ராதே கிருஷ்ணா 17-02-2020
நான் வெற்றியையோ, அரசுரிமையையோ, இன்பங்களையோ விரும்பவில்லை. (1:31) ஓ! கிருஷ்ணா, அரசுரிமை, இன்பங்கள், சுகங்கள் ஆகியவை யாருக்காக எங்களால் விரும்பப்பட்டனவோ, அப்படிப்பட்ட ஆசான்கள், தந்தைமார், பாட்டன்கள், தாய்மாமன்கள், மாமனார்கள், பேரன்கள், மைத்துனர்கள் மற்றும் சொந்தங்கள் ஆகியோர் தங்கள் உயிரையும் செல்வத்தையும் விடத் தீர்மானித்துப் போருக்குத் தயாராக இங்கே அணிவகுத்து நிற்கும்போது, ஓ! கோவிந்தா {கிருஷ்ணா}, அரசுரிமையோ, இன்பங்களோ ஏன் உயிரோ கூட எங்களுக்கு எப்படிப் பயன்படும்? ஓ! மதுசூதனா, இவர்கள் என்னைக் கொல்பவர்களாக இருப்பினும், மூவுலகங்களின் அரசுரிமைக்காககூட நான் இவர்களைக் கொல்ல விரும்ப மாட்டேன் எனும்போது, (இந்தப்) பூமியின் நிமித்தமாக ஏன் கொல்ல வேண்டும்? [6] ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா} தார்தராஷ்டிரர்களைக் கொல்வதால், என்ன மனநிறைவை நாங்கள் பெறுவோம்? அவர்கள் பகைவர்களாகக் கருதப்பட்டாலும் கூட, நாங்கள் அவர்களைக் கொன்றால் எங்களைப் பாவமே பீடிக்கும். 1:31-36
எனவே, இரத்த உறவினர்களான திருதராஷ்டிர மகன்களைக் கொல்வது எங்களுக்குத் தகாது. ஓ! மாதவா {கிருஷ்ணா}, எங்கள் சொந்த இரத்த உறவினர்களைக் கொல்வதால் நாங்கள் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க முடியும்? 1:36
பேராசையினால் கெட்டுப்போன தீர்மானங்களையுடைய {மனத்தையுடைய} இவர்கள், குலத்தின் அழிவால் விளையும் தீமையையும், உட்பகைச் சண்டையால் விளையும் பாவத்தையும் அறியாதிருந்தாலும், (1:37) ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, குல அழிவால் ஏற்படக்கூடிய தீங்கை நன்கு அறிந்த நாங்கள் பாவமிழைப்பதில் இருந்து விலக ஏன் கற்றுக் கொள்ளக்கூடாது? (1:38) 1:37-38
அர்ஜுனனின் மனவேதனை - அர்ஜுன விஷாத யோகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 025
The Distress of Arjuna! | Bhishma Parva - Section 025 | Mahabharata In Tamil
(பகவத்கீதா பர்வம் – 5) {பகவத் கீதை - பகுதி 1}
பதிவின் சுருக்கம் : குருக்ஷேத்திரக் களத்தைக் குறித்துச் சஞ்சயன் திருதராஷ்டிரனுக்கு வர்ணிப்பது; துரியோதனன் துரோணரிடம் பீஷ்மரின் பாதுகாப்புக் குறித்துப் பேசுவது; பீஷ்மர் சங்கை முழங்கியது; பாண்டவத் தரப்பிலும் அனைவராலும் சங்கு முழக்கப்பட்டது; அர்ஜுனன் கிருஷ்ணனிடம் தேரை இரு படைகளுக்கு நடுவில் நிறுத்த சொல்வது; எதிர்த்தரப்பில் இருக்கும் தனது சொந்தங்களையும் நண்பரைகளையும் நினைத்து வருந்தும் அர்ஜுனன் தனது வில்லை எறிந்துவிட்டுத் தேர்த்தட்டில் அமர்வது...
{இந்த உபபர்வமானது பகவத்கீதைக்கான உபபர்வமானதால் வரிக்கு வரியான சமஸ்கிருத சுலோகத்தின் எண்களும் குறிப்பிட்டுள்ளேன்}
{இந்த உபபர்வமானது பகவத்கீதைக்கான உபபர்வமானதால் வரிக்கு வரியான சமஸ்கிருத சுலோகத்தின் எண்களும் குறிப்பிட்டுள்ளேன்}
{இங்கிருந்து பகவத் கீதை ஆரம்பமாவதால் வரிக்கு வரியான சமஸ்கிருத சுலோகத்தின் எண்களும் குறிப்பிட்டுள்ளன}
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, புனிதக்களமான குருக்ஷேத்திரத்தில் போரிடும் விருப்பத்துடன் திரண்டிருந்த என் மகன்களும், பாண்டவர்களும் என்ன செய்தார்கள்?" என்றான். (1:1)
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, புனிதக்களமான குருக்ஷேத்திரத்தில் போரிடும் விருப்பத்துடன் திரண்டிருந்த என் மகன்களும், பாண்டவர்களும் என்ன செய்தார்கள்?" என்றான். (1:1)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பாண்டவப் படையின் அணிவகுப்பைக் கண்ட மன்னன் துரியோதனன், ஆசானை (துரோணரை) அணுகி இவ்வார்த்தைகளைச் சொன்னான்: (1:2)
"ஓ! ஆசானே, உமது புத்திசாலி சீடனான துருபதன் மகனால் (திருஷ்டத்யும்னனால்) அணிவகுக்கப்பட்ட பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} இந்தப் பரந்த படையைப் பாரும். (1:3)
அங்கே (அந்தப்படையில்), பீமனுக்கும், அர்ஜுனனுக்கும் போரில் இணையானவர்களும், துணிச்சல்மிக்கவர்களும், வலிமைமிக்கவர்களுமான பல வில்லாளிகள் இருக்கிறார்கள். (அவர்களில்) யுயுதானன் {சாத்யகி}, விராடன், வலிமைமிக்கத் தேர்வீரனான துருபதன், (1:4) திருஷ்டகேது, சேகிதானன், பெரும் சக்தியுடைய காசியின் ஆட்சியாளன்; புருஜித், குந்திபோஜன், மனிதர்களில் காளையான சைப்பியன், (1:5) பெரும் ஆற்றல் படைத்த யுதாமன்யு, பெரும் சக்தி கொண்ட உத்தமௌஜஸ், சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, திரௌபதியின் மகன்கள் ஆகியோர் [**] பெரும் தேர் வீரர்களாக இருக்கிறார்கள் (1:6). (1:4-6)
[**] யுயுதானன் - சாத்யகி என்ற பெயரும் உண்டு. அர்ஜுனனின் சீடன், சினியின் மகன், மகாபாரதப் போரில் இறக்காதவர்களில் இவனும் ஒருவன். யுயுதானன் என்ற பெயரில் வேறு ஒரு வீரனும் இருந்ததாகக் குறிப்பு உண்டு (உத்யோக பர்வம் 152).
விராடன் - மத்ஸ்ய நாட்டு மன்னன். பாண்டவர்களின் சம்பந்தி, அபிமன்யுவின் மாமனர். ஓராண்டு தலைமறைவு வாழ்வில் பாண்டவர்கள் இவனது மாளிகையிலேயே இருந்தனர்.
துருபதன் - பாஞ்சால நாட்டு மன்னன், பாண்டவர்களின் மாமனார், திரௌபதியின் தகப்பன். துரோணருக்கு நண்பனாக இருந்து எதிரியானவன். இவனது பாதி நாட்டைத் துரோணருக்கு வென்று கொடுத்தவர்கள் பாண்டவர்கள். துரோணரை அழிக்கவே இவன் திருஷ்டத்யும்னன் எனும் மகனை வேள்வித்தீயில் பெற்றான்.
திருஷ்ட கேது - சேதி நாட்டு மன்னன், சிசுபாலனின் மகன், மகாபாரதப் போரில் துரோணரால் கொல்லப்பட்டவன்.
சேகிதானன் - விருஷ்ணி குலத்தைச் சேர்ந்த வீரன். பாண்டவர்களின் ஏழு படைத்தலைவர்களுள் இவனும் ஒருவன். மகாபாரதப் போரில் துரியோதனனால் இவன் கொல்லப்பட்டான்.
காசிமன்னன் - காசியின் மன்னன். இவன் பெயர் எது என்பதில் குழப்பமுண்டு. உத்யோக பர்வம் பகுதி 171 இவனது பெயர் சேனா பிந்து என்றும், குரோதஹந்தன் என்றும் குறிப்பிடப்படுகிறது. கர்ண பர்வம் பகுதி 6ல் இவனது பெயர் அபிபூ என்று குறிப்பிடப்படுகிறது.
புருஜித், குந்திபோஜன் - இவர்கள் இருவரும் குந்தியின் சகோதரர்கள் ஆவர். இவர்கள் இருவரும் மகாபாரதப் போரில் துரோணரால் கொல்லப்படுகிறார்கள் கர்ண பர்வம் பகுதி 6ல் இந்தக் குறிப்பு வருகிறது.
சைப்யன் - யுதிஷ்டிரனின் மாமனார். இவனது பெண்ணான தேவிகா யுதிஷ்டிரனின் மனைவியாவாள். இவன் நரபுங்கவன் என்றும் அழைக்கப்படுகிறான்.
யுதாமன்யு, உத்தமௌஜா இவர்கள் இருவரும் பாஞ்சால இளவரசர்கள் ஆவர். இவர்களுக்கு முறையே விக்ராந்தன், வீரியவான் என்ற பெயர்களும் உண்டு. மகாபாரதப் போரின் இறுதியில், இரவில் உறங்கிக் கொண்டிருந்த இவர்களை அஸ்வத்தாமா கொல்கிறான். சௌப்திக பர்வம் பகுதி 8ல் இது குறிக்கப்படுகிறது.
அபிமன்யு - அர்ஜுனன் மற்றும் கிருஷ்ண பலராமர்களின் சகோதரியான சுபத்திரையின் மகன். துரோணர், கிருபர், கர்ணன், அஸ்வத்தாமன், பிருஹத்பலன், கிருதவர்மன் ஆகிய ஆறு பேர் சேர்ந்து இவனது மரணத்திற்குக் காரணமானார்கள். முடிவில் துச்சாசனனின் மகன் அவனது தலையில் ஓங்கி அடித்து அவனைக் கொன்றான். இது துரோண பர்வம் பகுதி 49ல் குறிக்கப்படுகிறது.
திரௌபதியின் ஐந்து மகன்கள் -பிரதிவிந்தியன், சுதசோமன், ஸ்ருதகர்மா, சதானீகன், ஸ்ருதசேனன் ஆகியோர். மகாபாரதப் போரின் இறுதியில், இரவில் உறங்கிக் கொண்டிருந்த இவர்களை அஸ்வத்தாமா கொல்கிறான். சௌப்திக பர்வம் பகுதி 8ல் இது குறிக்கப்படுகிறது.
இந்தக் குறிப்புகள் கீதா பிரஸ் ஸ்ரீ ஜயதயால் கோயந்தகரின் கீதா-தத்வவிவேசனீ என்று நூலில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
எனினும், ஓ! மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரே {துரோணரே}, நம்மில் புகழ்பெற்ற எவரெல்லாம் படைத்தலைவர் என்பதைக் கேளும். (உமது) தகவலுக்காக {கவனத்திற்காக} நான் அவர்களின் பெயரை உமக்குச் சொல்கிறேன். (1:7)
நீர், பீஷ்மர், கர்ணன், எப்போதும் வெல்பவரான கிருபர், அஸ்வத்தாமன், விகர்ணன், சௌமதத்தன் {சோமதத்தனின் மகன் பூரிஸ்ரவஸ்} மற்றும் ஜெயத்ரதன் (ஆகியோரே அவர்கள்) (1:8) [1]. இவர்களைத் தவிர, போரில் சாதித்தவர்களும், பல்வேறு வகையான ஆயுதங்களைத் தரித்துக் கொண்டிருப்பவர்களும், எனக்காகத் தங்கள் உயிரையும் விடத் தயாராக இருக்கும் துணிச்சல்மிக்கவர்களுமாகப் பல வீரர்கள் இருக்கிறார்கள். (1:8-9)
[1] "கீதையின் உரை எந்தவித இடைச்செருகலும் இல்லாமல் நம்மிடம் இறங்கியது என இங்கே துணிந்த குறிப்பிடலாம். சில பல உரைகளில் சிலபல வேறுபாடுகள் இருக்கலாம் அவ்வளவே. இங்கே ஜெயத்ரதனுக்குப் பதில் சில உரைகளில் tathaivacha என்றிருக்கிறது" என்கிறார் கங்குலி. பாரதியாரின் மொழிபெயர்ப்பு, கோயந்தகரின் தத்வவிவேசனி, பிரபுபாதரின் கீதை-உண்மையுருவில் ஆகியவற்றில் ஜெயத்ரதனின் குறிப்பு இல்லை.
இருந்தாலும், பீஷ்மரால் பாதுகாக்கப்படும் நமது படை போதுமானதுக்கு குறைவாகவே இருக்கிறது. அதே வேளையில், பீமனால் பாதுகாக்கப்படும் இவர்களுடைய (பாண்டவர்களுடைய) இந்தப் படை போதுமானதாக இருக்கிறதே [2]. 1:10
[2] "Aparyaptam மற்றும் Paryaptam என்ற வார்த்தைகள் விரிவுரையாளர்கள் அனைவரையும் சோதித்திருக்கிறது. Paryaptam என்பது "போதுமானது" என்றானால் (அதுவே நிச்சயமானதுமாகும்), Aparyaptam என்பது "போதுமானதுக்கு அதிகமானது என்றும் குறைவானது என்றும் பொருள் தரலாம். எனினும், இந்தப் {இங்கு சொல்லப்படும்} பின்னணி, வெற்றியில் நம்பிக்கை இல்லாமல் அச்சத்தால் தனது ஆசானிடம் {துரோணரிடம்} பேசும் துரியோதனனையே காட்டுகிறது. எனவே, நான் aparyaptam என்பதற்குப் போதுமானதற்குக் குறைவானது என்ற பொருளில் எடுத்துக் கொள்கிறேன்" என்கிறார் கங்குலி. இங்கே, பாரதியார் கங்குலியின் இக்கூற்றுக்கு வலு சேர்ப்பது போல, "நமது படை (கண்ணுக்கு) நிறைந்திருக்க வில்லை. இவர்களுடைய படையோ நிறைந்திருக்கிறது" என்று மொழிபெயர்த்திருக்கிறார். கோயந்தகரின் தத்வவிவேசனீ மற்றும் இஸ்கானின் பகவத்கீதை உண்மையுருவில் ஆகியவற்றில், "நமது படை அளக்க முடியாதது, பாண்டவப் படை அளவிடக்கூடியதே" என்றே இருக்கிறது.
உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் படைப்பிரிவுகளின் நுழைவாயில்களில் உங்களை நிறுத்திக் கொண்டு {தங்கள் தங்கள் இடங்களில் இருந்தபடி}, பீஷ்மரை மட்டுமே நீங்கள் அனைவரும் பாதுகாப்பீராக" என்றான் {துரியோதனன்}. 1:11
(சரியாக அதே நேரத்தில்) வீரமிக்கவரும், மதிப்புக்குரியவருமான குருக்களின் பாட்டன் {பீஷ்மர்}, அவனுக்கு (துரியோதனனுக்கு) பெரும் மகிழ்வை அளிக்கும்படி உரத்த சிங்க முழக்கத்தைச் செய்தபடி, (தனது) சங்கை ஊதினார். 1:12
பிறகு, சங்குகள், பேரிகைகள் {மத்தளங்கள்}, தாறைகள், கொம்புகள் ஆகியன ஒரே சமயத்தில் முழக்கப்பட்டன. அப்படி (ஏற்பட்ட) இரைச்சல், உரத்த பெரும் ஆரவாரமாக மாறியது. 1:13
பிறகு, வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட சிறந்த தேரில் இருந்த மாதவன் {கிருஷ்ணன்}, பாண்டுவின் மகன் (அர்ஜுனன்) ஆகியோர் தங்கள் தெய்வீக சங்குகளை முழக்கினார்கள். 1:14
ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, பாஞ்சஜன்யத்தையும் (பாஞ்சஜன்யம் என்று அழைக்கப்பட்ட சங்கையும்), தனஞ்சயன் {அர்ஜுனன்}, தேவதத்தத்தையும் (தேவதத்தம் என்றழைக்கப்பட்ட சங்கையும்) முழக்கினர். பயங்கரச் செயல்களைச் செய்யும் விருகோதரன் {பீமன்}, பௌண்டரம் என்ற (என்று அழைக்கப்பட்ட) பெரிய சங்கை ஊதினான். 1:15
குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரன் அனந்தவிஜயத்தையும் (என்று அழைக்கப்பட்ட சங்கையும்); நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர் சுகோஷம் மணிபுஷ்பகம் (என்று முறையாக அழைக்கப்பட்ட சங்குகள்) ஆகியவற்றையும் முழக்கினர். 1:16
அற்புத வில்லாளியான காசியின் ஆட்சியாளன், வலிமைமிக்கத் தேர்வீரனான சிகண்டி, திருஷ்டத்யும்னன், விராடன், வீழ்த்தப்பட இயலாத சாத்யகி, துருபதன், திரௌபதியின் மகன்கள், வலிய கரங்களைக் கொண்ட சுபத்திரையின் மகன் {அபிமன்யு} ஆகிய இவர்கள் அனைவரும், ஓ! பூமியின் தலைவா {திருதராஷ்டிரரே}, தத்தமது சங்குகளை முழக்கினார்கள். 1:17-18
அற்புத வில்லாளியான காசியின் ஆட்சியாளன், வலிமைமிக்கத் தேர்வீரனான சிகண்டி, திருஷ்டத்யும்னன், விராடன், வீழ்த்தப்பட இயலாத சாத்யகி, துருபதன், திரௌபதியின் மகன்கள், வலிய கரங்களைக் கொண்ட சுபத்திரையின் மகன் {அபிமன்யு} ஆகிய இவர்கள் அனைவரும், ஓ! பூமியின் தலைவா {திருதராஷ்டிரரே}, தத்தமது சங்குகளை முழக்கினார்கள். 1:17-18
வானத்திலும் பூமியிலும் எதிரொலித்த அந்த உரத்த முழக்கம், தார்தராஷ்டிரர்களின் இதயங்களைப் பிளந்தது. 1:19
அணிவகுக்கப்பட்ட தார்தராஷ்டிரத் துருப்புகளைக் கண்டவனும், குரங்குக் {வானரம்_ஹனுமன்} கொடி கொண்டவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தனது வில்லை உயர்த்தினான். சரியாக ஏவுகணைகளை {சஸ்திரங்களை} வீசும் தருணம் வந்தபோது, ஓ! பூமியின் தலைவா {திருதராஷ்டிரரே}, இவ்வார்த்தைகளை ரிஷிகேசனிடம் {கிருஷ்ணனிடம் அர்ஜுனன்} சொன்னான் [3]. 1:20
[3] ரிஷிகேசன் என்றால் "புலன்களின் தலைவன்" என்று பொருள் என்கிறார் கங்குலி.
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "அழிவிலாதவனே {அச்யுதா, கிருஷ்ணா}, போரிட விரும்பி நிற்பவர்களையும், இந்தப் போரில் நான் உழைப்பைச் செலுத்தி யாருடன் போராட வேண்டும் (1:22) என்பதையும் [4] நோக்கும் வகையில் எனது தேரை இரு படைகளுக்கும் இடையில் (ஒருமுறை) நிறுத்துவாயாக (1:21). 1:21-22
[4] Ranasamudyame என்பது "போருக்கு ஆரம்பத்தில்" என்றும் பொருள் தரும் என்கிறார் கங்குலி.
தீய மனம் கொண்ட திருதராஷ்டிரன் மகனுக்கு {துரியோதனனுக்கு} ஏற்புடையதைச் செய்வதற்காக இங்கே கூடியிருப்பவர்களையும், போரிடத் தயாராக இருப்பவர்களையும் நான் உற்று நோக்கப் போகிறேன்" என்றான் {அர்ஜுனன்}. 1:23
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}. குடாகேசனால் {உறக்கத்தை வென்றவனான அர்ஜுனனால்} இப்படிச் சொல்லப்பட்ட ரிஷிகேசன், இரண்டு படைகளுக்கும் மத்தியில், (1:24) பீஷ்மருக்கும், துரோணருக்கும், மன்னர்கள் அனைவருக்கும் எதிரில் அந்தச் சிறந்த தேரை நிறுத்தி, "ஓ! பார்த்தா {அர்ஜுனா}, கூடியிருக்கும் இந்தக் குருக்களைப் {கௌரவர்களைப்} பார்" என்றான் (1:25). 1:24-25
(தனது) தந்தைமார், பேரப்பிள்ளைகள், நண்பர்கள், மாமனார், இரு படைகளின் நலன் விரும்பிகள் [5] ஆகியோர் அங்கே நிற்பதை அந்தப் பிருதையின் மகன் {அர்ஜுனன்} கண்டான். (1:26)
(அங்கே) நின்று கொண்டிருந்த அந்தச் சொந்தங்கள் அனைவரையும் கண்ட குந்தியின் மகன் {அர்ஜுனன்}, பெருங்கருணை கொண்டு, மனத்தளர்ச்சியுடன் (இவ்வார்த்தைகளைச்) சொன்னான். (1:27)
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! கிருஷ்ணா, போரிடும் ஆவலில் ஒன்று கூடியிருக்கும் எனது சொந்தங்களைக் கண்டு என் உறுப்புகள் சோர்வடைகின்றன, எனது வாய் உலர்ந்து போகிறது. (1:28)
எனது உடல் நடுங்குகிறது, எனக்கு மயிர் கூச்சம் ஏற்படுகிறது காண்டீவம் எனது கைகளில் இருந்து நழுவுகிறது. மேலும் எனது தோலும் எரிகிறது. (1:29)
(இனிமேலும்) நிற்க என்னால் முடியவில்லை; எனது மனம் அலைபாய்கிறது. ஓ! கேசவா {கிருஷ்ணா}, நான் எதிர்மறையான {விபரீத} சகுனங்களையும் காண்கிறேன். 1:30
[5] வேறு பதிப்புகளில் இங்கே தந்தைமார், பாட்டன்மார், ஆசான்கள், மாமன்கள், சகோதரர்கள், மகன்கள், பேரன்கள், நண்பர்கள், மாமனார்கள் மற்றும் பல நலன்விரும்பிகளை அர்ஜுனன் கண்டதாகச் சொல்லப்பட்டுள்ளது.
(அங்கே) நின்று கொண்டிருந்த அந்தச் சொந்தங்கள் அனைவரையும் கண்ட குந்தியின் மகன் {அர்ஜுனன்}, பெருங்கருணை கொண்டு, மனத்தளர்ச்சியுடன் (இவ்வார்த்தைகளைச்) சொன்னான். (1:27)
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! கிருஷ்ணா, போரிடும் ஆவலில் ஒன்று கூடியிருக்கும் எனது சொந்தங்களைக் கண்டு என் உறுப்புகள் சோர்வடைகின்றன, எனது வாய் உலர்ந்து போகிறது. (1:28)
எனது உடல் நடுங்குகிறது, எனக்கு மயிர் கூச்சம் ஏற்படுகிறது காண்டீவம் எனது கைகளில் இருந்து நழுவுகிறது. மேலும் எனது தோலும் எரிகிறது. (1:29)
(இனிமேலும்) நிற்க என்னால் முடியவில்லை; எனது மனம் அலைபாய்கிறது. ஓ! கேசவா {கிருஷ்ணா}, நான் எதிர்மறையான {விபரீத} சகுனங்களையும் காண்கிறேன். 1:30

[6] இது போன்ற ஒரு வளமான வெகுமதிக்கான வாய்ப்பின் போதுகூட, இவ்வளவு அன்பானவர்களையும், எனக்கு நெருக்கமானவர்களை நான் கொல்ல மாட்டேன். மாறாக, அவர்களின் அடிகளில் துன்புற்றாலும், நான் அவர்களைத் திருப்பி அடிக்க மாட்டேன் என்பதே இங்கே பொருளாகும் என்கிறார் கங்குலி.
எனவே, இரத்த உறவினர்களான திருதராஷ்டிர மகன்களைக் கொல்வது எங்களுக்குத் தகாது. ஓ! மாதவா {கிருஷ்ணா}, எங்கள் சொந்த இரத்த உறவினர்களைக் கொல்வதால் நாங்கள் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க முடியும்? 1:36
பேராசையினால் கெட்டுப்போன தீர்மானங்களையுடைய {மனத்தையுடைய} இவர்கள், குலத்தின் அழிவால் விளையும் தீமையையும், உட்பகைச் சண்டையால் விளையும் பாவத்தையும் அறியாதிருந்தாலும், (1:37) ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, குல அழிவால் ஏற்படக்கூடிய தீங்கை நன்கு அறிந்த நாங்கள் பாவமிழைப்பதில் இருந்து விலக ஏன் கற்றுக் கொள்ளக்கூடாது? (1:38) 1:37-38
ஒரு குலம் அழிந்தால், அந்தக் குலத்தின் நிலைத்த {பல கால} வழக்கங்கள் {அறங்கள்} தொலைந்து போகும்; அந்த வழக்கங்கள் {அறங்கள்} தொலைந்து போனால், மொத்த குலத்தையும் பாவம் பீடிக்கும். 1:39
பாவம் மேலோங்கினால், ஓ! கிருஷ்ணா, அந்தக் குலத்தின் பெண்கள் கெட்டுப்போவார்கள். ஓ! விருஷ்ணியின் வழித்தோன்றலே {கிருஷ்ணா}, பெண்கள் கெட்டுப் போனால், வர்ணக் கலப்பு ஏற்படுகிறது [7]. 1:40
அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன்}, "வருந்த தகாதவர்களுக்காக நீ வருந்துகிறாய். நீ அறிவுடையவர்களின் (அறிவுடையவர் என்று சொல்லிக் கொள்பவர்களின்) வார்த்தைகளைப் பேசுகிறாய். எனினும், (உண்மையில்) அறிவுள்ளவர்கள், இறந்தவர்களுக்காகவோ, வாழ்பவர்களுக்காகவோ வருந்துவதில்லை. 2:11
பண்புருவத்தின் {உருவம் ஏற்ற ஆத்மாவின்} உடலுக்கு, பிள்ளைப்பருவம், இளமை, முதுமை ஆகியன இருக்கின்றன. மறு உடலை அடைவதும் அதுபோன்றதே (ஆகும்). அறிவுள்ள மனிதன், இதில் எப்போதும் மயங்குவதில்லை {ஏமாறுவதில்லை}. 2:13
ஓ! மனிதர்களில் காளையே {புருஷரிஷபா, அர்ஜுனா}, இதே போன்ற வலி {துன்பம்} மற்றும் இன்பத்தைக் கொண்டவனும், மனதில் உறுதியுடையவனும், இவற்றால் பாதிக்கப்படாதவனுமான மனிதனே விடுதலைபெறத் {முக்திக்குத்} தகுந்தவனாவான் [4]. 2:15
புலன்நுகர் பொருட்களை நினைப்பதால், அவற்றில் ஒருவனுக்குப் பற்று ஏற்படுகிறது.
பற்றுதலில் இருந்து {ஆசை, ஆசையில் இருந்து} கோபம் முளைக்கிறது;
கோபத்தில் இருந்து பாகுபாடு {மயக்கம்} எழுகிறது;
பாகுபாட்டினால் {மயக்கத்தினால்} நினைவு இழப்பு ஏற்படுகிறது;
நினைவு இழப்பால் அறிவு இழப்பும் ஏற்படுகிறது;
அறிவு இழப்பால் (அவன்) முற்றிலுமாகவும் அழிகிறான். 2:62-63
[*] அடைப்புக்குறிக்குள் இருக்கும் வாக்கியம் கங்குலியில் விடுபட்டுள்ளது.
அதிக உயரமோ, அதிகத் தாழ்வோ இல்லாத ஒரு தூய இடத்தின் மேல் துணியையோ, மான் தோலையோ, குசப் புற்களையோ {தர்ப்பைப் புல்லையோ} பரப்பி இருக்கையை அமைத்துக் கொண்டு, அந்த இருக்கையில் அமர்ந்து, ஒரு பொருளில் {பரம்பொருளில்} மனத்தை நிலைக்க வைத்து, இதயம் {மனம்} மற்றும் புலன்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு, தனது தூய்மைக்காக அவன் {யோகி} தியானம் பயில வேண்டும். 6:11-12
ஓ! கிருஷ்ணா, மனம் அமைதியற்றதாக, மூர்க்கத்தனமானதாக, மாறுபாடுடையதாக {விபரீதமானதாக}, பிடிவாதமானதாக இருக்கிறது. அதை {மனத்தைக்} கட்டுப்படுத்துவது என்பதைக் காற்றைக் கட்டுப்படுத்துவது போன்று மிகக் கடுமையான ஒன்றாகவே நான் கருதுகிறேன்" என்றான் {அர்ஜுனன்}. 6:34
பெரும் முயற்சிகளால் உழைக்கும் அந்த அர்ப்பணிப்பாளன் {யோகி}, தனது பாவங்கள் அனைத்திலும் இருந்து தூய்மையடைந்து, பல பிறவிகளுக்கு அப்பால் முழுமையை {பரகதியை} அடைந்து, அதன் பிறகு உயர்ந்த இலக்கை சென்றடைகிறான். 6:45
அனைத்துப் பொருட்களின் பெருந்தலைவனான எனது தலைமையான இயல்பை {பரமநிலையை} அறியாமல், வீண் நம்பிக்கைகள், வீண் செயல்கள், வீண் அறிவு, குழம்பிய மனங்கள் ஆகியவற்றையும், அசுரர்கள் மற்றும் ராட்சசர்களின் மயக்க இயல்பையும் கொண்டவர்களான மூடர்கள், மனித உடலை ஏற்றிருக்கும் என்னைப் புறக்கணிக்கிறார்கள். 9:11-12
ஏனெனில், பிரம்மம், அழிவின்மை, கேடின்மை, நிலையான அறம் மற்றும் தடையற்ற இன்பம் ஆகியவற்றின் உறைவிடமாக நானே இருக்கிறேன்" என்றான் {கிருஷ்ணன்} 14:27
(பகவத்கீதா பர்வம் – 27) {பகவத் கீதை - பகுதி 15}
(பகவத்கீதா பர்வம் – 28) {பகவத் கீதை - பகுதி 16}
தெய்வீகத்தன்மைகள் விடுதலைக்காவன எனக் கருதப்படுகின்றன; அசுரத்தன்மைகளோ பற்றை ஏற்படுத்துவனவாகும். ஓ! பாண்டுவின் மகனே வருந்தாதே, நீ தெய்வீகத்தன்மைகளுடனேயே பிறந்திருக்கிறாய். 16:5
"இதை நான் பின்பு அடைவேன், இந்தச் செல்வத்தை நான் கொண்டுள்ளேன், இஃது (இந்தச் செல்வம்) எனக்குக் கூடுதலாகக் கிடைத்ததாகும் {13}. இந்த எதிரி என்னால் கொல்லப்பட்டான். நான் இன்னும் பிறரையும் கொல்வேன். நானே தலைவன் {ஆள்பவன்}, நானே அனுபவிப்பவன் {போகி}, நானே வெற்றியாளன் {சித்தன்}, சக்தி நிறைந்தவன் {பலவான்}, மகிழ்ச்சியானவன் {சுகி} {14}, நான் செல்வந்தன், நான் உன்னதப் பிறப்பைக் கொண்டவன். என்னைப் போல் வேறு எவன் இருக்கிறான்? நான் வேள்வி செய்வேன், நான் கொடைகள் அளிப்பேன், நான் இன்பமாக இருப்பேன்" {15} என இப்படி அறியாமையில் மயங்கி எண்ணற்ற எண்ணங்களால் {கவலைகளால்} கலங்கி, மாய வலைகளில் சிக்கி, ஆசைக்குகந்த பொருட்களை அனுபவிப்பதில் பற்றுதல் கொண்ட அவர்கள் {அசுரத் தன்மை கொண்டோர்} தூய்மையற்ற நரகத்தில் மூழ்கிப் போகிறார்கள் {16}. 16:13-16
எனவே, எது செய்யப்பட வேண்டும்? எது செய்யப்படக்கூடாது? என்பதைத் தீர்மானிக்க உனக்குச் சாத்திரங்களே அதிகாரம் கொண்டதாக இருக்கட்டும். சாத்திரங்களின் விதிகளால் தீர்மானிக்கப்பட்டவற்றை உறுதி செய்த பிறகு செயல்புரிவதே உனக்குத் தகும்" என்றான் {கிருஷ்ணன்}. 16:24
(பகவத்கீதா பர்வம் – 29) {பகவத் கீதை - பகுதி 17}
2. கசப்பு, புளிப்பு, உப்பு, மிகுந்த சூடு, உறைப்பு, உலர்ந்த நிலை, எரிச்சல் ஆகியவற்றைக் கொண்டு, வலி, துயரம், நோய் ஆகியவற்றை உண்டாக்கும் உணவு வகைகள் உணர்ச்சிமிக்கோரால் {ராஜச குணமுள்ளோரால்} விரும்பப்படுகின்றன. 17:9
பாவம் மேலோங்கினால், ஓ! கிருஷ்ணா, அந்தக் குலத்தின் பெண்கள் கெட்டுப்போவார்கள். ஓ! விருஷ்ணியின் வழித்தோன்றலே {கிருஷ்ணா}, பெண்கள் கெட்டுப் போனால், வர்ணக் கலப்பு ஏற்படுகிறது [7]. 1:40
[7] கங்குலி இங்கே வர்ண சங்கர என்ற மூலச் சொல்லை Caste intermixture என்று மாற்றியிருக்கிறார். வர்ணம் என்பதற்கும் சாதி என்பதற்கும் பெருத்த வேறுபாடு உண்டு. எனவே, சாதி என்று கங்குலி பயன்படுத்தியிருக்கும் சொல்லை நாம் வர்ணம் என்று கையாண்டிருக்கிறோம். இந்த இடத்தில் பிரபுபாதர் "தேவையற்ற சந்ததி உண்டாகும்" என்று சொல்கிறார். கோயந்தகரும் பாரதியாரும், "வர்ணக் கலப்பு என்றே சொல்கின்றனர்.
இப்படி ஏற்படும் வர்ணங்களின் கலப்பு, அந்தக் குலத்தை அழித்தவர்களையும், அந்தக் குலத்தையுமே கூட நரகத்திற்கு இட்டுச் செல்கிறது. அந்தக் குலத்தின் மூதாதையர்கள், பிண்டம் மற்றும் நீர்க்கடன் சடங்குகளை இழந்து, (சொர்க்கத்திலிருந்து) விழுகின்றனர். 1:41
வர்ணங்களிலும், வர்ண விதிகளிலும், கலப்பை ஏற்படுத்தி, குலத்தை அழைப்பவர்களின் இந்தப் பாவங்களினால் குடும்பங்களின் நிலைத்த சடங்குகள் அழிந்து போகின்றன. 1:42
ஓ! ஜனார்த்தனா {மக்களைக் காப்பவனே, கிருஷ்ணா}, குடும்பச் சடங்குகள் அழிந்த போன மனிதர்கள் எப்போதும் நரகத்தில் வசிக்கிறார்கள் என்று நாம் கேள்விப்படுகிறோம். 1:43
ஓ! ஜனார்த்தனா {மக்களைக் காப்பவனே, கிருஷ்ணா}, குடும்பச் சடங்குகள் அழிந்த போன மனிதர்கள் எப்போதும் நரகத்தில் வசிக்கிறார்கள் என்று நாம் கேள்விப்படுகிறோம். 1:43
ஐயோ, அரசுரிமையின் இனிமைகளில் இச்சை கொண்டு எங்கள் இரத்த சொந்தங்களையே கொல்லத் தயாராகி, பெரும் பாவத்தைத் தரும் வன்செயலைச் செய்யத் தீர்மானித்துவிட்டோமே. 1:44
கையில் ஆயுதம் கொண்ட திருதராஷ்டிரர் மகன்கள், ஆயுதமின்றி எதிர்க்காமல் இருக்கும் என்னைப் போரில் கொன்றால், அஃது எனக்குச் சிறப்பானதாகவே இருக்கும். {அஃது எனக்கு மிகுந்த நன்மையையே செய்யும்}" என்றான் {அர்ஜுனன்}. 1:45
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "போர்க்களத்தில் இவ்வாறு சொன்ன அர்ஜுனன், கவலையால் மனம் பதைத்து, தனது வில்லையும், கணைகளையும் வீசி எறிந்து விட்டுத் தேரில் அமர்ந்தான்" 1:46
கோட்பாடுகளின் சுருக்கம் - சாங்கிய யோகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 026
The Summary of Doctrines! | Bhishma-Parva-Section-026 | Mahabharata In Tamil
(பகவத்கீதா பர்வம் - 14) {பகவத் கீதை - பகுதி 2}
பதிவின் சுருக்கம் : கிருஷ்ணனின் உதவியை அர்ஜுனன் கேட்பது; ஆத்மாவின் அழியா இயல்பு, ஞான யோகம், சாங்கிய யோகம், கர்மயோகம், பக்தி யோகம், மன உறுதி மற்றும் மனை அமைதி போன்ற சித்தாந்தங்களின் சுருக்கத்தைக் கிருஷ்ணன் அர்ஜுனனுக்குச் சொல்வது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "இப்படி இரக்கம் கொண்டவனாக, கண்ணீரால் நிறைந்து ஒடுக்கப்பட்ட கண்களுடனும் மனத்தளர்ச்சியுடனும் இருந்தவனிடம் {அர்ஜுனனிடம்}, மதுசூதனன் {கிருஷ்ணன்} இந்த வார்த்தைகளைச் சொன்னான். 2:1
அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்} [1], "ஓ! அர்ஜுனா, இத்தகைய நெருக்கடியில், உன்னதப் பிறவிகளுக்குத் தகாததும் [2], ஒருவனைச் சொர்க்கத்திற்கு வெளியே நிறுத்துவதும், புகழ்க்கேட்டை உண்டாக்குவதுமான இந்த மனத்தளர்ச்சி உனக்கு எங்கிருந்து வந்தது? 2:2
[1] சம்ஸ்க்ருத மூலத்தில் ஸ்ரீ பகவான் உவாச {śrībhagavān uvāca} என்றே உள்ளது. ஆனால் கங்குலி இங்கே The Holy One என்று பயன்படுத்துவதால், நாமும் புனிதமானவன் என்றே தொடர்கிறோம்.[2] இங்கே "அனார்ய" என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. ஆரியமல்லாத, அஃதாவது "உயர்ந்தோருக்குத் {சான்றோருக்குத்} தகாத" என்று பொருள் கொள்ளலாம். பாரதியார் "அரியருக்குத் தகாத" என்று சொல்கிறார். கோயந்தகர் "சான்றோர் கடைப்பிடிக்காத" என்று சொல்கிறார். பிரபுபாதர் "வாழ்வின் நோக்கமறியாதோரால் பயிலப்படும்" என்று சொல்கிறார்.
ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, எந்தப் பெண்தன்மையும் {அலித்தன்மையும்} உனதாக வேண்டாம். இஃது உனக்குப் பொருந்தவில்லை. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {பரந்தபா, அர்ஜுனா}, இதயத்தின் இந்த அற்ப பலவீனத்தை {இரக்கத்தை} உதறிவிட்டு எழுவாயாக" என்றான் {கிருஷ்ணன்}. 2:3
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! மதுசூதனா, ஓ! எதிரிகளைக் கொல்பவனே {கிருஷ்ணா}, வழிபாட்டுக்குத் தகுந்தவர்களான பீஷ்மர் மற்றும் துரோணருக்கு எதிராக எப்படி நான் கணைகளைக் கொண்டு போரில் போராடுவேன் {பதிலடி கொடுப்பேன்}? [3] 2:4
[3] விளக்கவுரை செய்பவர்கள் ishubhis {இக்ஷூபி} "கணைகள்" என்ற சொல்லை விளக்கிச் சொல்வதன் மூலம் தங்கள் புத்திக்கூர்மையைக் காட்டுகின்றனர். அவர்கள், "யாவரிடம் கடும்வார்த்தைகளால் கூட என்னால் மோத முடியாதோ, அவர்களிடம் கணைகளால் எப்படி மோதுவேன்?" என்று அர்ஜுனன் சொல்வதாக விளக்குகிறார்கள். இது மூலத்திற்கு நெருக்கமானது அல்ல" என்று சொல்கிறார் கங்குலி.
(ஒருவன் தனது) புகழ்மிக்க ஆசான்களைக் கொல்லாமல், இவ்வுலகில் பிச்சையெடுத்து வாழ்வதே (அவனுக்கு) நன்று. செல்வத்தில் பேராசை கொண்டவர்களாக ஆசான்கள் இருந்தாலும், அவர்களைக் கொல்வதால், இரத்தக்கறை படிந்த இன்பத்தையே என்னால் அனுபவிக்க முடியும். 2:5
{ஒன்று} நாம் அவர்களை வெல்வது, அல்லது, அவர்கள் நம்மை வெல்வது ஆகிய இரண்டில் எது சிறந்த தருணம் என்பதை நாம் அறியவில்லை. யாரைக் கொன்று நாம் உயிர்வாழ விரும்பமாட்டோமோ, அந்தத் திருதராஷ்டிர மகன்கள் (நம்) முன் நிற்கிறார்கள். 2:6.
இரக்கம் எனும் களங்கத்தால் பீடிக்கப்பட்ட எனது இயல்புடன், என் மனம் (என்) கடமையில் உறுதியற்றிருப்பதால், நான் உன்னைக் கேட்கிறேன். (எனக்கு) எது நல்லது என்பதை உறுதியாகச் சொல்வாயாக. நான் உனது சீடன். ஓ!, உனது உதவியை நாடுகிறேன் {உன்னைச் சரணடைந்தேன்}. எனக்குக் கற்பிப்பாயாக. 2:7
பூமியில், எதிரியற்ற ஒரு வளமான நாட்டையோ, தேவர்களின் அரசு உரிமையையோ நான் அடைந்தாலும் கூட, என்னுடைய புலன்களை வெடிக்கச் செய்யும் எனது துயரை அகற்றவல்லது எது என்பதை நான் காணவில்லை" என்றான் {அர்ஜுனன்}" 2:8
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ரிஷிகேசனிடம் {கிருஷ்ணனிடம்} இதைச் சொன்னவனும், எதிரிகளைத் தண்டிப்பவனுமான குடகேசன் {அர்ஜுனன்}, (மீண்டுமொருமுறை) கோவிந்தனிடம் {கிருஷ்ணனிடம்}, "நான் போரிடமாட்டேன்" என்று சொல்லி விட்டு அமைதியடைந்தான். 2:9
{இப்படி} மனச்சோர்வால் பீடிக்கப்பட்டவனிடம் {அர்ஜுனனிடம்}, ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, இரு படைகளுக்கு மத்தியில் {வைத்து பின்வருமாறு} சொன்னான். 2:10
![]() |
வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் வருந்தாத நிலை |
நானோ, நீயோ, மனிதர்களின் ஆட்சியாளர்களான இவர்களோ எப்போதும் இருந்ததில்லை என்பதும், அல்லது, நாம் அனைவரும் இதன்பிறகு என்றும் இருக்க மாட்டோம் என்பதும் கிடையாது. {நாம் இல்லாதிருந்த காலமும் கிடையாது. எதிர்காலத்திலும் நாம் இல்லாமல் இருக்க மாட்டோம்}. 2:12
![]() |
ஆடைகளை மாற்றிக் கொள்வது போல உடல்களை மாற்றிக் கொள்ளும் ஆன்மா |
புலன்கள், தங்கள் (தங்களுக்குரிய) {புலன்நுகர்} பொருட்களால் உற்பத்தி செய்யப்படும் வெம்மை மற்றும் குளுமை, இன்பம் மற்றும் வலி {துன்பம்}, ஆகியவற்றுடன் கொள்ளும் தொடர்புகள் {உணர்வுகள்}, ஒரு தொடக்கத்தையும் முடிவையும் கொண்டிருப்பதால், அவை நிரந்தரமானவையல்ல. ஓ! பாரதா {அர்ஜுனா}, நீ அவற்றைப் {இன்ப துன்பங்கள் என்ற உணர்வுகளைப்} பொறுத்துக் கொள்வாயாக. 2:14
![]() |
உடல்மாறினாலும் மாறாத ஆன்மா! |
[4] "Amritatwa "அம்ருதத்வாய" என்பது உண்மையில் "விடுதலை" அல்லது, "மீண்டும் மீண்டும் இறந்து, மீண்டும் மீண்டும் மறுபிறவி எடுக்க வேண்டாத நிலையைக்" குறிப்பதே ஆகும். "இறவாமை" என அதை வழங்குவது அந்த நிலைக்குச் சிறு களங்கத்தை ஏற்படுத்தும். ஏனெனில் ஒவ்வொரு ஆன்மாவும் "இறவா" நிலை கொண்டதே ஆகும். அதிலும் குறிப்பிட்ட இந்தப் பகுதி இக்கருத்தையே மனதில் பதிய வைக்கிறது" என்கிறார் கங்குலி. இங்கே பாரதியார், "சாகாதிருக்கத் தகுவான்" என்று மொழிபெயர்க்கிறார். கோயந்தகர், "மோக்ஷத்திற்குத் தகுதி பெறுகிறான்" என்கிறார். பிரபுபாதர், கங்குலியை ஒட்டியே, "விடுதலைக்குத் தகுதி பெற்றவனாகக் கருதப்படுகிறான்" என்கிறார்.
ஆன்மாவுக்கு வேறுபட்ட எதுவும் (எந்தப் புறநிலையும்) {நிலைப்பவையும்}; அதேபோல, ஆன்மாவின் குணங்களற்ற எதுவும் {நிலையாதவையும்} இருப்பில் இல்லை; இந்த இரண்டு நிலையைக் குறித்த தீர்மானங்களும் (பொருட்களின்) உண்மைகளை அறிந்தோரால் அடையப்பட்டவையாகும் [5]. 2:16
[5] "சத்" மற்றும் "அசத்" ஆகிய இரு வார்த்தைளும், இந்து தத்துவங்களில் அடிக்கடி சொல்லப்படுவதால் அச்சொற்களைத் துல்லியமாகப் புரிந்து கொள்ள வேண்டும். "சத்" என்பது "உண்மையானது" என்று விளக்கப்படுகிறது. அஃதாவது, ஆன்மா, அல்லது ஆன்மாவைப் போல உண்மையான, நிலையான எதுவும் "சத்" ஆகும். "அசத்" இதற்கு நேர்மாறானது ஆகும். அஃதாவது உண்மையற்ற அல்லது ஆன்மாவற்றதாகும். இங்கே கிருஷ்ணன், "உண்மையற்ற எதற்கும் இருப்புக் கிடையாது; அதே போல உண்மையானவற்றுக்கு, இருப்பற்ற நிலை கிடையாது {அதாவது இருப்பு உண்டு}" என்று சொல்கிறான். இது புற உலகை ஏற்கும் கருத்தியலைக் கொண்ட உதாரணம் இல்லையா?" என்கிறார் கங்குலி. நிலையற்றவை நிலைப்பதும்; நிலையானவை நிலையற்றுப் போவதும் கிடையாது என்பதே இங்குப் பொருளாக இருக்க வேண்டும்.
எதனால் இவை அனைத்தும் (இந்த அண்டம்) படர்ந்து ஊடுருவப்பட்டுள்ளதோ {வியாபிக்கப்பட்டிருக்கிறதோ}, அஃது (ஆன்மா) "அழிவற்றது" என்பதை அறிவாயாக. அழிவற்ற அதற்கு {ஆன்மாவிற்கு} யாராலும் அழிவை ஏற்படுத்த முடியாது. 2:17
நிலைத்ததும் {எப்போதும் இருப்பதும்}, அழிவற்றதும், முடிவிலியுமாக இருக்கும் பண்புருவத்தின் (ஆத்மாவின்) இந்த உடல், முடிவை உடையதாகச் சொல்லப்பட்டுள்ளது. எனவே, ஓ! பாரதா {அர்ஜுனா}, நீ போரிடுவாயாக. 2:18
அது (ஆத்மா) கொல்வதாக நினைப்பவன், அல்லது அது {ஆத்மா} கொல்லப்படுவதாக நினைப்பவன் ஆகிய இருவரும் எதையும் அறியாதவர்களாவர்; ஏனெனில், {ஆத்மா} எதுவும் கொல்வதுமில்லை, கொல்லப்படுவதுமில்லை. 2:19
அது {ஆத்மா} எப்போதும் பிறப்பதும் இல்லை, எப்போதும் இறப்பதுமில்லை; இருப்பில் இருக்கும் அஃது, இல்லாமல் போவதில்லை. பிறப்பற்றதும், மாற்றமில்லாததும், நிலைத்ததும், பழைமையானதுமான அதன் {ஆத்மா ஏற்ற உடல்}, உடல் அழிவை அடைவதால் அது {ஆத்மா} கொல்லப்படுவதில்லை. 2:20
{ஓ! பார்த்தா [அர்ஜுனா]}, அழிவற்றத்தாக, மாற்றமில்லாததாக, சிதைவில்லாததாக அஃதை {ஆத்மாவை} அறியும் மனிதன், {யாரையும்} கொல்வது எவ்வாறு? அல்லது கொல்லச் செய்வது எவ்வாறு? 2:21
சிதைந்த ஆடைகளைக் களைந்து, புதியவை பிறவற்றை அணிந்து கொள்ளும் ஒரு மனிதனைப் போல, பண்புருவம் கொண்ட அது (ஜீவாத்மா) சிதைந்த உடல்களைக் கைவிட்டு, புதிதான பிற உடல்களுக்குள் நுழைகிறது. 2:22
அதை {ஆத்மாவை} ஆயுதங்கள் பிளப்பதில்லை, அதை நெருப்பு எரிப்பதில்லை; நீர் அதை நனைப்பதில்லை, அதே போலக் காற்றும் அதை உலர்த்துவதில்லை. 2:23
அது {ஆத்மா} வெட்டவோ, எரிக்கவோ, நனைக்கவோ, உலர்த்தவோ தகுந்ததில்லை. அது {ஆத்மா} மாற்றமில்லாததும், அனைத்திலும் படர்ந்தூடுருவி {எங்கும் நிறைந்து} இருப்பதும், அசைக்க முடியாததும், உறுதியானதும், நிலையாக நிலைத்திருப்பதும் {நித்தியமானதும்} ஆகும். 2:24
அது {ஆத்மா} {புலன்களுக்கு} புலப்படாதது, சிந்தனைக்கு அப்பாற்பட்டது; மாற்றமுடியாதது என்று கூறப்படுகிறது. எனவே, இப்படி அஃதை {ஆத்மாவை} அறிந்த நீ, (அதற்காக) வருந்துவது தகாது. 2:25
மேலும், அது {ஆத்மா} தொடர்ந்து பிறந்து, தொடர்ந்து இறக்கிறது என்றே நீ கருதினாலும், ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, (அதற்காக) இப்படி வருந்துவது உனக்குத் தகாது. 2:26
ஏனெனில், பிறந்த ஒருவன் இறப்பது உறுதி; அதே போல இறந்த ஒருவன் பிறப்பதும் உறுதி. எனவே, தவிர்க்கப்பட முடியாத ஒரு காரியத்தில் நீ வருந்துவது உனக்குத் தகாது. 2:27
(பிறப்புக்கு முன்னால்) அனைத்து உயிரினங்களும் தோன்றாமல் இருந்தன. ஓ! பாரதா {அர்ஜூனா}, ஓர் இடைவெளியின் போது (பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவில்) மட்டுமே அவை தோன்றுகின்றன; மேலும், மரணம் வரும்போது, அவை (மீண்டுமொருமுறை) தோன்றாமல் போகின்றன. இதில் என்ன துயரம் இருக்கிறது? 2:28
ஒருவன் அஃதை ஆச்சரியமாகக் காண்கிறான்; மற்றொருவன் அதை ஆச்சரியமானதாகப் பேசுகிறான். இவற்றைக் கேட்ட பிறகும், ஒருவரும் உண்மையில் அது குறித்து அறிவதில்லை. 2:29
ஓ! பாரதா {அர்ஜுனா}, அனைவரின் உடல்களிலும் உறைந்த அஃது (ஆத்மா), எப்போதும் அழிவற்றதாகும். எனவே, (அந்த) உயிரினங்கள் அனைத்திற்காகவும் வருந்துவது உனக்குத் தகாது. 2:30
உனது வகைக்குரிய {க்ஷத்திரியனுக்குரிய} (நிர்ணயிக்கப்பட்ட) கடமைகளில் கண்களை வீசும் {கருத்தில் கொள்ளும்} நீ, கலங்குவது தகாது. ஏனெனில், நல்ல முறையில் போரிடுவதைக் காட்டிலும் ஒரு க்ஷத்திரியனுக்குச் சிறந்தது {சிறந்த கடமை} வேறு எதுவும் கிடையாது. 2:31
ஓ! பார்த்தா {அர்ஜுனா}, சொர்க்கத்தின் திறந்த கதவு ஒன்றைப் போலத் தானாக வந்த இத்தகு போரைப் பெறுபவர்களான அந்த க்ஷத்திரியர்கள் மகிழ்கின்றனர். 2:32
ஆனால், இதுபோன்ற ஓர் அறப்போரில் {தர்ம்யம் ஸங்க்ராமம்} நீ போரிடவில்லையெனில், உனது வகைக்கான கடமைகளைக் {ஸ்வதர்மத்தைக்} கைவிடுவது, {வீரன் என்ற} புகழைக் கைவிடுவது ஆகியவற்றின் மூலம் பாவத்தையே நீ ஈட்டுவாய். 2:33
பிறகு மக்கள் உனது நிலைத்த புகழ்க்கேட்டைப் {இகழ்வைப்} பிரகடனப்படுத்துவார்கள் {உன்னை எப்போதும் இகழ்ந்து பேசுவார்கள்}, மதிப்புமிக்கவனாக இருப்பவனுக்கு (தீமையான) புகழ்க்கேடு {அபகீர்த்தி} என்பது, மரணத்தைவிடப் பெரியதாகும் {மோசமானதாகும்}. 2:34
பெரும் தேர்வீரர்கள் அனைவரும், அச்சத்தின் காரணமாக நீ போரிலிருந்து விலகியதாகக் கருதுவார்கள். (இதுவரை) உன்னை மிக உயர்வாக மதித்தவர்களால் நீ சிறுமையாக {முக்கியமற்றவனாக} எண்ணப்படுவாய். 2:35
உனது எதிரிகள், உன் ஆற்றலை அவதூறாகப் பேசி, சொல்லக்கூடாத வார்த்தைகள் பலவற்றைச் சொல்வார்கள். அதைவிட வலி மிகுந்தது வேறு என்ன இருக்க முடியும்? 2:36
கொல்லப்பட்டால் நீ சொர்க்கத்தை அடைவாய்; வென்றாலோ பூமியை அனுபவிப்பாய். எனவே, ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, போரிடத் தீர்மானித்து எழுவாயாக. 2:37
இன்பம், வலி {துன்பம்}, ஆதாயம் {இலாபம்}, இழப்பு {நஷ்டம்}, வெற்றி, தோல்வி ஆகிய அனைத்தையும் சமமாகக் கருதி போரின் காரணமாகப் போரிட்டால் பாவம் உனதாகாது. 2:38
உனக்குச் சொல்லப்பட்ட இந்த அறிவு {ஞானம்}, சாங்கியத்தில் [6] {சாங்கிய தத்துவத்தில்} உள்ளது (கற்பிக்கப்படுகிறது). யோகத்தை ({கர்ம} யோக தத்துவத்தில்) (கற்பிக்கப்பட்ட அறிவை) இப்போது கேட்பாயாக. ஓ! பார்த்தா {அர்ஜுனா}, அந்த அறிவை அடைந்தால், செயல்களின் கட்டுகளில் {கர்மபந்தங்களில்} இருந்து நீ விடுபடுவாய். 2:39
[6] அறிவை அறிவால் அறியும் ஆத்மஞானம். இந்தப் பகுதியின் இந்தச் சுலோகம் வரை சாங்கிய யோகமே விளக்கப்பட்டிருக்கிறது. இதன் பிறகு 40 மற்றும் 48ம் சுலோகத்தில் கர்ம யோகம் விளக்கப்படுகிறது. 48 முதல் 53 வரை பக்தி யோகம் விளக்கப்படுகிறது. 55 முதல் 72 வரை தியான யோகம் விளக்கப்படுகிறது.
இதில் (இந்த யோக தத்துவத்தில் {கர்மயோகத்தில்) ஆரம்ப முயற்சி கூட வீணாகாது. இதில் எந்தக் குற்றங்களும் இல்லை. இந்த {கர்மயோக} பக்தியின் சிறியது (வடிவம்) {சிறு முன்னேற்றம்} கூடப் பெரும் அச்சத்தில் இருந்து {ஒருவனை} விடுவிக்கும். 2:40
ஓ! குருவின் மகனே {அர்ஜுனா}, இவ்வழியில், (ஒரு பொருளிடம், அதாவது விடுதலை {முக்தி} பெறுவதில்) உறுதியான அர்ப்பணிப்பைக் கொண்ட ஒரே ஒரு மனநிலையே உண்டு. எனினும், (அதில் {முக்தியில்}) அர்ப்பணிப்பில்லாதவர்களின் மனங்கள், (உறுதியற்ற) பல பிரிவுகளாகவும், முடிவற்ற நாட்டங்களில் இணைக்கப்பட்டதாகவும் இருக்கின்றன. 2:41
ஓ! பார்த்தா {அர்ஜுனா}, அறியாமை கொண்டோர் {சிற்றறிவு படைத்தோர்}, வேதங்களின் வார்த்தைகளில் மகிழ்ச்சி கொள்வோர், உலகளாவிய இன்பங்களில் பிணைப்புடைய மனங்களைக் கொண்டோர், இன்பங்களையும், சக்தியையும் பெறுவதற்காக, குறிப்பிட்ட குணங்களைக் கொண்ட பல அடுக்குச் சடங்குகளில் தங்களை இணைத்துக் கொள்வோர், இன்பங்கள் மற்றும் பலத்தில் பற்று கொண்டோர் ஆகிய மனிதர்கள், {வேதத்தின் அந்த வார்த்தைகளைத் தவிர} வேறு ஏதும் இல்லை என்றும், செயலின் கனியே பிறப்பென்றும், (இன்பங்களையும், செழிப்புகளையும் கொண்ட) சொர்க்கமே அடையத்தக்க உயர்ந்த பொருள் என்றும் உறுதிகூறுவோரின் மலர் போன்ற சொற்களில் ஏமாறும் இதயங்களையும் மனங்களையும் கொண்டு, முக்திக்கான ஒரே வழியாக அதையே {சொர்க்கத்தையே} கருதி (தெய்வீகத்தை, முக்தி நிலையைச்) சிந்திப்பதில்லை [7]. 2:42-44
[7] "வேதங்களையும், இன்பங்கள் மற்றும் சக்தியைத் தரும் சொர்க்கத்தை அடைவதற்காக, குறிப்பிட்ட செயல்களை வகுத்திருக்கும் வேதங்களின் விதிகளையும் நம்புவோர், அர்ப்பணிப்பைக் கொண்டிருக்க மாட்டார்கள் என்றும், அர்ப்பணிப்பு இல்லாவிட்டால் உயர்ந்த அருள் நிலையான இறுதி முக்தியை அடைய முடியாது என்றும் ஓர் எளிய உண்மையையே இங்கே கிருஷ்ணன் கற்பிக்க முற்படுகிறான். வேதச் சடங்குகளைச் செய்வதன் மூலம் இன்பங்களும், பலமும் கூடிய சொர்க்கம் கிட்டலாம். ஆனால் அந்தச் சொர்க்கம் எதற்குத் தகுந்தது? உண்மையான விடுதலை {முக்தி} என்பது அர்ப்பணிப்பு, தூய தியானம் ஆகியவற்றின் மூலம் அடையத்தக்க வேறொன்று ஆகும். {அந்த வேறொன்று சொர்க்கமல்ல}" என்கிறார் கங்குலி.
அறம், பொருள் மற்றும் இன்பம் ஆகிய மூன்று தன்மைகளின் தொடர்புடையவையே வேதங்களாகும். எப்போதும் புதியவற்றை அடைவதிலோ அல்லது ஏற்கனவே அடைந்ததைப் பாதுகாப்பதிலோ கவலையில்லாமல், எப்போதும் பொறுமையைக் கடைப்பிடித்து, கவலையற்றவனாக இருந்து, (இன்பம் மற்றும் துன்பம், வெப்பம் மற்றும் குளுமை போன்ற) முரண்பட்ட இரட்டைகளால் பாதிக்கப்படாமல், அவற்றில் இருந்து விடுபட்டிருப்பாயாக. 2:45
குளம் அல்லது கிணற்றால் பரிமாறப்படும் நோக்கங்கள் {தேவைகள்} அனைத்தும், விரிந்து, சுற்றிலும் படர்ந்திருக்கும் ஒரு பெரும் நீர்பரப்பாலும் செய்யப்படும்; அதேபோல, வேதங்கள் அனைத்தாலும் பரிமாறப்படும் நோக்கங்கள் எதுவாக இருந்தாலும், அவை அனைத்தும் (தன்னைப் பற்றி அல்லது பிரம்மத்தைப் பற்றிய) அறிவைக் கொண்ட அந்தணனால் அடையப்படும் [8]. 2:46
குளம் அல்லது கிணற்றால் பரிமாறப்படும் நோக்கங்கள் {தேவைகள்} அனைத்தும், விரிந்து, சுற்றிலும் படர்ந்திருக்கும் ஒரு பெரும் நீர்பரப்பாலும் செய்யப்படும்; அதேபோல, வேதங்கள் அனைத்தாலும் பரிமாறப்படும் நோக்கங்கள் எதுவாக இருந்தாலும், அவை அனைத்தும் (தன்னைப் பற்றி அல்லது பிரம்மத்தைப் பற்றிய) அறிவைக் கொண்ட அந்தணனால் அடையப்படும் [8]. 2:46
[8] "பல்வேறு மொழிபெயர்ப்பாளர்களால் இந்த ஸ்லோகம் பலவிதங்களில் பொருள் கொள்ளப்படுகிறது. உத்யோக பர்வம் சனத்சுஜாதீயத்தில் (உத்யோக பர்வம், பகுதி 45) தோன்றுவதே இது. ஸ்ரீதரர், சங்கரர் (இவர்களுடன் ஆனந்தகிரியையும் குறிப்பிடுவேன்) ஆகியோர் இவ்வழியிலேயே இதை விளக்குகின்றனர். சுருக்கமாகச் சொல்வதென்றால் இதன் பொருள், குளிக்கவோ, குடிக்கவோ {தாகம் தணிக்கவோ} விரும்பும் மனிதன் ஒருவன், விரிவான பகுதியை ஆக்கிரமித்திருக்கும் ஒரு பெரிய நீர்த்தேக்கத்தின் பயனை குளத்திலோ, கிணற்றிலோ, காண்பது போலவே, அறிவுபெற்ற பிராமணன் ஒருவனுக்கு (பிறப்பால் பிராமணன் என்றில்லாமல் பிரம்மத்தை அறிந்தவனான அவனுக்கு), வேதங்கள் அனைத்தாலும் கிடைக்கக்கூடியவற்றை {கல்வியை}, (தன்னையோ, பிரம்மத்தையோ குறித்த) அவனது அறிவே கற்பித்துவிடும். {அறிவு பெற்ற பிராமணன் ஒருவனுக்கு, வேதங்கள் அனைத்தாலும் கிடைக்கக்கூடியவற்றை, அவனது அறிவே கற்பித்துவிடும்}. நீலகண்டர் இதை வேறு வழியில் விளக்குகிறார்" என்கிறார் கங்குலி. பாரதியார் "எங்கும் நீர் நிரம்பிய இடத்தில் ஒரு சிறு குட்டை என்ன பொருளுடையது; அன்ன பொருளே ஞானமுடைய பிராமணனுக்கு வேதங்களுமுடையன" என்று சொல்கிறார்.
கோயந்தகர், "பெரிய நீர்நிலைகளை அடைந்தவனுக்கு சிறிய நீர்நிலைகள் தேவையற்றுப் போவது போல் பிரம்மானந்தத்தைப் பெற்ற பிறகு, ஆனந்தத்தைப் பெறுவதற்காக வேதங்கள் தேவைப்படுவதில்லை." என்கிறார்.
பிரபுபாதர், "சிறு கிணற்றால் பூர்த்தி செய்யப்படும் தேவைகள் அனைத்தும், பெரும் நீர்த்தேக்கத்தால் உடனே பூர்த்தி செய்யப்படும். அது போலவே, வேதங்களின் நோக்கங்களெல்லாம் அவற்றிற்குப் பின்னால் உள்ள நோக்கங்களை அறிந்தவனால் அடையப்பெறும்" என்கிறார்.
கடமை {செயல்} குறித்த காரியத்தில் மட்டுமே உனக்குக் கவலை {அக்கறை} இருக்கலாம், ஆனால் அது {உனது கவலை}, அதன் (அந்தச் செயலின்} கனியில் {பலனில்} இருக்கக்கூடாது. கடமைக்கான {செயலுக்கான} நோக்கமாகப் பலன் இருக்க வேண்டாம்; அதே போல, செயலின்மையிலும் பற்றுதல் வேண்டாம். 2:47
ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, அர்ப்பணிப்பில் {யோகத்தில்} நிலைபெற்றவனாகி, வெற்றி தோல்வி மீது கொண்ட பற்றை நீக்கி {அவற்றைச் சமமாக நினைத்து}, உன்னைப் பற்றற்ற செயலில் நீ ஈடுபடுத்திக் கொள்வாயாக. இந்த உள்ளச்சமநிலையே (பக்தியே) யோகம் ஆகும். 2:48
ஓ தனஞ்சயா {அர்ஜுனா}, (பலனை விரும்பி செய்யப்படும்) செயல், அர்ப்பணிப்பை விட மிகத் தாழ்ந்ததே. நீ அர்ப்பணிப்பின் {பக்தியின்} பாதுகாப்பை நாடுவாயாக. பலனுக்காகச் செயலில் ஈடுபடுபவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள் ஆவர். 2:49
அர்ப்பணிப்பு {பக்தி} கொண்ட ஒருவன், நற்செயல்களையும் {புண்ணியங்களையும்}, தீச்செயல்களையும் {பாவங்களையும்} இவ்வுலகிலேயே விட்டுவிடுகிறான். எனவே, அர்ப்பணிப்பில் {பக்தி என்ற யோகத்தில்} உன்னை நீ பொருத்திக் கொள்வாயாக {ஈடுபடுவாயாக}. 2:50
செயல்பாடுகளில் உள்ள புத்திசாலித்தனமே அர்ப்பணிப்பு {பக்தி} ஆகும். அர்ப்பணிப்பு {பக்தி} உடைய அறிவாளி, செயலினால் உண்டாகும் பலனைத் துறந்து, (மறு) பிறவி என்ற கடமையில் இருந்து விடுபட்டு, துன்பமற்ற நிலையை அடைகிறான். 2:51
மாயை என்ற புதிரை உனது மனம் எப்போது கடக்குமோ, அப்போது, கேட்கத்தக்கது, கேட்டது ஆகியவற்றில் ஒரு கருத்தும் இல்லாத சமநிலையை நீ அடைவாய். 2:52
(வாழ்வின் பல்வேறு பொருட்களைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து) நீ (இப்பொழுது) கேட்டவற்றால், கவனந்திரும்பும் உனது மனம் எப்போது உறுதியானதாகவும், அசைவற்றதாகவும் {சஞ்சலமற்றதாகவும்} தியானத்தில் நிலைக்கிறதோ, அப்போது நீ அர்ப்பணிப்பை {பக்தி என்ற யோகத்தை} அடைவாய்" என்றான் {கிருஷ்ணன்}. 2:53
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! கேசவா {கிருஷ்ணா}, தியானத்தில் நிலைத்த மனதுடைய ஒருவனின் அறிகுறிகள் யாவை? உறுதியான மனமுடைய ஒருவன் எப்படிப் பேச வேண்டும்? அமர வேண்டும்? நகர {நடக்க} வேண்டும்?" என்று கேட்டான். 2:54
அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "ஒருவன் தனது இதயத்தின் ஆசைகள் அனைத்தையும் கைவிட்டு, எப்போது (தனது) சுயத்தால் {ஆத்மாவால்} சுயத்திலேயே {ஆத்மாவிலேயே} நிறைவு கொள்கிறானோ, அப்போது அவன் உறுதியான மனத்தை உடையவனாகச் சொல்லப்படுகிறான். 2:55
அழிவுகளுக்கு {தோல்விகளுக்கு} மத்தியிலும், எவனுடைய மனம் கலங்காமல் இருக்கிறதோ, எவனுடைய இன்ப ஏக்கம் {இன்பத்தில் உள்ள பற்று} அகன்றதோ, (உலகப் பொருள்களில் தான் கொண்ட) ஆசை, அச்சம், கோபம் ஆகியவற்றில் இருந்து எவன் விடுபடுகிறானோ, அவன் உறுதியான மனம் கொண்ட முனிவனாகச் {தியான யோகியாகச்} சொல்லப்படுகிறான். 2:56
எங்கும் பற்றில்லாதவனாக எவன் இருக்கிறானோ, ஏற்கத்தக்க மற்றும் ஏற்க இயலாத பல்வேறு பொருட்களை அடைவதால், பெருமகிழ்ச்சி எதையுமோ வெறுப்பு எதையுமோ உணராமல் எவன் இருக்கிறானோ, அவன் உறுதியான மனம் படைத்தவனாவான். 2:57
அனைத்துப் புறங்களில் இருந்தும் தனது உறுப்புகளைப் உள்வாங்கிக் கொள்ளும் ஆமையைப் போல, எப்போது ஒருவன் தனது புலன்களை, (அதற்குரிய) புலன்நுகர் பொருட்களில் இருந்து விலக்கிக் கொள்கிறானோ, அப்போது அவன் உறுதியான மனம் படைத்தவன் ஆகிறான். 2:58
புலன்நுகர் பொருட்கள், அவற்றைத் தவிர்க்கும் மனிதனிடம் இருந்து விலகுகின்றன. ஆனால் (அந்தப் பொருட்களின் மீதுள்ள) ஆசை விலகுதில்லை. {அப்படிப்பட்ட} அந்த ஆசையே கூட, பரமாத்மாவைக் கண்ட ஒருவனிடம் இருந்து விலகுகிறது [9]. 2:59
[9] "விரும்பியோ அல்லது இன்ப நுகர் பொருட்களை அடைவதில் உள்ள தனது இயலாமையாலோ ஒருவன், இன்பநுகர் பொருட்களில் இருந்து விலகலாம். எனினும், இன்பம் நுகர்வதில் உள்ள ஆசை அடங்கும் வரை, ஒருவன் உறுதியான மனத்தை அடைந்து விட்டான் என்று சொல்ல முடியாது" என்கிறார் கங்குலி.
ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, புலன்களில் இருந்து தன்னை விலக்கி வைத்துக் கொள்ளக் கடினமாக முயற்சி செய்யும் அறிவுடைய மனிதன் ஒருவனின் மனத்தைக் கூட, கிளர்ச்சியடையக் கூடிய அந்தப் புலன்கள், தங்களை நோக்கி வலுக்கட்டாயமாக இழுத்துவிடுகின்றன. 2:60
அவை {புலன்கள்} அனைத்தையும் கட்டுப்படுத்தி, என்னையே {பரமாத்மாவையை} ஒரே புகலிடமாக {அடைக்கலமாகக்} கொண்டு, ஒருவன் தியானத்தில் நிலைக்க வேண்டும். ஏனெனில், எவனுடைய புலன்கள் கட்டுப்பாட்டில் உள்ளனவோ, அவனுடைய மனமே உறுதியானதாகும். 2:61
![]() |
புலன்நுகர் பொருட்களுக்கு அடிமையாகும் மனிதன் |
பற்றுதலில் இருந்து {ஆசை, ஆசையில் இருந்து} கோபம் முளைக்கிறது;
கோபத்தில் இருந்து பாகுபாடு {மயக்கம்} எழுகிறது;
பாகுபாட்டினால் {மயக்கத்தினால்} நினைவு இழப்பு ஏற்படுகிறது;
நினைவு இழப்பால் அறிவு இழப்பும் ஏற்படுகிறது;
அறிவு இழப்பால் (அவன்) முற்றிலுமாகவும் அழிகிறான். 2:62-63
ஆனால், புலனடக்கத்தின் மூலம் பற்று மற்றும் வெறுப்பில் இருந்து விடுபட்டவனான சுயக்கட்டுப்பாடு கொண்ட மனிதன், தனது புலன்களால், (புலன்நுகர்) பொருட்களை அனுபவித்துக் கொண்டே (மன) அமைதியை அடைகிறான். 2:64
(மனம்) அமைதியை அடைவதால், அவனது துன்பங்கள் அனைத்தும் அழிவை அடைகின்றன. அதனால், அமைதியான இதயம் கொண்ட அவனது மனம் விரைவில் உறுதியடைகிறது. 2:65
எவன் சுயக்கட்டுப்பாடு இல்லாதவனோ, அவன் (சுயத்தைக் {ஆத்மாவைக்} குறித்த) சிந்தனையை அடைவதில்லை {தியானிப்பதில்லை}. எவன் சிந்திப்பதில்லையோ {தியானிப்பதில்லையோ}, அவன் (மன) அமைதி கொள்வதில்லை. (மன) அமைதி இல்லாதவனுக்கு எப்படி மகிழ்ச்சி ஏற்படும்? 2:66
(புலன் நுகர் பொருட்களுக்கு மத்தியில்) அலைபாயும் {ஒரு} புலனைத் தொடர்ந்து செல்லும் இதயம் {மனம்}, நீர்நிலையில் உள்ள படகை அழிக்கும் காற்றைப் போல, அவனது அறிவை {புத்தியை} அழித்துவிடும். 2:67
எனவே, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, புலன் நுகர் பொருட்களில் இருந்து அனைத்துப்புறங்களிலும் கட்டுப்படுத்தப்பட்ட புலன்களைக் கொண்டவனின் மனமே உறுதியானதாகும். 2:68
எப்போது அனைத்து உயிர்களுக்கும் இரவாக இருக்கிறதோ, அப்போது சுயக்கட்டுப்பாடுடைய {புலனடக்கமுடைய} ஒரு மனிதன் விழிப்புடன் இருக்கிறான்; எப்போது பிற உயிரினங்கள் விழித்திருக்கின்றவோ, அப்போது பகுத்தறிவு உள்ள ஒரு முனிவனுக்கு அஃது இரவாக இருக்கிறது [10]. 2:69
[10] "ஆன்ம இருளில் உள்ள மோசமானவர்கள் உலக நாட்டங்களில் ஈடுபடுகின்றனர். ஆன்ம வெளிச்சத்தில் உள்ள ஒரு முனிவன் அவர்களுக்கு இறந்தவனாகத் தெரிவான் என்று மேற்கண்ட ஸ்லோகத்தை அடிக்குறிப்பில் விளக்குகிறார் கங்குலி.
தொடர்ந்து நிரப்பப்பட்டுக் கொண்டேயிருந்தாலும், நீரின் அளவில் மாற்றமில்லாத கடலுக்குள் புகும் {ஆறுகளின்} நீரைப் போல, எவனிடம் ஆசைக்குகந்த பொருட்கள் நுழைகின்றனவோ, அவன் அமைதியான (மனத்தை) அடைகிறானேயன்றி, ஆசைப் பொருட்களுக்காக ஏங்குபவன் {அந்த மன அமைதியை} அடைவதில்லை. 2:70
ஆசைப் பொருட்கள் அனைத்தையும் கைவிட்டு, (இன்பங்களை அடையும்) ஏக்கத்தில் {ஆசை} இருந்து விடுபட்டு, பற்றோ, செருக்கோ இல்லாமல் திரியும் மனிதனே அமைதியை அடைகிறான். 2:71
ஓ! பார்த்தா {அர்ஜுனா}, இதுவே தெய்வீக நிலையாகும். அதை {அந்நிலையை அடைந்தவன்} மயக்கத்தை {குழப்பத்தை} எப்போதும் அடைவதில்லை. அதில் நிலைத்திருக்கும் ஒருவன் மரணிக்கும்போது, பிரம்மத்தால் கவரப்படுகிறான் {உறிஞ்சப்படுகிறான் / உடல் அற்ற ஆன்மாவாக நிர்வாணமடைகிறான்}. 2:72
செயலில் அறம் - கர்மயோகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 027
Virtue in work - Karma Yoga ! | Bhishma-Parva-Section-027 | Mahabharata In Tamil
(பகவத்கீதா பர்வம் – 15) {பகவத் கீதை - பகுதி 3}
பதிவின் சுருக்கம் : பரிந்துரைக்கப்பட்ட கடமைகளின் செயல்பாட்டை, அதன் பலன்களின் மீது பற்றில்லாமல் செய்வதான கர்ம யோகமே அர்ஜனனுக்கான சரியான செயல்வழியாக இருக்கும் என்பதை அர்ஜுனனுக்குக் கிருஷ்ணன் சொல்வது...
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்} சொன்னான், "ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, செயலைவிட அர்ப்பணிப்பே {பக்தியே, ஞானமே} மேன்மையானதாக உன்னால் கருதப்பட்டால், ஓ! கேசவா {கிருஷ்ணா}, இத்தகு பயங்கரச் செயலில் என்னை ஏன் நீ ஈடுபடுத்துகிறாய்? 3:1
சிலேடைகளால் {இருபொருள் கொண்ட [அ] தெளிவற்ற வார்த்தைகளால்} நீ எனது அறிவைக் {புத்தியைக்} குழப்புவதாகத் தெரிகிறது. எனவே, நான் நன்மையை அடையும்படி நிச்சயமான ஒன்றை மட்டும் (எனக்குச்) சொல்வாயாக" என்றான் {அர்ஜுனன்}. 3:2
அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "ஓ! பாவமற்றவனே {அர்ஜுனா}, இங்கே இவ்வுலகில் இருவகை அர்ப்பணிப்புகள் {நம்பிக்கைகள்} இருக்கின்றன என்று என்னால் ஏற்கனவே சொல்லப்பட்டது; சாங்கியர்கள் அறிவின் மூலமும், {கர்ம} யோகிகள் செயலின் மூலமும் அவற்றை ஏற்கின்றனர். 3:3
செயல்படாமல் இருப்பதால் (மட்டும்), ஒரு மனிதன் செயலில் இருந்து விடுபட்டுவிடுவதில்லை. அதேபோல, (செயலைத்) துறப்பதால் மட்டுமே அவன் இறுதி விடுதலையை {முக்தியை} அடைந்துவிடுவதில்லை. 3:4
செயல்படாமல் யாராலும் ஒருக்கணம்கூட இருக்க முடியாது. {இயற்கையான குணங்களே அனைத்து உயிர்களையும் அவசரமாகச் செயல்புரிய வைக்கின்றன}[*]. 3:5
[*] அடைப்புக்குறிக்குள் இருக்கும் வாக்கியம் கங்குலியில் விடுபட்டுள்ளது.
புலன் உறுப்புகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, மனதால் புலன் நுகர் பொருட்களை நினைத்துக் கொண்டே வாழும் மூட ஆத்மா கொண்ட மனிதன், நடிகன் {உண்மையை மறைக்கும் போலியானவன்} என்று அழைக்கப்படுகிறான். 3:6
எனினும், ஓ! அர்ஜுனா, மனத்தின் மூலம் (தனது) புலன்களைக் கட்டுப்படுத்தும் ஒருவன், செயல் உறுப்புகளைக் {கர்மேந்திரியங்களான செயற்பொறிகளைக்} கொண்டு, செயலின் (வடிவில்) அர்ப்பணிப்புடன் {கர்ம யோகத்தில்} பற்றில்லாமல் ஈடுபட்டால், அவன் (அனைத்துக்கும் மேலாக) சிறப்படைவான். 3:7
(எனவே), {விதிக்கப்பட்ட} செயலில் உன்னை நீ எப்போதும் ஈடுபடுத்திக் கொள்வாயாக. ஏனெனில், செயலின்மையைவிடச் செயலே சிறந்தது. செயலில்லாமல் உனது உடலைக் கூட உன்னால் தாங்கிக் {பராமரித்துக்} கொள்ள முடியாது. 3:8
இவ்வுலகில், வேள்விக்கான (நிகழ்த்தப்படும்) செயலைத் தவிர, மற்ற அனைத்து செயல்களும் {பற்றுதலில்} பிணைக்கப்பட்டவையாகும் {கர்ம பந்தம் கொண்டவையாகும்}. (எனவே), ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, அதற்காகவே, பற்றைக் களைந்து செயல்புரிவாயாக. 3:9
பழங்காலத்தில், படைப்புத் தலைவன் {பிரம்மன்} மனிதர்களையும், வேள்வியையும் ஒன்றாகப் படைத்து, "இதனால் (இந்த வேள்வியால்) பெருகுவீராக. இந்த (வேள்வி) உங்கள் விருப்பங்கள் அனைத்தையும் ஈடேற்றுவதாக இருக்கட்டும். 3:10
இதைக் {வேள்வியைக்} கொண்டு தேவர்களை வளர்ப்பீராக. (பதிலுக்கு) தேவர்களும் உங்களை வளர்க்கட்டும். இருதரப்பு நலன்களையும் இப்படியே நிறைவேற்றும் நீங்கள், (உங்களுக்கு) நன்மையானதையே அடைவீராக. 3:11
வேள்வியால் நிறைவடைந்த தேவர்கள், நீங்கள் விரும்பும் இன்பங்களை அளிப்பார்கள். அவர்களால் கொடுக்கப்பட்டதை (தானே) அனுபவித்துக் கொண்டு, அவர்களுக்கு {தேவர்களுக்குக் காணிக்கையின் மூலம்} கைம்மாறு செய்யாதவன் நிச்சயமாகத் திருடனே ஆவான்" என்றான் {பிரம்மன்}. 3:12
வேள்விகளில் எஞ்சுவதை உண்ணும் நல்லோர் {சான்றோர்} பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபடுகிறார்கள். தங்களுக்காக மட்டுமே உணவை சமைக்கும் அநீதியாளர்கள் பாவத்தையே ஈட்டுகின்றனர். 3:13
உணவில் இருந்தே அனைத்து உயிரினங்களும் உண்டாகின்றன; {மழையால் உணவு தோன்றுகிறது; மழை வேள்வியால் உண்டாகிறது}; வேள்வி என்பது செயலின் வெளிப்பாடாகும். 3:14.
வேதங்களில் {அதாவது பிரம்மத்தில்} இருந்தே செயல் தொடங்கியது என்பதை அறிவாயாக; சிதைவிலாதவனிடம் {பரமாத்மாவிடம்} இருந்தே வேதங்கள் தொடங்கின {பிரம்மம் உண்டாகியது}. எனவே, எங்கும் படர்ந்தூடுருவியிருக்கும் பிரம்மம் வேள்விகளில் நிறுவப்படுகிறது [**]. 3:15
[**] மேற்கண்ட சுலோகத்தின் மூலம் வேதங்கள் பிரம்மத்தில் இருந்து உண்டானவை. பிரம்மத்தோடு இருந்தவை என்று நிறுவப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
ஓ! பார்த்தா {அர்ஜுனா}, இப்படிச் சுழலன்று கொண்டிருக்கம் {மேற்கண்ட படைப்பு} சக்கரத்தை இவ்வுலகில் பின்பற்றாதவனும், தனது புலன்களில் (ஈடுபட்டு) மகிழ்ந்து பாவ வாழ்வு வாழ்பவனுமான மனிதன் வீணாகவே வாழ்கிறான். 3:16
எனினும், தன்னில் {சுயமான ஆத்மாவில்} மட்டுமே பற்றுடையவன் {தன்னில் ஒளிர்பவன்}, தன்னில் மனநிறைவு கொள்பவன் மற்றும் தன்னிலே மகிழ்பவனான மனிதனுக்கு (செய்வதற்கு) செயல் {வேலை} எதுவும் கிடையாது. 3:17
செயலாலோ, செயலின்மையாலோ அவனுக்கு எந்தக் கவலையும் இல்லை. அதே போல, அனைத்து உயிரினங்களிடமும் அவனுடைய {அப்படிப்பட்ட} பயனும் சார்ந்திருப்பதில்லை. {எந்தவிதப் பயனையும் அவன் கருதுவதில்லை; எந்த உயிரையும் அவன் சார்ந்திருப்பதில்லை} [1]. 3:18
[1] விரிவுரையாளர்களால் விளக்கப்படுவது போல, அத்தகு மனிதன் செயலால் புண்ணியத்தையோ, செயலின்மையால் அல்லது செயலைத் தவிர்ப்பதால் பாவத்தையோ அடைவதில்லை. உயர்ந்த உயிரினத்தில் இருந்து இழிந்த உயிரினம் வரை, அவற்றில் எதுவும் வேறு எதையும் சார்ந்திருப்பதில்லை என்றே இங்குப் பொருள்படுகிறது என்கிறார் கங்குலி.
எனவே, செய்யப்பட வேண்டிய செயலை {செயலின் பலனில்} பற்றில்லாமல் எப்போதும் செய்வாயாக. பற்றில்லாமல் செயல்புரியும் மனிதன் பரம்பொருளை அடைகிறான். 3:19
செயலால் மட்டுமே ஜனகரும், பிறரும் தங்கள் நோக்கங்களை அடைந்தனர். தங்கள் கடமைகளைச் செய்யும் மனிதர்களைக் கருதிப்பார்த்து, {உலகிற்குக் கற்பிப்பதற்காக}, செயல்படுவதே உனக்குத் தகும். 3:20
பெரும் மனிதன் ஒருவன் {உயர்ந்தோன்} செய்வதை எல்லாம், இதர மக்களும் செய்கிறார்கள் {பின்பற்றுகிறார்கள்}. அவர்களால் (பெரும் மனிதர்களால்) அமைக்கப்பட்ட {நிர்ணயிக்கப்பட்ட} குறிக்கோள்களையே சாதாரண மனிதர்கள் பின்பற்றுகிறார்கள் [2]. 3:21
[2] இங்கே குறிப்பிடப்படும் Itaras "இதரர்" என்ற சொல் "பிறர்" என்ற பொருளைத் தராது; இழிந்தவர்கள் என்ற பொருளையே இங்குத் தரும் என்கிறார் கங்குலி. ஆனால் தாழ்ந்தோர் எனப் படிப்பதைவிட இங்கே இதர மக்கள் என்று படிப்பதே சிறப்பு. பல உரைகள் இதரர் என்றே இருக்கின்றன. பாரதியும் இங்கு "மற்ற மனிதர்கள்" என்றே குறுப்பிடுகிறார். தத்வவிவேசனீ "ஏனையோர்" என்று சொல்கிறது. பிரபுபாதர் "பொதுமக்கள்" என்று சொல்கிறார். எனவே இங்கு நான் கங்குலி சொல்வதில் இருந்து மாறுபட்டே மொழிபெயர்த்திருக்கிறேன்.
ஓ! பார்த்தா {அர்ஜுனா}, (என்னால்) அடையப்படாத எதுவும் இல்லாததால் {நான் அனைத்தையும் அடைந்திருப்பதால்}, மூன்று உலகிலும் நான் செய்ய வேண்டியது எதுவுமில்லை. ஆயினும்கூட நான் செயலில் ஈடுபடுகிறேன். 3:22
எந்நேரத்திலும் நான் சோம்பலில்லாமல் செயலில் ஈடுபடுகிறேன். ஏனெனில், ஓ! பார்த்தா, அனைத்துப் புறங்களில் இருந்தும் எனது வழியை மனிதர்கள் பின்பற்றுவார்கள். 3:23
நான் செயல்படவில்லையெனில் உலகங்கள் சீர்குலைந்துவிடும். மேலும் அதனால் {அந்தச் சீர்குலைவால்} கலப்பை ஏற்படுத்தி, நானே இந்த மக்களை அழிக்க காரணமாக வேண்டியிருக்கும். 3:24
[3] saṅkarasya kartā "ஸங்கரஸ்ய கர்தா" என்றே இருக்கிறது. கங்குலியோ இங்கே சாதிகளில் கலப்பை ஏற்படுத்தி என்று சொல்கிறார். சாதிகள் என்ற சொல் மூலத்தில் இல்லை. இதற்குப் பாரதியார் "குழப்பத்தை ஆக்கியோன்" என்று உரை பெயர்த்திருக்கிறார். தத்வவிவேசனீ "சீர்குலவை ஏற்படுத்தி" என்கிறது. பிரபுபாதர், "தேவையற்ற ஜனங்கள் தோன்றுவதற்குக் காரணமாவேன்" என்று பெயர்த்திருக்கிறார். இந்த சுலோகத்தின் ஆங்கில வரியின் பொருளை மூலத்தோடு ஒப்பிட்டு, மேலும் நான்கு புத்தகங்களுடனும் ஒப்பிட்டு, கங்குலின் மொழிபெயர்ப்பில் தெரிந்த பொருள் மாறுதலை மட்டுமே நான் இங்கு திருத்தியிருக்கிறேன்.
ஓ! பாரதா {அர்ஜுனா}, அறியாமை கொண்டோர், பயனில் பற்றுடன் எப்படிச் செயல்படுகிறார்களோ, அப்படியே அறிவுடைய ஒருவன், மனிதர்களைத் தங்கள் கடமைகளை நோற்க வைக்க {மக்களைச் சரியான பாதையில் நடக்க வைக்க}, பயனில் பற்றில்லாமல் செயல்பட வேண்டும். 3:25
செயலில் {செயலின் பலனில்} பற்றுடையோரும், அறியாமை கொண்டோருமான மனிதர்களுக்கு மத்தியில், அறிவில் {புத்தியில்} குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது; (மறுபுறம்) அர்ப்பணிப்புடன் செயல்படும் அவன் {அறிஞன்}, அவர்கள் அனைவரையும் {அறியாதோரை} அனைத்து (வகை) வேலைகளிலும் ஈடுபடுத்த வேண்டும். 3:26
அனைத்து செயல்களும், எல்லா வழியிலும் இயற்கையின் குணங்களுடனேயே செய்யப்படுகின்றன. எனினும், ஆணவத்தில் மயங்கிய மனம் கொண்ட ஒருவன் {அஞ்ஞானி}, தன்னைத்தானே செயல்படுபவனாகக் கருதிக் கொள்கிறான். {செயலைத் தானே செய்ததாக நினைத்துக் கொள்கிறான்}. 3:27
ஆனால், ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, குணம், செயல்பாடு ஆகியவற்றில் (தனது = ஆத்மாவின்) வேறுபாடுகளை அறிந்தவன் எவனோ, அவன் தனது புலன்கள் மட்டுமே அவற்றின் நோக்கங்களில் ஈடுபடுகின்றன (தான் என்ற ஆத்மா அல்ல) என்று கருதி, அச்செயலில் பற்று கொள்வதில்லை [4]. 3:28
[4] "சுலோகத்தின் இரண்டாவது வரியில் உள்ள மூலச் சொற்களின்படி, "குணங்கள் குணங்களில் ஈடுபடுவதாக எண்ணி" என்றே பொருள் வரும். இதில் முதலில் சொல்லப்படும் குணங்கள் "புலன்கள்" என்பதையும், இரண்டாவது சொல்லப்படும் குணங்கள் "புலன்நுகர் பொருட்கள்" என்பதையுமே இங்குக் குறிக்கின்றன. இங்கே கருத்து என்னவென்றால், "குறிப்பிடப்படும் அவற்றின் வேறுபாட்டை அறிந்த ஒருவன், தனது ஆன்மா செயல்படுகிறது என எப்போதும் நினைக்க மாட்டான். ஏனெனில், புலன்கள் தங்களுக்குரிய பொருட்களில் ஈடுபடுவதன் விளைவே செயலாகும்" என்கிறார் கங்குலி. இங்கே பிரபுபாதர் கங்குலிக்கு இசைவாகவும், பாரதியாரும், கோயந்தகரும் "குணங்கள் குணங்களில் ஈடுபடுகின்றன" என்றும் பெயர்த்திருக்கிறார்கள்.
இயற்கையின் குணங்களால் மயங்கியோர், குணங்களால் செய்யப்பட்ட செயல்களில் பற்றுதலைக் கொள்கிறார்கள். சரியான அறிவு கொண்ட ஒருவர், நிறைவற்ற அறிவு கொண்ட அவர்களைக் {பற்றுதல் கொள்பவரைக்} குழப்பக் கூடாது. 3:29
தன்னில் {ஆத்மாவில்} செலுத்தப்பட்ட (உனது) மனத்தால் அனைத்து செயல்களையும் எனக்கே அர்ப்பணித்து, உனது (இதயத்தின்) பலவீனம் அகன்று, ஆசை, பற்று ஆகியவை இல்லாமல் போரில் ஈடுபடுவாயாக [5]. 3:30
[5] "அனைத்து செயல்களையும் எனக்கே அர்ப்பணித்து" என்பது, "நீ செய்யும் அனைத்தைம் எனக்காகவே செய்கிறாய் என்று நம்பிக்கையுடன்" என்ற பொருளைத் தரும் என்கிறார் கங்குலி.
அற்பத் தடைகளை எழுப்பாமல், நம்பிக்கையுடன், எனது இந்தக் கருத்தை எப்போதும் பின்பற்றும் மனிதர்கள், செயலின் மூலமே {கர்ம பந்தத்திலிருந்து = செயல் பற்றிலிருந்து} இறுதி விடுதலையை {முக்தியை} அடைந்துவிடுகிறார்கள். 3:31
ஆனால், அற்பத்தடைகளை ஏற்படுத்தி, இந்த எனது கருத்தைப் பின்பற்றாதவர்களோ, பாகுபாடு ஏதுமில்லாமல், அறிவனைத்தையும் இழந்தவர்களாகி அழிகிறார்கள் என்பதை அறிவாயாக. 3:32
அறிவுடைய ஒரு மனிதன், தனது சொந்த இயல்பின் படி செயல்புரிகிறான். அனைத்து உயிரினங்களும் (தங்கள்) இயல்புகளையே பின்பற்றுகின்றன {தன்வசமின்றி செயல்புரிகின்றன}. எனவே, கட்டுப்பாட்டால் என்ன சாதிக்க முடியும்? 3:33
புலன்கள், தங்களுக்குரிய புலனுகர் பொருட்களின் மீது நிலைத்த பற்றையோ, வெறுப்பையோ கொண்டிருக்கின்றன. ஒருவனின் பாதையில் தடைகளாக இருக்கும் இவற்றுக்கு ஒருவன் அடிபணியக் கூடாது. 3:34
குறையோடு செய்யப்பட்டாலும், ஒருவனது சொந்த கடமை {ஸ்வதர்மம் = தன்னறம்}, வேறொருவரால் சரியாகச் செய்யப்படும் செயலை விடச் {பரதர்மத்தைவிட = அயலறத்தைவிட} சிறந்ததே ஆகும். ஒருவனது சொந்த கடமையில் (செயல்படுகையில்} ஏற்படும் மரணம் விரும்பத்தக்கதே. மற்றொருவனின் கடமை (அதைப் பின்பற்றினால், அது), அச்சத்தையே (அதனுடன்) சுமந்து வருகிறது. {தன்னறத்தில் ஈடுபடுகையில் இறப்பதே மேல். அயலறம் அச்சத்தையே தரும்}" என்றான் {கிருஷ்ணன்} [6]. 3:35
[6] நன்றாகச் செய்யப்படும் அந்நிய தர்மத்தைக் {அயலறத்தைக்} காட்டிலும் குறையோடிருப்பினும் சுயதர்மமே {தன்னறமே} ஒருவனுக்குச் சிறந்தது. சுயதர்மத்தில் {தன்னறத்தில்} ஈடுபட்டு ஒருவன் இறந்தாலும் அது மேன்மையானதே. ஆனால், அந்நிய தர்மத்தைப் பின்பற்றினால் விளைவது அச்சம் நிறைந்த பயங்கரமே என்பதே இங்குப் பொருள்.
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! விருஷ்ணி குலத்தின் மகனே {கிருஷ்ணா}, விருப்பமில்லாவிட்டாலும், ஏதோ ஒரு சக்தியால் வற்புறுத்தப்படுவதைப் போல, யாருடைய {எதனுடைய} தூண்டுதலால் ஒரு மனிதன் பாவத்தைச் செய்கிறான்?" என்றான் {அர்ஜுனன்}. 3:36
அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "பேராசையின் பண்பால் உண்டானவையான ஆசை {காமம்} அது; கோபம் {குரோதம்} அது. {ரஜோ குணத்தில் பிறந்த காமக்குரோதமே அது}; அனைத்தையும் விழுங்குவதும், பெரும் பாவமுமான இதையே இவ்வுலகில் எதிரிகளாக அறிவாயாக [7]. 3:37
[7] நிறைவேறாத ஆசை, கோபத்தில் முடிகிறது. இப்படியே விரிவுரையாளர்கள் சொல்கிறார்கள் என்று சொல்கிறார் கங்குலி.
நெருப்பானது புகையாலும், கண்ணாடியானது தூசியாலும், கருவானது கருவறையாலும் மறைக்கப்படுவதைப்போல, இது {அறிவு} விருப்பத்தால் {எதிரியான காமக்குரோதத்தால்} மறைக்கப்பட்டிருக்கிறது. 3:38
ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, நெருப்பைப் போலவே நிறைவடையாத ஆசையின் {காமத்தின்} வடிவில் இருக்கும் நிலையான எதிரியான இதுவே {ஆசையும் கோபமுமே} அறிவாளிகளின் அறிவை மறைக்கின்றது. 3:39
புலன்கள், மனம் மற்றும் அறிவு ஆகியனவே இதன் {ஆசை மற்றும் கோபத்தின்} வசிப்பிடங்களாகச் சொல்லப்படுகின்றன. இவற்றைக் கொண்டே அஃது (ஒருவனது) அறிவை மறைத்து, பண்புருவமான தன்னியல்பை {உருவமேற்ற ஆத்மாவின் சுயத்தை = ஜீவாத்மாவை} மயக்குகிறது. 3:40
எனவே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனா}, முதலில் (உனது) புலன்களைக் கட்டுப்படுத்தி, இந்தப் பாவத்தைக் கைவிடுவாயாக {அழிப்பாயாக}. ஏனெனில், இது கல்வியாலும், தியானத்தாலும் அடையப்பட்ட அறிவை அழிக்கிறது. 3:41
(செயல்திறனற்ற இந்த உடலைவிட) புலன்களே உயர்ந்தவை எனச் சொல்லப்படுகிறது. புலன்களைவிட உயர்ந்தது மனமாகும். மனத்தைவிட உயர்ந்தது அறிவாகும். ஆனால் அந்த அறிவையும் விட உயர்ந்தது அதுவாகும் {ஆத்மாவாகும்} [8]. 3:42
[8] இங்கே பரமாத்மா என்றும் பொருள் கொள்ளலாம் என்று சொல்கிறார் கங்குலி.
ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, இப்படியே அறிவை விட உயர்ந்ததை {ஆத்மாவை} அறிந்து கொண்டு, (உனது) தன்னிலையை {சுயத்தை} தன்னிலையாலேயே கட்டுப்படுத்தி, வெல்வதற்குக் கடினமானதும், ஆசை என்ற வடிவத்திலானதுமான எதிரியைக் கொல்வாயாக {கைவிடுவாயாக}" என்றான் {கிருஷ்ணன்}. 3:43
அறிவறம் - ஞானகர்மசந்யாசயோகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 028
The Religion of Knowledge - Gnana–Karma-Sanyasa yoga ! | Bhishma-Parva-Section-028 | Mahabharata In Tamil
(பகவத்கீதா பர்வம் – 16) {பகவத் கீதை - பகுதி 4}
பதிவின் சுருக்கம் : பக்தர்களைக் காக்கவும், தீயவர்களை அழிக்கவும் எப்போதும் யோகத்தைக் கற்பித்துக் கொண்டு, பல பிறவிகளின் மூலம் தான் வாழ்ந்து வருவதைக் கிருஷ்ணன் வெளிப்படுத்துவது; உண்மையை அறிந்த அறிவாளி ஒருவரை ஆசானாக ஏற்பதன் முக்கியத்துவத்தைக் கிருஷ்ணன் வலியுத்துவது....
அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "இந்த அழிவற்ற அர்ப்பணிப்பை (பக்தி முறைமையை) [1] {யோகத்தை} நான் விவஸ்வானுக்கு {சூரியனுக்கு} அறிவித்தேன்: விவஸ்வான் {சூரியன்} மனுவுக்கு அறிவித்தான்; மனு இக்ஷ்வாகுவுக்குச் சொன்னான். 4:1
[1] இங்கு மூலத்தில் "யோகம்" என்ற சொல் கையாளப்பட்டிருக்கிறது. யோகம் என்பது பக்தி யோகத்தைச் சுட்டுகிறது போலும். அதனாலேயே கங்குலி a system of devotion என்று இங்கே சொல்கிறார்.
தலைமுறை தலைமுறையாக இப்படிப் பெறப்பட்டதால், அரசமுனிகள் இஃதை அறிய வந்தார்கள். ஆனால், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {அர்ஜுனா}, காலப்போக்கில் அந்த அர்ப்பணிப்பு {யோகம்} இவ்வுலகில் தொலைந்து போனது. 4:2
அதே அர்ப்பணிப்புதான் (பக்திமுறைமைதான்) {யோகம்தான்} இன்று என்னால் உனக்கு அறிவிக்கப்படுகிறது. ஏனெனில், நீ என்னிடம் அர்ப்பணிப்பு கொண்டவனாகவும் {எனது பக்தனாகவும்}, எனது தோழனாகவும் இருக்கிறாய். (மேலும்) இதுவோ {இந்த யோகமோ} பெரும்புதிராக இருக்கிறது" என்றான் {கிருஷ்ணன்}. 4:3
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "உனது பிறப்போ பிந்தையது; விவஸ்வானின் {சூரியனின்} பிறப்போ முந்தையது. அப்படியிருக்கையில், நீயே (அதை) முதலில் அறிவித்தாய் என்பதை நான் எப்படிப் புரிந்து கொள்வது?" என்று கேட்டான். 4:4
அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "ஓ! அர்ஜுனா, என்னுடைய பல பிறவிகள் கடந்தவிட்டன; உனக்கும் அப்படியே {பல கடந்துவிட்டன}. இவை அனைத்தையும் நான் அறிவேன், ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {அர்ஜுனா}, நீயோ அதை அறிய மாட்டாய். 4:5
(நான்) பிறப்பற்றவனாகவும், அழிவறியாதவனாகவும் இருப்பினும்; அனைத்து உயிரினங்களின் தலைவனாக (நான்) இருப்பினும், எனது (மூலப்பொருளின்) இயல்பின் படி {பிரகிருதியில் நிலைத்து}, என் மாயையால் (சக்தியால்) {ஆத்மமாயையால்} பிறப்பை அடைகிறேன். 4:6
ஓ! பாரதா {அர்ஜுனா}, அறம் {தர்மம்} அழிந்து, மறம் {அதர்மம்} எழுச்சியடையும்போதெல்லாம் நான் என்னை தோற்றுவித்துக் கொள்கிறேன் [2]. 4:7
[2] இது மிக முக்கியமான ஸ்லோகமாகும். மூலத்தில் இது "யதா யதா ஹி தர்மஸ்ய க்லாநிர்பவதி பாரத| அப்யுத்தாநமதர்மஸ்ய ததாத்மாநம் ஸ்ருஜாம்யஹம் ||4-7||" என்று இருக்கிறது. இதற்குப் பாரதியாரின் உரை "பாரதா, எப்போதெப்போது தர்மம் அழிந்துபோய் அதர்மம் எழுச்சி பெறுமோ, அப்போது நான் என்னைப் பிறப்பித்துக் கொள்ளுகிறேன்" என்று சொல்கிறது. மூலத்தில் தர்மம் அதர்மம் குறித்துப் பேசப்படுவது கண்கூடாகத் தெரிகிறது. எனவே, கங்குலி பயன்படுத்தியிருக்கும் Piety {பக்தி}, Impiety {பக்தியின்மை} என்பனவற்றை அறம், மறம் என்றே நாம் எடுத்துக் கொள்ளலாம். அச்சொற்களுக்கு அகராதியில் அப்படியும் பொருள் உண்டு.
நல்லவர்களைப் பாதுகாக்கவும், தீவினையாற்றுவோரை அழிக்கவும், அறத்தை நிறுவும் பொருட்டும், காலந்தோறும் {யுகந்தோறும்} நான் பிறப்பெடுக்கிறேன். 4:8
இப்படியே எனது தெய்வீகப் பிறப்பையும், செயலையும் உண்மையாக அறியும் ஒருவன், (தனது உடலைத்) துறந்த பின் மீண்டும் பிறப்பதில்லை {பிறப்பை அடைவதில்லை}; (மறுபுறம்), ஓ! அர்ஜுனா, அவன் என்னிடமே வருகிறான் {அவன் என்னையே அடைகிறான்}. 4:9
ஆசை, அச்சம், கோபம் ஆகியவற்றில் இருந்து விடுபட்டவர்களும், முழுதும் நானாகவே இருந்தவர்களும், என்னையே நம்பி இருந்தவர்களும் ஆகிய பலர், அறிவு மற்றும் தவத்தால் தூய்மையடைந்து, எனது இயல்பை அடைந்திருக்கிறார்கள். 4:10
எந்தெந்த வழிமுறைகளில் எல்லாம் மனிதர்கள் என்னிடம் வருவார்களோ, அந்தந்த வழிமுறைகளிலேயே அவர்களை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, அனைத்துப் புறங்களிலும் {உலகம் முழுவதிலும்} மனிதர்கள் பின்பற்றுபவை எனது வழிகளே ஆகும் [3]. 4:11
[3] "கிருஷ்ணன் ஏற்காத வழிபடுவடிவங்கள் எதுவும் இல்லை" என்று அவன் சொல்வதாக இங்குச் சிறு சந்தேகம் எழலாம். ஆனால், "வழிபடுமுறைகள் எந்த வகையில் இருந்தாலும், வணங்கப்படுவது நானே" என்பதே இங்குப் பொருளாகும். கிறிஸ்தவத் தாக்கங்களின் கீழ், டாக்டர்.லாரின்சர் {Dr.Lorinser} அவர்களால் இயற்றப்பட்ட "கீதையின் வினோதமான கற்பிதங்கள்" என்பதற்கு {என்ற ஆக்கத்திற்கு}, K.T. டெலங் அவர்களால், முழுமையாகவும், பயனுள்ள வகையிலும் பதில் கொடுக்கப்பட்ட பிறகு, "இந்தச் செய்யுளின் இத்தகு சகிப்புத்தன்மை, அந்தக் கிறிஸ்தவ எழுத்தாளரின் கோட்பாட்டுக்குப் பொருந்தாது" என்று சொல்ல வேண்டிய தேவையே இல்லை" என்கிறார் கங்குலி. இது கங்குலி மகாபாரதத்தை மொழிபெயர்த்த போது {1883-96 காலகட்டத்தில்} ஏற்பட்டிருந்த சர்ச்சையாக இருக்கலாம்.
இவ்வுலகில் செயலின் வெற்றியை விரும்புவோர் தேவர்களை வழிபடுகின்றனர். எனெனில், மனிதர்களின் இந்த உலகில், செயலின் விளைவாகவே வெற்றியை விரைவாக அடைய முடியும். 4:12
குணங்கள் மற்றும் கடமைகளில் உள்ள வேறுபாடுகளின்படி, நான்கு முறைகளிலான சாதிகளின் {வர்ணங்களின்} பிரிவுகள் என்னாலேயே உருவாக்கப்பட்டன. நானே அவற்றைப் படைத்தவனாக இருப்பினும், அவற்றைப் படைக்காதவனாகவும் {செயலற்றனாகவும்}, அழிவற்றவனாகவும் என்னை நீ அறிவாயாக [4]. 4:13
[4] "அதாவது, செயலற்றவனாகவும், அழிவற்றவனாகவும்" என்று இங்கே பொருள் கொள்ள வேண்டும். செயல் உழைப்பைக் குறிக்கிறது. எனவே, அஃது ஆற்றல் இழப்பையும் குறிக்கும். எனவே, "என்னில் செயலோ, ஆற்றல் இழப்போ இல்லை. நான் அழிவற்றவன்" என்றே இங்கே நாம் பொருள் கொள்ள வேண்டும்" என்கிறார் கங்குலி. முதல் வரியில் கங்குலி சாதிகள் எனக் குறிப்பிடுவது, மூலத்தில் "சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் " என்று இருக்கிறது. அதன் பொருள், "நான்கு வர்ணங்கள் என்னால் உருவாக்கப் பட்டன" என்பதாகும்.
செயல்கள் என்னைத் தீண்டுவதில்லை {பாதிப்பதில்லை}. செயல்களின் பலன்களில் எனக்கு விருப்பமில்லை. என்னை இப்படியே அறிந்து கொள்பவன், செயல்களால் பிணைக்கப்பட மாட்டான் {செயல்களின் விளைவாக ஏற்படும் பற்றால் கட்டப்பட மாட்டான்}. 4:14
விடுதலையை {முக்தியை} விரும்பியவர்களான பழங்கால மனிதர்கள் கூட, இதையறிந்தே செயலில் ஈடுபட்டார்கள். எனவே, மிகப் பழைய மூதாதையர்கள் செய்ததைப் போல, நீயும் செயலில் ஈடுபடுவாயாக. 4:15
எது செயல்? எது செயலின்மை என்பதில் கல்விமான்களும் குழம்புகின்றனர். எனவே, அதையறிவதால் நீ தீமையில் இருந்து விடுபடுவாய் (என்றே), செயலைக் குறித்து {செயலின் இயல்பைக் குறித்து} நான் உனக்குச் சொல்கிறேன். 4:16
செயலின் அறிவை ஒருவன் கொண்டிருக்க வேண்டும்; அதே போல, விலக்கப்பட்ட செயலின் {தீச்செயல்களின்} அறிவையும் ஒருவன் கொண்டிருக்க வேண்டும்; செயலின்மையையும் ஒருவன் அறிய வேண்டும். செயலின் நடைமுறைகள் புரிந்து கொள்ள முடியாதனவாகும். 4:17
செயலில் செயலின்மையையும், செயலின்மையில் செயலையும் காணும் ஒருவன், மனிதர்களில் அறிவுள்ளவனாவான்; அவன் அர்ப்பணிப்பு கொண்டவனாவான் {யோகியாவான்}; அவன் செயல்கள் அனைத்தையும் செய்பவனாவான். 4:18
(பலனில்) ஆசை மற்றும் (அதன் தொடர்ச்சியாக ஏற்படும்) விருப்பம் ஆகியவற்றில் இருந்து விடுபட்டு, அறிவு எனும் நெருப்பால் செயல்கள் அனைத்தையும் எரித்தவனை அறிவாளி {ஞானி} எனக் கற்றோர் அழைக்கின்றனர் [5]. 4:19
[5] "காமஸங்கல்பவிவர்ஜிதா: Kama-sankalpa vivarjjitas. அதாவது, (பலனில் விருப்பம் எனும்) kama காமத்தில் இருந்து விடுபடுவது மற்றும் அதன் தொடர்ச்சியாக ஏற்படும் sankalpa விருப்பம் அல்லது தீர்மானம். இப்படியே ஸ்ரீதரரும், சங்கரரும் விளக்குகின்றனர்" என்கிறார் கங்குலி.
செயலின் பலனில் உள்ள பற்றை {பந்தத்தைக்} கைவிட்டு, எப்போதும் மனநிறைவுடனும், யாரையும் சாராமலும் இருப்பவர்கள் யாரும் செயலில் ஈடுபட்டாலும்கூட, உண்மையில், அவர்கள் செயலற்றவர்களே {4:18ல் உள்ளபடி செயலில் செயலின்மை கொண்டோரே}. 4:20
ஆசையற்று, மனத்தையும், புலன்களையும் கட்டுப்பாட்டில் கொண்டு, கவலைகள் அனைத்தையும் கைவிட்டு, உடலைப் பாதுகாப்பதற்காக மட்டுமே செயலில் ஈடுபடும் ஒருவன் பாவத்தை ஈட்டுவதில்லை [6]. 4:21
[6] மூலத்தில் chitta-ātmā சித்தாத்மா என்றிருப்பதில் Chitta சித்தம் என்று சொல்லப்படுவது மனமாகும். atma ஆத்மா என்று சொல்லப்படுவதோ, புலன்களாகும். இப்படியே ஸ்ரீதரரும் சங்கரரும் சொல்கிறார்கள் என்கிறார் கங்குலி. ஆனால் பாரதியோ ஆத்மாவால் கட்டுப்படுத்தப்படும் சித்தம் {மனம்} என இங்கே பொருள் கொள்கிறார்.
உழைப்பில்லாமல் ஈட்டியவற்றில் மனநிறைவு கொண்டு [7], முரண்பட்ட இரட்டைகளுக்கு {இருமைகளுக்கு} எதிராக மேன்மையாக எழுந்து, பொறாமையற்றிருந்து, வெற்றி தோல்விகளைச் சமமாக மதிப்பவன் ஒருவன், (செயல்பாடுகளின் மூலம்) செயலில் ஈடுபட்டாலும் கூட அதனால் {அந்தச் செயலால்} அவன் பிணைக்கப்படுவதில்லை. 4:22
[7] இங்கே மூலத்தில் யத்ருச்சாலாப yadrccha-labha என்ற சொல் கையாளப்பட்டுள்ளது; வேறு பதிப்புகளில் இதுவே gain out of its own accord என்று சொல்லப்பட்டுள்ளது. மேற்கண்ட சம்ஸ்க்ருத மற்றும் ஆங்கில வரிகளின் பொருள் "தானாக வந்தெய்தும் லாபம்" என்பதாகும். ஆனால், கங்குலியோ, இங்கே earned without exertion உழைப்பில்லாமல் ஈட்டியவை என்கிறார். இரண்டிற்கும் பெரிய அளவில் பொருள் வேற்றுமை இல்லாவிடினும் இரண்டும் ஒன்றல்ல.
வேள்வியின் [8] நிமித்தமாகச் செயல்படுவது {வேள்வி செய்வது போலச் செயலில் அர்ப்பணிப்புடன் ஈடுபடுவது}, பாசமற்றிருப்பது, (பற்றில் இருந்து) விடுபட்டிருப்பது, அறிவில் நிலைத்த மனம் கொண்டிருப்பது ஆகிவற்றைக் கொண்ட ஒருவனின் செயல்கள் அனைத்தும் {அந்தச் செயல்களில் அவனுக்குப் பற்றை ஏற்படுத்தாமல்} அழிவடைகின்றன. 4:23
[8] "இங்கே வேள்வி என்பது பரமாத்மா {அல்லது பிரம்மம்} என்று பொருள்படும். வேள்வியின் நிமித்தமாகச் செய்யப்படும் எதுவும் விடுதலை அடைவதற்காகச் செய்யப்படுவதே ஆகும்" என்கிறார் கங்குலி.
(நீர்க்காணிக்கைகள் ஊற்றப்படும்) பாத்திரம் பிரம்மமே; (காணிக்கையாக அளிக்கப்படும்) நீர்க்காணிக்கை பிரம்மமே; (நீர்க்காணிக்கையான) பிரம்மம் எதில் ஊற்றப்படுமோ, அந்த நெருப்பும் பிரம்மமே; செயலாக இருக்கும் பிரம்மத்திலேயே தனது மனதை நிலைக்கச் செய்யும் ஒருவன், {முடிவில்} தனது இலக்கான அந்தப் பிரம்மத்தையே அடைகிறான் [9]. 4:24
[9] "அத்தகு மனிதன், பிரம்மத்தை அடையாளம் காணும் வழக்கில் முழுமை அடைய நேர்ந்தால், செயல்கள் அழிக்கப்பட்டுவிடும் என்பதே இங்குப் பொருள்" என்கிறார் கங்குலி.
அர்ப்பணிப்புக் கொண்ட சிலர் {சில யோகிகள்} தேவர்களுக்கு வேள்வியைச் செய்கின்றனர். பிறர், வேள்வியின் மூலம், பிரம்ம நெருப்பில் காணிக்கையை இடுகின்றனர் [10]. 4:25
[10] இங்கே இரண்டாவது வரி, "பிரம்ம நெருப்பில் வேள்வியையே காணிக்கையாக இட்டு, தங்கள் செயல்களைக் கைவிடுகின்றனர் எனப் பொருள்படும்" என்கிறார் கங்குலி.
பிறர், கட்டுப்பாடு எனும் நெருப்பில், செவி முதலிய {கண், மூக்கு, நாக்கு, தோல் ஆகிய} தங்கள் புலன்களை (வேள்விக் காணிக்கையாக) இடுகிறார்கள். (மேலும்) பிறர், புலன்கள் எனும் நெருப்பில் ஒலி முதலிய புலன்நுகர் பொருட்களை {தன்மாத்திரைகளை = சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவற்றை} (நீர்க்காணிக்கையாக) இடுகிறார்கள் [11]. 4:26
[11] "கட்டுப்பாடு எனும் நெருப்பில் புலன்களைக் காணிக்கையிடுவது என்பது யோகப் பயிற்சியின் மூலம் புலன்களை அடக்குதல் என்றே பொருள்படும். புலன்நுகர் பொருட்களைக் காணிக்கையிடுதல் என்பது அப்பொருட்களில் பற்றற்றிருப்பது என்றே பொருள்படும்" என்கிறார் கங்குலி.
(மேலும்) பிறர், அறிவால் மூண்ட சுயக்கட்டுப்பாட்டின் மூலம், புலன்களின் செயல்பாடுகள் அனைத்தையும், உயிர்காற்றின் {உயிர்மூச்சின்} செயல்பாடுகளையும் அர்ப்பணிப்பு என்ற நெருப்பில் {யோகத்தீயில்} இடுகிறார்கள் [12]. 4:27
[12] "தியானம் அல்லது யோகத்திற்காக வாழ்வின் செயல்பாடுகளை நிறுத்துவது என்று" இங்கு விளக்கமளிக்கிறார் கங்குலி.
மேலும் பிறர், செல்வ வேள்வி, தவத்துறவு வேள்வி, தியான வேள்வி, (வேத) கல்வி வேள்வி, அறிவு வேள்வி ஆகியவற்றையும், இன்னும் பிறர் கடும் நோன்புகளைக் கொண்ட தவத்தையும் செய்கின்றனர் [13]. 4:28
[13] "இங்கே, செல்வத்தைத் தானமளிப்பதையும், தவத்துறவுகளையும், தியானம் மற்றும் கல்வியையும் கொண்டதே வேள்வியாகும். இங்கே இரண்டாவது வரியின் முதல் சேர்மத்தை ஸ்ரீதரர் வேறுவிதமாக விளக்குகிறார். அவரது கூற்றின்படி, அது கல்வியும் அறிவும் அல்ல; மாறாகக் கல்வியால் கிட்டும் அறிவாகும்" என்கிறார் கங்குலி.
சிலர் மேல்நோக்கு உயிர் காற்றை (பிராணத்தை), கீழ்நோக்கு உயிர்க்காற்றில் (அபானத்தில்) காணிக்கையிடுகின்றனர்; சிலர் கீழ்நோக்கு உயிர் காற்றை, மேல்நோக்கு உயிர்க்காற்றில் காணிக்கையிடுகின்றனர்; சிலர் மேல்நோக்கு மற்றும் கீழ்நோக்கு உயிர்க்காற்றுகளின் பாதையை அடைத்து, அந்த உயிர்க்காற்றுகளைக் கட்டுப்படுத்துவதில் {பிராணாயாமத்தில்} தங்களை அர்ப்பணிக்கின்றனர். 4:29
பிறர் உணவைக் கட்டுப்படுத்தி, உயிர்க்காற்றுகளை உயிர்க்காற்றுகளிலேயே காணிக்கையிடுகின்றனர் [14]. வேள்வியை அறிந்தவர்களும், வேள்வியால் தங்கள் பாவங்கள் எரிக்கப்பட்டவர்களுமான இவர்கள் அனைவரும், வேள்வியில் எஞ்சிய அந்த அமிர்தத்தை உண்டு நிலைத்த பிரம்மத்தையே அடைகின்றனர். வேள்வி செய்யாதவனுக்கு இவ்வுலகமே கிடையாது எனும்போது, ஓ! குரு குலத்தில் சிறந்தவனே {அர்ஜுனா}, அடுத்த உலகம் ஏது? 4:30,31
[14] "இவை அனைத்தும் யோகத்தின் பல்வேறு வகைகளாகும். அல்லது யோகப் பயிற்சியின் பல்வேறு நிலைகளாகும்" என்கிறார் கங்குலி.
இப்படியே வேதங்களில் ஏற்படும் {சொல்லப்பட்டுள்ள} வேள்விகள், பல்வேறு வகைகளில் இருக்கின்றன. அவை அனைத்தும் செயலின் மூலம் விளைபவையே என்பதை அறிவாயாக. இஃதை அறிந்தால் நீ விடுதலையடைவாய் {முக்தியடைவாய்}. 4:32
{மேற்கண்டது போன்ற} வேள்வி அறிவு, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {அர்ஜுனா}, செயலின் பலனில் (பலனை அடைவதில்) ஈடுபடும் அனைத்து வேள்விகளைக் காட்டிலும் மேன்மையானதாகும். ஏனெனில், ஓ! பார்த்தா {அர்ஜுனா}, செயல்கள் அனைத்தும் அறிவிலேயே முழுமையடைகிறது {முழுமையாக உட்கொள்ளப்படுகிறது} [15]. 4:33
[15] "அஃதாவது, அறிவை அடைந்தால், செயல்களின் பலன்கள் அடையப்படுகின்றன. அல்லது அவற்றின் முடிவாவது வரையறுக்கப்படுகிறது" என்கிறார் கங்குலி.
வணக்கம் {நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குதல்}, கேள்வி {விசாரணை}, தொண்டு {சேவை} ஆகியவற்றின் மூலம் அஃதை (அறிவை) அடைவாயாக. உண்மையைக் {சத்தியத்தைக்} காணக்கூடிய அறிவுடையோர் {ஞானிகள்}, அந்த அறிவை உனக்குக் கற்பிப்பார்கள். ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா} அஃதை அறிந்து கொள்வதால், மீண்டும் இத்தகு மயக்கத்தை நீ அடையமாட்டாய்; அஃதை அறிந்து கொள்வதால், (அண்டத்தின்) முடிவிலா உயிரினங்களை (முதலில்) உன்னிடத்தில் {உனக்குள்} கண்டு, பிறகு என்னிடத்திலும் நீ காண்பாய். 4:34-35
பாவிகள் அனைவரிலும் பெரும்பாவியாகவே இருந்துவிட்டாலும் கூட, அறிவு எனும் படகைக் கொண்டு பாவங்கள் அனைத்தையும் நீ கடந்துவிடுவாய். 4:36
விறகைச் சாம்பலாக்கும் சுடர்மிகும் நெருப்பைப் போல, ஓ! அர்ஜுனா, அறிவு எனும் நெருப்பு, செயல்களனைத்தையும் சாம்பலாக்கிவிடும். 4:37
ஏனெனில், அறிவைப் போன்று தூய்மையாக்கும் பொருள் வேறு எதுவுமில்லை. அர்ப்பணிப்பின் {யோகத்தின்} மூலம் வெற்றியடையும் ஒருவன், தனது முயற்சி ஏதுமில்லாமலேயே தகுந்த நேரத்தில், அதைக் {அறிவைக்} கண்டடைந்துவிடுகிறான். 4:38
அதில் {யோகத்தில்} நம்பிக்கையும், தீவிரமும் கொண்டு, தனது புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஒருவன் அறிவை அடைகிறான்; அறிவை அடைந்ததும், குறுகிய காலத்திலேயே {விரைவிலேயே} அவன் உயர்ந்த மன அமைதியைப் {பரசாந்தியைப்} பெறுகிறான். 4:39
அறிவும், நம்பிக்கையும் இல்லாது, மனம் நிறைந்த ஐயங்களைக் கொண்டவன் தொலைந்து {அழிந்து} போகிறான். மனம் நிறைந்த ஐயத்தைக் கொண்டவனுக்கு இவ்வுலகமோ, அடுத்ததோ {அடுத்த உலகமோ}, இன்பமோ கிடையாது. 4:40
ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, அர்ப்பணிப்பின் {யோகத்தின்} மூலம் செயலைத் துறந்து, அறிவால் ஐயம் விலகப்பெற்று, சுயக்கட்டுப்பாட்டுடன் இருப்பவனைச் செயல்களால் கட்டுப்படுத்தவே முடியாது. 4:41
எனவே, அறியாமையால் தோன்றி, உனது மனதில் குடிகொண்டிருக்கும் இந்த உனது ஐயத்தை, அறிவெனும் வாளால் அழித்து, அர்ப்பணிப்பில் {யோகத்தில்} நிலைப்பாயாக. ஓ! பரதனின் மகனே {அர்ஜுனா}, எழுவாயாக" என்றான் {கிருஷ்ணன்}. 4:42
துறவின் அறம் - சந்யாசயோகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 029
Religion by renouncing fruits of works - Sanyasa yoga ! | Bhishma-Parva-Section-029 | Mahabharata In Tamil
(பகவத்கீதா பர்வம் – 17) {பகவத் கீதை - பகுதி 5}
பதிவின் சுருக்கம் : செயல், செயலைக் கைவிடுவது ஆகிய இரண்டில் எது சிறந்தது எனக் கிருஷ்ணனிடம் அர்ஜுனன் கேட்பது; ஒரே இலக்கின் வழிகளே அவை இரண்டும் என்றும்; கர்ம யோகத்தின்படி செயலில் ஈடுபடுபவதே மேன்மையானது எனக் கிருஷ்ணன் பதிலளிப்பது; துறவறம் குறித்த கிருஷ்ணனின் விளக்கம்....
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! கிருஷ்ணா, செயல்களைக் கைவிடுவதையும் {புகழ்கிறாய்}, அதன்பிறகு (அவற்றின்) பயன்பாடுகளையும் புகழ்கிறாய். இவை இரண்டில் எது மேன்மையானது என்பதை எனக்கு உறுதியாகச் சொல்வாயாக" என்று கேட்டான் {அர்ஜுனன்}. 5:1
அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "செயல்களைக் கைவிடுவது {துறவு} மற்றும் செயல்களின் பயன்பாடு {கர்மம்} ஆகிய இரண்டும் விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுப்பனவே ஆகும். ஆனால் இவற்றில் துறவை விடச் செயல்படுவதே {கர்மமே} மேன்மையானது. 5:2
வெறுப்போ, ஆசையோ அற்ற ஒருவன் துறவி {சந்நியாசி} என்றே எப்போதும் அறியப்பட வேண்டும். ஏனெனில், ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, முரண்பட்ட இரட்டைகளில் இருந்து விடுபட்ட அவன், (செயலின்) கட்டுகளில் {பந்தத்தில்} இருந்து எளிதாக விடுபடுகிறான். 5:3
சாங்கியமும், யோகமும் வெவ்வேறானவை என்று மூடர்களே சொல்வார்கள். ஆனால் அறிவாளிகள் அப்படிச் சொல்வதில்லை. (அந்த இரண்டில்) ஏதேனும் ஒன்றில் நிலைத்திருப்பவன், இரண்டின் பலன்களையும் அடைகிறான் [1]. 5:4
[1] "இங்கே சாங்கியம் என்பது செயலைத் துறத்தலும், யோகம் என்பது அர்ப்பணிப்புடன் {பக்தியுடன்} செயல்படுவதுமாகும்" என்கிறார் கங்குலி.
சாங்கிய முறையில் உள்ளவர்கள் {துறவிகள்} எந்த நிலையை அடைகிறார்களோ, அதையே யோக முறையில் உள்ளவர்களும் {அர்ப்பணிப்புடன் செயல்படுவோரும் = யோகிகளும்} அடைகிறார்கள். சாங்கியத்தையும் {துறவையும்}, யோகத்தையும் {அர்ப்பணிப்புள்ள செயலையும்} ஒன்றாகக் காண்பவனே உண்மையைக் காண்பவன் ஆவான். 5:5
அனால், (செயலில்) அர்ப்பணிப்பு இல்லாத {யோகம் இல்லாத} துறவு, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, அடைவதற்கு அரிதானதாகும். (செயலால்) அர்ப்பணிப்பில் {யோகத்தில்} ஈடுபடும் ஒரு முனிவன், தாமதமில்லாமல் பிரம்மத்தை அடைகிறான். 5:6
(செயலால்) அர்ப்பணிப்பில் {யோகத்தில்} ஈடுபட்டு, தனது உடலை வென்று, தனது புலன்களை அடக்கி, உயிரினங்கள் அனைத்திலும் தன்னை அடையாளம் காணும் ஒருவன், (செயலைச்) செய்தாலும் கூட {அதனால்} பிணைக்கப்படுவதில்லை. 5:7
உண்மையை அறிந்தவனும் அர்ப்பணிப்புடையவனுமான {யோகியுமான} ஒரு மனிதன், பார்க்கும்போதோ, கேட்கும்போதோ, தீண்டும்போதோ, நுகரும்போதோ, உண்ணும்போதோ, நகரும்போதோ, உறங்கும்போதோ, சுவாசிக்கும்போதோ, பேசும்போதோ, கொடுக்கும்போதோ, எடுக்கும்போதோ, கண் இமைகளைத் திறக்கும்போதோ, அதை மூடும்போதோ, "நான் எதையும் செய்யவில்லை" என்றே எண்ணுவான்; அவன் தனது புலன்கள் புலன்நுகர் பொருட்களில் ஈடுபடுகின்றன எனவே கருதுவான். 5:8-9
செயல்களைப் பிரம்மத்திடம் ஒப்படைத்துவிட்டு, பற்றைத் துறந்து, அவற்றில் {செயல்களில்} எவன் ஈடுபடுவானோ, அவன், நீரால் தீண்டப்படாத தாமரை இலையைப் போலப் பாவத்தால் தீண்டப்படுவதில்லை. 5:10
பற்றுதலைத் துறந்த அர்ப்பணிப்புள்ளோர் {யோகியர்}, உடலாலும், மனத்தாலும், புத்தியாலும், {ஆசையற்ற} புலன்களாலும் தன் {ஆத்ம} தூய்மையின் (தூய்மையை அடையும்) பொருட்டே செயல்களில் ஈடுபடுகின்றனர். 5:11
அர்ப்பணிப்புக் கொண்ட {யோகி} ஒருவன், செயலின் பலனைத் துறந்து, உயர்ந்த அமைதியை அடைகிறான். அர்ப்பணிப்பில்லாதவனோ, செயலின் பலனில் பற்றுக் கொண்டு, ஆசையால் செய்யப்படும் செயலில் பிணைக்கப்படுகிறான் {அவன் செய்யும் செயல்களின் விளைவுகளால் கட்டப்படுகிறான்}. 5:12
சுயக்கட்டுப்பாடு கொண்ட பண்புருவம் (சுயம் = ஆத்மா), மனத்தால் செயல்கள் அனைத்தையும் துறந்து, தானே செயல்படாமலும், (எதையும்) செயல்படத்தூண்டாமலும், ஒன்பது வாயில் வீட்டில் {நவ (8) துவாரபுரத்தில்} [2] நலமாக நீடிக்கிறது. 5:13
[2] வீடு என்பது மூலத்தில் புரம் என்றிருக்கிறது. "இங்கே டெலங் "புரம்" என்பதை, "நகரம்" என்று வழங்குகிறார். இரண்டு கண்கள், இரண்டு காதுகள், மூக்கின் இரண்டு துளைகள், ஒரு வாய் மற்றும் மலம் மற்றும் சிறு நீர் கழிக்கப் பயன்படும் இரண்டு திறப்புகள் கொண்ட உடலே அது {அந்த நகரம்} என்பது நிச்சயம்" என்கிறார் கங்குலி.
செயல், அல்லது மனிதர்களின் செயல்கள், அல்லது செயல்களின் தொடர்பு ஆகியவற்றின் திறன் மற்றும் (அவற்றின்) பலன்களுக்குத் தலைவன் {பரம்பொருள்} காரணம் அல்ல. இயற்கையே (செயலில்) ஈடுபடுகிறது {செயல்படுகிறது}. 5:14
எவனுடைய பாவத்தையோ, புண்ணியத்தையோ தலைவன் {பரம்பொருள்} ஏற்பதில்லை. {பாவி என்றோ, நல்லவன் என்றோ எவனையும் கடவுள் ஏற்பதில்லை}. அறியாமையால் அறிவு மூடப்பட்டிருக்கிறது. இதனாலேயே உயிரினங்கள் மயங்குகின்றன {ஏமாறுகின்றன}. 5:15
ஆனால், தன்னறிவால் {ஆத்ம அறிவால்} அறியாமையை அழித்த எவனுக்கும், சூரியனைப் போன்ற அந்த அறிவு, பரம்பொருளையே வெளிப்படுத்துகிறது. 5:16
அவனில் {பரம்பொருளில்} மனம் நிலைத்தவர்கள், தன் ஆன்மாவையே அவனாகக் {பரம்பொருளாக} கொண்டவர்கள், அவனில் வசிப்பவர்கள், அவனையே குறிக்கோளாகக் கொண்டவர்கள் தங்கள் பாவங்கள் அனைத்தையும் அறிவால் அழித்து, மீண்டும் திரும்பாதவாறு புறப்படுகிறார்கள் [3]. 5:17
[3] "அத்தகைய மனிதர்கள் மறுபிறப்பு எனும் கடனில் இருந்து விலக்களிக்கப் படுகிறார்கள். அவர்கள் இவ்வுடலை விட்டுப் பரமாத்மாவில் கலக்கிறார்கள்" என்கிறார் கங்குலி.
கல்வியும் பணிவும் கொண்ட ஓர் அந்தணன், ஒரு பசு, ஒரு யானை, ஒரு நாய், ஒரு சண்டாளன் [4] ஆகியோர் மீது சமமான பார்வையையே அறிவுடையோர் செலுத்துகின்றனர். 5:18
[4] "ஸ்வபாகே: Swapacha" என்பது மூலச் சொல் என்றும், அதற்கு "தாழ்ந்த சாதியைச் சார்ந்தவன்" என்பது பொருள் என்றும் கங்குலி சொல்கிறார். பாரதியாரோ அது "நாயை உண்பவன்" என்ற பொருளைத் தரும் என்கிறார். இஸ்கானின் பிரபுபாதரும் அப்படியே சொல்கிறார். எனவே இங்கே கங்குலி கையாண்டிருக்கும் சாதி என்ற சொல் பொருந்தாது என்றும், மூலத்தில் சண்டாளன் என்ற சொல்லும் கையாளப்படவில்லை என்றும் தெரிகிறது.
சமநிலையில் நிலைத்து நிற்கும் மனத்தைக் கொண்டோரால் இங்கேயே பிறப்பு வெல்லப்படுகிறது; பிரம்மம் மாசற்றதாகவும், சமநிலை கொண்டதாகவும் இருப்பதால், அவர்கள் பிரம்மத்தில் நிலைப்பதாகச் சொல்லப்படுகிறது [5]. 5:19
[5] இங்கே "பிரம்மம் மாசற்றது என்றும் சமநிலை கொண்டது என்றும் ஸ்ரீதரர் சொல்கிறார். பிறரோ, மாசற்ற சமநிலை கொண்ட பிரம்மம் என்று சொல்கிறார்கள்" என்கிறார் கங்குலி.
மனம் உறுதி பெற்றவனும், மயங்காதவனும், பிரம்மத்தை அறிந்தவனும், பிரம்மத்தில் நிலைத்திருப்பவனுமான ஒருவன் ஏற்புடையதை {இனியதை} அடையும்போது உவகைக் கொள்வதில்லை {மகிழ்வது இல்லை}; அதே போல ஏற்பில்லாததை அடையும் போது துன்புறுவதும் இல்லை. 5:20
புலன்நுகர் புறப்பொருட்களில் {புறத்தீண்டல்களில்} பற்றிலாத மனம் கொண்டவன், தன்னில் உள்ள மகிழ்ச்சியை அடைகிறான்; மனங்குவிந்து பிரம்மத்தைத் தியானித்து, அழியாத மகிழ்ச்சியை அவன் அனுபவிக்கிறான். 5:21
அந்தத் தீண்டலால் (புலன்கள் தங்களுக்குரிய நுகர்பொருட்களைத் தீண்டுவதால்) பிறக்கும் இன்பங்களே துயரை உண்டாக்குவனவாகும். அறிவாளி ஒருவன், ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, தொடக்கமும் முடிவும் உள்ள இவற்றில் ஒருபோதும் இன்புறுவதில்லை. 5:22
இங்கிருக்கும் மனிதரில் எவனும், உடல் அழியும் முன்னர், நிலையான தியானத்துடன், ஆசை, கோபம் ஆகியவற்றால் விளையும் போராட்டங்களைத் தாங்கிக் கொள்ள இயன்றால், அவனே மகிழ்ச்சியுடையவனாகிறான். 5:23
தனக்குள்ளேயே மகிழ்ச்சியைக் கண்டு, தனக்குள்ளேயே இன்புற்று, தனக்குள்ளே (அறிவு எனும்) ஒளி பொருந்திய ஒருவனே அர்ப்பணிப்பு கொண்டவன் ஆவான் {யோகியாவான்}. அப்படிப்பட்டவன் பிரம்மத்துடன் ஒன்றுபட்டு பிரம்மத்தினுள் கலக்கும் {உறிஞ்சப்படும்} நிலையை {நிர்வாணத்தை} அடைகிறான். 5:24
ஐயங்கள் அகன்று, சுயக்கட்டுப்பாட்டுடன், அனைத்து உயிரினங்களின் நன்மையில் ஈடுபட்டு, பாவங்கள் அழிந்தவர்களாக இருக்கும் துறவிகள் {யதிகள்}, பிரம்மத்தில் கலக்கும் நிலையை {நிர்வாணத்தை} அடைகிறார்கள். 5:25
ஏனெனில், ஆசை மற்றும் கோபத்தில் இருந்து விடுபட்டு, மனங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, தன்னறிவைக் {ஆன்ம அறிவைக்} கொண்டிருக்கும் இந்த யோகிகளுக்கு, பிரம்மத்தில் கலக்கும் நிலை இப்போதும் எப்போதும் {அருகிலேயே} இருக்கிறது. 5:26
புலன்நுகர் புறப்பொருட்கள் {புறத்தீண்டல்கள்} அனைத்தையும் (தனது மனதில் இருந்து) வெளியேற்றி, புருவங்களுக்கு இடையில் தனது பார்வையைச் செலுத்தி, மேல்நோக்கு மற்றும் கீழ்நோக்கு உயிர்க்காற்றுகளை (ஒன்றாகக்) கலந்து, அவற்றைத் தனது மூக்கின் வழியாகக் கடக்கச் செய்பவனும், புலன்கள், மனம், அறிவு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தியவனும், விடுதலையை {முக்தியைத்} தனது நோக்கமாகக் கொண்டவனும், ஆசை, அச்சம், கோபம் ஆகியவற்றில் இருந்து விடுபட்டவனும், {மேற்கண்டவற்றில் எப்போதும்} அர்ப்பணிப்பு கொண்டவனுமான [6] {முனிவன்} ஒருவனே உண்மையில் விடுதலை {முக்தியை} அடைகிறான். 5:27-28
[6] இங்கே கங்குலி, "a devotee", அஃதாவது "அர்ப்பணிப்பு கொண்டவன் அல்லது பக்தன் அல்லது யோகி" என்ற பொருளில் சொல்கிறார். பாரதியாரின் விளக்கத்தின்படி, 28ம் சுலோகத்தின் முதல் வரியில் ய: ஸதா முக்த ஏவ ஸ என்று இருக்கிறது. இங்கே ய: என்பது அவன் என்று பொருள் படும், மீதம் உள்ளவை "எக்காலத்திலும் முக்தியடைவான்" என்று பொருள் தரும். ஆனால் அதற்கு முந்தைய வரியில் முநிர்மோக்ஷபராயண: என்ற வரியும் இருப்பதால், அடுத்த வரியில் ய: என்று சொல்லப்படும் அவன் முனிவன் ஆவான் என்று ஆகிறது. "முநிர்மோக்ஷபராயண:" என்ற மேற்கண்ட சொல்லின் பொருள் "மோட்சத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கும் முனிவன்" என்பதாகும். இந்த 28ம் சுலோகத்துக்கான பாரதியாரின் மொழிபெயர்ப்பு "புலன்களை, மனத்தை, மதியையும் கட்டி, விடுதலை இலக்கு எனக் கொண்டு, விருப்பமும், அச்சமும், சினமும் தவிர்த்தான் முக்தனே ஆவான் முனி" என்றிருக்கிறது. அவனைப் பக்தன் என்று ஏற்பதைவிட முனிவன் என்று ஏற்பதே சிறந்ததாகத் தெரிகிறது.
வேள்விகள் மற்றும் தவத்துறவுகள் அனைத்திலும் மகிழ்பவனாகவும், உலகங்கள் அனைத்தின் பெருந்தலைவனாகவும், உயிரினங்கள் அனைத்தின் நண்பனாகவும், என்னை அறியும் ஒருவனே மன அமைதியை அடைகிறான். 5:29
Religion by Self-Restraint - Dhyan yoga! | Bhishma-Parva-Section-030 | Mahabharata In Tamil
(பகவத்கீதா பர்வம் – 18) {பகவத் கீதை - பகுதி 6}
பதிவின் சுருக்கம் : அர்ப்பணிப்பைக் {யோகத்தினைக்} குறித்துக் கிருஷ்ணன் விளக்குவது; மனத்தின் சிரமங்கள் மற்றும் அந்த மனத்தை அடக்கி ஆள்வதற்குரிய நுட்பங்களை ஈட்டும் முறை ஆகியவற்றைக் குறித்து அர்ஜுனனிடம் கிருஷ்ணன் விளக்குவது...
அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "செயலின் பலனைக் கருதாமல், செய்ய வேண்டிய செயல்களைச் செய்பவன் துறவியும் {சந்தியாசியும்}, அர்ப்பணிப்பாளனும் {யோகியும்} ஆவான். அவன் (வேள்வி) நெருப்பை நிராகரிப்பவனோ, செயலைத் தவிர்ப்பவனோ ஆக மாட்டான். 6:1
ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, துறவு {சந்நியாசம்} என்று அழைக்கப்படுவதே அர்ப்பணிப்பு {யோகம்} என்பதை அறிவாயாக. ஏனெனில், கோட்பாடுகளைத் (அனைத்து கோட்பாடுகளையும்) துறக்காமல் எவனும் அர்ப்பணிப்பாளனாக {யோகியாக} முடியாது. 6:2
அர்ப்பணிப்பில் {யோகத்தில்} உயர விரும்பும் முனிவனுக்கு, செயலே வழிமுறையாகக் கூறப்படுகிறது; அவன் அர்ப்பணிப்பில் {யோகத்தில்} உயர்ந்த பிறகே, செயலை நிறுத்துவது வழிமுறையாக {அவனுக்குக்} கூறப்படுகிறது. 6:3
புலன்நுகர் பொருட்கள், அல்லது செயலில் பற்றில்லாமல், கோட்பாடுகள் அனைத்தையும் துறந்த ஒருவன், அர்ப்பணிப்பில் {யோகத்தில்} உயர்ந்தவனாகச் சொல்லப்படுகிறான். 6:4
ஒருவன் தன்னை {ஆத்மாவை} தானே உயர்த்திக் கொள்ள வேண்டும்; ஒருவன் தன்னை {ஆத்மாவை} தரந்தாழ்த்திக் கொள்ளக்கூடாது; ஏனெனில், ஒருவன், தனக்குத் தானே நண்பனும், தனக்குத் தானே எதிரியும் ஆவான். 6:5
தன்னை {ஆத்மாவை} தானே அடக்கியவன் {வென்றவன்} தனக்குத் தானே நண்பனாவான். ஆனால், தன்னைத் தானே அடக்காதவனோ {வெல்லாதவனோ}, தானே தன்னிடம் எதிரியைப் போல பகையுடன் நடந்து கொள்பவன் ஆவான். 6:6
தன்னைத் தானே அடக்கி {வென்று}, மன அமைதியில் இன்புற்றிருக்கும் ஒருவனின் ஆத்மா, குளுமை மற்றும் வெம்மை, இன்பம் மற்றும் துன்பம், மதிப்பு மற்றும் அவமதிப்பு ஆகியவற்றுக்கு மத்தியிலும் (தன்னிலேயே) {பரமாத்மாவிலேயே} நிலைத்து நிற்கும். 6:7
அறிவு மற்றும் அனுபவத்தால் {நடைமுறை அறிவால்} எவனுடைய மனம் நிறைந்திருக்கிறதோ, எவனுக்கு பற்று {பாசம்} இல்லையோ, எவன் தனது புலன்களை அடக்கியிருக்கிறானோ {வென்றிருக்கிறானோ}, எவன் புல்கட்டையும், கல்லையும், தங்கத்தையும் சமமாகக் கருதுவானோ, அந்தத் தவசியே {யோகியே} அர்ப்பணிப்பு கொண்டவனாக {யோகத்தில் நின்றவனாக} கூறப்படுகிறான். 6:8
நலன்விரும்பிகள் {அன்பர்கள்}, நண்பர்கள், எதிரிகள், தன்னை அலட்சியமாக நினைக்கும் அந்நியர்கள் {ஏதிலர்}, இரு தரப்பிலும் பங்கெடுப்பவர்கள் {நடுவர்}, (தனக்குத்) தொடர்புடையவர்கள் {சுற்றத்தார்}, நல்லவர்கள், தீயவர்கள் ஆகியோரைச் சமமாக நோக்குபவன் (அனைவரிலும்) மேலானவன் ஆவான். 6:9
அர்ப்பணிப்பாளன் {யோகி} ஒருவன், ஒதுக்குப்புறமான இடத்தில் {மறைவிடத்தில்} தனியாக இருந்து, மனத்தையும், உடலையும் கட்டுப்படுத்தி, (எவ்வகை) எதிர்பார்ப்புகளும் {ஆசைகளும்} இன்றி, (எதிலும்) கவலையில்லாமல், தியானத்தில் எப்போதும் மனத்தை நிலைக்க வைக்க வேண்டும். 6:10
![]() |
யோகியின் நிலை |
உடல், தலை, கழுத்து ஆகியவற்றைச் சமமாக வைத்துக் கொண்டு, அசையாமல் உறுதியாக இருந்து கொண்டு, திசைகள் பலவற்றில் ஒன்றையும் பார்க்காமல், தனது மூக்கின் நுனியில் பார்வையைச் செலுத்தி, மனத்தில் அமைதியுடன், அச்சமற்று, பிரம்மச்சாரிகளின் பயிற்சிகளை நோற்று, மனத்தைக் கட்டுப்படுத்தி, என்னில் இதயத்தை நிலைக்கச் செய்யும் அந்த அர்ப்பணிப்பாளன் {யோகி}, அடையத்தக்க பொருளாக என்னையே கருதி அப்படி அமர வேண்டும். 6:13-14
இப்படியே தொடர்ச்சியாக தனது ஆத்மாவைப் பயன்படுத்துபவனும், இதயத்தைக் கட்டுப்படுத்தியவனுமான அந்த அர்ப்பணிப்பாளன் {யோகி}, என்னுடன் கலப்பதிலும், வெளிப்படுவதிலும் உச்ச நிலையை அடையச் செய்வதான மன அமைதியை இறுதியில் அடைகிறான். 6:15
ஓ! அர்ஜுனா, அதிகமாக உண்பவன், உண்ணாமலே இருப்பவன்; அதிக உறக்கத்திற்கு அடிமையானவன், எப்போதும் விழிப்புடன் இருப்பவன் ஆகியோருக்கு அர்ப்பணிப்பு உரியதாகாது {அவர்களுக்கு யோகம் சித்திப்பதில்லை}. உணவு மற்றும் கேளிக்கைகளில் மிதமாக, தனது வேலைகள் அனைத்திலும் மிதமான உழைப்பை முறையாகக் கொடுத்து, உறக்கம் மற்றும் விழிப்பு நிலைகளில் மிதமாக இருக்கும் ஒருவனுக்கே துயரத்துக்கு அழிவை {துன்பத்திற்கே துன்பம்} உண்டாக்கும் அர்ப்பணிப்பு உரியதாகும் {யோகம் சித்திக்கும்}. 6:16-17
முறையாகக் கட்டுப்படுத்தப்பட்ட ஒருவனது இதயம், தன்னில் {ஆத்மாவில்} எப்போது நிலைத்திருக்குமோ, அப்போது, ஆசைக்குகந்த பொருட்கள் அனைத்தையும் அலட்சியம் செய்யும் [1] அவன், அர்ப்பணிப்பாளன் {யோகி} என்று அழைக்கப்படுகிறான் 6:18
[1] இங்கே "புலன்நுகர் பொருட்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டு தன்னில் நிலைத்திருத்தல்" என்று சங்கரர் சொல்வதாகக் குறிப்பிடுகிறார் கங்குலி.
காற்றில்லாத இடத்தில் சிமிட்டாமல் {அசைவின்றி} இருக்கும் விளக்கைப் போல, தனது இதயத்தைக் கட்டுப்படுத்தி, எவன் தன்னை நுட்பமாக்கிக் கொள்கிறானோ, அவனே அர்ப்பணிப்பாளன் {யோகி} என்ற தீர்மானிக்கப்பட்ட ஒருவனுக்கு ஒப்பாகிறான். 6:19
நுண்மையாகும் பயிற்சியால் கட்டுபடுத்தப்பட்ட நிலையில் மனம் ஓய்ந்திருக்கும் போது, தன்னைத் {ஆத்மாவை} தன்னில் {ஆத்மாவில்} கண்டு, தன்னில் {ஆத்மாவில்} மனநிறைவு கொண்டு, அறிவால் (மட்டுமே) பிடிபடக்கூடியதும், புலன்களுக்கு அப்பால் உள்ளதுமான உயர்ந்த இன்ப {பேரின்ப} நிலையை உணர்ந்த ஒருவன், உண்மையில் இருந்து வழுவாமல், அடைவதற்குப் பெரிதானதாகக் கருதப்படும் அஃதை அடைந்து, கனத்த கவலையிலும் தடுமாறாமல் {சலிப்படையாமல்} அதிலேயே நிலைத்திருந்து, துன்பம் தொடர்பானவற்றில் இருந்து விலகியிருக்கும் நிலையே அர்ப்பணிப்பு {யோகம்} என்று அழைக்கப்படுகிறது. அந்த அர்ப்பணிப்பே {யோகமே} விடாமுயற்சியுடனும் [2], நம்பிக்கையிழக்காத இதயத்துடனும் பயிலப்பட வேண்டும். 6:20-23
[2] "சங்கரரால் "நிஸ்சயேந Nischayena" என்பது "விடாமுயற்சி" அல்லது "உறுதியான" என்பதற்கு ஈடாக விளக்கப்படுகிறது. ஸ்ரீதரரோ அதை, "கல்வி மூலம் பெறப்பட்ட அறிவின் உறுதியுணர்வைக் கொண்டு" என்று விளக்குகிறார்" என்கிறார் கங்குலி.
[3] அமைதியாக வேண்டும். பிறகு, தனது மனத்தைத் தன்னில் {ஆத்மாவில்} ஈடுபடுத்தி எதையும் நினையாமல் இருக்க வேண்டும். 6:24-25
[3] "சங்கரர் மற்றும் பிறரால் "த்ருதி க்ருஹீதயா புத்த்யா Mriti-grahitaya Buddhya" என்பது "பொறுமையால் கட்டுப்படுத்தப்பட்ட அறிவைக் கொண்டு" என்று விளக்கப்படுகிறது. இதில் K.T.டெலங், "துணிவுடன் கூடிய உறுதியான தீர்மானம்" என்று விளக்குகிறார்" என்கிறார் கங்குலி.
எங்கே மனம் (இயல்பாகவே) அமைதியற்று, உறுதியற்று இருக்கிறதோ, அங்கே அதைக் கட்டுப்படுத்தி, அதைத் தன்னிலேயே {ஆத்மாவிலேயே} ஒருவன் நிலைக்கச் செய்ய வேண்டும். 6:26
உண்மையில், மன அமைதியுடன் இருப்பவனும், ஆசைகளை அடக்கியவனும், பிரம்மத்துடன் ஒன்றியவனும், பாவத்தில் இருந்து விடுபட்டவனுமான அத்தகு அர்ப்பணிப்பாளனுக்கு {யோகிக்கு} (தன் விருப்பத்தின்படியே) பேரின்பம் வாய்க்கிறது. 6:27
இப்படியே தனது ஆத்மாவை (நுண்மத்தில்) ஈடுபடுத்தும் அர்ப்பணிப்பாளன் {யோகி} ஒருவன், பாவத்தில் இருந்து விடுபட்டு, பிரம்மத்துடன் கூடிய பேரின்பத்தை எளிதாக அடைந்துவிடுகிறான். 6:28
தன்னை {ஆத்மாவை} நுண்மத்தில் {யோகத்தில் கலப்பதில்} அர்ப்பணித்தவன் எங்கும் சம பார்வையுடன், தன்னை அனைத்து உயிரினங்களிலும், அனைத்து உயிரினங்களைத் தன்னிலும் காண்கிறான். 6:29
என்னில் அனைத்தையும் கண்டு, அனைத்தில் என்னையும் காணும் ஒருவனுக்கு நான் தொலைவதில்லை {அழிவதில்லை}, எனக்கும் அவன் தொலைவதில்லை {அழிவதில்லை} [4]. 6:30
[4] "அதாவது, நான் அவனுக்கு எப்போதும் தெரிகிறேன். அதே போல, அவனும் எனது பார்வைக்குள்ளேயே இருக்கிறான். நான் அவனிடம் எப்போதும் அன்பாக இருப்பேன் என்பது இங்கே பொருள்" என்கிறார் கங்குலி.
அனைத்து உயிரினங்களிலும் வசிப்பவனாக என்னை வழிபட்டு, அனைத்தையும் ஒன்றென உணர்பவன் அர்ப்பணிப்பாளன் ஆவான் {யோகியாவன்}. அவன் எத்தகு வாழ்வு முறையை நோற்றாலும், அவன் என்னிலேயே வாழ்கிறான் [5]. 6:31
[5] நானும், அனைத்துயிரினங்களுக்குள் இருக்கும் பிரம்மமும் ஒன்றென அறிந்து, என்னை வழிபடும் யோகி, அனைத்து சந்தர்ப்பங்களிலும், எப்போதும் என்னுடனே நீடித்து இருக்கிறான் என்றும் இதற்குப் பொருள் சொல்லப்படுகிறது.
ஓ! அர்ஜுனா, எங்கும் சம பார்வையைச் செலுத்தி, அனைத்துப் பொருட்களும் தானே எனவும், பிறரின் இன்பமும் துன்பமும் தனதே எனவும் நினைப்பவன், சிறந்த யோகியாகக் {பரமயோகியாகக்} கருதப்படுகிறான்" என்றான் {கிருஷ்ணன்}. 6:32
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, நீ அறிவித்த சமத்துவத்தின் மூலம் ஏற்படும் இந்த யோகம், {எனது} மன அமைதியின்மையால், நிலையானதாக இருப்பாக எனக்குத் தோன்றவில்லை [6]. 6:33
[6] இயற்கையாகவே மனம் அமைதியற்ற நிலையில் இருப்பதால், அதன் நிலையான இருப்பை அடைவது எப்படி? {அமைதி கொள்ளச் செய்வது எப்படி?} என்று இதை விளக்குகிறார் கங்குலி.
![]() |
அடங்க மறுக்கும் மனத்தின் உருவகம் |
அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, 'மனம் என்பது அடக்குவதற்குக் கடினமானதும், அமைதியற்றதுமாகும்' என்பதில் ஐயமில்லை. எனினும், ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, 'பயிற்சியாலும், ஆசையைத் துறப்பதாலும், அதைக் கட்டுப்படுத்த முடியும்'. 6:35
கட்டுப்படுத்தாத மனத்தைக் கொண்டவன் அர்ப்பணிப்பை {யோகத்தை} அடைவது கடினம் என்பது எனது நம்பிக்கை. ஆனால் கட்டுப்படுத்தப்பட்ட மனத்துடனும், ஊக்கத்துடனும் உள்ள ஒருவனால், வழிமுறைகளின் உதவியுடன் அஃது அடையத்தக்கதாகிறது" என்றான் {கிருஷ்ணன்}. 6:36
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! கிருஷ்ணா, நம்பிக்கையுடன் இருந்தாலும், ஊக்கமில்லாமல், அர்ப்பணிப்பில் இருந்து மனம் விலகி, யோகத்தில் வெற்றியை ஈட்ட முடியாதவனுடைய முடிவு எது? {அவன் என்ன கதியை அடைகிறான்?}. 6:37
இரண்டில் இருந்தும் [7] விழுந்த அவன், ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, பிரம்மத்தை நோக்கிச் செல்லும் பாதையில் மயங்கி, புகலிடமற்றுப் போய், உடைந்த மேகம் போலத் தொலைந்து போவானா? இல்லையா? 6:38
[7] செயலின் மூலம் அடையப்படும் சொர்க்கத்தையும், அர்ப்பணிப்பின் {யோகத்தின்} மூலம் பிரம்மத்துடன் கலக்கும் இரண்டு நிலைகள் அவை என்கிறார் கங்குலி.
ஓ! கிருஷ்ணா, எதையும் விட்டுவிடாமல் [8], இந்த எனது ஐயத்தைக் களைவதே உனக்குத் தகும். உன்னைத் தவிர, இந்த ஐயத்தை விலக்கத்தக்கவன் வேறு எவனும் இல்லை" என்றான் {அர்ஜுனன்} 6:39
[8] "எதையும் விட்டுவிடாமல் முழுமையாக சொல்வாயாக என்பதே இங்கு பொருள்" என்கிறார் கங்குலி.
அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "ஓ! பிருதையின் மகனே {அர்ஜூனா}, நல்லதை {நற்செயல்களைச்} செய்யும் எவனுக்கும் தீய முடிவு ஏற்படுவதில்லை என்பதால் அவனுக்கு {நல்லவனுக்கு} இங்கேயோ {இவ்வுலகிலோ}, இதன் பிறகோ {அடுத்த உலகிலோ} அழிவில்லை. 6:40
நற்செயல்கள் புரிவோருக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை {உலகங்களை} அடைந்து, அங்கே பற்பல வருடங்கள் வாழும் அவன், அர்ப்பணிப்பில் {யோகத்தில்} இருந்து விழுந்து, நல்லோர் இருக்கும் இடங்களில் செழிப்புடன் பிறக்கிறான். அல்லது அறிவுடைய அர்ப்பணிப்பாளர்களின் {யோகியரின்} குடும்பத்தில் அவன் பிறக்கிறான். உண்மையில், இவ்வுலகில் இது போன்ற பிறவியை அடைவது அரிதானதாகும். 6:41-42
{அப்படி அடையும்} அந்தப் பிறவிகளில், முற்பிறவிகளில் அவனுடையதாக இருந்த பிரம்ம அறிவின் தொடர்பால், ஓ! குருவின் வழித்தோன்றலே {அர்ஜுனா}, விட்ட இடத்தில் இருந்தே அவன் முழுமையை {முழுமையான வெற்றியை} நோக்கி மீண்டும் உழைக்கிறான். 6:43
விருப்பமில்லாவிட்டாலும்கூட, தனது முந்தைய {முற்பிறவியில் செய்த} பயிற்சியின் விளைவால் அவன் மேலும் உழைக்கிறான். அர்ப்பணிப்பைக் {யோகத்தைக்} குறித்து கேட்பவனே {விசாரணை செய்பவனே} கூட, தெய்வீக வார்த்தையின் (பலன்களுக்கு) [9] மேல் உயர்ந்து விடுகிறான். 6:44
[9] "தெய்வீக வார்த்தை என்பது வேதமாகும். அர்ப்பணிப்பைக் {யோகத்தைக்} குறித்து வெறுமனே கேட்பதன் {விசாரிப்பதன்} மூலமாக மட்டுமேகூட, ஒருவனை, வேதச் சடங்குகளுக்கு இணங்காமல் அதைக் கடந்து செல்லச் செய்யும் அர்ப்பணிப்பின் {யோகத்தின்} திறம் மிகப் பெரியதாகும்" என்று இதை விளக்குகிறார் கங்குலி.
![]() |
அர்ப்பணிப்பாளன் ஒருவனின் தியானத்திற்குப் பொருத்தமான பொருளான சியாமசுந்தரன் |
தவத்தில் ஈடுபடும் தவசிகளை விட ஓர் அர்ப்பணிப்பாளன் {யோகி} மேன்மையானவனாவான்; அறிவாளியைவிடக்கூட அவன் உயர்வாக மதிக்கப்படுகிறான். செயலில் ஈடுபடுவோரைக் காட்டிலும் கூட, அந்த அர்ப்பணிப்பாளன் {யோகி} உயர்ந்தவனாவான். எனவே, ஓ! அர்ஜுனா, அர்ப்பணிப்பாளனாக இருப்பாயாக {யோகியாவாயாக}. 6:46
அர்ப்பணிப்பாளர்கள் {யோகியர்} அனைவருக்கும் மத்தியில், தனது {ஆத்மாவின்} அகத்தில் {அந்தராத்மாவில்} என்னைக் கொண்டு, முழு நம்பிக்கையுடன் என்னை வழிபடுபவன், என்னால் உயர்ந்த அர்ப்பணிப்பாளன் {மேலான யோகி} என்று கருதப்படுகிறான்" என்றான் {கிருஷ்ணன்}. 4:47
பகுத்தறிவின் அறம் - ஞானவிஞ்ஞானயோகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 031
Religion by Discernment - Gnaana–Vignaana yoga! | Bhishma-Parva-Section-031 | Mahabharata In Tamil
(பகவத்கீதா பர்வம் – 19) {பகவத் கீதை - பகுதி 7}
பதிவின் சுருக்கம் : முழுமையான உண்மை மற்றும் அதன் மறைபொருளான மாயையின் சக்தி ஆகியவற்றை அர்ஜுனனுக்கு விளக்கும் கிருஷ்ணன்...
அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, அர்ப்பணிப்பைப் {யோகத்தைப்} பயின்று, மனத்தை என்னில் நிலைக்கச் செய்து, என்னில் அடைக்கலம் கொண்டு, முழுமையாக என்னை நீ அறிவது எப்படி என்பதை ஐயத்திற்கிடமில்லாமல் கேட்பாயாக. 7:1
எவற்றை அறிந்தால், இவ்வுலகில் அறியத்தக்கதென எஞ்சுவது (உனக்கு) ஏதுமில்லையோ, அந்த அறிவு {ஞானம்} மற்றும் அனுபவம் {விஞ்ஞானம் = நடைமுறை அறிவு} ஆகிய அவற்றைக் குறித்து எதையும் விட்டுவிடாமல் {முழுமையாக} இப்போது நான் உனக்குச் சொல்கிறேன். 7:2
ஆயிரக்கணக்கான மனிதர்களில் ஒருவனே [1] முழுமைக்காக {சித்தி பெற} உழைக்கிறான். ஊக்கமுள்ளவர்களும், முழுமையை அடைந்தவர்களுமான அப்படிப்பட்டவர்களிலும், சிலரே என்னை உண்மையாக {உள்ள படியே} அறிகின்றனர். 7:3
[1] "ஒருவனே என்பது மிகச் சிலர் என்ற பொருளைத் தரும். முழுமையை அடைந்தவர்கள் என்பது ஆத்ம அறிவை அடைந்தவர்கள் என்ற பொருளைத் தரும்". இப்படியே அனைத்து உரையாசிரியர்களும் சொல்வதாகக் கூறுகிறார் கங்குலி.
படவிளக்கம்: பூமி, நீர், நெருப்பு ஆகிய அண்டத்தின் பொருட்களை கொண்டதே (உடல் எனக்குறிப்பிடப்படும்) ஆத்மா ஆகும். நுட்பமான மனோவுடல், அறிவு, அகந்தை ஆகியன நெற்றியில் உள்ள சிவப்பு புள்ளியால் குறிக்கப்படுகிறது. ஆன்மாவானது பருஉடலின் இதயத்தில் அமர்ந்திருக்கிறது.
பூமி {மண்}, நீர், நெருப்பு, காற்று, வெளி {வானம்}, மனம், அறிவு, உணர்வு என்று இப்படியே எனது இயல்பு {இயற்கை} எட்டு வகையாகப் பிரிந்திருக்கிறது. 7:4
(எனது வடிவத்தில்) இது தாழ்ந்த இயல்பு ஆகும். இஃதில் இருந்து வேறுபட்டு, உயிராக இருப்பதும், இந்த அண்டத்தையே தாங்குவதுமான (எனது வடிவத்தின்) உயர்ந்த இயல்பும் உண்டு என்பதை அறிவாயாக. 7:5
அனைத்து உயிரினங்களும் இவற்றையே தங்கள் மூலமாகக் கொண்டுள்ளன என்பதை அறிவாயாக. பரிணாம வளர்ச்சியின் {தோற்றத்தின்} மூலம் நானே; இந்த முழு அண்டத்தையும் அழிப்பவனும் நானே {அண்டம் முழுமைக்கும் ஆக்கமும் அழிவும் நானே}. 7:6
ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, என்னை விட உயர்ந்தது வேறு எதுவுமில்லை. சரத்தில் {நூலில்} கோர்க்கப்பட்ட முத்துக்களின் வரிசையைப் போல இவை அனைத்தும் {இந்த அண்டமனைத்தும்} என்னிலேயே இருக்கின்றன. 7:7
ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, நீரில் சுவையாக இருப்பவன் நானே. சந்திரன், சூரியன் ஆகிய இரண்டின் ஒளியாக இருப்பவன் நானே. வேதங்கள் அனைத்திலும் ஓம் ஆக {ஓம் என்ற ஒலியாக} இருப்பவன் நானே. வெளியில் {வானத்தில்} ஒலியாகவும், ஆண்களிடத்தில் ஆண்மையாகவும் இருப்பவன் நானே. 7:8
மண்ணில் நல்ல மணமும், நெருப்பில் பிரகாசமும், (வாழும்) உயிரினங்கள் அனைத்திலும் அவற்றின் உயிராகவும், தவம் செய்வோரில் தவமாகவும் இருப்பவன் நானே. 7:9
ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, அனைத்து உயிர்களின் நிலைத்த விதை நானே என்பதை அறிவாயாக. அறிவுடைய அனைத்து உயிர்களின் அறிவாகவும், புகழ்பெற்ற பொருட்கள் அனைத்தின் புகழாகவும் இருப்பவன் நானே. 7:10
பலம் கொண்டோர் அனைவரின் பலமாக இருப்பவன் நானே. ஆசை, தாகம் {ஏக்கம்} ஆகியவற்றில் இருந்து விடுபட்டு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனா}, அனைத்து உயிர்களிடத்திலும், கடமை தவறாத ஆசையாக இருப்பவன் நானே [2]. 7:11
[2] மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் ஆசை மற்றும் தாகம் ஆகியன மூலத்தில் காமம் மற்றும் ராகமாகச் சொல்லப்பட்டுள்ளன. "காமம் என்பது அடையப்படாத பொருளின் மீது கொண்ட ஆசை என்று ஸ்ரீதரர் சொல்கிறார். ராகம் என்பது ஏக்கம் அல்லது இன்னும் வேண்டும் என்ற தாகம் என்றும் சொல்கிறார்" என இங்கே குறிப்பிடுகிறார் கங்குலி.
நன்மையின் தன்மை {சத்வ குணம்}, ஆசையின் தன்மை {ரஜஸ் குணம்}, இருளின் தன்மை {தமோ குணம்} ஆகியவற்றைக் கொண்ட இருப்புகள் {பொருட்கள்} அனைத்தும், உண்மையில், என்னில் இருந்து வந்தவையே என்பதை அறிவாயாக. எனினும், நான் அவற்றினிடத்தில் இல்லை, ஆனால், அவைகளே என்னில் இருக்கின்றன. 7:12
(இந்த) மூன்று தன்மைகளை {முக்குணங்களைக்} கொண்ட, இந்த மூன்று உட்பொருள்களால் மயங்கும் இந்த அண்டம் முழுவதும், நான் அவற்றை {முக்குணங்களைக்} கடந்தவன், அழிவில்லாதவன் என்பதை அறியாதிருக்கிறது. 7:13
ஏனெனில், இந்தத் தன்மைகளை {முக்குணங்களைச்} சார்ந்திருக்கும் எனது இந்த மாயை, மிக அற்புதமானதாகவும் [3], கடப்பதற்கு மிகக் கடினமானதாகவும் இருக்கிறது. 7:14
[3] மூலத்தில் உள்ள தைவீ Daivi என்ற சொல்லை சங்கரர் "தெய்வீகமானது" என்றும், ஸ்ரீதரர் "அற்புதமானது" என்றும் விளக்குகின்றனர்" என்று இங்கு விளக்கமளிக்கிறார் கங்குலி.
அறியாமை கொண்ட மனிதர்கள் {மூடர்கள்}, தங்கள் இனத்தில் இழிந்தவர்கள் {மனிதர்களில் இழிந்தோர்}, (எனது) மாயையால் அறிவு மயங்கியோர், அசுரத் தன்மையை அடைந்தவர்கள் ஆகிய {நால்வகை} தீயோர் என்னை நாடுவது இல்லை. 7:15
ஓ! அர்ஜுனா நற்செயல் புரிவோரில் நான்கு வகையினர் என்னை வழிபடுகிறார்கள். அவர்கள், துயருற்றோர், அறிவுடையோர், [4] எப்போதும் அர்ப்பணிப்புடையோர் மற்றும் ஒன்றில் மட்டுமே நம்பிக்கை கொண்டோர் ஆகியோராவர். அறிவாளி ஒருவனுக்கு அனைத்தையும் விட அன்புக்குரியவன் நானே ஆவேன். அவனும் எனது அன்புக்குரியவன் ஆவான் என்பதால் எஞ்சியோர் அனைவரிலும் மேன்மையானவன் அவனே {அறிவாளியே}. 7:16-17
[4] மூலத்தை நோக்குகையில் கங்குலி சொல்லும் நான்கு வகையினரில் சற்றுக் குழப்பம் ஏற்படுவதால், மேற்கண்ட 16 மற்றும் 17 சுலோகங்களுக்கான பாரதியாரின் உரையைக் காண்பது சிறப்பெனக் கருதுகிறேன். அது பின்வருமாறு "நற்செய்கையுடைய மக்களில் நான்கு வகையினர் என்னை வழிபடுகின்றனர். பரதரேறே! {அர்ஜுனரே!}, துன்புற்றோர், அறிவை விரும்புவோர், பயனை வேண்டுவோர், ஞானிகள் ஆகியோரே அவர்கள். அவர்களில் நித்திய யோகம் பூண்டு, ஒரே பக்தியைச் செலுத்தும் ஞானி சிறந்தவன். ஞானிக்கு நான் மிகவும் இனியவன்.; அவன் எனக்கும் மிகவும் இனியன்" என்று பாரதியார் விளக்குகிறார். இஸ்கானின் பிரபுபாதரும் அப்படியே சொல்கிறார்.
இவர்கள் அனைவரும் உன்னதமானவர்களே. ஆனால், நுண்மத்தில் ஆத்மாவை நிலைக்கச் செய்து, என்னையே உயர்ந்த இலக்காகக் கொண்டு, என்னில் அடைக்கலமாகும் அறிவாளி ஒருவன் (என்னால்) நானாகவே கருதப்படுகிறான். 7:18
பல பிறவிகளின் முடிவில், அந்த அறிவாளி {ஞானி}, இவை அனைத்தும் வாசுதேவனே {கிருஷ்ணனே} என்று (நினைத்து) என்னையே அடைகிறான். எனினும், இத்தகு உயர் ஆன்மா கொண்டவன் அரிதிலும் அரிதானவன் ஆவான். 7:19
ஆசையால் களவாடப்பட்ட {கவரப்பட்ட} அறிவைக் கொண்டவர்கள், அவர்களின் {அந்நிய} தெய்வங்களை [5அ] நாடி, தங்கள் இயல்பில் கட்டுண்டு பல்வேறு சடங்குகளை நோற்கின்றனர் [5ஆ]. 7:20
[5அ] மூலத்தில் அந்ய தேவதா: ப்ரபத்யந்தே என்றே இருக்கிறது. ஆனால் கங்குலி இங்கே their godheads என்ற சொற்களைப் பயன்படுத்தி "அவர்களின் தெய்வங்கள்" என்கிறார். ஆனால் இங்கே அந்நிய தெய்வங்கள் என்பதே மூலம். இதற்குப் பாரதியாரின் உரை பின்வருமாறு. அது "வெவ்வேறு விருப்பங்களால் கவரப்பட்ட அறிவினை உடையோர், தத்தம் இயற்கையால் கட்டுண்டு, வெவ்வேறு நியமங்களில் நிற்போராய் அந்நிய தேவதைகளை வழிபடுகின்றனர்" என்பதாகும்.[5ஆ] "தெய்வீக ஆசைகள் என்பன மகன்கள், புகழ், எதிரிகள் மீதான வெற்றி மற்றும் இதரவை ஆகும். சடங்குகள் என்பன உண்ணா நோன்புகள் போன்றனவாகும். அவர்கள் இயல்பு என்பது தங்கள் முற்பிறவியின் செயல்களைச் சார்ந்த மனநிலை என்பதாகும்" என்றே அனைத்து உரையாசிரியர்களும் இதை விளக்குகின்றனர் என்கிறார் கங்குலி.
வழிபடுபவன் எவனும், நம்பிக்கையுடன் எந்த (தெய்வத்தின் அல்லது எனது) வடிவத்தை வழிபட விரும்புகிறானோ, அதன் (அந்த வடிவத்தின்) மேல் அவன் கொண்ட நம்பிக்கையை நான் உறுதியடையவே செய்கிறேன். 7:21
அந்த நம்பிக்கையுடனே அவன், தனது வழிபாடுகளை அதற்குச் (அந்த வடிவத்திற்கு) செலுத்துகிறான். அவன் தனது விருப்பம் அனைத்தையும் அடைகிறான். ஏனெனில், அவை அனைத்தும் என்னால் விதிக்கப்பட்டதே [6]. 7:22
[6] தான் வழிபடும் {அந்நிய} தெய்வத்திடம் இருந்தே தனது விருப்பங்களை அடைந்ததாக வழிபடும் ஒருவன் நினைக்கிறான். எனினும், அவற்றை அவனுக்குக் கொடுப்பது நானே ஆவேன்" என்று இங்கே விளக்கமளிக்கிறார் கங்குலி.
எனினும், சிற்றறிவு படைத்த அத்தகையோரின் பலன்கள் அழிவடையும். தேவர்களை வழிபடுவோர் தேவர்களிடமே செல்கின்றனர், (அதே வேளையில்) என்னை வழிபடுவோர் என்னையே அடைகிறார்கள் [7]. 7:23
[7] "தேவர்கள் அழிவுள்ளவர்களாக இருக்கிறார்கள், அழிவில்லாதவன் நானே. எனவே, அவர்கள் அடைவது எதுவும் அழியத்தக்கதாக இருக்கிறது, என்னை வழிபடுபவர்கள் அடைவது எதுவும் அழிவில்லாததாக இருக்கிறது" என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.
எதைவிட உயர்ந்தது எதுவும் இல்லையோ, அந்த எனது அழிவற்ற எல்லையற்ற நிலையை அறியாததால், (உண்மையில்) வெளிப்படாமல் இருக்கும் என்னை வெளிப்பட்டதாக [8] பகுத்தறிவற்ற அவர்கள் கருதுகின்றனர். 7:24
[8] "எல்லையற்ற என் தன்மையைத் தெரிந்து கொள்ளாத மூடர்கள், மனித மற்றும் எனது பிற அவதார வெளிப்பாடுகள் சுட்டிக்காட்டுவதைவிட நான் உயர்ந்தவன் இல்லை என்று எடுத்துக் கொள்கின்றனர். இப்படியே ஸ்ரீதரர் சொல்கிறார்" என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.
நினைத்துப் பார்க்க முடியாத எனது மாயசக்தியால் மூடப்பட்ட நான் அனைவருக்கும் வெளிப்படுவதில்லை [9]. நான் பிறப்பற்றவன், அழிவற்றவன் என்பதை {மாயையால்} மயங்கும் இந்த உலகம் அறிவதில்லை. 7:25
[9] என்னை அடைய உழைக்கும் ஒரு சிலருக்கு மட்டுமே வெளிப்படுவேன் என்றும் இங்கே பொருள் கொள்ளலாம்.
ஓ! அர்ஜுனா, சென்றன அனைத்தையும் {கடந்த காலத்தையும்}, இருப்பவை அனைத்தையும் {நிகழ்காலத்தையும்}, வருவன அனைத்தையும் {எதிர்காலத்தையும்} நான் அறிவேன். ஆனால் என்னை அறிந்தவர் எவருமில்லை. 7:26
ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, ஓ! பாரதா {அர்ஜுனா}, உயிரினங்கள் அனைத்தும் தாங்கள் பிறக்கும் நேரத்திலேயே, ஆசை மற்றும் வெறுப்பில் இருந்து எழும் முரண்பட்ட இரட்டைகளின் மாயையால் மயக்கப்படுகின்றன. 7:27
ஆனால், நற்செயல்கள் {புண்ணியங்கள்} செய்து தங்கள் பாவங்களின் முடிவை அடைந்த மனிதர்கள், அந்த முரண்பட்ட இரட்டைகளின் மயக்கத்தில் இருந்து விடுபட்டு, உறுதியான நோன்புடன் (அந்த வழிபாட்டில்) என்னையே வழிபடுகின்றனர். 7:28
என்னில் அடைக்கலம் கொண்டோர், சிதைவு {மூப்பு} மற்றும் மரணத்தில் இருந்து விடுபட உழைத்து, பிரம்மத்தையும், அத்யாத்மம் {ஆத்ம அறிவு} மற்றும் செயல்கள் முழுமையையும் அறிகிறார்கள் [10]. 7:29
[10] "அத்யாத்மம் Adhyatman" என்பது "பிரமத்தை அடைவதற்கு மூலமான அனைத்தும்" என்றும், "கர்ம ச அகிலம் karma cakhilam - All actions" என்பது "பிரம்ம அறிவுக்கு வழிவகுக்கும் கடமைகள் மற்றும் நடைமுறை வழிகள் அனைத்தும்" என்றும் இங்கே விளக்குகிறார் கங்குலி.
நுண்மத்தில் மனதை நிலைக்கச் செய்து, அதிபூதம் {பூத அறிவு}, அதிதெய்வம் {தேவ அறிவு}, அதியக்ஞம் {வேள்வி அறிவு} ஆகியவற்றைக் கொண்டு என்னை அறிபவர்கள், (இந்த உலகத்தில் இருந்து) புறப்படும் நேரத்திலும் என்னை அறிவார்கள்" என்றான் {கிருஷ்ணன்} [11]. 7:30
[11] "இந்தச் சுலோகத்தில் தோன்றும் மூன்று வார்த்தைகளும் அர்ஜுனனின் {அடுத்த} கேள்விப் பொருளின் வடிவாகி அடுத்தப் பகுதியில் விளக்கப்படுகிறது" என்று இங்கே சொல்கிறார் கங்குலி. மேலும் விளக்கமாக அறிய வேண்டுமென்றால், மேற்கண்ட சுலோகத்தைக் கீழ்க்கண்டவாறு பொருள் கொள்ளலாம், "பொருள்களின் தோற்றத்தை {வெளிப்பாட்டை} ஆளும் கோட்பாடான பரமாத்மாவாகவும், தேவர்கள் அனைவருக்கும் அடித்தளமான ஒருவனாகவும், அனைத்து வேள்விகளிலும் நிலைத்து நிற்கும் ஒருவனாகவும் என்னை அறிந்தவர்களால், மரண நேரத்திலும் கூட உறுதியான மனத்துடன் என்னை அறிந்து புரிந்து கொள்ள முடியும்"பரம்பொருளில் அர்ப்பணிப்பின் அறம் - அக்ஷர பிரம்ம யோகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 032
Religion by Devotion to the One Supreme God - Aksara–Brahma yoga! | Bhishma-Parva-Section-032 | Mahabharata In Tamil
(பகவத்கீதா பர்வம் – 20) {பகவத் கீதை - பகுதி 8}
பதிவின் சுருக்கம் : மரணத்திற்கு முன்னர் எண்ணப்படும் இறுதி நினைவின் முக்கியத்துவம், பொருள் மற்றும் ஆன்மிக உலகங்களுக்கு இடையே உள்ள வேறுபாடு, மரணத்திற்குப் பிறகு ஆத்மா பயணம் செய்யும் ஒளி மற்றும் இருள் பாதைகள் பற்றிய குறிப்புகளை அர்ஜுனனுக்குக் கிருஷ்ணன் விளக்குவது...
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! மனிதர்களில் சிறந்தவனே {புருஷோத்தமா, கிருஷ்ணா}, எது பிரம்மம்? எது அத்யாத்மம் {ஆத்மஞானம்}? எது செயல் {கர்மம்}? மேலும் அதிபூதம் {பூத அறிவு} என்று அழைக்கப்படுவது எது? அதிதெய்வம் {தேவ அறிவு} என்று அழைக்கப்படுவது எது? 8:1
ஓ! மதுசூதனா {கிருஷ்ணா}, இங்கே அதியக்ஞன் {வேள்வி அறிவு கொண்டவன்} யார்? இந்த உடலில் அவன் {அதியக்ஞன்} எப்படி இருக்கிறான்? புறப்படும் நேரத்தில் தற்கட்டுப்பாடு கொண்டோரால் நீ எப்படி அறியப்படுகிறாய்?" என்று கேட்டான் {அர்ஜுனன்}. 8:2
அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "அழிவற்றதாய், பரம்பொருளாய் இருப்பதே பிரம்மம். அத்யாத்மம் என்பது அதன் {ஆத்மாவின்} சொந்த வெளிப்பாடு {ஆத்மாவின் இயல்பை அறிவது} எனச் சொல்லப்படுகிறது. உற்பத்தியையும், அனைவருக்குமான வளர்ச்சியையும் விளைவிக்கும் காணிக்கையே (எந்தத் தெய்வத்துக்காவது வேள்வியில் கொடுக்கப்படுவது) செயல் {கர்மம்} என்று அழைக்கப்படுகிறது [1]. 8:3
[1] இங்கே செயல் {கர்மம்} குறித்த விளக்கத்தில் கங்குலி சற்றுக் குழப்புவதாகத் தெரிகிறது. "பூதபாவ: உத்பவகர: விஸர்க: கர்மஸம்ஜ்ஞித:" "bhuta-bhavodbhava-karo visargah karma-samjnitah" என்பது மூலம். இதன் பொருள் "உற்பத்தியையும் வளர்ச்சியையும் விளைவிக்கும் இயற்கையே கர்மம் எனப்படுகிறது" என்பதாகும். தெய்வத்துக்கான காணிக்கை என்ற பொருள் மூலத்தில் எங்கும் காணப்படவில்லை. இங்கே பாவ என்ற சொல் உற்பத்தியையும், உத்பவ என்ற சொல் வளர்ச்சி அல்லது முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்று ஸ்ரீதரர் சொல்வதாகக் குறிப்பிடுகிறார் கங்குலி.
{அழிவடையும்} இயற்கையைக் குறித்த {முடிவில்லாமல் மாறக்கூடியதே உடலின் இயல்பு என்ற} அறிவே அதிபூதம் {பூத அறிவு}. தலைவனைக் குறித்தது அதிதெய்வம் {தேவ அறிவு}, ஓ! உடல் கொண்டோரில் உயர்ந்தவனே {அர்ஜுனா}, {பரமாத்மாவான} என்னை உடலுக்குள் அறிதலே அதியக்ஞம் {வேள்வி அறிவு } [2] 8:4
[2] மேற்கண்ட சுலோகம் கங்குலியில் விடுபட்டிருக்கிறது.
(தனது) இறுதிக் கணங்களில் என்னை மட்டுமே நினைவில் கொண்டு, தனது உடலைத் துறந்து (இங்கிருந்து) புறப்படும் ஒருவன், எனது இயல்பை அடைகிறான். இதில் எந்த ஐயமுமில்லை. 8:5
இறுதியில் எந்த (தெய்வ) வடிவத்தை நினைவில் கொண்டு ஒருவன் தனது உடலைத் துறப்பானோ, ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, எப்போதும் அதைத் தியானிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த அவன், அதனிடமே {அந்த தெய்வ வடிவத்திடமே} செல்கிறான். 8:6
எனவே, அனைத்து நேரங்களிலும் என்னை நினைத்துப் போரில் ஈடுபடுவாயாக. உனது மனதையும், அறிவையும் என்னில் நிலைக்கச் செய்தால், நீ என்னையே அடைவாய் என்பதில் ஐயமில்லை. 8:7
ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, பிற பொருட்களில் செலுத்தப்படாத மனத்தைக் கொண்டு (பிரம்மத்தை) நினைத்து, தடங்கலற்ற செயலுடன் நுண்மத்தை அடைந்த ஒருவன், தெய்வீகமான பரமாத்மாவின் ஆளுமையை {பரமபுருஷனை} அடைகிறான். 8:8
{இறந்த பிறகு, இவ்வுலகத்திலிருந்து} புறப்படும் நேரத்தில் உறுதியான மனத்துடன், மதிப்புடன், நுண்மத்தின் சக்தியுடன், பிராணன் என்று அழைக்கப்படும் உயிர்க்காற்றைப் புருவங்களுக்கு மத்தியில் செலுத்தி, (அனைத்தையும்) ஆள்பவனும், அணுவிலும் நுண்மையானவனும், அனைத்தையும் விதிப்பவனும், உணர முடியாத உருவத்தில் இருப்பவனும், இருளனைத்தையும் கடந்திருப்பவனுமான அந்தப் பழைமையானவனை நினைப்பவன் தெய்வீகமான பரமாத்மாவின் ஆளுமையையே {பரமபுருஷனை} அடைகிறான். 8:9-10
எந்த நிலையை அழிவற்றது என்று வேதங்களை அறிந்தவர்கள் தீர்மானித்திருக்கிறார்களோ, ஏக்கங்களில் {ஆசைகளில்} இருந்து விடுபட்ட தவசிகள் எதற்குள் நுழைவார்களோ, எதை எதிர்பார்த்து பிரம்மச்சரிய நோன்பு பயிலப்படுமோ, அந்த நிலையை நான் உனக்குச் சுருக்கமாகச் சொல்வேன். 8:11
(இந்த) உடலைத் துறந்து இங்கிருந்து புறப்பட்டு, கதவுகள் அனைத்தையும் மூடி, மனத்தை இதயத்தில் அடக்கி, பிராணன் என்று அழைக்கப்படும் தனது உயிர்க்காற்றைப் புருவங்களின் மத்தியில் நிறுத்தி, தொடர்ந்த தியானத்தில் {யோகத்தில்} உறுதியாக நிலைத்து, ஓம் என்ற பிரம்ம எழுத்து ஒன்றையே உச்சரித்து, என்னையே நினைப்பவன் உயர்ந்த இலக்கை {பரமகதியை} அடைகிறான் [3]. 8:12-13
[3] இங்கே "கதவுகள் அனைத்தும்" என்பது புலன்கள் என்றும், "மனத்தை இதயத்தில் அடக்குவது" என்பது பிற பொருட்களில் இருந்து மனத்தை விலக்குவது என்றும் பொருள் படும் என்றும், "மூர்த்நி Murdhni" என்பதை "புருவங்களுக்கு மத்தியில்" என ஸ்ரீதரர் விளக்குகிறார் என்றும் கூறுகிறார் கங்குலி
ஓ! பார்த்தா {அர்ஜுனா}, பிற பொருட்கள் அனைத்திலும் இருந்து விலக்கப்பட்ட மனத்தைக் கொண்டு எப்போதும் என்னையே நினைத்து, எப்போதும் தியானத்தில் எவன் ஈடுபடுவானோ, அந்த அர்ப்பணிப்பாளன் {யோகி} {என்னை} அணுக எளிதானவனாகவே நான் இருக்கிறேன். 8:14
உயர்ந்த முழுமையான என்னை அடைந்த உயர் ஆன்மா கொண்டோர் {மகாத்மாக்கள்}, துயரின் உறவிடமும், நிலையற்றதுமான மறுபிறப்பை அடைவதில்லை. 8:15
ஓ! அர்ஜுனா, பிரம்ம லோகம் முதற்கொண்டு கீழே உள்ள அனைத்து உலகங்களும் பிறப்பு சுழற்சியின் வழியாகவே செல்ல வேண்டும் {அனைத்து உலகங்களிலும் மறுபிறப்பு உண்டு}. எனினும், ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, என்னை அடைந்தால் மறுபிறவி கிடையாது [4]. 8:16
[4] அழிவுள்ள இந்த உலகங்கள் அனைத்தும் மறுபிறப்பைக் கொண்டிருக்கின்றன. அங்கே வாழ்பவர்கள் கூட மரணத்திற்கும், மறுபிறப்புக்கும் உள்ளாவார்கள் என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.
பிரம்மனின் பகலொன்று ஆயிரம் {1000} யுகங்களில் முடியும் என்றும், (அவனது) இரவு ஆயிரம் {1000} யுகங்களில் முடியும் என்றும் அறிந்தவர்களே பகல் மற்றும் இரவைக் குறித்து அறிந்தவர்களாவர். 8:17
(பிரம்மனின்) பகல் தொடங்கும்போது வெளிப்படுபவை அனைத்தும் மறைந்திருந்ததில் {அவ்யக்தம் = உருவமற்றதில்} இருந்து தோன்றுகின்றன {பிரபவந்தி}; (அவனது) இரவு வரும்போது, மறைவுபட்டது என்று அழைக்கப்படுவதற்குள்ளேயே அனைத்து பொருட்களும் மறைந்து போகின்றன. 8:18
உயிரினங்களின் அதே தொகுதி, மீண்டும் மீண்டும் பிறக்கின்றன; இரவு தொடங்கும்போது மறைகின்றன, ஓ! பார்த்தா {அர்ஜுனா}, (மீண்டும்) பகல் வரும்போது (செயலின் சக்திக்கு) கட்டுப்பட்டுப் பிறக்கின்றன. 8:19
எனினும், அனைத்து பொருட்களும் அழிக்கப்படும் போது அழியாததும், மறைவைக் {அவ்யக்தத்தைக்| கடந்ததும், நித்தியமானதும், மறைவானதுமான மற்றொரு பொருள் இருக்கிறது. 8:20
அது {அந்தப் பொருள்} மறைவானதாகவும், அழிவில்லாததாகவும் சொல்லப்படுகிறது. அஃதை அடைந்த பிறகு, மீண்டும் யாரும் திரும்பி வர வேண்டிய அவசியம் இல்லாததால், அஃதை உயர்ந்த இலக்கு {பரமகதி} என்று அவர்கள் {பகலிரவை அறிந்தவர்கள்} அழைக்கிறார்கள். அதுவே எனது உயர்ந்த நிலையாகும் {பரமபதமாகும்}. 8:21
வேறு எந்தப் பொருளிலும் கவனம் செலுத்தாது, ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, எவனில் அனைத்துப் பொருட்களும் இருக்கிறதோ, எவனால் இவை அனைத்தும் ஊடுருவப்பட்டுள்ளதோ, அந்தத் தலைமையானவனே {பரமாத்மாவே}, அடையத்தக்கவனாவான். 8:22
ஓ! பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனா}, அர்ப்பணிப்பாளர்கள் {யோகிகள்} (இந்த வாழ்வில் இருந்து) எங்குப் புறப்படும்போது, எந்த நேரங்களில் எல்லாம் திரும்ப மாட்டார்கள், அல்லது திரும்புவார்கள் என்பதை நான் உனக்குச் சொல்லுகிறேன். 8:23
நெருப்பு, ஒளி, பகல், வளர்பிறை, சூரியன் வடக்கே இருக்கும் ஆறு மாதங்கள் {உத்தராயணம்} ஆகியவற்றில் இங்கிருந்து புறப்படும் {இறக்கும்} பிரம்மத்தை அறிந்த மனிதர்கள், பிரம்மதை அடையும் இவ்வழியில் செல்கிறார்கள். 8:24
புகை, இரவு, தேய்பிறை மற்றும் சூரியன் தெற்கே இருக்கும் ஆறு மாதங்கள் {தக்ஷிணாயணம்} ஆகியவற்றில் இங்கிருந்து புறப்படும் அர்ப்பணிப்பாளன் {யோகி}, சந்திர ஒளியை அடைந்து திரும்புகிறான். 8:25
ஒளி மற்றும் இருள் ஆகிய இரு பாதைகளே இந்த அண்டத்தில் நிலைத்தவையாக (நிலைத்த இரு பாதைகளாக) கருதப்படுகிறது. ஒன்றின் மூலம், (ஒருவன்) எப்போதும் திரும்பாதவாறு போகிறான்; மற்றொன்றின் மூலம், ஒருவன் திரும்பி வருவான் (வரப்போகிறான்). 8:26
ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, இந்த இரு பாதைகளையும் அறிந்த எந்த அர்ப்பணிப்பாளனும் {யோகியும்} மயக்கமடைவதில்லை. எனவே, ஓ! அர்ஜுனா, அனைத்து நேரங்களிலும் அர்ப்பணிப்புடன் {யோகத்துடன்} இருப்பாயாக. 8:27
வேதங்களில் (வேத கல்வியில்), வேள்வியில், தவத்தில், தானங்களில் பரிந்துரைக்கப்படும் புண்ணியப் பலன்களை அடைந்து, (இங்கே சொல்லப்பட்ட) அனைத்தையும் அறிந்த அர்ப்பணிப்பாளன் {யோகி} ஒருவன் முழுமையை அடைந்து, தொடக்க {ஆதி} மற்றும் தலைமையான {பரம} நிலையையும் அடைகிறான்" என்றான் {கிருஷ்ணன்}. 8:28
சிறந்த அறிவு மற்றும் பெரும்புதிரின் அறம் - ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 033
Religion by the Kingly Knowledge and the Kingly Mystery - Raja–Vidya–Raja–Guhya yoga! | Bhishma-Parva-Section-033 | Mahabharata In Tamil
(பகவத்கீதா பர்வம் – 21) {பகவத் கீதை - பகுதி 9}
பதிவின் சுருக்கம் : அறிவியல்களுள் சிறந்ததும், மறைபொருட்களில் மேலானதுமான பக்தி யோகத்தின் தன்மை, மேன்மை, பயன் ஆகியவற்றை அர்ஜுனனுக்குக் கிருஷ்ணன் சொல்வது; செயல்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடவுளின் தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்தும் கிருஷ்ணன்...
அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "எதை அறிந்தால் தீமையில் இருந்து நீ விடுபடுவாயோ, அந்த அறிவின் மிகப் பெரிய புதிரை, பொறாமையற்றிருக்கும் உனக்கு நடைமுறை அறிவுடன் இப்போது நான் சொல்லப் போகிறேன். 9:1
தூய்மையாக்கவல்லதும், நேரடியாகப் புரிந்து கொள்ளக்கூடியதும், புனித விதிகளுக்கு {தர்ம்யம் = அறத்திற்கு} இசைவானதும், பயில்வதற்கு எளிதானதும், (மேலும்) அழிவற்றதுமாகிய இஃது அரச அறிவியலும், ஓர் அரசப் புதிரும் ஆகும். 9:2
ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {அர்ஜுனா}, இந்தப் புனிதக் கோட்பாட்டில் {தர்மஸ்ய = அறத்தில்} நம்பிக்கையில்லாத மனிதர்கள் என்னை அடையாமல், அழிவுக்குள்ளாகக் கூடிய இந்த உலகத்தின் பாதையில் திரும்புகிறார்கள். 9:3
எனது மறைவடிவத்தால் இந்த அண்டம் முழுமையும் என்னால் படர்ந்து ஊடுருவப்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் {பூதங்கள் அனைத்தும்} என்னில் {நிலைபெற்று} இருக்கின்றன, ஆனால் நான் அவற்றில் {நிலைபெற்று} இருப்பதில்லை. 9:4
அதே போல அனைத்து பொருட்களும் என்னிலேயே இருப்பதுமில்லை. எனது தெய்வீக சக்தியைப் {ஈஸ்வரத்தன்மையுடைய எனது யோகசக்தியைப்} பார். அனைத்துப் பொருட்களையும் தாங்கி {ஆதரித்து}, அனைத்துப் பொருட்களையும் உற்பத்தி செய்யும் நானே (எனினும்) (அந்த) பொருட்களில் இருப்பதில்லை. 9:5
எங்கும் காணப்படக்கூடியதும், பெரியதுமான காற்று எப்போதும் வெளியில் {வானில்} பரவி வளர்வதைப் {ஆக்கிரமிப்பதைப்} போல, அனைத்துப் பொருட்களும் என்னில் அதே போல வசிக்கின்றன என்று அறிவாயாக [1]. 9:6
[1] காற்றானது வெளியை ஆக்கிரமிக்கும்போது, அஃதையோ, அதன் இயல்பையோ பாதிப்பதில்லை. அதே போல அனைத்துப் பொருட்களும் பரம்பொருளைப் பாதிக்காமல் பரம்பொருளிலேயே இருக்கின்றன என்று விளக்குகிறார் கங்குலி.
ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, கல்பத்தின் {432 கோடி வருடங்களின் = 43200 லட்சம் வருடங்களின்} முடிவில் அனைத்துப் பொருட்களும் எனது இயல்பை அடைகின்றன. நான் மீண்டும் அவற்றைக் கல்பத்தின் தொடக்கத்தில் படைக்கிறேன் [2]. 9:7
[2] இங்கே சுட்டப்படும் எனது இயல்பு என்பது மறைவான தோற்றம் என்ற கொள்கை அல்லது மூலாதாரச் சாரம் என்று பொருள்படும் என்கிறார் கங்குலி. இங்கே சுட்டப்படும் கல்பம் என்பது விஷ்ணு புராணம் மற்றும் பாகவத புராணத்தின் காலக்கணக்கின் படி 432 கோடி வருடங்கள் ஆகும். அதாவது 43200 லட்சம் வருடங்கள் ஆகும். ஒரு கல்பம் 14 மன்வந்தரங்களைக் கொண்டதாகும். அறிவியலாளர்கள் கூற்றின் படி இந்தப் பூமியின் வயது 454 கோடி வருடங்களாகும்.
இயற்கைக்குக் கீழ்ப்படிவதன் விளைவால் நெகிழ்பவையான பொருட்களின் அந்தத் தொகுதி முழுவதையும், (சார்பற்ற) எனது சொந்த இயல்பை ஒழுங்கமைத்து, மீண்டும் நான் படைக்கிறேன் [3]. 9:8
[3] பிராக்ருதி என்பதை நான் இங்கே "இயற்கை" என்று கொள்கிறேன். இதையே வேறு உரையாசிரியர்கள், "கர்மம்" என்றும், "அந்தக் கர்மம் அல்லது செயலின் தாக்கத்தால் ஒரு குறிப்பிட்ட பொருளின் வடிவத்தை அமைக்க, படைப்பு நேரத்தின் போது அமைகிறது" என்றும் பொருள் கொள்கிறார்கள் என்கிறார் கங்குலி.
எனினும், ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, கவலையில்லாமல் அமர்ந்திருப்பவனும், (படைப்பின்) அந்தச் செயல்களில் பற்றற்றவனுமான என்னை அந்தச் செயல்கள் பிணைக்காது {கர்ம பந்தத்தில் கட்டாது}. 9:9
கண்காணிப்பாளனான என் மூலம், மூலதாரமான இயற்கையானது (இந்த அண்டத்தில்) அசைவன மற்றும் அசையாதனவற்றைப் படைக்கிறது. இதன் காரணமாகவே [4அ], ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, இந்த அண்டம் (தோற்றம் மற்றும் அழிவு என்ற) தனது சுழற்சியைக் கடக்கிறது [4ஆ]. 9:10
[4அ] இங்கே இதன் காரணமாகவே என்பதன் பொருள், "எனது கண்காணிப்பின் கீழ்" என்று கொள்ளப்பட வேண்டும் என்கிறார் கங்குலி.[4ஆ] இதனால்தான் இந்த உலகமே சுழல்கிறது என்கிறார் இங்கே பாரதியார்.
![]() |
மனித உருவில் வெளிப்பட்ட பரமாத்மா |
ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, ஆனால், உயர் ஆன்மா கொண்டவர்களோ {மகாத்மாக்களோ}, தெய்வீக இயல்பைக் கொண்டு, வேறு எதிலும் செலுத்தப்படாத மனத்தினால், அனைத்துப் பொருட்களின் மூலமாகவும், அழிவற்றவனாகவும் (என்னை) அறிந்து, என்னையே வழிபடுகிறார்கள். 9:13
எப்போதும் என்னைப் புகழ்ந்தோ, உறுதியான நோன்புகளுடன் உழைத்தோ, என்னை வணங்கியோ, மதிப்புடனும், எப்போதும் அர்ப்பணிப்புடனும் (அவர்கள் {யோகிகள்}) என்னை வழிபடுகிறார்கள் [5]. 9:14
[5] பல்வேறு முறைகளிலான வழிபாடுகள் இவை என்றும்; "மரியாதையுடனும், எப்போதும் அர்ப்பணிப்புடனும்" என்பது "இலக்கணப்படி மூன்று வகை வழிபாட்டாளர்களையே குறிக்கிறது" என்றும் ஸ்ரீதரர் சொல்வதாக இங்கே குறிப்பிடுகிறார் கங்குலி.
மேலும் பிறர், அறிவு வேள்வியைச் செய்தும், (சிலர்) ஒருமையாகவும், (சிலர்) வேறுபட்டதாகவும் {பன்மையாகவும்}, (சிலர்) அண்டத்தில் படர்ந்து ஊடுருவி இருப்பவனாகவும் எனப் பல வடிவங்களில் என்னை வழிபடுகின்றனர் [6]. 9:15
[6] இங்கே "அறிவு வேள்வியைச் செய்வது" என்பதை "வாசுதேவனே {கிருஷ்ணனே} அனைத்தும் என்ற நம்பிச் செய்வது" என்றும், "பல வடிவங்களில்" என்பதை "பிரம்மன், ருத்ரன் முதலிய இதர வடிவங்களில்" என்றும் பொருள் கொள்ள வேண்டும் என்கிறார் கங்குலி.
வேத வேள்வி {ஹோமம்} நானே, ஸ்மிருதிகளில் {நினைவில் வைத்துக் கொள்ளப்பட்டவற்றில்} அறிவுறுத்தப்படும் வேள்வி நானே, சுவதா நானே, மூலிகைகளில் இருந்து உண்டாக்கப்படும் மருந்து நானே; மந்திரம் நானே, வேள்வி நெய் நானே, நெருப்பு நானே மற்றும் (வேள்வியில் அளிக்கப்படும்) காணிக்கையும் {அவியும்} நானே [7]. 9:16
[7] இங்கே மந்திரம் என்பதைத் தெய்வங்களை எழுப்பவதற்காகவும், பிற காரியங்களுக்காவும் சொல்லப்படும் புனித வரி அல்லது வரிகள் என்று பொருள் கொள்ள வேண்டும் என்கிறார் கங்குலி.
இந்த அண்டத்தின் தந்தை, தாய், படைப்பாளன், பெரும்பாட்டன் ஆகியவை நானே; ஓம் என்ற எழுத்து, ரிக், சாமம், யஜுஸ் ஆகியவையும், அனைத்தையும் தூய்மையாக்கும் வழிமுறையும், அறியப்பட வேண்டிய பொருள் ஆகியவையும் நானே. 9:17
குறிக்கோள், தாங்குபவன், தலைவன், கண்காணிப்பாளன், வசிப்பிடம், புகலிடம், நண்பன், மூலம், அழிவு, ஆதரவு, கொள்கலம் மற்றும் அழிவில்லா விதை ஆகியவை நானே.
வெப்பம் தருபவன் நானே, மழையை உண்டாக்கி நிறுத்துபவன் நானே; அழியாநிலை நானே, மரணம் நானே; ஓ! அர்ஜுனா, {இருப்பு} உள்ளவன் நானே, , {இருப்பு} இல்லாதவனும் நானே. 9:19
அறிவின் மூன்று கிளைகளை அறிந்தவர்களும், சோமச்சாற்றைப் பருகியவர்களும், வேள்விகள் செய்து என்னை வழிபடுவதால் பாவங்கள் நீங்கியவர்களும் சொர்க்கத்தில் நுழைய முயல்கிறார்கள்; தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} புனித உலகத்தை அடையும் அவர்கள், தேவர்களின் தெய்வீக இன்பத்தைச் சொர்க்கத்தில் அனுபவிக்கிறார்கள். 9:20
நெடுங்காலம் அந்தத் தெய்வீக உலகில் இன்புற்று இருக்கும் அவர்கள், தங்கள் நல்வினைப் பயன் {புண்ணியம்} தீர்ந்ததும், அழிவுடைய மனித உலகத்தினுள் மீண்டும் நுழைகிறார்கள். இப்படியே மூன்று வேதங்களின் கோட்பாடுகளை ஏற்றவர்கள், ஆசைக்குகந்த பொருட்களை விரும்புபவர்கள் ஆகியோர் வருவதும் போவதுமான நிலையை அடைகிறார்கள். 9:21
(இப்படி) எப்போதும் (என்னிடம்) அர்ப்பணிப்புள்ளவர்களில் வேறு எதிலும் தங்கள் மனங்களைச் செலுத்தாமல் (என்னையே) நினைக்கும் மனிதர்கள் என்னை வழிபடுகிறார்கள். அவர்களுக்கு நான் பரிசுகளைக் கொடுத்து, ஏற்கனவே அவர்கள் வைத்திருப்பதைப் பாதுகாக்கிறேன். 9:22
பிற {அந்நிய} தெய்வங்கள் மீது நம்பிக்கை கொண்ட அர்ப்பணிப்பாளர்கள் கூட {பக்தர்கள் கூட}, (ஒழுங்கின்படி இல்லாமல்) என்னையே {என்னை மட்டுமே} வணங்குகிறார்கள் [8].9:23
[8] ஆனால், அதனால் {முறையாக இல்லாததால்} அவர்கள் மீண்டும் பிறக்க நேரிடும் என்கிறார் கங்குலி.
வேள்விகள் அனைத்தின் தலைவனும், அதை அனுபவிப்பவனும் {அளிக்கப்படும் காணிக்கைகளை ஏற்பவனும்} நானே. எனினும், அவர்கள் என்னை உண்மையில் அறிவதில்லை; எனவே அவர்கள் {அந்நிய தெய்வங்களை வணங்குவோர்} (சொர்க்கத்தில் இருந்து) விழுகிறார்கள். 9:24
{தேவர்களை நோக்கி நோன்புகளைக் கொண்டோர் தேவர்களை அடைகிறார்கள் [9]} பித்ருக்களை நோக்கிய நோன்புகளைக் கொண்டோர் பித்ருக்களை அடைகிறார்கள்; பூதங்கள் என்று அழைக்கப்படும் தாழ்ந்த ஆவிகளுக்குத் (தங்கள்) வழிபாடுகளைச் செலுத்துவோர் பூதங்களை அடைகிறார்கள்; என்னை வழிபடுவோர் என்னையே அடைகிறார்கள். 9:25
[9] இது கங்குலியில் விடுபட்டுள்ளது.
இலை, மலர், கனி, நீர் ஆகியவற்றை மதிப்புடன் {பக்தியுடன்} எனக்குக் காணிக்கையளிக்கும் தூயோரிடம் இருந்து, மதிப்புடன் காணிக்கையளிக்கப்படும் அவற்றை ஏற்கிறேன். 9:26
நீ எதையெல்லாம் செய்வாயோ, எதையெல்லாம் உண்பாயோ, எதையெல்லாம் பருகுவாயோ, எதையெல்லாம் கொடுப்பாயோ, எந்தத் தவங்களில் எல்லாம் ஈடுபடுவாயோ, ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, எனக்காகக் காணிக்கையாகச் செய்யும் வழியில் அவற்றை அமைத்துக் கொள்வாயாக {அதை எனக்கே அர்ப்பணம் செய்}. 9:27
இப்படியே நல்ல மற்றும் தீய பலன்களைக் கொண்ட செயல்களின் பிணைப்புகளில் இருந்து நீ விடுபடுவாய். துறவு மற்றும் அர்ப்பணிப்பு {யோகம்} கொண்ட நீ விடுதலை அடைந்து என்னையே அடைவாய். 9:28
அனைத்து உயிரினங்களுக்கும் நான் ஒன்றாகவே {சமமாகவே} இருக்கிறேன்; எனக்கு வெறுப்பு நிறைந்தவனும், அன்புள்ளவனும் எவனும் இல்லை. எனினும், மதிப்புடன் என்னை வழிபடுபவர்கள் என்னில் இருக்கிறார்கள். நானும் அவர்களிடம் இருக்கிறேன். 9:29
மிகக் கொடிய நடத்தை கொண்டவன் ஒருவன், வேறு யாரையும் வழிபடாமல் என்னையே வழிபடுவானாகில், நன்கு செலுத்தப்பட்ட அவனது முயற்சிகளுக்காக, நிச்சயம் அவன் நல்லவனாகவே கருதப்பட வேண்டும். (அப்படிப்பட்ட மனிதன்) விரைவில் அறம் சார்ந்த ஆன்மா கொண்டவனாக மாறி நித்திய அமைதியை அடைவான். ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனன்} என்னிடம் அர்ப்பணிப்பு கொண்டோர் தொலைவதில்லை {அழிவதில்லை} என்பதை அறிவாயாக. 9:30-31
ஏனெனில், ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே அர்ஜுனா}, பாவப்பிறவிகள், பெண்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோர் கூட என்னைப் பணிந்தால், உயர்ந்த இலக்கை {பரகதி} அடைகிறார்கள். 9:32
அப்படி இருக்கையில், எனது அர்ப்பணிப்பாளர்களாக {பக்தர்களாக} இருக்கும் புனிதமான அந்தணர்கள் மற்றும் துறவிகளைக் குறித்து நான் என்ன சொல்வேன்? நிலையற்றதும், துன்பம் நிறைந்ததுமான இந்த உலகிற்கு வந்ததால், என்னை வழிபடுவதில் ஈடுபடுவாயாக [10]. 9:33
[10] இமம் லோகம் {இந்த மனித உலகம்} என்று சொல்வது, "இந்த வடிவில் இருக்கும் அரச முனியான நீ" என்று பொருள்படலாம் என்று ஸ்ரீதரர் சொல்வதாக இங்கே குறிப்பிடுகிறார் கங்குலி.
என்னில் உனது மனத்தை நிலைக்கச் செய்வாயாக; என்னிடம் அர்ப்பணிப்பு {பக்தி} கொண்டவனாகவும், என்னை வழிபடுபவனும் {தொழுபவனும்} ஆவாயாக; இப்படியே என்னைப் புகலிடமாகக் {பரமாகக்} கொண்டு நுண்மத்தில் {தற்கலப்பு யோகத்தில்} ஈடுபடும் நீ நிச்சயம் என்னையே அடைவாய்" என்றான் {கிருஷ்ணன்}. 9:34
தெய்வீக மாட்சிமையின் அறம் - வீபூதி விஸ்தார யோகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 034
Religion by the Heavenly Perfections - Vibhuti–Vistara–yoga! | Bhishma-Parva-Section-034 | Mahabharata In Tamil
(பகவத்கீதா பர்வம் – 22) {பகவத் கீதை - பகுதி 10}
பதிவின் சுருக்கம் : பொருள் மற்றும் ஆன்ம இருப்பின் மாட்சிமையின் முழுமையான காரணகர்த்தாவாகத் தன்னை விவரிக்கும் கிருஷ்ணன்; பெருமுனிவர்களின் மேற்கோள்களைச் சுட்டிக் காட்டி கிருஷ்ணனையே பரம்பொருளாக அர்ஜுனன் ஏற்றுக் கொள்வது; கிருஷ்ணனுடைய யோக சக்திகளின் மாட்சிமையைச் சொல்லுமாறு அர்ஜுனன் அவனை வேண்டுவது; கிருஷ்ணன் மேலும் தன்னை விவரிப்பது...
அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, (உனது) நன்மையை விரும்பி, சொல்லப்படும் மேன்மையான எனது வார்த்தைகளை மீண்டும் ஒருமுறை கேட்பாயாக. (அதனால்) மகிழ்ச்சியடைவாய் என்பதால் உனக்கு நான் இதைச் சொல்கிறேன். 10:1
அனைத்துவகையிலும் தேவர்கள் மற்றும் பெருமுனிவர்களின் மூலமாக {தோற்றுவாயாக} நான் இருந்தாலும், எனது மூலத்தை, தேவ படைகளும் அறியமாட்டார்கள்; பெருமுனிவர்களும் அறிய மாட்டார்கள். 10:2
பிறப்போ, தொடக்கமோ இல்லாதவனாகவும் உலகங்களின் பெருந்தலைவனாகவும் என்னை அறிபவன், மனிதர்களுக்கு மத்தியில் மயக்கமில்லாதவனாக இருந்து, பாவங்கள் அனைத்திலும் இருந்து விடுபடுகிறான். 10:3
அறிவாற்றல் {புத்தி}, அறிவு, மயக்கமின்மை, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, உண்மை {சத்தியம்}, தற்கட்டுப்பாடு, அமைதி, இன்பம், வலி {துன்பம்}, பிறப்பு, இறப்பு, அச்சம், பாதுகாப்பு {அச்சமின்மை}, தீங்கிழையாமை {அஹிம்சை}, மனத்தின் சமன்திறன் {நடுநிலை}, மனநிறைவு, தவத்துறவுகள், கொடை, புகழ், இகழ் ஆகிய இப்படிப்பட்ட பல பண்புகள் என்னில் இருந்தே உயிரினங்களில் எழுகின்றன {உண்டாகின்றன}. 10:4-5
இவ்வுலகின் சந்ததியர் எவரில் இருந்து உண்டானார்களோ, அந்த ஏழு {7} பெரு முனிவர்கள், (அவர்களுக்கு) முந்தைய பெருமுனிவர்கள் நால்வர் {4}, மனுக்கள் ஆகியோர் எனது இயல்பில் பங்கெடுத்து, என் மனத்தில் இருந்தே பிறந்தார்கள். 10:6
இந்த எனது மேலாதிக்கத்தையும், ஆன்ம சக்தியையும் உண்மையில் அறிந்தவன், அசைக்க முடியாத அர்ப்பணிப்பு {பக்தி} கொண்டவனாவான் {யோகத்தில் அமர்ந்தவனாவான்}. இதில் (எந்த) ஓர் ஐயமுமில்லை. 10:7
நான் அனைத்துப் பொருள்களின் மூலமாக {தோற்றுவாயாக} இருக்கிறேன். என்னிலிருந்தே அனைத்தும் இயங்குகின்றன. இப்படிச் சிந்திப்போரும், எனது இயல்பைக் கொண்டோருமான அறிஞர்கள் [1] என்னை வழிபடுகின்றனர். 10:8
[1] "பாவஸமந்விதா: Bhava-samanwitas" என்பதை ஸ்ரீதரர் "அன்பு நிறைந்தோர்" என்று விளக்குகிறார். அதையே K.T.டெலங்கும் ஏற்கிறார். சங்கரரோ, "பரம்பொருளில் அறி்வால் ஊடுருவியோர்" என்று விளக்குகிறார் என இங்கே குறிப்பிடுகிறார் கங்குலி. நம்பிக்கையும், பக்தியும் கொண்ட அறிஞர்கள் என்று இது பொருள் கொள்ளப்படுகிறது.
தங்கள் இதயங்களை என்னில் வைத்து, தங்கள் வாழ்வை எனக்கே அர்ப்பணித்து, ஒருவருக்கொருவர் {என்னைக் குறித்து} விளக்கியும், என்னைப் புகழ்ந்து கொண்டும் எப்போதும் மனநிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் அவர்கள் {அந்த அறிஞர்கள்} இருக்கிறார்கள். 10:9
எப்போதும் அர்ப்பணிப்புடனும் {யோகத்துடனும்}, அன்புடனும் (என்னை) வழிபடுவோருக்கு, அந்த அர்ப்பணிப்பை அறிவின் வடிவில் {புத்தி யோகத்தை} நான் அவர்களுக்குக் கொடுக்கிறேன். அதைக் கொண்டே அவர்கள் என்னை அடைகிறார்கள். 10:10
அவர்களது ஆன்மாக்களில் குடியிருக்கும் நான், அவர்களிடம் கருணை கொண்டு, அறிவு எனும் ஒளிமிக்க விளக்கால், {அவர்களிடம்} அறியாமையில் பிறந்த இருளை {அவர்களிடமிருந்து} அழிக்கிறேன்" என்றான் {கிருஷ்ணன்}. 10:11
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "தலைமையான பிரம்மம் {பரப்பிரம்மம்} நீயே, தலைமையான வீடு {பரவீடு} நீயே, தூய்மையனைத்திலும் தூயவன் நீயே, நிலையான தெய்வீகத் தலைவன் {நித்திய புருஷன்} நீயே, பிறப்பற்ற தேவர்களில் முதல்வனும், தலைவனும் நீயே. முனிவர்கள் அனைவரும், தெய்வீக முனிவரான நாரதர், அசிதர், தேவலர் மற்றும் வியாசர் ஆகியோரும் இப்படியே உன்னைச் சொல்கிறார்கள். நீயும் (அதையே) எனக்குச் சொல்கிறாய். 10:12-13
ஓ! கேசவா {கிருஷ்ணா}, நீ சொல்வது அனைத்தையும் நான் உண்மையெனவே கருதுகிறேன். ஓ! தூய்மையானவனே {கிருஷ்ணா}, தேவர்களோ, தானவர்களோ உனது வெளிப்பாட்டை {தோற்றத்தை} அறிவதில்லை. 10:14
ஓ! ஆண்மக்களில் சிறந்தவனே {புருஷோத்தமா, கிருஷ்ணா}, உன்னை நீயாக அறிந்தவன் நீயே. ஓ! அனைத்து பொருட்களையும் படைத்தவா, ஓ! அனைத்துப் பொருட்களின் தலைவா, ஓ! தேவர்களின் தேவா, ஓ! அண்டத்தின் தலைவா {கிருஷ்ணா}, எதையும் ஒதுக்காமல், எந்த மாட்சிமைகளை {ஒழுங்குமுழுமைகளைக்} கொண்டு இந்த உலகங்களில் நீ உடுருவி வசிக்கிறாயோ, அந்த உனது தெய்வீக மாட்சிமைகள் {ஒழுங்குமுழுமைகள்} கொண்டவற்றை அறிவிப்பதே உனக்குத் தகும். 10:15-16
ஓ! யோக சக்திகள் கொண்டவா {கிருஷ்ணா}, எப்போதும் தியானித்து உன்னை நான் அறிவது எப்படி? ஓ! தூய்மையானவனே {கிருஷ்ணா}, எந்தக் குறிப்பிட்ட நிலைகளைக் கொண்டு உன்னை நான் தியானிப்பது [2]? 10:17
[2] உன்னை முழுமையாக அறிவது என்பது இயலாதது. எனவே, எந்தக் குறிப்பிட்ட வடிவங்களில் அல்லது வெளிப்பாடுகளில் உன்னை நான் நினைக்க வேண்டும்? என இங்கே பொருள் கொள்ள வேண்டும் என்றும், இரண்டாவது வரியில் உள்ள "பாவே Bhava" {நிலைகள்} என்பதை "பொருட்கள்" என்று K.T.டெலங்கும், "உருவம்" என்று திரு.டேவிசும் பொருள் கொள்கின்றனர் என்றும் இங்கே விளக்கியிருக்கிறார் கங்குலி.
அமுதம் போன்ற உனது வார்த்தைகளைக் கேட்டு எனக்கு ஒருபோதும் தெவிட்டுவதில்லை என்பதால், ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, உனது ஆன்ம {யோக} சக்திகள் மற்றும் (உனது) மாட்சிமைகளை {கச்சிதங்களை} மேலும் விரிவாகச் சொல்வாயாக" என்றான் {அர்ஜுனன்}. 10:18
அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "நன்று. எனது தெய்வீக மாட்சிமைகளில் {ஆத்ம கச்சிதங்களில்} முக்கியமானவற்றை மட்டும் நான் உனக்கு அறிவிக்கிறேன். ஏனெனில், ஓ! குருக்களின் தலைவா {அர்ஜுனா}, எனது (மாட்சிமைகளின்) எல்லைக்கு ஒரு முடிவு கிடையாது. 10:19
ஓ! சுருள்முடி கொண்டவனே {குடாகேசா, அர்ஜுனா}, ஒவ்வொரு உயிரினங்களின் இதயங்களிலும் வசிக்கும் ஆத்மா நானே. உயிர்கள் அனைத்தின் தோற்றம், இடைநிலை மற்றும் முடிவு ஆகியவையும் நானே. 10:20
ஆதித்யர்களில் விஷ்ணுவும், ஒளி வடிவங்களில் பிரகாசமான சூரியனும் நானே; மருத்துகளில் {காற்று தேவர்களில்} மரீசியும், நட்சத்திரக்கூட்டங்களில் நிலவும் {சந்திரனும்} நானே. 10:21
வேதங்களில் சாமவேதம் நானே; தேவர்களில் வாசவன் {இந்திரன்} நானே; புலன்களில் மனம் நானே; உயிரினங்களின் அறிவாற்றல் {புத்தி} நானே. 10:22
ருத்ரர்களில் சங்கரன் {சிவன்} நானே; யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களில் பொக்கிஷத்தலைவன் {குபேரன்} நானே; வசுக்களில் பாவகனும் {அக்னி தேவன்}, முகடுகள் கொண்டவற்றில் (மலைகளில்) மேருவும் நானே. 10:23
ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே அர்ஜுனா}, புரோகிதர்களின் தலைவன் பிருஹஸ்பதி நானே என்று அறிவாயாக. படைத்தலைவர்களில் ஸ்கந்தன் நானே. நீர் கொள்ளிடங்களில் கடல் நானே. 10:24
பெரும் முனிவர்களில் பிருகு நானே, வார்த்தைகளில் அழிவற்றது (ஓம் என்ற எழுத்து) நானே. வேள்விகளில் ஜெப வேள்வி நானே [3]. அசையாதனவற்றில் இமயம் நானே. 10:25
[3] ஜெப வேள்வி என்பது வேள்விகள் அனைத்திலும் மேன்மையான தியான வேள்வியாகும் என்று இங்கு விளக்குகிறார் கங்குலி.
மரங்கள் அனைத்திலும் அரசமரம் நானே; தெய்வீக முனிவர்களில் நாரதர் நானே. கந்தர்வர்களில் சித்திரரதன் நானே, யோகத்தில் வெற்றி மணிமகுடம் தரித்த தவசிகளில் கபிலர் நானே. 10:26
குதிரைகளில், அமிர்தத்தில் (கடையும்போது) உதித்த உச்சைசிரவஸ் நானே என்பதை அறிவாயாக. அரச யானைகளில் ஐராவதம் நானே. மனிதர்களில் மன்னன் நானே. 10:27
ஆயுதங்களில் வஜ்ராயுதம் நானே, பசுக்களில் காமதுக் {காமதேனு} (என்று அழைக்கப்படுபவள்) நானே. இனப்பெருக்கக் காரணத்தில் கந்தர்பன் {மன்மதன்} நானே. பாம்புகளில் வாசுகி நானே. 10:28
நாகர்களில் {பாம்பினத் தலைவர்களில்} அனந்தன் நானே. நீர்வாழ் உயிரினங்களில் வருணன் நானே. பித்ருக்களில் அரியமான் நானே, நீதிவழங்கி தண்டிப்போரில் {நீதிமான்களில்} யமன் நானே. 10:29
தைத்தியர்களில் பிரகலாதன் நானே. கணக்கில் கொள்ளும் பொருள்களில் காலம் நானே. விலங்குகளில் சிங்கம் நானே. பறவைகளில் வினதையின் மகன் {கருடன்} நானே. 10:30
தூய்மை செய்வனவற்றில் காற்று நானே. ஆயுதம் தாங்கியோரில் ராமன் நானே. மீன்களில் மகரம் {சுறா} நானே. ஓடைகளில் ஜானவி {கங்கை} நானே [4]. 10:31
[4] "பவதாம், Pavatam, தூய்மை செய்வனவற்றுள்" என்பதை "அசைவனவற்றில்" என்றும் பொருள் கொள்ளலாம். இங்கே குறிப்பிடப்படும் ராமன், வால்மீகியின் செய்யுளில் வரும் தசரதமைந்தனான ராமன் ஆவான். கங்கை முழுதும் குடிக்கப்பட்ட பிறகு, ஜானு என்ற முனிவரின் கால் முட்டுகளில் இருந்து வெளிப்பட்டதால் அவள் ஜானவி என்று அழைக்கப்படுவதாகவும் இங்கே குறிப்பிடுகிறார் கங்குலி.
ஓ! அர்ஜுனா, படைக்கப்பட்ட பொருட்களில் அதன் தொடக்க நிலையாகவும், இடைநிலையாகவும், கடைநிலையாகவும் இருப்பவன் நானே. அறிவின் வகைகள் அனைத்திலும் {வித்தைகளில்}, தலைமையான ஆத்ம அறிவு {அத்யாத்ம = ஆத்மஞானம்} நானே. வழக்காடுவோர் {பேசுவோர்} மத்தியில் விவாதம் {பேச்சு} நானே. 10:32
எழுத்துகள் அனைத்திலும் அகரம் {அ என்ற எழுத்து} நானே. தொடர்மொழிகள் {புணர்ப்புகள்} அனைத்திலும் துவந்தம் {இரட்டைப் புணர்ப்பு} (என்றழைக்கப்படும் தொடர்மொழி) நானே. நித்தியமான காலமும் நானே. அனைத்துப் புறங்களில் முகம் கொண்ட விதிசமைப்பவனும் நானே. 10:33
அனைத்தையும் பீடிக்கும் மரணமும், அனைத்துக்கும் மூலமும் நானே. பெண்களுக்கு மத்தியில், புகழ், நற்பேறு, பேச்சு, நினைவு, அறிவாற்றல் {புத்தி}, பண்புமாறா நிலை, மன்னிக்கும் தன்மை {பொறுமை} ஆகியவை நானே. 10:34
சாமப் பாடல்களில், பிருஹத் சாமம் நானே. சந்தங்களில் காயத்ரி நானே. மாதங்களில், மலர்களை உற்பத்தி செய்யும் பருவமான மார்கசீரிஷம் {மார்கழி மாதம்} நானே [5]. 10:35
[5] உடனே விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுப்பதால் பிருஹத் சாமம் சிறந்ததாகச் சொல்லப்படுகிறது. இப்படியே சங்கரர் சொல்கிறார். மார்கசீரிஷ மாதம் என்பது பிப்ரவரி மாதத்தின் மத்தியில் ஆரம்பித்து, மார்ச் மாத மத்தி வரை நீடிக்கும் மாதமாகும். அதாவது மலர்கள் உற்பத்தியாகும் வசந்த {இளவேனிற்} காலமாகும் என்கிறார் கங்குலி. அதாவது கங்குலி குறிப்பிடுவது போல இருப்பின் அது மகம் (மாசி} மாதமாகும். ஆனால், பாரதியாரோ அந்த மாதத்தை மார்கழியாகக் கொள்கிறார். இதில் சந்திரமான மாதங்களின் அடிப்படையில் பாரதியார் சொல்லும் மார்கழியே சரியாகப் படுகிறது.
வஞ்சகரில் சூதாட்டம் நானே. ஒளியுடையோரில் ஒளி நானே. வெற்றி நானே, உழைப்பு நானே, நல்லவற்றில் நல்லது நானே. 10:36
விருஷ்ணிகளுக்கு மத்தியில் வாசுதேவன் {கிருஷ்ணன்} நானே; பாண்டு மகன்களுக்கு மத்தியில் தனஞ்சயன் {அர்ஜுனன்} நானே. தவசிகளில் வியாசர் நானே. கவிகளில் உசனஸ் {சுக்கிரன்} நானே. 10:37
தண்டிப்போரின் கோல் நானே. வெற்றிக்கு உழைப்போரின் கொள்கை {நீதி} நானே. கமுக்கங்களில் {இரகசியங்களில்} பேசாநிலை {மௌனம்} நானே. அறிவாளிகளில் அறிவு நானே. 10:38
ஓ! அர்ஜுனா, அனைத்துப் பொருள்களிலும் விதை எதுவோ அது நானே. அசைவனவற்றிலோ, அசையாதனவற்றிலோ நான் இன்றி எதுவுமில்லை. 10:39
ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {அர்ஜுனா}, எனது தெய்வீக மாட்சிமைகளுக்கு {ஒழுங்குமுழுமைகளுக்கு, கச்சிதங்களுக்கு} ஒரு முடிவில்லை. (அந்த) மாட்சிமைகளின் அளவைக் குறித்த இந்த ஒப்பித்தல், எடுத்துக்காட்டுகளாகச் சொல்லும் வழியில் (மட்டுமே) என்னால் சொல்லப்பட்டது.10:40
எவையெல்லாம் மேன்மையானவையோ, புகழ்பெற்றவையோ, வலிமையானவையோ, அவை அனைத்தும் எனது சக்தியின் பகுதியைக் கொண்டே பிறந்தன என்பதை அறிவாயாக. 10:41
அல்லது மாறாக {இன்னும் சரியாகச் சொல்வதாயின்}, ஓ! அர்ஜுனா, இவை அனைத்தையும் விரிவாக அறிவதால் நீ செய்யப்போவது என்ன? {உனக்குப் பயன் என்ன?} (என்னில்) ஒரு பகுதியை மட்டுமே கொண்டு இந்த அண்டம் முழுமையையும் தாங்கியபடி நான் நிற்கிறேன்" என்றான் {கிருஷ்ணன்}. 10:42
அண்டப்பெருவடிவக் காட்சி - விசுவரூப தரிசன யோகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 035
The Manifesting of the One and Manifold - Visvarupa–Darsana yoga! | Bhishma-Parva-Section-035 | Mahabharata In Tamil
(பகவத்கீதா பர்வம் – 23) {பகவத் கீதை - பகுதி 11}
பதிவின் சுருக்கம் : அர்ஜுனனின் வேண்டுகோளின் பேரில் கிருஷ்ணன் தனது அண்டப்பெருவடிவை {விஸ்வரூபத்தை} வெளிப்படுத்தல்; அந்தப் பயங்கர வடிவத்தைக் கண்டு அர்ஜுனன் அஞ்சுவது; கிருஷ்ணன் தனது இயல்பான உருவை அடைவது...
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "எனது நலனுக்காக உன்னால் சொல்லப்பட்ட, அத்யாத்மம் {ஆத்ம அறிவு} என்று அழைக்கப்படும் தலைமையான புதிரை {பரம ரகசியத்தை} குறித்த இந்த விவாதம் எனது மயக்கத்தைப் போக்கியது [1]. 11:1
[1] "அத்யாத்ம Adhyatman" என்பதற்குத் தனிப்பட்ட ஆத்மாவுக்கும், தலைமை ஆத்மாவுக்குமான உறவு குறித்தது எனப் பொருள் கொள்ள வேண்டும். "இந்த எனது மயக்கம்" என்பதற்கு நான் "கொலைகாரன் என்ற மயக்கம்" என்று பொருள் கொள்ள வேண்டும் என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.
ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, உயிர்களின் படைப்பையும் அழிப்பையும் குறித்து உன்னிடம் விரிவாகக் கேட்டேன். அழிவற்ற உனது பெருமையையும் கேட்டேன். 11:2
ஓ! பெரும் தலைவா {பரமேஸ்வரா, கிருஷ்ணா} உன்னைப் பற்றி நீ சொல்லியவாறே இருக்கிறாய். ஓ! ஆண்மக்களில் சிறந்தவனே {புருஷோத்தமா, கிருஷ்ணா}, உனது இறைமை பெற்ற வடிவத்தைக் {ஈஸ்வர ரூபத்தைக்} காண நான் விரும்புகிறேன். 11:3
ஓ! தலைவா {கிருஷ்ணா}, அதைக் (அந்த வடிவத்தைக்) காணத் தகுந்தவன் என என்னை நீ கருதினால், ஓ! யோகசக்தியின் தலைவா {யோகேஸ்வரா, கிருஷ்ணா}, உனது நித்தியமான {அழிவற்ற} [2] ஆத்மாவை எனக்கு வெளிப்படுத்துவாயாக" என்றான் {அர்ஜுனன்}. 11:4
[2] "அவ்யயம் Avyayam {நித்தியமான}" என்பது சிதைவற்றது என்று இங்கே பொருள்படும். வழக்கமாக இது "நித்தியமானது" என்றே சுட்டிக்காட்டப்படும். டெலங்க் இதை "வற்றாதது" என்று பொருள் கொள்கிறார் என்றும் மற்ற இடங்களில் எல்லாம் தான் இதை "புரிதல்" என்றே சொல்லியிருப்பதாகவும் இங்கே விளக்குகிறார் கங்குலி.
அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, பல்வேறான, பல்வேறு நிறம் மற்றும் வடிவம் கொண்ட, தெய்வீகமான எனது வடிவங்களைப் பார். 11:5
ஆதித்யர்கள், வசுக்கள், ருத்ரர்கள், அசுவினிகள், மருத்துகள் ஆகியோரைப் பார். ஓ! பாரதா {அர்ஜுனா}, இதற்குமுன் (நீ) கண்டிராத எண்ணிலடங்கா அற்புதங்களைப் பார். 11:6
ஓ! சுருள்முடி கொண்டவனே {குடாகேசா, அர்ஜுனா}, அசைவன மற்றும் அசையாதன ஆகியவை கொண்ட அண்டம் முழுமையும் ஒன்றாக {ஒரே இடத்தில்} திரண்ட எனது உடலையும், இன்னும் நீ காண விரும்பும் அனைத்தையும் பார் [3]. 11:7
[3] "ஏகஸ்தம், Ekastham" என்பது ஒன்றில் அனைத்துமாக, அஃதாவது ஒன்றாக ஒரே இடத்தில் திரண்ட என்ற பொருளைத் தரும் என இங்கே விளக்குகிறார் கங்குலி.
எனினும், உனது இந்தக் கண்களைக் கொண்டு என்னைக் காணத் தகுந்தவனாக நீ இல்லை. {எனவே}, நான் உனக்குத் தெய்வீகப் பார்வையை {ஞானக் கண்ணை} அளிக்கிறேன். இறைமை பெற்ற எனது மறைபொருள் இயல்பைப் {ஈஸ்வர யோகத்தைப்} பார்" என்றான் {கிருஷ்ணன்}. 11:8
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இதைச் சொன்னவனும், வலிமைமிக்கப் பெரும் யோக சக்தியின் தலைவனுமான ஹரி {கிருஷ்ணன்}, பல வாய்களும், கண்களும் கொண்டதும், பல அற்புத அம்சங்களைக் கொண்டதும், பல தெய்வீக ஆபரணங்களைப் பூண்டதும், பல தெய்வீக ஆயுதங்களை ஏந்தியதும், தெய்வீக மாலைகள் மற்றும் ஆடைகளைச் சூடியதும், தெய்வீக மணமிக்க நறுமணத் தைலங்கள் பூசியதும், அனைத்து அற்புதங்களையும் கொண்டதும், பிரகாசமாகவும், எல்லையற்றதாகவும், அனைத்துப் புறங்களிலும் முகங்களைக் கொண்டதுமான தலைமையான தனது இறைமை வடிவத்தை அந்தப் பிருதையின் மகனுக்கு {குந்தியின் மகன் அர்ஜுனனுக்கு} வெளிப்படுத்தினான். 11:9-11
ஒரே நேரத்தில், வானத்தில், ஆயிரம் சூரியன்களின் ஒளி வெடிக்குமாயின், (அப்போது) அதுவே {அந்த ஒளியே} அந்த வல்லமையுள்ளவனின் {கிருஷ்ணனின்} ஒளியைப் போன்றதாக இருக்கும். 11:12
பல கூறுகளாகப் பிரிக்கப்பட்ட அண்டம் முழுமையும், அந்தத் தேவதேவனின் {கிருஷ்ணனின்} உடலில் ஒன்றாகத் திரண்டிருப்பதை அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, கண்டான். 11:13
அப்போது, பெரும் வியப்பால் நிறைந்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, மயிர் சிலிர்த்தபடி தலைவணங்கி, கூப்பிய கரங்களுடன் அந்தத் தேவனிடம் {கிருஷ்ணனிடம்} பேசினான். 11:14
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! தேவா {கிருஷ்ணா}, தேவர்கள் அனைவரையும், உயிரினங்களின் பல்வேறு கூட்டங்கள் அனைத்தையும், (தனது) தாமரை இருக்கையில் அமர்ந்திருக்கும் பிரம்மனையும், முனிவர்கள் அனைவரையும், தெய்வீகப் பாம்புகளையும் நான் {உன்னில்} காண்கிறேன். 11:15
ஓ! எல்லையற்ற வடிவங்களைக் கொண்டவனே {அனந்தரூபா, கிருஷ்ணா}, அனைத்துப் புறங்களிலும் எண்ணற்ற கரங்களையும், வயிறுகளையும், வாய்களையும், (மற்றும்) கண்களையும் கொண்டவனாக நான் உன்னைக் காண்கிறேன். ஓ! அண்டத்தின் தலைவா {விஸ்வேஸ்வரா, கிருஷ்ணா}, ஓ! அண்டத்தின் வடிவானவனே {விஸ்வரூபா, கிருஷ்ணா}, உனது {வடிவின்} முடிவையோ, இடையையோ, தொடக்கத்தையோ நான் காணவில்லை. 11:16
பார்க்கக் கடினமானவனும், அனைத்துப் புறங்களில் பிரகாசிக்கும் சுடர்மிகும் நெருப்போ, சூரியனோ போன்றவனும், அளவிடமுடியாதவனுமான உன்னை, (உனது) கிரீடம், கதாயுதம், சக்கரம் ஆகியவற்றைத் தாங்கியபடி, அனைத்துப் புறங்களிலும் ஒளிரும் சக்தியின் திரளாகக் காண்கிறேன். 11:17
அழிவற்றவனாகவும், இந்த அண்டத்தின் தலைமை பொருளாகவும் {பரம்பொருளாகவும்} நீயே இருக்கிறாய். சிதைவில்லாதவனாகவும், நித்தியமான அறத்தின் {சாஸ்வத தர்மத்தின்} காவலனாகவும் நீயே இருக்கிறாய். நித்தியமான {முடிவற்ற} ஆண்மகனாக {சநாதன புருஷனாக} நான் உன்னைக் கருதுகிறேன். 11:18
தொடக்கம், இடைநிலை, முடிவு ஆகியவை இல்லாதவனாகவும், வரம்பில்லா ஆற்றல் கொண்டவனாகவும் {வீரனாகவும்}, எண்ணிலா கரங்களைக் கொண்டவனாகவும், சூரியனையும், சந்திரனையும் கண்களாகக் கொண்டவனாகவும், சுடர் மிகும் நெருப்பை உனது வாயாகக் கொண்டவனாகவும், உன் சொந்த சக்தியால் இந்த அண்டத்தையே சுடுபவனாகவும் நான் உன்னைக் காண்கிறேன். 11:19
சொர்க்கத்திற்கும் {வானிற்கும்}, பூமிக்கும் இடைப்பட்ட வெளியும், அடிவானத்தின் அனைத்துப் புள்ளிகளும் {திசைகள் அனைத்தும்} உன் ஒருவனால் மட்டுமே முழுதும் படர்ந்து ஊடுருவப்பட்டுள்ளது. இந்த உனது அற்புதமான பயங்கர வடிவத்தைக் கண்டு, ஓ! பரமாத்மாவே {கிருஷ்ணா}, மூவுலகங்களும் நடுங்குகின்றன. 11:20
இந்தத் தேவர்களின் கூட்டங்கள் உன்னுள் நுழைகின்றன. அச்சமுற்ற சிலர், கூப்பிய கரங்களுடன் வேண்டுகின்றனர். "நீ வாழ்க" எனச் சொல்லும் பெருமுனிவர்கள் மற்றும் சித்தர்களின் கூட்டங்கள், வளமான துதி பாடல்களால் உன்னைப் புகழ்கின்றனர். 11:21
ருத்ரர்கள், ஆதித்யர்கள், வசுக்கள், சித்தர்கள் (என்று அழைக்கப்படுபவர்கள்), விஸ்வர்கள், அசுவினிகள், மருத்துகள், உஷ்மபர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், அசுரர்கள், சாத்யர்கள் உன்னைக் கண்டு வியக்கின்றனர். 11:22
ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, பல வாய்களும் கண்களும், எண்ணிலடங்கா கரங்களும், தொடைகளும், பாதங்களும், பல வயிறுகளும் கொண்ட உனது பெருவடிவையும், பயங்கரமான உனது கோரைப்பற்கள் பலவற்றையும் கண்டு உயிரினங்கள் அனைத்தும், நானும் அஞ்சுகிறோம். 11:23
உண்மையில், வானத்தையே தொட்டுக் கொண்டு, சுடர்மிகும் ஒளியுடனும், பல வண்ணங்களுடனும், விரிந்து திறந்திருக்ககும் வாயுடனும், சுடர்மிகும் பெரிய கண்களுடனும் இருக்கும் உன்னைக் கண்டு, ஓ! விஷ்ணுவே {கிருஷ்ணா}, (அச்சத்தால்) நடுங்கும் (எனது) உள் ஆன்மாவுடன் என்னால் துணிவுடனும், மன அமைதியுடனும் இனியும் இருக்க முடியாது. 11:24
பயங்கரக் கோரைப் பற்களின் விளைவாக (யுக முடிவில் அனைத்தையும் எரிக்கும் நெருப்பைப் போல) பயங்கரமாக இருக்கும் உனது வாய்களைக் கண்டு, என்னால், அடிவானின் புள்ளிகளையோ {திசைகளையோ}, மன அமைதியையோ உணர முடியவில்லை. ஓ! தேவர்களின் தேவா, ஓ! அண்டத்தின் புகலிடமே {கிருஷ்ணா} அருள்புரிவாயாக {கருணை கொள்வாயாக}. 11:25
இந்தத் திருதராஷ்டிரர் மகன்கள் அனைவரும், மன்னர்களின் கூட்டங்களுடனும், பீஷ்மர், துரோணர், சூதனின் மகன் (கர்ணன்) ஆகியோருடனும் எங்கள் புறத்தில் இருக்கும் முக்கியப் போர்வீரர்களுடனும், கொடிய கோரைப் பற்களைக் கொண்ட உன்னுடைய வாய்களில் விரைவாக விழுகின்றனர். சிலர், தங்கள் தலைகள் நசுங்கியவாறு (உனது) பற்களின் இடைவெளிகளில் அகப்பட்டுக் காணப்படுகின்றனர். 11:26-27
பல நீரூற்றுகள் {ஆறுகள்} பல்வேறு வழிகளில் கடலை நோக்கி விரைவாக உருள்வதைப் போல, மனித உலகத்தின் இந்த வீரர்களும் அனைத்துப் புறங்களிலும் சுடர்விட்டெரியும் உனது வாய்களுக்குள் நுழைகின்றனர். 11:28
(தங்களை) அழித்துக் கொள்வதற்காகவே சுடர்மிகும் நெருப்பை நோக்கி வேகமாக விரையும் விட்டில் பூச்சிகளைப் {பதங்காக்களைப்} போல, (இந்த) மக்களும், தடையில்லா வேகத்துடன், (தங்கள்) அழிவுக்காகவே உனது வாய்களில் நுழைகின்றனர். 11:29
அனைத்துப் புறங்களில் இருந்தும் வந்த இந்த மனிதர்களை விழுங்கிவிட்டு, உனது சுடர்மிகும் வாய்களால் அவர்களை நக்குகிறாய். முழு அண்டத்தையும் (உனது) சக்தியாலும், உக்கிரமான கதிர்களால் நிரப்பி, ஓ! விஷ்ணுவே {கிருஷ்ணா}, (அனைத்தையும்) சுடுகிறாய். 11:30
(இத்தகு) உக்கிர வடிவம் கொண்ட நீ யார் என்று எனக்குச் சொல்வாயாக. ஓ! தேவர்களின் தலைவா {கிருஷ்ணா}, நான் உன்னை வணங்குகிறேன், எனக்கு அருள்புரிவாயாக {எனக்குக் கருணை காட்டுவாயாக}. மிகப்பழமையானவனான உன்னை நான் அறிய விரும்புகிறேன். உனது இயக்கத்தை {செயலை} [4] என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை" என்றான் {அர்ஜுனன்}. 11:31
[4] "ப்ரவ்ருத்திம், Pravritti" {செயல்} என்பதைச் சங்கரரும், ஸ்ரீதரரும், இயக்கம் அல்லது செயல் எனப் பொருள் கொள்கின்றனர் எனவும், திரு.டேவீசோ, "பரிணாமம், அல்லது வளர்ச்சியடைந்த உருவம்" எனக் கொள்கிறார் எனவும் திரு.டேவீசின் இந்தக் கருத்து சரியல்ல எனத் தான் கருதுவதாகவும் இங்கே விளக்குகிறார் கங்குலி.
அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "உலகங்களை அழிக்கவே முழுமையாக வளர்ந்த மரணம் {காலன்} நான் [5அ]. நான் இப்போது மனித குலத்தைக் கொல்வதில் {அழிப்பதில்} ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். இங்கே பல்வேறு பிரிவுகளில் நிற்கும் போர்வீரர்கள் அனைவரும் நீ இல்லாமலேயே [5ஆ] அழிவார்கள். 11:32
[5அ] ஜெ.இராபர்ட் ஓப்பன்ஹீமர் (J. Robert Oppenheimer 1904-67) ஓர் அமெரிக்க அறிவியலாளரும், கோட்பாட்டு இயற்பியலாளரும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றியவரும் ஆவார். இரண்டாம் உலகப் போரில் மன்ஹாட்டன் செயல்திட்டத்தால் "அணுகுண்டுகளின் தந்தை" என்று அறியப்படுபவர் ஆவார். அணுகுண்டை வெடித்துச் சோதித்த அவர், "உலகங்களை அழிக்க வந்த மரணமாக நான் இப்போது இருக்கிறேன்" என்று பகவத் கீதையின் இந்தச் சுலோகத்தைத் தான் மேற்கோளாகக் காட்டினார். 1933ல் அவர் சம்ஸ்கிருதம் பயின்றார். மூல மொழியிலேயே பகவத் கீதையை அறிந்தார். இதை "வாழ்வின் தத்துவம் - Philosophy of life" என்ற தனது புத்தகத்தில் அவரே குறிப்பிட்டிருக்கிறார். இதே பகுதியின் 12ம் சுலோகத்தையும் அணுகுண்டின் வீரியத்தை ஒப்பிடுவதற்காக சொல்லியிருக்கிறார்.[5ஆ] இங்கே குறிப்பிடப்படும் "கால: Kala" என்பது மரணமாகும். திரு.டேவீஸ் பிற மொழிபெயர்ப்பாளர்களைப் பின்பற்றிக் காலம் என்று இதற்குப் பொருள் கொள்கிறார். "ப்ரவ்ருத்த: Pravriddha" என்பது (திரு.டேவீஸ் சொல்வது போல) பழமையானது அல்லது மிகப் பழமையானது என்று பொருள் தராது, மாறாக அது "முற்றிய" அல்லது "முழுமையாக வளர்ந்த" என்ற பொருளையே தரும். பின்னர் மீண்டும் திரு. டேவீஸ், "ருதேऽபி த்வாம் rte 'pi tvam" என்பதற்கு "உன்னைத் தவிர" என்று பொருள் கொண்டு நகைப்புக்கிடமான ஒரு பெரும்பிழையைச் செய்திருக்கிறார். லெக்சிக்கானை மட்டுமே தங்கள் வழிகாட்டியாகக் கொண்ட வெளிநாட்டவர் நிச்சயமாகத் தடுமாறும் மொழி வழக்குகளில் {idioms} இதுவும் ஒன்றாகும். இங்கே கிருஷ்ணன் "அர்ஜுனனைத் தவிர மற்ற அனைவரும் அழிந்து விடுவார்கள்" என்று சொல்லவில்லை. மாறாக, "அர்ஜுனன் இல்லாவிட்டாலும், அஃதாவது அவன் போரிடாவிட்டாலும் அவர்கள் அனைவரும் அழிவார்கள்" என்றே சொல்கிறான் என்கிறார் கங்குலி. இங்கே, பாரதியாரும், பிரபுபாதரும் உன்னைத் தவிர என்றே பொருள் கொண்டிருக்கிறார்கள். கோயந்தகர், கங்குலி போலவே "நீ இல்லாமலேயே" என்று தனது “தத்வ விவேசனி"யில், பொருள் கொண்டிருக்கிறார்.
ஆகவே, எழுவாயாக, புகழை அடைவாயாக, (மேலும்) எதிரிகளை வீழ்த்தி, விரிவடைந்து வரும் (இந்தப்) பேரரசை அனுபவிப்பாயாக. இவர்கள் அனைவரும் என்னால் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டார்கள். ஓ! இடது கையால் (கூட) வில் வளைப்பவனே {அர்ஜுனா}, (நீ) எனது கருவியாக மட்டுமே இருப்பாயாக. 11:33
என்னால் (ஏற்கனவே) கொல்லப்பட்ட துரோணன், பீஷ்மன், ஜெயத்ரதன், கர்ணன் மற்றும் பிற துணிவுமிக்க வீரர்களை {வெளிப்படையாக} நீ கொல்வாயாக. திகைக்காதே, போரிடுவாயாக; (உனது) எதிரிகளைப் போரில் நீ வெல்வாய்" என்றான் {கிருஷ்ணன்}. 11:34
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "கேசவனின் {கிருஷ்ணனின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட கிரீடம் தரித்தவன் {கிரீடி, அர்ஜுனன்}, நடுங்கியவாறும், (மேலும்) கூப்பிய கரங்களோடும், (அவனை) வணங்கி, அச்சம் நிறைந்து தடைபட்ட குரலுடன் {வாய் குழறி} தனது வணக்கங்களைக் கிருஷ்ணனுக்கு மீண்டும் ஒரு முறை சொன்னான். 11:35
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "ரிஷிகேசா {கிருஷ்ணா}, இந்த அண்டமே மகிழ்வதும், உனது புகழைச் சொல்லி மயங்குவதும், அச்சத்தால் ராட்சசர்கள் அனைத்துப் புறங்களிலும் ஓடுவதும், சித்தர்க் கூட்டங்கள் (உன்னை) வணங்குவதும் பொருத்தமானதே. 11:16
ஓ! பெரும் ஆத்மாவே {கிருஷ்ணா}, பிரம்மனைவிட (அவனையே விடப்) பெரியவனும், முதன்மை காரணமுமான {ஆதிகர்த்தாவுமான} உன்னை அவர்கள் ஏன் வணங்காதிருப்பார்கள்? ஓ! எல்லையில்லாதவனே {அனந்தா}, ஓ! தேவர்களின் தேவா {தேவேசா}, ஓ! அண்டத்தின் புகலிடமே {ஜகந்நிவாசா}, அழிவற்றவன் {அக்ஷரம்} நீயே, இருப்பும் {சத்-ம்}, இல்லாமையும் {அசத்-ம்} நீயே, அவற்றை (அந்த இரண்டைக்) கடந்தவனும் {பிரம்மமும்} நீயே. 11:37
பழமையான ஆண்மகனும் {புராண புருஷனும்}, முதல் தேவனும் {ஆதிதேவனும்} நீயே. இந்த அண்டத்தின் தலைமைப் புகலிடம் நீயே. அறிபவன் நீயே, அறியப்பட வேண்டிய பொருள் நீயே. உயர்ந்த வசிப்பிடம் {பரமபதம்} நீயே. ஓ! எல்லையற்ற வடிவம் கொண்டவனே {அனந்தரூபா, கிருஷ்ணா}, உன்னால் இந்த அண்டமே படர்ந்தூடுருவப் பட்டுள்ளது [6]. 11:38
[6] "நிதாநம் Nidhanam" என்பதைப் புகலிடம் என்றோ, ஆதரவு என்றோ, வசிப்பிடம் என்றோ, கொள்ளிடம் என்றோ பொருள் கொள்ளலாம். திரு.டேவீஸ் அவர்கள் தவறாக "புதையலகம் Treasure house" என்று சொல்கிறார் என இங்கே விளக்குகிறார் கங்குலி.
வாயு, யமன், அக்னி, வருணன், சந்திரன், பிரஜாபதி, முப்பாட்டன் {பிரம்மன்} ஆகியோர் நீயே. உன்னை ஆயிரம் முறை வணங்குகிறேன். மீண்டும் மீண்டும் உன்னை வணங்குகிறேன் {நமோ நமஸ்தே}. 11:39
முன்னாலும், பின்னாலும் உன்னை வணங்குகிறேன். ஓ! அனைத்தும் ஆனவனே {கிருஷ்ணா}, அனைத்துப் புறங்களிலும் {என்} வணக்கம் உனதாகட்டும். எல்லையில்லா சக்தி, அளவிட முடியா ஆற்றல் ஆகிய அனைத்தும் நீயே. அனைத்தையும் தழுவி நிற்பவன் {சர்வன்} நீயே. 11:40
இந்த உனது பெருமையை அறியாமல், (உன்னை) நண்பனாகக் கருதி, அலட்சியமாக, "ஓ! கிருஷ்ணா, ஓ! யாதவா, ஓ! நண்பா" என்று தவறுதலாகவோ, அன்பாலோ என்னவெல்லாம் சொல்லியிருப்பேனோ, விளையாட்டிலும், படுத்திருக்கும் போதும், அமர்ந்திருக்கும் போதும், உணவருந்து போதும் தனிமையிலோ, பிறரின் முன்னிலையிலோ, மகிழ்ச்சியின் பொருட்டோ உனக்கு என்னென்ன அவமதிப்புகளைச் செய்தேனோ, ஓ! சீர்குலையாதவனே {கிருஷ்ணா}, {அவற்றிற்காக} அளவிடமுடியாதவனான உன்னிடம் மன்னிப்பை நான் வேண்டுகிறேன். 11:41-42
அசைவன மற்றும் அசையானவற்றைக் கொண்ட இந்த அண்டத்தின் தந்தை நீயே. வழிபடத்தகுந்த பெரும் குரு {ஆசான்} நீயே. உனக்கு நிகராக எவனுமில்லை எனும்போது, ஓ! மூவுலகங்களில் ஒப்பற்ற பெருமை கொண்டவனே {கிருஷ்ணா}, {உன்னைவிட} உயர்ந்தவன் எவன் இருக்க முடியும்? 11:43
எனவே, ஓ! தலைவா {ஈஸ்வரா}, ஓ! புகழத்தக்கவனே {கிருஷ்ணா}, (எனது) உடலை நெடுஞ்சாண் கிடையாகக் கிடத்தி, (உன்னை) வணங்கி உனது அருளைக் கேட்கிறேன். ஓ! தேவா {கிருஷ்ணா}, தந்தை ஒருவன் (தனது) மகனையும், தோழன் ஒருவன் (தனது) தோழர்களையும் [7], அன்பன் ஒருவன் (தனது) அன்புக்குரியவர்களையும், {அவர்களது தவறுக்காகப் பொறுப்பது} போல என்னைப் (எனது தவறுகளைப்) பொறுப்பதே உனக்குத் தகும். 11:44
[7] கங்குலி இங்கே Friend என்று சொல்கிறார். மூலத்தில் இது சகா என்று இருக்கிறது. சகா என்றால் தோழன் என்ற பொருள் வரும். பாரதியார் தோழன் என்றே பெயர்த்திருக்கிறார்.
இதற்கு முன் (காணப்படாத) உனது வடிவத்தைக் கண்டு மகிழ்ச்சியில் நிறைந்தேன், (எனினும்) அச்சத்தால் எனது மனம் கலங்குகிறது. ஓ! தேவா {கிருஷ்ணா}, எனக்கு உன் (வழக்கமான மற்ற {முந்தைய}) வடிவத்தையே காட்டுவாயாக. ஓ! தேவர்களின் தலைவா {தேவேசா}, ஓ! அண்டத்தின் புகலிடமே {ஜகந்நிவாசா}, அருள்புரிவாயாக. 11:45
கிரீடம் (தரித்து), கதாயுதம் (ஏந்தி), கையில் சக்கரத்துடன் முன்பு போலவே நான் உன்னைக் காண விரும்புகிறேன். ஓ! ஆயிரம் கரங்களைக் கொண்டவனே {சஹஸ்ரபாஹோ}, அண்டப்பெருவடிவே {விஸ்வமூர்த்தி}, அதே நான்கு கர வடிவைக் கொள்வாயாக" என்றான் {அர்ஜுனன்}. 11:46
அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "உன்னிடம் மகிழ்ச்சி கொண்டே, ஓ! அர்ஜுனா, மகிமை நிறைந்ததும், உலகந்தழுவியதும், எல்லையற்றதும், முதலானதும் {ஆதியானதும்}, இதற்கு முன் உன்னைத் தவிர வேறு யாராலும் காணப்படாததுமான இந்தத் தலைமையான வடிவத்தை {பரவடிவை}, எனது யோக சக்தியின் மூலம் {ஆத்மயோகத்தால்} உனக்கு நான் காண்பித்தேன். 11:47
குரு குல வீரனான {அர்ஜுனனான} உன்னை மட்டுமே தவிர, மனித உலகத்தில் உள்ள வேறு எவனாலும், வேத கல்வியாலோ, வேள்விகளாலோ, கொடைகளாலோ, செயல்களாலோ, ஏன் கடுந்தவங்களாலோ கூட இந்த எனது வடிவத்தைக் காண இயலாது. 11:48
இந்த எனது பயங்கர வடிவைக் கண்டு அச்சமோ, மனக்குழப்பமோ உனதாகாதிருக்கட்டும். மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், அச்சத்தில் இருந்து விடுபட்டு, வேறு வடிவமான அதை மீண்டும் நான் அடைவதைக் காண்பாயாக" என்றான் {கிருஷ்ணன்}. 11:49
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "இவை யாவையும் அர்ஜுனனுக்குச் சொன்ன வாசுதேவன் {கிருஷ்ணன்}, மீண்டும் ஒருமுறை தனது சொந்த {நாராயண} வடிவத்தையே (அவனுக்குக்_அர்ஜுனனுக்குக்) காட்டினான். அதன்பிறகு, அந்த உயர் ஆன்மா கொண்டவன் {கிருஷ்ணன்}, (தனது) மென்மையான வடிவத்தை {கிருஷ்ண வடிவத்தை} ஏற்று அச்சத்திலிருந்த அவனுக்கு {அர்ஜுனனுக்கு} ஆறுதலளித்தான். 11:50
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "உனது மென்மையான மனித வடிவைக் கண்டு, ஓ!ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இப்போது எனது மனம் சரியானதாகி {அமைதியுற்று}, எனது இயல்பான நிலையை அடைந்தேன்" என்றான் {அர்ஜுனன்}. 11:51
அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "நீ கண்ட இந்த எனது வடிவம் காண்பதற்கு அரியதாகும். தேவர்களும் கூட இந்த (எனது) வடிவைக் காண எப்போதும் விரும்புகிறார்கள். 11:52
வேதங்களாலோ, தவத்துறவுகளாகோ, கொடைகளாலோ, வேள்விகளாலோ நீ கண்ட இந்த எனது வடிவில் என்னைக் காண முடியாது. 11:53
எனினும், ஓ! அர்ஜுனா, (தனது நோக்கங்களின்) தனிப்பட்ட மதிப்பால் {வேறு எதையும் வேண்டாத அர்ப்பணிப்பால்}, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {அர்ஜுனா}, நான் இந்த வடிவத்திலேயே அறியப்பட்டு, உண்மையில் காணப்பட்டு, அடையவும் படலாம். 11:54
எனக்காகவே அனைத்தையும் செய்பவன் எவனோ, என்னையே தனது தலைமை நோக்கமாகக் கொள்பவன் எவனோ, பற்றில் இருந்து விடுபட்டவன் எவனோ, அனைத்து உயிரினங்களிடமும் பகைமையின்றி இருப்பவன் எவனோ, ஓ! அர்ஜுனா, அவனே என்னிடம் வருகிறான்" என்றான் {கிருஷ்ணன்}. 11:55
நம்பிக்கையறம் - பக்தி யோகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 036
The Religion of Faith - Bhakti yoga! | Bhishma-Parva-Section-036 | Mahabharata In Tamil
(பகவத்கீதா பர்வம் – 24) {பகவத் கீதை - பகுதி 12}
பதிவின் சுருக்கம் : கடவுளிடம் அர்ப்பணிப்புடன் செல்லும் பாதையைக் கிருஷ்ணன் புகழ்வது; அர்ப்பணிப்புடன் செயலாற்றும் முறையான பக்தி யோகத்தைக் கிருஷ்ணன் விளக்கிச் சொல்வது; மேலும் அவன் பல்வேறு வடிவங்களிலான ஆன்ம ஒழங்குகளை விளக்குவது...
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "தொடர் அர்ப்பணிப்புடன், உன்னை வணங்கி வழிபடுபவர்களிலும், மாற்றமில்லாதவனாக, தோற்றமில்லாதவனாக உன்னை (தியானித்து) வழிபடுபவர்களிலும், {மேற்கண்ட இருவரிலும்}, அர்ப்பணிப்பை {பக்தியை} சிறந்த முறையில் அறிந்தவர்கள் {யோக அறிவில் சிறந்தவர்} யார்?" என்றான் {அர்ஜுனன்}. 12:1
அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "என்னில் (தங்கள்) மனத்தை நிலைக்கச் செய்து, தொடர்ச்சியாக என்னை வணங்கி {நித்திய யோகியாக}, (அது தவிரவும்) உயர்ந்த நம்பிக்கையையும் கொண்டவர்களே என்னால் அர்ப்பணிப்பு மிக்கவர்களாகக் {யோகிகளில் மேலானவர்களாகக்} கருதப்படுகிறார்கள். 12:2
எனினும், புலன்களின் மொத்த தொகுதியையும் கட்டுப்படுத்தி, சுற்றிலும், அனைத்து வகையிலும் சம மனதுடன், அனைத்து உயிரினங்களின் நன்மையில் ஈடுபட்டு, மாற்றமில்லாததும் {அழிவற்றதும்}, தோற்றமற்றதும் {குறிப்பற்றதும்}, எங்கும் நிறைந்ததும், சிந்தனைக்கு அப்பாற்பட்டதும், வேறுபாடற்றதுமான நித்தியமான பொருளை {பரம்பொருளை} வழிபடுவோரும் என்னையே அடைகின்றனர். 12:3-4
தோற்றமில்லாததில் {அவ்யக்தத்தில்} மனதை நிலைக்கச் செய்வோருக்கான தொல்லை {கவலை} பெரிது; ஏனெனில் தோற்றமற்றதற்குச் செல்லும் பாதையைக் {நெறியைக்} கண்டடைவதென்பது, உடல்கொண்டோருக்குக் கடினமானதாகும். 12:5
செயல்களனைத்தையும் எனக்கே அர்ப்பணித்து, என்னையே (அடையத்தக்க) தங்கள் உயர்ந்த நோக்கமாகக் கொண்டு, என்னையே வழிபட்டு, வேறு எதிலும் அர்ப்பணிப்பைச் செலுத்தாமல், என்னையே தியானித்து, (இப்படியே) என்னிலேயே தங்கள் மனத்தை நிலைக்கச் செய்பவர்கள் எவரோ, அவர்களை, (இந்த) மரணத்தின்பாற்படும் உலகம் எனும் கடலில் இருந்து தாமதமில்லாமல் நான் விடுவிப்பேன். 12:6-7
என்னில் மட்டுமே உனது இதயத்தை நிலைக்கச் செய்து, உனது புத்தியை என்னில் செலுத்துவாயாக. இதன்பிறகு {இந்த உலகத்திற்குப் பிறகு} நீ என்னில் வசிப்பாய். (இதில்) ஐயமில்லை. 12:8
எனினும், என்னில் உனது இதயத்தை உறுதியாக நிலைநிறுத்த இயலவில்லையெனில், ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, தொடர்ந்த பயிற்சியினால் (எழும்) அர்ப்பணிப்பின் {யோகத்தின்} மூலம் என்னை அடைய முயற்சிப்பாயாக. 12:9
(இந்தத்) தொடர்ந்த பயிற்சிக்கும் நீ தகுதிவாய்ந்தவனாக இல்லாவிட்டால், எனக்காகச் செய்யப்படும் செயல்களே உனது உயர்ந்த இலக்காக இருக்கட்டும். உனது செயல்கள் அனைத்தையும் எனக்காகச் செய்வதால் கூட, நீ முழுமையை {என்னை} அடைவாய். 12:10
இதை உன்னால் செய்ய இயலாவிட்டால் கூட, என்னை அடையும் அர்ப்பணிப்பில் {யோகத்தில்} ஈடுபட்டு, உனது ஆத்மாவைக் கட்டுப்படுத்தி, செயல்கள் அனைத்தின் பலனையும் துறப்பாயாக. 12:11
(அர்ப்பணிப்பில் {யோகத்தில்} ஈடுபடும்) பயிற்சியை விட அறிவு மேன்மையானது; அறிவை விடத் தியானம் மேன்மையானது; தியானத்தைவிட {செயலுக்கான} எதிர்விளைவின் பலனைத் துறப்பது சிறந்தது, துறவில் இருந்து அமைதி உடனே விளைகிறது. 12:12
எந்த உயிரினித்திடமும் வெறுப்பில்லாதவன் எவனோ, நட்பும் கருணையும் கொண்டவன் எவனோ, ஆணவத்தில் இருந்து விடுபட்டவன் எவனோ, தற்பெருமையும், பற்றும் நீங்கியவன் எவனோ, இன்பத்திலும், வலியிலும் {துன்பத்திலும்} ஒன்றாக இருப்பவன் எவனோ, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, மனநிறைவு, எப்போதும் அர்ப்பணிப்பு, கட்டுப்படுத்தப்பட்ட ஆத்மா, உறுதியான நோக்கம் ஆகியவற்றைக் கொண்டு இதயத்தையும், புத்தியையும் என்னில் நிலைக்கச் செய்தவன் எவனோ, அவனே எனது அன்புக்குரியவன் ஆவான். 12:13-14
உலகத்துக்குத் தொல்லை {கவலை} கொடுக்காதவன் எவனோ, உலகத்தால் தொல்லை அடையாதவன் {கலங்காதவன்} எவனோ, மகிழ்ச்சி, கோபம், அச்சம் மற்றும் கவலைகள் ஆகியவற்றில் இருந்து விடுபட்டவன் எவனோ, அவனே எனது அன்புக்குரியவன் ஆவான். 12:15
கவலையற்று {எதிர்பார்ப்புகள் அற்று}, தூய்மையுடன், (உலகப் பொருள்களில்) தொடர்பில்லாதவனாக, (மனத்) துயரத்தில் இருந்து விடுபட்டவனாக என்னிடம் அர்ப்பணிப்பு {பக்தி} கொண்டிருப்பவன் எவனோ, ஒவ்வொரு செயலையும் (அதன் பலனையும்) துறப்பவன் எவனோ, அவனே எனது அன்புக்குரியவன் ஆவான். 12:16
மகிழ்ச்சியும், வெறுப்பும் இல்லாதவன் எவனோ, கவலைப்படாமல், ஆசைப்படாமல் இருப்பவன் எவனோ, நன்மையையும், தீமையையும் துறப்பவன் எவனோ, (மேலும்) என்னிடம் நம்பிக்கை நிறைந்தவன் எவனோ, அவனே எனது அன்புக்குரியவன் ஆவான். 12:17
நண்பன் மற்றும் எதிரி, மதிப்பு மற்றும் அவமதிப்பு ஆகியவற்றில் ஒன்றாக இருப்பவன் எவனோ, குளுமை மற்றும் வெம்மை (இன்பம் மற்றும் துன்பம்) ஆகியவற்றில் ஒன்றாக இருப்பவன் எவனோ, பற்றில் இருந்து விடுபட்டவன் எவனோ, இகழ்வையும், புகழையும் ஒன்றாகக் கருதுபவன் எவனோ, அதிகம் பேசாதவன் {அமைதியாக இருப்பவன்} எவனோ, (தான்) எதிர்கொள்ளும் எதிலும் மனநிறைவுடன் இருப்பவன் எவனோ, வீடற்று {வீட்டைக் குறித்துக் கவலையற்று}, உறுதியான மனத்துடனும், நிறைந்த நம்பிக்கையுடன் இருப்பவன் எவனோ, அவனே எனது அன்புக்குரியவன் ஆவான். 12:18-19
(ஏற்கனவே) அறிவித்தது போல, அழிவற்ற {அமுதம் போன்ற} இந்த நீதியின்படி {அறத்தின்படி} நடப்போர் எவரோ, (அடையத்தக்க) உயர்ந்த பொருளாக என்னையே கருதும் நம்பிக்கை நிறைந்த அந்த அர்ப்பணிப்பாளர்கள் {பக்தர்கள்} எவரோ, அவர்களே எனது மிகுந்த அன்புக்கு உரியவர்களாவர்" என்றான் {கிருஷ்ணன்}. 12:20
பொருள் மற்றும் ஆத்ம பிரிவினையின் அறம் - க்ஷேத்ர – க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 037
Religion by Separation of Matter and Spirit - Kshetra–Kshetrajna Vibhaga yoga! | Bhishma-Parva-Section-037 | Mahabharata In Tamil
(பகவத்கீதா பர்வம் – 25) {பகவத் கீதை - பகுதி 13}
பதிவின் சுருக்கம் : நிலையற்றதும் அழியக்கூடியதுமான உடலுக்கும், மாற்ற முடியாததும், நித்தியமானதுமான ஆத்மாவுக்கும் இடையிலான வேறுபாடுகளைக் கிருஷ்ணன் விவரிப்பது; தனிப்பட்ட உணர்வு மற்றும் பிரபஞ்சஉணர்வு ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டைக் கிருஷ்ணன் தெளிவாக்குவது...
{அர்ஜுனன் கிருஷ்ணனிடம், "ஓ! கேசவா {கிருஷ்ணா}, இயற்கை, மனிதன், க்ஷேத்திரம் {களம்}, க்ஷேத்திரக்ஞன் {களத்தை அறிந்தவன்}, அறிவு, அறிவின் எல்லை ஆகியவற்றை அறிய விரும்புகிறேன்" என்றான்} [1அ].
அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, இந்த உடலே க்ஷேத்திரம் {களம்} என்று அழைக்கப்படுகிறது. அஃதை {களத்தை} அறிந்தவனையே க்ஷேத்திரக்ஞன் {களத்தை அறிந்தவன்} என்று கற்றோர் {தத்துவங்களை அறிந்தோர்} அழைக்கின்றனர் [1ஆ]. ஓ! பாரதா {அர்ஜுனா}, க்ஷேத்திரங்கள் {களங்கள்} என்று என்னை அறிவாயாக [1இ]. 13:1-2
அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, இந்த உடலே க்ஷேத்திரம் {களம்} என்று அழைக்கப்படுகிறது. அஃதை {களத்தை} அறிந்தவனையே க்ஷேத்திரக்ஞன் {களத்தை அறிந்தவன்} என்று கற்றோர் {தத்துவங்களை அறிந்தோர்} அழைக்கின்றனர் [1ஆ]. ஓ! பாரதா {அர்ஜுனா}, க்ஷேத்திரங்கள் {களங்கள்} என்று என்னை அறிவாயாக [1இ]. 13:1-2
[1அ] அர்ஜுனனின் இந்தக் கேள்வி கங்குலியில் இல்லை, பாரதியாரிலும் இல்லை. பிரபுபாதரும், கோயந்தகரும் இதை மேற்கண்டவாறே குறிப்பிடுகிறார்கள்.[1ஆ] இங்கே சொல்லப்படும் கற்றோர் என்பது க்ஷேத்திரத்தை அறிந்தவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். கீழ்வரும் விளக்கங்களில் கிருஷ்ணனால் விளக்கப்படுவது போல இங்கே க்ஷேத்திரம் என்பது பருப்பொருளையும் {உடலையும் [அ] உடல் கொண்ட உயிரையும்}, க்ஷேத்திரக்ஞன் என்பது ஆத்மாவையுமே குறிக்கும்.[1இ] க்ஷேத்திரக்ஞன் {களங்கள் அனைத்தையும் அறிந்தவன்} நான் என்பதை அறிவாயாக என்பதே இங்குச் சரியாக இருக்கும். மூலத்தில் அப்படி இருப்பதாகவே தத்வ விவேசனி கூறுகிறது. கங்குலி இங்கு தவறிழைத்திருக்க வேண்டும்; அல்லது அச்சுப்பிழையாக இருத்தல் வேண்டும்.
க்ஷேத்திரம் {களம் [அ] உடல்} மற்றும் க்ஷேத்திரக்ஞன் {களத்தை அறிந்தவன் [அ] ஆத்மா} ஆகியவற்றின் அறிவையே, (உண்மை) அறிவு என நான் கருதுகிறேன். 13:3
க்ஷேத்திரம் (என்பது) என்ன? (அஃது) எதைப் போன்றது?
அஃது என்னென்ன மாற்றங்களை அடைகிறது?
(அஃது) எங்கிருந்து வருகிறது? அவன் (க்ஷேத்திரக்ஞன்) எவன்?
அவனது சக்திகள் {பெருமை} என்னென்ன?
என்பதைச் சுருக்கமாகக் கேட்பாயாக. 13:4
அஃது என்னென்ன மாற்றங்களை அடைகிறது?
(அஃது) எங்கிருந்து வருகிறது? அவன் (க்ஷேத்திரக்ஞன்) எவன்?
அவனது சக்திகள் {பெருமை} என்னென்ன?
என்பதைச் சுருக்கமாகக் கேட்பாயாக. 13:4
பிரம்மத்தைக் குறித்த குறிப்புகளைக் கொடுத்து, நன்கு அமைந்த, காரணம் நிறைந்த உரைகளாலும், பல்வேறு சந்தங்களாலும், இன்னும் பல வழிகளிலும் தனித்தனியாக இவையனைத்தும் {ஏற்கனவே} பாடப்பட்டுள்ளன. 13:5
பெரும்பூதங்களும் {ஐம்பூதங்களும்}, தன்னலம் {அகங்காரம்}, அறிவுத்திறன் {புத்தி}, தோற்றமில்லாதது (இயற்கை) {ஆத்மா}, பத்துப் புலன்கள், ஒன்றானது (மனம்), புலன்நுகர் பொருட்கள் ஐந்து, ஆசை, வெறுப்பு, இன்பம், வலி {துன்பம்}, உடல் உணர்வு, துணிவு ஆகிய இவை அனைத்துமே, அவற்றின் திருத்தப்பட்ட வடிவில், சுருக்கமாக, க்ஷேத்திரம் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. 13:6-7
கர்வமின்மை, ஆடம்பரமின்மை, தீங்கிழையாமை, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, நேர்மை, ஆசானிடம் அர்ப்பணிப்பு, தூய்மை, சீரான தன்மை {உறுதி}, தற்கட்டுப்பாடு, புலன்நுகர்பொருட்களில் வேறுபாடின்மை, தன்னலமின்மை {அகங்காரமின்மை}, பிறப்பு, இறப்பு, முதுமை, நோய், பற்று ஆகியவற்றில் இருந்து விடுதலை, மகன், மனைவி, வீடு மற்றும் எஞ்சியோர் ஆகியோரிடம் பற்றின்மை {அவர்கள் தன்னுடைமை எனக் கருதாமை}, நன்மை மற்றும் தீமையை அடைவதில் சீரான இதயச் சமன்நிலை, வேறு எதையும் தியானிக்காமல் {பிறழா யோகத்துடன்} என்னிடம் கலங்காத அர்ப்பணிப்பு {பக்தி}, தனிமையான இடங்களை அடிக்கடி நாடுதல், மனிதக் கூட்டங்களில் விருப்பமின்மை, தனக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள உறவு குறித்த நீடித்த அறிவு {ஆத்ம ஞானத்தில் எப்போதும் நழுவாமை}, உண்மை அறிவின் {தத்துவ ஞானத்தின்} பொருளை உணர்தல் [2] ஆகிய இவை அனைத்துமே அறிவு என்று அழைக்கப்படுகின்றன; இவற்றுக்கு முரணான அனைத்துமே அறியாமையாகும். 13:8-12
[2] இங்கே "உண்மை அறிவின் பொருளை உணர்தல்" என்பது அறியாமையை அகற்றி மகிழ்ச்சியை அடைவது எனப் பொருள்படும் என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.
எதை அறிந்தால், ஒருவன் அழியா நிலையை அடைவானோ, அந்த அறிவின் பொருளை (இப்போது) நான் (உனக்கு) அறிவிக்கிறேன். தொடக்கமில்லாததும் உயர்ந்ததும், இருப்பு {சத்} மற்றும் இல்லாமை {அசத்} அற்றதும், {13} அனைத்துப் புறங்களிலும் கைகளையும் கால்களையும் கொண்டதும், அனைத்துப் புறங்களிலும் கண்களையும், தலைகளையும், முகங்களையும் கொண்டதும், உலகத்தில் அனைத்திலும் படர்ந்தூடுருவி வசிப்பதும் {அனைத்தையும் சூழ்ந்திருப்பதும்} {14}, புலன்கள் அற்றிருந்தாலும், புலன்களின் குணங்கள் அனைத்தையும் கொண்டதும், அனைத்துப் பொருள்களைத் தாங்கியிருந்தாலும், {அவற்றில்} பற்றில்லாததும், அனைத்துப் குணங்களைக் கொண்டிருந்தாலும் குணங்களற்றதும், {15} அசைவன, அசையாதன மற்றும் அனைத்து உயிரினங்களின் உள்ளேயும் {உள்ளும்} வெளியேயும் {புறமும்} இருப்பதும், (தனது) நுண்மையால் அறியப்படாததும், அருகில் இருந்தாலும் தொலைவில் இருப்பதும், {16} அனைத்து உயிரினங்களிலும் பகிர்ந்திருந்தாலும், பகுபடாமல் இருப்பதும், அனைத்து உயிரினங்களையும் தாங்குவதும், (அனைத்தையும்) படைத்து அழிப்பதும்; {17} ஒளியுருவங்களின் ஒளியானதும், இருளுக்கு அப்பால் இருப்பதாகச் {உயர்ந்ததாகச்} சொல்லப்படுவதும், அறிவானதும், அறிவின் பொருளானதும் {நோக்கமானதும்}, அறிவின் எல்லையானதும், அனைத்தின் இதயங்களிலும் இருப்பதுமான (அது) {அறிவின் பொருளான} பரப்பிரம்மம் ஆகும் {18}. 13:13-18
இப்படியே க்ஷேத்திரம், அறிவு, அறிவின் பொருள் ஆகியவை என்னால் (உனக்கு) சுருக்கமாகச் சொல்லப்பட்டன. என்னில் அர்ப்பணிப்பு கொண்டவன் இதையறிந்தால் என் தன்மையையே அடைகிறான். 19
{பொருள் சார்ந்த} இயற்கை மற்றும் ஆத்மா ஆகியவை தொடக்கமில்லாதவை என்பதை அறிவாயாக. (மேலும்) அனைத்து மாறுதல்களும் {திருத்தங்களும்}, {அந்தப் பொருட்களின் [உடல்களின்]} அனைத்து குணங்களும் இயற்கையில் இருந்தே எழுகின்றன என்பதை அறிவாயாக. 13:20
இன்ப, துன்பங்களை அனுபவிக்கும் அளவின் மூலாதாரமே இயற்கை என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் ஆத்மாவே, இயற்கையில் வசித்து, இயற்கையில் இருந்து பிறக்கும் குணங்களை அனுபவிக்கிறது. {காரணக் காரியங்களை உண்டாக்கும் காரணம் இயற்கை ஆகும். இன்ப துன்பங்களை அனுபவிப்பதற்குக் காரணம் புருஷன் [ஆத்மா] ஆகும்}.13:21
(அதன் {ஆத்மாவின்}) குணங்களில் கொண்ட தொடர்பே நல்ல அல்லது தீய கருவறையில் அது {ஆத்மா} பிறப்பதற்குக் காரணமாக அமைகிறது. 13:22
இந்த உடலில் உள்ள உயர்ந்த ஆத்மா {பரம புருஷன்}, மதிப்பீட்டாளன் {மேற்பாற்வையாளன்}, அங்கீகரிப்பவன் {அனுமதி தருபவன்}, ஆதரிப்பவன் {சுமப்பவன்}, அனுபவிப்பவன், வலிமைமிக்கத் தலைவன் {மகேஸ்வரன்} மற்றும் பரமாத்மா என்றும் அழைக்கப்படுகிறான். 13:23
இப்படியே ஆத்மா {புருஷன்} மற்றும் இயற்கை {பிரகிருதி} ஆகியவற்றை அதன் குணங்களுடன் அறிந்தவன் எவனோ, அவன் என்ன நிலையில் இருந்தாலும், {அவன்} மீண்டும் பிறப்பதில்லை {பிறவியை அடைவதில்லை}. 13:24
சிலர் தன்னை {ஆத்மாவை}, தன்னில் {ஆத்மாவில்} தன்னாலேயே {ஆத்மாவாலேயே} அறிகிறார்கள்; பிறர் சாங்கிய அமைப்பின்படியான அர்ப்பணிப்பின் {சாங்கிய யோகத்தின்} மூலமும்; மேலும் பிறர், செயல்களில் அர்ப்பணிப்பின் {கர்ம யோகத்தின்} மூலமும் {தன்னை, ஆத்மாவை} அறிகிறார்கள். 13:25
எனினும் இஃதை அறியாத பிறரோ, இதைக் குறித்து வேறு பிறரிடம் கேட்டு வழிபடுகின்றனர். அப்படிக் கேட்கப்பட்டதில் [3] அர்ப்பணிப்புக் கொண்ட இவர்களும்கூட மரணத்தைக் {பிறப்பு இறப்பு என்ற மறுபிறவியைக்} கடந்துவிடுவார்கள். 13:26
[3] இங்கே "கேட்கப்பட்டது" என்பதைச் சுருதிகள் அல்லது புனிதக் கோட்பாடுகள் என்று பொருள் கொள்ள வேண்டும் என்கிறார் கங்குலி.
அசைவன, அசையாதன என இருப்பில் வரும் {பிறக்கும்} எந்த உயிரும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனா}, க்ஷேத்திரம் மற்றம் க்ஷேத்திரக்ஞன் (பருப்பொருள் {உடல்} மற்றும் ஆத்மா) என்பனவற்றின் தொடர்பில் உண்டானவை என்பதை அறிவாயாக. 13:27
அழிவனவற்றுள் அழியாதவனாக, அனைத்து உயிரினங்களிலும் சமமாகவே வசிக்கும் அந்த உயர்ந்த தலைவனைக் {பரமேஸ்வரனைக்} காண்பவனே பார்வையுடையவன் ஆவான். 13:28
எங்கும் நிறைந்திருக்கும் தலைவனை {ஈஸ்வரனைக்} காணும் ஒருவன் தன்னை {ஆத்மாவை}, தன்னில் {ஆத்மாவில்} அழித்துக் கொள்வதில்லை [4] {தன்னை துன்பப்படுத்திக் கொள்ளமாட்டான்}. அவன் உயர்ந்த இலக்கையே பிறகு அடைகிறான். 13:29
[4] தன்னைத் தன்னில் அழித்துக் கொள்வது என்பதை உண்மை அறிவை இழத்தல் என்று பொருள் கொள்ள வேண்டும் என்கிறார் கங்குலி.
அனைத்து செயல்களும், அனைத்து வகையிலும் இயற்கையால் மட்டுமே செய்யப்படுகின்றன என்பதையும், அதே போல செயல்படுபவன் தானல்ல {தான் எதையும் செய்யவில்லை} என்பதையும் காண்பவனே (உண்மையில்) பார்வையுள்ளவன் ஆவான். 13:30
பொருள்களின் {உடல்கொண்ட உயிர்களின்} பன்முகத்தன்மைகள் ஒன்றிலேயே நிலைத்து இருக்கின்றன என்பதையும், அதில் (அந்த ஒன்றில்) இருந்தே (அனைத்தும்) தோன்றுகின்றன என்பதையும் காணும் ஒருவனே பிரம்மத்தை அடைவான் எனச் சொல்லப்படுகிறான். 13:31
ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, தொடக்கமற்றவனாகவும், குணங்களற்றவனுமான இந்த அழிவற்ற பரமாத்மா செயல்படுவதுமில்லை, உடலில் நிலைத்திருந்தாலும் அதனால் களங்கப்படுவதுமில்லை {பற்றில்லமாலேயே இருக்கிறான்}. 13:32
எல்லையற்ற வெளி {வானம், ஆகாயம்} அதன் நுண்மையின் விளைவால் களங்கபடாதிருத்தல் போல {பற்றற்று நிற்பது போல}, ஒவ்வொரு உடலில் நிலைகொண்டிருக்கும் ஆத்மாவும் களங்கப்படுவதில்லை {பற்றுறுவதில்லை}. 13:33
ஒரே சூரியன் மொத்த உலகத்திற்கும் ஒளியூட்டுவது போல, ஓ! பாரதா {அர்ஜுனா}, ஆத்மா {க்ஷேத்திரக்ஞன்} மொத்த பருப்பொருள்களுக்கும் {உடல்களுக்கும், அல்லது உடலின் பொருள்கள் அனைத்துக்கும்} {க்ஷேத்திரங்களுக்கும்} ஒளியூட்டுகிறது. 13:34
அறிவுக்கண் கொண்டு பருப்பொருளுக்கும் {க்ஷேத்திரம், உடல்}, ஆத்மாவுக்கும் {க்ஷேத்திரக்ஞன், உடலின் சொந்தக்காரன் ஆகியவற்றுக்கு} உள்ள வேறுபாட்டையும், அனைத்துப் பொருள்களின் {உடல் கொண்ட உயிர்களின்} இயற்கையில் [5] இருந்து விடுபடுதலையும் காண்பவர்களே பரம்பொருளை அடைகின்றனர்" என்றான் {கிருஷ்ணன்}. 13:35
[5] இங்கே குறிப்பிடப்படும் "பூதப்ரக்ருதிமோக்ஷம் Bhuta-Prakriti-moksha" என்பது சங்கரர் மற்றும் ஸ்ரீதரர் ஆகிய இருவராலும், "பூதங்கள் அல்லது உயிர் பொருட்களின் {Bhuta} இயற்கையில் {Prakriti} இருந்து விடுதலை அல்லது மோட்சம் {moksha} அடையும் ஒருவன்" என்று விளக்கப்படுகிறது. இது போன்ற விடுதலையை விளைவிப்பது உண்மையான அறிவே ஆகும். திரு.டேவீசோ, "இயற்கையில் இருந்து விடுதலையடையும் உயிரினங்கள்" என்று இதை வழங்குகிறார். இது தவறு என்பது தெளிவானது. உயிரினங்கள் என்ற சொல்லானது, தான் {சுயம்} அல்லது ஆத்மா என்ற பொருளைத் தரவில்லை என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.குணப்பிரிவினைகளின் அறம் - குணத்ரய விபாக யோகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 038
Religion by Separation from the Qualities - Gunatraya–Vibhaga yoga! | Bhishma-Parva-Section-038 | Mahabharata In Tamil
(பகவத்கீதா பர்வம் – 26) {பகவத் கீதை - பகுதி 14}
பதிவின் சுருக்கம் : பொருள் இயல்புகளின் தொடர்புடைய நற்குணம், பேரார்வம் மற்றும் அறிவின்மை ஆகிய மூன்று வழிமுறைகளை (குணங்களை) கிருஷ்ணன் விளக்குவது; உடல்கொண்டு வாழும் ஓர் உயிரில் அவை ஏற்படுத்தும் விளைவுகள், பண்புகள் மற்றும் செல்வாக்கு ஆகியவற்றைக் கிருஷ்ணன் விளக்குவது...
அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "எதை அறிந்து, முனிவர்கள் அனைவரும் இந்த உடலில் (உடலின் பந்தங்களில்) இருந்து உயர்ந்த முழுமையை {பரமசித்தியை} அடைந்தார்களோ, அதே அற்புத அறிவியலை, அறிவியல்களில் தெய்வீக அறிவியலை நான் மீண்டும் உனக்கு அறிவிக்கிறேன் {சொல்கிறேன்}. 14:1
இந்த அறிவியலை அடைந்து, எனது இயல்பை அடைந்தோர், (புதிய) {உலக} படைப்பிலும் கூட {அண்டம் அழிந்து புதியதாக மலரும்போது கூட} மறுபிறவியை அடையாமலும், ஊழிக்காலத்தில் {பிரளயத்தின் போதும்} கலங்காமலும் இருக்கிறார்கள். 14:2
எனக்குக் கருவறையாக வலிமைமிக்கப் பிரம்மமே இருக்கிறது. அதில் நான் கருவை {உயிரை} வைக்கிறேன் {அதில் நான் கருத்தரிக்கிறேன்}. அதில்தான், ஓ! பாரதா {அர்ஜுனா} உயிரினங்கள் அனைத்தும் பிறப்பை அடைகின்றன. 14:3
கருவறைகள் அனைத்திலும் பிறக்கும் (உடல்கொண்ட) வடிவங்கள் யாவைக்கும், ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, பிரம்மமே வலிமைமிக்கக் கருவறையாக இருக்கிறது. (மேலும்) நானே விதையைத் தரும் தந்தையாக இருக்கிறேன். 14:4
இயற்கையில் பிறக்கும் நற்குணம் {சத்வ குணம்}, பேரார்வம் {ரஜோகுணம்}, இருள் {தமோ குணம்} ஆகிய இந்தக் குணங்களே, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, நித்தியமான பண்புருவத்தை [ஆத்மாவை] இந்த உடலில் கட்டுகிறது. 14:5
இவற்றில், நற்குணம் {சத்வகுணம்}, தனது பிழையில்லா இயல்பால் தெளிவைத் தரும் ஒளியாகவும் {அறிவாகவும்}, துன்பங்கள் அற்றதாகவும் இருப்பதால், ஓ! பாவமற்றவனே {அர்ஜுனா}, மகிழ்ச்சியையும், அறிவையும் அடைந்து {அது} (ஆன்மாவைக்) கட்டுப்படுத்துகிறது. 14:6
ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, ஆசையையே தன் சாறாகக் கொண்ட பேரார்வம் {ரஜோ குணம்}, தாகத்திலும் {ஏக்கத்திலும்}, பற்றிலும் இருந்து பிறப்பது என்பதை அறிவாயாக. செயலில் பற்று காரணமாகவே பண்புருவத்தை (ஆத்மாவை) அது {உடலில்} கட்டுகிறது. 14:7
ஓ! பாரதா {அர்ஜுனா}, எனினும், இருளோ {தமோ குணமோ}, அறியாமையில் பிறக்கிறது என்பதை அறிவாயாக. (மேலும்) பண்புருவங்கள் (ஆத்மாக்கள்) அனைத்தையும் அது {தமோ குணம்} கலக்கமடையச் {மயங்கச்} செய்கிறது. பிழை {தவறு}, சோம்பல் மற்றும் உறக்கத்தில் {ஆத்மாவை} அது {தமோ குணம்} கட்டுகிறது. 14:8
ஓ! பாரதா {அர்ஜுனா}, நற்குணம் {சத்வ குணம்} இன்பத்துடன் (ஆத்மாவை) ஒன்றிணைக்கிறது {பற்றுறச் செய்கிறது}; பேரார்வம் {ரஜோகுணம்}, செயலுடன் {ஆத்மாவை} ஒன்றிணைக்கிறது; ஆனால் இருளோ, அறிவுக்குத் திரையிட்டு, பிழையுடன் {தவறுடன்ஆத்மாவை} ஒன்றிணைக்கிறது. 14:9
ஓ! பாரதா {அர்ஜுனா}, பேரார்வத்தையும் {ரஜோகுணத்தையும்}, இருளையும் {தமோ குணத்தையும்} அடக்கி, நற்குணம் {சத்வ குணம்}, நிலைநிற்கிறது. பேரார்வத்தையும், நற்குணத்தையும் அடக்கி இருள் நிலைநிற்கிறது; (மேலும்) இருளையும், நற்குணத்தையும் அடக்கி பேரார்வம் நிலைநிற்கிறது. 14:10
எப்போது இந்த உடலில் உள்ள வாயில்கள் அனைத்திலும் அறிவொளி பிறக்கிறதோ, அப்போது நற்குணம் {சத்வ குணம்} வளர்ச்சி பெறுகிறது என்பதை ஒருவன் அறிய வேண்டும். 14:11
ஓ! பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனா}, பேராசை, செயல்பாடு, செயல்களின் தொடக்கம், அமைதியின்மை, ஏக்கம் ஆகியவைகளே, பேரார்வம் {ரஜோகுணம்} வளரும்போது பிறக்கின்றன. 14:12
ஓ! பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனா}, இருள் {ஒளியின்மை}, செயலின்மை, பிழை {தவறுதல்}, மயக்கம் ஆகியவையே, இருள் {தமோகுணம்} வளரும்போது பிறக்கின்றன. 14:13
உடலைத் தாங்குபவன் ஒருவன், ஊழிக்காலத்தின் {தன் மரணத்தின்} போது, நற்குணம் {சத்வ குணம்} வளர்ந்து சென்றால், அவன் பிரம்மத்தை அறிந்தவர்களின் களங்கமில்லா உலகங்களை அடைகிறான். 14:14
பேரார்வம் {ரஜோகுணம்} நிலவும்போது மரணமடைந்து சென்றால், அந்த ஒருவன் {மறுபிறவியில்} செயலில் பற்றுடையோருக்கு மத்தியில் பிறக்கிறான். அதே போல இருளில் {தமோ குணத்துடன்} இருக்கும்போது இறந்தால், ஒருவன் மூடர்களை ஈன்றெடுக்கும் கருவறைகளில் பிறக்கிறான். 14:15
நற்செயலின் பலன் நன்மையானது என்றும், களங்கமில்லாதது என்றும் சொல்லப்படுகிறது. அதேபோல, பேரார்வத்தின் பலன் துன்பமாகும்; (மேலும்) இருளின் பலன் அறியாமையாகும். 14:16
நற்குணத்தில் {சத்வ குணத்தில்} இருந்தே அறிவு பிறக்கிறது; பேரார்வத்தில் {ரஜோ குணத்தில்} பேராசையும்; (மேலும்) இருளில் {தமோ குணத்தில்} பிழை, மயக்கம் மற்றும் அறியாமையும் பிறக்கின்றன. 14:17
நற்குணத்தில் {சத்வ குணத்தில்} வசிப்போர் உயர்வடைகின்றனர்; பேரார்வத்திற்கு {ரஜோகுணத்திற்கு} அடிமையானோர் நடுவில் இருக்கிறார்கள்; (அதே வேளையில்) இருளில் {தமோ குணத்தில்} வசிப்போர், இழிகுணத்திற்கு அடிமையாகி வீழ்ச்சியடைகின்றனர் {தாழ்ந்த உலகங்களை அடைகின்றனர்}. 14:18
குணங்களைத் தவிரச் செயல்படுபொருள் வேறு எதுவும் இல்லை எனக் கண்டு, அவற்றைக் கடந்திருப்பதை உணரும் ஒரு பார்வையாளன், எனது இயல்பையே அடைகிறான் {அறிகிறான்}. 14:19
அனைத்து உடல்களின் மூலாதாரமாக இருக்கும் இந்த மூன்று குணங்களைக் கடந்து மேம்பட்டு, பிறப்பு, இறப்பு, முதுமை, துன்பம் ஆகியவற்றில் இருந்து விடுபட்ட பண்புருவம் {ஆத்மா}, அழிவற்ற தன்மையை அனுபவிக்கிறது {அமிர்த நிலையை அடைகிறது}" என்றான் {கிருஷ்ணன்}. 14:20
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! தலைவா {கிருஷ்ணா}, இந்த மூன்று குணங்களையும் கடந்து மேம்பட்டிருக்கும் ஒருவனின் அறிகுறிகள் என்னென்ன? அவனது நடத்தை எது? இந்த முக்குணங்களையும் ஒருவன் கடந்து மேம்படுவது எவ்வாறு?" என்று கேட்டான் {அர்ஜுனன்}. 14:21
அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, ஒளி, செயல், மாயை ஆகியவற்றில் - அவை இருக்கும்போது வெறுப்பையும், இல்லாதபோது விருப்பையும் [1] கொள்ளாதவன் எவனோ {22}, கவலையற்றவனாக அமர்ந்து, அந்தக் குணங்களால் அசைக்கப்படாதவன் எவனோ; அந்தக் குணங்களே (தங்களுக்குரிய செயல்பாடுகளில்) ஈடுபடுகின்றன (தானல்ல) என்று நினைத்து அசையாமல் அமர்ந்திருப்பவன் எவனோ {23}, துன்பத்தையும் இன்பத்தையும் ஒன்றாகக் கொள்பவன் எவனோ, தன்னிறைவு கொண்டவன் எவனோ, பூமியின் புல்லையும், கல்லையும், தங்கத்தையும் ஒன்றாகக் கருதுபவன் எவனோ, ஏற்புடையவற்றையும் ஏற்பில்லாதவற்றையும் ஒன்றாகக் கருதுபவன் எவனோ, பகுத்தறிபவன் எவனோ, இகழையும் புகழையும் ஒன்றாகக் கருதுபவன் எவனோ {24}, மதிப்பையும் அவமதிப்பையும் ஒன்றாகக் கருதுபவன் எவனோ, நண்பனையும் எதிரியையும் ஒன்றாகக் கருதுபவன் எவனோ, {பலன் தரும்} முயற்சிகள் அனைத்தையும் துறந்தவன் எவனோ, அவனே குணங்களைக் கடந்து மேம்பட்டவன் எனச் சொல்லப்படுகிறான் {25}. 14:22-25
[1] மூன்று குணங்களின் விளைவுகளைக் குறிப்பதே ஒளி, செயல்பாடு மற்றும் மாயை ஆகும் என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.
மேலும், தனிப்பட்ட அர்ப்பணிப்புடன் {வேறுபாடில்லாத பக்தி யோகத்தில்} என்னை வழிபடுபவன் எவனோ, அவனே இந்தக் குணங்களைக் கடந்து மேம்பட்டு, பிரம்மத்தின் இயல்புக்குள் நுழையத் தகுந்தவனாகிறான். 14:26
பரம நிலை அடைதலின் அறம் - புருஷோத்தம யோகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 039
Religion by Attaining the Supreme - Purusottama yoga! | Bhishma-Parva-Section-039 | Mahabharata In Tamil
என்பது இழத்தல் அல்லது நீக்கல் என்ற பொருளைத் தரும். இது நன்கு அறியப்பட்ட வார்த்தையாகும். இங்கே அதன் பயன்பாடும் மிக இயல்பாக இருக்கிறது. "நானே நினைவும் அறிவும் ஆவேன்" என்பது அவற்றை நற்செயலுக்குப் பயன்படுத்துவோரைக் குறித்ததாகும். "இவற்றை இழக்கும் நிலையும் நானே" என்பது அவற்றைத் தீச்செயலுக்குப் பயன்படுத்துவோரைக் குறித்ததாகும். திரு.டேவீஸ் இதைத் தவறான முறையில் "அறிவின் சக்தி" என்று சொல்கிறார் என இங்கே குறிப்பிடுகிறார் கங்குலி.
மாறக்கூடியன {க்ஷர புருஷன்}, மாற்றமுடியாதன {அக்ஷர புருஷன்} என்ற இரண்டு {உயிர்} பொருட்கள் இவ்வுலகில் இருக்கின்றன. மாறக்கூடியன {க்ஷர புருஷன்} என்பன (இந்த) உயிரினங்கள் அனைத்துமாகும். மாறாத ஒன்றே {கூடஸ்த} மாற்ற முடியாதது {அக்ஷர புருஷன்} என்று அழைக்கப்படுகிறது {அழைக்கப்படுகிறான்} [7]. 15:16
[7] "கூடஸ்த Kutashtha" என்பது K.T.டெலங்கால் "கவலையற்றவன்" என்று உரைக்கப்படுகிறது. திரு.டேவீஸ் "உயர்ந்த தலைவன்" என்று கொள்கிறார். தானோ "சமமானவன், மாற்றமில்லாதவன்" என்று அறிஞர்களால் சொல்லப்படுவதை ஏற்பதாக இங்கே சொல்கிறார் கங்குலி.
ஆனால், நித்தியமானவனும், மூன்று உலகங்களிலும் படர்ந்தூடுருவி இருப்பவனும், (அவற்றைத்) தாங்குபவனும் பரமாத்மா என்று அழைக்கப்படுபவனுமான இன்னுமொரு சிறந்தவன் இருக்கிறான். (மேலும்) மாறக்கூடியனவற்றுக்கு {க்ஷர புருஷனுக்கு} மேம்பட்டவனாகவும், மாற்றமுடியாதவனை {அக்ஷர புருஷனை} விட உயர்ந்தவனாகவும் நான் இருக்கிறேன்; இதன் காரணமாகவே, (மனிதர்களின்) உலகிலும், வேதத்திலும் புருஷோத்தமன் (உயர்ந்தவன்) என்று நான் கொண்டாடப்படுகிறேன். 15:17-18
மயக்கமடையாமல் எவன் என்னை இந்த உயர்ந்தவனாக {புருஷோத்தமனாக} அறிகிறானோ, ஓ! பாரதா {அர்ஜுனா}, அனைத்தையும் அறிந்த அவன், {என்னையே அனைத்தின் ஆன்மாவாக நினைத்து} என்னையே அனைத்து வழியிலும் வழிபடுகிறான். 15:19
ஓ! பாவமற்றவனே {அர்ஜுனா}, இப்படியே, பெரும் புதிர்களைக் கொண்ட இந்த அறிவானது என்னால் (உனக்கு) அறிவிக்கப்படுகிறது. ஓ! பாரதா {அர்ஜுனா}, இதையறிந்து, அறிவைக் கொடையாகக் கொள்ளும் ஒருவன், செய்யப்பட வேண்டிய தேவைகள் அனைத்தையும் செய்திருப்பான்" என்றான் {கிருஷ்ணன்}. 15:20
என்பது இழத்தல் அல்லது நீக்கல் என்ற பொருளைத் தரும். இது நன்கு அறியப்பட்ட வார்த்தையாகும். இங்கே அதன் பயன்பாடும் மிக இயல்பாக இருக்கிறது. "நானே நினைவும் அறிவும் ஆவேன்" என்பது அவற்றை நற்செயலுக்குப் பயன்படுத்துவோரைக் குறித்ததாகும். "இவற்றை இழக்கும் நிலையும் நானே" என்பது அவற்றைத் தீச்செயலுக்குப் பயன்படுத்துவோரைக் குறித்ததாகும். திரு.டேவீஸ் இதைத் தவறான முறையில் "அறிவின் சக்தி" என்று சொல்கிறார் என இங்கே குறிப்பிடுகிறார் கங்குலி.
மாறக்கூடியன {க்ஷர புருஷன்}, மாற்றமுடியாதன {அக்ஷர புருஷன்} என்ற இரண்டு {உயிர்} பொருட்கள் இவ்வுலகில் இருக்கின்றன. மாறக்கூடியன {க்ஷர புருஷன்} என்பன (இந்த) உயிரினங்கள் அனைத்துமாகும். மாறாத ஒன்றே {கூடஸ்த} மாற்ற முடியாதது {அக்ஷர புருஷன்} என்று அழைக்கப்படுகிறது {அழைக்கப்படுகிறான்} [7]. 15:16
[7] "கூடஸ்த Kutashtha" என்பது K.T.டெலங்கால் "கவலையற்றவன்" என்று உரைக்கப்படுகிறது. திரு.டேவீஸ் "உயர்ந்த தலைவன்" என்று கொள்கிறார். தானோ "சமமானவன், மாற்றமில்லாதவன்" என்று அறிஞர்களால் சொல்லப்படுவதை ஏற்பதாக இங்கே சொல்கிறார் கங்குலி.
ஆனால், நித்தியமானவனும், மூன்று உலகங்களிலும் படர்ந்தூடுருவி இருப்பவனும், (அவற்றைத்) தாங்குபவனும் பரமாத்மா என்று அழைக்கப்படுபவனுமான இன்னுமொரு சிறந்தவன் இருக்கிறான். (மேலும்) மாறக்கூடியனவற்றுக்கு {க்ஷர புருஷனுக்கு} மேம்பட்டவனாகவும், மாற்றமுடியாதவனை {அக்ஷர புருஷனை} விட உயர்ந்தவனாகவும் நான் இருக்கிறேன்; இதன் காரணமாகவே, (மனிதர்களின்) உலகிலும், வேதத்திலும் புருஷோத்தமன் (உயர்ந்தவன்) என்று நான் கொண்டாடப்படுகிறேன். 15:17-18
மயக்கமடையாமல் எவன் என்னை இந்த உயர்ந்தவனாக {புருஷோத்தமனாக} அறிகிறானோ, ஓ! பாரதா {அர்ஜுனா}, அனைத்தையும் அறிந்த அவன், {என்னையே அனைத்தின் ஆன்மாவாக நினைத்து} என்னையே அனைத்து வழியிலும் வழிபடுகிறான். 15:19
ஓ! பாவமற்றவனே {அர்ஜுனா}, இப்படியே, பெரும் புதிர்களைக் கொண்ட இந்த அறிவானது என்னால் (உனக்கு) அறிவிக்கப்படுகிறது. ஓ! பாரதா {அர்ஜுனா}, இதையறிந்து, அறிவைக் கொடையாகக் கொள்ளும் ஒருவன், செய்யப்பட வேண்டிய தேவைகள் அனைத்தையும் செய்திருப்பான்" என்றான் {கிருஷ்ணன்}. 15:20
தெய்வ-அசுரத் தனித்தன்மைகள் - தெய்வாசுர சம்பத் விபாக யோகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 040
The Separateness of the Divine and Undivine - Daivasura–Sampad–Vibhaga yoga! | Bhishma-Parva-Section-040 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : மனிதனின் பண்புகளில் காணப்படும் தெய்வீக மற்றும் அசுரத் தன்மைகளைக் கிருஷ்ணன் விளக்குவது; கைவிட வேண்டிய அனைத்தையும் கைவிட்டு பரமபதத்தை அடைவது எப்படி என்று கிருஷ்ணன் ஆலோசனை கூறுவது...
அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "அச்சமின்மை, இதயத் தூய்மை, அறிவில் (அறிவை அடையும் நோக்கில்) விடாமுயற்சி, யோகத் தியானம், கொடைகள் {ஈகை}, தற்கட்டுப்பாடு, வேள்வி, வேத கல்வி, தவ நோன்புகள், நேர்மை {1} [1], தீங்கிழையாமை, வாய்மை, கோபத்தில் இருந்து விடுதலை, துறவு, மன அமைதி, பிறர் குறை சொல்லாமை, அனைத்து உயிர்களிடத்தும் கருணை, பொருளாசையின்மை, மென்மை, பணிவு, அமைதியின்மையில் இருந்து விடுதலை,{2} வீரம், மன்னிக்கும் தன்மை {பொறுமை}, உறுதி, தூய்மை, சண்டித்தனமின்மை {துரோகமின்மை}, செருக்கின்மை ஆகியவை ஓ! பாரதா {அர்ஜுனா}, தெய்வீகத் தன்மைகளைக் கொண்டோரைச் சார்ந்தனவாகும் {3}. 1-3
[1] இங்குச் சங்கரரின் விளக்கத்தை ஏற்றே தான் பெயர்த்திருப்பதாகவும், ஸ்ரீதரர் இங்கு வேறு பொருள் கொள்கிறார் எனவும் இங்கே விளக்குகிறார் கங்குலி.
ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே அர்ஜுனா}, பாசாங்கு, செருக்கு, அகந்தை, கடுங்கோபம், முரட்டுத்தனம் மற்றும் அறியாமை ஆகியவை அசுரத் தன்மை கொண்டோரைச் சார்ந்தனவாகும். 16:4
![]() |
இருவகை மனிதர்கள் |
இவ்வுலகில் படைக்கப்பட்ட உயிரினங்கள், தெய்வீகத் தன்மை, அசுரத் தன்மை என இரு வகைகளிலேயே இருக்கின்றன. தெய்வத்தன்மை விரிவாக விளக்கப்பட்டது. {எனவே}, ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, அசுரத்தன்மை குறித்து இப்போது என்னிடம் கேட்பாயாக. 16:6
அசுர இயல்பு கொண்டோர் நாட்டத்தையோ {பற்றையோ}, நாட்டமின்மையையோ {பற்றின்மையையோ} [2] அறியமாட்டார்கள். தூய்மையோ, நன்னடத்தையோ, வாய்மையோ அவர்களிடம் {அசுரத்தன்மை கொண்டோரிடத்தில்} இருப்பதில்லை. 16:7
[2] "ப்ரவ்ருத்திம் Prabritti" என்பதை நாட்டம் என்றும், "நிவ்ருத்திம் Nivritti" என்பதை நாட்டமின்மை என்றும் தான் கொள்வதாகவும். நாட்டம் என்பதை நீதிமிக்கச் செயல்கள் என்றும், நாட்டமின்மை என்பதை நீதியற்ற செயல்கள் என்றும் விரிவுரையாளர்கள் அனைவரும் சொல்கிறார்கள் என்றும், K.T.டெலங்க் இதை "செயல்" மற்றும் "செயலின்மை" என விளக்குகிறார் என்றும், பர்னாஃப்-ன் பிரஞ்சு மொழி பதிப்பைப் பின்தொடரும் திரு.டேவீசோ "படைப்பு மற்றும் அதன் முடிவு" என அவற்றைக் கொள்கிறார் என இங்கே விளக்குகிறார் கங்குலி.
உண்மை {சத்தியம்}, வழிநடத்தும் கொள்கை {அறம்}, ஆட்சியாளன் {ஈஸ்வரன்} ஆகியவை அற்றதே இந்த அண்டம் எனவும், காமத்தினால் (ஆணும் பெண்ணும்) ஒன்றோடு ஒன்று கலந்து அது {இந்த அண்டம்} உண்டானது; வேறில்லை என்றும் அவர்கள் {அசுரத் தன்மை கொண்டோர்} சொல்கிறார்கள். 16:8
இந்தப் பார்வையிலேயே தங்களை {ஆத்மாவை} இழந்தவர்களான இந்த {அசுரத்தன்மை கொண்ட} மனிதர்கள், சிறுமதிபடைத்தவர்களும், கொடுஞ்செயல்கள் புரிபவர்களுமான இந்த (உலகத்தின்) எதிரிகள், அண்டத்தின் அழிவுக்காகவே பிறந்திருக்கிறார்கள். 16:9
தணியாத ஆசைகளில் இன்புற்று, பாசாங்குத்தனம், இறுமாப்பு, மடமை ஆகியவற்றுடன் இருந்து, மாயையால் தவறான கருத்துகளை ஏற்று, புனிதமற்ற நடைமுறைகளில் அவர்கள் {அசுரத் தன்மை கொண்டோர்} ஈடுபடுகின்றனர். 16:10
மரணத்தால் (மட்டுமே) {முடிவை} ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு எண்ணற்ற எண்ணங்களை {கவலைகளை} வளர்த்து, (தங்கள்) ஆசைகளை அனுபவிப்பதே உயர்ந்த எல்லை எனக் கருதும் அவர்கள் {அசுரத்தன்மை கொண்டோர்}, அதுவே அனைத்தும் என நம்புகின்றனர். 16:11
நம்பிக்கையின் நூறு கயிறுகளால் கட்டப்பட்டு, காமத்திற்கும், கோபத்திற்கும் அடிமையாகும் அவர்கள் {அசுரத் தன்மை கொண்டோர்} இன்று இந்தச் செல்வத்தை அடையவே விரும்புகிறார்கள். 16:12
![]() |
அசுரத்தன்மைகள் |
தற்பெருமை, பிடிவாதம், செருக்கு, செல்வத்தில் போதை ஆகியவற்றைக் கொண்ட அவர்கள் {அசுரத்தன்மை கொண்டோர்}, பாசாங்குத் தனத்துடனும், (பரிந்துரைக்கப்பட்ட) விதிகளுக்கு எதிராகவும், பெயரளவில் மட்டுமே வேள்விகளைச் செய்வார்கள். 6:17
பகட்டு, சக்தி, செருக்கு, காமம், கோபம் ஆகியவற்றைக் கொண்ட இந்த வசைபாடுவோர் {அசுரத் தன்மை கொண்டோர்}, தங்கள் சொந்த உடல்களிலும் பிறரின் உடல்களிலும் இருக்கும் என்னை வெறுக்கிறார்கள். 16:18
(என்னை) வெறுக்கும் இவர்கள், கொடூரர்களாகவும், மனிதர்களில் பயங்கரமானவர்களாகவும், புனிதமற்றவர்களாகவும் இருக்கிறார்கள். நான் {அசுரத் தன்மை கொண்ட} அவர்களைத் தொடர்ச்சியாக அசுரத் தன்மை கொண்ட கருவறைகளில் வீசி எறிகிறேன். 16:19
அசுரத்தன்மை கொண்ட கருவறைகளை அடைந்து, அடுத்தடுத்த பிறவிகளிலும் மயக்கமடையும் அவர்கள் {அசுரத்தன்மை கொண்டோர்}, ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா} என்னை அடையாமலேயே இழிந்த நிலைக்கு வீழ்ச்சியடைகிறார்கள். 16:20
காமம், கோபம், பேராசை ஆகியவையே தனக்கு {ஆத்மாவுக்கு} அழிவைத் தரும் நரகத்தின் மூன்று வகை வழிகளாகும். எனவே, இம்மூன்றையும் ஒருவன் துறக்க வேண்டும். 16:21
இருளின் இந்த மூன்று வாயில்களில் {காமம், கோபம், பேராசை ஆகியவற்றில்} இருந்து விடுபட்ட மனிதன், ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, தனக்கான சொந்த நலனைத் தேடிக் கொண்டு, பிறகு, தனது உயர்ந்த இலக்கை {பரகதியை} அடைகிறான். 16:22
சாத்திரங்களின் விதிகளைத் துறந்து {மீறி}, ஆசையின் உந்துதல்களால் மட்டுமே செயல்படுபவன் எவனோ, அவன் முழுமையையோ, இன்பத்தையோ, உயர்ந்த இலக்கையோ {பரகதியையோ} ஒருபோதும் அடைவதில்லை. 16:23
மூவித நம்பிக்கைகளின் அறம் - சிரத்தாத்ரய விபாக யோகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 041
Religion by the Threefold Kinds of Faith - Sraddhatraya-Vibhaga yoga! | Bhishma-Parva-Section-041 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : நம்பிக்கை, எண்ணங்கள், செயல்கள் மற்றும் உண்ணும் பழக்கங்கள் ஆகியவற்றில் உள்ள மூன்று விதங்களை மூன்று வித குணங்களுடன் தொடர்பு படுத்திக் கிருஷ்ணன் விளக்குவது...
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! கிருஷ்ணா, சாத்திரங்களின் விதிகளைக் கைவிட்டாலும், நம்பிக்கையுடன் வேள்வி செய்பவர்களின் நிலை என்ன? அது நற்குணத்தினுடையதா {சத்வமா}? பேரார்வத்தினுடையதா {ரஜசா}? இருளினுடையதா {தமசா}?" என்று கேட்டான் {அர்ஜுனன்}. 17:1
அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "பண்புருவங்களின் (உயிரினங்களின்) நம்பிக்கைகள் மூன்று வகைப்படும். அவை அதனதன் (தனிப்பட்ட) இயல்பில் தோன்றுகின்றன. நன்னம்பிக்கை {நற்குணத்தால் விளையும் நம்பிக்கை = சாத்விகம்}, உணர்வுமிகுதியின் நம்பிக்கை {பேரார்வத்தால் உண்டாகும் நம்பிக்கை = ராஜசம்} மற்றும் மூடநம்பிக்கை {இருளால் உண்டாகும் நம்பிக்கை = தாமசம்} என்பவையே அவையாகும். அவற்றை இப்போது கேட்பாயாக. 17:2
ஓ! பாரதா {அர்ஜுனா}, ஒருவனின் நம்பிக்கையானது, அவனது சொந்த இயல்புக்கு தகுந்தபடியே அமைகிறது. இங்கே இருக்கும் ஓர் உயிர் நம்பிக்கை நிறைந்தே இருக்கிறது {மனிதன் எவனும் நம்பிக்கை நிறைந்தவனாகவே இருக்கிறான்}; ஒருவனின் நம்பிக்கை எதுவானாலும், அதுவே அவனாவான். 17:3
![]() |
மூவித நம்பிக்கைகள் |
1. நற்குணம் கொண்டவர்கள் {சாத்விகர்கள்} தேவர்களை வழிபடுகிறார்கள்;
2. பேரார்வ குணம் கொண்டோர் {ராஜசர்கள்} யக்ஷர்களையும், ராட்சசர்களையும் {வழிபடுகிறார்கள்};
3. இருள் குணம் கொண்ட மக்கள் {தாமசர்கள்} இறந்தோரின் ஆவிகளையும், பூதக் கூட்டங்களையும் {பிரேத, பூத கணங்களை} வழிபடுகிறார்கள். 17:4
2. பேரார்வ குணம் கொண்டோர் {ராஜசர்கள்} யக்ஷர்களையும், ராட்சசர்களையும் {வழிபடுகிறார்கள்};
3. இருள் குணம் கொண்ட மக்கள் {தாமசர்கள்} இறந்தோரின் ஆவிகளையும், பூதக் கூட்டங்களையும் {பிரேத, பூத கணங்களை} வழிபடுகிறார்கள். 17:4
பாசாங்குத்தனம், செருக்கு ஆகியவற்றுக்குத் தன்னை இழந்து, பற்றில் விருப்பம் கொண்டு, வன்முறையில் ஈடுபட்டு, சாத்திரங்களால் விதிக்கப்படாத கடும் தவத்துறவுகளைப் பயின்று, (தங்கள்) உடல் உறுப்புகளின் தொகுதியையும் {பூதத்தொகுதியையும்}, (அவர்களின்) உடல்களுக்குள் நிலைத்திருக்கும் என்னையும் துன்புறுத்தி {சித்திரவதைக்குள்ளாக்கி} வரும் பகுத்தறிவில்லாத அம்மனிதர்கள், அசுர குணங்கொண்டவர்களாக அறியப்பட வேண்டும். 17:5-6
அனைவருக்கும் விருப்பமான உணவும் மூன்று வகையானதாக இருக்கிறது. வேள்வி, நோன்பு {தவம்}, கொடைகள் {தானங்கள்} ஆகியனவும் அதே போலவே உள்ளன (மூன்று வகையாக உள்ளன). அவற்றின் வேறுபாடுகளைப் பின்வருமாறு கேட்பாயாக. 17:7
{மூன்று வகை உணவு முறைகள்:}
{மூன்று வகை உணவு முறைகள்:}
1. வாழ்நாளின் அளவு, சக்தி, பலம், நோயின்மை {ஆரோக்யம்}, நன்னிலை, இன்பம் ஆகியவற்றை அதிகரித்து, சுவையுள்ளதாக, எண்ணெய்ப் பசையுள்ளதாக {குழம்பாக}, சத்துள்ளதாக, ஏற்கத்தக்க இனிமையுள்ளதாக இருக்கும் உணவு வகைகளே நல்லோரால் {சத்வ குணமுள்ளோரால்} [1] விரும்பப்படுகின்றன. 17:8
[1] இந்த இடத்தில் கங்குலியில் liked by God என்று இருக்கிறது. அஃது அச்சுப்பிழையாகவோ, ஸ்கேன் செய்ததில் ஏற்பட்ட குழப்பமாகவோ இருக்க வேண்டும். அங்கே liked by Good என்றே இருந்திருக்க வேண்டும். மூலத்தில் அது "ஸாத்த்விகப்ரியா sāttvikapriyāḥ" என்றே இருக்கிறது. அதனால் நானும் நல்லோர் விரும்புகின்றனர் என்று மொழிபெயர்த்திருக்கிறேன்.
![]() |
உணவின் வகைகள் |
3. குளிர்ந்த, சுவையற்ற, அழுகிய, கெட்டுப் போன, பிறர் ஏற்க மறுத்த {எச்சிலான}, தூய்மையற்ற உணவு, இருள் தன்மை கொண்ட மனிதர்களால் {தமோ குணமுள்ளோரால்} விரும்பப்படுகிறது. 17:10
{மூன்று வகை வேள்வி முறைகள்:}
1. விதிகள் பரிந்துரைக்கும்படி, (அதனால் ஏற்படும்) பலனில் எந்த எதிர்பார்ப்பும் {ஏக்கமும்} இல்லாமல், வேள்வி புரிவதே கடமை என்று மனத்தில் தீர்மானித்து மனிதர்களால் எது {எந்த வேள்வி} செய்யப்படுமோ, அந்த வேள்வியே நல்லதாகும் {சத்துவக் குணமுடையதாகும்}. 17:11
1. விதிகள் பரிந்துரைக்கும்படி, (அதனால் ஏற்படும்) பலனில் எந்த எதிர்பார்ப்பும் {ஏக்கமும்} இல்லாமல், வேள்வி புரிவதே கடமை என்று மனத்தில் தீர்மானித்து மனிதர்களால் எது {எந்த வேள்வி} செய்யப்படுமோ, அந்த வேள்வியே நல்லதாகும் {சத்துவக் குணமுடையதாகும்}. 17:11
2. ஆனால் பலனை எதிர்பார்த்தும், ஆடம்பரத்திற்காகவும் எது செய்யப்படுமோ, ஓ! பரதமகன்களின் தலைவனே {அர்ஜுனா}, அந்த வேள்வி பேரார்வ {ரஜோ} குணம் கொண்டது என்று அறிவாயாக. 17:12
3. விதிக்கு எதிரானது, {பிறருக்கு} உணவு அளிக்கப்படாதது, (புனித வரிகளைக் கொண்ட) மந்திரங்கள் அற்றது, துணை செய்த அந்தணர்களுக்குக் கூலி கொடுக்காதது, நம்பிக்கையில்லாமல் செய்யப்படுவது எதுவோ, அந்த வேள்வி இருள் {தமோ} குணம் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. 17:13
{மூன்று வகை நோன்பு{தவ} முறைகள்:}
1. தேவர்கள், மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்}, குருக்கள், அறிஞர்கள் ஆகியோரை வணங்குதல், தூய்மை, நேர்மை, பிரம்மச்சரியப் பயிற்சி, தீங்கிழையாமை ஆகியவற்றைக் கொண்டே உடலின் தவம் அமைவதாகச் சொல்லப்படுகிறது. 17:14
1. தேவர்கள், மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்}, குருக்கள், அறிஞர்கள் ஆகியோரை வணங்குதல், தூய்மை, நேர்மை, பிரம்மச்சரியப் பயிற்சி, தீங்கிழையாமை ஆகியவற்றைக் கொண்டே உடலின் தவம் அமைவதாகச் சொல்லப்படுகிறது. 17:14
கோபத்தைத் தூண்டாத, உண்மையான, இனிமையான, நன்மை விளைவிப்பதான பேச்சு மற்றும் ஊக்கமான வேத கல்வி ஆகியனவே பேச்சின் தவமாகச் சொல்லப்படுகின்றன. 17:15
மன அமைதி, மென்மை, குறைவாகப் பேசும் தன்மை {மௌனம்}, தற்கட்டுப்பாடு, மனநிலையின் தூய்மை ஆகியனவே மனத்தின் தவமாகச் சொல்லப்படுகின்றன. 17:16
இந்த மூன்று வகைத் தவங்கள், {அதன்} பலனில் ஆசையற்ற அர்ப்பணிப்புள்ள மனிதர்களால் {யோகிகளால்} முழு நம்பிக்கையுடன் செய்யப்பட்டால், அது நற்குணத்தின் தன்மை {சத்வ குணம்} கொண்டது எனச் சொல்லப்படுகிறது. 17:17
2. மரியாதை அடைதல், பெருமை அடைதல், வழிபாட்டை அடைதல் ஆகியவற்றின் நிமித்தமாக, பாசாங்குத்தனத்துடன், நிலையற்ற மற்றும் உறுதியற்ற வழியில் செய்யப்படும் தவம் பேரார்வத்தின் தன்மை {ரஜோ குணம்} கொண்டது எனச் சொல்லப்படுகிறது. 17:18
3. மூட நம்பிக்கையுடன், தன்னைத்தானே துன்புறுத்திக் கொண்டு, பிறரைக் கெடுப்பதற்காகச் செய்யப்படும் தவம் இருளின் தன்மை {தமோக குணம்} கொண்டது எனச் சொல்லப்படுகிறது. 17:19
{மூன்று வகை கொடைகள்:}
{மூன்று வகை கொடைகள்:}
1. கொடுத்தே ஆக வேண்டும் என்ற காரணத்தினால், திரும்பக் கைம்மாறு செய்ய முடியாதவராக இருப்பினும் சரியான நபருக்கு, சரியான நேரத்தில் கொடுக்கப்படும் கொடை நற்குணத்தின் தன்மை {சத்வ குணம்} கொண்டது எனச் சொல்லப்படுகிறது. 17:20
2. எனினும், (கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தின்) கைம்மாறு எதிர்பார்த்தோ, பலனில் ஒரு கண் கொண்டோ, இதயத் தயக்கத்துடன் அளிக்கப்படும் கொடை பேரார்வத்தின் தன்மை {ரஜோ குணம்} கொண்டது எனச் சொல்லப்படுகிறது. 17:21
3. தகாத ஓர் இடத்தில், தகாத ஒரு நேரத்தில், தகாத பொருளுக்கு, மதிப்பின்றி, இகழ்ச்சியுடன் அலட்சியமாகக் கொடுக்கப்படும் கொடை {தானம்} இருளின் தன்மை {தமோ குணம்} கொண்டது எனச் சொல்லப்படுகிறது. 17:22
ஓம், தத், சத் என்று பிரம்மத்தின் நிலை மூன்று விதமாகச் சொல்லப்படுகிறது. அதனால்தான் (பிரம்மத்தினால்தான்), பிரமாணங்கள் {விதிகள் [அ] உறுதிமொழிகள்}, வேதங்கள், வேள்விகள் ஆகியன பழங்காலத்தில் விதிக்கப்பட்டன. 17:23
எனவே, விதியால் பரிந்துரைத்தபடி வேள்விகள், கொடைகள் மற்றும் தவங்கள் ஆகியவற்றைச் செய்யும்போது, பிரம்மத்தை உச்சரிக்கும் அனைவரும், "ஓம்" என்ற எழுத்தை உச்சரித்தே தொடங்குகிறார்கள். 17:24
"தத்" என்பதை {"தத்" என்ற சொல்லை} உச்சரித்து, பல்வேறு வேள்விச் சடங்குகள், தவம், கொடைகள் ஆகியவற்றை விடுதலையை {மோட்சத்தை} விரும்புபவர்கள் பலனை எதிர்பார்க்காமல் செய்கிறார்கள். 17:25
"சத்" என்பது இருப்பு {உண்மை} மற்றும் நன்மையைக் குறிக்கப் பயன்பட்டு வருகிறது. அதே போல, ஓ! பிருதையின் மகேன {அர்ஜுனா}, "சத்" என்ற சொல், மங்கலகரமான {சுபச்} செயல்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. 17:26
வேள்விகள், தவங்கள், கொடைகள் ஆகியவற்றில் கொண்ட மாறாவுறுதி நிலையும் "சத்" என்றே அழைக்கப்படுகிறது. அதன் {பிரம்மத்தின்} [2] பொருட்டாகச் செய்யப்படும் செயலும் "சத்" என்றே அழைக்கப்படுகிறது. 17:27
[2] "முன்னர் சொன்ன பிரிவுகளின் படி இங்கே "அதன்" என்ற சொல் வேள்வி, தவம் மற்றும் தானத்தையே தெளிவாகக் குறிக்கிறது. எனினும், விரிவுரையாளர்கள், "அதன்" என்பது அவற்றைத் தவிரப் பிரம்மத்தையும் குறிக்கலாம் என்று கூறுகிறார்கள். "அதன்" என்பது பிரம்மத்தைக் குறிக்கவில்லை என்பதில் எனக்கு நிச்சயமில்லை" என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.
நம்பிக்கையில்லாமலேயே, (நெருப்பில்) எதைப் படைத்தாலும், எது {தானமாக} அளிக்கப்பட்டாலும், என்ன தவம் செய்யப்பட்டாலும், என்ன செயலைச் செய்தாலும், ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, அது "சத்"-க்கு எதிரானது {அசத்} என்று சொல்லப்படுகிறது. அவை இங்கும் {இம்மையிலும்}, இதன் பிறகும் {மறுமையிலும்} பயன்படாது [3]" என்றான் {கிருஷ்ணன்}. 17:28
[3] "ஓம்", "தத்", "சத்" என்ற வார்த்தைகளுக்குத் தனித்தனியான பயன்கள் இருக்கின்றன. அவை மூன்றும் பிரம்மத்தையே குறிக்கின்றன என்ற புரிதலோடு, இங்கே சுட்டிக்காட்டியபடி அவை பயன்படுத்தப்பட்டால், அத்தகு பயன்பாடு, {அவை சார்ந்த} அந்தந்த நடவடிக்கைகளின் குறைபாடுகளைக் குணப்படுத்தும் என்பதையே இந்த வரிகளின் மூலம் ஆசிரியன் {கிருஷ்ணன்} சொல்ல விரும்புகிறான்" என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.