ராதே கிருஷ்ணா 30-06-2020
குருகோவிந்தவிட்டலதாசர்
தாசரின் 25ம் ஆண்டு ஆராதனையின்போது எழுதப்பட்ட கட்டுரை
கன்னடத்தில்: ஹரதி பிரகலாதாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்.
***
ஜெய் பஸ்சிம ரங்கா
ஜெய் பாரதீஷா
ஜெய் வாதிராஜார்ப்பணமஸ்து
***
தாஸ சதுஷ்டயரு
***
***
விஜயதாசர்
கோபாலதாசர்:
***
வேணுகோபாலவிட்டல தாசர்
ஜகன்னாத தாசர்
ஆசாரியர் எம்புவர இவர நோடி
ஆசார பல்லவரே ஆசாரியரு (ஆசாரியர்)
ஆ எந்தரே அதி தத்வவ திளிதவரு
ஆதுளித மதத்வம்ஸ மாடுவரு
அதிதி அப்யைகதரிகே அன்னவன்னே எக்குவரு
ஆயுத வ்ருத்தியன்னே மாடுவரு (ஆசாரியர்)
ச எந்தரே சாஞ்சலாத்மவன்னே அளிதவரு
சென்னாகி வேத சாஸ்திரவன்னே ஓதிதவரு
சலனே இல்லதே குருஹிரியரிகே எரகுவரு
சானஸ பிட்டவரு ஆசாரியரு (ஆசாரியர்)
ரு எந்தரே ருணவ மாடதித்தவரு
ரிபுமித்ர சமரெந்து காம்புவரு
காவ்ய சௌவர்ணவு ம்ருத்திகெயெந்து நோடுவரு
ரமாதவ புரந்தர விட்டலன பல்லவரே ஆசாரியரு (ஆசாரியர்)
1. ஹரிகதாம்ருதசார - பாமினி ஷட்பதி என்கிற செய்யுள் வகையில் எழுதியது
2. தத்வ சுவ்வாலி - 1200 பத்யங்களால் ஆனது
3. பலவிது பாளுதக்கே என்ற பாடல்
4. நரசிம்ம சூளாதி, மற்றும் பல பாடல்கள் & சூளாதிகள்
தடி தோடி நிபகாயோ
ஜகன்னாதவிட்டலனய்யா விட்டலனய்யா
நீ கருணிசதே நிராகரிசலு என்ன சாகுவர் யாரோ
தயபாரா மூர்த்தே
விட்டலய்யா விட்டலய்யா
மேற்கண்ட பாடலைப் பாடத்துவங்கினார்.
தத்வ சுவ்வாலி
துளசி ஸ்தோத்ரம்
விருந்தாவனி ஜனனி வந்திசுவே சததஜ
லந்தரன ராணி கல்யாணி
கல்யாணி ஸ்ரீ துளசி
மந்திரெ எனகே தயவாகே
ஸ்ரீ துளசி தேவி மன்னாத லாலிசு
ஜகன்னாத விட்டலன்ன சரண
ஜகன்னாத விட்டலன்ன சரணாப்ஜ ஹ்ருதயாதி
நீதோரி நித்ய கிருபெயிந்த
துரிதவன குடாரி துர்ஜன குலவைரி
சரணாகத வஜ்ரபஞ்சர குஞ்ஜர
மந்த்ர துல்யவாத ந்ருஸிம்ஹ சூளாதி
அனேக ஈப்சித கொடுவந்தத்தாகிதே
பலவிது பாளுதக்கே
சிரி நிலயன குணகள திளிது பஜிசுவுதே
சோசித கர்மகள ஆசரிசுதபலு நீசரல்லிகே போகி யாசிசதே
கேசரவாஹ சராசர பந்தக மோசக நஹுதெந்து யோசிசுதிப்புதே (பலவிது)
நிச்ச சுபகுதிய அச்யுதலங்க்ரி களர்ச்சிஸி மெச்சிஸி தெச்சரதி
துச்ச விஷயகள இச்சைசதே யெத்ருச்சா லாபதிம் ப்ரோச்சனாகுவுதே (பலவிது)
பிகித கண்டதிம் த்ருக்பாஷ்பகளிம்
நகெமொகதிம் ரோமகளொளிது
மிகெ சந்தோஷதிம் நெகெதாடுத
நான்முகன அய்யன பொகளி ஹிக்குவுதே (பலவிது)
பன்னகாசல சுசன்னிவாச பாவன சரித சத்குண பரித
ஜன்யஜனக லாவண்யனேக நிதி ஜகன்னாத விட்டலா நான்யப நெம்புதே (பலவிது)
ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து.
***
Guru Govinda vittala Dasaru
Article published during the 25th Aradhana of Dasaru (2007)
In Kannada: Harati G Prahlad
Translated in English: T.M.Vishwa Janani
Verified by: T.V.Sathya Narayanan
***
***
Tuesday, August 22, 2017
குருகோவிந்தவிட்டலதாசர்
குருகோவிந்தவிட்டலதாசர்
தாசரின் 25ம் ஆண்டு ஆராதனையின்போது எழுதப்பட்ட கட்டுரை
கன்னடத்தில்: ஹரதி பிரகலாதாச்சார்
தமிழில்: T.V.சத்ய நாராயணன்.
***
நான் பார்த்தவரையில், தன்னலமற்ற மிகச்சிறந்த ஹரிதாசர் என்றால் அவர் மைசூரின் ஸ்ரீகுருகோவிந்தவிட்டலதாசர்தான் என்று சொல்வேன். 1975-76ம் ஆண்டுவாக்கில் நான் அவரைச் சந்தித்ததே ஒரு ஆச்சரியமான சம்பவம்தான். மைசூரில் பள்ளால் சர்க்கிள் அருகே வசித்து வந்த அவரைச் சந்திக்கப் போனால், யாருக்குமே அவரின் இல்லம்/விலாசம் தெரியவில்லை. அன்றிரவு அவரைப் பார்க்கமுடியாமல், மறு நாள் காலை மறுபடியும் தேடிச் சென்றேன். அப்படியும் அவரது இல்லம் கிடைக்காததால், சரி, இதுவே ஸ்ரீஹரியின் சித்தம் என்றெண்ணி, அங்கிருந்து புறப்பட்டு சேஷசந்திரிகாச்சாரியரின் ஆராதனைக்கு டி. நரசிப்புர் செல்லலாம் என்று புறப்பட்டேன்.
அப்போது அங்கு ஒரு வயதான ஸ்மார்த்த பிராமணர் தன் பேரனுடன் என்னை நோக்கி வந்துகொண்டிருந்தார். சாட்சாத் ருத்ரதேவரைப் போலவே அவர் எனக்குத் தெரிந்தார். அவரிடம் விலாசம் கேட்கலாம் என்றெண்ணி கேட்டேன். தானும் தாசர் வீட்டு வழியேதான் போகிறேன், நீங்களும் வாருங்கள் என்று என்னைக் கூட்டிச் சென்றார். ஒரு ஆட்டோ பிடித்துப் போனோம். சரியாக தாசர் வீட்டு வாசலில் நிறுத்தினார். நான் ஆட்டோக்கு பணம் கொடுத்துவிட்டுத் திரும்புவதற்குள், அந்த முதியவரைக் காணவில்லை.
வீட்டினுள் சென்று, குருகோவிந்தவிட்டலதாசரை சந்தித்து அவரிடம் ஆசி பெற்றேன். என் நலத்தை விசாரித்தார். அன்றிலிருந்து அவரிடம் கடிதத் தொடர்பில் இருந்தேன். பின்னர் அவரிடம் கிருஷ்ண மந்திர உபதேசத்தையும் பெற்றேன்.
தேவதேவதைகள், யதிகள் மற்றும் ஹரிதாசர்களைப் பற்றி சுமார் 800 பாடல்கள் இயற்றியுள்ளார் தாசர். இதைத் தவிர 265 பேர்களுக்கு அங்கிதம் கொடுத்து, அதற்கான பாடல்களையும் இயற்றியுள்ளார். ஆக இதையும் சேர்த்தால், மொத்தம் 1000 பாடல்களுக்கு மேல் அவர் இயற்றினார் எனக் கொள்ளலாம்.
இதைத் தவிர, நதி ஸ்தோத்ரம், குசேலோபாக்கியானம், அன்னபிரம்மா, ஆத்யாத்மிக வெங்கடேச கல்யாணம் மற்றும் கன்னடத்தில் ஷட்பதியில் தசோபனிஷத் ஆகியவற்றையும் இயற்றியுள்ளார். ஸ்ரீமத்வரிலிருந்து துவங்கி 20ம் நூற்றாண்டு வரை யாருமே இந்த அளவிற்கு வேலைகளைச் செய்ததில்லை என்று கூறலாம். தம் சிஷ்யர்களுக்கு ஏதேனும் இன்னல் வந்தால், அவர்களுக்காக சிறப்புப் பாடல் எழுதி, தீர்வுக்காக ஸ்ரீஹரியை வேண்டுவார். 7 பாகங்களைக் கொண்ட ஹரிபக்தி விஜய என்னும் நூலில் உலகத்திற்குத் தெரியாத பல ஹரிபக்தர்களை அறிமுகப்படுத்தினார். மேலும் சுந்தரகாண்டம், ராமாயணம், ஐ.ஜி. ஸ்வாமிகளின் மானஸ ஸ்ம்ருதி ஆகியவற்றை கன்னடத்தில் மொழிபெயர்த்துள்ளார். இந்தியா முழுவதும் சுற்றி வந்து, தீர்த்தயாத்திரை செய்ததால், தீர்த்தக்ஷேத்ர மாலா என்னும் 96 பத்யங்களைக் கொண்ட நூல் ஒன்றை எழுதியுள்ளார்.
தன் அனைத்து புத்தகங்களிலும், தத்வாபிமானி தேவதைகள் மற்றும் ருத்ராங்கர்கத பாரதிரமண முக்யபிராணார்ந்தர்கத ஸ்ரீஹரிக்கு நன்றி தெரிவித்துள்ளார். தத்வாபிமானி தேவைதைகளின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையை இது காட்டுகிறது. மேலும், அவரின் புத்தகங்களை அந்த ஸ்ரீஹரியேதான் எழுதுகிறான், தான் ஒன்றுமே செய்யவில்லை என்றும் கூறுகிறார்.
தன் சிஷ்யர்களுக்கு அங்கிதம் வழங்குவதற்கு ஒரு தனிப்பட்ட முறையைக் கடைப்பிடித்தார். சிலரை தாமாகவே அழைத்து அங்கிதம் வழங்கினார். வேறு சிலருக்கு, அவர்கள் ஸ்ரீஹரிக்கு சேவை வழங்க வேண்டி அங்கிதம் அளித்தார். அங்கிதம் கொடுக்கும் முன்பு, ஸ்ரீஹரியை வணங்குவார். அங்கிதம் கொடுப்பவர் & அங்கிதம் வாங்குபவர், இருவருக்கும் நல்ல ஒரு கனவு (கனவில் ஸ்ரீஹரி) வரும்வரை காத்திருப்பார். பின், பிம்பரூபி பரமாத்மாவை வணங்கி, சிஷ்யருக்கு அங்கிதம் கொடுப்பார். பிராமணர்கள் அல்லாத பலருக்கும்கூட தாசர் அங்கிதம் கொடுத்துள்ளார். இப்படிச் சொல்வதால், அவர் போவோர் வருவோர் அனைவருக்கும் அங்கிதம் கொடுத்துவிட்டதாக பொருள் கொள்ளக்கூடாது.
தம் சிஷ்யர்களிடத்தில் மிகுந்த அன்பும் கவனமும் செலுத்திவந்தார் தாசர். மிகவும் முதுமை நிலை அடைந்திருந்தாலும், யார் எந்த விழாவிற்கு அழைத்தாலும், எவ்வளவு தூரம் இருந்தாலும், தவறாமல் அங்கு போய் அவர்களை வாழ்த்திவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒரு முறை, ஒரு பெண்மணி தனக்கு அங்கிதம் வழங்குமாறு அவரது இன்னொரு சிஷ்யை மூலமாக தாசரிடம் வந்தார். அவரிடம் சில கேள்விகளைக் கேட்ட தாசர், அவருக்கு ஸ்ரீஹரியின் கனவு வந்தபிறகு வருமாறு சொல்லி அனுப்பிவிட்டார். 4-5 ஆண்டுகள் ஸ்ரீஹரியை வேண்டியும், சரியான கனவு வராததால், அவர் தாசரின் சிஷ்யையிடம் சென்று வேண்டினார். அவரும் தாசரிடம் இதைச் சொல்லி, அவருக்குப் பதிலாக தான் ஸ்ரீஹரி சேவை செய்யலாமா எனக் கேட்டார். தாசரும் சரி எனச் சொல்ல, சிஷ்யையும் சேவை செய்யத் துவங்கினார். அடுத்த 10-12 நாட்களிலேயே அவருக்கு தகுந்த கனவு வந்துவிட்டது. ஒருவரின் சேவை, அடுத்தவருக்காக (அங்கிதம் வாங்குவதற்காக) பயன்படுகிறது என்கிற இந்த நல்ல சம்பவத்தைக் கேட்டாலே மகிழ்ச்சி வருகிறதல்லவா? இதைப் போல, சில வேறு சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.
தாசர் எங்கும் அதிகம் பேசுபவரில்லை. பெங்களூரில் தாசருக்கு ஒரு விழா எடுத்தபோது, நாங்களும் அங்கு இருந்தோம். அப்போது அவரிடம் ‘மைக்’ கொடுத்து பேசச் சொன்னார்கள். தனக்குப் பதிலாக தன் சிஷ்யர்களில் ஒருவர் பேசுவார் என்று கூறிவிட்டார் தாசர். தன்னை எப்போதும் முன்னிலைப்படுத்தியதில்லை என்பது இதிலிருந்தே தெரிகிறது.
அகில பாரத ஹரிதாச சம்மேளன் நடத்தும் விழாக்களில் அனைத்திலும் கலந்து கொண்டு, பல ஆண்டுகள் புரந்தரதாசர் ஆராதனையை மிகச்சிறப்பாக நடத்தினார். ’யாயிவாரவ மாடி விப்ரரிகெ ம்ருஷ்டான்ன, ப்ரியதலி தானொந்து கொடத லோபி’ - புரந்தரதாசரைக் குறித்து வியாசராஜர் எழுதிய இந்தப் பாடலை மனதில் கொண்டு - இந்த உலகத்திற்கு பல ரத்தினங்களைக் (சிஷ்யர்கள், பாடல்கள்) கொடுத்து, பலருக்கும் ஊக்கமாகத் திகழும் இவரை - அபினவ புரந்தரதாசர் என்று அழைத்தாலும் மிகையில்லை.
ஒரு விஷயம் செய்யவேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், அதை கண்டிப்பாகச் செய்தே ஆகவேண்டும் என்ற பிடிவாத குணம் கொண்டவர் தாசர். திருப்பதி மற்றும் பண்டரிபுரத்தில், புரந்தரதாசர் ஆராதனை செய்யும்போது நடந்த சம்பவங்களே இதற்கு உதாரணம்.
ஒரு முறை கோதாவரி நதிக்கரையில், கற்றறிந்தவர்கள் உதவியுடன் பிருஹதி சஹஸ்ர ஹோமம் நடத்த தாசர் முடிவு செய்தார். ஹோமத்திற்கு தேவையான செங்கல்களை தாமே மந்திரங்களை சொல்லியவாறு சுட்டு, அதை ஹோமம் செய்யும் இடத்திற்கு கொண்டு வரச்செய்து, அதுவரை நடந்திறாத வகையில் பிருஹதி சஹஸ்ர ஹோமத்தை சிறப்பாக நடத்திக் காட்டினார். ஹோமம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பிராமணர் அல்லாத ஒரு தெலுங்கர் எழுந்து, அந்த ஸ்ரீஹரியே நம் அனைவரையும் வாழ்த்த இங்கு வந்துவிட்டார் என்று கூறினார். திடீரென்று எழுந்து - குதிரையின் மேலேறி (கல்கி அவதாரம்) அந்த ஸ்ரீஹரி வந்துவிட்டான் - அனைவரும் அவனைப் பாருங்கள் என்று கத்தினார்.
ஸ்ரீவாதிராஜரின் சிறப்பு அனுக்கிரகத்தை தாசர் பெற்றிருந்தார். ஸ்வப்னவிருந்தாவனாக்யான என்னும் புத்தகத்தை வெளியிடும் நிகழ்ச்சி மற்றும் ஹோமத்தில் இது கண்கூடாகத் தெரிந்தது. தன் 89ம் வயது வரை, தன்னை ஸ்ரீஹரியிடம் முழுவதுமாக ஒப்படைத்த தாசர், 1983ம் ஆண்டு மார்கசீர்ஷ பகுள த்வாதசியன்று, அனந்தபுரத்தில் இறைவனடி சேர்ந்தார். அந்த ஒப்பற்ற தாசரை நான் சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்.
ஸ்ரீவாதிராஜரின் அத்யந்த பக்தராகத் திகழ்ந்த தாசர், சொண்டாவில் கடினமான பயோ விரதம் மேற்கொண்டார். தன் அல்லது தன் சிஷ்யர்களின் வாழ்க்கையில் எந்தவித கஷ்டங்கள் வந்தாலும், ஸ்ரீவாதிராஜருக்கு சேவை செய்து, அதற்கான தீர்வு கிடைக்கும்வரை அடுத்த வேலையைத் துவங்க மாட்டார். அவரின் பக்தியை இந்த மாதிரி செயல்களே சொல்கின்றன.
1983ம் ஆண்டு புரந்தரதாசரின் ஆராதனை, ஸ்வாதியில் (சொண்டா) கொண்டாப்படுவதற்காக மிகச் சிறப்பாக திட்டமிடப்பட்டிருந்தது. தாசரே இந்த விழாவிற்கான அழைப்பிதழை தம் கைப்பட வழங்கியும், அனைத்து வேலைகளையும் மேற்பார்வை பார்த்தும் வந்தது அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. ஆனால் என்ன ஆயிற்று? ஆராதனைக்கு ஒரு மாதம் முன்னதாக, தாசர் தம் இன்னுயிர் நீத்தார். அனைவரும் அதிர்ச்சியில் மூழ்கினாலும், அவர் இருந்திருந்தால் எப்படி கொண்டாடியிருப்பாரோ, அதேபோல் சிறப்பாக அவ்விழாவை கொண்டாடி முடித்தனர் அவரது சிஷ்யர்கள். அவர் நம்மை விட்டு நீங்கி, தற்போது 30 ஆண்டுகள் ஆனாலும், புரந்தரதாசர் ஆராதனை அங்கு மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இவரை நாம் எப்படி ஹரிதாசர் என்று கூப்பிடலாம் என்று யாரேனும் கேட்கலாம். இதற்கான பதில் - அவரது புகைப்படத்தை / தோற்றத்தைப் பார்த்தாலே தெரிந்துவிடும். ஆனால், நாம் அவருடைய படைப்புகளையும் பார்க்கவேண்டும். இவரை மட்டுமல்ல. எந்த ஒரு ஹரிதாசரைப் பற்றி பேச முற்பட்டாலும், முதலில் அவர்களது படைப்புகளைப் பார்க்க வேண்டும். ஏனென்றால், ஆச்சாரியர் மத்வர் சொன்னதுபோல், அவரது அம்சம் சிறிதளவு அவரின் கிரந்தங்களில் இருக்கிறது. இதேபோல்தான், தாசர்களின் அம்சமும் எனக் கொள்ளவேண்டும்.
கெரெய நீரனு கெரெகெ செல்லி - என்று புரந்தரதாசர் சொன்னதுபோல், தாசர் தம் வீட்டையே விட்டலனின் கோயிலாக மாற்றினார். விட்டலின் சிலையை அங்கே நிறுவி, எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்டினார். தாசரினாலேயே, மைசூர், இரண்டாம் பண்டரிபுரம் என்று பெயர் பெற்றது. ’தாசனாகு விசேஷனாகு’ என்ற பாடலுக்கு விசேஷமான உரை எழுதி தம் சிஷ்யர்களை நல்வழிப்படுத்தினார்.
20ம் நூற்றாண்டின் தலைசிறந்த ஹரிதாசர் குருகோவிந்தவிட்டலதாசர் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. எதுவுமே தெரியாத எனக்கு தாசர் மிகவும் கருணை காட்டி, தன் அளவற்ற ஆசியை எனக்கு வழங்கினார். தன் சொந்த வாழ்க்கையில் பல்வேறு தியாகங்களைப் புரிந்தவர். தாசருடனான சந்திப்பு எனக்கு எப்போதும் மகிழ்ச்சியையே தந்தது. ‘பலவிது பாளுதக்கே’ என்ற பாடலின் பொருளே, அவரது வாழ்க்கையின் தத்துவமாக அமைந்தது.
விஜயதாசரின் பரம்பரையில் வந்த தந்தெமுத்துமோகனவிட்டலதாசரின், கடைசி சிஷ்யர்களில் ஒருவர் நம் தாசர். தந்தெமுத்துமோகனவிட்டலதாசர், ஸ்ரீவரவிட்டலதாசர் மற்றும் முத்துமோகனவிட்டலதாசரின் சிஷ்யர் ஆவார். குருகோவிந்தவிட்டலா என்ற அங்கிதத்தைப் பெற்று, ஹரிதாச பரம்பரையில் சேர்ந்தார். ‘ஹரிதாச குலதிலகா’ என்று அழைக்கப்பட்ட தாசர், கர்நாடகத்தில், குறிப்பாக மைசூர் பகுதிகளில் ஹரிதாச சாகித்யத்தையும், தாசகூடா’வையும் பரப்பியதில் மிகவும் முக்கியமானவர். ஹரிதாச பரம்பரையின் ஐந்தாம் கட்டத்தின் முதல் தாசராகக் கருதப்படும் குருகோவிந்தவிட்டலதாசரை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
இவரைப் போல இன்னும் பலர் இவ்வுலகில் பிறந்து நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டுமென்று ஸ்ரீஹரியை வேண்டுகிறேன். இளம் வயதினருக்கு சரியான வழிகாட்டியாக இருந்தவரை மேலும் பலருக்கும் அடையாளம் காட்டவேண்டும் என்பதற்காக இந்த கட்டுரை எழுதப்பட்டது.
ஜெய் பஸ்சிம ரங்கா
ஜெய் பாரதீஷா
ஜெய் வாதிராஜார்ப்பணமஸ்து
***
Sunday, August 20, 2017
தாஸ சதுஷ்டயரு
தாஸ சதுஷ்டயரு
குருகோவிந்தவிட்டலதாசரின் ஆராதனையை முன்னிட்டு, 6th Jan 2008ல் வெளியான புத்தகம்.
கன்னட மூலம் : ஹரதி பிரகலாதாச்சார்
தமிழில் : T.V.சத்ய நாராயணன்
***
ஹரிதாச சாகித்யத்தை Dr.R.S.பஞ்சமுகி, பல பாகங்களாக பிரித்துக் காட்டியிருக்கிறார். Dr.வரதராஜ ராவ் அவர்களுடன் ஆராய்ச்சி செய்து அவர்கள் சொல்லியிருக்கிற விஷயங்கள் நாம் கவனிக்கத்தக்கவை. அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியுடன் இவர்கள் செய்திருக்கிற ஆராய்ச்சிகள் போற்றத்தக்கவை.
இதுவரை வந்துள்ள கருத்துகள்:
1. Dr.R.S.பஞ்சமுகி:
முதல் கட்டம்: நரஹரி தீர்த்தர்
இரண்டாம் கட்டம்: 13 முதல் 16ம் நூற்றாண்டு வரை - யதித்ரயர்கள் மற்றும் புரந்தரதாசர், கனகதாசர்.
மூன்றாம் கட்டம்: விஜயதாசர், மோகனதாசர், கோபாலதாசர், ஜகன்னாததாசர்
நான்காம் கட்டம்: பிராணேஷதாசர், குருபிராணேஷதாசர் ஆகியோர்
2. Dr.H.K.வேதவியாசாச்சார், ஹரிதாச சாகித்யத்தை 4 நிலைகளாகப் பிரித்திருக்கிறார். துவக்கம், வளர்ச்சி, விரிவு மற்றும் சரிவு நிலைகள். ஆனால், வளர்ச்சி, சரிவு ஆகிய சொற்களைப் பயன்படுத்துவது சரியில்லை என்பது பொதுவான கருத்து.
3. Dr.H.திப்பே ருத்ரஸ்வாமி: காலகட்டங்களை நான்கு நிலைகளாக பிரிக்கலாமே தவிர, ஹரிதாச சாகித்யத்தால் விளைந்த சமூக மாற்றங்களைக் கணக்கில் கொண்டால், இங்கிருப்பது ஒரே ஒரு நிலைதான் என்கிறார்.
4. Dr.K.G.சாஸ்திரி அவர்கள் ஹரிதாச சாகித்யத்தில் இருப்பது இரண்டே நிலைதான் என்கிறார். நரஹரி தீர்த்தர் முதல் புரந்தரதாசர் வரை முதல் நிலையும்; விஜயதாசரிடமிருந்து இரண்டாவது நிலையும் துவங்குகிறது என்பது இவர் கருத்து.
5. Dr.K.கோபால்நாத் அவர்களின்படி இதிலிருப்பது மூன்று காலகட்டங்கள். 1. ஸ்ரீபாதராயர் 2. விஜயதாசர் 3.தந்தேமுத்துமோகனவிட்டலதாசர் காலகட்டம்.
அந்தந்த காலகட்டங்களில் இருந்த ஹரிதாசர்களை வைத்தே இப்படி நிலைகளைப் பிரித்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். அந்த காலகட்டங்களுக்கு அவர்களே பிரதிநிதிகளாக இருக்கிறார்கள் எனச் சொல்வது சரியாகுமா? சிந்திப்போம்.
R.S.பஞ்சமுகி மற்றும் Dr.G.வரதராஜ ராவ் அவர்கள், ஸ்ரீ நரஹரி தீர்த்தரை தங்கள் ஆராய்ச்சியில் சேர்க்கவில்லை. ஏனென்றால்:
* தாச சாகித்யம் அவருக்குப் பிறகு தொடரவில்லை
* அவரது சாகித்யம், 20ம் நூற்றாண்டின் சாகித்யத்தை ஒத்திருக்கிறது என்பது சிலரது வாதம்.
ஸ்ரீபாதராயர், ஸ்ரீவியாசராயர் மற்றும் ஸ்ரீவாதிராஜர் - யதித்ரயர்கள் என அழைக்கப்பட்டால், ஸ்ரீபுரந்தரதாசர் மற்றும் கனகதாசரை - தாச-த்வயர்கள் எனச் சொல்லலாம். ஹரிதாச சாகித்யம் என்னும் கங்கை இந்த காலகட்டத்திலிருந்து துவங்கியதால், இவர்கள் ஐவரையும் முதல் நிலை என்று கருதலாம்.
17ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயதாசர், கோபாலதாசர், ஜகன்னாததாசர் ஆகியோர் இரண்டாம் நிலையிலும்; பிராணேஷதாசர் ஆகியோர் மூன்றாம் நிலையிலும் வருகிறார்கள். ஜகன்னாததாசர் - இந்த குரு பரம்பரையில் வருகிறாரா என்பது யோசித்துப் பார்க்கவேண்டிய விஷயம். விஜயதாசரின் சொல்லிற்கேற்ப கோபாலதாசர், இவருக்கு ஆயுள் தானம் கொடுக்கிறார். அங்கிதம் கேட்டபோது, இவரை பண்டரிபுரம் போகச் சொல்கிறார் கோபாலதாசர். அங்கு ஜலாந்தர்யாமி சங்கர்ஷண ரூபி பரமாத்மாவிடமிருந்து அவர் அங்கிதம் பெற்றதாகக் கருதலாம். ஆகவே, ஜகன்னாததாசர், விஜயதாசரிடமிருந்தோ, கோபாலதாசரிடமிருந்தோ அங்கிதம் பெறவில்லை - ஸ்ரீஹரியிடமிருந்தே பெற்றார். ஆகவே, இவர் குருபரம்பரையில் வருவதில்லை. ஆனால், இரண்டாம் நிலையில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
புரந்தரதாசருக்குப் பிறகு, ஏறக்குறைய 150 ஆண்டுகள் சோர்வடைந்திருந்த ஹரிதாஸ சாகித்யம், வட கர்நாடகத்தின் பாகல்கோட் பிரசன்னவேங்கட தாசர், காகிண்டிகி மஹிபதி தாசர் ஆகியோர் வருகையால் மறுபடி வளரத் துவங்கியது. இந்த இருவரும்கூட எந்த குருபரம்பரையிலும் வரவில்லை. எவரின் காலகட்டக் கணக்கிலும் இவர்கள் இல்லை. ஆனால், இவர்களைப் போலவே உள்ள ஜகன்னாததாசர், இரண்டாம் கட்டத்தில் சேர்க்கப்படுகிறார். ஏன்?
மேற்சொன்ன விவாதங்களுக்குப் பிறகு, ஸ்ரீபாதராயர், வியாசராயர், வாதிராஜர், புரந்தரதாசர் மற்றும் கனகதாசர் ஆகியோர் முதல் கட்டத்தில் வருகின்றனர் என்பது ஒப்புக்கொள்ளக் கூடியதே.
குப்தகாமி ஹரிதாசர்கள்: மஹிபதிதாசர், பிரசன்னவேங்கடதாசர் (இவர்கள் இருவரும் தாச-த்வயர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்).
விஜயதாசர், கோபாலதாசர், வேணுகோபாலவிட்டலதாசர் மற்றும் மோகனதாசர் - இரண்டாம் கட்டத்தில் வருகின்றனர்.
ஜகன்னாததாசர், பிராணேஷதாசர் மற்றும் அவரது சிஷ்யர்கள், வியாச விட்டலர் மற்றும் அவரது சிஷ்யர்கள் - மூன்றாம் கட்டத்தில் வருகின்றனர்.
பரமப்ரிய சுப்பராயதாசர் மற்றும் அவரது சிஷ்யர்கள் நான்காம் கட்டத்தில் வருகின்றனர்.
குருகோவிந்தவிட்டலதாசர் மற்றும் அவரின் சிஷ்ய பரம்பரையினர், 21ம் நூற்றாண்டில் வருபவர்கள் ஐந்தாம் கட்டத்தில் வருகின்றனர்.
தாச-சதுஷ்டயர் என்றால் என்ன? இந்த சொல்லாடலை சரியாகப் புரிந்துகொண்டோமா? புரந்தரதாசர், விஜயதாசர், கோபாலதாசர் மற்றும் ஜகன்னாததாசர் - இவர்கள் நால்வரை தாச-சதுஷ்டயர் என்று அழைக்கலாமா? இவர்கள் ஒரே காலத்தைச் சேர்ந்தவர் அல்லர்; ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டவரும் அல்லர். 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒருவர், 18ம் நூற்றாண்டில் பிறந்தவரை எப்படி பார்க்க முடியும்? ஆகவே, விஜயதாசர், கோபாலதாசர், வேணுகோபாலவிட்டலதாசர் மற்றும் ஜகன்னாததாசரை தாச-சதுஷ்டயர் என்று அழைப்பதே சரியானதாக இருக்கும். ஆனால் இப்போது மற்றொரு கேள்வி எழுகிறது.
மோகனதாசரும் தாச சாகித்யத்திற்கு நிறைய பங்களித்திருக்கிறார். ஆகவே, அவரை இந்த பட்டியலில் சேர்க்கலாமே? ஆனால், அவர் விஜயதாசரின் வளர்ப்பு மகன். ஆகவே, அவரின் இடத்தில், வேணுகோபாலவிட்டலதாசரை சேர்த்துவிட்டால், நமக்கிருந்த சந்தேகம் தீர்ந்தது. கற்றறிந்த சான்றோர் இதை சரிபார்க்கலாம். ஆகவே, விஜயதாசர், கோபாலதாசர், வேணுகோபாலவிட்டலதாசர் மற்றும் ஜகன்னாததாசர் ஆகிய நால்வரை ‘தாச-சதுஷ்டயர்கள்’ என்று அழைப்பதில் எந்தவித பிரச்னையும் இல்லை.
இதில் ஜகன்னாததாசரை எப்படி சேர்க்கலாம் என்று யாரேனும் கேட்டால், விடை மிகவும் எளிது. அவர் விஜயதாசர் மற்றும் கோபாலதாசரைப் பார்த்திருக்கிறார். குரு பரம்பரையில் வரவில்லை என்றாலும், தாச சாகித்யத்திற்கு பலமான பங்களித்திருக்கிறார். ஆகவே, அவரை இதில் சேர்த்தோம். யாருக்கேனும் மாற்றுக் கருத்திருந்தால் சொல்லவும்.
ஆனால், மேற்சொன்னதைப் போல, Dr.G.வரதராஜ ராவ் அவர்களின் ஆராய்ச்சியின்படி, புரந்தரதாசரைத் தவிர, மற்றவர்கள் இந்தப் பட்டியலில் வந்துவிடுகின்றனர். ஆகவே, புரந்தரதாசருக்குப் பதிலாக வேணுகோபாலவிட்டலதாசரின் பெயரைச் சேர்த்தால், தாச-சதுஷ்டயர் என்பதற்கு சரியான பொருள் வந்துவிடும் அல்லவா?
யதி-த்வயரு மற்றும் தாச-த்வயரு - இவர்களை முதல் கட்டத்தில் சேர்த்தால், ஹரிதாசர்கள் வாழும் காலத்திலிருந்து அவர்களை கண்டுபிடித்து ஒரு கட்டத்தில் (நிலையில்) சேர்க்கிறோம் என்று ஆகிவிடும். இதுவே, ஆராய்ச்சிகளின் முடிவின்படி கட்டங்களை (நிலைகளை) சொன்னால், அதில் மேலும் விவாதிக்க அவகாசம் இருப்பதில்லை.
தொழில்நுட்பம் மிகுந்த இந்தக் காலத்தில்கூட மத்வர், ஜயதீர்த்தர் மற்றும் வியாசராயர் மூவரும் ‘வாங்மய-த்ரயர்’ என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டதில்லை. இவர்களுக்குள் 200 ஆண்டுகள் இடைவெளி இருக்கின்றது. ஆனால் எப்படி அப்படி அழைக்கப்படுகின்றனர்? ஆகவே, சரியான கருத்துக்களை எதிர்கால சந்ததிகளுக்குச் சொல்ல வேண்டியது நம் கடமையல்லவா?
விஜயதாசர்
கூஸினமக தாசா என்று அழைக்கப்பட்ட தாசர், மனோநியாமகனான ருத்ரதேவரைப் தரிசிக்க வியாசகாசிக்கு மூன்று முறை சென்றார். மிகுந்த வைராக்கியத்துடன் இருந்த அவருக்கு, அங்கு ‘விஜயவிட்டலா’ என்ற அங்கிதம் - கனவில் வந்த புரந்தரதாசர் மூலமாக கிடைத்தது. ஹரிதாச பரம்பரையின் இரண்டாவது கட்டத்தின் முதல் ஹரிதாசராக ஆனார் விஜயதாசர்.
ராய்ச்சூர் மாவட்டம், மான்வி தாலுக்கா, சிக்கல்பர்வியில் 1682ல் பிறந்தார் தாசர். விஜயவிட்டலா என்ற அங்கிதத்தில் பற்பல சூளாதிகளை இயற்றியுள்ளார். ஸ்ரீஹரியின் மகிமைகளை விளக்கும் விதமாக அவை உள்ளன. புரிந்து கொள்ள மிகவும் கடினமான தத்வவாதங்களை மிகவும் எளிமையான நடையில் விளக்கியுள்ளார். அவரது சூளாதிகள் - உபாசனை, பிம்பாபரோக்ஷா, முக்தி நிலை, ஆத்ம சமர்ப்பணம், கங்கணாகாரா - ஆகிய தலைப்புகளில் உள்ளன.
புரந்தரதாசரிடம் அங்கிதம் பெற்றவுடனேயே அவர் இயற்றிய பாடல் பின்வருமாறு.
அந்தரங்கத கதவு தெரெயுது இந்து
எந்தா புண்யத பல ப்ராப்தியாயித்தோ எனகே (அந்தரங்கத)
ஏசுதினவாயித்தோ பீக முத்ரே மாடி
வாசவாகித்தரு துரளல்லி
மோசவாகித்து இந்தின தனகா தமசின
ராசியொளகே ஹோலி காணி சுத்தித்தில்லா (அந்தரங்கத)
நம் உடம்பில் உள்ளும் வெளியிலும் தலா ஒன்பது கதவுகள் உள்ளன. வெளிப்புற ஒன்பது கதவுகளால் (ஒன்பது இந்திரியங்கள்) நமக்கு சுக துக்கங்கள் கிடைக்கின்றன. நம் ஆன்மாவில், இதயத்தில் சற்று உன்னிப்புடன் நோக்கினால், அங்கு இருக்கும் ஸ்ரீஹரியைக் (பிம்ப ரூப) காணலாம். முன்னர் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே இந்தக் காட்சி காணக் கிடைக்கும்.
நாம் நம்மை சுயபரிசோதனை செய்துகொண்டால் மட்டுமே, புண்ணியம் செய்ய முடியும் என்று தாசர் சொல்கிறார். அப்பொழுது மட்டுமே இறைவனைக் காண முடியும். நம் அனைவருக்குள்ளும் அவன் இருக்கிறான். ஆனால் அவனை எப்படி காண்பது? இறைவனைக் காணும் முன்பு, நம் இதயத்தின் கதவுகள் மூடியிருப்பது மட்டுமல்லாமல் - நம்மிடம் இருக்கும் அரிஷட்வர்க (காமம், குரோதம், மோகம், லோபம், மதம் மற்றும் மாத்சர்யம் ஆகியன) மற்றும் ஒன்பது விதமான த்வேஷங்கள் - ஆகியவற்றால் அந்தக் கதவுகள் நன்றாக பூட்டு போடப்பட்டும் இருக்கின்றன. இப்படிப்பட்ட அறியாமையினால் அந்த ஸ்ரீஹரி இந்தக் கதவுகளின் உள்ளே அடைபட்டுக் கிடக்கிறான். அந்தக் கதவுகளைத் திறக்க நம்மிடம் சக்தி இருக்கிறதா?
குருகருண எம்பந்தா கீலிகை தொரகிது
ஹரிகருண எம்பந்தா சக்தியிந்தா
பரம பாகவதர சகவாசதல்லி போகி
ஹரி ஸ்மரணெயிந்தலி பீகவ தெரெதா (அந்தரங்கத)
குருவின குலாம ஆகுவ தனக தொரெயதண்ண முகுதி - என்று சொல்லியிருக்கிறார்கள். சாதிக்க நினைப்பவருக்கு குரு அவசியம். திருமணமான பெண்ணிற்கு அவளது கணவனே குரு; அவரின் உள் இருக்கும் இறைவனையே அவள் வணங்க வேண்டும். கடவுளின் கருணையாலேயே - அவர் நினைத்தால் மட்டுமே தகுந்த குரு கிடைப்பது சாத்தியம். அந்த கருணை இல்லாமல், ராயரின் பிருந்தாவனத்திற்கு தங்கக் கவசம் செய்து அணிவித்தாலும், அவரின் அனுக்கிரகம் கிடைப்பது கடினமே. உபதேசம் செய்யத்தக்க குரு கிடைப்பது கடினம்தான். ஆனால், அப்படி ஒருவர் கிடைத்தபிறகு, அவரிடமிருந்து காயத்ரி மந்திரம், ராமகிருஷ்ண மந்திரம், அங்கித நாம ஜபம் ஆகியவற்றை பெற வேண்டும். இவைகளே நம்முள் இருக்கும் கதவுகளைத் திறக்க உதவும் சாவிகள் ஆகும். இத்தகைய சாவிகளை பெறுவதே சாதிக்க நினைப்பவர்களுக்கு முக்கியமான நோக்கமாக இருக்க வேண்டும்.
பத்தி கக்கடவெம்ப ஞான தீப
ஜத்தாகி ஹெடெகொண்டு த்வாரவன போகலு
எத்த நோடிதரத்த சிருங்கார சாதனா
சுத்தலித்தவர பாலாயனவாதரு (அந்தரங்கத)
நம்முள் இருக்கும் இறைவனைக் காண்பதற்கான ஒரே வழி - நாம ஜபம் செய்வதே ஆகும். இந்த நாம ஜபம் அதிகரிக்க அதிகரிக்க - அரிஷட்வர்க மற்றும் ஒன்பது வித த்வேஷங்கள் ஆகிய கெட்ட விஷயங்கள் களையும். நாம ஜபம் செய்யும்போது, இதயத்தில் இருக்கும் இருட்டு நீங்கி, அறிவின் ஒளி பெருகும். இந்த ஒளியால்தான் உள்ளிருக்கும் இறைவனை காண முடியும். ஆகவே, இந்த ஒளியைப் பெறுவதே நம் நோக்கமாக இருக்கவேண்டும் என்று தாசர் சொல்கிறார்.
ஹொரகெ த்வாரவு நால்கு ஒளகேஐது த்வாரகளு
புரத த்வாராதிகெ ப்ராணாதி ஜயரூ
மிருகவ மத்ய மண்டப கோடி ரவியந்தே
சரசிஜ நாபன அரமணெய சொபகு (அந்தரங்கத)
நம்முள் இருக்கும் ஸ்ரீஹரியைச் சுற்றி பல கதவுகள் (அரண்கள்) உள்ளன. முதல் நான்கு கதவுகளைக் கடந்தவுடன், அடுத்த ஐந்து கதவுகளைக் காணலாம். அவற்றையும் கடந்தால் ஒரு தாமரை. இந்த தாமரையிலேயே ஸ்ரீஹரி வசிப்பதாக ஞானிகள் கூறுகின்றனர். இந்த ஒன்பது கதவுகளிலும் பாரதி ரமணனான பிராணதேவன், ஒன்பது வித ரூபங்களில் வசிக்கிறார். அந்த முக்யபிராணனின் உள்ளிருக்கும் ஸ்ரீஹரியை, ஒவ்வொரு கதவைக் கடக்கும்போதும் வணங்குவது மிகவும் முக்கியமானதாகும். இதயத்தின் உள்ளே ஒரு அரண்மனை - அதற்குள் ஒரு தங்க மண்டபம் - அதற்குள்ளேயே இறைவன் இருக்கிறான். அந்த இறைவனைக் காண்பதே நம் வாழ்க்கையின் லட்சியமாக இருக்க வேண்டும் என்கிறார் தாசர்.
ஸ்வமூர்த்தி கண மத்ய சச்சிதானந்தைக
ரமெய தரதிந்த லா லிங்கைத்திதே
கமலஜாதிகளிந்த துதுசிகொளுத ஹ்ரு
கமலதொளகிர்த விஜயவிட்டலன கண்டே (அந்தரங்கத)
ஒரு கோடி சூரியனின் வெளிச்சத்தைப் போல உள்ளவனான ஸ்ரீஹரி, எப்படி தோற்றமளிக்கிறான் என்று யாரும் கேட்டால், சுயம்புவாக இருக்கிறான் என்று சொல்லவும். அவன் தனியாகவா இருக்கிறான்? இல்லை. ரமாதேவி (இலக்குமி) அவனுடன் இருக்கிறாள். ஸ்ரீஹரி எப்போதும் தனியாக இருக்கிறான் என்று நினைக்கவே கூடாது. வணங்கும்போதும் ரமாவுடன் கூடிய பஸ்சிம ரங்கன் என்றே வணங்க வேண்டும். ரமாதேவி, பிரம்மா, முக்யபிராணன், கருடன், சேஷன், ருத்ரன், இந்திரன், காமன் மற்றும் அனைத்து தத்வாபிமான தேவைதைகளும் அந்த ஸ்ரீஹரியுடனேயே இருக்கின்றனர். அந்த சர்வோத்தமன், இந்த எல்லா தேவதைகளுக்குள்ளும் வெவ்வேறு ரூபத்தில், அதே பிரகாசத்துடன் இருக்கிறார். எல்லா தேவர்களும் அவரை எப்போதும் துதித்தவாறே இருக்கின்றனர்.
தத்வாபிமானி தேவதைகள், முக்யபிராணர், ரமாதேவி ஆகியவர்களுக்குள் இருக்கும் அந்த பிம்பரூபி பரமாத்மனை நான் கண்டேன் என்கிறார் விஜயதாசர். அந்த தரிசன அனுபவத்தையும் ஒரு பாடலில் பாடியிருக்கிறார். நாமும் அதைப்போலவே (அவர் பாடியிருப்பதைப் போலவே) செய்தால், நாமும் நம்முள் இருக்கும் பிம்பரூபி பரமாத்மாவைக் காணலாம் என்பதே அவர் நமக்குக் கொடுக்கும் செய்தியாகும்.
விஜயதாசர் பற்பல பாடல்கள், சூளாதிகள் மற்றும் கேசவநாமாவைப் பாடியிருக்கிறார். பலருக்கும் அங்கிதத்தையும் கொடுத்திருக்கிறார். அவர்களில், கோபாலதாசர், ஹயவதன விட்டலதாசர், வேணுகோபால விட்டலதாசர், மோகனதாசர் முக்கியமானவர்கள் ஆகும். இதனால், தாச பரம்பரையை வளர்ப்பதிலும் விஜயதாசர் முக்கிய பங்கு வகிக்கிறார்.
கோபாலதாசர்:
இவர் விஜயதாசரின் சலபிரதிமை (நடமாடும் பிரதி) எனக் கருதப்படுகிறார். மேலும், இவரை நினைத்தவுடன் தன்வந்திரி அவதாரமும் நினைவுக்கு வரும்.
என்ன பின்னப கேளோ தன்வந்திரி தய மாடோ
சன்னவனு இவ கேவல
பண்ணபடிசுவ ரோகவன்னு மோசனே மாடி
சென்னாகி பாலிசுவுதே கருணி (என்ன)
ஜகன்னாத தாசருக்கு 40 ஆண்டுகள் ஆயுள் தானம் அளிக்குமாறு கோபாலதாசரிடம் விஜயதாசர் சொன்னவுடன், கோபாலதாசர் உடனடியாக அப்படியே செய்து, அந்தச் செயலை விஜயதாசருக்கு தமது குரு தட்சிணையாக அர்ப்பணம் செய்தார். இதனால் ஜகன்னாத தாசரின் ஆயுள் அதிகரித்து, பின் அவர் ஒரு மகத்தான கிரந்தத்தை - ஹரிகதாம்ருதசாரம் - எழுதினார். மேற்சொன்ன ஆயுள் தானம் செய்யும்போது எழுதப்பட்ட பாடலே இது.
ஹே தன்வந்திரி, நான் சொல்வதைக் கேள். இவன் மிகவும் சிறியவன். தீராத வயிற்றுவலியால் தவிக்கிறான். தயைகூர்ந்து இந்த நோயை தீர்த்து வை.
ஆரோக்ய ஆயுஷ்ய ஐஸ்வர்யவெம்ப
ஈ மூரு வித வஸ்துங்களு
நாராயணன பஜகராதவர சாதனக்கே
புராணவாகிப்பவோ
கோர வியாபிசார பரனிந்த பரவித்தாப
ஹார மாடித தோஷதி
தாரித்ர்யராகுவரு ஈ மூரு விததிந்தலி
காரணனு நீனே துஷ்கர்ம பரிஹரிஸோ
ஸ்ரீஹரியை வணங்குவதற்கு நல்ல உடல்நலம், பொருள் மற்றும் ஆயுளும் வேண்டும். இவை எல்லாம் வேண்டும் என்றால் பிறன்மனை நோக்குதல், பிறரின் செல்வத்தை அபகரித்தல் மற்றும் பிறரை தூஷித்தல் - ஆகியவற்றை செய்திருக்கக்கூடாது. இவற்றை நாம் செய்யாதிருந்தால், அதுவே சிறந்த செல்வம் ஆகும். மேலும் தாசர் - ஸ்ரீஹரியே, இவை எல்லாவற்றிற்கும் நீயே காரணம். ஆகவே, இவனை (ஜகன்னாத தாசரை) இந்த நோயிலிருந்து விடுவி என்கிறார். அவர் சொல்வது அனைத்தும் நமக்கும் அப்படியே பொருந்தும்.
வசுமதிய மேலின்னு அசுர ஜனரே பஹள
வஷவல்ல கலிய பாதே
பிசிலிந்த பேடிதவாத சசிகளந்தே
சிஷுகளு நா விப்பேவு
அசுராரி நின்ன கருணாம்ருதத மளிகெகளனு
குஷதல்லி பாலிசுவதோ
கெசரிந்த கெசரு தொளதந்தே கர்மத பதவு
அசுனாத ஹரியே சலஹோ, ஸ்வாமி (என்ன)
ஹே தன்வந்திரி - இந்த உலகத்தில் கலியால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் உள்ளனர். கடும் வெய்யிலினால் மரம் பட்டுப் போவதைப் போல், உன் கருணை இல்லாமல் நாங்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். நாங்கள் செய்த பாவங்களைப் போக்கி, எங்களுக்கு கருணை காட்டவும்.
அன்யரனு பஜிசதலே நின்னன்னே பஜிசுத்த
நின்ன சின்னெகளன்னு தரிஸி
நின்ன நாமோச்சரிஸி நின்னவர நெனிஸி
நின்னிந்த உபஜீவிஸி
அன்ன ஆரோக்யவு அல்பவூ ஆகே இன்னு
அன்யரிகே அல்பரியபேகே
நின்ன சங்கல்ப பக்தரனு போஷினெம்போ
கன்ன பிருதன்னு உளுஹோ ஸ்வாமி (என்ன)
ஹே தன்வந்திரி - நாங்கள் எப்போதும் உன்னையே வணங்குகிறோம். உன் சின்னங்களான - சங்கு, சக்ரம், கதை, பத்மம் மற்றும் நாராயண முத்ரிகைகளையே எங்கள் அங்கங்களில் தரிக்கிறோம். உன் அடியார்களுடனேயே பழகுகிறோம். எங்களை எப்போதும் உன் நினைவுகளிலேயே மூழ்கி இருக்கச் செய். உணவு, உடை மற்றும் உடல் நலத்திற்கு எப்போதும் குறை வைக்காதே. உன் மற்றொரு பெயர் பக்தாபராதீனன் (பக்தர்களுக்குக் கட்டுப்பட்டவன்) அல்லவா? ஆகவே, உன் பார்வையை எங்கள் மேல் செலுத்தி, எங்களை காப்பாற்றுவாயாக.
ஆதிவியாதிகளு உன்மாத விப்ரம நானா
பாதேகெ ஔஷதவு நீனே
ஈ தாவ கரமலதிம் சுதேகரெதே
சாதுகள பாலிசுவெ நீ
மோதபடிசுவி நின்ன சாதிசுவவரிகெ
சுபோதயங்கள நீ நீடி
ஆதரிஸி இவகெ தவபாத பஜனெயன் இத்து
சாதுகளொளிரிஸி மோதகொடு சர்வதா (என்ன)
ஹே தன்வந்திரி, அனைத்து நோய்களுக்கும் (பவ ரோகங்கள்) நீயே மருந்து ஆதலால், இவரை (ஜகன்னாத தாசரை) குணப்படுத்தி, காப்பாற்று. எங்களை எப்பொழுதும் உன் நினைவுகளிலேயே வைத்திரு, உன் புகழை பாடுமாறு செய், உன் அடியார்களின் சேவை செய்ய எங்களுக்கு அனுக்கிரகம் செய். எங்களை ஆனந்தமாக வைத்திரு.
நின்னவரலி இவகே இன்னு ரதியனெகொடோ
நின்னவரனெந்து அரிது
நின்ன பிரார்த்திஸிதே நானன்யரிகெ அல்பரியே
என்ன பாலிசுவ தொரெயே
என்ன மாதல்லவிது என்ன ஹிரியர மாது
மன்னிசபேகு கருணி
அனந்த குணபூர்ண கோபால விட்டல
இன்னிதகே பாலிசுவதோ ஸ்வாமி (என்ன)
ஹே தன்வந்திரி - இவர் (ஜகன்னாததாசர்), என் குருவை (விஜயதாசர்) ஒரு முறை அவமதித்திருந்தாலும், இவர் இன்னொரு முறை அப்படி செய்யாதிருக்க - நீ இவருக்கு உன் கருணையைக் காட்டு; எங்களைக் கரையேற்றுமாறு வேண்டி - உன்னைத் தவிர நான் வேறு எந்தக் கடவுளையும் வணங்குவதில்லை. இது என் வேண்டுகோள் அல்ல; இவருக்கு ஆயுள்தானம் கொடுக்க வேண்டி என் குருவின் ஆணை. ஆகவே, தயவு செய்து இவரைக் காப்பாற்று. நீ எங்கும் வியாபித்திருக்கிறவன். கோபாலகர்களை நீ காப்பாற்றியிருக்கிறாய். நீயே கோபால கிருஷ்ணன். ஹே விட்டலா, இது என் மற்றும் என் குருவின் பிரார்த்தனை ஆகையால், உன் கருணையை இவனுக்கு உடனடியாக காட்டி, கரையேற்று.
நான்கு ரொட்டிகளை இறைவனுக்கு படைத்து, அவற்றை ஸ்ரீனிவாசாச்சார்யருக்கு கொடுத்தார். அவரும் ஒவ்வொரு ரொட்டியிலிருந்தும் ஒரு துண்டு பிய்த்து உண்டார்.
மொதல பக்ரியல்லி ரிக் வேத
எரடனே பக்ரியல்லி யஜுர் வேத
மூரனே பக்ரியல்லி சாம வேத
நால்கனே பக்ரியல்லி அதர்வண வேத
மேற்கண்ட வரிகளைப் பாடி அந்த ரொட்டிகளைக் கொடுக்கவும், அதை சாப்பிட்ட ஸ்ரீனிவாசாச்சார்யருக்கு உடனடியாக மயக்கம் தெளிந்தது. பின்னர், ஜகன்னாததாசராகி ‘ஹரிகதாம்ருதசாரம்’ என்னும் மிகச்சிறந்த - வேதங்களின் சாரமான நூல் ஒன்றை எழுதி, தன் குருவிற்கு அர்ப்பணித்தார்.
குறிப்பு: ஒருவர், மற்றொருவருக்கு ஆயுள் தானம் செய்வது சாத்தியமா? ஆம் என்றால், எப்படி? இதற்கு யார் பதில் அளிப்பார்? இப்படி தானம் செய்வதற்கான வழிமுறைகள் என்ன? இதை யார் சொல்வார்? முன்னர் என்னென்ன சொன்னார்களோ, அதை அப்படியே ஏற்கவேண்டியதுதான் நம் கடமையா? இவற்றிற்கு யார் பதில் அளிப்பார்கள்?
மொசரகல்லு கிராமம், தேவதுர்கா தாலுக்கா, ராய்ச்சூர் மாவட்டத்தில் வாழ்ந்து வந்த முராரிராயா மற்றும் வெங்கம்மாவிற்கு நான்கு ஆண் பிள்ளைகள். அவற்றில் மூத்தவர் பாகண்ணா. இவரே இந்தக் கதையின் கதாநாயகர். 1722ம் ஆண்டு பிறந்தார். இவரின் தம்பிகளான தாசப்பா, சீனப்பா மற்றும் ரங்கப்பா இன்னும் சிறுவர்களாக இருந்தபோதே, இவர்களின் தந்தை முராரிராயா இறந்து போனார். இக்குடும்பமே அதிர்ச்சியில் தத்தளித்தது. தாயாரான வெங்கம்மா குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றார். அக்கஷ்டத்தில் சமாளித்து, பாகண்ணனுக்கு உபநயனம் செய்வித்து, காயத்ரி மந்திர உபதேசம் செய்வித்தார். அன்றிலிருந்து பாகண்ணன் நாள்தோறும் தவறாமல் காயத்ரி மந்திர ஜபம் செய்து வந்தார். ஒருவரின் அடுத்த மூன்று பிறவிகளை கண்டறியும் திறன் பெற்றிருந்தார். காயத்ரி மந்திர ஜபம் செய்ததாலேயே இப்படி கிடைத்தது - ஆகவே இதை யார் வேண்டுமானாலும் முயற்சி செய்து பார்க்கலாம்.
இவர்கள் அனைவரும் உத்தனூர் வெங்கப்பா என்பவரின் வீட்டில் வசித்து வந்தனர். இறைவனின் கருணையால், வெங்கட கிருஷ்ணா என்கிற அங்கிதத்துடன் பாகண்ணன் பாடல்கள் இயற்றத் துவங்கினார். பிறகு, விஜயதாசர் இவருக்கு ஆதோனி மங்கராயா கோயிலில், ‘கோபால விட்டலா’ என்ற அங்கிதத்தை வழங்கி ஆசி புரிந்தார். அன்றிலிருந்து இவர் விஜயதாசரின் பிரதிநிதி ஆனார்.
வெங்கடராமராயா, ஸ்ரீனிவாசாசார்யா மற்றும் தன் மூன்று தம்பிகளுக்கு தன் கருணையை வழங்கினார். ஆண்டுதோறும் திருப்பதி பிரம்மோத்சவத்திற்கு, தன் குரு விஜயதாசருடன் பயணம் மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். கோபாலதாசர், இந்தியா முழுக்க பயணம் செய்திருந்தாலும், விட்டலா என்ற அங்கிதம் பெற்றிருந்தாலும், இதுவரை பண்டரிபுரம் போகாமல் இருந்தார். ஒரு நாள், பாண்டுரங்க விட்டலன் இவர் கனவில் வந்து - ஆலே லஹி (மராத்தியில் - இன்னும் வரவில்லை) என்றார். கோபாலதாசர் இன்னும் தன்னை வந்து பார்க்கவில்லை என்பதையே சுட்டிக் காட்டினார்.
பண்டரிபுரம் வராததற்கு பாண்டுரங்கனிடம் மன்னிப்பு கேட்டவாறு - நீல குதுரெயனேறி ஷாலு தொங்கக்க சுத்தி’, என்ற பாடல் இயற்றி, பின் பண்டரிபுரமும் சென்று வந்தார். 1762ம் ஆண்டு, சித்ரபானு வருடம், புஷ்ய மாதம், கிருஷ்ண அஷ்டமி அன்று தன் இன்னுயிர் நீத்தார்.
வேணுகோபாலவிட்டல தாசர்
பங்க நாமத திம்மண்ணா என்றும் பெயர் கொண்ட வேணுகோபாலவிட்டல தாசர், தற்போதைய ஆந்திரத்தைச் சேர்ந்த ஆதோனியைச் சேர்ந்தவர் ஆவார். ருக்மம்மா தம்பதிகளுக்குப் பிறந்த மூன்று குழந்தைகளில் மூத்தவர் ஹிரெ திம்மண்ணா. அடுத்தவர் சிக்க திம்மண்ணா. மூன்றாமவர் நாகப்பா. இந்த இரண்டாவது மகனே பங்க நாமத திம்மண்ணா ஆவார். ’அதோனி வஸாலத் ஜங்க’ என்னும் நபாப்’பின் கீழ், திவானாக பணிபுரிந்து வந்தார்.
விஜயதாசர் எப்போது அதோனி வந்தாலும், இவர்களது வீட்டில் தங்குவது வழக்கமாக இருந்தது. அப்போது ஒரு சமயம், வேணுகோபாலவிட்டல தாசரின் தாய், விஜயதாசரிடம் - நீங்கள் எப்போது இங்கு வந்தாலும், என் மகன் தன் வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு உங்களுடனேயே இருந்துவிடுகிறான். அதனால் அவன் தன் வேலையை இழக்கக்கூடும் - என்றார். இதைக் கேட்ட விஜயதாசர் உடனடியாக அங்கிருந்து கிளம்பி, அடுத்த முறையிலிருந்து அங்கு வந்து தங்குவதை தவிர்த்தார். இதைக் கேள்விப்பட்ட திம்மண்ண தாசர், விஜயதாசரிடம் மன்னிப்பு கேட்டு, தனக்கு அங்கிதம் வழங்குமாறு கேட்டுக் கொண்டார். விஜயதாசரும், அவருக்கு வேணுகோபாலவிட்டல தாசர் என்ற அங்கிதம் கொடுத்து அவரை ஹரிதாசர் ஆக்கினார்.
விஜயதாசர் இவரை ஏன் பங்க நாமத திம்மண்ணா என்று அழைத்தார்?
அப்படி அவர் கூப்பிட்டதாலேயே, உண்மை என்ன என்று தெரிந்துகொள்ள நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. திம்மண்ணா முந்தைய பிறவியில் பேலூர் வைகுண்ட தாசராக பிறந்திருந்தார். பேலூர் கேசவனுக்கு சேவை செய்து, அவனின் கருணையைப் பெற்றவர். இதன் காரணமாக, இந்தப் பிறவியிலும் திம்மண்ணனின் நெற்றியில் மூன்று நாமங்களை தான் காண்பதாக விஜயதாசர் கூறினார்.
வேணுகோபாலவிட்டல தாசர், பற்பல பாடல்கள் மற்றும் சூளாதிகளை இயற்றியுள்ளார். 1738 ஸ்வாதாரி ஆண்டு வைசாக மாதம் சுத்த த்ருதியை திங்கட்கிழமை அன்று தன் இன்னுயிர் நீத்தார்.
மேலே சொன்னாற்போல், இவர் முந்தைய பிறவியில் வைகுண்ட தாசராக பிறந்திருந்தார். அப்போது நஞ்சுண்டா என்றொரு சிறுவன் இவருக்கு உதவியாக இருந்தார். அவனது உதவிகளைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த தாசர், அவனுக்கு வர இருந்த ஆபத்தைத் தடுத்து, அவனுக்கு இரண்டாண்டு காலம் ஆயுள் தானம் அளித்தார்.
பிறகு வைகுண்ட தாசர், வேணுகோபாலவிட்டல தாசராக பிறந்திருக்கையில், அதே நஞ்சுண்டா, கல்லூர் சுப்பண்ணா என்ற பெயரில் பிறந்து - வியாஸ விட்டலா என்ற அங்கிதம் பெற்றார். விஜயதாசரின் ஆசியும் பெற்றார்.
இவர்களினால், இந்த 21ம் நூற்றாண்டிலும் தாச பரம்பரை வளர்ந்து வருகிறது. ஆகவே, வேணுகோபாலவிட்டல தாசரை, தாச சதுஷ்டயரில் சேர்ப்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
ஜகன்னாத தாசர்
1650ம் ஆண்டு கீலக நாம சம்வத்சரம் சிராவண சுக்ல த்விதியை 27/01/1728 அன்று, திருப்பதி ஸ்ரீனிவாசரின் அருளால், நரசிம்ம தாசர் மற்றும் லக்ஷ்மக்காவுக்குப் பிறந்த ஸ்ரீனிவாசன், பல மொழிகளைக் கற்றுணர்ந்த பண்டிதராக வளர்ந்தார்.
ஸ்ரீ வரதேந்திர தீர்த்தர் மற்றும் மந்திராலயத்தில் பல பண்டிதர்களிடம் 12 ஆண்டுகள் பல பாடங்களைக் கற்று, த்வைத சித்தாந்தத்தில் சிறந்து விளங்கினார். கற்றறிந்தவர்கள் சபையில் ‘ஆசார்யா’ என்று அழைக்கப்பட்டார்.
நம் மாத்வர்களில் தங்கள் பெயருக்குப் பின்னால் ‘ஆசார்யா’ என்று பலர் சேர்த்துக் கொள்வது வழக்கம்தானே? யதித்ரயர்கள் மட்டுமே இப்படி சேர்த்துக் கொள்ள தகுந்தவர்கள் எனக் கூறலாம். அத்வைதிகள் மற்றும் விசிஷ்டாத்வைதிகள் இப்படி சேர்த்துக் கொள்வதில்லை. ஆனால், பெரும்பாலான மாத்வர்கள் - அவர் யாராக இருப்பினும் - சமையல் கலைஞர், பண்டிதர், சொற்பொழிவாளர் - ‘ஆசார்யா’வை சேர்த்துக் கொள்கிறார்கள். இப்படி செய்வது காலப்போக்கில் நின்றுவிடவேண்டும் என்று விரும்புகிறோம். இதைப் பற்றி புரந்தரதாசர் கூறுகையில்:
ஆசார பல்லவரே ஆசாரியரு (ஆசாரியர்)
ஆ எந்தரே அதி தத்வவ திளிதவரு
ஆதுளித மதத்வம்ஸ மாடுவரு
அதிதி அப்யைகதரிகே அன்னவன்னே எக்குவரு
ஆயுத வ்ருத்தியன்னே மாடுவரு (ஆசாரியர்)
ச எந்தரே சாஞ்சலாத்மவன்னே அளிதவரு
சென்னாகி வேத சாஸ்திரவன்னே ஓதிதவரு
சலனே இல்லதே குருஹிரியரிகே எரகுவரு
சானஸ பிட்டவரு ஆசாரியரு (ஆசாரியர்)
ரு எந்தரே ருணவ மாடதித்தவரு
ரிபுமித்ர சமரெந்து காம்புவரு
காவ்ய சௌவர்ணவு ம்ருத்திகெயெந்து நோடுவரு
ரமாதவ புரந்தர விட்டலன பல்லவரே ஆசாரியரு (ஆசாரியர்)
இப்போது கூறுங்கள். இவர்களை ஆசாரியர் என்று அழைக்கமுடியுமா? இல்லை. அவர்களின் பெயரை மட்டும் மரியாதையுடன் அழைத்தால் போதுமே?
ஜகன்னாததாசர் மான்வியில் வசித்தபோது, ஒரு நாள் அங்கு விஜயதாசர் வந்திருந்தார். ஸ்ரீனிவாசாச்சாரியரைப் பற்றி நன்றாக அறிந்திருந்தார் விஜயதாசர். ஒரு நாள், ஸ்ரீனிவாசாச்சாரியரின் வீட்டு வழியே செல்லும்போது, அவரை பிராமணராக உணவருந்த அழைத்தார். ஆனால், ஸ்ரீனிவாசாச்சாரியாருக்கு விஜயதாசரைக் கண்டாலே பிடிக்கவில்லை. நைவேத்யம் ஆனபிறகும் ஒருமுறை சொல்லி அனுப்பினார். ஆனால், ஸ்ரீனிவாசாச்சாரியரோ, தனக்கு வயிற்று வலி என்றும், தாம் ஏற்கனவே உணவருந்தி விட்டதாகவும் கூறிவிட்டார். இதைக் கேட்ட விஜயதாசர் - கடவுள் சித்தம் என்றார்.
அதே கடவுளின் சித்தப்படியே, ஸ்ரீனிவாசாச்சாரியருக்கு கடுமையான வயிற்றுவலி வந்து, நாளுக்கு நாள் அது மோசமடைந்து வந்தது. பொறுத்துக் கொள்ள முடியாததால், திருப்பதி மற்றும் கடிகாசலத்திற்குச் சென்று வேண்டினார். ஆனால், வலி குறையவில்லை. பின்பு ஒரு நாள், கருணைக் கடலான ஸ்ரீராகவேந்திரர் இவரது கனவில் வந்து, விஜயதாசரைப் பணிந்தால் இந்த வலிக்கு தீர்வு கிடைக்கும் என்றார். இதைக் கேட்ட தாசர், சிக்கலபரவிக்குச் சென்று விஜயதாசரிடம் தன் முந்தைய செயலுக்கு மன்னிப்பு கேட்டு, அவரது ஆசியை வேண்டினார்.
ஸ்ரீனிவாசாச்சார்யரின் ஆயுள் முடிவுறப் போவதைக் அறிந்த விஜயதாசர், அவரை கோபாலதாசரிடம் அனுப்பினார். விஜயதாசருக்கு அப்போதே 54 வயது ஆகியிருந்தது. விஜயதாசர் ஏற்கனவே தன் 2.5 ஆண்டு ஆயுளை கேசவாச்சார் மற்றும் சிலருக்குக் கொடுத்திருந்தார். மேலும், ஸ்ரீனிவாசாச்சார்யருக்கு 40 ஆண்டுகள் ஆயுள் தேவைப்பட்டது - அதை கோபாலதாசரால் மட்டுமே கொடுக்க முடியும். கோபாலதாசரும், விஜயதாசரின் ஆணைக்கேற்ப, தன் ஆயுளிலிருந்து 40 ஆண்டுகளை ஸ்ரீனிவாசாச்சார்யருக்கு தானமாகக் கொடுத்துவிடுகிறார்.
இதற்குள் ஸ்ரீனிவாசாச்சார்யாரின் கர்வம் அடங்கிவிடுவதால், அவர் கோபாலதாசரிடம் அங்கிதம் வேண்டினார். கோபாலதாசரும் ஸ்ரீனிவாசாச்சார்யருக்கு ஹரிதாஸ தீட்சை கொடுத்து, அங்கிதத்திற்காக பண்டரிபுரம் போகும்படி சொன்னார். அங்கு சந்திரபாகா நதியில் குளிக்கும்போது, ‘ஜகன்னாத விட்டலா’ என்ற பலகை ஒன்று கிடைத்ததால், அதை ஜலாந்தர்யாமி சங்கர்ஷணரூபி பரமாத்மாவின் வாக்காக ஏற்று, அதையே தன் அங்கிதமாக வைத்துக் கொண்டார். அன்றிலிருந்து, அதே அங்கிதத்தில் பற்பல பாடல்களை இயற்றி, ஜகன்னாத தாசர் என்று பெயர் பெற்றார். தன் நேரம் அனைத்தையும் பாடல்களால் இறைவனின் பெயர் பாடுவதிலேயே செலவழித்தார்.
1. ஹரிகதாம்ருதசார - பாமினி ஷட்பதி என்கிற செய்யுள் வகையில் எழுதியது
2. தத்வ சுவ்வாலி - 1200 பத்யங்களால் ஆனது
3. பலவிது பாளுதக்கே என்ற பாடல்
4. நரசிம்ம சூளாதி, மற்றும் பல பாடல்கள் & சூளாதிகள்
தடி தோடி நிபகாயோ
ஜகன்னாதவிட்டலனய்யா விட்டலனய்யா
நீ கருணிசதே நிராகரிசலு என்ன சாகுவர் யாரோ
தயபாரா மூர்த்தே
விட்டலய்யா விட்டலய்யா
மேற்கண்ட பாடலைப் பாடத்துவங்கினார்.
82 ஆண்டுகள் வாழ்ந்து, 1731 சுக்ல நாம சம்வத்சரம் பாத்ரபத சுத்த நவமி ஞாயிறு அன்று 8.30 மணிக்கு தன் இன்னுயிர் நீர்த்தார் ஜகன்னாத தாசர்.
தத்வ சுவ்வாலி
துளசி ஸ்தோத்ரம்
விருந்தாவனி ஜனனி வந்திசுவே சததஜ
லந்தரன ராணி கல்யாணி
கல்யாணி ஸ்ரீ துளசி
மந்திரெ எனகே தயவாகே
ஸ்ரீ துளசி தேவி மன்னாத லாலிசு
ஜகன்னாத விட்டலன்ன சரண
ஜகன்னாத விட்டலன்ன சரணாப்ஜ ஹ்ருதயாதி
நீதோரி நித்ய கிருபெயிந்த
மேலும் இவர் பிரம்ம, வாயு, ருத்ர, நவக்ரக, வினாயக, தசாவதார, வெங்கடேச, ஸ்ரீனிவாச ஸ்தோத்ரங்கள் மற்றும் ருக்மிணி விலாஸ ஆகியவற்றையும் இயற்றியுள்ளார்.
துரிதவன குடாரி துர்ஜன குலவைரி
சரணாகத வஜ்ரபஞ்சர குஞ்ஜர
மந்த்ர துல்யவாத ந்ருஸிம்ஹ சூளாதி
அனேக ஈப்சித கொடுவந்தத்தாகிதே
பலவிது பாளுதக்கே
சிரி நிலயன குணகள திளிது பஜிசுவுதே
இறைவனின் மகிமைகளை தெரிந்து கொண்டு, அதைப்பற்றி பாடுவதே நாம் பிறந்ததற்கான பொருள் ஆகும் என்கிறார்.
சோசித கர்மகள ஆசரிசுதபலு நீசரல்லிகே போகி யாசிசதே
கேசரவாஹ சராசர பந்தக மோசக நஹுதெந்து யோசிசுதிப்புதே (பலவிது)
நம் அன்றாட தேவைகளுக்கு நாம் யாரையும் சார்ந்திருக்கக்கூடாது. கருட வாகனனான ஸ்ரீஹரியை யார் எப்போதும் நினைத்துக் கொள்கிறாரோ, அவர் ஆனந்தமாக இருப்பார். நித்ய கர்மானுஷ்டானங்களான - ஸ்நானம், சந்தியாவந்தனம், ஜபம், தபம், தானம், தர்மம், அத்யயனம், அத்யாபனம், தீர்த்தயாத்திரை ஆகியவற்றை கண்டிப்பாக செய்ய வேண்டும் என்கிறார் தாசர்.
நிச்ச சுபகுதிய அச்யுதலங்க்ரி களர்ச்சிஸி மெச்சிஸி தெச்சரதி
துச்ச விஷயகள இச்சைசதே யெத்ருச்சா லாபதிம் ப்ரோச்சனாகுவுதே (பலவிது)
’அமலா பக்திஸ்ச தத் சாதனம்’ அதாவது ஸ்ரீஹரியிடம் பக்தி மட்டும் இருந்தால் போதாது, அது தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம் என்று ஸ்ரீவியாச தீர்த்தர் சொல்லியிருப்பதாக தாசர் இங்கு விளக்குகிறார். அந்த ஸ்ரீஹரிக்கு மாற்று யாருமே கிடையாது. நாம் எப்போதும் அவன் அடிகளை வணங்கவேண்டும். இருப்பதை வைத்து யார் திருப்தியுடன் வாழ்கிறாரோ, அவருடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாகும்.
பிகித கண்டதிம் த்ருக்பாஷ்பகளிம்
நகெமொகதிம் ரோமகளொளிது
மிகெ சந்தோஷதிம் நெகெதாடுத
நான்முகன அய்யன பொகளி ஹிக்குவுதே (பலவிது)
கடவுளை வணங்குவது ஒரு கலை. இதில் நாம் கற்றுத் தேற வேண்டும். அவனை நினைத்தாலே, நம்மையறியாமல், நம் கண்களிலிருந்து கண்ணீர் வரவேண்டும். நாம் அப்படி இருக்கிறோமா? கத்திவாறு, சத்தமாக சிரித்து, ஆடிப்பாடி அவனைத் தொழவேண்டும். இதுவே ஒரு உண்மையான பக்தனின் அடையாளம் ஆகும். இப்படி யார் செய்கிறாரோ, அவரது வாழ்க்கை - பலவிது பாளுதக்கே - அர்த்தமுள்ளதாகும்.
பன்னகாசல சுசன்னிவாச பாவன சரித சத்குண பரித
ஜன்யஜனக லாவண்யனேக நிதி ஜகன்னாத விட்டலா நான்யப நெம்புதே (பலவிது)
சேஷ சயனனான ஸ்ரீஹரி, நம்முள்ளும் இருக்கிறான். அவனது குணங்களைப் பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டும். உலகத்தின் அரசனே நமக்குள்ளும் இருக்கிறான் என்று நாம் நம்பினால், நம் வாழ்க்கை - பலவிது பாளுதக்கே - அர்த்தமுள்ளதாகும்.
27 பத்திகள் கொண்ட - நட்சத்திர மாலிகே - என்று அழைக்கப்படும் இந்தப் பாடலில், பஞ்சபேத (ஐந்து வேறுபாடுகள்), தாரதம்யம் (படிநிலை), த்வைத சித்தாந்தம் என அனைத்தையும் விளக்கியிருக்கிறார் தாசர். நம் வாழ்வில் ஆனந்தம் வேண்டுமானால், நாம் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழவேண்டும்? இதற்கான விடைகளை தாசர் இந்தப் பாடலில் பாடியிருக்கிறார். இதைப் புரிந்து கொண்டு, பாடி, அதன்படி நாம் வாழவேண்டாமா?
ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து.
***
Wednesday, August 16, 2017
ஸ்ரீமுத்துமோகனவிட்டலதாசர் - பாகம் ஒன்று
ஸ்ரீமுத்துமோகனவிட்டலதாசர் - பாகம் ஒன்று
ஸ்ரீமுத்துமோகனவிட்டலதாசர்
தொட்டபெல்லாபுரத தாசர்
ராகவேந்திர தாசர்
என்று பல பெயர்களால் அழைக்கப்படும் தாசரின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு, இங்கே பாகம் ஒன்றில் கொடுக்கப்பட்டுள்ளது. இவர் இயற்றிய பாடல்கள், உகாபோகங்கள் அடுத்த பாகத்தில் வரும்.
**
கன்னட முலம்: திரு.A.N. அனந்தஸ்வாமி ராவ். இவரது அங்கிதம் அனந்தவிட்டலா.
வெளியிட்டவர்கள்: தாச கூட சபா, தேவராயனதுர்கா
தமிழில்: திருமதி. ஜெயஸ்ரீ ராம்
சரிபார்த்தல்: T.V.சத்ய நாராயணன்
தமிழில் மொழிபெயர்த்து, தளத்தில் வெளியிட அனுமதி அளித்தவர்: திருமதி. சுபத்ரா, தாச கூட சபா. இவர் தந்தேமுத்துமோகனவிட்டலதாசரின் வம்சத்தை சேர்ந்தவர்.
**
முத்துமோகனவிட்டல சலஹோ || ப ||
சிரி மனோஹர நின்ன ப்ரார்திசுவே நிருத||அப||
சிரி பொம்ம மொதலாத சுரரிந்த சேவிதனே
பரம கருணாளு ஹரி கரிவரதனே
நிருததலி நின்ன நாம ஸ்மரணெயித்து
கருணதலி ரக்ஷிசோ பரம பாவனனே ||1||
குரு ஹிரியரலி பகுதி விஷயதலி விரகுதி
பிரிதாத பஞ்சபேதவனு அருபி
கரிவரதனே நின்ன நாமாம்ருத சார உணிசோ
துரிதகள பரிஹரிசோ பரம பாவனனே ||2||
நானு நன்னது எம்ப துரபிமானவன்னு பிடிசோ
சானுராகதலி தாரதம்யகள திளிசோ
மானநிதி நீனே சர்வோத்தமனெம்பந்த
ஞானதாயகனாகோ ஸ்ரீவரவிட்டலா ||3||
மொதலகல்லு சேஷதாசருடனான சம்பந்தம்
“குருபேளிகெ “
ஸ்ரீபதிய நாபியிந்த அஜ ஜனிசிதனு.
அஜனமான சபுத்ரரே சனகாதிகளு.
சனகாத்யர சிஷ்யரே துர்வாசரு.
துர்வாசர சிஷ்யரே கருடவாஹன தீர்த்தரு.
கருட வாஹன தீர்த்தர சிஷ்யரே க்ருபல்ய தீர்த்தரு.
க்ருபல்ய தீர்த்தர சிஷ்யரே ஞானேச தீர்த்தரு.
ஞானேச தீர்த்தர சிஷ்யரே பர தீர்த்தரு.
பரதீர்த்தர சிஷ்யரே சத்யப்ரக்ஞ தீர்த்தரு.
சத்யப்ரக்ஞ தீர்த்தர சிஷ்யரே ப்ராக்ஞ தீர்த்தரு.
ப்ராக்ஞ தீர்த்தர சிஷ்யரே அச்யுத ப்ரேக்ஷாச்சார்யரு.
அச்யுத ப்ரேக்ஷாச்சார்யர (சிஷ்யரே) கரகமலத சஞ்ஜாதரே நம்ம பூர்ணப்ரக்ஞரு.
பூர்ணப்ரக்ஞரே நம்ம ஸ்ரீமதானந்த தீர்த்த குரு மத்வரு.
ஸ்ரீமதானந்த தீர்த்தர ப்ரதம சிஷ்யரே பத்மநாப தீர்த்தரு.
பத்மநாப தீர்த்தர சிஷ்யரே லக்ஷ்மிதர தீர்த்தரு.
லக்ஷ்மிதர தீர்த்தர சிஷ்யரே சங்கருஷண தீர்த்தரு.
சங்கருஷண தீர்த்தர சிஷ்யரே பரசுராம தீர்த்தரு.
பரசுராம தீர்த்தர சிஷ்யரே ஆதிராஜ தீர்த்தரு.
ஆதிராஜ தீர்த்தர சிஷ்யரே சத்யவ்ரத தீர்த்தரு.
சத்யவ்ரத தீர்த்தர சிஷ்யரே சுவர்ணவர்ணதீர்த்தரு.
சுவர்ணவர்ணதீர்த்தர கரகமல சஞ்ஜாதரே நம்ம ஸ்ரீபாதராஜ தீர்த்தரு
ஸ்ரீபாதராஜதீர்த்தர சிஷ்யரே ஸ்ரீவ்யாஸராஜ யோகீந்த்ரரு.
ஸ்ரீவ்யாஸராஜர சிஷ்யரே புரந்தரதாசரு.
புரந்தரதாசராயர சிஷ்யரே விஜயதாசரு.
விஜயதாச ராயர சிஷ்யரே மோகனதாசரு.
மோகனதாசர சிஷ்யரே திம்மண்ணதாசரு.
திம்மண்ண தாசர சிஷ்யரே தாசாசார்யரு. (கத்வாலி பூவராஹ ரகுபதி விட்டல தாசர்).
இவர சிஷ்யரே ஸ்ரீபதி விட்டல தாசர்.
இவர சிஷ்ய தந்தெ ஸ்ரீபதி விட்டலதாசர்.
இவர சிஷ்யரு தொட்டபெல்லாபுரத முத்துமோகனவிட்டல தாசர்.
இவர சிஷ்யரே ப்ராணநாத விட்டல தாசாசார்யரு.
இவர சிஷ்யரே ஸ்ரீநிதிமோகன விட்டலதாசர்.
அஸ்மத் குருவந்தர்கத பாரதிரமண முக்யப்ராணாந்தர்கத ஸ்ரீநிதிமோகனவிட்டலதாசர தாசரிகெ நமோ நமோ நமஹ. : “ஸ்ரீஸ்ரீஸ்ரீ “.
(மேற்கண்ட குருபேளிகே - கீழே தமிழில்)
ஸ்ரீபதியான நாராயணனின் நாபியிலிருந்து அஜ (பிரம்மா) பிறந்தார்.
பிரம்மாவின் மானச புத்ரரே சனகாதிகள்.
சனகாதிகளின் சிஷ்யரே துர்வாசர்.
துர்வாசரின் சிஷ்யரே கருடவாஹன தீர்த்தர்.
கருடவாஹன தீர்த்தரின் சிஷ்யரே க்ருபல்ய தீர்த்தர்.
க்ருபல்ய தீர்த்தரின் சிஷ்யரே க்ஞானேச தீர்த்தர்.
க்ஞானேச தீர்த்தரின் சிஷ்யரே பரதீர்த்தர்.
பரதீர்த்தரின் சிஷ்யரே சத்யப்ரக்ஞ தீர்த்தர்.
சத்யப்ரக்ஞ தீர்த்தரின் சிஷ்யரே ப்ராக்ஞ தீர்த்தர்.
ப்ராக்ஞ தீர்த்தரின் சிஷ்யரே அச்யுத ப்ரேக்ஷாச்சார்யர்.
அச்யுத ப்ரேக்ஷாச்சார்யரின் (சிஷ்யரே) கரகமல சஞ்ஜாதரே நம்முடைய பூர்ணப்ரக்ஞர்.
பூர்ணப்ரக்ஞரே நம்முடைய ஸ்ரீமதானந்ததீர்த்த குரு மத்வர்.
ஸ்ரீமதானந்ததீர்த்தரின் முதன்மை சிஷ்யரே பத்மநாப தீர்த்தர்.
பத்மநாப தீர்த்தரின் சிஷ்யரே லக்ஷ்மிதர தீர்த்தர்.
லக்ஷ்மிதர தீர்த்தரின் சிஷ்யரே சங்கருஷண தீர்த்தர்.
சங்கருஷண தீர்த்தரின் சிஷ்யரே பரசுராம தீர்த்தர்.
பரசுராம தீர்த்தரின் சிஷ்யரே ஆதிராஜ தீர்த்தர்.
ஆதிராஜ தீர்த்தரின் சிஷ்யரே சத்யவ்ரத தீர்த்தர்.
சத்யவ்ரத தீர்த்தரின் சிஷ்யரே சுவர்ணவர்ண தீர்த்தர்.
சுவர்ணவர்ண தீர்த்தரின் கரகமல சஞ்ஜாதரே நம்முடைய ஸ்ரீபாதராஜர்.
ஸ்ரீபாதராஜரின் சிஷ்யரே ஸ்ரீவ்யாஸராஜ யோகீந்த்ரர்.
ஸ்ரீவ்யாஸராஜரின் சிஷ்யரே புரந்தரதாசர்.
புரந்தரதாசராயரின் சிஷ்யரே விஜயதாசர்.
விஜயதாசராயரின் சிஷ்யரே மோகனதாசர்.
மோகனதாசரின் சிஷ்யரே திம்மண்ணதாசர்.
திம்மண்ணதாசரின் சிஷ்யரே தாசாசார்யர் (கத்வாலி பூவராஹரகுபதிவிட்டல தாசர்).
இவருடைய சிஷ்யரே ஸ்ரீபதி விட்டலதாசர்.
இவருடைய சிஷ்யரே தந்தெஸ்ரீபதி விட்டலதாசர்.
இவருடைய சிஷ்யர் தொட்டபெல்லாபுர முத்துமோகனவிட்டல தாசர்.
இவருடைய சிஷ்யரே ப்ராணநாத விட்டலதாசாசார்யர்.
இவருடைய சிஷ்யரே ஸ்ரீநிதி மோகனவிட்டல தாசர்.
அஸ்மத் குருவந்தர்கத பாரதிரமண முக்யப்ராணாந்தர்கத ஸ்ரீநிதி மோகனவிட்டல தாசரின் தாசருக்கு நமோ நமஹ. : “ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ “.
இந்த சமயத்தில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துவது அவசியமானது என்று தோன்றுகிறது.

கன்னட மூலப் புத்தகத்தின் முன் அட்டை |
**
கன்னட முலம்: திரு.A.N. அனந்தஸ்வாமி ராவ். இவரது அங்கிதம் அனந்தவிட்டலா.
வெளியிட்டவர்கள்: தாச கூட சபா, தேவராயனதுர்கா
தமிழில்: திருமதி. ஜெயஸ்ரீ ராம்
சரிபார்த்தல்: T.V.சத்ய நாராயணன்
தமிழில் மொழிபெயர்த்து, தளத்தில் வெளியிட அனுமதி அளித்தவர்: திருமதி. சுபத்ரா, தாச கூட சபா. இவர் தந்தேமுத்துமோகனவிட்டலதாசரின் வம்சத்தை சேர்ந்தவர்.
பதிப்பாளர், விலை மற்றும் இதர விவரங்கள் |
**
கி. பி. 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தென் கர்நாடகத்தில் ஹரிதாச மார்க்கம் சற்று சரிவடைந்திருந்தது. அதை மறுபடியும் உயிர்ப்பித்து வலுவான அடித்தளத்தின் மேல் நிலைநிறுத்த வேண்டிய அவசியம் இருந்தது. இந்த சமயத்தில்தான் முத்துமோகனதாசரின் அவதாரம் ஆனது.
பெங்களூர் ஜில்லா, தொட்டபெல்லாபுரம் என்ற ஊரில் மாத்வ வைஷ்ணவ பாஷ்டிக வம்சத்தில் ஹூலுபண்டெ குடும்பத்தவரான, வசிஷ்ட கோத்திரத்தைச் சேர்ந்த ராகவேந்திரப்ப தம்பதிகள் வசித்து வந்தனர். மைசூர் ராஜ்யத்தின் முதல் குடியுரிமையாளராக நியமனம் செய்யப்பட்ட க்லோஸ் ஸாஹேபருக்கு (Close Saheb) மிகவும் வேண்டிய எழுத்தராக (clerk) ராகவேந்திரப்பன் இருந்ததாக தெரிகிறது. பின்னர் மக்கள் தொகை கணக்கெடுப்பு முக்கிய அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட க்லோஸ் ஸாஹேப், ராகவேந்திரப்பனை தனது கீழ் அதிகாரியாக நியமித்தார். ராகவேந்திரப்பன், தனது அரசு வேலை நிமித்தம் பாரத தேசத்தை மூன்று முறை சுற்றி வந்து, பல கிரந்தங்களை சேகரித்து, தன்னுடைய பயணத்தில் தினமும் எழுதிய நாட்குறிப்புகளிலிருந்து, “ஸாரஸ்வத பரிணய” என்ற காவியத்தை இயற்றியதாக தெரிய வருகிறது.
தாசகூட சபாவினர் நிர்மாணித்திருக்கும் தாசரின் சிலை வடிவம் |
அதே வம்சத்தில் சுமார் கி. பி. 1830ல் ராகவேந்திரதாசர் பிறந்தார். இவருடைய தாய், தந்தை பற்றிய விவரங்கள் தெரியவில்லை. ராகவேந்திரப்பன் தன் குலத்திற்கேற்ப கல்வி மற்றும் சாஸ்திர பாடங்களை கற்றிருந்தார். ஹரிதாசர்களின் பாடல்களினால் உந்தப்பட்டு பகவானின் நாமாக்களை சரளமாக பாடிக் கொண்டிருந்ததாக தெரிய வருகிறது.
ராகவேந்திரப்பனுக்கு சுமார் 18 வயதானபோது இவரது தாய் தந்தையர் காலமாகி விட்டனர். பன்னிரண்டு வயதான தனது தம்பி வெங்கடராயனை வளர்க்கும் பொறுப்பு அவரைச் சேர்ந்தது. எந்த குறிக்கோளும் இல்லாமல் வழி தெரியாமல் அலைந்து திரிந்து கொண்டிருந்த ராகண்னுக்கு திருமணம் செய்து வைக்க நினைத்து, அவனுடைய உறவினர்கள் அவர்களிடம் இருந்த ஒரு பெண்ணை அறிமுகப்படுத்தினர். ஆனால் ராகண்ணனோ வைராக்கியசாலியாக இருந்து, பிறவியிலேயே பார்வையற்ற அக்கண்ணம்மை என்ற பெண்ணை நல்ல எண்ணத்தில் திருமணம் புரிந்தார். பார்வையற்ற மனைவியே ஆனாலும், அவர் பக்கம் ராகண்ணன் திரும்பியே பார்க்கவில்லை. கடைசி வரை பிரம்மச்சர்யத்தை கடைப்பிடித்தார். இதற்கு அவரது மனைவியும் அனுகூலமாக இருந்ததாக தெரிகிறது.
தொட்டபெல்லாபுரத்தின் ஸ்ரீவிஜயவிட்டல ஆலயம் |
ராகண்ணனின் மனைவி அக்கண்ணம்மையின் தங்கையும் ஒரு நல்ல குடும்பத்திற்கு மருமகளாகச் சென்றபின், பார்வையற்ற அக்கண்ணம்மைக்கு ஒரு பெண் துணையின் அவசியம் இருந்ததால் ராகண்ண தம்பதிகளும், வெங்கடராயனும் அந்த குடும்பத்தின் உதவியை நாடினர்.
மனைவிக்கு தங்கையின் துணை கிடைத்தபிறகு, ராகண்ணனுக்கு சஞ்சாரம் செய்ய இருந்த தடைகள் விலகி, தம்முடைய தம்பியுடன் தீர்த்தயாத்திரை செல்ல ஆரம்பித்தார். பொதுவாக அந்த காலத்தில் கால்நடையாகவே பயணிக்க வேண்டியிருந்தது.
சகோதரர்கள் தம்முடைய முதல் சுற்றுப்பயணத்தில் வடக்கு கர்நாடகம், ஆந்திரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், வங்கதேசம், ஒரிசா முதலான இடங்களுக்கு தீர்த்தயாத்திரை சென்று, சுமார் இரண்டு வருடங்களில் ஊர் திரும்பினர். தம்முடைய இரண்டாவது சுற்றுப்பயணத்தில் உடுப்பி மற்றும் சுற்றியுள்ள க்ஷேத்ரங்களை தரிசித்து, இரண்டு மாதங்கள் கழித்து திரும்பினர்.
ஸ்ரீமுத்துமோகனவிட்டலதாசர் |
உடுப்பி யாத்திரை முடிந்து வந்த ராகண்ணன், சில மாதங்கள் தன் மனைவியுடன் இருந்து பின்னர் விஜயராயரகட்டெ இருக்கும் சிப்பகிரி மற்றும் மந்திராலய க்ஷேத்ரங்களை தரிசிக்க புறப்பட்டார்.
சிப்பகிரியில் விஜயதாசரின் ஆராதனை பொருட்டு, வழக்கப்படி, ஹரிதாச பரம்பரையில் வந்திருந்த ஸ்ரீவரவிட்டலதாசர் என்பவரின் ஹரிகதா காலக்ஷேபம் நடந்துகொண்டிருந்தது. தாசர் அவர்கள், அங்கிதத்தின் மகத்துவத்தை விவரித்ததை கேட்டு, ராகண்ணனும் அங்கிதம் பெறவேண்டும் என்று விரும்பினார். தாசரின் (ஸ்ரீவரவிட்டலதாசரின்) இயற்பெயர் ஸௌதி ராமசந்திரப்பா என்பதாகும்.
ஸ்ரீநிதிவிட்டலதாசரின் அனுக்ரஹத்தினால் அங்கித உபதேசம் பெற்றிருந்த, ஸ்ரீவரவிட்டலதாசர், தகுந்த ஒரு சீடனை தேடிக்கொண்டு இருந்தார். ஹரிகதையின் சுவையில் தீவிரமாக இருந்த ராகண்ணனை கண்ட தாசர், தமக்கு தகுந்த சிஷ்யன் கிடைத்து விட்டதாக எண்ணினார்.
உடுப்பி கிருஷ்ணன் சன்னிதியில் தாசர் கைப்பட எழுதிய உகாபோகம் |
அன்றிரவு கூடாரத்தில் உறங்கிக் கொண்டிருந்த ராகண்ணனின் கனவில் விடியற்காலை விஜயதாசர் தோன்றினார். இந்த நல்ல சகுனத்தினால் உற்சாகமடைந்த ராகண்ணன், மறுநாள் காலை ஏகாதசி அன்று தனது காலை ஆன்ஹிகங்களை முடித்து கொண்டு தாசரிடம் வந்து, அவரை வணங்கி, தன்னை உத்தரிக்க வேண்டினார். இதற்கிடையே, குரு சிஷ்யர் பரம்பரைக்கான சோதனைகள் நடந்து முடிந்திருந்தன. இப்படியாக, ராகவேந்திரப்பனுக்கு, மின்னல் வேகத்தில் அங்கித உபதேசம் செய்து, தாசபரம்பரையை வளர்க்க உத்தரவிட்டார், ஸ்ரீவரவிட்டலதாசர். இவருடைய அங்கிதம் இப்படியாக இருக்கிறது.
முத்துமோகனவிட்டல சலஹோ || ப ||
சிரி மனோஹர நின்ன ப்ரார்திசுவே நிருத||அப||
சிரி பொம்ம மொதலாத சுரரிந்த சேவிதனே
பரம கருணாளு ஹரி கரிவரதனே
நிருததலி நின்ன நாம ஸ்மரணெயித்து
கருணதலி ரக்ஷிசோ பரம பாவனனே ||1||
குரு ஹிரியரலி பகுதி விஷயதலி விரகுதி
பிரிதாத பஞ்சபேதவனு அருபி
கரிவரதனே நின்ன நாமாம்ருத சார உணிசோ
துரிதகள பரிஹரிசோ பரம பாவனனே ||2||
நானு நன்னது எம்ப துரபிமானவன்னு பிடிசோ
சானுராகதலி தாரதம்யகள திளிசோ
மானநிதி நீனே சர்வோத்தமனெம்பந்த
ஞானதாயகனாகோ ஸ்ரீவரவிட்டலா ||3||
அன்று இரவு தாசர் தன்னுடைய புதிய சிஷ்யன் மற்றும் அவனுடைய சகோதரன் வெங்கடராயனுடன் இரவு முழுவதும் விழித்திருந்து இறைவனைக் குறித்துப் பாடினார். மறு நாள் துவாதசி அன்று விஜயதாசரின் உத்தர ஆராதனை நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார்.
12இதழ்கள் கொண்ட தாமரை - கல்லில் செய்தது |
இப்படியாக ராகவேந்திரப்பன், முத்துமோகனவிட்டலதாசர் என்ற பெயர் பெற்றவராக, தன்னுடைய சகோதரனுடன் பண்டரிபுரத்திற்கு புறப்பட்டார். செல்லும் வழியில் தம்புரா ஒன்றை வாங்கிக் கொண்டு, சலங்கை, ஜால்ரா, யாசகம் (பிக்ஷை) பெறுவதற்கான ஒரு பாத்திரம் ஆகியவற்றையும் வாங்கிக் கொண்டார். தம்புராவிற்கு ஐந்து தந்திகள் இருந்தன. பயணம் செய்யும் காலத்தில் தமது தோள்களில் எளிதாக சுமந்து செல்லும் வகையில், இரண்டு பக்கமும் இரும்பு வளயங்களை பூட்டி, பகவானின் பன்னிரு நாமங்கள் மற்றும் வைணவ சின்னங்களினால் அலங்கரித்திருந்தாராம். தற்போது அந்த தம்புரா, அதே பரம்பரையில் வந்த குருகோவிந்தவிட்டலதாசரால், மைசூர் கிருஷ்ணமூர்த்திபுரத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீவிட்டல மந்திரத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
முத்துமோகனவிட்டலதாசர், பண்டரிபுரத்திலிருந்து பிரயாகை, வாரணாசி, கயா முதலான திவ்ய தேசங்களில் பகவானை நன்கு தரிசித்து அந்தந்த தேசங்களில் விதிக்கப்பட்ட உகந்த கர்மங்களை செய்து முடித்து மந்த்ராலயம் வழியாக தம்முடைய ஊருக்கு திரும்பினார்.
தாசர் தேசசஞ்சாரம் செய்வதில் விருப்பமுடையவராகி, மூன்று, நான்கு முறை காசி யாத்திரை சென்று வந்தார். நான்காவது முறையாக காசியிலிருந்து திரும்பும் பொழுது, விசுவநாதன் சன்னதியிலிருநது ஒரு லிங்கத்தை கொண்டு வந்தார். தாசருக்கு அப்பொழுது சுமார் 45 வயதிருக்கும். ஒவ்வொரு வருடமும் திருப்பதி சென்று வந்தார். அவ்வப்போது சிப்பகிரி, மந்த்ராலயம், உடுப்பி முதலான திவ்ய தேசங்களுக்கும் சென்று வந்தார். தாசர், சிவமொக்கா வழியாக உடுப்பி செல்லும்போது, தம்முடைய சிஷ்யரான பாவகட (Paavagada) கோபால்ராவ் என்பவரின் வீட்டில் இறங்கி கொள்வது வழக்கம்.
சுமார் 65 வயதான கோபாலராவ் என்பவரால் சமஸ்கிருத எழுத்துக்களில் எழுதிவைக்கப்பட்ட தாசரின் தேவரநாமாக்களை, ஸ்ரீகுருகோவிந்தவிட்டல தாசர் கிபி 1942ல் சேகரித்துள்ளார். தாசர், உடுப்பி கிருஷ்ணனின் சந்நிதியில் இயற்றி தன்னுடைய கையெழுத்திலேயே எழுதியுள்ள ஒரு உகாபோகத்தை கோபாலராவிடமிருந்து பெற்றிருந்தார். அதன் புகைப்படம் இங்கே தனியாக கொடுக்கப்பட்டுள்ளது.
முத்துமோகனதாசர், வயதான பிறகு தம்முடைய சுற்றுப்பயணங்களை குறைத்துக்கொண்டு, அருகில் இருந்த தேவராயனதுர்காவில் நடைபெறும் தேர் திருவிழாவிற்கு மட்டும் சென்று வந்ததாக தெரிகிறது.
தாசர், தாம் அதிக சிஷ்யர்களை பெறுவதைவிட திறமைமிக்க ஒரு சில சிஷ்யர்களை பெற்று, அவர்களின் மூலம் தாசதர்மத்தை எங்கும் பரப்பும் எண்ணம் உடையவராக இருந்தார். கிடைத்திருக்கும் தகவலின்படி அவருடைய சிஷ்யர்களின் எண்ணிக்கை 11 மட்டுமே. அவர்களில் மிக முக்கியமானவர், தேவராயனதுர்காவின் “பரமப்ரிய” சுப்பராயதாசர். இவர் மிக பிரபலமடைந்து, ‘தாசமார்க்கத்தை’ எங்கும் பிரச்சாரம் செய்தார். இவருக்கு அங்கித உபதேசம் நடைபெற்ற சூழ்நிலை பின்வருமாறு இருந்தது.
கரகிரி க்ஷேத்ரம் என்று பெயர் பெற்ற தேவராயனதுர்காவில் ஸ்ரீநரசிம்ம ஸ்வாமியின் தேர் திருவிழா நடைபெறும் பங்குனி மாதம் அது. மேலும் சுப்பராயர் அருகில் இருக்கும் தம்முடைய ஊரான நரசிபுரத்தில் இருந்து தேர் திருவிழாவில் கலந்து கொள்ள தம்புராவுடன் புறப்பட்டார்.
திருவிழாவின்போது ஒரு அந்தணரை சந்திக்க நேர்ந்தது. அதுவரை அங்கிதம் கிடைக்கப் பெறாது இருந்த சுப்பராயருக்கு, தொட்டபெல்லாபுரதாசர் என்று பெயர் பெற்ற, க்ஷேத்ர பயணத்தில் இருக்கும் மகிமை வாய்ந்தவரே குரு என்றும், அவரை தரிசித்த மாத்திரத்தில் அங்கித உபதேசம் பெறுமாறு குறிப்பிட்டு உடனே மறைந்தார், அந்த அந்தணர். தேர் திருவிழா முடிந்த பின்னர் அவருடைய குருவை தேடும் படலம் ஆரம்பம் ஆனது.
அதே சமயத்தில் சுப்பராயருடைய மனைவியின் சீமந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்தன. தொட்டபெல்லாபுரத்தின் ராகவேந்திரதாசர், நரசிபுரத்திற்கு - தன் இரு சிஷ்யர்களுடன், குதிரையில் எழுந்தருளினார். கிருஷ்ணான்ஜினத்தின் சட்டை அணிந்து மற்றும் பூஜை மணி, தோள்களில் சுமந்து செல்லும் வகையில் இரும்பு வளையங்கள் பூட்டிய ஐந்து தந்திகள் உடைய தம்புரா முதலானவற்றை உடன் வைத்திருந்தார். அவரைக் கண்டவுடன் சுப்பராயதாசர், தமக்கு குரு கிடைத்து விட்டதாக ஆனந்தம் அடைந்தார். தயை கூர்ந்து அங்கித உபதேசம் மற்றும் தாசதீக்ஷையை அளிக்கும்படி வேண்டினார். குரு சேவை செய்த பிறகே தக்க நேரத்தில் தீக்ஷை கிடைக்கும் என்று தாசர் சுப்பராயரை சமாதானப்படுத்தினார்.
அன்றைய தினம் உபசரிப்புகளை ஏற்றுக்கொண்டு மறுநாள் காலை தம்முடைய பயணத்தைத் தொடர ஆயத்தமானார். தாசர் குதிரையில் அமர்ந்து தம்முடைய சிஷ்யருடன் புறப்பட்டபோது அவருக்கு வழி காட்டும் பொருட்டு, சுப்பராயரும் உடன் சென்றார். நெடுஞ்சாலையை அடைந்தவுடன் தாசர், சுப்பராயரை திரும்பிச் செல்ல பணித்தார்.
சுப்பராயர் மிகுந்த வேதனையுடன் தனக்கு தாச தீக்ஷையை அளிக்கும்படி மன்றாடி வேண்டினார். அவரை சமாதானப்படுத்தும் வகையில் தாசர் குதிரையில் இருந்து கீழே இறங்கியவுடன், சுப்பராயர், தாசரின் கால்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு கண்ணீர் மல்க சிஷ்யத்வத்தை வேண்டினார். முதல் நாள் இரவு, தாசரின் பயணக் களைப்பைப் போக்க பாதசேவை செய்ததன் பலனாக, தகுதி பெற்ற சுப்பராயரை மேலும் சோதிக்க விரும்பாமல், மறுநாள் தும்கூர் வியாஸராய மடத்திற்கு வரும்படி கட்டளையிட்டு, தாசர் தம் பயணத்தை தொடர்ந்தார்.
தாசரின் கட்டளைப்படி, தும்கூரின் வியாஸராய மடத்திற்கு வந்த சுப்பராயருக்கு, ஸ்ரீமுத்துமோகனதாசர், சுபமுகூர்த்தத்தில் தத்வ உபதேசம் செய்து “தந்தெமுத்துமோகன விட்டல“ என்ற அங்கிதத்தை அதிகாரபூர்வமாக வழங்கினார்.
ஸ்ரீமுத்துமோகன தாசரின் ஏனைய சிஷ்யர்களில் பாலகிருஷ்ணதாசர், கரிவரத விட்டலதாசர் மற்றும் கருணாகர விட்டலதாசர் ஆகியோர், ஹரிகதாகாலக்ஷேபம் செய்வது, பாடல்களை இயற்றுவது ஆகியவை மூலமாக தாசதர்மத்தை பரப்பினர்.
தாசரின் தினப்படி நடவடிக்கைகளுக்கு ஒரு இடம் / நிலம் தேவைப்பட்டது. அதற்காக ஒரு நிலத்தை வாங்கி, விட்டலனின் சிலையை ப்ரதிஷ்டாபனம் செய்ய தீர்மானித்தார். பக்தர்கள் தாமாகவே கொடுக்கும் பணத்தை சேகரிக்க ஆரம்பித்தார்.
இந்த சமயத்தில் சில சிஷ்யர்களின் விருப்பப்படி தாசர், தம்முடைய தம்பியான வெங்கடராயனுடன் உடுப்பி யாத்திரைக்கு புறப்பட்டார். செல்லும் வழியில், தும்கூரில் திவான் பூர்ணய்ய அவரின் வம்சத்தவரும் அந்த ஜில்லா அதிகாரியுமான சர். P.N. கிருஷ்ணமூர்த்தி அவர்களை தொடர்பு கொண்டு, விட்டலனுக்கு கோவில் கட்டுவது குறித்து விவரித்தார். கோவில் திருப்பணி உதவிக்கான உறுதிமொழி பெற்றுக் கொண்டு, உடுப்பி பயணத்தை தொடர்ந்தார். தாசர் உடுப்பி யாத்திரையை முடித்துக் கொண்டு தொட்டபெல்லாபுரத்திற்கு திரும்பும் வழியில் மறுபடியும் தும்கூருக்கு வந்து, கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உறுதிமொழியின்படி, விட்டலன் கோவில் திருப்பணிக்கான உதவியை பெறுவதற்கு முயற்சித்தார்.
இதற்கிடையே கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தமது ஒரே மகனுக்கு வெகு விமரிசையாக உபநயனம் செய்ய ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தபோது, திடீரென்று அவருடைய மகன் நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டான். இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் அக்கறையின்றி தாசருக்கு தகுந்த மரியாதை அளிக்காததால் மன அழுத்தத்திற்கு உள்ளான தாசர், தொட்டபெல்லாபுரத்தின் சன்னதியில் தமது தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக சாகும்வரை உண்ணாவிரதத்திற்கு அமர்ந்தார்.
இந்த சமயத்தில் சரியாக தும்கூரில் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு தான் தாசருக்கு அளித்த உறுதிமொழி நினைவிற்கு வந்தது. தாசர் தம்மிடம் வந்த பொழுது உரிய மரியாதையை அளிக்காததற்கு வருந்தினார். தாசர், தரபனஹள்ளியில் (Tharabanahalli) முகாம் இட்டிருப்பதை அறிந்து, உடனடியாக தம்முடைய பரிவாரத்துடன் ஓடிச் சென்று மன்னிப்பு கோரினார். உபவாஸத்தை நிறுத்த வேண்டிக்கொண்டு, பின்னர் தாசரை உணவருந்தச் செய்தார்.
பின்னர், விட்டலனின் கோவில் திருப்பணிக்கான பணத்தை அர்ப்பணித்துவிட்டு திரும்பினார். தாசர், தரபனஹள்ளியின் பக்தர்களிடம் இருந்து கோவில் கட்டுவதற்காக பொருள் உதவி பெற்றுக் கொண்டு, தொட்டபெல்லாபுரத்திற்கு திரும்பினார்.
கோவில் நிலத்திற்காக பலவாறாக யோசித்து, இறுதியில் தம் திருமணத்திற்கு தம்முடைய மாமனாரிடமிருந்து பெற்ற பூர்வீக சொத்தான காலி நிலத்திலேயே கோவில் கட்டினார். சுமார் கி.பி. 1888 ல் ஒரு சுபதினத்தன்று முதலிலேயே தயாராகி இருந்த விட்டலன் சிலையை ப்ரதிஷ்டாபனம் செய்தார். ஏற்கனவே தாம் காசியிலிருந்து கொண்டு வந்த சிவலிங்கத்தை, விட்டலனின் இடது பக்கம் ப்ரதிஷ்டாபனம் செய்தார். அன்றிலிருந்து தாசருடைய கடைசி காலம் வரை, விட்டலனின் கோவிலே அவருடைய பஜனை மற்றும் ஆராதனை முதலான நடவடிக்கைகளின் மையமானது.
தாசர் திரண்ட தோள்கள் உடையவராகி, வசீகரமான முகம் மற்றும் கருமை கலந்த செந்நிற மேனியுடையவராக இருந்தார். அடர்ந்த மற்றும் நீண்ட தாடியுடன் ஜடாதாரிகளாக இருந்தார். முழங்கால் வரை வேட்டி, கழுத்தில் துளசி மற்றும் கமலாக்ஷி மாலைகள் அணிந்து, நெற்றியில் பளிச்சென்று தெரியும் அங்கார அக்ஷதைகளை இட்டுக் கொண்டு காவியுடை போர்த்திக் கொண்டு தாசர், ரிஷிகளைபோல காட்சி அளித்தார்.
தாசர் குடும்பஸ்தராக இருந்த போதிலும் துறவிகளைபோல வாழ்க்கை முறையை கடைபிடித்து, தம்முடைய உணவை தாமே சமைத்து கொள்ளும் வழக்கம் உடையவராகிருந்தார். சகோதரனான வெங்கடராயனும் சமையல் செய்து கொண்டிருந்தார். அவர் இல்லாத நேரத்தில் தாமே சமைத்து கொண்டிருந்தார். ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு, இரவு பலகாரம் சாப்பிட்டு வந்தார். முறைப்படி பூஜை விதிகளை பின்பற்றினார். பூஜை நேரத்தில் மேளம், சங்கு, தம்புரா முதலானவற்றை வாசித்தார்.
சஞ்சாரம் செய்யும் காலத்தில் இடுப்பு வரையிலான கிருஷ்ணான்ஜின சட்டை, தொப்பி, தலையில் காவி துண்டினாலான முண்டாசு முதலானவற்றை அணிந்து, தோள்களில் சுமந்து செல்லும் வகையில் முனைகளில் இரும்பு வளையங்கள் பூட்டப்பட்ட, ஐந்து தந்திகள் உடைய தம்புரா, தாளம் மற்றும் கால்களில் சலங்கை முதலானவற்றை அணிந்திருந்தார். குதிரையின் மீது ஏறி பயணம் செய்து வந்தார்.
மொதலகல்லு சேஷதாசருடனான சம்பந்தம்
தாசருடைய சிஷ்யர்களில் ஒருவரான, கரிவரதவிட்டல அங்கிதம் உடையவரான ராமதாசர் என்பவரின் கூற்றின்படி, தாசருக்கும், மொதலகல்லு சேஷதாசருக்கும் (கி.பி. 1801 - 1885) நெருங்கிய தொடர்பு இருந்தது. தாசர், பலமுறை மொதலகல்லு சென்று சேஷதாசரை சந்தித்து சேவை புரிந்து வந்துள்ளார்.
பிறவியிலேயே பார்வையற்றவரானாலும், மங்கையர் குலதிலகமாக திகழ்ந்த மனைவியும், அந்த ஜென்மத்தில் ப்ரம்மசாரியாகி - தன்னுடைய சகோதரன் மற்றும் அவரது மனைவி இருவருக்கும் பணிவிடை செய்வதையே வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டிருந்த வெங்கடராயனும், முதுமையில் தாசருக்கு பணிவிடை புரிந்து வந்தனர். காலப்போக்கில் வெங்கடராயனும் இறந்து விட்டான். பிறகு தாசரின் சிஷ்ய வட்டாரத்தில் இருந்த ஊதுகட்டி ஹனுமனந்தராயர் என்பவர், தாசருக்கு பணிவிடை புரிந்து வந்தார். தாசர், விட்டலனின் பூஜையை மட்டும் யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் தாமே செய்து வந்தார்.
கி.பி. 1898 ல் தொட்டபெல்லாபுரத்தில் ப்ளேக் காய்ச்சல் தொந்திரவு தலை தூக்கியபோது, மக்கள் ஊருக்கு வெளியே முகாமிட்டனர். ஆனால் தாசர் மட்டும் விட்டலனின் பூஜையை நிறுத்த மனமின்றி ஊரிலேயே தங்கினார். இந்த சமயத்தில் ஒரு நாள், ஊதுகட்டி ஹனுமனந்தராயரை அழைத்த தாசர், தம்முடைய இறுதிக்காலம் நெருங்கிவிட்டதை கூறி, தமக்கு மக்கள் இல்லாததால் தம்முடைய அந்திமக்ரியைகளை செய்வதற்கான உறுதிமொழி பெற்றுக் கொண்டார்.
கி.பி. 1898ல் சில நாட்களில் தாசரின் உடல்நிலை குன்றிய அந்த நிலையிலும் ஸ்நானம் மற்றும் பூஜைகள் செய்து வந்தார். சாலிவாஹன சக1820 (கி.பி. 1898) விளம்பி நாம சம்வத்சரத்தில் கார்த்திகை மாதம் பகுள சதுர்தசியன்று காலை, விட்டலனுக்கு அர்ச்சனை, நைவேத்யம், மங்ளாரத்தி ஆகியவற்றை முடித்துக் கொண்டு பிரதிமைகளை எடுத்து வைப்பதற்கு முன் மிகவும் களைப்புற்றார். இப்படிப்பட்ட நிலையில் கோவில் கர்ப்பகிரகத்தில் இருப்பது சரியல்ல என்று தீர்மானம் செய்து கோவிலின் வெளிப்புறத்திற்கு வந்தார். அங்கு தம்மாலேயே கல்லில் செதுக்கப்பட்ட பன்னிரு இதழ் தாமரையின் மேல் அமர்ந்து கொண்டு, நாராயணனை தியானித்துக் கொண்டு, சுமார் 11.15 மணிக்கு தேகத்தியாகம் செய்தார். தாம் அளித்த உறுதிமொழியின்படி ஊதுகட்டி ஹனுமனந்த ராயர், ஏனைய சிஷ்யர்கள் மற்றும் ஊர் மக்களுடன் இணைந்து, தாசரின் அந்திம க்ரியைகளை செய்து முடித்தார். இப்பொழுது தகுந்த பராமரிப்பு இல்லாததால், தாமரை செதுக்கப்பட்ட கல் காணப்படவில்லை. ஸ்ரீகுருகோவிந்தவிட்டல தாசர் சேகரித்த தாமரை செதுக்கப்பட்ட கல்லின் வரைபடம் தனியாக கொடுக்கப்பட்டுள்ளது.
தாசரின் சிஷ்யரான ஸ்ரீகுருகோவிந்த விட்டல தாசர், முத்துமோகனதாசரின் வாழ்க்கை வரலாற்றை “முததிபாலிசோ/ முத்துமோகனராயா..... “ என்ற பாடலில் எளிமையாகவும், அழகாகவும், விரிவாகவும் எடுத்துரைத்துள்ளார். அதை பின் வரும் பக்கங்களில் காணலாம்.
முத்துமோகனதாசர், பங்கநாம திம்மண்ணதாசரின் (வேணுகோபாலவிட்டல தாசரின்) பரம்பரையை சேர்ந்தவர் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் இவர் மோகனதாசரின் பரம்பரையை சேர்ந்தவர் என்றும் ஒரு தரப்பினர் கூறுவதுண்டு.
ஸ்ரீபாகேபள்ளி சேஷதாசரின் சிஷ்யரும், ஸ்ரீநிதி மோகன விட்டலாங்கிதருமான ஸ்ரீநந்தகுடி ஷ்யாமதாசர், தம்முடைய சொந்த கையெழுத்திலேயே எழுதி வைத்திருக்கும் “குருபேளிகெ (குருபரம்பரை) ” பின்வருமாறு உள்ளது.
ஸ்ரீநிதி மோகனவிட்டல ப்ரசன்ன ஸ்ரீகுருப்யோ நமஹ : ஹரி: ஓம்.
“குருபேளிகெ “
ஸ்ரீபதிய நாபியிந்த அஜ ஜனிசிதனு.
அஜனமான சபுத்ரரே சனகாதிகளு.
சனகாத்யர சிஷ்யரே துர்வாசரு.
துர்வாசர சிஷ்யரே கருடவாஹன தீர்த்தரு.
கருட வாஹன தீர்த்தர சிஷ்யரே க்ருபல்ய தீர்த்தரு.
க்ருபல்ய தீர்த்தர சிஷ்யரே ஞானேச தீர்த்தரு.
ஞானேச தீர்த்தர சிஷ்யரே பர தீர்த்தரு.
பரதீர்த்தர சிஷ்யரே சத்யப்ரக்ஞ தீர்த்தரு.
சத்யப்ரக்ஞ தீர்த்தர சிஷ்யரே ப்ராக்ஞ தீர்த்தரு.
ப்ராக்ஞ தீர்த்தர சிஷ்யரே அச்யுத ப்ரேக்ஷாச்சார்யரு.
அச்யுத ப்ரேக்ஷாச்சார்யர (சிஷ்யரே) கரகமலத சஞ்ஜாதரே நம்ம பூர்ணப்ரக்ஞரு.
பூர்ணப்ரக்ஞரே நம்ம ஸ்ரீமதானந்த தீர்த்த குரு மத்வரு.
ஸ்ரீமதானந்த தீர்த்தர ப்ரதம சிஷ்யரே பத்மநாப தீர்த்தரு.
பத்மநாப தீர்த்தர சிஷ்யரே லக்ஷ்மிதர தீர்த்தரு.
லக்ஷ்மிதர தீர்த்தர சிஷ்யரே சங்கருஷண தீர்த்தரு.
சங்கருஷண தீர்த்தர சிஷ்யரே பரசுராம தீர்த்தரு.
பரசுராம தீர்த்தர சிஷ்யரே ஆதிராஜ தீர்த்தரு.
ஆதிராஜ தீர்த்தர சிஷ்யரே சத்யவ்ரத தீர்த்தரு.
சத்யவ்ரத தீர்த்தர சிஷ்யரே சுவர்ணவர்ணதீர்த்தரு.
சுவர்ணவர்ணதீர்த்தர கரகமல சஞ்ஜாதரே நம்ம ஸ்ரீபாதராஜ தீர்த்தரு
ஸ்ரீபாதராஜதீர்த்தர சிஷ்யரே ஸ்ரீவ்யாஸராஜ யோகீந்த்ரரு.
ஸ்ரீவ்யாஸராஜர சிஷ்யரே புரந்தரதாசரு.
புரந்தரதாசராயர சிஷ்யரே விஜயதாசரு.
விஜயதாச ராயர சிஷ்யரே மோகனதாசரு.
மோகனதாசர சிஷ்யரே திம்மண்ணதாசரு.
திம்மண்ண தாசர சிஷ்யரே தாசாசார்யரு. (கத்வாலி பூவராஹ ரகுபதி விட்டல தாசர்).
இவர சிஷ்யரே ஸ்ரீபதி விட்டல தாசர்.
இவர சிஷ்ய தந்தெ ஸ்ரீபதி விட்டலதாசர்.
இவர சிஷ்யரு தொட்டபெல்லாபுரத முத்துமோகனவிட்டல தாசர்.
இவர சிஷ்யரே ப்ராணநாத விட்டல தாசாசார்யரு.
இவர சிஷ்யரே ஸ்ரீநிதிமோகன விட்டலதாசர்.
அஸ்மத் குருவந்தர்கத பாரதிரமண முக்யப்ராணாந்தர்கத ஸ்ரீநிதிமோகனவிட்டலதாசர தாசரிகெ நமோ நமோ நமஹ. : “ஸ்ரீஸ்ரீஸ்ரீ “.
(மேற்கண்ட குருபேளிகே - கீழே தமிழில்)
ஸ்ரீபதியான நாராயணனின் நாபியிலிருந்து அஜ (பிரம்மா) பிறந்தார்.
பிரம்மாவின் மானச புத்ரரே சனகாதிகள்.
சனகாதிகளின் சிஷ்யரே துர்வாசர்.
துர்வாசரின் சிஷ்யரே கருடவாஹன தீர்த்தர்.
கருடவாஹன தீர்த்தரின் சிஷ்யரே க்ருபல்ய தீர்த்தர்.
க்ருபல்ய தீர்த்தரின் சிஷ்யரே க்ஞானேச தீர்த்தர்.
க்ஞானேச தீர்த்தரின் சிஷ்யரே பரதீர்த்தர்.
பரதீர்த்தரின் சிஷ்யரே சத்யப்ரக்ஞ தீர்த்தர்.
சத்யப்ரக்ஞ தீர்த்தரின் சிஷ்யரே ப்ராக்ஞ தீர்த்தர்.
ப்ராக்ஞ தீர்த்தரின் சிஷ்யரே அச்யுத ப்ரேக்ஷாச்சார்யர்.
அச்யுத ப்ரேக்ஷாச்சார்யரின் (சிஷ்யரே) கரகமல சஞ்ஜாதரே நம்முடைய பூர்ணப்ரக்ஞர்.
பூர்ணப்ரக்ஞரே நம்முடைய ஸ்ரீமதானந்ததீர்த்த குரு மத்வர்.
ஸ்ரீமதானந்ததீர்த்தரின் முதன்மை சிஷ்யரே பத்மநாப தீர்த்தர்.
பத்மநாப தீர்த்தரின் சிஷ்யரே லக்ஷ்மிதர தீர்த்தர்.
லக்ஷ்மிதர தீர்த்தரின் சிஷ்யரே சங்கருஷண தீர்த்தர்.
சங்கருஷண தீர்த்தரின் சிஷ்யரே பரசுராம தீர்த்தர்.
பரசுராம தீர்த்தரின் சிஷ்யரே ஆதிராஜ தீர்த்தர்.
ஆதிராஜ தீர்த்தரின் சிஷ்யரே சத்யவ்ரத தீர்த்தர்.
சத்யவ்ரத தீர்த்தரின் சிஷ்யரே சுவர்ணவர்ண தீர்த்தர்.
சுவர்ணவர்ண தீர்த்தரின் கரகமல சஞ்ஜாதரே நம்முடைய ஸ்ரீபாதராஜர்.
ஸ்ரீபாதராஜரின் சிஷ்யரே ஸ்ரீவ்யாஸராஜ யோகீந்த்ரர்.
ஸ்ரீவ்யாஸராஜரின் சிஷ்யரே புரந்தரதாசர்.
புரந்தரதாசராயரின் சிஷ்யரே விஜயதாசர்.
விஜயதாசராயரின் சிஷ்யரே மோகனதாசர்.
மோகனதாசரின் சிஷ்யரே திம்மண்ணதாசர்.
திம்மண்ணதாசரின் சிஷ்யரே தாசாசார்யர் (கத்வாலி பூவராஹரகுபதிவிட்டல தாசர்).
இவருடைய சிஷ்யரே ஸ்ரீபதி விட்டலதாசர்.
இவருடைய சிஷ்யரே தந்தெஸ்ரீபதி விட்டலதாசர்.
இவருடைய சிஷ்யர் தொட்டபெல்லாபுர முத்துமோகனவிட்டல தாசர்.
இவருடைய சிஷ்யரே ப்ராணநாத விட்டலதாசாசார்யர்.
இவருடைய சிஷ்யரே ஸ்ரீநிதி மோகனவிட்டல தாசர்.
அஸ்மத் குருவந்தர்கத பாரதிரமண முக்யப்ராணாந்தர்கத ஸ்ரீநிதி மோகனவிட்டல தாசரின் தாசருக்கு நமோ நமஹ. : “ஸ்ரீ ஸ்ரீஸ்ரீ “.
இந்த சமயத்தில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துவது அவசியமானது என்று தோன்றுகிறது.
ஸ்ரீதந்தெமுத்துமோகன தாசரின் பரம்பரையை பல இடங்களில் ஸ்ரீவேணுகோபாலதாசரின் (பங்கநாம திம்மண்ணதாசரின்) பரம்பரையைச் சேர்ந்தவர் என்ற கருத்தை ஆங்காங்கே காணலாம். ஆனால் ஸ்ரீஷ்யாமதாசர் எழுதி வைத்திருக்கும் ‘குருபேளிகெ‘யின்படி, ஸ்ரீமோகனதாசரிலிருந்து பரம்பரை தொடர்வதாக தெரிகிறது. இது, ஸ்ரீதந்தெவெங்கடேசவிட்டல அங்கிதரான, சித்ரதுர்காவை சேர்ந்த ஸ்ரீ ஆர். ராமச்சந்திரதாசர் (கி.பி.1907 – 1982), “தந்தெமுத்து மோகன அஸ்மத் குரோர் குரு” என்ற ஸ்தோத்ர பாடலில் “மோகனவிட்டல வம்ச தொளகுத்பவிசி” என்று கூறியுள்ளதற்கு பொருந்துகிறது.
பாரமார்த்த சந்த்ரோதயாவில் வெளியிடப்பட்ட சில கட்டுரைகளில் தாசரின் பரம்பரையை, ஸ்ரீமோகனதாசருடையதென்றும், இன்னும் சில கட்டுரைகளில் ஸ்ரீபங்கநாமத திம்மண்ண தாசருடையதென்றும் (ஸ்ரீவேணுகோபால தாசர்) கூறியிருப்பதைக் காணலாம். ஆனால் வேணுகோபால தாசரிலிருந்து, முத்துமோகன தாசர் வரையிலான பரம்பரையை சேர்ந்த எல்லா தாசர்களின் அங்கிதங்களும் கிடைத்திருப்பதால், இவருடைய பரம்பரை வேணுகோபால தாசருடையதே என்று கூறவேண்டியுள்ளது.
இதுவரை கிடைத்திருக்கும் தாசரின் பதினெட்டு பாடல்களில், பதினொன்று உகாபோகங்கள், ஒரு சுளாதி, மூன்று ஸ்தோத்ர பாடல்கள் மற்றும் இரண்டு அங்கித பாடல்கள். இவற்றை காணும் போது, தாசருக்கு பல வகையான காவியங்கள் இயற்றும் திறமை இருந்ததாக தெரிகிறது. மேலும் அவர் தாசர்கள், யதிகள் மற்றும் தேவதைகள் குறித்து பல்வேறு ஸ்தோத்ரங்கள் இயற்றியிருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் அவைகள் தற்போது நடைமுறையில் இல்லை. தாசருடைய எழுதும் பாணி எளிமையாக இருப்பதுடன், பாடல்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் உள்ளன.
ஸ்ரீ முத்துமோகன தாசர், மந்திராலயத்தின் ராகவேந்திர ஸ்வாமிகளின் அம்சமாக நம்பப்படுகிறார்.
கி.பி. 2000 ல் தேவராயனதுர்காவின், தாச கூட சபா நூற்றாண்டு சமிதியினர் அர்ப்பித்திருக்கும் ஸ்ரீதாசரின் மாதிரி நினைவுச் சிலை, தொட்டபெல்லாபுரத்தில் ஸ்ரீவிஜயவிட்டலனின் கோவிலில் நிறுவப்பட்டுள்ளது. இதன் பின்னர், பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த ஸ்ரீவிஜயவிட்டலனின் கோவில், உள்ளூர் ஸ்ரீமாத்வ சங்கத்தினரின் ஆர்வம் மற்றும் விடாமுயற்சியினாலும் மறுபடியும் இயக்கப்பட்டு இப்பொழுது, மத சம்பந்தமான நடவடிக்கைகளுக்கு ஒரு மையமாக உள்ளது.
ஸ்ரீதாசரைப் பற்றி மேலும் தகவல் அறிய விருப்பம் உடையவர்கள், குருகோவிந்தவிட்டல தாசர் எழுதியுள்ள “தொட்டபெல்லாபுரத ஸ்ரீமுத்துமோகன தாசர் (1965)” என்ற புத்தகத்தை பார்க்கலாம்.
ஸ்ரீக்ருஷ்ணார்ப்பணம்..
Tuesday, June 13, 2017
Guru Govinda Vittala Dasaru
Guru Govinda vittala Dasaru
Article published during the 25th Aradhana of Dasaru (2007)
In Kannada: Harati G Prahlad
Translated in English: T.M.Vishwa Janani
Verified by: T.V.Sathya Narayanan
***
Sri Guru Govinda Vittala Dasaru of Mysore is one among the most selfless Haridasas I have ever seen. The first time I met him was in 1975-76 which in itself is a very exciting story to share. He used to stay near Ballal circle in Mysore. When asked about his residence, nobody knew him. I could not find his house that night, I came back the next morning but still couldn’t locate his house. Thinking that it was God’s wish,I decided to go to Thirumakoodli Narasipura (T. Narasipura) to attend Shesha Chandrikaacharya’s Aradhana. Standing at that very circle, I saw an old man who was a smartha brahmin coming towards me along with his grandson. To me he looked like Lord Shiva (Rudra Devaru) and so I decided to ask him about the address. When I asked him about it, he said I am also going that way, come along if you want. We took an auto and went to his house. By the time I got down and paid the driver, the old man had vanished.
I went inside, met Guru Govinda Dasaru and took his blessings. He enquired about my well-being and I told him that I was planning to go to T. Narasipura. From that moment I was in touch with him through frequent letters and later on had Sri Krishna Mantra Upadesha from him.
Dasaru has written around 800 songs on devatas, yatis and other hari dasas, apart from giving ankitha to about 265 people. He has also composed devara namas for them. And on including these he has composed around 1000 songs.
He has also composed Nadhi Stotra, Kuchelopakhyana, Annabrahma, Aadhyatmika Venkatesha Kalyana and Dashopanishath in Shatpadi meter in Kannada. We can say that beginning from Madhwacharyaru nobody has done this kind of work till the 20th century. And when it came to his disciples, he would personally look into each of their difficulties, compose a song and pray for them to God. He has introduced many unknown devotees to the world in his book ‘Haribhakthi Vijaya’ which consists of 7 volumes. He has also translated Sundara Kanda, Ramayana and I. G. Swamiji’s Manasa Smruti into Kannada.
Since he has travelled across the country and has done theertha yatre, he has composed a work named ‘Theertha Kshetra Mala’, which consists of 96 nudis.
In each of his works he has thanked the Tatvabhimani Devatas and Rudraantargata Bharatiramana Mukhyapranaantargata Sri Hari, which shows his belief in the Tatvabhimani Devatas. Moreover, he says that he did not write any of those works, instead it is the Lord himself who has composed them.
Guru Govinda Vittalaru had a unique way of giving ankitha to his shishyas. He has voluntarily given ankitha to some and to some others he given ankitha so that they can render their seva to the Lord. He used to pray, waited till both of them (Dasaru & the shishya to whom ankita to be given) get a dream, composed a song in the praise of the bimba roopi paramatma and then blessed his shishya with ankitha. He has given ankitha to many non-brahmins also. This shows his greatness. But that does not mean that he gave ankitha to anyone and everyone who asked.
He showed lots of affection towards his disciples. Despite his old age, he has never refused anyone who would invite him to any function. He would go there and bless them even if it was at a faraway place.
Once, when a lady approached him for ankitha through one of his disciples (a lady), he asked her several questions and told her to come back to him once she got the dream. The lady prayed for 4-5 years but still did not get any dream. So she went to that lady disciple who had first introduced her to Dasaru and told her that Dasaru did not give me ankitha even after approaching him, please help me. So when the latter met Dasaru, she told him about the concerns of that lady to which he replied that even he did not get any dream. On hearing this she asks him whether she can perform seva on that lady’s behalf and pray to God so that she will get the dream, for which he said yes. From the next day she starts with her seva and within 10-12 days the lady gets the dream. Is it not great that the fruit of ones seva has resulted in another lady getting her ankitha? Many more incidents like this have happened.
Dasaru was not the one who would talk too much. When Dasaru was given the civic honour in Bangalore, we were also present there. There, when he was given a mike and was asked to bless the devotees with a speech (anugraha sandesha), he said instead of him, one of his disciple will speak. This clearly shows that he is not a promoter of himself.
He used to actively participate in the Akhila Bharata Haridasa Sammelana and conduct various programs on the occasion of Purandara Dasara Aaradhana for several years. “Yaayivaarava maadi viprarige mrishtaanna, priyadhali thaanondhu kodadha lobhi” - keeping this (Sri Vyasarayaru’s song on Purandaradasaru) in mind, he has given to the world many gems and has been an inspiration for many.It will not be wrong if we call him ‘Abhinava Purandara Dasaru’.
Dasaru is said to be very stubborn. Once he has decided on something, he does not leave it in between. The incidents that took place during the aaradhana mahotsava at Tirupati and Pandarapur are enough to prove this. Dasaru once decided to perform Bruhati Sahasra Homa on banks of River Godavari through learnt scholars and pandits. By chanting mantras, he made bricks, got them to the venue and performed the homa on a scale that was neither witnessed before nor after. During the homa a Telugu non-brahmin person said that, the Lord himself has come, riding on a horse back (Kalkyavatara), to bless us. Everybody there got surprised, when he shouted the Lord has come and asked everybody to see Him. Dasaru always had special blessings from Sri Vadirajaru. This was evidenced when SwapnaVrindavanakhyana book was published and a homa was performed in its honour. At the age of 89, he completely devoted himself to Sri Hari. He reached his final abode, the lotus feet of the Lord on margashira bahula Dwadashi in Anathapura. I would like to bow my head in respect to the great Dasaru.
Dasaru had special devotion towards Sri Vadirajaru and performed payo vrata in Swadi (Sonda). Whenever he had any problems in his life or any of his disciples were in trouble, he would perform seva to the Rajaru and wait till he gets a solution from Rajaru through a dream before continuing with his other works. This showed how much he devoted himself to Rajaru.
In 1983 Purandara Dasara Aradhana was scheduled to be held in Swadi. Everyone was very happy that Dasaru himself distributed the invitation cards and was overlooking all the preparation for the aradhana. But what happened? Dasaru left for his heavenly abode just a month before the aradhana and left everyone shocked. But his disciples took over from there and completed the aradhana just the way Dasaru would have done. From then on, for 30 years now, they have been conducting Purandara Dasara Aradhana every year.
The one who questions, how can we call him a Hari Dasaru, will stop in his tracks once he sees Dasaru’s picture. But we should also have a look at his works to know his greatness. This was not the case only with Dasaru. The one who wants to know about all the Hari Dasaru should not comment without having a look at their respective works. The reason behind this is that, as Acharya Madhwaru says, a part of him (his Amsha) resides in all his granthas.
As Purandara dasaru says,“Kereya neeranu kerege chelli”, Dasaru converted his house into a Vittala temple. He installed an idol of Vittala in his house and showed a path to the future generation. Because of him Mysore is known as second Pundarapur. He has also given explicit meaning for the song “Dasanagu Vishesanagu” and has guided his disciples.
There is no doubt in the fact that, Guru Govinda Vittala dasaru is unmatched Haridasaru in the 20th century. Dasaru has shown a lot of mercy on an ignorant person like me and has graced me with his blessings. He has sacrificed a lot. Meeting Dasaru was always heart-warming and he emphasised on upasane of the Supreme Lord. The meaning of the song “Phalavidu Baldudake”, has been the virtue of his life.
Dasaru was one of the last disciples of Sri Tande Muddu Mohana Vittala Dasaru who belongs to the Vijaya Prabu Parampare and who was the disciple of SriVara Vittala Dasaru and Sri Muddu Mohana Vittala Dasaru. With the ankitha of Guru Govinda Vittala, Dasaru got Haridasa deekshe and became a part of the Haridasa Parampare. Famously known as “Haridasa Kulatilaka”, Dasaru was one among the few who helped to spread awareness about Haridasa Sahitya and Dasakoota in Karnataka and especially, in Mysore. I bow my head in respect to the Dasaru who has the first position in the fifth stage (gatta) of Haridasa lineage.
I pray to God, let such people be born often and make our lives worth living. The purpose of this article is to inspire and show the right way to all the young and curious people out there.
Jai Paschima Ranga
Jai Bharateesha
Jai Vadirajaarpanamastu
Thursday, June 1, 2017
ஸ்ரீத விட்டலரின் வாழ்க்கைச் சரிதம்
ஸ்ரீத விட்டலரின் வாழ்க்கைச் சரிதம் (1741-1820)
கன்னடத்தில் : திரு.K.அப்பண்ணாச்சார்யா
(Srida Vittala Kruthigalu - Published by TTD Religious Publications - 1997)
தமிழில் : T.V.சத்ய நாராயணன்.
***
சதாம் பிரசங்கான் மம வீர்ய சம்விதோ
பவந்தி ஹ்ருத் கர்ண ரசாயனா: கதா:
ஸ்ரத்தாரதிர் பக்தி ரனுக்ரமிஷ்யதி
தத் ஜோஷணா தாஷ்வ பவர்க்க வர்த்மனி
(ஸ்ரீமத் பாகவதம் 3-25-25)
இது பாகவதாசாரியரின் அமுதமொழி. கற்றறிந்த ஞானிகளுடனான சகவாசத்தை அந்த ஸ்ரீஹரியே விரும்புகிறான். சகவாசம் என்றால் எப்போதும் அவர்கள் அருகிலேயே இருப்பது என்றில்லை. சகவாசம் என்றால் - அருகில் மற்றும் மனதளவில் என்று இருவகைகள் உண்டு. அருகில் என்றால் ஞானிகளுடனேயே இருப்பது. மனதளவில் என்றால் அவர்களை எப்போதும் நினைத்துக் கொள்வது, அவர்களின் புகழ் பாடுவது, அவர்களை பற்றிய கதைகளைக் கேட்பது - இவையே ஆகும்.
ஞானிகளின் கதை என்றால் அந்த ஸ்ரீஹரியின் கதை என்றே சொல்லலாம். எப்படியென்றால், ஞானிகளின் நடவடிக்கைகள் அனைத்தும் ஸ்ரீஹரியைச் சுற்றியே - எப்போதும் அவனைச் சம்பந்தப்பட்டே இருப்பதால், அப்படிச் சொல்லலாம். இந்த ஞானிகளின் உபன்யாசங்களினால், காதுகளுக்கும் இதயத்திற்கும், எப்போதும் ஸ்ரீஹரியின் சிறப்புகள் கேட்டுக் கொண்டே இருக்கும். மோட்சத்தைக் கொடுக்கும் பக்தி தானாகவே வளரும். அதற்காகவே மதிப்பிற்குரிய மான்வி ஜகன்னாத தாசர் -
ரங்க நின்ன கொண்டாடுவ மங்களாத்மரா
சங்க சுகவித்து பாலிசென்ன கருணா சாகரா
என்று பாடியிருக்கிறார். ஞானிகளுடன் நாம் இருந்தால், அவர்களிடம் பழகி வந்தால், நமக்கு இஷ்டார்த்தங்கள் சித்திக்கும் என்று பொருள்.
ஸ்ரீ பிரசன்ன வேங்கட தாசர்,
சங்கவாகலி சாது சங்கவாகலி
சங்கதிந்த லிங்க தேக பங்கவாகலி
என்று வேண்டியவாறு, ஞானிகளின் ஆசி, இவ்வுலகிலும் மேலுலகிலும் நமக்கு மிகவும் பயன் தரக்கூடியது என்று கூறுகிறார்.
கெண்ட காணதே முட்டிதரு சரி
கண்டு முட்டிதரு தஹிசதிப்புதே
புண்டரீக தலாயதாக்ஷண விமலபதபத்ம
பண்டுஉணிகளெந்தெனிப பக்தர
ஹிண்டு நோடித மாத்ரதலி தனு
திண்டுகெடஹித நரன பாவன மாள்புதாக்ஷணதி
(ஹரிகதாம்ருதசார 13 - 12 )
ஈ நிமித்த புன: புன: சு
ஞானிகள ஸஹவாஸ மாடு கு
மானவர கூடாததிரு லௌகீகக்கே மருளாகி
(ஹரிகதாம்ருதசார 13 - 13 )
என்று ஜகன்னாத தாசர், ஞானிகளின் அறிமுகத்தை, அதன் பலன்களை அழகாக விளக்கியிருக்கிறார்.
இப்படிப்பட்ட ஜகன்னாத தாசரின் அறிமுகத்தால், அவருடைய சிஷ்யரான பிராணேஷ விட்டல தாஸரின் ஒரே ஒரு பாடலால், தன் வாழ்க்கை முறையையே நல்லபடியாக மாற்றிக் கொண்டவர் ஸ்ரீதவிட்டல தாசர்.
தார்வாட் பகுதிக்கு உட்பட்ட கிராமம், கர்ஜிகி. வரதா நதி மற்றும் எழில் கொஞ்சும் இயற்கை - இவ்விரண்டும் அக்கிராமத்திற்கு மிகவும் அழகைத் தந்தன. கிராமத்தில் வேத வேதாந்தத்தில் சிறந்து விளங்கியவர்கள், நித்ய அக்னிஹோத்ரிகள், உபன்யாசகர்கள் என பல பேர் இருந்தனர். ஒவ்வொரு வீட்டிலும் சரஸ்வதி குடி கொண்டிருந்தாள். வெளியூரிலிருந்து பாடங்களைக் கற்க வரும் மாணவர்களுக்கு அந்தக் கிராமத்தில் மிகுந்த மரியாதை கிடைத்தது. பல பண்டிதர்கள், அம்மாணவர்களுக்கு உணவும் வழங்கி, பாடங்களையும் எடுத்து வந்தனர். ஒவ்வொரு நாள் காலையும், ஒவ்வொரு வீட்டிலும் வேத கோஷங்கள் ஒலிப்பதை கேட்க முடிந்தது. கிராமத்திற்கு நடுவே விட்டலன் ஆலயம் ஒன்று இருந்தது. ஸ்ரீத விட்டல தாசர், விட்டலனை வர்ணிக்கும்போது :
ஸ்ரீத விட்டலா, நிம்ம சத்குண வேத சாஸ்திரதல்லி
ஷோதிஸி நோடுவ பூதேவரிகொலிது ஆதரிசலி
பந்தியா விட்டலா
என்று கர்ஜிகியின் அழகினை வர்ணிக்கிறார் தாசர்.
கிபி 1740-50க்கு நடுவில், கர்ஜிகி கிராமத்தில், கருணீகர் குடும்பத்தில், தாசர் பிறந்தார். பெற்றோர் தம் செல்லக் குழந்தைக்கு 'தாசப்பா' என்று பெயரிட்டனர்.
சிக்கதனதல்லி தந்தே தாயிகளு ஒலிது பெசரிக்கே
கரெதரு நின்ன 'தாசப்பா' எந்து
என்ற ஜகன்னாத தாசரின் வாக்கே இதற்கு ஆதாரம். தாசருக்கு சகோதர சகோதரிகள் யாரும் இருந்ததாகத் தெரியவில்லை. நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்ததனால், தாசப்பருக்கு இளமையில் எந்தப் பிரச்னையும் இருந்ததில்லை. தக்க வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். தாசப்பா வாலிப வயதில் இருந்தபோது, அவரது பெற்றோர் மரணமடைந்தனர். கட்டுப்படுத்துவதற்கு யாரும் இல்லை, வாலிப வயது, நிறைய செல்வம் - இவரை தட்டிக் கேட்பவர்கள் யாரும் இல்லை. ஆகவே காலப்போக்கில், தாசப்பா விலைமாதர்களிடம் போகத் துவங்கினார்.
தக்க வயதில் தாசப்பருக்கு திருமணம் ஆனது. நற்குணங்களையுடைய 'குண்டம்மா' தாசப்பரின் மனைவி ஆனார். திருமணம் ஆனாலும், தாசப்பரின் பழக்க வழக்கங்களில் எந்த மாறுதல்களும் தென்படவில்லை. காலையில் ஸ்நான ஆன்ஹிகங்களை முடித்துக் கொண்டு, கருணீகர் (கணக்கர்) வேலையை சிறிது நேரம் செய்வார். மதிய வேளையில் சாப்பாடு, பின் சிறிது ஓய்வு. மாலை ஆனதும், நன்கு அலங்கரித்துக் கொண்டு, தாம்பூலம் தரித்தவாறு, தனக்கு பிடித்தமான விலைமகள் வீட்டிற்குச் சென்றுவிடுவார். இரவில் எப்போது தோன்றுகிறதோ அப்போது தம் வீட்டிற்குத் திரும்புவது வழக்கம். தாசப்பா எந்நேரம் வீட்டிற்குத் திரும்பி வந்தாலும், அவர் மனைவியான குண்டம்மா, அவருக்கு உணவு பரிமாறிவிட்டு பின் தானும் உண்பது வழக்கம்.
குண்டம்மா மிகவும் பொறுமையுடனும், பயபக்தியுடனும், நடக்கும் அனைத்தையும் சகித்துக் கொண்டும் இருந்தாள். ஊரில் இருக்கும் விட்டலன் கோயிலுக்கு போகும் வழக்கத்தை தாசப்பா கொண்டிருக்கவில்லை. சிறப்பு நாட்களில், கோயிலில் ஏதேனும் நிகழ்ச்சிகள் இருந்தால், ஊரார் வந்து கூப்பிட்டால் மட்டுமே கோயிலுக்கு போவது வழக்கம். அப்போதும், கோயிலின் வெளிப் பிரகாரத்தில், ஏதேனும் ஒரு தூணின் கீழ் சிறிது நேரம் அமர்ந்து பின்னர் வெளியே வந்துவிடுவது வழக்கம். விட்டலன் கர்ப்பகிருஹத்தின் அருகில் ஒரு நாளும் போனது இல்லை.
இதே சமயத்தில், விஜயதாசரின் அனுக்கிரகத்திற்குப் பாத்திரராகி, கோபாலதாசர் மூலம் 40 ஆண்டுகள் ஆயுர் தானம் பெற்றவரான, பண்டரீபுராதீசனான பாண்டுரங்கனிடம் ஜகன்னாத விட்டலா என்ற அங்கிதத்தைப் பெற்றவரான, ஜகன்னாத தாசர், தேசாந்திரம் மேற்கொண்டிருந்தார்.
ஸஜ்ஜனர்களில் இரு வகைப்படுவர். முதல் வகையினர் - தம் சாதனைக்காக பூமியில் பிறந்து, தம் கடமைகளைச் செய்து, அவை முடிந்தவுடன், இங்கிருந்து புறப்பட்டுவிடுவர். இரண்டாம் வகையினர், ஸ்ரீஹரியின் ஆணைப்படி இங்கு பிறந்து தம் கடமைகளைச் செய்வதுடன், பூமியில் வழிதெரியாமல் திரிந்து கொண்டிருக்கும் மக்களுக்கு வழிகாட்டுவர். ஜகன்னாத தாசர் இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்தவர் ஆவார்.
பலவிது பாளுதக்கே - சிரி நிலையன குணகள
திளிது பஜிசுவதே - பலவிது பாளுதக்கே
என்று எல்லா சாத்வீகரின் மனத்தைத் தொடுமாறு பாடி வந்தார். இவருக்கு மிகவும் பிடித்த சிஷ்யர் - லிங்கசுகூர் என்ற ஊரைச் சேர்ந்தவரான பிராணேஷ தாசர். இவரது இயற்பெயர் யோகீந்த்ர ராயர் ஆகும்.
ஒரு முறை, குரு சிஷ்யர் இருவரும் சேர்ந்து, கர்ஜிகி ஊருக்கு வந்தனர். ஊருக்கு வந்ததும், நேராக தாசப்பாவின் வீட்டிற்குச் சென்றார்கள். தாசப்பாவின் வீட்டில் இவர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. குண்டம்மா தாசரின் கால்களில் விழுந்து வணங்கினார். உன் மனதில் நினைத்ததெல்லாம் நடக்கட்டும் என்று தாசர் ஆசிர்வத்தார். ஜகன்னாத தாசரின் ஆசிர்வாதத்திற்கு, பிராணேஷ தாசர், ததாஸ்து என்று வழிமொழிந்தார்.
ஜகன்னாத தாசரைப் பற்றி நன்று அறிந்திருந்த குண்டம்மா, அவரின் ஆசிர்வாதத்தைப் பெற்றதால் மிகவும் ஆனந்தமடைந்தார். அவரின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வந்தது.
ஜனஸ்ய க்ருஷ்ணாத் விமுகஸ்ய தைவாத்
அதர்ம ஷிலஸ்ய சு துக்கிதஸ்ய
அனுகிரஹாயேஹ சரந்தி நூனம்
பூதாநி பவ்யானி ஜனார்தனஸ்ய
(ஸ்ரீமத் பாகவதம் 3-5-3)
நினைத்த மாத்திரத்தில், ஸ்ரீஹரியைக் காணும் ஆற்றல் பெற்ற ஞானிகளுக்கு, தேச சஞ்சாரம் செய்வதால் எந்தவித பலனும் இல்லை. ஆனால், சாத்வீகராகப் பிறந்தும், சமய சந்தர்ப்பத்தால் புத்தி பேதலித்து அதர்மத்தில் மூழ்கி கிருஷ்ண நிந்தனை செய்பவர்களை உய்விக்க இத்தகைய சஞ்சாரம் தேவைப்படுகிறது. தாசப்பாவிற்கு நல்ல காலம் பிறப்பதற்கான வேளை வந்துவிட்டது என்பதற்கான அறிகுறியே ஜகன்னாத தாசரின் விஜயம் எனலாம்.
குண்டம்மா மிகுந்த பக்தி சிரத்தையுடன் தாசரின் பூஜைக்கு ஏற்பாடு செய்யத் துவங்கினாள். சுவை மிகுந்த சமையலையும் தயார் செய்தாள். தாசப்பரோ, தாசருடன் சிறிது நேரம் பேசிவிட்டு, தாசருக்கு வேண்டியதைச் செய்து தருமாறு குண்டம்மாவிடம் சொல்லிவிட்டு, வழக்கம்போல் வெளியே சென்றுவிட்டார். தாசர், கருட வாகனத்தில் எழுந்தருளியுள்ள லட்சுமி நரசிம்மரின் பூஜை செய்து முடித்தார். குண்டம்மா செய்து வைத்திருந்த உணவு வகைகளை நிவேதனம் செய்தார். அப்போது வீட்டிற்குத் திரும்பி வந்த தாசப்பா, தாசர் குடுத்த தீர்த்தத்தை பெற்றுக்கொண்டு, தாசரை உண்ண அமர வைத்து, தானும் அமர்ந்து உண்டார்.
மாலை ஆனதும், தாசப்பா வழக்கம்போல் தன்னை அலங்கரித்துக் கொண்டு, விலைமகளின் வீட்டிற்குச் சென்றார். தன் கணவனுக்கு நல்ல புத்தியைக் கொடு என்று குண்டம்மா தன மனதில் மாதவனை வேண்டினாள். ஊரின் சில பேர் தாசரிடம் வந்து, விட்டலன் கோயிலில் உபன்யாசம் செய்து தங்களை உய்விக்குமாறு கேட்டுக் கொண்டனர். தாசரும் அதற்கு தன் சம்மதத்தைத் தெரிவித்தார். கோயிலுக்குப் புறப்படும் முன் தாசர், குண்டம்மாவை அருகில் அழைத்து - அம்மா, இன்று மாலை விட்டலன் கோயிலில் உபன்யாசம் உள்ளது. உன் கணவனை அழைத்துக் கொண்டு நீயும் தவறாது கோயிலுக்கு வந்துவிடு - என்றார்.
குண்டம்மா தாசரின் பாதத்தில் வீழ்ந்து கதறினாள். தாசர், நான் அஸ்வதந்திரளாதவள் (எதையும் சுதந்திரமாக செய்ய இயலாதவள்). நான் எப்படி இதைச் செய்வது? என்றாள். தாசர் சற்று கண்டிப்புடன் - ஸ்ரீஹரி நினைத்தால் அது நடந்தே தீரும். நாமெல்லாம் அவன் சொன்னபடி செய்பவர்கள் மட்டுமே. நீ உடனே போய் உன் கணவனை கூப்பிட்டு வா. தாசப்பா கண்டிப்பாக வருவான் - என்றார். தாசரின் சொற்கள், குண்டம்மாவிற்கு என்றும் இல்லாத தைரியத்தைக் கொடுத்தன. உங்கள் ஆணை தாசரே - என்றாள்.
லௌகிகானாம் ஹி சாதூனாம் அர்த்தம் வாகானு வர்த்ததே
ரிஷி ராம் புனரத்ய நாம் வாசம் அர்த்த: அர்த்த: அனுவதந்தி
(உத்தர ராம சரிதம்)
சாதாரணமானவர்களின் சொற்கள், சாதாரணமான பொருளையே தரும். ஆனால், கற்றறிந்த ஞானிகள் / சாதுக்களின் சொற்கள் மிகுந்த பலம் பொருந்தியவை. அவர்கள் கூறியவை கூறியபடியே நடந்தேறும்.
மாலை ஆயிற்று. குண்டம்மா வீட்டில் விளக்கேற்றி ஸ்ரீஹரி முன் விழுந்து மனதார வணங்கினாள். நாம் அனைவரும் ஸ்ரீஹரியின் கட்டளைப்படி நடப்பவர்கள். நீ போய் தாசப்பனை அழைத்து வா. அவன் வருவான் என்ற தாசரின் வார்த்தைகள் குண்டம்மாவின் காதுகளில் எதிரொலித்தன. தாசரை நினைத்துக் கொண்ட குண்டம்மா, தாசப்பா இருந்த விலைமகளின் வீட்டிற்கு கிளம்பினாள். தலை மேல் சேலையைப் போர்த்தியவாறு தலை கவிழ்ந்து விலைமகள் இருக்கும் வீட்டிற்குப் போகும் குண்டம்மாவை வழியில் கண்டவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
தன் வீட்டு வாசலில் குண்டம்மாவைக் கண்ட அந்த விலைமகள், வெளியே ஓடிவந்தாள். அக்கா வந்திருக்கிறார்கள் - என்று அவள் கூறியதை கேட்ட தாசப்பா - உடனே வெளியே வந்தார். நீ எதற்கு இங்கே வந்தாய்? நேரமானால் நானே வீட்டிற்கு வருவேனே என்றார். இதைக் கேட்ட குண்டம்மாவிற்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. தலை குனிந்தவாறு - தாசர் உங்களை அவரது உபன்யாசத்திற்கு அழைத்து வருமாறு ஆணையிட்டார். ஆகவே நான் வந்தேன் - என்றாள்.
சரி, அப்படியே ஆகட்டும். நீ முன்னால் போ. நான் வருகிறேன் என்றார் தாசப்பா. தாசப்பரை வணங்கிய குண்டம்மா அங்கிருந்து வெளியேறினாள். உள்ளே வந்த தாசப்பா, விலைமகளைப் பார்த்து, வேறொன்றும் சொல்லாமல் - போய் வருகிறேன் என்றார். உடனே அவர் கைகளை பிடித்துக் கொண்ட அந்த விலைமகள் - போகிறேன் என்று மட்டும் சொல்லுங்கள். திரும்ப இங்கு வரவேண்டாம். அந்தப் பெண்ணின் மனதை நோகடிக்க வேண்டாம். இதுவரை உங்கள் பாதசேவை செய்ததே நான் செய்த பெரும் பேறு என்றாள். தாசப்பரும் ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து புறப்பட்டார்.
வீட்டிற்கு வந்த தாசப்பா, குளித்து மடியுடன் குண்டம்மாவையும் அழைத்துக் கொண்டு விட்டலனின் கோயிலுக்கு வந்தார். அங்கிருந்த ஜகன்னாத தாசர், தாசப்பாவை அன்புடன் அருகில் அழைத்தார். என்றும் கர்ப்பக்கிருகத்திற்கு அருகிலேயே வராத தாசப்பா, தாசர் அழைத்தவுடன் பணிவுடன் அவரருகில் வந்து அவரை வணங்கி அமர்ந்தார். இதைப் பார்த்த மற்றவர்களுக்கு ஆச்சரியமோ ஆச்சரியம்.
தாசர் தன் உபன்யாசத்தைத் துவக்கும்முன், பிராணேஷா தாசரைப் பார்த்து, ‘பிராணேஷா, இன்று உபன்யாசம் உன்னிடமிருந்தே துவங்கட்டும்’ என்றார். ’விஜயதாசர், கோபாலதாசரை அனுக்கிரகித்ததைப் போல் எனக்கும் அனுக்கிரகித்தீர். அப்படியே ஆகட்டும்’ என்றபடியே பிராணேஷ தாசர் --
ஆதத்து ஆயித்து இன்னாதரு ஒள்ளே ஹாதி ஹிடியோ பிராணி
ஈ துர்நடதெயலி முந்தே ஹோதரே இஹ பரதி மோத எந்திகு காணே பிராணி
நீலா சதி தனதூள அனவரத ஹுளாகிருவியல்லோ
ஹலா பிடிது விதிகுலாசரணே பிடே பலாதருவரல்லோ
ஸ்தளாஸ்தள அறியதே கலாபமாட்யகு கேளாகுவது சல்லோ
எலா கேளு ஓந்திலா மாத்ர நீ கெலாஹ பகே எல்லோ பிராணி (ஆதத்து ஆயித்து)
ஷிலாதி விக்ரஹ தளாதி ஹரியரப்யலா கேவலா சுள்ளோ
சலா பிரதிமே பதகள அர்ச்சிசதலே மலா தின்னுதியல்லோ
களா பிடதிரே அனிளான ஹரிமனே வேளாகியாதல்லோ
நளா பரதமுக இளான்மரந்ததி பலா எனிசலில்லோ பிராணி (ஆதத்து ஆயித்து)
பிலா சேரி தலி கெளாகி தபிசலு பலா லேஷிதில்லோ
களாரிதின பிந்துஜலா கொள்ளேநெந்து தலாமாடலில்லோ
பலாதரதலிந்துலாதி ஸ்நான மொதலாத ப்ரதவல்லோ
பலாரிநுத பிராணேஷ விட்டலன பலா களிசி கொள்ளோ பிராணி (ஆதத்து ஆயித்து)
மேற்கண்ட பாடலைப் பாடி முடித்தார். பிராணேஷ தாசரின் வாயிலிருந்து வெளிவந்த ஒவ்வொரு சொல்லும், தாசப்பரின் இதயத்தைத் தொட்டன. தாசப்பர் இந்த உலகத்திலேயே இல்லாததுபோல் மெய் மறந்தார். பேரானந்தத்தில் மூழ்கிய தாசப்பரின் மனம் அமைதியாயிற்று.
அபராதி நானல்லா அபராத எனகில்லா
கபட நாடக சூத்ரதாரி நீனே (அபராதி)
நீனே ஆடிசதிரலு ஜட வொனகெய கொம்பே
ஏனு மாடலு பல்லரு தானே பேரே
நீனிட்ட சூத்ரதிம் சலிபவு கை காலுகளு
நீனே முக்கிசலு முக்குவ தேஹதவனு (அபராதி)
ஒந்தெண்டு பாகில பட்டணக்கே தன்ன
தெந்து இப்பதனால்கு மனேயாள்கள
தந்து காலவ நிலிசி என்ன நீ ஒளகிட்டு
முன்தே பவதலி பவணிபுதன்யாய (அபராதி)
யந்த்ர வாஹக நீனே ஒளகித்து என்ன ஸ்வ
தந்த்ரநெந்தேநிஸி கொலிசுவரே ஹேளோ
கந்துபித லக்ஷ்மீஷ எந்தாதடந்தஹுதா
நந்த மூர்த்தி நம்ம புரந்தரவிட்டலா (அபராதி)
புரந்தரதாசரின் இந்தப் பாடலை தாசப்பா திரும்பத் திரும்ப பாடினார். சர்வஸ்வதந்த்ரனாகிய அந்த ஸ்ரீஹரியின் முன், அஸ்வதந்த்ரனாகிய நான் வணங்குகிறேன் என்றெண்ணியபடியே, தான் இதுவரை செய்த அனைத்து செயல்களையும் அர்ப்பணம் செய்தார். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த தாசப்பா ஜகன்னாத தாசரை விழுந்து வணங்கி, என்னை ஆசிர்வாதியுங்கள் என்றார். தாசரும் அவரை ஆசிர்வதிக்குமாறு ஸ்ரீஹரியிடம் வேண்டினார். மண்ணில் கிடந்த மாணிக்கமான தாசப்பனை மன்னித்து அவரை உன் பாதங்களில் விழவைத்து அலங்கரித்துக்கொள் என்ற தாசரின் வாக்கைக் கேட்ட தாசப்பா, தான் இதுவரை செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கியதாக ஆனந்தம் அடைந்தார். வாழ்க்கையில் இதுவரை கிட்டாத அனுபவமாக இதைக் கருதினார். குண்டம்மாவின் ஆனந்தத்திற்கும் எல்லையே இல்லாததுபோல் ஆயிற்று.
மறுநாள் காலை, குளித்து மடியுடன் வந்த தாசப்பனுக்கு ஜகன்னாத தாசர் தாசதீட்சையை வழங்கினார். ஸ்ரீதவிட்டலா என்ற அங்கிதத்தை கொடுத்தார்.
ஸ்ரீதவிட்டலா சர்வரந்தராத்மா
நீதயதி ஒலிது நித்யதல்லி காபாடுவுது... (ஸ்ரீதவிட்டலா)
சிக்கதனதல்லி தந்தே தாயுகளு ஒலிது பெசே
ரிக்கி கரேதரு நின்ன தாசனெந்து
அக்கரதி ஒலிது பவதுக்ககள பரிஹரிசி
மக்களனு தாய்நஹுவ தெரெதி சந்தைஸு (ஸ்ரீத விட்டலா)
சுகனய்யா நின்ன பதபகுதி த்வத்கதாசாஸ்திர
யுகுதிவந்தர சங்க சுகவனித்து
சகல கர்மகள வைதிகவெனிஸு ஒலிது தே
வகி தனய நின்னவர முகதிந்த ப்ரதிதினதி (ஸ்ரீத விட்டலா)
மாதரிஷ்வப்ரியா சுரேதராந்தகனே புரு
ஹூதநந்தன சக நிராதங்கதி
நீ தோரு மனதி சம்ப்ரீதி இந்தலி ஒலிது
ஹூதாஹ்வ குரு ஜெகந்நாத விட்டலா பந்து (ஸ்ரீத விட்டலா)
என்று பாடினார். "ஆத்ம பந்துவாகிய ஸ்ரீ ஜகன்னாத விட்டலா, நீயே குருவாகி இருந்து தாசப்பனை காப்பாற்ற வேண்டும் என்று ஸ்ரீஹரியிடன் வேண்டினார். தாசப்பருக்கு புதிய ஜென்மமே வந்ததாக ஆயிற்று. பிராணேஷ தாசரைப் போலவே, தாசப்பனும் ஜகன்னாத தாசரின் பிரியமான சிஷ்யரானார். ஜகன்னாத தாசரின் பூர்ண ஆசி தாசப்பருக்கு கிடைத்தது. தாசப்பர், 'ஸ்ரீதவிட்டல தாசர்' என்றும் 'கர்ஜிகி தாசர்' என்றும் அழைக்கப்படலானார். ஜகன்னாத தாசரின் மிக முக்கியமான க்ருதியான 'ஹரிகதாம்ருத சாரத்தின்' பல ஸ்ருதியை எழுதும் பாக்கியம், ஸ்ரீதவிட்டல தாசருக்குக் கிடைத்தது. ஸ்ரீதவிட்டல தாசர், தன் பெரும்பான்மையான நேரத்தை ஸ்ரீதவிட்டலனின் ஆலயத்திலேயே கழித்தார். விட்டலனின் முன்னால் பாடல் பாடுவதிலும், நடனமாடுவதிலும் நேரத்தை செலவிட்டார். பிறகு கோவிலிலேயே இருக்கும் ஒரு தூணின் கீழ் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்து விடுவார்.
சிறிது காலத்தில் ஸ்ரீதவிட்டலருக்கு, முரளிகிருஷ்ணன் மற்றும் சீதா சமேத ராமச்சந்திர விக்கிரகங்கள் கிடைத்தன. (அவை எப்படி கிடைத்தன என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை).
ஏகாதசி இரவில் ஜாகரணே (இரவு முழுக்க கண்விழித்தல்) செய்தவாறு கண்ணனை தொட்டிலில் உட்கார வைத்து நடனமாடியவாறே -
கொளலூது இந்நொம்மே கிருஷ்ணய்யா
கொளலூது மத்தொம்மே கிருஷ்ணய்யா
கொளலூது த்வாரக நிலையனே
என்னும் பாடலை, தன் மெய்மறந்து பாடிக்கொண்டிருந்தார். அப்போது, நாதமூர்த்தியான - கோபி ஜனப்ரியனான - பக்தாபராதீனனான - ஸ்ரீகிருஷ்ணன், தன் இடது தோளை, இடது கன்னத்தில் சாய்த்து, தாசரின் பாடலுக்கேற்ப ஆடத் துவங்கினான். தன் கொஞ்சும் விரல்களால், புல்லாங்குழலை ஏந்தி, தன் அழகான உதடுகளில் வைத்து இசைக்கவும் துவங்கினான்.
சில ஆண்டுகளில், குண்டம்மா, கால நாமக பகவந்தனின் ஆணைக்கேற்ப இவ்வுலக வாழ்வை நீத்தார். தாசரின் வம்சம் வளரவில்லை. இவ்வுலகில் அனைத்து சுகங்களையும் துறந்து, எக்காலமும் இறைவனையே நினைத்துக் கொண்டு காலத்தைக் கழித்த தாசரிடம் எந்த உறவினரும் நெருங்கவேயில்லை. தாசரின் உண்மையான உறவினர்கள் யார் என்று கேட்டால், ஹரிதாசர்களே ஆவர். குண்டம்மாவுடன் ஸ்ரீஹரியின் பக்தி வாழ்வை வந்த தாசர், அப்படியே தன் காலத்தைக் கழித்து விட்டார். சம்சாரத்தில் மூழ்கியிருந்த தம்மை, ஜகன்னாத தாசர் மூலமாக கைகொடுத்து தூக்கிவிட்டு, தன் பயத்தைப் போக்கிய அந்த ஸ்ரீஹரியின் கருணையை இந்தப் பாடலின் மூலம் நம் எல்லோருக்கும் விளக்குகிறார்.
அஞ்சபேடா பேடலே ஜீவா..
பவபஞ்சன ஹரிசரணர காவா..
தாசர் தம் 80வது வயதில் (1820 ம் ஆண்டு) உயிர் நீத்தார். தன் இறுதிக்கு காலத்தை உணர்ந்த தாசர் ஒரு சுப முகூர்த்த வேளையில் தாம் பூஜை செய்த ராம சீதா கிருஷ்ண விக்ரகங்களை தம் வீட்டில் ஒரு சுவரில் வைத்து மூடினார். தாமே ஒரு தர்ப்ப ஆசனத்தைப் போட்டு அதில் அமர்ந்து ஸ்ரீஹரியின் சிந்தனையில் மூழ்கி மேலுலகத்திற்கான பயணத்தைக் துவக்கினார். தாசரின் இந்த முடிவைக் கேட்ட உற்றார் உறவினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் வருந்தினர். தாசரின் இறுதி பயணத்தில் கலந்து கொள்ள வேண்டி அனைவரும் அவர் வீட்டின் முன் கூடினர்.
அதே சமயம், நல்ல தேஜஸ்விகளாகத் தோன்றிய நான்கு பேர் அங்கு வந்து, நாங்கள் தாசரின் சம்பந்திகள் முறை ஆக வேண்டும் என்று கூறினர். தாங்களே தாசரின் அந்திமக் கிரியைகளை சாஸ்திர பூர்வமாக செய்து முடித்தனர். பரம பவித்ரரான தாசரின் அந்திமக் கிரியைகளை வரதா நதிக்கரையில் அக்னி அந்தரககத பரசுராமருக்கு சமர்ப்பித்தனர். அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தபோதே அந்த நால்வரும் அனைவரின் கண்களிருந்து மறைந்து போனார்கள். அவர்கள் யார் என்று யாருக்குமே தெரிந்திருக்கவில்லை. நாங்கள் தாசரின் சம்பந்திகள் என்று அவர்கள் சொன்ன விஷயம் அனைவருக்கும் மிகவும் ஆனந்தத்தைக் கொடுத்தது.
பதிசுதான்வய ப்ராத்ரு பாந்தவான்
அதிவிலங்கிதே ஹ்ருச்சுதா கதா:
என்னும் கோபிகையரின் வசனம் மிகவும் உண்மையானது. ரத்த சம்பந்தப்படட உறவினர்களைவிட அந்த அச்சுதன் உண்மையான உறவினன் ஆவான். அந்த ஸ்ரீஹரியையே உறவினராகக் கொண்டவர்களுக்கு இவ்வுலகில் வேறு உறவினர்கள் இல்லையே என்பது ஒரு குறையா? நிரந்தரமில்லாத உறவுகளான தந்தை, தாய், அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மாமன் ஆகிய உறவினர்களால் நிரம்பிய இந்த வாழ்க்கை நிஜமான வாழ்க்கை இல்லை. ஆகவே, புரந்தரதாசர் நிஜமான நிரந்தரமான வாழ்க்கையைப் பற்றி இப்படி பாடியுள்ளார்.
சம்சாரவெம்பந்த பாக்யவிரலி
கம்சாரி நெனெவெம்ப சௌபாக்யவிரலி (சம்சார)
தந்தே நீனே கிருஷ்ண தாயி இந்திரேதேவி
பொந்தித அண்ணனு வனஜசம்பவனு
இந்துமுகி சரஸ்வதி தேவியே அத்திகேயு
என்தெந்திகு வாயுதேவரே குருவு (சம்சார)
பாரதி தேவியே குருபத்னியு எனகே
கருட சேஷாதிகளு குருபுத்ரரு
ஹரிதாஸ ரெம்புவரே இஷ்ட பாந்தவரெனகே
ஹரிபஜனே நடேயுதிஹ ஸ்தளவே மந்திரவு (சம்சார)
சர்வாபிமானவனு த்யஜிசுவுதே சுன்னான
ஹரிய நாமவே இன்னு அம்ருதபான
வரதபுரந்தர விட்டலா நின்ன பாதத்யான
கருணிஸி அனவரத கரபிடிது காயோ (சம்சார)
என்று பாடினார்.
ஸ்ரீகர்ஜிகி தாசாந்தர்கத பாரதிரமண முக்யப்ராணாந்தர்கத ஸ்ரீ ஸ்ரீதவிட்டலார்ப்பணமஸ்து