வெள்ளி, 31 ஜூலை, 2020

பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம் சுந்தரகணடம்

ராதே கிருஷ்ணா 01-08-2020


பெரியவாச்சான் பிள்ளை வ்யாக்யானம்  சுந்தரகணடம்

உங்களது உபன்யாசங்களை கேட்பவர்களின் அடியேனும் ஒருவன், அதிலிருந்து எடுத்த சில விஷயங்களை கூறியுள்ளேன். தவறிருந்தால் அது என்னுடையது, ஏதாவது உபயோகமிருந்தால் அது குருவையே சேரும்.

நன்றி ராம் ராம் 
சுந்தரகாண்டத்தில் சீதை ஒரு துரும்பைப்போட்டு தனக்கும் ராவணனுக்கும் நடுவில் போட்டு பேசும் உரையாடல் அர்த்தத்தை விளக்குகிறார் பெரியவாச்சான்பிள்ளை ஸ்வாமிகள்.

அதற்க்கு 26 விளக்கங்களைக் கூறுகிறார்.

1. நண்பர்கள் (அ) அதிதி வந்தால் அவரை வரவேற்க ஆசனம் அர்க்கியம் கொடுத்து வரவேற்பது போல துரும்பைப்போட்ட்டாள்.

2. நமக்கு வேண்டாதவர்கள் (அ) கெட்டவர்கள் வந்தால் அவர்களை அபசரிப்பது போல் புல் துரும்பைப்போட்டாள்.

3. கெட்டவனாக இராவணன் வந்ததால் (கெட்டவர்களுடன் பேச விருப்பம் இல்லாததால்) தடுப்பு சுவர் போல் துரும்பைப்போட்டு அதனுடன் பேசினாள்.
(ராவணனைப்பார்க்க விருப்பம் இல்லாததால்)

4. பெண்களை பர புருஷனை விரும்பமாட்டார்கள். இராவணன் கெட்டவன்னாததால் அவனைப்பார்க்க விருப்பம் இல்லாது துரும்பிடம் பேசுவது போல் இருக்க புல்லைப்போட்டாள்.

5. கபந்தம், விபீஷணன் போன்றவர்கள் உனக்கு உபதேசம் செய்தவர்கள். இருந்தும் அதற்க்கு உடன்படாமல் அன்னை இப்படி சித்தரவதை செயகிறாய்.. அதனால் நீ புல்லைப்போன்றவன் அன்று புல்லைப்போட்டாள்.

6. சீதை மஹாலக்ஷ்மி போன்றவள், அசேதனங்கள் , சேதனங்கள் ஏதுவாகியிருந்தாலும் ரக்ஷிக்கக்கூடியவளான சீதை புல்லையும் கடாக்ஷிக்கிறாள்.

7. ஒரு புல்லையும் சக்தி மிகுந்த ஆயுதமாகக்கொண்டு அழிக்கும் வல்லமை படைத்தவள் என்று உணர்த்த புல்லைப்போட்டு பேசுகிறாள்.

8. அறிவற்ற நீ ஒரு புல்லைப்போன்றவன் அன்று உணர்த்த புல்லைப்போட்டுப்பேசினாள்.

9.    புல்லை மனதில் வைத்து, ராவணனை ஒரு புல்லாகக்கூட நினைக்காததால் அவனிடம் பேப்பேச விருப்பம் இல்லாமல் புள்ளைப்பார்த்துப் பேசினாள்.

10. ஞானம் இல்லாத மனிதனை மிருகம் அன்பர்கள். பசு என்பது மிருகம். பசு புல்லைத்தான் திண்ணும். அதனால் புல்லை அவன் முன் போட்டுப்பேசினாள்.

11. ராமனை யானை என்றும் ராவணனை ஒரு முயல்  என்றும் ஒப்பிட்டு , யானையிடம் முயல் போரிட முடியாது. அதனால் முயல் புல்லைச்சாப்பிடும், அதுபோல் நீயும் புள்ளைச்சாப்பிடு என்பது போல் புல்லைப்போட்டு பேசினாள்.

12. ராவணா நீ எனக்கு ஒரு புல்லுக்கு சமம் என்பது போல் புல்லைப்போட்டு பேசினாள்.

13. நீ எப்படியாகிலும் என்னை அடைய நினைத்தால் அக்கணமே புல்லைப்போல் என் தேகத்தை விட்டுவிடுவேன்.

14.. தப்பான செயல் செய்வதினால் உன் இலங்கை நகரம் முழுவதும் அழிந்து போகும். இந்தப்புல் கொண்டு குடிசை கட்டி வாழ்வேன் என்பதைக்காட்ட புல்லை வைத்து பேசினாள்.

15.  இது போன்ற தவறான செயல் செய்யாமல், தவறான எண்ணம் விட்டு ராமனை சரணம் அடைந்தால் ராமன் உன்னை மன்னித்து அருள் புரிவான்.

16. ராமனுடன் நட்பு கொண்டால் ராமன் சரணாகதவத்சலன் அவன் அடைக்கலம் கொடுப்பான் என்று புல்லைப்பார்த்துச் சொன்னாள்.

17. அப்பா அம்மாபோன்றவர்களிடம் பிள்ளைகள் வணங்குவதுபோல் வணங்கி எங்களிடம் காமம் கொள்ளாதே என்று புல்லைப்போன்றவனிடம் கூறினாள்.

18. ராமனை நண்பனாகப்பெற்று இந்தப்[புல்லைக்கவ்வி ராமன் திருவடி சேர்ந்தால், ராமன் மன்னித்து அருளுவான்.

19. தூணிலிருந்து வந்த நரசிம்மனைப்போல் இருக்கும் ராமனிடம் அடைக்கலம் சென்று விடு, அதை விடுத்து ராமன் பாவத்தை எதிர்கொள்ளாதே. 

20. தாழ்ந்த உள்ளம் கொண்டவனே , உன் செயலால் நீ அழிவாய் என்று புல்லும் மண்ணாங்கட்டி மீது சத்யம் செய்வது போல் பேசினாள்.

21. துரும்பைக்கிள்ளி எறிவது போல் உன்னைக்கிள்ள எனக்கு எவ்வளவு பேரம் ஆகும் அன்று கூறினாள்.

22. வாமனாவதாரத்தில் சுக்கிராச்சாரியாரின் கண்ணை ஒரு துரும்பால் பகவான் கிள்ளினான், அது போல் உன்னை இந்தப்புல்லால் கிள்ள வைக்காதே.

23. நர நாராயணன் ஒரு புல்லை வைத்து அசுரனைக்கொன்றான், அதுபோல் ராமன் உன்னைக்கொன்றுவிடுவான்.

24.  புல்லை ப்ரஹ்மாஸ்திரம் ஆக்கியவர் அந்த ராமன், இதை மறந்துவிடாதே என்று கூறினாள். (காகாசுரன் சீதையை துன்புறுத்தியபோது ராமன் துரும்பை ப்ரஹ்மாஸ்திரம் ஆக்கி செலுத்தினான், அந்த காகத்தை அஸ்திரம் துரத்த அது மூவுலகிலும் சென்று இறுதியில் ராமனிடம் சரணடைந்தது.)

25, உன்னை என் கற்பு நெருப்பு மூட்டி அதற்குள் விழச்செய்யமுடியும் அதா மறந்து விடாதே.

26. சேதனனாகிய உன்னை இந்தத்துரும்மபிக்கிள்ளுவதுபோல் கிள்ளி எறிந்துவிடுவேன்.

இது போல் பலவாறாகக்கூறினாள், இந்த புனிதவதி சீதா தேவி என்று தனது வ்யக்க்யானத்தில் பெரியவாச்சான்பிள்ளை விளக்கங்கள் சொல்லியிருக்கிறார்.

இதை எங்களது வகுளாபரண தாசன்  தந்து ஸ்ரீ ராமாயண ப்ரவசனத்தில் அற்புதமானவற்றை விவரித்த்துக்கூறினார்.

நன்றி :  வகுளாபரண தாசன் அவர்களே. 

ராம் ராம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக