ராதே கிருஷ்ணா 13-09-2023
ஆர்த்தி ஹவுஸ்
1. ஷ்ரவன் ஸ்ரீமன் பள்ளிக்குச் செல்ல தயாரானார்கள். ஸ்ரீமன் 7 மணிக்கு எழுந்து 7:30 மணிக்கு கிளம்பி விடுவான். ஷ்ரவன் சிறிது லேட்டாகி கிளம்புவன். ஸ்ரீமன் பஸ் கிளம்பும் இடம் சென்று விடுவான். சுரேஷ் ஷ்ராவனை திட்ட ஆரம்பித்து விடுவார் . ஆரம்பமே கோபமாகி விடுவார். ஆர்த்தி சுரேஷை திட்டவேண்டாம் என்பார். இருவருக்கும் வாக்குவாதம் அதிகம் ஆகும்.
சுரேஷ் கோவத்தில் நான் 3 வருஷங்களாக பார்க்கிறேன், அவன் மாறுவதாக இல்லை, நான் தான் மாறவேண்டும். இது எப்படி ஞாயமாகும். அவசரத்தில் போனால் வரும் வண்டியில் ஆதி பட்டால் அவ்வளவு தான், பொய் பெறவேண்டியது தான். இப்படியாக வசை பாடுவார்.
அன்று நான் ஷ்ராவனிடம் நாளை நான் காலையில் எழுப்புகிறேன் என்றேன், இல்லை தாத்தா நானே எழுந்துவிடுவேன். எத்தனை மணிக்கு எழுப்பவேண்டும் என்று கேட்டு 6 மணிக்கு எழுப்புகிறேன்.
மறுநாள் காலையில் 6 மணிக்கு எழுப்பி விட்டேன், சரி என்று படுத்தான். 6:30 மணிக்கு எழுப்பினேன். சரியாக கீழே இறங்கி ஸ்கூல் சென்றான். ஆர்த்தி புன்சிரிப்பு சிரித்தாள். ஆர்த்திஇடம் நான் கேட்டேன், நம் தான் எழுப்பிவிடவேண்டும் . ஒரு நாளாவது செய்தீர்களா , இல்லை. ஆர்த்தி சுரேஷிடம் கேட்டாள், எத்தனை பேர் மக்களை அழைத்துச் சென்றிருக்கிறார்கள், நம் தான் செய்யவேண்டும் என்றள்.
2. இன்று காலை 13-09-2023 சுரேஷ் கோவமாக அவனது பையை கீழே போட்டு, உனக்காக வாங்கியது, அதை வேண்டாம் என்றால் அப்பொழுதே சொல்லியிருந்தால் திருப்பி கொடுத்திருக்கலாம். அது சொல்லாமல் குப்பைத்தொட்டியில் போடுவது போல் காரில் போட்டுவிட்டாய். ஷ்ரவன் அந்த பையை வேண்டாம் என்று சொல்லி அமைதியாக இருந்துவிட்டான் . சுரேஷ் அவனை வாசி பாடிக்கொண்டிருந்தார். ஆர்த்திக்கு அவர் அது மாதிரி வசை பாடுவது பிடிக்கவில்லை. தினமு பள்ளிக்குச் செல்லும்போது திட்டாதீர்கள் என்றாள் , அது பிடிக்கவில்லை.
பிறகு ஸ்ரீமன்னிடம் துணிகள் துவைத்து 3 நாட்கள் ஆகிறது, உங்களது துணிகளை எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும், ஏன் செய்யவில்லை என்ற வசை பாடினார். சிறுவர்களை தினம் இப்படி நடந்துகொண்டால் அவர்கள் மனது புண்படு. அவர்கள் இது அப்பாவிடம் பழக்கமாகி விட்டது என்கிறார்கள்.
நான் சொல்வது முதலில் கோவத்தை விடவேண்டும், கோவத்தில் என்ன பேசுகிறோம் என்பது தெரியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக