புதன், 15 மார்ச், 2023

அப்பா 100 25-03-2023

ராதே கிருஷ்ணா 24-03-2023


அப்பாவின் நூறு ஆண்டுகள் இந்த ஆண்டு 2023 மார்ச் 31ம் தேதி வருகிறது.

இந்த நன்னாளில் அவரைப் பற்றி ஓரிரு நல் வார்த்தைகள் என் நினைவிற்கு வந்தவற்றைக் கூற முயற்சிக்கிறேன்.

அப்பாவிடமிருந்து கற்றது பட்டியல் இட முடியாது. அவ்வளவு உள்ளது. இருப்பினும் எனது சிறு மூளைக்கு எட்டியவற்றை சிலவற்றைக் கூற ஆசைப்ப்படுகிறேன்.

என்றும் வேண்டும் அவர்களது ஆசிகள்.


ராதே கிருஷ்ணா 24-03-2023

ஸ்ரீ பத்ர விநாயகர் துணை 

அப்பா 100 (நூறாவது ஆண்டு இந்தவருடம் மார்ச் 31ம் நாள்)

இந்த தருணத்தில் அவர்களை நினைவு கூர்ந்து நினைவில் இருந்த சிலவற்றைக் கூற விரும்புகின்றேன்.

என்னைப் பெற்ற அப்பா அம்மா அவர்களுக்கு  எனது அநந்தகோடி ஸாஷ்டாங்க நமஸ்கரங்கள் .

அம்பத்தூர் LIC ரங்கா ராவ் அவர்களின் நூறாவது ஆண்டு இந்தவருடம்.

அப்பா அவர்கள் 1923 வது ஆண்டு மார்ச் மாதத்தில் 31ம்  தேதியில் உத்திரம் நட்சத்திரத்தில் சேலம் எடப்பாடி யில் பிறந்தார். அவருடன் பிறந்தவர்கள் அண்ணன்  சீதாபதி ராவ் அவர்கள், ராஜகோபால் அவர்கள், நெய்வேலி சரஸ்வதி பாய் அவர்கள்  , ருக்மணி அவர்கள்மற்றும் பேபி அத்தை அவர்கள்,  ஆவர். 

தன சிறு வயதிலேயே பெற்றவர்களை இழந்தார். புரசைவாக்கம் முத்தையா செட்டியார் பள்ளியில் படித்தார்.  (Sir M.Ct.Muthiah Chettiar Higher Secondary School Purasawalkam).  தம்பு செட்டி தெருவில் வசித்து வந்தார். அண்ணா அவர்கள் அந்த கால B. A பட்ட படிப்பு படித்து தூங்கா பாய் அவர்களை மணந்து குடும்ப வாழ்க்கை ஆரம்பித்தனர். அப்பாவும் பட்டப்படிப்பு முடித்து தன அக்கா சரஸ்வதி பாய் அவர்களின் குமாரத்தி திருமதி லட்சுமி என்பவரை மணந்து குடும்ப வாழ்க்கை ஆரம்பித்தார்.  அம்மா அவர்கள் 1927ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதியில் சேலம் ஆத்தூரில் சதயம் நட்சரத்தில் அனந்தவிரத  பண்டிகையில்  பிறந்தவர். அப்பா அண்ணா சாலையில் உள்ள LIC யில் வேலைக்கு சேர்ந்தார். அப்பா ஷார்ட் ஹாண்ட்  கற்று ஸ்டெனோகிராபர் (stenographer ) ஆக பனி புரிந்தார்.  தனது அக்கா மகன் ரங்கநாத ராவ் அவர்களை சென்னை CIT பாலிடெக்னிக்கில்  சேர்த்து மெக்கானிக்கல் படிப்பு படிக்க வைத்தார். அக்கா அவர்களை, மற்றும் அவரது மகள் காவேரி , சரோஜா அவர்களையும் , தன்னுடன் பிறந்த ராஜகோபால் என்பவரையும் தன்னுடனேயே வைத்து பார்த்துக்கொண்டு வந்தார். அண்ணன் ராஜகோபால் அவர்கள் சற்று மனநிலை சரி இல்லை , ஆனால் என்ன வேலை கொடுத்தாலும் செயது முடிப்பார். தினமும் அவரது வேலை கிணற்றுப்பக்கத்தில் உள்ள சிமெண்ட் தொட்டியில் நீரை நிரப்புவது.  பிறகு அம்பத்தூர் ஸ்டேஷன் அருகில் உள்ள உடுப்பி ஹோட்டல் அருகில் நிற்பார். ஹோட்டல் முதலாளி இவரை அழைத்து இட்லி சாப்பிடக் கொடுப்பார். வரும்போது எனக்கும் பிருந்தாவிற்கும் பட்டாணி வாங்கி வருவார்.

அப்பா தன சித்தி குஞ்சவ்வா என்பவரையும், கும்பகோணம் பாட்டி அவர்களையும்  தன்னுடனேயே இருக்க வைத்து பார்த்துக்கொண்டார்.

மூத்தவள் பாமா , பிறகு முரளியாகிய நான், பிருந்தா , சந்திரா, அனந்து என்கிற அனந்தபத்மநாபன் , ராகவேந்திரன் ஆக அறுவரை பெற்று வளர்த்துவந்தார்.

அம்மா அவர்கள் அப்பாவையும் மற்றவர்களையும் பெற்ற மக்களையும் பார்த்து பார்த்து வளர்த்து வந்தார். 

முரளியாகிய நான் 1950 ஜூன் மாதத்தில் 5ம் தேதில் பிறந்தேன். பாமா 1947 டிசம்பரிலும் , பிருந்தா 1953 ஜூன் மாதத்திலும் , சந்திரா 1956 ஜூன் 1ம் தேதியிலும், அனந்து 1958 செப்டம்பரிலும் , ராகவேந்திரன் 1961 மே மாதம் 4ம் தேதியிலும் பிறந்து வளர்ந்தோம்.

1950 வருடத்தில் அம்பத்தூர் ஏகாம்பர ஐயர் தெருவில் இரண்டு  கிரௌண்ட் நிலம் (கிரௌண்ட் ரூபாய் 350/-) வாங்கினார். ஒன்று அப்பாவிற்கும் மற்றது அண்ணன் அவர்களுக்கு வாங்கினார். 1955 இல் அண்ணனிடமிருந்து ரூபாய் 750/- க்கு அப்பா வாங்கினார்.  அண்ணன் அவர்கள் துங்காபாய் அவர்களை மணந்து கரக்பூரில் ரயில்வேயில் பனி புரிய சென்று விட்டார். 

அப்பா தனக்கென்று வீடு கட்டிக்கொண்டார். அதற்க்காக ரூபாய் 5000/- அம்பத்தூர் சாஸ்வதநிதியிலும் , ஆதம்பாக்கம் நிதியில் ரூபாய் 5000/- கடன் வாங்கினார். அதை 20 வருடங்களாக திரும்பிச் செலுத்தினார்.

அப்பா HMV ரேடியோ வைத்திருந்தார். அப்பா சுருக்கெழுத்து  ஸ்டெனோகிராபர்   (சுருக்கெழுத்தாளர்) ஆக LIC யில் வேலை செய்து வந்தார்.

தினசரி காலை 8 மணிக்கு சாப்பிட உட்கார்ந்து முடித்து 8:10க்கு ரெடியாகி சைக்கிளில் ஸ்டேஷன் சென்று 8:20க்கு வண்டி பிடித்து சென்ட்ரல் சென்று, அங்கிருந்து அண்ணா சாலைக்கு பஸ்ஸில் சென்று வேலை செய்வார். 

சைக்கிள் எடுத்து வைப்பது செருப்பு எடுத்து வைப்பது எங்கள் வேலை, அம்மா அதற்குள் சமைத்து பரிமாறுவது அவர்கள் வேலை.

மாலையில் அப்பா வந்தவுடன் ஈஸி சேர் வாசல் வராண்டாவில் போட்டு வைக்கவேண்டும்,  அப்பா வந்து உட்காருவார். அருகில் அம்மா , சுற்றி நாங்கள் உக்காருவோம் . பொது விஷயங்கள், மறுநாள் வேலைகள் பேசுவோம்.

இது தான் தினசரி நிகழ்ச்சி. 

நான் 1966 இல் பள்ளிப்படிப்பு முடித்து , அப்பாவின் விருப்பப்படி நியூ காலேஜில் சேர்ந்து PUC படிக்க வைத்தார். அது முடிந்து ரிசல்ட் வந்தது. நான் தேர்ச்சியடையவில்லை. அப்பாவிற்கு நான் டிகிரி படிக்கவேண்டும் அன்று ஆசை. ஆனால் அது நிறைவேறாதலால் பாலிடெக்நிக் ஆவடியில் சேர்ந்து எலெக்ட்ரிகிள் டிப்ளமோவில் சிறப்பு எலக்ட்ரானிக்ஸ் எடுத்து படித்து முடித்தேன். 

1970 இல் ஒருநாள் இரவு அப்பா என்னிடம் , வேலை வாய்ப்பு பார்க்க்கிறதே இல்லை என்றும், இந்தியன் எக்ஸ்பிரஸில்  வந்த செயதியை காண்பித்தார்.

நான் அவரது மகன் என்பதை நிரூபித்தேன். நான் ஏற்கனவே IIT விளம்பரம் பார்த்து அபப்ளிகேஷனுக்கு அனுப்பிவிட்டேன் என்றேன். 

இதன் நடுவில் டன்லப் கம்பெனியில் பராமரிப்பு (Annual Maintenance ) 15 நாட்கள் வேலைக்குச்  சென்றேன். brown braury யில் எலக்ட்ரிகல் வேலை , ஒருவாரம் தான் செய்தேன். மாலையில் வீடு வந்து சுத்தம் செயது தான் வரவேண்டும். உடம்பு முழுதும் ரப்பர் கறுப்பு ஆகிவிடும்.

கொரட்டூர் மின்சார ஆபீஸில் தொழிற்பயிற்சி ( Korattur Substation ) வேலை ரூபாய் 150/- மாதம்.

1977 இல்  IIT க்கு அழைப்பு வந்தது. காலை 8 மணிக்கு சென்றேன் இந்தியாவின் எல்லா பகுதியிலிருந்து வந்தனர். முதலில் 3500 பேரில் 300 பேர் தேர்வு செய்யப்பட்டனர், மதியம் அவர்களில் 300 பேர் தேர்வு செய்தனர், மாலையில் முடிவு செய்து நேர்காணல் (Interview ) க்குச் சென்றோம். அதில் 13 பேர் வெற்றி பெற்றோம், தமிழ்நாட்டிலிருந்து 8 பேர், கேரளாவிலிருந்து ஒருவர், மேற்கு வங்காளத்திலிருந்து ஒருவர், குல்பர்காவிலிருந்து ஒருவர்  ஆக 13 பேர் தேர்வு செய்யப்பட்டோம். நான் எலெக்ட்ரிக்கல் பிரிவு போல் மற்றவர்கள் மற்ற பிரிவுகளாக பிரித்து சேரப்பெற்றோம்.

அப்பா முதல் நாள்  ரேடியோவில் ஜனாதிபதி பேச்சு கேட்டு ஷார்ட் ஹாண்ட்  குறிப்பு எடுத்து மறுநாள் ஹிந்து பேப்பரில் வந்த செய்தியை காண்பித்து சரிபார்க்க சொல்வார். அவ்வளவு சிறப்பு வாய்ந்தவர். அப்பா LIC யில் பதவி உயர்வு பெற்று மும்பைக்குச் செல்லவேண்டும் என்ற செயதி வந்தது. அங்கு சென்றால் பாண்ட்  (Pant ) அணியவேண்டும் என்பதால் மறுத்துவிட்டார். வேலை செய்த 60 வருடங்கள் வரை வெள்ளை வேஷ்டி முழுக்கை சட்டை அணிந்து தான் சென்று வந்தார். அப்பாவிற்கு சீவல் போடும் வழக்கம் உண்டு, மூக்குப்பொடி போடும் வழக்கம் உண்டு. வலது கை  ஆள்காட்டி விரல் சேர்த்து அதில்  எப்பொழுதும் மூக்குப்பொடி இருக்கும். வாயில் சீவல் இருக்கும். 

வெள்ளிக்கிழமை மாலையில் கொத்தவால்சாவடி சென்று ஒரு வாரத்திற்க்கான காய்கறிகள் வாங்கி வருவார். நான் அம்பத்தூர் ஸ்டேஷன் சென்று அவரிடமிருந்து காய்கறிகள் பையினை வாங்கிவரவேண்டும்.

அப்பாவிற்கு ராமச்சந்திர ஐயர் நெருங்கிய நண்பர். மற்றவர்கள், VGR , சந்திரன் என்பவர், கிருஷ்ணமுர்த்தி ராவ் என்று பலர் உண்டு.

VGR அவர்களின் மகன் ஆனந்தா எம்போரியம் (Pharmacy ) வைத்திருந்தார்.

அப்பாவின் LIC ஆபீஸ் நண்பர்கள் R S , மணி, சப்தரிஷி ராமச்சந்திரன், 

N S . கிருஷ்ணமுர்த்தி , ராமன், கல்யாண சுந்தரம் அவர்கள் இருந்தனர். அப்பா ஸ்டெனோகிராபர் , A M . ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு Personnel Assistant (தனி உதவியாளர்)  ஆக பனி புரிந்து தனது 60 வது வயதில் ஒய்வு பெற்றார்.

அப்பா எங்கள் வீட்டிற்கு அருகிலேயே பத்ர விநாயகர் கோயில் வைத்து பராமரித்து வந்தார்.  அங்கேயே அரசமரம் வைத்து, அருகிலேயே வேப்பமரம் நட்டு இரண்டு மரத்திற்கும் திருமணம் செயது விநாயகர் கோயிலை நடத்திவந்தார். வீட்டின் முன்பே இருந்த இடத்தில் ராதா கல்யாணம் கடந்த 45 வருடங்களாக நடத்தி வந்தார். மார்கழி மாதம் 30 நாட்களும் காலையில் 5:30 மணிக்கு திருவீதி பஜனை நடத்தி பூர்த்தியாக ராதா கல்யாணம்  நிகழ்ச்சியாக பலவித பாகவதர்களை அழைத்து அவர்களை வீட்டிலேயே இருக்கச் செய்து , கவனித்து நடத்தி அவர்களுக்கு மரியாதை செயது வந்தார். அதற்கான பணத்தை நண்பர்களுடன் சென்று வசூலித்து நடத்தி வந்தார். அப்பாவின் நண்பர்கள் B.N சுக்கல், ராமராவ், நரசிம்மன், டன்லப் ஸ்ரீனிவாசன் , ஆக பலர் உண்டு.  ராமகிருஷ்ண ஐயங்கார்  பாகவதர் தலைமையில் சிறப்பாக நடத்தி வந்தார். ரங்கா ராவ் ராதா கல்யாணம் தான் முதன்முதலில் ஆரம்பித்தது. இன்றும் அன்றைய ராதா கல்யாணம் என்றால் அது பள்ளம் ரங்கா ராவ் ராதா கல்யாணம் என்ற பெருமையைப் பெற்றது.

அம்மா அப்பாவிற்கு சரியாக உதவி புரிந்து கவனித்து வந்தார்.

குஞ்சவ்வா பாட்டி சமையல் செய்வார். அம்மா உதவி புரிவார்.

தக்க வயது வந்ததும் பாமாவிற்க்கு 1971 ம் ஆண்டு திருமணம் செய்து அனுப்பி வைத்தார். எனக்கு அந்த நேரத்தில் உபநயனம் செய்வித்தார். வீட்டு புரோகிதர்  அம்பத்தூர் நாகராஜா அச்சார் அவர் தான் எல்லா  நிகழ்ச்சிகளுக்கும் வருவார்.

1977 ம் ஆண்டு அக்டோபர் 30 இல் எனக்கும் சுதா விற்கும் திருமணம் செய்வித்தார். ப்ரித்விபாக்கத்தில் சுதாவின் சித்தி இருந்தார். அவரது கணவர் கோபாலக்ரிஷ்ணா ராவ் LIC  யில் பனி புரிந்து வந்தார். நான் நண்பர்களுடன் அன்று பாட்மிண்டன் விளையாடியதை பார்த்து திருவல்லிகேணியில் உள்ள சுதாவின் பெற்றோருக்கு தெரிவித்து , அவர்களும் சித்தி வீட்டிலேயே பெண் பார்த்து திருமணம் செயது வைத்தார். அப்போது எனக்கு பஜ்ஜி பிடிக்காது என்று கூறியவுடன் பதிலாக மைசூர் பாக் ,  உப்புமா செய்தார்கள். எங்கள் திருமணம் திருச்சானூரில் சிறப்பாக நடந்தது. 

IIT யில் 1 1/2 வருடங்கள் தொழிற்பயிற்சி முடிந்து 4 1/2 வருடங்கள் பனி புரிந்தேன். கல்பாக்கம் அணு உலை மையத்தில் வேலைக்குச் செல்ல முயன்றேன். ஏனென்றால் IIT யில் ப்ரோமோஷன் வருவது பல வருடங்கள் ஆகும். அங்கு ப்ரோமோஷன் வரவேண்டும் என்றல் , நம் அதிகாரி 1. ஓய்வு பெறவேண்டும் அல்லது இறக்கவேண்டும் என்பதால் நண்பர்கள் கல்பாக்கம் செல்வதே நல்லது என்றார்கள். 

1977 மே 31ம் தேதி மாலை விருப்ப ஓய்வு பெற்று மறுநாள் கல்பாக்கம் அணு உலை மையத்தில் சேர்ந்தேன்.

செங்கல்பட்டு வல்லம் இடத்தில எனது பெரியப்பா ஸ்ரீனிவாச ராவ் குடும்பத்துடன் இருந்தார்  மே 31ம் தேதி மாலை அங்கு சென்று தங்கினேன்.

மறுநாள் காலை பெரியப்பா உடன் சென்றேன். அவரை உள்ளே  விடவில்லை,

அவரை கேட்டில் விட்டு விட்டு நான் ஆபீஸ் சென்று மாலையில் வந்து அவருடன் வல்லம் வீடு வந்து சேர்ந்தோம்.

கல்பாக்கத்தில் படிப்படியாக உயர்ந்து , அறிவியல் உதவியாளர் (Scientific Assitant 'B ' யிலிருந்து "C ", அறிவியல் ஆஃபீசர் (Scientific Officer ) "B ", "C ", "D ", "E ", இறுதியாக அறிவியல் ஆஃபீசர் (Scientific Officer ) "F  "  ஆக பதவி உயர்வு பெற்று  வாழ்க்கையில் சுதாவின் துணையுடன் இரண்டு  மகன்கள், ஒரு மகள் என்று செல்வங்கள் பெற்று இன்பமாக வாழ்ந்து வருகிறோம். இரண்டாவது மகன் ஸ்ரீஹரிக்கு ஹரிணி ராஜாராமன் என்கிற பெண்ணை திருமணம் செய்வித்தோம். இரண்டு  மகள்களை பெற்று இன்பமாக வாழ்ந்து வருகிறார்கள். ஸ்ரீஹரி REC Trichy யில் BE கம்யூட்டர் பிரிவு படித்து பெங்களூரில் IT  பிரிவில் வேலைக்கு சேர்ந்து முன்னேறி வருகிறான். ஹரிணியும் BE படித்து IT வேலை பார்த்து வருகிறார்கள். முத்தாக இரண்டு பெண் குழந்தைகளைப்பெற்று நல்ல முறையில் படிக்க வைத்து வருகிறார்கள். 
எனது மகள் ஆர்த்தி என்கிற ராதிகாவும் BE முடித்து சுரேஷ் என்கிற ஸ்ரீனிவாச பிரபு என்கிறவருக்கு மணமுடித்து அமெரிக்காவில் குடி உரிமை பெற்று ,தங்கமாக இரண்டு மகன்களைப் பெற்று (Shravan Srinivas ,  ஸ்ரீமன் ஸ்ரீனிவாஸ் ) நல்லபடியாக படிக்கவைத்து நல்லதொரு கும்பமாக வளர்த்து வருகிறார்கள். 


அப்பாவிற்கு வருவோம். பிருந்தாவிற்கு திருநெல்வேலி மாப்பிள்ளை ராகவேந்திரன் மணமுடித்து , இரண்டு மகன்கள், ஒரு மகள் என்று வளர்ந்து வந்தாள்.  விதி விளையாடியது.  

பிருந்தா பாவா ராகவேந்திரன் 2004 இல் ஜனவரி மாதம் இறுதியில் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது மகன் ரங்கநாதன் வெளிநாடு சென்றிருந்தான். செய்தி கேட்டு விரைந்து வந்தான். அதன் தொடர்ச்சியாக பிருந்தாவும் அகால மரணம் அடைந்தார். காரியங்கள் முடிந்த பிறகு பாமாவும் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.  பிருந்தா மகன்கள் மகள் சுதாவுடனும் மற்றவர்களுடனும் பேச்சு வார்த்தை நடத்தி  எனது மகன் ராஜாவிற்கு சூர்யகலாவை மனம் புரிய விருப்பம் உள்ளதாகவும் தங்கள் பதிலை எதிர்பார்க்கிறோம் என்றனர். நானும் அவர்கள் விருப்பத்தை மறுக்க முடியாமல் சரி என்று சொன்னேன்.

ராஜகோபால் சூர்யகலா திருமணம் சிறப்பாக நடந்தேறியது. ராஜா சூர்யாவும் மொரீஷியஸ் சென்றனர். அவர்களின் உதவியுடன் நானும் சுதாவும் மொரீஷியஸ் சென்று ஒரு மாதம் இருந்து பார்த்து வந்தோம். 

பிறகு அவர்கள் அமெரிக்கா சென்று வாழ்க்கையில் முன்னேறி வந்தனர். சஹானா பெண் குழந்தையை பெற்று சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

அப்பா சந்திராவிற்கு உத்தமபாளையம் அனந்தபத்மநாபன் என்பவருக்கு மணமுடித்தார்.  மகன் ஒன்று, மகள் ஒன்று பெற்று நலமாக வாழ்ந்து வருகிறாள். இருவரும் திருமணம் ஆகி மகனுக்கு ஒரு மகளும், மகளுக்கு இரண்டு மகன், ஒரு மகள் ஆக இன்பமாக இருக்கிறார்கள். மகன் அமெரிக்காவிலும் , மகள் லண்டனிலும் இன்பமாக வசித்து வருகிறார்கள்.

அனந்துவிற்கு ஜெயந்தியையும், ராகவேந்திரனுக்கு விஜயலட்சுமியை மணமுடித்து இரண்டு மகள்கள் பெற்று ,  இன்பமாக இருக்கிறார்கள்.

அனந்துவிற்கு இரண்டு மகள்களுடனும் இருவருக்கும் திருமணம் செயது இன்பமாக அமெரிக்காவில் குடி உரிமை பெற்று வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். பெரியவள் சிநேகாவிற்கு Jason Peck என்பவருக்கு மணமுடித்து 
இன்பமாக இல்வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். சாதனா  ராவ் அவர்களுக்கு சிவம் என்கிறவருக்கும் திருமணம் செய்வித்து இன்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.
அனந்து, ராகவேந்திரன் இருவரும் அமெரிக்காவில் குடி உரிமை பெற்று வாழ்ந்து  வருகிறார்கள்.

ராகா  விஜி இருவரும் அமெரிக்கா குடி உரிமை  பெற்று , 
பெரியவள் லேகாவிற்கு அலோக் 
தவேக்கு திருமணம் செய்வித்து இன்பமாக அமெரிக்காவில் குடி உரிமை பெற்று வாழ்ந்து வருகிறார்கள்.. சிறியவள் மாளவிகாவை நன்கு படிக்க வைத்து வாழ்ந்து வருகிறார்கள்.

பிருந்தா பாவா இருவரும் இறந்தபிறகு அவர்கள் குழந்தைகளில் சூர்யாவை ராஜாவிற்கு மணமுடித்து நன்றாக வாழ்ந்து வருகிறார்கள் .

அடுத்து ரங்காவிற்கு பல்லாவரம் பம்மலில் இருக்கும் ரங்கா ராவ் மகள் அர்ச்சனாவை பெண் பார்க்கச் சென்று ரங்காவின் சம்மதத்தோடு அவர்களின் திருமணத்தை ரங்காவின் சித்தப்பா சித்தி விருப்பத்தோடு இனிதாக தீர்மானம் செயது ரங்கா அர்ச்சனா இருவரும் தங்களுக்கென்று ஒரு செல்ல மகள் வர்ஷாவைப்  பெற்று இன்புற்று வாழ்ந்து வருகிறார்கள்.

மூர்த்தி என்கிற சத்தியநாராயணா தனது இளம் பருவத்திலேயே மரணத்தைத் தழுவிக்கொண்டார்.

அப்பா 60 வயது பூர்த்தி ஆனவுடன் ஷஷ்டியப்த பூர்த்தி செயது கொண்டார்கள். அப்பா 70 வயது வந்தவுடன் பீமரத சாந்தி ஹோமம் T.Nagar ராகவேந்த்ர  ஸ்வாமி மடத்தில் வெகு விமரிசையாக நடந்தது.  

அம்மா தனது 72 வது வயதில் இறைவனடி சேர்ந்தார்கள். 70வது  வயதில் உடல் நலமின்றி படுத்த படுக்கையாக இருந்தார்கள். அப்போது டாக்டர் ராகவேந்திரன் வந்து,  வீட்டு உள்ளே வராமல் வெளியில் இருந்து பார்த்து விட்டு , எல்லோருக்கும் சொல்லி அனுப்புங்கள் அன்று கூறிவிட்டு சென்றுவிட்டார். பிருந்தாவும் நானும் அப்பாவுடன் 2,3 ஹாஸ்பிடல்கள் பார்த்து அனைவரும் SMF (சுந்தரம் மெடிக்கல் foundation ) செல்லுங்கப்பார்க்கலாம் என்றும், அங்கு அழைத்துச் சென்று பார்த்ததில் குணமாகி 2 வருடங்கள் நன்றாக இருந்து தனது 72 வது வயதில் இறந்தார். 
அதன்பிறகு அப்பா அம்பத்தூரிலேயே இருப்பேன் என்று கூறிவிட்டார். 

அவரை கல்பாக்கம் அழைத்து வந்து டாக்டரிடம் காண்பித்தோம். உடம்பு மெலிந்து நினைவு சற்று குறைவாகிவிட்டது.  
மற்றவர்கள் வற்புறுத்தலால் SMF அண்ணா நகர் காண்பிக்க சொன்னார்கள். அனால் கல்பாக்கம் டாக்டர் எங்கு சென்றலும் குணமாவது கடினம் என்றார். உடன்பிறந்தவர்கள் வற்புறுத்தலால் அப்பாவை SMF அண்ணா நகர் செல்ல புறப்பட்டோம். நானும் ராகவேந்திரன் இருவரும் அப்பாவை காரில் அழைத்து அம்பத்தூர் வந்து சேர்ந்தோம். வழியில்  பல்லாவரம் அருகில் வரும்போது அப்பாவின் உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து வேஷ்டி மாற்றி கிளீன் செயது புறப்பட்டோம். 

ராகவேந்திரன் அனந்து வுடன் எனது நண்பன் வக்கீல் பிஸ்வநாத் உதவியுடன் சார் பதிவாளர் அலுவலகம் சென்று அனந்து ராகவேந்திரன் நிலங்களை உயில் பத்திரம் தயார் செய்து, சந்திரா பிருந்தா, பாமா உடன் சென்று பதிவு செய்தோம்.

அப்பாவை அண்ணா நகர் SMF ஹாஸ்பிடலில் சேர்த்து அங்கு சுமார் 15 நாட்களுக்கு மேலாக இருந்து ஜூன் மாதம் 27ம் தேதி இரவு இறந்தார்.

டாக்டர்கள் அப்பாவை அவரே வீட்டிற்கு நடந்து வருமாறு செய்வோம் அன்று கூறி வந்தனர். 
மெலிந்து இருந்தவர் உடல் பருமனாகி, வாய் மூலம் உணவு பவுடர் கொடுத்து, அவரால் எதுவும் பேசமுடியாமல், கூறவும்  முடியாமல் இருந்தார். அது டாக்டர்கள் செய்த தவறு என்பதை தெரிந்து பேசமுடியாமல் இருந்தேன்.

அப்பாவுடன் நீண்ட வருடங்கள் நானும் சென்று வந்ததால் அப்பாவுடன் இருந்தது வெகு காலம். அப்பாவுடன் அவரது காரியங்களில் பங்கு கொண்டதற்கு இறைவனுக்கு நன்றி கூற கடமைப் பட்டுள்ளேன்.

31-03-1983 மாலை நான் LIC ஆபீஸ் சென்றேன். அன்று அப்பாவிற்கு விடை கொடுத்த நாள். suitcase பெரிய பெட்டி அன்பளிப்பு   கொடுத்தார்கள் அவரை அழைத்துக்கொண்டு அம்பத்தூர் வந்தோம்.


அப்பாவின் சாதனைகள் 

அவர் செய்த பஜனை, ராதா கல்யாணம், உபன்யாசம் கேட்பது போன்றது, ஆறு மக்கட்செல்வங்களை வாழ்க்கையில் முன்னேற்றி சென்றது போன்றவை.

நல்ல நண்பர்கள் பெற்றது,  அப்பா அம்மாவை ராகவேந்திரன் அமெரிக்கா அழைத்து சென்று அங்கு அஷ்டபதி பாடியது, கோயில்கள் பார்த்தது 

பாண்ட் போடாமல் வேலை செய்தது 

அருகில் உள்ள ராகவேந்த்ர  ஸ்வாமி  மடத்தில் ப்ரெசிடெண்ட் ஆக இருந்து சர்வீஸ் செய்தார் .

பேஜாவர ஸ்வாமிகளை அழைத்து ஆசி பெற்றது 

வ்யாசராஜ மட  ஸ்வாமிகளை வரவழைத்து ஆசி பெற்றது 

அம்மாளு அம்மாள் பஜனைகளில் கலந்து கொண்டது . அம்மாளு அம்மாளை அழைத்து ஆசி பெற்றது 

சிந்தலவாடி நிலங்களை பராமரித்து வந்தது,

சிந்தலவாடி நரசிம்ம ஸ்வாமிகள் கோயிலுக்கு உதவியது, லக்ஷ அர்ச்சனை ஆரம்பித்து வைத்தது 

அங்கு வரும் பக்தர்களுக்கு வசதி செயது கொடுத்தது 

பத்ர விநாயகர் கோயில் பணிகள் செய்தது 

ஆறு மக்கட்செல்வங்களைப்பெற்று (3+3) , நன்கு படிக்கவைத்து, அவர்களுக்கு திருமணம் செய்வித்து , நல்வாழ்வு வாழ வழி வகுத்த பெருமை அவர்களையே சாரும்.

பெற்றவர்களைப் பெருமைகளை மேலும் மேலும் சொல்லிக்கொண்டே போகலாம்,  அதனால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

எனக்கு மனைவியாக வந்த சுதா தன்  குடும்பத்தையும், தான் வந்த புகுந்த வீடு கௌரவத்தையும் காத்து, உடன்பிறந்தவர்கள் அனைவரிடமும் நற்பெயர் பெற்று மூத்த குடும்பத் தலைவி என்ற பெயர் பெற்று பெற்ற குழந்தைகளையும் நன்றாக படிக்கவைத்து உள்நாடுகளிலும் வெளிநாடுகளிலும் சென்று நல்லபடி வாழ்க்கை நடுத்த வழி வகுத்த சுதா அவர்களுக்கு எனது பணிவான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு நல்லொதொரு பெற்றவர்களுக்கு மகனாக  பிறந்து வளர்ந்து 
73 ஆண்டுகள் கடந்து 45 ஆண்டுகள் திருமண வாழ்க்கையினை வாழ்க்கைத் துணைவியுடன்  வெற்றிகரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களை எப்போதும் வாழ்த்திக் கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு கோடி கோடி நமஸ்கரங்கள்.
  
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே 

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே 


ராம் ராம் 

 ----------------------------------------------------------------------------------------------------------------