திங்கள், 25 மே, 2020

பாகவதம் 3 வது ஸ்கந்தம் கபிலர் உபதேசங்கள்

ராதே கிருஷ்ணா 25-05-2020


பாகவதம் 3 வது ஸ்கந்தம் கபிலர் உபதேசங்கள்

பாகவதம் 3 வது ஸ்கந்தம் அத்யாயம் 25 முதல் 33 வரை

கபிலர் உபதேசங்கள் கூறுவது.

பக்தி என்பது மனிதனால், பேச்சினால், செயலினால் ஒன்றி செய்வது.

1. நமது வர்ணாஸ்ரம விதிமுறைகளை செய்வது

2. நித்யம் தேவரு  பூஜா செய்வது

3. எந்த ஜீவராசிகளுக்கும் மனிதனால், பேச்சினால், செயலினால் ஹிம்சை செய்யாதிருத்தல்

4. பகவான் திருமேனியை பார்த்து பார்த்து ரசித்து மகிழ்வது

5. எந்த ஜீவராசிகளையும் என்னை (பகவானை) பார்க்கிறமாதிரி பார்த்து

    நல்லது செய்வது

6. மனதில் வைராக்கியத்துடன் இருத்தல்

7. தைரியமாக இருத்தல்

8. சான்றோரை மதிப்பது, யாரையும் அவமானப்படுத்தக்கூடாது, புண்படும்படி மனதினால் கூட நினைப்பதோ, பேசுவதோ, செயலினால் செய்வதோ கூடாது

9. யார் கஷ்டப்பட்டாலும் உடனே சென்று உதவி செய்வது

10. நமக்கு சமமானவரிடம் நட்பு கொள்ளவேண்டும்

11. வெளிபுலன்களை அடக்கவேண்டும் (ஐம்புலன்கள் மற்றும் கர்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள் )

12. ஆத்மாத்மிக  (ஆத்மா விஷயம் பற்றியவற்றை எப்போதும் கேட்டு அறிந்துகொள்ளவேண்டும்)

13. திவ்ய நாமங்களை எப்போதும் பாடவேண்டும், உரைக்கவேண்டும், நினைக்கவேண்டும்

14. உண்மையாக இருக்கவேண்டும்

15.  சத்துக்களோடு கூடி இருக்கவேண்டும்

16.  அஹங்காரம் தொலைந்து வாழவேண்டும்

1.kapilar upadesangal as attachment
2. பாகவதம் 12 வது ஸ்கந்தம் 13 வது அத்யாயம் பூர்ண பாகவத புராணம் பற்றியது (consolidated bhagavatham as attachments)






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக