புதன், 13 செப்டம்பர், 2023

மஹாபாரதம் சுருக்கம் 25-09-2023

ராதே கிருஷ்ணா 13-09-2023








மஹாபாரதம் சுருக்கம் 


காட்டில் குந்திக்கு தருமதேவன் மூலம் தருமன், வாயு தேவன் மூலம் பீமன் , தேவேந்திரன் மூலம் அர்ஜுனன், அஸ்வினி தேவர்கள் மூலம் மாதிரிக்கு நகுலன், சகாதேவன் பிறந்தனர். குறு வம்சத்தில் மூத்த வாரிசு ஆக தருமன் பிறந்தான். இங்கு கர்ப்பவாதியான் காந்தாரி 24 மாதமாக இருக்க திருதாஷ்டிரன் காந்தாரியை வசை பாடினான். நீ என்ன பெண்னா  இல்லை என்று தித்தித்த தீர்த்தான். அதனால் மனமுடைந்த காந்தாரி உலக்கை கொண்டு தன கர்ப்பத்தை இடித்து சதைப்பிண்டமாக வெளிக்கொணர்ந்தாள். வ்யாஸர் அதை 100 பிண்டங்களாக பிரித்து பாண்டத்தில் வளர்த்து வர செய்தனர். துரியோதனன் பிறந்தான். ஜோசியர்கள் இந்த குழந்தையினால் குறு வாசமே அழியப்போகிறது, ரத்த ஆறு ஓடும் அன்று கூறி அதனால் இதைக்கொன்றுவிடும்படி கூறினர். அனால் திருதாஷ்டிரன் மறுத்துவிட்டான். 

துரியோதனன் சிறு வயது முதலே பீமனைக்கொல்ல சதித்திட்டம் தீட்டினான்.

விஷம் வைத்துக் கொள்ள நினைத்தான். ஆற்றில் மூழ்கவைத்துக் கொள்ள முற்பட்டான். விஷம் கொடுத்து மயக்கமுறச்செய்து கயிற்றால் கட்டி ஆற்றில் மூழ்கச்செயதான். பீமன் நாகலோகம் சென்றைடைந்தான். அங்குள்ளவர்களிடம் சண்டையிட்டான். நாகலோக அரசன் வந்து விசாரித்ததால் பீமன் தன்னுடைய பேரனின் பேரன் என்பதைக்கூறினான் நாகராஜன். நாகராஜன் நாகராசன் குடித்தால் பலம் கிடைக்கும் என்று கூறி, பீமனுக்கு நாகராசன் 3 குடங்கள் கொடுத்து 1000 யானைகள் பலம் உண்டாக்கினான். இதை குண்டி பாண்டவர்களிடம் ஏகச்சக்ரம் அந்தணன் வீட்டுப்பிள்ளைக்கு பதிலாக பீமன் செல்ல அனுப்பும்போது குண்டி மற்றவர்களிடம் கூறினாள்.

சிகண்டி 

காசி ராஜன் மகள் சிகண்டி, அம்பா தன அக்காக்கள் அம்பிகா, அம்பாலிகா வுடன் ஸ்வயம்வரம் பொது பீஷ்மர் இழுத்துச்செல்லும்போது, அம்பா தான் சால்வன் என்ற ராஜாவை விரும்புவதாகவும், பீஷ்மருடன் வர விரும்புவதில்லை என்றும் கூறினாள். பீஷ்மரும் அவளை அனுப்பிவிட்டார். அம்பாயோசனை கேட்டு அவள் ஆணாக மாறியதால்  சால்வனிடம் சென்றபோது அவன் எப்போது பீமனுடன் சென்றதால் அவரிடமே சென்றுவிட்டு என்று கூறி அனுப்பிவிட்டான். பீஷ்மரிடம் மீண்டும் சென்றபோது அவர் எப்போது எண்ணைவிட்டுச் சென்றாயோ அங்கேயே சென்றுவிட்டு என்றார். தன குடும்பத்தாரிடம் சென்றாள். திருபதனும் பீஷ்மருடன் போர் புரியமுடியாது என்று கூறி சென்றுவிட்டு என்று கூறிவிட்டார். அம்பா எங்கும் இல்லாதபோது அலைந்து திரிந்து சிவனக்குறித்து தவம் பூண்டாள். சிவனிடம் தான் பீஷ்மரைக்கொள்ளவேண்டும் என்று வேண்டினாள். சிவனும் அது இந்தப்பிறவியில் இல்லை என்றும் அடுத்தப்பிறவியில் தான் நடக்கும் என்று சொல்லி அனுப்பிவிட்டார். அம்பா உடனே தீயில் புகுந்து தன்னை மாய்த்துக்கொண்டாள். மீண்டும் வெளிவந்து திருபதனிடம் வந்தாள். மகன் போல அவளை வளர்த்து வந்தான். நாரதர் மூலம் அம்பா ஆணாக மாறியதால் அவளுக்கு ஒரு பெண்ணுடன் மணமுடிக்கக்கூறி ஹிரண்யவர்மன் மகளுடன் மணமுடித்தார்கள். அந்தப்பெண் தன கணவன் ஆணில்லை என்றும் , ஒரு பெண் என்று கூறி தன் பெற்றோர்களிடம் கூறினாள். அவர்களும் ஆத்திரம் அடைந்து துருபதனிடம் வாதிட்டார்கள். நாரதர் அவர்களிடம் ஆணில்லை என்பதை நிரூபிக்கமுடியுமா என்று கூறி அவன் திரும்பிவரும்வரை காத்திருந்து பிறகு வாருங்கள் என்று கூறி அனுப்பிவிட்டார். அம்பா ஊர் ஊராக அலைந்து தன்னை முற்றிலும் ஆணாக மாறமுயற்சி செய்தாள். 

அம்பா குபேரன் என்பவற்றின் புதல்வன் ஸ்தூனகர்மா என்பவரை சந்தித்து தன பெண்மையை பெற்று அவருடைய ஆண் தன்மையைக்கொடுக்கும்படி கூறி பிறகு வந்து மாற்றிக்கொள்ள வேண்டினாள். அவனும் தன ஆண்மையைக்கொடுத்து பெண்ணாகைமாறினான்.  சில காலம் கழித்து குபேரன் வந்து பார்த்ததில் இதை அறிந்து கோவப்பட்டான். நீ பெண்மையாகவே இரு என்று கூறிவிட்டான். அம்பா தான் ஆணாக மாறி திருபதனிடம் வந்து சேர்ந்தாள்.  பீஷ்மரைக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தாலேயே வளர்ந்து வந்தாள்.

பிறகு குருக்ஷேத்ரப்போரில் அர்ஜுனனுடன் தேரில் வந்து பீஷ்மரைப்பார்த்தால். பீஷ்மர் தன ஆயுதங்களை விட்டு நின்றபோது அம்பெய்து  அர்ஜுனன் அம்புகளால் அடிபட்டு அம்புப்படுக்கையில் படுத்தார்.

துரியோதனன் சிறுவயது முதற்கொண்டு தான் தான் இளவரசன் என்று மற்றவர்களால் பேசப்பட்டு வளர்ந்துவந்தான். அவன் பீமனுக்கு விஷம் கொடுத்து ஆற்றில் கயிற்றால் கட்டி மூழ்கவிட்டான். பீமன் கீழே நாகலோகம் சென்று தான் ஆண்டு தலைவனாக இருந்த நாகராஜனின் பேரனின் பேரன் என்பதை அறிந்து, அவர்கள் பீமனுக்கு உதவ நாகராசன் கொடுத்து ஆயிரம் யானைகள் பலம் கொண்டவனாக மாற்றினர். பீமனை எவராலும் வெல்லமுடியாது என்றும் வரமளித்தார்கள். இதை குந்தி மற்றவர்களிடம் ஏகச்சக்ராம் அந்தர் வீட்டிலிருந்து சிறுவனையும் பதிலாக பீமனை பகாசுரனுடன் போர்புரிய குண்டி அனுப்பும்போது கூறினாள்.

சகுனியின் முதல் திட்டம் -  அஸ்தினபுரி இளவரசன் யார் என்பதற்கு விவாதம் ஆரம்பமாயிற்று. பீஷ்மர் தான் அரசைத்துறைந்தவன், அதனால் எனக்கு அதில் பங்கில்லை,  துரோணர், கிருபர் அரசன் முடிவே தங்களது என்றனர். விதுரன் மூத்தவான் தருமனுக்கே பட்டம் என்றான்.  குந்தி அரசன் முடிவை சம்மதிக்கிறேன் என்றாள் .  ஆகவே திருதாஷ்டிரன் முடிவை ஆலோசித்து பிறகு அறிவிப்பதாகக் கூறினான்.

சகுனி தன ஆளான கணிக்கரை அழைத்து அரசரிடம் அரச நீதியை தனக்கு ஏற்றவாறு  உபதேசிக்க அனுப்பினான். அவனும் தீயவைகளைக்கூறி அரசரை  குழப்பத்தில் மேலும் கூறிவிட்டான். அதன் அதை அறிந்த விதுரன் அரசனிடம் விவாதித்தான் . அவர் விதுரனை பாண்டவர் பக்கமே நீ பேசுகிறாய், என மக்களை தவறாகவே பேசுகிறாய் அன்று அனுப்பிவிட்டான்.

சகுனி அரசரிடம் தனியாகப்பேசி எப்படியாவது பாண்டவரைக்கொள்ள திட்டமிட்டான். அரசரும் அவையில் தருமருக்கு பட்டாபிஷேகம் என்றும், வாரணாவதத்தில் நடக்கும் கோயில் விழாவிற்கு தருமானுடன் பாண்டவர்கள் சென்று வரவும் ஆணையிட்டான்.  அவர்கள் வருவதற்குள் மக்கள பணம் கொண்டு மனம் மாறச்செய்துவிடலாம் .  அதன்படி பாண்டவர்கள் வாரணாவதம் கிளம்பினார்கள். பாண்டவர்கள் ஐவர் குந்தியுடன் பயணம் தொடங்கினர். விடுறன் அவர்களுக்கு அறிவுரை அளித்து அனுப்பினான்.

கூரான ஆய்தங்கலாமட்டும் எதிரிகள் கொள்ளவேண்டும் என்பதில்லை, உலோகம் அல்லாத வற்றினாலும் அழித்த விடலாம்.

நட்சத்திரங்கள் மூலமாக திசைகளை அறிந்து கொள்ளமுடியும்.

முள்ளம்பன்றி தன முற்களால் மண் ணைத்தோண்டி வெளிவரமுடியும்.

காட்டுக்குள் தீ பரவினாலும் வலைக்குள் இருக்கும் எலியை ஒன்றும் செய்யமுடியாது. 

அனைவரும் ஒற்றுமையாக இருந்து தங்களைக்காப்பாற்றிக்கொள்ளலாம்.

இதன் விளக்கத்தை அறிந்து பாண்டவர்கள் அறைக்கு மாளிகையிலிருந்துதப்பினார்கள் .

எக்கச்சக்கிரம் அடைந்தனர்.

அங்கு பகாசுரனை வதம் செய்தனன்  பீமன். அங்குள்ளவர்கள் இவர்கள் பாண்டவர்கள் போல் தெரிகிறது என்றும் அந்தப்பெண் குண்டி தேவி போலும் தெரிகிறது என்றான். தக்க தருணத்தில் வ்யாஸர் அங்கு வந்து இவர்கள் தன சிஷ்யர்கள் எனவும் அதைக்கூற என் இத்தனை தயக்கம் என்றும் கூறினார். இவர்களை நான் தான் பகாசுரனிடமிருந்து உங்களைக்காப்பாற்ற அனுப்பினேன் என்றும் கூறினார்.   இனி நீங்கள் இங்கிருந்து போகலாம் என்றும் கூறினார்.


அங்கு துரியோதனன் சகுனி துச்சாதனன் கர்ணன் ஆகியோர் புதிய ஸிம்ஹாஸனம் செய்யவும், மண்டபத்தை அலங்கரிக்கவும் செய்தனர்.

இதை அறிந்த பீஷ்மர் விதுரர் அரசரிடம் சென்று விசாரிக்க, அவரும் துர்யோதன்னிடமும் சகுனியிடமும் விசாரித்து அறிந்தனர். பீஷ்மர் பாண்டவர் இறந்து ஒரு வருடம் கூட ஆகவில்லை, அதற்குள் என் இந்த மாற்றம். அது கூடாது என்று மறுத்துவிட்டார். பீஷ்மாருக்கு விதுரர் பாண்டவர் உயிருடன் தான் இருக்கிறார்கள் என்றும் அதை நேரம் வரும் பொது கூறவும் வேண்டினார்.


ஒரு நாள் கர்ணன் தானம் கொடுத்துக்கொண்டிருந்தபோது ஒருவன் தான் வாணராவதம் அருகே உள்ள சாதுவானம் என்ற கிராமத்தில் இருந்து வருவதாகவும், தனக்கு நீதி வழங்கவேண்டும் என்றும் கேட்டான். தனது பெயர் கீழத்தான் என்றும் தனது மனைவி மற்றும் மக்கள் ஐவரும் வாணராவதத்தில் பாண்டவர்களுக்கு உதவி செயது கொண்டிருந்தனர். அறைக்கு மாளிகை எரிந்தபிறகு அவர்களைக்காணவில்லை என்றும் கூறினார். தான் கோயில்களுக்குச்சென்று வந்தவுடன் இது கேட்டு தங்களிடம் நீதி கேட்க வந்தேன் என்றும் கூறினார்.

துரியோதனன் இவனை சகுனியிடம் சென்று சொல்களை ல , சகுனி துச்சாதனனை அங்கு அனுப்பி விசாரித்து வருமாறு அனுப்பினான்.அவனும் அங்கு சென்று விசாரித்ததில் இறந்தவர்கள் பாண்டவர்கள் என்றும் அவர்களுடைய ஆபரணங்களையும் பார்த்ததில் திருப்தி அடைந்து திரும்பினான். 

பாண்டவர்கள் தங்களை பாண்டவர்கள் என்று கூறியவனைக்கொன்று விட்டனர்.



மௌத்கல்யாண் என்பவர் மனைவி நளாயினி , மறுபிறவியில் இந்த்ரஸேனா வாகப்பிறந்தாள். அவள் சிவனைக்குறித்து தவமிருந்தாள். சிவனும் தோன்றி 

வேண்டும் வரம் கேள் என்றார். இந்த்ரஸேனா நல்ல மகளாகவும், நெறுப்பு மாதிரி சக்தியாகவும், வீரமாகவும் இருக்கவேண்டும் என்றும் பலவாறு கேட்டாள். ஆகட்டும் என்றார் சிவன். அதனால் மறுபிறவியில் திரௌபதியாக பிறந்தாள். அதனால் பாண்டவர்கள் ஐவருக்கு மனம் புரிந்தாள்.


பாண்டவர்கள் வருவதைவெறுத்த துரியோதனன் சகுனி துச்சாதனன் கர்ணன் வரவேற்பில் கலந்துகொள்ளமாட்டோம் என்றும் கூறினார். சகுனி மன்னர் பக்கம் இருந்து வரவேற்பில் கலந்துகொண்டார்.

துரியோதனன் சகுனியை கண்டித்து வெறுத்தான். காந்தாரி திருதாஷ்டிரரின் பேச்சை வெறுத்து விதுரனிடம்சென்றாள். பிறகு சாந்தமடைந்தாள்.

குந்தியிடம் பாண்டு மன்னன் தோன்றி குந்தியை அரசியாக இருந்து அஸ்தினாபுரம் அரசனாக தருமனுக்கு பட்டம் சூட்டி அரசாணையில் அமரவேண்டும் என்று ஆணையிட்டாள். விதுரனை அழைத்து அரசனிடம் பாண்டு அரசன் ஆண்டபிறகு தருமனுக்கு முடி சூட்டவேண்டும் என்று விவாதித்தனர்.


Sunday, June 09, 2013

துரியோதனாதிகள் யார்? - ஆதிபர்வம் பகுதி 117

The names of Duryodhana's brothers! | Adi Parva - Section 117 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 53)

பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் மகன்களின் பிறப்பின் வரிசையிலான பெயர்கள்; துச்சலையைச் சிந்து மன்னன் ஜெயத்ரதன் மணந்து கொண்டது...

ஜனமேஜயன், "திருதராஷ்டிரரின் மகன்கள் பெயர்களை அவர்களின் பிறப்பு வரிசையில் சொல்லுங்கள்" என்றான்.(1)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ மன்னா! பிறப்பின் வரிசையில் அவர்களது பெயர்கள், {1} துரியோதனன், {2} யுயுத்சு, {3} துட்சாசனன், {4}துட்சகன், {5} துட்சலன், {6} ஜலசந்தன், {7} சமன், {8} சகன், {9} விந்தன், {10} அனுவிந்தன், {11} துர்த்தர்ஷன், {12} சுபாகு, {13} துஷ்பிரதர்ஷனன், {14} துர்மர்ஷனன், {15} துர்முகன், {16} துஷ்கர்ணன், {17} கர்ணன் {குந்தியின் மகனல்ல}, {18} விவின்சதி, {19} விகர்ணன், {20} சலன், {21} சத்வன், {22} சுலோச்சனன், {23} சித்ரன், {24} உபசித்ரன், {25} சித்ராக்ஷன், {26} சாருசித்திரன், {27} சரசனன், {28} துர்மதன், {29} துர்விகஹன், {30} விவித்சு, {31} விகாடனானன், {32} ஊர்ணனாபன், {33} சுநாபன், {34} நந்தகன், {35} உபநந்தகன், {36} சித்ரபாணன், {37} சித்திரவர்மன், {38} சுவர்மன், {39} துர்விமோசனன், {40} அயோவாகு, {41} மஹாபாகு, {42} சித்திராங்கன், {43} சித்திரகுண்டாலன், {44} பீமவேகன், {45} பீமவளன், {46} பாலகி, {47} பாலவர்தனன், {48} உக்கிராயுதன், {49} பீமன் {குந்தியின் பீமன் அல்ல}, {50} கர்ணன் (2), {51} கனகயன், {52} திரிதாயுதன், {53} திரிதவர்மன், {54} திரிதாக்ஷத்ரன், {55} சோமகீத்ரி, {56} அனுதரன், {57} திரிதசந்தன், {58} ஜராசந்தன், {59} சத்யசந்தன், {60} சதன், {61} சுவகன், {62} உக்ரசிரவஸ், {63} உக்ரசேனன், {64} சேனானி, {65} துஷ்பாராஜெயா, {66} அபராஜிதன், {67} குண்டசாயின், {68} விசாலாக்ஷன், {69} துரதரன், {70} திரிதஹஸ்தன், {71} சுஹஸ்தன், {72} வாதவேகன், {73} சுவரசன், {74} அதியகேது, {75} வாவஷின், {76} நாகதத்தன், {77} அக்ரயாயின், {78} கவாசின், {79} கிராதனன், {80} குந்தன், {81} குந்தாதரன், {82} தனுர்தரன், வீரர்களான {83} உக்கிரன், {84} பீமரதன், {85} வீரபாகு, {86} அலோலூபன், {87} அபயன், {88} ரௌத்திரகர்மன், {89} திரிதரதன், {90} அனதிரிஷ்யா, {91} குந்தபேதின், {92} விரவி, {93} திரிகலோசன பிரமாதா, {94} பிரமாதி, {95} பலம் வாய்ந்த தீர்க்கரோமன், {96} தீர்க்கவாகு, {97} மஹாவாகு, {98} வியுதோரு, {99} கனகத்வஜன், {100} குந்தாசி, {101} விரஜசன் ஆவர்[1]. இந்த நூறு மகன்கள் போக, துச்சலை என்ற பெயரில் ஒரு மகளும் இருந்தாள்.(2-15)


[1] கவனிக்கவும், இவை பிறப்பின் வரிசையின் அடிப்படையில் உள்ள பெயர்களாகும் என வைசம்பாயனர் சொல்கிறார். வைசியப் பெண்மணிக்குப் பிறந்த யுயுத்சு இரண்டாவது பிள்ளையாகச் சேர்க்கப்பட்டிருப்பதால் கௌரவர்கள் 101 எண்ணிக்கை வருகிறது என நினைக்கிறேன்.

வேறு ஒரு  பதிப்பில் 1 துரியோதனன், 2யுயுத்சு, 3 துச்சாசனன், 4துஸ்ஸகன், 5துச்சலன், 6துர்முகன், 7விவிம்சதி, 8விகர்ணன், 9ஜலசந்தன், 10சுலோசனன், 11விந்தன், 12அனுவிந்தன், 13துர்த்தர்ஷன், 14சுபாகு, 15துஷ்பிரதர்ஷணன், 16துர்மர்ஷணன், 17பிரமாதி, 18துஷ்கர்ணன், 19கர்ணன், 20சித்ரன், 21உபசித்ரன், 22சித்ராக்ஷன், 23சாருசித்ராங்கதன், 24துர்மதன், 25துஷ்பிரஹர்ஷன், 26விவித்சு, 27விகடன், 28சமன், 29ஊர்ணநாபன், 30பத்மநாபன், 31நந்தன், 32உபநந்தன், 33சேனாபதி, 34சுஷேணன், 35குண்டோதரன், 36மஹோதரன், 37சித்ரபாஹு, 38சித்ரவர்மா, 39சுவர்மா, 40துர்விரோசனன், 41அயோபாகு, 42மஹாபாகு, 43சித்ரசாபன், 44சுகுண்டலன், 45பீமசேவகன், 46பீமபலன், 47பலாகி, 48பீமவிக்ரமன், 49உக்ராயுதன், 50பீமசரன், 51கனகாயு, 52திருதாயுதன், 53திருதவர்மா, 54திருதக்ஷத்ரன், 55சோமகீர்த்தி, 56அனூதரன், 57 ஜராசந்தன், 58திருதசந்தன், 59சத்யசந்தன், 60சஹஸ்ரவாக், 61உக்கிரச்சிரவஸ், 62உக்கிரசேனன், 63க்ஷேமமூர்த்தி, 64அபராஜிதன், 65பண்டிதகன், 66விசாலாக்ஷன், 67துராதனன், 68திருதஹஸ்தன், 69சுஹஸ்தன், 70வாதவேகன், 71சுவர்ச்சஸ், 72ஆதித்தியகேது, 73பஹவாசி, 74நாகதத்தன், 75அனுயாயி, 76தண்டி, 77நிஷங்கி, 78கவசி, 79தண்டதாரன், 80தனுர்கிரகன், 81உக்கிரன், 82பீமரதன், 83வீரன், 84வீரபாகு, 85அலோலுபன், 86அபயன், 87ரௌத்ரகர்மா, 88திருதரதன், 89அனாத்திருஷ்யன், 90குண்டபேதி, 91விராவி, 92தீர்க்கலோசனன், 93தீர்க்கபாகு, 94தீர்க்கரோமன், 95வியூடோரு, 96கனகாங்கதன், 97குண்டஜன், 98சித்ரகன், 99பிரமதன், 100 துஷ்பராஜியன் என்றும் ஒரு பெயர்ப்பட்டியல் சொல்லப்படுகிறது.

அனைவரும் வீரர்களாகவும், அதிரதர்களாகவும், போர்க்கலை நிபுணர்களாகவும் இருந்தார்கள். அனைவரும் வேதக் கல்வியும், அனைத்து ஆயுதங்களில் பயிற்சியும் பெற்றனர்.(16) ஓ மன்னா, அவர்கள் அனைவருக்கும், குறித்த நேரத்தில், முறையான சோதனைக்குப் பிறகு, தகுதிவாய்ந்த மனைவியரை திருதராஷ்டிரன் தேர்ந்தெடுத்தான்.(17) ஓ ஏகாதிபதியே, மன்னன் திருதராஷ்டிரன், சரியான நேரத்தில், சரியான சடங்குகளுடன் துச்சலையை ஜெயத்ரதனுக்கு (சிந்து மன்னனுக்கு) அளித்தான்.(18)


குருச்சேத்திரப் போர்

குருச்சேத்திரப் போர்

மகாபாரத காவியத்தின்படி விவரங்கள்


இதிகாச காலத்துப் பாரதம்
இடம்குருச்சேத்திரம்அரியானா மாநிலம், இந்தியா
போரின் முடிவில் கௌரவர் கூட்டணிப் படைகள் தோற்றது. பாண்டவர் கூட்டணிப் படைகள் வென்றது.
திருதராட்டிரன் முடி துறந்தார். தருமன்அத்தினாபுரத்தின் அரியணை ஏறினார்.
யுயுத்சுஇந்திரப்பிரஸ்தம் நாட்டின் அரசனாக அமர்த்தப்பட்டான்.
துரோணர் வசம் இருந்த பாஞ்சால நாட்டின் பாதி மீண்டும் பாஞ்சாலர்களுக்கே வழங்கப்பட்டது. காசிமதுராஅங்கம்காந்தாரம்சேதிகோசலம்கலிங்கம்மகத நாடுபாஞ்சாலம்சிந்து மற்றும் மத்சய நாட்டு மன்னர்கள் குருச்சேத்திரப் போரில் இறந்த காரணத்தினால் அந்நாடுகளுக்கு புதிய மன்னர்கள் ஆட்சியில் அமர்த்தப்பட்டனர்.
நிலப்பகுதி
மாற்றங்கள்
பாண்டவர் தலைமையில் இந்திரப்பிரஸ்தம் மீண்டும் அத்தினாபுரத்துடன் இணைக்கப்பட்டது.
பிரிவினர்
நாடற்ற பாண்டவர்கள், பாஞ்சாலமத்சய நாட்டுப் படைகள் மற்றும் பாண்டவர்களின் நட்பு நாட்டு படைகள்.குரு நாட்டின் கௌரவர் படைகள், மற்றும் அதன் நட்பு நாட்டுப் படைகள்.
தளபதிகள், தலைவர்கள்
கூட்டணிப் படைகளின் அரசன்
தருமன்
தலைமைப் படைத்தலைவர்கள்
சுவேதன் (நாள் 1) 
திருட்டத்துயும்னன் (நாள் 2 முதல் 18 முடிய) 
போர்த் தந்திரங்கள் வகுத்தல்
ஸ்ரீகிருஷ்ணர்
கூட்டணிப் படைகளின் அரசன்
துரியோதனன் 
தலைமைப் படைத்தலைவர்கள்
பீஷ்மர் (நாள் 1-10 முடிய) 
துரோணர் (நாள் 11-15 முடிய) 
கர்ணன் (நாள் 16-17 முடிய) 
சல்லியன் (நாள் 18) 
அசுவத்தாமன் (18ம்நாள் இரவில் நடத்திய படுகொலைகள்)
போர்த் தந்திரங்கள் வகுத்தல்
சகுனி 
பலம்
அக்குரோணி
(1,530,900 படைகள்)
11 அக்குரோணி
(2,405,700 படைகள்)
இழப்புகள்
8 பேர் தவிர அனைவரும் இறந்தனர்
உயிருடன் இருந்தவர்கள்-பாண்டவர் ஐவர், ஸ்ரீகிருஷ்ணர்சாத்தியகி மற்றும் யுயுத்சு.
4 பேர் தவிர அனைவரும் இறந்தனர்
உயிருடன் இருந்தவர்கள்-அசுவத்தாமன்கிருபர்கிருதவர்மன் மற்றும் விருச்சகேது.

குருச்சேத்திரப் போர் மகாபாரதக் காவியத்தில் (இதிகாசம்) நடக்கும் ஒரு முக்கியமான நிகழ்வாகும். இப்போர் அத்தினாபுரம் அரியணைக்காக பங்காளிகளான கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே குருச்சேத்திரம் என்ற இடத்தில் நடைபெற்றது. இவ்விடம் தற்போதைய ஹரியானா மாநிலத்தில் உள்ளது. இப்போரானது 18 நாட்கள் நடைபெற்றது. போரின் இறுதியில் பாண்டவர்கள் வென்றனர்.

குருச்சேத்திரப் போர் நடந்த காலம்

குருசேத்திரப் போர் எந்த காலத்தில் நடந்தது என்று, புராண இலக்கியங்கள் மற்றும் வரலாற்று அறிஞர்கள் பலவாறாக கூறுகின்றனர். சிலர் கிறிஸ்து பிறப்பதற்கு முன் என்றும், சிலர் கிறிஸ்து பிறந்தற்குப் பின் என்றும் கூறுகிறார்கள். ஆனால் எவராலும் குருசேத்திரப் போர் நடந்த காலகட்டத்தை உறுதியிட்டு அறுதியாக கூற இயலவில்லை. கடலில் மூழ்கிய துவாரகை நகரை ஆய்வு செய்த தொல்லியல் அறிஞர்கள், துவாரகை பொ.ஊ.மு. 1500 ல் கடலால் மூழ்கடிக்கப்பட்டதாக கூறுகிறார்கள். குருச்சேத்திரப் போர் பொ.ஊ.மு. 1500-இல் நடைபெற்றதாக கூறப்படினும் ,ஆரியர்களால் பயன்படுத்தப்பட்ட வண்ணம் தீட்டப்பட்ட மட்கலப் பண்பாடு பொ.ஊ.மு. 1100-க்கு முற்பட்டதல்ல என்று பி.கே.தாபர், பி.பி.லால், ஆர்.எஸ் கௌர்,ஐ.பி ஜோக்ஷி போன்ற தொல்லியலாளர்களால் கண்டுபிடித்து கூறப்பட்டன. மேலும் மகாபாரத்தில் கூறப்படும் நாடுகளில் மன்னராட்சி முறையும் முறைப்படி பொ.ஊ.மு. 7 ஆம் நூற்றாண்டில் இருந்தே வருவதாக கொண்டாலும், அந்நாடுகளின் உருவாக்கங்கள் பொ.ஊ.மு. 9–8 ஆம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றே தெரியவருகிறது. ஆனால் துவாரகை பொ.ஊ.மு. 1500 ல் முழுவதும் கடலாள் கொள்ளப்பட்டதாக எஸ்.ஆர்.ராவ் ஆய்வின் மூலம் கண்டுபிடித்து கூறியுள்ளார்.[1][2]

போருக்கான காரணங்கள்

அத்தினாபுரத்தின் சூதாட்டமண்டபத்தில் துரியோதனனுக்கும்தருமருக்கும் இடையே நடந்த சூதாட்டத்தில், தருமர், தனது இந்திரப்பிரஸ்தம் நாட்டையும், தன்னையும், தன் சகோதரர்களான வீமன்அருச்சுனன்நகுலன்சகாதேவன் மற்றும் தங்கள் மனைவி திரெளபதியையும் துரியோதனனிடம் பணயமாக வைத்து தோற்றான்.

பீஷ்மர்விதுரன்துரோணர்கிருபர் மற்றும் அத்தினாபுர மன்னன் திருதராட்டிரன் ஆகியவர்களின் ஆலோசனைப்படி, சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் 12-ஆண்டு காடுறை வாழ்க்கையும், ஒரு வருட தலைமறைவு வாழ்க்கையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், ஒரு வருட தலைமறைவு வாழ்க்கையின் போது பாண்டவர்கள் கண்டு கொள்ளப்பட்டால் மீண்டும் 12-ஆண்டு காடுறை வாழ்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் கௌரவர்களுக்கும்பாண்டவர்களுக்கும் ஒப்பந்தம் ஆயிற்று. இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றினால் மட்டுமே சூதாட்டத்தில் இழந்த நாடு மீண்டும் பாண்டவர்களுக்கு கிடைக்கும் என்று பாண்டவர்களுக்கு நினைவுபடுத்தப்பட்டது.

ஒப்பந்தப்படி, 12-ஆண்டு காடுறை வாழ்வும், ஒராண்டு தலைமறைவு வாழ்வு முடிந்தவுடன், பாண்டவர்கள் தாங்கள் சூதில் இழந்த நாட்டை கேட்டு ஸ்ரீகிருஷ்ணரை, அத்தினாபுர மன்னன் திருதராட்டினரிடம் தூது அனுப்பினர். கிருஷ்ணரின் கோரிக்கையை துரியோதனன் ஏற்கவில்லை. காரணம் பாண்டவர்கள் ஒராண்டு தலைமறைவு வாழ்வின் போது தான் அருச்சுனனை கண்டு கொண்டதால், பாண்டவர்கள் மீண்டும் 12-ஆண்டு காடுறை வாழ்வு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினான்.

ஆனால் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் திருதராட்டிரரிடம், பாண்டவர்களுக்கு ஐந்து ஊர்கள் அல்லது ஐந்து கிராமங்கள் அல்லது ஐந்து வீடுகளாவது வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். துரியோதனன் பாண்டவர்களுக்கு ஊசி முனை அளவு கூட இடம் அளிக்க முடியாது என ஆணவமாக பேசி, தூது வந்த கிருஷ்ணரை அவமதித்து அனுப்பு விட்டான். பின்னர் பாண்டவர்கள் கௌரவர்களுடன் போரிட்டு இழந்த நாட்டை மீட்பது என முடிவு செய்தார்கள்.

போரில் நடுநிலை வகித்தவர்கள்

குருச்சேத்திரப் போர்க் காலத்திய இந்தியா

பலராமன்விதுரன், மற்றும் விதர்ப்ப நாட்டு மன்னர் உருக்மி.

கௌரவர்களின் கூட்டணிப் படைகள்

கௌரவர்களின் கூட்டணிப்படையில் முக்கியமானவர்கள், பீஷ்மர்துரோணர்கிருபர்துரியோதனன்கர்ணன்துச்சாதனன்விகர்ணன்துச்சலையின் கணவனாக சிந்து நாட்டரசன் ஜயத்திரதன்சகுனிகாந்தார சகுனியின் மகன் உல்லூகன்சல்லியன்பர்பரிகன்பூரிசிரவஸ்பாக்லீகர்கள்பிராக்ஜோதிசத்தின் பகதத்தன்நிசாதர்கள்திரிகர்த்தர்களின் சுசர்மன்சம்சப்தகர்கள்காம்போச அரசன் சுதக்சினன், அவந்தி நாட்டு விந்தன் மற்றும் அனுவிந்தன், கேகய நாட்டு ஐந்து இளவரசர்கள், கலிங்கர்கள்ஆந்திரர்கள்யவனர்கள்சகர்கள் காம்போஜர்கள்மகிஷ்மதிகிருதவர்மன் தலைமையிலான துவாரகையின் நாராயணீப் படையும் மற்றும் 11 அக்குரோணி படையணிகள் கொண்ட தேர்ப்படை, குதிரைப்படை மற்றும் கலாட் படைவீரர்கள் இருந்தனர். மொத்தம் 11 அக்ரோணி படையணிகளில் 24,05,700 படைகள் கௌரவர் அணியில் போர் புரிய இருந்தனர்.கௌரவர்கள் படைகளின் தலைவராக பேரிளவரசர் பீஷ்மர் நியமிக்கப்பட்டார். கௌரவர் படைகளின் அரசராக களத்தில் இல்லாத அஸ்தினாபுர அரசர் திருத்திரட்டினான் இருந்தார். களத்தில் கௌரவர் படைகளின்  முழு நிர்வாகியாக அஸ்தினாபுர முதல் இளவரசன் துரியோதனன் இருந்தான். பீஷ்மர் களத்தில் உள்ளவரை "அங்க" தேசத்து அரசன் கர்ணன் களம் புக மறுத்துவிட்டார். சகுனி கௌரவப்படையணிகளுக்கு போர்த் தந்திரங்கள் தலைமை சூத்திரதாரியாக சொல்லிக் கொடுத்தார். சேர நாட்டு மன்னன் “உதியஞ்சேரல்” கௌரவப்படைகளுக்கு உணவு அளித்தார் என்றும் அதனால் உதியஞ்சேரனனை “பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் என்று அழைக்கப்பட்டார் என்று பழந்தமிழ் பாடல் ஒன்றில் குறிக்கப்பட்டுள்ளது. கௌரவர்  படைகளின் குறிக்கோள், பாண்டவர்கள் ஐவரையும் கொல்ல வேண்டும். குறைந்தது தர்மனை கைது செய்து பாண்டவர் குடும்பத்தை நிரந்தரமாக வனவாசம் அனுப்பவேண்டும்.

பாண்டவர்களின் கூட்டணிப்படைகள்

பாண்டவர் கூட்டணிப் படையில் முக்கியமாகப் பாஞ்சால அரசன் துருபதன், அவர் மகன்கள் திருட்டத்துயும்னன் மற்றும் சிகண்டிஅபிமன்யுகடோற்கஜன்அரவான்உபபாண்டவர்கள்மத்சய நாட்டு விராடன் மற்றும் அவர் மகன்களான உத்தரன், சுவேதன் மற்றும் சோமதத்தன், விருஷ்ணி குலத்தின் சாத்தியகிகாசி நாட்டு மன்னன், கேகயர்கள்சேதி நாட்டு சிசுபாலன் மகன் திருஷ்டகேதுமகத நாட்டு ஜராசந்தன் மகன் சயத்சேனன், நீலனின் மகிஷ்மதி நாட்டுப் படைகள், பாண்டியர்கள் மற்றும் போர்க்கருவி ஏந்தாத ஸ்ரீகிருஷ்ணருடன் 7 அக்குரோணி கொண்ட பெரும் படையணிகள் 15,30,900 படைகளுடன் போரிட இருந்தனர். பாண்டவர்களின் படைகளுக்கு தலைமைப்படைத் தலைவராக திருட்டத்துயும்னன் நியமிக்கப்பட்டான். பாண்டவ படைகளின் அரசனாக முன்னாள் பேரரசர் யுதிஷ்டிர தர்மன் இருந்தார்.பாண்டவப் படைகளுக்கு போர்த்தந்திரங்களை கூற தலைமை சூத்திரதாரியாக கிருஷ்ணர் இருந்தார். ஆனால் கிருஷ்ணர் இப்போரில் ஆயுதம் ஏந்தாமல் பார்த்தனுக்கு சாரதியாக செயல்பட்டார். பாண்டவ படைகளின் குறிக்கோள், போரில் வென்று அஸ்தினாபுரத்தை ஆட்சி செய்ய வேண்டும். இளவரசன் பீமன் 100 கௌரவர்களையும் கொல்ல சபதம் செய்திருந்தான்.

ஒரு அக்குரோணி படையணியின் கணக்கீடு

ஒரு அக்குரோணி படை என்பது, காலாட் படை வீரர்கள் 1,09,350, குதிரைகள் 65,610, தேர்கள் 21,870, யாணைகள் 21,870 ஆக மொத்தம் 2,18,700 எண்ணிக்கை கொண்டது. இது போன்று கௌரவர்அணியில் 11 அக்ரோணி படைகளும், பாண்டவர் அணியில் 7 அக்ரோணி படைகளும் இருந்தன். இரு அணிகளில் இருந்த 18 அக்குரோணி படைகளின் மொத்த எண்ணிக்கை 39,36,600 ஆகும்.

போர் விதிமுறைகள் வகுத்தல்

  1. கையில் ஆயுதம் இல்லாத ஒரு வீரன், மீண்டும் ஆயுதம் ஏந்தும் வரை அவனை எதிர்த்து போரிடக்கூடாது.
  2. ஆண்மையற்றவனிடம் (அரவாணி) போரிடக்கூடாது.
  3. போரில் காயம் பட்டு போர்க்களத்திலிருந்து வெளியேறிய வீரனை தாக்கக் கூடாது.
  4. மேலும் காயம் அடைந்த வீரனை காக்கும் போர் வீரனையும் எதிர்த்து போரிடக்கூடாது.
  5. போரிடாத வீரனை தாக்கக் கூடாது.
  6. கதிரவன் உதயத்திலிருந்து, மறையும் வரை மட்டுமே போரிட வேண்டும். கதிரவன் மறைந்த பின் போரிடக் கூடாது.
  7. போரில் சரணடைந்தவர்களைக் கொல்லாமல், போரில் வென்றவர்கள் காக்க வேண்டும்.
  8. காலாட்படை வீரர்கள், காலாட்படை வீரர்களுடன் மட்டும் போரிட வேண்டும், அது போல் குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை வீரர்கள் தத்தமது தகுதிக்குரிய வீரர்களுடன் மட்டும் போரிட வேண்டும்.
  9. மகாரதர்கள், மகாரதர்களுடனும், அதிரதர்கள், அதிரதர்களுடன் மட்டுமே போரிட வேண்டும்.
  10. போரின் இரவு வேளையில் இரு அணிப் படையினர், ஒருவரை ஒருவர் சந்திக்க விரும்பினால் சந்திக்கலாம்.

பீஷ்மர் வகுத்த இப்போர்விதிகளை கௌரவப் படையினரும், பாண்டவப் படையினரும் ஏற்றுக் கொண்டனர். ஆனால் இந்தப் போர் விதிகளை, அபிமன்யுவின் வீரமரணத்திற்குப் பின் இரு அணியினரும் கடைப்பிடிக்கவில்லை.

படையணி அமைப்புகள் (வியூகங்கள்) வகுத்தல்

வியாசரின் மகாபாரத இதிகாசத்தின்படி, தர்மச்சேத்திரமான குருச்சேத்திரத்தில் பாண்டவர் அணிப் படைகளுக்கும், கௌரவர் அணிப் படைகளுக்கும் நடந்த போரில், அணிகளின் தலைமைப் படைத்தலைவர்கள், தங்கள் படைகளை, தற்காத்துக் கொள்வதற்கும், எதிரிப் படைகளை தாக்கி அழிப்பதற்கும் பல்வேறு சிறப்பு வடிவத்தில் தங்கள் படைகளை (வியூகம்) அமைத்துக் கொண்டு போரிட்டனர். படை அமைப்புகளின் (வியூகம) பெயர்கள்:

  1. நாரை வியூகம்
  2. முதலை வியூகம்
  3. ஆமை வியூகம்
  4. திரிசூலம் வியூகம்
  5. சக்கர வியூகம்
  6. பூத்த தாமரைமலர் வியூகம் என்ற பத்ம வியூகம்
  7. கருட வியூகம்
  8. கடல் அலைகள் போன்ற வியூகம்
  9. வான் மண்டல வியூகம்
  10. வைரம் அல்லது வஜ்ராயுத (இடிமுழக்க) போன்ற வியூகம்
  11. பெட்டி அல்லது வண்டி போன்ற வியூகம்
  12. அசுர வியூகம்
  13. தேவ வியூகம்
  14. ஊசி போன்ற வியூகம்
  15. வளைந்த கொம்புகள் போன்ற வியூகம்
  16. பிறை சந்திர வடிவ வியூகம்
  17. பூ மாலை போன்ற வியூகம்

சஞ்சயன் ஞானக்கண் பெறுதல்[தொகு]

கண் பார்வையற்ற திருதராட்டிரனுக்கு குருச்சேத்திரப் போர்களக் காட்சிகளை அத்தினாபுர அரண்மனையில் இருந்தாவாறே பார்க்கும் பொருட்டு வியாசர் ஞானக்கண் வழங்க முன் வந்தார். ஆனால் கோரமான போர்க்களக் காட்சிகளை பார்க்க விரும்பாத காரணத்தினால், தனது தேரோட்டியான சஞ்சயனுக்கு அந்த ஞானக்கண் வழங்குமாறு வேண்டினார். வியாசரும் சஞ்சயனுக்கு ஞானக்கண் வழங்கி அவர் மூலம் திருதராட்டிரனுக்கு குருச்சேத்திரப் போர்களக் காட்சிகள் விளக்கப்பட்டது.

போர்க்களத்தில் கீதா உபதேசம்

குருச்சேத்திரப் போர்களத்தில் கிருஷ்ணர், அருச்சுனனுக்கு கீதை அருளுதல். படம் கி. பி., 1830

போர் துவங்குவதற்கு முன்பு, போர்க்களத்தில் எதிரணியை ஒருமுறை பார்வையிட்ட அருச்சுனன் அங்கே தன் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், பாட்டனார் பீஷ்மர் மற்றும் குரு துரோணரை போன்றோர் இருப்பதால் போரிட மறுத்து துயர மேலீட்டால், தன் கை வில்லை தூக்கி எறிந்து, கவலையுடன் தேர்த்தட்டில் அமர்ந்தான். இதைக் கண்ட தேரோட்டியான கிருஷ்ணர், தர்மத்திற்காகப் போரிடும் பொழுது உறவுமுறைகளைப் பார்க்கக்கூடாது என்று விளக்கினார். அருச்சுனனுக்கு தர்மயுத்தம் செய்ய வேண்டியது ஒரு சத்திரியனின் கடமை என்று என்று எடுத்துக்கூறி, பகவத் கீதையை அருச்சுனனுக்கு அருளி, அருச்சுனனை போருக்கு ஆயத்தப்படுத்தினார் கண்ணன்.

குருச்சேத்திரப் போர்க்கள காட்சிகள்[தொகு]

பதினெட்டு நாள் நடந்த குருசேத்திரப் போர் மகாபாரதத்தில் பீஷ்ம பருவம்துரோண பருவம்கர்ண பருவம்சல்லிய பருவம் மற்றும் சௌப்திக பருவம் எனும் ஐந்து பர்வங்களில் விளக்கப்படுகிறது. படைத்தலைவர்களை, அவரவர்களின் போர்த்திறனுக்கு ஏற்றபடி மகாரதர்கள் , அதிரதர்கள் மற்றும் அர்த்தரதர்கள் என வகைப்படுத்தி அவர்களின் கீழ் படையணிகளை நிறுத்தி இருந்தனர். போரில் வெற்றி பெற அரவானைப் பலி கொடுத்தனர். போர் துவங்குவதற்கு முன், ஒரு அணியிலிருந்து வேறு அணிக்கு மாற விரும்புபவர் மாறலாம் என தருமர் கூற, திருதராட்டினரின் இரண்டாம் மனைவியின் மகன் யுயுத்சு கௌரவர் அணியிலிருந்து, பாண்டவர் அணிக்கு மாறி அவர்கள் சார்பாக போரிட்டான். முதலில் பீஷ்மர் தனது சங்கை ஊத, பின் மற்றவர்கள் தத்தமது சங்குகளை ஊதிப் போருக்கு ஆயத்தமாயினர்.

பீஷ்ம பர்வம்

குருச்சேத்திரப் போர்

குருச்சேத்திரப் போரில் முதல் பத்து நாட்கள் கௌரவர்களின் தலைமைப் படைத்தலைவராக இருந்து பீஷ்மர் நடத்திய போர்கள் முதல் அவர் அம்புப் படுக்கையில் விழுந்தது வரை இது விவரிக்கிறது.[3] பீஷ்மரின் ஆணைப்படி, கர்ணன் முதல் பத்துநாள் போரில் கலந்து கொள்ளவில்லை.

இப்பர்வத்தில் பகவத் கீதை ஸ்ரீகிருஷ்ணரால் அருச்சுனனுக்கு அருளப்பட்டது.

போர் நாள் 1

போரில் பாண்டவர் படைகள் அபிமன்யுவால் காக்கப்பட்டும், சாந்தனுகங்கையின் மகன் பீஷ்மரின் அம்புகளால் பலத்த சேதமடைந்தது. விராடனின் மகன்களான உத்தரனும், சுவேதனும், சல்லியனாலும், பீஷ்மராலும் கொல்லப்படுகின்றனர்.

போர் நாள் 2

பாண்டவர் படைகள் முதல் நாள் போரில் படுதோல்வி அடைந்ததை சரிகட்ட, இரண்டாம் நாள் போரில் பரசுராமரின் மாணவரான பீஷ்மரைக் கொல்ல அணி வகுத்தனர். ஆனால் கௌரவர் படைகள் பீஷ்மரைக் காத்து நின்று போரிட்டது. ஆனால் அருச்சுனன் அதையும் மீறி பீஷ்மரைக் கொல்ல கடும் போராட்டம் நடத்தினான். துரோணர், பாண்டவ படைகளின் தலைமைப் படைத் தலைவனான திருட்டத்துயுமனனை அம்புகளால் துளைத்து விட்டார். எனவே வீமன் படுகாயமடைந்த அவனை போர்க் களத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்று விட்டான். வீமனைத் தாக்கிய கலிங்க நாட்டுப் படைகளை வீமன் நசுக்கி விட்டான். பீஷ்மரின் தேரோட்டியை சாத்தியகி கொன்றான். ஆனால் தேர்க் குதிரைகள் பீஷ்மரைப் போர்க்களத்திலிருந்து தனியே அழைத்துச் சென்றது. இரண்டாம் நாள் போரின் இறுதியில் கௌரவர் படைகளுக்குப் பெருத்த இழப்பு ஏற்பட்டது.

போர் நாள் 3

பீஷ்மர் தனது படைகளைக் கருட வடிவத்தில் வியூகம் அமைத்தார். பாண்டவர்கள் பிறைச்சந்திர வடிவத்தில் தங்கள் படைகளை வியூகம் அமைத்தனர். அபிமன்யுவும் சாத்தியகியும் சேர்ந்து, சகுனியின் காந்தார நாட்டுப்படைகளைத் தாக்கி வென்றனர். பீமனால் அவன் மகன் கடோற்கஜன்னும் சேர்ந்து துரியோதனனுடன் போரிட்டு, அவனைத் தாக்கியதால் தேரில் பலத்த காயமடைந்து வீழ்ந்தான். அதனால் அவன் போர்களத்திலிருந்து வெளியே சென்றதால், அவன் படைவீரர்கள் சிதறி ஓடினர். சிதறி ஓடிய கௌரவப்படைகளை மீண்டும் பீஷ்மர் ஒன்று சேர்த்து, துரியோதனனுடன் போர்க்களத்திற்கு வந்தார். தோல்வியின் காரணமாக துரியோதனன், பீஷ்மரை மிகவும் கடிந்து கொண்டான். இதனால் கோபம் கொண்ட பீஷ்மர் தன் அம்புகளால், பாண்டவர் படைகளைச் சிதறடித்தார். அருச்சுனன் பீஷ்மருடன் போரிட்டாலும், பாண்டவர் படைகளுக்குப் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டது.

மத்திய ஜகார்த்தாவில் உள்ள தேரோட்டும் ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் அருச்சுனன் சிலை.
போர் நாள் 4

துரியோதனனின் எட்டு சகோதரர்க, பீமனால் கொல்லப்பட்டனர். இதைக் கேட்டு ஆத்திரமுற்ற துரியோதனன், பீஷ்மரிடம் சென்று பாண்டவப் படைகளை எவ்வாறு வெல்லப் போகிறீர்கள் எனக் கடுமையாக கேட்டான். அதற்கு பீஷ்மர், பாண்டவர் பக்கம் தர்மம் இருப்பதால் அவர்களை வெல்ல இயலாது, அதனால் அவர்களுடன் சமாதானம் செய்து கொள் என்று அறிவுறுத்தினார். ஆனால் துரியோதன்ன் அவரது அறிவுரையைப் புறந்தள்ளிச் சென்றான்.

போர் நாள் 5 முதல் 9 முடிய

ஐந்தாம் நாள் போரில் பெரும்பாலான பாண்டவப் படைகள் பீஷ்மரின் அம்பு மழையால் அழிந்தன. சாத்தியகியை, துரோணரிடமிருந்து வீமன் காப்பாற்றினான். அருச்சுனன், கௌரவர் படைகளைக் காண்டீபம் எனும் வில்லால் அம்பு மழை பொழிந்து கொன்றான். துரோணர் பாண்டவப் படைகளை சிதறடித்தார். இரண்டு படைகளின் வியூகங்கள் உடைபட்டு போர்வீரர்கள் சிதறினர். அருச்சுனன் மகன் கௌரவர்களால் கொல்லப்பட்டான். துரியோதனனின் எட்டு தம்பியர்கள் வீமனால் கொல்லப்பட்டனர். பீஷ்மரைப் போரில் வெல்ல முடியாத காரணத்தினால், அருச்சுனன் மீது கிருஷ்ணன் கோபம் கொண்டார். எனவே பீஷ்மரைக் கொல்ல சிகண்டியைப், போர்க்களத்தில் பீஷ்மருக்கு எதிராக நிறுத்திப் போரிட கிருஷ்ணன் ஆலோசனை கூறினார்.

போர் நாள் 10
அம்புப் படுக்கையில் பீஷ்மர்

பீஷ்மரின் அம்புகள், பாண்டவப் படைகளுக்குப் பெருத்த அழிவை ஏற்படுத்தின. பீஷ்மர் பெண்களுடனும், ஆண்மையற்றவர்களுடனும் போரிடுவதில்லை என்று சபதம் செய்துள்ளதைச் சாதகமாக பயன்படுத்தி, பீஷ்மரைப் போரில் வெல்ல வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளான பாண்டவப்படைகள், கிருஷ்ணரின் ஆலோசனையின்படி சிகண்டியை பீஷ்மருக்கு எதிராகப் போரிட போர்களத்திற்கு அனுப்பினர். பீஷ்மர், போர்க்களத்தில் தனக்கு எதிராக நிற்கும் சிகண்டியை பார்த்த உடன், சிகண்டியுடன் போரிடாது தனது போர்க்கருவிகளை கீழே போட்டு விட்டார். இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சிகண்டியின் பின் இருந்து, அருச்சுனன் தனது அம்புமழையால் பீஷ்மரின் உடலை சல்லடையாக துளைத்தெடுத்து, அம்புப்படுக்கையில் கிடத்தினான்.

பீஷ்மரின் தந்தை சாந்தனு பீஷ்மருக்கு இச்சை மரணம் ("Ichcha Mrityu" (self wished death) என்ற விரும்பும்போது இறக்கலாம் எனும் வரத்தை அளித்த காரணத்தினால், பீஷ்மர் குருச்சேத்திரப் போர் முடிந்தபின், உத்தராயனம் முதல் நாளில் தன் விருப்பப்படி உயிர் நீத்தார். இறப்பதற்கு முன் அரச நீதி மற்றும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாண்டவர்களுக்கு அருளினார் பீஷ்மர்.

துரோண பர்வம்

துரோணர் குருச்சேத்திரப்போரில் ஐந்து நாட்கள் கௌரவர்களின் படையின் தலைமைப் படைத்தலைவராக இருந்து போர் தொடர்வதை இப் பர்வம் விவரிக்கின்றது. போரைப் பொறுத்தவரை இதுவே முக்கியமான பர்வமாகும். இரு பக்கங்களையும் சேர்ந்த பெரிய வீரர்கள் பலர் இப் பர்வத்தின் முடிவில் இறந்துவிடுகின்றனர்.[4]

போர் நாள் 11

குந்தியின் மகன் கர்ணன் முதன்முதலாக குருச்சேத்திரப் போரில் இறங்குகிறான். தருமனைப் போரில் உயிருடன் போர்க்கைதியாகப் பிடித்து வைத்துக் கொண்டால், பாண்டவர்கள் மீண்டும் அடிமையாகி விடுவார்கள் என்றும், குருச்சேத்திரப் போரும் முடிவுக்கு வந்துவிடும் என்று சகுனி துரியோதனனுக்கு ஆலோசனை கூறினான். தருமரைப் போரில் உயிருடன் பிடிக்கும் இத்திட்டம் துரோணரிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவே துரோணர் தருமனைக் கடுமையாக எதிர்த்து அவன் வில்லையும் மற்ற ஆயுதங்களையும் அழித்தார். தருமனைக் காக்கவந்த அருச்சுனனையும் அம்பு மழைகளால் துளைத்தெடுத்தார்.

போர் நாள் 12

தருமரைக் கையோடு பிடிக்கத் தடையாக இருந்த அருச்சுனனைத் தடுத்து நிறுத்தி போர்செய்ய, கௌரவர் அணியில் இருந்த திரிகர்த்த நாட்டரசன் சுசர்மன், அவன் சகோதரர்கள் மூவர் மற்றும் அவர் மகன்கள் 35 பேர்கள் ஒன்று சேர்ந்து அருச்சுனன் மீது தொடுத்த கடுமையான போரில், அருச்சுனன் அவர்களைத் தனது காண்டீபம் எனும் வில்லைக் கொண்டு அம்புகள் தொடுத்துக் கொன்றான்.

போர் நாள் 13
அபிமன்யு சக்கர வியூகத்தை உடைத்து உள் நுழைதல்.

கௌரவப்படைகளைச் சக்கர வடிவில் அமைத்தார் துரோணர். பகதத்தன் தனது ஆயிரக்கணக்கான வலிமை மிக்க யானைப்படைகளுடன், சுப்ரதீபம் எனும் யானையில் அமர்ந்து அருச்சுனனுடன் கடும் போர் புரிந்து கொண்டிருந்தான்.

துரோணரின் சக்கர வியூகத்தை அபிமன்யு உடைத்து உட்புகுந்து, கௌரவர் படைகளுக்குப் பெரும் அழிவை உண்டாக்கினான். அபிமன்யு, துரியோதனனின் மகன் இலட்சுமணகுமாரனைப் போரில் கொன்றான். எனவே ஆத்திரமுற்ற துரியோதனன், அபிமன்யுவைக் கொல்ல தனது படைத்தலைவர்களுக்கு ஆணையிட்டான். அதன்படி ஜயத்திரதன்கர்ணன்துச்சாதனன் போன்ற கௌரவப் படைத்தலைவர்கள் ஒரே நேரத்தில் அபிமன்யுவைச் சுற்றி வளைத்து கடும் தாக்குதல் தொடுத்துக் கொன்றனர். அபிமன்யுவின் மரணத்திற்குக் காரணமான ஜயத்திரதனை அடுத்த நாள் போரில் சூரியன் மறைவதற்குள் கொல்வேன் என்றும், அவ்வாறு ஜயத்திரதனைக் கொல்ல இயலவில்லை எனில் தீக்குளித்து இறப்பேன் என அருச்சுனன் சபதம் எடுத்தான்.

போர் நாள் 14

அருச்சுனனின் கடும் தாக்குதலிருந்து ஜயத்திரதனைப் பாதுகாக்க, ஒரு அக்ரோணி படையணியைத் (1,09,350 படைகள்) துரியோதனன் நிறுத்தி வைத்தான். அருச்சுனன், தன்னை எதிர்த்த பலம் மிக்க கௌரவப் படைத்தலைவர்களுடன் போராடிக் கொண்டே, ஜயத்திரதன் இருக்கும் இடம் அடைந்து, கதிரவன் மறையும் சிறிது நேரத்திற்கு முன்னரே அவனைத் தனது கூரிய அம்புகளால் கொன்று தனது சபதத்தை நிறைவேற்றிக் கொண்டான்.

கர்ணன் கடோற்கஜனை கொல்தல்

14-ஆம் நாள் போர் இரவிலும் தொடர்ந்தது. பீமனின் மகன் கடோற்கஜன், இரவுப்போரில் இலட்சக்கணக்கான கௌரவப் படைகளை அழித்தான். கடோற்கஜனின் தாக்குதலிருந்து கௌரவப்படைகளைக் காக்க, கர்ணன் தனக்கு இந்திரன் வழங்கிய சக்தி ஆயுதத்தை கடோற்கஜன் மீது ஏவிக் கொன்றான்.

போர் நாள் 15

துரோணர், பாஞ்சால நாட்டரசன் துருபதன் மற்றும் விராட நாட்டரசன் விராடன் ஆகியவர்களைப் போரில் கொன்றார். துரோணரைத் தந்திரமாக கொல்ல முடியுமோ தவிர, அவருடன் போரிட்டு கொல்ல முடியாது என்று உணர்ந்த கிருஷ்ணர், துரோணர் தன் மகன் அசுவத்தாமன் மீது கொண்டுள்ள அளவுகடந்த பாசத்தை மனதில் கொண்டு, பீமனைக் கூப்பிட்டு அசுவத்தாமன் என்ற பெயருடைய யானையைக் கொல்ல என ஆணையிட்டார். பீமனும் அவ்வாறே அசுவத்தாமன் எனும் பெயருடைய ஒரு யானையைக் கொன்றான். கிருஷ்ணர், பின் தருமனிடம், துரோணரின் முன் சென்று அசுவத்தாமன் கொல்லப்பட்டது என்று கூறுமாறு ஆலோசனை கூறினார். முதலில் இதை மறுத்த தருமன் பின் ஏற்றுக் கொண்டு, துரோணர் முன் தனது தேரை நிறுத்தி, அசுவத்தாமன் யானை போரில் இறந்தது விட்டது எனக் கூவினார். ஆனால் ”யானை” என்ற வார்த்தையை மட்டும் தருமர் மிகமெதுவாக கூறியதைத் துரோணர் கேட்கவில்லை. அசுவத்தாமன் போரில் இறந்து விட்டான் என்பதைத் தருமர் மூலம் தவறாக அறிந்த துரோணர் துக்க மேலீட்டால் தனது கை வில்லை கீழே போட்டுவிட்டு, தேரில் அமர்ந்து புத்திர சோகத்தால் புலம்பிக் கொண்டிருந்தார். அந்நேரத்தில் திருட்டத்துயும்னன் துரோணர் மீது அம்புகளை மழை போல் செலுத்திக் கொன்றான். 15-ஆம் நாள் போரின் இறுதியில் துரியோதனனின் தம்பிமார்களில் துச்சாதனன் தவிர 98 பேர்கள் வீமனால் கொல்லப்பட்டிருந்தனர்.

15-ஆம் நாள் போரின் இரவில், குந்தி, கர்ணனை இரகசியமாகச் சந்தித்து அருச்சுனனைத் தவிர மற்ற பாண்டவர்கள் மீது அம்புகள் செலுத்துவதில்லை என்றும், நாகபாணத்தை அருச்சுனன் மீது ஒரு முறைக்கு மேல் செலுத்துவதில்லை என்றும் இரண்டு வரங்களைக் கேட்டுப் பெற்றாள்.

கர்ண பர்வம்

போர் நாள் 16

துரோணரின் மறைவுக்குப் பின் 16-ஆம் போரில் கௌரவர்களின் தலைமைப் படைத்தலைவராக கர்ணன் நியமிக்கப்பட்டான்.[5] கர்ணனின் தேரை சல்லியன் ஓட்டினார். கர்ணன் போரில் இலட்சக்கணக்கான பாண்டவப்படைகளைக் கொன்றான். பாண்டவப்படைகளைக் காக்க, பல படைத்தலைவர்கள் கர்ணனைச் சுற்றி வளைத்து கடுமையாகத் தாக்கினார்கள். ஆனால் கர்ணன் அவர்களைத் திருப்பித் தாக்கி போர்களத்திலிருந்து ஓடஒட விரட்டி அடித்தான். பின் அருச்சுனன் தனது கூர்மையான அம்புகளால் கர்ணனின் தாக்குதலைத் தடுத்து நிறுத்தினான்.

பீமன், துச்சாதனனின் நெஞ்சை பிளந்து குருதி குடிக்கும் காட்சி

அதே நாளில், கதாயுதப் போரில் வீமன் துச்சாதனனின் வலது கையை முறித்து, நெஞ்சைப் பிளந்து, குருதியை குடித்து, பின் அவன் நெஞ்சத்து குருதியை கையில் ஏந்தி, திரெளபதியின் முடிக்காத முடியில் தோய்த்து, திரெளபதியின் சபதத்தை நிறைவேற்றினான். தன் தம்பிமார்கள் பலரை வீமன் கதாயுதத்தால் அடித்து கொன்ற போதிலும் துச்சாதனனின் கோரமரணத்தை நினைத்து புலம்பித் தவித்தான் துரியோதனன்.

போர் நாள் 17
கர்ணன் - அருச்சுனன் போர்

கர்ணன், தருமரையும் சகாதேவனையும் போரில் வென்றாலும், தன் தாய் குந்திக்கு வழங்கிய வரத்தின்படி, கொல்லாமல் விட்டு விட்டான். ஆயிரக்கணக்கான பாண்டவப்படைகளைத் தனது கூரிய அம்புகளால் கொன்று பின் அருச்சுனனைக் கொல்ல அம்பு மழை பொழிந்து கடுமையாக போரிட்டான்.

ஒரு நேரத்தில், அருச்சுனனைக் கொல்ல அவனின் கழுத்தைக் குறி வைத்து நாகபாணத்தை ஏவ முற்படும்போது சல்லியன், அருச்சுனனின் நெஞ்சைக் குறிவைத்து நாகபாணத்தைத் தொடுக்குமாறு கூறினார். ஆனால் சல்லியனின் ஆலோசனையை ஏற்காத கர்ணன், அருச்சுனனின் கழுத்துக்குக் குறிவைத்து நாகபாணத்தை ஏவினான். அப்போது பகவான் கிருஷ்ணர், அருச்சுனனின் தேரை ஒரு அடி கீழே அழுத்தினார். அருச்சனனின் தேர் பூமிக்குக் கீழ் ஒரு அடி இறங்கியது. அதனால் கர்ணன் ஏவிய நாகபாணம், அருச்சுனனின் கழுத்தை தாக்காது, அவனின் தலைக்கவசத்தைத் தாக்கியதால், அருச்சுனனின் தலைக்கவசம் மட்டுமே கீழே விழுந்தது. கிருஷ்ணரின் போர்த் தந்திரத்தால் அருச்சுனன் உயிர் பிழைத்தான்.

போரின் ஒரு கட்டத்தில் கர்ணனின் தேர்ச்சக்கரம் சகதியில் மாட்டிக் கொண்டது. கர்ணன் தேரைச் சகதியில் இருந்து மீட்கும் நேரத்தில், கிருஷ்ணர் அருச்சுனனை கர்ணன் மீது அம்புகள் ஏவச் சொன்னார். இந்திரன் முன்பே கர்ணனின் கவச குண்டலங்கள் தானமாகப் பெற்றுக் கொண்டபடியால், தெய்வீகக் கவசம் இல்லாத கர்ணன்மீது செலுத்தப்பட்ட அருச்சுனனின் கூரிய அம்புகள் கர்ணனின் நெஞ்சைச் சல்லடையாக துளைத்தன. அதனால் கர்ணன் போரில் மடிந்தான்.

சல்லிய பர்வம்

போர் நாள் 18

பதினெட்டாம் நாள் போரில் கௌரவர் படைத்தலைவராக சல்லியன் தலைமை தாங்கினான்.[6] இப்போரில் சகாதேவன் சகுனியையும் அவன் மகன் உல்லூகனையும் கொன்றான். தருமர் சல்லியனை தன் ஈட்டியால் கொன்றார். பதினெட்டாம்நாள் போர் முற்பகலிலேயே முடிந்தது.

சௌப்திக பர்வம்

தன் படையின் தோல்வியை உணர்ந்த துரியோதனன், போர்க்களத்திலிருந்து ஓடி சரசுவதி ஆற்றின் அருகில் இருந்த சமந்தபஞ்சகம் எனும் குளத்தில் மூழ்கி ஒளிந்து கொண்டான். பாண்டவர்கள் துரியோதனனைத் தேடி கண்டுபிடித்தனர். அப்போது தீர்த்த யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த பலராமன் முன்னிலையில் பீமனுக்கும் துரியோதனனுக்கும் இடையே மிகக் கடுமையான கதாயுதப் போர் நடந்தது. போரின் இறுதியில் பீமன் கதாயுதப் போரின் விதிமுறைகளை மீறி துரியோதனனின் இரண்டு தொடைகளிலும் உயிர் போகும்படி கடுமையாகப் பலமுறை அடித்தான். அதனால் துரியோதனன், தொடைகள் ஒடிந்து நசுங்கி குற்றுயிறும் குலையுறுமாக வீழ்ந்து மரணத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தான். பலராமன் வீமனின் கதாயுதப் போர் விதிமீறல்கள் குறித்து கடிந்து கொண்டார்.

பதினெட்டாம் நாள் போரின் இரவில், துரியோதனனின் உயிர் ஊசாலாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், அசுவத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மன் துரியோதனனைத் தேடி வந்தனர். துரியோதனனின் துயர நிலையைக் கண்டு கண்கலங்கிய அசுவத்தாமன், பாண்டவர்களைக் கொன்று பழி தீர்ப்பேன் என்று சபதமிட்டு, கிருபர் மற்றும் கிருதவர்மன் ஆகியவர்களுடன் அன்றைய நடு இரவில் பாண்டவர்களின் போர்ப் பாசறையில் நுழைந்து, அங்கு உறங்கிக் கொண்டிருந்த உபபாண்டவர்கள் (திரெளபதிக்கும்-ஐந்து பாண்டவர்களுக்கும் பிறந்தவர்கள்), திருட்டத்துயும்னன்சிகண்டி, மற்றும் உதாமன்யு மற்றும் அனைத்துப் படைவீரர்களையும் கொன்றான். இந்த நடுஇரவுப் படுகொலையில் தப்பியவர்கள் பாண்டவர் ஐவர், சாத்தியகியுயுத்சு, மற்றும் கிருஷ்ணர் மட்டுமே.[7]

குருச்சேத்திரப் போரின் இறுதியில் எஞ்சியவர்கள்

கௌரவர் தரப்பில் கிருபர்அசுவத்தாமன்கிருதவர்மன்கர்ணனின் மகன் விருச்சகேது ஆகிய நால்வர் மட்டுமே போரின் இறுதியில் உயிருடன் எஞ்சினர்.

பாண்டவர் தரப்பில் ஐந்து பாண்டவர்கள், ஸ்ரீகிருஷ்ணர்சாத்தியகி மற்றும் யுயுத்சு ஆகிய எட்டு பேர்கள் மட்டும் உயிருடன் எஞ்சினர். போரில் ஈடுபட்ட மற்ற அனைத்து மன்னர்கள், படைத்தலைவர்கள் மற்றும் படைவீரர்கள் கொல்லப்பட்டனர்.

குருச்சேத்திரப் போருக்குப் பின்

அத்தினாபுரத்தை தலைநகராகக் கொண்ட குரு நாடும்இந்திரப்பிரஸ்தமும் ஒன்றிணைக்கப்பட்டது. அத்தினாபுரத்தின் மகுடத்தை தருமன் அணிந்து குரு நாட்டின் மன்னரானர். திருதராஷ்டிரன் மகன் யுயுத்சு, அத்தினாபுரத்திற்கு அடங்கிய இந்திரப்பிரஸ்தம் நாட்டின் மன்னராக நியமிக்கப்பட்டான். கர்ணன் மகன் விருச்சகேது அருச்சுனனின் அரவணைப்பில் இருந்தான்.

துரோணர் வசமிருந்த பாஞ்சால நாட்டின் பாதிப்பகுதி, மீண்டும் பாஞ்சாலர்களுக்கே திருப்பி வழங்கப்பட்டது.

அங்க நாடு, சேதி நாடு, காந்தார நாடு, கலிங்க நாடு, ஆந்திர நாடு, கோசல நாடு, மதுரா, மகதம், மத்ஸ்ய நாடு, காஷ்மீரம், பாஞ்சாலம், சிந்து நாடு, திரிகர்த்த நாடு, விராட நாடு மற்றும் இதர நாடுகளின் மன்னர்கள் குருச்சேத்திரப் போரில் வீரமரணம் அடைந்தபடியால், அந்நாடுகளுக்குப் புதிய மன்னர்கள் நியமிக்கப்பட்டனர்.

திருதராட்டிரன்காந்தாரி மற்றும் குந்தி அத்தினாபுரத்தை விட்டு காடுறை வாழ்வு (வானப்பிரஸ்தம்) மேற்கொண்டனர்.

தருமன் மற்ற பாண்டவர்களின் துணையுடன் அசுவமேத யாகம் செய்து முடித்தார். அத்தினாபுரத்தை 36 ஆண்டுகள் தருமன் ஆண்ட பின் அருச்சுனன்-சுபத்திரை ஆகியவர்களின் பேரனும், அபிமன்யுஉத்தரை இணையரின் மகனுமான பரீட்சித்துவை அத்தினாபுரத்தின் அரசனாக்கினர்.

பிறகு பாண்டவர்-தருமன், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் மற்றும் திரெளபதியுடன் கையிலை நோக்கி தவம் இயற்ற பயணித்தனர். பயணத்தில் தருமன் தவிர மற்றவர்கள் ஒருவர் பின் ஒருவராக இறந்தனர். தருமனை, எமதர்மராசன் வரவேற்று சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றார்.

இதையும் காண்க

உசாத்துணை




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக