"
ஸ்ரீமத் பாகவதம்" - இது ஸ்ரீ வேத வியாசரால் இயற்றப்பட்ட பதினெட்டு புராணங்களில் ஒன்று. ஐந்தாவது வேதமான மஹாபாரதத்தின் தொடர்ச்சியாக இந்த புராணக் கதை ஆரம்பிக்கின்றது. இந்த புராணத்தில் 12 ஸ்கந்தங்களும், 18,000 ஸ்லோகங்களும் உள்ளன.
திருவண்ணாமலையில் இறைவன் மலையாய் இருக்கிறார் என்று கேள்வியுற்றிருப்போம்.
நைமிஷாரண்யத்தில் இறைவன் காடாக இருக்கிறார்.
புஷ்கரம் என்னும் புண்ணிய தல த்தில் இறைவனே ஏரியாக இருந்து அனைவரின் ஸம்ஸார தாகத்தையும் தணிக்கிறார்.
மரங்களில் அரசமரமாக வீற்றிருக்கிறார்.
அதுபோல்,
புத்தகங்களில் ஸ்ரீமத்பாகவதமாக இறைவன் இருக்கிறார்.
"श्रीमद्भागवताख्योयं प्रत्यक्ष: कृष्ण एव हि" - "ஸ்ரீமத் பாகவதாக்யேயாம் ப்ரத்யக்ஷ: க்ருஷ்ண ஏவ ஹி" என்பது பாகவத மாஹாத்ம்யத்தில் இருக்கும் ஒரு ஸ்லோகம்.
ஸ்ரீமத்பாகவதத்தின் உருவில் ப்ரத்யக்ஷமாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே இருக்கிறார்.
இந்த பாகவதத்திற்கு ஒரு
தனிச் சிறப்பு உண்டு.
புராணம் என்றால் படிப்பார்கள், சொல்லுவார்கள், பிறர் சொல்லக் கேட்பார்கள்.
யாரவது பருகினார்கள், அருந்தினார்கள், சுவைத்தார்கள் என்றெல்லாம் எண்ணிப் பார்க்க முடியுமா?
ஆனால்
இந்த புராணத்தைப் பருக முடியும், அதுவும் காது வழியாக.
தேனினும் இனிய பகவானின் குணங்களை, லீலைகளைக் சொல்லும் நூல், சொல்பவர்களுக்கு, கேட்பவர்களுக்கு, படிப்பவர்களுக்கு, என அனைவருக்கும் இனிமையை வாரி வழங்கும்.
ஸ்ரீவேதவ்யாஸர் ஸ்ரீமத்பாகவதத்தை வேதம் என்ற மரத்தில் பழுத்த பழம் என்கிறார்.
அந்த பழத்தை ஸ்ரீசுகர் என்னும் முனிவர், கிளி வடிவில் கொத்தி சுவைத்து நமக்காக அருளியுள்ளார்.
கிளி வாயிலிருந்து நழுவி விழுந்த அந்த பழத்தை, பல்வேறு மஹான்கள் சுவைத்து நமக்குப் புரியும்படி அருள்கின்றனர்.அவ்வகையில் எனது குருநாதரான மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி அவர்கள் சொல்லிக் கேட்ட கதைகளை, என்னால் இயன்றவரை ஒரு தொகுப்பாக, குருவருளால் இங்கு வழங்குகிறேன்.
சுகமுனி எனும் கிளி கொத்திக்கொடுத்த பழத்தைப் பருக அனைவரும் வருக!!
-ஹரிப்ரியா
ஸ்ரீமத்பாகவத பழங்களைச் சுவைக்க இங்கே அழுத்தவும்...
Original website:
பதிலளிநீக்குhttps://yashodhashishu.blogspot.com/p/blog-page.html?m=1