செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

ஸரணாகதி - மார்க்கம்

ராதே கிருஷ்ணா 26-02-2020



ஸரணாகதி  - மார்க்கம்


saranaagathi-margam



ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

ஹரிவம்சம்

ராதே கிருஷ்ணா 17-02-2020


பொருளடக்கம்


+/- ஹரிவம்ச பர்வம் 01-55


தக்ஷன் துருவன் பிரம்மன் பிராசேதஸ் பிருது வசிஷ்டர் விஷ்ணு வேனன்

மனிதர்களின் தோற்றம் - தக்ஷனின் பிறப்பு! - ஹரிவம்ச பர்வம் பகுதி – 02

(தக்ஷோத்பத்தி)

The origin of men: the birth of Daksha | Harivamsa-Parva-Chapter-02 | Harivamsa In Tamil

(ஹரிவம்ச பர்வம் - 02)


பதிவின் சுருக்கம் : ஸ்வாயம்பூ மனு மற்றும் ஷதரூபை; உத்தானபாதர்; துருவனின் பிறப்பு; வேனனை அழித்த முனிவர்கள்; வேனனிடம் தோன்றிய முதல் க்ஷத்திரியன் பிருது; பூமியைக் கறந்த பிருது; பிராசேதஸ்களின் தவம்; பத்து பேரை மணந்த மாரிஷை; தக்ஷனின் பிறப்பு; பல்வேறு உயிரினங்களைப் படைத்த தக்ஷன்; பாலினக் கலவி மூலம் உயிரினங்கள் உண்டானது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "குடிமுதல்வரான {பிரஜாபதியான} வசிஷ்டர், சந்ததி படைக்கும் தமது தொழில் {மனத்தால்} முடிவடைந்தபோது, எந்தப் பெண்ணில் இருந்தும் பிறக்காத ஷதரூபையைத் தமது மனைவியாக அடைந்தார்.(1) ஓ! ஏகாதிபதி, புலனுக்கு அப்பாற்பட்ட பகுதியை {உலகத்தை} மறைத்தபடி வசித்து வந்த அவர், தமது மகிமையாலும், யோக சக்தியாலும் ஷதரூபையைப் படைத்தார்.(2) ஒரு கோடி {1,00,00,000} வருடங்கள் கடுந்தவம் இருந்த அவள் {ஷதரூபை} தனல் போன்ற தவசக்தி கொண்ட தன் கணவரை அடைந்தாள்.(3) ஓ! குழந்தாய் {ஜனமேஜயா}, அந்தப் புருஷனே ஸ்வாயம்பூ மனு என்றழைக்கப்படுகிறான். இவ்வுலகில் அவனுடைய மன்வந்தரம் எழுபத்தோரு யுகங்களைக் கொண்டதாகும்.(4) அந்த அண்டப் புருஷன் {விராட்} ஷதரூபையிடம் வீரன் என்ற பெயரைக் கொண்ட மகனைப் பெற்றான், அவன் {வீரன்} காம்யையிடம் பிரிவிரதன் மற்றும் உத்தானபாதன் என்ற பெயர்களைக் கொண்ட இரு மகன்களைப் பெற்றான்.(5)

Sunday, 9 February 2020

தொடக்க கால படைப்பு! - ஹரிவம்ச பர்வம் பகுதி – 01

(ஆதிஸர்கம்)

An Account of the Primeval Creation | Harivamsa-Parva-Chapter-01 | Harivamsa In Tamil

(ஹரிவம்ச பர்வம் - 01)


பதிவின் சுருக்கம் : விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் வரலாற்றைச் சொல்லும்படி சௌதியிடம் வினவும் சௌனகர்; ஜனமேஜயனுக்கு வைசம்பாயனர் சொன்னதை சௌனகரிடம் சொல்லத் தொடங்கிய சௌதி; படைப்புத் தொடங்கி விருஷ்ணிகளின் கதையை ஜனமேஜயனுக்குச் சொல்லத் தொடங்கிய வைசம்பாயனர்...

அற ஆன்மா கொண்டவரும், சாத்திரங்கள் அனைத்தையும் நன்கு அறிந்தவரும், பெரும் முனிவருமான குலபதி[1] சௌனகர், புலன்களை ஆள்பவனும், அசையும் மற்றும் அசையாதனவற்றின் ஆசானும், முதல் புருஷனான ஈசானனும், வேள்விகளில் பலரால் துதிக்கப்பட்டு, காணிக்கைகளுடன் தணிக்கப்படுபவனும், உண்மையானவனும், பற்றுகளேதுமற்ற பிரம்மனும், வெளிப்பட்டவனும், வெளிப்படாதவனும், எப்போதும் நிலைத்திருப்பவனும், உண்மை, பொய்மைக்கு அப்பாற்பட்டவனும், இந்த அண்டத்தைத் தோன்றச் செய்தவனும், புலப்படுபவனும், புலப்படாதவனும், அனைத்தையும் கடந்தவனும், அனைத்தையும் படைத்தவனும், புராதனனும், சிறந்தவனும், சிதைவற்றவனும், இன்பமே ஆனவனும், இன்பத்தை அளிப்பவனும், விஷ்ணுவாக இருப்பவனும், பாவமற்றவர்களும், தூயவர்களுமான அனைவராலும் வழிபடப்படுபவனுமான ஹரியை வணங்கிய பிறகு, நைமிசக் காட்டில் இருந்த சௌதியிடம் பேசினார்.(1-4)

Saturday, 8 February 2020

முகவுரை

கணேசனை[1] வணங்குவோம். வேத வியாசரை[2] வணங்குவோம். {ஓம்} நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், கல்வியின் தேவியான சரஸ்வதியையும் வணங்கி வெற்றி {ஜெயம்} என முழங்குவோம்.(1) துவைபாயனரின் {வியாசரின்} உதடுகளில் இருந்து சிந்தியதும், அற்புதமானதும், பாவங்களை அழிக்கவல்லதும், மங்கலமானதும், உயர்வானதும், புனிதமானதுமான மஹாபாரதம் ஓதப்படுவதைக் கேட்பவனுக்கு, புனிதத்தலமான புஷ்கரையில்[3] நீராடுவதால் என்ன பயன்?(2) பராசரரின் மகனும், சத்யவதியை மகிழ்ச்சியடையச் செய்பவரும், உலகம் பருகும் சொல்லமுதத்தைச் சொன்ன தாமரை வாய் கொண்டவருமான வியாசர் வெற்றியால் மகுடம் சூடப்படட்டும்.(3) வேதங்களையும், ஸ்ருதிகள் பலவற்றையும் அறிந்த ஒரு பிராமணருக்குத் தங்கக் கொம்புகளுடன் கூடிய நூறு பசுக்களைக் கொடையளிப்பதால் உண்டாகும் அதே கனியை {பலனை} புனிதக் கருப்பொருளுடன் கூடிய மஹாபாரதத்தைக் கேட்பவன் அடைகிறான்.(4)

ஹரிவம்சம் அறிமுகம் - மன்மதநாததத்தர்

சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், ஹரிவம்சம் அல்லது ஹரியின் (ஸ்ரீகிருஷ்ணனின்) தலைமுறை என்பது பெருங்காப்பியமான மஹாபாரதத்தின் பின்தொடர்ச்சியாகும். விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்கள் ஆகிய இருபெரும் குலங்களின் கதையைச் சொல்லுமாறு சௌதியிடம், சௌனகர் வைக்கும் வேண்டுகோளுடன் இந்தப் படைப்புத் தொடங்குகிறது. முதல் அத்தியாயம் ஒன்பதாம் ஸ்லோகத்தில், அவர் {சௌனகர்}, "ஓ! லோமஹர்ஷணரின் மகனே {சௌதியே}, குருக்களின் பிறப்பு மற்றும் வரலாற்றை விளக்குகையில் விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் வரலாற்றை உரைக்க நீ மறந்துவிட்டாய். அவர்களின் வரலாற்றை உரைப்பதே உனக்குத் தகும்" என்று கேட்கிறார். குருக்களின் கதையைச் சொல்லும் படைப்பே மஹாபாரதமென்பதில் ஐயமில்லையென்றாலும், அது புராணம் என்று குறிப்பிடப்படும்போது, அந்த உரையில் சற்றே நமக்குக் குழப்பமேற்படுகிறது. மஹாபாரதத்தில் காணப்படாத கிருஷ்ணனுடைய குடும்பக் கதையை விரிவாகச் சொல்வதே ஆசிரியரின் நோக்கம் என்பது இந்த வாக்கியத்தின் மூலம் தெளிவாகத் தெரிகிறது.