புதன், 23 செப்டம்பர், 2020

மஹாபாரத ஸ்துதிஸ்

 ராதே கிருஷ்ணா 20-11-2020


மஹாபாரத ஸ்துதிஸ் 





EMPOWERING DVAITA TATTVA

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

ராஜகோபாலன் (குரு (நரசிம்மன்) தகப்பனார்

 ராதே கிருஷ்ணா 05-09-2020


ராஜகோபாலன்  (குரு (நரசிம்மன்) தகப்பனார் 


2019 ஸ்ரீ விகாரி  நாம ஸம்வத்ஸரம் வைசாக மாச சுக்ல பட்க்ஷ 

மே மாதம் 14 தேதி   -  தசமி திதி   (ஸ்ராத்த திதி - சூன்ய திதி)


மே மாதம் 15 தேதி   -  ஏகாதசி  திதி  உபவாசம் 


மே மாதம் 16 தேதி   -  த் வாதசி   திதி  / த்ரயோதசி ஸ்ராத்த திதி 



2019 ஸ்ரீ சார்வரி   நாம ஸம்வத்ஸரம் வைசாக மாச சுக்ல பட்க்ஷ  


மே மாதம் 3-ம்  தேதி   -  ஏகாதசி  திதி   (ஸ்ராத்த திதி - ஏகாதசி  திதி)


மே மாதம் 4 ம்  தேதி   -  த்வாதசி  திதி  / ST  - ஏகாதசி  திதி உபவாசம் 


மே மாதம் 5 ம்  தேதி   -     த்ரயோதசி திதி  / ST - த்வாதசி / த்ரயோதசி ஸ்ராத்த திதி 



2019 ஸ்ரீ சார்வரி   நாம ஸம்வத்ஸரம் பாத்ரபத மாச சுக்ல பட்க்ஷ  


மே மாதம் 13-ம்  தேதி   -  ஏகாதசி  திதி உபவாசம் 

மே மாதம் 14-ம்  தேதி   -  த்வாதசி  திதி  ST  - ஏகாதசி  திதி


ஆதலால் மே மாதம் 14-ம்  தேதி   ST  - ஏகாதசி  திதி அப்பா மஹாளய திதி செய்யலாம்.

ஆனால் த்வாதசி  திதி ஆதலால் காலையில் சீக்கிரம் செய்யவேண்டும், பிறகு பாரணை .


திருப்பாவை 2020


முதல் 5 பாசுரங்கள்  (1 - 5 )

1.  எதற்க்காக நோன்பு நோக்கவேண்டும் 

2. நோன்பு மாதத்தில் என்ன செய்யவேண்டும் 

3. நோன்பின் என்ன பலன்கள் தரும் 

4.  நோன்பு நோற்றால் தேவதைகள் நமக்கு என்ன செய்வார்கள் 

5. எந்த தடங்கலும் இல்லாமல் நோன்பு நோற்கவேண்டும் 

அடுத்த 10 பாசுரங்கள்   (6 -- 15)

6.  பிள்ளாய் எழுந்திராய் 

7.  நாயகப் பெண்பிள்ளாய்

8.  கோதுகலமுடைய பாவாய்! எழுந்திராய்;

9.  மாமான் மகளே! 

10.  அம்மனாய்!

11.  கோவலர்த்தம் பொற்கொடியே

12.  நற் செல்வன் தங்காய்

13.  போதரிக் கண்ணினாய்

14.  வாய்பேசும் நங்காய் எழுந்திராய்

15.  எல்லே. இளம் கிளியே

அடுத்த 5 பாசுரங்கள்   (16 -- 20)

16.  நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய கோயில் காப்பானே. கொடி தோன்றும் தோரண வாயில் காப்பானே

17.  எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்

18.  நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய் கந்தம் கமழும் குழலி கடை திறவாய்

19.  மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்

கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்
மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்

20.  முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்

அடுத்த 9 பாசுரங்கள்   (21 -- 29)

21.  ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப

மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்


22.  அம் கண் மா ஞாலத்து அரசர் அபிமான

பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்
அம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்

23.  மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்


24.  சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி

பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்

25.  ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்

ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே., உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்


26.  மாலே. மணிவண்ணா. மார்கழி நீராடுவான்

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்


27.  கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப்

பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்


28.  கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்

அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்


29.  சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்

பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்


30.  வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை

திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை-
சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.















Desika daya (Dushyant Sridha)

ராதே கிருஷ்ணா 05-09-2020



Abhinava e-Pātashālā
Vishesham (Events) 

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

மனதில் நிற்கும் மதுரக் கதைகள்

 ராதே கிருஷ்ணா 22-08-2020







ஸ்ரீ ஸ்ரீ ஸத்குருநாதர்  மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி, மற்றும் அவரது கரங்களான சிஷ்யர்களின் உபன்யாசங்களைக்  கேட்டு, குருவின் அருளுடன் விதம் விதமான தலைப்புகளில் பகவத் ஸம்பந்தமான விஷயங்களை என் புத்திக்குப்‌ புரிந்தவரையில்‌ வரை பதிவு செய்து வருகிறேன்.


இதுவரை கீழ் கண்ட தலைப்புகளில் பதிவுகள் எழுதப்பட்டிருக்கின்றன.

1. உறங்கும் முன்

2. ப்ருந்தாவனமே உன் மனமே

3. திருக்கண்ணன் அமுது

4. மதுரா நாயகா




8. கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் சிந்தனை


10. நவ(நீத)ரஸகுண்டு

11. ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து சில ரத்தினங்கள்

12. தீர்த்தராஜ் புஷ்கர்

13. பாட்டு கேக்கும் சாமி

14. ஸ்ரீமத் பாகவத பழம்

15. கிரிதர கோபாலா

அனைத்தையும் படித்து குருவருள் பெற வேண்டுகிறேன்...

என்றும் குருவின் சேவையில்
ஹரிப்ரியா

அந்தந்தத் தலைப்பில் வரும் கதைகளைப் படிக்க, அந்தத் தலைப்புகளையே தொடவும். தலைப்பில் கதைகள் இல்லையெனில் ஆர்வமுடன் தயைகூர்ந்து எதிர்நோக்கிக் காத்திருக்கவும். 


ஸ்ரீமத் பாகவத பழம்

"ஸ்ரீமத் பாகவதம்" - இது ஸ்ரீ வேத வியாசரால் இயற்றப்பட்ட பதினெட்டு புராணங்களில் ஒன்று. ஐந்தாவது வேதமான மஹாபாரதத்தின் தொடர்ச்சியாக இந்த புராணக் கதை ஆரம்பிக்கின்றது. இந்த புராணத்தில் 12 ஸ்கந்தங்களும், 18,000 ஸ்லோகங்களும் உள்ளன.



திருவண்ணாமலையில் இறைவன் மலையாய் இருக்கிறார் என்று கேள்வியுற்றிருப்போம்.

நைமிஷாரண்யத்தில் இறைவன் காடாக இருக்கிறார்.

புஷ்கரம் என்னும் புண்ணிய தல த்தில் இறைவனே ஏரியாக இருந்து அனைவரின் ஸம்ஸார தாகத்தையும் தணிக்கிறார்.

மரங்களில் அரசமரமாக வீற்றிருக்கிறார்.

அதுபோல், புத்தகங்களில் ஸ்ரீமத்பாகவதமாக இறைவன் இருக்கிறார்.

"श्रीमद्भागवताख्योयं प्रत्यक्ष: कृष्ण एव हि" - "ஸ்ரீமத் பாகவதாக்யேயாம் ப்ரத்யக்ஷ: க்ருஷ்ண ஏவ ஹி" 
என்பது பாகவத மாஹாத்ம்யத்தில் இருக்கும் ஒரு ஸ்லோகம்.

ஸ்ரீமத்பாகவதத்தின் உருவில் ப்ரத்யக்ஷமாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே இருக்கிறார்.

இந்த பாகவதத்திற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு.

புராணம் என்றால் படிப்பார்கள், சொல்லுவார்கள், பிறர் சொல்லக் கேட்பார்கள்.
யாரவது பருகினார்கள், அருந்தினார்கள், சுவைத்தார்கள்  என்றெல்லாம் எண்ணிப் பார்க்க முடியுமா?
ஆனால் இந்த புராணத்தைப் பருக முடியும், அதுவும் காது வழியாக.

தேனினும் இனிய பகவானின் குணங்களை, லீலைகளைக் சொல்லும்  நூல், சொல்பவர்களுக்கு, கேட்பவர்களுக்கு, படிப்பவர்களுக்கு, என அனைவருக்கும் இனிமையை வாரி வழங்கும்.

ஸ்ரீவேதவ்யாஸர் ஸ்ரீமத்பாகவதத்தை வேதம் என்ற மரத்தில் பழுத்த பழம் என்கிறார்.
அந்த பழத்தை ஸ்ரீசுகர் என்னும் முனிவர், கிளி வடிவில் கொத்தி சுவைத்து நமக்காக அருளியுள்ளார்.

கிளி வாயிலிருந்து நழுவி விழுந்த அந்த பழத்தை, பல்வேறு மஹான்கள் சுவைத்து நமக்குப் புரியும்படி அருள்கின்றனர்.அவ்வகையில் எனது குருநாதரான மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ  முரளீதர ஸ்வாமிஜி அவர்கள் சொல்லிக் கேட்ட கதைகளை, என்னால் இயன்றவரை  ஒரு தொகுப்பாக, குருவருளால் இங்கு வழங்குகிறேன்.

சுகமுனி எனும் கிளி கொத்திக்கொடுத்த பழத்தைப் பருக அனைவரும் வருக!!

-ஹரிப்ரியா

ஸ்ரீமத்பாகவத பழங்களைச் சுவைக்க இங்கே அழுத்தவும்...


ஸ்கந்தங்கள் - உள்ளடக்கம்


                                                                   ஸ்ரீ ஹரி:

                                                              ஸ்கந்தங்கள்



1. முதல் ஸ்கந்தம்

2. இரண்டாவது ஸ்கந்தம்

3. மூன்றாவது ஸ்கந்தம்

4. நான்காவது ஸ்கந்தம்

5. ஐந்தாவது ஸ்கந்தம்

6. ஆறாவது ஸ்கந்தம்

7. ஏழாவது ஸ்கந்தம்

8. எட்டாவது ஸ்கந்தம்

9. ஒன்பதாவது ஸ்கந்தம்

10. பத்தாவது ஸ்கந்தம்

11. பதினோராவது ஸ்கந்தம்

12. பன்னிரெண்டாவது ஸ்கந்தம்