திங்கள், 18 ஏப்ரல், 2022

Sri Rama Kaviyam 21-02-2022 (317) 18-04-2022 (371)

 

Radhe Krishna  18-04-2022 (371)
 
Sri Rama Kaviyam  21-02-2022 (317)
 
Radhe Krishna 22-07-2021
 
Sri Rama Kaviyam 22-07-2021  (114)
 
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~
001 /27-03-2021
 
என்னுரை:-
 
"ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே".
 
"அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக  ஆருயிர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு 
அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான். அவன் நன்மை 
அளித்துக் காப்பான்".
 
"ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே ரகுநந்தாய நாதாய 
சீதாய பதயே நமஹ".
 
★மகாபாரதம் 1 மற்றும் 2 பாகங்களுக்கு நீங்கள் அனைவரும் மிகுந்த ஆதரவு அளித்தீர்கள். அடுத்து மகாபாரதம் 3 எழுத வேண்டும். இந்த பாகத்தில்  ஶ்ரீவிஷ்ணு ஸஹஸ்ரநாமம் தமிழ் விளக்கத்துடனும் மற்றும் ஶ்ரீபகவத்கீதை தமிழ் 
விளக்கத்துடனும் இருக்கும்.
ஆனால் ஶ்ரீராம காவியம் என்கிற இந்த ஒரு அழகான, அருமையான காவியம் முடித்த பிறகு மகாபாரதம் 3 எழுதலாமென உள்ளேன். இனி ஶ்ரீராமகாவியத்தைப் பற்றி பார்ப்போம்.
 
★"பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே."
 
தர்மம் எப்பொழுதெல்லாம் அழிந்து அதர்மம் மோசமாக தலையெடுக்கிறதோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட நான் அவதரிப்பேன் யுகம் யுகமாக என்பது கீதாசாரம்.
 
★தர்மம் அழிந்து அதர்மம் தலையெடுத்த போது பகவான் அவதரித்த சிறந்த வரலாற்றை கூறுபவை இதிகாசங்களாகும். ஆகவே  இதிகாசம் என்பது கதை அல்ல. சமஸ்கிருதத்தில் இதி என்பதற்கு இப்படி என்றும் காசம் என்பதற்கு நடந்தது என்றும் அர்த்தம். இதிகாசம் என்றால் மரபுவழி வரலாற்று கதை என்றும் கொள்ளலாம். பெரும்காவியம் என்றும் ஒரு பொருள் உண்டு. 
 
★இதிகாசங்கள் இரண்டு ஆகும். அதில் 1. ராமாயணம் 2. மகாபாரதம். ராமாயணம் என்னும் பெயர் ராமன் மற்றும் அயணம் என்னும் இரண்டு சொற்களின் கூட்டாகும். அயணம் என்னும் சொல் சமஸ்கிருதத்தில் பயணம் அல்லது வழித்தடம் என்னும் பொருளுடையது. இதனால் ராமாயணம் என்பது ராமனின் பயணம் அல்லது அவன் வாழ்ந்த வழி என்னும் பொருளைக் குறிக்கிறது.
ராமாயணம் ஆதிகாவியம் என்றும் அழைக்கப் படுகிறது.
 
★வால்மீகி இராமாயணம் 24,000 பாடல்களைக் கொண்டது. இவை மொத்தம் ஏழு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை இராமரின் பிறப்பில் இருந்து இறப்பு வரை விளக்குகின்றன. அவை:
 
★பால காண்டம்:- 
ஶ்ரீராமன் மற்றும் அவருடைய உடன்பிறந்தோரின் பிறப்பு, கல்வி, திருமணம் என்பவை பற்றிய கதைப் பகுதி.
 
★அயோத்தி காண்டம்:- 
ராமன் சீதையை மணந்து கொண்ட பின்னர் அயோத்தி இளவரசனாக  வாழ்ந்த காலத்துக் கதைப் பகுதி.
 
★ஆரண்ய காண்டம்:- 
ராமன் காட்டுக்குச் சென்றதும் அங்கு வாழ்ந்ததும்.
 
★கிஷ்கிந்தா காண்டம்:- கடத்திச் செல்லப்பட்ட சீதையைத் தேடிச் செல்லும் போது வானரர் நாட்டில் இராமனது வாழ்க்கை.
 
★சுந்தர காண்டம்:- 
சீதையைத் தேடி அனுமன் இலங்கைக்குச் சென்றது, அங்கே சீதையைக் கண்டது ஆகியவற்றை உள்ளடக்கிய கதைப் பகுதி.
 
★யுத்த காண்டம்:- 
ராமனுக்கும் ராவணனுக்கும் இடையிலான போரை உள்ளடக்கிய கதைப் பகுதி.
 
★உத்தர காண்டம்:- 
ராமன் அயோத்திக்கு திரும்ப வந்து அரசனானதையும் சீதை மீண்டும் காட்டுக்கு அனுப்பப்பட்டதையும் உள்ளடக்கிய கதைப் பகுதி.
 
★இந்த இராமாயணத்தில் காணப்படும் முதல் காண்டமும் இறுதிக் காண்டமும் வால்மீகியால் எழுதப்பட்டதா என்பதில் சில ஐயங்களும் நிலவுகின்றன. இவ்விரு பகுதிகளின் மொழி நடை ஏனைய பகுதிகளில் இருந்து வேறுபடுவதும் அவற்றின் உள்ளடக்கங்களில் முரண்பாடுகள் காண்பதுவும் இத்தகைய ஐயங்களுக்குக் காரணமாகும். எனினும் பலர் இவ்வேழு காண்டங்களும் வால்மீகியால் எழுதப்பட்டது என்பதாகவே நம்புகின்றனர்.
 
★ராமாயணத்திலும் மற்றும் மகாபாரதத்திலும் பரவியுள்ள நல்ல நெறிகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்பதே இக்காவியங்களின் முக்கிய குறிக்கோளாகும்.  மனிதன் எப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதையே இவ்விரு காவியங்களும் நமக்கு போதிக்கின்றன. மண்ணாசை, பொருளாசை, பெண்ணாசை, ஆணவம், அகம்பாவம், கோபம், சூழ்ச்சி மற்றும் பொரியோர் சொல் கேளாமை ஆகியவை ஒரு மனிதனை அவன் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் அழித்து விடும் என்பதை இக்காவியங்கள் உணர்த்துகின்றன. 
 
★“ வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் ” என்று வள்ளுவர் கூறுவது இராம பிரானை மனதில் வைத்துத்தான் என்றே நான் கருதுகிறேன். மனிதர்களில் ‘சூப்பர்மேன்’ இராமன். கெட்டுப்போகவும் வழிதவறிப் போகவும் வாய்ப்புகள் கிடைத்தும்,அவன் கெட்ட வழியில் செல்லவில்லை. மாபெரும் பேரரசனின் மகனாகப் பிறந்தும் பாமர மனிதன் படும் துன்பம் எல்லாம் பட்டதோடு தன் மனைவியையும் தன்னுடன் படவைத்தான். அவனது இரண்டு தம்பிகளான பரதனும் லெட்சுமணனும் இராமனைவிட குணத்தில் ஒரு படி மேலே உயர்ந்துவிட்டனர்
 
★உலகின் பல மொழிகளிலும் இக்காவியங்கள் எழுதப்பட்டு இருப்பதற்கும் இதுவே காரணம். அநேக இந்திய மொழிகளில் ராமாயணம் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. தமிழில் கம்பர்,  ஒட்டக்கூத்தர் ஆகியோரும் அதன்பின் மூதறிஞர் ராஜாஜி உள்பட பலரும் ராமாயணம் எழுதி உள்ளார்கள். அந்தவொரு நீண்ட வரிசையில் நானும் "ஶ்ரீராமகாவியம்" என்கிற இந்த சிறந்த காவியத்தை ஶ்ரீஹரி குரு வாயு மற்றும் ஶ்ரீராகவேந்திரர் அவர்களின் கருணையோடும் மற்றும் ஆசியோடும் எழுத உள்ளேன். எங்கள் குலதெய்வமான ஹளேபுரம் ஶ்ரீலக்ஷ்மி நரசிம்மஸ்வாமியை வணங்கி எழுத ஆரம்பிக்கிறேன். 
 
★இக்காவியத்தை எழுத ஆலோசனைகள் பல  கூறிய அனைத்து அன்பர்களுக்கும், குறிப்புகள் அளித்துதவிய அநேக புத்தகங்களின் ஆசிரியர்களுக்கும் மற்றும் ஊக்கமும் உற்சாகமும் அளித்த நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் எனது நன்றி.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை..............
ஶ்ரீராம காவியம்
~~~~
002/28-03-2021
 
தயக்கத்தின் விளக்கம்...
 
★மகாபாரத காவியம் எனும் அற்புத இதிகாசத்தை தங்கள் அனைவரின் ஆதரவோடு இரண்டு பாகங்களாக பதிவு செய்தாகிவிட்டது. ஒரு பாகம் புத்தகமாகவும் வெளிவந்து விட்டது. இந்த நிலையில் ஶ்ரீராமகாதையை, அந்த ஶ்ரீராமனின் திவ்யமான சரிதத்தை 'ஶ்ரீராம காவியம்' என்கிற தலைப்பில் தினமும் வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் சிக்னல் செயலிகளில் நேற்று முதல் பதிவிட்டு வருகிறேன். 
 
★ இக்காவியத்தை எழுத ஆரம்பிக்கும் முன் எனக்குள் சிறு தயக்கம், ஶ்ரீ ராமனின் பிரம்மாண்டமான சரிதத்தை நம்மால் ஒழுங்காக எழுத இயலுமா எனபதினால் வந்தது , எதற்கு இந்த தயக்கம் என்றால் கம்பர் எழுதிய  ராமாயணத்தின் புகழும், மகாகவி காளிதாசன் எழுதிய ரகு வம்சம் என்ற காவியத்தின் புகழும் இன்று நமது இந்தியா முழுதும் பரவிஇருக்கிறது.
 
★அவர்கள் முதல் பாடலை எழுதி இந்த பெரும் காவியத்தைத் துவக்கிய போது இது எல்லா மக்களின் ஆதரவைப் பெறுமா,? காலத்தின் தாக்குதலைக் கடந்து நிலைத்து நிற்குமா?
நம்மால் இக்காவியத்தின் அழகு பொருள் சற்றும் குறையாமல் எழுதி முடிக்க இயலுமா ? என்றெல்லாம் பயமும், ஐயமும் இருந்திருக்கும். அவர்கள் இருவரும் பெரும் புலமை படைத்திருந்தும் மிகவும் அடக்கத்துடன்  ஶ்ரீராமனின்  காவியத்தைத் துவக்குகின்றனர். அவர்கள் கூறியது .......
 
क्व सूर्यप्रभवो वंशः क्व चाल्पविषया मतिः।
तितीर्षुर्दुस्तरं मोहादुडुपेनास्मि सागरम्॥
 
க்வ ஸூர்யப்ரப⁴வோ வம்ʼஸ²​: க்வ சால்பவிஷயா மதி​:|
திதீர்ஷுர்து³ஸ்தரம்ʼ மோஹாது³டு³பேனாஸ்மி ஸாக³ரம்||
 
-காளிதாசனின் 
ரகுவம்சம் 1-2
 
பொருள்:-
சூரியனிடமிருந்து இந்த வம்சம் தோன்றியது. அதைக் கூற, சின்ன அறிவுடைய நான் எங்கே? கடக்கமுடியாத பெரும் கடலை மிகச் சிறிய படகைக் கொண்டு கடந்து செல்ல விரும்புபவன் போல நான் ஆசைப்படுகிறேனே!
 
 
मन्दः कवियशः प्रार्थी गमिष्याम्यपहास्यताम्।
प्रांशुलभ्ये फले लोभादुद्बाहुरिव वामनः॥
 
மந்த³​: கவியஸ²​: ப்ரார்தீ² க³மிஷ்யாம்யபஹாஸ்யதாம்|
ப்ராம்ʼஸு²லப்⁴யே ப²லே லோபா⁴து³த்³பா³ஹுரிவ 
வாமன​:||
 
-ரகுவம்சம் 1-3
 
பொருள்:-
எனக்கோ குறைந்த அறிவு; ஆசையோ பெரிய கவிஞனாக வேண்டும் என்பது. ஒரு குள்ளன், மரத்தின் உச்சியில் இருக்கும் பழத்தைப் பறிக்க கையைக் கையைக் நீட்டினால் எல்லோரும் நகைக்க மாட்டார்களா? (அதுதான் என்னுடைய நிலை)
 
 
अथवा कृतवाग्द्वारे वंशेऽस्मिन्पूर्वसूरिभिः।
मणौ वज्रसमुत्कीर्णे सूत्रस्येवास्ति मे गतिः॥
 
அத²வா க்ருʼதவாக்³த்³வாரே வம்ʼஸே²(அ)ஸ்மின்பூர்வ
ஸூரிபி⁴​:|
மணௌ வஜ்ரஸமுத்கீர்ணே ஸூத்ரஸ்யேவாஸ்தி மே க³தி​:||
 
ரகுவம்சம் 1-4
 
நான் காவியம் இயற்றும் திறமை இல்லாதவன் தான் ஆனால் முன்னோர் சென்ற வழியில் சென்று புகழடைவேன். எப்படியென்றால் வைரத்தால் துளையிடப்பட்ட ரத்தினக் கல்லில் ஒரு நூலைக் கோர்ப்பது எளிதுதானே. அதே போல முன்னோர்கள் (வால்மீகி) இயற்றிய காவியம் என்னும் துவாரத்தில் நுழைந்து செல்வேன்.
 
★காளிதாசன் பணிவின் காரணமாக தன்னை குட்டையனாகவும், சின்னப் படகைக் கொண்டு பெரிய கடற் பரப்பைக் கடந்து செல்ல முயலும் முட்டாள்போலவும் , கேலி செய்யப்படக்கூடிய ஒருவனாகவும் தன்னை உருவகிக்கிறான். ஆனால்
கம்பனோ இதற்கும் ஒரு படி கீழே போய்விடுகிறான். தன்னைப் பைத்தியக் காரன் என்றும், பாற்கடலை நக்கிக் குடிக்கும் பூனை என்றும் உருவகிக்கிறான்.
 
"ஓசை பெற்று உயர் பாற்கடல் உற்று ஒரு பூசை முற்றவும் நக்குபு புக்கென ஆசைபற்றி அறையலுற்றேன் மற்று இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ
 
–பாலகாண்டம்
 
பொருள்:- ஒரு பூனை (பூசை), ஆர்ப்பரிக்கும் பாற்கடலை அடைந்து, அதிலுள்ள பால் முழுதையும் நக்கிக் குடித்துவிட ஆசைப்பட்டதைப் போல, குற்றமற்ற வெற்றியை உடைய ராமனது கதையை நான் சொல்ல ஆசை கொண்டேன்.
 
"முத்தமிழ்த் துறையின் முறைபோகிய
உத்தமக் கவிஞர்களுக்கு ஒன்று உணர்த்துவென்
பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்
பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ!"
 
பொருள்:- ஐயா! முத்தமிழ் புலவர்களே! கற்றறிந்த புலவர் பெருமக்களே! உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். பைத்தியக்காரர்கள் சொன்னதையும், அறிவில்லாத முட்டாள்கள் சொன்னதையும், பக்தர்கள் சொன்னதையும் ஆராயலாமா? அல்லவே!
 
வையம் என்னை இகழவும் மாசு எனக்கு
எய்தவும் இது இயம்புவது யாது எனின்
பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வ மாக்கவி மாட்சி தெரிவிக்கவே
 
பொருள்:– உலகம் என்னை கேலி செய்யும்; அதனால் எனக்கு பழி வரட்டுமே. நான் இந்தக் கம்பராமாயனத்தை இயற்றக் காரணம் என்ன தெரியுமா? தெய்வத் தன்மைமிக்க கவிதைகளின் பெருமையைத் தெரிவிக்கவே.
 
★மகாகவி காளிதாசனும் கவிச்சக்ரவர்த்தி கம்பரும் தங்களை முட்டாள் எனவும் குட்டையன் எனவும் காவியம் எழுத திறமையற்றவன் எனவும் பேராசைக்கார பூனை என்றும் மேலும் தங்களை பைத்தியக்காரன் எனவும் குறிப்பிட்டுக் கொண்டே ரகுவம்சத்தையும் மற்றும் ராமாயணத்தையும் எழுதி உள்ளார்கள்.
 
★ஆக பணிவுடன், வணக்கத்துடன் எழுதப்பட்ட காளிதாசனின் ரகுவம்சமும், அவருக்கு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்வந்த கம்பன் இயற்றிய ராமகாதையும் அவர்களை உலக மஹா கவிகள் உயரத்துக்கு உயர்த்தியதில் வியப்பொன்றும் இல்லை.
 
★ஆகவே, மேதாவிகளான அவர்கள் எங்கே? கடையினிலும் கடையனான நான் எங்கே? 
அவர்களின் எழுத்தோவியத்தில் ஒரு சிறு புள்ளி நான். கடலில் விழுந்த கடுகைப் போன்றவன். 
 
★ஆதலால் அன்பர்களே! 
நமது குழுவில் எத்தனையோ அறிஞர்களும், பண்டிதர்களும் உள்ளீர்கள். எழுத இஶ்ரீராம காவியம்
~~~~~~~~~~~~
003 / 29-03-2021
 
முன்னுரை:
~~~~~~~~
 
★உலகம் போற்றும் உன்னத இதிகாசமானது ராமாயணம். வடமொழியில் வால்மீகி முனிவர் என்பவர் பாரதத்தின் பழம்பெரும் சிறந்த இரண்டு இதிகாசங்களில் ஒன்றான, ராமாயணம் என்னும் இந்த சிறந்த இதிகாசத்தை இயற்றியவர். இவர் ராமாயணத்தை வட மொழியில் எழுதினார். இவர் இயற்றிய ராமாயணம் இந்தியாவின் அனைத்து மக்களிடமும் பரவி, உலகில் பல  மொழிகளிலும் மொழிப்பெயர்ப்பு செய்யப் பட்டுள்ளது.
 
★ராமாயண நூல் இதிகாசமே என்றாலும், அதில் குறிப்பிட பட்டிருக்கும் புவியியல் அமைப்புகள், விவரிக்கப் பட்டிருக்கும் அரசரின் ஆட்சி முறைமைகள், அரசுகள் போன்றவற்றை ஆய்வு நோக்கில் பார்க்கும் போது, வெறுமனே கற்பனையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு இவ்வாறான ஒரு இதிகாசத்தைப் படைத்து இருக்க முடியாது. இது சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டுள்ளதால், அந்தகாலத் தன்மைகளுக்கு அமைவாக, மந்திரம், மாயை உடன் இதிகாசச் சாயலுடன் எழுதப்பட்ட ஒரு வரலாறு ஆகவும் இருக்கலாம் என கருதுவோரும் உளர். 
 
★மூல நூலான வால்மீகி ராமாயணத்தைத் தழுவிப் பல இந்திய மொழிகளிலும் பிற நாடுகளின் மொழிகளிலும் ராமாயணம் இயற்றப்பட்டு உள்ளது. வடமொழியில் வால்மீகி இயற்றிய இந்த  ராமாயணத்தை பின்பற்றி யோக வசிஷ்டர் எழுதிய வசிஷ்ட ராமாயணம், ராமசர்மர் எழுதிய அத்யாத்ம ராமாயணம் மற்றும் வால்மீகி பெயரால் அழைக்கப்படும் அற்புத ராமாயணம் ஆனந்த ராமாயணம் என நிறைய நூல்கள் உள்ளது. 
 
★தமிழில் கம்பர் எழுதினார். இது கம்ப ராமாயணம் எனப்படுகின்றது. இந்தியில் துளசி தாசரும், மலையாள மொழியில் எழுத்தச்சனும், அசாமியில் மாதவ் கங்குனி என்பவரும், ஒரியாவில் பலராம்தாசும் இயற்றி உள்ளனர். கம்போடியாவின் கெமர் மொழியில் உள்ள 'ரீம்கெர்', தாய்லாந்தின் தாய் மொழியில் அருமையாக எழுதியுள்ள 'ராமாக்கியென்'    (ராமகீர்த்தி) தாய்லாந்து நாட்டின் தேசிய காப்பியம் ஆகும். லாவோ மொழியில் எழுதப்பட்ட 
'ப்ரா லாக் ப்ரா லாம்', மற்றும் மலாய் மொழியில் எழுதப்பட்ட 'இக்காயத் சேரி ராமா' போன்றவை வால்மீகியின் ராமாயண காவியத்தைத் தழுவி எழுதபட்டவை ஆகும்.
தென் கிழக்காசிய நாடுகளில் ராமனின் செல்வாக்கு அபாரமானது.
 
★இந்தியாவில் வால்மீகி, கம்பன், துளசிதாஸ், மற்றும் எழுத்தச்சன், அஸ்ஸாமிய, வங்காள, தெலுங்கு, சமண ராமாயணங்கள் பலப்பல கிடைக்கின்றன. பாரதத்தின்  பெரும்பான்மையான மொழிகளில் ராமாயணங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. திரு. ஏ.கே. ராமானுஜம் 1991 இல் எழுதிய ஆங்கில கட்டுரை 300 ராமாயணங்கள் என்பதில் குறிப்பிடப்பட்டவை தவிர மேலும் பல ராமாயண நூல்கள் பிற்காலத்தில் பழைய நூலகங்களிலிருந்து கண்டெடுக்கப் பட்டுள்ளன. 
 
★ராமாயணம் மொத்தம் எத்தனை உள்ளது என்று முழுமையாக யாராலும் சொல்லி விடமுடியாது. இதற்கு காரணமாக ஏன் ராமாயணத்தில் இத்தனை வகைகள் தோன்றியது என்று எண்ணினால் அக்காலத்தில் புராணங்களும். மற்றும்  இதிகாசங்களும் தலைமுறை தலைமுறையாக செவிவழிச் செய்தியாகவே பரிமாறப் பட்டிருக்கின்றன. யோகிகள் மகான்கள் ரிஷிகள் எழுதிய நூல்கள் தவிர்த்து மற்ற அனைத்து ராமாயணங்களும் அவரவர்களுக்கு மனதில் புரிந்தவைகளை அவரவர்கள் விருப்பம் போல் எழுதி இருக்கலாம். 
 
★ஆகவே தான் யோகிகள் மகான்கள் எழுதிய ராமாயண காவியத்திற்கும் வால்மீகி ராமாயணத்திற்கும் அதிக வித்தியாசம் ஒன்றும் இல்லை. மற்றவர்கள் எழுதியதிற்கும் வால்மீகி ராமாயணத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என்று ராமாயண ஆய்வாளர்கள் கருதுகின்ற வாய்ப்புள்ளது. 
 
★மேலும் ஓர் காலகட்டத்தில் சமணர்கள் சைவம் மற்றும்  வைணவத்தை அழித்து தங்கள் சமண மதத்தை பரப்புவதற்காக வரலாற்று காவியங்கள் சிலவற்றை வேண்டுமென்றே திரித்து மொழி பெயர்த்து எழுதி இருக்கவும் வரலாற்று சான்று உள்ளது. அதன்படியும் பல ராமாயண கதைகள் உருவாகியிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.
 
★ராமாயணம் கி.மு.1500 ஆம் ஆண்டுக்கும் கி.மு.500 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இயற்றப் பட்டிருக்கலாம் என்றும் ராமாயண ஆய்வாளர்களால் கருதப்படுகின்றது. ராமாயண இதிகாசம் வாழ்வியல் நன்நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் ஒரு மனிதன் தலைவனாக எவ்வாறு நடந்து கொள்கிறான் என்பதையும் தன் வாழ்வில் சந்தித்த பல்வேறு நிலைகளையும் ஒன்றுபோல எதிர்கொண்டு சமயத்துக்குத் தக்கபடி நடந்து தனது சொந்த இன்ப துன்பங்களுக்கு அப்பால் குடிமக்களை எவ்வாறு வழிநடத்துகிறான் என்பதை விளக்கமாக  காட்டுகிறது. 
 
★வேறொரு கட்டத்தில் இது தீமையை ஒழித்து நீதியை நிலை நாட்ட மனிதனாகத் தனது ஏழாவது அவதாரத்தை எடுத்த விஷ்ணுவின் அவதார வரலாறும் ஆகும். மகாபாரத காவியத்தின் வன பருவத்தில் ராமாயண நிகழ்வுகளை மார்க்கண்டேய முனிவர் யுதிஷ்டிரனுக்கு எடுத்து உரைத்திருக்கின்றார்.
 
★ஶ்ரீராம காவியத்திற்குள் நுழைவதற்கு முன்னால் அதை எழுதிய ரிஷி வால்மீகி, மொழி பெயர்த்த கம்பர், ஒட்டக்கூத்தர், அருணாசலக் கவிராயர் போன்றவர்களைப் பற்றியும் சிறிது தெரிந்துக் கொள்வோம்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை....................ருக்கும் ஶ்ரீராம காவியத்தில் ஏதேனும் அறிந்தும் அறியாமலும் செய்த குறைகள் தெரிந்தால் தயவு செய்து எனக்கு தனிப்பட்ட முறையில் தெரிவித்தால் திருத்திக் கொள்ள ஏதுவாக இருக்கும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
ஶ்ரீராம காவியம்
~~~~
004 / 30-03-2021
 
ஶ்ரீவால்மீகி முனிவர்...1
 
★தேவலோகத்தில் வருண பகவான் தன்னுடைய குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது நாராயண நாமத்தை சொல்லி கொண்டு நாரதர் அங்கு வந்தார். வருண பகவானோ நாரதர் வருவதை சிறிதும் கவனிக்காமல் தன்னுடைய  குழந்தையுடனே விளையாடிக் கொண்டிருந்தார். நாராயண நாமத்தை கவனிக்காத வருணன் மேல் கோவம் கொண்ட நாரதர் நீ உன் குழந்தையை பிரிவாயாக என்று சாபமிட்டார். 
 
★நாரதரிடம் தன்னை மன்னிக்கும் படியும் சாப விமோசனம் கொடுக்கும் படியும் கேட்டுக்கொண்டான் வருணன். அதற்கு நாரதர் இந்தச் சாபம் ஒரு வரம்தான். இக்குழந்தை பூலோகத்தில் பிறந்து பிற்காலத்தில் விஷ்ணுவின் அவதாரப் புராணத்தை ஒரு சிறந்த  இதிகாசமாகப் படைக்கும் என்று வாழ்த்திவிட்டு சென்றார். அக்குழந்தையே பிற்காலத்தில் வால்மீகி என்ற பெயர் பெற்ற முனிவராகி  ராமாயணத்தை படைத்தார்.
 
★மகரிஷி கஷ்யபர் அதிதி தம்பதியருக்கு ஒன்பதாவது குழந்தையாக வருண் பிரசேதாஸ் என்பவர் பிறந்தார். சகல யோகங்கள் மற்றும்  கலைகளையும் கற்று தவமிருந்து முனிவரான அந்த வருண் பிரசேதாஸிற்கு ரிக்சன் என்கிற ரத்னாகர் பத்தாவது குழந்தையாகப் பிறந்தார். 
 
★கல்வியறிவு அவ்வளவாக இல்லாத  ரத்னாகர் தனது மிகவும் ஏழ்மை வசப்பட்ட  குடும்பத்தைக் காப்பாற்ற வழி தெரியாமல் திருட்டு, களவு, கொள்ளை  வழிப்பறி என ஆரம்பித்தான். காட்டு வழியில் வருபவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்து  கொண்டு தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தான். அப்போது  அவனுடைய பூர்வ ஜென்ம காரணத்தினால் நாரதர் ரத்னாகர் இருந்த காட்டு வழியே வந்தார். 
 
★அவர் வருவதைப் பார்த்துவிட்டு கத்தியை எடுத்துக் கொண்டு அவர் அருகில் சென்றான். அவரை அருகில் சென்று பார்ததுமே அவன் மனதில் சிறிது சாந்தம் ஏற்பட்டது. அவரிடம் யார் நீங்கள்? எங்கு வந்தீர்கள்? இருப்பதையெல்லாம் கீழே வைத்துவிட்டு பேசாமல் ஓடிப்போங்கள் என்றான். அதற்கு அவர் என்னிடம் ஒன்றுமே இல்லை நான் நாராயண மந்திரத்தைச் சொல்லிக் கொண்டு பகவானை வணங்கிக் கொண்டு இருக்கின்றேன். எனக்கு எதுவும் தேவை இல்லை. சதா பகவத் தியானத்திலேயே மிகுந்த ஆனந்தமாக இருக்கின்றேன் என்றார். அதற்கு ரத்னாகர் பார்த்தாலே தெரிகிறது நீங்கள் மிகுந்த சாந்தமாக ஆனந்தமாக இருக்கின்றீர்.  ஆனால் உங்களிடம் ஒன்றும் இல்லை என்கின்றீர்கள். நான் நிறைய கொள்ளையடித்து சேர்த்து வைத்திருக்கிறேன். தெரியுமா? என்றான்.
 
★நீ இப்படி சேர்த்து வைத்த பணமெல்லாம் பண மூட்டை இல்லையப்பா.  இதெல்லாம் பாவ மூட்டைகள். இதற்காக நரகத்தில் கஷ்டப்படுவாய். இந்த உலக வாழ்க்கைக்குப் பிறகு சொர்க்கம் நரகம் என்று உள்ளது. இங்கே நல்ல வாழ்க்கை வாழ்ந்து அநேக  புண்ணிய காரியங்கள் செய்பவர்கள்  சொர்க்கம் செல்வார்கள். பாவமானச் செயல்கள் செய்தால் நரகத்திற்கு செல்வார்கள். நரகத்தில் பலவிதமான தண்டனைகளைப் பெற்று அவதிப் படவேண்டியிருக்கும் என்றார் நாரதர். 
 
★நான் செய்யும் செயல்கள் அனைத்தும் என் மனைவி குழந்தைகளுக்காகத் தானே செய்கிறேன். அவர்கள் எல்லோரும் என்னுடைய பாவத்தைப் பகிர்ந்து கொள்வார்கள் என்றான் ரத்னாகர். அப்படியானால் நீ அவர்களைப் போய் கேட்டுக் கொண்டு வா என்றார் நாரதர். 
 
★முனிவரே! தப்பித்துப் போக முயல்கிறீரா?  இதெல்லாம் என்னிடம் முடியாது என்றான். இல்லையப்பா நீ  என்னைக் கயிற்றால் கட்டிப் போட்டு விட்டுச் செல். அவர்களிடம் கேள். அவர்கள் நீ செய்த  பாவங்களில் பங்கு கொள்வதாய்க் கூறிவிட்டால் என்னிடம் உள்ளதை எல்லாம் எடுத்துக்கொள். அவர்கள் இல்லையென்று சொல்லி விட்டால் நான் சொல்வதை நீ செய்ய வேண்டும் என்றார் நாரதர். ரத்னாகர் யோசித்துப் பார்த்தான். இந்த முனிவர் சொல்வதும் சரியாகத் தான் இருக்கிறது. நாம் சென்று கேட்டுத்தான் பார்ப்போமே என்று நினைத்து நாரத முனிவரை அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டிப் போட்டு விட்டு சென்றான்.
 
★ரத்னாகர் அவனின் வீட்டுக்கு வந்து தன் அப்பா அம்மா மனைவி மற்றும் குழந்தைகளிடம் நான் நிறைய பாவங்கள் செய்து விட்டதாக ஒரு முனிவர் சொல்கிறார். நான் செய்த அந்த பாவங்களை எல்லாம் நீங்கள் என்னோடு பகிர்ந்து கொள்கிறீர்களா? என்று கேட்டான். அதற்கு அவர்கள் நாங்கள் எதற்காக உன் பாவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்? நீ நல்ல வழியில் சம்பாதிக்க வேண்டியதுதானே? நீ ஏன் பாவ வழியில் பொருள்களை சம்பாதிக்கின்றாய்? குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டியது உன்னுடைய கடமை. அதற்கு நல்லதொரு வழியில் சம்பாதிக்க வேண்டியது உன்னுடைய தர்மம். அதை விட்டு விட்டு மிகத் தவறான வழியில் சம்பாதிப்பது உன் தவறு. அதனால் உன்னுடைய பாவத்தை நாங்கள் வாங்கிக் கொள்ள மாட்டோம் என்று கூறிவிட்டனர். அவர்கள் கூறியதைக் கேட்டு ரத்னாகர் அதிர்ச்சியடைந்தார். என்ன செய்வதென்பதையறியாமல் திகைத்து நின்றார்.
 
நாளை..................
ஶ்ரீராம காவியம்
~~~~
005 / 31-03-2021
 
ஶ்ரீவால்மீகி முனிவர்...2
 
★உன்னுடைய பாவத்தை நாங்கள் வாங்கிக் கொள்ள மாட்டோம் என்று ரத்னாகரின் குடும்பத்தினர் கூறிவிட்டனர். அவர்கள் கூறியதைக் கேட்டு ரத்னாகர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தார். என்ன செய்வது என்பதையறியாமல் அங்கு திகைத்து நின்றார்.
 
★இந்தச் சொற்களை காதில் கேட்ட உடன் ரத்னாகருக்கு அகக்கண் திறந்துவிட்டது. திரும்பி வரும்போது அவர் முற்றிலும்ட மாறியிருந்தார் ரத்னாகர். ஓடோடி வந்து நாரதரின் காலில் விழுந்து சுவாமி நீங்கள் சொன்னது சரிதான் என்று கண்ணீருடன் கண் கலங்கியபடியே நாரதரின் கட்டுகளை அவிழ்த்து விட்டான்.
 
★ சுவாமி நீங்கள் சொன்னபடி என் மனைவி குழந்தைகள் பெற்றோர் உறவின என எல்லோரிடமும்  நான் செய்த  பாவத்தில் நீங்கள் பங்கு கொள்வீர்களா? என்று கேட்டேன். எல்லோரும் ஒரே விதமாய் எங்களைக் காப்பாற்ற வேண்டியது உன் கடமை. நீ எப்படிப் பொருள் கொண்டு வருகிறாய் என்பது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. நீ பாவ வழிகளில் சம்பாதித்தால் அந்த கொடும் பாவங்களை நீதான் தனியாக அனுபவிக்க வேண்டும். அதில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்று கூறிவிட்டார்கள் என்றான். 
 
★அதற்கு நாரதர் அவர்கள் சொன்னதில் தவறில்லையே? மனைவி மக்களைக் காப்பாற்றுவது உன் கடமை. அதை நல்லதொரு வழியில் செய்கிறாயா இல்லையா என்பதைப் பற்றி சிறிதும் அவர்களுக்குக் கவலைப்பட தேவை இல்லை என்றார் நாரதர். ஆமாம் சுவாமி அதை நான் இப்போதுஎன் மனதார உணர்கிறேன். நீங்கள் தான் நான் எல்லா பாவங்களில் இருந்தும் விடுபட ஒரு நல்ல வழி காண்பிக்க வேண்டும் என்றான். 
 
★நீ செய்த பாவங்களுக்கு எல்லாம் தகுந்த ஒரு பிராயச் சித்தம் இராம நாமத்தைச் சொல்லிக் கொண்டு இருப்பதே. இராம நாமத்தை ஜபம் செய்வது எல்லாப் பாவத்தையும் போக்கும் என்றார் நாரதர்.அதைகேட்ட
ரத்னாகருக்கு ராம என்ற சொல் சரியாக  வாயில் நுழையவில்லை. இதனை பார்த்த நாரதர் அங்கிருக்கும் மரத்தை காட்டி இது என்ன மரம் என்று கேட்டார். இது மரா மரம் என்றான். நீ இந்த மரத்தின் பெயரான மரா என்பதைச் சொல்லிக் கொண்டிரு அது போதும் என்றார். நீங்கள் சொன்னபடியே இந்த மரா மரத்தின் பெயரை நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று வணங்கி நின்றான். நாரதரும் அவனை ஆசீர்வசித்து விட்டுத் தன் வழியே சென்றார். 
 
★அவர் போனபின் ரத்னாகர் அங்கேயே அமர்ந்து தன்னை மறந்து மரா மரா மரா என்று ஜபிக்க ஆரம்பித்தான். நாளடைவில் அது ராம ராம ராம என்று மறுவி ஒலித்தது. ரத்னாகர் இரவு பகலாய் பசி தாகத்தை மறந்து ராம ராம ராம என்று ஜபம் செய்து கொண்டே சமாதி எனும் நிஷ்டையில் இருந்தான். அசையாமல் அவன் இருந்ததால் நாளடைவில் அவன் மேல் புற்று வளர்ந்தது. ராம நாம ஜபத்தால் அவன் பாவமெல்லாம் அழிந்து ஞானம் பெற்றான்.
 
★சில காலம் கழித்து அந்தப் காட்டுப் பக்கம்  சப்தரிஷிகள்  வந்தார்கள். அங்கே ராம நாம ஜபம் ஒரு புற்றுக்குள்ளிருந்து ஒலித்துக் கொண்டிருப்பதை கேட்டு அதற்குள் இருப்பவரை தங்களின் ஞானக்கண்ணால் பார்த்து வால்மீகி என்று அழைத்தனர்.  சம்ஸ்கிருத  மொழியில்  வால்மீகி என்றால்  புற்றுக்குள்ள் இருப்பவன் என்று பெயர். அவர்களின் அழைப்பினால் தவம் கலைந்து புற்றிலிருந்து ரத்னாகர் வால்மீகியாக வெளியே வந்தார். 
 
★இடைவிடாத ராம நாம ஜெபத்தின் பயனால் நீங்கள் ஒரு மகரிஷியாகிவிட்டீர்கள். இன்றிலிருந்து உமக்கு வால்மீகி என்று பெயரே நிலைக்கும். ராம நாமத்தின் மகிமையை உங்கள் மூலமாக இந்த உலகம் தெரிந்துக் கொள்ளும் என்று கூறி ஆசீர்வதித்தனர். அவரும் ரிஷிகளை நமஸ்கரித்து விட்டு பின் ராம நாமத்தையே ஜபித்துக் கொண்டு ஒரு ஆசிரமத்தை தமஸா நதிக் கரையில் கட்டிக் கொண்டார். அவரிடம் பல சிஷ்யர்கள்  வந்து சேர்ந்தார்கள். வால்மீகி தன்னுடைய தவத்தினால் ராமனின் வரலாற்றை தனது ஞானதிருஷ்டியில் கண்டார். இப்படிப்பட்ட ஓர் சிறந்த  குணாதிசயங்களோடு ஒரு மனிதன் இந்த உலகத்தில் இருப்பானா என்று அவருக்கு சந்தேகம் வந்தது.
 
★வால்மீகி ஆசிரமத்திற்கு ஒருநாள் நாரதர் அங்கு வந்தார். அவருக்கு உபசாரங்கள் செய்து வரவேற்ற பிறகு, வால்மீகி முனிவர் அவரை நோக்கி, ‘நாரதரே, இந்த யுகத்தில் முப்பத்திரண்டு கல்யாண குணங்களும் பொருந்திய நேர்மையான, சத்தியம் தவறாத, மிக்கவீரம் உடைய பராக்கிரமசாலியான புருஷன் யாராவது இங்கே இருந்திருக்கிறானா?’ என்று கேட்டார். அதற்கு நாரதர் 
உண்டு அவர் தான் ஶ்ரீராமர். இக்ஷ்வாகு வம்சத்தில் வந்த தசரத மன்னனின் மூத்த  குமாரர்தான்  ஸ்ரீராமர் என்று கூறி வால்மீகி முனிவருக்கு ராம சரித்திரத்தை முழுவதும் சுருக்கமாக நூறு ஸ்லோகம் மூலமாக உபதேசித்தார். இது ஸங்க்ஷேப இராமாயணம் எனப்படும். இதுவே வால்மீகி ராமாயணத்தின் முதல் சர்கம் ஆகும். நாரதர் இறுதியில் விடைபெற்று சென்றபின், வால்மீகி தனது சீடர் பரத்வாஜருடன் தமசா நதிக்கரைக்குச் சென்றார்.
 
★ அப்போது நதிக்கரையில் உல்லாசமாக அமர்ந்திருந்த ஒரு ஜோடி நாரைகளைப் பார்த்தார். அவற்றின் அந்தரங்க அன்புப் பிணைப்பினைக் கண்டு ரசித்தவாறே அவர் நீராடுகையில், எங்கிருந்தோ வந்த ஓர் அம்பு ஆண் நாரையின் மீது பாய்ந்து அதன் உயிரைக் குடித்தது. அதைக் கண்ட பெண் நாரை துக்கம் தாளாமல் ஓலமிட்டது.
பறவையின் துக்கத்தை கண்ட வால்மீகி தன் ஞான திருஷ்டியில் கண்ட ராமனும் இப்படி தானே சீதையை பிரிந்து துக்கப்பட்டிருப்பான் என்று எண்ணி மனம் பதறி அம்பை எய்த வேடனை மிகுந்த சீற்றத்துடன் நோக்கி, ‘இதயமற்ற அரக்கனே! என்ன காரியம் செய்து விட்டாய் நீ? வாழ்நாள் முழுதும் நீ அமைதியின்றி தவிப்பாய்!’ என்று உணர்ச்சி வசப்பட, அவருடைய வாயிலிருந்து வந்த சொற்கள் அனைத்தும் அவரையறியாமலே ஒரு கவிதை வடிவில் உருவாகி வெளிவந்தன.ஆசிரமத்திற்கு திரும்பி வந்த பிறகும் அவருடைய படபடப்பு அடங்கவில்லை. சற்று நேரத்தில், பிரம்மா வால்மீகியைக் காணவந்தார்.
 
★பிரம்மாவை விழுந்து வணங்கி வால்மீகி நின்ற போது, பிரம்மா, ‘வால்மீகி, என்னுடைய அருளினால் உனக்கு கவிதை பாடும் திறமை உண்டாகி விட்டது. ராமபிரானது வரலாற்றை இதற்கு முன் நீ கேட்டு இருக்கிறாய். அதை நீ காவியமாக இயற்று. இந்த உலகம் இருக்கும் வரை அவை காவியமாக நிலைத்திருக்கும்!’ என்று வாழ்த்தி விட்டுச் சென்றார். பிரம்மாவின் அருளினால் வால்மீகி திரேதாயுக விஷ்ணுவின் அவதாரமான ராமாயண இதிகாசத்தை 24000 சுலோகங்கள் கொண்டதாக முழுமையாக இயற்றினார். யோக வாசிஷ்டம், அத்புத ராமாயணம், கங்காஷ்டகம் ஆகிய நூல்களும் இவரால் இயற்றப்பட்டவையே.
 
★வால்மீகி இயற்றிய ராமாயணம் பாரதத்தின் அனைத்து மக்களிடமும் பரவி பின்னர் உலகில் பல்வேறு மொழிகளிலும் சிறப்பாக மொழிப்பெயர்ப்பு செய்யப் பட்டுள்ளது. இவர் இயற்றிய ராமாயணமும் அதன் பாத்திரங்களும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 
 
★பல முனிவர்கள் வால்மீகி என்கிற இதே பெயரில் இருந்து சித்தி அடைந்திருக்கிறார்கள். எட்டுகுடியில் ஒரு வால்மீகியின் சமாதி இருக்கிறது. அவர் எழுதிய பாடல்கள் மூலம் அவர் பிற்காலத்தவர் என்று தெரிந்து கொள்ளலாம். திருவாரூர், சங்கரன்கோவில், குடவாசல், திருவெற்றியூர், காஞ்சீபுரம் இப்படிப் பல கோவில்களில் வால்மீகநாதர் சந்நிதியும் வேறுபாடான திரு உருவங்களும் உண்டு. இவை எல்லாம் வால்மீகி என்ற பெயரில் பல முனிவர்கள் இருந்திருக்கின்றார்கள் என்பதற்குச் சான்றாகும்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.........................
ஶ்ரீராம காவியம்
~~~~
006 /01-04 2021

கம்பர்...1

★கம்பராமாயணம்
தமிழ் இலக்கியத்தில் மிகச் சிறப்பாகப் போற்றப்படும் காப்பிய நூல்களுள் ஒன்று இராமாயணம்.  சமயக் காப்பியங்களுள் இது வைணவ சமயத்தைச் சார்ந்தது. இந்தக் காப்பியம் தோன்றிய காலம் இரண்டாம் குலோத்துங்க சோழன் ஆண்ட, கி.பி. 12-ஆம் நூற்றாண்டாகும். சிலர் ஒன்பதாம் நூற்றாண்டு என்றும் கூறுவர். இந்நூலின் ஆசிரியர் கம்பர்.

★கம்பன் சோழ நாட்டில் கும்பகோணத்தில் உள்ள தேரெழுந்தூரில் கி.பி. 1180 ஆம் ஆண்டு ஆதித்தன் என்பவருக்கு மகனாக பிறந்தார். இவரின் வறுமை மிகுந்த குடும்பத்தின் நிலை  காரணமாக பணக்கார விவசாயி ஒருவருக்கு தத்து கொடுக்கப்பட்டார். இவர் சிறு வயதில் காளி கோவில் கம்பத்தின் கீழ் கிடந்ததால் கம்பர் எனவும் இவர் தனது குருவின் கம்பங்கொல்லை நிலத்தை காவல் புரிந்து  காத்தமையால் கம்பர் எனவும் அழைக்கப்பட்டார்.

★கம்பர் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் மிகவும் புலமை பெற்ற மாபெரும் கவிஞன். கம்பனின் வறுமை நிலையில் ஆதரவுக்கரம் நீட்டியவர் திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல். தனது புலமையை மெய்பித்து இரண்டாம் குலோத்துங்க சோழ மன்னரின் அவைத் தலைவராக உயர்வு பெற்றார். குலோத்துங்க சோழ அரசன் கம்பரிடம் ராமாயணத்தை தமிழில் மொழி பெயர்த்து அரங்கேற்றம் செய்யுமாறு ஆணையிட்டார். 

★கம்பர் வால்மீகி எழுதிய ராமாயணத்தை எப்படி தமிழில் தொடங்குவது என்ற குழப்பத்தில் இறைவனை நோக்கித் தியானித்திருந்த போது இறைவனே அவருக்கு அசீரரியாக "உலகம் யாவையும்" என்று முதலடி எடுத்துக் கொடுத்து பாடச் சொன்னார். அதை வைத்துக் கொண்டு வால்மீகி முனிவர் வடமொழியில் எழுதிய ராமாயண காவியத்தை  தமிழில்  இயற்றினார்.

"உலகம் யாவையுந் தாமுள வாக்கலும் நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா  அலகி லா விளை யாட்டுடையா ரவர்
அண்னவர்க்கே சரணாங்களே."

★விளக்கம்: உலகங்கள் எல்லாவற்றையும் தாமே இருக்கும்படியாக உருவாக்கியும் காலம் வரும்வரை அது நிலைத்து நிற்கும்படி காப்பாற்றியும் காலம் முடிந்ததும் அழித்தும் என்று எப்போதும் முடியாத திருவிளையாடலை மீண்டும் மீண்டும் அளவில்லாமல் விளையாடிக்கொண்டே இருக்கிறவர்தான் ஆண்டவர் அவரை நாங்கள் என்றுமே சரணடைகிறோம்.  

★முதல் பாடலை அடியெடுத்து
இறை வணக்கமாகப் பாடி ஆரம்பித்து கம்பர் ஶ்ரீராம காவியத்தை தமிழில் எழுதி முடித்தார். அதனை, தமிழ்ப் பண்பாட்டிற்கு ஏற்ப ஈடும் இணையும் இல்லாமல் கம்பர் தமிழில் தந்த காவியமே இராமாயணமாகும். 
 
★அடிப்படையில் அறமும், சமயமும் காப்பியத்தின் பொருளாக அமைகின்றன. மனிதர் யாவருக்கும் பயன் தரும் ஒழுக்க முறைகளையும் பண்பாட்டினையும் குறிக்கோளினையும் ஆட்சிச் சிறப்பினையும் விளக்கும் அருமையான இலக்கியமாகத் திகழும் சிறப்புடையது கம்பராமாயணமாகும்.
 
★கம்பராமாயணம் கதை ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கற்பு நெறி நின்று வாழ வேண்டும் என்ற ஓர் சிறந்த உண்மையை  ஏகபத்தினி விரதனாம் - இராமன் மூலம் தெரிவிக்கின்றது. பிறன் மனைவியை விரும்பினால் அவனும் அவனைச் சார்ந்த சுற்றமும் குலமும் அழிந்துவிடும் என்பதை இந்நூல் விளக்குகின்றது. பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப என்னும் நீதி (கிளை = சுற்றம்) இந்நூல் மூலம் உணர்த்தப்படுகிறது.

★இந்நூலின்  நாயகனாக விளங்கும் ஶ்ரீ ராமன், தெய்வநிலையில் இருந்து இறங்கி மானுட நிலையில் மனிதனாக வாழ்ந்து காட்டிய தன்மைகளையும், அதன் சிறப்புகளையும் விளக்கும் ஓர் ஒப்பற்ற காவியமாகும். இந்நூலில் கம்பர் அழுத்தமாக வலியுறுத்தும் நீதியும் அறனும் மக்கட் சமுதாயம் அனைத்திற்கும் எப்போதும் பொதுவானவை ஆகும்.

★வால்மீகி முனிவரின் ராமாயணத்தை தமிழில் எழுதிய கம்பர் இதனை வடமொழியில் ஸ்ரீராமர் கதையை வகுத்து வான்புகழ் கொண்ட முனிசிரேஷ்டர் வால்மீகியின் நூலை நான் தமிழ்ப் பாவினால் பாடி இருக்கின்றேன் என்று தனது பாடலின் வழியே நமக்கு  கூறுகின்றார். தாம் இயற்றிய இந்நூலிற்கு கம்பர் முதலில் ராமகாதை என்றே பெயரிட்டிருந்தார். பிற்காலத்தில் ராமாயணம் பலரால் தொகுக்கப்பட்டதால் கம்பரின் பெயரோடு இணைத்து கம்பராமாயணம் என்றே அழைக்கப்படுகிறது. 

★கம்பர் இந்த நூலை இயற்றிய பிறகு எண்ணற்ற ராமாயண நூல்கள் பலரால் படைக்கப்பட்டன. தமிழில் பலவித ராமாயண நூல்கள் தோன்றுவதற்கு கம்பரின் ராமாயணம் தூண்டுதலாக இருந்தது என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். தக்க ராமாயணம், குயில் ராமாயணம், ராமாயண அகவல், கோகிலராமாயணம் அமர்த ராமாயணம், மற்றும் ராமாயணக் கீர்த்திகள், பால ராமாயணம் என்று பல நூல்கள் பிற்காலத்தில் தோன்றின.

நாளை......................
ஶ்ரீராம காவியம்
~~~~
007 / 02/04/2021
 
கம்பர்...2
 
★கம்பர் தனது ராமகாதையை தொல்காப்பிய நெறிப்படி வல்லினம் மெல்லினம் இடையினம் என்று காட்சிக்கு ஏற்ப தனித்தனியாக பிரித்து சந்தத்தோடு பாடல்களில் தமிழை பயன்படுத்திய பெருமைக்கு உரியவர் ஆவார். உதாரணமாக அரக்கி ஒருத்தி நடந்து வரும் காட்சியில் வல்லின எழுத்துக்களில் ஆரம்பித்து சந்தத்தோடு எழுதியிருப்பார். அழகான பெண் நடந்து வரும் காட்சியில் மெல்லின எழுத்துக்களில் ஆரம்பித்து சந்தத்தோடு எழுதியிருப்பார். குதிரை வரும் காட்சிகளில் குதிரையின் காலடி சத்தம் வருவது போல வார்த்தைகள் வைத்து சந்தத்தோடு எழுதியிருப்பார். அதனை படிக்கும் போது குதிரை சத்தம் ரிதத்துடன் வருவது போலவே இருக்கும். 
 
★கம்பரின் காவியத்தை படித்த 14 மொழிகளில் அறிஞரான மகாகவி பாரதியார் தான் கண்ட கவிஞர்களில் கம்பரைப் போல் வள்ளுவரைப்போல் இளங்கோவைப்போல் வேறு யாரையும் கண்டதில்லை என்று இந்த மூன்று தலைசிறந்த கவிஞர்களில் கம்பரை முதலாவதாகக் குறிப்பிட்டு கூறுகிறார்.
 
★கம்பர் ஒரு ஶ்ரீ நரசிம்ம உபாசகர்.  ஶ்ரீ நரசிங்க பெருமாளின் தீவிர பக்தர். தான் எழுதிய ஶ்ரீராமகாவியம் நூலை ஸ்ரீரங்கம் கோவிலில் நரசிம்மர் சன்னதி எதிரில் அரங்கேற்ற நினைத்தார். ஸ்ரீரங்கம் கோவிலின் வேத பண்டிதர்கள் மற்றுமுள்ள புலவர்களிடம் தன்னுடைய  வேண்டுதலை முன்வைத்தார். அதற்கு அவர்கள் தில்லை சன்னதியில் இருக்கும் மூவாயிரம் தீட்சிதர்களிடம் அனுமதி பெற்று சான்று ஓலையை வாங்கி வந்தால் இங்கு நீங்கள் அரங்கேற்ற அனுமதிக்கிறோம் என்றார்கள். 
 
★தில்லை சென்ற கம்பர். அங்கிருந்த தீட்சிதர்களிடம் ஸ்ரீரங்கம் கோவிலைச் சேர்ந்தவர்கள்  குறிப்பிட்ட வேண்டுகோளைக் கூறி தாம் இயற்றிய ராமகாவியத்தைச் சரிபார்த்து சான்று தர வேண்டும் என்று கேட்டார். அவர்களோ நாங்கள் மூவாயிரம் தீட்சிதர்களும் ஒன்றாகக் கூடுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. பலர் பல இடங்களில் இருப்பார்கள்.   ஒருவர் குறைந்தாலும் ஓலையில் முத்திரை பதிக்கப்படாது. ஆகவே வீண் முயற்சி செய்யாதீர்கள். உமது ஊருக்கே சென்றுவிடுங்கள் என்றனர். 
 
★கம்பர் மீண்டும் ஸ்ரீரங்கம் திரும்பினார். தன்னுடைய ராமகாதையை அரங்கேற்ற முடியவில்லையே என்று வருத்தப்பட்டு பாடல்கள் சில அந்தாதிகளாக எழுதினார்.
ஒருநாள் இரவு நித்திரையில் கம்பனின் கனவில் கடவுள்  தோன்றி உடனே தில்லை செல்க என்றார். விழித்த கம்பர் உடனே தில்லை விரைந்து சென்றார். அங்கு மூவாயிரம் தீட்சிதர்களும் ஓர் இடத்தில் ஒன்று கூடி இருப்பதை கண்டார் கம்பர். ஆச்சரியத்துடன் அருகில் சென்ற போது ஒரு தீட்சிதரின் மகன் பாம்பு தீண்டி உடனே இறந்ததால் துக்கம் விசாரிக்க அனைவரும் ஒன்று சேர்ந்து இருக்கின்றனர் என்றும் தெரிந்து கொண்டார். 
 
★இறைவனின் அற்புதத் திருவிளையாடலை எண்ணி மகிழ்ந்து தாம் எழுதிய ஶ்ரீராமகாதையின் ஓலைக் கட்டிலிருந்து நாகபடலம் பாடல்களின் ஒரு ஓலைச் சுவடியை எடுத்து இறந்து கிடந்த அச்சிறுவனின் நெஞ்சில் வைத்து அப்படியே அப்பாடலை இறைவனை நினைத்துக் கொண்டு பாடினார். உடனே அச்சிறுவன் உயிர் பெற்று எழுந்தான். கூடியிருந்த தில்லை அந்தணர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டனர். இவர் பாடலின் ஆற்றலைக் கண்ட அனைவரும் ஒரே முகமாக ஒப்புக்கொண்டு அரங்கேற்றத்திற்கான ஒப்புதல் ஓலை அளித்தனர். 
 
★அதை வாங்கிக் கொண்டு ஸ்ரீரங்கம் திரும்பிய கம்பர் ஸ்ரீரங்கம் கோவில் தாயார் சன்னிதிக்கு எதிரிலுள்ள மண்டபத்தில் வீற்றிருக்கும் தனது இஷ்ட தெய்வமான ஶ்ரீநரசிம்மர் பெருமாள் முன்பு தனது ராமகாவியத்தை அரங்கேற்ற முடிவு செய்தார்.
 
★ஶ்ரீ ராமகாதையைக் கேட்ட ஸ்ரீரங்கத்துப் புலவர்கள் வால்மீகி எழுதிய நூலான  ராமாயணத்தில் ஹிரண்ய வதைப் படலம் இல்லை ஆனால் நீங்கள் எழுதி இருக்கின்றீர்கள். ஆகவே இது ராமாயணத்தோடு சேராது என்பதால் இங்கே அரங்கேற்றம் செய்ய முடியாது என்று சொல்லி விட்டார்கள். அதற்கு கம்பர் தமக்கு இறைவனே அடி எடுத்து கொடுத்து எழுத வைத்திருப்பதால் அதைத் தன்னால் மாற்ற இயலாது என்றும் உங்களுடைய சந்தேகத்திற்கு இறைவன் தான் பதில் சொல்லி அருள  வேண்டும் என்றும் கூறினார். 
 
★அதற்கு அவர்கள் அப்படி என்றால் ஹிரண்ய வதைப் படலத்தை மட்டும் முதலில் அரங்கேற்றுங்கள் இறைவன் அடியெடுத்துக் கொடுத்தது உண்மையாக இருந்தால் இறைவனே வந்து சாட்சி சொல்லட்டும் அதன்பிறகு நாங்கள் முழு ராமகாதையை ஏற்றுக் கொள்கிறோம் என்று கூறினார்கள். உடனே கம்பர் ஸ்ரீநரசிம்ம பெருமானை மனதில் வைத்து வேண்டிக் கொண்டு ஹிரண்ய வதைப் படலத்தை ஆரங்கேற்றம் செய்ய ஆரம்பித்தார். 
 
★பாடலின் நடுவே அசுரன் ஹிரண்யன் "ஆரடா சிரித்தார்" என்ற கேட்பது போலக் காட்சி வரும் போது மண்டபத்தின் தூணில் இருந்த நரசிம்மர் கடகடவென பெரிய சிரிப்பொலியுடன் கர்ஜனை செய்து கம்பரின் கூற்று உண்மை என கூறி ஆமோதித்து தன்னுடைய தலையையாட்டினார். இந்த அதிசயத்தை பயத்தோடு கண்ட புலவர்கள் யாவரும் கம்பரின் ராமகாதையை ஏற்றுக்கொண்டனர். அங்கு சிரித்த ஶ்ரீ நரசிம்மரை மேட்டழகிய சிங்கர் என்பதாக கூறுவார்கள். இவர் தாயார் சன்னிதி அருகில் தனி சன்னிதியில் இப்போதும் இருக்கிறார். இவரது கையில் சங்கு மட்டும் இருக்கிறது சக்கரம் இல்லை. இன்றும் ராமாயணம் அரங்கேற்றப் பட்ட இடமான இம்மண்டப மேடையைக் காணலாம்.
 
★வால்மீகி ராமாயணம் கம்பராமாயணத்தின் மூலமாக இருந்தாலும் கம்பர் அவற்றை வரிக்குவரி மொழி பெயர்ப்பு செய்யவில்லை. அந்நூலில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும் அப்படியே இருந்தாலும் முழுமையாக வால்மீகி ராமாயணம் போல் கம்ப ராமாயணம் இயற்றவில்லை. வால்மீகி ராமாயணத்தில் இல்லாத ராமரின் உணவு பழக்கமும் ராவணனின் திறமையும் ராவணன் சீதையைத் தொடாமல் இருந்த நெறியையும் கம்பராமாயணத்தில் காணலாம். கம்பர் தனக்கே உரித்தான பாணியில் வால்மீகி ராமாயணத்தின் கருப்பொருள் சிதையாமல் தமிழ் மொழியில் இயற்றி உள்ளார். வடமொழி கலவாத தூய தமிழ்ச் சொற்களைத் தனது நூலில் கையாண்ட காரணத்தால்  கம்பர் தொல்காப்பிய நெறி நின்றவர் என்று அழியாத ஓர் புகழினைப் பெற்றார்.
 
★கம்பர் தம் ராமாயணத்தைப் பால காண்டம் முதல் யுத்த காண்டம் முடிய உள்ள ஆறு காண்டங்களில் நிறைவு செய்துள்ளார். யுத்த காண்டத்தின் நிறைவில் விடை கொடுத்த படலம் என்றொரு படலம் உள்ளது. அதில் சுக்ரீவன், அனுமன், விபீஷணன் மற்றும் வானரர் முதலியோர்க்கு பரிசுகள் கொடுத்து ராமர் விடை தந்து அனுப்பிய செய்தி கூறப்பட்டுள்ளது. அதன் பின்பு ராமர் பல்லாண்டு மனுநெறி தவறாமல் ஆட்சி செய்ததை விளக்கி ராமாயணத்தைக் கம்பர் நிறைவு செய்து விட்டார். 
ஏழாம் காண்டமாகிய உத்திர காண்டம் என்னும் பகுதியை கம்பரின் முக்கிய சீடராகிய ஒட்டக்கூத்தர்  இயற்றி உள்ளார். அவரைப் பற்றி அடுத்த பதிவில் காண்போம்.
 
★வால்மீகி ராமாயணத்தை விஞ்சும் சுவையுடைய காப்பியமாகக் கம்பர் எழுதிப்  படைத்துள்ளார் என்று அறிஞர்  வ.வே.சு. ஐயர் போற்றியுள்ளார்.  'கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும்' என்று வழங்கும் மொழிகள் அவரது சிறந்த  கவித்திறனைப் பறை சாற்றும். பாரதியார் தம் பாடலில் 'புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு' என்று போற்றியுள்ளார்.
 
★கதைப் பாத்திரங்களை மனிதப் பாங்கின் அடித் தளத்திலிருந்து பேச வைத்து, உணர்ச்சியை வெள்ளம் போலப் பெருகி ஓட விட்டுப் பாத்திரங்களைப் படைத்துக் காட்டுகின்ற தன்மையால் கம்பர் உலகப் பெருங்கவி அறிஞர்களுள் ஒருவராகத் திகழ்கின்றார். உலக மகாகவி, கவிச்சக்கரவர்த்தி என்றும் தமிழறிஞர்களால் சிறப்பிக்கப்படுகின்றார்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை...................
ஶ்ரீராம காவியம்
~~~~
008 / 03-04-2021
 
ஒட்டக்கூத்தர்...
 
★ஒட்டக்கூத்தர் என்னும் புகழ் மிக்க தமிழ்ப் புலவர் விக்கிரம சோழன் (ஆட்சி 1120-1136), இரண்டாம் குலோத்துங்கன் (ஆட்சி 1136-1150), இரண்டாம் இராசராச சோழன் (ஆட்சி 1150-1163) ஆகிய மூன்று சோழர்கள் காலத்திலேயும் வாழ்ந்தவர். இவர் நமது தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்திலே மலரி என்னும் ஊரில் (இன்றைய திருவரம்பூரில்) பிறந்தார். திருநாவுக்கரசர் பாடிய திருவெறும்பியூர் என்பதுவும் இவ்வூரே. இவருக்குப் பல பட்டங்கள் இருந்தன. அவற்றுள் கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சதன் என்பன குறிப்பிடத்தக்கன. “ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் ” என்பது வாய்மொழி வழக்கு.
 
★நளவெண்பா இயற்றிய புகழேந்திப் புலவர் இவர் காலத்தில் வாழ்ந்தவர்தான். கம்பரின் பிறந்த-நாளையும், மறைந்த நாளையும் நினைவு கூர்ந்து இவர் பாடியுள்ள இவரது பாடல்கள் கம்பர் இவரது காலத்துக்கு சற்று முந்தியவர் என்னும்  ஓர் வரலாற்று உண்மையை வெளிப்படுத்துகின்றன. அன்று போர் மறவர்களாக  வாழ்ந்த செங்குந்தர் குல மக்களைப் போற்றிப்பாடும் இவர் செங்குந்தர் குலத்தவர் எனக் கருதிக்கொள்ள இடம் தருகிறது. 
 
★காஞ்சிபுரத்தில் இருந்து கொண்டு அக்காலத்தில் ஆட்சி புரிந்துவந்த அரசன் காங்கேயன் என்பவன் இவரைப் பேணிய வள்ளல். குலோத்துங்கன் போரைச் சிறப்பித்துப் பாடிய இவரது பாடல்கள் தனிப்பாடல் திரட்டில் உள்ளன. இவரும் புகழேந்திப் புலவரும் போட்டிப் போட்டுக்கொண்டு பாடிய பாடல்கள் மிக்க சுவை மிகுந்தவை.
 
★ஒட்டக்கூத்தர் இயற்றிய குலோத்துங்கசோழன் பிள்ளைத்தமிழ் என்ற சைவச்சிற்றிலக்கிய நூலே தமிழில் தோன்றிய முதல் பிள்ளைத்தமிழ் நூலாகும். இவரது காலத்துக்குச் சுமார் 500 ஆண்டுகள் முன்னர் பெரியாழ்வார் பாடிய பிள்ளைத்தமிழ்ப் பாடல்கள் தனி நூலாக இல்லை.
 
★பூந்தோட்டம் என்ற ஊரில் சரஸ்வதி கோயில் ஒன்று  ஒட்டக்கூத்தர் கட்டியதாகவும், அதனால் பூந்தோட்டம் அவரது பெயராலேயே கூத்தனூர் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. கூத்தர் என்பதுதான் இவரது பெயர் என்றாலும் இவர் எப்போதும் 'ஓட்டம்'  (பந்தயம்) வைத்துப் பாடுவதில் வல்லவர் என்பதால் ஒட்டக்கூத்தர் என்று வழங்கப்பட்டார்.
 
★ஒட்டக்கூத்தர்  கம்பரின் 
முக்கிய சீடர்களில் ஒருவர். 
கம்பர் ஶ்ரீராமாயண கதையை எழுதியபின் அதன் பின்னர் தொடர்சியை எழுதி நிறைவு செய்தவர் ஒட்டக்கூத்தர்.
கம்பராமாயணம் பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் எனும் ஆறு காண்டங்களில் 123 படலங்களுடன் ஏறத்தாழ 22000 பாடல்களையும் உடையது. காண்டம் என்பது பெரும் பிரிவினையும் படலம் என்பது அதன் உட்பிரிவினை குறிக்கும். ராமாயண ஏழாம் காண்டமாகிய உத்திர காண்டம் என்னும் பகுதியை கம்பரின் அபிமான சீடராகிய ஒட்டக்கூத்தர் வெகுசிறப்பாக இயற்றியுள்ளார்.
 
★கம்பர் ராமாயணத்தை நிறைவு செய்தபின் வரும் நிகழ்வுகளாக சீதையைக் குறித்து சந்தேகமாகப் பேசிய ஒரு குடிமகனின் மனதில் ஏற்பட்ட  ஆதங்கத்தைத் தீர்க்க வேண்டிய அரச தர்மத்தினால் ஐந்து மாத கர்ப்பிணியான சீதையை ராமன் தனது தம்பி லக்ஷ்மனனைக் கொண்டு சென்று காட்டில் விட்டுவிட்டு வரும்படி கூறுவது, காட்டில் சீதைக்கு மகரிஷி வால்மீகி ஆசிரமத்தில் லவன் மற்றும் குசன் எனும் இரட்டைக் குழந்தைகள் பிறப்பது பற்றி தனது உத்தர காண்டத்தில் குறிப்பிடுகிறார்.
 
★மேலும் அவர் ராமர் செய்த அசுவமேத யாகத்தில் உபயோகிக்க வேண்டிய குதிரைகளை லவ-குசர்கள் பிடித்துக் கட்டி வைத்தது, சத்துருக்கனன், பரதன் மற்றும் லக்ஷ்மணராலும் வெல்ல முடியாத லவ-குசர்களை ராமரே நேரில் வந்து பார்த்து போரிடுவது, பின்னர் தம்மக்கள் அவர்கள் என்பதைத் தெரிந்து கொண்டு லவ-குசர்களை அயோத்திக்கு அழைத்து செல்வது, அன்னை சீதை பூமாதேவியை வேண்டிக் கொள்ள பூமி பிளந்து பூமாதேவியுடன் அவள் சேர்வது போன்ற உருக்கமான செய்திகளை தான் எழுதிய உத்தர காண்டம் மூலம் வெகு சிறப்பாக ஒட்டக்கூத்தர் விளக்கிக் கொடுத்துள்ளார்.
 
நாளை...................
ஶ்ரீராம காவியம்
~~~~
009 / 04-04-2021
 
புலவர் அருணாசல
கவிராயர்...1
 
★ஸ்ரீமத் ராமாயணத்தை ஆதிகவி மகரிஷி வால்மீகி வடமொழியில் எழுதினார். கவி கம்பர் கவிநயம் சொட்ட தமிழில் இயற்றி அதை ஸ்ரீரங்கப்பெருமாள் முன்பாகவே அரங்கேற்றம் செய்தார். துளசிதாசர் இந்தி மொழியில் ராமாயணத்தை எழுதினார். குலசேகர ஆழ்வார் போன்றவர்களும் பக்திச் சுவை ததும்ப ராமனைப் பாடி இன்பம் எய்தினார்கள். ஒவ்வொருவர் பக்தி ஒவ்வொரு விதம். இசையால் இறைவனை அடைந்துவிடலாம். இசை மூலம் பரந்தாமனைப் பணிந்தவர்கள் பலர். சுவையான தமிழில் ராமபிரானைப் பாடி அவர் அருளைப் பெற்றவர்களுள் அருணாசலக் கவிராயரும் ஒருவர். 
 
★அருணாசலக் கவிராயர் (1711-1779) என்பவர் சீர்காழியிலே வாழ்ந்து கருநாடக இசையில் பல இசைப்பாட்டுக்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பிய இசை முன்னோடி. இவர் கருநாடக இசையில் மும்மூர்த்திகள் என்று போற்றப்படும் தியாகராச சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகிய மூவருக்கும் முன்னிருந்த ஆதி மும்மூர்த்திகளில் ஒருவர். இவர் இயற்றிய பாடல்கள் தமிழில் உள்ளன. கருநாடக ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் அருணாசலக் கவிராயர் (1712-1779), மாரிமுத்துப் பிள்ளை (1717-1787), முத்துத் தாண்டவர் (1525-1625) ஆகியோர்.
 
★அருணாசலக் கவிராயர் கி.பி.1711 இல் சிவபக்தர்
ஞானசம்பந்தருக்கு அம்பிகை ஞானப்பால் அருளிய சீர்காழியின் அருகிலுள்ள 
தில்லையாடி என்னும் ஊரில் கார்காத்த வேளாளர் குலத்தில் நல்லத் தம்பி - வள்ளியம்மை ஆகியோரின் நான்காவது புதல்வராகப் பிறந்தார்.  சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து விட்டதால் சகோதரனின் ஆதரவில் வளர்ந்தார். மிக ஏழ்மையான குடும்பம். அருணாசலத்திற்கு இசையில் ஆர்வம் அதிகமாக இருந்தது; நல்ல குரல் வளமும் இருந்தது.ஆனாலும் தமையனின் வார்த்தைக்குப் பணிந்து, அந்த ஊரிலிருந்த அம்பலவாணக் கவிராயரிடம் சைவத் திருமுறைகளையும், வடமொழியையும், தமிழ் சாத்திரங்களையும் கற்று வந்தார். இசையில் ஆர்வம் அதிகம் இருந்ததால் எல்லாவற்றையும் பாடலாக மாற்றிப் பாடுவதில் மிகவும் விருப்பம் கொண்டிருந்தார். 
 
★நீராடுவதற்கு நதிக்குச் சென்றால், தனிமையில் இருந்து தன் இனிமையான குரலில் பாடி மகிழ்வார். நேரம் போவது தெரியாமல் பாடிக் கொண்டிருப்பார்.இளமையில் கவிபாடும் புலமையும் பாடல்களை இசையுடன் பாடும் ஆற்றலும் கைவரப் பெற்றவர். மேலும் நூற்பயன்களை இசையுடன் சொற்பொழிவாற்றும் திறமையும் இவருக்கு இருந்தது. அருணாசலக் கவிராயரின் பல்புலமைத் திறன்களைத் தருமபுர ஆதீனத் தலைவர் பெரிதும் மதித்தார். எனவே அவர் கவிராயரைச் சீர்காழிக்கு அழைத்து, குடும்பத்தோடு தங்குவதற்கு வசதி செய்து கொடுத்தார்.
 
 ★அருணாசலத்தின் இறை பக்தியையும் இனிய குரலையும் கண்ட தருமபுரம் ஆதீனம், அவரை துறவு கொள்ளச் செய்து இறைப் பணியில் ஈடுபடுத்த விழைந்தார். ஆனால் அருணாசலத்தின் தமையன் அதற்கு சம்மதிக்கவில்லை. அருணாசலம் கம்ப ராமாயணத்தை மிகுந்த ஆர்வமாகப் படித்தார். எப்போதும் ராம சிந்தனை உடனேயே இருந்தார். ராமனை இசையால் பாடி இன்புற வேண்டும் என்று மனம் துடித்தது. 
 
★இயல், இசை, நாடக நூல்களை 12 ஆண்டுகள் முழுமூச்சாகக் கற்றார் அருணாசலம். அவர் வாலிப வயதை அடைந்தவுடன், அவருடைய தமையன் தனக்குத் தெரிந்த சீலமுள்ள குடும்பத்துப் பெண்ணை திருமணம் செய்து வைத்தார். அருணாசலத்திற்கு கடை ஒன்றை வைத்துக் கொடுத்தார் பெண்ணின் தந்தை. பகல் வேளைகளில் வியாபாரத்தை கவனிப்பார். இரவில் புராண பிரவசனம் செய்வார். அருணாசலத்தின் பிரவசனத்தைக் கேட்க மக்கள் திரளாகக் கூடினர். 
 
★ஒருநாள் இரவு கவிராயர் அருணாசலம் கனவில் ஒரு தெய்வீகக் காட்சியைக் கண்டார். கோதண்டத்தை ஏந்திய ராமபிரானும் லட்சுமணனும் தரிசனம் தந்து, காவியமான ராமாயணத்தை கர்நாடக இசையில் பாடு என்று கூறி அருளினார்கள். அருணாசலத்திற்கு மேனி சிலிர்த்தது. கண்களில் நீர் வழிந்தது. அடுத்த வினாடியே அவருடைய மனதில் இசை பிரவாகமாகப் பொங்கிற்று. "யாரோ இவர் யாரோ என்ன பேரோ அறியேனே" என்ற பாடல் இசை வடிவில் வந்தது. ஸ்ரீராமன் மிதிலா நகருக்குள் வரும்போது,கன்னி மாடத்தில் இருந்த சீதாதேவி தன் தோழிகளிடம் கேட்பதாக அமைந்தது இந்தப் பாடல். தன் மனதிற்குள் சுந்தர ரூபமான ஸ்ரீராமனை அனுபவித்துப் பாடிய பாடல்.
 
★அருணாசலம் குறிப்பு எதுவும் எடுப்பதில்லை. ஸ்ரீராமரை தியானித்து மேடையில் வந்து அமர்ந்தவுடன், அவரிடமிருந்து அருவியாகப் பாடல்கள் அமுதம் போன்று கொட்டும். அருணாசலத்தின் முகத்தில் ஒரு தெய்வீக ஒளி பிரகாசிக்கும். நெற்றியில் திருநீறு, தூய வெள்ளை ஆடை, கழுத்தில் துளசிமாலை. தியாகராஜ சுவாமிகள் ராமனை எப்படி அனுபவித்தாரோ அப்படியே அருணாசலமும் அனுபவித்து பாடினார். நாளுக்கு நாள் அருணாசலத்தின் புகழ் கூடியது.
 
★ சீர்காழிக்கு அருகிலுள்ள சட்டநாதபுரத்திலிருந்து கோதண்டராமன்  மற்றும்  வேங்கடராமன் என்ற இரு  இளைஞர்கள் தவறாமல் கவிராயர் அருணாசலத்தின் பிரவசனத்தைக் கேட்க வருவர். அருணாசலத்தின் இசையிலும், புராணம் சொல்லும் அழகிலும் தங்கள் மனதைப் பறிகொடுத்தார்கள். அவர்கள் அருணாசலத்தை நமஸ்கரித்து, ஐயா, உங்கள் இசையில் நாங்கள் மிகவும் கட்டுண்டோம். நீங்கள் எங்களுக்கு ராமாயணப் பாடல்களைக் கற்றுத் தரவேண்டும். உங்கள் பாடல்களின் நகல் வேண்டும் என்று பணிவோடு வேண்டிக் கேட்டார்கள். அருணாசலம் மகிழ்ந்து அவர்களுக்கு இசையுடன் ராமாயணப் பாடல்களைக் கற்றுக் கொடுத்தார். ராமகதையை தானும் அனுபவித்து வந்த அவர்களையும் மனதார அனுபவிக்கும்படி செய்தார். பிறந்தது முதல் சீர்காழியை விட்டு எங்குமே செல்லாத போதிலும், அயோத்தியையும், சரயு நதியையும், மற்றும் தண்டகாரண்யத்தையும், கோதாவரி நதியையும் அப்படியே கண்முன்னே கொண்டு நிறுத்தி விடுவார். 
 
நாளை.......................
ஶ்ரீராம காவியம்
~~~~
010 / 05-04-2021
 
புலவர் அருணாசலக்
கவிராயர்...2
 
★ஒருநாள் ராமாயண பிரவசனம் சொல்லும்போது, ராமர் காட்டுக்குப் போகும் கட்டத்தில் கைகேயி மிகவும் கோபித்துக் கொண்டு மந்தரையிடம் பாடிய, "ராமனுக்கே மன்னன் முடிசூட்டினால்" என்ற ஓர் பாடலைத் திரும்பத் திரும்ப பாடி மெய்சிலிர்த்துப் போனாராம். லட்சுமணன் பொங்கி எழும்போது, நானே ராமனுக்கு முடி சூட்டுவேன் என்று ஆவேசமாகப் பாடிய போது, சபையில் உள்ள அனைவரும் வெலவெலத்துப் போனார்களாம். ஏனென்றால் லட்சுமணனின் சீற்றமும் வில்லின் நாண் ஒலியும் அவரது பாடலில் அருமையாக வெளிப்பட்டதாம். 
 
★ஸ்ரீராமபிரானைப் பற்றி ராமநாடக கீர்த்தனைகளை நாற்பது ராகங்களில் அவர் பாடினார். தவிர தனிப்பட்ட பாடல்களும் பாடினார். அத்தனை பாடல்களும் மனதை உருக்கும்படியாக அமைந்தன. "சரணம், சரணம் ரகுராமா, நீ என்னை தற்காத்து அருள் பரந்தாமா" போன்ற பாடல்களை பக்தி ததும்ப அவர்  பாடியுள்ளார். ராமாயணம் முழுவதையும் பாடலாகப் பாடினார். இவர் இயற்றிய  ஓர் பாடலான "ஸ்ரீராமச்சந்திரனுக்கு ஜெயமங்களம், திவ்யமுக சந்திரனுக்கு சுபமங்களம்" என்ற பாடல் எல்லாரையும் மிகவும் கவர்ந்தது. பல வித்வான்கள் கச்சேரிகளில் இவரது பாடல்களைப் பாடினார்கள். 
 
★அருணாசலக் கவிராயர் 258 இசைப்பாடல்களில் இராமாயணக் கதையை நாடகவடிவில் வடிவமைத்தார். கீர்த்தனைகளால் தமிழில் முதன்முதலில் இசைநாடகம் படைத்தார். ஒரு கதையைச் சுவையாக மக்களுக்குச் சொல்வதற்குக் கீர்த்தனைகள் ஏற்றன என்பதை நிறுவிக் காண்பித்தார். அருணாசலக் கவிராயரது 'இராமநாடகக் கீர்த்தனை' திருவரங்கம் அரரங்கநாதர் கோயிலில் அரங்கேறியது.
 
★அருணாசல கவிராயர் ராமாயணம் சராசரி மனிதருக்கும் புரிய வேண்டும் என்று ராமகாவியத்தை தெருக்கூத்து நாடகம் போல் இயற்றினார். தான் எழுதிய ராம நாடகத்தை ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றம் செய்ய அங்கு உள்ள புலவர்களிடம் அனுமதி கேட்டார். எப்போதுமே நம்  கவிஞர்களுக்கு சோதனை உண்டு. கம்ப ராமாயணத்தை கம்பர் அரங்கேற்றும்போது அதிக எதிர்ப்பு தெரிவித்தனர். ரங்கநாத பெருமாள் உத்தரவு கொடுத்தால்தான் ராமாயண அரங்கேற்றம் நடக்கும் என்று கண்டிப்பாகச் சொன்னார்கள்.
 
★அவர்கள் இக்கோவில் ரங்கநாதர் கோவில் ஆகும். ஆகையால் நீங்கள் ஶ்ரீரங்கம் ரங்கநாதரை பற்றி பாடினால் அனுமதி தருகிறோம் என்று கூறுகினார்கள். கவிராயர்
அருணாசலம் ராமனிடமே தஞ்சம் ஆனார். ஸ்ரீராமனை நினைத்து கசிந்து உருகி,  ஏன் பள்ளி கொண்டீரய்யா ஸ்ரீரங்கநாதனே என்று மோகன ராகத்தில் மனம் உருக உருக பாடி முடித்தார். அந்தப் பாடலில், பிரம்மரிஷி விச்வாமித்திரர் பின் நடந்த வருத்தமோ என ஆரம்பித்து, ராவணனின் வதம் முடிய ராமாயணத்தில் உள்ள அத்தனை சம்பவங்களையும் பாடி முடித்தார். 
 
★ஶ்ரீரங்கம் கோவில் புலவர் சொன்ன நிபந்தனைக்கு நம் அருணாசல கவிராயரும் ஒத்துக் கொண்டு பாட ஆரம்பித்தார்.  எப்படித் தெரியுமா?  படியுங்கள்.
ஏன் பள்ளி கொண்டீரய்யா என்று ரங்கநாதர் பள்ளி கொண்டு இருப்பதை பாடலின் முதல் வார்தையாக ஆரம்பித்து பின்பு ராமரைப் பற்றியே பாடுகிறார். 
"ஏன் பள்ளி கொண்டீரய்யு
ஶ்ரீரங்கநாதா!  ஏன் பள்ளி கொண்டீரய்யா|
 
●விஸ்வாமித்திரர் தங்களை காட்டுக்கு அழைத்துச் சென்றாரே அங்கு பட்ட கஷ்டங்களை நினைத்து படுத்துக் கொண்டு இருக்கிறீரா? 
 
●பெண்ணாக இருக்கும் தாடகை என்னும் அரக்கியை அம்பு விட்டு கொன்று விட்டோமே என்று வருத்தப்பட்டு படுத்துக் கொண்டு இருக்கின்றீரா? 
 
●ஜனகர் கொடுத்த சிவதனுசை முறித்து விட்டோமே என்ற வருத்தத்தில் படுத்துக் கொண்டு இருக்கின்றீர்களா? 
 
●பரசுராமர் வில்லோடு வந்த போது அதனை உடைத்தீர்களே அதனை நினைத்து படுத்துக் கொண்டிருக்கின்றீர்களா? 
 
●சீதையுடன் காட்டில் நடந்து சென்றீர்களே அந்தக் களைப்பில் படுத்துக் கொண்டு உள்ளீரா? 
 
●கங்கையில் குகனுடன் ஓடத்தில் சென்றீர்களே அந்த உடல் அசதியில் படுத்துக் கொண்டு இருக்கின்றீர்களா? "
 
என்று முதல் இரண்டு அடியை மட்டும் ரங்கராதரை பற்றி பாடி மீதி அனைத்தும் ராமரைப் பற்றியே பாடித் தனது ராம நாடகத்தை அங்கு அரங்கேற்றம் செய்தார் அருணாசல கவிராயர்.
 
★இறைவன்  கவிராயர் அருணாசலத்தின் மனமார்ந்த பக்தியோடு கூடிய இசையை கேட்டு அருள்புரிந்தார். வைணவ ஆச்சார்யர்களின் கனவில் திருமாலே வந்து அரங்கேற்ற நாளை சொல்லி மறைந்தார். கம்பர்  தனது ராமகாவியம் அரங்கேற்றிய அதே பங்குனித் திருநாளில் அருணாசலக் கவிராயரின் ராம நாடக கீர்த்தனைகளும் அங்கேயே மிகச் சிறப்பாக அரங்கேறியது.
 
★மக்கள் இராம நாடகக் கீர்த்தனைகளைக் கேட்டு மகிழ்ந்தனர். அருணாசலக் கவிராயருக்கு "இராமாயணக் கவிஞன்" என்று பட்டம் வழங்கிப் பாராட்டினர். "இராம நாடகக் கீர்த்தனை" என்னும் நூல் பின்னர் "இராம நாடகம்" என்றும், "சங்கீத இராமாயணம்" என்றும் அழைக்கப்பட்டது.
 
★சீர்காழியில் வாழ்ந்ததால் 
சீர்காழி அருணாசலக் கவிராயர் என்று அழைக்கப் பெற்றார்.மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தது மட்டுமல்ல  பல நூல்களையும் இயற்றினார். இவர் படைத்த  படைப்புகளில் இராம நாடகக் கீர்த்தனை என்ற நூல் இவருக்கு அழியாப் புகழைக் கொடுத்தது. கி.பி. 1779 இல் தமது 67வது வயதில் மறைந்தார்.
 
★அசோமுகி நாடகம்,
சீர்காழித் தலபுராணம்,
சீர்காழிக் கோவை,
சீர்காழிக் கலம்பகம்,
சீர்காழி அந்தாதி,
தியாகராசர் வண்ணம்
சம்பந்தர்பிள்ளைத் தமிழ்,
அநுமார் பிள்ளைத் தமிழ் மற்றும் இராம நாடகக் கீர்த்தனை ஆகியவை நமது கவிராயரது படைப்புகள் ஆகும்.  இவற்றுள் இசைப் பாடல்களால் இனிய இராகங்களில் ஓர் இசை நாடக நூலாக, "இராம நாடகக் கீர்த்தனை" விளங்குகிறது.
 
★"கைவல்ய நவநீதம் "- 
என்ற நூல்  தாண்டவராய சுவாமிகள் இயற்றியது. இதற்கு முதலில் உரை எழுதியுள்ளார். இவ்வுரையே மிகச் சிறந்தது என்பதாக ஞானத்தேடலில் உள்ள  பயிற்சியாளர்களுக்கு மிகவும் அத்தியாவசியமானது என பலரும் கூறுகின்றர்.
 
★"இராம நாடகக் கீர்த்தனை" என்ற நூல் பல பதிப்புகளில் வெளிவந்தது. தோடி,பைரவி, மோகனம், ஆனந்தபைரவி, சங்கராபரணம் ஆகிய பழமையான இராகங்களில் அமைந்த கீர்த்தனைகள் மிகவும்  பிரபலமாயின. மங்களகைசிகம், சைந்தவி, துவிஜாவந்தி ஆகிய அபூர்வ இராகங்களிலும்  இவரின் இராமநாடகக் கீர்த்தனைகள் பாடப்பெற்றன. இக்கால இசைக் கச்சேரிகளிலும் நாட்டியக் கச்சேரிகளிலும் ஒரு சில இடங்களில்  "ஶ்ரீ இராம நாடகக் கீர்த்தனைகள்" பாடப்பெறுகின்றன.
 
★புதுவையில் துபாஷாக இருந்த அனந்தரங்கம் பிள்ளை, கவிராயரை வரவேற்று சிறப்புக்கள் செய்தார். மணலிமுத்துக் கிருஷ்ண பிள்ளை என்பவர் கவிராயரின் பாடல்களைப் பிரபலம் செய்தார். ஶ்ரீராம நாடக கீர்த்தனைகள் நமது நாடெல்லாம் ஒலிக்க வேண்டிய நாத காவியம் என்று பாராட்டினார். புலவர்  அருணாசலக் கவிராயரின் பாடல்கள் இன்றும் சங்கீத வித்வான்களால் அங்கங்கே  பாடப்படுகிறது. நாமும் கவிராயரது பாடல்களைப் பாடி, ஸ்ரீராமனின் அருளைப் பெறுவோம்.
 
★முத்தாய்ப்பாக  காஞ்சி பெரியவர் சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் ராமாயணம் படித்தால் மனம் பக்குவப்பட்டு நமது உடன் பிறந்தோர்களிடம் வேற்றுமை மறைந்து ஒற்றுமை நன்கு  அதிகரிக்கும் அதனால் உடன் பிறந்தவர்களிடம் விட்டுக் கொடுக்கும் தன்மை அதிகரித்து குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்று சொல்லியிருக்கின்றார். முப்பதே வினாடிகளில் இந்த  ராமாயணத்தை முழுவதுமாக சொல்லி முடிக்கிற மாதிரி அழகான ஒன்பதே வரிகளில் அருளியிருக்கிறார் மஹா பெரியவர்.
 
★"ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனு சாக்ரிஹத 
சீதா ஹஸ்தகரம்
அங்குல்யா பரண சோபிதம்
சூடாமணி தர்சனகரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர சைன்ய சேவிதம்
சர்வமங்கள கார்யானுகூலம்
சததம் ஸ்ரீ ராமச்சந்திர பாலயமாம்"
 
★அனைவரும் ராமாயணம் படித்து ராம காவியத்தை அறிந்து ஆனந்தத்துடன் இருப்போம். "ஶ்ரீராம் ஜெயம்"
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை......................
ஶ்ரீராம காவியம்
~~~~
011 / 06-04-2021
 
ராமன் எத்தனை 
ராமனடி...
 
 ★இராமகாதை தொடர்பாக இந்தியாவிலும் கடல்கடந்த நாடுகளிலும் வழங்கி வரும் இராமாயணங்கள். இராமனும் சீதையும் உடன் பிறந்தோர் என்றும் சீதை இராவணனின் மகள் என்றும் தீயவள் கூனி மந்தரையாகி வந்தவள் சரஸ்வதி என்றும் அனுமன் இராமனின் மகன் என்றும் எத்தனை எத்தனை விசித்ர கோலங்களைப் பூண்கின்றது இராமகாதை!
 
★ஒன்றா? இரண்டா? சுமார் முன்னூறு ராமாயணங்கள் இருக்கின்றன.. அதுவும் அன்னமேசி, பாலினேசி, பெங்காலி, கம்போடியன், சைனீஸ், குஜராத்தி, ஜாவனிஸ், கன்னடம், காஷ்மீரி, கோட்டனேசி, மலேசியன், மராத்தி, ஒரியா, பிராகிருதம், சமஸ்கிருதம், சாந்தலி, சிங்களம், தமிழ், தெலுங்கு, தாய், திபேத்தியன் என இத்தனை மொழிகளில்.
 
★முன்னூறு விதமாகப் பேசவும் படிக்கவும் எழுதப் பட்டு இருக்கிறது என்று ராமாயணங்களின் சுமாரான எண்ணிக்கையைப் பட்டியல் இட்டிருக்கிறார் காமில் பல்கே என்ற அறிஞர். அவற்றில் சில.
 
1. வால்மீகி இராமாயணம் வடமொழி
2. கம்ப இராமாயணம் - தமிழ்
3. ஒட்டர் கூத்தர் இராமாயணம் -தமிழ்
4. துளசி இராமாயணம் இந்தி
5. எழுத்தச்சர் இராமாயணம் மலையாளம்
6. மாதவ் கங்குனி இராமாயணம் அசாம்
7. பலராம்தாசு இராமாயணம் ஒரியா
8. வசிஷ்ட இராமாயணம் வடமொழி
9. அத்யாத்ம இராமாயணம் வடமொழி
10. அற்புத இராமாயணம்
11. ஆனந்த இராமாயணம்( வால்மீகி )
12. சமண இராமாயணம்
13. பௌத்த இராமாயணம்
14. அகத்தியர் இராமாயணம் வடமொழி
15. வியாசர் இராமாயணம் வடமொழி
16. குமார வால்மீகி புலவர் எழுதியுள்ள கன்னட இராமாயணம்
17. குணபத்திரரின் கன்னட இராமாயணம்
18. புசுண்டி இராமாயணம்
19. உத்தர இராமாயணம் சமணம்
20. துன் ஹவொங் என்னும் பெயருடைய திபேத்திய இராமாயணம்
21. மவுட்கலிய இராமாயணம்
22. தக்கை ராமாயணம்
23. குயில் ராமாயணம்
24. இராமாயண அகவல்
25. கோகில இராமாயணம்
26. அமர்த்த இராமாயணம், 
27. இராமாயணக் கீர்த்தைகள் 
27. பால இராமாயணம்
28. ராஜாஜியின் சக்ரவர்த்தி திருமகன்
29. ராவண காவியம்
30. மொள்ள ராமாயணம்
31. தாளையாக்கள் ராமாயணம்( கன்னடம் )
32. ராமகீயென் ராமாயணம் (தாய்லாந்து)
33. சடகந்த ராமாயணம்
34. சாந்தல ராமாயணம்
35. விமலசூரியின் ஜெயின் ராமாயணம்
36. ரங்கநாயகி ராமாயணம்
(ஆந்திரா தெலுங்கு)
37. பார்க்கவ ராமாயணம்
இன்னும் பலவுண்டு. காலம் அனுமதித்தால் அவைகளை தேடி பகிர்கிறேன்.
 
★பௌத்தர்களின் பௌத்த இராமாயண நூல்களின்படி (ஜாதகக் கதைகள், தசரத ஜாதகம்) இராமனின் தந்தையான தசரதனின் தலைநகர் வாரணாசியாகும் (காசி). இராமனும் சீதையும் உடன்பிறந்தவர்கள் ஆவர். அவர்கள் வனவாசமாகச் செல்லும் காடு இமயமலைச் சாரலேயாகும். வனவாசம் பன்னிரண்டு ஆண்டுகள் மட்டுமே எனப்படுகின்றது
உறவு முறைகளில் மாறுபட்ட பாத்திரங்கள் வெவ்வேறாக முரண்பாடாக சித்தரிக்கும் கதைகள் உண்டு. பௌத்த இராமாயணம்  இராமனையும் சீதையையும் அண்ணன் – தங்கையாக சித்தரிக்கிறது. சமணர்களோ தங்களின் சமண இராமாயணத்தில் இராவணனின் மகள் சீதை என்கிறார்கள்.
 
★சடகந்த இராவணா என்னும் தமிழ்க்கதை - சீதைதான் இராவணனைக் குத்திக் கொல்கிறாள் எனக் கூறுகிறது . விமலசூரியின் ஜெயின் இராமாயணமோ - இராவணனைக் கொல்வது இராமன் அல்ல.. இலட்சு மணன் என்கிறது.
 
★ஆந்திராவில், ரங்கநாயகி அம்மாள் தொகுத்திருக்கும் இராமாயணக் கதைகளை தங்கள் வீட்டுக் கொல்லை புறங்களில் அமர்ந்தபடி  பாடுகின்ற பிராமணப் பெண்களுக்கு, சீதையைப் பற்றிய கவலையே மிகுந்து காணப்படுகிறது. ராமனையே விஞ்சுகிறாள் என்று சீதையை உயர்த்திப் பிடிக்கின்றனர்.
 
★சமணர்களும், தாய்லாந்து நாட்டினரும் இராவணனுக்கு மிகுந்த  முக்கியத்துவம் அளிக்கின்றனர். உயர்ந்த குணங்களை கொண்டவனாக சொல்கின்றனர். போர்க்களம் மற்றும் யுத்தத்தை முன் னிறுத்தி வீர, தீர, சாகசங்கள் நிறைந்த கதையாகப் படைத்திருக்கின்றனர்.
 
நாளை.......................
[07/04, 3:15 PM] Mohan SriRaghavendrar Kulithalai: ஶ்ரீராம காவியம்
~~~~~~~~~~~~
012 - 07-04-2021
 
சக்கரவர்த்தித் திருமகன்...
 
★சக்கரவர்த்தித் திருமகன் எனும் இராமாயணம் வால்மீகி இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு மூதறிஞர்   சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரியார் எழுதிய இராமாயணம். கல்கி பத்திரிக்கையில் தொடராக வாராவாரம் வெளிவந்தது. வானதி பதிப்பகத்தால் பின்னர் ’இராமாயணம்’ என்ற தலைப்பில் வெளியானது. சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்.
 
★இந்நூலின் முடிவுரையில் இராஜாஜி, ’குழந்தைகளுக்கு ஒரு வார்த்தை’ என்ற தனது  குறிப்பில், இக்கதையனது  யாருடைய உதவியும் இல்லாமல் குழந்தைகள் தாங்களே படித்து புரிந்து கொள்வதற்காகவே முக்கியமாக எழுதப்பட்ட நூலாகக் குறிப்பிடுகின்றார்.
 
★உத்தரகாண்டப் புராணக் குறிப்புகள் பிற்காலச் சேர்க்கையாகக் கருதி உள்ளதால் அவற்றைச் சேர்க்கவில்லை என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.
வாலி வதம் போன்ற சில பகுதிகளில் ஆராய்ச்சி நோக்குடனும் தமது ஒப்புமைக் கருத்துகளைக் குறிப்பிடுகின்றார்.
 
அத்யாத்ம ராமாயணம்
––-------------------------------------
★அத்யாத்ம இராமாயணம் மகரிஷி வால்மீகி எழுதிய ராமாயணத்திற்கு பிற்பட்ட காலத்தில் ஏற்பட்ட வடமொழி ராமாயண நூல். இதன் ஆசிரியர் பண்டிட் ராமசர்மா என்று அம்பா பிரசாத் போன்ற அறிஞர்கள் குறிப்பிட்டு இருகின்றனர். எனினும் பல அறிஞர்கள் இந்நூலின் காலத்தையோ, ஆசிரியர் பெயரையோ சந்தேகத்திற்கு இடமின்றி அறிய தம்மால் இயலவில்லை என்று குறிக்கின்றனர். அத்யாத்ய இராமாயணம் இதற்கு முந்தைய நூல்களில் காணப்படும் செய்திகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது என்று அநேக அறிஞர்கள் கருதுகின்றனர்.
 
ரகுவம்சம்
-------------------
★ரகுவம்சம் என்னும் காவியம் சங்கத மொழியிலே மகாகவி காளிதாசன் இயற்றியதாகும். ரகுவின் மரபினைப் பாடுவது ரகுவம்சம் ஆகும். ரகுவின் தந்தை திலீபன் வரலாற்றுடன் ஆரம்பமாகும் இக்காவியம் திலீபன், ரகு, அயன், தசரதன், இராமன், குசன் என்போரின் வரலாறுகள் விரிவாகக் கூறப்படுகின்றன. அத்துடன் குசன் பின் வந்த அதிதி முதல் அக்கினி, வருணன் வரையான இருபத்து மூவர் வரலாறுகள் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன. நூலில் இறைவணக்கமாக சிவனைப்பற்றி பாடியிள்ளார். ரகுவசம்சத்தில் முதல் சுலோகத்தில் சிவனும் பார்வதியும் சொல்லும் பொருளும்போல் சேர்ந்திருக்கிறார்கள் என்ற உவமையோடு அவர்களைக் குறிப்பிடுகிறார்.
 
★ரகுவம்சத்தினைத் தமிழில் முதன் முதலில் பாடியவர் கி.பி. 16 - 17 நூற்றாண்டு காலங்களில் ஈழத்தில் வாழ்ந்த அரசகேசரி என்னும் அரச குடும்பத்துப் புலவர் ஆவார். இது 1887 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பதிப்பிக்கப்பட்டது.
 
★சி. கணேசையர் என்பவர்
புன்னாலைக்கட்டுவன்  முதற் பதினாறு படலங்களுக்கு எழுதிய உரை 1915 மற்றும் 1932 ஆண்டுகளில் புதிதாக  பதிப்பிக்கப்பட்டுள்ளன.
சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர் எழுதிய ரகுவம்ச சரிதாமிர்தம் 1930 இல் வெளிவந்தது. வித்துவான். ராகவையங்கார்  (1870-1946) சில சருக்கங்களைத் தமிழில் மொழிபெயர்த்துப் பாடியுள்ளார். புலோலியூர் வ. கணபதிப்பிள்ளை (இ. 1895) வசன நடையில் எழுதினார். முதலைந்து சருக்கத்தின் மொழிபெயர்ப்பு சென்னை நகரில் 1874ல்  வெளிவந்தது.
 
நாளை.......................
ஶ்ரீராம காவியம்
~~~~~
013 / 08-04 2021
 
தக்கை இராமாயணம்...
 
★தக்கை இராமாயணம் என்பது, கம்பராமாயணத்தை  பின்பற்றி ஶ்ரீ எம்பெருமான் கவிராயர் என்பவர் இயற்றி ஒரு நூலாகும். எம்பெருமான் கவிராயர் கொங்கு நாட்டின் வரலாற்றுச் சூழலோடு இக் காப்பியத்தைப் பாடியுள்ளார். தமிழுக்குத் தொண்டு செய்து உள்ள கொங்குபகுதியின் சிறப்பு இதில் விவரிக்கப்பட்டு உள்ளது. இக் காப்பியம் ஏறக்குறைய 1600 இல் பாடப்பட்டதாகும்.
 
★இராமனின் கதை பாரதக் கண்டம் முழுமையும் பல்வேறு மொழிகளில் பல்வேறு இலக்கிய வடிவங்களில் பல்வேறு புலவர்களால் பல்வேறு காலகட்டங்களில் பாடப்பட்டுள்ளது. காப்பிய வடிவில், கதைப்பாடல் வடிவில், நாட்டுப்புற வடிவில், வில்லுப்பாட்டு வடிவில், நவீன இலக்கிய வடிவில் எனப் பாடப்பட்டுள்ளது. தக்கை இராமாயணமும் இவ்வாறாக இராமனின் கதை கூற எழுந்த ஒரு நூலாகும். 
 
★கம்பராமாயணம் போல் விரிவாகப் பாடாமல் ஆனால் எல்லாப் பாடல்களையும் சுருங்கிய வடிவில் அழகாக பாடியுள்ளார். இருப்பினும் எம்பெருமான் கவிராயர் தனது கற்பனையழகையும் கவி வளத்தையும் சிறிதும் சுருக்கிக்கொள்ளவில்லை.
 
★சங்ககிரி வள்ளல் திருமிகு நல்லதம்பிக் காங்கேயன் என்பவர் எம்பெருமான் கவிராயரை வேண்ட தக்கை இராமாயணம் காப்பியம் உருவானது. தக்கை எனும் ஓர்  இசைக் கருவியைக் கொண்டு பாடப்பட்டதால் இது தக்கை இராமாயணம் என்றழைக்கப்பட்டது. இது  கதாகாலட்சேப முறையில்  பாடப்பட்டதாகும். இது ஏட்டுச் சுவடியிலும் நன்றாக எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றிக் கொங்கு மண்டல சதகம் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது.  
 
 "அம்புவி மெச்சு குன்றத்தூரில் ஆயரில் ஆய்கலைதேர்
எம்பெருமானைக் கொடு தக்கை என்னும் இசைத்தமிழால்
நம்பும் இராம கதையை அன்பாக நவிலவிசை
வம்பவிர் தார்ப் புயனல்லயனும் கொங்கு மண்டலமே."
 
★இக் காப்பியம் முழுமையும் பதிப்பிக்கப் பெறவில்லை. இவற்றின் தொகுதி ஒன்று, தொகுதி இரண்டு எனப் பதிப்பிக்கப்பட்டுள்ளன. யுத்த காண்டம் கையெழுத்துப் பிரதியாக உள்ளது. தக்கை இராமாயணப் பதிப்பு வரலாற்றில்  திருமிகு. அ. முத்துச்சாமிக் கோனார், திருமிகு  வே. ரா. தெய்வ சிகாமணிக் கவுண்டர் மேலும் கு. அருணாச்சலக் கவுண்டர் ஆகியோரின் முயற்சிகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. யுத்தக் காண்டத்தின் பகுதி கணிப்பொறித் தட்டச்சு நிலையில் கோபி கலை அறிவியல் கல்லூரியில் அச்சுக்குத் தயாரான நிலையில் உள்ளது. தக்கை இராமாயணம் நாட்டார் கூறுகளின் வழியாக நாட்டார் காப்பியமாகவே பாடப்பட்டு உள்ளதை அறியலாம். 
 
நாளை......................
 
ஶ்ரீராம காவியம்
~~~~
014 / 09 04-2021
 
மொள்ள ராமாயணம்...
 
★தமிழில் கம்ப இராமாயணம் எப்படி புகழ் பெற்றதோ அது போல் தெலுங்கில் புகழ் பெற்ற இராமாயணம் மொள்ள இராமாயணம். இது வால்மீகி இராமாயணத்தை ஒட்டியே அமைந்துள்ளது. இக்காவியம் நாரதரிடம் வால்மீகி கதை கேட்பது போல் அமைந்திருக்கிறது. இந்த இராமாயணம் முழுவதும் 824 பதிகங்களில் சுருக்கமாக அடங்கிவிடுகிறது  
 
★இந்த இராமாயணத்தில் அயோத்தியா காண்டம் 43 பதிகங்களைக் கொண்டது. ஆரண்ய காண்டம் 75 பதிகங்களும், கிஷ்கிந்தா காண்டம் 27 பதிகங்களும், சுந்தர காண்டம் 247 பதிகங்களும், யுத்த காண்டம் 351 பதிகங்களும், மீதமுள்ள 81 பதிகங்கள் பால காண்டம் மற்றும் பிற காண்டங்களாக உள்ளன.
 
★இதை இயற்றிய அத்துகுரி மொள்ள என்பவர் ஒரு பெண் புலவர். பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இவரின் தந்தை பெயர் கேசன செட்டி. ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் கோபவரம் எனும் ஊரைச் சேர்ந்த இவர் குயவர் குலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு முன் தெலுங்கில் காவியம் இயற்றிய பெண்கள் யாரும் இல்லை என்பது இங்கு குறிப்பிடக்கூடியது. 
 
★இந்நூல் உருவான விதம் குறித்துக் கதை ஒன்று உண்டு. தமது ஊரில் உள்ள கோயிலில் "மொள்ள" ஆழ்ந்த தியானத்தில் இருந்தாராம். அப்போது, ராமர் அவர் 
முன் தோன்றி உடனே ராமாயணத்தைப் பாடுமாறு கூறி மறைந்தாராம். கோயில் பூசகர் உடனடியாகவே வேண்டிய ஒழுங்குகளைச் செய்யவே, சற்று நேரம் ஏதோ தியானத்தில் இருந்த கவி "மொள்ள"  ஶ்ரீ இராமாயண காவியத்தைப் பலமாகப் பாடத்தொடங்கினார்.
 
★சிறிது நேரத்திலேயே முழுவதையும் பாடி முடித்து இறைவனை தியானித்ததாக சொல்லப்படுகின்றது. மொள்ள தனது காவியச் செய்யுள்களில், தான் இலக்கணம் படிக்கவில்லை என்றும், கோபவரத்து ஸ்ரீகண்ட மல்லேசனுடைய கருணையாலும், ஸ்ரீ ராமச்சந்திரன் ராமாயணம் பாடு என்று சொன்னதாலும் ராமாயணத்தை எழுதத் துணிந்ததாகவும் மகிழ்ந்து  தெரிவித்திருக்கிறாள்.
 
★எது எப்படியோ! கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்று சொல்வார்கள். அதுபோல இறைவன் கவி பாட ஆணையிட்டு அருள் செய்தால் இலக்கணம் படிக்காத கவி "மொள்ள அம்மா" ராமாயணம் இயற்றி பாடியதில் வியப்பென்ன இருக்கிறது? இதே போல ஒரு நிகழ்சி ஶ்ரீராகவேந்திர மகிமையில் இருப்பது நீங்கள் இப்போது  நினைவு படுத்திப் பாருங்கள்.  "ஶ்ரீ ராமஜெயம்".
 
நாளை......................
ஶ்ரீரா காவியம்
~~~~~
015 / 10-04-2021
 
சங்கப் பாடல்களில் ராமாயணம்...
 
★சங்ககாலப் பாடல்கள் இரண்டிலும், பழமொழி நானூறு பாடல் ஒன்றிலும் ராமாயணக் கதை பற்றிய குறிப்புகள் உள்ளன.
 
★ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் சோழ அரசன் இளஞ்சேட் சென்னியின் அரண்மனை வாயிலில் நின்றுகொண்டு அவன் செருப்பாழி (பாழி, மிதியல் செருப்பு என்னும் ஊரை வஞ்சிப் போரில் வென்றதைப் பாடினார். அவன் தன் அணிகலன்களைப் புலவர்க்கு மிகுதியாக வழங்கினான். புலவர் தாங்கமுடியாத அளவுக்கு வழங்கினான். 
 
★புலவருடன் வந்து சேர்ந்து பாடிய அவரது சுற்றத்தார் வறுமையில் வாடியவர்கள். அவர்கள் அந்த நகைகளை முன்பின் பார்த்ததில்லை. எந்த அணியை எங்கே அணிந்துகொள்வது என்று தெரியவில்லை. விரலில் அணியவேண்டுவனவற்றைக் காதுகளில் தொங்கவிட்டுக் கொண்டார்களாம். காதில் அணியவேண்டிய அணிகளை தங்களின் விரலில் செருகிக் கொண்டார்களாம். இடுப்பில் அணியும் அணிகளைக் கழுத்தில் தொங்கவிட்டுக் கொண்டார்களாம். கழுத்தில் அணியவேண்டிய அணிகளை தங்கள் இடுப்பில் கட்டிக் கொண்டார்களாம். இது எப்படியிருந்தது என்றால்,...
 
"'கடுந்தெறல் ராமன் உடன் 
புணர் சீதையை வலித்த  
கை அரக்கன் வௌவிய ஞான்றை நிலஞ்சேர் மதர்  
அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை 
இழை பொலிந்து ஆங்கு'" 
போல இருந்ததாம்.
 
★அதாவது,  ராமனுடன் காட்டுக்கு வந்திருந்த சீதையை ராவணன் வௌவிச் சென்றான். அவள் ராமனுக்கு வழி தெரியத் தான் அணிந்திருந்த அணிகலன்களை ஒவ்வொன்றாக ஆங்காங்கே நிலத்தில் போட்டுவிட்டுச் சென்றாள். அவள் அணிந்து இருந்ததைப் பார்த்த செங்குரங்குகள் (முசு) அவற்றை எடுத்து எதனை எங்கு அணிவது என்று தெரியாமல் தாறுமாறாக அணிந்துகொண்டது போல் இருந்ததாம்.
 
★கடுவன் மள்ளனார் என்னும் சங்ககாலப் புலவர் இராமன் தனுஷ்கோடி ஆலமரத்தடியில் வேதம் ஓதிய செய்தியைக் குறிப்பிடுகிறார்.
 
"'வென்வேல் கவுரியர் 
தொன்முது கோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன் துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலி அவிந்தன்று இவ் 
அழுங்கல் ஊரே'"
 
★தலைவன் திருமணம் செய்துகொள்ள இங்கு வந்து விட்டான். அவனையும் உன்னையும் இணைத்து அலர் தூற்றிய ஊரார் வாய் அடங்கிவிட்டது - என்று தோழி தலைவியிடம் சொல்கிறாள். இது செய்தி. ஊர் வாய் அடங்கியதற்குக் காட்டப்படும் உவமைதான் இராமனைப் பற்றிய செய்தி.
 
★கோடி = தனுஷ்கோடி
கவுரியர் = பாண்டியர்
இராமன் தன் வெற்றிக்குப் பின் பாண்டியரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த தனுஷ்கோடி வந்தடைந்தான். முழங்கிக்கொண்டிருக்கும் கடல் இரக்கத்தோடு காணப்பட்டது. அங்கு ஆறு கடலோடு கலக்கும் முன்றுறை (முன் துறை) ஓரத்தில் ஓர் ஆலமரம் இருந்தது. அந்த மரத்தடியில் அமர்ந்துகொண்டு இராமன் தன் மறைகளை ஓதிக்கொண்டிருந்தான். அப்போது பல விழுதுகளை உடைய அந்த ஆலமரம் தன் ஒலியை அவித்து வைத்துக் கொண்டது. அதாவது அந்த  ஆலமரத்துப் பறவைகள் ஒலிப்பதை மறந்து கேட்டுக் கொண்டிருந்தன. (ஆல மரத்தடியில் குழுமியிருந்த மற்ற உயிரினங்களும் ஒலி எழுப்பாமல் வாய்மூடிக் கொண்டன.)
 
★பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று பழமொழி நானூறு. இலங்கை அரசன் ராவணனின் தம்பி வீடணன். இவன் ராமனை நண்பனாகப் பெற்று இலங்கை நாட்டிற்கு அரசனானான் என்று அந்தப் பாடல் குறிப்பிடுகிறது.
 
'"பொலந் தார் இராமன் துணையாகப் போதந்து,
இலங்கைக் கிழவற்கு இளையான், இலங்கைக்கே
பேர்ந்து இறை ஆயதூஉம் பெற்றான்;-பெரியாரைச்
சார்ந்து கெழீஇயிலார் இல்'" 
 
★இதுபோல சங்க காலத்து இலக்கியங்களில் ராமாயண காவியத்தைப் பற்றிய அநேக பாடல்கள் பொதிந்து உள்ளன. அவற்றையெல்லாம் திரட்டி பதிவிட ஆரம்பித்தால் நம் ஶ்ரீராம காவியம் கதை   பதிவிட மிகுந்த காலதாமதம் ஆகலாம் என்பதால் இத்துடன் இப்பதிவை முடிக்கிறேன்.
"ஶ்ரீராம ஜெயம்".
 
நாளை .....................
ஶ்ரீராம காவியம்
~~~~
016  / 11-04-2021
 
துளசிதாசர்...1
 
★துளசிதாசர் (1532-1623) ஒரு பெரும் அவாதி  பக்தர், தத்துவஞானி, மற்றும் பாடலாசிரியர் ஆவார். பதினாறாம் நூற்றாண்டில் இந்தியில் ராமாயணத்தினை 'ஶ்ரீராமசரித மானஸ்' எனும் பெயரில் எழுதினார் துளசி தாசர்.
 
★துளசிதாசர் இராமாயணம் எழுதும் முன் திவ்ய தேச யாத்திரையாக இராமேசுவரம் வந்ததாகவும் அங்கே கம்ப ராமாயணத்தினைக் கேட்கும் பேறு பெற்றதாகவும் கம்பன் காவியத்தின் நயங்களை அவருடைய காதையில் பல இடங்களில் கையாண்டு உள்ளதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.
 
★சிறந்த ராமபக்தராக இருந்த துளசிதாசர் சைவம், வைணவம், சாக்தம் சம்பிரதாயங்களையும் சமமாகப் பாவித்துப் பெருமை பெற்றவர். கணேசர்,பார்வதி, சிவபெருமான், சூரியன் என அனைத்து தெய்வங்களையும் போற்றியவர் என்பதால் தனிப்பெருமை பெற்றவர்.
 
★உத்திரப் பிரதேசத்தில் பந்தா மாவட்டத்தில் உள்ள பிரயாகைக்கு (காசி) அருகில் உள்ள ராசாப்பூர் கிராமத்தில் ஆத்மாராம் துபே மற்றும் உலேசி அம்மையாருக்கும் மகனாக கி.பி. 1532 ஆம் ஆண்டு பிறந்தார் துளசிதாஸ். இவர் இளமையிலேயே பெற்றோரை இழந்து மிக்க வறுமையில் வாடிய ஒரு நிலையில் வால்மீகி எழுதிய ராமாயணக் கதையை மக்களிடையே பிரச்சாரமாகச் சொல்லி அதன் பலனாக வாழ்க்கை நடத்தி வந்தார். உரிய வயதில் ராமபக்தியும் அறிவும் பெற்ற குணவதி  ரத்தினாவளி என்கிற பெண்ணை மணந்தார்.
 
★தம் ஆசிரியரான பண்டிதர் நரஹரி தாசர் அவர்களின் அடக்கமான தொண்டராக துளசிதாசர் தம்மையே ஒப்படைத்துக்கொண்டார், சுகார்-கெட்டில் சிறுவனாக இருந்தபோது அவர் முதன் முதலாக இவரிடமிருந்து இராமனின் வீரச்செயல்களை கேட்டார், பின்னர் இதுவே ராமசரிதமானசா வின் பொருளாக அமைந்தது. 
வட இந்தியாவில் பிரபல  வைணவ மதத்தை சிறப்பாக பரப்பியவர்களான ராமநந்தா அவர்களுக்கு பின் வந்த தெய்வீக தலைமுறையின் ஆறாவது சந்ததி நரஹரி தாசர், அவர் தன்னுடைய பிரபல கவிதைகளுக்கும் நன்கு அறியப்பட்டவர்.
 
★துளசிதாசர்,பெரும் மகரிஷி  வால்மீகியின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.இவரின் சமகாலத்தவரும் பெரும் பக்தருமான நப்பாதாஸ் கூட தன்னுடைய படைப்பான பக்தமாலிகா எனும் நூலில் துளசிதாசரை வால்மீகியின் அவதாரமாகவே விளக்கமாக விவரிக்கிறார். துளசிதாஸர்
இயற்றியதாகக் கூறப்படும் நூல்கள் 39 என்று பலராலும் கூறப்படினும் துளசிதாசரால் இயற்றப்பட்டவை 12 தான் என்று அறிஞர்களால் கூறப்படுகின்றது. அவை: வைராக்கிய சிரசந்தீபனீ, ராமாஞ்ஞா பிரஷ்ன, ராமலாலா நகசூ, ஜானகீ மங்கள், பார்வதீ மங்கள், கிருஷ்ண கீதாவளி, கீதாவளி, விநய பத்திரிக்கா (விரஜ மொழி), தோஹாவளி, பரவை இராமாயணம், கவிதாவளி (விரஜ மொழி), ராம சரித மானஸ் (அவதி மொழி)
 
★துளசிதாசரின் இலக்கிய மதிப்பை ஆச்சார்யா ராம் சந்திரா ஷுக்லா தம்முடைய சாஹித்யகா  இதிஹாஸ் என்னும் விமர்சன படைப்பில் முன்னிலைப்படுத்தி உள்ளார்.ஆச்சார்யா ராம் ஷுக்லா துளசிதாஸரின் லோக்மங்கலை சமூக மேம்பாட்டுக்கான தத்துவக் கோட்பாடு என்று விவரித்துள்ளார், இதுதான் அந்தப் பெரும் கவிஞரை என்றும் புகழ்பெறச் செய்துள்ளது என்றும் எந்தவொரு இதர உலக இலக்கிய கர்த்தாக்களுடனும் ஒப்பீடுசெய்யமுடியும் என்றும் விவரிக்கிறார்.
 
★துளசி தாசரால் எழுதப்பட்ட ஒட்டுமொத்த இசைப்பாடல் தொகுப்பும், 13 புத்தகங்களை உள்ளடக்கியது,ஆங்கிலத்தில் (கவிதைகளாக) மொழி பெயர்க்கப்பட்டுள்ளது, இதை மொழிபெயர்த்தவர் பின்தா பிரசாத் காட்ரி (1898-1985). எனினும் இந்தப் படைப்பு இன்னமும் வெளியிடப் படவில்லை.
 
★ராமனுக்காக அர்ப்பணம் செய்யப்பட்ட காவியமான ராமசரிதமானசா , வால்மீகி  ராமாயணத்தின் அவாதிப் பதிப்பு. "அவாதி"  மொழி அல்லாமல்  ராமசரிதமானசா காவியத்தில் மூன்று இதர மொழிகளும் அங்கங்கே காணப்படுகிறது. அவை "போஜ்புரி", "பிரிஜ்பாஸா" மற்றும் "சித்ரகுட் மக்களின் உள்ளூர் மொழி" ஆகும். ராமசரிதமானசா, சம்ஸ்கிருத ராமாயணத்தின் மற்ற நூல்களைப் போலவே, இந்தியாவில் உள்ள பல இந்துக் குடும்பங்களில் பெரும் மதிப்புடன் படிக்கப் பட்டு,பூஜிக்கப்பட்டு வருகிறது  இது சௌபாய் என்றழைக்க படும் கவிதை வடிவிலான ஈரடிச் செய்யுளைக் கொண்டு இருக்கும் ஒரு எழுச்சியூட்டும் நூல்.
 
★இது பலராலும் துளசி-க்ரிதி ராமாயணா என்றும் விரும்பி  அழைக்கப்படுகிறது, இது இந்தியாவில் இருக்கும் இந்தி பேசும் இந்துக்கள் இடையே மிகவும் நன்றாக அறியப்பட்டு உள்ளது. இதன்  செய்யுள்கள் இந்தப் பிராந்தியங்களில் பிரபலமான பழமொழிகளாக இருக்கின்றன. துளசிதாசரின் சொற்றொடர்கள் சாதாரண மக்களின் பேச்சுவழக்கில் நுழைந்திருக்கிறது, மேலும் அதன் மூலத்தோற்றம் பற்றி அறியாமலேயே லட்சக் கணக்கான இந்திமொழி  பேசுபவர்களால் (உருது மொழி பேசுபவர்களாலும் கூட) பயன்படுத்தப்படுகிறது. 
 
★அவருடைய நூலில் வரும் பொன்மொழிகள் வெறும் பழமொழிகளாக மட்டும் இருக்கவில்லை.அவருடைய போதனைகள் உண்மையில் நிகழ்கால உள்ள இந்துமத தத்துவத்திற்கு ஒரு பெரும் ஆற்றல்மிக்க சமய பாதிப்பாக இருக்கிறது; மேலும் கவிஞர் துளசிதாசர் எந்த விதமான சித்தாந்தையும் ஏற்படுத்தாத போதும் அவர் ஒரு கவிஞராக மற்றும் துறவியாகவும், மதம் மற்றும் வாழ்க்கையின் நெறிமுறைக்கான ஒரு தூண்டுதலளிப்பவராகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்.
 
★ராமசரிதமானசா தவிர துளசிதாசர் ஐந்து நெடும் மற்றும் ஆறு சிறு படைப்புகளின் ஆசிரியரும் கூட.  அதில் பெரும்பாலானவை ராமனைப் பற்றியதாக, அவருடைய செயல்கள் மற்றும் அவரிடம் இருக்கும் பற்றுதல்களையே சார்ந்து இருந்தன. 
 
★துளசிதாசர் காலத்தில் சமுதாயத்தில் ஒழுக்கம் குறைந்து சீர்கேடுகள் மிகுந்திருந்தன. சமுதாய நிலை கண்டு மிகவும் மனம் வருந்திய துளசிதாசர், மக்களிடையே ஒழுக்கத்தை ஏற்படுத்தி அவர்களை உயர்த்த வேண்டி ஸ்ரீராமரிடம்  முறையிட்டு எழுதியதே "விநய பத்திரிகா". தமது வேண்டுகோள்களை இசைப் பாடல்களாக இயற்றி ஸ்ரீராமபிரான் அரசவைக்கு அனுப்பி வைக்கிறார் நம் துளசிதாசர். ராமபிரானின் அரசவையில் உள்ள கணேசர், சிவபெருமான், தேவி, சூரியன், கங்கை, யமுனை, அனுமன், இலக்குவன், பரதன், சத்துருக்னன், சீதை என அனைவரையும் துதித்துப் பாடி அவர்களைத் தன்னுடைய வேண்டுகோளை நிறைவேற்றச் செய்ய ராமபிரானின் கவனத்தை தம் பக்கம் ஈர்க்கச் சொல்கிறார் துளசிதாசர். கல் மனத்தையும் உருகிக் கரையச் செய்யும் "விநயபத்திரிக்கா" என்ற சொல்லடை இந்தியில் விநயபத்திரிக்காவின் பெருமையைக் குறிக்க வழங்கிவருகின்றது.இந்நூல் துளசிதாசரால் இறுதியாக எழுதப்பட்ட படைப்பாகக் கருதப்படுகின்றது.
 
நாளை.............
ஶ்ரீராம காவியம்
~~~~
017 /12-04-2021
 
துளஸிதாஸர்...2
 
★அவருடைய சிறந்த சிறு படைப்புகளில்  பாராவை இராமாயணா, ஜானகி மங்கல், இராமலாலா நஹாச்சூ, இராமஜ்னா பிரஷ்னா, பார்வதி மங்கல், கிருஷ்ணா கீதாவளி, அனுமன் பஹுகா, சங்கட மோச்சனா மற்றும் வைராக்கிய சண்டிபினி என நீள்கிறது. சிறு சிறு இசைப் பாடல்களில் மிகவும் ஆர்வமூட்டக்கூடியதாக இருப்பது வைராக்கிய சண்டிபானி , அல்லது சுயகட்டுப்பாட்டைத் தூண்டுதல் , ஒரு துறவியின் இயல்பு மற்றும் மேன்மையை விளக்கும் கவிதை, மற்றும் அவன் பெறக்கூடிய உண்மையான அமைதியைப் பற்றிய கவிதை.
 
★ராமாயணம் தவிர துளசிதாசரின் மிகப் பிரபலமானதும் அதிகமாக படிக்கப்பட்டதுமான இலக்கியப் படைப்பாக இருப்பது "அனுமன் சாலிசா", இது அனுமனைப் புகழ்ந்து பாடும் கவிதை. பல இந்துக்கள் இதை ஒரு இறைவழிபாடாக தினமும் ஒப்புவிக்கிறார்கள்.
இராமானுசரைப் போலவே, துளசிதாசரும் ஒப்புயர்வற்ற கடவுளை நம்புகிறார். அதே சமயம் சங்கராச்சார்யரின் கருத்தையும் ஏற்கிறார்;
 
★இந்த இறைவன் தானே ஒருமுறை மனித வடிவை எடுத்துக்கொண்டார், மனித குலத்தினை ஆசீர்வதிககவே ராமராக அவதாரம் எடுத்தார். அதனால் இந்த உடலானது போற்றப்படவேண்டுமே தவிர பயனற்றதாக எண்ணக் 
கூடாது. இறைவன்  என்ற நம்பிக்கையுடன் (பக்தியுடன்) அணுகப்படவேண்டும், தன்னலமற்ற வழிபாடு மற்றும் சுத்தமான அன்பில் தன்னையே சரணடையச் செய்யவேண்டும், மேலும் அவனின் சிந்தனையில் சுய-விருப்பங்களின் அனைத்து செயல்களிலும் சுத்தமாக வேண்டும்.
 
★அனைத்து உயிர்களிடத்தில் அன்பு காட்டவேண்டும், அப்போது அவை மகிழ்ச்சி அடையும்; ஏனெனில் எல்லாவற்றின் மீதும் அன்பு காட்டும் போது நீங்கள் இறைவனிடமும் அன்பு கொள்கிறீர்கள், ஏனெனில் அவனே எல்லாமுமாக இருக்கிறான்.ஆன்மா என்பது இறைவனிடமிருந்துதான் பெறப்பட்டது, மேலும் மனித வாழ்க்கையில் அது எல்லா வேலைகளில் கட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது (கர்மா); மனிதகுலம் தன்னுடைய பிடிவாதத்தினால், செயல்களின் வலைகளில் தங்களைத் தாங்களே பிணைத்துக்கொள்கிறது.
 
★இறைவனிடத்தில் மிகுந்த
நம்பிக்கை வைப்பவர்களின் பேரின்பத்தை அறிந்தபோதும் மற்றும் கேட்டறிந்தபோதிலும், விடுதலை ஆவதற்கான ஒரு வழியை அவர்கள் முயற்சி செய்வதில்லை. கடவுளின் இல்லத்தில் ஆன்மா பெறக்கூடிய பேரின்பம் இறைவனிடத்தில் ஈடுபாடு அல்ல, அவருடனேயே ஒன்றாதலாகும். இது பிறப்பு மற்றும் மறுபிறப்பின் சுமையிலிருந்து விடுதலை கிடைத்தல் (முக்தி) மற்றும் உச்சநிலையிலான ஒரு ஆனந்தமாகும்.
 
★கவிஞர் துளசிதாசருக்கு "சித்தாந்தம்" அத்தனை முக்கியமானது இல்லை. அதற்கு மேலாக முக்கியம் ஆனது நாம  பக்திதான். ஶ்ரீராமனின் பெயரான ராமநாமாவை திரும்பதிரும்ப சொல்வதான பழக்கம் முக்கியமானது என்கிறார். ராமரை விடவும் அவருடைய பெயர் மிகப் பெரிது என்று கூறுகிறார்.   ராமரைக் காட்டிலும் "ராமா" என்னும் பெயர் ஏன் பெரியதாக இருக்கிறது? ஏனெனில் "ராமா" என்பது ஒரு மந்திரம், ஒரு ஒலி, அதைத் திரும்பத் திரும்பச் சொல்வது ஒருவரை உயர் நிலையான உணர்வு நிலைக்குக் கொண்டுச் செல்லும். இவ்வாறு ராமர் அல்லாமல், ராமா என்னும் பெயர் தான்  அனைவரையும் "காப்பாற்றுகிறது". ஏனெனில் பெயருக்குள்ளேயே ராமர் என்கிற இறைவன் தானே உள்ளடங்கியிருக்கிறார். ராமா என்பதே அண்டத்தின் ஒவ்வொரு  அணுவிலும் இருக்கும் ஒன்று என்று பொருள் (ராம்தா சகால் ஜஹான்).
 
★இந்தி சிறிதும் தெரியாத பின்னணியிலிருந்து வருபவர்களுக்கு ஸ்ரீ ராமசரித மானஸ் புரிந்துகொள்வது சற்று சிரமம். இது முக்யமாக மன பேச்சுவழக்கு பாங்குகள் மற்றும் வாக்கியத்தின் அமைப்பு மொழி மரபுக்கு உரியதாகவும், சொல்தொக்கி நிற்பதாலும் அவ்வாறு ஏற்படுகிறது. ஸ்ரீ ராமசரித மானஸ் கற்க விரும்பும் மாணவருக்கும் இந்தக் கடினங்களே அதனுடைய தனித்தன்மையிலான மதிப்பை உருவாக்குகிறது. திரித்துக்கூறப்பட்ட மற்றும் உருக்குலைந்த வார்த்தைகள் அறிந்துகொள்வதற்கு அது மனதை ஒழுங்கு படுத்தி விடுகிறது , மேலும் ஒரு வாக்கியம் தலைகீழாக ஆக்கப்பட்டும் அகம்புறமாக மாற்றப்பட்டபோதிலும் அது புரியுமாறு இருக்க கற்றுக்கொடுக்கிறது. ஸ்ரீ இராமசரிதமானசுக்கான ஒரு நல்ல இலக்கண அறிமுகம் எட்வின் க்ரீவ்ஸ் அவர்களால் "நோட்ஸ் ஆன் தி கிராமர் ஆஃப் தி இராமாயன் ஆஃப் துளசி தாஸ்" (1895) என்ற தலைப்பில் எழுதப்பட்டது.
 
★ஸ்ரீ இராமசந்திரா க்ரிபாலு பஜாமான் (துளசிதாசரின் பஜனை)  ஓ மனமே!
கருணையுள்ள ஸ்ரீ ராமச் சந்திரனை வந்தனை செய்.
புலன்களால் உணரக்கூடிய உலகின் பயங்களை எல்லாம் அழிக்கக்கூடியவர்.அவரின் கண்கள் புத்தம்புது தாமரை போல் இருக்கிறது. அவர் தாமரை முகமுடையவர்.
அவருடைய கைகள் தாமரை போல் இருக்கிறது, அவரின் கால்கள் தாமரையைப் போல் இருக்கிறது.  அவருடைய  அழகு வடிவம் எண்ணற்ற மன்மதன்களை எல்லாம்  விஞ்சியிருக்கிறது.  அவர் மேகத்தைப் போன்ற அழகான நீல மேனிவண்ணமுடையவர்.
ஜனகனின் மகளை மணமுடித்தவர் முன்னால் நான் மண்டியிடுகிறேன்.
 
★மஞ்சள் ஆடையை அணியும் அவர், அகந்தையை அழிக்க வந்த சுத்தமானவர். ஏழைகள் நண்பனை வணங்கு மனமே. ஶ்ரீராமர் அரக்கர்களின் குடும்பங்களை அழிக்கும் சூரியன். தசரதர் மகனான ரகுவம்சத்தினன்,
பேரின்பத்தின் நீர்த்தேக்கம், கோசலாவின் நிலவு.
தன் தலையில் கிரீடத்தை அணிந்து இருப்பவரை நீ வணங்கு மனமே, காதில் அணிகலன்கள் மற்றும் நெற்றியில் செந்நிற பொட்டு வைத்திருப்பார். அவருடைய ஒவ்வொரு கைகாலும் தாராளமாகவும் அழகாகவும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
நல்ல உயரமுடைய அவர், திடகாத்திரமான உடலுடன் வலுவான கைகளை உடையவர், அம்பு மற்றும் வில்லைக் கொண்டு செல்லும் இவர் போர்களில் அரக்கர்களை வெற்றிக் கொள்பவர். என்றெல்லாம் இவ்வாறாக  சொல்கிறார் துளசிதாசர். 
 
★சங்கரனையும் மற்ற  முனிவர்களையும் மகிழ்ச்சிக்கு  உள்ளாக்கும் இவரை நாம் வணங்குவோம், என்னுடைய இதயத் தாமரை உள்ளே  வீற்றிருக்கும் அவர், மோகம் போன்ற பாவமான எண்ணங்களை அழிக்கிறார்
என்றும் மிகுந்த  கருணை உடையவரும், நம்முடைய இந்தக் கடும் வாழ்க்கையில் நமக்கிருக்கும் அத்தனை பயங்களையும் அழிக்கக் கூடிய ஸ்ரீ ராமனை நினைத்து தியானம் செய்யவேண்டும் என்று தன் மனதை கவி துளசிதாசர் வேண்டுகிறார்.
 
நாளை...🌺🌺🌺🌺🌺........CourtsyNaga Subbaraja rao Salem
ஶ்ரீராம காவியம்
~~~~
018  / 13-04-2021
 
துளஸிதாஸரின்
ஶ்ரீராமசரித மானஸ்...
 
★'இராமசரிதமானஸ்'  என்பது அவாதி என்ற இந்தி பேச்சு வழக்கில் இயற்றப்பட்ட ஒரு இதிகாசம். இது இராமரின் மேல் அதீதமான பக்தி கொண்ட இந்தியாவைச் சேர்ந்த கோஸ்வாமி துளசிதாஸ் என்பவரால் 16ம் நூற்றாண்டில் இயற்றப் பட்டது. "இராமசரிதமானஸ் என்பதற்கு இராமரின் செயல்களை தொகுத்து எழுதப்பட்ட ஏரி என்று பொருள். இது ஹிந்தி இலக்கியத்தில் ஒரு மிக பெரிய நூலாக கருதப் படுகிறது. 
 
★இந்த நூல் "வாழும் இந்திய கலாச்சாரத்தின் தொகுப்பு " , "இடைக்கால அதிசய இந்திய சரித்திர தோட்டத்தின் உயரமான மரம்" , "பக்தி இலக்கியத்தின் மிகச் சிறந்த நூல்", "இந்திய மக்களின் அசையாத நம்பிக்கைக்கு அத்தாட்சியாக விளங்கும் நூல் "என்று பெருமையாகக் கூறப்படுகிறது.
 
★"ராமசரிதமானஸ்" என்பது சமஸ்க்ருத சரித்திரம் ராமாயணத்தின் கவிதை வர்ணனையாகக் கருதப்படுகிறது. ராமாயணம் என்பது ராமனை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஓர் சரித்திரம். இராமன் இஷ்வாகு வம்சத்தை சேர்ந்தவர், அயோத்யையின் இளவரசர், ஹிந்து மதத்தில் மஹா விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுபவர். எனினும் இந்த நூல் வால்மீகி இராமாயணத்தின் மறு ஆக்கமில்லை என்று கவி துளசிதாசர் குறிப்பிட்டு உள்ளார் . 
 
★மேலும், ராமசரிதமானஸ் சிவனின் ஹிருதயத்தில் பதிந்த கதை, சிவனால் பார்வதிக்கு உபதேசிக்கப் பட்டது என்றும், இதை தனது குருவான நரஹரிதாஸரிடம் இருந்து கற்றுத் தெரிந்து கொண்டதாகக் கூறியுள்ளார். எனவே இந்த நூலைச் சிலர் துளசிகீர்த்திராமாயணம் (துளசிதாஸரால் எழுதப்பட்ட ராமாயணம்) எனவும் கூறுவார்கள்.
 
★ராமசரிதமானஸ் என்ற இந்த நூல் ஏழு காண்டங்களைக் (அத்தியாயங்கள் அல்லது பாகங்கள்) கொண்டது. துளசிதாசர் இந்த ஏழு காண்டங்களையும் புனிதமான மானசரோவர் ஏரிக்கு அழைத்துச் செல்லும் ஏழு படிக்கட்டுகளுக்கு ஒப்பிடுகிறார். இவை இரண்டுமே உடலையும் மனதையும் ஒரு சேர தூய்மை படுத்தும் ஆற்றல் படைத்தவை என்பதால் அவ்வாறு குறிப்பிடுகிறார்.
 
★இந்நூலின் தனித்துவமான சிறப்பு என்னவென்றால், இந்த நூலின் எல்லா வரிகளிலும் ச்,ர்,த்,ம் (சீதாராம) என்ற எழுத்துக்கள் இடம் பெற்றிருக்கின்றன.
 
★ஶ்ரீ ராமரின் வாழ்க்கை  சரித்திரத்தை வட இந்தியாவில் உள்ள சாமானிய மக்கள் பாடவும் தியானிக்கவும் செய்ததில் முக்கிய பங்கு வகிக்கிறது. துளசிதாசர் ஒரு மிகப் பெரிய சமஸ்க்ருத மொழிக் கவிஞர். இருப்பினும், ஶ்ரீ ராமரின் சரித்திரம் சமஸ்க்ருத மொழி வல்லுநர்களை மட்டுமல்லாது சாமானிய மக்களையும் சென்றடைய வேண்டும் என்று கருதியுள்ளார். எனவே, அவர் இந்த நூலை வட இந்தியாவின் அவாதி பேச்சு வழக்கில் இயற்றியுள்ளார். 
 
★இவ்வாறு அவர்  இந்த ராமாயணம் இயற்றியதற்கு வாரணாசியைச் சேர்ந்த பல்வேறு கவிஞர்கள் அப்பொழுது கண்டனம் தெரிவித்துள்ளனர். எனினும், வேதங்கள் மற்றும் உபநிடதங்களின் சாராம்சம் சாமானிய மக்களுக்கு எளிதில் விளங்க வேண்டும் என்ற தனது கொள்கையில் உறுதியாக இருந்துள்ளார். இது பிற்காலத்தில், அனைவராலும் ஏற்றுக் கொள்ளவும் பட்டுள்ளது. இந்த நூல், ராம்லீலா போன்ற நாடகங்களின் தோற்றத்திற்கு பொருத்தமான காரணமாக அமைந்துள்ளது.
 
★துளசிதாசர்  இந்த நூலை அயோத்தி மாநகரில் 1574ல் இயற்றி உள்ளார்.  இது சித்திரை மாதத்தின் ஒன்பதாவது நாள், அதாவது ஸ்ரீராமநவமி அன்று தொடங்கப்பட்டுள்ளது.  இந்த நூல் அயோத்தி, வாரணாசி, சித்ரகூட் ஆகிய மூன்று இடங்களில் எழுதப்பட்டு உள்ளது. 
 
★இந்த நூல் எழுதப்பட்ட போது இந்தியாவில் முகலாய மன்னர் அக்பர் அரசாட்சி செய்தார் ((1556-1605 CE) ). இதிலிருந்து துளசிதாசரும் ஆங்கிலக் கவிஞரான வில்லியம் ஷேக்ஸ்பியரும் சமகாலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வருகிறது.
 
★இந்த நூல் வால்மீகியின் ராமாயணத்தின்மறுஆக்கமாக கருதப்பட்டாலும் , அவாதி என்ற பேச்சு வழக்கில் எழுதப்பட்ட இந்த நூல் , மொழி பெயர்ப்பு இல்லை. உண்மையில், இந்த நூல் சமஸ்க்ருதம் மற்றும் பிற இந்திய மொழியில் எழுதப்பட்டுள்ள பல்வேறு ராமாயணங்களையும், புராணங்களையும் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.
 
★இராமசரிதமானஸ் தாய்மொழி மறுமலர்ச்சிக்கு ஒரு தலைசிறந்த உதாரணமாக கருத்தப்படுகிறது. சிலர் இந்நூலை, சமஸ்க்ருத மொழிக்கு ஒரு சவாலாக எழுதப்பட்ட நூலாகக் கருதுகிறார்கள். ஆனால், இந்த நூல் சாமானிய மக்களுக்கு ஸ்ரீராமரின் சரித்திரத்தை எளிதில் புரிய வைப்பதற்காக எழுதியதாக ஆசிரியர் துளசிதசாரே கூறியுள்ளார்.
 
★‘’இராமசரிதமானஸ்’’ ஏழு பாகங்கள் அல்லது காண்டங்களைக் கொண்ட நூல். முதல் இரண்டு பாகங்கள் – பால காண்டம்(குழந்தைப் பருவ அத்யாயம்), அயோத்யா காண்டம் (அயோத்தி அத்யாயம்) பாதி நூல் அளவிற்கு எழுதப்பட்டுள்ளது. மற்றவை – ஆரண்ய காண்டம் (கானக அத்யாயம்), கிஷ்கிந்தா காண்டம்(கிஷ்கிந்தா அத்யாயம்), சுந்தர காண்டம்(மகிழ்ச்சியான அத்யாயம்), இலங்கா காண்டம்(இலங்கை அத்யாயம்) மற்றும் உத்தர காண்டம்(ஏனைய அத்யாயம்). இந்த நூல் நான்கு அசைகளைக் கொண்ட சொற்றொடர்களால் எழுத்தபட்டுள்ளது. இதனை ஹிந்தியில் சௌப்பாய் என்று அழைப்பார்கள். இரு வரிக் கவிதைகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. இதனை இந்தியில் தோஹா என்று அழைப்பார்கள். 
 
★நூலின் அத்தியாயத்தின் தொடக்கத்தில் உள்ள பிரார்த்தனைப் பகுதி
இராமசரிதமானஸ் நூலின் ஒவ்வொரு அத்யாயமும் மங்களசரணம் அல்லது பிரார்த்தனைப் பகுதியுடன் தொடங்குகிறது. இவ்வாறு இறைப்பிரார்த்தனையுடன் நூலைத் தொடங்குவது இந்தியப் பரம்பரியமும் கூட. ஒவ்வொரு காண்டத்தின் முதல் மூன்று அல்லது நான்கு வரிகள் பிரார்த்தனைப் பாடலாக அமைக்கப்பட்டு உள்ளது.
 
★பால காண்டம் அறிவு, ஞானம், பேச்சு மற்றும் மங்களத்திற்குரிய ஹிந்துக் கடவுளான சரஸ்வதி மற்றும் கணபதியின் புகழைப் பாடும் விதமாக எழுதப்பட்டு உள்ளது.
 
★அயோத்யா காண்டம் சிவனைப் பிரார்த்திக்கும் பாடலுடன் தொடங்குகிறது. எவருடைய மடியில் மலையரசியின் மகள் பொலிவுடன் அமர்ந்து இருக்கிறாளோ, எவர் ஆகாய கங்கையைத் தனது தலையில் சுமக்கிறாரோ, எவருடைய பிறையில் அந்த பிறைச்சந்திரன் ஓய்வெடுக்கிறானோ, எவருடய தொண்டை ஆலகால விஷத்தை பிடித்துக் கொண்டுள்ளதோ, எவருடைய மார்பு சர்பத்திற்கு இடமளிக்கிறதோ, எவருடைய உடலைச் சாம்பல் அலங்கரிக்கிறதோ, எவர் எல்லா கடவுளுக்கும் தலைவனாக விளங்குகிறரோ, எவர் இந்த உலகத்தை அழிக்கும் வல்லமை படைத்தவரோ, அப்படிப்பட்ட எங்கும் நிறைந்த சந்திரனைப் போன்ற சிவபெருமான் என்றும் என்னைக் காக்கட்டும்
 
★ஆரண்ய காண்டத்தின் முதல் பாடல் மீண்டும் சிவபெருமானை குறித்த பாடலாக அமைந்து உள்ளது. இறைவன் சங்கரனை நான் வணங்குகிறேன். அவர் பிரம்மாவின் சந்ததியைச் சேர்ந்தவர், கருணையுடையவர், அன்பானவர், ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் மேல் அபிரிதமான பக்தி வைத்திருப்பவர், அறிவு எனும் கடலுக்கு மகிழ்ச்சியைத் தருகின்ற முழுச் சந்திரனைப் போன்றவர், சாந்தம் எனும் தாமரையைத் திறக்கும் திறவுகோலான சூரியனைப் போன்றவர், அஞ்ஞானம் எனும் மேகத்தைக் கலைக்கின்ற காற்றைப் போன்றவர், பாவம் மற்றும் காமம், குரோதம், மோஹம் போன்றவற்றை அழித்து, பழியை நீக்குபவர்.
 
★கிஷ்கிந்தா காண்டம் இவ்வாறாகத் தொடங்குகிறது. மல்லிகை மற்றும் நீலத் தாமரைப் போன்ற மலர்ச்சி உடையவர்;அளவில்லா வீரம் கொண்டவர் ;அறிவுக் களஞ்சியமாக விளங்குபவர்; கருணையுடையவர்;வில் வித்தையில் வீரர்;வேதங்களால் போற்றப்படுபவர்;பசு மற்றும் பிராமணர்கள் மீது பற்று கொண்டவர்;அரச குலத்தில் ரகுவரனாக மானிடனாகப் பிறவிஎடுத்தவர்;அந்த ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியும் சீதாபிராட்டியும் நமக்கு பக்தியை வழங்கட்டும்.
 
★சுந்தர காண்டம் இராமனைக் குறித்த துதியுடன் தொடங்குகிறது. உலகத்தின் தலைவரான ஸ்ரீராமனை வணங்குகிறேன்; அவர் அரச குலத்தின் மாணிக்கத்தைப் போன்றவர்;கருணையுடையவர்; பாவங்களை அழிக்க வல்லவர்;மானிடனாகப் பிறவி எடுத்தவர்; கடவுளுக்கும் கடவுளாக விளங்குபவர்; வேதங்கள் மற்றும் உபநிடதங்களால் அறியப்படுபவர்;படைப்புக் கடவுளான பிரம்மாவாலும், அழிக்கும் கடவுளான சிவனாலும்,ஆதிசேஷனாலும் முக்காலும் வணங்கபடுபவர்; பாவத்தை அழித்து வாழ்வில் பேரின்பத்தையும் அமைதியையும் வணங்க வல்லவர்
 
★இலங்கா காண்டம் இந்த பாடலுடன் தொடங்குகிறது. ஸ்ரீராமனை நான் வணங்குகிறேன்;அவர் மிகவும் உன்னதமானவர்; உலகில் உள்ள எல்லாவற்றைக் காட்டிலும் உயர்ந்தவர்; அன்பு மிகுந்த அழிக்கும் கடவுளான சிவனாலும் போற்றி வணங்கப் படுபவர்; மறுபிறவி பயத்தைப் போக்க வல்லவர்; மத யானை எனும் இறப்பை அடக்குகின்ற சிங்கம் போன்றவர்;ஞானத்தால் அடையக்கூடியவர் ;யோகிகளின் தலைவர்;நல்ல வழக்கங்களைக் கொண்டவர்;யாராலும் வீழ்த்தப்பட முடியாதவர்;பிறப்பு இறப்பு இல்லாதவர்;அதர்மத்தை அழிப்பவர் ;பிராமணர்களைக் காப்பவர்;நீர்த்திவலைகளால் மூடப்பட்ட மேகத்தைப் போன்ற அழகு உடையவர்; தாமரை போன்ற கண்களை உடையவர்; மானிடனாக அரச குலத்தில் அவதாரம் எடுத்தவர் 
 
★உத்தர காண்டம் இந்த பாடலுடன் தொடங்குகிறது. ஸ்ரீராமனை நான் இடைவிடாது வணங்குகிறேன்;அவர் ஜனகரின் புதல்வியான சீதாபிரட்டியால் வணங்கப்படுபவர்; மயில் கழுத்து நீல நிறமுடையவர்; பிரம்மாவின் தாமரை போன்ற பாதங்களுடையவர்;கடவுளுக்கு கடவுளாக விளங்குபவர்; மஞ்சள் நிற உடையில், தாமரை மலர் போன்ற கண்களுடன், கையில் வில் அம்புடன் புஷ்பக விமானத்தில் தம்பி இலக்குவனுடனும் வானரங்களுடனும் வலம் வருபவர் 
 
★காண்டத்தின் முடிவு
துளசிதாசர் எல்லா காண்டத்தையும் ஒரே போலவே முடிக்கிறார். எல்லா காண்டங்களும் முறையாக ஆசிரியர் கோஸ்வாமி துளசிதசாரால் இயற்றப்பட்டு உள்ளது. உதாரணத்திற்கு, கிஷ்கிந்தா காண்டம் இவ்வாறாக முடிகிறது:
 
"இதி ஸ்ரீராமசரிதமானஸ் சகல கலி கலுசவே த்வம்சேந சதுர்தஹ் சோபனஹ சமாப்தாஹ்"
 
மொழிபெயர்ப்பு : "இவ்வாறாக ஸ்ரீஇராமசரிதமானஸின் நான்காவது காண்டம் மானசரோவர் ஏரியின் நான்காவது படியையும் ஸ்ரீராமர் கலியுகத்தின் அதர்மங்களை அழிப்பார் என்பதையும் கூறி முற்றிற்று." இதில் சதுர்தஹ் எனும் சொல் நான்கு என்பதைக் குறிக்கும். ஒவ்வொரு அத்யாயமும் அந்த எண்ணை மட்டும் குறித்து முற்றுப் பெறுகிறது.
 
★துளஸிதாஸரின் "ஶ்ரீராமசரித மானஸ்" படிக்கப் படிக்க திகட்டாத தேன்சுவை விருந்து. அதன் வர்ணணைகள் மிகவும் அற்புதமானவை. அதை எழுத ஆரம்பித்தால் தனிபுத்தகமாகவே வெளியிட வேண்டியிருக்கும். ஆகவே சுருக்கமாக இத்துடன் முடித்துக் கொள்கிறேன். நேரம் கிடைத்தால் அந்த ஶ்ரீராமன் அனுமதித்தால் இனிமையான ஶ்ரீராமசரித மானஸை மொழி பெயர்த்து தமிழில் அளிக்க முயலுகின்றேன். நன்றி.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை...................
ஶ்ரீராம காவியம்
~~~~~
019 / 14-04-2021
 
மகாகவி காளிதாஸ்
எழுதிய ரகுவம்சம்...
 
★காலம் மாறிக் கொண்டே இருந்தாலும், எத்தனை நூற்றாண்டுகள் கழிந்தாலும் தமிழ் மற்றும் சம்ஸ்கிருத மொழிகளில் அற்புதமாக எழுதப்பட்டு உள்ள சில காவியங்கள் மட்டும் பெருமையுடன் இன்றும் பேசப்படுகின்றன. அவற்றில் தமிழில் சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி மற்றும் வடமொழியில் காளிதாசன் இயற்றிய குமார சம்பவம், ரகுவம்சம், பாரவியின் கிராதார்ஜுனீயம், மாகரின் சிசுபாலவதம், மற்றும் ஸ்ரீ ஹர்ஷரின் நைஷத சரிதம் ஆகியவை முக்கியமானவை ஆகும். தமிழ் மற்றும் வடமொழியில் உள்ள அந்த ஐந்து நூல்களும் ஐம்பெருங் காப்பியங்கள் என போற்றப்படுகின்றன.
 
★ரகுவம்ச காவியம் என்பது என்ன? ராமாயணத்தில் கூறப்படும் ராமபிரானின் வம்சாவளியினரே ரகுவம்சத்தின் கதாநாயகர்கள். சூரியனிடம் இருந்தே இந்த வம்சம் தோன்றியது என்றும் ராமபிரானுடைய மூதாதையோர் யார், அவர்கள் எப்படி ராமபிரானுடைய வம்சத்தை உருவாக்கி வளர்த்தார்கள், ராமருடைய மறைவுக்குப் பின்னர் அவர் வம்சம் தழைத்ததா, அவர்கள் சிறப்புக்கள் என்பதெல்லாம் என்ன என்பதை விளக்குபவையே ரகுவம்சக் காவியம் ஆகும். ரகுவம்சத்தின் மூலம் ராமபிரானுக்கு முன் காலத்திலேயே வசிஷ்ட முனிவர், கௌஷிக முனிவர் போன்ற ரிஷிகள் இருந்துள்ளார்கள் என்பது தெரிகிறது.
 
★வடநாட்டில் பெரும் புகழ் பெற்றவர் காளிதாசர். அவர் பிறப்பும், வாழ்கையும் குறித்த செய்திகள் சரிவர  யாருக்கும் தெரியவில்லை என்றாலும், அவர் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தவர் என்பது புலனாகிறது. கல்வி அறிவே இல்லாமலிருந்த காளிதாசர் ஒருநாள் உஜ்ஜயினி காளி தேவியின் கருணை பெற்று முறையாகக் கல்வி கற்றவர்களையும் மீறிய அளவில் சம்ஸ்கிருத மொழியில் பாண்டித்தியம் பெற்று, நிகரில்லாத அறிவாற்றல் பெற்று, பல அற்புதமான காவியங்களை இயற்றினார். அவை ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தவையாக இருந்தன.  
 
★ரகுவம்சக் காவியத்தை எதற்காக காளிதாசர் எழுதினர் என்பது குறித்த செய்தி இல்லை. சமிஸ்கிருத மொழியில் காளிதாசரால் எழுதப்பட்டிருந்த ரகுவம்சம் எனும் மூல நூலில் 25 காண்டங்கள் இருந்ததாகவும், ஆனால் அவற்றில் 19 காண்டங்களே புலவர்களுக்குக் கிடைத்துள்ளதாகவும் தெரிகிறது. மற்ற ஆறு காண்டங்களில் கூறப்பட்டுள்ள மன்னர்கள் யார் என்பதோ, இல்லை அவை எதை வெளிப்படுத்தின என்பதோ தெரியவில்லை. இதில் இரண்டு ஆச்சர்யமான செய்திகள்  என்னவென்றால் முதலாவதாக காளிதாசர் எழுதியதற்கு முன்னர் இருந்திருந்த ராமபிரானின் வம்சாவளியினர் யார், யார் என்பதைக்  குறித்து  எவருமே எழுதியதாக தெரியவில்லை.  இரண்டாவதாக காளிதாசருக்கு எப்படி ராமபிரானின் வம்சாவளியினர் யார், யார் என்பதும், அவர்களது வரலாறும் தெரிந்திருந்தது என்றும் விளங்கவில்லை.
 
★இதில் இன்னொரு ஆச்சர்யமான செய்தி என்னவென்றால் பத்தாம் நூற்றாண்டில் சம்ஸ்கிருத மொழியில் இயற்றப்பட்டு உள்ள ரகுவம்சம் எனும் அந்த அற்புதமான காவியத்தை 15 அல்லது 16 ஆம் நூற்றாண்டில்தான் முதன் முதலாக தமிழில் மொழிபெயர்த்து எழுதி உள்ளார்கள் என்பதும், அதை முதன் முதலில் தமிழில் எழுதியவர் இலங்கையை சேர்ந்த மன்னனான அரசகேசரி என்பதைக் கேட்கும்போதும் சற்று வியப்பை தரும். அந்த காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்ட பரராஜசேகர சிங்கையாரிய சக்கரவர்த்தி எனும் பரராஜசேகரன் என்பவரே இந்த நூலை தமிழில் இயற்ற துணையாக இருந்து அதை எழுதியவரை ஊக்குவித்தார் என்றும் கூறுகிறார்கள்.  
 
★அது மட்டும் அல்ல தமிழில் அரசகேசரி எழுதிய ரகுவம்சக் காவியம் அந்த காலகட்டத்தில் இந்தியாவில் தமிழ்நாட்டில் தஞ்சாவூரை ஆண்டு வந்திருந்த ரகுநாத நாயக்கர் எனும் அரசரின் சபையில்தான் முதன் முதலாக படிக்கப்பட்டு அரங்கேறியது என்றும் ஒரு செய்தி உண்டு.  இதில் இருந்து இன்னொரு விஷயமும் நமக்கு தெளிவாகிறது. இந்தியாவும், இலங்கையும் ஒரு காலகட்டத்தில் ஒன்றாக இருந்துள்ளன. தென் பகுதியில், இலங்கையையும் சேர்த்தே தமிழ் மொழி சிறப்புற்றுள்ளது. 
 
★பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக தமிழில் எழுதப்பட்டு உள்ள பல  நூல்களைக்  காணும்போது தமிழ்நாட்டை விட இலங்கையில் அதிக தமிழ் படைப்புக்கள் படைக்கப்பட்டு உள்ளன, தமிழ்நாட்டை சேர்ந்த பகுதிகள் மற்றும் இலங்கையின் பகுதிகள் இரண்டையுமே தமிழர்கள் ஆட்சி செய்து வந்துள்ளார்கள் என்பதெல்லாம் கண்ணாடி பிம்பம் போல தெரிகிறது.
 
★ரகுவம்சம் என்பதின் சாரம் என்ன என்றால் பிரபஞ்சம் படைக்கப்பட்டபோதே முதலில் அவதரித்த மும்மூர்த்திகளில் ஒருவரான மகாவிஷ்ணு பத்து அவதாரங்களை பூலோகத்தில் எடுத்து தீய சக்திகளை அழிக்க வேண்டும் என்பது விதியாக வைக்கப்பட்டு இருந்துள்ளது.  
 
★அந்த பத்து அவதாரத்தில் ஆறாவது அவதாரத்தில் பிராமணப் பிரிவை சேர்ந்த பரசுராமனாக அவதரித்து ஷத்திரியர்களைக் கொல்வதும், ஏழாவது அவதாரத்தில் ஷத்திரியப் பிரிவை சேர்ந்த ராமனாக அவதாரம் எடுத்து பிராமணப் பிரிவை சார்ந்த ராவணனைக் கொல்வது,  மற்றும் கௌதம புத்தராக அவதரித்து தாழ்ந்த பிரிவினரையும் மற்ற பிரிவினருக்கு சமனானவர்களாக மாற்றுவது போன்றவை முக்கியமானவை. இதன் மூலம் பிரும்மா படைத்திருந்த நான்கு வர்ணங்களான பிராமணன், ஷத்ரியன், வைசியர், சூத்திரர் என்பதில் எந்தப் பிரிவினருமே உயர்ந்தவர் இல்லை, தாழ்ந்தவரும் இல்லை. அனைவருமே தெய்வ நாடகத்தின் அங்கங்களே என்பதைக் காட்டும் நாடகம் ஆகும் .
 
★மகாவிஷ்ணு அவதரித்த ராமாவதாரத்தை விளக்குவதே ரகுவம்சம் ஆகும். மகாவிஷ்ணு பூலோகத்தில் மானிடப் பிறவியான ராமராக அவதரிக்க எத்தனைப் பிறவிகள் காத்திருக்க வேண்டி இருந்தது, அதற்கு முன்னர் என்ன பிரிவுகளை அவர் உருவாக்க வேண்டி இருந்தது என்பதையெல்லாம் மறைமுகமாக விளக்குகிறது ரகுவம்சம். இதில் காளிதாசர் எழுதிய ரகுவம்சம் கதை அல்ல, அதற்கும் மேற்பட்டக் காவியம் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. தெய்வ அருளைப் பெற்று இருந்த காளிதாசர் அந்த தெய்வங்களின் அவதாரங்களை மனதார அறிந்திருக்கிறார், அதனால்தான் அவரால் ராமருடைய முன்னோர் மற்றும் சந்ததியினரின் வரலாற்றை காவியமாக எழுத முடிந்துள்ளது. காளிதாசர் இல்லை என்றால் ராமருடைய வம்சத்தைப் பற்றியும், அவருடைய அம்சத்தையும் குறித்து யாரால் அறிந்திருக்க முடியும்?
 
★ராமபிரானின் பரம்பரையை அறிந்து கொள்ள ரகுவம்ச காவியத்தைப் படிக்க வேண்டும். ஆக மகாகவி காளிதாஸ் தனது மகா காவியமான ரகுவம்சத்தின் மூலமாக ராமகாதையை வெகு நேர்த்தியாக அமைத்திருக்கிறார் என்பது திண்னம். ஶ்ரீராம காவியம் முடிந்தபிறகு இந்த ரகுவம்சத்தை பற்றி எழுதலாம்.
மிக நீண்ட முன்னுதாரணங்கள் அளித்தாகி விட்டதினால் இனி நாம் ஶ்ரீராம காவியம் கதைக்கு செல்வோம்.
 
நாளை...................
ஶ்ரீராம காவியம்
~~~~~
020 / 15-04-2021
 
ராமாயண 
கதாபாத்திரங்கள்...
 
★ராமாயணத்தில் இடம்பெற்ற 69 கதாபாத்திரங்களும் – அவர்களைப் பற்றிய ஒரு வரி தகவலும் – ஓர் எளிய அலசல்.
பாரத நாட்டின் ப‌ழம்பெரும் இரட்டைக் காப்பியங்களாக இராமாயணமும் மகா பாரதமும் இருந்து வருகின்றன• 
 
★இரண்டும் புனித நூல்களாக போற்றப்படுகின்றன• மேலும் வைணவ சமயத்தின் நாயகர் ஸ்ரீ விஷ்ணுவின்10 அவதாரங்களில் ஸ்ரீராமர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் ஆகிய இரண்டு அவதாரங்கள் இங்கு மிகவும் அதீதமாக போற்றப்பட்டு வருகின்றன• அந்த இரட்டை காப்பியங்களில் ஒன்றான இராமாயணத்தில் இடம்பெற்றுள்ள‍ முக்கிய மான 69 கதாபாத்திரங்களையும், அவர்களைப் பற்றிய சிறு விளக்கமும் இங்கு படிக்க‍ விருக்கிறீர்கள். படியுங்கள் பக்தியுறுங்கள்.
 
1. அகல்யை 
 
– ராமரின் அருளால் சாபம் நீங்கப்பெற்றவள்.
 
2. அகத்தியர்
 
– ராமனுக்கு போர்க்களத்தில் ஆதித்ய ஹ்ருதயம் உபதேசித்த மாமுனிவர்.
 
3. அகம்பனன் 
 
-ராவணனிடம் ராமனைப்பற்றி கோள்சொன்னவன். ராமனின் அம்புக்கு தப்பிப்பிழை த்த அதிசய ராட்சஷன் 
 
4. அங்கதன் 
 
– வாலி, தாரையின் மகன். கிஷ்கிந்தையின் இளவரசன். 
 
5. அத்திரி 
 
– அனுசூயா என்ற பத்தினியின் கணவர். ராம தரிசனம் பெற்றவர்.
 
6. இந்திரஜித் 
 
– ராவணனின் மகன். லட்சுமணனால் அழிந்தவன். மேகநாதன் என்ற பெயரையும் உடையவன். 
 
7. கரன் & தூஷணன் 
 
– ராவணனின் தம்பிகள், ராமனின் கையால் அழிந்தவர்கள். ஜனஸ்தானம் என்ற இடத்திற்கு அதிபதிகள்.   
 
8. கபந்தன் 
 
– தலையும் காலும் இல்லாத அரக்கன். ராமனால் வதைக்கப்பட்டவன். கந்தர்வ வடிவம் பெற்று ராம லட்சமணர்கள் கிஷ்கிந்தை செல்ல வழி காட்டியவர்.
 
9. குகன் 
 
-வேடர் தலைவன், படகோட்டி, ராமரால், சகோதரனாக ஏற்றுக் கொள்ள‍ப்பட்ட‍வன் 
 
10. கும்பகர்ணன் 
 
– ராவணனின் தம்பி, ஆறுமாதங்கள் சாப்பிட்டும், மீதமுள்ள‍ ஆறுமாதங்கள் பெரும் தூக்கம் தூங்கியே பொழுதை கழிப்பவன் 
 
11. கும்பன் 
 
– கும்பகர்ணனின் மகன் 
 
12. குசத்வஜன் 
 
– ஜனகரின் தம்பி. மாண்டவி, சுருதகீர்த்தி ஆகியோரின் தந்தை. பரத சத்ருக்கனின் மாமனார். 
 
13. கவுசல்யா, கைகேயி, சுமித்திரை 
 
– தசரதரின் பட்டத்தரசியர் 
 
14. சுநைனா 
 
– ஜனகரின் மனைவி, சீதையின் தாய் 
 
15. கவுதமர் 
 
– அகல்யையின் கணவர், முனிவர்
 
16. சதானந்தர் 
 
– அகல்யை, கவுதமரின் மகன். சீதையின் திருமணத்திற்கு வந்த புரோகிதர். 
 
17. சம்பராசுரன் 
 
– இவனுக்கும், தேவர்களுக்கும் நடந்த போரில் தசரதர் தேவர்களுக்கு உதவினார். 
 
18. சபரி 
 
– மதங்க முனிவரின் மாணவி ராமனை தரிசித்தவள் 
 
19. சதபலி 
 
– வடக்கு திசையில் சீதையை தேடச்சென்றவன். 
 
20. சம்பாதி 
 
– கழுகரசன் ஜடாயுவின் அண்ணன், சீதையைக்காண அங்கதனின் படைக்கு உதவியவன். 
 
21. சீதா 
 
– ராமனின் மனைவி, ஜானகி, வைதேகி, ஜனகநந்தினி, ஜனககுமாரி, மைதிலி ஆகிய பெயர்களும் இவளுக்கு உண்டு. 
 
22. சுமந்திரர்.
 
– தசரதரின் மந்திரி, தேரோட்டி 
 
23. சுக்ரீவன் 
 
-கிஷ்கிந்தையின் மன்னன், வாலியின் தம்பி, சூரியபகவானின் அருளால் பிறந்தவன். 
 
24. சுஷேணன் 
 
– வாலியின் மாமனார், வானர மருத்துவன், மேற்கு திசையில் சீதையை தேடச் சென்றவன். 
 
25. சூர்ப்பணகை 
 
– ராவணனின் தங்கை, கணவனை இழந்தவள் 
 
26. தசரதர் 
 
– ராமனின் தந்தை 
 
27. ததிமுகன் 
 
– சுக்ரீவனின் சித்தப்பா, மதுவனம் என்று பகுதியின் பாதுகாவலர் 
 
28. தாடகை 
 
– காட்டில் வசித்த அரக்கி, ராமனால் கொல்லப்பட்டவள் 
 
29. தாரை 
 
– வாலியின் மனைவி, அங்கதனின் தாய். அறிவில் சிறந்த வானர ராணி 
 
30. தான்யமாலினி 
 
– ராவணனின் இளைய மனைவி 
 
31. திரிசடை 
 
– அசோக வனத்தில்  அரக்கிகளுள் நல்லவள், சீதைக்கு நம்பிக்கை ஊட்டியவள் 
 
32. திரிசிரஸ் 
 
– ராவணனின் தம்பியான கரனின் சேனாதிபதி 
 
33. நளன் 
 
-பொறியியல் அறிந்த வானரவீரன், விஸ்வகர்மாவின்மகன், கடலின்மீது இலங்கை க்கு பாலம் கட்டியவன் 
 
34. நாரதர் 
 
– பிரம்மாவின் மனத்தில் பிறந்தவர், கலக முனிவர் 
 
35. நிகும்பன் 
 
– கும்பகர்ணனின் மகன் 
 
36. நீலன் 
 
– வானர வீரன் நளனின் நண்பன், வானர சேனாதிபதி, அக்னி தேவனின் அருளால் பிறந்தவன் 
 
37. பரசுராமர் 
 
– விஷ்ணுவின் அவதாரம், ஜமத்கனியின் மகன், ராமனுடன் போரிட்டவர் 
 
38. பரத்வாஜர் 
 
– பிரயாகை அருகே ஆசிரமம் அமைத்திருந்த முனிவர் 
 
39. பரதன் 
 
– கைகேயியின் மகன், ராமனின் தம்பி 
 
40. மந்தரை 
 
– கைகேயியுடன் கேகய நாட்டிலிருந்து அயோத்திக்கு வந்த வேலைக்காரி, கூனி என்றும் சொல்வர் 
 
41. மதங்கர் 
 
– தவ முனிவர் (St. Sage)
 
42. மண்டோதரி 
 
– தேவலோக சிற்பியான மயனின் மகள், ராவணனின் பட்டத்தரசி, இந்திரஜித்தின் தாய்.
 
43. மாரீசன் & சுபாகு 
 
– தாடகையின் மகன்கள். ராமனால் வதம் செய்யப்பட்டவர்கள், மாரீசன் மாய மானாக வந்தவன் 
 
44. மால்யவான் 
 
– ராவணனின் தாய்வழிப்பாட்டன் 
 
45. மாதலி 
 
– இந்திரனின் தேரோட்டி
 
46. யுதாஜித் 
 
– கைகேயியின் தம்பி, பரதனின் தாய்மாமன் 
 
47. ராவணன் 
 
– மிச்ரவா என்பரின் மகன், குபேரனின் தம்பி, புலஸ்திய முனிவரின் பேரன். 
 
48. ராமன் 
 
– ராமாயண கதாநாயகன் 
 
49. ரிஷ்யசிருங்கர
 
– புத்திரகாமேஷ்டி செய்த முனிவர். 
 
50. ருமை 
 
– சுக்ரீவனின் மனைவி, வாலியால் கவரப்பட்டவர்.
 
51. லங்காதேவி 
 
– இலங்கையின் காவல் தெய்வம் 
 
52. வசிஷ்டர் 
 
– தசரதனின் குலகுரு, அருந்ததியின் கணவர் 
 
53. மார்க்கண்டேயர், மவுத்கல்யர், வாமதேவர், காஷ்யபர், கார்த்தியாயனர், கவுதமர், ஜாபாலி. 
 
– தசரதரின் மற்ற குருமார்கள் 
 
54. வருணன் (சமுத்திரராஜன்) 
 
– கடலரசன், தன்மீது அணை கட்ட ராமனை அனுமதித்தவன் 
 
55. வால்மீகி 
 
-ராமாயணத்தை எழுதியவர். ரத்னாகரன் என்பது இயற்பெயர், கொள்ளைக்காரனாக இருந்தவர், ராமனின் மகன் குசனுக்க ராமாயணம் போதித்தவர், சீதைக்கு அடை க்கலம் அளித்தவர்.
 
56. வாலி 
 
– இந்திரனின் அருளால் பிறந்த வானர வேந்தன் 
 
57. விஸ்வாமித்ரர் 
 
– ராமனுக்கு அஸ்திரவித்தை போதித்தவர், சீதா-ராமன் திருமணத்திற்கு காரணமானவர் 
 
58. விராதன் 
 
– தண்டகவனத்தில் வசித்த அரக்கன், ராமனால் சாபம் தீர்ந்தவன் 
 
59. விபீஷணன் 
 
– ராவணனின் தம்பி, ராமனிடம் அடைக்கலம் அடைந்தவன் 
 
60. வினதன் 
 
– கிழக்குத்திசையில் சீதையை தேடச் சென்றவன் 
 
61. ஜடாயு 
 
– கழுகரசன் சம்பாதியின் தம்பி, தசரதனின் தோழன், சீதைக்காக ராவணனுடன் போராடி உயிர்நீத்தவன் 
 
62. ஜனகர் 
 
– சீதை, ஊர்மிளாவின் தந்தை 
 
63. ஊர்மிளா 
 
– லட்சுமணனின் மனைவி 
 
64. ஜாம்பவான் 
 
– கரடி வேந்தர், பிரம்மாவின் அருள்பெற்று பிறந்தவர்.
 
65. அனுமான் 
 
– அஞ்சனை, கேசரி ஆகியோருக்கு வாயுபகவானின் அருளால் பிறந்தவன், ஆஞ்ச நேயன், மாருதி ஆகியவை வேறு பெயர்கள் 
 
66. ஸ்வயம்பிரபை 
 
– குகையில் வாழ்ந்த தபஸ்வினி, குரங்குப் படையினருக்கு உணவிட்டவள் 
 
67. மாண்டவி 
 
– பரதனின் மனைவி 
 
68. சுருதகீர்த்தி 
 
– சத்ருக்கனனின் மனைவி 
 
69. கம்பர் 
 
-- ராமாயணத்தை தமிழில் எழுதியவர்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~~
021 / 16-04-2021
 
★16 வார்த்தைகளில் 
ராமாயணம்...
 
"பிறந்தார், வளர்ந்தார், கற்றார், பெற்றார், மணந்தார், சிறந்தார், துறந்தார், நெகிழ்ந்தார், இழந்தார், அலைந்தார், அழித்தார்,செழித்தார், துறந்தார், துவண்டார், ஆண்டார், மீண்டார்"
 
★அவ்வளவுதான்.!
மாபெரும் இதிகாசமான ராமாயணம் வெறும் பதினாறு வார்த்தைகளில் கூறி முடித்தாகி விட்டது. இனி விளக்கத்தைப் பார்ப்போம்.
 
விளக்கம்
 
1. பிறந்தார்:
 
ஸ்ரீராமர் கௌசல்யா தேவிக்கு தசரதரின் ஏக்கத்தைப் போக்கும்படியாக பிறந்தது.
 
2.வளர்ந்தார்:
 
தசரதர், கௌசல்யை,  சுமித்திரை, கைகேயி ஆகியோர் அன்பிலே வளர்ந்தது
 
3.கற்றார்:
 
வஷிஷ்டரிடம் சகல வேதங்கள், ஞானங்கள்,  கலைகள் முறைகள் யாவும் கற்றது.
 
4.பெற்றார்:
 
வஷிஷ்டரிடம் கற்ற துனுர்வேதத்தைக் கொண்டு, விஸ்வாமித்ரர் யாகம் காத்து, விஸ்வாமித்ரரை மகிழ்வித்து பல திவ்ய அஸ்திரங்களை பெற்றது.
 
5.மணந்தார்:
 
ஜனகபுரியில் சிவனாரின் வில்லை உடைத்து ஜனகர்-சுனயனாவின் ஏக்கத்தை தகர்த்து மண்ணின் மகளாம் சீதையை மணந்தது.
 
6.சிறந்தார்:
 
அயோத்யாவின் மக்கள் மற்றும் கோசல தேசத்தினர் அனைவர் மனதிலும்,  தன் உயரிய குணங்களால் இடம் பிடித்து சிறந்து விளங்கியது.
 
7.துறந்தார்:
 
கைகேயியின் சொல்லேற்று தன்னுடையதாக அறிவிக்கப்பட்ட ராஜ்ஜியத்தை துறந்து வனவாழ்வை ஏற்றது.
 
8. நெகிழ்ந்தார்:
 
அயோத்தியா நகரின் மக்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்தது.
 
குகனார் அன்பில் நெகிழ்ந்தது.
 
பரத்வாஜர் அன்பில் நெகிழ்ந்தது.
 
பரதரின் அப்பழுக்கற்ற உள்ளத்தையும், தன் மீது கொண்டிருந்த பாலனைய அன்பினையும்,  தன்னலமற்ற குணத்தையும்,  தியாகத்தையும்,  விசுவாசத்தையும் கண்டு நெகிழ்ந்தது.
 
அத்ரி-அனுசூயை முதல் சபரி வரையிலான சகல ஞானிகள் மற்றும் பக்தர்களின் அன்பிலே நெகிழ்ந்தது.
 
சுக்ரீவர் படையினரின் சேவையில் நெகிழ்ந்தது.
 
விபீஷணரின் சரணாகதியில் நெகிழ்ந்தது.
 
எல்லாவற்றுக்கும் மேலாக ஆஞ்சநேயரின் சேவையைக் கண்டு, 'கைம்மாறு செய்ய என்னிடம் எதுவுமில்லை. என்னால் முடிந்தது என்னையே தருவது' எனக் கூறி ஆஞ்சநேயரை அணைத்துக் கொண்டது.
 
9.இழந்தார்:
 
மாய மானின் பின் சென்று, அன்னை சீதையை தொலைத்தது.
 
10.அலைந்தார்
 
அன்னை சீதையை தேடி அலைந்தது.
 
11.அழித்தார்
 
− இராவணனை அழித்தது.
 
12.செழித்தார்
 
சீதையை மீண்டும் பெற்று, அகமும் முகமும் செழித்தது.*
 
ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்று,  செல்வச் செழிப்பான வாழ்க்கைக்குத் திரும்பியது.
 
13.துறந்தார்
 
அன்னை சீதையின் தூய்மையை மக்களில் சிலர் புரிந்து கொள்ளாத நிலையில்,  மக்களின் குழப்பத்தை நீக்குவதற்காக,  அன்னை சீதையைத் துறந்தது.
 
14.துவண்டார்
 
அன்னை சீதையை பிரிய நேர்ந்தது,  ஶ்ரீராமருக்கு மிகுந்த வலியை தந்தது. அந்த வலி அவரை சில காலம் மனதளவில் துவள செய்தது.
 
15.ஆண்டார்
 
என்ன தான் மனதினுள் காயம் இருந்தாலும்,  மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் குறைவறச் செய்து மக்கள் உடலால், மனதால் ஆரோக்கியமானவர்களாகவும்,  செல்வச் செழிப்புடன் வாழும்படியும் பார்த்துக் கொண்டது.
 
16. மீண்டார்
 
பதினோறாயிரம் ஆண்டுகள் நல்லாட்சி செய்து மக்கள் அனைவரையும் ராமராகவும் சீதையாகவும் மாற்றி தன்னுடனே அழைத்துக் கொண்டு தன் இருப்பிடமான வைகுண்டம் மீண்டது.
 
★என்ன? சரிதானே? பதினாறு வார்த்தைகளில் ராமாயணம் இனிதே முடிந்தது. இனி விரிவாக பல அத்தியாயங்களில் இந்த ராமகாவியத்தை படித்து மகிழுங்கள்.
 
ஶ்ரீராம ஜெயம்!
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
022 / 17-04-2021
 
சூரிய குலம்...
 
★என்று காசியப முனிவருக்கும் அதிதீ தேவிக்கும் பிறந்த விவஸ்வான் என்ற பெயர் கொண்ட சூரியனின் பிறகு வந்த வம்சாவளிகளை சூரிய குலம் என்று குறிப்பிட்டு அனைவரும் கூறுகின்றனர் . இந்து மதத்தின் தொன்மவியலின் அடிப்படையில் சூரியனுக்கும் சந்தியாதேவி அவர்களுக்கும் வைவஸ்தமனு என்ற மகன் பிறந்தார்.  இவர் தான் மனுஸ்மிதிரியை இயற்றியவர். விவஸ்வான் என்கிற சூரியன் முதல் மனிதனாக இங்கு அறியப் பெறுகிறார். இவருடைய பெயரனான இக்ஷ்வாகுவின் வழி வந்த அரச வம்சம் சூரிய குலமாக அறியப்பெறுகிறது.
 
★இந்த வம்சத்தில் பிறந்தவராக பகீரதனும், ராமரும் மிகுந்த புகழ்பெற்றவர்கள். மகாபாரதப் போரில் பிரகதபாலன் என்பவரை அபிமன்யு கொல்ல இவ்வம்சம் அழிந்ததாக கூறுகின்றனர். சிலர் இவ்வம்சத்தில் மருத் என்பவர் பிழைத்து அவரால் வம்சம் தழைத்ததாகவும் நம்புவதுண்டு.
 
★சூரியனின் மறுபெயரான ரகு என்பதிலிருந்து ரகு வம்சம் என்று இந்த வம்சம் அழைக்கப்பட்டிருக்கலாம் எனவும், தசரதனின் தாத்தாவான ரகு என்பவரின் வம்சம் என அடையாளம் செய்ய ரகு வம்சம் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
 
ராமரின் முன்னோர்களை தெரிந்து கொள்ளலாமா 
 
1. பிரம்மாவின் மகன் -மரீசீ
2. மரீசீயின் மகன்- கஷ்யபர்
3. கஷ்யபரின் மகன் -விவஸ்வான்
4. விவஸ்வானின் 
மகன்- மனு
5. மனுவின் மகன் -இஷ்வாகு
6. இஷ்வாகுவின் மகன் 
-விகுக்ஷி
7. விகுக்ஷியின் மகன்- புரண்ஜயா
8. புரண்ஜயாவின் மகன் -அணரன்யா
9. அணரன்யாவின் 
மகன் -ப்ருது
10. ப்ருதுவின் மகன்- விஷ்வாகஷா
11. விஷ்வாகஷாவின் 
மகன் -ஆர்தரா
12. ஆர்தராவின் மகன் யுவான்ஷ்வா-1
13. யுவான்ஷ்வாவின் மகன் ஷ்ரவஷ்ட்
14. ஷ்ரவஷ்டின் மகன் 
-வ்ரதஷ்வா
15. வ்ரதஷ்வாவின் மகன் -குவலஷ்வா
16. குவலஷ்வாவின் மகன் - த்ருதஷ்வா
17. த்ருதஷ்வாவின் மகன் -ப்ரோமத்
18. ப்ரோமத்தின் மகன்- ஹர்யஷ்வா
19. ஹர்யஷ்வாவின் மகன் -நிகும்ப்
20. நிகும்பின் மகன் 
-சன்டஷ்வா
21. சன்டஷ்வாவின் மகன் க்ருஷஸ்வா
22. க்ருஷஸ்வாவின் மகன் ப்ரஸன்ஜீத்
23. ப்ரஸன்ஜீத்தின் மகன் யுவான்ஷ்வா-2
24. யுவான்ஷ்வாவின் 
மகன் மன்தாத்தா
25. மன்தாத்தாவின் மகன் அம்பரீஷா
26. அம்பரீஷாவின் 
மகன் ஹரிதா
27. ஹரிதாவின் மகன் 
த்ரதஸ்யு
28. த்ரதஸ்யுவின் 
மகன் -ஷம்பூத்
29. ஷம்பூத்தின் மகன்- அனரண்யா-2
30. அனரண்யாவின் மகன் - த்ரஷஸ்தஸ்வா
31. த்ரஷஸ்தஸ்வாவின் 
மகன் ஹர்யஷ்வா 2
32. ஹர்யஷ்வாவின் மகன் -வஸுமான்
33. வஸுமாவின் மகன்- த்ரிதன்வா
34. த்ரிதன்வாவின் மகன் த்ரிஅருணா
35. த்ரிஅருணாவின் மகன் -திரிசங்கு
36. திரிசங்கு வின் மகன் ஹரிசந்திரன்
37. ஹரிசந்திரநநின் மகன் ரோஹிதாஷ்வா
38. ரோஹிதாஷ்வாவின் 
மகன் ஹரித்
39. ஹரித்தின் மகன் -சன்சு
40. சன்சுவின் மகன் -விஜய்
41. விஜயின் மகன் -ருருக்
42. ருருக்கின் மகன் -வ்ருகா
43. வ்ருகாவின் மகன் -பாஹு
44. பாஹுவின் மகன்- சாஹாரா
45. சாஹாராவின் மகன் -அசமஞ்சன்
46. அசமஞ்சனின் மகன் -அன்ஷுமன்
47. அன்ஷுமனின் மகன் -திலீபன்
48. திலீபனின் மகன்- பகீரதன்
49. பகீரதனின் மகன் -ஷ்ருத்
50. ஷ்ருத்தின் மகன் -நபக்
51. நபக்கின் மகன்- அம்பரீஷ்
52. அம்பரீஷனின் மகன் -சிந்து த்வீப்
53. சிந்து த்வீப்பின் மகன்- ப்ரதயு
54. ப்ரதயுவின் மகன் -ஸ்ருது பர்ணா
55. ஸ்ருது பர்ணாவின் மகன் சர்வகாமா
56. சர்வகாமாவின் 
மகன்- ஸுதஸ்
57. ஸூதஸின் மகன் -மித்ரஷா
58. மித்ராஷாவின் மகன்- சர்வகாமா 2
59. சர்வகாமாவின் மகன் அனன்ரண்யா3
60. அனன்ரண்யாவின் மகன் -நிக்னா
61. நிக்னாவின் மகன்- ரகு
62. ரகுவின் மகன் -துலிது
63. துலிதுவின் மகன் - கட்வாங் திலீபன்
64. கட்வாங் திலீபனின் மகன் - ரகு2
65. ரகுவின் மகன் - அஜன்
66. அஜனின் மகன் - தசரதன்
67. தசரதனின் மகன் 
68. ஸ்ரீ ராமச்சந்த்ர மூர்த்தி
 
இப்படி 68 பரம்பரை கொண்டது.
 
★ஶ்ரீராமரின் முன்னோர்களைப் பற்றி தெரிந்து கொள்வது மாபெரும் புண்ணியமல்லவா? இந்தப் பட்டியலில் இருக்கும் சில அரசர்களைப் பற்றி அறிந்து கெள்வது மிகவும் அவசியம். ஶ்ரீராம காவியத்தில் தகுந்த இடம் பார்த்து அவர்களின் சரிதத்தை பதிய உத்தேசித்து உள்ளேன்.
 
ஜெய் ஶ்ரீராம்!
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
023 / 18-04-2021
 
கோசல நாட்டு வளம்...
 
★மழை வளம் குறைந்தால் நாட்டின் வளம் மறைந்து விடும். ஆனால் கோசல நாட்டில் பருவ மழை தவறாது பெய்தது. வெள்ளிப் பனிமலை மீது உலவிய கரிய மேகங்கள் அள்ளிப் பொழிந்த மழைநீர் வெள்ளமாகப் பெருக் கெடுத்தது; அது சரயூநதியாகப் பாய்ந்தது. மலைபடு பொருள்களாகிய மணியும், பொன்னும், முத்தும், சந்தனமும், அகிலும், தேக்கும் அவ்வெள்ளம் அடித்து வர அலைபடு பொருள்கள் ஆயின. வணிக மக்களைப்போல அந்நதி இப் பொருள்களை வாரி அடித்துக் கொண்டு வந்தது. அலைக் கரத்தில் மலைப் பொருள்களை ஏந்தி வந்து அடி வாரத்தில் குவித்தது.
 
★சரயூநதி, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐவகை நிலங்களில் பாய்ந்தது; அந்த கோசல நாட்டை வளப்படுத்தியது. மலைக் கற்களிடையே தோன்றி வெள்ளம், கானாறாய்ப் பெருகிப் பாய்ந்து குளம், குட்டை, ஏரி, கால்வாய்களில் பரவி வயல்கள் மற்றும்  சோலைகளையும், பசுமையுறச் செய்தது. மூலப் பொருள் ஒன்று எனினும் ஞாலம் அதைப் பல்வேறு பெயர்களைக் கொண்டு அழைக்கிறது. அதேபோல் கடல் நீர், மேகம், மழை, அருவி, வெள்ளம், வாய்க்கால், ஏரி, குளம், ஆறு, தடாகம் என்னும் பல வடிவங்களைக் கொண்டு விளங்கியது.
 
★கல்விச் செல்வத்தையும்
ஏட்டையும் (புத்தகங்கள்) தொடுவது தீமை என்று கூறி, நாட்டைக் கெடுத்தவர்கள் அக்காலத்தில் இல்லை. பெண் கல்வி நாட்டு முன்னேற்றத்திற்கு நலம் விளைவிக்கும் என்பதை நன்கு உணர்ந்திருந்தனர். பொருட் செல்வம் என்பது உடல் உழைப்பினாலும் அறிவினாலும் இயற்கை தருவது; அந்த அறிவு தரும் கல்வியை மானுடர் தேடிப் பெறுவது. செல்வக் குடியிற் பிறந்த செல்வியர் கல்வி கற்றுக் கவின் பெற்றுச் சிறப்பு அடைந்தனர். 
 
★கலைமகளும், திருமகளும் அவர்களை அடைந்து கொலுவீற்றிருந்தனர். கற்ற இப்பெண்களால் உற்ற நல் அறங்கள் சீரும் சிறப்பும் பெற்றுத் திகழ்ந்தன. இவர்கள் வறியவர்க்கு இல்லை என்னாமல் வாரி வழங்கினர்; விருந்தினர் வந்தால் விழைந்து வரவேற்றனர்; இன்முகம் காட்டி நல்லுரை பேசி உணவும் உறையுள்ளும் தந்து சிறப்புச் செய்தனர். மாதரார்தம் செயலால் மாட்சி மிக்க அறங்கள் தழைத்து ஓங்கின.
 
★அன்ன சத்திரங்கள் ஆயிரக் கணக்கில் செயல் பட்டன. அங்கே சோறு வடித்த கஞ்சி ஆறு போலப்பெருகியது. அது கால்வாய்களாகக் கிளைத்துச் சோலைகளிலும், வயல் நிலங்களிலும் பாய்ந்து வளம் பெருக்கியது; தேர் ஒடுவதால் தெருக்களில் துகள் கிளம்பியது. யானையின் மதநீர்பட்டு அது தெருவினைச் சேறு ஆக்கியது; அதில் யானைகள் வழுக்கி விழுந்தன. மகளிர்  செல்வ வாழ்க்கையைப் பெற்றிருந்தனர். சிறுமியர் சிற்றில் இழைத்துச் சிறுசோறு சமைத்தனர். முத்துகளை அவர்கள் சிறுசோறாக அமைத்தனர்; அந்த முத்துகளை இளம் விளையாட்டு சிறுவர்கள் தம் காலில் இடறிச் சிதைத்தனர். அவை அவர்கள் திரட்டி எடுத்துப் போடும் குப்பைகளாகக் குவிந்து கிடந்தன; அவை ஒளி செய்தன.
 
 ★மருத நிலத்துச் சோலைகளில் மயில்கள் தோகை விரித்து ஆடின; குயில்கள் கூவின; தாமரை மலர்கள் விளக்குகள் போல் ஒளி வீசின; முகில்கள் இடித்து இடியோசை செய்தன. பின்னர் பெய்த மழை நீர் அலைகள் அழகு மிகுந்த திரைச்சீலைகள் போல் ஆயின. குவளைகள் கண்விழித்து நோக்கின. இவ்வாறு மருத நிலம், நாட்டிய அரங்காகப் பொலிவு பெற்று அழகு செய்தது. அன்னப் பறவைகள் தாமரை மலர்களை அடைந்து துயில் கொண்டன; தம் அருகே தம் இளங்குஞ்சுகளை உறங்கச் செய்தன.
 
 ★சேற்று நிலத்தில் கால் வைத்த எருமைகள், தம் கொட்டிவில் உள்ள கன்றுகளை நினைத்துக் கொண்டு ஊற்று எனச் சுரந்த பாலை இச் சின்னப் பறவைகள் வாய்வைத்து உண்டன. தேரைகள் எனப்படும் பசுமை நிறத் தவளைகள் தாலாட்டுப் பாடின. அவை அதனைக் கேட்டு மயங்கித் துயின்றன. சேற்று நிலத்தில் எருமைகள் பாலைச் சொரிந்ததால் நாற்று நடும் வயல்கள் வளம் காட்டின. நெற்பயிர்கள் செழித்தன.
 
★அரங்குகளில் அரிவையர், ஆடலும் பாடலும் நிகழ்த்தினர். யாழும் குழலும் இணைந்து இசை அரங்குகளில் இனிமை கூட்டின. சதங்கை ஒலிகள், பதங்களுடன் சேர்ந்து, நாட்டிய நங்கையருக்கு நளினம் சேர்த்தன. இசையும் நாட்டியமும் கலைச் செல்வங்களாய்க் அழகு செய்தன. காவியக் கதைகளில் தேர்ச்சி மிக்கவர் இயம்பிடும் கவி அமுதம் செவிகளுக்கு இனிமை ஊட்டுவதாக ஆயின.
 
★இவ்வாறாக கோசலநாடு சகல வளங்களுடன் மிகச் சிறப்பாக விளங்கியது. நாட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருந்ததால் கள்வர் பயம் ஏதுமில்லை. ஆகவே மக்கள் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்தனர். இனி தலைநகர் பற்றி காண்போம்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை....................
நாளை.................
 
குறிப்பு;-
இந்த ராமாயண காவியம் பற்றிய தங்களின் மேலான கருத்துக்களையும் எண்ணங்களையும் எனது தனிப்பட்ட வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பக் கோருகிறேன். தவறு ஏதேனுமிருந்தால் திருத்திக் கொள்ள முடியும்.
நன்றி.
ஶ்ரீராம காவியம்
~~~~~
023 / 18-04-2021
 
கோசல நாட்டு வளம்...
 
★மழை வளம் குறைந்தால் நாட்டின் வளம் மறைந்து விடும். ஆனால் கோசல நாட்டில் பருவ மழை தவறாது பெய்தது. வெள்ளிப் பனிமலை மீது உலவிய கரிய மேகங்கள் அள்ளிப் பொழிந்த மழைநீர் வெள்ளமாகப் பெருக் கெடுத்தது; அது சரயூநதியாகப் பாய்ந்தது. மலைபடு பொருள்களாகிய மணியும், பொன்னும், முத்தும், சந்தனமும், அகிலும், தேக்கும் அவ்வெள்ளம் அடித்து வர அலைபடு பொருள்கள் ஆயின. வணிக மக்களைப்போல அந்நதி இப் பொருள்களை வாரி அடித்துக் கொண்டு வந்தது. அலைக் கரத்தில் மலைப் பொருள்களை ஏந்தி வந்து அடி வாரத்தில் குவித்தது.
 
★சரயூநதி, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐவகை நிலங்களில் பாய்ந்தது; அந்த கோசல நாட்டை வளப்படுத்தியது. மலைக் கற்களிடையே தோன்றி வெள்ளம், கானாறாய்ப் பெருகிப் பாய்ந்து குளம், குட்டை, ஏரி, கால்வாய்களில் பரவி வயல்கள் மற்றும்  சோலைகளையும், பசுமையுறச் செய்தது. மூலப் பொருள் ஒன்று எனினும் ஞாலம் அதைப் பல்வேறு பெயர்களைக் கொண்டு அழைக்கிறது. அதேபோல் கடல் நீர், மேகம், மழை, அருவி, வெள்ளம், வாய்க்கால், ஏரி, குளம், ஆறு, தடாகம் என்னும் பல வடிவங்களைக் கொண்டு விளங்கியது.
 
★கல்விச் செல்வத்தையும்
ஏட்டையும் (புத்தகங்கள்) தொடுவது தீமை என்று கூறி, நாட்டைக் கெடுத்தவர்கள் அக்காலத்தில் இல்லை. பெண் கல்வி நாட்டு முன்னேற்றத்திற்கு நலம் விளைவிக்கும் என்பதை நன்கு உணர்ந்திருந்தனர். பொருட் செல்வம் என்பது உடல் உழைப்பினாலும் அறிவினாலும் இயற்கை தருவது; அந்த அறிவு தரும் கல்வியை மானுடர் தேடிப் பெறுவது. செல்வக் குடியிற் பிறந்த செல்வியர் கல்வி கற்றுக் கவின் பெற்றுச் சிறப்பு அடைந்தனர். 
 
★கலைமகளும், திருமகளும் அவர்களை அடைந்து கொலுவீற்றிருந்தனர். கற்ற இப்பெண்களால் உற்ற நல் அறங்கள் சீரும் சிறப்பும் பெற்றுத் திகழ்ந்தன. இவர்கள் வறியவர்க்கு இல்லை என்னாமல் வாரி வழங்கினர்; விருந்தினர் வந்தால் விழைந்து வரவேற்றனர்; இன்முகம் காட்டி நல்லுரை பேசி உணவும் உறையுள்ளும் தந்து சிறப்புச் செய்தனர். மாதரார்தம் செயலால் மாட்சி மிக்க அறங்கள் தழைத்து ஓங்கின.
 
★அன்ன சத்திரங்கள் ஆயிரக் கணக்கில் செயல் பட்டன. அங்கே சோறு வடித்த கஞ்சி ஆறு போலப்பெருகியது. அது கால்வாய்களாகக் கிளைத்துச் சோலைகளிலும், வயல் நிலங்களிலும் பாய்ந்து வளம் பெருக்கியது; தேர் ஒடுவதால் தெருக்களில் துகள் கிளம்பியது. யானையின் மதநீர்பட்டு அது தெருவினைச் சேறு ஆக்கியது; அதில் யானைகள் வழுக்கி விழுந்தன. மகளிர்  செல்வ வாழ்க்கையைப் பெற்றிருந்தனர். சிறுமியர் சிற்றில் இழைத்துச் சிறுசோறு சமைத்தனர். முத்துகளை அவர்கள் சிறுசோறாக அமைத்தனர்; அந்த முத்துகளை இளம் விளையாட்டு சிறுவர்கள் தம் காலில் இடறிச் சிதைத்தனர். அவை அவர்கள் திரட்டி எடுத்துப் போடும் குப்பைகளாகக் குவிந்து கிடந்தன; அவை ஒளி செய்தன.
 
 ★மருத நிலத்துச் சோலைகளில் மயில்கள் தோகை விரித்து ஆடின; குயில்கள் கூவின; தாமரை மலர்கள் விளக்குகள் போல் ஒளி வீசின; முகில்கள் இடித்து இடியோசை செய்தன. பின்னர் பெய்த மழை நீர் அலைகள் அழகு மிகுந்த திரைச்சீலைகள் போல் ஆயின. குவளைகள் கண்விழித்து நோக்கின. இவ்வாறு மருத நிலம், நாட்டிய அரங்காகப் பொலிவு பெற்று அழகு செய்தது. அன்னப் பறவைகள் தாமரை மலர்களை அடைந்து துயில் கொண்டன; தம் அருகே தம் இளங்குஞ்சுகளை உறங்கச் செய்தன.
 
 ★சேற்று நிலத்தில் கால் வைத்த எருமைகள், தம் கொட்டிவில் உள்ள கன்றுகளை நினைத்துக் கொண்டு ஊற்று எனச் சுரந்த பாலை இச் சின்னப் பறவைகள் வாய்வைத்து உண்டன. தேரைகள் எனப்படும் பசுமை நிறத் தவளைகள் தாலாட்டுப் பாடின. அவை அதனைக் கேட்டு மயங்கித் துயின்றன. சேற்று நிலத்தில் எருமைகள் பாலைச் சொரிந்ததால் நாற்று நடும் வயல்கள் வளம் காட்டின. நெற்பயிர்கள் செழித்தன.
 
★அரங்குகளில் அரிவையர், ஆடலும் பாடலும் நிகழ்த்தினர். யாழும் குழலும் இணைந்து இசை அரங்குகளில் இனிமை கூட்டின. சதங்கை ஒலிகள், பதங்களுடன் சேர்ந்து, நாட்டிய நங்கையருக்கு நளினம் சேர்த்தன. இசையும் நாட்டியமும் கலைச் செல்வங்களாய்க் அழகு செய்தன. காவியக் கதைகளில் தேர்ச்சி மிக்கவர் இயம்பிடும் கவி அமுதம் செவிகளுக்கு இனிமை ஊட்டுவதாக ஆயின.
 
★இவ்வாறாக கோசலநாடு சகல வளங்களுடன் மிகச் சிறப்பாக விளங்கியது. நாட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருந்ததால் கள்வர் பயம் ஏதுமில்லை. ஆகவே மக்கள் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்தனர். இனி தலைநகர் பற்றி காண்போம்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை....................
ஶ்ரீராம காவியம்
~~~~~
024 / 19-04-2021
 
அயோத்தி நகர் வலம்...
 
★புண்ணிய கங்கை நதிக்கு வடக்கே கோசல ராஜ்யம் மிகப்பெரியதாக இருந்தது. அந்த ராஜ்யத்திற்குள் சரயு நதி ஒடிக்கொண்டிருந்தது. கங்கையின் உப நதி சரயு நதியாகும். கோசல ராஜ்யத்தை ஆண்டு வந்த அரசர்கள் அனைவரும் சூர்ய குலத்தை சேர்ந்தவர்கள். இந்த வம்சத்தில் மனுச்சக்கரவர்த்தி, இக்ஷ்வாகு மன்னன், மந்தாதா, சிபிச்சக்கரவர்த்தி, சகரர், பகீரதர், திலீபன், ரகு, அஜன் ஆகிய மன்னர்கள் மேன்மை தாங்கிய மன்னர்களாக மிளிர்ந்து இருந்தனர். 
 
★கோசல ராஜ்யத்திற்கு அயோத்ய பட்டணம் தலைமை நகரமாக இருந்தது. அயோத்ய என்ற சொல்லுக்கு யுத்தத்தில் அசைக்க முடியாதது என்று பொருள். அக்காலத்தில் இந்த நகரம் யாரிடமும் எவ்விதத்திலும் தோல்வி அடைந்தது இல்லை.
செல்வச் சிறப்பால் அழகாபுரம் நகரையும், இன்பச் சிறப்பால் பொன்னகராம் அமராவதி நகரையும் இது ஒத்து இருந்தது. எழில்மிக்க இந் நகரைப் பொழில் சூழ்ந்த மதில்களும், குழிகள் மிக்க அகழிகளும் சூழ்ந்து இருந்தன. மதில்கள் விண்ணை தொட்டன. அகழிகள் மண்ணின் அடித்தளத்தை அழுத்தின.
 
★காவல்மிக்க இக் கடிநகரை நால்வகைப் படைகள் காத்துப் போற்றின. மக்கள் தம் உயிர் என மன்னனை மதித்தனர். அவனும் மக்களைக் கண்களை இமை காப்பது போல் காத்துவந்தான். ஏழை உழைப்பாளியின் ஒரே நிலம் அவர்களின் உடைமைகள்; அவற்றை காப்பது  போல அரசன் நாட்டைக் காப்பது, அவன் கடமை ஆயிற்று. பகைவர் காட்டிய பகை, அவன் முன் எரிமுன் வைத்த பஞ்சு ஆகியது. அவர்கள் அஞ்சிப் புறமுது கிட்டனர். மக்கள் பசியும், பிணியும் நீங்க, வளனும் வாழ்வும் பெற்று, அவன் குடை நிழலில் குளிர்ந்தனர்.
 
★உட்பூசலும் வெளித்தாக்கலும் இன்றி நாட்டில் அமைதி நிலவியது.  ஆக்கம் தழைத்தது. ஊக்கம் நிலவியது. செம்மைகள் நிலைத்தன. மாதரார்தம் கற்பின் திறத்தால் நாட்டின் புகழ் மிகவும் உயர்ந்தது.  ஆடவர் தம் மறச் செயலால் வீரம் செறிந்தது. புகழ்மிக்க நாடு எனத் திகழ்ந்தது. கொடைச் சிறப்பால் வறுமை நீங்கியது.  வள்ளல்கள் என்று ஒரு சிலர் புகழ் பெற முடியாமல் அனைவரும் பிறர் துன்பத்தைக் களைந்தனர். பிறர் கை ஏந்தாமல் பீடும் பெருமையும் பெற்று, மக்கள் வாழ்க்கை நடத்தினர். செல்வம், தனி உடைமை என்று கூற முடியாமல் அனைவர்க்கும் உரியதாய் இருந்தது. கல்வியும் மக்கள் உடைமையாக இருந்தது. கற்றவர் கல்லாதவர் என்ற பேதம் இன்றி, அனைவரும் கல்வி கற்று அறிவிற் சிறந்தவராய்த் திகழ்ந்தனர்.
 
★நான்கு வேதங்களைக் கொண்டு வேதியர்கள் இயற்றும் வேள்விகளில் இருந்த வந்த புகைகள் வானத்தில் திரண்ட மேகக்கூட்டம் போல் காட்சி அளிக்கும். நாட்டில் பருவமழை சரியான அளவிற்கு பொழிந்து நாடு செழிப்புடன் இருந்தது. குடிமக்கள் நன்கு கல்வி கற்றவர்களாக இருந்தார்கள். ஒழுக்கத்திலும் நன்கு நிலை நின்றவர்களாக இருந்தார்கள். குடிமக்கள் நாட்டின் செல்வத்தை வளர்ப்பதில் அதிக ஊக்கம் படைத்த  உழைப்பாளிகளாக இருந்தார்கள். அனைவரின் உள்ளத்திலும் ஆனந்தம் மிகவும் குடிகொண்டு திருப்தி நிறைந்து இருந்தது. 
 
★தசரத சக்கரவரத்தியின் ஆட்சியில் மனிதர்களின் முயற்சியும் தெய்வ சம்பத்தும் ஒன்று கூடி பூலோக வைகுண்டம் போல் கோசல ராஜ்யம் காட்சி கொடுத்தது. கோசல நாட்டின் வளம் காரணமாக வறுமை என்பதே இல்லை. ஆகையால் தானதர்மங்களும் தனியாக இல்லை. அனைவரும் சத்தியத்தை கடைபிடித்து பொய் பேசாத காரணத்தால் உண்மை என்ற ஒன்று தனியாக இல்லை. நாட்டில் கள்வர்களே இல்லாத காரணத்தால் காவலர் என்ற ஒருவர் தேவையற்றவராக இருந்தார்.
 
★இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோசல நாட்டின் மன்னனாக தலைநகராம் அயோத்தியில் செங்கோல் ஏந்தியபடி வீரதீர பராக்கிரமங்களுடன் வாழ்ந்து வந்தான் தசரதன்.
 
நாளை...................
ஶ்ரீராம காவியம்
~~~~~
025 / 20-04-2021
 
தசரதன்...
 
★சூர்ய குலத்து அரசர்களுள் அஜமகாராஜன், இந்துமதி  தம்பதியருக்கு மகனாகப்பிறந்த தசரத சக்கரவர்த்தி கோசல ராஜ்யத்தை ஆண்டுவந்தார். 
தசம் என்றால் 10 என பொருள். ரதம் என்பது தேரை குறிக்கிறது. தசரதன் என்னும் பெயர் ஒரே நேரத்தில் 10 தேரை வழிநடத்த வல்லவன் என்ற பொருளாகிறது. மன்னன் தசரத சக்கரவர்த்தி ஆண்சிங்கத்தை ஒத்த உடல் வலிமையை பெற்றிருந்தான். இவருக்கு கௌசலை, கைகேயி, சுமித்திரை என்ற மூன்று மனைவிகள் இருந்தார்கள்.
 
★மன்னன் ஒருவனிடம் இருக்க வேண்டிய மாண்புகள் அனைத்தும் அயோத்தியின் தசரத சக்கரவரத்தியிடம் இனிதே அமைந்திருந்தது. நெடுங்காலம் செங்கோல் தாங்கி ஆட்சி புரிந்துவந்தார். அவர் ஆட்சியில் தருமம் தழைத்தோங்கியது. தடுக்க முடியாத பாங்கில் போர் வாய்த்த போது அதை தசரத சக்கரவரத்தி திறமையுடன் சமாளித்தார். தேவர்களின் நலனுக்காக அசுரர்களை எதிர்த்து போர்புரிந்த சிறப்பை தசரத சக்கரவரத்தி பெற்று இருந்தார். 
 
★போர் இல்லாத காலத்தை குடிமக்களை நலனுக்காக நன்கு பயன் படுத்திக்கொண்டார். தம்முடைய குடிமக்களை தந்தையின் பாங்கில் நன்கு பராமரித்து வந்தார். குடும்ப காரியம் ஆனாலும் நாட்டிற்கான காரியம் ஆனாலும் சான்றோர்களையும் முனிவர்களையும் அணுகி அவரகளுடன் நன்கு ஆலோசித்து அதன் பிறகே முடிவு செய்வார். இவருக்கு உதவியாய் இருந்த மந்தரிகள் அனைவரும் சிறந்த ஆட்சித் திறமை வாய்க்கப் பெற்றவர்களாக இருந்தார்கள்.
 
★தசரதமன்னனுடைய வாழ்வில் அனைத்து சம்பத்துக்களும் இருந்தாலும் அவருடைய மனதில் குறை ஒன்று இருந்தது. அவருக்கு திருமணம் நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டாலும் தனக்குப்பின் அரசாள ஓர் ஆண் மகப்பேறு வாய்க்கவில்லை என்பதே அது. அதைப்பற்றிய துயரம் அவர் மனதில் அறித்துக் கொண்டிருந்தது. இந்த ஒரு குறையை முன்னிட்டு அனைத்து மகிழ்ச்சிகளும் பயனற்றவை போல தசரத மன்னனுக்கு தெரிந்தது. மகப்பேறு ஒன்றை நாடி அவரின் உள்ளம் தவித்து கொண்டிருந்தது.
 
★அயோத்தி மாநகரில் தசரதன் அரசவையில் அமர்ந்திருந்தார். அப்போது குலகுருவான வசிஷ்டர் அரசவைக்கு வந்தார். அவரை அடிபணிந்த தசரதன் வழிவழியாக எங்கள் குலத்திற்கு தாயும் தந்தையாய் உயர்ந்த கடவுளாய் இருப்பவர் நீங்களே என்று போற்றி வணங்கி தக்க மரியாதை தந்து வரவேற்று அவருக்குத்தக்க ஆசனம் தந்து அமரவைத்தார். 
 
நண்பர்களே!
நாளை ஶ்ரீராம நவமி. ஶ்ரீராமர் ஜனித்த சுபதினம். நமது ஶ்ரீராம காவியத்திலும் நாளை ஶ்ரீராமர் அவதரிக்கிறார்.
ஜெய் ஶ்ரீராம்!.
 
நாளை.....................
ஶ்ரீராம காவியம்
~~~~~
026 / 21-04-2021
 
ஶ்ரீராம ஜனனம்...
 
★ரிஷியசிருங்க முனிவரின் கட்டளைப்படி யாக பாயசத்தை ஒரு பாதி கௌசலைக்கும், மற்றொரு பாதியில் பாதியை சுமித்ரைக்கும் மீதி உள்ளதில் பாதியை  கைகேயிக்கும் மீதம் உள்ளதை   சுமித்திரைக்கே மீண்டும் மன்னர் வழங்கினார். காலக்கிரமத்தில் மூன்று அரசிகளும்  கருவுற்று மகிழ்ந்தார்கள். மூவரும் பன்னிரெண்டு மாதங்கள் கர்ப்பமாக  இருந்தார்கள்.அந்த நேரத்தில் ராணிகள் மூவரும் இறைவனுக்கு வழிபாடுகள் செய்த வண்ணம் இருந்தனர். சில நாட்கள் சென்றது
 
★ஆன்மாக்கள் வானத்திலிருந்து மழை வழியாக மண்ணுலகத்தை அடைகின்றன. அவ்வாறு வந்த உயிர்கள் காய்கனி மற்றும். தானியங்களில் கலந்து தந்தையார் வயிற்றில் இரண்டு மாதங்கள் கரு இருந்த பின், தாய் வயிற்றில் பத்துமாதம் கரு இருந்து மகவாகப் பிறக்கின்றன. ஆகவே, உயிர்கள் கருவில் பன்னிரெண்டு மாதங்கள் இருக்கின்றன. முதலில் நம்மை, கருச்சுமந்தவர் தந்தையார். அதனால் தான் நம்முடைய பெயருக்கு முன்னால் தந்தையார் எழுத்தைப் பேணுகின்றோம். இராமருடைய கரு மன்னவன் பாலின்றி பாயாசம் வழியாக தாய்வயிற்றை அடைந்ததால் இவர்கள் பனிரெண்டு மாதம் கருச்சுமந்தார்கள்.
 
★சித்திரை மாதம் நவமி திதி புனர்பூச நட்சத்திரம் கடக லக்கினத்தில் ராணி கௌசல்யா தேவிக்கு தெய்வக் குழந்தை அவதாரம் செய்தார். மறுநாள் பூச நட்சத்திரத்தில் ராணி கைகேயி அவர்களுக்கு ஆண் மகவும், அதற்கு மறுநாள் ஆயில்ய நட்சத்திரத்தில் ராணி சுமித்ரை அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும், அவதாரம் செய்தார்கள். சொல்ல இயலா மகிழ்சியில் தசரதன் வாழ்வு மலர்ந்தது. எல்லாச் செல்வமும் அவனை வந்து அடைந்து மகிழவைத்தன. மக்கட் செல்வம் அவனை மிக்கோன் ஆக்கியது.
 
★தமக்கு குழந்தை பிறந்த செய்தி கேட்டதும் மகிழ்ந்த தசரதன் ஏழு ஆண்டுகளுக்கு குடிமக்கள் செலுத்தவேண்டிய வரிப்பணத்தை கட்ட வேண்டாம் என்று அறிவித்தார். நாட்டின் தானிய கிடங்குகளையும் கருவூலத்தையும் திறந்துவிட்டார். யார் வேண்டுமானாலும் தங்களுக்கு தேவையானதை எடுத்துச்செல்லலாம் என்று அறிவித்தார். அரண்மனையில் அன்னதானமும் கோ தானமும் வஸ்திரதானமும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருந்தது. 3 வேளைகளிலும் கோவில்களில் அலங்கார ஆராதனைகள் செய்ய தசரதர் உத்தரவிட்டார். இளவரசர்கள் பிறந்ததை நாட்டு மக்கள் 12 நாட்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள்.அயோத்தி மாநகரம் இன்பவெள்ளத்தில் மூழ்கியது
 
★குழந்தைகளுக்கு பெயர் சூட்ட வசிஷ்ட முனிவரை தசரதர் அழைத்தார். ஓவியத்தின் அழகைப்போல் கரிய திருமேனியுடைய மகாராணி கௌசலையின் குழந்தைக்கு ராமன் என்று பெயரிடுவதாக வசிஷ்டர் அறிவித்தார். விரதத்தை கடைபிடித்து மெய்வழியைக்காட்டக்கூடிய கைகேயிக்கு பிறந்த குழந்தைக்கு பரதன் என்று பெயரிடுவதாக வசிஷ்டர் அறிவித்தார். சுமத்ரைக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் முதல் குழந்தை தேவர்கள் வாழவும் அசுரர்கள் அழியவும் யாராலும் வெல்ல முடியாத புகழுடைய இக்குழந்தைக்கு லக்ஷ்மணன் என்று பெயரிடுவதாக அறிவித்தார் வசிஷ்டர். முத்து பிரகாசிப்பது போல அழகிய முகத்துடனும் தீமையை அழிக்கும் தகுதி பெற்ற இரண்டாம் குழந்தைக்கு சத்ருக்ணன் என்றும் பெயரிடுவதாக வசிஷ்டர் அறிவித்தார்.
 
★குழந்தைகள் நால்வரும் இணை பிரியாமல் ஒற்றுமை கொண்டு ஓடியாடி விளையாடி அனைவரையும் மகிழ்வித்து அவர்களும் மகிழ்ந்தார்கள்.
ராஜகுமாரர்கள் நான்கு பேரும் இனிது வளர்ந்தார்கள். குழந்தைகள் நால்வருக்கும் ஐந்து வயது ஆனதும் தசரதர் வசிஷ்டரிடம் சென்று நான்கு குமாரர்களுக்கும் வேதங்கள் மற்றும் போர்பயிற்சி கலைகள், அஸ்திர வித்தைகள் ஆகிய அனைத்தையும் கற்றுக்கொடுக்க கேட்டுக்கொண்டார். மகரிஷி வசிஷ்டரும் குழந்தைகளை தன்னுடைய ஆஸ்ரமத்திற்கு அழைத்துச் சென்றார். 
 
நாளை...................
Inline image
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
027 / 22-04-2021
 
வசிஷ்டர்...
 
★பிரம்ம ரிஷி. ஏழு புகழ்பெற்ற சப்தரிஷிகளுள் ஒருவர். வேத காலத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படும் மாமுனிவர்களுள் இவரும் ஒருவர். வேதங்களின் பல மந்திரங்களை இவர் உருவாக்கியுள்ளார். இவர் பேரைக்கொண்ட பல சுலோகங்கள் ரிக் வேதத்தின் ஏழாம் மண்டலத்தில் உள்ளது.
ரிக் வேதத்தில் இந்த ஏழாவது மண்டலத்தில் ரிக் 7.33 இல், பத்து அரசர்களின் மாபெரும்போர் என்னும் நிகழ்சியில் இவருடைய குடும்பத்தாரும் இவரும் ஆற்றிய பணியைப் போற்றப்படுகின்றது. மனித குலத்தைச் சேர்ந்த ஒருவரைப் புகழும் ஒரே சுலோகம் இதுவே என்பர்.
 
★இவர் பெயரால் வழங்கும் நூல் வசிட்ட சம்ஹிதை (Vasishta Samhita). இவரது மனைவியின் பெயர் அருந்ததி. தேவலோகப் பசுக்களான காமதேனு மற்றும் நந்தினி, இவையிரண்டையும் இவரே பராமரித்து வந்தார். மன்னர் கௌசிகர் இப்பசுக்களை பறிக்க முயன்று அதில் தோற்று, பின்பு கடுந்தவம் புரிந்து தன் தவ வலிமையால் பிரம்மரிஷி விசுவாமித்ரர் என்று பெயர் பெற்றார்.
 
★பிரம்மரிஷி என்பது ரிஷிகளின் தவவலிமைக்கு ஏற்றவாறு கொடுக்கப்படும் பட்டங்களில் மிக உயர்ந்த  பட்டமாகும். இத்தகைய பட்டம் பெற்றவர்கள் மற்ற ரிஷிகளில் உயர்ந்தவராக மதிக்கப்படுவார் என்கிறது இந்து தொன்மவியல் நூல்கள்.
 
★முனிவர்களில் சிறந்தவர் ரிஷி எனப்படுவார்.  ரிஷிகளில் மிகவும் சிறந்தவர் மகரிஷி எனப்படுவார்.மகரிஷிகளுக்கு எல்லாம் ரிஷி என்பவரை பிரம்மரிஷி என்று கூறுவார்கள். வேதங்களின் படி எவர் ஒருவர் பிரம்மஞானம் பெற்றவராக கருதப்படுகிராரோ, அவரே பிரம்மரிஷி என்ற பட்டத்துடன் அழைக்கப்படுவார். இதுவரை பிருகு, அத்திரி, அங்கரிசர் , காச்யபர், விசுவாமித்ரர், வசிஷ்டர், சாண்டில்யர் ஆகிய ஏழு ரிஷிகள் மட்டுமே உயரிய பிரம்மரிஷி என்ற சிறந்த பட்டம் பெற்றுள்ளனர். இவர்களில் விசுவாமித்ரர் மட்டும் க்ஷரத்ரிய குலத்தில் தோன்றி தன் தவ வலிமையால் பிரம்மரிஷி பட்டம் பெற்றார். பிரம்மரிஷிகளுக்கு தேவர்களுக்கு நிகரான சக்தி இருப்பதாகவும் வேதங்கள் கூறுகின்றன.
 
★ரிஷிகள் விஞ்ஞானம் மருத்துவம் போன்ற பலப்பல துறைகளிலும் முன்னோடிகளாக இருந்து வந்ததை பல நூல்கள் குறிப்பிடுகின்றன. "ஊர்வசி பஞ்சரத்னம்" எனும் நூல் தாயின் வயிற்றில் கருவின் வளர்ச்சியை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ரிஷிகள் அறிந்து இருந்ததைக் குறிப்பிடுகின்றது.
 
★ரிஷிகளில் வசிஷ்டருக்கு என்று ஓர் சிறப்பிடம் உண்டு. ஆதிகாலத்தில் பிரம்மா தனது படைப்புத்தொழிலைச் செய்தபோது, பிரஜாபதிகள் என்னும் பத்துப்பேரை முதலில் உண்டாக்கினார். அவர்கள் பல்லாயிரக்கணக்கான கோடிமக்களை உருவாக்கி உலகத்தை விரிவாக்கினர். அவர்களில் ஒருவர் வசிஷ்டர். அதனால் வசிஷ்டர் பிரம்மாவின் பிள்ளை என்கிறது ராமாயணம். வசிஷ்டரின் பிறப்புக்கு வேறு புராணகாரணங்களையும் சிலர் சொல்வார்கள். 
 
★மித்ரன், வருணன் என்று இரண்டு தேவர்கள் இருந்தனர். அந்த இருவருக்கும் பிறந்த பிள்ளைகள் என்பதால் அகத்தியர், வசிஷ்டர் இருவரும் மைத்ராவருணி என்ற பெயரால் அழைக்கப் படுவதாக ரிக்வேதத்தில் கூறப் பட்டுள்ளது. வசிஷ்டரிஷியின் மனைவியான அருந்ததி, கர்தம பிரஜாபதி, தேவஹூதி தம்பதியரின் புதல்வியாகப் பிறந்தவள். இவள் மிகச் சிறந்த பதிவிரதையாக வாழ்ந்ததால் பத்தினிக் கடவுளாகப் போற்றப்படுகிறாள். கணவரைப் போலவே மகாதபஸ்வியாக வாழ்ந்தவள் அருந்ததி. 
 
★திருமணங்களில் அருந்ததி நட்சத்திரத்தைப் பார்க்கும் வழக்கம் உண்டு. மணமகளுக்கு மிகச்சிறிய நட்சத்திரமான அருந்ததி நட்சத்திரத்தை காட்டும் மணமகன், இவள் அருந்ததியை உதாரணமாகக் கடைபிடித்து வாழவேண்டும் என்று சொல்லும் சடங்கு மிக நயமானது. வசிஷ்டரை விட்டுப் பிரியாத பாக்கியம் பெற்றவள் அருந்ததி. ஒருமுறை மகரிஷி வால்மீகி ஆஸ்ரமத்திற்கு, சீதையின் தந்தையான ஜனகர் வந்தபோது, அங்கு தற்செயலாக வந்திருந்த அருந்ததியைக் கண்டு கைகூப்பினார். அவளும் உபநிஷத் வாக்கியங்களைச் சொல்லி ஜனகரை வாழ்த்தி வரவேற்றதாக உத்தர ராமசரித கதை கூறுகிறது. 
 
★பிரம்மாவின் பிள்ளையாகப் பிறந்த இவருக்கு வேதங்களும், நந்தினி என்ற ஒரு தெய்வீகப் பசுவுமே செல்வமாக இருந்தது. நந்தினி பசுவின் காரணமாக, வசிஷ்டர் விஸ்வாமித்திரரின் பகையை சந்திக்க வேண்டி வந்தது. விஸ்வாமித்திரர் ரிஷியாவதற்கு முன் கவுசிகன் என்ற மன்னனாக இருந்தார். அவர் ஒருமுறை காட்டிற்கு வேட்டையாட வந்த போது, வசிஷ்டரின் ஆஸ்ரமத்தைக் கண்டார்.வசிஷ்டர், கவுசிகனை வரவேற்று அவருக்கும் அவரது பரிவாரங்களுக்கு எல்லாம்  கணநேரத்தில் விருந்தளித்தார். இதைக் கண்டு கவுசிகனுக்கு பிரமிப்பு உண்டானது.ஆள் நடமாட்டம் இல்லாத காட்டில் நினைத்தவுடனே வசிஷ்டர் விருந்து கொடுத்துவிட்டாரே என்று ஆச்சரியப்பட்டார். 
 
★அங்கிருந்த நந்தினி பசு மூலமே இத்தகைய இனிய விருந்தை தர முடிந்தது என்று தெரிந்து கொண்டார். கவுசிகன் வசிஷ்டரிடம், ஆயிரம் பசுக்களைக் கூட உங்களுக்குத் தருகிறேன். எனக்கு நந்தினிப்பசுவைத் தாருங்கள், என்று கேட்டார். ஆனால், வசிஷ்டர் சம்மதிக்கவில்லை. கவுசிகன் பலாத்காரத்தால் சண்டையிட்டு பசுவைக் கொண்டுபோக எண்ணி போர் தொடுத்தார். ஆனால், வசிஷ்டர் கவுசிகனின் சேனைகளைத் தோற்கடித்தார். அவமானம் தாங்காமல் கவுசிகன் தலை குனிந்தார். 
 
★மன்னராக இருப்பவர்களை விட  மிககடுமையாக தவம் புரிந்த தவசீலர்களுக்கே மதிப்பு அதிகமென்பதைப் புரிந்து கொண்டு, தவம் செய்யத் தொடங்கினார். தவத்தில் வென்று, வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்ற பட்டத்தையும் பெற்றார். விஸ்வாமித்திரர் என்ற சிறப்புப் பெயரும் பெற்றார். ரிஷி என்றாலே இன்ப துன்பங்களைச் சமமாகப் பாவிக்க வேண்டும் என்பது நியதி. வசிஷ்டரின் புத்திரர்களில் மூத்தவர் சக்தி. இவரைக் கல்மாஷபாதன் என்னும் நரமாமிசம் சாப்பிடும் ராட்சஷன் கொன்று தின்று விட்டான். வசிஷ்டருக்கு தன் பிள்ளை இறந்துவிட்டதால் புத்திரசோகம் உண்டானது. 
 
★உலகில் பிறந்த உயிர்கள் எல்லாம் என்றாவது ஒருநாள் இறந்து தான் ஆகவேண்டும் என்ற நியதி வசிஷ்டர் அறியாததா என்ன? இருந்தாலும், அவருடைய மனம் ஒருநிலையில் நிற்கவில்லை. அலைபாய்ந்தது. பின் 49 நாட்கள் செய்யும் ஏகஸ்மாந்ந பஞ்சாச யாகம் என்னும் யாகத்தைச் செய்தார். இதன் பயனாக மீண்டும் புத்திரபாக்கியம் பெற்றார். அதோடு மட்டுமல்லாமல் கல்மாஷபாதனையும் கொன்று தன் வஞ்சத்தைத்தீர்த்துக் கொண்டார். 
 
★இக்ஷ்வாகு குலத்தில் பிறந்த திரிசங்கு மன்னன், மனித உடலோடு சாகாமலே சொர்க்கம் செல்ல வேண்டும் என ஒரு விசித்திரமான ஆசை மனதில் கொண்டான். தன் குலகுருவான வசிஷ்டரை அணுகி தன்னுடைய விருப்பத்தைச் சொன்னான். ஆனால்,  "திரிசங்கு! நீ நினைப்பது நடக்காத காரியம். அந்த எண்ணத்தை இன்றோடு கைவிட்டுவிடு! "என்றார் வசிஷ்டர். அவனுக்கு ஆவல் தணியாமல் மேலும் மேலும், அதிகரித்துக் கொண்டே போனது. வசிஷ்டரின் பிள்ளைகளை போய் பார்த்து தன் நிலையை எடுத்துச் சொன்னான். அவர்கள் திரிசங்குவின் பேராசையைக் கண்டு கோபம் கொண்டு,நீ சண்டாளனாகப் போ! என்று சபித்துவிட்டனர். இறுதியாக திரிசங்கு விஸ்வாமித்திரரைச் சந்தித்தான். வசிஷ்டரின் மீது கொண்ட பகையால் இதை ஒருசவாலாக எண்ணி ஏற்றுக் கொண்டார். இதனால், அரும்பாடுபட்டு சேமித்து வைத்த தபோசக்தியை எல்லாம் இழந்தார்.  விஸ்வாமித்திரர். வெற்றி வசிஷ்டருக்குத் தான் கிடைத்தது. 
 
★வசிஷ்டர் தமது தவமகிமை கொண்டு  நினைத்தபடி எல்லாவற்றையும் சாதிக்கும் வல்லமை படைத்தவர் தான். ஆனால், அவருடைய செயல்கள் எல்லாம் நியாயத்தின் அடிப்படையில் தான் இருக்கும். தன் உடலோடு வசிஷ்டர் பல உலகங்களுக்கும் அவ்வப்போது செல்வதுண்டு. ஆனால், அங்கேயே நிலையாக இருப்பதில்லை. யாகங்கள் முடிந்தவுடன் அங்கிருந்து வந்து விடுவார். சக்ரவர்த்தி தசரதன் தேரானது பத்து திசைகளிலும் தடையின்றிச் செல்லும். வசிஷ்டரிஷியின் மகிமையால் தான் இப்பெருமை தசரதருக்கு வந்தது. 
 
★அதைப்போலவே ரகுராமன் என்னும் மன்னனுக்கு, குபேரனிடம் செல்வதற்காகஒரு விசேஷமான தேரினை பெற்றுத் தந்தவர் வசிஷ்டர் தான். தனது நூலான ரகுவம்சத்தில் காளிதாசர் இதை அழகாக விவரிக்கிறார்.ராமாயணத்தில் தசரதருக்கு புத்திரகாமேஷ்டி யாகத்தை செய்து எம்பெருமான் விஷ்ணு ராமாவதாரத்தை இப்பூமியில் எடுக்கச் செய்த பெருமை வசிஷ்டருக்கே உரியது. இன்னும் சொல்லப்போனால், குலகுரு வசிஷ்டரால் தான் ராமாயண வரலாறு முழுவதுமே திட்டமிடப் பட்டது. ராவண யுத்தம் முடிந்தபின், ராமனுக்கு வசிஷ்டரே முடி சூட்டி வைத்தார். ராமராஜ்யத்திற்கு முடிசூட்டிய பெருமை இவரையே சேரும். சூரியகுலத்தில் இக்ஷ்வாகு வம்சத்து மன்னர்களுக்கெல்லாம் குலகுருவாக இருந்து ராஜ்ய பரிபாலனம் செய்ததில் வசிஷ்டர் முக்கியபங்கு வகித்தார்.
 
★இராமாயணக் காவியத்தில் வசிஷ்டர், தசரதனின் அரச குருவாக விளங்கியவர். விசுவாமித்திரரின் வேண்டுகளின் படி, இராமன் மற்றும் இலக்குமணணை விசுவாமித்திரருடன் வனத்திற்குச் செல்ல வசிஷ்டர் தசரதனுக்கு ஆலோசனை கூறினார்.
 
நாளை....................
ஶ்ரீராம காவியம்
~~~~~
028 / 23-04-2021
 
வசிஷ்டரின்
நினைவலைகள்...
 
★பிரம்மரிஷி வசிஷ்டர் தனது ஆஸ்ரமத்தில் அமர்ந்து அங்கு விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் ஶ்ரீராம பரத மற்றும் லக்ஷ்மண சத்ருக்ணர்களைப் பார்த்து மகிழ்சியுடன் ரசித்துக் கொண்டிருந்தார். பரந்தாமன் மனித உருவில் குழந்தையாக வந்து இங்கு விளையாடுவதற்கு நான் செய்த பாக்கியம்தான் என்னே!  என்று மகிழ்சியுடன் நினைத்தவர் ஶ்ரீராமனாக அந்த பக்தவத்சலனே பூமிக்கு வந்த காரணத்தையும் மேலுலகில் நடந்த நிகழ்வுகள் யாவும் அவரின் நினைவலைகளில் நிழலாடின.
 
★முன்னெரு காலத்தில் தசரதன் பிறப்பதற்கு முன் இலங்கை மன்னன் ராவணன் முதலான அரக்கர்கள் செய்து கொண்டு இருந்த கொடுமை மூன்று உலகிலும் அதிகரித்தது. எங்கும் யாகம் ஹோமம் போன்றவை நடக்கவில்லை. சாதுக்களும் முனிவர்களும் ரத்த சகதியில் மிதந்தனர். யாகங்கள் எங்கும் நடக்காததினால் தேவர்களுக்குச் செல்ல வேண்டிய அவிர்பாகம் கிடைக்காததினால் அவர்கள் வலிமை குறைந்தது.
 
★ராவணன் கொடுமை அத்தோடு நிற்கவில்லை. தாய் கைகசி மற்றும் அசுரகுரு சுக்ராச்சாரி அவர்களின் தூண்டுதலால் இந்திரலோகம் மீது தாக்குதல் நடத்த முடிவு செய்தான். ஆனால் அந்த யுத்தத்தில் ராவணன் தோல்வியை தழுவினான். மேலும் அந்த படை எடுப்பின் போது இந்திரனின் மிகுந்த ஒரு ஆக்ரோஷமான தாக்குதலில் ராவணனின் பாட்டனார் (தாய் கைகசியின் தந்தை) மால்யவான் மரணம் அடைந்தார். மாலி, சுனாலி போன்ற மாபெரும் படைத்தலைவர்களும் பலத்த காயங்களுடன் திரும்பினர். ராவணனின் பெரும்படையை அஷ்டதிக்குகளின் தெய்வங்கள் ஆன இந்திரன், யமன், வருணன், அக்னி, வாயு, ஈசானன், நிருதி மற்றும் குபேரன் ஆகியோர் விரட்டி அடித்தனர்.
 
★ஆனால் ராவணன் மனதில் இந்த தோல்வியானது நிலைத்து நின்று வஞ்சகமாக உருமாறியது.  ராவணன் தனக்கு யாராலும் வெல்ல முடியாத ஒரு வீரமகன் பிறக்க வேண்டும். அதற்கு என்ன வழி என குரு சுக்ராச்சாரியாரை கேட்டான். அவரின் கூறியபடி முதலில் நவக்கிரகங்களை சிறை பிடித்தான். ராவணன் விஸ்ரவஸ் என்கிற முனிவருக்கும் கைகசி என்கிற அரக்கிக்கும் மகனாகப் பிறந்ததால் பிராமண வகுப்பில் தோன்றிய அரக்கன் ஆனான். ஆகவே அவன் சாஸ்திரங்கள் எல்லாவற்றிலும் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தான்.
 
★எனவே தனது மகனை ஏன்றும் அழியாதவனாக்க அவன் நவகிரகங்களுக்கும் மற்றும் நட்சத்திரங்களுக்கும் கட்டளை இட்டான். அத்தகைய நிலையில் தனது மகன் பிறக்க வேண்டும் என்று ராவணன் விரும்பினான்.
ராவணனின் கோபம் மற்றும் சக்தி காரணமாக, அனைத்து கிரகங்களும் நட்சத்திரங்களும் அவனுக்கு அஞ்சின. அவனது மகன் மேகநாதன் பிறந்த நேரத்தில் ராவணன் விரும்பிய நிலையில் நவகிரகங்களும் இருந்தன. அனைத்து கிரகங்களும்  மேகநாதனின் ஜாதகத்தின் 11 வது வீட்டில் இருக்குமாறு சீரமைக்கப்பட்டன. இருப்பினும், சனி கிரகம் இராவணனின் கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் குழந்தை பிறக்கும் சமயத்தில் ஜாதகத்தின் 12 வது வீட்டில் தனது கால் வைத்து விட்டார். அதனால் குழந்தைக்கு ஆயுள் பலம் குறைந்தது. இதைக் கண்டு கோபமடைந்த ராவணன் சனியைப் ஊனமடையச் செய்தான்.
 
★அக்குழந்தை பிறந்தபோது துர்சகுனங்கள் பல தோன்றின. கருமேகங்கள் திரண்டு இடியோசை முழங்கின. மேகக் கூட்டங்கள் கூடியிருந்த ஓர் வேளையில் பிறந்ததால் அந்தக் குழந்தைக்கு மேகநாதன் எனப் பெயர் சூட்டப்பட்டது. மேகநாதன் பிறந்த உடனே வளர்ந்து வாலிப வயதை எட்டினான். மேகநாதன் அசுரகுரு சுக்ராச்சாரியாரிடம் அனைத்து மாயகலைகளையும் அஸ்திர பயிற்சியும் கற்றான். அவரின் ஆலோசனைப்படி நிகும்பலா தேவியை வணங்கி ஆராதித்து அநேக வரங்களைப் பெற்றான். இந்திரலோகத்தை தாக்குவதற்கு தயாராக சரியான நேரம் பார்த்துக் காத்திருந்தான்.
 
★இந்தச் செய்தியை நாரதர் மூலமாக கேட்டறிந்த இந்திரனும் மற்ற தேவர்களும் கதிகலங்கி திகைத்தனர். தேவகுருவான பிரகஸ்பதியிடம் சென்று அடுத்து என்ன செய்வது என்று கேட்டுப் பின் அவருடன் சர்வேஸ்வரனை கண்டு வணங்கி தம் குறையை தெரிவித்தனர். தான் அந்த அரக்கர்களுக்கு வரங்களுடன் அஸ்திரங்களையும் கொடுத்து உள்ளதால் தம்மால் உதவிட முடியாதென்றும் பிரம்மாவிடம் செல்லலாம் எனக் கூறினார். அந்த பிரம்மா அனைவரையும் அழைத்துக் கொண்டு அனந்த சயனனான ஆபத்பாந்தவன் ஶ்ரீமன் நாராயணனிடம் சென்று நடந்த விஷயங்களைக் கூறி முறையிட்டனர். தாயார் ஶ்ரீமஹா லக்ஷ்மியுடன் அமர்ந்திருந்த கருணைக் கடலான ஶ்ரீமன் எம்பெருமான் நாராயணன் பேசத் தொடங்கினார்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை.....................
ஶ்ரீராம காவியம்
~~~~~
029 / 24-04-2021
 
வசிஷ்டரின்
நினைவலைகள்...2
 
★"கவலைப் பட வேண்டாம். நாம் அந்த ராவணனையும் அவனது பரிவாரங்களையும் அழிக்க திருஉள்ளம் கொண்டுள்ளோம். விரைவில் ராமாவதாரம் எடுக்கப் போகிறோம். லக்ஷ்மிதேவி சீதையாக பிறப்பார். எமது சங்கு சக்கரமும் ஆதிசேஷனும் அங்கு எமக்கு தம்பிகளாகப் பிறவி எடுப்பார்கள். ஆகவே நீங்கள் அனைவரும் எமக்கு உதவிடும் பொருட்டு பூமியில் காடுகளிலும் மலைகளிலும் வானரங்களாக பிறக்க வேண்டும். யாம் அங்கு தசரத மன்னனுக்கு மகனாக ராமனாக பிறந்து ராவணனைக் கொல்வோம். இது எமது வாக்குறுதி" என ஶ்ரீ நாராயணன் தேவர்களிடம் கூறினார்.
 
★இதைக்கேட்ட தேவர்கள் அனைவரும் மிகவும் மகிழ்சி அடைந்தனர். பிரம்மதேவர் தம்முடைய அம்சமானது  ஜாம்பவான் என்னும் பெயரில் கரடிகளுக்கு மன்னனாக பிறந்து ராமருக்கு உதவப் போவதாகவும் ஆகவே தேவர்கள் அனைவரும் உடனே பூமியில் பிறக்க வேணும் என்று கூறினார்.
 
★ பிரம்மதேவர் இவ்வாறு கூறி முடித்ததும் "பகைவர்களுக்கு இடி போல விளங்கப்போகும் வாலி மற்றும் அவன் மகன் அங்கதன் இருவரும் என் அம்சமாகப் பிறப்பார்கள்" என்று  இந்திரன் கூறினான். தொடர்ந்து அந்த வாலியின் தம்பி சுக்ரீவன் தனது அம்சம் என சூரியனும் நீலன் தனது அம்சமென அக்னியும் நளன் தனது அம்சம் என மயனும்  கூறினார்கள். ஹனுமானாக தனது அம்சம் பிறப்பெடுக்கும் என வாயு பகவானும் அதில் தனதம்சமும் கலந்திருக்கும் என பரமேஸ்வரனும் இயம்பினார்கள். ஏனைய தேவர்கள் அனைவரும் வானரங்களாக பிறப்பதென முடிவு செய்யப்பட்டது.
 
★பூமியில் அதிஅற்புதமான ஓர் நாடகத்தை நடத்திக் காட்டிட எல்லா தேவர்களும் உறுதி பூண்டு மகிழ்வுடன் மீண்டுப் இந்திரலோகம் அடைந்தனர். பிறகு தங்கள் தங்கள் ரூபங்களை பூமியில் சிருஷ்டித்து கொண்டனர். அந்த சமயத்தில் அவர்கள் எதிர்பாராத ஓர் நிலையில் மேகநாதன் தனது அரக்கர் படையுடன் இந்திரனின் உலகை முற்றுகையிட்டு பின் கடுமையாக போரிட்டு எல்லா தேவர்களையும் சிறைபிடித்துச் சென்று தந்தை ராவணனிடம் ஒப்படைத்தான். இந்திரனை வென்றதினால் இனி இந்திரஜித் என நீ அனைவராலும் அன்போடு அழைக்கப் படுவாய் என்று மேகநாதனை வாழ்த்தினான் ராவணன்.
 
★அப்போது அங்கே வந்த பிரம்ம தேவர் ராவணனின் தவறுகளை எடுத்துரைத்து தேவர்களை விடுவித்தார். இந்த முக்கிய நிகழ்சியானது தேவர்களை ராமருக்கு உதவி செய்ய உறுதி கொள்ள வைத்தது. அரிய நிகழ்சிகளை எல்லாம் மனதில் எண்ணித்தான் முக்காலமும் உணர்ந்த பிரம்மரிஷி வசிஷ்டர் அன்று தசரதன் அரண்மனையில் தனக்கு புத்திரன் பிறக்க வழி கூறுங்கள் என அவன் கேட்ட போது ரிஷ்யசிருங்க முனிவரை அழைத்து புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால் தெய்வம் போன்ற குழந்தைகள் பிறக்க வாய்ப்புண்டு என கூறினார். 
 
★அதே போல யாகம் செய்து அழகிய நான்கு குழந்தைகள் பிறந்து வளர்ந்து  இப்போது தன்னுடைய ஆஸ்ரமத்தில் கல்வி கற்க வந்து இருப்பதை எண்ணி மகிழ்ந்து கொண்டிருக்கும்போது "குருதேவா" என உரத்த மழலைக் குரல்களில் கூப்பிடும் சப்தம் கேட்டு தன் நினைவலைகளில் இருந்து விடுபட்டார் வசிஷ்டர். அங்கு ஶ்ரீராமனும் ஏனைய மாணாக்கர்களும் நின்று கொண்டிருந்தனர். "குருதேவா! பிரபஞ்சம் என்றால் என்ன? எங்களுக்கு விளக்குங்கள்" என ராமன் கேட்கவும் "ஆஹா! இந்த பிரபஞ்சத்தைப் படைத்தவனே அதைப்பற்றி கேட்கிறானே." என மகிழ்ந்து விளக்கமளிக்கிறேன் என கூறத் தொடங்கினார் பிரம்மரிஷி வசிஷ்டர்.
 
★அங்கே அயோத்தியில்...?
 
நாளை..................
ஶ்ரீராம காவியம்
~~~~~
030 / 25-04-2021
 
தசரதன் பெற்ற சாபம்...
 
★அயோத்தி அரண்மனையில் அன்று தசரத மன்னன் மிகுந்த சோகத்துடன் அமர்ந்திருந்தான். வாராது வந்த மாமணி போல பிள்ளையில்லா துயரம் போக்க வந்த பிள்ளை கண்மூடித் திறப்பதற்கு முன் ஐந்து வயதாகி குருகுலம் சென்றதே அரசனின் சோகத்திற்கு காரணம். இந்தப் பிள்ளைகள் பிறப்பதற்கு முன் நடந்த சில நிகழ்சிகளைத் தேடி தன் மனக்குதிரையை தட்டி விட்டான் மன்னன் தசரதன்.
 
★அன்று காலை முதலே ஒரு இனம் புரியாத சஞ்சலத்தை உணர்ந்திருந்தான் தசரதன். தனக்குப்பின் அரசாள வாரிசு இல்லை என்பதும் அதற்கு ஒரு காரணம் என்பதையும் அறிவான்.  இந்த சூழ்நிலையில் வேட்டைக்கு செல்வது ஒன்றே தன் கவலை தீர்க்கும் வழி என முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிட்டான். சிறிது நேரத்திலேயை  சிறு படையோடு வேட்டைக்காக  வனம் நோக்கி புறப்பட்டான்.
 
★சிரவண குமாரன். இரண்டு கண்களிலும் பார்வையற்ற பெற்றோர் மீது பாசமும் பக்தியும் கொண்டு அவர்களுக்கு சேவை செய்வதில் மகிழ்சி  காணும் ஓர் அற்புத புத்திரன்.  இவன் கண்பார்வையற்ற சலபேந்திர முனிவர் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தவன். இவர்களின் முதிர்ந்த வயதில் இருவருக்கும் வாழ்க்கை ஆதாரமாக சிரவண குமாரன் மட்டுமே விளங்க வேண்டியதாயிற்று. இவன் காவடி எடுத்துச்செல்வது போல் தம் பெற்றோரை  ஒரு தராசில்            
இரு பக்கமும் அமரவைத்து
போகும் இடமெல்லாம் சுமந்து செல்வான். 
 
★"இந்தச் சின்ன வயதில் எத்தனை பொறுமை, நிதானம். பெற்றோர்களுக்கான எல்லாப் பணிவிடைகளை மிகவும் பொறுமையாகவும், அன்புடனும் செய்கிறான். நேர்மையான சிந்தனைகள், உயிர்கள் மீது அன்பு, சிரமம் பாராமல் கண் பார்வை அற்ற தன்னுடைய பெற்றோர்களுக்கு கண்ணாக இருக்கிறான்.ரிஷி குமாரன் உதட்டில் எந்நேரமும் புன்னகை இருக்கும். வாயில் வேதம் மணக்கும்." என்று வனத்தில் வாழும் ஏனைய முனிவர்கள் சிரவணகுமாரனைப் பற்றிக் கூறுவார்கள்.
 
★ஒருநாள் வனத்தின் மத்தியில் வழக்கம் போல தன் பெற்றோரை சுமந்து சென்று கொண்டிருக்கும் போது தந்தையான சலபேந்திர முனிவர் அவனை தாகம் காரணமாக குடிநீர் கொண்டுவர சொன்னார். ரிஷிகுமாரனும் தன் பெற்றோரை அமரவைத்து விட்டு நீர் கொண்டுவர ஓர் குடத்தோடு அருகே ஓடிக்கொண்டிருந்த கங்கையின் உபநதியான தாமஸா என்னும் ஆற்றிற்கு வந்தான். வந்தவன் சற்றே குனிந்து குடத்தில் நீர் அள்ளும் போது எங்கிருந்தோ வந்த அம்பொன்று அவன் நெஞ்சத்தை தாக்கியது. "ஆ" என அலறிக் கொண்டே துடிதுடித்து மண்மீது சாய்ந்தான் சிரவணகுமாரன். 
 
★காட்டில் வேட்டையாட வந்த தசரதன், வழி தவறி விட்டான். அந்த வனத்தில் தங்கிய அவன் மறுநாள் எழுந்து மீண்டும் வேட்டையாட தாமஸா நதிக்கரை ஓரம் வந்தான். அவனுடைய வீரர்கள் அவனைத் தேடி வேறு பக்கம் சென்று விட, வேட்டையில் ஆர்வமுடைய தசரதன் வேறு வழியில் வந்து விட்டான். சற்று
தூரத்தில் இருந்து ரிஷிகுமாரன் குடத்தில் நீர் அள்ளும் சப்தம், மான் நீர் அருந்துவது போல் அவனுக்கு கேட்டது. சப்தத்தைக் கேட்டே இலக்கை தாக்கும் ‘சப்தவேதிகை’ என்ற அம்பை அவன் விட, அது நேராகச் சென்று ரிஷி குமாரனைத் தாக்கியது.
 
★"ஆ” என்ற அலறல் சத்தம் கேட்டதும் தான், அதிர்ந்து போய் ஓடிவந்தான்  தசரதன். மார்பில் அம்பு பட்டு வீழ்ந்து கிடந்த ரிஷி குமாரனைப் பார்த்து அவன் நடுங்கிப் போனான். "எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டேன்? இறைவா!   இந்தப் பாவத்தை எப்படிப் போக்குவேன்?” கலங்கிப் போனான். நேர்மை தவறாமல், சத்தியம் ஒன்றே இலக்காகக் கொண்டு நடக்கும் அவன், உயிர் இழந்த உடல் போல் கை, கால் இற்றுப் போனான். கண்ணீர் வழிய இருகரம் கூப்பி மன்னிப்பு வேண்டினான்.
 
★“மன்னா, என்னிடம் நீங்கள் மன்னிப்பு கேட்காதீர்கள். என் தாய், தந்தை இருவருமே கண் பார்வை இல்லாதவர்கள். அவர்கள் என்னை நம்பியே இருக்கிறார்கள். தயவு செய்து நீங்கள் அவர்களிடம் சென்று இந்த குடம் நீரை தாகம்தீர அருந்த வைத்து  விஷயத்தைக் கூறி அழைத்து வாருங்கள். நான் இறப்பதற்கு முன் அவர்களைப் பார்க்க விரும்புகிறேன்”என்றான் ரிஷி புத்திரன். சலபேந்திர முனிவரை அழைத்து வர தசரதன் சென்றான்.நீர் குடத்தை சிறுவனின் பெற்றோரிடம் கொண்டு சென்ற தசரதன் தன் மகன் அல்ல என்று கூட அறியாது நீரை பெற்றனர் அவனின் பெற்றோர். தசரதன் நிகழ்ந்த சம்பவத்தை பற்றி அவர்களிடம் சொல்ல மிகவும் வேதனையுற்ற கதறினார்கள் அந்த பார்வையற்ற தம்பதிகள்.
 
★சலபேந்திர முனிவர் தன் மனைவியுடன் கதறியபடி ஓடி வந்தார். அவர்களை அழைத்து வந்த தசரதன் வேதனையுடன் ஒதுங்கி நின்றார். ரிஷி குமாரன் மார்பில் புதைந்திருந்த அம்பை எடுத்தவுடன் “அம்மா” என்ற முனகலுடன் அவன் உயிர் பிரிந்தது. பெற்றோர்களின் அலறல் அந்த வனத்தையே ஸ்தம்பிக்க வைத்தது. தசரதன் நடுங்கினான். “நான் செய்த தவறுக்கு என்ன தண்டனை தந்தாலும் ஏற்றுக் கொள்கிறேன்” என்று கை கூப்பி வணங்கி நின்றான்.
 
★"அரசே, தண்டனை தருவதால் எங்கள் மகன் எங்களுக்குக் கிடைக்க மாட்டான். அவன் இல்லாத உலகில் நாங்கள் இருக்க விரும்பவில்லை. ஆகவே எங்களுக்கு சிதை மூட்டித் தாருங்கள். எங்கள் மகனுடன் நாங்களும் நெருப்பில் இறங்க விரும்புகிறோம்.”என  சலபேந்திர முனிவர் அமைதியாகப் பேசினாலும், அவரது உள்ளக் குமுறலை தசரத மன்னனால் உணர முடிந்தது.
 
★முனிவருடன் வாதாட விரும்பாமல் சிதை மூட்டினான். முனிவர் தன் மனைவி கைப்பிடித்து தீயில் இறங்கும் முன் தசரதரை நோக்கி, “மன்னா, இந்த வயதான காலத்தில் நாங்கள் எங்கள் மகனைப் பிரிந்து தவிக்கிறோம். எங்கள் ஆதாரம் அவன். அவனாலேயே எங்களுக்கு வாழும் ஆசை வந்தது. பெற்றவர்களாகிய எங்களை அவன் பாதுகாத்தான். மரியாதையுடன், எங்கள் சுக துக்கங்களை பார்த்துப் பார்த்து கவனித்தான். அவனிடம் நாங்கள் குழந்தைகளாகிப் போனோம். அவனைக் கொன்று விட்டீர்கள். வயதான காலத்தில் நாங்கள் எங்கள் மகனைப் பிரிந்து தவிப்பது போல், நீங்களும் மகனைப் பிரிந்து தவித்து இறப்பீர்கள்.” என்று சாபம் இட்ட சலபேந்திர முனிவர் மனைவியோடு தீயில் இறங்கி விட்டார்.
 
 
( சாம்பலாகக் கிடந்த அந்த இடத்தைப் பார்த்து தன் மனதில் வெதும்பினாள் நதியாக அங்கு ஓடிய தாமசா.
 
“அநியாயமாக கொல்லப்பட்ட இவனின் பிறப்புக்கு என்ன அர்த்தம்?” என தாய் கங்கையிடம் புலம்பினாள்.
 
“தாமசா!  எந்த உயிரும் காரணமின்றிப் பிறப்பதில்லை. சலபேந்திர முனிவருக்கு இவன் மகனாகப் பிறந்து தசரதரால் கொல்லப்பட வேண்டும் என்பது விதி. ஒரு மகன் பெற்றோர்களை எப்படி கவனிக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் இவன். முனிவரால் தசரதனுக்கு சாபமும், அதன் மூலம் அவருக்கு புத்திர பாக்கியம் உண்டு என்பதை அறிவிக்கவும் காலம் செய்த நாடகம் இது.” என்றாள் கங்கை.
 
“எனில் ரிஷி குமாரனின் வாழ்க்கை?”
 
“அது ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்று. இவன் அடுத்த பிறவியில் அணிலாகப் பிறப்பான். ராமர், ராவணனை வதம் செய்யக் கடலைக் கடக்கும்போது, கடலில் அணை கட்டும் பணியில் இவனும் உதவி செய்வான். அதில் மகிழ்ந்த ராமர் இவனை அன்போடு தடவித் தந்து, இவனை அடையாளம் கண்டு ஆசீர்வதிப்பார். அணில் தான் போகும் இடமெங்கும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு செல்லும்.”
 
கங்கை தொடர்ந்தாள்.
 
“ராமரால் அணிலின் முதுகில் போடப்பட்ட மூன்று கோடுகள், அவரின் சத்தியம், தர்மம், அனைத்து உயிர்களையும் நேசிக்கும் குணங்களைக் குறிக்கும்.” தன் மகளுக்கு விளக்கம் அளித்து விட்டு கங்கை மறைந்தாள்.
 
தாமசா மனம் சமாதானம் அடைந்து மீண்டும் நதியாக மாறிப் பாய ஆரம்பித்தாள்.
 
இச்சம்பவம் நடந்த இடம் இன்று சிரவணதீ என்று அழைக்கபடுகிறது. உத்தர பிரதேசத்தில் காசிபூர் என்ற இடத்தில் இருந்து சுமார் 30 கி.மீ அருகில் உள்ளது இவ்விடம்
 
பின்னாளில் இலங்கை செல்ல கடலில் பாலம் கட்டும்போது, அங்கு சிறுசிறு உதவிகளைப்  புரியும், அணிலாக பிறந்த ரிஷிகுமாரனை, அடையாளம் கண்டுகொண்டு, அதை அன்போடு தடவிக் கொடுக்கிறார் ராமபிரான்.
 
அந்த அணில் ஆனந்தத்தின் அடையாளம். துள்ளிக் குதித்து ஓடி, உற்சாகத்தைப் பரப்பி அனைவராலும் நேசிக்கப்படும் சிரவண குமாரன்.)
 
 
★பல காலம் குழந்தை இல்லாமல் தவித்த தசரதனுக்கு, முனிவரின் சாபமும் கூட வரமாக இனித்தது. ‘மகனைப் பிரிந்து இறப்பாய்’ என்றால், மகன் இருக்கிறான் என்றுதானே அர்த்தம் என்று மகிழ்ந்த அவன் தன்னைக் கண்டுபிடித்து வந்து சேர்ந்த வீரர்களுடன் அயோத்தி கிளம்பி சென்றான்.
 
★"அரசே! " என்று உரத்த குரலில் கூவிய குரலும் அவன் தோளைப் பிடித்து உலுக்கிய கரமும் சேர்ந்து தசரதனை பழைய நினைவில் இருந்து மீட்டன. எதிரிலே நின்று இருந்த ராணி கௌசல்யாவைப் பார்த்து லேசாக சிரித்தபடி ஏதோ பழைய நினைவுகள் எனக்கூறி சமாளித்தான் மன்னன் தசரதன்.
 
நாளை.................
ஶ்ரீராம காவியம்
~~~~~
031 / 26-04-2021
 
ரிஷ்யசிருங்கர்...
 
★ராணி கௌசல்யா பழைய நினைவில் இருந்து விடுபட்ட தசரதனை நோக்கி பலத்த யோசனைக்கு காரணம் என்ன என்று வினவினாள். நமது குழந்தைகள் பிறப்பதற்கு முன் நடந்த ஒரு சம்பவம் மனதை உறுத்தியது. அதாவது வனத்தில் முனிவரின் குமாரனை மான் என நினைத்து அம்பெய்து மரணம் அடையச் செய்த பரிதாபகரமான நிகழ்சி அது என்றான் தசரதன்.
 
★கௌசல்யா! நம் குழந்தைகள் பிறப்பதற்கு முன் நாம் பட்ட மன வேதனைக்கு அளவேது? நமது ரிஷ்யசிருங்கரைப் பற்றி குரு வசிஷ்டர் கூறியதால்தானே இந்த பிள்ளைப் பேறு பெற்றோம் என மன்னன் கூறினான். மேலும்
அன்றொருநாள் அரசவையில் தான் அமர்ந்திருந்தபோது குரு வசிஷ்டர் அங்கு வரவே அவரை வரவேற்று ஆசனமளித்து பின்  வணங்கி தமக்கு ஓர் வாரிசு இல்லாத நிலையை எடுத்துக் கூறியதும் ரிஷ்யசிருங்கர் பற்றிக் கூறி அவர் வந்து புத்திரகாமேஷ்டி யாகம் செய்தால் தெய்வக் குழந்தைகள் பிறக்கும் என்றார்.ரிஷ்யசிருங்கர் பற்றி கூற கேட்டபோது வசிஷ்டர் சொல்லத் தொடங்கினார்.
 
★விபாண்டகர் என்ற முனிவர் மகாகீர்த்திமான். யாக, ஹோம காரியங்களில் மிக மிக சிறந்தவர். அவரது புத்திரன் ரிஷ்யசிருங்கர். தாய் முகம் அறியாதவர். பிறந்தது முதல் தந்தையை மட்டுமே தெரியும். மழை இல்லாத இடத்தில் அவர் காலடி பட்டாலே போதும். வானம் பொத்துக் கொண்டு ஊற்றும். இவர் பிறந்தது முதல் காட்டில் உள்ள தங்கள் ஆசிரமத்திலேயே வசித்தார். தந்தையும், மகனும் மட்டுமே அங்கு வசித்தனர். அவரது நண்பர்களெல்லாம் காட்டில் வசிக்கும் சிங்கம், புலி, கரடி, மான்கள், மற்ற விலங்குகள் மட்டுமே. இதைத்தவிர வேறு எந்த உலகப் பொருளையும் அறியாதவர் அவர். 
 
★தந்தையைத் தவிர பிற மனித முகங்களை அவர் பார்த்ததே இல்லை. தந்தைக்கு சேவை செய்வது மட்டுமே இவரது பணி. யாகம், ஹோம முறைகளை தந்தையார் மகனுக்கு கற்றுக் கொடுத்தார். தந்தையார் கொடுக்கும் கனிவகைகள், எப்போதாவது தயாரிக்கும் பட்சண வகைகளைத் தவிர வேறு எந்த உணவையும் பற்றி தெரியாதவர். ஆசை என்ற சொல்லையே அறியாதவர். எனவே, பாவங்கள் செய்ய வழியே இல்லாத உத்தமராக இருந்தார். இப்படிப்பட்ட அப்பழுக்கற்றவரின் காலடிகள் பட்ட இடத்தில் மழை கொட்டுவதில் வியப்பென்ன! 
 
★இந்நிலையில் தான் அங்க தேசத்தில் திடீரென கடும் வரட்சி ஏற்பட்டது.  வானம் பொய்த்தது. மழை இல்லாத காரணத்தினால் விவசாயம் நடக்கவில்லை. எங்கும் பசி பட்டினி. பஞ்சம் தலை விரித்து ஆடியது. அரசன் ரோமபாதன் மழையின்றி நாட்டு மக்கள் வாடுவதைக் கண்டு தானும் வாட்ட முற்றான். என்னவெல்லாமோ யாகங்கள் நடத்திப் பார்த்தான். வருண பகவான் மசியவில்லை. ஒன்றல்ல, இரண்டல்ல, பத்தாண்டுகள் மழை தொடர்ந்து பொய்த்து விட்டது. 
 
★குளங்களில் தேக்கி வைத்த தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தியும் வற்றி விட்டது. மக்கள் இடம் பெயர்ந்து பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாகச் செல்ல  முடிவெடுத்தனர். அரசன் ரோமபாதன்  அவர்களைச் சமாதானம் செய்தான். சிறிது காலம் பொறுத்திருக்க மிகவும் வேண்டினான். எப்படியேனும் மழை பெய்ய வைக்க பூஜைகள் நடத்த உறுதியளித்தான். அமைச்சர்களையும், அவ்வூரில் மிகச்சிறந்த பிராமணர்களையும் அழைத்து ஆலோசித்தான். அவர்கள் ரிஷ்யசிருங்கர் பற்றி தாங்கள் கேள்விப்பட்டதைக் கூறினர். 
 
★அந்த மகான் நம் ஊருக்குள் நுழைந்தாலே, மழை கொட்டி நமது கஷ்டங்களெல்லாம் தீர்ந்து விடும். ஆனால், அதற்காக ஒரு பிரதி உபகாரம் செய்ய வேணும் , என்றனர். மழைக்காக என்ன வேண்டுமானாலும் செய்வதாக மன்னன் வாக்களித்தான். அரசே! ரிஷ்ய சிருங்கரை எப்படியாவது  அழைத்து வருவது எங்கள் பொறுப்பு. ஆனால், அவருக்கு உங்கள் மகள் சாந்தையை கன்னிகாதானம் செய்து தர வேண்டும். சம்மதமா? என்றனர். 
 
★காட்டுவாசியாக இதுவரை காலம் கழித்த முனிவருக்கு பெண் கொடுக்க எனக்கு எப்படி மனம் வரும்? அதிலும் நாட்டின் இளவரசியை மணம் செய்து கொடுப்பதென்றால் முடியாத காரியமல்லவா? என்றெல்லாம் அரசன் பேசவில்லை. முழு மனதுடன் சம்மதித்தான். எனக்கு நாட்டு மக்களின் சுகம் தான் முக்கியம். என் குடும்ப சுகம் அதற்கு பிறகு தான். சாந்தையை உறுதியாக முனிவருக்கு திருமணம் செய்து வைக்கிறேன், என சத்தியம் செய்தான். 
 
★இதன்பிறகு முனிவரை அழைத்து வர யார் செல்வது என்ற சிக்கல் ஏற்பட்டது. பிற மனித முகங்களையே கண்டறியாத அந்த மகானை தாங்கள் போய் அழைத்தால் வரமாட்டார் என அங்கிருந்த அமைச்சர்களுக்கு தோன்றியது. பிராமணர்களும் அவரை அழைத்து வரத் தயங்கினர். அவர்கள் ஒரு உபாயம் செய்தனர்  இவ்வுலகில் பெண்ணால் ஆகாதது எதுவுமில்லை. எனவே சில பெண்களை அனுப்பி அவரை  அழைத்து வருவதென்று முடிவு செய்யப்பட்டது. இளவரசி சாந்தையின் தலைமையில் சில பெண்கள் காட்டிற்கு அனுப்பப் பட்டனர். 
 
★அவர்கள் முனிவர்களுக்கான மரவுரி அணிந்திருந்தனர். விதவிதமான பட்சணங்களையும் தயாரித்திருந்தனர். விபாண்டகர் எங்காவது வெளியே போகட்டும் என ஒளிந்து காத்திருந்தனர். அவர்கள் நினைத்தது போலவே, விபாண்டகர் வெளியே போய் விட்டார். அந்தப் பெண்கள் இதுதான் சமயமென்று கருதி ஆஸ்ரமத்திற்குள் சென்று, முனிவரைப் பணிவாக வணங்கினர். முனிசிரேஷ்டர் ரிஷ்யசிருங்கருக்கு ஆச்சரியம். உலகத்தில் இத்தனை அழகான ஜீவன்கள் இருக்கிறதா? இவையெல்லாம் நம்மைப் போல் இல்லையே. கண், காது, மூக்கு, கை, கால்கள் அப்படியே இருக்கிறது. ஆனால், உடை மாறியிருக்கிறது. இன்னும் சில வேற்றுமைகள் காண்கின்றன. இவர்கள் உடலில் நறுமணம் கமழ்கிறது, என மிக ஆச்சரியப் பட்டார். விபாண்கர் வரும் சமயமாயிற்று என்பதினால் அப்பெண்கள் விடைபெற்றனர்.
 
★ விபாண்டகர் வந்ததும் குடில் மற்றும் மகனிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளதை உணர்ந்தார். அவரிடம் இது பற்றி கேட்டபோது அழகான ரிஷிகுமாரர்கள் இங்கு வந்ததாகவும் அவர்கள் உணவுப் பொருட்களை கொணர்ந்ததாக கூறினார். இனி யாரிடமும் பேச வேண்டாம் என்று விபாண்டகர் மகனிடம் கூறி விட்டு வெளியே சென்றார்.  அவர் வெளியே சென்றதைப் பார்த்த இளவரசி சாந்தை  தன் தோழிகளுடன் அந்த குடிலுக்குள் நுழைந்தாள். அப்பெண்களை அவர் வரவேற்று உபசரித்தார். ஆஸ்ரமத்திலுள்ள கனிகள், கிழங்குகளைக் கொடுத்தார். அப்பெண்களும் பதிலுக்கு தாங்கள் கொண்டு வந்த பட்சணங்களைக் கொடுத்து சாப்பிடும்படி வேண்டினர். அவரும் சாப்பிட்டுப் பார்த்தார். 
 
★தினமும் ஒரே வகையான பழமும், கிழங்கும் தின்றவருக்கு இந்த பட்சணங்கள் தேனாய் சுவைத்தன. ருசியோ ருசி. தன்னை மறந்த நிலையில் இருந்த ரிஷ்யசிருங்கரிடம், மகாமுனிவரே! தாங்கள் தயவு செய்து எங்களுடன் எங்கள் ஆஸ்ரமத்திற்கு வாருங்கள். அங்கு வந்தால், வித விதமான பட்சணங்கள் கிடைக்கும், என்றனர். ரிஷ்யசிருங்கர் ஒரு வித்தியாசமான உலகம் எங்கோ இருப்பதைப் புரிந்து கொண்டார். தந்தை வரும் முன் கிளம்புவது உசிதமென அப்பெண்கள் வலியுறுத்தவே  அவர் அங்க தேசத்துக்கு கிளம்பினார். அந்நாட்டு எல்லையில் ரிஷ்யசிருங்க முனிவரானவர் நுழைந்தாரோ, இல்லையோ, மழை ஊற்றித் தள்ளியது. பத்து ஆண்டுகளாக தலைமறைவான மழை, ஒரே நாளில் கொட்டி தீர்த்து விட்டது. 
 
★மக்கள், மன்னன் மகிழ்ந்தனர். கால்நடைகள் குதித்தாடின. சிறுவர்கள் மழையில் நனைந்து விளையாடினர். மன்னன் ரிஷ்யசிருங்கரை மகிழ்ச்சியுடன் வரவேற்றான். அதே சமயத்தகல் தன் மகனைத்தேடி முனிவர் விபாண்டகரும் அங்கு மிகுந்த கோபத்தோடு வந்து விட்டார். ரோமபாத மன்னனுக்கு சாபம் அளிக்க எத்தனிக்கும் போது ஊர் மக்களனைவரும்  மன்னனோடு சேர்ந்து விபாண்டகரின் காலில் விழுந்து தங்கள் நிவையைக் கூறி மன்னிக்த வேண்டினார்கள். தங்கள் நிலையை எடுத்துச் சொன்ன மன்னவன் ஒரு நல்ல காரியத்திற்காக அப்பெண்களை அனுப்பி உங்களை வரவழைக்க வேண்டியதாயிற்று. இதற்காக எங்களை மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 
 
★தாங்கள் என் மகள் சாந்தையை தங்கள் மகன் ரிஷ்யசிருங்கர் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றான் மன்னன் ரோமபாதன்.மகனை அழைத்து வந்த வழி தவறாக இருப்பினும்  நோக்கம் நேர்மையாக இருந்ததால் தான் அவர்களை மன்னிப்பதாகவும் திருமணத்திற்கும் சம்மதமென கூறினார். உலகம் என்றால் இன்னதென்று அறிந்து கொண்டு, நீண்ட நாட்களாக அங்கு தங்கியிருந்த முனிவர், சாந்தையை திருமணம் செய்து சுக வாழ்வு வாழ்ந்தார். அந்நாடு என்றும் செழித்திருந்தது. அந்த ரிஷ்யசிருங்கரைத்தான். நீ புத்திரகாமேஷ்டி யாகம் செய்ய அழைத்து வரவேண்டும் என்று தசரதனிடம் கூறினார் வசிஷ்டர். 
 
★ரிஷ்ய சிருங்கரின் கதையைப் படித்த நாமும் நம் தமிழகத்தில் தேவையான மழை கொட்டுமென நம்புவோம்.
 
நாளை..............
 
குறிப்பு:-
(கீழே குறிப்பிட்டுள்ளது சில ஆசிரியர்கள் கருத்து)
 
முதலில் தசரதன் - கோசலை தம்பதியருக்கு சாந்தா எனும் மகள் பிறந்தார். சாந்தாவை அங்க நாட்டு மன்னர் ரோமபாதருக்கு தத்து கொடுத்தார் தசரதன். பின்னர் சாந்தாவின் கணவரும், முனிவருமான ரிஷ்யசிருங்கர் நடத்திய புத்திரகாமேஷ்டி வேள்வியின் மூலம் தசரதனின் - கோசலை, கைகேயி மற்றும் சுமித்திரை ஆகிய  மூன்று மனைவியருக்கு, முறையே இராமர், பரதன், இலக்குவன் மற்றும் சத்துருக்கனன் எனும் நான்கு குழந்தைகள் பிறந்தனர்
 
Ref:-
 
1. Ikshvaku king of Emperor Dasharatha
 
2. Rao, Desiraju Hanumanta. "Bala Kanda in Prose, Sarga 11". Valmiki Ramayana. Valmiki Ramayan.net. பார்த்த நாள் 22 January 2019.
 
3. Kanuga, G.B. (1993). The Immortal Love of Rama. New Delhi: Yuganter Press. பக். 48–49.
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
032 / 27-04-2021
 
புத்திரகாமேஷ்டி யாகம்...
 
★இவ்வாறாக வசிஷ்டர் தனக்கு கூறிய ரிஷ்யசிருங்கரின் திவ்ய வரலாற்றை கௌசல்யாவிற்கு முழுமையாக விளக்கி கூறினான் மன்னன் தசரதன். பிறகு என்ன நடந்தது என ஆர்வமிகுதியால் ராணி கௌசல்யா கேட்கவே   சொல்லதொடங்கினான். அன்று நடந்ததை அப்படியே கூறுகிறேன் கேள்! என்றான் தசரதன்.
 
★வசிஷ்டர் தசரதனிடம் வருத்தப் படவேண்டாம். புத்திர காமேஷ்டி என்னும் வேள்வியை குறைகள் இன்றி செய்தால் உன் கவலை தீரும். ஏழு உலகையும் காக்கும் வலிமையுள்ள மகன் பிறப்பான் என்றார். இதைக்கேட்ட தசரதன் பெருமகிழ்ச்சி அடைந்து வசிஷ்டரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான். புத்திரகாமேஷ்டி யாகத்தை  எப்படி செய்ய வேண்டும் என்று தாங்கள் கூறுங்கள். உடனே அதற்கான ஏற்பாட்டை செய்கிறேன் என்றான்.
 
★புத்திர காமேஷ்டி யாகத்தை முறையாக செய்வது மிகவும் கடினமானது. இம்மியளவு யாகத்தில் தவறு செய்தாலும் யாகம் தனது பலனை தராது. அதற்குரிய நியதிகளை முறையாக நிறைவேற்ற வேண்டும் என்றார் வசிஷ்டர். இதனை கேட்ட தசரதர் இந்த யாகத்தை முறையாக யாரால் செய்ய இயலும் என்று கேட்டார். காசிபர் என்னும் முனிவருக்கு விபாண்டகர் என்னும் முனிவர் மகன். அவருக்கு சிவபெருமானே புகழும்படி சகலகலைகளிலும் கற்றுணர்ந்த புதல்வனாக ரிஷ்யசிருங்க என்பவர் உண்டு. அவரை இங்கு வரவழைத்து இந்த புத்திரகாமேஷ்டி யாகத்தை அவரது சொல்படி நடத்துவாயாக என்று வாழ்த்தினார் வசிஷ்டர்.
 
★தன் நண்பனான மன்னன் உரோமபாதனின் நாட்டில் ரிஷ்யசிருங்கர் இருப்பதை அறிந்த தசரதன் அவரை முறையாக தன் நாட்டிற்கு அழைத்துவர தனது மந்திரி சுமத்திரனோடு சென்றார். தன் நாட்டிற்கு தசரதர் வருவதை அறிந்த உரோம்பாதன் நாட்டின் எல்லைக்கே சென்று தசரதனை வரவேற்று விருந்தளித்தான். தசரதர் வந்த காரணத்தை அவரிடம் கேட்டு தெரிந்து கொண்ட உரோம்பாதன் தானே ரிஷ்யசிருங்க ரிஷியை அயோத்தி நகருக்கு அழைத்து வருவதாக வாக்களித்தார். 
 
★தசரதர் சென்ற பின் ரிஷ்யசிருங்க  இருக்கும் இடத்திற்கு வந்த உரோமபாதன் அவருக்கு உபசாரங்கள் செய்தான். இதனை கண்ட ரிஷ்யசிருங்கர் வந்த நோக்கம் என்ன என்று கேட்டார். தாங்கள் தமக்கு ஒரு உதவி செய்ய   வேண்டும் என்று உரோமபாதன் கேட்டுக் கொண்டான்.  என்ன வேண்டும் கேளுங்கள்  என்றார் ரிஷி. அசுரர்களால் துன்பப்பட்ட இந்திரனுக்கு உதவி செய்த தசரதரின் நாட்டிற்கு சென்று அவருக்கு புத்திர காமேஷ்டி யாகத்தை செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான் உரோமபாதன். தன் மனக்கண்ணில் தேவலோக நிகழ்வுகளைக் கண்ட ரிஷி இது எல்லாம் எம்பெருமான் ஶ்ரீமன் நாராயணனின் விளையாட்டு என்றுணர்ந்து  உடனே அயோத்தி கிளம்புவோம் என்றார். பின் ரிஷ்யசிருங்கர் தன் மனைவி சாந்தை மற்றும் அங்கதேச அரசன்  உரோமபாதனுடன் அயோத்தி நோக்கி கிளம்கினார்.
 
★உரோமபாதன் அனுப்பிய ஒற்றன் ரிஷ்யசிருங்கரிஷி அயோத்திநகர் வருவதை தசரதனுக்கு தெரிவித்தான். அதனை கேட்ட தசரதன் அயோத்தி நகருக்கு மூன்று யோசனை தூரம் (ஒரு யோசனை தூரம் என்பது தோராயமாக 15 கிமீ தூரம் ஆகும்) சென்று முரசு வாத்தியங்கள் ஒலிக்க மலர்கள் தூவி முனிவரின் அடிபணிந்து தனது தலைநகருக்கு அன்புடன் வரவேற்றான். 
 
★அரண்மனைக்கு வந்த சிருங்கரிஷி தசரதரை பார்த்து வசிஷ்டரை குலகுருவாக கொண்ட உன்னை போன்ற அரசர்கள் யாரும் இல்லை என்று வாழ்த்தி யாகத்திற்கு செய்ய வேண்டிய நியதிகளையும் ஒழுக்கங்களையும் மற்றும் விரதங்களையும் கூறினார். அவரின் ஆணைக்கு உட்பட்டு தசரதனும் அவன் மனைவியர் மூவரும் அதற்கான நியதிகளை கடைபிடிக்க ஆரம்பித்தனர்.
 
★யாகம் செய்யும் யாக பூமியை உழுது விதிப்படி திருத்தி அமைத்தார்கள். யாக சாலையில் ஆகவானீயம், தக்ஷ்ணாக்கினி, காருகபத்தியம் என மூன்று விதமான யாக குண்டங்கள் கட்டப்பட்டன. வேதம் ஓத யாக குண்டங்களில் புத்திர காமேஷ்டி யாகத்திற்கு தேவையான ஆகுதி பொருட்கள் அனைத்தும் நெய்யுடன் போடப்பட்டது. யாகம் தொடர்ந்து 12 மாதங்கள் நடந்தது. யாகம் உச்சநிலை அடைந்ததும் யாக நெருப்பில் இருந்து திவ்யஸ்வரூபியாக ஒருவர் மேலே கிளம்பி வந்தார். அவர் கையில் கலசம் ஒன்று இருந்தது. அதை அவர் தசரதனிடம் கொடுத்துவிட்டு மறைந்தார்.
 
★அந்த திவ்யஸ்வரூபியிடம் பெற்ற கலசத்தில் இருந்த அமிர்த பாயசத்தை மனைவிகள் மூவருக்கும் கொடுக்குமாறு ரிஷ்யசிருங்கரிஷி தசரதரனிடம் கட்டளையிட்டார்.   அப்போது சங்கு முரசுகள் முழங்க ஒரு வருடமாக நடைபெற்ற யாகம் இனிது நிறைவேறியது என அறிவிக்கப் பட்டது. பிறகு நடந்ததுதான் உனக்குத் தெரியுமே கௌசல்யா! என்று  கூறினான்  தசரதரன்.
 
★யாகத்தில் ஈடுபட்ட அனைத்து அந்தணர்களுக்கும் மற்றும் வேதியர்களுக்கும் பொன் பொருள் பட்டாடைகள் கொடுத்து அனைவரும் மரியாதையுடன் அனுப்பிவைக்கப் பட்டார்கள்.. வசிஷ்டரையும் ரிஷ்யசிருங்கர் தம்பதிகளையும் வணங்கி மரியாதை செய்து வழியனுப்பி வைத்தோம். நீங்கள் கர்ப்பம் தரித்த பனிரெண்டு மாதங்கள் ஆனதும்  ஶ்ரீராம ஜனனம் சிறப்பாக நடைபெற்று அயோத்தி மக்களை மிகுந்த ஆனந்த வெள்ளத்தில் மூழ்கடித்தது.
 
நாளை.....................
ஶ்ரீராம காவியம்
~~~~~
033 / 28-04-2021
 
வைகுண்ட நாடகம்...
 
★கௌசல்யா என்னும் கோசலை முற்பிறவியில் மனுசத்ருபா என்னும் பெண்ணாக பிறந்து இருந்தாள். இவள் அதி தீவிர ஶ்ரீமன் நாராயணனின் பக்தை. மேலும் மிகக் கடுமையான தனது தவத்தால் ஶ்ரீமகாவிஷ்ணுவை மகிழ்ச்சி அடையச் செய்து வரம் ஒன்றையும் பெற்றாள். அதுதான் அடுத்த பிறவியில் தனது மகனாக ஶ்ரீமகாவிஷ்ணு  பிறக்க வேண்டும் என்பது. பின்னர் சில வருடங்களில் தனது அசராத பக்தி காரணமாக பூவுலகைத் துறந்து வைகுண்டம் சென்று அடைந்தாள். அவள் வைகுண்டம் சென்ற நேரத்தில்தான் அங்கு  ஶ்ரீராமர் அவதாரம் எடுப்பது  பற்றிய பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தது. ஶ்ரீவிஷ்ணு மகனாகப் பிறப்பேன் என்றதால் அந்த மனுசத்ருபாவும் அங்கு இருந்தாள்.
 
★தர்மாங்கதர் என்ற ஓர் அந்தண முனிவர், கங்கைக்கரையில் ‘ஓம் நமோ நாராயணா’ என்ற அஷ்டாக்ஷ்ர மந்திரத்தை ஜபித்துக்கொண்டு தவம் செய்து கொண்டிருந்தார். அங்கிருந்து சற்று தூரத்தில் ஓர் அக்ரஹாரம் இருந்தது. அங்கு ஓர் அந்தணர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் சாந்த குணமுடையவர். இவரின் மனைவியின் பெயர் கலகை. இவர் அந்த அந்தணருக்கு எதிர்மறையாக இருந்தார்.  இவள் கணவர் வேண்டாம் என்பதை வேண்டும் என்று செய்வாள். வேண்டும் என்பதை வேண்டாம் என்று விட்டு விடுவாள். அவள் எப்போதும்  ஏதாவது கலகம் செய்து கொண்டிருப்பதால் நிம்மதி இழந்து  வெறுப்படைந்த அந்தணர் வீட்டை விட்டு வெளியில் கிளம்பிச் சென்றார். 
 
★அவ்வாறு செல்லும்போது வழியில் அந்தணரை பார்த்து ஐயா, எங்கே போகிறீர்? என்று ஒரு நண்பர் கேட்டார். அதற்கு மனைவியின் துன்பம் என்னால் தாங்க முடியவில்லை. அதனால் வீட்டைவிட்டு வெளியேறி போகின்றேன் என்றார். நான் வேண்டாம் என்பதை வேண்டும் என்று செய்கிறாள். வேண்டும் என்பதை வேண்டாம் என்று செய்கிறாள்  என்று வருத்தமாக கூறினார் அந்தணர். அன்பரே! நான் சொல்லுவதை அப்படியே கடைப்பிடியுங்கள். உங்களுக்கு வேண்டாம் என்பதை வேண்டும் என்று சொல்லுங்கள், என்றார் அந்த நண்பர்.
 
★அந்தணர் வீட்டுக்குச் சென்றார். கலகை! இன்று நான் சாப்பிட மாட்டேன். எனக்கு உணவு வேண்டாம் என்றார். அதெல்லாம் முடியாது. சாப்பிட வேண்டும்  என்று உணவை கோபத்துடன் கொடுத்தாள். இவ்வாறு அந்தணர் கலகையிடம் வேண்டும் என்பதை வேண்டாம் என்று கூறியும் வேண்டாம் என்பதை வேண்டும் என்று கூறியும் சுகமாக வாழ்ந்து வாழ்ந்தார். 
 
★ஒருநாள் அந்த அந்தணர் தன் மனைவியிடம், கலகை! நாளை என் தந்தையுடைய சிரார்த்தம். ஆகவே வீடு வாசல் மெழுகாதே. நீராடாதே. சமைக்காதே என்ற கூறினார். வழக்கம்போல அவள் எல்லாவற்றையும் ஒழுங்காகச் செய்து வைத்தாள். சிரார்தம் முடிந்த பின் பிண்டப்பிரசாதத்தை ஜலதாரையில் கொட்டுமாற சொல்லியிருக்க வேண்டும். அவர் சற்றுக் கவனக்குறைவாக, பிதுர் பிரசாதத்தைச் சுத்தமான நீரில் கொட்டுமாறு கூறிவிட்டார். 
 
★அவள் அதைக் கொண்டு போய் அசுத்தமான தண்ணீரில் கொட்டி விட்டாள். அந்தணர் கோபத்தில், எனக்கு ஆயிரமாயிரம் கொடும் குற்றங்கள் செய்தும் அனைத்து கெடுதல்களையும்  பொறுத்துக் கொண்டேன். பிதுர்களின் தூய பிரசாதத்தை ஜலதாரை தண்ணீரில் கொட்டினாயே ! இது எவ்வளவு பெரிய பாவம், கலகை! நீ அலகையாகப் போகக் கடவது என்று சாபமிட்டார். அந்த ஒரு சாபத்தால் அவள் பெண் பேயாக மாறினாள். அங்கும் இங்குமாக அலைந்து திரிந்து வேதனைப் பட்டாள்.
 
★கங்கைக்கரையில் ஜபம் செய்து கொண்டிருந்த தர்மாங்கதரை இந்த பெண் பேய் பிடிக்கச் சென்றது. அப்போது முனிவர் கமண்டலத் தண்ணீரை, ‘ஓம் நமோ நாராயணா’ என்று தெளித்தார். அந்த மந்திர நீரால் அவளது பாவமும் சாபமும் விலகிவிட்டன. அவள் அவருடைய அடிமலர் மீது வீழ்ந்து தொழுது, தர்மாங்கதரே! நான் கலகை என்ற பெயருள்ள பெண். கணவனுக்கு குற்றங்கள் செய்த பாவத்தால், அவருடைய சாபத்தால் பேயாக அலைந்து நொந்தேன் என கதறியவாறு கூறினாள். 
 
★தர்மாங்கத முனிவர், அம்மா! அழாதே. நான் அறிவு தோன்றிய நாள் தொட்டு இன்றுவரை செய்த தவத்தில் பாதி உனக்கு தந்தேன் என்று நீர் வார்த்து உறுதியாக சொன்னார். அதன்பயனாக யாரும் செய்யத் துணியாத ஓர் அருஞ்செயலை செய்ததால் வைகுண்டத்திலிருந்து வந்த பொன்மணி விமானம் அவர்கள் இருவரையும் வைகுண்டத்துக்கு அழைத்து சென்றது. அவர்கள் பரவாசுதேவனைச் சேவித்தப் பேரின்பத்தை எய்தினார்கள். அப்போது தேவர்களனைவரும் அங்கு குழுமி இருந்தனர்.
 
★திருமால் தேவர்களை நோக்கி அமரர்களே! நான் பூவுலகில் ராமனாக அவதரித்து ராவணாதி அரக்கர்களை அழித்து தங்களது துயர் நீக்கி அருள் புரிவேன். ஆகவே, நான் மனிதனாக வந்து அவதரிப்பேன். தேவர்களாகிய நீங்கள் முன்னதாகவே அங்கு வானரங்களாகப் பிறந்து இருங்கள் என்று கட்டளையிட்டார் திருமாலின் கட்டளையின்படி, 
வானவர்கள் வானரங்களாகப் பிறக்க தயாரானார்கள். 
 
★தேவர்களனைவரும் பூமியில்  ஶ்ரீராமராக பிறக்கப் போகும் பரந்தாமனுக்கு உதவிட தயாராக தங்கள் அம்சமாக வாலி, நீலன், சுக்ரீவன், அங்கதன் மற்றும் ஹனுமாராக பிறப்பெடுப்பதைப் பற்றி கூறிக்கொண்டிருந்தார்கள் அப்போது தேவி சரஸ்வதி, தான் கேகயநாட்டு மன்னன் அஸ்வபதி மகளாக பிறக்க தன்னுடைய அருள் பெற்ற அம்சத்தை அனுப்ப இருப்பதாக தெரிவித்தார்.
 
★ஶ்ரீமன் நாராயணர் முனிவர் தர்மாங்கதரைப் பார்த்து, தர்மாங்கதரே! நீ பூவுலகில் ஆதித்த குலத்தில் பிறந்து தசரதன் என்ற பெயர் பெற்று பல்லாயிரம் ஆண்டு தவம் செய்வாயாக. உனக்கு நான் மகனாகப் பிறந்து ராமன் என்ற பெயருடன் விளங்கி ராவணனை வதம் செய்து நாட்டுக்கு நலம் செய்வேன். அம்மா! மனுசத்ருபா! நீ  கௌசல்யா என்ற பெயரில் பிறந்து பின் தசரதனுக்கு மனைவியாக ஆவாய். உனக்கு நான் மகனாகப் பிறப்பேன் எனகூறினார்.
 
★மேலும் கலகை! நீ கேகய நாட்டில் அஸ்வபதி என்ற மன்னனுக்கு மகளாகப் பிறக்கப் போகும் கைகேயிக்கு தாதியாக மந்தரை என்ற பெயருடன் சமயம் வரும்பொழுது என்னைக் கானகம் போகச் சொல்லிக் கலகம் செய்வாய்.கைகேயியை தூண்டி விடுவாய் என்றார். பிறகு வைகுண்டம் அடைவாய் என்று கூறினார். திருமாலுடைய சக்கரம் பரதனாகவும், சங்கு சத்துருக்கனாகவும், ஆதிசேஷன் லக்ஷ்மணனாகவும் பிறக்க திருமால் கட்டளையிட்டருளினார்.
அதுபோலவே ஶ்ரீராம ஜனனம் இனிதே நடந்தேறியது.
 
நாளை.....................
 
குறிப்பு:-
நண்பர்களே
வணக்கம் பல.
 
ஒரு சிறிய சந்தேகம். இங்கு நான் பதிவிடும் இந்த ஶ்ரீராமகாவியம் தொடர்பதிவை யாராவது படிக்கிறீர்களா? இல்லை. நான் வெறுமனே குருட்டுத் தனமாக பதிவிடுகிறேனா? என்பதே அது.
நான் இந்த பதிவை ஃபார்வேர்டு (மறுபதிவு) செய்யவில்லை. நன்குவரவேண்டும் என்பதற்காக அநேக புத்தகங்களைப் படித்து நல்ல சாராம்சங்களை தொகுத்து பதிவிடுகிறேன். ஒரு பத்து பதினைந்து பேராவது இந்தப் பதிவை படிக்கிறார்கள் என்று தெரிந்தால் மிக உற்சாகமாக இருக்கும். "கடமையை செய். பலனை எதிர்பாராதே" என கீதையில் கண்ணன் கூறினான். அறிவிற்கு தெரிகிறது. ஆனால் மனம் கேட்கவில்லையே!
 
"ஹரி சித்த ஸத்ய|"
ஶ்ரீராம காவியம்
~~~~~
034 / 29-04-2021
 
சரஸ்வதி@கைகேயி...
 
 ★அஸ்வபதி  பண்டைய பாரத கண்டத்திற்கு வடமேற்கு நாடுகளில் ஒன்றான கேகய நாட்டின் மன்னர் ஆவார். கேகய நாட்டில் வலிமை மிகுந்த போர்க் குதிரைகள் மிகவும் அதிகமாக வளர்ந்ததால், அந்த கேகய நாட்டு  மன்னருக்கு அஸ்வபதி என்பதே (குதிரைகளின் தலைவன்)  பெயராயிற்று.  இந்நாடு தற்கால ஆப்கானித்தான் நாட்டிற்கு வடக்கே கசக்கஸ்தானில் அமைந்திருந்தது. கேகய நாடு குறித்து இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற மாபெரும் இதிகாசங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. 
 
★திரிகர்த்ததேசத்திற்கு ஏற்பட்ட பருவ நிலையும், பூமி வளப்பமும், பெரும்பாலும் இந்த தேசத்திற்கு உண்டு. குளிர், மழை விடாமல் மாதம் மும்மாரி மழை பெய்துகொண்டே இருக்கும். கேகயம், பாஹ்லிகம், மாத்ரம், காந்தாரம் முதலான தேசங்களில் நல்ல வெயில் தோன்றும் ஆனால் வெய்யிலை ஒருவரும் காணமுடியாது.
 
★மலை, காடு, மிருகங்கள்
இந்த தேசத்தின் வடக்கில் உள்ள பெரிய பெரிய குன்றுகளுக்கும் அருணகிரி என்று பெரிய மலைத்தொடரும்,  சதத்ரு என்ற நதியின் கரையோரமாய் வடக்கில் கொஞ்சம் நீண்டு இருக்கிறது. இதன் நடுவில் கொஞ்சம் இடைவெளியுண்டு, இதில் சிறிய காடுகளும், அவைகளில் கருங்குரங்கு, பெரிய மலைப்பாம்பு, கரடி ஆகிய மிருகங்கள் அதிகமாக இருக்கும். இந்த தேசத்தின் பூமிவளம் மிகவும் பனியாகவும் குளிர் மிகுந்தும் நன்மையானபடியால் கொடிய மிருகங்கள் அதிகமாக இம்மலைகளில் இல்லை.
 
★இந்த தேசத்தின் தெற்கு திசை முனையில் அருணகிரி மலை தொடர்ச்சியின் முடிவில் விபாசா நதியும், கிழக்குப் பாகத்தில் சதத்ருநதியும் இணைந்து மகாநதியுடன் சேருகிறது. இந்த தேசத்திற்கும், திரிகர்த்த தேசத்திற்கும், கேகய நாட்டிற்கும் எல்லையாக சென்று வநாயு தேசத்தின் சமீபத்தில் சிந்து நதியுடன் இணைகிறது.
 
★கேகய தேசத்தின் மன்னர் அஸ்வபதி  தலைசிறந்த ஒரு தர்மவான். எல்லா விதமானக் கலைகளிலும் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர்.'வைச்வானர' என்பது வித்தைகளில் மிகவும் தேர்ந்த வித்தை. அதில் அவர் தேர்ச்சி பெற்றவர். அத்துடன் சரஸ்வதி தேவியை உபாசிக்கும்
பக்தர். ஒரு நாள் பூஜையை முடித்து எழுந்தார் மன்னர் அஸ்வபதி. எதிர்பாராத விதமாகக் கையில் வீணையுடன் பால வடிவத்தில் சரஸ்வதிதேவி தரிசனம் தந்தாள். 
 
★ஆனந்தத்தின் எல்லையை அடைந்த மன்னர், அம்பிகையை வலம் வந்து துதித்தார். தன் உள்ளத்தில் இருந்ததை வெளிப்படுத்தினார். அம்மா! உனக்குச் சமமான குழந்தையை எனக்குத் தந்தருள வேண்டும். இதுவே நான் கேட்கும் வரம்! என வேண்டினார். சிரித்தாள் சரஸ்வதி. எனக்குச் சமமாகவா.. சரிதான்! நானேதான் உனக்குப் பெண்ணாக அவதரிக்க வேண்டும். நீ ஒன்று செய். ஐப்பசி மாதப் பவுர்ணமி அன்று "ஸாரஸ்வத இஷ்டீ" என்ற யாகம் செய். என்னுடைய அம்சமானது அந்த யாகத் தீயில் தோன்றி, உனது வீட்டில் உன் குழந்தையாக வளரும்! என்று சொல்லிவிட்டு மறைந்தாள் சரஸ்வதி தேவி.
 
★ஐப்பசி மாத பவுர்ணமியில் சரஸ்வதி சொன்ன "ஸாரஸ்வத இஷ்டீ" யாகத்தை முறைப்படி செய்தார் அஸ்வபதி. கௌதம முனிவர், முனிவர்களுக்குத் தலைவராக இருந்து யாகத்தை நடத்தினார். மாலை நேரம். யாக அக்னியில் இருந்து சரஸ்வதி  தேவி வெளிப்பட்டாள். தங்க மயமான பாத்திரத்தில் நிறைந்திருந்த அவிர்பாகத்தை (யாகத்தீயில் தேவர்களுக்காகப் போடப்படும் சாதம்) சுட்டிக் காட்டியபடி, அஸ்வபதி மன்னா! உனது அபரிமிதமான அன்பின் காரணமாக இந்த அவிர்பாகம் மிகவும் இனிமையாக உள்ளது. இதை நான் மட்டும் ஏற்றால் சரியாகாது. இதோ, இங்குள்ள தேவர்கள் அனைவருக்கும் இந்த அவிர்பாகத்தைப் பங்கிட்டுக் கொடு! அப்போதுதான் எனக்கு திருப்தி உண்டாகும்! என்றாள். 
 
★அவிர்பாகம் அங்கிருந்த தேவர்களுக்கெல்லாம் பங்கிட்டு கொடுக்கப்பட்டது. தங்களுக்குக் கிடைத்த அவிர்பாகத்தை (சாதத்தை) சிவபெருமானுக்கு சமர்ப்பணம் செய்தார்கள் தேவர்கள். இது ஏன்? சிவனுக்கு அவிர்பாகம் தராமல் அவரை விலக்கிவிட்டு யாகம் செய்த தட்சனும், அதில் கலந்துகொண்ட தேவர்களும் அவமானப்பட்டு, சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட நேரம் அது. எனவே, தட்ச யாகத்தில் கலந்து கொண்ட பாவம் தீர்வதற்கு அஸ்வபதி மன்னர் தங்களுக்கு தந்த அவிர்பாகத்தை சிவனுக்கு சமர்ப்பித்தார்கள். ஐப்பசி மாதத்தில் சிவ பெருமானுக்கு செய்யும் அன்னாபிஷேகத்துக்கு இதுவே மூலாதாரமாக அமைந்து உள்ளது. 
 
★யாகத்தில் அஸ்வபதி மன்னருக்கு தரிசனம் தந்த தேவி, அவரது பிரார்த்தனைக்கு இணங்கி தனது அம்சமாக ஒரு மானிடப் பெண்ணை சிருஷ்டி செய்து , கேகய ராஜனான அஸ்வபதிக்கு மகளாக அவரிடம் ஒப்படைத்தாள்.  இந்த பெண்.  தான் கைகேயி. இவளுக்கு அஸ்வபதி  வைத்த பெயர் சரஸ்வதி. நாளடைவில், தன் தந்தை பார்த்து வந்த வேலையை தானே பார்க்க ஆரம்பித்தாள் சரஸ்வதி. அது என்ன வேலை? அஸ்வபதி மன்னர் வேதத்திலும் கலைகளிலும் மிகுந்த திறமைசாலி என்பதால், போன ஜென்மத்தின் பலாபலன்களைக் கண்டறியும் சக்தி அவருக்கு உண்டு. 
 
★பிரச்னை என்று தன்னை நாடி வருபவர்களுக்கு, அவரவர் பூர்வ ஜென்மத்தையும், அதனால் ஏற்படும் சுக துக்கங்களையும் உணர்ந்து இன்னது செய்யலாம், இன்னது செய்யக் கூடாது என்று சொல்லி நல்வழி காட்டுவார். இதுதான் வைச்வானர வித்தை. அதனால் அரசர்கள் பலர் வந்து தங்கள் அல்லல்களைத் தீர்த்துக் கொண்டு போவார்கள். இந்த வேலையைத்தான் சரஸ்வதியும் செய்ய ஆரம்பித்தாள். அடுத்தவர் குறை தீர்க்கும் பணியை சரஸ்வதி செய்யட்டும். அவளைத் தேடி அயோத்தி மன்னர் வரப் போகிறார். நாம் அவரிடம் போகலாம். அயோத்தி மன்னர் தசரதருக்குக் குழந்தை இல்லை, நாமும் கேகய நாட்டு மன்னர் அஸ்வபதியிடம் போய் வழி கேட்க வேண்டியதுதான் என்று தீர்மானித்த தசரதர், கேகய நாட்டுக்குக் கிளம்பினார். 
 
★தசரதரை வரவேற்றாள் சரஸ்வதி. மன்னா! என்ன காரியமாக வந்தீர்கள்? என்றாள். பெண்ணே! மழலைச் செல்வம் இல்லாத மனக்குறைதான் எனக்கு. அதற்காக மன்னன் அஸ்வபதியைப் பார்க்க வந்தேன் என்றான் தசரதன். சரஸ்வதி வழி சொன்னாள். அதில் தசரதனின் பூர்வ ஜென்ம வரலாறே இருந்தது. தசரதன் திகைத்தான். மன்னா! போன பிறவியில் முனிவராக இருந்த நீங்கள் ஶ்ரீவிஷ்ணுவின் கட்டளைப்படி இந்தப் பிறவியில் தசரதராகப் பிறந்திருக்கிறீர்கள். மேலும் தனக்கு ஶ்ரீவிஷ்ணுவே மகனாக பிறக்க வேண்டும் என்று கடும் தவம் இருந்த  மனுசத்ருபா அவரின் கட்டளைப்படி பூமியில் பிறந்து கௌசல்யா என்ற பெயரில் தங்களை மணந்து கொண்டாள். 
 
★திருமாலின் தீவிர பக்தையான விதர்பதேச அரச குமாரியான சுமித்ரையும் உங்களை மணம் முடித்தாள். நீங்கள் என்னையும் மணம் செய்து கொண்டால், உங்கள் தோஷங்கள் நீங்கும். மேலும்,  மஹாவிஷ்ணுவே உங்கள் பரம்பரை பூஜா விக்கிரமாக ஸ்ரீரங்கநாதர் என்ற பெயரில் விளங்கி வருகிறார். அவரை பூஜை செய்யுங்கள். உங்கள் விருப்பம் நிறைவேறும். தெய்வக் குழந்தைகள் பிறக்கும். ஆகவே திருமணம் குறித்து என் தந்தையிடம் பேசுங்கள்! என்றாள். மனக் கவலை தீர மருந்தைத் தெரிந்து கொண்ட தசரதர், அஸ்வபதி மன்னரைச் சந்தித்தார். நடந்ததை எல்லாம் விவரித்தார். அஸ்வபதியும் ஒப்புக் கொண்டார். இளவரசி சரஸ்வதிக்கும் தசரதருக்கும் திருமணம் நடந்தது. இந்த சரஸ்வதி, கேகய இளவரசி என்பதால் கைகேயி என அழைக்கப்பட்டாள். 
 
★முன்பே வைகுண்டத்தில் தீர்மாணித்தபடி கலகை கேகய நாட்டு அரண்மணை தலைமை தாதிக்கு மகளாக மந்தரை என்ற பெயரோடு அவதரித்து வளர்ந்து வந்தாள். அவள் முதுகு சற்று வளைந்து இருந்ததால் அவளை அநேகர் கூனி என்றே அழைக்க தொடங்கினர். சரஸ்வதி என்கிற கைகேயி பிறக்கும்போது கூனி மந்தரை பெரிய பெண்ணாக இருந்தாள். கைகேயியை வளர்த்ததில் மந்தரைக்கு பெரும் பங்கு உண்டு. உற்ற தோழியாக கைகேயிக்கு விளங்கினாள். திருமணம் முடிந்து தசரதனுடன் கைகேயி அயோத்தி செல்லும் போது மந்தரையையும் உடன் அழைத்துச் சென்றாள்.
 
★தசரதனின் மனைவிகள் மூவரில் இளையவள், கைகேயி. அழகே உருவானவள். வீரமும் விவேகமும் கொண்டவள். தன் அன்பாலும் பாசத்தாலும் தசரதன் உள்ளத்தில் மட்டும் அல்லாமல், அனைவரின் உள்ளத்திலும் இடம்  பெற்றவள்.  ராணி கைகேயி எத்தகையவள் என்பதை விளக்கும் சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. சம்பராசுரன் என்ற அசுரனுடன் தசரதன் ஒருமுறை போர் புரிந்தான். அப்போது, அவனுடைய தேருக்குச் சாரதியாக இருந்தாள் வீராங்கனை கைகேயி. தேரின் அச்சு முறிந்த நிலையில், தன் விரலையே அச்சாணியாகக் கொடுத்து, தன்னுயிரைப் பணயம் வைத்து, தசரதன் உயிரைக் காத்தாள். கைகேயி. 
 
★ரதத்தின் கடையாணிக்குப் பதில்  தன் விரலை எப்படி பயன்படுத்தினாள் என்பது தெரியுமா? ஏனெனில், அந்த விரல் மட்டும் இரும்பு விரலாக இருந்தது. ஒரு சமயம், தசரதரின் அரண்மனை மாளிகையில் முனிவர்  துர்வாசர் தங்கியிருந்த போது, அவருக்கு பணி விடை செய்தாள் கைகேயி. துர்வாசருக்கு அடிக்கடி கோபம் வரும். சாபம் கொடுத்து விடுவார். துர்வாசர் இப்படி கோபம் கொண்டு சாபம் கொடுப்பது வழக்கம். அவருக்கு ஒரு வரம் இருந்தது. அவர் சாபமிட்டால் அவரது தவம் கூடுதலாகுமாம். அதனால், அவர் எப்போதுமே யாரையாவது சாபமிடுவது வழக்கம். 
 
★தசரதருடைய அரண்மனையில் துர்வாசர் தங்கிவிட்டுப் போகும் போது, பக்கத்திலுள்ள தனது தோழிகளிடம், அதோ அங்கு போகிறாரே, அவர்தான் துர்வாசர்   என்று, தன் ஆள்காட்டி விரலால் காண்பித்தாள் கைகேயி. இதை பார்த்த துர்வாசர், அந்த ஆள் காட்டி விரல் இரும்பாகப் போகட்டும்  என்று சாபம் கொடுத்தார். கைகேயின் ஆள்காட்டி விரல் மட்டும் இரும்பாக மாறியது. ஆனால், அதுவே நன்மையாக ¬முடிந்தது. தசரதரின் ரதத்திலிருந்த கடையாணி ஒடிந்த போது, தன் ஆள்காட்டி விரலையே கடையாணியாக பயன்படுத்தி ரதத்தை ஓட்டினாள் கைகேயி. 
 
★அவளின் பதிபக்தி மற்றும் தியாகத்தில் சிலிர்த்த தசரதன், இரண்டு வரங்களை அவளுக்கு அளித்தான். பேராசைக்காரியாக அவள் இருந்திருந்தால்  
தானே பட்ட மகிஷியாக ஆக வேண்டும் என்றும், தனக்குப் பிறக்கும் குழந்தைக்கே முடிசூட்ட வேண்டும் என்றும் அப்போதே வரம் கேட்டிருக்கலாம். ஆனால், அவள் அப்படிச் செய்யவில்லை. கணவனுக்குச் செய்த சேவை, தன் கடமைதானே என்று உணர்ந்து, வரங்கள் இப்போது வேண்டாம். தேவைப்பட்டால் பின்பு எப்போதாவது கேட்டுப் பெற்றுக்கொள்கிறேன் என்று பெருந்தன்மையாகக் கூறினாள். 
நினைவலைகள் போதும். இனி ராமகாதைக்குள் செல்லலாம்.
 
நாளை.........................
 
 
Ref:-
 
1) "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
 
2) "புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்" - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு.
 
குறிப்பு:-
 
அன்பு நண்பர்களே
வணக்கம் பல.
 
நேற்றைய பதிவில் என் சிறு ஆதங்கத்தை குறிப்பிட்டு இருந்தேன். ஆனால் உங்களில் பெரும்பான்மையோர் அளித்த பதில்களில் கண்ணீர் வடித்து மெய்சிலிர்த்தேன். நன்றி சொல்ல வார்த்தை இல்லாமல் தவிக்கின்றேன். இன்னும் சிறப்பாக"ஶ்ரீராம காவியம்" வருவதற்கு ராமச்சந்திரனும் சங்கரனும் நரசிம்மனும் உதவிட மனதார இறைஞ்சுகிறேன். 
' ஹரி சித்த ஸத்ய '
 
நன்றியுடன்
நாக சுபராஜராவ்.
9944110869.
[8:06 PM, 4/30/2021] Mohan SriRaghavendrar Kulithalai: ஶ்ரீராம காவியம்
~~~~~
035 / 30-04-2021
 
இளமைப் பருவம்...
 
★ராஜகுமாரர்கள் நான்கு பேரும் இனிது வளர்ந்தார்கள்.இவ்வளவு வருடங்களாக குழந்தைகளின் மழலை மொழி கேட்காத தசரதன் அரண்மனையில் அவர்களின் மழலைப் பேச்சு சப்தமும் ஓடியாடி விளையாடும் சப்தமும் எங்கும் எதிரொலித்தது. ராணிகள் மூவரும் பாகுபாடு ஏதுமின்றி பாசமழை பொழிந்தார்கள். மன்னன் தசரதனோ எந்நேரமும் தெய்வக் குழந்தைகளுடனே தன் நேரத்தை செலவிட்டான். அவர்களுடன் விளையாடுவதில் வாழ்வின் உச்சபட்ச மகிழ்வை வெளிப்படுத்தினான் தசரதன். 
 
★குழந்தை ராமன் எப்போதும் கைகேயி உடனே இருந்தான். இருவரின் பாசப்பிணப்பினைக் கண்டு அனைவரும் மகிழ்ந்தனர்.  சகோதரர்கள் நால்வரும் எங்கு பார்த்தாலும் ஒன்றாகவே இருந்தனர். அதிலும் ராமனும் லக்ஷ்மணனும் ஒன்றாகவும் பரத சத்ருக்ணர்கள் ஒன்றாகவும் சேர்ந்தே காணப்பட்டனர். மேலும் கைகேயியின்  தாதி கூனி மந்தரை இவர்களின் ம…
[8:27 PM, 4/30/2021] +91 97890 61122: அன்பான உங்களுக்கு ஒரு வேண்டுகோள்
 நான் கண்ட உண்மை என்னவென்பதை இங்கு தெரிவித்து கொள்ள கடமைப்பட்டுலளேன்.
கல் உப்பு கொண்டு கொரோனாவை அழிக்க முடியும். நாம் எவ்ளோ தான் sanitiser,  mask எல்லாம் போட்டாலும்  கொரோனாவை நாம் அழிக்க ஒரே வழி கல் உப்பு. 
டெட்டால் lizol மற்ற எல்லா ஆன்டிசெப்டிக் திரவத்துக்கு முன் நம் கல் உப்பு தான் சிறந்தது.
விலை கம்மி கல் உப்பை வாங்கவும். ஒரு பக்கெட்டில் தண்ணி நிறைத்து அதில் கல் உப்பு கால் கிலோ போட்டு கலக்கி வைக்கவும். வீட்டுக்கு வெளியே சென்றால் வந்தவுடன் அதில் முகம் கை கால் அலம்பி அப்புறம் வீட்டுக்குள் செல்லவும். அந்த தண்ணி கெடாது குறைய குறைய நிரப்பி கொள்ளவும்.
அடுத்தது வீட்டு மூலையில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு போட்டு வைக்கவும். நாள் முழுவதும் இருப்பதால் ஈரத்தை உறிஞ்சும் தன்மை உடைய கல் உப்பு அனைத்து வகை கிருமிகளையும் கொல்லும். பின்பு அந்த கல் உப்பு கொண்டு வீட்டை கூட்டும் பொழுது வீடு sanitise ஆகிவிடும். சிறு துகள்களாக வீடு முழுவதும் பரவி நமக்கு தீங்கு செய்யும் அனைத்து கிருமிகளையும் கொல்லும்.
இப்பொழுது ஒரு ஸ்பூன் கல் உப்பு கொண்டு ஒரு tumbler நீரில் கலந்து வாய் கொப்பளிக்க வேண்டும். ஒரு நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் செய்யலாம். இது செய்வதால்கொரோனாவின் தாக்கம் நம் தொண்டையில் இருக்காது. எவ்ளோ தான் நாம் மாஸ்க் போட்டாலும் சில சமயம் கொரோனாவை சுவாசிக்க நாம் சந்தர்ப்பம் குடுத்துள்ளோம்.
ஆதலால் மூக்கு வழியாக தொண்டையில் தங்கும்
கொரோனாவை உப்பு தண்ணி கொண்டு அழிக்கலாம். 
 
அப்படியே அழித்தாலும் நம் சுவாச குழாய் வழியாக செல்ல வாய்ப்புகள் அதிகம். இப்பொழுது தான் நாம் கல் உப்பு தண்ணி கொண்டு ஆவி பிடிக்க வேண்டும். அப்படி செய்தால் கண்டிப்பாக அந்த கிருமியை சூடான ஆவியால் அழிக்க முடியும். 
 
யாருக்கு வேணும்னாலும் கொரோனா தொற்று இருக்கலாம். இனி வரும் காலங்களில் இதை செய்து மரணத்தை தவிர்க்கலாம். 
 
தன் மேல் அக்கறை உள்ளவர்கள் பிள்ளைகள் மேல் பாசம் உள்ளவர்கள் இதை செய்யலாம். 
 
முடிந்த அளவு இதை பிரபல படுத்த வேண்டும். மாத்திரை மருந்து கொண்டு குணப்படுத்த முடியாது இன்று கல் உப்பு கொண்டு நாம் தப்பிக்கலாம். 
 
இதில் உள்ள logic புரிந்தால் நலம். சமையல் அறையில் மருந்தை வைத்து கொண்டு நாம் அலைய வேண்டியது இல்லை
உங்களை என் சகோதரர் சகோதரி அம்மா அப்பா மகன் மகள் மற்றும் அனைத்து சொந்தம் பந்தம் என்று நினைத்து கேட்டு கொள்கிறேன். இதை செய்வதன் மூலமாக இந்த 144 தடை எடுக்க வாய்ப்புள்ளது. எப்படி என்றால் கிருமி தொற்று யாருக்கும் இருக்காது. ஆதலால் அரசு இதை கருத்தில் கொண்டு நாம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிட வாய்ப்பு அதிகம் உள்ளது.
 
அனைவருக்கும் பகிருங்கள்👌👍👏
ஶ்ரீராம காவியம்
~~~~~
036 / 01-05-2021
 
விஸ்வாமித்திரர்...1
 
★மிகப் பெரிய முனிவரான விசுவாமித்திரர்   “ராஜரிஷி”  என்று பாராட்டப் படுபவர். அவர் அரசராய் இருந்தவர்.  அவர் தம் அரச பதவியை துறந்து, தவ வேள்விகளைச் செய்து, உயர்பேறுகளைப் பெற்று வந்தார். வேகமும், விவேகமும் துடிப்பும் அவர் உடன்பிறப்புகள். சினமும் சீற்றமும் அவர் நாடித் துடிப்புகள், அவர் வருகையைக் கண்டாலே மாநில அரசர்கள் நடுங்கினர்; அடுத்து என்ன நேருமோ என்று அஞ்சினர்.
 
★ஆரம்பத்தில் அரசனாகவே வாழ்ந்தார். காலப்போக்கில் அவர் முனிவராக மாறினார். அவர் இப்படி மாறியதற்கு பின் ஒரு வியப்பூட்டும் வரலாறு ஒளிந்து உள்ளது. அதை ஒரு கதை போல விவரித்துள்ளார் வியாசர். இதோ அந்த கதை.
 
★காதி என்றொரு அரசன் இருந்தான். அவனுக்கு ஆண் குழந்தை ஏதும் இல்லை. ஆனால் ஒரு அழகிய மகள் இருந்தாள். அவள் பெயர் சத்யவதி. வழக்கம் போல  காலம்  உருண்டோடியது, சத்யவதி திருமண வயதை அடைந்தாள். நற்குணங்களையும் அழகையும் ஒருங்கே பெற்ற அவளை நல்ல வசதியான ஒரு இடத்தில் மணம் முடித்து தரவேண்டும் என்று மிகவும் விரும்பினான் அரசன் காதி. அதற்கான வேலைகளிலும் அவன் தீவிரமாக இறங்கினான். அந்த சமயம் அரசனை தேடி ஒரு முனிவர் வந்தார். அவர் பெயர் ரிசீகர்.
 
★அரண்மனைக்கு வந்த ரிசீகர் சத்யவதியின் அழகையும் நற்குணங்களையும் கண்டு வியந்தார். அவளை மனம் முடிக்க. வேண்டும் என்று விரும்பினார். தன்னுடைய ஆசையை அவர் அரசனிடம் தெரிவித்தார். இதை கேட்ட அரசனுக்கு என்னசொல்வது என்றே தெரியவில்லை. முடியாது என்று சொன்னால் முனிவரின் சாபத்திற்கு ஆளாகிவிடுவோம் என்பது அவனுக்கு நன்கு தெரியும். ஆனாலும் முனிவரை எப்படியாது தட்டி கழிக்க வேண்டும் என்று அவன் எண்ணினான்.
 
★ஆகவே ஒரு நாள் முனிவரை அழைத்து, ஐயா!  முனிவரே!   எனக்கு உங்களிடம் சிறிய வேண்டுகோள் ஒன்று உள்ளது. அதை நீங்கள் நிறைவேற்றினால் என் மகளை உங்களுக்கு மணம்முடித்து தருகிறேன் என்றான் அரசன். 'அது என்ன வேண்டுகோள்' என்றார் முனிவர். ஒரு காது மட்டும் கருப்பாகவும் மற்றபடி  உடல் முழுவதும் வெள்ளையாகவும் உள்ள 1000 குதிரைகளை நீங்கள் எனக்கு தரவேண்டும் என்றான். அரசனின் வேண்டுகோளை ஏற்று குதிரைகளோடு வருவதாகக் கூறி சென்றார் முனிவர். இது போன்ற 1000 குதிரைகளை முனிவர் எங்கு தேடி கண்டுபிடிப்பார். அவரால் அதை தரவே முடியாது. ஆகையால் அவர் சத்தியவதியை மணக்கும் விருப்பத்தை விட்டுவிடுவார் என்று நினைத்தான் அரசன்.
 
★இதற்கிடையில் ரிசீகர் முனிவர் தன்னை மணக்க விரும்புகிறார் என்ற செய்தி சத்யவதியின் காதுகளுக்கு எட்டியது. அவளும் முனிவரை மணக்க விருப்பம் உடையவளாகவே இருந்தாள். அரசனின் வேண்டுகோளை பூர்த்தி செய்ய முனிவர் வருண பகவானிடம் வேண்டினார். வருணபகவானும் அவர் கேட்டது போல 1000 குதிரைகளை தந்து அருளினார். அதை அரசனிடம் ஒப்படைத்தார் முனிவர். இப்போது அரசனுக்கு வேறு வழி இல்லை. ஆகையால் தன் மகளை ரிசீகர் முனிவருக்கு மனம் முடித்து கொடுத்தார்.
 
★ரிசீகரும் சத்யவதியும் நல்ல ஒரு தம்பதிகளாகவே வாழ்ந்து வந்தனர். ஒருநாள் ரிசீகர் சத்யவதியை அழைத்து, நான் உனக்கு ஒரு வரம் தர மிகவும் ஆசைப்படுகிறேன். என்ன வேண்டுமோ கேள் என்றார். தன் கணவன் தன் மீது வைத்து இருக்கும் அளப்பரிய அன்பை கண்டு சத்யவதி மனம் மகிழ்ந்தாள். சுவாமி!, நான் எனக்கான வரத்தை பிறகொரு நாள் கேட்கலாமா என்றாள் சத்யவதி. ரிசீகரும் அதற்கு சம்மதித்தார்.
 
★ஒருநாள் சத்யவதி தன் தாய் வீட்டிற்கு சென்றாள். அங்கு தாயும் மகளும் அனைத்து விஷயங்களை பற்றியும் பேசினர். அப்போது சத்யவதி, தன் கணவர் தனக்களித்த 
வரம் குறித்து தன் தாயிடம் தெரிவித்தாள். என்ன வரம் கேட்க போகிறாய் என்றாள் அவள் தாய். எனக்கான ஆசைகள் இருக்கட்டும், உங்களுக்கு ஏதாவது ஆசை இருந்தால் கூறுங்கள் அம்மா நான் அதை என் கணவரிடம் கேட்கிறேன் என்றாள் சத்யவதி. உடனே அந்த தாய் வெட்கத்தோடு தனக்கொரு ஆண் மகன் பிறந்தால் நன்றாக இருக்கும் என்று கூறினாள். சில மணி நேரங்களுக்கு பிறகு சத்யவதி தன் தாய் வீட்டில் இருந்து புறப்பட்டு தன் இல்லத்தை அடைந்தாள்.
 
★அடுத்தநாள் ரிசீக முனிவரிடம் தனக்கான வரம் குறித்த பேச்சை தொடங்கினாள் சத்யவதி. முனிவரும் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார். சுவாமி, எனக்கொரு மகன் வேண்டும் என்றாள். அருமை, இதை தான்
 நீ கேட்பாய் என்று நான் நினைத்தேன்  என்றார் முனிவர். சுவாமி, என் தாய்க்கும் ஒரு மகன் வேண்டும் என்றாள் சத்யவதி. அப்படியே ஆகட்டும் என்று கூறிய முனிவர் சில மணி நேரம் தியானத்தில் அமர்ந்தார். பின் இரு பிரசாதங்களை அவர் சத்யவதியிடம் கொடுத்தார். ஒரு பிரசாதத்தை குறிப்பிட்டு இதை நீ உண்ண வேண்டும். மற்றதை உன் அன்னை மட்டும் உண்ண வேண்டும். அடுத்த நாள் இருவரும் குளித்து விட்டு நீ அத்தி மரத்தையும் உன் தாய் அரச மரத்தையும் சுற்றவேண்டும் என்றார்.
 
★இரண்டு பிரசாதங்களையும் எடுத்துக்கொண்டு சத்யவதி தன் தாயை சந்திக்க சென்றாள். நடந்த அனைத்தையும் தன் தாயிடம் தெரிவித்தாள். சில நொடிகள் யோசித்த சத்யவதி  தாய், நான் ஒன்று சொன்னால் நீ வருத்தப்படக்கூடாது. பொதுவாக எல்லா தந்தைகளும் தன் மகன் தான் சிறந்தவனாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்  ஆகையால் நீ உண்ணவேண்டும் என்று உன் கணவர் கூறிய அந்த பிரசாதத்திற்கு தான் சக்தி அதிகமாக இருக்கும். ஆகையால் அதை நீ எனக்கு கொடுத்துவிட்டு எனக்காக கொடுத்ததை நீ உண்டுவிடு. மரத்தையும் அதற்கேற்றாற்போல நாம் மாற்றி சுற்றிக்கொள்வோம். எனக்கு பிறக்கப்போகும் உன்னுடைய சகோதரனுக்காக இதை நீ செய்வாயா என்றார். சிறிது நேரம் யோசித்த சத்யவதியும்  சரி என்று கூறிவிட்டாள். அதன் பிறகு பிரசாதத்தை இருவரும் உண்டு விட்டு மரத்தையும் மாற்றி சுற்றினர்.
 
★சில நாட்களில் சத்யவதியும் அவள் தாயும் கர்பம் அடைந்தனர். சத்யவதியின் உருவ மாற்றத்தை கவனித்த முனிவர், பிரசாதம் உண்பதில் ஏதோ குளறுபடி நடந்துள்ளது என்பதை தன் ஞான திருஷ்டியால் அறிந்தார். பெரும் தவறு செய்துவிட்டாயே சத்தியவதி, நான் ஒரு அந்தணன் என்பதால் உனக்கு பிறகும் குழந்தை அந்தணனாக இருக்கவேண்டும் என்றும், உன் தந்தை சத்ரியன் என்பதால் உன் தாய்க்கு பிறகும் குழந்தை சத்ரியனாக இருக்கவேண்டும் என்றல்லவா நான் பிரசாதம் அளித்தேன். இப்போது நீங்கள் இருவரும் பிரசாதத்தை மாற்றி உண்டதால் உன் தாய்க்கு பிறக்கும் குழந்தை அந்தணன் குணத்தோடு எப்போதும் தவம் செய்துகொண்டிருக்கவே விரும்புவான். உனக்கு பிறக்கப்போகும் குழந்தையோ போர் குணத்தோடும் அனைவரையும் கொன்று குவிக்கும் வலிமையோடும் பிறக்கப்போகிறான் என்றார். இதை கேட்டு அதிர்ந்த சத்யவதி, நான் செய்த தவறை மன்னித்து இதை எப்படியாவது மாற்றுங்கள் சுவாமி என கதறி அழுதாள்.
 
★மனம் மாறிய முனிவர், ஒரே ஒரு வழி இருக்கிறது. உனக்கு பிறகும் குழந்தை அந்தணனாக பிறப்பான். ஆனால் உன் தாய்க்கு பிறக்கும் குழந்தை சத்ரியனாக பிறந்தாலும் சில காலத்திற்கு பிறகு அவன் அந்தணன் போல மாறிவிடுவான் என்று கூறி அதற்கான வரமும் அளித்தார். அதன்படி சத்யவதிக்கு பிறந்த குழந்தையே பிற்காலத்தில் ஜமதக்னி முனிவர் என்றழைக்க பட்டார். அவளின் தாய்க்கு பிறந்த குழந்தை தான், அரசனாக இருந்து பின் முனிவராக மாறிய விசுவாமித்திரர் ஆவார்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை..................
ஶ்ரீராம காவியம்
~~~~~
037/ 02-05-2021
 
விஸ்வாமித்திரர்...2
 
★ரிசீக முனிவர் கூறியபடியே சத்தியவதிக்கும் அவள் அன்னைக்கும் குழந்தைகள் பிறந்தன. முனிவரின் மகனான சத்தியவதியின் குழந்தை வளர்ந்து சகல வித்தைகளிலும் மற்றும்  சாஸ்திரங்களிலும் சிறந்தவனாக ஜமதக்னி என்ற பெயரில் முனிவரானார். இவரை பற்றி பின்னொரு நாளில் மிக விளக்கமாகப் பார்க்கலாம். சத்தியவதியின் அன்னைக்குப் பிறந்த பாலகனோ கல்வியிலும் வீர விளையாட்டுகளிலும் தேர்ச்சி பெற்றான். கௌசிகன் என்ற பெயரோடு தன்னிகரில்லா தலைவனாக விளங்கினான். நாட்டு அரசனாக முடிசூட்டப்பட்டு சிறந்த மன்னனாகவும் அவன் போற்றப்பட்டான்.
 
★கௌசிக நாட்டை ஆண்டுவந்த  மன்னன் கௌசிகன் தான் பின்னாளில் விசுவாமித்திர முனிவரானார். தனது நாட்டில் பஞ்சம் ஏற்பட துவங்கிய ஒரு காலகட்டத்தில் கௌசிக மன்னன் தனது படை  மற்றும் பரிவாரங்களுடன் காட்டு வழியே பயணித்துக்   கொண்டு இருக்கையில் மகரிஷி வசிஷ்ட முனிவரின் ஆசிரமத்தை கடக்க நேரிட்டது.
 
★மன்னனை உபசரிக்க மிகவும் விரும்பிய வசிஷ்டர், மன்னன் மற்றும்  படை வீரர்களுக்கும் தானே விருந்தளிக்க முன்வந்தார். அனால் கௌசிக மன்னனோ, காட்டுப் பகுதியில் தனித்து அமைந்திருக்கும் ஆசிரமத்தில் வாழும் வசிஷ்டரால் தனக்கும் அத்தனை வீரர்களுக்கும் உணவு சமைத்து பரிமாற இயலாது என எடுத்துக்கூறினான்.
 
★வசிஷ்டர், தன்னால் சற்று நேரத்தில் அனைவருக்கும் வேண்டிய அறுசுவை விருந்தை வழங்க இயலுமென்று பதிலுரைத்து அனைவரையும் இளைப்பாறும்படி வேண்டினார். மன்னனும் ஒத்துக்கொள்ள, சிறிது நேரத்தில் வசிஷ்டர் தான் கூறியபடி அனைவருக்கும் விருந்தளித்து உபசரித்தார். ஆச்சரியமடைந்த மன்னன் கௌசிகன் இது எவ்வாறு சாத்தியமானது என்று முனிவர் வசிஷ்டரிடம் கேட்டான். 
 
★வசிஷ்டர் தன்னிடம் இருந்த தெய்வீகப் பசு, காமதேனு
பசுவின் கன்றான நந்தினி தான் கேட்ட எல்லாவற்றையும் வழங்க வல்லது என்று காண்பித்தார். கேட்டதையெல்லாம் கொடுக்கும் இப்படியொரு பசு தன்னிடம் இருந்தால் தன் நாட்டில் பஞ்சமே வராமல் ஆளலாம் என்று நினைத்து கௌசிக மன்னன் வசிஷ்டரிடம் அப்பசுவை தனக்குத் தந்து அருளுமாறு வேண்டினான். தேவேந்திரன் தனக்கு வரமாக அளித்த பசுவை தானமாகக் கொடுக்கும் அதிகாரம் தனக்கு இல்லையென்றும் நந்தினி பசுவே விருப்பப்பட்டு வந்தால் அழைத்து செல்லுமாறும் வசிஷ்டர் கூறினார்.
 
★நந்தினி பசு மன்னனுடன் செல்ல விரும்பாததால் முனிவர் வசிஷ்டரை சரணடைந்தது. கௌசிகன் தனது படையிலுள்ள வீரர்களிடம் அதை சிறைப் பிடிக்குமாறு உத்தரவிட்டான். தனது பசுவை படை வீரர்கள் இழுத்து துன்புறுத்துவதைக் கண்ட வசிஷ்டர் நந்தினியின் வேண்டுகோளுக்கிணங்க  வீரர்கள் அனைவரும் எரிந்து சாம்பலாகும்படி சபித்தார்.
 
★வசிஷ்டரின் மகிமையையும் தவத்தின் பலத்தினையும் உணர்ந்த மன்னன் வசிஷ்டரிடம் தானும் அவரைப்போல் ‘பிரம்மரிஷி’ ஆகவேண்டும் என வேண்டினான். ஆனால் வசிஷ்டரோ கடுமையாகத் தவம் இயற்றினால் மட்டுமே ஒருவர் ‘பிரம்மரிஷி’ பட்டம் பெறமுடியும் என்றும் சுகபோகங்கள் நிறைந்த அரச வாழ்க்கையில் திளைத்த மன்னனால் அப்படி கடும் தவம் புரியமுடியாது என்று கூறினார்.
 
★முனிவர் வசிஷ்டர் தன்னை அவமதித்துவிட்டதாக எண்ணிய கௌசிக மன்னன் தானும் அவரைப்போலவே கடும் தவம் புரிந்து, அவரது வாயாலேயே ‘பிரம்மரிஷி’ பட்டம் பெறுவேன் என்று சபதமிட்டு தவமியற்றத் தொடங்கினார்.  கடுந்தவம் புரிந்தார். பல ஆண்டுகள் தவவலிமையை கண்ட தேவர் உலக தலைவர் பிரம்மா, கௌசிகருக்கு "மகரிஷி" 
எனும் பட்டத்தை வழங்கி, விசுவாமித்திரர் எனும் பெயரும் சூட்டியருளினார்.
 
★அவருடைய தவத்தின் கனல் தேவ லோகத்தில் இருக்கும் இந்திரனுக்கு அச்சத்தினை உண்டாக்கியது. எனவே தேவ கன்னிகையான மேனகையை விஸ்வாமித்தரர் முன் நடனமாடச் செய்து, முனிவரின் தவத்தினை கலைக்க கட்டளையிட்டான். அவ்வாறே மேனகை மகரிஷி விஸ்வாமித்திரர் முன் நடனம் ஆடினாள்.
 
★அவளுடைய நடனத்தினால் முனிவரின் தவம் கலைந்தது. அத்துடன் மேனகையை தனது மனைவியாக்கி கொண்டார் விஸ்வாமித்திரர். இவர்கள் இருவருக்கும் சகுந்தலை என்ற மகள் பிறந்தாள். பின்னர், சகுந்தலை அரசன் துஷ்யந்தனை மணமுடித்து, அவர்களுக்கு பரதன் மகனாக பிறந்தான். ஆனாலும், தன் தவம் மேனகையால் கலைக்கப்பட்டதற்காக மேனகையை விசுவாமித்திரர் சபித்தார். இந்தக் கதையைப் பற்றி மகாபாரத காவியம் -2 ல் எழுதியுள்ளேன்.
 
★மேனகையை சபித்த பின்னர், ஆயிரம் ஆண்டுகளுக்கு கடுந்தவம் செய்யும் பொருட்டு இமாலயத்திற்கு சென்று விடுகிறார் கௌசிகர். உணவு உண்ணாமல், மூச்சு விடுவதை கூட அறவே குறைத்து விட்டார். 
பல ஆண்டுகளுக்கு பின் அவர் விரதத்தை முடித்து உண்ண முடிவு செய்யும் கௌசிகரை மீண்டும் சோதிக்க ஏழை அந்தணராக வரும் இந்திரன், கௌசிகரிடம் யாசகம் கேட்க, அவரும் உணவை யாசகமாக கொடுத்துவிட்டு தன் தவத்தை தொடர்ந்தார். 
 
★விஸ்வாமித்திரரின் கடும் தவத்தைக் கண்டு மகிழ்ந்த ஈஸ்வரன் பூரணமான ‘தனுர் வேதத்தையும் சகல விதமான அஸ்திரங்களையும்’ அருளினார். ஆயினும் வசிஷ்டரிடம் தன் தவபலத்தை சோதித்து பார்த்த முனிவர் தான் மேலும் உறுதியான தவத்தினை மேற்கொள்ள வேண்டுமென்று உணர்ந்து தவஞ்செய்து பிரம்மனிடமிருந்து ‘ராஜரிஷி’ பட்டத்தையும் அடைந்தார்.
 
★கௌசிக மன்னன் தனது தவ வலிமையால் விசுவாமித்திரர் ஆன காலத்தில் திரிசங்கு அரசன் தனது தேகத்துடன் (பூத உடலுடன்) சுவர்க்கத்து செல்ல வேண்டுமென ஆசைக்கொண்டு தனது குலகுருவான வசிஷ்டரை அணுகினான். ஆனால் வசிஷ்டர் இதனை மறுத்துவிட்டார். மிக்க மனவருத்தத்துடன் நல்லரசன் திரிசங்கு தனது குரு வசிஷ்டரின் புத்திரர்களிடம் அதே கோரிக்கை வைத்தான். குருவையும் தங்களது தந்தையையும் மதிக்காத திரிசங்கு அரசனை சண்டாளனாகும்படி அவர்கள் சபித்துவிட்டார்கள்.
 
★சாபத்தினால் அவலட்சண உருவம் பெற்ற திரிசங்கு அரசன் விசுவாமித்திரரை தஞ்சம் அடைந்தான். அவன் மீது கருணை கொண்ட ராஜரிஷி விசுவாமித்திரர் தனது தவ வலிமையால் அவனை அவனது விருப்பப்படி உயிருடன் சுவர்க்கத்துக்கு அனுப்புவதாக வாக்களித்து அதனை நிறைவேற்ற யாகமும் செய்தார். முடிவில் சுவர்க்கம் வரை சென்ற திரிசங்கு அரசனை இந்திரன் தள்ளிவிட, தனது தவ வலிமை அத்தனையையும் ஒருசேர்த்து விசுவாமித்திரர் திரிசங்கு அரசனுக்கென்று தனியாக ஒரு ‘திரிசங்கு’ சொர்க்கத்தையே  உருவாக்கினார்.
 
★விஸ்வாமித்ரர் க்ஷத்திரிய குலத்தைச் சார்ந்தவராக இருந்தபடியால், அவரிடம் கோபம், வேகம், வேட்கை ஆகியவை இயற்கையாகவே இருந்தன. எல்லற்றையும் தன் அதிகாரத்தால் பெற வேண்டும் என்ற ஆணவம் அவரிடம் நிறைந்திருந்தது. படைப்புக் கடவுளான பிரம்மாவின் புத்திரரான வசிஷ்ட மகரிஷியை போல் தானும் படைப்பாற்றல் பெற வேண்டும் என்பதற்காக உள்ளார்ந்த உயர்ந்த எண்ணம் கொள்ளாமல், சுயநலத் தேவைகளுக்காக படைப்புச் சக்தியைப் பெற பெரும் முயற்சி கொண்டார். அதில் தோல்வியை கண்டார். 
 
★இவர் அஷ்டதிக் பாலகர்களைப் பார்த்தாலும், அவர்களைப் போல் தனக்கே அத்துணை சக்திகளும் வேண்டும் என்றே நினைப்பார். விஸ்வாமித்திரருக்கு, தான் வசிஷ்டரைப் போல் பிரம்மரிஷி ஆக வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருந்தது. இத்துடன் வசிஷ்ட மகரிஷியே தன்னை பிரம்மரிஷியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற வெறியும் அவர் மனதில் இருந்தது. அவரின் க்ஷத்திரிய குல அரச குணத்தால், அவரின் தவ வலிமைகள் எல்லாம் அவரின் சுய ஆசாபாசங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டன. 
 
★விஸ்வாமித்திரரை சிறந்த பிரம்மகுல ரிஷியாக மாற்ற, இந்திரனுக்கு ஆணையிட்டார் பிரம்மா. இந்திரன் தன் சபையில் உள்ள சிறந்த அழகியும், அறிவில் சிறந்தவளுமான மேனகையை முதலில் அனுப்பி, அவர் புத்தி எனும் இரண்டாம் நிலையிலிருந்து பெண் சக்தியின் ஆக்ஞா சக்கரத்தை விஸ்வாமித்திரருக்கு வழங்க முயற்சித்தார். விஸ்வாமித்திரர் மேனகையின் ஆக்ஞை சக்கரத்தை பந்தத்தில் ஏற்றுக்கொள்ளத் தவறியதுடன், கீழ்நிலையான காமத்தில் லயித்துவிட்டார். தன் சுய அறிவினால் எல்லாவற்றையும் பெற்றுவிட முடியும் என்று நினைத்த விஸ்வாமித்திரருக்கு, பிரம்மா பாடம் புகட்ட நினைத்து அவர் முன்னால் தோன்றி, அவர் பிரம்ம ரிஷிதான் என்று கூறியவுடன், அதை பிரம்ம ரிஷியான வசிஷ்டர் தன் வாயால் சொல்ல வேண்டும் என்று கூறினார். வசிஷ்டர் அப்படித் தன்னை ஏற்றுக் கொள்வாரா மாட்டாரா என்கிற கோபத்துடனும் ஆணவத்துடனும் ஒரு கட்டத்தில் அவரைக் கொல்லவும் துணிந்தார். 
 
★வசிஷ்ட முனிவரின் மனைவி அருந்ததி இதை அறிந்து, தன் கணவரிடம் விஸ்வாமித்திரர் பிரம்மரிஷிதான் என்று அவர் தம் வாயால் கூறி விடும்படி ஆலோசனை வழங்கினார். வசிஷ்டரின் ஆக்ஞை சக்கரம் அருந்ததியால் தூண்டி விடப்பட்டது. வசிஷ்ட மகரிஷியும் தன் திருவுளம் திறந்து   நான் விஸ்வாமித்திரரின் பலத்தாலும் பராக்கிரமத்தினாலும் பயந்து விடவில்லை. அவர் மேல் கொண்ட பேரன்பினாலேயே, அவரை பிரம்ம ரிஷி என்று என் மனமார ஏற்றுக்கொள்வதுடன் எல்லோர் முன்னிலையிலும் இதைக் கூறுவேன் என்றார். வசிஷ்டரின் ஆசிரமத்தின் வெளியில் அவரைக் கொல்ல காத்துக் கொண்டிருந்த முனிவர் விஸ்வாமித்திரரின் செவிகளில் வசிஷ்டர் கூறிய வார்த்தைகள் விழுந்தன. 
 
★அவை விஸ்வாமித்திரரின் ஆணவம், அகந்தை, கோபம் எனும் க்ஷத்திரிய குணங்களைச் சுக்குநூறாக உடைத்தன. தன்மீது அன்பு கொண்ட வசிஷ்டரைக் கொல்ல நினைத்ததை எண்ணி, மனம் பதைத்து கண்ணீர் மல்க தன் பாவங்களை வசிஷ்டரின் பாதங்களில் சமர்ப்பித்துக் கதறினார். விஸ்வாமித்திரரை வாரி அணைத்துக் கொண்ட வசிஷ்டர், விஸ்வாமித்திரரின் ஆக்ஞா சக்கரம் விழிப்பு உணர்வு பெற, புருவ மத்தியில் தொட்டு ஆசிர்வதித்து பிரம்மரிஷி என்று அழைத்து வாழ்த்தினார். தன் ஆக்ஞை சக்கரம் செயல்படத் தூண்டுகோலாக இருந்த அருந்ததியையும்  பிரம்மரிஷி விஸ்வாமித்திரர் வணங்கி விடைபெற்றார். 
 
"★பிரம்மரிஷி என்ற பட்டம், அவருக்கு பெருமையைத் தராமல் பொறுமையைத் தந்து விழிப்பு உணர்வையும் தந்தது. ஆண் குலத்திற்கே விழிப்பு உணர்வு எனும் மூன்றாம் கண்ணைக் கொடுத்த சக்தியை, தன் புருவ மத்தியில் ஐந்து முகமுடைய காயத்ரிதேவியாக விஸ்வாமித்திரர் கண்டு உணர்ந்தார். காயத்ரிதேவியின் தரிசனம், பஞ்சமா பாவத்தில் இருந்து அவரை விடுதலை ஆக்கியதுடன், அவரின் உடலில் பஞ்ச வாயுக்களையும் சரிசெய்து நிலைப்படுத்தியதுடன், பஞ்சபூதங்களுடன் இணைந்து வாழும் வாழ்வையும் பிரம்மரிஷி விஸ்வாமித்திரருக்குக் கொடுத்தது. 
 
★விஸ்வாமித்திரரின் ஆக்ஞா சக்கரத்தின் தூண்டுதலை வசிஷ்டர் உணரச் செய்ததால், உணர்வு எனும் உன்னதமான மூன்றாம் நிலைக்கு முனிவர் விஸ்வாமித்ர  சென்றார். உணர்வு நிலையில் பெண்மை தன்மையை அவர் உணரச் செய்ததுடன், அதன் வல்லமை அனைவரும் உணரும் வண்ணம் காயத்ரி மந்திரத்தைப் போல் சிறந்த மந்திரம் இல்லை என்று சொல்லும்படியாக தன் உணர்வால் உருவாக்கினார். 
 
★கிருஷ்ண பரமாத்மாவும், மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கின்றேன் என்று கீதையில் கூறுகின்றார். பாவங்களை நீக்கி, சமநிலைப் படுத்தி, சந்தோஷத்தைக் கொடுத்து சக்தியைப் பெருக்கும் மிகவும் சக்திவாய்ந்த காயத்ரி மந்திரம் எனும் மந்திரத்தை விஸ்வாமித்திரரே இந்த உலகிற்குக் கொடுத்தார் என்று ரிக் வேதம் கூறுகின்றது. 
 
★புத்தியால் எல்லாவற்றையும் சாதித்துவிட முடியும் என்று மூர்க்க குணத்துடன், பிடிவாதமாக, வெறித்தனமான தவ வலிமையால் எல்லாமும்  பெற்றுவிட முடியும் என்ற மமதையில் வாழ்ந்த முனிவர் பெண் சக்தியால் கொடுக்கப்பட்ட ஆக்ஞை சக்கரம் விழிப்பு உணர்வு பெற்று உணர்வு நிலைக்குத் திரும்ப அருந்ததி காரணமாக இருந்தார். பெண்மையின் தன்மையை முழுவதுமாக உணர்ந்து காயத்ரிதேவியின் தரிசனம் பெற்றார். 
 
★ரிக்வேதத்தின் 5-ஆம் பகுதியை விஸ்வாமித்திரர்தான் இயற்றினார்.  மனிதனின் கடமைகள் பற்றிய முழு உண்மைகளை எழுதியதுடன், லஞ்சம் கொடுப்பது, லஞ்சம் பெறுவதின் சாபங்களையும் குறித்து எழுதினார் என்று, மஹாபாரதம் அனுசாசன பர்வம் 93-ஆம் அதிகாரம் 43-ஆம் பதத்தில் கூறப்பட்டுள்ளது. ராமாயணத்தில் ஶ்ரீராமருக்கும் லக்ஷ்மணருக்கும், அதர்மத்துக்கு எதிராக எப்படி அஸ்திரங்களைப் பயன்படுத்துவது என்றும் 47 வகையான அஸ்திரங்களை எப்படிப் பிரயோகிப்பது என்றும் விஸ்வாமித்திரர் போதித்தார் என்று வால்மீகி ராமாயண பாலகாண்ட 27-ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.
 
★விசுவாமித்திரருக்குத் தனிக் கோவில் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம் விஜயாபதி எனும் ஊரில் உள்ளது.
 
நாளை........................
ஶ்ரீராம காவியம்
~~~~~
038 / 03-05-2021
 
விஸ்வாமித்திரர் விருப்பம்
தசரதன் தயக்கம்...
 
★தெளிந்த நீரோடையாக இயங்கிய தசரதன் வாழ்க்கை புயலையும் இடியையும் சந்திக்க நேர்ந்தது. மக்களைப் பெற்று மனைநலம் பெற்றிருந்த மன்னன், அவர்களைப் பிரியும் சூழல் உருவாகியது. அன்று
 தசரத சக்ரவர்த்தி அரசவையில் ராஜகம்பீரமாக  வீற்றிருந்தார். வசிஷ்டர், சுமந்திரர், யாபாலி முதலிய அறிஞர்கள் அவரை சூழ்ந்து அமர்ந்து இருந்தார்கள்.
 
★அப்போது காவலன் ஓடிவந்து மன்னரை வணங்கி, மகரிஷி விசுவாமித்திர  வருகின்றார் என்னும் செய்தியை கூறினான். 
பீடுநடை நடந்து ஏற்றமும் தோற்றமும் தோன்றத் தன் அவைக் களம் அணுகிய அம் முனிவரைத் தசரதன் தக்க வழிபாடுகள் கூறி வரவேற்று அமர வைத்தான். “தாங்கள் எழுந்தருளியதற்கு நாங்கள் மிக்க தவம் செய்தோம்” என்று அடக்கமாய்ப் பேசி, அன்புடன் வரவேற்றான். 
 
★தசரதன் விசுவாமித்திரரை சந்தனங்களாலும், மலர்களாலும் பாதபூஜை செய்தார். தசரதா! வசிஷ்ட முனிவருடைய கருணை உனக்கு இருப்பதால் உனது  எல்லாக் காரியங்களும் சித்தியாகும். உன்னை போன்ற உத்தம அரசனை எங்கும் காண இயலாது. அரசர் பெருமானே! என்னைப்போன்ற முனிவர்கள் நிறைவேறாத குறைகளை அயோத்தி மாநகரம் வந்து உன்னிடம்தான் முறையிட  முடியும். எங்களுக்கு உன்னைத் தவிர புகலிடம் ஏது?, என்று விசுவாமித்திர முனிவர் கூறினார்.
 
★தசரதர் அகமும், முகமும் மலர்ந்தது. குருநாதா! நான் தங்களுடைய அடிமை. நான் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும், கட்டளையிடுங்கள், என்றார். மன்னர் பெருமானே! உலக நலன் கருதி நான் தருக்கள் நிறைந்த குளிர்ந்த கானகத்தில் யாகம் செய்தேன். அதனை அரக்கர்கள் தடுத்து இடையூறு செய்கின்றார்கள். அந்த வேள்வியைக் காவல் புரிய ஒருவனை அனுப்ப வேண்டும் என்று கூறினார். உடனே தசரதன் நான் தயாராக உள்ளேன். வாருங்கள் செல்லலாம் என்றார்.
 
★வேந்தனே! உன்னாலும் முடியாது, உன்னை விட பல மடங்கு சிறந்தவன் ஒருவன் இருக்கின்றான், அவனை அனுப்புக என்றார் பிரம்மரிஷி. குருநாதா! அயோத்தியில் என்னைப் பார்க்கிலும் மிகவும் சிறந்தவன் இருக்கின்றானா? என வியந்தான் தசரத மன்னன்.
 தசரதா! உன்னைப் பார்க்கிலும் ஓராயிரம் கோடி மடங்கு உயர்ந்தவன், அயோத்தியில் இருக்கிறான். அவனை அனுப்பு. நான் ஒருபோதும் இல்லாத ஒன்றை இருப்பதாக என்றும் கூறமாட்டேன். என் வாக்கு சத்தியம். விசுவாமித்திரர் கூறியதை கேட்டு தசரதர் சிறிது சிந்தித்தார். என்னைவிட மிகச் சிறந்தவர் வசிஷ்ட முனிவர்தான். தாங்கள் அவரை அழைத்துப் போங்கள், என்றார் சக்கரவர்த்தி. 
 
★விசுவாமித்திரர் புன்னகை பூத்தார்! நான் கூறியவர் ரிஷி வசிஷ்டர் அன்று. மன்னவனே!, நீ பெற்ற நான்கு செல்வர்களும் அரிய ஆற்றல் படைத்தவர்கள். அதில் இராமனை அனுப்புக என்றார். இராமனை அனுப்பு என்ற சொல் மன்னவனை வாட்டி வதைத்தது. மிக்க கவலையில் ஆழ்ந்தார். தசரதன் பிரம்மரிஷி  விசுவாமித்திரருடைய திருவடி பிடித்து கதறியபடி குருநாதா! ராமனோ இளம் பாலகன், போர் முகம் அறியாதவன். நான்  பல போர்களில் வெற்றி பெற்றவன். அரக்கர்களை கொன்று வேள்வி  முடித்துக் கொடுப்பேன் என்றார். விசுவாமித்திரர் வெகுண்டு எழுந்தார். அவருடைய கோபக்கனல் உலகங்களை வெதுப்பியது. நிலம் நடுங்கியது, சராசரங்களெல்லாம் அசைந்தன.
 
★கேட்டதை அரசனால் மறுக்க முடியவில்லை. அதே சமயத்தில் மகனைவிட்டுப் பிரியவும் அவனால் இயலவில்லை.
“அதைத் தவிர வேறு ஏதேனும் கேட்டால் உவப்பேன்” என்றான்.
“நான் கேட்பது பொன்னும் பொருளும் அல்ல. பூவும் வழிபாடும் அல்ல. உன் மகன் ராமன்! அவனை என்னுடன் அனுப்புக. வந்ததே அவனுக்காக. தருவேன் என்று கூறியபின் மறுப்பு ஏன்?” என்றார் முனிவர். மேலும்  வாய்மை தவறாத மன்னன் நீ. இப்பொழுது வாய் தவறுகின்றாய். பாசமும், பந்தமும், உன் மகன்பால் வைத்த நேசமும் உன்னை இழுத்துப் பிடிக்கின்றன. இருதலைக் கொள்ளி எறும்புபோல் உன் நிலைமை ஆகிவிட்டது. மறுத்தலைச் சொல்லும் உன் மாற்றம் வியப்புக்கு உரியது” என்றார் முனிவர்.
 
★ராமன் நான்கு சகோதரர்களில் தர்மத்தை கடைபிடிப்பதில் மூத்தவனாக இருக்கிறான். இவன் மீது மிக அதிகமாக பிரியம் வைத்திருக்கிறேன். நான் எப்படி இந்த குழந்தையை தருவேன் என்று மீண்டும் மீண்டும் அனுப்ப மறுத்து யாகத்தை பாழ்படுத்த நினைக்கும் மாரீசன் சுபாகு என்ற அரக்கர்கள் யார்? என்று தசரதன் விஸ்வாமித்ரரிடம் கேட்டான். அவர்கள் ராவணன் ஆட்கள் என்று விஸ்வமித்ரர் சொன்னதும் அப்படியென்றால் நான் ராமனை நிச்சயம் அனுப்பமாட்டேன் என்று உறுதியாக கூறினான் தசரதன். இதை கேட்ட விஸ்வாமித்ரர் உன்னுடைய ரகு குலத்தை பற்றி கூறுகிறேன் கேள் என்று சொல்லி ஆரம்பித்தார்.
 
★கௌத்ஸர் என்று ஒரு ரிஷி தனது குரு குல கல்வி முடிந்தவுடன் தனது குருவான வரதந்துவிடம் தங்களுக்கு குரு தட்சணை என்ன தரவேண்டும் என்று கேட்டார். அதற்கு குரு நீ நன்றாக படித்தாய் அதுவே எனக்கு திருப்தி. அதுவே போதும் என தட்சணை வாங்க மறுத்து விட்டார். ஆனால் ரிஷி கௌத்ஸர் தன் குருவிடம் தாங்கள் எது வேண்டுமோ கேளுங்கள் தருகிறேன் என்று மீண்டும் மீண்டும் கேட்டார். குருவும் பதினான்கு கோடி வராகன் கொண்டு வா என்று ஒரு வார்த்தை கூறிவிட்டார். இதைக் கேட்டு திகைத்த கௌத்ஸர் ரகு மகாராஜாவிடம் உதவி செய்ய கேட்கலாம் என்று வந்தார். 
 
★இந்த ரகு மகாராஜா அப்போது தான் உலகத்தையெல்லாம் வெற்றி கொண்டு விஸ்வஜித் என்கிற யாகம் செய்து வெற்றி கொண்ட செல்வம் அனைத்தும் எளியவர்களுக்கு  தானம் செய்து விட்டார். அவரிடம் செல்வம் எதுவும் இல்லை. அதனை கண்ட கௌத்ஸர் திரும்ப செல்ல முனைந்தார். இதனை கண்ட ரகு மகராஜா அவரிடம் என்ன வேண்டும் தங்களுக்கு. இந்த  அரண்மனை வரை வந்துவிட்டு திரும்ப செல்கிறீர்களே என்று கேட்டார். அதற்கு கௌத்ஸர் எனக்கு பதினான்கு கோடி வராகன்  தேவைப்படுகிறது. அதை தங்களிடம் யாசிக்கலாம் என்று வந்த பொழுது தாங்கள் எல்லாவற்றையும் தானம் செய்து விட்டீர்கள் என்பதை அறிந்து திரும்பப் போகிறேன் என்கிறார்.
 
★அதற்கு ரகு மகாராஜா இன்று ஒருநாள் இங்கு தங்குங்கள் நான் நாளை நீங்கள் கேட்டதை தருகிறேன் என்று கூறி கௌத்ஸரை தங்க வைக்கிறார். நாளை நாம் குபேரன் மீது  படையெடுப்போம் என்று முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு உறங்க சென்றார். இதனை அறிந்த குபேரன் ரகு மகாராஜா படையெடுத்தால் அவரை எதிர்ப்பது கடினம். இந்திரனுடைய வஜ்ராயுதமே ரகுவை ஒன்றும் செய்ய இயல வில்லை. நாம் என்ன செய்ய முடியும் என்று பதினான்கு கோடி வராகனுக்கு மேலாகவே இரவோடு இரவாக ரகுவின் கஜானாவில் மழையாக பொழிந்துவிட்டார். 
 
★அடுத்த நாள் காலையில் 
இதை அறிந்த ரகு மகாராஜா கௌத்ஸரிடம் இந்த செல்வம்  எல்லாவற்றையும் நீங்கள் எடுத்து கொள்ளுங்கள் என்று வேண்டினார். அதற்கு கௌத்ஸர் இவை அனைத்தும் எனக்கு வேண்டாம்.  நான் கேட்ட பதினான்கு கோடி வராகன் மட்டும் எனக்கு போதும் அதனை என் குருவிற்கு தரவேண்டும் என்று அதனை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றார். தன்னிடம் இல்லாத போதும் ரகு மகாராஜா கேட்டதை தானமாக கொடுத்தார். நீயோ என்ன வேண்டுமோ கேளுங்கள். செய்கிறேன் என்று கூறிவிட்டு நான் கேட்ட  ராமனை கையில் வைத்துக் கொண்டு என்னுடன் அனுப்ப  மறுக்கிறாய். இச்செயல் நியாயமா?   ரகு குலத்தில் பிறந்த உனக்கு இது அழகா?  நான் வருகிறேன். என்று கோபமுடன் புறப்பட்டார்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை.....................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
039/ 04-05-2021
 
ஆரம்பம் 
ராமனின் பயணம்...
 
★நீரினின்று எடுத்துப் போட்ட மீனின் நிலைமையை மன்னவன் அடைந்தான்.  எதிர்பாராத சூழ்நிலையில் எது பேசுவது என்பது தெரியாமல் தவித்தான். “தவிர்க” என்றும் சொல்ல இயலவில்லை.  “செல்க” என்று வாழ்த்தி அனுப்பவும் முடிய வில்லை. “முடியாது” என்று முடிவு கூறவும் இயலாமல் தவித்தான்.
 
★வசிஷ்டர் விஸ்வாமித்திரர் செல்வதை தடுத்து நிறுத்தி தசரதருக்கு அறிவுறை கூற ஆரம்பித்தார். தாங்கள் தர்மிஷ்டன் என்று பெயர் பெற்றவர். வாக்கு கொடுத்து விட்டு அதனை மீறுதல் கூடாது. கொடுத்த வாக்கினை காப்பற்றவில்லை என்றால் இது வரைக்கும் தாங்கள் சேர்த்த புண்ய பலன்கள் எல்லாம் போய்விடும். 
 
★மேலும் வசிஷ்டர் தசரதனைப் பார்த்து, “உன்னுடைய  பாசம் போற்றத்தக்கது தான். அதனால் உன் மகனுக்கு நாசம் விளைவிக்க பார்க்கிறாய்.
குடத்து  விளக்குப்போல் உன் மகனை வளர்க்கிறாய். அவனை
தடத்தில் விட்டுத் தழைக்கச் செய்ய வழி விடு. காற்று வரும் போது தூற்றிக் கொள்வதுதான் ஏற்றம் தரும். கல்வி கரையற்றது; கற்க வேண்டியவை இன்னும் உள்ளது. படைக் கலம் பயின்ற மாமுனிவன், உன் மகன் கரை ஏறக் கிடைத்த மரக்கலம் என அறிக, ஆசானாக வந்த அறிஞர் அவர். அவருடன் அனுப்பு" என்று கூறினார். 
 
★மேலும் அரச முனிவர் ஆதலின் அரிய படைக் கலன்கள் பல அவரிடம் உள்ளன.அவற்றை தக்கவர்க்குத் அளிக்கக் காத்து இருக்கிறார். உன் மகன் வீரம் மிக்கவன்  என்று தெரிந்தால் அவற்றை அவனுக்கு  அவர் அளிப்பது  உறுதி. வாய்ப்புகள் எப்போதும் வந்து கொண்டே இருப்பதில்லை. அதை தவற விட்டால் நிச்சயம் வழுக்கி விழ வேண்டுயது தான். நீர் அவருக்கு உதவுவது எளிது. அதைவிட அந்த வாய்ப்பை உம் மகனுக்குத் தருவது வலிது. அவனுக்குப் புதுப் பயிற்சிகள், முயற்சிகள் அதனால் வெற்றிகள் காத்துக் கிடக்கின்றன. அவனை அனுப்பி விட்டு மறுவேலை பார். அவனை தடுக்க நீர் யார்?” என்று பல பல நன்மைகளை எடுத்துக்கூறி அவருடன் ராமன் செல்வதன் பலன்களை அறிவுறுத்தினார்.
 
★இருள் அகன்றது. ஒளி தெரிந்தது, பாசத் திரை தன் பார்வையை மறைத்திருந்தது. அதை விலக்கிவிட்டு, விழி பெற்றவனாகத் தசரதன் நடந்து கொண்டான்.  வழி தவறியதற்கு வருந்தினான்.  குருடனாக நடந்துகொண்ட அவன், இப்போது புத்தொளி பெற்று, மகனை முனிவனுடன் அனுப்பி வைக்க சம்மதித்தான்.தசரதர் ராமனையும், லக்ஷ்மணனையும் அழைத்து வருமாறு கட்டளை இட்டார். சுமந்தரர், அரண்மனை சென்று கௌசல்யையிடம் கூறி இருவரையும் அழைத்து வந்தார்.
 
★வசிஷ்டர், விசுவாமித்திரர் மற்றும் தந்தையாரின் திருவடியில் ராமர் வீழ்ந்து வணங்கினார். தசரதர் ராம 
லக்ஷ்மணரின் கரங்களைப் பற்றி விசுவாமித்திரருடைய கரத்தில் வைத்து, குருநாதா! இவர்களுக்கு தாய், தந்தை, குரு எல்லாம் நீங்கள் தான். அறுபதினாயிரம் ஆண்டுகள் இவர்களைப் பெறுவதற்கு நான் தவம் செய்தேன். என்னுடைய உயிரை நான் தங்களிடம் ஒப்படைத்து இருக்கிறேன். தாங்கள் திரும்பவும் கொண்டு வந்து சேர்க்கவும் என்று தாழ்ந்த குரலில் விசுவாமித்திரரிடம் கூறினார். அயோத்தியில் இருந்து விசுவாமித்திர முனிவர் விடைபெற்றுப் புறப்பட்டார்.
 
★அப்போது சங்க வாத்தியம் முழங்கியது. வானத்தில் இருந்து புஷ்பமாரி பொழிந்தது. விஸ்வாமித்ரர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். முனிவர்  ராமனை மட்டும் கேட்டார். லக்ஷ்மணன் வருவதை தடுக்கவில்லை. நிஜத்தை விட்டு பிரியாத நிழலாக வந்த இளையவன் லக்ஷ்மணன், அழைக்காமலே அண்ணன் ராமனைப் பின் தொடர்ந்தான்.முனிவன் முன்னே நடக்க, அவன் பின்னே இவ்விரு இளையவர்களும் தொடர்ந்து நடந்தனர்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.....................
ஶ்ரீராம காவியம்
~~~~~
040 / 05-05-2021
 
முனிவரின் வழியே
இளவல்கள் வழி...
 
 ★ஶ்ரீராமன் எக்காரணத்திற்காக மண்ணுலகிற்கு வந்தானோ அக்காரியத்தை நிறைவேற்ற நல்ல பயிற்சியை வழங்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு விஸ்வாமித்ரருக்கு இருந்தது. தான் பெற்ற ஞானம் மற்றும் அரிய பெரிய அஸ்திரங்கள்,மாய வித்தைகள் அனைத்தும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று ராமனை அழைத்து வந்தார். 
 
★கூட்டை விட்டுப் பறவைகள் வெளியே பறந்து செல்வது போல, நாட்டை விட்டுக் காட்டு வழியே முனிவருடன் நடந்து சென்றனர். மாட மாளிகைகளும், கூடகோபுரங்களும், அசையும் கொடிச் சீலைகளும், அவர்களை வழி அனுப்பின. வானவில்லின் அழகிய வண்ண நிறங்களும், பிரபஞ்சத்தின் பேரொளியும் அவர்கள் கண்ணைக் கவர்ந்து மகிழ்வு ஊட்டின. 
 
★காந்தத்தின் பின் தொடரும் இருப்பு ஊசிபோலக் கறுப்பு நிறச் செம்மலும் இளவலும் தவ முனிவர் பின் சென்றனர்.
 அறிவு நிரம்பிய ஆசானின் அணைப்பில் அவர்கள் பெருமிதம் கொண்டனர்.  புதிய இடங்களுக்குச் சென்று மனதில் பதியும் புதிய காட்சிகளைக் கண்டனர்.  அவற்றைக் கண்டு வியப்பும் அறிவும் பெற்றனர். ஆறுகளையும், சோலைகளையும் கடந்து, வேறுபட்ட சூழல்களைக் கண்டனர். அந்தப்புரங்களையும், ஆடல் அரங்குகளையும் கண்டவர் எளிமையும், எழிலும், ஞானப் பொலிவும் நிரம்பிய சிறந்த பல முனிவர்களின் ஒலைக் 
குடிசைகளைக் கண்டனர்.
 
★ஆசிரமங்கள் அவர்களுக்குப் பசும்புல் விரிப்புகளைப் பரப்பி, வரவேற்புச் செய்தன. காட்டு மரங்கள் காற்றில் அசைந்து அவர்களோடு கவிதைகள் பேசின. மனிதர்களைப் போலவே தாவரங்கள், மரம், செடி, கொடிகள் அவர்களிடத்தில் பாசமும், பரிவும் காட்டின. விலங்குகளும் தத்தமக்கு உரிய நெறிகளின் படி உலவிச் செயல்பட்டுத் திரிவதைக் கண்டனர். தேவைக்கு மேல் அவை உயிர்களைக் கொன்று தின்பதில்லை.தேடித் திரிவதும் இல்லை.மனிதன் மட்டும் தேவைக்கு மேல் பொருள் திரட்டுவதைக் கண்டு பழகிய அவர்களுக்கு அம்மிருகங்கள் மிகவும் மதிக்கத்தக்கவையாக விளங்கின. 
 
★மாந்தர் விடும் மூச்சில் கலந்து உள்ள அசுத்தங்களைத் தாம் வாங்கிக் கொண்டு காற்றைத் துய்மைப்படுத்தி உதவும் தாவரங்களின் உயர்வை அறிய முடிந்தது. தீமை செய்பவர்க்கும் தாம் உள்ள அளவும் நன்மை செய்யும் நல்லியல்பு அவற்றிடம் காண முடிந்தது. தம்மை வெட்டிக் கீழே சாய்க்கும் முரடனுக்கும் காயும், கனியும் நல்ல நிழலும் தந்து உதவும் அவற்றின் உயர்ந்த பண்பினை காணமுடிந்தது.
 
★அவர்கள் போகும் வழியில் மிக புனிதமான சரயு நதியைக் கண்டார்கள். அதில் அவர்கள் நீராடினார்கள். பிறகு அவர்கள் ஒரு மலர் சோலையை கண்டு மகிழ்சி அடைந்தார்கள். அங்கு காயத்ரி மந்திரத்தை ஜெபித்து சூரியனுக்கு அர்க்கியம் கொடுத்தார்கள். அர்க்கியம் என்பது தேவர்களுக்கும் அதிதிகளுக்கும் தீர்த்தத்தால் செய்யும் ஒருவகை உபசாரம் ஆகும்.
 
★ சூரியன் உதிப்பதற்கு முன்பே சூரியனுக்கு அர்க்கியம் கொடுப்பது, காணாமல் கொடுப்பதாகும். சூரியன் உச்சியில் இருக்கும் பொழுது அர்க்கியம் கொடுப்பது கோணாமல் கொடுப்பதாகும். சூரியன் மறைவதற்கு முன், மாலை வேளையில் அர்க்கியம் கொடுப்பது கண்டு கொடுப்பது ஆகும். இதை தான் காணாமல் கொடு, கோணாமல் கொடு, கண்டு கொடு என்பார்கள்.
 
★அங்கு விசுவாமித்திர முனிவர் அசோகக்  கொழுந்து, இளம் இலைகள்.மாங்கொழுந்து முதலிய கொழுந்துகளை விரித்து ராஜ குமாரர்களைப் படுக்க வைத்தார். ராமருடைய கால்மாட்டில் லட்சுமணர் படுத்து உறங்கினார். விசுவாமித்திர முனிவர் ராமருடைய தலை அருகில் அமர்ந்து ராமரையே உற்று நோக்கி பார்த்துக் கொண்டிருந்தார். ராமருடைய திருமுகத்தில் கருணை வழிந்து கொண்டிருந்தது. 
 
★விசுவாமித்திர முனிவர் தன் மனதில், ராமா! உன் தந்தை தசரதன் என் மிரட்டலுக்குப் பயந்து இந்த கானகத்தில் உன்னை எவ்வாறு தான் அனுப்பினானோ? ஆனால், நீ மட்டும் எனக்கு மகனாகப் பிறந்திருந்தால் ஆயிரம் விசுவாமித்திரர் வந்தாலும் உன்னைக் கானகத்துக்கு ஒருபோதும் அனுப்பியிருக்க மாட்டேன். ராமா! நீ இந்த உலகில் மனிதனாகப் பிறந்து ஒரு சுகமும் இல்லாத இந்த கானகத்தில் வெறுந்தரையில் படுத்து உறங்குகின்றாயே! என்று நினைத்துக் கொண்டு கண்விழித்துக் கொண்டிருந்தார்.
 
★மூவரும் விடியற்காலையில் எழுந்து நீராடிக் காயத்ரி மந்திரத்தை ஜெபம் செய்து புறப்பட ஆயத்தமானார்கள். 
அப்போது இருவருக்கும் 'பல' மற்றும் 'அதிபல'  என்னும் இரண்டு மந்திரங்களை விஸ்வாமித்திரர் உபதேசித்தார். இந்த மந்திரங்களை ஜபம் செய்வதின் பயனாக ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல எவ்வளவு தூரம் நடந்தாலும் களைப்பு இருக்காது. பசியையும் தண்ணீர் தாகத்தையும் சிரமம் இல்லாமல் சமாளிக்கலாம். தூங்கும் போது யாரும் தாக்க முடியாது. விஸ்வாமித்ரரிடம் இருந்து இருவரும் கற்ற முதல் உபதேசம் இதுவாகும்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.....................
ஶ்ரீராம காவியம்
~~~~~
041/ 06-05-2021
 
காமாஷ்ரம்...
 
★சரயூநதிக் கரையில் சஞ்சரித்த அவர்கள், பசுமையான சோலை ஒன்றனைக் கண்டனர். அதில் தவசியர் வசிக்கும் குடில்கள் சில  இருந்தன. அந்த முனிவர்கள்  இவர்களைக் கண்டதும் மகிழ்ந்து வரவேற்பும், உண்டியும், இடமும் தந்து உபசரித்தனர்; எழில்மிக்க பொழில்கள் சூழ்ந்த அந்த ஆஸ்ரமத்தில் இரவுப் பொழுதை கழித்தனர்.
 
★பொழுது புலர்ந்தது. அந்த ஆசிரமம் அவர்கள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது. அதன் ஆதி அந்தத்தைக் கேட்டு அறிய முயன்றனர். அதன் பெயரே புதுமையாய் இருந்தது. “காமாஷ்ரம்” என அது வழங்கப் பட்டது. காமத்தை ஒழித்து, ஏமநெறி காணும் முனிவர்கள், தாம் வாழும் இடத்துக்கு இப் பெயர் சூட்டியுள்ளமை வியப்பைத் தந்தது. “இதற்கு ஏதேனும் தக்க காரணம் இருக்க வேண்டும்” எனக் கருதினர். ஆரண்ய வேதியரை அணுகி, “இப்பெயர் இதற்கு அமையக் காரணம் யாது?” என்று வினவினர்.
 
★"மலரம்புகளை விட்டு மற்றவரை எரிக்கும் காமன் இங்கே எரிபட்டான். அதனால், இந்த இடம் “காமாஷ்ரம்” என வழங்கலாயிற்று” என்றார்.
“'காமன் கூடவா தவம் செய்ய இங்கு வந்தான்?'.  “செய்கிற தவத்தைக் கெடுக்க அவன் அம்புகளைத் தொடுக்க, அது சிவன் மேல்பட, அவர் சினந்து எரிக்க, அவன் சாம்பல் ஆனான்” என்று கூறினார். சிவபெருமான் செய்த  யாகத்தைக் கலைக்க மன்மதன் முயன்ற போது சிவபெருமானின் நெற்றிக் கண்ணால் அவன் அங்கம் அற்றவனாய் வீழ்ந்தான். அதனால் இது அங்கதேசம் என்று அழைக்கப்படுகிறது என்று கூறினார்.
 
 ★"மதன், மதம் அழிந்து, அவன் அதம் தீர்ந்து, அழிந்து, மறைந்து ஒழிந்தான்” என்பதைக் கேட்ட இவர்கள், “ஆழம் தெரியாமல் காலைவிட்டால் இந்தக் கதிதான் நேரும்” என்று தமக்குள் பேசிக் கொண்டார்கள். "மன்மதன் எரிந்து விட்டானா?” என்று இளையவன் கேட்டான்.
“எரிந்தாலும் அவன் இன்னும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறான்” என்று முனிவர் விடை தந்தனர்.
 
★இந்தக் கதை கேட்பதற்குச் சுவையாக இருந்தது. காணும் இடம் எல்லாம் ஏதாவது  கதைகளை பெற்றிருந்தது. முனிவர்களின் அற்புதங்கள் சொற்பதங்களாகப் பேசப்பட்டன. இதைப் போலவே காணும் காட்சிகள், செல்லும் இடங்கள், கடக்கும் ஆறுகள், தங்கும் சோலைகள் இவற்றின் பெயர் மற்றும் வரலாறுகளையும் கேட்டு அறிந்தனர். நடை வருத்தம் மறந்தனர்.
 
★அவர்கள் கடக்கும் வழியில் வெப்பம்மிக்க பாலை நிலம் ஒன்று குறுக்கிட்டது. அறம் சாராதவர் மூப்புப் போல் அது அழிவைப் பெற்று இருந்தது. குடிக்க நீரும், உண்ண உணவும், தங்க நிழலும் கிடைக்காத கொடிய காடாக இருந்தது. காட்டு விலங்குகளும் அந்த மேட்டு நிலத்தில் நடப்பதைத் தவிர்த்தன. அதன் வெப்பம் தாங்க வொண்ணததாய் இருந்தது. அதை நீக்கும் உபாயம் தேவைப்பட்டது. மாமுனிவன் உபதேசித்த மந்திரங்களைச் சொல்லி, இவர்கள் பசியும் நீர் வேட்கையும் நீங்கினர். சுற்றுப்புறம் வெம்மை நீங்கித் தண்மை அளித்தது. “அந்த மந்திரம் பிரம்ம தேவனால் விசுவாமித்திரருக்கு அளிக்கப் பட்டது” என்பதைக் கேட்டு அறிந்தனர்.
 
★ராமர் விசுவாமித்திர முனிவரை பார்த்து, குருவே! இக்கானகம் பாலைவனமாக இருக்க காரணம் என்னவென்று கேட்டார். அல்லது பரமசிவனின்  நெற்றிக் கண்ணால் இக்கானகம் எரிந்ததா? என வினாவினர். என் தந்தையின் ஆட்சிக்காலத்தில் இப்படி அழியக் கூடாதே! என்று வினாவினர். விசுவாமித்திர முனிவர், குமாரர்களே! இதுதான் தாடகை என்னும் அரக்கி வாழும் கானகம். இந்த வளமான கானகத்தை தாடகை தனியாக அழித்துப் பாலைவனமாக்கி விட்டாள். 
 
நாளை....................
ஶ்ரீராம காவியம்
~~~~~
042/ 07-05-2021
 
தாடகை...
 
விசுவாமித்திரருடன், காட்டுக்குச் செல்லும் ராமனும், லட்சுமனனும் காட்டின் அழிவு நிலைக்கான காரணம் குறித்துக் கேட்டபோது  
இங்கு தாடகை என்று ஒரு யட்சினி இருக்கின்றாள். அவள் ஆயிரம் யானை பலம் கொண்டு  கோபத்தினால் இந்த இடத்தை அழித்துவிட்டாள் என்று முனிவர் விஸ்வாமித்ரர் கூறினார். அவள் யார்? எதற்காக இவற்றைச் செய்கிறாள்? யட்சினிகளுக்கு அவ்வளவு பலம் இருக்குமா?
என ராமன் கேட்க அந்த இடத்தின் அழிவிற்கு
காரணமான யட்சினி தாடகை வரலாறு பற்றி விஸ்வாமித்திரர் அவர்களுக்கு கூறினார்.
 
★ மிகுந்த வலிமை கொண்ட யட்சர்கள் குலத்தைச் சேர்ந்த சற்சரன் என்பவனுடைய மகன் சுகேது. அவன் தூய்மையான இயல்புகளைக் கொண்டவன். அவனுக்குப் பிள்ளைகள் இல்லாமையால் பிரமனை வேண்டிப் பல ஆண்டுகள் கடுமையான தவம் செய்தான். இதனால் மகிழ்ந்த பிரமன் அவன் முன் தோன்றி, அவனுக்கு மயில் போன்ற அழகும் மதம் கொண்ட யானையை ஒத்த வலிமையும் கொண்ட ஒரு மகள் பிறப்பாள் என வரம் அருளினார். இந்த வரத்தின் காரணமாகச் சுகேதுவுக்கு மகளாக பிறந்தவள் தாடகை. 
 
★தாடகை என்ற அந்த பெண் குழந்தைக்கு சுகேது ஆயிரம் யானை பலம் கொடுத்தான். 
அந்தப் பெண் நன்கு வளர்ந்தாள். மிகுந்த பலசாலியான அவள் போர்கலைகளில் சிறந்து விளங்கினாள். அவளை நல்ல ஒரு வீரனுக்கு மணமுடிக்க எண்னிய சுகேது , சுந்தன் என்கிற ஓர் வீரனுக்கு திருமணம் செய்து வைத்தான்.
 
★திருமண வாழ்க்கை இன்பமாக கழிந்தது. அவர்களுக்கு வலிமை பொருந்திய, மாரீசன், சுபாகு என்னும் இரு மைந்தர்கள் பிறந்தனர். இருவரும் வளர்ந்து பெரியவர்கள் ஆனார்கள். வலிமை மிகுந்து இருந்ததினால் ஆணவம் தலை தூக்கியது.  எவரையும் மதிப்பதில்லை. இவர்களின் தந்தை சுந்தன் ஒருமுறை  அகத்தியருடைய ஆஸ்ரமத்துக்கு வந்து அங்கு இருந்த மரங்களைப் பிடுங்கி வீசி எறிந்து அட்டூழியம் செய்தான். 
 
★அன்புடன் எவ்வளவோ நல்ல புத்திமதிகள் கூறியும் அதைக் கேட்காமல் மேலும் மேலும்  ஆஸ்ரமத்தைச் சேர்ந்த இடங்கள் எல்லாம் சுந்தனால் அழிவுற்றன.  அகத்தியர் சினம் கொண்டு அவனை நோக்க அவன் எரிந்து சாம்பலானான். இதையறிந்த தாடகை தனது மக்கள் மாரீசன் சுபாகு ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு ஓடோடி வந்தாள்.  தாடகையும் அவள் புதல்வர்களும் அகஸ்தியரிடம் தன் கணவர் செய்த குற்றத்தை மன்னிக்க வேண்டும் என்று கேட்கும் பண்பை விட்டு விட்டு , அசுரர்களைப்போல் கல்லும் மண்ணும் வீசி ஆரவாரம் செய்தார்கள். 
 
★அகத்தியரைப் பழிவாங்கும் நோக்குடன் தாடகை அவரது ஆஸ்ரமத்தை அடைந்தாள். தாடகையின் மைந்தர்கள் அகத்தியரை தாக்க அணுகினர்.
இதனால் சினம் கொண்ட அகஸ்தியர், நீங்கள் மூவரும் அசுரர்களாகப் போக கடவது என்று சாபம் கொடுத்தார். யட்சர்களாகிய அவர்கள் மூவரும் அரக்கர்களாக மாறினர். மாறிய பின் அவர்கள் தாங்கள் காணும் ஆஸ்ரமங்களை எல்லாம் அடித்து நொறுக்கினர். 
 
★முனிவர்களுக்கு எண்ணற்ற கொடுமைகளை செய்து கொண்டு இருக்கின்றார்கள். 
மாரீசனும், சுபாகுவும் இலங்கை ராவணனுக்குப் பாட்டனாரை  அணுகி அவனுடன் மகன் முறை உறவு கொண்டாடி அவனுடன் சேர்ந்து கொண்டனர்.  தன் மகன்களைப் பிரிந்த தாடகை அங்க நாட்டுக் காட்டில் வந்து வாழலானாள்.
 
★தாடகையின் கொடுஞ் செயல்கள் பற்றி விசுவாமித்திரர் இராம இலக்குமணர்களுக்கு விளக்கும் நிகழ்வு கம்ப இராமாயணத்தில் வருகிறது. இதன்படி, தாடகை வளம் மிக்க மருத நிலத்தை அழித்துப் பாலை நிலம் ஆக்கினாள். அங்க நாட்டில் வாழ்பவர்களை எல்லாம், கொன்று தின்பதன் மூலம் அவர்களைக் குலத்தோடு அழித்து வந்தாள். உயிர்களை எல்லாம் தனக்கான  உணவுப் பொருள்களாகவே எண்ணும் தன்மை உடையவளாகவே இருந்தாள். அசுர பலத்தோடு  வேள்விகளுக்கு இடையூறு செய்து வந்தாள்.
 
★தாடகையோ தன்  கையில் மலைப்பாம்புகளைக் வளையல் போல சுற்றி  அணிந்திருப்பாள். சூலத்தை கையில் ஏந்திக் கொண்டிருப்பாள். ராமா! உலக நலன் கருதி நான் செய்கின்ற வேள்விகளை எல்லாம்  தடுத்து இந்த அரக்கர்கள் கெடுத்து விடுகின்றார்கள். தாடகை ராவணனின் உதவியால் எண்ணற்ற கொடுமைகளை செய்து வருகின்றாள் என்றார்.
 
★விசுவாமித்திரர் தாடகையைப் பற்றி இளவல்களிடம்  கூறிக் கொண்டு இருக்கும்போதே அவள் அவர்கள் முன் திடீரெனத் தோன்றினாள். 
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை..........................
ஶ்ரீராம காவியம்
~~~~~
043/ 08-05-2021
 
தாடகை வதம்...
 
★மூன்று கூரிய முனைகளைக் கொண்ட சூலத்தைக் கையில் கொண்டிருந்த அவள், அந்த மூவரையும் பார்த்து "எனது காவலுக்குரிய இந்த நிலத்திலே உள்ளதெல்லாம் அழியும்படி கருவறுத்துவிட்டேன். எனக்குத் தின்ன ஊன் கிடையாதென்று எண்ணி. உணவாக வந்தீர்களோ. விதி உந்த அழிய வந்தீர்களோ?" என்று கேட்டாள். 
 
★இப்பொழுது நீ இந்த அரக்கி தாடகையை வதம் செய்துவிடு. பெண்ணை அழிக்க வேண்டுமா என்று யோசிக்காதே இதற்கு முன் தர்மத்திற்காக இந்திரன் விரோசனை என்ற பெண்ணை வதம் செய்துள்ளான். விஷ்ணு பகவான் காவியமாதாவை வதம் செய்திருக்கிறார். அதுபோல் இந்த உலகத்துக்கு கெடுதல் நினைக்கின்ற கொடுமையான ஒரு பெண்ணை அழிக்கலாம். அதில்  தவறில்லை என்று விஸ்வாமித்திரர் ராமனுக்கு கட்டளை இட்டார்.
 
★ராமர் அவளைப் பெண் என்று நினைத்து போர் புரிய தயங்கி நின்றார். விசுவாமித்திரர் ராஜகுமாரா! இவள் பெண் அல்ல, அவள் தான் தாடகை. அளவற்ற கொடுமைகளை செய்பவள். முனிவர்களாகிய எங்களைக் கொன்று தின்னாமல் விட்டு இருக்கின்றாள். ஏனென்றால் நாங்கள் தவத்தால் உடம்பை வாட்டிச் சதைப்பற்று இல்லாமல் இருப்பதனால் எங்களை விட்டு வைத்து இருக்கிறாள். ஆகவே இவளைக் கொல்லுவது அறம் ஆகும் என்றார், விசுவாமித்திரர்.
 
★எனினும், அவள் ஒரு பெண் ஆகையால் அவளைக் கொல்வது அறம் அல்ல என்று எண்ணிய ராமன் சிறிது தயங்கினான். முனிவர் பல்வேறு எடுத்துக் காட்டுகளையும் மற்றும் அநேக காரணங்களையும் கூறி ராமனது தயக்கத்தைப் போக்க முயன்றார்.
கொடுஞ் செயல்களை சிறிதும் தயக்கம் இல்லாமல் செய்பவளை பெண் என்று நினைத்தல் கூடாது. அச்சம் நாணம் முதலான பெண்மைக் குணம் உடைய பெண்களுக்கு தீங்கிழைக்க கூடாது.
 
★ஆண்மை என்று கூறும் அந்த அஞ்சாத பண்பு யாரிடம் அதிகம் இருக்கும்.? பெண்ணாகிய இவளுக்கும். வலிமைமிக்க ஆண்களுக்கும் என்ன ஒரு  வேறுபாடிருக்கிறது? இந்திரன் முதலானோரையும் தோற்று ஓடும்படி செய்த இவளைப் பெண் என நினைக்கலாமா?.  வாழும் உயிர்களை வதைத்து  கொன்று தின்பதைவிட. தீயசெயல் எது உள்ளது? இப்படிப்பட்டவளைப் பெண் என்று சொல்வது இகழ்ச்சிக்குரியதேயாகும்.  அரச குலத்தவனாகிய நீ இவளது தீச்செயலை அறிந்தும் இவ்வாறு தணிந்து நிற்பது தருமம் அல்ல; இந்த அரக்கியை கொல்வாயாக".
என்று விசுவாமித்திரர் கூறினார். 
 
★அவர்களை அழிக்க கல் மண் மரம் என கைக்கு கிடைத்த அனைத்தையும் தூக்கி அவர்கள் மீது எறிந்தாள். அப்போது ராமர் லட்சுமனனிடம் நான் இவளின் கைகள் மற்றும் காலை வெட்டி விடுகிறேன் வெட்டியவுடன் இவளால் எங்கேயும் ஓடிப்போக முடியாது என்று கூறினார். இதனை கேட்டதும் பயந்த தாடகை மறைந்திருந்து தாக்க தொடங்கினாள். இவள் கெட்ட எண்ணம் கொண்டவள் . இவளிடம் கருணையை காண்பிக்காதே, ராமா! அவள் மறைந்திருந்து தாக்குகிறாள். இரவில் ராட்சசர்களுக்கு பலம் அதிகமாகிவிடும். ஆகவே விரைந்து அவளை அழித்துவிடு என்று விஸ்வாமித்ரர் ராமனை துரிதபடுத்தினார்.
 
★இதைக் கேட்ட இராமன், அறமில்லதாக இருந்தாலும், முனிவரின் கட்டளையை ஏற்றுச் செயல்படுவதே தனக்கு அறம் ஆகும் எனக் கூறித் தாடகையை எதிர்ப்பதற்குத் தயாரானான். தாடகை தனது சூலத்தையும், பாறைகளையும் மூவர் மீதும் எறிந்து போராடினாள். ராமா! தாமதம் வேண்டாம். விரைவில் அவளை ஒழித்து விடு என்றார் விஸ்வாமித்திரர்.
 
★விஸ்வாமித்ரரின் கட்டளையை கேட்ட ராமர் நான் கிளம்புபோது எனது தந்தை என்னிடம் விஸ்வமித்ரரின் உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்று எனக்கு உத்திரவிட்டிருந்தார். உங்கள் கட்டளையை நான் இப்போதே நிறைவேற்றுகிறேன் என்று தனது வில்லில் இருக்கும் நாணைச்  சுண்டினார். அந்த 
வில்லில் இருந்து வந்த பெரும் சத்தத்தை கேட்டவுடன் இடி இடித்தாற் போல் சத்தமிட்டு மறைந்திருந்த தாடகை தனது சூலாயுதத்தை அவர்கள் மீது வீசினாள்.
 
★ராமர் சப்தவேதி என்ற அஸ்திரத்தை எடுத்து விட்டார். அந்த அஸ்திரம் எங்கு இருந்து சப்தம் வருகிறதோ அதை தொடர்ந்து சென்று தாக்கும். மறைந்திருந்த தாடகையை அந்த அஸ்திரம் தாக்கியதும் உடனே அங்கிருந்து வானத்திற்கு தாவியவள் பெரிய உருவமாக எடுத்துக் கொண்டு அவர்கள் மீது பாய்ந்தாள். ராமர் விட்ட சக்தி அம்பானது  வானத்திலேயே அவள் மார்பை பிளந்து அவளை அழித்துவிட்டது. தாடகை அழிந்ததும் அவளது மந்திர சக்தி அனைத்தும் அழிந்தது. உடனே அந்த பிரதேசம் நந்தவனம் போல ஆகியது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
 
★துளசி ராமாயணத்திலும், சீதா கல்யாணம் என்னும் வில்லுப் பாட்டு நூலிலும் ராமன் தாடகைக்கு நற்கதி அளித்ததாக சொல்லப்படுகிறது. வேறு எந்த ராமாயணத்திலும்  இந்த  மாதிரி குறிப்புகள் இல்லை. சீதா கல்யாணத்தில், தான் ராமனை "மாயன்" என்று அறியாமல் கெட்டுவிட்டதாகவும், அவருடைய கையால் இறப்பதற்குப் பெரும் பாக்கியம் செய்திருப்பதாகவும் கூறித் தன் பெயர் உலகின் எப்போதும் விளங்கும்படி வரங்கொடுக்கும்படி தாடகை கேட்டுக்கொண்டாளாம். அவள் மீது இரக்கம் கொண்ட இராமன், நீ தென்கிழக்கு மூலையிலே உதிக்கும் நட்சத்திரம் ஆவாய். உன்னைத் 'தாடகை வெள்ளி' 
என மக்கள் சொல்வார்கள் என்று வரமளித்தாராம்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை.....................
ஶ்ரீராம காவியம்
~~~~~~
043  இணைப்பு /09-05-2021
 
வால்மீகியும் கம்பரும் 
தாடகை வதமும்-ஓர் ஒப்பீடு...
 
★வால்மீகி ராமாயணத்தில் தாடகையை வதம் செய்ய வேண்டும் என அவளைச் சந்திக்கும் முன்னரே விசுவாமித்திரர் ராமனிடம் சொல்லி விடுகிறார்.
 
स्व बाहु बलम् आश्रित्य जहि इमाम् दुष्ट चारिणीम् || १-२४-३०
मत् नियोगात् इमम् देशम् कुरु निष्कण्टकम् पुनः |
 
Depending upon the strength of your own self-confidence you have to eradicate this evildoer, and assigned by me you have to make this province free from thorniness
 
★அது மட்டுமில்லாமல், இதுவரை பெண்களை கொன்ற மகாபுருஷர்களின் உதாரணங்களையும் தருகிறார். இந்திரன் மந்தாரையைக் கொன்றது, விஷ்ணு பிருகு முனிவரின் மனைவி  மற்றும் சுக்ராச்சாரியாரின் தாயாரை கொன்றது என உதாரணங்கள் கொடுத்து, தீங்கு செய்யும் பெண்களைக் கொன்று இருக்கிறார்கள் என எடுத்துச் சொல்கிறார்.
 
श्रूयते हि पुरा शक्रो विरोचन सुताम् नृप |
पृथिवीम् हन्तुम् इच्छन्तीम् मन्थराम् अभ्यसूदयत् || १-२५-२०
 
Oh, Rama, the protector of people, we have heard that Indra once eliminated Manthara, the daughter of Virochana, when she wished to annihilate earth, haven’t we.
 
विष्णुना च पुरा राम भृगु पत्नी पतिव्रता |
अनिन्द्रम् लोकम् इच्छन्ती काव्यमाता निषूदिता || १-२५-२१
 
And Rama, once Vishnu wiped out even the wife of sage Bhrigu and sage Shukracarya’s mother when she wished the world to become one without a governing factor, namely Indra.
 
★வால்மீகியின் தாடகையிடம் மாய சக்திகள் உள்ளன. அதை வைத்து தூசிப்புயலை அவள் கிளப்புகிறாள். கற்களின் மழையைச் செலுத்துகிறாள். ராமன் அவளின் இரு கைகளை அம்பால் கொய்கிறான். அவள் பெண் என்பதால் முடிந்தளவு கொல்லாமலிருக்க முயல்கிறான் லட்சுமணன் அவளின் காதுகள் மற்றும்  மூக்கையும் அறுத்து விடுகிறான். (இலக்குவனுக்கு மூக்கை வெட்டுவதில் அப்படி என்னவொரு ஆனந்தம் எனப் புரியவில்லை!) பிறகு தாடகை கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து அவர்களைத் தாக்குகிறாள். 
 
★விசுவாமித்திரர் பொறுமை இழந்து “போதும் ராமா! பெண் எனப் பார்க்காதே. அவள் கொடியவள். யாகங்களுக்கு இடையூறு செய்பவள். இருட்டு வருவதற்கு முன் அவளைக் கொல்ல வேண்டும். கொஞ்ச நேரத்தில் இருட்டிவிடும். இருட்டியபின் அரக்கர்களை வீழ்த்த முடியாது.” இவ்வாறு இரண்டாவது முறை விசுவாமித்திரர் சொன்ன பிறகு தான் ராமன் அம்பு எய்து தாடகையை கொல்கிறான். அவனின் அம்பு இடியின் வேகத்தில் அவளைத் தாக்குகிறது. தாடகை வீழ்கிறாள். இந்திரன் உட்பட வானுலகத்தார் ராமனைப் பாராட்டுகின்றனர். விசுவாமித்திரர் ராமனின் நெற்றியில் முத்தமிடுகிறார்.
 
★இதே தாடகை வதத்தை கம்பன் அணுகும் முறையில் 4 முக்கிய வித்தியாசங்கள்.
 
★கம்பரின் விசுவாமித்திரர் தாடகையை கொல் என ஒரு முறை மட்டுமே சொல்கிறார். இரண்டு முறை அல்ல. விசுவாமித்திரரின் பேச்சுக்கு மறுபேச்சில்லை என்பது போல ஒரு முறை அவர் சொன்னதும், அறமாக இல்லாவிடிலும் நான் வேதமாக எடுத்துக்கொண்டு செய்வேன் என ராமன் அம்பு எய்கிறான். வால்மீகி ராமன் போல அவளைக் கொல்லென்று சொன்ன பின்பும் கை கால்களை வெட்டி நேர விரயம் ஏதும் 
செய்யவில்லை.
 
★கம்பரின் தாடகை எல்லா உயிரினங்களையும் உட்கொள்ள வேண்டும் என்கின்ற ஓர் வெறி உடையவள் மட்டுமே. அவளிடம் மாய சக்திகள் ஏதுமில்லை. அவள் மறைந்து தாக்கி ராமனுக்கு வித்தைகள் எதுவும் காட்டவில்லை. கம்பரின் ராமன் சுலபமாக அவளைக் கொன்று விடுகிறான். அம்பு எய்ததையும் யாரும் பார்க்கவில்லை, வில்லை வளைத்ததையும் யாரும் பார்க்கவில்லை, அவளின் சூலம் மட்டும் உதிர்ந்து கிடந்ததை பார்த்தனர். இது ராமனின் வலிமையை மேலும் மேலும் உயர்த்துகிறது. 
 
★கம்பர் பெண்களை கொன்ற மாமனிதர்களைப் பட்டியல் இடவில்லை. தாடகை பெண்ணே அல்ல என்றே வாதிடுகிறார். வால்மீகியைப் பொறுத்தவரை தவறு செய்தது யாராக இருந்தாலும், பெண்ணோ ஆணோ, அவரைக் கொல்லலாம். கம்பரைப் பொறுத்தவரை “எண் உருத் தெரிவு அரும்” பாவத்தை செய்பவள் பெண்ணே அல்ல. “பெண்ணை கொல்” என கம்பர் சொல்லவில்லை. இதைக் கலாச்சார வேறுபாடாகக் கூட பார்க்கலாம்.
 
★கம்பர் தாடகை வதத்தில் லட்சுமணனுக்கு வேலையே தரவில்லை. வேடிக்கை மட்டும் பார்க்கிறான். இது நல்ல விஷயம் தான். தாடகை வதத்தின் முழு கவனம் ராமன் மீதே குவிகிறது. “துணை கேரக்டராக மூக்கையும் காதையும் வெட்டுவதற்குப் பதிலாக, நீ சும்மாவே இரு!” என்று கம்பன் லட்சுமணனிடம் சொல்லியிருக்கலாம்.
 
★கம்பனை உவமைகளின் சரணாலயமாகவே பார்க்கிறேன். இடியின் வேகத்தில் ராமனின் அம்பு சென்றது என வால்மீகி சொன்னால், அதையும் தாண்டி சென்று, கொடிய மூடன் காதில் விழுந்த நல்லோர் சொல்லின் பொருள் போல அம்பு போயிற்று எனச் சொல்கிறார் கம்பர். சிறிது நேரத்தில் இருட்டி விடும் என வால்மீகியின் விசுவாமித்திரர் சொல்கிறார். ஆகவே தாடகை வதம் அந்தி மாலை நேரத்தில் நடக்கிறது. இருட்டியதும் கொல்லமுடியாது என்றெல்லாம் கம்பன் சொல்லாமல், அந்தி மாலையைக் அழகியதோர் உவமைக்குப் பயன்படுத்திக் கொள்கிறார். அந்திமாலையின் சிவந்த வானம் ஒடிந்து தரையில் விழுந்தது போல இருந்ததாம், ரத்தம் ஒழுகி தாடகை கிடந்த காட்சி என ஒரு போடு போடுகிறார்.
 
.★தாடகையின் அழிவையும் கம்பர் சும்மா விட்டுவிடவில்லை. ராவணன் மரணத்திற்கு அறிகுறியாக வைத்திருக்கிறார். இது வால்மீகி ராமாயணத்தில் இல்லை.
 
"தலைகள்தோறும் முடியுடை அரக்கற்கு. அந் நாள் முந்தி உற்பாதம் ஆக".
 
★இவற்றை வைத்துப் பார்க்கும் போது, தேவையில்லாத இடங்களை வெட்டியும், முக்கியமான இடங்களை விரித்துச் சொல்லியும், கம்பர் வால்மீகியின் ராமாயணத்தை ஒரு படி மேலே எடுத்துச் செல்ல நினைத்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் ஏற்கனவே விரிந்திருக்கும் ராமாயண காப்பியத்தில் எங்கெல்லாம் புகமுடியுமோ அங்கெல்லாம் புகுந்து விளையாடியிருக்கிறார். குறிப்பாக இந்த தாடகை வதம் நடந்த இப்பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டால்  அநேக ஆசிரியர்கள் பலவிதமாக எழுதி உள்ளார்கள்.கதை நெடுகிலும் இந்த மாறுபட்ட கருத்துக்கள் விரவிக் கிடக்கின்றன.
 
Source: http://www.valmikiramayan.net/utf8/baala/sarga24/bala_24_frame.htm
 
நாளை......................
ஶ்ரீராம காவியம்
~~~~~
044/ 10-05-2021
 
யாகம் காக்க...
 
★தாடகையின் வீழ்ச்சி, அரக்கர்களின் தாழ்ச்சிக்கு ஆரம்பநிலை. அவர்கள் அழிவுக்குப் பிள்ளையார் சுழி, இனி அடுத்து அவள் மைந்தர்கள் சுபாகுவும் மாரீசனும் இராமனை எதிர்க்கின்றனர். அதற்கு உரிய சூழல் உருவாகியது
 
★இதனை கண்ட தேவர்களும் முனிவர்கள் உலக நன்மைக்காக செய்யும் பல வேள்விகளை இந்த தாடகை தடுத்து கெடுத்து வந்தாள். ராமரினால் இப்போது தாடகை அழிக்கப்பட்டாள். அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி. ராமனுக்கு அஸ்திர வித்தைகள் அனைத்தும் கற்றுக்கொடுங்கள் ராமரினால் பெரிய காரியங்கள் பின்னாளில் நிறைய நடக்கப் போகிறது என்று பிரம்மரிஷி விஸ்வாமித்ரரிடம் கூறி விட்டு  சென்றார்கள்.
 
★விஸ்வாமித்ரர் தனக்கு தெரிந்த அஸ்திர  சாஸ்திரங்களை ராமருக்கு உபதேசித்தார். அதன் பின்னர் அஸ்திரங்களை திரும்ப பெரும் மந்திரங்களையும் கற்றுக் கொடுத்தார். அஸ்திரங்களின் அதிதேவதைகள் அனைவரும் ராமர் முன்பு தோன்றி தாங்கள் அழைக்கும் போது தங்களுக்கு தேவையானதை செய்வோம் என்று உறுதியளித்துவிட்டு சென்றனர்.
 
★ராமனால் விசுவாமித்திரர் அடைந்த பயனை காட்டிலும் விசுவாமித்திரரால் ராமன் அடைந்த பயன் மிக அதிகமாகும். மூவரும் கோமதி என்ற நதி, சரயு நதியில் கலக்கும் சங்கமத்தில் ஓர் இரவு தங்கினார்கள். அந்த நதியின் பெருமைகளை முனிவர் ராமருக்கு கூறி அங்கிருந்து புறப்பட்டனர்..
 
★ மூவரும் அந்த இடத்தை விட்டுச் சில யோசனை தூரம் நடந்து சென்றனர். மூவரும் அழகிய பசுஞ்சோலை ஒன்றனைக் கண்டனர்.  அந்த இடத்துக்குச் ‘சித்தாசிரமம்’ என்ற பெயர் வழங்கலாயிற்று. “நினைத்த பொருள் கைகூடும் இயல்பினது” என்ற பொருளில் இந்த இடம் இப் பெயரால் அமைந்தது.அந்த ஆசிரமம் மங்கையரின் உள்ளம் போல் மிகவும் தூய்மையாக இருந்தது
 
★அந்த சித்தாசிரமத்தில் பாம்பும் கீரியும், மயிலும் பாம்பும் பகை ஏதுமின்றி ஒன்றுபட்டு இருந்தன.
வேதம் கற்ற அந்தணர், வேள்விகள் இயற்றுவதைத் தம் தொழிலாகக் கொண்டிருந்தனர். தீ வளர்த்து, அவிசு சொரிந்து, தேவர்களுக்கு உணவு தந்தனர்; அவர்கள் புகழ்மிக்க இந்தத் திருத்தலத்தைத் தாம் யாகம் செய்யும் பூமியாகத் தேர்ந்து எடுத்தனர்; அதனால், அங்கே ஆசிரமங்கள் அமைத்துக் கொண்டு வேதம் ஓதுவதும் வேள்விகள் இயற்றுவதும் தம் தொழிலாகக் கொண்டனர்.
 
★விஸ்வாமித்ரர் தன்னுடைய ஆசிரமமான சித்தாஸ்ரமத்திற்கு இருவரையும் அழைத்து வந்தார். 
விசுவாமித்திரரும் தாம் செய்ய இருக்கும்  தவத்துக்குரிய இடமாக அந்த இடத்தைத் தேர்ந்து எடுத்தார். அங்கு வந்திருந்த ஏனைய வேதியர்களும் மற்றும் முனிவர்களும் அவர் தலைமை ஏற்று அடிபணிந்தனர். தன்னுடன் வந்தவர்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி, இவ்விரண்டு  வாலிபர்கள் தசரதன் நன்மக்கள் என்பதை எடுத்து உரைத்தார். இவர்கள் காவல் இருக்கத் தாம் எண்ணிய வேள்விகளைப் பண்ணி முடிக்கலாம் என்று உரைத்தார்.
 
★ஆசிரமத்திலுள்ள மற்ற ரிஷிகள் அனைவரும் தங்கள் யாகத்தை காக்க ராம லட்சுமனன் வந்ததை எண்ணி மகிழ்ந்தனர். யாகத்திற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகள் அதிவிரைவில் செய்யத் துவங்கினார்கள். 
யாகம் துவங்கும் முன் விஸ்வாமித்ரர் ராமரிடம் யாகம் முழுவதும் செய்து முடிக்க ஆறு நாட்கள் ஆகும். அந்த ஆறு நாட்களும் மௌனமுடன் இருக்க வேண்டும். ஆகவே விழிப்புடன் இருந்து காவல் காத்திருங்கள் என்று சொல்லிவிட்டு யாகத்தை தொடங்கினார்.
 
★வேள்வி தொடங்கியது. ஞானம் மிக்க முனிவர் அங்கு வந்து கூடினர். “இனி அரக்கர் வந்து அழிவு செய்ய முடியாது” என்பதால் அச்சமும் அவலமும் நீங்கி, உவகை பெற்றுச் செயல்பட்டனர். தீயை வளர்த்து, உலகத்துத் தீமைகளை அழிக்க முயன்றனர். விசுவாமித்தரர் யோக நிலையில் அமர்ந்து, தம் வேகம் எல்லாம் ஒடுக்கி, மவுன விரதம் மேற்கொண்டார். ஆறு நாள்கள் இந்த வேள்வி தொடர்ந்தது. 
 
ராமர் யாகசாலையில் தெற்கு வாசலிலும், இலட்சுமணர் வடக்கு வாசலிலும் வில்லேந்தி நின்று காவல் புரிந்தார்கள். வேறு அரக்கர் வந்து தொடர்ந்து வேள்விக் குழிகளைக் குருதிச் சேறு ஆக்காமல் இவ்விருவரும் ஊண் உறக்கம் இன்றி, வில் ஏந்திய கையராய்க் காவல் காத்து நின்றனர்.
 
நாளை......................
ஶ்ரீராம காவியம்
~~~~~
045/ 11-05-2021
 
தாடகையின்
அரக்க மைந்தர் அழிவு...
 
★தாடகை வீழ்ந்த அந்த அதிர்ச்சி மிக்க செய்தி அரக்கர்களைச் சுட்டது.  அது காடு முழுவதும் எட்டி எதிர் ஒலித்தது. அவள் மாரீசன் சுபாகு என்பவனின் தாய். அந்த அரக்கர்கள் கூட்டத்து  தலைவி, அக்கிரமங்களின் உறைவிடம். “அவள் வீழ்ந்தாள்” என்றதும் அரக்கர்கள் துயரில் ஆழ்ந்தனர்; கொதித்தனர்.  திக்கெட்டும் முரசுகள் அதிர்த்தனர்.  வான் எங்கும் குழுமினர்.  அவர்கள் கொக்கரித்து இடி முழக்கம் இட்டனர். வானத்தில் கரிய மேகங்கள் சூழ்ந்திருப்பது போல் இவ்வரக்கர்கள் ஒருங்கு திரண்டனர்.   “தலைவியை வீழ்த்திய அந்த சிறுவர்களையும் முனிவர்களையும் அழிப்பது” என்று உறுதி கொண்டனர்.
 
★வேள்விப் புகை கிளம்பியது. அதைப் பற்றிக் கேள்விப்பட்டனர். “இந்த முனிவர்களுக்கு என்ன துணிச்சல்?” என்று  நினைத்து அவர்களுக்கு ஒரே எரிச்சல்.
 மாமிசத் துண்டங்களை அந்த வேள்விக் குண்டங்களை நோக்கி வீச நினைத்தனர். குருதிப் புனலை அக் குழிகளில் கொட்டி நெருப்பை அவிப்பதில் மிக உறுதியாய் இருந்தனர். யாக மேடையைக் களப்பலி மேடை போலப் புலால் நாற்றம் வீசச் செய்ய முயற்சித்தனர். தமது கைவில்லை ஏந்தி நாண் ஏற்றி, அவர்கள் மீது அம்பு செலுத்தித் தொல்லைப் படுத்தினர். படைக்கலங்களை வீசி, அவர்கள் நெய்க் குடங்களை உடைத்தனர். 
 
★விண்ணில் இருந்து அவர்கள், இவற்றை வீசுவது ராமன் கண்ணில் பட்டது. அங்கிருந்த அரக்கர்களைச் சுட்டிக் காட்டி "இரக்கம் சிறிதும் காட்டாமல் வீழ்த்துக” என்று லட்சுமணனுக்கு அறிவித்தான். லட்சுமணன் அவர்கள் மீது அம்பு செலுத்தி, அலற வைத் தான். இராமன் சரக்கூடம் (யாகம் செய்யும் இடத்திற்கு மேல் அந்தரத்தில் அம்புகளால் பந்தல் போன்று) அமைத்து, வேள்விச் சாலையை அவர்கள் தாக்குதலினின்று தடுத்துக் காத்தருளினான்.
 
★தாடகையின் மக்களாகிய சுபாகுவும், மாரீசனும் ஆயிரம் அரக்கர்களுடன் வந்தனர். அந்த அரக்கர்கள் மாமிசத்தையும், கல்லையும், மண்ணையும் எரிந்து ஆரவாரம் செய்தார்கள். சரக்கூடம் இருந்ததினால் அவை ஹோம  குண்டத்தினுள்ளே விழவில்லை அரக்கர்களின் ஆரவாரத்தைக் கண்டு, அருந்தவ முனிவர் அஞ்சி, இராமனை அணுகி முறையிட்டனர். 
 
★"அவர்கள் குறைகளைத் தீர்த்து அருள்வதாக அபயம் அளித்தான். “'அஞ்சற்க” என்று கூறி அரக்கர் களைத் துஞ்ச வைத்தற்கு அம்புகளைச் செலுத்தினான். எதிர்க்க வந்த மாரீசன் அதிர்ச்சி அடைந்து, உயிர் தப்பி ஓடி விட்டான். சுபாகு என்பவன் மரணப் பிடியில் அகப்பட்டு அதிலிருந்த தப்ப முடியாமல் மடிந்து தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டான். “அரக்கர் தலைவர் இருவரும் களம் விட்டு மறையவே, மற்றவர் எதிர்த்துப் பயனில்லை” என்பதால் உயிர்மேல் விருப்புக் கொண்டு அந்த இடத்தை விட்டு ஒட்டம் பிடித்தனர். செத்தவர் சிலர்; சிதைந்தவர் பலர் ஆயினர்.
 அரக்கர்களின் கூட்டு எதிர்ப்பு வரட்டுக் கூச்சலாய் எழுந்து, ஓங்கி, அடங்கிவிட்டது. 
 
★தேவர்களின் யாகம் ஐந்து நாள்கள் நடந்தது. யாகம் எவ்வித தடங்களும் இன்றி மிக நன்றாக நிறைவேறியது. யாகம் முடிந்த பின் ஸ்நானம் செய்தார்கள்.
விசுவாமித்திரர் தம்முடைய  யாக வேள்வியை இனிது முடித்து மன நிறைவு கண்டார். மற்றைய முனிவர்களும் பனிப்படலம் நீங்கியது போல மன ஆறுதல் பெற்றுத் தத்தம் வேள்விப் பணிகளைச் செய்து முடித்தனர். அரக்கர்களின் அரட்டலும் மருட்டலும் அதோடு முடிந்தன. ராமன் விசுவாமித்திரருக்குத் துணையாய் இருந்து அவர் இட்ட பணிகளை இனிது முடித்துத் தந்து, அவர்தம் நன்மதிப்பைப் பெற்றான்.
 
★ராமரும் லட்சுமனனும் முனிவர் தங்களுக்கு கொடுத்த காக்கும் கட்மையை மிகவும்  சரியாக செய்து முடித்து விட்டார்கள். பின் விஸ்வாமித்ரரை நமஸ்கரித்து  நாங்கள் யாகத்தை காத்து விட்டோம் என்று சொல்லி ராமரும் லட்சுமனனும் தங்கள் மகிழ்ச்சியை  தெரிவித்தார்கள். 
ராமரை பார்த்து, ராமா! எல்லா உலகங்களையும் காத்தருளும் கடவுளாகிய நீ, இந்த வேள்வியை காத்தருளியதில் என்ன சிறப்பு! உன் புகழ் ஓங்குக ! என்று கூறி 
ராமலட்சுமனர்களை முனிவர் விஸ்வாமித்ரர் வாழ்த்தினார்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜ்
9944110869.
 
நாளை.......................
ஶ்ரீராம காவியம்
~~~~~
046/ 12-05-2021
 
கங்கை...
 
★கடமையை முடித்துக் கவலை நீங்கி இருந்தனர். ‘அடுத்துச் செய்யத்தக்கது யாது?’ என்று முனிவன் கட்டளையை எதிர் நோக்கி நின்றனர்.   “அடுத்த பயணம் எங்கே”என்று ராமன் நயனம் வினவியது.   “ஜனகன் என்ற பெயருடைய மாமன்னன் ஒரு பெரு வேள்வி நடத்த இருக்கிறான். வேள்வி காண அவன் ஊராகிய மிதிலைக்குச் செல்கிறோம். அங்கு உனக்கு ஒரு வீர விளையாட்டுக் காத்துக் கிடக்கிறது” என்று பதில் வந்தது பிரம்மரிஷியிடமிருந்து. எந்த ஊர்? என மீண்டும் கேட்டான் லட்சுமணன்.
 
★மிதிலாபுரி என்ற சிறப்பு மிக்க பட்டினத்தை மகாராஜா ஜனகர் ஆட்சி செய்து வருகிறார். அவர் கல்வியில் மேன்மைமிக்கவராக திகழ்பவர். அவர் பண்பாட்டில் சிறந்தவர்.  யாகம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார். அவர் யாகத்தை ஒட்டி நிகழ்ச்சிகள் சிலவற்றையும் நடத்துகிறார். 
“மேரு போன்ற வில் ஒன்று வளைப்பார் அற்று வாளாக் கிடக்கிறது. அதனை எடுத்து, வளைத்து, நாண் ஏற்றி, உன் வீரத்தைக் காட்டு. நீ மாவீரன் என்பதற்கு அஃது ஒர் எடுத்துக் காட்டு. அதனை வெளிப்படுத்த இவ்வாய்ப்புகள் காத்துக் கிடக்கின்றன” என்று கூறினார்.
 
★மேலும்நிகழ்ச்சிக்கு பல நாட்டு ராஜகுமாரர்களும் வருகிறார்கள். யாகத்தில் கலந்து கொள்ள நமது சித்தாஸ்ரமத்துக்கும் அழைப்பு வந்திருக்கிறது. நம் ஆசிரமத்தை சேர்ந்தவர்களும் நானும் அங்கு செல்கிறோம்.  நீங்களும் வந்து யாகத்தில் கலந்து கொள்ளலாம் என்று ராமரிடம் விஸ்வாமித்ர முனிவர் கூறினார். மேலும் யாகம் முடிந்த பின்னரே நாம் அயோத்தி செல்ல இயலும் எனவும் கூறியபடியால்  நாங்கள் நிச்சயமாக தங்களுடன் வருகிறோம் என்று ஶ்ரீராமனும் இளவல் லட்சுமனர்கள் ஒருசேர பிரம்மரிஷி விஸ்வாமித்ரரிடம் தெரிவித்தார்கள். இளவரசர்கள்  வருவதை எண்ணி ஆசிரமத்தை சேர்ந்தவர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்கள். விஸ்வாமித்ரர் ராமலட்சுமனர் ஆசிரமவாசிகள் என அனைவரும் மிதிலைக்கு கிளம்பினார்கள்.
 
★விஸ்வாமித்ரர் தலைமையில் அனைவரும் கங்கை நதிக் கரையை அடைந்தனர். முனிவர் விஸ்வாமித்ரரிடம் கங்கை எப்படி மூவுலகிலும் ஓடுகிறது. கங்கை நதியின் வரலாற்றை கூறுமாறு ராமர் கோரினார்.   "ஹிமவான் எனப்படும் பர்வத ராஜனுக்கு இரண்டு புதல்வியர் இருந்தனர். இவர்களின் தாய் பெயர் “மனோரமை”. மூத்தவள் ‘கங்கை’. இளையவள் ‘பார்வதி’. சிவனார் பார்வதியை தனது இடப்பக்கத்தில் வைத்து சரிபாதி இடம் கொடுத்தார். பெண்ணுக்கு சரி உரிமை தந்த முதற்கடவுள் சிவனார். சக்தியும் சிவனுமாய் அவர்களை மாந்தர் வணங்கி வழிபடுகின்றனர். கங்கை வானவர்க்கு அமுதமாக விளங்கிப் பரலோகவாசியாய் இருந்தாள். அவள் தேவர்களுக்கு நீராடும் புனலாக நிலவினாள் என்று விஸ்வாமித்ரர் கூறினார்.
 
★மேலும் ராம லட்சுமணன்
கங்கை நதிக்குப் பாகீரதி என்ற பெயர் வரக் காரணம் யாது?என்று முனிவரைக் கேட்டனர்.
 பகீரதனின் முயற்சியால் வான் உலகில் பாய்ந்து கிடந்த நதியை மண்ணுக்குக் கொண்டு வந்தமையால் அதற்குப் பாகீரதி’ என்ற பெயர் உண்டாயிற்று என்று விளக்கம் தந்தார் முனிவர். கங்கா தேவி பாகீரதி ஆன கதையை சொல்ல விஸ்வாமித்ர முனிவர் ஆரம்பித்தார். 
 
★அயோத்தி அரசை ஆண்ட இக்ஷ்வாகு குலத்தில் சகரன்      (சாஹாரா)  என்பவர் குழந்தை பேறின்மையால் இறைவனை வேண்டி தவம் செய்ததின் பயனாய் அவரது முதல் மனைவி மகாராணி சுமதிக்கு 60 ஆயிரம் குழந்தைகளும் 2 வது மனைவி ராணி கேசினி என்பவளுக்கு ஒரு குழந்தையும் பிறந்தனர். 
'சகரன்’ தன் புகழை  எட்டுத் திக்கும் பரப்பி, ஏற்றமுடன் ஆட்சி செய்து வந்தான். திறமைமிக்க தன்னிகரில்லாத வேந்தனாய் அவன் விளங்கினான்.
 
★தன் மாட்சியை உலகுக்கு அறிவிக்க அக்கால வழக்கப்படி அசுவமேத யாகம் ஒன்று நடத்தினான். அவன் அனுப்பி வைத்த குதிரை எட்டுத்திக்கும் சென்றும் அடக்குவார் இல்லை. அப்போது இந்திரன் அந்த யாக குதிரையை மறைத்து வைக்க குதிரையை தூக்கிச்சென்று பாதாள லோகத்தில் தவம் செய்து கொண்டிருந்த கபில மகரிஷியின் ஆசிரமத்தில் கட்டிவைத்து விட்டான். 
 
★அந்த குதிரையை தேடிச்சென்ற சகரனின் புதல்வர்கள் அறுபது ஆயிரம் பேரும் கபிலரின் ஆஸ்ரமத்தில் அஸ்வமேதகுதிரை இருப்பதை கண்டனர்.  வேல் ஏந்திய மன்னரை எதிர்க்கச் சென்றவர், நூல் அணிந்த மார்பன் ஆகிய கபில முனிவரை சந்தித்தனர். நொய்ந்த அவர் உடம்பைக் கண்டு அவரின் தவ  ஆற்றலை  மிகவும்  குறைவாக மதிப்பிட்டனர்.  கபிலரைத் திட்டியதுடன் அல்லாமல் அவரை மிகக் கடுமையாக துன்புறுத்த துவங்கினார்கள்.
 
★ கோபமடைந்த கபில மகரிஷி அவர்களை சபித்து சாம்பலாக்கி விட்டார். அனைத்தையும் அறிந்த மன்னன் சகரன்  கபிலரை வணங்கி தான் செய்யும் அஸ்வமேத யாககுதிரை தங்கள் ஆசிரமத்தில் இருந்தது கண்டதினால் இந்த குழப்பங்கள் வந்தது. தன் புதல்வர்களை மன்னிக்குமாறும் அவர்கள் சாப விமோசனம் தந்து நற்கதி அடைவதற்கு வழி சொல்லுங்கள் என்று கேட்டும் தன் குதிரையை எடுத்துச்செல்ல அனுமதிக்கும் படியும் கேட்டுக்கொண்டார்.
 
★சகரரின் வேண்டுகோளை ஏற்ற கபிலமகரிஷி குதிரையை எடுத்துச்செல்ல அனுமதி கொடுத்து மேலுலகத்தில் இருக்கும் கங்கையை பூலோகம் வரவழைத்து இந்த சாம்பலை புனிதப்படுத்தினால் இவர்கள் நற்கதி அடைவார்கள் என்று விமோசம் கூறினார். இதனை கேட்டு மிகவும் மகிழ்ந்த சகரர் குதிரையை  எடுத்துச் சென்று அசுவமேத யாகத்தை முடித்தார். முதல் மனைவியின் வாரிசுகள் அறுபதாயிரம் பேரும் சாம்பல் ஆனதால் இரண்டாவது மனைவியின் புதல்வன் ஆன அசமஞ்சன் நாட்டின் அரச பதவியை ஏற்றுக்கொண்டார்.
 
நாளை.................
ஶ்ரீராம காவியம்
~~~~~
047/ 13-05-2021
 
பகீரதன் தவம்...
 
★அசமஞ்சனுக்குப்பின் அவனது மகன் அன்ஷுமன் பதவிக்கு வந்தான். அவனுக்குப்பின் அவனது மகனான திலீபன் என்பவன் அரசனாக முடிசூட்டிக் கொண்டான்.திலீபனுடைய
புதல்வன் பகீரதன் ஆட்சி பொறுப்பை ஏற்றக்கொண்ட போது தமது முன்னோர்கள் அறுபதாயிரம் பேருக்கு நடந்த எல்லாவற்றையும் தெரிந்து கொண்டார். பகீரதன் முந்தையோர் கதைகளைக் கேட்டு வேதனை அடைந்தான்.
 
★ ஈமக்கடன்கள் ஏதும்  செய்ய முடியாமையால் அவர்கள் நாமமும் மறைந்து சாம்பலாய் மாறி அவர்கள் சரித்திரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தது. அவர்கள் சாம்பலை ஒருங்கு திரட்டிப் புண்ணிய நதியின் தீர்த்தத்தை அவற்றின் மீது தெளித்து, அவர்கள் வானுலகு செல்ல  அவன் முயற்சி எடுத்துக் கொண்டான். “கங்கை நீர்தான் புனிதம் மிக்கது” என்று சாத்திரம் அறிந்தவர் சாற்றினர்; ஆனால், அது மண்ணுலகில் பாய்வதில்லை; விண்ணவரின் உடைமையாக இருக்கிறது என்பதைப் பகீரதன் அறிந்தான்.
 
★இறந்த முன்னோர்களுக்குச் சிவலோகம் தருதற்கு மட்டும் அன்றிப் பாரத நாட்டுக்கு வளமும் வாழ்வும் தர, அந் நதி தேவை” என்பதை  நன்கு  சிந்தித்து உணர்ந்தான். மேலவர் என்று சொல்லும் தேவர்கள் தம் உடைமை என்று மதித்த அந்த நதியை மண்ணுக்குக் கொண்டு வர முடிவு செய்தான். ஆகவே தன் மகன் ஷ்ருத் என்பவனுக்கு முடிசூட்டி மன்னன் ஆக்கினான். பின்னர் பகீரதன்  நாட்டை துறந்து கங்கையை பூலோகம் கொண்டு வர பிரம்ம தேவரை நினைத்து காட்டில் மிகவும் கடுமையாக தவம் இயற்றினான்.
 
★இவரின் தவத்தில் மகிழ்ந்த பிரம்மதேவர் அகம் மகிழ்ந்து கங்கையை பூமிக்கு அனுப்ப இசைந்து ஆலோசனை வழங்கினார். பிரம்மதேவர் சகல சாத்திரங்களையும் அறிந்தவர். அவர் சட்ட நுணுக்கங்களை உணர்ந்தவர். நதியை எந்த ஒரு மாநிலமும் தனதென்று உரிமை கொள்ள முடியாது. அது பாயும் இடம் எல்லாம் அதற்கு வழிவிட வேண்டும் என்பதை உணர்ந்து அறிந்தவராய் இருந்தார்.
 
★கங்கை நதி, மேலிடத்தில் வாழ்ந்த தேவர்களுக்கு மட்டும் நீராடவும், விளையாடவும் பயன்பட்டு வந்தது. பிரம்மதேவர் கங்கையை  நோக்கி, ‘கங்கையே! நீ  மானுடர்களுக்கும் பயன்பட வேண்டும். மண்ணுலகில் மாந்தர் உம்மை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.  சற்றுக் கீழேயும் பார்’ என்று கூறி இது குறித்து உன்னிடம் பேச பகீரதன் என்ற மன்னன் வருவான் என கூறினார். பகீரதனிடம் கங்கை மாதாவை  சென்று பார்ககவும் கூறினார்.
 
★பிரம்மாவிடம் ஆலோசனை பெற்ற பகீரதன் விண்ணுலகம் சென்று அங்கே கங்கையைப் பார்த்து வணங்கித் தன் முன்னோர்களின் வரலாற்றைக் கூறி அவர்கள் நற்கதி அடையவேண்டி கங்கை பூமிக்கு வந்து பின் பாதளத்துக்கு வந்து தன் முன்னோர்கள் மோட்சம் அடைய உதவ வேண்டும் என வேண்டிக்கொண்டான். அதற்கு கங்கை பகீரதா நான் பூமிக்கு வரச் சம்மதிக்கிறேன். ஆனால் நான் விண்ணில் இருந்து பூமிக்கு வருகையில் அந்த வேகத்தை பூமி தாங்க மாட்டாள். நான் வரும் வேகத்தை என்னால் குறைக்கவும் இயலாது. என்னை எவரேனும் தாங்கிப் பிடித்து மெல்ல மெல்ல பூமியில் விட ஏற்பாடு செய்தால் நான் வருகிறேன் என்று கூறினாள். 
 
★பகீரதனும் விண்ணுலகத்து தேவர்களிடமும் பராக்கிரம சாலிகளிடமும் கங்கையின் வேண்டுகோளைக் கூறி அவர்களை வந்து கங்கையைத் தாங்கிப் பிடிக்க வேண்டினான். ஆனால் அவர்கள் கங்கையின் உண்மையான வேகம் அறிந்து மறுத்துவிட்டனர். பகீரதன் மஹாவிஷ்ணுவை வேண்ட அவர் இச்செயல் ஈசன் ஒருவரால் மட்டுமே இயலும். அவரே கங்கையைக் கட்டுப்படுத்த வல்லவர். அவரைத் தியானித்து தவம் செய்து அவர் அருளைப் பெறு என்று கூறினார்.
 
★மீண்டும் சிவனைக் குறித்து தவம் செய்ய ஆரம்பித்தான்.
பகீரதனின் கடும் தவத்திற்கு ஆதரவாக தேவர்கள் அனைவரும் சிவபெருமானைக் காணச் சென்றனர். கங்கை பூவுலகிற்கு பாயப்போகும் வேகம் அபாரமானது. இந்த மண்ணுலகம் அதனைத் தாங்காது என்பதை அறிந்த தேவர்கள்  சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.  
 
★ “மழை சிறிதும் பெய்யாமலும் கெடுக்கும். பெய்தும் கெடுக்கும் என்பது உலகு அறிந்த ஒன்று.  சில பகுதிகளில் மழையே பெய்வது இல்லை.   அங்கே பசியும் பஞ்சமும் விஞ்சி நிற்கின்றன. சில இடங்களில் மழை மிகுதியாய்ப் பெய்து 
அதிக வெள்ளப் பெருக்கை விளைவித்து, ஊர்களை அழித்து விடுகிறது. அழிக்கும் ஆற்றல் நெருப்புக்கு மட்டும் இல்லை.   நீருக்கும் உண்டு, “அதனை அடக்கி வேகத்தைக் குறைத்துப் பூமிக்கு அனுப்ப வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர்.
 
★மனம் மகிழ்ந்த ஈசனும் பகீரதனுக்குக் காட்சி அளித்து பகீரதா! உன் தவம் குறித்து மகிழ்ச்சி அடைந்தோம். உன் முன்னோர்களைக் கடைத்தேற்ற நீ கையாண்ட வழிகளையும் உன் விடா முயற்சியையும் மனதின் உறுதியையும் பாராட்டுகிறேன். கங்கை பூமிக்கு வரும் போது எனது சடாபாரத்தை விரித்துப் பிடிக்கிறேன். கங்கை அதிலே குதிக்கட்டும். அதிலிருந்து அவளைக் கீழே பாய்ந்து தவழச் செய்து விடுகிறேன் என்றார். 
 
★பகீரதனும் கங்கையிடம் ஈசனின் உதவியைக் குறித்துத் தெரிவிக்க அவளும் மகிழ்வோடு சப்தமிட்டுக்கொண்டு பூமியை நோக்கி வேகமாகப் பாய்ந்து வந்தாள். ஈசன் தன் சடையை விரித்துப் பிடித்தார். அப்போது கங்கைக்குள் அகங்காரம் புகுந்தது. நான் மிகவும் வேகமாக வருகின்றேன்.என் ஆற்றலையும் வேகத்தையும் இந்த ஈசனால் தாங்க இயலுமா என கங்கை யோசித்தாள். 
 
★எல்லாம் வல்ல சிவபெருமான்  கங்கையின் மன ஓட்டத்தை புரிந்து கொண்டார். நதியின் ரூபத்தில் வந்த அவளுடைய நீரோட்டத்தைத் தன்னுடைய  சடையிலேயே முடிந்து சுருட்டி விட்டார். திணறிப் போன கங்கை வெளிவர முடியாமல் தவித்து தன் அகங்காரத்தை போக்கிக் கொண்டாள். பகீரதனோ கங்கை நதியைக் காணாமல் கலக்கம் அடைந்தான். ஈசனை நோக்கி மீண்டும்  ஒற்றைக்காலில் நின்று தவமிருந்தான்.
 
★பகீரதன் முன் தோன்றிய ஈசன் கங்கையின் கர்வத்தை ஒடுக்க வேண்டியே தாம் இவ்விதம் செய்ததாகக் கூறிவிட்டு கங்கையை மெல்ல மெல்ல வெளியே விட்டார். அவளை அப்படியே தாங்கிக் கொண்டு இமயத்தில் நந்தியெம்பெருமான் விட கங்கை அங்கிருந்து பாயத் தொடங்கினாள். பகீரதன் அவளைப் பின் தொடர்ந்தான். வழியில் ஜான்ஹவி என்னும் ரிஷியின் ஆசிரமம் இருந்தது. கங்கை வந்த வேகத்தில் அந்த ஆசிரமத்தை முற்றிலும் நீரால் அழித்து முனிவரையும் உருட்டித் தள்ள ஆயத்தமானாள். கோபம் கொண்ட முனிவர் கங்கையை அப்படியே தன் கைகளால் அள்ளி எடுத்து குடித்து விட்டார். கங்கை மீண்டும் சிறைப்பட்டாள். 
 
★பகீரதன் கலங்கியே போனான். முனிவரின் கால்களில் வீழ்ந்து வணங்கித் தன் கடுமையான முயற்சியையும் காரணத்தையும் ஆற்றாமையையும் கங்கைக்காக தான் மன்னிப்புக் கோருவதாயும் தெரிவித்தான். அவன் நிலை கண்டு இரங்கிய ஜான்ஹவி முனிவர் கங்கையைத் தம் செவி வழியே மிக மிக மெதுவாக விட்டார். ஆகவே கங்கைக்கு ஜானவி என்ற இன்னொரு பெயரும் ஏற்பட்டது. இதன் பிறகு தடை ஏதுமில்லாமல் பாய்ந்த கங்கையைப் பாதாளம் அழைத்து சென்றான் பகீரதன். அங்கே கபில முனிவரை சந்தித்து ஆசிகள் பெற்றுக்கொண்டு தம் மூதாதையரின் சாம்பலை கங்கை நீரில் நனைத்துப் புனிதமாக்கினான்.
 
★சகரனனின்  புத்திரர்கள் அறுபதாயிரம் பேருக்கும் நற்கதி கிடைத்தது. அன்று முதலே கங்கை நதி பூமியில் பாய ஆரம்பித்தது என்று கங்கையின் வரலாற்றை ராமருக்கு முனிவர் விஸ்வாமித்ரர் சொல்லி முடித்தார்.  முந்தையோரின் பெருமைகளை கூறிக்கொண்டு வந்த விசுவாமித்திரர், அவற்றுள் ஒன்றாக இந்தப் பகீரதனின் கதையையும் கூறினார். இக் கதைகளைச் சொல்லி அன்றைய இரவுப் பொழுதைக் கழித்தனர். மறுநாள் மிதிலை நோக்கிப் புறப்பட்டனர்.
 
★விசுவாமித்திரர்பால் கேட்ட கதைகளுள் பகீரதன் கதையும் ஒன்றாகும்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.....................
ஶ்ரீராம காவியம்
~~~~~
048/ 14-05-2021
 
அகலிகை...1
 
★மிதிலை நகரம் தூரத்தில்
தென்பட்டது. ராமன் கைவண்ண மகிமையை  தாடகை வதத்தில் அவன் வில் திறமையில் காண முடிந்தது.அவன் கால் வண்ண மகிமையை  காணும் வாய்ப்பு இவனுக்காகக் காத்துக் கிடந்தது.
அழகான மிதிலை நகரத்திற்கு முன்பு ஒரு ஆசிரமம் தென்பட்டது.  யாரும் இல்லாத இடத்தைப் போன்றும் மிகவும் அழகாகவும்  தென்பட்ட அந்த ஆசிரமம் ஓர் காலத்தில் மிகச்  சிறப்பானதாக இருந்ததற்கான அடையாளங்கள் தென்பட்டது. ஆசிரமத்தின் அருகில் ஓரு கல்லில் இருந்து ஒரு துளசி செடி வளர்வதை ராமர் கண்டார். 
 
★குருவே இது மிகவும் வியப்பாக உள்ளது. இங்கே அனைத்தும் தனித்து விடப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் எப்படி ஒரு கல்லில் இருந்து துளசி செடி வளர்கிறது. இது யாருடைய ஆசிரமம். இங்கு யாரும் இல்லையே. இந்த ஆசிரமத்தின் வரலாற்றை அறிந்து கொள்ள நாங்கள்  விரும்புகின்றோம். தாங்கள் கூறுங்கள் என்று கேட்டார். அது ஒரு பெருங்கதை. பெண்ணின் விமோசனத்தைப் பேசும் ஒரு கதையாகும். அது தனிப்பட்ட ஒரு தவ முனிவனின் பத்தினி கதை மட்டுமன்று; 
 
★“தவறு ஏதும் செய்து விட்டால் அதனை வைத்து அவதூறு செய்வது கூடாது” என்ற பாடத்தையும் கற்பிப்பது. கற்பு என்பதற்கு அற்புதமான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. “அவர்கள் பிறர் நெஞ்சில் புக மாட்டார்கள்’ என்று பலராலும்  பேசப்படுகிறது. அவர்களுக்குக் கடுமையான விதிகள் விதிக்கப் பட்டிருந்தன. ஓர் காலத்தில் அருளுக்கும் அழகுக்கும் பெயர் பெற்றதாக இந்த ஆசிரமம் இருந்தது. இந்த ஆசிரமத்தின் தலைமையில் இருந்தவர் கௌதம மகரிஷி ஆவார். அவரது மனைவியின் பெயர் அகலிகை. 
 
★இவள் பிரம்மாவின் மானசீக மகளாவாள். இவளது பெயருக்கு மாசு அற்றவள் என்றும் தனது உடலில் அழகில்லாத பகுதி சிறிது இல்லாதவள் என்றும் பொருள். தேவலோகத்தில் இருந்த ஊர்வசி தான் தான் அழகு என்று எண்ணி மிக்க அகங்காரம் கொண்டிருந்தாள். அவளது ஆணவத்தை அடக்க பிரம்மா நீரிலிருந்து அகலிகை என்பவளை  மிக அழகுடன் படைத்தார். அவளை மணக்க அனைவரும் போட்டி போட்டனர். எனவே சுயவர போட்டி நடத்த பிரம்மா முடிவு செய்தார். 
 
★பேரழகு படைத்த அகலிகையை மணக்க சுயம்வர போட்டி ஒன்று நடந்தது. யார்  முன்பும் பின்பும் தலை  உள்ள பசுவை கண்டு அந்த பசுவை  மூன்று முறை முதலில் வலம் வருகிறார்களோ அவர்களுக்கே அகலிகை என்ற போட்டியை பிரம்மா வைத்தார். முன்னும் பின்னும் தலை உள்ள பசு மூன்று உலகத்திலும் எங்கும் இல்லை. ஆகவே வேறு ஏதேனும் சொல்லுங்கள் என்று தேவர்கள் பிரம்மாவிடம் ஒரு கோரிக்கை வைத்தார்கள். யார்  மூன்று உலகத்தையும் முதலில் சுற்றி வருகின்றார்களோ அகலிகை அவர்களுக்கே  என்று மற்றொரு போட்டியை பிரம்மா அறிவித்தார். இரண்டு போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் யார் முதலில் வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு அகலிகை மனைவியாவாள் என்று பிரம்மா அறிவித்தார்.
 
★இந்திரன் மாய வேலைகள் செய்து அகலிகையை அடைய எண்ணியிருந்தான். தேவர்கள் அவர்களுக்கான வாகனத்தில் மூன்று உலகத்தையும் சுற்ற போட்டி போட்டுக்கொண்டு கிளம்பினார்கள். நடப்பது அனைத்தையும் எட்டி நின்று பார்த்தார் நாரதர். கௌதம முனிவர் ஆஸ்ரமத்தில் அவருக்கு பணிவிடை செய்ய ஏற்றவள் அகலிகை. ஆகவே அகல்யாவை கௌதம முனிவருக்குத் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று நாரதர் திட்டம் திட்டினார். 
 
★எனவே பூரண கருவுற்றிருந்த ஒரு பசுவை ஓட்டிக்கொண்டு கௌதம ரிஷியின் ஆஸ்ரமத்தை  அடைந்தார். கௌதமரை வெளியே அழைத்தார். அந்தப் பசு அப்போது கன்றை ஈன ஆரம்பித்தது. பசுவின் பின்புறம் கன்றின் முகம் முதலில் தோன்றியது. உடனே நாரதர் கௌதமரை அந்தப் பசுவை மூன்று முறை வலம் வரச்செய்து வணங்க வைத்தார். கௌதமர் இரண்டு தலைகளை உடைய பசுவை இப்போது மூன்று முறை சுற்றி வந்துவிட்டார். நாரதர் கௌதம மகரிஷியை பிரம்ம தேவரிடம் அழைத்துப்போய் நடந்ததைக் கூறி கௌதமர் போட்டியில் வெற்றி பெற்று விட்டார். எனவே கௌதமருக்கு அகலிகையை திருமணம் செய்து கொடுக்குமாறு கேட்டார்
 
★பிரம்மதேவரும் அகலிகையை கௌதமருக்குத் திருமணம் செய்து வைத்தார். அகலிகையும் மகிழ்ச்சியுடன் கௌதமருடன் இல்லறத்தில் மகிழ்ந்திருந்தாள். அந்த மகிழ்ச்சியில் அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது . அந்த குழந்தைக்கு சதானந்தர் என்று பெயர் வைத்தார்கள். ஜனக மகாராஜாவின் புரோகிதராக இருப்பவர் இந்த சதானந்தாரே ஆவார். 
 
★இந்திரன் போட்டியிட்ட மற்றவர்களுக்கு முன்னால் உலகை வலம் வந்து பிரம்ம தேவரிடம் அகலிகையைக் கேட்டான். ஆனால் அகலிகைக்கு திருமணம் ஆகிக் குழந்தையும் பிறந்துவிட்ட கதையைப் பிரம்மதேவர் சொல்ல இந்திரன் ஏமாற்றத்தால் பொருமினான். மனதிற்குள் வன்மத்தை வளர்ந்த இந்திரன் எப்படியும் அந்த அகலிகையை அடைய வேண்டும் என்று திட்டம் திட்டினான். ஆகவே தினந்தோறும் அகலிகையையும் கௌதம மகரிஷியின் தினசரி செயலையும் நோட்டமிட்டான் இந்திரன்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை....................
ஶ்ரீராம காவியம்
~~~~~
049/ 15-05-2021
 
அகலிகை...2
 
★கௌதம மகரிஷி தினமும்  அதிகாலை குளக்கரைக்கு செல்வதை இந்திரன் அறிந்து கொண்டான். ஒருநாள் காலை விடிவதற்கு முன்பே சேவலாய் மாறி கூவினான். விடிந்து விட்டது என்று எண்ணிய கெளதமர் குளக்கரைக்கு செல்ல வீட்டை விட்டு வெளியேறினார். இந்திரன் கௌதம மகரிஷி போல் உருவத்தை மாற்றிக் கொண்டு அகலிகை இருந்த குடிலுக்குள் சென்றான். 
 
★தனது கணவர் தான் வந்து இருக்கின்றார் என்று எண்ணிய அகலிகை அவருக்கு பணிவிடை செய்ய ஆரம்பித்தாள். இதனை பயன் படுத்திக்கொண்ட இந்திரன் அவளிடம் நெருக்கம் ஆனான். திடீரென தன் கணவன் தன்னை நெருங்கி வருவதை அறிந்த அகலிகை தனது கணவரின் குணாதிசயத்தை போல் இது தெரியவில்லையே என மனதிற்குள் நினைத்து ஏதோ ஒரு தவறு நடக்கிறது என புரிந்து கொண்டாள். ஆனால் என்ன செய்வது என்று அவளுக்கு தெரியவில்லை.
 
★இன்னும் சரியாகப் பொழுது விடியவில்லை என்பதை உணர்ந்த கௌதமர் எதோ தவறு நடக்கப்போகிறது என உணர்ந்து விரைவாக குடிலுக்கு திரும்பி வந்தார். கௌதமர் உடனடியாக திரும்பி வந்ததை அறிந்த இந்திரன் பூனை உருவத்திற்கு தன்னை மாற்றிக்கொண்டு அங்கிருந்து வெளியேறினான். அதனை அறிந்த கௌதமர் பூனை வடிவத்தில் இருப்பது யார் என்று தன் கையில் இருந்த தண்ணிரை பூனை மேல் தெளிக்க இந்திரன் கௌதமரின் உருவத்தை அடைந்தான். தன்னைப்போல் இருப்பவனை பார்த்த கௌதமர் நடந்ததை புரிந்துகொண்டார். 
 
★முனிவர் விழிகள் கனலைப் பொழிந்தன. “கல்லாகுக” என்று சொல்லாடினார். அவனையும் எரித்து இருக்கலாம். இந்திரன், தேவர்களின் தலைவன். அவனைப் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. “நீ பெண் ஆகுக” என்று சபித்தார். “மற்றவர் கண்களுக்கு நீ உன் சொந்த உருவில் காட்சி அளிப்பாய். ஆனால்  உனக்கு மட்டும் நீ பெண்ணாகத் தோன்றுவாய்”  என்று சாபம் இட்டார். இருட்டிலே நடந்தது வெளிச்சத்துக்கு வரவே இல்லை. உலகத்துக்கு அவள் ஒரு பாடமாக விளங்கினாள்.
 
★கணவனின் தொடு உணர்வை அறிந்து கொள்ளாமல் கல் போல் இருந்த நீ கல்லாக போவாய் என்று அகலிகையை சபித்தார். அகலிகை நடந்த உண்மையை உணர்ந்து கௌதமர் காலில் விழுந்து கதறினாள். நீண்டகாலம் காற்றே உணவாக எடுத்துக்கொண்டு கல்லாக இருப்பாயாக. பல காலம் கழித்து இங்கு தசரதன் மகன் அவதார புருஷன் ராமன் ஒருநாள் இங்கு வருவார். இந்த ஆசிரமத்திற்கு வரும் ராமரின் கால்பாதம் உன் மீது பட்டதும் உன் சாபம் பாவம் இரண்டும் நீங்கும். 
 
★நீ அவரை வரவேற்று அன்பாக உபசரிப்பாய். அப்போது உன் இயற்கை குணத்தை அடைந்து மறுபடியும் என்னுடன் வாழ்வாய் என்று கூறினார். இந்திரன் செய்த கொடும்செயலை சிறிதும்  அறியாமல் அந்த தவறுக்கு உடந்தையாக இருந்த மனைவி அகலிகையை சபித்துவிட்டோமே இந்த பாவத்திற்கு ஈசனின் திருவடி தரிசனம் கிடைத்தால் மட்டுமே இந்த பாவம் போகும் என்று ஈசன் திருவடியை நாடி கௌதம மகரிஷி இமயமலை சென்று தியானத்தில் அமர்ந்து விட்டார்.
 
★இந்த துளசி செடி இருக்கும் கல்லுக்குள் அகலிகையின் ஆத்மா உள்ளது. ஒரு ஆணால் ஏமாற்றப்பட்டு ஒரு ஆணால் சபிக்கப்பட்டவளே இந்த பெண். ராமா! இவளுடைய சாபத்தை உன்னால் மட்டுமே திருப்பி எடுக்க முடியும். இந்த கல்லை உன் பாதங்களால் நீ தொட்டால் சாபத்தில் இருந்து அகல்யா மீள்வாள் இந்த கல்லில் உன் பாதத்தை வை எனக் கூறினார் விஸ்வாமித்திரர். பிரம்மரிஷி கூறியதை போல் தன் பாதத்தை கல்லின் மீது வைத்தார் ராமர். 
 
★அந்த கல்லிற்பட்ட  ராமருடைய ஸ்பரிசத்தால் சாப விமோசனம் பெற்றாள் அகலிகை. வின்னவர் ஆகாயத்திலிருந்து புஷ்பமாரி பெய்ய அவளுடைய கொடிய பாவம் தீர்ந்து தேவகன்னிகை போல் பிரகாசித்தாள். ராமரால் அகலிகைக்கு விமோசனம் கிடைத்ததை அறிந்த மகரிஷி கெளதமரும் அங்கே வந்து சேர்ந்தார். மகரிஷி கௌதமரும் அகலிகையும் ராமருக்கு மிகுந்த உபசரணைகள் செய்தார்கள். அனைத்தையும் ராமர் ஏற்றுக் கொண்டார். 
 
★அகலிகை  காலம் காலமாகக் கல்லாகிக் கிடந்தாள். அந்தக் கல் ராமன் வழியில் தட்டுப்பட்டது. ராமன் திருவடி பட்டதும் அவள் உயிர் பெற்று மீண்டு எழுந்தாள். கல்லையும் காரிகையாக்கும் கலை, ஶ்ரீராமன் காலுக்கு இருந்தது. அந்த அகலிகை  சாப விமோசனம் பெற்றாள்.
 
★பழைய நினைவுகளின் பாதிப்பினால் ஆத்திரம் கொண்ட  முனிவர் மிகைப்பட நடந்து கொண்டார். அவரே அவளை மன்னித்து தன்னுடன் சேர்த்து இருக்கலாம். ஆனால் அத்தகைய  மனநிலை அவருக்கு அப்போது அமைய வில்லை. ராமனைக் கண்டதும் அவர் மனம் மாறியது. விசுவாமித்திரர் வேறு அறிவுரை கூறினார். “பொறுப்பது கடன்” என்று எடுத்துக் கூறினார். அகலிகையை  மறுபடியும் சேர்த்துக் கொள்ள வேண்டினார். கவுதமர் மறுபடியும் தம் தவ வாழ்க்கையில் ஈடுபடலாயினார். அகலிகையும் முனிபத்தினியாய் இருந்து அவருக்குப் பணிவிடை செய்தாள். அவள் கூந்தல் மலர் மணம் பெற்றது.
 
★ கல்லைப் பெண்ணாக்கிய காகுந்தன் பெருமையைப் பாராட்டினார்   விசுவா மித்திரர். “தாடகை அழிவு பெற்றாள். அகலிகை வாழ்வு பெற்றாள். அவன் கைவண்ணம் அங்குப் புலப் பட்டது. கால்வண்ணம் இங்கே தெரிய வந்தது' என்று விசுவாமித்திரர் பாராட்டினார். 
 
★“கைவண்ணம் அங்குக் கண்டேன. கால்வண்ணம் இங்குக் கண்டேன்” என்பது கவிச்சக்ரவர்த்தி கம்பரின்  சொல்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை....................
ஶ்ரீராம காவியம்
~~~~~
050/ 16-05-2021
 
ஓடக்காரனின் பக்தி...
 
★கௌதம மகரிஷி மற்றும் அகலிகையின் உபசரிப்பை ஏற்றுக்கொண்ட பின் ஶ்ரீராமர் லட்சுமனனுடன் விஸ்வாமித்ரர் தனது சீடர்களுடன் மிதிலை நோக்கி கிளம்பினார். மூவரும் போகும் வழியில் சோனை நதியைக் கண்டார்கள். கங்கா நதியை தரிசனம் செய்தார்கள். சரவணப் பொய்கையைக் கண்டு முருகனை நினைத்து வணங்கி மகிழ்ந்தார்கள்.
 
★மூவரும் மிதிலைக்கு அருகில் சேர்ந்தார்கள். அங்கு ஒரு பெரிய நதி ஒன்று இருந்தது. அந்த நதியை கடக்க பாலம் இல்லை. ஆதலால்  நதியைக் கடக்க வழி ஏதேனும் உள்ளதா என்று தேடிக் கொண்டிருந்தபொழுது கரிய நிறத்துடன் ஒருவன் வந்து அவர்கள் முன் கைகூப்பி வணங்கி நின்றான். நீ யார்? உன் பெயர் என்ன? என்று கேட்டனர். 
 
★அவன்  வீரப்பன் என்பது என் பெயர் என்றான். நான் ஒரு ஓடக்காரன். நான் பரம்பரையாக ஓடம் செலுத்துபவன் என்று அவனைப் பற்றிக் கூறினான். . நாங்கள் அக்கறைக்கு போக வேண்டும். ஓடம் கிடைக்குமா எனக் கேட்டார் விஸ்வாமித்ரர். ஓடத்தில் அறுபது நபர் போக வேண்டும். நீங்கள் மூவர் தான் வந்து இருக்கின்றீர்கள் என்று ஓடக்காரன் வீரப்பன் கூறவே, அப்படி என்றால், நாங்கள் மீதம் 57 நபர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டுமா? என முனிவர் கேட்டார்.  தாங்களோ இந்த உலகத்தை காக்கும் தெய்வங்கள். உங்களை நான் ஒருபோதும் காக்க வைக்கவே மாட்டேன் என பதிலுரைத்தான் அந்த ஓடக்காரன்..
 
★விசுவாமித்திரர் ஓடத்தில் ஏறினார். ராமர் ஏறும்பொழுது மீனவன், அய்யா! அய்யா! நீங்க ஓடத்தில் ஏற வேண்டாம்.! இதனை கேட்ட ராமர் தூக்கிய காலை கீழே வைத்துவிட்டார். லட்சுமணனுக்கு பெரும் கோபம் உண்டாயிற்று. தம்பி லட்சுமணா! அவன் பரம்பரையாக ஓடம் செலுத்துபவன். அவனுக்கு சொந்தமான ஓடத்தில் கால் வைக்காதே என்று சொல்வதற்கு அவனுக்கு உரிமை உண்டு அல்லவா? ராமர், மீனவனே! நான் ஏன் ஓடத்தில் ஏறக்கூடாது என்கிறாய் எனக் கேட்டார். ஐயா! தங்களை நான் ஏற்றிக்கொள்ள மாட்டேன். ஆனால் என் மேல் கோபத்தில் உள்ள சின்ன ஐயாவை ஏற்றிக்கொள்வேன். மீனவனே! நாங்கள் அயோத்தி ராஜ்யத்தை ஆளும் தசரத சக்ரவர்த்தியின் மக்கள் என்றார் ராமர்.
 
★இதைக். கேட்டவுடன் அம்மீனவனின் உள்ளம் துடித்து, கண்ணீர் மல்க வணங்கி, "என்னை மன்னித்து அருள வேண்டும் ராம மூர்த்திகளே! தாங்கள் பிறந்த அன்று எங்களுக்கு அன்னமும் ஆடையும் வழங்கினார்கள். தங்களுக்கு ஒரு கோடி வணக்கங்களை நான் செலுத்துகிறேன். ஆனால் தாங்கள் மட்டும் ஓடத்தில் கால் வைக்கவேண்டாம்" என்றான். ராமர் ஏனப்பா! நான் ஏறக்கூடாது. எனக் கேட்க "ஐயனே! நாங்கள் இளமையில் ஆஸ்ரமத்திலிருந்த பெரிய கல்லில் சருக்கும்பாறை விளையாடுவோம். அந்தக் கல்லில் தங்கள் கால் பட்டவுடனே அது பெண்ணாக மாறிவிட்டது. இந்த ஓடத்திலும் கல்லும், மரமும், இரும்பும் இருக்கின்றன. தாங்கள் கால் வைத்தவுடன் ஓடம் பெண்ணாக மாறிவிட்டால் நான் என்ன செய்வது.
 
★அப்பா மீனவனே! நான் கால் வைத்தால் ஓடம் பெண்ணாகாது. அப்படி என்றால் தாங்கள் இந்த நதியில் இறங்கி சுத்தமாக காலைக் கழுவிவிட்டு ஏறுங்கள். ராமர் நதியில் இறங்கிக் கால் கழுவச் சென்றார். மீனவன், ஐயனே! கால் கழுவும் பணியை எனக்கு கொடும். நான் சுத்தமாய் தேய்த்துவிடுகிறேன் என்று கூறி, ராமருடைய பாதங்களை செம்பு தாம்பாளத்தில் வைத்து, ராம ராம என்று கண்ணீரும் பன்னீரும் விட்டு அபிஷேகம் செய்தான். காட்டு மலர்களை கொண்டு அர்ச்சனை செய்தான்.
 
★ பெருமானே உன் பாத பூஜைக்காக மகரிஷிகள் பல காலம் தவம் இருக்க, தவம் செய்யாத இந்த அடியேனுக்கு முதல் பாத பூஜை கிடைத்தது என துதி பாடி வழிபாடு செய்தான். ராமர், தம்பி லட்சுமணா! நமது பாதபூசைக்காக தான் இவ்வாறு செய்தான். மீனவன், ராமா! உங்கள் கால்களை  சுத்தம் செய்த இந்த நீரை கீழே விட்டால் கற்களெல்லாம் பெண்களாகி விடும். அதனால் என் மனமாகிய கல் பெண்ணைப் போல மென்மை ஆகட்டும் என்று கூறி தலையில் ஊற்றிக்கொண்டான்.
 
★பிறகு மூவரும் ஓடத்தில் ஏறினார்கள். அவன் பகவான் உடைய கீதத்தைச் சொல்லியபடி ஓடத்தை செலுத்தினான். அந்த மூவரும் ஓடத்தை விட்டு கீழே இறங்கிய பின் ராமர் தன் கையிலிருந்த நவரத்தின மோதிரத்தை பரிசாக தந்தார். மீனவன் அதை வாங்க மறுத்தவிட்டான். ராமச்சந்திர மூர்த்தி! நீயும் ஓடக்காரன், நானும் ஓடக்காரன். ஒரு தொழிலாளி மற்றொரு தொழிலாளியிடம் இனாம் வாங்க கூடாது. நான் இந்த நதிக்கு ஓடம் விடுபவன். தாங்கள் பிறவிப் பெருங்கடலை கடப்பதற்கு திருவடி ஆகிய ஓடத்தை விடுபவர் என்று கூறி, ராமர் மலரடிமீது வீழ்ந்து வணங்கினான். மீனவனின் அன்பைக் கண்டு ராமர் உள்ளம் உருகினார். பிறகு மூவரும் மிதிலையை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை......................
ஶ்ரீராம காவியம்
~~~~~
051/17-05-2021
 
ஸீரத்வஜ ஜனகர்...
 
★ஓடக்காரன் வீரய்யனிடம் விடை பெற்று மூவரும் மிதிலை நகர் நோக்கிச் செல்லலாயினர். சற்று நேரத்தில் ஓர் அழகான சோலை இருக்க கண்டனர். மான்களும் மயில்களும் அங்கு துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன. அந்த அழகான சோலையில் சிறிது நேரம் இளைப்பாறிச் செல்லலாம் என விஸ்வாமித்ரர் நினைத்தார். நினைத்ததை ராமரிடம் தெரிவித்தார். ராமரும் இசைந்தார். நாளை ஜனகரின் யாகத்தில் கலந்து கொண்டு அதன்பின் நடக்கவிருக்கும் இளவரசி சீதையின் சுயம்வர நிகழ்சியின் போதும்  நாம் அங்கு இருக்க வேண்டும். ஆகவே நீங்களும் சற்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்றார் முனிவர். அதைக் கேட்ட ராமன் மன்னர் ஜனகரைப் பற்றியும் இளவரசி சீதையைப் பற்றியும் சில விபரஙகள் கூறுமாறு கேட்டுக் கொண்டார். விஸ்வாமித்ரரும் சொல்லத் தொடங்கினார்.
 
 ★தட்ச பிரஜாபதி ஆரம்பித்த  யாகத்தில் தன்னை மாய்த்துக் கொண்டாள் சதி தேவி். அதனால் கோபமுற்ற சிவபெருமான் தட்சனின் யாகத்தில் கலந்து கொண்ட எல்லா தேவர்களையும், அழிப்பதற்காக சிவதனுசினை எடுத்து அம்பினை பூட்டினார். அதற்குள் தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் தங்களைக் காக்க வேண்டினர். அதனால் சிவபெருமான் மனம் மாறி, சிவதனுசினை தேவர்களின் மூத்தவரான தேவராதன் என்பவருக்கு அளித்தார்.அந்த சிவதனுசை தேவராதன் பக்தி கொண்டு பூஜித்து  பாதுகாத்து வந்தார். தேவராதன் மறையும் போது, அவர் சந்ததிகள் அதனை பாதுகாத்து வந்தார்கள். பின்னர் அந்த சிவதனுசின் மேன்மை புரிந்தவர்கள் வம்சத்தில் ஜனகர் தோன்றியதால், அவருக்கு சிவதனுசு கிடைத்தது. கிடைத்த சிவதனுசை ஜனகர் பூஜித்து பாதுகாத்து வந்தார்.
 
★ராமாயணத்தில் குறிப்பிடப் பட்டுள்ள  ஜனகர் ஒரே ஜனகர் அல்ல. அவரைப் போல் பல ஜனகர்கள் இருந்துள்ளனர். ஜனகர் என்பது  குடும்பப் பெயர். மிதிலையை தலைநகரமாகக் கொண்டு விதேக நாட்டை ஆட்சி புரிந்த மன்னர்களின் குடும்ப பெயர்தான் இந்த ஜனகர் என்பது. சீதையின் தந்தை பெயர் ஜனகர் இல்லை.   ஸீரத்வஜர் என்பதுதான் அவரது இயற் பெயர். குடும்ப பெயரையும் சேர்த்தால், ஸீரத்வஜ ஜனகர் என்பதுதான் அவருடைய உண்மையான பெயர். ஆனால் ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் குறிப்பிடப்படும் ஜனகர் ஒரு மன்னனாக இருந்தாலும் கர்ம யோகத்தால் பிரம்ம ஞானம் பெற்றார் என்று குறிப்பிடுகிறது.
 
★வேதாந்தம் அதாவது வேதத்தின்  இறுதி என்று அழைக்கப்படும் உபநிடதங்கள் பலவாயினும் குறிப்பிட்ட பத்து உபநிடதங்கள் முக்கியமானவை. ஈச, கேன, கடோப, பிரச்ன, முண்டக, மாண்டூக்ய, ஐதரேய,  தைத்ரீய, ப்ருஹதாரண்யக, சாந்தோக்ய என்பவையே அந்த பத்து உபநிடதங்கள். இவற்றுள் இந்த ப்ருஹதாரண்யக உபநிடத்தை கூறியவர் யாக்ஞவல்கியர் என்ற முனிவர். இவருக்கும் ஜனகருக்கும் இடையிலான உறவு மிகவும் அற்புதமானது.
 
★மிதிலை மன்னனான ஜனகர் தான் பிரம்மஞானம் அடைய ஒரு குருவை தேடிக் கொண்டிருந்தார். சீதையின் மணவாளனை தேர்ந்தெடுப்பதற்கு மட்டும் ஜனகர் போட்டி வைக்கவில்லை. தன்னுடைய ஞான குருவை தேர்ந்தெடுக்கவும் ஒரு போட்டி வைக்கிறார். ஒரு குறிப்பிட்ட தினத்தில் பிரம்மஞானிகளின் சபை ஒன்றை மிதிலையில் கூட்டி தர்க்கவாதம் நடத்தி, எவர் வாதத்தில் வெல்கின்றாரோ அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் மற்றும் ஆயிரம் பசுக்களும் தரப்படும் என்று அறிவிக்கிறான். பல ஞானிகள் கூடுகின்றனர். யாக்ஞவல்கியரும் வருகிறார்.
 
★"இந்த சபையில் யார் தன்னை பிரம்ம ஞானி என்று கூறிக் கொள்கின்றனரோ அவர் ஆயிரம் பொற்காசுகளையும் மற்றும் பசுக்களையும் ஓட்டிசெல்லலாம்’’ என்று ஜனகர் அறிவிக்கிறார். நிறைகுடங்களான ஞானிகளில் ஒருவரும் அந்த பரிசினை ஏற்க முன்வராதபோது முனிசிரேஷ்டர் யாக்ஞவல்கியர் துணிச்சலாக தான் ஒரு பிரம்மஞானி என்று முழங்கிவிட்டு பசுக்களை ஓட்டிச் செல்ல ஆரம்பித்தார். “எந்த விதத்தில் தாங்கள் பிரம்மஞானி’’ என்ற கேள்வி எழுந்தது. அதற்கு யாக்ஞவல்கியர் எந்த பிரம்ம ஞானியும் தானாக முன்வந்து  தன்னை பிரம்மஞானி என்று கூறிக் கொள்ள மாட்டான். எனக்குத் தேவை பசுக்கள் அதனால் ஓட்டிச் செல்கிறேன்’’ என்றார். அதன் பிறகு ஏகப்பட்ட வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்து இறுதியில் யாக்ஞவல்கியர்தான் பிரம்ம ஞானி என்று முடிவானது வேறு விஷயம். அப்படிப்பட்ட யாக்ஞவல்கியரிடம் ஜனகர் சீடனாகச் சேர்ந்து கர்மஞானம் கற்று மிகப் பெரிய ஞானியாக விளங்கினார்.
 
★ஜனகரின் ஞானத்தை வெளி உலகிற்கு உணர்த்த மகரிஷி யாக்ஞவல்கியருக்கு எண்ணம் தோன்றியது. ஒருமுறை வேத பாடம் நடை பெற்றுக் கொண்டு இருந்தபோது, தனது மந்திர சக்தியால் மிதிலை நகரம் நெருப்பு பற்றி எரிவதைப் போல ஒரு மாயையை ஏற்படுத்தினார் யாக்ஞவல்கியர். உடனமர்ந்த சீடர்கள் எல்லாம் தங்களது சொத்தெல்லாம் பறிபோய்விடப் போகிறதே என்று அலறி அடித்துக் கொண்டு ஓடினர். ஜனகர் அசையவில்லை. ( சீதை ஜனகபுத்ரி என்பதற்கு இந்த ஒரு இடம் போதும். ) போனவர்கள் அது மாயையினால் ஏற்பட்டது என்பதனைப் புரிந்து வெட்கி தலைகுனிந்து நின்றனர்.
 
★யாக்ஞவல்கியர் கேட்டார். “அற்ப சொத்துக்களையுடைய மற்ற அனைவரும் தங்கள் சொத்துக்களை காப்பாற்ற அலறிப் புடைத்து ஓடியபோது நீ மட்டும் ஏன் ஜனகா!  இருந்த இடத்தை விட்டு அகலவில்லை?’’ என்று கேட்டார்.
 
★"ஆத்மா அழிவற்றது. இடையில் சேர்பவை எல்லாம் நிலையிலை. அழிவுடையவை. ஆத்மஞானம் பெறவேண்டும் என்பதுதான் என்னுடைய இப்போதைய நிஷ்டை. இதில் இருந்து நான் வெளியில் வருவதாக இல்லை’’ என்று ஜனகர் பதில் சொன்னார்.
 
"★ஜனகர் பெரும் ராஜ்ஜியத்தின் அதிபதியாக இருப்பினும் இறுதிவரையில் கர்ம ஞானத்தை கடைப்பிடித்து வந்தார். இதனைக் கண்ணனே பகவத்கீதையில் அறிவிக்கிறான்.
 
"கர்மணைவ ஹி ஸம்ஸித்திமாஸ்திதா 
ஜனகாதய:"
 
இது கீதையில் கண்ணன் மூன்றாவது அத்தியாயத்தில் கர்ம யோகத்தின் முக்கியமான தாத்பரியங்களை சொல்லிக் கொண்டு வரும்போது ஜனகர் போன்ற மன்னர்கள் கூட கர்ம யோகத்தை அனுஷ்டித்தவர்கள் என்கிறான்.
 
 ★இத்தகைய மகாஅற்புதமான  ஞானம் பொருந்தியவரே ஸீரத்வஜ ஜனகர். இவரின் மகள்தான் சீதாலக்ஷ்மி. இவரைப் பற்றி அடுத்ததாகப் பார்ப்போம்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை........................
ஶ்ரீராம காவியம்
~~~~~
052/18-05-2021
 
சீதாலக்ஷ்மி...
 
★பத்மாட்சன் என்ற அரசன் பரத கண்டத்தை ஆட்சி புரிந்து வந்தான். அவன் மகப்பேறு வேண்டி தவம் புரிந்தான். பத்மாட்சன் தவத்தின் பலனாக திருமால் அவன் முன் தோன்றி, உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். இப்பூவுலகத்தின் நாராயணா! எனக்கு திருமகள் மகளாகப் பிறக்க வேண்டும் என்று வரம் கேட்டான். திருமால் ஒரு மாதுளங்கனியை அந்த பத்மாட்சனுக்கு கொடுத்தார். 
 
★அவன் மாதுளம் கனியை அரண்மனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே பழம் பெரிதாக ஆரம்பித்தது. உடனே பழத்தை பிளந்தான் பத்மாட்சன். அதில் ஒரு பாதி வளம் நிறைந்த ரத்தினங்களும் முத்துக்களும் மற்றொரு பாதியில் குழந்தை ஒன்றும் இருப்பதை கண்டு பத்மாட்சன் மகிழ்ந்தான். பத்மாட்சன் அப்பெண்ணுக்கு 
பத்மாட்சி என அழகான  பெயர் சூட்டினான். அந்தப் பெண் சிலை போல மிக அழகாக இருந்ததால் அனைவரும் பதுமை என்றும் அழைக்கலாயினர்.  பதுமை என்றால் சிலை என்று பொருள். 
 
★சில வருடங்கள் கழிந்தது. பத்மாட்சிக்கு திருமண வயது எட்டியது. பத்மாட்சன் தன்னுடைய  மகளுக்கு சுயம்வரம் வைத்தான். சுயம்வரத்துக்கு 56 தேசத்துச் சிற்றரசர்ககள் வந்தார்கள். பத்மாட்சன் மிகப்பெரிய சுயம்வர மண்டபத்தில் இருந்த அனைத்து நாட்டு மன்னர்களைப் பார்த்து வேந்தர்களே! விண்ணில் உள்ள நீலநிறத்தை யார் தன் உடம்பில் பூசிக்கொள்கிறானோ அவர்தான் என் மகளுக்கு மாலை போட வேண்டும் இது என் மகளின் விருப்பமாகும் என்றான். 
 
★இது முடியாத ஒரு காரியம் என்பதால் தங்களுக்குள் வில் வாள் போட்டி அல்லது அறிவு திறன் தொடர்பான போட்டிகள் வைக்கும்படி கூறினார்கள். பத்மாட்சன் மறுக்கவே அரசர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பத்மாட்சன் மீது போர் தொடுத்து அரண்மனைக்கு நெருப்பு வைத்தார்கள். அவர்களிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அங்கிருந்த  அக்னியில் விழுந்து தன்னை மறைத்துக் கொண்டாள். போரில் மன்னன்  பத்மாட்சன் அனைவரையும்
வெற்றி கொண்டான்.
 
★சல மாதங்களுக்குப் பிறகு ஒரு சமயம், பத்மாட்சி தவம் செய்து கொண்டிருந்தாள்.  அப்போது வானவீதியில் சென்று கொண்டு இருந்த ராவணன் பத்மாட்சியை பார்த்து காதல் கொண்டான். பத்மாட்சியை தனக்கு திருமணம் செய்து தருமாறு கேட்டான். பத்மாட்சன், அந்த வானத்தில் தெரிகின்ற நீல நிறத்தை போல உன் உடல் நிறத்தை மாற்றிக் கொண்டால் என் மகள் உனக்கு மாலை போடுவாள் என்றான். இதனால் கோபமுற்ற ராவணன் பத்மாட்சனுடன் போர் புரிந்து அவனைக் கொன்றுவிட்டான். 
 
★ராவணன் பத்மாட்சியைப் பிடிக்க  முயன்றான். பத்மாட்சி எரிகிற தீயில் விழுந்துவிட்டாள். ராவணன் தண்ணீரை விட்டு தீயை அணைத்து பார்த்தான். அதில் ஒரு மிகப்பெரியதான மாணிக்கத்தை  கண்டெடுத்தான் அதனை மண்டோதரிக்கு தரலாம் என்று பெட்டியில் வைத்துக் கொண்டான். இலங்கைக்கு சென்றபின்ன் மனைவியைப் பார்த்து மண்டோதரி! உனக்கு ஒரு மாணிக்க மணியை கொண்டு வந்துள்ளேன் என்று கூறி பெட்டியை திறந்தான். 
 
★அப்பெட்டியில் ஒரு பெண் குழந்தை இருந்தது. இதனை கண்ட ராவணன் அதிர்ச்சி அடைந்தான். இவள் ஒரு பயங்கர மாயக்கன்னி! பல வகையான வடிவம் எடுக்கிறாள் என்று கூறி, அவளை வெட்டுவதற்காக வாளை ஓங்கினான். மண்டோதரி கணவனின் கரத்தைப் பற்றி தடுத்தாள். இந்த குழந்தையை வெட்ட வேண்டாம். பல மாயமான வடிவங்கள் எடுத்த இவள் தேவி பத்ரகாளியாகவும் உருமாறி தங்களை கொன்றுவிடுவாள். இக்குழந்தையை பெட்டியில் வைத்து மூடி எங்காவது புதைத்து விடுங்கள் என்று கூறினாள். 
 
★ராவணன் அந்தக் குழந்தையை சிவபெருமான் வீற்றிருக்கும் இமயத்திலேயே விட்டுவிடத் தீர்மானித்து கங்கை நதியின் உற்பத்தி ஸ்தானத்தில் மிகவும் பனிபடர்ந்த ஒரு பகுதியில் பனிப்பாறைகளுக்கு நடுவில் வைத்துவிட்டால் அக்குழந்தை பனியில் உறைந்து இறந்து விடும் என நினைத்தான். ஆனால் அதற்கு மாறாக பனி உருகி கங்கையின் பிரவாகத்தில் இழுத்துச் செல்லப்பட்டது.
 
★மிதிலாபுரியை தலைநகராகக் கொண்டு விதேஹ நாட்டை அரசு புரிகின்றவர், ஸீரத்துவஜ ஜனகர். இவருடைய தம்பி குஸத்துவ  ஜனகர் என்பவர். சாங்காஸ்யம் என்ற நகரத்தை ஆட்சி புரிந்து வந்தார். ஜனகரிடம் மகரிஷி கௌதமரின் புதல்வர் ஆகிய ஸதானந்தர் என்பவர் ராஜகுருவாகவும் மற்றும் அரச புரோகிதராகவும் இருந்து வந்தார். ஜனகர் ஒரு  வேதாந்த வித்தகர். ஸதானந்தரின் சொல்படி மகப்பேறு வேண்டிப் பொற்கொழுவால் வேதமந்திரம் சொல்லி உழுகின்றபொழுது ராவணனால் புதைக்கப்பட்ட பெட்டி கிடைத்தது. அப்பெட்டியில் மகாலட்சுமியே குழந்தையாக இருந்தாள். ஜனகர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்து சீதாலக்ஷ்மி என்று பெயர் சூட்டினார். பிறகு அனைவரும் அன்புட சீதா என அழைக்க ஆரம்பித்தனர்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை......................
ஶ்ரீராம காவியம்
~~~~~
053/19-05-2021
 
சிவதனுசு...
 
★சில மாதங்கள் கழித்து மன்னர் ஜனகருடைய மனைவி சுநைனா கருவுற்று ஒரு பெண் குழந்தை பெற்றாள். அப்பெண்ணுக்கு ஊர்மிளை என்று பெயர் சூட்டினார்கள். ஜனகருடைய தம்பிக்கு இரண்டு பெண்கள் பிறந்தார்கள். அவர்களுக்கு மாண்டவி, சுருதகீர்த்தி என்று பெயர் சூட்டினார்கள்.ஆனால் மிதிலையின் இளவரசி மைதிலி, விதேக நாட்டின் இளவரசி வைதேகி, ஜனகனின் மகள் ஜானகி என்ற பட்டப்பெயர்கள் அனைத்தும் வளர்ப்புக் குழந்தை சீதைக்குத்தான் என்றாலும் அதுபற்றி ஊர்மிளா சிறிதுகூட கவலைப்படவில்லை. 
 
★ஒருநாள் நான்கு பெண் குழந்தைகளும் அரண்மனையில் பந்து விளையாடிக் கொண்டு இருந்தார்கள். சீதை வீசிய பந்து ஜனகர் பூஜை செய்யும் சிவதனுசு என்ற  வில்லின் அடியில் மாட்டிக் கொண்டது. ஊர்மிளை பந்தை எடுத்துப் போடு என்றாள் சீதை. அக்கா பந்து அந்த  வில்லின் கீழ் அகப்பட்டுக் கொண்டது. இதை ஆயிரம் பேர் சேர்ந்து தான் தூக்க முடியும் என்றாள் ஊர்மிளை. 
 
★ஒர் பந்தை எடுக்க ஆயிரம் பேர் வேண்டுமா? என்று கூறிக் கொண்டு அன்னம்போல் நடந்து சென்று தன் இடது கையால் வில்லை எடுத்து மூலையில் வைத்துவிட்டு பந்தை எடுத்தாள். ஆனால் வில்லை பழையபடியே எடுத்து மேடையில் வைக்க மறந்து விட்டாள். சீதை. மறுநாள் ஜனகர் காலையில் பூஜை செய்ய வந்தபோது வில் மேடையில் இல்லாமல் மூலையில் வைத்து இருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார். 
 
★உடனே சேவகனை அழைத்து வில்லை யார் எடுத்தது என்று கேட்டார். சேவகன் இங்கு ஒருவரும் வரவில்லை என்றும் சீதை தன் தங்கையுடன் பந்து விளையாடிக் கொண்டு இருந்தார்கள் என்று கூறினான். ஜனகர் சீதையை அழைத்து வில்லை யார் எடுத்தது? என்று கேட்டார். சீதை, அப்பா!  நான் தான் வில்லை எடுத்து அங்கே வைத்தேன். என்றாள். என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா! என்று கூறிவிட்டு வில்லை இடது கையால் எடுத்து இருந்த இடத்தில் வைத்துவிட்டாள்.
 
★ஜனகருக்கு இந்த நிகழ்வு பெரும் ஆச்சரியத்தை அளித்தது. ஆயிரம் பேர் எடுக்க வேண்டிய இந்த வில்லை ஐந்து வயது சிறுமியான சீதை எவ்வித இடர்பாடுகள் இன்றி சுலபமாக தன் இடது கையால் எடுத்து வைத்து விட்டாளே. இந்தப் பெண்ணை எப்படி  யாருக்கு திருமணம் செய்து கொடுப்பது? என்ற யோசனையில் ஆழ்ந்தார். வில்லை வளைத்தவனுக்கே பெண்ணை திருமணம் செய்து தருவதாகப் பிரகடன் செய்தார்.
 
★பல இளவரசர்கள்  வந்து முயன்றும் சிவபெருமானின் வில்லை வளைக்க முடியாமல் தோல்வியுற்றார்கள். சீதையின் திருமணம் மங்களகரமாக நடைபெறும் பொருட்டு ஒரு சத்ரயாகம் செய்ய திட்டமிட்டு தொடங்கினார் ஜனகர். அந்த யாகத்தில் கலந்து கொள்ள எல்லா முனிவர்களுக்கும் சிறப்பு அழைப்பு அனுப்பி வைக்கப் பட்டது. சித்தாஸ்ரமத்தில் இருந்த நமக்க்கும் அழைப்பு அனுப்பப் பட்டது. அந்த சமயத்தில் நாம் செய்த யாகமும் முற்றுப் பெற்று இருந்தது. 
 
★ஆகவே ஜனகரின் அழைப்பை ஏற்றோம். ஜனக மகாராஜா யாகம் ஒன்று நடத்துகிறார். அந்த யாகத்தை ஒட்டி சில சிறப்பு நிகழ்சிகளும் நடக்க உள்ளன. அந்த நிகழ்ச்சிக்கு பல நாட்டு ராஜகுமாரர்களும் வருகிறார்கள். யாகத்தில் கலந்து கொள்ள நமது சித்தாஸ்ரமத்துக்கும் அழைப்பு வந்திருக்கிறது ஆகையால்  நம் ஆசிரமத்தை சேர்ந்தவர்களும் நானும் அங்கு செல்கிறோம். ஆகவே ராமா! நீயும் உன்னுடன் லட்சுமணனும் எங்களுடன் புறப்படுங்கள். மிதிலை நகர் செல்வோம் எனக் கூறி புறப்பட்டோம். இளவல்கள் ஆகிய நீங்கள்  பின் தொடர்ந்தீர்கள் என முடித்தார் விஸ்வாமித்ரர். சற்று நேரம் கழித்து மூவரும் மிதிலை நோக்கிப் புறப்பட்டனர்.
 
நாளை.....................
ஶ்ரீராம காவியம்
~~~~~
054/ 20-05-2021
 
மிதிலைநகரில்...
 
★விஸ்வாமித்திரர் மிதிலைக்கு வந்து கொண்டிருந்த செய்தியை கேட்ட ஜனகர் பெரும் மகிழ்ச்சி அடைந்து  அவர் வந்து கொண்டு இருந்த வழியை நோக்கிச் சென்று வழியிலேயே அவரை சந்தித்து, அவரை விழுந்து வணங்கி அவருக்கு அர்க்கியமும் தந்து அவர்களை தனது அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். செல்லும் வழியில் அவருடன் இருந்த இரண்டு இளைஞர்களான ராம லஷ்மணர்களைக்  குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார். ராமனின் வீரம், தீரம் மற்றும் பல்வேறு மேன்மையான குணங்களைக் கேட்டறிந்த ஜனகரும் ராமனையும் அந்த யாக முடிவில் நடைபெற இருந்த வில் போட்டியில் பங்கேற்குமாறு அழைப்பு  விடுத்தார். ராமன் எதுவும் கூறும் முன்னரே அவர் சார்பில் விஸ்வாமித்திரர் அந்த அழைப்பை ராமர் சார்ப்பில் தானே ஏற்றதாகக் கூறினார்.
 
★மிதிலையின் மதிலையும், அகழியையும், சோலைகளையும் கடந்து நகருக்குள் புகுந்தனர். அந்நகரத்துப் பெருவீதிகளையும், கடை வீதிகளையும், அரச வீதிகளையும் கடந்து கன்னி மாடம் இருந்த ராஜவீதி வழியே நடந்து சென்றனர். அந்த வீதியில் கன்னி மாடத்து மாளிகையில் எழில்மிக்க நங்கை ஒருத்தி நின்று கொண்டு, அம் மாளிகையின் கீழே முற்றத்தில் அன்னமும் அதன் துணைப் பேடையும் அன்புடன் களித்து ஆடும் அழகைக் கண்ட வண்ணம் இருந்தாள்.
 
★முனிவர் பின் சென்ற ராமன், மாடத்துப் புறாவைக் கண்டு வியந்தாள். பொன்னை ஒத்து ஒளி பொருந்திய மேனியும், மலர்க் கூந்தலும், கண்ணைக் கவரும் அழகும் அவனைக் கவர்ந்தன. அக் கோதையாள் ஜனகன் மகள் சீதை என்பது அவனுக்குத் தெரியாது. அவளுக்கும் அவ்விளைஞன் யார்? என்பதும் தெரியாது; “அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள். இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினர்”. மாடத்தில் இருந்தவள் அவன் நெஞ்சில் குடி புகுந்தாள். முற்றத்தில் நடந்த இளைஞன் அவள் நெஞ்சில் குடி புகுந்து விட்டாள். அவள் அவனுக்குச் செஞ்சொற்கவி இன்பமாக விளங்கினாள்.
 
◆விஸ்வாமித்ரருடன் அந்த மாளிகையை கடந்த ஶ்ரீராமன் அவளின் கண்களில் இருந்து மறைந்தார். இவரை தான் மணக்க வேண்டும். அதற்கு சிவதனுசு தடையாக உள்ளதே. என்ன செய்வது?  இவர்கள் ரிஷி குமாரர்களா? இவரை மணந்து இவர் துணைவனாக வந்தால் காட்டில் இவருடன் வாழ்வதாக இருந்தாலும் பரவாயில்லை அதற்கும் தான் தயாராகவே இருப்பதாக மனதில்  எண்ணிக் கொண்டாள் சீதை.
 
★விஸ்வாமிரருடன் வந்திருந்த ராமரின் உருவம் ஜனகரை கவர்ந்தது. இதனை கவனித்த விஸ்வாமித்ரர் தன் ஆசிரமத்தில் உலக நன்மைக்காக செய்த வேள்வியை காத்து அசுரர்களை அழித்த ராம லட்சுமனனின் வீரத்தை ஜனகரிடம் மகிழ்வாக தெரிவித்தார். வீரம் செறிந்த இளைஞர்கள் இருவரும் தங்கள் மாளிகையில் வைக்கப்பட்டு இருக்கும் சிவதனுசை காண்பது முற்றிலும் அவசியம். ஆகவே இவர்களை அழைத்து வந்தேன் என்று ஜனகரிடம் விஸ்வாமித்ரர் கூறினார். இதன் உட்பொருளை உணர்ந்த ஜனகர் அனைவரும் சிறிது ஒய்வெடுக்குமாறு கேட்டுக்கொண்டார். 
 
★ஒய்வெடுக்க அனைவரும் படுத்ததும் ராமருக்கு மட்டும் தூக்கம் வரவில்லை. ஐனகரின் மாளிகையில் மாடத்தில் நின்று கொண்டிருந்த பெண்ணின் அழகை பார்த்ததும் ரசித்து விட்டோமே. எந்த பெண்ணை பார்த்தாலும் தனது தாயான கௌசலையை பார்ப்பது போல பார்ப்போம். இந்த பெண்ணை பார்க்கும் போது அந்த எண்ணம் தோன்றவில்லையே. இது வரை குற்றம் செய்யாத நமது மனம் குற்றம் ஏதும் செய்திருக்காது என்று எண்ணி தனக்கு தானே ஆறுதல் செய்து கொண்டார். அடுத்த நாள் அனைவரும் காலை வேள்விசாலையை அடைந்தார்கள்.
 
★இந்திரலோகம் போலிருந்த அழகுமிகுந்த மணிமண்டபத்தில் யாகசாலையில் அனைவரும் சந்தித்தனர். மிதிலையில் யாகம் சிறப்பாக செய்வதற்காக பரந்த இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விருந்தினர்களின் அந்தஸ்திற்கு ஏற்ப தங்கும் இடங்கள் மற்றும் கொட்டகைகள் அமைக்கப்பட்டு இருந்தது. பிரம்ம ரிஷியும் அவரது கூட்டத்தினரும் ராம லட்சுமனனுடன் முகாமிற்கு உள்ளே நுழைந்தார்கள். ஜனக மகாராஜா தான் நடத்தும் வேள்வியை தலைமை ஏற்று நடத்தும் அரசகுரு மற்றும் புரோகிதருமான சதாநந்தரோடு விரைந்து வந்து முனிவரை வரவேற்றார். தன்னுடைய யாக மண்டபத்திற்கு வந்திருந்த விஸ்வாமித்ரரை வணங்கி அவரின் வருகைக்கு நன்றி செலுத்தினார். பின்னர் யாகமானது மிகச்சிறப்பாக வேத கோஷங்களுடன் நடைபெற்றது. 
யாகம் மிகவும் சிறப்பாக நிறைவு அடைந்தது.
 
★யாகம் நிறைவடைந்ததும் சீதாவிற்கு பொருத்தமான ஒரு வாழ்க்கை துணைவனை தேடி திருமணம் செய்யவேண்டும் என்று ஜனகர் ஏற்கனவே தீர்மானம் செய்திருந்தார்.ஆகவே  யாகசாலையில் அமர்ந்து இருந்த மன்னர்கள் அனைவரும் அரண்மனை மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அரண்மனை மண்டபத்தில் அனைத்து அரசர்களும் அமர இடம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சுயவரப்போட்டி நடத்தி சீதையின் திருமணம் நடத்தப் போவதாக ஜனகர் அறிவித்தார்.
 
நாளை......................
ஶ்ரீராம காவியம்
~~~~~
055/ 21-05-2021
 
இற்றது சிவதனுசு...
 
★அனைவரும் ஜனகர் சபையை அடைந்தபின் சதாநந்தரின் 
தாய் அகலிகை ராமரினால் சாபவிமோசனம் பெற்றதையும் அவரது தந்தையாருடன் மீண்டும் இணைந்து விட்டதையும் கூறினார். இதனைக்கேட்ட சதாநந்தர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். அந்த போட்டியில் பங்கேற்க ராம லஷ்மணர்களை அரச சபைக்கு அழைத்துச் சென்றார். 
 
★நூற்றுக் கணக்காண பேர் வில்லை வைத்து இருந்த வண்டியை இழுத்துக் கொண்டு வந்து சுயம்வர மண்டபத்தின் நடுவில் வைத்தார்கள். அங்கு கூடியிருந்த மன்னர்கள் வில்லை பார்த்தவுடன் அதை வளைக்கும் பார்க்கும் ஆற்றலின்றி மடங்கி இருந்தார்கள்.  அப்போது சதாநந்தர் இந்த யாகம் இனிது நடைபெற்று முடிந்தமையால் இப்போது சுயவரம் நடக்கும் . நிபந்தனைகளை மன்னர் அறிவிப்பார் என்றார்.
 
★போட்டி துவங்கும் முன்னர் மன்னன் அனைவருக்கும்  கூறினார்  ‘இங்கு கூடி உள்ள அனைவருக்கும் வந்தனம். இந்த வில்லும் அம்பும் சிவபெருமான் கொடுத்ததாகும்.  ஏர் பூட்டி  நிலம் உழும்போது பூமியில் இருந்து எனது மகளாக குழந்தை சீதை கிடைத்ததால் இந்த வில்லையும் அம்பையும் யார் தூக்கி நாண் ஏற்றுவாரோ அவருக்கே என்மகள் சீதையை மணமுடித்து கொடுப்பதாக  முடிவு செய்து இருக்கிறேன். அதனை செய்து முடிக்கும் ஒருவரே சீதைக்கு கணவராக ஆவார். இப்படியாகக் கூறி விட்டு, அங்கு கூடி இருந்த அனைவருக்கும் சபை நடுவே வைக்கப்பட்டு இருந்த வில்லையும் அம்பையும் காட்டினார்.சபையில் உள்ள இளவரசர்கள் தங்களைத் தாங்களே அறிமுகப் படுத்திக் கொள்ள கோரப்பட்டார்கள். அதை ஆமோதித்த இளவரசர்கள் தங்களை பற்றிய விபரங்களை  கூற ஆரம்பித்தார்கள்.
 
★பிறகு ராம லட்சுமனனின் தந்தையை பற்றி சொல்லுங்கள் என்று விஸ்வாமித்ரரிடம் ஜனகர் கேட்டார். சூரிய குலத்தின் முதல் மன்னனான மனுவின் வழி வந்தவர்கள் இவர்கள். பூமியில் வாழும் அனைத்து உயிர்களும் பசி என்னும் துயரம் நீங்கி வாழ்வதற்கும் பூமியில் எல்லா வளமும் பெருகும்படி ஆட்சி செய்த புருது மன்னன் இவர்கள் குலத்தவரே ஆவார். பாம்பினை படுக்கையாக கொண்ட ஶ்ரீமன் நாராயணனின் திருவரங்கத்தை நமக்கு தோற்றுவித்து தந்த இஷ்வாகு மன்னனும் இவர்கள் குலத்தவரே ஆவார். வானவர் கோன் ஆகிய இந்திரனையே வாகனமாகக் கொண்ட மாவீரன் காகுத்தன் இவர்கள் குலத்தவரே ஆவார். 
 
★புலியும் பசுவும் ஒரே நீர் நிலையில் நீர் அருந்துமாறு அறத்தோடு ஆட்சி செய்த மந்தாதா என்னும் அரசனும் இவர்கள் குலத்தவரே ஆவார். இந்திரனுக்குரிய நகரமான அமராவதியை அசுரர்களிடம் இருந்து மீட்டு கொடுத்த திலீபன் அரசனும் இவர்கள் குலத்தவரே ஆவார். இவர்கள் குலத்துதித்த மன்னவர்களின் பெருமையை மகிமையுள்ள ஆதிஷேசனாலும் சொல்லமுடியாது அத்தகைய  பெருமை வாய்ந்த குலம் இவர்களுடையது. அரசர்களில் பெருமை வாய்ந்த தசரத மகா சக்ரவர்த்திக்கும் கௌசல்யா தேவிக்கும் மகனாக பிறந்தவன் ராமன். தசரத சக்ரவர்த்திக்கும் சுமித்ரை தேவிக்கும் மகனாக லட்சுமனனும் சத்ருக்ணனும் பிறந்தார்கள்.அதுபோல  தசரத சக்ரவர்த்திக்கும் கைகேயிக்கும் பிறந்தவன் பரதன். இங்கு ராமனும் லட்சுமனனும் வந்து உள்ளனர் என்று  ராமரின் குலத்தை பற்றி யாகத்திற்கு வந்த அனைவரும் அறியும்படி ஜனகரிடம் விஸ்வாமித்ரர் கூறினார். 
 
★இப்போது ராஜகுமாரர்கள் இந்த சிவதனுசுவில் நாண் ஏற்ற முற்படலாம் என ஜனகர் அறிவித்தார். ‘இந்த வில்லில் நாண் ஏற்றுபவர் முல்லைக் கொடியாளை மணக்கலாம்’ என்று முன்னுரை கூறினார் ஜனகர்.  சீதையை மணக்க வேண்டும் என மனதார விரும்பி ஆசை ஆசையாக அங்கு வந்து இருந்த அனைத்து நாட்டு  ராஜ குமாரர்களும் அடுத்தடுத்து சபை நடுவே வந்து வில்லை தூக்க முயன்று தோல்வி அடைந்து முகம் சோர்ந்து போய் அவரவர் ஆசனங்களில் சென்று அமர்ந்தார்கள்.
 
★ஒரு மன்னன் வில்லை பார்த்துவிட்டு வந்து ஆசனத்தில் அமர்ந்தான். அருகில் இருந்த மன்னன், எங்கு சென்றாய்? வில்லை தூக்க போனாயா? என கேட்டான். அவன், நான் வில்லை தூக்கப் போகவில்லை. வில்லை பார்க்க தான் போனேன் என்றான். இன்னொருவன் வில்லிடம் சென்று கைகளுக்கு அடங்குகிறதா? இல்லையா? என்பதை பார்க்க சென்றான். அவன் கைகளுக்கு அந்த வில் அடங்கவில்லை. மற்றொருவன் வில்லை தூக்க முயன்று, முடியாமல் அவமானத்துடன் வந்து தன் இருக்கையில் அமர்ந்தான். ஒருவன் எனக்கு இரண்டு நாட்களாக காய்ச்சல் என்றான். இன்னொருவன் சீதை எனக்கு தங்கை போன்றவள் என்றான். இவ்வாறு ஏதாவது  ஒரு காரணம் காட்டி எவரும் வில்லை வளைப்பதற்கு முன் வரவில்லை.
 
★இந்த அழகிய மகளை வில்லை வளைத்தால் தான் பெண்ணைத்  தருவேன் என்பது முட்டாள்தனம். இந்த வில்லை வளைக்கப் போகின்றவனும் இல்லை. அதேபோல் அந்த சீதைக்கும் திருமணமும் ஆகாது என்று அங்கு கூடியிருந்தவர்கள் பலவாறு பேசிக் கொண்டனர்.
சிவதனுசு சீதையைப் போலவே தக்க வீரனின் கை படாமல் காத்துக் கிடந்தது. வில்லை முறிக்கும் விழாவைக் காண பல நாட்டவர் வந்து குழுமினர். “புதியவன் ஒருவன் வருகை தந்திருக்கிறான்” என்ற செய்தி எங்கும் பரவியது. “இந்த முற்றிய வில்லால் கன்னியும் முதிர்ந்து போக வேண்டிய நிலை ஏற்படுமோ?” என்று பலரும் அஞ்சினர்.
 
★நடந்தவற்றைக் கண்ட ஜனகரும் சோர்ந்து போய் அமர்ந்து கொண்டார். சீதைக்கு இனி மணமாகாது என்றே நினைத்து வேதனையில் ஆழ்ந்தார். மகாராஜா ஜனகரின் குலகுருவும் புரோகிதருமான சதாநந்தர் ராமரிடம் வந்து தற்போது ஜனகர் சீதையின் திருமணம் தடைப்பட்டு விடுமோ என பயம் கொண்டு இருக்கிறார். தாங்கள் இந்த சிவதனுசை வளைப்பீர்கள் என்ற மகத்தான நம்பிக்கையில் இருக்கிறோம் என்றார் சதாநந்தர். 
 
★அப்போது விஸ்வாமித்திரர் ராமனை நோக்கி ‘நீ சென்று முயன்று பார்’ என்று கூறி ராமனை அனுப்ப ராமனும்
விஸ்வாமித்திரரை வணங்கி விட்டு அந்த வில்லைத் தூக்கி நாண் ஏற்ற  எழுந்து சென்றார். இத்தனைப் பேர் முயன்றும், அனைவரும் தோற்றுப் போய் விட்ட நிலையில் அவர்களை விட இளம் வயதினராக தோன்றும் இந்த ராமன் எங்கே இதை தூக்கி வெற்றி கொள்ளப் போகிறான் என முகத்தில் எந்த சலனமே இன்றி அமர்ந்திருந்த மகாராஜா ஜனகருக்கு ராமர் வணக்கத்தை தெரிவித்தப் பின் மீண்டும் பிரம்மரிஷி விஸ்வாமித்ரரைப் பார்த்தார்.
 
★அவர் இவனைப் பார்த்தார். விழியால் குறிப்புக் காட்டி ‘அதை முறிக்க’ என அறிவிப்புச் செய்தார். அவன் வில்லை எடுக்கச் செல்பவனைப் போல அதை நோக்கி நடந்தான். “இந்த வில்லை இவன் எடுப்பானா; எடுத்தால் இதை முறிப்பானா?” என்று எதிர்பார்த்திருந்த, அந்த அவையோர் வைத்த விழி வாங்காமல் அவனையே பார்த்து இருந்தனர். “இவன் எப்படி அதை எடுப்பான்?” எடுத்தால் அந்த வில் முறியுமா? அல்லது  அவன் இடுப்பு முறியுமா” என்று பார்க்க காத்துக் கிடந்தனர். 
 
★ஶ்ரீராமர் வீரத்துடன் நடந்து சென்று அந்த வில்லை எடுத்து நாணைப் பிடித்து இழுத்தார். ஒரு நொடியில் வில் படார் என்று ஒடிந்தது. அவர் சென்ற வேகம், எடுத்த விரைவு, அதை முறித்த ஒசை எல்லாம் கண்மூடிக் கண் திறப்பதற்கு முன் தொடர் நிகழ்ச்சிகள் ஆயின. எடுத்தது கண்டவர், இற்றது கேட்டனர். வில் ஒடிந்த ஒசைதான் முடிவை அவர்களுக்கு அறிவித்தது. அவன் வில்லை வளைத் ததையும், நாண் பூட்டியதையும், அவர்கள் காணவே இல்லை. முறிந்த ஒசையை மட்டும் கேட்டுச் செய்தி அறிந்தனர்.
 
★அந்த வில் வளைக்கும் போதே இரண்டாக முறிந்து விட்டது. அப் பேரொலி திக்கெட்டும் எட்டியது.  வில் உடைந்த ஓசையினால் பூவுலகம் எல்லாம் அதிர்ந்தன. எட்டுத் திசைகளிலும் வில் உடைந்த பெரும் ஓசை கேட்டது. ராமருக்கு தேவர்கள் மலர்மழை பொழிந்தார்கள். இதை பார்த்த ஜனகருக்கு அளவற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. மிதிலாபுரியிலுள்ள அனைவரும் ஆடி பாடி மகிழ்ந்து கொண்டாடினார்கள். எனது  உயிரினினும் மேலான என் மகள் சீதையை ராமருக்கு தருகிறேன் என்றார் ஜனகர். வில் உடைந்த சத்தம் அண்டம் முழுவதும் கேட்ட போதிலும் சீதை ஶ்ரீராமரையே நினைத்து நினைத்து  மனமுருகி  கொண்டிருந்ததால்  சீதைக்கு கேட்கவில்லை.
 
★அப்பொழுது நீலமாலை என்னும் தோழி ஓடி வந்து சீதையிடம் ராமன் வில்லை முறித்த செய்தியைக் கூறினாள். அன்று விசுவாமித்திர முனிவர் உடன் மிதிலைக்கு வந்த ராமன் தான் வில்லை முறித்தான் என்றாள். தான் அன்று கன்னி மாடத்தில் இருந்து பார்த்த அந்த கார்வண்ணன் தான் வில்லை முறித்தவன் என்ற செய்தியை அறிந்து மகிழ்ச்சி அடைந்தாள் சீதை.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை......................
ஶ்ரீராம காவியம்
~~~~~
056/ 22-05-2021
 
தசரதர் மிதிலை விஜயம்...
 
★முனிவருடன் வந்த கோமகன். நீல நிறத்தவன். தாமரைக் கண்ணன். அவன்தான் அந்த வில்லை முறித்தான் என்று தோழி நீலமாலை சொல்ல அதைக் கேட்ட சீதை, அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்னும்படி ஆகியது. தான் அன்று உப்பரிகையில் இருந்து கண்டவனே கொண்டவனாக வரப் போகிறான் என்பதில் அவள் கொண்ட மகிழ்ச்சியானது இரட்டிப்பு ஆகியது. அவள் பல மடங்கு பொலிந்த முகத்தினள் ஆயினள்.
 
★சபையில் ஒரு பெண்மணி சீதையைப் பார்க்க இராமருக்கு ஆயிரம் கண்கள் வேண்டும் என்றாள். இன்னொருவள் இராமரைப் பார்க்க சீதைக்கு ஆயிரம் கண்கள் வேண்டும் என்றாள். விசுவாமித்திர முனிவர், தசரத சக்கரவர்த்தியை வரவழைத்து திருமணம் செய்வதே சிறந்த முறையாகும். ஆதலால் ஜனகர் தூதர்களிடம் ஓலையை கொடுத்து அயோத்திக்கு சென்று இங்கே நிகழ்ந்தவற்றை தசரத சக்கரவர்த்தியிடம் கூறி, அழைத்து வரும்படி கட்டளையிட்டார். ஜனக மகராஜாவின் தூதர்கள் நான்கு  நாட்கள் பயணம் செய்து அயோத்தியை அடைந்தார்கள்.
 
★தசதர மன்னரை பார்த்து, தசரத சக்ரவர்த்தி அவர்களே! ஜனக மகாராஜர் தங்களுக்கு ஓர் நற்செய்தியை அனுப்பியுள்ளார். விசுவாமித்திரருடன் மிதிலைக்கு வந்த இராமர் சீதையின் சுயம்வரத்தில் நாணை இழுத்து சிவதனுசை ஒடித்து விட்டார். ஜனக மகாராஜர் தங்கள் புத்திரனின் விவாஹ அனுமதியையும், தங்களின் வரவையும் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார் எனக் கூறினார்கள். இராமனின் வீரச் செயல்களும், இராமனால் சிவதனுசு முறிபட்டதும் கேட்ட சக்ரவர்த்தி பெரும் மகிழ்ச்சி அடைந்தார். நாட்டு மக்களுக்கு தசரதன் இராமனின் திருமணத்தை முரசறைந்து செய்தி அறிவித்தான். நாட்டு மக்களும் மகிழ்ச்சி கடலில் மிதந்தனர்.
 
★தசரதனின் ஆணைப்படி தேரும், யானையும், குடைகளும், கொடிகளோடும், சேனைகள் புறப்பட்டன. வீரர்களும் பெண்களும் மிதிலை நகர் நோக்கி பிரயாணம் புறப்பட்டனர். வழியெங்கும் ஆடல் பாடலுடன் தங்களுக்கே திருமணம் நடப்பது போல் உணர்ந்து மகிழ்ந்தனர். திருமணம் நடத்தி வைக்க அந்தணர்களும் சென்றனர். பெண்களின் சிலம்பொலி, குதிரைகள் கனைப்பொலி, மக்களின் சிரிப்பொலி என போகப்போக மக்கட்கூட்டம் நிறைந்து வழிந்தது.
 
★தசரத மன்னருடன் அவருடைய பட்டத்தரசிகளும் இசையொலி இசைத்த  இரைச்சலோடும், படைகளின் ஒலியோடும் வழிநடையாக சென்றனர். கோசலை, கைகேயி, சுமத்திரை மூவரும் தோழிகளுடன் புடைசூழ தேரில் சென்றனர். சீர் கொண்டு செல்லும் பெண்கள் மொத்தம் அறுபதினாயிரம் பேர். தசரதன் நவரத்தின தேரில் வசிஷ்ட முனிவரும், பரதரும், சத்ருக்குனரும், அரச அதிகாரிகளும் சென்றனர். அன்றைய பொழுதை அவர்கள் இந்து சைல அடிவாரத்தில் தங்கி கழித்தனர்.
 
★மறுநாள் காலையில் அனைவரும் சந்திர சைலத்தை அடுத்துள்ள சோனையாற்றின் கரையை அடைந்தனர். அங்கு அனைவரும் நீராடி விட்டு புறப்பட்டனர். அந்தி மாலைப் பொழுதில் இளைஞர்களும், கன்னியர்களும் தங்களை அலங்கரித்து கொண்டு தங்களுக்கே திருமணம் என்பது போல் மகிழ்ச்சியோடு அங்கு இருந்தனர். இவ்வாறு தசரதன் தன் பரிவாரங்களுடன் பயணம் செய்து ஐந்தாம் நாளில் மிதிலையை அடைந்தார்.
 
★அவர்களுக்காக காத்து கொண்டியிருந்த ஜனகர் தசரதரையும் மற்றவர்களையும் வரவேற்று அழைத்து சென்றார். ராம இலட்சுமணர் தாய் தந்தையரிடன் ஆசி பெற்றனர். மிதிலை நகரின் வீதிகளில் ராமர் பவனி வரும்போது அவனைக் பார்ப்பதற்காக கூடியிருந்த பெண்களின் கண்களில் அவன் உருவம் புகுந்து வந்ததால் இவனுக்கு கண்ணன் என்று பெயர் வந்தது. 
 
★திருமண மண்டபத்துக்கு அனைவரும் வந்து சேர்ந்தார்கள். பல தேசத்திலிருந்தும் மக்கள் திருமண நிகழ்ச்சியை பார்க்க கூடி இருந்தனர். திருமண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. திருமண நிச்சயதார்த்த மண்டபத்துக்கு சீதையை அழைத்து வருமாறு வசிஷ்டர் கேட்டுக் கொண்டார். ஜனகர் வசிஷ்டரை தொழுத பின்னர் சீதையை அழைத்து வரும்படி கட்டளையிட்டார். 
 
★சீதையை அழகாக அலங்கரித்து அழைத்து வந்தார்கள். சீதையின் அழகை கண்டு கூடியிருந்த அனைவரும் கண்களை இமைக்க மறந்து விட்டனர். ராமன் சீதையை கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார். சீதை தன் இருக்கையில் அமர்ந்தபடியே தன் கண்களை சிறிது மேல் நோக்கி அன்று கன்னிமாடத்து உப்பரிகையிலிருந்து பார்த்த அந்த அழகன் தான் தன்னை மணந்து கொள்ள போகும் மணாளன் என்பதை உறுதி செய்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தாள்.
 
வணக்கத்துடன்
வரவேற்கும்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை........................
ஶ்ரீராம காவியம்
~~~~~
058/ 24-05-2021
 
திருமண ஏற்பாடுகள்...
 
★அனைவரும் திருமணம் நடக்க இருக்கும்  மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார்கள். பல தேசங்களில் இருந்தும் மக்கள் திருமண நிகழ்ச்சியை பார்க்க அங்கே கூடி இருந்தனர். சீதை ராமர் திருமண நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் விரைவாக நடைபெற்றுக் கொண்டு இருந்தன. மிதிலை நகரமே மிகுந்த பரபரப்பில் இருந்தது. நாட்டு மக்கள் அனைவருக்கும் மூன்று நாட்கள் அறுசுவை உணவு வழங்க ஜனகர் கட்டளை இட்டிருந்தார்
 
★திருமண நிச்சயதார்த்த மண்டபத்துக்கு சீதையை அழைத்து வருமாறு வசிஷ்டர் கேட்டுக் கொண்டார்.  மன்னர் வீற்றிருந்த மணி மண்டபத்தில் அழகு மயிலை மகளாய்ப் பெற்ற மாமன்னன் ஜனகன் வந்து அமர்ந்தான். கோல அழகியாகிய கோமகளை அழைத்துவரச் சேடியரை அனுப்பினான். நன்கு அலங்கரிக்கப்பட்டு மெல்லடி எடுத்து வைத்து  வந்த மாநிலம் போற்றும்  பேரழகி தந்தையின் அருகில் அமர்ந்து, அம் மண்டபத்திற்குப் பெருமை சேர்த்தாள்.
 
★சீதையின் அழகை கண்டு கூடியிருந்த அனைவரும் கண்களை இமைக்க மறந்து விட்டனர். இராமன் சீதையை கண்டு அளவற்ற மகிழ்ச்சியை அடைந்தார். சீதை தன்னுடைய இருக்கையில் அமர்ந்தபடியே தன் கண்களை சிறிது மேல் நோக்கி அன்று கன்னிமாடத்தில்  இருந்து பார்த்த அந்த அழகன் தான் தன்னை மணந்து கொள்ள போகும் மணாளன் என்பதை உறுதி செய்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தாள். 
 
★அவைக் கண் வந்திருந்த  தவசிகளைச் சீதை முதற்கண் வணங்கினாள்.  ராமனைப் பெற்ற பெரியோன் என்பதால் தசரதன் திருவடிகளைத் தொட்டு ஆசி பெற்றாள்.  பின் தன் தந்தை ஜனகன் அருகில் வந்து, அவள் பக்கத்தில் இருந்தாள்; அங்குக் குழுமியிருந்த விழுமியோர் ஆகிய நகர மாந்தரனைவருக்கும் நன்கலமாதருக்கும் ஏனைய பெரியோருக்கும் வந்தனம் தெரிவித்தாள்.  நகர மக்கள் அவளைத் தெய்வம் என மதித்து போற்றி சீதையைப் பாராட்டினர்.
 
★பொன்னின் ஒளியும், பூவின் பொலிவும், தேனின் சுவையும், சந்தனத்தின் குளிர்ச்சியும், தென்றலின் மென்மையும், நிலவின் ஒளியும் ஒருங்கே பெற்ற சீதை , அன்ன நடையைத் தன் நடையில் காட்டினாள். மின்னல் போல் ஒளி வீசி அவ் அரங்கினை அலங்கரித்தாள். அமுதம் போன்ற இனிமையும் குமுதம் போன்ற இதழ்களையும் உடைய அவ் ஆரணங்கு, அங்கிருந்தவர் கண்ணையும் கருத்தையும் ஒருங்கே கவர்ந்தாள்.
 
★மாடத்தில் இருந்து தான் கண்ட மாணிக்கத்தை மறுபடியும் காணும் வாய்ப்பைப் பெற அவள் விரும்பினாள். நேரில் காண அவள் நாணம் போரிட்டது. தலை நிமிர்த்திக் காண்பதைத் தவிர்த்துத் தன் கை வளையல் களைத் திருத்துவதுபோல அக் கார்வண்ணனைக் கடைக் கண்ணால் கண்டு அவன் அழகைப் பருகினாள்.  மனம் உருகினாள் தன் உள்ளத்தை ஈர்த்த அத் தூயவனே அவன் என்பதை உணர்ந்தாள், “ஒவியத்தில் எழுத ஒண்ணாப் பேரழகு உடைய காவிய நாயகன் ராமன்தான் அவன்” என்பதை மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டாள். “நேர்மை தவறிய இடம் இது ஒன்றுதான் என்பதை எண்ண” அவள் நாணம் அடைந்தாள். நாகரிகமாக அந்த நளினி நடந்து கொண்டதை அங்கிருந்த நங்கையர் பாராட்டினார்.
 
★அழகுக்கோலத்தில் சீதையைக் கண்ட மாண்புமிக்க வசிஷ்டர், அங்கு ஜனகன் மகளைக் காணவில்லை; “திருமகள் தசரதன் மருமகள் ஆகிறாள்” என்பதை உணர்ந்தார். “தாமரை மலரில் உறையும் கமலச் செல்வியே அவள்” என்று அந்த முனிவர் பாராட்டினார்.
 
★தசரதன் வரப்போகும் தன் மருமகளைக் கண்டதும் “அவள் தனக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்” என்றே மனதில் கருதினான். எத்தனையோ செல்வங்கள் பெற்றிருந்தும் அவை அவனுக்கு மன நிறைவை தர வில்லை; அவை செல்வமாகப் படவில்லை; அவளை தனது மருமகளாக அடைந்ததையே அருந்தவம் என்று கருதினான். “இதுவே திரு” என்று உளமாற எண்ணினான். “திரு என்பதற்கு உரு” இது என்பதை அறிந்தான்.
 
★தசரதன் வசிஷ்டரை பார்த்து திருமண நாள் என்று வைத்து கொள்ளலாம் எனக் கேட்டார். ஜனகர் விஸ்வாமித்திர முனிவரிடம் தன் இன்னொரு மகளை, லட்சுமணனுக்கும், தன் தம்பியின் மகள்களை பரதன், சத்ருக்குனருக்கும் கொடுக்க உத்தேசித்துள்ளேன். தசரத சக்ரவர்த்தி அவர்களின் சம்மதம் கோருகிறேன் என ஜனகர் கூறினார். மிகுந்த மகிழ்சியுடன் தசரதர் ஒப்புக் கொண்டார்.
 
★நாள் தள்ளிப்போட அவர்களால் முடியவில்லை. ‘நாளை மறு நாளே மணநாள் என்று முடிவு செய்யப்பட்டது.  இரண்டாம் நாளான பங்குனி உத்திரம் நாளில் நால்வருக்கும் திருமணம் செய்வதாக நிச்சயம் செய்து கொண்டனர். இரண்டாம் நாள் நடைபெறவிருக்கும் மகத்தான திருமணத்திற்காக வேலைகள் விரைவாகவும் சிறப்பாகவும்  நடைபெற தொடங்கின. நாளை மறுநாள் திருமணம் என்பதால் சீதை ராமனை நினைத்து நினைத்து அவதிபட்டு கொண்டு இருந்தாள். ராமனும் சீதையை மனதில் நினைத்து ஏங்கினான். மிதிலை மக்கள் திருமணத்தை பார்க்க தங்களை அலங்கரித்துக் கொண்டு கொண்டாட தயாராகி வருகிறார்கள். 
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை..........................
     
ஶ்ரீராம காவியம்
~~~~~
058/ 24-05-2021
 
சீதா கல்யாண
வைபோகமே...
 
★திருமண நாள் வந்தது.மிதிலை நகரமே அலங்கரிக்கப்பட்டு விழாக் கோலம் பூண்டு அழகாக  விளங்கியது. வாழையும், பலப்பல விதமான கொடிகளும், வண்ணமயமான கோலங்களும் தோரணங்களும் மிதிலை நகரை அழகாக அலங்கரித்து கொண்டு இருந்தது. மாமன்னன்  தசரதன் வெண்கொற்றக் குடையை விரித்து, மங்கல வாத்தியங்கள் முழங்க, சுற்றிலும் ஏனைய அரசர்கள் புடைசூழ சம்மந்தியாக திருமண மண்டபத்துக்கு வந்து சேர்ந்தான். 
 
★ராமர் மங்கல நீராடி, பட்டாடை உடுத்தி காதணிகள், வீரப்பட்டம், திலகம், முத்தாரம்,  மேலும் பல ஆபரணங்களை அணிந்து மிக அலங்காரமாய் தேரில் ஏறி திருமண மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார். அதுபோலவே அலங்கார பூஷிதராகி ராமரின் தம்பிகளான சத்ருக்ணன், பரதன் லட்சுமணன்  ஆகியோரும் தனித்தனியாக திருமணம் நடக்க இருக்கும் மண்டபத்திற்கு தங்கள் தேரில் வந்து சேர்ந்தனர்.
 
★சீதையும் ராமனும் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் அந்த மண்டபம், முந்நாளில் மயன் என்ற சிறந்த தேவதச்சனால் மிகச்சிறப்பாக செய்யப்பட்டது. ஆனால், இப்போது அதைப் பார்க்கும்போது அயன் (பிரம்மன்) படைத்த அண்டகோளத்தை போல் அது தெரிகிறது. ஏன்?
 
★அந்த மண்டபத்தில் ஆண்கள் பலர் கூடியுள்ளனர், அவர்கள் உடைய வாரி வழங்கும் வள்ளல் தன்மையால், அங்கே மேகங்கள் உள்ளன என்று சொல்லலாம்.  பல அரசர்கள் வந்துள்ளார்கள், அவர்கள் எல்லாம்  பெரிய நட்சத்திரங்களுக்குச் சமம்.
இந்த அரசர்களுடன் அவர்களது பரிவாரங்களும் வந்துள்ளன, இவர்களெல்லாம் சின்னஞ்சிறு நட்சத்திரக் கூட்டங்களைப்போல.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல், தசரதனும், ஜனகனும் அங்கே கம்பீரமாக பிரகாசமாக அமர்ந்திருந்தனர். இவர்கள் சூரிய, சந்திரர்களைப்போலத் திகழ்ந்தார்கள்.  இப்படி , இந்த நட்சத்திரம், மின்னல், சூரியன், சந்திரன் எல்லாம் உள்ள இது, உண்மையில் அயன் படைத்த அண்டமா, அல்லது மயன் செய்த மண்டபமா?
 
★அந்த திருமண மண்டபத்தில் ஹோமம் தொடங்கி வசிஷ்டர் முன்னிலையில் சடங்குகள் தொடங்கின. நான்கு இளம் மணமக்களும் மேடையில் அமர்ந்து இருந்தனர்.சீதை மண்ணில் கிடைத்த மாணிக்கம், பூமகள் தந்த புனை கோதை, அவள் ஜனகன் வளர்ப்பு மகள். மற்றொருத்தி பிறப்பு மகளாக அவருக்கு வாய்த்தாள். அவள் பெயர் ‘ஊர்மிளை’ என்பது; இலக்குவனை அவள் தன்னுடய இலக்காகக் கொண்டாள். 
 
★முனிவர்கள் வேதமந்திரங்கள் சொல்ல, வசிட்டர் தலைமையில் திருமணம் நடந்தேறியது. மணமேடையில்  இள நங்கை சீதையும் அடல் ஏறுபோன்ற ராமனும் இருந்த காட்சியைக் கண்டவர் மனம் குளிர்ந்தது.  தன் ஆசிகள் நல்கிய. ஜனகர் மகள் சீதையின் மெல்லிய கரங்களைப் பிடித்து ராமன் கைகளில் தந்து, சடங்கின்படி அவளை கன்னிகாதானம் செய்து ஒப்புவித்தான். அவள் மலர்க் கரங்களைப் பற்றி ராமன் அன்றுமுதல் அவள் இன்னுயிர்த் துணைவன் ஆயினன்.
 
★அந்தணர்களும், தேவர்களும் ஆசி வழங்கினர். மன்னர்கள் வாழ்த்து சொல்ல, மக்கள் மிக்க மகிழ்ச்சியுடன் ஆரவாரமும் செய்தனர். ராமரும் சீதையும் அக்னியை வலம் வந்து வணங்கினர். திருமணத்தின்  சம்பிரதாயப்படி ஶ்ரீராமன் சீதையின் கழுத்தில் மங்கல நாண் கட்டினார். அதே மண்டபத்தில் லட்சுமணன் ஊர்மிளைக்கும், பரதன் மாண்டவிக்கும், சத்ருக்குனன் ஸ்ருதகீர்த்திக்கும் மங்கல நாண் கட்ட திருமணம் சிறப்பாக நடைபெற்றது. 
 
★அப்போது, எங்கும் இனிய முழக்கங்கள் கேட்டன, பேரிகைகளும் மங்கலச் சங்குகளும் ஒலித்தன, நான்கு வேதங்களும் மகிழ்ச்சியில் கூவின, வானில் உள்ள தேவர்களெல்லாம் மகிழ்ந்து கூவினார்கள்,மலர் தூவினார்கள். பலவிதமான பறவைகளும் மகிழ்ந்து கூவின, பெண்கள் ‘பல்லாண்டு’ பாடுகிற சத்தம் எங்கும் கேட்டது, வண்டினங்கள் ரீங்காரமிட்டன, கடலும் ஆரவாரம் செய்து மகிழ்ந்தது!
 
★"நீவிர் அனைவரும் வீரனும் வாளும் போலவும், கண்ணும் இமையும் போலவும், கரும்பும் சாறும் போலவும், பூவும் மணமும் போலவும், நிலவும் வானும் போலவும், அறிவும் அறமும் போலவும் இணைந்து வாழ்வீராக” என தசரதனும், ஸீரத்வஜ ஜனகரும் அவ்ர் தம்பி குஸத்வஜ ஜனகரும் தங்கள் ராணிகளோடு இணைந்து புது மணத் தம்பதிகளை வாழ்த்தினர்.
 
★அந்தணர் ஆசி கூறினர். சுமங்கலிகள் மங்கல வாழ்த்துப் பாடினர்; நகர மாந்தர் பூவும் அரிசியும் தூவி ஆசி கூறினர். விண்ணவர் மலர்மாரி பொழிந்து மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். சங்குகள் முழங்கின. பேரரசர் பொன்மழை பொழிந்தனர். முத்தும் மணியும் எங்கும் இறைக்கப்பட்டன. கத்தும் குழலோசை காதிற் பட்டது. மணமிக்க மலர்கள் எங்கும் மணந்தன. புலவர்கள் பாக்கள் வாழ்த்துச் செய்திகளை யாத்து அளித்தன.
 
★வேள்வித் தீயின்முன் செய்ய வேண்டிய சடங்குகளை எல்லாம் செம்மையாய்ச் செய்தனர். மணமேடையில் இருந்து பின் எழுந்து அம்மேடையை வலம் வந்தனர். அவள் அவனோடு ஒட்டிக் கொண்டு உறவாடிப் பின் தொடர்ந்தாள். அவள் மெல்லிய கரங்களைப் பற்றிக் கொண்டு அம் மேடையைச் சுற்றி வந்தான் ராமன்.  அம்மி மிதித்து முனிவர் வசிஷ்டருக்கு அருகில் நின்று இருந்த தேவி அருந்ததியை அவளுக்குக் காட்ட, அவள் வணங்கி அவர்களின் ஆசியைப் பெற்றாள்.  வேதங்கள் ஒலித்தன. கீதங்கள் வாழ்த்தொலியைப்  பெருக்கின. பேதங்கள் நீங்கி இருவர் மனமும் ஒன்று பட்டன.  (வசிஷ்டரின் மனைவி தேவி அருந்ததியைப் பற்றி நாளைய பதிவில் காணலாம்.)
 
★மணம் முடித்துக் கொண்ட அவர்கள், பெரியோர்களை வணங்கி வாழ்த்துரைகள் பெற்றனர். முதற்கண்  தாயார் கைகேயியை வணங்கினர். பெற்ற தாயைவிடப் பாசம்மிக்க தாய் அவள் ஆதலின், அவளுக்கு முதன்மை தந்தான் ராமன். அடுத்துப் பெற்ற தாய் கோசலையையும், தான் மதித்துப் போற்றிய சிற்றன்னையாகிய சுமத்திரையையும் வணங்கினர். மாமியர் மூவரும் மருமகளை மனமார வாழ்த்தினர். அவள் பேரழகும் பெரு வனப்பும் அவர்களை பெரிதும் கவர்ந்தன. அவள் மாமியர் மெச்சும் மருமகள் ஆயினள், “வீட்டுக்கு வந்த திருமகள்” எனப் பாராட்டிப் பேசினார். “இராமன் கண்டெடுத்த அரிய அணிகலன் அவள்” என ஆராதித்தனர்.
 
★ராமன் தானே தேடி அவளைக் கண்டான். மனம் ஒத்த காதல் அவர்களைப் பிணைத்தது. “அவன் தேர்வு மெச்சத்தக்கது” என உச்சியில் வைத்துப் புகழ்ந்தனர்; “இவளைத் தவிர ராமனுக்கு வேறு யாரும் மனைவியாக முடியாது” என்று அவள் தகுதியை மிகுதிப்படுத்தி பேசினர். “'செல்வமும் சிறப்பும் பெற்று நீடித்து வாழ்க” எனக் மனதார  வாழ்த்தினர்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை......................
ஶ்ரீராம காவியம்
~~~~~
059/ 25-05-2021
 
அருந்ததி தேவி...
 
★சந்திரபாகா நதிக்கரையில் தாபஸாரண்யம் என்று பெயர் உள்ள ஒர் ஆஸ்ரமம் இருந்தது. அதில் மேதாதிதி என்ற முனிவர் வசித்து வந்தார். அவர் பெரும் வேள்வி ஒன்றை நடத்தினார். அவ்வேள்வியின் முடிவில் வேள்வித் தீயிலிருந்து ஒரு பெண் குழந்தை தோன்றியது. முனிவரான மேதாதிதி அக்குழந்தையை அன்புடன் வளர்த்து வந்தார். குழந்தை விளையாட்டில்கூடத் தர்மமான கார்யங்களுக்குத் தடங்கலாக இருந்ததில்லை. ஆகையால் அவளுக்குத் அருந்ததி என்ற பெயர் சூட்டப்பட்டது. 
 
★குழந்தை அருந்ததிக்கு வயது ஐந்தாயிற்று. ஒரு நாள் பிரம்ம தேவர் மேதாதிதி முனிவரின் அருகில் வந்தார். குழந்தை அருந்ததியை  நோக்கினார். மறைந்திருந்த முன்ஜன்ம அறிவுகள் வெளிப்பட வேண்டிய காலம்  வந்ததை  அறிந்தார். அருந்ததி கல்வி கற்கும் வயதை அடைந்திருக்கிறாள். ஆகையால் இவளை இப்பொழுதே நல்லோழுக்கமுள்ள பத்தினிப் பெண்களிடம் அனுப்ப வேண்டும். அவர்களிடமிருந்தே இவள் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியைக் கற்க வேண்டும் என்று முனிவரிடம் பிரம்மா கூறினார்.
 
★இதைக் கேட்ட முனிவர், 
தமது குழந்தையிடம் உள்ள பேரன்பினால் குழந்தையைப் பிரிய மனமில்லாதவராக்த சற்று தயங்கினார். இதைக் கண்ட பிரம்மன் முனிவரை நோக்கி நீரும் நானும் படித்தவர் தாம். இருந்தாலும், பெண்களுக்குகந்த கல்வியைப் பெண்கள்தான் கற்பிக்கமுடியும். பெண்களுக்கு இயற்கையாக அமைந்துள்ள நாணம், அச்சம், பக்தி, பொறுமை முதலிய நற்குணங்களை உள்ளவர்கள்தான் வர்ணிக்க முடியும். ஆண்கள் பெண்களுக்கு கல்வி கற்பிப்பதால் அந்த பெண்கள் நாணம் முதலிய பெண்களுக்குள்ள சிறப்பான குணங்களை இழந்து ஆண்களுடைய குணங்களைப் பெறுகிறார்கள். 
 
★பெண்களுக்கு ஒழுக்கமும் நாணமும்தான் முக்கியம். உங்கள் ஆசிரமத்தில் பெண்கள் கிடையாது. ஆகையால்  இக்குழந்தையை சாவித்ரியிடம் அனுப்பு என்று சொன்னார். பிரம்மாவின் கட்டளைப்படி அருந்ததியை அழைத்துக் கொண்டு சூர்ய லோகம் சென்றார்  முனிவர் . சாவித்ரி தேவியைச் சந்தித்தார். சாவித்ரி தேவியும்  அருந்ததியை அழைத்து கொண்டு மேருமலை சென்றார். அங்கே சரஸ்வதி காயத்ரி முதலிய தேவர்களும் வந்து இருந்தார்கள். முனிவர் அவர்களை தனித்தனியாக வணங்கினார். பிறகு அவர்களை நோக்கி, தேவியரே இவள் என் பெண் அருந்ததி, பிரம்மனின் கட்டளைப்படி இவளை உங்கள் வசம் கல்வி அனைத்தும் கற்க ஒப்புவிக்கிறேன். இவள் தங்களிடமே இருக்கட்டும். தாங்கள் பெண்களுக்கு உரிய கல்வியைக் கற்பியுங்கள் என்றார்.
 
★தேவியர் முனிவரே பகவான் விஷ்ணுவின் அருளாள் இவள் முதலிலேயே மிகுந்த ஒழுக்கம் உள்ளவளாக இருக்கிறாள். பெண்களுக்கு ஒழுக்கம்தான் மிக முக்கியம். ஆனாலும் பிரமனின் கட்டளைப்படி இவளை எங்கள் அருகில் வைத்துக் கொள்கிறோம். இவள் முன் ஜென்மத்தில் பிரம்மனின் பெண்ணாக இருந்தாள். உம் தவவலிமையாலும், ஈசனுடைய அருளாலும் இவளை நீர் உமது மகளாகப் பெற்றீர். இவளால் உலகத்திற்கு அநேக நன்மைகள் உண்டாகும். பெண் உலகிற்கே ஒர் எடுத்துக்காட்டாக இவள் விளங்கப்  போகிறாள் என்று கூறினார்கள்.
 
★முனிவர் தம் குழந்தை அருந்ததியை அவர்களிடம் ஒப்புவித்துச் சென்றார். அருந்ததியும் தேவியற்களுக்கு தினமும் பணிவிடை செய்து கொண்டும், கல்வி கற்றுக்கொண்டும் வந்தாள். சில ஆண்டுகள் சென்றன. அருந்ததி திருமணப் பக்குவத்தை அடைந்தாள். ஒரு நாள் வசிஷ்ட முனிவர் அருந்ததியின் ஆசிரமம் பக்கம் சென்றார். தற்செயலாக இருவரும் சந்தித்தார்கள். அருந்ததி நாணமடைந்து உள்ளே ஒடி விட்டாள். இதையறிந்த தேவியர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். 
 
★பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் முதலிய தேவர்களும் வந்தார்கள். மேதாதிதி முனிவர் பிரம்மரிஷி வசிஷ்டருக்குத் தம் மகள் அருந்ததியைத் தானம் செய்தார். தேவர்கள் பூமாரி பொழிந்தனர். மும்மூர்த்திகளும்,  திருமணப் பந்தலில் தம்பதியினரை உட்காரவைத்து நீராட்டினார்கள். அந்நீரே கோமதி, சரயூ முதலிய ஆறுகளாக பெருகிற்று. திருமண காலத்தில் பிரம்ம தேவர் மிக அழகிய விமானமும், விஷ்ணு
அழியாப் பதவியும், ருத்ரர் நீண்ட ஆயுளையும் அளித்தார்கள். வசிஷ்டர், தம் மனைவியுடன் தமக்கென அளிக்கப்பட்ட சப்தரிஷி மண்டலத்தில் இன்னும் இருந்து கொண்டிருக்கிறார். அவர் அருகில் மிகச் சிறு நக்ஷத்திரமாக அருந்ததி தேவி விளங்குகின்றாள். சப்தரிஷி மண்டலத்தில் தம் கனவரை விட்டுப் பிரியாமல் இடம் பெற்று இருக்கும் தேவி அருந்ததி ஒருவள்தான்.
 
★ஒரு சமயம் அக்னி தேவனின் மனைவி ஸ்வாஹாதேவி, அருந்ததியைப்போல உருவம் எடுக்க விரும்பினாள். எவ்வளவு முயற்சி செய்தும் அருந்ததியைப் போல உருவம் எடுக்க அவளால் முடியவில்லை. இதற்குமுன், அநேக முனிவர்களின் மனைவியைப்போல உருவம் எடுத்திருக்கிறாள். ஒருவரைப் போல் நாம் ஆகவேண்டுமானால் முதலில் அவர்களுடைய குணங்களைப் நாம் பெற வேண்டும். குணத்தை அடைந்த பிறகே நாம் அவர்களைப்போல் ஆகமுடியும். அருந்ததியோ மஹா உத்தமி. ஒழுக்கத்தை உயிரினும் மேலாக மதிப்பவள். 
 
★ஸ்வாஹாதேவி அருந்ததியிடம் சென்று கைகூப்பிச் சொன்னாள். தேவி நீங்கள் ஒருவர்தான் பதிவ்ரதா தர்மத்தைச் சரியான முறைப்படி அனுஷ்டிக்கிறீர்கள். தங்களைப் போன்ற உத்தம பத்தினியை நான் இதுவரை பார்த்ததே இல்லை. எந்தப்பெண் திருமண காலத்தில் அக்னி, அந்தணன் இவர்களுக்கு முன்னால் கணவனின் கையை பிடிக்கும் சமயம் உங்களை நினைக்கிறாளோ, அவள் நீண்டகாலம் கணவனுடன் சுகத்தையும், புத்திரனையும், செல்வத்தையும் அடைவாள். நான் எனது அல்ப புத்தியினால் உங்களைப்போல் உருவத்தை அடைய எண்ணினேன். ஆனால் என்னால் முடியவில்லை. என்னை மன்னிக்கவேண்டும் என்று வணங்கிச் சொன்னாள். இதனால்தான் திருமணக் காலத்தில் அம்மி மிதித்து அருந்ததியைப் பார்க்கின்ற ஓர் வழக்கம் வந்தது. நல்லோரைக் காண்பது நல்லதல்லவா.
 
★ஒரு சமயம் இந்திரன், அக்னி, சூரியன், இம்மூவரும் பதிவ்ரதா தர்மத்தைச் சோதிப்பதற்காக அருந்ததியின் ஆச்ரமத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அருந்ததி நீர் எடுத்துவர, குடத்தை எடுத்துக் கொண்டு நதியை நோக்கி நடந்து சென்று கொன்டிருந்தாள். அவள் எதிரில் தேவர்களைக் கண்டு வணங்கி நின்றாள். வருகையின் காரணம் வினவினாள். தேவர்கள் எங்களுடைய சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதற்காக தங்களிடம் வந்துள்ளோம் என்றாகர்கள். அருந்ததி சற்று இவ்வாசனத்தில் அமருங்கள் நான் நதியிலிருந்து ஜலம் கொண்டுவந்தபின் உங்களின் சந்தேகத்தைத் தீர்க்கிறேன் என்றாள். தேவர்கள் எங்களுடைய சக்தியால் இக்குடத்தை நிறப்பிவிடுகிறோம் என்றார்கள். அருந்ததி குடத்தை கீழே வைத்தாள். 
 
★இந்திரன், அக்னி, சூர்யன் மூவரும் எவ்வளவு முயற்சி செய்தும் அக்குடத்தை அவர்களால்  நிரப்ப முடியவில்லை. மூவரின் சக்தியால் முக்கால் குடம்தான் நிறைந்தது. தேவர்கள் தங்களால் முடியவில்லை என்பதை ஒப்புக்கொண்டனர். அருந்ததி தனது பதிவ்ரதா மகிமையால் அக்குடத்தை நிரப்பினாள். தேவர்கள் சந்தேகம் தெளிந்து  பதிவ்ரதையை வணங்கிச் சென்றனர். 
 
★பத்தினிப் பெண்களின் பெருமை தேவர்களின் பெருமையைவிட மிக உயர்ந்தது. பத்தினிப் பெண்களால்தான் நம் தேசம், தர்மம் இவை முன்னேர வேண்டும். இதனால்தான் வளம் பெருக்கும் நதிகளுக்கெல்லாம் பெண்களின் பெயர்களையே வைத்து வழிபட்டனர் நமது முன்னோர்கள். நமது நாடும் தாய்நாடு என ஆனது. 
 
 
நாளை....................
ஶ்ரீராம காவியம்
~~~~~
060/ 26-05-2021
 
பரசுராமர்...
 
★ராமர் சீதை திருமணம் முடிந்த பின் தசரதன் மிதிலையில் சில நாட்கள் தங்கினார். முனிவர் விஸ்வாமித்திரர் ராமனுக்கு வேதங்களில் சில ராஜ நீதிகளை கற்று கொடுத்தார். பிறகு விஸ்வாமித்திரர் தவம் செய்வதற்காக இமய மலைக்குச் சென்று விட்டார். ஜனகர் ராமனிடம் என் மகள் சீதை உன் மனைவியாகி விட்டாள். இப்போது நீ செல்லும் தரும நெறியில் உன்னுடன் துணையாக இருப்பாள். உன் நிழல் போலவே எப்போதும் உன்னுடன் இருப்பாள் என்று கூறி சீதையை ராமனுடன் அனுப்பினார். 
 
★தசரதர் தமது சுற்றமும் பரிவாரங்களும் சூழ ஜனகரிடம் விடைபெற்றுக்கொண்டு தனது நாட்டிற்கு புறப்பட்டார். ஜனகர் 4 பெண்களுக்கும் சீதனம் தந்து அறிவுரை கூறி வழியனுப்பி வைத்தார். ராமர் சீதையுடன் தனித் தேரில் புறப்பட்டார்.
அயோத்திக்கு சென்று கொண்டிருக்கும் போது வழியில் நான்கு பக்கமும் இருந்து பறவைகள் அபசகுனமாக கத்த தொடங்கியது. விலங்குள் அனைத்தும் வலதுபக்கமாக சென்றது. பூமி நடுங்க காற்று பலமாக அடிக்க மரங்கள் கீழே சாய்ந்து கொண்டும் இருந்தது. 
 
★இதனைக்கண்ட தசரதர் வசிஷ்டரிடம் சகுனம் சற்றும் சரியில்லாமல் இருக்கிறது. எனது மனம் படபடக்கிறது இந்த சகுனத்திற்கு என்ன பலன் என்று கேட்டார். அதற்கு வசிஷ்டர் பறவைகளின் சத்தத்தில் உள்ள ஒலிக்குறிப்பில் இருந்து தெய்வ சங்கல்பமாக அபாயகரமான ஆபத்து ஒன்று விரைவில் வர இருக்கிறது. ஆனால் விலங்குகளின் நடவடிக்கையில் இருந்து பார்த்தால் அந்த ஆபத்து நீங்கிவிடும் ஆகவே பயம் கொள்ள தேவையில்லை என்று ஆறுதலான வார்த்தைகளை தசரதரிடம் தெரிவித்தார்.
 
★அந்த சமயத்தில் கோபம் அதிகம் கொண்ட மகரிஷி ஜமதக்னியின் புதல்வரான பரசுராமர் அங்கே வந்தார். பரசுராமர் வந்ததை கவனித்த முனிவர்களில் ஒருவர் சத்ரிய குலத்தவரான தசரதர் குலத்தை அழிக்க பரசுராமர் வந்திருக்கின்றார்  என்று கூறினார். இதனை கேட்ட வசிஷ்டர் தன் தந்தையை கொன்ற சத்ரியர்களை கொல்ல சபதம் செய்து சூரிய குலத்தின் 21 தலைமுறைகளை அழித்து விட்டு சத்ரியர்கள் மீதான வெறுப்பையும் கோபத்தையும் விட்டவர் பரசுராமர். ஆகவே இப்போது அதற்காக வந்திருக்க மாட்டார் என்று கூறினார். வசிஷ்டர் மற்றும் அங்கு உள்ள முனிவர்களின் உபசாரத்தை ஏற்றுக்கொண்டார் பரசுராமர்.
 
★பரசுராமரைக் கண்ட தசரதர் இவரால் ராமருக்கு ஆபத்து ஏதும் வந்து விடுமோ என்று அஞ்சினார். ராமரிடம் வந்த பரசுராமர் உன்னுடைய அற்புதமான ஆற்றலை பற்றி கேள்விப்பட்டேன். சிவவில்லை உடைத்த உனது செயல் மிகவும் ஆச்சரியமானது. அதை எண்ணி பார்க்க முடியாதது. அதனை அறிந்ததும் எனது தந்தையால் கொடுக்கப்பட்ட விஷ்ணு வில்லை கொண்டு வந்திருக்கின்றேன். இந்த வில்லை வளைத்து நாணேற்றி உன்னுடைய சொந்த பலத்தை எனக்கு காட்டு. இந்த வில்லில் நாண் எற்றுவதில் உன் தோள் வலிமையை நான் கண்டபின் உன் வீரத்தை அங்கிகரிக்க உன்னுடன் தனி ஒருவனாக போர் புரிகிறேன் என்றார்.
 
★பரசுராமர் கூறியதை கேட்ட தசரதர் தாங்கள் உலகையே வெல்லும் வலிமையுள்ளவர். ராமனோ சிறு பாலகன். ராமன் ஏதேனும் தவறு செய்திருந்தால் மன்னித்து அருளுங்கள். ராமன் உங்களுடன் போரிட்டு கொல்லப் பட்டால் ராமன் இல்லாத இந்த உலகத்தில் நானும் என்னுடைய  உறவினர்களும் உயிருடன் இருக்க மாட்டோம்  என்று பரசுராமரிடம் தசரதன்  கேட்டுக் கொண்டார். அவர் கூறியது எதையும் கேட்காத பரசுராமர் ராமரிடமே பேசினார். 
 
★உலகில் யாராலும் அழிக்க முடியாத இரண்டு வில் இருந்தது. ஒன்று சிவனுடைய வில் ஆகும். இரண்டாவது விஷ்ணுவின் வில். நீ துருப்பிடித்து போன சிவனின்  வில்லை உடைத்து அங்கிருந்த அனைவரிடமும் வீராதிவீரன் என்று பெயர் பெற்றுவிட்டாய். உனக்கு இரண்டு வாய்ப்புகள் தருகிறேன். நான் கொண்டு வந்திருக்கும் விஷ்ணுவின் வில்லான இந்த கோதண்டத்தை வளைத்து நாண் ஏற்றி வீரன் என்று நிருபித்துக்காட்டு. இல்லையேல் என்னுடன் போர் புரிந்து உன் வீரத்தைக்காட்டு. இரண்டில் ஒன்றை நீ செய்தே ஆகவேண்டும் இல்லையேல் இங்கிருக்கும் அனைவரையும் அழித்து விடுவேன் என மிகுந்த கோபத்தோடு கூறினார். பரசுராமர் கூறியதை கேட்ட தசரதர் ராமருக்கு ஆபத்து வந்துவிட்டது என்று எண்ணி மயக்கமடைந்தார்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை.............................
ஶ்ரீராம காவியம்
~~~~~
061/ 27-05-2021
 
கோதண்டம்...
 
★நீ ஜனகனிடம் இருந்த  வலிமை  அற்ற  சிவ தனுஷை உடைத்து விட்டு சீதையை மணந்தாய். அது உன் உண்மையான வலிமையை எடுத்துக் காட்டாது.  இதோ  என்னிடம் உள்ள இந்த  பகவான் விஷ்ணுவின் வில்லைப் பார். இதன் பெயர் கோதண்டம். இதை நீ எடுத்து வளைத்து நாணேற்றி விட்டால் என்னை வெற்றிக் கொண்ட உண்மையான வீரன் என்று உன்னை மனமாற  ஒப்புக் கொள்வேன். அதன் பின் நீ மேலே செல்லலாம்’ என்று கூறினார்.
 
★அந்த ஏற்றுக் கொண்ட ராமன் பரசுராமரிடம் ‘முனிவரே, நீங்கள் என்னை விட மூத்தவர் என்பதினால் இந்த வில்லை வளைத்து நாணேற்றி வெற்றி கொண்டால் அதன் பிறகு   உம்மைக்  கொல்வது குற்றம் ஆகும். ஆகவே இந்த பாணத்தை  தூக்குவதற்கு முன்னரே தயவு செய்து இந்த  பாணத்துக்கு  என்ன இலக்கு என்பதைக் கூறுவீர்களேயானால்  நான் அதை செய்வேன். ஆனால் நீங்கள் விரும்பினால் கூட நான் உங்களைக் கொல்ல  மாட்டேன். 
 
★அதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உள்ளது. நீங்கள் ஒரு பிராமணர் என்பதைத் தவிர எனது குரு விஸ்வாமித்திரருக்கு உறவினர் ஆவீர்கள். பிரம்மரிஷி விஸ்வாமித்திரர் என்னுடைய குரு ஆவார்.  ஆகவே என்னால் என் குருவுடன் சம்மந்தம் உள்ளவர்களைக் கொல்ல முடியாது. அது குரு துரோகம்  ஆகிவிடும். அதனால்  இந்த  பாணத்துக்கு இலக்கு உங்கள் ‘பாத கதியா’ அல்லது நீங்கள் ‘ஜெயித்து உள்ள பூமியா’  என்று கேட்டார்.
 
★விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர் மிகுந்த  சாந்தமான முனிவராகத்தான் இருந்தார். ஆனால் தன்னுடைய தந்தை ஜமதக்னி முனிவரைக் கொன்ற எல்லா ஷத்ரியர்களை பழிவாங்க புறப்பட்டு சென்ற போது விஷ்ணுவின் கோப குணாதிசயங்களை தன்னுள் அடக்கிக் கொண்டு மிகுந்த ஆவேசமானவர். அவரது அவதாரத்திலே அவருக்கு ஒரு விசேஷ சக்தி உண்டு. அந்த சக்தியைக் கொண்டு  ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு இடையே எவ்வளவு இடைவெளி இருந்தாலும்  ஷண நேரத்தில் அவரால் சென்று விட முடியும்.  அந்த சக்தியையே ‘பாத கதி’  என்பார்கள்.
 
★பரசுராமானின் குரு காஷ்யப முனிவர் என்பவர் ஆவார். பரசுராமர்  அவருடைய குருவான காஷ்யபருக்கு குருதட்ஷணை   தான் தபஸ் மூலம் வெற்றிக் கொண்டிருந்த  அனைத்து பூமியையும் தானமாக அளித்து இருந்தார்.  அப்போது அதைப் பெற்றுக்  கொண்ட காஷ்யபர் பரசுராமரிடம் கூறினாராம்  ‘ பரசுராமா, எப்போது உனக்கு தபஸ் மூலம் கிடைத்த அனைத்து பூமியையும் எனக்கு நீ  தானம் தந்து விட்டாயோ, அந்த தானம் தந்த பூமியில் நீ  வசிக்கலாகாது,  அங்கு  நீ விஜயம் மட்டுமே செய்யலாம். இரவிலே தங்கக் கூடாது என்று உத்தரவிட்டார். 
 
★அதனால் பரசுராமர் காலை வேளையில் அந்த பூமியில் 
எங்கு விஜயம் செய்தவாறு இருந்தாலும், இரவு நேரங்களில் தனது 'பாத கதி'  எனும் சக்தியை பயன்படுத்தி வெகு தொலைவில் அந்த இடத்தின் எல்லையாக இருந்த மகேந்திர மலைக்கு அப்பால் சென்று விடுவாராம்.  ஆகவே அப்படிப்பட்ட சக்தியைத் தரும் பாத கதியையோ, அல்லது தான் ஏற்க்கனவே தானம் தந்து விட்ட பூமியையோ இலக்காக்கி அவற்றை இழக்க பரசுராமர் விரும்பவில்லை என்பதினால், ராமர் வில்லில் நாணேற்றி வெற்றி பெற்றால்  ஒன்று தன்னை கொன்று விடலாம், அப்படி தன்னைக் கொல்ல   விருப்பம் இல்லை எனில் அவர் அதற்கு மாறாக தான் யாகம் செய்து பெற்றுக் கொண்ட ஸ்வர்க கதியை இலக்காகக் கொள்ளலாம்  என்று கூறி விட்டார். அதாவது பரசுராமர் என்ற அந்த மானிடப் பிறவி முடிந்து விட்டதும்  அவர் ஸ்வர்கத்துக்கு  செல்ல இருந்த அந்தப் பாதையை  அழித்து  விடலாம் என்ற அர்த்தம் ஆகும்.
 
ஶ்ரீராமர் என்ன செய்தார்?
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை..........................
ஶ்ரீராம காவியம்
~~~~~
062/ 28-05-2021
 
கோதண்டராமன்...
 
★அதைக் கேட்டதும் ராமர் பரசுராமரிடம் இருந்த வில்லை வாங்கி அதை தூக்கி அதில் நாணேற்றி பரசுராமரை வெற்றிக் கொள்ள பரசுராமரின் கர்வ பங்கமும் அடங்கியது. அது நடந்து முடிந்ததும் பரசுராமர் தன் முன் உள்ள ராமனே தனக்கு பின் வந்துள்ள விஷ்ணுவின் அவதாரம் என்பதை புரிந்து கொண்டு அதை ராமனிடமே எடுத்துக் கூறி கைகளைத் தூக்கி ராமனை ஆசிர்வதித்தார். 
 
★தனக்கு முடிவு வந்து விட்டது என்பதை உணர்ந்து கொண்ட பரசுராமனே தம்முடைய தவ வலிமை முழுவதையும் ராமர் தூக்கி நிறுத்திய தமது பாணத்திற்கு இரையாக்கி விட்டு, பிராமணர் என்ற நிலையில் இருந்து கொண்டு  ‘நீ அவதரித்தக் காரணம் அனைத்தும் இனிதாக முடியட்டும் என்று ராமருக்கு ஆசிர்வாதம் செய்ய, ராமனும் தனது மனைவி மற்றும் பரிவாரங்களுடன் பரசுராமரின் கால்களில் விழுந்து வணங்கிய பின் அவர் ஆசிகளை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டனர். 
பரசுராமன் அரசுராமனிடம் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு கால் சென்றவழித் தவம் செய்ய இமயமலைச் சாரலை நோக்கிச் சென்றார். இராமன் எனறால் கோதண்டராமன்தான் எனறு உலகம் பேசும்படி அவன் புகழ் பன்மடங்காகியது.
 
★தவமுனிவரிடம் வென்று பெற்ற வில்லான கோதண்டம் ராமருக்கு  அப்பொழுது தேவைப்படவில்லை. அதனை வருணனிடம் தந்து பாதுகாப்பாக வைத்திருக்கும்படி ராமன் கேட்டுக் கொண்டான்.  அது பின்னொரு காலத்தில் கரன், தூஷணன் என்பவர்களுடன்  போர் செய்யும்போது பயன் பட்டது.  அவன் சிரம் நீக்க இந்த வில்லைக் கேட்டுப் பெற்றான். தக்க சமயத்தில் உதவியது.  பரசுராமன் வடக்கு நோக்கி விடை பெற்றதும் அடக்கமாகத் தந்தையை அணுகித் தன் வெற்றியை விளம்பினான் இராமன். அச்சம் நீங்கித் தசரதன், நல்லுணர்வு பெற்றுக் களிப்பு என்னும் கடலுள் ஆழ்ந்தான். தீமை விலகிற்று என்பது ஒன்று. இராமன் வெற்றி பெற்றான் என்ற சிறப்பானது மற்றொன்று. அனைவரும் தமது
நாட்டுக்குத் திரும்ப ஆயத்தம் ஆனார்கள்.
 
—————————–
★ஒரு  சிறு விளக்கம்★ :-​  
 
★ஸ்வர்க கதியை அழிப்பது என்றால் பரசுராமர் தனது அவதாரத்தை முடித்துக் கொண்டு விட்டால் இனிமேல் ஸ்வர்கத்துக்கு செல்லவே முடியாது என்பதல்ல இதன் சாரம். ஸ்வர்க பாதையை அழித்து விட்டால் பரசுராமர் அவதாரம் முடிந்தவுடன் முதலில்  அவர் எண்ணி இருந்தபடி நேரடியாக ஸ்வர்கத்துக்கு செல்ல முடியாமல் வேறு வழியில் ஸ்வர்கத்துக்கு செல்ல வேண்டி வரும்.  
 
★அதற்கு மேலும் கூடுதலாக சில ஷணங்கள் தேவைப்படும்.  தேவர்கள்  கணக்கில் ஒவ்வொரு ஷணமும்  மனிதர்களைப் பொருத்தவரை பல்லாண்டு காலம் ஆகும்.  ஆகவே வீணாகும் ஒவ்வொரு ஷணமும் அந்த தெய்வங்களைப் பொருத்தவரை பொன்னானவை. அப்படி  வீணாகும் ஒவ்வொரு ஷணமும்  ஒரு அவதாரத்தை முடித்து விட்டு அடுத்த அவதாரம் எடுப்பதற்கு  இடையே பல்லாயிரம் ஆண்டுகள்   இடைவெளியை ஏற்படுத்தி விடும்.  
 
★அப்படி என்றால் அனைத்து பிரபஞ்சங்களையும் இயக்கும் தெய்வங்களால் அவற்றை முன்னரே அனுமானித்து இருக்க முடியாதா, இப்படிப்பட்ட   சில சங்கடங்களை தவிர்க்க முடியாதா என்ற கேள்வி எழலாம்? புராண விளக்கங்களின்படி தெய்வங்களை மையமாகக் கொண்டு நடப்பது அனைத்துமே  தெய்வ லீலைகள் ஆகும்.  இப்படி செய்வதின் மூலம் இப்படி நடக்கும் என்ற விதியை மானிடப் பிறவிகளுக்கு உணர்த்திடவே அப்படிப்பட்ட லீலைகளை வேண்டும் என்றே தெய்வங்கள்  நடத்திக் காட்டுகிறார்கள்.
 
★விஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் தனது அவதாரத்தை முடித்துக் கொள்ள வேண்டிய கட்டத்தை அடைந்ததும், தனது சக்தியை ராமருக்கு செலுத்த வேண்டிய தருமணம் வந்து விட்டதை உணர்ந்து கொண்டார். அதனால் தன்னிடம் இருந்த வில்லை ராமன் வாங்கிக் கொண்டு, அதை தூக்கி நாணேற்றி  தன்னை  வெற்றிக் கொண்டவுடன்  தன்னை  வணங்கி நின்ற ராமருக்கு தனது கைகளைத் தூக்கி பரசுராமர் ஆசிர்வதிக்கிறார். பரசுராமர் உருவில் இருந்த விஷ்ணு பகவான் அப்படி கைகளை தூக்கி ஆசிர்வதிக்கும்போதே அதன் மூலம் தனது சக்திகள் அனைத்தையும் ராமாவதார மூர்த்திக்கு மாற்றி விடுகிறார்.  ஏன் என்றால் ஒரே நேரத்தில் தன்னுடைய அனைத்து விதமான சக்திகளையும் இரண்டு வேறு வேறு மானிட அவதாரங்களில் வைத்திருந்து  தமது கடமைகள் எதையும் செய்ய முடியாது.
 
★'நீ அவதரித்ததின் காரணம் அனைத்தும் இனிதே முடியட்டும்’ என்று பரசுராமர் ஆசிர்வதித்த போதும் கூட தான் விஷ்ணுவின் அவதாரம் எனும் உண்மையை ராமர் புரிந்து கொள்ளவில்லை. அது போலவே மற்றவர்களும் விஷ்ணுவைப் போல சக்தி கொண்ட மானிடர் என்றே ராமரைக் குறித்து நினைத்து  இருந்தார்களே தவிர அவரை தெய்வம் என்று கருதவில்லை. 
 
★தானே விஷ்ணுவின் அவதாரம் என்பது ராமருக்குப் புரிந்து இருந்திருந்தால் விஷ்ணுவின் அவதாரமாக, தமக்கு மூத்த அவதாரமாக இருந்த பரசுராமரை தம்மிடம் தோற்றுப் போக வேண்டும் என ராமர் எண்ணி இருப்பாரா? இந்த காட்சி கூட பரசுராம அவதாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும், தனது சக்திகளை ராமாவதாரத்துக்கு செலுத்திவிட வேண்டும் என விஷ்ணு எண்ணியதினால் நடைபெற்ற நிகழ்ச்சியாகும்.
ஏனென்றால் மனிதனாக இருந்தால் மட்டுமே ராவணனை கொல்ல முடியும். தான் அவதாரம் என புரிந்து கொண்டால் அவனை கொல்ல இயலாது. ராவணன் வாங்கிய வரம் அப்படி.
 
★மேலும் பரசுராமர் சிரஞ்சீவிகள் என போற்றப்படும் எழுவரில் ஒருவர். இவர் அடுத்து வந்த கிருஷ்ணாவதாரத்திலும் இருந்து இருக்கிறார். பிதாமகர் பீஷ்மர், துரோணாச்சாரியார் மற்றும் கர்ணனுக்கு அஸ்திர சாஸ்திரங்களை போதித்த குருவாக இருந்துள்ளார். இவர் சிரஞ்சீவி ஆதலால் கலியுகம் முடியும்வரை யார் கண்ணிலும் படாமல் எங்காவது தவம் செய்து கொண்டிருப்பார் என நம்பலாம்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை.....................
ஶ்ரீராம காவியம்
~~~~~
063/ 29-05-2021
 
புயலுக்கு முன்னே அமைதி...
 
★ராமர் தசரதரின் மயக்கத்தை தெளிவித்து பரசுராமர் சென்று விட்டார். ஆபத்து ஒன்றும் இல்லை என்று கூறினார். பரசுராமரை ராமர் வெற்றி பெற்றுவிட்டார் என்று எண்ணி மகிழ்ச்சியடைந்த தசரதர் ராமரை கட்டி அணைத்தார். அனைவரும் அயோத்தி நோக்கி சென்றார்கள்
 
★தசரதசக்ரவர்த்தியும் நான்கு ராஜகுமாரர்கள் தங்கள் துணையுடனும்  அயோத்திக்கு வருவதை அறிந்த மக்கள் அயோத்தியை முழுவதுமாக அலங்கரித்தார்கள். பூலோக சொர்க்கம் போல் காட்சி அளித்தது அயோத்தி. மக்கள் அனைவரும் ஊருக்கு சிறிது தூரத்திற்கு முன்பே சென்று மேளதாளத்துடன் சங்கொலி முழங்க ஆடல் பாடலுடன் அனைவரையும் வரவேற்றார்கள்.
 
★பரசுராமருடன்  ஏற்பட்ட நிகழ்வுகள் அனைத்தையும் கேட்டறிந்த  அனைவரும் பெரும் மகிழ்ச்சி கொண்டு  ராம பரத லஷ்மண சத்ருக்ணர்களை வரவேற்று உபசரித்தார்கள். அவர்களது வீர, தீர மற்றும் பெருமையை எடுத்துக் காட்டிய சம்பவங்களை வெகுசிறப்பாக நிகழ்த்தியதற்கும்,  சீதையை ராமன் திருமணம்  செய்து கொள்ளக் காரணமாக இருந்த விஸ்வாமித்திர  முனிவர் அங்கில்லை என்றாலும் அனைவரும் அவரைப் போற்றி புகழ்ந்து   வணங்கி  துதித்து தமது ஆனந்தத்தை அங்கே வெளிப்படுத்தினார்கள்.
 
★அரண்மனைக்கு வந்த புதிய திருமண தம்பதிகள் நால்வரை  அன்னையர் கௌசலை சுமித்ரை கைகேயி மூவரும்
ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள்.
மாற்றம் அல்லது ஏற்றம் எதுவும் இல்லாமல் தசரதன் வாழ்க்கை சென்றது. நான்கு புதுமணத் தம்பதிகளும் மிக இனிமையாக காலம் கழித்தனர். மூன்று தாய்மார்களுக்கும் பேதம் ஏதும் பார்க்காமல் வேண்டிய உதவிகளைச் செய்தனர். ஓரிரு இன்பமான ஆண்டுகள் கழிந்தன.
 
★கைகேயின் தந்தை கேகய நாட்டு மன்னர் அஸ்வபதி  தசரதரிடம் பரதன் தன்னுடைய மனைவியுடன் கேகய நாட்டில் சிறிது காலம் தன்னுடன் தங்கியிருக்க வேண்டும் என்று வேண்டுகோள் ஒன்று வைத்தார். தசரதரும் மகிழ்ச்சியுடன் அனுமதி அளித்தார். பரதனையும் அவனுடன் இணைபிரியாமல் இருக்கும் சத்ருகனனையும் கேகய நாட்டிற்கு தசரதர் அனுப்பிவைத்தார். அவர்களை கைகேயின் சகோதரன் யுதாஜித் என்பவன் அழைத்துச்சென்றான்.
 
★பரதனும் தசரதனிடம் விடை பெற்றுக்கொண்டு ராமனை வணங்கிப் பிரிய மனமில்லாமல் வேறுவழியின்றி விடைபெற்றுக் சென்றார்கள். இராமனை அவன், தன் உயிரையும்விட மிகவும்  நேசித்தவன் ஆதலின், பிரிவிற்கு மிகவும் வருந்தினான். செல்லும் இடம் அவனுக்குத் தேனிலவாக இல்லை. நிலவு இல்லாத ஒரு வானாக இருந்தது. யுதாஜித்  ஒட்டிய தேரில் கேகய நாட்டை நோக்கிச் சென்றனர். புறப்பட்ட ஏழாம் நாள் அவர்கள், தம் தாய் பிறந்த நாட்டை அடைந்தனர். தனது தாயின் தந்தையை கண்டு மகிழ்சியில் வணங்கி கட்டித் தழுவினர்.
 
★பரதன் சென்றதும் ராமரும் லட்சுமனணும் அன்னையர்க்கு தேவையான பணிவிடைகளை, குருவுக்கு தேவையான எல்லா பணிவிடைகளையும் அந்தந்த காலத்திற்கு ஏற்ப மிகவும் கவனத்துடன் செய்துவந்தார்கள். நாட்டு மக்களுக்கு தேவையான திட்டங்களை தந்தையின் அறிவுறைப்படி ராமரும் லட்சுமனனும் செய்தார்கள். ராமரின் நற்குணங்களால் தசரதர் மகிழ்ச்சி அடைந்தார். நான்கு குமாரர்களில் ராமர் தசரதரின் அன்புக்குரியவராக இருந்தார்.
 
★ஶ்ரீராமரும் மாதா சீதையும் அயோத்தியில் சில  ஆண்டுகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கழித்து விட்டார்கள். சீதை தன்னுடைய நற்குணங்களாலும் அன்பாலும் பேரழகினாலும் அனைவராலும் கவரப்பட்டாள். ராமர் சீதை மேல் வைத்த அன்பைவிட இருமடங்கு சீதை ராமரின் மேல் அன்பு வைத்திருந்தாள். தசரதனும் ஆட்சிப் பீடத்தில் தொடர்ந்து அமர்ந்து மக்களுக்குக் காட்சி தந்து தனக்கு உரிய கடமைகள் அனைத்தையும் செம்மையாய் ஆற்றிக் கொணடிருந்தான். 
 
★புயலுக்கு முன் அமைதி, அது அவன் மன நிறைவுக்குத் துணை செய்தது. எதுவுமே நிலைப்பது இல்லை. மாற்றங்கள் வரக் காத்துக் கொண்டிருந்தன.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை.........................
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
064/ 30-05-2021
 
பட்டாபிஷேகம்...?
 
★சில வருடங்கள் மகிழ்சியாக ஓடின. காலங்கள் ஒரேமாதிரி இருப்பதில்லை. காலம் மாறும் போது புத்தி தடுமாறுகிறது. வேண்டாத விஷயங்களை எப்போதும் நினைத்து கொண்டு அல்லல் படுகிறது. அதனால் தவறான முடிவுகள் எடுக்கப் படுகின்றன. விளைவுகள் மோசமடைகின்றன. விதியின் இந்த விளையாட்டு மனிதர் அனைவருக்கும் பொருந்தும். அது பாமரனாக இருந்தாலும் சரி அல்லது அரசனாக இருந்தாலும் சரி. தசரதனுக்கும் அப்பேற்பட்ட நிலை வந்தது.
 
★ஒருநாள் தசரதர் தூங்கும் போது பழைய நிகழ்சி ஒன்றை கனவாக கண்டார். கண்பார்வை அற்ற சலபேந்திர முனிவரின் மகனான சிரவணகுமாரனை மான் என எண்ணி அம்பெய்து வீழ்த்தி பின் புத்திரனை பிரிந்த சோகத்தால் மாள்வாய் என முனிவரால் சாபம் பெற்ற நிகழ்சிதான் அந்த கனவு. திடுக்கிட்டு விழித்த தசரதன் பதற்றம் அடைந்தான்.  புத்தி தடுமாறியது. தவறான ஒரு முடிவெடுக்க தூண்டியது. ராமனுக்கு முடி சூட்டி அரசனாக்கி பின் வனம் சென்று முக்தி அடையலாம் என தீர்மானமாக முடிவு செய்தான். பரதனும் சத்ருக்ணனும் அயோத்தியில் இல்லை என்பதை மறந்தான். மனம் முழுவதும் ராமன் மட்டுமே தெரிந்தான். அதன் விளைவுகள் தொடர்ந்தன.
 
★அயோத்தியை ஆளும் பொறுப்பை தம் மைந்தனிடம் ஒப்படைத்துவிட்டு தான் கானகம் சென்று முக்தி பெற பெரிதும் விரும்பினார், தசரதர். இதனால் ராமனின் முடிசூட்டுவிழாவை ஆடம்பரமாக கொண்டாட தசரதர் சிறிதும் விரும்பவில்லை. ராமனுடைய பட்டாபிஷேக விழாவுக்கு சீதையின் தந்தை ஜனகர் வர வேண்டும், கேகய நாட்டுக்கு சென்றிருக்கும் பரதன், சத்ருக்கன் வர வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் தோன்றவில்லை. சீக்கிரம் ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற எண்ணமே அவர் மனதில் இருந்தது. 
 
★உடனே வசிஷ்ட முனிவரை அழைத்து ராமனின் பட்டாபிஷேகத்துக்காக ஆலோசனை செய்தார். பிறகு சபையோர் அனைவரிடமும், எனக்கு வயது முதிர்ந்து விட்டதால் நான் நாட்டை ஆளும் பொறுப்பில் இருந்து விலகி ராமனுக்கு முடிசூட்ட இருப்பதாக, தம் கருத்தை கூறினார். வசிஷ்டர் தசதர மன்னரிடம், ராமனோ தங்களினும் மேல் சிறந்தவன். ராமனுக்கு முடி சூட்டுவதால் நாடும், நாட்டு மக்களும் நலம் பெறுவார்கள் என்று கூறினார். சபையில் உள்ள அனைவரும் தசரத சக்ரவர்த்தியின் கருத்தை ஏற்றுக் கொண்டனர்.
 
 ★வசிஷ்டர் தசரதரை பார்த்து இது சித்திரைமாதம் மங்களமான காலம் வனங்களெல்லாம் பூத்துக்குலுங்கும் நேரம். புஷ்ய நட்சத்திரத்தில் பட்டாபிஷேகம் விழாவிற்கு ஏற்பாடுகளை செய்யுங்கள் என்று கூறினார். வசிஷ்டர் கூறிய நாள் வர இன்னும் 3 நாட்களே இருந்தது. இதனை அறிந்து மகிழ்ந்த தசரதர் இன்றிலிருந்து 3 ம் நாளில் ராமருக்கு பட்டாபிஷேகம் என்று அனைவர் முன்னிலையில் அறிவித்தார். வசிஷ்டரிடமும் வாமதேவர் என்ற அந்தணரிடமும் பட்டாபிஷேகத்திற்கான பூஜைகள் யாகங்கள் செய்து தருமாறு கேட்டுக்கொண்டார். பட்டாபிஷேகத்திற்கான அனைத்து பணிகளையும் விரைவாக செய்யுமாறு தமது பணியாட்களுக்கு கட்டளை இட்டார்.
 
★தசரதர் ராமரிடம் எனக்கு வயதாகிவிட்டது. நேற்றிரவு கெட்ட கனவு ஒன்று கண்டேன். அதன்படி எனக்கு பெரிய துக்கம் சம்பவிக்கும் என்று சாஸ்திரங்கள் அறிந்தவர்கள் சொல்லி இருக்கின்றார்கள். எல்லா சுகங்களும் நீண்ட ஆயுளும் அனுபவித்து விட்டேன். செய்ய வேண்டிய தேவபித்ரு காரியங்களை அனைத்தையும் செய்துவிட்டேன். இனி உலகில் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை. உனக்கு பட்டாபிஷேகம் செய்து சிம்மாசனத்தில் அமர வைக்க வேண்டும் என்ற ஆசை மட்டுமே தற்போது உள்ளது. அதற்கான ஆயத்தப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது. இன்றிலிருந்து 3 நாளில் பட்டாபிஷேகம் நீயும் சீதையும் பட்டாபிஷேகத்திற்காக விரதம் இருக்க வேண்டும். தரையில் படுத்துத் தூங்கி விரதம் இருந்து மங்கள பூஜைகள் செய்துவா என்றார். 
 
★பரதனும் சத்ருக்கனனும் தற்போது கைகய நாட்டில் இருக்கின்றார்கள். அவர்களை பட்டாபிஷேகத்திற்குள்  இங்கு வரவழைக்க முடியாது. அதற்காக காலம் தற்போது இல்லை. அவர்கள் வரும் வரை ராமனின் பட்டாபிஷேகத்தை தள்ளி வைக்கவும் முடியாது. பரதன் மிகவும் நல்லவன் உன்னிடம் அன்பும் மரியாதையும் வைத்து இருப்பவன். ஆகையால் அந்த பட்டாபிஷேகத்திற்கு எந்த ஆட்சேபனேயும் சொல்ல மாட்டான். அவர்கள் வந்ததும் அவர்களுக்கு நடந்ததை தெரியப்படுத்திக் கொள்ளலாம் என்றார். தங்கள் ஆணைப்படி நடக்கின்றேன் என்று ராமர் தசரதரிடம் கூறினார்.
 
★தசரதர் கைகேயிக்கு பல காலங்களுக்கு முன்பு கொடுத்த வாக்கு ஞாபகத்திற்கு வந்தது. அதை பயன்படுத்தி ஏதேனும் விபரிதமாக கேட்டுவிடுவாளோ என்று தசரதருக்கு ஓரு பயம் வந்தது. தந்தையிடம் விடை பெற்ற ராமர் கௌசல்யையிடம் ஆசி வாங்க அவர் இருக்கும் இடம் சென்றார். ராமர் அங்கு வருவதற்கு முன்பே மகாராணி கௌசல்யைக்கு தகவல் சென்றுவிட்டது. லட்சுமனனும் சீதையும் அவருடன் இருந்தனர். ராமர் கௌசல்யாவை வணங்கினார். சிரஞ்சீவியாக இருப்பாயாக ராஜ்யத்தை நிர்வாகித்து எதிரிகளை அழித்து விரோதிகளை அடக்கி மக்களை காப்பாற்றுவாய். உன் குணத்தினால் உன் தந்தையை திருப்தி செய்து விட்டாய் இது என்னுடைய பாக்கியம் என்று ஆசிர்வாதம் செய்தார்.
 
★ராமர் அரசு அறநெறிகளை கற்க வசிஷ்டரிடம் சென்று வணங்கினார். வசிஷ்டர் ராமருக்கு ஆசி கூறி, இராமா நாளை உனக்கு முடிசூட்டும் விழா. ஆதலால் நான் கூறும் அறிவுரைகளை கேட்டுக்கொள். மிக்க சிந்தனையுடைய அந்தணர்கள் மிகவும் சிறந்தவர்கள். அவர்களிடன் நீ ஆசியை பெற்றுக்கொள்ள வேண்டும். அதேபோல் அமைச்சர்களின் அறிவுரையை மதித்து நடக்க வேண்டும். எல்லோரிடமும் அன்பாகவும், இனிமையாகவும் பழக வேண்டும். சிந்தித்து செயல்பட வேண்டும். ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். மக்களின் துயரங்களை நீக்க வேண்டும். மக்களை நிழல் போல் காத்து ஆட்சி புரிய வேண்டும். நீதி நெறி தவறாமல் ஆட்சி புரிய வேண்டும் என்று உபதேசித்தார். தசரத சக்ரவர்த்தி தன் மைந்தனின் முடிசூட்டு விழாவிற்கு சகல ஏற்பாடுகளும் செய்தார்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை.........................
ஶ்ரீராம காவியம்
~~~~~
065/ 31-05-2021
 
சூழ்ச்சி வலை...
 
★கௌசல்யையிடம் ஆசிர்வாதம் பெற்ற ராமர், லட்சுமனனிடம் என் உடலுக்கு வெளியில் நடமாடும் என்னுடைய இரண்டாவது உயிர் நீ. என்னோடு சமமாக இருந்து செல்வம் நிறைந்த இந்த நாட்டை நீயும் ஆட்சி செய்யவேண்டும். எனக்கு சொந்தமான இந்த ஆட்சி அதிகார பாக்கியமெல்லம் உன்னுடையதும் ஆகும் என்று கூறினார். மகிழ்ச்சி அடைந்த லட்சுமனன் ராமரின் அன்புக்கு தலைவணங்கி தன்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொண்டான். அனைவரும் அங்கிருந்து விடைபெற்று தங்கள் இருப்பிடம் திரும்பினர். 
 
★ராமனுடைய இருப்பிடத்திற்கு வந்த வசிஷ்டர் ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கு முன் செய்ய வேண்டிய பூஜைகள் அதற்கான நியதிகளையும் எடுத்துச்சொன்னார். அவர் கூறிய அனைத்தையும் கேட்டுக் கொண்ட ராமர் நியதிகளை முறையாக கடைபிடிப்பதாக வசிஷ்டருக்கு வாக்களித்தார்.
ராமர் அரசனாகப்போகின்றார் என்ற செய்தி அயோத்தி மக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது. கொண்டாட்டத்தில் மக்கள் இருந்தார்கள். 
 
★மந்தரையின் வடிவில் விதி விளையாட தொடங்கியது. மந்தரை கேகய நாட்டு மன்னருடைய அரண்மனையில் பணிபுரிந்தவள். மந்தரை கைகேயியை வளர்த்தவள். கைகேயி மீது அதிக அன்பு கொண்டவள். கைகேயியுடன் திருமணம் முடிந்து அயோத்திக்கு வந்தாள்.இவள் முதுகுபகுதி சற்று வளைந்து காணப்பட்டதால்  இவளுக்கு கூனி என்றொரு பெயரும் உண்டு. சிறு வயதில் ராமர் விளையாட்டாக கூனியின் முதுகில் உள்ள கூனை நிமிர்த்த மண் உருண்டைகளை எய்தினார். ஆனால் அவளோ கீழே விழுந்துவிட்டாள். அங்குள்ள பெண்கள் அவளை கைதட்டி சிரித்தார்கள். இதனால் கோபம் கொண்ட கூனி ராமர் மீது கோபம் கொண்டாள். இந்த சிறிய சம்பவத்தை நினைவில் வைத்து கொண்டு என்றாவது ஒருநாள் இராமனுக்கு தீங்கு செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தாள்.
 
★கைகேயியை தூங்குவதற்காக பஞ்சணையை தயார் செய்து அவளை தூங்க வைத்து விட்டு கீழே சென்றாள் மந்தரை. அங்கு இருந்த பெண்களிடம், நகரமே விழாக் கோலம் போல் அழகாய் அலங்கரிக்கப்பட்டுள்ளது, இன்று என்ன விழா? என்று கேட்டாள். நாளை நம்முடைய ராமனுக்கு பட்டாபிஷேக விழா என்று கூறினார்கள். இதைக்கேட்ட மந்தரைக்கு மிகுந்த கோபம் வந்தது. இந்த ராமனுக்கு பட்டாபிஷேகமா? இதனை ஒருபோதும் நான் நடக்க விட மாட்டேன். நான் இதை தடுத்து நிறுத்துவேன் என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.
 
★உடனே தூங்கி கொண்டிருந்த கைகேயிடம், கைகேயி! உனக்கு தீங்கு வந்துவிட்டது. இந்த ஒரு நேரத்தில் இப்படி அயர்ந்து தூங்குகிறாயே!  என்று அவள் கைகேயியை எழுப்பினாள். நாளை மறுநாள் பட்டாபிஷேகம் நடைபெறும் ராமனால் உனக்கு தீங்கு வரவிருக்கிறது என்றாள். மந்தரை!  ராமனால் ஒருபோதும் எனக்கு தீங்கு வராது. நீ ஏன் உளறுகின்றாய்? என கூறினாள் கைகேயி.  நீ இன்னும் சிறு பெண்ணாகவே இருக்கிறாய். உன் மகன் பரதனை உன் தந்தை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு தன் கணவனுக்கு மந்திரம் ஓதி உன் மகன் இல்லாத நேரத்தில் ராமனுக்கு பட்டாபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். நீ ஒன்றும் தெரியாமல் உறங்கிக் கொண்டு இருக்கிறாய் என்றாள் மந்தரை.
 
★இதை கேட்டதும் கைகேயி அளவற்ற மகிழ்ச்சி அடைந்தாள். அவளது முகம் பிரகாசமானது. அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவள் அடைந்த ஆனந்தத்தில் தன் கழுத்தில் போட்டு இருந்த இரத்தின மணிமாலையை மந்தரையின் கழுத்தில் பரிசாக போட்டாள். கைகேயிக்கு ராமன் மீது அளவுக்கடந்த அன்பு இருந்தது. கோபத்தில் மந்தரை  தன் கழுத்தில் போட்ட இரத்தின மாலையை தூக்கி எறிந்தாள். கைகேயி! நீ உன் மதியை இழந்து விட்டாயா என்ன? என்று உரக்கக் கேட்டாள், மந்தரை.
 
★கைகேயி, மதிநுட்பத்தால் கௌசலை தன் மகன் ராமனுக்கு நாளை முடிசூட போகிறாள். சீதையும் ராமனும் பெருமைமிக்க சிம்மாசனத்தில் விரைவில்  அமர போகின்றார்கள். ஆனால் உன் மகன் அவர்களுக்கு கை கட்டி வாய் மூடி பணிவிடை செய்ய வேண்டும். இந்நாட்டை ஆள போகும் இளவரசரின் தாயாகிய கௌசலைக்கு நீ பணிவிடை செய்ய வேண்டும். இப்படி ஒரு நிலை உனக்கு வந்து விட்டதே கைகேயி. நீயோ இதை எல்லாம் அறியாமல் முட்டாள்த்தனமாக எனக்கு நவரத்தின மாலையை பரிசாக தருகின்றாய் என அழுது புலம்பினாள் மந்தரை..
 
★கைகேயி மனம் மாறியதா?  மாறவேண்டும். நாளை மாறும்.
 
வணக்கத்துடன்
நாகசுபராஜராவ்
9944110869.
 
நாளை.........
ஶ்ரீராம காவியம்
~~~~~
066/ 01-06-2021
 
மதி மயக்கிய மந்தரை...
 
★கைகேயி, உன்னிடம் வறுமை என்று வருபவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பாயே. ராமன் அரசனாக வந்தால் நீ எப்படி தான தர்மம் செய்வாய் மகளே!. தானம் கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று எப்படி உன்னால் சொல்ல முடியும். இதையெல்லாம் நீ நினைத்து பார்த்தாயா ? இதைக் கேட்ட கைகேயி புன்னகைத்தாள். 
 
★ மந்தரை, நீ ஒன்றும் புரியாமல் பேசுகிறாய். ராமனோ என் அன்புக்கினிய புதல்வன் ஆவான். ஆதித்தன் குலத்தில் முடிசூடும் உரிமை மூத்த மகனுக்கே உண்டு. இதை அறியாமல் நீ பேசுகிறாய். இத்தகைய காலங்காலமாய் கடைபிடிக்கப்பட்டு வரும் மரபை அழிக்கலாமா?. ராமன் சீதை கல்யாணம் முடிந்து அயோத்தி நகருக்கு வரும் வழியில் சினம் கொண்டு எதிர்த்த பரசுராமனை யார் வென்றார்?. ராமன் தானே வென்றான். அது மட்டுமில்லாமல் கல்யாணமண்டபத்தில் சீதைக்கு மங்கல நாண் கட்டியவுடன் அச்சபையில் ராமன் எனக்கு தானே முதல் மரியாதை செய்தான்.
 
★ராமன் ஆட்சிக்கு வந்தால் ஒரு போதும் எனக்கு துயரம் வராது. மந்தரை! இனிமேல் நீ இந்த  ராமன் விஷயத்தில் தலையிட வேண்டாம். இதற்குமேல் நீ பேசினால் உனக்கு தண்டனை தான் கிடைக்கும் என கைகேயி கூறினாள். கைகேயி! நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது கூட உனக்கு சிறிதும் புரியவில்லை. எத்தகைய மனிதனும் பதவியில் அமர்ந்த உடன் குணம் மாறிவிடுவான். 
அதுபோல் ராமனும் நிச்சயம் மாறிவிடுவான். 
 
★கைகேயி மந்தரையின் பேச்சை பொருட்படுத்தவில்லை. மந்தரை ஒரு வேலைக்காரி. இவளால் அரச குடும்ப விசயங்களை இவளால்  சற்றும்  புரிந்து கொள்ளமுடியாது என்று எண்ணி அவளிடம் பேச ஆரம்பித்தாள். ராமன் தசரத சக்ரவர்த்திக்கு மூத்த குமாரன் ஆவான். அவனே இளவரசனாக பதவி எற்க உரிமையுள்ளவன். ராமன் நம் மக்களின் அன்புக்கு மிகவும் பாத்திரமானவன். ஞானிகள் ராமனை தெய்வம் என்று எண்ணி போற்றுகின்றனர். சத்தியத்தின் சொரூபமான ராமன் அறநெறி பிசகாதவன். 
 
★தன்னை பெற்றடுத்த மாதா கௌசலையை விட என் மீது அதிகமாக அன்பு வைத்து எனக்கு அதிகமாக பணிவிடை செய்கின்றான். அவன் ஆட்சிக்கு வரும் போது அவனால் எனக்கு எந்த இடைஞ்சலும் வராது. தன் சகோதரர்களை தன் சொரூபமாக நேசிக்கின்றான். ராமனுடைய ஆட்சிக்கு பிறகு பரதனும் ஒரு நாள் அரசனாகி இந்நாட்டை ஆட்சி செய்வான். உன் கற்பனை கதைகளை ஒதுக்கி வைத்து விட்டு நீயும் நாளை பட்டாபிஷேக விழாவில் கலந்து கொள்வாயாக என்று கைகேயி மந்தரையிடம் கூறினாள்.
 
★முன்பு  இருந்ததை  விட இப்போது மந்தரைக்கு அதிக முகவாட்டம் ஆனது. கைகேயிடம் மேலும் பேச ஆரம்பித்தாள். இப்போது ராமன் அரசனானால் அவனுக்கு பிறகு ராமனின் பிள்ளைகள் அரசனாவார்கள். ராமனுடைய சகோதரனான பரதன் ஒரு போதும் அரசனாக மாட்டான். அரச குமாரர்கள் அனைவரும் ஆட்சி புரிய எண்ணினால் சமுதாயத்தில் குழப்பமே உருவாகும். எப்பவும் 
ராஜதந்திரம் அறிந்த அரசன் ஒருவன் தன் பிள்ளைகளேயே அரசனாக்கவே விரும்புவான். 
 
★தனக்கு நிகரான உடன் பிறந்த சகோதரர்களை உடன் வைத்து இருக்கமாட்டார்கள். ஏதேனும் சொல்லி கண்ணுக்கெட்டாத தூரத்திலேயே வைத்திருப்பர். அதுபோல் ராமன் தனது ராஜதந்திரத்தால் பரதனை தூரத்திலேயே வைத்திருப்பான். இப்போதும் பரதன் பல தூரம் தள்ளி தனது தாத்தாவுடன் பல வருடங்களாக இருக்கின்றான். இதனால் மக்கள் பலருக்கு பரதனின் அழகு முகமே மறந்து போயிருக்கும். அனைவரும் ராமனைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கின்றார்கள். தம்பி பரதனை அனைவரும் மறந்து விட்டார்கள்.
 
★ராமன் அரசனானால் பரதனை விரோதி போலவே பார்ப்பான். விரோதிகளை அரசர்கள் எப்போதும் விட்டுவைக்கவே மாட்டார்கள். பயத்தினால் கொன்று விடுவார்கள். பரதனை ராமன் சந்தேகமாகவே பார்த்து ஒரு நாள் பயத்தில் கொன்று விடுவான். பரதனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. அவன் உயிருடன் இருக்கவேண்டும் என்றால் அவனின் கேகயநாட்டு தாத்தாவுடனேயே தங்க வைத்து விடு. கௌசலை தசரதரின் முதல் மனைவியாக இருந்து அவரின் அன்புக்கு பாத்திராமாக இருந்தாள். உன்னை திருமணம் செய்ததும் அவரின் அன்புக்கு நீ பாத்திரமானாய். இதனை கௌசலை மறந்திருக்கமாட்டாள். 
 
★அவள் உன் மீது கோபத்துடனே இருப்பாள். நேரம் கிடைக்கும் போது உன்னை பழி வாங்க காத்திருப்பாள். அதற்கான நேரம் இப்போது கௌசலைக்கு வந்து விட்டது. உன்னை இப்போது பழிவாங்குவாள். உன்னை சிறு வயதில் இருந்து நான் உன்னை பேணி வருகிறேன் உன் நலனில் எனக்கு மிகுந்த அக்கரை உண்டு. வேறு எந்த குறிக்கோளும் என்னிடம் இல்லை ஆகவே என் சொல்படி நடந்துகொள் இல்லை என்றால் ராமர் பட்டாபிஷேகம் முடிந்ததும் நீயும் பரதனும் வேலைக்காரர்களை போல இங்கு இருப்பீர்கள் என்று சொல்லி முடித்தாள்.
 
★சத்தியம் தவறாத ராமனை  மந்தரை சொல்லும் குணத்தில் கைகேயியால் எண்ணிப்பார்க்க முடியவில்லை. ராமனை தன் பிள்ளையாகவே பாவித்து வந்த கேகேயி இப்போது மந்தரையின் வலையில் சிக்கிவிட்டாள். மந்தரையின் கேள்விக்கு ஏற்ற பதில் சொல்ல முடியாமல் கைகேயி திகைத்து நின்றாள். கைகேயின் மனதில் பரதனைப் பற்றிய பயம் குடிகொண்டது. பரதன் மீதிருந்த அதிக பாசம் அவளுக்கு மேலோங்கியது. மந்தரை சொல்வதில் உண்மை இருக்கிறது என்று தன்மனதிவ் எண்ணினாள். மனம் மாறிய கைகேயி என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பமடைந்தாள். 
 
★இப்படி கொஞ்சம் கொஞ்சமாக மந்தரை  கைகேயி மனதை மாற்ற ஆரம்பித்தாள். ராமன் அரசன் ஆனால் ஏற்படும் தீமைகளை கூறி கைகேயி மனதை தன் பக்கம் இழுத்துக் கொண்டாள்.  மந்தரையிடம் தஞ்சமடைந்த கைகேயி  இதற்கு ஒரு வழி சொல், பட்டாபிஷேகம் நிறுத்த, தான் என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனை கேட்டாள்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.......................
ஶ்ரீராம காவியம்
ஶ்ரீராம காவியம்
~~~~~
067/ 02-06-2021
 
மந்திரா ஆலோசனை...
 
★பல காலங்களுக்கு முன்பு தேவர்களுக்கும் சம்பாசுரன் என்ற அசுரனுக்கும் போர் மூண்டது. தசரத சக்ரவர்த்தி தேவர்களுடன் இணைந்து போர் புரிந்தார். அப்போரில் சம்பாசுரன் எய்த ஓர் அஸ்திரத்தால் தசரதர் சிறிது நேரம் மயக்கமடைந்தார். அப்போது நீ அவருக்குத் தக்க  பணிவிடைகள் பல  செய்து உதவிகரமாக இருந்து அவர் அப்போரில் வெற்றி பெற உதவி புரிந்தாய். இதனால் மகிழ்ந்த மன்னர் தசரதர் உனக்கு இரண்டு வரங்கள் கொடுப்பதாக வாக்களித்தார். அப்போது அந்த வரத்தை தேவையான பொழுது பெற்றுக்கொள்வதாக நீ சொல்லிவிட்டாய். இப்போது அந்த வரத்தை உன் அன்பான மகனுக்காகவும் உனக்காகவும் உபயோகப்படுத்திக்கொள்.
 
★தசரதர் இங்கு வந்ததும் அவர் கொடுத்த வரத்தை அவருக்கு ஞாபகம் செய். தனக்கு இப்பொது அந்த வரம் வேண்டும் என்று கேள். அவர் சம்மதம் தெரிவித்த பிறகு கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டும் என்று அவரிடம் உறுதிமொழி பெற்றுக்கொள், அவர் சம்மதித்த பிறகு முதல் வரத்தில் ராமன் ராஜ சுகத்தைவிட்டு பதினான்கு வருடங்கள் காட்டிற்கு செல்ல வேண்டும். இரண்டாவது வரத்தில் ராமனுக்காக செய்த பட்டாபிஷேக நிகழ்ச்சியில் அதை குறிப்பட்ட நேரத்தில் பரதனுக்கு முடிசூட்டி சிம்மாசனத்தில் அமர வைக்க வேண்டும் என்று கேட்டு கொள். 
 
★அவரால் அதை மறுக்கவே முடியாது.  அவர் மறுத்தால் தசரதர் சத்தியத்தில் இருந்து பிசகியவராவார். எனவே தனது சத்தியத்தை காப்பாற்ற அவர் சம்மதிப்பார். உன் எண்ணம் முழுமையாக நிறைவேறும். பதினான்கு ஆண்டுகள் பரதன் ஆட்சி செய்தால் அவனது ஆட்சியில் பரதனை மக்கள் அன்புடன் நேசிக்க ஆரம்பித்து விடுவார்கள். பதினான்கு நீண்ட வருடங்கள் கழித்து ராமன் வரும் போது அவரை பலர் மறந்து இருப்பார்கள். நிரந்தர அரசனாகி விடுவான் பரதன் என்றாள்.
 
★இத்திட்டத்தில் மகிழ்ந்த கைகேயி மந்தரயை பாராட்டி செல்வங்கள் பல கொடுத்தாள். என் மகன் பரதனுக்கு கடல் சூழ்ந்த இந்த உலகத்திற்கு அரசனாக்க நல்ல திட்டத்தை கொடுத்தாய். இத்திட்டத்தை அப்படியே செயல் படுத்துகிறேன் என்று மந்தராவை அனுப்பினாள். தன்னுடைய கூந்தலில் இருக்கும் பூவை தூக்கி எறிந்தாள். தான் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் கழற்றினாள். பழைய உடைகளை எடுத்து போட்டுக்கொண்டு தரையில் படுத்து விட்டாள்.தசரதன் தன் மாளிகைக்கு வந்தால் அந்த வரத்தை கேட்பதற்காக கைகேயி காத்திருந்தாள்.
 
★தசரதர் அரண்மணையில்  பட்டாபிஷேகத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்யுமாறு உத்தரவிட்டு மகிழ்ச்சியுடன் அந்தபுரத்திற்குள் நுழைந்தார். தசரதன் கௌசலை, மற்றும் சுமித்திரைக்கு ராமனின் பட்டாபிஷேக விழாவை பற்றி சொல்லிவிட்டு கடைசியாக கைகேயியின் மாளிகைக்கு சென்றான். தசரதருக்கு அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது என்பது தெரியாது. அந்த 
கைகேயி. மாளிகையில்  இருக்கும் பணிப்பெண் தசரதரிடம் கைகேயி நகைகளை அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு பழைய உடை உடுத்திக் கொண்டு விகாரமாக தரையில் படுத்திருப்பாக கூறினாள். 
 
★இதனைக்கேட்டு திடுக்கிட்ட தசரதர் மிகவும் விரைவாக   
அந்தப்புரத்திற்குள் நுழைந்து கைகேயியை தேடினார். அந்த அறையில் அவள் தலைவிரி அலங்கோலமாக தரையில் படுத்திருந்தாள் அழுக்குப்படிந்த ஆடைகளை அணிந்திருந்தாள். அவளது நகைகள் தரையில் சிதறிக்கிடந்ததை கண்ட தசரதர் அவளிடம் சென்று பாசமாக பேச ஆரம்பித்தார். என் பிரியசகியே! அன்புக்குறியவளே! எதற்காக நீ மிகுந்த துன்பப்படுகிறாய்.? அரண்மணையில் யாராவது உன்னை ஏதேனும் சொல்லி விட்டார்களா?. என்ன காரணமாக இருந்தாலும் என்னிடம் சொல். இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள். 
 
★உனக்கென்ன ஆயிற்று.? உடல்நிலையில் ஏதேனும் சரியில்லையா? மருத்துவரை வரவழைக்கவா? பதில் கூறாத 
கைகேயி தலையை விரித்துக் கொண்டு விம்மி விம்மி அழுது கொண்டே இருந்தாள். தசரதர் அன்புடன் அவளது கண்ணீரை துடைத்து விட்டார். என்னுடைய  அன்புக்குரிய கைகேயி! நீ எதற்காக,, அழுகிறாய்? நீ அழுவதற்கான காரணம் என்ன? என்று கேட்டார். எதுவாக இருந்தாலும் பயப்படாமல் சொல் இப்போதே அதனை நிச்சயம் நிறைவேற்றுகின்றேன் என்றார்.
 
★கைகேயி எழுந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தாள். நோய் எதுவும் எனக்கு வரவில்லை. யாரும் என்னை எதுவும் சொல்லவுமில்லை. தீங்கு எதுவும் எனக்கு வரவில்லை. எனக்கு ஆசை ஒன்று உள்ளது. அதனை தாங்கள்தான் நிறைவேற்றி வைக்கவேண்டும். தங்களால் மட்டுமே அது முடியும் தாங்கள் நிறைவேற்றுவதாக உறுதி மொழி தந்தால் அதனை பற்றி சொல்கிறேன். இல்லை என்றால் இப்பேச்சை இப்போழுதே விட்டுவிடலாம் என்றாள்.
 
★தசரதர் கைகேயியிடம் எனது மகன்களில் மூத்தவனான 
ராமன் எனக்கு எப்படி மிகவும் பிடித்தமானவனோ அது போல் எனது மனைவியரில் நீ என் அன்புக்கு பாத்திரமானவள் அது உனக்கும் நன்றாக தெரியும். ராமனை யாராலும் வெல்ல முடியாது. நால்வரில் அவன் தலைசிறந்தவன். எனது உயிராக இருப்பவன் அவன். என்னை விட்டு பிரிந்தால் என் உயிரும் உடனே சென்றுவிடும். அந்த ராமனின் மேல் ஆணையிட்டு சொல்கிறேன் உன்னுடைய ஆசைகளை நான் நிச்சயம் நிறைவேற்றி வைக்கிறேன் என கைகேயியிடம் உறுதியளித்தார் தசரதர்.
 
★அரசரே! உங்களுக்கு நினைவு இருக்கின்றதா?  பல வருடங்கள் முன்பு அசுரர்களுடன் போர் புரிந்தபோது யுத்த களத்தில் தாங்கள் மயக்கமடைந்தீர்கள். அப்போது ரதத்தை வேகமாக வேறு இடத்திற்கு எடுத்துச் சென்று தங்களை நான்தான் காப்பாற்றினேன். அப்போது நீங்கள் மகிழ்சியுடன் எனக்கு இரண்டு வரங்கள் அளிப்பதாக வாக்குறுதி அளித்தீர்கள். அந்த வரத்தை பிறகு ஒருநாள் கேட்டு பெற்றுக்கொள்வதாக தங்களிடம் கூறியிருந்தேன். அதனை இப்போது நான் கேட்கின்றேன். நீங்கள் உடனே எனக்கு அதனை தாருங்கள் என்றாள் கைகேயி. 
 
★அதைக் கேட்டு பலமாக சிரித்த தசரதன் இதற்குத்தானா இத்தனை ஆர்பாட்டம்? அந்த வரம் உனக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்றால் இப்போதே தருகிறேன். உனக்கு என்ன வேண்டுமோ கேட்டு பெற்றுக் கொள் என்று மன்னர்  தசரதர் கைகேயியிடம் உறுதி அளித்தார்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.....................
ஶ்ரீராம காவியம்
~~~~~
068/ 03-06-2021
 
இரண்டு வரம் வேண்டும்...
 
★தசரதர் கொடுத்த உறுதிமொழி கேட்டு உற்சாகமடைந்த கைகேயி தனது வேண்டுதலை கூறினாள். அரசே! பஞ்ச பூதங்கள் சாட்சியாக கேட்கிறேன். சத்தியம் செய்து இருக்கின்றீர்கள். எனக்கு கொடுத்த சத்தியத்தை நீங்கள் காப்பாற்றுங்கள். ராமனுக்கு பட்டாபிஷேகம் ஏற்பாடு செய்த அதே நேரத்தில் பரதனுக்கு பட்டாபிஷேகம் செய்து அரசனாக்குங்கள். ராமன் தவம் செய்யும் பொருட்டு பதினான்கு வருடங்கள் காட்டிற்கு இன்றே அனுப்புங்கள் என்றாள்.
 
★கைகேயியின் வார்த்தையை கேட்ட தசரதன் தன் மேல் இடி விழுந்ததை போல் உணர்ந்தார். தன் வலிமை அனைத்தும் அழிந்தவராக சோர்வுற்று கீழே விழுந்தார். புலி ஒன்று மானை பார்த்து நடுங்குவது போல் கைகேயியை பார்த்து தசரதர் நடுங்கினார். மன்னர்கள் அனைவரும் தசரதரின் காலில் விழுந்து வணங்குவார்கள் அத்தகைய சிறப்பு மிக்க தசரதர் கைகேயியின் காலில் விழுந்தார். ராமன் உனக்கு என்ன தீங்கு செய்தான் தன் தாயை விட உன் மீது மிகவும் அன்பாக இருந்து பணிவிடைகள் செய்கின்றான். ராமன் தன்னை அறியாமல் தவறு செய்திருந்தால் அவனை மன்னித்துவிடு.
 
★பரதன் அரசனாக விரும்ப மாட்டான். அவன் விரும்பி பதவி ஏற்றுக்கொண்டாலும் இந்த உலகம் அதனை சரி என்று ஒப்புக்கொள்ளாது. மக்கள் இதனை கேட்டால் பொறுமை இழந்து உன்னை பழிப்பார்கள். இவ்வுலகில் மக்களால் பேசப்படும் புகழை நீ அடைய மாட்டாய். இந்த நிகழ்சியால் கொடிய பழி உன்னை வந்து அடையும். இந்த பழியைக் கொண்டு என்ன பயனை அடையப்போகிறாய்.
 
★ராமன் மூத்தவன் என்ற முறையில் அவனுக்கு அரச பட்டம் கொடுப்பதாக சொன்னதால் ராமன் அரசனாக முடிசூட்டிக் கொள்ள சம்மதித்தான். அவனிடம் நீ பரதனுக்கு இந்த பட்டத்தை கொடு என்று கேட்டால் ராமனே மனம் உகந்து பரதனை அரசனாக்கிவிடுவான். உன்னால் கேட்கப்பட்ட இரண்டாவது வரத்தை மட்டும் மறுபடியும் கேட்காதே. நீ கேட்ட முதல் வரத்தை இப்போதே தந்தேன். நீயும் பரதனும் இந்த உலகத்தை மகிழ்ச்சியுடன் ஆட்சி புரிந்து வாருங்கள். இனி அதனை மாற்ற மாட்டேன். 
 
★என் உயிரான ராமன் எல்லா உயிர்களுக்கும் நல்லவனாக இருக்க கூடியவன். உனக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். என் உயிராக இருக்கும் ராமன் என்னை பிரிந்து காட்டிற்குள் சென்றால் எனது  உயிர் உடலை விட்டு பிரிந்து விடும். நான் உன்னை யாசித்து கேட்கிறேன். ராமனை என்னிடம் இருந்து பிரித்து என்னை வருந்தும்படி செய்யும் இரண்டாவது வரத்தை கேட்காதே. ராமன் இந்த நாட்டை கடந்து செல்லாமல் இருக்க ஒரு நல்ல வார்த்தை சொல் உனது காலை பிடித்து கேட்கிறேன். அதர்மத்தை செய்ய என்னை தூண்டாதே என்றார்.
 
★அனைத்தையும் கேட்ட கைகேயி கோபத்துடன் எனக்கு கொடுத்த வாக்கை நீங்கள் நிறைவேற்றா விட்டால் நீங்கள் சத்தியத்தை மீறியவர் ஆவீர்கள். கொடுத்த வாக்கை மீறியவர் தசரதர் என்ற பெயரை பெற்று விடுவீர்கள். நான் கேட்ட இரண்டு வரத்தை கொடுத்தால் கொடுங்கள் இல்லையேல் ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்து நீங்கள் மகிழ்ச்சியுடன் வாழுங்கள். மன்னரே!, தாங்கள் இந்த வரத்தைஅருளவில்லை என்றால் நான் இப்பொழுதே உயிர் துறப்பேன் என்றாள். 
 
★தசரதன் இதை கேட்டு மிகவும் வேதனைப்பட்டார். நான் செல்ல இருக்கும் கானகத்துக்கு ராமன் செல்வதா? ராமன் அயோத்தியில் இருந்தால் உனக்கும் இளவல் பரதனுக்கும் தீங்கு செய்வான் என நீ நினைக்கின்றாயா ? பரதன் நாடாளும் வரத்தை தருகிறேன். அறுபதினாயிரம் ஆண்டு தவம் இருந்து பெற்ற மகனாகிய ராமனை கானகம் செல்ல சொல்வதா ? இதை நினைத்தால் என் இதய துடிப்பே நின்று விடும் போல் உள்ளதே! என்று புலம்பினார்.
 
★கைகேயி, தாங்கள் இந்த வரத்தை மறுக்க கூடாது என்று பிடிவாதமாக கூறிவிட்டாள். தசரதர் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கைகேயி இரண்டு வரங்களை பெற பிடிவாதமாய் நின்றாள். 
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869..
 
நாளை......................
ஶ்ரீராம காவியம்
~~~~~
069/ 04-06-2021
 
கைகேயி இட்ட கட்டளை...
 
★அன்றைய இரவு பொழுது கழிந்து மறுநாள் விடிந்தது. 
பட்டாபிஷேகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் வசிஷ்டர் செய்து முடித்தார். 
அயோத்தி மக்கள் மகிழ்ச்சியுடன் ராமனின் பட்டாபிஷேகத்தை பார்க்க மண்டபத்தில் கூடத் துவங்கினார்கள். வசிஷ்டரும் முனிவர்கள் புடைசூழ விழா நடக்கும் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்கள். சுமந்திரரே! பட்டாபிஷேகத்துக்கு நேரம் ஆகி கொண்டு இருக்கிறது. நீங்கள் போய் சக்ரவர்த்தியை அழைத்து வாருங்கள் எனக் கூறினார், வசிஷ்டர். 
 
★சுமந்திரர், மன்னர் கைகேயின் மாளிகையில் தான் இருப்பார் என்று நினைத்துக் கொண்டு கைகேயி இருக்கும்  மாளிகைக்கு சென்றார்.  அந்தப்புரத்திற்கு வந்த அமைச்சர் சுமந்திரர் அங்கு  அரசர் தசரதரிடம் வசிஷ்டரின் செய்தியை கூறினான். தசரதர் பேச இயலாமல் அமைதியாக இருந்தார். ஆனால் கைகேயி சுமந்திரரிடம், அமைச்சரே! தாங்கள் சென்று இங்கு ராமனை அழைத்து வாருங்கள் என்று  கூறினாள்.
 
★தயங்கியபடியே தசரதரை பார்த்தார் சுமந்திரர். ராமனை பார்க்க விரும்புகின்றேன் அவரை அழைத்து வா என்று வருத்தம் கலந்த குரலில் கூறினார் தசரதர். அவரின்
முகவாட்டத்தை கண்ட சுமந்திரர் ஏதோ விபரீதம் இங்கு  நடந்து இருக்கின்றது என்று தனக்குள் எண்ணினார்.ஒருவேளை  தான் தவறாக நினைக்கிறோமா? அல்லது  மகுடம் சூட்டி கொள்ள இருக்கும் ராமனை வாழ்த்தி வழியனுப்ப அழைத்து வரச் சொல்லி இருக்கலாமோ என்று குழப்பமாக  நினைத்து கொண்டு
ராமனுடைய மாளிகைக்கு ரதத்தை செலுத்தினார்.
 
★பட்டாபிஷேகத்திற்கு மனைவி சீதையுடன் தயாராக இருந்தான் ராமன். தங்கள் சிற்றன்னை கைகேயியின் மாளிகையில் தசரத சக்ரவர்த்தி தங்களை காணவேண்டும் என்றும் உடனே  அழைத்து வரச்சொன்னார் என்று சுமந்திரர் ராமனிடம் கூறினான். அலங்காரத்துடன் இருந்த சீதையிடம் , மகுடம் சூட்டி கொள்ள நேரம் ஆகி விட்டது. என்னை என் அன்னை ஏனோ அழைக்கிறார். நான் சென்று பார்த்து விட்டு வருகிறேன். நீ ஆயத்தமாக இரு என்று சொல்லி விட்டு   ராமன் சுமந்திரருடன் தசரதரை பார்க்க கிளம்பினார். 
 
★செல்லும் வழி எங்கும் மக்கள் ராமனைப் பார்த்து போற்றினர். ராமனை பெற்றது கௌசல்யா தான், ஆனால் ராமனை வளர்த்தது என்னவோ கைகேயி தான். ராமன் தேரில் கைகேயி மாளிகைக்கு சென்றதை பார்த்த அயோத்தி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.தன் பாசம் மிகுந்த மகனான ராமனை வாழ்த்தி அனுப்ப தான் கைகேயி அழைத்து இருக்கிறாள் என்று கூடியிருந்த மக்கள் பேசிக் கொண்டனர்.ராமர் கைகேயின் மாளிகைக்கு போய்ச் சேர்ந்தார்.
 
★ராமன் மாளிகைக்குள் நுழைந்ததும் ராமா! என்று அலறிய தசரதர் கீழே விழுந்தார். மேற்கொண்டு அவரால் பேச இயலவில்லை. இக்காட்சி ராமனை திகிலடையச் செய்தது. தன் தந்தைக்கு மன வருத்தம் ஏற்படும் வகையில் ஏதேனும் செய்து விட்டேனோ என்று பயந்தார் ராமன். தன் தந்தையை சாந்தப்படுத்தி அவர் அருகில் வணங்கி அமர்ந்தூர்.  பின்பு கைகேயியின் முன்னிலையில் வீழ்ந்து வணங்கினார். 
 
★வழக்கமாக கைகேயியின் முகத்தில் இருக்கும் தாயன்பு தற்போது இல்லாததை ராமன் கவனித்தான். அம்மா!  எவ்வளவு கோபத்தில் இருந்தாலும் தந்தை என்னிடம் அன்பாக பேசுவார். ஆனால் இப்போது வாடிய முகத்துடன் இருக்கிறார். நான் ஏதேனும் தவறு செய்து விட்டேனா?. தாங்கள் கோபம் அடையும்படி ஏதாவது ஏறுமாறாக நடந்து கொண்டேனா? எதுவாக இருந்தாலும் தயவு செய்து எனக்குச் சொல்லுங்கள். இங்கு இருக்கும் சூழ்நிலைகளை பார்த்து எனக்கு அச்சமாக இருக்கிறது என்றார். ராமரின் பேச்சைக்கேட்ட கையேயி தன் காரியத்தை நிறைவேற்ற நல்ல சந்தர்ப்பம் அமைந்துவிட்டது என்று எண்ணி ராமனிடம் பேச ஆரம்பித்தாள். 
 
★அரசருக்கு யார் மீதும் கோபம் இல்லை. அவர் மனதிலுள்ள செய்தியை உன்னிடம் சொல்ல பயப்படுகிறார். அதனால் பேசாமலிருக்கிறார். அதனை நானே சொல்லுகிறேன். உன் தந்தை பல வருடங்களுக்கு முன்பு எனக்கு இரண்டு வரங்கள் தந்தார். அதனை இப்போது நான் கேட்டுப்பெற்றுக் கொண்டேன். அந்த இரண்டு வரத்தில் ஒரு வரத்தோடு நீ தொடர்பு கொண்டு இருக்கின்றாய். அதனை சொல்லவே உன் தந்தை தயங்குறார் என்றாள் கைகேயி.
 
★ராமா! உன் தந்தை தற்போது ஒரு புதிய கட்டளை இட்டுள்ளார். அக்கட்டளையை நான் உனக்கு சொல்லாமா? எனக் கேட்டாள், கைகேயி. ராமன் எந்த சலனமும் இல்லாமல் கைகேயியிடம் கம்பீரத்துடன் பேச ஆரம்பித்தார்.
பெற்றோர்களிடமிருந்து வரும் ஆணையை செயல்படுத்துவது மகனின் கடமை. என் தந்தை மட்டுமல்ல தாங்கள் எனக்கு ஆணையிட்டாலும் கொளுந்து விட்டு எரியும் தீயில் குதிப்பேன். ஆழ்கடலில் மூழ்குவேன். விஷத்தையும் அருந்துவேன். எனக்கு எந்த ஒரு வருந்தமும் இல்லை. அம்மா! தந்தையின் கட்டளை தாய் மூலம் அமைந்தால் அதைவிட மகிழ்ச்சி வேறு ஒன்றுமில்லை. கட்டளை இடுங்கள் அன்னையே! உங்கள் கட்டளைப்படி நான் நடப்பேன் என்றார். 
 
★ராமன் இவ்வாறு சொன்னதும் கைகேயி நமது காரியத்தை சுலபமாக சாதித்துவிடலாம். நாம் நினைத்த காரியம் இனிது முடியப்போகிறது என்று மகிழ்ச்சியுடன் பயங்கரமான செய்தியை ராமனிடம் சொல்ல ஆரம்பித்தாள். முதல் வரமாக உனக்கு பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட நேரத்தில் பரதனுக்கு முடிசூட்டி அரசனாக்க வேண்டும். இரண்டாவது வரமாக நீ தவம் செய்யும் பொருட்டு காட்டிற்கு 14 வருடங்கள் வனவாசம் செல்லவேண்டும். இதுவே நான் உனது தந்தையிடம் கேட்ட வரம். இதனை கொடுக்க உனது தந்தை மறுத்தால் கொடுத்த சத்தியத்தில் இருந்து மீறியவர் ஆவார். இந்த இரண்டு வரங்களும் என்னால் மாற்ற முடியாத திட்டங்களாகும் என்று சொல்லி முடித்தாள். ஆனால் ராமனின் முகத்தில் எந்த சலனமும் இல்லை. 
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை......................
ஶ்ரீராம காவியம்
~~~~~
070/ 05-06-2021
 
கோபத்தில் லட்சுமணன்...
 
★கைகேயி, ராமா! அயோத்தியை உன் தம்பியான பரதன் ஆட்சி செய்ய வேண்டும். நீ பதினான்கு ஆண்டு வனவாசம் செல்ல வேண்டும். இது மன்னருடைய ஆணை என்றாள். இதனைக் கேட்ட ராமன் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார். ராமனின் முகம் பூக்களை போல் மலர்ந்தது.
அம்மா! தங்கள் கட்டளையே நான் மறுப்பேனா? என் தம்பி பெற்ற செல்வம் நான் பெற்ற செல்வம் அல்லவா? தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை. தங்களால் எனக்கு இந்த அரிய வாய்ப்பு கிடைத்து உள்ளது. ஆதலால் நான் இன்றே வனவாசம் செல்கிறேன் என்று சொல்லி விட்டு உடனே அங்கிருந்து விடைப்பெற்று சென்றார்.
 
★ராமன் தன்னை பெற்ற கௌசலையின் மாளிக்கைக்கு சென்றார். அங்கு தன் தாயின் காலடியில் பணிந்து விழுந்து வணங்கினார். கௌசலை, மகனே! ‘நீடுடி வாழ்க’ என்று வாழ்த்தினாள். ராமா! உனக்கு பட்டாபிஷேகம் செய்ய நேரம் ஆகிவிட்டது அல்லவா? ஏன் இன்னும் தாமதிக்கிறார்கள்.? பரதன் வர வேண்டும், ஜனகர் வர வேண்டும் என்று காலதாமதம் செய்கிறார்களா? என கேட்டாள். ராமன், அம்மா! இந்த நாட்டை பரதன் ஆட்சி புரிய வேண்டும் என்று தந்தை கட்டளையிட்டு இருக்கின்றார் என்றார். 
 
★இதை கேட்ட கௌசலை மகிழ்ச்சி அடைந்தாள். ராஜ குலத்தில் மூத்தவனுக்கு தானே முடிசூட்ட வேண்டும். மூத்தவன் நீ இருக்க இளையவனுக்கு முடி சூட்டுவது முறையற்றது. இருந்தாலும் பரதன் உன்னை விட சிறந்தவன். பரதன் ஆட்சி புரிந்தால் நாட்டுக்கு நலம் தான். நீ நாட்டின் அனைத்து நலனுக்காகவும்  பாடுபடலாம் என்றாள். அம்மா! தந்தையின் கட்டளை இன்னொன்றும் உள்ளது. தங்கள் மகனாகிய நான் பதினான்கு ஆண்டு காலம் வனவாசம் செல்ல வேண்டும். இது தந்தையின் கட்டளை ஆகும். ஆதலால் நான் வனவாசம் செல்கிறேன் என்றார்.
 
◆இதைக் கேட்ட கௌசலை, மகனே! என்று நிலை தடுமாறி கீழே விழுந்தாள். அவள் வேதனையால் துடிதுடித்து போனாள். தான் போக இருந்த கானகத்திற்கு உன்னை செல்லச் சொல்லி உன் தந்தை கட்டளை இட்டாரா? நீ செல்கின்ற அந்த கானகத்துக்கு உன்னுடன் நானும் வருவேன் என்று கூறி புலம்பி அழுதாள். அம்மா! தந்தையின் சொல் எனக்கு வேத மந்திரம் ஆகும். நான் கானகத்திற்கு செல்லவில்லை என்றால் தந்தையின் வாய்மை பொய் ஆகிவிடும். தாங்கள் தந்தைக்கு உதவியாக இங்கேயே இருக்க வேண்டும் என்றார். தாயே! நான் கானகம் செல்ல தாங்கள் மனமார ஆசி கூறி விடை கொடுங்கள் என்றார். 
 
★என் ஆருயிர் மகனே! ஒரு தாய் தன் மகனுக்கு செய்ய வேண்டிய எல்லா கடமைகளையும்  செய்ய முடியவில்லை என்று நான் துன்பப்படுகிறேன். உனக்கு நான் தருமம் என்னும் அமுதை தருகிறேன். மகனே! நீ என்றும் அறநெறியில் வழுவாமல் இருக்க வேண்டும். அங்கு உனக்கு விலங்களும், பறவைகளும் உதவி செய்யும். நீ செல்ல இருக்கும் கானகத்தில் உள்ள மரங்களும், பழுத்த பழங்களும் உனக்கு உதவும். நீ செல்லுகின்ற கானகம் வெப்பம் தணிந்து குளிர்ந்து உனக்கு நலம் புரிய வேண்டும் என்று ஆசி கூறினாள்.
 
★ராமன் கானகம் போகாமல் தடுத்து நிறுத்த தசரதரிடன் அனுமதி கேட்கலாம் என்று எண்ணிய சுமித்திரை உடனே கைகேயியின் மாளிகைக்குச் சென்றாள். அங்கு மன்னர் இருக்கும் நிலையை கண்டு நீங்கா துயரில் மூழ்கினாள். மன்னவரின் பாதங்களை பற்றி வாய்விட்டு புலம்பி அழுதாள். அக்குரலை கேட்ட வசிஷ்டர் கைகேயின் மாளிக்கைக்கு சென்றார். அங்கு மன்னரின் நிலையை கண்டு இங்கு என்ன நடந்தது என்று கைகேயிடம் கேட்டார்.
 
★வசிஷ்டரிடம் கைகேயி மன்னர் தனக்கு இரண்டு வரங்கள் அளித்ததையும், அவ்விரண்டு வரங்களையும் மன்னர் நிறைவேற்றியதை பற்றியும் கூறினாள். அவ்விரண்டு வரங்கள் என்னென்ன என்பதை பற்றியும் கூறினாள். வரத்தை கொடுத்துவிட்டு இப்போது துன்பப்படுகிறார் என நினைத்த வசிஷ்டர்  அம்மா! தசரத சக்கரவர்த்தி வரம் கொடுத்தது கொடுத்தது தான். ஆனால் தங்களின் குலகுருவாகிய நான் தங்களிடன் ஒரு வரத்தை கேட்கிறேன். பரதன் முடி சூட்டி கொண்டு ஆட்சிபுரிய வேண்டும். ராமன் வனவாசம் போகாமல் அயோத்தியில் உள்ள ஒரு தவச்சாலையில் தவம்  இருக்க வேண்டும். இந்த வரத்தை தாங்கள் எனக்கு அருள வேண்டும் என்றார்.
 
★கைகேயி சிறிதும் மனம் தளராமல், ராமன் வனவாசம் கண்டிப்பாக செல்ல வேண்டும். அப்படி இல்லையென்றால் நான் இப்போதே என் உயிரை மாய்த்துக் கொள்வேன் என்றாள். இதனை கேட்ட வசிஷ்டருக்கு மிகுந்த கோபம் உண்டானது. கைகேயி! மூத்தவனுக்கு தான் முடி சூட்ட வேண்டும் என்பது நாம் காலங்காலமாய் பின்பற்றி வரும் மரபாகும். அந்த மரபு இன்று உன்னால் அழிகிறது என்பது பற்றி உனக்கு சிறிதும் கவலை இல்லையா? உன்னால் இன்று மன்னர் மரணத்திலும் மிகுந்த வேதனைப்படுகிறார். அதை பற்றியும் உனக்கு கவலை இல்லையா? என்று வசிஷ்டர் உரத்த குரலில் கைகேயியை கடிந்தார்.
 
★தசரதர், சுமித்திரையின் நிலையைக் கண்டு துடிதுடித்து அழுதார்.  நீ அழாதே! ராமன் வனவாசம் செல்ல வேண்டும் என்பது விதி செய்யும் செயல். விதியை வென்றவர் யார்தான் இவ்வுலகில்  உண்டு என்று சுமித்ரைக்கு ஆறுதல் கூறினார் தசரதர். கைகேயி! இவ்வுலகில் கணவரை வாட்டி வதைக்கும் பெண்களும் சிலர் உண்டு. ஆனால் உன்னை போல் கணவனை அடியுடன் வதைத்த பெண்கள் இல்லை. ராமன் மிகுந்த நற்பண்புகளை தன்னிடம்  கொண்டவன். அவன் அயோத்தியில் இருந்தால் உனக்கும், பரதனுக்கும் தீங்கு செய்வான் என்று நீ நினைத்து இருக்கின்றாயா? குருநாதா! ஆலகால விஷமே எனக்கு மனைவியாக வந்துள்ளது. இனி இவள் எனக்கு மனைவியும் இல்லை. பரதன் எனக்கு மகனும் இல்லை. அவன் என் கடைசி ஈமச்சடங்கை கூட செய்யக் கூடாது என்று சொல்லி விட்டு மயங்கி விழுந்தார்.
 
★வசிஷ்டர் பட்டாபிஷேக மண்டபத்திற்கு சென்று அங்கு கூடியிருந்தவர்களிடம் கைகேயி மாளிகையில் நடந்தவற்றை எல்லாம் கூறினார். இதனை கேட்ட மக்கள் அனைவரும் மனம் கலங்கி  அழுது புலம்பினார்கள். பட்டாபிஷேக மண்டபத்திற்கு வந்த லட்சுமணன், கைகேயி பெற்ற வரங்களைப் பற்றியும், அவ்வரத்தால் பரதன் நாட்டை ஆளவும், ராமன் வனவாசம் செல்ல வேண்டும் என்பதையும்  கேட்டு மிகுந்த கோபமடைந்தான். கோபத்தால் வில்லை வளைத்து நாண் ஓசையை எழுப்பினான். அந்த ஓசையால் அண்டங்கள் அனைத்தும் அதிர்ந்தன. 
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.......................
ஶ்ரீராம காவியம்
~~~~~
071 / 06-06-2021
 
கௌசல்யை கலக்கம்...
 
★சுமித்திரையின் மாளிகைக்கு சென்று கொண்டு இருந்த ராமன் லட்சுமணனின் வில்லின் ஓசை கேட்டார். லட்சுமணன் கோபம் கொண்டால் உலகம் அழிந்து விடுமே என்று எண்ணி அரச மண்டபத்துக்கு திரும்பி சென்றார். ராமனை  கண்ட லட்சுமணன்,   அண்ணா! தங்களின் பட்டாபிஷேகத்துக்கு தடை ஏற்பட்டுவிட்டது. தடை செய்தவர்கள்  யாராக இருந்தாலும்  என் கோபத்திற்கு ஆளாக்குவேன். அது மட்டுமல்ல  பதினான்கு உலகங்களையும் தங்களுக்கு உரிதாக்கி முடி சூட்டுவேன் என்றார்.
 
★ தம்பி லட்சுமணா! அமைதி பூங்காவாக விளங்கும் அயோத்தி மண்ணுக்கே கோபம் வராத போது உனக்கு எப்படி கோபம் வந்தது? அண்ணா! இன்று தங்களுடைய பட்டாபிஷேகம் தடைப்பட்டதை அறிந்து நான் கோபம் கொள்ளாமல் இருப்பேனா? தம்பி! தானத்தில் சிறந்தது நிதானம் தான். இந்த நிகழ்ச்சி தடைப்பட காரணம் மன்னரும் அன்று, நம்மை வளர்த்த தாயின் பிழையும் இல்லை, இது விதியின் செயலாகும். 
 
★ஆதலால் நீ அமைதி கொள்வாயாக. அண்ணா! விதி என்று சொல்லிக் கொண்டு என்னுடைய மதியை இழப்பவன் நான் இல்லை. விதிக்கே விதியை காண்பிப்பவன் நான். இன்று தங்கள் என்னுடைய வில்லின் திறமையை காண்பீராக. தம்பி லட்சுமணா! வேதங்கள் ஓதிய உன்னுடைய  நாவினால் விதியை பற்றி இவ்வாறு கூறலாமா? என்னை கானகம் செல்ல கட்டளை இட்டவர்கள் தாய் தந்தையராகும். அவர்களின் கட்டளையை நான் மீறலாமா?
 
★அண்ணா! எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. எனக்கு தாய், தந்தை, தெய்வம் எல்லாம் தாங்கள் தான். தம்பி! உன் உரிமையை நான் ஒருபோதும் மறுக்க மாட்டேன். எனக்கு நல்வழியை காட்டி வளர்த்தவர் தந்தை தசரதர். தந்தையின் கட்டளையை என்றும் நான் மீறமாட்டேன். அதேபோல் உனக்கு தந்தை நான் தானே. அப்படி என்றால் நீ என் கட்டளையை மீறக் கூடாது. அமைதி கொள்வாயாக என்றார்.
 
★என் தந்தையின் சத்தியத்தை காப்பாற்றும் பொருட்டு நான் இப்போதே அரச உடைகளை களைந்து மரவுரி தரித்து காட்டுக்கு செல்கின்றேன். என் தந்தையின் வாக்கை எனது வாக்காக காப்பாற்றுவது எனக்கு கிடைத்த பாக்கியம். அதனை மகிழ்சியுடன் நிறைவேற்றுவேன். பரதனுக்காக எதையும் விட்டுக் கொடுத்து பரமசந்தோசத்தை அடைவேன். இதனால் எனக்கு எள் அளவும் வருத்தம் இல்லை. பரதனை தூதுவர்கள் மூலம் அழைத்து வரச்செய்து குறித்த நேரத்தில் முடிசூட்டி விடுங்கள். பரதன் அரசாள்வது எனக்கு மகிழ்ச்சியே. 
 
★எனது தந்தை தாயாரிடமும் சீதையிடமும் லட்சுமனனுடனும் விடைபெற்று செல்லவேண்டும். அதற்கான கால தாமதத்திற்கு மட்டும் சிறிது அனுமதி தாருங்கள் என்று பணிவுடன் கேட்டுக்கொண்டான். ராமருடைய முகத்தில் சிறிதளவும் கோபமோ அல்லது வருத்தமடைந்ததிற்கு உண்டான அறிகுறி கூட கைகேயிக்கு தெரியவில்லை. ராமனைப்  பார்த்து திகைப்பு அடைந்தாள். உடன் சென்ற லட்சுமனனுக்கு குடும்பத்தில் இருந்த குழப்பம் தெளிவாக புரிந்தது. தாய் தந்தையை எதிர்த்து பேச இயலாமல் மிகவும் துன்பத்தில் மூழ்கியவனாக தென்பட்டான். தசரதர் ராமர் நிலை என்ன ஆகுமோ என்று நடுநடுங்கிப்போய் பேச ஏதும் வார்த்தைகள் வராமல் அமர்ந்து இருந்தார்.
 
★ராமன் தசரதரிடமும் மேலும் கைகேயியிடமும் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து லட்சுமனனுடன் தனது தாய் கௌசலையை பார்க்க சென்றார். கைகேயி தனக்கு பின்னால் வரும் வரப்போகும் துக்கத்தை அறியாமல் தன்னுடைய திட்டம் வெற்றி அடைந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்தாள்..
 
★ராமர் தன்னுடன் வந்த வெண்கொற்றக்குடை, சாமரம் என்று இளவரசனுக்கு உரிய அனைத்து சுகங்களும் தனக்கு வேண்டாம். யாரும் தன்னை பின் தொடர வேண்டாம் என்று சொல்லிவிட்டு தன்னுடைய தாய் கௌசலையின் மாளிகையை நோக்கி லட்சுமணனுடன் தனியாக செல்ல ஆரம்பித்தார். லட்சுமணன் கண்கள் சிவக்க கோபத்துடன் ராமரை பின் தொடர்ந்தார். கௌசலையின் மாளிகையில் அனைவரும் ராமரின் பட்டாபிஷேகத்தை காணச்செல்வதற்கு தயாராகி மகிழ்ச்சியுடன் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டு இருந்தனர். ராமன் வந்ததைக் கண்ட கௌசலை அவனைக் கட்டியணைத்து வரவேற்றாள். 
 
★ராமனுக்கு உரிய ஆசனத்தில் அமரச்சொன்னாள். ராமர், தாயே! இந்த ஆசனத்தில் என்னால் அமர இயலாது. புல்லை பரப்பி உட்கார வேண்டிய தவஸ்வி தான் நான். தங்களுக்கு வருத்தம் தரக்கூடிய செய்தியை கொண்டு வந்து இருக்கின்றேன். தங்களையும் சீதையையும் லட்சுமணனையும் பிரிந்து காட்டிற்கு நான் செல்லப் போகிறேன். தாங்கள் இந்தச் செய்தியை பொருத்து கொண்டு என் செயலுக்கு ஆசி கூறி எனக்கு விடை கொடுக்க வேண்டும் என்று நடந்தவற்றை எல்லாம் விரிவாக எடுத்துக்கூறி 
இன்றே நான் காட்டிற்கு செல்ல வேண்டும் என்று சொல்லி முடித்தார்.
 
★ராமர் சொன்னதை கேட்ட மாதா கௌசலை அம்பினால் தாக்கப் பட்ட பெண்மானைப்போல கீழே விழுந்தார். எனக்கு பிள்ளையாக பிறக்காவிட்டால் உனக்கு இந்த தூன்பம் வந்திருக்காது. தசரதர் ஆட்சியில் இருக்கும் போது மூத்த பட்டத்து அரசிக்கான எந்த ஒரு சுகத்தையும் கண்டதில்லை. உன் சிற்றன்னைகள் அனைத்தையும் அனுபவித்தனர். அவர்களின் பணிப்பெண் போலவே நான் நடத்தப்பட்டேன். என் கணவர் என்னை சற்று தள்ளியே வைத்து இருந்தார். நீ என்னுடன் இருந்த காரணத்தால் அவற்றை நான் மிகவும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இப்போது நீயும் என்னை விட்டு பிரிந்தால் என் கதி என்ன ஆகும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக மரணித்து விடுவேன் கன்றின் மேல் உள்ள பாசத்தால் கன்றைத்தொடர்ந்து செல்லும் பசுவைப்போல் உன்னை நான் தொடர்ந்து வருகிறேன். ஆகவே என்னையும் அழைத்துச்செல் என்று அழுதபடி சொன்னார்.
 
★மனம் வருந்திய கௌசலை அழுகையினால் கலங்கிய லட்சுமணன் பேச ஆரம்பித்தான். அன்னையே! சிற்றன்னையின் சொல்லிற்காக ராமன் காட்டிற்கு செல்வது எனக்கும் சம்மதம் இல்லை. நாட்டைவிட்டு காட்டிற்கு செல்லும் அளவிற்கு ராமன் குற்றம் ஒன்றும் செய்யவில்லை. அவரிடம் மறைமுகமாக கூட யாரும் இதுவரை ஒர் குற்றத்தை கண்டதில்லை. வயோதிகரான தந்தையின் குணம் மாறிவிட்டது. 
 
★கைகேயின் செயலால் மனம் கலங்கி அவர் ஒன்றும் பேசாமல் இருக்கிறார். அவருடைய காலம் கடந்துவிட்டது. நாட்டு மக்கள் அனைவரும் ராமரை மன்னனாக சிம்மாசனத்தில் பார்க்க ஆவலாக இருக்கின்றார்கள். அண்ணா !உடனே அரச பட்டத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். எனக்கு உத்தரவு தாருங்கள். எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அழித்துவிடுகிறேன் என்று கோபத்துடன் கூறினான் லட்சுமணன்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை..........................
ஶ்ரீராம காவியம்
~~~~~
072 / 07-06-2021
 
சீதையின் கண்ணீர்...
 
★லட்சுமணன் பேசியதில்  சிறிதே கௌசலைக்கு ஆறுதல் ஆக இருந்தது. ராமன் தாயார் கௌசலையிடம் பேசினார். தாயே! காட்டிற்கு தாங்கள் என்னுடன் வருவது சரியாக இருக்காது. கணவனுடன் மனைவி இருப்பதே தர்மம். நான் சென்றதும் தந்தைக்கு தாங்கள் உதவியாக  இருந்து அவரைப் பார்த்துக்கொள்ளுங்கள். மேலும் தாங்களும் என்னுடன் வந்து விட்டால் தந்தை மிக அதிகமாக வருத்தப்படுவார். அது அவரின் உடல் நிலையை பாதிக்கும். நான் தனியாகவே செல்கிறேன். பதினான்கு வருடங்களில் திரும்பி வந்துவிடுவேன். நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் பல்லாண்டுகள் இந்த பூவுலகில் வாழ்ந்திருப்போம். அதுவரை பொருத்திருங்கள் என்றார்.
 
★லட்சுமணனைப் பார்த்து பேச ஆரம்பித்தார் ராமர். என் மீது நீ வைத்திருக்கும் அன்பை நான் அறிவேன். நீ சொல்லும் யோசனை முற்றிலும் தவறு. கோபம் மனிதனின் முதல் எதிரி. அதனை இப்பொழுதே நீ விட்டுவிடு. உன்சக்தியை நான் அறிவேன். அனைவரையும் தோற்கடித்து இந்த ராஜ்யத்தை நீ எனக்காக நிச்சயம் சம்பாதித்து கொடுப்பாய். எனக்கு உன் மீது நம்பிக்கை உள்ளது. ஆனால் தந்தையின் உத்தரவு தர்மமாக இருந்தாலும் அதர்மமாகவே இருந்தாலும் அவராகவே அதை  கூறியிருந்தாலும் அல்லது வேறு யாருடைய தூண்டுதலினால் கூறியிருந்தாலும் அதனை நிறைவேற்றுவது என் கடமை. 
 
★தந்தை கைகேயிக்கு கொடுத்த வாக்கை மீறினால் இத்தனை ஆண்டு காலம் அவர் செய்த பூஜைகள் யாகங்கள் மற்றும் தானதர்மங்கள் அனைத்தும் பயனில்லாமல் போகும். தந்தையின் வாக்கை காப்பாற்ற வேண்டியது மிகப்பெரிய தர்மம். இந்த தர்மத்தை செய்யாமல் வேறு எதனை செய்தாலும் அது இதற்கு ஈடு ஆகாது என்று தாய் கௌசலையையும் தம்பியான லட்சுமணனையும் சமாதானப் படுத்தினார் ராமன். தாயார் கௌசலையிடம் விடைபெற்று  வணங்கினார் ராமன். மங்கள மந்திரங்களை சொல்லி தந்தையின் ஆணையை செய்து முடித்துவிட்டு வெற்றிகரமாக திரும்பி வரவேண்டும் என்று திலகமிட்டு மனதார வாழ்த்தி விடைகொடுத்தாள் கௌசலை. ராமன் சிரித்துக்கொண்டே பதினான்கு வருடங்களையும் சுலபமாக கழித்துவிட்டு வந்து விடுவேன் என்று சொல்லிவிட்டு சீதையை பார்க்க தான் இருந்த மாளிகைக்கு கிளம்பினார்.
 
★சீதையிடம் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு காட்டிற்கு செல்லும் நெருக்கடியில் ராமன் இப்போது இருந்தார். அவருடைய வருகையை பார்த்து ஆவலோடு காத்திருந்தாள் சீதை. ராமர் அரசனாக பட்டாபிஷேகம் செய்யும் எந்த அறிகுறியும் இல்லாமல் வருவதை கண்டு சிறிது குழப்பமடைந்தாள் சீதை. பட்டாபிஷேகம் செய்யும் இன்று தங்களுடன் எப்போதும் இருக்கும் வெண்கொற்றக்குடை மற்றும்  சாமரம் எல்லாம்  எங்கே? பாடகர்கள் ஓதுவார்கள் எங்கே? தங்களுடன் வரும் தங்களது சேவகர்கள் எங்கே? என்று கேள்விகளாக கேட்டுக்கொண்டே இருந்தாள் சீதை. 
 
★ராமர், சீதா! என் தந்தை இந்த நாட்டை ஆட்சி செய்யும் பெரிய பொறுப்பை எனது தம்பியான பரதனுக்கு அளித்திருகின்றார். இதை கேட்டு சீதா மகிழ்ச்சி அடைந்தாள். தம்பி பரதன் மகுடம் சூட்டி கொண்டால் தாங்கள் அதிக நேரம் என்னுடன் தங்கி இருப்பீர்கள் என்று மிகவும் மகிழ்ச்சியுடன் கூறினாள். சீதா! என் தந்தை நான்  பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும் என்று கட்டளையிட்டு இருக்கின்றார் என்று கூறினார். இதை கேட்டு சீதை மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். 
 
★பெருமானே வனத்தில் மயில், குயில், வண்டு எல்லாம் ஆடிபாடும். இயற்கையை அழகாக்கும் செடி கொடிகள் பூத்து குலுங்கும். அது மட்டும் இல்லாமல் வனம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றாள். இராமர், சீதா! நீ அயோத்தியில் இரு. நான் வனம் செல்கிறேன் என்றார். இதை கேட்ட சீதை மயக்க நிலையை அடைந்தாள். இராமர் சீதையின் மயக்கத்தை தெளிய வைத்து, வனவாசம் செல்வது என்பது மிகவும் கடினமானது. அங்கு வெப்பக் காற்றில் இருக்க வேண்டும். பாறையின் மேல் தான் படுக்க வேண்டும். காய் கனிகளை தான் உணவாக உண்ண வேண்டும். உடம்பை வருந்தி கொள்ள வேண்டும். 
 
★ஆதலால் நீ அரண்மனையில் இரு என்றார். நீ அமைதியாக அரண்மணையில் வாழ்ந்திருந்து உனது மாமியார் மாமனாருக்கு பணிவிடைகள் செய்து பரதனை அரசனாக அங்கிகரித்து அவனை வந்தனை செய்வாயாக என்று சீதையிடம் சொல்லி முடித்தார் 
ராமரின் பேச்சைக்கேட்ட சீதை பெரும் கோபத்துடன் தர்மம் அனைத்தும் அறிந்த தாங்கள் இவ்வாறு கூறுவது எனக்கு வியப்பை தருகிறது. கணவன் வேறு மனைவி வேறு என்று தங்கள் பிரித்து கூறிகின்றீர்கள். 
 
★ராமர் வனவாசம் செல்ல வேண்டும் என்றால் அப்போது ராமரின் பாதியாக இருக்கும் சீதைக்கும் இந்த உத்தரவு பொருந்தும். அதுவே தர்மம் . காட்டிற்கு வந்தால் நான் மிகவும் துக்கப்படுவேன் என்று தாங்கள் எண்ண வேண்டாம். தங்களுடன்  வனவாசத்தை மகிழ்ச்சியுடன் யே அனுபவிப்பேன். உங்களுடன் இருக்கும் போது வனவாசம் என்பது எனக்கு விளையாட்டாக இருக்கும். உங்களுடன் இருந்தால் சொர்க்கமும் எனக்கு வேண்டாம். என்னை விட்டு பிரிந்து செல்லாதீர்கள். நீங்கள் என்னை விட்டு பிரிந்தால் மரணித்துவிடுவேன். 
 
★நீங்கள் செல்லும் காட்டுப் பகுதிக்கு நான் உங்களுக்கு முன்னே சென்று கல் முள் என்று அனைத்தையும் விலக்கி மிக நல்ல பாதையை தங்களுக்கு அமைத்து தருவேன் என்னையும் தாங்கள் அழைத்துச் செல்ல வேண்டும்  என்றாள். ராமன் சீதையிடம் அந்த காட்டிற்கு நீ என்னுடன் வந்தால் கொடூரமான விலங்குகள் இருக்கும். மேலும் அரண்மனையில் சுகமாக வாழ்ந்துவிட்டு காட்டில் மண் தரையில் படுக்கவேண்டியது  இருக்கும்  என்று காட்டில் வாழ்ந்தால் வரும் பிரச்சனைகள் பற்றி சொல்லி தன்னுடன் வரவேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
 
★சீதையின் கண்களில் நீர் பெருகியது. புலி சிங்கம் போன்ற விலங்குகள் கூட தங்களை கண்டால் தூரமாக விலகிச் செல்லும். தாங்கள் என் அருகில் இருந்தால் நீங்கள் சொல்லும் மழை புயல் காற்று வெயில் என்று அனைத்தையும் என்னால் பொருத்துக்கொள்ள முடியும். நீங்கள் இல்லாமல் இந்த அரண்மணையில் உள்ள சுகங்கள் கூட எனக்கு துக்கமாக இருக்கும். நான் ஜனகரின் மகள். என் தாயும் தந்தையும் எனக்கு கணவன் மனைவிக்கான தர்மத்தை பற்றி சொல்லியிருக்கிறார்கள். கணவன் இருக்கும் இடத்திலேயே மனைவி இருக்க வேண்டும் இதுவே தர்மம். 
 
★கணவன் செல்லும் பாதையை பின்பற்றி செல்ல வேண்டும். இதுவே என் தந்தை எனக்கு சொன்னது. நீங்கள் உங்கள் தந்தையின் வாக்கை நீங்கள் மீற மாட்டீர்கள். அது போல் என் தந்தை எனக்கு சொல்லி தந்த தர்மத்தை நான் மீற மாட்டேன். மேலும் ஒரு செய்தியை நான் சொல்கிறேன். நான் குழந்தை பருவத்தில் இருக்கும் காலத்தில் ஜோதிடர்களை வைத்து என் ஜாதகத்தை என் தந்தை கணித்தார். அப்போது அவர்கள் சில வருடங்கள் வனவாசத்தில் இப்பெண் இருப்பாள் என்று சொல்லியிருக்கின்றார்கள். நான் தனியாக வனவாசம் செய்ய முடியாது. அதற்கான எந்த ஒரு சூழ்நிலையும் ஏற்படவில்லை. இப்போது சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. அதனை நான் பயன் படுத்திக்கொள்கிறேன். 
 
நாளை..........................
[3:49 PM, 6/8/2021] Mohan SriRaghavendrar Kulithalai: ஶ்ரீராம காவியம்
~~~~~
073 / 08-06-2021
 
ராமனுடன் சீதையும் பயணம்..
 
★சீதை, சுவாமி! தங்களை பிரிவதை காட்டிலும் பெரிய கொடுமை வேறொன்றும் இல்லை. தாங்கள் படுக்கும் பாறை எனக்கு பஞ்சணை ஆகும், தாங்கள் உண்ணும் உணவு எனக்கு அமிர்தம் ஆகும். நான் உன்னை என்றும் பிரிய மாட்டேன் என்று மந்திரத்தை கூறி என்னை கரம் பிடித்தீர்கள், அதை தாங்கள் மறக்கலாமா? தங்களை நான் ஒருபோதும்  பிரிய மாட்டேன். தங்களுடன் வனத்திற்கு வந்து தங்களுக்கு நான் தொண்டு செய்வேன் என்றாள்.
 
★ராமர், சீதா! கானகத்தில் உன்னை காப்பது என்பது கடினமாகும் என்றார். சுவாமி! ஒரு பெண்ணை காக்க முடியாத தாங்கள் உலகத்தை எவ்வாறு காத்தருள்வீர். பெருமானே! அன்னையிடம் வனம் செல்ல உத்தரவு பெற்று விட்டீர்களா? சீதா! என் அன்னை என்னுடன் வருவதாக தான் கூறினார்கள். நான் தான் பெண்கள் ஒரு போதும் தங்கள் கணவரை விட்டு பிரியக்கூடாது. தாங்கள் தந்தைக்கு துணையாக இங்கேயே இருங்கள் என்று கூறினேன்.
 
★சுவாமி!தாங்கள் அன்னையிடம் கணவரை பிரியக்கூடாது என்று சொன்னீர்கள். ஆனால் நான் தங்களை விட்டு பிரிந்து இருக்கலாமா? தாய்க்கு ஒரு நியாயம். எனக்கு ஒரு நியாயமா? என்னை வரவேண்டாம் என்று சொன்னால் நான் உயிரற்ற ஒரு பொருள் ஆகிவிடுவேன் என்று சொல்லி  தன் கணவனான ராமனின் திருவடியில் விழுந்து வணங்கினாள். என்னை தயவு செய்து தடுக்காதீர்கள். நானும் உங்களுடன் வருவேன் என்று தீர்க்கமாக சொன்னாள் சீதை.
 
★சீதையின் வேண்டுதலை ராமனால் மறுக்க முடியவில்லை. உன்னை அழைத்து செல்கிறேன் இருவரும் செல்வோம். ஆகவே உன்னுடைய நகை மற்றும் உனக்கு உரிய பொருள்கள் அனைத்தையும் வறியவர்க்கும் உனது பணியாட்களுக்கும் தானம் அளித்துவிட்டு சாதாராண உடைகளை அணிந்துகொள் இவை அனைத்தையும் விரைவாக செய்துவிடு நாம் விரைவில் அயோத்தியை விட்டு கானகம் செல்லவேண்டும் என்று சீதையிடம் கூறினார். சீதை மகிழ்ச்சியில் திளைத்து தனது உடைமைகளை தானம் கொடுக்க ஆரம்பித்தாள்.
 
★ராமனும் சீதையும் வனம் செல்வது உறுதியாகி விட்டது. தனக்கு உரிய செல்வங்கள் அனைத்தையும் சீதை தானம் செய்துவிட்டாள். அரச மகளிர் உடைகளை களைந்து சாதாரண தபஸ்விகளுகான உடைகளை அணிந்து கொண்டு கிளம்ப ஆயத்தமானார்கள். லட்சுமணன் ராமரின் முன்னிலையில் வந்தான். தங்களுடன் நானும் வருகிறேன். தங்களை விட்டு பிரிந்நிருப்பது என்னால் இயலாத காரியம். தங்களையும் அண்ணியாரையும் காவல் காத்துக்கொண்டு தங்களுக்கு காட்டில் கனிவகைகளை தேடிக்கொடுத்து பணிவிடைகள் செய்கிறேன். என்னையும் தங்களுடன் அழைத்து செல்ல வேண்டுகிறேன்  என்றான் லட்சுமணன்.
 
★தந்தை கைகேயியிடம் வரங்களை கொடுத்து சிக்கிக் கொண்டிருக்கின்றார். பரதன் ஆட்சி செய்துகொண்டிருப்பான். மாயையில் சிக்கிக்கொண்டு இருக்கும் அன்னை கைகேயி அவர்களின் பிடியில் நமது தாயாரான கௌசலையும் சுமித்ரையும் இருப்பார்கள். கைகேயி இவர்களுக்கு நல்லது செய்ய வாய்ப்பில்லை. நீயும் என்னுடன் வந்துவிட்டால் நமது அன்னையர்களுக்கு  பணிவிடை செய்ய யாரும் அங்கு இருக்க மாட்டார்கள். ஆகவே லட்சுமணா! இங்கேயே இருந்து அவர்களை பார்த்துக்கொள் என்றார். தாய் தந்தைக்கு செய்யும் சேவை மிகப்பெரிய தர்மமாகும் இந்த தர்மத்தை செய்து கொண்டு இங்கேயே இரு என்றார்.
 
★அண்ணா! கைகேயி அன்னை மாயையால் மயங்கி இருக்கிறார். ஆனால் தங்களின் தம்பி பரதன் தங்களுடைய மகிமையால் சிறப்பான ஆட்சியை மக்களுக்கு கொடுப்பதோடு அன்னையர் கௌசலையையும் மற்றும் சுமித்ரையையும் கௌரவமாக பார்த்துக்கொள்வார். இதில் எள் அளவும் சந்தேகம் வேண்டாம். மேலும் கௌசலையை சார்ந்து இருப்பவர்கள் யார் ஒருவராக  இருந்தாலும் அவர்களை பார்த்துக்கொள்ளும் வல்லமை அன்னை கௌசலையிடம் இருக்கிறது. இதற்காகவே ஆயிரக்கணக்கான கிராமங்கள் அவரிடம் இருக்கிறது. 
 
★உங்களை விட்டு என்னால் எப்படி பிரிந்து இருக்கமுடியாதோ அது போல என்னைவிட்டும் தங்களால் பிரிந்து இருக்க சிறிதும் முடியாது. உங்களுடைய வெளியில் இருக்கும் உயிர் நான் என்று ஏற்கனவே ஒருமுறை சொல்லியிருக்கிறீர். அப்போதே என்னை தாங்கள் செல்லும் இடத்திற்கெல்லாம் என்னையும் உடன் அழைத்துச் செல்வதற்கு தாங்கள் அனுமதி அளித்து விட்டீர்கள். இப்போது என்னை தடுக்காதீர்கள் என்னையும் தங்களோடு வர அனுமதியுங்கள். தங்களுக்கு பின்னே கையில் வில் ஏந்தியவனாக நான் உங்களுடன் காட்டிற்கு வருவேன் என்றான் லட்சுமணன்.
 
★ராமர் லட்சுமணனையும் காட்டிற்கு அழைத்து செல்ல சம்மதித்தார். லட்சுமணனிடம் அரச உடைகளை களைத்து தவஸ்விகளுகான உடைகளை அணிந்து கொள்ளச் சொன்னார்.
பின் அவர்கள்  மூவரும் அன்னை சுமித்திரை மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றனர்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை....................
ஶ்ரீராம காவியம்
~~~~~
074 / 09-06-2021
 
விடைபெற்றனர்...
 
★மூவரும் சுமித்திரையின் மாளிகைக்கு சென்றார்கள். கைகேயி ராமருக்கு முனிவர்கள் அணியும் மரவுரி எனப்படும்  ஆடையை கொடுத்து அனுப்பி இருந்தாள். ராமரும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். தான் அணிந்திருந்த ஆடை ஆபரணங்களை அகற்றி விட்டு கைகேயி கொடுத்த ஆடையை மகிழ்வுடன் அணிந்து கொண்டார். மரப்பட்டையால் செய்த மரவுரி ஆடைகளை சுமித்திரை தன் அன்பு மிகுந்த மகனான லட்சுமணருக்கு கொடுத்தாள்.
 
★அவள் கொடுக்கும் போது கண்ணீர் தளும்ப, மகனே! நீ உன் அண்ணனான ராமனுக்கு துணையாக கானகம் சென்று வருவாயாக. ‘தம்பியுடையான் படைக்கு அஞ்சான்’ என்ற பழமொழிக்கு ஏற்ப உனதருமை அண்ணனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். உனக்கு தந்தை ராமன், தாய் சீதை ஆவாள். ராமன் இருக்கும் இடமே உனக்கு இருப்பிடமாகும். ராமன் கானகம் சென்றால் நீயும் உடன் கானகம் செல்ல வேண்டும். 
 
★உன் அண்ணன் ராமனுக்கு  அவன் செயலறிந்து தொண்டு செய்ய வேண்டும். விதியின் மதியால் ராமனுக்கு ஏதாவது நேருமாயின் அந்த விதியை நீ வென்று காட்ட  வேண்டும். பதினான்கு நீண்ட ஆண்டுகள் முடிந்து ராமன் அயோத்தி வந்தால் நீயும் அவர்களோடு வர வேண்டும். இன்று முதல் நீ ராமனுக்கு தம்பி அல்ல, அவர்களுக்கு பணிவிடை செய்யும் பணியாளன் என்று கண்ணீர் மல்க பாசமுடன்  கூறி அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினாள்.
 
★ராம இலட்சுமணர் இருவரும் வசிஷ்டர், கௌசலை, கைகேயி சுமித்திரை,  ஆகியோரிடம் வணங்கி ஆசிபெற்று விடை பெற்றனர்.  ஜனகரின் வேள்விச் சாலையில் வருணபகவான் நமக்கு அளித்த இரண்டு விற்கள் மற்றும் எவ்வளவு அம்புகளை எடுத்தாலும் குறையாத அந்த அம்புறாத்தூணிகள் சூரியனை போல ஒளி வீசும் வாள் ஆகிய அனைத்தையும்  வசிஷ்டரிடம் கொடுத்து வைத்திருக்கிறோம். வசிஷ்டர் இருப்பிடம் சென்று அவரிடம் கொடுத்து வைத்து இருந்த அரிய அஸ்திரங்களை எடுத்துக்கொண்டு தன்னோடு வருமாறு கட்டளையிட்டார் ராமர். மூவரும் தசரதரிடம் விடை பெற்றுக்கொள்வதற்காக அவர் இருப்பிடம் சென்றார்கள்.
 
★ராமரும் சீதையும் இளவல் லட்சுமணனும் தசரதரிடம் வீழ்ந்து வணங்கினர். ராமர் தசரதரிடம் பேச ஆரம்பித்தார். தந்தையே சீதையும் லட்சுமணனும் என்னுடன் வருகின்றார்கள். அவர்கள் என்னோடு வரும் முடிவிலிருந்து பின் வாங்க மறுக்கின்றார்கள். நாங்கள் மூவரும் வனவாசம் செல்கிறோம் எங்களை ஆசிர்வதித்து அனுப்புங்கள் என்றார். அதற்கு தசரதர் ராமா! கைகேயிக்கு கொடுத்த வரங்களால் நான் கட்டுப்பட்டவனாக இருக்கிறேன். கைகேயியினால் நாம் வஞ்சிக்க பட்டிருக்கிறோம். அவளால் இந்த பாவ காரியத்திற்கு நான் துணை போவது போல் ஆகிவிட்டது. 
 
★நாட்டிலிருந்து உன்னை வெளியேற்ற வேண்டிய இந்த அடாத செயலை கனவிலும் நான் நினைத்துபார்க்கவில்லை. கைகேயியிடம் நான் கொடுத்த வரத்திற்கு நான் கட்டுப்பட்டாலும் நீ கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை. தந்தையின் வாக்கை சத்தியமாக்க வேண்டும் என்று வனம் போக நீ தீர்மானித்து விட்டாய். நீ உன் பலத்தை பயன் படுத்தி இந்நாட்டின் அரசனாக ஆகியிருக்கலாம். ஏன் அப்படி செய்யவில்லை? என்று கேட்டார்.
 
★அதற்கு ராமர் இந்த நாட்டை நீங்கள் அரசராக இருந்து இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்யவேண்டியே இந்த அரச பதவியை நான் சிறிதும் ஆசைப்படவில்லை. என்னுடைய  பலத்தை பயன் படுத்தி அரச பதவியை பெற்றால் நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் சத்தியத்தை இழந்து பொய்யனாகி விடுவீர்கள். உங்கள் சத்தியத்தை காப்பது என் கடமை அதனை மிகுந்த மகிழ்சியுடன் செய்துமுடிப்பேன். பதினான்கு வருடவனவாசத்தில் இருந்து விரைவில் திரும்பி வருவேன். 
 
★பரதனை விரைவில் இங்கு வரவழைத்து அவனுக்கு உடனே பட்டாபிஷேகம் செய்து அவனை ஆசிர்வதித்து நீங்கள் அளித்த இரண்டாவது வரத்தையும் நிறைவேற்றுங்கள் என்றார்.
ராமா! உன்னிடம் ஒரு சிறு கோரிக்கை வைக்கின்றேன். இன்று இரவு தங்கிவிட்டு நாளை அதிகாலை இங்கிருந்து வனம் செல்வாய். உன்னை மனதார பார்த்து திருப்தி அடைய நான் விரும்புகின்றேன் என்றார். அதற்கு ராமர் என் தாய்க்கு கொடுத்த வாக்கின்படி நான் மனதால் அரசபதவியை துறந்துவிட்டேன். என் மனம் வனத்தை பற்றி இருக்கிறது. 
 
★உங்களுடைய மனதில் எந்த வருத்தமும் குறையும் வேண்டாம். ஒரு நாள் செல்வதை ஒத்திப் போட்டால் தாய்க்கு நான் அளித்த வாக்கை மீறுவது போலாகும். மேலும் நாளை செல்வதனால் அதிகப்படியான பயன்கள் ஏதும் ஏற்படாது.எனவே  எங்களை  ஆசிர்வதியுங்கள் நாங்கள் செல்கின்றோம். எங்களுக்கு உத்தரவு கொடுங்கள் என்றார். தருமத்தில் இருந்து தவறாத உத்தமனே! நமது ரகுகுலத்தின் பெருமையை பெருக்குவாய். பயம் உன்னை விட்டு விலகி நிற்கட்டும்.. நீ சென்றுவா! என்று அனுமதி கொடுத்தார்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை..  .  ...............
ஶ்ரீராம காவியம்
~~~~~
075 / 10-06-2021
 
புத்திர சோகம்...
 
★தசரதன் அமைச்சரான சுமந்தரரிடம் நம்முடைய படைத் தலைவர்களிடம் சொல்லி ஓர் சதுரங்க சேனை உருவாக்கி ராமன் பாதுகாப்பாக செல்ல ஏற்பாடு செய்துவிடு. மேலும் ராமன் காட்டில் சுகமாக வாழத்  தேவையான தனம் தானியம் பணியாட்களுடன் சகலவிதமான பொருட்களையும் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்துவிடு என்று உத்தரவிட்டார். அருகில் இருந்த கைகேயி சிரித்தாள். ராஜ்யத்தில் உள்ள செல்வத்தை எல்லாம் வாரி இந்த  ராமனுடன் கொடுத்தனுப்பி விட்டு மீதி இருப்பதை செல்வன்  பரதனுக்கு தருவீர்களா?. வரத்தை மிக அழகாக பூர்த்தி செய்கின்றீர்கள் என்றாள்.
 
★ராமர் தசரதரிடம்,  தந்தையே! மிகுந்த வணக்கத்துடன் கேட்டுக் கொள்கிறேன். நான் எனது ராஜ சுகங்கள் அனைத்தையும் விட்டு விட்டு வனம் செல்ல வேண்டும் என்று தீர்மானித்திருக்கின்றேன். தவசிகள் வாழும் தவ வாழ்க்கை மேற்கொண்டு வாழ மிகவும் விரும்புகிறேன்.  தாங்கள் சொல்லும் செல்வமும் சேனை பரிவாரங்களும் தவ வாழ்க்கை மேற்கொண்டவர்கு சிறிதும்  உபயோகப்படாது. நீங்கள் சொல்லும் அனைத்தையும் நான் காட்டிற்கு கொண்டு சென்றால் யானையை தானாம் செய்த பிறகு அதனை கட்டும் கயிற்றின் மீது ஆசைப்படுவது போலாகும். ஆகையால் மண்வெட்டியும் ஒரு கூடை மட்டும் போதும். அதை மட்டும் கொடுங்கள் எனக்கு போதும் என்றார். கைகேயி சிறிதும் கவலைப்படாமல் உடனே ஓடிப்போய் தயாராக இருந்த மண்வெட்டியுடன் கூடையையும் கொண்டு வந்து கொடுத்தாள். 
 
★அதனை பெற்றுக்கொண்ட ராமர் தந்தையே நாங்கள் செல்கிறோம். நாங்கள் திரும்பி வரும்வரையில் என்னுடைய தாய் கௌசலையை இங்கே விட்டு செல்கிறேன் அவர் மிகவும் துக்கத்தில் இருக்கிறாள். எனக்காகவே அவர் உயிரை வைத்துக்கொண்டிருக்கிறாள். நான் திரும்பி வரும் வரை நன்கு பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு மூவரும் வனம் நோக்கி கிளம்பினார்கள்.தசரதர் அமைச்சர்  சுமந்திரரை அழைத்து மூவரையும் காட்டின் எல்லை வரை விட்டுவிட்டுவாருங்கள்  என்று கண்ணீருடன் சொல்லி ராமர் செல்வதை பார்க்க  முடியாமல் தனது கண்களை மூடிக்கொண்டார். 
 
★அரண்மனை பெண்கள் அனைவரும் கண்ணீருடன் விடை கொடுத்தார்கள். தன் திட்டம் முழுமையடைந்து விட்டதாக கைகேயி மகிழ்ச்சி அடைந்தாள். ராமர் சென்றதும் தசரதர் நான் எத்தனையோ கன்றுகளை கொன்று தாய் பசுக்களை  இம்சித்திருக்க வேண்டும். அதனாலேயே நானும் கைகேயியின் இம்சையினால் என் மகனை பிரிந்து இப்போது வாடுகின்றேன் என்று சொல்லி கதறி அழுதார். 
 
★மூவரும் ரதத்தில் ஏறினார்கள். சீதை ராமருடன் காட்டில் இருக்கப்போகின்றோம் என்று சிரிப்பும் சந்தோஷமுமாக ஏறினாள். தேரோட்டிய அமைச்சர்  சுமந்திரர் ராமரை பார்த்து இப்போது முதல் பதினான்கு வருடம் ஆரம்பம் ஆகின்றது என்று சொல்லி தேரில் ஏறினார். வீதியில் காலை முதல் மிகுந்த குதூகலத்துடன் ஆரவாரமாக கொண்டாட்டத்தில் இருந்த மக்கள் இப்போது துக்கத்துடன் இருந்தார்கள்.தசரதர் வெளியே வந்து ரதம் புறப்பட்டதில் இருந்து கண்ணை விட்டு மறையும் வரை ரதத்தை பார்த்துக்கொண்டே வெகு நேரம் நின்றார்.  
 
★ராமர் சென்ற ரதம் தசரதரின் கண்ணை விட்டு மறைந்ததும் கதறிக்கொண்டே கீழே விழுந்து புரண்டார்.  ஒரு பக்கம் மனைவி கௌசலையும் மறுபக்கம் கைகேயியும் தசரதரை பிடித்துக் கொண்டார்கள். தசரதர் கைகேயியை பார்த்து பாவியே! என்னை தொடாதே!!. உன் முகத்தை பார்க்க நான் விரும்பவில்லை. உனக்கும் எனக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை. உன்னை விட்டேன். உன்னை விட்டேன் என்று சொல்லிக்கொண்டே  அவளின் கையை உதறினார். 
 
★உன்னுடைய வரத்தின் படி பரதன் இந்த ராஜ்ஜியத்தை மனநிறைவோடு மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டானேயானால் என் இறுதிக்காலத்தில் அவன் எனக்கு செய்யும் பிதுர்கடன் என்னை வந்து சேராது. உன் காரியத்தை நீ நடத்தி முடித்துக் கொண்டாய். கணவன் இல்லாத விதவைக்கோலத்தில் நீ மிகுந்த மகிழ்ச்சியுடன் இரு. உன்னை நான் இனி பார்க்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு அங்கு இருந்து கிளம்பி கௌசலையின் மாளிகைக்கு திரும்பினார்.
 
★தசரதர் கௌசலையிடம் புலம்ப ஆரம்பித்தார். ராமர் எவ்வாறு காட்டில் வசிப்பான். மெத்தையில் படுத்து சுகமாக உறங்கியவன் காட்டில் தரையில் படுத்து எப்படி தலைக்கு கல்லை வைத்து தூங்குவான். உணவிற்கு அந்த காட்டில் அவனுக்கு என்னதான்  கிடைக்குமோ!. சாப்பிட்டானோ !இல்லையோ! என்று கதறிக் கொண்டே இருந்தார். கௌசலை ராமர் சென்ற மிகப்பெரிய துக்கத்தில் இருந்த படியால் மயக்கம் அடைந்த தசரதருக்கு ஆறுதல் ஒன்றும் கூற முடியாமல் அமைதியாகவே கௌசல்யா அழுதுகொண்டிருந்தாள்.
 
★சுமித்ரை கௌசலைக்கு ஆறுதல் சொன்னாள். அக்கா! சாஸ்திரமும் தருமமும் தெரிந்த தாங்கள் ஏன் இவ்வாறு மிகுந்த  துக்கப்படுகின்றீர்கள்.?  நம்  தசரதருக்கு தைரியம் சொல்ல வேண்டிய தாங்கள் தைரியம் இழக்காதீர்கள். தந்தையின் சத்தியத்தை காப்பாற்ற ராமன் தனக்கான ராஜ்ஜியத்தை துறந்து வனம்  சென்றுள்ளான். சத்தியத்திற்கு மறுபெயரான ராமனை பெற்ற தாங்கள் பெருமைப்படவேண்டும். ராமன் சென்றதை நினைத்து துக்கப்பட வேண்டாம். ராமனுடன் சீதையும் லட்சுமணனும் சென்றுள்ளார்கள். அவர்களை ராமனை நன்றாக பார்த்துக்கொள்வார்கள். ஆகவே நிச்சயமாக மூவரும் திரும்பி வருவார்கள். ராமன் நிச்சயம் அயோத்தியை அரசாள்வான் என்று சமாதானம் செய்தாள். சுமித்ரையின் வார்த்தைகளால் கௌசலை சிறிது ஆறுதல் அடைந்தாள். 
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை......................
ஶ்ரீராம காவியம்
~~~~~
076 / 11-06-2021
 
தசரதன் மறைவு...
 
★தசரதர் மயக்கம் தெளிந்து கௌசலையை பார்த்து, அந்த  கண்ணில்லா பெற்றோர் தனக்கு கொடுத்த சாபம் பலித்து விட்டது எனக்கூறி கதறி அழுதார்.  
 
★அப்போது எனக்கு குழந்தை பிறக்கவில்லை. ஆனால் அவர்கள் கொடுத்த அந்த சாபம் இப்போது பலித்துவிட்டது என்று எண்ணி புலம்பினார். அரசகுரு வசிஷ்டரிடம் தசரதர், கைகேயி எனக்கு மனைவியும் இல்லை. பரதன் எனக்கு மகனும் இல்லை எனக் கூறினார். அவன் தனக்கு கடைசி ஈமச்சடங்கை கூட செய்யக்கூடாது என கூறினார்.
ராமர், சீதை, இலட்சுமணன் மூவரும் வனம் செல்வதற்கு புறப்பட்டனர். ராமர் வசிஷ்டர் மற்றும் தன் தாய்மார்களை தொழுது வணங்கி புறப்பட்டான். 
 
★சுமந்திரருடைய வேண்டுகோள் கேட்டறிந்து அவர்கள் மூவரும் தேரில் ஏறி சென்றனர். அயோத்தி மக்கள் அனைவரும் ராமரை தொழுது, தேரை பின் தொடர்ந்து சென்றனர். ராமர் தன்னிடம் உள்ள பொன், பொருள் எல்லாவற்றையும் ஏழைகளுக்கு வழங்கினார்.
புறப்பட்ட  ரதத்தை தடுத்த மக்கள் ராமரை கண்குளிர பார்த்துக் கொள்கின்றோம். சிறிது நேரம் நிறுத்திவைக்கும்படி மக்கள் கூப்பாடு போட ஆரம்பித்தார்கள்.
 
★இங்கிருந்தால் மக்களிடம் இன்னும் துக்கம் அதிகமாகும் என்று எண்ணிய ராமர் ரதத்தை வேகமாக செலுத்திச் செல்ல  உத்தரவிட்டார். மிகவும் கஷ்டப்பட்டு ரதத்தை சுமந்திரர் அரண்மணை வாயியில் இருந்து ரதத்தை வெளியே கொண்டு வந்து வேகமாக செலுத்தினார். 
தேர் வெகு தூரம் சென்றது. மாலை மங்கி இருள் சூழ்ந்தது. மக்கள் அனைவரும் துன்பத்தில் ஆழ்ந்தனர்.   ராமர் சென்ற அந்த ரதத்துடனே மக்கள் மிகப்பெரும் கூட்டமாக நாமும் அவருடன் வனம் போகலாம்,  நாட்டிற்கு திரும்ப வேண்டாம என உரத்து  கூக்குரலிட்டவாரே பின் தொடர்ந்து சென்றார்கள். 
 
★ரதத்தை நிறுத்திய ராமர் மக்களிடம் பேச ஆரம்பித்தார். அயோத்தி நகரத்து மக்களே! என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பும் பிரியமும் நான் மிகவும் அறிவேன். அதே அன்பையும் பிரியத்தையும் இனி நீங்கள் பரதன் மீது செலுத்தி பரதனை திருப்தி அடைய செய்யுங்கள். அதுவே எனக்கு திருப்திதரும். என்னைவிட வயதில் பரதன் சிறியவனாக இருந்தாலும் ஞானத்தில் சிறந்தவன். என் தந்தையின் சத்தியத்தை காப்பாற்ற தருமத்தின் படி வனம் செல்கின்றேன். விரைவில் திரும்பி வந்துவிடுவேன். 
 
★ஆகவே அரசரின் ஆணைப்படி நீங்களனைவரும்  நடந்து கொள்ள வேண்டும். உடனே அனைவரும் அயோத்தி திரும்பிச் செல்லுங்கள் என்று தன் அன்பு நிறைந்த பார்வையால் மக்களை பார்த்து உத்தரவிட்டார். மக்கள் அனைவரும் நகரத்திற்கு திரும்பி நடக்க ஆரம்பித்தார்கள். ரதத்தை காட்டை நோக்கி செலுத்தினார் சுமந்திரர். ரதத்தில் அன்று முழுவதும் பயணப்பட்டு கங்கா நதிக்கரையை அடைந்தார்கள். அயோத்திக்கு திரும்பிச் செல்ல  அமைச்சர் சுமந்திரருக்கு ராமர் கட்டளையிட்டார். 
 
★ராமர் சுமந்திரரை நோக்கி, தாங்கள் தேருடன் ஊர் நோக்கி திரும்புவீராக!. அப்போது தான் மக்கள் அனைவரும் ஊர் திரும்புவார்கள். எங்கள் தாய் தந்தையருக்கு வணக்கத்தை சொல்வீராக! என்றார். சீதை, தன் தங்கைகளுக்கு ஆசி கூறி தான் வளர்க்கும் கிளிக்கு வேளை தவறாமல் உணவு தர சொல்லி கூறி அனுப்பினாள். சுமந்திரர் ராமரை விட்டு பிரிய மனம் இல்லாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தார். சுமந்திரருக்கு ஆறுதல் சொன்னார் ராமர். 
 
★நாங்கள் மூவரும் மகிழ்சியுடன் வனம் செல்கின்றோம் என்பதை அரண்மனையில் இருக்கும் அனைவரிடமும் தெரிவித்து விடுங்கள் என்றும் தாயார் கைகேயியின் மீது மனவருத்தம் ஏதும் நாங்கள் அடையவில்லை என்றும்  கூறி விடுங்கள்  என்று சொல்லி ராமர் சுமந்திரருக்கு விடை கொடுத்தார். மிகுந்த மனத் துயரத்துடன் காலி ரதத்தை ஒட்டிக்கொண்டு அரண்மனைக்கு வந்து சேர்ந்தார். 
 
★அங்கு தசரத சக்ரவர்த்தியை சந்தித்தார். தசரதர் சுமந்திரரை பார்த்து எனது மகன்? எங்கே என் ராமன்?என்று கேட்டார். சுமந்திரர் அமைதியாய் நின்றதை பார்த்து, ராமர் கானகம் சென்றதையும் இனி நீண்டகாலம் திரும்பி வரப் போவதில்லை என்பதையும்  உணர்ந்தார். தசரதர் ராமரை நினைத்து, ராம ராம ராம என சொல்லி கொண்டு அவரின் உயிர், ஆன்ம ஒளியாக உடலில் இருந்து பிரிந்தது. தேவர்கள் வரவேற்க அவர் ஆன்மாவாக விண்ணுலகத்தை சேர்ந்தார். தசரதரின் மறைவை அறிந்து மக்கள் அனைவரும் கதறி அழுதார்கள்.     
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை......................
ஶ்ரீராம காவியம்
~~~~~
077 / 12-06-2021
 
குகனின் உபசாரம்...
 
★கங்கா நதிக்கரையின் அழகை அனுபவித்துக்கொண்டே மூவரும் நடந்தார்கள். கங்கை நதியில் ஓரிடத்தை கண்ட ராமர் இங்கு மிகவும் அழகாக இருக்கிறது இன்று இரவு நாம் இங்கே தங்கலாம் என்று சொன்னார். மூவரும் ஓர் மரத்தடியில் அமர்ந்தார்கள். பின்
ராமர், சீதை, லட்சுமணர் மூவரும் கங்கையில் மூழ்கி மகிழ்ந்தார்கள். கங்காதேவி! ராம பெருமானே! உலகில் உள்ள மனிதர்கள் என்னில் மூழ்கி அவர்களது பாவங்களை நீக்குகின்றனர். ஆனால் நீ இன்று என்னில் மூழ்கியதால் என்னிடம் இருந்த பாவங்கள் நீங்கின என்று கூறி ராமரை தொழுது வணங்கினாள். 
 
★முனிவர்கள் அவர்களுக்கு காய், கனிகளை தந்தார்கள். அவர்கள் அதனை உண்டு மகிழ்ந்தார்கள். கங்கை கரையில் சிருங்கி பேரம் என்ற நகரில் வாழ்பவன் குகன். இவன் வேடர் குலத்தின் பெருமைமிகுந்த  தலைவன். கருமையான மேனி, திரண்ட தோள்கள்,, அகன்ற மார்பும் உடைய தோற்றத்தை உடையவன்.ராமரின் மேல் அபார அன்பு கொண்டவன். ராமர் லட்சுமணன் வந்திருப்பதை அறிந்ததும் தன் பரிவாரங்கள் உடன் அவர்களை தரிசிக்க வந்தான். குகன் ராமனை காண வேண்டும் என்று எண்ணினான். 
 
★அதனால் உணவுகளையும் பழங்களையும் ராமருக்காக எடுத்து வந்திருந்தான். குகன், ராமர் தங்கி இருக்கும் அந்த தவப்பள்ளியை அடைந்தான். 
அந்த ஆசிரமத்தில் முன் நின்று காவல் புரிந்து கொண்டு இருக்கும் லட்சுமணன் குகனை பார்த்து, நீ யார்? எதற்காக இங்கு வந்துள்ளாய் எனக் கேள்வி கேட்டான். ஐயா! நான் ஒரு வேட குலத்தின் தலைவன். என் பெயர் குகன். நான் இங்கு இருக்கும் ஶ்ரீராம மூர்த்தியை காண வந்துள்ளேன் என்றான்.
 
★லட்சுமணன், இங்கேயே நில். என்று கூறிவிட்டு உள்ளே சென்று ராமரை, அண்ணா! தங்களை குகன் என்ற வேட குலத்தின் தலைவன் காண வந்து இருக்கின்றான். அவனை உள்ளே விடலாமா? எனக் கேட்டார். ராமர் அவனை இங்கே என்னிடம் அனுப்புவாயாக  என்று கூறினார்.  பிறகு லட்சுமணன் குகனுக்கு ராமனை காண அனுமதி அளித்தான். குகன் உள்ளே சென்று பரம்பொருளான ராமரை வணங்கினான். மேலும் 
குகனுடைய உபசாரங்கள் மிக அபாரமாக இருந்தது.. பலவித உணவு பண்டங்களை குகனின் ஆட்கள் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
 
★உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கின்றேன் எந்த வகை உணவு வேண்டும் என்று  கேட்டாலும் உடனே கொண்டு வந்து தருகிறேன் என்றான் குகன். அதற்கு ராமர் குகனிடம் பதினான்கு வருடங்கள் நான் தவவாழ்க்கை முறையை வாழுவதாக எண்ணி உள்ளேன். தவவாழ்க்கை விரதத்தில் கனிகளை தவிர்த்து வேறு எதையும் உண்ணக்கூடாது. உன் அன்புக்கு கட்டுப்பட்டு கனிகளை மட்டும் எடுத்துக்கொள்கிறேன். 
 
★குகனே! மிக்க மகிழ்ச்சி. நீ கொண்டு வந்த உணவை நான் ஏற்று கொண்டேன் என்றார். உனக்கு என் மேல் உள்ள அன்பு, ஆழத்தை காண முடியாத கடல் போல் இருக்கிறது. நீ என்னுடன் சற்று நேரம் இங்கேயே இரு என ராமர் கூறினதார்.  ராமரின் தவகோலத்தை கண்ட குகன் அயோத்தி உங்களுக்கு எப்படியோ அதேபோல் இந்த நகரமும் உங்களுடையது ஆகும். 
நீங்கள் இங்கு வசதியாக இருந்து கொள்ளலாம். பதினான்கு வருடங்களையும் தாங்கள் இங்கே இருந்து எங்களுடனேயே கழித்துக்கொள்ளுங்கள். 
 
★இங்கே இருந்து உங்கள் உபசாரங்களை பதினான்கு வருடங்களும் ஏற்றுக்கொண்டு வாழ்ந்தால் அது நான் கொண்ட சத்தியத்தில் இருந்து விலகுவது போலாகும். ஆகவே தன்னால் இங்கு இருக்க முடியாது நாளை இங்கிருந்து கிளம்பிவிடுவோம் என்றார்.ராமருக்கும் சீதைக்கும் மரத்தடியில் புல்களை பரப்பி அன்று இரவில் தூங்க ஏற்பாடு செய்தான் லட்சுமணன். 
 
★குகன் லட்சுமணிடம் நீங்கள் தூங்க தனியாக இடம் ஏற்பாடு செய்திருக்கின்றேன். இந்த இடத்தில் என்னை மீறி யாரும் வரமாட்டார்கள். எந்த பயமும் இல்லை. நீங்கள் நிம்மதியாக தூங்குங்கள் நான் காவலுக்கு இருக்கின்றேன் என்றான்.
லட்சுமணன் குகனிடம் மூன்று உலகத்தையும் யுத்தம் செய்து தனதாக்கிக். கொள்ளும் பெரிய வல்லமை பெற்ற என் அண்ணன் புல் தரையில் படுத்து ஓய்வு எடுக்கிறார். ஜனக மகாராஜா அவர்களின் புதல்வி சீதை சுகத்தை மட்டுமே இதுவரை அனுபவித்தவர். இப்போது தரையில் படுத்திருக்கிறாள். 
 
★அண்ணன் ராமனை வனம் செல்ல அனுப்பியதிற்கு பின்பு அயோத்தி நகரம் எப்படி பிழைக்க போகிறதோ தெரியவில்லை. அரண்மனை முழுவதும் உள்ள பெண்களின் அழுகுரலே கேட்டுக் கொண்டிருக்கும். ராமரை பிரிந்த துக்கத்தில் என் அன்னையர்கள் சுமித்ரையும் கௌசலையும் எப்படி உயிரோடு இருப்பார்கள் என்றே எனக்கு தெரியவில்லை. வனத்திற்கு போ என்று தந்தை சொல்லிவிட்டார். ஆனால் அவர் ராமனை பிரிந்த துக்கத்தில் இனி உயிர் பிழைத்திருப்பது கடினமே. பதினான்கு வருடம் வனவாசம் இப்போது தான் ஆரம்பித்திருக்கின்றது. 
 
★வனவாசம் முடிந்து நாங்கள் அயோத்தி அரண்மனைக்கு திரும்பி செல்லும் போது யார் இருப்பார்கள்? யார் இருக்க மாட்டார்கள்? என்றே தெரியாது. இவ்வளவு துக்கத்தில் இருக்கும் எனக்கு தூக்கம் வரவில்லை என்றான். லட்சுமணன் கூறிய வார்த்தைகளைக்  கேட்ட குகனும் கண்ணீர் விட்டான். இருவரும் தூங்காமல் ராமருக்கும் மற்றும் சீதைக்கும் காவலாக இருந்து இரவு முழுவதும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை........................
ஶ்ரீராம காவியம்
~~~~~
078 / 13-06-2021
 
குகனை பிரிதல்...
 
★குகன் ராமரை பலமுறை பார்த்தும், போதும் என்ற ஓர் எண்ணம் அவனுக்கு துளியும் வரவில்லை. ராமரின் அனுமதி பெற்று குகன் அங்கு அன்றிரவு தங்கினான். குகன் இளவல் லட்சுமணரிடம், ராமர் இந்த தவக்கோலம் பூண்டு கானகம் வரக் காரணம் என்ன என்று வினவினான். தாய் கைகேயி உடைய வரத்தின்படி ராமர் வனவாசம் செல்லவும், பரதர் அயோத்தியை ஆளவும் கட்டளை அருளினார். அதன்படி ராமர் இக்கானகத்தில் வாழ்கிறார் என்றார், லட்சுமணர். இதனைக் கேட்ட குகன் வெந்த புண்ணில் வேல் பாய்ந்தது போல் மிகவும் வருந்தினார். 
 
★அன்றிரவு ஆசிரமத்தில் குகன் காவல் புரிந்தான். அவனது மனதில் லட்சுமணரும்   ஒரு மாற்றாந்தாயின் மகன் தானே? அவனை எப்படி நம்புவது என்ற எண்ணம் தோன்றியது. குகன் லட்சுமணனுக்கும் சேர்த்து காவல் புரிந்தான். லட்சுமணரும் கண் இமைக்காமல் காவல் புரிந்தார். பொழுது விடிந்தது. இராமர், சீதை, இலட்சுமணர் நீராடி தங்களின் காலை கடன்களை முடித்தனர். 
 
★அதிகாலையில் எழுந்த ராமர் குகனிடம் கங்கை நதிக்கரையை கடக்க ஒரு ஓடத்தை ஏற்பாடு செய்து தருமாறும்  தாங்கள் கங்கையை கடந்து வனவாசம் செல்ல வேண்டும் என்றார். இதைக் கேட்ட குகன் அதிர்ச்சி அடைந்தான். தங்களுக்கு தொண்டு செய்ய நானும் மற்றும் வேடர்களும் உள்ளோம். கங்கை மிகவும் புனிதமான இடமாகும். இங்கு நறுமண மலர்களும், 
காய் கனிகள் என அனைத்தும் இருக்கின்றன. தங்களுக்காக நான் எதையும் செய்வேன். தங்களுக்காக தொண்டு செய்ய காத்து கொண்டு இருக்கிறேன். தாங்கள் இங்கேயே இருக்க வேண்டும் என மனமுருக வேண்டிக் கொண்டான். 
 
★நாங்கள் ஒரே இடத்தில் இருக்க முடியாது. வனவாசகாலத்தை முடித்து விரைவில் உன்னைச் சந்திக்கிறேன் என ஆறுதல் கூறிய ராமர் இப்பொழுது எங்களுக்காக ஓடம் கொண்டு வா என்றார். குகன் கண்ணீர் ததும்பும் விழிகளோடு  ஓடத்தை கொண்டு வந்தான். ராமர், சீதை, லட்சுமணர் மூவரும் ஓடத்தில் ஏறினார்கள். குகன் ராம நாமத்தை பாடிக் கொண்டு ஓடத்தை செலுத்தினான். 
 
★சீதை கங்கையை பிரார்த்திக்க ஆரம்பித்தாள். அன்னையே எங்கள் பதினான்கு வருட விரதம் முடிந்ததும் உன்னை கடந்து அயோத்திக்கு திரும்பி செல்ல அருள்புரிவாயாக என்று வேண்டி கொண்டாள். கங்கையின் மறுகரையை குகன் அடைந்தான். குகனுக்கு தர வேண்டிய ஓடக் கூலிக்காக சீதை தன்னுடைய  மோதிரத்தைக் கொடுத்தாள். இதைக் கண்ட குகன் சுவாமி நாம் இருவரும் ஒரு தொழில் செய்பவர்கள். ஆற்றைக் கடக்க வைக்கும் ஓடக்காரன் நான். பிறவிக் கடலைக் கடக்க உதவும் ஓடக்காரர் நீங்கள். ஒரே தொழில் செய்யும் ஒருவருக்கொருவர் கூலி வாங்குவது தர்மம் ஆகாது என மோதிரத்தை வாங்க மறுத்தான். அவனது அன்பைக் கண்ட ராமர் குகனைக் கட்டித் தழுவினார். 
 
★குகனே! நீ இனிமேல் எனக்கு தம்பி. இன்று முதல் தசரதருக்கு ஐந்து புதல்வர்கள். லட்சுமணர், பரதன், சத்ருக்கன் உனக்கு தம்பிமார்கள். பரதனிடம் அயோத்தியை ஆளும் அரசியல் பொறுப்பை ஒப்படைத்து வந்துள்ளேன். நீ அயோத்தி சென்று பரதனுக்கு துணையாக இரு. 14 ஆண்டுகள் 14 நாட்கள் போல் சென்று விடும். பிறகு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்வோம். என் சொல்லை மீற வேண்டாம். ராமன் குகனை பார்த்து, நீ கவலைப்படாமல் செல். மீண்டும் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியாய் இருப்போம் என்று கூறி குகனை திருப்பி அனுப்பினார்.
 
★மூவரும் யார் துணையும் இன்றி முதன் முறையாக இருண்ட காட்டிற்குள் நடக்க ஆரம்பித்தார்கள். ராமர், தம்பி  லட்சுமணனிடம் நீ தான் இனி எங்களுக்கு காவல் படை  எனக் கூறினார். லட்சுமணனும் நீங்கள் முன்னால் செல்லுங்கள். உங்களை தொடர்ந்து அண்ணி சீதை வரட்டும். அவர்களை தொடர்ந்து நான் வருகிறேன். வனவாசத்தில் உங்களுக்கு கடினங்கள் ஏதும் வராமல் என்னால் முடிந்தவரை பார்த்துக் கொள்கிறேன் என்றான். 
 
★தம்பி லட்சுமணா! இக்காட்டின் அருகில் பரத்துவாஜ முனிவர் ஆஸ்ரமம் உள்ளது. அவரிடம் சென்று அவரின் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்டு பதினான்கு வருட வனவாசத்தை எங்கு கழிப்பது என்று அவருடைய யோசனையை கேட்டு அதன் படி நடந்து கொள்ளலாம் என்றார். லட்சுமணனும் ஆமோதிக்க அங்கிருந்து மூவரும் கிளம்பி 
சித்ரகூடத்தில் உள்ள பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்தை அடைந்தார். அங்கு பரத்வாஜ முனிவரை கண்டு வணங்கி, அவரின் சொற்படி சித்ரகூடம் அருகில் உள்ள மந்தாகினி நதிக்கரையில் ஓர் ஆசிரமத்தை அமைத்து தங்கினார்கள். 
 
★சிறிது நாட்கள் அவர்கள் அங்கு தங்கினார்கள். பிறகு தங்கள் பயணத்தை தொடர்ந்தார்கள். அவர்கள் பயணத்தின் போது வழியில் யமுனை நதியை கண்டார்கள். அவர்கள் யமுனை நதியில் நீராடி, காய்கனிகளை உண்டு பசியாறினார்கள். லட்சுமணர் மூங்கில்களை வெட்டி தெப்பம் அமைத்து, மூவரும் தெப்பத்தில் ஏறி அக்கரையை அடைந்தார்கள். அங்கு பர்ணசாலை ஒன்றை அமைத்தார், லட்சுமணர். லட்சுமணரின் பர்ணசாலை அமைக்கும் திறனை கண்டு வியந்து ராமர் லட்சுமணரை வாழ்த்தினார்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை......................
ஶ்ரீராம காவியம்
~~~~~
079 / 14-06-2021
 
பரதனின் கலக்கம்...
 
★அயோத்தி நகரில்  என்ன நடக்கிறது என்பதைப் பற்றி சிறிது பார்ப்போம். ராமரரும் லட்சுமணனும் காட்டிற்கு சென்று விட்டார்கள். பரதனும் மற்றும் சத்ருக்கனனும் தாத்தா வீட்டில் வெகு தூரத்தில் இருக்கிறார்கள். அரசருடைய புதல்வர்கள் யாரும் அருகில் இல்லை. என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. வசிஷ்டரிடம் செய்தியை சொல்லி அவரது கருத்துக்களை கேட்டார்கள். 
 
★வசிஷ்டர் முதலில் விரைவாக செல்லும் குதிரை வீரனை பரதனிடம் அனுப்பி தசரதர் இறந்த செய்தியை சொல்லாமல் விரைவாக பரதனும் மற்றும் சத்ருக்கனனும் உடனே இங்கு அயோத்திக்கு வரவேண்டும் இது வசிஷ்டர் உத்தரவு என்ற ஒரு செய்தியை மட்டும் சொல்லுமாறு அனுப்பிவைத்தார். அடுத்து பரதனும் சத்ருக்கனனும் வரும் வரையில் தசரதரின் உடலை மூலிகை எண்ணை நிறைந்த கொப்பரையில் போட்டு வைத்து பதப்படுத்தி வைக்க அமைச்சர் சுமந்திரருக்கு உத்தரவிட்டார்.
 
★இரண்டு நாட்களாகவே இரு இளவரசர்களும் ஒரு இனம் புரியாத குழப்பத்தில் ஆழ்ந்து இருந்தனர். தூக்கம் சரியாக இல்லை. அடுத்த மூன்றாவது நாள் அதிகாலையில் பரதனுக்கு சோகம் ததும்பிய கனவு ஒன்று கண்டு திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தான். கனவைப்பற்றி மனக்குழப்பம் அடைந்தான். அதேநேரம் அன்றைய மாலை நேரத்தில் அயோத்தி குதிரை வீரனும் கைகய நாட்டிற்கு வந்து பரதனிடம் வசிஷ்டர் கூறிய செய்தியை சொன்னான். கனவு கண்ட குழப்பத்தில் இருந்த பரதன் வசிஷ்டர் உத்தரவை ஏற்று சத்ருக்கனனை அழைத்து கொண்டு தாத்தாவிடமும் மாமாவிடமும் விபரம் கூறி விடை பெற்று .உடனடியாக அயோத்தி நகருக்கு கிளம்பினார்கள். 
 
★சகோதரர்கள் இருவரும் குதிரை சவாரியில் நிபுணர்கள். அயோத்திக்கு விரைந்தனர். கைகய நாட்டிலிருந்து அயோத்தி நகருக்கு வரும் வழியெல்லாம் சிந்தித்துக்கொண்டே இருவரும் வந்தார்கள். அயோத்தியில் எதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்று இருவருக்கும் புரிந்தது. ஆனால் என்ன என்று சற்றும் தெரியவில்லை. ஆகவே மிகுந்த குழப்பத்துடனேயே பயணம் செய்தனர்.  தந்தை தாய் மற்றும் அண்ணன் என்று குடும்பத்தார் அனைவரையும் நேரில் பார்க்க போகின்றோம் என்ற மகிழ்ச்சி ஒரு புறமும் பயம் கலந்த குழப்பம் ஒரு புறமுமாக சிந்தித்துக் கொண்டே அயோத்தி எல்லைக்கு வந்து சேர்ந்தார்கள்.
 
★பரதனும் சத்ருக்கனனும் அயோத்திக்குள் நுழைந்ததும் கண்ட காட்சி அவர்களை பயம் கொள்ளச்செய்தது. எப்போதும் கலகலவென்று மகிழ்ச்சியுடன் மங்கள வாத்தியங்களுடன் இருக்கும் அயோத்தி நகரம் இப்போது துக்கத்துடன் மிகுந்த அமைதியாக இருந்தது. பார்க்கும் அனைவரது முகங்களிலும் துக்கமே தென்பட்டது. தங்களின் கவலையை அடக்க முடியாமல் இருவரும் மிகவும்  விரைவாக அரண்மனை கோட்டை பிரதான வாயிலுக்குள் நுழைந்தார்கள். 
 
★அரண்மனை அலங்காரங்கள் ஏதுமில்லாமலும் சரியாக மெழுகி கோலமிடாமலும் இருந்தது. அனைவரும் துக்கத்தில் ஆழ்ந்து சாப்பிடாமல் பட்டியினியில் இருந்தது அவர்களின் முகத்தில் நன்கு  தெரிந்தது. நடக்கக்கூடாத விபரீதம் எதோ நடத்துவிட்டது என்பதை இருவரும் புரிந்து கொண்டார்கள். தசரதரின் மாளிகைக்குள் நுழைந்தார்கள். அங்கு தசரதர் இல்லை. பின்னர் கைகேயியின் மாளிகைக்குள் நுழைந்தார்கள்.  பரதனைக்
கண்டதும் கைகேயி ஒடிவந்து கட்டி அணைத்தாள். தனதன்னை கைகேயியிடம் வீழ்ந்து பாதம் தொட்டு வணங்கினான் பரதன்.
 
★பரதனிடம் மகாராஜாவாக இருப்பாயாக என்று கைகேயி ஆசிர்வதித்தாள். என்ன ஆயிற்று இங்கு? ஏன் அனைவரும் துக்கத்தில் இருக்கின்றார்கள்? எனக்கு ஒன்றும் புரியவில்லை. தூதுவர்கள் அவசரமாக வர வேண்டும், இது வசிஷ்டர் ஆணை என்று சொன்னபடியால் விரைவாக வந்திருக்கின்றோம். அயோத்தி நகரம் முழுவதும் சோகத்தில் இருப்பது போல் தெரிகிறது. தந்தையை சந்திக்க அவரது மாளிகைக்கு நாங்கள் சென்றோம். அங்கு அவர் எங்கும் காணப்படவில்லை. அவருக்கு எனது வணக்கத்தை செலுத்த வேண்டும் அவர் எங்குள்ளார்? என்ன நடந்தது?. நடந்தவற்றை கூறுங்கள் என்று கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தான் பரதன்.
 
★உனது  தந்தை உலகத்தில் பிறப்பவர்கள் அடைய வேண்டிய சுகபோகங்களை அனைத்தையும் அனுபவித்துவிட்டார். பெரும் பாக்கியவானான அவர் பெரும் புகழை பெற்றார். செய்ய வேண்டிய பெரும் வேள்விகள் அனைத்தையும் நன்கு  செய்து முடித்தார். இந்த மண்ணுலகில் உடல் எடுப்பவர்கள் எல்லாம் இறுதியில் எங்கு சென்று சேர வேண்டுமோ அந்த  இடத்திற்கு உன் தந்தை சென்றுவிட்டார் என்றாள். தந்தை மடிந்தார் என்ற செய்தி கேட்டதும் குழந்தை போல் தரையில் வீழ்ந்து கதறிபதறி அழுதான் பரதன். 
 
★அவனிடம் கைகேயி இந்த வையகத்தை ஆளும் அரசன் ஒருவன் இறந்தவர்களை எண்ணி இப்படி தரையில் விழுந்து புலம்ப கூடாது. அது அரசனுக்கு சிறிதும் அழகல்ல. தருமமும் வேள்வியும் செய்யும் பதவியில் அமரப்போகிறாய். உன் முகம் சூரியனைப்போல் ஜோதியாக பிரகாசிக்கிறது. உனக்கு ஒரு குறையும் இல்லை. உனக்கு கொடுக்கப்பட்டுள்ள ராஜ பதவியை ஏற்றுக்கொண்டு இந்நாட்டை ஆள்வாயாக!. ஆகவே  உன் மனக்கலக்கத்தை விட்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எழுந்து நில் என்றாள். பரதனுக்கு கைகேயி கூறியதன் பொருள் புரியவில்லை.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை....................
ஶ்ரீராம காவியம்
~~~~~
080 / 15-06-2021
 
பரதனின் பதற்றம்...
 
★தாயே! என்னுடைய சகோதரன் ராமருக்கு நான் வந்து விட்ட செய்தியை அனுப்புங்கள். அறம் அறிந்த அண்ணன் தந்தைக்கு சமமானவர். வணக்கத்திற்குறிய அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கவேண்டும் என்றான். இனி எனக்கு அவர் தான் புகலிடம் என்றான். மேலும் நான் திரும்பி வருவதற்கு முன்பாகவே உயிர் போகும்படியாக என்ன நோய் தந்தையை பீடித்தது.? அவர் இறப்பதற்கு முன்பாக ஏதேனும் ஆணையிட்டிருந்தால் சொல்லுங்கள். அதனை நான் செய்து முடிக்கிறேன் என்றான்.
 
★பரதன் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் தன் மனதில் உள்ள எண்ணத்தை தெளிவாக நிறைவேற்றும் வகையிலேயே கைகேயி பதில் சொன்னாள். மேலும் உனது தந்தை,வனம் சென்ற ராமனும் லட்சுமணனும் மருமகள் சீதையும் திரும்பி வருவதை பார்ப்பவர்கள் பாக்கியம் செய்தவர்கள். எனக்கு அந்த கொடுப்பினை இல்லை என்று கூறிக்  கொண்டு இருந்தார்.எப்போதும் ராமா ராமா என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அவர் இரவு நேரத்தில் தூக்கத்திலேயே இறந்து விட்டார். 
 
★யாருக்கும் கடைசி காலத்தில் எதுவும் சொல்லவில்லை என்றாள். பரதன் பதறினான் பரதனின் துக்கம் இருமடங்கு ஆனது. தந்தையின் இறுதி காலத்தில் அண்ணன் இங்கே இல்லையா?  எங்கே சென்று விட்டார்?. இப்போது அவர் எங்கே இருக்கிறார்?  என்று கேள்விகள் பல பதற்றத்துடன் கேட்டான். பரதனை சமாதானப்படுத்தி விடலாம் என்ற எண்ணத்தில் நடந்தவைகள் எல்லாவற்றையும் மிகவும் விபரமாகச்  சொல்ல ஆரம்பித்தாள் கைகேயி.
 
★ராமனும் லட்சுமணன் சீதை மூவரும் உன் தந்தையின் சத்தியத்தை காப்பாற்ற தவம் செய்யும் பொருட்டு வனத்திற்கு பதினான்கு ஆண்டுகள் சென்று விட்டார்கள். பரதன் மேலும் பதற்றமடைந்தான். என்ன தவறு செய்தார் அண்ணன்  ஶ்ரீராமன்?. நிரபராதிகள் யாருக்கும் தண்டனை கொடுத்துவிட்டாரா? பிராமணர்கள் சொத்துகள் ஏதேனும் அபகரித்துவிட்டாரா? அண்ணன் சத்தியத்தை என்றும் கடைபிடிப்பவர்.  அவர் தவறு செய்திருக்க மாட்டார். எதற்காக வனவாசம் போகவேண்டும். ?வேறு யாரோ தவறுகள் செய்து இருக்கிறார்கள் ஏதோ சூழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. இந்த அக்கிரம காரியத்தை செய்ய வைத்தது யார்? என்ன நடந்தது சொல்லுங்கள் என்று பரதன் பதறினான்.
 
★அதற்கு கைகேயி ராமர் எந்த தவறும் செய்யவில்லை. உன் தந்தை ராமருக்கு பட்டாபிஷேகம் செய்து அரசனாக்க முடிவு செய்திருந்தார். அதற்கான பூர்வாங்க செயல்களிலும் மிக விரைவாக ஈடுபட்டார். குருநாதர் வசிஷ்டரிடம் ஆலோசனை செய்து பட்டாபிஷேகம் செய்ய நாள் குறித்தார். ஆனால் நான் உன்னுடைய நலனை கருத்தில் கொண்டு உன்னை அரசனாக்க முடிவு செய்தேன். உன் தந்தை பல காலங்களுக்கு முன்பு ஓர் இக்கட்டான நேரத்தில் எனக்கு இரண்டு வரங்கள் தருவதாக வாக்கு அளித்திருந்தார். அந்த வரத்தை இப்போது நான் கேட்டு பெற்றுக்கொண்டேன். 
 
★ஒரு வரத்தின்படி ராமருக்கு பட்டாபிஷேகம் செய்வதற்காக  நிர்ணயித்த அதே தினத்தன்று உனக்கு பட்டாபிஷேகம் செய்து உன்னை அரசனாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இதனால் உனக்கு ராமரினால் பாதிப்பு ஏதும் வந்து விடக்கூடாது என்று எண்ணி நாடு கடத்தும் முயற்சியாக இரண்டாவது வரமாக ராமனை பதினான்கு வருடங்கள் வனவாசம் செல்ல வேண்டும் என்று கேட்டேன். இரண்டாவது சத்தியத்தை உனது தந்தை நிறைவேற்ற முடியாமல் தவித்தார். அந்த ஒரு இக்கட்டான நிலையை  அறிந்த ராமன்  தந்தை கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற வனம் செல்ல முடிவு செய்தான். ராமரை தொடர்ந்து சீதையும் லட்சுமணனும் சேர்ந்து வனத்துக்கு சென்றுவிட்டார்கள்.
 
★இவை அனைத்தையும் நான் உனக்காகவே செய்தேன். ஆகவே இப்போது எப்படி  செயல்பட வேண்டும் என்பதை யோசித்து அதுபோலவே நீ உன் பணிகளை செயல்படுத்து. துக்கப்படாதே. உன்  மனதை ஒருமுகப் படுத்தி நிலையாக வைத்துக்கொள். நீ சத்திரிய வீரன். உனது தந்தை கையினால் ராஜ்யத்தை பெற்ற அரசகுமாரன் நீ.  இந்த நாடும் ராஜ்யமும் இப்போதும் மற்றும் எப்போதும்  உன்னுடையது. வசிஷ்டரின் ஆலோசனை பெற்று உன் தந்தையின் இறுதி சடங்கை சிறப்பாக  செய்து முடித்துவிட்டு பட்டாபிஷேகம் செய்துகொண்டு அரச பதவியை பெற்று அநேக சுகங்களை அனுபவிப்பாய் என்றாள்.
 
★பரதனுக்கு என்ன நடந்தது என்று இப்போது மிகநன்றாக புரிந்துவிட்டது.அவன் உடல் எங்கும் ஒருவித பதற்றம் தோன்றியது. காலடியில் இந்த உலகமே சுழலுவதைப்போல உணர்ந்தான். தனது தலை சுற்றுவதைப்போல ஓர் உணர்சி ஏற்பட்டு அப்படியே மயங்கி சரிந்தான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.......................
ஶ்ரீராம காவியம்
~~~~~
081 / 16-06-2021
 
பரதனின் கோபம்..
 
★மயக்கத்தில் சரிந்த தன் மகன் பரதனைப் பார்த்த கைகேயி அதிர்சியில் உறைந்தாள். நான் இவனுக்கு நன்மை தரும் நல்ல செய்தியைத்தானே கூறினேன். இதற்கு ஏன் மயக்கம் கொள்ள வேண்டும் என மகனை புரிந்து கொள்ளாத கைகேயி குழப்பமாக மகனைப் பார்த்தாள். பின்னர் தெளிவடைந்து மயக்கத்தில் இருந்து பரதனை விடுவிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டாள். அந்த 
செயல்களினால் மயக்கத்தில் இருந்து விடுபட்ட பரதன் தாய் கைகேயியைப் பார்த்தான். உடனே அவன் முகம் அடக்க முடியாத சினத்தினால் சிவந்தது.
 
★கோபத்தில் கைகேயியை பார்த்து கர்ஜிக்க ஆரம்பித்தான். 
தன்னுடைய நிதானத்தை இழந்து உரத்த குரலில் கடினமான சுடு சொற்களை  பேச ஆரம்பித்தான்.
பொல்லாத பாதகியே!  அன்னை வடிவில் வந்த அரக்கியே! உனக்குரிய வரங்களால் என்ன காரியத்தைச்  செய்துள்ளாய் என்று தெரியுமா? இக்ஷ்வாகு வம்சத்தில் மூத்த மகன்தான் அரசனாக முடிசூட வேண்டும் என்பது நம்முடைய பரம்பரை பாரம்பரியமாகும். புனிதம் வாய்ந்த அந்த பாரம்பரியத்திற்கு கேட்டை வரவழைத்திருக்கிறாய். 
 
★பதவி மோகம் உன்னுடைய அறிவை பாழ்படுத்திவிட்டது. உன்னை தனது அன்புக்குரிய மனைவியாக்கி எனது தந்தை பெரும் தவறு செய்துவிட்டார். அவர் உன் மேல் வைத்திருந்த  அன்பிற்கு கைமாறாக அவரை கொன்றுவிட்டாய். ராமன் தன் தாயை விட உன்னையே அதிகம் நேசித்தான். உனக்கு பலப்பல  பணிவிடைகளை செய்துள்ளான். அண்ணன் ராமன் உனக்கு செய்த பணிவிடைகளுக்கு கைமாறாக அவனை காட்டிற்கு அனுப்பிவிட்டாய்.
 
★உன்னைத் தன்  தங்கை போல் பாவித்த தாய் கௌசல்யைக்கு  இந்த மாபாதக கொடுமையை செய்திருக்கின்றாய். ஒரு செல்வ மகனைப்  பெற்ற அவளை அனாதையாக்கி விட்டு நீ உன் மகனுடன் மிக்க  சுகவாசியாக வாழலாம் என எண்ணுகிறாயா? உன் எண்ணம் கனவிலும் நிறைவேறாது. நீ செய்த இந்த பாவச்செயலுக்கு தண்டனையாக உன்னை கொன்று தள்ளுவதே முறை. ஆனால் உன்னைக் கொல்வதை எனது அண்ணன் ராமன் ஆமோதிக்கமாட்டான். அதனை முன்னிட்டு உனக்கு உயிர் பிச்சை தருகிறேன். நீ நாட்டுக்கும் வீட்டுக்கும் சிறிதும் உதவாதவள். கெட்ட வழியில் சென்று தருமத்தை வதைத்துக் கைவிட்டவள். என் தந்தை சென்ற சொர்க்கம் உனக்கு கிடைக்காது. உனக்கு நரகமே கிடைக்கும். நீ பெரும் துக்கத்தை அடைந்து மரணத்தை பெருவாய். இது நிச்சயம்.
 
★இந்த உலகத்தை ஆள்வதற்கு மகா பராக்கிரமசாலியான என் தந்தை ராமன் மற்றும் தம்பி லட்சுமணனையே தனது பக்க பலமாக கருதினார். அவர்களை வனம்  அனுப்பி விட்டு என்னை அரசனாக சொல்கிறாயே. இது தகுமா? இவ்வளவு பெரிய ராஜ்யத்தை ஆள என்னால் முடியுமா?. உன் ஆசை ஒரு நாளும் நிறைவேறாது. அதை நிறைவேற்றவும் விட மாட்டேன். எனக்கு ராஜ்யத்தை பெற்றுக் கொடுத்து விட்டதாக இன்பத்தில் மிதக்கிறாய். 
 
★உன் முன்னிலையில் சபதம் செய்கிறேன் கேட்டுக்கொள். ராமன் இல்லாத அயோத்தியில் பரதன் இருக்க மாட்டான். ராமன் அரச உடையை களைந்து தபஸ்விகளுக்கான உடையை அணிந்து கொண்டிருப்பதை போல் நானும் அதே உடையை அணிந்து கொள்வேன். எமது தந்தைக்கான கடமையை செய்து முடித்துவிட்டு ராமரை தேடிக் கொண்டு காட்டிற்கு செல்வேன். எனது ராமனை அழைத்து வந்து அரசனாக்கி இந்த மகா பெரிய ராஜ்யத்தை அவரிடம் திரும்ப ஒப்படைத்து அவருக்கு ஒரு அடிமையாக இருந்து நீ எனக்கு தேடித்தந்த பழியை போக்கிக் கொள்வேன். 
 
★ராட்சசியே!  உன்னுடைய மகன் பரதன் என்ற எண்ணத்தை நீ இப்போதே மறந்துவிடு. இந்தப் பெரிய பாவச்செயல் புரிந்த உன்னை என் தாயாக நான் ஏற்க முடியாது. தாய் என்ற புனிதமான சொல்லுக்கு அருகதையற்றவள். அன்னை  ஸ்தனத்தில் இருந்து நான் உன்னை துறந்துவிட்டேன். கௌசலையும் சுமத்ரையுமே இனி என் தாய்மார்கள். ஆகவே அவர்களை பார்க்க நான் அங்கு செல்கிறேன். என்னை இனி நீ பார்க்க முடியாது என்று உரக்க சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் பரதன்.
 
★பரதன் வந்துவிட்டான் என்ற செய்தி அரண்மனை முழுவதும் பரவியது. பரதன் வந்து விட்டதை அறிந்த கௌசலை சுமித்ரையை அழைத்துக்கொண்டு பரதனை பார்க்க புறப்பட்டாள். அப்போது பரதனும் சத்ருக்கனனும் அங்கு வந்து சேர்ந்தனர். ராஜ்ஜியம் தனக்கு மிக எளிதில் கிடைத்து விட்டது என்று எண்ணி கொண்டு  பரதன் கேகய நாட்டில் இருந்து பட்டாபிஷேகம் செய்து அரசனாக முடிசூட்டிக்கொள்ள விரைந்து வந்துவிட்டான் என்று கௌசலை எண்ணினாள். 
 
★கோபத்தில் பரதனிடம் எந்த ஒரு இடைஞ்சலும் இல்லாமல் உனக்கு அரச பதவியை தாய் கைகேயி பெற்றுக் கொடுத்து விட்டாள். அதனை ஏற்றுக் கொள். சுகமாக வாழ்வாய். உனது தந்தையை எரியூட்டும் அந்த நெருப்பில் வீழ்ந்து நானும் அவருடன் மேலுலகம் சென்று விடுகிறேன். இங்கு நீயும் உனது தாயும் மகிழ்ச்சியுடன் இருங்கள் என்று புலம்பினாள். அன்னை 
கௌசலையின் கொடிய விஷம் போன்ற பேச்சைக்கேட்ட பரதன் வேதனையில் கௌசலையின் இருகால்களையும் இறுக  கட்டிப்  பிடித்தான். 
 
★தாயே!  நான் கேகய நாட்டில், வெகு தூரத்தில் இருந்தது தங்களுக்கு தெரியும். இங்கு நடந்த கொடூரமான சூழ்ச்சி நான் அறியாமல் நடந்துவிட்டது. நான் அண்ணன் ராமன் மேல் நான் வைத்திருக்கும் அன்பை மிகவும் நன்றாக தாங்கள் அறிவீர்கள். இந்த பாவச்செயலில் எள் அளவு  கூட  என் பங்கு இருந்தாலும் நான் பெற்ற சகல அறிவும் ,  ஞானமும் என்னை விட்டுப் போகட்டும். இந்த உலகத்தில் யார் எந்த பாவம் செய்தாலும் அதனுடைய கர்மபலன் எல்லாம் என்னேயே வந்து சேரட்டும் என சத்தியம் செய்கிறேன் 
 
★தாயே!. நடந்தவைகளுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னை பெற்ற தாய் செய்த சூழ்ச்சி எனக்கு சிறிதும் தெரியாது. இந்த சூழ்ச்சிக்கு நான் உடன்பட மாட்டேன். அரச பதவியை ஏற்க மாட்டேன். என் அண்ணன் ராமரை மீண்டும் அழைத்து வந்து அவரையே அரசனாக்குவேன். ஒரு பாவமும் அறியாத என்னை தயவுசெய்து துன்பப்படுத்தாதீர்கள் என்று சொல்லி மயக்கம் அடைந்தான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை......................
ஶ்ரீராம காவியம்
~~~~~
082 / 16-06-2021
 
பரதன் வேதனை...
 
★பரதனின் மயக்கத்தை தெளிய வைத்த கௌசலை பரதனின் உள்ளத்தை அறிந்தாள். பரதனை பற்றி தான் எண்ணியது தவறு என்பதையும் உணர்ந்தாள். பரதனைப்பார்த்து, அன்புக்குரிய மகனே! உன்னுடைய துக்கத்தை பார்த்து என் மனம் இரண்டு மடங்கு துக்கமடைகிறது. ஆனால்  உன் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்ட என்னுடைய மனம் சிறிதளவு துக்கத்தை மறந்து உள்ளது. நடந்தவைகளுக்கு நாம் ஒன்றும் செய்ய இயலாது. நாம் அனைவரும் விதிக்கு வசப்பட்ட மனிதர்களாக இருக்கிறோம். புண்ணியவான்களுடைய பதவிகள் எல்லாம் உன்னை வந்து அடையட்டும் என்று ஆசிர்வதித்தாள்.
 
★பரதன் வசிஷ்டரை சந்தித்து தன் தந்தைக்கான காரியங்களை மிக விரைவில் செய்து முடிக்க வேண்டும் என்று வணக்கத்துடன் கேட்டுக்கொண்டான். தசரதர் தன் மரண தருவாயில் கைகேயி எனக்கு மனைவியும் இல்லை, பரதன் எனக்கு மகனும் இல்லை எனக் கூறி தன்னுடைய  கடைசி ஈமச்சடங்குகளை பரதன் செய்ய கூடாது என்று சொன்னதை அறிந்து மிகவும் மனம்  வருந்தி துடித்தான், பரதன்.  தந்தைக்கு இறுதிச் சடங்குகள் செய்யக்கூட தகுதியில்லாமல் தன்னைச் செயலற்றவனாக ஆக்கிவிட்ட தாயான கைகேயியை வெறுத்து தூற்றினான். சத்ருக்ணன், தசரதனின் இறுதி ஈமச்சடங்கு அனைத்தையும்  செய்தான். அதன் மூலம்தான் தாய்க்கு தலைப்பிள்ளை,  தந்தைக்கு கடைப்பிள்ளை என்னும் ஓர் சம்பிரதாயம் உருவானது.
 
★தசரதரின் இறுதிக்காரியத்தை மன்னனுக்குரிய முறைப்படி செய்து முடித்தார்கள். தந்தையை எண்ணி அழுது புலம்பிய பரதன் மற்றும் சத்ருக்கணனை அரசகுரு வசிஷ்டருடன்  பல அறிஞர்களும் சமாதானம் செய்ய முயற்சி செய்தார்கள். மறுநாள் காலை வசிஷ்டரும் மந்திரிகளும் அரச சபையை தகுந்த முறைப்படி கூட்டினார்கள். பரதனுக்கு தூது அனுப்பி பரதனை அரசவைக்கு வரவழைத்தார்கள். சங்குகள் வாத்யகோஷங்கள்   முழங்க பரதனை வரவேற்றார்கள். "நிறுத்துங்கள் அனைத்தையும் "  என்று பரதன் கத்தினான். 
 
★சத்ருக்ணனை பார்த்து ராஜ்யம் வேண்டாம் என்று சொல்லிவிட்ட பிறகு என்னை ஏன் இவ்விதம் துன்புறுத்துகிறார்கள்?. தாய் செய்த சூழ்ச்சியால் இந்த நாடு நல்ல அரசரை இழந்து தவியாய் தவிக்கிறது.  இதில் எனக்கு இந்த வரவேற்பு தேவையா? என்று சொல்லி துக்கப்பட்டான். வசிஷ்டர் பரதனிடம் நாடு அரசன் இல்லாமல் இருக்ககூடாது நாட்டிற்கு அது நல்லது இல்லை. ராமர் தற்போது இங்கு இல்லை. ஆகவே அவருக்கு அடுத்துள்ள  தாங்கள்தான் அரச பட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதில் எந்த தவறும் இல்லை. ஆகவே நீங்கள் இந்த நாட்டின் அரசராக முடிசூட்டிக் கொள்ளக் கேட்டுக் கொள்கிறேன்.
 
★அதற்குரிய ஏற்பாடுகள் அனைத்தையும் தங்கள் தந்தை இருக்கும் போதே ராமருக்காக செய்து வைத்திருந்தார். ஆகவே இப்போது அந்த ஏற்பாட்டின் படி நீங்கள் பதவி ஏற்றுக்கொண்டு இந்த நாட்டை காப்பாற்றுங்கள் என்று கூறினார். சபையோர்கள் இதனை ஆமோதித்தார்கள். அனைத்தையும் கேட்ட பரதன் பட்டாபிஷேகத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த யாக குண்டம் மற்றும் யாக பொருட்களை வலம் வந்து அனைவரையும் கைகூப்பி வணங்கினான்.
 
★அரச சபையில் கூடியிருந்த அனைவருக்கும் ஒரு செய்தி சொல்கிறேன். நன்றாக  கேட்டுக் கொள்ளுங்கள். நான் நல்ல முறையில் வளர்க்கப்பட்டவன். இக்ஷ்வாகு வம்சத்தின் அரச குலத்தின் பண்பாட்டை அறிந்து கொண்டவன். இந்த இக்ஷ்வாகு குல வழக்கப்படி மூத்தவரே அரசனாக மூடிசூடிக் கொள்ள வேண்டும். மூத்த குமாரனுக்கு உரிமையான ராஜ்யத்தை என்னை எற்றுக்கொள்ளும்படி வற்புறுத்துகின்றீர்கள். குல வழக்கத்திற்கு மாறாக நீங்கள் சொல்வதில் எனக்கு சிறிதும் உடன்பாடில்லை. எனக்கு உரிமையற்ற பதவியை நான் ஏற்க மாட்டேன். இந்த ராஜ்யத்தை ஏற்க தகுதியானவர் என் ராமன் ஒருவரே. 
 
★எங்களின் இக்ஷ்வாகு குல மூதாதையர்களான திலீபன் நகுஷன் போன்ற பலருக்கு சமமானவர் அண்ணன் ராமன். மேலும் எம்குலத்தின் மூத்த இளவரசரான ராமர் மற்றும் சீதை லட்சுமணன் இப்போது வனத்தில் இருக்கிறார்கள். இங்கிருந்தே வனத்திலிருக்கும் ராமரை வணங்குகின்றேன். ராமருக்கு வனத்திலேயே முடிசூட்டி அயோத்திக்கு அரசனாக்கி அரண்மனைக்கு அழைத்து வர வேண்டும் என்று தீர்மானித்து இருக்கிறேன். இதற்கு வேண்டிய பரிவாரங்களை திரட்டி அந்த வனத்திற்குள் ராமருக்கு பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடுகள் செய்யுங்கள். இது உங்களுடைய கடமை. இதுவே என்னுடைய முடிவு என்று தீர்மானமாக சொன்னான். 
 
★பரதன் கூறியதை கேட்ட  அங்கு இருந்த அனைவரும் தங்களை அறியாமல் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். சுமந்திரரைப் பார்த்த பரதன் ராமர் சென்ற வனத்திற்கு செல்லும் ஏற்பாட்டை உடனே செய்யுமாறு கட்டளை இட்டான்.பரதனுடைய இந்த யோசனையை அனைவரும் ஏற்றுக்கொண்டு அதற்கான பணிகளை விரைவாக செய்ய ஆரம்பித்தார்கள். 
 
★வனப்பிரதேசத்தை நன்கு அறிந்தவர்கள், காட்டு வழியில் மிருகங்களை தாண்டி செல்ல பயிற்சி பெற்றவர்கள், கரையை கடக்க படகுகளை செய்யத் தெரிந்தவர்கள், ராமருக்கு பட்டாபிஷேகம் செய்வதற்காக யாகம் செய்ய அந்தணர்கள், அனைத்து பொருட்களையும் சுமந்து செல்ல பணியாளர்கள் என்று பெரும் கூட்டத்துடன் பரதன் தலைமையில் திரளாகப் புறப்பட்டார்கள். நாட்டு மக்கள் அனைவரும் ராமரை பரதன் எப்படியாவது அழைத்து வந்து விடுவார் என்று நம்பினார்கள். ராமன் இப்போதே அயோத்திக்கு வந்துவிட்டதை போல் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.....................
ஶ்ரீராம காவியம்
~~~~~
083 / 18-06-2021
 
பரதன் குகன் சந்திப்பு...
 
★பரதனுடன் சேர்ந்து புறப்பட்ட அனைவரும் தங்கள் உள்ளம் கவர்ந்த ராமனைக் கண்குளிரக் காணப் போகிறோம் என்று மகிழ்சிக் கூக்குரலிட்டவாறே ஆர்பாட்டமாக வந்தனர். மற்றும் பலர் பாட்டுக்கள் பல பாடிக் கொண்டும் இசைக் கருவிகளை இசைத்துக் கொண்டும் வந்தனர். இத்துடன் யானைகளின் பிளிறல் குதிரைகளின் கனைப்புச் சத்தங்களும் சேர்ந்து கொண்டு  அமைதியை குலைத்தன. இந்த கும்பலில் அமைதியாக வந்தது தசரதனின் தேவியர் மூவர் மற்றும் வசிஷ்டர் மாத்திரமே.
 
★பரதனும் தம்பி  சத்ருக்ணனும் தவக்கோலம் பூண்டு, அனைத்து பரிவாரங்கள் புடைசூழ ராமரை காண கானகம் புறப்பட்டனர். 
இளவல் பரதன் தன்னுடன் வந்த கூட்டத்துடன் முதலில் கங்கை கரையை அடைந்தான். சுமந்திரர் பரதனிடம் இங்கு தான் ராமர் ரதத்தில் இருந்து இறங்கிவிட்டு  என்னை அயோத்திக்கு  திரும்பி செல்லுமாறு உத்தரவிட்டார் என விளக்கி கூறினார். கரைக்கு அப்பால் இருக்கும் பிரதேசத்தின் தலைவராக குகன் என்பவர் இருக்கின்றார். அவரிடம் கேட்டால் ராமர் சென்ற அந்த பாதையை நமக்கு காட்டுவார் என்று கூறினான்.
 
★கங்கை கரைக்கு எதிர்புறம் இருந்த குகன் அக்கரையில் பெரும்படை தங்கியிருப்பதை பார்த்தான். தன் அருகில் இருப்பவர்களிடம் பெரும் படை ஒன்று அக்கரையில் இருக்கிறது அவர்கள் இக்கரைக்கு வர முயற்சி செய்வது போல் தெரிகிறது. எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் நம்முடன் இருப்பவர்களை எச்சரிக்கை செய்யுங்கள் என்று உத்தரவு இட்டான். குகனின் கண்களுக்கு அந்த கூட்டத்தில் இருந்த  கொடி தென்பட்டது. அக்கொடியானது  அயோத்தி நாட்டின் கொடி என்பதை அறிந்தான் குகன். 
இந்த பரதன் அரசாட்சியை கவர்ந்து கொண்டதோடு மட்டுமில்லாமல் ராமரை இடர் செய்வதற்காக கானகம் வந்துள்ளான் என எண்ணினான். பரம ஏழையும் வேடனுமாகிய  என்னை இராமர் தம்பி என்று சொன்னாரே. அந்த ஒரு சொல்லுகாக நான் உயிரையும் இராமருக்காக தருவேன் என்று நினைத்தான்.
 
★வேடர்களே!, எதிர் புறத்தில் பரிவாரங்களுடன் வரும் பரதனோடு  போர்புரிய நீங்கள் ஆயத்தமாக இருங்கள் என்று உத்தரவிட்டான். பின்னர் குகன் போர் பறையறைந்தான். போர் பறையறந்ததை கேட்ட பரதன், அண்ணாவைத் தேடி மனம் நொந்து வரும் நம்மீது போர் புரிகின்றவர் யார்? என்று  அமைச்சர் சுமந்திரரிடம்  கேட்டார். பெருமானே! அவர்தான் கங்கை கரைக்கு அதிபரான குகன் என்னும் வேடன் . அவர் தாங்கள் ராமரை இடர் செய்ய வருவதாக எண்ணி போருக்கு ஆயத்தம் புரிகின்றார்,என பதிலுரைத்தார்.
வேடனுக்கு கூட என் மீது இந்த அளவு கோபமா? நான் என்ன பாவம் செய்தேன் என்று மிகுந்த வருத்தமாகக் கூறி சேனைகளை அங்கேயே நிறுத்துவிட்டு பரதன் குகனை பார்க்க சென்றார். அவரை பின் தொடர்ந்து தம்பி சத்ருக்ணனும் சென்றார். தவக்கோலம் பூண்டிருந்த இருவரும் கங்கைகரையில் அங்கங்கள் பூமியில்பட விழுந்து வணங்கினார்கள். பின்னர் கண்களில் நீர் சொரிய கைகூப்பி  வணங்கியபடியே நின்று கொண்டிருந்தார்கள்.
 
★பரதர் தொலைவில் நின்று இருப்பதை கண்டார் குகன். அவர்  ராமர் அண்ணாவை போல் இருக்கின்றாரே, அவருக்கு பின்னே நிற்பவர் லட்சுமணர் போல் இருக்கின்றாரே எனக்கூறி ராமர் சென்ற திசை நோக்கி தொழுது வணங்கினான்,
தன்னுடன் இருந்தவர்களிடம் நம்மிடம் இருக்கும்  அனைத்து வீரர்களையும் ஆயுதங்களுடன் போருக்கு தயார் நிலையில் இருக்க சொல்லுங்கள். நல்ல எண்ணத்துடன் இவர்கள் ராமரை தேடி வந்தால் கங்கை கரையை கடக்க இவர்களுக்கு உதவி செய்வோம். ராமரை கொல்லும் எண்ணத்துடன் வந்திருந்தால் இவர்கள் கங்கையை கடக்க விடக்கூடாது. இங்கேயே தடுத்துவிட வேண்டும் என்று தனது சகாக்களுக்கு உத்தரவு இட்டான் குகன். பரதனின் மன நிலையை அறிந்து கொள்ள ஒரு சிறிய படகில் குகன் சில பரிசுப்பொருட்களுடன் பரதனை சந்திக்க சென்றான்.
 
★குகன் படகில் வருவதை பார்த்த சுமந்திரர் பரதனிடம் வருபவர் இப்பிரதேசத்தின் தலைவர். இவரது பெயர் குகன். ராமரிடம் நிறைய அன்பினை வைத்திருப்பவர். அவர் நம்மை வரவேற்க வருகின்றார் போலும். இவருடைய குலத்தவர்களுக்கு அக்காட்டின் உள்ள அனைத்து இடங்களும் மிகவும் நன்றாக தெரியும். ராமர் சென்ற இடத்தை இவரிடம் கேட்டு நாம் தெரிந்து கொள்ளலாம். இவர் கூறும்  ஆலோசனைப்படி சென்றால் விரைவாக நாம் ராமர் இருக்கும் இடம் சென்று அடையலாம் என்றான். 
 
★நதியைத் தாண்டிய. குகன், அழுத கண்களுடனும் உருகிய உள்ளமுடனும் தவக்கோலத்தில் நிற்கும் பரதனைக்  கண்டார். ராமர் அண்ணாவிடம் ஒரு நாள் பழகிய எனக்கே நற்குணங்கள் இருக்குமானால், அந்த ராமர் அண்ணாவின் உடன் பிறந்த பரதனுக்கு தீய குணம் என்பது  ஒருபோதும் இருக்காது. நான் ஒரு அவசரக்காரன். நல்லவரை தீயவர் என எண்ணிவிட்டேன். பரதன் அருகில் வந்து உடனே அவருடைய திருவடியில் விழுந்து வணங்கினான், குகன். பரதர் குகனை கட்டி தழுவி கொண்டார்
 
★எனது பொருள்கள் எல்லாம் உங்களுடையதாக பாவித்து என்ன வேண்டும் என்று நீங்கள் கேளுங்கள். தங்களது அந்த தேவையை என்னால் இயன்ற வரை நிறைவேற்றுகின்றேன். ராமரின் தம்பியான தங்களுக்கு பணி செய்வது எனது பாக்கியம் என்றான் குகன். அதற்கு பரதன் ராமரை தேடி வந்திருக்கிறோம். அவர் இருக்கும் இடத்திற்கு நாங்கள் அனைவரும் செல்ல வேண்டும். எங்களுக்கு கரையை கடக்க உதவி செய்து ராமர் தற்போது இருக்கும் இருப்பிடம் எங்கே இருக்கிறது?. எப்படி செல்ல வேண்டும்? என்று சொன்னால் பெரிய உதவியாக இருக்கும் என்றான் குகனிடம்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை........................
ஶ்ரீராம காவியம்
~~~~~
084 / 19-06-2021
 
பரதன் பரத்வாஜர்
ஆஸ்ரமம் வருகை...
 
 
★குகன் பரதரை பார்த்து, அதற்கு தாங்கள் ஏன் தவக்கோலத்துடன் வனத்துக்கு வந்துள்ளீர்கள்? என வினவினான். பரதன் அதற்கு, , அரசக்குலத்தில் மூத்தவன் தான் ஆட்சி புரிய வேண்டும். ஆகவே அண்ணன் ராமர் இருக்க நான் ஆட்சி புரியலாமா? ஆதலால் தான் தவக்கோலத்தில் இருக்கும் அண்ணனை அழைத்து செல்ல நானும் அதுபோலவே இங்கு வந்துள்ளேன் என்றார். இதை கேட்ட குகன் மகிழ்ச்சியால் துள்ளி குதித்தான். பரதா! தாய் வரம் கேட்க, தந்தை தந்த மகத்தான அரச பதவியை உதறி தள்ளிவிட்டு கானகம் செல்ல தவக்கோலத்துடன் வந்த உனக்கு ஆயிரம் இராமர்கள் ஒன்று சேர்ந்தாலும் ஈடாகுமா? உன்னை போன்ற உத்தம குணங்கள் நிறைந்தவர் இவ்வுலகில் இல்லை எனக் கூறினான் குகன்.
 
★கங்கை கரையை கடக்க தங்களுக்கு உதவி செய்து ராமர் சென்ற பாதையை உங்களுக்கு காட்டுகின்றோம். ஆனால் எனக்கு ஒரு சிறு சந்தேகம் இருக்கின்றது. இவ்வளவு பெரிய படையுடன் ராமரை தேடி வந்திருக்கின்றீர்கள். எதற்காக இவ்வுளவு பெரிய படை ? மேலும் ராமரை திரும்ப அழைத்துச் செல்ல நீங்கள் இருவர் மட்டும் வந்தால் போதாதா? என்ற என் சந்தேகத்தை தாங்கள் தீர்த்து வைத்தால் காலதாமதமின்றி இப்போதே தங்களுக்கு மிகவும் தேவையானதை நான் செய்து கொடுக்கின்றேன் என்றான் குகன்.
 
★குகன் கேள்வி கேட்ட அந்த  பாவனையில் இருந்து அவன் ராமரின் மேல் வைத்திருக்கும் அன்பை உணர்ந்தான் பரதன். கைகேயி செய்த சூழ்ச்சியால் ராமருக்கு தான் விரோதி போல் அனைவராலும் பார்க்கப் படுவதை தெரிந்து கொண்டான். பரதனுடைய உடம்பெல்லாம் வியர்த்தது. தந்தை இறந்த துக்கத்துடனும் ராமர் பிரிந்த துக்கத்துடனும் இருந்த பரதன் குகனின் வார்த்தையால் மேலும் வேதனைப்பட்டு உடலெல்லாம் எரிவதை போன்று உணர்ந்தான். அன்பு குகனே! நீங்கள் எதுவும் சந்தேகப்படவேண்டாம். தந்தை இழந்த எனக்கு மூத்தவரான அண்ணன் ராமர்தான் தந்தை ஆவார். அவரை எப்படியாவது அயோத்திக்கு அழைத்துச் சென்றுவிட வேண்டும் என்ற எண்ணத்தில் வந்திருக்கிறேன். தெய்வத்தின் மீது ஆணையாக சொல்கிறேன். என் உள்ளத்தில் வேறு எந்த எண்ணமும் இல்லை என்றான். ராமர் மேலிருந்த அன்பும் ராமரை பிரிந்த துக்கமும் பரதனின் முகத்திலும் பேச்சிலும் கண்ட குகன் உள்ளம் பூரித்தான். தானாக வந்த ராஜ்யத்தையே தனக்கு வேண்டாம் என்று துறந்த தங்களை போன்ற மகானை பார்ப்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன். உங்களை சிரமம் இல்லாமல் நான் அழைத்துச் செல்கிறேன் என்று கங்கை கரையை பரதனின் பெரும் படைகள் கடப்பதற்கான எல்லா ஏற்பாடுகளை செய்ய அவன் தன் வீரர்களுக்கு உத்தரவிட ஆரம்பித்தான்.
 
★அப்போது பரதன் குகப் பெருமானே அண்ணன் ராமர் இங்கு எந்த இடத்தில் தங்கி இருந்தார் எனக் கேட்டான்.
பரதர்,  குகன் ராமர் தங்கி இருந்த ஆசிரமத்தை காட்டினான். பரதர் ஆசிரமத்தை பார்த்து மிகவும் கண்கலங்கி வருந்தினார். குகப் பெருமானே! லட்சுமணர் எங்கே படுத்து உறங்கினார்?. குகன், லட்சுமணர் சிறிது நேரம் கூட படுத்து உறங்கவில்லை. அவர் ராமரும், சீதையும் உறங்க விடியும் வரை வில்லூன்றி கண் இமைக்காமல் நின்று காவல் புரிந்தார் என்றான் குகன்.
 
★பிறகு அனைவரும் கரையை கடக்க படகுகளில் ஏறினார்கள். தசரதரின் குடும்பத்தினர் தனி படகில் சென்றனர். குகன், மிக துயரமாய் அமர்ந்திருக்கும் கௌசலையை பார்த்து இவர் யார் எனக் கேட்டார். குகன் அண்ணா, பன்னிரண்டு மாதம் சுமந்து பெற்ற ராமனின் தாய் கௌசலை என்றார், பரதர். குகன் கௌசலையின் மலரடியில் வீழ்ந்து பணிந்து வணங்கினான். கௌசலை, பரதா குழந்தை போல் அழும் இந்த மகன் யார்? என்று கேட்டாள். பரதர், அம்மா இவர் ராம் அண்ணாவுக்கு தம்பி, எனக்கும், லட்சுமணருக்கும், சத்ருக்ணனுக்கும் தமையன் என கூறினார். கௌசலை, ஐவரும் பல்லாண்டு அரசு புரிந்து ஒற்றுமையாக வாழுங்கள் என்று ஆசி கூறினாள். பரதர் மற்ற தாய்மார்களையும் அறிமுகம் செய்தார்.சுமித்திரை,கைகேயி இருவரையும் கீழே விழுந்து வணங்கிய குகன் அவர்களிடமும் ஆசிகளைப் பெற்றான். 
 
★கங்கை கரையை பெரும் படைகள் கடந்தது பெரிய படகுத் திருவிழாவைப் போல் இருந்தது. கரையை கடக்கும் போது ராமர் எங்கு சாப்பிட்டார். எங்கு தங்கினார், என்ன சொன்னார் என்று குகனிடம் மிக ஆர்வமாக கேட்டுக்கொண்டே பரதன் பயணித்தான். குகனும் ராமர் அமர்ந்த இடம் உணவருந்திய இடம். இரவு களைப்பாறிய இடம் என்று அனைத்தையும் சுட்டிக் காட்டிக்கொண்டே சென்றான். லட்சுமணனை பற்றி கேட்டான் பரதன். இரவு முழுவதும் சிறிது கூட தூங்காமல் ராமருக்கும் மாதா சீதைக்கும் காவலிருந்து லட்சுமணனும் தானும் பேசிக் கொண்டிருந்ததை விவரித்தான் குகன்.
 
★காட்டின் நடுவே ரம்யமான சோலையும் மத்தியில் பரத்வாஜ முனிவரின் ஆசிரமம் இருந்ததை கண்டு அனைவரும் அங்கு வந்து சேர்ந்தார்கள். 
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை....................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
085 / 20-06-2021
 
பரத்வாஜரின் உபசரிப்பு...
 
★பரத்வாஜ முனிவரின் ஆசிரமம் அது என்பதை உறுதி செய்து கொண்டு தன்னுடன் வந்தவர்கள் அனைவரையும் வெளியே நிற்க வைத்துவிட்டு பரதன், வசிஷ்டர் மற்றும் சில முக்கிய பிரமுகர்கள் மட்டும் உள்ளே சென்றனர். பரத்வாஜ முனிவரை பரதன் வணங்கினான். வந்தவர்கள் யார் என்பதை அறிந்த பரத்வாஜ முனிவர் வசிஷ்டருக்கும் பரதனுக்கும் செய்ய வேண்டிய வரவேற்பு உபசாரங்களை  முறைப்படி செய்து முடித்து பின் அவர்கள் ராமரை தேடித்தான்  இங்கு வந்திருக்கின்றார்கள் என்பதை அறிந்து கொண்டார்.
 
★பரத்வாஜ முனிவர் பரதனிடம் உன் பொறுப்பு அயோத்தியில் இருக்கின்றது. அங்கு அதை விட்டுவிட்டு நீ ஏனப்பா  இங்கு வந்திருக்கின்றாய்?. உனது தாயின் வரத்தின் படி தசரதர் ராமரை காட்டிற்கு செல்லுமாறு அனுப்பி விட்டார். அவருடன் சீதையும் மற்றும் லட்சுமணனும் இப்போது காட்டில் வசித்து வருகின்றார்கள். ராமரால் உன்னுடைய ராஜ்யத்திற்கு மேலும் ஏதாவது சில இடையூறு இருக்கின்றதா? ஆகவே  அதனை தீர்த்துக் கொள்ள அவரை தேடிக் கொண்டு வந்திருக்கின்றாயா? என்று கேட்டார். இதனைக் கேட்ட பரதன் தாங்களும் என்னை சந்தேகப்பட்டு விட்டீர்களா? நான் என்ன செய்வேன்.?  என்னைப் பெற்றவள் நான் இல்லாத போது என் சம்மதம் இல்லாமல் இந்த காரியத்தை செய்துவிட்டாள். எப்படியாவது என் அண்ணன்  ராமனை அயோத்தி நகருக்கு அழைத்துச் சென்று அவரை அரசராக்கி என் ஆயுளுக்கும் அவருக்கு அடிமையாக இருந்து என் மீது சுமத்தப்பட்ட பழியை போக்கிக் கொள்ளவே தேடிக் கொண்டு வந்திருக்கின்றேன். என் மீது குற்றம் சொல்லாதீர்கள் என்று கதறி அழுதான் பரதன்.
 
★பரத்வாஜ முனிவர் சிரித்தார். பரதா!  உன் உள்ளம் எனக்கு நன்கு தெரியும். ரகு வம்சத்தில் தசரதன் மகனாகப் பிறந்த உன்னை நான் வெகுநாளாக அறிவேன். ராமரிடத்தில் நீ வைத்துள்ள பக்தி, அன்பு இன்று போல் என்றும் உறுதியாக உன் உள்ளத்தில் இருந்து உன் புகழ் வளர்ந்து ஓங்குவதற்காகவும் உன்னுடைய குணத்தை இந்த உலகிற்கு காட்டி உன் உயர்ந்த உள்ளத்தையும் பெருமையையும் உலகம் அறிந்து கொள்ளட்டும் என்பதற்காகவே அவ்வாறு நான் கேட்டேன்.ஆகவே நீ  வருத்தப்பட வேண்டாம். ராமர் சித்திரக்கூட மலையில் இருக்கிறார். அவர் இருக்குமிடம் செல்வதற்கான வழியை சொல்கின்றேன். இன்று இரவு இங்கு தங்கியிருந்து உன் களைப்பை தீர்த்துக்கொள். நாளை காலை இங்கிருந்து கிளம்பி ராமரை சந்திக்க செல் என்று கூறினார். அதற்கு பரதன் முனிவரே!  தாங்கள் எனக்கு இப்போது அளித்த வரவேற்பு விருந்தில் நான் மிகவும் திருப்தி அடைந்துவிட்டேன். மேலும் தங்களுக்கு தொந்தரவு தர விரும்பவில்லை.  ஆகவே நான் இப்போதே கிளம்புகின்றேன் என்றார்.
 
★பரதா! உனது  பக்திக்கும் பதவிக்கும் தக்க உபசாரங்களை செய்ய கடமைபட்டிருக்கின்றேன். நீ இன்று இரவு இங்கேயே தங்க வேண்டும். நீ இன்று தங்கினால் நான் மகிழ்ச்சி அடைவேன். உன்னுடைய படை பரிவாரங்கள் எல்லோரும் ஏன் தூரத்திலேயே இருக்கின்றார்கள்?. அவர்களை ஏன் இங்கு உள்ளே அழைத்து வரவில்லை? என்று கேட்டார். படைபரிவாரங்கள் ரிஷிகளின் ஆசிரமத்திற்கு அருகில் செல்லக்கூடாது என்ற நியமப்படி இங்கே அழைத்து வரவில்லை. மேலும் என்னுடன் வந்திருக்கும் கூட்டம் மிகப்பெரியது. இங்கு அழைத்து வந்தால் உங்களுக்கு தொந்தரவாக இருக்கும். எனவே தூரத்திலேயே நிறுத்தி வைத்து விட்டேன் என்றான். அதற்கு பரத்வாஜ முனிவர் அங்குள்ள அனைவரையும் இங்கு அழைத்து வா! என்று கேட்டுக்கொண்டார். பரதனும் அவ்வாறே தூரத்தில் இருந்த தனது படைகளுக்கு உத்தரவிட்டான். அனைத்து படைகளும் ஆசிரமத்திற்குள் நுழைந்தது. பரத்வாஜ முனிவர் மந்திரங்களை சொல்லித் தன் தவ வலிமை கொண்டு   மயன், வருணன், குபேரன், அக்னி முதலிய தேவர்களையெல்லாம்  வரவழைத்து நான்  பரதனின் படைகளுக்கு விருந்தளிக்க விரும்புகின்றேன். அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்வீர்களாக! என்று கேட்டுக் கொண்டார்.
 
★காட்டிற்குள் உடனடியாக பல அற்புதங்கள் நிகழ்ந்தன. அந்த விந்தைகள் அனைவரையும்  வியக்க வைத்தன. மிகப்பெரிய  செல்வத்தை வைத்திருக்கும் ஒரு மன்னன் மற்றோரு மன்னருக்கு விருந்தளிப்பது போல் அந்தக் காட்டிற்குள் ஒரு கணத்தில் பல பெரிய மாற்றங்கள் உண்டாகின. அகில் சந்தனம் புஷ்பம் மேலும்  வாசனை திரவியங்களுடன் அவரவர்களுக்கு தகுந்தார் போல் வீடுகள் அமைந்தன. அங்கிருந்த அனைவர்களுக்கும் பிடித்தமான உணவு வகைகள் நிறைய  வந்த வண்ணமாகவே இருந்தது. தெய்விக ரீதியில் காதுகுளிர மெல்லிய சங்கீதம் இசைக்கப் பட்டுக் கொண்டிருந்தது. படை பரிவாரங்கள் தங்களை மறந்து அனைத்தையும் மிகமகிழ்சியாக அனுபவித்தார்கள். இதற்கு மேல் நாம் காட்டிற்குள் செல்லவே வேண்டாம். அயோத்திக்கும் செல்ல வேண்டாம். இங்கேயே என்றும் தங்கிவிடலாம் என்ற எண்ணினார்கள். தேவலோக நந்தவனத்தில் இருப்பதைப் பொன்று உணர்ந்தார்கள். எல்லைமீறி அனுபவித்ததும் மெய்மறந்தும் தூங்கிவிட்டார்கள். காலை விடிந்ததும் இரவில் நடந்தது கனவு போல் அங்கிருந்த அனைத்தும் மறைந்து விட்டது. நடந்தது கனவா? இல்லை இது நனவா? என்று சிறிதும் விளங்க இயலாமையால் குழம்பினார்கள். 
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை.........................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
085 / 20-06-2021

பரத்வாஜரின் உபசரிப்பு...

★பரத்வாஜ முனிவரின் ஆசிரமம் அது என்பதை உறுதி செய்து கொண்டு தன்னுடன் வந்தவர்கள் அனைவரையும் வெளியே நிற்க வைத்துவிட்டு பரதன், வசிஷ்டர் மற்றும் சில முக்கிய பிரமுகர்கள் மட்டும் உள்ளே சென்றனர். பரத்வாஜ முனிவரை பரதன் வணங்கினான். வந்தவர்கள் யார் என்பதை அறிந்த பரத்வாஜ முனிவர் வசிஷ்டருக்கும் பரதனுக்கும் செய்ய வேண்டிய வரவேற்பு உபசாரங்களை  முறைப்படி செய்து முடித்து பின் அவர்கள் ராமரை தேடித்தான்  இங்கு வந்திருக்கின்றார்கள் என்பதை அறிந்து கொண்டார்.

★பரத்வாஜ முனிவர் பரதனிடம் உன் பொறுப்பு அயோத்தியில் இருக்கின்றது. அங்கு அதை விட்டுவிட்டு நீ ஏனப்பா  இங்கு வந்திருக்கின்றாய்?. உனது தாயின் வரத்தின் படி தசரதர் ராமரை காட்டிற்கு செல்லுமாறு அனுப்பி விட்டார். அவருடன் சீதையும் மற்றும் லட்சுமணனும் இப்போது காட்டில் வசித்து வருகின்றார்கள். ராமரால் உன்னுடைய ராஜ்யத்திற்கு மேலும் ஏதாவது சில இடையூறு இருக்கின்றதா? ஆகவே  அதனை தீர்த்துக் கொள்ள அவரை தேடிக் கொண்டு வந்திருக்கின்றாயா? என்று கேட்டார். இதனைக் கேட்ட பரதன் தாங்களும் என்னை சந்தேகப்பட்டு விட்டீர்களா? நான் என்ன செய்வேன்.?  என்னைப் பெற்றவள் நான் இல்லாத போது என் சம்மதம் இல்லாமல் இந்த காரியத்தை செய்துவிட்டாள். எப்படியாவது என் அண்ணன்  ராமனை அயோத்தி நகருக்கு அழைத்துச் சென்று அவரை அரசராக்கி என் ஆயுளுக்கும் அவருக்கு அடிமையாக இருந்து என் மீது சுமத்தப்பட்ட பழியை போக்கிக் கொள்ளவே தேடிக் கொண்டு வந்திருக்கின்றேன். என் மீது குற்றம் சொல்லாதீர்கள் என்று கதறி அழுதான் பரதன்.

★பரத்வாஜ முனிவர் சிரித்தார். பரதா!  உன் உள்ளம் எனக்கு நன்கு தெரியும். ரகு வம்சத்தில் தசரதன் மகனாகப் பிறந்த உன்னை நான் வெகுநாளாக அறிவேன். ராமரிடத்தில் நீ வைத்துள்ள பக்தி, அன்பு இன்று போல் என்றும் உறுதியாக உன் உள்ளத்தில் இருந்து உன் புகழ் வளர்ந்து ஓங்குவதற்காகவும் உன்னுடைய குணத்தை இந்த உலகிற்கு காட்டி உன் உயர்ந்த உள்ளத்தையும் பெருமையையும் உலகம் அறிந்து கொள்ளட்டும் என்பதற்காகவே அவ்வாறு நான் கேட்டேன்.ஆகவே நீ  வருத்தப்பட வேண்டாம். ராமர் சித்திரக்கூட மலையில் இருக்கிறார். அவர் இருக்குமிடம் செல்வதற்கான வழியை சொல்கின்றேன். இன்று இரவு இங்கு தங்கியிருந்து உன் களைப்பை தீர்த்துக்கொள். நாளை காலை இங்கிருந்து கிளம்பி ராமரை சந்திக்க செல் என்று கூறினார். அதற்கு பரதன் முனிவரே!  தாங்கள் எனக்கு இப்போது அளித்த வரவேற்பு விருந்தில் நான் மிகவும் திருப்தி அடைந்துவிட்டேன். மேலும் தங்களுக்கு தொந்தரவு தர விரும்பவில்லை.  ஆகவே நான் இப்போதே கிளம்புகின்றேன் என்றார்.

★பரதா! உனது  பக்திக்கும் பதவிக்கும் தக்க உபசாரங்களை செய்ய கடமைபட்டிருக்கின்றேன். நீ இன்று இரவு இங்கேயே தங்க வேண்டும். நீ இன்று தங்கினால் நான் மகிழ்ச்சி அடைவேன். உன்னுடைய படை பரிவாரங்கள் எல்லோரும் ஏன் தூரத்திலேயே இருக்கின்றார்கள்?. அவர்களை ஏன் இங்கு உள்ளே அழைத்து வரவில்லை? என்று கேட்டார். படைபரிவாரங்கள் ரிஷிகளின் ஆசிரமத்திற்கு அருகில் செல்லக்கூடாது என்ற நியமப்படி இங்கே அழைத்து வரவில்லை. மேலும் என்னுடன் வந்திருக்கும் கூட்டம் மிகப்பெரியது. இங்கு அழைத்து வந்தால் உங்களுக்கு தொந்தரவாக இருக்கும். எனவே தூரத்திலேயே நிறுத்தி வைத்து விட்டேன் என்றான். அதற்கு பரத்வாஜ முனிவர் அங்குள்ள அனைவரையும் இங்கு அழைத்து வா! என்று கேட்டுக்கொண்டார். பரதனும் அவ்வாறே தூரத்தில் இருந்த தனது படைகளுக்கு உத்தரவிட்டான். அனைத்து படைகளும் ஆசிரமத்திற்குள் நுழைந்தது. பரத்வாஜ முனிவர் மந்திரங்களை சொல்லித் தன் தவ வலிமை கொண்டு   மயன், வருணன், குபேரன், அக்னி முதலிய தேவர்களையெல்லாம்  வரவழைத்து நான்  பரதனின் படைகளுக்கு விருந்தளிக்க விரும்புகின்றேன். அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்வீர்களாக! என்று கேட்டுக் கொண்டார்.

★காட்டிற்குள் உடனடியாக பல அற்புதங்கள் நிகழ்ந்தன. அந்த விந்தைகள் அனைவரையும்  வியக்க வைத்தன. மிகப்பெரிய  செல்வத்தை வைத்திருக்கும் ஒரு மன்னன் மற்றோரு மன்னருக்கு விருந்தளிப்பது போல் அந்தக் காட்டிற்குள் ஒரு கணத்தில் பல பெரிய மாற்றங்கள் உண்டாகின. அகில் சந்தனம் புஷ்பம் மேலும்  வாசனை திரவியங்களுடன் அவரவர்களுக்கு தகுந்தார் போல் வீடுகள் அமைந்தன. அங்கிருந்த அனைவர்களுக்கும் பிடித்தமான உணவு வகைகள் நிறைய  வந்த வண்ணமாகவே இருந்தது. தெய்விக ரீதியில் காதுகுளிர மெல்லிய சங்கீதம் இசைக்கப் பட்டுக் கொண்டிருந்தது. படை பரிவாரங்கள் தங்களை மறந்து அனைத்தையும் மிகமகிழ்சியாக அனுபவித்தார்கள். இதற்கு மேல் நாம் காட்டிற்குள் செல்லவே வேண்டாம். அயோத்திக்கும் செல்ல வேண்டாம். இங்கேயே என்றும் தங்கிவிடலாம் என்ற எண்ணினார்கள். தேவலோக நந்தவனத்தில் இருப்பதைப் பொன்று உணர்ந்தார்கள். எல்லைமீறி அனுபவித்ததும் மெய்மறந்தும் தூங்கிவிட்டார்கள். காலை விடிந்ததும் இரவில் நடந்தது கனவு போல் அங்கிருந்த அனைத்தும் மறைந்து விட்டது. நடந்தது கனவா? இல்லை இது நனவா? என்று சிறிதும் விளங்க இயலாமையால் குழம்பினார்கள். 

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869

நாளை.........................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
086 / 21-06-2021
 
சித்ரகூடமலை...
 
★அதிகாலை மிகவும் ரம்யமாக  விடிந்ததும் பரத்வாஜ முனிவரின் குடிலை நோக்கி சென்றான் பரதன். நித்திய பூஜைகளை முடித்துக்கொண்டு வெளியே வந்த பரத்வாஜ முனிவரை பார்த்து வணங்கினான் பரதன். இரவு அளித்த இனிய விருந்து உபசாரங்கள் மிகத்  திருப்தியாக இருந்தனவா என்று கேட்டார் பரத்வாஜ முனிவர். எங்கள்  படை பரிவாரங்கள முதல் மந்திரிகள் வரை அனைவரும் தாங்கள் அளித்த விருந்தை சாப்பிட்டு சுகமாக தங்கினோம். அனைவரது விருப்பங்களும் நிறைவேற்றப்பட்டன. தேவலோக நந்தவனத்தில் தங்கியது போன்று உணர்ந்தோம். ராமரின் இருப்பிடம் செல்ல வழியும் பின் நாங்கள் இங்கிருந்து செல்ல தங்களின் அனுமதியும் கேட்டு வந்திருக்கின்றேன் என்று வணங்கினான் பரதன்.
 
★பரத்வாஜ முனிவர் பரதனுடன் வந்திருந்த மூன்று அரசகுலப் பெண்களை தனக்கு அறிமுகம் செய்து வைக்குமாறு கேட்டுக் கொண்டார். கௌசல்யை, சுமித்திரை,  கைகேயி என மூவரையும் ஒருவர் பின் ஒருவராக அறிமுகம் செய்து வைத்து ஆசிபெறச்செய்தான். முதலில் கௌசலையை வரச் செய்து துக்கப்பட்டு பட்டினியால் வாடிய முகத்துடன் நிற்பவர் பட்டத்து ராணி. இவரது  பெயர் கௌசல்யை. இவரே ராமரை பெற்றெடுத்த புண்யவதி என்று அறிமுகம் செய்தான். 
 
★அவருக்கு  வலது புறத்தில் இருப்பவர் அன்னை சுமித்திரை ஆவார்.  இரண்டாவது பட்டத்து ராணியான இவரின் மகன்கள் தான் தம்பிகள் லட்சுமணன் மற்றும் சத்ருக்ணன் ஆவர். இடது புறத்தில் நிற்பவர் என் ஆருயிர் தந்தையின் மூன்றாவது அரசி வடிவத்தில் இருக்கும் அரக்கி. எங்களுடைய துக்கங்களுக்கு     எல்லாம் காரணமாக இருப்பவள் என்று கைகேயியை அறிமுகம் செய்தான். மூவரும் பரத்வாஜ முனிவரை சுற்றி வந்து வணங்கி நின்றனர். கைகேயி மிகுந்த கவலையுடன் முகத்தை மூடி மறைத்துக்கொண்டு வணங்கி நின்றாள். பரத்வாஜ முனிவர் பரதனிடம் இந்த உலகத்தின் நன்மைக்காகவே அனைத்தும் நடந்தது. உனது தாயை அப்படி சொல்லாதே என்று கேட்டுக் கொண்டு ராமர் இருக்கும் இடத்திற்கு செல்ல வழியை கூற தொடங்கினார். 
 
★இங்கிருந்து இரண்டரை யோசனை தூரத்தில் மந்தாகினி நதி ஓடுகின்றது. நதியை தாண்டினால் மனிதர்கள் நடமாட்டம் இல்லாத காடு இருக்கின்றது. அதன் தெற்கு பகுதியில் சித்ரகூட மலை இருக்கின்றது. அந்த மலையின் அடிவாரத்தில் ஒரு சிறிய  குடில் அமைத்து மூவரும் வசித்து வருகின்றார்கள் என்று கூறி ப் பின்னர் அங்கு  செல்வதற்கான வழிமுறைகளை பரதனிடம் சொல்லி வாழ்த்துக்களை கூறி விடை கொடுத்தார்.பரதன் தன் படை பரிவாரங்களுடன் பரத்வாஜ முனிவர் காட்டிய பாதையில் சென்றான். தூரத்தில் சித்ரகூட மலையும் மலை அடிவாரத்தில் லேசான புகையும் தெரிந்தது. ராமர் இருக்கும் இடம் அது தான் என்று அனைவரும் உற்சாகமடைந்து விரைவாக செல்ல ஆரம்பித்தனர்.
 
★சித்ரகூட மலையின் கம்பீரமும் வனத்தின் அழகும் பறவைகளின் சத்தமும் விலங்குகளின் விளையாட்டும் அவர்களின் உள்ளத்தை கவர்ந்தது. ஊரையும் உறவினர்களையும் பிரிந்த துக்கம் ஏதும் இல்லாமல் ராமர் சீதை லட்சுமணன் மூவரும் மிகவும் மகிழ்ச்சியாக காலம் கழித்துவந்தார்கள். பெரும் தூசி புகை கிளம்பியதையும் கண்டார் ராமர். லட்சுமணனிடம் தம்பி தூரத்தில் ஏதோ பெரும் சத்தம் தூசி படலத்துடன் கிளம்புகிறது. விலங்குகள் அனைத்தும் நாலாபக்கமும் ஒடுகின்றது. 
அரச குலத்தவர்கள் யாரேனும் வேட்டையாட இங்கு வந்து இருக்கிறார்களா எனப்பார் என்றார்.
 
★லட்சுமணன் பெரிய மரத்தில் ஏறிப்பார்த்தான். பெரிய படை ஒன்று சித்ரகூட மலையை நோக்கி வந்துகொண்டிருப்பதை பார்த்தான். மரத்தில் இருந்து ராமருக்கு எச்சரிக்கை செய்தான். அண்ணா! தேர்ப்படை , யானைப் படை , குதிரைப்படை மற்றும் காலாட்படை என்று ஒரு பெரிய படை பட்டாளம் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. நாம் மூட்டிய நெருப்பு புகையை அடையாளம் வைத்துக்கொண்டு அவர்கள் நம்மை நோக்கி வந்து கொண்டிருகின்றார்கள். உடனே நெருப்பை அணைத்து விட்டு அண்ணி சீதையை இந்த மலைக் குகையில் பத்திரமாக வைத்து விட்டு கவசம் உடுத்திக்கொண்டு வில்லும் அம்பு மற்றும் வீரவாள் எடுத்துக்கொண்டு யுத்தத்திற்கு தயாராவோம் என்றான்.
 
★ராமர் லட்சுமணனிடம் வந்து கொண்டிருக்கும் படையில் முதலாவதாக வரும் தேரில் எந்த நாட்டுக்கொடி இருக்கின்றது கவனித்துப் பார்? என்றார். கொடியை பார்த்த லட்சுமணன் மிகுந்த அதிர்சியும் கோபமும் அடைந்தான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை..........................
ஶ்ரீராம காவியம்
~~~~~
087 / 22-06-2021
 
பரதன் ராமரை சந்தித்தல்...
 
★அண்ணா!  தேரில் இருப்பது திருவாத்திக்கொடி நம்முடைய அயோத்தி நாட்டுக்கொடியாகும். சூழ்ச்சியால் நம் ராஜ்யத்தை பெற்றதோடு மட்டும் இல்லாமல் எதிர்காலத்தில் நம்முடைய தொந்தரவு ஏதும் இருக்கக் கூடாது என்று நம்மை எதிர்த்து கொல்லவும் வருகின்றான் பரதன். இன்று கைகேயியின் மகன் பரதன் என் கையில் அகப்படுவான். அவனை நான் மன்னித்து  விடப்  போவது இல்லை. அறநெறியில் இருந்து விலகிய அவனை கொல்வதில் தவறு ஒன்றும் இல்லை. நம்மை கொல்ல வரும் பகைவனை நாம் கொல்வது சிறிதும் பாவமாகாது. 
 
★இங்கிருந்தே பரதனை நாம் எதிர்ப்போமா இல்லை மலை மீது நின்று கொண்டு எதிர்ப்போமா? நீங்கள் சொல்லுங்கள். இவன் நமக்கு செய்த கொடுமைக்கு இன்று பழி வாங்கி விடலாம். பரதனை வென்று கைகேயியின் எண்ணத்தை முற்றிலும் நாம் அழித்து  விடலாம். இந்த அடர் வனத்தில் ரத்த வெள்ளத்தை ஓடச் செய்யப் போகின்றேன். வரும் படைகளை நீர்மூலமாக ஆக்குவேன். இந்த காட்டில் உள்ள மிருகங்களுக்கு இன்று நிறைய உணவு கிடைக்கப் போகின்றது எனக்கு உத்தரவு தாருங்கள். அனைத்து படைகளையும் நான் அழித்து விடுகின்றேன் என்று தன்னையும் மறந்து கோபத்தில் பேசிக்கொண்டே இருந்தான் லட்சுமணன்.
 
★தம்பி லட்சுமணன் சொன்ன அனைத்தையும் கேட்ட ஶ்ரீராமர் புன்சிரிப்புடன் அமைதியாக பேச ஆரம்பித்தார். லட்சுமணா! நீ ஒரு வெற்றி வீரனாவாய். சகோதரன் பரதனுடைய வீரமிக்க பெரும் படைகளையும் நிர்மூலமாக நீ  ஆக்குவாய்.  இதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. முதலில் கோபத்தை விட்டு அமைதியாக சிறிது யோசனை செய்து பார். பரதனே நேரில் வருகின்றான் என்கிறாய். பரதனை எதிர்த்து வில்லுக்கும் அம்புக்கும் மற்றும் கத்திக்கும் வேலை ஒன்றும் இல்லை. நமது தந்தையின் ஆணையை அழித்தும் பரதனை கொன்றும் ராஜ்யம் சம்பாதித்து நமக்கு என்ன பலன் கிடைக்கப் போகின்றது.
 
★ உடன் பிறந்தவர்களை அழித்து விட்டு கிடைக்கும் சொத்தானது விஷம் கலந்த உணவைப் போன்றது.  அது  யாருக்கும் உபயோகப்படாது. யாரை சந்தோஷப் படுத்துவதற்காக ராஜ்யத்தை சம்பாதித்து நாமும் சந்தோசமாக இருக்கின்றோமோ அவர்களையே அழித்துவிட்டு அந்த ராஜ்யத்தை அடைவதில் பயன் ஒன்றும் இல்லை. அதர்ம வழியில் கிடைக்கும் ராஜ்யம் நமக்கு சிறிதும்  வேண்டாம். 
நீயும் பரதனும் சத்ருக்ணனும் என்னுடன் சேர்ந்து அனுபவிக்க முடியாத சுகம் எனக்கு வேண்டாம் என்றார்.
 
★ராமர் தம்பி லட்சுமணனிடம் தொடர்ந்து பேசினார். பரதன் ஏன் இப்போது இங்கே வருகிறான்  என்பதை நான் அறிவேன். பரதன் எள் அளவும் தருமம் தவறாதவன். நம்மில் யாருக்கும் தீமை செய்யும் எண்ணம் சிறிது கூட இது வரை நம் பரதனுக்கு வந்தது இல்லை. ராஜ்யத்தை மீண்டும் எனக்கு கொடுத்து விடுவதற்காகவே அவன் வந்து கொண்டிருக்கின்றான். அன்னை கைகேயின் மேல் கோபம் மிகக் கொண்டும் தந்தையை நன்கு சமாதானம் செய்தும் என்னை அழைத்துப் போக வேண்டும் என்ற எண்ணத்தில் வந்து கொண்டிருக்கின்றான் பரதன். வேண்டுமானால் அவன் இங்கு வந்ததும் கவனி  என்றார் ராமர். 
 
★பரதனைப்பற்றி நீ கோபமாக பேசியதெல்லாம் அதர்மம். அப்படி பேசக்கூடாது. ராஜ்யத்தை அடைய வேண்டும் என்று ஆசை உன்னிடம் இருக்கின்றதா?  நீ சொல். பரதன் வந்ததும் நான் அவனிடம் சொல்கிறேன். நம் லட்சுமணனுக்கு ராஜ்யத்தின் மீது ஆசை இருக்கின்றது. ஆகவே அவனுக்கு ராஜ்யத்தை கொடுத்துவிடு என்று நிச்சயம் சொல்கிறேன். நான் கூறும் இந்த வார்த்தையை கேட்டவுடன் பரதன் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி ராஜ்யத்தில் உன்னை அமர வைத்துவிடுவான் என்று ராமர் லட்சுமணனிடம் கூறினார்.
 
★லட்சுமணன் வெட்கத்தில் தலை குனிந்து ராமரின் அருகில் சென்று கைகூப்பிய வண்ணம் அமர்ந்தான். தான் அவசரப்பட்டு பேசியதற்கு மிகவும் வருத்தம் தெரிவித்தான். நமது தந்தையார் வந்து கொண்டு இருக்கலாம் என்று எண்ணுகிறேன் என்றான் லட்சுமணன். ராமர் கூட்டத்தை பார்த்தார். நாம் இந்த காட்டில் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றோம் என்று எண்ணி நம்மை அழைத்துப் போகவும் தந்தையாரும் இந்த கூட்டத்தில் வந்திருக்கலாம். ஆனால் சக்கரவர்த்திக்கு உண்டான வெண்கொற்றக் குடையை காணவில்லை. ஆகவே தந்தை வந்திருப்பது சந்தேகமே என்றார் ராமர்.
 
★உறவினர்களையும் மற்றும் படைகளை தூரத்தில் நிறுத்தி விட்டு புகை கிளம்பும் இடத்தில் குடில் ஏதும் இருக்கின்றாதா என்று பார்த்து வருமாறு சில வீரர்களை அனுப்பினான் பரதன். புகை வரும் இடத்தில் குடில் இருப்பதை பரதனிடம் உறுதி செய்தார்கள் வீரர்கள். பரதன் படைகளை அங்கேயே இருக்கச் சொல்லி  உத்தரவிட்டு சிலருடன் மட்டும் ராமர் இருக்குமிடம் தேடிச் சென்றான். அங்கு புல் தரையில் அமர்ந்திருந்த ராமரை கண்டதும் பரதன் அண்ணா! என்று உரக்க கதறியபடியே ஓடி வந்து ராமரின் காலடியில் வீழ்ந்தான். அண்ணா என்ற அந்த ஒரு வார்த்தைக்கு மேல் பேச முடியாமல் தொண்டை அடைக்க விம்மி அழுதான். 
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.....................
ஶ்ரீராம காவியம்
~~~~~
088 / 23-06-2021
 
சகோதரர்களின் பாசம்...
 
★பரதனின் பின்னே வசிஷ்டரும் வந்து சேர்ந்தார். தபஸ்விகள் அணியும் உடை அணிந்தும், தன்  உடல் மெலிந்தும் இருந்த தம்பி பரதனை தூக்கிய ராமர் பரதனை அணைத்துக் கொண்டார். தம்பி! அயோத்தியில் தந்தையை தனியாக விட்டுவிட்டு நீ இப்படி வெகுதூரத்தில் இருக்கும் வனத்திற்கு வரலாமா? ஏன் இது போல் உடல் மிகவும் இளைத்து இருக்கிறாய்? என்று கேட்டார். பரதன் பேச்சு வராமல் தேம்பித் தேம்பி  அழுதபடியே இருந்தான். பரதனை மனநிலையை சராசரி நிலைக்கு கொண்டு வருவதற்கு என்றே ராமர் மேலும் மேலும்  பரதனிடம் பேசினார். நமது ராஜ்யம் எப்படி இருக்கின்றது?. தந்தை  மற்றும் நம்முடைய  அன்னையர்  மூவரும் நலமா? நமது உறவினர்கள் அனைவரும் நலமாக இருக்கின்றார்களா? என்று கேட்டார் ராமர்
 
★ராமரிடம் பரதன் பேசுவதற்கு ஆரம்பித்தான். ராஜ தர்மத்தைப் பற்றி பேச நான் சிறிதும் தகுதி அற்றவனாய் நிற்கின்றேன். சிம்மாசனத்தில் அமர்ந்து ராஜ்யம் செய்ய நீங்கள் இருக்கும் போது நான் எப்படி அண்ணா அரசனாவேன்?. தர்மத்தை மீறி அந்த சிம்மாசனத்தில் நான் அமர்ந்தால் அரசனுக்கு உரிய தர்மத்தை என்னால் அனுஷ்டிக்க முடியாது. எனக்கு தெரிந்த தர்மம் தங்களுக்கு அடிமையாக இருந்து தங்களுக்கு சேவை செய்வது மட்டுமே. நீங்கள் காட்டிற்கு வந்து விட்டபடியால் இத்தனை நாட்கள் அதற்கும் பிராப்தம் இல்லாமல் போய் விட்டது. நமது ராஜ குல தருமப்படி மூத்தவரே அரசனாக வேண்டும்.
 
★ பலப்பல  தலைமுறைகளாக நடைமுறையில் இருக்கும் நமது குலத்தின் பொதுவான தருமம் இது. நாட்டின் நலன்களை கருதி நீங்கள் அயோத்திக்கு வந்து அரச பதவியை ஏற்றுக்கொள்ளத்தான்  வேண்டும். இந்த இடத்திலேயே தங்களுக்கு பட்டாபிஷேகம் செய்விக்கத் தேவையான  அனைத்து ஏற்பாடுகளுடன் வந்திருக்கின்றோம். தயவு செய்து அரச பதவியை தாங்கள் ஏற்றுக்கொண்டு நாட்டுக்கும் மக்களுக்கும் செய்ய வேண்டிய நன்மைகளை செய்யுங்கள் என்றான் பரதன்.
 
★ராமர் பேச ஆரம்பித்தார். பரதா!
கேகய நாட்டில் இருந்து நீங்கள் இருவரும் அயோத்திக்கு வந்து பின்னர் தந்தையை பிரிந்து வெகு தூரத்தில் இருக்கும், யாராலும் எளிதில் உள்ளே வரமுடியாத அடர்ந்த காட்டிற்குள் வந்திருக்கிறீர்கள்  என்றால் என்னை பிரிந்த தந்தையார் மனோ தைரியத்துடன் நலமாக இருக்கின்றார் என்றுதான் நான்  எண்ணுகின்றேன். தாயார்கள் மூவரின் நலம் மற்றும் நமது உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் மிகுந்த நலமாக இருக்கின்றார்களா? சொல். இதனை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றேன் என்றார் ராமர்.
 
★நான் கேகய நாட்டில் இருந்த போது அரண்மனையில் நடந்த சூழ்ச்சியால் நீங்கள் அயோத்தியில் இருந்து கிளம்பி காட்டிற்கு வந்துவிட்டீர்கள். ஆனால்  பற்பல வேள்விகளை செய்தவரும், பெரும் மாவீரராய் திகழ்ந்தவரும், சான்றோர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட நமது தந்தை தசரதர் உங்களை பிரிந்த துக்கத்தை தாங்க முடியாமல் நோய் வாய்ப்பட்டு உங்கள் பெயரை மீண்டும் மீண்டும் சொல்லி அழைத்துக்கொண்டே இருந்தார். சுமந்திரர் வரும் போது நீங்களும் அவருடனேயே திரும்பி வந்து விடுவீர்கள் என்ற ஒரு நம்பிக்கையில் இருந்தார். சுமந்திரர் மட்டும் தனியாக வந்ததை பார்த்ததும் தங்களின் பெயரை கூறிக்கொண்டே சொர்க்கலோகம் புகுந்து விட்டார் நமது தந்தையார் என்று தழுதழுத்த குரலில் கூறினான் பரதன். பரதன் கூறியதை கேட்டதும் கோடாலியால் வெட்டப்பட்ட மரம் போல ராமர் கீழே விழுந்தார்.
 
★ராமரை தாங்கிபிடித்த பரதன் நம்முடைய தந்தையாருக்கு செய்ய வேண்டிய கிரியை கடமைகளை நானும் தம்பி சத்ருக்ணனும் செய்து விட்டோம். தந்தைக்கு மிக பிரியமானவராக தாங்கள் இருந்தீர்கள். உங்கள் ஞாபகமாகவே தந்தை உடலை விட்டார். நீங்கள் கொடுக்கும் பிதுர்கடனே அவருக்கு சாந்தி தரும். அவருக்கு செய்ய வேண்டி கடமைகளை நீங்களும் தம்பி லட்சுமணனும் செய்து முடிக்க வேண்டும். தாங்கள் வருந்த வேண்டாம். நீங்களே எங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்க வேண்டியவர் என்று ஆறுதலாக சொல்லி முடித்தான் பரதன்.
 
★ராஜ குமாரர்கள் நால்வரும் மந்தாகினி ஆற்றங்கரைக்கு வசஷ்டருடன் சென்றார்கள். அங்கே தசரதருக்கு செய்ய வேண்டிய அனைத்து விதமான இறுதி சடங்கு தர்பணங்களை வசிஷ்டரின் வழிகாட்டுதல்பேரில்  முறைப்படி செய்தார்கள். அந்த சகோதரர்கள் ஒருவரை ஒருவர் அணைத்து தங்கள் துயரத்தை தீர்த்துக்கொண்டு குடிசைக்கு திரும்பினார்கள். கௌசலை சுமித்ரை கைகேயி மூவரையும் ராமர் இருக்கும் குடிசைக்கு செல்லலாம் வாருங்கள் என்று அமைச்சர் சுமந்திரும் அவர்கள் உடன் கிளம்பினார். 
 
★வழியில் மந்தாகினி ஆற்றங் கரையில் பித்ருக்களுக்கான தர்ப்பை புல்லும் எள்ளும்வைத்து இருப்பதை பார்த்தார்கள். இந்த ஆற்றங்கரையில் இருந்து தான் தங்களுக்கு தேவையான நீரை கொண்டு செல்வார்கள். அருகில் தான் ராமர் இருக்கும் குடிசை இருக்கின்றது என்று கூறினார்  சுமந்திரர். எவ்வளவு வசதியாக வாழ்ந்த இந்த ராஜ குமாரர்கள் இங்கிருந்து குடிசை வரை தண்ணீர் சுமந்து கொண்டு செல்கின்றார்களா? என்று கௌசலை அழ ஆரம்பித்தாள். 
 
★சுமித்திரை கௌசலையை ஆறுதல் படுத்தினாள். ராமருக்காக லட்சுமணன் தினந்தோறும் தண்ணீரை சுமந்து கொண்டு செல்வதை மகிழ்ச்சியாகவே செய்வான். லட்சுமணனுக்கு இது ஒன்றும் பெரிய கடினமான காரியம் இல்லை என்று பேசிக்கொண்டே குடிசைக்கு அருகில் வந்தார்கள்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.........................
ஶ்ரீராம காவியம்
~~~~~
089 / 24-06-2021
 
பரதனின் உருக்கம்...
 
★ நான்கு ராஜ குமாரர்களும் பட்டத்து அரசிகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். அரண்மனையில் சுகபோகமாக மிகச் சிறப்பாக வாழ்ந்து வந்த ராஜகுமாரர்கள் குடியையில் இருப்பதை பார்த்ததும் சக்தி அற்றவர்களாக கௌசலையும் சுமத்ரையும் அங்கேயே அமர்ந்து விட்டார்கள். கௌசலையிடம் விரைவாக வந்த ராமர் அவளை தூக்கி தன் பக்கத்தில் அமரும்படி செய்து அவள் தலையில் மிக மெதுவாகத் தடவிக்கொடுத்தார். ராமரின் ஸ்பரிசத்தில் மயங்கிய கௌசலை ஆனந்தத்தில் மூழ்கி போனாள். 
 
★சீதையிடம் வந்த கௌசலை ஜனகருக்கு மகளாக பிறந்து அயோத்திக்கு எங்கள் வீட்டு மருமகளாய் வந்து இந்த காட்டில் சிறு குடிசையில் ரிஷிபத்தினி போலத் தங்கியிருக்கின்றாய். உன்னை பார்த்ததும் நெருப்பில் எரியும் விறகு போல் என் மனம் எரிகிறது என்று சீதையை அணைத்துக்கொண்டாள். சுமித்ரையின் பாதங்களில் வீழ்ந்து வணங்கி ராமரும் லட்சுமணனும் ஆசி பெற்றனர். நீண்ட கால பிரிவை நினைத்து  ஒருவரை ஒருவர் தங்களின் இரு  கண்களிலும் நீர் வழியும்படி அணைத்துக் கொண்டு ஆனந்தம் கொண்டார்கள்.
 
★பின்னர் தாய் கைகேயியை ராம லட்சுமணர்கள் இருவரும் வணங்கிப் பணிந்தார்கள்.ராமர் கைகேயிடம்  அன்னையே! எனக்கு தங்கள் மேல் யாதொரு வருத்தமும் இல்லை. தங்களின் விருப்பம் வேறு தந்தையின் விருப்பம் வேறு என என்றுமே நான் கருதியதில்லை. ஆகவே சிறிதும் கலங்க வேண்டாம் என அன்புடன் கூறினார்.கைகேயி அழுது கொண்டே ராமனையும் லட்சுமணனையும் தழுவிக் கொண்டு ஆசிர்வதித்தாள்.
 
★ராஜ குமாரர்களும்  பட்டத்து அரசிகளும்  ஒரே இடத்தில் தான் இருக்கின்றார்கள் என்று நன்கு தெரிந்தவுடன் இருந்த  படைகள் அனைத்தும் அவர்கள் இருக்கும் இடம் நோக்கி விரைந்து வந்து சேர்ந்தார்கள். தசரதரை இழந்த துக்கத்தில் இருந்த தசரதர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்  அனைவரையும் ஒன்றாக பார்த்த மக்கள் இனி ராமர் அயோத்திக்கு திரும்பி வந்து விடுவார் என்ற எண்ணத்தில் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். வசிஷ்டருடைய பாதங்களில் ராமரும் தம்பிகள் லட்சுமணனுடன் பரதனும் சத்ருக்ணனும் வீழ்ந்து வணங்கி அவருக்கு தங்களுடைய அன்பு வணக்கத்தை செலுத்தினார்கள். 
 
★வசிஷ்டர் அவர்களுக்கு ஆசி கூறி ஓரிடத்தில் அமர்ந்தார். அவரை பின்பற்றி அனைவரும் அமர்ந்தார்கள். பரதன் ராமரின் அருகில் வந்து அமர்ந்தான். மக்கள் அனைவரும் பரதன் ராமரிடன் என்ன பேசப்போகிறார் எப்படி ராமரை அயோத்திக்கு அழைக்கப்போகின்றார் ? என்ற ஆர்வத்தில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
ராமர் தம்பி பரதனிடம் மெதுவாக பேச ஆரம்பித்தார். பரதா! தந்தை உனக்கு தந்த ராஜ்யத்தை விட்டு தபஸ்விகளுக்கான உடைகளை அணிந்து கொண்டு ஏன் இங்கு வந்திருக்கிறாய்?. மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் இருக்கும் போது கடமையை விட்டு வந்திருக்கும் காரணம் என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகின்றேன். சொல்! என்றார்.
 
★ பரதன் பல தடவை பேசுவதற்கு  ஆரம்பித்து பேச முடியாமல் திக்கி திணறி மெதுவாக பேச ஆரம்பித்தான். உங்களை வனம் செல்ல சொல்லி  அனுப்பிவிட்டு யாரும் செய்யத் துணியாத காரியத்தை செய்துவிட்டேனே என்று துக்கத்திலேயே வெந்து மேலுலகம் சென்று விட்டார் நமது தந்தை. என்னை பெற்றவளும் தான் விரும்பிய சந்தோசத்தை பெற முடியாமல் மகா பாவம் செய்து உலகத்தால் பழிக்கப் பட்டு உயிருடன் நரக வேதனை அனுபவித்துக் கொண்டு இங்கே சோகத்தில் மூழ்கி அமர்ந்து இருக்கின்றாள். அயோத்தி மக்கள் துக்கமே வடிவமாக மகிழ்ச்சியை தொலைத்துவிட்டு நிற்கின்றார்கள். 
 
★மாற்றங்கள் ஏதும் செய்து இனி தந்தையை பெற முடியாது. ஆனால் நீங்கள் அரச பதவியை எற்க சம்மதம் தெரிவித்து உங்களுக்கு உரிய ராஜ்யத்தை நீங்கள் அடைந்தால் அயோத்தி மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவார்கள். நமது அன்னையர் கௌசலையும் சுமத்ரையும் மிக்க மகிழ்ச்சி அடைவார்கள். தாயார் கைகேயி இனி வரப்போகும் பழிச்சொல்லில் இருந்து மீண்டு வருவார். சூழ்ச்சியால் அயோத்தி ராஜ்யத்தை பெற்றேன் என்ற பழிச்சொல் என்னையும் விட்டு நீங்கும். அரச குடும்பத்தில் மூத்தவர் அரசனாக வேண்டும் என்ற நமது குல தர்மம் நிச்சயம் காப்பாற்றப்படும்.
 
★சொர்க்கம் சென்ற தந்தையும் இதனையே விரும்புவார். உரிய அரசனில்லாமல் அயோத்தி நகரம் தேய்ந்த சந்திரனைபோல் இருட்டாக இருக்கிறது. அதனை அகற்றி அயோத்தியை பூரண சந்திரனைப்போல் மங்கள நகரமாக்கி வெளிச்சமாக நீங்கள் மாற்றுங்கள். உங்களின் இரு  பாதங்களில் வீழ்ந்து கேட்டுக் கொள்கிறேன். அண்ணா! நீங்கள் அரசனானால் நம் அனைத்து பிரச்சனைகளுக்கும் சுமூகமான தீர்வு கிடைத்துவிடும். அரச பதவியை ஏற்றுக்கொள்கிறேன் என்ற தங்களின் வார்த்தையை கேட்க ஆவலுடன் நமது தாயார் மூவர் முதல் மக்கள் வரை காத்து கொண்டிருக்கின்றார்கள்.தயவு செய்து இதை நீங்கள்  மறுத்து விடாதீர்கள் என்று கண்களில் நீர் வழிய ராமரின் காலை பிடித்து கொண்டான் பரதன்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை..................
ஶ்ரீராம காவியம்
~~~~~
090 / 25-06-2021
 
பரதன் வேண்டுகோள்...
 
★பரதனை தூக்கிய ராமர் தன் அருகில் அமர வைத்து பேச ஆரம்பித்தார். நாம் நால்வரும் நற்குலத்தில் பிறந்தோம். நல்ல முறையில் வளர்க்கப்பட்டோம். நாம் நால்வரும் ஒரு நாளும் தவறு செய்ய மாட்டோம். நான் உன்னிடம் எள் அளவும் எந்தக் குறைகளை இதுவரை கண்டது இல்லை. நீ துக்கப்பட வேண்டாம். உனது தாயாரையும் நீ குற்றம் கூற வேண்டாம். நம்முடைய குல பண்பாட்டுக்கு இது தகாது. நம்மை பெற்ற தந்தையும் தாயும் நமக்கு எந்த ஒரு ஆணையும் இடலாம். அது அவர்களுடைய உரிமை. காட்டிற்கு அனுப்புவதும் ராஜ்யத்தை கொடுப்பதும்கூட அவர்களுடைய உரிமை. அந்த அவர்களின் கட்டளைகளை நிறைவேற்றி தாய் தந்தையை கௌரவிப்பது நமது கடமை. 
 
★உனக்கு ராஜ்ய பொறுப்பை தந்து எனக்கு 14 ஆண்டுகள் வனத்தின் தவ வாழ்க்கையை வகுத்துக் கொடுத்திருக்கிறார். இதனை நாம் மீறலாகாது. 14 ஆண்டுகள் 14 நாட்கள் போல் கழித்துவிட்டு விரைவில் நான் அயோத்தி திரும்பிவருவேன் என்று ராமர் கூறினார். அவரின் இந்த உறுதியான பேச்சைக் கேட்ட பரதனும் மக்களும் பேச வார்த்தை இல்லாமல் தவித்து நின்றார்கள். பரதன் மீண்டும் ராமரிடம் சொன்னான். தாங்கள் ராஜ்யத்தை ஏற்க மறுத்தால் என்மேல் விழுந்த பழி தீராமல் போகும். நான் என்ன செய்தாலும் இப்பாவத்தை போக்க இயலாது என்று மிகுந்த வருத்தத்துடன் சொன்னான். 
 
★அதற்கு ராமர் உன்னை நீயே நிந்தித்துக்கொள்ள வேண்டாம். நடந்தவைகள் அனைத்தும் உன்னாலேயே நடந்தது என்று நீ எண்ண வேண்டாம். விதியே அனைத்திற்கும் காரணம். நீ உன் துக்கத்தை விடு.தேவர் அரசன் இந்திரனுக்கு சமமான நமது தந்தையார் எனக்கு இட்ட  இந்த ஆணையை நான் நிறைவேற்ற இயலாமல் போனால் அதற்கு பதிலாக இந்த உலகமே எனக்கு கிடைத்தாலும் நான் திருப்தி அடைய மாட்டேன். தந்தையின் ஆணையை என்னால் சிறிதும் நிராகரிக்க முடியாது. தந்தையின் கட்டளையை நாம் இருவரும் ஏற்க வேண்டும். 
 
★உன்னிடம் ஒப்படைத்த இந்த ராஜ்ஜியத்தை நீ தயங்காமல் ஏற்றுக் கொண்டு அரச பதவியை தாங்கியே ஆக வேண்டும். ஆகவே அயோத்திக்கு சென்று 
அரசனுக்கு உரிய பணியை செய்து மக்களுக்கு நன்மையை செய். உனக்கு உதவியாக சத்ருக்கணன் இருக்கின்றான். எனக்கு உதவியாக லட்சுமணன் இருக்கின்றான். தசரதரின் நான்கு புத்திரர்களாகிய நாம் நால்வரும் தந்தையின் அன்பு ஆணையை நிறைவேற்றுவோம் என்று உறுதியுடன் கூறினார் ராமர்.
 
★ராமரின் உறுதியையும் மற்றும் ராமருக்கு துணையாக உள்ள லட்சுமணனையும் பரதனின் அன்பையும் பரதனுக்கு உற்ற துணையாக சத்ருக்கணனையும் பார்த்த கௌசலை சுமித்ரை கைகேயி மூவரும் களங்கமற்ற உள்ளத்தை கொண்ட இத்தகைய ராஜகுமாரர்களை பெற்றோமே என்று மகிழ்ந்தார்கள். பரதனுடன் வந்த மக்கள் கூட்டத்தில் இருந்த ஜாபலர் என்ற புரோகிதர் இடையில் ராமருக்கு வணக்கம் செலுத்தி பேசினார். 
 
★தந்தையின் ஆணை என்று திரும்ப திரும்ப சொல்கிறீர்கள். தசரதர் என்பது ஒரு உடல். அது அழிந்து பஞ்ச பூதங்களுடன் கலந்து விட்டது. இல்லாத ஒரு உருவத்திற்கும் உங்களுக்கும் சம்பந்தம் இருப்பது போலவே பேசுகின்றீர்கள். இது உங்களின் அறியாமை. இது கண் எதிரே இருக்கும் சுகங்களை சிறிதும் அனுபவிக்காமல் விட்டு விட்டு மூடர்கள் பேசும் பேச்சு போல் இருக்கின்றது தாங்கள் பேசுவது. துயரத்தில் மூழ்கி கிடக்கும் பெண் ஒருத்தி கூந்தலை வாரி முடிக்காமல் உள்ளது போல் அயோத்தி இப்போது துக்கத்தில் கிடந்து உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. ஆகையால் பட்டாபிஷேகம் செய்து கொண்டு அனைத்து சுகங்களையும் நன்கு  அனுபவித்துக் கொண்டு நீங்களும் மகிழ்ச்சியாய் இருந்து அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுங்கள். அதுவே எங்களின் விருப்பம். இப்போதைய தர்மமும் ஆகும். பரதன் சொல்வதை கேளுங்கள் என்றார்.
 
★ராமருக்கு அவர் இவ்வாறு பேசியது சற்று அதிருப்தியை உண்டாக்கியது. சத்தியத்தை நீங்கள் ஒரு பொருட்டாகவே  மதிக்கவில்லை என்றுதான் நான்  எண்ணுகின்றேன். நீங்கள் நாத்திகம் பேசுவது போல் உள்ளது. இது சரியாக இல்லை. சத்தியத்தை விட உயர்ந்த ஒரு பொருள் உலகத்தில் இல்லவே இல்லை என்றார் ராமர். வசிஷ்டர் ராமரை சமாதானம் செய்தார். உன்னை எப்படியாவது நமது அயோத்திக்கு அழைத்து சென்று விட வேண்டும் என்றும், தம்பி  பரதனுடைய துக்கத்தை போக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் அவ்வாறு பேசினார். அவர் மீது கோபிக்க வேண்டாம் எனக் கூறினார் வசிஷ்டர்.
 
★ராஜ்யத்தின் அரச பதவியை மூத்தவர்தான்  ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது உனது குல தர்மம். இன்னொரு பக்கம் உன் தந்தையின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்ற தர்மம். இரண்டில் பெரிய தர்மம் தந்தையின் ஆணையை நிறைவேற்ற வேண்டியது என்ற உன்னுடைய செயல் மிகவும் சரியானதாக இருந்தாலும் உன்னுடைய தம்பி தன் மேல் விழுந்த பழி பாவத்திற்கு அஞ்சி உன்னை தஞ்சம் அடைந்து இருக்கின்றான். நம்மிடம் தஞ்சம் அடைந்தவர்களை நிச்சயமாக காப்பாற்றவேண்டும் கைவிட கூடாது என்பது உன்னுடைய விரதமாயிற்றே. நீ உன்னுடைய விரதத்தையும் காப்பாற்ற வேண்டும் ஆகையால் தம்பி பரதனுக்காக உன்னுடைய இந்த தர்மத்திலிருந்து சிறிது இறங்கி வரலாம்  என்றார் வசிஷ்டர்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.........................
ஶ்ரீராம காவியம்
~~~~~
091 / 26-06-2021
 
பாதுகா பட்டாபிஷேகம்...
 
★தாங்கள் எனக்கு கூறிய சொற்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்க கூடியதாகவும் என்னால் செய்யக்கூடியதாக இருந்தாலும் இச்செயல் நல்ல வழி போல் தோற்றமளிக்கும். ஆனால் இது தவறான பாதையே ஆகும்.  அறநூல்களில் உள்ள  உபதேசங்களின்படி ஒருபோதும் நடக்காதவன் தனது ஒழுக்கம் மற்றும் சிந்தனையில் இருந்து வேறுபட்டு அதிக  பாவங்களை செய்தவன் ஆகின்றான். ஒரு தந்தையும் தாயும் தங்களுடைய குழந்தைகளுக்கு செய்யும் சேவைக்கு கைமாறாக அந்தக் குழந்தைகள் வளர்ந்தபின் காலம் முழுவதும் என்ன செய்தாலும் தீர்க்க முடியாது. அதிகபட்சம் அவர் கொடுத்த உத்தரவிற்கு ஆவது கட்டுப்பட்டு நடக்க வேண்டும். என் தந்தை எனக்கு காட்டிற்கு 14 வருடங்கள் செல்ல கட்டளையிட்டிருக்கிறார். நான் அவரின் கட்டளைக்கு சம்மதம் தெரிவித்து காட்டிற்கு வந்து விட்டேன். அவரின் சொல்லை ஒரு போதும் பொய்யாக்க மாட்டேன். இருக்கும் தர்மத்தில் கடைபிடிக்க வேண்டிய பெரிய தர்மம் சத்தியத்தை தவறாமல் காப்பாற்றுவதாகும். அவருக்கு கொடுத்த சத்தியத்தை நான் மீற மாட்டேன் என்றார் ராமர்.
 
★ராமர் இவ்வாறு பேசியதும் பரதன் தன்னுடன் வந்தவர்கள் இடம் முறையிட்டான். எனது அண்ணன் என் மீது சிறிதும் இரக்கம் காட்ட மறுக்கிறார். ஆகையால் இங்கேயே நான் பட்டினி கிடந்து எனது உயிர் துறக்கபோகின்றேன் என்று சொல்லி சுமந்தரரிடம் தர்பை புல்லை கொண்டு வர ஏற்பாடு செய்யுங்கள் என உத்தரவிட்டான் பரதன். சுமந்திரர் ராமரைப் பார்த்து தயங்கிய படியே நின்று கொண்டிருந்தார். பரதன் தானே சென்று தர்பை புல்லை எடுத்து வந்து ராமரின் முன்பாக போட்டு அமர்ந்தான். சுற்றி இருக்கும் மக்களிடம் பேச ஆரம்பித்தான். ராமர் வந்து அரச பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும். இல்லையெனில் நான் மிகவும் உறுதியாக இங்கேயே பட்டினி இருந்து உயிர் துறப்பேன் என்றான். மக்கள் பரதனிடம் ராமர் சத்தியம் தவறாதவர். தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற தன் எண்ணத்தில் அசையாமல் நிற்கின்றார். அவரின் குணம் நமக்கு நன்கு தெரியும். அவர் அயோத்திக்கு வரமாட்டார். அவரை வற்புறுத்துவதில் பயன் ஒன்றும் இல்லை என்றார்கள்.
 
★ராமர் பரதனை பார்த்து சத்ரிய தர்மத்துக்கு விரோதமான செயலை செய்யாதே! எழுத்திரு!. அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே செல்வார்கள். நாம் சத்தியத்தை இத்தனை நாட்கள் மீறாமல் காத்தபடியால் மக்களும் சத்தியத்தை மீறாமல் நன்றாக காப்பாற்றுகிறார்கள். மக்களின் பேச்சையும் கேள். அயோத்திக்கு சென்று அரச பதவியை எற்று உனது கடமையை செய் என்றார்
 
★பரதன் ராமரிடம் பேசினான். தந்தையின் இந்த ஆணையை நிறைவேற்றியே தீர வேண்டும் என்றால் நான் தங்களுக்கு பதிலாக 14 வருடங்கள் காட்டில் இருக்கிறேன். எனக்கு பதிலாக நீங்கள் அயோத்தியில் அரச பதவியை ஏற்றுக்கொண்டு ஆட்சி செய்யுங்கள் என்றான். ராமர் இதனைக்கேட்டு சிரித்தார். பரதா இது என்ன பண்ட மாற்று வியாபாரமா? ஒருவன் தனது கடமையை மிகக் கடுமையான ஆபத்துக் காலங்களில் அவனால் செய்ய முடியவில்லை என்றால் மற்றோருவன் செய்வதுண்டு. நான் எற்றுக்கொண்ட இந்த விரதத்திற்கு என் உடலில் ஏதும்  சக்தியில்லாமல் இருந்து அதை என்னால் செய்ய முடியவில்லை என்றால் தம்பி முறையில் நீ செய்யலாம். ஆனால் நான் திடகாத்திரமான வலிமையோடு இருக்கின்றேன். நான் அப்படி சக்தியற்றும் நீ சக்தியுள்ளவன் என்றும் உன்னால் சொல்ல முடியுமா என்றார். பரதன் தலை குனிந்து நின்றான். வசிஷ்டர் பரதனிடம் நீ ராமனுடைய அனுமதியை பெற்றுக்கொண்டு அரசாட்சி செய். இதனால் எந்த பழி பாவமும் உன்னை வந்து சேராது. சத்தியமும் தர்மமும் காக்கப்படும் என்றார்.
 
★ராமர் பரதனை அனைத்து அயோத்தியை நான் உனக்கு தந்த ராஜ்யமாக எண்ணி அரசாட்சி செய் என்று தன் அன்பின் சக்தியெல்லாம் அவன் மீது செலுத்தி கட்டளையிட்டார் ராமர். பரதன்,ராமரிடம் அண்ணா! நீயே என் தந்தை. என் தெய்வம் நீ சொல்கின்றபடி செய்கின்றேன். நீங்கள் 14 வருடம் முடிந்ததும் அயோத்திக்கு வந்து அரச பதவியை ஏற்றுக்கொள்வேன் என்று உறுதி மொழி தாருங்கள். பின்னர் உங்கள் பாதுகையை தந்தீர்கள் என்றால் உங்கள் பாதுகையை சிம்மாசனத்தின் மீது வைத்து 14 வருடங்கள் கழித்து நீங்கள் வரும் வரை அரசாட்சி செய்வேன். எனது பணிகள் அனைத்தையும் உங்கள் பாதுகைக்கு நான் சமர்ப்பிப்பேன் என்றான் பரதன். 
 
★நீ ஒன்றும் கவலைப் படாதே பரதா!. 14வருடங்கள் முடிந்ததும் ஒருநாள்கூட தாமதிக்காமல் நான் அங்கு வந்து ராஜ்ஜியத்தை உன்னிடம் இருந்து பெற்றுக் கொள்கிறேன் என்றார். அதற்கு பரதன் சரி அண்ணா! ஆனால் ஒருநாள் தாமதமானாலும் அக்னி வளர்த்து நான்  என்  உயிரை மாய்த்துக் கொள்வேன். இது சத்தியம் என்று பதிலுரைத்தான்.
பரதன் கோரியபடியே  ராமர் தனது பாதுகையை பரதனிடம் கொடுத்தார். பரதன் ராமரின் பாதுகையை பெற்றுகொண்டு அதை தன் தலையில் வைத்துக் கொண்டு அயோத்தி நகரை நோக்கி நடக்க ஆரம்பித்தான். தாயார் மூவரும் பின் தொடர அனைவரும் அயோத்தி நோக்கி சென்றார்கள்
 
★அயோத்தி செல்லும் வழியில் பரத்வாஜ முனிவரிடம் நடந்த எல்லாவற்றையும்  சொல்லி அவரிடம் ஆசி பெற்றான் பரதன். பரதனுடைய குணத்தை கண்டு பாராட்டிய பரத்வாஜ முனிவர் மழை நீர் பள்ளத்தை நோக்கி பாய்வதை போல உன் குலத்தின் நெறி யாவும் உன்னை அடைந்து இருக்கின்றது. உன்னை பெற்ற தந்தை பெரும் பாக்கியவான். அவர் இறக்கவில்லை உன் சொரூபத்தில் அமரராக இங்கே இருக்கிறார் என்று சொல்லி வாழ்த்தினார்.
 
★பரதன் அயோத்தி நகருக்குச் செல்லவில்லை. அயோத்தியின் அருகில் இருக்கும் நந்தி கிராமத்தில் மணி மண்டபத்தை ஒன்றை அமைத்து ராமருடைய பாதுகைகளை வைத்து ராஜகுரு வசிஷ்டர் தலைமையில் அந்த பாதுகைகளுக்கு மிகச்சிறப்பாக பட்டாபிஷேகம் நடத்தினான் பரதன்.  மக்கள் அனைவரும் அந்த பாதுகைகளையே தங்கள் அரசனாக வழிப்பட்டனர். மேலும் தினந்தோறும் ஆயிரம் தெய்வீக மந்திரங்களால் ராமரின் திவ்ய பாதுகைகளுக்கு அர்ச்சனை செய்து இடையுறாது ராம பக்தி கொண்டு தவநெறி தவறாமல் ஆட்சி புரிந்தார், பரதர்.
 
★பரதன், வசிஷ்டர் மற்றும் தம்பி சத்ருக்ணன் மந்திரிகள் என்று அனைவரையும் சபைக்கு வரவழைத்தான். இந்த ராஜ்யம் ராமருடையது. தற்காலிகமாக அவர் என்னிடத்தில் அரசாள ஒப்படைத்திருக்கிறார். ஆகவே அண்ணனுக்கு பதிலாக அவரின் பாதுகையை அரசரின் தங்கச் சிம்மாசனத்தில் அமர்த்தி இருக்கிறேன். ராமர் 14 ஆண்டுகள் கழித்து திரும்பி வரும் வரையில் நான் இந்த  நந்தி கிராமத்தில் இருந்து ஆட்சி செய்து அவர் எனக்கு இட்ட கட்டளையே நிறைவேற்ற போகின்றேன். அருமைத் தம்பி சத்ருக்ணன் நமது குலகுரு வசிஷ்டரின் ஆலோசனைப்படி ராஜப்பிரதிநிதியாக தலைநகர் அயோத்தியில் இருந்து கொண்டு நீதியை நிலைநாட்ட வேண்டும். தாங்கள் அனைவரும் அதற்கு உறுதுணையாக இருந்து நல்வழிகாட்டுகள் என்றான். பரதன் கூறியதை அனைவரும் ஆமோதித்தார்கள்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை..........................
ஶ்ரீராம காவியம்
~~~~~
092 / 27-06-2021
 
அத்ரி முனிவரின்
ஆசிகளும் வழிகாட்டுதலும்...
 
★ராமர் வசித்த சித்திரக்கூடம் காட்டுப்பகுதியில் இருந்த ரிஷிகள் பலர் ராமரை சந்திக்க வந்தார்கள். இந்தக் காட்டில் இலங்கை வேந்தன் தசமுகன் ராவணனுடைய  உறவினரான கரன் என்ற ராட்சசன் அடிக்கடி வந்து எங்களுக்கு தொல்லைகள் கொடுக்கின்றான். ஆகையால்  நாங்கள் வேறு இடத்திற்குச் செல்ல முடிவு செய்துள்ளோம். தங்களை ஒரு முறை பார்த்து விட்டு செல்லலாம் என்றுதான் இங்கு  வந்தோம். உங்களுக்கு விருப்பம் இருந்தால் தாங்களும் எங்களுடன் வந்துவிடலாம் என்றார்கள். ராட்சசனுக்கு பயந்து இங்கிருந்து செல்ல வேண்டாம். இங்கேயே  இருங்கள். வரும் ராட்சசர்களை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ராமர் அவர்களுக்கு தைரியம் அளித்து சொன்னார். ஆனால் ரிஷிகள் ராமர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள்.
 
★ரிஷிகள் அனைவரும் சென்றவுடன் ராமருக்கு தனது உறவினர்களின் ஞாபகம் வந்தது. பரதன் தனது மூன்று தாயாருடன் வந்ததும் அங்கே தங்கியிருந்து அவர்களிடம் பேசியதும் ராமரின் நினைவை விட்டு செல்லவில்லை. தம்பி லட்சுமணனிடமும் சீதையிடமும் நமது நாட்டு மக்களும் மற்றும் உறவினர்களும் இங்கு வந்து சென்றதும் எனக்கு அவர்களின் நினைவு அதிகமாக இருக்கிறது. வேறு இடத்திற்கு சென்றால் நலமாக இருக்கும் என்று நான் எண்ணுகிறேன். நாமும் உடனே இங்கிருந்து கிளம்பி வேறு ஒரு இடத்திற்கு செல்லலாம் என்றார். லட்சுமணனும் சீதையும் ராமரின் சொல்லை ஆமோதித்து சித்ரகூட மலையில் இருந்து கிளம்ப ஆயத்தமானார்கள்.
 
★ராமர், தம்பி லட்சுமணரோடும், சீதையோடும்  சித்ரகூட மலைப் பகுதியில்  இருந்து கிளம்பி
 தெற்கு நோக்கிப் பயணித்தனர். அவர்கள் நெடுந்தூரம் நடந்து அத்ரி மகரிஷி வாழும் ஆஸ்ரமம் அடைந்தனர். அத்ரி முனிவர் சப்த ரிஷிகளில் ஒருவர். இவருடைய மனைவி அனுசூயை. அனுசூயை என்றால் பொறாமையற்றவள் என்று பொருள். இவர் சிறிதும்  கலங்கமில்லாத கற்புகரசி ஆவார். ராமர், லட்சுமணர், சீதை மூவரும் அத்ரி முனிவரை வணங்கினார்கள். தமது ஆஸ்ரமத்திற்கு வந்திருக்கும் இவர்கள் யார் என்பதை பற்றிக் கேட்டறிந்த முனிவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.  ராமரை வரவேற்ற அத்ரி மகரிஷியும் அவரது மனைவியும்  மகா தபஸ்வினியுமான அனுசூமா தேவியும் அவர்களை வரவேற்று ஆசிர்வாதம் செய்து மிகநன்றாக உபசரித்தார்கள். அவர்களுக்கு காய் கனிகள் கொடுத்து பசியாற செய்தார்கள்.
 
★முனிவரின் மனைவி சீதையை அன்புடன் தழுவிக்கொண்டு  ஜனக மகராஜரின் குமாரியாகிய நீ மரவுரியுடன் (மரவுரி என்பது முனிவர்கள் உடுத்தும் ஆடை) கணவனை பிரிய முடியாமல் கானகத்துக்கு வந்துள்ளாய்?
காட்டிற்கு செல்ல முடிவெடுத்த கணவருடன் நீயும் வந்து கஷ்டங்களை அனுபவித்து எல்லோருக்கும் வழிகாட்டியாய் இருக்கின்றாய் என்று மிகவும் பாராட்டினாள். நீ கற்புகரசி. அணிகலன்கள் இல்லாமல் வெறுமையுடன் இருக்கிறாயே?  
 
★சுமங்கலி பெண் ஆனவள் அணிகலன்கள் இல்லாமல் இருக்கக் கூடாது. இந்த நகைகள்  என்னுடையவை  நீ என் மருமகள் ஆவாய். ஆகவே இங்கு இருக்கும்  அணிகலன்களை  நீ அணிந்து கொள் என அன்புடன் கூறி அணிகலன்களை நிரம்ப சீதைக்கு அணிவித்தார். மகளே! ஒரு சமயம் நீ உன் கணவனை பிரிந்திருக்க கூடும். உனக்கு பசி எடுக்காத வரத்தை நான் அருள் புரிகிறேன். உன் புகழ் வாழ்க எனக் கூறி அனுசூயாதேவி அருள் புரிந்தார். ராமர், சீதை லட்சுமணர்.  மூவரும் அத்ரி மகரிஷியின் வேண்டுகோளின் படி அன்று இரவு அவரின் குடிசையில் தங்கினார்கள்.
 
★அத்ரி மகரிஷியிடம் நாங்கள் சித்ரகூட மலையில் இருந்து வேறு இடத்திற்கு செல்ல தீர்மானித்திருக்கின்றோம். நாங்கள் வசிக்க சிறந்த வேறு வனப்பகுதி சொல்லுங்கள் என்று நடந்தவற்றை சொன்னார் ராமர். அதற்கு அத்ரி மகரிஷி அறநெறியில் செல்லும் வனவாசிகளாக தபஸ்விகள் அந்த தண்டகாரண்யத்தில் வசிக்கிறார்கள். அந்த காட்டில் இருக்கும் தவசிகளுக்கு அரக்கர்கள் மிகவும் தொந்தரவு கொடுக்கின்றார்கள். பலவித வடிவங்களை எடுத்து வந்து துன்புறுத்துகின்றார்கள்.
 
★மனிதர்களைத்  தின்னும் அரக்கர்களும் அக்காட்டில் இருக்கின்றார்கள். அங்கு சென்று நீங்கள் அந்த கொடிய அரக்கர்களை அழிக்கவேண்டும். அந்தக் காடு எளிதில் உள்புக முடியாதபடி அடர்ந்த காடாக இருக்கும். தபஸ்விகள் பழம் பூ வேள்விக்கான பொருள்களை சேகரித்து செல்லும் வழி ஒன்று உள்ளது அதன்வழியாக உள்ளே செல்லலாம் என்று சொல்லி அக்காட்டிற்கு செல்லும் அந்த வழியையும் காட்டினார் அத்ரி மகரிஷி.
 
★உங்கள் பயணம் நல்லபடியாக அமைந்து செல்லும் காரியம் நிறைவேற வேண்டும் என்று ஆசிர்வதித்தார் அத்ரி மகரிஷி.
மறுநாள் காலை அவர்கள் முனிவரை வணங்கி விட்டு தண்டகவனத்தை நோக்கி புறப்பட்டனர்.ஶ்ரீ ராமர், சீதை மற்றும் லட்சுமணனோடு மேக கூட்டத்தில் பிரவேசிக்கும் சூரியனைப்போல் அந்த காட்டில் புகுந்தார். அந்த தண்டகாரண்யம் குறித்து நாளை பார்ப்போம்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.....................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
093 / 28-06-2021
 
தண்டகாரண்யம்...
 
★தண்டம்’ என்றால் தண்டனை. `ஆரண்யம்’ என்றால் காடு என்று பொருள். `தண்டனை அளிக்கும் காடு' என்று பொருள். தவறு செய்பவர்களுக்கு அவர்கள் செய்த தவறுகளுக்கேற்ப நீதி வழுவாமல் தண்டனை வழங்கும் அரசர்களின் செங்கோலுக்கு, `தண்டம்' என்றுதான் பெயர். நீதியை நிலைநிறுத்தும் ஒரு இயல்புகொண்டதால் அரசர் கையில் இருக்கும் செங்கோலை, `தண்டம்' என்று கூறினார்கள்.
 
★புராணக் கதைகளிலும், மேலும் ராமாயணத்திலும் புகழ்பெற்ற வனம் தண்டகாரண்யம். இந்தத் தண்டகாரண்ய வனம் தோன்றிய வரலாற்றிலும் சுவையான ஒரு புராணக் கதை   இருக்கின்றது. இக்ஷ்வாகு என்பவர் சூரியவம்ச மன்னர்களில் ஒருவர். இவரின்  மரபில் வந்தவர்கள்தாம் தசரதன், ராமர், பரதன் உள்ளிட்டவர்கள். சோழர்கள்கூட தங்களை இந்த இக்ஷ்வாகு வம்சத்தில்தோன்றிய சூரிய அரச மரபாகவே கூறி, பெருமைப்பட்டுக்  கொண்டு இருந்தார்கள்.
 
★இப்படிப்பட்ட, சூரியகுலத்தைச் சேர்ந்த இக்ஷ்வாகுவிற்கு நூறு குழந்தைகள் இருந்தனர். அதில் அவனது கடைசி மகனின் பெயர் தண்டகன். விந்திய மலைக்கும் ரிஷிகாவுக்கும் இடைப்பட்ட பகுதிக்கு, மகன் தண்டகனை அரசனாக நியமித்தார் மன்னர் இக்ஷ்வாகு. அவனது நாட்டுக்கு `மதுமன்டா' என்ற பெயரில் மிகப்பெரிய நகரையும் அங்கு நிர்மாணித்து, அந்த நாட்டின்  தலைநகராக்கினார். தண்டகன் ஆண்டதால் அது `தண்டக நாடு’ என அழைக்கப்பட்டது.
 
★தண்டகன், சுக்ராச்சாரியாரிடம் சில அஸ்திர சாஸ்திரங்கள், அரசநீதி  கற்பதற்குச் செல்ல தொடங்கினான். அங்கே குரு சுக்ராச்சார்யாரின் மகளான அராஜா என்பவளைக் கண்டு, அவள்மீது காதல் கொண்டான். அவள் எவ்வளவோ மறுத்தும் கூட, விடாமல் அவளைத் தினமும் தொந்தரவு செய்தான். அரசன் தண்டகனின் செயலால் மிக்க வருத்தமடைந்த அராஜா, தன் தந்தை சுக்ராச்சாரியாரிடம் இதை முறையிட்டாள். கடும் கோபம் கொண்ட அசுரகுருவான  சுக்ராச்சாரியார், தண்டகன் ஏழு நாள்களுக்குள் இறப்பான் என சாபமிட்டார்.
 
★அத்துடன் இல்லாமல் அவனது ராஜியத்தில் உள்ளோருக்கும் சாவு நடக்கும் எனவும் அந்த இடமே தீக்கு இரையாகும் எனவும் சபித்தார். தண்டகன் ஒரு பாவி ஆனபடியால் அந்த இடத்தில் சாவே ஆட்சி செய்யும் எனவும்  உரைத்தார்.பின்பு  அவர் வேறிடம் நோக்கி சென்றார்.அவரது சாபம் நிஜமானது. தண்டகனையும் ராஜ்யத்தையும் சாவு தீண்டியது. அந்த இடம் ஒரு கருங்காடாக ஆயிற்று. அங்கே சூரிய ஒளி கூட நுழைய முடியவில்லை. அந்த இடம் பேய்களும், பிசாசுகளும், ராட்சதர்களும் வசிக்கும் ஒரு இடமென ராமாயண காவியம்  கூறுகிறது.
 
★தண்டகனின் முடிவு என்பது அதர்மத்தின் ஆரம்பத்தையும் திரேதாயுகத்தில்  தர்மத்திற்கு இருந்த மதிப்பையும் நன்கு உணர்த்துகிறது. இக்ஷ்வாகு அரசர் தண்டகனுக்கு எல்லா நன்மையையும் செய்த போதும் அவன் அதர்ம வழியில் சென்று தனது  முடிவைத் தேடிக் கொண்டான். தண்டகனின் காலத்திற்கு பிறகு அந்த காடு தண்டகாரண்யம் என அழைக்கப் பட்டது.
 
★சுக்ராச்சாரியார்  சாபத்தின்படி தண்டகன் ஏழு நாள்களுக்குள் மர்மமான முறையில் இறந்தான். அவன் இறந்த  பிறகு அவனது தலைநகரான `மதுமன்டா' நகர் சிதைந்து போனது. தண்டகன் ஆண்ட நாடு சூரிய ஒளிகூட நுழைய முடியாதபடி அடர்ந்த கருங்காடாகியது. பிசாசுகளும் ராட்சதர்களும் வசிக்கும் இடமாக மாறத் தொடங்கியது. தண்டகன்  காலத்துக்குப் பிறகு அந்தக் காடு `தண்டகவனம்’ எனும் பெயரில் `தண்டகாரண்யம்' என அழைக்க பட்டது. அந்த வனத்தில் வசிக்கும் ராட்சதர்களும், `தண்டகர்கள்’ என்றே அழைக்கப்பட்டார்கள்.
 
★அதன் பிறகு தண்டனைக்கு உரியவர்கள்தாம் இந்த இருண்ட வனத்தில் வசிக்கலானார்கள். ரகுகுலத் தோன்றல் ஶ்ரீராமனும் தனது 14 வருட வனவாசத்தில் பதிமூன்று வருடங்களை இந்த வனத்தில்தான் தன் தம்பியான லட்சுமணன் மற்றும் மனைவி சீதையுடன் வசித்தார். வால்மீகி முனிவர் எழுதிய ராமாயணத்தில் ஆரண்ய காண்டத்தில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் இந்தத் தண்டகாரண்ய வனத்தில் நடைபெற்ற நிகழ்வுகளே. ராமன் தண்டகாரண்ய வனத்தில் தங்கி இருந்த அந்த 13 வருடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னென்ன தெரியுமா?
 
★இலங்கேஸ்வரர்’ என அழைக்க படும் ராவணனின் தங்கையன  சூர்ப்பனகையின் மூக்கை லட்சுமணன் அறுத்தது இந்த வனத்தில்தான்.
 
★விராதன் எனும் கந்தர்வனை அழித்து அவனுக்கு ராமர் அருள்புரிந்ததும் இந்த தண்டக வனத்தில்தான்.
 
★ராவணன் சீதையை, `பஞ்சவடி’ என்ற இடத்தில் அபகரித்துச் சென்றான். அந்தப் பஞ்சவடி தண்டகாரண்ய வனத்துக்குள் தான் இருக்கிறது.
 
★தண்டகனின் இறப்புக்குப் பிறகு அந்த இடம் ராவணனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. கரன் என்பவனை நியமித்து ஆட்சி செலுத்தினான் ராவணன். கரன் ராமனால் கொல்லப்பட்டான்.
 
★தண்டகாரண்ய வனத்தில்தான் அகஸ்திய முனிவர் தவம் செய்ய தங்கியிருந்தார். அவரிடம் ராமன் ஆசீர்வாதம் பெற்றதும் இங்கு தான்.
 
★தன்னுடைய முதிர்ந்த வயதில் ராமனின் தரிசனத்துக்காகக் காத்துக்கொண்டிருந்த சபரிக்கு ராமன் தரிசனம் தந்ததும் இந்த வனத்தில்தான்.
 
★அசுரர்கள் என அழைக்கப்பட்ட ராவணன் கட்டுப்பாட்டில் இருந்த இந்தத் தண்டகாரண்ய வனத்தில் தான் இவ்வளவு அற்புதங்கள் நடந்தேறின.
 
குறிப்பு:-
~~
 
★தண்டகாரண்யம் என்பது 90,000 சதுர கி.மீ அளவுக்கு சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஒடிசா, ஆந்திரா என்று பறந்து விரிந்திருக்கும் அடர்ந்த வனப்பகுதியாகும்.
2000ஆம் ஆண்டில் சத்தீஸ்கர் தனி மாநிலமாக உருவானபோது  தண்டகாரணயத்தின் பகுதிகள் கங்கேர் , தந்தேவாடா, பிஜப்பூர் , நாராயண்பூர், கோண்டாகாவ் , சுக்மா என ஏழு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது.
 
★தண்டகாரண்யம் அடர்வனப் பகுதியில் வாழும் மக்களில் நான்கில் மூன்று பங்கினர் மலைவாழ் பழங்குடி மக்கள் ஆவர். அவர்களில் முக்கியமான பழங்குடி இனங்கள் 1. கோண்டு மக்கள் , 2. முரியாக்கள், 3.ஹல்பா மக்கள் மற்றும் 4.அபுஜ்மரியா பழங்குடி மக்கள்.தண்டகாரண்ய பகுதி நள வம்சம், நாகர்கள், காகதீய வம்சம், சாளுக்கியர்கள் மற்றும் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டது.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை..................
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
094 / 29-06-2021
 
விராதன் வருகை...
 
★உங்கள் பயணம் நல்லபடியாக அமைந்து செல்லும் காரியம் நிறைவேற வேண்டும் என்று ஆசிர்வதித்தார் அத்ரி மகரிஷி.
மறுநாள் காலை அவர்கள் முனிவரை வணங்கி விட்டு தண்டகவனத்தை நோக்கி புறப்பட்டனர்.ஶ்ரீ ராமர், சீதை மற்றும் லட்சுமணனோடு மேக கூட்டத்தில் பிரவேசிக்கும் சூரியனைப்போல் அந்த காட்டில் புகுந்தார்.
 
★ராமர் சீதை லட்சுமணன் ஆகிய மூவரும் அடர்ந்த தண்டகாரண்ய காட்டிற்குள் சென்றனர். சீதை அங்கே இருந்த அழகிய செடிகள் மலர்கள் மற்றும் பறவைகளை பார்த்து மகிழ்ந்து கொண்டே நடந்தாள். சிறிது தூரத்தில் வேத மந்திரங்கள் ஓதும் ஓசை பலமாக கேட்டது. சத்தம் வரும் திசை நோக்கி சென்றார்கள். அங்கே மிருகங்களும் பறவைகளும் ஒற்றுமையுடன் பயமின்றி சுற்றி கொண்டிருந்தன. அங்குள்ள ரிஷிகள் ராமரைக் கண்டதும் மிகுந்த மகிழ்ந்து வரவேற்று உபசரித்தனர். ராமர் அன்று இரவு தங்குமாறு கேட்டுக்கொண்டனர்.
 
★உபசாரங்கள் அனைத்தும் முடிந்ததும் ராமரிடம் அவர்கள் தங்களின் கோரிக்கை ஒன்றை தெரிவித்தார்கள். தாங்கள் தர்மத்தை காப்பற்றுகின்றவர். கீர்த்தி மிக வாய்க்கப்பெற்றவர். நாட்டில் இருந்தாலும் காட்டில் இருந்தாலும் தாங்களே அரசர். இக்காட்டில் எங்களை மிதவும் துன்புறுத்தும் மிகக் கொடிய அரக்கர்களிடம் இருந்துஎங்களை காப்பாற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டனர். ராமர் ரிஷிகளிடம் நீங்கள் மிகப்பெரும் தபஸ்விகள். உங்கள் தவத்தின் சக்தி அளவிட முடியாதது. சாபத்தை இட்டு அந்த அரக்கர்களை அழித்துவிடலாமே என்றார்.
 
★இதனைக்கேட்ட ரிஷிகள் நாங்கள் கோபத்தை வென்று விட்டவர்கள். எமது புலன்களை வென்றவர்கள். எங்களுக்கு கோபம் வராது. நாங்கள் சாபம் இட்டால் எங்களின் தவவலிமை குன்றிவிடும். தவம் செய்வதை தவிர எங்களுக்கு வேறு ஒன்றும் தெரியாது. எங்களை நீங்கள் காப்பாற்றுங்கள் என்று ராமரிடம் முறையிட்டார்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற ராமர் அன்று இரவு அங்கே தங்கினார்.
 
★பிறகு மூவரும் அங்கிருந்து புறப்பட்டு தண்டகவனத்தில் மற்றொரு அமைதியான ஒரு இடத்தை அடைந்தனர். அந்த தண்டகவனத்தில் அரக்கர்களின் தொல்லைகளால் அவதியுற்று வரும் மேலும் சில முனிவர்கள் ராமனின் வரவால் மகிழ்ச்சியை அடைந்தனர். அனைவரும் ஒன்று சேர்ந்து ராமனிடம் சென்றனர். ராமரின் தோற்றத்தைக் கண்டு தங்கள் மெய்மறந்து நின்றனர். முனிவர்கள் மூவரையும் அழகிய ஓர் ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றனர். அந்த முனிவர்கள் ராமனிடம், ராமா! இனி நீங்கள் இங்கேயே தங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.
 
★அன்று இரவும் முனிவர்களின் ஆஸ்ரம குடிலிலேயே தங்க வேண்டியது ஆயிற்று. ரிஷிகள்  அவரவர் இடம் சென்று தங்கினர். மறுநாள் அதிகாலை முனிவர்கள் அனைவரும் கூட்டமாக வந்து ராமனை தரிசித்தனர். ராமர் முனிவர்களே! உங்களின் குறை என்ன? என்று அன்புடன் கேட்டார். முனிவர்கள் ராமா! இரக்க உணர்வு சிறிதும் இல்லாத அரக்கர்கள் இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் செய்கின்ற அநியாயங்கள் காரணமாக அறநெறி துறந்தோம் தவச்செயல் நீத்தோம், புலி வாழும் காட்டில் வாழ்கின்ற மான்களைப் போல ஆனோம். எங்களுக்கு நற்கதி கிடைக்குமா?
 
★அரக்கர்கள் செய்யும் இந்தக் கொடுமையை இந்திரனிடம் சென்று முறையிடலாம் என்றால், அவனோ அரக்கர்களுக்குப் பணிவிடை செய்பவனாக இருக்கிறான். பிறகு நாங்கள் யாரிடம் சென்று முறையிடுவது? இந்த தண்டகாரண்ய பகுதி தற்சமயம் இலங்கை வேந்தன் ராவணன் வசம் உள்ளது.  அவனது பிரதிநிதியாக அவன் உறவினன் கரன் மற்றும் தூஷணன் இங்கிருந்து கொண்டு கொடுமைகள் பல செய்கின்றனர். அத்துடன் விராதன் கவந்தன் போன்ற அரக்கர்களும் இங்குள்ளனர்.
 
★நாங்கள் செய்த தவத்தின் பயனாக தான் இப்போது  நீ இங்கே வந்திருக்கிறாய். ராமா! சூரியனை போல நீ வந்து இருக்கிறாய். எங்கள் வாழ்வில் சூழ்ந்திருக்கும் இருளை நீக்கி வெளிச்சத்தை கொண்டு வர வேண்டும். எங்கள் துயரங்கள் நீங்கள் நீக்க வேண்டும். ராமர் முனிவர்களை தேற்றி நீங்கள் அந்த கவலையை விடுங்கள். உங்களுக்கு இடர் புரிபவர் யாராயினும் அவர்கள் வேறு அண்டத்திற்கு சென்று ஒளிந்து கொண்டாலும் அவர்களை நான் விடமாட்டேன். அவர்கள் என் அம்புக்கு இரையாவது நிச்சயம். பயப்பட வேண்டாம் என்றார்.
 
★முனிவர்களே! என் தந்தை இறந்ததும், என் தாய்மார்கள் துன்பம் அடைந்ததும், என் தம்பி என்னுடன் கஷ்டப்படுவதும், என் நகரத்து மக்கள் மிகுந்த  துன்பம் அடைந்ததும், நான் வனம் செல்ல நேர்ந்ததும், நான் செய்த பெரும் புண்ணியத்தின் பலன் என்று நினைக்கிறேன். ராமர் இப்படி சொன்னதும் முனிவர்கள் ராமா! அப்படி என்றால் உன் வனவாசம் முடியும் வரை நீ இங்கேயே தங்கி எங்கள் துன்பங்களை நீக்கி வாழவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.ராமரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.
 
★உடனே முனிவர்கள் ராமா! இங்கு அருகில் சிறு அருவியுடன் கூடிய சோலை போன்ற ஓர் அழகிய இடம் உள்ளது. அங்கு ஒரு பர்ணசாலை அமைத்து தாங்கள் தங்கிக் கொள்ளலாம் என்றனர்.  பின் மூவரும் முனிவர்களுக்கு வணக்கம் தெரிவித்து அவர்கள் கூறிய இடம் நோக்கி புறப்பட்டு சென்றார்கள். அந்த இடத்தின் அழகு அவர்களின் கண்களை கவர்ந்தது.  அங்கேயே தங்க தீர்மாணித்தார்கள். அப்போது அவர்கள் முன் ஓர் அரக்கன் தோன்றினான். பார்ப்பதற்கு மிக பயங்கரமாக காணப்பட்ட அவன் பெயர் விராதன்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை........................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
095 / 30-06-2021
 
விராதன்
 
★விராதன்! அற்புதமான ஜீவன். கருட பகவானுக்கும் ஆஞ்சநேய மூர்த்திக்கும் கிடைத்த மாபெரும் பாக்கியத்தைப்பெற்ற உத்தம ஜீவன். ஆம்!  சீதாதேவியையும் ராம-லட்சு மணர்களையும் சுமக்கும் பாக்கியம் பெற்றவன் விராதன். அப்படிப்பட்ட  இந்த விராதனைப்பற்றிப் பார்க்கலாம் வாருங்கள்! தாயின் விருப்பத்தை நிறைவேற்றவும், தந்தையின் வாக்கை மெய்யாக்கவும், 'நாடு விட்டு காடு' சென்றார், ஸ்ரீராமன்.
அத்ரி  மகரிஷி-அனுசூயா தேவி ஆகியோரைத் தரிசித்து, பின் அவர்களிடம் ஆசிகளைப்பெற்று
தண்டகவனம் நோக்கி புறப்பட்டு வந்தனர்.
 
★இயற்கை அழகை ஆடையாக அணிந்திருந்த தண்டகாரண்ய வனப்பகுதி அழகுடன் மிகுந்த ஆபத்தையும் தன்னிடம் ஒளித்தே வைத்திருந்தது. அந்த கானகப் பகுதியில் அவர்கள் அனைவரும் நுழைந்தார்கள். வெகுதூரம் நடந்து வந்த ஸ்ரீராமரும்,அன்னை  சீதாதேவியும் மிகுந்த  களைப்பு காரணமாக, தண்ட காரண்யப் பகுதியில் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து ஓய்வுகொண்டனர். அப்போதுதான் ஒளியை மறைக்கும் இருளாக வந்தான் விராதன். ராம லட்சுமணரையும் சீதாதேவியையும் முதல் ஆளாக தாக்க வந்தான் அசுரன் விராதன். குபேர லோகத்தைச் சேர்ந்த அழகிய கந்தர்வன்.
 
★பிரம்மனிடம் சாகா வரம் பெற்ற‍ விராதன், நூறு சிங்கங்களின் பலம் கொண்டவன். அண்ட சராசரங்களும் பயந்து நடுங்கும் தோற்றமும் குரலும் கொண்ட அவன் அழகே உருவான ஸ்ரீராமன், சீதை, லஷ்மணர் ஆகிய மூவரையும் பார்த்தபடி வந்தான்.அரக்கன் கிலிஞ்சன் என்பவனின் மகனான விராதன், சும்மா வரவில்லை. கையில் ஒரு பெரும் சூலம், அதில் யானைகள், யானைகளுக்குப் பகையான சிங்கங்கள், யாளிகள் ஆகிய மிருகங்களைக் கோர்த்துக் கொண்டு வருகின்றானாம். தலையெல்லாம் சுருண்ட  முடிகள், பெரும் புண்களைப் போன்ற இரு கண்கள், அகன்ற மூக்கு ‘‘கன்னங்கரேல்’’ எனக் கறுத்த மேனி - என வந்த அசுரன்  விராதனைக்கண்டு, விண்ணும் மண்ணும்  நடுங்குகின்றன.
 
★வரும்போதே பெரும்பசியுடன் வந்த விராதன், சூலத்தில் அலட்சியமாகக் கோர்த்துக் கொண்டுவந்த விலங்குகளை, அப்படியே கையால்  பிய்த்து எடுத்து வயிற்றுக்குள் தள்ளிக் கொண்டே வந்தான். வேக வைப்பது, உப்பு-உறைப்பு என்று எந்தப் பிரச்சனைகளும் இல்லாமல், பச்சையாகவே  மென்று தின்றபடி வந்தான். ஆனால் பசி அடங்கியதாகத் தெரியவில்லை.  ‘‘இன்னும் கொண்டு வா! இன்னும் கொண்டு வா!’’ எனக் கேட்டுக்கொண்டே இருந்தது
 
★வயிறு. அடங்காப் பசியோடு வந்து கொண்டிருந்த விராதன்,  அழகாக வந்து கொண்டிருந்த அரச குலத்தவர் மூவரையும் பார்த்தான். ஆயிரக்கணக்கான யானைகளின் பலத்தைக் கொண்ட விராதன், தன் பலத்தை  வெளிப்படுத்தும் விதமாக யானைத் தோல்களை இடுப்பில் ஆடையாகச்சுற்றி, அதன் மேல் அரைக்கச்சு ‘பெல்ட்’ போல, ஒரு நீண்ட  பாம்பை சுற்றியிருந்தான்.  மேலாடையாகப் புலித்தோலை முறுக்கி அணிந்திருந்தான். விசித்திரமான கோலத்தோடு ஓலமிட்டபடி  வந்தான்  விராதன்,
 
★இவ்வாறு பெரும் சத்தமிட்டுக் கொண்டே வந்த விராதன், சீதையைப் பார்த்தான். சிறிதும் இரக்கமற்ற அரக்க மனம் கொண்ட அவன் சீதாதேவியின் அழகில் மயங்கினான். அடுத்தவர் மனைவி என்பதைக் கூட உணராத அந்த அரக்கன் சீதையை நெருங்கினான். பயந்து நடுங்கிய சீதாதேவியை தனது வலிய கரங்களால் பற்றி தூக்கிக்கொண்டு பறக்க‌த் தொடங்கினான். இவை யாவும் ஒரே கணத்தில் நிகழ்ந்தன.
இதனால் ராமரும் லட்சுமணரும் அதிர்ந்து போய், பின்னர்சட்டென சுதாரித்துக்கொண்டனர். தனது அன்னையைப் போன்ற ஜானகி தேவியை ஒரு கோர அரக்கன் கவர்ந்து சென்றதைக் கண்ட இளையவர் லட்சுமணர் கடும் கோபம் கொண்டார். விராதனை எச்சரித்துத் தடுத்தார்.
 
★அந்த விராதன் அதை கண்டு கொள்ளவில்லை. சீதாவின் அலறலும், தம்பியின் சீற்றமும் கண்டு இனி  வாயால் பேசிப் பலனில்லை இவனிடம்’’ என்ற ஶ்ரீராமர்,வில்லை வளைத்து நாண் ஏற்றி ஓசை எழுப்பினார்.  அதைக்கேட்டு அதிர்ந்த விராதன், சீதையைக் கீழே  விட்டுவிட்டு ராமரின் எதிரில் வந்து நின்று, சூலாயுதத்தைச் சுழற்றி வீசினான். அம்பால் அதை, இரண்டு துண்டுகளாக்கினார்
பின்னர் அரக்கன், அங்கிருந்த மரங்களையும், மலைகளையும் பெயர்த்து எடுத்துத் தாக்கத் தொடங்கினான். ராம,லட்சுமண பாணங்களால் அவை யாவும் பொடிப்பொடியாகின.
 
★ஆத்திரமடைந்த அரக்கன் தாக்குதலை வேகமாக்கினான். என்ன செய்தும், போரிடும் அந்த இருவரையும் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற கடும் கோபத்தில் சீதாதேவியைத் துன்புறுத்த அவரை நோக்கிப் பாய்ந்தான். ஸ்ரீராமரின் பாணம் அவனை நோக்கி பாய்ந்து தடுத்தது. மரணமே இல்லாத தன்னை யாருமே தடுக்க முடியாது என கொக்கரித்த அவன், சீதாதேவியை விட்டு விட்டு ஓடுமாறு கூவினான். பொறுமை இழந்த ஶ்ரீராமரும் லட்சுமணரும் அம்புகளால் துளைத்தனர். என்ன செய்தும் அவன் சாகவில்லை.
 
★‘‘இவன் கையை வெட்டித்தள்ள வேண்டும். இல்லாவிட்டால் இவன் போர்செய்து கொண்டே இருப்பான்’’ என்ற ஶ்ரீராமர்  விராதனின் தோளில் தம்பியுடன் ஏறினார். தனது தோளில் ஏறிய அவர்களைச் சுமந்தபடியே புறப்பட்டான் விராதன். அதைக் கண்ட சீதை, ‘‘அவர்களை விட்டு விடு!  விட்டு விடு!’’ என்று துயரத்தால் கதறினாள். அந்த
விராதனின் தோள்களில் ஏறி பயணம் செய்து கொண்டிருந்த லட்சுமணன், ‘‘அண்ணா! தேவி துயரத்தால் கதறுகின்றார். இந்த நேரத்தில் விளையாட்டு  ஏதும் வேண்டாம். இவனை வெகு  சீக்கிரமாகக் கொல்ல வேண்டும்’’ என்றார். ஶ்ரீராமர் சிரித்தார்.
 
★லட்சுமணா!ஏன் பதறுகிறாய்? இவன் மேல் இருந்தபடியே, நாம்  போகவேண்டிய வழியின் எல்லை வரை போவது நல்லது என்று நினைத்தேன். இவன் சாவது ஒரு பெரிய காரியமா என்ன?’’ என்றார்.  அதாவது, ராமரைப் பொருத்தவரை விராதன் ஒரு ராட்சதக்கோமாளி. அவ்வளவுதான்! அதன்பின் ராமர் தன்காலால் உதைத்து, அரக்கன் விராதனை கீழே  தள்ளினார். அரக்கன் உடல் கீழே விழுந்த அதே விநாடியில், அவன் உடலில் இருந்து ஔிமயமான திவ்ய வடிவம் ஒன்று வெளிப்பட்டது.
 
★ஸ்ரீராமரின் காலால் உதைபட்ட அரக்கன், அழகிய கந்தர்வனாக எழுந்து மூவரையும் கைகூப்பி வணங்கினான். 'அபயம், அபயம்' என்று சரணடைந்தான். மோக இச்சையால் மதி மயங்கி ரம்பையை துன்புறுத்தியதால், பிரம்மதேவரின் சாபம் பெற்ற கதையைச் சொன்னான். சாபவிமோசனமாகத் தங்கள் திருவடி படவேண்டும் என்றே இத்தனை நாளும் திரிந்தேன் என்றும் கூறினான்.  வணங்கி நின்றவன், கீழே கிடந்த தன் பழைய கோரமான அசுர  உடலை பார்த்தான்.  அவனுக்கே மிக்க அருவருப்பாக ஆனது.  ‘‘இந்த உடம்பிலா இவ்வளவு நாட்கள் இருந்தோம்?’’ என நினைத்தான்.
 
★அதே சமயம், அந்த உடம்பில் இருந்து தனக்கு விடுதலை வாங்கித்தந்து,  சாப விமோசனம் தந்த ராமரின் திருவடிகளைத் துதித்தான். ‘‘குற்றங்களும் கள்ளங்களும் நிறைந்த மாய வாழ்வில் இருந்து எனக்கு விடுதலை  அளித்த, ஞானம் வீசும் திருவடிகள் கொண்ட வள்ளலே!’’என்று அழைத்துத் துதித்தான் ஔி வீசும் திருமேனி கொண்ட விராதன். துதித்தவன், தான்  அரக்க உருவம் எடுத்ததன் காரணத்தை அவர்களுக்கு கூறத் தொடங்கினான். குபேரனின் இருப்பிடமான அனகாபுரியில், நடனக்கச்சேரி நடந்து கொண்டு இருந்தது.  
 
★தேவலோகத்தைச் சேர்ந்த ரம்பை என்பவள் ஆடிக் கொண்டு இருந்தாள். நடனம்  வளர்ந்து கொண்டே போனது. நடனத்தை பார்ப்பவர்களை எல்லாம்  வசீகரம் செய்யும்படியாக, ஆடிக் கொண்டிருந்தாள் ரம்பை. ஆட்டம் ஆடிய அவளே, பாட்டையும் அனுபவித்துப் பாடியபடியே ஆடினாள். அதன்  காரணமாகப் பாட்டிற்கு இசைந்த ஆட்டமும் ஆட்டத்திற்கு இசைந்த பாட்டும் ஆக, இனிமையாக இருந்தது. நடனத்தை அனைவரும் பார்த்து மகிழ்ந்து  கொண்டிருந்தார்கள்.
ரம்பை பாடி-ஆடிக் கொண்டு இருந்ததை, கந்தர்வர்களில் ஒருவனான  நானும் மிகுந்த ஆர்வத்துடன்  பார்த்து கொண்டு இருந்தேன். இந்த அரக்கப்பிறவி  வந்துவிட்டது என்றான் விராதன்.
 
★ரம்பை, ஒரு காதல் நாட்டிய நாடகத்தைத் தன் ஆடல் மற்றும் பாடல்களால், அபிநயம்  பிடித்துக் காட்டிக்கொண்டிருந்தாள். காதல் நாடகத்தில் ஓர் ஊடல் காட்சி. அதை ரம்பை அற்புதமாக ஆடிக்  
காட்டிக் கொண்டிருந்தாள். அதைப்பார்த்துக்  கொண்டிருந்த கந்தர்வன், தன்னையே காதலனாகவும்   ரம்பையைக் காதலியாகவும் கற்பனை செய்து, மையலில் தன்னை முழுமையாக மறந்து  விட்டான். அவன் மறக்கலாம். ஆனால் குபேரன் மறக்கவில்லை. அந்த நடன நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த குபேரன், கந்தர்வன் தன் நிலை  மறந்ததைக் கண்டார். சாபம் தந்தார்.‘‘கந்தர்வனே!தன்னிலை மறந்த நீ,  தன்னை மறந்து செயல்படும் அரக்கனாகப் பிறப்பாய்!’’ எனச்சாபம் தந்தார்  குபேரன். அந்தச் சாபத்தாலேயே கந்தர்வன், விராதன் என்னும் அரக்கனாகப் பிறந்தேன் என்று
கூறினான் விராதன்.
 
★‘‘ஆதிப்பரம்பொருளே! சாபம் பெற்ற அந்தநாள் முதல் இன்று வரை உணவே பரம்பொருள். அடுத்தவரை இம்சை படுத்தி வதைப்பதே வாழ்க்கை’’ என்று  இருந்த, அறிவற்றவன் நான். உயர்ந்த லட்சியங்களை அறவே மறந்து, இந்தக்காட்டிற்கே சர்வாதிகாரி போலத் திரிந்து, மற்ற உயிரினங்களைக் கொன்று  தின்பதே வாழ்க்கை என்று இருந்தவன் நான். ‘‘என் தீமையெல்லாம் நீக்கிய அருள் தெய்வமே! அறிவில்லாமல் உங்களுக்குத் துன்பம் கொடுத்து விட்டேன்.  பொறுத்து அருள் புரியுங்கள்!’’ என வேண்டி, அங்கிருந்து அகன்றான் அந்த கந்தர்வன்-விராதன்.
 
★அவனை ஆசீர்வதித்த ராமர் காம, குரோத, லோப மாயையில் சிக்கிக்கொள்ளும் எவருமே அரக்கர் தான். எனவே தாழ்ந்த இச்சைகளை விலக்கிவிட்டு நலமாக வாழ ஆசீர்வதித்தார். இந்த சம்பவத்தின் மூலம் மிகக் கேவலமான இச்சைகளை நாம் ஒழிக்கவேண்டும் என்பது மட்டுமல்ல, அதை ஒழிக்க அந்த கடவுளின் அனுக்கிரகமும் சிறிது வேண்டும் என்பதையும் இங்கு அறிந்தோம்.
 
★ராவணனுக்கு முன்பே தாய் சீதாதேவியைக் கவர்ந்து செல்ல வந்த விராதன் மனிதர்களுக்கு ஒரு பாடமாக வேண்டியவன்.
வணக்கத்துடன்
நாக சுபராஜ்
9944110869.
 
நாளை.......................
.
விராதனுக்கு அருள் புரிந்ததைப்  போலவே, நம்மிடம் உள்ள தீமைகளையும் துயரங்களையும் நீக்கி, நமக்கும் அருள் புரியுமாறு ஶ்ரீராமரிடம் வேண்டுவோம்!
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
096 / 01-07-2021
 
சரபங்க முனிவர்...
 
★சாபவிமோசனம் பெற்று மீண்டும் தேவருலகம் சென்றான் கந்தர்வனான விராதன். அதன் பிறகு அந்த அழகான இடத்தில் ஓர் குடில் அமைத்து அங்கேயே சில ஆண்டுகளை கழித்தார்கள். அந்தப் பகுதியில் இருந்த தவ முனிவர்கள் அனைவரும் அரக்கர் தொல்லை இல்லாமல் நிம்மதியாக தங்கள் யாகங்களை மற்றும் நித்ய கடமைகளைச் செய்தார்கள். இங்கிருந்தது போதும். இனி வேறு இடம் நோக்கி செல்லலாமென ராமர் முடிவு எடுத்தார். ஒருநாள் அங்கிருந்த முனிவர்களிடம் விடைபெற்று  மூவரும் முனிவர் சரபங்கரின் ஆஸ்ரமம் நோக்கி சென்றார்கள்.
 
★ராமர் சரபங்க முனிவரின் அழகிய ஆசிரமத்திற்கு வரும் முன்னதாகவே இந்திரன் தனது தேவகணங்களுடன் வந்து சரபங்க முனிவருடன் பேசிக் கொண்டிருந்தான். ஶ்ரீராமர் ஆசிரமத்திற்குள் நுழைவதை அறிந்த இந்திரன் தன் பேச்சை விரைவாக முடித்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பி சென்றான். பின்னர் சரபங்க மகரிஷியின் பாதங்களில் விழுந்து ராமர் சீதை லட்சுமணன் மூவரும் வணங்கி வழிபாடு செய்தார்கள். அவர்கள் மூவரையும் பார்த்து மகிழ்ந்த சரபங்க மகரிஷி  ராமா!  நான் உங்களை எல்லாம் பார்ப்பதில் பேரானந்தம் அடைகின்றேன். உனக்காகத் தான் காத்துக் கொண்டிருக்கின்றேன் ராமா!. என்னுடைய உலக வாழ்க்கை வினைகள் எல்லாம் முடிந்து மேலுலகம் செல்லும் காலம் விரைந்து வந்து விட்டது.
 
★ என்னை மேலுலகம் அழைத்து செல்ல சிறிது நேரத்திற்கு முன்பு இங்கு இந்திரன் வந்திருந்தான். எனக்கு உன்னை காணாமல் மேலுலகம் செல்ல விருப்பம் இல்லை. எனவே இந்திரனிடம் ராமனை காண ஆவலாய் இருக்கின்றேன். ராமரை கண்ட பின்பு நிச்சயம் வருகிறேன். சிறிது நேரம் காத்து இருக்குமாறு இந்திரனிடம் நான் கூறினேன். நான் மேலுலகம் செல்ல உடலை விடும் வழிகளை சொல்லி விட்டு இந்திரன்சென்று விட்டான். நீ இந்த மண்ணுலகில் செய்ய வேண்டியிருக்கும்   அரிய பெரிய செயல்களை செய்து முடித்த பின்பு அந்த இந்திரனே உன்னை வந்து சந்திப்பான். பகவானே! இப்போது நான் இதுவரை செய்த என்னுடைய புண்ணிய பலன்கள் எல்லாம் உங்களிடம் தந்தேன். பெற்றுக்கொள்ளுங்கள் என்றார் சரபங்க முனிவர்.
 
★ராமர், சரபங்க முனிவரிடம் நான் சிறந்த சத்ரிய குலத்தில் பிறந்தவன். என்னுடைய குல தர்மப்படி என்னிடம் இருந்து கேட்பவர்களிடம் நான் தான் கொடுக்க வேண்டும். யாரிடமும் எதுவும் பெற்றுக்கொள்ளகூடாது. தாங்கள் குறிப்பிட்ட மிகநல்ல புண்ணியங்களை நல்லதொரு  கார்மாக்கள் செய்து என்னால் பெற்றுக்கொள்ள முடியும். ஆகவே தாங்கள் கொடுக்கும் புண்ய பலன்களை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது. நாடு நகரம் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு தபஸ்வியாய் காட்டில் வாழ வந்திருக்கிறேன். இக்காட்டில் வசிக்க எங்களுக்கு ஒரு நல்ல இடத்தை தேர்ந்து எடுத்து சொல்லுங்கள் என்றார்.
 
★இக்காட்டில் சுதீட்சணர் என்ற ரிஷி இருக்கிறார். அவர் முக்காலமும் அறிந்தவர். இந்த மந்தாகினி நதியின் எதிர் திசையில் இருக்கும் புனிதமான இடத்தில் அவர் தவம் செய்து கொண்டிருக்கின்றார். அவரிடம் சென்று இந்த வனத்தில் எங்கே வசிக்க வேண்டும் என்று கேட்டு தெரிந்து கொள். உன்னை சந்தித்ததில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன் உன்னை சந்திக்கும் என்னுடைய ஆசை தீர்ந்தது. சிறிது நேரம் இங்கே இருப்பாயாக. நான் மேலுலகம் செல்லும் நேரம் வந்து விட்டது என்று சொல்லி பெரியதாக  நெருப்பை வளர்த்து அதனுள் நுழைந்தார் சரபங்க முனிவர். நெருப்பில் இருந்து ஒரு திவ்யமான ஒளி உருவமாக தோன்றி பிரம்மலோகத்தை அடைந்தார் சரபங்க முனிவர்.
 
★அரக்கன் விராதன்  ராமரால் கொல்லப்பட்டதை அறிந்த காட்டிலிருக்கும் முனிவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ராமரை காண அனைவரும் முடிவு செய்து ராமரை காண கூட்டமாக புறப்பட்டு வந்தார்கள்.
மூவரும் அந்த முனிவர்களின் பாதங்களை தொட்டு வணக்கம் தெரிவித்தனர்.  ராமர், நம்முடைய  இந்த வனவாசமானது  மிகவும் பயனுள்ளதாக ஆயிற்று என்று லட்சுமணர் மற்றும் சீதையிடம் கூறினார். நாம் இங்கு வந்துள்ள  முனிவர்க்கும் தவசீலர்களுக்கும் உதவி செய்வதன் பொருட்டு நமக்கு மிகப் பெரும் பாக்கியம் கிடைத்தது. இந்த செயல் பெரும் புண்ணியம் ஆகும் என்றார். ராமரை பல முனிவர்கள் வந்து வணங்கி வாழ்த்திச் சென்றனர்.
 
★மேலும் பல முனிவர்கள் கூட்டம் ராமரை வணங்கி ராட்சதர்களிடம் தாங்கள் அனுபவித்த மிகுந்த துன்பங்களை எல்லாம் எடுத்துக் கூறினார்கள். தாங்கள் இங்கே தங்கியிருப்பதனால் எங்களின் தவங்களும் விரதங்களும் இடையூறு இன்றி இனி சிறப்பாக நடைபெறும் இது நாங்கள் செய்த பாக்கியம். பம்பை நதிக்கரையில் மற்றும் மந்தாகினி நதியின் கரை  ஓரங்களிலும் உள்ள ஏராளமான முனிவர்களும் ரிஷிகளும் ராட்சசர்களின் இரக்கமற்ற கொடுமையினால் துன்பங்களை அனுபவித்துக் கொண்டு இங்கே இருக்கின்றார்கள்.
 
★அரசனுடைய கடமை என்பது குடிமக்களைக் காப்பாற்றுவது ஆகும். அதை செய்யாத அரசன் அதர்மம் செய்தவனாகின்றான்.
குடும்பங்களில் இருப்பவர்கள் அரசுக்கு வரி செலுத்துவது போல முனிவர்களும் ரிஷிகளும் செய்யும் தவத்தின் பலனில் நான்கில் ஒரு பங்கு அரசனுக்கு சேர்ந்து விடுகின்றது. நாங்கள் படுக் கஷ்டங்கள் சொல்ல முடியாத அளவு உள்ளது. நீ இந்திரனுக்கு சமமானவனாக இருக்கின்றாய். உன்னையே சரணடைகிறோம் எங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று மிகவும் வருந்திக் கேட்டுக் கொண்டார்கள். ஶ்ரீராமர் பதில் உரைக்க ஆரம்பித்தார்.
 
நாளை..........................
 
 
 
097 / 02-07-2021
 
முனிவர் சுதீட்சணர்...
 
★ராமர் முனிவர்களைப் பார்த்து முனிவர்களே! நீங்கள் ஏன் இப்படி வருந்துகின்றீர்கள்? நீங்கள் இட்ட கட்டளையை ஏற்று செய்ய நான் கடமைப்பட்டவன் ஆவேன். அயோத்தியில் என் தந்தை இட்ட கட்டளைக்காகவே வனத்திற்கு வந்தேன். என் தந்தையிட்ட  ஆணைப்படி நான் நடக்கும்போது உங்களுக்கு நன்மை செய்வது எனக்கு கிடைத்த பாக்கியமே. நான் தண்டகவனத்தில் இருந்து கொண்டு ராட்சசர்களை அழித்து உங்களை துன்பங்களில் இருந்து காப்பேன். அனைவரும்  மிகவும் தைரியமாக இருங்கள் என்று ராமர் கூறினார். முனிவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். ராமர் லட்சுமணன் சீதை மூவரும் சுதீட்சணர் என்ற மகரிஷியின் ஆஸ்ரமத்தை நோக்கி புறப்பட்டு சென்றார்கள்.
 
★ராமர் முனிவர்  சுதீட்சணரின் ஆஸ்ரமத்திற்குள் சென்று அவரை சந்தித்து அவருக்கு வணக்கம் செலுத்தி எனது பெயர் ராமன்.  நாங்கள்  தங்களை தரிசிக்க வேண்டி வந்துள்ளோம். தாங்கள் எங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்றார். அதற்கு முனிவர் சுதீட்சணர் தர்மத்தைக் காப்பவனே! உன்னை நான் நன்கு அறிவேன்.நான் உங்களை வரவேற்கிறேன். நீங்கள்  இந்த ஆஸ்ரமத்திற்குள் வந்ததால் இந்த ஆஸ்ரமம் ஒளிபெற்று விளங்குகின்றது. நீயே இதற்கு எஜமானன். உன் வரவுக்காகவே நான் இவ்வளவு வருடங்களாக இங்கு காத்திருந்தேன். இல்லை என்றால்  இதற்கு முன்பே எனது உடலை விட்டுவிட்டு மேலுலகம் சென்றிருப்பேன். நீ உன்னுடைய ராஜ்ஜியத்திலிருந்து வெளியே வந்து சித்திரக்கூடம் பகுதிக்கு வந்திருப்பதை நான் கேள்விப் பட்டேன்.
 
★ நான் சம்பாதித்து வைத்துள்ள  புண்ணியங்கள் அனைத்தும் உன்னுடையதாகும். நீயும் உனது மனைவியும் லட்சுமணனும் அதைப் பெற்றுக் கொண்டு தர்மத்தைக் காக்க வேண்டும் என்றார்.  ஶ்ரீராமர், சுதீட்சண முனிவரிடம் என் புண்ணியத்தை நானே தவம் இருந்துதான்  பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது எனது சத்ரிய குலதர்மம். தங்களுடைய இந்த மகிமையான ஆசிர்வாதத்தால் அவ்வாறே செய்வேன். காட்டிலிருந்து வனவாசம் செய்ய நான் மிகவும் விரும்புகின்றேன். சரபங்கர் முனிவரின் வழிகாட்டுதலின் படி வனத்தில் தங்கி வாழ்வதற்கு ஏற்ற இடத்தை தங்களின் ஆலோசனைகள் மூலம் கேட்டுப் பெற வந்தேன் என்றார்.
 
★சுதீட்சணர் முனிவரின் முகம் மலர்ந்தது.இந்த ஆஸ்ரமத்தையே உனது இருப்பிடமாக வைத்துக் கொள்ளலாம். ரிஷிகள் பலர் இங்கே தபஸ்விகளாய் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். ரிஷிகளின் தவத்திற்கு மிகத் தடங்களாக  கொடூரமான விலங்குகள் மிகவும் தொந்தரவு கொடுக்கின்றன. விலங்குகளின் தொந்தரவை தவிர்த்து இங்கு வேறு எந்த குறையும் இல்லை என்று கூறினார். சுதீட்சணர் முனிவர் சொன்ன வார்த்தையின் பொருளை புரிந்து கொண்ட ராமர் தன்னுடைய வில்லின் நாணில் சத்தத்தை எழுப்பி இந்த காட்டில் தொந்தரவு கொடுக்கும் விலங்குளை ஒழிப்பது எனது பணியாக ஏற்றுக்கொள்கிறேன்.
 
★தாங்கள் தங்கியிருக்கும் இந்த இடத்திலேயே நாங்களும் வந்து தங்கினால் அது தங்களின் தவ வாழ்க்கைக்கு இடையூராக இருக்கும். ஆகவே இக்காட்டில் தனியாக ஒரு குடில் அமைத்து நாங்கள் தங்கிக் கொள்ள அனுமதி தாருங்கள் என்று ராமர் கேட்டுக்கொண்டார். சுதீட்சணர் முனிவர் ராமரிடம், அருகில் இருக்கும் தண்டகாரணியத்து ரிஷிகள் அனைவரும் தவம் செய்து சித்தி அடைந்தவர்கள். அவர்களை பார்த்து ஆசி பெற்றுக்கொள்ளுங்கள். அங்கு மிக ரம்யமான மலர்களும் தடாகங்களும் பறவைகளும் விலங்குகளும் இருக்கின்றது. அங்கு நீங்கள் தங்குவதற்கு குடில் அமைத்து கொள்ளுங்கள். உங்களுக்கு விருப்பமான போது இங்கு வந்து தங்கி கொள்ளலாம் என்று ஆசிர்வதித்தார். பின்னர் சுதீட்சணர் முனிவரை மூவரும் வலம் வந்து வணங்கி அவரிடம் விடைபெற்றுச் சென்றார்கள்.
 
★சீதை ராமரிடம் தனக்கு ஒரு சந்தேகம் உள்ளது என்றும் அதனை தீர்த்து வைக்குமாறு கேட்டுகொண்டாள். நாதரே! நான் தங்களை எதிர்த்து பேசுவதாக  எண்ண வேண்டாம். எனக்கு தோன்றுவதை நான் இங்கு சொல்கிறேன். எது தருமம் எது கடமை என்று தங்களுக்கு நன்றாக தெரியும். மக்கள் ஆசையினால் மூன்று பெரும் பாவங்களை செய்வார்கள் என்று பெரியவர்கள் சொல்வார்கள். 1. பொய் பேசுவது 2. தனக்கு சொந்தம் இல்லாத பெண்ணை தீண்டுவது 3. நம்மை எதிர்த்து தீங்கு செய்யாதவர்களை துன்புறுத்துவது. இந்த மூன்றில் பொய் என்ற ஒன்று தங்களிடம் இல்லவே இல்லை. மற்ற பெண்களை மனதளவில் கூட நினைக்க மாட்டீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
 
★இப்பொது நான் பயப்படுவது மூன்றாவது விஷயத்தை பற்றியது. காட்டில் இருக்கும் அசுரர்களை கொல்வதாக முனிவர்களுக்கு வாக்கு அளித்து விட்டீர்கள். கொடிய தீயவர்களை அழிப்பதும் மக்களை காப்பதும் சத்ரிய தருமம் தான். ஆனால் இப்போது நாம் தபஸ்விகளாய் இக்காட்டில் தவம் செய்யவே  வந்திருக்கின்றோம். ஆகவே தபஸ்விகளாய் இருக்கும் நம்மை எதிர்க்காத ஒருவனை நாம் ஏன் கொல்ல வேண்டும்?. அரச பதவிகளில் இருப்பவர்களின் கடமை அது. அக்கடமையை நாம் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்?. என்னுடைய சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் என்று கேட்டாள் சீதை.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.........................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
098 / 03-07-2021
 
அகத்திய முனிவர்
சந்திப்பு...
 
★ராமர் சீதையிடம் முனிவர்கள் ரிஷிகள் நேரில் வந்து உதவி கேட்காவிட்டாலும் அவர்களை காப்பாற்றுவது சத்ரிய குலத்தில் பிறந்தவர்களுடைய கடமை. இக்காட்டிற்கு நாம் வந்தவுடன் இங்கிருக்கும் ரிஷிகள் நம்மிடம் முதலில் சொன்னது உங்களை சரணடைகின்றோம் அபயம் எங்களை ராட்சதர்களிடம் இருந்து காப்பாற்றுங்கள் என்று முறையிட்டார்கள். நாம் இப்போது தபஸ்விகளாக இங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஒரு தபஸ்வியாக இருப்பவர்களிடம் யார் எதை கேட்டாலும் கொடுக்க வேண்டும் என்பது  தருமம். எனவே காப்பாற்றுகின்றேன் என்று சொல்லிவிட்டேன். ஆகவே கொடுத்த வாக்கை காப்பாற்ற நம்மை எதிர்க்காத ராட்சசர்களை அழிப்பதில் தவறேதுமில்லை. தபஸ்விகளுக்கான தருமத்திற்கு உட்பட்டு இதனை செய்யலாம்.
 
★இரண்டாவதாக நாம் இங்கு தபஸ்வியாக வாழ்ந்தாலும் வில் அம்புடன் ஆயுதங்கள்  ஏந்தி நிற்கின்றோம். துன்பப்படும் மக்களை காப்பாற்றுவது ஒரு அரசனுடைய கடமையாக இருந்தாலும் சத்ரிய குலத்தில் பிறந்தவர்களுடைய பொது கடமை தஞ்சமடைந்தவர்களை காப்பாற்றுவதாகும். அதன்படி ராட்சதர்களை அழிப்பதில் தவறு ஒன்றுமில்லை.  சத்ரிய தருமத்திற்கு உட்பட்டு இதனை செய்யலாம். என்னுடைய உயிர் இருக்கும் வரை கொடுத்த வாக்கை நான்  காப்பாற்றுவேன். இதற்காக உன்னையும் மற்றும் லட்சுமணனையும் கூட தியாகம் செய்ய தயங்க மாட்டேன் என்றார் ராமர். சீதை தனது சந்தேகம் தீர்ந்தது என்றாள்.
 
★தண்டகாரண்யத்தில் நிறைய ரிஷிகள் குடில்கள் அமைத்து தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். மான் கூட்டங்கள், யானைகளின் கூட்டங்கள், பறவைகள், அழகிய பூக்களை உடைய செடிகொடிகள் தடாகங்கள் என மிக அழகுடன் இருந்தது அந்த இடம். அங்கு ராமரும் லட்சுமணனும் தாங்கள் தங்குவதற்கு குடில் ஒன்று நன்கு அமைத்துக்கொண்டார்கள். பின் அங்கிருக்கும் முனிவர்களின் குடிலில் மாதம் ஒரு குடிலுக்கு விருந்தினர்களாக சென்றும் தவ வாழ்க்கையை சில  ஆண்டுகள் மகிழ்ச்சியுடன் கழித்தார்கள்.
 
 ★அகத்திய முனிவரை சந்தித்து அவரிடம் ஆசி பெற வேண்டும் என்ற ஒரு எண்ணம் ராமருக்கு வந்தது. சுதீட்சண முனிவரை சந்தித்த ராமர், தவசிரேஷ்டர்  அகத்திய முனிவரை காண மிக ஆவலாக இருக்கிறேன். அவரின் இருப்பிடத்தை பற்றி எனக்குச் சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார். சுதீட்சண முனிவர் நானே உன்னிடம் அகத்திரை சந்தித்து ஆசி பெற்று வா என்று சொல்ல எண்ணியிருந்தேன். நீயே கேட்டுவிட்டாய் மிக மகிழ்சி.
 
★நாம் இருக்குமிடத்தில் இருந்து தென் திசையில் சுமார் நான்கு யோசனை தூரத்தில் திப்பிலி மரங்களும் பழங்கள் வகை மரங்களும் நிறைந்த காட்டில் அகத்திய முனிவரின் தம்பி இத்மவாஹர் குடில் இருக்கிறது. அங்கு சென்று ஒர் இரவு தங்கி இருந்து  அடுத்த நாள் மீண்டும் தென் திசையில் ஒர் யோசனை தூரம் பயணித்தால் வரும் காட்டில் அகத்திய முனிவரின் குடில் இருக்கின்றது அங்கு சென்று அவரை சந்திக்கலாம். இன்றே புறப்படுவாய் என்று ராமருக்கு ஆசி கூறி அனுப்பி வைத்தார் சுதீட்சண முனிவர்.
 
★ராமர் சீதை லட்சுமணன் ஆகிய மூவரும் அகத்தியரின் தம்பி இத்மவாஹர் ஆஸ்ரமத்திற்கு சென்று அவரிடம் ஆசி பெற்றுக் கொண்டு அகத்தியர் ஆஸ்ரமம் நோக்கி சென்றார்கள். தூரத்தில் மிருகங்களும் பறவைகளும் விளையாடிக்கொண்டும் நடுவில் முனிவர்கள் சிலர் பூஜைக்காக மலர்களை சேகரித்து கொண்டும் இருப்பதை பார்த்தார்கள். அகத்தியரின் ஆஸ்ரமத்திற்கு அருகில் நாம் வந்து விட்டோம் என்பதை உணர்ந்த ராமர் தம்பி லட்சுமணனிடம் முதலில் நீ மட்டும் சென்று அகத்தியரிடம் உள்ளே வருவதற்கான அனுமதி பெற்றுக்கொண்டு வா என்றார்.
 
★லட்சுமணன் மட்டும் தனியாக ஆஸ்ரமத்தின் அருகில் சென்று அங்கிருந்த அகத்தியரின் சீடர் ஒருவரிடம் மன்னர் தசரதரின் புதல்வர்கள் ராமர் லட்சுமணன் இருவரும் ஜனகரின் மகள் சீதையும் அகத்தியரை பார்த்து ஆசி பெற காத்திருக்கின்றார்கள் வரலாமா? என்று கேட்டு செய்தி சொல்லி அனுப்பினான். சீடரும் அகத்தியரிடம் லட்சுமணன் சொன்ன செய்தியை அப்படியே சொன்னார். இதனை கேட்ட அகத்தியர் நான் வெகுகாலமாக அவர்களின் வரவை எதிர் நோக்கி காத்திருக்கின்றேன். நல்ல படியாக உபசரித்து பின்னர் அவர்களை விரைவாக இங்கு அழைத்துவா. அவர்களை பார்க்க ஆவலாக இருக்கின்றேன் என்று சீடரிடம் கூறினார். மூவரும் ரிஷி அகத்தியரை காண ஆவலுடன் சென்றார்கள்.
 
வணக்கத்துடன்
நாக சுபரா ராவ்
9944110869.
 
நாளை........................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
099 / 04-07-2021
 
அகத்தியர்...
 
★அகத்தியரின் பிறப்பு பற்றி மஹாபாரதம் ஆதி பர்வம் கூறுவதை  நாம் சுருக்கமாகப் பார்க்கலாம். பிரம்மாவினுடைய புத்திரர் மரீசி. மரீசியினுடைய புத்திரர் காஸ்யபர். அவருக்கு தக்ஷப்ராஜாபதியின் மகளாகிய அதிதி என்பவளிடத்தில் பன்னிரெண்டு புத்திரர்கள் ஜனித்தார்கள். அவர்களுக்கு பன்னிரெண்டு ஆதித்தியர்கள் என்று பெயர். அப்பன்னிருவரில் மித்திரர் என்பவர் ஒருவர். அந்த மஹாத்மாவுக்கு மகனாகப் பிறந்தவர் அகத்தியர்.
 
★தமிழர்களுக்கு மிகவும் பிடித்த மஹரிஷி அகத்தியர். தமிழ்க் கடவுள் முருகனிடமிருந்து தமிழைப் பெற்று அதற்கு இலக்கணமெல்லாம் வகுத்து தமிழைத் தமிழருக்குத் தந்த மஹரிஷி அகஸ்தியர். இவரைப் பற்றிய ஏராளமான சுவையான கதைகள் ராமாயண, மஹாபாரத இதிஹாஸங்களிலும் பதினெட்டு புராணங்களிலும் காணலாம்.
அகத்திய முனிவரின் மனைவி லோபாமுத்திரை பற்றிய ஒரு சுவையான கதையும் உண்டு.
 
★ஒரு சமயம் அகஸ்திய முனிவர் அவர்களின்  முன்னோர்கள் குழியில் தலகீழாகத் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதன் காரணத்தை அகஸ்தியர் வினவ அவர்கள்,”உனக்குக் குழந்தைகள் இல்லாததால் இப்படி இருக்கிறோம்” என்று பதில் தந்தனர். இதனால் நல்ல மனைவியைத் தேடி அலைந்த அகஸ்தியர், மணமுடிக்க யாரும் அகப்படாததால் ஜீவராசிகளின் சகல நல்ல அம்சங்களையும் ஒருங்கு திரட்டி ஒரு அழகான பெண்ணை சிருஷ்டித்தார். அந்தச் சமயம் விதர்ப்ப தேசத்து அரசன் குழந்தை வேண்டி தவித்துக் கொண்டிருந்தான். அவனிடம் அந்த சிசுவை மகளாகும் படி அகஸ்தியர் அனுக்ரஹித்தார். நாளுக்கு நாள் அந்தக் குழந்தை அழகுடன் மிளிர்ந்து வளர்ந்தது. அவளுக்கு அந்தணர்கள் லோபாமுத்திரை என்று பெயரிட்டனர். அவளையே தனக்கு கன்னிகாதானம் செய்து கொடுக்கும்படி விதர்ப்பராஜனை கேட்க அவனும் சம்மதித்தான். முனிசிரேஷ்டர் அகஸ்தியருக்கும் லோபாமுத்ரைக்கும் திருதாஸ்யூ என்ற புத்திரர் ஜெனித்தார். இப்படி ஒரு புத்திரன் இவருக்கு பிறந்ததால் அகஸ்தியரின் முன்னோர்கள் தாம் விரும்பிய நற்கதியை அடைந்தனர்.
 
★இவர் தினை மாவு, பயன்பல அளிக்கும் தானியங்கள், விஷம் தோய்ந்த அம்புகள்  மற்றும் தர்ப்பைப்புல் ஆகியவைகள் பற்றி தெளிவாக கூறியுள்ளார் (ரிக்வேதம் 1-189-10; 1-191-30). ராமாயண காவியத்தில்
ராமனின் வன வாச காலத்தில், அகத்தியர் சந்தித்து மந்திர பலம் மிக்க ஆயுதங்களை அருளினார்
ராமபிரானுக்கு சிவகீதையை போதித்தவர் முனிவர் அகத்தியர்.
ராமருக்கு ஆதித்ய ஹ்ருதயத்தை  உபதேசித்தவர். ஹயக்ரீவரிடம் இருந்து லலிதா சஹஸ்ரநாமம் ஸ்லோகத்தைப்   பெற்றவர். சரஸ்வதி ஸ்தோத்திரத்தை இயற்றியவர். இவரது மனைவி லோபாமுத்ரை அம்பாளின் மிக நெருங்கிய அணுக்க பக்தை.
 
★பார்வதி பரமேஸ்வரனுக்கு நடந்த விவாஹத்தின் போது தேவர்கள் அனைவரும் ஹிமகிரியில் கூட வடகோடி தாழ்ந்து தென்கோடி உயர்ந்தது. அதை சரிப்படுத்த ஈஸ்வரன் அகஸ்தியரைத் தென் திசைக்கு அனுப்பினார்.இதனால் தெற்கே மேருமலை நோக்கிப் பயணம் செய்தார் அகத்தியர். மேருமலை பகுதிக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, முனிவர் அகத்தியரைக் கண்டதும் தாள் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று அதனிடம் கூறிச் சென்ற அகத்தியர், மீண்டும் வடதிசை செல்லாதிருந்தார். ஆதலால் விந்திய மலையும் அதன் பின் சிறிதுகூட உயரவில்லையென புராணங்களில்  கூறப்படுகிறது.
 
★தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படி அகத்தியம் என்னும் இலக்கண நூலை இயற்றினார்.
அன்றிலிருந்து அகஸ்தியர் பொதியமலை வாசியானார். இந்த விருத்தாந்தத்தை ஸ்கந்த புராணம் விரிவாகக் கூறுகிறது.
அவருடைய ஆஸ்ரமத்தில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டைச் செய்து வழிபடும்போது அகத்தியருக்கு சிவபெருமானின் திருமணக் காட்சியை காண ஆர்வம் ஏற்பட்டது. சிவபெருமானின் திருமணக் காட்சியை காட்டுமாறு வேண்டினார் சிவபெருமான் அவ்வண்ணமே பார்வதி தேவி  இருவருமே காட்சியளித்தனர்.
 
★தேவர்களின் பகைவனான விருத்திராசுரன் மற்றும் பல அரக்கர்கள் கடலில் புகுந்து ஒளிந்து கொண்டார்கள். இந்திரன், முதலிய தேவர்கள் அகத்திய முனிவரிடம் சென்று வேண்டினர். அவர் ஏழு கடல் நீரையும் ஒரே முறை ஆசமனம் (மந்திரபூர்வமாக நீரை மும்முறை உட்கொள்ளுதல்) செய்து நீர் முழுவதையும் உண்டு விட்டார். தண்ணீர் வற்றியதும், அங்கே அடியில் ஒளிந்துகொண்டிருந்த அரக்கர்கள் அகப்பட்டனர். தேவர்கள் அவ்வரக்கர்களை கொன்று ஒழித்தனர். பிறகு தேவர்கள் முனிவரிடம் வேண்டிக்கொள்ள, முனிவர் மீண்டும் உண்ட நீரை உமிழ்ந்து கடலை நீர் நிறையச் செய்தார் என்பது புராணம்.
 
★சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர் காகமாக உருமாறிக் கொண்டு அதைச் சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது.
இலங்கை மன்னர் ராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர்.வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர்கள்  இருவர்  இருந்தனர். இவர்களில் அரக்கன் வில்வளவன் வேதியர் போல உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைப்பார்கள்.
 
★ வாதாபியைக் கறியாய்ச் சமைத்துப் படைத்து, விருந்தினர் உண்டபின் வாதாபியை திரும்ப அழைக்க அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர்கள் இதனை அகத்தியரிடம் முறையிடவே, அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர் “வாதாபே ஜீர்ணோ பவ” என்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த அரக்கன் வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான். ஆனால் அவனை மரமாகும்படி சபித்தார் அகத்தியமுனிவர். இது  போல் அகத்தியரைக் குறித்து நமது புராணங்களில் உள்ள கதைகள் பற்பல. அகத்தி முனிவர் ஒரு சித்த மருத்துவ நிபுணர். மேலும் அவர் தலைசிறந்த ஜோதிட வல்லுனரும் ஆவார். இவரின் நாடி ஜோதிடம் மக்களிடையே வெகு பிரபலமானது. இவரரைப் பற்றி இன்னும் பல தகவல்கள் அனைத்தையும் மற்றொரு சமயத்தில் பதிவிடுகிறேன்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை.......................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
100 / 05-07-2021
 
அகத்திய முனிவரின்
ஆசிர்வாதம்...
 
★லட்சுமணன் மட்டும் தனியாக ஆஸ்ரமத்தின் அருகில் சென்று அங்கிருந்த அகத்தியரின் சீடர் ஒருவரிடம் மன்னர் தசரதரின் புதல்வர்கள் ராமர் லட்சுமணன் இருவரும் ஜனகரின் மகள் சீதையும் அகத்தியரை பார்த்து ஆசி பெற காத்திருக்கின்றார்கள் வரலாமா? என்று கேட்டு செய்தி சொல்லி அனுப்பினான். சீடரும் அகத்தியரிடம் லட்சுமணன் சொன்ன செய்தியை அப்படியே சொன்னார். இதனை கேட்ட அகத்தியர் நான் வெகுகாலமாக அவர்களின் வரவை எதிர் நோக்கி காத்திருக்கின்றேன். நல்ல படியாக உபசரித்து பின்னர் அவர்களை விரைவாக இங்கு அழைத்துவா. அவர்களை பார்க்க ஆவலாக இருக்கின்றேன் என்று சீடரிடம் கூறினார். மூவரும் ரிஷி அகத்தியரை காண ஆவலுடன் சென்றார்கள்.
 
★ராமரை கண்டதும் அகத்தியர் தானே எழுந்து வந்து ராமரை கட்டி அணைத்து வரவேற்றார். நீங்கள் சித்திர கூடம் வந்த போதே எனக்கு தகவல் வந்தது. நீங்கள் எப்படியும் இங்கு வருவீர்கள் என்று தங்களின் வருகைக்காக காத்திருந்தேன். உங்கள் தந்தையின் சத்தியத்தை காப்பாற்ற காட்டில் இத்தனை வருடங்களாக வனவாசத்தில் இருந்தீர்கள். கொடிய அரக்கன் விராதனையும் அழித்தீர்கள் என பாராட்டினார். அதன் பின்னர் அனைவரும் மகான் அகத்திய முனிவரின் தவச்சாலை சென்று அடைந்தனர். தவச்சாலையில் முனிவர், ஶ்ரீராமரையும் மற்ற இருவரையும் மிகவும் நன்றாக உபசரித்தார்.
 
★அகத்திய முனிவர் ராமரிடம் தங்கத்தால் செய்யப்பட்டு ரத்தினங்கள் பதிக்கப்பட்ட வில், எடுக்க எடுக்க குறையாத அம்புகள் உள்ள அம்பறாத்தூணி மற்றும் கத்தியை அளித்தார். இந்த ஆயுதங்கள் அனைத்தும் விஷ்ணுவுக்காக தேவலோகத்து விஸ்வகர்மா செய்திருந்தார். முற்காலத்தில் இந்த பலமிக்க ஆயுதங்களை வைத்து விஷ்ணு பலமுறை அசுரர்களை வேரோடு அழித்தார். அதனை இப்போது உன்னிடம் தருகிறேன். இதனை வைத்து ராட்சசர்களை முழுதும் அழிப்பாயாக என்று மனமாற ஆசி கூறினார்.  மூவரையும் ஆசிர்வதித்த அகத்தியர், ராமா!
மீதி இருக்கும் சில வருடங்கள் உங்களின் விரதம் பூர்த்தியாகும் வரை நீங்கள் இங்கேயே தங்கலாம் என்றார் அகத்தியர்.
 
★அதற்கு ராமர்  ‘முனிவர் பெருமானே! இந்தக் காட்டில் தீங்கு செய்து வாழுகின்ற அரக்கர்களை அழிக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. இதற்கு தாங்கள் என்னை ஆசி கூறி அனுப்ப வேண்டும்’ என்றார். அகத்திய முனிவர் ராமா! நீ நல்ல காரியம் செய்யத் துணிந்துள்ளாய். உனக்கு வெற்றி உண்டாகட்டும்’ என்று ஆசி கூறினார். பிறகு அகத்திய முனிவர் பஞ்சவடி என்னும் இடத்தின் பெருமைகளை கூறி, அங்கு சென்று வாழுமாறு  சொல்லி அவர்கள் மூவரையும்  வழியனுப்பி வைத்தார்.
 
★ராமரும் அவ்வாறே செய்வதாக உறுதி அளித்து கிளம்புவதற்கு அனுமதி தருமாறு கேட்டுக் கொண்டார். அகத்தியர் ராம லட்சுமணனிடம் சீதை மிதிலை அரண்மனையில் சுகமாக வாழ்ந்து வந்தவள். காட்டில் கடினங்களுக்கு நடுவில் வசிக்காத ராஜகுமாரி ஆவாள். உங்களுக்காக கடினங்களை பொருட்படுத்தாமல் உங்களுடன் இப்போது வசித்து வருகிறாள். பஞ்சவடியில் சீதையை மிகவும் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்  என்று அவர்களுக்கு ஆசி கூறி அவர்கள் செல்ல அனுமதி கொடுத்தார். பிறகு மூவரும் பஞ்சவடி நோக்கி பயணம் செய்ய தொடங்கினர். போகும் வழியில் அவர்கள் பல நதிகளை பல மலைகளை கடந்து சென்றனர்.
 
★அகத்திய முனிவர் குறிப்பிட்ட ஐந்து ஆலமரக்கூட்டம் இருந்த இடத்திற்கு சென்று தங்குமாறு கூறுயிருந்தார். அந்த இடத்திற்கு ஜனஸ்தானத்தில் இருந்த முனிவர்கள் வைத்த பெயர் பஞ்சவடி. ஶ்ரீராமர் மாதா சீதை லட்சுமணன் மூவரும் அகத்தியர் சொன்ன வழியை பின்பற்றி பஞ்சவடி இடத்திற்கு சென்று கொண்டிருந்தார்கள். மூவரும்
பஞ்சவடிக்கு அருகில் செல்லும் போது மிகப்பெரிய கழுகைக் கண்டார்கள். அதன் வடிவத்தைக் கண்டு அது ராட்சதனாக இருக்க வேண்டும் என்று எண்ணி ஆயுங்களை எடுத்தார் ராமர்.
 
நாளை....................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
101 / 06-07-2021
 
ஜடாயு...
 
★காஸ்யப முனிவருக்கு அருண பகவானும், கருட பகவானும் பிறந்தார்கள். இவர்கள் தெய்வப் பறவைகள். நம்மைப் போலவே பேசும் திறன் கொண்டவர்கள். அருண பகவான் பேராற்றல் படைத்தவர். கருட பகவான் ஶ்ரீமன் நாராயணன் சேவையில் ஈடுபட்டு அவருக்கு வாகனம் ஆனார்.அருணபகவான் ஆதித்த பகவானுக்கு ரத சாரதியாக இருந்து தொண்டு புரிபவர். இவருக்கு சம்பாதி, ஜடாயு என இரு புதல்வர்கள்.
 
★அன்று ஜடாயு ஓர் உயர்ந்த மலையின் மேல் கம்பீரமாக வீற்றிருந்தார். பஞ்சவடி செல்லும் வழியில் ஶ்ரீராமர் ஜடாயுவைப் பார்த்து ஓர் அரக்கன் பறவை உருவத்தில் நமக்கு இடர் செய்ய இங்கு வந்து இருக்கிறான் என நினைத்துக் கொண்டார். ராமர், லட்சுமணர் வருவதை கவனித்து கொண்டிருந்தார், ஜடாயு. பின் இவர்கள் தவசிகள்  வேடத்தில் இருந்தாலும் தவசிகள் இல்லை. இவர்கள் கையில் வில்லேந்தி இருப்பதால் தேவர்களாக இருக்கக்கூடும். மேலும் . இவர்கள் உடன் வரும் தேவியை பார்த்தால் திருமகள் போல் தோன்றுகிறது என எண்ணிக் கொண்டு இருந்தார்.
 
★இவர்களை பார்க்கும் போது எனக்கு என் நண்பன் தசரத சக்ரவர்த்தி ஞாபகம் வருகிறது. இவர்கள் யாராக இருக்கக்கூடும் என எண்ணிக் கொண்டு இருந்தார். ராம இலட்சுமணர் அருகில் வந்தவுடன் அன்புள்ள குழந்தைகளே! நீங்கள் யார்? என அன்புடன் கேட்டார், ஜடாயு.  ராமர், ஐயா! நாங்கள் அயோத்தி தசரத சக்ரவர்த்தியின் குமாரர்கள் என்று கூறினார். இதைக் கேட்ட ஜடாயுக்கு அளவற்ற மகிழ்ச்சி உண்டானது. தசரதர் என் உடன்பிறவா சகோதரன். அவன் நலமாக இருக்கிறானா? எனக் கேட்டார். ராமர், சத்தியத்தை நிலைநாட்ட என் தந்தை முக்திநிலையை அடைந்து விட்டார் என கூறினார்.
 
★இதை கேட்ட ஜடாயு மிகுந்த அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். உடனே ராம லட்சுமணர்கள்  ஜடாயுவை மயக்க நிலையில் இருந்து தெளிய வைத்தனர். ஜடாயு கண்ணீர் மல்க தசரதரை நினைத்து அழுதார். தசரதா! உன் கொடை தர்மத்திற்கு தோல்வி வந்து விட்டதே. உன் உயிர் பிரிந்த செய்தியை ஒருபோதும் என் மனது ஏற்று கொள்ள சிறிதும் இயலவில்லையே. நீயும் நானும் இரு உடல் ஓர் உயிர் போலவே பழகினோம். நீ இல்லாத இந்த உலகில் ஒருபோதும் நானும் இருக்க மாட்டேன்.
 
★இப்பொழுதே நான் தீயில் பாய்ந்து உயிரை விடுகிறேன். நீங்கள் உங்கள் தந்தைக்கு செய்த ஈமச்சடங்குகளை எனக்கும் செய்வீர்களா?! என்று கேட்டார். ராமர் லட்சுமணர் இதனை கேட்டு மிகவும் மனம் வருந்தினார்கள். எங்கள் தந்தையின் உயிர் தோழனாகிய தாங்களே உயிரை மாய்த்து கொள்வேன் என்றால் வேறுயார் எங்களுக்கு  ஆதரவு தர முடியும். ராமர் ஜடாயுவை வணங்கி, பெரியப்பா! நாங்கள் வாழும் பொருட்டு ஒருபோதும் தாங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது என்று வேண்டிக் கொண்டார்.
 
★வனவாசத்திற்கு  வந்துவிட்ட எங்களை தாங்களும் பிரிந்து விட்டால் நாங்கள் என்ன தான் செய்வோம். சரி! குழந்தைகளே! நான் நீங்கள் அயோத்திக்கு திரும்பும் வரை சாக மாட்டேன் என்றார், ஜடாயு. நீங்கள் இந்த கொடிய கானகத்திற்கு வரக் காரணம் என்னவென்று கேட்டார் ஜடாயு. இலட்சுமணர் நடந்த எல்லாவற்றையும் ஜடாயுவிடம் கூறினார். இதைக் கேட்ட ஜடாயு மிகவும் நெகிழ்ந்து போனார். தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பதற்காக உன் தம்பி பரதனுக்கு நாட்டை கொடுத்து விட்டு கானகம் வந்த வள்ளலே! உன் வாய்மையை நான் பாராட்டுகிறேன் என்றார்.
 
★தனது தந்தையின் நண்பர் என்ற சொல்லை கேட்ட ராமர், காட்டில் மிகப்பெரிய துணையாக ஜடாயு இருக்கிறார் என்று மகிழ்ச்சியடைந்து ஜடாயுவை கட்டி அணைத்தார். சரி!  அது இருக்கட்டும்.  தங்களுடன் வந்திருக்கும் இப்பெண்மகள் யார்? எனக் கேட்டார். மிதிலை ஜனக மகாராஜாவின் மகள், அண்ணாவின் மனைவி என்று கூறினார் லட்சுமணர். ஜடாயு சீதையை பார்த்து, உன் புகழ் ஓங்குக. கணவனே கண்கண்ட தெய்வம் என்று அந்த கணவன் வந்திருக்கும் கானகத்துக்கு நீயும் வந்துள்ளாய். கற்புக்கரசியே! உன் புகழ் வாழ்க என மனதார வாழ்த்தினார்.
 
★ஜடாயு பஞ்சவடியில் தங்கி இருக்கும் நீங்களும் இளவலான லட்சுமணனும் காட்டிற்குள் வேட்டைக்கு செல்லும் போது நான் சீதைக்கு துணையாக இருப்பேன் என்றார்.  பிறகு அவர்கள் மூவரும் நடந்து செல்ல ஜடாயு குடையை போல தன் சிறகை விரித்து வழிகாட்டி கொண்டு மேலே பறந்து வந்தார். அவர்கள் பஞ்சவடி வனத்தை அடைந்தனர். புண்ணிய நதியான கோதாவரியில் மூழ்கி மகிழ்ந்தார்கள். லட்சுமணர் அங்கு ஓர் அழகான குடிலை அமைத்தார். ராமரும், சீதையும் அக்குடிலில் வாழ்ந்தனர்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை...................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
102 / 07-07-2021
 
பஞ்சவடி...
 
★பாற்கடலைக் கடைந்தபோது அமிர்தம் கிடைத்தது. அந்த அமிர்தம் தொடர்பாக சண்டை நடந்தபோது அதன் 4 துளிகள் மட்டும் அலகாபாத், ஹரித்வார், நாசிக் மற்றும் உஜ்ஜயினியில் விழுந்தது. இந்த நான்கு இடத்திலும் வருடா வருடம் மாசி மகத்தின்போது மேளா ஒன்று நடக்கிறது. 12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பமேளா சிறப்பாக
 நடக்கிறது. நாசிக்தான் முந்தைய பஞ்சவடி!  அகத்தியர், "ஐந்து ஆலமரங்களுடன் அருமையான பூஞ்சோலையாக உள்ளது. அங்கு போய் அகம் கட்டி வாழ்'' என ராமருக்கு அறிவுரை வழங்கி அனுப்பினார். காட்டில் ராமனும் சீதையும் சந்தோஷமாக வாழ்ந்தது பஞ்சவடியில்தான்.
 
★நாசிக்கின் வடக்குப் பகுதியில் பஞ்சவடி உள்ளது. கோதாவரி நதியின் ஒருபக்கம் நாசிக்கும் மறுபக்கம் பஞ்சவடியும் உள்ளது. வனவாசத்தில் லட்சுமணனால், சூர்ப்பனகை மூக்கு அறுபட்டு, அது கீழே விழுந்த இடம் நாசிக். சமஸ்கிருதத்தில் "நாசிகா' என்றால் "மூக்கு' என்று பொருள். நாசிக்கில் அருணா, வருணா, கோதாவரி என்ற மூன்று நதிகள் சங்கமிக்கின்றன. இதில் வருணா, அருணா பூமிக்கடியில் இருந்து வருவதாக ஐதீகம்!
 12 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளாவின் போது மட்டுமே, இதன் கரையில் உள்ள கர்ப்பூரேஸ்வரர் கோயில் திறந்து பூஜைகள் செய்யப்படும். மாதா கோதாவரிக்கும் கோயில் இங்கு உண்டு. இதனை கோதாவரி கோயில் என அழைப்பர்.
 
★இது வருடா வருடம் மாசி மகத்தன்று மட்டும் திறக்கப்படும்.  அந்த கோதாவரியில் தசரதனின் அஸ்தியை ராமர் கரைத்ததாக கூறப்படுகிறது. இதனால் இன்றும் மராட்டிய இந்துக்களில் பெரும்பாலோர், இறந்த தமது உறவினர்களின் அஸ்தியை இங்கே கொண்டுவந்து நதியில் கரைக்கிறார்கள்.
 பஞ்சவடியில் வெள்ளை ராமர் கோயில், கறுப்பு ராமர் (காலாராம்) கோயில் என இரண்டு உள்ளது. வெள்ளை ராமர் சலவைக்கல்லால் ஆனவர். இதில் கறுப்பு ராமர் கோயில் மிகவும் பிரபலம். இந்த கோயில் முழுவதும் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள ராமர், சீதை, லட்சுமணனை கறுப்புக் கல்லில் அழகு பொங்க அமைத்துள்ளனர். இங்கு ராமர் பொன்வண்ண மீசையுடன் காட்சி தருவது கொள்ளை அழகு.
 
★மஞ்சள், குங்குமம், எள் மற்றும் சர்க்கரை ஆகியவை ராமருக்குப் படைக்கப்படுகின்றன. ஸ்ரீராம நவமி உற்சவம் இங்கு மிகவும் பிரபலம். அச்சமயத்தில் 11-ஆம் நாள் தேர்த்திருவிழா உண்டு. கோயிலின் உள்ளே நாசிக் சார்ந்த ராமாயணக் காட்சிகளை அழகிய ஓவியங்களாகக் காணலாம். ராமரின் வனவாசத்தை ஞாபகப்படுத்தும் வகையில் 14 படிகள்.
 நாசிக்கில் ராம்குந்த் அருகில் பழைய கபாலீஸ்வரர் கோயிலைக் காணலாம். வழக்கமாக சிவன் கோயில்களில் சிவனுக்கு எதிரில் காட்சிதரும் நந்தியை இங்கு காண இயலாது.
 
★ஒருசமயம் சிவனுக்கும் பிரம்மாவுக்கும் சண்டை வந்தபோது பிரம்மனின் 5-ஆவது தலையை வெட்டி வீழ்த்திவிட்டார் சிவன். இந்த பாவத்திலிருந்து மீள்வதற்கு, பல இடங்களுக்கு வலம் வந்தார். அப்போது நந்தி தேவர், கோதாவரியில் சென்று ஸ்நானம் செய்தால் உங்கள்  பாவம் நீங்கும் எனக்கூறி ஆலோசனை வழங்கினார். ஆகவே சிவனுக்கு ஆலோசனை கூறி குருவாகியதால், இங்கு நந்தி தேவர் கிடையாதாம். கோதாவரியில் ஸ்நானம் செய்த சிவனும் அதன் இயற்கை அழகில் மயங்கி நிரந்தரமாய் அங்கேயே தங்கிவிட்டார்.
 நாசிக்கிலிருந்து 25-ஆவது கி.மீட்டரில் திரியம்பகேஸ்வரர் ஜோதிர்லிங்க கோயில் உள்ளது.
 
★இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் மூன்று லிங்கங்களில் தரிசிக்கலாம். இதுதவிர படிகளில்  இறங்கி திரியம்பகேஸ்வரரையும் நாம் தரிசிக்கலாம். இந்த சிவன் கோயில் அருகில் உள்ள பிரம்மகிரியில்தான் கோதாவரி உற்பத்தியாகின்றது. திரியம்பகத்தில் கார்த்திகை பௌர்ணமியும் மாசிமகமும் விசேஷம். மகாராஷ்டிரத்தின் புண்ணிய க்ஷேத்திரங்களில் முதலிடம் நாசிக் என்கிற பஞ்சவடிக்குத்தான்!
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை....................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
103 / 08-07-2021
 
சூர்ப்பனகை வருகை...
 
★பஞ்சவடியின் அழகைக் கண்ட மூவரும் மெய்சிலிர்த்தார்கள். ஶ்ரீராமர் லட்சுமணனிடம் நாம்தங்குவதற்கு சரியான இடத்தில் குடிலை அமைக்க வேண்டும் என்று சொன்னார். அதன்படியே லட்சுமணனும் குடிலைக் கட்டுவதற்கு சிறப்பான இடத்தை தேர்வு செய்து குடில் அமைப்பதற்குத் தேவையான பொருட்களைக் காட்டிற்குள் தேடி எடுத்து வந்து குடிலைக் கட்டி முடித்தான். குடிலின் அழகைப் பார்த்த ராமர் இவ்வளவு அழகான குடிலை அமைத்த நீ எனக்கு நமது தந்தையைப் போலவே தெரிகிறாய் என்று கூறி ஆனந்த கண்ணீருடன் லட்சுமணனைக் கட்டி அனைத்தார்.
 
★பஞ்சவடியில் சில காலம் சென்ற பிறகு பனிக்காலம் ஆரம்பித்தது. மூவரும் கோதாவரி நதிக்கரையை நோக்கிச் சூரிய நமஸ்காரம் செய்வதற்கும் தண்ணீர் எடுத்து வருவதற்கும் சென்றார்கள். அப்போது ராமருக்கு பரதனைப் பற்றிய நினைவு வந்தது. ராமர் லட்சுமணனிடம் நாம் இந்தக் காட்டில் குளிரில் வாழ்வது போலவே பரதனும் அனுபவிக்க வேண்டிய சுகங்களையெல்லாம் விட்டுவிட்டு நம்மைப் போலவே நந்திக்கிராமத்தில் தரையில் உறங்கி விரத வாழ்க்கையை வாழ்கின்றான் என்று கூறினார்.
 
★அதைக் கேட்ட லட்சுமணன் ராமரிடம் பரதனின் மிகநல்ல குணங்களைப் பார்த்தால் நமது தந்தையாரின் குணங்களைப் போலவே இருக்கின்றது. மக்கள் தாயைப் போலவே மகன் இருப்பான் என்று சொல்வார்கள் ஆனால் பரதன் விஷயத்தில் தவறாக இருக்கின்றது. குரூர குணம் கொண்ட கைகேயிக்கு பரதன் எப்படிப் பிறந்தான் என்று கூறி வியந்தான். ராமர் லட்சுமணனிடம் கைகேயியைப் பற்றி குறை கூற வேண்டாம். பரதனைப் பற்றி நீ கூறிய அனைத்தும் மிக உண்மையே என்று கூறினார்.
 
★எனக்கு அருமை சகோதரன்  பரதனின் ஞாபகமாகவே இருக்கிறது. அவனை இப்போதே பார்க்க வேண்டும் என்றும் தோன்றுகின்றது. எப்போது நாம் நால்வரும் ஒன்றாக அமர்ந்து உரையாடுவோம் என்று நான் காத்திருக்கிறேன். நாம் நான்கு பேரும் ஏற்கனவே ஒன்றாக அமர்ந்து கலந்துரையாடியதில் பரதனின் அமிர்தம் போன்ற பேச்சு இன்னமும் உள்ளத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது என்றார்.
 
★கோதாவரி நதிக்கரையில் தங்களுடைய பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் தர்ப்பணம் செய்துவிட்டு தெய்வீக ஒளிவீச மூவரும் குடிலுக்குத் திரும்பி வந்தார்கள். குடிலில் மூவரும் இதிகாச கதைகளைச் சொல்லி உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ராமரின் முகம் பூரண சந்திரனைப் போல ஒளிவிட்டுப் பிரகாசித்தது.
 
★அந்த நேரத்தில் அழகான பெண் ஒருத்தி அங்கு வந்து சேர்ந்தாள். தேவர்களைப் போன்ற அழகுடன் ஒருவர் இருக்கிறாரே என்று வியந்து ராமரின் மேல் மோகம் கொண்டு பேச ஆரம்பித்தாள். தவசிகளைப் போல உடை தரித்துக் கொண்டு மிக அழகான மனைவியையும் அழைத்துக் கொண்டு வில்லும் அம்புமாக ராட்சசர்கள் வாழும் காட்டிற்குள் நீ எதற்காக வந்திருக்கிறாய்? யார் நீ? உண்மையைச் சொல் என்று கூறினாள். தசரத மகாராஜாவின் மூத்த குமாரன் நான். என்னை ராமன் என்று அழைப்பார்கள். அருகில் இருப்பது என் தம்பி லட்சுமணன். என் மனைவியின் பெயர் சீதை. என் தாய் மற்றும் தந்தையரின் உத்தரவின் படி தர்மத்தைக் காப்பாற்ற இந்தக் காட்டில் வனவாசம் செய்ய வந்திருக்கின்றேன் என்று கூறினார்.
 
★சூர்ப்பனகை, பெருமானே! தங்களுக்கு வணக்கம்! என் பெயர் காமவல்லி. நான் பிரம்ம தேவரின் பேரன் விஸ்ரவசுவின் மகள் ஆவேன். என் அண்ணன் குபேரன் மற்றும் ராவணன். அவர்களுடைய தங்கை நான். நான் கன்னி பெண். எனக்கு இன்னும் திருமணம்ஆகவில்லை என்றாள். இராமர், அப்படியா?
நீ ராவணின் தங்கையா? ராவணனோ ஒரு அரக்கன். அப்படியென்றால் நீ ஒரு அரக்கி ஆகத்தான் இருக்க வேண்டும். நீ எப்படி அழகிய பெண் உருவில் இருக்கிறாய்? என்றார். அதற்கு சூர்ப்பனகை, ஆம் நாம் ஒரு அரக்கி தான். எனக்கு அதுபோல அரக்கியாக இருப்பதில் சிறிதும்  விருப்பம் இல்லை. ஆதலால் தவம் இருந்து தேவர்களிடம் வரம் பெற்று இந்தப் பெண் உருவம் பெற்றேன் என்று சிறிதும் கவலைப்படாமல் பொய் கூறினாள்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை..........................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
104 / 09-07-2021
 
சூர்ப்பணகை...
 
★வேகம் கொள்ள வேண்டிய நேரத்தில் வேகம், விவேகம் கொள்ள வேண்டிய நேரத்தில் விவேகம், எண்ணியதை செய்து முடிக்கும் ஆற்றல், குடும்பப் பாசம், சாகசம், அனைத்திற்கும் மேலாகப் பேச்சுத் திறமை - என அனைத்திலுமே  மிகுந்த ஒரு திறமைசாலியாக விளங்கிய சூர்ப்பணகையைப்பற்றி, ஒருசில தகவல்களை இப்போது  பார்க்கலாம். பெண்மையின் மாபெரும் சக்தியாக, மற்றும் ஆக்கபூர்வமான ஒரு  சக்தியாக ஜொலித்திருக்க வேண்டியவள், மிகப்பெரிய நாச சக்தியாக மாறக் காரணம் என்ன?
 
★சூர்ப்பணகை ஏதோ  ராமர் மேல் மையல் கொண்டாள்,அதன் விளைவாகத் தண்டிக்கப்பட்டாள் என்பவைகளை எல்லாம் ஓர் ஓரமாகத் தூக்கி வைத்து விட்டு, சூர்ப்பணகையின் செயல்களின் காரணங்களைச் சற்று ஆழமாகப் பார்க்கலாம். சூர்ப்பணகை பிரம்மகுலம். பிரம்மதேவரின் சாட்சாத் கொள்ளுப்பேத்தி. பிரம்மதேவரின் மகன் புலஸ்திய மகரிஷி. புலஸ்திய மகரிஷியின் மகன் விச்ரவஸ் மகரிஷி. விச்ரவஸ் மகரிஷிக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி சரிதை என்பவளுக்கு குபேரனும், இரண்டாவது மனைவி கைகசிக்கு பிறந்தவர்கள் ராவணன், கும்பகர்ணன், சூர்ப்பணகை, விபீஷணன் ஆவார்கள்.
 
★விபீஷணரின் மூத்த சகோதரி சூர்ப்பணகை. இவளுக்கு ஒரு பக்கம் ராவணன், மறு பக்கம் விபீஷணர். இம்மூவருக்கும் ஏதோ ஒரு சூட்சுமமான தொடர்பு இருக்க வேண்டுமல்லவா? அது என்ன? சூர்ப்பணகையின் கணவர் பெயர் வித்யுஜ்ஜிஹ்வா. வித்யுச்சவன் என்றும் சொல்வர். இந்தத் தம்பதியர்க்கு ‘சம்பு குமாரன்’ என ஒரு மகன் இருந்தான்.சூர்ப்பணகையின் கணவர்         வித்யுத்ஜிஹ்வா           காலகேய குலத்தைச்சேர்ந்தவர்.
வித்யுத்ஜிஹ்வா அதிகம் அறிவு உடையவன் என்பதால் தமக்கு அவனால் பெருமை கிடைக்காது. ஆதலால் அவனை கொன்று விட வேண்டும் என நினைத்தான் ராவணன். ஒரு சமயம்  போர் வெறிகொண்ட ராவணன் காலகேயர்களுடன் போரில் ஈடுபட்டிருந்த நேரம். அந்தப்
போரில் தங்கை கணவன் என்பதை கூட பார்க்காமல் அவனை கொன்று விட்டான் ராவணன்.
 
★கணவரை இழந்து துக்கத்தில் இருந்த  சூர்ப்பணகை, ராவணன் கதையை முடித்துவிட வேண்டும் என்று அன்றே தீர்மானித்தாள்.
 
  "கொல்லாத மைத்துனனைக் கொன்றாய் என்று, அது குறித்துக் கொடுமை சூழ்ந்து,
பல்லாலே இதழ் அதுக்கும் கொடும் பாவி நெடும் பாரப் பழி தீர்ந்தாளோ"?  9
 
இத்தகவலைப் பின்னால் யுத்தத்தில் ராவணன் வீழ்ந்தபின் விபீஷணன் கூறினாலும், சூர்ப்பணகையை அறிமுகப்படுத்தும் போதே...
       
‘‘நீலமாமணி நிருதர் வேந்தனை
மூலநாசம் பெற முடிக்கும் மொய்ம்பினாள் - ’’
 
என ராவணனை அடியோடு அழிக்கக்கூடிய வல்லமை பெற்றவள் சூர்ப்பணகை என்றே கம்பர் அறிமுகப் படுத்துகிறார்.
 
★சரி! ராவணனைக் கொல்ல வேண்டுமானால், அவனைப் போலவே, ஆற்றல் கொண்ட ஒருவன் வேண்டுமே! சொல்லப் போனால், ராவணனைவிட கொஞ்சமாவது ஆற்றல் உள்ளவனாக இருக்க வேண்டும். ராவணன் ஆற்றலைப் பட்டியல் இடுவதைவிட,  “ராவணன் சிவபெருமானிடம் வரங்கள் பெற்றவன்” என்று ஒரே வரியில் சொல்லி விடலாம்.
 
★அப்படிப்பட்ட ராவணனைக் கொல்ல வேண்டுமானால், தன் பிள்ளையும் சிவபெருமானிடம் வரம் பெற வேண்டும் என எண்ணினாள் சூர்ப்பணகை. சூர்ப்பணகையின் உள்ளம் புரியாத - தெரியாத ராவணன், கணவரை இழந்து  மிகுந்த  மனவருத்தத்தில் இருந்த சூர்ப்பணகையை ஆறுதல் சொல்லித்தேற்றிய ராவணன், “சகோதரி! அறியாமல் நடந்தது இது. மனதில் வைத்துக் கொள்ளாதே!” என்று வேண்டி, தண்டகாரண்யத்தில் இருந்த கரன், திரிசிரன், தூஷணன் என்பவர்களின் பாதுகாப்பில் அவளை விட்டு வைத்தான்.
 
★அதனால் தண்டகாரண்யம் சென்ற சூர்ப்பணகை, அதற்காக ராவணன் மேலுள்ள வன்மத்தை மட்டும் விடவில்லை. அண்ணன் ராவணனைக் கொல்லும் ஒரு ஆற்றலைப் பெறுவதற்காகத் தன் மகன் சம்புகுமாரனை, சிவபெருமானை நோக்கித் தவம் செய்ய அனுப்பினாள். தாய் சொல்லைத் தட்டாமல் தவம் செய்யப்போன சம்புகுமாரன், தர்பைக்காட்டில் அமர்ந்து கடுந்தவம் மேற்கொண்டான். நன்கு வளர்ந்த தர்பைபுற்களின் நடுவில் மறைவாக அமர்ந்து
சம்புகுமாரன் தவம்செய்வது யாருக்கும் தெரியாது. அவன் தவம் பலனளிக்கும் நேரம். ராமர் - சீதை, லட்சுமணன் மூவரும் வனவாசத்திற்கு வந்தார்கள்.
 
★புல் அறுக்கப்போன இளவல்  லட்சுமணன், சம்புகுமாரன் தவம் செய்வதை அறியாமல் அவன் தலையை அறுத்து விட்டான். ராமன் - சீதை, லட்சுமணன் எனும் மூவர் காட்டிற்கு வந்தி ருக்கிறார்கள் அவர்களில் ஒருவனால், தவம் சித்தியாகும் நேரத்தில் தன்மகன் கொல்லப்பட்டான் எனும் தகவலறிந்த சூர்ப்பணகை துடித்தாள். ஏற்கனவே கணவரை இழந்து துயரத்தில் இருந்தவள், ஒரே மகனை இழந்ததும் துயரத்தின் எல்லையையே அடைந்தாள்.
 
★“இனிமேல் நான் யாருக்காக வாழவேண்டும்?” என்று மனம் கலங்கி மிகுந்த துயரத்தில் இருந்த சூர்ப்பணகை  உள்ளம் , ஒரு முடிவிற்கு வந்தது.  தன்  கணவரைக் கொன்றவனையும் மகனைக் கொன்றவர்களையும் மோதவிடத் தீர்மானித்தாள். தீர்மானித்தால் மட்டும் போதுமா? அதற்கான செயல்களில் இறங்க வேண்டாமா?  இறங்கினாள். விளைவு? அங்கம் பங்கப்பட்டாள் சூர்ப்பணகை. அவளின் கட்டாய  தூண்டுதலால் கரன், திரிசிரன், தூஷணன் ஆகியோர் ராமனால் மாண்டார்கள்.
 
★சூர்ப்பணகை அங்கம் பங்கப்பட்ட இந்த இடத்திலும், மலை துமித்தென ராவணன் மணியுடை மகுடத்தலை துமித்தற்கு நாள் கொண்டது ஒத்ததோர் தன்மை - என்கிறார். அதாவது, மணிமகுடங்கள் அணிந்த ராவணனின் வதத்திற்கு, நல்லநாள் பார்த்துத் தொடங்கி வைக்கப்பட்டதைப் போல இருந்ததாம். சூர்ப்பணகை ராவண சங்காரத்திற்காகவே வந்தவள் என்பதை மறவாமல், இங்கும் பதிவு செய்கிறார்.
 
★அங்கம் பங்கப்பட்டிருந்த சூர்ப்பணகை, ரத்தம் சொட்டச் சொட்ட ஓடினாள் ராவணனை நோக்கி, அங்கே ராவணனிடம் சீதையின் அழகை விரிவாக வர்ணித்து, ஏற்கனவே அழுக்குப் படிந்திருந்த ராவணன் மனதைச் சாக்கடையாக ஆக்கினாள்.
சீதையின் அழகை வர்ணிக்கத் தொடங்கிய சூர்ப்பணகை, “தாமரை மலரில் இருக்கும் லட்சுமிதேவிக்கு, இந்தச் சீதைக்குப் பணிப்பெண்ணாக இருக்கக்கூடத் தகுதி கிடையாது” என்று சொல்லி, சீதையைப்பற்றி மேலும் வர்ணிக்கத் தொடங்கி  தாமரை இருந்த தையல் சேடியாம் தரமும் அல்லள் (கம்ப ராமாயணம்)  ‘‘சசிதேவியை மனைவியாக அடைந்தான் தேவேந்திரன். ஆறுமுகனின் தந்தையான சிவபெருமான் உமையை அடைந்தார். மேலும் பரந்தாமனான ஶ்ரீமகாவிஷ்ணு லட்சுமியை அடைந்தார். ஆனால், நீ சீதையை அடைந்தால்... அவர்களை விட நீ தான் மிகப் பெரியவன். நன்மை மிகுந்தவன் என்றும் தெய்வங்களை விடப் பெரியவனாகலாம் மிகுந்த நன்மையடையலாம்’’  என்கிறாள் சூர்ப்பணகை.
       
★இத்துடன் நிறுத்தவில்லை சூர்ப்பணகை; ‘‘சிவபெருமான் அம்பாளைத்தன் பாதிமேனியில் வைத்துக்கொண்டார். தாமரை மலரில் இருக்கும் மகாலட்சுமி தேவியை தன் மார்பில் வைத்துக் கொண்டார் ஶ்ரீமகாவிஷ்ணு. பிரம்மதேவர் சரஸ்வதியைத் தன் நாவில் வைத்துக்கொண்டார். சீதையைக் கொண்டு வந்தால், அவளை நீ எங்கே வைத்து வாழப்போகிறாய்?’’ எனக் கேட்கிறாள்.
 
★இவ்வாறு சீதையைப்பற்றி விவரமாக வர்ணித்து, ராவணன் மனதில் ஆசையை விளைவித்த சூர்ப்பணகை போய் விடுகிறாள். தன் திறமையின் மீது அவளுக்கு அபாரமான நம்பிக்கை தான் சொன்னபடி, ராவணன்போய் சீதையைக் கொண்டுவந்து விடுவான். அவன்கதை முடிந்து விடும் என்னும் எண்ணத்தில், வெளியேறி விடுகிறாள். ஆர்ப்பாட்டமாக வந்த அந்த சூர்ப்பணகையைப் பற்றி, அதன்பின் பேச்சே இல்லை.
 
★ராவணன் முடிவிற்குப் பெரும் காரணமாக இருந்தவள் சூர்ப்பணகை. சரி! ஆனால் அந்த சூர்ப்பணகைக்கு லட்சுமணன் மூலமாக ஏன் இந்த தண்டனை கிடைக்க வேண்டும்? அவளுக்கு தண்டனை அளிக்கக்கூடிய பொறுப்பை, ஶ்ரீராமரே ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாதா? இதற்கான பதிலை, திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் மிகவும் அழகாக விவரிப்பார். சத்தியவிரதன் எனும் மன்னருக்கு, சங்கசூடணன் என்ற மகன் இருந்தான். அவன் ஆனந்தகுரு என்ற குருநாதரிடம் போய்க் கல்வி கற்றான். குருநாதரின் மகள் பெயர் சுமுகி.
 
★அவள், அரசகுமாரனான சங்கசூடணனை விரும்பினாள். சங்கசூடணனோ, ‘‘அம்மா! குருநாதரின் மகளான நீ, எனக்கு சகோதரியாக ஆவாய். உன்னை விரும்பினால், சகோதரியை விரும்பிய பாவம் வரும். மறுபிறவியானாலும் சரி! நீ என் சகோதரி தான். மனதாலும் உன்னைத்தீண்ட மாட்டேன்’’ என்றான். சமயம் பார்த்திருந்த சுமுகி, ஒருநாள் சங்கசூடணன் மீது வீண்பழி சுமத்தினாள். மகள் பேச்சைக் கேட்ட ஆனந்த குரு, மன்னரிடம்போய் முறையிட்டார்.
 
★மன்னர் மிகுந்த கோபத்துடன் கொதித்தார். ‘‘சகோதரியாகக் கருத வேண்டியவளிடம் போய், சரசமாட நினைப்பதா?  என் மகனாக இருப்பதால், அரசனின்  குமாரன் எனும் ஆணவத்தில் இம்மாபெரும் தவறைச் செய்தானா சங்கசூடணன்?’’ என்று, மகனைத் தண்டிக்கத் தீர்மானித்தார் மன்னர். ஆகவே சங்கசூடணனைக் கூட்டிப் போய்,மிகக் கொடுமையான தண்டனையை அளித்தார்கள். சங்கசூடணன் தான் வழிபடும் தெய்வமான ஆதிசேஷனிடம் முறையிட்டுப் புலம்பினான். ‘‘ஆதிசேஷ பகவானே! இந்த உலகையே தாங்குபவன் நீ! உனக்குத் தெரியாதா? எனது குருநாதரின் மகளை, நான் சகோதரியாகத் தானே மனதில் நினைத்தேன்’’ என்று புலம்பி முறையிட்டான்.
 
★அவனுக்குப் பதில் அளித்தார் ஆதிசேடன். ‘‘சங்க சூடணா! நீ சொன்னதைப்போல, அடுத்த பிறவியில் உனக்கு அவள் சகோதரியாகவே வருவாள். அப்போது நான் அவளுக்குத் தண்டனை அளிப்பேன்’’ என்றார். அதன்படியே, சுமுகி அரக்கியான சூர்ப்பணகையாக வந்து பிறந்தாள். சங்கசூடணன் விபீஷணராக வந்து பிறந்தார். ஆதிசேஷன் லட்சுமணனாக அவதரித்து சூர்ப்பணகைக்குத் தண்டனை அளித்தார்.
 
★லட்சுமணன் மூலமாக அந்த  சூர்ப்பணகைக்குத் தண்டனை அளிக்கப்பட இதுவே காரணம். சூர்ப்பணகையின் திறமை அளவிட முடியாதது. தனக்குள் எண்ணியதை முடிக்கும் ஆற்றல்,சாகசம், பேச்சுத்திறமை, எனப் பலவிதமான திறமைகளும் பெற்றவள் சூர்ப்பணகை. பெண்மையின் பெரும் ஆக்க சக்தியாக ஜொலித்திருக்க வேண்டியவள், நாச சக்தியாக மாறிப்போனாள். யாரைச் சொல்வது?
 
குறிப்பு:-
 
இந்த பதிவில் சூர்ப்பனகை மகன் சம்புகுமாரனைப் பற்றிய செய்திகள் இணையத்தில்  கண்ட  சில ராமாயணப் பதிவுகளில் இருந்து எடுக்கப் பட்டது.
 
நாளை......................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
105 / 10-07-2021
 
இரக்கமில்லா அரக்கி...
 
★அரக்கி சூர்ப்பனகை அடிக்கடி கோதாவரி ஆற்றில் இறங்கி வெகுநேரம் அங்கேயே நின்று கொண்டிருப்பாள். அன்றும் பஞ்சவடிக்குத்தான் வந்து கொண்டிருந்தாள். தூரத்தில் வரும்போதே அந்த கோதாவரி ஆற்றின் கரையில் புதிதாக ஓர் பர்ணசாலை இருப்பதை பார்த்து விட்டாள் சூர்ப்பனகை. இது ஏதோ ஒரு தவம் இயற்றும் முனிவனின் வேலையாகத் தான் இருக்கும். இந்த வனத்துக்கு நான் அரசி. என்னைக் கேட்காமல் இப்படியொரு காரியத்தில் ஈடுபட்டு இருக்கிறான். இந்த முனிவன்கள் மேல் இரக்கமே காட்டக் கூடாது என்று நினைத்து கொண்டு வேகமாக சென்றாள்.
 
★அவள் செல்லும் வேகத்தில் பூமியே அதிர்ந்தது. அந்த பர்ண சாலையை பிய்த்து எறிந்துவிடும் நோக்கத்தில் ஆவேசம் பொங்க சென்றாள். அவள் சென்ற அதே வேகத்தில் சட்டென்று நின்று விட்டாள். ராமர் ஓர் மரத்தின் கீழ் அமர்ந்து இறைவனை நினைத்து தியானம் செய்து கொண்டு இருந்தார். ராமரை கண்டவுடன் அவளுக்கு ராமரின் மேல் காதல் வந்துவிட்டது. ஆஹா! இவர் என்ன அழகு! ஆயிரம் ஆண்கள் சேர்ந்தாலும் இவரின் அழகுக்கு ஈடாக முடியாது.
 
★இவரை கடவுள் எனக்காக தான் படைத்து இருக்கிறான். ஆனால் நானோ ஒரு அரக்கி. என் அரக்க உருவில் சென்றால் அவன் என்னை விரும்ப மாட்டான். ஆதலால் நான் அழகிய ஒரு பெண் உருவில் செல்கிறேன் என்று பெண் உருவம் எடுத்தாள். அன்னம் போல் நடந்து ராமன் முன் நின்றாள்.  ராமருக்கு இவள் தீயவள் தான் என்று அடிமனதில் தோன்றியது.
 
★பெண்மணியே! இக்கொடிய கானகத்தில் தனியாக என்ன செய்து கொண்டு இருக்கிறாய் என வினவினார். அதற்கு ராட்சத பெண் பெருமானே!    இலங்கை வேந்தன் ராவணனைப் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றாயா? ராவணனின் சகோதரி நான். எனது பெயர் சூர்ப்பனகை. விச்ரவஸினுடைய மகனும் ராட்சதர்களின் ஒரே அரசனான ராவணன் மற்றும் அவனின் சகோதர்களான விபீஷணனும் கும்பகர்ணனும் மகா பலம் பொருந்தியவர்கள். தவிர இக்காட்டின் அரசனான கரணும் தூஷணனும் என் சகோதரர்கள் ஆவார்கள். இவர்களின் அதிகார பலம் மிகவும் பெரியது. அவர்கள் நினைக்கும் எதையும் செய்யும் பலமும் அதிகாரமும் ஒருங்கே பெற்றவர்கள்.
 
★ஆனால் நான் அவர்களுக்கு கட்டுப்பட்டவள் அல்ல. என் விருப்பப்படி தான் எதையும் செய்வேன். இந்த வனத்தில் என்னைக் கண்டால் அனைவரும் பயப்படுவார்கள். எனக்கு அந்த அரக்கர்களுடன் வாழ சிறிதும் பிடிக்கவில்லை. ஆதலால் இங்கு வந்து தேவர்களுக்கும் மற்றும் முனிவர்களுக்கும் அன்புடன் பணிவிடை செய்து கொண்டு இருக்கிறேன் என்று மறுபடியும் பொய் உரைத்தாள்.
 
★ராமர், பெண்மணியே! நீ என்னை காண வந்த நோக்கம் பற்றி ஏதும்  கூறவில்லையே?  என வினவினார். சூர்ப்பனகை தன் தந்திரத்தை ஆரம்பித்தாள். பெருமானே!  நான் தங்களை பார்த்தவுடன் என்னையும் அறியாமல் என் மனம் தங்களிடம் வந்துவிட்டது. நான் உங்களை விரும்புகிறேன். தாங்கள் என்னை திருமணம் செய்து மனைவியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
 
★இனி நீ தான் என் கணவன்.  இக்காட்டில் உனக்கு தகுந்த மனைவி நான் தான். என்னுடன் வந்து மகிழ்ச்சியாய் இரு. என் உருவத்தை பார்த்து பயப்படாதே. எனக்கு உருவத்தை மாற்றிக் கொள்ளும் சக்தி உண்டு.உனக்கு பிடித்தாற் போல் அழகாக என் உருவத்தை இப்போதே மாற்றிக் கொள்கிறேன். எதற்காகவும் யோசிக்காதே. உடனே என்னுடன் வந்துவிடு என அழகிய குரலில் கொஞ்சும் விதமாக கூறினாள் சூர்ப்பனகை.
 
★பெண்மணியே! நீயோ மகான் விஸ்ரவசுவின் மகள். அவர் ஒரு அந்தணர். நானோ தசரதரின் ராஜகுமாரன். அந்தணரின் மகளை ராஜகுமாரர்கள் மணந்து கொள்ளக் கூடாது. அது மட்டும் அன்றி உன் தாய், தந்தை, ராவணன் முதலிய உன் சகோதரர்களின் அனுமதியின்றி உன்னை மணந்து கொள்வது தவறான செயல் ஆகும். நான் திருமணம் ஆனவன். நீ என்னை விரும்புவது முறையற்ற செயல் ஆகும் என்றார், இராமர். இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது சீதை வந்து கொண்டு இருந்தாள். சீதையின் அழகை பார்த்து சூர்ப்பனகையே ஒரு நிமிடம் மயங்கி போனாள். சீதை ராமனை நோக்கி வருவதை சூர்ப்பனகை கவனித்தாள்.
 
★உடனே சூர்ப்பனகை ராமனிடம், பெருமானே! தங்களை நோக்கி வருபவள் ஒரு அரக்கி. நீங்கள் அவளை நம்ப வேண்டாம். இவள் மாய வேலை செய்வதில் மிகவும் வல்லவள் என்றாள். ராமர், சூர்ப்பனகை நல்லவள் அல்ல தீயவள் என்பதை உறுதி செய்து கொண்டார். ராமர் சூர்ப்பனகை பேசிய அனைத்தையும் கேட்டு சிரித்துவிட்டு லட்சுமணனுடன் சிறிது விளையாட எண்ணம் கொண்டார்.
 
★பின் சூர்ப்பனகையிடம், நானோ திருமணம் ஆனவன். என்னை நோக்கி வருபவள் என் மனைவி சீதை. திருமணம் ஆன ஒரு ஆண்மகனை மறுபடியும் திருமணம் செய்ய சொல்வது உனக்கு தீமையை உண்டாக்கும்.
என்னை ஆசைப்பட்டு நீ அடைந்தால் இரண்டாவது மனைவியாவாய். உனக்கு துன்பம் மிகவும் வரும். இரண்டு மனைவிகள். இருவருக்குமே தொந்தரவு வரும். உனக்கு நான் ஒரு வழியை காட்டுகிறேன். இதோ என் தம்பி லட்சுமணன் இருக்கிறான். அழகிலும், வீரத்திலும் சிறந்தவன். நீ வேண்டுமானால் அவனை திருமணம் செய்து கொள் என்றார்.
 
★ராமர் சொன்னபடி அரக்கியான  சூர்ப்பனகையும் லட்சுமனணிடம் தனது ஆசையை தெரிவித்தாள்.
வீரனே! உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. வா! நாம் இருவரும் திருமணம் செய்து மகிழ்ச்சியாக இருப்போம் என்றாள். தனது அண்ணன் தன்னுடன் விளையாடுவதை அறிந்த லட்சுமணன் தானும் விளையாட்டில் சேர்ந்து கொண்டான். சூர்ப்பனகையிடம் பைத்தியக்காரி! நீ ஏமாந்து போகாதே. நான் எனது அண்ணனுக்கு அடிமையாக இருந்து பணி செய்து கொண்டிருக்கின்றேன். நீ என்னை திருமணம் செய்தால் நீயும் என்னுடன் அடிமைக்கு அடிமையாக இருந்து பணி செய்ய வேண்டும். நீயோ ராஜகுமாரி. என்னைப்போன்ற அடிமையுடன் சேர்ந்து நீ வாழலாமா? அண்ணன் மனைவியை பற்றி கவலைப்படாதே. எனது அண்ணனை திருமணம் செய்து கொண்டு இரண்டாவது மனைவியாக மகிழ்ச்சியுடன் இருப்பாய் என்றான்.
 
★சூர்ப்பனைகையும் யோசனை செய்தாள்.லட்சுமணனனின் பேச்சை சரி என நினைத்து மறுபடியும் ராமனிடம் சென்று சீதையை பார்த்தாள். இவளால் தான் நீங்கள் என்னை திருமணம் செய்ய மறுக்கிறீர்கள். இவளை நான் ஒழித்து விடுகிறேன். பிறகு தாங்கள் என்னை தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறி கொண்டு சீதையின் மீது பாய்ந்தாள்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.....................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
106 / 11-07-2021
 
சூர்ப்பணகை
மானபங்கம்...
 
★ராமரும் லட்சுமணனும் மாற்றி மாற்றி பேசியபடி தன்னிடம் விளையாடுகின்றார்கள் என்று அறிந்த அரக்கி சூர்ப்பனகைக்கு சீதையின் மீது கோபம் வந்தது. சூர்ப்பனகை ராமரிடம் வந்து வயிறு ஒட்டி மிகுந்த ஒல்லியாக இருக்கும் சீதையின் மீது உனக்கு காதல் இருப்பதால் தானே என்னுடன் வர மறுக்கிறாய். நீ இல்லாமல் நான் உயிருடன் இருக்க முடியாது. உன்னை விட மாட்டேன். உன்னை அடைந்தே தீருவேன். இப்போதே இந்த சீதையை தின்று விடுகின்றேன். அப்போது நீ என்னை திருமணம் செய்து கொள்வாய். நாம் மகிழ்ச்சியுடன் இருக்கலாம் என்று சீதையின் மீது பாய்ந்தாள் சூர்ப்பனகை.
 
★சீதை பயந்து ராமனின் பின் ஒளிந்து கொண்டாள். இதற்கு மேல் விளையாடினால் அது ஆபத்தாகிவிடும் என நினைத்து
ராமர் சீதையின் அருகே சூர்ப்பனகை வர முடியாமல்
"நில்" என்று அவளை தடுத்தார்.
“இவள் என் மனைவி. என்  வாழ்க்கைத் துணைவி” என்று சொல்லாமல் செய்கையால் அறிவுறுத்தினார். சீதையை அழைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டே பர்ணசாலையில் நுழைந்தார். செல்லுமுன் நீ இங்கிருக்க வேண்டாம்.  என்
 “தம்பி தயவு காட்டமாட்டான்; என்னை நம்பி இங்கு இருக்க வேண்டாம்'” என்று மறுபடியும் கூறிவிட்டு அவளை விட்டு அகன்றார்.
 
★“இன்று போய் நாளை நான் வருகிறேன்” என்று கூறி விட்டு அவ்வரக்கி அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள். பொழுது சாய்ந்தது. அவள் உள்ளத்தில் வெறுமை நிறைந்தது. இரவு நீண்டதாக அவளுக்கு இருந்தது. பொழுது விடியலில் தன் விடியலைக் காணக் காத்துக் கிடந்தாள். எப்படியாவது அவனை அடைவது என்று உறுதி கொண்டாள். இருள் அவளுக்கு மருளினைத் தந்தது. மனதின் வேதனையால் நரக வேதனையை அடைந்தாள்.
 
★உறக்கம் நீங்கிய ஶ்ரீராமர் காலையில் தன் கடனை முடிக்கக் கோதாவரிக் கரையை சென்று அடைந்தார். நித்தியக் கடனை முடித்து இறைவனை வழிபட்டு நிறை உள்ளத்தோடு குடிலுக்கு  திரும்பினார். அவர் புத்தம் புதுப் பொலிவோடு விளங்குவது சூர்ப்பணகையின் விருப்பைத் தூண்டியது. சீதை குறுக்கிட்டு கெடுத்ததால்தான் அந்த ராமன் தன்னைத் துறந்தான் என்று தவறாகக் கணக்குப் போட்டாள். அவள் வாழ்க்கை, ஒருதலை ராகமாக மாறியது. அவள் ஒரு தறுதலையாக மாறினாள்.
சீதை அவளுக்கு நந்தியாகக் காணப்பட்டாள்.  ஆகவே அவள் நந்தியாகிய சீதைமீது பாய்ந்து மறைத்து விடுவது என்று துணிந்தாள். சீதையை அழிக்க பர்ணசாலைக்குள் நுழைய முற்பட்டாள்.
 
★காவல் செய்து காத்துக் கிடந்த ராமனின் தம்பியை அவள் கவனிக்கவில்லை. ‘தனித்து இருக்கிறாள்’ என்று துணிந்து அவளைப் பற்றி இழுக்க முயன்றாள். மெய்ப்படைக் காவலன்போல இருந்த இளவல் லட்சுமணன் அவள் செய்கை பொய்யாகும்படி அவள் தலை முடியைக் கரத்தால் பற்றி அவளைக் ‘கரகர’ என்று இழுத்து வெளியே விட்டான்.  மிகுந்த கோபமடைந்த சூர்பபணகை லட்சுமணனையும் தூக்கிக் கொண்டு வானில் பறந்து செல்ல  முற்பட்டாள்.
 
★நிலமை விபரீதமாவதைக் கண்ட ராமர்  தீயவளான இந்த ராட்சத பெண்ணுக்கு நல்ல பாடம் கற்பித்து விடு. அவலட்சணமான இந்த ராட்சதப் பெண்ணின் உடலில் தீராத ஒரு குறையை உண்டாக்கி விடு, லட்சுமணா!என்றார். ராமரின் சொல்லுக்காக காத்திருந்த லட்சுமணன் மிகுந்த கோபத்துடன் தன் கத்தியை எடுத்து ராட்சசியின் காதையும் மூக்கையும் அறுத்து விட்டான். அழகான உருவத்துடன் இருந்த ராட்சசி சகிக்க முடியாத ஒரு அகோரமான உருவத்துடன் மேலும் அவலட்சணமாகி வலி பொருக்க முடியாமல் உரக்க கதறிக் கொண்டே காட்டிற்குள் ஒடி மறைந்தாள்.
 
★அரக்கி சூர்ப்பனகை நேராக, அரக்கர்கள் சூழ அமர்ந்திருக்கும் ராட்சஷ தலைவனான மற்றும்  அந்த காட்டின் ராட்சத அரசனாக இருக்கும் தனது சகோதரன் கரனிடம் அலறி அடித்து ஒடிச் சென்று கதறினாள். அவளின் நிலையை பார்த்து கோபம் கொண்ட கரன் என்ன ஆயிற்று? உடனே சொல். உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவனை வதைத்து இப்போதே கழுகிற்கும் காக்கைக்கும் இரையாக்கி விடுகிறேன் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு விசாரித்தான்.
 
★அதற்கு அரக்கி சூர்ப்பனகை, அண்ணா!  அயோத்தியின் மன்னரான தசரதரின் அழகிய குமாரர்கள் இரண்டு பேர் ஒரு பெண்ணுடன் காட்டிற்குள் தபஸ்விகள் வேடத்தில் வந்திருக்கின்றார்கள். அந்த பெண்ணை காரணமாக வைத்துக்கொண்டு என்னை தாக்கி இந்த கொடூர காரியத்தை செய்துவிட்டார்கள். அவர்களின் ரத்தத்தை குடிக்க நான் மிகவும் ஆசைப்படுகிறேன் என்றாள்.
கரன், எனக்கு நீ சொல்வது ஒன்றும் புரியவில்லை. சற்று தெளிவாக சொல் என்றான். சரி! தெளிவாக கூறுகிறேன் என்ற
சூர்ப்பனகை, தசரதரின் இரண்டு குமாரர்கள் தவக்கோலம் பூண்டு இங்கே வந்து இருக்கிறார்கள்.
 
★அவர்களுடன் ஒரு பெண்ணும் இருக்கிறாள். அந்தப் பெண் மிகுந்த அழகுடையவள். தனக்கு எவரும் நிகரில்லா பேரழகி. அவளை நமதருமை  அண்ணன் ராவணனின் அந்தப்புரத்தில் சேர்க்க எண்ணினேன். அதற்காக அப்பெண்ணை நெருங்கும் சமயத்தில்  அவர்கள் என்னை இக்கதிக்கு ஆளாக்கி விட்டனர்.
நீ உடனே சென்று அவர்களை வதம் செய்துவிட்டு வா! என்றாள்.
இப்போது நீ பார்த்துக்.  கொண்டு இருக்கும் வேலைகளை எல்லாம் அப்படியே வைத்து விட்டு முதல் வேலையாக அவர்களை உடனே கொன்று விட்டு பின்னர்  அடுத்த வேலையை பார் என்று கதறி அழுதாள்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை......................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
107 / 12-07-2021
 
கரன் படையினர் அழிவு...
 
★கரன் இலங்கை வேந்தன் இராவணன் உறவினன், அவன் அந்த எல்லைக்குக் காவலனாக இருந்தான். அவனிடத்தில் சென்று தன் துயரத்தை அழுது கொண்டு வெளியிட்டாள். மூக்கு அறுத்தவரை வேர் அறுக்கும்படி வேண்டினாள். கரன் போருக்குப் புறப்பட்டான். ஆனால் அவன் படை தளபதிகள் பதினான்கு பேர் அவனைத் தடுத்து நிறுத்தித் தாங்களே  களம் நோக்கிச் செல்வதாக கூறினர்.
 
★காட்டில் உள்ள  அயோத்தியின் ராஜகுமாரர்களை இருவரையும் கொன்று விட்டு அவர்களின் உடலை இங்கே உடனே கொண்டு வாருங்கள். அவர்களுடன் இருக்கும் பெண்ணையும் கட்டி இங்கே அழைத்து வாருங்கள். தாமதம் வேண்டாம். உடனே கிளம்புங்கள் என்று கரன் தனது ராட்சச சேனாதிபதிகளுக்கு உத்தரவிட்டான். பதினான்கு சேனாதிபதிகளும் தங்கள் படை பரிவாரங்களுடன் ராமருடன் போரிட கிளம்பினார்கள்.
 
★அவர்களுக்கு ராமர் இருக்கும் இடத்தை காட்டி ராஜகுமாரர்கள் இருவரின்  ரத்தத்தை குடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சூர்ப்பனகையும் அவர்களுடன் வந்தாள்.  தூரத்தில் ஶ்ரீராமர் மற்றும் லட்சுமணனை கண்டதும் அதோ பாருங்கள்! என்னை துன்புறுத்தியவர்கள் அங்கே இருக்கின்றார்கள் அவர்களை உடனே கொன்று விடுங்கள் என்று சூர்ப்பனகை கத்தினாள். சூர்ப்பனகை கத்திய சத்தத்தில் ராட்சச கூட்டம் ஒன்று தங்களை நோக்கி வந்து கொண்டிருப்பதை ராமர் பார்த்தார். சூர்ப்பனகை மற்றும் அவளின் ராட்சதபடை சேனாதிபதிகளை பார்த்த உடன் அவளின் நோக்கத்தை அறிந்து கொண்டார்.
 
★உடனே, லட்சுமணரிடம், லட்சுமணா! சீதையை சிறிது நேரம் பத்திரமாக பார்த்துக் கொள்.  இவர்களை  நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். ராமர் தன்னுடைய வில்லை ஏந்தி ராட்சச சேனாதிபதிகளிடம் பேச ஆரம்பித்தார். நாங்கள் ராம லட்சுமணர்கள். அயோத்தியின் ராஜகுமாரர்கள். இக்காட்டில் தபஸ்விகளை போல வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். பிறருக்கு தீங்கு செய்வதையே தொழிலாகக் கொண்டு, தவம் செய்யும் முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் தொந்தரவு கொடுக்கும் உங்களை அந்த முனிவர்களின் ஆணைப்படி அழிக்க வில் அம்புடன் நான் வந்திருக்கின்றேன்.
 
★உயிர் மேல் ஆசையில்லை என்றால் திரும்பி ஓடாமல் இங்கு என்னை எதிர்த்து நீங்கள்  போர் செய்யுங்கள். உயிர் மேல் அதிக ஆசையிருந்தால் உடனே திரும்பி ஒடி விடுங்கள் என்றார் ஶ்ரீராமர். இல்லையேல் யாவரையும் நான் விடமாட்டேன் என எச்சரிக்கை விடுத்தார். ராமரின் பேச்சைக் கேட்ட பதினான்கு அரக்கர்களும் கோபத்துடன் கடுமையான குரலில் பேச ஆரம்பித்தார்கள். மிகப்பெரிய உருவம் படைத்த எங்களுடைய தலைவரும் இக்காட்டின் அரசருமான கரனின் கோபத்திற்கு நீங்கள் இப்போது  ஆளாகியிருக்கிறீர்கள். ஆகவே  இப்போது எங்களது தாக்குதலில் நீ அழிந்து போகப்போகிறாய். நீயோ ஒருவன் நாங்கள் பதினான்கு சேனாதிபதிகளுடன் பல பேர் இருக்கின்றோம்.
 
★போர்க்களத்தில் எங்களுக்கு எதிராக உன்னால் நிற்கக்கூட முடியாது. கரனின் அனைத்து சேனாதிபதிகளும் தங்கள் பலத்தை பற்றி பலவாறாக பேசினார்கள்.சில கணங்களில் உன்னை வீழ்த்தி விடுவோம். போர் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை என்று கோபத்துடன் கூறிவிட்டு பலவகையான ஆயுதங்களுடன் ராமரை நோக்கி ஒடி வந்தார்கள். போர்  ஆரம்பம் ஆனது. ராமர் தனது வில்லில் அம்பை பூட்டி யுத்தத்துக்கு தயாரானார். அந்த ராட்சசர்கள் தங்களிடம் உள்ள ஆயுதங்களை போரில் யாராலும் வெல்ல முடியாத ராமரின் மேல் வேகமாக வீசினார்கள்.ராமர் தனது அம்பை ராட்சசர்களின் மீது வரிசையாக எய்தார். ராட்சசர்கள் அனைவரும் மார்பு பிளக்கப்பட்டு உடல் சிதைந்து வேர் அறுக்கப்பட்ட மரம் போல் வீழ்ந்தார்கள்.
 
★தரையில் வீழ்ந்த ராட்சச சேனாதிபதிகளின் உடலை பார்த்து பயந்த சூர்ப்பனகை பயங்கரமான கூச்சலுடன் அந்த இடத்தை விட்டு ஓடி மீண்டும் கரனிடம் வந்து சேர்ந்து அழுது புலம்பினாள். கரனுக்கு ஒன்றும் புரியவில்லை. போர் புரிய யமனைப் போன்ற வீரர்களை நான் அனுப்பினேன். அவர்கள் ராஜகுமாரர்களை தற்சமயம் அழித்திருப்பார்கள். நீ ஏன் அழுது புலம்புகிறாய்?  நீ இப்படி அழுது புலம்புவதை நிறுத்தி அங்கு நடந்தவற்றை சொல் என்றான் கரன்.
 
★அவள் உடனே எழுந்து கண்களை துடைத்து கொண்டு,
சேனாதிபதிகள் பதினான்கு பேரை நீ அனுப்பினாய். அவர்கள் அனைவரையும் அந்த அழகிய ராஜ குமாரன் தனது அற்புதமான யுத்தத்தினால் சில கணங்களில் கொன்று விட்டான். அனைவரும் உடல் சிதைந்து மோசமாக  இறந்து விட்டார்கள். அந்த  பதினான்கு சேனாதிபதிகளும் அங்கு பிணமாக கிடக்கிறார்கள். ராமனுடைய வீரத்தால் நமது சேனாதிபதிகள் அனைவரும் மாண்டார்கள். ராமனின் வீரத்தை உனக்கு எப்படி சொல்வது என்று தெரியவில்லை? உன் ராட்சத குலத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் உடனே சென்று அந்த  ராமனிடம் யுத்தம் செய்.
 
★உனது காட்டிற்குள் புகுந்த அந்த ராஜ குமாரர்களை உடனே அழித்துவிடு. நீ அவர்களை அழிக்காவிட்டால் அவர்கள் நம்மை அழித்து விடுவார்கள். உன்னை நீ சூரன்,வீரன்  என்று சொல்லிக்கொள்கிறாய். இதில் பலன் ஒன்றும் இல்லை. நீ உண்மையான சூரனாக இருந்தால் உடனே யுத்தத்திற்கு கிளம்பி அவர்களை அழித்து நம் ராட்சத குலத்தை காப்பாற்று. இல்லையென்றால் அவர்களால் நாம் முற்றிலும் அழிந்து போவது நிச்சயம் என்று அரக்கன் கரனின் கோபத்தை சூர்ப்பனகை மேலும் தூண்டிவிட்டாள்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை...................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
108 / 13-07-2021
 
கரன், தூஷணன்
யுத்தகளம் வருதல்...
 
★நீ மிகப்பெரிய பலசாலி என்று அனைவரிடமும் சொல்வதால் ஒரு பயனும் இல்லை. உடனே இராமனிடம் சென்று போரிட்டு உன் வீரத்தையும், தீரத்தையும் காண்பி. இல்லையேல் அவன் உன் குலத்தை நிச்சயம் அடியோடு அழிப்பான் என்றாள். தன்னுடைய  சபையில் சூர்ப்பனகை இப்படி தன்னை இழிவுபடுத்தி பேசுவதை கரனால் பொறுத்து கொள்ள முடியவில்லை.  ராமரை புகழ்ந்து பேசியும் தன்னை மிக அவமானப் படுத்தியும் சூர்ப்பனகை கூறிய  வார்த்தைகள் கரனின் நொந்த உள்ளத்தில் சூலம் போல் பாய்ந்து கோபத்தை உண்டு பண்ணியது.
 
★சூர்ப்பனகை! நீ இந்த மானிட அற்பனை கண்டு இவ்வளவு பயப்படக்கூடாது. அவனைக் கொல்ல எனக்கு ஒரு நிமிடம் போதும். அவனை நான் சிறிது நேரத்தில் கொன்று விடுவேன். அவனின் ரத்தத்தை நீ குடிப்பாய். அது வரை காத்திரு என்று யுத்தத்திற்கு கிளம்பினான் கரன். கரனின் வார்த்தைகளால் மகிழ்ச்சி அடைந்த சூர்ப்பனகை நீ தனியாக போக வேண்டாம். உன்னால் முடிந்த வரை நமது படைகளை திரட்டிக்கொண்டு போ என்று கரனிடம் கேட்டுக் கொண்டாள்.
 
★கரனும் தன்னுடைய படைகள் அனைத்தையும் ஆயுதங்களுடன் போருக்கு செல்ல வேண்டும் என்றுஉத்தரவிட்டான். கரனின் படைத் தலைவனான தூஷணன் தலைமையில் அனைத்து படைகளும் கொடூரமான பலவித  ஆயுதங்களுடன் காட்டிற்கு சென்றது. உற்சாகத்துடன் ஓடிய படைகளின் பின்னே கரன் சென்றான்.ராமரை அழித்தே தீர வேண்டும் என்ற உற்சாகமாக கிளம்பிய அந்த ராட்சதர்கள் அனைவருக்கும் செல்லும் வழி எங்கும் அபசகுனங்கள் தென்பட்டது.
 
★குதிரைகள் காரணமில்லாமல் நிலை தடுமாறி விழுந்தது. சூரியனை சுற்றி கரிய வட்டம் தோன்றியது. அரசனின் தேரில் மாமிச பட்சியான கழுகு வந்து அமர்ந்து கூச்சல் போட்டது. நரிகள் ஊளையிட்டு மிகவும் பயங்கரமாக கத்தியது. பெரிய உடல் கொண்ட வெள்ளைநிற  நாரைகள் வானத்தை மறைக்கும் அளவிற்கு கூட்டமாக சென்றது. மேலும் பல அபசகுனங்களை கண்ட ராட்சத படையினர் தமது உற்சாகம் இழந்தனர். கரன் அனைவரையும் உரத்த குரலில் உற்சாகப்படுத்தினான்.
 
★நீங்கள் இந்த அபசகுனங்களை கவனிக்காதீர்கள்.  இந்த மாதிரி அபசகுனங்களை கண்டு யாரும் அஞ்ச வேண்டாம். நாம் சீக்கிரம் அவர்களை கொன்று விட்டு திரும்புவோம் நாம் இதுவரையில் செய்த எந்த ஒரு யுத்தத்திலும் தோற்றதில்லை. துஷ்டர்களாகிய அந்த மானிட பூச்சிகளை அழித்து விட்டு வெகு சீக்கிரம் வெற்றி பெற்று  நாம் திரும்பி விடுவோம் என்று கரன் கர்ஜனை செய்தான்.  கரனின் இவ்வார்த்தைகளை கேட்டவுடன் மிகுந்த பயத்தில் இருந்த அந்த சேனை படைகள் மீண்டும் உற்சாகமடைந்து மிக கம்பீரமாக கூக்குரலிட்டு காட்டிற்குள் சென்றார்கள்.
 
★பர்ணசாலையில் ராமருக்கும், லட்சுமணக்கும் சேனை வரும் ஓசை கேட்டது. யுத்தத்திற்காக சேனை வந்துக்கொண்டு இருக்கிறது என்பதை அறிந்த ராமர் யுத்தத்திற்கு தயாரானார். உடனே லட்சுமணரிடம், சென்று லட்சுமணா! அரக்க சேனையின் ஓசையை கேட்டாயா?  இன்று மீண்டும் யுத்தம் நடப்பது வெகு நிச்சயம். எல்லா அரக்கர்களும் அழிந்து போவதும் உறுதி எனக் கூறினார்.ராமரும் லட்சுமணனும் ராட்சச படையின் கூக்குரலை கேட்டு அரக்கருடன் யுத்தத்துக்கு தயாரானார்கள்.
 
★ராமர் தம்பி லட்சுமணனிடம் போருக்கு வருகின்ற ராட்சதர்கள் அனைவரும் இன்று அழிந்து போவது நிச்சயம். நீ சீதையை மலைக் குகையில் பாதுகாப்பாக வைத்து விட்டு அவளுக்கு காவலாக இரு. வருகின்ற ராட்சத படைகளை நான் ஒருவனே பார்த்துக் கொள்கின்றேன். தற்போது எனக்கு துணையாக
நீ தேவையில்லை. விரைவாக சீதையை அழைத்துச் செல் என்று கட்டளையிட்டார் ராமர். லட்சுமணன் சீதையை அழைத்து கொண்டு மலைக்குகைக்குள் சென்றான்.
 
★ராமர் தனியாக அங்கு யுத்தம் செய்வதை பார்க்க தேவர்களும் கந்தர்வர்களும் ஆகாயத்தில் காத்திருந்தார்கள். ஶ்ரீராமர் ஒருவராக இருந்து இவ்வளவு பெரிய ராட்சத சேனையை எப்படி வெற்றி அடையப்போகிறார் என்று ரிஷிகளும் முனிவர்களும் கவலை அடைந்தார்கள். ராமர் வில்லின் அம்புடன் தயாராக காத்திருந்தார். கரனின் ராட்சத படைகளின் சிம்ம நாதமும் பேரிகை நாதமும் கர்ஜனைகளும் காட்டை நிரப்பி இருந்தது. அந்த அரக்க சேனையானது பெரும் ஓசையை எழுப்பிக் கொண்டு பர்ணசாலையை வந்தடைந்தது.
 
★ராட்சத சேனைகள் இராமரை சூழ்ந்து கொண்டதும்  யுத்தம் மிக கோரமாக ஆரம்பித்தது. கோர அரக்கர்களால் இராமரின் உடல் மிகவும் அடிபட்டும் அவர் சிறிதும் தளராமல் எதிர்த்து யுத்தம் புரிந்தார். அச்சமயத்தில் இராமர் நாணை பூட்டுவதோ, நாணில் இருந்து அம்பு வெளிவருவதோ கண்ணுக்கு தெரியவில்லை. அந்த அளவுக்கு வேகமாக யுத்தம் புரிந்தார். இராமரின் மிகக்கூரிய பாணங்களுக்கு  யானைகள்,  
குதிரைகள்  ஆயிரக்கணக்கான
அரக்கர்கள்   இரையாயினர். அரக்கர்களின் சேனைகள் முழுவதும் நிர்முலமாகின.
தனது படைகள் அழிவதைக் கண்ட கரன், தூஷணனுடன் போர்களத்தில் நுழைந்தான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை...........................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
109 / 14-07-2021
 
கரன்,தூஷணன் வதம்...
 
★ராமர் தனது வில்லில் இருந்து அம்புகளை வேகமாக அனுப்ப ஆரம்பித்தார். ராமரை சுற்றி இருக்கும்  ஆயிரக்கணக்கான  ராட்சசர்களை பார்த்த தேவர்கள் ஒற்றை ஆளாக இருந்து ராமர் எப்படி அனைவரையும் அழிக்க போகிறார் என்று இந்த கொடிய யுத்தத்தை மிக்க ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ராமர் வில்லில் அம்பு பூட்டுவதோ அம்பு வில்லில் இருந்து செல்வதோ மின்னல் வேகத்தில் இருந்தது. சூரியனில் இருந்து அனைத்து பக்கமும் வெளிச்சம் பரவுவதைப் போல ராமர் தன்னை சுற்றி அம்பை அனுப்பிக்கொண்டே இருந்தார். எட்டு திசைகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான வீரர்கள் அழிந்தனர். யானைகளும் குதிரைகளும் பூமியில் வீழ்ந்து மடிந்தது. பெரிய உருவத்திற்கு மாறிய பல ராட்சசர்கள் ஆகாயத்தில் பறந்து வந்து ராமரை தாக்க முற்பட்டனர். ராமரின் வில்லில் இருந்து வந்த அம்புகள் அந்த ராட்சசர்களை ஆகாயத்திலேயே அழித்தன.
 
★இதைக்கண்ட தூஷணன் ஒரு பெரும் படையை கூட்டி கொண்டு ராமரின் மீது பாய்ந்தான். சிறிது நேரம்தான் தூஷணனின்  அட்டகாசங்கள் நடந்தது. பிறகு ராமரின் பாணங்களுக்கு தூஷணனின் படைகள், தேர்கள், குதிரைகள், யானைகள் என அனைத்தும் இரையாயின. பெரும் கோபங்கொண்டு அந்த தூஷணன் தன் தண்டாயுதத்தை கொண்டு ராமர் மீது வேகமாக பாய்ந்தான். ராமர் அனுப்பிய அம்பு அவனது இரு கைகளையும் வெட்டி தள்ளி அவனை அடியோடு அழித்தது. தூஷணன் இறந்ததை பார்த்த ராட்சச படைகள் பயந்து போர்களத்தை விட்டு ஓட ஆரம்பித்தனர்.
 
★கரன்  அனைவரையும் உற்சாக மூட்டி மீண்டும் அழைத்து வந்தான். அரக்கர்களில் மீதம் இருந்தது  தலைவர்களான கரன் மற்றும் திரிசிரஸ் தான். கோபங்கொண்ட கரன் ராமருடன் சண்டையிட முன் சென்றார். அப்போது திரிசிரஸ் கரனை தடுத்து நிறுத்தி, அந்த ராமனை கொன்று நான் வெற்றி பெறுவேன், இல்லையென்றால் நான் இறந்த பின் நீ ராமனை எதிர்த்து நின்று சண்டையிடு என கூறி திரிசிரஸ் முன் சென்றான். அவன் ராமரை தாக்க மிகக் கடுமையாக இயன்ற அளவு முயற்சித்தான். முடிவில் ராமர் அவன் மேல் ஒரு பாணத்தை எய்தினார். அந்த திரிசிரஸ்  அவ்விடத்திலேயே இறந்தான்.
 
★இதனைப் பார்த்த கரன், கோபங்கொண்டு தேரில் ஏறி ராமரை நோக்கி சென்றான்.
ராமருக்கும் ராவணனுக்கும் நடக்க இருக்கும் போருக்கு முன்னோட்டமாக கரனோடு நடந்த போர் அமைந்தது. ராமர் ஒன்பது அம்புகளை ஒருசேரக் கரன் மீது ஏவினார். அவற்றிற்கு எதிராக அம்புகளைச் செலுத்திக் கரன் அவற்றை அறுத்து அழித்தான். அம்பு மழையினால் ராமனது உருவம் முழுவதையும் மறைத்து விட்டான். அதைக் கண்டு தேவர்கள்  நடுங்கினர். ராமர் வீராவேசம் கொண்டு வில்லை வேகமாக வளைத்தார். அது முறிந்து விட்டது.
 
★வில்லிழந்து ராமர், நிராயுத பாணியாக ஆகி விட்டார். அடுத்து என்னை நடக்குமோ? என்று அஞ்சும் சூழ்நிலை ஏற்பட்டது.
மிதிலையில் சீதையுடன் மணம் முடித்து அயோத்தி திரும்பும் வழியில்  பரசுராமரிடமிருந்து பெற்ற மாபெரும் வில்லை வருணனிடம் கொடுத்திருந்தார். அதற்காகக் தன் பின்புறமாக கைநீட்டினார் ஶ்ரீராமர். வருணன் கொண்டுவந்து சேர்த்த அந்த வில்தான் கோதண்டம். அதை ஏந்தியதால் கோதண்டராமர் ஆனார்.
 
★ராமரின் அம்பினால் அனைத்து ராட்சதர்களும் அழிந்தனர். ராமர் ருத்திர மூர்த்தியை போல் காணப்பட்டார்.  இவ்வளவு நாட்களாக சிரித்த முகத்துடன் அன்புடன் இருக்கும் ராமரை பார்த்திருந்த பஞ்சவடி காட்டில் வசிப்பவர்கள் இப்போது ராமரை ருத்ரமூர்த்தியாக பார்க்கும் போது பயந்து நடுங்கினார்கள். அந்த காட்டுப் பகுதி முழுவதும் இறந்த ராட்சதர்களின் உடல்கள் மலை போல் குவிந்து கிடந்தது.
 
★ராமர் கரனின் தேர் மற்றும் குதிரைகளை அழித்து அவனை நிர்மூலமாக்கினார். ஒற்றை ஆளாக நின்று கொண்டிருந்த கரனிடம் ராமர் நிதானமாகப் பேச ஆரம்பித்தார். இந்தக் காட்டில் யாருக்கும் எந்த தொந்தரவும் செய்யாமல் தவம் செய்து தமது வாழ்ககையை நடத்தி கொண்டு இருக்கும் முனிவர்களையும் ரிஷிகளையும் ஏன் பலவிதமாக துன்புறுத்தியும் கொன்றும் வந்திருக்கிறாய்.?   உன்னை போன்ற அரக்கர்களை அறவே அழிப்பதற்காகவே இக்காட்டிற்கு வந்திருக்கின்றேன். என்னுடைய அம்புகள் உன்னுடன் வந்த
உன்னுடைய  ராட்சத குலத்தைச் சேர்ந்த அனைவரையும் அழித்து விட்டது. உலகத்தாருக்கு துன்பம் விளைவித்து அப்பாவி மக்களை கொல்பவன் எவ்வளவு பெரிய பலசாலியாக இருந்தலும் ஒரு நாள் இறந்து தான் போவான். இவ்வளவு நாள் இந்த பாவ காரியங்களை செய்து கொண்டு இருந்த நீயும் இப்போது எனது அம்பினால் அழியப்போகிறாய் என்று தனது அம்பை வில்லில் பூட்டினார்.
 
★கரன் உடனே, அற்ப மனிதனே! யாரும் தன்னைதானே புகழ்ந்து கொண்டு பேச மாட்டார்கள். நீ பேசும் பேச்செல்லாம் மிகுந்த அற்பத்தனமான பேச்சு. ஆகவே உன்னால் முடிந்தால் நீ என்னை வென்று காட்டு. இன்று உனக்கு எமனாக நான் இருக்கிறேன். உன்னை கொல்வதற்காகவே நான் இங்கு வந்துள்ளேன் என்று கூறினான். ராமர் வில்லை எடுத்து, கரனுடைய வில், தேர் என அனைத்தையும் அழித்தார். கரன் அனைத்தும் இழந்து நின்றான். கடைசியில் அவன் தன் கதாயுதத்தை கையில் எடுத்தான். அவன் தன் கையில் வைத்து இருந்த கதாயுதத்தை சுழற்றி ராமர் மீது வீசினான்.
 
★ராமரும் கதாயுதத்தை பார்த்து பாணத்தை எய்தினார். கதாயுதம் துண்டு துண்டாக நொறுங்கி தரையில் விழுந்தது. பிறகு கரன் பக்கத்தில் இருந்த மரத்தை பிடுங்கி, இராமர் மீது வீசினான். இராமர் தன் வில்லை கொண்டு தன்னை நோக்கி வந்த மரத்தை தடுத்தார். அம்புகள் பலவற்றை கரனின் மேல் எய்தார் ராமர். உடல் முழுவதும் காயமடைந்த அரக்கன் கரன் ராமரை தனது கைகளினால் தாக்க ஓடோடி  வந்தான். இனியும் தாமதிக்க வேண்டாம் என்று நினைத்த ராமர் இந்திர பாணத்தை கரனின் மேல் பிரயோகித்தார்.
 
★வருணன் கொடுத்த அந்த  வில் அவருக்குக் கைகொடுத்தது: அதனால் ஏவிய அம்பு, கரனின் உயிரைக் குடித்தது.  அடுத்த நொடியிலே கரனும் வீழ்ந்தான்
கோதண்டத்திற்கு முதல் பலியாக ஆனான் அரக்கன் கரன். காட்டில் முனிவர்களை துன்புறுத்திய ராட்சதர்களை அனைவரையும் அழித்து விட்டார் ராமர். இனி இந்தக்  காட்டில் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கலாம் என்று முனிவர்களும் ரிஷிகளும் மகிழ்ச்சியுடன் ராமரை வணங்கி ஆசிகள் வழங்கினார்கள். இந்த யுத்தத்தை பார்த்து கொண்டு இருந்த தேவர்களும். ரிஷிகளும் மலர்மாரி பொழிந்தார்கள்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை.......................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
110 / 15-07-2021
 
அகம்பணன்...
 
★ராமரின் மேல் தேவர்கள் மிக்க மகிழ்சியுடன் பூ மாரி பொழிந்து வாழ்த்தினர். ஶ்ரீராமர், அரக்கர் கூட்டத்தை அழித்து  விட்டு ஆசிரமம் திரும்பினார். அப்போது
சீதையும் லட்சுமணனும் மலை குகையில் இருந்து திரும்பி
ஆசிரமத்திற்கு வந்தார்கள்.
வெற்றியோடு திரும்பி வந்த ராமரை சீதையும், லட்சுமணனும் கண்ணீர் மல்க பார்த்தனர். பகைவர்களை கொன்று அழித்து முனிவர்களுக்கு நன்மையை செய்த ராமரை பார்த்து மகிழ்ந்த சீதை அவருடைய நெற்றியில் இருந்த வியர்வையை துடைத்து இவ்வளவு பெரிய யுத்தத்தில் ராமருக்கு ஒன்றும் ஆகவில்லை என்று ஆனந்தப்பட்டாள். ஒற்றை ஆளாக இருந்து அனைவரையும் அழித்த ராமரை பெருமையுடன் பார்த்த லட்சுமணன் அவரை அணைத்துக் கொண்டான். பிறகு முனிவர்களும் ரிஷிகளும் வந்து ராமருக்கு தங்களது அன்பான வணக்கத்தை தெரிவித்துக் கொண்டார்கள்.
 
 ★கரன் மற்றும் தூஷணன் வதம் செய்யப்பட்டதைக் கண்ட அரக்கி
சூர்ப்பனகை, ' நான் ராமன் மீது வைத்த காதலால் கேவலமாக என் மூக்கு, காதுகளை மட்டும் இழக்கவில்லை. உடன்பிறவா சகோதரர்களாகிய உங்களையும் இழந்துள்ளேன் ' என்று புலம்பி அழுதாள். எனக்கு நேர்ந்த இந்த அநியாயத்தை நான் அண்ணன் ராவணனிடம் இப்போது சென்று முறையிடுவேன் என்று கூறி கதறி அழுதாள்.
 
★ராமருடன் நடந்த இந்த போரில் அகம்பனன் என்ற ஒரு ராட்சசன் மட்டும் பெண் உருவத்திற்கு மாறி ராமரின் அம்பிலிருந்து தப்பி நடந்தவற்றை விபரமாக ராவணனிடம் சொல்வதற்கு இலங்கைக்கு சென்றான். அரசவைக்குள் நடுநடுங்கியபடி சென்ற அவன் ராவணனின் அருகில் சென்று மெதுவாக பேச ஆரம்பித்தான். எங்களின் மதிப்பு மிக்க அரசரே !  தங்களின் ஆளுகைக்கு உட்பட்ட அந்த தண்டகாரண்ய காட்டின் சிறந்த அரசனான கரனும் சேனாதிபதி தூஷணன் உட்பட நமது ராட்சச குலத்தவர்கள் அனைவரும் அழிந்து விட்டார்கள். நான் ஒருவன் மட்டும் தப்பி தங்களிடம் இந்த செய்தியைச் சொல்ல வந்திருக்கின்றேன் என்றான்.
 
★கண்கள் சிவக்க கோபத்தில் பேச ஆரம்பித்தான் ராவணன். என் அழகான காட்டை அடியோடு அழித்தவன் எனக்கு பயந்து இந்த உலகத்தின் எந்த ஒரு பகுதியிலும் தங்க இடம் சிறிதும் கிடைக்காமல் அலைந்து கொண்டிருப்பான். அவனை விட்டு வைக்க மாட்டேன். எனக்கு கெடுதலைச் செய்தவன் அந்த இந்திரன்,  குபேரன்,  யமன்,  விஷ்ணு அல்லது  வேறு  யாராக இருந்தாலும் நிம்மதியாக இருக்க முடியாது. நான் யமனுக்கு யமன்.
 
★சூரியனின் அக்னியையும் நான் எரிப்பேன். நடந்தவற்றை முழுமையாக சொல் என்று கர்ஜனையுடன் கத்திக்கொண்டே அகம்பனனை நோக்கி வந்தான் ராவணன். தனக்கு மிக அருகில் வரும் ராவணனை பார்த்து பயந்த அகம்பன் நடுங்கியபடியே அரசே! தாங்கள் எனக்கு அபயம் அளித்தால் சொல்கின்றேன் என்று கூறினான்.  பயம் ஏதும் வேண்டாம். உனக்கு  அபயம் அளிக்கின்றேன்.  உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன். நடந்தவற்றை அப்படியே சொல் என்றான் ராவணன். அகம்பனன் பேச ஆரம்பித்தான்.
 
★தசரதரின் புத்திரர் ராமர். அவர் தனது மனைவியுடனும் தனது சகோதரன் லட்சுமணனுடனும் அக்காட்டில் தவஸ்விகளை போல் வேடம் தரித்து  அமைதியாக வாழ்ந்து வருகின்றார்கள். ராமர் சிங்கம் போன்ற உடலமைப்பும் காளையைப் போன்ற வலிமை பொருந்திய தோள்களையும் உருண்டு திரண்ட அழகான கைகளையும் ஒப்பில்லாத உடல் பலத்துடன் இருக்கிறார். அவரது சகோதரன் ஆன  லட்சுமணன் சூர்ப்பனகையின் காதுகளையும் மூக்கையும் வெட்டி விட்டான். அதை சூர்ப்பனகை கரனிடம் தெரிவித்தாள்.
 
★கரன் உத்தரவின் பேரில் அந்த ராமரை அழிக்க நமது தளபதி தூஷணனின்  தலைமையில் போரிட சென்ற பதினான்காயிரம் ராட்சதர்களையும் கரனையும் கொன்று விட்டார் ராமர். அவரால் அங்கிருந்த நமது குலத்தவர்கள் அனைவரும் அழிந்து விட்டனர் என்றான் அகம்பனன். அவனின் இத்தகைய  பேச்சைக்  கேட்ட ராவணன் இந்த ராமர் என்பவன் தேவேந்திரனோடும் அனைத்து தேவர்களோடும் காட்டிற்குள் வந்து யுத்தம் செய்தானா? வேறு யார் யார் ராமனுக்கு இந்த யுத்தத்தில் உதவி செய்தார்கள்? அனைவரையும் ஒன்றாகவே அழித்து விடுகின்றேன் என்று கர்ஜித்தான் ராவணன்.
 
★ராமருடைய பேராற்றலை மேலும் சொல்ல ஆரம்பித்தான் அகம்பனன்.  ராமர் மிகவும் பராக்கிரமசாலி. உலகில் உள்ள வில்லாளிகளில் தலைசிறந்தவர்  போல் காணப்படுகிறார். மேலும் தன்னிடம் உள்ள தெய்வீக சக்தி பொருந்திய  அஸ்திரங்களை இலக்கு நோக்கி செலுத்தும் அரிய திறமை பெற்றிருக்கிறார். அவரது வில்லில் இருந்து கிளம்பிய அம்புகள் ஐந்து தலை பாம்புகள் போல் ராட்சதர்களை ஓட ஓட துரத்தியது. ராட்சதர்கள் எங்கே ஒளிந்தாலும் தேடிப்போய் அவர்களை கொன்றது என்று ராமர் தனது வில்லில் இருந்து செலுத்திய அம்பின் தீவிரமான வேகத்தையும் மற்றும் அபார திறமையையும் விவரித்துச் சொன்னான். அனைத்தையும் கேட்ட ராவணன் அந்த இரண்டு மனித பூச்சிகளை இப்போதே கொன்று விட்டு திரும்புகிறேன் என்று கர்ஜனையுடன் எழுந்தான். அகம்பனன் ராவணனை தடுத்து நிறுத்தினான்.
 
★ராமரின் பாராக்ரமத்தை நேரில் பார்த்தவன் என்ற முறையில் சொல்கின்றேன் கேளுங்கள். என்று அகம்பனன் ராவணனிடம் பேச ஆரம்பித்தான். ராமர் சர்வ வல்லமை படைத்தவராக இருக்கின்றார். இந்த உலகத்தில் உள்ள ராட்சதர்கள் அனைவரும் ஒன்று சேர்த்து ராமரை எதிர்த்து யுத்தம் செய்தாலும் அவரை வெற்றி பெற முடியாது. அவரை கொல்ல எனக்கு தெரிந்த ஓர் உபாயத்தை சொல்கின்றேன். தங்களுக்கு விருப்பம் இருந்தால் செயல் படுத்துங்கள் என்றான் அகம்பனன். உனது உபாயத்தை கூறு பார்கலாம் என்று ராவணன் அகம்பனனுக்கு கட்டளையை பிறப்பித்தான்.
 
★ராமருடைய மனைவி சீதை இருக்கிறாள். பெண்களில் ரத்தினம் போன்ற பேரழகு உடையவள். மூவுலகத்தில் தேடினாலும் அவளின் அழகுக்கு இணையாக யாரையும் பார்க்க முடியாது. அந்த பெரிய காட்டில் ராமரின் பாதுகாப்பில் இருக்கும் சீதையை யாருக்கும் தெரியாமல் வஞ்சகமான உபாயத்தை கையாண்டு கவர்ந்து கொண்டு வந்துவிடுங்கள். மனைவியின் மேல் பேரன்பு வைத்திருக்கும் ராமர் அவளின் பிரிவைத் தாங்க முடியாமல் தனது உயிரை விட்டு விடுவார் என்று ஒரு யோசனை சொல்லி முடித்தான். ராவணன் நீண்ட நேரம் யோசித்து இந்த அகம்பனனுடைய உபாயம் சரியானதாக இருக்கின்றது என்று அத்திட்டத்தையே  செயல் படுத்த முடிவு செய்தான். அடுத்த நாள் காலையில் தனது புஷ்பக விமானத்தின் சாரதியுடன்   தான் மட்டும் தனியாக கிளம்பி தாடகையின் புதல்வனான மாரீசனின் ஆசிரமம் சென்று சேர்ந்தான் ராவணன்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.....................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
111 / 16-07-2021
 
மாரீசனின் அறிவுரை...
 
★மாரீசன் பல வகையான உபசரணைகள் செய்து அரக்க அரசன் ராவணனை வரவேற்று பின்பு பேச ஆரம்பித்தான். ராட்சதர்களின் தலைவரே! தங்கள் நாட்டில் அனைவரும் நலமாக இருக்கின்றார்களா? நீங்கள் விரைவாக இங்கு வந்து இருப்பதை பார்த்தால் மனம் வருந்தும்படி ஏதோ தங்களுக்கு நடந்திருக்கின்றது என்று எண்ணுகின்றேன். என்ன செய்தி சொல்லுங்கள் என்று மாரீசன் ராவணனிடம் கேட்டான்.
 
★எனது ராஜ்யத்திற்கு உட்பட்ட காட்டில் உள்ள எனது அழிக்க முடியாத படைகள் அனைத்தும் தசரதரின் புதல்வன் ராமன் அழித்து எனக்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தி விட்டான். இந்த அவமானம் போக்க அவனது மனைவி சீதையை கவர்ந்து செல்ல வேண்டும் என்று முடிவு செய்து திட்டம் தீட்டி இருக்கின்றேன். அதற்கு நீ எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று ராவணன் மாரீசனிடம் சொன்னான்.
 
★மாரீசன் ராவணனிடம் பேச ஆரம்பித்தான். ராமர் யுத்தத்தில் மத யானைக்கு ஒப்பானவர். சீதையை அபகரிக்கும் இந்த யோசனையை உனக்கு யார் சொன்னது ராவணா? இதனை செயல்படுத்துவது என்பது கொடிய விஷ பாம்பின் வாயில் கைவிட்டு அதன் பல்லை பிடுங்கி மரணிப்பது போல் ஆகும். எவனோ உன் பகைவன் ஒருவன் உனக்கும் உனது ராட்சத குலத்திற்கும் சர்வநாசம் ஏற்பட வேண்டும் என்று உன்னுடைய நண்பன் போல் பாசாங்கு செய்து இந்த திட்டத்தை உனக்கு சொல்லியிருக்கிறான். ஏமாந்து அழிந்து போகாதே.
 
★ராமருடைய கோபத்தை தூண்டினால் உன் குலம் அழிந்து போகும். ராமர் யுத்தம் செய்யும் போது அந்தப் பாதாளத்தையே அடித்தளமாக கொண்ட கடல் போன்று காட்சி அளிப்பார். அவரின் வில்லில் இருந்து வரும் அம்புகள் கடல் அலைகள் போல் நிற்காமல் வந்து கொண்டே இருக்கும். அக்காட்சியை கண் கொண்டு பார்க்க இயலாது. அப்படி இருக்கும் போது யுத்தம் செய்வது எப்படி சாத்தியமாகும். அரக்கர்களின் தலைவனான ராவணா, நீங்கள் சீதையை ராமருக்கு தெரியாமல் கவர்ந்து செல்வது உங்களுக்கு எந்த ஒரு விதத்திலும் நன்மையானது அல்ல. நான் சொல்வதை கேளுங்கள்.
 
★மனம் அமைதி அடைந்து இலங்கைக்கு திரும்பி சென்று உங்களது மனைவிமார்களுடன் மகிழ்ச்சியுடன்  இன்பத்தை அனுபவியுங்கள். ராமர் தன் மனைவியுடன் காட்டில் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்று மாரீசன் ராவணனிடம் புத்தி கூறினார். இதனைக்கேட்ட ராவணன் அனுபவசாலியான மாரீசன் கூறினால்   சரியாக இருக்கும் என்று தன் திட்டத்தை கைவிட்டு மீண்டும் இலங்கைக்கு திரும்பிச் சென்றான்.
 
★மாரீசன் கூறிய அறிவுரைகளை ஏற்ற ராவணன் அரசவையில் கம்பீரமாக தேவேந்திரன் போல் ஜொலித்துக்கொண்டு அமர்ந்து இருந்தான். அவனது மந்திரிகள் அனைவரும் ராவணனை சூழ்ந்தவாறு அந்த மண்டபத்தில்  
வீற்றிருந்தனர். அரம்பையர்கள் அழகாக நடனம் ஆடிக் கொண்டு இருந்தார்கள். அந்த அரசரவை மண்டபத்தில் கூடியிருந்த மற்ற அரசர்கள் எப்போது ராவணன் தங்கள் பக்கம் திரும்புவானோ என்று எதிர்பார்த்து கரங்களைக் கூப்பிக்கொண்டு பணிவாக நின்று கொண்டிருந்தார்கள்.
தேவர்கள் எல்லாம் ராவணனின் சபையில் பணிவிடை செய்து கொண்டு இருந்தார்கள்.
 
★அப்போது சபையில் மிகுந்த அதிர்ச்சியை உண்டாக்கும் வகையில் ராவணனின் உடன் பிறந்த சகோதரி சூர்ப்பனகை காது மூக்கு அறுந்த நிலையில் மிகவும் கொடூரமான பயங்கர உருவத்துடன் அரசவைக்குள் நுழைந்து  கம்பீரமாய் அங்கு அமர்ந்திருந்த ராவணனின் காலடியில்  வந்து வீழ்ந்தாள். இராவணன் தன் தங்கை சூர்ப்பனகையின் நிலைமையை கண்டு பெரும் கோபம் கொண்டு கொதித்தெழுந்தான். தங்கையே! உன்னை இத்தகைய  கதிக்கு ஆளாக்கியவர்கள் யார்? உன் மூக்கையும், காதையும் அறுத்தவர்கள் யார்? எவ்வளவு துணிவு இருந்தால் அவர்கள் உன்னை இவ்வாறு செய்து இருப்பார்கள். அவர்கள் யாராக இருந்தாலும் நான் உயிருடன் விடமாட்டேன் என கோபம் பொங்க கூறினான்.
 
★ராவணனின் கோபத்தை கண்டு அங்கு கூடியிருந்த வர்கள் அஞ்சி நடுங்கினார்கள். அன்பு சூர்ப்பனகையே! தயங்காமல் சொல், உன்னை இக்கதிக்கு ஆளாக்கியவர்கள் யார்?  யார்?
சூர்ப்பனகை, அன்பு அண்ணா! தவக்கோலம் பூண்டு இருவர் வனத்திற்கு வந்துள்ளார்கள். அவர்கள் தசரதனின் குமாரர்கள். வீரத்தில் மிகவும் சிறந்தவர்கள். வில்வித்தையில் மிக நன்றாகத்  தேறியவர்கள்.கலைகள் எல்லாம் நன்கு கற்று தேர்ந்தவர்கள். தர்ம நெறியில் நடப்பவர்கள். அவர்கள் இருவருக்கும் ஈடு இணை யாரும் இல்லை. அவர்கள் பெயர் ராமன், லட்சுமணன். அது மட்டுமில்ல. அவர்கள் நமது அரக்கர் குலத்தை அழிப்போம் என்று சபதம் ஒன்று எடுத்துள்ளார்கள். என்னை இக்கதிக்கு ஆளாக்கியதும் அந்த மனிதர்கள் தான்.
 
★“மானிடருக்கு இந்தத் துணிவு வாராது. நீ ஏதோ பெரிய தவறு செய்திருக்கிறாய்.அதனால்தான் அவர்கள் பொறுக்க முடியாமல் இந்த எல்லைக்குச் சென்று இருக்கிறார்கள். நடந்ததை அச்சமின்றிச் சொல்” என்று கேட்டான். ராவணன் கேட்டதற்கு பதில் உரைக்காமல் அவனையே குற்றம் சாட்டி  கடுமையான வார்த்தைகளை கூறி பேச ஆரம்பித்தாள். ராட்சத அரசனான நீ அரச சுகங்கள் அனைத்தையும் அனுபவிப்பதில் மதிமயங்கி கிடக்கின்றாய். மிகவும்  பெரிய ஆபத்து ஒன்று பின்னாளில் வரப்போகிறது என்று நான் சொல்வதற்கு முன்பாகவே ஒற்றர்கள் வழியாக உனக்கு செய்தி வந்திருக்கும். அதனை தெரிந்தும் தெரியாதது போல் சிறுபிள்ளைதனமாக சுகங்களை அனுபவித்து கொண்டிருக்கிறாய் என மிகக் கொடிய கடுமையான வார்த்தைகளை பிரயோகம் செய்தாள்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை..................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
112 / 17-07-2021
 
சூர்பணகையின்
துர்போதனை...
 
★உனக்கு இப்படியொரு தீங்கு செய்த அவர்கள் உயிரோடு இருக்கலாமா? காட்டில் காவல் புரிந்து கொண்டு இருக்கும் கரனிடம் சென்று சொன்னாயா? என்றான் இராவணன். இதை கேட்ட சூர்ப்பனகை ஒப்பாரி வைத்து அழுதாள். பிறகு நான் முதலில் கரனிடம் தான் சென்று முறையிட்டேன். உடனே அவன் தூஷணன் மற்றும் திரிசிரஸ் தலைமையில் பெரும் படைகளை அழைத்து கொண்டு இராமனிடம் யுத்தம் செய்ய சென்றான்.
 
★ராமன் தனி ஒருவனாய் நின்று கரன், தூஷணன், திரிசரஸ் மூவரையும் படையோடு தன் பாணங்களால் மிகக்கொடூரமாக கொன்றுவிட்டான்.உன்னுடைய ஆளுகைக்கு உட்பட்ட உனது இடத்தை ஒருவன் ஆக்ரமிப்பு செய்து உன் குலத்தை சேர்ந்த உன்னை நம்பி தண்டகாருண்ய காட்டை ஆட்சி செய்தவர்கள் அடியோடு அழிந்து விட்டார்கள்.
பதினான்காயிரம் வீரர்களையும் அரசன் சேனாதிபதி என எல்லா அரக்கரையும் முனிவர்களின் சார்பாக வந்த ஒருவன் அழித்து உள்ளான். உன்னுடைய அரக்க படைகளை கண்டு நடுநடுங்கிய எதிரிகள் இதனைப்பார்த்து இப்போது மனதிற்குள் சிரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
 
★இதனை அறிந்தும் அறியாதது போல் அறிவிழந்து கிடக்கிறாய். மரண பயமில்லாமல் நீ ஒருவன் இருந்தால் மட்டும் போதுமா ?அரசர்கள்  செய்ய வேண்டிய காரியத்தை நீ சரியாகச் செய்ய வேண்டாமா? நீ எந்த சமயத்தில்  அழிவாய் என்று உனது எல்லா பகைவர்களும் மிக்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நீ இங்கு சுகமாக சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கின்றாய். உனக்கு அவமானமாக இல்லையா? உன்னை கண்டு நடுங்கிய முனிவர்களுக்கும் யாகம் செய்யும் ரிஷிகளுக்கும் ராமர் இப்போது அபயம் அளித்து விட்டான்.
 
★உன்னை பாராட்டி கொண்டு இருப்பவர்களின் பசப்பலான வார்த்தைகளில் திருப்திப்பட்டு கிடக்கும் உனக்கு ஆபத்து நெருங்கி விட்டது. இலங்கைக்கு இந்த நிலை வந்தால் உன் குடி மக்கள் கூட உன்னை மதிக்க மாட்டார்கள். உனக்கு கோவம் வரவில்லையா கோபம் இல்லாத அரசன் எதற்கும் உதவ மாட்டான் என்று சூர்ப்பனகை ராவணனின் கோபத்தை தூண்டி விட்டாள்.
இதனைக்கேட்ட இராவணின் கண்கள் நெருப்பு குழம்பு போல் எரிந்தது. சூர்ப்பனகையிடம், சரி! உன் காதையும், மூக்கையும் வெட்டும் அளவிற்கு நீ என்ன தவறு செய்தாய்? அதை முதலில் கூறு என்று கேட்டான்.
 
★கோபத்தில் பேசிக் கொண்டு இருந்த சூர்ப்பனகை இப்போது ராவணனிடம் சாந்தமாக பேச ஆரம்பித்தாள். ராமனுக்கு சீதை என்ற மனைவி இருக்கிறாள். ராமனோடு தனியாக உள்ளாள். அவளின் அழகை என்னவென்று சொல்வேன். தேவர்கள் கந்தர்வர்கள் உலகங்கள் உட்பட ஈரேழு பதினான்கு உலகங்கள் முழுவதும் தேடினாலும் அவளைப் போன்ற அழகியை நீ பார்க்க முடியாது. அவள் மகாலட்சுமி போல் பேரழகு உடையவளாக இருக்கிறாள்.  அழகின் சொரூபமாய் தங்கச்சிலை போல் உள்ளாள்.
 
★திருமகளும் அவளுக்குப் பணிப் பெண் ஆகும் தகுதியைப் பெறமாட்டாள். அவள் கூந்தல் மேகத்தைப் போன்றது. அவளின் பாதங்கள் செம்பஞ்சு போன்று இருப்பவை.  அந்த   விரல்கள் பவளத்தைப் போன்றவை. வதனம் தாமரை மலரைப் போன்று அழகானது. கண்கள் கடலைப் போல அகலமானவை.
அவளை பார்த்ததும் நானே ஒரு நிமிடம் மயங்கிவிட்டேன். உலகில் அவளை காட்டிலும் அழகி வேறு யாரும் இல்லை என்று பலவாறாக சீதையின் அழகைப் பற்றி கூறினாள்.
 
★" உனக்குத் தெரியும். இந்திரன், இந்திராணியைப் பெற்றான். ஈசன் உமையைப் பெற்று தனது இடது பாகத்தையே கொடுத்து வாழ்கிறார்.  மகாவிஷ்ணு மகாலக்ஷ்மியைப் பெற்று தனது மார்பிலேயே வைத்துகொண்டு வாழ்கிறார்.  பிரம்ம தேவனோ தனது  நாவில் சரஸ்வதியை வைத்து கொண்டு வாழ்கிறார்.
சீதையை நீ பெற்றால் நீ தான் அவர்களைவிட மிக்க மேன்மை பெற்றவன் ஆவாய். மின்னல் போன்ற இடையாளாகிய அந்த சீதையை வீரனே! நீ பெற்றால் எப்படி எங்கு வைத்து வாழப் போகிறாய்?"
 
★அவளைக் கண்டதும் அவள் உனக்குரியவள் உன்னிடம் இருக்க வேண்டியவள் என்று நினைத்தேன். அதற்கான ஒரு செயலிலும் இறங்கி உனக்காக அவளை தூக்கி வர முயற்சி செய்தேன். அப்போது ராமனின் தம்பி லட்சுமணன் தடுத்து ராட்சசியாக இருந்தாலும் பெண் என்பதால் உன்னை உயிரோடு விடுகின்றேன் என்று சொல்லி என் காது மூக்கை அறுத்து அவமானப்படுத்தி விட்டான். உனக்காக செயல்படப் போய் நான் இந்த கோரமான விகார முகத்தையும் அவமானத்தையும் பெற்றுவிட்டேன். இதற்கு நீதான் பழிக்குப்பழி வாங்க வேண்டும். இப்பழியை தீர்த்து உன் அரக்க குலத்தின் மானத்தைக் காக்க உடனே புறப்படு.  உனக்கு அந்த சீதையின் மேல் ஆசையிருந்தால் விரைவாக  தண்டகாரண்ய காட்டிற்கு புறப்படு.
 
★சீதை போன்ற பேரழகி ராட்சச குலத்தின் அரசனான உன் அருகில் தான் இருக்க வேண்டும். சாதரண மனிதனுடன் காட்டில் இருக்கக் கூடாது. அவளை தூக்கி வந்து உனக்கு அருகில் வைத்துக்கொள். உன் உடன் பிறந்த சகோதரியாகிய எனக்கு கிடைத்த அவமானம் உனக்கு கிடைத்த அவமானம் ஆகும். ராமனை வெற்றி கொண்டோ அல்லது தந்திரமாகவோ அந்த சீதையை நீ இங்கு தூக்கி வந்து ராமனை  மிகவும் அவமானப் படுத்தினால் போர்க்களத்தில் ராமனால் இறந்த நமது வீரர்கள் திருப்தி அடைவார்கள். நமது குலத்திற்கு ஏற்பட்ட அவமானம் தீர்க்கப்படும். இதனை மனதில் வைத்து சீக்கிரம் உனது அரக்க குலத்தின் கௌரவத்தை காப்பாற்றிக்கொள் என்று ராவணனுக்கு சீதை மீது ஆசை ஏற்படும்படியும் ராமரின் மேல் கோபம் வரும் படியும் தூண்டி விட்டு தனது பேச்சை முடித்தாள் சூர்ப்பனகை.
 
★சீதையின் அழகை பற்றிய பேச்சில் மயங்கிய ராவணன் மந்திரிகளிடம் சபை முடிந்தது அனைவரும் செல்லலாம் என்று சபையை முடித்து அங்கிருந்த அனைவரையும் அனுப்பி வைத்து விட்டு யோசிக்க ஆரம்பித்தான். சீதையை தூக்கி வர வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் மாரீசன் ராமரைப் பற்றி சொல்லிய எச்சரிக்கை அவனது மனதில் தோன்றியது.
ஆகவே மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டுமென்று நினைத்துக் கொண்டான்.
 
★சூர்ப்பனகையிடம் ராமன் என்பவன் யார்? அவன் எதற்காக தண்டகாருண்ய காட்டிற்கு வந்திருக்கின்றான்? அவனது உருவம் எப்படிப்பட்டது? ராமன் வைத்திருக்கும் ஆயுதங்கள் என்ன? அவன் தனியாக போரிட என்னென்ன போர் தந்திரங்கள் கையாண்டு நமது அரக்கர்கள் குலத்தவர்களை அழித்தான் என்று ராமரைப்  பற்றிய அனைத்தையும் சொல் என்று கேட்டுக் கொண்டான். அதற்கு  சூர்ப்பனகை ராமர் அயோத்தி அரசை  சேர்ந்த ராஜகுமரன் என்று ஆரம்பித்து காட்டில் யுத்தம் முடிந்தது வரை ராமரைப் பற்றி தனக்குத் தெரிந்த அனைத்து விஷயங்களையும் சொல்லி முடித்தாள். அனைத்தையும் கேட்ட ராவணன் நீண்ட யோசனைக்குப் பிறகு ஓர் முடிவுக்கு வந்தான். தனது புஷ்பக விமானத்தில் ஏறி மாரீசனை காணச் சென்றான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை.........................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
113 / 18-07-2021
 
மாரீசன் அதிர்ச்சி...
 
★சூர்ப்பணகை  பற்ற  வைத்த நெருப்பு அவனைச் சுட்டெரித்தது. சீதையின்பால் சிந்தை இழந்த அவன், அவள் நினைவாக மாறிவிட்டான், ராமனால் உயிர் இழந்த தன் தம்பி கரனையும் மறந்தான். தன் தங்கையின் மூக்கை அறுத்த  லட்சுமணன் மீது கொண்ட பகையையும் மறந்தான். அதனால், தனக்கு நேர்ந்த பழியையும் மறந்தான். தான் பெற்றிருந்த வரங்களை எல்லாம் மறந்தான். சூர்ப்பனகை சொல்லிக் கேட்ட அந்த அழகு  மங்கையை மட்டும் அவனால் மறக்க முடியவில்லை.
 
★சீதையின் நினைவு ஒருபக்கம். மான அவமானம்  ஒரு பக்கம்.  இரண்டில் சீதையின் நினைவே வெற்றி கொண்டது. மயிலைப் போன்ற எழிலுடைய சீதையை  வஞ்சித்து, கவர்ந்து அழகுடைய
நகரமான இலங்கை சிறையில்  வைப்பதற்கு முன் தன் இதயச் சிறையில் வைத்தான் ராவணன். வெயிலில் வைத்த மெழுகுபோல் அவன் உள்ளம் உருகியது. சீதையை அடைந்தால் தவிரத் தன் துன்பம் தீராது என்ற முடிவுக்கு வந்தான்.  
 
★ராவணன் காலையில் எழுந்து, தான் செய்ய  வேண்டிய  காலை கடமைகளை செய்து முடித்தான். எப்படியாவது சீதையை கவர்ந்து கொண்டு வர வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு இருந்தான். அதற்கு தாடகையின் மகன், மாயத்தில் வல்லவனான மாரீசனின் உதவியை நாட எண்ணினான். உடனே ராவணன் தன் புஷ்பக விமானத்தில் ஏறி, தவம் செய்து கொண்டு இருக்கும் மாரீசனிடம் செல்ல வேகமாகப் புறப்பட்டான்.
 
★மாரீசனின் ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்த ராவணனைத்
தவ வாழ்க்கை வாழும் மாரீசன் முறைப்படி வரவேற்றான். எதிர் பாராமல் திடீரென தன்னிடம் வந்த ராவணனை கண்டு சற்று திடுக்கிட்டான். இந்த காலை நேரத்தில் ஏன்  இவன் இங்கு வந்துள்ளான்? எதற்காக இவன் வந்திருப்பான்? என அச்சம் கொண்டான். ராவணனை பார்த்து, மருமகனே! வருக! நம் இலங்கையில் எல்லோரும் நலமாக உள்ளார்களா? எனக் கேட்டான்.
 
★இப்போது சில நாட்கள் முன்பு தானே வந்தீர்கள்?. மீண்டும் வந்திருக்கின்றீர்கள் என்றால் முக்கியமான செய்தியோடுதான் வந்திருப்பீர்கள் என்று நான் எண்ணுகிறேன். என்ன செய்தி சொல்லுங்கள்? என்று மாரீசன் ராவணனிடம் கேட்டான். பிறகு ராவணன் மாரீசனிடம் பேச ஆரம்பித்தான். என் உடன்பிறவா சகோதரர்கள் கரன் மற்றும் தூஷனனும் என் ஆளுகைக்கு உட்பட்ட தண்டகாரண்ய காட்டில் நன்கு ஆட்சி செய்து கொண்டு வந்தார்கள். இது உனக்கு நன்றாகத் தெரியும்.
 
★எனது சகோதரர்களையும் அவர்களின் பதினான்காயிரம் படை வீர்களையும் ராமன் என்ற ஒருவன் தேர் இல்லாமல் பயங்கரமான ஆயுதங்கள் ஏதும் இல்லாமல் தனியாக கீழே நின்று கொண்டே வெறும் வில்லையும் அம்பையும் மட்டும் வைத்துக் கொண்டு சர்வ சாதாரணமாக  கொன்று விட்டான். இப்போது தண்டகாரண்ய காட்டில் ராட்சதர்கள் யாரும் இல்லை. ராட்சதர்கள் என்கின்ற பயம் என்பதும் துளியும் இல்லை.
ரிஷிகளும் முனிவர்களும் பயம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் இருக்கின்றார்கள்.
 
★ ராமன் என்பவன் தந்தையால் காட்டிற்கு விரட்டப்பட்ட ஒரு நாடோடி. தனது மனைவியான  சீதையுடன் காடு காடாக சுற்றிக் கொண்டு நாடோடி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றான். தவஸ்வியைப் போல் வேடம் அணிந்து கொண்டு இந்திரனை போல் தன்னை உயர்ந்தவனாக எண்ணி கொண்டிருக்கின்றான். எந்த காரணமும் இல்லாமல் தன் பலத்தால் என் சகோதரியின் காதுகளையும்   மூக்கையும் அறுத்து என் குலத்திற்கு தீராத அவமானத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றான். என் தங்கை என்னிடம் அழுது புலம்புகின்றாள்.
 
★அரசன் என்கின்ற முறையிலும் தங்கைக்கு அண்ணன் என்ற முறையிலும் நான் ஏதாவது செய்தாக வேண்டும். நான் ஒன்றும் செய்யாமல் பார்த்துக் கொண்டிருந்தால்  நமது ராட்சதர்களின் அரசன் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் பயன் ஒன்றும் இல்லை.இதனால் நான் மிகப் பெரும் துயரத்தில் சிக்கி துயரப்பட்டுக் கொண்டு இருக்கின்றேன். இத்துயரத்தை உன்னால் தான் போக்க முடியும் அதன் பொருட்டு  உன்னைக் காணவந்து  தஞ்சம் அடைந்து இருக்கிறேன்.
 
★அந்த ராமனை தண்டித்து அவமானப்படுத்துவது எனது குலத்திற்கு செய்யும் கடமையாக நினைக்கின்றேன். நீயும் எனது சகோதரர்கள் விபிஷணன் கும்பகர்ணன் இருக்க எனக்கு என்ன பயம். ஆகவே துணிந்து முடிவெடுத்து விட்டேன். அதற்கு உனது உதவி வேண்டும். உன்னுடைய யுக்தியும் உருவம் மாறும் திறமையும் உலகத்தில் வேறு யாரிடமும் இல்லை. அதனால் நான் உன்னிடம் வந்து இருக்கின்றேன். நான் சொல்லும் தந்திரத்தை நீ ஆமோதித்து செய்ய வேண்டும். மறுக்க கூடாது என்றான் ராவணன்.
 
★உனக்கு இல்லாத உதவியா? நான் என்ன செய்ய வேண்டும் என கேட்டான் மாரீசன். அதற்கு ராவணன் உரைத்த பதிலால் அப்படியே உறைந்து போனான் மாரீசன். ஆயிரமாயிரம் இடி மற்றும் மின்னல் தாக்கியது போல உணர்ந்தான். தலை சுற்ற அப்படியே சரிந்து உட்கார்ந்தான். சில நிமிடங்களில் சுதாரித்துக் கொண்டு ' என்ன கூறினாய் ? மீண்டும் சொல்' என பயத்தோடு ராவணனிடம் கேட்டான். இடி தாக்கியது போல வந்த பதில் "சீதையை அடைய நான் மிகவும் விரும்புகிறேன். அவளைக் கவர்ந்து இலங்கைக்கு கொண்டு வர நீதான் தகுந்த உதவி செய்ய வேண்டும்".
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை................
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
114 / 19-07-2021
 
மீண்டும்
மாரீசன் அறிவுரை...
 
★மாமா! இராமனின் மனைவி சீதை மிகவும் அழகு உடையவள். அவளை நான் விரும்புகிறேன். நான் அவளை அடைய வேண்டும். அதற்கு நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும் என்றான். அதற்காக தான் நான் உங்களை நாடி வந்துள்ளேன் என்றான் ராவணன்.
 
★ராமருடைய பராக்ரமத்தை நன்றாக அறிந்திருந்த மாரீசன் ராவணனுடைய தீர்மானத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தான். சீதையை தூக்கிச் செல்வதில் ராவணன் குறியாக இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டான். விதி ராவணனை கயிறு கட்டி இழுக்கின்றது. ராவணன் தன் புத்தியை இழந்து விட்டான். இனி ராவணனின் அழிவை தடுக்க முடியாது என்று உணர்ந்து பேச ஆரம்பித்தான் மாரீசன். ராட்சச அரசரே!  நீங்கள் சொல்வதை கேட்டதும் எனக்கு எல்லையற்ற துக்கம் உண்டாகிவிட்டது. ஒருவரின் கருத்துக்கு ஆதரவான கருத்தை மற்றவர் சொல்லும் போது அதனை கேட்பவருக்கு இனிமையாக இருக்கும்.
 
★ஆனால் எதிரான கருத்தை சொல்லும் போது அதனை கேட்க முன் வர மாட்டார்கள். ஆனாலும் உங்கள் கருத்துக்கு எதிரான கருத்துக்களை சொல்லி நான் உங்களுக்கு நன்மையை செய்ய  விரும்புகின்றேன். உங்கள் கருத்துக்கு ஏற்ப இனிமையாக பேசி உங்களை திருப்தி செய்து உங்களை அபாயத்தில் தள்ளி விடுவதில் எனக்கு விருப்பம் இல்லை.நீங்கள்  எப்படிப்பட்ட செயலை செய்ய துணிந்துள்ளீர் என்று தெரியுமா? உங்களின் இந்த செய்கையால் அசுர குலமே அழிந்துவிடும். நான் ஒரு அசுரனாக இருப்பதாலும் உங்கள்  உறவினனாக இருப்பதாலும் உங்களுக்கொரு நல்ல அறிவுரை கூறுகிறேன் கேளுங்கள்  என்றான்.
 
★ராமரை பற்றி ஏற்கனவே நான் நிறைய சொல்லியிருக்கிறேன். உங்களிடம் சொல்லியவர்கள் ராமரை பற்றிய உண்மையை சரியாக சொல்லவில்லை. ராமர் பற்றி அறியாத அவர்களின் பேச்சை கேட்டு ஏமாறவேண்டாம். ராமர் உத்தம குணங்கள் அதிகம் நிறைந்த மாவீரன். அவருடைய கோபத்தை சம்பாதித்து நமது இலங்கையின் அழிவுக்கு நீரே காரணமாகி விடாதீர். நீங்கள்  ராமரை பற்றி சொன்னதில் உண்மை எதுவும் இல்லை. தசரதர் ராமரிடம் குற்றம் கண்டு தண்டனை கொடுப்பதற்காக அவரை தண்டகாரண்ய வனம் அனுப்பவில்லை. ராமர் தனது தந்தை தாயிடம் செய்துகொடுத்த வாக்கை நிறைவேற்றுவதற்காக காட்டிற்கு வனவாசம் செய்ய வந்திருக்கிறார். தனக்குரிமை இருக்கும்  ராஜ்யத்தையும் அதிலுள்ள சுகங்கள் எல்லாமும் துறந்து காட்டில் யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல் தவஸ்வியை போல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
 
★தேவர்கள் அனைவரிலும்  முதன்மையானவன் இந்திரன். அது போல் இந்த மானிட ர்கள் உலகத்தில் முதன்மையானவர் ராமர். அவரின் மனைவியை நீங்கள் அபகரிக்க வேண்டுமென நினைக்கிறீர்கள். சூரியனைப் போன்ற ராமரை ஏமாற்றி அந்த  சூரியனுடைய ஒளியை போல் இருக்கும் சீதையை நீங்கள் திருட முடியாது. தந்திரமாக ஏதேனும் செய்து சீதையை நீர் அபகரித்து சென்று அவளை தீண்டினால் எரிந்து போவீர். ஒன்று ராமனின் அம்பால் அழிந்து போவீர்கள் அல்லது சீதையின் கரத்தை தொட்ட அடுத்த கணம் நிச்சயம் அழிந்து போவீர்கள். உங்களின்  சர்வ நாசத்துக்கும் நீங்களே  வழி தேடிக்கொள்ளாதீர்கள்.
 
★உலகில் உள்ள பாவங்களுக்கு எல்லாம் பெரிய பாவம் மற்றவர் மனைவியை விரும்புவது தான். உங்களுக்கே மனைவிமார்கள் பலர் இருக்க நீங்கள்  மற்றவர் மனைவியை விரும்பலாமா? அடுத்தவர் மனைவியை நினைத்து அழிந்து போனவர் பலர் உண்டு. இந்திரன் அந்த அகலிகையை விரும்பியதால் தன் பெருமையெல்லாம் இழந்து சாபத்திற்கு ஆளானான். இது போல அழிந்தவர்கள் அதிகம். உமக்கு விருப்பமான பட்டத்து மனைவி  இருக்க நீங்கள்  ஏன் சீதையை விரும்புகிறீர்கள்? இதனால் உங்கள்  அரக்கர் குலமே அழிந்து போகும்.
 
★ராவணா! நீங்கள்  வகிக்கும் இந்தப் பதவியும், செல்வமும் உமக்கு சாதாரணமாககிடைத்தது அல்ல. இரவும் பகலும் கொடும் தவமிருந்து, உம்  உடலை வருந்தி நீர் பெற்றுள்ள இப்பதவியை பெண்ணாசை கொண்டு இழந்து விடாதீர் எனஅறிவுரை கூறினார்.
என் தாய் தாடகையும் ராமனால் தான் மாண்டு போனார். தம்பி சுபாகுவும் ராமனால் தான் மாண்டு போனார். ஆனால் நான் மட்டும் உயிர் தப்பி பிழைத்து விட்டேன். அதை நினைத்தால் இன்றும் கூட என் உடல் நடுங்குகிறது.
 
★விராதன் பற்றி தெரியாதவர் யாரும் இல்லை. அத்தகைய விராதனையை ராமன் சுலபமாக வீழ்த்தினான். அந்த ராமனை எதிர்ப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அது உம்  உயிருக்கே எமனாக வரும். நான் சொல்வதை கேள் என்று மேலும் அறிவுரை கூறினார் மாரீசன். ஆற்றல்மிக்க அந்த ராமனோடு நீர் வீனாக மோதிக் கொள்கிறீர்கள் என்று நான் நினைக்கும்போது அச்சம் மிகுகிறது. அற்ப சுகங்களுக்கு ஆசைப்பட்டு உம் ஆயுளை இழக்காதீர்கள்!” என்று அறிவுரை கூறினான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.......................

[6:05 pm, 12/08/2021] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
115 / 23-07-2021
 
ராவணன்
பஞ்சவடி வருகை...
 
★ராமர் சிறு வயதில் யுத்தம் செய்யும் போதே நான் பார்த்து பிரமித்து இருக்கின்றேன். பல வருடங்களுக்கு முன்பு நான் என் உடல் பலத்தின் மீது இருந்த அகங்காரத்தினால் முனிவர்கள் ரிஷிகள் செய்த வேள்விகளை தடுத்து அவர்களை மிகவும் கொடூரமாக கொன்று தின்று அழித்துக் கொண்டு இருந்தேன். ஒரு முறை விஸ்வாமித்ரர் செய்த வேள்வியை தடுத்து அழிக்க சென்றிருந்தேன். விஸ்வாமித்ரர் தன்னுடைய  வேள்வியை காக்க தசரதரிடம் அனுமதி பெற்று ராமரை அழைத்து வந்திருந்தார். நான் வேள்வியை அழிக்க அங்கு சென்ற போது ராமர் விட்ட அம்பு என்னை அங்கிருந்து விரட்டி பல காத தூரம் தள்ளி கொண்டு போய் கடற்கரையில் போட்டது.
 
★நீண்ட நேரம் சுயநினைவு இல்லாமல் இருந்தேன். மீண்டும் எழுந்து ராமரை கொல்லும் நோக்கத்தில் சென்றேன். அந்த ராமர் என்னை நோக்கி மூன்று அம்புகளை ஒரே நேரத்தில் விடுத்தார். அந்த மூன்று மகா பயங்கரமான அம்புகளிடமும் நான் பெரும் துன்பத்தை அனுபவித்தேன். எப்படியோ தப்பித்து நல்லொழுக்கம் கொண்டவனாக தவம் செய்து தவஸ்விகளை போல் நல்ல ஒரு தவவாழ்க்கை இங்கு வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன் என்று மாரீசன் ராவணனிடம் தொடர்ந்து பேசினான்.
 
★ராமரைப்பற்றி மாரீசன் நீண்ட நேரம் பேசி ராவணனுக்கு புத்தி கூறினான். மாரீசன் பேசியது எதுவும் ராவணனுக்கு சிறிதும் பிடிக்கவில்லை. ராவணன் பேச ஆரம்பித்தான். மாரீசா! நீ சொல்வது எதுவும் சரியில்லை. நீ சொல்வதை நான் கொஞ்சமும் ஒப்புக்கொள்ள மாட்டேன். ராட்சத அரசன் நான். இதனை நீ மனதில் வைத்துக் கொள். உன்னிடம் சீதையை  தூக்கிச் செல்லலாமா வேண்டாமா என்று உனது கருத்தை கேட்க நான் இங்கு வரவில்லை.நீண்ட யோசனைக்கு பிறகே சீதையை  தூக்கிச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து விட்டே இங்கு வந்திருக்கிறேன்.
 
★என் முடிவில் இனி மாற்றம் இல்லை. ஒரு பெண்ணின் சிறிய சூழ்ச்சியால் ஏமாற்றப்பட்டு தன் ராஜ்யத்தை இழந்து ஊரில் இருந்து துரத்தப்பட்டவன் அந்த ராமன். ராட்சத அரசனான நான் இந்த சாதாரண மனிதனுடன் சமமாக நின்று யுத்தம் செய்ய மாட்டேன். அந்த சீதையை தூக்கி சென்று ராமனை அவமானப் படுத்த வேண்டும் என்று முன்பே தீர்மானித்து விட்டேன். இதற்கு நான் கேட்கும் உதவியை நீதான் செய்ய வேண்டும் என்று உனக்கு இலங்கை அரசனாக உத்தரவு இடுகின்றேன். நீ என்னுடைய உத்தரவை செயல்படுத்த வேண்டும். இல்லை என்றால் உன்னை நான் இங்கு இப்போதே கொன்று விடுவேன் என்று ராவணன் சொல்லி முடித்தான்
 
★ராமனின் பகையை விரைவில் சம்பாதித்து  நீ யமனிடம் செல்ல ஆசைப்படுகின்றாய். இலங்கை எரிந்து அழிந்து போவதும், நீயும் உனது சகோதரர்கள் உட்பட உன் ராட்சத படைகள் அனைத்தும் அந்த ராமனால் அழிக்கப்படுவது இப்பொதே என் கண்களுக்கு தெரிகிறது. உன் உத்தரவை செயல் படுத்தாமல் உனது கையால் மரணிப்பதை விட ராமரின் கையால் நான் மரணம் அடைவது மிகசிறப்பு  என்று எண்ணுகின்றேன். ஆகவே அந்த தண்டகாரரண்யம் காட்டிற்கு செல்லலாம் வா! என்று கிளம்பினான் மாரீசன். பழைய மாரீசனை கண்டுவிட்டேன்! என்று ராவணன் மாரீசனை கட்டி அணைத்து செய்ய வேண்டிய காரியத்தை சொல்ல அவனிடம் ஆரம்பித்தான் ராவணன்.
 
★நான் சொல்வதை கேள். தங்க புள்ளிகளும் மற்றும் வெள்ளி புள்ளிகளும் கலந்த ஓர் பொன் மானாக உருவம் எடுத்து ராமர் வாழும் காட்டிற்கு சென்று அந்த சீதையின் முன்பாக சென்று நிற்க வேண்டும். பெண்களின் சுபாவப்படி அழகானவற்றை பார்த்ததும் அதனை அடைய வேண்டும் என்று ஒரு எண்ணம் கொள்வார்கள். ராமரிடமும் லட்சுமணனிடமும் அந்த மானை பிடித்து கொடுக்கச் சொல்லி வற்புறுத்துவாள். உன்னை பிடிக்க அவர்கள் வரும் போது மான் உருவத்தில் இருக்கும் நீ காட்டிற்குள் ஓட வேண்டும். உன்னை பின் தொடர்ந்து வருவார்கள். அப்போது சீதை தனியாக இருப்பாள். அவளை சுலபமாக நான் தூக்கிச் சென்று விடுவேன். சீதையை இழந்த ராமன் மனம் உடைந்து மிகுந்த பலவீனமடைவான். அப்போது ராமனை தாக்கி பழிவாங்கி திருப்தி அடைவேன் என்று மாரீசனிடம் ராவணன் சொல்லி முடித்தான்.
 
★இதைக்  கேட்ட  மாரீசனின் நெஞ்சம் துடிதுடித்தது. ராவணா! என் தாய் இறந்த அன்றே நான் இறந்திருக்க வேண்டியவன். நான் கடலில் விழுந்து தப்பித்து விட்டேன். இன்று என் உயிருக்கு எமனாக நீயே வந்துள்ளாய். அசுர குலம் அழிவது நிச்சயம். நீயும் அழிவது நிச்சயம் என்று மிக்க கோபமாக கூறினான். பிறகு இருவரும் புஷ்பவிமானத்தில் பஞ்சவடியை அடைந்தார்கள். இராவணன் இராமனின் பர்ணசாலையை காண்பித்தான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை..................
[6:05 pm, 12/08/2021] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
116 / 24-07-2021
 
மாயமான்...
 
★தண்டகாரண்ய காட்டில் ராமனுடைய குடிலுக்கு சற்று தூரத்தில்  இருவரும் வந்து சேர்ந்தார்கள். அருகில் நின்ற மாரீசனின் கையை பிடித்த ராவணன் அதோ பார் ராமனின் குடில் உள்ளது என தூரத்தில் தெரியும் ராமரின் இருப்பிடத்தை காட்டினான். என் திட்டப்படி அனைத்தையும் சிறப்பாக செய்து முடி என்று அனுப்பினான் ராவணன். பிறகு ராவணனின் ஆணைப்படி மாரீசன் அழகிய பொன்மான் வடிவம் எடுத்தான். அங்கிருந்து ராமர் தங்கியிருந்த பஞ்சவடி குடிலுக்கு அருகில் சென்றான்.
 
★மானின் உடலில் ஒவ்வொரு அங்கமும் விசித்திர அழகில் வைர வைடூரியங்கள் ரத்ன கற்கள் பதித்த தங்க மான் போல் ஒளி வீசியது. மான் குடிலை சுற்றி சுற்றி வந்தது. மற்ற மான்கள் இதன் அருகில் வந்து இந்த மான்  தங்கள்  இனம் இல்லை என்று சந்தேகத்துடன் விலகி சென்றன.சீதை குடிலுக்கு அருகே பூக்களை  பறித்துக் கொண்டிருந்தாள்.மான் சீதைக்கு முன்பாக ஓடி துள்ளிக் குதித்தது. சீதை மானின் அழகை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருந்தாள்.  மாய மானை பார்த்த சீதை அந்த மானின் அழகில் மயங்கினாள்.
 
★கண்ணிமைக்காமல் அந்த மானை பார்த்து கொண்டு இருந்தாள். இந்த பூக்களுக்கு நடுவில் ஓடிய மான் காட்டிற்கே புது அழகு தந்தது.  ராமரும் லட்சுமணனும் இந்த அழகை காண வேண்டும் என்று எண்ணிய சீதை ஓடி வாருங்கள் ஓடி வாருங்கள் இந்த அழகிய மானை பாருங்கள் என்று கத்த ஆரம்பித்தாள்.  ராமரும் லட்சுமணனும் சீதையின் குரலைக் கேட்டு விரைந்து வந்து பொன் மானைப் பார்த்து வியந்தார்கள். அந்த மானை பார்த்த இலட்சுமணருக்கு இது மாரீசனாக இருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்தது.
 
★மாரீசன் மாய வேலைகள் செய்து பலரை ஏமாற்றுபவன் என்பது ராம லட்சுமணருக்கு தெரியும். லட்சுமணன் மானின் நடவடிக்கைகளை பார்த்து சந்தேகமடைந்தான். மான் வடிவில் வந்திருப்பது ராட்சதன் மாரீசன் என்பதை லட்சுமணன் புரிந்து கொண்டான். ராமரை பார்த்து இந்த அழகிய கற்கள் பதிக்கப்பட்ட பொன் மான் வடிவில் இருப்பது மாரீசன் என்ற ராட்சதன் ஆவான். இயற்கையில் இப்படி ஒரு மிருகம் கிடையாது. நம்மை ஏமாற்ற ஏதோ தந்திரம் செய்து நம்மை தாக்க இங்கே வந்திருக்கிறான் என்று நான் எண்ணுகிறேன் என்றான்.
 
★லட்சுமணன் சொன்னதை கேட்டதும் மானின் அழகில் மயங்கிய சீதை ராமரிடம் இந்த மான் தங்க நிறத்தில் நவரத்ன கற்களும் ஜொலிக்க அழகாக இருக்கிறது. இதனுடன் நான் விளையாட ஆசைப்படுகிறேன். நாம் இக்காட்டை விட்டு அரண்மனைக்கு செல்லும் காலம் நெருங்கி விட்டது. இங்கிருந்து செல்லும் போது இந்த மானையும் தூக்கிச்சென்று விடலாம். நமது அரண்மனை தோட்டத்தில் இதனுடன் மிகுந்த  ஆனந்தமாக விளையாடி பொழுதை கழிக்க ஆசைப்படுகின்றேன். இந்த மானைப் பார்த்தால் பரதன் மிகவும் மகிழ்ச்சி அடைவான். இந்த மானை பரதனுக்கு பரிசாக கொடுக்கலாம்.
 
★இந்த மானை பிடித்து எனக்கு தாருங்கள். நமது குடிலில் இந்த மானை கட்டி வளர்க்கலாம் என்று விடாமல் ராமரிடம் அந்த மானை பிடித்து கொடுக்க சொல்லி பேசிக் கொண்டே இருந்தாள்.
சீதை அந்த பொன்மான் தனக்கு வேண்டும் என  பிடிவாதமாக கேட்டாள். சீதையின் ஆசையை நிறைவேற்ற ராமர் மானை பிடிக்க கிளம்பினார். அப்போது லட்சுமணர், அண்ணா! வனம் வந்த நமக்கு காட்டு மான் எதற்கு? அது மட்டுமின்றி காட்டு மான்கள் பொன் வடிவத்தில் இருக்குமா? இந்த மான் ஏதாவது ஒரு மாயமாக கூட இருக்கலாம். நாம் ஒரு சமயம் தாடகையை வதம் செய்தபோது மாரீசன் என்னும் அரக்கன் தப்பி பிழைத்து விட்டான். ஒரு வேளை இந்த மாய வேலை அவனுடையதாக கூட இருக்கலாம் என்றார்.
 
 ★ராமர் லட்சுமணனிடம் பேச ஆரம்பித்தார். சீதையின் பேச்சை பார் லட்சுமணா! . அவளின் பேச்சில் இருந்து அந்த மான் அவளுக்கு மிகவும் பிடித்து இருக்கிறது என்று நமக்கு நன்கு தெரிகிறது. அவளுடைய இந்த ஆசையை நிறைவேற்றுவது எனது கடமை.  தம்பி! நமக்கு தெரியாமல் இந்த உலகத்தில் விசித்திரமான எத்தனையோ விஷயங்கள் உண்டு. அதில் ஒன்று இந்த மானாக கூட இருக்கலாம். அது மட்டுமின்றி எனக்காக நாட்டையும், வீட்டையும் விட்டு என்னை நம்பி வந்த உன் அண்ணி சீதையின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.
 
★அந்த பொன்மான் ராட்சதனாக இருந்தால் இக்காட்டில் இருக்கும் முனிவர்களுக்கு நாம் கொடுத்த வாக்கின்படி அதனை அழிப்பது நமது கடமை. வந்திருப்பது ராட்சசனா என்று நமக்கு தெரியாது. ஆகையால் நீ வில் அம்புடன் கவனத்துடன் சீதைக்கு பாதுகாப்பாக இங்கேயே இரு. எந்த ஒரு சமயத்திலும்  என்ன வேண்டுமானாலும் நிகழலாம். எச்சரிக்கையுடன் இரு. நான் அந்த மானை உயிருடனோ அல்லது ராட்சசனாக இருக்கும் பட்சத்தில் கொன்றோ கொண்டு வருகிறேன் என்று வில் அம்புடன் கிளம்பினார். லட்சுமணன் யுத்தத்திற்கு தயாராக இருப்பது போல் வில் அம்புடன் சீதைக்கு காவலாக இருந்தான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை...................
[6:05 pm, 12/08/2021] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
117 / 25-07-2021
 
மாரீச மான் வதம்...
 
★ராமர் மானை பின் தொடர்ந்து ஓடினார். ராமர் தன்னை பின் தொடர்ந்து வருகின்றாரா என்று மான் திரும்பி திரும்பி பார்த்து காட்டிற்குள் ஓடியது. மாய மான் ராவணனுக்கு போதிய அவகாசம் தர எண்ணி கைக்கு சிக்குவது போல காட்டிக்கொண்டு மாயமாக மறைந்தது. மாய மான் ராமனை வெகுதூரம் இழுத்து சென்றது. ஒரு சமயம் மெதுவாக போகும். பிறகு ஒரே பாய்ச்சலாக அந்த காட்டிற்குள் வேகமாக ஓடி மறைந்து விடும். திடீரென்று தோன்றி தன் அழகை மீண்டும் பார்க்கும்படி ஓடும். பிடிக்கும் அளவிற்கு பக்கத்தில் இருக்கும். பக்கத்தில் போனால் தூரமாக ஓடிவிடும். ஆகவே மானை ராமரால் பிடிக்க முடியவில்லை.
 
★ராமரை காட்டில் இருந்து நீண்ட தூரத்திற்கு இழுந்து வந்தது மான். இப்படியே தன் மாய வேலையை மாறி மாறி செய்தது. நெடுந்தூரம் சென்ற பிறகு இவன் அரக்கன் மாரீசன், மான் அல்ல என்பதை உணர்ந்தார். இவனை இனியும் உயிருடன் விடக்கூடாது என எண்ணிய
ராமர் தனது வில்லை எடுத்தார். இதனை கண்ட மான் உருவில் இருந்த மாரீசனுக்கு தான் ராமரின் கையால் இறக்கப் போகின்றோம் என்று உறுதியாக தெரிந்துவிட்டது. ராமரின் கண்ணில் படாமல் மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டது.
 
★ராமர் தனது வில்லில் அம்பை பூட்டி மான் இருக்கும் திசையை நோக்கி செலுத்தினார். அம்பு மானை குத்தியது. பொன்மான் உருவத்தில் இருந்த மாரீசன் தனது சுய உருவத்தை அடைந்து வீழ்ந்தான். ராவணன் அவனிடம் சொன்னபடி சீதா! லட்சுமணா! காப்பாற்று என்று ராமரின் குரலில் கத்தியபடி கீழே விழுந்து இறந்தான் மாரீசன். ராமருக்கு அவன் சூழ்ச்சி விளங்கியது. “கூப்பிட்ட குரலில் ஏதோ சூழ்ச்சி இருக்க வேண்டும்” என்பதை உணர்ந்தான்;
 
★ராமர் விட்ட அம்பு மாரீசனை கொன்று விட்டது. மாரீசன் தன் குரலைப்போலவே எழுப்பிய சத்தத்தில் சீதை மிகவும் பயந்து விடுவாளே என்று எண்ணிய ராமர்,  லட்சுமணன் அருகில் இருக்கின்றானே என்று தன்னை சமாதானம் செய்து கொண்டு அங்கிருந்து தன் குடிலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.எனினும் சூழ்ச்சி உருவெடுப்பதற்குமுன் திரும்புவதில் வேகம் காட்டினார்.
ராமர், தன் தம்பி லட்சுமணர் சொன்னது உண்மைதான். நான் தான் தவறாக எண்ணி விட்டேன். இவனின் கூக்குரலை கேட்டு சீதை தன்னை நினைத்து மிகவும் வருந்துவாளே என எண்ணினார்.
 
★சீதையை பாதுகாக்க தம்பி லட்சுமணன் அருகில் உள்ளான் என்று தனக்குத்தானே கூறி சமாதானப்படுத்திக் கொண்டார்.
சீதா! இலட்சுமணா! என மாரீசன் கதறியதைக் கேட்டு ராமர் தான் கதறுகிறார் என சீதை மனதில் நினைத்து விட்டாள். உடனே சீதை லட்சுமணரிடம், லட்சுமணா! விரைந்து செல். உன் அண்ணன் ஆபத்தில் உள்ளார். அவரின் குரல் உனக்கு நன்றாக கேட்டதா? இல்லையா? காலத்தை கருதி தாமதிக்காமல் விரைந்து சென்று அண்ணனை உடனே காப்பாற்று என்றாள். சீதை தான் ஒரு பொன் மானுக்காக ஆசைப்பட்டு என் கணவனை இழக்க போகிறேனே எனப் புலம்பினாள்.
 
★உனது அண்ணனின் அபயக் குரல் கேட்கிறது. உனக்கு அது கேட்கவில்லையா? நிற்காதே போ! போ! சீக்கிரம் ஓடிச் சென்று அண்ணனுக்கு உதவி செய் என்று மீண்டும் மீண்டும் கதற ஆரம்பித்தாள். ராமர் சீதைக்கு துணையாக இங்கேயே இரு, எச்சரிக்கையுடன் சீதையை பார்த்துக்கொள் என்ற தன் அண்ணனின் ஆணையை ஏற்று லட்சுமணன் அசையாமல் நின்றான். சீதை மீண்டும் லட்சுமணனை பார்த்து கத்த ஆரம்பித்தாள். ராட்சதனிடம் உன் அண்ணன் அகப்பட்டு அபயக் குரலில் கதறுகிறார். ஒரே பாய்ச்சலில் சென்று அவரை நீ காப்பாற்ற வேண்டாமா? மரம் போல் அசையாமல் இங்கேயே நின்கின்றாயே ஓடு! ஓடு! என்று விரட்டினாள்.
 
★அப்போதும் அசையாமல் நின்றான் லட்சுமணன். சீதைக்கு லட்சுமணனின் மேல் கோபம் அதிகரித்தது. ராமரின் மேல் உள்ள அன்பும் ஆபத்தில் இருக்கும் ராமருக்கு உதவி செய்ய செல்லாமல் அசையாமல் நின்ற லட்சுமணனின் மேல் உள்ள கோபமும் சேர்ந்து என்ன பேசுகின்றோம் என்று சிறிதும் தெரியாமல் தன் சுய புத்தியை இழந்த சீதை கோபத்தில் கத்த ஆரம்பித்தாள்.அரக்கர்களின் கூட்டத்தில் உன் அண்ணன் மாட்டிக் கொண்டு கதறுகிறார். நீ ஏன் இன்னும் இங்கு நின்று கொண்டு இருக்கிறாய்? சீக்கிரம் சென்று உன் அண்ணனை காப்பாற்று என்று கதறினாள்.
 
★நீ உடனே அங்கு போகவில்லை என்றால் இப்பொழுதே என் உயிரை மாய்த்து கொள்வேன் என்றாள். லட்சுமணர் சீதையிடம்! அன்னையே! தாங்கள் கவலை கொள்ள வேண்டாம். அந்த குரல் அண்ணனின் குரல் அல்ல. அந்த மாய அரக்கன் செய்த செயல். இவ்வுலகில் அண்ணனை மிஞ்சிய வீரன் எவரும் இல்லை. தாங்கள் அந்த குரல் என்னுடைய அண்ணனுடையது என எண்ணி கவலை கொள்ள வேண்டாம். அண்ணன் தங்களை என்னிடம் ஒப்படைத்து விட்டுத்தான் அங்கு  சென்றுள்ளார். ஆதலால் நான் எந்த சூழ்நிலையிலும் தங்களை தனியாக இங்கு விட்டு செல்ல மாட்டேன். இது அண்ணனின் ஆணையும் கூட என்றார்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை........................
[6:05 pm, 12/08/2021] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
118 / 26-07-2021
 
லட்சுமணன் கோடு...
 
★லட்சுமணா! நீ ஏன் வஞ்சகம் செய்கிறாய் என்று எனக்கு நன்றாக தெரியும். நீயோ மாற்றாந்தாய் மகன். கைகேயி நாட்டை பறித்துக் கொண்டாள். பரதன் அழுது புரண்டு காலில் முள் குத்தட்டும் என்று நினைத்து ராமரின் பாதுகைகளை பெற்று கொண்டான். நீ உன்னுடைய  உடன்பிறந்த அண்ணனுக்கு தீங்கு செய்ய தான் வந்துள்ளாய் என்பதை நன்றாக  உணர்ந்து கொண்டேன். நீ இப்போது ராமருக்கு எதிரியாகி விட்டாய். இவ்வளவு நாளும் நல்லவன் போல் வேடமணிந்து எங்களுடன் இருந்திருக்கிறாய். ராமரின் மரணத்திற்காக இவ்வளவு நாள் காத்திருந்தாயா? என்றெல்லாம்
தன்னுடைய மிகக் கொடிய வார்த்தைகளினால் அவனை சாடினாள்.
 
★லட்சுமணன் மிக மெதுவாக சீதையிடம் பேச ஆரம்பித்தான். நான் சிறு வயதில் இருந்து என் அண்ணனுடன் பல யுத்தங்களை பார்த்திருக்கிறேன். என்னுடைய அண்ணனின் பலம் எனக்கு தெரியும். அவரை யாராலும் ஒன்றும் செய்து விட முடியாது. காட்டில் நம்மை எதிர்த்த பல ஆயிரக்கணக்கான ராட்சதரை அண்ணன் தனி ஒருவராக நின்று யுத்தம் செய்து அவர்கள் அனைவரையும் அழித்தார். அவரின் அந்த பராக்ரமத்தை தாங்களும்தான் பார்த்தீர்கள்.
 
★தேவர்கள்,  கந்தர்வர்கள், அசுரர்கள், ராட்சசர்கள், அரசர்கள் மானுடர்கள், மிருகங்கள் என அண்ணனை எவர் எதிர்த்தாலும் அவர்களை  தனி ஒருவராக நின்று அனைவரையும் அழித்து விடுவார். அந்த வல்லமை அவருக்கு எப்போதும் உண்டு. இது நிச்சயமான உண்மை . பயப்படாதீர்கள். உங்களின் மனைதை சாந்தப்படுத்திக் கொள்ளுங்கள்.அந்த மாயமான் உருவில் வந்த ராட்சதனை அழித்து விட்டு தாங்கள் விரும்பிய மான் உடலுடன் அண்ணன் சிறிது நேரத்தில் வந்து விடுவார். அதனை நீங்கள் பார்ப்பீர்கள் என்று உங்களுக்கு நான் உறுதி அளிக்கின்றேன். உங்கள் புத்தியை நிலையாக வைத்துக் கொள்ளுங்கள் என்று சீதையிடம் லட்சுமணன் மிகத் தெளிவாக கூறினான்.
 
★நீ என்ன கூறினாலும் அதை நான் கேட்க  மாட்டேன்.  அவர் இறந்தால் அதன் பிறகு என்னை அடைந்து விடலாம் என்ற ஒரு எண்ணத்தில் இருந்தாயா? துஷ்டனே! ராமர் அபயக் குரலில் கதறி அழைத்தும் போகாமல் இங்கேயே நிற்கின்றாயே ?அண்ணனிடம் நீ காட்டிய அன்பெல்லாம் வெறும் நடிப்பா ?சூழ்ச்சிக்காரனே! நயவஞ்சகனே! என்று திட்டிக்கொண்டே கதறி அழுதாள். லட்சுமணன் தன் கண்ணில் நீர்  வழியத் தனது  காதுகளை மூடிக்கொண்டான்.
சீதை லட்சுமணனிடம் இன்னும் மிகக் கடுமையாக  தொடர்ந்து பேசினாள்.
 
★அண்ணனின் ஆணை என்று சமாதானம் சொல்லி அண்ணன் கதறினாலும் போக மறுக்கிறாய். அவரும் நானும் உன்னை நம்பி மோசம் போனோம். ராமருக்கு பகைவனாய் வந்த துஷ்டனே! இது பரதனின் சூழ்ச்சியா? பரதன் சொல்லிக் கொடுத்து, நீ இது போல் செய்கிறாயா? ராமரின் உடன் பிறந்தவர்கள் அனைவரும் சேர்ந்து அவரை அழித்து ராஜ்யத்தை அடைய நினைக்கின்றீர்களா? மேலும் ராஜ்யத்தையும் என்னையும் நீ அடைய நினைத்து இது போல் செய்கிறாய் என்பதை தெரிந்து கொண்டேன். உன் எண்ணம் நிறைவேறாது.
 
★உன் அண்ணன் இல்லை என்று தெரிந்த அடுத்த கனம் நானும் இறந்து விடுவேன். இப்பொது நீ சென்று அவருக்கு உதவி செய்து அவரை காப்பாற்றா விட்டால் அதோ பார் உலர்ந்த கட்டைகள் இருக்கின்றன. இப்போது நான் இங்கேயே அதில் தீ மூட்டி குதித்து என் உயிரை விடுவேன். மலையின் உச்சிக்கு சென்று குதித்து விடுவேன். அல்லது விஷத்தை அருந்தி விடுவேன். இல்லையென்றால் இதோ பார் உன் முன்பே இப்போதே இந்த ஆற்றில் குதித்து இன்னுயிர் துறப்பேன் என்று சிங்கம் போல் கர்ஜித்துக்கொண்டே சீதை ஆற்றை நோக்கி செல்ல ஆரம்பித்தாள்.
 
★லட்சுமணன் இதை கேட்டு மனம் நொந்து போனான். சீதையை தடுத்து நிறுத்தினான். தாங்கள் உயிரை மாய்த்து கொள்ள வேண்டாம். தங்களின் இந்த கொடிய சொற்களினால் என்னை துளைத்து விட்டீர்கள்.
நீங்கள் என்னைக் குறித்துச் சொன்ன இந்த வார்த்தைகள் என் காதுகளில் இரும்பை காய்ச்சி ஊற்றுவது போல் இருக்கிறது. உங்களின் சொல்லையும் செயலையும் பார்த்து நான் பயப்படுகிறேன். உங்களுடைய வார்த்தைகளால் உங்களுக்கு வரும் கேட்டிற்கு நீங்களே வழி வகுத்து கொடுத்து விட்டீர்கள்.
 
★தேவர்களின் சாட்சியாக சொல்கிறேன். நான் உங்களை கண்டு இரக்கப்படுகின்றேன். இன்று உங்களிடம் குணக் குறைவை காண்கிறேன். எனக்கு கெட்ட  எண்ணம் இருப்பது போல் பேசிவிட்டீர்கள். இது என்னுடைய மிகக் போறாத  காலம் என்று நான் எண்ணுகிறேன். எந்த ஒரு விதியாக இருந்தாலும் நிச்சயம் என்னுடைய இந்த வில்லால் வென்று விடலாம் என்று கர்வம் கொண்டிருந்தேன். இன்று அந்த கர்வம் அடங்கி விதி என்னை வென்று விட்டது. அன்னையே! நீங்கள் சொல்வது போல் அண்ணனின் ஆணையை மீறி உங்களை தனியாக விட்டு செல்கிறேன். தங்களை விட்டு செல்வதற்கு பயமாக உள்ளது
நீங்கள் இங்கிருந்து காணாமல் போகப் போகின்றீர்கள். அதற்கு உண்டான கெட்ட அபசகுனங்கள் இங்கு அதிகம் காண்கிறேன்.
 
★அண்ணனுடன் சேர்ந்து வந்து உங்களை மீண்டும் சந்திப்பேனா என்று எனக்கு தெரியவில்லை. சந்தேகமாக இருக்கிறது. ஆயினும் இதோ தங்களுடைய கடுமையான வார்த்தைக்காக போகிறேன் என்று கூறி குடிலை சுற்றி ஒரு கோடு வரைந்தான் லட்சுமணன்.  தயவு செய்து குடிலை சுற்றி இருக்கும் இந்த கோட்டை தாண்டி மட்டும் வெளியே வந்து விடாதீர்கள். உங்களை இங்கிருக்கும் வன தேவதைகள் காப்பார்களாக! என்று சொல்லிவிட்டு திரும்பி திரும்பி பார்த்தபடி ராமர் சென்ற காட்டிற்குள் ஓடினான்
 
★லட்சுமணன். சீதை சொன்ன கோரமான வார்த்தைகள் அண்ணனுக்கு தெரிந்தால் மிகவும் வருத்தப்படுவார். கோபம் வராத அண்ணனுக்கு கோபம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதே என்று கோபமும் துயரமும் சேர்ந்து லட்சுமணனை மிகவும் வாட்டியது.கண்களில்
நீர் வழிய அந்தக் காட்டிற்குள்
தன் அண்ணனைத் தேடி ஓடிக் கொண்டு இருந்தான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை...........................
[6:05 pm, 12/08/2021] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
119 / 27-07-2021
 
சீதையை கவர்ந்து
சென்ற அரக்க ராவணன்...
 
★லட்சுமணன் செல்லும் அந்த  நேரத்திற்காக காத்திருந்த ராவணன் தனது உருவத்தை மாற்றிக்கொண்டு காவி உடை அணிந்து தண்டமும், கையில் கமண்டலமும் தரித்து வயதான ஒரு தபஸ்வி போல் சீதை இருக்கும் குடிலை நோக்கி சென்றான். குடிசை முன் நின்று "உள்ளே யார் இருக்கிறீர்கள்? நான் ஒரு தவஸ்வி. எனக்கு உணவிட முடியுமா? "என்று உரத்த குரலில் கூவினான். குடிலின் உள்ளிருந்து அழுத முகத்துடன் வெளியே வந்த சீதையை பார்த்து அசந்து போன ராவணன் யாரம்மா நீ? இந்த ராட்சதர்கள் வாழும் காட்டில் தனியாக இருக்கிறாய்?  எதற்காக அழுது கொண்டிருக்கிறாய்? என்று சீதையிடம் கேட்டான்.
 
★ராமர், லட்சுமணனுடன் வந்து விடுவார் என்று காத்திருந்த சீதை தனது குடிலில் முன் வந்திருக்கும் தபஸ்வி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலாமா வேண்டாமா என்று மிகுந்த ஒரு குழப்பத்துடன் யோசித்தாள். பதில் ஏதும் சொல்லவில்லை என்றால் கோபத்தில் அவர் சாபம் ஏதும் கொடுத்து  விடுவாரோ என்ற பயத்தில் அழுத முகத்தை துடைத்துக்கொண்டு முறைப்படி வரவேற்றாள்.
 
★முனிவன் மீண்டும் சீதையிடம், நீ யார்? மிருகங்கள் வசிக்கும் இந்த வனத்தில் நீ தனியாக என்ன செய்து கொண்டு இருக்கிறாய்? என வினவினான். சீதை, முனிவரே! நான் தசரத புதல்வரின் மனைவி. ஜனக மன்னரின் புதல்வி, சீதை.
நான் தவஸ்விகளை தெய்வமாக எண்ணுகிறேன். தாங்கள் யார்? தாங்கள் எங்கு இருந்து வந்துள்ளீர்கள்? எனக் கேட்டாள்.
ராவணன் கேட்ட கேள்விகளுக்கு நடந்தவற்றை பதிலாக சொல்லி கொண்டே ராமர் வந்து விட்டாரா என்று அவர்கள் சென்ற காட்டு வழியையே பார்த்துக் கொண்டே இருந்தாள்.
 
★வந்திருந்த முனிவனோ தனது காரியத்திலேயே கண்ணாக இருந்தான். தாயே! எனக்கு மிகவும் பசியாக உள்ளது. உண்ண ஏதேனும் அளிக்க இயலுமா? மிகவும் பணிவாகக் கேட்டான். என்னை உன் குடிலுக்குள் அழைக்க மாட்டாயா? எனவும் சீதையிடம் கேட்டான். வீட்டில் யாரும் இல்லாதபோது அழைப்பது சாத்தியமில்லாத ஒன்று என பதிலுரைத்த சீதை சற்றுப் பொருங்கள் முனிவரே! தாங்கள் உண்ண ஏதேனும் கனிகள் எடுத்து வருகிறேன் என்று கூறி குடிலுக்குள் திரும்பி சென்றாள். சற்று ஏமாற்றம் அடைந்த ராவண முனிவன் சீதையை பின்தொடர்ந்து அந்த குடிலுக்குள் செல்ல முயற்சி செய்தான். ஆனால் லட்சுமணன் வரைந்த கோட்டை அவனால் தாண்ட இயலவில்லை. அக்னி வளையம் ஒன்று உருவாகி அவனை குடிலுக்கு  உள்ளே செல்ல விடாமல் தடுத்தது.
 
★சுதாரித்துக் கொண்டு அந்தக் கோட்டிற்கு வெளியே நின்று கொண்டான்.குடிலுக்குள் சென்ற சீதை ஒரு சிறிய பூகூடை நிறைய கனிகளை வைத்துக் கொண்டு வந்து லட்சுமணன் வரைந்த கோட்டிற்கு உள்ளே இருந்தபடி ராவண முனிவரிடம் அளித்தாள். அதை வாங்கிக் கொள்ள மறுத்த முனிவர் சீதையைப் பார்த்து பெண்ணே! எப்போதும் தானம் கொடுப்பவருக்கும்  அதை பெறுபவருக்கும் இடையில் தடங்கல் ஏதும் இருக்கக் கூடாது என நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆகவே இந்த கோட்டை தாண்டி எனதருகில் வந்து பிட்சை இடு. அதுவே முறை என மெதுவாக கூறினான்.
 
★அந்தக் கோட்டைப் பற்றி வந்திருக்கும் முனிவருக்கு எப்படித் தெரியும் என சிறிது கூட சீதை யோசிக்கவில்லை. தாண்டிச் செல்லலாமா என சிறிது தயங்கிய சீதை பின் வயதான முனிவர் தானே. இவரால் எந்த  ஆபத்தும் தனக்கு நேர்ந்திடாது என முடிவு செய்து லட்சுமணன் வரைந்த கோட்டைத் தாண்டி மறுபக்கம் சென்றாள்.
அடுத்த நொடியே தன் சுய ரூபத்திற்கு மாறிய ராவணன் கணநேரமும் யோசிக்காமல் சீதை நிற்கும் நிலத்தோடு பெயர்த்தெடுத்து தன் புஷ்பக விமானத்தில் வைத்து ஆகாய மார்கமாக பறக்க ஆரம்பித்தான்.
 
★திடீரென தனக்கேற்பட்ட அந்த அதிர்சியிலிருந்து விடுபட்ட சீதை தன்னை ராவணன் கடத்திச் செல்வதை உணர்ந்து உடனே
மேகத்தில் இருந்து நிலத்தில் விழும் மின்னலைப்போல  மயங்கி விழுந்தாள். மயக்கம் தெளிந்து  ‘ஒ’ என்று கதறினாள்.
மிகப் பலமாக கூக்குரலிட ஆரம்பித்தாள். "பிராணநாதா! உடனே வந்து இந்த கொடிய  அரக்கனிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள். லட்சுமனா! என்னை மன்னித்து விடு. நீ அவ்வளவு எடுத்து கூறியும் அதை கேட்காமல் உன்னை துரத்தினேன். நீ எந்த கடினமான நிலையிலும் தாண்ட வேண்டாம் எனக் கூறி வரைந்த கோட்டை தாண்டி வந்து இப்போது அவதிப் படுகிறேன்.லட்சுமனா! என்னைக் காப்பாற்று! தேவர்களே ! நீங்கள் யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்கள்"என கதறி அழுது புலம்பினாள்.
 
★ராவணனிடமிருந்து தப்பிச் செல்ல வழியறியாமல் கலங்கி தவித்தாள். நீ என்னிடமிருந்து தப்ப முடியாது. யாரும் உன் உதவிக்கு வரமாட்டார்கள். ஏனென்றால் உன்னைத் தூக்கிச் செல்வது ராவணன் ஆகிய  நான். என்னை எதிர்க்கும் ஆற்றல் எவனுக்கும் இல்லை. அமைதியாக இரு. இன்னும் சற்று நேரத்தில் இலங்கை சென்று விடுவோம். அங்கு உன்னை திருமணம் செய்து கொண்டு உன் அடிமையாக நான் இருப்பேன் எனக் கூறினான்.
 
★ “நான் ராமன் மனைவி. நீ நாயினும் கேடானவன். ராமனது கொடிய அம்பு பாய்வதற்கு முன் என்னை விட்டு விட்டு தப்பி ஒடிவிடு!” என்று கூறினாள். “அந்த அம்பு என்னை ஒன்றும் செய்யாது. அது மலராக எனக்கு கட்டுப்படும், நீ என் விருப்பத்தை நிறைவேற்றி எனக்கு உயிர்ப் பிச்சை கொடு” என்று இரந்து அவள் கால்களில் விழுந்து வனங்கினான். அவள் மிகவும் பயத்துடன் பலமாக ராமனையும் லட்சுமணனையும் ‘இறைவா! இளையோனே!’ என்று கூவி அழைத்தாள். ராவணனுக்கு பிரம்மனால் ஏற்பட்டிருந்த ஒரு சாபத்தால் அவளைத் தொட அஞ்சினான். ஆகவேதான் அவளை தொடாமல் தரையோடு பெயர்த்து எடுத்து விமானத்தில் வைத்து விண்ணில் பறந்தான்.
 
★“நீ ஒரு கோழை. அதனால்தான் இந்த கொடிய செயலை மிகுந்த வஞ்சகமாக மேற்கொண்டாய்” என்று கூறினாள். “மனிதரிடம் போர் செய்தால் அது என்னுடைய  வீரத்துக்கு மிகுந்த இழுக்கு. வஞ்சனைதான் வெற்றி தரும்” என்றான். மேலும் “தேவர்கள்கூட எனக்கு ஏவல் செய்கிறார்கள். புழுக்களைப் போல வாழும் மானிடர் அரக்கனாகிய என்னை காட்டிலும் வலியவர் என்று நினைத்துப் பேசுகிறாய். நான் உன்னைப் பிசைந்து தின்று விடுவேன். அதன்பின் நீ இல்லாமல் நான் வாழ முடியாது என்பதால்தான் தயங்குகிறேன்” என்றான். “நீ கவலைப்படாதே; என் செல்வச் சிறப்பில் நீ மகிழ்ச்சியோடு இருக்கலாம்” என்று தொடர்ந்தான்.
 
★“சித்திரப்பாவையை நிகர்த்த சீதை அவன் கூறுவதை கேட்டுக் கதி கலங்கி மிக பலமாக அழுது கதறினாள். சீதையின் குரல் கேட்டுக் கழுகின வேந்தன் ஜடாயு  வந்து இடை மறித்தான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை............................
[6:05 pm, 12/08/2021] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
120 / 28-07-2021
 
ஜடாயு மறித்தல்...
 
★சீதையை வலுகட்டாயமாக தன் புஷ்பக விமானத்தில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து பறந்து சென்றான்.  சீதை அழுது கதற ஆரம்பித்தாள். ராமா எங்கு சென்றீர்கள்? என்னை காப்பாற்ற வாருங்கள். என் பெருமானே! எங்கே உள்ளீர்கள்? லட்சுமணா! உன்னை தவறாக எண்ணி விட்டேன். பிடிவாதமாய் உன்னை துரத்தினேனே! என்று கதறி அழுதாள்.  லட்சுமணா! அண்ணனின் தலை சிறந்த பக்தனே உன்னை தகாத வார்த்தைகளினால் திட்டி உன் பேச்சை கேட்காமல் உன்னை துரத்தினேனே. மரங்களே !செடிகளே! என்னை இந்த ராட்சதன் தூக்கிச் செல்வதை ராமர் வந்ததும் சொல்லுங்கள் என்று சத்தமாக கதறிக் கொண்டே  இருந்தாள்.
 
★ராவணன்  தேரை வேகமாக செலுத்தினான். அரக்கனே! என் கணவருக்கு பயந்து மாய மானை அனுப்பி என்னை கவர்ந்து வந்த  நீ, என் கணவரை பார்த்து மிகவும் பயப்படுகிறாய் என்பது நன்றாக தெரிகிறது.  எனது கணவர் ஶ்ரீராமரால் நீ கொல்லப்படுவது உறுதி. உன் கண்களில் மரண பயம் தெரிகிறது. என்னை விட்டு விடு. வீனாக உனது உயிரைத் துறக்காதே என்றவள் மீண்டும் துக்கத்தால் கதறினாள்.கடவுளை நினைத்து தொழுதாள்.
 
★ஒரு மரத்தின் மேல் அரை தூக்கமாக அமர்ந்திருந்த ஜடாயு, வானத்தில் வேகமாக சென்று கொண்டிருந்த ரதத்தை பார்த்தான். சீதையின் குரலைக் கேட்ட கழுகு அரசனான ஜடாயு சீதையை யாரோ தூக்கிச் செல்கின்றார்கள் என்று உணர்ந்து கொண்டான்.சீதையும் மரத்தின் மேல் அமர்ந்திருந்த ஜடாயுவை கண்டாள். சீதை ஜடாயுவிடம், இந்தக் கொடிய அரக்கன் என்னை கவர்ந்து கொண்டு செல்கிறான். தாங்கள் இவ்வரக்கனை எதிர்த்தால் தங்களையும் இவன் கொன்று விடுவான்.  தாங்கள் இந்த கொடிய செய்தியை ராமனிடம் சொல்லுங்கள் என்று அழுதாள்.
 
★வேகமாக பறந்து சென்று அந்த புஷ்பக விமானத்தின்  முன்பாக நின்று ராவணனை தடுத்தான் ஜடாயு. இதனை கண்ட சீதை ஜடாயுவை பார்த்து இவன்தான்  ராட்சசதர்களுக்கு தலைவன் இலங்கை அரசன் ராவணன். இவன் ஆயுதங்கள் பல வைத்து இருக்கின்றான். நீங்கள் இவனை எதிர்த்தால் உங்களை கொன்று விடுவான். உங்களால் என்னை மீட்க முடியாது. ராமர் இங்கு வந்ததும் அவரிடம் இந்த செய்தியை சொல்லி விடுங்கள் என்று கதறியபடியே கூறினாள். ராவணன் ஜடாயுவை பார்த்து யார் நீ?  சிறிய பறவையான நீ என்னை தடுக்கின்றாய். தூரமாக விலகிப்போ என்று விரட்டினான்.
 
★ஜடாயு ராவணனிடம் எனது பெயர் ஜடாயு. கழுகு ராஜன். நீண்ட நாள் உன்னைப் போல் ஒரு நாட்டின் அரசனாக வாழ்ந்து வந்தவன். பெண்களை காப்பது அரசனுடைய கடமை. அதற்கு மாறாக அரசனாகிய நீ இதுபோல கீழ்தரமான காரியங்களை செய்யக்கூடாது. சீதை யார் உன்று உனக்கு தெரியுமா? ஒரு ராஜ குமாரியை அவளது துணைவன் இல்லாத போது இப்படி தூக்கிச் செல்லக்கூடாது. உடனே அவளை விட்டுவிட்டுப் போ. இல்லை என்றால் அழிந்து போவாய்.
 
★ராமர் மீது உனக்கு பகை ஏதும் இருந்தால் அவருடன் யுத்தம் செய். அதை விட்டு ராமர் அங்கு இல்லாத சமயத்தில் வந்து சீதையை தூக்கிச் செல்கிறாய். இது தான் உன்னுடைய வீரமா? ராமருடன் யுத்தம் செய்ய உனக்கு தைரியம் இல்லை என்று எனக்கு தெரிந்து விட்டது. ராமருடன் நீ யுத்தம் செய்தால், ஏற்கனவே ராமரின் கைகளால் அழிந்த உனது சேனைப் படைகளாக இருந்த ராட்சதர்களுக்கு நிகழ்ந்த கொடுரமான மரணம் தான் உனக்கு நிகழும். யமனுடைய பாசக்கயிறு உன் கழுத்தின் மேல் விழுந்து உன்னை இழுத்துச் செல்ல தயாராக இருப்பதை நீ அறியாமல் இருக்கிறாய்.
 
★நான் மிகவும் வயதான முதியவன். ஆயுதம் எதும் இன்றி இருக்கிறேன். நீயோ சிறுவன். கவசம் பூண்டு,  வில் அம்பு ஆயுதங்களுடன் இருக்கிறாய். சீதையுடன் நீ இங்கிருந்து செல்ல நான் உன்னை விட மாட்டேன். என்னை மீறி சீதையை தூக்கிச் செல்ல உன்னால் முடியாது. கோழையே!  இதோ உன் முன் நிற்கின்றேன். உனக்கு தைரியம் இருந்தால் என்னுடன் யுத்தம் செய். நான் உயிரோடு இருக்கும் வரையில் உன்னால் சீதையை தூக்கிச்செல்ல முடியாது. எனக்கு பயந்து ஓடாதே நில் என்று கர்ஜித்தான் ஜடாயு.
 
★ஜடாயு பேசியதைக் கேட்ட ராவணன் பெரும் கோபம் கொண்டான். நிறுத்து! இதற்கு மேல் ஒரு வார்த்தையும் பேசாதே. அந்த மனிதர்களை என் கண் முன் வரச்சொல், அவர்களை கொன்றுவிடுகிறேன். உயிர்மேல் ஆசை இருந்தால் ஓடிப்போய் விடு என்றான்.  அரக்கனே! உடனே அவளை விட்டுவிட்டு இங்கிருந்து செல், இல்லை என்றால் நீ அழிந்து போவாய். ராமனின் தேவியை கவர்ந்து செல்வது உன் அழிவிற்கான பாதை ஆகும். ராமன் இல்லாத நேரத்தில் நீ சீதையை கவர்ந்து செல்வது உன் கோழைதனத்தை காட்டுகிறது. ராமனிடம் யுத்தம் செய்ய துணிவில்லாமல் இப்படி கோழைதனமாய் சீதையை கவர்ந்து செல்கிறாயா! நான் இருக்கும் வரையில் சீதையை இங்கிருந்து கவர்ந்து செல்ல விடமாட்டேன்.
 
★நீ வீரன் என்றால் என்னுடன் வந்து போரிடு என்று சொல்லி ஜடாயு மேலே பறந்தான். ஜடாயு பறந்த வேகத்தில் மரங்களும், மலைகளும் ஒன்றோடொன்று மோதிக் கொண்டன.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.....................
[6:05 pm, 12/08/2021] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
121 / 29-07-2021
 
ஜடாயு மரித்தல்...
 
★ஜடாயுவின் பேச்சைக் கேட்ட ராவணன் கோபத்தில் ஜடாயுவை தாக்க ஆரம்பித்தான். அரக்கன்
ராவணனை அங்கிருந்து தப்பிச் செல்லாமல் அங்கேயே தடுத்து நிறுத்தினான், ஜடாயு. மிகக்
கூரிய அஸ்திரங்களை ஜடாயு மீது விடுத்தான் ராவணன். சிறகால் செய்யப்பட்ட மலை போல் நின்ற ஜடாயு, தனது கூரிய நகங்களால் அனைத்தையும் தடுத்து ராவணனின் வில்லை உடைத்து அவனை கடுமையாக தாக்க ஆரம்பித்தான். தனது  சிறகுகளாலும், மூக்காலும் போர் புரிந்தான் ஜடாயு.  தன்னுடைய  மூக்கால் இராவணனை உடல் முழுவதும் கீறினான்.
 
★ராவணனின் உடலில் ரத்தம் சிந்தியது.வலி தாங்க முடியாமல் ராவணன் கழுகுகளின் அரசன் ஜடாயுவை அங்கிருந்து செல்ல மிரட்டினான். ராவணன் ஒரு சூலாயுதத்தை எடுத்து ஜடாயு மீது வீசினான். அந்த சூலாயுதம் செயலற்றுப் போய் கீழே விழுந்தது. பிறகு ராவணன் தன் தண்டாயுதத்தை எடுத்து ஜடாயு மீது வீசினான். தண்டாயுதத்தால் ஜடாயு அடிபட்டுக தள்ளாடி  கீழே விழுந்தான். ஜடாயு கீழே விழுந்த நேரம் பார்த்து ராவணன் தேரை வானத்தில் மிகுந்த வேகமாக செலுத்தினான். சீதை மிகுந்த துன்பத்தால் அழுதாள்.
 
★இதைக் கண்ட ஜடாயு சீதைக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டே மேலெழுந்து ராவணனை மிகக் கடுமையாகத்  தாக்கினான். முதியவனான ஜடாயு  கொடிய ராவணனின் எதிர் தாக்குதலை சமாளிக்க முடியாமல் விரைவில் சோர்ந்து போனான். அழுத முகத்துடன் இருந்த சீதையை கண்டதும் மீண்டும் புத்துயிர் பெற்றது போல் எழுந்த ஜடாயு  ராவணனை ஆக்ரோசமாக தாக்க ஆரம்பித்தான். ராவணனின் கைகளை ஒவ்வொன்றாக தனது அலகால் கொத்தி துண்டாக்கி வீசி எறிந்தான் ஜடாயு.
 
★ராவணனுக்கு புதிது புதிதாக கைகள் முளைத்துக் கொண்டே இருந்தன. இந்தக் கோர யுத்தம் நீண்ட நேரம் நடந்தது. அரக்கன்
ராவணனும் ஜடாயுவும் மிகவும் பயங்கரமாக மோதிக் கொண்டு யுத்தம் புரிந்தனர். ராவணனைச் ஜடாயு தேரோடு கீழே சாய்த்தான். இனி ராவணன் பிழைக்க மாட்டான் என்ற நிலைமை உருவாகியது. அவனிடம் வேறு ஆயுதங்கள் இல்லை. வெகு நேரமாக நடந்த யுத்தத்தினால் அந்த சமயத்தில் ஜடாயு மிகவும் சோர்வடைந்திருந்தான். அந்த
 யுத்தத்தில் ராவணனின் கை ஓங்கியது.
 
★மிகுந்த கோபம் கொண்ட ராவணன் தன்னிடம் இருந்த
சந்திரஹாஸம்" என்ற பெயரை உடைய உடைவாளை உறுவி ஜடாயுவின் சிறகுகளையும், மற்றும் கால்களையும் வெட்டி வீழ்த்தினான். அந்த வாள் சிவபெருமான் ராவணனுக்குக் கொடுத்தது ஆகும். தனது  சிறகுகளையும் கால்களையும் இழந்த ஜடாயு ராமரை நினைத்து ராம்! ராம்! என சொல்லிக் கொண்டு தரையில் விழுந்தான். இதனைக் கண்ட தேவர்களும் முனிவர்களும் பெரும் துயரம் அடைந்தனர்.
 
★ஜடாயுவின் நிலமையைக் கண்ட சீதை என் கணவருக்கு இன்னோரு தந்தையாக வந்தீர்களே!,  தசரதர் மீண்டும் உயிர் பெற்று வந்ததை போல் யுத்தம் செய்து இப்போது நீங்கள் எனக்காக உங்களின் உயிரை விடப் போகின்றீர்களே! ராமா !எங்கிருக்கின்றார்கள்?. லட்சுமணா! எங்கிருக்கிறாய் ?என்னை காப்பாற்றுங்கள் என்று கதறியபடியே இருந்தாள். ஜடாயு பறவை நிற்க கூட முடியாமல் விழுந்து கிடப்பதை கண்டு திருப்தி அடைந்த ராவணன் சீதையுடன் ஆகாய மார்க்கமாக சென்றான்.
 
★சீதை ஆகாயத்தில் சென்று கொண்டிருக்கும் போது தைரியமாக ராவணனிடம் பேச ஆரம்பித்தாள். உன் குலத்தின் பெருமைகளையும் உன்னுடைய வீரப்ரதாபங்களையும் கம்பீரமாக என்னிடம் சொல்லி பெரிய சூரனைப் போல் நடந்து கொண்டாய். ஆனால் ராமருடன் யுத்தம் செய்ய தைரியம் இல்லாமல் ஒரு கோழையைப் போல் தன் துணைவன் இல்லாத நேரத்தில் ஒரு பெண்ணை மாறுவேடம் தரித்து ஏமாற்றி தூக்கிச் செல்கிறாய். இது தான் உனது வீரமா? உனக்கு சிறிதும் வெட்கமாக இல்லையா?
 
★என்னை காப்பாற்ற வந்த வயதான ஒரு பறவையை கொன்ற கோழை நீ. உன்னுடைய இந்த கீழ்தரமான செயலினால் உன் குலத்திற்கே நீ தீராத ஒரு அவமானத்தை தேடிக் கொடுத்து இருக்கிறாய். என்னை தூக்கிச் சென்று உன்னால் நிம்மதியாக இருக்க முடியும் என்று மனதில் எண்ணுகிறாயா? உன்னுடைய பதினான்காயிரம் ராட்சதர் படைகளையும் என் ராமர் தனி ஒருவராக அனைவரையும் அழித்திருக்கிறார்.  ஞாபகம் வைத்துக்கொள். என் ராமரின் கண்ணில் பட்ட அடுத்த கனம் அவருடைய வில்லில் இருந்து வரும் அம்புகள் உன்னை கொன்று விடும்.
 
★தந்திரங்கள் மூலமாகவும் மாயா ஜாலங்கள் மூலமாகவும் தப்பிப் பிழைப்போம் என்று கனவு காணாதே. நிச்சயமாக நீ அழிந்து போவாய் என்று ராவணனை திட்டிக்கொண்டே இருந்தாள்.சீதை பேசிய எதையும் ராவணன் தன் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. சீதையை அடைந்து விட்டோம் என்று  நினைத்து தான் வந்த செயலை நிறைவேற்றி விட்ட மகிழ்ச்சியில் இருந்தான் ராவணன். ரதம் வில்லில் இருந்து சென்ற அம்பு போல் இலங்கையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
 
★செல்லும் வழியில் கீழே மலை மீது வேடர்கள் சிலரையும் வானரங்கள் சிலரைக் கண்டாள் சீதை. ராமர் தன்னை தேடி வந்தால் அவருக்கு வழி தெரிய வேண்டும் என்று தன்னுடைய ஆபரணங்கள் சிலவற்றை  எடுத்து வானரங்கள் இருக்கும் மலையை நோக்கி வீசினாள் சீதை. வானத்தில் ராட்சதன் பிடியில் இருக்கும் பெண் தங்களை நோக்கி எதோ தூக்கி எறிவதை வானரங்கள் பார்த்து அதனை எடுக்க ஓடினார்கள்.
ரதம் பல காடுகளையும் மலைகளையும் கடலையும் தாண்டி இலங்கையை சென்றடைந்தது.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.....................
[6:05 pm, 12/08/2021] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
122 / 30-07-2021
 
இலங்கையில் சீதை...
 
★புஷ்பக விமானம் பல காடுகளையும் மலைகளையும் கடலையும் தாண்டி ராவணனின் இலங்கையை சென்றடைந்தது.
 துயரத்தில் இருந்த சீதையுடன் தன் அந்தப்புரத்தை அடைந்தான் ராவணன். அங்கிருக்கும் ராட்சச பணிப்பெண்களை அழைத்தான். இவளிடம் மிகவும் பணிவுடனும் மரியாதையாகவும்  நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். இவளை  ஜாக்கிரதையாகவும் ஆண்கள் யாரும் இவளிடம் பேசாமலும் இவள் அருகில் நெருங்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 
★இவள் கேட்கும் தங்க, வைர வைடூரியங்கள் முத்து என்று எது கேட்டாலும் கொடுத்து அவளை சந்தோசமாக வைத்திருக்க வேண்டும். இவள் வருத்தம் கொள்ளும்படி யாரேனும் நீங்கள் நடந்து கொண்டால் உங்கள் அனைவரையும் கொன்று விடுவேன். நீங்கள் எனக்கு கொடுக்கும் அனைத்து வித மரியாதைகளும் இவளுக்கும் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, சீதை கிடைத்து விட்ட பெருமிதத்தில் அங்கிருந்து கிளம்பினான்.
 
★அரண்மனைக்கு வந்த அசுர ராவணன் சாமர்த்தியமான இரண்டு ஒற்றர்களை அருகில் அழைத்தான். நீங்கள் இருவரும் ராமர் வாழும் காட்டிற்கு உடனே செல்லுங்கள். ராமர் எனக்கு எதிரி. எப்படியாவது அவன் அழிய வேண்டும். ராமன் இருக்கும் வரையில் எனக்கு நிம்மதியான தூக்கம் இல்லை. ராமன் என்ன செய்கிறான் என்று மறைந்திருந்து பார்த்து எனக்கு தினந்தோறும் தகவல் தெரிவிக்க வேண்டும். உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது. தைரியமாக செல்லுங்கள் என்று கட்டளை இட்டான்.
 
★ராமருடன் வாழ்ந்த காட்டில் இருந்து வெகு தூரத்தில் கடலால் சூழப்பட்ட நாட்டில் மிகப் பெரிய அரண்மணையில் தான் இப்போது இருப்பது சீதைக்கு தெரியவில்லை. ராமருடைய வீரத்தையும் சாமர்த்தியத்தையும் அறிந்த சீதை ராமர் விரைவில் வந்து ராவணனை கொன்று விட்டு தன்னை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையுடன் காத்து இருந்தாள்.கொடிய  ராட்சதனான ராவணன் தன்னிடம் முறைதவறி மிருகத்தனமாக ஏதும் நடந்து கொள்ளவில்லை என்று ஆறுதலுடன் இருந்தாள்.
 
★சீதை தனது அரண்மனையை சுற்றிப் பார்த்தால் அங்கிருக்கும் ராஜபோகங்களை கண்டு தனக்கு அடிபணிவாள் என்று எண்ணிய ராவணன், சீதையை பார்த்துக் கொள்ளும் ராட்சதப் பெண்களை அழைத்து தன் அரண்மனையை சுற்றிக் காட்டுமாறு உத்தரவிட்டான். உலகத்தில் எந்த அரசனிடமும் இல்லாத செல்வங்களுடன் ராஜபோகத்துக்கு உரிய பொருட்களுடன் ராவணனின் செல்வம் நிறம்பிய அழகான அரண்மனையை சுற்றிக் காண்பித்தார்கள்.
 
★எங்கு பார்த்தாலும் பொன்னும் நவரத்தினங்களும்  மணியும் பட்டும் குவிந்திருந்தன. மனதை  கவரும் படியான விசித்திர வேலைப்பாடுகள் நிறைந்த மண்டபங்கள் மேடைகள் என ராஜ்ய அதிகாரத்தினால் பெற்ற அத்தனை செல்வங்களையும் அந்த அரண்மனையில் சீதை கண்டாள். அவளுடைய மனதில் ராமர் எப்பொது வருவார்? எப்படி வருவார்? எப்போது காண்போம்? என்ற எண்ணத்தை தவிர சீதையின் மனதில் வேறு ஒன்றும் ஓடவில்லை.
 
★சீதையை மீண்டும் காண அவள் இருக்கும் அந்தப்புரம் நோக்கி  வந்தான் ராவணன். ராட்சஷிகள் சரியாக காவல் இருக்கின்றார்களா என்பதை சரி பார்த்துக் கொண்டான். சீதை சோகத்தில் கண்ணீர் நிறைந்த கண்களோடு இருப்பதைக் கண்டான். எப்படியாவது அந்த சீதையை அடைந்து விட வேண்டும் என்று எண்ணி ஏற்கனவே பேசியதை போலவே சீதையிடம் தன் வீரப்பிராதப பராக்கிரமங்களை பற்றி சொல்ல ஆரம்பித்தான் ராவணன். நீங்கள் வாழ்ந்த காட்டில் இருந்து 100 யோசனை தூரத்தில் இருக்கும் கடல் சூழ்ந்த எனது மிக அழகான  லங்காபுரி நாட்டில் நீ இப்போது இருக்கிறாய். இந்த நாட்டை சுற்றி இரவு பகலாக பல மகா ராட்சதர்கள் காவல் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். என் அனுமதி இல்லாமல் யாரும் உள்ளே நுழைந்து விட முடியாது.
 
★நாட்டில் இருந்து விரட்டப்பட்ட ஒரு மனிதனை எண்ணி நீ கவலையோடு இருக்கிறாய்.
ராமனால் இங்கு வர முடியாது. உன் ஆயுட்காலம் முழுக்க நிச்சயம் நீ ராமனை பார்க்க முடியாது. என் பதவியையும் மறந்து உன்னிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். அனைவரது தலையும் என் காலடியில் இருக்க என் தலையை உன் பாதங்களில் வைத்து கேட்டுக் கொள்கிறேன்.
 
★நான் உன் அடிமையாக இருப்பேன். எனக்கு அடிமையாக இருக்கும் அனைத்து தேவர்கள் மற்றும் கந்தர்வர்கள் உனக்கும் அடிமைகள் ஆவார்கள். என் வாழ்நாளில் இவ்வாறு நான் யாரையும் கெஞ்சியது இல்லை. நான் சொல்வதை கேள். வேறு யோசனை ஏதும்  செய்யாதே. குபேரனை வெற்றி பெற்ற லங்கேசன் மனைவியாகி விடு.
நீ இதற்கு ஒப்புக்கொள்வதில் பாவம் ஒன்றும் இல்லை. இந்த ராஜ்யம் முழுவதும் உனக்கு உரிமையுடையது என்பதாக எண்ணிக்கொள். இந்த ஆயுள் காலம் முழுவதும் நாம் இங்கேயே சந்தோஷமாக வாழலாம். உன்னுடைய அழகிய முகத்தில் துக்கம் இருக்கக்கூடாது. எந்த நேரமும்  மகிழ்ச்சியுடன் இரு என்று சீதையிடம் சொல்லி முடித்தான் ராவணன்.
 
வணத்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.................
[6:05 pm, 12/08/2021] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
123 /31-07-2021
 
ராமன் தேடிய சீதை...
 
★சீதை எந்த பயமும் இல்லாமல் ராவணனிடம் தைரியமாக பேச ஆரம்பித்தாள். ராட்சதர்கள் இருக்கும் அந்த தண்டகாரண்ய காட்டில் ராமருடன் தனியாக வசித்தேன். எங்களை எதிர்த்து வந்த உன்னுடைய ராட்சத படைகளை ஒற்றை ஆளாய் கண நேரத்தில் அழித்தவர் என் கணவர். தேவர், அசுரர்களால் கொல்லப்பட கூடாது என்று நீ வரம் வாங்கியதினால் யாராலும் உன்னை ஒன்றும் செய்ய முடியாது என்ற கர்வத்தில் என்னை தந்திரமாக தூக்கி வந்து விட்டாய். இதனால் ராமரின் பகையை பெற்றுவிட்டாய்.
 
★நீ எத்ததைய பெரிய சக்தி வாய்ந்த அஸ்திரங்கள் மற்றும் ஆயுதங்கள் வைத்திருந்தாலும் நீ பெற்ற உன்னுடைய வரம் இனி உன்னைக்  காப்பாற்றாது. நீ எத்தனை யோசனை தூரத்தில்  என்னை கடல் தாண்டி தூக்கி வந்தாலும் அந்தக் கடலை வற்றச் செய்து என்னை தேடி வருவார் என் ராமர். நீ செய்த தீராத ஓர் தீ  வினையால் நீயும் அழிந்து உன் குலமும் அழிந்து உன் அழகான லங்காபுரி நகரமே அழிந்து
போகப்போகிறது. என் உயிர் மற்றும்  உடலையும் நான் காப்பாற்றிக் கொள்ள உன் வசமாவேன் என்று எண்ணாதே. உலகத்தாரால் இகழப்பட்டு உயிரை வைத்துக் கொண்டிருக்க நான் ஒரு போதும் விரும்பியது இல்லை என்று அந்த அரக்கன் ராவணனிடம் கர்ஜனையுடன் சீதை பேசி முடித்தாள்.
 
★சீதை பேசிய அனைத்தையும் கேட்ட  ராவணன் உனக்கு பன்னிரண்டு மாதம் அவகாசம் தருகிறேன். அதற்குள் என் சொல்படி நடந்துகொள். இல்லை என்றால் அந்த அவகாச காலம் முடிந்ததும் உன்னை என்னுடைய  சமையல்காரர்கள் எனது காலை உணவிற்கு பதமாக  சமைத்து விடுவார்கள். எச்சரிக்கிறேன்! நினைவில் கொள்!  என்று சொல்லி விட்டு காவல் காக்கும் ராட்சசிகளை தனியாக அருகில் அழைத்தான். இவளை அசோக வனத்திற்கு அழைத்துச் சென்று விடுங்கள். அங்கு இவளுடைய பிடிவாதத்தையும் கர்வத்தையும் எப்படியாவது நீங்கள் அழிக்க வேண்டும்.
 
★பயத்தாலும்,  நயத்தாலும் மேலும் தந்திரமாகவும் பேசி இவளை என் சொல்படி நடந்து கொள்ள வையுங்கள் என்று கோபத்துடன் உத்தரவிட்டு தன் அரண்மனைக்கு சென்றான்.
ராட்சசிகள் சீதையை அழகான அசோகவனத்திற்கு கொண்டு சென்றார்கள். அங்கு ரம்யமாக வடிவமைக்கப்பட்ட  அற்புதமான பூந்தோட்டத்தில் அகோரமான ராட்சசிகளுக்கு மத்தியில் சீதை துயரத்துடன் இருந்தாள். இந்த ராவணன் நம்மை தூக்கி வந்த செய்தியை ராமரும் மற்றும் லட்சுமணனும் எப்படியாவது தெரிந்து, நாம் இருக்கும் இந்த இடத்தை வந்தடைந்து, கொடிய ராட்சசர்களை கொன்று நம்மை நிச்சயமாக காப்பாற்றுவார்கள். அதுவரை இந்த ராட்சசிகளுக்கு சிறிதும் பயப்படாமல் இருக்க வேண்டும் என முடிவெடுத்தாள்.
 
★சோகமான சீதையை அசோக வனத்தில் ஒரு அசோக மரத்தின் அடியில் உட்கார வைத்து விட்டு, இனி சீதையை தேடப் போகும் ராமரிடம் செல்வோம். சீதையை தனியே விட்டுட்டு மனம் வருந்தி லட்சுமணர் ராமரை நோக்கிச் சென்றார். ராமர் தான் வாழ்ந்து வந்த குடிலில் இருந்து மிகவும் தூரத்தில் இருந்தார். குடிலில் சீதை என்ன ஒரு  மனநிலையில் இருப்பாள்?  என்று கற்பனை செய்த வண்ணம் குடிலுக்கு மிகவும் விரைவாக  வந்து கொண்டிருந்தார்.  மாரீசனின் குரலைக் கேட்டு சீதை தன்னை நினைத்து மிகவும் பயப்பட்டு அழுது துன்பப்படுவாள் என எண்ணினார்.
 
★இந்நேரம் லட்சுமணனை காட்டிற்குள் செல்ல வற்புறுத்தி இருப்பாள். லட்சுமணன் என் உத்தரவை மீறி நடக்க மாட்டான். அதனால் சீதை கோபமடைந்து சொல்லக்கூடாத வார்த்தைகளை சொல்லியிருப்பாள். வட்சுமணன் என்ன முடிவெடுப்பான் என்று தெரியவில்லை. லட்சுமணன் குடிலில் சீதையை தனியாக விட்டு கிளம்புவதற்குள் நான் எப்படியாவது நம் குடிலுக்கு விரைந்து சென்றுவிட வேண்டும் என்று எண்ணிய ராமர் மிகவும் விரைவாக நடக்க ஆரம்பித்தார்.
எதிரே லட்சுமணன் வருவதை கண்டு அதிர்ந்தார்.
 
★லட்சுமணனைப்  பார்த்ததும் ராமரின் மனம் பதைப்பதைத்தது. தாம் நினைத்த படியே நடந்து விட்டதே என்று லட்சுமணா! என்று கத்தினார். லட்சுமணனை சீதைக்கு காவலாக அங்கே இரு என்று சொல்லியிருந்தும், இவன் இங்கு வருவதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு தம்பி லட்சுமணரை நோக்கி வந்தார் ராமர். லட்சுமணர் ராமரைக் கண்டதும் அருகில் வந்து வணங்கி, ராமரை ஆரத் தழுவிக் கொண்டார்.
 
★காட்டின் நடுவே சீதையை ஏன் தனியாக விட்டு விட்டு வந்து விட்டாய்.? அவளை ராட்சதர்கள் கொன்று தின்று விடுவார்களே. ராட்சதர்களிடம் இருந்து அவள் தப்ப முடியாதே.  தவறான ஒரு காரியத்தை செய்துவிட்டாயே! என்று லட்சுமணனிடம் பேசிக் கொண்டு  குடிலுக்கு மிகவும் விரைவாக நடக்க ஆரம்பித்தார் ராமர். ராமர், மாரீசன் போட்ட சத்தத்தை என்னுடைய சத்தம் என்று நம்பி விட்டீர்களா?. நான் இப்போது என்ன செய்வேன்.
 
★உன்னை நம்பி சீதையை ஒப்படைத்து விட்டு வந்தேன். நீ ஏன் அவளை தனியாக விட்டு வந்தாய்.? ராட்சசர்கள் நம் மீது வைத்திருந்த பகையை சீதை மீது காண்பித்து அவளை கொன்று இருப்பார்கள். சீதை குடிலில் இல்லையென்றால் லட்சுமணா! என் உடலில் உயிர் இருக்காது. லட்சுமணா! நீ அயோத்திக்கு சென்று இந்தச் செய்தியை சொல்லிவிடு. இந்த துக்கத்தை மாதா கௌசலையால் பொறுக்க முடியாது. அன்னை கைகையி தான் விரும்பியதை அடைவாள். நான் என்ன செய்வேன் என்று சொல்லிக் கொண்டே குடிலுக்கு ஓடு! லட்சுமணா ஓடு! என்று ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தார்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை......................
[6:05 pm, 12/08/2021] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
124 /01-08-2021
 
சீதை எங்கே?
 
★பிறகு ராமர்,  நீ சீதையை தனியாக விட்டுவிட்டு இங்கே வருவதற்கான காரணம் என்ன? என்று வினவினான்.  அதற்கு
லட்சுமணன் கண்ணீர் மல்க ராமரிடம் பேச ஆரம்பித்தான். அண்ணா! நான் மட்டும்  என்ன செய்வேன்?. உங்கள் குரலைப் போன்ற ஒரு சத்தம் வந்ததும் அண்ணியாருக்கு பெரும் பயம் வந்து விட்டது. நடுங்கிப் போனார். ஓடு! லட்சுமணா! ஓடு! போ! போ! என்று என்னை துரத்தினார். வந்தது உங்கள் குரல் அல்ல அது ராட்சதனின் ஏமாற்று வேலை. உங்களை எந்த ராட்சதனும் எதிர்த்து வெற்றி பெற முடியாது என்று எவ்வளவு சொல்லியும் அன்னை சீதை கேட்கவில்லை.
 
★நான் தங்களின் குரல் இல்லை என எவ்வளவு சொல்லியும் அன்னை அதை கேட்கவில்லை. அன்னை சீதை, தன்னை கடிந்து பேசி அனுப்பியதை கூறினார்.
மனம் வருந்தும் படியான வார்த்தைகளை சொல்லி நீ செல்லவில்லை என்றால் இப்போதே இறந்து விடுவேன் என்று சொல்லி ஆற்றில் விழுந்து போவதற்கும் துணிந்து விட்டார்.  பேசக்கூடாத வார்த்தைகளை சொல்லி என்னை மிகவும் துன்புறுத்தி துரத்தினார்கள். நான் வேறு வழி இல்லாமல் வந்தேன் என்று லட்சுமணன் சொல்லி முடித்தான். ராமர் பேச ஆரம்பித்தார்.
 
★நீ சொல்லும் சமாதானத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்ணாய் பிறந்த அவள் பயத்தால் சில நேரம் ஏதேதோ பேசுவாள். அது போல் பெண்ணான சீதையும் பயத்தால் வந்த அஞ்ஞானத்தால் ஏதோ பேசியிருக்கிறாள். அதனை நீ பொறுத்திருக்க வேண்டும். அவளை தனியாக விட்டு நீ எப்படி வரலாம். நீ செய்தது தவறு தான்.
ஆனால் அனைத்துக்கும் தானே காரணம் என்று மனம் வருந்தி பேசினார். தம்பி! நீ மானை பிடிக்க வேண்டாம் என என்னிடம் சொல்லியும், நான் மானை பிடிக்க வந்தது என் தவறு தான் எனக் கூறினார்.
 
★எப்படியும் சீதையை இனி நான் காணப்போவதில்லை என்று லட்சுமனணிடம் கோபத்தில் பேசிக்கொண்டே ஓடினார். வரும் வழி எங்கும் அபசகுனங்கள் தென்பட்டன.  சீதை அங்கே தனியாக இருப்பாள் என மிகவும் விரைந்து பர்ணசாலைக்கு திரும்பினர். இருவரும் வேகமாக அவர்களின் பர்ணசாலையை அடைந்தனர். பர்ணசாலை வெறுமையாக இருந்தது. அங்கே சீதை இல்லாததை கண்டு ராமர் திடுக்கிட்டார். ராமர் சீதையை நினைத்து மிகுந்த  துயரத்தில் மூழ்கினார்.சீதை இல்லாத குடில் சூன்யமாக தென்பட்டது.
 
★சீதையை காணாமல் ராமரின் இதயம் உடைந்து அங்கேயே விழுந்தார். மான் தோலும் தர்ப்பையும் சிதறிக்கிடந்தது. தண்ணீர் எடுக்க ஆற்றுக்கு போயிருப்பாளோ என்று ஆற்றுக்கு அருகில் ஓடினார். தோட்டம் செடி கொடிகள் என்று குடிலை சுற்றி சீதையை தேடி ஓடினார். சீதை எங்கும் காணவில்லை. சீதையை எங்கு கொண்டு போனார்களோ? என்ன செய்தார்களோ? எவ்வளவு பயந்து போயிருப்பாள். என்று கண்ணில் நீர் வழிய தன் சுய சிந்தனையை இழந்து சீதை! சீதை! என்று காட்டில் அங்கும் இங்கும் தேடி பிதற்றிக்கொண்டே ஓடினார் ராமர்.
 
★எங்கெங்கு தேடியும் சீதையை காணவில்லை. லட்சுமணா !சீதையை ராட்சதர்கள் கொன்று தின்றிருப்பார்கள். இனி என் உடலில் உயிர் இருக்காது. தந்தை தசரதர் இருக்குமிடம் நான் சென்று விடுவேன். நான் இட்ட ஆணையை நிறைவேற்றாமல் இங்கு வந்துவிட்டாயே என்று தந்தை என்னிடம் கோபம் கொள்வார் என்று துயருடன் அழ ஆரம்பித்தார் ராமர். அண்ணா !தங்களின் மேன்மைக்கு நீங்கள் இப்படி அழுவது சிறிதும் தகாது. இருவரும் இந்த காடு முழுவதும் தேடிப்பார்ப்போம். காட்டிற்குள் செல்வதும், ஆற்றில் குளிப்பதும், விளையாடுவதும், தோட்டத்தில் பூக்களுடன் இருப்பதும் சீதைக்கு பிடித்தமான செயல்.
 
★இங்கே எங்காவது அருகில் விளையாடிக் கொண்டிருப்பார். நம்மை சோதிக்கத்தான் இப்படி விளையாடுகிறாள் என்று எண்ணுகிறேன். வாருங்கள்!. இருவரும் சென்று தேடுவோம் என்றான். லட்சுமணர், தங்களின் பர்ணசாலைக்கு வெளியில் தேர் சுவடு இருப்பதை கண்டார். அந்தத் தேர் தெற்கு நோக்கி பயணித்துள்ளது என்பதை கண்டு ராமரிடம் கூறினார். அண்ணா! நாம் நமது நேரத்தை வீணடிக்காமல் விரைந்துசென்று அன்னையை காப்பாற்றுவோம் என கூறினார் லட்சுமணர். ராமர், நீ சொல்வதும் சரிதான். வா! உடனே நாம் பின் தொடர்ந்து செல்வோம் எனக் கூறி இருவரும் பின் தொடர்ந்தனர்.
 
★தேரின் சுவடை நோக்கி இருவரும் சென்றனர். சிறிது தூரம் சென்றதும் தேரின் சுவடு மறைந்து விட்டது. தேரின் சுவடு மறைந்ததை பார்த்து ராமர் திகைத்து நின்றார். லட்சுமணர், அண்ணா! தேரின் சுவடு இங்கு மறைந்தால் என்ன? தேர் தெற்கு நோக்கி சென்றுள்ளது என்பது உறுதியாக தெரிகிறது. நாம் தெற்கு நோக்கி செல்வோம் எனக் கூறினார். இருவரும் தெற்கு நோக்கி சென்றார்கள்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை....................?
[6:05 pm, 12/08/2021] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
125 /02-08-2021
 
ஶ்ரீராமரின் துக்கம்...
 
★ராமர் சிறிது நேரம் செயல்பட முடியாமல் தவித்தார். லட்சுமணா சீதையை ராட்சசர்கள் கொன்று தின்றிருப்பார்கள். சீதையை இழந்து விட்டேன். என்னை நம்பி வந்தவளை பாதுகாக்காமல் விட்டுவிட்டேன். என்னை போல் ஒரு பாவி உலகத்தில் இல்லை. இனி எனது இந்த  உயிர் எனக்கு வேண்டியதில்லை. வனத்திற்கு சீதையுடன் சென்றவன் அங்கு ராட்சதர்களுக்கு சீதையை உணவாக கொடுத்து விட்டு தனியாக வந்திருக்கின்றான் என்று மக்கள் பேசுவார்கள். அவர்களுக்கு சமாதானம் சொல்ல என்னால் முடியாது.
 
★இனி அயோத்திக்கு தான்
போக முடியாது.நீ அயோத்திக்கு சென்று நமது தாயார்களை பார்த்துக்  கொள். பரதனிடம் அயோத்திக்கு இனி நீயே அரசன் என்று நான் உத்தரவிட்டதாக சொல்லிவிடு என்று சோகமாக அழது கொண்டே கூறினார்.
ராமருக்கு,  தம்பி  லட்சுமணன் தொடர்ந்து தைரியம் சொல்லிக் கொண்டே இருந்தான். அண்ணா! மனநிலை தெளிவில்லாமல் தைரியம் இழந்தவர்கள் ஒரு செயலையும் செய்ய முடியாது. துக்கத்தை அடக்கிக் கொண்டு மனதை ஒரு நிலைப்படுத்திக் கொள்ளுங்கள்.
 
★நாம் இந்த காடு மலை மற்றும் குகைகள் என்று அனைத்து திசைகளிலும் தேடுவோம். மகாவிஷ்ணுவானவர் எப்படி  பலிச்சக்கரவர்த்தியை அடக்கி மூவுலகையும் அடைந்தாரோ அது  போல் நீங்களும் சீதையை நிச்சயம் அடைவீர்கள் என்று ராமரிடம் சொல்லிக் கொண்டே இருந்தான். இருவரும் சீதையை தேடிக்கொண்டே இருந்தார்கள். அப்போது மான் கூட்டம் ஒன்றின் சகுனங்களை பார்த்த இளவல் லட்சுமணன் தெற்கு திசை பக்கம் நோக்கி சென்று நாம் தேடலாம் வாருங்கள் என்று ராமரை அழைத்துச் சென்றான். வழியில் ஓரிடத்தில்  பூக்கள் சிதறிக் கிடந்தது. பூக்களை கண்ட ராமர் இதோ நான் சீதைக்கு கொடுத்த பூக்கள் இங்கே இப்படி சிதறிக் கிடக்கிறது என்று கதறி அழுது கொண்டே சீதையை தேடி ஓட ஆரம்பித்தார்.
 
★பூக்கள் இருக்கும் காட்டை சுற்றி தேடிப்பார்த்தார்கள்.  அருகில் சீதை அணிந்திருந்த மணிகள் சிதறிக் கிடந்தது. இதனை கண்ட ராமர் பார்த்தாயா! லட்சுமணா! சீதையை மிகவும் துன்புறுத்தி இருக்கிறான் ராட்சதன் என்று புலம்ப ஆரம்பித்தார். ராமரும் லட்சுமணனும் அந்த இடத்தை சுற்றி ஏதேனும் தடயங்கள் கிடைக்கின்றதா? என்று தேடிப் பார்த்தார்கள்.  அவர்கள் சிறிது தூரம் சென்றதும் வழியில் வீணைக்கொடி ஒன்று அறுந்து கிடப்பதை பார்த்தார்கள். லட்சுமணர் வீணைக் கொடியைப் பார்த்து இது ராவணனுடையது என்றார். அந்த வீணைக் கொடி ஜடாயு-வின் மூக்கினால் கொத்தி அறுப்பட்டுள்ளதை பார்த்தனர். ராவணனிடம் போர் புரிந்து அவன் தேரை உடைத்து வீணைக்கொடியை அறுத்தவர் ஜடாயுவாக இருக்கலாமோ? என நினைத்தனர்.
 
★அருகில் தேரின் உடைந்த பாகங்களும் தேர் ஓட்டும் ராட்சத சாரதி ஒருவன் இறந்து கிடந்த கோலத்தையும் கண்டார்கள். இரண்டு ராட்சதர்கள் சீதையை திண்பதற்காக சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள். பெரிய சண்டை ஒன்று இங்கு நடந்து இருக்கின்றது. இந்த நேரத்தில் ஒரு தெய்வம் கூட சீதையை காப்பாற்ற வரவில்லை. இந்த கொடுமையான உலகத்தை என்னுடைய அஸ்திரங்களால் அழித்து விடுவதே சரியானதாக  இருக்கும்.  நான் கற்று தேர்ந்த  அஸ்திரங்கள் பயன்படாமல் போகுமா? பார்க்கலாம் என்று ராமர் லட்சுமணனிடம் புலம்பிக் கொண்டே கூறினார்.
 
★லட்சுமணன் ராமரிடம் பேச ஆரம்பித்தான். உங்களுக்கு ஏற்பட்ட  பெரும் துயரத்தினால் உங்களுடைய இயற்கையான குணங்களை விட்டு விடாதீர்கள். ஒருவன் செய்த துஷ்ட செயலால் உலகத்தை வெறுக்கவோ கோபிக்கவோ தேவையில்லை. நம்முடைய எதிரி யார் என்று முதலில் தெரிந்து கொள்வோம். பிறகு செய்ய வேண்டியதை பற்றி யோசித்து அதற்கேற்றபடி  செயல்படுவோம் என்று தைரியம் சொல்லிக்கொண்டே வந்தான்.
பிறகு இருவரும் ஜடாயுவை தேடி சென்றனர். செல்லும் வழியில் பல தலைகள், பல கைகள் அறுப்பட்டு கிடந்தன. இதனைப் பார்த்த ராமர், சீதையை கவர்ந்து சென்றவர், பல அரக்கர்கள் போல் தெரிகிறது என்றார்.
 
★லட்சுமணர், அண்ணா! அந்த ராவணனுக்கு பல தலைகள், பல கைகள் உண்டு. இவனுடைய  பல தலைகளும், பல கைகளும் அறுக்கப்பட்டாலும் திரும்ப முளைக்கும் வரம் பெற்றவன். இங்கு பல தலைகள், பல கைகள் அறுக்கப்பட்டுள்ளது. ஆனால் கால்கள் அறுப்பட வில்லை. ஆதலால் ராவணன் மட்டும் தான் அன்னையை கவர்ந்து சென்று உள்ளான் என்றார். அங்கிருந்து
சிறிது தூரத்தில் பெரிய பறவை ஒன்று சிறகு வெட்டப்பட்ட நிலையில் ரத்ததுடன் துடித்துக் கொண்டிருப்பதை கண்டார்கள்.
 
குறிப்பு:-
=========
 
ராமாயணம் புராணத்தில் ஆரண்ய காண்டம் பகுதியில் சீதையை இழந்த ராமர் புலம்பி அழுவதை படிக்கும் பலர் பகவான்  ஶ்ரீமகாவிஷ்ணுவின் அவதாரமாக இருக்கும் ராமர் ஏன் அழ வேண்டும்?. இறைவன் ஏன் துன்பப்படுகின்றார்? என்று சந்தேகங்கள் கேட்பதுண்டு. அதற்கான பதில்
 
சீதை ராமரிடம் சரணடைந்து
இருப்பதை போல் இறைவனை சரணடைந்திருக்கும் பக்தன் சிறு தவறு செய்து அந்த இறைவனை சென்றடையும் பாதையை விட்டு ஒருவேளை தன் வழி தவறிப் போனால், கருணைக்  கடலான இறைவனின் திருவுள்ளம் மிக்க துன்பப்படுகின்றது என்கிற ஓர் கருத்து இந்த இடத்தில் நமக்கு சித்தரிக்கப் பட்டிருக்கின்றது.
அத்துடன் பரிபூர்ண மனிதனாக இருந்தால்தான் தான் எடுத்த அவதார நோக்கம் ஆனது  பூர்த்தி அடையும் என்ற ஒரு கருத்தாலும் இருக்கலாம்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை..........................
[6:06 pm, 12/08/2021] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
126 /03-08-2021
 
ஜடாயு தகனம்...
 
★ராமர் லட்சுமணர், ஜடாயுவை தேடி விரைந்து சென்றனர். அவர்கள் போகும் வழியில் ஒரு வில் முறிந்து கிடப்பதையும், கவசம் அறுந்து கிடப்பதையும் கண்டனர். இதனைக் கண்ட ராமர் இங்கு பெரும் போர் ஒன்று நடத்திருக்க கூடும் என்றார். ராமர் தூரத்தில் தெரிந்த பட்சி ராஜன் ஜடாயுவை பார்த்ததும் அதோ! ஒரு ராட்சதன் சீதையை தின்று விட்டு நம்மை ஏமாற்ற இங்கே படுத்து இருக்கிறான் என்று ராமர் வில் அம்பை தன் கையில் எடுத்தார்.  ஆனால் அம்பை எய்யாமல் சிறிது தூரம் சென்றதும் இரத்த வெள்ளத்தில் ஜடாயு வீழ்ந்து இருப்பதை பார்த்து மிகவும் துன்பப்பட்டனர்.
 
★கடலில் மத்தாக வைக்கப்பட்ட மந்தர மலையைப் போல ரத்த வெள்ளத்தில் ராமர் ஜடாயுவைப் பார்த்தார். அவர் மீது ராமர் விழுந்து கதறி அழுதார். தனது தந்தைக்கு நிகரான தங்களை இந்த ஒரு ரத்த வெள்ளத்தில் பார்க்கிறேனே!தங்களை இழந்து விடுவேனோ?. இனி நான் என்ன செய்வேன்? என புலம்பி அழுதார். சிறிது மயக்கம் தெளிந்த ஜடாயு ராம லட்சுமணரை பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தார்.ராமரின் கண்களில் இருந்து கண்ணீர் ஆறு போல் சுரந்தது. வில்லை வீசி எறிந்தார். ஜடாயுவை கையில் தூக்கி இருகக்  கட்டி அணைத்தார். ராமர் லட்சுமணன் இருவருக்கும் துக்கம் எல்லை கடந்து போயிற்று.
 
★ஶ்ரீ ராமர் பேச ஆரம்பித்தார். என்னை போன்ற அதிர்ஷ்டம் இல்லாத துர்பாக்கியசாலிகள்  யாருமில்லை. தாய் சகோதரன் உறவினர்களை பிரிந்து இந்த காட்டிற்கு வந்தேன். இப்போது மனைவியை பிரிந்து துக்கத்தில் இருக்கிறேன். இப்போது தந்தை போல் இருந்த ஜடாயுவையும் இழந்து விட்டேன். தங்களை நான் இழப்பது சீதையை இழந்த ஒரு துக்கத்தை விட பெரிய துக்கமாக இருக்கிறது. நான் நெருப்பில் விழுந்தாலும் என் துர்பாக்கியம் எல்லாம் சேர்ந்து நெருப்பையும் அணைத்து விடும். கடலில் விழ்ந்தால் என் துர்பாக்கியம் எல்லாம் சேர்ந்து கடலில் உள்ள அனைத்து  நீரும் வற்றிப் போகும். நான் பெரும் பாவி. லட்சுமணா! எங்கே உன்னையும் இழந்து விடுவேனோ என்று பயப்படுகிறேன் என்று சொல்லி ஜடாயுவை கட்டி அணைத்தார்.
 
★நான் சிறிது நேரத்தில் இறந்து விடுவேன். நீ தேடிக் கொண்டு இருக்கும் சீதையை பலவந்தமாக ராவணன் தன்னுடைய மாய ரதத்தில் தூக்கிச் சென்றான். அப்போது ராவணனுடன் நான் சண்டையிட்டு அவனை தடுத்து சீதையை மீட்க முயற்சித்தேன். அவனது தேரோட்டியை கொத்தி கொன்றேன். அவனது தேரையும் உடைத்தேன். அதன் பாகங்களும் இறந்த தேரோட்டியும் அருகில் இருப்பதை பார்.  அந்த ராவணன் சீதையை கவர்ந்து செல்வதை கண்டு நான் அவனை தடுக்க எவ்வளவோ  முயற்சித்தும் தோற்றுவிட்டேன்.
 
★சண்டையிட்டு கொண்டிருந்த
நான் சிறிது களைப்பு அடைந்து இருக்கும் போது அந்த ராவணன் சிவன் கொடுத்த வாளால் என் சிறகுகளையும் கால்களையும் அறுத்துவிட்டு, இங்கிருந்து தப்பித்து ஓடி விட்டான். எதிர்க்க யாரும் இல்லாமல் சீதையை ஆகாய மார்க்கமாக கொண்டு சென்று விட்டான். சிறகு உடைந்த என்னால் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. உன்னிடம் செய்தியை சொல்வதற்காக என் உயிரை பிடித்துக் கொண்டு இருக்கின்றேன் என்று சொல்லி முடித்தான் ஜடாயு. உங்களை என் உயிர் போகும் இந்த தருணத்தில் காண்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தாங்கள் சீதையை தனியே விட்டுவிட்டு எங்கே சென்றீர்கள்.
 
★நீங்கள் சீதையை கண்டீர்களா? அவள் எப்படி இருந்தாள்?. அந்த ராட்சதன் அவளை மிகவும் கொடுமை படுத்தினானா? சீதை மிகவும் துடித்தாளா? என்று கேட்டார்.  ஜடாயு மரணத்தின் இறுதியில் பேச சக்தியின்றி பேச ஆரம்பித்தார். பயப்படாதே, ராமா! சீதைக்கு ஒரு பாதிப்பும் வராது.
நீ மீண்டும் சீதையை அடைந்து பெரு மகிழ்ச்சியை அடைவாய் என்று சொல்லி பேச முடியாமல் தவித்தார்.  இதைக்கேட்ட  ராமர் பெரும் கோபம் கொண்டார். சீதையை வஞ்சகமாக அபகரித்து சென்றதையும், தங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவனை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த விண்ணுலகத்தவரை அழித்து விடுகிறேன் என்றார்.
 
★ஜடாயு, ராமா! ஒரு பெண்ணை காட்டில் தனியாக விட்டுவிட்டு ஒரு மானின் பின் சென்றது உன் தவறு. நீ விண்ணுலகத்தவரை கோபித்துக் கொண்டு ஒரு பயனும் இல்லை. அவர்கள் நீ அரக்கர்களை அழிப்பாய் என உன் உதவியை எதிர்பார்த்து  இருக்கின்றனர்.ஆதலால் நீ அரக்கர் குலத்தை அழித்து உன் மனைவியை காப்பாற்று என்று கூறினார். சரி. “சீதையை கடத்திய அந்த ராவணன் எங்கே சென்றான்?” என்று கேட்டார் ராமர். அதற்கு ஜடாயுவால் விடை கூற முடியவில்லை. அவர் மூச்சு அடங்கியது.
 
★அதைக் கண்ட ராமர் எனது
 “தந்தையை நாட்டில் இழந்தேன்; மற்றொரு தந்தையைக் காட்டில் இழந்தேன். என்னைப் போல அபாக்கியவான் வேறு யாரும் இருக்க முடியாது” எனக் கதறி அழுது தன் தம்பி லட்சுமணனிடம் உலர்ந்த கட்டைகளை கொண்டு வா!. நமது தந்தைக்கு நம்மால் செய்ய முடியாமல் போன கிரியைகளை ஜடாயுவுக்கு செய்வோம் என்றார். இருவரும் ஜடாயுவுக்கு செய்ய வேண்டிய இறுதி கடமைகளை செய்து முடித்தனர். எதிர்பாராத கொடிய சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்ததினால் ராம லட்சுமணர்கள் இருவரும் இயற்கையான தைரியத்தை இழந்து ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டு ராவணன் அபகரித்துச்  சென்ற சீதையை எவ்வாறு மீட்கலாம் என்று பேசிக்கொண்டே காட்டுப் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.
 
★இருள் மிகுந்தது.  பிரிவு என்னும் துயர் ராமரை வாட்டியது. மனைவியை மாற்றான்கொண்டு சென்றதால் ஏற்பட்ட மானமும், ராவணன் மீது கொண்ட சினமும், தந்தை போன்றவராகிய ஜடாயுவின் மரணத்தால் ஏற்பட்ட துயரமும் இவர்களை வாட்டின. இவற்றை மெல்ல மறந்து வாழ வேண்டும் என்ற ஞானமும், தாங்க முடியாத துயரும் மனப் போராட்டமாக உருக்கொண்டன. இரவுப் பொழுதெல்லாம் சிறிதும் தூங்காது பலவாறாக எண்ணித் துயருற்றனர். மாதா  சீதையை நினைத்து மிகவும் வேதனையை அடைந்தார். பொழுது விடிந்தது. ராமரும் லட்மணரும் சீதையை தேடி தெற்கு திசையை நோக்கி பயணித்தனர்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.......................
[6:06 pm, 12/08/2021] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
127 /04-08-2021
 
அயோமுகி...
 
★மாலைப்பொழுதும் வந்து அணுகியது. ராமரும் மற்றும் லட்சுமணனும் ஜடாயு உயிர் நீத்த இடத்தைவிட்டு நீங்கிச் சிவந்த  வானம் நிறைந்த மேகம் தவழும் ஒரு மலையில் தங்கினர். இருள் மிகுந்தது. பிரிவு என்னும் துயர் ராமரை வாட்டியது. மனைவியை மாற்றான் கொண்டு சென்றதால் ஏற்பட்ட மானமும், ராவணன் மீது கொண்ட சினமும், தந்தை போன்றவராகிய ஜடாயுவின் மரணத்தால் ஏற்பட்ட துயரமும் இவர்களை வாட்டின. இவற்றை மெல்ல மறந்து வாழ வேண்டும் என்ற ஞானமும், தாங்க முடியாத துயரும் மனப் போராட்டமாக உருக்கொண்டன.  இரவுப் பொழுதெல்லாம் தூங்காது பலவாறாக எண்ணி மிகுந்த துயருற்றனர்.
 
★இளைய வீரனான லட்சுமணன் ராமனிடம் அடக்கமாக பொன் போன்ற சீதையைத் தேடாமல் அழுதபடி இங்கமர்ந்திருந்தால் போதுமா? வாருங்கள் அண்ணா!    நாம் பல இடங்களிலும் தேடலாம் என்று கூறினான். புகழ்மிக்க ராமனும், அரக்கன் இருக்கும் இடம் கண்டு அறிவோம் என்று கூறி மலைத் தொடரில் வெயில் மிகுந்த காட்டுக்குள் தேடிச் சென்றனர். குன்றுகளையும் ஆறுகளையும் கடந்து பதினெட்டு யோசனை தூரம் நடந்து சென்று கொண்டிருந்தனர். பறவைகள் தங்குகின்ற குளிர்ச்சிமிக்க சோலை ஒன்றில் புகுந்தனர்.
 
★மாலைப்பொழுது மறைந்து இருட்பொழுது வந்து சேர்ந்தது. அங்கு ஒரு  மண்டபத்தில் இருவரும் தங்கினர். “தம்பி! குடிப்பதற்கு நீர் வேண்டும். இங்கு எங்காவது கிடைக்கிறதா என்று பார்த்துக் கொண்டு வா!” என்றார் ராமர். அண்ணனை விட்டு லட்சுமணன் தனியே சென்றான்.எங்குத் தேடினும் நீர் அவனுக்கு கிடைக்கவில்லை. சிங்கம்போல் காட்டில் அவன் திரிந்து கொண்டிருந்தான். அங்கு அவ்வனத்தில் கடினமான இரும்பு போன்ற இருண்ட முகத்தை உடைய அயோமுகி என்னும் அரக்கி இவனைக் கண்டாள். கண்டதும் இவன் மீது விருப்பம் கொண்டாள்.
 
★இவன் “மன்மதனாக அழகாக இருக்கிறான்” என்று தன்மனதில் நினைத்தாள். தன் செருக்கையும் கொடுமையையும் தணித்துக் கொண்டாள். “இவனை நான் கட்டி அணைத்துக் கொள்வேன். மறுத்தால் அடித்துக்கொல்வேன்” என்று ஒரு முடிவுக்கு வந்தாள்.
 அவன் தன்னை ஏற்க மறுத்தால் அவனைத் துக்கிச் செல்வது என்ற முடிவுக்கு வந்தாள். பின்பு லட்சுமணனைச் சந்தித்தாள், நெருங்கி கட்டி அணைந்தாள்.
 “இருட்டில் முரட்டுத் தனமாக நடக்கும் நீ யார்?” என்று அவன் கேட்டான். நான் அயோமுகி. இந்த வனத்தின் அரசி.நான் உன்னைத் தழுவ விருப்பம் கொண்டேன். உன்னை அடையாவிட்டால் நான் உயிர்விடுவது உறுதி என்றாள்.
 
★இவளும் ஒரு சூர்ப்பனகை   என்பதை அறிந்தான் இளவல் லட்சுமணன். நீ இங்கு நின்றால் உன் மூக்கும் செவியும் அறுபடும்” என்று அதட்டிப் பேசினான்.
அவள் சிறிதும் அஞ்சவில்லை. கோபமும் கொள்ள வில்லை. லட்சுமணனை வாரி எடுத்துக் கொண்டு வான்வழியே விரைந்து சென்றாள். தன் குகையில் அவனை வைத்து அவன் சினம் தணிந்ததும் அவனுடன் சேர்ந்து  இன்பமாக வாழலாம் என்று நினைத்தாள். லட்சுமணன் சீற்றம் மிகக் கொண்டான். அவளிடமிருந்து விடுபடுவது எப்படி? என்று எண்ணிக் கொண்டிருந்தான்.
 
★லட்சுமணனைப் பிரிந்த ராமர் அடைந்த  துயர் இரு மடங்கு ஆயிற்று. சீதையைப் பிரிந்த துயர் ஒருபுறம், லட்சுமணனை இப்பொழுது பிரிந்த துயர் மற்றொரு புறம். குடிக்க நீரைக் கொண்டு வரச் சென்றவனை யாரோ ஆபத்தில் சிக்க வைத்து இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். ஒருவேளை
 சீதையைக் கவர்ந்து சென்ற ராவணன் இவனையும் கடத்திச் சென்று விட்டானோ, இல்லை கொன்று தீர்ந்தானோ?, என்ன என்று தெரியவில்லையே. அந்த சீதையைக் காவல் செய்வதில் தவறுகள்  பெற்றமைக்கு மனம் வருந்தித் தானே தனது உயிர் துறந்தானோ? என்று பலவாறு நினைத்தார்.
 
★கண்ணை இழந்தவன்போல் கதறி அழுதார் ராமர். உயிர் போன்று இருந்தாய். என்னைத் தவிக்கவிட்டுச் சென்றது பொருத்தமா?” என்று வருத்தமாக பிரலாபித்தார். அரசு துறந்த போதும் தனி ஒருவனாக நீ என்னைப் பின் தொடர்ந்தாய். என் துக்கத்தில் பங்கு கொண்டு என்னோடு வந்தாய். அத்தகைய நீ என்னை விட்டுப்பிரிந்து போவது தகுமா?” என்று கூறி வருந்தினார். விதியின் செயல் இதுவாக இருக்குமானால் அடுத்த பிறவியில் உனக்கு நான் தம்பியாகப் பிறப்பது என் கடமை ஆயிற்று, என்று கூறித் தன் உயிரைப் போக்கிக் கொள்ள முடிவு செய்தார்.
 
★அரக்கி அயோமுகியின் மாயையில் அகப் பட்டிருந்த வட்சுமணன் அம்மாயையில் இருந்து  விடுபட்டுத் தெளிவு பெற்றான். அவள் மூக்கையும், செவிகளையும் மற்றும் உதடுகளையும்  அறுத்து அங்கக் குறைவினை ஏற்படுத்தினான். அவள் இட்ட கூக்குரல் அக்காடு முழுவதும் எதிரொலித்தது. அது ராமர் செவிக்கும் எட்டியது. இது ஒர் அரக்கியின் குரலாகத்தான் இருக்க முடியும்” என்று ராமர் ஓரளவு அனுமானித்தார்.
தனது கையில் அக்னிஅஸ்திரம் எடுத்துக் கொண்டு ஒலி வரும் திக்கு நோக்கிப் புறப்பட்டார்.
 
★புயற் காற்றைவிட வேகமாய் லட்சுமணன் இருக்குமிடத்தை அடைந்தார். லட்சுமணன் ராமனைப் பார்த்து “அண்ணா! வருந்தாதீர்கள்” என்று கூறினான். இழந்த கண்ணொளி மீண்டும் பெற்றது போல் ராமர் மகிழ்ச்சி அடைந்தார். பிரிந்த கன்றை மீண்டும் அடைந்த பசுவாய் விளங்கினார். குடிக்க நீர் கொண்டுவரச் சென்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சிகள் யாவை? என்று கேட்டார் ராமர். அயோமுகி என்னும் ஓர் அரக்கி சூர்பனகை போலவே என்னிடம் தவறாக நடக்க முயற்சித்தாள். ஆகவே அந்த  அயோமுகி என்னும் அரக்கியின் மூக்கையும், செவியையும், உதடுகளையும் அறுத்து முடித்தேன். அவள் கூக்குரல் இட்டாள். அதனால் தப்ப விட்டேன்  என்றான்.
 உயிரைப் போக்காமல் விட்டது உத்தமம், அதுதான் அறநெறி என்று ராமர் அறிவித்தார்.
 
★துன்பம் நீங்கி அமைதி பெற்று வருணனை நினைத்து மந்திரம் கூறினார் ராமர். அவன் மழை நீரைத் தர அதனைக் குடித்து இருவரும் நீர் வேட்கை தணித்தனர். அந்த மலையில் மணல் பரப்பில் லட்சுமணன் அமைத்துக் கொடுத்த மரப் படுக்கையில் ராமன் படுத்துக் கொண்டார். உணவும், உறக்கமும் இன்றி வேதனைப் பட்டார், சீதையின் நினைவு அவரை வாட்டித் துயில் இழக்கச் செய்தது.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.......................
[6:06 pm, 12/08/2021] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
128 /05-08-2021
 
கவந்தன்...
 
★சீதையைத் தேடி இருவரும் விடியற்காலையில் விரைவாய்ச் சென்றனர்.இவர்கள் வெகுதூரம் சென்று கவந்தன் என்னும் அரக்கன் இருக்கும் வனத்தை அடைந்தனர். நண்பகல் வந்தது.
கவந்தன் என்ற அந்த ராட்சதன் கோர உருவத்துடன் இருந்தான். அவனுக்கு தலையும் இல்லை கால்களும் இல்லை. மார்பில் ஒரு கண்ணும் பெரிய வயிறும் அதில் வாயும் மிக நீண்ட இரு கைகளுடன் அகோரமான ஒரு  உருவத்துடன்  இருந்தான். அந்த
கவந்தனை தேவராஜன் ஆகிய இந்திரன் தன்னுடைய மிகுந்த சக்தி வாய்ந்த வஜ்ஜாயுதத்தால் அடித்ததால் அவனின் தலை உடம்புக்குள் புகுந்து முண்டமாக மாறினான்.
 
★கவந்தன் வனத்தில் வாழும் விலங்களையும், மற்றுமுள்ள முனிவர்களையும் துன்புறுத்தி தீங்கு செய்து வந்தான். அந்த கவந்தனின் கையில் யாராவது அகப்பட்டால் உடனே அவன் தின்றுவிடுவான். கவந்தன் ஒரு தனிப்பிறவியாய் இருந்தான். இருந்த இடத்தில் இருந்தே எந்த  உயிரையும் எட்டி வளைத்துப் பிடிக்கும் கரங்களை உடையவன் அவன், எறும்பு முதல் யானை வரை எல்லா உயிர்களும் அவன் கையில் அகப்பட்டன. காட்டில் வாழும் உயிர்ப் பிராணிகள் அனைத்தும் அஞ்சி நடுங்கின.
 
★அவன் தனது கைகளை நீட்டி அள்ளினால் வனத்தில் உள்ள விலங்குகள், முனிவர்கள் எல்லாம் கையில் அகப்படுவர். அந்த அளவுக்கு அவனின் கை நீளமானது. தன்னுடைய இரண்டு கைகளையும் நீட்டி கையில் கிடைக்கும் காட்டு விலங்குகளை தின்று உயிர் வாழ்ந்து கொண்டு இருந்தான் அந்த ராட்சதன். எல்லா திக்குகளிலும் உள்ள செடி கொடி மரம் மற்றும் விலங்குகள் ஆகிய அனைத்தையும் தனது  கையால் வளைத்து அருகில் இழுக்கும்போது அந்த  நீண்ட கரங்களுக்கு இடையே ராமரும் லட்சுமணனும் அகப்பட்டுக் கொண்டனர்.இது அவர்களுக்கு புதுமையாய் இருந்தது.
 
★ “இது அரக்கர் செயலாகத்தான் இருக்க வேண்டும். அதனால், சீதை மிக அண்மையில்தான் இருக்க வேண்டும்” என்று ராமர் கூறினார்.இல்லை!. இது அரக்கர் செயலாக இருக்காது. அரக்கர் செயலாக இருந்தால்,  அவர்கள் முரசும் சங்கும் முழங்கி இருக்க  வேண்டுமே என்று கூறி அதை மறுத்தான் லட்சுமணன். “நம்மைப் பிணைத்திருப்பவை மந்தர மலையைச் சுற்றிய வாசுகி என்ற பாம்பாகத்தான் இருக்க வேண்டும்” என்று அவன் கூறினான். இருவருமே இரண்டு யோசனை தூரம் நெருங்கிச் சென்று அவ்வரக்கனை நேருக்கு நேர் சந்தித்தனர்.
 
★“இவனிடமிருந்து உயிர் தப்ப முடியாது” என்று ராமர் முடிவு செய்தார். அதற்காகத் தன்னை ஆளாக்கிக் கொண்டார். தம்பி லட்சுமணனை மட்டும் தப்பித்துச் செல்லும்படி வேண்டினார். நான் அழகு சீதையைப் பிரிந்தேன். ஜடாயுவை இழந்தேன். அதனால்  கொடும்பழிக்கு நான் உள்ளாகி விட்டேன்.  இனியும் உயிர் வாழ்வது தக்கதன்று.  இந்தப் பூதத்துக்கு உணவு ஆவதுதான் உத்தமம்.  எந்த முகத்தை வைத்து கொண்டு ஜனகர் முகத்தைப் பார்க்க முடியும்? அயோத்திக்கு திரும்பச் சென்றால், ஆட்சியைப் பிடித்து அரசாள மிகுந்த ஆசை உடையவன் என்று பேசுவர். மனைவியைக் காக்கத் சிறிதும் திறனில்லாத இவன், வாழ்ந்து என்ன பயன்? மானங்கெட்டவன். என்று என்னை பேசுவதற்கு முன் உயிர்விட்டால் என் பழி தீரும் என்று கூறினார். லட்சுமணன் அதை மறுத்து ஆறுதல் கூறி தேற்றினான்.
 
★அப்போது கவந்தன், உங்களை கடவுளே எனக்கு உணவாக அனுப்பியிருக்கிறார். உயிர் மேல் ஆசை வைக்க வேண்டாம் என மிரட்டினான். ராமர் சீதையின் நினைவால் மிகவும் மனம் வருந்தி இருந்தார். ராமர் தம்பி லட்சுமணனிடம், தம்பி! எனக்கு ஏற்பட்ட துயரங்கள் போதும். இனியும் நான் உயிர் வாழ விரும்பவில்லை. என்னை இவ்வரக்கனிடம் விட்டுவிட்டு நீ தப்பிச்செல் என்றார். அதற்கு லட்சுமணன், அண்ணா! நாம் வனம் வரும் முன் அன்னை சுமித்திரை என்னிடம், ராமனுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அவனுக்கு முன் நீ உனது உயிர் துறந்துவிடு என்றார். ஆனால் இப்பொழுது நீங்கள் உயிர் துறந்தால், நான் எவ்வாறு நாடு திரும்ப முடியும். இறந்தால் இருவரும் இறப்போம் என்றார்.
 
★அண்ணா! துன்பம் வரும்போது அதனை எதிர்க்க வேண்டும். அது தான் வீரம். மேலும் போருக்கு அஞ்சி உயிர் விட்டாய், என்ற பெரும்பழி உன்னைச் சாராதா? இந்த பூதம் என்ன? இதைவிட அஞ்சத்தக்க விலங்கு வந்தாலும் நம் வாள் முன் எம்மாத்திரம்? துணிந்து எதிர்த்தால் இது செத்து மடிவது உறுதி என்று கூறிய வண்ணம் லட்சுமணன் முன்னேறினான். ராமனுக்குப் புதிய உற்சாகம் தோன்றியது.
அந்த சமயத்தில  ராமர் மற்றும் லட்சுமணன் இருவரையும் இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டான் ராட்சதன் கவந்தன்.
அவன் ராம லட்சுமணர்களை விழுங்க முன் வந்தான்
 
★லட்சுமணர், அண்ணா! நாம் இவனைக் கொல்லாமல் இவனுடைய தோள்களை மட்டும் வெட்டிவிடுவோம் என்றார். அவர்கள் அந்த கவந்தனுடைய இரண்டு தோள்களை வெட்டித் தள்ளினார்கள். கவந்தன் கீழே விழுந்தான். அருவி பொழியும் மலைபோல் குருதி கொட்டி நின்றது.ராமரிடம் ராட்சதன் பேச ஆரம்பித்தான். எனது பெயர் கவந்தன். பிரம்மாவை குறிந்து கடுமையான தவம் இருந்து நீண்ட ஆயுளைப் பெற்றேன். நீண்ட ஆயுள் கிடைத்து விட்டது, இனி யாராலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்ற மிகுந்த கர்வத்தில் இந்திரனை போருக்கு அழைத்தேன்.
 
★இந்திரனின் ஆயுதத்தால் எனது தலையும் கால்களும் உடலுக்குள் சென்று விட்டது. நீண்ட ஆயுள் பெற்ற நான் வாய் இல்லாமல் சாப்பிடாமல் எப்படி வாழ்வேன் என்று புலம்பினேன். கால்கள் இல்லாததினால் நீண்ட கைகளையும் எனது வயிற்றுப் பகுதியில் வாயும் கொடுத்து இதே உடலுடன் இருப்பாயாக!என்று இந்திரன் என்னை சபித்து விட்டான். இந்திரனிடம் என் சாப விமோசனம் கேட்டு கதறி அழுது முறையிட்டேன். ஒரு நாள் ராமர் லட்சுமணன் இருவரும் ஒன்று சேர்ந்து வந்து உனக்கு சாப விமோசனம் கொடுப்பார்கள் என்று கூறினார்.
 
★தற்போது எனது கைகளை  நீங்கள் வெட்டியதும் எனக்கு பழைய நினைவுகள் வந்து விட்டது. நீங்கள் தான் ராம லட்சுமணன் என்று என் மனதில் தோன்றுகிறது. எனது உடலை நீங்கள் எரித்து விடுங்கள். நான் எனது பழைய உடலெடுத்து தேவலோகம் சென்று விடுவேன் என்று கேட்டுக்கொண்டான்.
ராம லட்சுமணன் இருவரும் காட்டில் விறகுகளை குவித்து அந்த ராட்சத உடலை எரித்து விட்டனர். பிறகு அவன் சாபவிமோசனம் பெற்று அந்த நெருப்பில் இருந்து மங்கள ரூபத்துடன்  வெளியே வந்து
சூரிய ஒளி போல் விண்ணில் தோன்றி வாழ்வளித்த ராமரை வணங்கினான்..
 
★தங்களுக்கு என்னுடைய கோடி வணக்கங்கள். நீங்கள் சீதையை தேடிக் கொண்டிருக்கின்றீர்கள்.
நான் சீதையை கண்டுபிடிக்க வழியை கூறுகிறேன். நீங்கள் தனியாக சீதையை கண்டுபிடிக்க இயலாது. முதலில் பம்பா சரஸ் நதிக்கரைக்கு அருகில் இருக்கும் ரிஷ்யமுக மலையில் வசித்து வரும் சுக்ரிவன் என்ற வன ராஜாவை சந்தியுங்கள். அவர் தனது அண்ணன் வாலியால் ராஜ்யத்தில் இருந்து துரத்தப் பட்டு காட்டில் வாழ்ந்து கொண்டு வருகிறார். அவரை சந்தித்து அவருடைய நட்பை பெற்றுக் கொள்ளுங்கள். தங்களுக்கு சுக்ரீவன் உதவி புரிவார்.
 
★சுக்ரீவனின் மனைவியை வாலி கவர்ந்து சென்றுள்ளான். நீங்கள் சுக்ரீவனின் மனைவியை மீட்டு சுக்ரீவனிடம் நட்புகொள்ளுங்கள்.
அவன்  மிகவும் நல்லவன். அவன் வானரங்களின் ஒரே தலைவன் ஆவான். ராட்சதனிடம் இருந்து சீதையை மீட்க அவர் உங்களுக்கு உதவி செய்வார். நீங்கள் நிச்சயமாக சீதையை மீண்டும் அடைவீர்கள் என்று சொல்லி தேவலோகம் நோக்கி புறப்பட்டுச் சென்றான் கவந்தனாக இருந்த கந்தர்வன். அதன் பிறகு ராமரும் லட்சுமணனும் பம்பா சரஸ் நதி நோக்கி புறப்பட்டுச் சென்றனர்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.......................
[6:06 pm, 12/08/2021] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
129 /06-08-2021
 
கவந்தன்-ஓர் ஆய்வு...
 
★கவந்தன், ராமாயண காவியம் ஆரண்யகாண்டத்தில் வர்ணித்து கூறப்படும், கால்கள், கழுத்து, தலையும் அற்ற முண்டமும், நீண்ட கைகளும், வயிற்றில் ஒற்றைக் கண்ணும், அகண்ட வாயுடன் கூடிய ஒரு ராட்தசன் ஆவான். கவந்தனின் இரண்டு நீண்ட கைகளை ராமன் மற்றும் லட்சுமணன் ஆகிய இருவரும் வெட்டி வீழ்த்தியதால், கவந்தன் முக்தி அடைந்தான்.
 
★கவந்தன் முற்பிறவியில் தனு என்ற பெயரைக் கொண்ட தேவலோக கந்தர்வ இன இசைப் பாடகர் ஆவார். இந்திரனின் சாபத்தால், அறுவறுப்பான தோற்றமும், தலையும், கழுத்தும் அற்ற, கால்கள் மற்றும் தலையற்ற உடலுடன் கூடிய அரக்கனாக தண்டகாரண்யத்தில் ஓரிடத்திலே தங்கி வாழ்ந்து மனிதர்களையும், காட்டில் வாழும் விலங்குகளையும் கொன்று புசித்து வாழ்ந்தான்.  தன் நீண்ட கைகளில் சிக்கிய ராமரைக் கொல்ல முயற்சி செய்து ஆனால் அவரால் வதம் செய்யப்பட்டு
பின்னர் கவந்தன் சாபநிவர்த்தி பெற்று கந்தர்வனாக வடிவு எடுத்து, சுக்கிரீவன் தங்கியுள்ள ரிஷியமுக மலைக்கு சென்று அவனின் நட்பினை பெற்று, ராவணன் கவர்ந்து சென்ற சீதையை கண்டுபிடிக்குமாறு ராம-லட்சுமணர்களுக்கு ஆலோசனை கூறினான்.
 
★ராமாயணம் - கவந்தன் - ஒரு ஆய்வு. கவந்தன் பற்றி சிந்திக்க இருக்கிறோம்.ராம காவியத்தில் ஒவ்வொரு கதா பாத்திரமும் ஏதோ ஒன்றை சொல்லி நிற்கின்றன. பொதுவாகவே அரக்கர்கள் அழிக்கப் படும்போது நிகழ்வது என்ன என்றால், அவர்கள் தங்கள் சாபம் தீர்ந்து, தங்களின் அரக்க உருவத்தை அழித்த அந்த பரம் பொருளை வணங்கி விண்ணுலகு செல்வார்கள். அதற்கு  என்ன அர்த்தம்?
 
★எல்லா மனிதர்களுக்குள்ளும் அரக்க குணம் மிகவும் நிரம்பிக் கிடக்கிறது. அந்த அரக்க குணம் தலை விரித்து ஆடுகிறது. காமம், குரோதம், மதம், மாச்சரியம், பொறாமை, பேராசை என்ற பல அரக்க குணங்கள், அசுர  குணங்கள் தலை விரித்து ஆடுகின்றது. நான் என்ற அந்த உடல் அழியும் போது அவர்களின் உண்மையான தெய்வ வடிவம்  பெறுகிறார்கள்.
 
★அரக்கர்கள் என்றால் ஏதோ  கருப்பா,குண்டா , பெருசா இருப்பார்கள் என்று நினைக்கக்  கூடாது. நாம் தான்  அரக்கர்கள்.
நமக்குள் இருப்பதுதான் அந்த
அரக்க குணம். கவந்தன் என்று ஒரு  அரக்கன்.  அவனிடம் உள்ள கெட்ட குணம் அளவுக்கு அதிகமாக உண்பது. அளவுக்கு அதிகமான எதுவும் அரக்க குணம்தான்.
 
★ராவணனுக்கு காமம் தலைக்கு  ஏறியது. ஆதலால் அரக்கன். கும்பகர்ணன் அதிக தூக்கம். இந்திரஜித் அதிக ஆணவம்.
கவந்தனுக்கு உணவு மேல்  ஆசை.பெருந்தீனி  உண்பவன்.
வாயில் போட்டு, அரைத்து உண்டு, அது வயிற்றிற்கு போவது கூட அதிக நேரம் ஆகும் என்று, அவனுக்கு வாய் வயிற்றிலேயே இருக்குமாம்.
வயிற்றிடை வாயன் என்று பெயர். உணவை எடுத்து அப்படியே வயிற்றிலேயே போட்டுக் கொள்வான். வாய் தான்  வயிற்றில் இருக்கிறதே.
அதிமான உணவு உண்டதால் உடல் பெருத்து, புத்தி மழுங்கி பலப் பல தீய செயல்களை  செய்கிறான்.
 
★ஒரு மனிதனைப் பிரச்னைகள் எவ்வாறு தாக்கும்? அந்தமாதிரி பிரச்னைகளில் ஆட்பட்டவன் எவ்வாறு செயல்படுவான்? பிரச்னைகளில் இருந்து விடுபட, எவ்வாறு செயல்பட வேண்டும்? - என்பவைகளையெல்லாம், நமக்கு வாயால் பாடம் எடுத்து சொல்வதைவிட - ஓர் மனிதனாக வாழ்ந்து காட்டியே பாடம் நடத்தி இருக்கிறார் ராமராக பூஉலகு வந்திருக்கும் பரந்தாமன் . அதன் காரணமாகவே, கவந்தன் எனும் அதிவிசித்திரமான  அரக்கனின் பிடியில் அகப்பட்ட ராமர், ஒரு சாதாரண மனிதனின் துயரத்தை அப்படியே வெளிப்படுத்தினார்.
 
★ஒருவர் துயரத்தில் இருக்கும் போது, அருகில் இருப்பவர் என்ன செய்ய வேண்டும்? இதோ! நமது லட்சுமணன் செய்கிறார்.  “ஒரு பூதம் போய், நம்மைக்  கொன்று  அழிப்பதாவது! இந்த பூதத்தை எல்லாம் ஒரு பொருளாக நாம் மதிக்கலாமா?” என்ற  இளவல் லட்சுமணன், மேலும் ராமருக்கு தைரியமூட்டும் விதத்தில் பேசுகிறார்.“அண்ணா! நம்மை வளைத்துக்  கட்டும் இவனுடைய  கையையும், எல்லாவற்றையும் அள்ளிக் கொட்டிக்கொள்ளும் இந்த வாயையும் வெட்டுகிறேன். பாருங்கள்! துயரத்தை அடியோடு நீக்குங்கள்!” என்று உரைத்தார்  லட்சுமணன்.
 
★இதை மிக அழகான வரிகளில் புலப்படுத்துகிறார் கவி கம்பர்.
         "பிணிக்கும் கையும்                                          
          பெய்பில வாயும்
          பிழையாமல் துணிக்கும்
          வண்ணம் காணுதி
          துன்பம்  துறவென்றான்"
             (கம்பராமாயணம்)
இப்பாடல் வரிகளை வாய்விட்டுச் சொல்லிப் பாருங்கள்! இளவல்
லட்சுமணனின் தைரியம் நமக்கு அப்படியே தெரியும். துறக்க வேண்டியது துயரமே தவிர, நம் உயிரல்ல என்பது லட்சுமணன் வாக்கு.
 
★ விசித்திரமான ஓர் வடிவம் கொண்ட கவந்தனைப் போலவே; கொரோனா எனும் கொடியது எந்த விதமான பேதாபேதமும் பார்க்காமல், அனைவரையும் தன் கொடிய கரங்களால் மடக்கி -ஒடுக்கி-இடுக்கிப் பிடித்து இருக்கிறது. ராம-லட்சுமணர்கள் ஒன்றாகச் சேர்ந்து, கவந்தனை ஒழித்து வெற்றி கண்டதைப் போல, நாம் அனைவரும் ஒற்றுமையாக ஒன்றாக ஒன்றி இணைந்து ‘கொரோனா’ எனும் அந்தக்  கொடிய பூதமாகிய நோயை,  ராம-லட்சுமணர்கள் அருளால் நிச்சயம் வெல்வோம்.
வாருங்கள்!
 
★காப்பியங்கள், காவியங்களில் நிகழ்வுகளை கொஞ்சம் மிகைப் படுத்தி சொல்ல வேண்டியதாக இருக்கும் . நிகழ்வுகளுக்கு பின் இருக்கும்  செய்தியை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
ஏராளமாக கொட்டிக் கிடக்கிறது, அறிவுரைகளும் தத்துவங்களும் ஆன  புதையல் நமது புராண, இதிகாசங்கள் மற்றும் காவியங்களில். வேண்டுமட்டும் அள்ளிக் கொள்வோம்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை....................
[6:06 pm, 12/08/2021] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
130 /07-08-2021
 
சபரி...
 
★நீங்கள் தனியாக சீதையை கண்டுபிடிக்க இயலாது. முதலில் பம்பா சரஸ் நதிக்கரைக்கு அருகில் இருக்கும் ரிஷ்யமுக மலையில் வசித்து வரும் சுக்ரிவன் என்ற வானரங்களின்  ராஜாவை சந்தியுங்கள். அவர் தனது அண்ணன் வாலியால் ராஜ்யத்தில் இருந்து துரத்தப் பட்டு காட்டில் வாழ்ந்து கொண்டு வருகிறார். அவரை சந்தித்து அவருடைய நட்பை பெற்றுக் கொள்ளுங்கள். தங்களுக்கு சுக்ரீவன் உதவி புரிவார் எனக் கூறிவிட்டு பின்னர் அங்கிருந்து மறைந்தார் கவந்தனாக இருந்த கந்தர்வன்.
 
★பிறகு இராம இலட்சுமணர் பல காடுகளையும், மலைகளையும் தாண்டி சென்று மதங்க மகரிஷி அவர்களின் ஆஸ்ரம எல்லைக்கு அருகில் வந்து சேர்ந்தார்கள். அந்த சமயத்தில் யாரோ ஒருவர் ராம நாம ஸ்மரணை செய்து கொண்டிருந்த ஒலியை தங்கள் செவிகளில் கேட்டார்கள். “ராம்... ராம்... ராம்... ராம்... ராம்... ராம்...”
வனமெங்கும் பரவியது அந்த நாமம். மரங்கள் அசைவற்று நின்றன. காற்று குளுமையாக வீசியது. பறவைகள் பறப்பதை நிறுத்தி விட்டு கிளைகளில் அமர்ந்து, ராம நாமத்தை செவி குளிரக் கேட்டன.
 
★குருதிச் சாக்கடையாக ஓடும் பம்பா நதியும் கூட, நிலைத்து நின்று சபரியின் ராம நாமத்தை கேட்டு ஆனந்தம் அடைந்தது. மலைகளின் உச்சிகள் அந்த நாமத்தை விண்ணுலகத்திற்கு எடுத்துச் சென்றன. காற்றில் அலை அலையாகப் பரவிய ராம நாமம், அந்த வனப் பகுதி எங்கும் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
சிறிது தூரத்தில் இளவலுடன் வந்து கொண்டிருந்த ஸ்ரீராமர் செவிகளிலும் அந்த நாமம் விழுந்தது. அவர் புன்னகையுடன் ஒரு சில நொடிகள் அந்த நாமத்தை உள்வாங்கினார்.
 
★ராமன் அசைவற்று நிற்பதைக் கண்டு,   “என்ன அண்ணா?” என்றபடி லட்சுமணன் மிகுந்த பரபரப்புடன் அருகில் வந்தான்.
“அருகில் மதங்க முனிவரின் ஆஸ்ரமம் உள்ளது. அங்கு நாம் போகலாம்.” ராமன் சொல்லுக்கு எதிர்ப் பதம் என்ன இருக்கிறது.
 
★இருவரும் அந்த ஆஸ்ரமம் நோக்கி நடந்தனர்.மகான்  மதங்க முனிவர் இல்லாத போதும், அந்த ஆஸ்ரமம் தூய்மையாகவே இருந்தது. சுற்றிலும் மரங்கள், வண்ண மலர்த் தோட்டங்கள். அழகிய மலர்கள் பூத்துக் குலுங்கி அந்த இடம் எங்கும் நறுமணம் பரவி இருந்தது. ஒரு வேப்ப மரத்தின் கீழ், இருந்த ஒரு பெரிய கற்பாறையில் மாதா சபரி அமர்ந்திருந்தார். தொலைவில் ஆஸ்ரமத்தில்  முனிவர்கள், பெண்கள் தங்களின்  பணியில் ஆழ்ந்திருக்க, சபரி அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து விட்டு தனிமையில் வந்து அமைதியாக ராம நாமத்தை ஜெபிக்க ஆரம்பித்திருந்தார்
 
★சபரி. முதிர்ந்த, பழுத்த பழம் போன்ற உருவம். தலையின் முன்புறம் முடி உதிர்ந்து, நரைத்து வெள்ளிச் சொம்பாக இருந்தது.
அந்த முகம் முழுதும் பரவியிருந்த சாந்தம், அமைதி அவருக்கு ஒரு தெய்வீகமான  தோற்றத்தைத் தந்திருந்தது. பெண் துறவி போன்ற தோற்றம். உடல் ஆசை, உருவத்தின் மீதான பற்று, வாழ்வியல் பொருட்கள் மீதான ஈர்ப்பு எல்லாம் அகன்று ராம நாம ஜெபத்திலேயே தன்னை முழுதாக ஆட்படுத்தியிருந்தார்.
‘வருவான், ராமன் தனக்கு அனுக்கிரகம் செய்ய வருவான்’ என்ற ஒன்று மட்டுமே சபரியின் மனதில் ஆழமாக வேரூன்றி இருந்தது.
 
★வேட்டுவக் குலத்தில் பிறந்த சபரியின் மனதில் கருணையும், அன்பும் நிறைந்திருந்தது. தன் திருமணத்திற்காக ஏராளமான மிருகங்களைக் கொன்று உணவு சமைப்பதை பார்க்க சிறிதும் பொறுக்காமல், “எனக்கு இந்த திருமணமே வேண்டாம்” என்று வீட்டை விட்டு வெளியேறியவர். மதங்க முனிவரின் ஆசிரமத்தில் தஞ்சம் அடைந்து, அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொண்டு அங்கேயே தங்கி விட்டார்.
 
★மதங்க முனிவர், சபரிக்கு பல நல்ல உபதேசங்களை செய்தார். தன் பிரதம சீடர்களுடன் அவர் விண்ணுலகம் செல்லும்போது, “அம்மா சபரி.! பூவுலக பாரம் தீர்க்க மகாவிஷ்ணு ஸ்ரீராமனாக அவதாரம் செய்யப் போகிறார். அவர் சீதையைத் தேடிச் செல்லும் வழியில் இங்கு வருவார். நீ அவருக்கு வேண்டிய அனைத்து உதவிகளைச் செய்து, அதன்பின் விண்ணுலகம் வரலாம்” என்று கூறியிருந்தார். அது முதலே, “என்று வருவான் எனது ராமன். கண்ணின் கருமணி போன்ற அவனை என்று கண்டு பிறவிப் பயன் எய்துவேன்” என மனம் ஏங்கியவளாக, ராமநாமத்தை ஜெபித்தபடி நாட்களைக் கழிக்கத் தொடங்கியிருந்தார் சபரி.
 
★அவர் இங்கு இருப்பதை சில முனிவர்கள் விரும்பவில்லை. தாழ்த்தப்பட்ட இனத்துப் பெண், அங்கு இருப்பதை வெறுத்தனர். அதில் ஒரு முனிவர் பம்பா நதியில் குளித்து விட்டு வரும் போது, ஆசிரமத்துக்கு நீர் எடுக்க வந்த சபரியின் கை தவறுதலாக அவர் மேல் பட்டுவிட்டது. உடனே
வெகுண்ட முனிவர் அவளை வெகுவாகக் கடிந்து கொண்டார். தூற்றினார். ‘மீண்டும் ஆற்றில் இறங்கி குளித்தால்தான் தீட்டு போகும்’ என்று பம்பா நதியில் இறங்கினார். அந்த நிமிடம் பம்பா நதி, குருதிச் சாக்கடையாக மாறி, அதில்  புழுக்கள் நெளிய ஆரம்பித்து விட்டது. இன்று வரை அதை யாரும் பயன்படுத்துவது இல்லை.
 
★சபரி ‘அனைத்தும் ஶ்ரீராமன் வருகையால் மாறும்’ என்று காத்திருந்தார். அவரின் அந்த காத்திருப்புக்கு பலன் கிடைத்து விட்டது. இதோ ஶ்ரீராமன், அவர் முன்பாக நின்று காட்சியளித்துக் கொண்டிருந்தார். ஆனால் அந்த சபரிக்கு தான் வார்த்தைகளே வரவில்லை. ராமனை  நேரில்  கண்டவுடன் பேச்சு மறந்து, பரவசத்தில் கண்ணீர் வழிய, விரல்கள் நடுங்க “ரா.. ராம்.. மா..” என்று குழறியது. தள்ளாடியபடி எங்கோ ஓடினார், ஆனால் அது எதற்காக என்பது மறந்து போய் மீண்டும் திரும்பி வந்தார். அந்த அழகான ஸ்ரீராமனின் முகத்தை பார்த்தபடியே தனது மெய்மறந்து நின்றார். மலர்களை அள்ளி, அள்ளி, ராம-லட்சுமணர்கள் மீது வீசினார்.
 
★காய், கனிகள், பழங்கள் என்று அனைத்தையும் கொண்டு வந்து, அதைத் தான் தின்று பார்த்து, ருசியானதை மட்டும் ராமனுக்குத் தந்தார். ஸ்ரீராமன் அதில் இருந்த எச்சிலைப் பார்க்கவில்லை.அவர்
அந்த  அன்பைதான் பார்த்தார். ஆர்வத்தோடு அந்த மூதாட்டி தந்ததை விரும்பி உண்டார்.
“தாயே,உனக்கு என்ன வேண்டும் கேள்.” என சபரியிடம் அன்புடன் கேட்டார். “முதற்பொருளே!, முழுப் பொருளே.!. உன்னைச் சந்தித்த பாக்கியத்தை விட வேறு என்ன வேண்டும்?” - மனம் நெகிழப் பேசினார் சபரி. “இல்லை தாயே!. உன் இணையில்லா அன்புக்கு நான் பிரதி செய்ய வேண்டும். ஏதாவது கேள்.”
 
★சபரி தயங்கியபடி, “இறைவா, இந்த பம்பா நதி, குருதி நிறைந்த  சாக்கடையாக இருக்கிறது. இதை நீக்க வேண்டும்.இந்த நதி ஆஸ்ரமத்து முனிவர்களுக்கு பயன்படும்படி தூய்மையான நதியாக அது மாற வேண்டும்.” சபரியின் வார்த்தையின் பம்பா நதியின் நிலை குறித்த வருத்தம் வெளிப்பட்டது. “தாயே, இதற்கு நான் தேவையில்லை. தாங்களே இதில் இறங்குங்கள். உங்களது பாதம் அந்த நீரில் பட்டாலே போதும், நீரின் மாசு நீங்கிவிடும். மனிதரில் ஜாதியால் உயர்வு, தாழ்வு இல்லை. ஒருவரை ஜாதியைக் கொண்டு கீழ்மைப் படுத்தக்கூடாது. தங்களை விட தூய்மையானவர் இங்கு யார் இருக்கிறார்?”
 
★ராமன் வற்புறுத்த “ராமா, ராமா” என்று உச்சரித்தபடி சபரி அந்த ஆற்றில் இறங்கினார். அவரின் பாதம்பட்ட அந்த நொடி, நதி தூய்மையானது. குருதி மற்றும்  புழுக்கள் மறைந்து, வெள்ளியை உருக்கி விட்டதுபோல் ஓடியது பம்பா நதி. “ராமா உன்னுடைய  மகத்துவம்தான் எத்தகையது?” வியந்து போற்றினார் சபரி.
“இது என் மகத்துவம் இல்லை தாயே. உங்களுடைய ஆழ்ந்த பக்தி, நம்பிக்கை, பொறுமை, இவையே காரணம். இதுநாள் வரை தங்களைத் தூற்றிய அந்த முனிவர்களை நீங்கள் கடிந்து கொள்ளவில்லை. இந்த நதி அவர்களுக்கெல்லாம்  பயன்பட வேண்டும் என்று மனதார நீங்கள் விரும்பினீர்கள். ஜாதியை விட, நல்ல மனமே உயர்ந்தது.”
 
★பரவசத்துடன் ராமனை கையெடுத்துக் கும்பிட்டார் சபரி.
“தாயே, என் மனைவி சீதையை அரக்கன் ஒருவன் கவர்ந்து சென்று விட்டான். அவளைத் தேடிக் கொண்டு வரும் வழியில் கவந்தனின் வதம் நிகழ்ந்தது. அவன்தான், ‘மதங்க முனிவரின் ஆஸ்ரமத்தில் சபரி அல்லும் பகலும் உங்கள்  நாமத்தையே ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். சீதையைத் தேட உங்களுக்குத் துணை தேவை. எனவே அவளை சந்தியுங்கள்’என்றான். அதன்படி தங்கள் தரிசனம் கிடைத்து விட்டது”
 
★ராமனின் பணிவான பேச்சில் மகிழ்ந்த சபரி, கிஷ்கிந்தைக்குச் செல்லும் வழியைக் கூறியதுடன், அங்கிருக்கும் சுக்ரீவனுடன் நட்பு கொள்ளும் வழிமுறைகளையும், பயணத்திற்குரிய வழிகளையும் கூறினார். ஒரு நல்லாசிரியன் கூறுவதைக் கேட்கும் மாணவன் போல் ராமன் அதைக் காது கொடுத்துக் கேட்டான். ராமனின் தரிசனம் பெற்ற மகிழ்ச்சியில் சபரி இந்த உலக வாழ்வை இத்துடன் உதிர்க்க நினைத்தார். பல்லாண்டுகள் ராம நாமத்தைச் ஜெபித்து யோகப் பயிற்சி பெற்ற சபரி, அந்த நெறியின் பயனால் யோகக் கனல் மூட்டி, அதில் தன் உடலைத் துறந்து விஷ்ணுவின் வைகுண்ட லோகம் சென்றார்..
 
★“தாயே” என்று ராமனால் அழைக்கப்பட்ட சிறப்புக்குரியவர் சபரி. ஜாதியால் உயர்வு இல்லை என்று ராமனால் மிக உயர்வாக போற்றப்பட்டவர். அவர் இருந்த மலையே ‘சபரிமலை’ என்று அழைக்கப்படுகிறது. அன்பான, தூய்மையான, எதிர்பார்ப்பு இல்லாத பக்திக்கு உதாரணம் சபரி. அதன்பிறகு  ராமரும் லட்சுமணரும் சுக்ரீவனை காண சபரி காண்பித்த வழியை நோக்கி பயணித்தனர்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை...................
[6:06 pm, 12/08/2021] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
131 /09-08-2021
 
ராமர் ரிஷ்யமுக
பர்வதம் அடைதல்...
 
★ராமரும் லட்சுமணரும் வானர அரசன் சுக்ரீவனை காண சபரி காண்பித்த வழியை நோக்கி பயணித்தனர். செல்லும் வழியில்  நதிகள்,  மலைகள், காடுகள் எனப் பலவற்றைக் கடந்து சென்றனர். பிறகு அவர்கள் பம்பை நதியை சென்று அடைந்தனர். பம்பை நதியின் அழகையும், நீர் வளத்தையும், நில வளத்தையும் பார்த்த உடன் ராமருக்கு சீதையின் நினைவு வந்தது. அவர்கள் பம்பையில் நீராடிவிட்டு இறைவனை வழிப்பட்டு, பிறகு சோலையில் ஓர் இடத்தில் தங்கினார்கள்.
 
★ராமர் லட்சுமணரிடம், தம்பி! சீதை இங்கு இருந்தால் பம்பை நதியின் அழகை கண்டு மிகவும் ரசித்திருப்பாள். ஆனால் இன்று அவள் என்னை நினைத்து மிகவும் வருந்தி கொண்டு இருப்பாள் என்றார். இதற்கு லட்சுமணர், அன்னை தங்களை நினைக்க மாட்டார் என்றார். இதைக் கேட்ட ராமருக்கு மிக்க அதிர்ச்சி உண்டானது. தம்பி! உன் பதில் வித்தியாசமாக உள்ளது. கற்புடைய பெண்கள் தங்கள் கணவரை எப்போதும் நினைத்துக் கொண்டுதான் இருப்பார்கள். அதேபோல் சீதையும் என்னை நினைத்துக் கொண்டு இருப்பாள் தானே? என்றார்.
 
★அதற்கு லட்சுமணர், கற்புடைய பெண்கள் நிச்சயம் தங்கள் கணவரை பிரியும். போது, மனதில் நினைத்துக் கொண்டு இருப்பார்கள். ஆனால் அன்னை தங்களை மறந்தால் தானே நினைப்பார்கள். அன்னை தங்களை ஒரு நொடி கூட மறக்க மாட்டார்கள். ஆதலால் தான் தங்களை நினைக்க மாட்டார்கள் என்றேன் என்றார். தன் தம்பி லட்சுமணனின் இந்தப்  பேச்சு திறமையைக் கண்டு ராமர் வியந்து போனார். ராமர் மறுபடியும் சீதையை நினைத்து புலம்பினார். சுக்ரீவன் எங்கு உள்ளானோ? அவனை நாம் எப்படி கண்டுபிடிப்பது? சீதை எத்தகைய துன்பத்தை அனுபவித்துக் கொண்டு இருப்பாளோ? சீதையை நான் எப்பொழுது காண்பேன்? ஒரு பெண்ணின் துயரத்தை போக்க முடியாத எனக்கு எதற்கு வில்? என்று உலக மக்கள் அனைவரும் என்னை தூற்றுவார்களே எனக் கூறி இராமர் புலம்பினார்.
 
★லட்சுமணர் ராமரை சமாதானம் செய்தார். இரவானதால் அந்தச் சோலையிலேயே தங்கினார்கள்.
இரவு சூழ்ந்து, வானில்  சந்திரன் தோன்றினான். சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்த பிறகு ராமர்  தூங்கச் சென்றார். வழக்கம் போல லட்சுமணர் தூங்காமல் காவல் புரிந்தார்.
ராமர் சிறிதும் தூங்காமல் இனிய   சீதையை நினைத்து மனதை வருத்திக் கொண்டு இருந்தார். மறுநாள் பொழுது விடிந்தது. ராம லட்சுமணர் பம்பையில் நீராடி காலை கடமைகளை முடித்தனர். பிறகு வானர ராஜா  சுக்ரீவனை தேடிக் கொண்டு பயணத்தை தொடங்கினர். அவர்கள் சபரி காட்டிய வழியில் வெகுதூரம் நடந்து ரிஷியமுக மலைப்பகுதி தெரியக்  கண்டனர்.
 
★அங்கு தான் சுக்ரீவன் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு அம்மலையை நோக்கி இருவரும் நடந்து சென்றனர்.
ராமரும் லட்சுமணனும் அந்த ரிஷியமுக மலைக்கு வந்து அங்கு சுக்ரீவனை தேடினார்கள். இதனை கண்ட சுக்ரீவனின் ஒற்றர்கள் வில்லும் அம்பும் வைத்துக்  கொண்டு இருவர் வனத்தில் யாரையோ தேடிக் கொண்டு இருக்கின்றார்கள் என்று சுக்ரீவனிடம் செய்தி சொன்னார்கள். இதனை கேட்ட சுக்ரீவனுக்கும் அவனது வானர படைகளுக்கும் பயம் பிடித்துக் கொண்டது. ராம லட்சுமணர் மலையை நோக்கி வருவதைக் கண்ட சுக்ரீவன் தன்னைக் கொல்ல வாலி அனுப்பிய ஆட்களாக இருக்கக்கூடும் என பயந்து நடுங்கினான்.
 
★சுக்ரீவனின் உடன் இருந்த மற்ற வானரங்கள் எல்லாம் பயந்து ஒளிந்துக் கொண்டன.
 ராஜ்யத்தில் இருந்து மோசமாக துரத்தப்பட்ட நாம் வாலியால் வர  முடியாத இந்த மலைப்பகுதியில்   ஒளிந்து கொண்டிருக்கின்றோம். இங்கு நம்மை தேடி வாலி மாறு வேடத்தில் வந்திருப்பானோ அல்லது வாலியின் நண்பர்கள் நம்மை அழிக்க இங்கு தேடிக் கொண்டு வந்திருக்கிறார்களோ என்று சுக்ரீவன் பயந்தான். அவன் படைகள் பயந்து அங்கும் இங்கும் ஓடி ஒளிய இடம் தேடி அலைந்தார்கள். ஆனால் அங்கு சுக்ரீவனுக்கு துணையாக நின்று இருந்த அனுமன் ராம மற்றும் லட்சுமணரைக் கண்டு சிறிதும் பயப்படவில்லை.
 
★அனுமன் சுக்ரீவனுடைய முதல் மந்திரி. அவர் சுக்ரீவனுக்கு தைரியம் சொன்னார். அனுமன் நன்கு கற்றுத் தேர்ந்தவன். அது மட்டுமின்றி அனுமனிடத்தில் ஒரு விஷேச குணமும் உண்டு. தன் உணர்வினால் எதிர்நோக்கி வருபவர் யார்? எத்தகையவர்? என்பதை அறியும் ஆற்றல் உடையவர். வந்திருக்கும் இருவரை பற்றிய செய்தியை கேட்டால் அவர்கள் வாலியோ அவனது நண்பர்களோ இல்லை என்று எண்ணுகிறேன். அதனால் நாம் பயப்பட வேண்டியதில்லை. நான் சென்று அவர்களை பற்றிய தகவல்களை அவர்களிடமே கேட்டு தெரிந்து கொண்டு வருகிறேன் என்றார்.
 
★அனுமனிடமிருந்து வாலியோ அவன் நண்பர்களோ நிச்சயம்  வரவில்லை என்ற வார்த்தையை கேட்ட சுக்ரீவன் மிகவும் மகிழ்சி அடைந்தான். அனுமா!  மிகவும் சாமர்தியமாக அவர்களை பற்றிய உண்மையை அறிந்து கொண்டு வா. அவர்கள் அங்கும் இங்கும் அலைந்து தேடுவதைப் பார்த்தால் சிறிது பயமாகத்தான்  இருக்கிறது. ஜாக்கிரதையாக சென்று வா!  என்று அனுப்பி வைத்தார்.அனுமன் சுக்ரீவனிடம், நீ பயப்படாமல் இங்கேயே ஒளிந்துக் கொள். நான் சென்று, வருபவர் யார் என்பதை அறிந்துக் கொண்டு வருகிறேன் என்று கூறிவிட்டு மரத்தின் பின் மறைந்து கொண்டு ராமனையும்  லட்சுமணரையும்  உற்று நோக்கினான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை.......................
[6:06 pm, 12/08/2021] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
132 /10-08-2021
 
சொல்லின் திறமை...
 
★ராமர் இருக்கும் இடத்திற்கு அனுமன் ஒரு பிராமண வடிவம் எடுத்து சென்றார். தூரத்தில் ராமரைக் கண்டதும் அனுமனின் உள்ளத்தில் ஒரு புத்துணர்ச்சி உண்டாகியது. ராமரின் அருகில் வந்து அவரின் முகத்தைப் பார்த்ததும் அனுமன் பரவச நிலையை அடைந்தார். ஆஹா!
இவர்களை பார்த்தால் தேவர்கள் போல் தெரிகிறார்கள். இவர்கள் யார் என்று என்னால் எளிதாக கண்டு பிடிக்க முடியவில்லையே. ஆனால் இவர்களின் முகங்களை பார்த்தால் ஏதோ மிகப்பெரிய பொருளை தொலைத்தது போல் தெரிகிறதே. தொலைத்த அந்த பொருளை தேடி வருபவர்கள் போல் தெரிகிறது.
 
★இவர்கள் தர்ம நெறியில் நடப்பவர்கள் போல் தெரிகிறது. இவர்களுடைய அழகு முகத்தை பார்த்தால் அன்பு, பாசம், அழகு, கருணை, பண்பு,  ஒழுக்கம், ஆகிய குணங்கள்   நிறைந்து விளங்குகிறது. இவர்கள் பாதம் பட்ட இடங்கள் எல்லாம் பொன் போல் இருக்கின்றன. இவர்கள் அஞ்சா நெஞ்சம் உடையவர்கள். இவர்கள் மிகவும்  நல்வழியில் செல்பவர்கள். இவர்களைப் பார்த்ததும்  எனது உள்ளமானது  உருகுகின்றதே என எண்ணிக் கொண்டு இருந்தார். ராமரும் லட்சுமணரும் அனுமனின் அருகில் வந்தனர்.
 
★ராமர் அனுமனைப் பார்த்து, நற்குணம் நிறைந்தவரே! நீங்கள்  யார்? என வினவினார். அதற்கு அனுமன், ராமரை வணங்கி,
உள்ளது உள்ளபடி உண்மையை பேச ஆரம்பித்தார். ஐயனே! நான் அஞ்சனா தேவியின் மகன் ஆவேன். வாயுவின் புத்திரன்.
என் பெயர் அனுமன். இக்காட்டில் சுக்ரீவன் என்கின்ற வனராஜா தன் அண்ணனால் துரத்தப்பட்டு மறைந்து வாழ்ந்து வருகிறார். அவருடைய மந்திரி நான். எனது அரசரின் உத்தரவின்படி இங்கு தங்களைப் பற்றிய அனைத்து  செய்திகளும் தெரிந்து கொள்ள மாறுவேடத்தில் இங்கு வந்து ருக்கிறேன்.
 
★நீங்கள் இந்த வனத்திற்கு தவம் செய்ய வந்த தவஸ்விகள் போல் மரஉரி தரித்து வேடமணிந்து வந்திருக்கின்றீர்கள். மனதைக் கவரும் ரூபம் கொண்ட நீங்கள் தேவ ரிஷிகளைப் போல் கம்பீரமாக உள்ளீர்கள். நீங்கள் இந்த வனத்திற்கு வந்ததும் முன்பை விட இந்த வனம் மிகவும் அழகாக இருக்கின்றது. பெரிய ராஜ்யத்தை ஆட்சி செய்யவே பிறத்தவர் போலவே தாங்கள் இருக்கின்றீர்கள். உங்களுடைய பராக்கிரமத்தை பார்த்து இந்த காட்டில் இருக்கும் பல ஜீவன்கள் பயப்படுகின்றது. நீங்கள் யார்? எங்கிருந்து வந்திருக்கின்றீர்கள்? என்று அனுமன் இருவரிடமும் கேட்டு தன் சுயஉருவை எடுத்துக் கொண்டார்.
 
★ராமர் அனுமனின் பேச்சை ரசித்தார். அனுமனின் பணிவான வார்த்தைகளை கேட்ட ராமர், லட்சுமணனிடம் இவர் பேசிய பேச்சின் அழகை பார்த்தாயா? எவ்வளவு சரியான படி அளவாக வார்த்தைகளை உபயோகித்து இலக்கணப்படி பேசுகிறார். வேதங்களை முறையாக கற்றவர் போல் பேசுகிறார். இவரின் பேச்சால் எனக்கு முழு நம்பிக்கை வந்திருக்கிறது. தூதர் என்பவர் இவரைப் போலத்தான்  இருக்க வேண்டும். இவரை தூதராக கொண்ட சுக்ரீவனுக்கு எந்த காலத்திலும் குறை இருக்காது. நாம் சுக்ரீவனை தேடி வந்து இருக்கின்றோம் அவரே நம்மை தேடி தூதரை அனுப்பியுள்ளார்.
 
★இவரிடம் நாம் யார் என்பதையும் சுக்ரீவனிடம் நட்பு தேடி வந்திருக்கின்றோம் என்பதையும் சொல்லி அவர் இருக்குமிடத்திற்கு நம்மை அழைத்துச்செல்ல அனுமதி பெற்றுக்கொள். நாம் விரைவில் அவரை சந்திக்க வேண்டும் என்று சொல்லி முடித்தார்.
இராமர் அனுமனிடம், ஐயனே! நாங்கள் இங்கு சுக்ரீவனை காணத் தான் வந்துள்ளோம். சுக்ரீவன் எங்கு உள்ளார் என்று சொல்லுங்கள். நட்பு நாடியே வந்துள்ளோம்.நாங்கள் அரசர் சுக்ரீவனை உடனே காண வேண்டும் என்றார்.  இதைக் கேட்ட அனுமன் சிறிது நேரம் சிந்தித்தான்.
 
★இவர்கள் வாலி அனுப்பி இருந்தவர்களாக இருந்தால், இவர்களின் முகத்தில் கோபத்தீ தான் அதிகம்  தெரிய வேண்டும். ஒருவேளை நான் சுக்ரீவனை காட்டி, இவர்கள் அவனைக் கொன்று விட்டால் பெரும் தீங்கு ஏற்பட்டு விடுமே? இவர்கள் யார் என்பதும் தெரியவில்லை.
இவர்களை எப்படி உள்ளே அனுமதிப்பது? இவர்களை இங்கேயே இருக்கச் சொல்வோம் என தன் மனதில் நினைத்துக் கொண்டான். அனுமன், ராமரிடம் பெரியவர்கள்  எப்போதும் சிறியவர்களை பார்க்க வரக் கூடாது. சிறியவர்கள் தான் பெரியவர்களை பார்க்க வர வேண்டும். ஆதலால் தாங்கள் இங்கேயே இருங்கள், நான் சென்று சுக்ரீவனை அழைத்து வருகிறேன்.
 
★ஆனால் சுக்ரீவன் தன்னை யார் காண வந்துள்ளார்கள் எனக் கேட்டால் நான்  தங்களை யார் என்று அவரிடம்  கூறுவேன் எனக் கேட்டான். உடனே ராமர் சிரித்து லட்சுமணனிடம், லட்சுமணா! இந்த வானரவீரனின் சொல்லின் திறமையை பார்த்தாயா? இவன் எல்லா கலைகளையும் கற்றுத் தேர்ந்தவன். நம்மை யார் என்று தெரிந்து கொள்ள எவ்வாறு நுணுக்கமாக கேள்வியை எழுப்பியுள்ளான். இவனின் சொல்லின் திறமையை நான் பாராட்டுகிறேன் என்றார்.
லட்சுமணன் தங்களைப் பற்றி அனுமனிடம் விரிவாக சொல்ல ஆரம்பித்தான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.......................
[6:06 pm, 12/08/2021] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~
133 /11-08-2021
 
 
சுக்ரீவன் சந்திப்பு...
 
ராமரைப் பற்றியும், தம்மைப் பற்றியும் அனுமனிடம் சொல்ல ஆரம்பித்தான் லட்சுமணன். ராமர் எனது அண்ணன் ஆவார். அயோத்தியை ஆண்ட தசரதரின் மூத்த ராஜகுமாரன். தந்தையின் சத்தியத்தை காப்பாற்ற வேண்டி புறப்பட்ட   அவர்  தற்சமயம்  அரண்ய வாசத்தில் இருக்கிறார். இந்நேரத்தில் அவரது மனைவி சீதையை ராட்சதன் ஒருவன் ஏமாற்றி தூக்கிச் சென்று விடவே அவளை தேடிச் செல்லும் போது கவந்தன் என்ற ஒரு ராட்சதன் சாப விமோசனம் பெற்றான். மாதா சீதை இருக்கும் இடம் தெரியாமல் தேடிக்கொண்டு இருக்கும் எங்களிடம் சுக்ரீவனின் நட்பை பெற்றுக்கொள்ளுங்கள். அவருக்கு நீங்கள் உதவி செய்யுங்கள். உங்களுக்கு அவர் உதவி செய்வார். சீதையை நீங்கள் மீட்டெடுக்கலாம் என்று சொல்லி  சென்றார்.
 
★அதன்படி சுக்ரீவனின் நட்பை பெற்றுக் கொள்வதற்காக அவனை  தேடி இங்கே  வந்து இருக்கின்றோம் என்று சொல்லி முடித்தான் லட்சுமணன். அதைக் கேட்டதும் அனுமன் இருவரையும் கைகூப்பி வணங்கி பெருமானே! வாருங்கள். உங்களை நான் சுக்ரீவன் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்வேன் எனக் கூறினார். பிறகு மூவரும் ரிஷ்யமுக பர்வதத்தில் உள்ள ஓர் குகையில் தங்கியிருந்த அரசன் சுக்ரீவனைச் சந்திக்க சென்றனர். அங்கு அவர்களை ஓரிடத்தில் அமர வைத்துவிட்டு நான் போய் சுக்ரீவனை இங்கு அழைத்து வருகிறேன் எனக் கூறி சென்றான் அனுமன்.
 
★சுக்ரீவனைச் சந்தித்த அனுமன் ராமரைப் பற்றி விரிவாக எடுத்து உரைத்தான். மேலும்  அனுமன் சுக்ரீவா! இனி நீ வாலியைக் கண்டு அஞ்சிநடுங்க வேண்டாம். இனி உனக்கு துன்பம் நீங்கி இன்பம் வர போகிறது. உன்னை காக்க ராமர் வந்துள்ளார். அவர் வாலியை கொன்று உன்னை காத்தருள்வார். ராமர் நீதிநெறி தவறாதவர். விசுவாமித்திர முனிவரிடம் சீடனாக இருந்தவர். அரக்கர்கள் தாடகையையும், சுபாகுவையும் வதம் செய்தவர். விராதனை கொன்றவர். கரன் முதலிய அரக்கர்களை தனியாக நின்று கொன்றவர். தன் தாய் கைகேயின் கட்டளையினால் ராஜ்ஜியத்தை துறந்து வனம் வந்து உள்ளார். ராமரால் உன் வாழ்வில் பிரச்சனைகள் தீரும். கவலைக் கொள்ளாதே! எனக் கூறினான்.
 
★அனுமன் கூறிய தெம்பூட்டும்
வார்த்தைகளை கேட்டு மிகவும் மகிழ்ந்து போனார். உடனே தொலைவில் அமர்ந்திருக்கும் ராம லட்சுமணரை கண்டு மகிழ்ச்சியடைந்தார். சிறிது நேரம் கண்ணிமைக்காமல் ராம லட்சுமணைரையே பார்த்துக் கொண்டு இருந்தார். பிறகு அவர்களின் பக்கம் சென்று தொழுது வணங்கினார். ராமரைப் பார்த்ததும் சுக்ரீவன் பேச ஆரம்பித்தார். அயோத்தி ராஜகுமாரனே! வானரமான என்னுடைய நட்பை நீங்கள் தேடி வந்ததினால் இப்போதே நான் உங்களின்  நட்பை என் மனதார ஏற்றுக் கொள்கிறேன். எனது  நட்பையும் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று தனது கையை நீட்டினார். இருவரும் கைகளை பிடித்துக் கொண்டும் ஒருவரையொருவர்  தழுவிக் கொண்டும் பேச ஆரம்பித்தார்கள்.
 
★ராமரும் சுக்ரீவனை தழுவிக் கொண்டார். ராமரோ சூரிய வம்சத்தில் பிறந்தவர். சுக்ரீவன் சூரியனின் குமாரன். இவர்கள் இருவரும் இப்போது ஒன்றுபட்டு இருந்தனர். சுக்ரீவன் ராமனை பார்த்து, பெருமானே! தங்களை கண்டு நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். நான் பெரும் தவம் செய்து இருக்கின்றேன். ஆகவே தான் தங்களை இன்று நான் சந்தித்து உள்ளேன் என மனம் உருகி கூறினார். ராமர் அரசன் சுக்ரீவனிடம், சுக்ரீவரே! மதங்க மகரிஷி ஆஸ்ரமத்தில் சபரி மூதாட்டி உன்னுடைய எல்லா நற்குணங்களையும்  என்னிடம் கூறி உன்னை சந்திக்கமாறு கூறினார். ஆதலால் தான் நான் உன்னை நாடி வந்துள்ளேன் என்றார்.
 
★சுக்ரீவன் தன்னுடைய உடன் பிறந்த அண்ணன் வாலியால் தனக்கு ஏற்பட்ட துக்கத்தைப் பகிர்ந்து கொண்டான். எனது அண்ணன் வாலியால் சொந்த ராஜ்யத்தையும் இழந்து அருமை மனைவியையும் இழந்தேன். என்னை தாக்க வருவானே என்று அவனுக்கு பயந்து இக்காட்டில் அங்கும் இங்கும் திரிந்து ஒளிந்து கொண்டு காலத்தை கழித்து வருகிறேன். நீங்கள் வாலியை கொன்று என் துக்கத்தை தீர்த்து எனக்கு ராஜ்யத்தையும் மற்றும் மனைவியையும் திரும்பவும்  கிடைக்க  செய்யுங்கள் என்றான் சுக்ரீவன். அதற்கு ராமர் அறம் தவறி உன்னுடைய அன்பு மனைவியை தூக்கிச் சென்ற வாலியை கொல்வேன். இது நிச்சயம். என்னுடைய அம்புகள் வீண்போகதவை. என் அம்புக்கு வாலி நிச்சயம் இரையாவான் இதில் சந்தேகம் இல்லை என்று உறுதி கூறினார்.
 
★ராமர் கூறிய வார்த்தையை கேட்ட சுக்ரீவன் உங்களால் நான் இழந்தவைகள் அனைத்தையும் பெறுவேன் என்று கூறி மகிழ்ச்சி அடைந்தான். ராமர் வனராஜன் சுக்ரீவனிடத்தில் உறுதி கூறிய அதே நேரத்தில் வாலிக்கும் லங்கையில் உள்ள சீதைக்கும் மற்றும் ராவணனுக்கும் இடது கண் துடித்தது. சீதைக்கு மங்கள கரமாக துடித்தது. இதனை அறிந்த சீதை ராமர் தம்மை தேட ஆரம்பித்து விட்டார். நம்மை அந்த ராட்சதன் தூக்கி வந்ததை அவர் அறிந்து இருப்பார். நாம் இங்கு இருப்பது அவருக்கு தெரிந்து விட்டது. விரைவில் நம்மை காப்பாற்ற வந்துவிடுவார் என்று ஆறுதலடைந்தாள். ஆனால் ராவணனுக்கும் வாலிக்கும் இடது கண் அபசகுனமாக துடித்தது.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை....................
 
ஶ்ரீராம காவியம்
~~~~ 
134 /12-08-2021
 
வாலியும் சுக்ரீவனும்...
 
★சுக்ரீவன், பெருமானே! குற்றம் செய்யாத என்னை, என்னுடைய  அண்ணன் வாலி மிகவும் துன்புறுத்தி வந்தார். ஆதலால் நான் இம்மலைக்கு வந்து ஒளிந்து கொண்டேன். இந்த மலைக்கு வந்தால் எனது  அண்ணன் வாலியின் தலை வெடித்து விடும். இது மதங்க முனிவரின் சாபம் ஆகும். ஆதலால் நான் இம்மலையில் துன்பம் இன்றி வாழ்ந்து வருகிறேன் என்றான். இதனைக் கேட்ட இராமர் சுக்ரீவனை கட்டி தழுவிக் கொண்டார். 
 
★சுக்ரீவா! இன்று முதல் நீ என் தம்பி. உன்னுடைய நண்பர் எனக்கும் நண்பர். உன்னுடைய பகைவர் எனக்கும் பகைவர். இன்று முதல் தசரதருக்கு ஆறு புதல்வர்கள். உன்னுடைய இன்ப துன்பங்களில் எனக்கும் பங்கு உண்டு. இனி நீ கவலைக் கொள்ளாதே என ஆறுதல் கூறினார். இந்த கண்கொள்ளா காட்சியைக் கண்ட அனுமன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். மற்ற வானர வீரர்களும் இதனைக் கண்டு மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர். பிறகு எல்லோரும் சுக்ரீவனின் குகைக்குச் சென்றனர். 
 
★அந்த சமயத்தில் வெளியே சென்றிருந்த ஜாம்பவான் வந்து சேர்ந்தார். அவர் கரடிகளின் தலைவர். சுக்ரீவனின் நண்பர், குரு, ஆலோசகர் ஆவார். மிகுந்த அறிவாளி. சுக்ரீவன் ராமரிடம் ஜாம்பவானை அறிமுகம் செய்து வைத்தார். ராமரை வணங்கிய ஜாம்பவான் தசரத குமாரா! உம்மையும் உமது கீர்த்தியையும் நான் நன்கு அறிவேன். உங்கள் நட்பு கிடைத்ததால் சுக்ரீவன் மிகவும் பாக்கியம் செய்தவன் ஆவான் என்று கூறினார்.
 
★சுக்ரீவன் தன் குகையில் ராம லட்சுமணரை அமரச் செய்தார். பிறகு சுக்ரீவன் தன்னிடமிருந்த காய் கனிகளை கொடுத்து உபசரித்தான். இதனை பார்த்த ராமர் தன் மனதில், இவ்வுலகில் மனைவியுடன் இல்லறத்தில் வாழ்பவர்கள், தேடி வரும் விருந்தினருக்கு அவர்களின் மனைவிமார்கள் தான் உபசரித்து உணவு படைப்பார்கள். அது தான் நியதி. மனைவி இருக்க கணவர் விருந்ததினை படைக்க மாட்டார்கள். ஆனால் இங்கு சுக்ரீவன் மனைவி இல்லாததால் அவனே உணவு படைக்க நேரிட்டது  என கவலையோடு நினைத்தார். அனுமன் ராமரின் முகத்தில் தெரிந்த சோகத்தைக் கண்டு நடந்தவற்றையெல்லாம் கூறத் தொடங்கினான். 
 
★சூரியனின் அருளால், அருணி என்னும் குரங்கின அரசிக்கு பிறந்தவன் சுக்ரீவன். இவனது அண்ணன் வாலி இந்திரனின் அருளால் தோன்றியவன். இவர்களில் வாலி, வானரகுல அரசனாகவும், தம்பி சுக்ரீவன் இளவரசனாகவும் கிஷ்கிந்தை நாட்டை ஒற்றுமையுடன் ஆட்சி செய்து வந்தனர். கிஷ்கிந்தா பகுதியில் மாயாவி என்னும் அரக்கன் எல்லோரையும் துன்புறுத்தி வந்தான். அவனிடம் யுத்தம் செய்ய முடிவு செய்த வாலியும், சுக்ரீவனும் அரக்கனை விரட்டி சென்றனர். 
 
★அப்போது அந்த அரக்கன் ஒரு நீண்ட பொந்து கொண்ட குகைக்குள் புகுந்து கொண்டான். சுக்ரீவனை காட்டிலும் வாலி வீரத்திலும், வலிமையிலும் சிறந்தவன் என்பதால், வாலி தன் தம்பி சுக்ரீவனிடம், தம்பி! வேறு எந்த அரக்கனும் குகைக்குள் நுழையாதபடி நீ வெளியே வாசலில் நின்று பார்த்துக் கொள். நான் குகைக்குள் உள்ள பொந்தில் ஒளிந்து கொண்டு இருக்கும், அரக்கனை கொன்று விட்டு வருகிறேன் என்று சொல்லி வாலி குகைக்குள் சென்றான். அவர்களின் சண்டை நாள் கணக்கில் நடந்தது. அங்கு அவர்கள் செய்யும் சண்டையில் இரத்தம் குகைக்கு வெளியில் வந்தது.
 
★இதனைப் பார்த்த சுக்ரீவன் அரக்கன் அண்ணனை கொன்று விட்டான் என நினைத்துக் கொண்டான். வெளியில் வந்தால் தன்னையும் கொன்று விடுவான் என பயந்து குகையை மூடிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான். சில நாட்களில் வாலி அரக்கனை கொன்றுவிட்டு, வெளியில் செல்ல குகையின் வாயிலுக்கு வந்தான். ஆனால் அக்குகையின் வாயில் ஒரு பெரிய கல்லால் மூடப்பட்டிருந்தது. இதனைக் கண்டு வாலி மிகவும் அதிர்ச்சி அடைந்தான். 
 
★பிறகு மிகவும் கஷ்டப்பட்டு அந்தக் கல்லை நகர்த்தி வெளியே வந்தான். ஒரு வழியாக கிஷ்கிந்தா வந்து சேர்ந்தான். அங்கு கிஷ்கிந்தாவில் சுக்ரீவன் அரசனாக முடிசூட்டிக் கொண்டு ஆட்சி செய்து வருவதைக் கண்டான். தன் தம்பி சுக்ரீவன் கிஷ்கிந்தாவின் அரசன் ஆவதற்காகவே, தன்னைக் கொல்வதற்காக குகையின் வெளியில் கல்லை வைத்து வாசலை அடைத்ததாக வாலி நினைத்தான். இதனால் சுக்ரீவன் மேல் வாலிக்கு மிகுந்த கோபம் உண்டானது. சுக்ரீவனை கொல்ல வேண்டும் என நினைத்தான்.
 
 ★உடனே வாலி, சுக்ரீவனிடம் சென்று, நீ என்னை ஏமாற்றி அரச பதவியை பறித்து கொள்ள நினைத்தாயா? எனக் கேட்டான். சுக்ரீவன் எவ்வளவோ சொல்ல முன் வந்தும் அதை சிறிதும் கேட்கவில்லை வாலி. பிறகு சுக்ரீவனிடம் இருந்து அரச பதவியை பறித்துக் கொண்டு அவனை மிகவும் துன்புறுத்தி வந்தான். சுக்ரீவன் வாலியிடம் இருந்து தப்பிக்க காட்டுக்கும், மலைக்கும் என மாறி மாறி ஓடி ஒளிந்துக் கொண்டான். 
 
★ஆனால் வாலியோ, சுக்ரீவன் எங்கு சென்றாலும் விடாமல் துரத்தி துன்புறுத்தி வந்தான். கடைசியில் சுக்ரீவன், வாலி மதங்க முனிவரால் சாபம் பெற்ற ரிஷியமுக மலைக்கு சென்று ஒளிந்துக் கொண்டான். அந்த  மலைக்கு வாலி சென்றால் அவனது தலை வெடித்து விடும் என்பது முனிவரின் சாபமாகும். அந்த சாபத்துக்கு அஞ்சிய வாலி அம்மலைக்கு வருவதில்லை. இதனால் கோபங்கொண்ட வாலி, சுக்ரீவனின் மனைவி ருமாவை கவர்ந்து சென்று அந்தப்புரத்தில் சிறையில் வைத்தான். ஆகவே தாங்கள் தான் சுக்ரீவனுக்கு இழந்த ராஜ்ஜியத்தை மீட்டுத் தர வேண்டும் என்று கூறி முடித்தான் அனுமன்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.......................
 
ஶ்ரீராம காவியம்
~~~~
135 /13-08-2021
 
சீதையின் ஆபரணங்கள்...
 
★சுக்ரீவன் படும் கஷ்டங்களை எடுத்துரைத்த அனுமன் ராமரிடம் சுக்ரீவனுக்கு உதவி புரியக்கேட்டு கொண்டார். சிறிதும் கவலைப்பட வேண்டாம் சுக்ரீவா! உனக்கு தகுந்த நியாயம் கிடைக்க நான் முயல்கிறேன். தேவைப்பட்டால் அந்த வாலியை வதம் செய்து உன்னை கிஷ்கிந்தை மன்னன் ஆக்குவேன் என்று அவனுக்கு  உறுதியளித்தார்.
 
★அன்று மாலை நேரத்தில் ராமர், லட்சுமணர், சுக்ரீவன், அனுமன், ஜாம்பவான்  மற்றும் ஏனைய வானரங்களும் ஒரு சோலையில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். அப்பொழுது வானர அரசன் சுக்ரீவன் ஶ்ரீ ராமரை வணங்கி, பெருமானே! நாங்கள் ஒரு சமயம் மலையின் உச்சியில் இருந்தபோது வான வழியாக ராவணன் ஒரு பெண்மணியை கவர்ந்து செல்வதை கண்டோம். அந்தப் பெண் அழுது கொண்டு இருந்தாள். அப்பெண் தங்களின் தேவியாக தான் இருக்க வேண்டும் என்றான் சுக்ரீவன். ராவணன் அப்பெண்ணுடன் இம்மலையை கடக்கும் போது, அப்பெண் தான் அணிந்திருந்த அணிகலன்களை கழற்றி ஓர் துணியில் சுற்றி எங்களை நோக்கி எறிந்தாள்.
 
★அந்த அணிகலன்களை நாங்கள் பத்திரமாக எடுத்து வைத்து உள்ளோம். தாங்கள் அந்த அணிகலன்களை பார்த்து அது தேவியின் அணிகலன்கள் தானா என்று சொல்லுங்கள் என்றான் சுக்ரீவன். பிறகு சுக்ரீவன் அணிகலன்களை ராமரிடம் காண்பித்தான். ராமர், துணியால் சுற்றப்பட்டிருந்த அணிகலன்களை அவிழ்த்து பார்த்தார். அனைத்தும் சீதையுடைய அணிகலன்கள். இவை அத்திரி மகரிஷியின் மனைவி அனுசூயை சீதைக்கு கொடுத்த அணிகலன்கள் என்று கூறி உணர்ச்சி வசப்பட்டு சீதையின் நினைவால் மிகவும் வருந்தினார். இராமர், கற்புடைய பெண்கள் கணவர் இறந்தபின் தான் அணிகலன்களை கழற்றி எறிவார்கள். நான் உயிருடன் இருக்கும்போதே சீதை இந்த அணிகலன்களை கழற்றி எறிந்துவிட்டாள். இதனால் நான் இறந்ததிற்கு சமமாகிவிட்டேன் என்று புலம்பி வருந்தினார்.
 
★பிறகு லட்சுமணரிடம், இந்த அணிகலன்களை காட்டி இது சீதையின் அணிகலன்கள் தானா என கேட்டார். தம்பி! லட்சுமணா! தலையில் அணியும் இந்த நவரத்னங்கள் பதித்த  மாலை உன் அன்னையின் அணிகலன் தானே எனக் கேட்டார். அண்ணா! இது அன்னையின் அணிகலன் தானா என்று எனக்கு நன்றாகத் தெரியவில்லை என்றார்.
 
★தம்பி! லட்சுமணா! காதில் அணியும் இந்த காதணி உன் அண்ணியின் அணிகலன் தானே எனக் கேட்டார். இதற்கும் லட்சுமணர்,   அண்ணா! இது அண்ணியின் அணிகலன் தானா என்று எனக்கு தெரியவில்லை என்றார். தம்பி! லட்சுமணா! இந்த கழுத்தணி உன் அன்னையின் அணிகலன் தானே என மீண்டும்  கேட்டார். லட்சுமணர், அண்ணா! இது அன்னையின் அணிகலன் தானா என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை என்றார்.
 
★இந்த வளையல்களாவது  உன் அன்னையின் அணிகலன் தானே எனக் கேட்டார் ராமர். லட்சுமணர், அண்ணா! இதுவும்  அன்னையின் அணிகலன்தானா என்று எனக்கு தெரியவில்லை என்றார். தம்பி! இலட்சுமணா! இந்த ஒட்டியாணம் உன் மாதா சீதையின் அணிகலன் தானே எனக் கேட்டார். லட்சுமணர், அண்ணா! இது அன்னையின் அணிகலன் தானா என்று எனக்கு தெரியவில்லை என்றார்.
 
★தம்பி! இலட்சுமணா! இதைப் பார். இந்த மெட்டியாவது உன் அண்ணியின் அணிகலன் தானே சொல்! எனக் கேட்டார்.
லட்சுமணர், அண்ணா! ஆம்.இது  அண்ணியின் அணிகலன் தான் என உரத்த குரலில் உணர்சி பொங்க கூறினார். உடனே ராமர் லட்சுமணரிடம் இத்தனை அணிகலன்கள் காண்பித்தும் இவை உன் அன்னையின் அணிகலன்களா? என்று உனக்கு தெரியவில்லை. இந்த மெட்டி. மட்டும் எப்படி அடையாளம் தெரிந்தது என்று கேட்டார்.
 
★லட்சுமணர்,ராமரிடம் சொல்லத் தொடங்கினார்.  அண்ணா! இந்த பதினான்கு ஆண்டுகளில் என் அன்னை சீதைக்கு பாத பூஜை செய்யும் போது அவர்களின் பாதங்களை மட்டும் தான் நான் பார்த்துள்ளேனே தவிர அவர்களின் திருமேனியை நான் பார்த்ததில்லை.  அதனால் தான் எனக்கு மெட்டி   மட்டும் தான் அடையாளம் தெரிந்தது. மற்ற அணிகலன்கள் அடையாளம் தெரியவில்லை என்றார்.
 
★இதைக் கேட்டுக் கொண்டிருந்த சுக்ரீவன், அனுமன் மற்றும் ஏனைய வானரங்கள், தம்பி என்றால் இவரைப்   போல் அல்லவா இருக்க வேண்டும். நற்குணத்தின் நாயகன், ஒழுக்கத்தின் சிறந்தவன் என்று லட்சுமணரை பாராட்டினார்கள்.
சீதையை தூக்கிப் போன அந்த
ராட்சதனுக்கு யமன் வீட்டு வாசல் காத்திருக்கிறது. அவனை அழிப்பேன். அவனுக்கு ஆதரவு அளிக்க யாராவது வந்தால் அவன் குலம் முழுவதும் அழிப்பேன் என்று கர்ஜனை செய்தார் ராமர்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.......................
 
ஶ்ரீராம காவியம்
~~~~ 
136 /14-08-2021
 
சுக்ரீவன் சந்தேகம்...
 
★ராமர் தனக்கு முதலில் உதவி செய்து ராஜ்யத்தை அடையச் செய்வார், பிறகு நாம் அவருக்கு உதவி செய்யலாம் என்று எண்ணியிருந்த சுக்ரீவன் ராமரின் கோபத்தை பார்த்து மிகவும் கவலைப்பட்டான். ராமர் முதலில் நமக்கு உதவி செய்து நம்முடைய ராஜ்யத்தை மீட்டுக் கொடுப்பாரா? இல்லை, அந்த  சீதையை மீட்க அவருக்கு நாம் முதலில் உதவி செய்வதா? யார் யாருக்கு முதலில் உதவுவது என்று குழப்பமடைந்தான். ராமருக்கு முதலில் உதவி செய்து சீதை இருக்குமிடம் தேடிப்போக வேண்டுமானால் நாம் முதலில் மறைந்திருக்கும் இடத்தை விட்டு வெளியே வரவேண்டும். 
 
★நாம் இந்த இடத்தை விட்டு வெளியே வந்தது தெரிந்தால் வாலி நம்மை தாக்குவான். வாலியை எதிர்த்து போராட முடியாது. எனவே ராமரை நமக்கு முதலில் உதவி செய்ய சொல்லி இழந்த  ராஜ்யத்தை  நாம் அடைந்து விடுவோம். பிறகு நாம் அவருக்கு உதவி செய்து சீதையை தேடிக் கண்டு பிடிக்க உதவி செய்யலாம் என்று முடிவெடுத்தான் சுக்ரீவன். ஆனால் இதனை எப்படி ராமரிடம் சொல்வது? அவர் இருக்கும் துக்கத்திலும் கோபத்திலும் நமக்கு முதலில் உதவி செய்ய சொல்லி சொன்னால் நம்மை தவறாக நினைத்தால் என்ன செய்வது? இப்போது ஆரம்பித்த நட்பு உடனடியாக முடிவுக்கு வந்து விடுமோ என்று அவன் மிகவும்  பயந்தான்.ராமருடைய மனநிலை பார்த்து அதற்கு ஏற்றார் போல் சமயோசிதத்துடன் பேச ஆரம்பித்தான்.
 
★ஶ்ரீ ராமரிடம் சுக்ரீவன் பேச ஆரம்பித்தான். சீதையை தூக்கிச் சென்ற ராட்சதனின் பராக்கிரமம் என்ன? அவன் எங்கிருக்கிறான்? அவன் சீதையை எங்கு வைத்து இருக்கிறான்? என்று எதுவும் எனக்கு தெரியாது. உங்களுக்கு நான் ஒரு சத்தியம் செய்து கொடுக்கிறேன். சீதை எங்கு இருந்தாலும் அவர்களை தேடிக் கண்டு பிடித்து, எதிர்த்து வரும் அந்த ராட்சதர்களை கொல்லும் வழியை தேடி, அவர்களை மீட்க உங்களுக்கு நான் உதவுவேன். உங்களுக்கு சந்தேகம் ஏதும் வேண்டாம். அந்த ராட்சதனை கண்டு பிடித்து அவனது குலத்தையே அழிப்போம். 
 
★உங்களது வீரமும் எனது படை பலமும் வீண்போகாது. மிகவும் தைரியமாக இருங்கள். இந்த  துக்கமான நேரத்தில் நாம்தான் தைரியமுடன் இருக்க வேண்டும். துக்கத்திற்கு நாம் இரையானால் அது நம்மை இழுத்து கொண்டு போய் தோல்வியின் பள்ளத்தில் விட்டு விடும். உங்களைப் போல் அன்பான மனைவியை இழந்து ராஜ்யத்திலிருந்து அவமானப் படுத்தப்பட்டு துரத்தப்பட்டவன் நான். என்னுடைய துக்கத்தை அடக்கிக் கொண்டு தைரியத்தை காத்து வருகிறேன். வானரமான என்னால் முடியும் போது அரச குமாரரான உங்களாலும் உங்கள் மனதின் துக்கத்தை நிச்சயம் அடக்கிக்கொள்ள முடியும். 
உங்களுக்கு உபதேசம் செய்யும் தகுதி எனக்கில்லை. நண்பன் என்ற முறையில் எனக்குள் தோன்றுவதை உங்களுக்குச் சொல்ல மிகவும் கடமைப்பட்டு இருக்கின்றேன் என்று சொல்லி முடித்தான் சுக்ரீவன்.
 
★ராமருக்கு சுக்ரீவன் சொன்ன வார்த்தைகள் வேர் போல உள்ளத்தில் பதிந்தது. சீதையின் ஆபரணங்களை கண்டு ஒருவித  கலக்கத்தில் இருந்து மீண்டு புத்துணர்ச்சி பெற்றார். தன் கண்களில் இருந்து வந்த  நீரை துடைத்துக்கொண்டு சுக்ரீவனை இருக அனைத்துக் கொண்டார். உன்னுடைய சிறந்த நட்பை அடைந்தேன் சுக்ரீவா!. சீதை இருக்கும் இடத்தை நாம்  அறிந்து கொள்ளும் வழியை நீ யோசித்து சொல். உன் யோசனைப்படியே நடக்கின்றேன். 
 
★அது போல் உன் காரியத்தை என் காரியமாகவே நான் ஏற்றுச் செய்வேன் என்று சத்தியம் செய்கின்றேன். உன் கஷ்டத்தை தீர்க்கும் வழியை சொல். அதை  உடனடியாக செய்து முடித்து விடுகின்றேன். நம்முடைய நட்பு என்றைக்கும் பொய்க்காது என்று ராமர் சுக்ரீவனிடம் மனம் விட்டு பேசி முடித்தார். ராமரின் இந்த பேச்சைக் கேட்ட சுக்ரீவன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான்.  உடன் இருந்த அவனது மந்திரிகளும் படைகளும் தங்களுடைய எல்லா துயரங்களும் நீங்கி சுக்ரீவன் மீண்டும் வானர ராஜ்யத்தை அடைவார் என்று எண்ணி மகிழ்ந்தார்கள்.
 
★அனைத்தையும் கேட்ட ராமர் என் அம்பு வாலியின் உடலை துளைக்கும். உனக்கு  தந்த உறுதி மொழியை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன்.  கவலை சிறிதும் வேண்டாம்.. விரைவில் ராஜ்யத்தையும் அத்துடன் உனது மனைவியையும் அடைவாய் என கூறினார். ராமரின் இத்தகைய  பாசமான வார்த்தைகளால் மகிழ்ச்சியடைந்த சுக்ரீவனுக்கு ராமரின் வீரத்தின் மீது சந்தேகம் வந்தது. ராமரின் பராக்ரமத்தை கொண்டு வாலியை வெல்ல முடியுமா? ஆகாத காரியமாக தோன்றுகிறதே. வாலியின் தேகமோ இரும்பைப் போன்றது. அவனை எப்படி ராமர் அழிப்பார்? இவரை விட்டாலும் இப்போது வேறு வழி இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தவன் ராமரை பரிட்சித்து பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை....................
ஶ்ரீராம காவியம்
~~~~ 
137 /15-08-2021
 
துந்துபி...
 
★ஶ்ரீ ராமரிடம் எப்படி இதனைக் கேட்பது? என்று யோசனை செய்த சுக்ரீவன்,    ராமரிடம் மெதுவாக பேச ஆரம்பித்தான். தாங்கள் சொன்ன வார்த்தைகள் என் துக்கத்தை போக்கி மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. உங்களுடைய பராக்ரமத்தை நான் அறிவேன். உங்களால் விடப்படும் அம்பு மூன்று லோகங்களையும் அழிக்கும். வாலியின் பராக்ரமத்தை பற்றி உங்களிடம் சொல்ல வேண்டியது எனது கடமை. 
 
★ஒரு காலத்தில் எருமை வடிவம் பெற்ற துந்துபி என்ற அசுரன் தவம் செய்து தான் பெற்ற அரிய வரத்தினால் ஆயிரம் யானைகள்  பலத்தை அடைந்தான். பெற்ற வரத்தை எப்படி நன்கு  பயன் படுத்துவது என்று தெரியாமல் கடல் ராஜனிடம் சென்று வம்புச் சண்டைக்கு அழைத்தான். கடல் ராஜனோ,  உனக்கு சமமான எதிரியுடன் சண்டை போட வேண்டும். என்னிடம் அல்ல. உனக்கு சமமான எதிரி வடக்கே ஹிமவான் என்ற இமயமலை இருக்கிறது. ஆகவே அங்கு சென்று அதனுடன் சண்டையிட்டு உனது வீரத்தை காட்டு என்று அனுப்பி வைத்தார். 
 
★இமயமலை வந்த துந்துபி அங்கிருந்த மலைகளை எல்லாம் உடைத்து, பாறைகளை தனது கொம்பால் தள்ளி, அட்டகாசம் செய்தான். அதனை பார்த்த ஹிமவான் தன் கோபத்தை அடக்கிக்  கொண்டு நீ எதற்காக  என்னுடன் வம்ப சண்டைக்கு நிற்கிறாய். யுத்தத்தில் எனக்கு அவ்வளவாக பயிற்சி கிடையாது. இங்குள்ள முனிவர்களுக்கும், ரிஷிகளுக்கும், சாதுக்களுக்கும் இடம் கொடுத்து அவர்களுடன் காலம் கழித்து வருகிறேன். உனக்கு சமமான ஒரு எதிரியுடன் சண்டையிடு என்று கூறினார். அப்படியானால் எனக்கு சம்மான எதிரி யார்? என்பதை உடனே  கூறு. இப்போதே சண்டையிட்டு அவனை நான் வெற்றி கொள்ள வேண்டும் என்று மூர்க்கமாக கத்தினான் அசுரன். 
 
★இதனை கேட்ட ஹிமவான், தெற்கே கிஷ்கிந்தையில் வாலி என்ற வானரராஜன் ஒருவன் இருக்கிறான். அவன் தான் உனது பலத்துக்கு சமமான வீரன் ஆவான். அவனை யுத்தத்திற்கு அழைத்து சண்டையிட்டு வெற்றி பெற்று உனது பராக்கிரமத்தை காட்டு என்றான்.  ஹிமவான் சொன்ன வார்த்தைகளை கேட்ட துந்துபி வாலியுடன் சண்டையிட கிஷ்கிந்தைக்கு வந்தான். அங்கு இருந்த மரங்களை தள்ளியும் அரண்மனை கோட்டையை இடித்தும் வானரத்தின் அரசனே! வாலியே! வெளியே வா! வந்து  என்னுடன் யுத்தம் செய்! என்று வாலியை சண்டைக்கு அழைத்து கர்ஜனை செய்தான். 
 
★அந்தப்புரத்தில் உற்சாக பானம் அருந்திக் கொண்டிருந்த வாலி வெளியே வந்து துந்துபியிடம், உயிரோடு இருக்க உனக்கு ஆசையிருந்தால் ஓடிப்போய் விடு என்று எச்சரித்தான். வாலி அலட்சியமாக பேசியதை கேட்ட துந்துபி, மிகுந்த  கோபமாக, உனக்கு வீரியமிருந்தால் என்னுடன் யுத்தம் செய். வீண் விவாதம் வேண்டாம்.  நீ இப்போது அந்தப்புரத்தில் இருந்து வந்திருக்கிறாய். அதிக உற்சாக பானம் அருந்தி மிக்க களைப்பாக இருக்கிறாய். களைப்பாக இருப்பவனுடன் சண்டையிடுவது பாவமாகும். நாளைக் காலை வரை உனக்காக காத்திருக்கிறேன். உன்னுடைய களைப்பை விட்டு புத்துணர்ச்சி அடைந்ததும் வா! நாமிருவரும்  சண்டையிடுவோம் என்றான் துந்துபி.
 
★வாலி துந்துபியின் ஆத்திர மூட்டும் வார்த்தைகளை கேட்டு சிரித்தான். நான் உற்சாக பானம் அருந்திருக்கிறேன்.  அது உண்மை தான். சண்டையிட நீ விரும்பினால் இப்போதே சண்டையிடலாம் வா!  என்று அசுரனை பிடித்து தூக்கி தரையில் எறிந்தான். ரத்தம் கக்கி விழுந்த அசுரன் சுதாரித்துக் கொண்டு  மீண்டும் எழுந்து சண்டைக்கு வந்தான். ஆனால் அடுத்த  சில நிமிடங்களில் அந்த அசுரன் துந்துபியை  அடித்தே கொன்றான் வாலி. ஆயிரம் யானைகளின் பலம் கொண்ட அசுரனை சில கணங்களில் கொன்று விட்டான் வாலி. அவ்வளவு பலம் பொருந்திய பெரிய பராக்கிரமசாலி. செத்து விழுந்த துந்துபி அசுரனை தூக்கி வீசினான் வாலி. அசுரன் ஒரு யோசனை தூரம் போய் விழுந்தான். 
 
★அசுரன் விழுந்த இடத்தில் இருந்து தெறித்த ரத்த துளிகள் காற்றில் பரவி அருகில் இருந்த மதங்க முனிவரின் ஆசிரமத்தில் விழுந்தது. இதனை கண்ட முனிவர் இதனை செய்தது யார் என்று அறிந்து கோபம் கொண்டார். இந்த ஆசிரமம் இருக்கும் காட்டிற்குள் வாலி வந்தால் இறந்து விடுவான் என்று வாலியை சபித்து விட்டார் மதங்க முனிவர். அருகில் தான் மதங்க முனிவரின் ஆசிரமம் இருக்கிறது. முனிவர் சாபமிட்ட இடமே இது. முனிவரின் சாபத்தினால் வாலி பயந்து இங்கு வரமாட்டான் என்று இந்த இடத்தில் நாங்கள் ஒளிந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
 
★வாலி அதிகாலையில் எழுந்து ஒரே முகூர்த்தத்தில் நான்கு பக்கங்களிலும் இருக்கும் கடல்களுக்கு தாவி சென்று சந்தியா வந்தனம் செய்து முடிப்பான். ஒரு திசை கடலில் இருந்து அடுத்த திசை கடலுக்கு ஒரே தாவலில் சென்று விடுவான். தன்னுடைய உடல் பலத்தை காட்டும் வகையில் மலைப் பாறைகளை பந்து போல் மேலே எறிந்து விளையாடுவான். பெரிய மரங்களை புல்லை பிடுங்குவது போல் பிடுங்கி விளையாடுவான். இங்கிருக்கும் ஆச்சா மரங்களை பாருங்கள் எவ்வளவு பெரிதாக வளர்ந்து இருக்கின்றது. வாலி இந்த மரத்தினை ஒரே கையில் பிய்த்து விடுவான். மரத்தை லேசாக அசைத்தால் மரத்திலுள்ள இலைகள் எல்லாம் அதிர்ந்து விழுந்து விடும் என்று வாலியின் பராக்கிரமத்தை சொல்லி முடித்தான் சுக்ரீவன்.
 
★லட்சுமணனுக்கு சுக்ரீவன் பேசிய பேச்சிலிருந்து வாலியை நினைத்து அவன் மிகவும் பயம் கொண்டிருக்கின்றான். ராமரின் வீரத்தின் மீது சுக்ரீவனுக்கு சந்தேகம் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டான். ஆகவே சுக்ரீவனிடம் உங்கள் சந்தேகம் தீர ராமரின் பலத்தை நீங்கள் சோதித்து பார்க்கலாம் என்றான். இதற்கு சுக்ரீவன் நான் ராமரிடம் சரண்டைந்து விட்டேன். ராமரின் வீரத்தின் மீது எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் வாலியின் வீரத்தையும் பராக்கிரமத்தையும் நான் நேரில் பார்த்திருக்கிறேன். அவனை நினைக்கும் போது எல்லாம் நான் பயப்படுகின்றேன் என்றான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை......................
ஶ்ரீராம காவியம்
~~~~
138 /16-08-2021
 
ராமரின் வலிமை...
 
★லட்சுமணனுக்கு, சுக்ரீவன் பேசிய பேச்சிலிருந்து வாலியை நினைத்து அவன் மிகவும் பயப்படுகின்றான். ராமரின் வீரத்தின் மீது சுக்ரீவனுக்கு சிறிது சந்தேகம் இருக்கின்றது என்பதை புரிந்து கொண்டான். சுக்ரீவனிடம் உங்கள் சந்தேகம் தீர ராமரின் பலத்தை நீங்கள் சோதித்து பார்க்கலாம் என்றான். இதற்கு சுக்ரீவன் நான் ராமரிடம் சரண்டைந்து விட்டேன். ராமரின் வீரத்தின் மீது எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் வாலியின் வீரத்தையும், பராக்கிரமத்தையும் நான் நேரில் பார்த்திருக்கிறேன்.
 
★அவனை நினைக்கும் போது எல்லாம் நான் பயப்படுகின்றேன் என்றான்.  அப்போது அனுமன் சுக்ரீவனை தனியே அழைத்துப் சென்று, வாலியை கொல்லும் அளவிற்கு ராமனரிடம் வலிமை உள்ளதா என நீ மிக்க சந்தேகம் கொண்டிருக்கிறாய். வானளவில் படர்ந்து ஓங்கி வளர்ந்து நிற்கும் மரங்களை ராமரின் வில்லானது  துளைத்தால், அது வாலியின் உயிரையும் துளைக்கும். ஆகவே நாம் இதனை சோதித்துப் பார்ப்போம் என்றான். பிறகு அவர்கள் ஓர் இடத்தில் ஏழு மராமரங்கள் வரிசை இருப்பதை கண்டனர்.
 
★இவர்கள் ராமனிடம் சென்று தங்களால் இந்த மரங்களை துளைக்க முடியுமா? எனக் கேட்டனர். ராமர் தன்னுடைய வலிமையை இவர்கள் அறிய எண்ணுகிறார்கள் என மனதில் எண்ணினார். சுக்ரீவனுடைய பயத்தையும் சந்தேகத்தையும் போக்க ராமர்  முடிவு செய்தார். துந்துபி அரக்கனின் உடலைப் போல் 10 மடங்கு பெரிய மரக்கட்டை  ஒன்றை ராமர் தனது கால் கட்டை விரலால் நெம்பி தூக்கி எறிந்தார். அந்த மரம் பத்து யோசனை தூரம் சென்று விழுந்தது.  உடனே ராமர் தன் கோதண்டத்தை எடுத்து நாணை பூட்டி அம்பை மரங்களை நோக்கி எய்தினார். நாணின் ஒலியைக் கேட்டு வானரங்கள் எல்லாம் பயந்து ஓடி ஒளிந்தன.
 
★ராமரின் பாணம் அந்த ஏழு மராமரங்களையும் துளைத்தது. அந்த மரங்கள் எல்லாம் வேரோடு சாய்ந்து கீழே விழுந்தது. ராமரின்
அம்பு அந்த மரத்தையும் அதன் பின்னால் இருந்து மேலும் ஆறு ஆச்சா மரங்களையும் சேர்த்து மொத்தம் ஏழு மரங்களையும் ஒன்றாக துளைத்து வெளியே வந்து மீண்டும் ராமரின் அம்பாரிக்குள் வந்து விட்டது. இதைக்கண்ட சுக்ரீவன் மிகுந்த பரவசமடைந்தான். வாலியின் வஜ்ஜிரம் போன்ற உடலை ராமரின் அம்பு துளைக்கும் என்று நம்பினான். ஒரு மரத்தை துளைப்பதே மிகவும் அரிது. அதுவும் ஏழு மரங்களை ஒன்றாக துளைப்பது மிகவும் பாராட்டுக்கு உரியது. உங்கள் பராக்கிரமத்தை கண்ணாரக் கண்டேன் என்று ராமரின் கால்களில் விழுந்து வணங்கினான். வாலியை அழித்து என்னை நிச்சயமாகக்  காப்பாற்றுவீர்கள் என்று நான் நம்புகிறேன் என்றான்.
 
★பிறகு அவர்கள் அங்கிருந்து போகும் வழியில் துந்துபி என்ற அரக்கனின் எலும்பு, மலை வடிவில் அங்கு கிடப்பதை கண்டனர். ராமர் சுக்ரீவனிடம், சுக்ரீவா! இது என்ன எலும்பு? மலை போல் இவ்வளவு பெரியதாக உள்ளது எனக் கேட்டார். சுக்ரீவன், பெருமானே!
நான் முன்பு உங்களிடம் கூறிய வாலி கொன்ற துந்துபி என்ற அரக்கனின் எலும்புகளே இவை.
துந்துபி மலைபோல் பெரிய வடிவத்தை உடையவன். ஒரு சமயம் இவ்வரக்கன் வாலியிடம் போருக்கு வந்தான்.
 
★அப்போரில் வாலி அரக்கனை கொன்று விட்டான். இறந்த அந்த அரக்கனுடைய ரத்தம் சிந்திய இடமே எலும்பாக மாறி உள்ளது. சிதறிய அந்த ரத்த துளிகள் இங்கிருந்த மதங்க முனிவரின் ஆஸ்ரம வளாகத்தின் புனிதத் தன்மையைக் கெடுத்ததால், அவர் வாலி இந்த ரிஷ்யமுக பர்வத எல்லைக்குள் வந்தால் தலை வெடித்து இறப்பான் என சாபமிட்டார். ஆகவே அவன் இங்கு வருவதில்லை. அதனால் தான் நாங்கள் இந்த இடத்தில்  இருக்கிறோம் என்றான். ராமர் லட்சுமணரை பார்த்து, தம்பி! இந்த எலும்பை அகற்றிவிடு! என்றார். லட்சுமணர் தன் கால் பெருவிரலால் அதனை அகற்றி வீசினார். இதனைக் கண்ட சுக்ரீவன், ராமருக்கு நிகரான பேராற்றால் உடையவர் என லட்சுமணரை வாழ்த்திப் போற்றி வணங்கினார்.
 
★திடீரென ராமருக்கு சீதையின் நினைவு வந்து விட்டது. அவர் மனம் சோர்ந்து முகம் வாடியது.
 சுக்ரீவன், தங்களின் தேவி எங்கு இருந்தாலும் தங்களிடம் சேர்ப்பேன். தாங்கள் மனம் தளர வேண்டாம் என்றான். அனுமன் ராமரிடம், பெருமானே! தாங்கள் வருந்த வேண்டாம். நாம் வாலியை வென்று விட்டால் கிஷ்கிந்தையில் உள்ள மற்ற வானரங்களும் நம் வசம் ஆகிவிடுவர். பிறகு நாம் விரைவில் ராவணனை கொன்று சீதையை மீட்டு விடலாம் என்றான். சுக்ரீவன் மற்றும்  அனுமனின் சொற்களை கேட்டு ராமர் சமாதானம் ஆனார்.
 
★வாலியிடம் சண்டையை நாம் நாளை வைத்துக் கொள்ளலாம் என்றான் அனுமன். ராமரும் அனுமனின் யோசனையை ஏற்றுக் கொண்டார். எல்லோரும் அச்சோலையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தனர். பிறகு அவர்கள் அனைவரும் கிஷ்கிந்தை நோக்கி பயணம் செய்தனர். அங்கு அவர்கள் ஒரு அழகான சோலையில் தங்கினார்கள்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.....................
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~
139 /17-08-2021
 
சுக்ரீவன் அறைகூவல்...
 
★ராமரிடம் சுக்ரீவன், வாலியை பற்றிய வேறொரு  செய்தியை தங்களிடம் சொல்ல வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்தான். வாலி மிகப்பெரிய சிவ பக்தன். சிவனை நோக்கி அரிய பெரும் தவங்கள் செய்திருக்கின்றான். கயிலையிலுள்ள எம்பெருமான் சிவபெருமானின் அருளைப் பெற்றவன். முன்பொரு முறை அமிர்தம் பெறுவதற்கு பாற்கடலை கடையும் போது வாலி தேவர்களுக்கு உதவி செய்தான். அதனால் பஞ்ச பூதங்களின் வலிமையையும் பெற்றான். தனது தந்தையான இந்திரனிடம் இருந்து வாலி ஒரு வரத்தை பெற்றிருக்கின்றான்.
 
★அந்த வரத்தின்படி வாலியுடன் யுத்தம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்  சக்தியில் பாதி சக்தி வாலிக்கு சென்று விடும். அதனால் மிகச்சிறந்த சிவபக்தனும், வலிமையும், அதிகாரமும் கொண்ட அரக்கர் தலைவனான ராவணன் கூட வாலி இருக்கும் கிஷ்கிந்தை பக்கம் வருவதில்லை. நீங்கள் வாலியின் மீது அம்பு எய்ய அவன் எதிரே நின்றால் வாலி பெற்ற வரத்தின்படி உங்களின் சக்தியின்  பாதி வாலிக்கு சென்று விடும். ஏற்கனவே வாலி மிகவும் பராக்கிரமசாலி. உங்களின் பாதி சக்தியும் வாலியுடன் சேர்ந்தால் அவன் இன்னும் பராக்கிரமசாலி ஆகிவிடுவான். அதன் பிறகு அவனை யாராலும் அழிக்க முடியாது என்று சொல்லி முடித்தான்.
 
★அதற்கு ராமர் வாலியின் உடலை எனது அம்பு துளைத்து அழிக்கும். சந்தேகமோ பயமோ சிறிதும் வேண்டாம் என்றார். ராமரின் வார்த்தைகளை கேட்ட சுக்ரீவனுக்கு அப்போதே வெற்றி பெற்றுவிட்டதை போன்று ஒரு பூரிப்படைந்தான்.  ஶ்ரீ ராமரிடம் அனுமன் பேச ஆரம்பித்தார். முதலில் வாலியைக் கொன்று, பின் சுக்கிரீவனுக்கு முடிசூட்ட வேண்டும். சுக்ரீவன் கிஷ்கிந்தை அரசனாவான். அவன் ஆணை பிறப்பித்ததும் எழுபது வெள்ளம் எண்ணிக்கை உள்ள வானரர் படைகள் ஒன்று சேர்வார்கள். (1000 வீரர்கள் கொண்டது ஒரு வெள்ளமாகும்) அவர்கள் அனைவரையும் ஒரே சமயத்தில் நாலா திக்குகளுக்கும் அனுப்பி வைத்தால் விரைவில் சீதையை கண்டு பிடித்து விடலாம் என்றார்.
 
★ராமரும் அனுமன் சொல்வது சரி என்று ஏற்றுக் கொண்டார். அனுமன் தன்னுடைய  துணை அமைச்சர்களான தாரன், நீலன், நளன் மற்றும் குரு ஜாம்பவான் ஆகியவர்களோடு ராமருக்கு வழிகாட்ட அனைவரும் வாலியின் இருப்பிடத்தை நோக்கிச் சென்றார்கள். கிஷ்கிந்தை காட்டுப் பகுதிக்கு வந்ததும் நான் இப்போது என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் என சுக்கிரீவன் ராமனை நோக்கிக் கேட்டான். நீ வாலியை யுத்தத்திற்கு கூப்பிடு. நீங்கள் இருவரும் போர் செய்யும் போது மறைவிடத்தில் இருந்து அம்பு ஒன்றினால் வாலியைக் கொல்வேன் என்று ராமர் கூறினார். (ராமர் ஏன் இப்படி கூறினார் என்பதற்கான காரணம் பின் வரும் பகுதியில் வரும்)
 
★சுக்ரீவனுக்கு வாலியிடம் போர் செய்ய தைரியம் சிறிதுகூட  இல்லை. என்றாலும் ராமனின் கட்டளையை ஏற்றுக் கொண்டு போரிட   ஆயததமானான். சுக்கிரீவன் தனது பயத்தை நீக்கி ஒர் உயரமான இடத்தில் இருந்து கொண்டு வாலியைப் போருக்கு வருமாறு கூவி அழைத்தான். பிறகு மீண்டும் சுக்ரீவன், வாலி! எங்கே இருக்கிறாய்.? தைரியம் இருந்தால் என்னுடன் வந்து போரிடு. உன்னை இன்று நான் கொல்வேன் என்று கூக்குரலிட்டு அழைத்தான். அப்போது வாலி அரண்மனையில் பஞ்சணையில் படுத்து இருந்தான். சுக்ரீவனின் குரலைக் கேட்டு சிங்கம் போல் கர்ஜித்துக் கொண்டு எழுந்தான்.
 
★பிறகு தான் தெரிந்தது அக்குரல் சுக்ரீவனின் குரல் என்று.  தனக்கு பயந்து ஒளிந்து கொண்டு இருந்த சுக்ரீவன், இன்று தன்னை சண்டைக்கு அழைப்பதை நினைத்து ஏளனமாக சிரித்தான் வாலி. பின் அவன் கோபத்தில் அரக்கன் போல் படுக்கையில் இருந்து எழுந்தான். அவன் படுக்கையில் இருந்து எழுந்த வேகத்தில் மரங்கள், மலைகள் எல்லாம் ஆடின. பிறகு, வருகிறேன்! வருகிறேன்! எனக் கூறிக் கொண்டு வெளியே வந்தான்.
அப்போது வாலியின் மனைவி தாரை போக வேண்டாம் எனத் தடுத்து நிறுத்தினாள்.
 
★வாலி, மனைவியிடம், ஒரு செயலில் வெற்றி பெற போகும் போது மனைவி தடுத்தால் அந்த செயல் நிறைவேறாது என்பது காலங்காலமாய் பின்பற்றி வரும் நம்பிக்கை என்பதை தெரிந்தும், எதற்காக என்னை தடுக்கிறாய் எனக் கேட்டான். என்னைத் தடுக்காதே! நான் உடனே சென்று சுக்ரீவனை கொன்று வருகிறேன் என்றான் வாலி.   தாரை, வாலியிடம், மன்னரே! தங்களைப் பார்த்து ஓடி ஒளிந்த சுக்ரீவன், இன்று தங்களை எதிர்த்து நிற்கிறான் என்றால், அவனுக்கு புதுமையாக வந்த வலிமை அல்ல. அவனுக்கு துணையாக யாரோ இருக்கிறார்கள் என்று அர்த்தம் என்றாள்.
 
★வாலி, பெண்ணே! அனைத்து உலகங்களும் ஒன்று திரண்டு வந்தாலும், யாராலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. அது மட்டுமின்றி என்னை யார் எதிர்த்தாலும் அவர்களிடம் உள்ள பாதி வலிமையும், வரமும் என்னிடம் சேரும்படி வரத்தினை பெற்றுள்ளேன். ஆகையால் என்னை எதிர்க்க எவராலும் முடியாது. அதனால் நீ பயம் கொள்ள வேண்டாம் என்றான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.....................
 
ஶ்ரீராம காவியம்
~~~~
140 /18-08-2021
 
வாலி-சுக்ரீவன் யுத்தம்...
 
★மன்னா! அந்த சுக்ரீவனுக்கு துணையாக ராமன் என்பவர் வந்துள்ளதாக நம் அன்புக்கு உரியவர்கள் கூறினார்கள். அவரை வெல்ல எவராலும் முடியாது. ஆகையால் தாங்கள் செல்ல வேண்டாம் என்றாள் தாரை. நீ என்ன சொல்கிறாய். ராமர் சுக்ரீவன் உடன் உறவு கொண்டு உள்ளாரா? ராமர் அறவழியில் நடப்பவர். ஒருவேளை ராமர் சுக்ரீவன் உடன் இருந்தால் ராமருக்கு கிடைக்கபோகும் பலன் தான் என்ன? தன் தாயின் கட்டளையால் நாட்டை தம்பி பரதனுக்கு தந்துவிட்டு, ராமர் வனம் வந்துள்ளார்.
 
★உலகமே எதிர்த்து நின்றாலும் வெற்றி பெறுபவர், ராமர். அவர் கையில் பெரிதும் துணையாக கோதண்டம் உள்ளது. அவருக்கு உறுதுணையாக அவரின் தம்பி லட்சுமணர் உள்ளார். இதற்கு மேல் அவருக்கு வேறென்ன துணை வேண்டும். அவர் சூரிய குலத்தவர், நாம் வானரங்கள். அதுவும் சுக்ரீவனிடம் ஏன் அவர் நட்பு கொள்ள வேண்டும். தம் தம்பிகள் மீது மிகவும் அன்புக் கொண்ட, அத்தகைய ராமர் எங்களின் சண்டைக்கு இடையில் வருவாரா? நிச்சயம் வரமாட்டார். இவ்வளவு சிறப்பு வாய்ந்த ராமரை தவறாக எண்ணி விடாதே.
 
★நான் சீக்கிரம் சென்று அந்தத் துரோகி சுக்ரீவனின் உயிரை எடுத்துவிட்டு வருகிறேன் என்று மனைவி தாரையிடம் சொல்லி விட்டு புறப்பட்டார். தாரை, இதற்கு மேல் இவரிடம் பேசி ஒரு பயனும் இல்லை என நினைத்து அமைதியாக இருந்தாள்.  ராமர் ஒரு மரத்திற்கு பின்பு மறைந்து நின்று கொண்டார். சுக்ரீவன் வாலி வெளியே வா என்று கர்ஜனை செய்தான்.
வாலி தன் தம்பி சுக்ரீவனை தேடிக் கொண்டு சோலைக்கு அருகில் உள்ள மலைக்கு வந்தான்.
 
★அங்கு சுக்ரீவன் வாலிக்காக காத்து கொண்டு இருந்தான். பிறகு இருவரும் சண்டையிட தொடங்கினர். ஓர் இடத்தில் சண்டையிடாமல் சுழன்றுச் சுழன்று சண்டையிட்டார்கள்.
இருவருக்குமிடையே மிகவும் பயங்கரமான சண்டை நடந்தது. சண்டை ஆரம்பித்ததும் இருவரில் யார் சுக்ரீவன்? யார் வாலி? என்று ராமரால் சிறிதும் கண்டுபிடிக்க முடியவில்லை. இருவரும் ஒரே வானர வடிவம் கொண்டு , ஒரே விதமான உடைகளையும், மற்றும் ஒரேவித ஆபரணங்களையும்  அணிந்து ஒரே விதமாக தங்களது வீரப் பராக்கிரமத்தை வெளிப்படுத்தி மிக உக்கிரமாக சண்டையிட்டுக்  கொண்டிருந்தார்கள். இருவரில் யார் வாலி என்று தெரியாமல் ராமரால் அவனைக் குறிபார்தது கொல்ல இயலவில்லை. ராமர் திகைத்து நின்றார்.
 
★ராமர் லட்சுமணனிடம், தம்பி! பார்த்தாயா! இருவரும் இரு சிங்கங்கள் போல கர்ஜித்து கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றார். ஆனால் அண்ணனை காத்து துணைபுரிவதே தம்பியின் கடமையாகும். ஆனால் இங்கு அண்ணன் தம்பி இருவரும் சண்டை போட்டு கொண்டு இருக்கிறார்கள் எனக் கூறி மனம் வருந்தினார் வட்சுமணர். அதற்கு ராமர், தம்பி லட்சுமணா! இந்த இருவரும்  புரிதல், பொறுமை, பாசம், ஒற்றுமை  இன்றி சண்டை போட்டுக் கொண்டுள்ளார்கள் என்றார். அவர்களின் சண்டை வெகுநேரம் நடந்தது. வாலியால் சுக்ரீவன் மிகுந்த அடிப்பட்டான்.
 
★சுக்ரீவன் அடிபட்டு தன் உயிர் போகும் தருவாயில் ராமர் ஒன்றும் செய்யவில்லையே என்று ஏமாற்றமடைந்தான். மதங்க முனிவர், வாலி நுழைந்தால் இறந்து விடுவான் என்று சாபமிட்ட ரிஷ்யமுக காட்டிற்குள் ஒரே ஓட்டமாக ஓடினான் சுக்ரீவன். அதனை கண்ட வாலி சுக்கிரனை விட்டு விட்டு தன் கோட்டைக்கு திரும்ப சென்றான்.  பிறகு சுக்ரீவன் ராமரிடம் வந்து, பெருமானே! நான் என்ன தவறு செய்தேன். அண்ணன் வாலி என்னை அடித்துக் கொண்டே இருக்கிறார். ஆனால் தாங்கள் ஒன்றும் செய்யாமல் அமைதியாகவே உள்ளீர்கள் என வலி தாங்க முடியாமல் கேட்டான்.
 
★ராமர் லட்சுமணன் இருவரும் மிகவும் அடிபட்டு துக்கத்தில் இருந்த சுக்ரீவனிடம் சென்றார். ராமர், வாலியை கொல்வேன் என்று சொன்ன  சொல்லை தவற விட்டார் என்று ராமரின் மீது கோபத்தில் தரையை பார்த்துக் கொண்டே ராமரிடம் பேசினான். தங்களால் வாலியை கொல்ல முடியாது என்றால் என்னிடம் முன்பே தயங்காமல் நீங்கள் சொல்லியிருக்கலாம். நான் வாலியுடன் சண்டைக்கு சென்று இருக்க மாட்டேன். உங்களை நம்பி சென்ற நான் இப்போது எனது உடல் முழுக்க காயங்கள் உயிர் தப்பி வந்திருக்கின்றேன். ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டான்.
 
★ராமர், சுக்ரீவனிடம் என்னை கோபிக்க வேண்டாம். நான் சொல்வதை சிறிது அமைதியாக கேளுங்கள். நான் அம்பை வாலியின் மீது விடாததற்கு காரணம் சொல்கிறேன். நீங்களும் வாலியும் உயரம் உடல் பருமன் ஆடை அணிகலன்கள் நடை உடை அனைத்திலும் ஒரே மாதிரி இருந்தீர்கள். சண்டை ஆரம்பித்து விட்ட பிறகு யார் சுக்ரீவன் யார் வாலி என்று என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை நான் திகைத்து நின்றேன். சிறிதும் வித்தியாசம் இல்லாமல் ஒரே மாதிரி இருக்கின்றீர்கள். என்னால் எதுவும் செய்ய முடியாமல் திகைத்து நின்றேன்.
 
★வாலி இவன் தான் என்று
எனக்கு உறுதியாக தெரியாமல் சந்தேகத்தின் அடிப்படையில் அம்பெய்து அது உங்களை கொன்று விட்டால் என்ன செய்வது என்று அமைதியாக இருந்துவிட்டேன். மீண்டும் வாலியை சண்டைக்கு அழையுங்கள். உங்கள் இருவரில் யார் வாலி என்று நான் தெரிந்து கொள்ள இப்போது மாற்று ஏற்பாடு செய்து விடுவோம். எளிதில் வாலியை கண்டு பிடித்து நிச்சயமாக கொல்வேன் என்றார் ராமர்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.....................
 
ஶ்ரீராம காவியம்
~~~~
141 /19-08-2021
 
பூமாலையுடன்
சுக்ரீவன்...
 
★ராமர், தம்பி! சுக்ரீவா, எனக்கு உங்கள் இருவரில் வாலி யார்? சுக்ரீவன் யார்? என வேற்றுமை தெரியவில்லை. அதனால் தான் நான் பாணத்தை தொடுக்காமல் அமைதியாக இருந்தேன் என்று கூறினார்.  பூமாலையை நீ உன் கழுத்தில் அணிந்து கொண்டு சண்டையிடு. இந்த பூமாலை உனக்கு வெற்றி மாலையாக அமையும். நான் எளிதாக வேற்றுமை அறிந்து வாலியை வதம் செய்வேன் என்றார்.
 
★ராமர், லட்சுமணனிடம் அழகிய பூக்கள் நிறைந்த கொடியை கொண்டு வந்து சுக்ரீவனிடம் கொடுத்துவிடு. சுக்ரீவன் அதை அணிந்து கொண்டு சண்டை போடட்டும். அதை வைத்து யார் வாலி என்று எளிதில் கண்டு பிடித்து கொல்வேன். இன்று வாலி மரணித்து பூமியில் விழுவதை நீ பார்ப்பாய் சுக்ரீவா! என்றார். சுக்ரீவன் சமாதானம் அடைந்து மறுபடியும் உற்சாகம் அடைந்தான். லட்சுமணன் பூங்கொடியை சுக்ரீவன் கழுத்தில் மாலையாக போட்டான்.
 
★வாலி இருக்கும் இடத்திற்கு   மீண்டும் சென்றான் சுக்ரீவன். ராமரும் லட்சுமணனும் அவன் பின்னாலேயே சென்றார்கள். வாலியை மீண்டும் அறை கூவி அழைத்தான் சுக்ரீவன். ராமரும் லட்சுமணனும் ஒரு மரத்திற்கு பின்னால் நின்று கொண்டார்கள். அப்போது லட்சுமணன் ராமரிடம் பேச ஆரம்பித்தான். இந்த சுக்கிரீவன் நம்பத்தகுந்தவன் போல் சிறிதும் தெரியவில்லை. தனது சொந்த அண்ணனையே கொல்வதற்கு நம்மை அவன் துணையாகத்  தேடுகிறான் என்றால் அது துரோகம் அல்லவா? அவனை நம்புவது மண் குதிரையை நம்பி நட்டாற்றைக் கடப்பது போல் இருக்கிறது என்றான்.
 
★ஶ்ரீ ராமர், லட்சுமணனிடம் தம்பியர்கள் அனைவரும் பரதன் ஆக முடியாது. சுக்ரீவனிடம் ஒரு சில குறைகளை தேடினால் இருக்கலாம். அவன் எப்படிப் பட்டவன் என்ற ஒரு ஆராய்ச்சி நமக்கு முக்கியம் இல்லை. யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை வைத்துத் தான் ஒரு காரியத்தில் இறங்க வேண்டும். வாலி அவன் தம்பி சுக்கிரீவன் இடமிருந்து அவனுக்கு உரிய ஆட்சியை எடுத்துக் கொண்டான். அதில் தவறு ஏதும் இல்லை. சுக்ரீவன் மனைவியை வாலி ஏன் கைப்பற்ற வேண்டும்? எந்தத் தவறும் செய்யாத தம்பியை சரிவர விசாரிக்காமல் உண்மை என்ன என்று அறியாமல் ஏன் விரட்டி அடிக்க வேண்டும்? வாலி தவறு செய்திருக்கிறான். அவனை அழிப்பது அறம் தான் என்று கூறித் தெளிவு படுத்தினார் ராமர்.
 
★ராமர் மரத்திற்கு பின்பு ஒளிந்து நிற்பதை பார்த்துக். கொண்ட சுக்ரீவன், வாலி!  வெளியே வா! என்று கத்த ஆரம்பித்தான். சுக்கிரீவனின் அறை கூவலைக் கேட்ட வாலி மிகவும் வியந்தான். சண்டைக்கு பயந்து ஓடியவன் இப்போது திரும்பவும் வலிய வந்து அழைக்கின்றானே என்று வாலிக்கு வியப்பை அளித்தது. இன்று சுக்ரீவனை அழித்தே விடவேண்டும் என்ற கோபத்தில் கிளம்பினான். அப்போது மீண்டும் வாலியின் மனைவி தாரை அவன் போருக்குச் செல்வதைத் தடுத்தாள். எனக்கு எதோ அபசகுனமாக தெரிகிறது. தாங்கள் சண்டைக்கு செல்வது எனக்கு பயமாக இருக்கிறது.
 
★அடிபட்டு அவமானப்பட்டு உயிருக்கு பயந்து ஓடிப்போன சுக்ரீவன் மறுபடியும் தைரியமாக   தங்களுடன் சண்டையிட வந்து இருக்கிறான். அவரது உரத்த பேச்சையும் கர்ஜனையும் பார்த்தால் ஏதோ அபாயமும் சூழ்ச்சியும் இருப்பது போல் எனக்கு தெரிகிறது. அவருக்கு துணையாக யாரையாவது அழைத்து வந்திருக்கலாம் என்று எண்ணுகிறேன். இன்று போக வேண்டாம். நாளை காலை ஆலோசனை செய்து முடிவு செய்யலாம். அதன் பிறகு எதிரியுடன் சண்டை போடலாம் என்று கூறி தடுத்தாள்.
 
★தாரையின் பேச்சு வாலிக்கு பிடிக்கவில்லை. சண்டைக்கு கிளம்புவதிலேயே மும்முரமாய் இருந்தான். தாரை கண்ணீர் வடித்தாள். நமது ஒற்றர்கள் நமது மகன் அங்கதனிடம் சில முக்கிய தகவல்களை சொல்லி இருக்கிறார்கள். அவன் எனக்கு சொன்னான். அவர்கள் கூறிய செய்திகளை  அப்படியே நான் தங்களிடம் சொல்கிறேன். தயவு செய்து கேளுங்கள் என்றாள்.
நான் முன்பே கூறியது போல
ராமர் என்பவரும் அவரது தம்பி லட்சுமணனும் இங்கு வந்து உள்ளார்கள்.அவர்களின் நட்பை சுக்ரீவன் இப்போது பெற்று உள்ளான்.இதனால் அவனது தைரியமும் பலமும் மிகவும் அதிகரித்திருக்கிறது. அவர்கள் வெற்றி பெறுவதற்கு ஏதேனும் சூழ்ச்சி செய்யக்கூடும். நான் பிதற்றுகிறேன் என்று எண்ண வேண்டாம். நமது மகன் அங்கதன் இருக்கின்றான். அவனுடைய நலனை கருத்தில் கொள்ளுங்கள். அவனுக்காகவும் எனக்காகவும் நீங்கள் இருக்க வேண்டும். தயவு செய்து செல்லாதீர்கள் என்று சொல்லி கண்ணீர் வடித்தாள்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.....................
 
ஶ்ரீராம காவியம்
~~~~
142 /20-08-2021
 
வாலி வதம்...
 
★மேலும் உங்கள் தம்பியும் நல்லவன் தானே. அவனை ஏன் விரோதிக்க வேண்டும். உங்களிடம் பக்தியுடன் தானே இருந்தார். அவரை விட நெருக்கமான உறவினர் என்று சொல்ல நமக்கு யாரும் இல்லை. அவரிடம் உள்ள விரோதத்தை மறந்து விட்டு பாசத்தை காட்டுங்கள். அவரிடம் ஒன்றாக இருப்பதே நமக்கு நலம். அவரை அழைத்து பயைழபடி இளவரசு பட்டம் கட்டிவிடுங்கள். எனக்கு விருப்பமான காரியத்தை தாங்கள் செய்ய விரும்பினால் என் பேச்சை கேளுங்கள் புறக்கணிக்காதீர்கள் என்று வாலியை தடுத்தாள் தாரை. வாலி தாரையிடம் மெதுவாக  பேச ஆரம்பித்தான்.
 
★ராமரை பற்றிய செய்தியை ஒற்றர்களிடம் நானும் கேட்டு அறிந்தேன். நீ கவலைப்பட வேண்டாம். அவர் தர்மம் அறிந்தவர். அவர் அநியாய காரியத்தில் இறங்க மாட்டார். ராமருக்கு ஒரு குற்றமும் செய்யாத என்னை ஏன் அவர் கொல்லப் போகிறார்? எதிரி ஒருவன் சண்டைக்கு என்னை அழைக்கும் போது நான் எப்படி செல்லாமல் சும்மா இருக்க முடியும்?. அதனை விட உயிரை விடுவதே மேல். உனக்காக வேண்டுமானால் சுக்ரீவனின் கர்வத்தை அடக்கி அவனை கொல்லாமல் அப்படியே விட்டுவிடுகிறேன்.
 
★அவன் போடும் கூக்குரலின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. அவனை அடக்கி வெற்றியுடன் திரும்பி வருகிறேன் பயப்பட வேண்டாம். மங்களகரமான  வார்த்தைகள் சொல்லி என்னை வழி அனுப்பு. என்னைத் தடுக்காதே என்று சொல்லி கிளம்பினான் வாலி. தாரை கண்களில் கண்ணீருடன் வாலியை வலம் வந்து நடப்பது நல்லதாக நடக்கட்டும் என்ற மங்கள வார்த்தைகளை சொல்லி கவலையுடன் வழிஅனுப்பினாள். வாலி சுக்ரீவன் இருக்குமிடம் வந்து சேர்ந்தான்,
 
★ராமர் இருக்கும் தைரியத்தில் சுக்ரீவன் வாலியை நோக்கி வேகமாக வந்தான்.இருவருக்கும் இடையே சண்டை மூர்க்கமாக நடைபெற்றது. சிறிது நேரத்தில் வாலியின் பலம் அதிகரித்தது. சுக்ரீவனின் பலம் குறைய ஆரம்பித்தது. தன்னுடைய கதையால் வாலி  சுக்ரீவனை பலமாக அடித்தான். வாலியின் அந்த பலமான அடியால் சுக்ரீவன் உயிர்போகும் நிலைக்கு வந்தான். அப்போது ராமர் ஒரு மரத்தின் மறைவில் நின்றுக் கொண்டு வாலியை நோக்கி பாணத்தை பூட்டிக் கொண்டு இருந்தார்.
 
★சுக்ரீவன் என்ன செய்வதென்று திகைத்து நின்றான். அப்போது வாலி சுக்ரீவனை பார்த்து இப்போதே உன்னை கொன்று விடுகிறேன் என்று சொல்லி சுக்ரீவனை தன் தலைக்கு மேலே தூக்கினான்.  இதனை கண்ட ராமர் இனியும் தாமதித்தால் சுக்ரீவன் தாங்க மாட்டான் என்று எண்ணி தன் அம்பை வாலிக்கு குறி வைத்து விடுத்தார். அம்பு ஆச்சா மரத்தை துளைத்தது போல் வாலியின் வஜ்ரம் போன்ற உடலை துளைத்தது. பட்ட மரம் வீழ்வது போல் வாலி கீழே விழுந்தான்.
 
★ராமனின் பாணம் வாலியின் மார்பில் துளைத்தது. வாலி மயங்கி கீழே விழுந்தான். பிறகு சிறிது மயக்கம் தெளிந்த வாலி தன் மார்பில் அம்பு துளைத்தை பார்த்து மிகவும் கோபமுற்றான். வாலி கோபத்தில், என் மீது அம்பு எய்தியவரை நான் உயிரோடு விடமாட்டேன். இவ்வுலகை அழிப்பேன் என உரைத்தான். பிறகு வாலி என் மீது அம்பை தொடுத்தவர் யாராக இருக்கக் கூடும்?  ஒருவேளை தேவர்களாக இருப்பார்களா? ஆனால் அந்த தேவர்களுக்கு இந்த அளவுக்கு வலிமை உள்ளதா என மனதில் எண்ணினான். வாலி தன் மார்பில் பாய்ந்த அம்பை எடுக்க முயற்சித்தான். எவ்வளவு முயன்றும் அந்த அம்பை அவனால் வெளி கொண்டு வர முடியவில்லை.
 
★இதனால் அவன் மனம் மிகவும் வருந்தினான்.  அவன் அதிக
கோபத்தில் என்ன செய்வது  என்று தெரியாமல் சிரித்தான். அவன் மார்பில் இருந்து இரத்தம் ஆறு போல் பெருகியது. இதனை பார்த்துக் கொண்டிருந்த தம்பி சுக்ரீவன், அண்ணன் மீது கொண்ட பாசத்தில் அழுது கீழே விழுந்தான். பிறகு வாலி தன் மார்பின் மீது பாய்ந்த அம்பில் உள்ள பெயரை பார்த்தான். அதில் ராம் என எழுதப்பட்டு இருந்தது. இதனை பார்த்த வாலி மிகவும் அதிர்ச்சி அடைந்தான். தருமநெறியில் நடக்கும் ராமனா இச்செயலை செய்தது. தாரையிடம் இராமனை பற்றி பெருமையாக பேசி அவளை கடிந்துவிட்டு வந்தேனே என நினைத்து  சிரித்தான்.
 
★ரகு குலத்தில் பிறந்த இராமர் தவறே செய்யாத என்மீது அம்பு எய்தியது எதற்காக? தசரதரின் புதல்வர் ராமர் நீதிநெறி தவறலாமா? ராமனின் இந்தச் செய்கையை பார்த்து ஏளனமாக சிரித்தான். பிறகு அம்பு வந்த திசையை உற்று பார்த்தான். ராமர் வாலியை நோக்கி வந்துக் கொண்டு இருந்தார்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.....................
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~
143 /22-08-2021
 
வாலியின் கோபம்...
 
★தன் மீது அம்பு ஏய்தது யார் என்று நான்கு பக்கமும் தேடினான் வாலி. அப்போது ராமர் லட்சுமணன் இருவரும் வாலியின் அருகில் வந்தனர்.
வாலி முன் ராமர் வந்து நின்றார். ஒளிவீசும் தோற்றத்தோடும், கையில் வில் ஏந்தி வந்த ராமரை பார்த்தான் வாலி. பிறகு தன் மார்பிலிருந்து கஷ்டப்பட்டு பிடுங்கி எடுத்த  அம்பினையும் அதில் செதுக்கியிருந்த இரண்டு எழுத்துக்களையும் பார்த்தான்.
 
★பிறவி ஒவ்வொன்றுக்கும், முற்பிறவி, இப்பிறவி, இனி வரும் பிறவி எனும் மூவகை உண்டு. இந்த மூன்று வகைப் பிறவிகளுக்கும் வாழும் இடமாக இருக்கின்ற இந்தப் பூவுலகில், இருக்கும் உயிர்களுக்கெல்லாம் மூலமந்திரமாய் இருப்பது எதுவோ, தன்னை ‘நான் யார்?’ என்ற கேள்வி கேட்டு அதற்கான உண்மையான பொருளை அறிந்து கொள்ளும் “அஹம் பிரம்மாஸ்மி” எனும் ஞானப் பொருளை,  இனி பிறவியில்லை எனும் நிலையை இந்த ஒரு  பிறவியிலேயே தரக்கூடிய மிக அற்புத அருமருந்தாகிய, மந்திரச் சொல்லாகிய, “ராம” என்னும் பெருமை மிக்க இரண்டு எழுத்தைத் தன் கண்களால் தெரியக் கண்டான்.
 
★“ராம” என்ற அந்த இரண்டு எழுத்து மந்திரத்தின் அதிஅற்புத பெருமையை விளக்கக்கூடிய பல சான்றுகளைச் சொல்லலாம். எல்லா மந்திரங்களிலும் மூலாதாரமான மந்திரம் ‘ராம’ என்பதற்கு, சம்பாதி,  தான் இழந்து போன சிறகுகள் திரும்ப முளைக்க, கூடியிருந்த அனுமன் முதலான அனைவரையும் ‘ராம’ மந்திரத்தைச் சொல்லுங்கள் என்று சொல்ல வைத்து அதனால், தான் முன்பு இழந்த சிறகுகளை திரும்ப அடையப் பெற்றதாக இதே ராம காதையில் பின்னால் வருகிறது.
 
★தன் மீது அம்பு செலுத்தியது ராமன் என்பதைத் தெரிந்து கொண்ட வாலிக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. ஶ்ரீ ராமனா இந்தக் காரியத்தைச் செய்தான்?
தன் மீது ராமர் தான் அம்பு ஏய்திருக்கிறார் என்பதை உணர்ந்த வாலி ராமரிடம் பேச ஆரம்பித்தான். மிகவும் கோபம் கொண்ட வாலி ராமரிடம், என் மீது அம்பை எதற்காக துளைத்தாய்? நான் உனக்கு என்ன தவறு செய்தேன்? எல்லோருக்கும் தீமையை அகற்றி நன்மை செய்யும் நீ எனக்கு இத்தகைய தீங்கு விளைவிக்க காரணம் என்ன?
 
 ★உத்தம குலத்தில் தசரதரின் புத்திரனாக பிறந்த உனது நற்குணங்களும் ஒழுக்கமும் உலகம் அறிந்தது. நல்ல அரச குடும்பத்தில் பிறந்து இப்படி ஒரு பாவத்தை செய்து அரச பதவிக்கு தகுதியானவன் அல்ல என்று காட்டிவிட்டாய். நீ முறை தவறி என்னைக் கொன்று பெரும் பாவத்தை செய்து விட்டாய்.
ராமா! வாய்மையும், மரபையும் காக்கும் தசரதனின் புதல்வனா நீ?  ராகவா! உத்தம குணமிக்க பரதனின் அண்ணனா நீ! வசிஷ்ட முனிவரிடம் கற்ற கல்வியை நீ மறந்து விட்டாயா?  தர்மத்தை கடைபிடிக்கும் நீ ஏன் இப்படி செய்தாய்?.
 
★உன்னிடமா நான் சண்டை இட்டுக் கொண்டிருந்தேன். நான் மற்றொருவனுடன் மனம் ஒன்றி வீராவேசமாக சண்டையிட்டுக் கொண்டிருக்கையில் என் கண்களுக்கு தெரியாமல் மறைந்திருந்து என் மேல் அம்பு எய்தி விட்டாய். என் முன்பு நின்று என்னுடன் நீ சண்டையிட்டு இருந்தால் இந்நேரம் என்னால் கொல்லப்பட்டிருப்பாய். அந்த
அரக்கர்களை அழித்து காட்டில் வாழும் முனிவர்களை காத்தாய். என்னை அழித்து நீ யாரை காக்க
போகிறாய்?   அன்னம் போன்ற உன் மனைவி சீதா தேவியை பிரிந்த பிறகு உனக்கு என்ன செய்வதென்று சிறிதுகூட தெரியவில்லையா? நான் தனிப்பட்ட முறையில் உனக்கு எந்தத் தீங்கும் செய்யவில்லை.
 
★உன்னுடைய நாட்டிற்கோ நகரத்திற்கோ நான் எந்த தீங்கும் செய்யவில்லை. அப்படியிருக்கும் போது என்னைக் கொல்ல உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? என்று கடுமையான வார்த்தைகளால் ராமரிடம் பேசினான் வாலி. ஓர் அரக்கன் உன் மனைவியை கவர்ந்து சென்றதால், குரங்கினத்தின் அரசனாகிய என்னை வதம் செய்வதா? ராமா! உன்னிடத்தில் இருந்த அன்பும், பாசமும் எங்கே போனது? வேந்தனே! நாட்டை உன் தம்பி பரதனுக்கு கொடுத்து விட்டு, இக்கானகத்துக்கு வந்த நீ, என்னை கொன்றுவிட்டு அரசை தம்பி சுக்ரீவனிடம் கொடுக்கத் தான் இவ்வாறு செய்தாயா? ஓர் உயிரை காக்கும் நீ, ஓர் உயிரை எடுப்பது அதர்மத்திற்கு சமமாகும்.
 
★எந்த ஒரு வீரனும் பின் நின்று அம்பு எய்ய மாட்டான். இதில் இருந்து தெரிகிறது நீ எத்தகைய வீரன் என்று?.  இன்று நீ அறநெறிப்படி நடக்கவில்லை. சுக்ரீவன் அழைத்ததால் இங்கு வந்து,  சண்டையிட்டு கொண்டு இருந்த என்னை இக்கதிக்கு ஆளாக்கிவிட்டாய். இது உனக்கு நியாயமாகப்படுகிறதா? நீ என்னை கொன்று என்ன சாதிக்க போகிறாய்?. நேருக்கு நேர் என்னிடம் சண்டை போடாமல் பின் நின்று என் மீது அம்பு எய்திய உன்னை மக்கள் பாராட்டுவார்களா? இல்லை தூற்றுவார்களா?நீ அனைவரைக் காட்டிலும் வில்வித்தையில் மிக சிறந்தவன் என கூறுகிறார்கள். நீ பின் நின்று அம்பு எய்துவது தான் உன் வில்வித்தையின் சிறப்பா? என்று கேட்டான் வாலி.
 
★வாலி கூறியதையெல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்த ராமர் வாலியிடம்
பேச ஆரம்பித்தார்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.....................
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~
144 /23-08-2021
 
வாலியின் நிந்தனை
ஶ்ரீராமரின் போதனை...
 
★வாலி கூறியதையெல்லாம் அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்த ராமர்,  வாலி! தவறுகள் ஏதும்  செய்யாத உன் தம்பியான  சுக்ரீவனை நீ தண்டிப்பது நியாயமா? சுக்ரீவன் அங்கு  என்ன நடந்தது என்று சொல்ல வந்தும்கூட,  அதை நீ செவி கொடுத்து கேட்கவில்லை. அது மட்டுமின்றி சுக்ரீவன் வானரர் எல்லோரின் நன்மைக்காக தான் குகையை மூடிவிட்டு வந்தானே தவிர, உன்னை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. அதை சுக்ரீவன் உன்னிடம் சொல்ல வந்தும் நீ கேட்கவில்லை. இது உன் தவறு தானே என்று வாலியிடம் கேட்டார்.
 
★உனக்கு துணையாக இருந்த உன் தம்பியை விரட்டி விரட்டி அடிப்பது அண்ணனின் செயலா? எனவும் கேட்டார் ராமர். மேலும் மலைகள் காடுகள் நதிகள் உட்பட இந்த முழு பூமியும் அதிலுள்ள அனைத்தும் இக்ஷ்வாகு வம்சத்தினரின் ஆட்சிக்கு உட்பட்டது. இக்ஷ்வாகு வம்ச அரசர்களுக்கு தவறு செய்யும் எல்லா மனிதர்களையும் மற்றும் விலங்குகளையும் தண்டிக்க முழு அதிகாரம் உள்ளது. இஷ்வாகு குலத்தின் ராஜ குமாரனான எனக்கு மன்னரான பரதரின் கட்டளைப்படி, நீதியிலிருந்து விலகியோரை தண்டிக்கும் அதிகாரம் உண்டு. காமத்தாலும் பேராசையாலும் நீ பாவகரமான செயல்களைச் செய்தாய்.
 
★அது மட்டுமல்லாமல், எல்லாப் பெண்களையும்  தாயை போல நினைக்க வேண்டும். ஆனால் நீ, தம்பியான சுக்ரீவனின்  மனைவி ருமா என்று தெரிந்தும் அவரை கவர்ந்து சென்று சிறை வைத்து உள்ளாய். இந்த ஒரு பாவச் செயல் போதும் உன்னை நான் தண்டிப்பதற்கு. மகள், மருமகள், சகோதரி, சகோதரனின் மனைவி ஆகியோருடன் உறவு வைத்துக் கொள்பவர்களுக்கு மரணமே தகுந்த தண்டனை. ஓர் அரசன் பாவம் செய்த ஒருவனைக் கொல்லவில்லை என்றால் அந்த பாவம் அரசனுக்கே வந்து சேரும். எனவே உன்னை கொன்றேன்.
 
★இதனைக் கேட்ட வாலி, சரி ராமா! நேருக்கு நேர்போர் புரிவது தான் ஒரு வீரனுக்கு அழகு. நீ வேடனை போல் மறைந்திருந்து என் மேல் அம்பு எய்தியது என்ன நியாயமா? எனக் கேட்டார். இதற்கு லட்சுமணர், வாலி! நீ உன் தம்பி சுக்ரீவனை தண்டித்து கிஷ்கிந்தையை விட்டு விரட்டி விட்டாய். ஆனால் சுக்ரீவன் உன்னிடம் இருந்து தன்னை காப்பாற்றக் கோரி அண்ணன் ராமரிடம் சரணடைந்து விட்டான். ராமரும் உன்னை காப்பாற்றி வாலியை கொல்வேன் என்று சுக்ரீவனிடம் வாக்களித்து விட்டார்.
 
★ராமர்  நீதியையும், அனைத்து தர்மத்தையும் நிலைநாட்டுபவர் என்பது உனக்கு நன்கு தெரியும். தன்னிடம் அடைக்கலம் வேண்டி வருபவரை காப்பதே ராமரின் தலையாய கடமையாகும். இதை நீ புரிந்து கொள்ள வேண்டும். அது மட்டுமில்லாமல் ஶ்ரீராம் அண்ணா, உன்னிடம் நேருக்கு நேர் நின்று போர் புரிந்தால் நீயும் அண்ணாவிடம் சரணடைந்து விடுவாய். பிறகு அண்ணாவால் கொடுத்த வாக்குறுதியை சிறிதும் காப்பாற்ற முடியாமல் போய்விடும். அதனால் தான் உன் மீது மறைந்திருந்து அம்பு எய்தினார் என்றார்.
 
★உன்னை ஏன் மறைந்திருந்து அம்பெய்தினேன்  என்பதற்கான மற்றொரு காரணத்தையும்  சொல்கின்றேன் கேட்டுக்கொள் என்றார் ராமர்.இந்திரன் உனக்கு கொடுத்த வரத்தைக் காக்கவும், இந்திரனின் வரத்தின் மதிப்பை குறைத்து விட வேண்டாம் என்பதற்காகவும் உன் மீது மறைந்திருந்து அம்பு எய்தேன். இதில் தவறு ஒன்றும் இல்லை. மேலும் சத்திரியர்கள் வேட்டை ஆடும் போது கவனமின்றி இருக்கும் மிருகங்களை இப்படி மறைவான இடத்திலிருந்து அம்புகளால் தாக்குவதுண்டு. நீ ஒரு வானரம் என்பதால்தான்  மறைந்திருந்து முன்னறிவிப்பு இன்றி உன்னைத் தாக்கியதில் எந்த தவறும் இல்லை.
 
★கடத்தப்பட்ட எனது மனைவி எங்குள்ளாள்? என்று அனைத்து இடங்களிலும் தேடுவதற்கு ஒரு மன்னனின் உதவியானது எனக்குத்  தேவைப்பட்டது. தர்ம சாஸ்திரங்களின்படி ஒரு நாட்டு மன்னன் தனது எதிரியை வெற்றி கொள்வதற்கு மற்றொரு மன்னனின் உதவியை நாடலாம். அதன்படி சுக்ரீவனை சந்தித்து நட்பு கொண்டேன். சுக்கிரீவன் முதலில் என்னைச் சரணடைந்து தனக்கு உதவுமாறு என்னிடம் வேண்டினான். உன்னைக் கொல்வதாக நான் சுக்ரீவனுக்கு வாக்குறுதி அளித்துவிட்டேன். சத்திரியன் கொடுத்த வாக்கை மீறுவதில்லை என்பதால் அந்த வாக்கை தற்போது நிறைவேற்றி உள்ளேன்.
 
★சுக்ரீவனுக்கு கொடுத்த அந்த வாக்கை காப்பாற்றுவதற்காக மறைந்திருந்து அம்பு செலுத்த வேண்டி இருந்தது என்று சொல்லி முடித்தார் ராமர்.
வாலி, ராமா! நீ சொல்வதை சரி என்று ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் விலங்குகளும் மனிதர்களும் வேறுவேறு தானே.
ஒழுக்கம் என்பது மனிதர்களுக்கு விதிக்கப்பட்ட வரைமுறைகள். நாங்கள் விலங்குகள்  ஆவோம். எங்களைப் போன்ற  எல்லா விலங்குகளுக்குள்ளும் மனைவி கணவன் என்று உரிமைகளை கொண்டாட முடியாது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடுக்கு இங்கே இடம் இல்லை.
 
★நாங்கள் விரும்பியவாறு வாழலாம் என்பது எங்களுக்கு உள்ள உரிமை. வல்லவன் எதையும் செய்யலாம். நாங்கள் இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டு வாழ்பவர்கள். அப்படி இவ்வுலகில் மனிதருக்குச் சொல்லப்பட்ட இந்த  அளவு கோல்களை வைத்து எங்களை அளப்பதில் நியாயம் இல்லை. ஒரு விலங்காகிய என்னை துன்புறுத்துவது தவறு தானா? இதற்கு நீ என்ன சொல்ல போகிறாய்? என்றார்.
 
★வாலி! விலங்குகளுக்கு எது சரி, எது தவறு என்று தெரியாது. ஆனால் நீ இந்திரனின் அருளால் தோன்றியவன். எல்லா கலையும் நன்கு கற்றவன். தருமத்தின் நெறிகளை நன்கு அறிந்தவன். மனிதன், விலங்கு என்ற பாகுபாடு உருவினால் வருவது அல்ல. அவர்களின் அறிவின் திறமையைக் கொண்டு உள்ளது. நீ உருவத்தில் வேண்டுமானால் விலங்காய் இருக்கலாம்.ஆனால்  உன் அறிவும், திறமையும் ஒரு மனிதனுக்கு சமமாகும். ஆதலால் தான் உன்னை நான் தண்டித்தேன். பிறப்பால் நீ விலங்கு என்று உன் தவறுகளை நியாயப்படுத்துவது சரியல்ல.
 
★மிருகம் மனிதன் என்பது உடலைப் பற்றியது. ஆனால் சத்தியம் அனைவருக்கும் ஒன்றே. தம்பியின் தாரத்தைத் தங்கையாக மதிக்க வேண்டிய நீ அவளைத் துணைவியாக ஆக்கி கொண்டாய். பிறர் மனைவியை விரும்பும் அற்பத்தனமானது  உன்னிடம் அமைந்துள்ளது. நீ உயிர் வாழத்தகுதியானவன் அல்ல. விலங்கு என்று சொல்லி தப்பித்துக் கொள்ளமுடியாது.
அதுமட்டுமல்ல. எல்லோருக்கும் தீங்கை விளைவிக்கும் அரக்கன் ராவணனிடம் நீ நட்பு கொண்டு உள்ளது சரியானதா? எனக் கேட்டார்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.....................
 
ஶ்ரீராம காவியம்
~~~~
145 /24-08-2021
 
வாலி,ராமரிடம்
கேட்ட வரம் ..
 
★ராமரின் பதிலில் திருப்தி அடைந்த வாலி அடுத்ததாக ஒரு கேள்வியை கேட்டான். உனது மனைவியை தூக்கிச் சென்ற ராவணனைக் கொல்வதற்கு என் நட்பை நீ தேடி இருக்கலாம். ஒரு கணத்தில் அந்த ராவணனை கயிற்றால் கட்டி இங்கு தூக்கி வந்திருப்பேன். சிங்கத்தை உற்றத் துணையாக வைத்துக் கொள்வதை விட்டு, சிறுமுயலை நம்பி விட்டாய். உன்னிடம் முன் யோசனை இல்லை என்றான் வாலி. அதற்கு ராமர், பற்களைக் குத்தித் தூய்மைப்படுத்த சிறு துரும்பு போதும், எனக்கு அந்த உலக்கை தேவை இல்லை. அதுபோல் ராவணனை அழிக்க எனக்கு நீ தேவை இல்லை, உன் தம்பியே போதும் என்று மிகவும் தெளிவாக கூறினார்.
 
★அதற்குப் பின், ராமர் தவறு செய்திருக்க மாட்டார், தவறு தன்னுடையதுதான் என்று உணர்ந்த வாலி மனம் மாறினான்.  தான் கொடுத்த வாக்குறுதியை நிலைநாட்டவே ராமர் இவ்வாறு செய்தார் என்பதை புரிந்து கொண்ட வாலி, அமைதி அடைந்தான். ராமர் என்றும் அதர்மத்திற்கு துணை போகமாட்டார் என்பதை வாலி புரிந்து கொண்டான். தன் உயிர் போகும் நிலையிலும் ராமரை வணங்க முற்பட்டான். தான் செய்த தவறான செயல்களால் தான், ராமர் தன்னை தண்டித்தார் என்பதை புரிந்து கொண்டான் வாலி.
 
★பிறகு வாலி ராமரிடம், எம்பெருமானே! நான் தங்களை கடிந்து பேசிய சொற்களை மறந்து என்னை மன்னித்து அருள வேண்டும். உயிர் போகும் தருவாயில் பகைமையை அகற்றி எனக்கு நல்லறிவு அருளுனீர்கள். தாங்கள் எனக்கு ஒரு வரத்தை அருள வேண்டும். என் தம்பி சுக்ரீவன் ஏதாவது தவறு செய்தால் அவன் மீது கோபத்தை காட்டாமல் அவனை மன்னித்து அருள வேண்டும் என வேண்டிக் கொண்டான்.
 
★தாங்கள் எனக்கு மற்றொரு வரத்தையும் அருள வேண்டும். தங்களுடைய தம்பிகள் தங்கள்மீது மிகுந்த பாசமும், அன்பும் வைத்துள்ளார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்கள் யாரேனும் சுக்ரீவன் தன் அண்ணனை கொன்றவன் என்று இகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ராமரும், வாலி கேட்ட இரண்டு வரங்களை அருளினார். பிறகு வாலி எம்பெருமானே! சுக்ரீவன் நன்றி மறவாதவன். சீதையை மீட்க தங்களுக்கு உதவி புரிவான். சுக்ரீவன் வாலியை பார்த்து அழுது கொண்டு இருந்தான்.
 
★வாலி, சுக்ரீவனை பார்த்து, தம்பி! நீ வருந்தாதே! ராமர் என்றும் உனக்கு உற்ற ஒரு துணையாக இருப்பார் எனக் கூறினான். பின்னர் ராமரிடம், தங்களுக்கு துணையாக அனுமனும் இருக்கிறான். மிகவும் வலிமையுடையவன். தாங்கள் அனுமனை சாதரணமானவனாக எண்ண வேண்டாம். தாங்கள் கட்டளையிட்டால் போதும், அந்த  ஒரு வேலையை நொடிக்குள் முடித்து விடும் திறமை நமது அனுமனுக்கு உண்டு என்றான். தாங்கள் என் தம்பி சுக்ரீவனை இனி தங்கள் தம்பியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இவர்கள் சீதையை கண்டுபிடிக்க உறுதுணையாக இருப்பார்கள் என்றான் வாலி.
 
★பிறகு வாலி சுக்ரீவனை அழைத்து, கட்டி தழுவிக் கொண்டார். தம்பி சுக்ரீவா! நீ அழாதே. நீ ராமனுக்கு உதவி செய்யும் பெரும் பாக்கியத்தை பெற்றுள்ளாய். ராமர் உனக்கு கொடுக்கும் கட்டளையை செய்து முடி என்றார். ராமர் உனக்கு துணையாக இருப்பார் எனக் கூறி பல அறிவுரைகளை கூறினான். பிறகு வாலி, தன் தம்பி சுக்ரீவனை ராமனிடம் ஒப்படைத்து விட்டு இரு கரம் கூப்பி இராமனை வணங்கினான்.
 
★குறிப்பு: ராமர் வாலியை தாக்கியதற்கு வேறு சில பின்னணிக் காரணங்களும் உள்ளது. முதலில் வாலி யாராலும் எதிர்த்து வெற்றி கொள்ள முடியாத தன்னை விஷ்ணு அவதாரமெடுத்து அழிக்க வேண்டும் என்று விரும்பியிருந்தான். இரண்டாவதாக ராவணனால் வாலியை எதிர்க்க முடியாமல் அவனை அழிக்க சில அரக்கர்களை அனுப்பி பல தந்திரங்களையும் செய்து இருந்தான் ராவணன். அதன் காரணமாகவே வாலியும் சுக்ரீவனும் பிரிந்து சண்டையிட்டு கொண்டனர்.
 
★பல ஆண்டுகளுக்கு முன்பு இந்திரனிடம் வாலி வரம் பெற்றதும் ராகுவிற்கும் வாலிக்கும் சண்டை ஏற்பட்டது. அதில் தோற்ற ராகு வாலியிடம் உனது மரணத்திற்கு நானே காரணாமாக இருப்பேன் என்று சாபமிட்டிருந்தான். வாலியும் சுக்ரீவனும் சண்டையிட்டு பிரிந்த நேரத்தில் ராகு, தான் விட்ட சாபத்தின்படி வாலியின் மனதில் சுக்ரீவனின் மனைவி மீது ஆசை ஏற்படும்படி தூண்டி விட்டான் அதன்படியே சுக்ரீவனின் மனைவி மீது ஆசை கொண்டு அறநெறி தவறிய வாழ்க்கையை வாழத்தொடங்கினான். இந்த நிகழ்வினால் ராகுவின் சாபம் நிறைவேறியது. ராவணனின் தந்திரம் நிறைவேறியது. வாலியின் ஆசைப்படி அவன் விஷ்ணுவின் கையாலேயே மரணமடைந்தான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.....................
ஶ்ரீராம காவியம்
~~~~
146 /25-08-2021
 
அங்கதனுக்கு அறிவுரை...
 
★பிறகு வாலி பணியாட்களை ஏவி தன் மகன் அங்கதனையும் மனைவி தாரையையும்  அழைத்து வர அனுப்பினான்.
ராமரால் வாலி கொல்லப்பட்டான் என்ற செய்தி கிஷ்கிந்தையில் அனைவருக்கும்  தெரிந்தது. இச்செய்தியை கேட்டதும் தாரை முதலில் நடுநடுங்கிப் போனாள். தன் மகன் அங்கதனுடன் தனது அறையிலிருந்து வெளியே வந்தாள். கிஷ்கிந்தையில் வானரங்கள் அங்குமிங்கும் பயந்து ஓடினார்கள். வானர சிங்கமான வாலி யுத்தத்திற்கு செல்லும் போது அவருக்கு முன்பாக செல்வீர்கள். இப்போது தனியாக இருக்கும் அவர் இருக்குமிடம் செல்லாமல் பயந்து ஓடுகின்றீர்கள். நில்லுங்கள் ஓடாதீர்கள் என்ற தாரை அவர்களிடம் பேச ஆரம்பித்தாள்.
 
★சுக்ரீவனை  அரசனாக ஆக்குவதற்காக வாலியைக் கொன்றார்  ராமன். அவரால் உங்களுக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை. ராமரை கண்டு நீங்கள் அனாவசியமாக பயந்து ஓட வேண்டாம் என்று வானரங்களுக்கு தைரியம் கொடுத்த பிறகு அங்கிருந்து சண்டை நடந்த இடத்திற்குச் செல்ல ஆயத்தமானாள். ஆனால்
வானரங்கள் அவளை அங்கு போகவிடாமல் தடுத்தார்கள். வாலியின் மகன் அங்கதனுக்கு பட்டாபிஷேகம் செய்து முதலில் அரசனாக்கி விட்டு கோட்டையை பத்திரப்படுத்துவோம்.
 
★பிறகு சுக்ரீவனும் அவர்களுக்கு துணையாய் இருப்பவர்களும் நமது நாட்டை கைப்பற்றாமல் காப்பாற்றுவோம் என்றார்கள். அதற்கு தாரை என் கணவர் வாலி இறந்த பிறகு அங்கதனால் எனக்கு ஒன்றும் ஆகவேண்டியது இல்லை. அரசாட்சியால் என்ன பயன்?. நான் உயிரோடு இருந்து ஆகப்போவதென்ன? ராமனால் கொல்லப்பட்ட வாலியை காண்பதற்காக செல்கிறேன் என்று கதறி அழுதபடி நேராக
சண்டை நடந்த இடத்திற்கு விரைந்து சென்றாள்.
 
★அங்கதனும் தாரையும் அந்த இடத்துக்கு வந்தனர். தன் தந்தை வாலி இரத்த வெள்ளத்தில் விழுந்து கிடப்பதைப் பார்த்த அவன், ஒன்றும் பேசாமல் வாலியின் மீது படுத்து அழுதான்.
தரையில் கிடந்த வாலியைப் பார்த்து துக்கத்தை அடக்கிக் கொள்ள முடியாமல் கதறி அழுதாள். வாலியின் குமாரன் அங்கதனும் தாரையுடன் கதறி அழுதான். இக்காட்சியைக் கண்ட சுக்ரீவனுடைய உள்ளத்தில் தவறு செய்து விட்டோமோ என்ற உணர்ச்சி ஏற்பட்டது. அதற்குள் மரணத்தருவாயில் இருந்த வாலி கண்ணை திறந்து சுக்ரீவனைப் பார்த்து மெதுவாக பேச ஆரம்பித்தான்.
 
★ராமருக்கு நீ வாக்களித்தபடி அவருக்கு தேவையானதை செய்து முடிக்க வேண்டும். அலட்சியமாக இருந்து விடாதே.
 நீ அவருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் போனால் அதனால் உனக்கு பெரும் பாவம் வந்து சேரும். ஶ்ரீ ராமரால் நீ கொல்லப்படுவாய். ஞாபகம் வைத்துக்கொள். சுக்ரீவா! நாம் இருவரும் ஒன்றாக இருந்து சந்தோசமாக இந்த ராஜ்யத்தை ஆண்டு அனுபவித்திருக்கலாம். ஒரே நேரத்தில் நாம் இருவரும் சுகமாக இருக்க வேண்டும் என்று விதி நிர்ணயிக்கவில்லை என்று எண்ணுகிறேன். உண்மையை  தீர விசாரிக்காமல் இருந்த என்னுடைய தவறு அதிகமாக இருக்கிறது.
 
★முற்பிறவியில் நான் செய்த வினைகளின் விளைவாக இப்பிறவியில் பல செயல்களை விதி செய்ய வைக்கிறது. நானும் அதற்கு விதிவிலக்கல்ல. இப்போது அதைப் பற்றி பேசிப்பயன் ஏதும் இல்லை. நான் மேலுலகம் செல்லப் போகிறேன். இந்த கிஷ்கிந்தைக்கு நீயே அரசனாகி இந்த ராஜ்யத்தை ஆள்வாய். எனது உயிரை விட மேலான மகன் அங்கதனை உன்னிடம் ஒப்படைக்கிறேன். அவன் உன்னை போன்ற வீரன். யுத்தம் என்று வந்தால் உனக்கு
முன்பாக போர்க்களத்திற்கு வந்து நிற்பான். எனக்கு பதிலாக நீ அவனுக்கு தந்தையாக இருந்து அவனை அன்புடன் பார்த்துக் கொள் என்று உன்னிடம் கேட்டுக் கொள்கிறேன்.
 
★அடுத்து என் மனைவி தாரை மிகுந்த அறிவாளி. சூட்சுமமான பல விஷயங்களை முன்பே அறியும் சக்தி பெற்றவள். அவள் இவ்விதம்தான் நடக்கும் என்று ஒன்றைக் கூறினால் அது அப்படியே நடக்கும். இதில் சந்தேகம் இல்லை. எனவே அவளுடைய யோசனையை எந்த விஷயத்திலும் தட்டாதே என்று சுக்ரீவனிடம் அன்பாக  சொல்லி முடித்தான். அங்கதனிடம் வாலி பேச ஆரம்பித்தான். இந்த வானர நாட்டின் அரசனாகிய உன் சிறிய தந்தை  சுக்ரீவனிடத்தில் நீ மரியாதையாகவும் பணிவுடனும் உள்ளன்புடனும் நடந்து கொள் என்று அங்கதனிடம் மேலும் பல புத்திமதிகளை வாலி சொல்லி முடித்தான்.
 
★பிறகு அங்கதன் தன் தந்தை வாலியிடம், தந்தையே! தங்களை இக்கதிக்கு ஆளாக்கிய ராமர் என்பவர் யார்? தங்கள் உயிரை பறிப்பதற்கு அவருக்கு என்ன தைரியம்? என பலவாறு புலம்பி அழுதான். அழுது கொண்டு இருக்கும் தன் மகனைப் பார்த்து மகனே! நீ வருந்த வேண்டாம் என்று கட்டி தழுவிக் கொண்டான். மகனே! பிறப்பும், இறப்பும் எல்லோருக்கும் நிச்சயித்த ஒன்று. நான் முற்பிறவியில் செய்த புண்ணியத்தினால் இன்று ராமனால் எனக்கு மோட்ச பதவி கிடைத்துள்ளது.
 
★மனித உருவில் வில் ஏந்தி இருக்கும் பரம்பொருளான ராமனை, உன் தந்தையை கொன்றவர் என்று தவறாக எண்ணி விடாதே. இவ்வுலகை காத்தருளும் ராமன் மலரடியில் விழுந்து தொழுது வாழ்வாயாக எனக் கூறி தன் மகனை தழுவிக் கொண்டான். பிறகு ராமனிடம், பெருமானே! என் மகன் அரக்கர்களை அழிக்கும் ஆற்றல் படைத்த வீரன். இவனை நான் தங்களிடம் ஒப்படைக்கிறேன் என்றான். ராமர், தன் திருவடியில் விழுந்த அங்கதனை தழுவி, தன்னிடம் இருந்த உடைவாளை அங்கதனுக்கு கொடுத்து அருள் புரிந்தார்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.....................
 
ஶ்ரீராம காவியம்
~~~~
147 /26-08-2021
 
வாலி மரணம்...
 
★பிறகு ஶ்ரீராமர்,  வாலியிடம் நீ செய்த பாவத்திற்குத் தகுந்த  தண்டனையை அனுபவித்து விட்டாய். தற்போது எல்லா பாவங்களிலிருந்தும் விடுபட்டு விட்டாய் என்று ராமர் அவனுக்கு உறுதியளித்தார். அனுமன் அழுது கொண்டிருந்த தாரைக்கு ஆறுதல் சொன்னார். வாலி நிச்சயமாக நல்ல மேலுலகம் அடைவார். ஆகையால் தாங்கள் வாலியைப்பற்றி கவலை கொள்ள வேண்டியதில்லை. வாலிக்கு சரியானபடி இறுதிக் காரியங்களை செய்து விட்டு அங்கதனுக்கு யுவராஜா  பட்டாபிஷேகம் செய்வோம். அதனை கண்டு மகிழ்வோம்.
 
★அங்கதனுக்கு புத்திமதி கூறி வளர்க்க வேண்டிய ஒரு கடமை தங்களுக்கு இருக்கிறது. ஆகவே கவலையை விட்டுவிட்டு சிறிது சாந்தமாக இருங்கள் என்று கூறினார். அதற்கு தாரை இனி இவ்வுலகத்தில் எனக்கு என்று வேண்டியது ஒன்றுமில்லை. சுக்ரீவன் தனது மகனைப் போலவே அங்கதனை பார்த்துக் கொள்வான். ஆயிரம் அங்கதன் வந்தாலும் அது வாலிக்கு சமமாக இருக்காது. நான் வாலியுடன் மேலுலகம் செல்கிறேன் என்றபடி அழுது கொண்டே இருந்தாள். வாலியின் மீது அம்பெய்த ராமரின் மேல் எந்த விதமான கோபத்திற்கான அறிகுறியும் தன் முகத்தில் இல்லாமல் ராமரை நோக்கிச் சென்றாள் தாரை.
 
★ராமரிடம் தாரை மெதுவாக பேச ஆரம்பித்தாள். ஸ்வாமி! தாங்கள் யாராலும் அறிந்து கொள்ள முடியாத தன்மையை உடையவர். முக்காலமும் அறிந்தவர். உயர்ந்த தர்மங்களை கடைபிடிப்பவர். பூமியை போல் பொறுமை மிக்கவர். மனித உடலுக்கான இயல்பான பண்புகளை ஒதுக்கி தள்ளி வைத்து விட்டு மிகுந்த தெய்வீகமான பண்புகளுடன் இருக்கின்றீர்கள். மேலுலகம் செல்லும்  வாலி அங்கு என்னை தேடி அலைவார். நானில்லாமல் அவரால் இருக்க முடியாது.
 
★மனைவியை பிரிந்த ஒருவர் எவ்வளவு மன வேதனையுடன் இருப்பார் என்று தங்களுக்கு தெரியும். எந்த அம்பினால் வாலியை கொன்றீர்களோ அதே அம்பினால் என்னையும் தயவு செய்து கொன்று விடுங்கள். அவர் இருக்குமிடம் நானும் செல்கிறேன். நாங்கள் இருவரும் மேலுலகத்தில் மகிழ்ச்சியுடன் இருப்போம். உத்தமமான தாங்கள் எப்படி ஒரு பெண்ணை கொல்வது? இது மாபெரும் பாவம் என்று எண்ணாதீர்கள். இங்கு பாவத்திற்கு இடமில்லை. என்னை கொன்றால் அதற்கான பாவம் தங்களை வந்து சேராது.
 
★உலகத்து பெரும் ஞானிகளின் கருத்துப்படி கணவனிடம் மனைவியை கொடுக்கும் பெண் தானத்தை விட, உயர்ந்த தானம் வேறு ஒன்றும் இல்லை. ஆகவே தாங்களும் அந்த அறநெறிப்படி மேலுலகம் செல்லும் என் கணவரிடம் என்னை கொடுத்து விடுங்கள். இப்படி தானம் செய்வதினால் தங்களுக்கு எந்த பாவமும் வராது. வாலி என்னுடன் இல்லாமல் இந்த உலகத்தில் என்னால் உயிர் வாழ முடியாது. சில நாட்களில் நான் இறந்து விடுவேன். இப்போதே நீங்கள் என்னை கொன்று பெண் தானம் செய்த புண்ணியத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று ராமரிடம் சொல்லி முடித்தாள் தாரை.
 
★ராமர்,  தாரையிடம் பேச ஆரம்பித்தார். இறப்பு பற்றி இது போன்ற தவறான எண்ணங்கள் தங்கள் உள்ளத்தில் எழுவதற்கு இடம் கொடுக்காதீர்கள். பிரம்மா தான் இவ்வுலகை படைத்து இங்குள்ள அனைத்து சுகங்கள் மற்றும் துக்கங்களையும் எல்லா உயிர்களுக்கும் கொடுக்கிறார். இந்த மூன்று உலகத்தில் உள்ள அனைவரும் பிரம்மா விதித்த  விதியை மீறிச் செயல்படுவது இல்லை. ஏனென்றால் எல்லா உயிரினங்களும் அவர் வசத்தில் உள்ளார்கள். இனி வரும் காலக் கட்டத்தில் உனது மகனான அங்கதன் இளவரசனாக பட்டம் சூட்டப்படுவான். நீ முன்பு இருந்தது போல் மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் இருப்பாய்.
 
★உனது விதி பிரம்மாவினால் இவ்வாறு தான் எழுதப்பட்டு இருக்கிறது.  மகாவீரனுடைய மனைவிகள் இவ்வாறு வேதனை படக்கூடாது, வருந்தாதீர்கள் என தாரையிடம் ராமர் சொல்லி முடித்தார். நடப்பவற்றை முன்பே அறியும் திறன் கொண்ட  வானர அரசி தாரைக்கு வந்திருப்பது மகாவிஷ்ணுவின் அவதாரம் என்பதை அறிந்து கொண்டு ராமரை வணங்கினாள். ராமரின் பேச்சு தாரைக்கு ஆறுதலை தந்தது. தனது அழுகையை விட்டு மௌனமானாள்.
 
★பிறகு வாலி, ராமரை பார்த்துக் கொண்டே முக்தி நிலையை அடைந்தான். வாலி தன் கையால் அம்பை இறுக பிடித்திருந்தான். அவன் உடல் உயிரை விட்டு பிரிந்ததும் அவனின் மார்பில் இருந்து அம்பு தளர்ந்தது. அம்பு, வாலியின் மார்பில் இருந்து வெளிவந்து கங்கையில் மூழ்கி ராமனின் அம்புறாத்தூணியை வந்தடைந்தது. வாலி வானுலகம் அடைந்தான். தாரை உயிரற்ற அவன் உடல் மீது விழுந்து புரண்டு அழுதாள்.
 
★சுக்ரீவன் பேச ஆரம்பித்தான். நான் எவ்வளவு பெரிய குற்றம் செய்து இருந்தாலும் என்னைக் கொல்லாமல் ஓடிப்போ! உயிர் பிழைத்துக்  கொள்! என்று என்னை என் அண்ணன் வாலி துரத்தினான். சாகும் தருவாயில் கூட ராஜ்யத்தை எடுத்துக்கொள் என்று எனக்குத்  தந்தானே. அவனை சதி செய்து கொன்று விட்டேன். என்னை போன்ற பாதகன் உலகத்தில் யாரும் இல்லை. நான் உயிர் வாழ்வதில் அர்த்தம் இல்லையே என்று தனது பெரும் குற்றத்தை எண்ணி அழுதான்.
 
★ராமர் பேச ஆரம்பித்தார். சோகத்தில் அனைவரும் மூழ்கி இருப்பதால் இறந்தவருக்கு எந்த நன்மையும் ஏற்படாது. காலம் கடந்து செய்யும் எந்த செயலும் பயன் தராது. வாலிக்கு உடனே செய்ய வேண்டிய கர்மாக்களை செய்யுங்கள் என்றார். இதனைக் கேட்ட லட்சுமணன், சுக்ரீவன் மற்றும்  அங்கதனுடன் கலந்து ஆலோசித்து விரைவில் வாலிக்கான ஈமச் சடங்குகளை செய்து முடியுங்கள் என்று கேட்டுக்கொண்டான். அதன்படி அனைவரும் தங்களுக்குள் உள்ள சோகத்தை தள்ளி வைத்தனர். அரசனுக்குரிய மரியாதையுடன் வாலியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.....................
 
ஶ்ரீராம காவியம்
~~~~
148 /27-08-2021
 
வாலி - ஓர் ஆய்வு - 1...
 
★ராவணனின் கொடுமைகளை தாங்காத தேவர்கள், ரிஷிகள் போன்றவர்கள் எம்பெருமான் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டார்கள். அப்போது மகாவிஷ்ணு, தான் தசரத மைந்தன் ராமராக அவதரித்து, ராவணனை ஸம்ஹாரம் செய்வதாகச் சொன்னார். பிரம்மாதி தேவர்களையும் வானரங்களாக பூவுலகில் வந்து பிறக்கும்படியாகச் சொன்னார்.
   
       "வானுளோர் அனைவரும்
        வானரங்களாக் கானினும்
        வரையினும்  கடிதடத்தினும்                                    
       சேனையோடு அவதரித்
       திடுமின் சென்று என
       ஆனன  மலர்ந்தனன்
        அருளின் ஆழியான்"
             (கம்ப ராமாயணம்)
 
★அதன்படி பூவுலகில் யார்யார், யார்யாராகப் பிறந்தார்கள் என்பதை, வால்மீகி - கம்பர் முதலானவர்கள் விரிவாகவே கூறுகிறார்கள். பகவான் பிரம்ம தேவருடைய அம்சமாக ஜாம்பவான்,   இதேபோல தேவேந்திரன்- வாலி,  சூரியன் - சுக்ரீவன்,  அக்கினி பகவான் - நீலன்,  பிரகஸ்பதி - தாரன், குபேரன் - கந்தமாதனன், மேலும்  விசுவகர்மா - நளன்,  வருண பகவான் - சுஷேணன்,  அஸ்வினி தேவர்கள் இருவர்- மைந்தன், துவிதன் எனும் இருவராக,. இவ்வாறு தேவர்கள் பலரும் வானரங்களாகப் பிறந்தார்கள்.
ஜாம்பவான் முதலானவர்கள் இவ்வாறு வந்து பிறந்ததாக, அருணகிரிநாதரும் திருப்புகழில் கூறுகிறார்.
 
★இவ்வளவு பேர்களும் வந்து பிறந்தது, ராவண ஸம்ஹாரம் செய்யப்போகும் ராமருக்கு உதவுவதற்காகவே. இதை நன்கு மனதில் பதிய வைத்துக் கொள்ளவேண்டும். அவ்வாறு பதிய வைத்துக் கொண்டால் தான், வாலி வதம் பற்றிய உண்மை  புரியும். இந்திரனுடைய  அம்சமாகப் பிறந்த வாலி, ஆற்றல்கள் பலவும் மனத் திண்மையும் கொண்டவன்.  பாற்கடல் கடைந்த தேவர்க்கு உதவியவன், தினந்தோறும் எட்டுத் திசைகளிலும் சென்று சிவபூஜை செய்பவன்.
 
★அவ்வாறு ஒருநாள், வாலி வழிபாடு செய்யச் சென்றிருந்த நேரத்தில், (திக்விஜய யாத்திரை செல்வதற்காகப் புறப்பட்ட) ராவணன் வாலியுடன் போரிட நினைத்து, கிஷ்கிந்தை வந்தான். வந்த ராவணன், வாலி அங்கு இல்லை என்ற தகவலை அறிந்ததும், வாலி இருக்கும் இடத்தைத் தேடிப் போனான். போர் செய்யும் நோக்கத்தோடு ராவணன் வருவதை அறிந்த வாலி, அப்படியே ராவணனை ஒரு சிறு பூச்சியைப்போல தூக்கி வந்து விட்டான்.
 
★ஆம்! ராவணனின் வீரமானது வாலியிடம் எடுபட வில்லை. அரண்மனை திரும்பிய வாலி, ராவணனைத் தன் பிள்ளையான அங்கதனின் தொட்டில்மேலே, ஒரு விளையாட்டு பொம்மையை போலத் தொங்க விட்டான் என்றும் சொல்வதுண்டு. பிறகு ராவணன் மன்னிப்பு கேட்க, வாலியும் ராவணனும் நட்பு பூண்டார்கள். “உன் நண்பன் என் நண்பன், உன் பகைவன் என் பகைவன்” எனும் அளவிற்கு நட்பு உருவானது. (ராவண ஸம்ஹாரத்தில் ராமருக்கு உதவி செய்வதற்காக வந்த, இந்திர அம்சமான வாலி, அந்த அரக்கன் ராவணனுடனேயே நெருங்கிய  நட்பு பூண்டதைக் கவனிக்க வேண்டும்)
 
★இதுவரையில் பார்த்தது மிகச்சுருக்கமான முற்பகுதி. முக்கியமான பிற்பகுதி தொடர்கிறது. இது ஓரளவுக்கு நன்றாகவே பிரபலமான பகுதி.
சீதையைக் கவர்ந்து கொண்டு போன ராவணனைத் தேடி, ராமரும் லட்சுமணரும் வந்தார்கள். காட்டின் வழியே வந்த அவர்களை அனுமன் சந்திக்க, சுக்ரீவனுடன் சந்திப்பும் நட்பும் உண்டானது.
 
★அப்போது சுக்ரீவனுடைய வாட்டத்திற்கான காரணத்தை, ராமரிடம் விரிவாகவே கூறத் தொடங்கினார், ஆஞ்சநேயர். வாலியைப்பற்றிய அனைத்து தகவல்களையும் விரிவாகவே சொன்னார், அனுமன்.நான்கு வேதங்களும் நான்கு ஞானக் கடல்களாய் கிடக்க,  அந்தக் கடல்களுக்குக் கரை கிடப்பதைப் போலப் பாதுகாப்பாக உள்ளது பழமையான கயிலைமலை. மலைமேல் மலைபோல, கயிலை மலைமீது, ஞானமலையாய்ச் எம்பெருமானாம் சிவபெருமான் வீற்றிருக்கிறாராம். நல்லவர் - பொல்லாதவர் என்ற வேறுபாடு இல்லாமல், தன்னை பக்தியுடன் நாடியவர்களுக்கெல்லாம், வரப் பிரசாதம் பொழிந்த வண்ணமாக இருக்கிறார், சிவபெருமான்.
 
★வாலி அந்தச் சிவபெருமானை வழிபட்டுத்தான் தன் ஆற்றலை, எல்லையில்லாத ஆற்றலாகப் பெருக்கிக் கொண்டிருக்கிறான்.
எட்டுத்திக்குகளின் எல்லைக்கும்  போய் அஷ்ட மூர்த்தியாகிய சிவபெருமானை வழிபடுவான் வாலி. அவனிடம் வந்து மிகுந்த பலமுள்ளவர்கள் போர் செய்ய எதிர்த்தாலும், அவர்களின் உடல் பலம் - வரபலம் ஆகிய இரண்டு பலங்களில், பாதி பாகம் வாலிக்கு வந்து விடும். இவ்வாறு சொல்லிக்கொண்டு வந்த அனுமன், மேலும் தொடர்ந்து - வாலி பாற்கடல் கடைந்தது, ராவணனைக் கட்டித் தூக்கிப் போனது, ராவணனுடன் நட்பு பூண்டது, துந்துபியைக் கொன்றது, மாயாவியைக் கொன்றது என பல முக்யமான விவரங்களையும் சொல்லிக் கொண்டு வந்தார்.
 
★அதன்பின் நடந்த,  வாலி தன் சகோதரனான சுக்ரீவனை அடித்துத் துவைத்து விரட்டிய நிகழ்வையும் சொன்னார். தான் அடிபட்ட நிகழ்வைக் கேட்டபோது, அருகிலிருந்து  கேட்டு கொண்டு இருந்த சுக்ரீவனுக்கு உடம்பு நடுங்கியது. உத்தமரான மாருதி மூலம் நடந்ததை எல்லாம் விரிவாகவும் தெளிவாகவும் உணர்ந்து கொண்ட ராமர், வாலியை வதம் செய்வதாக சுக்ரீவனுக்கு வாக்கு தந்தார்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.....................
 
ஶ்ரீராம காவியம்
~~~~
149 /28-08-2021
 
வாலி - ஓர் ஆய்வு - 2...
 
★சுக்ரீவனை சதிகாரனாகக் கருதி அடித்து விரட்டியதோடு அல்லாமல் அவன் மனைவியான ருமாதேவியையும் கவர்ந்து கொள்கிறான் வாலி.  பின்னர் ராவணனை வென்றாலும்,
 அதே ராவணனுடன் நட்பு கொள்கிறான். என்னதான் ராவணன் அவன் வீரத்திற்கு பெயர் பெற்றவன் என்றாலும் அவன் சிறந்த ராஜதந்திரிதான். அவனை வென்ற வாலியையே நண்பனாக பெற்று விடுகிறான்.
ஆக, வாலி பலம் மிக்கவன் என்றாலும் அறிவும் தர்ம சிந்தனையும் குறைந்தவன். வாலியே சொல்வான்,  ராமன் தன்னிடம் வேண்டியிருந்தால் சிறிது நேரத்திலேயே சீதையை மீட்டுக் கொடுத்திருப்பேன் என்று.
 
★அனுமனும் ஜாம்பவானும் சுக்ரீவனும், வாலியின் பலம் பற்றி ராமனுக்கு சொல்லித்தான் இருக்கிறார்கள். அதனால்தான் மறைந்திருந்து கொல்லும் ஒரு திட்டத்தையே ராமன் தனக்குள் உருவாக்குகிறான். மறைந்து இருந்து தன்னைத் தாக்கியது ஏன்? என்ற ஒரு கேள்வி
வாலியிடமிருந்து கிளம்புகிறது. சரியான இந்தக் கேள்விக்கு முறையாகப் பதில் சொல்லாமல் மௌனம் காக்கிறான் ராமன். இதுவரை பேசாமல் நின்றிருந்த லட்சுமணன் அப்போதுதான் குறுக்கிடுகிறான்.
 
★வாலி பெற்ற வரத்தை நினைவு படுத்தி, அவன் எதிரே ராமன் வந்திருந்தால் பாதி வலிமை வாலிக்குப் போய் விடும் எனக் கருதியே ராமன் மறைந்திருந்து தாக்கினான் என்று கூறவில்லை லட்சுமணன். மாறாக, ராமனிடம் முழுமையாக சரணாகதியான சுக்கிரிவனுக்கு அவன் தன்னிடம் அடைக்கலம் தந்துவிட்டான். அப்படி இருக்க, வாலியும் தனக்கு அடைக்கலம் வேண்டும் என்று கேட்டு  விட்டால் மறுக்கவும் முடியாமல், கொடுக்கவும் முடியாமல் இருதலைக் கொள்ளி எறும்பாவேன்  என்றுதான் ராமன் மறைந்திருந்து வாலியை தாக்கினான் என்பது தம்பியான லட்சுமணன் விளக்கம்.
 
★இன்னும் சில விவாதங்கள்
1. எப்போது வாலி அடுத்தவன் மனைவியை கவர்ந்தானோ அப்போதே வாலி தர்மத்தில் இருந்து வழுவி விட்டான்
2. ராமருக்கு உதவி செய்து அரக்க ராவணனை அழிக்கவே அவதாரம் எடுத்த வாலியாகிய இந்திரன் தன் பலத்தில் செறுக்கு கொண்டு ராவணனிடம் நட்பு கொண்டது.
3. மிருகங்களை மறைந்திருந்து கொல்லலாம் என்பது விதி.வாலி குரங்கு எனும் மிருக வகையை சேர்ந்தவன் ஆவான்.
அதை விட இன்னுமொரு முக்கிய சூட்சுமமும் உண்டு. சுக்ரீவன் சூரியனின் மகன். ராமனும் சூரிய வம்சத்தவன். எனில் சுக்ரீவனின் மனைவியும் சூரிய வம்சத்து மருமகளே. ஆக சுக்ரீவனின் மனைவியை மீட்காமல் சீதையை மட்டுமே ராமன் மீட்க முடியாது.
 
★வாலியை ராமன் மறைந்து இருந்து அம்பெய்து மாய்த்தான்
என்ற பழி அவனுக்கு மாறுவதாக இல்லை. தத்துவார்த்துவமாக இதை இப்படி காணலாம். நம் மனதிலேயே வாலியும் மற்றும் சுக்ரீவனும் இருக்கிறார்கள். வாலி இந்திரனின் மகன். போகன். அதாவது எதையும் அனுபவிக்க ஆசைப்படுபவன். அவன் ஆசைப்பட்டது எதாவது கிட்டவில்லை என்றால் அதன் மீதான விருப்பம் இரட்டிப்பாகும். வெறிகொண்டு அடைய மிக்க ஆசைப்படுவான். ஆக அந்த  ஆசைதான் வாலி.  சுக்ரீவன் சூரிய புத்திரன். அடக்கமானவன். புத்தி என்பதே சுக்ரீவனாகும்.
 
★ஆசை, புத்தியை ஒரு கட்டத்தில் புறந்தள்ளி அழிக்க நினைக்கும்.
ஆங்கிலத்தின் will என்ற பதம் வாலியையே குறிப்பதாக கொள்ளலாம். ஆசைக்கு நிகரான பலம் பெற்றது எதுவுமே இல்லை.
புத்தி தனக்கான சரியான துணை கிட்டும் வரை ஆசையால் துரத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இறை சிந்தனை என்னும் ராமன் நட்பு கிடைத்த பின்னரே, புத்திக்கு ஆசையுடன் போரிடும் திடம் கிடைக்கிறது.
புத்தியால் ஆசை வெல்லப்பட இறை சிந்தனை அதன் பின்னே நின்று கணை தொடுக்கும். ஆசை அறுக்கப்படும். இறை சிந்தனையானது  ஆசையுடன் நேரிடையாகப் போரிட முடியாது. அது ஞானத்தின் பின் நின்றே போரிட்டு மாய்க்கிறது. இப்படி ஒரு தர்மம் வாலிவதத்தில் உண்டு.
 
★ஆசையை புத்தியால் வெல்ல முடியாது, ஆசை, புத்தியுடன் போரிடும்பொழுது புத்தியின் பின் மறைந்திருந்து, அந்த  ஆசையை இறைசிந்தனை கொல்லும்.  ஆக வாலிவதம் என்பதை ஆசையைக் கொன்று புத்தியை அரசுகட்டிலேற்றி
அதன் துணையால் எதிரிகளை  வெல்லுதலாம். மேலும் ராமன் ஏன் வாலியுடன் நேருக்குநேர் போர்புரியவில்லை? ராமன் ஒரு தபஸ்வியாக  இருக்கிறான். அவன் யாருக்கும் அறைகூவல் விடுக்கக் கூடாது. ராவணனைக் கூட அவன் அறைகூவல் விட்டு அழைக்கவில்லை. தவறு செய்பவர்களை தண்டிக்கும் அதிகாரம் மட்டுமே தபஸ்விக்கு உண்டு. ராமன், தன்னை ஒரு  அரசனாக பதினான்கு ஆண்டும் நினைக்கவில்லை. தன்னை ஒரு தபஸ்வியாகவே எண்ணினான்.
 
★வாலி வதம் மட்டுமே தனியாய் எடுத்துக் கொண்டு பார்த்தால் அது குழப்பமாய் இருக்கும்.
ராமாயணத்தில் நான்கு சிறந்த பலவான்கள் உண்டு.
1. வாலி
2. ராவணன்
3. கும்பகர்ணன்
4. அனுமான்
 
இதில் முதல் மூவரும் பலத்தை எப்படி உபயோகப்படுத்தக் கூடாது என்பதற்கு உதாரணம். அனுமான் பலத்தை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பதன் உதாரணம். வாலி தன் பலத்தை எண்ணி கொண்ட கர்வம் அவனை அனைவரிடமும் சண்டைக்கு  போகவைத்தது.
ராவணன் தன் பலத்தை எல்லாம் எளியவர்களைக் கொடுமைப் படுத்தி அநேக அக்கிரமங்களை அரங்கேற்றவே  பயன்படுத்தி உள்ளான்.  கும்பகர்ணன், அவன்  அண்ணனின் அத்தனை அதர்ம ஆட்டங்களுக்கும் துணை நின்றான்.
 
★வாலியை நேருக்கு நேர் சந்தித்து இருந்தால் ராமன் தோற்றிருப்பானா?  சாத்தியம் இல்லை. காரணம். வாலி கதை கொண்டு அடிப்பானென்றாலும் ராமனின் ஒரே ஒரு பாணத்தில் உயிரிழப்பான் என்பதுதான்  உண்மை. வாலியை நேரடியாக ராமன் ஒரு பாணத்தில் அடித்து இருந்தால் வாலியைப் பற்றி இனியும் நாம் பேசிக்கொண்டு இருக்க போவதில்லை.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.....................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
150 /29-08-2021
 
சுக்ரீவன் மகுடாபிஷேகம்...
 
★இப்போது மீண்டும் ஶ்ரீராமரின் காவியத்திற்கு வருவோம்.தாரை, கணவன் உள்ளத்தில் மனைவி இருப்பாள். அதைபோலவே அந்த மனைவியின் உள்ளத்தில் கணவன் இருப்பார்.நான் தங்கள் உள்ளத்தில் இருந்திருந்தால் என் மார்பின் மீதும் அன்பு பாய்ந்து இருக்க வேண்டுமே. ஆனால்  நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறேன்? என கூறி கதறி அழுதாள். அனுமன் தாரைக்கு ஆறுதல் சொன்னான். பிறகு அங்கிருந்து தாரையை அழைத்து சென்றான். அங்கதன் தன் தந்தைக்கு செய்ய வேண்டிய காரியங்களை எல்லாம் செய்து முடித்தான்.
 
★ராமர் இருக்கும் இடத்திற்கு அனைவரும் வந்து சேர்ந்தார்கள். அனுமன் ராமரிடம் பேசுவதற்கு ஆரம்பித்தார். தங்களின் இந்த  பேருதவியால் சுக்ரீவன் வானர பேரரசை பெற்றுள்ளார். ஆகவே இப்போது தாங்கள் கிஷ்கிந்தை வந்து சுக்ரீவனை அரசனாகவும் அங்கதனை இளவரசனாகவும் முடிசூட்ட வேண்டும். பின்பு எங்கள் அரசன் தங்களை கௌரவித்து தங்களுக்களித்த வாக்குப்படி மாதா சீதையை தேடுவதற்கான உத்தரவை வானரங்களுக்கு பிறப்பிப்பார் என்று சொல்லி முடித்தார். ராமர் அனுமனை நோக்கி தந்தையின் சத்தியத்தை நான் காப்பாற்ற வேண்டும். அதனால் பதினான்கு ஆண்டு காலம் எந்த கிராமம் மற்றும் நகரத்திற்குள்ளும் வர மாட்டேன். நீங்கள் மட்டும் சென்று உங்கள் மரபுப்படி சுக்ரீவனுக்கு பட்டாபிஷேகம் செய்யுங்கள். தம்பி லட்சுமணனை அனுப்பி வைக்கின்றேன்  என்றார்.
 
★பிறகு சில நாட்கள் கழித்து, ஒரு நல்ல நாளில் ராமன், இளவல் லட்சுமணனிடம், சுக்ரீவனுக்கு முடி சூட்டும்படி கட்டளையிட்டார். பிறகு லட்சுமணன் அனுமனிடம் பட்டாபிஷேகம் செய்யத்  தேவை படும் பொருட்களை கொண்டு வரும்படி கூறினான். அனுமனும் புண்ணிய தீர்த்தங்கள், மற்றும் மங்கலப் பொருட்கள் என்று தேவையான அனைத்தையும்  கொண்டு வந்து சேர்த்தான். முனிவர்களின்  ஆசியுடன், தேவர்கள் மலர்தூவ லட்சுமணன், சுக்ரீவனுக்கு அவர்கள் குல முறைப்படி முடிசூட்டினான். அங்கதனுக்கு இளவரசர் பட்டம் சூட்டினான். கிஷ்கிந்தையின் அரசனாக முடிசூட்டிக் கொண்ட சுக்ரீவன், ராமன் இருக்குமிடம் சென்று, அவன்  திருவடியில் விழுந்து வணங்கினான். ராமர் சுக்ரீவனை கட்டி தழுவிக் கொண்டார்.
 
★சுக்ரீவா! உன் அரசு ஓங்குக. நீ உன் ஆட்சியில் தருமநெறிப்படி நடந்து, உன் அரசாட்சிக்கு பெருமை சேர்க்க வேண்டும். நீ வாலியின் மகன் அங்கதனுடன் சேர்ந்து நலமாக ஆட்சி புரிய வேண்டும் என்று வாழ்த்தினார். பிறகு ராமர், சுக்ரீவா! நீ மன்னன் என்னும் உன் மரியாதையை பாதுகாத்து கொள்ள வேண்டும். பகைமை, விரோதம், இகழ்ச்சி, வேற்றுமை இவற்றை மனதில் வைத்துக் கொள்ள கூடாது. நேர்மையாகவும், அறநெறியுடன் அரசு புரிய வேண்டும். சிறியவர், பெரியவர் என்று எவரையும் இகழ்ந்து பேசுதல் கூடாது. அழிவுக்கு காரணம் பாவங்களே. அதனால் பாவச்செயலை ஒருபோதும் செய்யக்கூடாது.
ஒரு பெண்ணாசையால் தான் வாலி மாண்டான். நானும் ஒரு பெண்ணால் தான் இன்று மிகப் பெரிதாக துன்பப்பட்டு கொண்டு இருக்கிறேன். ஆதலால் எல்லா பெண்களிடமும் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரைக் கூறினார். பிறகு அங்கதன் ராமனின் திருவடியில் விழுந்து வணங்கினான். ராமர் அங்கதனிடம், அங்கதா! நீ பண்புள்ளவனாக, நீதிமானாக, ஒழுக்கமுள்ளவனாக நடந்து கொள்ள வேண்டும். ஒரு நல்ல இளவரசனுக்கு உரிய மதிப்பு மற்றும் பெருமையை பாதுகாத்து கொள்ள வேண்டும். சுக்ரீவனை உன் சிறிய தந்தைதானே  என்று  நினைக்காமல், உன் தந்தை போலவே பாவித்து மரியாதை அளித்து,  மதித்து நடக்க வேண்டும் என அறிவுரைக் கூறினார்.
 
★அப்போது மழைக்காலம் ஆரம்பித்து விட்டது. மழையால் வெள்ளம் காட்டிற்குள் மிகவும் பெருக்கெடுத்து ஓடியது. செல்லும் பாதைகள் எல்லாம் தடைபட்டுக் கிடந்தது. இதனால் சீதையே தேடும் பணி மேலும் சிறிது நாட்கள் தள்ளிச் சென்றது. ராமர் இதனால் சிறிது வருத்தம் அடைந்தார். மழைக் காலத்தில் சீதையை தேட சென்றால் அனைவருக்கும் கடினமாக இருக்கும். எனவே மழைக்காலம் முடிந்ததும் தேட ஆரம்பிக்கலாம். அதுவரை நாங்கள் காட்டிலேயே இருக்கின்றோம்.  மழைக்காலம் முடிந்து உன் சேனையை திரட்டிக் கொண்டு வா! நாம் சீதையை தேடிச் செல்வோம் என்று கூறி
சுக்ரீவனை ராமர் அனுப்பினார்.
 
★செல்வதற்கு முன், சுக்ரீவன் ராமனை தன்னுடன் வந்து அரண்மனையில் தங்கும்படி வேண்டினான். ஆனால் ராமர், நான் தவக்கோலம் பூண்டு உள்ளதால் அரண்மனையில் வாழ்வது முறையாகாது. ஆதலால் என்னால், உன்னுடன் வர இயலாது எனக் கூறினார். அவரை மறுத்து சுக்ரீவன் எதுவும் கூறவில்லை. சுக்ரீவன், ராமரின் பிரிவை எண்ணி மிகவும் வருந்தினான். பிறகு ராமரையும், லட்சுமணரையும் பிரிய மனம் இன்றி கண்களில் கண்ணீர் தளும்ப  கிஷ்கிந்தை நோக்கி புறப்பட்டான். சுக்ரீவனும், அங்கதனும் அரண்மனைக்கு சென்று, தாரையின் திருவடியில் விழுந்து வணங்கினார்கள்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.......................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
151 /30-08-2021
 
கிஷ்கிந்தையில்
சுக்ரீவன்...
 
★ராமர், அனுமனிடம், வீரனே! நீ சுக்ரீவனுக்கு துணையாக அவர்களுடன் சேர்ந்து இரு என்றார். அனுமன், பெருமானே! தங்கள் அடியேன், தங்களுடன் இருந்து சேவைபுரிய மிகவும் விரும்புகிறேன் என்றான். ராமன், அனுமனே! வாலி இந்த நாட்டை வலிமையுடனும், திறமையுடனும் ஆண்டு வந்தான். வாலியின் மறைவுக்கு பின் சுக்ரீவன் அரசனாக முடிசூட்டி உள்ளான். சுக்ரீவனின் ஆட்சியில் யாராவது நாட்டை கைப்பற்ற வரக் கூடும். ஆதலால் நீ சுக்ரீவனுக்குத் துணையாக அவனுடன் இரு என்று கூறினார். மழைக்காலம் முடிந்து எனக்கு  உதவி புரிய சுக்ரீவனுடன் வருவாயாக! எனக் கூறினார். ராமரின் ஆணையை மீற முடியாத அனுமன், ராமரை வணங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றான்.
 
★சுக்ரீவன் தனது அமைச்சர்கள், அண்ணன் வாலியின் மனைவி  தாரையின் அறிவுரைகளின்படி நாட்டை நெறி தவறாமல் ஆட்சி புரிந்து வந்தான். இளவரசனாக முடிசூட்டிக் கொண்ட அங்கதன், தன்னுடைய நகரத்தை கண்ணும் கருத்துமாக ஆண்டு வந்தான். அனுமனை நாட்டுக்கு அனுப்பி விட்டு பிரஸ்ரவணமலை என்னும் மலைபகுதியை இருவரும் சென்று அடைந்தனர். அங்கு அவர்கள் ஒரு குகையில் வாழ்ந்தனர். மழைக்காலமும் வந்தது. சுக்ரீவன் தன் மனைவி ருமாதேவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தான். அனுமன் நாட்டு மக்களுக்கு நீதி நெறிகளை பரப்பிக் கொண்டு இருந்தான். அங்கதனும் நீதி தவறாமல் நகரத்தை ஆட்சி செய்தான்.
 
★கார்மேகம் சூழ்ந்தது. இடியும், மின்னலுமாக மழை பெய்தது. கடும் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ராமரும் லட்சுமணனும் மழைக் காலத்தில் பாதுகாப்பாக குகைக்குள்ளேயே இருந்தார்கள். ராமர் சீதையை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டு இருந்தார். லட்சுமணர் ராமரை சமாதானம் செய்தார்.
சீதையை தேடுவதற்கான காலம் விரைவில் வரும் என்று இளவல் லட்சுமணன் வருத்தத்துடன் இருந்த ராமருக்கு அடிக்கடி ஆறுதல் சொல்லிக் கொண்டே இருந்தான்.
 
★காற்றும் மழையும் சேர்ந்து வேகம் எடுத்ததினால் வெளியில் எங்கும் போக முடியாத நிலை ராமருக்கு . சீதை இப்பொழுது என்ன துன்பத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கிறாளோ என வருந்தினார் ராமர். ராமருக்கு சீதையின் பிரிவும், தனிமையும் பெரும் துன்பத்தை மனதில் ஏற்படுத்தியது. லட்சுமணன் ராமனுக்கு ஆறுதல் சொல்வதால் ராமரின் தவித்த மனம் சாந்தம் அடைந்தது. கார்காலம் என்பது ஒருவழியாக முடிந்தது. நான்கு மாத மழைக்காலம் முடிவுக்கு வந்தது. வெயில் எங்கும் படர தொடங்கியது. வானம் மிகவும் தெளிவடைந்து வெளிச்சத்தைக் கொண்டு வந்தது.பறவைகளும் மிருகங்களும் வெளியில் திரிந்து விளையாட ஆரம்பித்து விட்டன.
 
★கிஷ்கிந்தையில் வாலி இறந்த துக்கத்தை மறந்து சுக்ரீவன் தாரை உட்பட வானரங்கள் அனைவரும் சீரும் சிறப்புமாக மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். ராமருடைய காரியத்தை அனுமன் மட்டும் மறக்காமல் மிகவும் கவலைப்பட்டான். ராமருக்கு கொடுத்த வாக்கை பற்றி சுக்ரீவனிடம் மெதுவாக பேசுவதற்கு தக்க சமயத்திற்காக காத்துக் கொண்டிருந்தான். ராஜ காரியங்கள் அனைத்தையும் மந்திரிகளிடம் ஒப்படைத்து விட்டு போகத்தில் மூழ்கிக் கிடந்த சுக்ரீவனிடம் சென்று அனுமன் மெதுவாக பேச ஆரம்பித்தான்.
 
★ராமர் உங்களுடைய எதிரியை அழித்ததை தாங்கள் நினைவில் கொள்ள வேண்டும். பெரிய அபாயத்தை கருதாமல் தங்களுக்கு வாக்களித்தபடி வாலியை உடனடியாக கொன்று விட்டார் ராமர். இதன் காரணமாக முன்னோர்கள் அனுபவித்த ராஜ்யத்தை நீங்கள் அடைந்து விட்டீர்கள். பேரும் புகழும் பெற்று விட்டீர்கள். உங்களுடைய அதிகாரம் நிரந்தரமாகி விட்டது. இப்போது ராமருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி அவருடைய நட்பை பலப்படுத்திக் கொள்ள வேண்டியது மிக முக்கியமானதாகும். இப்போது அதைச் செய்தால் உங்கள் புகழ் மேலும் பெருகும். ராஜ்யமும் பலப்படும்.
 
★ராமருக்கு கொடுத்த அந்த வாக்குறுதியை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாக செய்து முடிப்பது சிறப்பானதாகும். கால தாமதம் செய்யாமல் செய்து முடிக்க வேண்டும். கால தாமதத்துடன் செய்யும் காரியமானது பயன் தராது. ராமர் நமக்கு செய்த உதவியை நாம் நினைத்து அவருக்கு செய்ய வேண்டியதை தங்களுக்கு நினைவூட்டுகிறேன். மழை காலம் முடிந்து விட்டது. இனி தாமதம் சொல்வதற்கு ஏதும் காரணமில்லை. சீதையை தேட வேண்டிய பெரும் காரியத்தை உடனே துவக்க வேண்டும். இவ்விசயத்தில் ராமர் மிகவும் பொறுமையாக இருந்து வருகிறார். அவருடைய இந்த பொறுமைக்கும் எல்லை உண்டு.
 
★அவரது கோபத்தை நம்மால் தாங்க இயலாது. இனி சிறிதும் கால தாமதம் வேண்டாம் என்று நீதி முறைகளை சுக்ரீவனுக்கு சொல்லி முடித்தார் அனுமன். அதற்கு சுக்ரீவன் பூமி முழுவதும் சுற்றி தேடிப் பார்த்து சீதையை கண்டுபிடிக்க வேண்டிய திறமை வாய்ந்த ஒற்றர் வானரங்களை உடனே இங்கு வந்து சேர வேண்டும் என்றும், வந்து சேராதவர்களுக்கு விசாரணை இன்றி தண்டனை வழங்கப்படும். இது அரசனுடைய உத்தரவு. இவ்வாறு உத்தரவிடுவாய் என்று அனுமனிடம் சொல்லி விட்டு சுக்ரீவன் தன் அந்தப்புரத்திற்கு சென்று விட்டான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.........................
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
152 /31-08-2021
 
சுக்ரீவன் அரச மயக்கம்...
 
★ராமரும் லட்சுமணனும் மழைக்காலம் முடிந்து விட்டது, இனி சுக்ரீவன் விரைந்து இங்கு வருவான் என்று ஆவலுடன் காத்திருந்தார்கள். சுக்ரீவன் வரவில்லை. ராமரும் இளவல் லட்சுமணரும் குகையைவிட்டு வெளியே வந்தனர். கார்காலம் முடிந்து தன் படைகளுடன் வருவதாக சொன்ன சுக்ரீவன் வராததால் கோபமடைந்த ராமர்
லட்சுமணனிடம் கோபமாக பேச ஆரம்பித்தார். இந்த மழைக்கால பருவத்தில் நான்கு மாதங்கள் சென்று விட்டது. இந்த நான்கு மாதமும் எனக்கு நான்கு யுகம் போல் இருந்தது.
 
★இந்த உலகம் மிகுந்த அழகாக மகிழ்ச்சியாக இருக்கிறது. சீதை எங்கோ ஓரிடத்தில் தவித்துக் கொண்டிருக்கிறாள். நான் இங்கே துக்கத்தில் வானர அரசனான சுக்ரீவன் உதவியை எதிர்பார்த்துக் கொண்டு சும்மா இருக்கின்றேன். லட்சுமணா! சுக்ரீவன் நமக்கு கொடுத்த வாக்குறுதியை மறந்து விட்டான். கார்காலம் முடிந்து வருவதாக சொன்ன சுக்ரீவன் இன்னும் திரும்பி வரவில்லை. அவன்
கிஷ்கிந்தைக்கு மன்னனானதும்
நட்பையும், நன்றியையும் மறந்து
 கொடுத்த வாக்கை மறந்து அரச போகங்களில் மூழ்கி கிடக்கின்றான்  போலும்.
 
★நன்றியை மறந்தவனை கொல்வது கூட தவறில்லை. வாலியை கொல்ல என்னிடம் உதவியை நாடினான். நம்மை கொல்ல வேறு ஒருவரிடம் கூட உதவியை நாடலாம். அப்படி இருந்தால் இவ்வுலகில் இந்த வானரங்கள் இல்லாதவாறு நான் செய்து விடுவேன். உடனடியாக கிஷ்கிந்தை சென்று சுக்ரீவனை சந்தித்து நான் சொல்லும் செய்தியைச் சொல்லி விடு என்று சொல்ல ஆரம்பித்தார்.
 
★ராமர் தனது கோபத்தை வார்த்தைகளில் லட்சுமணனுக்கு புரிய வைத்தார். கொடுத்த வாக்கை நிறைவேற்றாதவன், அதன் காரணமாகவே விரைவில் அழிந்து போவான். எங்களுக்கு கொடுத்த வாக்கை மறந்து எங்களை ஏமாற்ற விரும்பினால் உனக்கும் அதே கதி தான் உண்டாகும். வாலிக்காக காத்து இருந்த மேலுலகம் உனக்காகவும் காத்திருக்கிறது என்று தெரிந்து கொள். நீயும் மேலோகம் செல்ல விரும்புகிறாயா? ராமருடைய வில்லும் அம்பும் உனக்காக தயாராக இருக்கின்றது. நீயும் உன்னை சார்ந்தவர்களும் மகிழ்ச்சியாக போகங்களை அனுபவித்து ராமருடைய கோபத்தை பெற்று விட்டீர்கள் என்ற செய்தியை கூறுவாய் என்று ராமர் லட்சுமணனை அனுப்பி வைத்தார்.
 
★லட்சுமணன் தன் தமையனின் துயரத்தையும் கோபத்தையும் அப்படியே கேட்டுக்கொண்டு கிஷ்கிந்தைக்கு கிளம்பினான். அப்போது ராமர் சில கணங்கள் லட்சுமணனின் கோபமாக பேசும் சுபாவத்தை பற்றி யோசித்தார். லட்சுமணனை மீண்டும் அழைத்தார். சுக்ரீவனிடம் எனது கோபத்தை தெரியப்படுத்தும் போது கடுமையான சொற்களை உபயோகிக்க வேண்டாம். நமது நண்பனாகி விட்டான். எனவே அவனது தவறை மட்டும் சுட்டிக்காட்டு. நீ கிஷ்கிந்தைக்கு சென்று அவனின் மனநிலையை அறிந்து வா. உன் கோபத்தில் அவனை ஒன்றும் செய்து விடாதே. கிஷ்கிந்தையில் அவன் மனநிலை மாறியிருந்தால் என்னிடம் வந்து சொல். நீ கிஷ்கிந்தை சென்று வருவாயாக
என்று சொல்லி அனுப்பினார் ராமர். லட்சுமணனும் அப்படியே செய்கிறேன் என்று சொல்லி
கிஷ்கிந்தை நோக்கி புறப்பட்டுச் சென்றார்.
 
★ராமரின் கட்டளைப்படி தம்பி லட்சுமணர் கிஷ்கிந்தை நோக்கி புறப்பட்டார். லட்சுமணனுடைய கோபத்தையும் அவனது ஆவேச தோற்றத்தையும் அவன் கையிலிருந்த ஆயுதங்களையும் பார்த்து வானர காவலாளிகள் பயந்து ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்று எண்ணிக் கொண்டார்கள். எனவே கோட்டையை ஜாக்கிரதையாக பாதுகாக்க வேண்டுமென்று ஆயத்தமானார்கள். அவர்களின் இந்த நடவடிக்கையை பார்த்த லட்சுமணனுக்கு மேலும் கோபம் அதிகரித்தது.
 
★சில வானரங்கள் ஓட்டமாக ஓடி அந்தப்புரத்தில் இருந்த அரசன் சுக்ரீவனிடம் லஷ்மணன் மிகுந்த  கோபத்துடன், வில்லும் அம்புடன் வந்து கொண்டிருக்கிறான். யார் தடுத்தாலும் நிற்கவில்லை. யாராலும் அவனை தடுக்க இயலவில்லை என்றார்கள். சுக்ரீவன் அந்தப்புரத்தில் மயக்கத்தில் கிடந்ததால் வானரங்கள் சொன்னது அவன் காதில் விழவில்லை. ராஜ சேவகர்களுடைய உத்தரவின் பேரில் அரண்மனையை காவலாளிகள் பலமாக நின்று யாரும் உள்ளே நுழையாமல் காவல் காத்தார்கள்.
 
★இந்தக் காட்சியை கண்டதும், அது லட்சுமணனுக்கு மேலும் கோபத்தை உண்டு பண்ணியது.
தடையை மீறி லட்சுமணன் உள்ளே நுழைந்தான். மிகுந்த கோபத்துடன், ஒரு சிங்கம் போல் லட்சுமணர் வருவதைக் கண்ட வானரங்கள், உடனே சென்று அங்கதனிடம் லட்சுமணர் மிகுந்த கோபத்துடன் வருவதைக் கூறினர். செய்தியை அறிந்த அங்கதன், சுக்ரீவனை காண மாளிகைக்கு சென்றான். அங்கு மாளிகையில் சுக்ரீவன், மது அருந்தி  மயங்கி, அவனை சுற்றி பெண்கள் புடைசூழ மயங்கி இருந்தான்.
 
★அங்கதன், தந்தையே! தங்களை தேடி லட்சுமணர் மிகுந்த கோபத்துடன் வந்து கொண்டு இருக்கிறார். தாங்கள் மயக்கத்தை கலைத்து எழுங்கள் என சுக்ரீவனை பார்த்து கூறினான். அங்கதனின் வார்த்தைகள் சுக்ரீவனின் காதில் விழவில்லை. தன் நிலைமை மோசமாகி கொண்டு இருப்பதை கூட அறியாமல் சுக்ரீவன் மயங்கி இருந்தான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை...................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
153 /01-09-2021
 
லட்சுமணன் சினம்...
 
★சுக்ரீவன் நிலமையைப் பார்த்த அங்கதன், இனி சித்தப்பாவிடம் பேசி ஒரு பயனும் இல்லை. அனுமனிடம் சென்று கூறுவோம் என நினைத்து அனுமனைத் தேடி அரண்மனை வாயிலுக்கு வரும்போது  கோபமாக வந்து கொண்டிருந்த லட்சுமணனை சந்தித்தான். அங்கதனை அங்கு கண்டதும் லட்சுமணன் கோபம் ஓரளவு தணிந்தது. அங்கதனிடம் வானர ராஜவாகிய சுக்ரீவனிடம் நான் வந்திருக்கும் செய்தியை முதலில் சொல்வாய்! என்று சொல்லி அனுப்பினார். இளவல் லட்சுமணனுக்கு தகுந்த ஒரு இருக்கையை அளித்து அமரச் செய்து விட்டு அனுமனைத் தேடிச் சென்றான் அங்கதன்.
 
★ஓரிடத்தில் அனுமனைக் கண்டு அவனிடம் சென்றான். அவனிடம் லட்சுமணன் மிக்க கோபத்துடன் வந்துக் கொண்டு இருக்கிறார். சித்தப்பாவிடம் கூறலாம் என சென்றால் அங்கு அவர் மகளிரின் அழகிலும், மது போதையிலும் மயங்கி உள்ளார். நமக்கு அழிவு காலம் வந்து விட்டது. இதிலிருந்து விடுபட ஏதேனும் வழி உள்ளதா என யோசனைக் கேட்டான். ஆனால் அனுமன், கோபத்தில் வந்து கொண்டிருக்கும் லட்சுமணனை யாராலும் சமாதானப்படுத்த முடியாது என தன்னுடைய  மதி நுட்பத்தால் நன்கு அறிந்துக் கொண்டான்.
 
★அனுமன் அங்கதனிடம், அங்கதா! இதற்கு ஒரே வழி உன் தாய் தாரையிடம் சென்று உதவி கேட்பது தான் என்றான்.
பிறகு இருவரும் சென்று கூறி தாரையின் காலில் விழுந்து வணங்கினர். அங்கதன், அம்மா! லட்சுமணர் பெரும் கோபமாக வந்துக் கொண்டு இருக்கிறார். சித்தப்பா மதுவில் மயங்கி உள்ளார். இந்நிலைமையில் தாங்கள் தான் உதவி செய்து அனைவரையும் காப்பாற்ற வேண்டும். தாங்கள் தான் லட்சுமணனின் கோபத்தைக் குறைக்க வேண்டும் எனக் கூறினான். கிஷ்கிந்தையின் வாயிலை வானரங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அடைத்து விட்டனர்.
 
★அந்த வானரங்கள் தன்னை தடுப்பதற்காக வாயிலை அடைத்திருப்பத்தை கண்ட லட்சுமணன் மிகுந்த கோபம் கொண்டு தன் செந்தாமரை போன்ற காலால் வாயிலை உதைத்தார். லட்சுமணின் பாதம் பட்டவுடன், மதில்சுவரும், வாயிலுக்கு காவலாக இருந்த கதவும் உடைந்து விட்டன. இதனைப் பார்த்த வானரங்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள தலைதெறிக்க ஓடின.
பிறகு லட்சுமணர் கிஷ்கிந்தை ஊருக்குள் நுழைந்து சுக்ரீவன் அரண்மனையை நோக்கி வந்தார்.
 
★லட்சுமணர் அரண்மனை நோக்கி வருவதை பார்த்து எல்லோரும் பயந்து நடுங்கினர். அவரை நான் சந்தித்து தக்க ஆசனம் அளித்து உபசரித்து விட்டு நம் அனுமனை அழைத்துக் கொண்டு உங்களிடம் வந்து உள்ளேன்.இனி நீங்கள்தான் லட்சுமணனிடம் பேசி இந்த நிலமையை சீர் செய்து சரியாக்க  வேண்டும். நானும் அனுமனும் சித்தப்பா சுக்ரீவனை தெளிய வைத்து அழைத்து வருகிறோம் என்று கூறி முடித்தான்.
 
★பிறகு தாரை அனைவரையும் அங்கிருந்து போகச் சொல்லி விட்டாள். தாரை பெண்கள் புடைசூழ லட்சுமணன் அமர்ந்து இருக்கும் இடம் நோக்கிச் சென்றாள். உலக அறிவிலும் சாமர்த்தியமான பேச்சிலும் தாரைக்கு நிகர் யாருமில்லை. அவள் லட்சுமணனிடம் சென்று மெதுவாக பேச ஆரம்பித்தாள்.
லட்சுமணர் தாரையை பார்த்த உடன், தன் தலையை கீழே குனிந்து கொண்டார். தாரை லட்சுமணனை பார்த்து, ஐயனே! நாங்கள் செய்த தவத்தின் பயனாக தாங்கள் இன்று இங்கு வந்துள்ளீர்கள். தங்கள் வரவு எங்களுக்கு புண்ணியமே என்று கூறினாள்.
 
★பிறகு லட்சுமணர் கோபம் குறைந்து தாரையை நிமிர்ந்து பார்த்தான். தாரையை பார்த்த உடன் தன் தாயின் நினைவு வந்துவிட்டது. அவர்களும் தாரையை போல தான், மங்கல நாண் அணியாமல், அணிகலன் ஏதும் அணியாமல், மணம் வீசும் மலர்களை சூடாமல், குங்குமம் இடாமல் மேலாடையால் உடலை மறைந்துக் கொண்டு இருப்பார் என நினைத்து வருந்தினான். லட்சுமணன் தாரையிடம், தாயே! கார்காலம் முடிந்த பிறகு மாதா சீதையை தேட படையோடு வருவதாக ராமரிடம் வாக்கு கொடுத்துவிட்டு சென்ற சுக்ரீவன், தான் கொடுத்த வாக்கை மறந்துவிட்டான்.
 
★ஆதலால் அண்ணன் ராமன், அரசன் சுக்ரீவன் என்ன செய்து கொண்டு இருக்கிறான்?. தான் செய்த வாக்கிற்கு என்ன பதில் என்பதை தெரிந்து கொண்டு வரும்படி கட்டளையிட்டுள்ளார். ஆதலால் தான் நான் இங்கு வந்துள்ளேன் எனக் கூறினான். தாரை, மைந்தனே! சிறியவர்கள் தவறு செய்து இருந்தால் அவர்களை தாங்கள் மன்னித்து அருள வேண்டும். தாங்கள் செய்த உதவியை சுக்ரீவன் ஒருபோதும் மறக்கவில்லை. அதேபோல் தங்களுக்கு செய்த கொடுத்த வாக்கையும் சுக்ரீவன் மறக்கவில்லை. பல தூரமான இடங்களுக்கு தூதர்களை அனுப்பி படைகளை திரட்ட சற்று காலதாமதமாகிவிட்டது என்றாள்.
 
★வெகு நாட்கள் பகைவன் தொந்தரவுடன் சுகங்கள் எதையும் அனுபவிக்காமல் துக்கத்துடனேயே வாழ்ந்து வந்த சுக்ரீவன் நீங்கள் சம்பாதித்துக் கொடுத்த ராஜ்யத்தை பெற்றதும் அதில் உள்ள சுகங்களில் புத்தி மயங்கி நன்றாக அனுபவித்து வருகின்றான். அவன் மேல் கோபம் கொள்ள வேண்டாம். மயக்கத்தில் மூழ்கியிருக்கும் சுக்ரீவனை தெளிவுடன் இருக்கும் தாங்கள் மன்னிக்க வேண்டும். தங்களுக்கு அளித்த வாக்கை அவர் சிறிதும் மறந்து விடவில்லை. பல இடங்களில் உள்ள வீரர்களை எல்லாம் இங்கு வந்து சேர சுக்ரீவன் உத்தரவு பிறப்பித்து இருக்கின்றான்.
 
★அவர்கள் இன்றோ நாளையோ வந்து விடுவார்கள். பிறகு சீதையைத் தேடும் வேலையை ஆரம்பித்து,ராவணனை எதிர்த்து வெற்றி பெரும் வேலையும் நன்கு நடைபெறும். தாம் அரசர் சுக்ரீவனை சிறிதும் சந்தேகப்பட வேண்டாம். தாங்கள் செய்த உதவியை ஒருபோதும் மன்னன் சுக்ரீவனால் மறக்க இயலாது. அவ்வாறு சுக்ரீவன் மறக்க நேர்ந்தால், அனைத்தையும் இழந்து மிகுந்த துன்பத்திற்கு உள்ளாவான் என்றாள். இதைக் கேட்ட லட்சுமணன் நாம் தேவை இல்லாமல் கோபப்பட்டு விட்டோமா என நினைத்துக் கொண்டார். இப்போது அரசனை பார்க்க தாங்கள் உள்ளே வரலாம் என்று லட்சுமணனை அழைத்துச் சென்றாள்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை....................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
154 /02-09-2021
 
வானரப்படை...
 
★ராமனின் தம்பி லட்சுமணன் கோபத்துடன் வில் அம்புடன் இங்கு வந்திருக்கிறான் என்ற செய்தியை கேட்டதும் சுக்ரீவன் நான் தவறு ஏதும்  செய்து விடவில்லை. எனது நெருங்கிய  நண்பர்களாகிய ஶ்ரீராமரும் லட்சுமணரும் என் மேல் ஏன் கோபம் கொள்கிறார்கள்.. யாரோ விரோதிகள் ஏதோ சொல்லி அவர்களுடைய மனதை கெடுத்து இருக்க வேண்டும் என்றான் சுக்ரீவன். அதற்கு அனுமன் அரசே! ராமனுக்கு நாம் கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் தாமதம் செய்து விட்டோம். ராமருடைய துயரத்தை நாம் மறந்து விட்டோம். இது இப்போது சிறிது அபாயத்தை உண்டு பண்ணியிருக்கிறது. ஆகவே லட்சுமணனிடம் மன்னிப்பு கேட்டு இனி தாமதப்படுத்தாமல் ராமருக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றப் பாருங்கள் என்றார் அனுமன்.
 
★ராமருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற மிகவும் காலதாமதம் ஆகிவிட்டது என்பதை அறிந்த சுக்ரீவன் ஶ்ரீ ராமரை நினைத்து மிகவும் பயந்தான். லட்சுமணனை சகல மரியாதையுடன் அரசவைக்கு உள்ளே அழைத்து வருமாறு தனது சேவகர்களுக்கு அவன் கட்டளையிட்டான்.தாரையின் பேச்சால் கோபம் குறைந்திருந்த லட்சுமணனை அழைத்துக் கொண்டு தாரை உள்ளே நுழைந்ததும் சுக்ரீவன் தனது ஆசனத்தில் இருந்து இறங்கி வந்தான். முதலில் நான் எந்த குற்றம் செய்திருந்தாலும் மன்னிக்க வேண்டும் என்று லட்சுமணனிடம் கேட்டுக் கொண்டு பேசத் துவங்கினான்.
 
★ராமருடைய நட்பினாலும் வீரத்தாலும் நான் இந்த ராஜ பதவியை அடைந்தேன். ராமன் எனக்கு செய்த உதவியை நான் மறக்க மாட்டேன். ராமருடைய பராக்கிரமத்தை அறிந்தவன் நான். என் துணை இல்லாமலே பகைவர்களை அழிக்கும் பலம் ராமருக்கு உண்டு என்று எனக்கு நன்றாகத் தெரியும். நான் என் சேனைகளுடன் அவரை தொடர்ந்து செல்வேன். சீதையை தேடுவதற்கு ஏற்பாடுகள் உடனடியாக செய்யப்படும். நான் செய்த தாமதத்தை மன்னித்து விடுங்கள் என்று லட்சுமணனிடம் கேட்டுக்கொண்டான்.
 
★இதனை கேட்டு மகிழ்ச்சி அடைந்த லட்சுமணன், ராமர் இருக்கும் இடத்திற்கு வந்து இந்த செய்தியை சொல்லி அவரின் துக்கத்தை போக்குங்கள் என்று சுக்ரீவனிடத்தில் கேட்டுக் கொண்டான். சுக்ரீவன் இளவல்  லட்சுமணனுடன் ராமர் இருக்கும் இடம் சென்று அவரின் கால்களில் விழுந்து வணங்கி இந்த நல்ல செய்தியை சொல்லி அவரை திருத்திப் படுத்தினான்.
ராமர் மகிழ்ச்சியுடன் பேசத் துவங்கினார். உன்னை போன்ற உயர்ந்த நண்பன் உலகத்தில் வேறொருவன் இல்லை. மேகங்கள் மழை பெய்து பூமியை குளிரச் செய்தது போல் என் உள்ளத்தை அன்பால் குளிரச் செய்துவிட்டாய்.
 
★உன் நட்பை பெற்றது என் பாக்கியம். இனி ராவணன் அழிவது நிச்சயம் என்று ராமர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சுக்ரீவன் சொல்லி அனுப்பிய அனைத்து வானர கூட்டங்களும் அங்கே வந்து சேர்ந்தார்கள். பல்வேறு நிறமும்  வடிவங்களும் கொண்ட அந்த வானரங்கள் மொத்தமாக வந்ததில் எழுந்த தூசியானது வானத்தை மறைப்பது போல் இருந்தது.ராமரிடம் சுக்ரீவன்
பேச ஆரம்பித்தான். இந்த கோடிக்கணக்கான அபூர்வ பலம் கொண்ட வானர சேனைகள் அனைவரும் உங்களுடைய சேனைகள்.இன்னும் படைகள் வந்து கொண்டு இருக்கின்றன.
 
★நீங்கள் இடும் ஆணையை குறைவில்லாமல் செய்யும் பலம் மிக்கவர்கள் இந்த வானரர்கள்.  இவர்கள் அனைவரையும் உங்களுடைய சேனைகளாகக் கருதி தற்போது தங்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய  உத்தரவிடுங்கள், அவர்கள் செய்து முடிப்பார்கள் என்று சொல்லி முடித்தான் சுக்ரீவன். ராமர், அனுமன் எங்கே? எனக் கேட்டார். சுக்ரீவன், அனுமன், படைகளை திரட்டிக் கொண்டு வரச்  சென்றுள்ளான், முழு படைகளையும் திரட்டி கொண்டு வருவான் என்றான். அதைக் கேட்ட ராமர் மிகுந்த மகிழ்ச்சியடைந்து சுக்ரீவனை அணைத்துக் கொண்டார்.
 
★ராமர் பேச ஆரம்பித்தார்.
முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, சீதை எங்கே இருக்கின்றாள்? அவளை தூக்கிச் சென்ற ராவணன் எங்கே இருக்கின்றான்? என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும். இப்போது இங்கு உள்ள வானர படைகளுக்கு உத்தரவிட வேண்டியது வானரங்களின் அரசனான நீ தான் சுக்ரீவா!. நானும் லட்சுமணனும் அல்ல. எல்லாம் அறிந்து செய்ய வேண்டியதை நன்கு  செய்யத் தெரிந்தவன் நீ. உன் திட்டப்படியே நடக்கட்டும் என்றார் ராமர்.
அங்கு வானர படைகள் பல்வேறு திசைகளில் இருந்து வந்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை வானரங்களாக தெரிந்தன. திரண்டு வந்த வானர படைகளை பற்றி காண்போம்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.....................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
155 / 03-09-2021
 
சீதையைத் தேடி
புறப்படுதல்...
 
★அங்கு வானர சேனை பல்வேறு திசைகளில் இருந்து ஏராளமாக வந்து கொண்டு இருந்தனர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை வானரங்களாக தெரிந்தன. திரண்டு வந்த வானர படைகளை பற்றி சிறிது காண்போம். சதவலி என்னும் வானர வீரன்,  அங்கு தன் படைத் தளபதிகளோடு, பதினாயிரம் வானரசேனையை அழைத்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தான். சுசேடணன் என்னும் வானர வீரன் மேரு மலையை தகர்த்து எடுக்கும் வலிமை படைத்தவன். அவன் தன் பத்து லட்சம் வானர வீரர் படைகளுடன் அங்கு வந்து சேர்ந்தான்.
 
★தாரன் என்னும் வானர வீரன் கண் சிமிட்டும் நேரத்துக்குள் தன் பெரிய படையான ஐம்பதாயிரம் படையுடன் வந்து சேர்ந்தான். சுவாட்சன் என்னும் வானர வீரன் இரண்டாயிரம் படையுடன் வந்து சேர்ந்தான். தாரன் என்னும் வானர வீரன் தன் இரண்டாயிரம் படைகளுடன் வந்து சேர்ந்தான்.
கரடி இனத் தலைவனான தூமிரன் இரண்டாயிரம்  கரடிப்படையுடன் அங்கு வந்து சேர்ந்தான். பனசன், பெரிய மலையைப் போன்ற உருவம் கொண்ட மாபெரும் தலைவன் தன் பன்னிரெண்டாயிரம்  படை வீரர்களுடன் அங்கு வந்து சேர்ந்தான்.
 
★வானர வீரனான நீலன் தன் பதினைந்து ஆயிரம்  நெடிய வானரப் படையுடன் வந்து சேர்ந்தான். கவயன் எனும் வீரன் முப்பதினாயிரம்  சேனையுடன் அங்கு வந்து சேர்ந்தான். ஆறைந்து தன் முப்பது ஆயிரம் குரங்குச் சேனையுடன் அங்கு வந்தான். தரிமுகன் என்பவன் தன் பெரிய படையான  அறுபது ஆயிரம் படையுடன் வந்து சேர்ந்தான்.ராமரின் உத்தரவுப்படி சுக்ரீவன் தன் சேனாதிபதிகளை அழைத்து அவர்களுடன் வெகு தீவிரமாக ஆலோசித்து ஒரு கூட்டத்திற்கு ஒரு தலைவனை நியமித்து எட்டு திசைகளுக்கும் சென்று சீதையை தேட ஆணை இட்டான்.
 
★சுக்ரீவன் அனுமனிடம் பேச ஆரம்பித்தார். நீ சீதையை கண்டு பிடிக்கும் ஆற்றல் உடையவன். உன் தந்தையின் வேகமும் நல்ல பலத்தையும் நீ பெற்றிருக்கிறாய். பலம், அறிவு, உபாயம் ஆகிய அனைத்தும் உன்னிடத்தில் நிறைவுடன் இருக்கின்றது. எனவே சீதையை தேடும் இந்த பொறுப்பை உன்னிடமும் ஒப்படைக்கிறேன். உன்னை நான் இந்தப் பெரும் காரியத்தில் நம்பியிருக்கிறேன். உனக்குச் சமமாக வேறு யாரும் இந்த உலகத்தில் இல்லை. நீ அங்கதனுடன் சென்று சீதை எங்கிருக்கிறாள் என்பதை அறிந்துவா! என்று அனுமனுக்கு ஆணை பிறப்பித்தான் சுக்ரீவன்.
 
★வடக்கே சதபலி என்கின்ற வானர வீரன் தலைமையில் சென்றார்கள். கிழக்கு பக்கமாக வினதன் என்கின்ற வானர வீரன் தலைமையில் சென்றார்கள். மேற்கே சுஷேணன் என்கின்ற வானர வீரன் தலைமையில் சென்றார்கள். தெற்கே அனுமன் அங்கதன் தலைமையில் சென்றார்கள். எப்படியாவது சீதையை கண்டுபிடிக்க வேண்டும். எங்கே ஒளித்து வைக்கப்பட்டிருந்தாலும் அவர்களை உங்களால் கண்டுபிடிக்க முடியும் அதற்கான மன வலிமை உடல் வலிமை உங்களிடம் இருக்கிறது. ஒரு மாதத்திற்குள் கட்டாயம் திரும்பி வந்து என்னிடம் சொல்ல வேண்டும் என்று மிகுந்த கண்டிப்பாக ஆணையிட்டான்
 
★சுக்ரீவன், எட்டு திசைகளில் இருக்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் எப்படி செல்ல வேண்டும் என்றும் அதற்கான வழிகளையும் தெளிவாக வானர வீரர்களின் கூட்டங்களுக்கு விளக்கிச் சொல்லி அனுப்பினான். வானர கூட்டங்கள் புற்றிலிருந்து ஈசல் வேகமாக கிளம்புவது போல் எட்டு திசைகளுக்கும் பிரிந்து சென்றனர். ராமர் சீதையை கண்டு பிடிக்கும் காரியத்தை அனுமன் சரியாக செய்து முடிப்பார் என்று எண்ணினார். எந்தவிதமான இடையூறுகள் வந்தாலும் அதனை நீக்கி செய்து முடிப்பான் அனுமான் என்பதை உணர்ந்தார்.
 
★அனுமனை தன்னருகே அழைத்தார் ராமார். தனது மோதிரத்தை அனுமனிடம் கொடுத்தார். உன்னால் சீதை கண்டு பிடிக்கப்பட்டால் இந்த மோதிரத்தை அவளிடம் நீ காட்டு இந்த மோதிரத்தை பார்த்தவுடன் நீ என்னுடைய தூதன் என்பதை அவள் அறிந்து கொள்வாள். விரைவில் அவளை மீட்பேன் என்ற செய்தியை அவளிடம் சொல்லி அவள் இருக்குமிடத்தை விரைவில் அறிந்துவா. நான் சீதையை மறுபடியும் அடையும்படி செய்வாயாக என்று ராமர் அனுமனிடம் கூறினார். விரைவில் சீதை இருக்குமிடம் அறிந்து கொண்டு தங்களை வந்து சந்திக்கிறேன் என்று ராமரை வணங்கி விடைபெற்றுக் கொண்டு சென்றார் அனுமான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
156 / 04-09-2021
 
சீதையை தேடுதல்...
 
★சுக்ரீவன், இப்படி எல்லா இடங்களிலும் சீதையை தேடி ஒரு மாதத்திற்குள் இங்கு வந்தடைய வேண்டும். ஆதலால் எல்லோரும் காலத்தை தாமதிக்காமல் உடனே புறப்படுங்கள் என்றான். பிறகு ராமன் அனுமனை தனியாக அழைத்துச் சென்று, வீரத்தில் சிறந்தவனே! நிச்சயம் நீ சீதையை கண்டுபிடித்து வருவாய் என நம்புகிறேன். சீதையை பற்றி நான் உன்னிடம் கூறுகிறேன். சீதை அழகில் சிறந்தவள். தாமரைப்பூ போன்றவள். மிகவும் நளினம் உடையவள் என சீதையைப் பற்றிக் கூறினார். பிறகு இராமர், சீதையிடம் இக்கணையாழியை என் அடையாளமாக காண்பித்து என்னுடைய நலத்தை கூறுவாயாக என வாழ்த்தி அனுமனுக்கு விடை கொடுத்தார்.
 
★ராமர் சுக்ரீவனிடம் பேசுவதற்கு  ஆரம்பித்தார். இந்த உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு திசையிலும் இருக்கும் எல்லா நாடுகளையும் மற்றும் அதன் வழிகளையும் நேரில் பார்த்தது போல் உன் வீரர்களுக்கு மிகத் தெளிவாக விளக்கிச் சொன்ன அழகைப்  பார்த்தேன். அத்தனை நாடுகளையும் அதன் அனைத்து வழிகளையும் நீ எப்படி அறிந்து வைத்திருக்கிறாய். எப்போது அந்த நாடுகளுக்கு சென்றாய் என்று கேட்டார். அதற்கு சுக்ரீவன் வாலியால் நாட்டை விட்டு துரத்தியடிக்கப்பட்டதும் நான் செல்லும் இடங்கலெல்லாம் வாலி என்னை துரத்திக் கொண்டே வருவான். அவனுக்கு பயந்து உலகம் முழுவதும் சுற்றி அலைந்திருக்கிறேன்.
 
★இதன் காரணமாக உலகம் முழுவதும் இருக்கும் நாடுகள் காடுகள் அனைத்தையும் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது. ஒரு நாள் மதங்க மகரிஷி ஆசிரமத்தைப் பற்றி அறிந்தேன். இந்த பிரதேசத்தில் வாலி நுழைந்தால் மகரிஷியின் சாபத்தால் அவன் தலை வெடித்துப் போகும் என்ற ஒரு காரணத்தினால் இங்கு வர மாட்டான். மீறி வந்தாலும் எனக்கு அபாயம் ஒன்றுமில்லை என்று அங்கு பலகாலம் நான் ஒளிந்து இருந்தேன் என்று ராமரிடம் சொல்லி முடித்தான் சுக்ரீவன். சுக்ரீவன் வானரங்களுக்கு சீதையைத் தேட கொடுத்த  கால அவகாசமான ஒரு மாத காலம் செல்ல ஆரம்பித்தது.
 
★ராமர் இருக்குமிடத்தில் இருந்து சீதையை தேடிச் சென்றவர்கள் ஒவ்வொருவராக திரும்பி வர ஆரம்பித்தார்கள். வடக்கு கிழக்கு மேற்கு பக்கம் சென்றவர்கள் அனைவரும் திரும்பி வந்தார்கள். காடுகள் மலைகள் ஆறுகள் நகரங்களிலும் ஜாக்கிரதையாக தேடிப் பார்த்து விட்டோம். சீதையை எங்கும் காணவில்லை. எங்களுக்கு சீதையை கண்டு பிடிக்கும் பாக்கியம் இல்லை. ராவணன் சீதையை தூக்கிக் கொண்டு தென் திசை நோக்கியே சென்றிருக்கிறான். தென் திசை சென்ற அனுமனும் திரும்பி வரவில்லை. விரைவில் அனுமன் நல்ல செய்தியோடு வருவார் என்று எண்ணுகிறோம் என்று சுக்ரீவனிடம் சொல்லி முடித்தார்கள். வானரங்கள் கூறிய அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ராமர் அவர்களின் முயற்சியில் திருப்தி அடைந்தார்.
 
★ராமர் தெற்குப் பக்கம் சென்ற அனுமன் நல்ல செய்தியோடு வருவார் என்று அனுமனின் வருகைக்காக காத்திருந்தார். தெற்குப் பக்கம் தேடிக் கொண்டு சென்றவர்கள் விந்திய மலைக் குகைகளிலும் வனங்களிலும் புகுந்து எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தார்கள். எங்கும் சீதையை காணவில்லை. ஒரு பெரிய பாலைவனத்தை அங்கு கண்டார்கள். அவர்கள் அந்த பாலைவனத்தின் வெப்பத்தை தாங்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர். இருந்தாலும்
அங்கும் தேடிப் பார்த்துவிட்டு அதனை தாண்டி வேறு இடம் சென்றார்கள். அங்கு ஒரு அரக்கன் இருந்தான். அரக்கனை கண்ட வானரங்கள் அவன் தான் ராவணனாக இருக்க வேண்டும், ராவணன் இங்கிருப்பதால் சீதை இங்கு தான் எங்கோ இருக்க வேண்டும் என்று அரக்கனை நோக்கி சென்றார்கள்.
 
★ஒரு பெரிய வானர கூட்டம் தம்மை நோக்கி வருவதைக் கண்ட அரக்கன் இன்று நல்ல உணவு கிடைத்தது என்று சந்தோசமாக அவர்களை பிடிக்க தாவினான். அங்கதன் அரக்கன் மேல் பாய்ந்து ஓங்கி ஒர் அறை அறைந்தான். அந்த அடியை தாங்க முடியாமல் அரக்கன் கத்திக் கொண்டே கீழே விழுந்து இறந்தான். ராவணன் இறந்தான் என்ற மகிழ்ச்சி அடைந்த வானரங்கள் அந்த காடு முழுவதும் சீதையைத் தேடிப் பார்த்தார்கள். சீதை அங்கு இருப்பதற்கான எந்த  ஒரு அறிகுறியும் அவர்களுக்கு அங்கு தென்படவில்லை.
 
★பிறகு வேறு இடத்தை தேடி சென்றார்கள். எவ்வளவு தேடியும் பயனில்லையே என்று உற்சாகம் இழந்து வருத்தப்பட்டு அமர்ந்து விட்டார்கள். அங்கதனும் அனுமனும் தைரியம் சொல்லி வானரங்களை உற்சாகப் படுத்தினார்கள். உற்சாகமடைந்த வானரங்கள் மறுபடியும் தேடி சென்றார்கள். இப்படியே பல நாட்கள் கழிந்தது. சீதையைக் காணவில்லை. சுக்ரீவன் கடுமையான தண்டனை விதித்து விடுவானே என்ற பயத்தில் தேடிக் கொண்டே சென்றவர்கள் பசியாலும் தாகத்தாலும் மிகவும் சோர்வடைந்தனர்.
 
நாளை......................
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
157 / 05-09-2021
 
சுயம்பிரபை...
 
★அனுமனும் அங்கதனும் அங்கே ஒரு பெரிய குகையை கண்டு பிடித்தார்கள். அந்த குகைக்குள் இருந்து பல வகைப் பறவைகள் சந்தோசமாக வெளிவந்து கொண்டிருந்தன. குகைக்குள் இருந்து நல்ல வாசனையோடு காற்று வீசுவதை பார்த்து இந்த குகையில் தண்ணீர் இருக்க வேண்டும். அனைவரும் உள்ளே செல்வோம் வாருங்கள் என்று கூறினார்கள். அந்த குகைக்குள் இருட்டாக இருந்தது. ஒருவர் கையை ஒருவர் இருகப் பிடித்துக் கொண்டு தடுமாறி நடந்து சென்றனர்.தண்ணீர் தண்ணீர் என்று தாகத்தால் வருந்திய வானரங்கள் வெகுதூரம் இருட்டிலேயே சென்றார்கள். குகையின் இறுதியில் வெளிச்சத்துடன் மிக ரம்யமான நகரத்தை கண்டார்கள்.
 
★மிக அதிசயமான தங்கத்தால் ஆன மாளிகைகளும் எல்லாவித செல்வமும் நிறைந்த நகரத்தை கண்டார்கள். மனிதர்களின் நடமாட்டமே இல்லாத அந்த நகரம்  மிக அழகாகவும், நேர்த்தியாகவும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. சுவையான மிக அருமையான உணவுகளும்,உடைகளும் அங்கு  இருந்தன. சிலர் இது தான் அந்த அரக்கன் ராவணன் சீதையை சிறை வைத்துள்ள இடம் என்று நினைத்தனர். அங்கு ஓர் அழகிய மண்டபத்தில் ஓர் பெண் தவம் செய்து கொண்டு இருந்தாள்.
 மரவுரி தரித்த அந்த தவஸ்வியை கண்டும் அவரின் முகத்தில் இருந்த தேஜஸை பார்த்தும் வானரங்கள் நடுங்கினார்கள்.
 
★அப்பெண் தபஸ்வினி இந்த நகருக்குள் யாரோ மனிதர்கள் வந்துள்ளார்கள் என்பதை அறிந்து கண் விழித்து யாரெனப் பார்த்தாள். வானரங்கள் நிற்பதைப் பார்த்து முன் நின்ற அனுமனை பார்த்து, தாங்கள் யார்? என வினவினாள். அனுமன், நாங்கள் அனைவரும் ஶ்ரீராமருடைய அடியார்கள். என் பெயர் அனுமன் என்றார். பிறகு அனுமன் அந்த தபஸ்வினியை பார்த்து, தாங்கள் யார்? தாங்கள் தனியாக இங்கு என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என வினவினான்.மேலும் அனுமன் அவரிடம் சென்று வணங்கி தாயே! நாங்கள் சோர்வினாலும் தண்ணீர் தாகத்தினாலும் உள்ளே வந்தோம். தங்களைக் கண்டு எங்கள் கூட்டத்தினர் பயப்படுகின்றார்கள். தங்களைப் பற்றியும், இந்த விசித்திர குகையைப் பற்றியும்  சொல்லி எங்கள் வானர கூட்டத்தின் பயத்தை போக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
 
★அதற்கு அந்த தவஸ்வினி, நீங்கள் அனைவரும் மிகவும் களைப்பாகவும் பசியுடனும் இருக்கின்றீர்கள். முதலில் உங்கள் பசி, தாகத்தை தீர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு நாம் பேசலாம் என்று கூறிவிட்டு  அவர்களுக்கு தேவையான உணவு முதலானவற்றை ஏற்பாடு செய்து கொடுத்தாள். வானரர் அனைவரும் பசியாறி மகிழ்ச்சி அடைந்தார்கள். இப்பொது தவஸ்வினி பேச ஆரம்பித்தாள். இந்த அழகிய அரண்மனை வானவர்களுடைய விஸ்வகர்மா மயன் கட்டியது. பிரம்மாவினால் சுக்ராச்சாரியாருக்கு உபதேசம் செய்யப்பட்ட சிற்பக் கலையை, அவரிடம் இருந்து ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து நன்கு கற்றவன்.
 
★இந்த அரண்மனையை அவன் கட்டி வெகுகாலம் இங்கே வசித்து வந்தான். அத்துடன் தெய்வப் பெண்ணான ஹேமையுடன், தான் அமைத்த அழகிய நகரில் கூடா ஒழுக்கத்துடன் வாழ்ந்து வந்தான். அவர்களுக்கு நான் துணை புரிந்தேன். மயன் ஹேமையுடன் இருப்பதாக நாரத முனிவர் இந்திரனிடம் கூறினார். இதனால் கோபமடைந்த அந்த இந்திரன் மயனைக் கொன்று விட்டு ஹேமையை அவரின் தேவலோகத்திற்கு அனுப்பி விட்டார். என்னை இங்கேயே தனியாக தவம் செய்து கொண்டு இருக்கும்படி கூறினார்.  எனது பெயர் சுயம்பிரபா. இந்த இடத்தை காவல் காத்துக் கொண்டும் தவம் செய்து கொண்டும் இருக்கிறேன்.
 
★இவ்வளவு பெரிய கூட்டமாக வந்திருக்கும் நீங்கள் யார்? உங்கள் காரியம் என்ன? ஏன் இந்த மாதிரி காடுகளில் திரிந்து களைத்து இருக்கின்றீர்கள்? என்று கேட்டாள். அனுமன் பேச ஆரம்பித்தார். தசரத குமாரன் ஶ்ரீராமர் இந்த உலகத்திற்கு அதிபதியானவர். தன் தம்பி மற்றும் மனைவியுடன் தன் தந்தையின் சத்தியத்தை காப்பாற்றுவதற்காக ராஜ்ய பதவியை விட்டு காட்டிற்குள் வனவாசம் செய்துக் கொண்டு இருந்தார். அப்போது ராட்சதன் ஒருவன் ராமருடைய மனைவி சீதையை தூக்கிக் கொண்டு சென்று விட்டான். சீதையை தேடிக் கொண்டு ராமரும் லட்சுமணனும் வந்தார்கள்.
 
★வன ராஜன் சுக்ரீவன் அவர்களுக்கு நண்பனானான். ராமருக்காக சீதையை தேடும்படி சுக்ரீவன் ஆணையிட்டு ஒரு மாத காலம் அவகாசம் கொடுத்து எங்களை அனுப்பி வைத்தான். அவர் இட்ட ஆணையை நிறைவேற்ற நாங்கள் அனைத்து காடுகளிலும் குகைகளிலும் தேடிக் கொண்டிருந்தோம். அப்பொழுது தாகத்தாலும் பசியாலும் சோர்வினாலும் நாங்கள் இந்த குகைக்குள் வந்து சேர்ந்தோம். குகைக்குள் நீண்ட நாட்களாக தண்ணீரை தேடிக்கொண்டு இருந்ததில் சுக்ரீவன் எங்களுக்கு விதித்த மாத காலம் முடிந்து விட்டது.
 
★இன்னும் நாங்கள் சீதையை கண்டு பிடிக்கவில்லை. சுக்ரீவன் மிகவும் கண்டிப்பானவர். அவர் இட்ட வேலையை குறிப்பிட்ட காலத்திற்குள் செய்யாத காரணத்தினால் எங்களைக் கொன்று விடுவார். தயவு செய்து நாங்கள் விரைவாக வெளியில் செல்வதற்கான வழியை சொல்லுங்கள் என்று அனுமன் தவஸ்வியிடம் விபரமாகச் சொல்லி முடித்தார். நானும் உங்களுக்காகத்தான் இவ்வளவு வருடங்களாக காத்திருந்தேன். சீதையை மீட்க அனுமனிடம் வழிகளைக்கூறி, அதன் பின் தேவலோகம் வந்தடைவாய் என இந்திரன் எனக்கு ஆணையிட்டு இருந்தார்.
 
★ஆகவே உங்களுக்கு இந்த இடத்தைவிட்டு வெளியே செல்லும் வழியைக் காண்பித்து பின்னர் நான் இந்திர  லோகம் செல்வேன் எனக் கூறினாள் சுயம்பிரபை. பின்னர் அனுமன் முதலானோரை அழைத்துக் கொண்டு அந்த குகையை விட்டு வெளியேறினாள்.  தாங்கள் எனக்கு இதிலிருந்து மோட்ச பதவியை அளிக்க வேண்டும் என்றாள். பிறகு அனைவரும் ராமநாமத்தை ஜபித்து சுயம்பிரபைக்கு மோட்சத்தை அளித்தனர். சுயம்பிரபை தேவலோகத்தை சேர்ந்தாள்.
 
நாளை....................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
158 / 06-09-2021
 
அங்கதன் தடுமாற்றம்...
 
★சுயம்பிரபை இந்திரலோகம் சென்றதும், அவள் கூறியபடி மகேந்திரமலை நோக்கி நடக்க துவங்கினர். போகும் வழியில் அந்த  வானர வீரர்கள் ஒரு பொய்கையை அடைந்தனர். அங்கு அவர்கள் காய், கனிகளை உண்டு இளைப்பாறினார்கள். பொய்கை கரையில் அன்றிரவை கழித்தனர்.பொய்கை கரையில் அனுமன், அங்கதன், ஜாம்பவான் மற்ற வானர வீரர்கள் அன்றிரவு தங்கி கழித்தனர். துமிரன் என்ற அரக்கன் கருநிறமுடன், பெரிய உடலும், நீண்ட கைகளுடன் நடுஇரவில் அங்கு வந்தான். என் ஆட்சிப் பகுதியான பொய்கை கரையில் இவர்கள் எவ்வளவு துணிவுடன் உறங்கி கொண்டு இருக்கிறார்கள் எனக் கூறி அங்கதனின் மார்பில் ஓங்கி குத்தினான்.
 
★யார் தன் மார்பில் குத்தியது என்பதை அறிய அங்கதன் எழுந்து பார்த்தான். அங்கு அரக்கன் அவன் முன் பெரும் கோபத்தில் நின்று கொண்டு இருந்தான். பிறகு இருவரும் போர் புரிய தொடங்கினர். நெடுந்நேரம் இவர்களின் யுத்தம் தொடர்ந்தது. ஒரு வழியாக அங்கதன் அரக்கனை கொன்று விட்டான். மற்ற வானரங்கள் இவர்களின் போரின் போது ஏற்பட்ட சத்தங்களை கேட்டு எழுந்து பார்த்தனர். அப்போது அரக்கன் மாண்டு கிடந்தான்.
 
★உடனே அனுமன் அங்கதனை பார்த்து இவன் யார்? எனக் கேட்டான்.அதற்கு அங்கதன், இவன் யாரென்று எனக்கு தெரியவில்லை என்றான். அப்போது ஜாம்பவான், இவனை எனக்கு தெரியும். இவன் துமிரன் என பெயர் கொண்ட அரக்கன். இவன் இந்த பொய்கையை தன்னுடையது என எண்ணிக் கொண்டு இருந்தான். இவனை அங்கதனை தவிர வேறு எவராலும் கொல்ல முடியாது என்றான். பிறகு வானர வீரர்கள் அங்கிருந்து சீதையை தேட புறப்பட்டனர்.
 
★அனைத்து இடங்களிலும் சீதையைத் தேடிக்கொண்டே சென்றவர்கள், கடைசியாக மகேந்திரமலையையும் பின்னர் அதைச் சார்ந்து இருந்த கடல் பகுதியையும் அடைந்தார்கள்.
அனுமனிடன் அப்போது ஒரு வானரம் பேச ஆரம்பித்தான். சுக்ரீவன் நமக்கு கொடுத்த ஒரு மாத காலம் நிறைவடைந்தது. சீதையை பற்றிய எந்த தகவலும் அறிந்து கொள்ளாமல் இப்போது நாம் கிஷ்கிந்தைக்கு சென்றால் மகாராஜா சுக்ரீவன் நமக்கு மரண தண்டனை விதிப்பான். எனவே நம்மை காப்பாற்றிக் கொள்வதற்கு ஒர் உபாயம் சொல்லுங்கள் என்று கூறினான்.
 
★அந்த வானரம் சொன்னதை ஆமோதித்த அங்கதன் பேச ஆரம்பித்தான். ராமருடைய ஆணைக்கு பயந்து தான் ராஜா சுக்ரீவன் எனக்கு யுவராஜா பட்டத்தை தர ஒப்புக்கொண்டான். சுக்ரீவனுக்கு என் மேல் அன்பு கிடையாது. அங்கே போய் நாம் உயிரை விடுவதை விட, அந்த  தவஸ்வினி சுயம்பிரபாவின் குகைக்குள் மறுபடியும் சென்று அங்கேயே சுகமாக வாழ்வோம். அங்கு நமக்கு வேண்டியது அனைத்தும் இருக்கிறது. அங்கு சுக்ரீவன் உட்பட யாரும் உள்ளே நுழைய முடியாது. நாம் மிகவும் சந்தோஷமாக ஆயுள் முழுவதும் காலம் கழிக்கலாம் என்று கூறினான். யுவராஜன் அங்கதன் சொன்னதே சரி என்று பல வானரங்கள் கூறினார்கள்.
 
★அனுமனுக்கு இந்த யோசனை சரி என்று தோன்றவில்லை. ஏன் இப்படி தகாத வார்த்தைகளை பேசுகிறீர்கள்?. நம்முடைய குடும்பங்களை விட்டுவிட்டு இந்த குகைக்குள் சாப்பிட்டு தூங்கி உயிர் வைத்துக் கொண்டு இருப்பதில் பலன் ஒன்றும் இல்லை. அரசர் சுக்ரீவனுக்கு அங்கதனின் மேல் விரோதம் ஒன்றும் இல்லை. சுக்ரீவன் மிகவும் நல்லவன் அவனை பார்த்து நாம் எதற்கும் பயப்பட வேண்டியது இல்லை. நீங்கள் சொல்வது போல் நாம் இப்போது இருந்து இந்த குகையில் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தால் லட்சுமணனுடைய கோபத்தில் வரும் ஓர் அம்பிற்கு இந்த குகை தாங்காது. லட்சுமணன் தனது ஒரு அம்பினாலேயே இந்த குகையை பொடிப் பொடியாக்கி ஒன்றும் இல்லாமல் செய்து விடுவான். ஆகையால் இந்த யோசனையை விடுங்கள். சுக்கீரவனிடத்தில் நடந்தவற்றை சொல்லி நாம் மன்னிப்பு கேட்டுக் கொள்ளலாம் என்றார் அனுமன்.
 
★அனுமன் சொன்னதை கேட்ட அங்கதன் சுக்ரீவனுக்கு என் மீது இரக்கம் கிடையாது. வாலியை எப்படி கொன்றான் என்று சிறிது யோசித்துப் பாருங்கள். நான் உயிருடன் இருப்பது அவனுக்கு பிடிக்கவில்லை. ஏதாவது காரணத்தை சொல்லி என்னை அழிப்பதே அவருடைய எண்ணம். எந்த அரசனும் தனது அரசுக்கு இடையூறாக இருக்கும் ஒருவரை எப்படி அழிப்பது என்று மனதில் எண்ணுவார்கள். சுக்ரீவன் அது போலவே என்னை கொல்வான். என் தாய் ஏற்கனவே வாலியை இழந்து கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறாள். இப்போது என்னையும் சுக்ரீவன் கொன்று விட்டால் என் தாய் என்ன ஆவாள் என்று எனக்கு தெரியவில்லை நான் என்ன செய்வேன் என்று கதறி அழ ஆரம்பித்தான்.
 
★கிஷ்கிந்தைக்கு சென்று உயிரை விடுவதை விட நான் இங்கேயே என் உயிரை விட்டு  விடுகிறேன் என்று சொல்லி தர்ப்பைப் புல்லை கடல் மணலில் பரப்பி சமன் செய்து, அனைத்து தெய்வங்களையும் வணங்கி விட்டு, உயிர் நீக்கும் சங்கல்பம் செய்து கொண்டு, வடக்கு முகமாக பார்த்து அங்கதன் அமர்ந்து கொண்டான். தமது யுவராஜன் செய்த காரியத்தை கண்ட பல வானரங்களும் தாங்களும் அப்படியே உயிரை விடுகிறோம் என்று சங்கல்பம் செய்து கொண்டு அங்கதன் பின்னே அமர்ந்து விட்டார்கள்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை...................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
159 / 07-09-2021
 
அங்கதனைத் தேற்றிய
வாயுபுத்திரன் அனுமன்...
 
★அனுமன் எவ்வளவு ஆறுதல் கூறியும் அங்கதனும் மற்றைய வானர வீரர்களும் சிறிதுகூட கேட்கவில்லை.  நாம் இன்னும் சீதையை கண்டுபிடிக்கவில்லை என்ற செய்தி ராமருக்கு தெரிய வந்தால் அவர் மிகவும் வேதனை கொள்வாரே? நாம் சீதையை கண்டுபிடிக்காமல் எவ்வாறு நாடு திரும்ப முடியும் என பலவாறு புலம்பி கவலையுற்றனர். அந்த சமயத்தில்  அங்கதன் தனது வீரர்களிடம், நாம் ராமரிடம் சீதையை நிச்சயமாக கண்டு பிடித்துவிட்டு வருவோம் என அவரிடம் ஆணையிட்டு வந்தோம். ஆனால் நம்மால் அக்காரியத்தை செய்து முடிக்க முடியவில்லை.
 
★நமக்கு சுக்ரீவன் கொடுத்த கால அவகாசமும் முடிந்து விட்டது. இதற்கு மேலேயும் நம்மால் சீதையை கண்டுபிடிக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை இல்லை. ராஜா  சுக்ரீவன் நமக்கு கொடுத்த கட்டளையை செய்து முடிக்கவில்லை என்று நம்மை தண்டிப்பான். நாம் சீதையை தேடி கண்டுபிடிக்க முயற்சித்தும் முடியவில்லை என்ற செய்தி ராமர் அறிந்து மிகவும் வருத்தம் கொள்வார். இதையெல்லாம் நாம் கண்ணால் பார்ப்பதற்கு பதில், நம் உயிரை இங்கேயே மாய்த்துக் கொள்ளலாம். இதற்கு உங்களின் கருத்து என்ன? என்று கேட்டான்.
 
★அங்கதன் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்த ஜாம்பவான், வானர இளவரசனே! வீரனே! உன் கருத்துக்கள் சிறப்பானது. நீ உன் உயிரை மாய்த்துக் கொண்ட பின் நாங்கள் மட்டும் உயிரோடு இருப்போமா என்ன? இல்லை, கிஷ்கிந்தைக்கு சென்று நடந்த விஷயங்களை எல்லாம் சொல்லி ராமனின் திருவடியிலும், சுக்ரீவனின் திருவடியிலும் வீழ்ந்து உயிர் வாழ்வோம் என நினைத்தாயா? நாங்கள் மட்டும் உயிர் வாழ்ந்து என்ன பயன்? ஆதலால் நாங்களும் எங்கள் உயிரை மாய்த்து கொள்வோம். ஆனால் நீ எங்களுக்கு ஓர் சத்தியம் செய்ய வேண்டும். நாங்கள் இறந்த பின் நீ உயிர் வாழ வேண்டும். இது எங்களின் விருப்பம் ஆகும் என்றான்.
 
★அதற்கு அங்கதன், நீங்கள் எல்லோரும் மாண்டு போன பின் நான் உயிருடன் நாடு திரும்புவது நன்றல்ல. அதனால் நாம் அனைவரும் உயிரை துறப்போம் என்றான். இதைக்கேட்ட ஜாம்பவான், அங்கதனே! நீ அரச பதவிக்கு உரியவன். ஆதலால் தான் உன்னை உயிருடன் நாடு திரும்ப சொன்னேன் என்று கூறினான். இவர்களின் உரையாடல்களை கேட்டுக் கொண்டிருந்த அனுமன், நாம் அனைத்து உலங்களிலும் இன்னும் சீதையை தேடி முடிக்கவில்லை. சீதையை தேடி கண்டுபிடித்து ராமரிடம் ஒப்படைப்பதுதான் நம் கடமையும், வீரமும் ஆகும்.
 
★நாம் சுக்ரீவன் குறித்த காலத்திற்குள் சீதையை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. குறித்த காலத்திற்குள் திரும்பி வராததால் நாம் இன்னும் மாதா சீதையை தேடி கண்டு பிடிக்க முடியவில்லை என்பதை நம் சுக்ரீவன் நன்கு புரிந்து கொண்டு இருப்பான். ஆதலால் நாம் சீதையை தேடிச் செல்வது தான் சிறந்தது என உரையாற்றினான்.
அனுமன் அங்கதனிடம் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து முடிவு செய்வோம். நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்று தைரியம் கூறினார். கடற்கரையில் கும்பலாக உணவில்லாமல் அமர்ந்திருந்த வானரங்களை அருகில் மலை மீதிருந்த கழுகரசன் சம்பாதி பார்த்துக் கொண்டிருந்தான்.
 
★சிறகுகள் இழந்து பறக்க முடியாமல் பட்டினியால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த கழுகரசன் சம்பாதி இத்தனை வானரங்கள் உணவில்லாமல் பட்டினியால் ஒரே இடத்தில் இறந்து போகப் போகின்றார்கள். நமக்கு இன்று உணவு சுலபமாக கிடைத்து விட்டது என்று எண்ணி அவன் மனம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது.அப்பொழுது வானரங்கள் ஒருவருக்கொருவர் தசரதன் இறந்தது முதல் ராமர் காட்டிற்கு வந்தது, சீதையை ராவணன் தூக்கிச் சென்றது, ஜடாயு கழுகு இறந்தது, என்று அனைத்தைப் பற்றியும் பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்பேச்சில்  ஜடாயு இறந்து விட்டான் என்ற செய்தியை கேட்டதும் திடுக்கிட்டது கழுகு.
 
★அங்கதனிடம் தொடர்ந்து பேசிய அனுமன், சீதையை அந்த ராவணன் கவர்ந்துசென்றபோது, ஜடாயு அவனிடம் போரிட்டு உயிர் துறந்தார். அதுபோல நாம் மாதா சீதையை தேடும்போது உயிர் துறக்க நேரிட்டால் அது தான் சிறப்பு. அதை விட்டுவிட்டு சீதையை கண்டுபிடிக்கவில்லை என்று தமது உயிரை மாய்த்து கொள்வது தான் ஓர் வீரனின் சிறப்பா? என்றான். இப்படி அனுமன் பேசிக் கொண்டிருக்கும் போது, சற்று தொலைவில் ஓர் மலையில் அமர்ந்திருந்த சம்பாதி என்ற கழுகின் அரசன், தம் தம்பி ஜடாயு இறந்து விட்டான் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தான். ஜடாயுவை நினைத்து புலம்பி அழுதான்.
 
★எனது தம்பி ஜடாயு இறந்து விட்டானா? என்று அது பற்றி மேலும் தெரிந்து கொள்ள கழுகரசன் சம்பாதி ஆர்வம் அடைந்தது. என் அன்புக்குரிய அருமை தம்பி ஜடாயு பற்றி பேசிக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் யார்? நடந்தது என்ன? என்று விவரமாக சொல்லுங்கள் என்று மலை மீதிருந்து கத்தியது.
அனுமன் பறக்க முடியாமல் இருந்த கழுகை கீழே தூக்கிவர ஒரு வானரத்தை கேட்டுக் கொண்டார். கீழே வந்த அந்த கழுகரசன் சம்பாதி பேசத் தொடங்கியது.
 
வணக்கத்துடன
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை...................
 
[9/8, 4:02 PM] Naga Subharajarao: ஶ்ரீராம காவியம்
~~~~~
160 /08-09-2021
 
சம்பாதி...
 
★கருடனும் அருணனும் அண்ணன் தம்பிகள். அண்ணன் கருடனுக்கு சம்பாதியும், ஜடாயுவும் இரண்டு குமாரர்கள். இருவரும் சிறு வயதிலிருந்தே தாங்கள் பெற்ற அபார சக்தியை அனுபவித்துக் கொண்டு இருந்தார்கள். அப்படி ஒரு நாள் இருவரும் ஆகாயத்தில் போட்டி போட்டுக் கொண்டு உயரப் பறந்து சென்று கொண்டு இருந்தனர். சூரியனை நெருங்க நெருங்க வெப்பம் அதிகரித்து கொண்டு இருந்தது. ஜடாயுவை வெப்பம் கொளுத்தி விடும் போல் இருந்தது. அப்போது சம்பாதி தன் சிறகுகளை விரித்து ஜடாயுவைக் காப்பற்றினான். ஆனால் சம்பாதியின் சிறகு எரிந்து போனது.
 
★சம்பாதி பறக்க முடியாமல் கீழே மலை மேல் விழுந்தான். ஆகவே அன்றிலிருந்து சம்பாதி பறக்க முடியாமல் துன்பப்பட்டுக் கொண்டிருந்தான் என்று சம்பாதியைப் பற்றி அனைத்தும் தெரிந்த ஜாம்பவன் அங்கிருந்த அனைவரிடமும் கூறும்போது சம்பாதி பேசத் தொடங்கினார்.
ஆகாயத்தில் போட்டி போட்டுக் கொண்டு மேலே கிளம்பினோம். சூரியனை நெருங்க நெருங்க வெப்பம் அதிகரித்தது. சிறுவனான ஜடாயு மிகவும் சோர்வடைந்தான். வெப்பம் ஜடாயுவை எரித்து விடும் போலிருந்தது. உடனே எனது சிறகுகளை விரித்து ஜடாயுவை காப்பாற்றினேன். அவன் உயிர் பிழைத்தான்.
 
★ஆனால் எனது சிறகுகள் எரிந்து பறக்க முடியாமல் இந்த மலை மேல் விழுந்தேன். இந்த மலையின் மீது இருந்த நிசாகர் என்ற முனிவரிடம் எனக்கு விமோசனம் கேட்டேன். முக்காலமும் உணர்ந்த அவர் ராம அவதாரத்தை இறைவன் விரைவில் எடுப்பார். அப்போது ஶ்ரீராம தூதர்களுக்கு வேண்டிய ஒரு காரியத்தை நீ செய்வாய். அப்போது உனது சிறகுகள் பழையபடி வந்து உனது இளமை திரும்பும். ராமரை காணும் பாக்கியம் உனக்கு உண்டாகும் என்றார். அதன்படி ராமரை பார்க்கவும் ராம காரியம் செய்வதற்காகவும் இங்கே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். ஜடாயு இறந்து விட்டான் என்று தாங்கள் பேசிக் கொண்டிருந்தது எனக்கு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. என்னுடைய தம்பி எப்படி இறந்தான் சொல்லுங்கள் என்றான் கழுகரசன் சம்பாதி.
 
★அனுமன் சம்பாதியிடம், ராவணன் சீதையை கவர்ந்து சென்ற போது ஜடாயு அரக்கன் ராவணனிடம் போரிட்டார். போரின் போது ராவணன், சிவன் கொடுத்த வாளால் ஜடாயுவின் சிறகுகளையும், கால்களையும் வெட்டி வீழ்த்தியதால் ஜடாயு இறந்து விட்டார் எனக் கூறினார். இதைக்கேட்ட சம்பாதி மயங்கி கீழே விழுந்தார். மயக்கம் தெளிந்த சம்பாதி, எம்பெருமான்! ராமரின் மனைவியை காக்கும் பொருட்டு ஜடாயு உயிர் துறந்து புகழை அடைந்துள்ளான். பிறகு சம்பாதி, அனுமனையும், மற்ற வானர வீரர்களையும் மகிழ்வுடன் பாராட்டினான்.
 
★சம்பாதி, வானர வீரர்கள் அனைவரிடமும் ராம நாமத்தை சொல்லச் சொன்னான். அனைவரும் ராம நாமத்தை சொல்லும்போது சம்பாதியின் சிறகுகள் வேகமாக  முளைக்க ஆரம்பித்தது. திரும்பவும் தன் சிறகுகளை பெற்ற சம்பாதி மிகவும் வலிமையுடையவனாக மாறினான். ராமருக்கு எப்படி உதவுவது சீதை இருக்குமிடம் கண்டுபிடிக்க தங்களுக்கு ஏதேனும் வழிவகைகள் தெரிந்தால் சொல்லுங்கள் என்று சம்பாதி கழுகிடம் கேட்டுக் கொண்டார்கள்.
 
★அனைத்தையும் கேட்ட கழுகரசன் சம்பாதி எனது தம்பி ஜடாயுவை கொன்ற ராவணனை அழிக்க துடிக்கிறேன். சிறகில்லாத வயதான என்னால் ஏதும் செய்ய இயலவில்லை. ராவணனை அழிக்க உங்களுக்கு நான் உதவுகின்றேன். எனக்கு ராம காரியம் செய்யும் பாக்கியம் இப்போது கிடைத்துவிட்டது என்று மகிழ்ச்சி அடைந்தது
பிறகு அனுமன், ராவணன் சீதையை தென் திசை நோக்கி கவர்ந்து சென்றதால் நாங்கள் இவ்வழியாக சீதையைத்  தேடி வந்துள்ளோம் என்றான்.
 
★சம்பாதி, வீரர்களே! வருந்த வேண்டாம். நான் அரக்கன் ராவணன் சீதையை கவர்ந்து சென்றதை பார்த்தேன். அவன் அன்னை சீதையை கவர்ந்து கொண்டு இலங்கை நோக்கிச் சென்றான். மிகுந்த துன்பத்தில் இருந்த அன்னையை அங்கே ராவணன் சிறை வைத்து உள்ளான். நீங்கள் அங்கே சென்று சீதையை காண்பீராக! என்றான். பிறகு சம்பாதி, நீங்கள் அனைவரும் அங்கே செல்வது எளிதான விஷயம் அல்ல. உங்களில் மிக்க வலிமையும், தைரியமும் மிக்கவர் அங்கு சென்று, ராமர் கூறியதை சீதையிடம் கூறி அவரின் துயரங்களை நீக்கிவிட்டு வருவீராக என்றான்.
 
★அப்படி உங்களால் இலங்கை செல்ல முடியாவிட்டால் ராமரிடம் சென்று சீதை இருக்கும் இடத்தை சொல்லுங்கள் என்று கூறி,
அங்கதனிடம் பேச ஆரம்பித்தது. சூரியனால் எரிக்கப்பட்ட எனது சிறகுகள் ராம காரியத்தை செய்து முடித்ததும் முனிவர் சொன்னபடி மீண்டும் முளைத்து விட்டது. வாலிபப் பருவத்தில் எனக்கிருந்த பராக்கிரமமும் வலிமையும் மீண்டும் எனக்கு கிடைத்து விட்டது. முனிவரின் வாக்கு சத்திய வாக்கு என்று நிருபிக்கப்பட்டு விட்டது.
 
★இந்நிகழ்ச்சியே நீங்கள் மாதா  சீதையை காண்பீர்கள், ஆகவே  உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்பதற்கான சான்று ஆகும். இனி உங்கள் காரியத்தை தொடருங்கள் என்று சொல்லி விட்டு கடற்கரையில் தம்பி ஜடாயு கழுகிற்கு கிரியைகள் செய்து திருப்தி அடைந்து அங்கிருந்த அனைவரிடமும் விடைப்பெற்று புறப்பட்டான் சம்பாதி கழுகு.
வானரங்கள் அனைவரும் உற்சாகமடைந்தனர். இனி சுக்ரீவன் நமக்கு தண்டனை கொடுப்பான் என்ற பயம் இல்லை. சீதை இருக்குமிடம் தெரிந்து கொண்டோம் என்று உற்சாகம் அடைந்தனர்.
 
மகாபாரத காவியம்
(பாகம்-1)
புத்தக விலை ரூ.400/-
(10/09/2021வரை)
 
N.SUBHARAJ
FEDERAL BANK
ALAGAPURAM BRANCH
A/C NO:15270100023870
IFSC CODE:FDRL0001527
 
 
Google pay:
9944110869.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை...................
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
161 /09-09-2021
 
ஸாகரத்தை தாண்டும்
ஸாகச வீரன் யார்?...
 
★சீதை இருக்கும் இடமும் அந்த ராட்சசன் ராவணன் இருக்கும் இடமும் சம்பாதி கழுகின் மூலம் வானரங்களுக்கு தெரிந்து விட்டது. சுக்ரீவனிடம் போய் சொல்வதற்கு இதுவே  போதும் என்று வானரங்கள் தம் மனதில் எண்ணினார்கள். அங்கிருந்த சில வானர வீரர்கள், கழுகரசன் பொய் சொல்ல மாட்டான், ஆகவே நாம் மாதா சீதையை தேடி கண்டு பிடித்தால் தான் நம்மால் உயிர் வாழ முடியும் என்றனர். சம்பாதி கழுகு சொன்னதை மட்டும் வைத்துக் கொண்டு சீதையை நேரில் பார்க்காமல் வானரராஜா சுக்ரீவனிடத்தில் இந்த செய்தி பற்றிச்  சொல்ல முடியாது.
 
★சீதையை தேடும் காரியத்தை நிறுத்தி விட்டு கிஷ்கிந்தைக்கு செல்வது சரியல்ல என்று அங்கதன் கூறினான். நூறு யோசனை தூரம் கடல் தாண்டி இலங்கை சென்று பார்த்தால் மட்டுமே ராம காரியம் செய்து முடித்தது போல் இருக்கும். அந்த நூறு யோசனை தூரம் தாண்டிச் சென்று சீதையை நேரில் எப்படி பார்ப்பது என்று தெரியாமல் வானரங்கள் திகைத்தார்கள். வானரங்கள் மறுபடியும் மிகுந்த கவலையில் மூழ்கினார்கள். அங்கதன் பேச ஆரம்பித்தான். எந்த காரியம் என்றாலும் எப்படி சாதிக்கலாம் என்று எண்ண வேண்டும். தைரியத்தை இழக்க வேண்டாம்.
 
★உங்கள் தாவும் சக்திகளைப் பற்றி சுக்ரீவன் சொல்ல நான் கேள்விப்பட்டிருக்கிறேன். வானர வீரர்களே!  யார் யாருக்கு மிக அதிகமான தூரம் தாவும் சக்திகள் உள்ளது? உங்களுடைய தாவும் சக்திகளைப் பற்றி ஒவ்வோருவராக சொல்லுங்கள். அதன் பிறகு என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம் என்றான் அங்கதன். பிறகு அனைவரும் யார் கடலை கடந்து இலங்கை செல்வது என்று ஆலோசித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கிருந்த பல வானர வீரர்கள் தங்களால் கடலை கடந்து செல்ல இயலாது எனக் கூறினர்.
 
★கஜன் என்ற வானரம் நான் பத்து யோசனை தூரம் மட்டும் தாண்டுவேன் என்றான். அடுத்து கவாஷன் என்ற வானரம் நான் இருபது யோசனை தூரம்தான் தாண்டுவேன் என்றான். பிறகு ஒவ்வோரு வானரமாக தங்களால் தாண்ட முடிந்த மிக அதிகமான யோசனை தூரத்தை பற்றி சொல்லிக் கொண்டே வந்தார்கள். இறுதியில் அனைவரையும் விட மூத்தவரான ஜாம்பவன் பேச ஆரம்பத்தான். இளமையில் நான் 100 யோசனை தூரத்திற்கும் அதிகமான தூரத்தை தாண்டி இருக்கிறேன். இப்போது முதுமைத் தன்மை காரணமாக என்னால் 90 யோசனை தூரம் மட்டுமே தாண்ட முடியும். ஆனால் இலங்கை நூறு யோசனை தூரம் இருக்கிறது. என்னால் அங்கு செல்ல முடியவில்லேயே வயதாகி விட்டதே என்று வருத்தமாக இருக்கிறது. இளமையோடு இருந்தால் நிச்சயமாக இந்நேரம் தாண்டியிருப்பேன் என்று அங்கதனிடம் கூறினான்.
 
★சீதை இருக்கும் இலங்கைக்கு 100 யோசனை தூரம் தாண்டி இலங்கையை என்னால் சென்று சேர முடியும் என்றான் அங்கதன். அனைத்து வானரங்களும் அங்கதனின் பேச்சில் மகிழ்ச்சி அடைந்து ஆரவாரம் செய்தார்கள். உடனே அங்கதன் சீதையை கண்டபின் உடனடியாக மறுபடியும் அங்கிருந்து திரும்பவும் இவ்வளவு தூரம் தாவும் சக்தி எனக்கு இருக்கிறதா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை என்றான். அதற்கு ஜாம்பவான் அங்கதா அதைப் பற்றி நீ சந்தேகப்பட வேண்டியதில்லை. உனது தந்தையான வாலிக்கு இருந்தது போலவே அளவற்ற சக்தி உனக்கும் உண்டு.
 
★உன்னால் 100 யோசனை தூரம் மட்டுமல்ல, அதனை தாண்டியும் உன்னால் சென்று விட்டு மீண்டும் திரும்ப வரவும் முடியும். அதற்கேற்ற சக்தி உன்னிடம் உள்ளது. ஆனால் இந்த காரியத்தை யுவராஜாவாகிய நீ செய்தால் சரியாக இருக்காது. நீ மற்றவர்களுக்கு உத்தரவிட்டு அனைத்து காரியங்களையும் செய்து முடித்தல் வேண்டும். இதுவே ராஜநீதி ஆகும். இச்செயலை செய்ய சரியான நபர் அனுமனே. அதோ ஒரு ஓரத்தில் மௌனமாக அமர்ந்து
இருக்கும் அனுமனே இந்தக் இக்காரியத்தை செய்து முடிக்கும் திறமை பெற்றவன்.
 
★அனுமனுக்கு நீண்ட வாழ் நாள் வரம் உள்ளது. அதனால், அவனை யாரும் அழிக்க இயலாது. சாஸ்திர நூல்களின் நுட்பங்களை அவன் அறிந்தவன். திறமை யாய்ப் பேசும் சொல்வன்மை உடையவன். எமனும் அஞ்சும் சினமும், உடல் வலிமையும், சிவனைப் போலக் கடும்போர் செய்யும் திறமையும் படைத்தவன். கடல் கடந்து திரும்பும் ஆற்றலும் நம்முடைய அனுமனுக்குத்தான் உண்டு, ராமனும் அனுமனிடமே மிக்க நம்பிக்கை வைத்திருக்கிறான். எண்ணிச் செயல்படும் நுண்ணறிவும், எதையும் உடனே சாதிக்கும் திண்மையும் நமது அனுமனிடமே உள்ளன. அவன் வயதாலும் என்னை விட  மிகவும் (ஜாம்பவானை விட)  இளைஞன்.  பேருருவம் எடுத்து மண்ணும் விண்ணும் வியாபிக்கும் அற்புத  பேராற்றல் அவனிடமே உள்ளது. அமைச்சனுக்கு உரிய அறிவும், படைத் தலைவனுக்கு உரிய வீரமும், அறிஞர்க்கு உரிய சிந்தனையும், சிங்கம் போன்ற சீற்றமும், அஞ்சாமையும் அவனிடம் உள்ளபடியால் அந்த இலங்கைக்கு செல்லத் தக்கவன் அனுமனே” என்று ஜாம்பவான் சொல்லி அனுமனை அருகில் அழைத்து வந்தான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை..................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
162 /10-09-2021
 
இலங்கைக்கு செல்ல
தாவினார் அனுமன்...
 
★அனுமன் மிக அமைதியாக அனைவருக்கும் நடுவில் வந்து நின்றார்.ஜாம்பவான் அனுமனை பார்த்து, மாருதி என்ற பெயர் கொண்ட அனுமனே! பல சாஸ்திரங்கள் கற்றவனே, மிக்க வலிமையுடையவனே, கடமை தவறாத மாவீரனே, பணிவு மிக்கவனே, செயலை ஆராய்ந்து செய்யும் ஆற்றல் உடையவனே, நீதி நெறியில் நிலைத்து இருப்பவனே, என்றும்  வாய்மை தவறாதவனே, பெண்ணாசை இல்லாத பிரம்மச்சாரியே, தன்னை எதிர்ப்பவரை வீழ்த்தும் ஆற்றல் உடையவனே, தக்க சமயத்தில் உருவத்தை மாற்றும் ஆற்றல் உடையவனே, ராமர் மீது மிக்க அன்பு உடையவனே,
 
 ★கடலை தாண்டி சீதையை கண்டுபிடிக்கும் ஆற்றல் உன்னிடத்தில் உண்டு.
எல்லா சாஸ்திரங்களையும் அறிந்த வீரனே! தனியாக ஏன் பேசாமல் அமர்ந்து இருக்கின்றாய்?. பேச்சிலும் பலத்திலும் நம் அனைவரையும் விட முதன்மையானவனாக இருக்கும் நீ சுக்ரீவனுக்கு சமமானவன். கருடன், கடலை தாண்டி பறப்பதை நான் பலமுறை பார்த்திருக்கின்றேன். அந்த கருடனுடைய சிறகுகளின் பெரும் பலம் உனது மாபெரும் தோள்களுக்கும் உண்டு. பராக்கிரமத்திலும் வேகத்திலும் கருடனுக்கு நிகரானவன் நீ.
 
★உனது தாயார் அஞ்சனை தேவலோகத்து தேவதை ஆவாள். ரிஷி ஒருவரிடம் பெற்ற  சாபம் காரணமாக வானரமாக புவியில் பிறந்தாள். அவளுக்கும் பகவான் வாயுதேவனுக்கும் மானச புத்திரனாக பிறந்தவன் நீ. வாயு தேவனுக்கு சமமான வீரியமும் பலமும் உன்னிடம் இருக்கிறது. நீ சிறு குழந்தையாக இருக்கும் போதே சூரியனை பார்த்து அது ஒரு பழம் என்று எண்ணி அதை பிடிப்பதற்காக ஆகாயத்திற்கு தாவிச் சென்றாய். நீ பயமின்றி வானத்திற்கு தாவுவதைப் பார்த்த தேவராஜன் இந்திரன் மிகவும் கவலை கொண்டு யார் இவன் இப்படி தாவுகிறான் என்று தன்னுடைய வஜ்ராயுதத்தை உன் மீது வீசினான்.
 
★வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்ட நீ ஒரு மலை மீது விழுந்தாய். பலத்த அடிபட்ட உன்னை கண்ட உனது தந்தை வாயு பகவான் கோபப்பட்டு தனது தொழிலான காற்றை வெளியிடுவதை நிறுத்தி விட்டார். இதனால் உலகத்தில் உள்ள அனைத்து கோடிக்கணக்கான ஜீவன்களும் பிராண வாயு இன்றி தவித்துப் போனது. தேவர்கள் வாயு பகவானிடம் கோபம் தணிய வேண்டும் என்று  கேட்டுக் கொண்டார்கள். ஆனாலும் அந்த வாயுபகவானின் கோபம் சிறிதும் குறையவில்லை.
 
★அதன் பிறகு பிரம்மனும் இந்திரனும் வாயுதேவனிடம், உனது மகனுக்கு எந்த விதமான ஆயுதத்தாலும் மரணம் வராது. அவன் விருப்பப்பட்டால் மட்டுமே அவனுக்கு மரணம் நிகழும். அது வரை மரணம் அவன்  அருகில்  நெருங்காது என்ற வரத்தை கொடுத்தார்கள். இதனால் நீ சிரஞ்சீவி என்னும் பட்டத்தை பெற்றாய். இந்த பட்டத்தையும் பலத்தையும் பெற்ற நீ அதனை மற்றவர்களை போல் எங்கும் துஷ்பிரயோகம் செய்யாமல் அமைதியாக அமர்ந்திருக்கிறாய். இந்த கடலை தாண்டுவது உனக்கு பெரிய காரியமில்லை.
 
★ராம காரியத்திற்காக உனது பராக்கிரமத்தை காட்டும் நேரம் வந்து விட்டது. உன்னால் விரும்பிய அளவிற்கு உனது உடலை பெரிதாக்கிக் கொள்ள முடியும். கடலை தாண்டும் சக்தியுடைய நீ ஏன் அமைதியாக இருக்கிறாய்? உன்னை நாங்கள் அனைவரும் சரணடைகிறோம் அனுமனே! இனியும் தாமதிக்க வேண்டாம். உன்னுடைய உண்மையான பலத்தை அறிந்து கொண்டு, அதனை செயல் படுத்து. ஒரே தாவலில் இந்த கடலைத் தாண்டி இலங்கையை சென்றடைந்து, ராம காரியத்தை செய்து முடித்து, வானரங்களின் துயரை தீர்ப்பாய் என்று அனுமனின் அற்புதமான பராக்கிரமத்தை ஜாம்பவான் தட்டி எழுப்பினான்.
 
★ஜாம்பவான்  அனுமனின் பெருமையை கூறும்போது, அனுமன் தன் தலையை குனிந்து மௌனமாக புன்னகைத்தான்.
ராமகாரியத்தை செய்து முடிக்க வேண்டும் என்று அனுமன் சங்கல்பம் செய்து கொண்டார்.
அனுமன் தன்னுடைய சக்தியை உணர தொடங்கி அதனை வெளிக்காட்டினார். வானரங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அனுமனின் உடலும் தேஜசும் வளர்ந்து கொண்டே இருந்தது. அதனை கண்ட அங்கதனும் மற்ற அனைத்து வானரங்களும் வியந்து மகிழ்ச்சி அடைந்தார்கள்.
 
★நம்பிக்கையுடன் ஆவேசமாக ஜாம்பவானிடம் பேசுவதற்கு ஆரம்பித்தார் அனுமன். தனக்கு
ராமரின் அருளும், தங்களின் ஆசியும் இருந்தால் ஓர் பறவை போல் கடலை கடந்து செல்வேன் என்றான். ராவணன் தூக்கிச் சென்ற சீதையை தேடிக் கண்டு பிடித்துவிட்டு திரும்பி வருவேன். இது நிச்சயம். சந்தேகம் சிறிதும் வேண்டாம் நான் வரும் வரையில் இங்கேயே எனக்காக நீங்கள் காத்திருங்கள். நாம் அனைவரும் ஒன்றாகவே கிஷ்கிந்தைக்கு செல்வோம் என்றார். அதன்பிறகு கடல் தாண்டி இலங்கைக்குச் செல்வதற்கு தகுந்த இடத்திற்கு சென்று மனதை ஒரு நிலையாக நிலைப்படுத்தினார். சூரியன், இந்திரன்  மற்றும்  வாயு தேவனையும், பிரம்மாவையும் தியானித்து வணங்கினார். உடலை இன்னும் பெரிதாக்கிக் கொண்டு பூமியை தன் காலால் மிதித்து கைகளால் அடித்து இலங்கைக்கு தாவினார் அனுமன்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை....................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
163 /11-09-2021
 
சுந்தரகாண்டம்
ஒரு குறிப்பு - 1...
 
★விதியை மாற்றுவதில் மனித குலத்திற்கே தீர்வாக இருந்து மிகவும் துணைபுரிவது தான் ஸ்ரீமத் சுந்தர காண்ட பாராயணம். ராமாயணம் மனித குலத்திற்கு கிடைத்த ஒரு பெரும் பொக்கிஷம் என்றால் அதில் ‘சுந்தரகாண்டம்’ விலைமதிப்பற்ற மாணிக்கமாகும்.ராமாயணத்தில்
சுந்தரகாண்டத்திற்கு மட்டும் ஏன் இத்தகைய சிறப்பு என்றால் சுந்தரகாண்டம் முழுவதும் அனுமனின் பராக்கிரமத்தை விளக்குவதாகும். அனுமன் பிரவேசித்த பின்னர் தான் ராமாயணத்தின் போக்கிலேயே ஒரு மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். ராமருக்கும் சரி…. அன்னை சீதா தேவிக்கும் சரி நல்ல செய்திகள் கிடைக்க துவங்கும்.
 
★ராமநாமம் ஒன்றையே சதா ஜபிப்பவன் அனுமன். ‘ராமா’ என்னும் இனிய திருநாமத்தைச் சொன்னால் நமக்கு அனுமனின் அருள் கிடைக்கும். மனித வாழ்வில் ஏற்படும் எந்த பிரச்னைக்கும் கை கண்ட மருந்தாக உடனடியாகத் தீர்வு தரும் பரிகாரம் சுந்தரகாண்டப் பாராயணம். சுந்தரகாண்டம் படித்தால் வேண்டுதல்கள் யாவும் ஈடேறும் என்பர். ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவர் அதை காண்டங்களாகப் பிரித்தார். அப்போது அவருக்கு ராமாயணத்தில் அரும்பெரும் செயல்கள் புரிந்த அனுமனுக்கு சிறப்பு சேர்க்க வேண்டும் எனத் தோன்றியது.
 
★ எனவே ஏழு காண்டங்களுள் ஒன்றினை அனுமனின் பெயரால் சுந்தர காண்டம் என்று அமைத்து மகிழ்ந்தார். அனுமன் சொல்லின் செல்வன் என்பதற்கு எடுத்துக்காட்டாக சில காட்சி வசனங்களை அமைத்தார் கம்பர். அனுமன் முதன்முதலில் ராமனை சந்தித்த போது  ஶ்ரீராமபிரான் அவரிடம் நீ யார்? என்று கேட்டார். ராமனின் வினாவுக்கு, காற்றின் வேந்தர்க்கு அன்னை அஞ்சனை வயிற்றில் வந்தேனென் நாமம் அனுமன், என்று தன்பெயருக்கு தன் பெற்றோர் யார் என்பதையும் சேர்த்து அடக்கமாக கூறினார்.
 
★அனுமன் சீதையை தேடி இலங்கைக்குச் சென்றபோது அசோகவனத்தில் மாதா சீதை தற்கொலைக்கு முயற்சிப்பதைக் கண்டார். ஒரு நொடி தாமதம் செய்தாலும் சீதை உயிர் நீத்து விடுவாள் எனும் நிலை. அவளை என்ன சொல்லித் தடுப்பது? சட்டென்று "ஜெய் ஸ்ரீராம்"  என்று சீதை காதுபட உரக்கக் கூறினார். ராம நாமம் கேட்டதும் அப்படியே நின்றாள் சீதை. சீதா தேவியிடம் தாயே! நான் ராமபக்தன். என் பிரபு ஸ்ரீராமன் தங்களை மிக விரைவில் சிறை மீட்டுச் செல்ல வருவார்.! என்று ஆறுதல் சொல்லி தற்கொலை செய்யும் முயற்சியில் இருந்து மாதாவை காப்பாற்றினார்.
 
★இலங்கையில் இருந்து திரும்பி வந்த அனுமன், ராமபிரானிடம், "கண்டனென் கற்பெனும் கணியை கண்களால்"  என்று ஒரே வரியில் மாதா சீதையைக் கண்டதையும்,  கற்புக்கரசியாக அவர் திகழ்வதையும் கூறினார். வால்மீகியும், கம்பனும் மட்டும் அல்ல. இன்றும் கூட  ஶ்ரீமத் ராமாயணத்தினை யார், எந்த மொழியில் எழுதினாலும் எல்லோராலும் போற்றப்படும் சிறந்தவராக இருப்பதே அனுமனின் பெருமை எனலாம்.
 
★இருபெரும் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதத்தில் ராமாயணம் முந்திய காவியம். அது நமக்கு பொக்கிஷங்களான இரண்டு அரிய ரத்தினங்களை நமக்கு தந்திருக்கிறது. அதில் ஒன்று பக்தர்களின் ரத்தினமான அனுமன், மற்றொன்று அநேக மந்திரங்களின் ரத்தினமான சுந்தர காண்டம். "ராமா"  என்ற நாமம் ஒன்றையே எப்போதும் ஜெபிக்கும் பக்தர்களில் மிகத் தலைசிறந்த ரத்தினமாக திகழ்பவன் அனுமன். ராமா என்னும் இனிய திருநாமத்தைச் சொன்னால் நமக்கு அனுமனின் அருள் கிடைக்கும். மனித வாழ்வில் ஏற்படும் எந்த பிரச்னைக்கும் கை கண்ட மருந்தாக உடனடியாகத் தீர்வு தரும் பரிகாரம் சுந்தரகாண்ட பாராயணம்.
 
★ராமனைப் பிரிந்து துன்பத்தில் துவண்ட சீதாதேவியின் துயர் துடைக்க ராமநாமத்தின் மீது கொண்ட நம்பிக்கையால் கடலையும் தாண்டியவன் ராமபக்த அனுமன். அனுமன் மற்றும் சுந்தரகாண்டம் ஆகிய ரத்தினங்களின் மதிப்பை அறிந்தவர்கள் அதை நழுவ விட மாட்டார்கள். இம்மண்ணுலகில் வாழும் மனிதர்களால், கோடிக் கணக்கில் உள்ள அருமையான ஸ்லோகங்களைப் படித்து ராமாயணத்தை அறிந்துகொள்ள முடியாது என்பதை உணர்ந்த வால்மீகி முனிவர் அதை சுருக்கி இருபத்துநான்காயிரம் ஸ்லோகங்கள் கொண்ட சிறு காவியமாக உருவாக்கினார். இந்த பாரத நாடெங்கும் வால்மீகி ராமாயணத்துக்கு, பெருமையும் எல்லையில்லாத மதிப்பும் இருந்து வருகிறது. வேறு எந்த ஒரு காவியத்துக்கும் இத்தனை பெருமை இருந்ததில்லை.
சுந்தரகாண்டத்தில் எல்லாமே அழகுதான்!
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை...................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~~
164 / 12-09-2021
 
சுந்தரகாண்டம்
ஒரு குறிப்பு - 2...
 
★பல நூறு கோடி பக்தர்கள் ஸ்ரீராமபிரானின் திவ்ய திரு நாமத்தை நாள்தோறும் விடாமல் தொடர்ந்து உச்சரித்து கொண்டு இருக்கிறார்கள். ராமாயணத்தை ஆதி முதல் அந்தம் வரை முழுவதும் படித்தால்தான் நாம் செய்த  பாவங்கள் போகும் என்பதில்லை,  ராமாயணத்தில் உள்ள ஒவ்வொரு சொல்லும்கூட மகா பாவங்களைப் போக்கி விடும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். ஶ்ரீமத் ராமாயணத்தின் அருமை பெருமை குறித்தும், பிறவிப் பிணி நீக்கும் ராமநாமத்தின் மகிமை பற்றியும், எண்ணற்ற மகான்களும் ஞானிகளும் பலவாறு உபதேசிக்கிறார்கள்.
 
★ராம வழிபாடு, ஆதிகாலத்தில் இருந்தே இந்த உலகின் பல பாகங்களில் இருந்தும் படிக்கப்  பட்டு  வருகிறது. ராமாயணத்தில் ஒவ்வொரு காண்டத்துக்கும் தனித்தனியே பலன்கள் கூறப்பட்டுள்ளன. ஸ்ரீராம காதையின் ஏழு காண்டங்களில் ஐந்தாவது காண்டம்தான் சுந்தர காண்டம். இது நமது  வளமான வாழ்வுக்கு உதவும் நித்திய பாராயண நூல் ஆகும். இந்த காண்டத்தின் நாயகர் அனுமன் என்னும் ஶ்ரீஆஞ்சநேயரே! ராமாயணம் என்ற அழகிய மாலையில், நடுமையமாக ரத்தினம்போல் ஆஞ்சநேயர் விளங்குகிறார்.
 
★சுந்தரகாண்டத்தில் ஆரம்பம் முதல் முடிவு வரையில் ராமபக்த  ஆஞ்சநேயரே நாயகனாக இருக்கிறார். அவருடைய பலம், பராக்கிரமம், புத்திக்கூர்மை, மகிமை, வீர்யம், சொல் திறமை ஆகியவை பற்றி சுந்தர காண்டம் அழகாக வர்ணிக்கிறது. சுந்தர காண்டத்தின் பெருமை அளவிட முடியாதது. சுந்தர காண்ட பாராயணத்தால் அடைய முடியாதது எதுவுமே இல்லை என்ற நம்பிக்கை பக்தர்களின் உள்ளத்தில் ஆழமாக வேரூன்றி இருக்கிறது.
 
★சுந்தர காண்ட பாராயணம், பல இடங்களில் பல விதங்களாக அனுஷ்டிக்கப்படுகிறது. பெரும்பாலும் மக்களிடையே ஏழேழு ஸர்க்கங்களாகப் பாராயணம் செய்யும் முறையே பரவலாக இருந்து வருகிறது. இரண்டு, மூன்று, ஐந்து என்று குறிப்பிட்ட நாள் கணக்கில் சுந்தர காண்டம் பாராயணம் செய்யும் முறையும், இன்ன பலனுக்காக இந்த ஸர்க்கம் பாராயணம் செய்யத் தகுந்தது என்ற ஒரு நிர்ணயமும் உள்ளது. இவ்வாறு பல விதங்களில் சுந்தர காண்டம் பாராயணம் செய்வது பற்றி உமா சம்ஹிதையில் விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது.
 
★சுந்தர காண்டத்தில் அனுமன் காற்றின் வேந்தரான வாயு பகவானுக்கும் அஞ்சனாதேவி இடத்தும் பிறந்தவன். ஆசைகளைத் துறந்த தூயோன். சிவ அம்சம் பெற்றவன். தீவிர பிரம்மச்சாரி. சுக்ரீவன் நாடாண்ட காலத்தில், முதலமைச்சனாக இருந்து நாட்டைக் காத்த நல்லவன். சுக்ரீவன் நாடாண்ட காலத்தும், நாடிழந்து தன் மனைப் பூவையை இழந்து மலைக் குகையில் ஒளிந்திருந்த காலத்தும், உடனிருந்து அன்பு செய்த உத்தமன் அனுமன். ராமபிரானுக்கு, ஆறாவது சகோதரனாக சுக்ரீவனைச் சேர்த்த சீராளன். தேன்மொழி பேசும் சீதை தென் இலங்கையில் உள்ளாள் என்பதை உளவறியச் சென்றவனும் அவனே!
 
★நாயகன் ஶ்ரீராமன் இல்லாக் குறையாலும், நரம்பிசையில் வல்லோனான இலங்கை வேந்தன் ராவணனின் எல்லை மீறிய தொல்லையாலும் தன்னுயிரையே இழக்கத் துணிந்த சீதையின் ஆரூயிரைக் காத்தவன். வல்வில் ராமனின் தூதன் என்று விஸ்வரூபம் காட்டி, சீதைக்குத் தரிசனம் தந்தவன். அன்னையின் அச்சம் தீர்த்தவன். ரகுராமனின் பிரவேசமும் அந்த அரக்கன் ராவணனின் வதமும் நடைபெறுவதற்கு அச்சாரமாக, அவன் மகன் அட்சயகுமாரனைத் தேய்த்தழித்து அங்குரார்ப்பணம் செய்ததோடு, அழகிய அசோக வனத்தையும் அழித்தவன். அக்னிதேவனின் வயிற்றுப்பசி தீர்க்க இலங்கையை கொளுத்தி, வாஸ்து சாந்தி செய்தவனும் அனுமனே!
 
★அரக்கன் விபீஷணனை தன் இன்னொரு சகோதரனாக உளமாற ஏற்றுக்கொள்ள, ராமனுக்கு அக்கறையோடு ஆலோசனை அளித்தவனும் அனுமனே! இந்திரஜித்தின் பிரம்மாஸ்திரத்தால் அனைவரும் மூர்ச்சித்து விழுந்தபோது, அனுமன் ஒருவனே உயிர்பெற்று சமயத்தில் சஞ்சீவிமலை கொண்டுவந்து அனைவரையும் காப்பாற்றியவன். ராமனின் வெற்றிக்குக் கொடியாய் இருந்தவன். சீதையை மீட்கத் துணை நின்றவன். நந்திக் கிராமத்தில் ராமன் வரவைப் பற்றி பரதனுக்குச் சாற்றி அந்த உத்தமனின் உயிரைக் காத்து அருளியவன். உரிய காலத்தில் அண்ணனுக்குப் பட்டம் சூட வழிவகுத்தவன்.
 
★ராமனின் பாத சேவை ஒன்றே பரமானந்தம் தரக்கூடிய ஒன்று  என்பதை உணர்ந்த உத்தமன். சீதையின் திருவாக்கால் சிரஞ்சீவி பட்டம் பெற்றவர் ஆஞ்சநேயன். எந்த யுகத்திலும் ஜீவிக்கக்கூடிய ராமபக்தன். அவரின் ராம பக்தி அளவிட முடியாதது. இவ்வாறாக ஶ்ரீவாயு புத்திரன், அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயரின் பெருமை பற்றிக் கூறுகிறது சுந்தர காண்டம். அனுமனுடைய ஆற்றல், அறிவு, செயல்திறன், வீரம், விவேகம், வாக்கு சாதுர்யம், முயற்சி, தன்னடக்கம், ராம பக்தி போன்ற பல உயர்குணங்கள் எல்லாம் இந்த சுந்தர காண்டத்தில்தான் அழகாகவும்,முழுமையாகவும் வெளிப்படுகின்றன.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.....................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
165 / 13-09-2021
 
சுந்தரகாண்டம்
ஒரு குறிப்பு - 3
 
★சீதையின் திருவாக்கால் சிரஞ்சீவி என்ற பட்டம் பெற்றவர் ஆஞ்சநேயன். எந்த யுகத்திலும் ஜீவிக்கக்கூடிய ராமபக்தன். அவரின் ராம பக்தி அளவிட முடியாதது. இவ்வாறாக வாயு புத்திரன், அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயரின் பெருமை பற்றிக் கூறுகிறது சுந்தர காண்டம். அனுமனுடைய ஆற்றல், அறிவு, செயல்திறன், வீரம், விவேகம், வாக்கு சாதுர்யம், முயற்சி, தன்னடக்கம், ராம பக்தி போன்ற பல உயர்குணங்கள் எல்லாம் சுந்தர காண்டத்தில்தான் நமக்கு முழுமையாக வெளிப்படுகிறது.
 
★அற்புதமான சுந்தர காண்டம் பற்றிய அழகான ஸ்லோகம் இது.
 
"ஸுந்தரே ஸுந்தரோ ராம:
ஸுந்தரே ஸுந்தரி கதா
ஸுந்தரே ஸுந்தரி ஸீதா
ஸுந்தரே ஸுந்தரம் வநம்
ஸுந்தரே ஸுந்தரம் காவ்யம்
ஸுந்தரே ஸுந்தரோ கபி:
ஸுந்தரே ஸுந்தரம் மந்த்ரம்
ஸுந்தரே கிம் ந ஸுந்தரம் |"
 
அழகான சுந்தர காண்டத்தில் ராமபிரான் அழகு. அன்னை சீதா அழகு. சுந்தர காண்டம் கதை அழகு. அசோகவனம் அழகு. வானரர்கள் அழகு.  சுந்தர காண்டத்தில் உள்ள சொற்கள் அழகு.  நல்ல பலனைத் தரும்  மந்திரங்கள் அழகு. காண்டம் முழுவதும் காணப்படும் அனுமன் மிக அழகு. சுந்தர காண்டத்தில் எல்லாமே அழகுதான்!
 
★சுந்தரகாண்டம் படித்தால் தீராத பிரச்னைகளே இல்லை. சகல காரிய சித்தி, தீர்க்க முடியாத நோய்களினின்றும் விடுதலை, சுபகாரியத் தடை நீங்குதல், தனலாபம், தரித்திரம் முடிவுக்கு வந்து அஷ்ட ஐஸ்வரியங்களும் பெருகுதல் என சுந்தரகாண்டம் தரும் பயன்கள் எண்ணற்றவை.
ஜாதக ரீதியாக நடக்கும் கிரக தோஷங்கள், தசாபுக்திகள், தோஷங்கள் முதலியவற்றை தீர்க்கும் சக்தி சுந்தரகாண்டம்.
இதொடர்ந்து படிப்பதால் மேற்கூறிய நன்மைகள் மட்டுமல்லாது ஜாதக ரீதியாக நடக்கும் திசைகள், தோஷங்கள் போன்றவை கூட நீங்கும். சுந்தர காண்டத்தில் உள்ள ஒவ்வொரு அத்தியாயத்துக்கும், ஒவ்வொரு குறையை தீர்க்கும் சக்தி உண்டு.
 
★எனக்குத் தெரிந்து சுந்தர காண்டம் படிப்பதால் ஏற்படும் கற்பனைக்கும் எட்டாத சில நன்மைகள்!
 
1. ஒரே நாளில் சுந்தர காண்டம்  முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது என்று உமாசம்ஹிதையில் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.
 
2. காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகளிடம் ஒரு சமயம் ஒருவர் வயிற்று வலியால் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், எந்த டாக்டராலும் அதை குணப்படுத்த இயலவில்லை என்றார். உடனே காஞ்சி பெரியவர் சுந்தரகாண்டத்தை தினமும் சாப்பிடும் முன் படி என்றார். அதன்படி அந்த நபர் பாராயணம் செய்து வர அவருக்கு வயிற்று வலி பறந்து போய் விட்டது.
 
3. சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும் மந்திர சக்திகளுக்கு இணையானது என்று ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர்.
 
4. சுந்தரகாண்டத்தை நாம் எந்த அளவுக்கு படிக்கிறோமோ அந்த அளவுக்கு பகவானை நெருங்குகிறோம் என்று அர்த்தம்.
 
5. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்து வந்தால் வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் முடிவுக்கு வந்து விடும்.
 
6. சுந்தரகாண்டம் வாசித்தால் வாழ்வு வளம் பெறும். கஷ்டங்கள் தொலைந்து போகும்.
 
7. சுந்தர காண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால், வாசிக்க, வாசிக்க மன வலிமை உண்டாகும்.
 
8. சுந்தரகாண்டத்தை முறைப்படி வாசித்தால் காலதாமதமான திருமணம் விரைவில் கை கூடும். கவலைகள் மறந்து போய் விடும்.
 
9. சுந்தரகாண்டம் படித்து அனுமனை வழிபட்டு வந்தால் அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை, துணிச்சல், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்கு சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம்.
 
10. சுந்தரகாண்டத்தை மனம் உருகி படித்தால் பாவம் தீரும். முடியாத செயல்கள் முடிந்து விடும்.
 
11. ஆஞ்சநேயருக்கு வடை வெண்ணை வைத்து நெய்தீபம் ஏற்றி சுந்தரகாண்டம் படித்து வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
 
12. ராம நவமியன்று விரதம் இருந்து ராமருக்கு துளசி மாலை அணிவித்து சுந்தரகாண்டம் படித்து வந்தால் வாழ்வில் அமைதி பெறலாம்.
 
13. ராமனுடன் மறுபடியும் வாழ முடியும் என்ற நம்பிக்கையை சீதைக்கு கொடுத்து சுந்தரகாண்டம்தான். எனவேதான் கருவுற்ற தாய்மார்கள் சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்கிறார்கள்.
 
14. ஏழரை சனி, அஷ்டமத்து சனி திசை நடப்பவர்கள் தினமும் சுந்தரகாண்டம் படித்து வந்தால் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.
 
15. சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலைத் தாண்டுவதற்கு முன்பு சொன்ன ஸ்லோகத்துக்கு “ஜெய பஞ்சகம்”  என்று பெயர். இதை சொல்லி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.
 
16. சுந்தரகாண்டத்தில் அனுமன் சீதையை கண்டுபிடிக்க அசோக வனத்துக்கு செல்லும் முன்பு கூறிய ஸ்லோகத்தை கூறி வந்தால் வெற்றி மீது வெற்றி உண்டாகும்.
 
17. சுந்தரகாண்டத்தை நீண்ட நாட்களாக பாராயணம் செய்பவர்களை விட்டு நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும்.
 
18. சுந்தரகாண்டம் என்று பெயர் சொல்லுவார். இதை சுகம் தரும் சொர்க்கம் என்பார்கள்.
 
19. சுந்தர காண்டம் படிப்பதன் மூலம் வேதம் சொல்லிய புண்ணியத்தை பெண்கள் பெற முடியும்.
 
20. ராமாயணத்தில் மொத்தம்  24 ஆயிரம் சுலோகங்கள் உள்ளன. இதில் 2885 சுலோகங்கள் சுந்தரகாண்டத்தில் இருக்கிறது.
 
21. சுந்தரகாண்டத்தை எவர் ஒருவர் ஆழமாக படிக்கிறாரோ, அவருக்கு தனது உண்மையான சொரூபத்தை உணரும் ஆற்றல் கிடைக்கும்.
 
22. சுந்தரகாண்ட பாராயணம் நமது ஊழ்வினையால் ஏற்படும் நிம்மதி சீர்குலைவை சரி செய்து விடும்.
 
23. சுந்தரகாண்டத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்தால் மனம் லேசாகி விடும்.
 
24. சுந்தரகாண்டத்தில் 42-ம் சர்க்கத்தில் 33-வது ஸ்லோகம் முதல் 37-வது ஸ்லோகம் வரை உள்ள ஸ்ரீஜெயபஞ்சகம் ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் உடனே திருமணம் கைகூடும்.
 
25. ராமநவமியன்று ராகவேந்திர சுவாமிகள் இயற்றிய சுந்தரகாண்ட சுலோகம் கூறினால் மன தைரியம் உண்டாகும்.
 
26. ஒரு பெண் கருத்தரித்த நாள் முதல் 9 மாதம் வரை நாள் தவறாமல் சுந்தரகாண்டம் படித்து வந்தால் சுகப் பிரசவம் உண்டாகி குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும் என்பது ஐதீகம்.
 
27. கர்ப்பிணிகள் குறைந்த பட்சம் 5-வது மாதத்தில் இருந்து சுந்தரகாண்டம் படித்து வந்தால், பிறக்கும் குழந்தை ஆன்மிக சிந்தனை உள்ள குழந்தையாக பிறக்கும்.
 
28. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்தால்தான் அதன் முழு பலனும் கிடைக்கும்.
 
29. சுந்தரகாண்டம் மிகவும் வலிமையானது. அதை வாசிப்பவர்களுக்கும் வலிமை தரக்கூடியது.
 
30. சுந்தரகாண்டம் படிக்கும் நாட்களில் உறுதியாக அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். வீட்டிலும் அசைவ உணவு தயாரிக்கக் கூடாது.
 
31. சுந்தரகாண்டத்தில் காயத்திரி மந்திரத்தின் அளவற்ற சக்தி உள்ளதாக கருதப்படுகிறது.
 
32. சுந்தரகாண்டம் படிக்க தொடங்கும் முன்பு முதலில் ராமாயணத்தை ஒரே நாளில் படித்து விட வேண்டும். அதன் பிறகு சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்பது ஐதீகம். (ராமாயணத்தை முழுமையாக படிப்பதா?  அதுவும் ஒரே நாளில்… என்று நினைக்கவேண்டாம். அதற்க்கு ஒரு எளிய வழி இருக்கிறது. அடுத்த பதிவில் அது பற்றி சொல்கிறோம்.)
 
33. பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து, அந்த அறை முன்பு அமர்ந்து சுந்தரகாண்டம் படிப்பது மிகவும் நல்லது.
 
34. சுந்தரகாண்டத்தை காலை, மாலை இரு நேரமும் படிக்கலாம்.
 
35. சுந்தரகாண்டத்தை படிக்கத் தொடங்கினால் ஒருநாள் கூட இடைவெளி விடாமல் படிக்க வேண்டும்.
 
36. பெண்கள் வீட்டுக்கு தூரமாக இருக்கும் நாட்களில் சுந்தரகாண்டம் படிக்கக் கூடாது.
 
37. சுந்தரகாண்டத்தின் ஒவ்வொரு சர்க்கத்துக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அதை அறிந்து படித்தால் மிக எளிதாக பலன் பெறலாம்.
 
38. சுந்தரகாண்டத்தை முழுமையாக படித்து முடித்ததும் ஆஞ்சநேயரை  வழிபட்டு, ஏழைகளுக்கு உதவி செய்தால் அளவில்லா புண்ணியம் கிடைக்கும்.
 
39. வசதி, வாய்ப்புள்ளவர்கள் சுந்தர காண்டம் படிக்கும் நாட்களில் ஆஞ்ச நேயருக்கு பிடித்த நைவேத்தியங்களை படைத்து பயன்பெறலாம்.
 
40. சுந்தரகாண்டம் புத்தகத்தின் பதினோரு பிரதிகள் வாங்கி பதினோரு பேருக்கு படிக்க கொடுத்தால் யாகம் செய்ததற்கான பலன்கள் கிடைக்கும்.
 
இத்தனை பெருமைகள் மற்றும் பயன்கள் கொண்ட அற்புதமான சுந்தரகாண்டத்லை நாமும் நன்கு படித்து மற்றவர்களையும் படிக்க வைத்து ஶ்ரீஆஞ்சநேயரின் திருக் கடாக்ஷ்சம் பெற்று அவர் மூலமாக ஶ்ரீராமனின் கருணை மழைக்கு பாத்திரர் ஆவோம். ஜெய் ஶ்ரீராம்- ஶ்ரீராமஜயம்...
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை...................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
166 / 14-09-2021
 
மைனாகமலை...
 
★ராம காரியமாக இலங்கைக்கு செல்லவிருக்கும்  அனுமன்,  அங்கதன் உட்பட்ட அங்கிருந்த வானரங்களிடம் பேசினார். இலங்கை செல்லப் போகிறேன். அங்கு சீதையை காணவில்லை என்றால் பிறகு அங்கிருந்து தேவலோகத்திற்கு தாவிச் சென்று தேடுவேன். அங்கும் இல்லை என்றால் சீதையை தூக்கிச் சென்ற ராவணனைத் தேடி  கட்டி இழுத்துக் கொண்டு வருவேன். தேவைப்பட்டால் இலங்கை மொத்த நகரத்தையும் பெயர்த்தெடுத்து வந்து விடுவேன் என்றார். தன்னை கருடனாகவே பாவித்துக் கொண்டு ராம பாணத்தில் இருந்து வேகமாக வெளியேரும் அம்பு போல் அனுமன் வேகமாக
மகேந்திர மலை உச்சிக்கு சென்றான்.
 
★கடலைக் கடப்பதற்கு அனுமன் தன் உடம்பை பிரம்மாண்டமாகப்  பெருக்க வேண்டுவதாயிற்று. மண்ணும் விண்ணும் நிறைந்த பேருருவாக தனது விஸ்வரூபம்  எடுத்தான். அவனுடைய  தலை விண்ணை முட்டியது. பிறகு அனுமன் இலங்கை எங்கு உள்ளது என்று அங்கிருந்து தேடினான்.அவன் ஏறி நின்றது மகேந்திர மலை. விண்ணை முட்டும் அம் மலையில் இருந்த அவனுக்குப் பொன்னை நிகர்த்த இலங்கை கண்ணில் பட்டது. செல்லும் இடம் அதுதான் என்ற தெளிவு ஏற்பட்டது. அதனால், எல்லை யில்லா மகிழ்ச்சி அவனைத் தழுவியது.
 
★கால்களை அழுத்தமாக அந்த  மலையின் மீது  ஊன்றினான்
அனுமன். தன்னுடைய  இரண்டு கால்களை மலையில் ஊன்றி "ஶ்ரீ ராமா" என்று உச்சரித்தப்படி வானில் பறந்தான். அனுமன் மலையில் ஊன்றி பறந்த போது அம்மலை பூமிக்கு அடியில் போகும் படியான அதிர்வு ஏற்பட்டது. வானரனாக இருந்த அனுமன் வானவர்போல் அந்தரத்தில் பறந்தான், பறவை
போலத் தன்னை மாற்றிக் கொண்டான். வாலை மிகவும் உயர்த்தினான். கால்களை மடக்கினான். கழுத்தை உள் அடக்கினான். காற்றிலும் வேகமாகத் தன் ஆற்றல் தோன்ற விண்ணில் பறந்தான்.
 
★அவன் செல்லும் வேகத்தால் கல்லும் முள்ளும் மரமும் மற்றும் செடியும், கொடியும் அவனுடன் தோழமை கொண்டன. உடன் பயணம் செய்தன. அவன் செல்லும் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் கடலில் விழுந்து மிதந்தன.  அனுமன் ஆகாயத்தில் செல்லும் பயங்கர வேகத்தில் அங்கிருக்கும் மேகக்காற்று எழுப்பிய சத்தங்கள் பெருங்கடலை நடுங்கச்செய்தது.  அனுமனுக்கு, தேவர்களும், முனிவர்களும் பூக்களை தூவி, வீரத்தில் வலிமை உடையவனே! சென்று, வென்று வா! என வாழ்த்தி அனுப்பினர். அனுமன் வானத்தில் மிக வேகமாக பறந்தான்.  கடல் நீரைப் பார்த்தான். அதன் அடியைக் கண்டான்  
 
★நாகர் உலகம் ஒளிவிட்டது. கடல் மீன்கள் அவனால் எழுந்த காற்றால் துடித்து இறந்தன. திக்கு யானைகள் எட்டும், திசை தடுமாறி நிலை குலைந்தன. அண்டங்கள் நடுங்கின.
ராம காரியமாக செல்லும் அனுமனை பார்த்த கடலரசன் அனுமனுக்கு உதவி செய்ய எண்ணினார். கடலின் நடுவில் அனுமன் இளைப்பாறிச் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்வோம், இதனால் அனுமன் மேலும் புத்துணர்ச்சியுடன் செல்வார் என்று எண்ணினார். தனது கடலுக்குள் இருக்கும் மைனாகம் என்னும் மலையிடம் தண்ணிருக்குள் இருந்து மேலே வந்து அனுமனுக்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
 
★கடலரசனான அருணன்  கேட்டுக் கொண்டதால் கடலின் அடியில் இருந்து மைனாகம் என்னும் மலை தண்ணீரில் இருந்து மிகவும் விரைவாக
மேலே எழுந்து வந்தது. கடலுக்கு நடுவே தானாக மேலெழுந்து வரும் மலையைப் பார்த்து, இந்த மலை நமக்கு நடுவே ஒர் இடையூறாக இருக்கிறது என்று எண்ணிய அனுமன், மிகவும் வேகத்தோடு அந்த மலையை மேகத்தை தள்ளுவது போல தள்ளினார். அனுமனால் தள்ளப்பட்ட மலையானது அனுமனின் வேகத்தை அனுபவப்பூர்வமாக உணர்ந்து பெரிதும் ஆச்சரியமும், மிக்க ஆனந்தமும் அடைந்தது. மலை வடிவில் இருந்து மனித உருவம் பெற்று அனுமனிடம் பேசத் தொடங்கியது.
 
★ராம காரியமாக செல்லும் தங்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் கடலரசன் என்னை வெளியே வருமாறு கேட்டுக் கொண்டார். இங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டுப் பிறகு செல்லுங்கள் என்றது மைனாகம் மலை. அதற்கு அனுமன் உங்கள் வரவேற்பினால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். ஆனால் என்னால் சிறிது நேரம் கூட  இங்கு தங்க இயலாது. நான் இங்கு தங்கிச் சென்றால் ராம காரியம் மேலும் தாமதமாகும். நான் விரைவாக செல்ல வேண்டும். உங்களை எனது வேகத்தால் தள்ளியதாலும் இங்கு தங்க மறுப்பதாலும் என் மீது கோபம் கொள்ளாதீர்கள் என்று மலையை கடந்து சென்றார் அனுமன்.
 
★அனுமனின் பராக்கிரமத்தை பார்த்த தேவர்கள் மேலும் அனுமனின் வலிமையையும் சாமர்த்தியத்தையும் பார்க்க விரும்பினார்கள்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை......................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
167 /15-09-2021
 
சுரசை, அங்காதாரை...
 
★பிறகு தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் பாம்புகளுக்கு தாயாகிய சுரசையை பார்த்து,
ராம காரியமாக அனுமன் கடலை தாண்டிக் கொண்டிருக்கிறார்
நாம் அனுமனின் பலத்தை அறிய வேண்டும். ஆதலால் நீ அனுமனுக்கு தடையாக சென்று இடையூறு செய். அவன் உன்னை எப்படி வெல்ல போகிறான் என்பதை பார்ப்போம் என்றனர்.
அதற்கு நாகமாதா சுரஸையும் சம்மதித்து அனுமன் தாண்டிக் கொண்டிருக்கும் இடத்திற்கு சென்றாள்.
 
★சுரசை அனைத்து தேவர்களின் வேண்டுகோளின்படி அரக்கி உருவம் எடுத்து அனுமன் முன் தோன்றினாள். ராம காரியமாக செல்லும் அனுமனின் முன்பாக கோரமான பெரிய ராட்சத உருவத்தை எடுத்த நாகமாதா சுரஸை அனுமனை தடுத்து நிறுத்தினாள். வானர வீரனே! இன்று தெய்வங்களின் அருளால் எனக்கு நீ உணவாக கொடுக்கப் பட்டிருக்கிறாய்.  வானரமே!, இன்று என் பசிக்கு நீ உணவாகப் போகிறாய் என்றாள்.
 
★ அவளை வணங்கிய அனுமன்,
அம்மா! ராம காரியமாக நான் இப்பொழுது இலங்கைக்குச் சென்று கொண்டிருக்கிறேன்.
இப்பொழுது தாங்கள் தடை செய்யலாமா? பெண்ணாகிய நீங்கள் பசியில் வேதனை படுவதை கண்டால் என் மனம் துன்பப்படுகிறது.வழி விடுங்கள். நான் இராமனின் காரியத்தை முடித்துவிட்டு வருகிறேன்.
நான் இங்கு உங்களுக்கு ஒரு சத்தியம் செய்து கொடுக்க முன் வருகின்றேன். இலங்கையில் சீதையைக்  கண்டதும், அந்தச் செய்தியை ராமரிடம் சொல்லி விட்டு மீண்டும் உங்களிடம் வந்து தங்கள் விருப்பப்படி வாய்க்குள் செல்கிறேன். இப்பொழுது ராம காரியத்துக்கு செய்யும் பெரும் உதவியாக எனக்கு வழி விடுவாயாக என்று கேட்டுக் கொண்டார்.
 
★அனுமன் கூறியதை கேட்ட சுரஸை என்னை தாண்டி யாரும் செல்ல முடியாது. இது பிரம்மாவினால் எனக்கு கொடுக்கப்பட்ட வரம் எனது வாய்க்குள் சென்று வெளியே வர முடிந்தால் நீங்கள் செல்லலாம் என்று தனது வாயை திறந்து வைத்துக் கொண்டாள் சுரஸை. அனுமன் தன் உடலை மேலும் பத்து மடங்கு பெரியதாக்கி கொண்டு எனது உடல் செல்லும் அளவிற்கு உனது வாயை திறந்து கொள் என்றார் அனுமன். சுரஸை தன் உடலை அனுமன் உடலை விட இருபது மடங்கு பெரியதாக்கிக் கொண்டாள். சாமர்த்தியசாலியான அனுமன் சில கனத்தில் தனது உடலை கட்டை விரல் அளவிற்கு சிறியதாக்கிக் கொண்டு வேகமாக சுரஸையின் பெரிய  வாய்க்குள் புகுந்து வேகமாக வெளியே வந்து சுரஸையின் முன்பாக நின்றார்.
 
★ராட்சசியே! ராம காரியத்தை முடித்ததும் உனது வாய்க்குள் புகுவேன் என்று முன்பு நான் கொடுத்த உறுதி மொழியை இப்போதே நிறைவேற்றி விட்டேன். பிரம்மாவினால் உனக்கு கொடுத்த வரத்தையும் நான் மீறவில்லை. இப்பொது நான் உன்னை தாண்டி செல்கிறேன் உன்னால் முடிந்தால் என்னை தடுத்துப்பார் என்றார். உடனே சுரஸை தனது சுய உருவத்தை அடைந்து தேவர்கள் உங்களது வீரதீர பராக்கிரமத்தையும்,  மற்றும்  சாமர்த்தியத்தையும் சோதித்துப் பார்ப்பதற்காக என்னை இங்கு அனுப்பியிருந்தார்கள். நீங்கள் விரைவில் ராம காரியத்தை முடிப்பீர்களாக! என்று வாழ்த்தி அனுமன் வானில் செல்ல வழி கொடுத்தாள்.
 
★அனுமன் இன்னும் வேகமாக வானில் பறந்து சென்றான். அவனின் வேகத்தை கண்ட தேவர்கள், கருடன் தான் வேகமாக செல்கிறான் என நினைத்தனர்.  அனுமன் கருடனுக்கு நிகரான வேகத்தில் சென்று கொண்டிருந்தார். அனுமனுக்கு அடுத்த சோதனை வந்தது. பயங்கரமான ராட்சசி  ஒருவள் அனுமனை பார்த்து இன்று உணவு கிடைத்து விட்டது என்று அனுமனின் நிழலைப் பிடித்து இழுத்தாள். தன்னை யாரோ பிடித்து இழுப்பது போலவும் தனது வேகம் குறைவதையும் உணர்ந்த அனுமன் தன்னைச் சுற்றிப் பார்த்தார்.
 
★கடலில் இருக்கும் ஒரு ராட்சசி  தன் நிழலை பிடித்து இழுப்பதை பார்த்தார். இந்த ராட்சசியைப் பற்றி சுக்ரீவன் ஏற்கனவே சொல்லியிருப்பது அனுமனுக்கு நினைவு வந்தது. நிழலைப் பிடித்து இழுத்து சாப்பிடும் அங்காதாரை என்ற ராட்சசி  என்று தெரிந்து கொண்டு தன் உடலை மேலும் பெரிதாக்கினார். ராட்சசியும் தன் உடலை பெரிதாக்கிக் கொண்டு அனுமன் உள்ளே செல்லும் அளவிற்கு தனது வாயை திறந்து கொண்டு அனுமனை நோக்கி விரைந்து வந்தாள். அனுமன் தன் உடலை சிறியதாக்கிக் கொண்டு மனோ வேகத்தில் ராட்சசியின் வாய் வழியாக அவள் வயிற்றுக்குள் புகுந்து தனது நகங்களால் வயிற்றை கிழித்து ராட்சசசயைக் கொன்று வெளியே வந்தார்.
 
★அரக்கி  இறந்து கடலில் மூழ்கினாள். தனது உடலை பழையபடி பெரியதாக்கி இலங்கை நோக்கி சென்றார். தூரத்தில் மரங்களும் மலைகளும் அனுமனுக்கு தெரிந்தன. இலங்கை வந்து விட்டோம் என்பதை அறிந்தார். இவ்வளவு பெரிய உருவத்துடன் இலங்கை சென்றால் தூரத்தில் வரும் போதே நம்மை கண்டு பிடித்து விடுவார்கள் யாருக்கும் தன்னைப்பற்றி தெரியக்கூடாது என்று எண்ணிய அனுமன் தனது இயற்கையான உருவத்திற்கு மாறி இலங்கையில் உள்ள லம்பம் என்னும் மலை சிகரத்தின் மீது இறங்கினார்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்.
9944110869.
 
நாளை....................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
168 / 16-09-2021
 
லங்காதேவி...
 
★அனுமன் சுற்றிலும் பார்த்தார். இலங்கையின் வளம் குபேரனின் அழகாபுரியை காட்டிலும் ஜஸ்வர்யத்தின் உச்சத்தில் இருந்தது. திருகூட மலையில் ராவணனின் கோட்டை தாமரை, நீலோத்பலம் என்னும் அழகிய மலர்களால் அகழி போல சுற்றி அழகுடன் இருந்ததை கண்டார். இலங்கை நகரத்தை விருப்பப்படி உருவத்தை மாற்றிக் கொள்ளும் வலிமையான ராட்சதர்கள் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். 
பின்பு அங்கிருந்து இலங்கை நகரை சுற்றி பார்த்தான். இலங்கை நகரின் அழகை கண்டு அனுமன் வியந்தான். 
 
★இலங்கை மாநகரின் மாட மாளிகைகள், கோபுரங்கள், குளங்கள், நந்தவனங்கள் நவரத்தினங்கள் போல் மிகவும் ஜொலித்தது. பிறகு அனுமன், இவ்வளவு அழகு வாய்ந்த இலங்கையை காக்க எத்தனை அரக்கர்கள் இருக்க வேண்டும்? இப்பொழுது நான் இங்கு வந்தது போல் வானர வீரர்களான அங்கதனும், தளபதியான நளனும், அரசனான சுக்ரீவனும் மட்டுமே வர முடியும். மற்ற வானர வீரர்கள் எவ்வாறு இங்கு வர முடியும்? சீதையை எப்படி மீட்பது? சீதை எங்கே இருப்பார்? நான் சீதையை எவ்வாறு காண்பேன்? நான் சீதையை அரக்கர்களுக்கு தெரியாமல் தான் பார்க்க வேண்டும். ஆனால் இப்பொழுது பகலாக இருக்கிறது. அனுமன் நிதானமாக யோசித்தார். 
 
★நாம் யார்?   எங்கிருந்து இங்கு வந்திருக்கின்றோம்?  எதற்காக வந்திருக்கின்றோம்? என்று யாருக்கும் தெரியாத வகையில் சீதையை தேட வேண்டும் என்று முடிவு செய்தார். தான் செய்யும் வேலையை தடங்கல் இல்லாமல் ஆராய்ந்து தான் செய்ய வேண்டும். இரவில் சீதையை தேடிச் செல்லலாம் என மனதில் நினைத்துக் கொண்டான். 
பகலில் சென்றால் யார் கண்ணிலாவது பட்டு விடுவோம் என்று இரவு வரை காத்திருந்த அனுமன் மிகவும் சிறியதோர் உருவத்திற்கு மாறினான். 
இருளும் மெல்ல மெல்ல அங்கு சூழ்ந்தது. அரக்கர்களான ராவணனின் ஏவலர்கள் இந்திர லோகத்திற்கு சென்றனர். பின்பு 
தேவர்களும், நாகர்களும் தமது  பணியை முடித்துக் கொண்டு வானவழியில் சென்றனர். 
 
★இரவும் முழுவதும் சூழ்ந்தது. சந்திரன் தோன்றினான். ராம தூதனான அனுமன் வந்ததை பார்த்து சந்திரன் மிக்க மகிழ்ச்சியுடன் பிரகாசமான ஒளியை தந்தது.இலங்கையின் நகரத்திற்குள் நுழைவதற்கு  முற்பட்டார். இவ்வளவு காவல் இருக்கும் நகரத்திற்குள் புகுந்து எப்படி சீதையை தேடுவது என்ற வருத்தமும் விரைவில் சீதையை பார்க்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியுடன் சென்றார் அனுமன். விரோதியின் கோட்டையின் நுழைவு வாயில் வழியாக செல்லக்கூடாது என்ற யுத்த நியதியின்படி வேறு வழியாக ராம காரியம் நிறைவு பெற வேண்டும் என்று எண்ணி தனது இடது காலை வைத்து இலங்கை நகரத்திற்குள் நுழைந்தான் அனுமன்.
 
★இலங்கா தேவி, இலங்கையை விழிப்புடன் பாதுகாத்து வரும் நகர தேவதை ஆவாள். நான்கு முகங்களும், எட்டு கரங்களும், கொடிய உருவமும் கொண்டவள். அவள் தோற்றமே அச்சம் தருவது போல் இருந்தது. அவள் வேல், வாள், சூலம், கதை, பாசம், சங்கு, வில், அம்பு ஆகிய பயங்கரமான ஆயுதங்களைத் தன் எட்டு கரங்களிலும் ஏந்திக் கொண்டு இருந்தாள். அனுமன் மதில் சுவரில் ஏறுவதைக் கண்டு இலங்காதேவி, நில்! நில்! என சொல்லிக் கொண்டு ஓடி வந்தாள். அனுமனிடம், யார் நீ? ஒரு குரங்கு, உனக்கு எவ்வளவு தைரியம்? என் அனுமதியின்றி யாரும் உள் செல்லக் கூடாது. எவரும் உள்ளே செல்ல அஞ்சும் இக்காரியத்தை செய்ய உனக்கு எவ்வளவு தைரியம்? இத்தனை அரக்கர்கள் காவல் புரிவதை பார்த்து உனக்கு பயம் சிறிதும் இல்லையா? இங்கிருந்து ஓடிப்போ, என்றாள்.
 
★இவளது பேச்சைக்கேட்டு அனுமனுக்கு கோபம் வந்தது. ஆனால் அனுமன் அதை வெளிக்காட்டி கொள்ளவில்லை. அனுமன், எனக்கு இந்நகரை சுற்றிப் பார்க்க வேண்டும் என்று ஆசை. அதனால் தான் நான் இந்த இடத்திற்கு வந்தேன் என்று புத்திசாலிதனமாக கூறினான். நான் உன்னை இங்கிருந்து, ஓடிப்போ என்று சொன்ன பிறகும் நீ என்னிடம் வாதம் செய்து கொண்டிருக்கிறாய். உனக்கு எவ்வளவு துணிவு இருந்தால் இங்கே வந்து இருப்பாய்? உன்னைப் போன்றோர் இங்கே வரக் கூடாது. பதில் பேசாமல் இங்கிருந்து ஓடிப் போ என ஏளனமாக கூறினாள். அரக்கி இப்படி பேசுவதை கேட்டு அனுமன் மனதில் சிரித்துக் கொண்டான். மறுபடியும் அரக்கி அனுமனிடம், நீ யார்? யார் சொல்லி நீ இங்கே வந்துள்ளாய்?
 
★நான் இவ்வளவு சொல்லியும் நீ இங்கிருந்து போவது போல் தெரியவில்லையே! உன்னை கொன்றால் தான் இங்கிருந்து போவாய் என நினைக்கிறேன் என்றாள். அனுமன், நீ என்ன தான் செய்தாலும், இந்த ஊருக்குள் போகாமல் திரும்பி போகமாட்டேன் என்றான். அனுமன் பேசியதைக் கேட்ட இலங்காதேவி, அனைவரும் என்னைப் பார்த்து அஞ்சி நடுங்குவார்கள். ஆனால் இவன் என்னைப் பார்த்து பயப்படுவது போல் தெரியவில்லை. இவன் சாதாரணமான குரங்கு இல்லை. இவனை இப்படியே விட்டுவிடக் கூடாது. இவனை கொல்வது தான் சரி. இல்லையென்றால் இலங்காபுரிக்கு தீங்கு ஏற்படும் என்று மனதில் நினைத்தாள். உடனே இவள் அனுமனை பார்த்து, முடிந்தால் உன் உயிரை காப்பாற்றிக் கொள் என கூறிக் கொண்டு வேலை அனுமனை நோக்கி எறிந்தாள்.
 
★தன்னை நோக்கி வந்த வேலை அனுமன் தன் கைகளால் ஒடித்து தூக்கி எறிந்தான். தன் வேலை ஒடித்த அனுமன் மீது மிகுந்த கோபம் கொண்டு பல விசித்திர ஆயுதங்களை ஏவினாள். ஆனால் அனுமனோ தன்னை நோக்கி வந்த ஆயுதங்களை எல்லாம் ஒடித்து வானில் வீசினான். தன் ஆயுதங்கள் அனைத்தும் வானில் தூக்கி எறியப்பட்டதை பார்த்து மிகவும் கோபங்கொண்டு குன்றுகளை அனுமன் மேல் ஒவ்வொன்றாக தூக்கி எறிந்தாள், இலங்கா தேவி. பிறகு இலங்கா தேவி அனுமனை தன் கரங்களால் அடிக்க ஓடி வந்தாள். அனுமன் அவளது கரங்களை ஒன்றாக பிடித்து அவளை ஓங்கி அடித்தான். அவள் வலி தாங்க முடியாமல் சுருண்டு கீழே விழுந்தாள்.
 
★பிறகு அந்த இலங்கா தேவி அனுமனிடம், வானரமே! வேறு எவராலும் வீழ்த்த முடியாத என்னை நீ வீழ்த்திவிட்டாய். அப்படியென்றால் இந்த கொடிய அரக்கர்களுக்கு அழிவுக்காலம் ஆரம்பித்துவிட்டது. ஐயனே! நான் பிரம்மதேவரின் கட்டளையினால் இலங்கையை காவல் புரிகிறேன். பிரம்மன் என்னிடம், எப்போது உன்னை ஒரு வானரம் வீழ்த்துகிறதோ, அப்பொழுது அரக்கர் குலம் அழிய போகிறது என்று அர்த்தம் என்றார். உன்னால் இன்று என் காவல் நிறைவுப்பெற்றது. பிரம்மன் சொன்னது போல் நடந்துவிட்டது. இனி நீ செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும் எனக்கூறி அனுமனுக்கு வழிவிட்டு வானுலகம் சென்றாள்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை..................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
169 / 17-09-2021
 
சீதையைத் தேடும் அனுமன்...
 
★அனுமன் நகரத்திற்குள் காலை வைத்ததும் எதிரியின் தலை மீது தன் காலை வைப்பது போல இருந்தது அனுமனுக்கு. அந்த நகரம் குபேரனின் நகரத்திற்கு இணையாக, மிக்க அழகுடனும் மிகுந்த செல்வச் செழிப்புடனும் இருந்தது. மாளிகைகள், வீடுகள் அனைத்தும்  தங்கத்தாலும், நவரத்தினங்களாலும் மிகுந்த பிரகாசமாக ஜொலித்தது. நகரின் வீதிகள் அனைத்தும் மலர்களால் நன்கு  அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இலங்கை நகரத்திற்குள் கொடூரமான வடிவத்துடன் வில், அம்பு, கத்தி என்று பல விதமான விசித்திர ஆயுதங்களையும்  வைத்துக் கொண்டு, கவசத்துடன் வீரர்கள் பலர் நகரத்தை காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். 
 
★மக்கள் அகோரமாகவும் பல நிறங்களையும், பல வடிவங்கள் உடையவர்களாகவும் நடமாடிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வோரு மாளிகையாக அனுமன் தேடிக் கொண்டே வந்தான். எங்கும் சீதையை பார்க்க முடியவில்லை என்று அனுமன் மிக்க  வருத்தம் அடைந்தான். அனுமன் செல்ல முடியாத இடங்களுக்கெல்லாம் தன் உருவத்தை அதற்கேற்றார் போல் மாற்றிக்கொண்டு சென்று தேடி பார்த்தான்.
 
★பெண்ணை ஒதுக்கி வாழ்ந்தவன், பெண்ணைத் தேடும் பணியில் அமர்ந்தான். இது ஒரு புதுமையாய் இருந்தது. ராமன் உரைத்த அடையாளம் அவனுக்கு வரைபடமாய் விளங்கியது. சீதை என்னும் கோதை, எழில் மிகு ஒவியமாய் அவன் மனத்தில்  பதிந்து இருந்தாள். வழியில் காணும் பெண்களை அவன் விழிகள் சந்தித்தன. அழகு என்பதற்கு அடையாளம் எதுவும் அவன் கண்ணில் படவில்லை. அரக்கியர் இடையே ஜனகனின் அணங்கனைய மகளாகிய சீதையைக் காண முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.
 
★நகருக்குள் சென்ற அனுமன் அந்நகரின் சிறப்புகளை கண்டு வியந்து போனான். அந்நகரின் ஓரமாக சீதையை தேடி கொண்டு சென்றான். அனுமன் போகும் வழியில் சோலைகள், இரத்தின மாளிகைகள், மாட்டுக் கொட்டில், குதிரை லாயங்கள், அரக்கர்கள், தேவ மாதர்கள் போன்றவர்களை கடந்து மாதா சீதையை தேடிக் கொண்டு சென்றான்.இவ்வாறு அனுமன் சீதையை தேடி போகும் போது கும்பகர்ணனின் அழகு மாளிகையை அடைந்தான். 
 
★அங்கு கும்பகர்ணன் தூங்கிக் கொண்டு இருந்தான். மலை ஒன்று உருண்டு கிடப்பதைப் பார்த்தான். அதன் தோற்றத்தைக் கண்டு வியந்தான். பேருருவம் படைத்த அது நின்றால் எப்படி இருக்கும்? என்று நினைத்தான். மலையின் உருவை அவன் உருவில் வைத்துப் பார்த்தான். தின்பதற்கே பிறந்தவன் அவன், என்பதை அறிந்தான். ஊனும் கள்ளும் உண்டபின் அவன் உறக்கம் கொண்டவனாய்க் காணப்பட்டான். அவன் குறட்டை விட்டுக்கொண்டு உறங்குவதைப் பார்த்தான்.கும்பகர்ணனை பார்த்தவுடன், அவன் ராவணன் என நினைத்து  மிகுந்த கோபம் கொண்டான், அனுமன். 
 
★கும்பகர்ணனுக்கு மிகவும் அருகில் நெருங்கிச் சென்றான். இவனுக்கு பத்து தலைகளும், இருபது தோள்களும், இருபது கைகளும் இல்லையே. அதுமட்டுமல்ல, பேரரசனாகிய ஒருவன் இப்படிப் பெருந்துயில் பெற்றிருக்க முடியாது என்பதால் அவன் ராவணனாய் இருக்க முடியாது என்பதை உறுதி செய்து கொண்டான். அனுமனின் கோபம் சிறிதளவு தணிந்தது.
இவன் ராவணன் இல்லை என்பதை அறிந்து, இவன் யாராக இருந்தால் நமக்கு என்ன? இவன் இப்படியே சில காலம் நன்றாக தூங்கட்டும் என்று நினைத்துக் கொண்டு சீதையை தேட தொடங்கினான். 
 
★அனுமன் சீதையை பலப்பல  இடங்களில் தேடினான். மாடங்கள், மாளிகைகள், அந்தபுரம், மண்டபங்கள், ஆலயங்கள் என அனைத்து இடங்களிலும் சீதையை தேடி அலைந்தான். எங்கு தேடியும் சீதையை அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை. இவ்வாறு அனுமன் சீதையை தேடி போகும் போது விபீஷணனின் பெரிய மாளிகையை அடைந்தான். அங்கு மற்ற மாளிகைகளில் கண்டது போல் மதுகுடங்களை காணவில்லை. அதற்கு பதிலாக தேன், பால், பஞ்சாமிர்தம் போன்ற பூஜைக்குரிய பழங்கள், பொருட்களை கண்டான். பிறகு தூங்கி கொண்டிருக்கும் விபீஷணனின் அருகில் சென்று அவனது முகத்தைப் பார்த்தார். விபீஷணனின் முகத்தில் கருணை வழிந்தது.
 
★கறுப்பு நிறத்தில் வெள்ளை உள்ளம் குடி கொண்டிருப்பதைக் காண முடிந்தது. நீதியும் அறமும் அவனிடம் இடம் வேண்டிக் குடிகொண்டிருந்ததைக் காண முடிந்தது. ‘பகை நடுவே உறவு கொள்ள ஒருவன் உளன்’ என்பதை அறிந்தான். ‘இவன் தப்பிப் பிறந்தவன்’ என்ற முடிவுக்கு வந்தான்.  இவன் குற்றம் செய்யாத உயர்ந்த குணமுடையவன் என்பதை அறிந்துக் கொண்டான். இவன் 
கும்பகர்ணனின்  தம்பியான விபீஷணனாகத் தான் இருக்க வேண்டும் என்று அறிந்தான். அவன் மீது இவன் மதிப்பு மிக்க கண்ணோட்டம் சென்றது; ‘இவன் பயன்படத் தக்கவன், என்று மதிப்பீடு செய்து கொண்டான்.
பிறகு அங்கிருந்து சென்று பல மாளிகையில் தேடினான். சீதையை தேடுதல் தொடரும்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை...................
ஶ்ரீராம காவியம்
~~~~~
170 / 18-09-2021
 
அனுமனின் தேடல்...
 
★பிறகு அங்கிருந்து சென்று பல மாளிகையில் தேடினான். அங்கு பல பெண்கள் ஆடுவது மற்றும் பாடுவதுமாக இருந்தனர். பலர் உறங்கி கொண்டு இருந்தார்கள். இவர்களை எல்லாம் கடந்து, யாரும் எளிதில் நுழைய முடியாத இடங்களிலும் சென்று சீதையை தேடினான். அனுமன் சீதையை தேடிக் கொண்டு போகும்போது இந்திரஜித்தின் மாளிகைக்கு சென்றான். இந்திரஜித், ஆறுமுக கடவுள் முருக பெருமான் உறங்குவது போல் உறங்கி கொண்டு இருந்தான். இவன் அரக்கனா? முருக பெருமானா? இல்லை, இவர் வேறு யாராக இருக்கக்கூடும்? என மனதில் நினைத்துக் கொண்டான்.
 
★இவன் இந்திரனைச் சிறையில் இட்டவன்’ என்பதை முன்பே கேட்டு அறிந்திருக்கிறான். அரக்கர் குலத்தில் அழகு உடைய இளைஞன் இருந்தது அவனுக்கு வியப்பை ஊட்டியது.இவன் மிகுந்த பலம் மற்றும் வலிமை உடையவன் என்பதை அனுமன்  உணர்ந்தான். ‘இவனோடு நீண்ட போர் நிகழ்ந்த வேண்டிவரும்’ என்று மதித்தான். “இவன் ஒரு மாவீரனாய் இருக்க வேண்டும்” என்று கண்டான். இவனைப் போன்ற வீரர் இருப்பதால்தான் ராவணன் வலிமை மிக்கவனாய் இருக்கிறான், என முடிவு செய்தான்.இவனுடன் ராமரும், லட்சுமணரும் பல நாட்கள் போரிட நேரிடும் என கருதினான்.
 
★பிறகு அனுமன் இங்கேயே நின்றிருந்தால் தாமதமாகிவிடும் என நினைத்து அங்கிருந்து அக்ஷய குமாரன், அதிகாயன் போன்ற பல வீரர்களின் மாளிகையில் சென்று சீதையை தேடினான். இலங்கை நகரின் இடையில் ஓர் அகழியும், ராவணனின் மாளிகையைச் சுற்றி ஓர் அகழியும் இருந்தது. அனுமன் இவ்விடத்தை அடைந்தான். இலங்கை நகரமே உறங்கி கொண்டிருந்த நேரத்தில் அனுமன் மட்டும் சீதையை தேடி அலைந்து கொண்டு இருந்தான். அனுமன் எல்லா இடங்களிலும் தேடிய பிறகு ராவணனின் மாளிகையை அடைந்தான். அங்கு அனுமன் மண்டோதரியின் மாளிகையை கண்டான்.
 
★அனுமன், இம்மாளிகையை கூர்ந்து கவனித்தான். அந்த மாளிகை மற்ற மாளிகைகளை காட்டிலும் சந்திரனை போல் ஒளி வீசிக் கொண்டிருந்தது. இந்த மாளிகை தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தது. ஆதலால் இந்த மாளிகையில் தான் ராவணன் நிச்சயம் சீதையை வைத்திருக்க வேண்டும் என நினைத்தான்.அதனுள் நுழைந்து ராவணன் மனைவியான
 மண்டோதரியைக் கண்டான்
வித்தியாதர மகளிர் உறையும் தெருக்களைக் கடந்தான், மண்டோதரி தங்கி இருந்த மண்டபத்தை அடைந்தான்.
 
★‘சீதையிடம் இருக்கத் தக்க வனப்பும் எழிலும் அவளிடம் இருப்பதைக் கண்டு, அங்கு அவளைக் காண முடியும்’ என்று நம்பிக்கை கொண்டான். அங்கே மண்டோதரி கண் அயர்ந்து உறங்கிக் கிடந்தாள். மயன் மகளாகிய மண்டோதரியை ‘ஜனகன் மகள்’ என்று தவறாய் நினைத்தான்.   ‘சுகபோக சுந்தரியாக மாறி விட்டாளோ?’ என்று மயங்கினான். சோர்ந்த குழலும், கலைந்த துயிலும், அயர்ந்த முகமும், ஜீவனற்ற முகப் பொலிவும் அவள் மண்டோதரி என்பதை உணர்த்தின. ‘நலம் மிக்க நங்கை ஒருத்தி தனக்கு மனைவியாய் இருக்க, மற்றொருத்தியை ராவணன் நாடுகிறானே’ என்று வியந்தான்.
 
★ ராவணன் சீதையை நிச்சயம் இங்கேதான் வைத்து இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு மண்டோதரியின் மாளிகையை எட்டி பார்த்தான். அங்கு பணிப் பெண்கள் மலரடி வருட, சில  பெண்கள் மெல்லிய விசிறியால் காற்று வரும்படி வீச, சிலர் இன்னிசை இசைக்க, ஒரு அழகிய பெண் அங்கு தூங்கி கொண்டிருந்தாள். இப்படி சகல வசதிகளுடன் உறங்குவது யார்? என நினைத்தான், அனுமன். இவள் தான் சீதையோ? என நினைத்து அப்பெண்ணை உற்று நோக்கினான். இவளை நன்கு பார்த்தால் மானுட பெண்ணாக தெரியவில்லை. இவளின் முகத்தில் ராமரை பிரிந்த சோகம் சிறிதும் தெரியவில்லை. அப்படியென்றால் நிச்சயம் இவள் சீதையாக இருக்க முடியாது என உறுதி செய்து கொண்டான்.
 
★அனுமன் விண்ணையே முட்டும் அளவிற்கு பெரிய மாளிகை ஒன்றை கண்டான். அங்கு ராவணனின் பறக்கும் புஷ்பக விமானம் இருந்தது. இந்த விமானம் பிரம்மாவிடம் இருந்து குபேரன் தனக்காகப் பெற்றிருந்தான். அதை ராவணன் கொண்டு வந்து வைத்திருந்தான். புஷ்பக விமானத்தை பார்த்த அனுமன் இது ராவணனின் மாளிகையாக இருக்கும் என்று எண்ணி இங்கு சீதை இருக்கலாம் என்று ராவணனின் மாளிகைக்குள் நுழைந்தான். சமைக்கும் இடம், உணவருந்தும் இடம் என்று ஒவ்வொரு அறையாக சென்று பார்த்தான். எங்கும் சீதையை காணவில்லை. பெண்கள் மட்டும் இருக்கும் அறைக்கு அவர்களின் அனுமதி இல்லாமல் செல்லக் கூடாது என்ற தர்மத்தையும் மீறி பெண்களின் அறைக்குள்ளும் சென்று பார்த்தான். அங்கும் சீதை இல்லை. ஓர் அறையில் தங்கத்தினாலும். மற்றும் வைரத்தினாலும் செய்யப்பட்ட ஒரு கட்டிலில் ஓர் மலை போல் ஒர் ராட்சதன் படுத்திருந்தான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை...................
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~~
171 / 19-09-2021
 
தொடர்ந்த தேடுதல்...
 
★பிறகு அங்கிருந்து சீதையை தேடிச் சென்றான் அனுமன். ராவணனுடைய மாளிகையை அடைந்த அனுமன் அந்த அழகிய  மாளிகையில் அடியெடுத்து வைத்ததும் இலங்கை நகரமே நடுங்கியது. அனுமன் அரக்கன் ராவணனுடைய அறைக்குள் புகுந்து அவனை நன்கு உற்று நோக்கினான்.அவனுடைய ரூபத்தை கண்டு அனுமன் ஒரு சில கணம் பிரம்மித்து நின்று பார்த்தான். யானையின் தும்பிக்கை போன்ற கைகளும் மார்பில் விஷ்ணுவின் சக்ராயுதம் மற்றும் இந்திரனின் வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்ட வடுவும் இந்திரனின் ஐராவதன் யானையின் தந்தம் குத்தப்பட்ட தழும்புடன் இருப்பதை பார்த்தான்.
 
★அவனுக்கு பத்து தலைகள், இருபது தோள்கள், இருபது கைகளும் இருப்பதை பார்த்து இவன் தான் ராவணன் என்பதை உறுதி செய்து கொண்டான். பணிப்பெண்கள்  உறங்கிக் கொண்டே அவன் அடிகளை வருடிக் கொண்டு இருந்தனர். உறக்கம் கலைந்த ஒரு நிலையில் படுக்கையில் புரண்டு கொண்டு அவன் காணப்பட்டான். சுடும் நெருப்பை மடியில் கட்டிக் கொண்டு, அவனால் எப்படி அமைதியாய் உறங்கமுடியும்? சீதையை நெஞ்சில் வைத்தவன், நெருப்பு வைத்த பஞ்சாய் எரிந்து அழிந்து கொண்டிருந்தான்.
 
★கும்பகர்ணனை ராவணன் என்று நினைத்து, அவன் மீது கோபங்கொண்ட அனுமன், ராவணனை பார்த்தவுடன், இவனால் இந்த நகரம் அழிய போகிறது என்பதை நினைத்து வருந்தினான்.அரக்கனை கண்ட அனுமன் பதைபதைத்தான். அவன் பத்துத் தலைகளையும் கிள்ளி எறிந்து, பந்தாட மிகவும் விரும்பினான்.   ‘அவனை வென்று சீதையை மீட்பதை விடக் கொன்று முடிப்பதேமேல்’ என்று நினைத்தான்.அங்கு சிறிது நேரம்  நின்று நிதானமாய் நினைத்துப் பார்த்தான்.  ‘கண்டு வர சொல்லி அனுப்பப்பட்டவனே தவிர, கொண்டு வரச் சொல்லப் பட்டேன் இல்லை’   என்பதை நினைந்தான். ‘எல்லை மீறிய தொல்லைகளை விளைவிப்பது நல்லது அன்று’ என்ற முடிவுக்கு வந்தான்.
 
★“ராமன் வீரத்துக்கு விளைநிலம் வேண்டும்” என்பதற்காகத்தான் அவனை விட்டு வைத்து எட்டிச் சென்றான்.  பிறகு அனுமன் சுற்றிலும் பார்த்தான்.   பல பெண்கள் அந்த அறையில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் தலைவி போல் இருந்த பெண்ணின் அழகும் முக லட்சணமும் அவை சீதையாக இருக்குமோ? என்று அனுமனுக்கு சந்தேகம் வந்தது. அடுத்த கணம் இது என்ன மடமை, சீதையை தவறாக நினைத்து விட்டோமே ராமரை பிரிந்த சீதை துக்கத்தில் இவ்வளவு நகைகளை அணிந்து கொண்டு ராவணனின் அந்தப் புரத்திலா தங்கியிருப்பாள்?. இது சீதை கிடையாது என்று முடிவு செய்தான்.
 
★பிறகு அனுமன், நான் இங்கு சீதையை தேடி வந்துள்ளேன். சீதையை கண்டுபிடிக்காமல் இவனை கொல்வதோ  அல்லது வெறுமையாகத் திரும்பிச் செல்வதோ  நியாயமல்ல என தன் மனதை சமாதானப்படுத்திக் கொண்டான். கோபம் தணிந்த அனுமன், இவனுடன் இருக்கும் பெண்களின் கூட்டத்தில்  சீதை  இல்லை.  அப்படியென்றால் இவன் மாதா சீதையை எங்கே வைத்து இருப்பான்?. இவன் தனிமையில் இருக்கிறான் என்றால் சீதை நல்ல நிலையில் இருக்கிறாள் என்பது தெரிகிறது என நினைத்துக் கொண்டான்.
 
★பிறகு அனுமன்,சீதை அங்கு இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு ராவணனின் மாளிகையை விட்டு வெளியே வந்தான். நான் அனைத்து இடத்திலும் அன்னை சீதையை தேடிவிட்டேன். இன்னும் என்னால் சீதையை கண்டு பிடிக்க முடியவில்லையே என வருந்தினான். சீதையை நான் இனி எங்கு சென்று தேடுவேன். ஒருவேளை ராவணன் சீதையை, கொன்றுவிட்டானோ, இல்லை வேறு எங்கயாவது சிறை வைத்து இருப்பானோ என எண்ணினான். நான் நிச்சயம் சீதையை கண்டுபிடித்துவிட்டு வருவேன் என ஶ்ரீ ராமரும், சுக்ரீவனும், அங்கதனும், ஜாம்பவானும், நளனும், நீலனும்  மற்றைய வானர வீரர்களும் எதிர்பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.
 
★சுக்ரீவன் கொடுத்த ஒரு மாத காலமும் முடிந்துவிட்டது. நான் இன்னும் மாதா சீதையைக் கண்டு பிடிக்கவில்லை. நான் எவ்வாறு ராமரின் முகத்தில் விழிப்பேன். சீதையை தேடி கண்டுபிடிக்க முடியாமல் மகேந்திர மலையில் உயிரை மாய்த்துக் கொள்ள இருந்த வானர வீரர்களை, அங்கேயே இருக்கச் சொல்லி விட்டு சீதையை தேடி வந்தேனே. நான் தேடி வந்த காரியத்தை முடிக்க  முடியவில்லையே என மிகவும் வருந்தினான். இனிமேல் நான் உயிருடன் இருந்து என்ன பயன்? நான் ராவணனையும் மற்ற அரக்கர்களையும் கொன்றுவிட்டு நானும் இங்கேயே என் உயிரை மாய்த்து கொள்கிறேன் என வருந்தினான்.
 
★கட்டிய கட்டிடங்களில் சீதை கால் அடி வைக்க வில்லை என்பதை அறிந்தான். அவன் சுற்றாத இடமே இல்லை. எட்டிப்பாராத மாளிகை இல்லை. அவனுக்கே அலுப்பு ஏற்பட்டு விட்டது.  ‘சலிப்பதால் பயன் ஏதுமில்லை’ என்று பயணத்தை மேலும் தொடர்ந்தான்.அனுமன், இனி நான் தேவியை எவ்வாறு காண்பேன்?. கழுகரசன் சம்பாதி, மாதா சீதை இலங்கையில்தான் இருக்கிறாள் என கூறினாரே. அவருடைய அந்த சொல்லும் பொய்யாகி விட்டதே. இனி என் உடலில் உயிர் இருந்து என்ன பயன்? நான் இந்த இலங்கையை கடலில் போட்டு அழுத்தி, நானும் உயிரை மாய்த்துக் கொள்வது தான் சரி என்று உறுதி எடுத்து கொண்டான்.
 
★இவ்வாறு அனுமன் நினைத்து கொண்டு இருக்கையில், மிக அருகில் அழகான வனம் ஒன்று இருப்பதை கண்டான். அந்த வனத்தின் பெயர் அசோக வனம்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை.....................
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
172 / 20-09-2021
 
அனுமன் கண்ட சீதை...
 
★பாய்ந்து ஒடும் அனுமனின் கால்கள் மரங்களையும் மாட மாளிகைகளையும் தாவின. பறவைகள்  பறந்து திரிவதும் பூக்கள் நிறைந்ததுமாகிய சோலை ஒன்று காணப்பட்டது. அவன் சோகம் தீர்க்கும்படியாக  அசோகவனத்தைக் கண்டான்.
பிறகு அனுமன் அவ்வனத்துக்கு அருகில் சென்று பார்த்தான். என்ன இடம் இது? நான் இந்த இடத்தில் சீதையை இதுவரைத் தேடவில்லையே! அனுமன், இவ்வனத்தில் சென்று சீதையை தேடலாம் என அவ்வனத்திற்குள் சென்றான்.  அனைத்து தெய்வங்களையும் வணங்கி விட்டு அசோக வனத்திற்குள் குதித்தான் அனுமன்.
 
★அசோகவனத்தின் உள்ளே குதித்ததும் அனுமனுக்கு மனதில் ஒரு விதமான மகிழ்ச்சி ஏற்பட்டது. இங்கு நிச்சயம் சீதையை காண்பேன் என்று புத்துணர்ச்சி அடைந்தான். உயரமான ஒரு  மரத்தின் மீது நின்று கொண்டு சீதையை தேட ஆரம்பித்தான். அனுமன் யார் கண்ணிலும் படாமல் இருக்க தன் உருவத்தை மிகச் சிறிய உருவமாக மாற்றிக் கொண்டான்.
அனுமன் மரத்திற்கு மரம் தாவிக் கொண்டு சீதையை தேடிக் கொண்டு இருந்தான். அங்கு ஓர் குளத்தைக் கண்டான். அங்கு சென்று குளக்கரையில் ஓர் மரத்தின் மேல் ஏறி சுற்றும் முற்றும் பார்த்தான்.
 
★அங்கு தூரத்தில் தங்கத்தில் ஆன மண்டபத்தைக் கண்டான்.
அதற்கு அருகில் ஓர் மரத்தடியில் கண்ணைக் கூசும் வகையில் பேரழகுடன் பெண் ஒருத்தி அமர்ந்திருப்பதை கண்டான். அவரை சுற்றி அகோரமான வடிவத்துடன் ராட்சசிகள் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். ராட்சசிகளின் நடுவே அழகிய தெய்வீகமான முகத்தில் நடுக்கத்துடன் கசங்கி அழுக்கு படிந்த உடையில் பயமும் துயரத்தையும் வைத்துக் கொண்டு, அழுததினால் முகம் வாடியிருப்பதையும் கண்டதும் இவரே சீதை என்று முடிவு செய்தார்.
 
★அனுமன் சீதையை பார்த்து விட்டேன் என்று ஆனந்தமாக துள்ளி குதித்தார். அடுத்து என்ன செய்யலாம் என்று சுற்றிலும் பார்த்தார். சீதையை பார்த்த மகிழ்ச்சியில் இருந்த அனுமன் அவரின் நிலையை கண்டதும் மிகவும் துக்கமடைந்தார்.அசோக வனத்தில் சீதை, அரக்கியர் சூழ ஓர் மரத்தினடியில் மிகுந்த சோகத்துடன் அமர்ந்திருந்தாள். சீதையின் கண்கள் அழுதழுது மிகவும் வாடிப் போயிருந்தது. அவள் மிகவும் உடல் இளைத்து, தூக்கமின்றி புலிகளிடம் மாட்டிக் கொண்ட மான் போல அந்த அரக்கியர் கூட்டத்தில் அகப்பட்டு மிகவும் வருத்தப்பட்டு கொண்டு  இருந்தாள்.
 
★ராமரின் நினைவால் மிகவும் வருந்தி, சோர்வுற்று, ராமரின் வரவை எதிர்பார்த்து மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருந்தாள். ராமரின் நினைவு சீதையை வாட்டிக் கொண்டு இருந்தது. ராமர் தன்னை காக்காவிட்டாலும், தன் குலப்பெருமையைக் காக்கும் பொருட்டு நிச்சயம் வருவான் என நாலாபுறமும் ராமரின் வரவை எதிர்நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தாள். ராவணன் தன்னை கவர்ந்து வந்த செய்தியை ராமரும், லட்சுமணரும் அறியவில்லை போலும் என பலவாறு நினைத்து மிகுந்த துன்பப்பட்டுக் கொண்டு இருந்தாள்.
 
★ராவணன் என்னை கவர்ந்து வந்த போது, வழியில் அவனை தடுத்து போரிட்ட ஜடாயுவும் இறந்து விட்டார். ஆதலால் ராமரிடம் என் நிலைமையை எடுத்துரைக்க ஆள் இல்லாமல் போய் விட்டது போலும். ஆதலால் இப்பிறவியில் ராமனையும், லட்சுமணனையும் மீண்டும் காண்பது என்பது நடக்காத காரியம் என நினைத்து மிகவும் வருந்தினாள். தான் அமர்ந்த இடத்தை விட்டு சற்றும் நகராத சீதை, இனி ராமருக்கு யார் உணவளிப்பார்கள்?. முனிவர்கள் எவரேனும் வந்தால் ஶ்ரீராமர் அவர்களுக்கு எவ்வாறு உணவு அளிப்பார் என நினைத்து வருந்தினாள்.
 
★ஒரு வேளை என்னை கவர்ந்து வந்த அரக்கர்கள், இவ்வளவு நாட்கள் ஆகியும் என்னை உயிருடன் விட்டுவிட மாட்டார்கள். இவர்கள் என்னை தின்று இருப்பார்கள் என நினைத்து இருப்பாரோ என்று நினைத்து நினேத்து மிகவும் துன்பம் கொண்டாள். ஒருவேளை பெற்ற தாய்மார்களும், தம்பி பரதனும் காட்டிற்கு வந்து ராமரையும் லட்சுமணரையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டார்களோ? என்னவோ? ராமர், தாயின் கட்டளைப்படி பதினான்கு ஆண்டு வனவாசம் முடியாமல் நிச்சயம் நாடு திரும்ப மாட்டார். அவ்விருவருக்கும் ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிட்டதோ? என நினைத்து மிகவும் வருந்தினாள்.
 
★அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை சுற்றி பல அரக்கர்கள் நின்று கொண்டிருந்தனர். அங்கு திரிசடை என்னும் அரக்கி மட்டும் சீதையிடம் அன்பாக பேசுவாள். அங்கு திரிசடையை தவிர்த்து மற்ற அரக்கர்கள் மயக்க நிலையில் வீற்றிருந்தனர். அங்கு மற்ற அரக்கர்கள் நன்கு தூங்கி விட்டதால் சீதை திரிசடையிடம் பேச ஆரம்பித்தாள். திரிசடை! நீ என்னிடம் அன்பாக இருப்பதால் நான் உன்னிடம் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன் என்றாள்.
 
★பிறகு சீதை, அன்புமிக்க திரிசடையே! என் இடக்கண் துடித்துக் கொண்டு இருக்கிறது. இதனால் ஏற்படும் விளைவு தான் என்ன? என் துன்பங்கள் நீங்கி நன்மை உண்டாக போகிறதா? இல்லை, நான படும் இந்த துன்பத்திற்கும் மேல் அதிக துன்பம் வர போகிறதா? எனக் கேட்டாள்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை....................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
173 / 21-09-2021
 
திரிசடையின் ஆறுதல்...
 
★பிறகு சீதை, அன்புமிக்க திரிசடையே! என் இடக்கண் துடித்துக் கொண்டு இருக்கிறது. இதனால் ஏற்படும் விளைவு தான் என்ன? என் துன்பங்கள் நீங்கி நன்மை உண்டாக போகிறதா? இல்லை, நான படும் இந்த துன்பத்திற்கும் மேல் அதிக துன்பம் வர போகிறதா? எனக் கேட்டாள்.
 
★அதுமட்டுமில்லை, ராமர் விசுவாமித்திர முனிவரிடம் மிதிலைக்கு வரும்போது எனது இடக்கண் துடித்தது. இன்றும் அதேபோல் என் இடக்கண் துடிக்கிறது. ராமர் நாட்டை விட்டு வனம் செல்லும்போது என் வலக்கண் துடித்தது. பிறகு ராவணன் என்னை கவர்ந்து வரும்போதும் என் வலக்கண் துடித்தது. ஆனால் இன்று என் இடக்கண் துடிக்கிறது. இதனால் ஏற்படும் விளைவு என என்னிடம் சொல் எனக் கேட்டாள். சீதை சொன்னதை கேட்டுக் கொண்டிருந்த திரிசடை, சுபம் உண்டாகும், உன் இடக்கண் துடிப்பதால், நீ நிச்சயம் உன் கணவரை அடைவாய் என்றாள்.
 
★மரத்தின் மேல் அமர்ந்தபடி
சீதையும் திரிசடையும் பேசிக் கொண்டதை அனுமன் கேட்டான்.  நம்பிக்கை நட்சத்திரமாய் சீதை  ஒளிவிடுவதைக் கண்டான். செல்வச் சிறப்பும், இன்பக் களிப்பும், அதிகார ஆதிக்கமும் மிக்க ராவணன் ஆதிக்கத்தில் அவள் ஒளிதரும் சுடர் விளக்கு போல இருப்பதை அறிந்தான். அறம் அழியவில்லை’ என்று அகம் மகிழ்ந்தான்.  கற்பின் மாட்சியால் அவள் பாராட்டும் சிறப்பினை உடையவள் என்பதை அறிந்தான். பிறந்த மனைக்கும் புகுந்த வீட்டுக்கும் பெருமை தேடித் தந்திருக்கிறாள் என்று பாராட்டினான்.
 
★மாசுபடியாத மாணிக்கத்தைக் கண்டெடுத்த மனநிறைவு அவனை அடைந்தது.   இழந்த வாழ்வுதனை  மீண்டும் ராமன் பெறுகின்றான் என்பது அவனை மகிழ்ச்சியில் ஆட்டிப்படைத்தது.
கல்லைப் பெண்ணாக்கிய அழகு ராமன் மனைவியின் மன உறுதி, “கல்லைப் போன்றது” என்று கண்டு ஆனந்தம் கொண்டான்.  பெண்மைக்குப் பெருமை சேர்க்கும் திண்மை சீதையிடம் இருப்பதைக் கண்டான்.  அந்த சமயத்தில்  திரிசடை மீண்டும் பேசத் தொடங்கினாள்.
 
★திரிசடை, சீதையே! நான் என் கனவில் ஒளி மிகுந்த ஒரு பொன் வண்டு ஒன்று உன் காதருகே பாடிச் சென்றதை கண்டேன். இவ்வாறு ஒரு பொன் வண்டு காதருகே வந்து பாடினால், நிச்சயம் உன் கணவனால் அனுப்பப்பட்ட தூதன் உன்னை வந்து சந்திப்பான். குலமகளே! உனக்கு தூக்கம் என்பதே இல்லாததால் உனக்கு கனவு வரவில்லை. மேலும் நான் கண்ட கனவுகளை கூறுகிறேன், கேள்! என்றாள். ராவணன் தன் வீட்டில் அக்னி ஹோத்ரம் செய்வதற்காக அக்னியை பாதுகாத்து கொண்டு வருகிறான். அந்த அக்னி அணையாமல் பாதுகாக்க வேண்டும். ஆனால் என் கனவில் அந்த அக்னி அணைந்துவிட்டது. மேலும் அந்த அக்னி இருந்த இடத்தில் செந்நிறத்தில் கரையான்கள் தோன்றின.
 
★அதே போன்று, மாளிகையில் நெடுங்காலமாக பெரிய மணி விளக்குகள் ஒளி வீசி கொண்டு இருந்தன. அப்போது திடீரென்று வானத்தில் வீசிய பேரிடியால் அவ்விளக்குகள் அனைத்தும் அணைந்து போயின. அங்கிருந்த தோரணங்கள், கம்பங்கள் என அனைத்தும் முறிந்து விழுந்தன. பொழுது விடியும் முன்பே கதிரவன் தோன்றியது. அரக்க பெண்களின் கழுத்திலிருந்த மங்கல நாண்கள் தானாக அறுந்து விழுந்தன. அதுமட்டும் அல்ல, ராவணனின் மனைவி மண்டோதரி தலைவிரி கோலமாக தோன்றினாள். இவை அனைத்தும் அரக்கர் குலம் அழிவதற்கான தீய சகுனங்கள்.
 
★நான் கடைசியாக கண்ட கனவு, இரண்டு ஆண் சிங்கங்கள், தங்களுடன் புலிக் கூட்டத்தை அழைத்துக் கொண்டு காட்டு யானைகள் மிகுந்த வனத்திற்கு சென்று யானைகளை எதிர்த்து போரிட்டன. அங்கு கணக்கற்ற யானைகளை கொன்று வீழ்த்தி விட்டு, இறுதியில் அவர்களுடன் ஓர் அழகு மயிலை அழைத்துக் கொண்டு சென்றன. அதுமட்டும் அல்ல, ராவணனின் மாளிகை உள்ளே இருந்து ஓர் அழகிய பெண், ஆயிரம் திரிகளை கொண்ட ஓர் விளக்கை தன் கையில் ஏந்திக் கொண்டு, விபீஷணனின் மாளிகைக்கு சென்றாள். விபீஷணனின் பொன் மாளிகையில் அப்பெண் நுழைந்த நேரத்தில் விபீஷணன் உறக்கத்தில் இருந்து எழுந்தான். அதற்குள் தாங்கள் என்னை எழுப்பி விட்டீர்கள் என்றாள் திரிசடை.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
174 / 22-09-2021
 
ராவணன்
அசோகவனம் வருதல்...
 
★திரிசடை தன் கனவை பற்றி கூறியதை கேட்ட சீதை, திரிசடை தாயே! உன் கனவின் மிஞ்சிய பகுதியையும் கண்டுவிட்டு, எனக்கு கூறு. இப்பொழுது நீ உறக்கத்திற்கு செல் என்றாள். மரத்தில் அமர்ந்திருந்த அனுமன் கீழே இறங்கி சீதையிடம் பேசலாமா என்று நினைத்தான். அப்போது அங்கு தூங்கி கொண்டு இருந்த அரக்கியர்கள் தூக்கத்தை கலைத்து சீதையை காவல் புரிய தொடங்கினர். இதை பார்த்த அனுமன் உடனே ஓடி சென்று தன்னை யாரும் பார்க்காத வண்ணம் மரத்தில் ஏறி கொண்டான்.
 
★அப்போது அந்த அரக்கிகள் சீதையிடம், நீ எதற்கு அழுது கொண்டிருக்கிறாய்? உன்னை யார் என்ன செய்தார்கள்? எங்கள் அரசன் ராவணனுக்கு அறிவே கிடையாது. அவர் எங்களில் யார் ஒருவரையாவது விரும்பி இருந்தால் நாங்கள் மகிழ்சியாக அவரின் மனைவியாக மாறி இருப்போம். எங்கள் அரசரை நீ ஏற்றுக் கொண்டால் இங்கு நீ மகிழ்சியாக இருக்கலாம். எங்கள் அரசர் இங்கு வந்தால் அவரை வரவேற்று வணக்கம் சொல் என்று அச்சுறுத்தினார்கள்.
இவர்களின் இச்சொற்களை கேட்டு சீதை மிகவும் துன்பம் கொண்டாள். அனுமன் சீதையின் பரிதாப நிலைமையை பார்த்து மனம் கலங்கினான்.
 
★தூங்க முயற்சித்துக் கொண்டு இருந்த ராவணன், சீதை தன் ஆசைக்கு இணங்கவில்லையே என்ற கோபத்தில் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டு இருந்தான்.அப்போது இருட்டு மறைந்து காலை சூரியன் மெல்ல வெளிவந்தது. வேத மந்திரங்கள் முழங்க ராவணன் எழுப்பப்பட்டான். காலையில் எழுந்ததும் தன் படை வீரர்கள், பரிவாரங்களுடன் சீதையை பார்க்க செல்லலாமென ராவணன் நினைத்தான் .
 
★ராவணன், ஒளி வீசுகின்ற மணிகளை அணிந்து சீதையை நோக்கி புறப்பட்டான். இந்திரன் சபையில் உள்ள அப்ஸரஸ் ஊர்வசி உடைவாளை ஏந்திக் கொண்டு அவனுடன் வந்தாள். மேனகை வெற்றிலை பாக்கை மடித்து கொடுத்துக் கொண்டு உடன் வந்தாள். திலோத்தமை அவனுடைய காலணிகளை தூக்கிக் கொண்டு உடன் வந்தாள். மற்றும் ஏனைய தேவ மாதர்கள் சூழ ஆடம்பரமாக ராவணன் நடந்து வந்தான்.
ராவணன் அசோக வனத்திற்கு வந்தவுடன் அங்கு இருந்த அரக்கிகள் அவனுக்கு வழிவிட்டு நின்றனர். ராவணன் வருவதை கண்ட அனுமன் மரத்தில் நன்கு ஒளிந்து கொண்டான்.
 
★இரவில் தூங்கும் போது கண்டதை விட இப்போது மேலும் பராக்கிரமசாலி போல் ராவணன் அனுமனுக்கு தெரிந்தான். அங்கு நடப்பவற்றை அறிந்து கொள்ள அனுமன் மரத்து இலைகளுக்கு இடையே தன்னை மறைத்துக் கொண்டான். இலங்கை வேந்தன் ராவணன், ஆடம்பரமான ஆடை அலங்காரத்தோடும், அரம்பை மகளிரும் பணிப் பெண்களும் அவனைச் சூழ்ந்து வரவும், சீதையிருக்கும் இடம் நாடி வந்தான். அரக்கியரையும் அரம்பையரையும் விலகியிருக்க சொல்லித் தான் மட்டும் தனி ஒருவனாய் சீதையின்  அருகில்  சென்றான். அவள் கடும்புலிக்கு நடுங்கும் இளமான் ஆனாள். ராவணன் சீதையின் முன் நின்றான்.
 
★அவனை கண்டதும் சீதையின் உடல் கூசியது.சீதை,ராவணனை கண்டதும் பெரும்காற்றில் நெடிய மரங்கள் நடுங்குவதை போல நடுங்கினாள். சீதையிடம் ராவணன் பேச ஆரம்பித்தான். அழகியே! என்னை கண்டதும் ஏன் நடுங்குகிறாய்? நான் உன் மேல் வைத்திருக்கும் அன்பை நீ தெரிந்து கொள். என்னைக் கண்டு பயப்பட வேண்டாம். உன்னுடைய முழுமையான அன்பு என் மீது வரும் வரையில் நான் உன்னை தொட மாட்டேன்.
 
★ஆசை வெட்கம் அறிவதில்லை என்று கூறுவதைப் போல அந்த
ராவணன் சீதையிடம், நீ என் மேல் இரக்கம் காட்ட மாட்டாயா? இதுநாள் வரை உனக்காக காத்திருந்து நாட்கள் வீணாகி விட்டது என்று நாக்கூசாமல் தன் ஆசைகளை வாய்விட்டுப் பேசினான். தன்னை அவள் அடைவதால் அவளுக்கு உண்டாகும் நன்மைகளை எடுத்து உரைத்தான். “செல்வச் சிறப்பும், ஆட்சிப் பொறுப்பும் உடைய என்னை மதிக்காமல், காட்டில் திரியும் அற்ப மனிதன் ஆகிய ராமனைக் கற்பு என்னும் பேரால் நினைத்துக் கொண்டு இருப்பது அறியாமை. வாழத் தெரியாமை” என்று உரக்க கூறினான்.
 
★நீ என்னை அடைந்தால் இந்த மூவுலகமும் உன்னை வந்து அடையும். ராமனிடம் இருந்து பிரிந்து வந்த பிறகு அவனை நினைத்து அழுவதில் ஒரு பயனும் இல்லை. உன் அழகுக்கு ஏற்றவன் நான் மட்டும் தான். என்னை வேண்டாம் என்று சொல்லாதே. என்னை போல் பலம் கொண்டவன் இவ்வுலகில் எவரும் இல்லை. உனக்கு நல்ல ஒரு வாழ்வு காத்துக் கொண்டு இருக்கிறது. அதை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும். நீ என்னுடன் வந்தால் என் செல்வங்கள் மேலும் பெருகும். நீ ராமனையே நினைத்து கொண்டிருப்பதில் ஒரு பயனும் இல்லை. ராமன் இங்கு வந்து உன்னை மீட்டு செல்ல போவதில்லை.
 
★தேவர்கள் முதலானோர் என் அடிமைகளாக இருக்கின்றனர். நான் உனக்கு அடிமையாக இருக்கிறேன். உனது சிறப்பான அடிமையாகிய என்னை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும் என தன் இரு கரங்களையும் கூப்பி மண்டியிட்டு கேட்டான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை....................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
175 / 23-09-2021
 
ராவணன்,
சீதை உரையாடல்...
 
★உன் விருப்பத்திற்கு மாறாக இங்கு எதுவும் நடக்காது. வீணாக துக்கத்துடன் இருந்து உன் உடலை ஏன் நீ வருத்திக் கொள்கிறாய். உனக்கு சமமான அழகி இந்த உலகத்தில் வேறு யாரும் இல்லை. நகைகள் வைர வைடூரியங்கள் அணிந்து பட்டு துணிகளை அணிந்து மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டிய நீ, ஏன் உன் அழகையும் வயதையும் வீணடித்துக் கொள்கிறாய்?. நான் இருக்கும் இடம் நீ வந்து சேர்ந்து விட்டாய். என்னுடன் சேர்ந்து நீ சகல சந்தோசங்களையம் மற்றும் போகங்களையும் அனுபவித்து மகிழ்ச்சியுடன் இருக்கலாம்.
 
★நீயே பட்டத்தரசியாக இருந்து என் அந்தப்புரம் முழுவதையும் அதிகாரம் செய்து,  ஒரு  சிறந்த தலைவியாக நீ இருக்கலாம். தவத்திலும் செல்வத்திலும் புகழிலும் ராமனை விட நானே மிகவும் மேம்பட்டவன் என்பதை தெரிந்துகொள். காட்டில் மரவுரி தரித்துக் கொண்டு இருக்கும் ஒருவனை இனியும் நம்பாதே. இனி நீ அவனை நீ கண்ணால் பார்க்க முடியாது. அவன் இங்கு வரமட்டான். என் சொல்லை கேட்டு அதன்படி நடந்தால்  சகல ஜஸ்வர்யங்களையும் நீ இங்கு அனுபவிக்கலாம் என்று மாதா சீதையிடம் ராவணன் நயத்துடன் கூறினான்.
 
★சீதை தொடர்ந்து ராவணனிடம் பேசினாள். ராமர், ராட்சசன் ஒருவனை அழித்து விட்டார் என்ற பயத்தில் தானே, அவர்கள் இல்லாத நேரம் பார்த்து என்னை நீ தூக்கிக் கொண்டு வந்தாய்?. அவர்களுக்கு முன்பாக உன்னால் நான் இருக்கும் இடத்திற்கு அருகில் கூட வர முடியாது. இதுவே உன்னுடைய வீரம் என்பதை நான் தெரிந்து கொண்டேன். நீ என்னிடம் கூறிய உன்னுடைய செல்வங்கள், ஜஸ்வர்யங்கள், போகங்கள் என ஒன்றும் எனக்கு தேவை இல்லை. அவற்றை வைத்து நீ எனக்கு ஆசை காட்ட வேண்டாம்.
 
★இதனால் உனக்கு ஒரு பயனும் இல்லை. நான் சக்கரவர்த்தியின் திருமகன் ராமருக்கு உரியவள். ராமரை விட்டு நான் விலக மாட்டேன். உனக்கு ஒரு நல்ல அறிவுரை சொல்கிறேன், கேட்டுக்கொள். முதலில் ராமரிடம் சென்று மன்னிப்பு கேட்டு என்னை அவரிடம் ஒப்படைத்து விட்டு, அவரின் கோபத்தில் இருந்து தப்பித்துக் கொள். ராமர் உன்னை மன்னிப்பார். அவரை சரணடைந்து அவருடைய அன்பை பெற்றுக் கொள். சரணடைந்தவர்களை அவர் ஒன்றும் செய்ய மாட்டார்.
 
★உன்னை சுற்றி இவ்விடத்தில் இருப்பவர்களில் உனக்கு நல்ல புத்தி சொல்கின்றவர்கள் ஒருவர் கூட இல்லையா? ஏன் இவ்வாறு கெட்ட காரியங்கள் செய்து உனக்கு தீராத கெடுதலை உண்டாக்கிக் கொண்டு, உன்னை நம்பி இருக்கும் மக்களுக்கும் அழிவை தேடிக் கொடுக்கிறாய். அரசன் ஒருவன் தன் மனதை கட்டுப்படுத்திக் கொள்ளாமல் போனால் அவனுடைய நாடும் நகரமும் செல்வமும் சீக்கிரம் அழிந்து போகும். உன்னுடைய பொறுப்பை புரிந்து கொண்டு உன்னுடைய எண்ணத்தை விட்டுவிட்டு உன்னையும் உன் அரசையும் காப்பாற்றிக்கொள். இல்லையென்றால் ராம லட்சுமணர்களின் அம்பு சீக்கிரமே இந்த இலங்கையை அழிக்கும் என்று சொல்லி முடித்தாள்.  
 
★மேலும் சீதை, அற்பனே! நீ உண்மையான வீரனாக இருந்தால் போர் புரிந்து என்னை கவர்ந்திருக்க வேண்டும். என் கணவரும், அவரின் தம்பி லட்சுமணரும் இல்லாத நேரத்தில் ஓர் சந்நியாசியாக வந்து என்னை கவர்ந்து சென்ற நீ ஒரு வீரனா? உனக்கு அழிவு காலம் வந்துக் கொண்டிருக்கிறது. அதை மறந்து விடாதே. என் கணவரின் அம்பு வானத்தையும் கிழிக்கச் செய்யும் வல்லமை உடையது. ஜடாயுவிடம் போரிட்டு தரையில் வீழ்ந்து தோற்றவன் தானே. அதனால் ஜடாயுவை சிவன் கொடுத்த வாளால் வெட்டி வீழ்த்தி விட்டாய். அந்த வாள் உன்னிடம் இல்லையென்றால் அன்றே நீ மாண்டு இருப்பாய்.
என்று அவன் செய்த தவறுகளை எடுத்துக் கூறி, அவன் கொடுமைகளைச் சாடினாள்;
 
★‘வஞ்சனையால் மான் ஒன்றினை ஏவித் தன்னை வலையில் சிக்க வைத்தது அவனது கோழைத்தனம் என்று சுட்டிக்காட்டினாள், ‘ஜடாயுவைக் கொன்றது அநீதி, என்று எடுத்து உரைத் தாள். ராமனை அற்ப மனிதன் என்று சொன்னதற்கு எதிராக அவன் வீரத்தையும், வெற்றிகளையும் விவரமாகக் கூறினாள்.அரச மகன் என்பதால் ராமனைத் தான் மணக்க வில்லை, ஆற்றல் மிக்க வீரமகன் என்பதால் தான் மணந்து கொண்டதாய்க் கூறினாள். “வில்லை வளைக்க முடியாமல் பேரரசர்கள் பின்வாங்கிய நிலையில், அதனை வளைத்து அவ்வெற்றியையே தனக்கு மண மாலையாகச் சூட்டினான்” என்பதைச் சுட்டிக்காட்டினாள்.
 
★சீதை பேசியதை கேட்ட ராவணன், பெருங்கோபம் கொண்டான். நான் உன்னிடம் அமைதியாக பேசுகிறேன் என்று நீ என்னை அவமதிக்கின்றாய். என்னால் முடியாது என்பது எதுவும் இல்லை. நான் ராமனை கொன்று உன்னை கவர்ந்து வந்திருந்தால், நீயும் உயிரை மாய்த்துக் கொள்வாய். ஆகவே
தான் உன்னை வஞ்சனை செய்து கவர்ந்து வந்தேனே தவிர போருக்கு பயந்து அல்ல. நான் நினைத்தால் ராம லட்சுமணன் இருவரையும் என் வாளினால் வெட்டி வீழ்த்துவேன். ஆனால் அவர்கள் இத்தகைய அழகு படைத்த உன்னை எனக்கு கொடுத்ததால், அவர்களை கொல்லாமல் இருக்கின்றேன். நான் உன் மீது கொண்ட அன்பின் காரணமாக உன்னை கொல்லாமல் விடுகிறேன்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை...................
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
176 / 24-09-2021
 
சீதையின் ஆவேசம்...
 
★நான் நினைத்தால் ராம லட்சுமணன் இருவரையும் என் வாளினால் வெட்டி வீழ்த்துவேன். ஆனால் அவர்கள் இத்தகைய அழகு படைத்த உன்னை எனக்கு கொடுத்ததால், அவர்களை கொல்லாமல் இருக்கின்றேன். நான் உன் மீது கொண்ட அன்பின் காரணமாக உன்னை கொல்லாமல் விடுகிறேன் எனக் கூறினான் ராவணன். அவனின் பேச்சிற்கு சீதை தன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு பதில் கூறினாள்.
 
★நீ செய்வது, பேசுவது என்று அனைத்தும் தகாத காரியமாக இருக்கிறது. சீதை ஆகிய நான் யார் என்பதையும் என் பிறந்த வீடு, புகுந்த வீட்டின் வரலாற்றை அறிந்து கொண்டு பேசு. என்னை பற்றிய உன் எண்ணத்தை உடனே மறந்துவிடு. மற்றவன் மனைவி என்பவள் எப்போதும் உன்னுடைய  மனைவியாக முடியாது. தர்மத்துடன் உன் மனைவிகளுடன் மகிழ்ச்சியாக இருந்து உனது இனிய  உயிரை காப்பாற்றிக்கொள். இல்லை என்றால் அவமானத்தையும் துக்கத்தையும் நீ விரைவில் அடைவாய் தெரிந்து கொள் என்ற  சீதை, மேலும் பேசினாள்.
 
★கார்த்தவீரியார்சுனனை, பரசுராமர் வென்று ஒடுக்கினார். அந்த பரசுராமரை ஒரு கணப் பொழுதில் வென்றவர் ராமர் என்பதையும் தெரிந்து கொள். தாடகை, விராதன், கரன், தூஷணன், திரிசிரன், கவந்தன் முதலிய அரக்கர்களை அழித்து மக்களை காத்தவர் ராமர் என்பது உனக்கு தெரியாதா? நீ என்னை விரும்புவது உனக்கு அழிவை தேடித் தரும். உன் சக்தியோ அல்லது செல்வமோ என்னை பணிய வைக்க முடியாது. நான் ஒரு போதும் உன்னை மனதால் நினைக்க மாட்டேன் என்பதை தெரிந்து கொள். ஒப்பற்ற உனது செல்வங்களை மட்டுமல்ல, உனது உயிரையும் நீ என் கணவரால் இழக்கப் போகிறாய்.
 
★ராம லட்சுமணர் இருவர் மட்டும் என்று அலட்சியமாய் மனதில் எண்ணாதே. அவர்கள் இருவரும் இரு புலிகள். அந்த இரு பெரும் புலிகளையும் எதிர்க் கொள்ளும் சக்தியும், வலிமையும் உன்னிடம் உள்ளதா? இராம லட்சுமணரின் சக்தியும், வலிமையும் நீ போர் புரியும் போது புரிந்து கொள்வாய் என்று கோபமாக அவன் மீது சீறினாள் சீதை.
 
★சீதை பேசியதில் கோபமடைந்த ராவணன் கர்ஜனையுடன் பேசினான். உன் மீது நான் வைத்திருக்கும் அன்பே உன்னை இப்போது காப்பாற்றியது. இல்லை என்றால் நீ பேசிய பேச்சிற்கு உன்னை கொன்று இருப்பேன். நான் உனக்கு பன்னிரெண்டு மாதம் அவகாசம் கொடுத்தேன். ஆனால் நீ எனக்கு இன்னும் எந்த பதிலும் இதுவரை அளிக்கவில்லை.உனக்கு  நான் கொடுத்த காலம் முடிய இன்னும் 2 மாதம் மட்டுமே இருக்கிறது ஞாபகம் வைத்துக்கொள். அதற்குள் நீ என்னுடையவளாக மாறிவிட வேண்டும்.  
 
★அதற்கு நீ சம்மதிக்கவில்லை என்றால் ஏற்கனவே நான் சொன்னது போல், என் சமையல் அறையில் உன்னை எனது சமையல் கலைஞர்கள் சமைத்து விடுவார்கள்.பிறகு இங்குள்ள அரக்கர்களுக்கு இரையாக்கி விடுவேன் ஜாக்கிரதை என்று
கோபத்துடன்  கத்தினான்.
ராவணனுடைய கோபம் அதிகரித்ததை கண்ட அவனது மனைவிகளில் ஒருத்தியான தான்யமாலி என்பவள், மன்னன் ராவணனிடம்  உங்களை அடைய இந்த மானிட பெண்ணிற்கு பாக்கியம் ஏதும் இல்லை. இவள் அப்படி ஒன்றும் அழகு இல்லை. இவளது பேச்சிற்கு நீங்கள் ஏன் கோவப்படுகின்றீர்கள்? .
 
★வாருங்கள்! நாம் செல்லலாம் என்று வற்புறுத்தி ராவணனை அழைத்தாள். பிறகு ராவணன் அங்கிருந்த அரக்கியர்களை பார்த்து, இவள் என் வசம் ஆகும்படி செய்யுங்கள். அவளிடம் நல்ல வார்த்தை கூறி பேசி பாருங்கள். அப்படி அவள் இணங்க வில்லை என்றால் கடுமையாக பேசி எப்படியேனும் இணங்கச் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி தனது மாளிகைக்கு திரும்பினான்.
 
★இதையெல்லாம் மரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அனுமன், ராவணனை கொன்று இப்பொழுதே சீதையை மீட்டு செல்வேன் என மனதில் எண்ணினான்.சீதையை சுற்றி வளைத்து ராட்சசிகள் நின்று கொண்டார்கள். ராவணன் முன்பு தைரியமாக பேசிய சீதை சுற்றி நெருங்கி நிற்கும் ராட்சசிகளின் அகோர உருவங்களை கண்டு பயந்து நடுங்கினாள்.
 
★ராட்சசிகள் சீதையிடம் பேச ஆரம்பித்தார்கள்.  ராவணன் உன்னை விரும்பும் பொழுது நீ வேண்டாம் என்றா சொல்வாய் மூட பெண்ணே!. ராவணனை யார் என்று தெரிந்துக்கொள். பிரம்மாவின் புத்திரரான புலஸ்த்திய பிரஜாபதியினுடைய பேரன் ராவணன். விச்ரவஸ் ரிஷியின் மகன். அவர் சொல்படி கேட்டு நடந்து கொள். இல்லை என்றால் உன்னை கொன்று விடுவார்கள் என்றாள் ஒரு ராட்சசி.
 
★இன்னோரு ராட்சசி, வானத்து  தேவர்களை எல்லாம் யுத்தம் செய்து துரத்தியடித்த வெற்றி வீரன் ராவணன் உன்னை தேடி வருகின்றார். சூரியனும், அந்த வாயுவும், அக்னியும்  கூட எங்கள் ராவணனை கண்டு மிகுந்த பயம் கொள்வார்கள். ராவணனுக்கு சமமான வீரன் இந்த உலகத்தில் ஒருவரும் இல்லை. இது உனக்கு தெரியவில்லையா? தானாகவே ஒரு பாக்கியம் உன்னை வந்து சேருகிறது, அதை வேண்டாம் என்று நீ சொல்வது மடத்தனமாக இருக்கிறது. கர்வப்பட்டு அழிந்து போகாதே. அவர் சொல்படி நீ கேட்காவிட்டால், நீ பிழைக்க மாட்டாய் என்றாள்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை........................
 
மகாபாரத காவியம் -1 புத்தகத்தை
கீழே கொடுக்கப்பட்டு உள்ள வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி கூரியரில்  பெறக் கேட்டுக் கொள்கிறேன். கூரியர் கட்டணம் உள்பட ரூ400/- மட்டுமே.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்.
 
மகாபாரத காவியம்
(பாகம்-1)
புத்தக விலை ரூ.400/-
(கூரியர் உள்பட)
 
N.SUBHARAJ
FEDERAL BANK
ALAGAPURAM BRANCH
A/C NO:15270100023870
IFSC CODE:FDRL0001527
 
 
Google pay:
9944110869
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
177 / 25-09-2021
 
அரக்கியரின்
அச்சுறுத்தல்...
 
★ராவணன் திரும்பி சென்ற பிறகு அரக்கிகள் சீதையை சூழ்ந்து கொண்டனர். அவர்கள் சீதையிடம், அரசன் ராவணன் உன் மீது உண்மையான ஆசை வைத்து இருக்கிறார். அவரை நீ ஏற்றுக் கொள். இல்லையேல் உன்னை நாங்களே கொன்று தின்று விடுவோம் என்றனர். நீ ராவணனை ஏற்றுக் கொள்ள முடியாது  என்றால் உன்னால் உயிர் வாழ முடியாது. இனியும் ராமன் இங்கு வந்து உன்னை காப்பாற்றுவான் என எண்ணிக் கொண்டு இருக்காதே.
 
★ராவணன் இம்மூவுலகுக்கும் அதிபதி ஆவான். அவனை நீ ஏற்று கொள்வதை விட உனக்கு வேறு வழி இல்லை என பலவாறு சீதையை துன்புறுத்திக் கூறினர். இவர்களின் துன்புறுத்தல்களை கேட்ட திரிசடை தூக்கத்தில் இருந்து எழுந்தாள். உடனே அவள் மற்ற அரக்கிகளிடம், இனியும் நீங்கள் சீதையை துன்புறுத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள். சீதையின் கணவன் ராமன், சீதையை மீட்டுச் செல்ல போகிறார். இது நான் கண்ட கனவு ஆகும். பொதுவாக விடியற்காலையில் காணும் கனவுகள் பலிக்கும் என்றுதான் சொல்வார்கள் என்றாள்.
 
★இதைக் கேட்ட மற்ற அரக்கிகள் உன் கனவை விரிவாக கூறு என்றனர்.  வெள்ளைக் குதிரை கொண்ட தங்கத்திலான புஷ்பக தேரில் ராமனும் லட்சுமணனும் வந்து இந்த சீதையை மீட்டுச் சென்றனர். ராவணன் அத்தேரில் இருந்து தள்ளப்பட்டு, கழுதை மீது ஏறி தென் திசை நோக்கிச் சென்றான். அவனுடன் தம்பி கும்பகர்ணனும் சென்றான். விபீஷணன் மட்டும் யானை மீது அமர்ந்திருந்தான். இலங்கை நகரம் தீப்பிடித்து எரிவதுபோல  நான் கனவு  கண்டேன் என்றாள்.
 
★இதைக் கேட்ட சீதை மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். திரிசடை! நீ கண்ட கனவு பலித்தால் நான் நிச்சயம் உனக்கு தேவைப்படும் உதவி செய்வேன் என்றாள். இருந்தாலும் சீதை, ராவணனின் தொல்லைகளையும், மற்ற அரக்கிகளின் பயங்கரமான  அச்சுறுத்தல்களையும் நினைத்து மிகவும் வேதனையடைந்தாள்.
ஆனால் ஒவ்வோரு ராட்சசிகளாக மாற்றி மாற்றி சீதையிடம் பேசிக்கொண்டே இருந்தார்கள்.
ராவணனைப் பற்றி மிகவும் பெருமையாகவும், ராமரை சிறுமைப்படுத்தியும் தங்களால் இயன்ற வரை அமைதியாகவும், சில நேரங்களில் பயமுறுத்தியும் பேசினார்கள். இறுதியில் ஒருத்தி சொல்ல வேண்டியது அனைத்தையும் சொல்லி விட்டோம் இனி உன்னுடைய விருப்பம் என்று கூறினாள்.
 
★ராமர் எப்படியும் நாம் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து, இந்த ராட்சதர்கள் அனைவரையும் அழித்து, நம்மை  மீட்பார் என்று மன தைரியத்தில் இருந்த சீதை, அந்த ராட்சசிகளிடம் பேச ஆரம்பித்தாள். சூரியனை சுற்றி அதனுடைய பிரகாசமானது பரவி  நிற்பது போல் நான் எனது பதி ராமனை சுற்றியே நின்று கொண்டிருப்பேன். நீங்கள் என் ராமரைப் பற்றிய மிகத் தவறான தகவல்களை தெரிந்து வைத்துக் கொண்டு பேசுகின்றீர்கள். ஒரு மனித பெண்ணை ஒரு ராட்சசன் விரும்புவது முறையில்லை.
ஒரு மனித பெண் எப்படி ஓர் ராட்சதனுடன் இருக்க முடியும்?.
 
★நீங்கள் சொல்வது அனைத்தும் பாவகரமான வார்த்தைகளாக இருக்கிறது என்றாள். இதனைக் கேட்ட ஒரு ராட்சசி, சீதையிடம் பேசி பிரயோஜனம் இல்லை, அவளைத் தின்று விடலாம் என்றாள். இன்னொரு ராட்சசி, அவள் மார்பை கிழித்து அந்த இதயத்தை நான் தின்று விடுகிறேன் என்றாள். ராவணன், சீதை எங்கே என்று கேட்டால், சீதை துக்கத்தில் இறந்து விட்டாள் என்று நாம் சொல்லி விடலாம். இதனால் ராவணன் இனி எந்த கவலையும் சிறிதும் இல்லாமல் நிம்மதியாகத் தூங்குவார். இப்போது இவளை நாம் அனைவரும் பங்கிட்டு சாப்பிட்டு மகிழ்ச்சியுடன் இருப்போம். பிறகு ஒவ்வொரு ராட்சசியும் தனது பங்கிற்கு சீதையின் ஒவ்வொரு பாகமாக சொல்லி, தின்று விடுவதாக தங்களுக்குள் பேசிக் கொண்டு இருந்தார்கள்.
 
★ராட்சசிகளின் கொடூரமான பேச்சை கேட்ட சீதை, ராமரை நினைத்துக் கொண்டாள்.
தண்டகாரண்ய காட்டில் சுமார்  14000 ராட்சசர்களை சில கணங்களில் கொன்ற ராமர், ஏன் இன்னும் என்னை மீட்டு போக இங்கு வரவில்லை? நான் இருக்கும் இடம் இன்னும் அவருக்குத் தெரியவில்லையா? தெரிந்தால் சும்மா இருப்பாரா? என்று நினைத்துக் கொண்டே பலமாக  வாய்விட்டு அழுதாள். சீதையின் அழுகையை கண்டு கொள்ளாத ராட்சசிகள் அவளை பயமுறுத்தி தங்கள் வழிக்கு கொண்டு வந்து விடலாம் என்று எண்ணி, சீதையை எப்படி உண்பது என்று அவள்  முன்பாக  பயமுறுத்தி பேசிக்கொண்டே இருந்தார்கள்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை....................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
178 / 26-09-2021
 
சீதையின் துயரம்...
 
★ராமரைப் பற்றி சீதை பல வகையில் நினைக்க ஆரம்பித்தாள். ராட்சதன் தம்மை தூக்கி வந்ததும், தாம் அவரை பிரிந்த துக்கத்தில் தவத்தில் ஈடுபட்டு, ஆயுளைக் கழித்து விடலாம் என்ற எண்ணத்தில் காட்டில் தவத்தில் அமர்ந்து விட்டாரோ என்று நினைத்தாள். மனம் துக்கத்தில் இருக்கும் போது அமைதியாக தவம் செய்ய முடியாது. ஆகவே தவத்தில் இருக்க வாய்ப்பில்லை என்று நினைத்தாள். அதன் பிறகு நம் மீது ராமருக்கு அன்பு குறைந்து விட்டதோ? அதனால்தான்  நம்மை தேடி வரவில்லையோ? என்று நினைத்தாள்.
 
★நம் மீது ராமர் காட்டும் அன்பு உண்மையானது, அவர் நம்மை மறக்க மாட்டார், இப்படி ஒரு எண்ணம் நமக்கு வரக்கூடாது, இந்த எண்ணம் பாவமாகும் என்று நினைத்தாள். அதன் பிறகு ராவணன் நம்மை ஏமாற்றி தூக்கி வந்தது போல், ராமரையும் லட்சுமணனையும் ஏமாற்றி யுத்தம் செய்து அவர்களைக் கொன்று இருப்பானோ? என்று நினைத்தாள். ராமர் மிகவும் அறிவும் வலிமையும் உடைய வீரர். அவருடன் லட்சுமணனும் இருக்கின்றான். அவரை எப்படி ஏமாற்ற நினைத்தாலும் அவரை ஏமாற்றி யுத்தம் செய்து வெற்றி அடைய முடியாது என்றும் நினைத்தாள்.
 
★அதன் பிறகு நான் இல்லாத துக்கத்தில் ராமர் இறந்து விட்டாரோ? அப்படி இருந்தால் அவர் சொர்க்கத்திற்கு சென்றிருப்பார். நான் அவரை பிரிந்த துக்கத்தில் இன்னும் உயிரோடு இருக்கிறேனே! நான் எவ்வளவு பெரிய பாவியாக இருக்கிறேன். இப்போதே எனது உயிரை விட்டுவிட்டு ஶ்ரீ ராமர் இருக்கும் சொர்க்கத்திற்கு சென்று விடலாம் என்று மனதில் நினைத்து வருந்தினாள்.
 
★சீதைக்கு வாழ்க்கையே கசந்துவிட்டது.  துன்பத்துக்கும் ஒர் எல்லை உண்டு. உயிர் அவளுக்குச் சுமையாய் விளங்கியது. உயிருக்கும் உணர்வுக்கும் மதிப்புத் தாராமல் தன் உடலை அரக்கன் ராவணன் விரும்புவதை அவள் மிகவும் வெறுத்தாள்.  அழகு தனக்கு எதிராகப் போரிடுவதை அறிந்தாள்.  “மானம் இழந்த பின் வாழாமை இனியது” என்ற முடிவுக்கு வந்தாள். உயிர் விடுதற்குத் துணிந்தாள். அருகில் இருந்த குருக்கத்திச் செடி அவளுக்கு உதவியாய் நின்றது. அதனைச் சுருக்குக் கயிறாய் மாற்ற நினைத்தாள். வாழ்க்கையின் கரை ஓரத்தைக் கண்டாள். நூலிழையில் அவள் உயிர் ஊசலாடிக் கொண்டு இருந்தது.  
 
★அப்போது வெளியே சென்று இருந்த திரிசடை அங்கு வந்து, ராட்சசிகள்,சீதையை மிகவும் பயப்படுத்தி   பேசிக் கொண்டு இருப்பதை பார்த்தாள். அவளை பயமுறுத்தி இப்படி எல்லாம் பேசாதீர்கள் என்று கண்டித்தாள். இந்த சீதை என்பவள் மிகவும் புண்ணியவதி. இவளிடம் இப்படி நீங்கள் பேசிக் கொண்டிருந்தால் விரைவில் நாம் அனைவரும் அழிந்து போவோம். அவளிடம் நல்ல விதமாக பேசி அவளுடைய அருளை கேட்டு பெற்றுக் கொள்ளுங்கள் எனக்  கூறினாள். பயந்த ராட்சசிகள் அனைவரும் சீதையை விட்டு விலகி நின்றார்கள். திரிசடை பேசியதை கேட்ட சீதை உடனடியாக மனம் மாறி தனது உயிரை விடும் எண்ணத்தை மாற்றிக் கொண்டு தைரியமடைந்தாள்.
 
★அனுமன், நடந்த இந்த எல்லா நிகழ்ச்சிகளையும் ஒரு நாடகம் போல் கவனித்து வந்தான்.
மரத்தின் மீது அமர்ந்திருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டு பல வகையில் சிந்தனை செய்தான். இது தான் சரியான தருணம் நான் அன்னை சீதையிடம் பேசுவதற்கு என நினைத்தான்.சீதை இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டோம். இது ராட்சசர்களுடைய நகரம் இங்கு காவல் மிகவும் பலமாக இருக்கிறது. இப்போது நாம் இங்கிருந்து ராமர் இருக்குமிடம் சென்று சீதை இருக்குமிடத்தை அவரிடம் சொல்லி, அதன் பிறகு ராமர் லட்சுமணர்கள் இங்கு புறப்பட்டு வருவதற்குள், சீதை துக்கம் தாளாமல் தன் உயிரையே விட்டு விட்டால் என்ன செய்வது? எனவே சீதையிடம் ராமன் விரைவில் வருவார், அவரது உத்தரவின் படியே உங்களை தேடி அனுமனாகிய நான் வந்திருக்கிறேன் என்ற செய்தியைச் சொல்லிவிட்டு, நாம் இங்கிருந்து செல்லலாம் என்று முடிவு செய்தான் அனுமன்.
 
★யாருக்கும் தெரியாமல் மாதா சீதையிடம் சென்று எப்படி பேசுவது என்று சிந்தனை செய்தான். இதுவே நல்ல சமயம் என்று சீதையின் அருகில் செல்லலாம் என்று நினைத்தான். ஆனால் சீதையின் முன்பாக திடீரென்று ஒரு வானரம் சென்று பேச ஆரம்பித்தால் ராவணன் ஏதோ ஏமாற்று வேலை செய்கின்றான் என்று நம்மை கண்டு பயத்தில் பலமாக கத்தி கூச்சலிட்டால், ராமர் கொடுத்த மோதிரத்தை காண்பிக்க முடியாமலே போய்விடும். மாதா சீதையை சுற்றி தூங்கிக் கொண்டிருக்கும் ராட்சசிகள் அனைவரும் வந்து விடுவார்கள். அவர்களை யுத்தம் செய்து சமாளிக்கலாம். ஆனால் மேலும் பல ராட்சதர்கள் வருவார்கள் அனைவரையும் நமது வலிமையால் சமாளித்து விடலாம்.
 
★ஆனால், அங்கு  இவ்வளவு ராட்சசர்களை எதிர்த்து யுத்தம் செய்து சோர்வு ஏற்பட்டாலோ, உடலுக்கு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டாலோ மீண்டும் இங்கிருந்து நூறு யோசனை தூரம் தாண்ட முடியாமல் போய்விடும். இதனால் ராமருக்கு சீதை இருக்குமிடத்தை சொல்ல முடியாமல் போகும். எனவே ராமரின் தூதன் நான் என்பதை முதலில் சீதைக்கு புரிய வைத்துவிட வேண்டும் என்று எண்ணினான். அனைத்திற்கும்  முன்பாக அந்த அரக்கிகள் தூங்க வேண்டும். அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என தீர்மானித்தான். பின்னர்  ஒரு வழியை கண்டுபிடித்து அதனை செயல்படுத்த ஆரம்பித்தான்.
 
நாளை.......................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
179 / 27-09-2021
 
அனுமன்,
சீதையை சந்தித்தல்...
 
★அனுமன் ஒரு மந்திரத்தைச் சொல்லி அங்கிருந்த அரக்கிகள் அனைவரையும் ஆழ்ந்த தூக்கத்திற்கு போகும்படிச் செய்தான். அரக்கிகள் எல்லாம் ஒன்றாக தூங்குவதை என்றும் காணாத சீதை இன்று அவர்கள் ஒன்றாக தூங்குவதைக் கண்டாள். சீதை தனக்கு ஏற்பட்ட துன்பங்களை நினைத்து மிகவும் வருந்தினாள். என் ராமன் எப்போது வந்து என்னை மீட்க போகிறார்?.  மாய மானின் பின்னால் என் ராமனையும் லட்சுமணனையும் அனுப்பி வைத்தேனே. அதற்கு பதிலாகத் தான் இன்று இந்த மாதிரி ஒரு கொடுமையை அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன் என நினைத்து வேதனைப்பட்டாள்.
 
★சோகத்தின் எல்லையில் இருப்பவளை வேகமாகக் காத்தல் வேண்டும். அதற்கு என்ன மருந்து? ‘ஶ்ரீ ராமன்’ என்ற திருப்பெயர்தான். ‘ஶ்ரீ ராமன் வாழ்க - ஶ்ரீராமஜயம்' என்று குரல் கொடுத்தான், மரத்தில் மறைந்து அமர்ந்து இருந்த அனுமன்.
அப்பெயர், அவளுக்கு உயிரைத் தந்தது. புத்தொளியைக் கண்டாள். அவள் பார்வை, ஒலி வந்த திக்கை நோக்கிற்று.
மரத்தின் மீது இருந்து ராம நாமத்தை சத்தமாக ஜபிக்க ஆரம்பித்தான். ராமருடைய சரித்திரத்தையும் , பவித்திரமான குணங்களையும் சீதை நன்றாக கேட்கும்படி, மெதுவான குரலில் தசரதருடைய குமாரர் ராமர் என்று ராமப்பற்றி சொல்ல ஆரம்பித்து, சீதையை தேடி வந்திருப்பது அனுமன் என்று முடிக்கும் வரையில் கூறினான் அனுமன்.
 
★அனுமனின் வார்த்தைகளில் மகிழ்ச்சி அடைந்த சீதை யாருடைய குரல் இது என்று சுற்றிலும் தேடினாள். ஒருவரும் அவளது கண்களுக்கு தெரியவில்லை. மரத்தின் மீது பார்த்தாள். ஓரு வானரம் மட்டும் மரத்தில் மறைந்திருப்பதை கண்டாள். காதில் விழுந்த வார்த்தைகளும், கண் முன்பே தெரியும் வானரமும், தனது கனவாக இருக்கும் என்று யூகித்தாள் சீதை. ஆனால் இப்போது விழித்து விட்டோமே! இன்னும் இந்த வானரம் எனது கண்ணுக்கு தெரிகிறதே என்று குழப்பமடைந்தாள்.
 
★சில கனங்களில் மனம் தெளிவு அடைந்த சீதை இது கனவல்ல நிஜம் தான். என் காதில் விழுந்த சொற்கள் உண்மையாகவே இருக்கட்டும் என்று அனைத்து தெய்வங்களையும் மனமாற வணங்கினாள். என் ராமரிடம் இருந்து தூதுவன் இங்கு வந்து இருக்கின்றான் இது நிச்சயம் உண்மையாக இருக்க வேண்டும் என்று அனுமனுக்கு தனது வணக்கத்தை தெரிவித்தாள் சீதை. அப்பொழுது ராமனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டு அனுமன் சீதை முன் தோன்றி சீதையை தொழுது கரம்கூப்பி வணங்கினான். அனுமன் திடீரென்று தோன்றியதால் சீதை அவனைப்  பார்த்து பயந்தாள்.
 
★அன்னையே! தாங்கள் பயப்பட வேண்டாம். நான் ஶ்ரீராமரின் தூதன் என்று கூறிய அனுமன்,  அவள்தான் சீதை என்பதை அறிந்தாலும் அதை அவள் மூலமாகவே உறுதிப் படுத்திக் கொள்ள எண்ணினான்.
அனுமன் சீதையை வணங்கி சீதையிடம் கேள்வி கேட்டான். தாயே! மானிடப் பெண்ணாக இருக்கும் உங்களின் முகம் கண்ணீருடன் இருக்கின்றது. நீங்கள் யார்? இந்த வனத்தில் ராட்சசிகளுக்கு நடுவில் ஏன் இருக்கின்றீர்கள் என்று தயவு செய்து சொல்லுங்கள். ராமரிடம் இருந்து ராவணனால் தூக்கி வரப்பட்ட சீதை தாங்கள் தானா? என்று கேட்டான் அனுமன்.
 
★அனுமனின் பேச்சில் மகிழ்ந்த சீதை நான் தான் சீதை. விதேஹ ராஜன் ஜனகரின்  மகள். ராமரின் மனைவி. பன்னிரண்டு வருட காலம் சகல சுகங்களையும் ராமருடன் அயோத்தியில் நான் அனுபவித்தேன். மன்னர் தசரதர் ராமருக்கு பட்டாபிஷேகம் செய்ய எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். அப்போது கைகேயி தன் மகன் பரதனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும் என்றும், ராமரை பதினான்கு வருடம்  காட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் ஓர் வரத்தைக் கேட்டுக் கொண்டார். அதன்படி தந்தையின் வாக்கை காப்பாற்ற ஶ்ரீராமரும் ,அவருடன் நானும், ராமரின் இளவலான  லட்சுமணனும்   வனவாசம் வந்தோம்.
 
★அப்போது ராவணன் எங்களை வஞ்சகம் செய்து,  என்னை பலாத்காரமாக தூக்கி வந்து இந்த வனத்தில்  சிறைவைத்து இருக்கிறான்.  ராவணனின் சொல்படி நான் கேட்க வேண்டும் என்று எனக்கு பன்னிரண்டு மாத காலம் அவகாசம் கொடுத்து இருக்கின்றான். இந்த காலம் முடிய இன்னும் இரண்டு மாதங்களே இருக்கிறது அது முடிந்தவுடன் அவன் என்னை கொன்று விடுவான் என்று சொல்லி முடித்தாள் சீதை. மேலும் அனுமனைப் பார்த்து அன்பு மிக்க வானரனே! நீ யார் ? என்பதனைச் சொல்வாயாக என்று கேட்டாள்.
 
★தாயே! நான் ராமனின் அடியேன் ஆவேன். என் பெயர் அனுமன். ஶ்ரீ ராமனின் கட்டளையினால் தங்களை தேடி இங்கு வந்தேன். தங்களை இலங்கை முழுவதும் தேடி கண்டு பிடிக்க முடியாமல் கடைசியில் இங்கு கண்டுவிட்டேன். நான் தங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் என்றான். அனுமன் பேசியதைக் கேட்ட சீதை நிச்சயம் இவன் ஒரு அரக்கனாக இருக்க முடியாது என நினைத்தாள். பிறகு சீதை, அனுமனை உற்று நோக்கினாள். இவன் என் கணவன் ஶ்ரீராமன் பெயரை கூறுவதால் நிச்சயம் இவன் மிக  நல்லவனாக தான் இருக்கக்கூடும் என மனதில் நினைத்தாள்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.................
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
180 / 28-09-2021
 
அனுமன்,
சீதை உரையாடல்...
 
★ராமர் வந்து மீட்கும்  வரையில், சீதை  தன் துயரத்தை போக்கி  தைரியமாக இருக்க அவளுக்கு ஆறுதல்  கொடுக்க வேண்டும் என்று அனுமன் சீதையிடம் பேச ஆரம்பித்தான். தாயே! மாபெரும் வீரரான தசரத சக்கரவர்த்தியின் திருமகன் ராமர், உங்களுக்கு தன்னுடைய நலத்தை சொல்லி அனுப்பினார். அவருடைய அன்பு உடன்பிறப்பான லட்சுமணன் உங்களை நினைத்து துயரப்பட்டு கொண்டிருக்கின்றார். அவர் தன்னுடைய வணக்கத்தை உங்களுக்கு சொல்லச் சொல்லி என்னை அனுப்பினார்.
 
★ஶ்ரீ ராம லட்சுமணர்களின் பெயர்களை கேட்டதும் சீதையின் உள்ளம் மிகுந்த மகிழ்ச்சியால் பொங்கியது. அடுத்த கனம் சீதையின் மனதில் வந்திருப்பது ராவணனாக இருக்குமோ?என்று மீண்டும் ஒரு  பயம் வந்தது. அனுமனின் பேச்சில் நம்பிக்கை இழந்த சீதை நம்மை ஏமாற்ற  இப்படி  ராவணன் உருவத்தை மாற்றிக் கொண்டு வந்து இருக்கின்றானா? என்று நினைத்து அவளது மனம் தடுமாறியது. வந்திருப்பது ராமரின் தூதுவனா? இல்லை ராவணனா? என்று கேள்விக்கு விடை தெரியாமல் குழப்பத்தில் அனுமனை பார்க்காமல் திரும்பி அமர்ந்து கொண்டாள்.
 
★இதைக் கண்ட அனுமன் கைகூப்பியபடி சீதையின் அருகில் சென்றான். உடனே சீதை பேச ஆரம்பித்தாள். நான் முன்பு உன்னிடம் ஏமாந்தேன். அன்று தண்டகாரண்ய வனத்தில் ராமருடன் இருக்கும் போது சந்நியாசி வேடத்தில் வந்து என்னை ஏமாற்றி தூக்கிக் கொண்டு வந்தாய். இப்போது வானர வேடத்தில் வந்து, ஏதேதோ பேசி என்னை மிகவும் வருத்துகிறாய், ராவணா! இது உனக்கு நல்லதல்ல. துக்கத்தில் இருக்கும் என்னை மாயங்கள் செய்து தொந்தரவு செய்யாதே!. விலகிப்போ! என்று கூறி மௌனமானாள் சீதை.
 
★ராமனிடமிருந்து சீதையை ராவணன் ஏமாற்றி தூக்கி வந்ததால், சீதை பயத்தில் இருக்கிறார் என்பதை உணர்ந்த அனுமன் அவளின் பயத்தையும் சந்தேகத்தையும் போக்க வேண்டும் என்று யோசித்து மீண்டும் சீதையை வணங்கி விட்டு, அவளிடம்பேசினார். பூமியில் ஆளும் அரசர்கள் அனைவரும் தலைவனாக மதிக்கும் ராமர் அனுப்பிய தூதுவன் நான். எனது பெயர் அனுமன். வானரங்களின் அரசனான சுக்ரீவனுடைய ராஜ்யத்தில் மந்திரியாக இருக்கிறேன்.
 
★ராமர் தங்களை விட்டு பிரிந்த பிறகு அவருக்கு சூரிய குமாரான சுக்ரீவனின் நட்புக் கிடைத்தது. சுக்ரீவனுடைய அண்ணன் வாலி. அவன் சுக்ரீவனுக்கு தீங்கு இழைத்ததால் ராமர் அவனை தன் பாணத்தால் வீழ்த்தினார். ராவணன் தங்களை கவர்ந்து சென்ற போது, தங்களுடைய ஆபரணங்களை  நாங்கள் இருந்த ரிஷியமுக பர்வதத்தில் தூக்கி எறிந்தீர்கள். அதை நாங்கள் ஓர் துணியில் கட்டி வைத்திருந்தோம். பிறகு நாங்கள் அந்த அணிகலன்களை ராமரிடம் காண்பித்தோம். ராமர் அணிகலன்களை பார்த்து அது தங்களுடைய அணிகலன்கள் தான் என்பதை உறுதி செய்தார்.
 
★ஆனால் ராமர் தங்களுடைய அணிகலன்களை பார்த்து மிகவும் துன்பப்பட்டார். பின்னர்
ராமருடைய யோசனையின் பேரில், வாலிக்குப்பின்  அந்த கிஷ்கிந்தைக்கு அரசனான சுக்ரீவன் இட்ட ஆணைப்படி,  பல மலைகள் குகைகளிலும் தங்களை தேடி இறுதியில் நூறு யோசனை தூரம் கடலைத் தாண்டி குதித்து இந்த இலங்கையில் இறங்கினேன். நான் ராம தூதுவன் தாயே !என்னை சந்தேகிக்க வேண்டாம். எனது வார்த்தையே நம்புங்கள் என்று அனுமன் கண்களில் நீர் ததும்ப சீதையிடம் கூறினார். அனுமன் பேசிய பேச்சு சீதைக்கு தைரியமும் நம்பிக்கையும் தந்தது.
 
★சீதை அனுமனிடம் பேச ஆரம்பித்தாள். வானர உருவம் கொண்டு  இருக்கும் உங்களை நான் சந்தேகப்பட்டேன் என்று நீங்கள் வருத்தப்படாதீர்கள். வஞ்சக ராட்சதன் ராவணனால் ஏமாற்றப்பட்டு இங்கு தூக்கி வரப்பட்டேன். இதனால் எதையும் நம்ப முடியாமல் நான் மிகவும் பயப்படுகிறேன். நீங்கள் எப்படி, எங்கு  ராமரை சந்தித்து நட்பு கொண்டீர்கள் என்று விவரமாக சொல்லுங்கள் என சீதை அனுமனிடம் கேட்டுக் கொண்டாள்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை......................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
181 / 29-09-2021
 
தொடரும் அனுமனின்
உரையாடல்...
 
★ராமரும் லட்சுமணரும், என்னை ராவணன்  கவர்ந்து சென்ற செய்தியை எவ்வாறு அறிந்தனர் எனக் கேட்டாள் சீதை. அதற்கு அனுமன், ராவணன் தூண்டுதலால் மாய மான் போல் வந்த மாரீசனை ராமன் கொன்று விட்டார். ஆனால் அவனோ இறக்கும் தருவாயில் சீதா! தம்பி லட்சுமணா! என கூறிக் கொண்டு இறந்தவிட்டான். தாங்களோ அது ராமர் என நினைத்து இளவல் லட்சுமணரை கடிந்து பேசி ராமரை காண செல்லுமாறு அனுப்பிவிட்டீர்கள்.
 
★பர்ணசாலை நோக்கி வரும் வழியில் தம்பி லட்சுமணன் வருவதை கண்ட ஶ்ரீ ராமர், சீதையின் தூண்டுதலால் தான் லட்சுமணன் இங்கே வந்து உள்ளான் என்பதை புரிந்து கொண்டார். பிறகு தங்களை தனியே விட்டு வந்ததால் அங்கு தங்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்து விடுமோ என நினைத்து இருவரும் மிக  விரைவாக பர்ணசாலை வந்தடைந்தனர். அங்கு தங்களை காணாமல் ராமர் மிகவும் துன்பப்பட்டார்.
பிறகு அவர்கள் இருவரும் தேரின் சுவடை வைத்து தெற்கு நோக்கி வந்தனர். அவர்கள் வரும் வழியில் ஜடாயு உயிர் துறக்கும் நிலையில் இருப்பதை கண்டனர்.
 
★ஜடாயு அவர்களிடம் ராவணன் தங்களை கவர்ந்து சென்ற செய்தியை கூறினார். பிறகு ராமரும், லட்சுமணரும் தங்களை தேடி எங்களை வந்தடைந்தனர் என்றான்.  பிறகு ராமரின் கட்டளைப்படி, சுக்ரீவன் தங்களை தேடச் சொல்லி ஒரு பெரும் வானரர்கள் சேனையை எட்டுத் திசைகளுக்கும் செல்லுமாறு அனுப்பினார். தெற்கு திசையில் தங்களை தேடி வந்த வானர சேனைகளின் தலைவன் அங்கதன் ஆவான். அவன் தங்களை தேடும் பொருட்டு என்னை இலங்கைக்கு அனுப்பியவன். நான் தங்களை கண்டுபிடித்து விட்டு வருவேன், என்று எனக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றான்.
 
★சீதை, அனுமன் சொன்னதை கேட்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தாள். மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தாள். சீதை அனுமனிடம் ராமர் நலமாக உள்ளாரா? என வினவினாள். ராமர் நலமாக உள்ளார். ஆனால் உங்களை நினைத்து மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறார். லட்சுமணரும் மிக நலமாக இருக்கிறார். ஆனால் அவரும் உங்களை கஷ்டத்தில் இருந்து காப்பாற்ற முடியாமல் போனதே என்ற வருத்தத்தில் உள்ளார் என்றான்.இதைக் கேட்ட சீதை, ராமனுக்கு ஏற்பட்ட துன்பத்தை நினைத்து மிகவும் வருந்தினாள்.
 
★அனுமனின் மென்மையான பேச்சானது காட்டுக் கூச்சல் கேட்டுப் பழகிய அவளுக்குத் தெய்வ கீதம் கேட்பதுபோல் இருந்தது. அவள் உள்ளம் உருகியது. ராமன் பெயரைக் கேட்டதும் அவளுக்கு வாழ்க்கை வாயில் தென்பட்டது. வேதங்கள் மறையவில்லை, அவற்றின் நாதங்களை அவளால் கேட்க முடிந்தது.  நீதியும் அறமும் அழிய வில்லை,  நேர்மைகள் தழைக்கின்றன என்பதை உணர்ந்தாள்.  “ராமன் தன்னைக் கைவிடவில்லை, உயிர்க் காவலனாய் இருக்கிறான்” என்பதை அறிந்தாள். மேலும் ராமனிடமிருந்து தான் தூதனாக வந்ததையும், அவன்தான் அனுப்பி வைத்தான் என்பதை யும் கூறி ராமன் திருமேனி அழகைப் பற்றிக் கூறினான்;
 
★“ராமன் திருவடிகள் தாமரை மலரைப் போன்றும், பவழத்தைப் போன்றும் உள்ளன. கால் விரல்கள் இளஞ்சூரியனைப் போன்றன. நகங்கள் வைரத்தினும் அழகியவை. கணுக்கால் அம்பறாத் தூணியை போன்றன. தொடைகள் கருடனின் கழுத்தைப் போன்றன. உந்தி மகிழ மலருக்கு ஒப்பாகும். மார்பு திருமகள் உறையும் இடமாகும். கைகள் ஐராவதம் என்னும் யானையின் துதிக்கை போன்றவை. கை நகங்கள் அரும்பு போல கூர்மையானவை. தோள்கள் மலை போன்றன. கழுத்து திருமாலின் கரத்தில் உள்ள சங்கு போன்றது. முகமும் கண்களும் தாமரை மலர்கள் போன்றவை. பல்லுக்கு முத்தும், நிலவின் துண்டும் உவமைகள். குனித்த புருவம் வளைந்த வில் போன்றது. நெற்றி எட்டாம்நாள் சந்திரன் போன்றது. நடைக்கு எருதும், யானையும் உவமை” என்றான்.
 
 ★அவனுடைய ஒவ்வொரு சொல்லும் அமுதத் துளிகளாய் அவள் செவிகளில் நிறைந்தன. தேன் துளிகளாய் இனித்தன.
 “உன் அமுத மொழிகள் என் மனத்தை உருக்கி விட்டது. என் உயிரைத் தளிர்க்கச் செய்து விட்டாய்,அனுமா!  வாழ்க நீ” என்று வாழ்த்தினாள். பின்னர் அனுமனை நோக்கி வேறு ஏதாவது கூற முடியுமா  என்று கேட்டாள்.ராமனுக்கும் சீதைக்கும் மட்டுமே தெரிந்த சுவை யான அனுபவங்கள் சில ராமரால்  அனுமனிடம் தெரிவிக்கப் பட்டு இருந்தன. அவற்றுள் இரண்டை அவன் எடுத்துரைத்தான்.
 
★நாட்டைவிட்டுக் காட்டுக்குச் சென்றபோது, அயோத்தியின் மதிலைக் கடக்கும் முன்பு, “காட்டை அடைந்து விட்டோமா?” என்று கேட்ட குழந்தைத்தனமான சீதையின் வினாவினை  நினைவுப்படுத்தினான். அடுத்து
 சுமந்திரனிடம் பூச்செடிகளையும் கிளியையும். கவனித்துக் கொள்ளும்படி தங்கையர்க்குச் சொல்லி அனுப்பிய அன்புச் செய்தியை அறிவித்தான். தன்
 கூற்றுகளால் அவளை நம்ப வைத்த அனுமன், உறுதி தரும் அடையாளம் ஒன்றனையும் அவள் முன் நீட்டினான்.
 
★ராமன் கை விரலை அழகு படுத்திய மோதிரமாய் அது இருத்தலைக் கண்டாள். அதை அன்புடன் வாங்கிக் கொண்டாள். வஞ்சகர் நாட்டுக்கு வந்ததால் அது மாசு பட்டுவிட்டதே என்று கூறி கண்ணீரால் அதனைக் குளிப்பாட்டினாள்.  அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.  இறந்தவர் உயிர் பெற்றது போலவும், இழந்த மாணிக்கத்தைப் பெற்ற நாகத்தைப் போலவும், விழி பெற்ற குருடனைப் போலவும், பிள்ளையைப் பெற்ற மலடியைப் போலவும் அவள் விளங்கினாள்.
 
★“என் உயிரைத் தந்த உத்தமன் நீ” என்று அனுமனை அவள் பாராட்டினாள்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை..................
 
+91 94439 23584
குனித்த புருவம் - விளக்கவும். ஆசீர்வாதங்கள்.
 
என்று ஶ்ரீராமகாவியம்  கதையினை விரும்பிப் படிக்கும் எனது மதிப்பிற்குரிய குருநாதர்களில் ஒருவர் கேட்டிருந்தார். நிறைய. அன்பர்களுக்கும் இந்த ஒரு ஐயம் வந்தருக்கலாம். ஆகவே அதற்கான விளக்கம் அளித்துள்ளேன்
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
 
குனித்த புருவமும்
 
கோயில் – திருவிருத்தம்
 
குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!
 
--திருநாவுக்கரசு சுவாமிகள்
 
பொருள்:
 வளைந்த புருவங்களையும், கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயிலே முகிழ்க்கும் புன்னகையையும், கங்கையால் ஈரமான சடைமுடியையும், பவளம் போன்ற சிவந்த திருமேனியில் அணிந்த பால் போன்று வெண்மையான வெண்ணீற்றுப் பூச்சினையும், பேரின்பம் நல்கும் தூக்கிய திருவடிகளையும் காணும் வாய்ப்பினைப் பெறுவதாம்பட்சத்தில் இவ்வுலகில் மனிதராய்ப் பிறப்பெடுத்தலும் விரும்பத்தக்க செயலாகும்.
 
குனித்த புருவம்:
பரதக் கலையின் மெய்ப்பாடு உணர்த்துவது. தன்னிடம் வந்து குறையிரந்து முறையிடும் அடியார்களின் விண்ணப்பங்களைக் கூர்ந்து நோக்கி ஊன்றிக் கேட்டருளும் கருணைத் திறத்தினைக் காட்டுவது.
__________
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
182 / 30-09-2021
 
அனுமனிடம்
உரையாடிய சீதை...
 
★சீதை அனுமனிடம், மாருதியே! இவ்வளவு சிறிய உருவத்தைக்  கொண்ட நீ எவ்வாறு இக்கடலை கடந்து வந்தாய்? எனக் கேட்டார். சீதை இவ்வாறு கேட்டதால் அனுமன் தன் முழுமையான விஸ்வரூப  உருவத்தையும் காட்ட நினைத்தான். பிறகு அனுமன் வானை முட்டும் அளவிற்கு தன் உருவத்தை வளர்த்து நின்றான். அனுமனின் உருவத்தைக் கண்ட சீதை, பிரமித்து நின்றாள். தனக்கு நல்ல செய்தி கூறி ஆறுதல் அளிக்க வந்த ரட்சகன் என நினைத்தாள். மாருதி! போதும், உன் உருவத்தை ஒடுக்கிக் கொள் என்றாள். அனுமன், தங்கள் வார்த்தையே எனக்கு கட்டளையாகும் எனக் கூறிக் கொண்டு தன் உருவத்தை மீண்டும் சிறிதாக்கி நின்றான்.
 
★அனுமன், சீதையிடம் விரைவில் ராமர்  இங்கு வந்து ராவணனை அழித்து தங்களை மீட்பார், கவலை வேண்டாம் என்று கூறினான். ஶ்ரீ ராமரும் தன்னைப் பிரிந்த துக்கத்தில் இருக்கிறாரே என்று சீதை வருந்தினாள். நீங்கள் ராமரிடம் இருந்து கொண்டு வந்த செய்தி எனக்கு அமிர்தம் கலந்த விஷம் போல் உள்ளது. ராமர் விரைவில் இங்கு வந்து என்னை சந்திப்பார், நான் அவரை நிச்சயம் பார்க்கப் போகின்றேன் என்று மகிழ்வதா இல்லை ஶ்ரீ ராமர் என்னை தன் மனதில் நினைத்து துக்கத்துடன் இருக்கிறார் என்று வருத்தம் கொள்வதா என்று எனக்கு தெரியவில்லை என்று கூறினாள்..
 
★மேலும் ராமர் என்னை சிறிதும் மறக்காமல் நினைத்துக் கொண்டிருக்கிறார், என்னை தேடிக் கொண்டிருக்கிறார், என்ற செய்தி எனக்கு ஆனந்தத்தை அளிக்கிறது. என்னுடைய செய்தியாக நான் சொல்வதை அப்படியே ராமரிடம் சென்று சொல்லுங்கள் என்று சீதை சொல்ல ஆரம்பித்தாள். இந்த இலங்கையில் ராவணனின் தம்பி விபிஷணன் என்பவன் சீதையை ராமரிடம் சென்று சேர்த்துவிடு இல்லை என்றால் ராட்சச குலம் அனைத்தும் ராமரால் அழியும் என்று ராவணனிடம் எவ்வளவோ அறிவுறை கூறினான்.
 
★ஆனால் ராவணன் அந்த ஒரு அறிவுரையைக் கேட்கவில்லை. எனக்கு பன்னிரண்டு மாத காலம் அவகாசம் அளித்திருக்கிறான். அதில் பத்து மாத காலம் முடிந்து விட்டது. இன்னும் இரண்டு மாத காலம் மட்டுமே உள்ளது. அதற்குள் வந்து ராமர் என்னை மீட்டுச் செல்ல வேண்டும் இல்லை என்றால் ராவணன் என்னை சமைத்து சாப்பிட்டு விடுவதாக சொல்லிச் சென்று  இருக்கிறான் என்று சீதை பேசி முடித்தாள்.
 
★அனுமன், சீதையிடம் பேச ஆரம்பித்தான். இந்த கடலை சில கணத்தில் நான் தாண்டிச் சென்று தங்களின் செய்தியை ராமரிடம் சொல்லி விடுவேன். ராமர் விரைவில் பெரும் சேனையுடன் இலங்கைக்கு வந்து விடுவார். ஆகவே தாங்கள் சிறிதும் கவலைப்படாதீர்கள். அரக்கன் ராவணனோடு சேர்த்து இந்த இலங்கை நகரத்தையே மொத்தமாக தூக்கிக் கொண்டு போய் ராமரிடம் சேர்க்கும் வல்லமை என்னிடம் இருக்கிறது. உங்களுக்கு விருப்பம் இருந்தால் என்னுடைய முதுகில் ஏறி அமர்ந்து கொள்ளுங்கள். நான் இப்போதே இந்த கடலைத் தாண்டிப் போய் ஶ்ரீ ராமரிடம் உங்களை சென்று சேர்த்து விடுவேன்.
 
★அதற்கான போதிய பலம் என்னிடம் இருக்கிறது. சிறிதும் தங்களுக்கு சந்தேகம் வேண்டாம். உத்தரவிடுங்கள் தாயே! இப்பொழுதே இதனை செய்து முடிக்கிறேன். கடலை தாண்டும் போது என்னை தடுக்கும் பலம் இங்கு யாருக்கும் இல்லை. இன்றே தாங்கள் ராமரை சந்தித்து விடலாம் என்று அனுமன் சொன்னதை கேட்ட சீதை, ஆற்றல் மிகுந்த மாருதியே! உன் ஆற்றலுக்கு இச்செயல் ஏற்றது. ஆனால் ஒரு பெண்ணாகிய நான் இந்தச் செயலை செய்யக்கூடாது என எண்ணுகிறேன். நீ என்னை தோளில் சுமந்து போகும் வழியில் அரக்கர்கள் யாரெனும் தடுக்கும்போது நான் கீழே விழவும் வாய்ப்பு உள்ளது.
 
★இதற்கு மற்றொரு காரணமும் உண்டு. நான் உன்னுடன் வந்தால் ராமனின் வில்லுக்கும், வீரத்திற்கும் வீண் பழி உண்டாகும். ராவணன் என்னை பிறர் அறியா வண்ணம் கவர்ந்து வந்தது போல் நீயும் என்னை பிறர் அறியா வண்ணம் அழைத்து செல்கிறேன் என்கிறாய். இதை மற்றவர்கள் நியாயம் என்று சொல்வார்களா? நான் என் ராமனை தவிர வேறு எந்த ஆண்மகனையும் தீண்ட மாட்டேன். வானரமானாலும் நீயும் ஓர் ஆண்மகன். நான் எவ்வாறு உன் தோளில் அமர்ந்து வருவேன்? ராமன் இங்கே வந்து கொடிய அரக்கர்களை அழித்து, ராவணனை வென்று என்னை அழைத்துச் செல்வது தான் சிறப்பு என்றாள்.
 
★ராவணனாலும் என்னை தீண்ட முடியாது. ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவன் தீண்டினால் அவனுடைய பத்து தலைகளும் வெடித்து விடும். இது பிரம்மன் அவனுக்கு கொடுத்த சாபமாகும். ராவணன் பெற்ற சாபத்தால் தான் நான் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றாள்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை..................
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
183 / 01-10-2021
 
சூடாமணியளித்தல்...
 
★மேலும் சீதை, அனுமனிடம்
'தப்பித்துச் செல்ல நினைப்பதை விட உயிர் விடுவதே மேல்’ என்பதைச் சுட்டிக் காட்டினாள்.
 காவிய நாயகியின் கடுமையான  சொற்கள் அவனை அடக்கி வைத்தன. வீர மறக்குலத்தில் பிறந்த பாரதப் பெண்மணியைக் கண்டான் அனுமன். “வாழ்க்கை கிடைக்கிறது” என்பதற்காக அவள் தாழ்ந்து போக சிறிதும் விரும்பவில்லை. வீர சுதந்ததிரம் வேண்டி நிற்கும் பேராண்மை அவளிடம் காணப்பட்டது.
 
★ “ராமனிடம் தாங்கள் சொல்ல நினைக்கும் செய்திகள் ஏதேனும் உள்ளதா?” என்று அடக்கமாய்க் கேட்டான் அனுமன். “இந்திரன் மகன் ஜயந்தன், எங்கள் ஏகாந்தத்தின் இடை புகுந்து, காக்கை வடிவில் என் காலைத் தொட்டான். புல் ஒன்று கொண்டு அப்பறவையை விரட்டினார் ராமர். இந்தச் செய்தியைச் சொல்லுக” என்றாள். “காக்கை ஒன்று தொட்டதற்கே அவர் பொறுமை காட்டவில்லை. அரக்கன் ஒருவன் சிறை வைத்திருப்பதை அவரால் எப்படிப் பொறுத்திருக்க முடியும்?” என்ற கருத்தை உண்டாக்க இந்தச் செய்தியை நினைவுப் படுத்தினாள்.
 
★“அன்பாக வளர்த்து வந்த தன் கிளிக்கு யார் பெயர் இடுவது?” என்று ராமரைக் கேட்க, அவர், தான் நேசித்து வந்த மதிப்புமிக்க அன்னை கைகேயி பெயரை வைக்கும்படி கூறியதை நினைவு படுத்தி பேசினாள். மிகுந்த அர்த்தமுள்ள நிகழ்ச்சியாக இது இருந்ததால் அதனை எடுத்து உரைத்தாள். “எந்தத் தாயை அவர் உயிரினும் மேலாக நேசித்தாரோ, அவளே அவன் வாழ்வுக்கு உலை வைத்தாள்” என்பதை நாகரிகமாய்ச் சுட்டிக் காட்டினாள்.
 
★கணையாழியைக் கொடுத்த ராமருக்கு, அதற்கு இணையாய் தன் தலையில் குடியிருந்த சூடாமணியை எடுத்து அவனிடம் தந்தாள். “இது எங்கள் திருமண நாளை நினைவுபடுத்தும் அடையாளம்” என்றாள். சீதை, தன் ஒளிமிக்க சூடாமணியை கையில் எடுத்து அனுமனிடம் கொடுத்ததும் அனுமன், இது என்ன? எனக் கேட்டான். நான் கொடுத்த அடையாளமாக ராமரிடம் இந்த சூடாமணியை கொடு. இந்த ஆபரணத்தை பார்த்தால் ராமருக்கு என் நினைவு மட்டுமின்றி, என் தாய் மற்றும் ராமரின் தந்தையான தசரதனின் ஞாபகமும் வரும் என்றாள் சீதை.
 
★அனுமன், சீதையை வணங்கி அவள் அளித்த சூடாமணியை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டான். பிறகு அனுமன் நிச்சயம் இத்துன்பத்தில் இருந்து தாங்கள் மீள்வீர்கள். ராமர் தங்களை காப்பாற்ற பேராற்றல் கொண்ட ஒரு பெரும்படையுடன் இங்கு வருவார் என ஆறுதல் கூறினான். பிறகு அனுமன் சீதையிடம் ஆசியை பெற்றுக் கொண்டு அங்கிருந்து புறப்பட ஆரம்பித்தான். நீ சென்று ராமரையும் லட்சுமணனையும் உங்களது பராக்கிரமம் கொண்ட வானர சேனைகளையும் இங்கே அழைத்துவா. நான் அதற்காக காத்திருக்கிறேன். ராமருடைய அம்புகளால் இந்த இலங்கை அழிந்து ராவணன் எமன் உலகம் அனுப்பப்பட வேண்டும். ஆகவே விரைந்து சென்று வா என்று சீதை அனுமனிடம் கூறினாள்.
 
★தாயே!  நான் ஒருவன் தான் இந்த பெரிய கடலை தாண்டக் கூடியவன் என்று எண்ணி விடாதீர்கள். சுக்ரீவனின் வானரப் படையில் உள்ளவர்கள்  அனைவரும் பல யோசனை தூரம் தாண்டி பறந்து செல்லும் சக்தியை பெற்றிருக்கிறார்கள். என்னை விட மிக அதிகமான  சாமர்த்தியசாலியாக அவர்கள் இருப்பார்கள். இந்த கடலை தாண்டுவது எங்கள் வானரப் படைகளுக்கு ஒரு பெரிதான காரியமில்லை. என்னை விட பலசாலிகளும், அறிவாளிகளும்  சாமர்த்தியசாலிகளும் ஆகாய மார்க்கமாக பறந்து செல்லக் கூடிய சக்தி பெற்றவர்களும் ஆயிரக்கணக்கில் எங்களிடம் இருக்கிறார்கள். தங்களுக்கு ஒரு சந்தேகமும் வேண்டாம்.
 
★எனது முதுகில் ராமர் மற்றும் லட்சுமணன் இருவரையும் அமர்த்திக் கொண்டு விரைவில் இங்கு தாவி வந்து விடுவேன். ராமரும் லட்சுமணனும் வில் அம்புடன் இலங்கையின் எல்லையில் நிற்பார்கள். இந்த செய்தி தங்களின் காதுகளுக்கு வந்து சேரும். ராவணனையும் அவனை சார்ந்தவர்களையும் அடியோடு ராமரும் லட்சுமனணும் அழிப்பதை பார்ப்பீர்கள். வானர சேனைகள் குதித்து கூத்தாடி இந்த இலங்கை நகரத்தை அழிப்பதை பார்ப்பீர்கள். தைரியமாக இருங்கள் என்று சீதையை வணங்கி நான் செல்கிறேன் எனக்கு அனுமதி அளியுங்கள்.
 
★அதற்கு முன்பாக எனக்கு ஒரு விண்ணப்பம் இருக்கிறது அதற்கும் அனுமதி கொடுங்கள் என்று கேட்டார் அனுமன். அதற்கு சீதை என்ன என்று கேட்டாள்.
அனுமன் சீதையிடம் இந்த அசோகவனத்தில் உங்களின் இந்த அவலநிலையே கண்ட பின்பு நான் அப்படியே செல்ல விரும்பவில்லை. தங்களை கொடுமைப்படுத்தும் இங்குள்ள ராட்சசிகளை அழிக்க என் கைகள் துடிக்கின்றன. தயவு செய்து தாங்கள் இதற்கு அனுமதி கொடுங்கள் என்றார்.
 
★ஆனால் சீதையோ உனது கோபம் அர்த்தமில்லாதது. ராவணன் இட்ட கட்டளையை நிறைவேற்றுவது ராட்சசிகளின் கடமை. தங்கள் கடமையை அவர்கள் செய்கிறார்கள். இவர்களை தண்டிப்பது முறையாகாது என்று கூறினாள்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை..................
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
184 / 02-10-2021
 
சீதையின் அறிவுரை...
 
★தாயே! அரக்கன்  ராவணனின் கட்டளையாக இருந்தாலும் இவர்கள் செய்தது தவறு தானே. அதற்காக அவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டாமா? என வாதிட்டார். அதற்கு சீதை அனுமனே நீ சொல்வது போல் தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்றால் முதலில் ராமரையும், பிறகு என்னையும் உன்னையும் கூட தண்டிக்க வேண்டும் என்றாள் சீதை.
 
★திடுக்கிட்ட அனுமன், ராமர் என்ன தவறு செய்தார்? என கேட்டார். ராவணன் என்னும் கொடிய ராட்சசனிடம் , தன் பதிவிரதையான மனைவி சிக்கியிருக்கிறாள், அவளுக்கு ஆபத்து இருக்கிறது என்று தெரிந்ததும் சிறிதும் காலம் தாழ்த்தாமல் ஓடிவந்து என்னை காப்பாற்றாமல், ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு தன்னுடைய ஆட்களை எல்லா திசைகளிலும் அனுப்பி தேடிக் கொண்டு காலம் கடத்திக் கொண்டிருக்கிறாரே, இது அவர் செய்த குற்றமல்லவா? என சீதை பதிலளித்தாள்.
 
★அனுமன் திகைத்து சீதையின் பதிலை ஆமோதித்துக் கொண்டு, சரி, பதிவிரதையான தாங்கள் என்ன தவறு செய்தீர்கள்? என்று கேட்டார். எந்த பெண்ணும் தன் கணவரைப் பற்றி அடுத்தவரிடம் குறை கூறக்கூடாது. ஆனால் தற்போது உனக்கு புரிய வைக்க வேண்டும் என்ற ஒரேஒரு காரணத்தினாற்காக ராமரைப் பற்றி உன்னிடம் நான் குறை சொல்கிறேன். இது நான் செய்த தவறு தானே என்றாள்.
 
★மேலும் திகைத்த அனுமன், நான் என்ன தவறு செய்தேன்? என்று கேட்டார். அரசன் இட்ட பணியைச் செய்வது இந்த ராட்சசிகளின் கடமை. அதனை நன்கு செய்து கொண்டிருக்கும் ராட்சசிகளை கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று நீ நினைத்தது குற்றம். தவறு செய்யாதவர்களே இவ்வுலகில் இல்லை. தவறு செய்வது மனித இயல்பு. அதை உணர்ந்து மனம் வருந்தி அதை திருத்திக் கொள்வதே சிறந்த மனிதனின் அடையாளம் என்றாள் சீதை. இதைக் கேட்ட அனுமன் தனது கோபத்தை விட்டு ராட்சசிகளை துன்புறுத்தாமல் இருக்கிறேன் ஆனால் இந்த இலங்கையை சிறிதளவாவது சேதப்படுத்திச் செல்கிறேன் என்று கூறி சீதையை வணங்கி அவளிடம் அனுமதி பெற்று அங்கிருந்து விடைபெற்றான்.
 
★நான் உயிரோடு இருக்கிறேன் என்ற செய்தியை ராமர் லட்சுமணனிடம் சொல்லி விரைவாக அவர்களை இங்கே அழைத்துவா! உனக்கு ஜெயம் உண்டாகட்டும் என்று வாழ்த்தி அனுமனுக்கு அனுமதி கொடுத்தாள் சீதை. அங்கிருந்து கிளம்பினான் அனுமன்.
அனுமன் அசோகவனத்தின் மதில் மேல் அமர்ந்து சிறிது நேரம் யோசித்தான். ராமனிடம் சென்று சீதை இருப்பிடம் பற்றிய செய்தியைச் சொல்லி அனைத்து வானர படைகளுடன் இந்த இலங்கைக்கு வரும் வரை சீதை சுகமாக இருக்க வேண்டும். சீதையை யாரும் துன்புறுத்தக் கூடாது. இதற்காக  என்ன செய்யலாம் என்று சிந்தனை செய்தான்.
 
★செல்வத்திலும்,  போகத்திலும், சுகத்திலும்  இருக்கும் கொடிய ராட்சசர்களிடம் சமாதான வழியில் பேசிக் கொண்டிருக்க முடியாது. அரக்க ராவணன் எப்பொழுதும் போல் கர்வம் கொண்டவனாக தினந்தோறும் வந்து மாதா சீதையை துன்பப் படுத்துவான். ராவணனுக்கும், அவனுடைய ராட்சதர்களுக்கும்  மிக்க பயத்தை உண்டாக்கி விட வேண்டும். அப்படி செய்தால் ராவணனும், ராட்சசிகளும் சீதையை எந்த விதத்திலும் துன்புறுத்த மாட்டார்கள். மாதா சீதையை கண்டு மிக்க பயம்  கொள்வார்கள். நான் இப்போது இங்கு வந்தது கூட ராவணனுக்கு தெரியாது. நாம் வந்து சென்ற அடையாளத்தை ஏற்படுத்தி விட்டு, பயத்தை உண்டாக்கி விடலாம் என்று எண்ணினான்.
 
★இந்த காரியத்தை சிறிது நேரத்தில் முடித்து விட்டு, விரைவில் ராமரிருக்கும் இடம் செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தான் அனுமன். நான் மாதா சீதையைத் தேடி கண்டு பிடித்து விட்டேன். இப்பொழுது ராவணன் பற்றியும் அவனின் பலத்தை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் ராமர் போர் புரிய எவ்வளவு பலம் வேண்டும் என்பது தெரியும். அதற்கு நான் ஏதாவது செய்ய வேண்டும். அரக்கர்களை தொல்லை செய்யலாம் என எண்ணினான். பிறகு வேண்டாம் என நினைத்து விட்டு இவ்வளவு அழகு மிகுந்த இந்த அசோக வனத்தை அழித்தால் போதும் ராவணன் நிச்சயம் வர வாய்ப்பு உள்ளது என நினைத்தான்.
 
★உடனே அனுமன் அசோக வனத்தை முற்றிலும் நாசம் செய்தான். இவ்வாறு அனுமன் அசோக வனத்தை நாசம் செய்து கொண்டிருக்கும்போது தூங்கி கொண்டிருந்த அரக்கிகள் விழித்துக் கொண்டனர். அப்போது மேரு மலையை போல் இருந்த அனுமனை கண்டு அரக்கிகள் பயந்தனர்.உடனே அவர்கள் சீதையிடம் சென்று, பெண்ணே! இவன் யார் என்று உனக்கு தெரியுமா? இவன் எப்படி இங்கே வந்தான்? என கேட்டனர். இதற்கு சீதை, மாய உருவம் எடுக்கும் அரக்கர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். யார் வந்தார்கள்? என்ன செய்தார்கள்? என்பது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது எனக் கூறி விட்டாள்.
 
★உடனே அரக்கிகள் மன்னன் ராவணனிடம் ஓடிச்சென்று, மன்னரே! ஓர் வானரம் நம் அசோகவனத்தில் சீதையின் இருப்பிடத்தை மட்டும் விட்டு விட்டு மற்ற எல்லா இடத்தையும்  நாசம் செய்து விட்டது எனக் கூறினார்கள். இதைக்கேட்ட இராவணன் எவரும் செல்ல முடியாத அசோக வனத்தை ஓர் வானரம் நாசம் செய்து விட்டது என என்னிடம் வந்து வெட்கம் இல்லாமல் மூடத்தனமாக சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்றான். அப்போது அனுமன் உலகம் அதிரும்படியான ஒரு கூக்குரலை எழுப்பினான். இக்குரல் இராவணனின் காதிலும் விழுந்தது.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை......................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
185 / 03-10-2021
 
அசோகவனம்
சோகவனமானது...
 
★அசோக வனத்தில் தனது உருவத்தை பெரிய வடிவமாக்கி கொண்ட அனுமன் அந்த அசோக வனத்தை சோகவனமாகச்செய்ய ஆரம்பித்தான். மரங்களை வெட்டி வீசினான். கொடிகளை நாசம் செய்து குவியல் போன்று வைத்தான். அலங்காரங்கள் அனைத்தையும் உடைத்து எறிந்தான். மிக ரம்மியமான அழகுடன் இருந்த அசோகவனம் இப்போது தன்னுடைய  அழகை முற்றிலும் இழந்தது. அங்கே இருந்த மான்களும் மற்றும் எல்லா பறவைகளும் பயந்து ஓடி அசோகவனத்தை விட்டு விலகி வெளியேறின. அனுமன் அந்த நந்தவனத்தை அழித்து விட்டு மதில் மேல் ஏறி அமர்ந்தார்.
 
★அனுமன் ராட்சதர்கள் வரட்டும் அவர்களை ஒரு வழி செய்து விடலாம் என்று மதில் சுவற்றில் சுகமாக அமர்ந்திருந்தார். அரசன் ராவணனிடம் சென்ற ராட்சசிகள் அசோகவனத்தை ஒரு பெரிய வானரம் அழித்து விட்டு எல்லா ராட்சசிகளையும் பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. சீதையை சுற்றி இருக்கும் மரங்கள் கொடிகளை மட்டும் அந்த வானரம் ஒன்றும் செய்யாமல் விட்டு வைத்துள்ளது. சீதையிடம் அந்த வானரம் ஏதாவது தகவல் சொல்ல வந்திருக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது. சீதையிடம் கேட்டுப் பார்த்தோம் அவர் எனக்கு தெரியாது என்று சொல்லி விட்டார். அந்த வானரத்தை அழிக்கத் தக்க ஆட்களை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள்.
 
★தன் சுகபோகத்திற்காக உருவாக்கப்பட்ட அசோகவனம் அழிந்துவிட்டது என்ற செய்தியை கேட்ட ராவணன் மிகவும் கோபம் கொண்டான். தனது ராட்சச வீரர்களிடம் அந்த வானரத்தை பிடித்துக் கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டான். இரும்பு உலக்கைகள், கத்தி மற்றும் பலவிதமான கொடுரமான  ஆயுதங்களுடன் ராட்சத வீரர்கள் அனுமனை பிடிக்க அந்த அசோக வனத்திற்கு விரைந்தனர்.
 
★அனுமன் அசோகவனத்து
 மதில் சுவற்றின் மேல் அமர்ந்து இருப்பதை கண்ட ராட்சதர்கள் அனுமனை தாக்க முற்பட்டார்கள். அனுமன் ராட்சதர்களை கண்டதும், அசோகவனத்தின் வாயில் கதவில் இருந்த பெரிய இரும்பு கட்டையை பிடுங்கி, எதிர்கொண்ட ராட்சதர்கள் அத்தனை பேரையும் எதிர்த்து யுத்தம் செய்தான். மரங்களை வேரோடு பிடுங்கி அவர்களின் மீது எறிந்தான்.  வந்திருந்த ராட்சதர்களை ஒருவர் பின் ஒருவராக அழித்து விட்டு மீண்டும் அசோகவனத்தின் நெடிய மதில் சுவற்றின் மேல் அமர்ந்தான்.
 
★பின்னர்,  வாழ்க ராமர்! வாழ்க லட்சுமணன்! வாழ்க சுக்ரீவன்! என்று கர்ஜனை செய்த அனுமன், ராட்சசர்களே! உங்களுக்கு அழிவு காலம் வந்து விட்டது. எங்களது பகைவர்களான உங்களை அழிக்க வந்திருக்கின்றேன். ஆயிரம் ராவணன்கள் இந்த இலங்கையில் இருந்தாலும் இப்போது என்னிடம் யுத்தம் செய்ய வரலாம். என்னை எதிர்க்க வரும் அனைவரையும் அழிக்க நான் மிகவும்  தயாராக நிற்கின்றேன். உங்கள் இலங்கை நகரத்தை இப்பொழுது அழிக்க போகின்றேன் என்று அங்கிருந்த  அனைவரும் நடுங்கும்படி அனுமன் கர்ஜித்தான்.
 
★வானரத்தை பிடிக்கச் சென்ற ராட்சதர்கள் அனைவரும் இறந்து விட்டார்கள் என்ற செய்தியை கேட்ட ராவணன் மிகுந்த கோபத்துடன் கொதித்து எழுந்து கர்ஜனை செய்ய ஆரம்பித்தான்.
உடனே ராவணன் கிங்கரர் என்னும் ஒரு வகை அரக்கர்களை அழைத்து, அக்குரங்கை தப்பிக்க விடாமல் என்னிடம் கொண்டு வந்து ஒப்படையுங்கள் என்று ஆணையிட்டான். உடனே கிங்கர அரக்கர்கள் அனுமனை தேடி விரைந்துச் சென்றனர். அவர்கள் வானரவீரன் அனுமனை சூழ்ந்துக் கொண்டனர்.
 
★உடனே அனுமன் தன் அருகில் இருந்த மரத்தை பிடுங்கி கிங்கர அரக்கர்கள் அனைவரையும் அழித்தான். அனுமனை பிடிக்கச் சென்ற கிங்கர அரக்கர்கள் அனைவரும் இறந்த செய்தி ராவணனுக்கு தெரிவிக்கப் பட்டது.  அங்கே அழகான  அசோக வனத்தில், அனுமன் அருகில் இருக்கும் பெரிய மண்டபத்தின் மேலே ஏறி நின்றான். பெரிய உருவத்தில் இருந்த அனுமன் நிற்பது,  இலங்கையின் மேல் ஆகாயத்தில் ஒரு பிரகாசமான பொன்மயமான மலைத்தொடர் இருப்பது போல் இருந்தது. இந்த
இலங்கையை அழிக்கவே நான்  வந்திருக்கிறேன் என்று உரக்க  கர்ஜனை செய்த அனுமனின் சத்தம் நகரத்தின் எட்டு திசைகளிலும் எதிரொலித்தது.
 
★அனுமனின் சத்தத்தை கேட்ட பல ராட்சசர்களின் உள்ளம் நடுங்கியது. அந்த பெரிய மண்டபத்தில் காவல் காத்துக் கொண்டிருந்த ராட்சசர்கள் அனுமன் மீது பல பயங்கர ஆயுதங்களை தூக்கி எறிந்து தாக்கினார்கள். அனுமன் மண்டபத்தின் தூணாக இருந்த தங்கத்தினால் செய்யப்பட்டு வைரத்தினால் அலங்காரங்கள் செய்யப்பட்ட தூணை பிடுங்கி எதிர்த்த ராட்சசர்களின் மீது எறிந்தான். தூணை எடுத்ததும் பெரிய மண்டபம் கீழே இடிந்து விழுந்தது. தாக்கிய ராட்சதர்கள் அனைவரும் அழிந்தனர்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை....................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
186 / 04-10-2021
 
ஜம்புமாலி வதம்...
 
★இஷ்வாகு குலத்தின் ராஜ குமாரன் ராமரின் பகையை அரசன் ராவணன் சம்பாதித்துக் கொண்டான். அதன் விளைவாக என்னைக் காட்டிலும் மிகவும் வலிமையான வானரர்கள் சுக்ரீவன் தலைமையில் வரப் போகின்றார்கள். உங்களையும் உங்கள் நகரத்தையும் அழிக்கப் போகின்றார்கள் என்று அனுமன் கர்ஜனை செய்தார். அனுமனின் சத்தத்தில் பல ராட்சதர்கள் ஓடி ஒளிந்தனர்.
 
★இதனைக் கேட்ட ராவணனின் முகம் கோபத்தால் சிவந்தது. ராட்சதர்களின் நிகரற்ற வீரனான பிரகஸ்தனுடைய மகனான ஜம்புமாலி என்ற அரக்கனை அழைத்து, அந்த வானரத்தின் கொட்டத்தை அடக்கிவிட்டு வா என்று உத்தரவிட்டான் ராவணன்.
நீ குதிரைப்படையுடன் சென்று அக்குரங்கை கயிற்றால் கட்டி இங்கு அழைத்து வா! அப்போது தான் என்னுடைய கோபம் தணியும் என்றான். ஜம்புமாலி ராட்சசன் கவசம் அணிந்து கொண்டு தனது கொடூரமான ஆயுதங்களுடன் அசோகவனம் கிளம்பினான். தன் படையை அழைத்துக் கொண்டு அனுமன் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தான் ஜம்புமாலி.
 
★அனுமன் இருக்கும் இடத்திற்கு ஜம்புமாலி தனது படைகளோடு வந்து சேர்ந்தான். பெரிய கோவேறு கழுதைகள் பூட்டிய தேரில் ஆயுதங்களுடன் வந்து இருக்கும் ராட்சசனை பார்த்த அனுமன் தாக்குதலுக்கு தயாரானான். அனுமன் தன் பக்கத்தில் இருந்த இரும்புத் தடியை கையில் எடுத்துக் கொண்டான். தன்னிடம் போர் புரிய வந்த கொடிய அரக்கர்கள் எல்லோரையும் இரும்புத் தடியால் ஓங்கி அடித்துக் கொன்றான். கடைசியில் ஜம்புமாலி மட்டும் இருந்தான்.அனுமன் அவனிடம், உயிர் மேல் ஆசை இருந்தால் இங்கிருந்து தப்பி ஓடிச்செல் என்றான். ஆனால் ஜம்புமாலி அங்கிருந்து கோழை போல் ஓடாமல் அனுமன் மீது வேகமாக அம்புகளை ஏவினான்.
 
★ஒரு அம்பு அனுமனின் உடம்பை தாக்கி லேசாக ரத்தம் வந்தது. இதனால் மிகவும் கோபமடைந்த அனுமன் அருகில் இருந்த பெரிய கல்லை எடுத்து ஜம்புமாலி மீது எறிந்தார். ஒரு அம்பால் அந்த பெரிய கல்லை தூளாக்கினான் ஜம்புமாலி.  தன்னை நோக்கி வந்த அம்புகளை அனுமன் தன் இரும்புத் தடியால் தடுத்தான். ஜம்புமாலி தன் அம்பால் அனுமனிடம் இருந்த இரும்புத் தடியையும் ஒடித்து விட்டான்.
 
★இதனால் சற்று சளைத்து நின்ற அனுமன், ஓடிச்சென்று  ஒரு பெரிய ஆச்சா மரத்தை வேரோடு பிடுங்கி தேரின் மீது வீசினார். தேர் இருந்த இடம் தெரியாமல் பொடிப் பொடியாய் போனது.  ஜம்புமாலியின் பெரிய ராட்சத உடம்பு நசுங்கி, கை கால் தலை என அடையாளம் சிறிதும் தெரியாமல் அனைத்தும் தரையோடு தரையாக அழுந்தி பிண்டமானது. உடன் வந்த  வீரர்கள் அனைவரையும் அழித்தான் அனுமன். யுத்தத்தின் முடிவில் ஜம்புமாலி இறந்த செய்தியை அரக்கர்கள் ஓடிச் சென்று  ராவணனுக்கு தெரிவித்தனர்.
 
★வலிமையான வீரன் ஜம்புமாலி இறந்த செய்தியை கேட்ட ராவணன் திகைத்தான். ஒரு குரங்கு தன் அரக்கர்களையும் மற்றும் ஜம்புமாலியையும் கொன்றதை அறிந்து ராவணன் மிகவும் கோபங்கொண்டான். உடனே ராவணன் தானே சென்று அந்த குரங்கைப் பிடித்து வருவதாக கூறினான். இதைக் கேட்ட விரூபாட்சன், யூபாசன், துர்த்தரன், பிரகசன், பாசகர்ணன் என்னும் ஐந்து சேனைத் தலைவர்களும், அரசே! தாங்கள் போய் ஒரு குரங்கிடம் போர் புரிவதா! தாங்கள் இங்கேயே இருங்கள் நாங்கள் சென்று அந்த குரங்கைப் பிடித்து வருகிறோம் எனக் கேட்டுக் கொண்டனர்.
 
★சேனைத் தலைவர்கள் கேட்டுக் கொண்டதிற்கு இணங்கி ராவணன் அவர்கள் போருக்கு செல்வதற்கு சம்மதித்தான்.
வந்திருக்கும் வானரம் ஒரு மிருகம் போல் தெரியவில்லை. ஏதோ புதிதாக தெரிகின்றது. என்னுடைய பழைய பகைவர்கள் ஆன தேவர்களின் சதியாக இருக்க வேண்டும்.  ஒரு புது வகையான பிராணியை உருவாக்கி இங்கு அனுப்பி இருக்கிறார்கள். இந்த கொடிய வானரத்தை கட்டாயம் பிடித்து, என் முன் கொண்டு வநது நிறுத்த  வேண்டும் என்று தனது மிகுந்த வலிமையான ராட்சத வீரர்களையும், அவர்களுக்கு துணையாக மிகப் பெரும் சேனையையும் அனுப்பினான் ராவணன்.
 
★பிறகு ஐந்து சேனைத் தலைவர்கள் தங்களின் அரக்க படைகளையும் சேர்த்து  திரட்டிக் கொண்டு அனுமன் இருக்கும் இடத்திற்கு புறப்பட்டனர். மிகப்
பெரிய ராட்சதர்களின் கூட்டம் பெரும் படைகளாக அசோக வனம் நோக்கி சென்றார்கள்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை..................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
187 / 05-10-2021
 
அட்சயகுமாரன்...
 
★அனுமன் ஒரு பெரும் அரக்கர் படை வருவதை கண்டு, அவர்கள் அனைவரையும் நான் அழிப்பேன் என மனதில் நினைத்துக் கொண்டான். அந்த அரக்கர் படை அனுமனை எதிர்க் கொண்டது. இச்சிறிய குரங்கா அரக்கர்களை அழித்தது என ஆச்சர்யப்பட்டனர். அனுமன் தன் உருவத்தை மிகப்பெரிய உருவமாக மாற்றிக் கொண்டான். இதைப் பார்த்த அரக்கர்கள் மிகவும் கோபம் கொண்டு அனுமன் மீது கூரிய அம்புகளையும், ஏராளமான ஆயுதங்களையும் எய்தினர்.
 
★ஆனால் அந்த அம்புகளும், ஆயுதங்களும் வலிமைமிக்க அனுமனை ஒன்றும் செய்ய இயலவில்லை. அனுமனை பல வகையான கொடிய ஆயுதங்கள் கொண்டு தாக்கினார்கள். அந்த ராட்சதர்களின் எந்த விதமான ஆயுதத்தாலும் வஜ்ராயுதம் போல் இருந்த அனுமனை கட்டுப்படுத்த முடியவில்லை. அனுமன் வழக்கம் போல் மரங்களை வேரோடு பிடுங்கி அவர்கள் மீது எறிந்தும், பெரிய பாறைகளை தூக்கி வீசியும், சிலரை தனது கால்களால் பலமாக மிதித்தும் கொன்றான். மீண்டும் அனுமனைத் தாக்க அரக்கர்கள் அலை போல் வந்தனர். உடனே தன் பக்கத்தில் இருந்த தூணை கையில் எடுத்துக் கொண்டு அரக்கர்களை வீழ்த்தினான்.
 
★அரக்கர்கள் அனைவரும் கொல்லப்பட்ட பிறகு, சேனைத் தலைவர்கள் ஐவரும் அனுமனை சூழ்ந்து அவன்மீது அம்புகளை எய்தினர். அனுமன் தன்னை நோக்கி வந்த அம்புகளை தன் கையால் தடுத்தான். அந்த அசோக வனத்திற்குள் மிகக்  கடுமையான போர் நடந்தது. அனுமன் தன்னைத் தாக்கிய ஐந்து சேனைத் தலைவர்கள் ஒவ்வொருவரையும் தன் இரு கைகளால் அடித்துக் கொன்று வீழ்த்தினான். அவர்களுடன் வந்து, மீதி இருந்த  அரக்கர்களில் உயிர் பிழைத்தவர்கள் பயந்து ஓடி விட்டார்கள். அனுமன் மீண்டும் அசோகவனத்தின் மதில் சுவற்றின் மீது அமர்ந்து கொண்டார்.
 
★தாங்கள் குரங்கை பிடித்து கொண்டு வருவதாக சென்ற ஐந்து சேனைத் தலைவர்களும் மாண்ட செய்தியை அறிந்த ராவணன் மிகவும் கோபம் கொண்டான். அச்செய்தி,  அவன் மனதில்  சஞ்சலத்துடன் கூடிய  சிறிது பயத்தை கொடுத்தது. ஒரு தனி வானரம் எப்படி இவ்வளவு பலமுடனும் பராக்கிரமத்துடனும் இருக்கின்றது?. தலை சிறந்த சேனாதிபதிகளையும், அரக்க  வீரர்களையும் கொன்றது சாரணமான நிகழ்வு அல்ல. தேவர்கள் ஏதோ சூழ்ச்சி செய்திருக்கின்றார்கள் என்று ராவணன் கவலையுடன் இருந்தாலும் தன் கவலையை முகத்தில் காட்டாமல் சிரித்த முகத்துடன் அனுமனை ஏளனம் செய்து சிரித்தான்.
 
★தன் சபையில் இருப்பவர்களை சுற்றிப் பார்த்தான்.  பிறகு ராவணன் தானே சென்று அந்த அனுமனை தாக்கி இழுத்து  கொண்டு வருவதாக மீண்டும் கூறினான். அப்போது அவையில்
ராவணனின் இளைய மகன் அட்சயகுமாரன் மிக உற்சாகமாக எழுந்து நின்றான். தந்தையே! இந்த வாய்ப்பை எனக்கு அளிக்க கோருகிறேன். அக்குரங்கை அழித்து பேரும், புகழும் நான் பெறுவேன். அந்த வானரத்தை நான் தனியாக சென்று பிடித்து வருகின்றேன் எனக்கு உத்தரவு கொடுங்கள் என்று ராவணனிடம் கேட்டான். யுத்தத்திற்கு சிறிதும் பயப்படாமல் தைரியமாக முன் நின்ற தன் வீர மகனைப் பார்த்து பெருமை கொண்ட ராவணன்,
தன் மகனை கட்டித் தழுவி விடை கொடுத்தான்.
 
★தேவர்களுக்கு சமமான வாலிப வீரனான அட்சயகுமாரன் தான் தவம் செய்து பெற்ற தன்னுடைய எட்டு குதிரைகள் பூட்டிய தங்க ரதத்தில் ஏறி அசோக வனத்தை நோக்கி சென்றான். மிகச்சிறிய ஒரு சாதாரண  வானரத்துடனே போர் புரியப் போகின்றோம், சில கனத்தில் அந்த வானரத்தை பிடித்து விடலாம் என்ற அலட்சிய எண்ணத்தில் இருந்தான் அட்சய குமாரன். அவனுடன் மிகப்பெரிய ராட்சதப் படைகள் பின்னே அணி வகுத்துச் சென்றது. இலங்கேசன் ராவணகுமாரணான இளவரசன்
அட்சயகுமாரன் தேரில் ஏறும் போது அவனுடன் ஏராளமான இளைஞர்களும், சேனைத் தலைவர்களின் மைந்தர்களும், நான்கு இலட்சம் வீரர்களும் உடன் சென்றனர்.
 
★அனுமன் தன்னை நோக்கி வரும் பெரும்படையைக் கண்டு, வருவது ராவணன் அல்லது இந்திரஜித் ஆக இருக்கக் கூடும் என நினைத்தான். இவர்களிடம் போர் புரிவதை நினைத்து அனுமன் மகிழ்ந்தான். அவர்கள் சிறிது பக்கத்தில் வந்தவுடன் தான் தெரிந்தது அது ராவணன் இல்லை, இந்திரஜித்தும் இல்லை என்று. அனுமன் வருபவன் யார்? என உற்று நோக்கினான். அனுமனை பார்த்த அட்சய குமாரன், இச்சிறிய குரங்கு தான் அரக்கர்களை கொன்றதா? என ஏளனமாக கேட்டான்.
 
★உடனே அனுமன் அவனிடம், ஐயனே! தங்கள் அரசனான ராவணனை வென்ற வாலியும் குரங்கு தான் என்பதை உனக்கு சொல்ல வேண்டியதில்லை என நினைக்கிறேன். ஆதலால் இதை மனதில் வைத்துக்கொண்டு  போர் புரியுங்கள் என்றான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை..................
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
188 / 06-10-2021
 
அட்சயகுமாரன் வதம்...
 
★அனுமனின் மிகப் பெரிய உருவத்தையும்,  இவ்வளவு பெரிய ராட்சச படைகளைக் கண்டும், பயமில்லாமல் நின்ற அனுமனின் கம்பீரத்தைக் கண்ட அட்சயகுமாரன் தன்னுடைய வீரத்திற்கு சரி சமமான ஒரு விரோதியுடனே யுத்தம் செய்ய போகின்றோம் என்று மிகவும் மகிழ்ந்தான். அட்சயகுமாரன் அந்த வானரத்தை பிடிக்க சிறிது நேரமாகும் போலிருக்கிறதே என்று எண்ணினான். அட்சய குமாரன் அனுமனிடம், இலங்கை நகரை நீ அழித்ததன் காரணமாக உன் இனத்தவர் இவ்வுலகில் எங்கு இருந்தாலும் அவர்களை நான் அழிப்பேன் என்றான்.
 
★பிறகு அந்த அரக்கர் கூட்டம் அனுமனை சூழ்ந்துக் கொண்டது. பின்னர் அவர்கள் அனுமன் மீது ஆயுதங்களையும்,அம்புகளையும் எய்தினர். அனுமன் அவ்வரக்கர் படையுடன் தனியாக போர் புரிந்தான். போரிட்ட அரக்கர்கள் அனைவரையும் அழித்தான்.பின் அட்சய குமாரன் அனுமன் எதிரில் நின்றான். இருவரும் போர் புரிய தொடங்கினர். அட்சய குமாரன் தன் வாளை எடுத்து அனுமனை குத்த முற்பட்டான். அப்போது அனுமன் அந்த வாளை அட்சய குமாரனிடம் இருந்து பிடுங்கி உடைத்து எறிந்தான்.
 
★இருவருக்கும் இடையில் கடும் யுத்தம் நடந்தது. அட்சயகுமாரன் அனுமனின் மீது எய்த அம்புகள் மேகங்களின் கூட்டம் போல் கிளம்பி, மலை மேல் மழை பொழிவது போல இருந்தது. அனுமனுடைய வஜ்ரம் போன்ற உடம்பை அட்சயகுமாரன் எய்த அம்புகளால் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆகாயத்தில் மேகங்களுக்கு நடுவில் பறப்பது போல் அம்புகளுக்கு இடையில் பாய்ந்து சென்ற அனுமன் அட்சயகுமாரனை தாக்கினான். ராட்சச படைகளை பறந்து தாக்கி சிதறடித்தான்.
 
★ராவணனின் குமாரனாகிய அட்சயகுமாரனின் சாமர்த்தியம், வீரம், பொறுமை ஆகிவற்றை கண்ட அனுமன், இவ்வளவு சிறிய வயதில் பெரிய வீரனாக இருக்கின்றானே, இவனை கொல்ல வேண்டுமா என்று வருத்தப்பட்டு விளையாட்டாக யுத்தம் செய்து நேரத்தை கடத்தினான். ராட்சதர்களுடைய பலம் பெருகிக் கொண்டே சென்றது. இறுதியில் அனுமன் அட்சயகுமாரனைக்  கொன்று விடலாம் என்று மனதை உறுதிப் படுத்திக் கொண்டு அட்சய குமாரனுடைய தேரின் மேல் குதித்தார்.
 
★தேர் பொடிப்பொடியானது. குதிரைகள் இறந்தது. தனியாக தரையில் நின்ற அட்சயகுமாரன் தன்னுடைய வில்லுடனும் கத்தியுடனும் ஆகாயத்தில் கிளம்பி அனுமனை தாக்கினான். இருவருக்கும் இடையிலான போர் ஆகாயத்தில் நடந்தது.
தன் இருக்கரங்களாலும் அவனை அடித்து உதைத்தான்.
அட்சயகுமாரனுடைய எல்லா எலும்புகளையும் உடைத்து உடலை நசுக்கி கொன்றான் வீர அனுமன். அரக்கர்கள் அலறிக் கொண்டு அரண்மனையை நோக்கி ஓடினர்.
 
★அனுமன் அட்சயகுமாரனை கொன்ற பிறகு வழக்கம் போல் அசோக வனத்தின் மதில் சுவற்றின் மீது அமர்ந்து கொண்டான்.  தேவர்களுக்கு நிகரான ராவணனின் புதல்வன் அட்சயகுமாரன் கொல்லப்பட்ட செய்தி அறிந்த தேவேந்திரன் அனுமனைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டான். ஏராளமான  முனிவர்களும் தேவர்களும் ஆகாய வழியாக வந்து வீரதீர அனுமனை பார்த்து வாழ்த்தி விட்டுச் சென்றார்கள்.
 
★அட்சயகுமாரன் வானரத்தால் கொல்லப்பட்டான் என்ற செய்தி அறிந்ததும் ராவணன் இதயம் துடித்தது. கோபத்தில் பலமாகக் கத்தினான். தன் உள்ளத்தை ஒரு நிலையில் வைத்துக்கொள்ள முடியாமல் தவித்தான். அட்சய குமாரன் மாண்ட செய்தி மண்டோதரிக்கும், தெரிவிக்கப் பட்டது. இதை அறிந்த அவனது தாயான மண்டோதரி செய்வது அறியாது ராவணனின் காலில் விழுந்து அழுதாள்.
 
★அப்பொழுது இந்திரஜித் தன் மனைவிமார்களுடன் மிக்க மகிழ்ச்சியாக இருந்தான். அவன் காதில் அரக்கர்கள் அழும் குரல் கேட்டது. உடனே அவன் தன் பக்கத்தில் இருந்த ஏவலர்களை பார்த்து இவ்வழுகை ஒலி எங்கிருந்து வருகிறது எனக் கேட்டான். அதற்கு ஏவலர்கள், ஒரு வானரம் அசோக வனத்தை அழித்து, கிங்கரர், ஜம்புமாலி, மற்றும் நமது ஐந்து சேனைத் தலைவர்களையும் அழித்து விட்டது. கடைசியாக சென்ற இளவரசர் அட்சய குமாரனையும் கொன்று விட்டது. இதனால் அரக்கர்கள் மிக்க துன்பத்தோடு  வருத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர் என்று கூறினர்.
 
★தன் தம்பி அனுமனால் கொல்லப்பட்ட செய்தி அறிந்த இந்திரஜித் மிகவும் கோபம் கொண்டு கொதித்தெழுந்தான்.
தன் தம்பியை நினைத்து அவன் மிகவும் வருந்தினான். தன் வில்லை பார்த்து, ஒரு வானரம் என் தம்பியை கொன்றதா? இல்லை, ராவணனின் புகழை அல்லவா கொன்று உள்ளது என்றான். அதே சமயத்தில் இந்திரனுக்கு சமமான வீரனான தன் மகன் இந்திரஜித்தை அழைத்தான் ராவணன். தன் தந்தையால் அழைக்கப்பட்ட இந்திரஜித் மிக விரைவாக அரசவைக்குள் வந்து தந்தை ராவணனின் முன்  நின்று தனது வணக்கத்தை தெரிவித்து,
அவன்  திருவடியில் விழுந்து வணங்கினான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை..................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
189 / 07-10-2021
 
இநதிரஜித்...
 
★அரசே! அந்த குரங்கின் மிகுந்த  வலிமையை அறிந்த பின்பும் தாங்கள் அரக்கர்களை அந்த கொடிய குரங்கிடம் அனுப்பி, எமலோகத்திற்கு அவர்களை அனுப்புகிறீர்கள். அப்படித்தான் கிங்கர அரக்கர்கள், ஐந்து சேனைத்தலைவர்கள், என் தம்பி அட்சய குமாரன் என ஒருவர் பின் ஒருவராக இறந்து போயினர். இவ்வளவு பேரையும் கொன்ற பிறகு அக்குரங்கை சும்மா விடுவது சரியல்ல. நான் சென்று அக்குரங்கை கணப்பொழுதில் பிடித்து வருகிறேன். தாங்கள் வருந்த வேண்டாம் என்றான்
இந்திரஜித். ராவணன் அவனை கட்டித் தழுவிக் கொண்டு பேச ஆரம்பித்தான்.
 
★இந்திரனுக்கு சமமான வீரன்
 நீ ஆவாய். அனைத்து விதமான அஸ்திரங்களையும் நன்றாக பயின்று அதனை அடைந்து இருக்கிறாய். நம்மை எதிர்த்த தேவர்களையும் அசுரர்களையும் யுத்தத்தில் வென்றிருக்கிறாய். பிரம்மாவை, கடின தவம் செய்து பூஜித்து அவரிடமிருந்து உயர்ந்த பிரம்மாஸ்திரம் பெற்று வந்து இருக்கின்றாய். உன்னை எதிர்த்து யுத்தம் செய்யக் கூடிய வீரர்கள் இந்த உலகத்தில் யாரும் இல்லை. அறிவில் சிறந்த நீ காரியங்களை மிகச் சரியாக யோசனை செய்வதில் உனக்கு நிகர் யாருமில்லை.
 
★அசோக வனத்தில் ஒரு துஷ்ட வானரம் நம்மை எதிர்த்துக் கொண்டு இருக்கிறது. இது அந்த தேவர்களின் சூழ்ச்சியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். நான் அனுப்பிய கிங்கரர்கள், ஜம்புமாலி,  நம்முடைய , வீரமான சேனாதிபதிகள் 5 பேர், உனது அருமை தம்பி அட்சயகுமாரன் ஆகிய அத்தனை பேரும் அந்த வானரத்தால் கொல்லப்பட்டனர். நீ தான் அந்த துஷ்ட வானரத்தை வெல்லும் வல்லமை அதிகமாக கொண்டவன். அந்த வானரத்தை நமது சேனைகளின் பலத்தால் வெல்ல முடியாது. அந்த  கொடிய வானரத்தின் அறிவாற்றலையும், வல்லமையையும் அத்துடன் அதன் பராக்கிரமத்தையும், சிந்தித்து பார்த்து உன்னுடைய தவ பலத்தை உபயோகித்து, சிறந்த அஸ்திரத்தை பயன் படுத்தி, கைது செய்து இங்கே வெற்றியுடன் திரும்பி வா என்று சொல்லி இந்திரஜித்தை அனுப்பி வைத்தான் ராவணன்.
 
★இந்திரஜித், தந்தையை வலம் வந்து ஆசி பெற்றுக்கொண்டு நான்கு சிங்கங்கள் பூட்டிய தேரில் நின்று, வில்லின் நானை இழுத்து சப்தம் செய்து, அசோக வனத்தை நோக்கிச் சென்றான். அவன் பின்னே பெரும் ராட்சத சேனைகள் பெரும் கூட்டமாக வந்தார்கள். அனுமனுக்கு வெகு தூரத்தில் ஒரு கூட்டம் வருவது தெரிந்தது. மீண்டும் யுத்தம் செய்வதற்கு தயாரானான்.  இந்திரஜித்தின் அரக்கர் படைகள் அனுமனை சூழ்ந்துக் கொண்டன.
 
★அனுமன் தன் விஸ்வரூபத்தை எடுத்தான்.அனுமன் தன் அருகில் இருந்த ஆச்சா மரத்தை பிடுங்கி அரக்கர்களிடம் போரிட்டான். அரக்கர் படை  அனைத்தையும் கொன்றான். பிறகு அனுமன் தன் தோள்களைத் தட்டி என்னிடம் போருக்கு வாருங்கள் என முழக்கமிட்டான். அரக்கர்களுக்கு அழிவு வந்துவிட்டது என்றான். இதைக்கேட்ட இந்திரஜித், உன் எண்ணத்திற்கு நான் முடிவு கட்டுகிறேன் எனக்கூறி அனுமன் மீது அம்புகளை ஏவினான். இந்திரஜித் தன்னுடைய வில்லை எடுத்து அம்புமழை பொழிந்தான். அனைத்து அம்புகளில் இருந்தும் அனுமன் லாவகமாக தப்பினான்.
 
★சில அம்புகள் அனுமன் மீது பட்டாலும் அந்த அம்புகளால் அனுமனின் வஜ்ரம் போன்ற உடம்பை துளைக்க சிறிதும் முடியவில்லை. இந்திரஜித் விட்ட அம்புகள் அனைத்தும் பயன் அற்றுப் போனது. ராட்சதர்கள் ஏற்படுத்திய பேரிகை, முரசு மற்றும  நாணோசை ஆகிய பெரும் சத்தங்களுக்கு எதிராக அனுமனின் கர்ஜனை சத்தம் பெரிதாக இருந்தது. வீரர்கள் இருவருக்கிடையிலும் நடந்த யுத்தம் இருவரின் அபரிமிதமான சாமர்த்தியத்தையும், அற்புதமான வலிமையையும் காட்டியது. யுத்தம் நீண்டு கொண்டே சென்றது.
 
★அனுமன் தன் உடலை மிகவும் பெரிதாக்கிக் கொண்டே சென்றான். இந்திரஜித்தால் அனுமனை பாதிக்குமேல் காண முடியவில்லை. பிறகு அனுமன்,
ஒரு மரத்தை வேரோடு பிடுங்கி இந்திரஜித் மீது எறிந்தான். இதனால் இந்திரஜித்தின் மணிமுடிகள் உடைந்து கீழே விழுந்தன. இதனால் மிகுந்த கோபங்கொண்ட இந்திரஜித் அனுமன் மீது ஆயிரக்கணக்கான  பாணங்களை ஏவினான். அனுமன், இந்திரஜித்தை அவன் நின்றிருந்த தேரோடு தூக்கி எறிந்தான். தரையில் விழுந்த இந்திரஜித் எழுந்து வானில் சென்றான்.  
 
★என்ன செய்வதென தெரியாத நிலையில் இந்திரஜித், மனதில்
சிந்திக்கத் தொடங்கினான். எத்தனை அம்புகள் விட்டாலும் இந்த வானரத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை. தந்தை சொன்னது முற்றிலும் சரியே. நமது தவத்தினால் பெற்ற அஸ்திரத்தை உபயோகித்து இந்த வானரத்தை அடக்க வேண்டும் என்று ஓர் முடிவு செயதான். அனுமன் மீது திவ்ய பிரம்மாஸ்திரத்தை ஏவ மனதில் நினைத்தான். அதனால் அந்த பிரம்மாஸ்திரத்திற்கு விஷேச அர்ச்சனைகளும், பூஜைகளும், வழிபாடுகளும், செய்து சகல தெய்வங்களை வணங்கி அந்த பிரம்மாஸ்திரத்தை தன் கையில் எடுத்துக் கொண்டான் ராவணன் மைந்தன் இந்திரஜித்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை......................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
190 / 08-10-2021
 
கட்டுண்ட அனுமன்...
 
★பிரம்மாவிடம் இருந்து பெற்ற பிரம்மாஸ்திரத்தை அனுமன் மீது எய்தான் இந்திரஜித். அந்த மகா பிரம்மாஸ்திரம் அனுமனை செயல் இழக்கச் செய்தது. பிரம்மாஸ்திரத்தால் கட்டுண்ட அனுமன் கீழே விழுந்தான்.
பிரம்மாஸ்திரத்திற்கு மதிப்பு அளித்து  கட்டுப்படுவது தான் சிறந்தது என நினைத்து கட்டுப்பட்டான். பிரம்மா தனக்கு அளித்த சிரஞ்சீவி பட்டத்தையும் அந்தநேரம் அவர் சொல்லிய செய்திகளையும் ஞாபகம் செய்து கொண்டார்.
 
★ஒரு முகூர்த்த நேரம் மட்டுமே இந்த அஸ்திரம் நம்மை கட்டி வைக்கும், அதன் பிறகு அந்த அஸ்திரமானது செயலற்றுப் போகும். இதனால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லை. இந்த ஒரு முகூர்த்த நேரத்தில் இந்த ராட்சதர்களால் என்ன செய்ய முடியும், பார்க்கலாம் என்று  பிரம்மாஸ்திரத்திற்கு கட்டுப்பட்டு தரையில் விழுந்து அமைதியாக இருந்தார். இதைப் பார்த்த இந்திரஜித், அனுமனின் அருகில் வந்து இவனுடைய வலிமையை ஒடுக்கி விட்டேன் என்றான்.
 
★அனுமன் கீழே விழுந்து செயலற்றுப் போய் விட்டார் என்று அறிந்த ராட்சதர்கள் அனுமனுக்கு அருகில் வந்து சூழ்ந்து கொண்டு இளவரசன் இந்திரஜித்தை புகழ்ந்தும், அனுமனை தின்று விடுவோம் என்றும் பலமாக கோஷம் போட ஆரம்பித்தார்கள். அனுமன் கட்டுண்டதை பார்த்து சிரித்த அரக்கர்கள் மிகவும் மகிழ்ந்து கொண்டாடினார்கள். அனுமன் மயக்கமடைந்தது போல் பாசாங்கு செய்து கொண்டு படுத்திருந்தான்.. அப்படியே விட்டால் இந்த கொடிய வானரம் திடீரென்று எழுந்து நம்மை தாக்கக் கூடும். அவரை உடனே கயிற்றால் கட்டி விடலாம் என்று ஒரு ராட்சசன் கூறினான்.
 
★அருகில் இருந்த ராட்சதர்கள் அனைவரும் ஆமோதித்து ஒரு பெரிய கயிற்றை கொண்டு வந்து அனுமனை கட்டினார்கள். மந்திர பிரம்மாஸ்திரத்தினால் கட்டப்பட்டு இருப்பவர்களை, சாதாரண தூலப்பொருளான கயிறு கொண்டு கட்டினால் பிரம்மாஸ்திரம் செயலற்றுப் போகும் என்பதை அறிந்திருந்த இந்திரஜித் வானரத்தை கயிறால் கட்டாதீர்கள் என்று கத்தினான். ராட்சதர்கள் வெற்றி முழக்கத்தில் போட்ட கூச்சலில் தூரத்தில் நின்றிருந்த இந்திரஜித் கத்திச் சொன்னது யார் காதிலும் விழவில்லை.
 
★ராட்சதர்கள் அனுமனை கட்டியதை தடுக்க முடியாமல் தவித்த இந்திரஜித், நம்முடைய பிரம்மாஸ்திரம் வீணாகப் போய் விட்டதே!  விரைவில் இந்த வானரம் எழுந்து யுத்தம் செய்ய வந்து விடுவான். மீண்டும் வானரத்தின் மீது அபூர்வமான பிரம்மாஸ்திரத்தை பிரயோகிக்க முடியாதே என்று மிகவும் வருத்தப்பட்டான். அனுமன் தன்னை கட்டிய பிரம்மாஸ்திரம் அவிழ்ந்து போனதை உடனே உணர்ந்தார். சாதாரணமான ஒரு  கயிற்றினால் கட்டப்பட்டிருப்பதை பார்த்த அனுமன் தன் உடல் வலிமையால் ஒரு கணத்தில் இந்த கயிற்றை அறுத்து விடலாம்.
 
★ஆனால் கயிற்றை அறுக்காமல் நாம் இப்படியே இருப்போம், இவர்கள் நம்மை ராவணனிடம் அழைத்துச் செல்வார்கள். அவனிடம் பேசுவதற்கு நமக்கு வாய்ப்பு கிடைக்கும். இதனை பயன்படுத்திக் கொண்டு ராவணனை சந்தித்து, அவனை பயமுறுத்தி வைக்கலாம் என்று அனுமன் அமைதியாக இருந்தார். ராட்சதர்கள் தனது கைகளினால் அனுமனை அடித்தும், திட்டியும், பரிகாசம் செய்து கொண்டே ராவணனின் அரண்மனைக்கு இழுத்துச் சென்றார்கள். ராவணனை பயமுறுத்தியே ஆக வேண்டும் என்று அனைத்தையும் அனுமன் மிக அமைதியாக பொறுத்துக் கொண்டார்.
 
★பிறகு அரக்கர்கள் அனுமனை கயிற்றோடு கட்டி ராவணனின் அரண்மனைக்கு இழுத்துச் சென்றனர். அனுமன் திவ்ய பிரம்மாஸ்திரத்தால் கட்டுண்ட செய்தியை அறிந்து சீதை மிகவும் வருந்தினாள். போகும் வழியில் சில அரக்கர்கள் அனுமனை பார்க்க பயந்தனர். சிலர் நீ கொன்ற என் மகனை திரும்பக் கொடு என்றனர். இன்னும் சிலர் நீ கொன்ற என் கணவரை திரும்ப கொடு என்றனர். இன்னும் சில அரக்கர்கள் அனுமனிடம் பணிந்து எங்களை மன்னித்து விடு என்றனர்.
 
★சிலர் நீ கொன்ற எங்களின்  தந்தையை திரும்ப கொடு என்றனர். அனுமன், அரக்கர்கள் பின் சென்றால் ராவணனை காண முடியும் என நினைத்து அமைதியாக வந்தான். பிறகு அனுமனுடன் இந்திரஜித் தலைமையில் அரக்கர்கள் அரண்மனையை அடைந்தனர். ராவணனுக்கு வானர வீரன் கட்டுண்ட செய்தி முன்பே தெரிவிக்கப்பட்டது. உடனே ராவணன், அரக்கர்களிடம் அவனை என் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள் என ஆணையிட்டான்.
 
★அனுமன் அவனைக் காணும் வாய்ப்புக்கு அகமகிழ்ந்தான். அவனைக் கொல்வதற்கும், வெல்வதற்கும் ஶ்ரீ ராமன் ஒருவனால்தான் முடியும் என்பதைக் கண்டான். விரைவில் விடுபட்டு இராமனுக்குச் செய்தி சொல்ல விரும்பினான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை..................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
191 / 09-10-2021
 
ராவணன்
அரண்மனையில் அனுமன்...
 
★இவனோடு நான் போரிட்டால், சீதையின் நிலைமையை நான் எப்படி ராமனிடம் சொல்வேன் என நினைத்தான். ஆதலால் ராவணன் முன்பு ஒரு தூதனாக சந்திப்பது தான் சிறந்தது என நினைத்தான். ராவணனின் சபைக்கு கட்டிக் கொண்டு வரப்பட்டான் அனுமன்.
அங்கு அவனை இலங்கேசன் ராவணன் முன்பு கொண்டு போய் நிறுத்தினார்கள். அந்த அனுமனை, இந்திரஜித் அரசன் ராவணனுக்கு அறிமுகம் செய்து  வைத்தான்.
 
★அனுமனை பார்த்து, குரங்கின் உருவில் இருக்கும் இவ்வீரன் சிவபெருமானை போலவும், விஷ்ணுவை போலவும் வலிமை கொண்டவன் எனக் கூறினான்.
 ராவணன் பட்டுப் பீதாம்பரமும், கண் கூசும் ஆபரணங்களுடன், ரத்தின கீரீடத்துடனும் அந்த அரசவையில் கம்பீரமாக ஒரு மலை போல் அமர்ந்திருந்தான். ராட்சதர்கள் இவ்வளவு நேரம் செய்த கொடுமைகளில் அமைதியாக இருந்த அனுமன் ராவணனை பார்த்ததும், சீதைக்கு அவன் செய்த துன்பங்கள் அனைத்தும் ஞாபகம் வந்தது. பெருங்கோபம் கொண்டு அடுத்து என்ன செய்யலாமென சிந்திக்க ஆரம்பித்தான் அனுமன்.
 
★மிக்க எழிலுடனும், பராக்கிரம சாலியாகவும் இருக்கும் இந்த ராவணன் தர்மத்தில் இருந்து விலகாமல் இருந்து, சத்தியத்தை கடைபிடித்திருந்தால் அந்த தேவலோகத்தில் இருப்பவர்கள் கூட இவனுக்கு சிறிதும் ஈடாக மாட்டார்கள். ராவணன் தான் பெற்ற எலா வரங்களையும், மேன்மைகளையும் தவறான காரியங்களைச் செய்து அவை அனைத்தையும் இழந்து விட்டானே என்று அவன் மீது பரிதாப்பட்டான் அனுமன்.
 
★ராவணன் தன் மந்திரிகளிடம் யார் இந்த வானரம்?. இவன் இலங்கைக்குள் எதற்காக வந்தான்? என்று விசாரியுங்கள் என்று உத்தரவிட்டான். அந்த மத்திரிகளில் ஒருவரான பிரஹஸ்தன் என்பவன் அனுமனிடம் வந்து வானரனே! யார் நீ? எதற்காக இங்கே வந்தாய்? வானர வேடத்தை அணிந்து வந்திருக்கின்றாயா? உன்னை அனுப்பியது யார்? இந்திரனா? இல்லை குபேரனா? வேறு யாராவது உன்னை ஏவினார்களா? உண்மையை சொல்லி விட்டால் இங்கிருந்து நீ உயிரோடு தப்பிக்கலாம். ஆகவே  மறைக்காமல் அனைத்தையும்
சொல். இல்லையென்றால் இங்கிருந்து உயிருடன் செல்ல முடியாது என்றான்.
 
★அனுமன் பேச ஆரம்பித்தான். இந்திரனாவது, குபேரனாவது. யாரும் என்னை இங்கு அனுப்ப வில்லை. வேடம் அணிந்து கொண்டும் நான் இங்கு வரவில்லை என்று கூறினான். ராவணன் அனுமனை பார்த்து, பின்பு நீ யார்? எதற்காக இங்கு வந்துள்ளாய்? உன்னை இங்கு அனுப்பியவர் யார்? எனக் கேட்டான். அனுமன், நான் வில் வீரத்தில் சிறந்தவனான ராமனின் தூதுவன். ராமன், வேதங்களை நன்கு கற்றவன். அறிவில் சிறந்து விளங்குபவன். அறத்தை வளர்ப்பவன். தர்ம நெறியில் விளங்குபவன். மிகச் சிறந்த வீரன். அத்தகைய சிறப்பு மிக்க ராமனின் தூதன் நான்.
 
★ராமனின் மனைவி சீதையை தேடி வாலியின் சகோதரனான சுக்ரீவனின் கட்டளைப்படி வாலியின் மகன் அங்கதன் தலைமையில் வந்துள்ளேன். அவனுடைய தூதனாக மற்றும் தனியாக இங்கே வந்துள்ளேன்.
ராட்சத அரசனான ராவணனை பார்க்க விரும்பினேன். அதற்கு சரியான அனுமதி எனக்கு கிடைக்காது என்பதை நான் அறிந்தேன். அதற்காக வனத்தை அழித்தேன். என்னை கொல்ல வந்தவர்களை நான் அழித்தேன். இப்போது உங்கள் முன்பு நிற்கின்றேன். உங்களுக்கு எனது அன்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். வானர அரசன் சுக்ரீவன் உங்களைத் தன் சகோதரனாக பாவித்து, நலத்தை விசாரிக்கச் சொன்னார் என்ற செய்தியை முதலில் உங்களிடம் சொல்லி விடுகின்றேன் என்றார்.
 
★வாலியின் பெயரைக் கேட்ட ராவணன், பலமாக சிரித்தான். வாலியின் மகன் அங்கதனின் தூதனா நீ? வாலி நலமாக உள்ளானா? எனக் கேட்டான். அனுமன், ராவணனை பார்த்து கேலியாக சிரித்தான். பிறகு, அரக்கனே! வாலி இவ்வுலகை விட்டு வானுலகம் சென்று விட்டான். அவனின் உயிரை ராமனின் பாணம் பதம் பார்த்தது. இப்போது வாலியின் தம்பியான சுக்ரீவன் அரசனாக உள்ளான் எனக் கூறினான். உடனே ராவணன் அனுமனிடம், வாலியை ராமன் எதற்காக கொன்றான்? என சொல்வாய்  என்றான்.
 
★சீதையைத் தேடி ராமன் வந்தபோது, சுக்ரீவனின் நட்புக் கிடைத்தது. சுக்ரீவனின் துயரை போக்கும் பொருட்டு  ஶ்ரீ ராமன் வாலியை கொன்று,சுக்ரீவனுக்கு மணிமுடி சூட்டினான் என்றான். ராவணன், உன் குலத்து பெரும் தலைவனை கொன்ற ராமனிடம் அடிமையாக இருக்கின்றீர்கள். தன் சொந்த அண்ணனை ராமனை விட்டு கொன்ற அந்த சுக்ரீவன் எனக்கு தூது அனுப்பி உள்ளானா? எனக் கேட்டான். நீ இங்கு தூதுவனாக வந்ததால் உன்னைக்  கொல்லாமல் இருக்கின்றேன். உண்மையைச் சொல் என்றான் ராவணன்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்.
9944110869.
 
நாளை..................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
192 / 10-10-2021
 
அனுமனுக்கு தண்டனை?...
 
★அவையில் அனுமன் மேலும் பேச ஆரம்பித்தான். நான் வானர அரசன் சுக்ரீவனிடம் இருந்து வந்திருக்கும் தூதுவன் என்று சொல்லியும் என்னை கயிற்றால் கட்டி வைத்து எனக்கு ஆசனம் தராமல் நிற்க வைத்து பேசிக் கொண்டிருக்கின்றீர்கள். இந்திரஜித்தின் திவ்யமான பிரம்மாஸ்திரத்தினால் நான் வீழ்ந்து விட்டேன், நான் இப்போது  ஒரு கைதி என்று நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். இந்திரஜித்துக்கு வரம் கொடுத்த பிரம்மா எனக்கும் சிரஞ்சீவி என்ற வரத்தை அருள்கூர்ந்து கொடுத்திருக்கின்றார்.
 
★பிரம்மாவின் வரத்திற்கு கட்டுப்பட்டு,  நான் இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தேன். இப்போது எனக்குரிய அந்த ஆசனத்தை நானே ஏற்படுத்திக் கொள்கிறேன் என்று அனுமன், உடனே தன்னுடைய வாலை பெரியதாக்கி, சுருட்டி, ஆசனம் செய்து அதன் மேல் அமர்ந்து பேசுவதற்கு  ஆரம்பித்தான். தசரதரின் மூத்த குமாரன் ராமர் தனது தந்தையின் சத்தியத்தைக்  காப்பாற்ற வனவாசம் மேற்கொண்டார். அப்போது ஒரு ராட்சதன் மிக வஞ்சகமாக ஏமாற்றி, அவரது மனைவி சீதையை தர்மத்திற்கு விரோதமாக தூக்கிச் சென்று விட்டான்.
 
★ராமர், மாதா சீதையை தேடிக் கொண்டிருக்கும் நேரத்தில், சுக்ரீவனிடம் நட்பு கொண்டார். யாராலும் அழிக்க முடியாத வலிமை பொருந்திய வாலியை ராமர் வதம் செய்து, சுக்ரீவனுக்கு அரச பதவியை பெற்று தந்தார். ராமரின் கட்டளைப்படி சுக்ரீவன் சீதையை தேட உலகம் முழுவதும் தனது வானர படைகளை அனுப்பி வைத்தார். இந்த இலங்கையில் சீதையை தேடி நான் வந்தேன். இங்கு சீதையை கண்டேன். நீங்கள் சீதையை அபகரித்து வந்தது தர்மத்துக்கு விரோதமான செயல் என்று உங்களுக்கு தெரியும். உங்களின் இந்த செயலால் ராமர் மற்றும் வானர கூட்டத்தின் பகையை சம்பாதித்துக் கொண்டீர்கள்.
 
★உடனடியாக ராமரிடம் மன்னிப்பு கேட்டு,  சீதையை அவரிடம் ஒப்படைத்து, நீங்கள்  சரணடைந்து விடுங்கள். இல்லை என்றால் ராமர் மற்றும் அவரது தம்பி லட்சுமனணின் அம்புகள் மற்றும் வானர கூட்டத்தினால் இந்த ராட்சத கூட்டம் மொத்தமும் அழிந்து போகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறினான் அனுமன். அவனின் இந்தப் பேச்சினால் மிகுந்த கோபமடைந்த ராவணன், இந்த வானரத்தை கொன்றே விட வேண்டும் என்று முடிவு செய்தான். அவனது கண்கள் கோபத்தில் துடித்தது. அனுமன் மேலும் பேச ஆரம்பித்தான். புத்திமான்கள் தர்மத்துக்கு எதிராக செயல்பட்டு தங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திக் கொள்ள மாட்டார்கள்.
 
★தங்களின் இந்த ஒரு பாதகச் செயலால் இத்தனை நாட்கள் நீங்கள் செய்த தவங்கள் எல்லாம் அழிந்து போகும். உங்களுடைய தவ பலன்களின் வலிமை எல்லாமே  ஶ்ரீ ராமரின் முன்பு தோற்றுப் போகும். நீங்கள் பிழைக்க இப்போது ஒரு வழி மட்டுமே உள்ளது. ஶ்ரீ ராமரை சரணடைவதை தவிர வேறு வழி இல்லை. சிந்தித்துப் பார்த்து, உண்மையை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள்.ராம தூதுவனான எனது சொல்லை மதித்து நல்வழியில் சென்று பிழைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி முடித்தான் அனுமன். நிறுத்து! உனது பேச்சை! என்று கர்ஜனை செய்த ராவணன் இந்த கொடிய வானரத்தை முதலில் அடித்துக் கொல்லுங்கள் என்று மிகுந்த கோபமாக கத்தினான்.
 
★மகாபாரதக் கதையில் வரும் துரியோதனன் அருகில் துச்சாதனன் இருந்தான். வேடிக்கை பார்க்கும் வீரன் கர்ணன் இருந்தான். வயதில், பலத்தில் பெரியவர்களாக இருந்த பிதாமகர் பீஷ்மர், கிருபர்,  கிருபாச்சாரியார், துரோணர் ஆகியோரும் மௌனமாக வீற்றிருந்தார்கள். ஆனால்  தடுத்துப் பேச ஒரு விதுரன் தான் அங்கு இருக்க முடிந்தது. இங்கே வீபீஷணன், விதுரனாய்ச் செயல் பட்டான்.  “மாதரையும் மற்றும் தூதுவரையும் கொல்வது அரச நீதியாகாது”  என்று சாஸ்திரம் அறிந்த அவன், நீதியை எடுத்து உரைத்தான். தூதுவனைக் கொல்வது தவறாகும். இதுவே ராஜ நீதி.  எனவே இந்த துஷ்ட வானரத்தை கொல்ல வேண்டாம் என்று சபையில் இருந்த அரசன் ராவணனின் தம்பி விபீஷணன் கூறினான்.
 
★அதற்கு ராவணன், எனது மகன் அட்சயகுமாரன், ஜம்புமாலி  உட்பட நம்முடைய மாபெரும் சேனாதிபதிகள் மற்றும் ராட்சத சேனைகள் பலரை இந்த வானரம் கொன்றிருக்கிறான். பாப காரியத்தை செய்த இந்த வானரத்தை கொல்வதில் தவறு ஒன்றும் இல்லை என்றான். அதற்கு விபிஷணன், இந்த வானரம் குற்றம் செய்தவனாக இருந்தாலும், அவை  அனைத்தும் பிறருடைய ஏவலினால் செய்து இருக்கிறான். ஏவியவர்களை விட்டுவிட்டு தூதுவனாக வந்த இவனை தண்டிப்பதில் எந்த பயனும் இல்லை.
 
★அந்த வானரத்தை இங்கு  அனுப்பியவர்களை தண்டிக்க  ஏதுவாக அருமையான  வழியை தேடுங்கள். இந்த வானரத்தை உயிருடன் அனுப்பினால் மட்டுமே அவர்களிடம் சென்று சீதை இங்கிருக்கும் செய்தியை சொல்லுவான்.  இந்த வானரம். கூறும் செய்தியை  கேட்டதும், அவர்கள் அனைவரும் நம்மை தாக்க இங்கே வருவார்கள். அப்போது அவர்களை நம்முடைய பலத்தினால் தண்டிக்கலாம் என்றான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.....................
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
193 / 11-10-2021
 
வாலில் இட்ட தீ...
 
★நீங்கள் இப்போது தண்டிக்க எண்ணினால் இந்த வானரத்தின் அங்கங்கள்  எதையாவது ஊனப்படுத்தி விடுங்கள் என்று சொல்லி முடித்தான் தம்பியான விபிஷணன்.  ராவணன் விபீஷணனிடம், தம்பி! நல்லது செய்தாய். இல்லையென்றால் இக்குரங்கை கொன்று பாவம் செய்திருப்பேன் என்றான். ஆனால் இந்த வானரம் குற்றம் செய்துள்ளது. அதற்கு தண்டனை தர வேண்டும் என நினைத்தான்.
 
★ராவணன், தன் தங்கையான சூர்பணகையை, ராம லட்சுமணர் அங்க பங்கப்படுத்தியது போல, இவன் வாலுக்கு நெருப்பு வைப்பதே உகந்தது என்று கூறினான். வானரத்தின் லட்சண உறுப்பான வாலில் நெருப்பை வைத்து வெளியே துரத்தி விடுங்கள். வால் எரிந்து, வால் இல்லாமல் அவலட்சணமாக இருக்கட்டும்.  அதனால் இக்குரங்கின் வாலில் தீ மூட்டி, இலங்கை நகரை சுற்றி வந்து பிறகு இந்நகரை விட்டு விரட்டியடியுங்கள் என்றான். பிறகு  அரக்கர்களிடம் இவனை கனமான கயிற்றை கொண்டு கட்டுங்கள் என சொல்லி விட்டுச் சென்றான்.  அரக்கர்கள் அனுமனை கனமான கயிற்றை கொண்டு கட்டினார்கள்.
 
★அனுமனை ராட்சத வீரர்கள் அரண்மனையை விட்டு வெளியே அழைத்து வந்து, தெருக்கள் வழியாக இழுத்துச் சென்றார்கள். ராட்சத கூட்டம் சுற்றி நின்று அனுமனை திட்டியும், பரிகாசம் செய்தும், கோஷம் போட்டும் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள். மந்திரத்தின் கட்டு அவனைவிட்டு நீங்கியது. மாந்தரின்கட்டு அவனைக் கட்டியது. நகரெங்கும் ஒவ்வொரு
வீதி தோறும் அவன் இழுத்துச் செல்லப்பட்டான். அருமையான அந்தப்  பொன்னகரின் எழிலும் பரப்பும் அவனால் காண நன்கு முடிந்தது.  நகரத்தின் நடுவில்  அவனை நிற்க வைத்தனர்,
 
★ராவணன் உத்தரவிட்டபடி வாலில் நெருப்பை வைக்கட்டும் அதன் பிறகு நமது சக்தியை இந்த ராட்சசர்களுக்கு காண்பிக்கலாம் என்று மிகவும் அமைதியாக அனைத்தையும் பொறுத்துக் கொண்ட அனுமன் அமைதியாக இருந்தான். அவன் வாலுக்குத் துணிசுற்றினர். பிறகு அரக்கர்கள் இலங்கையின் அனைத்து துணிகளையும் கொண்டு வந்து அனுமனின் வாலில் சுற்றினர். அனுமனின் வாலில் எண்ணைய் தடவிய துணியை சுற்றி நெருப்பை வைத்து இழுத்துச் சென்றார்கள் ராட்சதர்கள்.
 
★அசோகவனத்தில் சீதைக்கு பாதுகாப்பாக நின்ற ராட்சசிகள்,  உன்னிடம் பேசி விட்டு சென்ற அந்த வானரத்தின் வாலில் நெருப்பை பற்ற வைத்து தெரு தெருவாக இழுத்துக் கொண்டு  செல்கிறார்கள் என்று அவளிடம் சொல்லி சிரித்தார்கள். சீதை அவளருகே அக்னியை மூட்டினாள். அக்னியே! நான் செய்த புண்ணியம் ஏதேனும் இருந்தால், நான் உண்மையான பதிவிரதையாக இருந்தால், அனுமனை நெருப்பின் வெப்பம் தாக்காமல் குளிர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தாள்.
 
★அத்தீ அனுமனை சுடவில்லை.  
அனுமனுக்கு தனது வாலில் உள்ள நெருப்பின் வெப்பம் தாக்காமல் குளிர்ச்சியாகவே இருந்தது, புதிராக இருந்தது. அப்போது அனுமன், அன்னை சீதை தான் நம்மை நெருப்பு சுடக் கூடாது என அக்னி தேவனை வேண்டியிருப்பாளோ என நினைத்தான். அனுமன் மேலும் சிந்திக்க ஆரம்பித்தார். நெருப்பு வைக்கப்பட்ட துணி எரிகிறது ஆனால் நமது வால் மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறது. ஒருவேளை  தன் தந்தை வாயு பகவானுக்கு மரியாதை செய்ய அக்னி பகவான் தன்னை சுடவில்லையோ, என்றும் எண்ணிய அனுமன், எது எப்படியோ நாம்  இந்த ஒரு அருமையான சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எண்ணினார்.
 
★அரக்கர்கள் அனுமனை கயிற்றில் கட்டிக் கொண்டு இலங்கை முழுவதும் சுற்றினர்.  தன்னை பரிகாசம் செய்த ராட்சசர்களின் மீது அனுமனுக்கு கோபம் அதிகரித்தது. தன்னை கட்டியிருக்கும் கயிற்றை உதறி அறுத்தான். தனது உருவத்தை பெரிதாக்கினான்.  அப்பொழுது அனுமன் சரியான நேரம் பார்த்து வான் வெளியில் பறந்தான்.
எரியும் வாலுடன் ஒவ்வொரு மாளிகையாக குதித்து தாவி, வாலில் உள்ள நெருப்பை ஒவ்வொரு மாளிகைக்கும் வைத்தான். பெரும் காற்று நெருப்பிற்கு உதவி செய்தது. ஒவ்வொரு மாளிகையும் முழுமையாக எரியத் தொடங்கியது.
 
★சிறிது நேரத்தில் இலங்கை நகரமே வானளவு நெருப்பில் எரிந்தது. ராட்சதர்கள் அனைவரும் கதறிக்கொண்டே ஓடினார்கள். தனது வாலில் உள்ள நெருப்பை கடல் நீரில் அனுமன் அணைத்துக் கொண்டான்.  அனுமன் உயரமான திருகூட மலை மேல் ஏறி நின்று எரியும் இலங்கையை பார்த்து மகிழ்ந்தான். அலறிக் கொண்டு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கும் அரககர்களைப் பார்த்தான். உங்களுக்கு இந்த தண்டனை போதாது. என் மாதா சீதையை துன்புறுத்தி மகிழ்ந்தீர்கள் அல்லவா? அதற்கான தண்டனையே இது.  ஶ்ரீ ராமன் இங்கு வந்தபின் இன்னும் இருக்கிறது, உங்களுக்கும் அந்த ராவணனுக்கும் என்ற உரக்க கூறி கர்ஜனை செய்தான்.
 
★பிறகு அனுமன், மாதா சீதை இருந்த திசையை பார்த்து தொழுதான்.  உடனே அவன் மனதில் ஒரு திகில் உணர்ச்சி தோன்றியது.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
194 / 12-10-2021
 
வந்த வேலை முடிந்தது...
 
★அனுமன் ராமனை நினைத்து, வீடுகள், மாளிகைகள் மற்றும்  தெருக்கள் என அனைத்து இடங்களிலும் தீயை வைத்தான். அப்பொழுது இலங்கை நகரம் தீயின் ஒளியால் பிரகாசமாக எரிந்தது. நெருப்பின் புகையால் இலங்கை நகரம் இருண்டு காணப்பட்டது. சில அரக்கர்கள் நெருப்பிற்கு பயந்து கடலில் குதித்தனர். தீயினால் இலங்கை நகரம் அழிந்தது. இலங்கை தீயில் எரிவதை கண்ட அரக்கன் ராவணன் மனம் கலங்கி இதற்கு யார் காரணம்? எனக் கேட்டான்.
 
★அங்கு உயிர் பிழைத்து வந்த அரக்கர்கள், குரங்கின் வாலில் நாம் இட்ட தீ தான். இலங்கை நகரம் எரிவதற்கு காரணம் என்றனர். கோபங்கொண்ட ராவணன், இலங்கை இந்தளவு அழிவதற்கு காரணமாய் இருந்த அக்குரங்கை பிடித்து வாருங்கள் என கட்டளையிட்டான். அந்த அரக்கர்கள் குரங்கை பிடிக்கச் சென்றார்கள். இதை கவனித்த அனுமன், தன் பக்கத்தில் இருந்த மரத்தைப் பிடிங்கி அரக்கர்கள் மீது எறிந்தான். இதனால் எல்லா அரக்கர்களும் உடனே மாண்டு போனார்கள். சில அரக்கர்கள் பயந்து ஒளிந்து கொண்டனர்.
பிறகு அனுமன், மாதா சீதை இருந்த திசையை பார்த்து தொழுதான்.  உடனே அவன் மனதில் ஒரு திகில் உணர்ச்சி தோன்றியது.
 
★உடனே நாம் தவறு செய்து விட்டோமோ என்று எண்ணிய அனுமன் திடுக்கிட்டு அதிர்ந்தார். எவ்வளவு சாமர்த்தியமும், உடல்  வலிமையும் நம்மிடம் அதிகமாக இருந்தாலும், கோபத்தை அடக்க முடியாமல் மதியிழந்து நடந்து விட்டோமே என்று எண்ணினார். இந்த இலங்கை நகரத்திற்கு  பெரும் தீயை உண்டாக்கி நாசம் செய்து விட்டோம். இந்த பயங்கர நெருப்பில் சீதையும் எரிந்து போயிருப்பாரே. சீதையை அந்த ராட்சதர்கள் கொல்வதற்கு முன்பாகவே நாம் கொன்று விட்டோம். கோபத்தில் நாம் செய்த செயலானது ஶ்ரீ ராம காரியத்தையும் நாசம் செய்து விட்டதே. நம்மைப் போன்ற மூடன், பாவி இந்த உலகத்தில் யாரும் இருக்க மாட்டார்கள் என்று தன்னை தானே திட்டிக் கொண்டு துக்கத்தில் ஆழ்ந்தார் அனுமன்.
 
★இனி இந்த உலகத்தில் வாழ நமக்கு சிறிதும் தகுதி இல்லை. இங்கேயே நமது உயிரை விட்டு விடலாம் என்று முடிவு செய்தார் அனுமன். அப்போது மிக நல்ல சகுனங்கள் அனுமனுக்கு தென்பட்டது. உடனே சிந்திக்க ஆரம்பித்தார். தனது வாலில் உள்ள நெருப்பு நம்மை சுடாத போது அறநெறி தவறாமல் சத்தியத்தை கடைபிடிக்கும் நம்
ஶ்ரீ ராமரின் மனைவி சீதையை நெருப்பு எப்படி சுடும். கற்புக்கு அரசியாக இருக்கும் சீதை இந்த நெருப்பில் அழிந்திருக்க மாட்டார்.
 
★ஆகவே சீதை மிகவும் நலமாக இருப்பார் என்று அனுமன் நினைத்துக் கொண்டிருக்கும் போது ஆகாயத்தில் இரண்டு வானவர்கள் பேசிக் கொண்டு சென்றது அனுமனுக்கு கேட்டது.
அனுமன் இலங்கையில் இந்த மிக அற்புதமான செயலை செய்திருக்கிறார். இலங்கையில் சீதை இருக்கும் இடம் தவிர மற்ற அனைத்து இடங்களும் பற்றி எரிகிறது. அனுமன் வாழ்க !அனுமனின் பராக்கிரமம் வாழ்க! என்று சொல்லிக் கொண்டே சென்றார்கள்.
 
★இதைக் கேட்டு அனுமன், மகிழ்ந்தான். நல்ல வேளை அன்னை உள்ள இடத்திற்கு தீ பரவவில்லை என நினைத்தான்.
அனுமனுக்கு அப்போதுதான்
சீதையின் மகத்துவம் புரிந்தது.  அவளின் புண்ணியத்தால் தான் நமது வாலில் இருந்த நெருப்பு நம்மை சுடவில்லை. நம்மை சுடாத நெருப்பு அவரை எப்படி சுடும். சீதை நலமாக இருக்கிறார். நாம் பிழைத்தோம்.  ஒரு முறை சீதையை பார்த்து விட்டு பிறகு செல்லலாம் என்று முடிவெடுத்த அனுமன் அசோகவனத்திற்கு மீண்டும் சென்றார்.
 
★அனுமனை பார்த்த சீதை மகிழ்ந்தாள். பிறகு சீதை அனுமனின் வீரதீர செயல்களை பாராட்டினாள். அனுமன் சீதையிடம் ஆசி பெற்றுக் கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரானான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை.................
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
195 / 13-10-2021
 
அனுமன் போற்றி....
 
★மகேந்திரமலையில்  இருந்து அனுமன்  நூறு யோசனை அகலமுள்ள சமுத்திரத்தை தாண்டி அரக்கன் ராவணனின்
இலங்கைக்கு  பறந்து சென்ற பின் ஜாம்பவான், அங்கதன் உள்ளிட்ட வானரர்களனைவரும் கடற்கரையில் குழுமி இருந்தனர்.
அனுமன் இலங்கை போய் சேர்ந்து இருப்பானா? வழியில் இடையூறுகள் ஏதேனும் அவன் சந்தித்தானா? மாதா சீதையைக் கண்டானா? அவர்கள் எப்படி உள்ளார்கள்? அந்த கொடிய அரக்கர்கள் அவருக்கு மிகவும் துன்பம் தருகின்றனரா? அனுமன் ராவணனை சந்தித்து இருப்பானா? இல்லையா?போன்ற கேள்விகள் எல்லாம் அங்கிருந்த அனைவரின் மனங்களிலும் எழுந்தது.
 
★எழுந்த வினாக்களுக்கு விடை காணமுடியாமல் தவித்தனர்.
மௌனம் கலைத்த ஜாம்பவான், யாரும் கவலைக் கொள்ளாதீர். அனுமன் நலமாக இலங்கை அடைந்திருப்பான். அவன் மிக்க தைரியசாலி. பராக்கிரமம் மிக்கவன். நிச்சயம் சீதையை சந்தித்திருப்பான். மற்றவை பற்றி உங்களைப் போலவே நானும் அறியேன். அனுமன் வரும் வரை காத்திருப்பதைத் தவிர   வேறுவழியில்லை
எனக் கூறினான். அச்சமயத்தில் இலங்கை இருக்கும் திக்கில் இருந்து வானில் புகை மண்டிக் கிடந்ததைக் கண்டார்கள்.  
 
★ஜாம்பவான் அது மிகவும் பிரமாண்டமான ஒரு அக்னி ஜுவாலையால் ஏற்பட்ட புகை மண்டலம்  என்பதை உணர்ந்து கவலை கொண்டார். அங்கு ஏதோ அசம்பாவிதம் நடந்துள்ளது என்று அங்கதனிடம் கூறினார். அங்கு நடந்திருப்பது எதுவாக இருந்தாலும் சரி. நாம் அனுமன் நலமாக திரும்பி வர ப்ரார்தனை செய்வோம். அனுமனைப் பற்றி உயர்வாக நாம் போற்றும்போது அவருக்கு ஶ்ரீராம அருளால் தேகபலம் அபரிமிதமாக கூடும். நான் முதலில் கூறுகிறேன். நீங்கள் அனைவரும் அதை பின் தொடர்ந்து அவரைப் போற்றுங்கள் என ஜாம்பவான் அனைவரிடமும் கூறினார்.
 
★ஜாம்பவான் ஶ்ரீராம நாம ஜபத்தையும் பின்னர் அனுமனைப் போற்றியும் சொல்ல ஆரம்பிக்க, அங்கிருந்த அனைவரும் உரத்த குரலில் அவர் கூறுவதை திருப்பி சொல்ல தொடங்கினர்.
 
1. ஓம் அனுமனே போற்றி
2. ஓம் அஞ்சனை மைந்தனே போற்றி
3. ஓம் அறக்காவலனே போற்றி
 
 
4. ஓம் அவதார புருஷனே போற்றி
5. ஓம் அறிஞனே போற்றி
6. ஓம் அடக்கவடிவே போற்றி
 
7. ஓம் அதிகாலை பிறந்தவனே போற்றி
8. ஓம் அசோகவனம் எரித்தவனே போற்றி
9. ஓம் அர்ஜுனக்கொடியில் நின்றவனே போற்றி
10. ஓம் அமாவாசையில் பிறந்தாய் போற்றி
 
11. ஓம் ஆனந்த வடிவே போற்றி
12. ஓம் ஆரோக்கியம் தருபவனே போற்றி
13. ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
14. ஓம் இகபர சுகமளிப்பவனே போற்றி
 
15. ஓம் இசை ஞானியே போற்றி
16. ஓம் இறை வடிவே போற்றி
17. ஓம் ஒப்பிலானே போற்றி
18. ஓம் ஓங்கி வளர்ந்தோனே போற்றி
19. ஓம் கதாயுதனே போற்றி
20. ஓம் கலக்கம் தீர்ப்பவனே போற்றி
21. ஓம் களங்கமிலாதவனே போற்றி
22. ஓம் கர்மயோகியே போற்றி
23. ஓம் கட்டறுப்பவனே போற்றி
24. ஓம் கம்பத்தருள்பவனே போற்றி
25. ஓம் கடல் தாவியவனே போற்றி
26. ஓம் கரை சேர்ப்பவனே போற்றி
27. ஓம் கீதாபாஷ்யனே போற்றி
28. ஓம் கீர்த்தியளிப்பவனே போற்றி
29. ஓம் கூப்பிய கரனே போற்றி
30. ஓம் குறுகி நீண்டவனே போற்றி
31. ஓம் குழப்பம் தீர்ப்பாய் போற்றி
32. ஓம் கவுண்டின்ய கோத்திரனே போற்றி
33. ஓம் சிரஞ்சீவி ஆனவனே போற்றி
34. ஓம் சலியாத மனம் படைத்தாய் போற்றி
35. ஓம் சஞ்சலம் தீர்ப்பாய் போற்றி
36. ஓம் சிரஞ்சீவி கொணர்ந்தவனே போற்றி
37. ஓம் சிந்தூரம் ஏற்பவனே போற்றி
38. ஓம் சீதாராம சேவகனே போற்றி
 
39. ஓம் சூராதி சூரனே போற்றி
40. ஓம் சுக்ரீவக் காவலனே போற்றி
41. ஓம் சொல்லின் செல்வனே போற்றி
42. ஓம் சூரியனின் சீடனே போற்றி
43. ஓம் சோர்வில்லாதவனே போற்றி
44. ஓம் சோக நாசகனே போற்றி
45. ஓம் தவயோகியே போற்றி
46. ஓம் தத்துவஞானியே போற்றி
 
47. ஓம் தயிரன்னப் பிரியனே போற்றி
48. ஓம் துளசியில் மகிழ்வோனே போற்றி
49. ஓம் தீதழிப்பவனே போற்றி
50. ஓம் தீயும் சுடானே போற்றி
 
51. ஓம் நரஹரியானவனே போற்றி
52. ஓம் நாரத கர்வ பங்கனே போற்றி
53. ஓம் நொடியில் அருள்பவனே போற்றி
54. ஓம் நொடித்தோர் வாழ்வே போற்றி
 
55. ஓம் பண்டிதனே போற்றி
56. ஓம் பஞ்சமுகனே போற்றி
57. ஓம் பக்தி வடிவனே போற்றி
58. ஓம் பக்த ரட்சகனே போற்றி
 
59. ஓம் பரதனைக் காத்தவனே போற்றி
60. ஓம் பக்த ராமதாசரானவனே போற்றி
61. ஓம் பருதியைப் பிடித்தவனே போற்றி
62. ஓம் பயம் அறியாதவனே போற்றி
 
63. ஓம் பகையை அழிப்பவனே போற்றி
64. ஓம் பவழமல்லிப் பிரியனே போற்றி
65. ஓம் பிரம்மச்சாரியே போற்றி
66. ஓம் பீம சோதரனே போற்றி
 
67. ஓம் புலனை வென்றவனே போற்றி
68. ஓம் புகழ் சேர்ப்பவனே போற்றி
69. ஓம் புண்ணியனே போற்றி
70. ஓம் பொட்டிட மகிழ்பவனே போற்றி
 
71. ஓம் மதி மந்திரியே போற்றி
72. ஓம் மனோவேகனே போற்றி
73. ஓம் மாவீரனே போற்றி
74. ஓம் மாருதியே போற்றி
 
75. ஓம் மார்கழியில் பிறந்தவனே போற்றி
76. ஓம் மணம் கூட்டுவிப்பவனே போற்றி
77. ஓம் மூலநட்சத்திரனே போற்றி
78. ஓம் மூப்பில்லாதவனே போற்றி
 
79. ஓம் ராமதாசனே போற்றி
80. ஓம் ராமநாமப் பிரியனே போற்றி
81. ஓம் ராமதூதனே போற்றி
82. ஓம் ராம சோதரனே போற்றி
 
83. ஓம் ராமபக்தரைக் காப்பவனே போற்றி
84. ஓம் ராமனுயிர் காத்தவனே போற்றி
85. ஓம் ராமனை அணைந்தவனே போற்றி
86. ஓம் ராமஜெயம் அறிவித்தவனே போற்றி
 
87. ஓம் ராமாயண நாயகனே போற்றி
88. ஓம் ராமாயணப் பிரியனே போற்றி
89. ஓம் ராகவன் கண்மணியே போற்றி
90. ஓம் ருத்ர வடிவனே போற்றி
 
91. ஓம் லட்சியப் புருஷனே போற்றி
92. ஓம் லட்சுமணனைக் காத்தவனே போற்றி
93. ஓம் லங்கா தகனனே போற்றி
94. ஓம் லங்காவை வென்றவனே போற்றி
 
95. ஓம் வஜ்ர தேகனே போற்றி
96. ஓம் வாயுகுமாரனே போற்றி
97. ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
98. ஓம் வணங்குவோரின் வாழ்வே போற்றி
 
99. ஓம் விஷ்ணுஸ்வரூபனே போற்றி
100. ஓம் விளையாடும் வானரனே போற்றி
101. ஓம் விஸ்வரூபனே போற்றி
102. ஓம் வியாசராஜருக்கு அருளியவனே போற்றி
 
103. ஓம் வித்தையருள்பவனே போற்றி
104. ஓம் வைராக்கிய மூர்த்தியே போற்றி
105. ஓம் வைகுண்டம் விரும்பாதவனே போற்றி
106. ஓம் வெண்ணெய் உகந்தவனே போற்றி
 
107. ஓம் வெற்றிலைமாலை ஏற்பவனே போற்றி
108. ஓம் வெற்றியளிப்பவனே போற்றி
 
★அவர்கள் சொல்லி முடிக்கவும் ஜெய் ஶ்ரீராம் எனக் கூறிக் கொண்டே அனுமன் அவர்களின் எதிரில் வந்து குதிக்கவும் மிகச் சரியாக இருந்தது.
 
நாளை....................
 
குறிப்பு:-
 
துன்பங்களில் இருந்து விடுபட நினைப்பவர்கள் அனுமனுக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் அல்லது அனுமனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வரலாம்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை...............
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
196 / 14-10-2021
 
வெற்றிவீரன் அனுமன்....
 
★இலங்கை வேந்தன் ராவணன் தன் உற்றார் உறவினருடன் புஷ்பக விமானத்தில் ஏறி வானத்தில் நிலைபெறச் செய்தான். பின்னர் அங்கிருந்து
தன்னுடைய பொன்நகரம் என எல்லோராலும் அழைக்கப்பட்ட
இலங்காபுரி பற்றி எரிவதை தன் இருபது கண்களாலும் பார்த்து கலங்கினான். ஆத்திரம் கொண்டான். நெஞ்சத்தில் ஓர் இனம் புரியாத, இதுவரையிலும் அவன் அனுபவித்திராத கலக்கத்தை உணர்ந்தான். அவன் கோபம் தலைக்கேறியது. ராமா!!! உன்னை அழிப்பேன் என உரத்த குரலில் கத்தினான்.
 
★அந்த சமயத்தில் மண்டோதரி, அவனை பார்த்து, ஒரு குரங்கே இவ்வளவு நாசம் செய்து விட்டதே. இன்னும் குரங்குகள் அனைத்தும்  இங்கு வந்தால் என்னவாகும்? என்று கேட்டாள். ராவணன் அவளைப் பார்த்த உக்கிரமான பார்வையில மண்டோதரியின் சப்த நாடிகளும் அடங்கியது.
கலக்கம் வேண்டாம் தந்தையே! உலகமெங்கும் பரவியுள்ள நமது அசுரப் படைகள் அனைத்தையும்
ஒன்று திரட்டுகிறேன். அந்த ராமன் குரங்கு படையோடு வந்தால், அவர்களை அழித்து நிர்மூலமாக்குவோம் என்று வீரத்தோடு முழக்கமிட்டான்.
 
★அரக்கர் குல சிற்பி மயன் என்பவனை வரவழைத்த ராவணன், முன்பைவிட  அதிக எழிலாக இந்த லங்காபுரியை உருவாக்குக என்று ஆனை பிறப்பித்தான். அசுரசிற்பி மயன் தனது உதவியாளர்களுடன் களத்தில் புகுந்து வேலையை ஆரம்பித்துச் சிலநொடிகளில் முடித்தான். பார்த்த ராவணன் பிரமித்தான். மயனைப் பாராட்டி நிறைய பரிசுப் பொருட்களை வழங்கினான் ராவணன். பின் தன் சுற்றத்தாரோடு தனது அரண்மனை சேர்ந்தான்.
 
★அனுமன் அசோகவனத்தில் சிம்சுபா மரத்தடியில் சீதை அமர்ந்திருப்பதை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். சீதையிடம் சென்று தனது வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு, தாயே! தாங்கள் நலமாக இருப்பதை கண்டேன். இப்போது இந்த இலங்கையில் நடந்ததுள்ள அனைத்தும் தாங்கள் நன்கு அறிவீர்கள். இவை அனைத்தும் தங்களின் சக்தியினால் மட்டும் என்பதை உணர்கிறேன்.  அந்த  நெருப்பு என்னைச் சுடாமல் நான்
உங்களால் காப்பற்றப்பட்டேன்.  இது எனது பாக்கியம் என்றான்.
 
★அதற்கு சீதை, உன்னால் ஆகாத காரியம் ஒன்றுமில்லை. வெகு சீக்கிரம் எனது ராமனை அழைத்து வர வேண்டும். இது உன் ஒருவனால் மட்டுமே செய்ய முடியும்  என்றாள். விரைவில் அரசர் சுக்ரீவன் தலைமையில் ஆயிரக்கணக்கான வானரர்கள்  உடன் ராமரும் லட்சுமணனும் விரைவில் வந்து சேருவார்கள்.  நீங்கள் அயோத்திக்கு ராமருடன் திரும்பிச் செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை. நான்  சென்று, விரைவில் மீண்டும்  வருகிறேன் என்ற அனுமன் அங்கிருந்து கிளம்பினார்.
 
★அனுமன் சீதையிடம் ஆசி பெற்றுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு வடதிசை நோக்கிச் சென்றான். அனுமன் இலங்கை கடற்கரையின் மிகப்பெரிய மலை ஒன்றின் மீது ஏறி நின்று வில்லில் இருந்து செல்லும் அம்பு போல அங்கிருந்து ஆகாயம் நோக்கி தாவினான்.  அவ்வாறு அனுமன் பறந்து செல்லும்போது சமுத்திரராஜன் வேண்டியதிற்கு  இணங்க, தன் மீது ஓய்வெடுத்து செல்லும்படி சொன்ன மைநாகம் மலையின் மீது வந்து நின்றான். அங்கு அம்மலையின் மீது சிறிது நேரம் ஓய்வெடுத்தான். பிறகு இலங்கையில் நடந்த நிகழ்சிகள் எல்லாவற்றையும்   மைநாக மலையிடம் கூறினான். பிறகு தன்னை எதிர்பார்த்து அங்கதன், ஜாம்பவான் மற்றும் வானர வீரர்கள் அனைவரும்  காத்துக் கொண்டிருப்பார்கள் எனக் கூறி விட்டு அம்மலையிடம்  விடை பெற்று வானில் பறந்தான்.
 
★அனுமன். தூரத்தில் தெரிந்த மகேந்திரமலையை பார்த்ததும் கடற்கரைக்கு அருகே வந்து விட்டோம் என்பதை உணர்ந்து வெற்றிக்காண கர்ஜனை செய்தான். அவன் ஆகாயத்தில் கருடன் பறந்து வருவதைப் போல கர்ஜனை புரிந்து கொண்டு வருவதைப் பார்த்த ஶ்ரீராம நாமஜபம் செய்து தொண்டிருந்த சில வானரங்கள், அனுமன் வந்து விட்டார் என்று ஆரவாரம் செய்தார்கள். இது வரையில் கவலையும்,கண்களில்  கண்ணீருமாக இருந்த அந்த வானரங்கள் அடங்காத ஒரு மகிழ்ச்சியோடு தலை நிமிர்ந்து பார்த்தார்கள்.  அந்த சமயத்தில்  அவர்களின் எதிரில் வானத்தில் இருந்து குதித்தான் அனுமன்.
 
★ஜாம்பவான் நமது அனுமன் வெற்றியுடன் திரும்பி இங்கு வந்திருக்கிறான். அவன் வெற்றி வீரன்.  அதனாலேயே இவ்வாறு கர்ஜனை செய்தான் என்றார்.  வானர வீரரனைவரும் , மகிழ்சி  கொண்டனர். ஆரவாரம் செய்து, கடல் ஒலியைக் கரையில் எழுப்பினர். அனுமன் வாய் திறந்து பேசவில்லை. அவன் தோற்றமே அவன் ஏற்றத்தை உணர்த்தியது.
 
★“ஞான நாயகன் தேவி கூறினாள், நன்மை” என்றான். அதனால் சீதையை அவன் கண்டு வந்ததை அனைவரும் அறிந்தனர்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை...................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
197 / 15-10-2021
 
இலங்கையில்
நடந்தது என்ன?...
 
★அனுமனைப் பார்த்த மிகுந்த மகிழ்ச்சியில் வானரங்கள் அனுமனை சுற்றி நின்று ஒன்றுகூடி உரக்க ஆரவாரம் செய்தார்கள். அனுமனின் வரவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்ததால் வானர வீரர்கள் அனுமனை கண்டு மிக்க மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர். சிலர் அனுமனை தொழுதனர். சிலர் அனுமனை தூக்கி ஆரவாரம் செய்தனர். சிலர் அனுமனை கட்டி தழுவிக் கொண்டனர். சிலர் ஆடி பாடி மகிழ்ந்தார்கள்.
 
★வானரங்கள் அனுமனை பார்த்து  அனுமனே! உன் வீரதீர செயல்களின் காரணமாய் ஏற்பட்ட புண்களும், உன் முகத்தின் பொழிவும் நீ சீதையை பார்த்துவிட்டாய் என்பதை காட்டுகிறது என்றனர். பிறகு
அந்த இலங்கையில் நடந்தது என்ன?என்று அவனை கேட்டனர்.
வானரங்கள், உனக்காக நாங்கள் காய்களும், கனிகளும், மற்றும் கிழங்குகளும் சேகரித்து வைத்துள்ளோம். இவற்றை உண்டு சிறிது நேரம் இளைப்பாறு என்றனர். பிறகு அனுமன் அங்கதனிடம் சென்று அவனை வணங்கினான்.
 
★ஜாம்பவான் காலில்விழுந்து வணங்கினான்.  ஜாம்பவான் அனுமனை வரவேற்றார். பிறகு அனைவரும் ஓரிடத்தில் அமர்ந்தனர். மாதா சீதை எப்படி இருக்கிறாள்?. அவளின் மனநிலை, உடல் நிலை எப்படி இருக்கிறது?. அந்த ராவணன் அவளிடம் எப்படி எல்லாம் நடந்து கொள்கிறான்?. அங்கு நீ பார்த்தவற்றையும், நடந்த எல்லாவற்றையும் அப்படியே சொல். மாதா சீதையை கண்ட மகிழ்ச்சியான செய்தியை அனைவரும் அனுபவிக்க காத்திருக்கிறோம்.
 
★நீ சொல்பவற்றை வைத்து அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து நல்ல முடிவு செய்யலாம் என்று ஜாம்பவான் அனுமனிடம் கூறினார். அனுமன் அனைவரிடமும் நான் சீதையை கண்டுவிட்டேன். சீதையின் வாழ்த்துக்களையும் பெற்றேன் என்றான். உடனே வானரங்கள் அனுமனிடம், நீ இங்கிருந்து சென்றது முதல் அங்கிருந்து இங்கு வந்ததுவரை நடந்தது  எல்லாவற்றை கூறு என்றனர்.
 
★அதற்கு அனுமன் கிளம்பியதில் இருந்து கடலைத் தாண்டும் போது வந்த ஆபத்தில் இருந்து சொல்ல ஆரம்பித்து இலங்கையை எரித்தது வரை அனைத்தையும் கூறினார். தன் வாலில் ராட்சசர்கள் பற்ற வைத்த நெருப்பில் இருந்து சீதை தன்னை காப்பற்றியதை திகைப்புடன் சொன்ன அனுமன் சீதை தன்னிடம் சொன்ன வார்த்தைகளை சொல்லும் போது மட்டும் அனுமனின் கண்களில் நீர் வடிந்தது.
அனுமன், சீதையின் கற்பு திறனையும், அவர் இராமரின் நினைவாக இருப்பதையும், தன் அடையாளமாக சீதை கொடுத்த சூடாமணி பற்றியும் கூறினான்.
 
★ராவணனைப் பற்றி சொல் என்று ஜாம்பவன் கேட்டார்.
அனுமன் பேச ஆரம்பித்தார். நெருப்பே நெருங்க முடியாத சீதையை யாராவது தூக்கிச் செல்ல வேண்டும் என அருகில் சென்றிருந்தால் கூட அவர்கள் சாம்பலாகிப் போயிருப்பார்கள். ஆனால் ராவணன் சீதையை தூக்கிச் செல்லும் போது அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை. அவ்வளவு தவ பலனை வைத்து இருக்கும் வலிமையானவன் அவன். சீதையை தூக்கிச் சென்றதில் ராவணனுடைய தவ பலன்கள் சற்று குறைந்தாலும் இன்னும் சிறிது தவ பலன் அவனை காத்துக் கொண்டு இருக்கிறது. அதனால் இன்னும் வலிமையுடன் இருக்கின்றான்.
 
★சீதை நினைத்தால் இந்த ராவணனை நெருப்பால் பொசுக்கி இருப்பாள். அப்படி செய்தால் ராமரின் மதிப்பு குறைந்துவிடும் என்றும் ராமர் தன்னுடைய வலிமையால் ராவணனை வென்று அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் ஆகவே நடப்பது அனைத்தையும் சகித்துக் கொண்டு அமைதியாக இருக்கிறாள் என்றார். பிறகு வானரங்கள், அனுமனே! நீ போர் புரிந்ததற்கு அடையாளமாய் உனக்கு ஏற்பட்ட புண்களே காண்பிக்கிறது. அவர்களிடம் நீ வெற்றி பெற்று தான் இங்கு வந்துள்ளாய் என்றனர்.
 
★அனுமன் தொடர்ந்து பேசினார். இப்போதே நாம் அனைவரும் இலங்கை சென்று அரக்கன் ராவணனையும், அவனது ராட்சச கூட்டத்தையும் அழித்து விட்டு சீதையை மீட்டு ஶ்ரீ ராமரிடம் கொண்டு போய் சேர்த்து விடாலாமா? என்று உங்களது யோசனையை சொல்லுங்கள். இதனை செய்ய நமக்கு போதுமான வலிமையும் சக்தியும் இருக்கிறது. ஜாம்பவானாகிய உங்கள் ஒருவரின் வலிமையே போதும் ராட்சச கூட்டத்தை அழிக்க இதற்கு மேல் வாலியின் குமாரன் அங்கதன் இருக்கிறான்.
 
★மிகவும் பராக்கிரம சாலிகளான பனஸன்,  நீலன் ஆகிய இருவர் இருக்கிறார்கள். பிரம்மாவிடம் வரங்களை பெற்ற அசுவினி குமாரர்கள் மயிந்தன், த்விவிதன் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தனியாகவே சென்று ராட்சசர்களை அழிக்கும் திறமை பெற்றவர்கள். இப்போது அனைவரும் இங்கு ஒன்று கூடி இருக்கின்றோம். ஆகவே நாம் அனைவரும் சென்று சீதையை மீட்டு ராமரிடம் சேர்த்து வைத்து அவர்களை இருவரையும் நாம் மகிழ்ச்சியில் ஆழ்த்துவோம். இப்போது நீங்கள், நாம் என்ன செய்யலாம் என சொல்லுங்கள் என்று அனுமன் பேசி முடித்தார்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை..................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
198 / 16-10-2021
 
மதுவனத்தில் உற்சாகம்...
 
★அங்கதன் அனுமனிடம், நீ மிகவும் துணிவுடன் இந்தக் காரியத்தை செய்து உள்ளாய். உன் பலத்துக்கும், வலிமைக்கும் நிகரானவர் எவரும் இல்லை என்பதை நிரூபித்து விட்டாய். இன்று உன்னால் வானர குலம் மிகவும் புகழ் பெற்றுள்ளது என பாராட்டினான். இனி  நான் ஒருவனே போதும், இலங்கை  ராவணனையும், மற்றுமுள்ள  இந்த ராட்சசர்கள் கூட்டத்தையும் அழித்து விடுவேன். அப்படி இருக்க நாம் இங்கு இத்தனை வீரர்களும் இருக்கின்றோம். இவ்வளவு நாட்கள் கழித்து சீதையை அழைத்துப் போகாமல் ஶ்ரீ ராமரிடம் வெறும் கையுடன் திரும்பிச் செல்வது சரியில்லை. இலங்கை சென்று, அங்கு நம்மை எதிர்ப்பவர்களை அழித்து விட்டு சீதையை மீட்டுச் வருவோம் என்று அங்கதன் கூறினான்.
 
★அதற்கு ஜாம்பவான், எனது அன்புக்குரிய யுவராஜனே! இது சரியில்லை. நாம் ஶ்ரீ ராமரிடம் சென்று நடந்தது அனைத்தையும் சொல்லுவோம் என்றார். பிறகு அனுமன், அன்னை சீதை, நான் இன்னும் ஒரு மாத காலம் தான் உயிருடன் இருப்பேன். அதற்குள் ராமர் வந்து என்னை காப்பாற்றி செல்ல வேண்டும் என்று கூறினார் என்றான். உடனே வானரங்கள், இனியும் நாம் தாமதிக்கக் கூடாது. உடனே ராமரிடம் சென்று சீதையைக் கண்ட செய்தியைக் கூற வேண்டும் என்றனர்.
 
★அங்கதன் அனுமனிடம், அனுமனே! நாங்கள் உயிரை விட தயாராக இருந்தோம். நீ தான் தக்க சமயத்தில் இலங்கை சென்று சீதையை கண்டு எங்கள் உயிரையும் காப்பாற்றி உள்ளாய். ஆதலால் நீ விரைந்து சென்று, ராமரிடம் நடந்த விஷயங்களை எல்லாம் கூறு என்றான். அதற்கு அனுமன், அது முறையாகாது. நாம் அனைவரும் சீதையைத் தேடி ஒன்றாக வந்தோம். மீண்டும்  திரும்பிச் செல்லும் போதும் ஒன்றாகவே செல்வோம் என்றான். ஜாம்பவானும் அந்த கருத்தை ஆமோதித்தார். பின்பு ஜாம்பவான் உத்தரவுப்படி செய்வோம் என்றார் அனுமன்.
 
★இதனைக் கேட்ட அங்கதன்  உட்பட அனைவரும், ஜாம்பவான் மிகவும் அறிவும், அனுபவமும் உள்ளவர். அவர் சொன்னால் அது சரியாக இருக்கும் என்று அவரின் கூற்றை ஆமோதித்து நாம் கிஷ்கிந்தைக்கு விரைந்து செல்லலாம் என கூறினார்கள்.
பிறகு அங்கதன் தலைமையில் வானர வீரர்கள் ராமரை நோக்கி கிஷ்கிந்தைக்கு புறப்பட்டனர்.  
அனுமன் உட்பட அனைத்து வானர கூட்டமும் கிஷ்கிந்தைக்கு வந்து சேர்ந்தார்கள்.
 
★அரண்மனைக்கு செல்லும் வழியில் சுக்ரீவனின் மதுவனம் என்கிற நந்தவனம் இருந்தது. அம்மதுவனம் முதலில் அரசன் வாலியின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது. வாலி இறந்த பின் அம்மதுவனம் சுக்ரீவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அதனை ததிமுகன் என்னும் வானர வீரன் தன் ஏவலாட்களுடன் காவல் காத்து கொண்டிருந்தான்.
இதனை கண்ட வானரக் கூட்டம் பல நாள் கழித்து நாம் நாட்டிற்கு வெற்றியுடன் திரும்பி வந்து விட்டோம் என்ற மகிழ்ச்சியில்
இருந்த வானரங்கள் மிகுந்த பசியுடன் இருந்ததால், அவர்கள் அங்கதனிடம், நாங்கள் மிகுந்த பசியுடன் உள்ளோம். தாங்கள் இந்த மதுவனத்தில் உள்ள மதுவை அருந்த அனுமதி தர வேண்டும் என்றனர்.
அங்கதனும் அவர்களுக்கு அனுமதி அளித்தான். வானர வீரர்கள் மதுவனத்தில் ஆடியும் பாடியும் மகிழ்ந்தார்கள்.
 
★நந்தவனத்தில் புகுந்து அங்கு இருந்த தேனையும் பழத்தையும் சாப்பிட்டு வெற்றிக் களிப்புடன் கூத்தாடினார்கள். அங்கிருந்த காவலர்கள் எவ்வளவு தடுத்தும் அவர்கள் கேட்காமல் தங்கள் விருப்பப்படி வெற்றி அடைந்த கொண்டாட்டத்தை தொடர்ந்து செய்தார்கள். சிலர் மகிழ்ச்சியில் தோட்டத்தை நாசம் செய்தார்கள். இப்படி இவர்கள் மதுவை அருந்த மதுவின் மயக்கம் இவர்களுக்கு அதிகரித்துக் கொண்டே போனது.
 
★இதனால் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு அழகான அந்த மதுவனத்தை நாசம் செய்தனர். இவர்களையெல்லாம்  தடுப்பற்காக ததிமுகனின் வானர வீரர்கள் சென்றனர்.
ஆனால் வானர வீரர்கள் இவர்களையும் அடித்து மிகவும் துன்புறுத்தினர். காவல் புரிந்த வானர வீரர்கள் ததிமுகனிடன் சென்று முறையிட்டனர். உடனே ததிமுகன் அங்கதனிடம் போருக்குச் சென்றான். அங்கதனோ அவனை அடித்து உதைத்தான். மிகவும் அடிப்பட்ட ததிமுகன் அரசன் சுக்ரீவனைப் பார்க்கச்  சென்றான்.
 
★ரிஷியமுக பர்வத்தில் ராமர் சீதையை நினைத்து மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டு இருந்தார். சீதையை தேடி சென்ற வானர வீரர்கள் எல்லோரும் திரும்பி வந்துவிட்டனர். ஆனால் தென் திசை நோக்கிச் சென்ற வானர வீரர்கள் இன்னும் திரும்பி வரவில்லை. அவர்கள் நிச்சயம் சீதையை தேடி கண்டுபிடித்து விட்டு வருவார்கள் என ராமருக்கு ஆறுதல் சொன்னான் சுக்ரீவன்.
 
★ராமர், தென் திசைக்கு சென்ற வானர வீரர்களுக்கு என்ன ஆயிற்று என்பது நமக்குத் தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் சீதையை காணாமல் மாண்டு போனார்களோ? இல்லை இன்னமும் சீதையை தேடி அலைந்துக் கொண்டு இருக்கிறார்களா? சீதைக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டு இருக்குமோ? இல்லை அவர்களுக்கு என்ன தான் ஆகி இருக்கும் எனக் கூறி ராமர் மிகவும் வருந்தினார்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை....................
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
199 / 17-10-2021
 
கண்டேன் சீதையை....
 
 
★அப்போது ததிமுகன் அங்கு வந்து அங்கதன் தலைமையில் வந்த வானர வீரர்கள் செய்யும்  அட்டூழியங்களையும், இளவரசன் அங்கதனால் ஏற்பட்ட துன்பத்தை பற்றியும் கூறினான். தெற்கே சென்ற வானர கூட்டம் திரும்பி வந்து விட்டார்கள். நமது பழத் தோட்டத்தை நாசம் செய்து மிகவும் அக்கிரமாக நடந்து கொள்கின்றார்கள். எவ்வளவு தடுத்தும் கேட்கவில்லை. காவல் காக்கும் வானரங்களை அடித்து உதாசீனப்படுத்தி செடி கொடிகளை நாசமாக்கி விட்டார்கள். அவர்களை உடனே தாங்கள் தண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.
 
★இதைக் கேட்டு சுக்ரீவன் மகிழ்ந்தான். அப்படியென்றால் வானர வீரர்கள் நிச்சயம் சீதையை தேடி கண்டுபிடித்து இருப்பார்கள். அங்கதன் தலைமையில் சென்ற வானர கூட்டம் காரிய சித்தி அடைந்து விட்டார்கள். அதனாலேயே வெற்றி களிப்பில் இப்படி செய்கிறார்கள். அதனால் தான் மதுவனத்தை நாசம் செய்து இருக்கிறார்கள் என மனதில் நினைத்தான். சுக்ரீவன்,  பிறகு ததிமுகனை பார்த்து, ததிமுகனே! மதுவனத்தின் இளவரசனை நீ எதிர்க்கலாமா? நீ இளவரசன் அங்கதனிடம் சென்று சரண் அடைவாயாக எனக் கூறினான்.  
 
★அனுமனையும் அங்கதனையும் உடனே ராமர் தங்கி இருக்கும் இடத்திற்கு அழைத்து வாருங்கள் என்று உத்தவிட்டான் சுக்ரீவன். பிறகு சுக்ரீவன் ராமனிடம், பெருமானே! தாங்கள் வருந்த வேண்டாம். வானர வீரர்கள் சீதையை கண்ட மகிழ்ச்சியில் மதுவனத்தை நாசம் செய்து இருக்கிறார்கள் என்று கூறினான். இவ்வாறு சுக்ரீவன் கூறிக் கொண்டு இருக்கையில், தென் திசையில் இருந்து அனுமன், அவர்கள் முன் வந்து நின்றான். அனுமன் தென் திசை நோக்கி சீதை இருக்கும் இடத்தை பார்த்து தொழுதுவணங்கினான். ராமர் சிறிது நேரம் அனுமனை உற்று நோக்கினார். அனுமன் முகத்தில் தெரிந்த பிரகாசமே சீதையை கண்டுவிட்டேன் என்ற செய்தியை கூறியது.
 
★"கண்டனன் கற்பினுக்கு அணியைக் கண்களால்" என்று சீதையை தன் கண்களால் கண்டதையும், அவள் கற்போடு உள்ளாள் என்பதையும் அவன் ஶ்ரீ ராமனுக்கு உணர்த்தினான். பிறகு நிதானமாக  அனுமன் ராமனிடம், நான் கண்டுவிட்டேன்! நான் கண்டுவிட்டேன்! நான் அன்னை சீதை இருக்கும் இடத்தை கண்டுவிட்டேன். பெருமானே! தாங்கள் இனி கவலை கொள்ள வேண்டாம் என்றான். பெருமானே! தசரத மகாராஜாவின் பெருமைக்கு உரியவளும், ஜனக மகாராஜா அவர்களின்  மகள் என்ற தகுதிக்குரியவளும், தங்களின் மனைவியுமான அன்னை சீதையை நான் கண்டுவிட்டேன் எனக் கூறினான்.
 
★இதைக் கேட்ட ராமனின் முகம் பிரகாசமானது. பிறகு அனுமன், பெருமானே! அன்னை தங்களின் நினைவாகவே உள்ளார். தன் கற்புக்கு சிறிது கலங்கம் அற்றவளாய் உள்ளார். தங்களின் பெயரையே உச்சரித்துக் கொண்டு உள்ளார். தங்கள் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டு உள்ளார் என்றான். அன்னை சீதா, தன் பொறுமையாலும் சீலத்தாலும் தன் கற்பின் திறத்தை நிலை நாட்டிவிட்டார் என்று கூறினான்;
 
★அதனால் பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டுக்கும் பெருமை தேடித் தந்திருக்கிறாள். எனக்கும் அதனால் பெருமை உண்டாகி இருக்கிறது. தன்னைத் தனிமை செய்த ராவணன் வன்குலத்தை கூற்றுவனுக்குத் தர முடிவு செய்து இருக்கிறாள். வானரர் குலத்தை ஆசிர்வதித்து வாழ்வித்தாள்  என்று சொல்லி, அவள் இருந்த காட்சியை அநுமன் ராமனிடம் தெளிவாக தெரிவித்தான். காவியத்தின் நீதியைத்  தொடக்கூடிய  ஒரு நிலையில் அனுமன் கூற்று அமைந்தது.  சீதை மண்மகள் தந்த மாமகள், அவள் அந்த விண்மகளிரையும் உயர்த்தி விட்டாள் என்றான். இப்புவியில் உள்ள பெண்ணினத்துக்கே அவளால் பெருமை சேர்ந்து விட்டது என்று கூறினான
 
★வாயுபுத்திரன் அனுமன் ஶ்ரீ ராமனிடம், பெருமானே! அன்னை, கடலுக்கு நடுவில் இருக்கும் இலங்கை என்னும் நகரத்தில், அழகிய சோலைகள் நிறைந்த அசோக வனம் என்னும் இடத்தில் ராவணனால் சிறை வைக்கப்பட்டுள்ளார். ராவணன், ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவளை தொட்டால் அவனின் தலை வெடித்து விடும். இது பிரம்மன் அவனுக்கு கொடுத்த சாபமாகும். இந்த சாபத்திற்கு அஞ்சி அவன் அன்னை சீதையை தீண்டாமல் சிறை வைத்திருக்கிறான் என்றான்.
 
★ஶ்ரீ ராமர் இந்த செய்தியை கேட்டதும் அவரது காதில் தேவர் அமிர்தம் சுரப்பது போல் இருந்தது.  ராமர் அனுமனை கட்டியணைத்து பரவசம் ஏற்படுத்தினார். ராமர் அங்கு வந்திருந்வர்களிடம் பேச ஆரம்பித்தார். சீதையை எங்கே கண்டீர்கள்? எப்படி இருக்கிறாள்? பார்த்தவற்றை மிக விவரமாக சொல்லுங்கள் என்னால் சிறிதும் பொறுக்க முடியவில்லை  என்று அவசரப்படுத்தினார் ராமர். ஜாம்பவான் அனுமனிடம் நடந்தவற்றை நீயே முழுமையாக சொல் என்றார். அனுமன் பேச ஆரம்பித்தார்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை....................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
200 / 18-10-2021
 
ராமர் சூடாமணி
பெறுதல்....
 
★ராமர் அனுமனிடம், நீ சீதையை எவ்வாறு கண்டாய்? எனக் கூறு என்றார். அனுமன், நாங்கள் அன்னை சீதையை தென் திசை முழுவதும் தேடினோம். ஆனால் எங்களால் எங்கேயும் அன்னையை தேடி கண்டுபிடிக்க முடியாமல் கடைசியில் மகேந்திர மலையை அடைந்தோம். அங்கு ஜடாயுவின் சகோதரனான சம்பாதி வந்து, எங்களுக்கு சீதை இருக்கும் இருப்பிடத்தைக் கூறினான்.  
 
★பிறகு நான் சீதையை தேடி இலங்கை சென்றேன். அங்கு உள்ள மாட மாளிகைகளிலும், வனங்களிலும், மற்றும் எல்லா அரண்மனைகளிலும் தேடினேன். எங்கு தேடியும் கிடைக்காத சீதை, கடைசியில் அசோக வனத்தில் இருப்பதை கண்டேன். அங்கு சீதை மிகவும் துன்பப்பட்டு அரக்கியர்கள் நடுவே கலக்கம் கொண்டு வீற்றிருந்தார். நூறு யோசனை தூரத்தில் உள்ள இலங்கையில் உள்ள அசோக வனத்தில் ராட்சசிகள் சுற்றிலும் காவலுக்கு நிற்க, சீதை ராமா ராமா என்று உச்சரித்தபடி இருக்கிறாள்.
 
★கொடூர ராட்சசிகள் கொடிய வார்த்தைகளால் சீதையை பயமுறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். தரையில் படுத்து ஒளி இழந்து கவலை படர்ந்த முகத்துடன் துக்கத்துடன் இருக்கிறாள் சீதை. அப்போது ராவணன் அங்கு வந்தான். அவன் சீதையை, தன் அன்புக்கு இணங்கும்படி வேண்டினான். ஆனால் சீதை கடுஞ்சொற்களால் அவனை பேசினார். என் மனதில் ராமரை தவிர வேறு எவருக்கும் இடமில்லை எனக் கூறினார். ராவணன் சென்ற பிறகு அன்னை மிகவும் துன்பப்பட்டார்.
 
★அச்சமயத்தில் நான் அந்த அரக்கர்களை தூக்க நிலைக்கு ஆழ்த்திவிட்டு, அன்னை முன்பு தோன்றினேன். பிறகு நான் தங்களின் பெயரை உரக்கச் சொன்னவுடன் அன்னை மிகவும் மகிழ்ந்தார். பிறகு தங்களின் அடையாளமாக கொடுத்த கணையாழியை அன்னையிடம் கொடுத்தேன். கணையாழியை பார்த்த அன்னை, மிகவும் மகிழ்ச்சியடைந்தார். பிறகு அன்னை என்னிடம், இராமர் ஏன் இன்னும் என்னை தேடி வரவில்லை. நான் அவரின் வரவை எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.
 
★ராவணன் அவனின் ஆசைக்கு இணங்க எனக்கு ஒரு வருட காலம் அவகாசம் கொடுத்து உள்ளான். அதற்கு இன்னும் ஒரு மாதம் தான் உள்ளது. அதற்குள் ராமர் வந்து என்னை மீட்டுச் செல்ல வேண்டும். இல்லையேல் என் உயிரை நான் மாய்த்துக் கொள்வேன் என்றார். பிறகு அன்னை அவரை கண்டதின்  அடையாளமாக இருக்க  இந்த சூடாமணியை தங்களிடம் கொடுக்கச் சொல்லி கொடுத்தார் என்றான்.  சீதை ராமருக்கு சொன்ன செய்தியை சொல்லி அவள் கொடுத்த சூடாமணியை ராமரிடம் கொடுத்தார் அனுமன்.
 
★சீதையிடம், மிக விரைவாக தங்களுடன் வருவேன் என்று சமாதானம் சொல்லி விட்டு வந்திருக்கிறேன் என்று சொல்லி முடித்தார் அனுமன். சீதை கொடுத்து அனுப்பிய அந்த
 சூடாமணியை பார்த்த ராமரின் இரு கண்களிலும்  கண்ணீர் பொங்கியது. பிறகு ராமர் சூடாமணியை மார்போடு அணைத்துக் கொண்டார். சீதையை நினைத்து மிகவும் வருந்தினார். ஶ்ரீ ராமர் அந்த சூடாமணி கிடைத்த மகிழ்சியில் பரவசமடைந்து சுக்ரீவனிடம் பேச ஆரம்பித்தார்.
 
★யாராலும் செய்ய முடியாத காரியத்தை அனுமன் செய்து முடித்திருக்கின்றான். பெரிய
கடலை கடப்பது என்பது மிகவும் எளிதான விஷயம் அல்ல. ஆனால் எவராலும் நுழைய முடியாத இலங்கைக்கு சென்று ராவணனின் காவலில் இருக்கும் சீதையை கண்டுபிடித்து வந்து உள்ளாய் எனப் பாராட்டினார்.
சீதைக்கு ஆறுதல் சொல்லி அவளின் உயிரை காப்பாற்றி விட்டு வந்திருக்கின்றான். அவள் உயிருடன் இருக்கிறாள் என்ற செய்தியை என்னிடம் சொல்லி என் உயிரை காப்பாற்றி இருக்கின்றான்.
 
★இதற்கு பிரதிபலனாக நம் அனுமனுக்கு நான் என்ன செய்து திருப்திப்படுத்த முடியும் என்று தெரியவில்லை என்று சொல்லி ஆனந்த கண்ணீர் விட்டார் ராமர்.
அப்போது அங்கதன் முதலிய வானர வீரர்கள் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் ராமரை தொழுது வணங்கினர்.
அப்போது சுக்ரீவன், இனியும் நாம் நேரத்தை வீணடிக்கக் கூடாது. சீதை இருக்கும் இடத்தை கண்டுபிடித்தாகிவிட்டது. நாம் புறப்படுவோம் என கூறி வானர சேனைகளை ஒன்று திரட்ட இளவரசன் அங்கதனுக்கு  கட்டளை இட்டான்.
 
★ராவணனையும் அவனது ராட்சச கூட்டத்தையும் அழிக்க கடலைத் தாண்டி செல்ல வேண்டும். இது ஒர் பெரும் காரியம். இந்த கடலை எப்படி தாண்டப் போகிறோம்?. உன்னுடைய சேனைகள் எப்படி கடலைத் தாண்டும்? என்று கவலையில் மூழ்கினார் ராமர்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.....................
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
201 / 19-10-2021
 
வானரப்படை
புறப்படுதல்...
 
★ராமரின் கவலையை பார்த்த சுக்ரீவன் பேச ஆரம்பித்தார். நீங்கள் மனத்தளர்ச்சி அடையாதீர்கள். சோகத்தை மறந்து சத்ரியனுக்குரிய தைரியத்துடன் இருங்கள். உங்களுக்கு ஏன் சந்தேகம். எனது வலிமை மிக்க வீரர்கள் இருக்கிறார்கள். உங்களுக்காக மகிழ்ச்சியுடன் உயிரையும் கொடுக்க காத்திருக்கிறார்கள். மனக்கவலையை தள்ளி வைத்து விட்டு வானர வீரர்களின் சக்தியை வைத்து, எப்படி கடலை தாண்டலாம் என்று உங்களின் நுண்ணறிவை பயன்படுத்தி ஆராய்ந்து சொல்லுங்கள்.
 
★உங்கள் உத்தரவு எதுவாக இருந்தாலும் அதனை சிற்ப்பாக செய்து முடிக்கிறோம். உங்களையும் லட்சுமனணையும் கடலைத் தாண்டி இலங்கை கொண்டு போய் சேர்ப்பது எங்களுடைய காரியம். அதனை சிறப்பாக செய்து முடிப்போம். நீங்கள் இலங்கை சென்று ராவணனை வென்று, சீதையுடன் திரும்பி வருவீர்கள் இதனை உறுதியாக நம்புங்கள் என்று ராமரை உற்சாகப்படுத்தினான் சுக்ரீவன்.
 
★இலங்கையின் அமைப்பையும் அங்கு உள்ள பாதுகாப்பு அமைப்பையும் சொல்லுமாறு
ராமர் அனுமனிடம்  கேட்டார். அதற்கு அனுமன் கடலை தாண்டி செல்லும் வழி, இலங்கை நகரத்தின் அமைப்பு, ராவணின் கோட்டையை சுற்றி இருக்கும் அகழியின் பாதுகாப்பு அமைப்பு, மக்கள் ராவணனின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, அவர்களின் செல்வம், அங்கு உள்ள ராட்சதர்களின் வலிமை, சேனைகளின் பலம், அந்த இலங்கையின் பாதுகாப்புக்கு நிற்கும் ராட்சதர்கள் பற்றி அனுமன் கூறினான்.
 
★மேலும் இலங்கை நகரில்  எதிரிகள் எளிதில் நுழைய முடியாதபடி பாதுகாப்பு அரண் அமைத்து ராவணன் காத்துக் கொண்டிருக்கிறான் என்று அனைத்தையும் அனுமன் விவரமாக ராமரிடம் கூறினான். இவ்வளவு பெரிய பாதுகாப்பு அரணை அழித்து உள்ளே செல்லும் வல்லமை பெற்ற அங்கதன், ஜாம்பவான், பனஸன், நீலன், நளன் போன்ற நிகரற்ற வீரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் கடலைத் தாண்டி அங்கு செல்லும் வல்லமை பெற்ற வீரர்கள். பெரும் வானர படையும் தயாராக இருக்கிறது.
 
★தாங்கள் உத்தவு கொடுங்கள். அவை  அனைத்தையும் அழித்து நாசம் செய்து விடுகிறோம் என்றார் அனுமன். பின்னர் சுக்ரீவன் ஆணைப்படி அனுமன் அனைத்து வானரப்படை தலைவர்களையும் ஶ்ரீ ராமருக்கு அறிமுகம் செய்து வைத்தான். அங்கதன், குமுதன், ஜாம்பவான், நளன், நீலன், ரம்பன்,சரதன், கவயன், வினதன், குரோதன், தாரன், தூம்ரன், தம்பன், கரதன், கேசரி என பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருக்கும் அநேக வானரப் படை  தலைவர்களை அறிமுகம் செய்தான்.
 
★ராமர் சுக்ரீவனுடன் கலந்து ஆலோசித்து யுத்தத்தில் வெற்றி தரும் முகூர்த்தமான உத்தர பல்குனி நட்சத்திரத்தன்று கடற்கரை நோக்கி அனைவரும் செல்லலாம் என  முடிவு செய்தார்கள். ஶ்ரீ ராமரின் ஆலோசனையை ஏற்று அனுமன், அங்கதன், சுக்ரீவன் ஆகியோர் லட்சுமணனுடன் கிஷ்கிந்தை அரண்மனை வந்தனர். அங்கு வாலியின் மனைவி தாரையை சந்தித்து வணங்கி போர்முனை செல்ல அனுமதியும் மற்றும் வாழ்த்துக்களையும் பெற்றனர்.
 
★தாரை லட்சுமணனிடம் தங்கள் தமையன் ஶ்ரீ ராமர் துணை இருக்கையில் வெற்றியில் ஐயம் இல்லை. வெற்றியோடும் மாதா சீதையோடும் திரும்பி வாருங்கள் என ஆசிர்வதித்தாள். சுக்ரீவன் தன் மனைவி ரூமாதேவியிடம் விடை பெற்றான். பிறகு அனைவரும் ராமரிடம் திரும்பி வந்து நடந்ததைக் கூறினார்கள்.
பின்னர்  ராமர் தலைமையில் லட்சுமணன் சுக்ரீவன் அனுமன் உட்பட அனைவரும் தென்திசை கடலை நோக்கி கிளம்பினார்கள்.
 
★இத்துடன் சுந்தரன் என்று அறியப்படும், அனுமனின் வீர தீர பராக்கிரமங்களை குறிப்பிடும் சுந்தரமான சுந்தரகாண்டம் பகுதியை நிறைவு செய்கிறேன்.
மேலும்  ராமாயணத்தின் மிக முக்கியமான ஒரு பாத்திரம் அனுமன்.அவனைப் பற்றிய கம்பனின் அருமையான பாடல் ஒன்று உண்டு. அதை இங்கு பதிவிட்டு அனுமனின் பெருமை கூறும்  இந்த சுந்தரகாண்டத்தை நிறைவு செய்கிறேன்.
ஜெய் ஶ்ரீராம்! ஜெய் ஶ்ரீராம்!!
ஶ்ரீராமஜயம்! ஶ்ரீராயஜயம்!!
 
"அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
 
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி
 
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்
 
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்" .
 
ஶ்ரீராமஜயம்
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை...................?
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
202 / 20-10-2021
 
அனுமன் சாலிசா...
 
★நேற்றைய பதிவோடு சுந்தர காண்டம் பதிவுகள் நிறைவுப் பெற்றன. ஆனால் சரியாக நிறைவு பெறவில்லை என்ற சிந்தனை எனக்கு ஏற்பட்டது.
ஆகவே துளஸிதாசரின் ஹனுமன் சாலீஸா பதிவிட்டு நிறைவு செய்கிறேன்.
   
★ஸ்ரீ ராம ஜயம் சொன்னால் நம்மைத் தேடி வந்து அனைத்து தெய்வங்களும் அருள் புரிவார்கள். ஸ்ரீ ராமரை தன் உயிராக நினைத்தவர் அனுமன். அப்படிப்பட்ட சிரஞ்சீவி அனுமனின் பெயரை சொன்னாலே துன்பங்கள், துயரங்கள், தடைகள், தொல்லைகள் தவிடுபடியாகும்.
 
★அனுமனின் அருளைப் பெற
16 ஆம் நூற்றாண்டு கவிஞரான
துளசிதாசர் வட மொழியில் அருளிய அனுமன் சாலீசா எனும் திருமந்திரத்தை இங்கு சொல்லி நம் துன்பங்களை வெல்வோம்.
 
அனுமன் சாலீஸா
பாராயண முறை:-
 
 
★இந்த அனுமன் சாலீஸா மந்திரத்தை பாராயணம் செய்யும் முன் உடலை தூய்மை படுத்திக்கொண்டு, தூய ஆடையை உடுத்தி மாருதியை மனதார நினைத்துக் கொண்டு தியானிக்க வேண்டும். பின்னர் நெய் விளக்கேற்றி இங்கு குறிப்பிட்டுள்ள 40 துதிகளை 11 முறை ஓதுங்கள். ஒவ்வொரு முறை மந்திரத்தை படித்து முடித்ததும் அனுமன் பாதங்களில் மலர்களை சமர்ப்பியுங்கள்.
 
★"ராமா என சொன்னால் அனைத்து தெய்வங்களும் வருவார்கள்"...
இது ராம நாமத்தின் மகிமையை பற்றி  காஞ்சி பெரியவர் கூறிய அற்புத வார்த்தைகள்.
 
★இந்த மந்திரத்தை வீட்டிலோ அல்லது கோயிலிலோ தூய்மையாக இடத்தில் அமர்ந்து அனுமன் படம் அல்லது சிலைக்கு முன் அமர்ந்து பாராயணம் செய்யலாம். செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் பாராயணம் செய்வது சிறந்தது.
 
★ஸ்ரீ ராமரையும், அனுமனையும் மனதில் நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை உச்சரிக்கும் போது அனைத்து தெய்வங்கள் அருளும் கிடைக்கும்.
 
★அனுமான் சாலீசாவை தொடர்ந்து உச்சரிப்பதால் ஆன்மீக உணர்வு  அதிகரிக்கும். சனி பகவானின் கெடு பலன்கள் நீங்கும். நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் பெறலாம்.
 
 
ஸ்ரீகுரு சரண் ஸரோஜ்ரஜ் நிஜ மன முகுர ஸுதார் பரணோம் ரகுவர விமல யச ஜோ தாயக பலசார்
 
புத்தி ஹீன தனு ஜானி கே, ஸுமிரௌ பவன குமார் பல புத்தி வித்யா தேஹு மோஹிம், ஹரஹு கலேச விகார்
 
1. ஜய ஹனுமான் ஜ்ஞான குண ஸாகர ஜய கபீஸ திஹுலோக உஜாகர
 
2. ராமதூத அதுலித பலதாமா அஞ்ஜனி புத்ர பவன ஸுத நாமா
 
3. மஹாவீர் விக்ரம பஜரங்கீ குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ
 
4. கஞ்சன பரண விராஜ ஸுவேசா கானன குண்டல குஞ்சித கேசா
 
5. ஹாத் வஜ்ர ஒள த்வஜா விராஜை காந்தே மூஞ்ஜ ஜனேவூ ஸாஜை
 
6. சங்கர ஸுவன கேசரீ நந்தன தேஜ ப்ரதாப மஹா ஜகவந்தன
 
7. வித்யாவான் குணீ அதி சாதுர ராம காஜ கரிபே கோ ஆதுர
 
8. ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா ராம லக்ஷமண ஸுதா மன பஸியா
 
9. ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹிம் திக்காவா விகட ரூப தரி லங்க ஜராவா
 
10. பீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே ராமசந்த்ர கே காஜ் ஸவாரே
 
11. லாய ஸஜீவன் லஷன ஜியாயே ஸ்ரீ ரகுவீர ஹரஷி உர லாயே
 
12. ரகுபதி கீனி பஹுத் படாயீ தும் மம ப்ரிய ஹி பரதஸம பாயீ
 
13. ஸஹஸ வதன தும்ஹரோ யச காவைம் அஸ கஹி ஸ்ரீபதி கண்ட லகாவைம்
 
14. ஸனகாதிக ப்ரஹ்மாதி முனீசா நாரத சாரத ஸஹித அஹீசா
 
15. யம குபேர திகபால ஜஹாம் தே கவி கோவித கஹி ஸகைம் கஹாம் தே
 
16. தும் உபகார ஸுக்ரீ வஹிம் கீன்ஹா ராம மிலாய ராஜபத தீன்ஹா
 
17. தும்ஹரோ மந்த்ர விபீஷண மானா லங்கேச்வர பயே ஸப் ஜக ஜானா
 
18. யுக ஸஹஸ்ர யோஜன பர பானூ லீல்யோ தாஹி மதுர பல ஜானூ
 
19. ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீம் ஜலதி லாந்தி கயே அசரஜ் நாஹீம்
 
20. துர்கம காஜ் ஜகத் கே ஜேதே ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே
 
21. ராம துவாரே தும் ரக்வாரே ஹோத ந ஆஜ்ஞா பின பைஸாரே
 
22. ஸப் ஸுக லஹை தும்ஹாரீ ஸரனா தும் ரக்ஷக காஹூ கோ டர்னா
 
23. ஆபன் தேஜ் ஸம்ஹாரௌ ஆபை தீனோம் லோக ஹாங்க்தே காம்பை
 
24. பூத பிசாச நிகட நஹிம் ஆவை மஹாவீர ஜப் நாம ஸுனாவை
 
25. நாசை ரோக் ஹரை ஸப் பீரா ஜபத நிரந்தர ஹனுமத் வீரா
 
26. ஸங்கட ஸே ஹனுமான் சோடாவை மன க்ரம வசனத்யான ஜோ லாவை
 
27. ஸப் பர் ராம் தபஸ்வீ ராஜா தின்கே காஜ் ஸகல தும் ஸாஜா
 
28. ஒளர் மனோரத ஜோ கோயி லாவை தாஸு அமித ஜீவன் பல பாவை
 
29. சாரஹு யுக பரதாப தும்ஹாரா ஹை பரஸித்த ஜகத உஜியாரா
 
30. ஸாது ஸந்த கே தும் ரக்வாரே அஸுர நிகந்தன ராம துலாரே
 
31. அஷ்ட ஸித்தி நவ நிதி கே தாதா அஸ் வர தீன் ஜானகீ மாதா
 
32. ராம் ரஸாயள தும்ஹரே பாஸா ஸதா ரஹெள ரகுபதி கே தாஸா
 
33. தும்ஹரே பஜன் ராம்கோ பாவை ஜன்ம ஜன்ம கே துக்க பிஸராவை
 
34. அந்த கால ரகுபதி புர ஜாயீ ஜஹாம் ஜன்மி ஹரிபக்த கஹாயீ
 
35. ஒளர் தேவதா சித்த ந தரயீ ஹனுமத் ஸேயி ஸர்வ ஸுக கரயீ
 
36. ஸங்கட ஹரை மிடை ஸப் பீரா ஜோ ஸுமிரை ஹனுமத பல பீரா
 
37. ஜய் ஜய் ஜய் ஹனுமான் கோஸாயீ க்ருபா கரஹு குருதேவ கீ நாயீ
 
38. ஜோ சத பார் பாட கர ஜோயீ சூடஹி பந்தி மஹாஸுக ஹோயீ
 
39. ஜோ யஹ படை ஹனுமான் சாலீஸா ஹோய ஸித்தி ஸாகீ கௌரீஸா
 
40. துளஸீதாஸ ஸதா ஹரி சேரா கீஜை நாத ஹ்ருதய மஹ டேரா
 
பவன தன்ய ஸங்கட ஹரன, மங்கள மூரதி ரூப ராமலஷமன ஸீதா ஸஹித ஹ்ருதய பஸஹு ஸுரபூப ||
 
ஸியாவர ராமசந்த்ரகீ ஜய |
பவனஸுத ஹனுமான்கீ ஜய |
போலோ பாயீ ஸப
ஸந்தன்கீ ஜய |
 
ஶ்ரீராமஜயம்!
 
சுந்தரகாண்டம் இனிதே
நிறைவடைந்தது.
 
.வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.....................???
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
203 / 21-10-2021
 
கடற்கரை அடைந்தனர்...
 
★ராமர் தலைமையில் இளவல் லட்சுமணன், சுக்ரீவன், அனுமன் உட்பட அனைவரும் தென்திசை கடலை நோக்கி கிளம்பினார்கள். செல்லும் வழியில் இருக்கும் மக்களுக்கும், பிராணிகளுக்கும்,  சிறு உயிர்களுக்கும் எந்த ஒரு விதமான தொந்தரவும் சிறிதும் தரக்கூடாது என்று ஶ்ரீ ராமர் கட்டளையிட்டார். பத்து கோடி எண்ணிக்கையுடைய வானரப் படைகளை சதபலி என்ற வானரத் தலைவன் தலைமை தாங்கி வழி நடத்திச் சென்றான். வழி தெரிந்த வானரங்கள் வழிகாட்ட அவர்களை நோக்கி அனைவரும் சென்றார்கள்.
 
★நீலனும், குமுதனும் முன் பகுதியில் சரியான பாதையில் செல்கிறோமா? என்பதை உறுதிபடுத்திக் கொண்டே வந்தார்கள். பின் பகுதியில் எண்ணிக்கையில் அடங்காத கரடிகள் கூட்டம் ஜாம்பவான் தலைமையில் வந்தார்கள். ராமரையும், லட்சுமணனையும் மத்திய பாகத்தில் வானரங்கள் தூக்கிக்கொண்டு சென்றார்கள். சுக்ரீவன் உள்பட பெரிய வீரர்கள் ராமருடன் வந்தார்கள். வேகமாக மலைகளையும் காடுகளையும் தாண்டிச் சென்றார்கள்.
 
★உணவும்,  தண்ணீரும் கிடைக்கும் வழியாக பார்த்துக் கொண்டே சென்றார்கள். அந்த வானரக்கூட்டம் வெற்றி நமதே! வெற்றி பெருவோம் என்ற வீர முழக்கத்தை கூச்சலிட்டுக் கொண்டே சென்ற சத்தம் எட்டு திசைகளிலும் எதிரொலித்தது. செல்லும் வழிகளில் எல்லாம் வானரக் கூட்டத்தினால் எழுந்த புழுதி வானத்தை மறைத்தது. ராம காரியமாக செல்வதால் எங்கும் யாரும் சிறிதும்  ஒய்வு எடுக்கவில்லை. நிற்காமல் சென்று கொண்டே இருந்தார்கள். ராவணனை நானே கொல்வேன் நானே கொல்வேன் என்று வானர கூட்டம் பேசிக்கொண்டே சென்றதை பார்த்த ஶ்ரீ ராமர் உற்சாகமடைந்து லட்சுமணனிடம் நாம் புறப்பட்டு விட்டோம் என்பதை சீதை அறிந்தால் தைரியம் அடைந்து மகிழ்ச்சி அடைவாள் என்றார்.
 
★ராமர் கடற்கரையின் அருகில் இருக்கும் மகேந்திரகிரி என்கிற மலையை பார்த்ததும் நாம் கடற்கரைக்கு வந்து விட்டோம் என்பதை உணர்ந்தார். பிறகு
அனைவரும் மகேந்திர மலையை அடைந்தனர். மலைமீது ஏறி கடலை பார்த்தார். அனைத்து சேனைகளுடன் எப்படி இந்த கடலை தாண்டுவது என்று தீர்மானிக்க வேண்டும் அதுவரையில் அனைவரும் இங்கே ஒய்வெடுத்து தங்கலாம் என்று சுக்ரீவனுக்கு ராமர் உத்தரவிட்டார். சுக்ரீவனும் அவ்வாரே தனது படை யிலுள்ள வீரர்களுக்கு உத்தரவிட்டான்.
 
★அப்பொழுது இரவாகி விட்டது. ஆதலால் அன்றைய பொழுதை மகேந்திர மலையில் கழித்தனர்.
தங்கியிருக்கும் சேனைப் படைகளுக்கு எதிரிகளால் எந்த ஆபத்தும் வராத வகையில் நான்கு பக்கமும் பாதுகாப்பு செய்யப்பட்டது. அனைவருக்கும் அனைத்து விதமான வசதிகளும்  இருக்கிறதா? என்று ராமரும் லட்சுமணனும் பார்த்து திருப்தி அடைந்த பின் தனியாக சென்று அமர்ந்தார்கள். கடலை எப்படி தாண்டுவது என்பதை குறித்து சுக்ரீவன் ராமர் லட்சுமணனுடன் ஆலோசனை செய்தான்.
 
★இலங்கையில் ராவணன் ஓர் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான். அந்த கூட்டம் அனுமனால் நகருக்கு  ஏற்பட்ட அழிவு பற்றிய முக்கிய ஆலோசனைக் கூட்டமாகும். அந்தக் கூட்டத்திற்கு தனக்கு நெருக்கமானவர்களை தவிர வேறு யாரையும் அவன் சிறிதும்  அனுமதிக்கவில்லை. ராவணன் அக்கூட்டத்திற்கு பலத்த காவல் ஏற்பாடு செய்திருந்தான். மேலும் ராவணன் தன் அனுமதியின்றி எவரும் உள்ளே வரக்கூடாது எனக் கட்டளையிட்டான்.
 
★அந்த ஆலோசனை கூட்டத்தில் ராவணன், இது வரையில் நமது பகைவர்கள் யாரும் நம்முடைய  நகரத்திற்குள் நுழைந்தது இல்லை. ஆனால் ஒரு குரங்கு என் வீரத்தையும், என் சிறந்த ஆற்றலையும், என்னுடைய  பெருமையையும் அழித்துவிட்டு சென்றுவிட்டது. இதைக் காட்டிலும் பெரிய அவமானம் வேறு என்ன வேண்டும்? இலங்கை நகரை எரித்துவிட்டு சென்றுள்ளது. இலங்கை நகரம் பெரும் அழிவைக் கண்டுள்ளது. எனக்கும் பெரும் அவமானத்தை ஏற்படுத்திவிட்டு அக்குரங்கு சென்றுவிட்டது.
 
★ராமனின் தூதுவனாக வந்த குரங்கானது,  சீதையை இரண்டு முறை பார்த்து பேசி  உள்ளது. எனது மகன் உட்பட நமது பல வீரர்களை கொன்றிருக்கிறது. நகரத்தில் உள்ள அனைத்து மாட மாளிகைகளையும் எரித்து விட்டது. யாருக்கும் பயப்படாத நமது மக்களை பயத்தால் நடுங்கச் செய்து விட்டு இங்கிருந்து சென்றுவிட்டது.
 
★இவ்வளவு ஏற்பட்ட பின் நான் மட்டும் இந்த சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறேன் என புலம்பினான்.   அனுமன் இலங்கைக்கு வைத்த தீயானது  இன்னும் அணையக்கூட இல்லை. ஆனால் நாம் சுகமாகத் தான் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறோம். அந்த அனுமன் இலங்கைக்கு ஏற்படுத்திவிட்டு சென்ற அழிவினால், நம்முடைய  படைகள், நம் உறவினர்கள் என அனைவரையும் இழந்துள்ளோம். இது என் மனதில்  மிகவும் காயப்படுத்திவிட்டது.
 
★ஆனால் அனுமன் என்ற அக்குரங்கை நாம் கொல்லாமல் விட்டுவிட்டோம் என்பது மிகவும் வருத்தத்தை தருகிறது என மனம் வெதும்பிக் கூறினான் ராவணன். ஆனால் இத்துடன் இந்த பிரச்சனை முடிவுக்கு வராது. அந்த வானரம் தன்னுடைய கூட்டத்தை விரைவில் இங்கு அழைத்து வருவான். அப்போது இன்னும் பிரச்சனை வரும் அது பற்றி நாம் ஆலோசிக்க வேண்டும் என்று ராவணன் தலை குனிந்தபடியே பேசினான்.
 
★"கரன் சிரத்தை இழந்தான். சூர்ப்பனகை செவியையும் மூக்கையும் இழந்தாள். நமது வீரர்களின் மனைவியர் தாலியை இழந்தனர். என் மகன் அட்சயகுமாரன் தன் இன்னுயிர் இழந்தான்.பொன்நகரமாம் இலங்கை  எழிலை இழந்தது. நாம் மானத்தையும், புகழையும் இழந்தோம்” என்று இழப்புகளை அடுக்கிக் கூறினான் இலங்கை வேந்தன் ராவணன்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை....................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
204 / 22-10-2021
 
ராவணன் ஆலோசனை...
 
★மேலும் அந்த  ராமன் நமக்கு பகைவனாகி விட்டான். அவனை என்ன செய்யலாம் என்று நாம் ஆலோசனை செய்ய வேண்டும். ராமன் மிகவும் பலமானவன். அவனது படையும் மிகவும் பலமானது. அவர்கள் நமது இலங்கையை தாக்குவது நிச்சயம் என்று தெரிந்து விட்டது. கடல் அரண் போல் நம்மை பாதுகாக்கிறது என்று எண்ணி நாம் சும்மா இருக்க முடியாது. இலங்கையை சுற்றி இருக்கும் கடலை எப்படியாவது தந்திரம் செய்து அவர்கள் தாண்டி இங்கு வந்து விடுவார்கள்.
 
★நம்முடைய நகரத்தை எப்படி பாதுகாப்பது என்றும், நமது சேனைகளின் பலத்தை எப்படி அதிகரிக்கலாம் என்றும், நம் மக்களை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்றும்,  உங்கள் அனைவருடைய எல்லாவிதமான ஆலோசனைகளை இப்போது  சொல்லுங்கள் என்று ராவணன் அனைவரிடமும் பேசி முடித்தான்.
மகேந்திரன், துன்முகன், பிசாசன் முதலிய படைத் தலைவர் நாடக வசனம் பேசினர். “படை எழுப்பி எதிரிகளைத் துடைப்பதுதான் செய்யத் தக்கது” என்ற தமது கருத்தைச் சொல்லினர்.
 
★ராமரைப் பற்றியும்,  அனுமன் வந்து சென்றது பற்றியும், ராவணன் பேசியதை கேட்ட அவனது சபையில் உள்ள ஒரு படைத்தலைவனான தூமகேது தனது கருத்தை அங்கு சொல்ல ஆரம்பித்தான். நம்முடைய சேனை பலமும், ஆயுத பலமும் இந்த பரந்த உலகத்தில் மிகப் பெரியதாகவும் வலிமை உள்ளதாகவும் இருக்கும் போது நீங்கள் ஏன் அதிகமாக கவலைப் படுகின்றீர்கள். நமது நகரின் கோட்டையை எந்த வலிமையான எதிரிகளாலும் வெற்றி பெற முடியாது. தேவலோகம் சென்று இந்திரனையே தாங்கள்  வெற்றி பெற்றிருக்கிறீர்கள்.
 
★யாராலும் வெற்றி பெற முடியாத தானவர்களுடன், தங்களின் தவ பலத்தால் ஒரு வருடம் யுத்தம் செய்து வெற்றி பெற்றிருக்கிறீர்கள். போகவதி நகரத்திற்கு சென்று மன்னன் நாகராஜனை எதிர்த்து தாங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். குபேரனை தோற்கடித்து, அவன் வைத்திருந்த பறக்கும்  புஷ்பக விமானத்தை தாங்கள் அடைந்து இருக்கிறீர்கள். தங்களுக்கு பயந்து மயன் தங்களுடன் நட்பு கொண்டு அவனது மகளான  மண்டோதரியை உங்களுக்கு மணம் முடித்து கொடுத்துள்ளார். பாதாளத்தில் உள்ள பல பெரிய நகரங்களையும் மற்றும்  அந்த காளகேயர்களையும் வெற்றி பெற்றிருக்கிறீர்கள்.
 
★வருணனுடைய மகன்களையும், யமனையும் கூட தங்கள் முன்பு மண்டியிட வைத்து விட்டீர்கள். இவ்வளவு பலசாலியான உங்களுக்கு ராமன் ஒரு எதிரியே அல்ல. தங்களுடைய பலம் எதிரிக்கு தெரிந்திருக்கும். தங்களை எதிர்க்க இங்கு யாரும் வரமாட்டார்கள். மீறி வந்தால் அவர்களை சமாளிக்க தங்களின் புதல்வனான இந்திரஜித் ஒருவனே போதும். எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் இந்திரஜித்தை நீங்கள் அனுப்பி வைத்தால் அத்தனை பேரையும் அழித்து வெற்றி பெறுவான். ஆகவே நம் காரியம் முடிந்தது, கவலைப்படாதீர்கள் என்று ராவணனை புகழ்ந்து சொல்லி அமர்ந்தான்.
 
★ராவணனின் சேனாதிபதி மகாசுரன் எழுந்து தனது கருத்தை சொல்ல ஆரம்பித்தான். அரசே! நான் முன்பே சொல்லி இருந்தேன். சீதையை கவர்ந்து வருவது மட்டும் ஒரு வீரனுக்கு அழகல்ல. நான் சொன்னதை அப்பொழுது நீங்கள் சிறிதும் கருத்தில் கொள்ளவில்லை. கரனையும், நம் அரக்கர்களையும் கொன்று, சூர்ப்பனைகையின் மூக்கையும் அறுத்த, அந்த ராம லட்சுமணனை அன்றே கொன்றிருக்க வேண்டும். அப்பொழுது விட்டுட்டு இன்று வருந்துவது ஒரு பயனும் இல்லை. நாம் பகைவரை எதிர்க்காமல் இங்கு இன்பத்தை அனுபவித்து கொண்டிருப்பதில் என்ன பயன்?
 
★இப்படி இருந்தால் குரங்கு மட்டுமல்ல, சிறு கொசுவும் நம்மை எதிர்க்கும் என்றான். இவன் பேசிய பிறகு துன்முகன், மகாபார்சுவன், பிசாசன்,  தூமிராட்சன் முதலான அரக்க வீரர்களும் எழுந்து பேசினார்கள். அரசே! எலிகளை கண்டு புலிகள் பயம் கொள்ளுமா? எங்களுக்கு அனுமதி தாருங்கள். நாங்கள் அந்த மனிதர்களையும், அந்த குரங்குகளையும் கொன்று தின்று வருகிறோம் என்றனர்.
அனுமன் இலங்கைக்கு வந்த போது சிறிது அஜாக்கிரதையாக இருந்து விட்டோம். நமது அஜாக்கிரதையை பயன்படுத்தி அந்த வானரம் தனது உடல் வலிமையை காட்டி நம்மை எல்லாம் அவமானப்படுத்தி விட்டு சென்று விட்டது.
 
★இது போல் மீண்டும் நடக்க விட மாட்டேன். மறுபடி அந்த வானரம் இங்கே வந்தால் நான் பார்த்துக் கொள்கிறேன். எத்தனை வானரங்கள் வந்தாலும் சரி, அத்தனை பேரையும் அழித்து விடுவேன். ஒரு தவறு நடந்து விட்டதால் அதை தொடர்ந்து அபாயம் வரும் என்று சிறிதும் கவலைப்பட வேண்டியதில்லை. தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் தானவர்கள் என அனைவரையும் எதிர்த்து வெற்றி பெற்ற தாங்கள் ராமரைப் பற்றி எந்த கவலையும்  கொள்ளாதீர்கள் என்று சொல்லி முடித்தான், மகேந்திரன் என்கிற படைத் தளபதி.
 
★துர்முகன் என்ற ராட்சசன் எழுந்து, அரசே!  எனக்கு உத்தரவு கொடுங்கள். நம்மை எல்லாம் அவமதிப்பு செய்த அந்த கொடிய வானரத்தையும், அவனது கூட்டத்தையும் இப்போதே சென்று அழித்து விட்டு திரும்பி வருகிறேன் என்று கர்ஜனை செய்தான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை....................
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
205 / 23-10-2021
 
ஆலேசனைக்
கூட்டம் தொடர்கிறது...
 
★ராமர் லட்சுமணன் இருவர் மட்டுமே இப்போது நமது எதிரிகளாக இருக்கிறார்கள். சாதாரண வானரத்தை பற்றி ஏன் பேச வேண்டும். எனக்கு உத்தரவு கொடுங்கள் அவர்களை நான் ஒருவனே சென்று அழித்துவிட்டு வருகிறேன் என்று வஜ்ர தம்ரஷ்டிரன் என்ற ராட்சதன் தனது பரிகை என்ற உலக்கை ஆயுதத்தை காண்பித்தான். கும்ப கர்ணனின் மகன் நிகும்பன் எழுந்தான். நீங்கள் அனைவரும் இங்கேயே இருங்கள். யாரும் வர வேண்டாம். நான் ஒருவனே கடலின் அக்கரையில் அவர்கள் இருக்கும் இடம் சென்று, அவர்களை தின்று விட்டு உங்களுக்கு செய்தியை சொல்கிறேன் என்றான்.
 
★ துன்முகன் என்கிற ராட்சதன் எழுந்து நாம் சூழ்ச்சி மூலமாக இவர்கள் அனைவரையும் அழித்து விடலாம். அதற்கான திட்டத்தை சொல்கிறேன் என பேச ஆரம்பித்தான். பல ராட்சதர்களை மனித வேடம் அணியச் செய்து ராமரிடம் அனுப்புவோம். தங்கள் தம்பியான  பரதன், எங்களை அனுப்பியிருக்கிறான். நான்கு வகை பெரும் படை ஒன்று பின்னால் வருகிறது, சிறிது நாள் காத்திருங்கள் என்று நாம் சொல்லுவோம். அவர்கள் கடற்கரையிலேயே ஓய்வு எடுத்துக் கொண்டு பரதனின் படைக்காக காத்திருப்பார்கள். நமது சூழ்ச்சி வலையில் விழுந்த அவர்களை நாம் வான் வழியாக சென்று,  முதலில் சூழ்ந்து கொண்டு, நான்கு பக்கமும் இருந்து தாக்கி அழித்துவிடலாம் என்றான்.
 
★அனைவரும் தங்களது பெரிய ஆயுதங்களை காட்டி சப்தமிட்டு ஆர்ப்பரித்தார்கள். இப்படி ஒருவர் பின் ஒருவராக பலர் ராவணனை பெருமையுடன் பேசி திருப்திப் படுத்தினார்கள். அனைவரது பேச்சும் அரக்கன் ராவணனுக்கு திருப்தியை கொடுத்தாலும், அவனது மனதில் ஏதோ நெருடிக் கொண்டே இருந்தது. அரக்கன் ராவணனின்  உடன் பிறந்த தம்பியாகிய கும்பகருணன் மட்டும் அதற்கு உடன்படவில்லை;
கும்பகர்ணன் எழுந்து, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் எனக் கூறி அவர்களை அமர வைத்தான்.
 
★பிறகு கும்பகர்ணன் அரசன் ராவணனிடம் சென்று, உன் தம்பியாகிய நான் உனக்கு எப்போதும் நல்லதை மட்டும் தான் சொல்வேன். நீ உன்னை உலகம் போற்ற வேண்டும் என நினைக்கிறாய். அவமானம் நடந்து விட்டது எனக் கூறுகிறாய். உன் மீது ஆசை கொண்ட மனைவிமார்கள் பலர் இருக்க  ராம லட்சுமணர் இல்லாத நேரத்தில் நீ சீதையை கவர்ந்து வந்துள்ளாய். இது நியாயமா? நீ என்று சீதையை கவர்ந்து வந்து இங்கு சிறை வைத்தாயோ, அன்றே அரக்கர்களின் புகழ் அழிந்து விட்டது.
 
★தீய செயல்களை செய்துவிட்டு புகழ் கிடைக்கவில்லை என்று புலம்புவதில் ஒரு பயனும் இல்லை. நம் அரக்க குலத்திற்கு அழிவைத் தேடித்தரும் செயலை நீ செய்துள்ளாய். ராமர் தன் ஒரு அம்பினால் கரன் முதலிய பதினாயிரம் அரக்கர்களை கொன்றுள்ளான்.  அரசே! சீதையை ராம லட்சுமணரிடம் ஒப்படைப்பது நல்லது . அதை செய்வாயாக! இல்லையேல் ராமன் நிச்சயம் நம்மை வெல்வான். ஆகவே தொட்ட இடத்தில் அவளைக் கொண்டு விடுவித்தால் அது தூய செயலாகும் என்றான்.
 
★மேலும்  திடமுடன் தான் கருதியதை எடுத்து உரைத்தான். அடிப்படைத் தவற்றை எடுத்துக் கூறினான். ‘சீதையைச் சிறை பிடித்தது ராவணன் செய்த மாபெரும் தவறு’ என்றான். ‘ராமனை அடைந்து மன்னிப்புக் கேட்பதுதான் பெருமை’ என்றான். அப்படி இல்லையேல் இதற்கு மற்றொரு வழியும் உண்டு. இங்கு வீரம் பேசினால் நாம் அதனையும் திறம்படச் செய்ய வேண்டும்.  ராமனுக்கு முன்பு, நாம் நம் அரக்கர்கள் படைகளை அழைத்துக் கொண்டு அந்த ராமனிடம் போர் புரிந்து ராம லட்சுமரையும், அவர்களுடன் இருக்கும் வானர படைகளையும் அழித்து விடலாம். இது தான் சரியான வழி என்று கூறினான் கும்பகர்ணன்.
 
★இப்படி தம்பி கும்பகர்ணன் அவையில் பேசியதை கேட்டு கோபங்கொண்ட ராவணன், அவன் கடைசியாக கூறிய ஆலோசனையை மட்டும் ஏற்றுக் கொண்டான். தம்பி கும்பகர்ணா! நீ நல்லது சொன்னாய். நாம் அனைவரும் உடனே போருக்கு புறப்படுவோம். பகைவர்கள் அனைவரையும் அழித்துவிட்டு திரும்புவோம். நம் படைவீரர்கள் அனைவரையும் போருக்கு தயாராக இருக்கும்படி கூறினான். அப்போது வயதால் இளைஞன், வாலிபப் பருவத்தினன், ராவணனின் வீரமகன் இந்திரஜித் மூத்தோர் வார்த்தைகளை எதிர்த்துப் பேசினான்.
 
★“முள்ளைக் களைவதற்குக் கைநகம் போதும். கோடரி தேவை இல்லை” அரசே! அற்பமான புழுக்களைக் கொல்வதற்கு தாங்கள் செல்வதா? எனக்கு அனுமதி கொடுங்கள். நான் சென்று அவர்களனைவரையும் அழித்துவிட்டு வருகிறேன். நான் ஒருவனே தக்க படை கொண்டு அவர்களைத் தாக்கிப் பாடம் கற்பிக்க முடியும்” என்றான்.
அப்போது ராவணனின் தம்பியான விபீஷணன் எழுந்து! மகனே, இந்திரஜித்! நீ இன்னும் சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறாய். நீ  அரச நீதிகளை நன்கு உணரவில்லை. அனுபவம் உடையவர்கள் முடிவு செய்வதை, நீ முடிவு செய்யலாமா? என்றான்.
 
★விபீஷணன் ராவணனை பார்த்து, அண்ணா! எனக்கு தாய், தந்தை, அண்ணன், கடவுள் எல்லாம் நீங்கள் தான். உனக்கு ஆலோசனை சொல்ல தகுதி உடையவன் நான் இல்லை என்றாலும், இவர்கள் கூறிய ஆலோசனை அனைத்தும் தங்களுக்கு தீமை அளிக்கக் கூடியவை. ஆதலால் நான் சொல்வதை கோபப்படாமல் கேட்க வேண்டும். இலங்கையை ஒரு வானரம் தான் எரித்தது என தாங்கள் நினைப்பது தவறு எனக் கூறினான்
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை....................
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
206 / 24-10-2021
 
விபீஷணன்ன் அறிவுரை...
 
★விபீஷணன் ராவணனை பார்த்து, அண்ணா! எனக்கு தாய், தந்தை, அண்ணன், கடவுள் எல்லாம் நீங்கள் தான். உனக்கு ஆலோசனை சொல்ல தகுதி உடையவன் நான் இல்லை என்றாலும், இவர்கள் கூறிய ஆலோசனை அனைத்தும் தங்களுக்கு தீமை அளிக்கக் கூடியவை. ஆதலால் நான் சொல்வதை கோபப்படாமல் கேட்க வேண்டும். இலங்கையை ஒரு வானரம் தான் எரித்தது என தாங்கள் நினைப்பது தவறு.
சீதையின் கற்பின் திறன் தான் இலங்கை நகரை எரித்துள்ளது. தாங்கள் அதனை நன்கு உணர வேண்டும். இதை நீங்கள் நன்றாக ஆராய்ந்து பார்த்தால் ஒருவனின் பெருமை இழக்க காரணம் பெண்ணாகத் தான் இருக்கக் கூடும்.
 
★மேலும் இங்கு வந்திருக்கும் அனைவரும் தங்களின் பெருமைகளை பேசுவதிலும், உங்களை புகழ்வதிலுமே குறியாக இருக்கிறார்கள். இவர்களின் யோசனைகள் தங்களுக்கு இனிமையாக இருந்தாலும், நமது நாட்டிற்கும் மற்றும் நமது குலத்திற்கும் இது சரியானதல்ல. நீதி தர்மத்திற்கு எதிராக ஒரு காரியத்தை செய்தால், அதன் எதிர் விளைவுகள் கண்டிப்பாக
கடுமையானதாக  வரும். அதுவே இப்போது வந்திருக்கிறது.
 
★இதற்கு முதலில் அமைதியான பேச்சுக்கள் வழியாகவும் அறிவுப்பூர்வமாகவும் தீர்வுகளை தேட வேண்டும். அது நம்மால் முடியாவிட்டால் அதன் பிறகு யுத்தத்தை செயல்படுத்த வேண்டும். இவர்கள் சொல்வது போல் நீங்கள் முதலில் யுத்தத்தை ஆரம்பித்தால், இலங்கையும் நமது குலமும் முற்றிலும் அழிந்து போகும். தருமத்தை சிந்தித்து எது சரியானதோ அதனை முதலில் செய்யுங்கள்.
 
★ராமருடைய மனைவி சீதையை நீங்கள் தூங்கி வந்தது மிகவும் பெரிய பாவகரமான ஒரு காரியமாகும். அந்த பாவத்தை தீர்த்துக் கொள்ள முதலில் அதற்கான வழியை தேடுங்கள். ராமர் நமக்கு என்ன தீங்கு செய்தார்?. தனது தந்தையின் சத்தியத்தை காப்பாற்ற தண்டகாரண்ய காட்டில் தனது மனைவியுடனும்,  தனது தம்பியுடனும் யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமல் மிகவும் அமைதியாகவே வாழ்ந்து வந்தார்.
 
★அங்கு அவரிடம் சரணடைந்த அனைவர்களையும், தன்னை சார்ந்தவர்களையும் காப்பாற்றிக் கொள்வதற்காகத்தான்  தன்னை எதிர்த்து வந்த ராட்சதர்களை யுத்தம் செய்து அழித்தார். ராமரின் மேல் கோபம் இருந்தால் நீங்கள் ராமரை எதிர்த்து யுத்தம் செய்திருக்க வேண்டும். ஆனால்  அதைவிட்டு அவர்களை மிக வஞ்சகமாக ஏமாற்றி, அவரது மனைவியை தூக்கி வந்து விட்டீர்கள். இது மிகப்பெரிய பாவமாகும். நம் பெயரில் குற்றத்தை வைத்துக் கொண்டு யுத்தம் செய்ய வேண்டும் என்று சொல்வது சரியானதல்ல.
 
★ராமருடைய பலத்தை முதலில் சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். அவரின் தூதுவனாக வந்த அனுமனின் பலத்தையும் சாமர்த்தியத்தையும் நாம் அனைவரும் கண்டோம். இவ்வளவு பெரிய கடலை ஒரே தாவலில் தாவ யாராலும் முடியாது ஆனால் அனுமன் தாண்டினான். அனுமானம் செய்ய முடியாத அளவிற்கு அனுமனின் வீரம் உள்ளது.
 
★அண்ணா! குரங்குகள் என்று நீ அலட்சியம் செய்வது தவறு. குரங்காகிய வாலியினால் நீ அடைந்த துன்பங்களை நினைத்துப் பார். அவர்கள் மனிதர்கள் தான் என அலட்சியம் செய்கிறீர்கள் தானே? கார்த்தவீர்யார்ஜுனன் உன்னை சிறை வைத்ததை மறந்து விட்டாயா? மேலும் அந்த மன்னன்  கார்த்தவீர்யார்ஜுனனை கொன்ற பரசுராமனை இராமன் வென்றதையும் நீ மறந்து விட்டாயா? இராம இலட்சுமணரை பகைப்பது உனக்கு தீங்கை விளைவிக்கும்.
 
★ராமரைப் பற்றியும் , அந்த வீர அனுமனைப் பற்றியும் இங்கு இருப்பவர்கள் அலட்சியமாக பேசுவதில் பயன் ஏதுமில்லை. நம்முடைய பலம் பெரிதாக இருந்தாலும் எதிரியின் பலத்தையும் பார்த்து யுத்தத்தை தீர்மானிக்க வேண்டும். சீதையை முதலில் ராமரிடம் ஒப்படைத்து விட்டால் யுத்தம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ராமரும் லட்சுமணனும் இங்கு வருவதற்குள் சீதையை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். உன் புகழும், உன் குலமும் அழிவதற்கு முன் நீ சீதையை இராம இலட்சுமணரிடம் ஒப்படைத்து விடு. அவ்வாறு செய்வது தான் உனக்கு நன்மை பயக்கும்.
 
★உங்களின் கருத்துக்கு எதிரான கருத்தை சொல்கிறேன் என்று என்மீது கோபம் ஏதும் கொள்ள வேண்டாம். உங்களின் சிறந்த நன்மைக்காக சொல்கிறேன் என்று ராவணனிடம் விபீஷணன் அமைதியுடன் கூறினான். தன்னுடைய மந்திரிகள் மற்றும் சேனாதிபதிகளின் வீரமான பேச்சுக்களை மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்த ராவணனுடைய மனதில் இருந்த சந்தேகம் அதிகமானது. நாளை மீண்டும் இதை பற்றி  நாம் விவாதிக்கலாம் என்று அந்த   அவையை ஒத்தி வைத்து விட்டு அந்தப்புரம் சென்று விட்டான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை....................
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
207 / 25-10-2021
 
விபீஷணன்
அறிவுரை தொடர்கிறது...
 
★ராமரைப் பற்றியே இரவு முழுவதும் சிந்தித்துக் கொண்டே இருந்தான் ராவணன். மறுநாள் அதிகாலையில் வாத்தியங்கள் வேதங்கள் முழங்க, மங்கல இசைகளுடன் இருந்த அரசன் ராவணனது அந்தப்புரத்திற்கு விபீஷணன் சென்றான். ராவணனை வணங்கிய விபீஷணனை பார்த்ததும் அங்கிருக்கும் அனைவரையும் வெளியே போகச் சொல்லிவிட்டு விபீஷணனிடம் என்ன செய்தி? என்று கேட்டான் ராவணன். அதற்கு விபிஷணன், அண்ணா! நான் சொல்வதில் தவறு ஏதும் இருந்தால் மன்னிக்க வேண்டும். என்னுடைய லாபத்திற்காக நான் எதுவும் இங்கு பேசவில்லை. என்னுடைய அண்ணன் என்ற பாசத்தில் உங்களின் நலன் கருதியே பேசுகிறேன். நீங்கள் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.
 
★ராமரிடம் இருந்த சீதையை பிரித்து இங்கு கொண்டு வந்ததில் இருந்து,  இலங்கை நகரத்தில் அபசகுனங்கள் நிறைய நமக்குத்  தெரிகிறது. ஹோமங்கள் செய்யும் போது எரியும் அக்னி, எரிய வேண்டிய முறையில் எரியவில்லை. சரியான மந்திரங்களை சொல்லி ஆகுதிகளையும் நெய்யையும் அக்னியில் போட்டாலும் அக்னி எரிவதில்லை. பூஜை செய்யும் இடங்களில் பாம்புகள் நிறைய காணப்படுகிறது. இறைவனுக்கு படைக்க செய்யும் உணவுகளை இறைவனுக்கு படைக்கும் முன்பாகவே அதில் எறும்புகள் வந்து மொய்க்கிறது.
 
★பசுக்கள் சரியாக பால் கரப்பது இல்லை. நமது அரண்மனையில் உள்ள யானைகள், குதிரைகள், கோவேறு கழுதைகள் என அனைத்து விலங்குகளும் உடல் ஆரோக்கியம் இல்லாமல் நலிந்து கிடக்கின்றன. அவை சரியாக உண்ணாமல் விபரீதமாக நடந்து கொள்கின்றன. விலங்குகளுக்கு செய்யும் வைத்தியங்கள் எதுவும் பலன் அளிக்கவில்லை. பறவை இனமான காக்கைகள் நகரத்தின் உயரமான இடங்களின் மேல் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து விபரீதமாக கத்துகின்றன.
 
★கழுகுகள் வட்டமிட்டு கொண்டு இருக்கின்றன. காட்டு நரிகள் ஊருக்குள் புகுந்து பயங்கரமாக ஊளையிடுகின்றன. காட்டில் வாழும்  மிருகங்கள் எல்லாம் நகரத்திற்குள் நடமாடுகின்றன. சகுனம் சொல்லும் அறிஞர்கள், இந்த அபசகுனங்களின் அறிகுறிகளை பார்த்து, அதற்கு அர்த்தம் சொல்வது மக்கள் அனைவருக்கும் கவலையை உண்டாக்கி இருக்கின்றது. இவையெல்லாம் நமக்கு மிகப்பெரிய அபாயத்தையும் நஷ்டத்தையும் குறிக்கின்றது. இதை நாம் அலட்சியம் செய்யக் கூடாது. சீதையைத் திருப்பி அனுப்பிவிடுங்கள். அவளை இங்கு கொண்டு வந்தது முதல் இந்த அறிகுறிகள் அதிகமாக காணப்படுகின்றன.
 
★நான் சொல்வதில் நம்பிக்கை இல்லை என்றால் தயவுசெய்து மற்றவர்களையும் விசாரித்து கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.  நான் சொன்னதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் என் மீது கோபித்துக் கொள்ளாதீர்கள்.
இதைக் கேட்ட ராவணன், கோபத்தில் குலுங்க குலுங்க சிரித்தான். பிறகு அவன், என் வலிமையைப் பற்றி நீ அறிந்து இருந்தும், அந்த மனிதர்கள் என்னை வெல்வார்கள் எனக் கூறுகிறாய். நீ அவர்களை பார்த்து பயப்படுகிறாயா? இல்லை அவர்கள் மீது அன்பு காட்டுகிறாயா? என்றான்.
 
★முன்பு வாலியை வலிமை மிக்கவன் எனக் கூறினாய். ஆனால் அவனிடம் போர் புரியும் எதிரியின் வலிமையை பாதி பெற்றவன் என்பதை மறந்து விட்டாயா? அவனிடம் யார் போர் புரிந்தாலும் அவன் அவர்களின் வலிமையை பாதி பெற்று விடுவான். ராமனும் வாலியை மறைந்து இருந்து தான் கொன்றான் என்பதை நீ மறந்து விட்டாயா? நீ மட்டும் தான் அந்த மனிதர்களுக்காக மனமிறங்கி பேசிக் கொண்டிருக்கிறாய். உன் பேச்சை கேட்பதில் ஒரு பயனும் இல்லை. ஆதலால் நான் போருக்கு செல்வது நிச்சயம்.
 
★அந்த ஶ்ரீராமரை பகைத்துக் கொள்வதினால் நமக்கு லாபம் ஒன்றும் இல்லை. சீதையை திருப்பி அனுப்பிவிட்டு நாம் சுகமாக வாழ்வோம் என்று மிகப் பணிவுடன் விபீஷணன் ராவணனிடம் கூறினான். அதற்கு ராவணன் சீதையைத் திருப்பி தரும் பேச்சுக்களை இங்கு பேச வேண்டாம். அது ஒரு நாளும் முடியாது. ராமரை நான் சமமான ஒரு எதிரியாகவே காணவில்லை. ராமரின் மேல் எனக்கு ஒரு பயமும் இல்லை நீ போகலாம் என்றான்.
 
★ராவணன் சீதையை திருப்பி அனுப்பக் கூடாது என்று மிகப் பிடிவாதமாக இருந்தாலும், தன்னுடைய ஆசை சிறிதும் நிறைவேறவில்லையே என்று மிகவும் வருந்தினான். தான் செய்யும் காரியத்திற்கெல்லாம் தன்னுடைய உறவினர்களும் தவறாக பேசுகின்றார்களே என்று தனது மன அமைதியை இழந்தான் ராவணன். அதனை யாரிடமும் காட்டிக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் சபையை கூட்டி ஆலோசனை செய்தான்.
 
★இழந்த மன அமைதியை மீண்டும் பெறுவதற்காக அரச சபையை கூட்டி ஆலோசனை என்ற பெயரில் தன்னை மற்றவர்கள் பெருமையாக பேசுவதை கேட்டு ஆறுதல் அடைந்தான் ராவணன். தனது அகங்காரத்தால் மிகச் சிறிய காரியத்திற்கு கூட சரியான யோசனை செய்ய இயலாமலும், முடிவெடுக்க முடியாமலும் திணறினான் ராவணன்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை....................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
208 / 26-10-2021
 
கும்பகர்ணன் அறிவுரை...
 
★ராமரை பற்றி விவாதிக்க மீண்டும் தனது மந்திரி சபையை கூட்டினான். இந்த முறை நகரத்தில் உள்ள அனைத்து ராட்சச குழுக்களின் தலைவர்கள் அனைவரும் வர வேண்டும் என்று கட்டளையிட்டான். அந்த அரண்மனையின் அவை ராட்சத தலைவர்களால் நிரம்பியது. ராவணன் பேச ஆரம்பித்தான். எல்லா விதத்திலும் நீங்கள் திறமைசாலிகள். இந்த மந்திரி சபையில் உள்ளவர்கள், எந்த விதமான கடினமான, சிக்கலான காரியத்திற்கும் சரியான ஒரு யோசனை சொல்லும் சக்தி வாய்ந்தவர்கள். இதுவரை நீங்கள் ஆலோசித்து சொன்ன அனைத்தும் நமக்கு நன்மையை அளித்திருக்கிறது.
 
★இதுவரையில் நாம் செய்த யுத்தங்களும், அதற்காக  நீங்கள் சொன்ன அனைத்து விதமான ஆலோசனைகளும் நமக்கு பல வெற்றிகளை அள்ளி  கொடுத்து இருக்கிறது. நாம் இது வரையில் தோல்விகளை கண்டதில்லை. இப்பொழுது உங்களிடம் நான் ஒன்று கேட்கிறேன். ராமரிடம் இருந்து சீதையை நான் தூக்கி வந்தது உங்கள் அனைவருக்கும் தெரியும். அதன் பிறகு ஒரு வானரம் இங்கு வந்து நாசம் செய்ததும், இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் மிக மோகமான அபசகுனங்களும் உங்கள் அனைவருக்கும் தெரியும்.
 
★பலர் என்னிடம் சீதை இங்கு வந்ததினால் தான் இப்படி நடக்கறது. எனவே சீதையை ராமரிடம் அனுப்பி விடுமாறும் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கேட்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் என்னை வற்புறுத்தி பேசுகின்றனர். ராமரிடம் அந்த சீதையை நான் திருப்பி அனுப்ப முடியாது. ராமரிடம் நான் மன்னிப்பும் கேட்கவும் முடியாது. ராமர் வந்து தன்னை மீட்பான் என்று சீதை நம்பிக் கொண்டு இருக்கிறாள். ராமரால் கடல் தாண்டி இங்கு வருவது இயலாத காரியம். மீறி வந்தாலும் அதைப் பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை பயமும் இல்லை.
 
★நம்மை தாக்கலாம் என்று ராமரும் லட்சுமணனும் அந்த வானரங்களுடன் கடற்கரையில் இருந்து கடலை எப்படி தாண்டி செல்லலாம் என்ற யோசனை செய்து கொண்டு இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. ஆகவே அவர்களை அங்கேயே அழிக்கும் வழிகளை எல்லாம்  நீங்கள் சொல்லுங்கள். இத்தனை நாட்கள் தம்பி கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்தான் ஆகவே இது பற்றி பேசவில்லை. இப்போது தம்பி கும்பகர்ணன் சபைக்கு வந்து விட்டான் எனவே இதுபற்றி நன்றாக யோசித்து உங்கள் ஆலோசனைகளை எல்லாம் சொல்லுங்கள் என்று பேசி முடித்தான் ராவணன். பின் கும்பகர்ணன் பேச ஆரம்பிக்க எழுந்தான்.
 
★ராமர் லட்சுமணனின் மீது உங்களுக்கு விரோதம் ஏதேனும் இருந்தால் நீங்கள் முதலில் அவர்களை எதிர்த்து யுத்தம் செய்து வெற்றி பெற்றிருக்க வேண்டும். அவர்களை நீங்கள் அழித்திருந்தால், வெற்றி வீரரான உங்களுடன் சீதை தானாகவே வந்திருப்பாள். அதை விட்டுவிட்டு யாரையும் சிறிதும் ஆலோசனை கேட்காமல் இப்படி நீங்களாகவே ஒரு பாவமான  ஒரு காரியத்தை செய்து. விட்டு, ராமரின் பகையை சம்பாதித்துக் கொண்டு விட்டீர்கள். இப்போது காலம் தாண்டிய பின்பு நல்ல ஆலோசனை சொல்லுங்கள் என்று கேட்கிறீர்கள்.
 
★நீதி சாஸ்திரங்களை  அறிந்த அரசனுக்குரிய உத்தமமான  காரியத்தை செய்யாமல், நீதி சாஸ்திரம் அறியாத மூடனைப் போல் செய்து விட்டீர்கள் என்று ராவணனின் மேல் எந்த பயமும் இல்லாமல் தைரியமாக சொல்லி அமர்ந்தான் கும்பகர்ணன். அனைவரின் முன்பும் தம்பி இப்படி பேசி விட்டானே என்று ராவணனின் முகம் வாடியது. ராவணனின் மேல் அளவு கடந்த அன்பு வைத்திருந்த தம்பியான கும்பகர்ணனால் ராவணனின் முகம் வாடியதை பொறுக்க முடியவில்லை.
 
★தன்னுடைய கடினமான சுடு சொல்லால்தான் அண்ணன் முகம் வாடி விட்டது என்பதை நன்கு உணர்ந்த கும்பகர்ணன் பழையதை பேசி இனி ஏதும் பிரயோஜனம் இல்லை. இனி நடக்க வேண்டியதை பார்ப்போம். இனி அண்ணனுக்கு ஆதரவாக நாம் இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான். ராமரின் வல்லமையும் அவர் ஒரு சிறந்த வில்லாளி என்றும் அவர் பெற்ற வரங்களும் கும்பகர்ணனுக்கு நன்றாக தெரியும். ராவணனுக்கு எதிராக எந்த ஒரு காரியத்தையும் செய்யக் கூடாது என்ற முடிவில் இருந்த கும்பகர்ணன் அங்குள்ள மற்றவர்களை போல் அண்ணன் ராவணனை பெருமைப்படுத்தி ராவணனுக்கு தைரியத்தை கொடுத்து பேசினான்.
 
★நீங்கள் முன்னால் செய்ய வேண்டியதை பின்னாலும் பின்னால் செய்ய வேண்டியதை முன்னாலும் தவறாக செய்து கொண்டு இருக்கிறீர்கள். ஆனாலும் இனி நீங்கள் பயப்பட வேண்டாம். இந்த ராமரை நான் எனது வலிமையால் எதிர்த்து யுத்தம் செய்து அமோக வெற்றி பெறுவேன். ராமரது அம்புகள் என் மீது ஒன்றிரண்டாவது படும் அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. எனக்கு ஒன்றும் ஆகாது. ராமரை அழித்து அவரது ரத்தத்தை குடித்துவிட்டு, அந்த  செய்தியை உங்களுக்கு  அனுப்பு வேன். நீங்கள் என்ன முடிவு எடுக்கின்றீர்களோ அதற்கு நான் கட்டுப் படுகிறேன் என்று கும்பகர்ணன் பேசி முடித்தான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை...................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
209 / 27-10-2021
 
அவையில் ஆலோசனை
தொடர்கிறது...
 
★ராவணனுடைய பிரதான ஆலோசகன் பிரஹஸ்தன் ராவணனுடைய பலத்தை எடுத்துச் சொல்லி உங்களை எதிர்த்து இது வரை யாரும் வென்றது இல்லை. இனி வெற்றி பெறப் போவதும் இல்லை என்று ராவணனை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினான். ராவணன் உற்சாகமடைந்தான். குபேரனை எதிர்த்து வெற்றி பெற்றவன் நான், என்னை எதிர்த்து யார் இங்கே வந்து வருவார்கள்? என்று ஆர்ப்பரித்தான். ராவணனின் பேச்சில் சபையில் உள்ளவர்கள் ஆராவாரம் செய்தார்கள்.
 
★ராமருடைய அழகு, வலிமை, சாமர்த்தியம், ஆயுதப்பயிற்சி, அவரிடம் உள்ள அஸ்திரங்கள் என அனைத்தையும் விபீஷணன் சபையில் அனைவரின் முன்பும் தைரியமாகச் எடுத்துரைத்தான். ராமரிடம் இருந்து நீங்கள் தூக்கி கொண்டு வந்த சீதை ஒரு சக்தி வாய்ந்த நங்கை. சீதை மிக அமைதியாக இருப்பது போலவே தங்களுக்கு இருக்கும். ஆனால் அவளால் தான் அழிவு உங்களை தேடி வரும். அவளை ஏன் கவர்ந்து  வந்தீர்கள்?. ஆகவே இப்பொழுது உங்களுடைய முதல் கடமை அவளை ராமரிடம் திருப்பி அனுப்புவது மட்டுமே. 
 
★இதைச் செய்யாவிட்டால், நாம் அழிந்து போவோம் என்பது நிச்சயம். இதனை நான் பல முறை இந்த சபையிலும், உங்களிடமும் எடுத்துச் சொல்லி விட்டேன். இதனால் என் மீது நீங்கள் எவ்வளவு அதிகமான கோபமாக இருந்தாலும் பரவாயில்லை. நான் சொல்வதை சிறிது கேட்டு அதன் பிறகு முடிவெடுங்கள். நீங்கள் தவறான பாதையில் செல்வதை தடுத்து உங்களுக்கு வரப்போகும் அபாயத்தை சுட்டிக்காட்டி, உங்களையும் இந்த ராட்சச குலத்தையும் காப்பாற்ற வேண்டியது  என்னுடைய கடமை ஆகும். இப்போதும் உங்களுக்கு சிறிது அதிர்ஷ்டம் இருப்பதினால் தான் ராமர் இன்னும் இங்கு வரவில்லை.
 
★ராமர் வருவதற்குள் சீதையை நீங்கள் திருப்பி அனுப்பிவிட்டு அவரை சரணடைந்தால், நீங்கள் காப்பாற்றப்பட்டு சுகமாக இந்த ராஜ்யத்தை ஆளலாம். எனவே தான் இதனை மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் என்று அங்கு இருந்தவர்கள்  பேசியதையும், எதிர்த்து பேசினான் விபீஷணன்.
அவன் மறுபடியும் ராவணனிடம், அண்ணா! நான் சொல்வதை கேளுங்கள். ஒப்பற்ற திருமால் தான் தேவர்களின் அன்பான வேண்டுகோளுக்கிணங்க அரக்கர்களாகிய நம்மை அழிக்க அவதாரம் எடுத்து உள்ளான். ஆதலால் தாங்கள் போருக்கு செல்ல வேண்டாம் என்று ராவணனிடம் கெஞ்சிக் கேட்டான்.
 
★விபீஷணன் கூறியதை கேட்ட ராவணன் மிகவும் கோபம் கொண்டான். விபீஷணிடம், நீ அந்த ராமனை, திருமாலின் அவதாரம் எனக் கூறுகிறாய். நான் இந்திரனை சிறையில் அடைத்தவன். தேவர்களை ஓட ஓட விரட்டினேன் என்பதை மறந்துவிட்டு பேசுகிறாய். உனக்கு என்னுடன் உக்ரமான போர்க்களத்திற்கு வருவது பயமாக இருக்கிறது என்றால், நீ இங்கேயே இரு என்று சொல்லி விபீஷணனை பார்த்து ஏளனமாக சிரித்தான். 
 
★இதை பார்த்த விபீஷணன், அண்ணா! இந்த கோபத்தை குறைத்துக் கொள். திருமாலுடன் போரிட்டு மாண்டவர் பலர் உண்டு. அவற்றுள் ஒருவன் தான் ஹிரண்யன் என்பவன். அவன் உன்னைக் காட்டிலும் பல மடங்கு வலிமை உடையவன். மகரிஷி காஸ்யப முனிவருக்கும், திதி என்பவளுக்கும் பிறந்தவன் தான் ஹிரண்யன். அவனின் தம்பி ஹிரண்யாட்சன். இவன் தன் மக்களுக்கு மிகவும் கொடிய துன்பங்களை செய்ததால் திருமால் வராக அவதாரம் எடுத்து அவனைக் கொன்றார். இதனால் கோபங்கொண்ட ஹிரண்யன் திருமால் மீது கோபங்கொண்டான்.
 
★ஹிரண்யன் கடுமையான தவம் இருந்து பிரம்மனிடம் வரன் கேட்டான். தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், ஐம்பெரும் பூதங்கள், படைக்கலன்கள், பகல் நேரத்தில், இரவு நேரத்தில், வீட்டுக்கு உள்புறம்  அல்லது வெளியில் தனக்கு இறப்பு என்பது வரக்கூடாது என வரம் பெற்றான். தான் பெற்ற இவ்வரத்தால் இவன் மக்கள் எல்லோரையும்  துன்புறுத்தி, உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் தன்னை கடவுளாக வணங்கும்படி கட்டளையிட்டான். 
 
★அனைவரும் பயந்து மன்னன் ஹிரண்யனையே கடவுளாக வணங்கினர். அப்போது தேவேந்திரன் ஹிரண்யனைப் பழிவாங்க நினைத்து, அவன் மனைவி கருவுற்றிருந்தபோது அவளைச் சிலகாலம்  தனியாக ஆசிரமத்தில் வைத்து, நாரதர் மூலம் மகாவிஷ்ணுவின் மகிமைகளை அறிய வைத்தான். இதை அவள் வயிற்றிலிருந்த குழந்தையும் கேட்டு, பரந்தாமன் மகாவிஷ்ணுவின் தீவிரமான பக்தனாகியது. அந்தக் குழந்தை தான் பிரகலாதன்.
 
★அனைவரும் ஹிரண்யனையே கடவுளாக வணங்கினார்கள். ஆனால், ஹிரண்யனின் மகன் பிரகலாதன், ஆபத்பாந்தவன்  மகாவிஷ்ணுவையே எப்போதும் போற்றி வணங்கினான். அதைப் பொறுக்க முடியாத ஹிரண்யன், தன் மகன் என்றும் பார்க்காமல் ஆயுதங்களைக் கொண்டு கொல்ல முயன்றான். தீயில் தள்ளிவிட்டும், கடலுக்குள் தள்ளிவிட்டும், நச்சுப் பாம்புகளை கடிக்க விட்டும் எத்தனையோ கொடுமைகளை செய்தான். 
 
★ஆனால், அவனுக்கு வந்த எல்லா ஆபத்துகளிலிருந்தும் மகாவிஷ்ணு பிரகலாதனைக் காப்பாற்றினார். ‘தன்னை எல்லாத் துன்பங்களிலிருந்தும் காப்பவர் ஶ்ரீ ஹரி என்று பக்தியுடன் அழைக்கப்படுகின்ற மகாவிஷ்ணுவேதான்’ என்று பிரகலாதன் கூறினான். அதைக் கேட்ட ஹிரண்யன், ‘அந்த ஹரி எங்கே இருக்கிறான்? ’ என்று கேட்டான். அதற்கு பிரகலாதன், ‘எங்கும் நிறைந்துள்ள இறைவன் இந்தத் தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார் ’ என்று ஒரு தூணைக் காட்டினான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை....................
ஶ்ரீராம காவியம்
~~~~~
210 / 28-10-2021
 
ஓம் ஶ்ரீ நரஸிம்மாய நம:  ...
 
★ஹிரண்யன் ஆவேசத்துடன், தன் கையிலிருந்த கதாயுதத்தால் அந்தத் தூணை அடித்தான். அப்போது, ஸ்ரீமன் நாராயணன் ஆகிய மகாவிஷ்ணு, சிங்க முகமும், மனித உடலும் கொண்ட நரசிம்ம அவதாரத்தில், தூணைப் பிளந்து கொண்டு வெளிவந்தார். அவரைத் தாக்கப் பாய்ந்தான் ஹிரண்யன். ஶ்ரீநரசிம்மர் தன் நகங்களால் அவனது வயிறைக் கிழித்து, குடல்களை உருவி, அதை மாலையாக அணிந்து கொண்டார். பூமியிலும், ஆகாயத்திலும் அவன் உடல் படாமல், தமது மடியில் வைத்துக் கொன்றார். அந்த நேரம் இரவுமின்றி, பகலுமின்றி மாலை வேளையாக இருந்தது. 
 
★வீட்டின் உள்ளும் இல்லாமல் வெளியிலும் இல்லாமல் வாயிற்படியில் அமர்ந்திருந்தார்.
மகாவிஷ்ணுவின் பயங்கரமான நரசிம்ம உருவத்தைக் கண்டு, தேவர்கள் எல்லோரும் அருகில் வர மிகவும்  பயந்து, தூரத்தில் இருந்தபடியே வணங்கினார்கள். பக்தன் பிரகலாதன் மட்டும் அவர் அருகில் சென்று மிக இனிய பாடல்களைப் பாடித் துதித்து  வணங்கினான். அப்போது, ஸ்ரீநரசிம்மர் தமது கோபம் தணிந்து, அனைவருக்கும் அருள் புரிந்து மறைந்தார். கதையை சொல்லி முடித்த விபீஷணன் ராவணனை பார்த்து, அண்ணா! இக்கதையில் வரும் ஶ்ரீ நரசிம்மர் தான் திருமால். ஆதலால் அவரை பகைத்து அழிவை தேடிக் கொள்ளாதே என்றான். 
 
★ஆனால் ராவணன் தம்பி விபீஷணன் கூறியது எதையும் மனதில் கொள்ளவில்லை. விபீஷணன் கூறிய பிரகலாதன் கதையைக்  கேட்டு ராவணன் மிகவும் கோபங்கொண்டான். ராவணன், விபீஷணா! இந்தக் கதையில் வரும் பிரகலாதனும் நீயும் ஒன்று தான். அவன் தன் தந்தையை கொன்று மிகுந்த செல்வத்தை அடைந்தான். அதேபோல் நீ என்னை கொன்று இச்செல்வத்தை அடையலாம் என நினைக்கிறாய். அதனால் தான் அந்த ராம லட்சுமணர் மேல் உனக்கு பாசம் பொங்கி வருகிறது. இதற்கு மேல் நீ ராம லட்சுமணரை புகழ்ந்து பேசினால் உன்னை கொன்று விடுவேன் என விபீஷணன் மீது சீறினான். 
 
★ராமருக்கு சாதகமாகவே நீங்கள் பேசுகின்றீர்கள் என்று இந்திரஜித் கத்தினான். அரசர் ராவணனின் தம்பியாக இருந்து கொண்டு நீங்கள் இப்படி பேசுவதை கேட்க எனக்கு மிக வெட்கமாக இருக்கிறது. நம்முடைய குலத்தின் பெருமை மற்றும் சக்தியை  தெரிந்த நீங்கள் இவ்வாறு பேசுவதை இந்த சபை ஏன் இன்னும் அமைதியுடன் கேட்டுக் கொண்டிருக்கிறது? என்று எனக்கு தெரியவில்லை. நீங்கள் உங்கள் குலத்தை மறந்து உங்களின் சிறுமையான குணத்தை காண்பிக்கிறீர்கள். உங்களுடைய பேச்சை ஒரு நாளும் அங்கிகரிக்க முடியாது. இந்திரனையும் அவனது தேவ கணங்களையும் எதிர்த்து நான் வெற்றி பெற்றிருக்கிறேன். நம்மைக் கண்டு இந்த உலகம் பயப்பட்டுக் கொண்டிருக்கிறது. இரண்டு மானிடர்களை பார்த்து நாம் பயப்பட வேண்டுமா? இந்த சபையில் உங்களது பேச்சு எனக்கு அவமானமாக இருக்கிறது என்று சொல்லி அமர்ந்தான் இந்திரஜித். 
 
★விபீஷணன் மீண்டும்  பேச ஆரம்பித்தான். ராமலட்சுமணன் இருவரும் மானிடர்கள் என்று சொல்லாதே இந்திரஜித். நீ பாலகன் அவர்களை பற்றி அறிந்து கொள்ளும் அளவுக்கு உனக்கு அனுபவமும் அறிவும் போதாது. உன் தந்தையின் ராட்சத படைகளை பின்னால் வைத்துக் கொண்டு நீ பெற்ற வெற்றியினால் இப்படி பேசுகிறாய். ராவணனுக்கு மகனாக பிறந்தும் நீ அவரை அழிக்க வந்த சத்ரு என்றே நான் நினைக்கிறேன். ராமர் யுத்தம் செய்ய வேண்டும் என்று நினைத்து விட்டால் அவருக்கு எந்த படையும் தேவையில்லை. ராமரும் அவரது தம்பி லட்சுமணனும் எத்தனை பெரிய படைகள் வந்தாலும் அவர்கள் இருவர் மட்டுமே நின்று அனைத்து படைகளையும் எதிர்த்து அழிக்கும் வல்லமை கொண்டவர்கள். 
 
★இந்த சபையில் அரசனுக்கு நல்ல யோசனை சொல்லக் கூடியவர்களே இப்போது அவருக்கு அழிவைத் தரும் யோசனையை சொல்கிறார்கள். ஏன் என்று எனக்கு கொஞ்சமும் புரியவில்லை. இந்த தீவிரமான விஷயத்தில் நான் சொல்வதும், எனது முடிவும் ஒன்று மட்டுமே. சீதையை விரைவில் ராமரிடம் அனுப்பி வைத்துவிட்டு நம்மை காப்பாற்றிக் கொள்ளவேண்டும். எனது பேச்சை நீங்கள் அனைவரும் புறக்கணித்தால், பின்பு துன்பப்படுபவர்கள் நீங்களே. ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் என்று பேசி முடித்தான் விபீஷணன். 
 
★அனைத்தையும் கேட்ட அரசன் ராவணனுடைய கோபம் மிகவும் அதிகமானது. எனது தம்பி என்று இது வரை உனது பேச்சை நான் கேட்டுக் கொண்டு மிகவும் பொறுமையாக இருந்தேன். வேறு ஒருவனாக இருந்தால் பேசிய நேரத்தில் இங்கேயே கொன்றிருப்பேன். ராட்சத குலத்தை அவமானப் படுத்த என்றே பிறந்தவன் நீ என்று விபீஷணனை திட்டினான்.
அது மட்டுமில்லை, எனக்கு ராமனிடம் சீதையை திரும்பி அனுப்பும் எண்ணமும் இல்லை. ஆதலால் நீ இங்கு இருந்து சென்று விடு. நீ என் தம்பி என்பதால் இப்போது உன்னை கொல்லாமல் விடுகிறேன். இனியும் நீ எனக்கு உபதேசம் சொல்வதை நிறுத்திக் கொள். என் கண்முன் நிற்காதே. இங்கிருந்து சென்று விடு. இல்லையேல் உன்னை கொன்று விடுவேன் என்றான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை...................
ஶ்ரீராம காவியம்
~~~~~
211 / 29-10-2021
 
வானர்களும்
விபீஷணனும்....
 
★விபீஷணன், ராவணா! நான் சொல்வதைக் கேள். நான் உனக்கு சொன்ன அறிவுரைகள் பற்றி  நீ உணரவில்லை. உனக்கு அழிவு காலம் வந்து கொண்டு இருக்கிறது என்பதை மறந்து விடாதே. ராமரின் வலிமையை அறியாத உங்களிடம், நான் அவரின் பராக்கிரமத்தை பற்றி எவ்வளவோ சொல்லியும் நீங்கள் கேட்காமல் இந்த அரச சபையில் என்னை மிகவும் அவமானம் செய்து  விட்டீர்கள். இனி நான் இங்கிருக்க விரும்பவில்லை. உங்கள் காதுக்கு இனிமையாக பேசுபவர்களின் பேச்சு ஒன்றே  உங்களுக்கு பிடித்திருக்கிறது.
 
★எனது பேச்சு உங்களுக்கு பிடிக்கவில்லை. ஏதேனும் ஒரு வகையில் ஶ்ரீராமரிடமிருந்து உங்களையும், நமது இந்த  நாட்டையும் காப்பாற்றுங்கள். உங்களுக்கு துணை நின்று தீயவற்றை செய்வதை விட, இங்கிருந்து சென்று தர்மத்தின் பக்கம் நிற்பதையே நான் மிகவும் விரும்புகிறேன். நான் ஏதேனும் தவறாக சொல்லியிருந்தால் என் தவறை மன்னித்துக்கொள், நான் செல்கிறேன் என சொல்லிவிட்டு  விபீஷணன் அந்த அவையை விட்டு வெளியேறினான். அவனுடன் படைத்தலைவர்களில நால்வர் வெளியேறி துணையாக நின்றனர்.
 
★அடுத்து என்ன செய்யலாம் என்று விபீஷணன் தன்னுடன் வந்த படைத்தலைவர்களுடன் ஆலோசனை செய்தான்.பின்னர் ராமனிடம் சென்று சரணடைவது எனத் தீர்மானித்தனர். ராமர் தற்போது மகேந்திரமலை அருகில் படைகளுடன் முகாமிட்டு இருப்பதால் அங்கு செல்ல முடிவெடுத்து வான் வெளியில் பறந்த விபீஷணனுடன், அரன், அனலன், அனிலன்,  சம்பாதி ஆகிய நான்கு தளபதிகளும் உடன் சென்றனர். அண்ணன் ராவணன், நீ இங்கிருந்து போய்விடு, இல்லையேல் உன்னை கொன்று விடுவேன் என்று அச்சுறுத்தியதால் இலங்கையை விட்டுச் சென்று கொண்டிருந்தான். இனி என்ன செய்வதென்று தெரியாததால் விபீஷணன் ராமனிடம் தஞ்சம் அடைய சென்றான்.
 
.★ராம லட்சுமணர் இருக்குமிடம் நோக்கி ஆகாய மார்க்கமாக சென்றான். இப்படி விபீஷணன் சென்று கொண்டிருக்கும் போது மகேந்திர மலை அருகில் கடற்கரையில்  வானரங்கள் தங்கியிருப்பதை பார்த்தான். அதேசமயம் கடற்கரையில் இருந்த வானரங்கள் கடலுக்கு மேலிருந்து ஆகாய மார்க்கமாக பெரிய வடிவம் கொண்டு  ஐந்து ராட்சதர்கள் வருவதை கண்டு திகைத்தார்கள். பின் அவர்கள்
சுக்ரீவனிடத்தில் விரைவாக சென்று ராட்சதர்கள் சிலர் ஆகாய மார்க்கமாக வருவதை கண்டதாக தெரிவித்தார்கள். இதனைக் கேட்ட சுக்ரீவன் கடற்கரைக்கு வந்து, வருபவர்கள் ராட்சசர்கள், நம்மைக் கொல்ல ராவணன் அனுப்பியிருப்பான். ஆகவே நம்மை அழிக்க வருகிறார்கள் என்றார். இதனை கேட்ட  அந்த வானரங்கள், தங்களது எல்லா ஆயுதங்களுடன் தயாரானார்கள். உத்தரவு கொடுங்கள், இப்போதே அவர்களை அழித்து விடுகிறோம் என்று ஆர்ப்பரித்தனர். அப்போது  வீபிஷணனும் அவனுடைய தளபதிகளும் மகேந்திர மலை வந்தடைந்தனர்.
 
★வானரங்களின் ஆர்ப்பரிப்பை கேட்ட விபீஷணன் சிறிதும் பயமின்றி அவர்கள் முன்  வந்து நின்று பேச ஆரம்பித்தான். நான் ராவணன் தம்பி விபீஷணன்.
ஶ்ரீ ராமரிடமிருந்து சீதையை தூக்கிச் சென்ற  ராவணனது தம்பியான  விபீஷணன் நான்தான். ராவணன் செய்த செயல்கள் அனைத்தும் தர்மத்திற்கு எதிரானது. எனவே சீதையை ராமரிடம் கொடுத்து விட்டு அவரிடம் மன்னிப்பு கேட்டு அவரை சரணடையுங்கள் என்று தர்மத்தை எவ்வளவோ எடுத்து சொல்லி பலமுறை அவனிடம் மன்றாடினேன்.
 
★நான் சொல்வதை கேட்காமல் சபை நடுவில் என்னை மிகவும் அவமானப் படுத்திவிட்டான் ராவணன். எனவே எனது நாடு, மக்கள், என  அனைத்தையும் விட்டுவிட்டு ராமரை சரண்டைய இங்கு வந்து நிற்கிறேன். இந்த செய்தியை ராமரிடம் தெரிவித்து அவரை சந்திக்க அனுமதி பெற்றுக் கொடுங்கள் என்று சொல்லி முடித்தான். விபீஷணன்  கூறிய அனைத்தையும் கேட்ட சுக்ரீவன், தனது வானரங்களிடம் வந்திருப்பவர்களை தாக்காது இருங்கள். ராமரிடம் உத்தரவு பெற்று விட்டு வருகிறேன் என்று ராமர் இருக்குமிடம் சென்றான்.
 
★அதேசமயத்தில் அனுமன் வானர வீரர்களின் கூச்சலைக் கேட்டு துமிந்தன், மயிந்தன் என்னும் இரு வானர வீரர்களை அழைத்து, அங்கே! என்ன நடக்கிறது என அறிந்து கொண்டு வரும்படி கூறினான். பிறகு துமிந்தன், மயிந்தன் சென்று கூட்டமாய் நின்று கொண்டிருந்த வானர வீரர்களையெல்லாம் விலக்கிக் கொண்டு வந்திருப்பது யார் எனப் பார்த்தனர். அவர்கள் விபீஷணனின் அருகில் வந்து நன்றாக உற்று கவனித்தனர்.
 
★அவர்களை உற்றுப்  பார்த்ததும் ஞானமும், அறநெறியும் மற்றும் உண்மையும் உடையவர்கள் என்பதை தெரிந்து கொண்டனர். பிறகு விபீஷணனை பார்த்து, நீங்கள் யார்? எதற்காக இங்கு வந்துள்ளீர்கள்? எனக் கேட்டனர். விபீஷணன், நான் ராவணனின் தம்பி. நாங்கள் ரகு குலத்தில் பிறந்த ராமனின் திருவடியில் சரணடைய வந்துள்ளோம் என்றான்.துமிந்தன் அவர்களிடம், சற்றுப் பொருங்கள், நான் ஶ்ரீராமரிடம் சென்று உத்தரவு வாங்கி வருகிறேன் எனக்கூறிச் சென்றான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.....................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
212 / 30-10-2021
 
விபீஷணனைப்
பற்றி ஆலோசனை -1...
 
★அங்கு ராமர் மாதா சீதையின் நினைவில் வாடிக் கொண்டு இருந்தார். சீதையை நான் எவ்வாறு காண்பேன்?, இந்தப்  பெருங்கடலை நாம் எவ்வாறு கடக்க போகிறோம்? என்று  நினைத்து புலம்பிக் கொண்டே இருந்தார். லட்சுமணர் ராமருக்கு ஆறுதல் கூறினார். அப்போது சுக்ரீவனும், துமிந்தனும் வந்து ராவணனின் சகோதரன் தங்களிடம் சரணடைய இங்கு வந்திருக்கிறார், தாங்கள் தீர விசாரித்து அனுமதி அளித்தால் அழைத்து வருகிறோம் என்றனர்.
 
★பிறகு  சுக்ரீவன், ராவணனின் தம்பி என்று சொல்லி இங்கு வந்திருக்கும் ராட்சதனும், அவனுக்கு துணையாக நான்கு ராட்சதர்களும் தங்களை சரணடைய வந்திருக்கிறார்கள். ராட்சதர்கள் மிகவும் மோசமான ஏமாற்றுக்காரர்கள். அவர்களை நம்பக்கூடாது. அவர்களை ஏதோ சதி வேலை செய்யும் நோக்கில் ராவணன் தான் நம்மிடம் அனுப்பியிருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். நம்மிடம் புகுந்து, நமக்குள் இருக்கும் ஒற்றுமையை குலைப்பதற்காக ஏதேனும் சதி வேலை செய்ய வந்திருக்கலாம். அல்லது நாம் அசந்திருக்கும் சமயம் நம்மை கொல்ல முயற்சிக்கலாம்.
 
★இவன் சரணடையவே  வந்து இருக்கிறேன் என்று நம்மிடம் சொன்னாலும், இவன் நமது எதிரியான ராவணனின் தம்பி என்பதை நாம் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.அவனையும், உடன் வந்திருப்பவர்களையும் அழித்து விடலாம் என்பதுதான் என்னுடைய கருத்து. இதைப் பற்றி நீங்கள் நன்கு ஆராய்ந்து பார்த்து முடிவு செய்யுங்கள். ஆகவே எங்களுக்கு உத்தரவு கொடுங்கள்.  இப்போதே வந்திருப்பவர்களை அழித்து விடுகிறேன் என்றான் சுக்ரீவன்.
அனைத்தையும் கேட்ட ராமர் நீதி சாஸ்திரம் அறிந்த சுக்ரீவன், வந்திருப்பவர்களை பற்றி தனது கருத்தை சொல்லி விட்டார். நெருக்கடியான சமயத்தில் சுற்றத்தார்கள், நண்பர்களது யோசனை மிகவும் முக்கியம். எனவே உங்களது கருத்துக்களை சொல்லுங்கள் என்று தன்னை சுற்றியிருப்பவர்களின் கருத்தை ராமர் கேட்டார். ஒவ்வொருவராக தங்களின் கருத்தை சொல்ல ஆரம்பித்தார்கள்.
 
★முதலில் அங்கதன் பேசுவதற்கு ஆரம்பித்தான். ராமரை சரண் அடைகிறேன் என்று நமது பகைவன் கூட்டத்தில் இருந்து சில ராட்சதர்கள் இங்கு வந்து இருக்கிறார்கள். இவர்கள் தானாக வந்தார்களா? இல்லை ராவணனால் திட்டமிடப்பட்டு அனுப்பப்பட்டார்களா? என்று நமக்கு தெரியாது. இதனை தெரிந்து கொள்ளாமல் நாம் இவர்களை அழிப்பது தவறு. ஒருவேளை நாம் இவர்களை நம்முடன் சேர்த்துக் கொண்டால், பின்நாளில் நமக்கு ஏதேனும் அபாயம் இவர்களால் வந்தாலும் வரலாம். இவர்களை பற்றி உடனடியாக ஒரு தீர்மானத்திற்கு வர முடியாது.
 
★சில நாள் இவர்கள் இங்கே இருக்கட்டும். நாம் இவர்களது நடவடிக்கைகளை மிகநன்றாக கண்காணிக்கலாம். எப்படி நடந்து கொள்கின்றார்கள் என்று பார்க்கலாம். இவர்களின் செயல் மிக நல்லபடியாக இருந்தால் நம்மோடு அவர்களை சேர்த்துக் கொள்ளலாம். சந்தேகத்தை ஏற்படுத்தினால் அதன் பிறகு விசாரித்து, இவர்கள் வஞ்சகமாக ஏமாற்ற வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தால் அழித்து விடலாம் என்று அங்கதன் பேசி முடித்தான். அதன் பிறகு சபரன் பேச ஆரம்பித்தான். இவர்களை நம்மோடு சேர்த்துக் கொள்வது எனக்கு சரியானதாக இருக்கும் என்று தோன்றவில்லை. முதலில் நம்மிடம் இருப்பவர்களில் மிக  சாமர்த்தியமான ஒற்றர்களை வைத்து இவர்களை சோதித்து அதன் பிறகு முடிவு செய்யலாம் என்றான்.
 
★பிறகு ராமர் ஜாம்பவானைப் பார்த்தார். ஜாம்பவான் பேச ஆரம்பித்தார். ராட்சசர்கள் நல்ல எண்ணத்துடன் வந்துள்ளார்களா அல்லது வஞ்சக எண்ணத்துடன் வந்திருக்கிறார்களா என்று சோதித்து பார்த்து அறிந்து கொள்வது என்பது கடினமான காரியம். ராவணன் நமக்கு மிகப்பெரிய பகைவன் ஆவான். அவனிடம் இருந்து பிரிந்து வந்துவிட்டதாக சொல்கிறார்கள். இவர்களின் இந்த  பேச்சு எனக்கு சிறிது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை எப்படி நாம் நம்புவது?  இலங்கை செல்ல இன்னும் நாம் கடலை கூடத் தாண்டவில்லை. அதற்குள்ளாக ராமரை சரண்டைகிறேன் என்று சொல்கிறார்கள். இதற்குறிய காரணத்தை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். ராவணன் ஏற்கனவே வஞ்சகம் செய்து ஏமாற்றியிருக்கிறான். மீண்டும் அது போல் நடக்க விடக்கூடாது. ஆகவே இவர்களை நம்முடன் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்பது என்னுடைய கருத்து என்று சொல்லி முடித்தார் ஜாம்பவான்.
 
★மயிந்தன் பேச ஆரம்பித்தான். சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை தள்ளி வைப்பது என்பது நல்லவர்கள் செய்யும் சரியான செயல் இல்லை. அவர்களை நம்முடன் சேர்த்துக் கொள்ளலாமா வேண்டாமா என்பதை நம் அறிவின் மூலம் சிந்தித்துத்தான்  முடிவெடுக்க வேண்டும். ராவணனிடமிருந்து இவர்கள் பிரிந்து வந்தது உண்மையாக கூட இருக்கலாம். இதனை சோதித்து பார்த்து அறிந்து கொள்ளும் திறமை மிகுந்தவர்கள் நமக்குள் சிலர் இருக்கிறார்கள் என்று சொல்லி முடித்தான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை.....................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
213 / 31-10-2021
 
விபீஷணனைப்
பற்றி ஆலோசனை -2...
 
அனுமனின் கருத்து.
 
★ராமர் அனுமனை பார்த்தார். தன்னுடைய அபிப்பிராயத்தை அறிந்து கொள்ள விரும்புகிறார் என்பதை உணர்ந்த அனுமன் பேச ஆரம்பித்தார். தங்களின் யோசனைக்கு முன்பு சிறப்பான யோசனையை யாரால் சொல்ல முடியும். தங்கள் முன்பு யோசனை சொல்லக்கூடிய  வல்லவர்கள் யாரையும் நான் இந்த பூமியில் காணவில்லை. இங்கு தாங்கள் என்னிடம் கேட்பதினால் எனக்கு தோன்றியதை இங்கு தெரிவிக்க விரும்புகிறேன். விபீஷணன் வஞ்சகம் செய்து நம்மை ஏமாற்ற விரும்பி இருந்தால், அவன் இங்கு  மறைமுகமாகவே வந்து இருக்கலாம்.
 
★ஆனால் நேரடியாகவே இங்கு வந்து, மிகுந்த  தைரியத்துடன் அனைவரின் முன்பும் நின்று இலங்கையில் நடந்தவற்றை சொல்லி, உங்களை பார்க்க அனுமதி கேட்கிறான். அங்கு நடந்தவைகள் அனைத்தையும் விபீஷணன் சொன்ன பிறகு, ஒற்றர்கள் இவர்களிடம் தனியாக விசாரிக்க ஒன்றும் இல்லை. ஏற்கனவே இலங்கை சபைக்கு நான் சென்றிருந்த போது, அங்கு இருந்த  அனைவரும் மன்னன் ராவணனுக்கு ஆதரவாகவும், தர்மத்திற்கு எதிராகவும் நிறைய  பேசினார்கள். அப்போது அந்த ராவணனை எதிர்த்து, மிகுந்த தைரியமாகவும்,  தர்மத்திற்கு ஆதரவாகவும்  பேசியவர் இந்த விபீஷணன். இதனை நான் நேரடியாகவே கண்டிருக்கிறேன்.
 
★எனது கருத்துப்படி பார்த்தால் விபீஷணனை தீயவன் என நான் நினைக்கவில்லை. இங்கு உள்ள அனைவரும் விபீஷணனை நம்ப வேண்டாம் எனக் கூறினார்கள். ராவணன் அழிவது நிச்சயம் என்பதை உணர்ந்து தான், அவன்  தம்பி விபீஷணன் தங்களை அடைக்கலம் தேடி வந்துள்ளான். நம்மிடம் அடைக்கலம் என்று தேடி வருபவர்கள் நமக்கு தீங்கு ஏதும் செய்வார்களா? நான் இலங்கை ராவணனின் அரசவையில் இந்திரஜித்தால் கொண்டு வந்து நிறுத்தப்பட்டபோது, ராவணன் இவனை கொல்லுங்கள் என ஆணையிட்டான். அப்போது விபீஷணன், தூதர்களை கொல்வது பாவச் செயலாகும், இது நம் குலத்திற்கு இழிவாகும் எனக் கூறினான்.
 
★நான் இலங்கையில் இரவு நேரத்தில் சீதையை தேடிக் கொண்டு போகும்போது இந்த விபீஷணனின் மாளிகைக்குச் சென்றேன். அரக்கர்கள் பலர் மாளிகையில் மது கிண்னங்கள் நிரம்பிக் கிடந்தன. ஆனால் விபீஷணனின் மாளிகையில் பூஜைக்குரிய பொருட்கள் நிரம்பி கிடந்தன. விபீஷணன் அரக்கர் குலத்தில் பிறந்து இருந்தாலும் அவன் நற்குணத்தில் சிறந்து விளங்கியவன். அன்னை சீதை அங்கு பாதுகாப்பாக இருக்கிறார் என்றால் அதற்கு விபீஷணனின் மகள் திரிசடை தான் காரணம். தந்தையை போல திரிசடையும் நற்குணமுடையவள். அதனால் தான் அவள் அன்னைக்கு உறுதுணையாக உள்ளாள்.
 
★ராவணன் தங்களால் அழியக் கூடியவன் என்பதை நன்றாக அறிந்து தான் தங்களை சரணடைய வந்துள்ளான். பகைவனிடம் இருந்து பிரிந்து வந்துள்ள விபீஷணனை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், பிறர் நம்மை ஏளனமாக அல்லவா நினைப்பார்கள். அந்த விபீஷணனை நாம் ஏற்றுக் கொள்வதால் அவன்  மூலமாக அரக்கர்களின் மாய வேலைகள் பற்றி நாம் நன்கு தெரிந்துக் கொள்ளலாம். அப்போது அனுமன் சொன்னதை கேட்ட இராமர், நல்லது சொன்னாய் என அனுமனை பாராட்டினார்.
 
★அனுமன் மேலும் தொடர்ந்து பேசினான். தர்மத்திற்கு எதிராக செயல்பட்ட ராவணனுக்கு விபீஷணன் புத்திமதி சொல்லி இருக்கிறான். அதை ராவணன் சிறிதும் கேட்காமல் விட்டான். அவனை எதிர்த்து தங்களின் பராக்கிரமத்தை அறிந்துதான் உங்களிடம்  விபீஷணன் சரண் அடைய வந்திருக்கிறான். இதில் சந்தேகப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ராமரிடம் அனுமன் தொடர்ந்து பேசினார். எதிரிகள் கூட்டத்தில் இருந்து ராட்சதன் ஒருவன் வந்ததும் அவனை எப்படி நம்புவது என்று பலரும்  சந்தேகத்தோடு பார்த்தார்கள்.
 
★சிறிது நாள் அவர்களைச் சேர்த்துக் கொண்டு உன்னிப்பாக கண்காணிக்கலாம் என்றும், அவர்களின் குணத்தை அறிந்து பின்பு சேர்த்துக் கொள்ளலாம் என்றும் சொன்னார்கள். சரண் அடைந்தவர்களை சேர்த்துக் கொண்ட பிறகு அவர்கள் மேல் சந்தேகப்படுகிறோம் என்று தெரிந்தாலே நம் மீதான பூரண நம்பிக்கை குறைந்து விடும். முன்பு நம்மிடம் நடந்து கொண்டது போல் விசுவாசமாக அவர்களால் நடந்து கொள்ள முடியாது. இது இயற்கையாக அனைவருக்கும் இருக்கும் ஒரு சுபாவம். நாம் அவர்களிடம் ஏதோ குற்றத்தை தேடுகிறோம் என்று சுதந்திரமாக இல்லாமல் நம்மிடம் பயத்துடனே இருப்பார்கள்.
 
★ஒருவன் பொய் பேசினால் அவனது முகம் காட்டிக் கொடுத்து விடும். இது நீதி சாஸ்திரம் சொல்லும் உண்மை. ஆகவே வந்திருக்கும் ராட்சதர்களின் முகத்தையும், பேச்சையும் பார்க்கும் போது அவர்கள் உண்மையை பேசுகின்றார்கள் என்றே எனக்கு தோன்றுகிறது. அவர்கள் மீது எனக்கு எந்த விதமான சந்தேகமும் வரவில்லை. ராவணனின் பராக்கிரமத்தை முழுவதுமாக அறிந்தவன் விபீஷணன். ஆனாலும் ராவணன் தங்களிடம் தோல்வி அடைவான் என்பதை தன் அறிவின் மூலம் உணர்ந்து கொண்டான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை. .....................
 
★ஒரு தராசின் ஒரு தட்டில் சிபி, அந்தப் புறாவை வைத்து மறு தட்டில் தன் உடலிலிருந்து சிறு பகுதியைச் செதுக்கி எடுத்து வைத்தான். புறா அமர்ந்த தட்டு இறங்கவில்லை. எவ்வளவு வெட்டி வைத்தாலும் புறாவின் தட்டுக்குச் சமமாக வரவில்லை. கடைசியில் சிபி கழுகைப் பார்த்து, நானே தட்டில் ஏறி அமர்ந்து கொள்கிறேன் என்று கூறிவிட்டுத் தட்டில் ஏறி அமர்ந்தான். உடனே புறா இருந்த தட்டு சமநிலைக்கு வந்து விட்டது. உடனே கழுகு இந்திரனாகவும்,, புறா அக்னி தேவனாகவும் மாறினார்கள். உன்னுடைய கருணையையும் கொடைத் தன்மையையும் நாங்கள்  புரிந்து கொண்டோம் என்று வாழ்த்தி மறைந்தார்கள்
 
வணக்கத்துட
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை........................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
214 / 01-11-2021
 
விபீஷணனைப்
பற்றி ஆலோசனை -3...
 
ராமர் கூறிய கதை.
 
★ராமர் யாராலும் வெற்றி பெற முடியாத வாலியை அழித்து சுக்ரிவனிடம் ராஜ்யத்தை கொடுத்தார் என்பதை  அந்த  விபீஷணன் நன்கு அறிவான். அதன்படி ராவணனை நீங்கள் அழித்த பிறகு இலங்கைக்கு விபீஷணனை அரசனாக்கி விடுவீர்கள் என்ற திட்டத்தில் தற்போது உங்களை சரணடைய வந்திருக்கிறான் என்பது என்னுடைய கருத்து. விபீஷணன் அவ்வாறு திட்டமிட்டு நடந்து கொள்வதில் தவறு ஒன்றும் இல்லை. ஏனெனில் இந்த ஒரு திட்டத்தில் அவன் ராவணனுக்கு எதிராக வஞ்சகம் ஒன்றும் செய்யவில்லை. தான் பிறந்த நாடு அழியாமல் பாதுகாக்கும் நன்மை கருதி தர்மத்தின் படியே நடந்து கொள்கிறான்.
 
★விபீஷணன் உண்மையில் உங்களை சரணடைய வந்து இருக்கிறான் என்றே நான் எண்ணுகிறேன். ஆகவே இங்கு வந்திருக்கும் ராட்சதர்களின் மீது சந்தேகப்படாமல்,  சேர்த்துக் கொள்ளலாம் என்பதுதான் என் கருத்து. என்னுடைய புத்திக்கு எட்டிய வரை கூறியுள்ளேன். தாங்கள் எப்படி செயல்படச் சொல்கிறீர்களோ, அதன் படியே செய்து கொள்ளலாம் என்று பேசி முடித்தான் அனுமன். ஶ்ரீ ராமர் அனுமன் சொன்ன கருத்தில் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். மேலும் பலரும் பல விதங்களில் ஆலோசனைகளை கூறினார்கள். அனைவரது கருத்துக்களையும் பொறுமையாக கேட்டார் ராமர்.
 
★அனுமன் பேசியதைக் கேட்ட சுக்ரீவன் சமாதானமடையாமல் தனது வருத்தத்தை ராமரிடம் தெரிவித்தான். தங்களது கருத்துப்படி இந்த ராட்சதன் நல்லவனாகவே இருக்கலாம். ஆனால் தன் சொந்த அண்ணன் ஆபத்தில் சிக்கிய இந்த மாதிரி சமயத்தில் அவனைக் கைவிட்டு நம்மிடம் நட்பு வேண்டும் என்று சொல்லிக் கொண்டு இங்கே வந்திருக்கிறான். இது போல் நாம் ஆபத்தில் சிக்கி இருக்கும் போது நம்மையும் இது போலவே கைவிட்டு செல்வான். இவனை எப்படி நம்புவது. அண்ணன் மிகுந்த ஆபத்திலிருக்கும் போது கைவிட்டு வந்தவன் நம்மையும் கைவிட மாட்டான் என்று எப்படி நம்புவது என்றான் சுக்ரீவன்.
 
★ராமர், சுக்ரீவனிடம் பேச ஆரம்பித்தார். இலங்கையில் இனி இருந்தால் தனக்கு ஆபத்து என்று எண்ணி விபீஷணன் பயந்து இங்கு நம்மை சரணடைய வந்திருக்கலாம். ராவணனை அழித்து நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். இலங்கையை விபீஷணனிடம் ஒப்படைப்போம். ராவணனுடைய ராஜ்யத்தை, அவனுக்குப்பின் தான் ஆளலாம் என்ற ஆசையில் அவன் இங்கு வந்திருப்பான் என்ற அனுமனின் வார்த்தையில் உண்மை அதிகம் இருக்கிறது. நாட்டின் நலன் கருதி எடுத்த முடிவாக இருந்தால் இதில் தவறு ஒன்றும் இல்லை.
 
★ஆபத்துக் காலத்தில் அரசன் ராவணனை கைவிட்ட  தம்பி விபீஷணன் நம்மையும் ஒருநாள் கைவிடுவான் என்ற உன்னுடைய வாதத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனெனில் நம்மைக் கைவிடுவதற்கு விபீஷணனுக்கு சரியான காரணம் ஒன்றும் இல்லை. நாம் அவர்களை நம்மோடு சேர்த்துக் கொண்ட பிறகு அவர்களை சந்தேகப்படப் போவதில்லை. சரணடைந்த அவர்களை அழிக்க வேண்டும் என்ற வஞ்சக எண்ணம் நம்மிடம் இல்லை என்பதை விபீஷணன் நன்கு அறிவான்.
 
★அடுத்து, இலங்கையை வெற்றி பெற்ற பிறகு அவர்களின் ராஜ்யத்தின் மீது நாம் ஆசை வைக்கப் போவதில்லை. அந்த ராஜ்யத்தை அவர்களிடமே திருப்பி ஒப்படைத்து விட்டு வந்து விடுவோம். நாம் போரில் வெற்றி பெற்றால் மட்டுமே  இலங்கை விபீஷணனுக்கு கிடைக்கும். எனவே விபீஷணன் நமது வெற்றிக்கு துணை இருப்பான் என்றே நான் கருதுகிறேன்.  அனுமன் சொல்வது தான் சரி. விபீஷணன் நம்மை நோக்கி வந்த காலமும் நமக்கு மிகவும் ஏற்ற காலம் தான். நம்மிடம் அடைக்கலம் தேடி வருபவர்களை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
 
★இந்த தருணத்தில் நான் சில வரலாற்றைக் கூறுகிறேன். சிபிச் சக்ரவர்த்தியின் புகழ் தேவர்கள் லோகத்தை எட்டியது. சிபியைச் சோதித்துப் பார்க்க தேவேந்திரன் அக்னி பகவானை அழைத்துக் கொண்டு பூமிக்கு வந்தான். இந்திரன் ஒரு கழுகு வடிவம் எடுத்தும், அக்னி ஒரு புறாவின்  வடிவத்திலும் வந்து சேர்ந்தனர். புறாவைத் துரத்திக்கொண்டு கழுகு பறந்து வந்து சிபிச் சக்ரவர்த்தியின் அரண்மனை உள்ளே  விழுந்தது. அந்த புறாவை கவ்வி கொண்டு போக முயன்றது கழுகு. இதைப் பார்த்த சிபி அதைத் தடுத்தான். கழுகு, அரசனே! என்னுடைய பசியை  தீர்க்கவேண்டிய இரையாகும் அந்தப் புறா. ஆகவே அந்தப் புறாவைக் கீழே விடு என்றது.
 
★அதற்கு சிபி கழுகிடம், உனக்கு என்ன வேண்டுமோ கேள். அதை நான் உனக்குத் தருகிறேன். ஆனால் புறாவை விட்டுவிடு, அது என்னிடம் அடைக்கலம் அடைந்து விட்டது என்று உறுதி படக் கூறினான். அரசே! அந்த புறாவின் எடையளவு மாமிசம் எனக்கு வேண்டும். அது மனித மாமிசமாக இருந்தாலும் பரவாயில்லை என்றது கழுகு. அதற்கு ஒப்புக் கொண்ட சிபி, உனக்குத் தேவையானது புறாவின் எடையளவு மாமிசம் தானே! அதை நான் என் உடலில் இருந்தே வெட்டித் தருகிறேன் என்று கழுகிடம் கூறினார்.
 
★ஒரு தராசின் ஒரு தட்டில் சிபி, அந்தப் புறாவை வைத்து மறு தட்டில் தன் உடலிலிருந்து சிறு பகுதியைச் செதுக்கி எடுத்து வைத்தான். புறா அமர்ந்த தட்டு இறங்கவில்லை. எவ்வளவு வெட்டி வைத்தாலும் புறாவின் தட்டுக்குச் சமமாக வரவில்லை. கடைசியில் சிபி கழுகைப் பார்த்து, நானே தட்டில் ஏறி அமர்ந்து கொள்கிறேன் என்று கூறிவிட்டுத் தட்டில் ஏறி அமர்ந்தான். உடனே புறா இருந்த தட்டு சமநிலைக்கு வந்து விட்டது. உடனே கழுகு இந்திரனாகவும்,, புறா அக்னி தேவனாகவும் மாறினார்கள். உன்னுடைய கருணையையும் கொடைத் தன்மையையும் நாங்கள்  புரிந்து கொண்டோம் என்று வாழ்த்தி மறைந்தார்கள்
 
வணக்கத்துட
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை........................
 
நேற்றைய பதிவு
 
~~~~~
 
ஶ்ரீராம காவியம்
~~~~~~
215 /02-11-2021
 
விபீஷணனைப்
பற்றி ஆலோசனை -4...
 
ராமர் கூறிய மற்றொரு கதை.
 
★ஶ்ரீ ராமர், உங்களுக்கு நான் மற்றொரு வரலாற்றையும் கூறுகிறேன், ஒரு வேடன் காட்டில் வேட்டையாடச் சென்றான். அக்காட்டில் ஒரு ஆண் புறாவும், பெண் புறாவும் அன்புடன் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன. ஒரு நாள் ஆண் புறாவுக்கு உடல் நலம் சரி இல்லாமல் போனது. ஆதலால் பெண் புறா நான் தனியாக சென்று இரைக் கொண்டு வருகிறேன் என்றது. ஆண் புறா, நீ இரையை தேடி வெகு தூரம் செல்லாமல் சீக்கிரம் வந்து விடு என்று கூறி அனுப்பி வைத்தது. வேடன் ஒருவன்  ஒரு மரத்தடியில் பொரிகளை போட்டு வலையை விரித்து வைத்து இருந்தான்.
 
★இதை அறியாத பெண் புறா, இரையை எடுக்கப் போய் அந்த வலையில் மாட்டிக் கொண்டது. பிறகு அவ்வேடன் அந்த பெண் புறாவை தன் கூட்டில் அடைத்துக் கொண்டு, விலங்குகளை வேட்டையாடச் சென்றான். இரவு சூழ்ந்தது. இடியும், மின்னலுமாக மழை பெய்ய தொடங்கியது. வேடன் குளிரும், பசியும் தாங்க முடியாமல் ஆண் புறா இருக்கும் மரத்தடிக்கு வந்தான். பசியால் வேடன் அயர்ந்து தூங்க ஆரம்பித்து விட்டான்.ஆண் புறா வெகு நேரம் ஆகியும் பெண் புறாவை காணாததால் மிகவும் வருத்தத்தில் இருந்தது.
 
★ஆண்புறா மரத்தின் கிளையில் அமர்ந்து கொண்டு வேடனின் கூண்டில் அடைபட்டிருந்த பெண் புறாவைக் பார்த்து ஒலி எழுப்பியது. அதற்குப் பெண் புறா நான் இங்கு சிறைப்பட்டு விட்டேன். இவ்வேடன் என்னை ஏமாற்றி வலை வைத்து என்னை பிடித்துக் கொண்டான். நம் வீட்டை நோக்கி வந்து விட்ட இந்த வேடன் குளிரால் நடுங்குகிறான். இவனுக்கு வேண்டிய உதவி அனைத்தும்  செய்வாயாக என்று கூறியது. பிறகு ஆண்புறா, உன்னை இப்பிறப்பில் காண முடியாமல் போய் விடுமோ? என எண்ணினேன். ஆனால் அந்த கடவுளின் கருணையால் உன்னை பார்த்து விட்டேன் என்றது.
 
★பிறகு ஆண் புறா, வேடனின் குளிரைப் போக்க, உலர்ந்த சுள்ளிகளைப் போட்டு அங்கு தீமூட்டியது. குளிர் தீர்ந்த பின் வேடன் பசியால் மிகவும் தவித்தான்.உடனே ஆண் புறா, வேடனைப் பார்த்து, வேடனே! இந்த ஆலமரம் நானும், உன் கூண்டில் அகப்பட்டிருக்கும் என் மனைவியும் வாழும் இடமாகும். எங்கள் இல்லம் தேடி வந்த நீ பசியோடு இருக்கக் கூடாது. ஆதலால் உன் பசி தணிய நீ என்னையே உண்டுக்கொள் என்று கூறிவிட்டு தீயில் விழுந்து மாண்டுபோனது.
 
★இதைப்பார்த்த வேடன், ஆண் புறாவின் அன்பைக் கண்டு மெய்சிலிர்த்தான். இந்த புறாவுக்கு இருக்கும் நற்குணம் நமக்கு இல்லையே என நினைத்து மிகவும் வருந்தினான். இனிமேல் நான் வேட்டையாட மாட்டேன் எனக் கூறிவிட்டு கூண்டில் இருக்கும் புறாவை விடுவித்தான். பெண் புறா, வேடனை பார்த்து, என் கணவனை இழந்து ஒரு போதும் என்னால் உயிர் வாழ முடியாது. உன் பசியை நீக்கிக் கொள்ள என்னையும் உண்டுக் கொள் என கூறி தீயில் விழுந்தது. வேடன் இப்புறாக்களின் அன்பைக் கண்டு அதிசயித்தான்.
 
★பிறகு ஶ்ரீ ராமர், தேவர்கள் பாற்கடலை கடைந்தப் போது அதில் ஆல கால விஷம் ஒன்று தோன்றியது. அந்த ஆலகால விஷத்தின் கடுமை தாங்க முடியாமல் தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானிடம் முறையிட்டு வேண்ட,  சிவனும் அந்த விஷத்தை அப்படியே எடுத்து உண்டார். விஷம் முழுமையாக இறைவனின் வயிற்றில் இறங்கினால் எங்கே இறைவனிற்கு ஏதாவது தீங்கு நேர்ந்து விடுமோ என அஞ்சிய அன்னை பார்வதிதேவியானவள்  இறைவனின் கண்டத்தை மிக அழுத்தமாக பிடிக்க  விஷமானது கழுத்திலேயே தங்கி விட்டது.
 
★அன்று முதல் இறைவனும் திருநீலகண்டர் என்று அழைக்கப் பட்டார். இதை நாம் மறக்கலாமா? அது மட்டுமின்றி ராவணன் சீதையை கவர்ந்து சென்றபோது, சீதையின் அலறலைக் கேட்டு ஜடாயு, ராவணனிடம் போரிட்டு, சிவன் வாளினால் தன் உயிரை இழந்தார். அத்தகைய பறவைகள்  அரசனான ஜடாயுவின் கருணை திறத்தை நாம் மறக்கலாமா? விபீஷணனுக்கு அடைக்கலம் தருவதால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் எதுவாக இருந்தாலும் அவனை நாம் ஏற்றுக் கொள்வது தான் நம் கடமை என்றார் ராமர்.
 
★ராமர், விபீஷணனுக்கு ஏன் அடைக்கலம் தர வேண்டும் என்பதற்கு உங்களுக்கு நான் போதுமான விளக்கம் தந்து விட்டேன் என்றார்.  அடுத்ததாக, ஒருவன் என்னிடம் சரண் அடைகிறேன் என்று வந்து விட்டால், அவன் நல்லவனோ கேட்டவனோ அவனை தள்ளி வைக்க என்னால் முடியாது.
இது என்னுடைய தர்மம் ஆகும்.
அதனால் எனக்கு ஏதேனும் பிரச்சனை வந்தாலும், அதன் விளைவுகளை ஏற்றுக் கொள்வேன்.  அதனை நான் பொருட்படுத்த மாட்டேன். எனது உயிருக்கு ஆபத்து வந்தாலும் நான் கடைபிடிக்கும் தர்மத்தை விட்டுவிட மாட்டேன்.
 
★ராவணனே என்னிடம் வந்து உங்களை சரணடைகிறேன், என்னை காப்பாற்றுங்கள் என்று வந்தாலும் அவனை சோதித்து பார்க்காமல் நிச்சயம் சேர்த்துக் கொள்வேன்.  எனக்கு ஆருயிர் நண்பர்களாக வந்திருந்து, எனக்காக இத்தனை சிறப்பான வேலைகளை செய்யும் நீங்கள் அனைவரும் இதனை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். மேலும் வந்தவர்கள் வஞ்சகம் செய்து ஏமாற்ற வரவில்லை என்று முழுமையாக தெரிந்து விட்டால் அவர்களிடம் குற்றம் காண கூடாது என்றார்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை......................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
216 / 03-11-2021
 
விபீஷணன் சரணாகதி...
 
★ஶ்ரீ ராமர் தன் உரையைத் தொடர்ந்தார். மேலும் வந்தவர்கள் வஞ்சகம் செய்து ஏமாற்ற வரவில்லை என்று முழுமையாக தெரிந்து விட்டால் அவர்களிடம் குற்றம் காண கூடாது என்றார். அப்படியிருக்க என்னிடம் சரணடைய இங்கு வந்திருக்கும் ராவணனின் தம்பியை நான் எப்படி தள்ளி வைக்க முடியும். உடனடியாக விபிஷணனை இங்கே அழைத்து வாருங்கள் என்று கட்டளை இட்டார் ஶ்ரீராமர். அதற்குப் பின்
ராமரிடம் சுக்ரீவன் பேசினான். உங்களது பேச்சால் நான் தெளிவடைந்து விட்டேன். எனது சந்தேகங்கள் தீர்ந்தது என்றான்.
பிறகு ராமர், சுக்ரீவனை அருகில் அழைத்து, சுக்ரீவா! நீ சென்று வீபிஷணனை என்னிடம் அழைத்து வா என்றார். சுக்ரீவன் விபீஷணன் இருக்கும் இடம் நோக்கிச்  சென்றான்.
 
 ★ராமர்,  லட்சுமணனை பார்த்து சிரித்தார். எல்லோரும் பரதனைப் போல் இருப்பார்களா? என்று பரதனை நினைத்து ராமர் சிறிது நேரம் கண்ணை மூடி பரதனை நினைத்து ஆனந்தப்பட்டார். லட்சுமணனையும், பரதனைப் போன்ற சகோதரர்களை அடைந்த என்னைப் போன்ற பாக்கியவான்கள் இந்த புவியில் யாரும் இல்லை. மேலும் உங்களைப் போன்ற நண்பர்கள் யாருக்கு கிடைப்பார்கள் என்று கண்ணில் நீர் பெருக மகிழ்சி கொண்டு அனைவரிடமும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டார் ராமர்.
 
★சுக்ரீவன், விபீஷணனை கட்டித் தழுவிக் கொண்டான். பிறகு சுக்ரீவன் மகிழ்ச்சியோடு ராமர் உன்னை அழைத்து வர என்னை பணித்துள்ளார் என கூறினான். இதைக் கேட்ட விபீஷணன், ராமர் இருக்கும் இடத்தைப் பார்த்து தொழுதான். பிறகு விபீஷணன், சீதையை கவர்ந்து சென்ற ராவணனின் தம்பி என நன்கு தெரிந்தும் எனக்கு அடைக்கலம் கொடுக்க அவர் சம்மதித்தாரா? சிவபெருமான் நஞ்சை உண்டு நீலகண்டனாக மாறி பெருமை அடைந்தார். அதேபோல் இன்று ராமர் என் மீது காட்டிய மிகுந்த கருணையால் பெருமை அடைந்தேன் என்றான்
 
★பிறகு சுக்ரீவன் விபீஷணனை அழைத்துக் கொண்டு ராமர் இருக்கும் இருப்பிடத்திற்கு சென்றான். அங்கு விபீஷணன் ராமரை பார்த்து பரவசமடைந்து ராமரின் காலில் விழுந்து வணங்கினான். ஶ்ரீராமர் அந்த விபீஷணனை இருக்கையில் அமரக் கூறினார். விபீஷணன், ராவணன் என்னை வெறுத்து ஒதுக்கியதும் நன்மை தான். அதனால் தேவர்கள் எவருக்கும் கிடைக்காத தங்களின் திருவடி எனக்கு கிடைத்தது என்றான்.
மேலும் நான் உங்களிடம் சரணடைகிறேன். தர்மத்தின் வழி நடக்கும் உங்கள் நட்பை நாடி வந்திருக்கிறேன். என்னுடைய நட்பை ஏற்றுக் கொள்ளுங்கள்.
 
★தங்களுக்கு ஏதேனும் உதவி  தேவைப்பட்டால் தயங்காமல் சொல்லுங்கள். தங்களுக்கு தேவையானதை என்னால் முடிந்த வரை செய்து முடிப்பேன் என்று வணங்கி நின்றான் விபீஷணன். பிறகு ராமர் விபீஷணனிடம், விபீஷணா! இன்று முதல் நீ எனக்கு தம்பி ஆவாய். தசரத சக்ரவர்த்திக்கு நான்கு புதல்வர்கள். குகனுடன் ஐந்து புதல்வரானார்கள். சுக்ரீவனுடன் நாங்கள் ஆறு புதல்வரானோம். இன்று உன்னுடன் ஏழு புதல்வர்கள். இன்று முதல் எனக்கு ஏழு சகோதரர்கள். நீ கடல் சூழ்ந்த இலங்கை நகரை நன்கு ஆட்சி புரிவாயாக எனக் கூறி அருளினார்.
 
★ராமர் கூறியதைக் கேட்ட விபீஷணன், ராமரை போற்றி வணங்கினான். பிறகு ராமர் தன் தம்பி லட்சுமணரை அழைத்து, இலங்கையின் அரசனாக விபீஷணனுக்கு முடிசூட்ட பணித்தார். விபீஷணன் ராமரிடம், ராவணனின் தம்பி ஆகிய என் பாவங்கள் நீங்க, தங்களின் பாதுகைகளால் எனக்கு முடிசூட்டக் கோருகிறேன் எனக் கேட்டான். விபீஷணன் கேட்டுக் கொண்டபடி, இராமனின் பாதுகைகளால் விபீஷணனுக்கு முடிசூட்டப்பட்டது. இன்று முதல் நீ தான் இலங்கையின் அரசன் என்று விபீஷணனுக்கு அந்த இடத்திலேயே பட்டாபிஷேகம் செய்து வைத்தார் ராமர்.
 
★பிறகு விபீஷணன் ஶ்ரீராமரின் பாதுகைகளை தலையில் வைத்துக் கொண்டு ராமரை மகிழ்ச்சியோடு வலம் வந்தான். இதைப் பார்த்த அனைவரும் மகிழ்ச்சி கடலில் திளைத்தனர். வாழ்த்தும் தொழிலையுடைய வானவர்கள் சமயம் பார்த்து வாழ்த்திக் கொண்டிருந்தனர். அரசன் விபீஷனணன் பெற்ற வெற்றியும் பெருவாழ்வும் இந்த உலகில் யாரும் பெற்றிலர் என்று அவனைப் பாராட்டி வாழ்த்தினர்.
 
★அடிக்கடி கட்சி மாறும் நமது அரசியல்வாதிகளுக்கு அவன் முன்னோடியாய் விளங்கினான். சரித்திரப் புகழ்பெற்ற சாதனை மனிதனாய்க் காணப்பட்டான். உறவு கொண்டவனை விட்டு, கொள்கை கண்டவனிடம் அரண் தேடிச் சரண் அடைந்துள்ளான். “இது சரியா தவறா” என்பதற்கு இதுவரை பலர் முன்னுரை கூறினார்களே தவிர எவரும் முடிவுரை கூறியதாய் சிறிதும்  தெரியவில்லை. பிறகு லட்சுமணன்,  விபீஷணனை அழைத்துக் கொண்டு தங்களின்  படைகள் தங்கியிருக்கும் எல்லா இடங்களையும்  காண்பிக்கச் சென்றான்.
 
★அன்றிரவு வந்தது. ராமர் சீதையை நினைத்து மிகவும் வருந்திக் கொண்டு இருந்தார். இதைப் பார்த்த சுக்ரீவன் ராமரிடம், நாம் செய்ய வேண்டிய செயல்கள் நிறைய இருக்க தாங்கள் ஏன் வருந்திக் கொண்டு இருக்கிறீர்கள் என்றான். பிறகு ராமர் விபீஷணனை அழைத்து வரச் சொன்னார். ராமர் அரசன் விபீஷணனை அமர வைத்து, இலங்கை நகரின் அரக்கர்கள், அதன் காவல்கள் பற்றி எல்லாம் சொல்லுமாறு கேட்டார்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை.......................
 
 
[2:04 pm, 04/11/2021] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
217 / 04-11-2021
 
ராவணனைப் பற்றி
விபீஷணன் உரைத்தல்...
 
★ஆதிஷேஷனுடன் நடத்திய
பலப்பரீட்சையின் போது மேரு மலையில் இருந்து சிதறடித்த மலை நகரமே இலங்கை நகரமாகும். இலங்கை நகரின் நான்கு பெரிய வாயில்களிலும் ஆயிரக்கணக்கான அரக்கர்கள் காவல் புரிகின்றனர். மதிலின் உட்புறத்திலும் மற்றும் அதன் வெளிப்புறத்திலும் மிகக்கொடிய லட்சக்கணக்கான ராட்சதர்கள் உறக்கமின்றி காவல் புரிந்து வருகின்றனர். இலங்கை அரண்மனையின் வாயிலை கண் இமைக்காமல் அரக்கர்கள் அறுபத்திநான்கு ஆயிரம் பேர் காவல் புரிகின்றனர் என்று விபீஷணன் கூறினான்.
 
★ராவணனின் படைகளின் எண்ணிக்கை ஆயிரம் பெரிய பிரிவுகளாக பிரிந்து உள்ளது. ராவணனுடன் எப்போதும் இருக்கும் அரக்கர்கள் குரூரமான   மனம் படைத்த பலம் கொண்டு உள்ளவர்கள்.  அங்கிருக்கும் மிகவும் பலம் பொருந்திய அரக்க வீரர்களை பற்றி இப்போது நான் கூறுகிறேன் என்றன். முதலில் ராவணன் மற்றும் அவனின் சகோதரர்களை பற்றி இப்போது கூறுகிறேன் என்றான்.  பிரம்ம தேவனும், சிவனும் இவனுக்கு மிக அரிய பெரிய வரங்களை அளித்திருக்கின்றனர். இவன்
குபேரனை தோற்கடித்து அவனது நகரத்தையும் மற்றும் எங்கும் பறந்து செல்லக்கூடிய சிறப்பு வாய்ந்த புஷ்பகவிமானத்தையும் கைப்பற்றியவன். வருணனை வென்ற இவன், மலைகள் போல வலிமையை உடையவன்.
 
★கும்பகர்ணன் ராவணனின் தம்பி. இவன் தேவர்களை ஓட ஓட விரட்டிய பெரும் வீரன் ஆவான். இவன் இந்திரனின் யானையான ஐராவதத்தின் கொம்புகளையே தன் ஆயுதமாகக் கொண்டு தேவர்களை அழித்தவன். இவன் பெற்ற வரத்தால் தன்னுடைய  வாழ்நாளில் பெரும்பகுதியை தூக்கத்தில் ஆழ்ந்து கழிப்பவன். மற்ற நாட்களில் இவன் உண்னும் உணவும் மலையளவு இருக்கும். இவனை வென்றவர்கள் யாருமில்லை.
 
★இந்திரஜித், ராவணனின் மூத்த மகன். இவன் சூரிய சந்திரரை சிறையில் அடைத்தவன். இந்திரனை தோற்கடித்து போரில் வென்றவன். அதிகாயன் ராவணனின் இரண்டாவது மகன். இவன் பிரம்மன் அளித்த வில்லை உடையவன். இவன் இந்திரஜித்துக்கு தம்பி ஆவான்.
ராவணனின் கடைசி புதல்வன் அட்சயகுமாரன். அனுமன் இலங்கை வந்தபோது அசோகவனத்தில் நடந்த போரில் கொல்லப்பட்டவன்.  இவர்கள் ராவணனுடைய பெருமை மிக்கப் புதல்வர்கள்.
 
★கும்பன்  என்னும் அரக்கன் ஆயிரம் யானைகளுக்கும், குதிரைகளுக்கும் இணையான வலிமையும், வீரமும் உடையவன். சூரியனின் வெப்பத்தைக் காட்டிலும் மிகவும் கொடிய வீரன் ஆவான். அடுத்தது அகம்பனன், இவன் தவமிருந்து சக்தி பெற்று போர் புரிபவன். இவன் நரசிம்ம மூர்த்தியைப் போன்றவன். நிகும்பன் பெரும் மலைகளைக் காட்டிலும் வலிமை உடையவன். மகோதரன் என்பவன் சூழ்ச்சிகள்  புரிந்தும், வஞ்சனையும் மற்றும் மாயையும் செய்து போர் செய்து வெற்றி காண்பவன். பகைஞன் என்பவன் மலைவாழ் வீரன் ஆவான். இவன் பெரும்படைக்கு தலைவன். இவன் தேவர்களை பலமுறை போரில் தோற்கடித்து சிறப்படைந்தவன்.
 
◆சூரிய பகைஞன் என்னும் மற்றொருவன் அனைவரையும் வெல்லக்கூடிய மிகுந்த வலிமை உடையவன். பெரும்பக்கன் என்பவனை முனிவர்களும் நேராக பார்க்க பயப்படுவார்கள். வஜ்ரதந்தன் என்பவன் எட்டு கோடி சேனைக்கு அதிபதி ஆவான். பலரும் இவனிடம் போரிட  மிகவும் அஞ்சுவார்கள்.
பிசாசன் என்பவன் பகைவரைக் கண்டு அஞ்சாதவன். இவன் பத்து கோடி சேனைகளுக்கு தலைவன் ஆவான். துன்முகன் என்பவன் பதினான்கு கோடி காலாட்படைக்குத் தளபதி. பூமியையும் தகர்த்து எறியும் ஆற்றல் உடையவன்.
 
★விரூபாட்சன் என்னும் அரக்கன்  வாட்போரில் வல்லவன். அவனை  இதுவரை எவரும் வென்றது இல்லை. தூமாட்சன் என்பவன் மாண்ட வீரர்களின் உடலைத் திண்பவன். தேவர்களையும் தோற்கடிக்கும் அதிக வல்லமை உடையவன். பிறகு போர்மத்தன், வயமத்தன் ஆகிய இவ்விருவரும் மிகவும் வலிமை படைத்தவர்கள். கடல் போன்று இருக்கும் அசுரப் படைகளுக்கு இவர்கள்தான்  அதிபர்கள். அரக்கன் பிரகஸ்தன் என்பவன் ராவணனுக்கு போர்த் தொழிலில் துணை புரிபவன். இந்த பிரகஸ்தன் ராவணனின் படைத்தளபதி ஆவான். இவன் இந்திரனின் ஐராவதம் என்னும் யானை உள்ளிட்ட அனைத்துப் படைகளையும் அஞ்சி ஓடச் செய்யும் வல்லமை உடையவன். இவ்வளவு பெரும்படை உடைய ராவணனை தங்களை தவிர வேறு எவராலும் சிறிதும் அழிக்க முடியாது என்றான்.
 
★பிறகு விபீஷணன், ஶ்ரீராமரே! அனுமன் இலங்கைக்கு வந்த போது, அங்கு  ஆற்றிய வீர தீரச் செயல்களை பற்றி கூறுகிறேன் என்றான். அசோகவனத்தில் ஏராளமான அரக்கர்கள் அனுமன் கையால் மாண்டனர். அனுமன் இட்ட தீயினால் இலங்கை மாநகரமே எரிந்து சாம்பலானது. கிங்கரர் எனும் அரக்க போர் வீரர்களை அனுமன் தனித்து நின்று கொன்று குவித்தான். ஜம்புமாலி எனும் அதிக  வலிமை வாய்ந்த அரக்கனும் அவனுடைய படைகளையும் மற்றும் மாபெரும் படைத் தலைவர்களான பஞ்ச சேனாதிபதிகளை கொன்றான்.
 
★ராவணனின் இளைய மகனான அக்ஷயகுமாரனை கொன்றான். ராவணனை மிகத் தடுமாற வைத்தது அவன் மகன் அக்ஷயகுமாரனின் மரணம்தான். அனுமனால் தாக்கப்பட்டு இறந்த அரக்கர்கள் எண்ணிக்கையில் அடங்காதவை. இப்பொழுது எரிந்து போன இலங்கை நகரை ராவணன் புதுப்பித்து விட்டான் என்றான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை......................
[11:58 am, 06/11/2021] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
218 /06-11-2021
 
வருணனை வேண்டுதல்...
 
★விபீஷணன், அனுமனின் வீரச் செயல்களையும், அவனது மிகச் சிறந்த வலிமையையும் கண்டு நான் அடைக்கலம் கேட்க புகவேண்டியது தங்களிடம்தான் என்பதை உணர்ந்து இங்கு வந்தேன் என்றான். இதைக் கேட்ட ராமர், அனுமனை மிக்க  கருணையோடும், அன்போடும் பார்த்து, வலிமைமிக்க வீரனே! விபீஷணன் சொல்வதிலிருந்து நீ பாதி இலங்கை நகரை அழித்துவிட்டு வந்துள்ளாய் என்பது தெரிகிறது. நீ இலங்கை நகரை தீக்கு இரையாக்கிவிட்டு வந்துள்ளாய்.
 
★என் வில்லின் திறமையை உலகம் அறிய வேண்டும் என்று தான் சீதையை அங்கேயே விட்டு வந்துள்ளாய். இதற்கு பரிசாக உனக்கு நான் ஏதேனும் செய்ய வேண்டும்.ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லை? பிரம்மதேவரின் ஆட்சி காலம் முடிந்தபின் பிரம்மராக ஆட்சி புரிவாய் என்று பிரம்மபதத்தை பரிசாக வழங்கினார். ராமர் கூறியதைக் கேட்ட அனுமன், ராமரின் திருவடியில் விழுந்து வணங்கி, புகழின் நாணத்தால் ஒன்றும் பேசாமல் தலைகுனிந்து நின்றான். இதைப் பார்த்த சுக்ரீவன் மற்றும் மற்ற வானர வீரர்கள் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தனர்.
 
★பிறகு ராமர், இப்பெருங்கடலை வானரங்களுடன் கடந்து அந்த இலங்கை செல்வதற்கு ஏதேனும் வழி உள்ளதா? என யோசித்துக் கொண்டு கடலுக்கு அருகில் வந்து நின்றார். விபீஷணனை பார்த்து இக்கடலை கடப்பதற்கு ஏதேனும் வழி உள்ளதா எனக் கேட்டார். அதற்கு விபீஷணன், பெருமானே!வருணனை வேண்டி கேட்டால் நிச்சயம் ஏதாவது வழி கிடைக்கும் என்று கூறினான். பிறகு ராமர், கடலுக்கு அருகில் சென்று, தர்ப்பைப் புற்களை அடுக்கி அதன்மேல் நின்று கொண்டு, ஏழு நாட்கள் வருண ஜபம் செய்தார்.
 
★ ஏழு நாட்கள் வருண ஜபம் செய்தும் வருணன் வந்து தோன்றவில்லை. இதனால் ராமர் பெருங்கோபம் கொண்டார். உடனே  தன்கோதண்டத்தை வளைத்து நாணில் ஏற்றிய அக்னியாஸ்திரத்தை கடலை நோக்கி எய்தினார். இந்த தீயினால் கடலில் இருந்த மீன்கள் முதலிய விலங்குகள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாயின. இதைப் பார்த்துக் கொண்டிருந்த லட்சுமணன் முதலிய வானர வீரர்கள் இனி என்ன நடக்குமோ என அச்சத்தில் இருந்தனர்.
அப்போதும் வருணன் அங்கு வந்து தோன்றவில்லை.
 
★இதனால் ராமரின் கோபம் இன்னும் அதிகமானது. ராமர் பிரம்மாஸ்திரத்தை நாணில் ஏற்றி  கடலை நோக்கி செலுத்த  ஆயத்தமானார். இதனைப் பார்த்து உலகமே நடுங்கியது. தேவர்கள் முதலானோர் மிகவும் வருந்தினர். அப்போது வருணன் கடல் வழியே வந்து ராமரின் திருவடியில் விழுந்து வணங்கி, அடியேன்! செய்த பிழையை மன்னித்தருள வேண்டும் என வேண்டினார். ராமர் கோபம் தணிந்து, நான் இவ்வளவு நேரம் பணிந்து வேண்டியும் வராததற்கு காரணம் என்ன? என்று கேட்டார்.
 
★வருணன், பெருமானே! கடலில் மீன்களுக்கிடையே போர் நடந்து கொண்டிருந்தது. நான் சென்று அவைகளை சமாதானம் செய்து கொண்டிருந்தேன். அதனால் தான் தங்களின் அழைப்பை நான் கவனிக்க மறந்துவிட்டேன். ஆதலால் பெருமானே! இந்த சிறியேன் செய்த பிழையை மன்னித்தருள வேண்டும் என வேண்டினார். ராமர் இதனைக் கேட்டு, வருணனே!  நான் இப்போது உன்னை மன்னித்து விடுகிறேன். ஆனால் நான் நாணில் ஏற்றிய அற்புதமான  பிரம்மாஸ்திரத்தை ஏதாவது இலக்கில் செலுத்த வேண்டும். எதன் மீது பிரம்மாஸ்திரத்தை செலுத்தலாம் எனக் கூறு? என்றார்.
 
★வருணன், பெருமானே! மருகாந்தாரம் என்னும் தீவில் வாழும் நூறு கோடி அரக்கர்கள் உலக மக்களுக்கு அழிவு செய்து வருகிறார்கள். ஆதலால் இந்த பிரம்மாஸ்திரத்தை அந்த மருகாந்தாரம் தீவிற்கு ஏவி அங்கு வாழும் அரக்கர்களை வதம் செய்யுங்கள் என்றார். உடனே ராமர், மருகாந்தாரம் என்கிற தீவை பார்த்து அந்த பிரம்மாஸ்திரத்தை எய்தினார். அந்த அஸ்திரம் அத்தீவை கணப்பொழுதில் அழிந்துவிட்டு கடலில் நனைந்து பின் மீண்டும் ராமரிடமே வந்து விட்டது. பிறகு ராமர் வருணனை பார்த்து, நாங்கள் அனைவரும் கடலை கடந்துச் செல்ல வழி உண்டாக்கி தர வேண்டும் எனக் கேட்டார்.
 
★வருணன், பெருமானே! தாங்கள் கடல் தாண்டிச் செல்ல, கடலை வற்றச் செய்வதற்கு நான் காரணமாக இருக்கக் கூடாது. தாங்கள் செல்வதற்கு கடல் நீரை திடம் ஆக்கினாலும் கடலில் உள்ள உயிரினங்கள் மிகுந்த துன்பப்படும். இதற்கு வேறொரு வழியும் உண்டு. என் மீது அணைக்கட்டினால் தாங்கள் அனைவரும் கடல் தாண்டிச் செல்லலாம். அணையில் தாங்கள் இடும் குன்றுகளையும், பாறைகளையும், மலைகளையும் மூழ்கிவிடாமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.
 
★ராமர், வருணனை பார்த்து, நல்லதொரு யோசனையை உரைத்தீர்கள், ஆனால்
வருணனாகிய நீங்கள்  இந்த கடலுக்கே அரசன். உங்கள் மீது அணை கட்டி அதன் மேல் நாங்கள் நடப்பது பெரும் தவறு. வேறு ஏதேனும் உபாயம் இருந்தால் கூறுங்கள் என்றார். பெருமானே! தங்களின் பாததுளி என்மேல் படுவதற்கு நான் மிகுந்த பாக்கியம் செய்திருக்க வேண்டும். ஆகவே சிறிதும் கலக்கமோ அல்லது தயக்கமோ கொள்ளாதீர்கள். என்மீது பாலம் கட்டுங்கள். எவ்வளவு பாரம் என்றாலும் நான் தாங்குவேன் என்றான் வருணன். சம்மதம் தெரிவித்த ராமர் உங்களது இந்த சேவையானது, மகத்துவமானது,
என்று வருணனை பாராட்டினார்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.....................
 
[2:04 pm, 04/11/2021] Naga. Suba.Raja Rao Salem: 
ஶ்ரீராம காவியம்
~~~~~
217 / 04-11-2021
 
ராவணனைப் பற்றி
விபீஷணன் உரைத்தல்...
 
★ஆதிஷேஷனுடன் நடத்திய 
பலப்பரீட்சையின் போது மேரு மலையில் இருந்து சிதறடித்த மலை நகரமே இலங்கை நகரமாகும். இலங்கை நகரின் நான்கு பெரிய வாயில்களிலும் ஆயிரக்கணக்கான அரக்கர்கள் காவல் புரிகின்றனர். மதிலின் உட்புறத்திலும் மற்றும் அதன் வெளிப்புறத்திலும் மிகக்கொடிய லட்சக்கணக்கான ராட்சதர்கள் உறக்கமின்றி காவல் புரிந்து வருகின்றனர். இலங்கை அரண்மனையின் வாயிலை கண் இமைக்காமல் அரக்கர்கள் அறுபத்திநான்கு ஆயிரம் பேர் காவல் புரிகின்றனர் என்று விபீஷணன் கூறினான்.
 
★ராவணனின் படைகளின் எண்ணிக்கை ஆயிரம் பெரிய பிரிவுகளாக பிரிந்து உள்ளது. ராவணனுடன் எப்போதும் இருக்கும் அரக்கர்கள் குரூரமான   மனம் படைத்த பலம் கொண்டு உள்ளவர்கள்.  அங்கிருக்கும் மிகவும் பலம் பொருந்திய அரக்க வீரர்களை பற்றி இப்போது நான் கூறுகிறேன் என்றன். முதலில் ராவணன் மற்றும் அவனின் சகோதரர்களை பற்றி இப்போது கூறுகிறேன் என்றான்.  பிரம்ம தேவனும், சிவனும் இவனுக்கு மிக அரிய பெரிய வரங்களை அளித்திருக்கின்றனர். இவன் 
குபேரனை தோற்கடித்து அவனது நகரத்தையும் மற்றும் எங்கும் பறந்து செல்லக்கூடிய சிறப்பு வாய்ந்த புஷ்பகவிமானத்தையும் கைப்பற்றியவன். வருணனை வென்ற இவன், மலைகள் போல வலிமையை உடையவன். 
 
★கும்பகர்ணன் ராவணனின் தம்பி. இவன் தேவர்களை ஓட ஓட விரட்டிய பெரும் வீரன் ஆவான். இவன் இந்திரனின் யானையான ஐராவதத்தின் கொம்புகளையே தன் ஆயுதமாகக் கொண்டு தேவர்களை அழித்தவன். இவன் பெற்ற வரத்தால் தன்னுடைய  வாழ்நாளில் பெரும்பகுதியை தூக்கத்தில் ஆழ்ந்து கழிப்பவன். மற்ற நாட்களில் இவன் உண்னும் உணவும் மலையளவு இருக்கும். இவனை வென்றவர்கள் யாருமில்லை.
 
★இந்திரஜித், ராவணனின் மூத்த மகன். இவன் சூரிய சந்திரரை சிறையில் அடைத்தவன். இந்திரனை தோற்கடித்து போரில் வென்றவன். அதிகாயன் ராவணனின் இரண்டாவது மகன். இவன் பிரம்மன் அளித்த வில்லை உடையவன். இவன் இந்திரஜித்துக்கு தம்பி ஆவான். 
ராவணனின் கடைசி புதல்வன் அட்சயகுமாரன். அனுமன் இலங்கை வந்தபோது அசோகவனத்தில் நடந்த போரில் கொல்லப்பட்டவன்.  இவர்கள் ராவணனுடைய பெருமை மிக்கப் புதல்வர்கள்.
 
★கும்பன்  என்னும் அரக்கன் ஆயிரம் யானைகளுக்கும், குதிரைகளுக்கும் இணையான வலிமையும், வீரமும் உடையவன். சூரியனின் வெப்பத்தைக் காட்டிலும் மிகவும் கொடிய வீரன் ஆவான். அடுத்தது அகம்பனன், இவன் தவமிருந்து சக்தி பெற்று போர் புரிபவன். இவன் நரசிம்ம மூர்த்தியைப் போன்றவன். நிகும்பன் பெரும் மலைகளைக் காட்டிலும் வலிமை உடையவன். மகோதரன் என்பவன் சூழ்ச்சிகள்  புரிந்தும், வஞ்சனையும் மற்றும் மாயையும் செய்து போர் செய்து வெற்றி காண்பவன். பகைஞன் என்பவன் மலைவாழ் வீரன் ஆவான். இவன் பெரும்படைக்கு தலைவன். இவன் தேவர்களை பலமுறை போரில் தோற்கடித்து சிறப்படைந்தவன். 
 
◆சூரிய பகைஞன் என்னும் மற்றொருவன் அனைவரையும் வெல்லக்கூடிய மிகுந்த வலிமை உடையவன். பெரும்பக்கன் என்பவனை முனிவர்களும் நேராக பார்க்க பயப்படுவார்கள். வஜ்ரதந்தன் என்பவன் எட்டு கோடி சேனைக்கு அதிபதி ஆவான். பலரும் இவனிடம் போரிட  மிகவும் அஞ்சுவார்கள்.
பிசாசன் என்பவன் பகைவரைக் கண்டு அஞ்சாதவன். இவன் பத்து கோடி சேனைகளுக்கு தலைவன் ஆவான். துன்முகன் என்பவன் பதினான்கு கோடி காலாட்படைக்குத் தளபதி. பூமியையும் தகர்த்து எறியும் ஆற்றல் உடையவன். 
 
★விரூபாட்சன் என்னும் அரக்கன்  வாட்போரில் வல்லவன். அவனை  இதுவரை எவரும் வென்றது இல்லை. தூமாட்சன் என்பவன் மாண்ட வீரர்களின் உடலைத் திண்பவன். தேவர்களையும் தோற்கடிக்கும் அதிக வல்லமை உடையவன். பிறகு போர்மத்தன், வயமத்தன் ஆகிய இவ்விருவரும் மிகவும் வலிமை படைத்தவர்கள். கடல் போன்று இருக்கும் அசுரப் படைகளுக்கு இவர்கள்தான்  அதிபர்கள். அரக்கன் பிரகஸ்தன் என்பவன் ராவணனுக்கு போர்த் தொழிலில் துணை புரிபவன். இந்த பிரகஸ்தன் ராவணனின் படைத்தளபதி ஆவான். இவன் இந்திரனின் ஐராவதம் என்னும் யானை உள்ளிட்ட அனைத்துப் படைகளையும் அஞ்சி ஓடச் செய்யும் வல்லமை உடையவன். இவ்வளவு பெரும்படை உடைய ராவணனை தங்களை தவிர வேறு எவராலும் சிறிதும் அழிக்க முடியாது என்றான்.
 
★பிறகு விபீஷணன், ஶ்ரீராமரே! அனுமன் இலங்கைக்கு வந்த போது, அங்கு  ஆற்றிய வீர தீரச் செயல்களை பற்றி கூறுகிறேன் என்றான். அசோகவனத்தில் ஏராளமான அரக்கர்கள் அனுமன் கையால் மாண்டனர். அனுமன் இட்ட தீயினால் இலங்கை மாநகரமே எரிந்து சாம்பலானது. கிங்கரர் எனும் அரக்க போர் வீரர்களை அனுமன் தனித்து நின்று கொன்று குவித்தான். ஜம்புமாலி எனும் அதிக  வலிமை வாய்ந்த அரக்கனும் அவனுடைய படைகளையும் மற்றும் மாபெரும் படைத் தலைவர்களான பஞ்ச சேனாதிபதிகளை கொன்றான். 
 
★ராவணனின் இளைய மகனான அக்ஷயகுமாரனை கொன்றான். ராவணனை மிகத் தடுமாற வைத்தது அவன் மகன் அக்ஷயகுமாரனின் மரணம்தான். அனுமனால் தாக்கப்பட்டு இறந்த அரக்கர்கள் எண்ணிக்கையில் அடங்காதவை. இப்பொழுது எரிந்து போன இலங்கை நகரை ராவணன் புதுப்பித்து விட்டான் என்றான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை......................
[11:58 am, 06/11/2021] Naga. Suba.Raja Rao Salem: 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
218 /06-11-2021
 
வருணனை வேண்டுதல்...
 
★விபீஷணன், அனுமனின் வீரச் செயல்களையும், அவனது மிகச் சிறந்த வலிமையையும் கண்டு நான் அடைக்கலம் கேட்க புகவேண்டியது தங்களிடம்தான் என்பதை உணர்ந்து இங்கு வந்தேன் என்றான். இதைக் கேட்ட ராமர், அனுமனை மிக்க  கருணையோடும், அன்போடும் பார்த்து, வலிமைமிக்க வீரனே! விபீஷணன் சொல்வதிலிருந்து நீ பாதி இலங்கை நகரை அழித்துவிட்டு வந்துள்ளாய் என்பது தெரிகிறது. நீ இலங்கை நகரை தீக்கு இரையாக்கிவிட்டு வந்துள்ளாய். 
 
★என் வில்லின் திறமையை உலகம் அறிய வேண்டும் என்று தான் சீதையை அங்கேயே விட்டு வந்துள்ளாய். இதற்கு பரிசாக உனக்கு நான் ஏதேனும் செய்ய வேண்டும்.ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லை? பிரம்மதேவரின் ஆட்சி காலம் முடிந்தபின் பிரம்மராக ஆட்சி புரிவாய் என்று பிரம்மபதத்தை பரிசாக வழங்கினார். ராமர் கூறியதைக் கேட்ட அனுமன், ராமரின் திருவடியில் விழுந்து வணங்கி, புகழின் நாணத்தால் ஒன்றும் பேசாமல் தலைகுனிந்து நின்றான். இதைப் பார்த்த சுக்ரீவன் மற்றும் மற்ற வானர வீரர்கள் மகிழ்ச்சிக் கடலில் திளைத்தனர்.
 
★பிறகு ராமர், இப்பெருங்கடலை வானரங்களுடன் கடந்து அந்த இலங்கை செல்வதற்கு ஏதேனும் வழி உள்ளதா? என யோசித்துக் கொண்டு கடலுக்கு அருகில் வந்து நின்றார். விபீஷணனை பார்த்து இக்கடலை கடப்பதற்கு ஏதேனும் வழி உள்ளதா எனக் கேட்டார். அதற்கு விபீஷணன், பெருமானே!வருணனை வேண்டி கேட்டால் நிச்சயம் ஏதாவது வழி கிடைக்கும் என்று கூறினான். பிறகு ராமர், கடலுக்கு அருகில் சென்று, தர்ப்பைப் புற்களை அடுக்கி அதன்மேல் நின்று கொண்டு, ஏழு நாட்கள் வருண ஜபம் செய்தார்.
 
★ ஏழு நாட்கள் வருண ஜபம் செய்தும் வருணன் வந்து தோன்றவில்லை. இதனால் ராமர் பெருங்கோபம் கொண்டார். உடனே  தன்கோதண்டத்தை வளைத்து நாணில் ஏற்றிய அக்னியாஸ்திரத்தை கடலை நோக்கி எய்தினார். இந்த தீயினால் கடலில் இருந்த மீன்கள் முதலிய விலங்குகள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாயின. இதைப் பார்த்துக் கொண்டிருந்த லட்சுமணன் முதலிய வானர வீரர்கள் இனி என்ன நடக்குமோ என அச்சத்தில் இருந்தனர்.
அப்போதும் வருணன் அங்கு வந்து தோன்றவில்லை. 
 
★இதனால் ராமரின் கோபம் இன்னும் அதிகமானது. ராமர் பிரம்மாஸ்திரத்தை நாணில் ஏற்றி  கடலை நோக்கி செலுத்த  ஆயத்தமானார். இதனைப் பார்த்து உலகமே நடுங்கியது. தேவர்கள் முதலானோர் மிகவும் வருந்தினர். அப்போது வருணன் கடல் வழியே வந்து ராமரின் திருவடியில் விழுந்து வணங்கி, அடியேன்! செய்த பிழையை மன்னித்தருள வேண்டும் என வேண்டினார். ராமர் கோபம் தணிந்து, நான் இவ்வளவு நேரம் பணிந்து வேண்டியும் வராததற்கு காரணம் என்ன? என்று கேட்டார். 
 
★வருணன், பெருமானே! கடலில் மீன்களுக்கிடையே போர் நடந்து கொண்டிருந்தது. நான் சென்று அவைகளை சமாதானம் செய்து கொண்டிருந்தேன். அதனால் தான் தங்களின் அழைப்பை நான் கவனிக்க மறந்துவிட்டேன். ஆதலால் பெருமானே! இந்த சிறியேன் செய்த பிழையை மன்னித்தருள வேண்டும் என வேண்டினார். ராமர் இதனைக் கேட்டு, வருணனே!  நான் இப்போது உன்னை மன்னித்து விடுகிறேன். ஆனால் நான் நாணில் ஏற்றிய அற்புதமான  பிரம்மாஸ்திரத்தை ஏதாவது இலக்கில் செலுத்த வேண்டும். எதன் மீது பிரம்மாஸ்திரத்தை செலுத்தலாம் எனக் கூறு? என்றார். 
 
★வருணன், பெருமானே! மருகாந்தாரம் என்னும் தீவில் வாழும் நூறு கோடி அரக்கர்கள் உலக மக்களுக்கு அழிவு செய்து வருகிறார்கள். ஆதலால் இந்த பிரம்மாஸ்திரத்தை அந்த மருகாந்தாரம் தீவிற்கு ஏவி அங்கு வாழும் அரக்கர்களை வதம் செய்யுங்கள் என்றார். உடனே ராமர், மருகாந்தாரம் என்கிற தீவை பார்த்து அந்த பிரம்மாஸ்திரத்தை எய்தினார். அந்த அஸ்திரம் அத்தீவை கணப்பொழுதில் அழிந்துவிட்டு கடலில் நனைந்து பின் மீண்டும் ராமரிடமே வந்து விட்டது. பிறகு ராமர் வருணனை பார்த்து, நாங்கள் அனைவரும் கடலை கடந்துச் செல்ல வழி உண்டாக்கி தர வேண்டும் எனக் கேட்டார்.
 
★வருணன், பெருமானே! தாங்கள் கடல் தாண்டிச் செல்ல, கடலை வற்றச் செய்வதற்கு நான் காரணமாக இருக்கக் கூடாது. தாங்கள் செல்வதற்கு கடல் நீரை திடம் ஆக்கினாலும் கடலில் உள்ள உயிரினங்கள் மிகுந்த துன்பப்படும். இதற்கு வேறொரு வழியும் உண்டு. என் மீது அணைக்கட்டினால் தாங்கள் அனைவரும் கடல் தாண்டிச் செல்லலாம். அணையில் தாங்கள் இடும் குன்றுகளையும், பாறைகளையும், மலைகளையும் மூழ்கிவிடாமல் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். 
 
★ராமர், வருணனை பார்த்து, நல்லதொரு யோசனையை உரைத்தீர்கள், ஆனால்
வருணனாகிய நீங்கள்  இந்த கடலுக்கே அரசன். உங்கள் மீது அணை கட்டி அதன் மேல் நாங்கள் நடப்பது பெரும் தவறு. வேறு ஏதேனும் உபாயம் இருந்தால் கூறுங்கள் என்றார். பெருமானே! தங்களின் பாததுளி என்மேல் படுவதற்கு நான் மிகுந்த பாக்கியம் செய்திருக்க வேண்டும். ஆகவே சிறிதும் கலக்கமோ அல்லது தயக்கமோ கொள்ளாதீர்கள். என்மீது பாலம் கட்டுங்கள். எவ்வளவு பாரம் என்றாலும் நான் தாங்குவேன் என்றான் வருணன். சம்மதம் தெரிவித்த ராமர் உங்களது இந்த சேவையானது, மகத்துவமானது, 
என்று வருணனை பாராட்டினார்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.....................
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
219 /07-11-2021
 
ராவணனின் ஒற்றர்கள்...
 
★ராமர், வருணனைக் குறித்து தியானம்  செய்து கொண்டு இருக்கும் போது ராவணன் அந்த ராமர் எத்தகைய படைகளுடன் வந்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள சார்தூலன் என்ற ராட்சசனை அனுப்பி உளவு பார்த்து வருமாறு அனுப்பினான். ராவணனிடம் திரும்பி வந்த ஒற்றன் கடற்கரையில் தான் கண்ட காட்சிகளை விவரிக்க ஆரம்பித்தான். ராமரும் லட்சுமணனும் சீதை இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு மிகப்பெரிய படைகளுடன் இங்கு வருவதற்கான முயற்சிகளை தீவிரமாக செய்து கொண்டு இருக்கிறார்கள். 
 
★நமது இலங்கையை நோக்கி கணக்கில் அடங்காத வானரப் படையினர் உள்ளனர். அங்கு மேலும் வானரங்களும், பெரிய  கரடிகளும் பெரும் திரளாக வந்து கொண்டிருக்கிறது. அவர்களை பார்ப்பதற்கு கடற்கரையில் இன்னோரு கடல் இருப்பது போல் யாரும் உள் புக முடியாத அளவிற்கு பெரும் கூட்டமாக உள்ளார்கள். இந்த படைகள் பத்து யோசனை தூரத்திற்கான இடத்தை ஆக்ரமித்துக் கொண்டு இருக்கும் அளவிற்கு மிகப்பெரிய படைகளாக இருக்கிறார்கள். விரைவில் இங்கு வந்து விடுவார்கள் என்று சொல்லி முடித்தான். 
 
★ஒற்றனின் பேச்சில் ராவணன் மிகவும் மனக்கலக்கம் அடைந்து தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்து ஒரு தந்திரம் செய்தான். தனது தூதுவர்களில் சிறந்தவனான சுகனை வரவழைத்து அவனிடம் சுக்ரீவனிடம் தனியாக சென்று பேச வேண்டும் என்றும், பேசும் முறைகளையும் சொல்லி தூது செல்ல அனுப்பினான். சுகன் ஒரு பறவை உருவத்தை அடைந்து கடலை தாண்டி யாருக்கும் தெரியாமல் கடற்கரைக்கு வந்து சேர்ந்தான்.
 
★ராமர் லட்சுமணர் உட்பட  மற்ற அனைவரும் ஒன்றாக அமர்ந்து இருந்ததினால் அரசன் சுக்ரீவன் தனியாக வரும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த அசுரன் சுகனுக்கு அதற்கான சமயம் அமைந்தது. சுக்ரீவன் அருகில் பறவை வடிவிலேயே சென்றான் சுகன். இலங்கையின் அரசனான ராவணன் தங்களிடம் என்னை தூதுவனாக அனுப்பியுள்ளார் என்று பேசஆரம்பித்தான். வானர அரசே! ராவணன் இலங்கையின் அரசன். நீங்களும் ஒரு அரச பரம்பரையில் பிறந்த மகத்தான கிஷ்கிந்தை  நாட்டின் அரசன். ஒரு நாட்டின் அரசன் இன்னோரு நாட்டின் அரசனோடு நட்பு கொண்டு ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வார்கள். இதுவே மரபு. 
 
★ஒரு நாட்டில் இருந்து துரத்தப் பட்ட ராமருடன் நீங்கள் நட்பு கொண்டு அவருக்கு உதவி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் காட்டில் வாழும் ராமருடன் நட்பு கொள்வதால் அரசன் என்ற உங்களின் பெரும் மதிப்பு மிகத்  தாழ்ந்து சென்று விடுகிறது. நீங்கள் ராமருக்கு உதவி செய்வதினால் இலங்கை அரசனை பகைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். உங்களுக்கும் ராவணனுக்கும் இதுவரையிலும் எந்த விதமான பகையும் விரோதமும் இல்லை. தற்போது பகை என்று வந்து விட்டால் இருவரின் படைகளுக்கும் சண்டை ஏற்படும். 
 
★ராட்சசர்களின் படைகள் மிக வலிமையானது. அவர்களை வெற்றி பெறுவது என்பது யாராலும் இயலாத காரியம். இலங்கை நகரத்தை வெற்றி பெற வேண்டும் என்று  இதுவரை தேவர்கள், கந்தர்வர்களால் கூட நெருங்க முடியவில்லை. அப்படியிருக்க இந்த வானர படைகளை வைத்து நீங்கள் எப்படி வெற்றி பெற முடியும்? என்று நம்புகிறீர்கள். நீங்கள் ராவணனுக்கு தம்பி போன்றவர். உங்களையும் உங்களது எந்தப் படைகளின் அழிவையும் ராவணன் விரும்பவில்லை. உங்களிடம் நட்புடன் இருக்கவே விரும்புகிறார்.
 
★ராமரின் மனைவி சீதையை ராவணன் தூக்கிச் சென்றதில் உங்களுக்கு ஒரு பாதிப்பும் வரவில்லை. எனவே இது பற்றி நீங்கள் நன்றாக யோசித்து முடிவு செய்யுங்கள். விரைவில் உங்கள் படைகளுடன் உங்கள் நாட்டிற்கு திரும்பி சென்று விடுங்கள். இதுவே உங்களுக்கு நன்மையை தரும் என்று சொல்லி முடித்தான். ராட்சசன் சுகன் சொன்னதை முழுமையாக கேட்ட சுக்ரீவன் கோபம் மிகவும் அடைந்தான். இந்த ராட்சசனை பிடித்து கட்டுங்கள் என்று தனது வானர படைகளுக்கு சுக்ரீவன் கட்டளை இட்டான். உடனே வானர வீரர்கள் பாய்ந்து சென்று பறவை வடிவத்தில் இருந்த ராட்சசனை பிடித்து கட்டி அதனை துன்புறுத்த ஆரம்பித்தார்கள்.
 
★ராமருக்கு தூதுவனாக வந்த ராட்சசனின் அலறல் சத்தம் கேட்டது. ராமர் தனது அருகில் இருந்தவர்களிடம் என்ன சத்தம் என்று கேட்டார். அதற்கு தூதுவன் என்று சொல்லிக் கொண்டு ராவணனிடம் இருந்து வந்த ஒரு ராட்சதன் சுக்ரீவனின் மனதை கலைக்க பார்த்தான். அவனை நமது வானர வீரர்கள் கட்டி வைத்து துன்புறுத்துகிறார்கள். அந்த ராட்சதனின் சத்தம் தான் கேட்கிறது என்றார்கள். அதற்கு ராமர், தூதுவர்களாக இங்கு வந்தவர்களை துன்புறுத்துவதும் கொல்வதும் தர்மம் இல்லை. எனவே உடனே அவனை விட்டு விடுங்கள் என்று உத்தரவிட்டு தனது உபவாசத்தை மீண்டும் தொடர்ந்தார். 
 
★ராமரின் உத்தரவை கேட்ட வானர வீரர்கள் ராட்சதனை விடுவித்தார்கள். விடுதலையான ராட்சதன்,  சுக்ரீவனிடம் ராவணன் தங்களுக்கு அனுப்பிய செய்திக்கு தங்களின் பதிலை சொல்லுங்கள். அதனை நான் எனது அரசனான ராவணனிடம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டான். அதற்கு சுக்ரீவன் துஷ்டனான ராவணனுக்கு நான் தம்பியுமில்லை. அவன் எனக்கு அண்ணனுமில்லை. ராமர் எனக்கு நண்பர். அவருக்கு அந்த ராவணன் எதிரியானதால் அவன் எனக்கும்  எதிரி ஆகிறான். 
 
★தேவர்கள், கந்தர்வர்கள் என்று யாராலும் அந்த இலங்கையை நெருங்க முடியாது என்ற அசுர ராவணனின் கர்வத்தை அழித்து அவனையும் அழிக்க விரைவில் நாங்கள் கடலை கடந்து வந்து விடுவோம். நாங்கள் வந்ததும் ராவணன் பிழைக்க மாட்டான். ராவணன் இந்த உலகத்தில் எங்கு ஓடி ஒளிந்தாலும், ராமரின் அம்பில் இருந்து தப்ப மாட்டான் என்று உனது அரசனிடம் போய் சொல். ராமரின் கருணையால் நீ பிழைத்தாய். எனவே  விரைவாக இங்கிருந்து ஓடி விடு என்று சுக்ரீவன் ராட்சதனை விரட்டி அடித்தான். ராட்சதன் விரைவாக அங்கிருந்து சென்று விட்டான்.
அரக்கன் சுகன் இலங்கை சென்று நடந்ததை எல்லாம் ராவணனிடம் தெரிவித்தான். 
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை....................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
220 /08-11-2021
 
சேது பந்தனம் உருவாகிறது...
 
 ★ஶ்ரீ ராமரின் அழைப்பிற்கு இணங்கி அங்கு வந்த வருணன், தன்மீது வானரங்களை வைத்து இலங்கை வரைக்கும், மரங்கள் மற்றும்  கற்பாறைகளை வைத்து ஒரு பாலம் கட்டுங்கள். அதனை அலைகள் தாக்கி அழிக்காமலும் நீரில் மிதக்கும் படியும் பார்த்துக் கொள்கிறேன். இந்தப் பெரிய  வானரப்படைகள் கடலை தாண்டி செல்லும் வரை பெரிய மீன்கள் முதலைகள் யாரையும் சிறிதும் தாக்காமல் கவனமாக  பார்த்துக் கொள்கிறேன். எனது தர்மத்தை மீறாமல் இந்த உதவியை மட்டும் செய்கிறேன். தங்களின் வானர படைகளில் நளன் இருக்கிறான். தேவலோக விசுவகர்மாவின் மகனான அவனிடம் இந்தப் பாலத்தைக்  கட்டும் பணிகளை ஒப்படையுங்கள். அவன் இந்த அணையை திறமையுடன் கட்டி முடிப்பான் என்று சொல்லி வருணன் ராமரை வணங்கி விடைபெற்றுச் சென்றான்.
 
★பிறகு வானர சேனைகளை அழைத்து, இந்த குன்றுகளை கொண்டு வந்து கடலின் மேல் அணைக் கட்டுங்கள் என பணித்தார் ராமர். சுக்ரீவனிடமும், விபீஷணனிடமும், அணைக் கட்டுவதற்கான வேலையை முன்னின்று யாரை செய்யச் சொல்வது, வருணன் கூறியது போல  நளனிடம் ஒப்படைத்து விடலாமா அல்லது வேறு யாரிடமாவது ஒப்படைக்கலாமா என ஆலோசனை நடத்தினார்.
நீண்ட ஒரு ஆலோசனைக்குப் பின் அவர்கள் நளன் தான் அணைக்கட்ட தகுதியானவன் என தீர்மானித்து நளனை அழைத்து வரச் சொன்னார்கள். நளன் அங்கு வந்து சேர்த்தான். ராமர், நளனிடம் நீ அணையை திறம்பட கட்டி முடிக்க வேண்டும் என்றார். நளன் ராமரிடம், நான் அணையை நல்லமுறையில்  கட்டி முடிக்கிறேன் எனக் கூறினான்.
 
★வானர வீரர்கள் அருகில் இருந்த காட்டுப் பகுதிகளுக்குச்  சென்று ஆயிரக்கணக்கான மரங்களை வேரோடு பிய்த்து எடுத்து வந்து நளன் சொல்லியபடி கடலுக்குள் போட்டார்கள். மரங்கள் கடலில் மிதந்தது. மரங்களின் மேல் பெரிய பாறைகளை அடுக்கி வைத்து பாதை அமைத்தார்கள்.
 வானரங்கள் மலைகளும், குன்றுகளும் கொண்டு வர ஆரம்பித்தனர். சில வானரங்கள் மலைகளையும், பாறைகளையும் கால்களில் உருட்டிக் கொண்டும், சில வானரங்கள் கைகளால் சுமந்து கொண்டும் வந்தனர். அனுமன் ஒரே நேரத்தில் பல மலைகளும், குன்றுகளும், பாறைகளும் கொண்டு வந்து சேர்த்தான்.
 
★வானரங்கள் மலைகளும், குன்றுகளும், பாறைகளும் கொண்டு வந்து கொடுக்க நளன் அதை தன் இடக்கையால் வாங்கி அணைக் கட்டினான். அனுமன் கொண்டு வந்து கொடுக்கும் மலைகளையும், குன்றுகளையும் நளன் தன் இடக்கையால் வாங்கி அணைக் கட்டினான். அரசன் சுக்ரீவனிடம்  அமைச்சராக இருக்கும் என்னை மதிக்காமல் இடக்கையால் வாங்கி அணை கட்டுகிறானே என நளன் மீது கோபம் கொண்டான் அனுமன். உடனே அனுமன் தானே அணை கட்ட மலைகளை அந்த கடலில் சேர்த்தான். ஆனால் மலைகள் யாவும் கடலில் மூழ்கிவிட்டன.
 
★இதை தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ராமர், அனுமனை பார்த்து தொழிலில் பெரியவர், சிறியவர் என்று பார்க்கக் கூடாது. அதனால் நீ மலைகளை நளன் மூலமாகவே அணையில் சேர்ப்பாயாக எறு கூறினார். இதை பார்த்து கொண்டிருந்த லட்சுமணன் ராமரிடம், அண்ணா! நளன் கையால் சேர்க்கின்ற எல்லா மலைகளும் குன்றுகளும் நீரில் மூழ்காமல் மிதக்கின்றன. ஆனால் அனுமன் சேர்த்த பாறைகள் நீரில் மூழ்கிவிட்டன. அதற்கான காரணம் என்ன? என்று கேட்டார்.
 
★அதற்கு ராமர்  லட்சுமணா,! சூர்ய கிரகணம் நடக்கும் அந்த கிரகண காலத்தில் எல்லாம் வல்ல தெய்வத்தினை, குறித்து ஜபம் செய்தால் ஒன்றுக்கு பல ஆயிரம் மடங்கு பலன் உண்டு.
அதைவிட தண்ணீரில் மூழ்கி மந்திர ஜபம் செய்தால் ஒன்றுக்கு பல லட்சம் மடங்கு பலன்கள் அதிகமாகும். அப்படி ஒருமுறை மாதவேந்திரர் என்ற மகரிஷி , கானகத்தில் சூர்ய கிரகணம் அன்று நீரில் மூழ்கி தவம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது நமது நளன் குட்டி வானரமாக இருந்தான். குரங்குகளுக்குச் சேட்டை செய்வது என்பது பிடித்தமான ஒன்று.
 
★அப்போது  குரங்குகள், நீரில் தவம் செய்து கொண்டிருந்த முனிவரை பார்த்தனர். உடனே வானரங்கள் முனிவர் மீது கற்களை எறிந்து விளையாடிக் கொண்டிருந்தனர். முனிவர் தவத்தை விட்டு எழுந்து வந்து குரங்குகளை விரட்டி விட்டு மீண்டும் நீரில் மூழ்கி தவம் செய்தார். முனிவர் பலமுறை நளன் என்ற அந்த சின்ன குட்டிக் குரங்கை விரட்டியும், குட்டிக் குரங்கு கற்களை  எறிந்து கொண்டே தான் இருந்தது.
ஜபம் செய்யும் பொழுது கோபம் கொண்டு சாபம் விட்டால் ஜபசக்தி குறைந்து விடும். அதனால் முனிவர் குரங்குக்கு சாபம் கொடுக்காமல், இக்குரங்கு எரியும் கற்கள் தண்ணீருக்குள் மூழ்காமல் மிதக்க வேண்டும் என்று கூறி தண்ணீருக்குள் ஜபம் செய்ய தொடங்கினார்.
 
★நளன் என்னும் குரங்கு தான் எறியும் கற்கள் மூழ்காமல் மிதப்பதினால் விளையாட்டில் ஆர்வம் இல்லாமல், அங்கிருந்து சென்று விட்டது. அந்த சாபத்தின் நன்மையால் தான், நளன் இடுகிற கற்கள் தண்ணீரில் மூழ்காமல் மிதக்கின்றன என்றார் ராமர். நளனைப் பற்றி தெரிந்து கொண்ட அனுமன் பக்தியுடன் அனைத்து பாறைகளிலும் ஸ்ரீ ராம் என்று எழுதி  நளனிடம் கொடுத்தான்.. பாலம் கட்டும் வேலையினால் எழுந்த பெரிய சத்தம் கடலின் ஓசையை விட பெரியதாக இருந்தது.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை......................
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
221/09-11-2021
 
இலங்கை அடைந்தனர்...
 
★முதல் நாளில் பதினான்கு யோசனை தூரமும் 2 வது நாளில் இருபது யோசனை தூரமும் 3 வது நாளில் இருபத்தியோரு யோசனை தூரமும் நான்காவது நாளில் இருபத்தியிரண்டு யோசனை தூரமும் ஐந்தாவது நாளில் மீதியுள்ள தூரத்திலும் பாலத்தை கட்டி முடித்து கடலின் இலங்கை  கரை வரை பாலத்தை கட்டி முடித்தார்கள். இலங்கை கடற்கரை வரை பாலம் கட்டும் பணி ஐந்து நாட்களில் முடிந்தது. இவ்வாறு வானரங்கள் இரவு பகலாக வேலை செய்து ஐந்து நாட்களில் அணையைக் கட்டி முடிக்கப்பட்ட செய்தியை அறிந்ததும் ராமர் அவர்களை கட்டி தழுவி பாராட்டினார்.
 
★கட்டி முடித்த அணையின் அழகைக் கண்டு ராமர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். வெகு சிறப்பான ஒரு அணையை விரைவில் கட்டி முடித்ததற்கு  பரிசாக நளனை கௌரவிக்கும் விதமாக, வருண பகவான் தனக்கு முன்பு ஒரு சமயத்தில் கொடுத்த நவரத்தின மாலையை நளனுக்குப் பரிசாக வழங்கினார். பிறகு அனைவரும் அங்கிருந்து இலங்கை நோக்கி செல்ல ஆயத்தமாகினர். வானரர்கள் பயணத்திற்கு தேவையான உணவு பொருட்களை சேகரித்து கொண்டனர். வானர சேனைகள் அணிவகுத்து புறப்பட ஆயத்தம் செய்தார்கள்.
 
★ராமரிடம் வந்த சுக்ரீவன் பாலம் கட்டப்பட்டு விட்டது. இங்கிருந்து தாங்கள் இலங்கை பகுதியில் இருக்கும் அக்கரை வரை நடந்து சென்றால் நீண்ட நாட்கள் ஆகும். ஆகவே நீங்கள் அனுமன் மீது அமர்ந்து கொள்ளுங்கள். தம்பி லட்சுமணன் அங்கதன் மீது அமர்ந்து கொள்ளட்டும். நாம் விரைவாக  இலங்கை சென்று அடைந்து விடலாம் என்று ராமரிடம் சுக்ரீவன் கூறினான்.
சுக்ரீவனின் விருப்பப்படி அனுமன் ராமரையும், அங்கதன் லட்சுமணனையும்  தூக்கிக் கொண்டு சென்றான்.
 
★ராமரும் லட்சுமணனும் முன்னே செல்ல பின்னால் வானரப் படைகளும், ஜாம்பவானின் தலைமையில் கரடிப் படைகளும் சென்றது. வானரர்கள் கூச்சல் இட்டுக் கொண்டே  சென்றனர். சிலர் ஆகாயத்தில் தாவியும், சிலர் நீரில் நீந்தியும், சிலர் கருடனைப் போல் பறந்தும் ராமரின் பின்னே பாலத்தை கடந்தார்கள். வானரப்படைகள் எழுப்பிய சத்தம் கடலில் இடி முழக்கம் போல் எதிரொலித்தது. அனைவரும் இலங்கை கடற்கரையை அடைந்தார்கள்.
 
★ராமரும், வானர வீரர்களும் இலங்கை தீவை அடைந்ததைக் குறித்து மகிழ்சி அடைந்தனர் அங்கு அவர்கள் ஒரு குன்றின் அடிவாரத்தில் தங்கினார்கள். சுக்ரீவனின் கட்டளைப்படி நளனும், நீலனும் அவர்கள் தங்குவதற்காக வசதியான  பர்ணசாலையை அமைத்தனர்.
ராமர் லட்சுமணனிடம் வந்து இருக்கும் அனைவருக்கும் நல்ல உணவு மற்றும்  நீர் கிடைக்கும் காடுகளாக பார்த்து தங்குவதற்கு ஏற்பாடுகளை செய்து கொடு என்றார்.
 
★விபீஷணன் உதவியுடன் இலங்கையில் உணவு, தண்னீர் இருக்கும் காடுகளாக பார்த்து வானப்படைகள் அனைவரும் தங்குவதற்கான ஏற்பாடுகளை நன்றாக செய்து கொண்டார்கள். தேவர்கள், கந்தர்வர்கள் மற்றும் முனிவர்கள் கடலில் கட்டப்பட்ட பாலத்தை கண்டு வியந்தார்கள்.  ராமரிடம் வந்த தேவர்களும், முனிவர்களும் உங்களின் எதிரியான ராட்சதர்களை வென்று இந்த மண்ணுலத்தில் பல்லாண்டு வாழ்ந்து தர்மத்தை காப்பாற்ற வேண்டும் என்று வாழ்த்தி வணங்கிச் சென்றனர்.
 
★அன்றிரவு ராமர் சீதையை நினைத்து மிகவும் வருந்திக் கொண்டு இருந்தார்.  இலங்கை கடற்கரையில் அமைக்கப்பட்டு உள்ள பாலத்தை, ராவணனின் ராட்சச வீரர்கள் யாரும்  தகர்த்து சண்டைக்கு வராதபடி அரசன் விபீஷணன் தன்னுடன் உள்ள வீரர்களுடன் அனைவருக்கும் பாதுகாப்பாக நின்றான்.  அப்பொழுது அங்கு ராவணனால் ஏவப்பட்ட ஒற்றர்கள் சுகன், சாரணன் என்னும் இரண்டு அரக்கர்கள் இவர்களை அறிந்து கொள்ளும் வகையில் வானர உருவம் கொண்டு அங்கு வந்தனர்.
 
★ஒற்றர்களை அடையாளம் கண்டுகொண்ட விபீஷணன், அவர்களை அடித்து, உதைத்து கயிற்றால் கட்டிக்கொண்டு ராமர் முன் நிறுத்தினான். ராமர், இவர்கள் வானர வீரர்கள் என நினைத்து விபீஷணனை பார்த்து, தம்பி விபீஷணா! இவர்கள் என்ன மாதிரி தவறு செய்தார்கள்? இவர்களை ஏன் கயிற்றால் கட்டிக்கொண்டு வந்துள்ளாய்? என வினவினார். விபீஷணன், பெருமானே! இவர்கள் வானரங்கள் இல்லை. ராவணனால் ஏவப்பட்ட அரக்கர் குலத்தைச் சார்ந்த ஒற்றர்கள். இவர்கள் பெயர் சுகன், சாரணன். இவர்கள் நம்மை ஆராய்ந்து பார்க்க இங்கு வந்துள்ளார்கள் என்றார்.
 
★உடனே அந்த ஒற்றர்கள், பெருமானே! நாங்கள் ஒன்றும் அரக்கர் குலத்தைச் சார்ந்த ஒற்றர்கள் இல்லை. தங்கள் முன் நிற்கும் இந்த விபீஷணன் கபட நாடகமாடி தங்களை போரில் தோற்கடிக்க திட்டமிட்டுள்ளான். நாங்கள் உண்மையில் வானர வீரர்கள்தான் என்று நாடகமாடி பேசினார்கள். விபீஷணன், இவர்களின் இந்த நாடகத்தை நிறுத்த ஒரு மந்திரத்தை உச்சரித்தான். உடனே  அவர்கள் தம் சுய ராட்சத உருவத்தில்  தோன்றினார்கள். இவர்கள் ராவணனின் ஒற்றர்கள் என்பது உறுதியாகிவிட்டது என்றான் விபீஷணன். தங்களின்  சுய உருவத்தை பெற்ற அரக்கர்கள் ராமரை பார்த்து நடுங்கினார்கள்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை......................
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
222/10-11-2021
 
ராவணன் ஆவேசம்...
 
★ராமர் அவர்களிடம், என்னை பார்த்து நீங்கள் சிறிதும் அஞ்ச வேண்டாம். நீங்கள் இங்கு வருவதற்கான காரணம் என்ன என்று சொல்லுங்கள் என்றார். ஒற்றர்கள் ராமரை பார்த்து, வீரனே! சீதையை யாரும் இல்லாத நேரத்தில் கவர்ந்து வந்த ராவணனுக்கு அழிவு வந்துவிட்டது என்பதை உணராமல் தங்களை பற்றி வஞ்சனை செய்து ஒற்று பார்க்க அனுப்பினான் என்றார்கள்.
ராமர் ஒற்றர்களை பார்த்து, ஒற்றர்களே! நான் சொல்வதை ராவணனிடம் சென்று சொல்லுங்கள். நான் இலங்கை நகர ஆட்சி பொறுப்பையும், வற்றாத செல்வத்தையும் விபீஷணனுக்கு வழங்கிவிட்டேன்.
 
★அது மட்டுமின்றி கடல் நடுவில் இருக்கும் இலங்கைக்கு பாலம் கட்டித்தான் நாங்கள் இலங்கை வந்துள்ளோம் என்பதையும், என்னுடன் ஒப்பற்ற வலிமை வாய்ந்த வீரர்களும் உடன் வந்துள்ளதாகவும் சென்று கூறுங்கள். எங்களின் கடல் போன்ற வானர படை வீரர்கள் பற்றியும் சொல்லுங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்வதற்கு வழிவகுத்து கொடுத்தார். சுகன், சாரணன் என்ற அந்த ஒற்றர்கள் இருவரும் ராவணன் அரண்மனை நோக்கி விரைந்தனர்.
 
★அங்கு அரசன் ராவணனின்  அரண்மனையில் மந்திரிகளுடன் ஆலோசனை கூட்டம் கூடியது.
ராமர் இலங்கைக்குள் பெரும் படையுடன் வந்திருக்கிறார் என்பதை அறிந்த ராவணனின் தாய் வழி சொந்தமான மால்யவான் என்னும் வயதான ராட்சசன், ராவணனிடம் சென்று உன்னுடைய நல்ல காலம் முடிந்து விட்டது. நீ செய்து வரும் பாவ காரியங்களினால் உனது வலிமை குறைந்து போயிற்று. நீ தவமிருந்து பெற்ற வரங்களை இனிமேல்  நம்பிக்கொண்டு இருக்காதே.
 
★உனது தீய செயல்களினால், உன்னுடைய தவ பயன்கள் அனைத்தும் குறைந்து உன்னை விட்டு சென்று விட்டது. இப்போது அவைகள் உனக்கு பயன் தராது. இலங்கைக்கு வந்திருக்கும் அந்தப் பெரிய சேனைகளை பார். மனிதர்களுடன் வானரங்களும், பயங்கரமான கரடிகளும் வந்திருக்கிறன. அவர்கள் கட்டிய பாலத்தின் வலிமையையும் அதன் அற்புதத்தையும் பார். மகாவிஷ்ணுவே மனித உருவத்தில் வந்து விட்டார் என்று நான் எண்ணுகிறேன் ராமருடன் சமாதானம் செய்து கொள் என்று மால்யவன் ராவணனிடம் கூறினார்.
 
★அதற்கு ராவணன், நீங்கள் சொல்லும் இந்தச் சொற்கள் எனக்கு மிகவும் கொடூரமான வார்த்தைகளாக கேட்கிறது. விபீஷணன் போல் நீங்களும் எதிரிகளோடு சேர்ந்து,நம்முடைய ராட்சத குலத்திற்கு எதிரிகளாகி விட்டீர்கள் என்று என் மனதில் தோன்றுகிறது. ராட்சத குலத்தை எதிர்க்க மனித குலத்திற்கு வலிமை இல்லை. தகப்பனால் காட்டுக்குத் துரத்தப்பட்ட  அந்த மானிடன் ஒருவனை கண்டு அனைவரும் பயப்படுகிறீர்கள். குரங்குகளையும்,கரடிகளையும் நம்பி ஒரு மனிதன் இங்கு வந்து இருக்கின்றான். அவர்களை கண்டு நீங்கள் மிக கேவலமாக பயப்படுகின்றீர்கள்.
 
★நம் ராட்சத குலத்தில் பிறந்து இத்தனை பயத்தை நெஞ்சில் வைத்திருக்கும் உங்களைப் பார்க்கவே எனக்கு வெட்கமாக இருக்கின்றது. என் மேல் உங்களுக்கெல்லாம்  ஏதேனும் பொறாமையாக இருக்கிறதா? ஏன் இப்படி பேசுகிறீர்கள்?. நான் ராமனை வணங்க முடியாது. என்னுடைய இந்த சுபாவத்தை என்னால் மாற்றிக் கொள்ள முடியாது. ராமரிடம் யுத்தம் செய்து இறந்து போனாலும் போவேன். ஆனால் ராமனிடம் சமாதானமாக போக மாட்டேன் என்று ராவணன் சொல்லி முடித்தான். மேலும் தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி. தங்களுக்கு இவ்வளவு பயம் இருந்தால், அந்த துரோகியான  விபீஷணனுடன் சென்று சேர்ந்துக் கொள்ளுங்கள். என் கோபத்திற்கு ஆளாகாதீர்கள் என்றான்.
 
★இதற்கு மாலியவான், உனக்கு நன்மை சொல்வதில் எந்த ஒரு பயனும் இல்லை. மிக நல்ல விஷயங்கள் சில நேரத்தில் கசக்கத் தான் செய்யும். ஆகவே
நன்றாக  யோசித்து, செய்ய வேண்டியதை செய்து கொள் என்று சொல்லி விட்டு மிகுந்த வருத்தத்தோடு அங்கிருந்து கிளம்பினார். ஆலோசனை கூட்டத்தில் இருந்தவர்களும் ராவணனின் பாட்டன் கூறிய சொல்லிற்கு தங்களின் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். அப்பொழுது ராவணன் அனுப்பிய ஒற்றர்கள் அங்கு வந்து சேர்ந்தார்கள்.
 
★அவர்கள் ராவணனை பார்த்து வணங்கினார்கள். ராவணன் அவர்களிடம், ஒற்றர்களே! நீங்கள் அங்கு சென்று ராமர் மற்றும்  லட்சுமணரின் திறமை, வானர வீரர்களின் படை வலிமையும் திறமையும், அங்கு விபீஷணன் இருக்கும் நிலையை பற்றியும் நீங்கள் கண்டதை கூறுங்கள் என்றான்.பிறகு ஒற்றர்கள், அரசே! ராமன் கடலின் மேல் அணைக்கட்டி இங்கு வந்து சேர்ந்துவிட்டான். வானரங்களின் படைகளின் அளவை எங்களால் காண இயலவில்லை.
 
★பிறகு நாங்கள் வானரங்கள் உருவம் மாறி சென்றதை அந்த விபீஷணன் கண்டுபிடித்து விட்டான். அவன் எங்களை ராமன் முன் நிறுத்தினான். ராமன் முன் நாங்கள் ஒற்றர்கள் இல்லை என கூறினோம். ஆனால் விபீஷணன் நாங்கள் தங்களின் ஒற்றர்கள் தான் என்பதை நிரூபித்து விட்டான். இதை அறிந்த ராமர் தங்களிடம் சொல்லச் சொல்லி ஒரு செய்தியை அனுப்பியுள்ளான் என்று கூறினார்கள்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.......................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
223/11-11-2021
 
ராவணனின்
மாயாஜாலம்...
 
★அந்த ராமன், விபீஷணனை
 நம் இலங்கையின் அரசனாக முடிசூட்டிவிட்டதாகவும், தன்னிடம் மிக வலிமை வாய்ந்த வீரர்கள் உள்ளதாகவும் கூறினான் என்று, அந்த ஒற்றர்கள் ராவணனிடம் சொனார்கள். அந்த  ஒற்றர்கள் கூறியதை கேட்ட ராவணன், ஆவேசத்தோடு ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்தான். இனி நாம் என்ன செய்யலாம் என அவையில் இருந்தவர்களிடம் ஆலோசனை கேட்டான். அப்போது படைத்தலைவன் எழுந்து, அரசே! இப்பொழுது நாம் அந்த சீதையை அவர்களிடம் ஒப்படைத்தால், நாம் அவர்களை கண்டு பயப்படுகிறோம் என எண்ணுவார்கள். மிகுந்த பலம் கொண்ட நம் படைகளை அழிக்க அவர்களுக்கு பல வருடங்கள் ஆகும் என்றான்.  
 
★அவர்களிடம் சமாதானம் பேச சென்றால், விபீஷணன் அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டான். எனவே நாம் விரைவில் படையெடுத்து அவர்களிடம் போர் புரியச் சென்றால், நம் படைகளைக் கண்டு வானரங்கள் பயந்து ஓடி விடுவார்கள் என்றான். படைத் தலைவனின் யோசனையைக் கேட்ட ராவணன், சீதையின் காரணமாகத்தான் அவர்கள் என்னுடன் போர் புரிய இங்கு வருகிறார்கள் என்றால், நான் அதற்காக சிறிதும் பின்வாங்க மாட்டேன். என் கையிலுள்ள அம்புகள் உலகம் அனைத்தையும் வென்ற புகழுடையவை. போர் என்றதும் எதிரியின் மார்பில் புகுந்து செல்லக்கூடிய  மிகுந்த வலிமையுடையது. இந்த குரங்கு கூட்டத்திடம் நான் தோற்றுப் போவேனா? என்றான் மிகுந்த ஆவேசத்துடன்.
 
★ராவணன், மஹோதரன் என்பவனை அழைத்து, வேறு நல்ல ஒற்றர்களை அழைத்து வரும்படி கட்டளையிட்டான். அந்த ஒற்றர்களிடம் ராமனின் திட்டம், எங்கே, எப்போது, எந்த இடத்தில் இருந்து அவர்கள் தாக்கப் போகின்றார்கள்? மற்றும் ராம, லட்சுமணனின் சாப்பாட்டு முறைகள், அவர்கள் செய்யும் ஆலோசனைகள் அனைத்தையும் அறிந்து வந்து சொல்லுமாறு பணித்தான். ராவணன் கூறிய சொல்படி  ஒற்றர்கள் மாறுவேடம் அணிந்து ராமரின் இருப்பிடம் நோக்கிச்  சென்றனர். ஆனால் விபீஷணன் இந்த முறையும் ஒற்றர்களையும் அடையாளம் கண்டு கொண்டான்.
 
★கண்ட உடனே விபீஷணன் இவர்களை பிடித்து , ராமர் முன் கொண்டு சென்று நிறுத்தினான். ஶ்ரீ  ராமர் இந்த ஒற்றர்களையும் விடுவிக்குமாறு கட்டளையிட்டார். ஆனால் வானரர்கள் அவர்களை விடாமல் துன்புறுத்தினர். ஒருவழியாக அவர்களிடமிருந்து தப்பித்த ஒற்றர்கள் ராவணனிடம் சென்று நடந்தவற்றைக் கூறினர். மன்னரே! தாங்கள் சீதையை ஒப்படைத்து விடுங்கள், இல்லை என்றால் நிச்சயமாக  யுத்தம் நடைபெறும் என்றார்கள். இதைக் கேட்ட ராவணன், சீதையை அவர்களிடம் அனுப்புவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றான்.
 
★பிறகு தன் அரண்மனைக்குள் சென்று மந்திர, தந்திரங்களில் மிகவும் தேர்ந்தவன் ஆனவனான வித்யுத்ஜிஹ்வா என்பவனை அழைத்தான். பிறகு அவனிடம் ராமனின் தலையைப் போல் ஒரு தலையை உருவாக்கி, கொண்டு வர கட்டளையிட்டான். அதனுடன் சிறந்த வில்லையும் அத்துடன் அம்புகளையும்  கொண்டுவர உத்தரவிட்டான். ராவணனின் கட்டளைப்படி வித்யுத்ஜிஹ்வா அவற்றை நன்கு உருவாக்கி எடுத்து வந்தான். ராவணன், வித்யுத்ஜிஹ்வா தன் கட்டளை ஏற்று, செய்த ராமனின் தலை, வில் மற்றும் அம்புகளுக்காக அவனுக்கு பரிசளித்தான்.
 
★பிறகு ராவணன், சீதை உள்ள அசோகவனத்தை நோக்கிச் சென்றான். தன் தந்திரத்தால் சீதையின் மனதைக் கலைத்து கவர வேண்டும் என நினைத்த ராவணன், சீதையிடம் சென்று, சீதா! நான் உனக்கு எவ்வளவோ சொல்லியும், வனவாசி ராமனின் நினைவாகவே இருக்கின்றாய்.  இப்போது உனக்கு ஒரு துக்கச் செய்தியை சொல்கிறேன் கேள் என்றான். உன்னுடைய ராமனை நான் கொன்று விட்டேன். எந்த ராமனை நம்பி, நீ என்னை நிராகரித்தாயோ அந்த ராமன் யுத்தத்தில் கொல்லப் பட்டான். இனியாவது நீ என்னை ஏற்றுக் கொள். இதை தவிர உனக்கு வேறு வழி எதுவும் இல்லை என்றான்.
 
★பிறகு ராவணன், யுத்தத்தை நேரில் பார்த்த படைத்தலைவன்  வித்யுத்ஜிஹ்வாவை இங்கே வரச் சொல். போரில் கொல்லப் பட்ட ராமனின் குருதி வாய்ந்த தலையையும் கொண்டுவரச் சொல் என பணித்தான். அந்த வித்யுத்ஜிஹ்வா, ராவணன் சொன்னதை போல் கையில் வில், அம்புகளுடனும், அவனால் செய்யப்பட்ட போலி ராமரின் தலையுடனும் அங்கே வந்து சேர்ந்தான். ராவணன், சீதையிடம், சீதா! வில்லைப் பார்த்தாயா? இது ராமனின் வில். மற்றும் இந்த தலையை பார்த்து தெரிந்துக் கொள், ராமன் இறந்து விட்டான். இனி நீ என் ஆசைக்கு இணங்குவதே நன்று என்றான்.
 
★மேலும் நான் இவ்வளவு நேரம் சமாதானமாகச் சொல்லியும் நீ யாரை நினைத்து மனம் கலங்கி உருகுகிறாயோ, கரனை அழித்த அந்த உன் கணவன் ராமன் யுத்தத்தில் கொல்லப் பட்டான். உன் நம்பிக்கை வேரோடு சின்னாபின்னமாகி விட்டது. உன் கர்வம் அடக்கப் பட்டது. சீதே!, இப்பொழுது இந்த கஷ்டம்  தாங்க மாட்டாமல் என்னுடைய மனைவியாகப் போகிறாய். இந்த பிடிவாதத்தை விடு. உயிர் போன பின் அவனை நினைத்து என்ன செய்ய போகிறாய் ? என் பத்தினிகளுக்கு மகிஷியாக,
 என் பட்டத்து ராணியாக இரு. தன்னை மிக்க அறிவுள்ளவளாக நினைத்துக் கொண்டிருக்கும் அறிவிலியே!, மூடத்தனமாக எதையோ நம்பிக் கொண்டு இருக்கிறாயே, அது பொய்த்து விட்டது. சீதே!, இதைக் கேள்.
உன் கணவனின் வதம் பற்றிச் சொல்கிறேன், நன்றாக மிகக் கவனமாகக் கேள் என்று கூறினான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944210869.
 
நாளை......................
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
224 /12-11-2021
 
ராவணனின் மாயம்,
சீதையின் சோகம்...
 
★ராவணன் மேலும் தொடர்ந்து பேச ஆரம்பித்தான்.தன்னை மிகவும் அறிவுடையவளாக நினைத்துக் கொண்டிருக்கும் அறிவிலியே!!, மூடத்தனமாக எதையோ நம்பிக்கொண்டு இருக்கிறாயே, அது பொய்த்து விட்டது. சீதே!, இதைக் கேள். உன் கணவனின் வதம் பற்றிச் சொல்கிறேன், கேள். என்னைக் கொல்ல ராமன் சமுத்திரத்தைக் கடந்து வந்தான் அல்லவா?. வானர ராஜன் அழைத்து வந்து பெரும் படையுடன், அநத கடலின் வட கரையில் முகாமிட்டு இருந்தானே, அந்த பெரும் படையுடன், இன்று சூரியன் அஸ்தமனம் ஆகுமுன் தானும் அழிவைத் தேடிக் கொண்டான்.  
 
★நேற்று பாதி இரவில் வந்து இறங்கிய படைகளைப் பற்றி இன்று காலை தெரிந்து கொண்ட நான், முதலில் ஒற்றார்களை அனுப்பி அவர்கள் நன்றாகத் தூங்குவதைத் தெரிந்துக் கொண்டேன். ப்ரஹஸ்தன் மூலமாக பெரும் படையை அனுப்பி, ராமனும், லட்சுமணனும் சேர்ந்து இருக்கும் இடம் சென்று அவன் பலத்தை அழித்தேன். சக்ரங்கள், தண்டங்கள், வாட்கள், மகா ஆயஸம் என்ற இரும்பு ஆயுதங்கள், பாணங்கள் மற்றும் ஏராளமான சூலங்கள், பள பளவென பிரகாசிக்கும் கூடம், உத்கரம் என்ற ஆயுதம், மேலும் யஷ்டிகள், தோமரங்கள், சக்திகள், முஸலங்கள் ஆகிய கொடிய ஆயுதங்களை எடுத்துக் கொண்டு ராட்சத படையினர்  வானரங்கள் பேரில் மாற்றி மாற்றி பிரயோகித்தார்கள்.
 
★தூங்கும் ராமனை, ப்ரஹஸ்தன் பலமாக ஒரு அடி கொடுத்து கைகளை கட்டி, தலையை கொய்து கொண்டு வந்தான். யதேச்சையாக விழித்துக் கொண்ட விபீஷணனை கைது செய்து இங்கு கொண்டு  வந்து விட்டான். மற்ற வானரங்களை லட்சுமணனுடன் துரத்தி அடித்து விட்டான். மூலைக் கொன்றாக அவர்கள் ஓடி விட்டனர். சுக்ரீவன், கழுத்து துண்டிக்கப் பட்ட  ஒரு நிலையில், இருக்கிறான். அனுமன் அவனுடைய சிறப்பான கன்னத்திலேயே அடிபட்டு மாண்டான். ஜாம்பவானை முழங்காலில் அடித்து விட்டான். அந்த அடி தாங்காமல் அவனும் மாண்டான்.
 
★பெரிய மலையை ரம்பம் கொண்டு அறுத்து தள்ளுவது போல, அந்த குரங்கு கூட்டத்தை அடி மரத்தில் அடிப்பது போல அடித்து தள்ளி விட்டான். ததிமுகன், ஏராளமான நாராசம் எனும் ஆயுதங்களால் தாக்கப் பட்டு அழிந்தான். குமுதன், அம்புகளால் குரலே எழும்பாதபடி செய்யப் பட்டு இறந்து விட்டான். ராட்சதர்கள் அம்பு மழையாகப்  பொழிந்து அங்கதனை வீழ்த்தி விட்டார்கள். நாலாபுறமும் வானரங்கள் ரத்தம் கக்கிக் கொண்டு பரிதாபமாக விழுவதை பார்த்துக் கொண்டே அங்கதன் உயிரை விட்டான்.
 
★மீதியுள்ள வானரங்கள்,  என் ரதத்தில் பூட்டப் பட்டிருந்த யானைகள் காலில் மிதி பட்டனர். குதிரைகள் கீழே தள்ளி பலரை எழுந்திருக்க முடியாமல் செய்து விட்டன.இப்படி அடிபட்டவர்களை பார்த்து பலர் பயந்து ஓடியே போய் விட்டனர். ராட்சதர்கள் பின் தொடர்ந்து ஓடி, மிகப் பெரிய யானைகளை, சிங்கங்கள் துரத்துவது போல துரத்தி அடித்து விட்டார்கள்.  சிலர் கடலில் மூழ்கினர். சிலர் ஆகாயத்தில் வீசியெறியப் பட்டனர். கரடிகள், மரங்களில் ஏறி வானரங்களைப் போலவே ஆனார்கள்.
 
★கடற்கரையிலும், மலையிலும், வனங்களிலும், இவ்வாறு தான் உன் கணவன்,தன் சேனையோடு என் படை வீரர்களால் அடிக்கப் பட்டு மாண்டான். ரத்தம் கொட்டி ஏராளமாக, புழுதி படிந்து கிடந்த இந்த தலையை கொண்டு வரச் சொல்லிவிட்டு வந்தேன் என்ற ராவணன், சீதையுடன் இதைக் கேட்டுக் கொண்டிருந்த காவல் புரியும் அரக்கிகளைப் பார்த்து, வித்யுத்ஜிஹ்வனை அழைத்து வா என்று கட்டளையிட்டான். அவன் தான் யுத்த களத்தில் இருந்து ராமனின் தலையைத் தானாக கொண்டு வந்தவன் என்று கூறி முடித்தான். இதன் பின் வித்யுத்ஜிஹ்வன் ராமரின் வில்லையும், அம்பையும் துண்டிக்கப் பட்ட தலையையும், ராவணனுக்கு எதிரில் வைத்து விட்டு நின்றான்.  
 
★ராவணன் அவனைப் பார்த்து வித்யுத்ஜிஹ்வா!, அந்த ராமனின் தலையை சீதையின் எதிரில் வை. தசரத நந்தனின் தலையை சீக்கிரம் அவள் பார்க்கட்டும். பாவம், மிகுந்த வருத்தத்தால் இளைத்துக் கிடக்கிறாள். தன் கணவன் மரணம்  அடைந்த காட்சியை கண் குளிரக் காணட்டும் என்றான்.  இதைக் கேட்ட அந்த ராட்சதன், ராமரின்  தலையை சீதை முன்னால் வைத்தான். ராவணனும் வில்லை அவள் முன் வைத்து பார், மூவுலகிலும் புகழ் பெற்ற  வனவாசி ராமனின் கோதண்டம், அம்புகளுடன் கூட ப்ரஹஸ்தன் கொண்டு வந்தான். அந்த ராமனை இரவில் தூங்கும் பொழுது கொன்று விட்டு, இவைகளை கவர்ந்து கொண்டு வந்து விட்டான். இனியாவது என் வசம் ஆவாய் என்று ராவணன் வித்யுத்ஜிஹ்வனின் உதவியால் துண்டிக்கப் பட்ட தலையைக் காட்டி, விதேஹ ராஜ குமாரியான சீதையை அழ விட்டான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை....................
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
225/13-11-2021
 
சீதையின் துக்கம்...
 
★சீதை, துண்டிக்கப்பட்ட அந்த தலையையும், உத்தமமான ராமனது வில்லையும் பார்த்து, அனுமன் சொல்லியிருந்த சுக்ரீவ சக்யம் முதலியவைகளை மனதில் நினைத்துக் கொண்டு கண்களிலும், முக சாயலிலும் தன் கணவனை ஒத்திருந்த அந்த தலையைப் பார்த்தாள். ராமரின் கேசத்தையும், தான் கொடுத்த சூடாமணி அந்த தலையில் சூடப் பெற்றிருப்பதையும் பார்த்தாள். எல்லா அடையாளங்களும் பொருந்த, ராமனின் தலைதான் என்று அடையாளம் கண்டு கொண்டவளாக பெரும் துக்கத்தை அடைந்தாள்.  
 
★சீதை திடுமென கைகேயியை நினைத்து அவளை தூற்ற  ஆரம்பித்தாள். கைகேயி! நீ விரும்பியது இதோ இங்கு நடந்து விட்டதே, சந்தோஷமாக இரு, ரகுகுல நந்தனனாக பிறந்த தசரத நந்தன்கொல்லப் பட்டான். உன் விருப்பம் நிறைவேறியது. நீ செய்த கலகத்தால், இந்த குலமே அடியோடு அழிந்தது. கைகேயி!, என் கணவன் ராமனால் உனக்கு என்ன தீங்கு நேர்ந்தது. எதற்காக அவனை மரவுரியைக் கொடுத்து வீட்டை விட்டுத் துரத்தினாய்? இவ்வாறு புலம்பி உடல் நடுங்க, சாய்க்கப்பட்ட வாழை மரம் போல கீழே பூமியில் விழுந்தாள்.
 
★சீதை ஒரு சில நிமிடங்களில்   சமாளித்துக் கொண்டு, தன் நினைவு பெற்றவளாக, அந்த தலையை இருக அணைத்துக் கொண்டு உச்சி முகர்ந்தாள். ஹா, மகா பாக்யசாலி என்று போற்றப்படுபவனே, ஒரு மகா வீரனுக்கான கதியை அடைந்து விட்டாயா? என்னை இங்கு தனியாக தவிக்கவிட்டு விட்டு நீ சென்று விட்டாயே, கணவனை இழந்தவளாக என்னை  துன்பம் அனுபவிக்க செய்து விட்டாயே. பெண்கள், கணவனுக்கு முன்னால் மரணம் அடைவது தான் நல்லது என்று அனைவரும் சொல்வார்களே.  எனக்கு முன்னால், உயிரற்றவனாக ஆகி விட்டாயே!
 
★நன்னடத்தை மிக்கவனே!, நான் என்ன செய்வேன்? ஏற்கனவே பெரும் துக்கத்தில், சோக சாகரத்தில் மூழ்கி கிடக்கிறேன், உன்னை எனக்கு ஆதாரமாக  எண்ணியிருந்தேனே. உன்னை நம்பித் தான் நான் உயிர் தரித்து இருக்கிறேன். என்னை நிச்சயம் காப்பாற்ற வருவாய் என்று நான் எதிர் பார்த்திருக்க, இது என்ன, நீயே வீழ்ந்து விட்டாயா? உன்னை புத்திரனாகப் பெற்ற என்னுடைய
மாமியார் கௌசல்யை, இதை எப்படித் தாங்குவாள். கன்றை இழந்த தாய் பசு போல, மகனை இழந்து கதறப் போகிறாள்.
 
★ஜோதிடம் அறிந்த நிபுணர்கள், நீ நீண்ட நாள் வாழ்வாய், உனக்கு தீர்கமான ஆயுள் என்றெல்லாம் சொன்னார்களே. அவர்களின் வார்த்தை பொய்யாகுமா. இப்படி அற்பாயுளில் எங்களை விட்டு மறைந்து விட்டாயே. ராமா!, இது எப்படி நடக்க முடியும்? உன்னைப் பற்றி சொன்னவர்கள் மகா அறிஞர்கள். அறிவாளிகளின் கணிப்பும் கூட நம் விதிப்படி மாறுமா என்ன? காலத்தின் கோலம் இது தானோ? நியாயம், சாஸ்திரம் இவற்றை அறிந்தவன் நீ. என்னைக் காணாமலேயே காலனை அடைந்து விட்டாய். யாருக்கென்ன சங்கடமானாலும், அதிலிருந்து தப்ப உபாயம் சொல்பவன், மற்றவர்களின் இடர்களைத் தவிர்ப்பதில் மகிழ்சி கொள்பவன், நீ.
 
★காலன் தான் ரௌத்ரமானவன், கருணை இல்லாதவன், என்னை மறைத்து, உன்னை ஆரத் தழுவி, என்னிடமிருந்து பிரித்துச்சென்று விட்டானோ. ஶ்ரீராமா! தவம் செய்து வாடி இருக்கும் என்னை நிமிர்ந்து பார்க்காமலேயே பூமியில் கிடக்கிறாயே, என்னை விட பிரியமான பூதேவியை ஆலிங்கனம் செய்து கிடப்பதில் அவ்வளவு ஆனந்தமா? கந்த மால்யம் என்ற வாசனை நிறைந்த புஷ்பங்களால் நாள் தவறாது பூஜித்து வந்தேனே, இதோ இந்த வில், பொன் நகைகளால் அலங்கரிக்கப் பட்ட இந்த வில் என்னை விட உனக்கு அதிக பிரியமானதாகி விட்டதா?
 
★ஸ்வர்கம் போய், உன் தந்தை தசரதன், மற்றும் பெரியவர்கள் பலரையும் காண்பாய். இந்த ஆகாயத்தில் நட்சத்திரமாக மாறி புண்யமான உன் குலத்தை , மகோன்னதமாக ஆக்குவாய். என்னை ஏன் சற்றும் திரும்பி பார்க்கவில்லை. ப்ரிய ராமா! , என்னுடன் ஏன் பேச தாங்கள் மறுக்கிறீர்கள். இளம் வயதில், அதே இளம் வயது மனைவியாக நான் உங்களை வந்து சேர்ந்து, கூடவே சஹ தர்மசாரிணீ என்று உன்னை தொடர்ந்து வந்தேனே, என்னையும் இந்த கொடிய துன்பத்திலிருந்து விடுவித்து, உன்னுடன் அழைத்துக் கொள்.
 
★என்னை விட்டு நீ தனியே எப்படி போகலாம்.  இந்த உலகை விட்டு மேலுலகம் செல்பவன், என்னை மட்டும் இங்கேயே வருந்தி புலம்ப விட்டுச் செல்வது எப்படி சரியாகும்?. மங்களமான வஸ்துக்களை தன்னுடைய உடலில் தரித்தவன், என்னால் ஆலிங்கனம் செய்யப் பட்ட இந்த உடல், காகமும் கழுகுகளும் தின்று தீர்க்கப் போகின்றனவா? அக்னி ஹோத்ரம் முதலிய யக்ஞங்களைச் செய்தவன், யாகத்தில் நிறைந்த தக்ஷிணைகள் கொடுத்து திருப்தி செய்தவன், உனக்கு அக்னி ஸம்ஸ்காரம் செய்ய கொடுத்து வைக்கவில்லையே?
என்று உரக்க கதறி அழுதாள்.
 
வணக்கத்துடன
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை...................
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
226/14-11-2021
 
சீதையின் சோகமும்
திரிசடையின் தேறுதலும்...
 
★மேலும், தமையன் ராமனுடன் வனவாசம் செய்ய புறப்பட்டு , முடிவில் திரும்பி தனியாக வரும்
லட்சுமணனைப் பார்த்து, தாய் கௌசல்யா, மூன்று பேரில் ஒருவனாக வருகிறாயே என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்து எடுக்கப் போகிறாள். அப்படி கேட்கும் பொழுது, அவன் என்ன பதில் சொல்வான்? உன்னுடன் நட்பு கொண்ட சுக்ரீவன் படை பலத்துடன், இரவு தூங்கும் பொழுது ராட்சதர்கள் வதம் செய்து விட்டார்கள் என்று சொல்வானா? தூங்கும் பொழுது வதம் செய்யப் பட்ட உன்னையும், அரக்கனின் அசோகவனத்தில் உள்ள  என்னையும் நினைத்து, அவன் இதயமானது  பிளந்து போகும்படி வேதனைப் படுவான். அதிக நாள் உயிருடன் இருக்க மாட்டான்.  
 
★ராமா, அதிர்ஷ்டக் கட்டையான என்னால், ராஜ குமாரன்  ராமன் சமுத்திரத்தைக் கடந்து வந்தும், ஒன்றுமில்லாதவன் போல மடிந்து போக நேரிட்டது. தசரத குலத்தில் வாழ்க்கைப் பட்டவள் நான். என்னை ரகு குலத்தை கெடுக்க வந்தவள் என்று அறியாமல், மருமகளாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள். தசரத  புத்திரனான ராமனுக்கு மனைவியாக வந்து அவனுக்கு காலனைத் தான் என்னால் தர முடிந்திருக்கிறது. ஏதோ தானம் கொடுக்கப்படுவதை நான் தடுத்து இருக்கிறேன், போலும். அந்த பாபம் தான் என்னை வாட்டுகிறது. அதிதியாக யார் வந்தாலும், அள்ளி அள்ளிக் கொடுத்த குடும்பத்தில் வந்து சேர்ந்த நான், இப்படி அல்லல் படுவானேன்.  
 
★ராவணா!, ஒரு காரியம் செய். என்னையும் வெட்டி இந்த ராமன் உடல் மேலேயே போட்டு விடு. பதி பத்னிகளை சேர்த்து வைத்த புண்ணியம் உனக்கு நிச்சயம் கிடைக்கும். என்னையும் வெட்டி, என் தலையோடு தலை, உடலோடு உடலாக ராமனுடன் சேர்த்து வை. ராவணா, நானும் என் பதியுடன் செல்வேன். இவ்வாறு திரும்பத் திரும்ப, துண்டிக்கப் பட்ட ராமனது தலையையும், அவன் வில்லையும் பார்த்த வண்ணம் அழுது அரற்றினாள்.
 
★இவ்வாறு அழுது புலம்பும் சீதையைப் பார்த்தபடி நின்று இருந்த ராவணனிடம் ஒரு சேவகன் அருகில் வந்து, கை கூப்பி வணங்கியபடி, அரசே! நமது சேனாபதி ப்ரஹஸ்தன் தங்களை காண வந்திருக்கிறார். மந்திரிகள் அனவரையும் கூட்டி வைத்துக் கொண்டு தங்கள் வரவுக்காக காத்திருக்கிறார் என்றான்.    இதைக் கேட்டு ராவணன் அவசரமாக, அசோக வனத்தை விட்டு, மந்திரிகளை சந்திக்கச் சென்றான்.  சீதை, ராவணன் சொன்ன கொடிய வார்த்தைகளை நம்பி, துக்கம் தாங்க முடியாமல் கதறி அழுதாள். என் கணவர் இல்லாத உலகத்தில் நானும் இருக்க மாட்டேன். என்னையும் கொன்று விடுங்கள் என கதறி அழுதாள்.
 
★சபைக்கு சென்ற ராவணன் தான் செய்த செயலை மிகப் பெருமையாக சொல்லிக் கொண்டான். அதன் பின், ராமனைப் பற்றி தான் தெரிந்து கொண்ட எல்லாவற்றையும்  அவர்களுக்குச் சொன்னான்.  அதேசமயத்தில் அந்த அசோக வனத்தில் சீதையின் எதிரில் வைக்கப் பட்டிருந்த வில்லும், துண்டிக்கப் பட்ட ராமர் தலையும், மாயமாக மறைந்தன. அரசன் ராவணன் அந்த இடத்தை விட்டு அகன்றதால் அவையும் மறைந்து விட்டன.  தன் மந்திரி சபையில், ராவணன் இந்த நிகழ்ச்சியைச் சொல்லி சிரித்துக் கொண்டு இருந்தான். மந்திரிகள் இதன் பின், தாங்கள் வந்த காரியத்தை நினைவு படுத்த, அருகில் படை பலத்துடன் வந்து இறங்கி இருக்கும் பலமான எதிரியையும், அவர்களின்  சக்தியைப் பற்றியும் பேச்சு திசை திரும்பியது. அப்போது ராவணன் தன்னுடைய சேனைத் தலைவர்கள் அனைவரும் உடனே  வந்து என்னை சந்திக்கச் செய்யுங்கள் என்று மந்திரிகளுக்கு உத்தரவு இட்டான். அவன் உத்தரவுப்படி அனைவரும் அரசவையில் கூடினர்.
 
★அசோகவனத்தில் சீதை மூர்ச்சையடைந்து கிடப்பதைப் பார்த்து திரிசடை தன் ஆருயிர் சினேகிதியாகி விட்ட, சீதையிடம் வந்து சேர்ந்தாள். திடுமென அடிபட்டவளைப் போல, நினைவிழந்து சீதை கிடப்பதைக் கண்டாள். புழுதி படிந்த பூமியில் கிடந்த சீதை, மிகவும் சிரமப்பட்டு எழுந்து அமர்ந்தாள். அவள்  அருகில் நெருங்கி விசாரித்தாள் திரிசடை.  ராமரின் வெட்டப்பட்ட  தலை  போல ஒன்றினைக் காட்டியதையும், ராவணன் சென்றபின் அது மாயமாக மறைந்தது பற்றியும், திரிசடைக்கு தெரிவித்தாள்.
 
★அவளை சமாதானம் செய்ய முனைந்தாள் திரிசடை. சீதா! , தூங்கும் ராமனை கொல்வது என்பது நடக்கக் கூடிய காரியமா? அதிலிருந்தே இதில் ஏதோ சூது இருக்கிறது என்பது உனக்குச் சிறிதும் தெரியவில்லையா?
மரங்களையும் கற்களையும் ஆயுதமாக வைத்துக் கொண்டு போராடும் வானரர்களைத் தான் அவ்வளவு சுலபமாக அழித்து விட முடியுமா? தேவேந்திரன் தேவர்களை காப்பதைப் போல, இந்த வானரங்களை ராமன் காத்து அருள்கிறான். இந்த வானர வீரர்கள், ராமனுடைய நிழலில் கவலைகள் ஏதும் இல்லாமல்  இருக்கிறார்கள்.
 
★நீண்ட கைகளும் , அகன்ற மார்பும் உடைய ராமன், கையில் வில்லேந்தி நின்றால், அந்த வில்லின் ஓசையே அவனை தர்மாத்மா என்று உலகுக்கு பறை சாற்றுவது போல ஒலிக்குமே.
அவன் வீரம் மற்றவர்களைக் காப்பாற்றத்தான் பயன் படும். லட்சுமணனுடன் அவன் நலமாக இருக்கிறான். ராமனைச் சுற்றி எப்போதும் லட்சுமணன் மற்றும் அனுமன், சுக்ரீவன் ஆகியோர் இருக்கும் போது அவர்களை கொல்வது என்பது முடியாது.
எதிரி படையை வீழ்த்தக் கூடிய ராமனுக்கு எதுவும் நேரவில்லை. சீதே!, கவலையை விடு. உனது ஸ்ரீராமன், சத்ருக்களை வேரோடு அழிப்பவன், அவன் நலமாகவே இருக்கிறான்.
 
★சற்று முன் நடந்த மனம் கலங்க கூடிய அநத கொடுமையான நிகழ்ச்சிகளால் தவித்துப் போய் விட்ட சீதை,  திரிசடையின் அன்பு வார்த்தைகளைக் கேட்டு மனம் சமாதானம் அடைந்தாள்.  இந்த பூமியை மழைமேகம், நீரால் நனைத்து  மகிழ்விப்பது போல, திரிசடை சீதையை தன்னுடைய அன்பான வார்த்தைகளால் அமைதியடையச் செய்தாள்.  தோழியான சீதைக்கு, மன நிம்மதி கிடைக்கும் விதமாக,  பேச்சுக் கொடுத்தாள் திரிசடை.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை........................
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
227/15-11-2021
 
தயாராக நிற்கும்
படைகள்...
 
★தனது அரசவையில் ராவணன் மீண்டும் பேசத் தொடங்கினான்.
ராமன் பெரிய படையுடன் இங்கு வந்திருப்பதினால் தனது கோட்டைக்கு ராவணன் பெரிய அரண் அமைக்க  ஆலோசனை செய்தான். யுத்தம் ஆரம்பிக்கும் நிலையில் இருப்பதால் இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து ராட்சத வீரர்களும் உடனே இலங்கைக்கு வர வேண்டும் என்று உத்தரவிட்டான். இரண்டு ஒற்றர்களை வரவழைத்த ராவணன், ராமன் தலைமையில் வந்திருப்பவர்கள் எவ்வாறு அந்த பாலத்தை கட்டினார்கள், மேலும் அவர்கள் படைகளின் பிரிவுகள், எண்ணிக்கை, அவர்களிடம் உள்ள ஆயுதங்களின் பலம், அவர்களின் வலிமை பற்றியும் அவர்களில் ஒருவராக உருவம் மாறி சென்று, அவர்களுடன் கலந்து அனைத்தையும் தெரிந்து கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டான்.
 
★இலங்கையின் கிழக்கு வாசல் பக்கத்திற்கு பிரஹஸ்தனையும், தெற்கு வாசல் பக்கத்திற்கு மகாபாரிசுவன், மகோதரன் என்ற இருவரையும், மேற்கு வாசல் பக்கத்திற்கு தனது சிறந்த  மகன் இந்திரஜித்தையும் அவர்களின் படைகளுடன் காவலுக்கு செல்லுங்கள் என்று உத்தரவிட்ட ராவணன்  வடக்கு பக்கத்திற்கு தானே காவல் இருப்பதாக கூறி தனது படைகளை உடனே அங்கு வரவேண்டும் என்று உத்தரவு இட்டான். போர் சம்பந்தப்பட்ட அனைத்து காரியங்களையும் சரியாக செய்து விட்டோம். இனி யுத்தத்தில் நாம் வெற்றி பெற்று விடுவோம் என்று மகிழ்ச்சியுடன் இருந்தான் ராவணன். அங்கு இருந்த அனைவரும் ராவணன் வாழ்க! இலங்கை வெல்க!! என்று கூக்குரலிட்டு, ராவணனை சந்தோஷப்படுத்தி விட்டு பின் அங்கிருந்து கலைந்து சென்று விட்டார்கள்.
 
★ராமரிடம் வந்த விபீஷணன், தன்னுடைய ஒற்றர்கள், அந்த  ராவணன் செய்த எல்லாவித  செயல்களையும், படைகளின் பலத்தையும் பற்றி தெரிந்து கொண்டு வந்துள்ளார்கள் என்ற  செய்தியை கூறினான். மேலும் தேவலோகத்தில் குபேரனை ராவணன் எதிர்க்க சென்ற போது இருந்த அசுரப்படைகளை விட இப்போது இருக்கும் படைகள் மிகப் பெரியதாக இருக்கிறது. ஆனாலும் வெற்றி நமக்கே என்றான் விபீஷணன். ராமரும், சுக்ரீவனும், வீபீஷணனும் யுத்தம் செய்வதை பற்றி கலந்து ஆலோசனை செய்தார்கள்.
 
★ராமர் தனது படைகளை ராவணனின்  கோட்டையின் நான்கு பக்கங்களும் இருக்கும் ராட்சதர்களின் வலிமைக்கு ஏற்ப நான்காக பிரித்தார். கிழக்குப் பக்கம் இருக்கும் பிரஹஸ்தனை எதிர்க்க நீலனை நியமித்தார். தெற்கே இருக்கும் மகோதரன் மற்றும்  மகாபாரிசுவனை எதிர்க்க அங்கதனை நியமித்தார். மேற்கே இருக்கும் இந்திரஜித்தை எதிர்க்க அனுமனை நியமித்தார். வடக்கே இருக்கும் ராவணனை நானும் லட்சுமணனும் எதிர்ப்போம். எங்களுடன் அரசன் சுக்ரீவனும், ஜாம்பவானும், விபீஷணனும் இருக்கட்டும் என்று கூறினார்.
 
★காலையில் சுவேத மலை மீது ஏறி ராவணனின் கோட்டையை பார்த்த ராமர் அதன் அழகை பார்த்து வியந்தார். திரிகூட மலை மேல் மனதைக் கவரும் அழகுடன் ஜொலித்த நகரமானது, ஆகாயத்தில் தொங்குவது போல் காட்சி கொடுத்தது. இலங்கை கோட்டையின் மதிலை காவல் காத்து நின்ற ராட்சதர்கள் இன்னொரு மதில் சுவர் போல் காணப்பட்டனர். மாளிகைகள், மற்றும் நகரின் அழகையும், செல்வத்தையும் பார்த்த ராமர், ராவணனை நினைத்து மிகவும் வேதனைப் பட்டார். நற்குலத்தில் பிறந்து அதன் பெருமையை அறிந்த ராவணன்,   தானும் அழிந்து, தனது குலத்தையும் அத்துடன் இவ்வளவு அதிகமான செல்வத்தையும், தனது கொடிய மூர்க்கத்தனத்தாலும், மோசமான
அகங்காரத்தினாலும் அழிக்கப் பார்க்கின்றானே என்று மிகவும் வருத்தப்பட்டார். பின்னர்,நமது சிந்தனையை அசுர ராவணனை அழிப்பதில் செலுத்துவோம். தேவையில்லாத சிந்தனைகள் செய்தால் பிறகு வீண் குழப்பம் தான் உண்டாகும் என்று, தனது சிந்தனையை திருப்பி வானரப் படைகளுக்கு உத்தரவு கொடுக்க ஆரம்பித்தார்.
 
★அன்றிரவுப் பொழுது கலைந்து சூரியன் உதித்தது. ராவணன், ராமனுடன் வந்திருக்கும் வானர படைகளின் அளவை கண்டறிய விரும்பினான். ஆதலால் அவன் ரம்பை, ஊர்வசி மற்றும் சில ஒற்றர்களுடன் அரண்மனை கோபுரத்தின் மீது ஏறி நின்று வானர படையை நோக்கினான். வானர படையின் அளவைக் கண்டு, போர் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்தான். வெகு தூரத்தில் ராமர் நிற்பதை கண்டு மனதில் கோபங்கொண்டான். உடனே அங்கு ஒற்றனாகச் சென்ற சாரணனை அழைத்து, அதோ அங்கு கரிய நிறத்தில் நிற்பவன் தான் ராமன் என்பது தெரிகிறது. அருகில் நிற்கும் மற்றவர்கள் எல்லாம் யார்? என்பதை எனக்குச் சொல் என்றான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.......................
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
228/16-11-2021
 
வானர வீரர்களின்
அறிமுகம்- ராவணனுக்கு...
 
 
★எவ்வளவு மோசமான  ஆபத்து நேரிடினும், சீதையை திருப்பிக் கொடேன்  என்று தனது அசட்டு பிடிவாதத்தால் மதியிழந்த இலங்கேசன், தன்னுடன் சீதா மணாளனான ஸ்ரீராமன் போரிட வருகிறான் என்பதை அறிந்து, தனது மாளிகையின்  உச்சிக் கோபுரத்திற்குச் சென்றான். மிகுதியான  ஆவேசங்கொண்டு அலைமோதும் அந்த மாபெரும் வானரச் சேனையை கண்டு ஒரு நொடி திடுக்கிட்டான். அச்சேனை பார்வை எட்டியவரை கடல்போல் வியாபித்திருந்தது. கடல் அலைகள் போல துள்ளித் துள்ளி எழுந்து கொண்டிருந்தது.
 
★கதி கலங்கின ராவணன், தன்
ஒற்றர்களான சுகன், சாரணனை நோக்கி “இதோ அங்கு காணும் சேனைகளின் தலைவர்கள்  யார்? யார்? இதில்  சூரர்களும், மகாபலவான்களும் யார்? எப்போழுதும் உற்சாகத்துடன் முதலில் வந்து  நிற்பவர்கள் யார்? சுக்ரீவன் யார் கூறும் சொல்லை கேட்கிறான்? என கோபமாகவும்,   அதேசமயத்தில் சிறிது  பயம் கொண்டும்  படபடப்பாகவும் கேட்டான் சுகனும், சாரணனும் வானரப் படையின் பிரம்மாண்ட அணிவகுப்பைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்கள்:
 
★சாரணன், ராமனுக்கு அருகில் நிற்கிறானே, அவன் தான் லட்சுமணன். தங்கள் தங்கை சூர்ப்பனகையின் மூக்கை அறுத்தவன். இவன் ராமனை இரவும் பகலும் சிறிதுகூட கண் இமைக்காமல் காவல் புரிகிறான். அவன் பக்கத்தில் இருப்பவன் தான் சுக்ரீவன். வாலியின் சகோதரன். போரில் வாலியை தோற்கடித்தவன் என்றான்.
 
★அவன் அருகில் நிற்பவன் தான் அங்கதன். வாலியின் புதல்வன். வாலியை போல இவனும் மிக்க வலிமை படைத்தவன். அங்கு அங்கதனுக்கு அருகில் மிகவும் பலசாலியாக இருக்கிறான் அல்லவா? அவன் தான் அனுமன். இலங்கைக்கு வந்து அரக்கர்கள் பலரைக் கொன்று, நம் நகருக்கு தீமூட்டியவன். அனுமன் அருகில் நிற்பவன் தான் நீலன். இவன் பிறர் வியக்கும் அளவுக்கு மிக்க ஆற்றல் மிக்கவன். இவனை காட்டிலும் சிறிது மாறுபட்டு இருப்பவன் தான் நளன். இவன் தான் ராமர் முதலிய வானரங்கள் கடலைக்.  கடந்து  வருவதற்கு ஐந்து நாட்களில் கடலின் மேல் அந்த பெரிய அணையைக் கட்டியவன்.
 
★அங்கு கரடி போல நிற்கிறான் அல்லவா? அவன் தான் கரடி இனத் தலைவன் ஜாம்பவான். அனைத்தையும் தன் அறிவால் உணரக்கூடிய ஓர் ஆற்றலைப் பெற்றவன். உலகங்களை அழிக்கும் அளவிற்கு வலிமை உடையவன். நீலன், வானரப் படையின் ஒரு பிரிவின் சேனைத் தலைவன். சுக்ரீவன், வானர சேனையின் முதல் கவசமாக நிற்கிறான்.வாலியின் புதல்வன் அங்கதன்,படையின் இரண்டாம் கவசமாக திகழ்கிறான் என்று
சாரணன் வானர வீரர்களைப் பற்றி ராவணனிடம் கூறினான். பிறகு அவன் இந்த வானரப் படைகளின் ஆரம்பமும், முடியும் எல்லையும் தெரியவில்லை என்றான். பிறகு  விபரமாக மற்ற வானர வீரர்களைப் பற்றியும் கூற ஆரம்பித்தான்.
 
★அடர்த்தியான சந்தன மரக் காடுகளில் வசிப்பவனான நளன் என்ற வானர வீரனின் சேனை, பத்து லட்சம் வானர வீரர்களைக் கொண்டது. யாவராலும் மனதில் நினைக்க முடியாத  அற்புதமான அணையை சமுத்திரத்தில் கட்டியவன் நளன் என்ற இந்த வானரன். மூவுலகிலும் புகழ் பெற்றவன். புத்தி கூர்மையிலும், வெற்றி அடைய திட்டம் போடுவதிலும் நிகரற்றவன்.
 
★கோமதிக்கரையில் உள்ள சங்கோசனம் என்னும் முக்கிய பிரதேசத்தின் சிற்றரசன் குமுதன் எனப்படும் வானர வீரன். மஞ்சள், சிவப்பு, வெளுப்பு என பல வர்ணங்களை கொண்ட அடர்ந்த ஊசிபோன்ற முனைகள் கொண்ட வாலுடையவர்கள், லட்சக் கணக்கான இவனுடைய படை வீரர்கள்.  விந்தியம், கிருஷ்ணம், லஹ்யம் என்ற இடங்களில் பரவியுள்ள வானரப் படையினருக்குத் தலைவன் ரம்பன். கபிலவர்ணமும், சிங்கம் போன்ற கம்பீர தோற்றமும் கொண்ட இவனது சேனை மூவாயிரம் லட்சம் படைவீரர்கள் கொண்டது.
 
★சால்வேய  பிரதேசத்தின்
நாற்பது லட்சம் தொகையைக் கொண்ட விஹாராகர்கள் எனும் வானர வீரர்கள், தங்களின்    தலைவனான அரசன் சரபன் என்பவனின்  தலைமையின் கீழ் பணியாற்றுகின்ற மிக்க வீரம் பொருந்தியவர்கள். பாரியாதர என்னும் மலைப்பிரதேசத்தின் படைத்தலைவன், மனஸன் என்னும் வானர வீரன். இவன் சேனையின் பேரொலி ஒன்றே எதிரியின் நெஞ்சை பிளந்து விடும். இந்த சேனையின் எண்ணிக்கை ஐம்பது லட்சம்.
 
★தர்தர பிரதேசத்து வினதன் என்ற வானர வீரனது மிகப் பெரும் சேனையாகும். எதிரிகள் மீது திடீரென்று தொப்பென்று குதித்து எதிரிகளை கொல்வதே இவர்கள் போர்முறையாகும்.
அவன் அருகில் நிற்பது
இவர்களது சேனைத் தலைவன், குரோதன். காவிக்கல் நிறத்துடன் வளரும் ஆற்றலையும், மிகுந்த ஆண்மையையும் கொண்ட வீரமான எழுபது லட்சம் வானரப் படைகளின் தலைவன் கவயன். நகங்களையும், பற்களையுமே ஆயுதமாக கொண்ட சூரர்கள் இவர்கள்.
 
★ஆயிரமாயிரமாய், பனைமரம் போல் உயர்ந்து. ஆர்த்தெழுந்து, மலை சிகரங்களையும், மற்றும் மலைகளையும் பெயர்த்தெடுத்து பந்தாடுகின்ற சேனையின் தலைவன், தாரன் என்னும் வீரன். மழமழப்பாயும், மிகுந்த  வெண்மையாகவும், அதிக தூரம் நீண்ட தாடையும், சிவப்பு, மஞ்சள் வெண்மை ஆகிய வர்ணமான நுனியுடன் துடிக்கும் வாலை உடையவர்கள். மேலும்...
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.....................
 
[7:46 pm, 16/11/2021] Naga. Suba.Raja Rao Salem: துளசி மகிமை
~~~~~
 
★ருக்மணி, சத்யபாமா ஆகிய இருவரும் கிருஷ்ண பரமாத்மாவின் மனைவியர். லெட்சுமியின் மறு அவதாரம் ருக்மணி ஆவார். ஒரு நாள், கலக மன்னன் நாரதர், சத்யபாமாவைப் பார்க்க வந்தார். அவருக்கு ருக்மணி விஷயத்தில் கொஞ்சம் பொறாமை உண்டு. ஆகவே இனி வரும் பிறவிகளிலும் கிருஷ்ணன் தனக்கு கணவனாக வேண்டும் என்றும் அதற்கு வழி என்ன என்றும் கேட்டார்.
 
 ★நாரதர் வந்த வாய்ப்பை நழுவ விடுவாரா? அவர் சொன்னார்: பிராமணர்களுக்கு தானம் கொடுத்தால் அது இனி வரும் ஜன்மங்களில் பன்மடங்காகக் கொடுத்தவருக்கே திரும்பிவரும் என்ற நம்பிகை உள்ளது. ஆகவே கிருஷ்ணனை எனக்கு தானம் கொடுத்துவிடு. நீ எத்தனை பிறவி எடுத்தாலும் அவர் உனக்கே கிடைத்து விடுவார்.
 
★சத்யபாமா சொன்னாள்: அப்படியே ஆகட்டும், ஸ்வாமி! உங்களுக்கே கொடுத்து விட்டேன்.  கிருஷ்ணரும் நாரதருடன் புறப்பட்டார். நாரதருக்கு எடுபிடி வேலை செய்யும் ஆளாக கிருஷ்ணன் இருந்தார். நாரதரின் வீணையைச் சுமக்கும் வேலை, மூன்று உலகங்களுக்கும் அவர் பின்னால் ஓடும் பையனாக இருந்தார்.
 
★தேவலோகம், வைகுண்டம், கைலாசம், குபேரனின் அளகாபுரி, இந்திரனின் அமராவதி, பிரம்ம லோகம் முழுதும் செய்தி காட்டுத் தீ போல பரவியது. கண்ணன் மீது தீராக்காதல் கொண்ட ஏனைய பெண்களும் மனைவியரும், அவரை உடனே திருப்பித் தரவேண்டும் என்று நாரதரிடம் முறையிட்டனர். அவர்கள் அனைவரும் சத்யபாமாவிடம் சென்று அனல் பறக்கப் பேசினர். அப்பொழுதுதான் தெரிந்தது அவர் செய்தது தவறு என்று. உடனே அவரும் நாரதரிடம்
ஐயா!, என் கணவரை உடனே திருப்பி அனுப்பவும் என்று செய்தி அனுப்பினாள்.
 
★நாரதர் சொன்னார்:- பிராமணர்களுக்குத் தானம் கொடுத்த எந்தப் பொருளையும் திரும்பி வாங்குவது தவறு. வேண்டுமானால் உங்களுக்குத் திருப்பித் தருகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. கிருஷ்ணனின் எடைக்குத் தக்க அளவு தங்கக் கட்டிகள் தரவேண்டுமென்றார்.
 
★உடனே கிருஷ்ணனை தராசின் ஒரு தட்டில் உட்காரவைத்து, அங்குள்ள பெண்கள் அனைவரும் தங்களுடைய நகைகளை தராசின் அடுத்த தட்டில் வைத்தனர். இப்படியாக துலாபாரம் ஆரம்பமானது. கிருஷ்ணனின் எடைக்குப் பக்கத்தில்கூட வரவில்லை அவர்களுடைய நகைகளின் எடை! மேலும் மேலும் தங்க கட்டிகளைச் சேர்த்தும் பலனில்லை.
 
★உடனே அவர்கள் எல்லோரும் ருக்மணிக்குச் செய்தி அனுப்பினர். அவள் விரைந்தோடி வந்து எல்லோர் நகைகளையும் எடுங்கள் என்று உத்தரவிட்டாள். தான் கொண்டுவந்த ஒரே ஒரு துளசி இலையை அந்தத் தராசுத் தட்டில் வைத்தார். கிருஷ்ணன் உட்கார்ந்த தட்டும் மிகவும் லேசாகி மேலே எழும்பியது. எல்லோரும் துளசியின் மகிமையை அறிந்தனர். நாரதரும் சிரித்துக் கொண்டே யாருக்கும் தெரியாமல் நழுவிவிட்டார்.
 
★இந்துக்கள் எல்லோர் வீட்டிலும், குறிப்பாக வைணவர்கள் வீடுகளில், துளசி மாடமிருக்கும். அதைத் தினமும் வழிபடுவதும், கோலமிட்டுப் பூஜை செய்வதும் வழக்கம். வடநாட்டில் கார்த்திகை மாத (அக்டோபர்-நவம்பர்) ஏகாதசி நாளில் துளசி கல்யாணம் செய்வது வழக்கத்தில் உள்ளது. துளசி-விஷ்ணு கல்யாணம் முடிந்தவுடன் கல்யாண சீசன் ஆரம்பமாகிவிடும்.
 
★துளசி கல்யாணம் செய்தால் கன்யா தான புண்யம் கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. கன்யாதானம் என்பது ஒருவருடைய பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதாகும். இதையும் இந்துக்கள் புனித காரியமாகவே கருதுவர்!
 
துளசி கல்யாண வைபோகமே!
 
--நாக சுபராஜராவ்
[3:48 pm, 17/11/2021] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
229/17-11-2021
 
வானர வீரர்கள்
அறிமுகம்- 2
 
★மேலும் சாரணன் கூறத் தொடங்கினான். நர்மதையை சார்ந்த ரிஷவான் என்னும் பிரதேசத்திற்கு, கீர்த்தி வாய்ந்த தூம்ரன் என்பவன் சேனாதிபதி ஆவான். இவனது லட்சக் கணக்கான வானரப்படையினர் திடீரெனப் பாய்ந்து எதிரிகளை கடித்தே கொன்று விடும் மிக்க வல்லமைப் படைத்தவர்கள்.
 
★இவன்தான் உலகப் புகழ்பெற்ற ஜாம்பவான். இவன்தான் கரடி சேனையின் பெருந்தலைவன். தேவாசுர யுத்தத்தில் ஜாம்பவான் இந்திரனுக்கு துணைபுரிந்தவன். சாகாவரம் பெற்றவன். ஆழ்ந்த சிந்தனை கொண்டவன். மேலும் இவனும், இவனைச் சார்ந்த  கரடிகளும், மரமேறி, மலை தாவி, குன்றுகளை கிள்ளி பறித்து, கீழே இருக்கும் எதிரிமீது வீசி, பொடியாக்கி விடும் வல்லமை பெற்றவர்கள். இவன்தான் கரடிகளின் பிதாமகனான சன்னாதகன். சேனைகளுக்கு ஆலோசனை கூறி தகுந்த சமயத்தில் மிகவும் பயங்கரமாக தாக்கி வெற்றி பெருவதில் வல்லவர்கள்.
 
★இந்திரனை உபாசனை செய்து தேவதையாக பெற்று, அமரர் அருள் பெற்றவன் தம்பன் எனும் போர்வீரன். யோஜனைக்கு யோஜனை அடிவைத்து, உயரக் கிளம்பி அங்கேயே ஸ்தம்பித்து நின்று, உடலையும் யோஜனை அளவு பெருக்கி தொப்பென்று, எதிரிப்படையை மோதி நசுக்கி
உயிரை மாய்க்கும் மகாசூரன்.
குபேரன் மன்னர் வசிக்கும் இடத்தில் இருக்கும் கரதன் என்பவன் மிகப் பிரசித்தி பெற்ற பராக்கிரமன். கங்கையைச் சார்ந்த மகேந்திர மலைக்கு சமமான உசீரபீஜமென்னும் மலைபிரதேசத்தில் தனி ஆட்சி புரிபவன், இவனுடைய படை, புழுதியை வானளவாக உயர்த்தி, எதிரிப்படையை திக்குமுக்காடச் செய்து, மூச்சுதிணற வைத்து, அவர்களை மாய்க்கும் முறையை கையாள்பவர்கள்.
 
★சேது பந்தனத்தை மிகவும் வெற்றிகரமாக முடித்துவைத்த  கோலாங்கூலம் என்ற வீரமான கருங்குரங்குப் பெரும்  படையின் சேனாதிபதி, கவாஷன். மேலும்
கோரின யாவும் கொடுக்கவல்ல சிறந்த முனிவர்கள் வசிக்கும் புனிதமான காஞ்சன மலைப் பிரதேசத்தின் தலைவன், கேசரி. இவன் மகாவீரன் அனுமனின் தந்தையுமாவான். மகனுக்கும், ஶ்ரீராமனுக்கும் உதவிட லட்சக் கணக்கான வீரர்களுடன் வந்துள்ளான்.
 
★மதயானை போன்றவர்களும், மலைச் சிகரங்களை நிகர்த்த வீரர்களும், இஷ்டமான உருவம் எடுப்பவர்களும், தேவர்களுடைய பராக்கிரமும் கொண்டவர்கள் தான், மைந்தன் மற்றும் தவிதன் என்னும் போர்வீரர்கள். பிரம்ம தேவர் அனுமதி பெற்று, அமிர்தம் உண்டவர்கள். அழிவே சிறிதும் இல்லாதவர்கள். சாகா வரம் பெற்றவர்கள்.
 
★அரக்கர் வீரர்களின் அழிவிற்கு முதன்முதலாக அச்சாரம் போட்ட வானரன் அனுமன். நினைத்த உருக்கொள்பவன். அங்குள்ள வானரர்களின் அரசனான சுக்ரீவனது முதல் அமைச்சன். அளவற்ற ஆற்றலும், பலமும்,
ஆண்மையும் ஒருங்கே அமையப் பெற்றவன். மாபெருங்கடலை பசுவின் குளம்படியாகத் தாண்டி, சீதா தேவியை கண்டு ஆறுதல் அளித்து, அசோகவனத்தை அழித்து, தன்னை எதிர்க்க வந்த கிங்கரர்கள், ஜம்புமாலி, ஏழு மந்திரி குமாரர்கள், ஐந்து சேனைத் தலைவர்கள், அட்சயகுமாரன் ஆகியோரை முதலிலேயே வதம் செய்தவன். இலங்கையை தீக்கிரையாக்கி, தங்களை  திடுக்குறச் செய்து
நிர்அபாயமாய் வெற்றியுடன் ராமரிடம் திரும்பி சென்று சேர்ந்த வானர வீரன், இந்த அனுமான். இலங்கையின் அழிவிற்கு முதன்முதலில் வித்திட்டவன் இவனே.
 
★மலைபோல் ஆற்றலாலும், புகழாலும், மதியாலும், வீரம் பொலிந்த உன்னதமான பிறவி  என்பதாலும், பர்வதங்களில் இமயமலை போல் சிறப்பாக விளங்குபவன் சுக்ரீவன். இவனே அதிசயமான வன்மை கொண்ட திவ்யமாக கஜபுஷ்பி என்ற மாலையும், மிகப்பரந்த  வானர சாம்ராஜ்யத்தையும் நிரந்தரமாக அடைந்தவன். ரகுநாதனுக்கு ஈடு இணையற்ற துணைவனாக காத்திருப்பவன்.
 
★அவனருகில் இருப்பது குமுதீ என்னும்  சேனைத் தலைவன். இவனிடம் நூறாயிரம் வீரர்கள் உண்டு. இவன் நிர்வகிக்கும் படையின் வீரர்கள்,இளைஞர்கள், நல்ல உழைப்பாளிகள் ஆவர். இவர்களுடைய வால், நீண்டு, தாம்ர வர்ணத்தில், மஞ்சள் நிறமாக, கருத்த, வெண்மையான என்று பல வகை வர்ணங்களில் இருக்கும். மிகவும் கோரமாக சண்டையிடக் கூடியவர்கள். யுத்தம் செய்ய அதிக ஆவலுடன் இவர்களும் இப்போது தயாராக இருக்கிறார்கள். துடிப்புடன், புதுமையாக என்ன செய்யலாம், இலங்கையை வீழ்த்த தாங்களும் ஏதாவது செய்ய வேண்டும் என்று துடிக்கிறார்கள்.
 
★இந்த வானர வீரர்களின் அணிவகுப்பு இதுதான். நீலன், மைந்தன், தவிதன் ஆகியோர் கிழக்கு வாயிலிலும்,  அனுமன், பிரமாதி, பிரகசன் ஆகியோர் மேற்கு வாயிலிலும், அங்கதன், ரிஷபன், கேசரி ஆகியோர் தெற்கு வாயிலிலும், ஶ்ரீராமனும், லட்சுமணனும், விபீஷணனும் வடக்கு முனையிலும் ஒரே நேரத்தில் தாக்குதலுக்கு ஆயத்தமாக இருக்கின்றனர். முப்பத்தாறு லட்ச  வீரர்கள் கொண்ட, மத்தியிலிருந்து சுக்ரீவனின் அணிவகுப்புப்படை அவசரத் தாக்குதலுக்கு மிக்க துணிச்சலுடன் காத்து நிற்கிறது. லட்சுமணனும், விபீஷணனும் இடைவெளிகளில் ஒவ்வொரு கோடி வானரப்படையை நிறுத்தி உள்ளனர். இவ்வாறு சாரணன் கூறி முடித்ததும், இலங்கேசன் என்று அறியப்படும்  அசுர சாம்ராஜ்யாதிபதியான மாவீரன்  ராவணேஸ்வரன் கோபத்தின் எல்லைக்கே சென்று விட்டான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை..................
 
குறிப்பு:-
 
இந்த ராவண வதத்திற்குத்தான் ஶ்ரீராமனுக்கு இந்த வானரப் படைகள் எவ்வளவு பாசமுடன், ஆதரவாகவும், பெருமதிப்புடன்  அனுசரணையாகவும் இருந்து இருக்கிறார்கள்! எப்பேர்ப்பட்ட
மெய் சிலிர்க்கும்படியான ஒரு
போர் ஏற்பாடு! ஶ்ரீராமர் வெற்றி வாகை சூடியதற்கு, போர் வீரர்களின் இந்த அணிவகுப்பும், திட்டமிடுதலும், துரிதமாக இயங்கியதும்தான் எவ்வளவு வியப்புக்குரியது!  ஜெய் ஶ்ரீராம்!
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
230/18-11-2021
 
சுக்ரீவனும்
இலங்கேசனும்...
 
★ராமர் அனைத்து வானரப் படை பிரிவுகளுக்கும் யுத்தத்தில் செய்ய வேண்டியதையும், நடந்து கொள்ள வேண்டிய நேர்மையான முறைகளையும் பற்றி சொல்ல ஆரம்பித்தார். ராட்சதர்கள் யுத்தம் நடக்கும் நேரத்தில் பல மாய வேடங்களில் வந்து நம்மை குழப்புவார்கள். ஆகவே நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ராட்சதர்கள், வானர வேடத்தையும், கரடிவேடத்தையும் போட்டு நம்மிடம் வந்து யுத்தம் செய்ய, அவர்களின் கர்வம் இடம் தராது. எனவே வேறு பலவித பயங்கரமான பெரிய வேடங்கள் அணிந்து வந்து நம்மை மிகவும் பயமுறத்துவார்கள்.
 
★அவர்களின் உருவம் மற்றும் ஆயுதங்கள் வேண்டுமானால் மிகப்பெரியதாகவும், பயங்கர  கொடூரமானதாகவும் இருக்க வாய்ப்பு உண்டு.  ஆனால் நம்முடைய வலிமைக்கு முன்பு, அவர்களின் வலிமை மிகவும் குறைவு. அவர்களின் உருவத்தை பார்த்து நாம் பயப்படாமல், யுத்தம் செய்தால் வெற்றி நமக்கு நிச்சயம் கிடைக்கும். இதனை அனைவரும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். நமது வானர படைகளும், கரடி படைகளும் தங்களது சொந்த வடிவத்தில் யுத்தம் செய்யட்டும் என்று சொல்லி முடித்தார்.
 
★ராவணனின் படை பலத்தைப் பார்க்க எண்ணிய ஶ்ரீராமர் அனைவருடனும் அருகில் இருந்த சுவேத மலை மீது ஏறி நின்று இலங்கையை பார்த்தார்.  அந்த அழகான நகரைப் கண்டு மிகவும் வியந்து , ராவணனின் இந்த அதீத சுயநலத்தால், அவனுடன் சேர்ந்து அழகான  இந்த நகரமும் அழியப் போகிறதே என்று தன் மனதில் எண்ணி மிக வருத்தம் கொண்டார்.  அந்த சமயத்தில் தான் ராவணன் அரண்மனை கோபுரத்தில் இருந்து, இவர்கள் அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்தான்.
 
★ராவணன், சாரணனிடம் பேசிக் கொண்டிருப்பதை தூரத்தில் இருந்த விபீஷணன் பார்த்தான். உடனே விபீஷணன் ராமரிடம் சென்று, பெருமானே! அதோ! அந்த அரண்மனையின் மேல் கோபுரத்தில் நின்றுக் கொண்டு இருக்கிறான் அல்லவா? அவன் தான் ராவணன் என்றான். அவன் இரு பக்கத்திலும் இருப்பவர்கள் தேவலோகத்து பெண்களான ரம்பை, ஊர்வசி என்றான். ராவணனை பார்த்த சுக்ரீவன், தனது யுத்த ஆர்வத்தினால் ராவணன் மீது கோபங்கொண்டு வானத்தில் ஒரே தாவலில் பாய்ந்து, ராவணன் இருக்கும் மாளிகையின் உச்சிக்கு சென்று அமர்ந்தான்.
 
★அங்கே ராவணன் தனது பரிவாரங்களோடு அமர்ந்து இருந்தான். ராவணனை கண்ட சுக்ரீவன், ராவணா! என்னிடம் நீ இன்று சிக்கினாய், இன்றோடு நீ அழிந்தாய் என்று ராவணனின் மேல் பாய்ந்து, அவன் கீரிடத்தை தள்ளி, ராவணனை ஓர் அறை அறைந்தான். எதிர்ப்பாராமல் இப்படி சுக்ரீவன் ராவணன் மேல் விழுந்ததை,  தேவலோகத்து பெண்கள் பார்த்து பயந்து போய் அங்கிருந்து ஓடினர். ராவணன், சுக்ரீவனைப் பார்த்து எதற்காக இங்கு வந்தாய்? என்றான். அரக்கனே! உன்னை அழிக்கத் தான் இங்கு வந்துள்ளேன் என கூறி ராவணன் மீது பாய்ந்தான்.
 
★தன்னை தாக்க யாரும் இல்லை என்ற ஓர் கர்வத்தில் இருந்த ராவணனுக்கு விழுந்த அடியில் அவனுக்கு சிறிது நேரம் என்ன நடக்கிறது என்று புரியவில்லை. உடனே சுதாரித்துக் கொண்ட ராவணன், தானும் யுத்தத்திற்கு தயாரானான். இருவருக்கும் இடையே பெரிய மல்யுத்தம் நடந்தது. இருவரும் மல்யுத்தம் புரிவதில் சிறந்த  வல்லவர்கள். இருவரும் தங்களது வலிமையை மற்றும் திறமையையும் காட்டி சண்டையிட்டார்கள். சிறிது நேரத்தில் வானர சுக்ரீவனுடன் சண்டையிட்ட அரசன்   ராவணன் மிகவும் கஷ்டப்பட்டான். வானர அரசன் சுக்ரீவனால் தாக்கப்பட்ட ராவணன் வலியால் கத்தினான்.
 
★பொறுமையிழந்த ராவணன், சுக்ரீவனை இரத்தம் சிந்தும் அளவிற்கு தாக்கினான். பலமாக உதைத்தான். இருவரும் மிகக் கடுமையாக சண்டையிட்டார்கள். அங்கு ராமர், சுக்ரீவன் மட்டும் தனிமையில் நின்று போர் புரிவதை கண்டு மிகவும் வருந்தினார். சுக்ரீவா! நான் உன்னை இழந்து, சீதையை மீட்டுச் செல்வது வெற்றியாகாது. பலம் பொருந்திய ராவணனை வெல்வது என்பது எளிதானது அல்ல. ஆதலால் நீ நிதானத்தை கடைப்பிடித்து, இங்கு வந்துவிடு என மனதில் நினைத்துக் கொண்டு மிகவும் வருந்தினார். அப்பொழுது சுக்ரீவன், அரசன் ராவணனின் ஒளி மிகுந்த கிரீடத்திலிருந்து மணிகளைப் பறித்துக் கொண்டு மீண்டும் தாவி ராமர் இருக்குமிடம் வந்து சேர்ந்தான்.
 
★அங்கு வந்து நின்ற சுக்ரீவனை கண்ட ராமர் நிம்மதியடைந்து
சுக்ரீவனை தழுவிக் கொண்டார்.
ராமர் சுக்ரீவனிடம், தம்பி! சுக்ரீவா! பலம் பொருந்திய ராவணனிடம், நீ தனியாகச் சென்று போரிடலாமா?  ஏன் இப்படி செய்தாய்? ஒருவேளை அவனால் உன் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்திருந்தால் நான் என்ன செய்வேன் எனக் கூறி வருந்தினார். பிறகு சுக்ரீவன், எனக்கு எம்பிராட்டி சீதையை கவர்ந்து சென்ற ராவணனை பார்த்தவுடன் அவனின் தலையை கொய்து வரச் சென்றேன். ஆனால் என்னால் ராவணனின் தலையை கொய்துவிட்டு வராமல் அவனின் மகுடத்தில் உள்ள மணிகளை கொண்டு வந்துள்ளேன் என்றான். இதனால் என்னுடைய செயல் சிறப்படையதாகாது எனக் கூறி வருந்தினான்.
 
★இதைக் கேட்ட விபீஷணன், சுக்ரீவா!, நீ வருந்தாதே! நீ செய்த செயல் மிகவும் அரிதானது. ராவணனின் கிரீட மணிகளை பறிப்பது என்பது எளிதான செயல் அல்ல. நீ அவனின் உயிருக்கு மேலான மணிகளை அல்லவா பறித்துக் கொண்டு வந்துள்ளாய். இதைக் காட்டிலும் வீரச் செயல் வேறு எதுவும் இல்லை என்றான். அப்போது ராமர் அன்பு சுக்ரீவா!  என்று அழைத்து...
 
வணக்கத்துடன
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.......................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
231/19-11-2021
 
ராவணன் கலக்கம்...
 
 
★ஶ்ரீராமர்,  அன்பு சுக்ரீவா! நீ செய்த இந்த செயலால், உனது வீரத்தையும் பராக்கிரமத்தையும் பார்த்து நான் வியப்பும், மிக்க மகிழ்ச்சியும் அடைகிறேன். ஆனால் அரசனாக இருப்பவன் எதிரிக்கு யுத்தம் செய்ய நான் வருகிறேன் என்று முன்னரே அறிவிக்காமல்  இப்படி திடீர் என்று தாக்குதல் செய்யக் கூடாது. இது தர்மத்திற்கு மிக விரோதமானது. மேலும் உடன் இருப்பவர்களுடன் ஆலோசனை செய்யாமல் இது போல் அபாய காரியத்தில் ஈடுபடக்கூடாது. இது அரசனுக்கு நன்மையானதல்ல. எனவே இனிமேல் இப்படிப்பட்ட அதிர்ச்சி மூட்டும் காரியங்களைச்  செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
 
★அதற்கு சுக்ரீவன் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. உங்களை கேட்காமல் நான் சென்றது தவறு தான். தங்களுக்கும் மாதா சீதைக்கும் வஞ்சகம் செய்து ஏமாற்றிய ராவணனை கண்டதும் என்னுடைய கோபம் மேலோங்கி விட்டது. கோபத்தை என்னால் கட்டுப்படுத்த முடியாமல் இப்படி செய்து விட்டேன். இனி மேல் இப்படி நடக்க கொள்ளமாட்டேன் என்று ராமரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டான் சுக்ரீவன்.
 
★அங்கு, இலங்கையின் அரண்மனையில், ராவணன் தனக்கு ஏற்பட்ட அவமானத்தால் வருந்திக் கொண்டு இருந்தான். ஒரு குரங்கு தன்னை இவ்வளவு அவமானப்படுத்தியதை நினைத்து, நினைத்து மனதில் புழுங்கினான். சுக்ரீவனால் ஏற்பட்ட அவமானம் அவன் மனதில் திரும்பத் திரும்ப தோன்றியது. இதனால் தலைக் குனிந்த ராவணன் யாரிடமும் ஒன்றும் பேசாமல் தன்னுடைய  மாளிகைக்குச் சென்று படுத்துக் கொண்டான். அப்போது ஒரு வாயிற்காவலன் வந்து ஒற்றன் சார்த்தூலன் தங்களை காண வந்திருப்பதாகச் சொன்னான். ராவணன் அவனை உள்ளே வரச் சொல்லி அனுப்பினான்.
 
★ஒற்றன் உள்ளே வந்து ராவணனை வணங்கினான். ராவணன் அவனைப்பார்த்து நீ கொண்டு வந்த செய்தியை கூறு என்றான். மன்னா! வானரப் படைகள் நம் நகரின் எல்லா வாயிலிலும் அணிவகுத்து நிற்கின்றனர்.  அனுமன் தலைமையில் பதினேழு வெள்ளம் (கோடிக்கணக்கான) சேனைகள், தயார் நிலையில்ஃ, இலங்கையின் மேற்குப் புற வாயிலில் நிற்கின்றன. இலங்கையின் பிரதான தெற்கு வாயிலில், வாலியின் மைந்தன் ஆகிய அங்கதன் பதினேழு வெள்ளம் (கோடிக்கணக்கான) வானரப் படையுடன் போருக்குத் தயாராக தன்னுடைய பலத்த  படைகளை அணிவகுத்து நிற்கிறான்.
 
★கிழக்கு வாயிலில், நீலன் எனும் படைத்தலைவன் அதே பதினேழு வெள்ளம் (கோடிக்கணக்கான) சேனையிலும், படையோடு தயார் நிலையில் நிற்கிறான். வானரப் படைகளுக்குத் தேவையான உணவுகளை கொண்டு வந்து கொடுப்பதற்கு இரண்டு வெள்ளம் (கோடிக்கணக்கான) சேனையிலும், சேனையை பல திசைகளுக்கும் அனுப்பி உள்ளனர்.   ராமன், தங்கள் தம்பியான விபீஷணனை போரின் தன்மையை அறிய அடிக்கடி இலங்கை நகரின் எல்லா வாயில்களுக்கும் சென்று கண்காணிக்கும்படி நியமித்துள்ளான்.
 
★ராமனும், அவனின் தம்பி லட்சுமணனும் இலங்கை நகரின் வடக்கு வாயிலில் போரைத் தொடங்குவதற்கு ஆயத்தமாக நிற்கிறார்கள் என்று அந்த ஒற்றன், ராமனின் போர்முனை ஏற்பாடுகள் பற்றி கூறினான். இதைக் கேட்டு ராவணனின் கண்கள் சிவந்தது. இவர்கள் அனைவரையும் நான் அடியோடு ஒழிக்கிறேன் எனக் கூறினான். பிறகு ராவணன் மந்திர ஆலோசனைக் கூட்டத்திற்கு சென்று அங்கு அனைவரையும் வரும்படி கட்டளையிட்டான். அனைவரும் மந்திர ஆலோசனை கூட்டத்திற்கு வந்தனர்.
 
★ராவணன் அவர்களிடம், நம் நகரத்தின் நான்கு புறங்களிலும் வானர படைகள் ஆயத்தமாக நிற்கின்றன. இனி நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதை பற்றி கூறுங்கள் என்றான். அப்பொழுது நிகும்பன் என்னும் அரக்கன் எழுந்து நின்று, நம் நகரை சூழ்ந்துக் கொண்ட இந்தக் கேவலமான  வானரப் படைகளுக்காக நாம் இப்படி வருந்தலாமா? இவர்களைக் காட்டிலும்,  ஆயிரமாயிரம் சேனைகள் நம்மிடம் உள்ளது என்றான்.
 
★மந்திர ஆலோசனையில் நடந்தவற்றை திரிசடை கேட்டுக் கொண்டு சீதையிடம் சென்று கூறினாள். சீதா! ராமனை வெல்ல இவ்வுலகில் எவரும் இல்லை. ராவணன் உன்னிடம் நாடகமாடி உள்ளான். இலங்கை நகரத்தின் போர் முழக்கங்கள் உனக்கு நன்றாக கேட்கிறதா? இல்லையா? ராமன் போருக்கு ஆயத்தமாக இலங்கை நகரின் வாயிலில் நின்றுக் கொண்டு இருக்கிறான். அதனால் நீ கவலைக் கொள்ள வேண்டாம் எனக் கூறினாள். ராவணன் மந்திரிகளுடன் செய்த  ஆலோசனையில், ராவணனின் மாமனான மாலி எழுந்து, ராவணா! காம உணர்வு துன்பத்தைத்தான் தரும் என்பதைப் புரிந்துக் கொள்..
 
வனக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை. ......................
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
232/20-11-2021
 
தூதுவனை அனுப்ப முடிவு...
 
★மாலி தொடர்ந்தான். நமதிந்த
இலங்கைக்குள் புகுந்து, நம் அரக்கர்களை அழித்து, நம் நகரை தீ வைத்த அனுமனின் கையில் என்ன ஆயுதம் தான் இருந்தது? சுக்ரீவன் உன்னுடன் போரிட்டு, உன் கிரீடத்தில் இருந்த மணிகளைப் பறித்துச் சென்றபோது அவன் கையில் இருந்த ஆயுதம் தான் என்ன? உனக்கு இதிலிருந்து தப்பிக்க ஒரு வழி தான் உள்ளது. நீ சீதையை அந்த ராமனிடம் ஒப்படைத்துவிட்டு, அவனிடம் சரணடைவது தான் நல்லது என்றான்.
 
★மாலி சொன்னதை கேட்டு அரசன் ராவணன் கடுங்கோபம் கொண்டு அவனைக் கடிந்துக் கொண்டான். ராவணன் மாலியிடம், என் வலிமை என்ன என்பது தெரியாமல் நீ அதிகமாக பேசுகிறாய். நீ எனக்கு நல்ல வழியைக் காட்டவில்லை, பெரும் அழிவைத்தான் காட்டுகிறாய். நீ இதுபோன்ற அறிவுரைகள் கூறுவதாக இருந்தால், நீ பேசாமல் இருப்பது தான் நல்லது என்றான் கோபத்துடன். மறுநாள் சூரியன் உதித்தான்.
 
★அன்றைய பொழுது கழிந்து, சூரியன் தன் ஒளிக்கற்றைகளை வீசிக் கொண்டிருந்தது. வடக்கு வாயிலுக்கு வெளியே ராமர், தனது பதினேழு வெள்ளம் படையுடன் போர் செய்வதற்கு ஆயத்தமாக நின்று கொண்டு இருந்தார். ராமர், இலங்கேசன் ராவணனுக்காக தன்னுடைய  கோதண்டத்தை கையில் ஏந்தி போருக்குத் தயார் நிலையில் இருந்தார். ராவணன் வடக்கு வாயில் வழியாக போருக்கு வருவான் என வெகுநேரம் எதிர்பார்த்து ராமர் காத்துக் கொண்டிருந்தார். வெகுநேரம் ஆகியும் ராவணன் போருக்கு வருவதுபோல் தெரியவில்லை.
 
★இதற்கு மேல் காத்திருப்பதில் ஒரு பயனும் இல்லை என்று நினைத்த ராமர், விபீஷணனை அழைத்து, இதற்கு மேல் நாம் என்ன செய்ய வேண்டும் என ஆலோசனை தொடங்கினார். ராமர், சிறை வைத்திருக்கும் சீதையை விடுவிக்குமாறும், அப்படி இல்லையென்றால் போருக்கு வருவமாறும் நாம் ஒரு தூதுவனை அனுப்பலாம் என்றார். ராமரின் மிகச்சிறப்பான  இந்த ஆலோசனையை கேட்ட விபீஷணன், இது தான் சரியான செயல் என்றான். சுக்ரீவன், நாம் மிகவும் வலிமை வாய்ந்த ஒரு வீரனை அனுப்பவது தான் சிறந்தது என்றான்.
 
★இதைக் கேட்ட லட்சுமணன், அண்ணா! ராவணனின் மேல் இரக்கம் காட்டி தூது அனுப்புவது சரிதானா? நாம் இப்பொழுது ராவணனை அழிப்பதை விட்டு விட்டு அவனுக்கு சமாதான தூது அனுப்புவதா? அந்த ராவணன், தேவர்கள் முதற்கொண்டு அனைவரையும் கொடூரமாக துன்புறுத்தியவன். அன்னை சீதையையும் கவர்ந்துச் சென்று சிறையில் வைத்தவன். அவன் நம் தந்தை போன்ற ஜடாயுவை கொன்றவன். இவ்வளவு செய்த ராவணனின் மீது கருணை காட்டி அவனுக்கு தூது அனுப்புவது சரி தானா? எனக் கேட்டான்.
 
★ராமர் லட்சுமணனிடம், தம்பி. லட்சுமணா!  நீ  சொல்வது எல்லாம் முற்றிலும் உண்மை தான். அரக்கர்கள் அழிந்து போவது நிச்சயம். ஆனால் நம் தர்ம நெறிப்படி தூது அனுப்புவது தான் பெருந்தன்மையைக் குறிக்கும் என்றார். பிறகு லட்சுமணன் மிக நல்லதொரு  தூதுவனை  அனுப்புவதற்கு சம்மதித்தான். பிறகு அங்கிருந்த அனைவரிடமும் யாரை தூது அனுப்புவது என ஆலோசித்தார். ராமர்,  நாம்  மறுபடியும் நமது அனுமனை அனுப்பினால் நம்மிடம் சிறந்த வீரர்கள் எவரும் இல்லை என அவன் நினைத்துக் கொள்வான். அனுமனை தவிர சிறந்த வலிமைமிக்க வீரர் உள்ளார்களா? என யோசித்தார்.
 
★வானர அரசனான சுக்ரீவனை அனுப்பி வைக்கலாம். ஆனால் அவன் ஏற்கனவே ராவணன் மேல் பாய்ந்து அவனது அழகான கிரீடத்தில் இருந்த மணிகளைப் பறித்து வந்துள்ளான். நளன் அல்லது நீலன் ஆகிய வீரர்கள் வயதில் சிறியவர்கள். மிகுந்த சாமர்த்தியமாக பேசுவதில் அதிக அனுபவம் இல்லாதவர்கள்.
பின் யாரை அனுப்புவது என்று யோசித்தார்கள். உடனே ராமனின் நினைவுக்கு வந்தது வாலியின் மைந்தன் அங்கதன் தான்.
 
★ராமர், அனைவரிடமும் நாம் அங்கதனை தூது அனுப்பலாம் என்றார். அனைவரும் இதற்கு சம்மதித்தனர். அங்கதனை வரச் சொல்லி செய்தி அனுப்பினர். அங்கதனும் உடனே அங்கு வந்துச் சேர்ந்தான். அங்கதன் ராமரை நோக்கி பணிந்து வணங்கினான். பிறகு ராமர் அங்கதனிடம், அங்கதா! நீ தூதுவனாக ராவணனிடம் சென்று நான் சொல்லும் இரண்டு விஷயங்களை கூறி, அதற்கு அவன் கூறும் பதிலை எனக்கு வந்து சொல்வாயாக என்றார். ராமர் சொன்னதை கேட்ட அங்கதன் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தான்.
 
★அங்கதன் ராமரிடம், ஐயனே! தாங்கள் என்னை தூதுவனாக தேர்வு செய்ததை நினைத்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன். நான் ராவணனிடம் என்ன செய்தியை சொல்ல வேண்டும்? என்பதை என்னிடம் கூறுங்கள் என்றான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.......................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
233/21-11-2021
 
அங்கதன் தூது...
 
★அங்கதனை அழைத்த ராமர்,
அங்கதா! அரக்கன் ராவணனிடம் இப்போது நீ தூதுவனாக செல்ல வேண்டும் என்று கூறி அந்த  ராவணனிடம் பேச வேண்டியதை அங்கதனுக்குச்  சொல்லிக் கொடுத்தார். தவத்தினால் நீ பெற்ற வரங்களினாலும், அதன் பயனாக கிட்டிய எல்லையில்லாத  சக்திகளினாலும், மிகுந்த கர்வம் கொண்டு துஷ்டனாகி பாவங்கள் பலவும் செய்து விட்டாய். இந்த உலகத்தில் உள்ளவர்களை மிகவும் துன்புறுத்தி விட்டாய். இறுதியாக ராமரின் மனைவி சீதையை ஏமாற்றி கடத்திக் கொண்டு வந்து விட்டாய். இப்போது உனக்கு இறுதி எச்சரிக்கை செய்கிறோம்.
 
★ராமரின் மனைவியை அவரிடம் ஒப்படைத்துவிட்டு மன்னிப்பு கேட்டு, சரணடைந்து உனது உயிரை காப்பாற்றிக் கொள். இல்லையென்றால் ராமரின் அம்பில் நீ அழிந்து விடுவாய். உனது வலிமையின் மேல் நம்பிக்கை வைத்து யுத்தம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நீ இருந்தால் இறுதியாக உன்னுடைய இந்த இலங்கையை ஒரு முறை சுற்றிப் பார்த்துகொள். யுத்தத்தில் நீ வெற்றி பெறுவாய் என்று உன்னை நம்பி, உனக்கு மிகச் சாதகமாக யுத்தம் செய்ய வருபவர்கள் ஒருவர் கூட தப்பிப் பிழைக்க மாட்டார்கள். இறுதியில் உனக்கு ஈமக்கிரியைகள் செய்யக் கூட யாரும் இருக்க மாட்டார்கள்.
 
★எனவே உனக்கு செய்ய வேண்டிய  ஈமக்கிரியைகளை நீயே செய்து கொண்டு, உனது கோட்டையை விட்டு வெளியே வந்து ராமரிடம் யுத்தம் செய். ராமர் யுத்தத்திற்கு தயாராக, உனது கோட்டை வாயிலில் காத்திருக்கிறார். உன்னை அழித்ததும் இந்த இலங்கைக்கு விபீஷணன் சிறந்த அரசனாக இருப்பான். இந்த இலங்கையை ஆட்சி செய்யவும், இந்த மக்களை காப்பதற்கும் தகுதியானவன் விபீஷணன். ராமர் அவனுக்கு ஏற்கனவே இலங்கையின் அரசன் என்று பட்டாபிஷேகம் செய்துவிட்டார்.
 
★ஆகவேஇவற்றில் சரியான ஒரு வழியை தேர்ந்தெடுக்கும்படி கூறு. இதற்கு அவன் கூறும் பதிலை இங்கு என்னிடம் வந்து கூறுவாயாக எனக் கூறி ராமர் அங்கதனுக்கு விடை கொடுத்து அனுப்பி வைத்தார். ராமரின் கட்டளைப்படி கிளம்பிய அங்கதன், ஒரே தாவலில் ராவணனின் கோட்டைக்குள் நுழைந்து, அவன்  அரசவைக்குள் சென்றான்.  அங்கதன் அரசன் ராவணனுடைய அரண்மனை மணிமண்டபத்தை அடைந்தான். அங்கதனை பார்த்த அரக்கர்கள் அனுமன் தான் திரும்பி வந்து விட்டான் என நினைத்து பயந்து ஓடினார்கள். ராவணனை பார்த்த அங்கதன், இவனை நம்மால் வெல்ல முடியுமா? இவனை ராமரை தவிர வேறு எவராலும் கொல்ல முடியாது என நினைத்து கொண்டான்.
 
★பிறகு அங்கதன் ராவணன் முன்பு நின்றான். அங்கதனை பார்த்த ராவணன், படைத்தளபதி மகோதரனிடம், மகோதரா! இந்த வானரம் நம் இலங்கை நகரை அழித்த வானரமா? எனக் கேட்டான். மகோதரன், அரசே! இந்த வானரம் இளம் வானரமாக இருக்கிறது. ஆதலால் இந்த வானரம் நம் இலங்கை நகரை அழித்த வானரம் இல்லை என்றான். பிறகு ராவணன் அங்கதனை பார்த்து, யார் நீ? எதற்காக இங்கு வந்தாய்? உன்னைக் கொன்று தின்பதற்கு முன் உண்மையைச் சொல் என்றான். இதைக் கேட்டு அங்கதன் பலமாகச் சிரித்தான்.
அங்கிருந்த ராவணனிடம் மிகவும் கம்பீரமாக பேச ஆரம்பித்தான் அங்கதன்.
 
★அனைத்திற்கும் தலைவனான, அனைத்துலகையும் வழி நடத்தக் கூடிய  ஸ்ரீஇராமன் அனுப்பிய தூதன் நான். அவர் உன்னிடம் சொல்லச் சொல்லி சில முக்கிய செய்திகளை என்னிடம் கூறி அனுப்பியுள்ளார். அவற்றை உன்னிடம் சொல்லவே தூதனாக இங்கு வந்தேன் என்றான். ராவணன், வானரமே! உன் தலைவன் என்ன கைலாயத்தில் உள்ள சிவபெருமானா? இல்லை திருமாலா? இல்லை பிரம்ம தேவனா? ஒரு வானரப்படையை கூட்டிக்கொண்டு கடலை தாண்டி வந்த ராமன் தானே உன்னுடைய  தலைவன். ராமன் உலகை ஆள்பவனா? எனக் கூறி மிகுந்த கேலியாகச் சிரித்தான். பிறகு வானரமே! அந்த சிவன் கூட இலங்கைக்குள் தைரியமாக நுழைய முடியாதபோது, கேவலம் ஒரு மனிதனுக்காக நீ இங்கு தூதுவனாக வந்திருக்கிறாய். முதலில் நீ யார்? உன் பெயர் என்னவென்று கூறு என்று ஆணவத்தோடு கேட்டான்.
 
★அங்கதன், தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, அவர்கள் சோர்ந்து போன நிலையில், அவர்களுக்காக ஒருவனாகவே கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுத்த இந்திரன் மைந்தன் வாலியின் புதல்வன் நான். என் பெயர் அங்கதன் என்றான். வாலியின் பெயரைக் கேட்ட ராவணன், அடடே! நீ வாலியின் புதல்வனா? நான் வாலியின் நண்பன் ஆவேன். உன் அருமை தந்தையை கொன்ற ராமனின் பின் நீ செல்லலாமா? இது உன் பெருமைக்கு இழிவல்லவா? நீ உற்ற நேரத்தில் தான் இங்கு வந்துள்ளாய். உன்னை நான் மகனாக பெற்றேன். அந்த மானிடர்கள் எப்படியும் ஒழிந்து விடுவார்கள். உன்னை நான் கிஷ்கிந்தைக்கு அரசனாக முடி சூட்டுகிறேன் என்றான். அரசன் ராவணன் சொன்னதை கேட்ட அங்கதன், அவனைப் பார்த்து பரிகாசமாகச் சிரித்தான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.....................
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
234/22-11-2021
 
அங்கதனின் அறிவுரையும்
ராவணனின் பிடிவாதமும்...
 
★நீ எனக்கு முடிசூட்டுகிறாயா? இங்கு உள்ள அனைவரும் அழிவது நிச்சயம் என்பதை மறந்து விடாதே. உனது  தம்பி விபீஷணன், ராமரிடம் சரண் அடைந்ததை மறந்து விட்டாயா? ராமர், விபீஷணனை இந்த இலங்கையின் அரசனாக முடி சூட்டிவிட்டார். நீ வஞ்சனையாக பேசி என்னை உன் பக்கம் சாய்க்கலாம் என நினைக்காதே. அது ஒரு போதும் நடக்காது. தூதுவனாக வந்தவன் அரச பதவி ஏற்றுக் கொள்வது எவ்வளவு பெரிய துரோகம். அத்தகைய துரோகத்தை நான் ஒருபோதும் செய்யமாட்டேன் எனக் கூறி நகைத்தான்.
 
★அங்கதன் கூறியதைக் கேட்டு ராவணன் கடுங்  கோபம் கொண்டு,  அவனைக் கொல்ல முனைந்தான். ஒரு வானரத்தை தன் கையால் கொல்வதா? என நினைத்து கோபத்தை அடக்கிக் கொண்டான். உடனே சீதையின் நினைவு அவனுக்கு வந்தது. இவளால் தானே தனக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சீதை மட்டும் இணங்கியிருந்தால் ராமன் இலங்கைக்கு வந்திருக்க  மாட்டார். இந்த யுத்தமும் இப்போது நடந்திருக்காது என்று நினைத்த  ராவணன் தூதுவன் அங்கதனிடம், நீ இங்கு எதற்காக வந்தாய்? என்பதைச் சொல் என்றான்.
 
★ராமர், என்னிடம், போருக்கு பயந்து அரண்மனையில் பதுங்கி கொண்டிருக்கும் உன்னிடம், அன்னை சீதையை உடனே  ஒப்படைத்து விடு அப்படி இல்லையென்றால் போரில் அழிவது நிச்சயம் என  அன்பு காட்டும் பொருட்டு கூறினார் என்றான். மேலும் அங்கதன், உலகின் எட்டு திசைகளையும் போரில் வென்ற பெரு வீரன் என்ற பெயர் பெற்ற நீ, உன் நகரத்தை மாற்றார் சேனை வளைத்துக் கொண்ட போது போருக்குச் செல்லாமல், பயந்துகொண்டு உன்னுடைய  அரண்மனைக்குள் புகுந்து கொண்டால், உனக்கு பழியைத் தவிர வேறு என்ன கிடைக்கும்? என்றான்.
 
★ராவணனே!, பெண்ணாசை கொடியது. அதனால் அழிந்தவர் பலர். ஆசைக்கு அடிமையாகாதே. உன்னால் அரக்கர் குலம் அழிய போகிறது என்பதை மறந்து விடாதே. நீ இந்த இரண்டில் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றான். அங்கதன் கூறியதைக் கேட்ட ராவணன், பெரும் கோபம் கொண்டான். கோபத்தால் அவன் கண்கள் சிவந்தன. பிறகு மீண்டும் அவனைப் பார்த்து ராவணா! உனக்கு மறுபடியும் கூறுகிறேன், மாதா சீதையை ராமரிடம் ஒப்படைத்துவிட்டால் உன்னை  அவர் விட்டுவிடுவார். அப்படி இல்லையென்றால் போரில் உன்னுடைய  பத்து தலைகளையும் சிதறடித்து விடுவார். ஜாக்கிரதை!. உனக்குத் தேவையானது மரணமா? அல்லது நிம்மதியான ஒரு வாழ்க்கையா? நீயே முடிவு செய்து கொள் என்று கூறி முடித்தான்.
 
★அங்கதன் சொன்னதை கேட்ட ராவணன் கோபம் கொந்தளிக்க இந்த வானரத்தை பிடித்து கொல்லுங்கள் என்று பலமாக கத்தினான். அதிபயங்கரமான ராட்சர்கள் பெரிய உருவத்தை எடுத்து அங்கதனை பிடித்து கயிற்றினால் கட்ட முயற்சி செய்தார்கள். உடனே அங்கதன் ராட்சசர்களோடு ஒரே தாவலில் ஆகாயத்திற்கு தாவி, பிடித்து இருந்த ராட்சதர்களை உதறித் தள்ளி  அந்த அரக்கர்களை அடித்து கொன்று வீசினான்.
 
★பிறகு அங்கதன் இலங்கை மக்களிடம், ராமர் போருக்கு வந்து விட்டார் என அறிவித்துவிட்டு அங்கிருந்து ராமர் இருப்பிடத்தை அடைந்தான். அதனை கண்ட ராட்சசர்கள் அனைவரும் ஒரு வானரத்திற்கே இத்தனை வலிமை என்றால், வந்திருக்கும் அனைத்து வானரங்களின் வலிமையையும் ஒன்று சேர்த்தால் எவ்வளவு வலிமை இருக்கும், அவர்களை எப்படி எதிர்த்து வெற்றி கொள்வோம் என்று பயந்தனர். அனைவரின் பயத்தையும்  கண்ட ராவணன் இதனை ஒரு அபசகுனமாக கண்டு பெரு மூச்சுவிட்டான்
 
★அங்கதன்,ராமரின் திருவடியில் விழுந்து வணங்கினான். ராமர் அங்கதனிடம், ராவணனைப் பார்த்துப் பேசினாயா? அவன் அதற்கு என்ன சொன்னான் என்று கேட்டார். அங்கதன், அங்கு நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் ராமரிடம் கூறினான். பிறகு அங்கதன் ராமரிடம், இவ்வளவு நடந்த போதிலும் அவன் தன் ஆசையை விட்டபாடில்லை என்றான்.
இதனை கேட்ட ராமர் வானர படைகளிடம், யுத்தத்திற்கு தயாராகும்படி கூறினார்.
அங்கதன் சொன்னதை கேட்ட அனைவரும், இனி நடக்கப் போவது பெரும் போர் தான், சமாதானம் அல்ல என்பதை அறிந்துக் கொண்டனர்.
 
★முதல்நாள் போர் தொடங்கியது.
வானர சேனைகள் போருக்கு புறப்பட்டன. கோட்டையை வானர படைகள் நெருங்கியது. ராமர் லட்சுமணனிடம் இந்த இலங்கை நகரின் அழகை  பார்த்தாயா?
அந்த அழகிய நகரை அழித்திட முடிவு செய்து விட்டான் ராவணன் என்று வருத்தத்தோடு கூறினார்.
ராமருக்கு சீதையின் ஞாபகம் வந்தது. நாம் இவ்வளவு பெரிய படையுடன் வந்து விட்டோம் என சீதைக்கு இந்நேரம் தெரிந்து இருக்குமா? என்று சிந்தனை செய்தபடியே படைகளை அணி வகுக்கும் பணியில் ஈடுபட்டார். கோட்டையின் நான்கு புறமும் யார் யார் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என்று ராமர் நிர்ணயித்தபடி அனைவரும் அணிவகுத்து நின்றனர்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை......................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
235/23-11-2021
 
மீண்டும் ராவணனின்
உளவு ஒற்றர்கள்...
 
★அந்த சமயத்தில், ராவணன் அனுப்பிய இரண்டு ஒற்றர்களும் வானரர்கள் போல் தங்கள் உருவத்தை மாற்றிக் கொண்டு வானர படைகளுக்குள் கலந்து வேவு பார்த்தார்கள். எவ்வளவு வானர வீரர்கள் இருக்கிறார்கள் என்று இவர்களால் துல்லியமாக கணக்கெடுக்க இயலவில்லை. காடு, மலைகள் அனைத்திலும் வானர வீரர்கள் லட்சக்கணக்கில் குவிந்து இருந்தார்கள். மேலும் கடலில் உள்ள பாலத்தின் வழியாகவும், கூட்டம் கூட்டமாக இருந்தார்கள். இரு ராட்சச ஒற்றர்களையும் வீபிஷணன் கண்டு பிடித்து விட்டான். வானர வீரர்களிடம் சொல்லி, அவர்களை பிடித்து ராமரிடம் அழைத்துச் சென்றான்.
 
★ராமரிடம் சென்ற இரண்டு ராட்சதர்களும் மிகவும் பயந்த படியே பேசினார்கள். எங்களது பெயர் துந்தகன் மற்றும் விருபாட்சன். நாங்கள் இங்கு தூதுவர்களாக எங்களது அரசரால் அனுப்பப்பட்டோம். எங்களை விட்டு விடுங்கள் என்று அவரை கைகூப்பிய படியே நின்றனர். ராமர், ராட்சதர்களை பார்த்து சிரித்தபடியே பேசினார். எங்களது கையில் வசமாகச் சிக்கிக் கொண்டோமே என்று பயப்படாதீர்கள். ஆயுதங்கள் இல்லாமல் இருக்கும் உங்களை ஒன்றும் செய்ய மாட்டோம். உங்கள் அரசர் சொன்னபடி எங்களது படைகளின் மொத்த எண்ணிக்கையை சரியாக எண்ணிப் பார்த்து விட்டீர்களா? எங்களது வலிமை, ஆயுதங்கள் பற்றிய தகவல்கள் அனைத்தும் தெரிந்து கொண்டு விட்டீர்களா?
 
★இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியது ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள் விபீஷணனை உங்களுடன் அங்கு அனுப்பி வைக்கிறேன். உங்களுக்கு தேவையான செய்தியை மறைக்காமல் விபீஷணன் சொல்லுவார். முழுமையாக பார்த்து விட்டு அனைத்தையும் தெரிந்து கொண்டு உங்கள் அரசரிடம் போய் சொல்லுங்கள். உங்கள் உளவு செய்தியுடன் அப்படியே நான் சொல்லும் செய்தியையும் சேர்த்து, உங்கள் அரசரிடம் சொல்லுங்கள் என்று சொல்ல ஆரம்பித்தார்.
 
★எந்த பலத்தின் மேல் நம்பிக்கை வைத்து சீதையை தூக்கி வந்தாயோ, அதே ஒரு பலத்தை உனது படையின் மகா  வீரர்களோடு வந்து, உன்னால் முடிந்த வரை காட்டி என்னுடன் யுத்தம் செய். நாளை காலையில் எனது அம்புகள் இந்த இலங்கை நகரத்தை அழிக்கத் தொடங்கும். அதை உனது கண்களால் பார்ப்பாய். அதன் பிறகு பெரிய ராட்சச படையுடன் இருக்கும் உன் மீது எனது கட்டுக் கடங்காத கோபத்தை எனது அம்புகள் வழியாக காட்டுவேன். எனது அம்பின் வலிமையின் முன்பு உனது வலிமையை காட்டி, முடிந்தால் தப்பித்துக்கொள். இச்செய்தியை ராவணனிடம் சொல்லி விடுங்கள் என்று சொல்லி முடித்தார்.
 
★ராமர், விபீஷணனிடம் எந்த விதமான ஆயுதங்களும் கையில்  இல்லாமல் இருக்கும் இவர்களை விட்டு விடுங்கள் என்றார். அதன் படி விடுபட்ட அந்த இரண்டு ராட்சதர்களும், ராமரிடம் தாங்கள் நிச்சயம் இந்த மகா யுத்தத்தில் வெற்றி பெறுவீர்கள்! என்று தங்களையும் அறியாமல் வாழ்த்து கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்கள். ராவணனிடம் சென்ற ஒற்றர்கள் தாங்கள் தெரிந்து கொண்டதை சொல்ல ஆரம்பித்தார்கள். ஒரே முக்கிய நோக்கத்திற்காக ராமர் மற்றும் லட்சுமணன், அரசன் சுக்ரீவன், விபீஷணன் ஆகிய நால்வரும் ஒன்று கூடி இருக்கிறார்கள். அவர்களின் வலிமையை சொல்ல வேண்டுமானால், இந்த நான்கு பேரின் வலிமையை கணக்கிட்டால், இந்த நால்வரும்  சேர்ந்தால் இந்த இலங்கை நகரத்தையே தனியாக தூக்கி வேறு இடத்தில் வைத்து விடுவார்கள். அவ்வளவு வலிமையானவர்கள். இதற்கு எந்த படை பலமும் இவர்களுக்கு தேவையில்லை.
 
★ராமரையும், அவர் வைத்துள்ள  ஆயுதங்களின் வலிமையையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால்,  இந்த இலங்கை நகரத்தை அழிக்க ராமருக்கு யாருடைய துணையும் தேவை இல்லை. எந்த படைகளும் தேவை இல்லை. தான் ஒருவரே தனியாக நின்று தனது அம்பின் மூலம் எதிர்க்கும் அனைவரையும் அழிக்கும் வல்லமை பெற்றவர் ராமர். சுக்ரீவனுடைய வானரப் படைகளின் வலிமையையும் நாம்  நிச்சயமாக தெரிந்து கொள்ள வேண்டுமானால், எல்லா தேவர்களும், அசுரர்களும் ஒன்று சேர்ந்து வந்து தாக்கினாலும் இந்த வானரங்களை அழிக்க முடியாது. இந்த வானரங்களின் எண்ணிக்கையை சொல்ல முடியாது. பல யோசனை தூரத்திற்கு கூட்டம் கூட்டமாக இருக்கிறார்கள். இந்த கூட்டத்தின் எல்லையை பார்க்க முடியவில்லை.
 
★கண்ணுக்கெட்டிய தூரம் வரை அவர்களின் கூட்டமானது  நீண்டு கொண்டே இருக்கிறது. ஆனால் இப்போதே யுத்தம் தொடங்க  வேண்டும் என்று வானர படை வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இது வரையில் தாங்கள் ராமரிடம் விரோதமாக இருந்து விட்டீர்கள். இனி மேலும் இந்த விரோதம் தொடர்ந்தால் இலங்கை அழிவது நிச்சயம். நாங்கள் அவர்களின் வலிமையை கண்ணால் பார்த்து விட்டோம். ஆகையால்தான் இதைச்  சொல்கிறோம். உளவு பார்த்துக் கொண்டிருக்கும் போது விபீஷணனிடம் நாங்கள் சிக்கிக் கொண்டோம். அவர் எங்களை ராமரிடம் அழைத்துச் சென்றார். இனி பிழைக்க மாட்டோம், அழிந்தோம் என்று நினைத்த நாங்கள், ராமரின் அபரிமிதமான கருணையினால் உயிர் தப்பிப் பிழைத்து, இங்கு வந்து நலமாக சேர்ந்தோம். ராமர் கூறிய செய்தியையும், ராவணனிடம் கூறினர். இனி என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து செயல்படுங்கள்  அரசே!  என்று கூறி விட்டு தலை குனிந்தபடியே நின்றார்கள்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869…
 
நாளை..................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
236/25-11-2021
 
யுத்தம் துவங்குகிறது...
 
★ராமர் சொன்ன செய்தியை கேட்ட ராவணன், கோபமடைந்து கடுமையான வார்த்தைகளால் தூது சென்ற ராட்சதர்களை திட்ட ஆரம்பித்தான். தேவர்கள், கந்தர்வர்கள், தானவர்கள் என்று அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்த்தாலும் உலகமே எனக்கு எதிராக நின்றாலும் சீதையை ராமருடன் அனுப்ப மாட்டேன். ஒற்றர்களாக சென்ற நீங்கள் எதிரிகளிடம் சிக்கிக் கொண்டு பயத்தினால் நடுங்கி இப்படி பேசுகிறீர்கள். கோழைகளே !எந்தப் பகைவனாலும் என்னை வெற்றி பெற முடியாது என்றான்.
 
★ராமரின் வலிமையை பற்றி அனைவரும் ஒரே மாதிரியாகச் சொல்வதில் கவலைப்பட்ட ராவணன் தன் ஆரம்ப காலத்தில் செய்த யுத்தங்கள் அனைத்திலும் வெற்றி பெற்ற கர்வத்தினால், தன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்ற எண்ணத்தில் இருந்தான். அரண்மனை மாளிகையின் உச்சிக்கு சென்ற ராவணன், தன் மந்திரிகளுடன் கோட்டையை சுற்றி இருக்கும் வனார படைகளின் அணிவகுப்பை பார்த்தான்.
 
★எதிரியின் பராக்கிரமத்தை சொல்லும் ஒற்றர்களை பார்த்து கோபம் கொண்ட ராவணன், ராமரின் பராக்கிரமத்தையும், சுக்ரீவன் தனி ஒருவனாக வந்து தன்னை தாக்கி விட்டு மீண்டும் சென்றதையும், அனுமன் தனியாக வந்து இலங்கை நகரத்தையே அழித்துவிட்டுச் சென்றதையும், சிறுவனான வாலியின் புத்திரன் அங்கதனின் திறமையையும் நினைவு படுத்திக்கொண்டான். சீதையை திருப்பி அனுப்ப அவனது கர்வம் இடம் கொடுக்க இயலவில்லை. யுத்தம் செய்யாமல் இருக்க வேறு ஏதேனும் வழிகள் இருக்கிறதா என்று யோசனை செய்ய ஆரம்பித்தான்.  அப்போது இலங்கை மதிலுக்கு அப்பால் வானரர்களின் உற்சாகக் குரலும் போர் முழக்கமும் கேட்டது.
 
★இனி வேறு யோசனைக்கே இடமில்லை, போர் புரியத்தான் வேண்டும் என முடிவெடுத்து ப் புறப்பட்டான்.பிறகு ராவணன் தன்னுடைய, மகாபலம் கொண்ட சேனைக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தான். இலங்கையின் கிழக்குதிசை வாயிலுக்கு,
மகாபாரிசுவன் என்கிற ஓர்
 படைத்தலைவனுடன் இருநூறு வெள்ளம் ஆயுதம் தாங்கிய அரக்கர் படையை அனுப்பி, அங்கு தயார் நிலையில் நிற்கும் வானரப் படை தளபதி நீலனோடு போரிடுவதற்கு அனுப்பி வைத்தான். ராவணன் தனது மகன் அதிகாயனை அழைத்து, இருநூறு வெள்ளம் படையுடன் சென்று, தென் திசை வாயிலில் தயாராக இருக்கும் அங்கதனுடன் போரிடத் தயாராகுமாறு அனுப்பினான்.
 
★பின் ராவணன் இந்திரஜித்தை அழைத்து, மகனே! நீ இருநூறு வெள்ளம் சேனையுடன் மேற்கு வாயிலுக்குச் சென்று அங்கு போருக்குத் தயார் நிலையில் நிற்கும், நம் நகருக்கு பேரழிவை செய்த அந்த அனுமனிடம் போர் புரிய தயாராக இரு என்றான். அடுத்து ராவணன், விரூபாட்சா! நீ நம் சேனைகளோடும், அமைச்சர்களோடும், இலங்கை நகரத்தின் காவல் பொறுப்பை ஏற்றுக்கொள் என்றான். நான் யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை என இருநூறு வெள்ளம் படைகளுடன் வடக்கு வாயிலுக்குச் சென்று அந்த ராமனோடும், அவன் தம்பி  லட்சுமணனோடும் போரிடத் தயாராக இருப்பேன் என்று நகரின் பாதுகாப்பையும், படைகளின் அணிவகுப்பையும் நிர்ணயித்தான்.
 
★நான்கு புறங்களில் நிற்கும் ராம லட்சுமணர் மற்றும் வானர படைகள், அரசன் ராவணனின் உத்தரவின்படி நிற்கும், அரக்கர் படைகள் பற்றி சிறு தொகுப்பு :
 
ராம லட்சுமணர் வானர படைகள்:- :
 
மேற்கு திசை - அனுமன் - பதினேழு வெள்ளம் வானர படை
 
கிழக்கு திசை - நீலன் - பதினேழு வெள்ளம் வானர படை
 
தெற்கு திசை - அங்கதன் - பதினேழு வெள்ளம் வானர படை
 
வடக்கு திசை - ராம லட்சுமணர் - பதினேழு வெள்ளம் வானர படை
 
விபீஷணன் - அரக்கர்களை கண்காணிக்கும் பணி
 
ராவணனின் படை :-
 
மேற்கு திசை - இந்திரஜித் - இருநூறு வெள்ளம் அரக்க சேனை
 
கிழக்கு திசை - படைத்தலைவன் - இருநூறு வெள்ளம் அரக்க சேனை
 
தெற்கு திசை - அதிகாயன் - இருநூறு வெள்ளம் அரக்க சேனை
 
வடக்கு திசை - இராவணன் - இருநூறு வெள்ளம் அரக்க சேனை
 
விரூபாட்சன் - நகர காவல் பொறுப்பு
 
★ராமர், இலங்கை நகரைச் சுற்றியுள்ள அகழிகளை, முன்பு கடலில் அணைக் கட்டியது போல, மரங்களையும், பாறைகளையும் கொண்டு வந்து போட்டு, இந்த அகழியை மூடிவிடுங்கள் என்று வானரப் படைகளுக்கு ஆணை இட்டார். ராமரின் ஆணைப்படி வானர வீரர்கள் இலங்கை நகரத்தின் நான்கு புறத்திலும் உள்ள அகழிகளைத் தூர்த்தனர். வானரப் படைகள் அகழியைத் தூர்த்தபின், கோட்டை மதிலின் உச்சிக்கு ஏறிச்சென்று போருக்கு ஆரவாரம் செய்தனர். வானர வீரர்கள் மிகுந்த உற்சாகத்தோடு செய்த ஆர்ப்பாட்டத்தினால் கோட்டை மதிற்சுவர்கள் தரையில் அழுந்தின.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை......................
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
237/26-11-2021
 
முதல்நாள் யுத்தம்...
 
★ராமரைப் பற்றிய தகவலை விபீஷணனின் மனைவியான சரமை சீதைக்கு எடுத்துச் சொன்னாள். ராமர் இலங்கைக்கு பெரும் வானர படையுடன் வந்து இருக்கிறார். அவருடன் எனது கணவர் விபீஷணனும் சென்று சேர்ந்து விட்டார். இங்கு யுத்தம் செய்ய வந்திருப்பவர்கள் யாராலும் எதிர்த்து வெற்றி பெற முடியாத வலிமையுள்ளவர்கள் என்று ராவணனுக்கு அவனது ஒற்றர்கள் தகவல் கொடுத்து இருக்கிறார்கள். ஆகையால் நீ ராவணனால் விரைவில் ராமரிடம் ஒப்படைக்கப்படுவாய். இல்லையென்றால் ராவணனை ராமர் யுத்தத்தில் வெற்றி பெற்று உன்னை அழைத்துச் செல்வார் என்று சீதைக்கு தோழி போல் இருந்து அவளுக்கு ஆறுதல் கூறினாள் சரமை. இதை கேட்ட சீதை ராமரை விரைவில் பார்க்க போகிறோம் என்று பேரானந்தம் அடைந்தாள்.
 
விராதனுக்கு அருள் புரிந்ததைப்  போலவே, நம்மிடம் உள்ள தீமைகளையும் துயரங்களையும் நீக்கி, நமக்கும் அருள் புரியுமாறு ஶ்ரீராமரிடம் வேண்டுவோம்!
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.................
 
★ராமர் தனக்கருகில் வந்து விட்டார், விரைவில் அவரை நாம் பார்க்க போகிறோம் என்று மகிழ்ச்சி அடைந்தாள் சீதை. சரமை சீதையிடம் மேலும் சில தகவல்களை கூறினாள். ராவணனிடம் அரசவையில் மந்திரிகள் பலரும், முக்கியமான சில  உறவினர்களும் சீதையை ராமரிடம் ஒப்படைத்து விடுங்கள் என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் ராவணன் யாருடைய பேச்சையும் சிறிதும் கேட்பதற்கு தயாராக இல்லை. ராமரை எதிர்த்து யுத்தம் செய்து யுத்தத்தில் எனது  உயிரை வேண்டுமானாலும் விடுவேன், ஆனால் ராமரை நான் வணங்கி நிற்க மாட்டேன் என்று ராவணன் தீர்மானமாகச் சொல்லி விட்டான்.
 
★விரைவில் யுத்தம் ஆரம்பித்து விடும். உனக்கு இனி எந்த அபாயமும் இல்லை.  இனிமேல் உன்னிடம் ராவணன் எதை சொன்னாலும் நம்பாதே. அந்த ராவணன் சொல்லும் அனைத்து சொற்களும் உன்னை ஏமாற்றும் செயலாகவே இருக்கும். ஆகவே ராவணன் செய்யும் எந்த ஒரு செயலையும், அதைக் கண்ணால் கண்டாலும் நம்பாதே. அவை அனைத்தும் மாயமானதாகவே இருக்கும். ராவணன் இங்கு வருகிறான் என்று தெரிந்தால் உடனே எச்சரிக்கையுடன் இருந்து கொள் என்று சொல்லி முடித்தாள்.
 
★சரமை சொல்லி முடித்ததும் வானர படைகளின் முழக்கமும், பேரிகைகள் மற்றும்  சங்குகள் ஒலிக்கும் சத்தங்களும் கேட்டது. இந்த சத்தத்தை கேட்டதும் ராவணன் விரைவில் ராமரால் அழியப் போகிறான் என்று சீதை மகிழ்ந்தாள். யுத்தம் செய்ய நாங்கள் வந்திருக்கிறோம் என்ற வானரங்களின் சங்கு மற்றும் பேரிகையின் பெரும் சத்தத்தை கேட்ட ராட்சசர்கள் பலர் பயந்து நடுங்கினார்கள். ராமர் தனது கடல் போன்ற வானரர்களின் படைகளுடன் இலங்கையின் நான்கு புறமும் சூழ்ந்து முற்றுகை  இட்டுக் கொண்டார் என்ற ஒரு செய்தியை ராவணனுக்கு அவனது படை வீரர்கள் கூறினார்கள்.
 
★மேலும் இலங்கையை சுற்றி இருந்த அகழியையும் அந்த வானரர்கள் தூர்த்து விட்டார்கள் என்ற செய்தியும் அவர்களை எட்டியது. அப்போது ஏற்கனவே பயந்து போயிருந்த ராட்சத மந்திரிகள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இதனை கண்ட ராவணன் இதற்கு முன்பு நடந்த  பல்வேறு யுத்தங்களில் எல்லாம் உங்களது பராக்கிரமத்தை காட்டி பல வெற்றிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளீர்கள். ஆனால் இப்போது ஏன்  இந்த வனவாசி ராமனைப் பார்த்து இப்படி பயப்படுகிறீர்கள்?.
 
★இந்த பயம் தான் உங்கள் முதல் எதிரி. ராமன் சாதாரண மானிடன் ஆவான். அவர் மேல் இருக்கும் இந்த பயத்தை விட்டு, உங்கள் வலிமையைக் காட்டி யுத்தம் செய்து, நமது ராட்சத குலத்திற்கு பெருமை தேடிக் கொடுங்கள் என்று சொல்லி முடித்தான்.
பிறகு தனது கோட்டையின் உச்சிக்கு சென்று இலங்கையை சுற்றி நிற்கும் வானர படைகளை பார்வையிட்டான் ராவணன். எப்போதும் பச்சை பசேல் என்று இருக்கும் இலங்கை இப்போது மரம் செடி கொடிகள் எதுவும் தெரியாமல் வானர படைகள் நிறைந்து செம்மையாக காட்சி கொடுத்தது. இத்தனை பெரிய வலிமை மிக்க வானர படையை எப்படி அழிப்பது என்று ராவணன் கவலையில் ஆழ்ந்தான்.
 
★ராமர் சீதையை நினைத்து ஒரு முறை சிந்தித்தார். தினந்தோறும் எதிரியின் சித்தரவதையில், பதைபதைக்கும் உள்ளத்தோடும், கலங்கும் எண்ணங்களோடும், பயத்துடன் இருக்கும் சீதையை விரைவில் விடுவிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு, இலங்கை நகரத்தின் உள்ளே செல்ல, யுத்தம் செய்வதற்கு  ஆரம்பிக்கலாம் என்று ராமர் வானர வீரர்களுக்கு கட்டளை இட்டார். ராமரின் ஆணையை எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த வானர படை வீரர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர்.
 
★சங்கு,   பேரிகை முழங்க அலைமோதிக் கொண்டு முன்னேறினார்கள். அவர்களின் உரத்த சத்தம் விண்ணை முட்டி எதிரொலித்தது. முதலில் இலங்கை நகரத்தை மதில் சுவர் போல் பாதுகாத்த மலைகளையும் மதில் சுவர்களையும் தங்கள் கைகளினாலேயே உடைத்து நொறுக்கினார்கள். உடைத்த மலைகளின் மண் குவியல்களை போட்டு மூடியிருந்த அகழியை  தாண்டிச் சென்று, தங்கத்தாலும் வைர வைடூரியங்களினாலும் செய்யப்பட்ட நுழைவாயில் கதவுகளை எல்லாம் உடைத்து எறிந்தார்கள்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை.......................
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
238/27-11-2021
 
வஜ்ரமுஷ்டி வதம்...
 
★அப்பொழுது இலங்கை நகரத்துக்குள் அரக்கர் படையும் போருக்கு எழுந்தன. முரசுகள் முழங்கின. இரு படைகளும் ஒன்றுக்கொன்று நேரெதிராக நின்று மோதத் தொடங்கின. வானரப் படைவீரர்கள் மரங்களையும், கற்களையும், தத்தம் பற்களையும் ஆயுதமாகக் கொண்டு போர் புரிந்தனர். அரக்கர்கள் வில், அம்பு, வேல் கொண்டு போர் செய்தனர். போர் இரண்டு புறத்திலும் மிகக் கடுமையாக நடந்தது.
 
★வானர வீரர்கள் வீசிய கற்களையும், மரங்களையும் அரக்கர்கள் தங்களிடமிருந்த  ஆயுதங்களை கொண்டு பொடி பொடியாக்கினர். போர் நடந்த இடம் இரத்த வெள்ளமாகக் காட்சி அளித்தது. வானர வீரர்கள், அவர்களது பற்களால் கடித்தும், கைகளாலும் அடித்தும் அந்த  அரக்கர்களைக் கொன்றனர். அரக்கர்கள் வீசிய அம்புகளாலும், வேலாலும், கதாயுதத்தாலும் பல்லாயிர வானர வீரர்கள் மாண்டு போயினர். இலங்கை நகரத்தின் மதில்கள் எல்லாம் ரத்தத்தால் சிவந்து பயங்கரமாக காணப்பட்டன.
 
★ராமர் வாழ்க!!  லட்சுமணன் வாழ்க!! ராம லட்சுமணர்களுக்கு வெற்றி! என்ற கோஷங்களுடன் வானர சேனைகள் இலங்கை நகரத்திற்குள் முன்னேறிச் சென்றார்கள். இதனை கண்ட ராவணன் பெரும் ராட்சதர்களின் படையை அனுப்பி வைத்தான். சங்குகள், பேரிகைகள் முழங்க ராட்சத வீரர்களும் பெரிய கடல் அலைகள் போல் கிளம்பி, வானர வீரர்களை கொடூரமான நவீன ஆயுதங்களை கொண்டு பலமாக தாக்கினார்கள். ராட்சதர்களின்  படைகளுக்கும் வானரவீரர்கள்  படைகளுக்கும் பெரும் யுத்தம் தொடங்கியது.
 
★வானர வீரர்கள் மிகப் பெரிய பாறைகளையும் மரங்களையும் வேரோடு பிடுங்கி, ராட்சதர்கள் மீது தூக்கி வீசி தாக்கினார்கள். இரு தரப்பிலும் சேதம் அதிகம். ஆயிரக்கணக்கான வீரர்கள் இறந்தார்கள். யுத்த பூமி முழுவதும் ரத்தமும் சதையும் பரவிக் கிடந்தது. ஒரு பக்கம் அங்கதனும் இந்திரஜித்தும்,
மறு பக்கம் ப்ரஜங்கன் என்ற ராட்சதனுக்கும் விபீஷணனின் தளபதி சம்பாதிக்கும் இடையே கடுமையாக சண்டை நடந்தது. மறு பக்கம் அனுமனுக்கும் ராட்சதன் ஜம்புமாலிக்கும், லட்சுமணன், ராட்சதன் விருபாக்ஷனுடனும் கோரமான யுத்தம் நடந்தது.
 
★இன்னோரு பக்கம், நீலனும் ராட்சதன் திகும்பனும் யுத்தம் செய்து  கொண்டிருந்தார்கள். இந்திரஜித்தின் குதிரைகளை கொன்ற அங்கதன், ரதத்தையும் உடைத்து எறிந்தான். இளவரசன் அங்கதனின் வீரத்தை கண்ட வானரர்கள் மிகவும் உற்சாகமாக சண்டையிட்டார்கள். இதனால் கோபமடைந்த இந்திரஜித் அதற்கு பதிலடியாக தனது மாய வித்தைகளை காட்டி மறைந்து இருந்து யுத்தம் செய்து வீரன் அங்கதனை அடித்து அதிகமாக காயப்படுத்தினான்.
 
★இந்திரஜித் இருக்கும் இடத்தை வானர வீரர்களால் சிறிதும் காணமுடியவில்லை. இந்திரஜித் மறைந்திருந்து அம்புகள் எய்து வாரன வீரர்களின் உற்சாகத்தை குலைத்தான். இந்திரஜித் செய்த மாய யுத்தத்தினால் அந்த வானர வீரர்கள் தங்களின் தைரியத்தை சிறிது இழக்கத் தொடங்கினர்.
அரக்கர் படைகளின் பெரும் பலத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் வானர சேனைகள் பயந்து ஓடின. இதைப் பார்த்த சுக்ரீவன்  கோபமடைந்தான். உடனே அவன் தன் பக்கத்தில் இருந்த ஓர் பெரிய கடம்ப மரத்தை வேரோடு பிடுங்கி போர் செய்தான். மரத்தால் அரக்கன் ராவணனின் அரக்கப்படைகளை சம்ஹாரம் செய்தான்.
 
★அரக்கர்கள் தோல்வி முகத்தில் இருப்பதைப் பார்த்த வஜ்ரமுஷ்டி என்னும் கொடிய அரக்கன், தன் கண்களில் தீப்பொறி பறக்க அங்கு வந்துச் சேர்ந்தான். அசுர வஜ்ரமுஷ்டி செய்த போரில் வானரங்கள் பலர் மாண்டனர். தன் படை வீரர்கள் மாண்டு போவதை கண்டு கடும் கோபம் கொண்ட சுக்ரீவன், அந்த வஜ்ரமுஷ்டி மீது பாய்ந்தான். அவனது வில்லையும், அம்புறாத் தூணியையும் அறுத்து எறிந்து விட்டு, ஆலகால விஷம் போல் போரிட்டு வஜ்ரமுஷ்டியையும் கொன்றான். வஜ்ரமுஷ்டி இறந்த பின் அரக்கர்களின் படை நிலை குலைந்து ஓடத் தொடங்கியது. இதனை கண்டு வானரர்கள் ஆரவாரம் செய்தனர்.
 
★இலங்கையில் கிழக்கு வாயிலில், சூலம், வாள், வேல், வாளி முதலான ஆயுதங்களால் வானர வீரர்களைக் கொன்றனர். வானர வீரர்கள் வீசிய குன்றுகளாலும், மரங்களாலும் அரக்கர்கள் பலர் மாண்டனர். அப்போது வானரப் படை தளபதி நீலன் ஓர் பெரிய கடம்ப மரத்தைப் பிடுங்கி அரக்கர் படை மீது வீசினான். அரக்கர்களின் தேர்களும், குதிரைகளும், அரக்க வீரர்களும் இதனால் மாண்டு வீழ்ந்தனர். அப்பொழுது நீலனை எதிர்க்க கும்பானு என்னும் அரக்கன் வந்துச் சேர்ந்தான்.
 
★மற்றொரு பக்கத்தில் இடும்பன் என்னும் கரடிப்படை வீரன் கும்பானுவை எதிர்த்துப் போரிட வந்தான். இருவருக்கும் இடையே கடும் போர் நடந்தது. நீண்ட நேர போருக்கு பின், அரக்கனை, இடும்பன் தன் கைகளால் அடித்தும், வாயால் கடித்தும் கொன்றான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை ............. ......
 
 
 
[3:57 pm, 28/11/2021] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
239/28-11-2021
 
ராவணன் போருக்கு
செல்லுதல்...
 
★தெற்கு வாயிலில் அங்கதன், சுபாரிசன் என்னும் அரக்கனுடன் போரிட்டான். அங்கதனுடைய பலமான தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாமல், சுபாரிசன் போரில் மாண்டு போனான். சுபாரிசன் மாண்டு போனதை அறிந்து அரக்கர் படைகள் அங்கிருந்து ஓடி ஒளிந்தனர். மேற்கு வாயிலில் அனுமன், துன்முகன் என்னும் கோரமான அரக்கனையும் மற்றும் அவனது இருநூறு வெள்ள ராட்சதர்கள் அடங்கிய  சேனைகளையும் எதிர்த்துப் போர் செய்துக் கொண்டிருந்தான். அனுமனின் கைகளால் ஏராளமான கொடிய அரக்கர்கள் மாண்டனர்.அனுமன், துன்முகனுடன் கடுமையாக போரிட்டு அவனைக்கொன்றான்.
 
★இவ்வாறு இலங்கையின் நான்கு வாயில்களிலும் போர் நடந்தது. தூதுவர்கள், நான்கு வாயில்களிலும் நடந்த போரைப் பற்றி ராவணனிடம் சென்று செய்தியை கூறினர். அவர்கள், கிழக்குவாயிலில் மகாபாரசுவன், தெற்கு திசையில் சுபாரிசன், வடக்கு வாயிலில் வஜ்ரமுஷ்டி, மேற்கு வாயிலில் துன்முகன் மாண்டச் செய்தியை அவனிடம் கூறினார்கள்.தூதர்கள் சொன்ன இந்தச் செய்தியைக் கேட்டு, இலங்கேசன் ராவணனின் முகம் தீ போல் சிவந்தது. ராவணன், மகாபாரிசுவனைக் கொன்றவன் யார்? என மிகுந்த கோபத்துடன் கேட்டான். அதற்கு தூதர்கள் நமது மகாபாரிசுவனைக் கொன்றது, வானரவீரர்களின்  படைத்தலைவன் ஆகிய  நீலன் என்றார்கள்.
 
★இந்திரனையும் வென்ற மகாபாரிசுவன், மிகுந்த பலம் கொண்டவன். இவ்வளவு மகாபலம் கொண்ட அவனை, கேவலம் ஒரு குரங்கு கொன்று விட்டதா! என மனதில் நினைத்து புலம்பினான் ராவணன். கோபம் அவனின் தலைக்கேறியது. உடனே அவன் போருக்கு தயாராகி, நூறு குதிரைகள் பூட்டிய தேரில் ஏறினான். இத்தேர், இந்திரன் போரில் தோற்றபோது ராவணனுக்குக் கொடுத்தது. புவி அதிரும்படி ஒலி எழுப்பும் தேர். இத்தேர் விண்ணுலகுக்கும்  சென்று வரும் வலிமை பெற்றது. ராவணன், தான் வணங்கும் சிவனை மனதால் வணங்கி, தன் வில்லை கையில் எடுத்து, அதில் நாணைப் பூட்டி மிகப்பெரிய ஒலி எழுப்பினான்.
 
★பிறகு, அவன் தன்மார்பில் கவசத்தை அணிந்துக் கொண்டு தும்பைப்  பூவை மாலையாக கழுத்தில் அணிந்து கொண்டான். ராவணன் போருக்குத்  தேவைப் படும் ஆயுதங்களை எடுத்துக் கொண்டான். ஏவலர்கள் ராவணனின் தலைக்குமேல் வெண்கொற்ற குடையை பிடித்துக் கொண்டனர். முரசுகள் முழங்கின. இதனைப் பார்த்து தேவர்கள் அனைவரும் அஞ்சி நடுங்கினர். ராவணனின் தேரில் வீணைக்கொடி பறந்தது. அவன் மிகுந்த ஆவேசத்துடன் போருக்கு புறப்பட்டான். ராவணனின் கண்களில் தீப்பொறி பறக்க, அவன் போர்க்களத்திற்கு வந்துச் சேர்ந்தான்.
 
★ராவணன், கோபத்தோடு, அசுர படைகளுடன் போருக்கு வந்தச் செய்தியை ஒற்றர்கள் ராமனிடம் ஓடிச் சென்று தெரிவித்தனர். ராமர், போர்க்கோலம் பூண்டு, தன் கோதண்டம் என்கிற தெய்வ வில்லையும், அம்புறாத் தூணியையும் கட்டிக் கொண்டு, தும்பை மாலை சூடிக் கொண்டு புறப்பட்டார். லட்சுமணனும், ராமனோடு போர்க்கோலம் பூண்டு, ராவணனை போரில் சந்திக்க புறப்பட்டான். யுத்தக் களத்தில் எதிரெதிராக அரக்கர் சேனையும், வானர சேனையும் போருக்குத் தயாராக நின்றனர். போர் தொடங்கியது.
 
★அரக்கர் சேனையும், வானர சேனையும் மிகக் கடுமையாக போரில் ஈடுபட்டனர். வானர படைகளுக்கு ராமர் தலைமை வகித்து மிகுந்த திறமையுடன் போரிடுவதும், அரக்கர் படைக்கு ராவணன் தலைமை வகித்துப் போரிடுவது தான் இந்தளவு கடுமையான போருக்கு காரணம். போரில் வானர வீரர்கள் மிகக் கடுமையாகப் போர் புரிந்தனர். போரில் காயங்கள் ஏற்பட்டு மாண்டவர்கள் பலர். இதனால் அந்த இடம் ரத்த பூமியாக தென்பட்டது. காணும் இடமெல்லாம் பிணங்களாக தெரிந்தன. ராவணன் தன் வில்லில் நாணை பூட்டி அநேக அம்புகளை வானரர்கள் மீது எய்யத்  தொடங்கினான்.
 
★இதைப் பார்த்த அனுமன் அங்கு வந்தான். ராவணா! பலம் இருந்தால் என்னிடம் வந்து போரிடு! என வீரமுழக்கமிட்டான். பிறகு அனுமன், தன் பக்கத்தில் இருந்த பெரிய மரம் ஒன்றை பிடுங்கி ராவணன் மீது தூக்கி வீசினான். ராவணன் அந்த மரத்தின் மீது ஓர் அம்பை ஏவி அதை தூள் தூளாக்கினான். அனுமன் மறுபடியும் ஒரு சிறிய மலையை பிடுங்கி ராவணனை நோக்கி எறிந்தான். ஆனால் அதை ராவணன்  தடுக்கும் முன்பு மரம் அவனது தோளை வேகமாக தாக்கியது. இதனால் பெரும் கோபம்  அடைந்த ராவணன், ஏராளமான அம்புகளை அனுமன் மீது எய்தான்.
 
★ராவணன் எய்த அம்புகள் அனுமனின் உடலை துளைத்தன. ஆனால் அனுமன் அதை சிறிதும் பொருட்படுத்தாமல் போர் புரிந்தான். அனுமன் மறுபடியும் ஒரு மரத்தை பிடுங்கி அரக்கன் ராவணனை நோக்கி எறிந்தான். ஆனால் அந்த மரம் அவனது தேரோட்டியின்மேல் விழுந்து பல அரக்கர்களை கொன்றது. உடனே வேறோரு தேரோட்டியின்  தேரில் ஏறி தேரைச் செலுத்தினான். ராவணன் ஆயிரமாயிரம் அம்புகளை வானர படைகள் மீது செலுத்தினான். இதனால் பல வானரங்கள் மாண்டனர். இரவு நெருங்கியதால் அன்றைய போர் நிறுத்தப்பட்டது.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை......................
[6:35 am, 29/11/2021] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
240/29-11-2021
 
ராவணன் சூழ்ச்சி...
 
★மறுநாள் காலையில், இலங்கை நகரில் ராவணன் தனது மந்திர ஆலோசனை மண்டபத்திற்கு வந்தான். அங்கு அவன், இனி சீதையை நான் எவ்வாறு அடைவது? சீதையை கவர்ந்து வந்து நீண்ட ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டது. இன்னும் நான் அவளை மனதால் கூட அடைந்த பாடில்லை. இனி என்ன செய்தால் நான் அவளை மிக எளிதாக அடைய முடியும்? என ஆழமாக யோசித்துக் கொண்டு இருந்தான். அப்பொழுது மாய வேலைகளில் வல்லவனான மகோதரன் அங்கு வந்தான். அவன் ராவணனை வணங்கி நின்றான்.
 
★பிறகு அவன் ராவணனிடம், அரசே! தங்கள் முகம் ஏன் இவ்வளவு வாடி இருக்கின்றது? தாங்கள் எதையோ நினைத்து ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருக்கிறீர்கள் போல் எனக்குத் தெரிகிறதே? தங்களின் முக வாட்டத்திற்கான காரணம் என்ன? என்று கேட்டான்
ராவணன், மகோதரனே! நீ மந்திரத்திலும், தந்திரத்திலும் மிகச் சிறந்தவன். நான் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறேன். அழகில் ஒப்பற்றவளாய் இருக்கும் சீதையை அடைந்தால் மட்டுமே எனக்கு மகிழ்ச்சி கிடைக்கும். என்ன செய்தால் அவளை எளிதாக அடைய முடியும்?.
 
★மந்திரத்திலும், தந்திரத்திலும் வல்லவனாக இருக்கும் உன்னிடம் ஏதேனும் யோசனை இருந்தால் என்னிடம் கூறு என்றான். மகோதரன், அரசே! பெண்களுக்கு தாய் வீட்டின் மீது பாசம் அதிகம். தாய் தந்தையரின் மேல் அதிக பாசத்தை வைத்து இருப்பார்கள். ஒரு சமயம், தட்ச பிரஜாபதியின் மகளாக, தாட்சாயணியாக அவதாரம் கொண்டு பார்வதிதேவி  ஈசனை மணந்தாள். பின்னர் தட்சன் தான் நடத்திய யாகத்தில் மருமகனான ஈசனை அழைக்காததால், ஈசன் அங்கு செல்லாமல் இருந்தாலும், இறைவனின் ஆணையை மீறி தாட்சாயணி தட்சன் நடத்திய யாகத்திற்கு சென்றாள். இது போல் பெண்களுக்கு தாய் வீட்டிற்கு செல்வதில் அதிக பிரியமுண்டு.
 
★பெண்கள், தாய் தந்தையின் மேல் எப்போதும் அதிக கவனம் செலுத்துவார்கள். இதனை மையமாக கொண்டு, மாய வேலையில் வல்லவனாக இருக்கும் அரக்கன் மருத்தனை, மிதிலாபுரியை ஆளும் சீதையின் தந்தை ஜனகனாக உருமாறி வரச் செய்து, உன்னை அடையச் சொல்லுமாறு அந்த சீதையை வற்புறுத்தி கூறச் சொல்லலாம். தந்தையின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து அல்லது தந்தைக்கு தன்னால் எந்த இடரும் வரக்கூடாது என எண்ணி சீதை மனம் மாறுவாள். தங்களையும் நேசிப்பாள். இதைக் கேட்ட ராவணன், மகிழ்ச்சியில் துள்ளி குதித்தான். மகோதரா! என்னே! உன் அறிவு திறமை என மனதார பாராட்டினான்.
 
★இந்த மந்திர சூழ்ச்சியில் எப்படியேனும் நான் சீதையை அடைவேன் என்றான் ராவணன். மகோதரா!, நான் அசோக வனத்திற்கு சென்று சீதையுடன் அன்பாக உரையாடிக் கொண்டு இருக்கிறேன். அப்பொழுது நீ மருத்தனை ஜனகனாக மாறச் சொல்லி, அவனுடன் அங்கு வா என கூறிவிட்டு அவனை தழுவிக் கொண்டான். அசோக வனத்தில் சீதை, வேதனையுடன் ராமனை நினைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.அப்பொழுது அரக்க ராவணன் பெண்கள் புடைசூழ, சீதையின் முன் வந்து நின்றான்.
 
★சீதையின் முன் கைகூப்பி வணங்கி, பெண்ணே! அழகின் வடிவமே! உன்னால் நான் தினம் தினம் வருந்திக் கொண்டு இருக்கிறேன். உன் மீது கொண்ட ஆசையால் நான் அவதிப்பட்டு கொண்டிருக்கிறேன். நீ எப்போது என் மீது சிறிது இரக்கம் காட்ட போகிறாய்?. பெண்களுக்கு எப்போதும் இளகிய மனம் உண்டு. நீ என் மேல் ஏன் இரக்கம் காட்ட மறுக்கின்றாய்? உனக்கு என் மேல் என்ன கோபம்? நீ என்னை ஏற்றுக் கொண்டால், உன்னை அரசியாக்கி, நான் உனக்கு சேவை புரிந்து என் வாழ்நாளை கழிப்பேன். அரண்மனையில் உள்ள பெண்கள் அனைவரும் உனக்கு சேவை புரிவார்கள். நீ மகாராணி போல் இங்கு வாழலாம். நீ இப்போதாவது என் மீது கருணை காட்டு எனக்கூறி சீதையை வணங்கினான்.
 
★ராவணனின் சொற்களை கேட்ட சீதை, நெருப்பு போல் கொதித்தாள். அரக்கனே! கொடியவனே! பாதகனே! ஒரு சிங்கத்தை விரும்பும் நான், ஒரு சிறுநரியை விரும்புவேனா? இனியும் இது போன்ற ஆசை இருந்தால் அதை நீ மறந்து விடு. பெண்ணாசையால் அழிந்து விடாதே. உனக்கு அழிவு காலம் நெருங்கி கொண்டு இருக்கிறது. துஷ்டனே! இங்கே நின்று கொண்டு மதிகெட்டு பேசாதே. இங்கே இருந்து சென்று விடு என்று கடிந்து பேசினாள். சீதை இப்படி பேசியதைக் கேட்டும் ராவணன் அமைதியாக இருந்தான்.
 
★பெண்ணே! ராவணனாகிய என்னை மூடனாக நினைக்காதே. நீ என்னுடைய  ஆசைக்கு  இணங்கவில்லை என்றால் நீ பிறந்த நகரத்தையும், புகுந்த நகரத்தையும் பொடிபொடியாக ஆக்குவேன். என்னை யார் என்று நினைத்தாய்? நான் வெள்ளி மலையை அள்ளியெடுத்தவன். நான் மூன்று உலகங்களையும் வென்றவன். நான் உன்னுடைய மிதிலாபுரிக்கும், அயோத்திக்கும் அரக்கர்களை அனுப்பியுள்ளேன்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை....................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
241/30-11-2021
 
மாய ஜனகன்...
 
★அயோத்தியில் பரதன், சத்ருக்கனையும், மிதிலையில் உன் தந்தை ஜனகனையும் கட்டி இழுத்துக் கொண்டு வருமாறு ஏவலாட்களை அனுப்பியுள்ளேன் என்றான். அப்பொழுது, அங்கே மகோதரன், மாய ஜனகனாக மாறிய மருத்தனை கை மற்றும்  கால்களை கட்டி இழுத்துக் கொண்டு வந்தான். சீதை வருவது தன் தந்தைதான் என நினைத்து, தந்தையின் இந்த நிலையைக் கண்டு மிகவும் வருந்தினாள். என்ன செய்வது என்று தெரியாமல் தந்தையை பார்த்து அழுதாள்.
 
★கடவுளே! என் தந்தைக்கு இந்த துயரம் வந்ததே. இனி நான் என்ன செய்வேன். தந்தையே! என்னை பெண்ணாக பெற்று வளர்த்ததற்கு தாங்கள் இன்று பெருந்துயரம் அடைந்தீரே. இது என்னை பெற்ற பாவத்திற்கா, உங்களுக்கு இந்த தண்டனை?. ஆயிரமாயிரம் வறியவர்களுக்கு உதவி செய்வீரே. இன்று நமக்கு உதவ யாரும் இல்லையே! தரும மூர்த்தியாகிய உங்களுக்கு துன்பம் நேர்ந்ததே. இனி நான் என்ன செய்வேன். என்னை சிறை மீட்டுச் செல்ல இன்னும் என் கணவர் வரவில்லையே! எப்படி உங்களை சிறை மீட்பேன்.
 
★ஒரு பெண்ணாகிய நான் உங்களை எப்படி சிறை மீட்பேன் என பலவாறு புலம்பி அழுதாள். அப்பொழுது அந்த கொடிய ராவணன் சீதையைப் பார்த்து பெண்ணே! நீ கவலைப்படாதே. நீ என்னை ஏற்றுக் கொள். நான் உன் தந்தையை இலங்கையின் அரசனாக முடி சூட்டுகிறேன். நீயும் நானும் இங்கு மகிழ்ச்சியாக வாழலாம். உன்னைப் பெற்று வளர்த்த தாய் தந்தையரை நான் ஒன்றும் செய்ய மாட்டேன். இதற்காக நீ என்னை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்றான். சீதை, ஒரு சிங்கத்தை விரும்பும் நான், ஒரு தந்திரமான சிறுநரியுடன் வாழ்வேனா? என் கணவனின் அம்பிற்கு நீ அழிவது நிச்சயம். அந்த பயங்கர போர்க்களத்தில் நீ என்னவரின் அம்புப்பட்டு வீழ்ந்து கிடப்பாய் என்றாள் கோபத்துடன்.
 
★ராவணன் இதைக்கேட்டு கடுங்கோபம் கொண்டான். அப்பொழுது மகோதரன் ராவணனை பார்த்து, அரசே! தாங்கள் சீதையிடம் கோபம் கொள்ள வேண்டாம்.  சீதையின் தந்தையாகிய ஜனகன் புத்தி கூறினால் நிச்சயம் அவள் கேட்பாள் என்றான். பிறகு மாய ஜனகன் சீதையை பார்த்து, மகளே! என் செல்லமே! நீ அழாதே. நீ இந்த ராவணனை அடைந்தால், நிச்சயம் உன் துன்பம் தீரும். உன்னால் பிற உயிர்கள் அழிவது நல்ல செயலா? உன்னால் நான் இன்று இறக்கும் தருவாயில் உள்ளேன். ஆதலால் நீ இந்த ராவணனை ஏற்றுக் கொள். இதனால் உன் துன்பமும் நீங்கும். எங்கள் துன்பமும் நீங்கும் என்றான்.
 
★இதைக் கேட்ட சீதை பெரும் கோபம் கொண்டாள். இப்படி பேசுகின்ற நீ என் தந்தையா? இது மிதிலையின் அரசன் ஜனகர் பேசும் வார்த்தையா? தண்ணீர் பனிக்கட்டியாக மாறினாலும், மேருமலை கடலில் மிதந்தாலும், சீதை ஒரு போதும் இந்த ராவணனை ஏற்க மாட்டாள். விஷம் போன்ற இந்த மோசமான வார்த்தைகளை பேசி தாங்கள் உங்கள் பெருமையை இழந்து விடாதீர்கள் என்றாள் மிகுந்த சீற்றத்துடன்.அப்போது மகோதரன் ராவணனிடம் ஏதோ கூறவே அவன் அவசரமாக அரண்மனைக்குப் புறப்பட்டான்.
 
★போகும் போது மகோதரன், மாய ஜனகனை பார்த்து இவனை சிறையில் அடைத்து வையுங்கள் என்றான். அப்போது சீதை தந்தையை பார்த்த வண்ணம் வருந்திக் கொண்டு இருந்தாள். அப்போது திரிசடை சீதையிடம், தாயே நீ வருந்த வேண்டாம். இங்கு உன் தந்தை போல் வந்தது, மாய வேலையில் வல்லவனான மருத்தன். நீ இதனை நினைத்து கவலைப்பட வேண்டாம் என ஆறுதல் கூறினாள். ராவணன் கோபத்துடன் ஆலோசனை மண்டபத்தை அடைந்தான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை......................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
242/01-12-2021
 
அதிகாயன்
யுத்தகளம் செல்லுதல்...
 
 
★ராவணன் கோபத்துடன் தனது ஆலோசனை மண்டபத்தை அடைந்தான். அங்கு நின்று கொண்டிருந்த அமைச்சர்களை பார்த்து, நீங்கள் எல்லாம் வீரர்களா? இல்லை, யுத்தம் செய்ய பயப்படும்  கோழைகளா? உங்கள் உடம்பில் வீர இரத்தம் ஓடுகிறதா? இல்லை கழுநீர் ஓடுகிறதா? நான் இன்று என் அருமை தளபதிகள் சிலரை  இழந்துவிட்டேன். ஆனால் நீங்கள் இங்கு கல் போல் அசையாமல் நின்று கொண்டு இருக்கிறீர்கள். பகைவர்களை எல்லாம் அழித்து வெற்றியுடன் திரும்புவோம் என வீர வசனம் பேசி கொண்டு சென்றீர்கள்.
 
★நீங்கள் நம்முடைய  வீரமான தளபதிகளுக்குத் துணையாக இருந்து அவர்கள் யாரையும்  காப்பாற்றவும் இல்லை, போரில் வெற்றி பெறவும் இல்லை. இனி போரில் வெற்றி பெற முடியும் என்றால் மட்டுமே போருக்குச் செல்லுங்கள். அப்படி இல்லை என்றால் யாரும் எங்கும் செல்ல வேண்டாம். நானே போருக்குச் செல்கிறேன் எனத் தன்னுடைய  அமைச்சர்களை மிக கடுமையாக பேசினான். ராவணன் கூறிய அனைத்தையும்  கேட்டு அவன் மகனான அதிகாயன் எரிமலை போல் பொங்கி எழுந்தான்.
 
★அதிகாயன், ராவணன், தான்யமாலினி தம்பதிகளின் மகனாவான். மலை போன்ற பெரிய உருவம் கொண்டவன். பிரம்மாவை நோக்கி தவமிருந்து கவசம், தங்க ரதம் முதலிய பல வரங்களை பெற்றவன். தர்ம அறநெறியை உணர்ந்தவன். வீரத்தில் மிகவும் சிறந்தவன். ஆலோசனைகள் சொல்லுவதில் வல்லவன், வேதங்களை முழுமையாகக் கற்றறிந்தவன். எதிரிப்படைகளைத் துவம்சம் செய்து தண்டிப்பதில் மிகச் சிறந்தவன். இவன் இந்திரனின் வஜ்ராயுதத்தையே அடக்கியவன்.
 
★தந்தையே! தாங்கள் என் தம்பி
அட்சயகுமாரனை இழந்து தவிப்பது போல் அந்த ராமனின் தம்பி லட்சுமணனை கொன்று அவனுக்கு உங்களின் வலியை கொடுப்பேன். நான் போருக்கு செல்கிறேன். தாங்கள் போருக்கு தனியாக செல்ல சொன்னாலும் சரி, சேனைகளை அழைத்து கொண்டு செல்ல சொன்னாலும் சரி. நான் தாங்கள் விரும்புவது போலவே  செய்கிறேன். தாங்கள் எனக்கு விடை கொடுங்கள் என்றான். மேலும் திரிசரன் என்ற ராட்சதன், இப்படி புலம்புவதில் எந்தவிதப்  பயனும் இல்லை. பிரம்மாவினால் கொடுக்கப்பட்ட சக்தியும் ஆயுதங்களும் நம்மை காக்கும் கவசங்களும் இருக்க ஏன் வருத்தப் படுகிறீர்கள் என்று ராவணனுக்கு தைரியம் சொல்லி தேற்றினான்.
 
★ஆனாலும் அந்த ராவணன் புலம்பியபடியே இருந்தான். இதனை கண்ட திரிசரன், நாராந்தகன், தேவந்தகன், நிகும்பன் என்ற நான்கு கொடிய ராட்சதர்களும் ஒன்றாக
அதிகாயனுடன் யுத்தத்திற்கு செல்ல முடிவு செய்தார்கள். ராவணனிடம் சென்ற நால்வரும் நாங்கள் ஒன்றாக சேர்ந்து யுத்தம் செய்தால் எத்தனை வலிமை உடைய வீரனாக இருந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று உங்களுக்கு தெரியும். எனவே நாங்கள் நால்வரும் ஒன்றாக யுத்தத்திற்கு செல்ல அனுமதி கொடுங்கள் என்று ராவணனிடம் கேட்டுக் கொண்டார்கள். இதனைக் கேட்ட ராவணன் சிறிது ஆறுதல் அடைந்து அனுமதி கொடுத்தான்.
 
★அதிகாயனும் மற்றவர்களும்  சொன்னதைக் கேட்ட ராவணன், அவனுடன் பெரும் சேனையை அனுப்பி வைத்தான். சிறந்த வீரர்களான கும்பன், நிகும்பன், அகம்பன் ஆகியோரையும் அதிகாயன் தேருக்கு முன்பும், பின்பாகவும் செல்லும்படி ஆணையிட்டு அனுப்பினான்.
ராம லட்சுமணர்களை எங்களது அஸ்திரத்தினாலும் மிகுந்த வலிமையினாலும் அழித்து விட்டு, நாங்கள் உங்களை வந்து பார்க்கிறோம் என்று நால்வரும் அவர்களுடைய படைகளுடன் யுத்தகளத்திற்கு சென்றார்கள். நால்வரும் ஒன்றாக செல்வதால் இம்முறை வெற்றி அடைவோம் ராம லட்சுமணர்கள் அழிவார்கள் என்று ராவணன் நம்பினான்.
 
★அதிகாயன் ராவணனிடம் இருந்து விடைப்பெற்று, தனது கவசத்தை அணிந்து கொண்டு கையில் வில்லையும், மற்றும் உடைவாளையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான். கோடிக் கணக்கில் யானைப்படையும், தேர்ப்படையும் உடன் சென்றது.
அதிகாயன் போர்களத்திற்கு வந்தடைந்தான். அங்கு ராமனால் ஏற்பட்டிருந்த  அரக்க படைகளின் அழிவைக் கண்டு வருந்தினான். இதை காணவா நான் இங்கு வந்தேன் என புலம்பி அழுதான். பிறகு அவன் கோபங்கொண்டு எழுந்தான். ராமனின் தம்பி லட்சுமணனை கொன்று, அந்த ராமனுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்துவேன். அப்பொழுது தான் என் மனம் சாந்தமடையும் என்றான்.
 
★லட்சுமணனை தன்னுடன் போர் புரிய வருமாறு மயிடன் என்னும் அரக்கனை தூது செல்ல அனுப்பினான். மயிடன், ராமர் இருக்கும் இருப்பிடத்தை அடைந்தான். அவனை பார்த்த வானரங்கள், அவனைப் பிடித்து  மிகவும் துன்புறுத்தினர். ராமர் அவர்களை தடுத்து நிறுத்தி தூதுவர்களாக வந்தவர்களை துன்புறுத்தக் கூடாது எனக் கூறினார்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை....................
 
அன்புடையீர்,
வணக்கம் பல.
 
மகாபாரத காவியம், பாகம் 1 புத்தகம் வெளியிட்டு தற்போது  விற்பனையில் உள்ளது. தற்சமயம் மகாபாரத காவியம் 2ம் பகுதி அச்சகத்தில் அச்சிட கொடுக்கப்பட்டு உள்ளது.
தை மாதம்(ஜனவரி 22) வெளியிட உத்தேசம். ஆகவே மகாபாரத காவியம் -2 புத்தகம் வேண்டுவோர் ரூ400/-செலுத்தி பதிவு செய்து கொள்ள கோருகிறேன்.
 
மகாபாரத காவியம் பாகம்-1 புத்தகமும் கிடைக்கும். இதன் விலை ரூ400/-
 
கீழ்கண்ட வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப கேடடுக் கொள்கிறேன்.
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
வங்கி விபரம்:-
 
மகாபாரத காவியம்
பாகம்-1 விலை ரூ.400/-
 
பாகம்-2 விலை ரூ.400/-
 
N.SUBHARAJ
FEDERAL BANK
ALAGAPURAM BRANCH
A/C NO:15270100023870
IFSC CODE:FDRL0001527
 
 
Google pay:
9944110869
 
 
[3:54 pm, 01/12/2021] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
ஶ்ரீராம காவியம்
~~~~~
242/01-12-2021
 
அதிகாயன்
யுத்தகளம் செல்லுதல்...
 
 
★ராவணன் கோபத்துடன் தனது ஆலோசனை மண்டபத்தை அடைந்தான். அங்கு நின்று கொண்டிருந்த அமைச்சர்களை பார்த்து, நீங்கள் எல்லாம் வீரர்களா? இல்லை, யுத்தம் செய்ய பயப்படும்  கோழைகளா? உங்கள் உடம்பில் வீர இரத்தம் ஓடுகிறதா? இல்லை கழுநீர் ஓடுகிறதா? நான் இன்று என் அருமை தளபதிகள் சிலரை  இழந்துவிட்டேன். ஆனால் நீங்கள் இங்கு கல் போல் அசையாமல் நின்று கொண்டு இருக்கிறீர்கள். பகைவர்களை எல்லாம் அழித்து வெற்றியுடன் திரும்புவோம் என வீர வசனம் பேசி கொண்டு சென்றீர்கள்.
 
★நீங்கள் நம்முடைய  வீரமான தளபதிகளுக்குத் துணையாக இருந்து அவர்கள் யாரையும்  காப்பாற்றவும் இல்லை, போரில் வெற்றி பெறவும் இல்லை. இனி போரில் வெற்றி பெற முடியும் என்றால் மட்டுமே போருக்குச் செல்லுங்கள். அப்படி இல்லை என்றால் யாரும் எங்கும் செல்ல வேண்டாம். நானே போருக்குச் செல்கிறேன் எனத் தன்னுடைய  அமைச்சர்களை மிக கடுமையாக பேசினான். ராவணன் கூறிய அனைத்தையும்  கேட்டு அவன் மகனான அதிகாயன் எரிமலை போல் பொங்கி எழுந்தான்.
 
★அதிகாயன், ராவணன், தான்யமாலினி தம்பதிகளின் மகனாவான். மலை போன்ற பெரிய உருவம் கொண்டவன். பிரம்மாவை நோக்கி தவமிருந்து கவசம், தங்க ரதம் முதலிய பல வரங்களை பெற்றவன். தர்ம அறநெறியை உணர்ந்தவன். வீரத்தில் மிகவும் சிறந்தவன். ஆலோசனைகள் சொல்லுவதில் வல்லவன், வேதங்களை முழுமையாகக் கற்றறிந்தவன். எதிரிப்படைகளைத் துவம்சம் செய்து தண்டிப்பதில் மிகச் சிறந்தவன். இவன் இந்திரனின் வஜ்ராயுதத்தையே அடக்கியவன்.
 
★தந்தையே! தாங்கள் என் தம்பி
அட்சயகுமாரனை இழந்து தவிப்பது போல் அந்த ராமனின் தம்பி லட்சுமணனை கொன்று அவனுக்கு உங்களின் வலியை கொடுப்பேன். நான் போருக்கு செல்கிறேன். தாங்கள் போருக்கு தனியாக செல்ல சொன்னாலும் சரி, சேனைகளை அழைத்து கொண்டு செல்ல சொன்னாலும் சரி. நான் தாங்கள் விரும்புவது போலவே  செய்கிறேன். தாங்கள் எனக்கு விடை கொடுங்கள் என்றான். மேலும் திரிசரன் என்ற ராட்சதன், இப்படி புலம்புவதில் எந்தவிதப்  பயனும் இல்லை. பிரம்மாவினால் கொடுக்கப்பட்ட சக்தியும் ஆயுதங்களும் நம்மை காக்கும் கவசங்களும் இருக்க ஏன் வருத்தப் படுகிறீர்கள் என்று ராவணனுக்கு தைரியம் சொல்லி தேற்றினான்.
 
★ஆனாலும் அந்த ராவணன் புலம்பியபடியே இருந்தான். இதனை கண்ட திரிசரன், நாராந்தகன், தேவந்தகன், நிகும்பன் என்ற நான்கு கொடிய ராட்சதர்களும் ஒன்றாக
அதிகாயனுடன் யுத்தத்திற்கு செல்ல முடிவு செய்தார்கள். ராவணனிடம் சென்ற நால்வரும் நாங்கள் ஒன்றாக சேர்ந்து யுத்தம் செய்தால் எத்தனை வலிமை உடைய வீரனாக இருந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று உங்களுக்கு தெரியும். எனவே நாங்கள் நால்வரும் ஒன்றாக யுத்தத்திற்கு செல்ல அனுமதி கொடுங்கள் என்று ராவணனிடம் கேட்டுக் கொண்டார்கள். இதனைக் கேட்ட ராவணன் சிறிது ஆறுதல் அடைந்து அனுமதி கொடுத்தான்.
 
★அதிகாயனும் மற்றவர்களும்  சொன்னதைக் கேட்ட ராவணன், அவனுடன் பெரும் சேனையை அனுப்பி வைத்தான். சிறந்த வீரர்களான கும்பன், நிகும்பன், அகம்பன் ஆகியோரையும் அதிகாயன் தேருக்கு முன்பும், பின்பாகவும் செல்லும்படி ஆணையிட்டு அனுப்பினான்.
ராம லட்சுமணர்களை எங்களது அஸ்திரத்தினாலும் மிகுந்த வலிமையினாலும் அழித்து விட்டு, நாங்கள் உங்களை வந்து பார்க்கிறோம் என்று நால்வரும் அவர்களுடைய படைகளுடன் யுத்தகளத்திற்கு சென்றார்கள். நால்வரும் ஒன்றாக செல்வதால் இம்முறை வெற்றி அடைவோம் ராம லட்சுமணர்கள் அழிவார்கள் என்று ராவணன் நம்பினான்.
 
★அதிகாயன் ராவணனிடம் இருந்து விடைப்பெற்று, தனது கவசத்தை அணிந்து கொண்டு கையில் வில்லையும், மற்றும் உடைவாளையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான். கோடிக் கணக்கில் யானைப்படையும், தேர்ப்படையும் உடன் சென்றது.
அதிகாயன் போர்களத்திற்கு வந்தடைந்தான். அங்கு ராமனால் ஏற்பட்டிருந்த  அரக்க படைகளின் அழிவைக் கண்டு வருந்தினான். இதை காணவா நான் இங்கு வந்தேன் என புலம்பி அழுதான். பிறகு அவன் கோபங்கொண்டு எழுந்தான். ராமனின் தம்பி லட்சுமணனை கொன்று, அந்த ராமனுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்துவேன். அப்பொழுது தான் என் மனம் சாந்தமடையும் என்றான்.
 
★லட்சுமணனை தன்னுடன் போர் புரிய வருமாறு மயிடன் என்னும் அரக்கனை தூது செல்ல அனுப்பினான். மயிடன், ராமர் இருக்கும் இருப்பிடத்தை அடைந்தான். அவனை பார்த்த வானரங்கள், அவனைப் பிடித்து  மிகவும் துன்புறுத்தினர். ராமர் அவர்களை தடுத்து நிறுத்தி தூதுவர்களாக வந்தவர்களை துன்புறுத்தக் கூடாது எனக் கூறினார்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை....................
[3:55 pm, 01/12/2021] Naga. Suba.Raja Rao Salem: அன்புடையீர்,
வணக்கம் பல.
 
மகாபாரத காவியம், பாகம் 1 புத்தகம் வெளியிட்டு தற்போது  விற்பனையில் உள்ளது. தற்சமயம் மகாபாரத காவியம் 2ம் பகுதி அச்சகத்தில் அச்சிட கொடுக்கப்பட்டு உள்ளது.
தை மாதம்(ஜனவரி 22) வெளியிட உத்தேசம். ஆகவே மகாபாரத காவியம் -2 புத்தகம் வேண்டுவோர் ரூ400/-செலுத்தி பதிவு செய்து கொள்ள கோருகிறேன்.
 
மகாபாரத காவியம் பாகம்-1 புத்தகமும் கிடைக்கும். இதன் விலை ரூ400/-
 
கீழ்கண்ட வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப கேடடுக் கொள்கிறேன்.
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
வங்கி விபரம்:-
 
மகாபாரத காவியம்
பாகம்-1 விலை ரூ.400/-
 
பாகம்-2 விலை ரூ.400/-
 
N.SUBHARAJ
FEDERAL BANK
ALAGAPURAM BRANCH
A/C NO:15270100023870
IFSC CODE:FDRL0001527
 
 
Google pay:
9944110869
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
243/02-12-2021
 
அதிகாயன்
கொல்லப்பட்டான்...
 
★ராமர் மயிடனை பார்த்து, இங்கு எதற்காக வந்தாய்? எனக் கேட்டார். அதற்கு அவன், நான் அரசர் ராவணனின் மகனான அதிகாயன் அனுப்பிய தூதுவன். அதிகாயன், தங்கள் தம்பி லட்சுமணனிடம் போர் புரிய அழைப்பு விடுத்திருக்கிறார் என கூறினான். ராமர், தூதுவனே! என் தம்பியை வெல்ல இந்த உலகில் எவரும் இல்லை. போர்க்களத்தில் அவனின் வலிமையை காண்பீர்கள் எனக் கூறி அனுப்பினார். பிறகு ராமர், தம்பி லட்சுமணன் ஒருவனே அதிகாயனை தனித்து நின்று போரிட்டு அழிப்பான். நமது லட்சுமணனை சாதரணமாக எண்ணி விடாதீர்கள். என்னைக் காட்டிலும் லட்சுமணன் சிறந்த வீரன் என அங்கிருந்தவர்களிடம் கூறினார்.
 
★அப்பொழுது விபீஷணன், ராமா!, அதிகாயன், பிரம்ம தேவனிடம் தவம் செய்து எவராலும் அழிக்க முடியாத வரத்தினை பெற்றுள்ளான்.
அதனால் லட்சுமணனுடன் நாம் அனைவரும் செல்வது நலம் என்றான். ராமர், விபீஷணா! நீ லட்சுமணனுடன் சென்று, அவன் போர் வேகத்தையும் மற்றும்  கர வேகத்தையும் காண்பாயாக எனக் கூறி ராமர் அனுப்பி வைத்தார். பிறகு லட்சுமணனும், விபீஷணனும், வாயுமைந்தன் அனுமனும் மற்றும் சுக்ரீவனும்
ராமரை தொழுது அங்கிருந்து போர்க்களத்திற்கு சென்றனர்.
 
★அங்கு அரக்க படைகளும், வானர படைகளும் மிகப் பெரும் ஆரவாரத்துடன் மோதிக் கொண்டு போர் புரிந்தனர். அரக்கப் படைகளின் கோரமான ஆவேசத்தைத்  தாக்கு பிடிக்க முடியாமல் வானர படைகள் நிலை தடுமாறின. லட்சுமணன் தன்னை நோக்கி வந்த கொடிய அரக்கர்களை, தன் அம்பிற்கு இரையாக்கினார். இதைப் பார்த்த தாருகன் என்னும் அரக்கன், தேர் மீது நின்றுக் கொண்டு லட்சுமணன் மீது அம்புகளை ஏவினான். உடனே லட்சுமணன் அந்த அம்புகளை தகர்த்தெறிந்தார்.பிறகு அவனை நோக்கி லட்சுமணன் அம்பினை ஏவி தாருகனின் தலையினை துண்டாக்கினார்.
 
★தாருகன் இறந்ததை கண்ட மற்ற அரக்கர்கள், லட்சுமணனை தாக்க ஓடி வந்தனர். லட்சுமணன் அவர்கள் அனைவரையும் சில நொடிகளில் வீழ்த்தினார். அப்பொழுது ராவணன், மகன் அதிகாயனுக்கு துணையாக யானைப்படைகளை அனுப்பி வைத்தான். அங்கு வந்த யானைப்படைகளை எல்லாம் லட்சுமணன் தன் அம்பினால் வீழ்த்தினார். லட்சுமணனின் கரவேகத்தை எவராலும் பார்க்க முடியவில்லை. மற்றொரு புறம் அனுமன் யானைப்படைகளை வீழ்த்திக் கொண்டு இருந்தான். அனுமன், யானைகளை கைகளால் அடித்தும், காலால் மிதித்தும், கடலில் ஏறிந்தும், தரையில் தேய்த்தும் கொன்று ஒழித்தான்.
 
★இதனைப் பார்த்து மிகுந்த கோபங்கொண்ட தேவாந்தகன் எனும் அரக்கன் அனுமனைத் தாக்க வந்தான். அனுமனின் தாக்குதலை தாக்கு பிடிக்காமல் அவன் மாண்டான். இதைப் பார்த்து மிகவும் கோபங்கொண்ட அதிகாயன், நான் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்றான். அப்பொழுது அனுமன் உன்னுடன் திரிசரனையும் அழைத்து வா! என்று கூறிக் கொண்டிருக்கும் போது அரக்கன் ஒருவன் தேரில் வந்து அனுமன் மீது பாய்ந்தான். அனுமன், அந்த அரக்கனை தேரில் இருந்து தள்ளி, தேரை அவன் மீது ஏற்றிக் கொன்றான். அனுமனின் போர் திறமையை கண்டு அதிகாயன் அதிசயித்தான்.
 
★பிறகு அவன் நான் இந்த வானர அனுமனுடனா போர்
புரிய வந்தேன்? என நினைத்துக் கொண்டு லட்சுமணன் இருக்கும் இடத்திற்கு தன்னுடைய தேரைச் செலுத்தினான். லட்சுமணனும், அதிகாயனும் போர் புரிய தொடங்கினர். அதிகாயன் தேரில் நின்று போர் புரிந்ததால், அங்கதன் லட்சுமணனை தன் தோளின் மீது ஏறி போர் புரியக் கேட்டுக் கொண்டான். அங்கதன் தோள்மீது அமர்ந்த லட்சுமணன், அதிகாயன் இருவருக்கும் மிகக் கடுமையான போர் நடந்தது. லட்சுமணன் அம்புகளை ஏவி அதிகாயனின் தேரையும், தேர் பாகனையும் வீழ்த்தினார். பிறகு அதிகாயன் மேல் பல அம்புகளை ஏவினார்.
 
★லட்சுமணனின் அம்புகளை எதிர்த்து நின்று எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் நிற்கும் அதிகாயனைக் கண்டு வானர வீரர்கள் திகைத்து நின்றனர். தேவர்களும், யட்சர்களும்,  முனிவர்களும் இந்த அதிசயச் சண்டையைக் காண விண்ணில் கூடி நின்றனர். லட்சுமணன் அதிகாயனை வீழ்த்தும் வழி தேடித் திகைத்து நின்றார். அப்போது வாயுதேவன் லட்சுமணன் அருகில் வந்து, அதிகாயனை பிரம்மாஸ்திரம் எய்தால் மட்டுமே வீழ்த்த முடியும். வேறு எந்த ஆயுதங்களாலும் வீழ்த்த முடியாது எனக் கூறிவிட்டு சென்று விட்டார்.
 
★உடனே லட்சுமணன் மந்திரம் ஜபித்து பிரம்மாஸ்திரத்தை வரவழைத்து, பூமி அதிரும்படி அதனை அதிகாயன் மேல் செலுத்தினார். அதிகாயன் பிரம்மாஸ்திரத்தை வீழ்த்த ஏவிய அஸ்திரங்கள் பலனற்றுப் போயின. அந்த அஸ்திரமானது அதிகாயனின் தலையை துண்டித்து வானவழியாகச் சென்றது. இதனை பார்த்த வானர வீரர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். வானில் இருந்த தேவர்களும் இதனைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். பிறகு லட்சுமணன் அங்கதனின் தோளில் இருந்து கீழே இறங்கினார். லட்சுமணின் இத்தகைய ஆற்றலைக் கண்ட விபீஷணன், இந்திரஜித் அழிவது உறுதி என நினைத்துக் கொண்டான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை....................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
246/05-12-2021
 
இந்திரஜித் ஆவேசம்...
 
★அப்பொழுது இந்திரஜித் அனுமனை பார்த்து,  அனுமனே! நில்லு! என் தம்பிகளை கொன்ற உன்னை, நினைத்துக் கொண்டு தான் நான் போருக்கு வந்தேன்.
வானரங்களாகிய நீங்கள் குன்றுகளையும், பாறைகளையும் தூக்கி எறிந்தால், நீங்கள் வெற்றி பெற முடியுமா என்ன? நான் போருக்கு வராததால் நீ உன் ஆண்மை பெரிதென கூறிக் கொண்டிருக்கிறாய். நீ எறியும் இந்த மலைகளும், மரங்களும், பாறைகளுமா? என்னை கொல்ல போகிறது. நான் இப்பொழுது போருக்கு வந்துவிட்டேன். இனி உங்களால் என்னை கொல்ல முடியாது. உங்கள் அனைவரின் உயிரையும் நான் எடுப்பேன் என்றான். இதைக் கேட்ட அனுமன் இந்திரஜித்தை பார்த்து, போர் புரிபவர்கள் தங்களை பெருமையாக கூற மாட்டார்கள். வீரத்தில் நீ மட்டும் தான் சிறந்தவன் என பெருமை கொள்ளாதே என்றான்.
 
★எங்களிடமும் வலிமை வாய்ந்த வீரர்கள் உள்ளார்கள் என்பதை மறந்து விடாதே. அவர்களுடன் உன்னை ஒப்பிட்டால் அவர்களை காட்டிலும் நீ சிறியவன் ஆவாய். எங்களிடமும் வில்லில் சிறந்த வீரர்கள் அதிகமாக உள்ளனர். நீ வேண்டுமென்றால் இந்திரனை வென்றவனாக இருக்கலாம். ஆனால் நாங்கள் உன்னிடம் தோல்வி பெற வரவில்லை, வெற்றி பெறவே வந்துள்ளோம். வீரர்கள் வாயால் பேசுவது சிறப்பல்ல, கையால் பேசுங்கள் என்றான். பிறகு அனுமன் இந்திரஜித்தை பார்த்து, நீ யாருடன் போர் புரிய வந்தாய்? எங்களுடனா? இல்லை இளவல் லட்சுமணனுடனா? இல்லை ராவணனை அழிக்க வந்துள்ள ராமனுடனா? என்றான்.
 
★இந்திரஜித், என் அருமை தம்பி அதிகாயனை கொன்ற அந்த லட்சுமணனின் உயிரை எடுக்கத் தான் வந்துள்ளேன். நான் விண்ணுலகத்தவரையும், மண்ணுலகத்தவரையும் தனியாக நின்று அழிக்கும் ஆற்றல் படைத்தவன் என்றான். பிறகு அனுமன் இந்திரஜித்தை நோக்கி ஒரு பாறையை தூக்கி எறிந்தான். ஆனால் அந்த பாறை வீரன் இந்திரஜித் மேல் பட்டு தூள்தூளானது. வானரவீரன் நீலனும் இந்திரஜித்தை நோக்கி மலைகளை எறிந்து கொண்டு இருந்தான். ஆனால் இந்திரஜித் அதை தன் அம்புகளால் தூள்தூளாக்கினான். பிறகு அங்கதன் வந்து போர் புரிய தொடங்கினான். ஆனால் அவனை இந்திரஜித்தின் பாணங்கள் வீழ்த்தியது. வானரங்கள் இந்திரஜித்தின் மீது பாறைகளை தூக்கி போட்டு களைத்து போயினர். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த லட்சுமணன், விபீஷணா! நீ சொன்னது சரி தான். நம்முடைய  படைகள் எல்லாம் அழிந்துக் கொண்டிருக்கிறது.
 
★அங்கே பார்! நம் படைவீரர்கள் வீழ்ந்துக் கொண்டு இருப்பது நன்கு தெரிகிறது. நான் முதலில் படைகளை அனுப்பியது தவறு. நானே சென்று அவனிடம் போர் புரிந்திருக்க வேண்டும் என்றான். விபீஷணன், லட்சுமணா! முன்பு தேவர்களும் இப்படித்தான் இவனிடம் தோற்றனர். இவனிடம் கவனமாக போர் புரிய வேண்டும். ஏனென்றால் இவன் மாய வேலை செய்வதில் வல்லவன் என்றான். பிறகு லட்சுமணன், இந்திரஜித்தை எதிர்த்து போரிட அவன் முன் சென்று நின்றான். அப்பொழுது இந்திரஜித், சாரன் என்னும் ஒற்றனை பார்த்து இவன் யார் எனக் கேட்டான். சாரன், இவன் தான் ராமனின் தம்பி லட்சுமணன். தங்கள் தம்பிகளை கொன்றவன் என்று கூறினான். இதைப் கேட்ட அங்கிருந்த அரக்கர்கள் இளவல் லட்சுமணனை தாக்க ஓடி வந்தனர்.
 
★லட்சுமணன், அங்கிருந்த அரக்கர்கள் அனைவரையும் தன் அம்புகளுக்கு இரையாக்கினார். லட்சுமணனின் வில் வேகம் மற்றும் கரவேகத்தையும் கண்டு இந்திரஜித் வியப்படைந்தான். லட்சுமணனை பார்த்து, இவன் சிறந்த வில் வீரன் எனப் புகழ்ந்து பேசினான். அங்கு வந்திருந்த யானைப்படைகள், குதிரைப் படைகள் என அனைத்தையும் லட்சுமணன் அம்பை ஏவி அழித்துக் கொண்டிருந்தான். லட்சுமணனின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் அரக்கர்கள் மாண்டனர். இதைப் பார்த்த இந்திரஜித் தன் படைகள் அழிவதைக் கண்டு கோபங் கொண்டான். உடனே அவன் தேரில் நின்று லட்சுமணனுடன் போர் புரிய தொடங்கினான். இதைப் பார்த்த அனுமன், லட்சுமணனை தன் தோளில் ஏறிக் கொண்டு போர் புரியுமாறு வேண்டினான்.லட்சுமணன் அனுமனின் தோளில் இருந்துக் கொண்டே அரக்க சேனைகளை அழித்தார்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜ்
9944110869.
 
நாளை.......................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
247/06-12-2021
 
நாகபாசம் ஏவிய
இந்திரஜித்...
 
★லட்சுமணன் அனுமனின் தோளில் இருந்துக் கொண்டே அரக்க சேனைகளை அழித்தார். இந்திரஜித் லட்சுமணனை நோக்கி ஆயிரமாயிரம் அம்புகள் ஏவினான். லட்சுமணன் அந்த பாணங்களை எல்லாம் தகர்த்து எறிந்தார்.  லட்சுமணனும், அந்த இந்திரஜித்தை நோக்கி ஆயிரம் பாணங்களை ஏவினான். இந்திரஜித் அவற்றை எல்லாம் தூள்தூளாக்கினான். இருவரும் ஏவும் பாணங்கள் ஒன்றை ஒன்று மோதிக்கொண்டு தூளாகின. பிறகு லட்சுமணன் ஒரு அற்புத பாணத்தை ஏவி இந்திரஜித்தின் கவசத்தை அறுத்தெறிந்தார். அனுமன், இந்திரஜித்தின் தேரை காலால் உதைத்து உடைத்தான்.
 
★பிறகு லட்சுமணன் ஓர் அம்பை ஏவி இந்திரஜித்தின் வில்லை உடைத்தார். மறுபடியும் ஓர் பாணத்தை இந்திரஜித்தின் மீது ஏவினார். அந்த அம்பு நேராகச் சென்று இந்திரஜித்தின் மார்பில் துளைத்தது.  அவன் மார்பில் ஏற்பட்ட காயத்தில் இருந்து ரத்தம் வழிந்துக் கொண்டிருந்தது. அப்பொழுது இந்திரஜித்துக்கு உதவ அரக்க துமிராட்சசனும், மகாபாரிசுவனும் வந்தனர். அவர்கள் லட்சுமணனை நோக்கி எதிர்க்க தொடங்கினர். உடனே லட்சுமணன் அவர்களை தன் அம்புகளுக்கு இரையாக்கினார். லட்சுமணனின் வில் திறமையை கண்டு இந்திரஜித் மனமுவந்து பாராட்டினான்.
 
★பிறகு இந்திரஜித் போர் புரிய மற்றொரு தேரில் ஏறினான். லட்சுமணன் தன் அம்பை ஏவி அத்தேரை ஒடித்தார். இவ்வாறு இந்திரஜித் ஏறும் தேர்களை லட்சுமணன் அழித்த வண்ணம் இருந்தார். லட்சுமணரின் இந்த போரை கண்டு தேவர்கள் அதிசயித்தனர். பகல் பொழுது மறைய தொடங்கி இருள் சூழ்ந்தது. இந்திரஜித் வானத்தில் போய் மறைந்தான். வானர வீரர்கள் இந்திரஜித் பயந்து ஓடி மறைந்து விட்டான் என மிகவும் மகிழ்ந்தனர். அப்போது அங்கு வந்த ராமரை,  ராட்சதர்கள் சிலர் சக்தி வாய்ந்த அம்புகளால் தாக்கத் தொடங்கினார்கள்.
 
★ராட்சதர்களின் அனைத்து அம்புகளுக்கும் பதிலடி கொடுத்த ராமர், மறுபக்கம் தனது கூரிய அம்புகளால் கூட்டம் கூட்டமாக வந்த ராட்சதர்களை அழித்துக் கொண்டிருந்தார். அன்றைய பகல் முழுவதும் நடந்த யுத்தம் இரவிலும் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. தேவர்கள், மாயத்தில் வல்லவனான இந்திரஜித் என்ன செய்வானோ என பயந்துக் கொண்டு இருந்தனர். இந்திரஜித் மேக மண்டலத்தில் போய் நின்று கொண்டான். தான் பெற்ற தவத்தின் பலனாக, அவன் மிகச்சிறிய உருவம் எடுத்துக் கொண்டான்.
 
★இங்கு இளவல் லட்சுமணன், அனுமனின் தோளில் இருந்து இறங்கி சிறிது இளைப்பாறிக் கொண்டு இருந்தார். அப்போது
போர் புரிந்து கொண்டிருந்த ராமரும் லட்சுமணன் அருகில் வந்தார்.  அந்த சமயத்தில்  இந்திரஜித் நாகபாசம்  என்னும் அஸ்திரத்தை மந்திரம் சொல்லி கையில் எடுத்தான். அங்கு ராமரும், லட்சுமணனும், வானர வீரர்களும் இந்திரஜித் பயந்து ஓடிவிட்டான் என்று  நினைத்து மகிழ்ச்சியாக இருந்தனர். அந்த நேரம் பார்த்து இந்திரஜித் நாகபாசத்தை ராமர் மற்றும்  லட்சுமணன் மீது ஏவினான்.
 
★உலகமே எதிர்த்தாலும், எதிர்த்து போர் புரியும்  ராம லட்சுமணர்கள்,  தங்கள் மீது நாகபாசம் ஏவியது இந்திரஜித் என்பதை தெரியாமல் ஒடுங்கி விழுந்தனர். வானர சேனைகள் ராம லட்சுமணர்களை சூழ்ந்து கொண்டு மிகுந்த கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இதனால் யுத்தம் நின்றது. இந்திரஜித் தன்னுடைய ராட்சத படை வீரர்களை பாராட்டி விட்டு அரண்மனைக்கு வெற்றிக் கொண்டாடத்தோடு திரும்பிச் சென்றான். ராவணனிடம் சென்ற இந்திரஜித் ராம லட்சுமணர்கள் அழிந்தார்கள். இனி எதிரிகளால் எந்த பயமும் இல்லை என்று கூறினான். இதனைக் கேட்ட ராவணன் மிகவும் மகிழ்ச்சி அடைந்து தனது மகனின் பெரும் வீரத்தை பாராட்டி அவனை கட்டி அணைத்து புகழ்ந்தான்.
 
★அங்கே யுத்தகளத்தில்  ராம லட்சுமணர்கள் நாக பாணத்தின் சக்திக்கு கட்டுப்பட்டு மயங்கிக்  கிடந்தார்கள். பல வானர வீரர்கள் இறந்து விட்டார்கள். பலர் அதிக காயமடைந்து விட்டார்கள். அன்று யுத்தத்தில் மிகப்பெரிய பின்னடைவை கண்ட சுக்ரீவன், நாம் யுத்தத்தில் தோல்வி அடைந்து விட்டோம் என்று எண்ணிக் கொண்டு, மிகுந்த கவலையில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் அமர்ந்து விட்டான்.
 
★இதனை கண்ட விபீஷணன், சுக்ரீவனிடம் சென்று நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள். நீங்கள் தைரியத்தை இழந்தால் வானர வீரர்களும் தைரியம் இழந்து விடுவார்கள். ராம லட்சுமணர்களின் முகத்தை பாருங்கள். இன்னும் அவர்களின் பொலிவு அப்படியே முகத்தில் இருக்கிறது. சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்து மறுபடியும் யுத்தம் செய்ய கிளம்பி விடுவார்கள் என்று சுக்ரீவனுக்கு தைரியத்தை கொடுத்தான் விபீஷணன். சுக்ரீவனும் விபீஷணனும் வானர வீரர்களின்  தைரியத்தை இழக்காமல் இருக்க, சிதறிப் போயிருந்த வானர வீரர்களை ஒன்று படுத்தி உற்சாகப் படுத்தினார்கள். அனைத்து வானர வீரர்களும் ஒன்று பட்டு ராம லட்சுமணர்கள் விழிப்படைய காத்திருந்தார்கள்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை.....................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
248/07-12-2021
 
நாகபாசத்தால்
கட்டுண்ட ராமலட்சுமணர்...
 
★இந்திரஜித், நான் இங்கு வந்த வேலையை முடித்து விட்டேன். என் உடல் சோர்வை நீக்கி விட்டு நாளை மறுபடியும் வருவேன் எனக் கூறிவிட்டு அங்கிருந்து அரண்மனைக்குச் சென்றான். ராவணனிடம் சென்று, தந்தையே! வணக்கம். நான் ராமனையும் லட்சுமணனையும்  நாகபாசத்தை ஏவி கொன்று விட்டேன். திரும்பவும் நாளைச் சென்று மற்ற அனைவரையும் கொல்வேன் என்றான். இதனைக் கேட்டு ராவணன் மகிழ்ந்தான். பிறகு இந்திரஜித் நான் நாளை மறுபடியும் போர்க்களம் செல்ல வேண்டியுள்ளதால் என்னுடைய  மாளிகைக்கு சென்று ஓய்வு எடுத்து கொள்கிறேன் எனக் கூறி விட்டு அங்கிருந்துச் சென்றான்.
 
★அங்கு ராம லட்சுமணர்கள் நாகபாசத்தால் கட்டுண்டு கிடப்பதைப் பார்த்து விபீஷணன் வருந்திக் கொண்டு இருந்தான். அப்போது அங்கு அனலன் என்னும் வானர வீரன் வந்து விபீஷணனுக்கு ஆறுதல் கூறினான். இந்திரஜித் லட்சுமணரின் போர்த்திறத்தால் தோற்று ஓடிப்போய் மறைந்து இருந்து நாகபாசத்தை ஏவுவான் என  எதிர்ப்பார்க்கவில்லை. இங்கு நாகபாசத்தால் யாரும் உயிர் விடவில்லை. இவர்கள் அனைவரும் நாகபாசத்தால் கட்டுண்டு இருக்கிறார்கள் என்றான்.
 
★ராம லட்சுமணர்கள் இருவரும் இந்திரஜித்தால் அழிக்கப் பட்டார்கள் என்ற செய்தியை இலங்கை முழுவதும் பரப்ப ராவணன் உத்தரவிட்டான். ஒரு ராட்சசியை அழைத்து ராமர் லட்சுமணர் இருவரும் மற்றும் அவர்களுடைய வானர சேனைகளும் யுத்த பூமியில் இறந்து கிடக்கிறார்கள் என்ற செய்தியை சீதையிடம் போய் சொல்லுங்கள். அவளை எனது பறக்கும் புஷ்பக விமானத்தில் அழைத்துச் சென்று ராமர் லட்சுமணர்கள் இறந்து கிடக்கும் காட்சியைக்  காண்பியுங்கள். இனி ராவணனைத் தவிர  வேறு யாரும் சீதைக்கு ஆதரவு இல்லை என்று அவளுக்கு நன்கு புரிய வையுங்கள் என்று சொல்லி அனுப்பினான்.
 
★ராட்சசிகளும் ராவணன் கட்டளை இட்டபடி, சீதையை ராமர் இருக்கும் இடத்திற்கு புஷ்பக விமானத்தில் அழைத்துச் சென்றார்கள். தரையில் அசைவற்று இருக்கும் ராமர் லட்சுமணனை பார்த்த சீதை ஒரு கணம் திடுக்கிட்டாள். ராவணன் மாயத்தின் மூலமாக வஞ்சகமாக நம்மை ஏமாற்ற பார்க்கிறானா? என்ற சந்தேகம் சீதைக்கு எழுந்தது. ராமர் அருகில் அவருடைய வில்லும் அம்பும் இருப்பதை பார்த்த சீதை காண்பது உண்மை தான் என்று நம்ப ஆரம்பித்தாள்.
 
★பிற்காலத்தை பற்றி அறிந்து கொள்பவர்கள் தன்னுடைய வருங்காலத்தை பற்றி சொல்லியது அனைத்தும் பொய்யா? கணவர் இறந்து போவார், சிறு வயதில் விதவை ஆவாய் என்று யாரும் எனக்குச் சொல்லவில்லையே. நீண்ட காலம் மகாராணியாய் வாழ்வாய் என்றும், உனக்கு குழந்தைகள் பிறக்கும் என்றும் அவர்கள் சொல்லியது அனைத்தும் பொய்யாகப் போனதே. உங்களது அஸ்திர வித்தைகள் எல்லாம் எங்கே போனது?. உங்களை யாரும் வெல்ல முடியாது என்றார்களே அதுவும் பொய்யாகிப் போனதே. இனி நான் வாழ்வதில் அர்த்தம் இல்லை. இப்போதே எனது உயிரை விட்டு விடப்போகிறேன் என்று சீதை கண்ணீருடன் அழுது புழம்பினாள்.
 
★அருகில் இருந்த திரிசடை , சீதையிடம் பேச ஆரம்பித்தாள்.
ராமர் லட்சுமணன் முகத்தை நன்றாக பாருங்கள் அவர்கள் இறக்கவில்லை. அவர்களின் முகத்தில் தெய்வீக பொலிவு அப்படியே இருக்கிறது. இறந்திருந்தால் அவர்களின் முகம் வேறு மாதிரி இருக்கும். அவர்கள் மாய அஸ்திரத்தின் வலிமையால் மயக்கத்தில் இருக்கிறார்கள். விரைவில் எழுந்து விடுவார்கள். அவர்களை சுற்றி இருக்கும் வானர வீரர்களை பாருங்கள் யாரும் பயந்து ஓடவில்லை. ராமர் விரைவில் எழுந்து விடுவார் என்று அவரை சுற்றி எல்லோரும் தைரியத்துடன் இருக்கிறார்கள் என்றாள்.
 
★திரிசடையின் இந்த ஆறுதல் வார்த்தைகள் சீதையின் காதுகளில் அமிர்தம் பாய்வது போல் இருந்தது. மீண்டும் தனது தைரியத்தை பெற்று அமைதி ஆனாள். உடனே ராட்சசிகள் மீண்டும் சீதையை அசோக வனத்திற்கு அழைத்துச் சென்று விட்டார்கள். ராமரை நினைத்த படி இருந்த சீதை ராவணன் அழிவான். விரைவில் ராமர் வந்து தன்னை மீட்பார் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தாள்.
 
★சுக்ரீவன் விபீஷணனுக்கு ஆறுதல் கூறினான். தனது உறவினன் சுஷேணனை அழைத்து, ராம லட்சுமணர்களை கிஷ்கிந்தைக்கு அழைத்துச் செல்லுங்கள். நான் அந்த ராவணனை அழித்துவிட்டு சீதையை அழைத்து வருகிறேன் என்றான் சுக்ரீவன். அதற்கு சுஷேணன் ராம லட்சுமணர்கள் காயத்திற்கு மூலிகை மருந்துகள் இருக்கிறது. மூலிகைகள் இருக்கும் இடம் நம்மில் பலருக்கு தெரியும். அனுமனிடம் சொன்னால் மூலிகையை உடனே கொண்டு வந்து விடுவார். அதனை வைத்து விரைவில் ராம லட்சுமணர்களை குணப்படுத்தி விடலாம் என்றான். அப்போது காற்றின் சத்தம் அதிகமானது சத்தத்திற்கு நடுவே மிகப்பெரிய கருடன் ஒன்று பறந்து வந்தது.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை...................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
249/08-12-2021
 
நாகபாசம் விலகுதல்...
 
★ராமர் லட்சுமணர்களின் அருகே வந்த கருடன் இருவரையும் தடவிக் கொடுத்தது. உடனே இருவரின் மீதிருந்த அம்புகள் அனைத்தும் மறைந்தது. கருடன் இருவரின் உடலில் இருந்த காயங்கள் மீது தடவிக் கொடுத்தான். இருவரின் மேலிருந்த காயங்கள் அனைத்தும் மறைந்து மிகவும் பலத்துடனும் பொலிவுடனும் எழுந்து அமர்ந்தார்கள். ராமர் லட்சுமணன் எழுந்ததை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்து அவனை அணைத்துக் கொண்டார்.
 
★வானர வீரர்கள் அனைவரும் ராம லட்சுமணர்கள் எழுந்ததை பார்த்து மகிழ்ந்து ராம லட்சுமணர்கள் வாழ்க!! என்று கோஷமிட்டார்கள். ராமர் முன்னை விடவும் உற்சாகமாய் இருப்பதை உணர்ந்து மிகவும் ஆச்சரியம் அடைந்தார். கருடனை பார்த்து தாங்கள் யார் என்று கேட்டார். அதற்கு கருடன் நான் உங்களுக்கு நண்பன். அசுரன் இந்திரஜித் தன்னுடைய மாயத்தினால் பாம்புகளை அம்புகளாக்கி உங்கள் மீது எய்தான். அந்தப் பாம்புகளின் விஷத்தன்மையால் தாங்கள் இருவரும் பலமாக கட்டப்பட்டு இருந்தீர்கள்.
 
★உங்கள் தவ சக்தியின் மிகுதியால் உங்களால் கண் விழிக்க முடிந்தது. பாம்புகளின் சத்ருவான கருடனான என்னை கண்டதும் பாம்புகள் ஓடிவிட்டது. நீ தொடர்ந்து யுத்தம் செய்யலாம் உனக்கு வெற்றி உண்டாகும். நான் யார் என்பதை நேரம் வரும் போது சொல்கிறேன். இப்போது யுத்தத்தில் உங்களுடைய கவனத்தை செலுத்துங்கள். நான் வருகிறேன் என்ற கருட பகவான், இராமரின் திருவடிகளை தொழுது வணங்கி, உங்கள் திருவடிக்கு கோடி வணக்கங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து பறந்து சென்றது.
 
★ பிறகு அனுமன் இராமரிடம், பெருமானே! லட்சுமணர் இறந்து விட்டார் எனவும், நாம் அனைவரும் இறந்து விட்டோம் எனவும் அன்னை சீதை நினைத்து வருந்திக் கொண்டு இருப்பார். அது மட்டுமின்றி அங்கு அரக்கர்கள் மகிழ்ச்சியில் இருப்பார்கள். ஆதலால், நாம் உயிர் பிழைத்துவிட்டோம் என்பதை இலங்கையில் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள நாம் ஆரவாரம் செய்வோம் என்றான். ராமர், அனுமனின் யோசனைக்கு உடன்பட்டு சம்மதித்தார். பிறகு வானரங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உலகமே அதிரும் வண்ணம் ஆரவாரம் செய்தனர்.
 
★இலங்கையில் இருவர் மட்டும் தூங்காமல் இருந்தனர். ஒருவன் ராவணன். ராவணன் சீதையை நினைத்துக் கொண்டு சிறிதும் தூங்காமல் விழித்து இருந்தான். மற்றொருவர் சீதை. சீதை ராமனையே நினைத்துக் கொண்டு தூங்காமல் இருந்தாள். இந்த ஆரவாரம் இலங்கை நகர் முற்றிலும் கேட்டது. ராவணன் இந்த ஆரவாரத்தைக் கேட்டு திடுக்கிட்டான். இது என்ன மாயம்? வானரங்களின் ஆரவாரம் செவிகளை பிளக்கிறதே! லட்சுமணன் வில்லின் நாணொலியின் சத்தமும் கேட்கிறதே! அனுமனின் ஆரவாரமும் கேட்கிறதே! அப்படியென்றால் இவர்கள் அனைவரும் நாகபாசத்தில் இருந்து விடுப்பட்டு விட்டார்கள் என்பதை உணர்ந்தான்.
 
★ராவணன் வானரங்களின் ஆரவாரத்தைக் கேட்டு இந்திரஜித்தின் மாளிகைக்கு விரைந்துச் சென்றான். அங்கு இந்திரஜித் போரினால் ஏற்பட்ட களைப்பால் மிகவும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான். ராவணன், இந்திரஜித்தை எழுப்பினான். இந்திரஜித், தந்தையே! தாங்கள் ஏன் இவ்வளவு அவசரமாக என்னை எழுப்பினீர்கள் என்றான். அதற்கு ராவணன், மகனே! நீ நாகபாசம் அம்பால் அவர்களை  கொன்று விட்டேன் எனக் கூறினாய். ஆனால் அவர்கள், ஆரவாரம் செய்து கொண்டிருக்கும் ஓசை உனக்கு கேட்கவில்லையா? எனக் கேட்டான்.
 
★இதைக் கேட்ட இந்திரஜித், இது எப்படி சாத்தியமாகும்? அந்த நாகபாசத்தால் கட்டுண்டவர்கள் எவ்வாறு மீள முடியும்? என்றான். அப்பொழுது தூதுவன் ஒருவன் அங்கு வந்தான். அரசே! அந்த நாகபாசத்தால் கட்டுண்டு பிழைத்த பின் ராமர், மிகுந்த கோபங்கொண்டு நாகபாசத்தை ஏவியவனை கொல்வேன் என முழக்கமிட்டார்.அப்பொழுது கருட பகவான், வானத்தில் இருந்து பறந்து வந்து தன் சிறகுகளை அகல விரிந்து நாகபாசத்தால் கட்டுண்டவர்களையும், மற்றும் போர்களத்தில் மாண்ட  எல்லா வானரங்களையும் காப்பாற்றி விட்டான் எனக் கூறினான்.
 
★இதைக் கேட்ட ராவணன், என்னுடன் தோல்வி அடைந்த அந்த கருடனுக்கு இவ்வளவு ஆற்றலா? எனக் கோபம் கொண்டான். பிறகு தன் மகன் இந்திரஜித்திடம், மகனே! நீ உடனே போர்களத்திற்குச் சென்று பிரம்மாஸ்திரத்தை ஏவி அவர்களை கொன்று விட்டு திரும்புவாயாக என்றான். இந்திரஜித், தந்தையே! நான் இன்று ஓய்வு எடுத்துக் கொண்டு நாளை போரில் நிச்சயம் அவர்களை வீழ்த்தி, உங்களுக்கு மன ஆறுதலை கொடுப்பேன் என்றான். ராவணன், இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து வந்தான். ராவணன் தன்னுடைய  மாளிகைக்கு வந்தடைந்தான். அப்பொழுது படைத்தலைவர்கள் அங்கு வந்தனர்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை....................
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
250/09-12-2021
 
வஜ்ரதம்ஷ்ட்ரன் வதம்...
 
★ராம லட்சுமணர்கள் மீண்டும் தங்களின் முழுமையான பலத்துடன் யுத்தம் செய்ய வருகின்றார்கள் என்று நன்றாக தெரிந்ததும் வானர படைகள் தங்கள் பயத்தை விட்டு மிகுந்த உற்சாகத்துடன் யுத்தம் செய்ய ஆயத்தமானார்கள். போருக்கு
ஆராவாரமாக சென்ற வானர படைகள், இலங்கை நகரின் கோட்டையை வேகமாக தாக்க ஆரம்பித்தார்கள். கோட்டைக்கு வெளியே வானரர்களின் ஆரவாரத்தை கேட்ட ராவணன் ஆச்சரியப்பட்டான். அருகில் இருந்தவர்களிடம் ஏன் இந்த வானர படைகள் உற்சாகத்துடன் நம்மை நெருங்கி வருகின்றட்னர்? என்று கேட்டான். மேலும் ராம லட்சுமணர்கள் நாக பாணத்தால் மயங்கிக் கிடக்கிறார்கள், மிக  விரைவில் இறந்து விடுவார்கள். இதனை நினைத்து கவலைப்பட வேண்டியவர்கள் மகிழ்ச்சியுடன் யுத்தத்திற்கு வருகின்றார்கள். இதற்கு ஏதேனும் காரணம் இருக்கும், அது என்ன என்று தெரிந்து கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டான்.
 
★ராமரும் லட்சுமணனும் நாக பாணத்தில் இருந்து பிழைத்து விட்டார்கள். மீண்டும் யுத்தம் செய்ய வந்து கொண்டுள்ளனர் என்று மிகவும் பதறியபடி, ராட்சத ஒற்றர்கள் ராவணனிடம் மிக்க கவலையுடன் கூறினார்கள். இதனை கேட்ட ராவணன், நீங்கள் சொல்வது வியப்பாக இருக்கிறது. நாக பாணத்தில் இருந்து இது வரை யாரும் தப்பித்தது கிடையாது. இந்த ராம லட்சுமணர்கள் எப்படி தப்பி பிழைத்தார்க்கள்?. மாவீரனான இந்திரஜித்தின் நாக பாணம் வீணாகப் போனது என்றால், நமக்கு நிச்சயம் ஆபத்து காத்துக் கொண்டு இருக்கிறது. இந்த செய்தி உண்மையாக இருந்தால் நாம் மேலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மிகவும் கவலையுடன் பேசினான்.
 
★சிறிது நேரத்தில் ராவணனின் கர்வம் தலை தூக்கியது. நாம் ஏன் ராமரை பார்த்து பயப்பட வேண்டும்? என்று தூம்ராசன் என்ற ராட்சசனை அழைத்தான் ராவணன். மகா பலசாலியான நீ இருக்க நாம் ஏன் கவலை கொள்ள வேண்டும். உனக்கு தேவையான படைகளையும் ஆயுதங்களையும் திரட்டிக் கொண்டு போய் ராமரையும் இந்த வானர படைகளையும் அழித்து வெற்றியுடன் திரும்பி வா என்று உத்தரவிட்டான் ராவணன். தூம்ராசன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். அரசன் தனக்கு மிகப்பெரிய கவுரவத்தை அளித்திருக்கிறார் என்று பெருமைப் பட்டுக் கொண்டான். தனக்கு தேவையான படைகளை திரட்டிக் கொண்டு வானரருடன் யுத்தம் செய்ய புறப்பட்டான்.
 
★ராமரை எதிர்க்கப் புறப்பட்ட தூம்ராசன் முதலில் அனுமனை எதிர்த்து யுத்தம் செய்தான். யுத்தத்தில் இரு தரப்பில் இருந்தும் ஏராளமானவர்கள் இறந்தார்கள். அனுமனுக்கும் தூம்ராசனுக்கும் கடுமையான யுத்தம் நடந்தது. தூம்ராசன் தன்னுடைய முள்ளால் ஆன கதையினால் அனுமனின் தலையில் தாக்கினான். அதனை சிறிதும் பொருட்படுத்தாத அனுமன் மிகப் பெரிய மலையை தூக்கி அசுரன் தூம்ராசன் மீது போட்டார். தூம்ராசன் மலையின் அடியில் உடல் பாகங்கள் நசுங்கி இறந்து போனான். இதனை கண்ட ராட்சத வீரர்கள் யுத்த களத்தில் இருந்து பயந்து ஓடினார்கள்.
 
★தூம்ராசனுடன் நடத்திய யுத்தத்தில் அனுமன் மிகவும் களைப்படைந்திருந்தார். வாயுபுத்ர அனுமனை வானர வீரர்கள் மிகவும் போற்றிக் கொண்டாடினார்கள். இதனால் மேலும் உற்சாக மடைந்த அனுமன் தனது களைப்பை பொருட்படுத்தாமல் மீண்டும் யுத்தம் செய்ய ஆரம்பித்தார். தூம்ராசன் அனுமனால் கொல்லப்பட்டான் என்ற செய்தி ராவணனுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. மனம் கலங்கிய ராவணன் இதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மிகவும் கோபத்துடன் பெரு மூச்சு விட்டு மாய வித்தைகள் செய்யும் வஜ்ரதம்ஷ்ட்ரனை அழைத்தான்.
 
★மாய வித்தைகளில் மிகவும் வலிமையான நீ,  உனக்குத் தேவையான படைகளையும் ஆயுதங்களையும் திரட்டிக் கொண்டு போய் ராமனையும், அந்த வானர படைகளையும் அழித்து வெற்றியுடன் திரும்பி வா என்று உத்தரவிட்டான் ராவணன். வஜ்ரதம்ஷ்ட்ரன் மிகவும் மகிழ்ச்சி அடைந்து தனக்கு தேவையான படைகளை திரட்டிக் கொண்டு அங்கதன் தலைமையிலான வானரப்படை வீரர்களுடன் யுத்தம் செய்ய புறப்பட்டான்.ராமரை எதிர்க்கப் புறப்பட்ட வஜ்ரதம்ஷ்ட்ரன் தெற்கு வாசல் வழியாக கிளம்பினான்.
 
★அப்போது வானத்தில் இருந்து அவனுக்கு முன்பாக பெரிய நெருப்புக் கங்குகள் விழுந்தன. நரிகள் ஊளையிட்டன. கொடிய விலங்குகள் ஓலமிட்டன. பல ராட்சச வீரர்கள் கால் இடறி கீழே விழுந்தார்கள். இதுபோல பல அபசகுனங்களை கண்ட வஜ்ரதம்ஷ்ட்ரன் பயந்தாலும் தன்னை தைரியப்படுத்திக் கொண்டு முதலில் அங்கதனிடம் யுத்தம் செய்தான். யுத்தத்தில் வஜ்ரதம்ஷ்ட்ரன் மிகப்பெரிய மாயங்கள் செய்து வானர வீரர்களை பயமுறுத்திக் கொன்றாலும், வானர வீரர்கள் எதற்கும் அஞ்சாமல் யுத்தம் செய்து பல ராட்சச வீரர்களை கொன்று குவித்துக் கொண்டு இருந்தார்கள்.
 
★வஜ்ரதம்ஷ்ட்ரன் மாயங்கள் செய்து தன்னுடைய வில்லில் இருந்து ஒரே நேரத்தில் பல அம்புகளை அங்கதன் மீது எய்தான். அம்புகளால் பலமாக தாக்கப்பட்ட அங்கதன், பெரிய மரங்களையும் பெரிய பெரிய பாறைகளையும் இடைவிடாமல் வஜ்ரதம்ஷ்ட்ரன் மீது தூக்கிப் போட்டுக் கொண்டே இருந்தான். மரங்கள் மற்றும் பாறைகளுக்கு நடுவில் சிக்கிய வஜ்ரதம்ஷ்ட்ரன் மயக்கம் அடைந்தான். அவனது மயக்கம் தெளியும் வரை ஓய்வெடுத்த அங்கதன் அவனது மயக்கம் தெளிந்ததும் அவனை தனது கதை ஆயுதத்தால் தாக்கி கொன்றான். இந்திரனுக்கு நிகரான வலிமையுள்ள வஜ்ரதம்ஷ்ட்ரன் அங்கதனால் கொல்லப்பட்டு விட்டான் என்று வானரவீரர்கள் அங்கதனை போற்றி கொண்டாடினார்கள்.
 
நாளை.....................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
251/10-12-2021
 
அகம்பனன் வதம்...
 
★ராமரிடம் தூம்ராசன் மற்றும் வஜ்ரதம்ஷ்ட்ரன் என்ற இரண்டு வலிமை மிக்க ராட்சசர்கள் அனுமனாலும் அங்கதனாலும் கொல்லாப்பட்டார்கள் என்ற செய்தியை சொன்னார்கள். அதனால் மனம் மகிழ்ந்த ராமர் அனுமன் அங்கதன் இருவரின் வீரத்தையும் பாராட்டினார். வஜ்ரதம்ஷ்ட்ரன் அங்கதனால் கொல்லப்பட்டான் என்ற செய்தி ராவணனுக்கு வந்து சேர்ந்தது.
 
★இந்திரனுக்கு நிகரான வீரன் வஜ்ரதம்ஷ்ட்ரன். அவனை,  அங்கதன் என்னும் ஒரு சிறு
குரங்கு கொன்றான் என்ற செய்தியை ராவணனால் நம்ப முடியவில்லை. மிகவும் அதிர்ச்சி அடைந்தான். பின்பு அரக்கன் பிரஹஸ்தனை பார்த்த ராவணன் அஸ்திர சாஸ்திரத்திலும் யுத்தத்தில் நிபுணனாகிய அகம்பனை வரச்சொல் என்று உத்தரவிட்டான். அரசவைக்கு வந்த அகம்பனிடம் வலிமைமிக்க ராட்சச வீரர்களாக தேர்வு செய்து ஒரு சேனையை உருவாக்கிக் கொள். அவர்களுடன் சென்று ராமரையும் லட்சுமணனையும் அழித்து வெற்றியுடன் திரும்பி வா என்று கட்டளையிட்டான் ராவணன்.
 
★மாயங்கள் தெரிந்த வலிமை மிக்க ராட்சத வீரர்களாக தேர்வு செய்த அகம்பன் யுத்தத்திற்கு கிளம்பினான். அப்போது அவனை சுற்றி ஏராளமான அபசகுனங்களாகவே நிகழ்ந்தது. இதனை அகம்பனும் ராட்சத வீரர்களும் ஒரு பொருட்டாகவே கருதாமல் யுத்தத்திற்கு சென்றார்கள். ராட்சதர்கள் எழுப்பிய கர்ஜனை விண்ணை முட்டி எதிரொலித்தது.ராமரை வெற்றி பெற வேண்டும் என்று உறுதியாக முடிவு செய்து சென்ற அரக்கன் அகம்பனனின் படை வீரர்களுக்கும், வானர படை வீரர்களுக்கும் பெரும்போர் நடந்தது. இருதரப்பிலும் அநேக அரக்கர்களும் வானரர்களும் கொல்லப்பட்டனர்.
 
★யுத்தகளம் முழுவதும் ரத்த ஆறு ஓடியது. வானர வீரர்கள் கைகளையே ஆயுதமாக வைத்து பெரிய பாறைகளை தூக்கிப் போட்டும், மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தும் ராட்சதர்களை குவியல் குவியலாக கொன்று குவித்தார்கள். அதனால் கோபமடைந்த அகம்பனன் வாரன வீரர்களிடம் தனது மாய அஸ்திர வித்தைகளை காட்டி அழிக்க ஆரம்பித்தான். அசுர அகம்பனின் மாய அஸ்திரத்தை எதிர்க்க இயலாமல் வானர வீரர்கள் ஓடத் துவங்கினார்கள். இதனை கண்ட அனுமன் வானர வீரர்களுக்கு ஆதரவாக அங்கு வந்து அகம்பனனை எதிர்த்து யுத்தம் செய்தார்.
 
★அனுமனுக்கும் அகம்பனுக்கும் கடுமையான யுத்தம் நடந்தது. அகம்பன் தனது மாயத்தினால் ஒரே நேரத்தில் பதினான்கு அம்புகளை அனுமன் மீது எய்தான். அம்புகள் உடலை துளைக்க ரத்தத்தினால் அனுமனின் உடல் நனைந்தது. இதனால் கோபம் கொண்ட அனுமன் தன் உடலை மிகவும் பெரிதாக்கிக் கொண்டார். மிகப்பெரிய மரத்தை வேரோடு பிடுங்கி தன் வலிமை முழுவதையும் பயன்படுத்தி அகம்பனின் தலையில் அடித்தார். அகம்பன் அங்கேயே இறந்தான்.
 
★அகம்பன் இறந்து விட்டான் என்ற அறிந்த ராட்சத வீரர்கள் இலங்கை கோட்டைக்குள் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். அகம்பனை அழித்த அனுமனை வானர வீரர்கள் போற்றி வாழ்த்தி ஆரவாரம் செய்தார்கள். வெற்றிக்கு துணை நின்ற அனைத்து வானர வீரர்களையும் கௌரவப்படுத்திய அனுமன் பலத்த காயத்தினால் சிறிது நேரம் ஓய்வெடுக்க அமர்ந்தார். அனுமனின் உடம்பில் அசுரன் அகம்பனின் அம்புகள் தாக்கி ரத்தம் வழிந்த இடத்தில் எல்லாம் வானர வீரர்கள் துணியால் சுற்றினார்கள்.
 
★ராமர், லட்சுமணன், சுக்ரீவன், விபீஷணன் அனைவரும் அனுமனின் அருகில் வந்து போற்றி வாழ்த்தினார்கள். தேவ கணங்களும் வானில் நின்று அனுமனுக்கு மலர் தூவி மனமார வாழ்த்தினார்கள். அகம்பன் அனுமனால் கொல்லப்பட்டான் என்ற செய்தி ராவணனுக்கு மிக்க துக்கத்தை ஏற்படுத்தியது. வருத்தம்  கொண்ட ராவணன் தனது கவலையை சிறிதும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மிகுந்த கோபத்துடன் கத்த ஆரம்பித்தான்.
 
★ராட்சதர்களின் சத்தத்தை கேட்டாலே பயந்து ஓடும் இந்த வானரங்களுக்கு இத்தனை வலிமையா? என்று கூறிய ராவணன், தன் கோட்டையின் பாதுகாப்பு சரியாக உள்ளதா என்று பார்ப்பதற்க்காக பிரஹஸ்தனுடன் கிளம்பி கோட்டையை சுற்றிப் பார்த்தான். அனைத்து பாதுகாப்புகளும் சரியாக உள்ளதில் திருப்தி அடைந்த ராவணன் இந்தப் பிரச்சனையை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என்று சிந்திக்க ஆரம்பித்தான்.
 
★அப்போது அவனது படைத் தலைவர்களில் சிலர் அங்கு வந்தனர். அவர்கள், அரச பெருமானே! தாங்கள் எங்களை போருக்கு அனுப்புமாறு வேண்டுகிறோம் என்று மிக்க பனிவுடன் கேட்டுக் கொண்டனர். அப்பொழுது அவர்களில் ஒருவன், அரசே! மாபக்கனும், புக்கண்ணனும் போரில் வானர வீரர்களை பார்த்து பயந்து ஓடி வந்தவர்கள் எனக் கூறினான். இதைக் கேட்டு ராவணன் அவர்கள் மேல் பெருங்கோபம் கொண்டான். போரில் நமது எதிரிகளை கண்டு பயந்து ஓடி வந்த நீங்கள் எல்லாம் வீரர்களா? இவர்களின் மூக்கை அறுத்து எறியுங்கள் என்றான்.
 
★அப்பொழுது மாலி என்னும் வீரன் ராவணனை வணங்கி, அரசே! ஒருவனுக்கு வெற்றியும், தோல்வியும் மாறி மாறி வரும். வெற்றியும், தோல்வியும் யாருக்கும் நிரந்தரம் அல்ல. உங்கள் தம்பிமார்களும் போரில் தோற்றவர்கள் தான். அதனால் தோற்றவர்களின் மூக்கை அறுப்பது நியாயமாகாது என்றான்.
 
நாளை.....................
 
[6:10 pm, 11/12/2021] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
252/11-12-2021
 
புக்கணன்,மாலி,பிசாசன்,
மகரக்கரன் மரணம்...
 
★இதைக்கேட்டு ராவணன் கோபம் தணிந்து அவர்களை மன்னித்து, பத்து லட்சம் சேனைகளை அவர்களுடன் அனுப்பி போரிட்டு வெற்றியுடன் வாருங்கள் என வாழ்த்தினான். பிறகு படைத்தலைவர்களும், அரக்கப்படைகளும் கையில் ஆயுதங்களை ஏந்திக் கொண்டு போருக்கு புறப்பட்டனர். யுத்த களத்திற்கு தங்களுடன் போரிட வரும் படைத்தலைவர்களின் ஆற்றலைப் பற்றி விபீஷணன், ராமரிடன் எடுத்துக் கூறினான். அரக்கப்படைகளும், வானரப் படைகளும் பெரும்  போர் புரியத் தொடங்கினர். இரு படைகளும் செய்த போர் மிகவும் கடுமையாக நடந்தது.
 
★புக்கணன் அனுமனுடன் போர் புரிந்து மாண்டான். மாபக்கன், அங்கதனுடன் போர் புரிந்து மாண்டான். மாபெரும் வீரனான மாலி, வானர படைத்தலைவன் நீலனுடன் கடும் போர் புரிந்து மாண்டான். போரில் அசுரனான வேள்விப்பகைஞன் என்பவன் லட்சுமணனுடன் போர் புரிந்து மாண்டான். வச்சிரப்பல்லன் அனுமனின் கையால் மரணம் அடைந்தான். லட்சுமணன், பிசாசன் என்னும் வீரனையும் கொன்றான். ராமர் ஆறு லட்சம் சேனைகளை அழித்தார். லட்சுமணன், நான்கு லட்சம்  சேனைகளை அழித்தார்.
 
★போரில் படைத்தலைவர்கள் மாண்டச் செய்தியை தூதர்கள் ராவணனிடம் சென்று கூறினர். இதைக் கேட்டு ராவணன் மிகவும் கோபங்கொண்டான். ராவணன் தம்பி கரன். இவனின் மகன் மகரக்கரன். முன்பு ஒருமுறை காட்டில் ராமரும், லட்சுமணரும் இருந்தபோது சூர்ப்பனகை அவர்களிடம் தவறாக நடக்க முற்பட்டாள். அப்பொழுது கோபங்கொண்ட லட்சுமணன் சூர்ப்பனகையின் காதையும், மூக்கையும் அறுத்தான். உடனே தன் அண்ணன் கரனிடம் சென்று முறையிட்டாள்.
 
★அப்பொழுது ராமரிடம் போர் புரிய சென்றவர்களுள் ஒருவன் தான் கரன். காட்டில் போர் புரியும் போது கரன்,ராமரால் மாண்டான். மகரக்கரன், ராவணனை வணங்கி தொழுது, பிதாவே! என் தந்தையை கொன்ற ராமனை நான் கொன்று, என் பழியை தீர்த்துக் கொள்கிறேன். தாங்கள் என்னை போருக்கு அனுப்பி வையுங்கள். நான் இப்போரில் தங்களுக்கு வெற்றியை தேடித் தருவேன். நான் போருக்குச் செல்ல தாங்கள் அனுமதித்து விடை தாருங்கள் என்றான்.
 
★ராவணன் அவனை அன்போடு தழுவி, மகனே! உன் வீரம் மேருமலையை விடச் சிறந்தது.
 நீ போரில் அந்த ராமனையும், லட்சுமணனையும் கொன்று வெற்றி மாலை சூடி திரும்பி வருவாயாக எனக் கூறி விடைக் கொடுத்தான். பிறகு ராவணன், ஐந்து லட்சம் சேனைகளை உடன் அனுப்பி வைத்தான். அரக்கன்
மகரக்கரன், சேனைகள் புடைசூழ, முரசொலிகள் முழங்க போர்களத்திற்கு வந்து சேர்ந்தான். அங்கு ராமரை பார்த்து கோபங்கொண்டு, ராமா! நீ என் தந்தையைக் கொன்று அரக்க குலத்திற்கு பழியை தேடி தந்து உள்ளாய். அதே போல் நான் உன்னையும், உன் தம்பி லட்சுமணனையும் கொன்று என் பழியை தீர்த்து கொள்ள போகிறேன் என்றான்.
 
★பிறகு தன் மாய உருவினால் நெருப்பு மழை சிந்தியும், புயல்காற்று வீசியும், வானத்தில் இடி விழச் செய்தும் தன்னுடைய உருவத்தினை மறைத்து, பல மகரகரன்கள் இருப்பது போல் தோற்றமளித்து போர் புரிந்தான். இவ்வாறு அவன் தன் உருவினை மாற்றி மாற்றி போர் புரிந்துக் கொண்டிருந்தான். ராமர் அவனை நோக்கி அம்புகளை ஏவினார். அதில் ஓர் அம்பு பட்டு அவன் உடம்பில் இருந்து ரத்தம் வழிந்தது. இதைப் பார்த்த ராமர், ரத்தம் சிந்தும் உருவமே அவன் உண்மையான உருவம் என்று கண்டு கொண்டார்.
 
★பிற உருவங்களில் ரத்தம் இல்லாததைக் கண்டார். அசுர மகரக்கரனை தவிர மற்றவைகள் எல்லாம் மாயம் என்பதை நன்கு உணர்ந்த ராமர், ஒரு தெய்வீக கணையை அவன் மீது ஏவினார். இதனால் அவனின் வலிமை குறைந்து அவன் மாண்டான். அரக்க தூதர்கள் ராவணனிடம் சென்று மகரக்கரன், ராமனால் மாண்டான் என்னும் செய்தியைக் கூறினார்கள். இதைக்கேட்டு ராவணன் துன்பக்கடலில் ஆழ்ந்தான். இலங்கையில் அரக்கியர்கள், போரில்  தங்கள் கணவர்கள் மாண்டதை அறிந்து கதறி அழுதுக் கொண்டிருந்தனர்.
 
★ராம லட்சுமணர்கள் சாதாரண மானிடர்கள் என்று இது வரை எண்ணியிருந்த ராவணனுக்கு இப்போது அவர்களின் மேல் ஒரு பயம் வந்தது. அதனை வெளிக் காட்டிக் கொள்ளாமல் அரக்கன் பிரஹஸ்தனிடம் மனம் விட்டு பேச ஆரம்பித்தான் ராவணன். ராம லட்சுமணர்கள் சாதாரண மானிடர்கள், அவர்களுடன் வந்திருப்பதும் சாதாரணமான வானரங்கள் தானே என்று அவர்களை எதிர்த்து யுத்தம் செய்ய வேண்டாம் என்று எண்ணியிருந்தேன். எனவே அவர்களை நமது கோட்டைக்குள் நுழையாதவாறு பாதுகாத்தோம். அதனால் இப்போது பல ராட்சத வீர்ரகளை இழந்து விட்டோம்.
 
நாளை....................
[6:10 pm, 11/12/2021] Naga. Suba.Raja Rao Salem: அன்புடையீர்,
வணக்கம் பல.
 
மகாபாரத காவியம், பாகம் 1 புத்தகம் வெளியிட்டு தற்போது  விற்பனையில் உள்ளது. தற்சமயம் மகாபாரத காவியம் 2ம் பகுதி அச்சகத்தில் அச்சிட கொடுக்கப்பட்டு உள்ளது.
தை மாதம்(ஜனவரி 22) வெளியிட உத்தேசம். ஆகவே மகாபாரத காவியம் -2 புத்தகம் வேண்டுவோர் ரூ400/-செலுத்தி பதிவு செய்து கொள்ள கோருகிறேன்.
 
மகாபாரத காவியம் பாகம்-1 புத்தகமும் கிடைக்கும். இதன் விலை ரூ400/-
 
கீழ்கண்ட வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப கேடடுக் கொள்கிறேன்.
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
வங்கி விபரம்:-
 
மகாபாரத காவியம்
பாகம்-1 விலை ரூ.400/-
 
பாகம்-2 விலை ரூ.400/-
 
N.SUBHARAJ
FEDERAL BANK
ALAGAPURAM BRANCH
A/C NO:15270100023870
IFSC CODE:FDRL0001527
 
Google pay: (GPay)
9944110869
 
PhonePe:
9944110869
 
Paytm:
9944110869
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
253/12-12-2021
 
பிரஹஸ்தன் மரணம்...
 
★இனி நாம் யுத்தம் செய்து நமது வலிமையை காட்ட வேண்டும். நான், இந்திரஜித், மகாநாதன், கும்பகர்ணன் மற்றும்  பிரஹஸ்தனான நீயும் சேர்ந்து ஐவருமாக யுத்தத்திற்கு சென்றால் அந்த ராமரையும் லட்சுமணனையும் வானர வீரர்களையும் அழித்து நமது ராட்சச குலத்தின் பெருமையை நிலை நாட்டி விடலாம். அதற்கான ஏற்பாட்டை உடனே செய்வாயாக என்று கட்டளை இட்ட ராவணன், உனக்கு இதில் ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் அதனை சொல் என்றான்.
 
★அதற்கு பிரஹஸ்தன் அரசரே! இது பற்றி அரசவையில் பல முறை விவாதித்து விட்டோம். ஆனால் சரியான முடிவுகளை எடுக்கவில்லை. தர்மம் தெரிந்தவர்கள், பெரியவர்கள், மற்றும் எதிர்காலத்தை பற்றி அறிந்தவர்கள் என அனைவரும் இந்த பிரச்சனைக்கு சொன்ன ஒரே தீர்வு மற்றும் அறிவுரை, சீதையை திருப்பி அனுப்பி விட வேண்டும் என்பது தான். இதற்கு உடன்படாததால் விபீஷணனும் சென்று விட்டார். அனுபவசாலி ஆகிய  உங்கள் உறவினரான மால்யவான் என்ற முதியவரும் எச்சரிக்கை செய்துவிட்டு சென்று விட்டார்.
 
★ராமரிடம் சீதையை திருப்பி அனுப்பி விடலாம் என்பது தான் என்னுடைய கருத்து. ஆனால் தாங்கள் எனக்கு நல்ல மதிப்பான பதவியை கொடுத்து மரியாதை செய்தும் பல பரிசுகளை கொடுத்தும் இனிய சொற்களாலும் என்னை கௌரவப்படுத்தி மகிழ்ச்சிப் படுத்தியிருக்கிறீர்கள். எனவே தங்களுக்கு விருப்பமானதையே நான் செய்வேன். நம்முடைய ராட்சச குலத்தின் பெருமையை காப்பாற்றவும் தங்களுடைய பெருமையை காப்பாற்றவும் நானே இன்று எனது படைகளுடன் சென்று ராம லட்சுமணர்களுடன் யுத்தம் செய்கிறேன் என்றான்.
 
★பிறகு அங்கிருந்து கிளம்பிய பிரஹஸ்தன்  தன்னுடைய அனைத்து பிரிவு படைகளும் உடனடியாக களம் வருமாறு உத்தரவிட்டான். சங்கு நாதம் பேரிமை முழங்க பிரஹஸ்தன் தன்னுடைய பெரும் படையுடன் யுத்தகளத்திற்கு கிளம்பினான். பிரஹஸ்தனுடைய ரதத்தை சுற்றி அவனுடைய நெருங்கிய ஆலோசகர்களான நராந்தன், கும்பஹனு, மகாநாதன், ஸமுன்னதன் ஆகிய  நால்வரும் பாதுகாப்பாக உடன் வந்தனர். அப்போது பிரஹஸ்தனுடைய தேர் கொடியின் மேல் அமர்ந்த கழுகு ஒன்று கொடியை கொத்தி உடைத்தது.
 
★யுத்த களத்தில் தேர் ஓட்டுவதில் சிறந்தவனான பிரஹஸ்தனின் சாரதி தன்னுடைய சவுக்கை அடிக்கடி தவர விட்டுக் கொண்டே இருந்தான். பிரஹஸ்தனை சுற்றி பல அபசகுனங்கள் நிகழ்ந்தது. மிகப்பெரிய படை ஒன்று தங்களை நோக்கி வருவதை அறிந்த வானர படை வீரர்கள் யுத்தத்திற்கு தயாரானார்கள்.
ராமர் விபீஷணனிடம் தோள் வலிமையுடன் மிகப்பெரிய உடலமைப்புடன் யுத்தம் செய்ய வந்து கொண்டிருப்பது யார் என்று கேட்டார். அதற்கு விபீஷணன் இவனது பெயர் பிரஹஸ்தன் ராவணனின் படைத்தலைவன்.
 
★ராவணனிடம் இருக்கும் மொத்த ராட்சச படைகளில் மூன்றில் ஒரு பங்கு இவனது படைகளாக இருக்கும். மிகவும் வலிமை உடைய இவன் மந்திர அஸ்திரங்களை நன்கு அறிந்தவன். இவனை வெற்றி பெற்றால் இலங்கையின் மூன்றில் ஒரு பங்கு படைகளை வெற்றி பெற்றது போலாகும் என்றான் விபிஷணன். யுத்தம் ஆரம்பித்தது. இரு படை வீரர்களுக்கும் கடுமையான சண்டை நடந்தது. பிரஹஸ்தனை நீலன் எதிர்த்தான்.
 
★இருவருக்கும் கடுமையான சண்டை நடந்தது. இறுதியில் நீலன் பெரிய ஆச்சா மரத்தை பிடுங்கி பிரஹஸ்தன் மீது எறிந்தான். இதில் இருந்து தன்னை தற்காத்துக் கொண்ட பிரஹஸ்தன், அதிலிருந்து சுதாரிப்பதற்குள் நீலன் மிகப் பெரிய பாறையை அவன் மேல் போட்டான். அந்தப் பாறையானது பிரஹஸ்தனுடைய தலையை நசுக்கி அவனை கொன்றது. பிரஹஸ்தன் கொல்லப்பட்டதும் ராட்சச வீரர்கள் அலறி அடித்துக் கொண்டு திரும்பி ஓடினார்கள். நீலனை போற்றி வானர வீரர்கள் ஆர்ப்பரித்தார்கள்.ராமரிடம் வந்த நீலன் தனது வணக்கத்தை தெரிவித்துக் கொண்டான். பிரஹஸ்தனை கொன்ற நீலனை ராமர் பாராட்டி வாழ்த்தினார்.
 
★யுத்த களத்தில் சிதறி ஓடிய பிரஹஸ்தனின் படை வீரர்கள் ராவணனிடம் நடந்ததை எல்லாம் விபரமாகத் தெரிவித்தார்கள். தேவலோகத்தில் உள்ள இந்திரனையும் அவனது படைகளையும் பிரஹஸ்தன் வெற்றி பெற்றிருக்கிறான். அனைத்து தேவர்களும் கந்தர்வர்களும் ஒன்றாக சேர்ந்து வந்தால் கூட தனியாக நின்று வெற்றி பெறக்கூடிய உயர்ந்த வலிமையான ஒரு வீரன் ஆவான் பிரஹஸ்தன். அவன் கேவலம் வானரங்களால் பரிதாபமாகக் கொல்லப்பட்டானா? என்று ராவணன் மிக்க கவலையில் ஆழ்ந்தான். சபையில் இருந்த அனைவரும் தலை குனிந்து தரையை பார்த்தவாறு மிகுந்த அமைதியுடன் இருந்தார்கள். சிறிது நேரத்தில் ராவணன் கோபத்தில் கர்ஜித்தான்.
 
நாளை.......................
 
[4:22 pm, 13/12/2021] Naga. Suba.Raja Rao Salem: அன்புடையீர்,
வணக்கம் பல.
 
மகாபாரத காவியம், பாகம் 1 புத்தகம் வெளியிட்டு தற்போது  விற்பனையில் உள்ளது. தற்சமயம் மகாபாரத காவியம் 2ம் பகுதி அச்சகத்தில் அச்சிட கொடுக்கப்பட்டு உள்ளது.
தை மாதம்(ஜனவரி 22) வெளியிட உத்தேசம். ஆகவே மகாபாரத காவியம் -2 புத்தகம் வேண்டுவோர் ரூ400/-செலுத்தி பதிவு செய்து கொள்ள கோருகிறேன்.
 
மகாபாரத காவியம் பாகம்-1 புத்தகமும் கிடைக்கும். இதன் விலை ரூ400/-
 
கீழ்கண்ட வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப கேடடுக் கொள்கிறேன்.
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
வங்கி விபரம்:-
 
மகாபாரத காவியம்
பாகம்-1 விலை ரூ.400/-
 
பாகம்-2 விலை ரூ.400/-
 
N.SUBHARAJ
FEDERAL BANK
ALAGAPURAM BRANCH
A/C NO:15270100023870
IFSC CODE:FDRL0001527
 
Google pay: (GPay)
9944110869
 
PhonePe:
9944110869
 
Paytm:
9944110869
[4:22 pm, 13/12/2021] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
254/13-12-2021
 
யுத்தகளத்தில் ராவணன்...
 
★இனி சற்றும் பொறுமையாக இருக்க முடியாது. அனைவரும் யுத்தத்திற்கு தயாராகுங்கள். யுத்தத்தில் நமது அனைத்து படைகளுக்கும் நானே தலைமை ஏற்று வருகிறேன். இன்னும்  சில கணங்களில் அந்த ராமனையும், லட்சுமணனையும் மற்றுமுள்ள வானர வீரர்களையும் அழித்து விடுகிறேன் என்று ராவணன் யுத்த களத்திற்கு கிளம்பினான். யுத்த களத்திற்கு அனைத்து சேனாதிபதிகளுடன் வந்த ராவணன் தனது ராட்சத படை வீரர்களிடம், நமது சில படைத் தளபதிகள் இந்த யுத்தத்தில் இறந்து விட்டார்கள். இந்த சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வானர கூட்டம் நமது நகரத்திற்குள் நுழைந்து விடுவார்கள். எனவே பயம் இல்லாதவர்கள் மட்டும் யுத்தத்திற்கு வாருங்கள். பயம் இருப்பவர்கள் நமது கோட்டை மதில் சுவர் மேல் நின்று இந்த கோட்டைக்கு பாதுகாப்பாக இருந்து வானரங்கள் யாரும் உள்ளே நுழையாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டான்.
 
★ராமருக்கு, இது வரை இல்லாத அளவு சங்கு பேரிகை நாதமும், ராட்சசர்களின் ஆரவாரமும் கேட்டது. ராட்சசர்களின் படை இது வரை காணாத கூட்டத்துடன் பெரிய தலைமையுடன் வருவதை அறிந்த ராமர் போர்செய்ய வந்து கொண்டிருப்பது யார் என்று விபீஷணனிடம் கேட்டார். அதற்கு விபீஷணன், ராவணன் தனது அனைத்து படை தளபதிகள், வீரர்களுடன் வந்து கொண்டு இருக்கிறான். நடுவில் இருக்கும் தங்க ரதத்தில், பெரிய மலை போல் சூரிய பிரகாசமாக வந்து கொண்டிருப்பவன்தான் அரசன் ராவணன்.
 
★அதற்கு ராமர், ராவணனைப் போல் பிரகாசமாக, தேஜசாக தேவலோகத்திலும் யாரையும் காண முடியாது. ஆனால் என் சீதையை பிரிந்திருந்த எனது தாங்கமுடியாத துக்கத்தையும், இத்தனை நாளாக சேர்த்து வைத்திருந்த எனது தீராத கோபத்தையும் மொத்தமாக சேர்த்து, மகாபாவியான இவன் மேல் இப்போது காண்பிக்க போகிறேன் என்ற ராமர், தனது வில்லையும் அம்பையும் எடுத்து யுத்தத்திற்கு தயாரானர்.
ராமர் தனது அம்புகளை ராட்சத படைகள் மீது விட்டு அவர்களை கொன்று குவித்துக் கொண்டு ராவணனை நோக்கி மேலும் முன்னேறிக் கொண்டிருந்தார்.
 
★ராவணன் தனது வில் அம்பை எடுத்தான். தனது கோட்டைக்குள் நுழைந்து தனது கீரிடத்தை தள்ளிவிட்ட சுக்ரீவன் மீது அம்பை எய்தான் ராவணன். சுக்ரீவனின் உடலை ராவணனின் அம்பு துளைத்துச் சென்றது. சுக்ரீவன் தனது உணர்வை இழந்து தரையில் விழுந்தான். இதனை கண்ட ராட்சத வீரர்கள் ஆரவாரம் செய்தார்கள். சுக்ரீவனின் தளபதிகளான வலிமையுள்ள வானரங்கள் ஒன்று சேர்ந்து பெரிய மலைகளையும் மரங்களையும் ராவணன் மீது தூக்கி எறிந்தார்கள். அவை அனைத்தையும் ராவணன் தனது அம்பினால் தூளாக்கி தனது அருகில் வரவிடாமல் பார்த்துக் கொண்டான்.
 
★இந்நேரத்தில் சுக்ரீவனை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்ற வானரங்கள், அவருக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்தார்கள். ராவணன் ஏராளமான வானர வீரர்களை கொன்று குவிக்கத் தொடங்கினான். அதனால் யுத்த களத்தில் பின் வாங்கிய வானர படைகள் ராமரிடம் வந்து செய்தியை கூறினார்கள். ராமர் ராவணனை எதிர்த்து யுத்தம் செய்வதற்காக அவனை நோக்கி முன்னேறிச் செல்ல முற்பட்டார். அப்போது லட்சுமணன் ராமரின் முன் வந்து ராவணனை எதிர்த்து யுத்தம் செய்ய தாங்கள் செல்ல வேண்டாம். நான் செல்கிறேன். எனக்கு அனுமதி கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டான்.
 
★ராமர், லட்சுமணனிடம் ராவணனை எதிர்த்து யுத்தம் செய்ய உனக்கு நான்  அனுமதி அளிக்கிறேன். ஆனால் மிகவும் ஜாக்கிரதையாக இரு. அரசன் ராவணன் மிகவும் பராக்கிரமம் நிறைந்தவன். பல யுத்தங்கள் செய்து மூன்று உலகங்களையும் வெற்றி பெற்றிருக்கின்றான். மிகவும் வலிமையானவன். உன்னால் ராவணனை எதிர்த்து யுத்தம் செய்து வெற்றி பெற முடியும்.  அதற்கான வல்லமை உன்னிடம் உள்ளது. ஆகவே ராவணனுடைய யுத்த கலையில் என்ன குறைகள் இருக்கிறது என்பதை முதலில் கண்டுபிடித்து அதற்கு ஏற்றார் போல் யுத்தம் செய்.
 
★ராவணனுடைய மந்திர அஸ்திரங்களை மிக  நன்றாக கவனித்து, அதற்கு ஏற்றார் போல் உன்னிடம் இருக்கும் அஸ்திரங்களை உபயோகித்து உன்னை காத்துக் கொள். ஆனால் எந்த நேரமும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனெனில் ராவணன் தோல்வியை சந்திக்கும் இறுதி நேரத்தில் மாயங்களால் வஞ்சகம் செய்து ஏமாற்றி வெற்றி பெற நினைப்பான். சென்று வா! என்று அனுமதி அளித்தார். ராமரின் பாதங்களில் விழுந்து வணங்கிய லட்சுமணன் ராவணனை நோக்கி விரைவாக சென்றான்.
 
நாளை.....................
 
ஶ்ரீராம காவியம்
~~~
255/14-12-2021
 
ராவணன் மற்றும் அனுமன்..
 
★ராமரை எதிர்த்து ராவணன் யுத்த களத்திற்கு வந்துள்ளான் என்ற செய்தி அறிந்த அனைத்து முனிவர்களும், தேவர்களும், கந்தர்வர்களும் இந்த கடும் யுத்தத்தைப் பார்க்க ஆவலுடன் வந்திருந்தார்கள். லட்சுமணன் ராவணனை சுற்றி இருக்கும் ராட்சத படைவீரர்களை எல்லாம் சமாளித்துக் கொண்டு அரசன் ராவணனை நோக்கி வேகமாகச்  சென்றான். ராவணனை சுற்றி பல அடுக்குகளாக, பாதுகாப்பாக சுற்றி நின்ற ராட்சதப் படை வீரர்கள் லட்சுமணனை, தங்கள் அரசன்  ராவணனின் அருகில் செல்ல விடாமல் தடுத்து யுத்தம் செய்தார்கள்.
 
★ராவணனின் அம்புகளுக்கு வானர வீரர்கள் பலர் அடிபட்டு இரையாயினர். ராவணனது வில் திறமையை கண்ட  லட்சுமணன், இவனை என் அம்புகளுக்கு இரையாக்குவேன் என விரைந்து வந்தான். அந்த இடத்திற்கு  வந்த லட்சுமணன் தன் வில்லின் நாணை இழுத்து உரத்த ஒலி எழுப்பினான். அங்கு அனுமனின் உடலில் பல அம்புகள் துளைத்து, அதனால் சோர்ந்து கீழே அமர்ந்து இருப்பதை கண்டான். உடனே லட்சுமணன் அம்புகளை ஏவி பல அரக்கர்களை அழித்தான். அந்த அரக்கர் படைகளும் இளவல் லட்சுமணனை சூழ்ந்து தாக்கத் தொடங்கினர்.
 
★அரக்கர்கள், இவன் தமதரசன் இலங்கேசன்  ராவணனை நெருங்கி விடக்கூடாது என்று மிகுந்த உறுதி கொண்டு லட்சுமணனை எதிர்த்து மிகவும் ஆவேசமாக போரிட்டனர். ஆனால் அரக்கர்கள் வீசிய அம்புகளை லட்சுமணன் தகர்த்து எறிந்தான். கட்டுக்கடங்காத அம்புகள் லட்சுமணனின் உடலில் நுழைந்தது. லட்சுமணன் தனித்து நின்று அரக்கர்களை எல்லாம் அழிப்பதைக் கண்ட ராவணன் கடுங்கோபம் கொண்டு தேரை செலுத்தி லட்சுமணனுக்கு அருகில் வந்தான்.தன் முன் வந்து நின்ற ராவணனை பார்த்த லட்சுமணனுக்கு கோபம் மிகவும் அதிகமானது.
 
★லட்சுமணன் ராவணனை பார்த்து, அன்னை சீதையை காவல் புரிந்து வந்த  என்னை வஞ்சனையால் அனுப்பி விட்டு, , மாதாவை கவர்ந்துச் சென்ற நீ என்னிடமிருந்து இப்போது தப்பிச் செல்ல முடியாது என்று உரைத்தான். பிறகு லட்சுமணன் அம்புகளை ராவணன் மீது எய்தினான். ராவணனும் சிறிது கூட சளைக்காமல் லட்சுமணன் மீது அம்புகளை எய்தினான். தன் அம்புகளால் லட்சுமணன், ராவணனை செயல் இழக்கும் படி செய்தான். ராவணன், இளவல் லட்சுமணனின் அம்புறாத் தூனியை அறுத்தெறிந்தான்.
அதற்குள் ராவணனின் முன்பு தாவி வந்து சேர்ந்த அனுமன் அவனை எதிர்த்து நின்று பேச ஆரம்பித்தார்.
 
★தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், யட்சர்கள் மற்றும் ராட்சசர்களால் உனக்கு மரணம் இல்லை என்று பல வரங்களை வாங்கியிருக்கிறாய். ஆனால் வானரங்களினால் மரணம் இல்லை என்ற வரத்தை நீ வாங்கவில்லை. எனவேதான் நீ வானரங்களை பார்த்தால் பயப்படுகிறாய்.  உன்னால் முடிந்தால் என்னுடன் யுத்தம் செய் என்று மிகுந்த சத்தமாகச் சொன்னார். அதற்கு ராவணன் அனுமனிடம், குரங்கே! உன்னால் முடிந்தால் தைரியமாக என்னைத் தாக்கு. உன்னுடைய வலிமையை பார்த்துவிட்டு அதற்கு ஏற்றார் போல் உன்னிடம் சண்டையிட நினைக்கிறேன் என்றான்.
 
★அதற்கு அனுமன், இதற்கு முன்பாக தனியாக நான் அந்த அசோகவனம் வந்த போது பெரும் படையுடன் வந்த உனது மகனையே கொன்றிருக்கிறேன். இதிலிருந்தே எனது வலிமையை நீ தெரிந்து கொள்ள வில்லையா? இப்போது உன்னிடமும் எனது வலிமையை காட்டுகிறேன் பார்.
ராவணா! இப்பொழுது நாம் முஷ்டி யுத்தம் புரிவோம் வா!என்றான். பிறகு அனுமன் தனது விஸ்வரூபத்தை எடுத்து நின்றான். அனுமன் ராவணனை பார்த்து, ராவணா! வா! என்னை எதிர்த்து சண்டையிடு என்றான். ராவணனும் துணிச்சலோடு சண்டைக்கு எதிர்த்து நின்றான்.
 
★அனுமன் ராவணனிடம், நான் குத்தும் ஒரு குத்துக்கு உன்னால் தாக்கு பிடிக்க முடியுமா? ஒரு குரங்கின் வலிமையை நீ பார்த்திருக்க மாட்டாய். இன்று நீ காண்பாய் என்றான். பிறகு அனுமன், ராவணா! உன் மார்பில் நான் ஒரு குத்து குத்துவேன். நீ பிழைத்துக் கொண்டால் என் மார்பில் குத்து, நான் பிழைத்துக் கொண்டால் இனி உனக்கும் எனக்கும் போர் புரியும் நிலைமை இல்லை என்றான். ராவணன் அனுமனின் மிகுந்த வீரமான வசனங்களை கேட்டு, அனுமனே! உன் வீரத்திற்கு நிகர் எவரும் இல்லை. நான் உன் முஷ்டி யுத்தத்திற்கு சம்மதிக்கிறேன். அனுமனே! ஒரு மாவீரனோடு போரிடுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். இனி நான் உன்னுடன் போர் புரிய தேவையில்லை. வா! என்னை வந்து குத்து என மார்பைக் காட்டி நின்றான்.
 
★அனுமன், ராவணனிடம், நான் உன் வீரத்தை பாராட்டுகிறேன்
என்று ராவணனின் அருகில் தாவிச் சென்று தனது கைகளால் ராவணனின் மார்பில் ஓங்கி குத்தினார். அனுமனின் திடீர் தாக்குதலில் நிலை குலைந்து போன ராவணன் சிறிது நேரம் ஆடிப்போய் தனது ரதத்திலேயே அமர்ந்தான். இதனைக் கண்ட முனிவர்கள், தேவர்கள், கந்தர்வர்கள் மகிழ்ச்சி பொங்க ஆரவாரம் செய்தார்கள்.
 
நாளை.......................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
256/15-12-2021
 
அனும ராவண
முஷ்டி யுத்தம்...
 
 ★பிறகு அனுமன், ஆராவாரம் செய்து தன் கண்களை அகல விரித்து தன் கையின் ஐந்து விரல்களையும் பலமாக மடக்கி ராவணனின் கவசம் அணிந்த உடல் சிதறும்படி  மார்பில் ஓங்கி குத்தினான். அனுமன் குத்திய குத்தினால் மலைகள் பெயர்ந்து விழுந்தன. இதனைப் பார்த்த அரக்கர்கள் மூர்ச்சித்து கீழே விழுந்தார்கள். மலைகள், பாறைகள், மரங்கள் எல்லாம் நிலைகுலைந்து போயின. இதை கண்ட  தேவர்களும் நடுங்கி போனார்கள். வானர வீரர்களும் நிலைகுலைந்து போனார்கள். அனுமனின் குத்தினால் ராவணனுக்கு உயிர் போய் உயிர் வந்தது. அவனது கண்களில் இருந்து தீ வெளிப்பட்டது. நிலை தடுமாறினான்.
 
★பிறகு தன் உணர்வை பெற்ற ராவணன், அனுமனிடம் உனக்கு நிகர் எவரும் இல்லை. இதுவரை நான் அடையாத துன்பத்தை எனக்கு காட்டி விட்டாய். எனக்கு நிகரான வலிமை உன்னிடம் இருக்கிறது. நீ சிறந்த வீரன் என்பதையும் நான் அறிந்து கொண்டேன். இப்பொழுது நான் உன் மார்பில் குத்துகிறேன் என்றான். என் குத்தினால் நீ மாண்டு போவாய். ஒருவேளை அப்படி இல்லாமல் நீ பிழைத்துக் கொண்டால் உனக்கு அழிவு என்பதில்லை. உன்னால் என்னை கொல்ல முடியவில்லை அதுபோல  என்னால் உன்னை கொல்ல முடியவில்லை என்றால் உனக்கும் எனக்கும் போரில்லை எனக் கூறினான்.
 
★பிறகு அனுமன் தன் மார்பை காட்டி ராவணன் முன் நின்றான். ராவணன், கண்களில் தீப்பொறி பறக்க, பற்களை கடித்து, விரல்களை பலமாக மடித்து அனுமனின் மார்பில் ஓங்கி குத்தினான். மேரு மலைபோல் நின்ற அனுமன், ராவணனின் பலமான அடியால் சற்று நிலை தடுமாறினான். அனுமன் நிலை தடுமாறியதை பார்த்த தேவர்கள் மிகவும் வருந்தினர். போர் தொடர்ந்து நடந்துக் கொண்டு இருந்தது.
 
★ராமர் அனுமனின் செயலைக் கண்டு ஆச்சரியமடைந்தார். நிலைகுலைந்த இருவருமே  சிறிது நேரத்தில் சுயநிலையை பெற்றனர். ராவணன்  சுதாரித்து அனுமனிடம் பேச ஆரம்பித்தான். வானரனே! இது நாள் வரை என்னை எதிர்த்து நின்று தாக்கிய வீரன் யாருமில்லை. எதிரியாக இருந்தாலும் உன்னுடைய வீரத்தை நான் பாராட்டுகின்றேன் என்றான். அதற்கு அனுமன் என் வலிமை முழுவதையும் பயன்படுத்தி உன்னை அடித்திருக்கிறேன். ஆனாலும் நீ உயிரோடுதான் இருக்கிறாய். என்னுடைய வலிமை அவ்வளவு தான். நீ என்னை பாராட்டும் அளவிற்கு வலிமையானவன் நான் இல்லை என்றான்.
 
★ஆனால் எனது ராமர் உன்னை அடித்திருந்தால் அந்நேரமே நீ இறந்திருப்பாய் என்று அனுமன்  ராமரின் பெயரை சொல்லியதை கேட்டதும் கோபம் கொண்ட ராவணன் தனது வலிமை முழுவதையும் பயன்படுத்தி அனுமனின் மார்பில் மீண்டும் குத்தினான். இதில் அனுமன் கலங்கி நிற்கும் போது ராவணன் இரண்டாவது முறையாக குத்தினான். அனுமன் நிலை குலைந்து தடுமாறி நின்றார். அந்நேரம் பிரஹஸ்தனைக் கொன்ற நீலனை பார்த்த ராவணன் அனுமனை விட்டு நீலனை தாக்க சென்றான்.
 
★ராமர், நிலை தடுமாறி நின்ற அனுமனின் உடல் நலத்தை விசாரித்தார். சிறிது நேரம் ஓய்வெடுத்தால் மீண்டும் யுத்தம் செய்ய தயாராகி விடுவேன் என்று அனுமன் ராமரிடம் தெரிவித்தார். பிரஹஸ்தனை கொன்ற நீலனிடம் சென்ற ராவணன் தன்னுடைய அம்புகளால் நீலனை தாக்கத் தொடங்கினான். இதனால் கோபமடைந்த நீலன் மிகப்பெரிய மரங்களையும் பாறைகளையும் ராவணன் மீது தூக்கி எறிந்தான். அனைத்தையும் தனது சிறப்பான அம்புகளால் தூளாக்கிய ராவணன் நீலனின் மீது அம்புகள் விட்ட வண்ணம் இருந்தான். இதனை சமாளிக்க முடியாத நீலன் தன் விளையாட்டை ஆரம்பித்தான்.
 
★மிகவும் சிறிய உருவத்தை எடுத்த நீலன், ராவணனின் கீரிடத்தின் மீதும், அவனுடைய தேர் கொடியின் மீதும், வில்லின் நுனி மீதும் தாவித்தாவி அமர்ந்து விளையாட்டு காட்டினான். ராவணனின் அம்புகளால் மிகவும் சிறிய உருவமாயிருக்கும் நீலனை ஒன்றும் செய்ய இயலவில்லை. இதனால் மனத்தடுமாற்றம் அடைந்த ராவணனையும், விளையாட்டு காட்டும் நீலனையும் கண்ட மற்ற வானர வீரர்கள் சிரித்து மகிழ்ந்தார்கள். இதனை கண்டு கோபமடைந்த ராவணன், மந்திர அஸ்திரங்களை எடுத்து உபயோகப் படுத்தினான். மந்திர அஸ்திரத்தினால் தாக்கப்பட்ட நீலன் மயக்கமுற்று கீழே விழுந்தான். நீலனை அடக்கிய ராவணன் தன்னை நோக்கி வந்த லட்சுமணனை எதிர்த்து யுத்தம் செய்ய தயாரானான்.
 
நாளை........................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
257/16-12-2021
 
ராவண லட்சுமண யுத்தம்...
 
★ராவணனால் வானர வீரர்கள் பலர் மாண்டனர். ராவணனின் அம்பு வானர படைத்தலைவன் நீலனின் உடலில் துளைத்தது. இதனால் நீலன் மயங்கி வீழ்ந்தான். ஜாம்பவானும் ராவணனின் ஆயுதத்தால் அடிப்பட்டு கீழே விழுந்தான். இதைப் பார்த்த லட்சுமணன் தன் வில்லை எடுத்து ராவணனின் அம்புகளை தகர்த்து எறிந்தான்.
ராமர் எங்கே லட்சுமணா நீ மட்டும் தனியாக வந்து என்னிடம் சிக்கி இருக்கிறாய்? ராட்சதர்களுக்கு அரசனான என் முன்பாக வந்தால் அழிந்து விடுவோம் என்று வராமல் இருக்கிறாரா ராமர்? என் முன் வந்த உன்னை சிறிது நேரத்தில் அழித்து விடுவேன் என்றான் ராவணன்.
 
★அதற்கு லட்சுமணன், ராட்சத அரசனே! வலிமை அதிகமாக வாய்ந்தவர்கள் உன் போல் தன்னைத் தானே எப்போதும் பெருமையாகப்பேசிக் கொண்டு இருக்க மாட்டார்கள். யுத்தத்தில் தன்னுடைய முழு வீரத்தையும் காட்டுவார்கள். ராமரும் நானும் இல்லாத போது சீதையை வஞ்சகம் செய்து தூக்கி வந்த போதே உன்னுடைய வீரத்தை தெரிந்து கொண்டேன். இப்போது வில் அம்புடன் வந்திருக்கிறேன். முடிந்தால் என்னுடன் யுத்தம் செய்து உன்னை காப்பாற்றிக் கொள் என்ற லட்சுமணன் தன்னுடைய வில்லில் இருந்து அம்புகளை ராவணன் மீது அனுப்பத் தொடங்கினான்.
 
★லட்சுமணன் ஓர் வில்லினால் ராவணனின் கை வில்லை அறுத்தெறிந்தான். லட்சுமணன் ஆற்றிய வீரத்தையும், போர் திறமையும் கண்டு ராவணன் லட்சுமணனை புகழ்ந்தான். உன் போர் வலிமை மிகச் சிறப்பாக உள்ளது. அம்பு தொடுக்கும் உன் கையின் விவேகமும், நீ எதிர்த்து நிற்கும் உன் தைரியமும் மிகச் சிறந்தது. நீ மற்றவர்களை காட்டிலும் ஒப்பற்றவன் ஆவாய் என்றான். பிறகு ராவணன், லட்சுமணா! உன் அண்ணன் ராமனும், இந்திரனை வென்ற இந்திரஜித் மற்றும் என்னை காட்டிலும் உனக்கு நிகர் சிறந்த வீரர் இவ்வுலகில் இல்லை என்றான்.
 
★பிறகு லட்சுமணன், லங்கேசன் ராவணனை பார்த்து அம்புகளை ஏவினான்.  அவனது அனைத்து அம்புகளையும் தன்னுடைய அம்புகளால் தடுத்து, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள சிரமப்பட்ட ராவணன், இவனை வெல்லுதல் என்பது மிக எளிதான விஷயம் அல்ல என நினைத்து, பிரம்மன் கொடுத்த ஒளிமிக்க வேலை எடுத்து இளவல் லட்சுமணன் மீது வீசினான். அந்த வேல் வேகமாக லட்சுமணனின் அம்புகளை தகர்த்தெறிந்து பின் லட்சுமணன் மேல் பாய்ந்தது. லட்சுமணன் மயங்கி கீழே சரிந்து விழுந்தான். லட்சுமணன் மயங்கி விழுந்ததை பார்த்த வானர வீரர்கள் பயந்து ஓடினர். அரக்கர்கள் ஆரவாரம் செய்தனர்.
 
★லட்சுமணன் மயங்கி கீழே விழுந்ததை பார்த்த ராவணன் அவன் அருகில் சென்று தூக்க முயற்சித்தான். சிவன் வாழும் வெள்ளிமலையை அள்ளி எடுத்த ராவணனால்  லட்சுமணனை தூக்க முடியவில்லை. தன் இருபது கரங்களாலும் தூக்க முயற்சித்தும் ராவணனால் தூக்க முடியவில்லை.  சிறிது கூட அசைக்கக்கூட  முடியாமல் ராவணன் பெருமூச்சுவிட்டான்.
 
★இதனைக் கண்ட அனுமன் ராவணனின் மீது தன் கைகளால் குத்தினார். அனுமனின் குத்தில் ரத்தக் காயமடைந்த ராவணன் சிறிது நேரம் உணர்வில்லாமல் இருந்தான். இந்நேரத்தில் அனுமன் லட்சுமணனை பாதுகாப்பான இடத்திற்கு தூக்கிச் சென்றார். இதனை அறிந்த ராமர் ராவணனுடன் யுத்தம் செய்ய முன்னேறிச் சென்றார். ராவணனால் தூக்க முடியாத லட்சுமணனை அனுமன் எளிதாக தூக்கிச் சென்றதை பார்த்து அரக்கர்கள் மிகுந்த ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அனுமன் லட்சுமணனை தூக்கிச் சென்றது, ஒரு தாய் தன் குழந்தையை தூக்கிச் செல்வது போல் இருந்தது.
 
★மயக்கம் தெளிந்த லட்சுமணன், அனுமனை அழைத்து கொண்டு இருவரும் ராமர் இருக்கும் இடத்திற்குச் சென்றனர். அங்கு
ராமர், ராவணனுடன் போர் புரிய ஆயத்தமாக நின்று கொண்டு இருந்தார். ராவணன் தன் தேரை செலுத்திக் கொண்டு ராமருக்கு எதிரே வந்து நின்றான். போர் புரிய ராவணன் தேரில் வந்து நின்றதும், அனுமன், ராமர் தரையில் நின்று போர் புரிவதா! என நினைத்து வருந்தினான்.
ராமர் ராவணன் மீது அம்பு மழை பொழிந்தார். ராவணன் தனது ரதத்தில் நின்று ராமரின் அம்புகளை தடுத்துக் கொண்டு இருந்தான்.
 
★பிறகு அனுமன் ராமரிடம், பெருமானே! தாங்கள் ஏன் தரையில் நின்று யுத்தம் செய்ய வேண்டும்? நீங்கள் என் தோளின் மீது அமர்ந்து யுத்தம் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
ராமரும் அனுமனின் பக்தியான இந்த வேண்டுகோளை ஏற்று தோள்மீது அமர்ந்து போர் புரிய தொடங்கினார்.
 
நாளை.......................
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
258/18-12-2021
 
இன்று போய் நாளை வா...
 
★ராமர் இதற்கு சம்மதம் கொடுக்கவே தன் உருவத்தைப் பெரியதாக்கிக் கொண்ட அனுமன் ராமரை தன் தோளின் மீது அமர வைத்துக் கொண்டு ராவணன் முன்பாக நின்றார்.
அனுமன் தோள்மீதமர்ந்து ராமர் போர்புரியத் தொடங்கினார்.
 
★ராமர் மற்றும் ராவணனின் யுத்தத்தைக் காண்பதற்கு பிரம்மன் முதலான தேவர்கள் வானத்தில் வந்து ராமர் வெற்றி பெற வாழ்த்தினார்கள். ராமர் ராவணனுடன் போர் புரிய ஆயத்தமாகி, தன் வலிமையான கோதண்டத்தின் நாணை இழுத்து ஓர் பேரொலி எழுப்பினார். ராவணன் வில்லை வளைத்து கணக்கற்ற அம்புகளை ஒரே நேரத்தில் தொடுத்தான். ராவணன் எய்த அம்புகளை துண்டுகளாக்கி, ஐந்து கொடிய கணைகளை ராமர் விடுத்தார். அந்தக் கணைகள் பல அரக்கர்களை ஒழித்தது.
 
★ராமர், ராவணனுக்கு இடையில் கடும்போர் நடந்தது. ராமரின் கோதண்டத்தில் இருந்து வந்த அம்புகள் அரக்கர்களின் தலைகளை அறுத்தும் பல்லாயிர கணக்கான அரக்கர்களையும் வீழ்த்தியது. ராமரை சுமந்து கொண்டிருக்கும் அனுமன் தன் கைகளாலும், கால்களாலும் அரக்கர்களை கொன்று வீழ்த்தினான். எந்த திசையைப் பார்த்தாலும் அரக்கர்களின் பிணங்கள் குவிந்த வண்ணமாக கிடந்தன.
 
★யானைகளும், குதிரைகளும் ஆகிய  அனைத்தும் ராமரின் அம்புகளுக்கு இரையாயின. கடைசியில் ராவணன் மட்டும் தனித்து நின்றான். தன் அரக்கர் படைகள் பிணங்களாக குவிந்து கிடப்பதை பார்த்த ராவணன் கடும்கோபம் கொண்டான். உடனே அவன் ராமரை நோக்கி அம்பு எய்தினான். ராமர் அந்த அம்பை உடைத்து தூள் தூளாக்கிவிட்டு மற்றொரு அம்பை ராவணனை நோக்கி எய்தினார். இந்த அம்பு ராவணனின் வில்லை அறுத்தது. ராமர் மறுபடியும் ஒரு அம்பை ஏவி ராவணனின் தேரை அறுத்து ஒடித்தார்.
 
★ஆனால் ராவணனுக்கு புதிது புதியதாக தேர்கள் வந்து கொண்டிருந்தன. ராமர் புதியதாக வந்த அனைத்து தேர்களையும் அறுத்து ஒடித்தார். ராமர் மற்றொரு அம்பை ஏவி ராவணனின் தலையில் அலங்கரித்து கொண்டிருக்கும் பத்து மணி மகுடங்களையும் கீழே வீழ்த்தினார்.ராமர் ராவணனின் தேரோட்டியையும் குதிரைகளையும் கொன்று, பின் தன்னுடைய அம்புகளால் தேரையும் உடைத்தார். பின்னர் ராவணனின் வில்லை உடைத்து அவனின் அனைத்து விதமான ஆயுதங்களையும் தாக்கி தூளாக்கினார். ராமரின் சக்தி வாய்ந்த அம்புகளால் ராவணன் நிலை குலைந்தான்.
 
★ராமரின் தாக்குதலில் ஏற்பட்ட காயங்களுடன் ஆயுதங்கள் ஏதும் இல்லாமல் நிராயுதபாணியாக நின்றான் ராவணன். அப்போது ராவணன் சந்திரன் இல்லாத இரவு போலவும், சூரியன் இல்லாத பகல் போலவும் காட்சியளித்தான். ராவணன் போர்கருவிகள், தன் வில், தேர், அரக்கர் படைகள் எதுவும் இல்லாமல் தன் கால் விரலால் நிலத்தை களைத்துக் கொண்டு, தலை குனிந்து நின்றான். இதனைப் பார்த்து கொண்டிருந்த தேவர்கள், "தர்மத்தை அழித்த பாவிகளின் நிலைமை இது தான்" என்றனர்.
 
★ராமர் தன் எதிரில் சோகமாக தலைகுனிந்து நிற்கும் அரக்க அரசன் ராவணனை பார்த்து இரக்கம் கொண்டார். ராமர் ராவணனிடம் பேச ஆரம்பித்தார். ராவணா! நீ இன்று மிகவும் பயங்கரமாக யுத்தம் செய்து என்னுடைய படைகளில் உள்ள முக்கியமான வீரர்களை அழித்திருக்கிறாய். வானரவீரன் அனுமனுடனும்,என் தம்பியான லட்சுமணனுடனும் மற்றும் என்னுடனும் நீண்ட நேரம் யுத்தம் செய்து மிகவும் களைப்புடன் இருக்கின்றாய். மேலும் இப்போது உன்னிடம் தேரும் இல்லை எந்த ஆயுதங்களும் இல்லை. அரசனுக்குரிய எந்த விதமான அறிகுறியும் இல்லாமல் சாதாரண வீரன் போல் தரையில் நின்று கொண்டு நிராயுதபாணியாக இருக்கிறாய்.
 
★யுத்தத்தில் நிராயுதபாணியாக நிற்பவனை தாக்குவது என்பது தர்மத்திற்கு எதிரானது. எனவே இங்கிருந்து உயிருடன் செல்ல உன்னை அனுமதிக்கிறேன்.
ராவணா! இப்பொழுது உன்னிடம் எதுவும் இல்லாமல் வெறும் கையுடன் இருக்கிறாய். இப்பொழுது உன்னை கொல்வது நன்றல்ல. ஆகவே, இப்பொழுது தெரிந்துக் கொள், தர்மத்தால் மட்டுமே போர்களில் வெல்ல முடியுமே தவிர, வலிமையால் அல்ல. நான் உன்னை அந்த அரக்கர்களை கொன்றதை போல கொன்றிருப்பேன். ஆனால் தனித்து நிற்கும் உன்னுடைய நிலையை பார்த்து உன்னை கொல்லாமல் விட்டுவிடுகிறேன்.
 
★அரக்கனே! இங்கிருந்து ஓடிபோய் உன் நகரத்திற்குள் ஒளிந்துக் கொள் என்றார். உனக்கு நான் மறுபடியும் ஒரு வாய்ப்பளிக்கிறேன். சீதையை என்னிடம் ஒப்படைத்துவிட்டு, வீபிஷணனை இலங்கையின் அரசனாக முடிசூட்டிவிடு. உன்னை நான் மன்னித்து உயிருடன் விடுகிறேன். அப்படி இல்லையென்றால் என்னை எதிர்த்து போர் புரியும் ஆற்றல் உன்னிடம் இருந்தால், உன் சேனைகளை திரட்டி என்னை எதிர்த்து போரிடு அல்லது
 நீ உன் நகரத்திற்குச் சென்று உனது களைப்பை போக்கிக் கொண்டு நாளை உன்னுடைய ஆயுதங்களுடன்  தேரில் வந்து மீண்டும் என்னுடன் யுத்தம் செய்.
 
★அரசர்களுக்குரிய ரதம் இல்லாமல் உன்னுடன் நான் யுத்தம் செய்கிறேன். அப்போது மேலும் என்னுடைய ஆற்றலை நீ அறிந்து கொள்வாய் என்றார்.
இப்பொழுது நீ இங்கிருந்து செல். உன் மனைவி உன்னை எதிர் நோக்கி காத்துக் கொண்டு இருப்பாள். ஆகவே ராவணா! "இன்று போய்,  நாளை வா" என்றார்.
 
நாளை....................
 
ஶ்ரீராம காவியம்
~~~
259/19-12-2021
 
ராவணன் சோகம்...
 
★தோல்வி என்பதை அறியாத ராவணன் இன்று தன் வீரத்திற்கு இழுக்கு நேர்ந்துவிட்டதை நினைத்து ஒன்றும் பேச முடியாமல் மவுனமாக நின்றான். இன்று ஒரு மனிதன் தன்னை "இன்று போய் நாளை வா" என்று சொல்லும் அளவிற்கு தன் நிலைமை தாழ்ந்து போனதை நினைத்து ஏளனமாக சிரித்தான். பிறகு ராவணன் நிலத்தை பார்த்து தலை  குனிந்தவாறே தன் அரண்மனையை நோக்கி நடந்து  சென்றான்.
 
★இறுதியாக ராவணனிடம் இருந்தது வீரம் மட்டும் தான். ராவணன் போரில் தன்னுடைய பெருமைகளை இழந்துவிட்டு, ராமர் அன்புடன் கொடுத்த உயிர் பிச்சையை மட்டும் வைத்துக் கொண்டு அரண்மனை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். ராவணன் இலங்கைக்குள் நுழையும் போது சூரியன் மறைய தொடங்கியது. அவன் எந்த ஒரு திசையையும், யாரையும் பார்க்கவில்லை. தலையை குனிந்தவாறு அரண்மனை நோக்கி மெதுவாக சென்றுக் கொண்டிருந்தான்.ராவணன் மிகவும் அவமானத்துடன் தலை கவிழ்ந்தவனாய் தனது அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்தான்.
 
★அரண்மனையில் ராவணன் வரும்போது இருக்கும் பரபரப்பு அன்று அங்கு தென்படவில்லை. அங்கு லங்கேசன்  ராவணனின் மனைவிகளும், உறவினர்களும், சேனைத்தலைவர்களும் நின்று கொண்டிருக்க அவன் யாரையும் பார்க்காமல் நேராக தன்னுடைய  அறைக்குச் சென்று, போரில் எவ்வாறு வெல்வது என்பதைப் பற்றி ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினான். ராவணன் தோல்வி அடைந்து சென்றதை கண்ட தேவர்களும், முனிவர்களும் இனி நமக்கு நல்ல காலம் பிறந்து விட்டது என்று எண்ணி மகிழ்ச்சி அடைந்து மிகுந்த ஆரவாரம் செய்தார்கள்.
 
★ராமரை பற்றி ராவணன் பலவகையாக தன் மனதில் சிந்திக்க ஆரம்பித்தான். ஒரு சாதாரன மானிடனால் எப்படி நம்மை வெற்றி கொள்ள முடிந்தது? எந்த தேவர்களாலும் நம்மை வெல்ல முடியாது என்று வரம் வாங்கிய போது,  ஒரு மனிதனால் தான் உனக்கு ஆபத்து என்று நம்மிடம் பிரம்மா சொன்னது இந்த ராமரைத் தானோ? என்று பல வகையிலும் சிந்தனை செய்த ராவணன், அரசவையை கூட்டி அங்கிருந்த அனைவரிடமும் தெளிவாகப் பேச வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்தான். ராமரைப் பற்றி அனைவரும் சொன்னது உண்மையாகி விடும் போல் உள்ளது. என்னுடைய தவ வலிமைகள் எல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை என்று மனம் குழம்பி, பலவித  யோசனைகளில் மூழ்கி இருந்தான்.
 
★பின்னர் ராவணன் தன்னுடைய மெய்க்காப்பாளனை அழைத்து, தூதர்கள் நால்வரை அழைத்து வரும்படி சொன்னான். உடனே தூதர்கள் நால்வரும் அங்கு வந்துச் சேர்ந்தார்கள். அவர்கள் மனகதி, வாயுவேகன், மருத்தன், மாமேகன் என்பவர்கள். ராவணன் அவர்களிடம் நான்கு திசைகளுக்கும் சென்று அரக்கர்களை ஒன்று திரட்டி வரும்படி கூறினான். பின் ராவணன் யாரையும் பார்க்க விருப்பமின்றி தன்னுடைய படுக்கைக்குச் சென்றான். சீதையை மட்டும் மனதில் நினைத்துக் கொண்டிருந்த ராவணனுக்கு இப்பொழுது கவலை தொற்றிக் கொண்டது.
 
★கவலையால் ராவணனுக்கு தூக்கம் வரவில்லை. தான் பெற்ற தோல்வியைக் கண்டு தேவர்கள் சிரிப்பார்கள். தன் பகைவர்கள் மட்டுமல்ல, இந்த  மண்ணுலகத்தில் உள்ளோரும் சிரிப்பார்கள். அது மட்டுமின்றி அழகும், அன்பும், மென்மையும் உடைய சீதை என்னைப் பார்த்து சிரிப்பாளே என நினைத்து மிகுந்த கவலை கொண்டான். ராவணன் தூக்கம் வராமல் தன் படுக்கையில் இருந்து எழுந்து அரசவைக்குச் சென்று தன் அரியணையில் அமர்ந்தான்.
 
★ராவணன் கவலையுடன் இருப்பதைக் கண்டு அவனுடைய பாட்டன் மாலியவான், எழுந்து அன்புடன் பேச ஆரம்பித்தார். பேரப்பிள்ளையே! உன் முகம் ஏன் இவ்வளவு வாடி இருக்கின்றது?. உன் துன்பத்திற்கான காரணம் என்னவென்று கேட்டார். அதற்கு  ராவணன், பல வெற்றிகளை கண்ட நான் இன்று ஒரு சாதாரன மனிதனிடம் தோற்றுவிட்டேன். ராமன் என் பலமான சேனைகள் அனைத்தையும் வேரோடு அழித்து விட்டான். இந்திரன், சிவன், திருமால் ஆகிய மூன்று தேவரையும் வென்ற பேராற்றல் உடைய நான், ராமனிடம் இன்று தோற்றுவிட்டேன்.
 
★இன்று ஒரு மனிதனான ராமனை என்னால் வெல்ல முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன். ராமன் வீரம் நிறைந்தவன். அவன் என்னுடன் போர் புரியும் போது கோபமோ, பரபரப்போ தெரியவில்லை. மிகவும் நுணுக்கமாக போர் புரிந்தான். இன்று அவன் மிகுந்த கோபத்துடன் போர் புரிந்து இருந்தால், நான் இன்று தங்கள் முன் பேசிக் கொண்டிருக்க மாட்டேன். ராமனின் போரிடும் வீரத்தை நான் என்னவென்று சொல்வது? ராமனின் அற்புத பாணங்கள் அனைத்தும் எரிக்கும் வல்லமை உடையது. ராமரிடம் என் பெருமைகள் அனைத்தையும் இழந்துவிட்டு, பரிதாபமாக இங்கு வந்துள்ளேன் என மிகவும் வருத்தத்துடன் கூறினான்.
 
நாளை.........................
 
[1:47 pm, 21/12/2021] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
261/21-12-2021
 
தூக்கம் கலைந்த
கும்பகர்ணன்...
 
★அரசன் ராவணன், மல்லர்கள் ஆயிரம் பேரை அழைத்து வந்து கும்பகர்ணனை விரைவில் எழுப்பச் செய்யுங்கள் என்று கட்டளையிட்டான். மல்லர்கள் அங்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும் கும்பகர்ணனை பார்த்து பயந்து நடுங்கினார்கள். அவர்கள் கும்பகர்ணனை அடித்து எழுப்ப பயந்து அவன் காதருகில் சங்கு, தாரை போன்ற ஊது கருவிகளை கொண்டு பெரும் ஓசை எழுப்பினர். எதற்கும் கும்பகர்ணன் சிறிதும் அசைவு கொடுக்கவில்லை.
 
★பிறகு அந்தக் கிங்கரர்கள், படைகலன்களில் மிக தேர்ச்சிப் பெற்ற வீரர்களை அழைத்து வந்து கொம்பு, வலிமையுடைய தண்டு, சம்மட்டி, சூலம், ஈட்டி போன்றவற்றைக் கொண்டு கும்பகர்ணனின் மார்பிலும், தலையிலும், தாடையிலும், மூட்டுகளிலும் அடித்தனர். அவர்கள் எவ்வளவு அடித்தும் கும்பகர்ணன் எழுந்தபாடில்லை. அவர்கள் தான் அடித்து அடித்துச் சோர்ந்து போனார்கள். பிறகு
மீண்டும் மீண்டும் ராவணனின் தம்பியான கும்பகர்ணனை எழுப்புவதற்கான காரியத்தில் ராட்சத வீரர்கள் இறங்கினார்கள்.
 
★கும்பகர்ணன் எழுந்ததும் பசி என்று தனக்கு மிக அருகில் கிடைத்ததை எல்லாம் விழுங்க ஆரம்பிப்பான். எனவே முதலில் அவனுக்கு தேவையான தண்ணீர், உணவுகளை அவனை சுற்றி வைத்தார்கள். சங்கு பேரிகை என்று அனைத்து வாத்தியங்களையும் வைத்து அவனது காதின் அருகில் சத்தம் எழுப்பினார்கள். யானைகளை வைத்து அவனது உடலை முட்ட வைத்தார்கள். மிகவும் நீண்ட கம்புகளாலும் ஈட்டிகளாலும் அவனது கால்களை குத்த ஆரம்பித்தார்கள். ஒரு வழியாக லேசாக தூக்கத்திலிருந்து கண் விழித்த கும்பகர்ணனுக்கு பசி எடுக்க ஆரம்பித்தது.
 
★பசிக்கு உணவு தேடி எழுந்த கும்பகர்ணன் தன்னை சுற்றி இருக்கும் உணவுகளை முதலில் சாப்பிட்டு முடித்து எழுந்தான். பின்  அங்கிருந்த  அனைவரும் தன்னை எழுப்ப முயற்சித்ததை  கண்டு கடும் கோபமடைந்தான். கும்பகர்ணனிடம் ராட்சத வீரர்கள் ராவணனின் உத்தரவையும், யுத்தத்தில் நடந்தவற்றையும் கூறினார்கள். அனைத்தையும் கேட்ட கும்பகர்ணன், தனது தொடர் தூக்கத்தை விட்டு எழுந்து, ராவணனை சந்திக்க சென்றான். ராமர் பற்றிய ஒரே சிந்தனையில் தனியாக இருந்த ராவணனிடம், கும்பகர்ணன் எழுந்து அரசவைக்கு வந்து கொண்டு இருக்கிறான்  என்ற செய்தி சொல்லப்பட்டது.
 
★மகிழ்ச்சி அடைந்த ராவணன், அங்கிருந்து அரசவைக்கு வந்து சேர்ந்தான். கும்பகர்ணன் அரசவை சென்றடைந்ததும், ராவணனின் கால்களில் வீழ்ந்து வணங்கினான். ராவணன், கும்பகர்ணனை தன் தோளோடு தழுவிக் கொண்டான். அங்கு கும்பகர்ணன் தனக்கு மிகவும் விசாலமாக இருக்கும் ஓர் அரியணையில் அமர்ந்தான். பிறகு ராவணன், தன் தம்பியான கும்பகர்ணனுக்கு மிக நல்ல உடைகளையும், விசேஷமான ஆபரணங்களையும் கொடுத்து அணிந்து கொள்ளச் செய்தான். சந்தனக் குழம்பைக் கொண்டு வரச் செய்து, அதையும் அவன் உடலெங்கும் பூசிக்கொள்ளச் செய்தான். அவன் மார்பில் கவசத்தை அணிவித்து, நெற்றியில் வீர பட்டத்தைக் கட்டி போருக்குத் தயார் செய்தான்.
 
★இதையெல்லாம் பார்த்த கும்பகர்ணன் ராவணனிடம், "எனக்கு இத்தகையச்  சிறப்புகள் செய்வதெல்லாம் எதற்காக" என்றான்.  மேலும், அண்ணா!
எப்போதும் மிக கம்பீரமாகவும் பொலிவுடன் இருக்கும் தங்கள் முகம் ஏன் மிகுந்த கவலையில் உள்ளது. உங்களுடைய இந்த கவலையை போக்குவதற்காக நான் என்ன செய்ய வேண்டும். அண்ணா! எனக்குத் தாங்கள் உத்தரவிடுங்கள். இப்போதே செய்து முடிக்கிறேன் என்றான் கும்பகர்ணன்.அதற்கு ராவணன், தம்பி! நீ தூங்க ஆரம்பித்ததும் தேவர்களும் நெருங்க முடியாத நமது நகரத்தை கடல் போல் வந்த வானரசேனைகள் சூழ்ந்து கொண்டு விட்டார்கள்.
 
★ராட்சசர்களுக்கும் இந்த வானர குரங்குகளுக்கும் நடந்த யுத்தத்தில், நம்முடைய பல தளபதிகளும், முக்கிய வீரர்களும் இறந்து விட்டார்கள். நேற்று நானே எனது வீரமான படைகளுடன் யுத்தத்திற்கு சென்றேன். ராமர் தனது பராக்கிரமத்தால் என்னிடம் இருந்த திவ்யமான ஆயுதங்கள் அனைத்தையும் அழித்து, தர்மம் என்ற பெயரில் என்னை உயிரோடு விடுகிறேன் என்று அவமானப்படுத்தி அனுப்பி விட்டான். இந்த சம்பவத்தால் மிகவும் கவலையுடன் இருக்கிறேன்.
 
★உன்னுடைய பலத்தை நான் அறிவேன். அதனால் இப்போது உன்னை மட்டுமே நான் மிகவும் நம்பியிருக்கிறேன். இதற்கு முன்பாக நடந்த யுத்தத்தில் உனது பலத்தினால் தேவர்களை எல்லாம் சிதறி ஓடும்படி விரட்டி அடித்திருக்கிறாய். உடனே சென்று யுத்தம் செய்து ராம லட்சுமணர்களை அழித்து, இழந்த எனது பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்து, நமது ராட்சத குலத்தையும் நமது இலங்கை நகரத்தையும் காப்பாற்று என்று ராவணன் கேட்டுக் கொண்டான். இதைக் கேட்ட கும்பகர்ணன் மிகவும் சத்தமாக சிரிக்க ஆரம்பித்து மன்னிக்க வேண்டும் அண்ணா என்று  பேச ஆரம்பித்தான்.
 
நாளை......................
[3:33 pm, 22/12/2021] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
262/22-12-2021
 
கும்பகர்ணன்
உரைத்த அறிவுரை...
 
★அண்ணா! யுத்தம்  வந்து விட்டதா? கற்புடைய சீதையின் துயரம் இன்னமும் தீராமலேயே உள்ளதோ? தேவலோகத்திலும், மற்றும்  மண்ணுலகத்திலும் வளர்ந்த நமது புகழ் அழிந்து போனதோ? நாம் அனைவருமே அழியப் போகும் காலம் வந்து விட்டதோ? ஒருவனுக்கு நிலம் காரணமாகவும், பதவி ஆசை காரணமாகவும் போர் வரும். ஆனால் உனக்கு  கேவலம் ஒரு பெண்ணின் காரணமாக போர் வந்துவிட்டது.  இன்று உனக்கு சீதையினால் அழிவு நேர்ந்து விட்டதே!  
 
★ராமர் இலங்கைக்குள் வந்து விட்டார் என்ற செய்தி வந்ததும் சபையில் நாம் அனைவரும் செய்த ஆலோசனையில் பெரியவர்களும் அறிஞர்களும் என்ன சொல்லி எச்சரிக்கை செய்தார்களோ, அதுவேதான் இப்போது நடந்திருக்கிறது. அனைவரும் எச்சரிக்கை செய்ததை நீங்கள் சிறிதுகூட கேட்கவில்லை. சீதையை ஏமாற்றி இங்கு தூக்கி வந்த பாவத்திற்கான பயனை இப்போது அனுபவிக்கிறீர்கள்.
மேலும் அன்றைய அரசவை ஆலோசனையின் போது நானும், விபீஷணனும், நமது பாட்டன் மாலியவானும் சீதையை விடுவிக்குமாறு சொன்ன எந்த அறிவுரைகளையும் நீ சிறிதும் கேட்கவில்லை.
 
★விதியின் செயலை நாம் என்ன செய்வது? நம் குலத்தின் பண்பு அழிந்துவிட்டது. நம்முடைய  உறவினர்களும், சேனைகளும், நம் குலமும் அழிய வழிவகுத்து விட்டாய். உன் நிலைமையை நினைத்தால் என் உள்ளம் பதறுகிறது. இனி நம் அசுர குலம் வாழுமோ! வாழாதோ! என்பது தெரியவில்லை என்றான்.
நீங்கள் முதலில் அந்த ராம லட்சுமணர்ளை அழித்து விட்டு பின்பு சீதையை தூக்கி வந்து இருந்தால், உங்களது வீரம் அனைவராலும் பாரட்டப்பட்டு இருக்கும். இப்போது என்னை தோற்கடித்து விட்டான், எனது வீரர்கள் இறந்து விட்டார்கள் என்று புலம்புகிறீர்கள்.
 
★அரசன் ஒருவன் ஆசையினால் தூண்டப்பட்டு, அதனைப் பற்றி ஆராய்ந்து, அறிந்து கொண்டு செயல்பட்டிருக்க வேண்டும். எதைப் பற்றியும் யோசிக்காமல் செய்து முடித்துவிட்டு, பின்பு ஆலோசனை சொல்பவர்களின் கருத்தையும் கேட்காமல் இருந்தால், இதுபோல் அவஸ்தை பட வேண்டியிருக்கும் என்று தனக்கு தெரிந்த நீதியை ராவணனிடம் சொல்லி பேச்சை முடித்தான் கும்பகர்ணன். கும்பகர்ணன் பேசிய பேச்சுக்கள் ராவணனுக்கு பிடிக்கவில்லை. ராவணனுக்கு கோபம் வந்தது. தனது கோபத்தை அடக்கிக் கொண்டு கும்பகர்ணனிடம் பேச ஆரம்பித்தான்.
 
★ராம லட்சுமணர்களை முதலில் அழித்திருக்க வேண்டும் என்ற உனது வாதம் சரியானது தான். ஆனால் இப்போது காலம் தாண்டிவிட்டது. இப்போது இதைப் பற்றி பேசி பயனில்லை. நடந்து போன எனது மாபெரும் தவறுகளினால், இப்போது இந்த சங்கடமான சூழ்நிலை அமைந்து விட்டது. என் மீது நீ வைத்து இருக்கும் பிரியம் உண்மையாக இருந்தால், கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் எனக்கு தைரியம் சொல்லி, உனது வல்லமை முழுவதையும் உபயோகித்து, எனக்காக யுத்தம் செய்து ராம லட்சுமணர்களை அழித்து, என்னை காப்பாற்று என்று ராவணன் தன் தம்பி கும்பகர்ணனிடம் கேட்டுக் கொண்டான்.
 
★கும்பகர்ணன், அண்ணா! முன்பு நீ தர்மத்தை எப்போதும்  கடைப்பிடித்ததால், வலிமையும், செல்வமும் உனக்குப் புகழைத் தந்தன. ஆனால் எப்போது நீ அந்த தர்மத்தை மீறினாயோ, அப்போதே உன் அழிவை தேடிக் கொண்டு விட்டாய். இனி உன்னை எவராலும் காப்பாற்ற முடியாது. ராம லட்சுமணரின் வாக்கில் சத்தியமும், குணத்தில் நல்லொழுக்கமும் நிறைந்து உள்ளது. ஆனால் இன்று நமக்கு நெஞ்சில் வஞ்சகமும், வாக்கில் பொய்யும், செயலில் பாவமும் நிறைந்திருக்கின்றது. இவ்வாறு இருக்கையில் நமக்கு எப்படி வெற்றி உண்டாகும்?.
 
★நான் உனக்கு கடைசியாக ஒன்று சொல்கிறேன். கடலை கடந்து வந்த வானரங்களும்  ராம லட்சுமணருக்கு இன்னும் துணையாக  இருக்கின்றனர். சீதை அசோக வனத்தில் பெரும் துன்பத்தில் உள்ளாள். நண்பன் வாலியின் மார்பைத் துளைத்த பாணமும் இன்னும் ராமனின் அம்புறா தூணியில் உள்ளது. ஆகவே, நீ சீதையை ராமரிடம் சென்று ஒப்படைத்துவிட்டு விபீஷணனுடன் சேர்ந்து வாழ்வதே நலம். அதுவே உனக்கும், நம் குலத்துக்கும் நல்லது. இல்லையென்றால் நம் அரக்க குலம் அழிவது நிச்சயம் என்றான்.
 
★கும்பகர்ணனின் இந்த நல்ல அறிவுரையைக் கேட்டு கோபம் அடைந்து கொதித்து எழுந்த ராவணன், காலினால் நிலத்தை ஓங்கி மிதித்தான். கும்பகர்ணா! எனக்கு அறிவுரை சொல்ல, நான் உன்னை அழைக்கவில்லை.
ஆகவே நீ எனக்கு அறிவுரை கூற அவசியமும் இல்லை. நான் ஆயிரம் பேருக்கு அறிவுரை கூறுபவன். நான் கல்லாத கலையும் இல்லை, நான் வெல்லாத போரும் இல்லை. வெள்ளிமலையை அள்ளி எடுத்த தோள்களை உடைய என்னை அந்த மனிதர்களால் அசைக்க முடியாது. அந்த குரங்குகளை போல் அந்த மனிதர்களை வணங்கி, விபீஷணனுடன் சேர்ந்துக் கொள். அது தான் உனக்கு பொருந்தும். உன் வீரம் பயனற்று போனது.
 
நாளை..................
[4:17 pm, 23/12/2021] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
263/23-12-2021
 
கும்பகர்ணன்
போருக்கு புறப்படுதல்...
 
★நீ போருக்கு சிறிதும் தகுதி இல்லாதவனாக ஆகிவிட்டாய். போ! இன்னும் மாமிசங்களும், கள்ளும் மீதம் உள்ளது. அதை உண்டு விட்டு போய் உறங்கு. என் பகைவரை எப்படி அழிப்பது என்பது எனக்கு தெரியும். நீ இங்கிருந்து செல் என்றான் மிகுந்த கோபத்துடன். பிறகு ராவணன், தன் ஏவலாட்களை அழைத்து, என் தேரையும், ஆயுதங்களையும் கொண்டு வருக. நானே போருக்குச் சென்று, அனைவரையும் ஒழிப்பேன் என எழுந்தான்.
 
★அப்பொழுது கும்பகர்ணன், ராவணனை பணிந்து வணங்கி, அண்ணா! என்னை பொறுத்து அருள வேண்டும். நீ போருக்குச் செல்ல வேண்டாம். அடியேன் போருக்குச் செல்கிறேன். ஆனால் நான் திரும்பி வருவேன் என்பதை என்னால் சொல்ல இயலாது. நான் போரில் இறந்து விட்டால் நீ சீதையை ராமனிடம் ஒப்படைப்பது தான் நலம். என்னை வென்றவர் தங்களை நிச்சயம் வெல்வர். உன் அரக்க படைகள் அழிவதும் நிச்சயம்.
 
★உன் மகன் இந்திரஜித் போருக்குச் சென்றால், அவன் லட்சுமணனின் வில்லினால் அழிவது நிச்சயம். பிறகு உனக்கு ஏற்படும் முடிவை அறிந்துக் கொண்டு, அதற்கேற்ப முயற்சி செய்யுங்கள். நான் கடைசியாக உங்களிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன். நான் இதுநாள் வரைக்கும் ஏதேனும் தவறு செய்திருந்தால் அவற்றை பொறுத்தருள வேண்டும். இனி நான் தங்கள் முன் நின்று கொண்டிருப்பதில் ஒரு பயனும் இல்லை என கண்ணீர் மல்க, ராவணனை ஏற இறங்க பார்த்து, நீங்கள் கவலைப்பட்டது போதும்.
 
★என்னை யாராலும் வெல்ல முடியாது என்று உங்களுக்கு தெரியும். உங்களுக்கு பயத்தை உண்டாக்கி இருக்கும் நமது எதிரிகளை, என்னால் முடிந்தால் அழித்து விட்டு வருகிறேன்.
அண்ணா! நான் விடைப்பெற்று கொள்கிறேன்எனக் கூறிவிட்டு  கண்ணீருடன்   மனம் நொந்து போர்களம் நோக்கி புறப்பட்டான்.
ராவணனும் தனது கண்களில் கண்ணீர் நிரம்ப அசையாது கும்பகர்ணனையே பார்த்துக் கொண்டிருந்தான். அங்கு கூடியிருந்த அனைவரும் துன்பத்தில் ஆழ்ந்தனர்.
 
★கும்பகர்ணனுக்கு துணையாக ஏராளமான அசுரப்படைகளை ராவணன் அனுப்பி வைத்தான். கும்பகர்ணன் சேனைகள் புடைசூழ வானமும், வையகமும் நடுங்க தேரில் ஏறி போருக்குச் சென்றான். சூலம், வேல், வில், சக்கரம் முதலிய ஆயுதங்களை சுமந்துக் கொண்டு சேனைகள் அவன் பின்தொடர்ந்து சென்றன. பெரிய மலை போல் தேரில் வரும் கும்பகர்ணனை, ராமர் பார்த்து இவன் யார்? என விபீஷணனிடம் கேட்டார். பெருமானே! இவன் காற்றைவிட விரைந்து செல்லும் கால்களை
உடையவன். இவன், தான் தவறாகக் கேட்டுவிட்ட ஒரு வரத்தினால் எப்போதும் உறங்கிக் கொண்டே இருப்பவன்.
 
★சிவபெருமான் இவனுக்கு அளித்த சூலப்படை இவனிடம் இருக்கிறது. அந்தச் சிறப்பான சூலாயுதத்தைக் கொண்டு இவன் போரில் தேவர்களை ஓட வைத்தவன். இவனின் பெயர் கும்பகர்ணன். ராவணனுக்கு இளைவன், எனக்கு மூத்தவன்.
கும்பகர்ணன் மிகவும் வலிமையானவன். இவனை எதிர்த்து வெற்றி பெறுவது கடினம். ராவணனுக்கு தர்மத்தை எடுத்துரைத்து சீதையை திருப்பி அனுப்ப வேண்டும் என்று அரச சபையில் இருந்த அனைவர் முன்னிலையிலும் தைரியமாக சொல்லி, ராவணன் செய்த தவறை கண்டித்தவன். ஆனால் ராவணன் மீது உள்ள பாசத்தால் தவறு என தெரிந்தும் தமையன் ராவணனுக்காக யுத்தம் செய்ய வந்திருக்கிறான் என்று ராமரிடம் விபீஷணன் சொல்லி முடித்தான்.
 
★கும்பகர்ணன் யுத்த களத்திற்கு உள்ளே நுழைந்ததும் ராட்சத வீரர்கள் அவன் மீது மலர்களை தூவி ஆரவாரம் செய்தார்கள். மலை போல் பெரிய உருவத்தை கொண்ட கும்பகர்ணனை கண்ட வானர வீரர்கள் அலறி அடித்துக் கொண்டு ராமரை நோக்கி ஒடினார்கள். வானர படைத் தலைவர்கள், அனைவருக்கும் தைரியத்தை சொல்லி, படைகள் சிதறி ஓடாமல் பார்த்துக் கொண்டார்கள்.  விபீஷணன் இப்படி கூறியதைக் கேட்ட சுக்ரீவன் ராமரிடம், கும்பகர்ணன் மிக்க பேராற்றல் உடையவன். நற்குணத்தில் சிறந்தவன். இவனை கொல்வதால் நமக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது?. ஆனால் இவனை கொல்லாமல் நம்முடன் சேர்த்துக் கொண்டால், விபீஷணன் தன் அண்ணனை இழக்க மாட்டான் என்றான்.
 
★ராமரும் சுக்ரீவனின் இந்த யோசனையைக் கேட்டு, இதை கும்பகர்ணனிடம் சொல்வது யார்? எனக் கேட்டார். உடனே விபீஷணன், தாங்கள் அனுமதி தந்தால் நானே சென்று கும்பகர்ணனிடம் பேசுகிறேன் என்றான். ராமர் விபீஷணனிடம், விபீஷணா! நீ கும்பகர்ணனிடம் சென்று, அவன் விரும்பினால் நம்முடன் வந்து சேர்ந்துக் கொள்ளச் சொல் என்றார்.
 
நாளை.....................
[4:14 pm, 24/12/2021] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
264/24-12-2021
 
கும்பகர்ணனிடம்
விபீஷணன் வேண்டுகோள்...
 
★உடனே விபீஷணன் அந்த இடத்திலிருந்து புறப்பட்டு, வானர சேனைகளை கடந்து கும்பகர்ணன் இருக்குமிடம் சென்றான். விபீஷணன் கும்பகர்ணனின் காலில் விழுந்து வணங்கினான். கும்பகர்ணன் விபீஷணனை தழுவிக் கொண்டான். கும்பகர்ணன், நீ ஏன் இங்கு வந்தாய்? நீ உத்தமன், நற்குணத்தில் சிறந்தவன். நம்மில் ஒருவனாவது உயிர் பிழைத்துக் கொண்டாய் என மகிழ்ந்திருந்தேன். தம்பி! விபீஷணா! நீ இங்கு என்னிடம் வருவதற்கான காரணம் என்ன? உன்னால் நம் குலம் அழியாத புண்ணியமும், புகழும் பெற்றது என நினைத்திருந்தேன்.
 
★ராமன் உன்னை கைவிட மாட்டான். ராமனிடம் நீ இருக்கும் வரையில் உனக்கு இறப்பு இல்லை. அப்படி இருக்கையில் அவர்களை விட்டு நீ ஏன் இங்கு வந்தாய்? உனது தீவினைகள் அனைத்தும் நீங்கப் பெற்று, மெய்ஞானத்தை பெற்ற தம்பி விபீஷணா! தவங்களைச் செய்து ஒழுக்கம், தர்மம் இவற்றை கடைப்பிடித்துக் கொண்டு இருக்கிறாய்.  பிரம்மதேவன் உனக்கு அழிவு இல்லாத பூரண ஆயுளைக் கொடுத்திருக்கிறான். தம்பி விபீஷணா! உனக்கு அரக்க குலத்தின் குணங்கள் இன்னும் போகவில்லையா?
 
★நாங்கள் போரில் மாண்டு இறந்தால், நீ உயிருடன் இருந்தால் தானே எங்களுக்கு ஈமச் சடங்குகள் செய்ய முடியும். நீ இல்லையென்றால் எங்களுக்கு யார் இதைச் செய்வது? விபீஷணா! அங்கே பார்! போருக்கு தயாராக ராமரும், லட்சுமணனும் உள்ளனர். எப்படி இருந்தாலும் அவர்கள் எங்கள் உயிரை பறிக்க போகிறார்கள். ஆதலால் நீ சென்று ராமனிடம் சேர்ந்துக் கொள். ராமர் போரில் வென்ற பிறகு, சீதை ராமனிடம் சேர்ந்த பிறகு, அவர்களின் முன்னிலையில் இலங்கையின் ஒப்பற்ற அரசனாக வேண்டும். அதனால் இப்பொழுது நீ ராமனிடன் சென்றுவிடு என்றான்.
 
★கும்பகர்ணன் சொன்னதைக் கேட்ட விபீஷணன், அண்ணா! நான் தங்களிடம் சேர்ந்துக் கொள்ள வரவில்லை. தங்களிடம் வேறு செய்தியை சொல்ல வந்துள்ளேன் என்றான். கும்பகர்ணன், அப்படியென்றால் நீ கொண்டு வந்த செய்தியைக் கூறு என்றான். அண்ணா! கருணையே வடிவான ராமர், தங்களை அவர்களுடன் சேர்ந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்து உள்ளார். தாங்கள் அறவழியில் நடப்பீர்கள் என்றால் ராமருடன் வந்து சேர்ந்துக் கொள்ளுங்கள். இதுவே என்னுடைய விருப்பம் ஆகும். நீங்கள் ராமருடன் சேர்ந்துக் கொண்டால் நாம் நம் குலத்தை சிறப்புடன் ஆட்சி செய்யலாம். ராமர், தங்கள் மீது கொண்ட இரக்கத்தாலும், என் மீது கொண்ட அன்பாலும் உங்களை அழைத்து வரும்படி என்னை அனுப்பியுள்ளார். நீங்கள் என்னுடன் வருவது எனது விருப்பமும் ஆகும் என்றான்.
 
★வீபீஷணன் கூறியதைக் கேட்டு, கும்பகர்ணன் கண்ணீர் தளும்ப விபீஷணனை தழுவிக் கொண்டான். விபீஷணா! உலக வாழ்க்கை நீரின் மேல் எழுதிய எழுத்திற்கு சமமாகும். என்னை நெடுங்காலம் வளர்த்த ஆருயிர் அண்ணனுக்காக, என் உயிரைக் கொடுப்பது தான் கடமையாகும். தன் கடமையை மறப்பவன் அறிவற்றவன். கடமை மட்டுமே உடைமை. என் துன்பத்தை நீ, நீக்க வேண்டும் என நிஜமாக  நினைத்தால்,  விரைந்துச் சென்று ராமனிடம் சேர்ந்துவிடு. பிரம்மன் உனக்கு எண்னற்ற வரங்களை அளித்துள்ளார்.
 
★அதனால் நீ சிரஞ்ஜீவியாக வாழப்போகிறவன்.  அறவழியில் நடக்கும் ராமனிடம் நீ இருப்பது தான் நியாயம். எனக்கு மரணமே புகழுக்குரியதாகும். இதுவரை எனக்கு உண்ண உணவளித்து, என்னைச் சுமந்த அண்ணனுக்கு உயிரை தருவது தான் சிறந்தது. இது என்னுடைய கடமையும் ஆகும்.நான் போரில் அனுமன், அங்கதன், சுக்ரீவன், நீலன் முதலிய வானர வீரர்களை வென்று என் ஆற்றலை இந்த உலகிற்கு காட்டுவேன். அந்த வானரங்களின் உயிரை எல்லாம் பறிப்பேன். நீ தாமதிக்காமல் ராம லட்சுமணரிடம் சேர்ந்துக் கொள்.
 
★நமக்குள் இனிமேல்  எந்த வகையான பேச்சு வார்த்தையும் வேண்டாம். நாங்கள் இறந்த பிறகு, எங்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நீ செய்வாயாக. இன்று நம் உறவு முடிந்து விட்டது. இனி நாம் இருவரும் சந்திக்கவும் வாய்ப்பு இல்லை. ஆதலால் நீ உடனே இங்கிருந்துச் செல் என்றான். பிறகு இருவரும் கண்ணீர் தளும்ப தழுவிக் கொண்டனர். கும்பகர்ணன், விபீஷணனுக்கு விடைக்கொடுத்து அங்கிருந்து சென்றான். வீபீஷணன் அகமும், முகமும் மிகவும் வாடிப் போனது. இனியும் கும்பகர்ணனிடம் பேசுவதில் எந்த பயனும் இல்லை என நினைத்து அங்கிருந்து சென்றான். போகும் வழியில் நான் கும்பகர்ணனை எப்போது பார்க்கப் போகிறேன் என நினைத்து கும்பகர்ணனை திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டுச் சென்றான்.
 
நாளை...................
[3:26 pm, 25/12/2021] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
265/25-12-2021
 
கும்பகர்ணனின்
தீவிரமான போர்...
 
★கும்பகர்ணனும் தன் தம்பி விபீஷணனை பாசத்தோடு பார்த்தான். பிறகு இருவரும் அவரவர் வழியில் சென்றனர். விபீஷணன் ராமர் இருப்பிடத்தை அடைந்தான். அங்கு நடந்ததை அனைத்தையும் ராமரிடம் கூறினான். ராமர் விபீஷணனை பார்த்து  விபீஷணா! உனக்கு  முன்னால் உன் அண்ணன் கும்பகர்ணனை நான் எவ்வாறு கொல்ல முடியும்? அதற்காக தான் அவனை இங்கு அழைத்து வரச் சொன்னேன். ஆனால் அந்த கும்பகர்ணன் என் அழைப்பை மறுத்துவிட்டான். இனி என்னால் என்ன செய்ய முடியும். எல்லாம் விதியின் கையில் தான் உள்ளது என்றார். இப்படி ராமர் பேசிக் கொண்டிருக்கும் போது அரக்கப் படைகள், வானரப் படைகளை சூழ்ந்துக் கொண்டது. அந்தப் போர்க்களத்தில் பெரும் ஆரவாரம் உண்டானது.
 
★போர் தொடங்கியது. அரக்க சேனைகளும், வானரர்களின் சேனைகளும் எதிர்த்துப் போர் புரிந்தன. வானர வீரர்கள் கற்களையும், மலைகளையும், பாறைகளையும் அரக்கர்கள் மீது எறிந்தனர். அரக்கர்கள் , வேல், சூலம் முதலிய ஆயுதங்களை வானரங்கள் மீது எறிந்தனர். அரக்கர்களின் வில்லில் இருந்து வெளிவந்த அம்புகள் பலப்பல வானரங்களை கொன்றது. பதிலுக்கு வானரங்களும் மலை, பாறை, கல், மரம் முதலியவற்றை தூக்கி எறிந்தனர். இப்படி போர் மிக கடுமையாக நடந்து கொண்டு இருந்தது. இதைப் பார்த்து கொண்டிருந்த தேவர்கள் திகைத்து நின்றனர்.அப்பொழுது கும்பகர்ணன் போர்களத்திற்கு வந்தான். அவனிடம் பல வானரங்கள் அகப்பட்டனர். வானரங்கள் மலைகளை தூக்கி கும்பகர்ணன் மீது எறிந்தனர். ஆனால் அதை அவன் தூள் தூளாக்கினான்.
 
★ராமரிடன் வந்த அங்கதன் கும்பகர்ணனோடு போர் புரிய அனுமதி பெற்றுக் கொண்டு, அவனை தாக்க நீலன், நளன், சுக்ரீவன் மற்றும் பெரிய வானர படை கூட்டத்துடன் சென்றான். பெரிய பெரிய மரங்களையும், பாறைகளையும் கும்பகர்ணன் மீது தூக்கிப் போட்டார்கள். எதனையும் பொருட் படுத்தாத கும்பகர்ணன் பலமாக சிரித்துக் கொண்டே, அனைத்தையும் தூசி தட்டிச் செல்வது போல் தட்டி விட்டு, வானர படைகளை அழித்துக் கொண்டு முன்னேறிச் சென்றான்.
 
★கும்பகர்ணன் தன்னிடம் அகப்பட்ட வானரங்களை வானத்தில் தூக்கி எறிந்தும், சில வானரங்களை வாயில் போட்டு உமிழ்ந்தும், சில வானரங்களை தன் கால்களால் மிதித்தும் கொன்றான். கும்பகர்ணன் இப்படி வானரங்களை கொன்று குவிப்பதை பார்த்த தேவர்கள் பயந்து ஓடினர். அப்போது நீலன், கும்பகர்ணன் மீது பெரும் மலையை தூக்கி எறிந்தான். கும்பகர்ணன் அதை தன் சூலத்தால் பொடி பொடியாக ஆக்கினான். பிறகு நீலன், கும்பகர்ணனின் தேரில் ஏறி அதிலிருந்த ஆயுதங்களை தூக்கி எறிந்தான். நீலன் எந்த ஆயுதங்களும் இல்லாமல் போர் புரிந்ததால், கும்பகர்ணனும் எந்த விதமான ஆயுதங்களையும் பயன்படுத்தவில்லை. நீலன் கும்பகர்ணனை என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றான்.
 
★அப்போது கும்பகர்ணன், நீலனை தன் கையால் ஒரு தட்டு தட்டினான். இதனால் நீலன் மயங்கி கீழே விழுந்தான். இதைப் பார்த்த அங்கதன், கும்பகர்ணன் மீது ஓர் மலையை தூக்கி வீசினான். கும்பகர்ணன் அந்த மலையை தன் கைகளால் தூள் தூளாக்கினான். பிறகு அவன் அங்கதன் மீது ஓர் அம்பை ஏவினான். அங்கதன் அந்த அம்பை தன் கைகளால் பிடித்து கும்பகர்ணன் மீது எறிய ஓடி வந்தான். அப்போது மாவீரனான கும்பகர்ணன், அங்கதனை பார்த்து, வானரமே! நீ யார்? வாலியின் மகனா? இல்லை சுக்ரீவனா? இல்லை இலங்கைக்கு தீ வைத்த அனுமனா? என்றான். அங்கதன், அரக்கப்படை தலைவனே! உன் அண்ணனான ராவணனை தன் வாலில் கட்டி, இரத்தம் சிந்த எட்டு திசைகளிலும் தாவி போர் புரிந்த வாலியின் மகன் நான். என் பெயர் அங்கதன்.
 
★என் தந்தையை போலவே நானும் உன்னை என் வாலில் கட்டி ராமரின் பாதங்களில் வீழ்த்துவேன் என்றான். அப்போது கும்பகர்ணன், நீ சொல்வது சரிதான். உன் தந்தையை தன் ஓர் கணையால் வீழ்த்திய ராமனுக்கு நீ செய்ய வேண்டிய தொண்டு மிகவும் பாராட்டத்தக்கது என பலமாக நகைத்தான். அப்போது அங்கதன், மலைகளை தூக்கி கும்பகர்ணன் மீது வீசினான். அம்மலை கும்பகர்ணன் மீது பட்டு பொடிப்பொடியானது. கும்பகர்ணன் தன் சூலாயுதத்தை அங்கதன் மீது வீசினான். அங்கதன் அந்த சூலாயுதத்தை தன் கைகளால் பிடித்து கும்பகர்ணன் மீது திருப்பி எறிந்தான். கும்பகர்ணன் அந்த சூலாயுதத்தை பொடி பொடியாக ஆக்கிவிட்டு, அங்கதன் மார்பில் ஓங்கி குத்தினான். இதனால் அங்கதன் அந்த இடத்தில் மயங்கி விழுந்தான்.
 
நாளை......................
[4:33 pm, 26/12/2021] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
267/26-12-2021
 
கும்பகர்ணன்
ராமருடன் யுத்தம்...
 
★மயங்கி கிடந்த சுக்ரீவனை, கும்பகர்ணன் தன் தோளில் தூக்கிக் கொண்டு நகருக்குள் சென்றான். அப்பொழுது சுக்ரீவன் எந்த உணர்வுமின்றி மயங்கி இருந்தான். அங்கிருந்த வானரங்கள், தங்கள் அரசன் கும்பகர்ணனின் கையில் அகப்பட்டு செல்வதைப் பார்த்து மிகவும் புலம்பி அழுதனர்.
 
★வானரர்களின் அரசனான சுக்ரீவனை சிறை பிடித்து விட்டோம், இனி யுத்தம் நின்று விடும் என்று கும்பகர்ணன் மகிழ்ச்சி அடைந்தான். ராட்சத வீரர்கள் ஆரவாரம் செய்து தங்களின் பெரிய வெற்றியை கொண்டாடினார்கள். ராவணன் தம்பி கும்பகர்ணன், சுக்ரீவனை தூக்கிச் செல்வதை பார்த்த அனுமன், இவனிடம் நான் சண்டையிட மாட்டேன் என சத்தியம் செய்துவிட்டேனே என நினைத்து, என்ன செய்வதென்று தெரியாமல் கும்பகர்ணனை பின் தொடர்ந்து சென்றான்.
 
★சுக்ரீவன் சிறைபட்டு விட்டான் என்ற செய்தியை அறிந்து கொண்ட வானர வீரர்கள், என்ன செய்வது என்று தெரியாமல் ஶ்ரீராமரை நோக்கி ஓடினார்கள்.
வானரங்கள் ஓடிச் சென்று ராமரிடம், எங்களின் அரசனான சுக்ரீவனை கும்பகர்ணன் தூக்கி கொண்டு செல்கிறான். இனி எங்களுக்கு யார் துணை? எனக் கூறி அழுதார்கள். இதைக் கேட்ட ராமர், நெருப்பு போல் கண்கள் சிவக்க எழுந்தார்.
 
★அனுமன் அனைவருக்கும் தைரியம் கூறினார். சுக்ரீவன் தற்போது மயக்கத்தில் உள்ளான் அதனால் தான் கும்பகர்ணனால் சுக்ரீவனை தூக்கிச் செல்ல முடிகிறது. விரைவில் சுக்ரீவன் விழித்து விடுவார். விழித்ததும் ஒரே தாவலில் அங்கிருந்து இங்கு வந்து விடுவார் எனவே யாரும் சிறிதும் பயம் கொள்ளத் தேவையில்ல என்று சொல்லி வானர படைகளை ஒழுங்கு படுத்தினார். ராவணனின் மாளிகைக்குள் சுக்ரீவனை தூக்கிக் கொண்டு கும்பகர்ணன் நுழைய முற்பட்ட போது, ராமர் தன் வில் மற்றும் அம்பை கையில் எடுத்துக் கொண்டு கணப்பொழுதில் இலங்கை நகர் வாயிலை அடைந்தார்.
 
★ராமர், சுக்ரீவனை இலங்கை நகருக்குள் கொண்டு சென்று விட்டால் பெரும் ஆபத்து ஏற்படும் என நினைத்து, கோட்டையின் வாயில்கள் அனைத்தையும் தன் அம்புகளை ஏவி அடைத்தார். அந்த அம்புகளை கடந்து இலங்கை நகருக்குள் செல்ல கும்பகர்ணனால் முடியவில்லை. பிறகு மதிலை கடந்து போக நினைத்த அவனை அங்கும் அம்புகள் தடுத்தது. பிறகு அவன் இலங்கை நகருக்கு திரும்ப முடியாமல் திரும்பினான். திரும்பும்போது ராமர் அவனை எதிர்த்து நிற்பதை கண்டான்.
 
★ராமா! உனக்காகத் தான் நான் காத்துக் கொண்டு இருந்தேன். வலிமையுடையவர் செய்யும் போரில், நான் உன் தம்பி லட்சுமணனுடனும் போர் செய்யவில்லை, அனுமனுடனும் போர் செய்யவில்லை, வானர அரசன் சுக்ரீவனிடமும் போர் செய்யவில்லை. ஏனென்றால் இவர்கள் யாரும் எனக்கு நிகரானவர்கள் இல்லை. உனக்காக தான் நான் காத்து கொண்டிருந்தேன். இந்த சுக்ரீவனை நீ காப்பாய் என்றால், நிச்சயம் நீ சீதையை மீட்பாய் என்றான். கும்பகர்ணன் பேசியதைக் கேட்டு ராமர் புன்னகைத்தார்.
 
★பிறகு ராமர், சுக்ரீவனை தூக்கி கொண்டு வந்த உன்னையும், மலை போல் உள்ள உன்னுடைய தோளையும் நான் வெட்டிச் சாய்க்கவில்லை என்றால் உன்னிடம் தோற்றவன் ஆவேன் என்று கூறி, கும்பகர்ணனின் நெற்றியை குறி வைத்து அம்புகளை எய்தினார். பிறகு கும்பகர்ணனின் நெற்றியில் இருந்து ரத்தம் ஆறு போல் வழிந்தது. அந்த ரத்தம் சுக்ரீவனின் முகத்தில் பட்டு, மயக்கம் தெளிந்து எழுந்தான். அப்பொழுது கும்பகர்ணன் மயங்கி ஒரு மலை விழுவது போல் கீழே விழுந்தான்.
 
★மயக்கம் தெளிந்த சுக்ரீவன் நன்கு விழித்துக் கொண்டு, தன்னுடைய சுய உணர்வை பெற்று, இலங்கைக்கு வெளியே  ராட்சதர்களுக்கு மத்தியில் இருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டான். அப்போது சுக்ரீவன் மயக்கம் தெளிந்ததை கண்டு ராமர் மகிழ்ந்தார். அங்கு கும்பகர்ணன் அம்பு பட்டு மயங்கி விழுந்திருப்பதைக் கண்ட சுக்ரீவன், ராமர் தான் இவ்வாறு செய்திருப்பார் என தன் மனதில்  நினைத்தான். உடனே சுக்ரீவன் ராமர் எங்கே இருக்கிறார் என சுற்றியும் பார்த்தான். பிறகு ராமரைக் கண்டு மகிழ்ந்தான்.
 
★அந்த மகிழ்ச்சியில் அவன் கும்பகர்ணனின் மீது பாய்ந்து, (ராவணனிடம் கிரீடத்தில் இருந்து மணிகளை பறித்து வந்தது போல்) அவன் காதையும், மூக்கையும் கடித்தும், உடலை தனது நகங்களால் கீரியும் கும்பகர்ணனின் பிடியில் இருந்து விடுபட்ட சுக்ரீவன், அங்கிருந்து ஒரே தாவலில் ராமர் இருக்கும் இடம் வந்து சேர்ந்தான்
கும்பகர்ணனின் காதையும், மூக்கையும் தம் அரசர் சுக்ரீவன் கடித்து விட்டதை வானரங்கள் ஒருவருக்கொருவர் சொல்லி மகிழ்ந்தனர்.
 
நாளை.............. ........
[3:30 pm, 27/12/2021] Naga. Suba.Raja Rao Salem: அன்புள்ள நண்பர்களே,
வணக்கம் பல.
 
இன்று பதிவிடவேண்டிய
பகுதியை தவறுதலாக நேற்றே பதிவிட்டு விட்டேன். ஆகவே நேற்றைய பதிவை இன்று பதிவிட்டுள்ளேன். தவறுக்கு வருந்துகிறேன்.
-நாக சுபராஜராவ்.
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
266/26-12-2021
 
கும்பகர்ணன்
லட்சுமணன் போர்...
 
★அங்கதன் மயங்கி கீழே விழுந்ததை பார்த்த அனுமன் அங்கே ஓடி வந்தான். ஓர் பெரிய மலையை   கும்பகர்ணனை நோக்கி வீசினான். கும்பகர்ணன் அம்மலையை தன் கையால் பிடித்து திரும்ப அனுமன் மீது வீசினான். அப்போது வானர வீரர்கள்,அங்கதனைஅங்கிருந்து தூக்கிச் சென்றனர். அனுமன் மறுபடியும் ஓர் மலையை தூக்கி, அரக்கனே! இந்த மலையை நான் உன் மேல் எறிவேன். இந்த மலையை உன்னால் தவிர்க்க முடியுமானால் நீ மிகவும் வலிமை மிக்கவன். உன் வலிமையை அனைவரும் போற்றுவர்.
 
★அப்படி இல்லாமல் இந்த மலையால் தாக்கப்பட்டால், நீ என்னிடம் தோற்றவன் ஆவாய். பிறகு உனக்கும் எனக்கும் போர் இல்லை. நான் இங்கிருந்து சென்றுவிடுவேன் என்றான். கும்பகர்ணன் இதைக் கேட்டு, நான் உன்னுடைய  வலிமைக்கு சற்றும் குறைந்தவன் இல்லை எனக் கூறி சம்மதித்தான். பிறகு அனுமன் அந்த மலையை கும்பகர்ணன் மீது தூக்கி எறிந்தான். கும்பகர்ணன் அந்த மலையை தூள் தூளாக்கினான். இதனைப் பார்த்த அனுமன், இவன் மிகவும் வலிமை படைத்தவன். இவனை ராமரை தவிர வேறு எவராலும் கொல்ல முடியாது என நினைத்து அங்கிருந்துச் சென்றான்.
 
★அப்பொழுது லட்சுமணன் அங்கு வந்து போர் புரிவதற்கான அடையாளமாக தன் நாணை இழுத்து பெரும் ஓசையை எழுப்பினான். பிறகு அங்கு ஆயிரமாயிரம் அம்புகளை ஏவி அரக்கப் படைகளை கொன்று குவித்தான். லட்சுமணனின் கரவேகத்தை கண்டு அசுரனான கும்பகர்ணன் வியந்தான். பிறகு கும்பகர்ணன், லட்சுமணன் முன்வந்து போர் புரிவதற்காக நின்றான். கும்பகர்ணன் தேரின் மீது ஏறி நின்று போர் புரிந்தான். இதனைப் பார்த்த அனுமன், லட்சுமணனை தன் தோளில் ஏறி நின்று போர் புரியச் செய்தான்.
 
★கும்பகர்ணன் லட்சுமணனை பார்த்து, லட்சுமணா! நீயோ! ராமனின் தம்பி, நானோ அரசன் ராவணனின் தம்பி. ஆகவே நம் இருவரின் போரை காண அந்த தேவர்கள் முதலானோர் இங்கு வந்துள்ளனர். சூர்ப்பனகையின் மூக்கை அறுத்த உன்னை, இன்று அடியோடு ஒழிப்பேன் என்றான். லட்சுமணன், அரக்கனே! வீரர்கள் சொல்லால் பெருமை பேச மாட்டார்கள். வில்லால் தான் பேசுவார்கள். உன்னைப் போல் வீண் பேச்சு பேச நான் விரும்பவில்லை. நான் என் வில்லினால் பேசுவேன் என்றான்.
 
★லட்சுமணனுக்கும், அரக்கன் கும்பகர்ணனுக்கும் மிகவும்  கடுமையாக போர் நடந்தது. கும்பகர்ணன் விடுத்த அம்புகள் எல்லாவற்றையும் , லட்சுமணன் அடித்து ஒழித்தான். பிறகு லட்சுமணன் தன் வில்லைக் கொண்டு, கும்பகர்ணனின் தேர் முதலியவற்றை ஒழித்தான். கும்பகர்ணன் மீதும் அம்புகளை ஏவி தாக்கினான். இதனால் கும்பகர்ணன் கடும்கோபம் கொண்டான். இப்பொழுதே உன்னை கொல்கிறேன் எனக் கூறி லட்சுமணன் மீது ஓர் மிகக் கூர்மையான சூலாயுதத்தை வீசினான்.
 
★லட்சுமணன் வேகமாக வந்த அந்த சூலாயுத்தை அழித்தான். கும்பகர்ணன் தரையில் நின்று போர் புரிவதைக் கண்டு, மனமிரங்கி, அனுமனின் தோளில் இருந்து இறங்கி போர் புரிந்தான். அப்பொழுது ராவணன், கும்பகர்ணனுக்கு துணையாக அரக்க சேனைகளை அனுப்பி வைத்தான். புதியதாக ஓர் அரக்க படைகள் வருவதைக் கண்ட வானரங்கள் அங்கிருந்து ஓடினர். பிறகு கும்பகர்ணன், சுக்ரீவனிடம் போர் புரிய தொடங்கினான். அப்போது கும்பகர்ணன், சுக்ரீவன் மீது ஓர் கூர்மையான சூலாயுதத்தை எறிந்தான்.
 
★சூலாயுதம் வந்த வேகத்தைப் பார்த்த அங்கிருந்தவர்கள் சுக்ரீவன் இறந்தான்! இறந்தான்! எனக் கத்தினார்கள். இதனைப் பார்த்த அனுமன், மின்னலை போல் வேகமாகச் சென்று அச்சூலாயுதத்தை பிடித்து ஒடித்தான். இதைப் பார்த்த கும்பகர்ணன், அனுமனின் வலிமையை பாராட்டினான்.
அனுமனின் வலிமையைக் கண்ட கும்பகர்ணன், நீ என்னுடன் போர் புரிய வா! என்று அழைத்தான். அதற்கு அனுமன், நான் உன்னுடன் போர் செய்ய மாட்டேன் என முடிவு செய்த பிறகு உன்னுடன் போர் செய்வது தவறு எனக் கூறிவிட்டு அங்கிருந்துச் சென்றான்.
 
★அப்பொழுது சுக்ரீவன், கும்பகர்ணனை தன் கைகளால் தாக்க தொடங்கினான். மிகவும் பலம் கொண்டு சுக்ரீவன் அவனைத் தாக்கினான். கும்பகர்ணன் அவனை பார்த்து, உன் வலிமை மிகவும் சிறந்தது. ஆனால் இன்று நான் உன்னை அழித்து விடுகிறேன் என்றான். பிறகு அவர்களிருவரும் எதிரும் புதிருமாக மாறி மாறி சண்டை இட்டனர். இருவருக்கும் இடையில் கடும்போர் நிகழ்ந்தது. இருவரும் வெகுநேரம் சோர்வு அடையாமல் சண்டையிட்டனர். கும்பகர்ணனின் அடியை வானர சுக்ரீவனால் சிறிதும்  தாங்க முடியவில்லை. இதனால் அவன் மயங்கி கீழே விழுந்தான்.
 
நாளை..................
[3:57 pm, 28/12/2021] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
268/28-12-2021
 
கும்பகர்ணன் ராமருடன்
கடும் யுத்தம்...
 
★ஶ்ரீராமரிடம் வந்து சேர்ந்த சுக்ரீவன், கும்பகர்ணனின் வலிமையை எடுத்துரைத்தான். பெரிய மலை போல் இருக்கும் கும்பகர்ணனை எவ்வாறு தாக்கி அழிப்பது என்று ஆலோசனை செய்தார்கள். சிறிது நேரம் கழித்து கும்பகர்ணன் மயக்கம் தெளிந்தான். அப்போது தான் பிடித்து வைத்திருந்த சுக்ரீவன் தப்பி ஓடியதையும், தன் மூக்கையும், காதையும் கடித்து கொண்டு சென்றதை அறிந்து மிகவும் வருந்தினான். இதனால் கடுங்கோபம் கொண்ட அவன், தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய அவர்களை நான் கொல்வேன் என உரக்க  கூறிக் கொண்டு அங்கிருந்து வேகமாக எழுந்தான்.
 
★தன் கையில் இருந்த வாள் மற்றும் கேடயம் கொண்டு வீசி வீசி போர் புரிந்தான். இதனால் பல வானரங்கள் மாண்டு விழுந்தனர். கும்பகர்ணன் மீது தாவி ஏறிய வானரபடைகள் ஈட்டிகளால் அவனது உடம்பை குத்தி தாக்கினார்கள். எதைப் பற்றியும் கவலைப்படாத வீரன் கும்பகர்ணன் அனைவரையும் உதறி விட்டு மேலும் முன்னேறிக் கொண்டே இருந்தான். அப்போது லட்சுமணன் தனது அம்புகளால் கும்பகர்ணனை தாக்கினான். ஆனாலும் கும்பகர்ணனை லட்சுமணனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அனைவரது தாக்குதலையும் சமாளித்த கும்பகர்ணன், ராமரை நோக்கி முன்னேறிச் சென்றான்
 
★ராமர், கும்பகர்ணன் கையில் இருந்த கேடயத்தை தன் அம்பை ஏவி  உடைத்தெறிந்தார். அந்த சமயத்தில்  கும்பகர்ணன் தன் கையில் இருந்த வாளைக் கொண்டு போர் புரிந்தான். பிறகு ராமர், கும்பகர்ணனை நோக்கி ஒவ்வொரு அம்பாக  செலுத்தத் தொடங்கினார். ஆனால் அந்த கும்பகர்ணன், இதையெல்லாம் தன் இரு கைகளால் தடுத்து நிறுத்தினான். ஶ்ரீ ராமருக்கும் கும்பகர்ணனுக்கும் நீண்ட நேரம் யுத்தம் நடந்தது. ராமரின் அம்புகளால் கும்பகர்ணனின் உடலை துளைக்க முடியவில்லை,
 
 ★பிறகு மற்றொரு அம்பை ஏவி கும்பகர்ணனின் கையில் இருந்த வாளை உடைத்தெறிந்தார். தன் வாளை ராமன் உடைத்ததைக் கண்டு மற்றொரு வாளை கும்பகர்ணன் கையில் எடுத்துக் கொண்டு ராமரை தாக்க தொடங்கினான். அப்பொழுது ராமர் ஒவ்வொரு அம்பாக ஏவி கும்பகர்ணனிடம் இருந்த வாள், கேடயம், கவசம், சூலாயுதம் என அனைத்தையும் அறுத்து எறிந்தார். அப்போது ராவணன், கும்பகர்ணனுக்கு உதவியாக ஒரு சூலப்படையை அனுப்பி வைத்தான். பிறகு கும்பகர்ணன் அந்த சூலப்படையைக் கொண்டு போர் புரிய தொடங்கினான்.
 
★அப்போது ஜாம்பவான், ராமரிடம் சென்று, பெருமானே! இந்த கும்பகர்ணனை சீக்கிரம் கொல்லுங்கள். இல்லையெனில் நம் வானர படைகளை இவன் அழித்து விடுவான் என வேண்டி நின்றான். பிறகு ராமர் அசுரன் கும்பகர்ணனுடன் போருக்கு  வந்த சேனைகள் அனைத்தையும் விரைந்து அழித்தார்.கடைசியில் கும்பகர்ணன் மட்டும் தனியாக வெறுங்கையுடன் நின்றான். அப்பொழுது ராமர், மாவீரனான  கும்பகர்ணனை பார்த்து, பெரும் சேனைகளுடன் போர் புரிய வந்த நீ இப்பொழுது எல்லாம் இழந்து நிற்கின்றாய். நீ பண்பில் சிறந்த, நீதிநெறியில் மிகவும் உயர்ந்த விபீஷணனின் சகோதரன் என்பதால், உன்மேல் கருணை காட்டுகிறேன். நீ இலங்கை நகருக்குச் சென்று நாளை திரும்பி வந்து என்னுடன் போர் செய்கிறாயா? அல்லது இப்போதே என்னுடன் போரிட்டு மடிகிறாயா? உனது விருப்பம் எதுவோ அதன்படி செய் என்றார்.
 
★கும்பகர்ணன் ராமரிடம், ராமா! என்னால் சூர்ப்பனகை போல் மூக்கறுக்கப்பட்டு உயிருடன் வாழ முடியாது. நான் அண்ணன் ராவணனின் தவறை தடுக்க எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால் என்னால் அதை தடுக்க முடியவில்லை. இன்று நான் உன் முன்னால் மூக்கும், காதும் அறுக்கப்பட்டு  தலைகுனிந்து நிற்கிறேன். இந்த நிலைமையில் என்னால் இலங்கை நகருக்கு சென்று உயிர் வாழ முடியாது. நான் வீரப்போர் புரிந்து உயிர் விடுவேனே தவிர திரும்பி செல்ல மாட்டேன் என கூறிவிட்டு தன் பக்கத்தில் இருந்த மலை போன்ற பாறையை எடுத்து ராமரை நோக்கி வீசினான்.
 
★ராமர் அதை தன் அம்பால் தூள்தூளாக்கினார். பிறகு அசுரன் கும்பகர்ணன் விடாமல் ஒவ்வொரு மலையாக எடுத்து ராமர் மீது வீசினான். ராமர் அதையெல்லாம் தன் அம்பிற்கு இரையாக்கினார். இவ்வாறு கும்பகர்ணனுக்கும், ராமருக்கும் இடையே கடும்போர் நிகழ்ந்தது. ராமர் ஓர் திவ்யமான அம்பை கும்பகர்ணனை நோக்கி ஏவினார். ஆனால் அந்த அம்பு கும்பகர்ணன் அணிந்திருந்த சிவபெருமான் கொடுத்த கவசத்தைத் துளைத்துக் கொண்டு உள்ளே செல்ல முடியவில்லை. இதனால் ராமர், சிவபெருமான் அருளிய பாசுபதாஸ்திரத்தை எடுத்து, கும்பகர்ணன் மேல் ஏவி, அவனது கவசத்தை உடைத்தார்.
 
நாளை.....................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
269/29-12-2021
 
கும்பகர்ணன் வதம்...
 
★இதனை உணர்ந்த ராமர் கூர்மையான அம்புகளால் கும்பகர்ணனின் உடலில் உள்ள ஒவ்வொரு பாகமாக வெட்ட ஆரம்பித்தார். பிறகு இராமர் மற்றொரு அம்பை ஏவி கும்பகர்ணனின் வலக்கரத்தை அறுத்தெறிந்தார். ஆனால் கும்பகர்ணன் மற்றொரு கையால் வானரங்களை அடித்து வீழ்த்தினான். இதைப் பார்த்த தேவர்கள், ராமரிடம், ராமா! அவனின் மற்றொரு கையையும் அறுப்பாயாக எனக் கேட்டுக் கொண்டனர். பிறகு ராமர் மற்றொரு அம்பை செலுத்தி கும்பகர்ணனின் மற்றொரு கையையும் அறுத்தெறிந்தார்.
 
★கும்பகர்ணன், என் கைகள் போனால் என்ன, என் கால்கள் உள்ளது. அதைக் கொண்டு போர் புரிவேன் எனக் கூறி வானர வீரர்களிடம் போர் புரிந்தான். இதைப் பார்த்த ராமர், ஓர் அம்பை ஏவி கும்பகர்ணனின் ஒரு  காலை அறுத்தெறிந்தார்.
ஆனால் கும்பகர்ணன் தன் மற்றொரு காலைக் கொண்டு போர் புரிய தொடங்கினான். பிறகு ராமர், கும்பகர்ணனின் மற்றொரு காலையும் ஓர் அம்பை ஏவி அறுத்தெறிந்தார். தன் கை, கால்கள் இழந்த கும்பகர்ணன் தன் வாயைக் கொண்டு ஊதி ஊதி போர் புரிந்தான். ராமர் கும்பகர்ணனின் தீர்க்கமான போரைக் கண்டு அதிசயத்து நின்றார்.
 
★வெகு நேரம் கும்பகர்ணனால் வாயால் ஊதி ஊதி போர் புரிய முடியவில்லை.  கும்பகர்ணன் ராமரை நினைத்து, வணங்கி காலவரம்பின்றி வாழ வேண்டிய நான் அண்ணன் ராவணனின் பெண்ணாசையால் இன்று வீழப் போகிறேன். ராமனின் வில்லின் ஆற்றலுக்கு முன் ஆயிரம் ராவணன் வந்தாலும் ராமனுக்கு இணையாக முடியாது என நினைத்தான். பிறகு மாவீரன் கும்பகர்ணன் ராமரிடம், ராமா! நீ சிபிச்சக்ரவர்த்தி போல் அபயம் என்று வருபவரை காக்கும் பண்புடையவன். விபீஷணன் அரக்க குலத்தில் பிறந்து இருந்தாலும், உன்னை நம்பி அடைக்கலம் தேடி வந்தான். என் தம்பி விபீஷணன் குணசீலன், நீதிநெறி தவறாதவன். அவனை காப்பது உன்னுடைய கடமை.
 
★அரக்க ராவணன், தம்பி என்று பாராமலும், விபீஷணனை கொல்ல வருவான், நீ அவனிடம் இருந்து விபீஷணனைக் காப்பாற்று. உன் தம்பிகளில் ஒருவர் அல்லது நீயோ யாரேனும் வீபீஷணனை விட்டு பிரியாமல் அவனை காக்க வேண்டும். ராமா! அனைத்தும் அறிந்த பரம்பொருளே! நான் இறுதியாக உன்னிடம் ஒரு வரம் கேட்க வேண்டும். அதை நீ எனக்கு மறுக்காமல் அளித்தருள  வேண்டும் என்றான். ராமர், கும்பகர்ணா! நீ உன் வரத்தை கேள் என்றார். கும்பகர்ணன், ராமா! இந்த யுத்தத்தை வானவர், ரிஷிகள்  முதலானோர் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
 
★என்னை கை, கால்கள் இல்லாத முண்டம் என யாரும் ஏளனம் செய்யாத வண்ணம் என் கழுத்தை துண்டித்து யாருக்கும் எட்டாத வெகு தூரத்தில், யாரும் காணாமல் கடலில் போட்டு விடு. என் முண்டம் யார் ஒருவரின் பார்வைக்கும் பட வேண்டாம். இந்த வரத்தை நீ எனக்கு அருள வேண்டும் என்றான். பிறகு ராமர், தன் அம்பினால் கும்பகர்ணனின் தலையை துண்டித்து, அது கடலில் மூழ்கும் படி செய்தார். கும்பகர்ணனின் தலை கடலில் மூழ்கியது. வானரப் படைகளை திணறடித்துக் கொண்டிருந்த கும்பகர்ணன் இறந்துவிட்டான்.
 
★இதனைக் கண்ட ராட்சத படைகள் அலறியடித்துக் கொண்டு இலங்கை நகரை நோக்கி  ஓடினார்கள். வானர சேனைகள் ஆர்ப்பரித்து கோஷங்கள் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார்கள். ஶ்ரீ ராமர், கும்பகர்ணனை கடலில் வீசியதைப் பார்த்து வானரங்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தது இலங்கையில் எதிரொலித்தது.
 
நாளை.....................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
270/30-12-2021
 
ராவணனின் சஞ்சலம்...
 
★அப்பொழுது போர்க்களத்தில் இருந்து  தூதன் ஒருவன் அங்கு வந்து, ராவணனிடம்  போரில் உங்கள்  தம்பி கும்பகர்ணன் மாண்டு விட்டான் என்றும், இதனால் தேவர்களும், வானரங்களும் அங்கு பெரும் ஆரவாரம் செய்து கொண்டு இருக்கின்றனர் என்றும் கூறினான்.ராமர், தன் தம்பியான கும்பகர்ணனை அழித்துவிட்டார் என்ற செய்தியை கேட்டதும் ராவணனுக்கு தன் உயிர் செல்வதைப் போல் உணர்ந்து மயக்கமடைந்து விழுந்தான். சிறிது நேரம் கழித்து விழித்த ராவணன், கும்பகர்ணனை நினைத்து நினைத்து புலம்பத் தொடங்கினான்.
 
★இந்திரனை வென்ற என் அருமை தம்பியே! நீ இறந்த செய்தியை கேட்ட தேவர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து ஆடினார்களாமே?. ஆயிரம் யானைகள் வந்தாலும் எதிர்த்து நிற்கும் வலிமை உடையவனே! உன் பிரிவை நான் எவ்வாறு தாங்குவேன். உன்னை நம்பி இருந்த என்னை இப்படி நட்டாற்றில் விட்டு சென்று விட்டாயே! யாராலும் வெற்றி பெற முடியாத உன்னை ராமர் எப்படி வெற்றி கொண்டார். உன்னுடைய பலம் எங்கே போனது.
 
★அந்த ராமன் இறந்து விட்டான் என்னும் செய்தியை கேட்டு மகிழ வேண்டிய நான், நீ இறந்து விட்டாய் என்னும் செய்தியை கேட்கும் நிலைமை எனக்கு வந்து விட்டதே! பொன்னையும், பொருளையும் இழந்தால் மீட்டு விடலாம். உன்னை எப்படி நான் மீட்பது? நீ இல்லாத இந்த உலகத்தில் நான் வாழ்ந்து பயன் இல்லை. உன்னைக் கொன்ற ராமரை சித்ரவதை செய்து கொன்ற பிறகு, நீ இருக்கும் இடத்திற்கு நானும் வருவேன், கும்பகர்ணா! என்று சோகமாக புலம்பினான் ராவணன்.  ஆரம்பத்தில் விபீஷணன் கூறிய பேச்சை கேட்டிருக்கலாமோ? அகங்காரத்தினால் அவசரப்பட்டு விட்டோமோ? என்று சபையில் அனைவரின் முன்னிலையில் தனது புலம்பலை கொட்டித் தீர்த்தான் ராவணன்.
 
★ராவணன் கவலையின் உச்சத்திற்கு சென்று தடுமாற ஆரம்பித்தான். இதுவரை நடந்த யுத்தத்தில் யாராலும் வெல்ல முடியாத வலிமையுடன் இருந்த சேனாதிபதிகளும் வீரர்களும் ஒவ்வொருவராக இறந்து கொண்டே வருகின்றார்கள் என்று ராமரைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தான் ராவணன். இந்திரனுக்கு நிகரான இந்திரஜித் அனுப்பிய நாக பாணத்தையும் எப்படியோ அறுத்து விட்டார் இந்த ராமர். மிகவும் பராக்கிரமம் நிறைந்த வீரராக இருக்கிறார். இவரது வலிமை, புரிந்து கொள்ள முடியாத விந்தையாக உள்ளது. ராமர், அந்த  நாராயணனின் சொரூபமாக இருப்பாரோ? என்று ராவணன் எண்ணினான்.
 
★ராமர், அந்த  நாராயணனின் சொரூபமாக இருந்தால், நாம் எப்படி வெற்றி பெருவது? என்று ராவணன் மனதில் சிந்திக்கத் தொடங்கினான். ஏற்கனவே நமது வலிமை மிக்க பல வீரர்கள் இறந்து விட்டார்கள். யாராலும் வெற்றி பெற முடியாத தம்பி கும்பகர்ணனும் இறந்து விட்டான். இனி இந்த யுத்தத்தை எப்படி நடத்திச் செல்வது என்று கவலையுடன் இருந்தான். ஆனாலும் ராவணனுடைய மனம் அகங்காரத்தினால் ராமரை சரணடைய ஒத்துக் கொள்ள மறுத்தது.
 
★தேவலோகத்தையே வெற்றி பெற்றிருக்கிறோம்.  அது போலவே இந்த மானிடனையும், வானரங்களையும் எப்படியும் வெற்றி பெறுவோம் என்ற ஆணவம் ராவணனிடம் மேலோங்கி இருந்தது. ஆனால் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயமும் ராவணனின் மனதை கதிகலங்க வைத்தது. கவலையின் உச்சத்தில் இருந்தான் ராவணன்.
இனி அந்த வானரங்கள் உயிர் வாழ்வார்களே. சீதை, என் தம்பி கும்பகர்ணன் மாண்ட துயரச்  செய்தியை அறிந்து, மிகவும் மகிழ்சி கொள்வாளே.அந்த தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் என்னிடம் பயம் விட்டுப் போகுமே. என்ன செய்வேன்? என
தன் மனதிற்குள் புலம்பினான்.
 
★என் தம்பியை கொன்ற அந்த ராமனையும், அவனுடன் கூடி இருக்கும் அந்த வானரங்கள், கரடிகள் என எவரையும் உயிருடன் விடமாட்டேன் எனக் கூறி கோபங்கொண்டான். அப்போது அங்கு வந்த அவனது அமைச்சர்கள், ராவணனை மிகவும் சமாதானப் படுத்தி அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர்.  அதேசமயம் இந்திரஜித் அங்கு வந்தான். ராவணன் இந்திரஜித்தை அழைத்து, மகனே! படைத்தலைவர்களும், கரன் மகனான மகரக்கரனும் போரில் மாண்டனர். நமது அதிகாயனும், என் அருமைத் தம்பியுமான கும்பகர்ணனும் மாண்டார்கள்.
 
★இப்போரில் உன்னைத் தவிர வேறு எவராலும் வெல்ல முடியாது. உனக்கு நிகரான மாவீரர்கள் இந்த உலகத்தில் இல்லை. அந்த ராமனையும், லட்சுமணனை உன்னைத் தவிர வேறு எவராலும் வெல்ல முடியாது. நீ போருக்கு சென்று வெற்றியுடன் திரும்பி வா! எனக் கூறினான். நான் இருக்கும் வரையில் நீங்கள் எதற்கும் கவலையில்லாமல் இருங்கள். ஏற்கனவே ராமரையும், அவனது தம்பி  லட்சுமணனையும் வெற்றி பெற்றது போல் இப்போதும் நான் சென்று வெற்றி பெற்று திரும்பி வருகிறேன் என்று ராவணனுக்கு தைரியத்தை கொடுத்தான்.
 
★பிறகு அவன் தன் தந்தையை வணங்கி போர் களத்திற்கு புறப்பட்டான். சீதை இருக்கும்
அசோக வனத்திற்குள் எதிரிகள் யாரும் புக முடியாத படி பலத்த பாதுகாப்பை ஏற்படுத்திய ராவணன், இந்திரஜித்தின் வெற்றிச் செய்தியை தன் காது குளிரக் கேட்பதற்காக அவனது மாளிகையில் காத்திருந்தான்.
 
நாளை.................
 
[4:49 pm, 31/12/2021] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
271/31-12-2021
 
லட்சுமணனை தாக்கிய
சக்தி ஆயுதம்...
 
★இந்திரஜித், நூறு குதிரைகள் பூட்டிய தேரில் ஏறி, அசுர படைகள் புடைசூழ போர்க்களம் வந்துச் சேர்ந்தான். அவனை பார்த்த வானர வீரர்கள் சிலர் பயத்தில் ஓடி ஒளிந்தனர். ராமர் வானர வீரர்களுக்கு பயம் நீங்க ஆறுதல் கூறினார். ராமர், அனுமனின் தோளிலும், லட்சுமணன் வானர இளவரசன் அங்கதன் தோளிலும் ஏறி போர் புரிய தொடங்கினர். அப்போது
ராமர், பெரிய ராட்சச படை தம்மை நோக்கி வருவதை பார்த்தார். இந்திரஜித் மீண்டும் யுத்தம் செய்ய வருகிறான் என்று உணர்ந்த ராமர், லட்சுமணனை எச்சரிக்கை செய்தார்.
 
★லட்சுமணா! இந்திரஜித் மீண்டும் யுத்தம் செய்ய இங்கு வருகிறான். அவன் தன் உடலை மறைத்துக் கொண்டு நம்மைத் தாக்குவான். ஆகவே மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து, நாம் அவனது தாக்குதலை முறியடிக்க வேண்டும் என்றார். யுத்தம் ஆரம்பித்தது. இந்திரஜித் மந்திர அஸ்திரங்களை கொண்டு வானர வீரர்களை தாக்க ஆரம்பித்தான். வானர வீரர்கள் குவியல் குவியலாக இறக்க ஆரம்பித்தார்கள். இதனை கண்ட ராமர் இந்திரஜித்தை எதிர்க்க ஆரம்பித்தார்.
 
★ராமரும், லட்சுமணரும் தங்கள் கர வேகத்தையும், மற்றும் வில் வேகத்தையும் கொண்டு போர் புரிந்து கொண்டு இருந்தனர். ராம லட்சுமணனின் இந்த  வில் திறமையைக் கண்டு இந்திரஜித் வியந்து நின்றான். ராமர் மற்றும் லட்சுமணனின் ஆவேசமான போர் திறமையைக் கண்டு அரக்க சேனைகள் பயந்து ஓடின. இந்திரஜித் நான் தனியாகவே போர் புரிந்து கொள்கிறேன் எனக் கூறி போர் புரிந்தான். அப்பொழுது ராமர் அவனின் தேரை உடைத்தெறிந்தார். லட்சுமணனும், இந்திரஜித்தும் கடுமையாக போர் புரிந்தனர்.
 
★ராமர் அம்புகள் விடும் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத இந்திரஜித் தன் உடலை மறைத்துக் கொண்டு யுத்தம் செய்யலாமா என யோசிக்த  ஆரம்பித்தான். அதன்பிறகு
இந்திரஜித் தன் மாயத் திறமை கொண்டு வானத்தில் போய் மறைந்தான். லட்சுமணன் ராமரை பார்த்து, அண்ணா! நான் இப்பொழுது இவன் மேல் திவ்ய பிரம்மாஸ்திரத்தை ஏவி விடப் போகிறேன் என்றான்.ராமர், தம்பி லட்சுமணா! நீ திவ்யமான பிரம்மாஸ்திரத்தை இங்கு பயன் படுத்தினால், அது உலகிற்கு ஆபத்தான ஒரு நிலையை ஏற்படுத்தி விடும். அதனால் நீ பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்த வேண்டாம் என தடுத்து நிறுத்தி விட்டார்.
 
★போரில் தோற்று மாய வேலை செய்து மறைந்த இந்திரஜித் யாரும் அறியாமல் இலங்கை நகரை அடைந்தான். எங்கும் இந்திரஜித்தை காணாததால், அவன் பயந்து ஓடி விட்டான் என நினைத்து ராம லட்சுமணன் உள்ளிட்ட வானரப்படைகள் இளைப்பாறினர். ராமர், வானரப் படைகளுக்கு உண்பதற்கான உணவு பொருட்களை கொண்டு வருமாறு விபீஷணனை அனுப்பி வைத்தார். ராமர்,லட்சுமணன் மற்றும் வானர வீரர்கள் மட்டுமே அந்த நேரத்தில் போர்க்களத்தில் இருந்தனர். இந்திரஜித் தனது அரண்மனைக்கு சென்று, ராவணனிடம் தான் மறைந்து நின்று சிவபெருமான்  அளித்த சக்தி ஆயுதத்தை  விடுவது என முடிவு செய்திருப்பதாக தெரிவித்தான்.
 
★அதற்காக,  மகோதரன் முதலில் சென்று போர் புரிய வேண்டும். அவன் மாயப் போர் செய்து கொண்டிருக்கையில் நான் சக்தி ஆயுதத்தை செலுத்தி விடுவேன் என ராவணனிடம் கூறினான். (மாயப் போர் என்பது ஒருவரை ஒருவர் பார்க்காமல் போர் புரிவது.) இந்திரஜித்தின் திட்டப்படி மகோதரன் போர்க் களத்தில் மறைந்திருந்து மாயப் போர் புரிந்தான். அவன் ஆங்காங்கே நின்று போர் புரிந்தான். இதை கவனித்த லட்சுமணன், பாசுபதாஸ்திரத்தை ஏவினார். இதில் அரக்க சேனையும், அவர்களது மாயமும் எரிந்து போனது. மாயை விலகிய மகோதரன் அவ்விடத்தை விட்டு ஓடினான்.
 
★அப்போது இந்திரஜித் யாரும் அறியாத வண்ணம் மறைந்து இருந்து சக்தி ஆயுதத்திற்கான மந்திரத்தை சொல்லிக் கொண்டு இருந்தான். மறுபடியும் திரும்பிய மகோதரன், இந்திரன் போல் உருவம் கொண்டு ஐராவரத்தின் மீது ஏறிக் கொண்டு களத்தில் வானரங்களுக்கு எதிராக போர் செய்து கொண்டு இருந்தான். ஆனால் லட்சுமணனுக்கு இந்திரன் போல் வந்திருப்பது மாய வேலையில் வல்லவனான மகோதரன் என்பது சிறிதும் தெரியவில்லை. இதைப் பார்த்த லட்சுமணன், அனுமனிடம், நாம் இந்திரன் முதலிய தேவர்களை காக்கும் பொருட்டும் தான் ராவணனுடன் போர் செய்து கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கையில் இந்த இந்திரன் முதலியவர்கள் நம்மீது போர் செய்ய என்ன காரணம்? என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
 
★சக்தி ஆயுதத்தை எடுத்த இந்திரஜித் ராமரின் மீது எய்தான். தன்னை நோக்கி வந்த சக்தி ஆயுதத்தை எதிர்த்து வேறு அஸ்திரங்கள் எய்தால் இது சிவபெருமானை  அவமதிக்கும் செயலாகும் என்று எண்ணிய ராமர் அமைதியுடன் இருந்தார். அதனை கண்ட லட்சுமணன் ராமரின் முன்பு வந்து நின்று சக்தி ஆயுதத்தை தான் ஏற்றுக் கொண்டு மயங்கி விழுந்தான்.
 
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை...................
[4:49 pm, 31/12/2021] Naga. Suba.Raja Rao Salem: ✍️
[4:49 pm, 31/12/2021] Naga. Suba.Raja Rao Salem: அன்புடையீர்,
வணக்கம் பல.
 
மகாபாரத காவியம், பாகம் 1 புத்தகம் வெளியிட்டு தற்போது  விற்பனையில் உள்ளது. தற்சமயம் மகாபாரத காவியம் 2ம் பகுதி அச்சகத்தில் அச்சிட கொடுக்கப்பட்டு உள்ளது.
தை மாதம்(ஜனவரி 22) வெளியிட உத்தேசம். ஆகவே மகாபாரத காவியம் -2 புத்தகம் வேண்டுவோர் ரூ400/-செலுத்தி பதிவு செய்து கொள்ள கோருகிறேன்.
 
மகாபாரத காவியம் பாகம்-1 புத்தகமும் கிடைக்கும். இதன் விலை ரூ400/-
 
கீழ்கண்ட வங்கி கணக்கிற்கு பணம் அனுப்ப கேடடுக் கொள்கிறேன்.
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
வங்கி விபரம்:-
 
மகாபாரத காவியம்
பாகம்-1 விலை ரூ.400/-
 
பாகம்-2 விலை ரூ.400/-
 
N.SUBHARAJ
FEDERAL BANK
ALAGAPURAM BRANCH
A/C NO:15270100023870
IFSC CODE:FDRL0001527
 
Google pay: (GPay)
9944110869
 
PhonePe:
9944110869
 
Paytm:
9944110869
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
272/01-01-2022
 
லட்சுமணன்
மயக்கம்?..
 
★சக்தி ஆயுதத்தை எடுத்த இந்திரஜித் ராமரின் மீது அதை எய்தான். தன்னை நோக்கி வந்த அந்த சக்தியாயுதத்தை எதிர்த்து வேறு அஸ்திரங்கள் எய்தால் அது சிவபெருமானை  சற்று அவமதிப்பதாகும் என்று எண்ணிய ராமர் அமைதியுடன் இருந்தார். அதனை கண்ட லட்சுமணன், ராமரின் முன்பு வந்து நின்று சக்தியாயுதத்தை தான் ஏற்றுக் கொண்டு மயங்கி விழுந்தான். அண்ணனை காக்க தன் உயிரையும் கொடுக்க வந்த லட்சுமணனின் இச்செயலால் நிலைகுலைந்த ராமர், நிற்க முடியாமல் அவனோடு சேர்ந்து தானும் விழுந்தார். சக்தி ஆயுதம் தாக்கிய வேகத்தில் லட்சுமணன் அருகில் இருந்த சுக்ரீவன், அங்கதன், அனுமன், ஜாம்பவன் போன்றவர்களும் தூக்கி வீசப் பட்டு மயங்கி விழுந்தனர்.
 
★இதனை கண்ட இந்திரஜித் ஒரே அஸ்திரத்தில் இருவரையும் அழித்து விட்டோம் என்று வெற்றி முழக்கமிட்டு, ஆனந்த கூச்சல் இட்டான். ராட்சத வீரர்கள் மிக்க மகிழ்சியுடன் இந்திரஜித்தை பெருமைப்படுத்தி கோஷங்கள் இட்டார்கள். ராம லட்சுமணர்கள் தனக்கு சிவபெருமானால் அளிக்கப்பட்ட சக்தி ஆயுதத்தால் அழிந்தார்கள் என்று இந்திரஜித் ராவணனிடம் சொல்லி அவனை சந்தோஷப் படுத்துவதற்காக  அரண்மனைக்கு திரும்பினான்.
 
★ராமர் தன்னை தாக்க வந்த சக்தியாயுதத்தை லட்சுமணன் ஏற்றுக் கொண்டதை நினைத்து கண்ணீர் விட்டார்.லட்சுமணனை மார்போடு தழுவிக் கொண்டார்.
தம்பி! எனக்கு தாயும், தந்தையும் நீ தான். எவ்வாறு நீ என்னை விட்டு பிரிந்துச் சென்றாய். என் ஆருயிர் தம்பியே! கானகத்தில் இந்த பதினான்கு  வருடங்கள்
எனக்கு காய், கனிகள் கொடுத்து நீ உண்ணாமல் இருந்தாய். எனக்கு தூக்கத்தை கொடுத்து நீ தூங்காமல் இருந்தாய். இந்த வனவாசத்தில் நீ எனக்கு துணையாக இருந்து சேவை புரிந்தாயே. இனி எனக்கு துணையாக யார் இருப்பார்கள்.
 
★நீ என்னைவிட்டு பிரிந்த பின் நான் மட்டும் வாழ்ந்து என்ன பயன்? தம்பி! நீ எனக்காக உன் மனைவியை விட்டு, அயோத்தி அரண்மனையை விட்டு, உன் உணர்வையும், தூக்கத்தையும் விட்டு, எனக்காக பணிகள் செய்தாயே! நீ இல்லாமல் எனக்கு இந்த புகழ் எதுவும் வேண்டாம். இனி நானும் உயிர் வாழ மாட்டேன் என பலவாறு கூறி புலம்பி அழுதார். தன் மனச்சுமையையும், மற்றும் துக்கத்தையும் தாங்காமல் ராமர் மயங்கி விழுந்தார். ராமரின் துயரத்தைக் கண்டு தேவர்கள் முதலானோர் மிக்க வருத்தம் கொண்டனர்.
 
★இதை அறிந்த அரக்க தூதர்கள் ராவணனிடம் ஓடிச் சென்று வானரப் படையோடு லட்சுமணன் மாண்டான். லட்சுமணனின் பிரிவை தாங்க முடியாமல் ராமன் மாண்டான். இதனால் தங்களின் பகை தீர்ந்தது என கூறினார்கள். சக்தியாயுதத்தால் ராமன் மற்றும்  லட்சுமணன் உட்பட வானர வீரர்கள் மாண்டதை அறிந்து ராவணன் மகிழ்ச்சி அடைந்தான். இந்த மகிழ்ச்சியை விழாவாக கொண்டாட நினைத்தான். உடனே மருத்தன் என்னும் அரக்கனை அழைத்து, நீ உடனே போர்களத்திற்குச் சென்று, போரில் மாண்ட அரக்கர்கள் அனைவரையும் ஒன்று விடாமல் கடலில் எடுத்து வீசி விடு.
 
★இந்த வேலையை உன்னைத் தவிர வேறு யாரும் செய்யக் கூடாது. இது உன்னை தவிர வேறு யாருக்கும் தெரியவும்  கூடாது. அப்படி யாருக்கேனும் தெரிந்தால் உன் தலையை சீவி விடுவேன் எனக் கட்டளையிட்டு அனுப்பினான். (இதற்கான காரணம் என்னவென்றால் அரக்கர்களின் பிணங்கள் போர் களத்தில் இருந்தால், அதைப் பார்ப்பவர்கள் ராவணனின் அரக்கர்கள் தான் போரில் அதிகம் மாண்டவர்கள் என்பது தெரிய வரும். அதனால் தான்.) ராவணனின் கட்டளைப்படி மருத்தன், போர்களத்திற்குச் சென்று அந்த அரக்கர்களின் பிணங்களை எல்லாம் கடலில் போட்டுவிட்டான்.
 
★இப்பொழுது போர்களத்தில் வானர வீரர்கள் மட்டும் வீழ்ந்துக் கிடந்தனர். ராவணன், சீதையை போர்களத்திற்கு அழைத்துச் சென்று, போரில் அரக்கர்கள் யாரும் மாளவில்லை என்பதை தெரியப்படுத்த நினைத்தான். உடனே ராவணன், சீதையை அழைத்துச் சென்று அந்த யுத்த களத்தில் ராம லட்சுமணனுக்கு நேர்ந்த கதியை காட்டுங்கள் என கட்டளையிட்டான். இதனால் சீதை, ராம லட்சுமணர் மாண்டு விட்டனர் என நினைத்து தன்னை ஏற்றுக் கொள்வாள் என நினைத்தான். அரக்கியர்கள் சீதையை ஒரு புஷ்பக விமானத்தில் ஏற்றி ராம லட்சுமணனின் நிலையை காட்டினர்.
 
★சீதை, ராம லட்சுமணரின் நிலையைக் கண்டு கதறி அழுதாள். என் பெருமானே! ராவணாதி அரக்கர்களை கொன்று தண்டகவனத்தில் வாழும் முனிவர்களுக்கு பெரிய அனுகூலம் புரிவதாக தாங்கள் கூறினீர்களே! தங்களின் இந்த நிலைமைக்கு நான் தானே காரணம். நான் அந்த மாய மான் மேல் ஆசைப்படாமல் இருந்து இருந்தால், தங்களுக்கு இந்த நிலைமை நேர்ந்திருக்காது. நான் தங்களை அந்த மானின் பின் அனுப்பியது என் தவறு. இனி நான் என்ன செய்வேன். எனக்கு துணையாக இனிமேல் யார் இருப்பார்கள். எம்பெருமானே! தயவுகூர்ந்து எழுங்கள் என கதறி அழுதாள்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை....................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
273/02-01-2022
 
சீதையின் துயரம்...
 
★சீதை லட்சுமணனை பார்த்து, இளையவனே! வலிமையான லட்சுமணனே! என் அண்ணன் ராமனுக்கு துணையாக நான் இருப்பேன் எனக் கூறினாயே! நான் அன்று உன்னை இகழ்ந்து பேசியதற்கு பதிலாகத் தான் இன்று இங்கு சிறைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நீ மாய மான் எனக் கூறியும், நான் அதைக் கேட்காமல் உன்னுடைய  அண்ணனை  தேடி வருமாறு கூறியது என் தவறு என்பதை உணர்ந்துவிட்டேன்.
 
 ★நீ அன்று என்னுடன் இருந்து இருந்தால் தங்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டு இருக்காது. இரவும் பகலும் பாராமல் கண் விழித்து காவல் புரிவாயே. நான் செய்த தவறால் தங்களுக்கு இந்நிலைமை நேர்ந்துவிட்டதே. நான் மதியை இழந்ததால் தான் அந்த ராவணனின் சிறையில் அகப்பட்டு விட்டேன். இனி என்னை காப்பாற்றுவதற்கு யார் இருக்கிறார்கள் என கூறிக் கதறி அழுதாள். சீதை, பெருமானே! தங்களுக்கு என்னால்தான் இந்த துன்பம் நேர்ந்தது.
 
★கண் இமைக்காமல் என்னை காத்த லட்சுமணா! அண்ணன் இறக்கும் முன் நான் என் உயிரை விடுவேன் என உன் அன்னை சுமித்திரையிடம் கூறினாயே. அதுபோல் இன்று செய்து விட்டாயே. உனக்கு இந்த  ஒரு நிலைமை நேர்ந்துவிட்டதே எனக் கூறி கதறி அழுதாள். மேலும் பெருமானே! நான் தீராப் பழிக்கு ஆளாகிவிட்டேன். இனி என்னை காக்க யார் இருக்கிறார்கள் எனக் கூறிக் கொண்டு கீழே விழ முயன்றாள். அப்பொழுது திரிசடை சீதையை தடுத்தாள். பிறகு சீதையை அன்போடு தழுவிக் கொண்டாள்.
 
★அம்மா சீதை! இதெல்லாம் மாயை. மாய மானை அனுப்பி வைத்ததும், உன் தந்தை போல் மாய ஜனகரை உன் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியதும் அரக்கர்கள் செய்த மாய வேலை என்பதை உனது நினைவில் கொள்வாயாக.அங்கு வீழ்ந்து இருக்கும் உன் கணவனை பார்! ராமனின் உடலில் அம்பு பட்ட இடமும் தெரியவில்லை. ரத்த காயங்களும் தெரியவில்லை. அதுமட்டுமில்லாமல் இங்கு ஒரு அரக்கர் கூட தென்படவில்லை. இது எல்லாம் அரக்கர்களின் மாய செயல் என்பதை நன்கு உணர்வாயாக.
 
 ★நான் கண்ட கனவு நிச்சயம் பொய்யாகாது. உனக்கு நேர்ந்த நல்ல நிமித்தங்களை எல்லாம் நினைத்துப்பார். நிச்சயம் தர்மம் தழைத்தோங்கும். மிகப் பெரிய பாவமான செயல்களைச் செய்யும் இந்த அரக்கர்களின் நிலைமையானது,  நிச்சயம் ஒரு முடிவுக்கு வரும். நீ அழாதே என ஆறுதல் கூறினாள். பிறகு திரிசடை, சீதா! முன்பு ஒருநாள் நாகப்பாசத்தால் கட்டுண்டவர்கள் விடுபட்டு ஆரவாரம் செய்த ஒலி உனக்கு கேட்டது அல்லவா? அதுபோல நிச்சயம் இவர்கள் திரும்பி வருவார்கள். ராமர் இறந்திருந்தால் இந்த ஏழு உலகங்களும் அழித்திருக்கும்.
 
★சக்தியாயுதத்தால் வீழ்ந்து கிடப்பவர்கள் நிச்சயம் உயிர் பெறுவார்கள். நீ உன் மனதை தெளிவுப்படுத்திக்கொள் என ஆறுதல் கூறினாள். சீதை, திரிசடை தாயே! இதுவரை தாங்கள் சொன்ன எதுவும் பொய்யாகவில்லை. தக்க சமயத்தில் தாங்கள் எனக்கு அறிவுரை கூறியுள்ளீர்கள். தாங்கள் கூறிய வார்த்தைகளை தெய்வ வாக்காக நினைத்து, நான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றாள். நிச்சயம் எம்பெருமான் என்னை வந்து காப்பார் எனக் கூறினாள். பிறகு அரக்கியர்கள் புஷ்பக விமானத்தை மீண்டும் அசோக வனத்திற்கே கொண்டு சென்று சீதையைக் காவலில் வைத்தனர்.
 
★ராமரின் கட்டளைப்படி உணவு சேகரிக்க சென்ற விபீஷணன் போர்க்களத்திற்கு வந்தான்.  அங்கு வீழ்ந்து கிடக்கும் வானர வீரங்களை கண்டு அதிர்ச்சி அடைந்தான். அங்கதன், சுக்ரீவன் முதலான வானர வீரர்கள் வீழ்ந்துக் கிடப்பதைக் கண்டு மிகவும் கவலை அடைந்தான். பிறகு விபீஷணன், ராமன் மயங்கி கிடப்பதைக் கண்டு அவனது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. என்ன செய்வதென்று தெரியாமல் சிறிது நேரம் குழம்பி இருந்தான். விபீஷணன், ராமரை உற்றுப் பார்த்தபோது ராமரின் உடலில் எந்த காயமும் இல்லை என்பதைக் கண்டுகொண்டான்.
 
★சக்தியாயுதத்தால் மயக்கம் கொள்ளாதவர் எவரேனும் உள்ளார்களா? எனச் சுற்றியும் பார்த்தான். உடனே அவனின் கண்களில் அனுமன் மட்டும் தென்பட்டான். அனுமன் அருகில் சென்று, அவன் மேல் பட்டிருந்த அம்புகளை தூக்கி எறிந்தான். பிறகு தண்ணீரைக் கொண்டு அனுமனின் முகத்தில் நன்றாக தெளித்தான். அனுமன் ராம! ராம! என சொல்லிக் கொண்டு எழுந்தான். விபீஷணனை பார்த்த அனுமன் மகிழ்ச்சியில் கட்டி தழுவிக் கொண்டான். பிறகு அனுமன், விபீஷணா! ராமர் எங்கே இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? எனக் கேட்டான்.
 
★விபீஷணன், லட்சுமணனின் நிலைமையை கண்ட ராமர் அழுது ஓய்ந்து மயக்கத்தில் உள்ளார் எனக் கூறினான். பிறகு இருவரும் ராம லட்சுமணரும் மற்றும்  வானர வீரர்களும் இந்த இடர்ப்பாட்டில் இருந்து மீள்வதற்கு ஏதேனும் வழி உள்ளதா? என யோசித்தனர்.
 
நாளை........................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
274/03-01-2022
 
சஞ்சீவனி மலை...
 
★அனுமனுக்கு,  ஜாம்பவான் ஞாபகம் உடனே வந்தது. அவன்  விபீஷணனிடம், ஜாம்பவான் எங்கே? அவனுக்கு இறப்பு என்பது கிடையாது. அவன் நமக்கு ஏதேனும் நல்ல வழியை காட்டுவான் என்றான். பிறகு இருவரும் ஜாம்பவானை எல்லா இடங்களிலும் தேடினர். அங்கு ஓரிடத்தில் ஜாம்பவான், உடல் எங்கும் அம்புகள் துளைத்ததால் மிகுந்த துன்பத்துடனும், அதிகம் சோர்வடைந்ததால், உணர்வு இழந்த நிலையிலும்,  கண்கள் மங்கிய நிலையில் மயக்கத்தில் இருந்த அவரைக் கண்டனர்.
 
★தன்னை நோக்கி யாரோ வருவதை உணர்ந்த ஜாம்பவான், வருவது யார்? என்னை காக்க வந்த ராமனா? இல்லை அந்த லட்சுமணனா? அல்லது நமது அனுமனா? இல்லை நண்பன் விபீஷணனா? என தன் மனதில் நினைத்தான். ஜாம்பவானை பார்த்த விபீஷணன் மகிழ்சி அடைந்தான். அதன் பிறகு மூவரும் ராமரிடம் சென்றனர். மயக்கத்தில் இருக்கும் ராமரின் முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை எழுப்பினர். தன்னுடைய சுயநினைவிற்கு வந்ததும் ராமர் மீண்டும் லட்சுமணனைப் பார்த்து வருத்தப்பட ஆரம்பித்தார்.
 
★இவனைப் போல் ஒரு தம்பி உலகத்தில் வேறு யாருக்கும் கிடைப்பார்களா என்று மிகுந்த வருத்தமாகக் கூறிவிட்டு லட்சுமணன் மீதிருந்த அம்பை எடுத்தார். மிகக் கடுமையாக சக்தியாயுதத்தினால் தாக்கப்பட்ட லட்சுமணன் உயிருக்கு ஒன்றும் ஆகாது என்று தைரியத்துடன் இருந்த ராமர், லட்சுமணனை எப்படி விழிக்க வைப்பது என்று ஜாம்பவானிடம்  கேட்டார்.
இந்திரஜித்தின் தாக்குதலில் பெரும் காயமடைந்த ஜாம்பவான் லட்சுமணனின் முகத்தை பார்த்து அஸ்திரத்தின் சக்தி இருக்கும் வரை விழிக்க வாய்ப்பில்லை. விரைவில் விழிக்க வைக்க மூலிகைகள் இருக்கின்றன. அவற்றை உபயோகித்து விரைவில் லட்சுமணனை எழுப்பி விடலாம் என்றார்.
 
★பிறகு  ஜாம்பவான் அனுமனை கூப்பிட்டார். ஜாம்பவானின் வார்த்தையை கேட்ட அனுமன் இதோ இருக்கிறேன் நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு உத்தரவிடுங்கள், என்று அவரின் முன்பு வந்து வணங்கி நின்றார்.
ஜாம்பாவான் பேச ஆரம்பித்தார். இமய மலையில் உள்ள ஒரு சிகரத்தில் மூலிகைகள் பலவும் நிறைந்து இருக்கும். அந்த மூலிகைகள் இறந்தவரையும் உயிர்ப்பிக்கும் மிகுந்த  ஆற்றல் உடையது. அந்த மூலிகைகளை சூரியன் மறைவதற்குள் பறித்து அன்றே சூரியன் மறைவதற்குள் அதன் வாசத்தை லட்சுமணன் உபயோகப்படுத்த வேண்டும். இல்லை என்றால் மூலிகைகள் பயன் தராது. இந்த குறுகிய நேரத்திற்குள் அவற்றை எடுத்து வருவதற்கு அனுமனால் மட்டுமே முடியும். அனுமன் மூலிகைகளை கொண்டு வந்ததும் லட்சுமணன் எழுந்து விடுவார். ஆகவே சிறிதும்  கவலைப்படாதீர்கள் என்று அனைவரிடமும் கேட்டுக் கொண்டார்.
 
★அனுமனிடம் திரும்பிய ஜாம்பவான் நான் சொல்வதை கவனமாக கேட்டுக் கொள் என்று மூலிகைகளின் பெயரையும் அதன் விதத்தையும் சொல்ல ஆரம்பித்தார். இமயமலையில் ரிஷபம் போன்ற வடிவத்தில் மூலிகை நிறைந்த மலை ஒன்று இருக்கும். அந்த மலை மிகப் பிரகாசமாக ஒளிவீசிக் கொண்டு இருக்கும் அதுவே அதன் முக்கிய அடையாளம்  ஆகும். அங்கு ம்ருதசஞ்சீவினி என்ற மூலிகை இருக்கும். அது இறந்தவரையும் உயிர்ப்பிக்கும் ஆற்றலை உடையது. அடுத்து இருப்பது விசல்யகரணி என்ற மூலிகை. அது உடலில் உள்ள காயங்களை உடனடியாக போக்கும் அற்புத ஆற்றல் உடையது. அடுத்து சாவர்ண்யகரணி என்ற ஒரு மூலிகை. அது காயத்தால் உண்டான வடுக்களை நீங்க  வைக்கும் ஓர்  ஆற்றல் உடையது. அடுத்து சந்தானகரணி. அது உடலில் அம்புகளால் பிளந்த இடத்தை ஒட்ட வைக்கும் மிக அருமையான ஆற்றல் உடையது. இந்த நான்கு மூலிகைகளையும் எடுத்து இன்று மாலை சூரியன் மறைவதற்குள் இங்கு வர வேண்டும். உன்னால் இயலுமா? என்று கேட்டார். ராமரை வணங்கி நின்ற அனுமன் பேச ஆரம்பித்தார்.
 
★ராமரின் அருளால் நிச்சயமாக நான் இதனை செய்து விடுவேன். விரைவில் திரும்பி வருகிறேன் என்று அனுமன் வணங்கி கூறினான்.உடனே அனுமன் தன் பெரிய உருவத்தை எடுத்து, நிலத்தில் காலை ஊன்றி வானுயர பறந்தான். (வேகமாக பறப்பதில் அனுமனுக்கு நிகர் எவரும் இல்லை. இருப்பினும் தான் பறந்த வேகத்தை பார்த்து அனுமனுக்கே ஆச்சரியம்தான். தன்னால் இவ்வளவு விரைவாக பறக்க முடியுமா என்று? தான் வணங்கி வழிபடும் ராமரின், உடன்பிறப்பு அல்லவா அங்கு உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறது. அதை அனுமனின் அங்கங்களும் உணர்ந்திருக்க வேண்டும். அதனால்தான் பறப்பதில் இவ்வளவு வேகம்). அனுமன், ஜாம்பவான் கூறிய வழியில் சென்று இமயமலை இருக்கும் மலைத் தொடரில் உள்ள மூலிகை சிகரத்திற்கு சென்றார். அங்கிருக்கும் பல மூலிகைகள் சூரியனைப்போல  பிரகாசித்துக் கொண்டும் பல நிறங்களிலும் பலப்பல வடிவம் கொணடும் இருப்பதைப் பார்த்த அனுமன் ஆச்சரியமடைந்தார். ஜாம்பவான் சொன்ன விதத்தில் இருக்கும் மூலிகைகளை தேட ஆரம்பித்தார்.
 
நாளை....................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
275/04-01-2021
 
லட்சுமணன்
மயக்கம் தெளிந்தது..
 
★சஞ்சீவினி மலை என்னும் மூலிகை மருந்து மலையை அடைந்தான். அங்கிருக்கும் பல மூலிகைகள் சூரியனைப் போன்று பிரகாசித்துக் கொண்டும் பல நிறங்களிலும் பல வடிவங்களிலும் இருப்பதைப் பார்த்த அனுமன் ஆச்சரியமடைந்தார். ஜாம்பவான் சொன்ன விதத்தில் இருக்கும் மூலிகைகளை தேட ஆரம்பித்தார். அந்த மூலிகைகளின் பெயர்களையும் அவற்றின் பயன்களையும் சற்று நினைத்துப் பார்த்தான்.
 
★ஜாம்பவான் கூறிய மருந்தின் விவரம் :
 
சஞ்சீவ கரணி:- -
இறந்தவர்களை உயிர் பிழைக்க செய்யும் மூலிகை மருந்து
 
சந்தான கரணி:- -
உடல் பல துண்டுகளாகப் பிளவு பட்டுப் போயிருந்தால் அதனை ஒட்ட வைக்கும் மூலிகை மருந்து
 
சல்லிய கரணி:- -
உடலில் பாய்ந்த அனைத்துவித  படைக்கருவிகளை வெளியே எடுக்கும் மருந்து.
 
சமனி கரணி:- -
சிதைந்து போன உருவத்தை மீண்டும் பழையபடியே பெறுவதற்கான மருந்து.
 
★மருந்துகளின் பெயர்களை நினைவிற்கு கொண்டு வந்த அனுமன் அவைகளைத் தேட ஆரம்பித்தான்.அப்போதுஅதைக் காக்கின்ற தெய்வங்கள், அனுமனை பார்த்து, நீ யார்? நீ இங்கு வந்ததற்கான காரணம் என்ன? எனக் கேட்டனர். அனுமன், தெய்வங்களே! நான் வாயு குமாரன், அனுமன். நான் ராமரின் தூதன். போரில் மாண்ட ராம பக்தர்களை உயிர்ப்பிக்க மருந்து கொண்டு செல்ல இங்கு வந்தேன் என்று கூறினான். அத்தெய்வங்கள், நீ வேண்டிய மருந்துகளை கொண்டு சென்று, மீண்டும் இங்குக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்று கூறி மறைந்தன.
 
★பிறகு அனுமன், ஜாம்பவான் கூறிய மருந்துகளைப் பிரித்து எடுப்பது அரிதான செயல் என எண்ணினான். இங்கேயே நின்றுக் கொண்டு மருந்து பற்றி யோசித்துக் கொண்டிருந்தால் கால தாமதம் ஆகிவிடும் என நினைத்தான்.ஆகவே அந்த
இமயமலையில் இருக்கும் பலவிதமான விலங்குகள், பெரிய மரங்கள் கொண்ட அந்த மூலிகை சிகரத்தை அப்படியே பெயர்த்து எடுத்த அனுமன், அதைத் தன்னுடைய ஒரு கையில் வைத்துக் கொண்டு வான வழியில் கருடனுக்கு நிகரான வேகத்தில் ராமர் இருக்குமிடத்திற்கு பறந்து சென்றார். தூரத்தில் அனுமன் வந்து கொண்டிருக்கும் போதே அதனை கண்ட யுத்தகளத்தில் இருந்த வானரங்கள் அனுமன் வந்து விட்டார், சூரியன் மறைவதற்குள்ளாகவே அனுமன் வந்து விட்டார் என்று பலமாகக் கூக்குரலிட்டார்கள். வானர வீரர்களின் கூக்குரலுக்கு அனுமன் எதிர் சப்தமிட்டார். இலங்கை நகரத்திற்குள் இச்சத்தத்தை கேட்டு வெற்றிக் கூக்குரலிட்டுக் கொண்டிருந்த ராட்சதர்கள் பயத்தில் அப்படியே உறைந்தார்கள். அனுமன் யுத்த களத்திற்கு அருகில் மூலிகை மலையை இறக்கி வைத்து விட்டு அனைவரையும் வணங்கி நின்றார்.
 
★ராமர் விரைவாக வந்த வாயு குமாரன் அனுமனைப் போற்றி வாழ்த்தினார். விபீஷணன் அனுமனை கட்டி அனைத்து தனது வாழ்த்துக்களை அன்பாக கூறினார். லட்சுமணன் மூலிகை வாசத்தில், தூங்கி எழுவது போல் எழுந்தார். அவரது உடலில் இருந்த காயங்கள் அனைத்தும் மறைந்தது. யுத்தம் ஆரம்பித்தது முதல் யுத்தகளத்தில் இறந்து கிடந்த வானர வீரர்கள் எல்லாம் தூக்கத்தில் இருந்து எழுவது போல் எழுந்தார்கள். அம்புகளால் மயக்கமடைந்தும் காயமடைந்தும் இருந்த வானர வீரர்கள் அந்த மூலிகையின் வாசம் பட்டதும் காயத்திற்கான அறிகுறிகள் ஏதும் இல்லாமல் புதுப் பொலிவு பெற்று எழுந்தார்கள். யுத்தம் ஆரம்பித்த நாள் முதல் வானர வீரர்களால் குவியல் குவியலாக கொல்லப்பட்ட ராட்சத வீரர்களை தேவர்கள் பார்த்தால் மிகுந்த அவமானமாக இருக்கும் என்று கருதிய ராவணன் இறந்து கிடக்கும் ராட்சத வீரர்களை உடனே கடலில் தூக்கி வீசச் சொல்லி உத்தரவிட்டிருந்தான். அதன் விளைவாக இறந்த ராட்சத வீரர்கள் பிழைக்க வழி ஏதும் இல்லாமல் போனது.
 
★ராமர், உயிர் பெற்று எழுந்த தம்பி லட்சுமணனை ஆனந்த கண்ணீருடன் அன்போடு தழுவிக் கொண்டார். பிறகு ராம லட்சுமணர், அனுமனை பார்த்து, அனுமனே! தசரத குமாரர்களான நாங்கள் மாண்டு இருப்போம். இப்பொழுது உன்னால் மீண்டும் உயிர் பெற்று எழுந்துள்ளோம். எங்களுக்கு உயிர் கொடுத்த மாவீரனே! உன் புகழ் எப்போதும் என்றென்றும் வாழ்க என வாழ்த்தினர். அனுமன் ஒன்றும் பேசாமல் அடக்கத்தோடு ராமரை வணங்கினான்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை.....................
 
குறிப்பு:-
~~~
 
★கலிபோர்னியாவில் உள்ள  
பெர்க்லி பல்கலைக்கழக சம்ஸ்கிருத பேராசிரியரான ஆர்.பி.கோல்ட்மேன் அனுமனின் வேகத்தையே கணக்கிட்டு விட்டார்.சஞ்சீவி மலை இருந்த இடத்திற்குச் சென்று அதைப் பெயர்த்து இலங்கைக்கு வான்வழியே வந்து திருப்பி அதை எடுத்த இடத்திலேயே வைக்க அவர் பறந்த வேகம் சுமார் மணிக்கு 660 கிலோமீட்டர் இருக்க வேண்டும் என்பது அவரது கணிப்பு.
 
(Robert Philip Goldman (born 1942) is the William and Catherine Magistretti Distinguished Professor of Sanskrit at the Department of South and Southeast Asian Studies at the University of California, Berkeley. He is also the winner of the Sanskrit Award for 2017 by the Indian Council on Cultural Relations (ICCR) as well as a Fellow of the American Academy of Arts and Sciences since April 1996.)
 
குறிப்பு:-
நேற்று 05-01-2022 நான் திருமலை திருப்பதியில் இருந்ததினால் ஶ்ரீராம காவியம் பதிய இயலவில்லை.
 
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
276/05-01-2022
 
ராவணன் ஆலோசனை...
 
★வானரங்கள் அனுமனை சூழ்ந்துக் கொண்டு வாழ்த்தினர். அனைவரும் உயிர்ப்பெற்று எழுந்தவுடன் ஜாம்பவான் அனுமனிடம், சஞ்சீவி மலையை சிறிதும் தாமதிக்காமல் அதை எடுத்த இடத்திலேயே கொண்டு போய் வைத்துவிட்டு வா எனக் கூறினான். ராமர் அனுமனிடம் பேச ஆரம்பித்தார். வாயு புத்ரா! இந்த மலையில் இருக்கும் மூலிகைகள் அனைத்தும் அங்கிருக்கும் வரை நன்றாக இருக்கும். ஆனால் இடம் மாறினால் சில நாட்களில் வாடி விடும். அப்படி இந்த மூலிகைகள் வாடி இறந்தால் அதற்கு நாம் காரணமாகி விடுவோம். அப்படி நடந்தால் நாம் இயற்கைக்கு எதிராக செயல்பட்டது போல் ஆகிவிடும். ஆகையால் இந்த மூலிகை மலையை எங்கிருந்து எடுத்து வந்தாயோ அங்கேயே வைத்து விட்டு வந்துவிடு என்று உத்தரவிட்டார்.அனுமன் ராமரின் கட்டளையை ஏற்று மூலிகை மலையை மீண்டும் எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு திரும்பினார்.
 
★இந்திரஜித் ஏவிய திவ்யமான சக்தியாயுதம் ராமர் முன் வந்து தோன்றியது. என்னை வில்லில் பூட்டி செலுத்திய பின், நான் கொல்லுவது என்பது உறுதி என்ற உண்மையை நீங்கள் நிலை நிறுத்திவிட்டீர்கள் எனக் கூறிவிட்டு ராமரை வணங்கி சரணடைந்தது. ராவணனின் அரண்மனையில், இந்திரஜித் தன் சக்தி ஆயுதத்தால் ராம லட்சுமணன் உள்ளிட்ட வானரங்கள் வீழ்ந்ததை வெற்றி விழாவாகக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அங்கிருந்த அரக்கர்களும், அரக்கியர்களும் மது அருந்தி ஆட்டம் பாட்டம் என மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
 
★அங்கு யுத்த களத்தில் வானர வீரர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் மிகுந்த ஆரவாரம் செய்தனர். வானரங்களின் ஆரவார கூச்சல்களைக் கேட்டு ராவணன் திடுக்கிட்டான். அப்பொழுது ராவணனின் தூதர்கள் அங்கு வந்தனர்.அரசே! அனுமன் சஞ்சீவி மலையைக் கொண்டு வந்ததால், நமது இளவரசர் இந்திரஜித் ஏவிய சக்தி ஆயுதத்தால் வீழ்ந்தவர்கள் புத்துயிர் பெற்று எழுந்து ஆரவாரம் செய்துக் கொண்டு இருக்கின்றனர் என்றார்கள். இதைக்கேட்ட ராவணனின் மகிழ்ச்சி நிரம்பிய உள்ளம் சோகத்தால் வாடியது. உடனே ராவணன் மந்திர ஆலோசனைக் கூட்டத்திற்கு விரைந்துச் சென்றான்.
 
★இந்திரஜித், மகோதரன், மாலியவான்,  உள்ளிட்ட மற்ற முக்கியமான  தலைவர்கள் அங்கு வந்துச் சேர்ந்தனர். ராவணன், ராம லட்சுமணர் மற்றும் வானர வீரர்கள் உயிர் பிழைத்ததைக் கூறினான். அப்போது மாலியவான், ராவணா! நீ அவசரப்பட்டு அரக்கர்களின் பிணங்களை கடலில் போட்டு விட்டாய். அப்படி செய்யாமல் இருந்தால் அனுமன் கொண்டு வந்த சஞ்சீவி மலையால் அவர்களும் உயிர் பிழைத்து இருப்பார்கள். சஞ்சீவி மலையை தூக்கிய அனுமன் இந்த இலங்கை நகரை தூக்கி கடலில் எறிந்தாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. நீ உன் பிடிவாதத்தைக் கொண்டு உன் மதியை இழந்து விடாதே. நீ சீதையை கொண்டு போய் ராமனிடம் ஒப்படைத்து விட்டு, ராமனை சரணடைந்தால் இலங்கையில் மீதமுள்ள அரக்கர்களாவது உயிர் வாழ்வார்கள் என்றான்.
 
★இதைக் கேட்டு ராவணன், மிகுந்த கோபங்கொண்டு தங்களின் அறிவுரைகளுக்கு நன்று எனக் கூறி அமர வைத்தான். இலங்கையில் அரக்கர்கள் அனைவரும் அழிந்தாலும், நான் ஒருவனே தனித்து நின்று போர் புரிவேன். போர் புரிவதற்கு யாருக்கேனும் பயம் இருந்தால் ஓடி விடுங்கள். அது மகனாக இருந்தாலும் சரி. என் எதிரிகளை அழிக்கும் ஆற்றல் என்னிடம் உள்ளது. எனக்கு துணையாக யாரும் வர வேண்டாம். நானே அவர்களை அழிப்பேன் எனக் கூறினான்.
 
★அப்பொழுது இந்திரஜித் தந்தையை வணங்கி, தந்தையே! நான் எதிரிகள் அனைவரையும் கொல்ல சக்தி ஆயுதத்தை ஏவினேன். ஆனால் அதிலிருந்து ராமன் தப்பித்து விட்டான். இதிலிருந்து விபீஷணன் கூறியவாறு ராமன் பரம்பொருள் என்பதை தாங்கள் உணர வேண்டும் என்றான். ராவணன்  உடனே கோபங்கொண்டு, என் ஆற்றலை நீ அறியவில்லை. நாளை நானே போருக்குச் சென்று அவர்களை நிச்சயம் கொல்லுவேன் என்றான்.
 
★இதைக்கேட்ட இந்திரஜித், தந்தையே! தாங்கள் என்னை மன்னித்தருள வேண்டும். நாளை நான் போருக்குச் செல்கிறேன். அதற்கு முன் நான் அந்த ராம லட்சுமணனை வெல்வதற்காக  நிகும்பலா யாகம் செய்ய வேண்டும். இதற்கும் ஒரு தடை உள்ளது. நான் நிகும்பலா யாகம் செய்வதை விபீஷணன் ராம லட்சுமணனிடம் சொல்லாமல் இருக்க வேண்டும். இதனை தடுக்க நாம், மாய சீதையை கொன்றுவிட்டு பிறகு அயோத்திக்கு செல்வது போல் பாசாங்கு காட்ட வேண்டும். அதன்பின் நான் நிகும்பலா யாகத்தை செய்து முடிப்பேன் என்றான். இந்திரஜித்தின் யோசனையை ஏற்று ராவணன் இதற்கு சம்மதம் தெரிவித்தான்.
 
நாளை.....................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
277/07-01-2021
 
கும்ப நிகும்பர்கள் வதம்...
 
★ராமருடன் சுக்ரீவனும் விபீஷணனும் யுத்தத்தில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பவற்றை பற்றி ஆலோசனை நடத்தினார்கள். அப்போது விபீஷணன் பேச ஆரம்பித்தான். ராவணன் தங்களுடன் யுத்தம் செய்து தோற்று ஓடி விட்டான். கும்பகர்ணன் இறந்து விட்டான். ராவணனுடைய படை தளபதிகளும் பல வலிமையான வீரர்களும் இறந்து விட்டார்கள். இனி ராவணன் உங்களுடன் யுத்தம் செய்ய வர மாட்டான். இந்திரஜித் மட்டும் மாயங்கள் செய்து மறைந்திருந்து வலிமையான அஸ்திரங்களை தங்களின் மேல் உபயோகித்து விட்டு வெற்றி வீரன் போல் திரும்பி சென்றான்.
 
★ஏற்கனவே உங்கள் மீதும் வானர வீரர்கள் மீதும் இந்திரஜித் பல வலிமையான திவ்ய அஸ்திரங்களை உபயோகித்து வீணடித்து விட்டான். இப்போது அவன் தவ வலிமையும் அஸ்திர வலிமையும் இல்லாமல் இருக்கிறான். ஆகையால் அவனும் யுத்தத்திற்கு வருவானா என்று தெரியாது. ஆகையால் நாம் நகரத்திற்குள் இருக்கும் ராட்சசர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தலாம். இதனால் கோபத்தில் ராவணன் யுத்தம் செய்ய வருவான். அவனை வெற்றி பெற்றால் மட்டுமே யுத்தம் நிறைவு பெறும். எனவே இந்த திடீர் தாக்குதலுக்கு அனுமதி கொடுங்கள் என்று விபீஷணன் ராமரிடம் கேட்டுக் கொண்டான்.
 
★ராமர் பலவகையில் யோசனை செய்து திடீர் தாக்குதல் நடத்தும் பொறுப்பை சுக்ரீவனிடம் கொடுத்தார். சுக்ரீவன், மிகுந்த வேகமாகவும் விவேகமாகவும் செயல்படும் அனுமன் உட்பட பல வானர வீரர்களை தேர்வு செய்தான். அவர்களிடம் இந்த இரவு நேரத்தில் பெரிய தீப்பந்தங்களுடன் இலங்கை நகரத்திற்குள் நுழைந்து கண்ணில் படும் அனைத்து மாளிகைகளுக்கும் தீ வைத்து விடுங்கள் என்றான். வானர வீரர்கள் தீப்பந்தத்துடன் நகரத்திற்குள் நுழைந்து, பார்த்த இடத்தில் எல்லாம் நெருப்பை பற்ற வைத்தார்கள்.
 
★தேவலோகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட முத்துக்கள், ரத்தினங்கள், வைரங்கள், மற்றும் சந்தனக் கட்டைகளால் கட்டப்பட்ட மாடமாளிகைகளும், கோபுரங்களும் எரிந்து சாம்பலாயின. இரவு நேரத்தில் வைரம் போன்று ஜொலித்த இலங்கை நகரம், இப்போது ஒரு எரிமலைப்போல பயங்கரமாக காட்சியளித்தது. ராட்சதர்கள் பலர் நெருப்பில் அகப்பட்டு அலறி ஒட்டம் பிடித்தார்கள். நெருப்பு வைத்தவர்கள் அந்த வானரங்கள் என்பதை அறிந்த ராட்சத வீரர்கள், எதிர் தாக்குதல் நடத்த ஆயத்தமானார்கள்.
 
★இதனை கண்ட சுக்ரீவன் மற்ற வானர வீரர்களிடம் நகரத்தை சூழ்ந்து கொள்ளுங்கள், எதிர்த்து வரும் ராட்சத வீரர்களை கொன்று குவியுங்கள் என்று கட்டளையிட்டான். மூலிகை வாசத்தில் உடல் வலிமையும் புத்துணர்ச்சியும் பெற்ற வானர வீரர்கள் சுக்ரீவனின் இத்தகைய வார்த்தைகளில் மிகுந்த உற்சாகமடைந்தார்கள். எதிர்த்து வந்த ராட்சதர்களை எல்லாம் கொன்று குவித்தார்கள். சில ராட்சத வீரர்கள் நகரத்திற்குள் நடக்கும் விபரீதத்தை அரசன் ராவணனிடம் தெரிவித்தார்கள். இதனால் கோபம் கொண்ட ராவணன், கும்பகர்ணனின் மகன்களான கும்பனையும் நிகும்பனையும் போர் முனைக்கு செல்லுமாறு கட்டளையிட்டான்.
 
★இருவருக்கும் துணையாக வலிமையான வீரர்களான யூபாக்சன், சோணிதாக்சன், பிரஜங்கன், கம்பனன் என்ற ராட்சச வீரர்களையும் அனுப்பினான். ராவணனின் கட்டளையை ஏற்றுக் கொண்ட கும்பனும் நிகும்பனும் பெரிய படையுடன் இரவு நேரத்தில் சங்கு நாதம் செய்து யுத்த களத்திற்கு சென்றார்கள். ராமர் வானர படைகளுக்கு எச்சரிக்கை செய்தார். இலங்கை நகரம் எரிந்து கொண்டிருக்கும் இந்த இரவு நேரத்தில் ராட்சசர்களின் பெரும் படை வருகிறது. மாயங்கள் செய்து எந்த திசையிலிருந்தும் ராட்சசர்கள் தாக்குவர்கள். அனைவரும் நான்கு திசைகளிலும் பார்த்து யுத்தம் செய்யுங்கள் என்றார்.
 
★யுத்தம் ஆரம்பித்தது. கும்பனை சுக்ரீவன் அழித்தான். அரக்கன் நிகும்பனை அனுமன் அழித்தார். கும்பன் மற்றும் நிகும்பனுக்கு பாதுகாப்புக்காக வந்திருந்த  ராட்சதர்கள் அனைவரையும் ராமர் அழித்தார். யுத்தத்திற்கு சென்ற ராட்சதர்கள் அனைவரும் அழிந்தார்கள் என்ற செய்தியை கேட்ட ராவணன் மனம் கலங்கி நின்றான். மகன் இந்திரஜித்தை அழைத்து அவனிடம் பேச ஆரம் பித்தான். இது வரை போருக்குச் சென்றவர்களில் கும்பகர்ணன் உட்பட , யாராலும் வெல்ல முடியாத வீரர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்கள்.
 
★நீ மட்டும் தான் இரண்டு முறை வெற்றி பெற்று திரும்பி வந்திருக்கிறாய். இது உனது பராக்கிரமத்தை காட்டுகிறது. உனது அஸ்திரத்தினால் தாக்கப்பட்ட ராம லட்சுமணர்கள் எப்படி பிழைத்தார்கள் என்று தெரியவில்லை. இப்போது மீண்டும் யுத்த களத்திற்கு சென்று வானரங்களை அழித்து ராம லட்சுமணர்களை வென்று வா என்று உத்தரவிட்டான் ராவணன். சம்மதம் தெரிவித்த
இந்திரஜித் யுத்தகளத்திற்குள் நுழைந்தான்.
 
நாளை......................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
278/08-01-2022
 
மாயாசீதை...
 
★ராமர் இந்திரஜித் வருவதை பார்த்து தனது அம்பை அவனை நோக்கி அனுப்பினார். ராமரின் அம்பு தன்னை தாக்க வருவதை அறிந்து கொண்ட இந்திரஜித் மாயங்கள் செய்து வானத்தையும் பூமியையும் பனி மூட்டத்தாலும் மறைத்தான். பிறகு  தன்னையும் மறைத்துக் கொண்டான். ராமரின் மீதும் லட்சுமணனின் மீதும் மறைந்து இருந்து அம்புகளை ஏவினான். ராம லட்சுமணர்களை அம்புகள் தாக்கி அவர்களின் உடலில் இருந்து காயங்களினால் ரத்தம் வரத்தொடங்கியது. இதனால் கோபம் கொண்ட லட்சுமணன் ராமரிடம் பேச ஆரம்பித்தான். இந்திரஜித் மறைந்திருந்து தாக்குதல் நடத்திக் கொண்டே இருக்கிறான். எங்கிருக்கிறான் என்று கண்டு பிடிக்க முடியவே இல்லை என மிகுந்த சினத்துடன் கூறினான்.
 
★இந்திரஜித்தையும், நம்மை எதிர்க்கும் ராட்சதர்களை மட்டும் அழிப்பதில் நமது கவனத்தை செலுத்துவோம். இந்திரஜித் நம்மை நோக்கி அனுப்பும் அம்புகள் எந்த திசையிலிருந்து வருகிறது என்று நன்றாக பார்த்து அந்த திசை நோக்கி நமது அம்புகளை அனுப்புவோம். இந்திரஜித் நம் கண்ணுக்குத் தெரியாமல் எங்கு மறைந்து இருந்தாலும் அவனை தாக்கும் மந்திர அஸ்திரங்களை நான் அனுப்புகிறேன். அவன் எங்கு ஒடி ஒளிந்தாலும் என்னுடைய அஸ்திரம் அவனை தாக்கி நம் முன்னே கொண்டு வந்து சேர்த்து விடும் என்றார்.
 
★ராமர் தனது அஸ்திரங்களை உபயோகிக்க ஆரம்பிக்கப் போகிறார், இதில் நாம் பிழைக்க மாட்டோம் என்பதை உணர்ந்த இந்திரஜித் உடனே இலங்கை நகரத்திற்குள் ஒடினான். ஆகவே அவனுடைய ராட்சச படைகளும் இலங்கை நகருக்குள் ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரம் கழித்து பறக்கும் தனது தேரில் யுத்த களத்தின் மேலாக வானத்தில் பறந்து வந்த இந்திரஜித், ஓர் அரக்கனை மாய சீதையாக மாற்றி யுத்தகளத்தில் இருப்பவர் முன்தோன்றினான். அவனது
மாயத்தினால் உண்டாக்கிய சீதையின் உருவத்தை  தனக்கு முன்பாக நிறுத்தி யாரும் தன்னை தாக்காதவாறு பாதுகாப்புடன் நின்று ராம லட்சுமணர்களை தாக்கத் தொடங்கினான்.
 
★ராமர் சீதையை கண்டதும் செய்வதறியாமல் திகைத்து நின்றார். லட்சுமணனும், வானர வீரர்களும் இந்திரஜித்தை எப்படி தாக்குவது என்று புரியாமல் நின்றனர். இந்த சூழ்நிலையை தனக்குச் சாதகமாக பயன் படுத்திக் கொண்ட இந்திரஜித், வானரங்களை கொன்று குவித்தான். இதனை கண்ட வானர படைகள் மாயையால் உருவாக்கப்பட்டவள் இந்த சீதை என்று தெரியாமல் பெரிய பாறைகளை அவளின் மீது படாதவாறு இந்திரஜித்தின் மீது தூக்கி எறிந்தார்கள். இதனால் கோபமடைந்த இந்திரஜித் மாயையால் உருவாக்கப்பட்ட சீதையின் தலை முடியை பிடித்து அவளை மூர்க்கமாகத் தாக்கத் தொடங்கினான்.
 
★இதனைக் கண்ட அனுமனின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. அசுரன் மாயையால் உருவாக்கப்பட்ட சீதையின் கதறலை பொறுக்க முடியாமல் இந்திரஜித்திடம் மெதுவாகப்  பேச ஆரம்பித்தார். மகாபாவியே! பிரும்ம ரிஷியின் பரம்பரையை சேர்ந்தவன் நீ. பெண்ணை துன்புறுத்துகிறாயே. நீயும் ஓர் ஆண் மகன் தானா? சாபத்தின் காரணமாக ராட்சத குலத்தில் பிறந்ததினால் ராட்சதர்களின் குணத்தை பெற்றுவிட்டாய். அதற்கும் ஓர் எல்லை உண்டு. உனது செயல்கள் எல்லை மீறிப் போகிறது.
 
★உன் தந்தை செய்த தவறால் இந்த இலங்கை நகரம் இப்போது இந்த துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. அது போல் நீயும் இந்தப் பெரிய தவறைச் செய்கிறாய். இதன் பலனாக மூன்று உலகங்களில் நீ எங்கு சென்று ஒளிந்து கொண்டாலும் தப்பிக்க மாட்டாய். உனக்கான கொடிய அழிவை நீயே தேடிக் கொள்கிறாய் என்றார். அதற்கு இந்திரஜித் பெண்களை துன்புறுத்தக் கூடாது என்று சொல்கிறாயே. அது உண்மை தான். ஆனால் யுத்த நியதிப்படி எதிரிக்கு பெரும் துன்பத்தை கொடுக்க என்ன காரியம் வேண்டுமானாலும் செய்யலாம். அதையேதான் நான் இப்போது செய்கிறேன். சீதையை துன்புறுத்துவதற்கே இப்படி பேசுகிறாயே. இப்போது இவளை கொல்லப் போகிறேன் என்று கூறினான்.
 
★இந்திரஜித் மாய சீதையின் கூந்தலை ஒரு கையில் பிடித்துக் கொண்டு, ஒரு வாளை மற்ற கையில் வைத்திருந்தான். இந்திரஜித் அனுமனை பார்த்து, அடேய், வானரமே! இத்தனை விளைவுகளும் இந்த பாதகி சீதையினால் தான் நிகழ்ந்தது. அதனால் இவளை நான் இங்கு கொல்லப் போகிறேன். அது மட்டுமல்லாமல் நான் உங்கள் அயோத்திக்குச் சென்று பரதன், சத்ருக்கனையும் கொல்லப் போகிறேன் என்றான். அனுமன், அவனிடம் பணிவாக, வேண்டாம் பெண்ணை கொல்வது என்பது பாவச் செயலாகும். இதனால் உனக்கு பாவங்கள் தான் அதிகரிக்கும். அறநெறியை அழித்து, பாவத்தை தேடிக் கொள்ளாதே என தடுத்தான்.
 
★ஆனால் அசுர இந்திரஜித் அனுமனின் சொல்லைக் கேட்காமல் மாய சீதையை அனுமன் கண் முன் தன் வாளால் வெட்டிவிட்டு, நான் இப்போது அயோத்திக்குச் சென்று பரதன், சத்ருக்கனையும் கொல்லப் போகிறேன் எனக் கூறி அயோத்திக்குச் செல்வதை போல் நிகும்பலா யாகம் செய்யும் இடத்திற்குச் சென்றான்.
 
நாளை...................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
279/09-01-2022
 
ராம லட்சுமணர் அதிர்ச்சி...
 
★இதன் பிறகு சுக்ரீவனையும், உன்னையும், விபீஷணனையும் கொல்வேன். நீங்கள் இத்தனை காலம் யுத்தம் செய்து சிரமப் பட்டதெல்லாம் வீணாக போகப் போகிறது என்று கூறி தனது கத்தியை எடுத்து மாயையால் உருவாக்கப்பட்ட சீதையை கொன்றான் இந்திரஜித். இதைக் கண்ட அனுமன் மிக்க அதிர்ச்சி அடைந்தார்.நிஜமாகவே சீதை இறந்த விட்டதாக நினைத்து அனுமன் புலம்பி அழுதார்.
ராமர், சீதையை இந்திரஜித்  கத்தியால் கொல்வதைப் பார்த்து பிரமை பிடித்தது போல், என்ன செய்வது என்று தெரியாமல் மயக்க நிலையில் சிலை போல் நின்றார்.
 
★ராம லட்சுமணர் உறைந்து போய் நிற்பதை கண்டு மிகவும் மகிழ்ந்த  இந்திரஜித், நீங்கள் இத்தனை நாட்கள் செய்த யுத்தம் அனைத்தும் வீணாகப் போயிற்று என்று ஆனந்தக் கூத்தாடி விட்டு அயோத்தி செல்வதைப் போல போக்கு காட்டி விட்டு நிகும்பலை நோக்கி சென்றான். சுக்ரீவன் உட்பட வானர தலைவர்கள் அனைவரும் ராமருக்கு ஆறுதல் சொல்வது எப்படி என்று சிறிதும்  தெரியாமல் ராமரை சுற்றி நின்று கொண்டு இருந்தனர். இந்திரஜித் அடுத்து என்ன செய்யப் போகிறான் என்று அனுமன் வேகமாகச் சிந்திக்க ஆரம்பித்தார்.ராமரின் நிலைமை பார்த்த லட்சுமணன், அண்ணா! தாங்கள் இவ்வாறு வருந்துவது அறிவுடைமையாகாது. நாம் இந்த மூவுலகங்களையும் அழிக்க வேண்டும் என்றான்.
 
★அப்பொழுது விபீஷணன், ராமரை பணிந்து, பெருமானே! இது எல்லாம் அரக்கர்களின் மாய வேலையாகத் தான் இருக்க வேண்டும். உங்களை திசை திருப்பி விட்டு, இந்திரஜித் நிகும்பலா யாகம் செய்யச் சென்றிருப்பான்.அந்த யாகத்தை அவன் திறம்பட செய்துவிட்டால் அவனை வெல்ல எவராலும் முடியாது. தாங்கள் கவலை கொள்ளாமல் இருங்கள். நான் வண்டு போல் சிறு உருவம் எடுத்து, அன்னை சீதை எவ்வாறு இருக்கிறார் என்பதை பார்த்து விட்டு வருகிறேன் என்றான். பிறகு விபீஷணன் சிறு வண்டு போல் உருவம் எடுத்து, அசோக வனத்திற்குச் சென்றான். அங்கு சீதை நலமுடன் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தான். உடனே விபீஷணன் அங்கிருந்து விரைந்து வந்து ராமரிடம், அன்னை சீதை நலமுடன் இருக்கிறார் எனக் கூறினான்.
 
★ராமரையும் லட்சுமணனையும் அழிக்க பெரிய வேள்வியை செய்து, அதன் வழியாக அதிக வரத்தையும், வலிமையையும் பெற இந்திரஜித் திட்டமிட்டு இருந்தான். வேள்வியை செய்யும் போது ராம லட்சுமணர்கள் இடையில் வந்து வேள்வியை தடுத்து விட்டால் என்ன செய்வது என்று சிந்தித்து ஒரு திட்டம் தீட்டினான். அதன்படி அவர்களை செயல்பட விடாமல் தடுக்க மாயையால் சீதை போன்ற உருவத்தை உருவாக்கி அவளைக் கொன்றால் அனைவரும் துக்கத்தில் என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்தில் இருப்பார்கள். அப்போது வேள்வியை செய்து முடித்து விடலாம் என்று திட்டம் தீட்டி இருந்தான் இந்திரஜித். அதன்படி இப்போது பாதி திட்டத்தை நிறைவேற்றி விட்டான். திட்டத்தின் மீதியை இப்போது செயல்படுத்த ஆரம்பித்தான். மலையின் குகைக்குள் பெரிய வேள்வியை ஆரம்பித்து நடத்த ஆரம்பித்தான் இந்திரஜித். அனைத்து விதமான செய்தியையும் அறிந்த அரசன் ராவணன், ராமரை எதிர்க்க தந்திரமாக செயல்பட்டு கொண்டிருக்கும் இந்திரஜித்தை நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டான்.
 
★ராமரிடம் வந்த விபீஷணன் கலங்காதீர்கள். நடந்தவற்றை இப்போது தான் ஒற்றர்கள் மூலமாக அறிந்தேன். ராவணன் சீதைக்கு விதித்த ஒரு வருடம் முடிய இன்னும் 4 நாட்கள் இருக்கிறது. அது வரை சீதையை கொல்ல யாரையும் ராவணன் அனுமதிக்க மாட்டான். நீங்கள் கண்டது அனைத்தும் உண்மை இல்லை. சீதை போன்ற ஒரு உருவத்தை இந்திரஜித் தனது மாயத்தால் உருவாக்கி உங்களை குழப்பியிருக்கிறான்.  எதற்கும் கலங்காத தாங்கள் இப்போது உங்களுக்குள் இருக்கும் குழப்பத்தை விட்டு மனதை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று நம்மால் யோசித்து செயல்பட முடியும் என்றான்.
 
★ராமர் விபீஷணனிடம் சீதையை நான் என் கண்களால் கண்டேன். எனது கண் முன்னே இந்திரஜித் சீதையை வெட்டிக் கொன்றான் என்றார். அதற்கு விபீஷணன்,ஒரு அரக்கனை அன்னை சீதை போல உருமாற்றி நம் கண்முன்பு கொன்றுள்ளான். இது நம் கவனத்தை திசை திருப்பவே ஆகும். அன்னை சீதை நன்றாக இருப்பதை நான்தான் பார்த்தேனே. ஆகவே சஞ்சலம் கொள்ளாதீர்கள்.
நிகும்பலை என்ற இடத்தில் ஒரு குகைக்குள் இந்திரஜித் பெரிய வேள்வி ஒன்றை செய்ய ஆரம்பித்திருக்கிறான் என்று என்னுடைய ஒற்றர்கள் வந்து தெரிவித்தார்கள். இந்த முக்கிய வேள்வியை இந்திரஜித் செய்து முடித்து விட்டால் அவன் மிகவும் வலிமையுடன், பல வரங்களை பெற்று விடுவான்.
 
★அதன் பிறகு அவனை நம்மால் எளிதில் வெற்றி பெற முடியாது. அந்த வேள்வியை நாம் தடுத்து நிறுத்தி விடுவோம் என்று பயந்து நம்மை திசை திருப்பவே இந்திரஜித் சீதை போல் ஒரு உருவத்தை மாயமாக செய்து நாடகமாடி இருக்கிறான். இந்த வேள்வியை தடுக்கும் ஒரு முயற்சியை நாம் இப்போது உடனடியாக செய்ய வேண்டும்.
 
நாளை.......................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
280/10-01-2022
 
லட்சுமணன்
இந்திரஜித்துடன் யுத்தம்...
 
★நிகும்பலையில் இந்திரஜித் வேள்வி செய்யும் குகையை யாருக்கும் தெரியாமல் மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறான். ஆனால் அவன் வேள்வி செய்யும் குகை பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். லட்சுமணனையும், அனுமனையும் இப்போது அங்கு என்னுடன் அனுப்பி வையுங்கள். இந்திரஜித்தை லட்சுமணன் எதிர்த்து வெற்றி பெறுவான். இந்திரஜித்துக்கு காவலாக இருக்கும் ராட்சசர்களை எல்லாம் அனுமன் எதிர்த்து வெற்றி பெறுவார். அதன் பிறகு அந்த இலங்கைக்குள் ராவணன் மட்டுமே இருப்பான். அவனையும் அழித்து விட்டால் சீதையை நீங்கள் அடைந்து விடலாம் என்று சொல்லி முடித்தான் விபீஷணன்.  
 
★இந்திரஜித்தை எதிர்த்து யுத்தம் செய்ய நான் தயாராக இருக்கிறேன் எனக்கு உத்தரவு கொடுங்கள் என்று ராமரிடம் லட்சுமணன் பணிவாக கேட்டுக் கொண்டான். ராமர் தன்னுடன் விபீஷணன் பேசிய  பேச்சில் உண்மை இருப்பதை அறிந்து தெளிவடைந்தார். உடனடியாக லட்சுமணனுக்கு அனுமதி கொடுத்து அவனுடன் அங்கதன் மற்றும் அனுமனையும் சில வானர படைகளையும் அனுப்பி வைத்தார். அனைவரும் இந்திரஜித் வேள்வி செய்த குகைக்கு அருகே சென்று சேர்ந்தனர்.
 
★குகைக்கு வெளியே காவல் காத்த ராட்சதர்களுக்கும் வானர வீரர்களுக்கும் யுத்தம் நடந்தது. லட்சுமணனும் அனுமனும் வானர வீரர்களை கொன்று குவித்தனர். லட்சுமணனும் வானர வீரர்களும் ராட்சசர்களை கொன்று குவிப்பதை சில ராட்சசர்கள் இந்திரஜித்திடம் சென்று கூறினார்கள்.இதனால் கோபம் கொண்ட இந்திரஜித் தான் செய்து கொண்டிருந்த நிகும்பலா வேள்வியை தொடர்ந்து செய்ய முடியாமல் பாதியிலேயே விட்டு விட்டு அவர்களுடன் யுத்தம் செய்வதற்காக குகையை விட்டு வெளியே வந்தான்.
 
★போரைக் காண்பதற்காக விண்ணுலகத்தவர் வானில் வந்து தோன்றினர். அப்பொழுது இந்திரஜித் விபீஷணனிடம், நீ அரக்க குலத்தையே கெடுக்க வந்தாயா? சிறிது கூட உனக்கு வம்ச ரத்தம் ஓடவில்லையா? நம் விரோதியே கதி என அங்கேயே இருக்கின்றாய். உனக்கென்ன மூளை மழுங்கிவிட்டதா? இன்று உன் யோசனையால் தான் இந்த யாகம் தடைப்பட்டு விட்டது என்றான். விபீஷணன், நான் அரக்க குணம் கொண்டவனல்ல. நேர்மையை விரும்புபவன். அதனால்தான் இவர்களோடு நட்பு கொண்டேன்.
 
★அந்த நட்பு, நம்பிக்கையின் அடிப்படையில் பிறந்தது. பிறர் பொருளைக் கவர்ந்தவன், என்றுமே வாழ்க்கையில் உயர மாட்டான். நீ ராவணனுக்காக போர் புரிகிறாய். அதனால் நீயும் அழிய வேண்டியவன் தான் என்றான். இதைக்கேட்டு இந்திரஜித் மிகவும் கோபம் கொண்டான். லட்சுமணனைப் பார்த்து, நான் உன்னையும், உன் அண்ணனையும் நினைவிழக்கச் செய்தேனே, அதை எல்லாம் நீ மறந்து விட்டு, இப்பொழுது என் கையால் இறக்கவா இங்கு வந்திருக்கின்றாய்? எனக் கேட்டான்.
 
★லட்சுமணன், வீரனே! இனி என்னை கொல்வது என்பது முடியாத காரியம். அதனால் என்னிடம் வீண்பேச்சு பேசாதே. மறைந்து தாக்குவது தான் வீரனின் பலமா? என்னுடன் வந்து நேருக்கு நேர் போர் புரிந்து வென்றுக்காட்டு எனக் கூறினார். இருவருக்கும் போர் ஆரம்பம் ஆனது. இவர்களுக்கிடையில் நீண்ட நேரம் போர் நடந்தது. இந்திரஜித்தால் லட்சுமணனின் தாக்குதலைச் சமாளிக்க முடியவில்லை. விபீஷணன், வானரர்களே!, அரக்கர்களை அழியுங்கள். இராவணனுக்கு மகனான இந்த மாவீரன் இந்திரஜித் ஒருவனே இப்போது இருக்கிறான். இவனை நம் லட்சுமணன் கொன்று விடுவார்.
 
★நாம் லட்சுமணனுக்கு உதவி புரியும் வகையில் அரக்கர்களை அழிப்போம் என கூறினான். வானர வீரர்கள், அரக்கர்களை எல்லாம் கொன்று வீழ்த்தினர். லட்சுமணன் இந்திரஜித்தின் தேர்ப்பாகனைக் கொன்றான். அதனால் இந்திரஜித் தானே தேரை ஓட்டிக் கொண்டு போர் புரிந்தான். வானர வீரர்கள் இந்திரஜித்தின் தேரை ஒடித்து எறிந்தனர். பிறகு இந்திரஜித் தரையில் நின்றபடியே  போர் புரிந்தான். லட்சுமணனின் தாக்குதலை தாக்கு பிடிக்க முடியாமல் இந்திரஜித், சக்தி வாய்ந்த படைக்கலன்களை ஏவ ஆரம்பித்தான்.
 
★இந்திரஜித் லட்சுமணன் மீது வாயுப்படையை ஏவினான். லட்சுமணன் தன்னிடமிருந்த அக்னிப் படையை ஏவி அதை அணைத்தார். இந்திரஜித் வருணாஸ்திரத்தை லட்சுமணன் மீது ஏவினான். லட்சுமணன் தன்னிடமிருந்த பலம் வாய்ந்த வருணாஸ்திரத்தால் அதனைத் தூள்தூளாக்கினார்.லட்சுமணன், படைக்கலன்களை அழித்ததை பார்த்து தேவர்கள் பாராட்டினர். ஆனால் இந்திரஜித் இதைக் கண்டு திகைத்து நின்றான்.
 
★பிறகு மாவீரனான இந்திரஜித் லட்சுமணனை பார்த்து, லட்சுமணா! இப்பொழுது நான் விடும் அஸ்திரத்தால் நிச்சயம் நீ மாண்டொழிவாய். உன்னால் இதிலிருந்து தப்பிக்க முடியாது எனக் கூறி விட்டு மிகச்சிறந்த சக்தி பொருந்திய அஸ்திரமான நாராயணஸ்திரத்தை ஏவினான்.
அந்த அஸ்திரம் லட்சுமணனை நோக்கி மிக வேகமாக பாய்ந்து வந்தது.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை.....................
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
281/11-01-2022
 
இந்திரஜித்தும்
வீழ்ந்தான்...
 
★மாவீரனான இந்திரஜித் லட்சுமணனை பார்த்து, லட்சுமணா! இப்பொழுது நான் விடும் அஸ்திரத்தால் நிச்சயம் நீ மாண்டொழிவாய். உன்னால் இதிலிருந்து தப்பிக்க முடியாது எனக் கூறி விட்டு மிகச்சிறந்த சக்தி பொருந்திய அஸ்திரமான நாராயணஸ்திரத்தை ஏவினான்.
அந்த அஸ்திரம் லட்சுமணனை நோக்கி மிக வேகமாக பாய்ந்து வந்தது. லட்சுமணன், சிறிதும் தயக்கம் இல்லாமல் பரமாத்மா ஶ்ரீநாராயணனை பிரார்த்திக் கொண்டு அதே அஸ்திரத்தைக் கொண்டு, அந்த இந்திரஜித் ஏவிய அஸ்திரத்தைத் தாக்கி    தூள்தூளாக்கினார்.
 
★இதைப் பார்த்த இந்திரஜித் மிகவும் கோபங்கொண்டு, இதற்கெல்லாம் விபீஷணன் தான் காரணம் என்று கூறி, அவனை கொல்ல ஓர் திவ்ய அஸ்திரத்தை ஏவினான். அந்த அம்பு விபீஷணனை நோக்கி வரும்போது, லட்சுமணன் அதையும் உடைத்தெறிந்தார். பிறகு இந்திரஜித் அங்கிருந்து மறைந்து அரண்மனையில் வீற்றிருக்கும் ராவணன் முன் தோன்றினான். இந்திரஜித் ராவணனை பார்த்து, உங்கள் தம்பி விபீஷணனால் இன்று என் யாகம் தடைப்பட்டு போனது என  கோபததுடன் கூறிவிட்டு பிறகு அங்கு நடந்த போரை பற்றிக் கூறினான். லட்சுமணனின் வில்வேகத்தையும், மற்றும் போர்திறமையையும் பற்றிக் கூறினான்.
 
★அதனால் நீங்கள்  சீதையை மறந்து விடுங்கள். இதுவே உங்களுக்கு நன்மை. அவர்களும் போரை நிறுத்திக் கொள்வார்கள் எனக் கூறினான். ராவணன் கோபத்துடன், நான் சீதையை அவர்களிடம் ஒப்படைப்பதற்கு பதில், அவர்கள் முன் என் உயிரைத் துறப்பது மேல். உனக்கு போருக்குச் செல்ல பயமாக இருந்தால் என்னிடம் சொல், நானே போருக்குச் செல்கிறேன் எனக் கூறினான். பிறகு இந்திரஜித் ராவணனிடம், தந்தையே! தாங்கள் கோபம் கொள்ள வேண்டாம். நானே போருக்கு செல்கிறேன் என்றான். இந்திரஜித் தன் தந்தை ராவணனிடம் இருந்து விடைப்பெற்று போர் நடக்கும் இடத்திற்கு மீண்டும்  சென்றான்.
 
★அங்கு லட்சுமணனுக்கும் இந்திரஜித்துக்கும் கடும்போர் நடந்தது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் சரிசமமாக யுத்தம் செய்து தங்கள் வலிமையை காண்பித்தார்கள். லட்சுமணன், ஒரு அம்பை ஏவி இந்திரஜித்தின் தேரை உடைத்தெறிந்தார். பிறகு இந்திரஜித் கையில் வாளை ஏந்திக் கொண்டு வானத்தில் சென்று மறைய முற்பட்டான். அப்போது லட்சுமணன், அம்பை எய்தி இந்திரஜித்தின் வாள் ஏந்திய  கையை வெட்டினான். தன் கையை இழந்த நிலையில் இந்திரஜித் லட்சுமணனை நோக்கி, ஒரு சூலாயுத்தை வீசினான். லட்சுமணன் அதையும் உடைத்தெறிந்தார்.
 
★இறுதியில் லட்சுமணன் இந்திராஸ்திரத்தை எடுத்து, ராமர் தர்மத்தை கடைபிடிப்பது உண்மையானால் இந்த அம்பு இந்திரஜித்தை அழிக்கட்டும் என்று சொல்லி அந்த அம்பை செலுத்தினான். அம்பானது  இந்திரஜித்தின் கழுத்தைத் துளைத்து தலையை துண்டாக்கி அவனது உயிரைப் பிரித்தது. இதனைக் கண்ட தேவர்கள் மகிழ்ச்சி அடைந்து மலர் தூவி லட்சுமணனை பாராட்டினார்கள். இந்திரஜித் கொல்லப்பட்டதும் யுத்த களத்தில் இருந்த  எல்லா ராட்சதர்களும் சிதறி ஓட ஆரம்பித்தார்கள். லட்சுமணன் காயத்துடன் யுத்தம் செய்த களைப்பில் அனுமன் மீது சாய்ந்து நின்றான்.
 
★விபீஷணன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து லட்சுமணனை பாராட்டினான்.மாவீரனும், மந்திர வேலையில் வல்லவனுமான இந்திரஜித் அந்த இடத்திலேயே தன் உயிரை விட்டான். இதைக் கண்டு விபீஷணன் மகிழ்ச்சி அடைந்து ஆர்ப்பரித்தான். வானரர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். தேவர்கள் லட்சுமணனை வாழ்த்தி பூமாரி பொழிந்தனர். பிறகு அங்கதன், இந்திரஜித்தின் தலையை கையில் ஏந்திக் கொண்டும், அனுமன் லட்சுமணனை தனது தோளில் ஏற்றிக் கொண்டும் ராமரிடம் இச்செய்தியைக் கூறச் சென்றனர்.
 
★ராமரிடம் வந்த லட்சுமணன் அவரை வணங்கி நின்றான். இந்திரஜித் இறந்ததைக் கேட்டு ராமர், லட்சுமணனை தழுவிக் கொண்டு, ராவணனுக்கு இனி யார் இருக்கிறார்கள்? அவனின் முடிவு காலம் வந்து விட்டது எனக்கூறி தன் மகிழ்ச்சியை காட்டினார். தேவலோகத்தில் இந்திரனை அடக்கி வெற்றி பெற்றவனும், எவராலும் வெற்றி கொள்ள முடியாத இந்திரஜித்தை அழித்து விட்டாய். உனது இந்த காரியத்தால், விரைவில் நாம் சீதையை பார்த்து விடலாம் என்ற நம்பிக்கை எனக்கு வந்து விட்டது என்று லட்சுமணனை கட்டி அணைத்து பாராட்டினார் ராமர்.
 
★பிறகு ராமர் லட்சுமணனிடம், தம்பி லட்சுமணா! இந்த வெற்றிக்கு நீயும் காரணம் இல்லை, நானும் காரணம் இல்லை. இதற்கு காரணம் விபீஷணன் தான் எனக் கூறி விபீஷணனை பாராட்டினார். பிறகு அனைவரும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை...................

ஶ்ரீராம காவியம்
~~~~~
282/12-01-2022

இந்திரஜித்

★லட்சுமணன் தன் மருமகன்  இந்திரஜித்தை வதம் செய்தான்.
ஒன்றும் புரியவில்லையா? மேலும் படியுங்கள்.
  
★இலங்கையை ஆண்ட ராவணன் தானே கடவுளாக வேண்டுமென்று மிகப்பெரிய ஆசைகொண்டான். தனது தந்தையின் பெரிய ஆசையை நிறைவேற்ற மேகநாதன் உயரிய சக்திகளை அடைய தவம் செய்யத் தொடங்கினான். அவனின் தவத்திற்காக பிரம்மா அவன் கேட்ட சக்திகளை அவனுக்கு வழங்கினார். திவ்ய சக்திகளை அடைந்த மேகநாதன் உடனே இந்திரலோகம் மீது போரை தொடங்கினான். அங்கிருந்த  தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் போர் நடந்த போது, மேகநாதன் இந்திரனை வெற்றிகொண்டு அவரை தன் மாயரதத்தில் கட்டி சிறைப் பிடித்தான். 

★அப்போது பிரம்மா தோன்றி இந்திரனை விடுவிக்கும்படி கேட்டுக் கொண்டார். அதற்கு ஒப்புக்கொண்ட மேகநாதன், பிரம்மாவிடம் வரம் ஒன்றை கேட்டான். மேகநாதன் மரணம் இல்லா வாழ்க்கையை கேட்டான். ஆனால் மரணமில்லா வாழ்க்கை என்பது இயற்கைக்கு எதிரானது என்று கூறி அந்த வரத்தை கொடுக்க மறுத்து விட்டார். அதற்கு பதிலாக அவனின் குலதெய்வமான நிகும்பலா தேவிக்கு செய்யும் யாகம் அழிக்கப்படாத வரை அவனுக்கு மரணம் நேராது என்ற வரத்தை கொடுத்தார்.  

★ஆனால் இந்த யாகத்தை அழிக்கக்கூடியவன் உன்னை அழிக்க இயலும் என்றும் எச்சரித்தார். நான் செய்யக் கூடிய யாகத்தை யாரால் தடுக்க முடியும் என்று பிரம்மாவிடம் மேகநாதன் கேட்டான். பதிநான்கு வருடங்கள் சிறிதும்  தூங்காத ஒருவனால்தான் உன் யாகத்தை அழிக்க முடியும் என பிரம்மா பதிலுரைத்தார் . எவராலும் அத்தனை ஆண்டுகள் சிறிதும் தூங்காமல் இருக்கமுடியாது என்பதினால் மேகநாதன் கவலையற்று இருந்தான்.

★மேகநாதனுக்கு இந்திரஜித் என்னும் பெயர் வழங்கியதே பிரம்மாதான்.  இதன் பொருள் இந்திரனை வெற்றி கொண்ட மாவீரன் இவன் என்பதாகும். 
இலங்கை திரும்பிய மேகநாதன் என்கிற இந்திரஜித் மிகப்பெரிய  யாகம் ஒன்றை நிகும்பலையில்  செய்தான். அந்த யாகத்தின் முடிவில் மேகநாதன், மறையக் கூடிய ரதம் ஒன்றை பெற்றான். அதன்மூலம் அவன் எந்த ஒரு போரிலும் மறையக்கூடிய சக்தியை பெற்றான்.

★சுலோச்சனா என்கிற ஒரு அழகிய மங்கையின் தந்தை  ஆதிசேஷன் எனும் சேஷநாகன், அவளுக்கு இந்திரனை மணம் முடிக்க எண்ணினார், ஆனால் சுலோச்சனா அதற்கு மறுத்து விட்டாள். அதனால் கோபமுற்ற ஆதிசேஷன் சுலோச்சனாவை மணந்து கொள்பவன் எவராக இருந்தாலும், என் அவதாரத்தால் கொல்லப்படுவான் என்று சாபமளித்து, தன் பேச்சை கேட்காததால் அவளை ப்ரித்வி லோகத்தை விட்டு  வெளியே அனுப்பிவிட்டார். வெளியேற்றப் பட்ட சுலோச்சனா, தனக்கு மிகவும்  பிடித்த தெய்வமான விஷ்ணுவின் கோவிலுக்குச் சென்றாள்.

★திவ்ய சக்திகளை பெற்ற மேகநாதன் வெற்றி தாகத்தில் மரணத்தின் கடவுளான எமன் எனப்படும் எமதர்மராஜனையும் சிறைபிடித்தான். எமனை காக்கச் சென்ற இந்திரனை விரட்டி சென்ற மேகநாதன் விஷ்ணு கோவிலில் இருந்த ஆதிசேஷன் மகளான சுலோச்சனாவின் அழகில் மயங்கி அவளுடைய  சம்மதம் இல்லாமலேயே அங்கேயே அவளைத் திருமணம் செய்து கொண்டான்.  பிறகு 
இலங்கையில் சுலோச்சனாவின் வாழ்க்கை அவ்வளவு மகிழ்ச்சி நிறைந்ததாக இல்லை. அவள் சுதந்திரமாக முடிவுகளை எடுக்க முடியாது. தன்னுடைய விருப்ப கடவுளான விஷ்ணுவை வணங்க அவளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கடவுள் மீதான பக்திக்கும், கணவனின் கட்டளைக்கும் இடையில் மாட்டிக்கொண்டு திணறினாள் சுலோச்சனா. கணவனின் கட்டளையை மீறமுடியாது என்பதால் கடவுள் பக்தியை கைவிட்டாள்.

★சீதையை இலங்கைக்கு ராவணன் தூக்கி வந்த பிறகு போர் மூண்டது. அந்தப்  போரில் தந்தையின் சார்பாக மேகநாதன் கலந்து கொண்டான். மாவீரன் இந்திரஜித்தின் திவ்யமான சில அஸ்திரங்களினால்தான், லட்சுமணன் இருமுறை மூர்ச்சை அடைந்து, அவரை குணப்படுத்த அனுமன் சஞ்சீவி மலையை தூக்கி வரவேண்டிய நிலை ஏற்பட்டது, அந்த அளவிற்கு மேகநாதன் மிகுந்த ஆற்றல் பெற்றவனாக இருந்தான்.

★தந்தையின் கட்டளைப்படி, ராமர் மற்றும் சீதை வனத்திற்கு புறப்பட்டனர். அவர்களுக்கு சேவை செய்யவும், அவர்களை  பாதுகாக்கவும்  லட்சுமணனும் உடன் சென்றான். புறப்படும் போது சுமித்திரை, லட்சுமனா! ராமனுக்கு எப்போதும் விழித்து இருந்து சேவை செய்வாயாக. அவன் இல்லாமல் நீ மட்டும் திரும்பி வரக்கூடாது என கட்டளை இட்டாள். இதை அறிந்த லட்சுமணன் மனைவி ஊர்மிளா, 14வருடங்கள் தூங்காமல் எவ்வாறு தன் கணவனால் இருக்க முடியும் என்று நினைத்து கவலை கொண்டாள். ஆகவே தங்கள் குல தெய்வமான சூரியனை நினைத்து, விரதம் மேற்கொண்டாள். சூரியன் நேரில் தோன்றியதும் அவரிடம் ஶ்ரீராமருக்கு 14 வருடங்கள் உறங்காமல் விழித்திருந்து சேவைகள் புரிய தன்னுடைய  கணவனான லட்சுமணன் சென்றுள்ளான். அவனுடைய உறக்கத்தை தனக்கு கொடுத்து அருளும்படியும், அதனால் அவன் தூங்காமலும், களைப்பு சிறிதும் தெரியாமலும் தன் அண்ணனை காப்பான் என்ற வரம் கேட்டாள். சூரியனும் வரம் அளித்து மறைந்தார்.  ஆகவே ஊர்மிளா தினமும் தன் தூக்கத்தோடு தன் கணவனின் தூக்கத்தையும் சேர்த்தே 14வருடங்களும் நன்கு தூங்கினாள். அதனால்தான் லட்சுமணனால் அவ்வளவு வருடங்களும் சிறிதளவு கூட களைப்பு இல்லாமல் ராமருக்கும் சீதைக்கும் தேவையான பணிவிடைகள் செய்ய முடிந்தது
14 ஆண்டுகள் தூங்காமல் இருந்ததால் லட்சுமணன் நிகும்பலையின் யாகத்தை அழிக்கும் மிகப்பெரிய ஆற்றலை பெற்றிருந்தார். பிரம்மதேவர்  முன்னரே கூறியது போல நிகும்பலையின் வேள்வியை அழிக்கக்கூடிய ஒருவன்தான்  இந்திரஜித்தையும் வதைக்கக் கூடும். அதன்படி இந்திரஜித் லட்சுமணனால் வதைக்கப் பட்டான். அதாவது ஆதிசேஷன் தன் மருமகனான இந்திரஜித்தை  லட்சுமண அவதாரத்தில் கொன்றார்.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869

நாளை.....(17/01/2022).....

குறிப்புகள்:-

1) C. G. Uragoda (2000). Traditions of Sri Lanka: A Selection with a Scientific Background. Vishva Lekha Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-955-96843-0-5.

2) George M. Eberhart (1 January 2002). Mysterious Creatures: A Guide to Cryptozoology. ABC-CLIO. பக். 388. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-57607-283-7.

3) http://www.sacred-texts.com
/hin/rama/

பொங்கல் பண்டிகையை கருத்தில் கொண்டு வரும் 13/01/2022 வியாழன் முதல் 16/01/2022 ஞாயிறு வரை நான்கு நாட்கள் "ஶ்ரீராம காவியம்" பதிய இயலாமைக்கு வருந்துகிறேன்.
ஶ்ரீராம காவியம்
~~~~~
283/17-01-2022

ராவணனின் சோகமும்
கோபமும்...

★இந்திரஜித் மாண்ட செய்தியை ராவணனிடம் கூறினால் நம்மை கொன்று விடுவானோ? என அஞ்சி தூதர்கள் சொல்ல பயந்தனர். தேவர்களும், அரக்கர்களும் பயந்து ஓடி ஒளிந்தனர். கடைசியில் அரக்கன் ஒருவன் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ராவணனிடம் சொல்ல சென்றான். அவன் ராவணன் முன் கை கால்கள் நடுங்க நின்றான். அசுர குலத்தின் வேந்தனே! நமது இளவரசர் இந்திரஜித் போரில் ராமனுடைய தம்பியான லட்சுமணனால் மாண்டார் எனக் கூறினான். இதைக்கேட்டு ராவணன் மிகக் கோபங்கொண்டு அவன் தலையை வெட்டி வீசினான். 

★இந்திரனையே வென்ற இந்திரஜித்தை லட்சுமணன் கொன்று விட்டான் என்பதை நினைத்து மிகவும் கோபம் கொண்டான்.  இந்திரஜித் லட்சுமணனால் கொல்லப்பட்டான் என்ற ஒரு செய்தியை ராவணன் இன்னும்  நம்பாமல் இந்திரஜித் இருக்கும் இடத்திற்கு சென்றான். அங்கு இந்திரஜித்தின் உயிரற்ற உடலை பார்த்ததும் அங்கேயே மூர்ச்சையாகி விழுந்தான் ராவணன். சுற்றி இருந்ந ராட்சசர்கள் என்ற செய்வது என்று தெரியாமல் விழித்து நின்றார்கள். சிறிது நேரம் கழித்து விழித்த ராவணன் புத்திர சோகத்தில் புலம்பினான்.

★என் செல்வமே! எனக்கு முன் நீ மாண்டாயே! உன் ஆற்றல் மேரு மலையை போன்றது. நீ எனக்குச் செய்ய வேண்டிய அனைத்து ஈமச்சடங்குகளையும், நான் உனக்கு செய்யும் படி விதி செய்துவிட்டதே. ஓஓஎன்ன செய்வேன்? நீ இறந்த செய்தியை அறிந்து இந்திரன் முதலான தேவர்கள் மகிழ்ந்திருப்பார்களே! நீ இன்றி இனி நான் என்ன செய்யப் போகிறேன் என தலையில் அடித்துக் கொண்டு மிகவும் புலம்பி கதறி அழுதான். அப்போது அவன், தன் மகன் இந்திரஜித்தின் வில்லோடு அறுப்பட்ட கையைக் கண்டு ஆறாத் துயரம் அடைந்தான். 

★ராவணன், இந்திரஜித்தை அரண்மனைக்குச் கொண்டு சென்று பஞ்சு மெத்தையில் படுக்க வைத்து அழுதான். இந்திரஜித் இறந்த செய்தி அவன் தாயார் மண்டோதரிக்கு தெரிவிக்கப்பட்டது. செய்தியைக் கேட்டு மகனே! மகனே! என அலறிக் கொண்டு, இந்திரஜித் காலடியில் வந்து வீழ்ந்தாள்.என் அன்பு செல்வமே! என் ஆருயிரே! இனி உன்னை நான் என்று காண்பேன்! எவரும் வெல்ல முடியாத வலிமை உன்னிடம் இருந்தததே! நீ சிறு வயதில் அரண்மனை யானைகளுக்கு, சிங்க குரலைக் கொண்டு பலமாக கர்ஜித்து அவற்றிற்கு சினமூட்டி விளையாடி மகிழ்வாயே. அது போன்ற காட்சியை இனிமேல் நான் எப்போது காணப் போகிறேன்.
உனக்கு நேர்ந்த இந்த நிலைமை தானே, நாளை உன் தந்தைக்கும் உண்டாகும் எனக் கூறி புலம்பி அழுதாள். 

★இந்திஜித்தின் மனைவியான சுலோச்சனாவிற்கும் மற்ற மனைவிமார்களும், மரணித்த இந்திரஜித்தைக் கண்டு கதறி அழுதனர். இலங்கையில் உள்ள அரக்கர்கள் அனைவரும் இந்திரஜித் மாண்ட செய்தியை அறிந்து கதறி அழுதனர். ராவணன் இவற்றை எல்லாம் கண்டு மிகவும் கோபம் கொண்டான். உடனே அவன் இவ்வளவு துன்பத்திற்கும் காரணம் சீதை தான். இவளால் தான் இவை அனைத்தும் நடந்தது. நான் இப்பொழுதே சீதையை வெட்டி வீழ்த்துகிறேன் எனக் கூறிக் வாளை உருவிக் கொண்டு அசோக வனத்தை நோக்கிச் சென்றான்.

★ராவணனை தடுக்க அவனது மந்திரிமார்களும், ராவணனின் மனைவிமார்களும் எவ்வளவோ முயற்சித்தும் முடியாமல் போயிற்று. ராமரைப் பற்றிய  சிந்தனையில் இருந்த சீதை, தன்னை நோக்கி ராவணன் கத்தியுடன் கோபமாக வருவதை பார்த்ததும் ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது என்று புரிந்து கொண்டாள். ராவணனின் மகன்கள் இல்லையென்றால் தம்பிகள் யாராவது ராம லட்சுமணர்களால் கொல்லப் பட்டிருப்பார்கள் என்பதை யூகித்த சீதை தன்னை கொன்று விடப்போகிறானோ என்று சந்தேகத்துடன் நின்றாள். 

★அப்போது அங்கு வந்து சேர்ந்த ராவணனின் ஆலோசகனும் அமைச்சருமான சுபார்ச்வன் ராவணனை தடுத்தான். அரசே!வேதத்தை ஓதி சகல விதமான வித்தைகளையும் நன்கு கற்று, உலகத்தையையே வென்ற உங்களுக்கு நிகர் யாரும் இல்லை. இவ்வளவு வலிமை வாய்ந்த நீங்கள் ஒரு மானிடப் பெண்ணை கொன்று, அதனால் எற்படும் தோஷத்தையும், அவமானத்தையும் பெற்றுக் கொள்ளாதீர்கள். உங்களை வெல்ல யாராலும் முடியாது. உங்களது கோபத்தை ராமரின் மீது காண்பியுங்கள். இன்று இரவு தாண்டியதும் நாளை அமாவாசை ஆரம்பிக்கிறது. நமக்கு உகந்த நாள். இன்று ஒரு நாள் பொறுத்திருங்கள். 

★பிரம்மா உங்களுக்கு கொடுத்த கவசத்தை இது வரை நீங்கள் உபயோகித்ததில்லை. நாளை அதனை உபயோகித்து, அந்த யுத்தத்திற்கு சென்று, உங்களது கோபத்தை வனவாசிகளான 
ராம லட்சுமணர்களின் மீது காண்பியுங்கள். நீங்கள் அணிந்திருக்கும் பிரம்மாவின் கவசத்தை மீறி அவர்களின் அம்பு உங்கள் உடலை நிச்சயம் துளைக்காது. உங்களின்  வலிமையை உபயோகித்து அவர்களை அழித்து விடுங்கள். உங்களது புகழ் மேலும் பெருகும். உங்களுக்கு சீதை கிடைத்து விடுவாள் என்று சுபார்ச்வன் யோசனை தெரிவித்தான். ராவணன் சிறிது நேரம் யோசித்து, நீங்கள் சொல்வது சரியான யோசனை என்று தனது சேனைத் தலைவர்களை அழைத்தான்.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.

நாளை.........................
ஶ்ரீராம காவியம்
~~~~~
284/18-01-2022

மூலபல படைகள்..

★சீதையை கொல்வதில் இருந்து
அவனைத் தடுத்த அமைச்சனான சுபார்ச்சுவன், அச்செயலால் நம்மீது பழிதான் வரும் என்றும், எல்லா உலகிலும் உள்ள அரக்கர்களைத் திரட்டி ராமனை வெல்லும் வழி காணுவோம் என்றும் கூறினான். ராவணன் தன் ஏவலாட்களிடம் உலகில் உள்ள அரக்கர்கள் அனைவரும் இங்கு வர வேண்டும் என கட்டளையிட்டான். ராவணனின் கட்டளைப்படி உலகில் உள்ள அரக்கர்கள் இலங்கையை வந்தடைந்தனர்.

★இந்த அரக்கர்களின் சேனை, மூலபல சேனை என்றழைக்கப்  பட்டது. பூமிக்கு மேலே உள்ள ஏழு உலகிலும் கீழே உள்ள ஏழு உலகிலும் உள்ள அரக்கர்கள் அனைவரையும் கொண்டது இந்தச் சேனை. அவர்கள் அனைவரையும் அழைப்பு அனுப்பி, சுபார்ச்சுவன் இலங்கை வரவழைத்தான். அந்த கொடிய  சேனையில் சாகத்தீவினர், குசைத்தீவினர், இலவத் தீவினர், அன்றில் தீவினர், மலையத்து அரக்கர், பவளக்குன்றினர், கந்தமாதானத்தோர்,மலையசுரர், புட்கரத்தீவினர், இறலித்தீவினர், பாதாளத்தில் வாழ்பவர்கள் என்று பல பிரிவினர் இருந்தனர். 

★ராவணனின் தூதர்கள், அங்கு வந்து ராவணனுக்கு படைகளை அறிமுகம் செய்தனர். இவர்கள் சாகத் தீவினர், இவர்கள் குசைத் தீவினர் என அங்கு வந்த ஆயிரம் ஆயிரம் படைகளை அறிமுகம் செய்தனர். இவர்கள் எல்லாம்  ஒனறு சேர்ந்து மேரு மலையை தூள்தூளாக்குவர். இவர்களால் முடியாத செயல் என்பது எதுவும் கிடையாது என்றனர். மகிழ்வுடன் 
அவர்களைக் கண்ட ராவணன் அவர்களது எண்ணிக்கை என்ன  என்று சுபார்சுவனிடம் கேட்டான். 

★அந்த அரக்கர் சேனையை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் அடக்க இயலாது என்று மற்றொரு அமைச்சனான மகோதரன் பதிலுரைத்தான். சரி, ஆட்களைத்தான் எண்ண முடியவில்லை, வந்திருக்கும் படைத்தலைவர்களையாவது அழைத்து வாருங்கள் என்று ராவணன் தன் தூதர்களை அனுப்பி அந்தச் சேனையின் தலைவர்கள் எல்லாரையும் தருவித்தான். அதன் பின் ராவணன் அந்த மூலபலப் படைத் தலைவர்களை அழைத்து, இப்போர் ஏற்பட்டதற்கான காரணத்தை மிக விவரமாக கூறினான். 

★அவனுக்கு சீதை மீது ஏற்பட்ட காதலை பற்றியும் கூறினான். அவர்களிடம் ராம,லட்சுமணர் பற்றியும், வானரவீரர்களை வெல்ல வேண்டிய காரணத்தைக் கூறியதும், அவர்கள் வெடிச் சிரிப்புச் சிரித்தனர். எங்களை நீங்கள்  கூப்பிட்டது  உலகை ஆதிசேஷனின் தலைமேல் இருந்து எடுக்கவோ, ஏழு மலைகளை வேரோடு பிடுங்கி எறியவோ, கடலை எங்களின் உள்ளங்கையில் ஏந்திக் குடிக்கவோ என்று பார்த்தால், போயும் போயும் மலர்களோடு இலைகளை உண்டு தின்னும் குரங்குகளைக் கொல்லச் சொல்கிறாயே என்று அவர்கள் ஆத்திரப்பட்டனர். அப்படைத் தலைவர்கள், மனிதர்களிடமும், வானரங்களிடமும் போரிடவா எங்களை அழைத்தீர்கள் என்றனர். 

★அப்பொழுது வன்னி என்னும் தலைவன், அந்த மனிதர்கள் யார்? உங்களை காட்டிலும் அவர்கள் வலிமையானவர்களா? எனக் கேட்டான். அதைக்கேட்ட மாலியவான்,  வானரங்கள் என்று அலட்சியம் செய்யாதீர்கள். அவர்களில் ஒருவன் இங்கு வந்து அசோக வனத்தை அழித்து, இலங்கை நகரையும் தீமூட்டிவிட்டு சென்றுவிட்டான். 
அது மட்டுமின்றி சக்தி ஆயுதத்தால் வீழ்ந்தவர்களை சிறு பொழுதில் சஞ்சீவி மலையைக் கொண்டு வந்து அவர்களை உயிர்பித்துவிட்டான். மேலும்  அந்த ராமன் என்பவன் திருபாற்கடலை கடைந்த வானர வாலியைக் கொன்றவன் என்று அவர்களிடம் கூறினான். இதில் இருந்து விடுபட ஒரே வழி சீதையை விடுவிப்பது தான் என்றான். 

★ஆனால் அதற்கு வன்னி, அரசனின் தம்பிகளும், மகன்களும் மாண்டபின் அந்த சீதையை விடுவிப்பது தவறு. எல்லா எதிரிகளையும் வென்று காண்பிப்பது தான் சிறந்தது என்றான். பிறகு அவன் அரசன் ராவணனைப் பார்த்து, அரசே!வேந்தனே! இவ்வளவு நடந்த போதிலும் தாங்கள் எதற்காக  போருக்குச் செல்லவில்லை எனக் கேட்டான். அதற்கு ராவணன் முதல் நாள் போரில் தோற்றதைக் கூறாமல், எனக்கு மனிதர்கள் மீதும், குரங்குகள் மீதும் போர் செய்ய கேவலமாக இருந்தது என்றான். 

★அதன்பிறகு ராவணன், ராம, லட்சுமணர்களின் வீரத்தைப் பற்றியும், அனுமன் முதலிய வானரர்களின் வலிமையைப் பற்றியும் விளக்கிக்கூற அவர்கள் போருக்குச் செல்வதாக  முடிவெடுத்தனர்.அந்தச் சேனா வீரர்களிடம் நீங்கள் ராம, லட்சுமணர்களை அழியுங்கள், நான் வானர சேனையை ஒரு கை பார்க்கிறேன் என்று  கூறினான். பிறகு படைத் தலைவர்கள், நாங்கள் செல்கிறோம். இன்றுடன் போர் முடிந்துவிட்டது என எண்ணிக் கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டு சென்றனர். பிறகு ராவணன் அங்கிருந்துச் சென்று அரண்மனையின் கோபுரத்தின் மேல் நின்று அரக்கர்களின் எண்ணிக்கையை பார்த்தான்.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.

நாளை..... ..
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
285/19-01-2022

மூலபலப்படைகள் 2

★கலங்கிய ராவணன், அவசரக் காலங்களில் தனது நாட்டைப் பாதுகாப்பதற்காக வைத்திருந்த மூலபல சேனையைப் போருக்கு அழைத்து வந்தான். போருக்குச் செல்ல படைகள் தயாராயின. அந்தப் படைகள் மூலபலப்படை, கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை, பகைப்படை என்பவையாகும். இவற்றில் மூலபலப்படையே தொன்மையானது என அவர்கள் நாங்களே முதலில் செல்கிறோம் எனக் கூறிவிட்டுச் சென்றனர். 

★இருபுறமும் கூரான நீண்ட வாள்களை ஏந்திக்கொண்டு அவர்கள் யுத்த களத்துக்குள் நுழைந்தார்கள்.மழைக்காலத்துக்கரையான் புற்றிலிருந்து, அந்தக் கரையான்கள் வரிசையாக வெளி வருவது போல இலங்கை கோட்டையிலிருந்து அவர்கள் வானர சேனையை நோக்கி வரத் தொடங்கினார்கள். வரும்போதே அவர்கள்  யானைகளையும், குதிரைகளையும், தேர்களையும் மிதித்து நசுக்கிக் கொண்டு நடந்து வந்தார்கள். அந்த அரக்க சேனையின் தொடக்கத்தை எல்லோராலும் காணமுடிந்ததே தவிர, அதன் முடிவு கண்ணுக்கு எட்டவில்லை. 

★மூலபலப்படையைக் கண்ட வானரங்கள் பயந்து ஓடிச் சென்று  ஒளிந்தனர். நீலனும், அங்கதனும் வானரங்களை தடுத்து நிறுத்தி யாரும் பயப்பட வேண்டாம் எனக் கூறினர். அதற்கு வானரங்கள், அங்கே பாருங்கள்! அங்கு வருபவர்கள் எல்லாம் அசுர சேனைகள். உலகத்தை அழிக்கும் ஆற்றல் படைத்தவர்கள். இவர்களுடன் போர் புரிய ஆயிரம் ராமர் வந்தாலும், லட்சுமணன் வந்தாலும் முடியாது. நாம் உயிர் வாழ்வதற்கு மலைகளும், குகைகளும் உள்ளது. பசியாற காய், கனிகள் இருக்கிறது எங்களுக்கு அது போதும் என நடுநடுங்கக் கூறினார்கள்.

★அதைக் கேட்ட ஜாம்பவான் யாரும் பயம் கொள்ளாதீர்கள். நம்மைத் தாக்க வருபவர்கள் அனைவரும் அரக்கர்கள். ஈவு இரக்கம் என்பது இல்லாதவர்கள்.  அதற்காக போரிடாமல் இருக்க முடியாது என்றான். அங்கதன், ஜாம்பவானை பார்த்து! மதிநலம் மிக்கவரே! பெரியவர் தாங்களும்  இவர்களை கண்டு அஞ்சலாமா? நம்முடன் இருப்பவரான ஶ்ரீராமர்  சாதாரணமான ஒரு மனிதன் என்று எண்ணுகிறீர்களா? நமது இந்த உலகத்தையே ஆளும் பரம்பொருளே இங்கு ஒரு மனிதனாக வந்திருக்கிறார் அல்லவா? நம்மை காக்க ராமரின் கோதண்டம் இருக்கிறது. அவர் நிச்சயம் இந்த அசுரசேனைகளை வென்று காட்டுவார். அதனால் பயம் கொள்ள வேண்டாம் என ஆறுதல் கூறி இருவரும் அழைத்து வந்தனர். 

★விபீஷணன் ராமரிடம், பெருமானே! இந்த படைகள் மூலபலப்படைகள். இவர்கள் ராவணனின் கட்டளையால் இங்கு வந்துள்ளார்கள். இவர்கள் உலகத்தையே வெல்லும் அளவிற்கு மிகுந்த ஆற்றல் படைத்தவர்கள் என்றான். 
இவர்களோடு யுத்தம் செய்தால், பெரும்பாலான வானரர்கள் உயிரிழக்க நேரிடும் எனக் கணக்கிட்டான் ராமன். தனக்குத் தொண்டு செய்வதற்காக வந்த வானரர்கள் இவ்வாறு மடிவதை ராமன் விரும்பவில்லை. அதனால் அந்த மூலபல சேனையைத் தான் ஒருவனே எதிர்கொள்வது என ஶ்ரீராமன் முடிவெடுத்தான். 

★என் அன்பிற்குரிய வீரர்களே! இந்த மூலபல சேனையை நான் தனி ஒருவனாகவே போரிட்டு வெல்வேன். நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக மரக்கிளைகளில் அமர்ந்துகொண்டு நான் போர் புரிவதை, விளையாட்டை ரசிப்பதுபோல ரசித்து ஆனந்தம் அடையுங்கள். இது மன்னர் சுக்ரீவர், இளவரசர் அங்கதர், இலங்கையின் வருங்கால மன்னரான விபீஷணர், என் இளவல் லட்சுமணன் ஆகிய அனைவருக்கும் பொருந்தும். அனைவரும் பாதுகாப்பான இடத்துக்குச் சென்று அமர்ந்து கொள்ளுங்கள்!” என்றான் 

★பிறகு ராமர் லட்சுமணனிடம், தம்பி லட்சுமணா! நான் இந்த மூலபலப்படைகளை எதிர்த்து போரிட்டு அழிக்கிறேன். நீயும் அனுமனும், இந்த வானரங்கள் அனைத்திற்கும் மற்றும் அரசர்  வீபிஷணனுக்கும் துணையாக இருங்கள் எனக் கூறிவிட்டு, தன் கோதண்டத்தை கையில் எடுத்துக் கொண்டு போருக்குச் சென்றார். வானரசேனை அனைத்தும் மரக்கிளைகளில் அமர்ந்து கொண்டன. அரசர் விபீஷணனும் லக்ஷ்மணனும் மரத்தின் அடியில் கைகட்டி நின்றுகொண்டு ராமன் போரிடுவதை ரசித்தார்கள்.

★ராமர் போருக்கு செல்வதை பார்த்த தேவர்கள், ஶ்ரீராமர் ஒருவரால் இந்த அசுர சேனைகளை அழிப்பது கடினம். ராமர் நற்குணத்தில் சிறந்தவர். சிறந்த வில்லாளன். ஆனால் அரக்கர்களோ அதர்மம் செய்பவர்கள். அதர்மத்தை காட்டிலும் தர்மம் தான் வெல்லும். இப்போரில் அறம் தான் செல்லும் எனக் கூறி ஶ்ரீராமர் போரில் வெற்றி பெற வாழ்த்தினார்கள். ராமர், தன்னுடைய  வில்லின் நாணோசையை எழுப்பி அரக்கர்கள் முன் நின்றார். அரக்கர்கள் ராமரைக் கண்டு, இந்த சிறு மனிதனா நம்மை எதிர்த்து போர் புரிய போகிறான். மலை போல் பலம் கொண்ட நம்மை இந்த எறும்பு கடிக்க முடியுமா? என ஏளனம் செய்தனர். இவனை அழிக்க ஒரு நொடி போதும் என ராமர் மீது அநேக பாணங்களை ஏவினர்.

வணக்கதுடன்
நாக சுபராஜராவ்
9944110869

நாளை..................

ஶ்ரீராம காவியம்
~~~~~
286/20-01-2022

மூலபலப் படைகள் 3

★பெருங்கூட்டமாக வந்த இந்த மூலபல சேனையைக் கண்டு வானரங்கள் போர்க்களத்தை விட்டு சிட்டாகப் பறந்து விட்டன. தொண்டர்கள் என்பதற்கு மிக அருமையான  எடுத்துக்காட்டாக அப்படி இருந்திருக்கிறார்கள். ராம, லட்சுமணருடன் அனுமன், சுக்ரீவன், அங்கதன் ஆகியோர் மட்டும் உடனிருந்தனர். அரக்கர் சேனையைக் கண்டு யாரும் அஞ்சவேண்டாம் என்று கூறி அவர்களை அழைத்துவர ராமன் அங்கதனை அனுப்பினான். ஒருவழியாக அங்கதன் அவர்கள் எல்லோரௌயும் அழைத்து வந்ததும் அவர்களைக் காக்க லட்சுமணனையும் அவனுக்குத் துணையாக அனுமனையும் அனுப்பிவிட்டு, தான் மட்டும் போர்க்களத்திற்குச் சென்று மூலபல சேனையை எதிர்த்து நின்றான். 

★துணை ஏதும் வேண்டாத தோள் வலியன் அல்லவா அவன். அரக்கர்கள் ராமரைக் கண்டு, இந்த சிறு மனிதனா நம்மை எதிர்த்து இங்கு போர் புரியப் போகிறான்?. மலை போல் பலம் கொண்ட நம்மை இந்த எறும்பு கடிக்க முடியுமா? என ஏளனம் செய்தனர். ராமனின் வில் எழுப்பிய ஒலியைக் கண்டு அச்சமுற்ற அரக்கர்கள், அவன் தனியே வந்து நின்ற அழகான கோலத்தைக் கண்டு மிகுந்த ஆச்சரியப்பட்டனர். ராமன் கையில் வில்லுடன் தனி ஒருவனாக நிற்கும் அந்தப் பெரிய மைதானத்துக்குள், நுழைந்த மூலபல சேனை  ராமன் மேல் பாய்ந்தது.

★இவனை அழிக்க ஒரு நொடி போதும் என ராமர் மீது அநேக பாணங்களை ஏவினர். ராமர் அப்பாணங்களை தடுத்து, கோதண்டத்தில் ஆயிரமாயிரம் பாணங்களை தொடுத்து அரக்கர்களை அழித்தார். 
முப்புரங்களை எரித்த சிவனுக்கு தேர் இருந்தது, தேவர்களுக்கும் அவர்களுக்குரிய வாகனங்கள் இருந்தன, விஷ்ணுவுக்கு கருடன் வாகனமாக இருந்தான். ஆனால் இவன் மட்டும் தனியே வந்து எதிர்க்கிறானே என்று மிகவும் வியந்தனராம் அவர்கள்.தன்னை சூழ்ந்த அரக்கர் படைமீது ராமர் தனது பாணங்களைத் தொடுத்தார். 

★ராமரின் கரவேகம் மின்னலை போல் இருந்தது. அது  நொடி பொழுதில் ஆயிரம் ஆயிரம் பாணங்களை தொடுத்து  அரக்கர்களை அழித்தது. இவ்வாறு நொடியில் அநேக ஆயிரம் அரக்கர்களை கொன்று வீழ்த்தினார். மேலும் அவர்களை நோக்கி ராமன் ‘சம்மோகன அஸ்திரம்’ என்ற ஓர் அம்பைச் செலுத்தினான். அதன் சிறப்பு என்னவென்றால், அதனால் அடிபட்டவருக்குப் பார்க்கும் பொருட்களெல்லாம் அம்பை எய்தவர் போலவே தோன்றும். அதேபோல, அது பலவாகப் பெருகி அவர்களைத் தாக்கியது. 

★தாக்கப்பட்ட ஒவ்வொரு அரக்கனுக்கும் அவனைச் சுற்றி உள்ள அரக்கர்கள் அனைவரும் ராமனாகவே தெரிந்தார்கள். அதனால் ஒவ்வொரு அரக்கனும் தன்னைச் சுற்றி உள்ள அரக்கர்களை, ராமனென எண்ணி வாளால் அவர்களின் தலையை மிகக் கொடூரமாக  வெட்டத் தொடங்கினான். ராமர் ஒருவரே பல்லாயிர ராமனாக இருப்பது போன்ற தோற்றம் அரக்கர்களுக்கு ஏற்பட்டது. போர்க்களத்தில் ஒவ்வொரு அரக்கனுடனும் ராமர் நின்று போரிடுவது போன்ற தோற்றம் அரக்கர்களை நிலை தடுமாற வைத்தது. ஶ்ரீராமனின் கைவில்லின் மணி ஒலிக்கும் போதெல்லாம் அரக்கர்கள் கூட்டம் கூட்டமாக இறந்து வீழ்ந்தனர். 

★அரக்கர் கூட்டத்தில் புகுந்து அங்குமிங்கும் திரிந்து மிகுந்த வேகமாக தமது பாணங்களை ராமன் விட்டதால், அரக்கர் படை பெருமளவில் அழிந்தது. இருந்தாலும் பல்லாயிரம் வீரர்களைக் கொண்ட சேனை அணி அணியாக வந்து ராமனை எதிர்த்தது.  அந்த அரக்கர்கள்  சேனை அயராமல் வந்து வந்து தாக்கினாலும், ராமன் தொடர்ந்து கணைகளைத் தொடுத்துக் கொண்டே இருந்தார். பல்வேறு இடங்களில் தோன்றி தனது அம்புகளினால் அரக்கர்களைக் கொன்று குவித்தார்.ஒருவனாக இருந்த ராமன் இப்படி தாங்கள்   பார்க்கும் இடங்களில் எல்லாம் தோன்றுவதைக் கண்டு குழப்பமடைந்த அரக்கர்களும் தங்களையே ஒருவருக்கொருவர் வெட்டிக்கொன்று அழிந்தனர். இப்படியாக மூலபல சேனை முற்றிலுமாக அழிந்தது. 

★ராமனின் வில்லில் ஒரு மணி கட்டப்பட்டிருக்கும். ராமருடைய கோதண்டத்தில் பதினாறு தங்க மணிகளும், பதினாறு கவந்த மணிகளும் ஆக மொத்தம் முப்பத்திரண்டு மணிகள் தொங்க விட்டிருந்தது. ஆயிரம் யானைகள், இரண்டாயிரம் தேர்,ஐயாயிரம்  குதிரைகள், பத்தாயிரம் சேனை வீரர்கள் இறந்தால் ராமருடைய வில்லில் உள்ள கவந்த மணி ஒரு முறை ஒலிக்கும். அந்தக் கவந்த மணி ஆயிரம் முறை ஒலித்தால் பெரிய தங்கமணி பெரிய சத்ததோடு கணீரென்று ஒலிக்கும். மூலபல சேனையுடன் ராமன் போர் புரிந்தபோது தொடர்ந்து ஏழரை நாழிகைகளுக்கு (168 நிமிடங்கள்) அந்த பெரிய  மணி ஒலித்துக் கொண்டே இருந்தது. 

★அப்படியானால் எவ்வளவு தலைகள் வெட்டப்பட்டிருக்கும் என்று கணக்கிடவே முடியாதே என்கிறார் கம்பர்:

“ஆனை ஆயிரம் தேர் பதினாயிரம் அடர்பரி ஒரு கோடி
சேனை காவலர் ஆயிரம்பேர் படின் செழுமணிக் கவந்தம் ஒன்று ஆடும் கானம் ஆயிரம் ஆயிர கோடிக்குக் கவின்மணி கணீல் என்னும் ஏனை அம்மணி ஏழரை நாழிகை ஆடியது இனிதன்றே.”

அப்படியென்றால் அசுர சேனைகள் மாண்ட எண்ணிக்கையை எவ்வாறு எண்ண முடியும். ராமருடைய சக்தி வாய்ந்த போரை நாம் இந்த மூலப்படை மூலம் அறியலாம்.

★இந்த ஒரு நிகழ்சியை மிகவும் அற்புதமான ஒரு பாடலில் நமக்கு தந்தருளி உள்ளார் கர்னாடக சங்கீத பிதாமகர் என்று அழைக்கப்படும் ஶ்ரீபுரந்தரதாசர்.

" அல்லி நோடலு ராமா, 
இல்லி நோடலு ராமா,
எல்லெல்லி நோடிதரல்லி
ஶ்ரீராமசந்த்ர:" என்று ஆரம்பிப்பது தான் அந்த புகழ் பெற்ற பாடல்.

அதாவது 
அங்கு பார்த்தாலும் ராமன் இங்கு பார்த்தாலும் ராமன். எங்கெங்கு பார்த்துலும் ராமனாகவே தென்படுகின்றான். அவனுக்கு இவன் ராமனாகவும் இவனுக்கு அவன் ராமனாகவும் கண்களால் காண்கிறார்கள். உலகதில் வேறு உருவமே இல்லாதது போல அனைத்தும் ராமனாகவே கண்ணுக்குத் தெரிகிறது என்று ஆரம்பிக்கிறது அந்தப் பாடல்.

என்னே ராமனின் வில் திறம் !!
ஜெய் ஶ்ரீராம்.! ஜெய் ஶ்ரீராம்.!

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.

நாளை......................

ஶ்ரீராம காவியம்
~~~~~
287/21-01-2022

போர்க்களத்தில் ராவணன்...

★கொடிய மூலபலப் படைகள் அனைத்தும் ராமனால் அழிந்தது என்பதைக் கேட்ட  ராவணன் மிகுந்த வருத்தம் கொண்டான். என்ன செய்து எதிரிகளை வீழ்த்துவது என மனம் தடுமாறி கலங்கினான். அனைத்து சொந்தங்களும் போனபின், தான் ராமனிடம் சரணடைவது மிகக் கேவலமான செயலாகும் என்பதினால் போர்க்களம் செல்ல முடிவு எடுத்தான்.

★நாளை காலை அமாவாசை ஆரம்பித்த பின்பு  நான் போர்க் களத்திற்கு வருகிறேன். அது வரையில், நீங்கள் இருக்கும் அனைத்து படைகளையும் அழைத்துக் கொண்டு யுத்த களத்திற்கு செல்லுங்கள். ராமரையும் லட்சுமணனையும் நான்கு புறமும் சுற்றி நின்று ஆயுதங்களை அவர்கள் மீது எறிந்து யுத்தம் செய்யுங்கள். நான்கு புறமும் உங்களுடன் யுத்தம் செய்த களைப்பில் ராமர் இருக்கும் போது நான் வந்து ராமரையும் லட்சுமணனையும் அழித்து விடுகிறேன். உடனே  கிளம்புங்கள் என்று உத்தரவு இட்டான். ராவணனின் அந்த உத்தரவுப்படி அனைத்து ராட்சத வீரர்களும் யுத்த களத்திற்கு புறப்பட்டார்கள்.

★பிறகு ராவணனும் போருக்குப் புறப்பட்டான். போர்க்களத்திற்கு வந்த அந்தச் சேனையில்,  எத்தனை எத்தனை மேகங்கள் இருந்தனவோ, அத்தனை யானைகள் இருந்ததாம். அங்கு  எத்தனை ஆயிரம்  யானைகள் இருந்ததோ அவற்றிற்கு ஈடாக தேர்கள் இருந்தனவாம். உலகில் உள்ள எல்லா  நெல்மணிகளின் எண்ணிக்கைக்கு ஈடாக அங்கு குதிரைகள் இருந்தனவாம்.
ராவணன் ஒளிவீசும் தேரில் ஏறி, தேவர்களை வென்ற வில்லை கையில் ஏந்திக் கொண்டு, யானைப்படைகளும், குதிரைப் படைகளும், காலாட்படைகளும் புடைசூழ வானர வீரர்களை கொல்ல போர்களத்திற்கு வந்தான். 

★அங்கு தன் அரக்கப்படைகள் அழிவதை அறிந்து மிகவும் கோபங்கொண்டான். வானர வீரர்களும், அரக்கப்படைகளும் பெரும் ஆரவாரத்துடன் போர் புரிந்தனர். ராவணன் மிகுந்த கோபங்கொண்டு லட்சுமணனை எதிர்த்து போரிட்டான். ராவணன் ஏவும் அஸ்திரங்களை எல்லாம் லட்சுமணன் எளிதாக உடைத்து எறிந்தார். இதைப் பார்த்த ராவணன், இந்த லட்சுமணனை சாதரணமான அஸ்திரங்களை கொண்டு வீழ்த்த முடியாது என்பதை எண்ணி, தெய்வப் படைக்கலன்களை கொண்டு வீழ்த்த நினைத்தான். 

★அதனால் ராவணன் கைலாய சிவபெருமானால் உண்டாக்கப் பட்ட மோகாஸ்திரத்தை, அந்த  லட்சுமணன் மீது ஏவினான். இதைப் பார்த்த விபீஷணன், அந்தக் கணையை முறியடிக்க, லட்சுமணனை நாராயணஸ்திரம் எடுத்து அதைப் பிரயோகம் செய்யும்படி கூறினான். ஆகவே லட்சுமணனும் ஶ்ரீ நாராயண அஸ்திரத்தை பிரயோகம் செய்து மோகாஸ்திரத்தை வீழ்த்தினான். இதைக் கண்ட ராவணன், தம்பி விபீஷணன் மீது அளவில்லாத கோபங்கொண்டு அவனை வீழ்த்த நினைத்தான். 

★அதனால் அவன் தன் மனைவி மண்டோதரியின் தந்தை மயன், மண்டோதரியின் திருமணத்தின் போது தனக்களித்த திவ்யமான சூலாயுதத்தை பிரயோகிக்க  நினைத்தான். அந்த சூலாயுதம், யாரை நோக்கி பிரயோகம் செய்தாலும் அது அவர்களை கொன்றுவிட்டு திரும்ப வரும். விபீஷணனை கொல்ல ராவணன் மயன் கொடுத்த சூலாயுதத்தை அவன் மீது பிரயோகம் செய்தான். இதைப் பார்த்த விபீஷணன் இன்று நிச்சயம் இந்த சூலாயுதம் என்னை வீழ்த்தப் போகிறது எனக் கூறினான். லட்சுமணன் சூலாயுதத்தை தடுக்க பல கணைகளை ஏவினான். அவை அனைத்தும் பயனற்று போனது. 

★தங்களிடம் அடைக்கலம் புகுந்த விபீஷணனை காக்க எண்ணி, லட்சுமணன், அந்த கணையை தான் வாங்கிக் கொள்ள அரசர் விபீஷணனுக்கு முன் வந்து நின்றான். லட்சுமணனுக்கு முன் அங்கதன் வந்து நின்றான். அங்கதனுக்கு முன் சுக்ரீவன் வந்து நின்றான். சுக்ரீவனுக்கு முன் அனுமன் வந்து நின்றான். இப்படி அந்த கணையை வாங்க மாறிமாறி நின்றுக் கொண்டு இருந்தனர். சூலாயுதம் நெருங்கி வரும் நேரத்தில் லட்சுமணன் முன் நின்று அதை தன் மார்பில் வாங்கிக் கொண்டான். அந்த சூலாயுதம் லட்சுமணனின் மார்பில் பட்டு அவரது உயிரை பறித்துச் சென்றது. 

★லட்சுமணன், ராவணன் செலுத்திய சூலாயுதத்தால் அடிபட்டு  நிலத்தில் வீழ்ந்தார். லட்சுமணன் வீழ்ந்ததை பார்த்து கோபம் கொண்ட விபீஷணன், ராவணனின் தேரையும், மற்றும் குதிரைகளையும் உடைத்து எறிந்தார். ராவணன், ராமனின் இளவல் லட்சுமணன் இறந்து விட்டான், இந்தப்  போர் முற்று பெற்றுவிட்டது என நினைத்து அரண்மனைக்கு திரும்பினான். லட்சுமணனின் அருகில் சென்று விபீஷணன் கதறி அழுதான். அப்பொழுது ஜாம்பவான், அனுமனிடம், அனுமனே! நீ உடனே சென்று சஞ்சீவி மலையைக் கொண்டு வந்து லட்சுமணனை காப்பாயாக எனக் கூறினான். அனுமனும், உடனே வடக்கே சென்று சஞ்சீவி மலையைக் கொண்டு வந்து லட்சுமணனை உயிர்ப்பித்தான். 

★உயிர் பெற்ற லட்சுமணன் எழுந்ததும், விபீஷணன் நலமாக இருக்கிறானா? எனக் கேட்டார். பிறகு அனுமனை கட்டி தழுவிக் கொண்டார்.

நாளை.......................

ஶ்ரீராம காவியம்
~~~~~
288/22-01-2022

ராவணனின் குழப்பம்...

★அனைவரும் ராமரிடம், பெருமானே! அடைக்கலம் புகுந்தவரை காக்கும் பொருட்டு லட்சுமணன் உயிர் தியாகம் செய்து, பின் மீண்டும் உயிர்ப் பெற்றுள்ளார் எனக் கூறினர். இதைக் கேட்டு ராமர் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார். இளவல் லட்சுமணனின் புகழ் வானுயர ஓங்கி நிற்கும் எனக் கூறி வாழ்த்தினார். பிறகு ராமரும், லட்சுமணரும் ஓய்வு பெற சென்றுவிட்டனர். வானரங்கள் இந்த மூலப்படையை ராமர் எவ்வாறு அழித்திருப்பார் என்பதை போர்க்களத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு அரக்கர்களின் பல சேனைகள் வீழ்ந்துக் கிடப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தனர். பிறகு ராமரை நினைத்து துதித்து போற்றினர். 

★அப்போது ராவணன், நான் போரில் லட்சுமணனை கொன்று விட்டேன். ஆனால் அங்கு மூலபலப்படைகள் முழுவதும் அந்த வனவாசி ராமனால் அழிக்கப்பட்டதே என நினைத்து  மகிழ்ச்சி கலந்த துக்கத்தில் இருந்தான். இருந்தாலும் அவன் தனக்காக போர் செய்த எல்லா படைத்தலைவர்களுக்கும் விருந்து வைக்க ஏற்பாடுகள்  செய்ய நினைத்தான். உடனே அவன் ஏவலாட்களை அழைத்து, உடனே விருந்திற்கு ஏற்பாடு செய்யச் சொல்லி  கட்டளை இட்டான். ராவணனின் கட்டளைக்கிணங்க ஏவலர்கள் மிகச் சுவையான பண்டங்களும், இனிப்பு வகைகளும், வகை வகையான குளிர் பானங்களும் நிரப்பி வைத்தனர். அங்கு அரண்மனையில் ஆடலும், பாடலும் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு இருந்தது. 

★ராமன், லட்சுமணன் மாண்டச் செய்தியை அறிந்து, அவனும் வீழ்வான் என நினைத்து மிகவும் மகிழ்ந்தான் ராவணன். அந்தச் சமயத்தில்  சில  தூதர்கள் அங்கு வந்து, அரசே! போரில் தாங்கள் வீழ்த்திவிட்டு வந்த லட்சுமணன் உயிர் பெற்றான். அனுமன் சஞ்சீவி மலையைக் கொண்டு வந்து உயிர்ப்பித்து விட்டான் எனக் கூறினர். இதைக் கேட்டு ராவணன் அதிர்ச்சி அடைந்தான். மிகவும் கோபம் கொண்டான். உடனே அவன் கோபுரத்தின் மேல் நின்று மூலபலப்படை முழுதும் அழிந்ததை பார்த்தான். இனி என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றான். மனம் குழம்பிய நிலையில் ராவணன் மந்திர ஆலோசனை மண்டபத்திற்கு சென்றான். 

★அங்கு ராவணனின் பாட்டன் மாலியவான் அவனைப் பார்த்து, ராவணா! இப்போதாவது நான் சொல்வதைக் கேள். சீதையை ராமனிடம் கொண்டுச் சென்று ஒப்படைத்துவிடு. இது தான் உனக்கு நலம். உன்னால் இந்த அரக்க குலம் அழியும் படி செய்து விடாதே. இப்பொழுதாவது விபீஷணன் கூறியதை மனதில் நினைத்துப் பார். அந்த மகாசக்தி பரம்பொருளே மண்ணுலகில் ராமனாக அவதரித்துள்ளான். இனியும் அதர்மச் செயலை செய்யாதே என அறிவுரைக் கூறினான். இதைக்கேட்டு ராவணன் மாலியவான் மீது கோபம் கொண்டான். 

★பிறகு அவன் மகோதரனிடம், இன்னும் நம்மிடம் எஞ்சி இருக்கும் அரக்க சேனை படைகளை போருக்குத் தயாராக இருக்கும்படி கட்டளையிட்டான். ராவணனின் கட்டளைப்படி அரக்கப் படைகள் போருக்கு தயாராக இருந்தன. கும்பானு மற்றும் சுபாரிகன் ஆகிய இரு அரக்கப் படைத் தலைவர்களை அழைத்து , உங்கள் இருவரின் மேலும் மிகுந்த நம்பிக்கை கொண்டு இருக்கிறேன். நீங்கள் இருவரும் யுத்த களத்திற்கு சென்று, அந்த ராமனையோ அல்லது அவன் தம்பியான லட்சுமணனையோ அல்லது அந்த வானரத் தலைவர்களில் ஒருவரையாவது கொன்று ஒழித்து என் செவிகளுக்கு விருந்து அளிப்பீர்கள் என நம்புகிறேன் என கூறி அனுப்பி வைத்தான்.

★ராமரையும் லட்சுமணனையும் சுற்றி நின்று தாக்கிய ராட்சத படைகளின் மீது ராமரும் லட்சுமணனும் அம்பு மழையாகப்  பொழிந்து அவர்களை  கொன்று குவித்தார்கள். மழை போல் வந்த அம்புகளுக்கு நடுவில் ராமரை ராட்சதர்களால் சிறிதும் காண இயலவில்லை. ராட்சதர்கள் தங்களுடன் வந்தவர்கள் ராமரின் அம்புகளால் இறப்பதை பார்த்து பயத்தில் கலங்கி நின்றார்கள். கும்பானுவுடன் கடும்போர் புரிந்த லட்சுமணன் 
ஓர் திவ்ய அஸ்திரத்தை பயன் படுத்தி அவனை வீழ்த்தினார். மற்றொரு இடத்தில் நடந்த யுத்தத்தில் அரக்கர் தலைவன்  சுபாரூகனை தன் கதையால் அடித்தே கொன்றான் அனுமன்.

★ராவணன் உத்தரவுப்படி ஒரு நாள் கூட தாக்குப்பிடிக்க முடியாது என்று உணர்ந்த மீதியிருந்த ராட்சதர்கள் இலங்கை நகரத்திற்குள் சிதறி ஓடினார்கள். இலங்கை நகரத்திற்குள் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெண்களின் அழுகை சத்தம் எங்கும் கேட்ட வண்ணமாக இருந்தது. ராவணனின் அகங்காரத்தினால் அனைவரும் உயிரை  இழந்து விட்டார்களே என்று ராவணனை தூற்றியபடி, ராட்சத பெண்கள் ஒருவருக்கொருவர் கூக்குரலிட்டு அழுது புலம்பினார்கள்.

நாளை.....................

ஶ்ரீராம காவியம்
~~~~~
289/23-01-2022

மகோதரனும் மறைந்தான்...

★ராமர் அனைத்து ராட்சதப் படைகளையும் வெற்றி கொண்டார். கும்பானுவை லட்சுமணனும், சுபாரிகனை அனுமனும்  வதைத்தனர். அதனால் பல ராட்சதர்கள் பயத்தில் சிதறி ஓடி விட்டார்கள் என்று ராவணனிடம் செய்தியை தெரிவித்தார்கள். இலங்கை நகரம் எங்கும் பெண்களில் அழுகுரல் ராவணனின் காதில் விழுந்தது. கோபமும் கவலையும் சேர்ந்து ராவணனை நிலை குலைய வைத்தது. இறுதியில் சிறிது தெளிவடைந்தவனாக தானே யுத்தத்திற்கு கிளம்பினான்.

★மகோதரன், மகாபார்சுவன் என்ற இரு ராட்சதர்களை தனது படைக்கு தளபதியாக்கினான். யுத்தத்தில் உயிர் பிழைத்து மீதி இருக்கும் ராட்சத படைகளை யுத்தத்திற்கு கிளம்புமாறு ராவணன் கட்டளையிட்டான். அரசனின் கட்டளையை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் ராட்சதர்கள் இருந்தார்கள். யுத்தத்திற்கு சென்றால் ராமரால் மரணம், செல்லா விட்டால் ராவணன் கொன்று விடுவான். ராட்சதர்கள் எப்படியாவது தங்களின் உயிரை பாதுகாத்துக் கொள்ள பயத்தில் மிகவும் நடுங்கிய படியே காப்பு மந்திரங்களை வெளியில் யாருக்கும் கேட்காதபடி உச்சரிக்க தொடங்கினார்கள். 

★ராவணன் நீராடி சிவபூஜை செய்தான். பிறகு தன்னிடமிருந்த விலையுயர்ந்த பொருட்கள், ஆடை ஆபரணங்கள் ஆகிய எல்லாவற்றையும் தான தர்மம் செய்தான். ராவணன், ரத்தின கவசம் கட்டி, அம்புறாத் துணியை தோளில் கட்டி, வில்லை கையில் ஏந்திக் கொண்டு சூரியனைப் போல் ஒளி வீசும் தேரில், காற்றை விட வேகமாகச் செல்லும் குதிரைகளைப் பூட்டி, அதில் போருக்குத் தேவையான வாள், சூலம் முதலிய கொடிய ஆயுதங்களை வைத்து, அந்தத் தேருக்கு மலர்களால் பூஜித்து வழிபாடு செய்தான். அரசன் இலங்கேசன் ராவணனுடைய பத்து தலைகளும் மிக அழகிய  ரத்தினங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தன. 

★ராவணன், தன் கணவனை நினைத்து இன்று சீதை அழ வேண்டும். அப்படி இல்லை என்றால் மண்டோதரி அழ வேண்டும். இவ்விரண்டில் ஒன்று இன்று நடந்தே தீரும் எனக் கூறிவிட்டு சிங்கத்தைப் போல் தேரில் ஏறி போர்களத்திற்குச் சென்றான். ராவணனுடைய கோபத்தைக் கண்டு தேவர்கள் இன்று போரில் என்ன நிகழப் போகிறதோ என கதிகலங்கி இருந்தனர். ராவணன் தனது தேரில் ஏறி யுத்த களத்தை நோக்கி இலங்கை நகரத்தின் வடக்குவாசல் வழியாக வெளியே வந்தான். 

★அப்போது சூரியனை மேகம் மறைத்தது. அழகிய பறவைகள் கொடூரமாக கத்தத் தொடங்கின. காட்டு நரிகள் தொடர்சியாக ஊளை இடும் சப்தம் காதைப் பிளந்தது. போர் குதிரைகள் நடக்கும் போது இடறி விழுந்தன. ராவணனின் தேரின் கொடியில் கழுகு வந்து அமர்ந்தது. அரசன் ராவணனுக்கு தனது இடது கண்கள் துடித்து, எங்கும் அபசகுனங்கள் தெரிந்தது. தனது அறிவு மயக்கத்தாலும், அகங்காரத்தினாலும் எதனையும் பொருட்படுத்தாத ராவணன், யுத்த களத்திற்கு தொடர்ந்து முன்னேறிச் சென்றான்.

★ராவணன் போருக்கு விரைந்து வருவதைக் கண்ட விபீஷணன் ராமரிடம் சென்று ராவணன் போருக்கு வந்துக் கொண்டு இருக்கிறான் எனக் கூறினான். மேலும் ராமரிடம், விபீஷணன் யுத்தத்தின் இறுதிக்கு வந்து விட்டோம், ராவணன் இன்று யுத்தத்திற்கு வந்து விட்டான். இப்போது அவனை வெற்றி கொண்டால், இன்றோடு யுத்தம் நிறைவு பெற்று விடும். இன்றே நீங்கள் சீதையை மீட்டு விடலாம் என்றான். இதனை கேட்ட ராமர் இதற்காக தான் இத்தனை நாட்கள் காத்திருந்தேன். எனது முழு வல்லமையையும் இன்று பயன்படுத்தி அந்த ராவணனை கொன்று விடுவேன் என்று ராமர் யுத்தத்திற்கு தயாரானார். 

★ராவணன் யுத்தத்திற்கு வந்து கொண்டு இருக்கிறான் என விபீஷணன் சொன்னதைக் கேட்டு வானரங்கள் பயத்தால் நடுநடுங்கிப் போயினர். ராமர் வானரங்களிடம் கருணையுடன், வீரர்களே! தாங்கள் பயப்பட வேண்டாம். இன்று ராவணனின் வதம் நிகழும். ஆதலால் நீங்கள் அனைவரும் துன்பத்தில் இருந்து மீள்வீர்கள் எனக் கூறிவிட்டு போர்க்களம் புகுந்தார். யுத்தம் ஆரம்பித்தது. கடுமையான யுத்தத்தில் சுக்ரீவன் அரக்கன் மகோதரனையும், அங்கதன் மகாபார்சுவனையும் கொன்று ஒழித்தார்கள். அந்த இரண்டு தளபதிகளும் இல்லாமல், வழிகாட்ட தலைமை இல்லாமல் யுத்தம் செய்ய ராட்சத படைகள் திணறினார்கள். 

★இதனை கண்ட  ராவணன் எனது மகன்கள், எனது உடன் பிறந்தவர்கள், எனது நெருங்கிய உறவினர்கள், என்னுடைய படைகள் என அனைவரையும் அழித்த ராமனை இன்று அழித்து விடுகிறேன் என்று கோபத்தில் கத்தினான். தனது தேரை ராமர் இருக்குமிடத்திற்கு ஓட்டிச் செல்ல தேரோட்டியிடம் உத்தரவு இட்டான். இடையில் எதிர்த்து வந்த எல்லா  வானரங்களையும் பிரம்மா  கொடுத்த  தாமஸ என்னும் ஆயுதத்தால் கொன்று குவித்தபடி ராமரை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தான் ராவணன். பிரம்மாவின் ஆயுதத்தை எதிர்க்க முடியாமல் வானரங்கள் சிதறி ஓடினார்கள்.

நாளை.......................
ஶ்ரீராம காவியம்
~~~~~
290/24-01-2022

தேவர் உலகத்து தேர்...

★ராமர் இருக்கும் இடத்திற்கு முன்னேறிச் செல்ல விடாமல் இடையில் ராவணனை அவன் தம்பி விபீஷணன் தடுத்தான். ராவணன் மற்றும் விபீஷணன் ஆகிய இருவருக்கும் இடையே   மிகக் கடுமையான யுத்தம் ஆரம்பித்தது. இருவரும் ராட்சத பரம்பரையை சேர்ந்தவர்கள். இருவரும் வலிமையானவர்கள். இருவருக்கும் நடந்த யுத்தம் கடுமையாகவும் கோரமாகவும்  இருந்தது. ராவணனின் அம்புக்கு சரியான பதிலடி கொடுத்தான் விபீஷணன். ராவணன் தனது அஸ்திரங்களை விபிஷணன் மீது வேகமாக  உபயோகப்படுத்த ஆரம்பித்தான். 

★விபீஷணன் உயிருக்கு ஆபத்து வர இருப்பதை கண்டு உணர்ந்த லட்சுமணன்,  ராவணனின் கொடிய அஸ்திரங்களுக்கு பதில் திவ்ய அஸ்திரத்தை தொடுத்து விபீஷணனை காப்பாற்றினான். இதனை கண்ட ராவணன் உனது அஸ்திரத்தால் விபீஷணனை காப்பாற்றி விட்டாய். ஆனால் இப்போது விபீஷணனுக்கு பதில் நீ உயிரை விடப்போகிறாய் என்று கூறி லட்சுமணனுடன் யுத்தம் செய்ய ஆரம்பித்தான். லட்சுமணனுக்கும் இலங்கேசன் ராவணனுக்கும் யுத்தம் மிகக் கடுமையாக நடந்தது. இறுதியில் ராவணன் அனுப்பிய ப்ருத்வி  என்னும் அஸ்திரமானது இளவல் லட்சுமணனை  மயக்கமுறச் செய்தது.. 

★வலிமையான அஸ்திரத்தால் அடிபட்டு விழுந்த லட்சுமணன் தொடர்ந்து யுத்தம் செய்ய இயலாமல் பூமியில் விழுந்தான்.
ராமர், லட்சுமணன் வீழ்ந்து கிடப்பதை கண்டதும் பதைத்தார். சுக்ரீவனிடமும் அனுமனிடமும் லட்சுமணனை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக அவனுடனேயே இருங்கள் என்று உத்தரவிட்டார். 
ராமர் லட்சுமணனின் உடலில் இருந்த அம்பை எடுத்து, அவன் காயத்திற்கு தேவையான மூலிகைகளை எடுத்து வருவாறு அனுமனுக்கு உத்தரவிட்டார். அனுமன் மூலிகையை எடுக்க விரைந்து சென்றார். மூலிகை வந்ததும் சரியான படி அதை உபயோகித்து லட்சுமணனை பழைய நிலைக்கு கொண்டு வந்து விடுங்கள் என்று ஜாம்பவானிடமும் சுக்ரீவனிடமும் சொல்லிய ராமர், ராவணனை நோக்கி முன்னேறிச் சென்றார்.

★ராமருக்கும் ராவணனுக்கும் நடக்கும் யுத்தத்தை பார்க்க தேவர்களும் கந்தர்வர்களும் முனிவர்கள் பலரும் வந்தார்கள். ராமருக்கும் ராவணனுக்கும் இடையே கடுமையாக சண்டை நடந்தது. ராவணன் தனது தேரில் இருந்து ராமரை சுற்றிய வண்ணம் தனது வலிமையை காட்டி யுத்தம் செய்தான். ராமர் கீழே நின்றபடி ராவணனுக்கு இணையாக யுத்தம் செய்தார். அப்போது வானத்தில் இருந்து நவரத்தினங்கள் மின்ன, தங்கத்தினால் செய்யப்பட்ட பிரகாசமாக ஜொலித்துக் கொண்டு ஒரு தேர் வந்து ராமரின் முன்பாக நின்றது.

★அங்கு விண்ணுலகத்தில் சிவபெருமான் தேவர்களை அழைத்து, இன்று இந்தப் போர் முடிந்துவிடும். ராவணன் இன்று மாள்வான். அதனால் ராமருக்கு, இந்திரனின் தேரைக் காட்டிலும் நிகரில்லாத வெற்றி பொருந்திய தேரை அனுப்புங்கள் என பணித்தார். இந்திரன் உடனே ஒரு தேரை தயார் செய்தார். அத்தேரை அனைத்து தேவர்கள்  வணங்கி, இப்போரில் வெற்றி காண்பாயாக எனக் கூறி அதை வாழ்த்தி அனுப்பினர். அத்தேரை இந்திரனின் தேர்பாகனான மாதலியிடம் கொடுத்து ராமருக்கு அனுப்பினர். அந்தத் தேர்தான்  ராமரின் முன்வந்து நின்றது. ராமர் அத்தேரை கண்டு திகைத்து நின்றார்.

★திடீரென தன்முன் வந்து நின்ற தேரைக் கண்டதும் திடுக்கிட்ட 
ராமர் இது ராவணனின் மந்திர மாயமாக இருக்குமோ என்று சிந்திக்க ஆரம்பித்தார். ராமர், அத்தேரை பார்த்து இது நிச்சயம் அரக்கர்களின் மாயமந்திர  வேலையாகத்தான்  இருக்கும்
என நினைத்தார். ராமர், மாதலியை பார்த்து, நீ யார்? உன் பெயர் என்ன? எனக் கேட்டார்.
அப்போது தேரின் சாரதி ராமரை வணங்கி நின்று அவரிடம் பேச ஆரம்பித்தான். 

★மாதலி, ராமரை வணங்கி, என் பெயர் மாதலி. நான் இந்திரனின் தேர்ப்பாகன். சிவபெருமானும், பிரம்ம தேவனும் கட்டளையிட, இந்திரனால் அனுப்பப்பட்ட தேர் இது. அத்தேரின் தேர்பாகன் நான் என்றான். பிறகு அத்தேரில் பூட்டியிருந்த குதிரைகள், மாதலி கூறிய அனைத்தும் உண்மையே என வேத மொழிகளால் உறுதி செய்தன. இந்த தேர் தாங்கள் ராவணனை எதிர்த்து யுத்தம் செய்வதற்காக தேவேந்திரன் அனுப்பியுள்ளான். இந்த தேரில் தங்களுக்கு தேவையான அனைத்து ஆயுதங்களும் உள்ளது. தேவேந்திரனின் தோல்வி என்பதை அறியாத சக்தி அஸ்திரமும் உள்ளது. இந்த தேரில் அமர்ந்து ராவணனை எதிர்த்து யுத்தம் செய்து அவனை கொன்று வெற்றி பெறுங்கள் என்று கேட்டுக்கொண்டான். 

★பிறகு விபீஷணன் அங்கு வந்து, அத்தேரை உற்று நோக்கினான். ராமர், அனுமன், லட்சுமணன்,  விபீஷணனை பார்த்து இதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் உள்ளதா? எனக் கேட்டார். அவர்கள் பெருமானே! இதில் சந்தேகப்பட ஒன்றும் இல்லை. இது இந்திரன் அனுப்பிய தேர் தான் என்றனர். 
பிறகு ராமர் இந்திரனின் தேரை வலம் வந்து வணங்கி தேரில் ஏறி அமர்ந்தார். தேவர்கள் வாழ்த்து மழை பொழிய, ராமர் போருக்கு புறப்பட்டுச் சென்றார். 

★அத்தேர் ராவணன் முன் வந்து நின்றது. ராவணனும் தேரை விரைந்து செலுத்தி ராமர் முன் வந்து நின்றான். ராமரின் தேர், தேவர்கள் அனைவரும் சேர்ந்து கொடுத்தது என்பதை அறிந்து மிகவும் கோபங்கொண்டான். கோபத்தால் அவன் கண்கள் சிவந்தன. ராமரும், ராவணனும் போர் புரிய எதிரெதிரே நின்று கொண்டிருந்தனர்.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869

நாளை.........................

ஶ்ரீராம காவியம்
~~~~~
291/25-01-2022

ராம ராவண யுத்தம்...

★ராமரும், ராவணனும் போர் புரிய எதிரெதிரே நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது ராவணனின் மந்திராலோசனை குழுவின் ஓர் அமைச்சரான விருபாட்சன் ராமரை நோக்கி அம்புகளை ஏவினான். ராமர், அந்த அம்புகளை எல்லாம் தன் அம்புகளால் தகர்த்தெறிந்தார். பிறகு விருபாட்சனின் படைகள் ராமரை தாக்க ஓடி வந்தன. ராமர் அந்த அரக்க படைகளை அம்பு மழை பொழிந்து அழித்தார். இப்பொழுது விருபாட்சன் மட்டும் தனியாக போர்க்களத்தில் நின்று கொண்டிருந்தான். ராமர், விருபாட்சனை நோக்கி ஒரு கணையை ஏவினார். அந்த கணை விருபாட்சனின் தலையை துண்டித்துச் சென்றது.

★அரக்கன் விருபாட்சன் அந்த இடத்திலேயே மாண்டான். விருபாட்சனின் மரணத்தை கண்டு ராவணன் கடுங்கோபம் கொண்டான். அவன் கண்கள் கோபத்தால் சிவந்தது. ராவணனுடைய படைகள் ராமரை சூழ்ந்து ஓடி வந்தன. ராமர் அம்புகளால் அரக்கர்களை அழித்து கொண்டு இருந்தார்.
அப்பொழுது ராவணனுக்கு சில தீய நிமித்தங்கள் ஏற்பட்டன. ராவணின் இடது கண்ணும், இடது தோளும் துடித்தன. ராவணன் கழுத்தில் இருந்த மாலை அழுகி நாற்றம் வீசியது. இருப்பினும் ராவணன் இந்த மனிதனா? என்னை வெல்லப் போகிறான். நான் வெள்ளி மலையை அள்ளி எடுத்தவன். இந்திரனை வென்றவன் என்று அலட்சியமாக கூறி நகைத்தான். 

★ராவணன், இந்த ராமனை நான் புழுவை நசுக்குவது போல் நசுக்கி கொல்வேன் என கர்ஜனை செய்தான். உடனே ராவணன், ராமரை நோக்கி ஆயிரமாயிரம் அம்புகளை ஏவினான். அந்த அம்புகள் ராமர் இருந்த இடத்தையே மறைத்து விட்டது. இதைப்பார்த்து வானரங்கள் அஞ்சி நடுங்கினர். விண்னுலக தேவரும் இதைக் கண்டு அஞ்சி நடுங்கினர். ராவணன் தன்னுடைய  தேரை விண்னிலும், மண்னிலும் சுழன்று சுழன்று சுத்தினான்.
அதேப் போல் சாரதி மாதலியும், ராவணன் செல்லும் இடங்களில் எல்லாம் அவன் முன் தேரை நிறுத்தி அவனை நிலை தடுமாற வைத்தான். 

★இதனை கண்ட ராவணன் ராமரின் மீது கொடிய ராட்சத அஸ்திரங்களையும் நாக அஸ்திரங்களையும் தொடர்ந்து எய்து கொண்டே இருந்தான். நாக அஸ்திரம் சீறிப் பாய்ந்து ராமரின் தேரை சுற்றி வந்து நெருப்பையும் விஷத்தையும் கக்கியது.  ராமர் ராட்சத அம்புகளை சமாளித்து நாக அஸ்திரத்திற்கு நேர் எதிரான அஸ்திரமாக கருடாஸ்திரத்தை எய்தார். கருடாஸ்திரம் அனைத்து நாக அஸ்திரத்தையும் அழித்தது.
ராமர் மீது ராவணன் நொடிப் பொழுதும் இடைவிடாமல் அம்புகளை  எய்து கொண்டே இருந்தான். இதனை பார்த்த தேவர்களும் கந்தர்வர்களும் சிறிது மனக்கலக்கத்தை அடைந்தார்கள். 

★ராமர் அரக்கன் ராவணனின் அனைத்து அம்புகளையும் முறியடித்தார். ராவணன் மீது ராமரின் கோபம் சிறிது சிறிதாக அதிகரித்தது. உடனே அந்த ராவணனை அழிக்க எண்ணிய ராமரின் பலம், பராக்கிரமம், அஸ்திரங்களின் வலிமை அனைத்தும் இரண்டு மடங்காக கூடியது. தனது அஸ்திரங்களை உபயோகப்படுத்தி ராவணன் மீது அம்பு மழை பொழிந்தார் ராமர். அதனை சற்றும்  எதிர்பார்க்காத ராவணன் எதிர் தாக்குதல் நடத்த முடியாமல் கலங்கி நின்றான். ராமரின் அம்புகள் தொடர்ந்து ராவணனை துளைக்க அவமானத்தால் தலை குனிந்த ராவணன் மயக்க நிலைக்கு சென்றான். 

★அதனை கண்ட ராவணனின் தேரோட்டி, தேரை யுத்த களத்தில் இருந்து வேறு இடத்திற்கு ஓட்டிச் சென்றான். சிறிது நேரம் கழித்து கண் விழித்த ராவணன் தனது தேரோட்டி மீது மிகுந்த கோபம் கொண்டான். யுத்த களத்தில் இருந்து இத்தனை தூரமாக என்னை கொண்டு வந்து விட்டாய். நான் பயந்து ஓடி விட்டேன் என்று அனைவரும் எண்ணுவார்கள் என்று கடும் கோபத்தில் திட்டிய ராவணன், விரைவாக மீண்டும் யுத்த களத்திற்குள் செல் என்று கட்டளையிட்டான். ராவணனின் வார்த்தைகளில் பயந்த தேரோட்டி தேரை மீண்டும் யுத்த களத்திற்குள் ராமரின் முன்பாக கொண்டு சென்று நிறுத்தினான்

★ராமர் ராவணனை பார்த்ததும் யுத்தம் செய்வதற்கு தயாரானார். ராவணன் ஓர் அர்த்த சந்திர பாணத்தை ஏவி, ராமரின் தேரில் இருந்த கொடியை அறுத்து எறிந்தான். உடனே ராவணன், கொடி அறுந்ததைக் கண்டு மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தான். இதைப்பார்த்த கருட பகவான், ராமரின் தேரில் கொடியாக வந்து நின்றார். பிறகு ராமர் ஒரு சிறந்த கணையை ஏவி ராவணனின் தேரில் இருந்த வீணைக்கொடியை அறுத்து எறிந்தார். இதைப் பார்த்து கோபங்கொண்ட ராவணன், ராமர் மீது தாமதப் படையை ஏவினான். தாமதப்படை புயல், மழை, நெருப்பு என மாறி மாறி சுழன்றுக் கொண்டு இராமரை நோக்கி வந்தது. 

★ராமர், தன்னிடம் இருந்த தெய்வப் படைக்கலன்களில் மிகச் சிறந்த அஸ்திரமான சிவாஸ்திரத்தை தாமதப் படை மீது ஏவினார். தாமதப் படை சிதறி வெவ்வேறு திசையில் போய் விழுந்தது.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869

நாளை.....................

ஶ்ரீராம காவியம்
~~~~~
292/26-01-2022

ராம ராவண யுத்தம் 2...

★பிறகு ராவணன், ராமரை நோக்கி அசுராஸ்திரத்தை ஏவினான். அந்த ஒரு அஸ்திரம் உருமாறி  கோடிக்கணக்கான அஸ்திரங்களாக பிரிந்து நெருப்பு பொறியாக ராமரை நோக்கி மிக விரைவாக வந்துக் கொண்டிருந்தது. ராமர் அசுராஸ்திரத்தை, அக்னி கணையால் நொடிப்பொழுதில் பொடியாக்கினார். ராவணன் மறுபடியும், மண்டோதரியின் தந்தையும், ராவணனின் மாமனுமான மயன் கொடுத்த ஒரு சிறந்த அஸ்திரத்தை ராமர் மீது ஏவினான். ராமர், அந்த அஸ்திரத்தை காந்தர்வக் கணையைக் கொண்டு பொடிப்பொடியாக்கினார்.

★ராவணன், இந்த ராமனை சாதாரணமான அஸ்திரத்தை கொண்டு வீழ்த்த முடியாது. நான் மிகச் சிறந்த அஸ்திரத்தை ஏவி ராமனைக் கொல்லுவேன் என்றான். பிறகு ராவணன், மாயாஸ்திரத்தை எடுத்து அதனை மலர்களால் அர்ச்சனை செய்து, பிறகு சிவபெருமானை வழிபட்டு ராமர் மீது ஏவினான். அந்த அஸ்திரம் மறைந்த அரக்கர்களை, அதாவது இந்திரஜித், கும்பகர்ணன், அட்சய குமாரன், அதிகாயன், மூலப்படை முதலிய அரக்கர்கள் எழுந்து ஆரவாரம் செய்வது போல் இருந்தது. 

★இந்த அஸ்திரத்தை பார்த்து தேவர்கள், வானரங்கள் அஞ்சி நடுங்கினர். ராமர், இந்த மாயா அஸ்திரத்தை பெரியதாக பொருட்படுத்தாமல் திவ்யமான ஞானாஸ்திரத்தை ஏவினார். இதனால் மாயாஸ்திரம் இருந்த இடம் தெரியாமல் பொடியானது. மறுபடியும் ராவணன் மிகவும் பலம் பொருந்திய சூலாயுதத்தை ராமர் மீது ஏவினான். அந்த சூலாயுதம் ராமரை கொல்ல வந்து கொண்டிருந்தது. ராமர், அந்த அஸ்திரத்தை பொடியாக்க பல கணைகளை ஏவினார்.
ஆனால் அவை எல்லாமே சூலாயுதத்துக்கு முன்னால் பயனற்று போனது. சூலாயுதம் ராமரின் மார்பை நோக்கி வந்து கொண்டிருந்தது. 

★இதைப் பார்த்து வானரங்கள் திகைத்து நின்றனர். தேவர்கள் இனி ராமர் உயிர் பிழைப்பது கடினம் என கண்கலங்கி நின்றனர். பரம்பொருளான ராமர் "ம்" என்ற ஓங்கார ஒலியை மிக பலமாக எழுப்பினார். இந்த ஓங்காரத்தால் சூலாயுதம் பொடிப்பொடியாகி இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. இதைப்பார்த்த ராவணனும் ஆச்சர்யம் அடைந்தான். சக்தி வாய்ந்த சூலாயுதம் ஒரு சாதாரண மனிதனால் அழிந்து விட்டதை நினைத்து அதிர்ச்சி அடைந்தான்.

★இவன் என்ன சிவபெருமானா? அப்படி இருந்தால் இவனுக்கு மூன்று கண்களும், நீலமேகம் போன்ற நிறமுடைய மேனியும் இருக்க வேண்டும். அதனால் இவன் சிவன் இல்லை. சிவன் இல்லையென்றால் ஞானியான பிரம்மதேவனா? பிரம்ம தேவனாக இருந்தால் நான்கு முகங்களும், எட்டு கண்களும் இருக்க வேண்டும் அல்லவா? அதனால் இவன் பிரம்மதேவன் இல்லை. பிரம்மதேவன் இல்லை என்றால் இவன் திருமாலா? திருமாலாக இருந்தால் இவன் கையில் சங்கு சக்கரம் இருக்க வேண்டும் அல்லவா? அதனால் இவன் திருமாலும் இல்லை. 

★நான் பலகாலம் தவமிருந்து முயன்று பெற்ற வரங்களை எல்லாம் அழித்து விட்டான். இவன் தெய்வப்பிறவியாக இல்லாதபோது, தவம் செய்யும் முனிவனாக இருப்பானா? அப்படி இவன் ஒரு தவமுனிவனாக இருந்தால் இந்த இளம் வயதில் இவ்வளவு வலிமைகள் பெற இயலாதே. இந்த உலகத்தையே அழிக்கக்கூடிய இந்த சக்தி சூலாயுதத்தை ஒரே ஒரு பெரிய ஓங்கார ஓசையைக் கொண்டு முற்றிலும் அழித்து விட்டான். அப்படியென்றால் விபீஷணன் கூறியது உண்மை தானோ? இவன் பரம்பொருளே தான். விபீஷணன் கூறியவற்றை நான் இப்பொழுது உணர்கிறேன். சரி. இவன் யாராக இருந்தால் எனக்கென்ன? அந்த எல்லாம் வல்ல பரம்பொருளாகவே இருந்தால் தான் எனக்கென்ன? இவனை வெல்லாமல் நான் பின் வாங்க மாட்டேன் என மனதில் எண்ணினான்.
 
★அப்போது யுத்தத்தை பார்க்க வந்த முனிவர்களுள் அகத்தியர் திடீரென ராமரிடம் தோன்றி  பேச ஆரம்பித்தார். ரகசியமானதும், மிகவும் பழமை வாய்ந்ததுமான ஆதித்ய ஹ்ருதயம் என்னும் மந்திரத்தை கேட்டுக் கொள். இது உனது தைரியத்தை பல மடங்கு பெருக்கி, உனக்கு சக்தியை கொடுக்கும் என்று ஆதித்ய ஹ்ருதயம் மந்திரத்தை உபதேசம் செய்தார். சூரியனை போற்றி வழிபடும் இந்த மந்திரம் பாவங்களை அழிக்கக் கூடியது கவலையை போக்கக் கூடியது ஆயுளை வளர்க்கக் கூடியது. இந்த மந்திரத்தை மனமொன்றி கூறினால், எதிரியை சுலபமாக வெற்றி கொள்ளலாம் என்று சொல்லி ராமரை வாழ்த்தி விட்டு அங்கிருந்து மறைந்தார். 

★ராமர் சூரியனை வணங்கி ஆதித்ய ஹ்ருதயம் மந்திரத்தை ஜபித்து யுத்தம் செய்ய ஆரம்பித்தார். மந்திரத்தை ஜபித்த பிறகு மனம் மிகவும் உற்சாகமாக இருப்பதை ராமர் உணர்ந்தார். ராமருக்கும் ராவணனுக்கும் கடுமையான யுத்தம் மீண்டும் ஆரம்பித்தது. 
நூற்றுக்கணக்கான அம்புகளை ஒரே நேரத்தில் ராமர் அரக்கன் ராவணனின் மீது எய்தார். ராவணன், ராமரின்  அத்தனை அம்புகளையும் தடுத்து அவருக்கு சமமாக யுத்தம் செய்தான். வானர படைகளும் ராட்சச படைகளும் சிறிது நேரம் தங்களுக்குள்ளான யுத்தத்தை நிறுத்தி, ராம ராவணனின் யுத்தத்தை கண்டு இந்த உலகத்தில் இப்படியும் யுத்தம் நடக்குமா என்று பிரமித்து நின்றார்கள்.

குறிப்பு:-
நண்பர்களே!

மகரிஷி அகஸ்தியர் யுத்த களத்தில் ஶ்ரீராமருக்கு உபதேசித்த அருமையான ஸ்லோகங்கள் " ஶ்ரீ ஆதித்த ஹ்ருதயம் " என்றழைக்கப் படுகிறது. மனச்சோர்வையும் நோய்களையும் தீர்த்து, நமது உடலுக்கு சக்தி தரும் அபூர்வ
ஸ்லோகமாக ஆதித்ய ஹ்ருதயம் கூறப்பட்டுள்ளது. 

ராவணனோடு யுத்தம் செய்த போது சற்று அயர்ச்சியும் சோர்வும் கொண்ட ஸ்ரீராமனுக்கு, ஆக்கமும் ஊக்கமும் கொடுக்கும் வகையில், அவருக்கு முனிவர் அகத்தியர் உபதேசித்த அற்புத ஸ்லோகம் இது. ஆபத்துக் காலங்களிலும், எந்த கஷ்ட காலத்திலும், எதற்காகவேனும் பயம் தோன்றும் போதும் இந்த துதியை ஜபிக்க, மனம் புத்துணர்ச்சி பெறும், பலம் பெறும். துன்பங்கள் தூள் தூளாகும்.  பயம் விலகும். கிரகபீடைகள் நீங்கும். ஆயுளை வளர்க்கும்.

இத்தகைய ஆதித்த ஹ்ருதயம் ஸ்தோத்திரத்தை, அதன் விளக்கத்தோடு நாளை பதிவிட எணணியிருந்தேன். ஆனால் கதையின் ஓட்டத்தைக் கருதி 'ஶ்ரீராம காவியம்' முடிந்தபின் பதிவிடுகிறேன். நன்றி.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.

நாளை.....................

ஶ்ரீராம காவியம்
~~~~~
293/27-01-2022

ராம ராவண யுத்தம் 3...

★நூற்றுக் கணக்கான அம்புகள் ஒரே நேரத்தில் ராமரால் அரசன்  ராவணனின் மீது எய்தப்பட்டது. ராவணன், ராமரின்  அத்தனை அம்புகளையும் தடுத்து அவருக்கு சமமாக யுத்தம் செய்தான். வானர படைகளும் ராட்சதப் படைகளும் சிறிது நேரம் தங்களுக்குள்ளான யுத்தத்தை நிறுத்தி ராம ராவணனின் யுத்தத்தை கண்டு இந்த உலகத்தில் இப்படியும் யுத்தம் நடக்குமா என்று பிரமித்து நின்றார்கள்.பிறகு ராவணன் அரக்கர்கள் நிரம்பிய நிருதிப் படையை ஏவினான். ராமர், நிருதிப் படையை கருடப்படை கொண்டு அழித்தார். 

★பிறகு ராமர், ராவணனின் பயங்கரப் பஞ்சமுகப் படையை ஆயிரமாயிரம் கணைகளை ஏவி அழித்தார். ராமரின் இப்போரைப் பார்த்து ராவணன் தன் நிலை தடுமாறினான். இதனால் அவன் வலிமையும் குறைந்தது. பிறகு ராமர், ராவணனை நோக்கி அம்புகளை தொடுத்தார்
அக்கணைகள் ராவணனின் கவசத்துக்குள் நுழைந்து, அவன் உடலில் பலத்த காயத்தை உண்டாக்கியது. ராவணனின் உடலில் ரத்தம் ஆறு போல் வழிந்தது. சிறிது நேரத்தில் ராவணன் மயங்கி விழுந்தான். இதைக் கண்ட  ராவணனின் தேர்ப்பாகன் மறுபடியும் தேரை வேறு வழியில் திருப்பிச் சென்றான். 

★இதைப் பார்த்த மாதலி ராமரிடம், பெருமானே! ராவணனை உடனே விரைந்து கொல்லுங்கள். அவனுக்கு மயக்கம் தெளிந்துவிட்டால் அவனை கொல்வது அரிதாகும் என்றான். ராமர் மாதலியிடம், தேர்ப்பாகனே! மயக்கத்தில் இருக்கும் பகைவரை கொல்வது பாவச் செயல் ஆகும். இது ஆண் மகனுக்குரிய ஒரு வீரம் அல்ல.
அவன் விழித்து, பின் தெளிந்து இங்கே வரட்டும். அதுவரை நாம் காத்திருக்கலாம் எனக்கூறினார். இதைக்கேட்டு வானவெளியில் நின்றிருந்த தேவர்கள் மிகவும் மகிழ்ந்து ராமரின் யுத்த தர்மத்தை போற்றினர். 

★சிறிது நேரத்தில் ராவணன் மயக்கம் தெளிந்து எழுந்தான். தேர் போர்க்களத்தை விட்டு வந்திருப்பதைப் பார்த்து, தேர்ப்பாகனிடம், அடேய், மூடனே! என் வீரத்திற்கு இழுக்கு தேடி கொடுத்துவிட்டாய். தேவர்கள் என்னைப் பார்த்து கேவலமாகச் சிரிப்பார்களே. நீ எனக்கு இன்று இரண்டாவது முறையாக அவமானத்தை தேடித் தந்து விட்டாய். இனி உன்னை கொல்வது தான் சரி என்று தேர்ப்பாகனை கொல்லச் சென்றான். அப்பொழுது தேர்ப்பாகன் ராவணனை வணங்கி, அரசே! தாங்கள் வலிமை குறைந்து மயங்கி விழுந்ததால், தங்களை காக்கும் பொருட்டு நான் தேரை திருப்பி செலுத்தி வந்தேன். 

★தங்கள் உயிரை காக்கவே நான் இவ்வாறு செய்தேன். இல்லையேல் தாங்கள் மாண்டிருப்பீர்கள் என்றான். இதைக் கேட்ட பின் ராவணனின் கோபம் தணிந்தது. பிறகு ராவணன் அங்கிருந்து போர்க் களத்தை அடைந்தான். அங்கு ராமருக்கும், ராவணனுக்கும் இடையே கடும்போர் நடந்தது. ராவணன் ராமரை நோக்கி, சீறிக் கொண்டு லட்சம் கணைகளை ஏவினான். ராமர், தன்னை நோக்கி வந்த  அக்கணைகளை எல்லாம் தகர்த்து எறிந்தார். பிறகு ராவணன் அங்கிருந்து மேகத்தின் நடுவே நின்று போர் புரிந்தான். ராமரின் தேரும் மேகத்தின் நடுவே சென்று ராவணனின் முன் நின்றது. 

★ராமர் ராவணனை நோக்கி பல கணைகளை ஏவினார். அக்கணைகள் ராவணனின் உடலில் பல இடங்களில் துளைத்து வெளியே வந்தது. பிறகு ராவணன் அங்கிருந்து கீழே வந்தான். ராமரும் கீழ் இறங்கினார். ராவணன் தன்னிடம் இருந்த வாள், வேல், சூலாயுதம் முதலிய அனைத்து அஸ்திரங்களையும் ராமர் மீது ஏவினான். ராமர், ராவணனிடம் இருந்த திவ்ய அஸ்திரங்கள் அனைத்தையும் தூளாக்கினார். பிறகு ராமர் ஒரு சிறந்த கணையை ராவணன் மீது ஏவினார். அந்தக் கணை ராவணன் கழுத்தை அறுத்துச் சென்றது.

★இதைப் பார்த்த தேவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். ஆனால் அந்த தலை விழுவதற்குள், வேறொரு தலை ராவணனுக்கு முளைத்தது. பிறகு ராமர் மற்றொரு சிறந்த கணையை ஏவினார். அந்த கணை ராவணனின் கரங்களை அறுத்துச் சென்றது. அதேபோல், ராவணனின் கரங்கள் நிலத்தில் விழுவதற்குள் வேறு கைகள் முளைத்தது. மீண்டும் ராமர் ஒரு திவ்ய அஸ்திரத்தை அதற்கான மந்திரங்கள் கூறி ராவணன் மேல் செலுத்தினார். அந்த திவ்ய அஸ்திரமானது விரைந்து சென்று ராவணனின் கழுத்தை மீண்டும் அறுத்து கீழே தள்ளியது. 

★ஆனால் ராமர் ராவணனின் கழுத்தை அறுக்க அறுக்க ராவணனின் தலையானது புதிதாக வளர்ந்து கொண்டே இருந்தது. இதனை கண்ட ராமர் திகைத்து நின்றார். என்னுடைய அஸ்திரங்கள் இத்தனை நாட்களாக பல ராட்சசர்களை சுலபமாக அழித்திருக்கிறது. ஆனால் இந்த ராவணனிடம் இந்த அஸ்திரங்கள் வலிமை குன்றி காணப்படுகிறதே என்று சிந்தித்தவராக ராவணனின் அஸ்திரங்களுக்கு பதில் அஸ்திரம் கொடுத்து யுத்தத்தில் கவனத்துடன் இருந்தார். 

★ராவணன், மாதலியை நோக்கி ஒரு கணையை ஏவினான். அக்கணையால் மாதலி உடலில் இருந்து ரத்தம் கசிந்தது. 

குறிப்பு:-
பொதுவாகவே புராணங்களிலோ அல்லது இதிகாசங்களிலோ யுத்தம் சம்பந்தப்பட்ட நிகழ்சிகளை எழுதுவதோ படிப்பதோ மிகவும் கடினம். திரும்பத் திரும்ப ஒரே மாதிரி அம்புமழை பொழிந்தது, உடலில் ரத்தம் வழிந்தது என எழுதியதையே சற்று மாற்றி பல தடவைகள் எழுத வேண்டி இருக்கும். ஆனா என்ன செய்ய? இது தவிர்க்க முடியாது.

மகாபாரதம் மற்றும் ராமாயணம் ஆகிய காவியங்களில் வரும் யுத்த காட்சிகள்,அமைப்புகள் வித்தியாசமானவை. பாரதத்தில் நிறைய பாத்திரங்கள். யுத்த முறைகள் வேறுபடும். பயன் படுத்திய ஆயுதங்களும் மிக வித்தியாசமானவை. மேலும் அனைத்திற்கும் மேலாக பகவான் ஶ்ரீகிருஷ்ணன் அங்கு இருந்தார்.அதனால் யுத்தக்
காட்சிகள் விறுவிறுப்பாக இருந்தது.

ஆனால் ஶ்ரீராம காவியத்தில் ஸர்வோத்தமனான ஶ்ரீஹரியே ஶ்ரீராமராக மனித ரூபத்தில் அவதாரமெடுத்ததால் மனித தர்மத்தின்படியே நடக்க வேண்டி வந்தது. தந்தையின் சொல்லிற்கு கட்டுப்படடு வனம் செல்லும் போதும், துன்பங்கள் அதிகமாக அனுபவிக்கும் போதும், சீதை கடத்தப்பட்ட பின் தவிக்கும் போதும், வாலியை வதம் செய்யும் போதும் அதன் பின்னர் யுத்தகளத்திலும் ஶ்ரீராமர் மனிதனாக, மனித தர்மத்தோடு நடந்து கொண்டார். எந்த இடத்திலும் நான்தான் பிரம்மாண்டமான பரம்பொருள், ஸர்வோத்தமன், ஶ்ரீஹரி, மஹாவிஷ்ணு என்பதை சிறிதும் வெளிப்படுத்தவே இல்லை.

அதனால்தான் மாதா சீதையை மீட்கவும், அசுர ராவணனை கொல்லவும் சிரமப்பட்டார். மகரிஷி அகஸ்தியர் " ஆதித்ய ஹ்ருதயம்" என்னும் அற்புதமான ஸ்லோகத்தைச் சொல்லும்போது பணிவுடன் கேட்டுக் கொண்டார். 
பின் அதை உச்சரித்து சூரியனை நமஸ்கரித்து, சோர்வு நீங்கி, பலம் பெற்று ராவணனை வதம் செய்தார். இதன் மூலமாகவே மனிதர்களாகிய நமக்கு கடவுளாக இருந்தாலும் மனிதப் பிறவி எடுத்தால் மனிதர்களின் தர்மத்தைத்தான் கடைபிடிக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தை வெகுஅழகாக உபதேசிக்கிறார்.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869

நாளை......................


ஶ்ரீராம காவியம்
~~~~~
295/29-01-2022

மண்டோதரியும் மறைந்தாள்...

★ஜாம்பவான் விபீஷணனின் இந்த நிலைமையைக் கண்டு அவனின் கண்ணீரை துடைத்து ஆறுதல் கூறினான். மதிநலம் படைத்தவரே! தாங்கள் இவ்வாறு புலம்பி அழுவது அறிவுடைமை ஆகாது. இவ்வுலகில் விதியை வென்றவர் யார்? விதி அந்த ராவணனை வேரோடு அழித்து விட்டது. நீ அழுவதால் ஒன்றும் நடைபெறப் போவதில்லை. ஆதலால் நீ உன் தமையனுக்கு செய்ய வேண்டிய இறுதியான ஈமச்சடங்குகளை செய்வாயாக எனக் கூறினான். ஶ்ரீ ராமர் விபீஷணனுக்கு ஆறுதல் கூறினார். 

★இலங்கேசன் ராவணன் மூன்று உலகங்களையும் தன்னுடைய  வீரத்தினால் வெற்றி பெற்ற மகா பராக்கிரமசாலி. இந்த யுத்த களத்தில் மரணம் அடையும் இறுதி வினாடி வரை சிறிதும் பின்வாங்காமல் வீரனாக நின்று போர் புரிந்திருக்கிறான். யுத்தத்தில் வீர மரணம் அடைந்த ஒருவனைப் பற்றி சத்ரியர்கள் சற்றும் மன வருத்தம் அடைய மாட்டார்கள். இப்போது இதைப் பற்றி வருத்தப்படுவதற்கு சரியான நேரம் இல்லை. இலங்கையின் அரசனாக நீ செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய உள்ளது. அதில் உனது கவனத்தை செலுத்து என்றார். 

★அதற்கு விபீஷணன், தனது அண்ணன்  ராவணனுக்கு செய்ய வேண்டிய இறுதி காரியத்தை செய்வதற்கு தாங்கள் அனுமதி தாருங்கள் என்று கேட்டுக் கொண்டான். அதற்கு ராமர், யுத்தத்தில் நாம் விரும்பிய பலனை அடைந்து விட்டோம். பகைமை என்பது ராவணன் உயிரோடு இருந்த வரை மட்டும் தான். இறந்த பிறகு பகைமை மறைந்து விடுகிறது. எனக்கும் ராவணனுக்கும் இப்போது எந்த பகையும் இல்லை. ராவணனுக்கு உற்ற தம்பியாக இறுதி காரியம் செய்ய வேண்டிய கடமை உனக்கு உள்ளது. நீ எனக்கு சகோதரன் என்றால் ராவணனும் எனக்கு சகோதரன் ஆகிறான். ஆகவே ராவணனுக்கு நல்ல கதி கொடுக்க கூடிய சடங்குகள் எதுவோ அதனை செய்து உனது கடமையை நிறைவேற்றிக் கொள். நானும் உன்னோடு கலந்து கொண்டு செய்வேன் என்று விபீஷணனுக்கு அனுமதி கொடுத்தார். 

★ராமர், ராவணனை அழித்து விட்டார் என்ற செய்தி இலங்கை நகரம் முழுவதும் பரவியது. இலங்கை நகரத்திற்குள் இருந்து வந்த ராட்சத மக்கள் கூட்டம் ராவணனின் உடலைப் பார்த்து, ஆசையினாலும், யாரையும் மதிக்காத  அகங்காரத்தினாலும் சேர்த்து வைத்த பெயரையும் புகழையும் இழந்து, உங்களை நம்பிக்கொண்டு இருந்த பல வலிமையான வீரர்களையும் உறவினர்களையும் இழந்து விட்டு, இப்போது உயிரையும் விட்டு விட்டீரே என்று பேசிய படி சென்றார்கள். 

★ராவணன் இறந்தச் செய்தி மண்டோதரிக்கு முறைப்படி      
 தெரிவிக்கப்பட்டது.இதைக் கேட்டு மண்டோதரி கதறிக் கொண்டு ஓடி வந்தாள். ஓடி வருகின்ற அவசரத்தில் அவள் கூந்தல் அவிழ்ந்து விழுந்தது. கரிய நீண்ட கூந்தல் அவள் பாதத்தை தொடும் அளவிற்கு கீழே விழுந்தது. ராவணன் மனைவி மண்டோதரியுடன் ஏனைய மனைவிமார்களும், அரக்கியர்களும் உடன் வந்தனர்.
ராவணனின் மனைவி மண்டோதரி யுத்த களத்திற்குள் வந்து ராவணனின் உடலை பார்த்து புலம்ப ஆரம்பித்தாள். 
போர்க்களத்தில் இறந்து கிடக்கும் ராவணன் மேல் விழுந்து புலம்பி அழுதாள். 

★என் ஆருயிரே! பஞ்சணையில் காண வேண்டிய உங்களை இன்று ரத்தச்சகதி  நிறைந்து இருக்கும் போர்க்களத்தில் காண நேரிட்டதே. ராமர், மானிடர் இல்லை. மகாவிஷ்ணுவின் அவதாரம். யமனே எதிர்ந்து வந்தாலும் இந்த ராமரை வெற்றி கொள்ள முடியாது, அவரிடம் பகைமை வேண்டாம் என்று தங்களுக்கு எத்தனையோ முறை சொன்னேனே. தாங்கள் அதைக் கேட்காமல் இருந்து விட்டீர்களே. இப்போது உயிரற்ற உடலாக இருக்கிறீர்களே என்று கணவன் ராவணனை பார்த்து கதறி அழுதாள். 

★உங்களின் வலிமை மிகுந்த தவம் மற்றும் நீங்கள் பெற்ற வரம் ஒரு சாதாரண மனிதனின் அம்பால் வீழ்த்த முடியுமா? உங்களை ராமனின் பாணம் வீழ்த்தி விட்டதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என் கணவனை யாராலும் வீழ்த்த முடியாது என்று எண்ணியிருந்தேனே. சீதையின் பேரழகும், சீதையின் கற்பும், அவள் மேல் கொண்ட காதலும், சூர்ப்பனகை இழந்த மூக்கும், தசரதன் 'போ' என்று ராமனிடம் சொன்ன சொல்லும் எல்லாம் சேர்த்து உங்களை கொன்று விட்டதே.

★ராமனுடன் பகை கொள்ள வேண்டாம். சீதையை சிறைப் பிடித்து வந்தது தவறு என்றும், சீதையைக் கவர்ந்து வந்தது அறத்துக்குப் புறம்பானது எனவும், சீதையை ராமனிடம் சேர்த்துவிடுங்கள் என்றும் எத்தனை முறை உங்களிடம் சொல்லியிருப்பேன்! நான் சொன்ன சொல்லை நீங்கள் கேட்கவில்லை. நல்லது செய்தவனுக்கு நல்லதே நடக்கும். தீமை செய்பவனுக்கு தீமையே நடக்கும். உன்னுடன் பிறந்த சகோதரன் நன்மை செய்தான். அதனால் இன்று அவன் நலமுடன் இருக்கிறான். தாங்களோ தீமை செய்தீர்கள். அதனால் தான் இன்று இறந்து கிடக்கிறீர்கள். 

★சீதையின் அழகில் வீழ்ந்த நீங்கள், உயிர் பெற்று வருவது என்பது இயலாத ஒன்று. பதிவிரதையின் கண்ணீரானது, பூமியில் விழுந்தால், ஏதேனும் ஒன்று நடந்தே தீரும். அதுதான் தங்களை இன்று பழிவாங்கியது! பெண்ணாசை என்பது அழிவில் தான் முடியும்.தங்களை இழந்த பின் இனி நான் உயிருடன் இருந்து என்ன செய்யப் போகிறேன் என கூறிக்கொண்டு ராவணனின் மார்பில் சுருண்டு விழுந்தாள். அப்பொழுது மண்டோதரி பெருமூச்சுவிட்டாள். அத்துடன் மண்டோதரியின் உயிரும் பிரிந்தது. இதனைப் பார்த்து அங்கிருந்த அனைவரும் மண்டோதரி கற்புக்கரசி எனப் போற்றி வாழ்த்தினர். 

★பிறகு விபீஷணன், அண்ணன் ராவணனையும், அவன் மனைவி மண்டோதரியையும் ஒன்றாக வைத்து பன்னீரால் குளிர்வித்து, மலர் மாலை சூட்டி, சந்தனம் முதலிய வாசனை கட்டைகளை அடுக்கி, அவர்களுக்கு தீமூட்டி இறுதி சடங்குகளை செய்தான். விபீஷணன், ராவணனின் ஈமச்சடங்குகளை செய்து முடித்த பின் ராமரிடம் சென்றான்.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.

நாளை........................
[2:57 pm, 30/01/2022] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
296/30-01-2022

விபீஷணனின் பட்டாபிஷேகம்...

★ராவணனுக்கு செய்ய வேண்டிய இறுதி கடமைகளை விபீஷணன் வேத முறைப்படி செய்து முடித்தான். ராமரும், லட்சுமணனும் அனுமன், சுக்ரீவன் உட்பட யுத்தத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் தனது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டார்கள். 
ராமர் ராவணனை கொன்று, அவனது ஈமச்சடங்குகள் முடிந்தபின், தேவலோகத்தில் இருந்து வந்த இந்திரனின் தேரோட்டி மாதலியை பாராட்டி மீண்டும் தேவலோகம் செல்ல அனுமதி கொடுத்தார். 

★யுத்தத்தைப் பார்க்க வந்த தேவர்களும், கந்தர்வர்களும் ராமரின் வீரப்பிரதாபங்களை பாராட்டிப் பேசியபடி தங்களின் இருப்பிடத்திற்கு சென்றார்கள். இத்தனை காலம் ராவணன் கட்டளைப்படி செயலாற்றி வந்த தேவர்கள் அரசனான இந்திரன் தனது தேவலோகத்திற்கு சுதந்திரம் கிடைத்த மகிழ்ச்சியில் யுத்தத்தில் இறந்த வானரங்கள் அனைவரும் மீண்டும் உயிர் பெறுவதற்கு வேண்டிய வரத்தை  கொடுத்தான். போரில் இறந்த வானரங்கள் தூக்கத்தில் இருந்து விழித்தெழுவது போல் எழுந்து மகிழ்ச்சியுடன்  ஆரவாரம் செய்தார்கள். முனிவர்கள் ராமரை வாழ்த்தி விட்டுச் சென்றார்கள். 

★ராமர் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் பூண்டு வந்து இருப்பதால், அவர் இலங்கை நகருக்குள் செல்வது என்பது ஏற்றதல்ல. ராமர், தனது தம்பி  லட்சுமணனிடம், அருமை தம்பி லட்சுமணா! நீ, விபீஷணன், சுக்ரீவன், அனுமன் முதலிய வானர வீரர்களை அழைத்து இலங்கை நகருக்குச் சென்று, விபீஷணனுக்கு வேதமுறைகள் சொல்கிறபடி, இலங்கையின் அரசனாக முடிசூட்டி, அவனுக்கு  பட்டாபிஷேகம் செய்துவிட்டு வருவாயாக! என அன்பு கட்டளை இட்டார். பிறகு லட்சுமணன், விபீஷணன், சுக்ரீவன், அனுமன் முதலிய வானர வீரர்கள் புடைசூழ இலங்கை நகருக்குச் சென்று, இலங்கை நகரை அலங்கரித்தனர். 

★தேவர்களும், முனிவர்களும் விபீஷணனின் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்டனர். புண்ணிய தீர்த்தங்கள் கொண்டு வரச் செய்து, வேள்வியில் தீ மூட்ட, முனிவர்கள் மந்திரங்கள் சொல்ல, விபீஷணனை அரியணையில் அமர வைத்து, வேத கோஷங்கள் முழங்க, மங்கல ஸ்னானம் செய்வித்து, புத்தாடைகள் அணிந்து, அபிஷேகம் செய்து அனைவரின் முன்னிலையிலும் லட்சுமணர் விபீஷணனுக்கு இலங்கையின் அரசனாக முடிசூட்டினார். இலங்கையின் மன்னனாக முடிசூட்டிக் கொண்ட அரசன் விபீஷணன், லட்சுமணனை வணங்கினான். தேவர்களும், முனிவர்களும் விபீஷணனை வாழ்த்தினர். 

★விபீஷணனின் மனைவி சரமை, விபீஷணனின் மகள் திரிசடை பட்டாபிஷேகத்தை பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். அரம்பையர்கள் நடனம் ஆட, அரண்மனையில் இசைக்கச்சேரி நடைப்பெற்றது. விபீஷணன் வறியவர்களுக்கு பொன்னும், பொருளும் வழங்கினான். இலங்கை நகரமே திருவிழாக் கோலம் பூண்டது. அதன் பிறகு விபீஷணன் ராமரிடம் ஆசி பெற ஶ்ரீராமர் இருக்குமிடத்திற்கு வந்தடைந்தான். விபீஷணன் ராமரின் திருவடியில் விழுந்து ஆசி பெற்றான். ராமர் விபீஷணனை அன்போடு தழுவிக் கொண்டார். 

★பிறகு ராமர், விபீஷணா! அரச பதவியை ஏற்றுக் கொண்ட நீ, என்றும் ஏழை மக்களுக்கு உறுதுணையாக தொண்டுகள் செய்ய வேண்டும். உனது ஆட்சியில் அறத்தை நிலை நாட்ட வேண்டும். நான் தான் அரசன் என்று சிறிது கூட மனதளவில் ஆணவம் கொள்ளக் கூடாது. மக்கள் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உனது நாட்டை கண்ணும் கருத்துமாக அறநெறியுடன், நீதிநெறி தவறாமல் ஆட்சி புரிய வேண்டும் என வாழ்த்தினார். 

★பிறகு ராமர் அனுமனிடம், அன்பனே! இப்போது இலங்கை நகரத்தின் அரசன் விபீஷணன். இதோ இங்குதான்  நிற்கிறார். இவரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு அசோக வனத்திற்குள் சென்று சீதையிடம் இங்கு நடந்தவைகள் அனைத்தையும் சொல்லி, அவளது செய்தியை பெற்று வா! என்று கட்டளை இட்டார். ராமரை வணங்கிச் சென்ற அனுமன்,விபீஷணனிடம் அனுமதி பெற்றுக் கொண்டு 
மீண்டும்  ராமரிடம் இருந்து விடைபெற்று, மிகவும் மகிழ்ச்சி கொண்டு  அசோகவனத்திற்கு சென்று சீதையின் திருவடிகளில் விழுந்து வணங்கினான்.

★பிறகு அனுமன், அன்னையே! நான் தங்களுக்கு ஒரு சுபச் செய்தியை கொண்டு வந்து உள்ளேன். ஶ்ரீராமரின் திவ்ய பாணத்தால் அசுர வளர்ச்சிராவணன் மாண்டான், அது மட்டுமில்லாமல் இப்பொழுது விபீஷணனுக்கு முடிசூட்டு விழா நடைப்பெற்று முடிந்தது எனக் கூறினான்.
இச்செய்தியைக் கேட்டு சீதை அளவற்ற மகிழ்ச்சி அடைந்தாள். மகிழ்ச்சியில் சீதை என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றாள். அனுமன் சீதையைப் பார்த்து, அன்னையே! தாங்கள் இந்த சுபச்செய்தியை கேட்டு ஒன்றும் பேசாமல் இருப்பது ஏன்? எனக் கேட்டான். சீதை, மாருதியே! அளவுக்கடந்த மகிழ்ச்சியினால் என்ன சொல்வதென்று தெரியவில்லை என்றாள்.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869

நாளை.....................

ஶ்ரீராம காவியம்
~~~~~
297/31-01-2022

அனுமனும் சீதையும்...

★ராமர் ராவணனை அழித்து யுத்தத்தில் வெற்றி பெற்று விட்டார் என்று அனுமன் நடந்தவைகள் அனைத்தையும் சீதையிடம் எடுத்துக் கூறினார். அனைத்தையும் கேட்ட சீதைக்கு பேச்சு வரவில்லை. அமைதியாக இருந்த சீதையிடம் அனுமன் மேலும் பேச ஆரம்பித்தார். தாயே! இப்போது இந்நாட்டின் அரசன் விபீஷணன். அவரது அனுமதியின் பேரிலேயே தங்களை சந்தித்து, உங்களது செய்தியை ராமரிடம் கொண்டு செல்ல வந்திருக்கிறேன். மிக விரைவில் நீங்கள் ராமரை சந்திக்க போகிறீர்கள் என்கிற ஒரு  மகிழ்ச்சியான செய்தியை தங்களுக்கு நான் கொண்டு வந்திருக்கிறேன். ஆனால்  தாங்கள் ஏன் பேசாமல் மிகவும் மௌனமாக இருக்கீறீர்கள்? என்றார். 

★அதற்கு சீதை என்னால் பேச முடியவில்லை. மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறேன். 
மாருதியே! நீ எனக்கு செய்த உதவிக்கு, நான் உனக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. அன்று உயிரை மாய்த்து கொள்ளும் தருவாயில் இருந்த என்னை, நீ ராமரிடம் இருந்து கொண்டு வந்த கணையாழி காப்பாற்றியது. இன்று நீ சொன்ன சுபச் செய்தி என் மனதை குளிர வைத்தது. இந்த மூன்று உலகத்தையும் உனக்கு காணிக்கையாக நான் கொடுத்தாலும்,  நீ செய்த உதவிக்கு ஈடாகாது. ஏனென்றால் உலகங்கள் அழியக்கூடியவை. உன்னை என் தலையில் வைத்து தொழுவதே சிறந்தது. 

★இத்தனை பெரிய செய்தியை கொண்டு வந்த உனக்கு பரிசு கொடுக்க விரும்புகிறேன். உன்னுடைய இந்த விவேகம், பொறுமை, வீரம், மனோபலம் ஆகியவை உலகத்தில் வேறு யாருக்கும் இல்லை. நான் ராமரையும்,அவருடன் எப்போதும் இருக்கும் லட்சுமணனையும் பார்க்க விரும்புகிறேன் என்ற தகவலை ராமரிடம் எடுத்துச் செல் என்று ஆனந்தக் கண்ணீர் பொங்க  கூறினாள். மேலும் மாருதியே! உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள். அந்த வரத்தை நான் உனக்கு தருவேன் என சீதை கூறினாள். 

★அந்த அசோக வனத்தில் மாதா சீதையை சுற்றி நின்ற எல்லா ராட்சசிகளை பார்த்த அனுமன் சீதையிடம், அன்னையே! நான் திருமணம் ஆகாத பிரம்மச்சாரி. எனக்கு வேண்டுவது உலகத்தில் இல்லை. தாங்கள் எனக்கு வரம் தருகிறேன் என்று மகிழ்வுடன் கூறியுள்ளீர்கள். அன்னையே! தங்களை பத்து மாதங்கள் இந்த 
அரக்கிகள் கத்தியும், கோடாரியும் காட்டி பயமுறுத்தியும் மிகவும் துன்புறுத்தியும் இருக்கிறார்கள். எனக்கு உத்தரவு கொடுங்கள்
இங்கு இருக்கும்  அனைத்து கொடிய அரக்கிகளையும்  நான் கொல்வேன். தாங்கள் இந்த வரத்தை எனக்கு அருள வேண்டும் எனக் கேட்டார். 

★இதைக்கேட்ட அரக்கியர்கள் அனைவரும் பயத்தில் சீதையை சரணடைந்தனர். சீதை, அரக்கியர்களுக்கு அபயம் அளித்தார். அதன் பிறகு
சீதை அரசன் இட்ட உத்தரவை இவர்கள் பின் பற்றினார்கள். அரசன் இப்போது இறந்து விட்டான். இந்த ராட்சசிகள் இப்போது மிகவும் பயந்து கொண்டிருக்கிறார்கள். உலக உயிர்களுக்கு துன்பத்தை மட்டுமே கொடுப்பது பிறவி இயல்பாக இந்த ராட்சதர்ளுக்கு உள்ளது. ஆனால் நாம் உலக உயிர்களுக்கு நன்மை செய்வதையே இயல்பாக கொண்டவர்கள். இவர்களுக்கு நன்மை இல்லாததை நாம் செய்யக்கூடாது. எனவே இவர்களை தண்டிப்பது சரியல்ல

★மேலும் சீதை, அனுமனிடம், மாருதியே! இந்த அரக்கியர்கள் எனக்கு தீங்கு செய்யவில்லை. நான் செய்த தவறினால் இந்த துன்பம் ஏற்பட்டது. எனக்கு இத்தனை நாட்கள் ஏற்பட்ட துன்பத்திற்கு இந்த பெண்கள் காரணம் அல்ல. ராவணனின் ஏவலினால் தான் இவர்கள் எனக்கு துன்பத்தை தந்தார்கள். நான் எம்பெருமானுக்கு துணையாக இக்கானகத்திற்கு வந்தேன். கானகம் வந்த நான், ஒரு மானின் மேல் ஆசைப்பட்டது என் தவறு.  நான் அந்த மானை வேண்டும் என்று கேட்காமல் இருந்திருந்தால், இத்தனை துன்பங்கள் நேர்ந்திருக்காது. 

★பதினான்கு ஆண்டுகள் உண்ணாமலும், உறங்காமலும் எம்பெருமானை காவல் புரிந்த லட்சுமணனின் மனதை மிகப் புண்படும்படி பேசினேன். நான் அவ்வாறு பேசாமல் இருந்து இருந்தால் இத்துன்பம் நேராமல் இருந்திருக்கும். எங்களை பதினான்கு ஆண்டுகள் வனவாசம் அனுப்ப காரணமாய் இருந்த கூனியை விடவா இவர்கள் கொடியவர்கள். நயவஞ்சகம் செய்து வனவாசம் அனுப்பிய கூனியை, நான் நினைத்திருந்தால்  அன்றே மடிந்திருப்பாள். கூனி செய்த குற்றத்தை பொறுத்த என்னால் இவர்கள் செய்த துன்பங்களை பொறுக்க வேண்டும் அல்லவா? 

★அதனால் நீ இவர்களின் மேல் கருணை காட்டி விட்டு விடு எனக் கூறினார். ஶ்ரீராமர் வெற்றி பெற்றார் என்னும் செய்தியை கேட்டதும் நான் மிகவும் மகிழ்சி அடைந்தேன் என்ற எனது இந்த செய்தியை ஶ்ரீராமரிடம் தெரிவித்து விட்டு அதன் பின் அவர் உத்தரவின்படி செயல்படு என்று அனுமனிடம் சீதை கூறினாள். இதைக்கேட்ட பின் அனுமன், அன்னையே! நான் தங்களின் வார்த்தைகளுக்கு உட்பட்டு இந்த அரக்க பெண்கள் மேல் கருணை காட்டுகிறேன் எனக் கூறிவிட்டு சீதையிடம் ஆசிப்பெற்று அங்கிருந்து விடைப்பெற்று சென்றார். 

★பிறகு அனுமன் ராமரிடம் வந்து, பெருமானே! தாங்கள் ராவணனை வதம் செய்த செய்தியை நான் அன்னை சீதையிடம் கூறினேன். அவர் அதைக்கேட்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார் எனக் கூறினார். 

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.

நாளை...................
ஶ்ரீராம காவியம்
~~~~~
298/01-02-2022

சீதை ராமரைக் காணல்...

★சீதையிடம் ஆசிப்பெற்று பின் அங்கிருந்து விடைப்பெற்ற அனுமன், ஶ்ரீ ராமரிடம் வந்து, பெருமானே! தாங்கள் அரக்கன் ராவணனை வதம் செய்த நல்ல ஒரு செய்தியை நான் அன்னை சீதையிடம் கூறினேன். அவர் அதைக் கேட்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார். அவர் 
தங்களையும் லட்சுமணனையும் சந்திக்க விரும்புவதாக செய்தி சொல்லி அனுப்பினார் என்று கூறினார். இதனை கேட்ட ராமர், யாருடைய முகத்தையும் பார்க்க விரும்பாமல் குனிந்து தரையை பார்த்தபடியே மிகவும் சிந்தித்து விபீஷணனை வரவழைத்தார்.

★அதன் பின் ராமர்,  அரசர் விபீஷணனை பார்த்து, தம்பி விபீஷணா! பணிப்பெண்களிடம் சீதைக்கு தேவையான ஆடை ஆபரணங்களை கொடுத்து சீதையை அலங்கரித்து அழைத்து வரச் சொல் எனக் கட்டளையிட்டார். விபீஷணன் ராமரிடம் இருந்து விடைப்பெற்று அசோகவனம் நோக்கி வேகமாக  சென்றான். அரசன் விபீஷணன் ராமரிடம் இருந்து விடைப்பெற்று அசோகவனம் நோக்கிச் சென்றான். விபீஷணன் அசோக வனத்தில் இருக்கும் சீதையை வணங்கி, சீதையின் திருவடிகளில் விழுந்து வணங்கினான். 

★அப்பொழுது அருகில் இருந்த திரிசடை சீதையிடம், அம்மா சீதை! இவர் தான் என் தந்தை விபீஷணர் என அறிமுகம் செய்து வைத்தாள். விபீஷணன் சீதையிடம்! தாயே! எம்பெருமான் ராமசந்திர மூர்த்தி தங்களை காண மிகவும் விரும்புகின்றார். தேவர்களும் தங்களை கைகூப்பி தொழுவதற்காக எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதனால் ஸ்ரீராமர் தங்களுக்கு ஆடை ஆபரணங்கள் கொடுத்து அலங்கரித்து அழைத்து வரச் சொல்லி கட்டளையிட்டுள்ளார் எனக் கூறினான். இதைக்கேட்ட சீதை விபீஷணனிடம், அன்பனே! நான் ஆடை ஆபரணங்கள் இன்றி தவ கோலத்திலேயே வர விரும்புகிறேன்.

★நான் இத்தனை நாட்கள் உண்ணாமலும், உறங்காமலும், தவம்  செய்த ஒரு கோலத்தை அவர்கள் காண வேண்டாமா? அதனால் நான் அந்த தவக் கோலத்திலேயே வருகிறேன் எனக் கூறினாள். விபீஷணன், அன்னையே! இது எம்பெருமான் ஸ்ரீராமனின் கட்டளை. இதை எவ்வாறு மீறுவது? எனக் கேட்டான். பிறகு சீதை, இது எம்பெருமானின் கட்டளை என்பதால் சரி என சம்மதித்தாள். அதன் பின் விபீஷணன் சீதையை அலங்கரித்து வரச் சொல்லி தேவ மாதர்களுக்கு கட்டளை இட்டு அங்கிருந்துச் சென்றான். 

★பிறகு ரம்பை, ஊர்வசி, மேனகை முதலிய தேவலோக  மாதர்கள், சீதையை நறுமண நீரால் குளிர்வித்து, நறுமண தைலங்கள் பூசி, ஆடை ஆபரணங்களால் அழகாய் அலங்கரித்தனர். அதன்படி சீதை ஒரு ராஜகுமாரிக்கு உண்டான கோலத்தில் பல்லக்கில் அசோக வனத்தில் இருந்து ஶ்ரீ ராமர் இருக்குமிடம் கிளம்பினாள்.
ராமரை நோக்கி அன்னை சீதை பல்லக்கில் வந்து கொண்டு இருப்பதை அறிந்த வானர வீரர்களும், கரடிக் கூட்டமும் சீதையை பார்க்க விரும்பி ஒருவருக்கொருவர் தள்ளிக் கொண்டு முன்னேறி வந்தார்கள்.

★இதனை கண்ட விபீஷணன், தனது ராட்சத வீரர்களை கொண்டு அனைவரையும் விரட்டி, சீதையை பாதுகாப்புடன் அழைத்து வந்தான். இதனை கண்ட ராமர், விபீஷணனிடம் கடுமையான வார்த்தைகளில் பேசத் தொடங்கினார். வானர வீரர்களும், கரடிக் கூட்டங்களும் என்னைச் சார்ந்துதான இங்கே  வந்திருக்கிறார்கள். எனது மகிழ்ச்சியான தருணங்களில் அவர்கள் அனைவரும் கலந்து கொள்வது சிறிதும் தவறாகாது. அவர்களை உனது ராட்சத வீரர்கள் விரட்டுவது சரியில்லை. அனைவரது முன்னிலையிலும் சீதை இங்கு வரட்டும் என்று கோபத்துடன் கூறினார். 

★விபீஷணன் தலை குனிந்தபடி ராமரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு வானர வீரர்கள் யாரையும் விரட்ட வேண்டாம் என்று தனது வீரர்களுக்கு உத்தரவிட்டான். ராமர் அரசன் விபீஷணனிடம் கோபத்துடன் பேசியதை கவனித்த இளவவல் லட்சுமணன் மிகக் கவலையுடன்  சிந்திக்க தொடங்கினான். சீதை வருகிறார் என்ற ஒரு மகிழ்ச்சி ராமரின் முகத்தில் இல்லை. அவரின் அங்க அசைவுகளை வைத்து பார்க்கும் போது சீதை வருவதே விரும்பாதவர் போல் காணப்படுகிறார். சீதையை அழைத்து வர உத்தரவிட்ட போது கூட தரையை பார்த்தவாரே மிகவும் யோசித்து விட்டே பேசினார் என்று சிந்தித்த வண்ணம், லட்சுமணன் மிகவும் வருத்தமடைந்தான். 

★ராமர் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்று லட்சுமணனுக்கு புரியவில்லை. ராமருக்கு இத்தனை உதவிகள் செய்து இப்போது சீதையை அழைத்துக் கொண்டு வரும் விபீஷணனை பாராட்ட வேண்டிய நேரத்தில், ராமர் கோபத்துடன் பேசியது சுக்ரீவனையும் அனுமனையும் வருத்தமடையச் செய்தது. 
சீதையை பார்க்க தேவர்களும் முனிவர்களும் அங்கு வந்து கூடினர். வானர வீரர்கள் சீதையைப் பார்த்து பணிந்து நின்றனர். சீதை ராமரைப் பார்த்ததும் பல்லக்கில் இருந்து இறங்கி அவரை  வணங்கி, கண்களில் கண்ணீர் தளும்ப அவரின் திருவடியில் விழுந்து வணங்கினாள்.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869

நாளை.................. .

[3:53 pm, 02/02/2022] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
299/02-02-2022

ராமரின் கோபம்
சீதையின் சோகம்...

★தரையை பார்த்தவாரே விபீஷணனை தொடர்ந்து வந்த சீதை ராமரிடம் வந்து மிகுந்த வெட்கமுடன் அவரின் முகத்தை பார்த்து, என் உயிர் துணையே! என்று சொல்லி வணங்கி நின்று ஆனந்தக் கண்ணீருடன் அழத்தொடங்கினாள். ராமரும் சீதையை கருணைக்கொண்டு அன்பாக நோக்கினார். ஆனால் சீதையை நோக்கிய மறு நிமிடத்தில்  ராமரின் முகத்தில் கருணையும் தென்படவில்லை, அன்பும் தென்படவில்லை. ராமரைப் பொருத்தவரை அவருக்கு சீதை மேல் பரிபூரணமான நம்பிக்கை உண்டு என்றாலும், மாற்றானின் சிறையில் வைக்கப்பட்டிருந்த சீதையைப் பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள் என்றதொரு சந்தேகம் அவருக்கு வரவே, அவர் சீதையை மறுபடியும் மனைவியாக ஏற்றுக் கொள்ள ஒரு மனத்தடை ஏற்பட்டது. அதனால் ராமரின் கண்களில் கோபம் சீற்றமாய் நிறைந்து இருந்தது.

★ராமர் அனைவருக்கும் கேட்கும்படி சீதையிடம் பேசத் தொடங்கினார். ஜானகி! நீ நலமாக இருக்கின்றாயா? நான் உன்னை அரக்கர்களின் சிறையில் இருந்து மீட்கவே இவ்வளவு பெரிய யுத்தத்தை செய்தேன். ராவணனிடமிருந்து  உன்னை மீட்பதற்காக நான் கடலில் அணை கட்டினேன். 
சத்ரியனாக போரில் எதிரியை வென்று உன்னை மீட்டு விட்டேன். ராவணன் உன்னை தூக்கிச் சென்று, இத்தனை காலம் அவனது நகரத்தில் வைத்திருந்தான். ஒரு வருட காலம் ராவணனது பிடியில் நீ இருந்ததால் என்னுடைய குலத்திற்கு பெரும் தலை குனிவு உண்டாகி விட்டது.

★அந்த தலைகுனிவை எனது நண்பர்களான அனுமன், சுக்ரீவன், மற்றும்  விபீஷணன் இவர்களின் உதவியுடன் போக்கி விட்டேன். ரகு குலத்தில் பிறந்த நான், என் மனைவியை அந்த அரக்கர்கள் கவர்ந்து சென்று விட்டார்கள் என்னும் பழியை தீர்க்கும் பொருட்டே, இத்தகைய மிகப்பெரிய யுத்தத்தை வெற்றிகரமாக முடித்தேன்.
ஜானகி! ராவணனின் சிறையில் நெடுநாள் நீ இருந்திருக்கிறாய்.  நீதி தவறிய அரக்கனின் நகரில், அரக்க அரசனுக்கு அடங்கி நீ உயிர் வாழ்ந்து இருக்கிறாய்.
இத்தனை பெரிய யுத்தத்தை செய்தது உனக்காக இல்லை என்பதை நீ முதலில் தெரிந்து கொள். 

★அயலான் வசம் அவன் ஊரில் பல மாதங்கள் இருந்த உன்னை நான் சேர்த்துக் கொண்டால் நம் நாட்டு மக்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்?
இந்த உலகத்தை வெளிச்சம் இருந்தால் மட்டுமே பார்க்க முடியும். ஆனால் கண் வலி உள்ளவனுக்கு வெளிச்சம் ஆகாதது போல, எனக்கு மிக வெளிச்சமாக இருந்த நீ இப்போது எனக்கு துளியும் தேவையில்லை. ராமர், கற்பு உடைய பெண்கள் கணவனை பிரிந்த மறுகணமே உயிரை மாய்த்துக் கொள்வார்கள். ஆனால் நீயோ அந்த  பெண் குலத்திற்கே பெரும் இழிவை உண்டாக்கியுள்ளாய். 

★நீ புழுவைப் போல் மண்ணில் இருந்து தோன்றியவள் தானே? அதனால் தான் உன்னிடத்தில் நற்குணம் இல்லை. நீ என் கண்முன் நிற்காதே. இங்கிருந்து சென்றுவிடு என மிக கோபமாக கூறினார். உனக்கு முழுமையான சுதந்திரத்தை கொடுக்கிறேன். இந்த உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் நீ சென்று உன் விருப்பப்படி வாழலாம். நான் நன்றாக யோசித்த பின் இந்த முடிவை எடுத்துள்ளேன்.  இதுபற்றி நீ லட்சுமணனிடமோ, பரதனிடமோ அல்லது உன் விருப்பமானவர்கள் யாராக இருந்தாலும், அவர்களிடம்  ஆலோசித்துக் கொள்ளலாம் என்று சீதையிடம் பேசி முடித்தார்.

★ராமர் பேசிய கடுஞ்சொற்கள், எம்பெருமான் தனக்கு தரும் தண்டனை என்பதை சீதை உணர்ந்தாள். ராமரின் கடுஞ் சொற்களை கேட்டு அனுமன் கதறி அழுதார். வானர வீரர்கள் அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் வருத்தப்பட்டு உருக்குலைந்து போய் கதறி அழுதார்கள். தேவர்களும், முனிவர்களும் ராமரின் கடுஞ் சொற்களைக் கேட்டு திடுக்கிட்டு துடிதுடித்தனர்.

★ராமர் அனைவருக்கும் முன்பு கோபத்துடன் பேசிய இத்தகைய கொடூரமான வார்த்தைகளை கேட்ட சீதை மிகவும் மனம் தவித்து வெட்கத்தால் தலை குனிந்தபடி அழுதாள். பின்பு ராமரிடம் பேச ஆரம்பித்தாள். உங்களது வார்த்தைகள் இத்தனை காலம் என்னுடன் வாழ்ந்த மேன்மை பொருந்திய மனிதனின் வார்த்தைகளைப் போல் இல்லை. ஒரு பாமர மனிதன் பேசுவதைப் போல் உள்ளது. மிகவும் கடுமையான சொற்களை பயன்படுத்தி விட்டீர்கள். 

★இந்த வார்த்தைகளை நீங்கள் எப்படி நினைத்து பேசினீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நான் குற்றமற்றவள் என்று எனது கற்பின் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். உங்களை பிரிந்திருந்த இத்தனை காலமும் என்னுடைய மனம் உங்களை மட்டுமே எப்போதும் நினைத்துக் கொண்டு இருந்தது, இது அந்த இறைவனுக்கும், உங்களின் மனதிற்கும் நிச்சயமாகத் தெரியும் என கண்ணீர் வழியக் கதறியபடி கூறினாள்.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.

நாளை...................

ஶ்ரீராம காவியம்
~~~~~
300/03-02-2022

அக்னி பிரவேசம்...

★சீதையின் கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. சீதை ராமரை பார்த்து, மேலும் பேச ஆரம்பித்தார். எனனவரே!எம்பெருமானே! அனுமன் அசோகவனம் வந்து, என்னைப் பிரிந்த தங்களின் நிலையையும், பகைவனை வென்று விரைவில் என்னை மீட்பீர்கள் எனவும்  கூறிச் சென்றதனால், நான் இதுநாள் வரையிலும் தங்கள் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்தேன். தங்களின் பாசமிகு பேரன்பினை எனக்கு எடுத்து உரைத்த அனுமன், தங்களை பிரிந்து நான் வருந்தும் என் நிலைமையையும், தங்களிடம் உள்ளவாறு சொல்லியிருக்க வேண்டுமே? 

★அனுமனை முதல் முறையாக அசோகவனத்திற்கு அனுப்பி வைத்தீர்களே, அப்போதே இந்த செய்தியை நீங்கள் என்னிடம் சொல்லி அனுப்பியிருந்தால், அக்கணமே நான் என் உயிரை விட்டிருப்பேனே.  இதனால் இந்த யுத்தமும் நடந்திருக்காது. பலர் தங்களது உயிரை இழந்திருக்க மாட்டார்கள் என்று கண்ணீர் மல்க  அழுதபடி மேலும் கூறினாள்.  நான் தங்கள் மேல் கொண்ட அன்பினால், ஒரு முறையாவது தங்களைத் தரிசிக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தேன். தங்களை காண இத்தனை நாள் நற்குணங்களுடன் தவம் செய்து கொண்டிருந்தேன். நான் இன்று தங்களை தரிசித்து விட்டேன். தங்களுக்கு என் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறினாள்.  

★ராமர் வேறு எதுவும் பேசாமல் மௌனமாக நின்றார்.அதன் பின் ராமரின் அருகில் நின்று இருந்த லட்சுமணனைப் பார்த்து, அன்பு லட்சுமணா! எம்பெருமான் என்னை தவறாக கூறிவிட்டார். இனியும் நான் உயிர் வாழ விரும்பவில்லை. எனக்கு எற்பட்டுள்ள துயரத்திற்கு அக்னியைத் தவிர வேறு மருந்து இல்லை. பொய்யான பழியை சுமந்து கொண்டு நான் வாழ விரும்பவில்லை. ஆகவே மரக் கட்டைகளை அடுக்கி, இங்கே நெருப்பை மூட்டு.  அந்த அக்னியில் விழுந்து எனது பழியை தீர்த்துக் கொண்டு நான் எனது உடலை விடுகின்றேன் என்று கோபமடைந்தவளாக கூறினாள். 

★நான் தீக்குளிக்க தீ வளர்த்துக் கொடு எனக் கேட்டாள். அன்று உன்னை நான் வாயினால் சுட்டேன். இன்று தீயினால் என்னை சுட்டுக் கொள்ளப்  போகிறேன் என்றாள். சீதை பேசிய இத்தகைய சோகமான  வார்த்தைகளை கேட்டபிறகாவது ராமரின் மனம் மாறுகின்றதா என்று லட்சுமணன் கண்களில் கண்ணீர் நிரம்ப  ராமரின் முகத்தை பார்த்தான். ராமர் கண்களால் கட்டளையிட்டார்.
அவரின் உள்ளத்தை குறிப்பால் உணர்ந்து கொண்ட லட்சுமணன் வேறு வழியின்றி அழுதபடியே மரக் கட்டைகளை அடுக்கி நெருப்பை பற்ற வைத்தான். 

★ராமர் ஏன் இச்செயலை செய்கிறார் என்பதனை அறிந்து கொள்ள விண்ணவர்களும் அங்கு வந்து நின்றார்கள்.
சீதை, அக்னி குண்டத்தையும், ராமரையும் வலம் வந்தாள். பின் ராமரை பார்த்து, எம்பெருமானே! எனக்கு வேண்டுவது தங்களின் திருவருள் மட்டுமே. தாங்கள் என் கற்பின் நிலையறியாமல் பேசிவிட்டீர்கள். இனி நான் உயிர் வாழ விரும்பவில்லை எனக் கூறி விட்டு அக்னி குண்டம் அருகில் சென்றாள். இதைப் பார்த்த அத்தனை உயிர்களும் கதறி அழுதனர்.

★இதை வானத்தில் இருந்து பார்த்த இந்திராணி! இத்தகைய கொடுமையை பார்க்க நான் என்ன பாவம் செய்தேன் என்று தெரியவில்லையே! எனக் கதறி அழுதாள். ராமரை வணங்கி வலம் வந்த சீதை அக்னி குண்டம் அருகில் சென்று, அக்னி தேவா! உலகில் சிவபெருமானும், பிரம்மாவும், திருமாலும் பெண்களின் நிலைமையை அறியமாட்டார்கள். நீ தான் எனக்கு சாட்சி. உலகில் உள்ள அனைவரும் திருமணத்தின் போது உன்னைத்தான் (அக்னி) சாட்சியாக வைத்து வலம் வந்து இனிதாகத் திருமணம் செய்து கொள்கிறார்கள். 

★நான் உடலாலும், மனதாலும் ஏதேனும் குற்றம் செய்திருந்தால் என்னை உன்னுடைய  தீயினால் சுட்டெரிப்பாயாக. மேலும் எனது உயிர் இந்த ராமருக்கு சொந்தம் என்பது உண்மையானால், எனது மனம் ராமரை விட்டு ஒரு வினாடி கூட பிரியாமல் இருப்பது உண்மையானால் நான் சிறிதும் மாசற்றவள் என்பது உண்மை என்றால், இந்த அக்னி தேவர் என்னை காப்பாற்றட்டும் எனக் கூறி ராமர வணங்கி, கூப்பிய கரங்களுடன் தீயில் பாய்ந்தாள். 

★ராமர் தன் முகத்தில் எந்த விதமான சலனமும் இல்லாமல் அமைதியாக இருந்தார். ராமரை மீறி ஒன்றும் செய்ய முடியாமல் அனைவரும் நடுங்கியபடி மிக அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்தனர்.  எதனால் ராமர் இப்படி செய்கிறார் என்ற ஒரு கேள்வியைக் கேட்க முடியாமல் அனைவரும் ராமரின் இறுகிய முகத்தையும், அக்னியையும் திரும்பத்திரும்ப பார்த்தபடி இருந்தனர்.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869

நாளை........................

ஶ்ரீராம காவியம்
~~~~~
301/04-02-2022

கற்பெனும் கனல்...

★என் மனம் ராமரை விட்டு ஒரு வினாடி கூட பிரியாமல் இருப்பது உண்மையானால் நான் சிறிதும் மாசற்றவள் என்பது உண்மை என்றால், இந்த அக்னி தேவர் என்னை காப்பாற்றட்டும் எனக் கூறி ராமரை வணங்கி, கூப்பிய கரங்களுடன் தீயில் பாய்ந்தாள். 
ராமர் தன் முகத்தில் எந்த விதமான சலனமும் இல்லாமல் அமைதியாக இருந்தார். ராமரை மீறி ஒன்றும் செய்ய முடியாமல் அனைவரும் நடுங்கியபடி மிக அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்தனர்.  எதனால் ராமர் இப்படி செய்கிறார் என்ற ஒரு கேள்வியைக் கேட்க முடியாமல் அனைவரும் ராமரின் இறுகிய முகத்தையும், அக்னியையும் திரும்பத்திரும்ப பார்த்தபடி இருந்தனர்.

★அப்போது தேவர்கள் சூழ  பிரம்மா ராமரின் முன்பு வந்தார். ராமர் பிரம்மாவை வணங்கி நின்றார். பிரம்மா ராமரிடம் பேசத் தொடங்கினார். ராம பிரானே! தாங்கள் என்ன காரியம் செய்து விட்டீர்கள்? ஏன் இது போல் நடந்து கொண்டீர்கள் என்று கேட்டார். அதற்கு ராமர் சூரியனிடமிருந்து வெளிச்சச்தை எப்படி தனியாக பிரிக்கவே முடியாதோ, அது போல் சீதையை என்னிடமிருந்து பிரிக்கவே முடியாது. சீதை கொழுந்து விட்டு எரியும் நெருப்பைப் போன்றவள். அவளை யாராலும் நெருங்க முடியாது. மூவுலகங்களிலும் உள்ள தூய்மையான அனைத்து பொருள்களை விட சீதை தூய்மையானவள். 

★இவை அனைத்தும் எனக்கு நன்றாக தெரியும். ஆனால் சிலகாலம் ராட்சதர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சீதையை, தர்மத்தின்படி யுத்தம் செய்து அடைந்த நான், தர்மப்படி அவள் புனிதமானவள் என்று மூன்று உலகங்களுக்கும் நிரூபிக்க வேண்டிய ஒரு இக்கட்டான கட்டாயத்தில் இருக்கிறேன். அவளை அப்படியே ஏற்றுக் கொண்டால், ராமர் சீதையின் அழகில் மயங்கியதால் தான் அவளை ஏற்றுக் கொண்டார், சீதை மீது அன்பு ஒன்றும் இல்லை என்று யாரும் சொல்லி விடக்கூடாது. நான் எவ்வளவு அன்பு மறறும் பாசம் சீதை மீது வைத்திருக்கிறேன் என்றும், சீதை என் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறாள் என்றும் எங்கள் இருவருக்கும் தெரியும். 

★சீதை புனிதமானவள் என்பதை அனைவரின் முன்பும் நிரூபிக்க வேண்டி, இத்தனை பெரிய கடுமையான வார்த்தைகளை உபயோகிக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. அதனால் சீதையிடம் சொல்லக்கூடாத கடுமையான வார்த்தைகளை சொல்லி அவளை நான்  மிகவும்  காயப்படுத்தினேன். அதற்கு வேறு காரணங்களும் உண்டு. சிறிது நேரத்தில் சீதைக்கு அந்த காரணம் தெரியும் போது, அது  அனைவருக்கும் தெரியும் என்று சொல்லி முடித்தார் ராமர்.
ராமரின் முன் எரிந்து கொண்டு இருந்த அக்னியில் இருந்து வெளிவந்த அக்னி தேவன், சீதையை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான். 

★சீதையின் கற்பு என்னும் வெப்பம் தாங்கமுடியாமல்தான் அக்னி தேவன் சீதையுடன் வெளியே வந்தான். அதன்பிறகு அக்னிதேவன் ராமரை பார்த்து, பெருமானே! நான் என்ன தவறு செய்தேன். என்னை ஏன் கற்பு என்னும் நெருப்பால் சுட வைத்தீர்கள். சீதையின் கற்பு தீ என் வலிமையை அழித்துவிட்டது என்றான். சீதை, தீயினில் விழுவதற்கு முன் எவ்வாறு இருந்தாலோ அப்படியே மாசு மருவற்று இருந்தாள். ராமரின் கடுஞ்சொற்களை கேட்டு சீதையின் முகத்தில் ஏற்பட்ட வியர்வைகளும் அப்படியே இருந்தன. சீதை சூடியிருந்த பூக்களும் வாடாமல் அப்படியே இருந்தது. அப்போது சீதை இளம் சூரியனைப் போல் பிரகாசமாக காட்சியளித்தாள். 

★ராமர் அக்னிதேவனை பார்த்து, நீ யார்? யார் சொல்லி நீ இந்த சீதையை சுடாதபடி காப்பாற்றி உள்ளாய் எனக் கேட்டார். அக்னிதேவன், ராமா! நான் தான் அக்னிதேவன். சீதையின் கற்பு தீ என்னை சுட்டெரித்துவிட்டது. அதனால் தான் நான் தங்களை சரணடைந்துள்ளேன்.இவள் கோபம் கொண்டால், இந்த உலகமே அழிந்துவிடும். சீதை கற்பு நெறி தவறாதவள். ஆதலால் தாங்கள் சீதையை ஏற்று கொள்ள வேண்டும் என்றார்.  அப்பொழுது அங்கு சிவபெருமான், தோன்றி ராமரிடம், எம்பெருமானே! சீதை கற்பின் தெய்வம். அதனால் நீர் நெருப்புடன் விளையாடாதீர். சீதையை ஏற்றுக்கொள்ளுங்கள்  எனக் கூறினர். 

★ராமர் அதன்பின் சீதையை ஏற்றுக் கொண்டார். பிறகு ராமர் சீதையை கருணையுடன், அன்பாக பார்த்தார். இதைப் பார்த்த தேவர்களும், வானர வீரர்களும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். அதன்பின் சிவபெருமான் வைகுந்தப் பதவியை அடைந்த தசரதனிடம் சென்று, ராமனை பிரிந்து தாங்கள் அடைந்த துன்பத்தை ராமனை சந்தித்துப் போக்கிக் கொள்ளுமாறு கூறினார்.
சிவபெருமானுடைய அந்தக் கட்டளையை ஏற்று, தேவர்கள் விண்ணுலகத்தில் வாழ்ந்த தசரதரை வானுலக ஊர்தியில் ஏற்றி அழைத்து வந்தனர். 

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869

நாளை....................

ஶ்ரீராம காவியம்
~~~~~
302/05-02-2022

ராமரும் தசரதரும்?...

★அப்போது விண்ணிலிருந்து தசரதர் அங்கு வந்தார். அவரைக் கண்டதும் ராமர் உட்பட எல்லா வானரங்களும், ராட்சதர்களும் அவருக்கு மரியாதை செலுத்தி வணங்கினார்கள்.தந்தையை கண்ட ராமர் மகிழ்ச்சி பொங்க அவரின் திருவடியில் விழுந்து வணங்கினார். ராமரை கண்ட தசரதர், இன்பக் கடலில் திளைத்தார், ஆனந்த கண்ணீர் அவரின் கண்களில் ஆறாய் பெருக்கெடுத்து ஓடியது. பிறகு ராமரை அன்போடு தழுவிக் கொண்டார். அதன் பின் சீதை, தசரதரின் திருவடியில் விழுந்து ஆசி பெற்றார். தசரதர் ராமரிடம், மகனே! நான் உன் தந்தையாக இருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். முன்பு இந்த மண்ணுலகத்தில் இருந்த போது, நான் வணங்கிய தேவர்கள், இப்பொழுது அங்கு என்னை வணங்குகிறார்கள். எனக்கு பிரம்மனுக்கு சமமான ஒப்பற்ற பெருமைஉண்டாகியுள்ளது என்றார்.

★தசரதர், சீதையிடம் பேச ஆரம்பித்தார். ராமர் உன்னிடம் கடுமையான வார்த்தைகளை சொல்லி விட்டார் என்று வருத்தப் படாதே. ராமர் தர்மத்தை கடை பிடித்து அதன் படி நடப்பவர். தண்டகாரண்ய காட்டில் நீ விரும்பிய மானை ராமர் கொண்டு வரச் சென்ற போது, லட்சுமணன் உனக்கு காவலாக இருந்தான். அப்போது அசுரன் ராவணனின் சூழ்ச்சியால், ராமரின் குரலில் அபயக் குரல் எழுப்பினான் மாரீசன். இதனை நம்பிய நீ, உன்னை தாயாக எண்ணிய லட்சுமணனை தீயைப் போல் சுடும், பேசக்கூடாத கடுமையான வார்த்தைகளால் பேசி தவறு செய்து விட்டாய். 

★கடும் வார்த்தைகளைப் பேசிய நீ அதே போன்ற கடுமையான வார்த்தைகளினால் உனது தண்டனையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கோட்பாட்டின்படி, நீ செய்த தவறுக்கான தண்டனையை  அனுபவித்தே ஆக வேண்டும். அதற்கான தண்டனையை நீ அனுபவிக்க மிகவும் கஷ்டப்படுவாய் என்று எண்ணி தர்மத்தின் படி உன்னை கடும் சொற்களால் பேசினார். இதனால் நீ அடைந்த மன உளைச்சலைப் போலவே சீதையை இப்படிப் பேசி விட்டோமே என்று அவனும் மன உளைச்சல் அடைந்து உனது தண்டனையில் பாதியை ஏற்றுக் கொண்டான். 

★மேலும் லட்சுமணனை தீ சுடுவதைப்போல் வார்த்தைகள் பேசிய உன்னை, அக்னியில் இறங்க வைத்து தீயால் சுட்டு, நீ செய்த தவறுக்கான தண்டனை அளித்து, அதை  முழுமையாக அனுபவிக்க வைத்தது மட்டும் அல்லாமல் நீ புனிதமானவள் என்பதையும் இந்த உலகத்திற்கு காட்டி விட்டார் ராமர். எனவே அவரின் மீது கோபம் சிறிதும் கொள்ளாதே என்று சீதையிடம் பேசி முடித்தார் தசரதர்.
தசரதர், ராமரை, மகனே! உனக்கு என்ன வரம் வேண்டுமென்று கேள். முன்பு கைகேயிக்கு கொடுத்த வரத்தினால் தான் இத்தனை துன்பங்களும் ஏற்பட்டிருக்கின்றன என்றார். 

★ராமர், தந்தையே! தங்களை தரிசித்ததே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கின்றது. அதனால் எனக்கு எந்த வரமும் வேண்டாம் என்றார். தசரதர், ராமா! நான் உனக்கு வரம் கொடுக்க விரும்புகின்றேன். அதனால் நீ ஏதேனும் ஒரு வரத்தைக் கேள் என்றார். ராமர், தந்தை தசரதர் கொடுக்கும் வரம் தனக்கு பயன்படாமல் பிறருக்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என நினைத்தார். 
அப்பொழுது ராமருக்கு நினைவு வந்தது அன்னை கைகேயும், தம்பி பரதனும்தான். வனத்திற்கு   செல்லுமாறு தன்னிடம் கைகேயி  சொல்லியதும், தந்தை, அவள் இனி எனக்கு மனைவியும் இல்லை, பரதன் எனக்கு மகனும் இல்லை என்று சொன்னது ராமரின் நினைவுக்கு வந்தது.

★ராமர் தசரதரிடம், தந்தையே! தாங்கள் அன்னை கைகேயி மற்றும் தம்பி பரதனையும் மன்னித்தருள வேண்டும் என்றார். மகனே! கைகேயி என்னிடம் கேட்ட வரம் கூர்மையான கத்தி போல் என் மார்பில் குத்தியது. அந்த வலி என் மார்பை விட்டு அகலாமல் இருந்தது. இப்பொழுது நான் உன்னை தழுவிக் கொண்டதால் அவ்வலியும் மறைந்துவிட்டது. 
ராமா! நான் பரதனை மகனாக ஏற்றுக் கொள்கிறேன். உன்னை கானகத்திற்கு அனுப்புவதற்கு காரணமான அந்த கைகேயியை நான் மன்னிக்க மாட்டேன் என்றார். 

★இதைக்கேட்ட ராமர், தந்தையே! நான் அயோத்தியில் பிறந்தது கோசலை நாட்டை ஆள்வதற்காக அல்ல. தேவர்கள், முனிவர்கள், மற்றும் ரிஷிகளுக்கு மிகுந்த துன்பத்தை தந்த  ராவணாதி அரக்கர்களை கொல்லும் பொருட்டே, நான் ராமனாக அவதாரம் எடுத்தேன். இப்படி இருக்கையில் நான் அயோத்தி அரசனாக முடிசூட வேண்டும் என்று நினைத்தது என் தவறு. இதில் அன்னையின் தவறு என்ன உள்ளது?. அதனால் தாங்கள் அன்னையை மன்னித்தருள வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

★இதைக்கேட்ட தசரதர், ராவணாதி அரக்கர்களின் அழிவுக்கு காரணமாக இருந்தது கைகேயியின் செயல் தான் என்பதை புரிந்து கைகேயியை மன்னிதருளினார்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869

நாளை....................

ஶ்ரீராம காவியம்
~~~~~
303/06-02-2022

இலங்கையில் இறுதிநாள்...

★ராமரின் அருகில் அன்னை சீதை வந்தாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு தங்கள் அன்பை வெளிப்படுத்திக் கொண்டார்கள். ராமரிடம் தசரதர் பேசுவதற்கு ஆரம்பித்தார். இத்தனை காலம் உனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் எல்லாம், ராவணன் அழிய வேண்டும் என்ற முக்கிய  காரணத்திற்காக தேவர்களால் திட்டமிடப்பட்டு செய்யப்பட்டது. அத்திட்டத்தின்படி ராவணனை அழித்து விட்டாய். இதனால் உனது பராக்கிரமத்தையும், நீ கடைபிடிக்கும் தர்மத்தையும் இந்த உலகம் கண்டு கொண்டது. 

★உனது பதினான்கு ஆண்டு கால வனவாசம் பூர்த்தியாகப் போகிறது. நீ எனக்கு கொடுத்த வாக்குறுதியை சீதையுடனும்,  லட்சுமணனுடனும்  சேர்ந்து நிறைவேற்றி விட்டாய். அங்கு உனக்காக பரதன் இப்போது காத்திருக்கிறான். உன்னிடம் தளராத அன்பு கொண்ட தம்பி பரதனிடம், நீ சேர்ந்திருக்கும் காட்சியை நான் காண மிகவும் விரும்புகிறேன். எனவே உடனே நீ அயோத்திக்கு சென்று, அரசனாக முடிசூட்டிக் கொண்டு, அஸ்வமேத யாகத்தை நடத்தி, நல்லாட்சி செய்து வா!. அயோத்தியில் உனக்கு பிறகு நல் புத்திரர்களை அரசனாக முடிசூட்டி, பின்பு உனக்கான மேலுகத்திற்கு சென்று புகழை அடைவாய் என்று வாழ்த்தினார். 

★லட்சுமணனிடம் தசரதர் பேச ஆரம்பித்தார். ராமருக்கும் சீதைக்கும் பக்தியுடன் பலவித பணிவிடைகளைச்  செய்து இத்தனை காலமாக  இருந்து இருக்கிறாய். இதில் நான் மிகவும் திருப்தி அடைந்தேன். அறநெறிக்கிணங்க நீ நடந்து கொண்டதால் அதற்கான சிறந்த புண்ணிய பயனை நீ அடைந்து இருக்கிறாய். ராமருக்கு தொடர்ந்து பணிவிடைகளை செய்துவா. இதனால் ஈடு இணையில்லாத மேன்மையும் புகழையும் அடைவாய். ராமரின் மனதில் இடம் பிடித்த நீ அவரைப் போலவே உலகம் முழுவதும் பெயரையும் புகழையும் பெற்று நீண்ட காலம் இவ்வுலகில்  வாழ்ந்து உனக்கான சிறந்த மேலோகத்தை அடைவாய் என்று வாழ்த்தினார். 

★அனைவரிடமும் விடைபெற்ற தசரதர் தெய்வீக ஒளியுடன் அங்கிருந்து கிளம்பி மேலோகம் சென்றார்.அதன் பின் தேவர்கள் ராமரை பார்த்து, பெருமானே! தங்களுக்கு எத்தகைய  வரம் வேண்டும் என்று கேட்டனர். ராமர் தேவர்களிடம், போர்களத்தில் மாண்ட எல்லா  வானரங்களும் புத்துயிர் பெற்று எழ வேண்டும். வானரங்கள் வாழும் வனத்தில், நீர் வளமும், நில வளமும், சுவை மிகுந்த பழங்கள், காய்கனிகள் வற்றாது இருக்க அருள் செய்ய வேண்டும் என்று கேட்டார். தேவர்களும் ராமர் கேட்டபடியே வரத்தை அருளினர். தேவர்கள் அனைவரும் ராமருக்கு தங்கள் பாராட்டையும், வணக்கத்தையும் செலுத்திவிட்டு தங்களின் விண்ணுலகம் திரும்பினார்கள்.

★போர்களத்தில் மாண்டுபோன  வானரங்கள் அனைவரும் புதிய உயிர் பெற்று எழுந்தனர். இதைப் பார்த்த மற்ற வானரங்கள் மிக்க மகிழ்ச்சியில் ஆடிப்பாடினர். அப்பொழுது சிவபெருமானும், பிரம்ம தேவனும் தோன்றி, ராமருடைய பதினான்கு ஆண்டு வனவாசம் நாளையுடன் முடிவு அடைகிறது. ஆதலால் தாங்கள் அயோத்திக்கு விரைந்துச் செல்லுங்கள். தங்கள் வரவை பரதன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறான். தாங்கள் குறிப்பிட்ட நேரத்தில் அங்கு போகவில்லையென்றால், பரதன் அக்னியில் வீழ்ந்து உயிரை மாய்த்துக் கொள்வான். ஆதலால் காலம் தாழ்த்தாமல் விரைவில் அயோத்திக்குச் செல்லுங்கள் என்று கூறி ராமரை வாழ்த்தி விட்டு சென்றனர். 

★யுத்தம் செய்து களைப்புடன் இருந்த வானரங்களிடம், இன்று இரவு நன்கு உறங்கி உங்களது களைப்பை எல்லாம் போக்கிக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அடுத்த நாள் அதிகாலையில் விபீஷணன், ராமரிடம் வந்து இன்று நான் தங்களுக்கு உபசாரங்கள் செய்து கௌரவப்படுத்த உள்ளேன். அனைத்தையும், தாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.

★ராமர், விபீஷணனிடம் பேச ஆரம்பித்தார். இத்தனை காலம் உங்களது ஆலோசனையிலும், உங்களது வழிகாட்டுதலிலும், உங்களது நட்புக்கேற்ற செயலிலும் நான் மிகவும் கௌரவப்படுத்தப்பட்டு விட்டேன். நான் இங்கு காட்டில் எப்படி தவ வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறேனோ அது போல் சகல சௌகர்யங்கள் இருந்தும் பரதன் தவ வாழ்க்கை மேற்கொண்டு எனக்காக காத்திருக்கிறான். எப்போது பதினான்கு ஆண்டு காலம் முடியும் எப்போது நான் வருவேன் என்று எனது வரவை எதிர்பார்த்து தவித்துக் கொண்டு இருப்பான். எனது பாசமிகுந்த அன்னையர்களையும் மற்றும் பரதசத்ருக்ணனையும் அயோத்தி மக்களையும் பார்க்க எனது மனம் தவிக்கிறது. எனவே நான் உடனடியாக அயோத்திக்கு திரும்ப வேண்டும். அயோத்தி வெகு தூரத்தில் உள்ள படியால் நான் உடனடியாக இங்கிருந்து கிளம்புகிறேன். 

★நீங்கள் அன்புடன் எனக்காக கொடுப்பதாக சொன்ன எல்லா உபசாரங்கள், கௌரவங்கள், செல்வங்கள்  அனைத்தும் சுக்ரீவனுக்கும் அவனது படை வீரர்களுக்கும் கொடுங்கள் என்றார். 

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869

நாளை..................

ஶ்ரீராம காவியம்
~~~~~
304/07-02-2022

இலங்கை விட்டு
புறப்படுதல்...

★ராமர் விபீஷணனை பார்த்து, தம்பி விபீஷணா! இன்றுடன் என் பதினான்கு ஆண்டு வனவாசம் முடிந்துவிட்டது. நான் இன்று அயோத்தி செல்ல வேண்டும். என் வரவைக் காணாமல் பரதன் நிச்சயமாக இறந்து போவான். நான் உடனே அயோத்திக்குச் செல்ல ஏதேனும் வாகனம் உள்ளதா? எனக் கேட்டார். விபீஷணன், எம்பெருமானே! ராவணன் தன் தமையனான குபேரனிடம் இருந்து பறித்த புஷ்பக விமானம் உள்ளது. அதன் வேகமானது, வாயு வேகத்தை விட அதிகம் என்று சொல்லலாம். நாம் அனைவரும் புஷ்பக விமானத்தில் செல்லலாம் என்றான். 

★புஷ்பக விமானத்தை கொண்டு வர தனது பணியாளர்களிடம் உத்தரவிட்டான் விபீஷணன்.
ராமர், அன்பர்களே! நீங்கள் அனைவரும் இப்போது உங்கள் இருப்பிடத்திற்கு சென்று, அங்கு உங்களின் உறவினர்களைச் சந்தித்து, உங்களின் நலத்தை கூறுங்கள். என் பதினான்கு ஆண்டு வனவாச காலம் நாளை முடிவிற்கு வந்து விட்டதால், நான் இன்றே அயோத்திக்குச் செல்ல வேண்டும் என்றார். ராமர், சீதை, லட்சுமணன் மூவரும் தங்களது வணக்கத்தை அனைவருக்கும் சொல்லி விட்டு புஷ்பக விமானத்தில் ஏறினார்கள். 

★ராமரின் வேண்டுகோளுக்கு இணங்க அரசன் விபீஷணன், வானரங்கள் அனைவருக்கும் அவர்களது தகுதிக்கேற்றபடி செல்வங்களை கொடுத்து கௌரவித்தான். இதனைக் கண்டு திருப்தி அடைந்த ராமர் அனைவரிடமிருந்தும் விடை பெற்றார். புஷ்பக விமானம் கிளம்ப ஆயத்தமாக இருந்தது. 
ராமர், விபீஷணனை பார்த்து, தம்பி விபீஷணா! உன் ராஜ்யத்து மக்களுக்கு நல்லாட்சி புரிந்து, நீதிநெறி விளங்க, தர்மத்தை நிலை நிறுத்துவாயாக என வாழ்த்தி ஆசி கூறினார். 

★பிறகு சுக்ரீவனைப் பார்த்து, சுக்ரீவா! உன் உதவியால் தான், நான் ராவணனை கொன்றேன். நீயும், உன் வானரப்படைகளும் கிஷ்கிந்தைக்கு சென்று, எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வாயாக எனக் கூறினார்.அதன் பின், அங்கதன், அனுமன், நீலன், நளன்,ஜாம்பவானை அழைத்து நீங்கள் அனைவரும் எல்லாவித நன்மைகளையும் பெற்று, மகிழ்ச்சியுடன் வாழ்வீர்களாக எனக் கூறினார். ராமரை பிரிய முடியாமல் அங்குள்ள அனைவரும் கண்கலங்கி நின்றனர். 

★பிறகு அனைவரும் ராமரின் திருவடிகளில் விழுந்து வணங்கி, நாங்கள் அனைவரும் தங்களோடு அயோத்திக்கு வந்து, தங்களின் பட்டாபிஷேகத்தை கண்டு களித்து, அதன் பின்னர் நாங்கள் கிஷ்கிந்தைக்குச் செல்கிறோம் என வேண்டினர். ராமர் அவர்களின் அன்பை மெச்சி, நீங்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம். உங்களின் மனக்கருத்தை தெரிந்துக் கொள்ளவே நான் இவ்வாறு செய்தேன். நீங்கள் அனைவரும் அயோத்திக்கு வாருங்கள்.
நாம் அனைவரும் ஒன்றாக செல்லலாம் என்றார். 

★சுக்ரீவன் தனது படைகளை நலமாக கிஷ்கிந்தை செல்லவும், அங்கு அன்னை தாரை மற்றும் மனைவி ரூமாவிற்கு இங்கு நடந்த எல்லா விஷயங்களையும் விளக்கமாக கூறும்படியும் உத்தரவிட்டான். தாங்கள் அயோத்தி சென்று ஶ்ரீராமரின் பட்டாபிஷேகம் கண்டு திரும்பி வருவதாக கூறச் சொன்னான். பிறகு சுக்ரீவன்,அங்கதன், நீலன், அனுமன் ஜாமபவான்  முதலிய அனைவரும் அந்த புஷ்பக விமானத்தில் ஏறிக் கொண்டனர். விபீஷணன் நாங்களும் வந்து தங்களின்  பட்டாபிஷேகத்தை கண்டுகளிக்க விரும்புகிறோம் என்றனர். ராமர் சம்மதம் தெரிவிக்க, விபீஷணனும் அவனின் மனைவி மக்களும் புஷ்பக விமானத்தில் ஏறிக் கொண்டனர். 

★ராமர், சீதைக்கு இலங்கையை சுற்றி காண்பிக்க விரும்பினார். அதனால் புஷ்பக விமானத்தை இலங்கையை சுற்றி அழைத்துச் செல்லுமாறு வேண்டினார். ராமரின் வேண்டுகோளுக்கு இணங்க புஷ்பக விமானமும் இலங்கையை ஒரு வலம் வந்து சென்றது.  புஷ்பக விமானம் இலங்கை நகரின் கிழக்கு நோக்கி பறக்க தொடங்கியது. ராமர் சீதையிடம், சீதா! இதோ இந்த இடத்தில் வானர படைத் தலைவன் நீலன், பிரகஸ்தன் என்னும் அரக்கனை தன் கைகளால் கொன்றான் என்றார். 

★விமானம் தெற்கு நோக்கி பறக்க தொடங்கியது. ராமர், இந்த இடத்தில் தான் அனுமன், துன்மிகன் என்னும் அரக்கனை கொன்றான் என்றார். அதன் பின் விமானம் மேற்கு நோக்கி பறக்க தொடங்கியது. ராமர், சீதா! இதோ இந்த இடத்தில் தான், தம்பி லட்சுமணன், மிக வலிமையான, மாயையில் வல்லவான வீரன் இந்திரஜித்தை கொன்றான் என்றார். விமானம் வடக்கு நோக்கி பறக்க தொடங்கியது. ராமர், சீதா! இதோ பார்! இந்த இடத்தில்தான் நான் ராவணனை பிரம்மாஸ்திரத்தைக் கொண்டு கொன்றேன் என்றார். அதன்பின் விமானம் கடல் மேல் பறந்துச் சென்றது. 

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869

நாளை....................
[2:41 pm, 08/02/2022] Mohan SriRaghavendrar Kulithalai: ஶ்ரீராம காவியம்
~~~~~
305/08-02-2022

மகரிஷி பரத்வாஜரின்
ஆஸ்ரமம் சென்றடைதல்...

★ராமர், சீதா! இதோ பார்!  இந்த இடத்தில்தான் நான் ராவணனை பிரம்மாஸ்திரத்தைக் கொண்டு கொன்றேன் என்றார். அதன்பின் விமானம் கடல் மேல் பறந்துச் சென்றது. ராமர் சீதையிடம், சீதா! இதோ இந்த பாலத்தை வானர வீரர்கள் ஐந்து நாட்களில் கட்டிமுடித்தனர் என பாலத்தை காட்டி மகிழ்ந்தார். இங்கு வந்து தீர்த்தங்களில் மூழ்கி ஸ்நானம்  செய்பவர்கள், அனைத்துப் பாவங்களும் நீங்கி நற்கதியை அடைவர். இந்த சேதுவில் நீராடுபவர்கள், எத்தகைய பாவங்களைச் செய்திருந்தாலும், இந்த கடலில் மூழ்கினால் தேவர் தொழும் பெருமை பெற்றவர் ஆவார்கள் என்றார். 

★அதன்பின் சீதையிடம், வருண தேவன் தன்னிடம் சரணடைந்த இடத்தையும் காட்டினார். பிறகு விமானம் கடலைக் கடந்து, வடக்கு நோக்கி பொதிகை மலை மேல் சென்றது.ராமர் சீதையிடம், சீதா! இந்த மலை அகத்திய முனிவர் வாழும் சிறப்புமிகுந்த மலை ஆகும் என்றார். பிறகு  விமானம் திருமாலிருஞ்சோலை மலை, திருவேங்கடமலை மேல் பறக்கும்போது, இந்த மலைகள் முழுமுதற் கடவுளான திருமால் எழுந்தருளும் மலைகளாகும் என்றார். விமானம் ரிஷியமுக பருவத்தை நெருங்கும் போதும், சீதை ராமரிடம், பெருமானே! தாங்கள் முதன் முதலில் அனுமனை எங்கு பார்த்தீர்கள் எனக் கேட்டாள். 

★ராமர், இதோ இந்த ரிஷியமுக பர்வதத்தில் தான் சந்தித்தேன் என்றார். விமானம் ரிஷியமுக பர்வத்தை தாண்டி கிஷ்கிந்தை நோக்கி பறந்துச் சென்றது. ராமர் சீதையிடம், சீதா! இதுதான் கிஷ்கிந்தை. இங்கு தான் நான் வாலியை வதம் செய்தேன். இதோ, இங்கிருக்கும் இந்த சூரிய குமாரரான சுக்ரீவன் நீதிநெறி தவறாது ஆட்சி செய்யும் கிஷ்கிந்தை இது தான் என்றார்.  சீதை இராமரிடம், பெருமானே! பெண்களின் துணையின்றி நான் மட்டும் அயோத்தி நகருக்கு செல்வது சிறப்பல்ல. அதனால் இந்த  நகரத்தில் வாழும் அரசர் சுக்ரீவரின் மனைவி மற்றும் சில வானரப் பெண்களை நம்முடன் அழைத்துச் செல்லலாம் என்றார். 

★ராமர், சரி என்று சம்மதிக்கவே, புஷ்பக விமானம் கிஷ்கிந்தை யில் இறங்கியது. சுக்ரீவனின் கட்டளைப்படி,அனுமன் விரைந்து சென்று சுக்ரீவன் மனைவி ரூமாவையும், அங்கதனின் தாயார் தாரையையும், மற்றும் அவர்களுக்கு உதவ சில வானரப் பெண்களையும்  அழைத்து வந்தான். அவர்கள் சீதைக்காக சில பரிசுப் பொருட்களை கொண்டு வந்து கொடுத்தனர். சீதை அப்பரிசுப் பொருட்களை ஏற்று அவர்களை வாழ்த்தினார். பிறகு அங்கிருந்து விமானம் வானில் பறந்தது. விமானம் கோதாவரி ஆற்றில் மேல் பறந்துச் சென்றது.

★ராமர், முன்பு கோதாவரி ஆற்றின் பக்கத்தில் தங்கிருந்த இடத்தை காண்பித்து, இந்த இடத்தில்தான்  நாம் இருவரும் பிரிந்து மிகுந்த துன்பத்திற்கு உள்ளானோம் எனக் கூறினார். அதன்பின் விமானம் தண்டக வனத்தின் மேல் சென்றது. ராமர் சீதையிடம், இந்த இடம் பல முனிவர்கள் யாகம் செய்து பலன் பெற்ற இடம் என்றார். அதற்குள் விமானம் சித்ரகூட மலை மேல் சென்றது. அங்கு பரத்வாஜ முனிவர், ராமர் இங்கு இறங்க வேண்டும் என மனமுருக வேண்டிக் கொண்டார். பரத்வாஜ முனிவர் வேண்டுகோளின்படி ராமர் சித்ரகூட மலையில் இறங்கினார். 

★ராமர் பரத்வாஜ முனிவரிடம் சென்று அவரை வணங்கினார். பரத்வாஜ முனிவர் ராமரை அன்புடன் ஆசிர்வதித்தார். அதன் பின் லட்சுமணரும், சீதையும் மகரிஷி பரத்வாஜ முனிவரின் திருவடியில் விழுந்து ஆசியை பெற்றனர்.ஶ்ரீ ராமரை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்ற ரிஷி பரத்வாஜர் ராமரிடம் பேச ஆரம்பித்தார். நீ இங்கிருந்து கிளம்பியது முதல் யுத்தத்தில் ராவணனை அழித்தது வரை நடந்த எல்லா சம்பவங்களையும் எனது தவத்தின் சக்தியால் தெரிந்து கொண்டேன். அரிய பல செயல்களை செய்து உனது மிக அற்புதமான பராக்கிரமத்தைக் காட்டியிருக்கிறாய். 

★இந்த நேரத்தில் எனது வேண்டுகோள் ஒன்றை இங்கே வைக்கின்றேன். ஆகவே ,  இன்று ஒரு நாள் இங்கேயே தங்கி தனது விருந்து உபசாரங்களை ஏற்றுக் கொள்ள வேண்டுமாய்  ராமரிடம் கேட்டுக் கொண்டார். பரதன் அங்கு உயிர் துறக்கும்படியான  நிலையில் இருக்கும் போது, ராமர், பரத்வாஜ முனிவரிடம், உணவருந்த ஒப்புக் கொண்டார். அத்துடன் அன்று அங்கேயே தங்குவதற்கும் தனது சம்மதம் தெரிவித்து பரதனைப் பற்றியும், அயோத்தியில் உள்ளவர்களைப் பற்றியும் மகரிஷி பரத்வாஜரிடம் விசாரித்தார். 

★பரத்வாஜ முனிவர் ராமரிடம், ராமா! அனைத்து செல்வங்களும் வசதிகளும் இருந்தாலும் மரவுரி தரித்து தவ வாழ்க்கை வாழ்ந்து வரும் சகோதரன் பரதன் உனது பாதுகைகளை சிம்மாசனத்தில் வைத்துக் கொண்டே அரசாட்சி செய்து வருகின்றான். பரதன் உட்பட அயோத்தியில் உள்ள அனைவரும்,   நீ எப்போது வருவாய் என உன் வருகையை  எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.  
மேலும் உன்னுடைய  தம்பி பரதன்! தன் உடலை வருத்திக் கொண்டு, மனதில் கலக்கத்தை கொண்டு, தினமும் காய்,கனிகள் மட்டும் உண்டு, உன்னுடைய  பாதுகைகளுக்கு முப்பொழுதும் வண்ண மலர்களால் அர்ச்சித்து வருகிறான்.  இன்றுடன் உன் வனவாசம் முடிவடைவதால் உன் வரவை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறான் என்றார்.

★ராமர் இதைக் கேட்டு மிகவும் துயரம் அடைந்தார். அதன்பின்
ராமர், பரத்வாஜ முனிவரின் உபசரிப்பை ஏற்றார்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869

நாளை...................

[4:00 pm, 10/02/2022] Mohan SriRaghavendrar Kulithalai: ஶ்ரீராம காவியம்
~~~~~
306/09-02-2022

பரதனின் ஆதங்கம்...

★உன் தம்பி பரதன் தினமும் காய், கனிகளை உண்டு, உன் பாதுகைகளுக்கு முப்பொழுதும் வண்ண மலர்களால் அர்ச்சித்து வருகிறான்.  இன்றுடன் உன் வனவாசம் முடிவடைவதால் உன் வரவை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறான் என்றார் மகரிஷி பரத்வாஜர். ராமர் இதைக் கேட்டு மிகவும் துயரம் அடைந்தார். ராமர் பரத்வாஜர் சொன்னதைக் கேட்டு சிறிது நேரம் அமைதியாக சிந்தித்தார். பிறகு மகரிஷி பரத்வாஜரின் விருந்து உபசாரத்தை ஏற்றுக் கொண்டார்.

★தனக்கு உதவிய அனுமனை கௌரவிக்கும் வகையில், தனக்கு உணவு பரிமாறிய ஒரு இலையின் நடுவில் ஒரு கோடு போட்டார். ஒரு பக்கத்திலிருந்த உணவை அவரை உண்ணும்படி கூறினார். அனுமனை அழைத்து பேச ஆரம்பித்தார். இங்கிருந்து உடனடியாக கிளம்பி அயோத்தி நகருக்கு செல்லும் வழியில் கங்கை கரையில் இருக்கும் வேடர்களின் தலைவன் குகனை சந்தித்து எனது நலத்தை கூறி விட்டு நாளை அயோத்திக்கு செல்லும் வழியில் சந்திப்பதாக செய்தி சொல்லிவிடு. 

★பின்னர் அங்கிருந்து கிளம்பி அயோத்திக்கு சென்று, பரதனை சந்தித்து நடந்தவற்றை எல்லாம் விவரித்து, என்னுடைய  இந்த கணையாழியை பரதனிடம் காண்பித்து, ராமர் சீதை மற்றும் லட்சுமணன் அவர்களது நண்பர்களுடன் அயோத்திக்கு நாளை வருகின்றார்கள் என்று செய்தியை சொல்லிவிடு என்றார். பிறகு ராமர் தன் கணையாழியை அனுமனிடம் கொடுத்தார்.அதன்பின் அனுமன் ராமரிடன் விடைப்பெற்று வான்வெளி நோக்கிச் பறந்தான். வான்வெளியில் அனுமன் மிக வேகமாக பறந்துச் சென்றான். 

★பரதர், அயோத்தி மாநகரையும், அரண்மனையையும் துறந்து அயோத்திக்கு அருகிலுள்ள நந்திக் கிராமத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் தமையன் ராமரின் பாதுகைகளை வைத்து வழிபாடு செய்து கொண்டிருந்தார். 
ராமரின் பாதுகைகளை காலை, மதியம், இரவு என முப்பொழுதும் மலர்களை கொண்டு அர்ச்சனை செய்து, வழிபாடு செய்து வரும் பரதன் இன்றும் ராமரின் பாதுகைகளுக்கு பூஜை செய்து மலர்களால் அர்ச்சித்து வழிபாடு செய்தான். அப்பொழுது பரதன், அண்ணன் ராமர் அயோத்திக்கு திரும்பி வரும் நாளை பற்றி சிந்தித்தான். 

★உடனே ஜோதிடர்களை வரவழைத்து இராமர் திரும்பி வரும் நாள் என்று எனக் கேட்டார். ஜோதிடர்கள், பதினான்கு ஆண்டு வனவாச காலம் இன்றுடன் முடிவடைகிறது என்றனர். இதைக் கேட்டு பரதர் மகிழ்ச்சி அடைந்தார். பரதர் ராமரை நோக்கி எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்.
ராமர் குறித்த காலத்திற்குள் வர கால தாமதமானதால் பரதர், அண்ணன் ராமரை இன்னும் காணவில்லையே! அவருக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்து விட்டதோ! என எண்ணினார். 

★இல்லை, பகைவர்களால் ஏதேனும் துன்பம் நேர்ந்ததோ! ஆனால் அண்ணனுடன் தம்பி லட்சுமணன் இருக்கிறானே,
 அதனால் அவருக்கு ஏதும் நேராது என்று மன அமைதி அடைந்தார்.அண்ணன் ராமர் வரவில்லையெனில், நான் உயிர் வாழ மாட்டேன். இனி நான் உயிர் வாழ்வது சிறந்தது அல்ல. நான் உயிர் துறக்க வேண்டும் என எண்ணி பரதர் உயிரை விடத் துணிந்தார். அதன்பின் தன் ஏவலாட்களை அழைத்து சத்துருக்ணனை அழைத்து வர கட்டளையிட்டார். அவ்வாறே சத்ருக்ணனும் அங்கு வந்து பரதரை பணிந்து நின்றான்.

★பிறகு பரதன் சத்ருக்ணனை பார்த்து, தம்பி! பதினான்கு ஆண்டு வனவாச காலம் முடிந்த பின்பும் நமது  அண்ணன் ராமர் குறிப்பிட்டப்படி நாடு திரும்பி வரவில்லை. அதனால் நான் உயிர் துறக்க போகிறேன். நீ எனக்கு விறகுகளைக் கொண்டு அக்னி மூட்டிக் கொடு எனக் கேட்டார். சத்ருக்ணன், பரதர் இவ்வாறு கூறியதைக் கேட்டு துடிதுடித்துப் போனான். சத்ருக்ணனின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அண்ணா! தாங்கள் இல்லா இவ்வுலகில் நான் மட்டும் இருந்து என்ன பயன்? நானும் தங்களுடன் வருகிறேன். இருவரும் ஒன்றாக உயிரைத் துறப்போம். நீங்கள் இல்லாத இவ்வுலகில் இந்த இராஜ்ஜியம் மட்டும் எனக்கெதற்கு? தாங்கள் தீயில் விழுந்தால் நானும் தீயில் விழுந்து மாள்வேன் எனக் கூறி அழுதான்.

★பரதன், தம்பி சத்ருக்கனா! நீ இவ்வாறு எப்போதும் சொல்லக் கூடாது. எனக்காக நீ உயிர் வாழ வேண்டும். என் பொருட்டு தான் ராமர் வனவாசம் சென்றுள்ளார். வனவாச காலம் முடிந்த பின்பும் ராமர் இன்னும் நமது நாட்டுக்குத் திரும்பவில்லை. நான் இந்த அயோத்தியை ஆட்சி புரிவதால், தம்பி பரதனே ஆட்சி புரியட்டும் என ராமர் வராமல் இருக்கிறாரா? என்பது தெரியவில்லை. நான் இறந்துவிட்டால் அயோத்தியை ஆட்சி புரிய எவரும் இருக்க மாட்டார்கள். அப்பொழுது ராமர் அரசு புரிய இங்கு வந்துதான் ஆக வேண்டும். அதனால் தான், நான் இன்று என் உயிரை விட துணிந்துள்ளேன் என மிகவும் உருக்கமாகக்  கூறினான். 

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.

நாளை.................

ஶ்ரீராம காவியம்
~~~~~
307/10-02-2022

பரதனுடன் அனுமன்...

★நான் இறந்துவிட்டால் அயோத்தியை ஆட்சி புரிய எவரும் இருக்க மாட்டார்கள். அப்பொழுது ராமர் அரசு புரிய இங்கு வந்தே ஆக வேண்டும். அதனால் தான், நான் என் உயிரை விட துணிந்துள்ளேன் என பரதன்,தம்பி சத்ருக்ணனிடம் கூறினான். என் செயலை நீ புரிந்துக் கொள்ள வேண்டும். அதனால் நீ எனக்கு தீ மூட்டிக் கொடு, இது என் கட்டளை எனக் கூறினான். பரதன் இவ்வாறு கூறியதால் சத்ருக்ணனால் எதுவும் செய்ய முடியவில்லை. கண்களில் கண்ணீர் தளும்ப பரதரின் கட்டளைப்படி தீமூட்டினான்.  

★பரதன் தீயில் தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் செய்தி அயோத்தி முழுவதும் பரவியது. மக்கள் அனைவரும் பரதனை காண ஓடி வந்தனர். இச்செய்தி கௌசலை, சுமித்திரை, மற்றும் கைகேயிக்கும்  தெரிவிக்கப் பட்டது. மூவரும் கண்களில் கண்ணீர் தளும்ப பரதனை காண நந்தி கிராமத்திற்கு விரைந்து  வந்தார்கள். அத்துடன் சுமந்திரன் உள்ளிட்ட மந்திரிப் பிரதானிகளும் மற்றும்  படைத் தலைவர்களும் கூட வந்து குவிந்தனர். கௌசலை பரதனை பற்றிக் கொண்டு  கதறி அழுதாள். 

★என் அன்பு மகனே! என்ன காரியம் செய்ய துணிந்து இருக்கிறாய்? ராமன் இன்று வரவில்லை என்றால் நாளை வருவான். ராமன் இங்கு வந்து உன்னைப் பற்றி கேட்டால் நாங்கள் என்ன சொல்வது?. இச்செய்தியை அறிந்து ராமனும் மாள மாட்டானா? நீ ராமன் மேல் வைத்த அன்புக்கும், உன் பண்புகளுக்கும் ஆயிரம் ராமர்கள் வந்தாலும் உனக்கு ஈடாக மாட்டார்கள். உன்னைப் போல் ஒருவன் இவ்வுலகில் பிறக்கப் போவதில்லை. உன் அன்பு மேரு மலையைக் காட்டிலும் மிகப் பெரியது. நீ உன் உயிரை தீயிக்கு இரையாக்கி விடாதே எனக் கூறி புலம்பி அழுதாள்.  

★பரதன், அன்னையே! அண்ணன் ராமர், பதினான்கு ஆண்டு வனவாசம் முடிந்த பின்பு திரும்பி வருவேன் என உறுதி அளித்தார். அப்பொழுது நான், தாங்கள் பதினான்கு ஆண்டு முடிந்து வரவில்லையென்றால் உயிருடன் இருக்க மாட்டேன் என சபதம் செய்துக் கொண்டேன். இன்று அண்ணன் ராமரின் பதினான்கு ஆண்டு வனவாசம் காலம் முடிந்துவிட்டது. ஆனால் அவர் இன்னும் இங்கு வரவில்லை. அதனால் நான் ஏற்றுக்கொண்ட சபதத்தின்படி உயிர் விடுவேன். தந்தை, என் தாய்க்கு செய்து கொடுத்த  சத்தியத்தைக் காப்பாற்றும் பொருட்டு உயிரைவிட்டவர். அதுபோல் நானும் என்னுடைய  சபதத்திற்காக இந்த உயிரை விடுவேன் என்றான். 

★பரதன் கூறிய சொற்களை கேட்டு கௌசலை துடிதுடித்து போனாள். கௌசலை, பரதனை எவ்வளவோ தடுக்க முயற்சி செய்தும், அத்தனையும் தோல்வியில் முடிந்தன.
சுமித்திரையும், கைகேயியும் கண்ணீர் மல்க அழுது கொண்டு நின்றிருந்தனர். பரதன் தீயில் இறங்குவதில் உறுதியாக இருந்தான். பரதன், அக்னிக்கு அருகில் சென்று பூஜையை செய்தான். அக்னிக்கு தன் உயிரை காணிக்கையாக கொடுக்க முன்னே வந்தான். அப்போது திடீரென "ஶ்ரீராமர் வருகிறார்" என்ற பெரிய சப்தம் கேட்டது.

★குகனிடம் செய்தியை சொல்லி விட்டு அயோத்தியை வந்து  அடைந்தார் அனுமன். நகரத்தின் வெளியே ஒரு கிராமத்தில் இளைத்த உடலுடன், முகம் வாடி, மான் தோலை உடுத்திக் கொண்டு, அக்னியின் முன்பு விழுவதற்கு தயாராக இருந்த பரதனைக் கண்ட அனுமன், அவர் 
தீயில் இறங்க  இருப்பதைக் கண்டு இவர் தான் பரதர் என்பதை யூகித்துக் கொண்டான். அனுமன், "ஶ்ரீராமர் வருகிறார்.!ராமர் வந்துவிட்டார்!, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி வந்துவிட்டார்.!" எனக் கூறிக் கொண்டு வேகமாக வந்து இறங்கி பரதனை தடுத்தான். 

★அனுமன் வந்து இறங்கிய வேகத்தில் அக்னித் தீயும் அணைந்தது. பரதரே! ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி வந்துவிட்டார். இன்னும் சிறிது நேரத்தில் இங்கு வந்துவிடுவார். பரத்வாஜ முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க, அவரின் உபசரிப்பை ஏற்றுக் கொண்டு ஆசிரமத்தில் தங்கியிருக்கின்றார்.  ராமர், சீதை, லட்சுமணன் மூவரும் தண்டகாரண்ய காட்டில் உள்ள ரிஷி பரத்வாஜர் ஆசிரமத்தில் தங்கியிருக்கிறார்கள். அங்கு இருந்து தங்களுக்கு நல்ல செய்தி ஒன்று சொல்லி அனுப்பியிருக்கிறார் என்று அனுமன் பரதனிடம் கூறினார். 

★ராமரிடம் இருந்து நல்ல செய்தி என்ற வார்த்தையை கேட்ட பரதனுக்கு மகிழ்ச்சியில் பேச வார்த்தைகள் வரவில்லை. அனுமன் தொடர்ந்து பேசினார். ராமர் தங்களின் நலனை விசாரித்து விட்டு நாளை இங்கே வருவதாக தகவல் சொல்லி அனுப்பினார். ராமருடன் சீதையும் லட்சுமணனும் அவர்களுடன் அவரது நண்பர்கள் பலரும் வருகிறார்கள் என்றார். 
பிறகு அனுமன், பரதரே! 
அதற்குள் தாங்கள் என்ன ஒரு காரியம் செய்ய துணிந்து உள்ளீர்கள். தாங்கள் உயிர் விட்ட செய்தியை அறிந்து ராமர் மட்டும் மகிழ்ச்சியாக உயிர் வாழ்வார் என நினைத்தீர்களா? நிச்சயம் இல்லை. 

★அவரும் தங்களுடன் உயிரை மாய்த்துக் கொள்வார். தாங்கள் அவசரப்பட்டு இச்செயலை செய்வது சரியானது அல்ல. 
ஸ்ரீராமர் பதினான்கு ஆண்டு வனவாசம் முடிந்து அயோத்திக்கு வருவதற்கு இன்னும் நாற்பது நாழிகை பொழுது மீதம் இருக்கிறது. அதற்குள் ராமர் இங்கு வந்துவிடுவார். தாங்கள் யாரும் வருந்த வேண்டாம். நான் செல்வது அனைத்தும் உண்மை. பரதரே! ஸ்ரீராமர் அவர்கள், அவரின் அடையாளமாக இந்த கணையாழியை தங்களிடம் காண்பிக்கச் சொன்னார் எனக் கூறிவிட்டு, ராமர் கொடுத்த கணையாழியை பரதரிடம் காண்பித்தான்.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869

நாளை...................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
308/11-02-2022
 
அன்னையரை
வணங்கிய அனுமன்...
 
★பரதரே! ஸ்ரீராமர், அவரின் அடையாளமாக இந்த கணையாழியை தங்களிடம் காண்பிக்க சொன்னார் எனக் கூறிவிட்டு பரதரிடம் அதைக் காண்பித்தான். பரதன், அக்கணையாழியை பார்த்து இது என் அண்ணனுடையது தான் எனக் கூறி அதை வாங்கி, கண்ணீரால் அபிஷேகம் செய்தார். பிறகு பரதன் அந்தக் கணையாழியை அனைவரிடமும் காண்பித்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அனைவரும் அதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.
 
★பிறகு பரதன் அனுமனைப் பார்த்து எனக்கு பேரின்பத்தை கொடுக்கும் செய்தியை தாங்கள் கொண்டு வந்திருக்கிறீர்கள். என்னுடைய அரசராகிய ராமர் என்னை விட்டு பிரிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இத்தனை ஆண்டுகாலம் ராமர் என்ன செய்து கொண்டிருந்தார்? என்றும், தாங்கள் யார்? தங்களிடம் ராமருக்கு எப்படி நட்பு ஏற்பட்டது? என்றும் தயவு கூர்ந்து சொல்லுங்கள். இத்தனை ஆண்டுகள் ராமரைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டு இருந்த நான், மேலும் அவரைப் பற்றி கேட்டு தெரிந்து மகிழ்ச்சி கொள்கிறேன் என்றான்.
 
★சீதையை ராவணன் தூக்கிச் சென்றது முதல் ராவணனை அழித்து, புஷ்பக விமானத்தில் பரத்வாஜர் ஆசிரமத்தில் ராமர் வந்தது வரை நடந்தவைகள் அனைத்தையும்  பரதன் கேட்க
அனுமன் சொல்லி முடித்தார்.
பிறகு பரதன் அனுமனை பார்த்து, ஐயனே! எங்களுக்கு உயிரினும் மேலான ஶ்ரீராமரைப் பற்றிய இத்தகையை இன்பச் செய்திகளைக் கூறிய தாங்கள் யார்? என்று எங்களிடம் கூறவில்லையே! நீங்கள் வந்த வேகத்தில் அக்னித்தீயும் அணைந்துவிட்டது. அப்படி என்றால் நீங்கள் யார்? அந்த மும்மூர்த்திகளில் ஒருவரா? எனக் கேட்டான்.
 
★அனுமன், பரதனை வணங்கி அவனிடம் பெருமானே! நான் வாயுக்குமாரன். குரங்கினத்தைச் சேர்ந்தவன். வாயு பகவானுக்கும், அன்னை அஞ்சனா தேவிக்கும் பிறந்தவன் என்றான். அதன்பின் அனுமன் தன் விஸ்வரூபத்தை காண்பித்தான். அனுமனின் இந்த உருவத்தைக் கண்டு சத்ருக்ணனும் மற்றவர்களும் அஞ்சி நடுங்கினார்கள். பிறகு அனுமன் அவர்களை பார்த்து, இது தான் என் உண்மையான உருவம் என்றான். அங்கு இருந்தவர்கள் பயப்படுவதைப் பார்த்த அனுமன் தன்னுடைய  உருவத்தை சிறியதாக மாற்றிக் கொண்டான்.
 
★அதன் பின் பரதன், அனுமனே! அண்ணல் வந்துவிட்டார் என்னும் சுபச்செய்தியை கூறியதால், உனக்கு பல பரிசுகளை நான் தர விரும்புகின்றேன் என்று கூறி . அனுமனுக்கு விலையுயர்ந்த பொன்னும், பொருளும், ரத்ன மணிகளும் பரிசாக கொடுத்து மகிழ்ந்தான். அனைவரிடமும் பேசிக்கொண்டு இருந்த அனுமன் பரதனிடம், ‘அன்னை  எங்கே? அவரை நான் வணங்க வேண்டும்’ என்றார். பரதனும், ஸ்ரீராமனைப் பெற்ற மிகவும் பாக்கியசாலியான அன்னை கௌசல்யை இதோ  எனக் காட்டினான். அவளை வணங்கிய பின் மறுபடியும் அன்னை எங்கே? நமஸ்கரிக்க வேண்டும்’ என்று கேட்டார்.
 
★ஸ்ரீராமனை கணமும் பிரியாது சேவை செய்த பாக்கியசாலி லக்ஷ்மணனையும், என் தம்பி சத்ருக்ணனையும் பெற்ற அன்னை சுமித்ரை, இதோ இவர்’ எனக் காட்டினான் பரதன். அவளையும் வணங்கிய பின்னரும், வெளிப்படையாக, தங்களைப் பெற்ற தியாகி, அன்னை கைகேயி எங்கே? அவர்களையும் நான் வணங்க வேண்டும்’ என்றார் அனுமன்.
துணுக்குற்ற பரதன், ‘அவள் மஹாபாவியாயிற்றே.அவளுக்கு மகனாகப் பிறக்கும் அளவுக்கு பாபம் செய்து விட்டேனே! என நான் வருந்தாத நாளில்லை. அவளை நீங்கள் ஏன் வணங்க வேண்டும்?’ எனக் கேட்டான்.
 
★அப்போது அனுமன், பிறர் அறியாத மாதா  கைகேயியின் பெருமைகளைப் பற்றி மிகவும் விபரமாகக்  கூறினார்.‘பரதா! நீயோ இந்த உலகமோ அவரை அறிந்து கொண்டது இவ்வளவு தான். உன் தாயார் எவ்வளவு தன்னலமற்ற தியாகி தெரியுமா? தசரதரின் தாயார் இந்துமதி மிகுந்த இளகிய மனம் படைத்தவள். செடி, கொடிகள் போன்ற தாவரங்களிலும் உயிரோட்டத்தை, அவைகளின்  உணர்ச்சிகளைக் கண்டவள். அவளுடன் ஒரு நாள் சிறுவன் தசரதன் உத்யானவனத்தில் திரிந்தபோது, தளதளவெனப் பொன்னிறத்தில் மினுமினுத்த தளிர் ஒன்றைக் கொடியிலிருந்து ஒடித்து விட்டான்.
 
★ஒடித்த இடத்திலிருந்து பால் வடிவதைக் கண்டு பதறிய இந்துமதி, ‘தன் குழந்தையான தளிரைப் பிரிந்து இந்தக் கொடி எப்படி கண்ணீர் வடிக்கிறதோ, அப்படியே உன் மகனைப் பிரிந்து நீ கண்ணீர் வடித்து மடியக் கடவாய்’ எனச் சாபமிட்டாள்.
பின்னர் இளைஞனாக தசரதன் வேட்டைக்குச் சென்ற இடத்தில் ரிஷிகுமாரனான சிரவணன், குடுவையில் தன் தாய் மற்றும் தந்தையின் தாகம் தீர்க்கத் தண்ணீர் மொள்ள, அதை யானை தண்ணீர் குடிப்பதாகக் கருதி சப்தவேதி என்னும் அஸ்திரத்தினால் அவனைக் கொன்றதனால், ‘உயிர் நீங்கும் முன் புத்திர சோகத்தினால் உயிர் நீங்கக்கடவாய்’ என்று அவனது கண்ணிழந்த தாய் தந்தையால் தசரதர் சபிக்கப்பட்டார்.
 
★தசரதர் பெற்ற இவ்விரண்டு சாபங்களைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தார் அன்னை கைகேயி.
 
வணக்கத்துடன
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை..................
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
309/12-02-2022
 
கைகேயி பற்றி
அனுமனின் விளக்கம்...
 
★தசரதர், ராமருக்கு எவ்வளவு சீக்கிரம் பட்டம் கட்ட முடியுமோ அவ்வளவு விரைவில் முடிசூட்ட நிச்சயித்தார்.  தன் அரசவை ஜோதிடர்களை வற்புறுத்தி, குறித்த முகூர்த்தத்தின், பின்விளைவுகளை தசரதர் அறிய மாடடார். ஆனால் , பல கலைகளும் சாஸ்திரங்களும் அறிந்த தன் தந்தையிடமிருந்து, தான் முழுமையாகக் கற்றிருந்த ஜோதிடத்தின் மூலம், கோசல ராஜ்ஜியத்தின் ஜாதகத்தினை ஆராய்ந்து, நன்றாகவே அறிந்து இருந்தார் அன்னை  கைகேயி.
அந்த முகூர்த்தத்தின்படி, ராம பட்டாபிஷேகம் நிகழ்ந்திருந்தால், ராஜ்யபாரத்தில் ராமன் அன்று அமர்ந்திருந்தால், அதுவே அவனது ஆயுளை நிச்சயம் முடித்திருக்கும்.
 
★புத்ரசோகம் தசரதனையும் முடித்திருக்கும். புத்ரசோகம் எப்படியும் நிகழ வேண்டும் என்னும்போது, அது  ராமனை விட்டுத் தற்காலிகப் பிரிவா? நிரந்தரப் பிரிவா? என்பதுதான் பிரச்னை. தனக்கு வைதவ்யம் வந்துவிடும் என்று நன்றாகத் தெரிந்திருந்தும், ஸ்ரீராமனின் உயிரை எப்படியும்  காப்பாற்ற  நிச்சயித்தார் உன் அன்னை.
அந்தக் கணத்தில் அரசனாக இருப்பவன் உயிர் நீப்பது ராஜ்யத்தின் மோசமான ஜாதக அமைப்பின்படி நிச்சயம் என்ற நிலையில், ஏற்கெனவே ஆண்டு அனுபவித்து முதியவனாகிவிட்ட தசரதன் உயிர் நீப்பதே மேல் என அவள் எண்ணினாள்.
 
★அப்போது கூட அவள் கேட்க விரும்பியது பதினான்கு நாள்கள் வனவாசம். வாய்தவறி அது பதினான்கு வருடங்கள் என வந்துவிட்டது. ஒரு கணம் கூட ராமனைப் பிரிவதைச் சகிக்காத தசரதருக்கு இதுவே உயிரைக் கொல்லும் விஷமாகிவிட்டது.
எந்தப் பெண்ணாவது தன் சௌமாங்கல்யத்தைக் கூடப் பணயம் வைத்து, மாற்றான் மகனைக் காப்பாற்றுவாளா? உங்கள் அன்னை கைகேயி செய்தார். ராமனிடம் கைகேயி கொண்ட பிரியம் அத்தகையது.
நீ ராஜ்யத்தை ஏற்க மாட்டாய்
என அவளுக்குத் தெரியும்.
 
★ஆகவேதான், அத்தகைய வரத்தைக் கேட்டார். ஒருகால் நீ ஏற்றால், ஸ்ரீராமனின் உயிர் காக்க உன்னை இழக்கவும் அவர் தயாராக இருந்தார். அவர் மஹா தியாகி. அவரால் தான் எங்கோ வனத்தில் கிடந்த எங்களுக்கு எல்லாம் ஸ்ரீராமனின் தரிசனம் கிட்டியது. கர-தூஷணர் முதலாக ராவணன் வரை பல கொடிய ராட்சதர்களின் வதமும் சிறப்பாக நிகழ்ந்தது. அந்த புனிதவதியை நாம் அனைவரும் வணங்க வேண்டும்’ ஆகவே காரணம் அல்லாது காரியம் இல்லை. இந்த உலகில் எதையும் ஆராயாது நம்பக் கூடாது  என்பது அன்னை கைகேயி வாயிலாக அறிய முடிகிறது
என்று கூறினான்.
 
★பின்னர் கைகேயியை வணங்கி தொழுதார் அனுமன். பரதன் முதலானவர்களுக்கு அப்போதுதான் கைகேயியுடைய உண்மை உருவம் புரிந்தது.
எங்களை மன்னித்து விடுங்கள் தாயே! என்று கண்ணீர் விட்டு அழுதபடியே கைகேயியை பரதனும் சத்ருக்ணனும்  வணங்கினர். கைகேயியும் அவர்களை ஆரத்தழுவிக் கொண்டு என் செல்லக் குழந்தைகள் மேல் என்றுமே எனக்கு கோபம் வராது எனக் கூறினாள்.  கௌசலையும், சுமித்ரையும் நாங்களும் கூட உன்னைத் தவறாக நினைத்து இருந்தோம். எங்களையும மன்னித்துவிடு கைகேயி எனறு கேட்டுக் கொண்டனர்.
 
★மேலும் இந்த விஷயத்தை தெரியப் படுத்திய அனுமனை அனைவரும் போற்றி வாழ்த்தி தங்கள் நன்றியினைத் தெரிவித்தனர்.  பரதன் அனுமனிடம், நாங்களும் உன்னுடன் வந்து அண்ணலை வரவேற்க விரும்புகிறோம் என்றான். பரதனின் தவிப்பை அறிந்த அனுமன் சம்மதித்தான்.
அயோத்தி மக்களும், மற்றும் முனிவர்களும்,ராமரின் அன்னை கௌசலை உட்பட்ட மூன்று தாய்மார்களும், சத்ருக்ணனும் ராமரை அழைத்து வரச் செல்ல தயாராக இருந்தனர். பரதன், ராமரின் பாதுகைகளை தன் தலையில் வைத்துக் கொண்டு ராமரை எதிர்நோக்கி அழைத்து வர புடைசூழச் சென்றான்.
 
★போகும் வழியில் பரதன் அனுமனிடம், நீ அண்ணல் ராமரை முதலில் எங்கு சந்தித்தாய் என்பதை விரிவாக கூறு எனக் கேட்டான். அனுமன், நான் எம்பெருமான் ஶ்ரீராமரை முதலில் ரிஷியமுக பர்வதத்தில் சந்தித்தேன் என்றான். அதன் பின் அனுமன், வாலியின் வதத்தையும், ராவணனனின் வதத்தையும், விபீஷணனுக்கு பட்டாபிஷேகத்தை செய்ததையும் அதன்பின் அங்கிருந்து புஷ்பக விமானத்தில் வந்து பரத்வாஜ முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க அங்கு  அனைவரும் தங்கியிருந்ததை பற்றியும் விரிவாக கூறினான்.
 
★ராமரின் பராக்கிரமத்தை கேட்டு பேரானந்தமடைந்த பரதன், சத்ருக்ணனை அழைத்து தம்பி சத்ருக்கனா! அண்ணல் ராமர் நாளை வருகிறார் என்கிற  செய்தியை  முரசறைந்து நமது
மக்களுக்கறிவித்து, அயோத்தி நகரை நன்றாக  அலங்கரிக்கச்
சொல்லி, அதுபோலவே அயோத்தியின் எல்லையில் இருந்து ராமர் வரும் வீதிகள் தோறும் அலங்காரங்கள் செய்து இசை நடனம் என்று அனைத்து
கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்துவிடு என்று கட்டளையிட்டான். சத்ருக்ணன் இச்செய்தியை சுமந்திரரிடம் கூறினான்.
 
★சுமந்திரர் இச்செய்தியை முரசறைந்து அறிவிக்கும்படி முரசறைவோனிடம் கூறினார். பரதனின் கட்டளைப்படி நாடு முழுவதும் ராமரின் வருகையை முரசறைந்து அறிவிக்கப்பட்டது. இதை அறிந்த மக்களனைவரும் மகிழ்ச்சி கடலில் திளைத்தனர். அவரவர் வீடுகளில் மாவிலை தோரணம் கட்டி அலங்கரித்தனர். அயோத்தி நகரமே மகிழ்ச்சி கடலில் திளைத்தது.
 
குறிப்பு:-
நண்பர்களே! சில தவிர்க்க இயலாத காரணங்களினால் நாளை(13/02/2022) "ஶ்ரீராம காவியம்" பதிய இயலாது என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை மறுநாள்................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
308/11-02-2022
 
அன்னையரை
வணங்கிய அனுமன்...
 
★பரதரே! ஸ்ரீராமர், அவரின் அடையாளமாக இந்த கணையாழியை தங்களிடம் காண்பிக்க சொன்னார் எனக் கூறிவிட்டு பரதரிடம் அதைக் காண்பித்தான். பரதன், அக்கணையாழியை பார்த்து இது என் அண்ணனுடையது தான் எனக் கூறி அதை வாங்கி, கண்ணீரால் அபிஷேகம் செய்தார். பிறகு பரதன் அந்தக் கணையாழியை அனைவரிடமும் காண்பித்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அனைவரும் அதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.
 
★பிறகு பரதன் அனுமனைப் பார்த்து எனக்கு பேரின்பத்தை கொடுக்கும் செய்தியை தாங்கள் கொண்டு வந்திருக்கிறீர்கள். என்னுடைய அரசராகிய ராமர் என்னை விட்டு பிரிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இத்தனை ஆண்டுகாலம் ராமர் என்ன செய்து கொண்டிருந்தார்? என்றும், தாங்கள் யார்? தங்களிடம் ராமருக்கு எப்படி நட்பு ஏற்பட்டது? என்றும் தயவு கூர்ந்து சொல்லுங்கள். இத்தனை ஆண்டுகள் ராமரைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டு இருந்த நான், மேலும் அவரைப் பற்றி கேட்டு தெரிந்து மகிழ்ச்சி கொள்கிறேன் என்றான்.
 
★சீதையை ராவணன் தூக்கிச் சென்றது முதல் ராவணனை அழித்து, புஷ்பக விமானத்தில் பரத்வாஜர் ஆசிரமத்தில் ராமர் வந்தது வரை நடந்தவைகள் அனைத்தையும்  பரதன் கேட்க
அனுமன் சொல்லி முடித்தார்.
பிறகு பரதன் அனுமனை பார்த்து, ஐயனே! எங்களுக்கு உயிரினும் மேலான ஶ்ரீராமரைப் பற்றிய இத்தகையை இன்பச் செய்திகளைக் கூறிய தாங்கள் யார்? என்று எங்களிடம் கூறவில்லையே! நீங்கள் வந்த வேகத்தில் அக்னித்தீயும் அணைந்துவிட்டது. அப்படி என்றால் நீங்கள் யார்? அந்த மும்மூர்த்திகளில் ஒருவரா? எனக் கேட்டான்.
 
★அனுமன், பரதனை வணங்கி அவனிடம் பெருமானே! நான் வாயுக்குமாரன். குரங்கினத்தைச் சேர்ந்தவன். வாயு பகவானுக்கும், அன்னை அஞ்சனா தேவிக்கும் பிறந்தவன் என்றான். அதன்பின் அனுமன் தன் விஸ்வரூபத்தை காண்பித்தான். அனுமனின் இந்த உருவத்தைக் கண்டு சத்ருக்ணனும் மற்றவர்களும் அஞ்சி நடுங்கினார்கள். பிறகு அனுமன் அவர்களை பார்த்து, இது தான் என் உண்மையான உருவம் என்றான். அங்கு இருந்தவர்கள் பயப்படுவதைப் பார்த்த அனுமன் தன்னுடைய  உருவத்தை சிறியதாக மாற்றிக் கொண்டான்.
 
★அதன் பின் பரதன், அனுமனே! அண்ணல் வந்துவிட்டார் என்னும் சுபச்செய்தியை கூறியதால், உனக்கு பல பரிசுகளை நான் தர விரும்புகின்றேன் என்று கூறி . அனுமனுக்கு விலையுயர்ந்த பொன்னும், பொருளும், ரத்ன மணிகளும் பரிசாக கொடுத்து மகிழ்ந்தான். அனைவரிடமும் பேசிக்கொண்டு இருந்த அனுமன் பரதனிடம், ‘அன்னை  எங்கே? அவரை நான் வணங்க வேண்டும்’ என்றார். பரதனும், ஸ்ரீராமனைப் பெற்ற மிகவும் பாக்கியசாலியான அன்னை கௌசல்யை இதோ  எனக் காட்டினான். அவளை வணங்கிய பின் மறுபடியும் அன்னை எங்கே? நமஸ்கரிக்க வேண்டும்’ என்று கேட்டார்.
 
★ஸ்ரீராமனை கணமும் பிரியாது சேவை செய்த பாக்கியசாலி லக்ஷ்மணனையும், என் தம்பி சத்ருக்ணனையும் பெற்ற அன்னை சுமித்ரை, இதோ இவர்’ எனக் காட்டினான் பரதன். அவளையும் வணங்கிய பின்னரும், வெளிப்படையாக, தங்களைப் பெற்ற தியாகி, அன்னை கைகேயி எங்கே? அவர்களையும் நான் வணங்க வேண்டும்’ என்றார் அனுமன்.
துணுக்குற்ற பரதன், ‘அவள் மஹாபாவியாயிற்றே.அவளுக்கு மகனாகப் பிறக்கும் அளவுக்கு பாபம் செய்து விட்டேனே! என நான் வருந்தாத நாளில்லை. அவளை நீங்கள் ஏன் வணங்க வேண்டும்?’ எனக் கேட்டான்.
 
★அப்போது அனுமன், பிறர் அறியாத மாதா  கைகேயியின் பெருமைகளைப் பற்றி மிகவும் விபரமாகக்  கூறினார்.‘பரதா! நீயோ இந்த உலகமோ அவரை அறிந்து கொண்டது இவ்வளவு தான். உன் தாயார் எவ்வளவு தன்னலமற்ற தியாகி தெரியுமா? தசரதரின் தாயார் இந்துமதி மிகுந்த இளகிய மனம் படைத்தவள். செடி, கொடிகள் போன்ற தாவரங்களிலும் உயிரோட்டத்தை, அவைகளின்  உணர்ச்சிகளைக் கண்டவள். அவளுடன் ஒரு நாள் சிறுவன் தசரதன் உத்யானவனத்தில் திரிந்தபோது, தளதளவெனப் பொன்னிறத்தில் மினுமினுத்த தளிர் ஒன்றைக் கொடியிலிருந்து ஒடித்து விட்டான்.
 
★ஒடித்த இடத்திலிருந்து பால் வடிவதைக் கண்டு பதறிய இந்துமதி, ‘தன் குழந்தையான தளிரைப் பிரிந்து இந்தக் கொடி எப்படி கண்ணீர் வடிக்கிறதோ, அப்படியே உன் மகனைப் பிரிந்து நீ கண்ணீர் வடித்து மடியக் கடவாய்’ எனச் சாபமிட்டாள்.
பின்னர் இளைஞனாக தசரதன் வேட்டைக்குச் சென்ற இடத்தில் ரிஷிகுமாரனான சிரவணன், குடுவையில் தன் தாய் மற்றும் தந்தையின் தாகம் தீர்க்கத் தண்ணீர் மொள்ள, அதை யானை தண்ணீர் குடிப்பதாகக் கருதி சப்தவேதி என்னும் அஸ்திரத்தினால் அவனைக் கொன்றதனால், ‘உயிர் நீங்கும் முன் புத்திர சோகத்தினால் உயிர் நீங்கக்கடவாய்’ என்று அவனது கண்ணிழந்த தாய் தந்தையால் தசரதர் சபிக்கப்பட்டார்.
 
★தசரதர் பெற்ற இவ்விரண்டு சாபங்களைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தார் அன்னை கைகேயி.
 
வணக்கத்துடன
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை..................
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
309/12-02-2022
 
கைகேயி பற்றி
அனுமனின் விளக்கம்...
 
★தசரதர், ராமருக்கு எவ்வளவு சீக்கிரம் பட்டம் கட்ட முடியுமோ அவ்வளவு விரைவில் முடிசூட்ட நிச்சயித்தார்.  தன் அரசவை ஜோதிடர்களை வற்புறுத்தி, குறித்த முகூர்த்தத்தின், பின்விளைவுகளை தசரதர் அறிய மாடடார். ஆனால் , பல கலைகளும் சாஸ்திரங்களும் அறிந்த தன் தந்தையிடமிருந்து, தான் முழுமையாகக் கற்றிருந்த ஜோதிடத்தின் மூலம், கோசல ராஜ்ஜியத்தின் ஜாதகத்தினை ஆராய்ந்து, நன்றாகவே அறிந்து இருந்தார் அன்னை  கைகேயி.
அந்த முகூர்த்தத்தின்படி, ராம பட்டாபிஷேகம் நிகழ்ந்திருந்தால், ராஜ்யபாரத்தில் ராமன் அன்று அமர்ந்திருந்தால், அதுவே அவனது ஆயுளை நிச்சயம் முடித்திருக்கும்.
 
★புத்ரசோகம் தசரதனையும் முடித்திருக்கும். புத்ரசோகம் எப்படியும் நிகழ வேண்டும் என்னும்போது, அது  ராமனை விட்டுத் தற்காலிகப் பிரிவா? நிரந்தரப் பிரிவா? என்பதுதான் பிரச்னை. தனக்கு வைதவ்யம் வந்துவிடும் என்று நன்றாகத் தெரிந்திருந்தும், ஸ்ரீராமனின் உயிரை எப்படியும்  காப்பாற்ற  நிச்சயித்தார் உன் அன்னை.
அந்தக் கணத்தில் அரசனாக இருப்பவன் உயிர் நீப்பது ராஜ்யத்தின் மோசமான ஜாதக அமைப்பின்படி நிச்சயம் என்ற நிலையில், ஏற்கெனவே ஆண்டு அனுபவித்து முதியவனாகிவிட்ட தசரதன் உயிர் நீப்பதே மேல் என அவள் எண்ணினாள்.
 
★அப்போது கூட அவள் கேட்க விரும்பியது பதினான்கு நாள்கள் வனவாசம். வாய்தவறி அது பதினான்கு வருடங்கள் என வந்துவிட்டது. ஒரு கணம் கூட ராமனைப் பிரிவதைச் சகிக்காத தசரதருக்கு இதுவே உயிரைக் கொல்லும் விஷமாகிவிட்டது.
எந்தப் பெண்ணாவது தன் சௌமாங்கல்யத்தைக் கூடப் பணயம் வைத்து, மாற்றான் மகனைக் காப்பாற்றுவாளா? உங்கள் அன்னை கைகேயி செய்தார். ராமனிடம் கைகேயி கொண்ட பிரியம் அத்தகையது.
நீ ராஜ்யத்தை ஏற்க மாட்டாய்
என அவளுக்குத் தெரியும்.
 
★ஆகவேதான், அத்தகைய வரத்தைக் கேட்டார். ஒருகால் நீ ஏற்றால், ஸ்ரீராமனின் உயிர் காக்க உன்னை இழக்கவும் அவர் தயாராக இருந்தார். அவர் மஹா தியாகி. அவரால் தான் எங்கோ வனத்தில் கிடந்த எங்களுக்கு எல்லாம் ஸ்ரீராமனின் தரிசனம் கிட்டியது. கர-தூஷணர் முதலாக ராவணன் வரை பல கொடிய ராட்சதர்களின் வதமும் சிறப்பாக நிகழ்ந்தது. அந்த புனிதவதியை நாம் அனைவரும் வணங்க வேண்டும்’ ஆகவே காரணம் அல்லாது காரியம் இல்லை. இந்த உலகில் எதையும் ஆராயாது நம்பக் கூடாது  என்பது அன்னை கைகேயி வாயிலாக அறிய முடிகிறது
என்று கூறினான்.
 
★பின்னர் கைகேயியை வணங்கி தொழுதார் அனுமன். பரதன் முதலானவர்களுக்கு அப்போதுதான் கைகேயியுடைய உண்மை உருவம் புரிந்தது.
எங்களை மன்னித்து விடுங்கள் தாயே! என்று கண்ணீர் விட்டு அழுதபடியே கைகேயியை பரதனும் சத்ருக்ணனும்  வணங்கினர். கைகேயியும் அவர்களை ஆரத்தழுவிக் கொண்டு என் செல்லக் குழந்தைகள் மேல் என்றுமே எனக்கு கோபம் வராது எனக் கூறினாள்.  கௌசலையும், சுமித்ரையும் நாங்களும் கூட உன்னைத் தவறாக நினைத்து இருந்தோம். எங்களையும மன்னித்துவிடு கைகேயி எனறு கேட்டுக் கொண்டனர்.
 
★மேலும் இந்த விஷயத்தை தெரியப் படுத்திய அனுமனை அனைவரும் போற்றி வாழ்த்தி தங்கள் நன்றியினைத் தெரிவித்தனர்.  பரதன் அனுமனிடம், நாங்களும் உன்னுடன் வந்து அண்ணலை வரவேற்க விரும்புகிறோம் என்றான். பரதனின் தவிப்பை அறிந்த அனுமன் சம்மதித்தான்.
அயோத்தி மக்களும், மற்றும் முனிவர்களும்,ராமரின் அன்னை கௌசலை உட்பட்ட மூன்று தாய்மார்களும், சத்ருக்ணனும் ராமரை அழைத்து வரச் செல்ல தயாராக இருந்தனர். பரதன், ராமரின் பாதுகைகளை தன் தலையில் வைத்துக் கொண்டு ராமரை எதிர்நோக்கி அழைத்து வர புடைசூழச் சென்றான்.
 
★போகும் வழியில் பரதன் அனுமனிடம், நீ அண்ணல் ராமரை முதலில் எங்கு சந்தித்தாய் என்பதை விரிவாக கூறு எனக் கேட்டான். அனுமன், நான் எம்பெருமான் ஶ்ரீராமரை முதலில் ரிஷியமுக பர்வதத்தில் சந்தித்தேன் என்றான். அதன் பின் அனுமன், வாலியின் வதத்தையும், ராவணனனின் வதத்தையும், விபீஷணனுக்கு பட்டாபிஷேகத்தை செய்ததையும் அதன்பின் அங்கிருந்து புஷ்பக விமானத்தில் வந்து பரத்வாஜ முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க அங்கு  அனைவரும் தங்கியிருந்ததை பற்றியும் விரிவாக கூறினான்.
 
★ராமரின் பராக்கிரமத்தை கேட்டு பேரானந்தமடைந்த பரதன், சத்ருக்ணனை அழைத்து தம்பி சத்ருக்கனா! அண்ணல் ராமர் நாளை வருகிறார் என்கிற  செய்தியை  முரசறைந்து நமது
மக்களுக்கறிவித்து, அயோத்தி நகரை நன்றாக  அலங்கரிக்கச்
சொல்லி, அதுபோலவே அயோத்தியின் எல்லையில் இருந்து ராமர் வரும் வீதிகள் தோறும் அலங்காரங்கள் செய்து இசை நடனம் என்று அனைத்து
கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்துவிடு என்று கட்டளையிட்டான். சத்ருக்ணன் இச்செய்தியை சுமந்திரரிடம் கூறினான்.
 
★சுமந்திரர் இச்செய்தியை முரசறைந்து அறிவிக்கும்படி முரசறைவோனிடம் கூறினார். பரதனின் கட்டளைப்படி நாடு முழுவதும் ராமரின் வருகையை முரசறைந்து அறிவிக்கப்பட்டது. இதை அறிந்த மக்களனைவரும் மகிழ்ச்சி கடலில் திளைத்தனர். அவரவர் வீடுகளில் மாவிலை தோரணம் கட்டி அலங்கரித்தனர். அயோத்தி நகரமே மகிழ்ச்சி கடலில் திளைத்தது.
 
குறிப்பு:-
நண்பர்களே! சில தவிர்க்க இயலாத காரணங்களினால் நாளை(13/02/2022) "ஶ்ரீராம காவியம்" பதிய இயலாது என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை மறுநாள்................

[4:39 pm, 14/02/2022] Mohan SriRaghavendrar Kulithalai: ஶ்ரீராம காவியம்
~~~~~
310/14-02-2022
 
பரதனும் ராமரும்...
 
★அடுத்த நாள் காலையில் கைகேயி, சுமத்திரை, கௌசலை மூவருடனும் பரதன், சத்ருக்னன் மற்றும் மந்திரிகள், படைகள் என்று ஆயிரக்கணக்கான யானைகளுடன் அயோத்தியின் எல்லைக்கு ராமரை வரவேற்க புறப்பட்டார்கள்.அப்பொழுது சூரியன் எழத் தொடங்கினான். அங்கு பரத்வாஜ முனிவரின் ஆஸ்ரமத்தில் ராமர், பரத்வாஜ முனிவரின் உபசரிப்பை ஏற்று மகிழ்ச்சியுடன் இருந்தார். பிறகு ராமரும் மற்றவர்களும்  மகரிஷி பரத்வாஜரிடம் இருந்து விடைப் பெற்று அங்கிருந்து புஷ்பக விமானத்தில் புறப்பட்டனர்.
 
★புஷ்பக விமானம் கங்கை கரையை அடைந்தது. ராமர், கங்கைக் கரையில் இறங்கி கங்கையில் நீராடி, பின்னர் குகனை சந்தித்தார். குகன், ஸ்ரீராமரின் திருவடிகளில் விழுந்து வணங்கினான். ராமர், குகனை தன் மார்புடன் அன்பாக தழுவிக் கொண்டார். ராமர் குகனை பார்த்து, தம்பி! நீ எவ்வாறு இருக்கின்றாய்?. உன் சுற்றத்தில் அனைவரும் நலமாக இருக்கிறார்களா? எனக் கேட்டார். குகன், எம்பெருமானே! தங்களின் அருளால் நாங்கள் எந்தவிதக் குறையின்றி மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றோம் என்றான்.
 
★ஆனால் லட்சுமணரை போல் எங்களால் உங்களுக்கு உற்ற துணையாக இருந்து சேவை செய்ய முடியவில்லை என்ற குறை தான் உள்ளது என்றான். இதைக் கேட்டு ராமர், எனக்கு லட்சுமணனும், நீயும் வேறுவேறு அல்ல எனக் கூறி குகனை சமாதானம் செய்தார். குகன் இதைக்கேட்டு மகிழ்ச்சி அடைந்தான். பிறகு குகன் சீதையிடமும், லட்சுமணனிடமும் ஆசியைப் பெற்றான். பிறகு ராமர், குகனை, சுக்ரீவன், அங்கதன் முதலானவர்களுக்கு அறிமுகம் செய்தார். இவன் பெயர் குகன். வேடர்களின் தலைவன். நற்குணத்தில் சிறந்தவன், என் தம்பிக்கு ஒப்பானவன்  என்றார்.
 
★பிறகு சுக்ரீவனும், இலங்கை அரசன் விபீஷணனும் குகனை அன்போடு தழுவிக் கொண்டனர்.
அதன் பின் ராமர் குகனிடம் இருந்து விடைப்பெற்று அயோத்தியை நோக்கி புஷ்பக விமானத்தில் பறந்தனர். ராமர், விமானத்தில் இருந்து அங்கதன், விபீஷணன், சுக்ரீவன்,  நளன், நீலன் மற்றும் ஜாம்பவான் முதலானவர்களுக்கு, அவர்கள் கண்ணுக்கு எட்டக்கூடிய தூரதில் இருந்த  அயோத்தி நகரையும் அதை ஒட்டிய சரயு நதியையும்  காண்பித்து, அதோ அயோத்தி நகரம் தெரிகிறது பாருங்கள் என்றார்.
 
★அனுமன், புஷ்பக விமானத்தை பார்த்தார். உடனே பரதனிடம், பரதரே அதோ! பாருங்கள். நம் அண்ணல் ராமர், லட்சுமணர், சீதை வரும் புஷ்பக விமானம் என்றார்.பரதர்,அவ்விமானத்தை பார்த்து வணங்கினார். ராமரை பார்த்த அயோத்தி மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். அனுமன், உடனே பறந்துச் சென்று ராமர் முன் வணங்கி நின்றான். அனுமன் ராமரிடம், பெருமானே! தங்களின் கட்டளைப்படி நான் அந்த நந்தி கிராமத்திற்குச் சென்று, அங்கு தங்களின் வருகையை எதிர் பார்த்துக் காத்திருந்து, தாங்கள் வராமல் போகவே  தீக்குளிக்க முயன்ற பரதரை தடுத்து நிறுத்தினேன்.
 
★தங்களின் வருகையைப் பற்றி அவர்களுக்கு நன்கு எடுத்துக் கூறினேன். இதை அறிந்து அனைவரும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். பரதர், உடனே அயோத்தி நகரை அலங்கரித்து சிறப்பிக்குமாறு கட்டளை அருளினார் என்றான். ராமர் அனுமனை பார்த்து, அனுமனே! எனக்கு துன்பம் நேரும்போது தக்க சமயத்தில் நீ எனக்கு உதவி செய்துள்ளாய். நீ என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வாயாக எனக் கூறி வாழ்த்தினார். அனுமன் ராமரிடம், பரதரும், சுற்றமும் தங்களை எதிர்நோக்கி அழைத்து வர என்னுடன் வந்துள்ளார்கள் எனக் கூறி பரதர் மற்றும் சுற்றத்தாரை அவருக்கு அங்கிருந்து காண்பித்தான்.
 
★ராமர், பரதரை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தார். உடனே ராமர் புஷ்பக விமானத்தை தரையில் இறங்கும்படியாக வேண்டினார். புஷ்பக விமானம் தரையில் இறங்கியது.
ராமர், புஷ்பக விமானத்தில் இருந்து இறங்க முற்பட்டார். உடனே பரதர், தான் தலையில் வைத்திருந்த பாதுகைகளை ராமரின் திருவடிக்கு கொண்டு சேர்த்தார். பரதன் ராமரிடம் தங்களின் பாதுகைகளை வைத்து இத்தனை ஆண்டு காலம் தங்களின் உத்தரவுப்படி ஆட்சி செய்து வந்திருக்கிறேன் இனி நீங்கள் அரசனாக பதவி ஏற்றுக் கொள்ளுங்கள் என்றான்.
ராமர், பரதரின் பாசத்தை நினைத்து மகிழ்ச்சி அடைந்தார்.
 
★ராமர் மற்றும் சீதையின் கால்களில் வீழ்ந்து வணங்கிய பரதனும் சத்ருக்ணனும் அவருக்கு தகுந்த மரியாதை செய்தார்கள். பிறகு ராமர் பரதரை அன்போடு தழுவிக் கொண்டார். அதன் பின் குல குருவான வசிஷ்டரை பார்த்து ராமர் வணங்கினார். வசிஷ்டரின் கண்களில் கண்ணீர் பெருக ராமரை வாழ்த்தி, தழுவிக் கொண்டார். சத்ருக்ணன், ராம லட்சுமணரை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தான். ராம லட்சுமணர், சத்ருக்னனை அன்போடு தழுவிக் கொண்டனர். சத்ருக்ணன் ஆனந்த கண்ணீர் வடித்தான்.
 
★ராமரின் தாய்மார்கள், ராமர் சீதை மற்றும் லட்சுமணனை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்கள். ராமர் சீதையுடன் கைகேயி, சுமத்திரை, கௌசலை மூவரின் பாதங்களில் விழுந்து வணங்கி பின்னர் ஆசிகளைப்  பெற்றன.
கௌசலை, ராமரைப் பார்த்து, ராமா! உன்னை நான் இத்தனை காலம் பார்க்காமல் தவித்துக் கொண்டிருந்தேன். ராமருடன் இத்தனை ஆண்டு காலம் இருந்த லட்சுமணனை அனைவரும் பாராட்டினார்கள். ராமர் பரதனிடமும் சத்ருக்கனனிடமும் தன்னுடன் வந்த அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தார்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
 
நாளை.........................

ஶ்ரீராம காவியம்
~~~~~
311/15-02-2022

அன்னையினரின்
அரவணைப்பு...

★கௌசல்யா, ராமா! இன்று உன்னை கண்டு நான் அளவற்ற மகிழ்சி அடைந்தேன் என்றாள். ராமரும்,தன் தாய் கௌசலையை அன்போடு பார்த்தார். பிறகு ராமர், சீதை மற்றும் லட்சுமணர் கௌசலையின் திருவடிகளில் விழுந்து ஆசியைப் பெற்றுக் கொண்டனர். அப்பொழுது சுமித்திரை, ராமா! நீ வந்து விட்டாயே! இனி எங்களுக்கு கவலைவில்லை. உன்னை காணாமல் நாங்கள் மிகவும் துன்பம் அடைந்தோம் எனக் கூறி அன்போடு தழுவிக் கொண்டார். அதன்பின் லட்சுமணனை பார்த்து, லட்சுமணா! என் அருமை மகனே! நீ எவ்வாறு இருக்கின்றாய்? எனக் கூறி அன்போடு தழுவிக் கொண்டாள். 

★லட்சுமணனும் தன் தாய் சுமித்திரையைக் கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தான். அதன்பின் ராமர், சீதை மற்றும் லட்சுமணர் ஆகிய மூவரும் அன்னை சுமித்திரையின் திருவடிகளில் விழுந்து ஆசியைப் பெற்றுக் கொண்டனர்.
அப்பொழுது ராமர் தன் தாய் கைகேயியை தேடினார். கைகேயி, ஒரு ஓரமாக நின்றுக் கொண்டு இருந்தாள். இதைப் பார்த்த ராமர், கைகேயிடம் ஓடிச் சென்று திருவடிகளில் விழுந்து வணங்கினார். கைகேயின் கண்களில் கண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்து ஓடியது. பிறகு ராமர் கைகேயிடம், அம்மா! தாங்கள் ஏன் ஓரமாக நின்று கொண்டு உள்ளீர்கள் எனக் கேட்டார். 

★கைகேயி, என் அன்பு மகனே! நான் உனக்கு செய்த செயல் தான், இன்று  நான் ஓரமாக நிற்பதற்கு காரணம் என்றாள். ராமர், அம்மா! தாங்கள் இவ்வாறு பேசுதல் கூடாது. என்னை அன்போடு வளர்த்தவர் நீங்கள். தங்களால் தான் எனக்கு இந்த பதினான்கு வருட வனவாச காலத்தில், பல முனிவர்களின் ஆசிகளையும், பல ரிஷிகளின் சாப விமோச்சனத்தையும், பலரது நட்புகளையும் பெற்று தந்தது. அது மட்டுமல்லாமல் பல அரக்கர்களின் பாவம் நிறைந்த  செயல்களும் அழிந்து போனது. இது எல்லாம் தங்களால் தான் நடந்தது. இதை நினைத்து தாங்கள் வருந்துதல் கூடாது என்றார். 

★ராமரின் இந்த பணிவான சொற்களை கேட்டப்பின் கைகேயி ராமரை அன்போடு ஆசிர்வதித்தாள். இதைப் பார்த்து அயோத்தி மக்கள் மகிழ்ச்சி கடலில் திளைத்தனர். அதன்பின் லட்சுமணரும், சீதையும் மாதா கைகேயி திருவடிகளில் விழுந்து ஆசியைப் பெற்றுக் கொண்டனர். பிறகு சுமந்திரர் முதலான அமைச்சர்கள் ராமரை கண்டு மிக்க மகிழ்ச்சியை அடைந்தனர். அயோத்தி நகர மக்களும் ராமரைக் கண்டு தரிசித்து அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். 

★லட்சுமணன் மனைவியான  ஊர்மிளை பதினான்கு நீணட வருடங்கள் தன்னை விட்டுப் பிரிந்து வனவாசத்தில் இருந்த கணவனைக் கண்டு கண்களில் நீர் தளும்ப அழுதாள். அவளுக்கு துக்கமும் மகிழ்சியும் சேர்ந்து வந்ததால் பேசுவதற்கு நல்ல வார்தைகள் வராமல் மிகவும் தடுமாறினாள். "பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ". லட்சுமணனை வணங்கி அவன் அருகில் நின்று மௌனமாக ஏறிட்டுப பார்த்தாள் ஊர்மிளை. 
'கண்ணோடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல’என்று மிக அழகாக பிற்காலத்தில் வந்த வள்ளுவர் கூறுகிறார். பின்னர் பரதன் மனைவி மாண்டவி, சத்ருக்ணன் மனைவியான சுதகீர்த்தியும் வந்தவுடன் மூவரும் ராமரையும சீதையையும் வணஙகி, சகோதரி சீதையை தழுவிக் கொண்டனர்.

★அதன்பிறகு ராமர், சுக்ரீவன், அங்கதன், ஜாம்பவான் மற்றும் விபீஷணன் முதலானவர்களை 
தன்னுடைய தாய்மார்களுக்கும்,   
தம்பி பரதன் மற்றும் தம்பி சத்ருக்ணனுக்கும் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின் ராவணாதி அரக்கர்களால் ஏற்பட்ட துன்பங்களையும் எடுத்துக் கூறினார். ராமரால் ராவணாதி அரக்கர்கள் அழிந்ததை நினைத்து அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். அதன் பிறகு அனைவரும் அயோத்தி செல்ல முற்பட்டனர். ராமர், நாம் அனைவரும் இந்த புஷ்பக விமானத்தில் பரதன் தங்கிருந்த நந்தி கிரமத்திற்கு சென்று அதன்பின் அயோத்தி நகருக்குச் செல்லலாம் என்றார். 

★ராமரின் சொற்படியே அவர்கள்  அனைவரும் விபீஷணனின்  புஷ்பக விமானத்தில் நந்தி கிராமத்திற்கு புறப்பட்டனர்.
சிறிது நேரத்தில் அனைவரும் நந்தி கிராமத்தை அடைந்தனர். ராமர் சீதையை காண்பதற்காக அயோத்தி மக்கள் கூட்டமாக கூடியிருந்தனர். புஷ்பக விமானம் நந்தி கிராமத்தில் இறங்கியது. ராமருக்காக அங்கு வெண் குதிரைகளால் பூட்டப்பட்ட பொன்னால் ஆன சிறந்த தேர் காத்துக் கொண்டிருந்தது. நந்திகிராமத்தை அடைந்த ராமர் தம்பிகளுடன் சடாமுடி போக்கி, வனவாச கோலத்தை நீங்கி சரயு நதியிலே நீராடினர். 

★பிறகு ராமரை அழகாக ஒப்பனை செய்தனர். பிறகு ராமர் அயோத்திக்குச் செல்ல, வெண் குதிரைகள் பூட்டப்பட்ட அழகிய தேரிலே ஏறினார். லட்சுமணர், ராமருக்கு குடை பிடித்தார், சத்ருக்ணன், ஶ்ரீ ராமருக்கு வெண்சாமரம் வீசினார். பரதர், அத்தேருக்கு சாரதியாக இருந்து தேரை செலுத்தினார். மேலும் விபீஷணன் மற்றும் சுக்ரீவன் இருவரும் தேரின் இருபுறமும் யானைகள் மீது சென்றனர். அங்கதனும், அனுமனும் அத்தேருக்கு முன்னும் பின்னும் சென்றனர். பொன்னாலான தேரில் சீதை சென்றாள். மனித உருவம் கொண்ட வானர பெண்கள் அன்னை சீதையுடன் குதிரைகளின் மேலும், அழகிய பல்லக்கிலும் அமர்ந்துச் சென்றனர். 

★சிறிது நேரத்திலேயே அவர்கள்  அனைவரும் அயோத்தி நகரை அடைந்தனர். அயோத்தி மக்கள் அனைவரும் தாயை பிரிந்த குழந்தை போல் ராமரை கண்டு அளவற்ற மகிழ்ச்சி கொண்டனர்.  அனைவரும் அரண்மனை வளாகத்தைச் சென்றடைந்தனர்.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869

நாளை.....................

ஶ்ரீராம காவியம்
~~~~~
312/16-02-2022

பட்டிணப் பிரவேசம்...

★பதினான்கு வருடங்களுக்கு  முன்பு கைகேயி பெற்ற கொடிய வரத்தால், அயோத்தி நகரத்தை விட்டு நீங்கி, கானகம் சென்று, தவசிபோல ஒரு வாழ்க்கையை தொடங்கிய ராமன்,  ராவணன் முதலிய கொடிய அரக்கர்களை அழிக்க வேண்டி,  இலங்கை வரை செல்ல, ராமசேது பாலம் அமைத்து, போரில் வெற்றி பெற்று,  அந்த வனவாச காலத்தை சிறப்பாக முடித்து,
வேடர்குலதலைவன் குகன் மற்றும் வானரவீரர்களின் வேந்தன் சுக்ரீவன், நளன், நீலன், கரடிகள் அரசன் ஜாம்பவான், மற்றும் அஞ்சனை மைந்தன் அனுமனோடு, அன்னையரும், தம்பியரும் புடைசூழ, அரசரவை அமைச்சர்கள் பின்தொடர, ரகுராமனான, கல்யாண ராமனான, சீதா ராமனான, தசரத ராமனான, ஜானகிராமனான, கல்யாண குணோஜ்வலனான,
 பித்ருவாக்ய பரிபாலனான, ஏக பத்னி விரதனான,சர்வஜன ரக்ஷகனான,  கோதண்ட ராமனான, ஸ்ரீராமனாக, மங்கல வாத்தியங்கள் இனிதே முழங்க, அயோத்தி வாழ் மக்கள் எழுப்பிய கரவொலியோடு,ஜய விஜயீபவ என்ற முழக்கமும், துந்துபி ஓசையோடு ஜயகோஷமுமாகக் காற்றுடன் கலந்து அலை மோத, கொடிகள் காற்று வேகத்தில் அசைந்து வருக! வருக!! என வரவேற்க  மதில்கள் சூழ்ந்த அயோத்தி நகருக்குள்,பட்டிண பிரவேசம் செய்தார்.

★அங்கதனும், அனுமனும் பொன் மயமான ஶ்ரீராமனின் தேருக்கு முன்னும் பின்னும் சென்றனர். 
பொன்னாலான மற்றொரு அழகிய தேரில் மகாலக்ஷ்மி சீதை வந்தாள். மனித உருவம் பெற்ற வானர பெண்கள் சீதையுடன், குதிரைகளின் மேலும், பல்லக்கிலும் அமர்ந்து கொண்டு,அலங்காரமாக வந்தனர். சிறிது நேரத்திலேயே அனைவரும் அயோத்தி நகர் வந்து அடைந்தனர். அனைத்து 
தேவர்களும் முனிவர்களும் சீதாராமனை கண்டவுடன் மலர் மழை பொழிந்து வாழ்தினர். 

★மஞ்சள் கலந்த அரிசியைத்  (அட்சதை) தூவிக்கொண்டு,  வேதவிற்பன்னர்கள் வேத கோஷங்களோடு உடன் சென்றனர். பதினான்கு வருஷங்களுக்கு முன்பு பிரிந்து போனவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தனர். குடிமக்கள்  குதூகலம் பொங்க வாழ்த்த, ஸ்ரீராமன் தனது அயோத்தி அரண்மனைக்குள் அடியெடுத்து வைத்தார். கௌசல்யாதேவி, சுமித்ரா தேவி, கைகேயி தேவி ஆகிய அன்னையர் மூவரையும் ராமபிரானும் சீதாபிராட்டியும் தம்பதியாக வணங்கி ஆசி பெற்றார்கள். குலகுருவான வசிஷ்டரை ஶ்ரீ ராமபிரான் முறைப்படி நமஸ்கரித்தார். 

★பதினான்கு ஆண்டு காலம், 
ஶ்ரீ ரகுராமன் பாதுகைகளே அயோத்தி அரசை நடத்த, தவசி போல வாழ்ந்த பரதனை  ராமர் தழுவிக்கொண்டு கண்ணீர் சிந்தினார்.  நந்திகிராமத்தில்
பரதன் பூஜிக்க,  ஶ்ரீராமனின் திவ்ய  பாதுகைகள்  ஆட்சி செய்ய, அதன் பிரதிநிதியாக  அயோத்தியில் இருந்துகொண்டு  சிறப்பாக ஆட்சி புரிந்த, தம்பி சத்ருக்ணனை கௌரவித்து போற்றினார்.அனைவரும் அயோத்தி மாநகர்  அரண்மனை சென்று அடைந்தனர். அயோத்தி மக்கள் அனைவரும் தாயைப் பிரிந்த குழந்தைபோல், ராமரை கண்டவுடன் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். 

★ராமபிரான் வரவால் அயோத்தி நகர அரண்மனை வளாகம், புத்துயிர் பெற்று திகழ்ந்தது. சீதாராமன் பரதனிடம், தம்பி! வாயு பகவான் மைந்தன் அனுமன், கிஷ்கிந்தை வேந்தர் சுக்ரீவன், மற்றும் இலங்கை வேந்தர் விபீஷணனுக்கு தேவையான வசதிகளைக் செய்துக் கொடுத்து, நமது இந்த அரண்மனையை நன்கு சுற்றி காண்பிக்க வேண்டும், என்று கேட்டு கொண்டார். பரதனின் துணையுடன், அனுமன்,சுக்ரீவன், மற்றும் வீபீஷணன் ஆகியோர்  அரண்மனையை சுற்றி வலம் வந்து, பிரம்மிப்புடன் கண்டு மகிழ்ந்தனர்.

★அப்போது வானரவேந்தன் சுக்ரீவன் பரதனிடம், ஐயனே! முடிசூட்டு விழாவிற்கு ஏன் இவ்வளவு தாமதமாகிறது? எனக் கேட்டான். பரதன் ராமரின் பட்டாபிஷேகத்திற்காக பாரத தேசம் முழுவதும் உள்ள புண்ணிய நதிகளிலிருந்து, தீர்த்தங்களை கொண்டு வர வேண்டி இருப்பதால் தான், தாமதமாகிறது என்றார். உடனே வாலியின் சகோதரன் அரசன் சுக்ரீவன், அனுமனை குறிப்பாக நோக்கினான். சுக்ரீவனின் நோக்கத்தை நன்கு அறிந்த மாருதியும் நதிகளின் புண்ணிய தீர்த்தங்களை கொண்டு வர, காற்றாக புறப்பட்டார்.

★பரதர்,வசிஷ்ட முனிவரிடம் சென்று, குருவே! அண்ணல் ராமபிரானுக்கு விரைவில் பட்டாபிஷேகம் நடத்த வேண்டும். ஆதலால் பட்டாபிஷேகம் செய்ய உகந்த நாளை, தாங்களே கணித்து கூறுங்கள் என்றார்.
இதை கேட்ட குலகுரு வசிஷ்ட மகரிஷி, முதலில் யோசித்தார்.
முதலில் ஒரு முறை அரண்மனை ஜோதிடரகளும், தசரதனும், ராமருக்கு  பட்டாபிஷேகம் செய்ய நாள் குறித்து  பொழுது, அது நடக்காமல் நின்று போனது. ஆதலால் இம்முறை இஷ்வாகு குல வம்சத்தின், குலதெய்வம், ஶ்ரீரங்கநாதரிம் சென்று, அவரை பிரார்த்தனை செய்துகொண்டு, பிறகு முடிவு செய்வோம் என்று கூறினார்.

★அடுத்து பரதன், வசிஷ்டரையும் சத்ருக்ணனையும், அழைத்துக் கொண்டு, இஷ்வாகு குல தெய்வம் ஶ்ரீரங்கநாதரின் திவ்ய ஆலயம்  சென்றார்.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.

நாளை.................

[9:25 am, 17/02/2022] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
313/17-02-2022

பட்டாபிஷேக ஏற்பாடுகள்...

★முதலில் ஒரு முறை ராமருக்கு  பட்டாபிஷேகம் செய்ய நாள் குறித்த   பொழுது, நடக்காமல் நின்று போனது. ஆதலால் இந்த முறை இஷ்வாகு குல வம்சத்து குலதெய்வம், ஶ்ரீரங்கநாதரிடம் சென்று பிரார்த்தனை செய்து கொண்டு, அதன் பிறகு முடிவு செய்வோம் என்று கூறினார் மகரிஷி வஷிஸ்டர் . அடுத்து பரதர் சத்ருக்ணனையும்,மற்றும்  வசிஷ்டரையும் அழைத்துக் கொண்டு, இஷ்வாகு அரச குல தெய்வமான  ஶ்ரீரங்கநாதர் கோயிலுக்கு சென்றார்.

★மகரிஷி வசிஷ்டர், ஶ்ரீரங்க நாதரிடம் மனமுருக வேண்டி பிரார்த்தனை செய்தார். அந்த சமயத்தில் திருக் கோயில் பட்டாசாரியாரிடம் இருந்து,
பட்டாபிஷேகம் நாளையே நடத்தலாம் என்ற தெய்வ வாக்கு கிடைத்தது. பரதரே! இறைவன் ஶ்ரீ ரங்கநாதனும் சொல்லி விட்டார். நாளை மிக நல்ல நாள் என்று, நானும் நன்கு கணித்து வைத்திருந்தேன். அதுபோலவே தெய்வவாக்கும் கிடைத்து விட்டது. எனவே, நாளையே நாம் ஜானகிராமனுக்கு முடிசூட்டும் வைபவ விழாவை வைத்துக் கொள்வோம் என்றார். இதைக் கேட்டு பரதன் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார். 

★இச்செய்தி, அன்னையர் மூவருக்கும், அனுமன்,சுக்ரீவன், மற்றும் விபீஷணனுக்கும் முறையாக தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு அனைவரும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர். 
ஶ்ரீராமன் மூடிசூட்டு விழா செய்தி, அயோத்தி திருநகர் முழுவதும்  முரசறைந்து அறிவிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் இச்சுபசெய்தியைக் கேட்டு  மகிழ்ச்சிப் பரவசம்  அடைந்தனர். ஶ்ரீ ராமருக்கு பட்டாபிஷேகம் செய்வதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடக்க தொடங்கியது. கோசலை மைந்தன் தசரதராமனுக்கு, முடிசூட்டு விழா நாளையே நடைபெறும் என்ற செய்தியை, ஓலை மூலம்,  குறு நிலமன்னர்க ளுக்கும்,பேரரசர்களுக்கும், சிற்றரசர்களுக்கும், மிதிலை வேந்தர் ஜனகருக்கும், அனுப்பப்பட்டது. 

★குகனுக்கும் ராமரின் முடிசூட்டு விழாவிற்கு வரும்படி தனி அழைப்பு விடப்பட்டிருந்தது. 
வனவாசமாக பதினான்கு  ஆண்டுகள் காட்டில் வாழ்ந்து விட்டு,அயோத்தி திரும்பிய ராமனுக்கு,பட்டாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மிக தடபுடலாக நடைபெற்றன.
பதினான்கு ஆண்டுகளாக வாழ்க்கையில் எந்த குறையும் இல்லா விட்டாலும், ராமன் அயோத்தியில் இல்லாததால் எதுவுமே இல்லாதது போல், உயிரற்று வாழ்ந்து வந்த மக்களின் முகத்தில், அன்றுதான் உண்மையான ஆனந்தம் தென்பட்டது.

★அயோத்தி மக்கள் அனைவரும் மகிழ்வுடன் புத்தாடை அணிந்து கொண்டனர். தங்கள் வீடுகளை திருவிழா போல மிகச்சிறப்பாக அலங்கரித்தனர். நான்முகன் ஏவலால், தேவர்கள் உலக கட்டிட கலை வல்லுனரான மயன், ராஜாராமன் - சீதாபிராட்டி,
பட்டாபிஷேகத்திற்கான முடி சூட்டு விழா மணி மண்டபத்தை, பொன்னாலும், மலர்களாலும் அலங்கரித்து மிகுந்த சிறப்புடன் அமைத்துக் கொடுத்தார். 

★பொழுது புலரும் முன் அனுமன், எட்டு  திசைகளுக்கும் விரைவாகப்  பறந்து சென்று, புண்ணிய நதிகளின் திவ்யத் தீர்த்தங்களை, ரத்னமும் மற்றும் தங்கமும் இழைத்த மிக அழகான குடங்களில், ஏழு கடல்களில் இருந்தும், அநேக நதிகளில் இருந்தும் சேகரித்து கொண்டு, பட்டாபிஷேக மண்டபதிற்கு,   வந்து சேர்ந்தார். ஜாம்பவான், வேகதர்சீ, சிஷபன் ஆகியோர் ஐந்நூறு புனிதமான இடங்களில் சேகரித்த மிகப்  புண்ணியமான, தீர்த்தங்களுடன் வந்தார்கள். ஸுஷேணன், ரிஷபன், கவயன், நளன் நால்வரும் முறையே,நாலா திசை சமுத்திரங்களிலிருந்தும் புனித நீரைக் கொணடு வந்து சேர்த்தார்கள்.

★சீதாராமனின்  பட்டாபிஷேக வைபவத்தை காணவேண்டி, பல நாடுகளிலிருந்து குறு நில மன்னர்களும், சிற்றரசர்களும், பேரரசர்களும், மிதிலை வேந்தர் ஜனகரும், ஆர்வத்துடன் பரிசு பொருட்களோடு, வந்து குவிந்த வண்ணம் இருந்தனர். குகனும் ராமபிரானின் பட்டாபிஷேக வைபவத்தை காணும் பொருட்டு, மலைகளில் விளைந்த பலவித  பழங்களையும், மற்றும் கொம்புத் தேனையும் கொண்டு வந்து, தன் சுற்றத்தோடு விரைந்து வந்து சேர்ந்தான். 

★பட்டாபிஷேகத்திற்கு முக்கியத் தேவையான யாகசாலை மூலிகை பொருட்கள், சமித்துகள் எல்லாம், அமைச்சர் சுமந்திரர் தலைமையில் கொண்டு வரப் பட்டது. குல குருவான  வசிஷ்டர் முதலான பல முனிவர்களின் தலைமையில், குறித்த நேரத்தில் முடிசூட்டு விழாவிற்கான, வேள்விகளை முறைப்படி தொடங்கி சிறப்பாக நடத்த ஆரம்பித்தனர். ஊரெங்கும் 
மங்கல கீதங்கள் இசைக்கப் பட்டன. வேதியர் மிகச் சிறப்பாக  வேத கோஷங்கள் முழங்கினர். பல இன்னிசை வாத்தியங்கள், இசை மழை பொழிந்தன.மங்கல நாதஸ்வர மேள இசை காற்றில் மிதந்து வந்து, அயோத்தி நகர மக்களை ஶ்ரீராமன் முடி சூட்டு விழாவிற்கு கூவி, வா! வா! என்று அழைத்தது.

★பட்டாபிஷேகத்துக்குரிய நிகழ்ச்சிகள்  எல்லாம் சீராகத் தொடங்கின. ஶ்ரீராம லக்ஷ்மண பரத சத்ருக்ணர்களுடைய அலங்காரம் மிக அழகாகவும்  சிறப்பாகவும்  நடந்தேறியது. சீதாதேவிக்கு, தேவலோகத்து மகளிருடன் சேர்ந்து மாண்டவி, ஊர்மிளை, சுதகீர்த்தி ஆகியோர்   அலங்காரம் செய்தனர். மேலும் விருந்தாளிகளாக வந்திருக்கும் வானரப் பெண்களுக்கும் அழகு செய்தாள் ராமரின் அன்னை கௌசல்யை.  தசரத மைந்தன்  ஶ்ரீ ராமனுக்கு முடிசூட்டு விழா நாளை நடைபெறும் என்ற செய்தியை காதுகுளிரக் கேட்டு மூவுலகத்தவரும் அயோத்தி வந்து சேர தொடங்கினார்கள்.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.

நாளை..................
[9:28 am, 17/02/2022] +91 94445 51031: ராம் ராம் ராம்

ஶ்ரீராம காவியம்
~~~~~
314/18-02-2022

ஶ்ரீராம பட்டாபிஷேகம்...

★வனவாசமாக பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழ்ந்து விட்டு,அயோத்திக்கு  திரும்பிய 
ஶ்ரீ ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தடபுடலாக நடைபெற்றன.

★அயோத்தி மக்கள் அனைவரும் மகிழ்வுடன் புத்தாடை அணிந்து கொண்டனர். தங்கள் வீடுகளை திருவிழா கொண்டாட்டம் போல அலங்கரித்தனர். நான்முகன் ஏவலால், தேவர்கள் உலக கட்டிட கலை வல்லுனரான மயன், 
ஶ்ரீராஜாராமன் - சீதாபிராட்டி அவர்களின்  பட்டாபிஷேகத் திருவிழாவிற்கான அரசவை  மணி மண்டபத்தை, முடிசூட்டு விழாவிற்காக பொன்னாலும், மலர்களாலும் அலங்கரித்து சிறப்புற அமைத்தார். அயோத்தி நகர மக்கள் அனைவரும் தங்களுக்கே முடிசூட்டு விழா என்பது போல நினைத்துக் கொண்டு, புத்தாடைகள் உடுத்தி  அளவற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.

★பேரருள் பெற்றவரும், தசரத மன்னனின் குல குருவுமான வசிஷ்ட மகரிஷி,  அனைவரின் சம்மதத்துடன் சீதையையும், ஶ்ரீராமரையும் ரத்தின ஒளிவீசும் சிம்மாசனத்தில், சீதாராமராக, அமரும்படி கூறினார்.  ஶ்ரீபரதன் வெண்கொற்ற குடையை  நன்கு உயர்த்திப் பிடித்தார். அதுபோல ஶ்ரீலக்ஷ்மணனும் அவர் தம்பி ஶ்ரீசத்ருக்னனும், ஜானகி சமேத ஶ்ரீராமனின் இருபுறங்களிலும் நின்று கொண்டு வெண்சாமரம் வீசினர். அனுமன், ஶ்ரீரகுராமன் அருகில் ஏதும் அறியாதவன் போல, பணிவாக வாய் பொத்தி
ஶ்ரீராமபிரான் திருவடியை கைகளால் தொட்டபடி அமர்ந்து கொண்டிருந்தார். பட்டாபிஷேக வைபவம் மிகப் பவித்திரமாகத் திகழ்ந்தது.

★சீதாராமனின் திவ்யமான பட்டாபிஷேகத்தை ரகு வம்சகுல குருவான வசிஷ்ட முனிவர், ரிஷி வாமதேவர், மகரிஷி ஜாபாலி, முனி சிரேஷ்டர் காச்யபர், ரிஷி காத்யாயனர், மகரிஷி விஜயர், ஸுயஜ்ஞர், கௌதமர், ஆகிய எட்டு மகாஞானியர்களும், வேதச் சீர்மையுடன் பட்டாபிஷேகம்  செய்வதற்கான மந்திரங்களை
தெளிவாக உச்சாடனம் செய்து, 
ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும், சீதாபிராட்டியையும் வாசனாதி  திரவியங்கள் கலந்த, புண்ணிய நதிகளிலிருந்து கொண்டுவந்த தீர்த்தங்களினால், அபிஷேகம் செய்தார்கள். முனிவர்களும், அறிஞர்களும்,இலங்கை வேந்தர்  வீபீஷணனும், வானரவேந்தன் சுக்ரீவனும், சீதா -ராமருக்கு புனித நீரால் புரோட்சணம் செய்தார்கள்.

★அபிஷேக நீர் ராமர்,சீதை சிரசு முதல் பாதம் வரை தொட்டுச் சென்றது. அந்த அபிஷேக நீரானது ஶ்ரீராமரின் காலடியில் அமர்ந்திருந்த அனுமனின் சிரசிலும் பட்டு, அவரை நன்கு  கௌரவிப்பதுபோல் இருந்தது..  இதைப் பார்த்த அனைவரும் மகிழ்ச்சியில் மிக்க ஆரவாரம் செய்தனர். கௌசலை, கைகேயி சுமித்திரை ஆகிய மூவரின்   கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்கி வழிந்தது. வானத்தில் திக்பாலகர்களுடன் சேர்ந்து  தேவகணங்களும் பேருவகை கொண்டார்கள். புனித நீரால் அபிஷேகம் நடந்த பின்னர் ஶ்ரீராமரும் சீதாபிராட்டியும் தனி அறைக்குச் சென்று புதிய பட்டாடைகள் அணிந்து நன்றாக அலங்காரம் செய்து கொண்டு மீண்டும் அந்த ஸ்வர்ணமயமான  மணிமண்டபத்திற்கு  வந்து அனைவரையும் வணங்கி, அதன்  பின்னர் அரியணை  ஏறி அமர்ந்தனர்.

★வேத கோஷம் முழங்க,மங்கள வாத்யம் ஒலிக்க, கௌதம ரிஷி, உயர்ந்த ரத்தின கற்கள் பதித்த, பொன்னாலான மணி மகுடத்தை எடுத்துக் கொடுக்க, அதனை கைகளில் வாங்கி கொண்ட வசிஷ்ட மகரிஷி,கண்களில் ஒற்றிகொண்டு,  இஷ்வாகு குல,தெய்வம் ஶ்ரீரங்கநாதனை மனதில் பிரார்த்தனை செய்து கொண்டு, ரவிகுல தோன்றல் ஸ்ரீராமனுக்கு, மணி மகுடம் சூட்டினார். இந்த சுபமுஹூர்த்த நன்னாளில்,வேத கோஷம் முழங்க, வேதவிற்பன்னர்கள் மந்திரங்களை ஒலிக்க, ஶ்ரீராமபிரானின் பட்டாபிஷேக விழா, மிகச் சிறப்புற நடந்து அனைவரின் நெஞ்சங்களிலும் நீககமற நிறைந்தது.

★வாயுபகவான் தங்கத்தாமரை மலர்களாலான ஒளி தரக்கூடிய மாலைகளையும், ஒன்பது முத்து மாலைகளையையும் கொணடு வந்து பேரரசரான சீதாராமனுக்கு காணிக்கையாக சமர்பித்தார். பட்டாபிஷேகம் முடிந்ததும் சீதா ராமனை பார்த்து எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்த ரிஷிகளும், முனிவர்களும், நாட்டு மக்களும், பெரியவர்களும் வாசனை மிக்க பூக்களை பொழிந்து வாழ்தினர்.
வானத்தில் இக்காட்சியை கண்ட தேவர்களும் மலர் மழையாகப்  பொழிந்து வாழ்தினர். பிரம்ம தேவரும், கலைமகள் சரஸ்வதி தேவியும், பரமசிவனாரும், பார்வதி தேவியும்   நேரில் வந்திருந்து ஶ்ரீராஜாராமனை மலர் தூவி வாழ்தினார்கள்.

★அப்பொழுது ரகுராமன்,  ஶ்ரீமன் நாராயணனாகவும்  அன்னை ஜானகி ,மகாலக்ஷ்மியாகவும் பட்டாபிஷேக திருக்கோலத்தில் அனைவருக்கும் காட்சியளித்து சிறப்பித்தனர். பட்டாபிஷேகம் முடிந்தவுடனே  ஶ்ரீராமபிரான், பரதனுக்கு இளவரசர் பட்டம் சூட்டி, முன்பு போல  ஆட்சியை நேர்மையாக, நீதிநெறி சிறிதும் தவறாமல் செங்கோலுடன் ஆட்சி புரியுமாறு கேட்டு கொண்டார். இதைப் பார்த்த முனிவர்களும், தேவர்களும் அளவற்ற மகிழ்ச்சி அடைந்து மலர்மழை தூவினர். 

குறிப்பு:-
ஶ்ரீ ராமபிரான் குடும்ப சகிதமாக எழுந்தருளியுள்ள இந்த பட்டாபிஷேக திருக்கோலத்தை "கும்பகோணம் ராமசாமி" கோயிலில் சேவித்து மகிழ்சி கொள்ளலாம்.குடும்ப ஒற்றுமை குறைந்தவர்கள், கருத்து வேறுபாடு காரணமாக இல்லற வாழ்க்கை பாதிக்கப்பட்டவர்கள், அவசியம் வந்து தரிசிக்க வேண்டிய கோயில் இது.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869

நாளை....................


[8:15 am, 19/02/2022] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
315/19-02-2022

ஆனந்தம்! ஆனந்தம்!!
ஆனந்தமே!!!

★வேத கோஷம் முழங்க,மங்கள வாத்யம் ஒலிக்க, கௌதம ரிஷி, உயர்ந்த ரத்தின கற்கள் பதித்த, பொன்னாலான மணி மகுடத்தை எடுத்துக் கொடுக்க, அதனை கைகளில் வாங்கி கொண்ட வசிஷ்ட மகரிஷி,கண்களில் ஒற்றிகொண்டு,  இஷ்வாகு குலதெய்வம் ஶ்ரீரங்கநாதனை மனதில் பிரார்த்தனை செய்து கொண்டு, ரவிகுல தோன்றல் ஸ்ரீராமனுக்கு, மணி மகுடம் சூட்டினார். அப்பொழுது அங்கு ஶ்ரீரகுராமன்,  ஶ்ரீமன் நாராயணனாகவும்  அன்னை ஜானகி ,மகாலக்ஷ்மியாகவும் பட்டாபிஷேக திருக்கோலத்தில் அனைவருக்கும் காட்சியளித்து சிறப்பித்தனர். 

★இன்றைய அதிகாலையின் அற்புதம் திவ்யமாக இருந்தது. மதுரமான இசையாலும், கருவிகளின் ஒலிகளாலும், தங்க ஆபரணங்கள் அணிந்து உத்தமப் பெண்களின் நாட்டியங்களாலும், தாங்கள் எழுப்பப்பட்டதைக் கண்டு நாங்கள் சந்தோஷம் கொண்டோம். வானவீதியில் தன்னுடைய முழுமையான ஒளிக்கிரணங்களுடன், அனைத்து உலகுக்கும் தேஜஸையும் ஆயுளையும் வழங்கிக் கொண்டிருக்கும் நடுப்பகல் சூரியன் போன்று, தாங்கள் பட்டாபிஷேகப் பெரும் வைபவத்தோடு, ரத்னமயமான சிம்மாசனத்திலிருந்து எங்கள் அனைவருக்கும் அருள்பாலித்து நலம் புரிவதைப் பார்த்துப் பார்த்து மகிழ்ச்சி கொள்கிறோம். பூமி உள்ள வரையிலும் தாங்கள் பரிபாலனம் நடத்த வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை! இவ்வாறாக பரதன், தலைமீது கரங்களைக் கூப்பியவாறு ஸ்ரீராமனிடம் வேண்டினான்.

★ஊரெங்கிலும் குதூகலத்தோடு வானவேடிக்கைகளும், பாட்டுக் கச்சேரிகளும், இனிமையான   இன்னிசையோடு கலந்து ஒலித்தன. நாட்டியத்தில் தேர்ந்த கலைஞர்கள் அயோத்தியில் பல இடங்களில் ஶ்ரீராமனின் பெருமைகளை விளக்கும் வகையில், பலதரப்பட்ட நடனங்களை ஆடி மக்களை மகிழ்வித்து அவர்களும் மகிழ்ந்தனர்.  அரண்மனை நடனப் பெண்டிர்கள் ராமன் பெருமையை பாடிக்கொண்டு கும்மிநடனம் ஆடினர்.

"கும்மியடி பெண்ணே 
கும்மியடி!
ஶ்ரீராமனின் பேர் சொல்லி கும்மியடி!
நாடு செழித்திடும்
கும்மியடி!
உன் வீடு வளம் பெரும் 
கும்மியடி!      (கும்மியடி)

சூரியன் வம்சத்தில் 
வந்தவன்டி!
அவன் நமக்கொரு காவியம் தந்தவன்டி!
சத்தியம் காத்திட 
நின்றவன்டி!
அவன் பத்துத் தலையனை வென்றவன்டி!   (கும்மியடி)

தாமரைப் போல கண்கள் உடையவன்டி!
அவன் நீண்ட  கைகளை கொண்டவன்டி!
ஒட்டிய வயிறு 
உள்ளவண்டி!
அகன்ற  மார்புடன் நிமிர்ந்து 
நிர்பவண்டி!     (கும்மியடி)

மண்ணுடையான் அவன் விண்ணுடையான்!
தலையில் மகுடமாய்  மகுடமாய் பொன்னுடையான்!
சீதையை தவிர 
மற்றொரு பெண்ணை
காதலால் கண்டிடா கண்ணுடையான்!   (கும்மியடி)

வில்லுடையான் பொய்க்காத சொல்லுடையான்!
அவன் நடக்கையில் சிங்கம் போல் நடையுடையான்!
பூ விழியுடையான் நேர்மை வழியுடையான்!
அவன் சிரிக்கையில் கன்னக் குழியுடையான்!      (கும்மியடி)

கும்மியடி பெண்ணே
கும்மியடி!
ஶ்ரீராமனின் பேர் சொல்லிக் கும்மியடி!
தீமை ஒழியட்டும் நன்மை செழிக்கட்டும் நல்ல 
காலங்கள், காலங்கள் பிறக்கட்டுமென்று
கும்மியடி!            (கும்மியடி)

அரிச்சந்த்ரன் வம்சத்தில் வந்தவன்டி!
அந்த அரிச்சந்த்ரன் போலவே வாழ்ந்தவன்டி!
தயரத மகராசன் 
பிள்ளையடி!
ராஜா ராமனுக்கீடிங்கு இல்லையடி!        (குமமியடி)

கௌசல்யை வயிற்றினில் பிறந்தவன்டி!
அன்பில் தாயைக் காட்டிலும் சிறந்தவன்டி!
சீதையின் மலர்க்கரம் பிடித்தவன்டி!
அதற்கு சிவனார் வில்லை ஒடித்தவன்டி!       (கும்மியடி)

அன்புடையான் நல்ல பண்புடையான்!
குறி தப்பிடா, தப்பிடா அம்புடையான்!
நன்மையின் உருவமாய் தோன்றியவன்தான்!
என்றும் தப்பு செய்வோரை வதைப்பவன்தான்!      (கும்மியடி)

குணமுடையான் நல்ல மனமுடையான்!
அவன் ஏழைக்கு உதவிடும் பண்புடையான்!
குற்றம் புரிந்திடில் தேவர்கள் ஆயினும்,
அஞ்சிடும், அஞ்சிடும் சினமுடையான்!

கும்மியடி பெண்ணே 
கும்மியடி!
ஶ்ரீராமனின் பேர் சொல்லிக் கும்மியடி!
துக்கம் அழியட்டும் மகிழ்ச்சி பிறக்கட்டுமென்று 
கும்மியடி!        (கும்மியடி)

ஶ்ரீராமஜெயம் என்று 
கும்மியடி!
ஶ்ரீராமஜெயம் என்று
கும்மியடி!
ஶ்ரீராமகாவியம் இன்று
நிறைவடைந்ததென்று
கும்மியடி!"       (கும்மியடி)

★இந்தப் பாட்டைச் சிறப்பாகப் பாடிக்கொண்டு அரண்மனை பெண்டிர் கும்மிநடனம் ஆடியதை ஶ்ரீராமரும சீதையும் மற்றும் வைபவத்திறகு வந்திருந்த அனைவரும் கண்டு களித்தனர்.

★ராமபிரானும்,சீதாபிராட்டியும் தம்பதிசகிதமாக, ஏழை, எளியவர்களுக்கு பசுக்களோடு கன்றுகளையும்,தங்க நாணயங்களையும்,பொன், பொருள், ஆடை, அணிகலன்களையும் கொடுத்து மகிழ்ந்தனர்.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869

நாளை.............

[10:29 am, 20/02/2022] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
316/20-02-2022

ஶ்ரீராம ராஜ்யம் ஆரம்பம்...

★பட்டாபிஷேகம் சிறப்பாக நடந்து முடிந்தது.  பூமி நன்கு செழித்தது. மரங்களில் கனிகள் நிறைந்தன.  பட்டாபிஷேகம் சிறப்பாக முடிந்த கையோடு  ஶ்ரீராமபிரானும்,சீதாபிராட்டியும் தம்பதி  சகிதமாக, ஏழை, எளியவர்களுக்கு  பசுக்களையும், கன்றுகளையும், மற்றும் தங்க நாணயங்களையும், அலங்கார ஆடை ஆபரணங்களையும் தேவைப்பட்ட  பொருள்களையும், கொடுத்து மகிழ்ந்தனர்.
பிறகு ஶ்ரீரகுராமன் தனக்கு  துணையாக ராவண வதம் வரை வந்து நின்றவர்களுக்கு, முதலில் பரிசளிக்க விரும்பினார்.

★முன்னதாக கிஷ்கிந்தை வேந்தன் சுக்ரீவனை அழைத்த ரகுராமன், தன் தந்தை தசரத சக்ரவர்த்தி இந்திரனிடம் இருந்து பெற்ற ரத்தின கடகத்துடன், யானைகளையும், வெள்ளை நிற குதிரைகளையும் பரிசாக கொடுத்து,அவனுக்கு தங்க மாலையையும்,   அத்துடன்
பசும் பொன்னால் ஆன கிரீடம் ஒன்றையும் அணிவித்து,  தன் நன்றியை தெரிவித்தார். 
சுக்ரீவன் ராமரின் கைகளை பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டான்.  வாலி மைந்தன் அங்கதனை அழைத்து, தங்கத் தோள் வளையங்களையும் மதிப்பற்ற முத்தாரங்களையும்,
யானைகளும்,  குதிரைகளும்
பரிசாக கொடுத்து மகிழ்ந்தார்.

★பிறகு இலங்கை வேந்தன் விபீஷணனை அழைத்து, தேவர்கள் கொடுத்த ரத்தின கடகத்தையும், பொன்னும் பொருளும் பரிசாக கொடுத்து வாழ்த்தினார். விபீஷணர், தயங்கி நின்று ஶ்ரீராமரின் குலதெய்வம் ஶ்ரீரங்கநாதரை, அப்படியே இலங்கைக்கு ரங்க விமானத்துடன்  ரகுராமன் நினைவாக எடுத்து செல்ல வேண்டும் என்று பிரார்தித்தார். வீபீஷணன் விருப்படியே ஸ்ரீரங்க விமானத்தை  ஶ்ரீரங்கநாதருடன் தருவதாக  வாக்களித்தார் பட்டாபிராமன். அதன் பிறகு நீலன், ஜாம்பவான், நளன் முதலிய வீர வானர படைத் தலைவர்களுக்கு ரத்தின மாலைகளையும், யானைகளும், குதிரைகளும், பொன்னும் பொருளும் பரிசாக கொடுத்தார் ஜானகி ராமன்.

★ஶ்ரீ ரகுராமன் அனுமனை அழைத்து, ‘வாயு புத்திரனே! உதவி செய்வதில் உனக்கு ஒப்பாக யாரும் இருக்க முடியாது. எனக்கு நீ செய்த மிகப்பெரிய உதவியானது அளவு கடந்தது. அதற்கு இணையாக நான் உனக்கு என்ன கைமாறு செய்ய போகிறேன் என்று நிச்சயமாகத் தெரியவில்லை.  உனக்கு ஆயிரமாயிரம் பொருட்கள் பரிசாக கொடுத்தாலும் ஈடாகாது. உன்னுடைய வலிமையும், தியாக உதவியும் மிக மேன்மையானது. உனக்கு என்ன பரிசு கொடுப்பது என்று எனக்குத்  தெரியவில்லை. 
அதனால் என் அன்பைத் தவிர, விலை உயர்ந்தது வேறு எதை நான் உனக்குத் தரமுடியும்? என்று கூறிய ரகுராமன், அனுமனை தன் மார்போடு சேர்த்து இறுக அணைத்துக் கொண்டார். அப்போது அந்த இருவரின் கண்களிலும் கண்ணீரானது பெருக்கெடுத்து ஓடியது. இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

★ராமபிரான் தன் கழுத்தில் அணிதிருந்த முத்துமாலையை கழற்றி எடுத்து,சீதா! என்னுடைய  பரிசளிப்பு முடிந்துவிட்டது. இந்த அழகான முத்துமாலையை நீ விரும்பியவருக்கு பரிசாக அளிக்கலாம் எனக் கூறி மாதா சீதையின் கைகளில் அதைக் கொடுத்தார். முத்துமாலையை கையில் வாங்கிய சீதை முதலில் பார்த்தது அனுமனைத் தான். அனுமனை பார்த்து, சுந்தரா! என அன்போடு அழைத்தாள். அனுமன் சீதையின் அருகில் வந்து நின்றான். அன்னை சீதை, முத்துமாலையை அனுமனின் கழுத்தில் அணிவித்தாள். எனக்கு தக்க சமயத்தில் உதவி செய்த உனக்கு என் பரிசு என்றாள். அதை ஏற்று அனுமன் இருவரையும் வணங்கியதும் அனுமா! நீ எங்களுக்கு மகன் போன்றவன். என்றென்றும் சிரஞ்சீவியாக வாழ்வாய் என்று ஆசிர்வதித்தாள்.

★ராமர், சீதா! நீ, நான் மனதில் நினைத்ததை தான், நீயும் செய்துள்ளாய்,என்று கூறி மகிழ்ந்தார். பிறகு சீதாராமன் அனுமனை பார்த்து, அனுமனே! உனக்கு என்ன வரம் வேண்டும்.? கேள்! என்றார்.  அனுமன், பெருமானே! நான் தங்களிடம் வேண்டுவதை  தவறாமல் கொடுக்க வேண்டும் எனக் கூறிவிட்டு, நான் உங்களின் அடிமையாக என்றும் எப்போதும் இருக்க வேண்டும். என்னை வேண்டுபவர்களுக்கு, முதலில் உங்கள் நாமமே (ராம நாமம்) நினைவுக்கு வர வேண்டும்! என, கேட்டுக் கொண்டார். ரகுராமன் புன்னகைத்து உனக்கு அந்த வரத்தினை  தருகிறேன் எனக் கூறினார். அனுமனின் இந்த வரத்தை கேட்டு மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்தனர். 

★ஶ்ரீ கோதண்டராமனுக்கு முடிசூட்டும் பட்டாபிஷேக விழா அறுபது நாள் கோலாகலமாக நடந்தது. குகன், சுக்ரீவன், அங்கதன், விபீஷணன், அனுமன் முதலியவர்கள் ஶ்ரீராமரின் பட்டாபிஷேக விழாவை கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.
பிறகு ஜானகிராமன், அங்கிருந்த குகன், சுக்ரீவன், அங்கதன், விபீஷணன், அனுமன் முதலிய வீரர்களை அழைத்து, அரசன் இல்லாத நாடு வெறுமையாகி விடும். ஆதலால் தாங்கள் அவரவர் இருப்பிடத்திற்கு சென்று, உங்களது நாட்டை மேன்மையுடன், நல்லாட்சி புரியுங்கள் என்று கூறி விடை கொடுத்தார். 

குறிப்பு:-
ஶ்ரீராம காவியம் நாளை நிறைவடைகிறது. அதன்பின் ஶ்ரீராம நாம மகிமைகளைப் பற்றி சிலநாட்களும் பின் விடுபட்ட ராமாயண கதைகளைப் பற்றியும் பதிவிடப் போகிறேன். லவ குசன் வரும் உத்தரகாண்டம் தற்சமயம் பதிவிட வேண்டாம் என  நினைத்துள்ளேன்.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869

நாளை.....................

[9:18 am, 21/02/2022] +91 94433 28867: Namaskaram to All!

சேலம் & கயத்தார் இவ்விரு இடங்களிலுள்ள கோசாலைகளில் பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன. 

பசுக்களுக்கு வைக்கோல் வாங்க, பிணி தீர்க்கப் போதிய வருவாயின்றித் தவிக்கின்றனர்.

உங்களால் இயன்றதைக் கொடுத்துதவுங்கள்.

சேலம் - ரூ.1/-
கயத்தார் - ரூ.1/-

மேற்கண்டவாறு குறைந்தபட்சம் 1ரூபாய் மட்டுமாவது கொடுங்கள்; பசுவின் பசியாற்றுங்கள்.

ஒரு கோடி மக்கள் பார்க்கும் வகையில் இந்த மெசெஜ் forward செய்யுங்கள். ஒரு கோடி பேர் ஒரு ரூபாய் கொடுத்தால் பசுக்களைப் பராமரிக்கப் போதுமான பணம் கிடைக்கும்.

Sri Krishna gho samrakshana Trust 
 Govt.Reg :BK4/26/2020 பனைமரத்துப்பட்டி(P.O),சேலம்.

வைக்கோல் தேவை மிகவும் அவசரம். கடும் நிதி நேருக்கடியில் உள்ளது நமது கோசாலை.
    சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி கிராமத்தில் உள்ள   நமது ஸ்ரீ கிருஷ்ணா கோ-சாலையில் வயதான உடல் ஊனமுற்ற, மடிவற்றிய, கரவைநின்ற, இறக்கும் தருவாயில் உள்ள  பசுக்கள் எந்த லாபநோக்கமும் இன்றி பாதுகாக்கப்படுகின்றன.
      
      மேலும்  நமது கோ  சாலையில் எந்த வருவாயும் இல்லை கடுமையான நிதிநேருக்கடி. எனவே  பச்சைத் தீவனம், மருத்துவம்  மற்றும் வைக்கோல்க்கும்,  மாதாந்திர பராமரிப்புக் கைங்கரியதாரர்களை வரவேற்கிறோம்.  எதிர்வரும் நாட்களை  சமாளிக்க கோக்களுக்குத் தீவனம் மிகவும் அவசரம். குறைந்தபட்சம்  நாள் ஒன்றுக்கு 6-பேல் வைக்கோல் மிகவும் அவசரத் தேவையுள்ளது. (300-முதல் 350 ரூபாய் வரை ஆகின்றது×6=2100)
       கடுமையான நிதி நெருக்கடியில், நன்கொடைகள் மூலம் மட்டுமே கோசாலையினை நடத்த வேண்டிய நிலை உள்ளது.
 எனவே அருளாளர் பெருமக்களும்!!  கைங்கர்யபுருஷர்களும்!! 🙏🙏
   தயவுசெய்து தங்களால் இயன்ற ஒரு ரூபாய்யாவதும் கைங்கர்யமாக  வழங்கிட வேண்டுமாய்  விண்ணப்பிக்கிறோம்!!!
 தற்போது அறுவடை காலம் என்பது குறிப்பிடத்தக்கது. வைகோலுக்கு உதவுங்கள்!

 கோசாலையில்:-
* கோதானம் ஏற்றுக்கொள்ளப்படும்
* பூமி தானம் வரவேற்கிறோம்.

Bank Account Details for சேலம் கோசாலை:

Account Holder Name : Sri Krishna gho samrakshana Trust
Account number: 10113601295
IFSC Code : IDIB0PLB001
Tamilnadu grama bank.
(The unit of indian bank),
Panamarathupatty Branch,salem.

Bank Account Details for கயத்தார் கோசாலை:

Name: Shree Shivvarpanam Trust,
Bank: Indian Overseas Bank
Branch: Kayathar Branch,
Account Number: 243901000014552
IFSC code: IOBA0002439

🙏🙏🙏🙏🙏🙏


சேலம் கோசாலை Contact:
ஸ்ரீராம்
+91 9944633705.

கயத்தார் கோசாலை Contact:
Karpagam Narasimhan
9566062490( What's app)
9940692490
[9:39 am, 21/02/2022] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
317/21-02-2022

ஶ்ரீ ராமனுக்கு
ஜெய மங்களம்..........  

★இலங்கை வேந்தன் விபீஷணன் தன் சுற்றத்தாரோடு இலங்கைக்கு செல்லாமல் தயங்கி நின்ற பொழுது,
ரகுராமன் அவன் மனதறிந்து ஶ்ரீரங்கம் பிரணவாகார விமானத்தை, ஶ்ரீரங்கநாதருடன், வீபீஷணனுக்கு மனமுவந்து பரிசாக அளித்தார். ஶ்ரீராமனிடம், பிரியா விடைபெற்ற அவர்கள் ராமரையும்,சீதையையும் மற்றும் பரத லட்சுமண சத்ருக்ணரையும், குரு வசிஷ்ட முனிவரையும், தாய்மார்களையும் வணங்கி விடை பெற்றனர். அனைவரும் புஷ்பக விமானத்தில் ஏறிக் கொண்டனர், வேடர்குலத் தலைவன் குகனை அவனது ஊரான சிருங்கிபேரத்திலும்,
கிஷ்கிந்தை வானர வேந்தன் சுக்ரீவனை கிஷ்கிந்தையிலும், இறக்கி விட்டு வீபீஷணன் இலங்கைக்கு புறப்பட்டான்.

★வீபீஷணன் இலங்கை நோக்கி செல்லும் வழியில் ஶ்ரீரங்க விமானத்தை ஶ்ரீரங்கம் காவிரி ஆற்றங்கரையில் பூஜை அனுஷ்டானம் காரணமாக இறக்கி வைத்து, பூஜைகள் முடிந்த பின் திரும்ப எடுக்க முனைந்த பொழுது, இயலாத காரணத்தால், ஶ்ரீரங்கநாதரை அங்கேயே பிரதிஷ்டை செய்து விட்டு பின்னர் இலங்கை சென்றான் என்று ஶ்ரீரங்கம் திவ்ய தேச மகாத்மியம் குறிப்பிடுகிறது. ஶ்ரீரங்கநாதர் தென் திசை நோக்கி பள்ளி கொண்டு இருப்பது இதனால் தான் என்று ஶ்ரீரங்க புராணம் கூறுகிறது.

★ஶ்ரீரகுராமன், தன் தம்பியருடன் அயோத்தியை நீதி நெறி தவறாது , அரசாட்சி புரிந்தார். 
தசரத மன்னரின் குமாரனான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, நாட்டு  குடிமக்கள் அனைவரையும் தமது குழந்தைகளாக நினைத்து ராஜ்ய பரிபாலனம் நடத்தினார். 
ஶ்ரீ ராமபிரான் அருளால் மாதம் மும்மாரி பொழிந்து செழிப்பாக  மண்ணுலகம் விளங்கியது. அஸ்வமேதம், வாஜபேயம் போன்ற யாகங்களைப் புரிந்து, ஸ்ரீராமன் ஆட்சி ராம மயமாகவே இருந்தது.

ஶ்ரீராமஜெயம்! ஶ்ரீராமஜெயம்!!

"ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே.
சகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே".

ராம் ராம் ராம் ராம் ராம் ராம்

குறிப்பு:-

★ராமாயண காவியத்தின் இறுதியில் ராமாயணத்தை கேட்பவர்களுக்கும் மற்றும் படிப்பவர்களுக்கும் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று வால்மீகி முனிவர் தெளிவாக அருளியிருக்கிறார்.

★ஶ்ரீராமனின் ஶ்ரீராம காவியம் கதையை அந்த தேவர்களும், சித்தர்களும், கந்தர்வர்களும், ரிஷிகளும் நித்யம் நிச்சயம் கேட்கின்றனர். ராமாயணம் எங்கெல்லாம் சிரத்தையாகச் சொல்லப்படுகிறதோ அங்கு எல்லாம், அனுமன் அதனை கேட்டபடி இருப்பார். சூரிய உதயத்தின் போது அல்லது சூரியன் மறையும் போது கட்டுப்பாட்டுடன், நியமத்துடன் ராமாயணத்தை மனமொன்றிப் படிக்க வேண்டும். அவ்வாறு தினந்தோறும் படிப்பவர்கள், புதல்வர்கள் மற்றும் உற்றார் உறவினரோடு மகிழ்ச்சியாக உலகில் வாழ்வார்கள்.

★மேலும் ஆரோக்கியமான ஆயுளையும்,சௌபாக்யத்தையும் அடைவார்கள். புத்திரன் இல்லாதவர்கள் நல் புத்திரனைப் பெறுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக  இல்லாதவர்கள் நல்ல செல்வத்தை பெறுவார்கள். சிரார்த்த காலத்தில் படித்த அறிஞர்களைக் கொண்டு ராமாயணத்தை சொல்ல வைக்க வேண்டும். இதனால் இதனை கேட்பவர்களுக்கு தங்களின் பற்றுக்களும், ஆசைகளும் நீங்கி சொர்க்கம் செல்வார்கள். தினந்தோறும் குறைந்தது  ஒரு ஸ்லோகமாவது படித்தால் அன்றாடம் அறியாமல் செய்யும் பாபங்களிலிருந்து விடுபடலாம். 

★ஒரு அத்தியாயத்தை தினம் தோறும் பக்தியுடன் ராம சிந்தனையோடு படிப்பவர்கள் நூறு அஸ்வமேத யாகம் செய்த பலனைப் பெறுவார்கள். இருபதினாயிரம் வாஜபேய யாகம் (தலைமை குருவாக பதவி ஏற்றுக் கொள்ளும் போது செய்யப்படும் யாகம்) செய்த பலனை அடைவார்கள். இதைக் கேட்பவர்களும் அதே பலனை அடைவார்கள். பிரயாகை, பல தீர்த்தங்கள், புண்ணிய கங்கை நதி, நைமிசம் போன்ற அடர்ந்த காடுகள் ஆகிய அனைத்திற்கும் சென்று கிடைக்கும் பலனை, ராமாயணத்தை கேட்பதாலேயே பெறுவார்கள். கிரகணகால  சமயத்தில் துலா பாரமாக தங்கம் தானம் செய்பவர்களுக்கு கிடைக்கும் பலன்கள் யாவும் ராமாயணத்தை பக்தியுடன் கேட்பவர்களும், படிப்பவர்களும் பெற்று எல்லா விதமான பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணு லோகம் செல்வார்கள். எந்த வித கெட்ட எண்ணமும் இல்லாமல் பக்தியுடன் ராமனின் ராமாயணத்தை நினைப்பவர்கள் தீர்காயுள் பெற்று ஆயுள் முடியும் தறுவாயில் விஷ்ணு லோகம் செல்வார்கள்.

★அருமையான ராமாயணத்தை கதாகாலட்சேபமாக மக்களுக்கு சொல்பவர்களுக்கு அல்லது கதைகளாக சொல்பவர்களுக்கு உடை உணவு இருப்பிடம் பசு போன்றவற்றை தாராளமாக கொடுக்க வேண்டும். இதை படித்து சொல்பவர்கள் திருப்தியாக மகிழ்ச்சியாக இருந்தால் சர்வ தேவதைகளும் மகிழ்ச்சியடைவார்கள். இதனால் தானம் கொடுப்பவர்களுக்கு நீண்ட ஆயுளோடு, சொர்க்கத்தை அடைவார்கள். ராமாயணத்தை ஒரு காண்டத்தின் முழுமையான  பகுதியையோ அல்லது  அரைப் பகுதியை மட்டும் கேட்பவன் கூட அந்த பிரம்மலோகத்திற்கு சென்று, அங்கு பிரம்மாவினால் மிக்க மரியாதையுடன் வரவேற்று அழைக்கப்படுவான் என்று மகரிஷி வால்மீகி கூறுகிறார்.

★அனைவருக்கும் மங்களம் உண்டாகட்டும். ராமாயணத்தை படித்து ராம நாமத்தை சொல்லி இறைவனின் திருவடியை அடைவோம். ராம ராம ராம ராம ராம.ராம. ஶ்ரீராமஜெயம்.

★ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த ஶ்ரீராமகாவியம் வாட்ஸ்அப் மூலமாக உங்கள் கரங்களில் தவழ்ந்தது. நீங்களும் அதை அணைத்து, தடவி, பார்த்து, ரசித்து, படித்து மகிழ்ந்தீர்கள். பெற்றதாயைப் போல நானும் மகிழ்ந்தேன். இந்த அருமையான ஶ்ரீராம காவியம் இன்றுடன் நிறைவு அடைகிறது. ஆனால் ஶ்ரீராமரும் அஞ்ஞனை மைந்தன் அனுமனும் என்றென்றும் நம்முடன் இருந்து வாழ்த்தி அருளுவார்கள் என்பது சத்தியம்.

★ராமநாம மகிமைகளைப் பற்றியும், ராமாயண கதைகளை பற்றியும் 23/02/2022 புதன் கிழமை முதல் பதிவிடுகிறேன். அனைவரும் படித்து பயன்பெற வேண்டுகிறேன்.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869

நாளை மறுநாள்.................
[10:22 am, 21/02/2022] +91 98435 21166: மிக்க நன்றி ஐயா .சிறு வயதில் என்னுடைய தாத்தா அவர்கள் எனக்கு ராமாயணம் மற்றும் மஹாபாரத காவியங்களை மிக எளிமையாக எந்த நேரம் கேட்டாலும் விளக்கி கூறுவார்.அது போன்ற ஒரு சூழ்நிலையை தற்போது உணர்கிறேன்.தங்களுக்கு மீண்டும் ஒரு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்🙏🙏🙏
Senthilkumar.M
Puducherry
[11:26 am, 21/02/2022] +91 98433 44722: 317 நாட்கள் சென்றது என்பது தெரியவில்லை. ஒரு நாள் வர தாமதம் ஆனால் ஏன் இன்னும் வரவில்லை என்று கேட்டுக் கொண்டார் பலர். அவ்வளவு ஆர்வம். இதனை எத்தனையோ பேர் கூறியிருந்தாலும் காவியத்தின் தன்மை மாறாமல் எல்லோர் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் என்ற சிறப்பு  சுபராஜராவ் அவர்களுக்கும் இதனை இந்த குழுவில் அனுப்பி இராமாயணம் காவியம் வடரங்கம் கோவில் அர்ச்சகர் ரமேஷ் அவர்களுக்கும் இந்த குழுவில் உள்ள அனைத்து உறுப்பினர் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் பாராட்டுகள்💐🙏🏾
[1:58 pm, 21/02/2022] +91 99422 96366: உண்மையில் பொழுது புலர்ந்ததும் ராம நாமத்தோடு நினைவுக்கு வருவது ராமகாவியத்தின் அன்றைய நாளுக்குண்டான பதிவு எப்போது வரும் படிப்போம் என்ற நினைவு தான்... கடந்த 317 நாட்களாக எமது நிகழ்வுகளில் முக்கிய அம்சம் ராமகாவியம் படிப்பது தான்.... முடிந்த அளவு இது சம்பந்தமாக அனைத்து புத்தகங்களையும் படித்து பின்னர் தெளிவாக பதிவு செய்து நாங்கள் படித்து பயன்பெற உதவியமைக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா திரு.நாகசுபராஜராவ் அவர்களுக்கு...🙏 இது போன்ற தொடர்பதிவுகளில் எங்கள் அனைவரையும் இணைத்து படிக்க ஏதுவாக உதவும்படி அனைவரின் சார்பாகவும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கேட்டுக்கொள்கிறேன்...🙏

-------------------------------------------------------------------------------------------------------


[8:03 am, 23/02/2022] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
318/23-02-2022

நண்பர்களே! வணக்கம் பல.

★ஶ்ரீராமருக்கும் இலங்கை வேந்தன் ராவணனுக்கும் யுத்தம் நடந்தபோது அகஸ்திய முனிவர் ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரத்தை ஶ்ரீராமருக்கு உபதேசித்து இருந்தார் எனக் குறிப்பிட்டு இருந்தேன். அந்த பவித்ரமான ஸ்தோத்ரத்தை தினமும் சில ஸம்ஸ்க்ருத ஸ்லோகங்களுடன் அவற்றின் தமிழ் பொருளையும் பதிவிட உள்ளேன்.

ஆதித்ய ஹ்ருதயம் பலன்கள்

★மனச்சோர்வையும் மற்றும் நோய்களையும் தீர்த்து, நமது உடலுக்கும், மனதிற்கும்  சக்தி தரும் ஒரு அபூர்வ ஸ்லோகமாக ஆதித்ய ஹ்ருதயம்  கூறப்பட்டு உள்ளது. ராவணனோடு யுத்தம்  செய்தபோது சற்று அயர்ச்சியும் சோர்வும் கொண்ட ஸ்ரீராமனுக்கு, ஆக்கமும் அத்துடன் ஊக்கமும் கொடுக்கும் வகையில் அவருக்கு முனிவர் அகத்தியர் உபதேசித்த அற்புத ஸ்லோகம் இது. ஆபத்துக் காலங்களிலும், எந்த ஒரு கஷ்ட காலத்திலும் எதற்காகவேனும் பயம் தோன்றும்போது இந்த துதியை ஜபிக்க, மனம் புத்துணர்ச்சி பெறும், பலம் பெருகும். துன்பங்கள் தூள் தூளாகும்.  பயம் விலகும். கிரகபீடைகள் நீங்கும். ஆயுளை வளர்க்கும்.

★எதிரிகளின் தொல்லையால் அவதிப்படுபவர்கள், இத்துதியை பாராயணம் செய்தால் அத்தொல்லைகள் சூரியனைக் கண்ட பனி போல் அகலும். ஆயுளை வளர்க்கும். இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்ததாலேயே ராமபிரான் ராவணனை எளிதாக வெல்ல முடிந்தது. இந்த ஸ்லோகம் சூரியனைத் துதிக்கும் வகையில் அமைந்துள்ளது. அனைவரும் இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஶ்ரீஆதித்ய ஹ்ருதயத்தை பாராயணம் செய்து உயர்ந்த நிலையை அடைய கேட்டுக் கொள்கிறேன்.

ஆதித்ய ஹ்ருதயம் 
ஸ்தோத்ரம்... 1 


பூர்வாங்க ஸ்தோத்ரம்

★ஜயது ஜயது ஸூர்யம் சப்த லோகைக தீபம் |
கிரண ஷமிதா பாபக்லேஷ துக்கசஸ்ய நாஷம் ||
அருண கிரண கம்யம் ஆதிம் ஆதித்ய மூர்த்திம் |
சகல புவன வந்த்யம் பாஸ்கரம் தம் நமாமி ||

விளக்கம்:- 
ஸ்ரீ ஸூர்ய பகவானே, உனக்கு நமஸ்காரம். ஏழு உலகங்களுக்கும் (பூலோகம், புவர் லோகம், ஸ்வர் லோகம், மஹர லோகம், ஜனர் லோகம், தபோ லோகம், ஸத்ய லோகம்) நீ ஒளியேற்றும் விளக்காக இருக்கிறாய். உன்னிடமிருந்து பரவும் ஒளிக்கதிர்கள் துக்கங்களையும் கவலைகளையும் போக்கும். உனது கிரணங்கள் எம்மை ஆட்கொள்கின்றன. நீயே முதல்வன். முதன்மையானவன். ஸகல உலகங்களும் உன்னை வணங்கும். ஒளி வீசுபவனே உனக்கு நமஸ்காரம்.

★ததோ யுத்த பரிஷ்ராந்தம் ஸமரே சிந்த்தயா ஸ்திதம் |
ராவணம் ச்சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்த்திதம் || 1 ||

விளக்கம்: 
ராம ராவணசுர யுத்தம் முடிவுறும் தருவாயில், ராமனுக்கு சோர்வு ஏற்பட்டது. அந்த சமயத்தில், ராவணாசுரன் வல்லமை படைத்தவனாக தென்பட்டான்.

★தெய்வ தைஷ்ச ஸமாகம்ய த்ருஷ்டுமப்யாக தோரணம் |
உபாகம்யா ப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவான் ருஷி: || 2 ||

விளக்கம்: 
போர்க்களத்தின் வாயிலிலே, அகஸ்த்ய முனிவர், ராமபிரானை சந்தித்தார். அவரது சோர்ந்த நிலையைக் கண்டு பின்வருமாறு கூறினார்.

★ராம ராம மஹா பாஹோ ஷ்ருனு 
குஹ்யம் ஸனாதனம் |
ஏன ஸர்வானரீன் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி || 3 ||

விளக்கம்: 
பலமான ஆயுதம் பொருந்திய ராம பிரானே, சத்ருக்க்ளை தோற்கடித்து போரில் வெல்வதற்கான நிரந்தரமான தீர்வை உனக்கு இப்போது சொல்கிறேன்.

★ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸ்ர்வ ஷத்ரு வினாஷனம் |
ஜயாவஹம் ஜபேன்னித்யம் அக்ஷய்யம் பரமம் ஷிவம் || 4 ||

விளக்கம்: 
ஆதித்ய ஹ்ருதயம் ஒரு புண்ணிய மிக்க மந்திரம் ஆகும். எதிரிகளை வீழ்த்தும். தினமும் பக்தியுடன் அதை பாராயணம் செய்பவர்களுக்கு நிரந்தரமான முழுமையான வெற்றிகள் கிட்டும்.

★ஸர்வ மங்கல மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரனாஷனம் |
ச்சிந்தா ஷோக ப்ரஷமனம் ஆயுர்வர்ததனம் உத்தமம் || 5 ||

விளக்கம்: 
ஸர்வ ஸௌபாக்யங்களையும் அளிக்கும்; ஸர்வ பாபங்களையும் அழிக்கும்; சிந்தையில் உள்ள கவலைகளை ஒழிக்கும்; ஆயுளை அதிகரிக்கும்.

★ரஷ்மி மந்தம் ஸமுத்யந்தம் தேவாசுர நமஸ்க்ருதம் |
பூஜ்யஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம் || 6 ||

விளக்கம்: 
ஸூர்ய பகவான் தனது பொன்னான கிரணங்களை எங்கும் பரப்புகிறார். தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப் படுகிறார். திவ்யமான ஒளியின் வண்மையால் அண்ட சராசரத்திற்க்கும் அதிபதியாக விளங்குகிறார்.

நாளை...................

#ஸ்ரீராமர்பட்டாபிஷேகம் ஏற்ற பின் ராமரை பார்த்து ஆசி கூற அகஸ்திய மாமுனிவர் அயோத்திக்கு வருகை புரிந்தார். அகஸ்தியர் சபையில் அமர்ந்ததும், ராவண வதம் பற்றி விவாதிக்கலாயினர் அனைவரும்.

அப்பொழுது அகஸ்தியர் சபையினரை பார்த்து ராவண கும்பகர்ண வதத்தை விட லக்ஷ்மணன் ராவணன் மகன் மேகநாதனை வதைத்ததே மாபெரும் வீர செயல் என்றார் அகஸ்தியர். அதை கேட்டு அனைவரும் ஆச்சரியமாக அகஸ்தியரை பார்க்க ஸ்ரீராமர் ஏதும் அறியாதவர் போல் ஸ்வாமி எதை வைத்து அப்படி கூறினீர்கள். மேகநாதன் அவ்வளவு சக்தியுள்ளவனா என்று கேட்க,

அகஸ்தியர் ராமா எல்லாம் அறிந்தவன் நீ  ஆனால் ஏதும் அறியாதவன் போல் லக்ஷ்மணனின் பெருமையை என் வாயாலே கூறவேண்டும் என்றுதானே இப்படி அறியாதவன் போல் கேட்கிறாய்,  சரி நானே கூறுகிறேன் சபையோர்களே  ராவணன் மகன் மேகநாதன் தேவலோக அரசன் இந்திரனுடன் போர்புரிந்து அவனை வென்று சிறையில் அடைத்து வைத்தது யாவரும் அறிந்ததே. 

நான் முக கடவுளான பிரம்மா இந்திரனை விடுவிக்க மேகநாதனிடம் கோரிக்கை வைக்க மேகநாதன் இந்திரனை விடுவிக்க வேண்டுமென்றால் தாங்கள் எனக்கு மூன்று அறிய வரங்கள் தர வேண்டும் என நிபந்தனை வைத்தான்.

அவை 

1.பதினான்கு ஆண்டுகள் உணவு உண்ணாதவனும், 
2.அதே பதினான்கு ஆண்டுகள் ஒரு நொடி கூட உறங்காது இருப்பவனும்,  3.அதே பதினான்கு ஆண்டுகள் எந்த ஒரு பெண் முகத்தையும் ஏறெடுத்து பார்க்காது இருப்பவன் எவனோ அவனால் மட்டுமே எனக்கு மரணம் நிகழவேண்டும் என்று பிரம்மாவிடம் மூன்று அறியவரங்களை பெற்று இந்திரனை விடுவித்தான். 

அதனால் மேகநாதனை யாவரும் இந்திரஜித் என்று அழைத்தனர். இப்படி பட்ட மேகநாதனை வதம் செய்த பெருமை லக்ஷ்மணனையே சேரும் என்று கூறி முடிக்க,

ராமர் ஸ்வாமி லக்ஷ்மணன் என்னுடன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் இருந்த போது அவன் எந்த ஒரு மாதையும்(பெண்ணையும்) ஏறெடுத்து பார்த்ததில்லை என்பதை நான் அறிவேன். ஆனால் உணவும் உறக்கமும் இல்லாமல் எப்படி இருந்திருப்பான் என்று கேள்வி எழுப்ப அகஸ்தியர் அனைத்தும் அறிந்து வைத்து கொண்டே கேட்கிறாயே சரி சற்று பொறு உன் கேள்விக்கான விடையை லக்ஷ்மணனிடமே கேட்டு தெரிந்து கொள்வோம் என்று கூறி லக்ஷ்மணனை அழைத்து வர ஏற்பாடு செய்தார்.

அகஸ்தியர் சபைக்கு வந்த லக்ஷ்மணன் அண்ணன் ராமரையும் குரு அகஸ்தியரையும் சபையோரையும் வணங்கிய பின் ராமர் தன் சந்தேகத்தை கேட்டார் லக்ஷ்மணா என்னோடு வனவாசம் இருந்தபோது எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காமையும் உணவு உண்ணாமையும் உறக்கம் கொள்ளாமையும் இருந்தாய் என அகஸ்தியர் கூறுகிறாரே எப்படி என சபையோர் முன் விளக்கமுடியுமா.?

லக்ஷ்மணர் அண்ணா உங்களுக்கு நினைவு இருக்கலாம் ரிஷிமுக பர்வதத்தில் மாதா சீதையை தேடி அலைந்த போது மாதாவால் வீசப்பட்ட அணிகலன்களை சுக்ரீவன் நம்மிடம் காட்டும்போது அன்னையின் பாத அணிகலன்களை தவிர வேறு எதுவும் என்னால் அடையாளம் காண முடியவில்லை காரணம் அன்னையின் பாதத்தை மட்டுமே பார்த்து நான் தினமும் வணங்குவேன். அதனால் பாத அணிகலன்களை மட்டுமே என்னால் அடையாளம் காணமுடிந்தது. 

அடுத்து வனவாசத்தின் போது நீங்களும் மாதாவும் இரவில் உறங்கும்போது நான் காவல் புரியும் நேரம் நித்ராதேவி என்னை ஆட்கொள்ள வரும் நேரம் நான் நித்ராதேவியிடம் ஒரு வரம் கேட்டேன். அம்மா என் அண்ணன் ராமரையும் என் அண்ணியான மாதா சீதா தேவியையும் பாதுகாக்கவே நானும் அண்ணனோடு வனவாசம் வந்துள்ளேன். அதனால் எங்கள் வனவாசம் முடியும் வரை என்னை நீ ஆட்கொள்ளவே கூடாது.
இந்த வனவாசம் முடியும் வரை எனக்கு உறக்கமே வரக்கூடாது என வேண்டிக்கொண்டேன் நித்ராதேவியும் என் வேண்டுதலுக்கு செவி சாய்த்து என்னை பதினான்கு ஆண்டுகள் ஆட்கொள்ள மாட்டேன் என வரமளித்தாள். அதனால் எனக்கு உறக்கம் என்பதே இல்லாமல் இருந்தது வனவாசத்தின் போது.

மூன்றாவதுநம்குருநாதராகிய விஸ்வாமித்திரர் நம் உடல் சோர்வு அடையாமல் இருக்கவும் பசியே எடுக்காமல் இருக்கவும் பலா அதிபலா என்னும் மிகவும் சக்தி வாய்ந்த காயத்திரி மந்திரத்தை நம் இருவருக்கும் அவரது யாகம் வெற்றி பெற காவல் புரிந்ததற்காக உபதேசித்தார். அந்த பலா அதிபலா மந்திரத்தை தினமும் உச்சரித்தே எனக்கு பசி ஏற்படாமலும் உடல் சோர்வு அடையாமலும் பார்த்துக்கொண்டேன் என்று கூற சபையினர் எல்லோருமே லக்ஷ்மணனை ஆச்சிரியமாக பார்க்க ஆஞ்சநேயர் அயர்ந்தே போனார்.  

லக்ஷ்மணின் ராம பக்தியை நினைத்து ராமர் அரியணையை விட்டு இறங்கி வந்து லக்ஷ்மணனை கண்ணீருடன் ஆரத்தழுவி கொண்டார்.

ஜெகம் புகழும் புண்ணிய கதை 
ராமனின் கதை மட்டும் அல்ல, லக்ஷ்மணின் கதையும் தான் 

ஸ்ரீ #ராமஜெயம் சொல்வது எவ்வளவு புண்ணியமோ அப்படியே,
ஸ்ரீ #லக்ஷ்மண ஜெயம் சொல்வதும் புண்ணியமே...!

ஶ்ரீராம காவியம்
~~~~~
320/25-02-2022
 
ஆதித்ய ஹ்ருதயம்
ஸ்தோத்ரம்... 3
 
★ப்ரமஹேஷான் அச்யுதேஷாய ஸூர்யாய ஆதித்ய வர்ச்சஸே |
பாஸ்வதே ஸர்வ பக்ஷாய ரௌத்ராய வபுஷெ நம: || 19 ||
 
விளக்கம்:
அதிதியின் புத்ரனாகிய ஸூர்ய பகவானே ப்ரம்மா, ஷிவன், விஷ்ணு ஆவார். அவருக்கு நமஸ்காரம். எங்கும் வியாபித்து எங்கும் நிறைந்திருக்கும் பேரெழிலானவருக்கு நமஸ்காரம்.
 
★தமோக்னாய ஹிமாக்னாய ஷத்ருக்னாய அமிதாத்மனே |
க்ரதக்னாக்னாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம: || 20 ||
 
விளக்கம்:
இருளையும் குளிரையும் போக்கி எதிரிகளை என்றும் அழிக்கும் ஸூர்ய பகவானுக்கு நமஸ்காரம். செய்நன்றி மறத்தலை அகற்றி ஒளியால் திகழும் ஸூர்ய பகவானுக்கு நமஸ்காரம்.
 
★தப்தசாமி கராபாய வஹ்னயே விஷ்வகர்மனே |
நமஸ்தமோபினிக்னாய ருசயே லோக ஸாக்ஷினே || 21 ||
 
விளக்கம்:
ஸூர்ய பகவான் ஒளிப்பிழம்பாக இருப்பவர். அவருக்கு என் நமஸ்காரம். அவரே உலகத்தை வடிவமைத்தவர். இருளை அகற்றி உலகத்தோர் காணும் வண்ணம் அமைந்துள்ள ஸூர்ய பகவானுக்கு நமஸ்காரம்.
 
★நாஷயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்ரஜதி ப்ரபு: |
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி: || 22 ||
 
விளக்கம்:
ஸூர்ய பகவானே இந்த பரந்த உலகத்தை உருவாக்கி, காத்து ரக்ஷிப்பவர். அழிக்க வல்லவரும் அவரே. அவருக்கு நமஸ்காரம். அவரது அபரிமிதமான ஒளியாலேயே மழையைத் தருகிறார். அவரே இவ்வுலகை ஆள்கிறார்.
 
★ஏஷ ஸுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரினிஷ்டித: |
ஏஷ ஏவாக்னிஹோத்ரம்ச பலம் ச்சைவாக்னி ஹோத்ரிணாம். || 23 ||
 
விளக்கம்:
உலகத்து உயிர்களெல்லாம் உறங்கும் போதும் ஸூர்ய பகவான் விழித்து இருக்கிறார். அவர் அக்னியால் ஹோமம் செய்கிறார். அவரே அக்னி. அக்னி ஹோமத்தின் கனிகளும் பலனும் அவரே.
 
★வேதஷ்ச க்ரத்வஷ்ச்சைவ க்ரதூனாம் பலமேவச |
யானி க்ருத்யானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு: || 24 ||
 
விளக்கம்:
ஸூர்ய பகவான் வேதங்களின் சாரத்தில் இருக்கிறார். தத்தம் கடமைகளை உண்மையுடன் செய்பவர்களுக்கு, கடமையின் பலனாக இருக்கிறார். வல்லமை பொருந்திய ஸூர்ய பகவானே எல்லா செயல்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்.
 
★ஏனமாபத்ஸு க்ருச்ரேப்ஷு கான்தார்யேஷு பயேஷுச |
கீர்த்தயன்புருஷ: கஷ்சின்னாவசீததி ராகவா || 25 ||
 
விளக்கம்:
ஓ ராகவனே! அவமானத்திலோ, பயத்திலோ, துன்பத்திலோ இருப்பவர்கள் ஸூர்ய தேவனின் நாமத்தை ஜபித்தால், நிச்சயமாக அவற்றிலிருந்து மீண்டு வருவார்கள்.
 
★பூஜயஸ்வைனமேகாக்ரோ தேவதேவம் ஜகத்பதிம் |
ஏதத் த்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயஷ்யஷி || 26 ||
 
விளக்கம்:
தேவர்களின் அதிபதியும் இந்த உலகின் அரசனுமான ஸூர்ய பகவானை முழுமையான அர்ப்பணிப்போடு வணங்க வேண்டும். இந்த ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகத்தை மும்முறை ஜபித்தால் வாழ்வின் எல்லா இடர்களிலும் வெற்றி கிட்டும்.
 
★அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி |
ஏவமுக்த்வா தடாகஸ்த்யோ ஜகாமச்ச யதாகதம் || 27 ||
 
விளக்கம்:
அகஸ்த்ய முனிவர், தான் கிளம்பும் முன், ராமபிரானைப் பார்த்து இவ்வாறு கூறினார்: ஓ ராமா, வலிமையான தோள்கள் உள்ளவனே, இந்த க்ஷணம் முதல், ராவணனை நிச்சயமாக வெற்றி கொள்வாய்.
 
★ஏதச்சுர்த்வா மஹாதேஜா நஷ்டஷொகோ பவத்தத |
தாரயாமாஸ சுப்ரீதோ ராகவ ப்ரயதத்மவான் || 28 ||
 
விளக்கம்:
அகஸ்த்ய முனிவரின் மொழிகளைக் கேட்ட ஸ்ரீராமன், தனது துன்பங்களையும் கவலைகளையும் துறந்தான். தனக்கு மிகப் பெரிய பலம் வந்து சேர்ந்ததைப் போல உணர்ந்தான்.
 
★ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து பரம் ஹர்ஷமவாப்தவான் |
த்ரிராசம்ய ஷுசிர்போத்வா தனுராத்யாய வீர்யவான் || 29 ||
 
விளக்கம்:
ஸ்ரீராமன் ஸூர்ய பகவானைப் பார்த்து இந்த ஸ்லோகத்தைச் சொன்னார். வீறு பெற்றார். மும்முறை நீரை அருந்தி தன்னை சுத்தி செய்து கொண்டு, வீரத்துடன் தனது வில்லை எடுத்தார்.
 
★ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்தாத்மா யுத்தாய ஸமுபாகமத் |
ஸர்வயத்னேன மஹதா வதே தஸ்ய த்ருதோ பவத் || 30 ||
 
விளக்கம்:
யுத்தக் களத்தில் ராவணனைக் கண்ணுற்ற ஸ்ரீராமன், அவனைக் கொல்லும் பொருட்டு முன்னேறினான்.
 
 
இறுதி ஸ்தோத்ரம்:-
 
★அத ரவிரவதன்னிரீக்ஷய ராமம் முதிதமனாஹ ப்ரமம் ப்ரஹ்ருஷ்யமான: |
நிஷிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா சுரகண மத்யகதோ வாச்ஸ்த்ரவேதி ||
 
விளக்கம்:
யுத்த களத்தில் ஸ்ரீராமனைப் பார்த்த ஸூர்ய பகவான், ராவணனின் முடிவு உறுதி எனத் தெரிந்து கொண்டான். ஸ்ரீராமனுக்கு, அதற்கான வழியையும் காண்பித்தான்.
 
இந்த ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகத்தை, உண்மையான பக்தியுடன் உதயமாகும் ஸூர்யனைப் பார்த்து மும்முறை சொல்லி வந்தால், வாழ்வில் எல்லா தடைகளும் நீங்கி எதிரிகளை வென்று சிறப்புடன் வாழலாம்.
 
குறிப்பு:-
இந்த பதிவிற்கு கீழ் திருமதி. M.S.சுப்புலக்ஷ்மி அவர்கள் பாடிய "ஆதித்ய ஹ்ருதயம்" ஸ்லோகம் mp3 வடிவில் இணைத்துள்ளேன். அதை கேட்டுக் கொண்டு இந்த ஸ்லோகத்தை பார்த்து படித்து பயன் பெறக் கோருகிறேன்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை......................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
320/25-02-2022
 
ஆதித்ய ஹ்ருதயம்
ஸ்தோத்ரம்... 3
 
★ப்ரமஹேஷான் அச்யுதேஷாய ஸூர்யாய ஆதித்ய வர்ச்சஸே |
பாஸ்வதே ஸர்வ பக்ஷாய ரௌத்ராய வபுஷெ நம: || 19 ||
 
விளக்கம்:
அதிதியின் புத்ரனாகிய ஸூர்ய பகவானே ப்ரம்மா, ஷிவன், விஷ்ணு ஆவார். அவருக்கு நமஸ்காரம். எங்கும் வியாபித்து எங்கும் நிறைந்திருக்கும் பேரெழிலானவருக்கு நமஸ்காரம்.
 
★தமோக்னாய ஹிமாக்னாய ஷத்ருக்னாய அமிதாத்மனே |
க்ரதக்னாக்னாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம: || 20 ||
 
விளக்கம்:
இருளையும் குளிரையும் போக்கி எதிரிகளை என்றும் அழிக்கும் ஸூர்ய பகவானுக்கு நமஸ்காரம். செய்நன்றி மறத்தலை அகற்றி ஒளியால் திகழும் ஸூர்ய பகவானுக்கு நமஸ்காரம்.
 
★தப்தசாமி கராபாய வஹ்னயே விஷ்வகர்மனே |
நமஸ்தமோபினிக்னாய ருசயே லோக ஸாக்ஷினே || 21 ||
 
விளக்கம்:
ஸூர்ய பகவான் ஒளிப்பிழம்பாக இருப்பவர். அவருக்கு என் நமஸ்காரம். அவரே உலகத்தை வடிவமைத்தவர். இருளை அகற்றி உலகத்தோர் காணும் வண்ணம் அமைந்துள்ள ஸூர்ய பகவானுக்கு நமஸ்காரம்.
 
★நாஷயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்ரஜதி ப்ரபு: |
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி: || 22 ||
 
விளக்கம்:
ஸூர்ய பகவானே இந்த பரந்த உலகத்தை உருவாக்கி, காத்து ரக்ஷிப்பவர். அழிக்க வல்லவரும் அவரே. அவருக்கு நமஸ்காரம். அவரது அபரிமிதமான ஒளியாலேயே மழையைத் தருகிறார். அவரே இவ்வுலகை ஆள்கிறார்.
 
★ஏஷ ஸுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரினிஷ்டித: |
ஏஷ ஏவாக்னிஹோத்ரம்ச பலம் ச்சைவாக்னி ஹோத்ரிணாம். || 23 ||
 
விளக்கம்:
உலகத்து உயிர்களெல்லாம் உறங்கும் போதும் ஸூர்ய பகவான் விழித்து இருக்கிறார். அவர் அக்னியால் ஹோமம் செய்கிறார். அவரே அக்னி. அக்னி ஹோமத்தின் கனிகளும் பலனும் அவரே.
 
★வேதஷ்ச க்ரத்வஷ்ச்சைவ க்ரதூனாம் பலமேவச |
யானி க்ருத்யானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு: || 24 ||
 
விளக்கம்:
ஸூர்ய பகவான் வேதங்களின் சாரத்தில் இருக்கிறார். தத்தம் கடமைகளை உண்மையுடன் செய்பவர்களுக்கு, கடமையின் பலனாக இருக்கிறார். வல்லமை பொருந்திய ஸூர்ய பகவானே எல்லா செயல்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்.
 
★ஏனமாபத்ஸு க்ருச்ரேப்ஷு கான்தார்யேஷு பயேஷுச |
கீர்த்தயன்புருஷ: கஷ்சின்னாவசீததி ராகவா || 25 ||
 
விளக்கம்:
ஓ ராகவனே! அவமானத்திலோ, பயத்திலோ, துன்பத்திலோ இருப்பவர்கள் ஸூர்ய தேவனின் நாமத்தை ஜபித்தால், நிச்சயமாக அவற்றிலிருந்து மீண்டு வருவார்கள்.
 
★பூஜயஸ்வைனமேகாக்ரோ தேவதேவம் ஜகத்பதிம் |
ஏதத் த்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயஷ்யஷி || 26 ||
 
விளக்கம்:
தேவர்களின் அதிபதியும் இந்த உலகின் அரசனுமான ஸூர்ய பகவானை முழுமையான அர்ப்பணிப்போடு வணங்க வேண்டும். இந்த ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகத்தை மும்முறை ஜபித்தால் வாழ்வின் எல்லா இடர்களிலும் வெற்றி கிட்டும்.
 
★அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி |
ஏவமுக்த்வா தடாகஸ்த்யோ ஜகாமச்ச யதாகதம் || 27 ||
 
விளக்கம்:
அகஸ்த்ய முனிவர், தான் கிளம்பும் முன், ராமபிரானைப் பார்த்து இவ்வாறு கூறினார்: ஓ ராமா, வலிமையான தோள்கள் உள்ளவனே, இந்த க்ஷணம் முதல், ராவணனை நிச்சயமாக வெற்றி கொள்வாய்.
 
★ஏதச்சுர்த்வா மஹாதேஜா நஷ்டஷொகோ பவத்தத |
தாரயாமாஸ சுப்ரீதோ ராகவ ப்ரயதத்மவான் || 28 ||
 
விளக்கம்:
அகஸ்த்ய முனிவரின் மொழிகளைக் கேட்ட ஸ்ரீராமன், தனது துன்பங்களையும் கவலைகளையும் துறந்தான். தனக்கு மிகப் பெரிய பலம் வந்து சேர்ந்ததைப் போல உணர்ந்தான்.
 
★ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து பரம் ஹர்ஷமவாப்தவான் |
த்ரிராசம்ய ஷுசிர்போத்வா தனுராத்யாய வீர்யவான் || 29 ||
 
விளக்கம்:
ஸ்ரீராமன் ஸூர்ய பகவானைப் பார்த்து இந்த ஸ்லோகத்தைச் சொன்னார். வீறு பெற்றார். மும்முறை நீரை அருந்தி தன்னை சுத்தி செய்து கொண்டு, வீரத்துடன் தனது வில்லை எடுத்தார்.
 
★ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்தாத்மா யுத்தாய ஸமுபாகமத் |
ஸர்வயத்னேன மஹதா வதே தஸ்ய த்ருதோ பவத் || 30 ||
 
விளக்கம்:
யுத்தக் களத்தில் ராவணனைக் கண்ணுற்ற ஸ்ரீராமன், அவனைக் கொல்லும் பொருட்டு முன்னேறினான்.
 
 
இறுதி ஸ்தோத்ரம்:-
 
★அத ரவிரவதன்னிரீக்ஷய ராமம் முதிதமனாஹ ப்ரமம் ப்ரஹ்ருஷ்யமான: |
நிஷிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா சுரகண மத்யகதோ வாச்ஸ்த்ரவேதி ||
 
விளக்கம்:
யுத்த களத்தில் ஸ்ரீராமனைப் பார்த்த ஸூர்ய பகவான், ராவணனின் முடிவு உறுதி எனத் தெரிந்து கொண்டான். ஸ்ரீராமனுக்கு, அதற்கான வழியையும் காண்பித்தான்.
 
இந்த ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகத்தை, உண்மையான பக்தியுடன் உதயமாகும் ஸூர்யனைப் பார்த்து மும்முறை சொல்லி வந்தால், வாழ்வில் எல்லா தடைகளும் நீங்கி எதிரிகளை வென்று சிறப்புடன் வாழலாம்.
 
குறிப்பு:-
இந்த பதிவிற்கு கீழ் திருமதி. M.S.சுப்புலக்ஷ்மி அவர்கள் பாடிய "ஆதித்ய ஹ்ருதயம்" ஸ்லோகம் mp3 வடிவில் இணைத்துள்ளேன். அதை கேட்டுக் கொண்டு இந்த ஸ்லோகத்தை பார்த்து படித்து பயன் பெறக் கோருகிறேன்.
 
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
 
நாளை......................
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
321/26-02-2022


இன்றிலிருந்து சிலநாட்கள் ஶ்ரீராமநாம மகிமைகளைப் பற்றியும் அதன்பிறகு விடுபட்ட ராமாயண கதைகளையும் பதிவிடலாம் என்றுள்ளேன். ஆனால் மிகுந்த ஆர்வம் கொண்டு சில நண்பர்கள் ராம நாம மகிமை கதைகளை ஶ்ரீராம காவியம் குழுவில் பதிவிட்டும்  மற்றும் தனிப்பட்ட முறையில் எனக்கும் அனுப்பியுள்ளார்கள். அவையும் நன்றாகவே உள்ளன.
ஆகவே அவற்றை அனைவரும் படிக்க வேண்டி , அவர்கள் பெயரிலேயே நான் அவற்றைப் பதிவிடுகிறேன். ஶ்ரீராம காவியம் புத்தகமாக வரும்போது இந்த கதைகள் அவர்கள் பெயரிலேயே வரும். ஏதேனும் கதைகள் அனுப்புவதாக இருந்தால் எனக்கு அனுப்புங்கள். குழுவில் வேண்டாம். நன்றி.


ஶ்ரீராமநாம கதைகள் - 1

அனுப்பியவர்.
திரு P.V.ராமமூர்த்தி அவர்கள்
M/s PVR கன்ஸ்ட்ரக்சன்ஸ்
மடிப்பாக்கம்
சென்னை.
94449 71772.

லட்சுமணன் ராவணனிடம் 
கேட்ட அறிவுரை...

★ராமன் செலுத்திய அம்பில் காயம்பட்டு குற்றுயிராய்க் கிடந்த ராவணன் உயிர் பிரியாமல் இருந்தது. அப்போது ஶ்ரீராமர் லட்சுமணனை பார்த்து லட்சுமணா! அரசன்  ராவணன் அனைத்துக் கலைகளையும் அறிந்தவன். ராஜதந்திரம் மிக்கவன். நமக்கு அவனுடைய அரசியல் அனுபவம், மிகவும் பயனுள்ளதாயிருக்கும். நீ அவனிடம் சென்று  நான் கேட்டதாகக் கூறி, அவனுடைய சிறந்த அறிவுரைகளைப் பெற்று வா! என்று கூறி அனுப்பினார். 

★லட்சுமணன் பவ்யமாக ராவணனின் காலடியில் நின்று இலங்கேஸ்வரா! வணக்கம்.  உன்னுடைய ஞானம் உன்னோடு அழிந்துவிடக்கூடாது. நீ எனக்கு உபதேசிப்பதன் மூலம், அதை இந்த உலகம் அறிந்து பயன் பெறும். ஆகவே   எனக்கு உன் ஆத்மஞானத்தை உபதேசிக்க வேண்டுகிறேன்  என்று மிகுந்த பணிவுடன் கேட்டபடி  நின்றான். 

★லட்சுமணனை சிரித்துக் கொண்டே வரவேற்ற ராவணன், ஶ்ரீராமர் தன்னிடத்தில் வைத்து இருக்கும் மதிப்பு அறிந்து மிக்க மகிழ்வுடன் தன் அறிவுரைகளை கூறத் தொடங்கினான். தம்பி 
லட்சுமணா! ஒரு காலத்தில் சர்வ வல்லமை படைத்தவனாக, நான் இருந்தேன். நவக்கிரகங்களும், அந்த எமனும், இந்திரனும் கூட எனக்குக் கீழ்ப்படிந்தனர். அப்போது நான் எண்ணியது என்ன தெரியுமா? 

★எனது நாட்டில் அனைவரும் சொர்க்கம் செல்ல வேண்டும். நரகம், யாருக்கும் இல்லையென உத்தரவு பிறப்பிக்க வேண்டும். ஒரு பறக்கும் ஏணியை, மக்கள்  அனைவரையும் ஏற்றிச் செல்ல அந்த எமனைக் கொண்டே உருவாக்கப்பட வேண்டும் என்பதே. ஆனால் இந்த நல்ல எண்ணத்தை செயல்படுத்தாமல் தள்ளிப் போட்டேன். அதன் விளைவாகவே இன்று நான் அவதிப்பட்டேன். 

★சூர்ப்பனகை வந்து சீதாதேவி அழகின் சிகரம். அவள் உனக்கு ஏற்றவள் என்று கூறியதும் உடனே அந்தச் செயலை தள்ளிப் போடாமல் புறப்பட்டேன். விளைவு அனைவருக்கும் நாசம். 
அதனால் நான் முக்கியமாகச் சொல்ல விரும்புவது.

1. நல்ல செயலை உடனடியாக செய்து முடி. அது பலன் தரும்.

2. தீய செயலைத் தள்ளிப் போடு. தள்ளிப்போடுவதால் அந்த தீய செயல் நடைபெறாமல் இருக்க வாய்ப்புண்டு.

3. உன் சாரதியிடமோ, வாயிற் காப்போனிடமோ அல்லது உன் சகோதரனிடமோ என்றும் பகை கொள்ளாதே. உடனிருந்தே கொல்வார்கள்.

4. தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும், எப்போதும் வெல்வோம் என்று ஒருபோதும் எண்னாதே.

5. உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு.

6. நான் அனுமனை, சிறியவன் என்று எடை போட்டது போல் எதிரியை எப்போதும் எளியவன் என்று எடைபோட்டுவிடாதே.

7. வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என்று நம்பாதே. அவை என்றுமே  நம் வழிகாட்டிகள்.

8. பொறுமையைவிட மேலான தவமுமில்லை.

9. திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.

10. இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.

11. மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை என்று சொல்லி முடித்தான் ராவணன்.

★லட்சுமணன் ராவணனை வணங்கி உபதேசங்களை பெற்றுக் கொண்டு மகிழ்வுடன் திரும்பினான்...

வணக்கத்துடன்
நாக சுபராஜ்ராவ்
9944110869…

நாளை..................
#ஸ்ரீராமர்பட்டாபிஷேகம் ஏற்ற பின் ராமரை பார்த்து ஆசி கூற அகஸ்திய மாமுனிவர் அயோத்திக்கு வருகை புரிந்தார். அகஸ்தியர் சபையில் அமர்ந்ததும், ராவண வதம் பற்றி விவாதிக்கலாயினர் அனைவரும்.

அப்பொழுது அகஸ்தியர் சபையினரை பார்த்து ராவண கும்பகர்ண வதத்தை விட லக்ஷ்மணன் ராவணன் மகன் மேகநாதனை வதைத்ததே மாபெரும் வீர செயல் என்றார் அகஸ்தியர். அதை கேட்டு அனைவரும் ஆச்சரியமாக அகஸ்தியரை பார்க்க ஸ்ரீராமர் ஏதும் அறியாதவர் போல் ஸ்வாமி எதை வைத்து அப்படி கூறினீர்கள். மேகநாதன் அவ்வளவு சக்தியுள்ளவனா என்று கேட்க,

அகஸ்தியர் ராமா எல்லாம் அறிந்தவன் நீ  ஆனால் ஏதும் அறியாதவன் போல் லக்ஷ்மணனின் பெருமையை என் வாயாலே கூறவேண்டும் என்றுதானே இப்படி அறியாதவன் போல் கேட்கிறாய்,  சரி நானே கூறுகிறேன் சபையோர்களே  ராவணன் மகன் மேகநாதன் தேவலோக அரசன் இந்திரனுடன் போர்புரிந்து அவனை வென்று சிறையில் அடைத்து வைத்தது யாவரும் அறிந்ததே. 

நான் முக கடவுளான பிரம்மா இந்திரனை விடுவிக்க மேகநாதனிடம் கோரிக்கை வைக்க மேகநாதன் இந்திரனை விடுவிக்க வேண்டுமென்றால் தாங்கள் எனக்கு மூன்று அறிய வரங்கள் தர வேண்டும் என நிபந்தனை வைத்தான்.

அவை 

1.பதினான்கு ஆண்டுகள் உணவு உண்ணாதவனும், 
2.அதே பதினான்கு ஆண்டுகள் ஒரு நொடி கூட உறங்காது இருப்பவனும்,  3.அதே பதினான்கு ஆண்டுகள் எந்த ஒரு பெண் முகத்தையும் ஏறெடுத்து பார்க்காது இருப்பவன் எவனோ அவனால் மட்டுமே எனக்கு மரணம் நிகழவேண்டும் என்று பிரம்மாவிடம் மூன்று அறியவரங்களை பெற்று இந்திரனை விடுவித்தான். 

அதனால் மேகநாதனை யாவரும் இந்திரஜித் என்று அழைத்தனர். இப்படி பட்ட மேகநாதனை வதம் செய்த பெருமை லக்ஷ்மணனையே சேரும் என்று கூறி முடிக்க,

ராமர் ஸ்வாமி லக்ஷ்மணன் என்னுடன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் இருந்த போது அவன் எந்த ஒரு மாதையும்(பெண்ணையும்) ஏறெடுத்து பார்த்ததில்லை என்பதை நான் அறிவேன். ஆனால் உணவும் உறக்கமும் இல்லாமல் எப்படி இருந்திருப்பான் என்று கேள்வி எழுப்ப அகஸ்தியர் அனைத்தும் அறிந்து வைத்து கொண்டே கேட்கிறாயே சரி சற்று பொறு உன் கேள்விக்கான விடையை லக்ஷ்மணனிடமே கேட்டு தெரிந்து கொள்வோம் என்று கூறி லக்ஷ்மணனை அழைத்து வர ஏற்பாடு செய்தார்.

அகஸ்தியர் சபைக்கு வந்த லக்ஷ்மணன் அண்ணன் ராமரையும் குரு அகஸ்தியரையும் சபையோரையும் வணங்கிய பின் ராமர் தன் சந்தேகத்தை கேட்டார் லக்ஷ்மணா என்னோடு வனவாசம் இருந்தபோது எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காமையும் உணவு உண்ணாமையும் உறக்கம் கொள்ளாமையும் இருந்தாய் என அகஸ்தியர் கூறுகிறாரே எப்படி என சபையோர் முன் விளக்கமுடியுமா.?

லக்ஷ்மணர் அண்ணா உங்களுக்கு நினைவு இருக்கலாம் ரிஷிமுக பர்வதத்தில் மாதா சீதையை தேடி அலைந்த போது மாதாவால் வீசப்பட்ட அணிகலன்களை சுக்ரீவன் நம்மிடம் காட்டும்போது அன்னையின் பாத அணிகலன்களை தவிர வேறு எதுவும் என்னால் அடையாளம் காண முடியவில்லை காரணம் அன்னையின் பாதத்தை மட்டுமே பார்த்து நான் தினமும் வணங்குவேன். அதனால் பாத அணிகலன்களை மட்டுமே என்னால் அடையாளம் காணமுடிந்தது. 

அடுத்து வனவாசத்தின் போது நீங்களும் மாதாவும் இரவில் உறங்கும்போது நான் காவல் புரியும் நேரம் நித்ராதேவி என்னை ஆட்கொள்ள வரும் நேரம் நான் நித்ராதேவியிடம் ஒரு வரம் கேட்டேன். அம்மா என் அண்ணன் ராமரையும் என் அண்ணியான மாதா சீதா தேவியையும் பாதுகாக்கவே நானும் அண்ணனோடு வனவாசம் வந்துள்ளேன். அதனால் எங்கள் வனவாசம் முடியும் வரை என்னை நீ ஆட்கொள்ளவே கூடாது.
இந்த வனவாசம் முடியும் வரை எனக்கு உறக்கமே வரக்கூடாது என வேண்டிக்கொண்டேன் நித்ராதேவியும் என் வேண்டுதலுக்கு செவி சாய்த்து என்னை பதினான்கு ஆண்டுகள் ஆட்கொள்ள மாட்டேன் என வரமளித்தாள். அதனால் எனக்கு உறக்கம் என்பதே இல்லாமல் இருந்தது வனவாசத்தின் போது.

மூன்றாவதுநம்குருநாதராகிய விஸ்வாமித்திரர் நம் உடல் சோர்வு அடையாமல் இருக்கவும் பசியே எடுக்காமல் இருக்கவும் பலா அதிபலா என்னும் மிகவும் சக்தி வாய்ந்த காயத்திரி மந்திரத்தை நம் இருவருக்கும் அவரது யாகம் வெற்றி பெற காவல் புரிந்ததற்காக உபதேசித்தார். அந்த பலா அதிபலா மந்திரத்தை தினமும் உச்சரித்தே எனக்கு பசி ஏற்படாமலும் உடல் சோர்வு அடையாமலும் பார்த்துக்கொண்டேன் என்று கூற சபையினர் எல்லோருமே லக்ஷ்மணனை ஆச்சிரியமாக பார்க்க ஆஞ்சநேயர் அயர்ந்தே போனார்.  

லக்ஷ்மணின் ராம பக்தியை நினைத்து ராமர் அரியணையை விட்டு இறங்கி வந்து லக்ஷ்மணனை கண்ணீருடன் ஆரத்தழுவி கொண்டார்.

ஜெகம் புகழும் புண்ணிய கதை 
ராமனின் கதை மட்டும் அல்ல, லக்ஷ்மணின் கதையும் தான் 

ஸ்ரீ #ராமஜெயம் சொல்வது எவ்வளவு புண்ணியமோ அப்படியே,
ஸ்ரீ #லக்ஷ்மண ஜெயம் சொல்வதும் புண்ணியமே...!

ஶ்ரீராம காவியம்
~~~~~
322/27-02-2022

ஶ்ரீராமநாம கதைகள்-2

அனுப்பியவர்:
திரு.T.P.நடராஜன் அவர்கள்
பெங்களூரு.
97411 91188

"ராம ராம" ஓடமும் பாடமும்...

★சிலவிஷயங்கள் பாகவதத்தில் தேடும்போது கிடைக்காது. ஆனால் பாகவதம் படிக்கும் போது  கண்ணில் படும் ஒருசில ராமாயண விஷயங்களை  அறியும்போது அட! இதை எப்படி ராமாயணத்தில் படிக்கவில்லை? என்று ஆச்சர்யப்பட வைக்கும். அதற்கு எல்லாம் காரணம் காரியம் அவசியமில்லை. அதில் உள்ளடங்கிய நீதி அல்லவோ நமக்கு முக்கியம். 

★ஶ்ரீராமனை ஊர், உலகமே அறியும் எனும்படி  அவனது மகிமை, பெருமைகள் எங்கும் பரவி இருந்தது.  ஶ்ரீராமன் காட்டிற்கு போக, தந்தை தசரத மகராஜா  உத்தரவு இட்டார். அதை ஏற்று வனம் செல்லும் போது சீதையும், லக்ஷ்மணனும் அவன் கூட செல்கிறார்கள்.  கங்கை நதியை கடந்து அக்கரை செல்லவேண்டும்.    அப்போது தான் முதன் முதலாக குகன் ஶ்ரீராமனை அங்கு பார்க்கிறான்.  ஶ்ரீராமனைப் பற்றிய  சகல விஷயங்களும் அவனுக்குத் தெரியும்.  நாட்டை இழந்து தன் முன் நிற்கும் மரவுரி தரித்த ஶ்ரீராமனை காணமுடியாமல் கண்களை கண்ணீர்த்திரை மறைக்கிறது.  

★''என்னால் உங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும் ராமா?'' என பக்தியோடு கேட்கிறான்.
''கங்கையை கடந்து அக்கரை செல்ல வேண்டும் குஹா!.'' என ஶ்ரீராமன் பதிலுரைத்தான்.
அப்போது ஒரு படகு  யாரையோ இறக்கி விட்டு மீண்டும்  அக்கரை புறப்பட தயாராகியது.  கேவத் என்பவன் அதற்கு ஓடக்காரன். குகன் அவனை அணுகி ''கேவத்!  உன் படகை இங்கே கொண்டு
வா! '' என கூறவும் படகு நெருங்கி வருகிறது. ''கேவத், இதோ நிற்கிறார்களே  யார் தெரியுமா?  அயோத்தியின் மஹாராஜா ராமர், அது சீதாதேவி ராணி அவர் மனைவி, அது லக்ஷ்மணன் அவருடைய வீர சகோதரன்.இவர்களை அக்கரை  கொண்டு சேர். நானும் உடன் வருகிறேன்''

★கேவத், ராமலக்ஷ்மணர்களை சீதாவை வணங்குகிறான். அவன் தினமும் காலையில் எழுந்திருக்கும்போதும் இரவில் பாட்டுக்கு முன்பும் ராம நாமம் சொல்பவன். ''ஐயா குகனே!,  நான் இவர்களை கங்கையின் மறுகரைக்கு கொண்டுபோய் சேர்க்கிறேன்.  ஆனால்  முதலில் இந்த ஶ்ரீராமரின் கால்களை நன்றாக கழுவிவிடவேண்டுமே . தூசு தும்பு இருக்கக்கூடாது. ''
'ஓ   அவருக்கு பாத பூஜையா, அதை அப்புறம் மறுகரையில் இறக்கி விடும்போது வைத்துக் கொள் ' என்றான் குகன்.
''அப்படி இல்லை ஐயா!,  என் படகில் ஏறுவதற்கு முன்னால் தான் அதை செய்யவேண்டும்.''

★குகனின் கண்கள் கோபத்தால் சிவந்தது. ஏன் இந்த பிடிவாதம் கேவத்? எதற்காக இப்படிச் செய்கிறாய் எனறு கூறி முகம் சுளித்தான் குகன். கேவத் இதை கவனித்து விட்டு  நேராக  
ஶ்ரீராமனை வணங்கி, பின்னர் 
''மஹாராஜா,  நான் ஒரு ஏழை ஓடக்காரன். இந்த பழைய சிறிய ஓடம் தான் எனது வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கிறது. இதில் கிடைக்கும் சிறிய வருமானம் என் மனைவியையும் மற்றும் என்னையும் வாழ வைக்கிறது. என்னிடம் வேறு படகு  ஏதும் கிடையாது,இன்னொன்று வாங்க வசதியும் இல்லை ''

★இதைக் கேட்ட ஶ்ரீராமர் ''எதற்கு இப்படி பேசுகிறாயப்பா '' என்று அன்புடன் கேட்டார்.  ''எனக்கு உங்களை பற்றி தெரியுமய்யா.  உங்கள் காலில் உள்ள தூசி பட்டால் போதும்,  கல்லும் கூட பெண்ணாகும். உங்கள் கால் தூசி  பட்டு என் படகும் ஒரு பெண்ணானால், நான் அவளை எப்படி  காப்பாற்றுவேன், என் படகு காணாமல் போய்விடுமே!''  அந்த ஆபத்து என் படகுக்கு வரக்கூடாது என்பதற்காகவே  நீங்கள் என் படகில் கால் வைக்கும் முன்பே,   உங்கள்  கால்களை தூசி, இல்லாமல் முதலில் கழுவ ஆசைப்பட்டேன். ஆகவே என்னையும்  என்னுடைய இந்த படகையும் நீங்கள் தான் காப்பாற்ற  வேண்டும் '' என்று வேண்டினான் கேவத்.

★ராமர், சீதை லக்ஷ்மணன் குகன் அனைவரும் கேவத்தின்   எளிமை,பக்தி  சமயோசிதம் ஆகியவற்றை ரசித்து மனமார மகிழ்ந்தார்கள். கேவத் அவன் மனைவி இருவரும் கங்கை ஜலத்தால், ஸ்ரீ ராமரின் பாதங்களை கழுவி வணங்கி அந்த ஜலத்தை ப்ரோக்ஷித்துக் கொண்டார்கள். கேவத் தனது வஸ்த்ரத்தால் ஸ்ரீ ராமர் பாதங்களை துளியும் தூசி இல்லாமல் துடைக்கிறான். அவர்களை கங்கை நதியின் மறுகரையில் கொண்டு சேர்த்தான்.

★அவர்கள்  மறுகரை சேர்ந்ததும்,  ஶ்ரீராமரின்  பாதங்களை தனது உள்ளங்கையில் முதலில்  வைத்து விட்டு, பின்  இறங்க வேண்டும் என்று கேவத் வேண்ட ஶ்ரீராமரும் அவ்வாறே செய்தார். இவ்வாறு  ஸ்ரீ ராம பாத சேவை முழுதும் செய்தான் கேவத். அதன் பின்னர் ஒவ்வொருவராக கையைப் பிடித்து நிதானமாக  
எல்லோரையும் படகில் இருந்து கரை இறக்கினான் கேவத். 
சீதா தேவி மன நிறைவோடு தனது மோதிரம் ஒன்றை  கழற்றி ராமனிடம் தந்து  அந்த கேவத்திற்கு பரிசாக அளிக்க கூறினாள்.

★அம்மா!  ஸ்ரீ ராமனுக்கும் உங்களுக்கும் சேவை செய்ய, பரிசு வாங்கினால் என் புண்யம் குறைந்து விடும் என்று கூறி பரிசை ஏற்க மறுத்தான்.
அப்படியா கேவத்!, நீ இதை பரிசாக ஏற்கவேண்டாம். அதை   எங்களை உன்னுடைய  படகில் ஏற்றிக்கொண்டு  கங்கையை கடக்க செய்ததற்கு கூலியாக ஏற்றுக்கொள்  என சிரித்துக் கொண்டே  அந்த மோதிரத்தை அவனிடம் நீட்டினார் ஸ்ரீ ராமன்.
ஸ்ரீ ராமா!, ஒருவேளை நான் பரிசாகவாவது  மோதிரத்தை ஏற்றுக்  கொண்டிருப்பேன். ஆனால் நிச்சயம் கூலி வாங்க மாட்டேன் என்றான் ஓடக்காரன் கேவத்.

★ கேவத்!  நீ பேசுவது மிகவும்  விநோதமாகவே இருக்கிறதே.  ஏன் என்னிடம் கூலி வாங்க மாட்டாய்? எனக் கேட்ட ராமருக்கு 
தொழில் விசுவாசம் ஐயா! என கேவத் பதிலுரைத்தான்.
அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை. கேவத்!  கொஞ்சம் புரியும்படியாக சொல்! என்று சற்று உரத்த குரலில் குகன் கூறினான். ஐயா!  ஒரு நாவிதன் மற்றொரு நாவிதனுக்கு சேவை செய்யும்போது கூலி சிறிதும் வாங்க மாட்டான். அதுபோலவே துணி வெளுப்பவனும் மற்ற சக  தொழிலாளிகளிடம கூலிகேட்க மாட்டான் என்றான்.

★எங்களுக்கு புரியவில்லை. விளக்கமாக சொல். நீ துணி வெளுப்பவனோ, நாவிதநோ இல்லை. நீ படகோட்டிதானே  என்றார் ராமர்.  உங்களுக்கா புரியாது?.. என்னை  நீங்கள் சோதிக்கிறீர்கள். இங்கு  நாம் இருவருமே ஓடக்காரர்கள், படகோட்டிகள்தான்.  நான் ஒரு கரையிலிருந்து இந்த நீரை மட்டும் கடக்க உதவும் சாதாரண ஓடக்காரன்.  நீங்களோ எல்லோரையும்  ஜனன மரண துன்பங்களிலிருந்தும், இந்த  ஸம்ஸார  கடலிலிருந்தும்  கரை சேர்க்கும் தாரக ராமன்.  நாம் இருவரும் படகோட்டிகள் தானே. நான் சின்ன படகோட்டி. நீங்கள் பெரிய பெரிய படகோட்டி. ஆகவே தொழில் ஒன்றுதானே! ஆதலால் பகவானே! என்னையும் ஒருநாள் இந்த சம்சார சாகரத்தை கடக்க உதவி செய்து  உங்களின் இந்த  கணக்கை நேர் செய்து கொள்ள கேட்டுக் கொள்கிறேன் என்று  ஶ்ரீராமரின்  காலில் விழுந்து வணங்கினான்  கேவத்.

★ராமர் கண்களின் ஓரத்தில் நீர் கசிகிறது. ஆனந்த பாஷ்பம். என்ன ஒரு அருமையான பக்தன் இவன்.  இந்த சமயத்தில், நம் பாவங்கள் தீர  ஶ்ரீஆதி சங்கரர் அருளிய பஜகோவிந்தம் ஸ்லோகம் காதில் விழுகிறதா? 

"புனரபி ஜனனம் புனரபி மரணம்

புனரபி ஜனனீ ஜடரே சயனம்

இஹ ஸம்ஸாரே பஹு துஸ்தாரே

க்ருபயா பாரே பாஹி முராரே..."

விளக்கம் :
மறுபடியும் மறுபடியும் பிறக்க வேண்டும் , மறுபடியும் மறுபடியும் இறக்க வேண்டும் , மறுபடியும் தாயின் வயிற்றில் தங்கி பிறக்க வேண்டும்.

நண்பர்களே.....!!!

பகவானிடம் எனக்கு சொத்து கொடு, சுகம் கொடு, வீடு,கார் கொடு, பங்களா  கொடு என்று  கேட்காதீர்கள். மஹா பெரிய தனவந்தனிடம், வள்ளலிடம் ஒரு ரூபாய் காசா எதிர்பார்ப்பது?
நமது துன்பங்களை போக்கி மாய உலகத்தை நீங்கி அவன் திருவடி தர காத்திருக்கிறான்.  
கேவத் இதை நமக்கு  சொல்லிக்  கொடுக்கிறான். ஒரு படிக்காத  ஓடக்காரனிடம் பாடம் படிப்போம்.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869

நாளை....................

ஶ்ரீராம காவியம்
~~~~~
324/01-03-2022

ஶ்ரீராமநாம கதைகள்-4

அனுப்பியவர்:
திருமதி கற்பகம்.
9789866862.

தியாகராஜரின் சீடரின் பெருமை...

★அவர் பெயர் ராமராயன். அவர்
தியாகராஜரின் சீடர். தினமும் தியாகராஜர் வீட்டிற்கு அவர்  அதிகாலை  காலையிலேயே வந்துவிடுவார். அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்வார். அவரது மனைவி கமலாவிற்கும் உதவி செய்வார். 
தியாகராஜர் ராமரின் முன் அமர்ந்தால் பூஜைக்கு வேண்டியவற்றை எடுத்துக் கொடுப்பார். பாடினால் வாங்கிப் பாடுவார். அவரது அனைத்து கீர்த்தனைகளையும்  எழுதி வைத்துக் கொள்வார்.

★காலையில் உஞ்சவ்ருத்திக்குக் கிளம்பும் தியாகராஜ  சுவாமிகள்  நிதானமாகப் பாடிக்கொண்டு உஞ்சவ்ருத்தி எடுத்துக்கொண்டு சொம்பு நிறைந்ததும் வீட்டிற்கு திரும்புவார். உள்ளே வந்து அரிசியைக் கொடுத்தானாரால், அதன் பின் வீட்டில் என்ன நடந்தாலும் காதில் சிறிதும் வாங்கமாட்டார். ஒரு சமயம் ராமராயன் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு பயந்தபடி வந்தார். 

★தியாகராஜருக்கு சீடனின் நடவடிக்கை வித்தியாசமாகப் பட்டது.

என்னாச்சு ராமா..?

ஒன்னுமில்ல மாமா..

சொல்லுப்பா..? ஏன் வாட்டமா இருக்க? ஏதானம் கஷ்டமா? ஆத்தில் ஏதவது ப்ரச்சினையா?

எங்காத்தில் ஒன்னும் ப்ரச்சினை இல்ல மாமா..

பின்ன யாராத்தில் ப்ரச்சினை?

சொன்னா என்னை திட்டக்கூடாது.

திட்டறதா ? நானா? உன்னையா? நீ எவ்ளோ சமத்து. உன்னை ஏன் நான் திட்டணும்?

சொன்னா கோவப்படுவேள் மாமா.

என்னாச்சுன்னு சொல்லுப்பா..?

★ராமாயணம் பாராயணம் பண்ண ஆரம்பிச்சேன்.

பேஷாப் படியேன். அது ரொம்ப நல்லது தானே.. அதுக்கேன் திட்டப்போறேன்?

ராவணன் சீதையை தூக்கிண்டு போனதும் மேலே படிக்காம  நிறுத்தி வெச்சிருக்கேன்.

அச்சோ.. ஏன்டா..?

ராமன் நன்னா காட்டிலேயே அலையட்டும் அப்படின்னுதான். 
ஜடாயு வந்து சொன்னாதானே சீதையை ராவணன் தூக்கிண்டு போனது ராமனுக்குத் தெரியும். 
அந்தக் கட்டம் படிக்கல. ராமன் நன்னா தவிக்கட்டும்.

தியாகராஜருக்கு லேசாக கோபம் வந்தது. இருந்தாலும் சீடன் ஏன் அப்படிச் செய்தான் என்று புரியவில்லை. அதனால் கேட்டார்.

ஏன் அப்படி பண்ணின?

★மாமி நாலு நாளா வயத்து வலில அவஸ்தைப் படறா. யார்கிட்டயும் சொல்றதில்ல. நீங்களோ எந்த குடும்ப சிந்தனையும் இல்லாம ராமரைப் பாத்துண்டிருக்கேள். ராமராவது மாமியைப் பாத்துக்கணுமா இல்லியா? மாமி சொல்லாட்டா என்ன?  வலியைப் பொறுத்துக் கொண்டு  அத்தனை வேலையும் பண்றா. ப்ரசாதம் பண்றா.  ராமரை நாலுநாள் காட்டில் அலைய விட்டாத் தான் மாமி படற அவஸ்தையை புரிஞ்சுப்பார்னு, ஜடாயு வர கட்டத்துக்கு முன்னாடி பாராயணத்தை நிறித்திட்டேன். 
நாலுநாளா ராமர் சீதைக்கு என்னாச்சுன்னு தெரியாம தவிச்சிண்டிருக்கார். மாமிக்கு உடம்பு சரியானாதான் மேல படிப்பேன்.  தப்பார்ந்தா மன்னிச்சிடுங்கோ மாமா. என்றார் ராமராயன்.

★தியாகராஜர் கண்ணிலிருந்து ஆறாய்க் கண்ணீர் பெருகியது. 
பாராயணம்தானே, என்னிக்கோ நடந்த கதைதானேன்னு இல்லாம உனக்கு இவ்ளோ நம்பிக்கையா என்று மறுகினார்.
தியாகராஜர் அன்று பூஜை செய்து தீர்த்தம் கொடுத்ததும் கமலாம்பாளின் நோவு நீங்கியது.

★கதைதானே என்றில்லாமல் பாராயணம் துவங்கியதுமே கதையின் ஒரு பாத்திரமாக வாழும் மஹான்கள் நம் தேசத்தில் ஏராளம். பக்தி எனறால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த ராமராயன் ஒரு சிறந்த உதாரணம். இதைத்தான் முழுமையான அர்ப்பணம் என்று சொல்வார்கள்.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869

நாளை................

ஶ்ரீராம காவியம்
~~~~~
325/02-03-2022

ஶ்ரீராமநாம கதைகள்-5

அனுப்பியவர்:
திரு.PN ஶ்ரீனிவாசன்
சென்னை.
94454 12918.

நாம மகிமை...

★அர்ஜூனனுக்கு ஒரு முறை 
ஒரு சந்தேகம் வந்தது. ராமர் உண்மையிலேயே சிறந்த வில்லாளி எனில், ஏன் அவர் தன் வில்லைக் கொண்டே சேதுவுக்கு பாலம் கட்டவில்லை?.அவர்,
வானரங்களை வைத்து ஏன் பாலம் கட்டினார்?” எப்படியாவது இந்த கேள்விக்கு ஒரு விடை கண்டுபிடிக்கவேண்டும் என்று விரும்பினான்.   பாசுபதாஸ்திரம் வேண்டி தவம் செய்ய அவன் சென்று கொண்டிருந்தபோது, ஒரு நதிதீரத்தில் அனுமன் தனது சுய உருவை மறைத்து, ஒரு சாதாரண வானரம் போல உருக்கொண்டு அமர்ந்து ராமநாம ஜபம் செய்து கொண்டு இருப்பதை பார்த்தான்.

★அவரிடம் சென்று, “ஏய்…!வானரமே…! உன் ராமனுக்கு உண்மையில் திறன் இருந்து இருந்தால், வில்லினாலேயே அம்புகளைக் கொண்டு  பாலம் கட்டியிருக்கலாமே…? ஏன் வானரங்களை கொண்டு பாலம் கட்டினார்?”என்றான் மிகுந்த எகத்தாளமாக.தியானம் கலைந்த அனுமன், தனது  எதிரில் நிற்பது அர்ஜூனன் என்பதைஉணர்ந்து கொண்டார். அவன் கர்வத்தை ஒடுக்க திருவுள்ளம் கொண்டார். 
'சரப்பாலம், என் ஒருவனது பாரத்தையே தாங்காது எனும் போது, எப்படி ஒட்டுமொத்த வானரங்களின் பாரத்தையும் தாங்கும்?'

★ஏன் முடியாது.?  நீ நின்றால் தாங்கும்படி, இந்த நதியின் குறுக்கே நான் ஒரு பாலம் கட்டுகிறேன். நீ மட்டுமல்ல… எத்தனை வானரங்கள் அதில் ஏறினாலும் அந்த பாலம் மிக்க உறுதியாக நிற்கும் என்றான் அர்ஜூனன்.தனது காண்டீபதின் சக்தி மேல் அபார நம்பிக்கை கொண்டிருந்த அர்ஜூனன், பந்தயத்தில் நான் தோற்றால், வேள்வித் தீ வளர்த்து அதில் குதித்து உயிர் துறப்பேன் எனக் கூறினான். நான் தோற்றால், என் ஆயுளுக்கும் உன் அடிமையாக  தேர்க்கொடியில் இடம்பெற்று உதவுவேன் என பதிலுரைத்தான்  அனுமன்.

★அர்ஜூனன் சரப் பாலத்தை கட்டத் துவங்கினான். அனுமன் ஒரு ஓரத்தில் அமர்ந்து ராமநாம
ஜெபம் செய்யத் தொடங்கினான்.
அர்ஜூனன் பாலத்தை கட்டி முடித்ததும், அனுமன் அதன் மீது ஏற தனது காலை எடுத்து வைத்தது தான் தாமதம், பாலம் தகர்ந்து சுக்குநூறானது. அனுமன், ஆனந்தக் கூத்தாட அர்ஜூனன் மிகவும்  வெட்கித் தலைகுனிந்தான். பார்த்தாயா! என் ராமனின் சக்தியை? என்று அனுமன் கடகடவென சிரித்தபடி.

★தனது வில் திறமை இப்படி வீனாகிப் போனதே என்ற ஒரு வருத்தம் அவனுக்கு. போரில் வெற்றி பெற சிவபெருமானிடம்  பாசுபாதாஸ்திரத்தை பெற்றுச் செல்வதற்தாக  வந்த நான், தேவையின்றி, ஆணவத்தால் ஒரு வானரத்திடம் கேவலமாகத் தோற்றுவிட்டேனே!. நான் உயிர் துறந்தால், என் சகோதரர்களை யார் காப்பாற்றுவார்கள்?… கிருஷ்ணா! என்னை மன்னிக்க வேண்டும் என்று கூறியவாறு சொன்னது போலவே வேள்வித் தீ வளர்த்து அதில் குதித்து உயிர் துறக்க எத்தனித்தான். 

★அனுமன் தடுத்தபோதும், தனது பந்தயத்திலிருந்து பின்வாங்க அவன் சிறிதும் தயாராக இல்லை. அர்ஜூனன் குதிக்க எத்தனித்தபோது, “என்ன நடக்கிறது இங்கே… என்ன பிரச்சனை?” என்று ஒரு குரல் கேட்டது. குரல் கேட்ட திசையில், ஒரு அந்தணர் தென்பட்டார்.
இருவரும் அவரை வணங்கி, நடந்ததை கூறினார். பந்தயம் என்றால் சாட்சி என்ற ஒன்று வேண்டும். சாட்சியின்றி நீங்கள் பந்தயத்தில் ஈடுபட்டதால் அது செல்லாது. மற்றொருமுறை நீ பாலம் கட்டு… மற்றொருமுறை இந்த வானரம் அதை உடைத்து நொறுக்கட்டும். யார் பலசாலி என்று பிறகு முடிவு செய்து கொள்ளலாம் என்று  அந்தணர் கூற இருவரும் அதற்கு ஒப்புக் கொண்டார்கள்.

★இரண்டாவது முறை பாலம் கட்டுவதால் மட்டும், இங்கு  என்ன மாற்றம் நிகழ்ந்து விடப் போகிறது என்று கருதிய அர்ஜூனன், ஶ்ரீகிருஷ்ணரை நினைத்துக்கொண்டு விரைவாக “கிருஷ்ண, கிருஷ்ண” என்று சொல்லியபடி பாலம் கட்டினான்.
தன் பலம் தனக்கே தெரியாது அனுமனுக்கு. இருப்பினும் முதல்முறை அந்த பாலத்தை உடைத்திருந்தபடியால், கர்வம் தலைக்கு ஏறியிருந்தது. ஆகவே இம்முறை ராம நாம ஜெபம் செய்யவில்லை.

★அர்ஜூனன் அம்பினால்  பாலம் கட்டியவுடன், அனுமன்  அதில் ஏறுகிறார், நிற்கிறார், ஓடுகிறார், ஆடுகிறார்   பாலம் ஒன்றும் ஆகவில்லை.  இப்போது
பார்த்தாயா எங்கள் கண்ணனின் சக்தியை ? நீயே சொல், யார் இப்போது பெரியவர்? எங்கள் கண்ணன் தானே?”அர்ஜூனன் கேட்ட கேள்வியால் அனுமனுக்கு குழப்பம் ஏற்பட்டது. அங்கே சாட்சியாக நின்றுகொண்டிருந்த அந்தணரை நோக்கி வந்து ஐயா! யார் நீங்கள்?” என்று கேட்டார்.
அந்தணரின் உருவம் மறைந்து அங்கு சங்கு சக்ரதாரியாக பரந்தாமன் காட்சியளித்தார். இருவரும் அவர் கால்களில் வீழ்ந்து ஆசி பெற்றனர்.

★நீங்கள் இருவருமே இங்கு தோற்கவில்லை. ஜெயித்தது கடவுள் பக்தியும், மற்றும்  நாம ஸ்மரணையும் தான். அர்ஜூனன் முதல் தடவை பாலம் கட்டும் போது, தன்னால் தான் எல்லாம் நடக்கிறது என்கிற அகந்தையில், என்னை மறந்து பாலத்தை கட்டி முடித்தான். அனுமன் தனக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்று ராம நாமத்தை ஜபித்தான். ராம நாமம் தோற்காது. எனவே முதல் முறை அனுமன் இங்கே வென்றான்.

★இரண்டாம் முறை, அகந்தை ஒழிந்த அர்ஜூனன், என்னை நினைத்தபடி பாலம் கட்டினான். அனுமன், தன் பலத்தாலே தான் வென்றோம் என்று கருதி ராமநாமத்தை மறந்தான். எனவே இரண்டாம் முறை அர்ஜூனன் வென்றான். இருமுறையும் வென்றது நாம ஸ்மரணையே தவிர நீங்கள் அல்ல!! என்று பகவான் கூறினார். மேலும்
கர்வம் தோன்றும்போது கடமையும் பொறுப்புக்களும் மறந்துவிடுகின்றன. எனவே தான் சும்மா இருந்த அனுமனை சீண்டினான் அர்ஜூனன். 

★உங்கள் இருவரின் பக்தியும் அளவு கடந்தது, சந்தேகமே இல்லை. ஆனால், இறைவன் ஒருவனே என்பதை உணர மறந்துவிட்டீர்கள். அதை உணர்த்தவே இந்த சிறிய நாடகம். மேலும் அர்ஜூனா!, இந்த வானரன் வேறு யாருமல்ல, சிரஞ்சீவி அனுமனே!. உடனே அனுமன் தனது சுய உருவைக் காட்ட,  அர்ஜூனன், அவரின் கால்களில் வீழ்ந்து நமஸ்கரித்து மன்னிக்க வேண்டினான்.
அனுமனை நோக்கி திரும்பிய பரந்தாமன், “ஆஞ்சநேயா!, பாரதப்போரில் அர்ஜூனனுக்கு உன் உதவி தேவை. நீ போர் முடியும்வரை, அவன் தேர் கொடியில் இருந்து அவனைக் காக்கவேண்டும். அதற்காகவே இந்த திருவிளையாடலை நிகழ்த்தினேன்.

★நீ இருக்கும்வரை அந்த இடத்தில், எந்த மந்திர, தந்திர உபாயங்களும் சிறிதும்  வேலை செய்யாது!. அப்படியே ஆகட்டும் பிரபோ!  என்று அவரிடம் மறுபடியும் ஆசிபெற்றான் அனுமன். இன்றும் பாரதப் போர் சம்பந்தப்பட்ட படங்களில் அர்ஜூனனின் தேரில் அனுமன் உருவம் இருப்பதை பார்க்கலாம்.

★அர்ஜூனன் தேரின் கொடியில் அனுமன் இடம் பெற்ற கதை இது தான்.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869

நாளை...................

ஶ்ரீராம காவியம்
~~~~~
326/03-03-2022

ஶ்ரீராமநாம கதைகள்-6

அனுமனை
விழுங்கிய முதலை...

★ராமாயண யுத்தத்தின் போது ராவணன் மகன் இந்திரஜித் மற்றும் லட்சுமணனுக்கு இடையே நடைபெற்ற போரில், இந்திரஜித் ஏவிய அஸ்திரத்தால் லட்சுமணன் மூர்ச்சையாகி மயங்கி விழுந்தார். இலங்கை அரச மருத்துவர் சுசேனர் லட்சுமணனை குணப்படுத்த இமயமலையில் வளரும் அபூர்வமான, சஞ்சீவினி எனும் மூலிகை மருந்துச் செடிகளை பறித்து வர அறிவுறுத்தினார். சஞ்சீவினி மூலிகை மருந்தினை இமயமலையில் இருந்து கொண்டு வருவதற்காக பெரும் பலவானாகிய அனுமன் விரைந்து சென்றார். 

★இதை அறிந்த ராவணன், அனுமனுக்கு பல்வேறு விதமான தடைகளை ஏற்படுத்த, அவற்றை எல்லாம் கடந்து அனுமன் அந்த சஞ்சீவினி மலையைச் சென்று  அடைந்தார். அங்கு அனுமனைக் கொல்ல காலநேமி என்னும் அரக்கனை இந்திரஜித் அனுப்பி வைத்தான். காலநேமி, அசுரன் மாரீசனின் மகன் ஆவார். அனுமன் இமயமலையின் சஞ்சீவினி மூலிகை உள்ள பகுதியை அடைந்து, சஞ்சீவினிச் செடிகளை அடையாளம் காண  முற்படுகையில், முனிவர் வேடம் போட்ட காலநேமி அனுமன் முன்னிலையில் சென்றார். 

★முனிவரைக் கண்ட அனுமன் அவரை வணங்கினார். அப்போது அருகில் இருக்கும் குளத்தை காண்பித்த முனிவர் வேடத்தில் இருந்த காலநேமி, இந்தப் புனிதக்குளத்தில் நீராடி வந்து ஆசி பெற்றுக்கொள். அப்போது ராம காரியம் வெற்றி பெறும் என்றார். அனுமனும் அந்தக் குளத்தில் குளிக்கையில் காலநேமி ஏவிய மாய முதலை அனுமனை விழுங்கியது. அனுமன் அம்முதலையின் வயிற்றைக் கிழித்துக் கொன்றார். அனுமன் கையால் இறந்த முதலை உடனே ஒரு தேவனாக மாறி அனுமனை வணங்கி நின்றான். 

★எனது பெயர் தான்யமாலி. ஒரு சாபத்தால் முதலையாக இங்கே இத்தனை ஆண்டு காலம் நான் இருந்தேன். இன்று  உங்களால் கொல்லப்பட்டதால் எனது சாபம் நீங்கி விமோசனம் பெற்றேன். இங்கு நீங்கள் முனிவர் என்று நினைத்துக் கொண்டிருப்பவர் ஒரு அசுரன். முனிவர் வேடத்தில் உங்களை கொல்ல திட்டம் தீட்டி இருக்கின்றான் என்று முனிவர் வேடத்தில் அங்கு நின்றிருந்த காலநேமியின் சதித் திட்டத்தை, அனுமனுக்கு எடுத்துரைத்து காலநேமியைக் கொன்று, விடிவதற்குள் சஞ்சீவினிச் செடிகள் பறித்து லட்சுமணனைக் காக்குமாறு தேவன் அனுமனிடம் கூறினான். 

★அனுமனும் காலநேமியைக் கொன்று சஞ்சீவினி மூலிகைச் செடிகளை அடையாளம் காண முடியாததால், அந்த  மலையை பெயர்த்து எடுத்துக் கொண்டு வந்து, இளவல்  லட்சுமணனின் மூர்ச்சையை தெளிய வைத்தார். ராமாயணத்தின் மிக முக்கிய திருப்புமுனையாக விளங்கும் இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் உள்ள சேஷராயர் மண்டபத்தில் உள்ள தூணில் மிக அழகிய சிற்பங்களாக அமைக்கப்பட்டு உள்ளது.

நாளை.....................

ஶ்ரீராம காவியம்
~~~~~
327/04-03-2022

ஶ்ரீராமநாம கதைகள்-7

திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர்...

★ஶ்ரீராமர், ராவணனை வதம் செய்து சீதையை மீட்ட பின்னர், ஶ்ரீ ராமருடன் அங்கு இருந்த அனைவரும் ராவணனுடைய  புஷ்பக விமானத்தில் ஏறி அயோத்திக்கு கிளம்பினார்கள். செல்லும் வழியில் பரத்வாஜ மகரிஷியின் வேண்டுகோளை ஏற்று அதற்கிணங்கி அவரின் ஆசிரமத்தில் ஒரு நாள் தங்கி இருந்தார்கள். அப்போது அங்கு வந்த நாரதர், யுத்தத்தில் வெற்றி பெற்ற ஶ்ரீ ராமருக்கு தனது வாழ்த்துக்களை சொல்லி அவரிடன் பேச ஆரம்பித்தார். 

★ராவணன் அழிந்த பின்னரும் ராட்சசர்கள் சிலர் ஆங்காங்கு இருக்கவே செய்கின்றனர். அவர்களில் ரக்தபிந்து மற்றும் ரக்தராக்ஷகன் என்ற இருவரும் மிகவும் கொடியவர்கள். அவர்கள் இருவரும் தற்சமயம் கடலுக்கு அடியில் கடுந் தவம் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் செய்யும் தவமானது நன்கு  நிறைவடையுமானால், அசுரன்  ராவணனை போல வரங்கள் நிறையப்  பெற்று இந்த உலகை அழித்துவிடுவர்கள். 

★ஆகையால், உலக நன்மையின் பொருட்டு அவர்களை தாங்கள் அழிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அதற்கு ஶ்ரீராமர் தாங்கள் சொன்னபடி அந்த ராட்சசர்களும் அழிக்கப்பட வேண்டியவர்களே. ஆனால் நான் பரதனுக்கு கொடுத்த வாக்குப்படி உடனே அயோத்திக்கு திரும்ப வேண்டும்.தம்பி  லட்சுமணனும் என்னை பிரிந்து அங்கு செல்ல  மாட்டான். எனவே அந்த கொடிய ராட்சதர்களை அழிக்கும் மகா ஆற்றலுடைய மாவீரன் வாயு புத்திரன் சிரஞ்சீவி அனுமனை அனுப்புகிறேன் என்றார்.

★ராமரின் கட்டளையை மிகப் பணிவுடன் அனுமன் ஏற்றுக் கொண்டார். அனுமன் சிரஞ்சீவி வரம் பெற்றவர். அளவிலா ஆற்றல் கொண்டவர். அஷ்டமா சித்திகளும் கற்றவர். எனினும் மாயாவிகளான ராட்சதர்களை வெல்ல இது போதாது. எனவே திருமால் தன்னுடைய சங்கு சக்கரத்தையும், நான்முகனான பிரம்மா அவர்கள் தனது பிரம்ம கபாலத்தையும், ஶ்ரீருத்ரன் தனது மழுவையும் அனுமனுக்கு அளித்து ஆசிர்வதித்தார்கள். 
ஶ்ரீ ராமர் தனது வில்லையும் அம்பையும் வழங்கினார். அனைவரும் வழங்கிய எல்லா ஆயுதங்களையும்  தாங்கிய அனுமன், பத்து கரங்களுடன் காட்சியளித்தார். 

★அதன்பின் வந்த கருடாழ்வார் தனது சிறகுகளை அளித்தார். சிவபெருமான், பத்து கரங்களில் ஆயுதங்கள் தரித்து நின்றிருந்த அனுமனைப் பார்த்து வியந்து தன்னுடைய சிறப்புக்குரிய மூன்றாவது நெற்றிக் கண்ணை அனுமனுக்கு அளித்தார். மூன்று கண்களும் (திரிநேத்ரம்), பத்து கைகளும் (தசபுஜம்) கொண்ட வீரக்கோலத்தில் இருந்த அனுமன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். 

★கடலுக்கு கீழே தவம் செய்த அசுரர்களையும் அவர்களது அசுரப் படையினரையும் அழித்த அனுமன், தனக்கு தரப்பட்ட கடமையை செய்து முடித்துவிட்டு மிகுந்த ஆனந்தத்துடன் ராமனை சந்திக்கப் புறப்பட்டார். அனுமன் வரும் வழியில் இருந்த அழகிய  கடற்கரை ஓரத்தில், இயற்கை அழகு நிரம்பிய ஒரு இடத்தில் ஆனந்தத்துடன் தங்கினார். அவர் தங்கிய இடம் ஆனந்தமங்கலம் என பெயர் பெற்றது. 

★தற்போது பேச்சு வழக்கில் இப்போது அனந்தமங்கலம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு அனுமனுக்கு கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வெளியே கோவிலின் முகப்பைப் பார்த்து சதுர்புஜத்துடன் ஒரு கையில் மன்னார்குடி அருள்மிகு ராஜகோபால ஸ்வாமியின் சாட்டையையும் ஏந்தி காட்சி அளிக்கிறார். திருக்கடவூர், தரங்கம் பாடிக்கு இடையே தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ஒரு கிலோமீட்டர் கிழக்கில் அனந்தமங்கலம் என்கிற இந்த ஊர் அமைந்துள்ளது. அங்கு சென்று திரிநேத்ர தசபுஜ வீர ஶ்ரீஆஞ்சநேயரை தரிசனம் செய்பவர்களுக்கு எப்போதும் வெற்றியே கிடைக்கும்.
ஜெய் ஶ்ரீஆஞ்சநேயா!

நாளை......................

[4:43 pm, 05/03/2022] Mohan SriRaghavendrar Kulithalai: ஶ்ரீராம காவியம்
~~~~~
328/05-03-2022

ஶ்ரீராமநாம கதைகள்-8

ஜனகரின் அதிகாரம்...

★ஜனகருடைய ஆட்சியில் அந்தணர் ஒருவர் தவறு செய்து விட்டார். அவரைத் தண்டிக்கத் தீர்மானித்த ஜனகர் நீங்கள் உடனே இந்த ராஜ்யத்தை விட்டு வெளியேறுங்கள் என அவருக்கு உத்தரவிட்டார். அதைக் கேட்ட அந்தணர், மன்னா! உங்கள் நாட்டின் எல்லை எதுவரை என்று எனக்கு தெரியாது. எல்லை எது என்று சொன்னால் அதைத் தாண்டிச் சென்று விடுவேன் என்றார். 

★ஜனகர் இந்த மிதிலை முழுவதும் என் அதிகாரத்திற்கு உட்பட்டது தானே. பிறகு ஏன் இந்த அந்தணர் இப்படி கேட்கிறார்? என்று சிந்திக்க ஆரம்பித்தார். எனது அதிகாரம் என்பது இந்த அரண்மனைக்குள் மட்டும் தான் இருக்கும். இந்த அந்தணர் என் எல்லையைத் தாண்டி விட்டால் வேறு எங்காவது போய் பிழைத்துக் கொள்வார். அதன் பின் அவர் மீது அதிகாரம் செலுத்த என்னால் முடியாது என சிந்தித்தார். 

★சிறிது நேரத்தில், இந்த அரண்மனைக்குள் என் அதிகாரம் செல்லும் என்று நினைத்தது கூட தவறு தான். காரணம்,  என்னுடைய இந்த அரண்மனைக்குள் அமர்ந்து கொண்டு ஜனகராகிய நான் கட்டளை இடுகிறேன். எனது உடம்போ, நீ எப்போதும் இப்படியே இளமையாக இரு என்று கட்டளையிட்டால், என் உடம்பு என் உத்தரவுக்கு கட்டுப்பட்டு இளமையாகவே இருக்குமா? என சிந்தித்தார். 

★என் உடம்பின் மீது கூட எனக்கு அதிகாரம் சிறிதும் இல்லை. அப்படியிருக்க, இன்னொருவரை வெளியேறச் சொல்ல எனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? என்று கருதினார். மொத்தத்தில் இந்த உலகில் வாழும் எந்த மனிதனுக்கும் தனக்குத்தானே அதிகாரம் செய்து கொள்ளக்கூட அதிகாரம் இல்லை என்பது புரிந்தது. எல்லாம் கடவுளின் அதிகாரத்திற்கு உட்பட்டது, என்பதை அவர் சூசகமாகப் புரிந்து கொண்டார்.

★ஜனகர் அந்தணரிடம், என் அதிகாரத்திற்கு உட்பட்டு இந்த உலகில் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. ஆகையால் நீங்கள் விருப்பம் போல எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் என்று தன் தண்டனையை ரத்து செய்து விட்டார். அந்தணர் அவரிடம் என்ன இது? இவ்வளவு பெரிய ராஜாவாக இருந்தும், உங்களுக்கு அதிகாரம் இல்லை என்கிறீர்களே! என்று வியப்புடன் கேட்டார். 

★மனதில் தோன்றிய எண்ணம் அனைத்தையும் அந்தணரிடம் சொன்னார் ஜனகர். அப்போது அந்தணர் தர்மதேவதையாக உருமாறி நின்றார். ஜனகரே! உன்னைச் சோதிக்கவே அந்தணராக வந்தேன். தவறிழைத்தது போல நாடகம் ஆடினேன். நாட்டின் எல்லை எது? என்று ஒரே ஒரு கேள்வி கேட்க அது உலக வாழ்வின் யதார்த்தத்தை உமக்கு புரிய வைத்து விட்டது. உம் போல உத்தமரை உலகம் எப்போதும் கண்டதில்லை என்று வாழ்த்திவிட்டுப் புறப்பட்டார்.

★இந்தக்கதை மூலம் தவறு செய்தவர்களைத் தண்டிக்கக் கூடாது என்று தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. அதிகாரத்தில் இருப்பவர்கள் மட்டுமல்ல, சாதாரண மனிதனும் கூட தன்னால் தான் உலகம் நடக்கிறது என எண்ணக்கூடாது. கடவுளின் கட்டளைப்படியே அனைத்தும் நடக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால், மனதில் ஆணவத்திற்கே இடமிருக்காது.

நாளை..................

ஶ்ரீராம காவியம்
~~~~~
329/06-03-2022

ஶ்ரீராமநாம கதைகள்-9


★படைப்புக் கடவுள் நான்முகன் பிரம்மாவிற்கு ஒரு பேரழகியைப் படைக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றிற்று. அதனால் தன் கற்பனை நயங்களை எல்லாம் திரட்டி ஒரு பேரழகியை உருவாக்கிக் கொண்டிருந்தார்.
இதைக் கண்டு பொறாமை கொண்ட மாதா சரஸ்வதி, தன் மகனான நாரதரை அழைத்து, “உன் தந்தை ஒரு பேரழகியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். ஒரு குற்றமில்லாத பெண்ணாக அவளை உருவாக்கப் போவதாக பெருமிதம் கொண்டிருக்கிறார்.

★ஆகவே எப்படியாவது அந்தப் பெண்ணுக்கு ஏதாவது ஒரு குறை ஏற்படும்படி செய்துவிடு!” என்றாள். பிரம்மா அந்தப் பெண்ணைப் படைத்து முடித்து விட்டார். அவளுக்குப் என்ன பெயர் சூட்டலாம் என்று மிகவும் யோசித்தார்.‘ஹல்யம்’ என்றால் குற்றம் என்று அர்த்தம். எந்த சிறு குற்றமுமில்லாத பேரழகியாதலால் ‘அஹல்யா’ என்று பெயர் வைத்தார். அவளது தலையெழுத்திலும் அஹல்யா என்று எழுதினார் பிரம்மா.

★அந்நேரம் பார்த்து அங்கே வந்த நாரதர் பிரம்மாவிடம் பேச்சு கொடுத்து, அவரது கவனத்தைத் திசை திருப்பி விட்டு, அந்தப் பேரழகிய பெண்ணின் தலை எழுத்தில் இருந்த ‘அ’ என்னும் எழுத்தை மட்டும் அழித்து விட்டார். அது ‘ஹல்யா’ என்று ஆகிவிட்டது. ஹல்யா என்றால் குற்றமுள்ளவள் என்று பொருள். சரஸ்வதி சொன்னபடி, நாரதர் அப்பெண்ணுக்குக் குறையை உண்டாக்கிவிட்டார். பெயர்தான் அஹல்யா (குற்றமற்றவள்), ஆனால், தலையெழுத்தில் ஹல்யா (குற்றமுள்ளவள்) என்று உள்ளது. பிரம்மாவும் இதைக் கவனிக்கவில்லை.

★அஹல்யாவுக்குத் திருமண வயது வரவே, பல தேவர்கள் அவளை மணந்து கொள்ள விரும்பினார்கள். நாரதரின் ஆலோசனைப் படி பிரம்மா, “யார் மூவுலகையும் முதலில் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்குத் தான் பெண் கொடுப்பேன்!” என்று கூறிவிட்டார். இந்திரன் ஐராவதத்தின் மேல் ஏறினான், அக்னி பகவான் ஆட்டின் மேலும், வருண பகவான் முதலையின் மீதும், வாயு பகவான் மானின் மீதும் ஏறி மூவுலகைச் சுற்றக் கிளம்பினார்கள். அதற்குள் மிகவும் முதியவரான கௌதம மகரிஷியைப் பிரம்மாவிடம் அழைத்து வந்தார் நாரதர்.

★கன்றை ஈன்றுகொண்டிருக்கும் பசுவைப் பிரதட்சிணம் செய்ய கௌதமரிடம் நாரதர் கேட்டுக் கொண்டார். கௌதம ரிஷியும் பிரதட்சிணம் செய்தார். நாரதர், பிரம்மாவிடம், “கன்றை ஈன்று கொண்டிருக்கும் பசுவைச் சுற்றினால் மூவுலகங்களையும் சுற்றியதற்குச் சமம். இதோ கௌதமர் சுற்றி விட்டார். ஆகவே 
அஹல்யாவை இவருக்கு மணமுடித்துத் தாருங்கள்!” என்றார். அதை ஏற்றுக் கொண்டு அஹல்யாவைக் கௌதமருக்கு மணமுடித்துத் தந்தார் பிரம்மா.

★மூவுலகங்களையும் சுற்றி விட்டு வந்த இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார்கள். எப்படியாவது அஹல்யாவை அடைந்தே தீரவேண்டும் என்று இந்திரன் முடிவு செய்தான். அதன்படியே அவன் செயல்பட, கௌதமரிஷி அஹல்யாவைக் கல்லாகப் போகும்படி சபித்தார். கல்லாக இருந்த அஹல்யாவின் மீது ராமபிரானுடைய திருவடித்துகள் பட்டபோதே அவள் மீண்டும் பெண் ஆனாள்.

★ராமனின் திருவடித் துகள் அவள் மேல் பட்டபோது அவளது தலையெழுத்தில் இருந்த ‘ஹல்யா’ என்பது ‘அஹல்யா’ என்று மாறி விட்டது. அதனால் தான் அவள் இப்போது குற்றமற்றவள் ஆனாள். இவ்வாறு பிரம்மா எழுதும் தலையெழுத்தையே மாற்றும் வல்லமை ஸ்ரீ ராமரின் திருவடிகளுக்கும் மற்றும் அவர் பாதுகைகளுக்கும் உள்ளது.

ராம ராம ஹரே ராஜா ராம் 
ராம ராம ஹரே சீதா ராம் 

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

நாளை..................

ஶ்ரீராம காவியம்
~~~~~
331/08-03-2022

ஶ்ரீராமநாம கதைகள்-11

அனுப்பியவர்:
திரு. சங்கர் திரிவேதி அவர்கள்
சென்னை.
94453 19632

ராம நாமத்தின் மகிமை...

★சத்ரபதி சிவாஜி, வீர சிவாஜி என்றெல்லாம் பேரும் புகழும் பெற்ற ‘சிவாஜி’ மகாராஷ்டிரத்தை ஆண்டு கொண்டிருந்த காலம் அது.
நதியில் இறங்கி சிவாஜி தன் கை, கால்களைத் தூய்மை செய்து கொண்டிருந்த போது,
ஆற்று நீரில் பல ஓலைச் சுவடிகள் மிதந்து வந்ததைப் பார்த்தார்.ஓர் ஓலைச்சுவடியை எடுத்துப் பார்த்த போது, அதில் மஹாராஷ்டிர மொழியில் எழுதப்பட்டிருந்த அற்புதமான கவிதைகள் இருந்தன. மனம் வியந்த சிவாஜி, ஓலைச் சுவடிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு ஆற்று நீர் வந்த திசையை நோக்கிக் குதிரையைச் செலுத்தினார்.

★அங்கே ஓரிடத்தில், சிவாஜி கண்ட காட்சி, அவரை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. காரணம்? அங்கே மர நிழலில் ஒரு பாறையின் மீது இருந்தபடி, ஒப்பற்ற ஒரு தவ சீலர் இனிய குரலில் ராம நாமத்தைப் பாடிக் கொண்டிருந்தார்.அவரைச் சுற்றி அந்தக் காட்டில் இருந்த கொடிய விலங்குகள் எல்லாம் அமர்ந்து இருந்தன. அந்தக் கொடிய விலங்குகளிடம் பயப்பட வேண்டிய பசுக்களும், மற்றும் மான்களும் அவற்றின் அருகிலேயே எந்த விதமான பயமும் இல்லாமல் எல்லாம் ஒரே கூட்டமாக அமர்ந்து கொண்டும் ஒன்றிரண்டு சுற்றியபடியும் இருந்தன.

★மறுநாளும் சிவாஜி அந்த ஞானியைத் தரிசிக்கப் போன போது, அவர்  வழக்கப்படி ராம நாமத்தை பலமாகப் பாடிக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றிக் கூடியிருந்த காட்டு விலங்குகள் எல்லாம் கண்களிலிருந்து நீர் வழிய அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தன.அந்த மஹா ஞானியின் வாக்கிலிருந்து வெளிப்பட்ட ராம மந்திர இசை ஓசையில் ஆற்றின் சலசலப்பும் மரங்களின் இலைகள் அசைகின்ற ஓசையும் அடங்கிப் போய்விட்டன. அதுவரை சிவாஜி அப்படிப்பட்ட இசையைக் கேட்டதே இல்லை. அவர் தாம் ஒரு மன்னர் என்பதையே மறந்தார்.

★அங்கிருந்த ஒரு மரத்தின் நிழலில் அப்படியே அமர்ந்து தன்னிலை மறந்தார்.
அது மட்டுமன்று. ஒப்பற்ற அந்த சீலரையே தம் மானசீக குருவாகவும் ஏற்கத் தொடங்கி விட்டார் சிவாஜி. ஒரு நாள்,
அந்த மஹா ஞானி தனிமையில் இருந்தார். சிவாஜிக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அவர் உடனே ஞானியை நெருங்கி அவரது திருவடிகளில் விழுந்து வணங்கினார். “குருநாதா! அடியேனுக்கு ஞான உபதேசம் செய்யுங்கள்!” என பணிவுடன் வேண்டினார்.

★அப்போதுதான் அந்த ஞானியின் திருநாமம் ‘சமர்த்த ராமதாசர்’ என்பதை சிவாஜி அறிந்து கொண்டார்.
தகுதி உள்ளவர்கள் வந்து உபதேசம் செய்யும்படி கேட்டால் அதை மறுக்கக் கூடாது. உபதேசம் செய்ய வேண்டும்.
அதனால் சமர்த்த ராமதாசர் சிவாஜிக்கு ராம மந்திர உபதேசம் செய்து அவரைத் தம் சீடராக ஏற்றுக் கொண்டார்.
குருநாதரை வணங்கிய சிவாஜி அவரிடம் ராம மந்திரத்தை இனிய இசையுடன் பாடக் கற்றுக் கொண்டார்.

★ஒரு நாள், சிவாஜி சிறிதளவு படையுடன் சமர்த்த ராமதாசர் தங்கியிருந்த மாவுலி என்ற நகரத்திற்குப் போய்க் கொண்டிருந்தார்.அந்தத் தகவலை அறிந்த முகலாய மன்னன் ஔரங்கசீப் சிவாஜியைச் சிறைப் பிடிக்க ஒரு பெரும் படையை அனுப்பி வைத்தான்.இரவு நேரம் நெருங்கியது. பயணம் செய்து கொண்டிருந்த சிவாஜி காட்டிலேயே ஓரிடத்தில் முகாம் போட்டுத் தங்கிவிட்டுக் காலையில் பயணத்தைத் தொடரலாம் எனத் திட்டமிட்டார்.
அதன்படியே காட்டில் ஆங்காங்கு கூடாரமிட்டுப் படைவீரர்கள் தங்கினார்கள்.

★சிவாஜி மட்டும் தனிமையை விரும்பிச் சற்றுத் தள்ளியே கூடாரத்தை அமைத்து அதில் தங்கியிருந்தார்.சமர்த்த ராமதாசர் கற்றுக் கொடுத்த ராமநாம மந்திரத்தை அப்போது சிவாஜி இனிய இசையுடன் பாடிக் கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து..ஔரங்கசீப்பின் பெரும் படை சிவாஜியையும், சிவாஜியின் படையையும் சுற்றி வளைத்து முற்றுகையிட்டது.
அது எதுவும் தெரியாத சிவாஜி மன்னரோ தன்னை மறந்த நிலையில் பக்திப் பரவசத்தோடு ராம மந்திரத்தைப் பாடிக் கொண்டிருந்தார்.

★எந்த நேரமும் சிவாஜியும் அவரது படையும் கைது செய்யப் படலாம் என்ற அந்த இக்கட்டான சூழ்நிலையில், அந்த இரவு நேரத்தில்,காட்டிலிருந்த குரங்குக் கூட்டங்கள் சிவாஜி மன்னரின் படைகளுக்கு உதவியாக முகலாயப் பெருஞ்சேனையின் மீது பாய்ந்தன. முகலாயப் படை திகைத்தது. “இவ்வளவு பெரிய வானரக் கூட்டம் எங்கிருந்து வந்தது?” என்ற அதிர்ச்சியில் முகலாயப் படை சிதறிப் போய் சின்னாபின்னமாகி ஓடியது.
சிவாஜிக்கு விவரம் தெரிந்தது. ‘ஆஞ்சனேயரே வந்து தம்மைக் காப்பாற்றியிருக்கிறார் என உணர்ந்தார்.

★அதனால் விடிந்ததும் விடியாததுமாகப் புறப்பட்ட சிவாஜி நேரே போய் சமர்த்த ராமதாசரைத் தரிசித்து வணங்கி நடந்ததையெல்லாம் அவரிடம் கூறினார். மஹா ஞானியான சமர்த்த ராமதாசரின் மகிமையை விளக்கும் மற்றொரு நிகழ்ச்சியும் நடந்தது.  அன்று! வீர சிவாஜி மன்னரின் அரண்மையில் நடந்தது.  வீர சிவாஜியைப் பார்ப்பதற்காக சமர்த்த ராமதாசர் அரண்மனைக்கு வந்தார். 

★அந்த நேரத்தில்  சமர்த்த ராமதாசரின் தலைமைச் சீடரான உத்தமர் என்பவர் அரண்மனை நந்தவனத்தில் இருந்த பழங்களைப் பறிப்பதற்காக சமர்த்த ராமதாசரிடம் அனுமதி கேட்டார். அதற்கு.. “நானே பறித்துத் தருகிறேன்” என்று சொல்லி கீழே கிடந்த கல்லை எடுத்துக் கனிகளின் மீது வீசினார் சமர்த்த ராமதாசர்.
அந்தக் கல் தவறுதலாக ஒரு பறவை மீது பட்டு பறவை துடிதுடித்துக் கீழே விழுந்து இறந்தது.

★அதைப் பார்த்து அங்கிருந்த காவலர்கள், “இவர் பெரிய ஞானிதான். ஆனால் கல்லை எடுத்து அடித்துப் பறவையைப் பரலோகம் அனுப்பிவிட்டாரே!” என்று பரவலாகப் பேசினார்கள்.
அதைக்கேட்ட சமர்த்த ராமதாசர் ராம மந்திரத்தின் மகிமையை விளக்கும் ஒரு பாடலை ‘ஜன்ஜூட்’ எனும் ராகத்தில் பாடினார்.பாடலைப் பாடிய படியே கீழே இறந்து கிடந்த பறவையை எடுத்து ஆகாயத்தில் வீசினார்.
அந்தப் பறவை உயிர் பெற்று அப்படியே பறந்து ஓடியது.

★ஹிந்துஸ்தானி ராகமான ‘ஜன்ஜூட்’ என்ற ராகத்தைப் பாடினால் எப்படிப்பட்ட நோயும் நீங்கும் என்பது இன்றும் நிலவி வரும் நம்பிக்கை.  கர்னாடக சங்கீதத்தில் அதே சாயலுடைய ‘செஞ்சுருட்டி’ என்ற ராகம், மிகுந்த பக்தி பாவத்துடன் பாடப்படுமானால், மனோ ரோகங்களைப் போக்க வல்லதாக இருக்கிறது.
சமர்த்த ராமதாசர் இறந்துபோன பறவையை உயிருடன் எழுப்பிய தகவல் ஊரெங்கும் பரவியது.

★அப்போது மாவுலி நகரத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த முகலாய மன்னனுக்கும் தகவல் தெரிந்தது.அவன் மனைவிக்கு சித்தப் பிரமை நோய்  உண்டாகி இருந்தது. அந்த முகலாய மன்னன் மாவுலி நகரத்திலுள்ள ஹிந்துக்கள் அனைவரையும் இஸ்லாம் மதத்தைச் சாரும்படி கொடுமைப்படுத்திக் கொண்டு இருந்தான்.அப்படிப்பட்ட அந்த மன்னன்தான் ஞானி சமர்த்த ராமதாசரைப் பணிந்து “என் மனைவியின் சித்தப் பிரமை நோயைத் தீர்த்து வையுங்கள்!” என வேண்டினான்.

★சமர்த்த ராமதாசரும் பார்த்தார். ‘இந்த மன்னனை நல்வழிப் படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு’ என்று எண்ணிய அவர், அந்த மன்னனின் மனைவி முன்னால் மூன்று மணிநேரம் ‘மால் கவுஞ்ச்' என்ற ராகத்தில் ராம பஜனை செய்தார். மூன்றாவது மணியில் மன்னனின் மனைவி சித்தப் பிரமை நீங்கித் தெளிந்து எழுந்தாள். அவளையும் தன்னுடன் சேர்ந்து பாடச் செய்தார் சமர்த்த ராமதாசர்.
முகலாய மன்னன் வெட்கித் தலைகுனிந்தான். அநியாயமாக ஹிந்துக்களுக்குத் தான் இழைத்த அநீதிக்கு ஏதாவது பரிகாரம் செய்ய எண்ணி சமர்த்த ராமதாசரிடம் முறையிட்டான்.

★ராமதாசர், “மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும் போது ‘ ராம்ராம்!” என்று சொல்லிக் கொள்ள வேண்டும்” எனக் கேட்டார். அன்று முதல் மஹாராஷ்டிர மாநிலம், மாவுலி நகரம் முதலான வட தேசங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் ‘ராம்! ராம்!’ எனச் சொல்லிக் கொண்டார்கள். ஞானியான சமர்த்த ராமதாசரின் நல்லதொரு இசையால் அவர் பெற்ற ராம பக்தியால், நம்தேசத்தில் ஒரு ஹிந்து சாம்ராஜ்ஜியமே நிறுவப்பட்டது.

ஜெய்ஸ்ரீராம்..ஜெய் ஸ்ரீராம்..ஜெய் ஸ்ரீராம்..
ஸ்ரீராமஜயம்

நாளை .................

[5:11 pm, 10/03/2022] Mohan SriRaghavendrar Kulithalai: ஶ்ரீராம காவியம்
~~~~~
333/10-03-2022

ஶ்ரீராமநாம கதைகள்-13

அஞ்சுக்கு 
இரண்டு பழுதில்லை...

★'அஞ்சுக்கு இரண்டு பழுது இல்லை' என்பது பொருள் நிறைந்த முதுமொழி ஆகும். அதாவது "நமசிவாய' என்னும் ஐந்தெழுத்துக்கு, "ராம' என்னும் இரண்டெழுத்து எந்த ஒரு விதத்திலும் குறைவில்லை, இரண்டும் சமசக்தி வாய்ந்தன என்பதே பொருள். இந்தக் கலியுகத்துக்கு கைகண்ட அருமருந்து ராமநாம ஜெபமே.

★காட்டு வேடன் 'ரத்னாகரன்', நாரத முனிவரின் உபதேசம் பெற்று "ராமராம'' எனச் சொல்லி,  பழம்பெரும் இதிகாசப் பாட்டு நாயகனாக, வால்மீகி முனிவராக  உயர்ந்தது ராமநாமத்தால்தான். அதுபோல 
பிள்ளைப் பிராயத்தில் கம்பங் கொல்லையைக் காவல் காத்த சிறுவன் கம்பன், ராமபக்தியால் கவிச் சக்ரவர்த்தியாகி இராம காதை பாடியது ராமநாம மகிமையால்தான்.

★"ராம்போலோ' என்ற பாசமுள்ள  மனிதனை துளசி தாசராக்கி "ராமசரித மானசம்' பாட வைத்தது ராமநாமமே!  மேலும்
சமர்த்த ராமதாசர் சொற்கேட்ட சாதாரண மன்னன், சத்ரபதி சிவாஜியாக மிகச் சிறந்து விளங்கியதும், ராமபக்தியுடன் காவிக்கொடியுடன் மராட்டிய மாநிலத்தை ஆண்டதும் ராமநாம மந்திர மகிமையே ஆகும்.

★இவை மட்டுமா?. இளம் வயதில் 'கதாதரன்' என்ற இளைஞன் ராம, கிருஷ்ண மந்திரங்களை இடைவிடாது கூறிக்கொண்டு பாருலகே வியக்கும்படி 'ராமகிருஷ்ண பரமஹம்சராக'த் திகழ்ந்தது ராமநாமத்தால்தான்.

★எல்லாவற்றுக்கும் மேலாக நம்மிடையே தியாக வாழ்வு வாழ்ந்த 'மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி' அவர்கள்  "ரம்பா'' என்ற பணிப்பெண் மூலம், ராமநாமம் கற்று வாழ்நாள் எல்லாம் ராமநாமம் ஜபித்து, தேசப் பிதாவாக தெய்வீக புருஷராக சத்யஜோதியாக "மகாத்மா காந்தி' என்னும் அழியாப் புகழுடன் திகழ்ந்ததும் ராமநாமத்தால்தான்.

★இன்றைக்கும் மராட்டிய மாநிலத்தில் காலைவணக்கமாக
'ராம் ராம்' எனக் கூறுவதையும், மற்றும்   "ஆம் ஆம்' என்று சொல்வதற்குப் பதிலாக "ராம் ராம்' என்று சொல்லும் வழக்கம் மக்களிடையே மலர்ந்ததும் ராமநாம மகிமையால்தான்.

★"நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே "ராம' என்ற இரண்டெழுத்தினால்''

என்கிறார் கம்பர்.

நாமும் சொல்வோம் ராமநாமம்.
ராம ராம ராம ராம ராம ராம ராம
ராம ராம ராம ராம ராம ராம ராம
ராம ராம ராம ராம ராம ராம ராம
ராம ராம ராம ராம ராம ராம ராம
ராம ராம ராம ராம ராம ராம ராம.
ஶ்ரீராமஜயம்!

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.

நாளை....................
ஶ்ரீராம காவியம்
~~~~~
334/11-03-2022

ஶ்ரீராமநாம கதைகள்-14

ஶ்ரீராமஜெயம்...

★கிருஷ்ண ஜெயம் என்றோ நரசிம்ம ஜெயம் என்றோ யாரும் சொல்வதில்லை. ஸ்ரீ ராமஜெயம் என்று மட்டும் ஏன் எங்கும் சொல்லப்படுகிறது என்றால் ராமன் தர்மத்தினுடைய பிரதிநிதியாகத் திகழ்ந்தான். ராமன் என்றால் தர்மம். ராமன் தர்மத்தின் மறு உருவம். ஸ்ரீ ராமஜெயம் என்றால் தர்மத்திற்கு ஜெயம் உண்டாகட்டும் என்று பொருள். 

★எந்த சூழ்நிலையிலும் தனது சுகத்தையும், துக்கத்தையும் ஒன்று போலப் பாவித்துக் கொண்டு அதர்மத்தை அழித்து தர்மத்தை கடைபிடித்து, அந்த  தர்மத்தைக் காப்பாற்றுபவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு  அடைக்கலம் தருபவனாக ஶ்ரீராமன் விளங்கினான் என்பது தான் ராமாவதாரத்தின் மகிமை. 

★'தெய்வம் மனுஷ்ய ரூபேண' என்பதை நிரூபணம் ஆக்கியவர் ராமர். எந்தெந்த உபதேசங்களை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று ராமர் நினைத்தாரோ, அவற்றை எல்லாம் அவரே வாழ்ந்து காட்டினார். வேத சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கும் தர்மங்களை மேற்கோள் காட்ட, தானே அப்பாதையில் சென்று தன் மக்களுக்கு வழி காட்டினார். 

★நாடாள வேண்டும் என்றாலும் சரி இல்லை காட்டுக்கு போக வேண்டும் என்றாலும் சரி இரண்டையும் ஒரே மனோநிலையில் ஏற்றுக் கொண்டவர் ராமர். அதனால் தான் ஶ்ரீராமஜயம் என்று நாம் சொல்கிறேன். ஶ்ரீகிருஷ்ணர் ராஜதந்திரத்துடன் செயல் பட்டவர். நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்கு கெட்டவன். மேலும் கிருஷ்ணர் நமது நண்பனைப் போல. எப்படி வேண்டுமானாலும் கூப்பிடலாம். 

★ஶ்ரீநரசிம்மர் நேரடியாக தூணில் இருந்து வெளிப் பட்டவர். அவதார கடவுள். கூப்பிட்டதும் வந்து அபயம் அளித்தவர். இவர் கடவுளாக வணங்கப் படுகிறார். என்றும் எப்போதும் வெற்றி இவர் பக்கம். 
ஜெயிப்பதற்கென்றே கடவுளாக தோன்றியவர். அதனால் ஶ்ரீநரசிம்ம ஜெயம் எனச் சொல்வதில்லை. ஶ்ரீகிருஷ்ணர் காப்பவர். மனமுருகி கிருஷ்ணா என பரிபூரண சரணாகதி அடைந்தால் நம்மை எல்லாத் துன்டங்களில் இருந்தும் காப்பவர். ஆகவே ஶ்ரீகிருஷ்ண ஜெயம் சொல்வதில்லை.

★ஶ்ரீராமர் அரசன். மரியாதைக்கு உரியவர். நம் வார்த்தைகளுக்கு மதிப்பளிப்பவர். மனித அவதாரம். ஒரு சாமான்ய மனிதனின் இன்பம் துன்பம் கஷ்டம் நஷ்டம் சண்டை இழப்பு  மகிழ்சி வீரம் கொண்டவர். நம்மைப் போல ஒருவர். என்றும் அவர் ஜெயமடைய வேண்டும், அவரால் நாம் ஜெயமடைய வேண்டும் என்பதினால் தான் ஶ்ரீராம ஜெயம் என்கிறோம்.

ஶ்ரீராமஜெயம்

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869

நாளை...............

[3:27 pm, 13/03/2022] Mohan SriRaghavendrar Kulithalai: ஶ்ரீராம காவியம்
~~~~~
336/13-03-2022

ஶ்ரீராமநாம கதைகள்-14

நாயாகப் பிறவி எடுப்பது ஏன்?

★ராமர் தனது அரசவையில் அமர்ந்திருந்தார். அப்போது வெளியே நாய் ஒன்று பெருங் குரலில் குரைத்துக் கொண்டே இருந்தது. என்னவென்று தெரிந்து வருமாறு ஒரு அரசவை காவலனை அனுப்பினார். அவன் அந்த நாயைத் துரத்திவிட்டு ராமரிடம் வந்து காரணமின்றிக் குரைத்த அந்த நாயை இந்தப் பகுதியை விட்டே துரத்தி விட்டேன் என்றான். சற்று நேரம் கழித்து மீண்டும் அந்த நாய் குரைக்க, அதே காவலன் விரைந்து சென்று அதைத் துரத்தினான். இந்த நிகழ்வானது தொடர்ந்து நடந்தது. 

★ இதனை சிந்தித்த ராமர் லட்சுமணனிடம் அந்த நாய் தொடர்ந்து குரைக்கிறது. நீ போய் காரணம் என்ன வென்று தெரிந்து கொண்டு வா என்று அனுப்பினார். லட்சுமணன் குரைக்கும் நாயை நெருங்கி, உன் துயரத்துக்குக் காரணம் என்ன சொல் என்று கேட்டான். அதற்கு அந்த நாய் ஈனஸ்வரக் குரலில் பேசத் தொடங்கியது ராமரை வரச் சொல்லுங்கள் எனக்கு நீதி வேண்டும் என்றது. இதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்த லட்சுமணன், நாய் சொன்னதை அப்படியே ராமரிடம் கூறினான். உடனே ராமர் வெளியே வந்தார். எனது ராஜ்யத்தில் காரணமின்றி எவரும் துயரப்படக் கூடாது. ஆகவே நீ எவ்விதத் தயக்கமும் இன்றி உன் துயரத்தை என்னிடம் சொல் என்றார். 

★அந்த நாய் பணிவுடன் அவரை வணங்கி பேசத் தொடங்கியது. என்னை சன்யாசி ஒருவர் கல்லால் அடித்துக் காலை உடைத்து விட்டார். அதை முறையிடவே இங்கு வந்தேன் எனக்கு நீதி வேண்டும் என்று வேதனையுடன் கூறியது. ராமர் கனிவான குரலில் வருந்தாதே. நான் இப்போதே அந்த சன்யாசியிடம் விசாரிக்கிறேன் என்று கூறிவிட்டு, சன்யாசியை அழைத்து வர உத்தரவிட்டார். சற்று நேரத்துக்குள் அந்த சன்யாசி அங்கு வந்து ராமரை வணங்கி நின்றார்.

★ராமர், சன்யாசியிடம் நீங்கள் எதற்காக இந்த நாயைக் கல்லால் அடித்தீர்கள்? என்று விசாரித்தார். அதற்கு சன்யாசி நான் பிட்சை வாங்கி வரும்போது இந்த நாய் எனது பிட்சான்னத்தைத் தொட முயற்சி செய்தது. அப்போது நான் மிகவும் பசியுடன் இருந்ததால், இந்த நாய் மீது எனக்குக் கோபம் ஏற்பட்டது. எனவே அதன் மீது கல் எறிந்தேன் என்றார். ராமர் புன்னகை மாறாத முகத்துடன் அவரை நோக்கி, இந்த நாய் ஐந்தறிவு படைத்த பிராணி, இதனால் தனக்கு தேவையான உணவை சமைக்கவோ அல்லது உருவாக்கிக் கொள்ளவோ தெரியாது. 

★பார்க்கும் உணவை சாப்பிடவே தோன்றும்.   இது, ஐந்தறிவு படைத்த பிராணிகளுக்கு உண்டான விதி. உங்களுக்கு பசி இருப்பது போல், இந்த நாயிற்கும் பசி எடுத்ததினால், உங்களது உணவை சாப்பிட முயற்சி செய்தது. இந்த நாயின் விதிப்படி இது தவறு அல்ல. பசியுடன் இருப்பவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்பது ஆறறிவு மனிதனுக்கு உண்டான தர்மம். நீங்கள் அந்த தர்மத்தை மீறியது மட்டும் அல்லாமல், நாயை கல்லால் அடித்து காயப்படுத்தி தவறு செய்து விட்டீர்கள். உமது செயல் கண்டிப்பாகக் குற்றமே. எனவே நீங்கள் அதற்குரிய தண்டனை எதுவோ அதை  அனுபவித்தே தீர வேண்டும் என்று கூறினார். 

★நாயின் பக்கம் திரும்பிய ராமர், இந்த சன்யாசி உனக்கு கெடுதல் செய்திருப்பதால், இவரைத் தண்டிக்கும் பொறுப்பை நான் உன்னிடமே ஒப்படைக்கிறேன். 
நீ என்ன சொன்னாலும் அதை நிறைவேற்றுகிறேன் என்றார். அதற்கு அந்த நாய் இவரை ஒரு சிவாலயத்தில் அதிகாரமிக்க  வேலையில் அமர்த்துங்கள். இதுவே நான் அவருக்கு அளிக்கும் தண்டனை என்றது.
ராமர் அதற்குச் சம்மதித்து, அதற்கான ஆணையை பிறப்பித்தார். தனக்குப் பெரிய பதவி கிடைத்த மகிழ்ச்சியில் சன்யாசியும் திருப்தியுடன் அங்கிருந்து வெளியேறினார். நாயும் மன நிறைவுடன் அந்த இடத்திலிருந்து அகன்றது. 

★இதை பார்த்துக் கொண்டிருந்த மக்கள் வியப்புடன் நின்றார்கள். அன்னத்துக்கு அலையும் அந்த சன்யாசிக்கு, இது அதிர்ஷ்டமே அன்றி தண்டனையல்ல. இதனால் அவர் மேலும் சுகம் அடையப் போகிறார். இது எப்படி தண்டனை ஆகும்? என்று எல்லா மக்களும் ராமரிடம் கேட்டார்கள். அனைத்தும் அறிந்த ஶ்ரீராமர் நாயிடமே இதனை கேட்டு தெரிந்து கொள்வோம், என்று அந்த நாயை அழைத்து வருமாறு தன் காவலரிடம் கூறினார். அந்த நாயும் மீண்டும் அங்கு வந்தது. இப்போது நாயிடம் அதே கேள்வியே மக்கள் கேட்டார்கள். 

★அதற்கு அந்த நாய், அரசே! சிவாலயத்தில் அதிகாரி வேலை என்று அந்த சன்யாசிக்கு நான் அளித்தது, முள்ளின் மேல் நிற்கிற ஒரு பணி. சிவாலயம், மடம், கிராமம் போன்றவற்றில் தவறு செய்யும் அதிகாரிகள் மற்றும்  அந்தணர், அநாதை, குரு ஸ்தானத்தில் இருப்போர் ஆகியோரின் செல்வத்தை அபகரிப்பவர்கள், அரசனது வீட்டில் இருந்து கொண்டு அங்கு வரும் யாசகர்களைத் தடுத்து திருப்பி அனுப்புபவர்கள், பொது  மக்களுக்கு உரிய  உணவுப் பொருட்களை அபகரிப்பவர்கள் ஆகியோர் மறு ஜென்மத்தில் கண்டிப்பாக நாயாகப் பிறவி எடுப்பார்கள். 

★சென்ற பிறவியில் நான் தவறு இழைத்த ஒரு மடாதிபதியாக இருந்ததால், இப்போது நாயாகப் பிறவி எடுத்துள்ளேன். எனவே தான் சன்யாசிக்கு இப்படி ஒரு தீர்ப்பு சொன்னேன். இந்த ஜென்மத்தில் எனது பசிக்கு உணவு தராமல் தவறு செய்த சன்யாசி, சிவாலயப் பணியில் இருந்து நல்ல விதமாக பணி செய்தால் என்னை அடித்த பாவம் தீர்ந்து நன்மை அடைவார். ஆசையின் காரணமாக ஏதேனும் தவறு செய்தால் மீண்டும் பாவம் செய்து நாயாகப் பிறப்பார் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பியது. அங்கு கூடியிருந்த அனைவரது சந்தேகமும் தீர்ந்தது.

★கருத்து:-
 ஆலயங்கள், மடம், அரசு நிர்வாகம் போன்ற பதவியில் இருப்பவர்கள், தவறு ஏதும் செய்யக்கூடாது. ஆலயங்கள், பசு, அந்தணர், ஆதரவற்றோர்,  ஆகியோரின் செல்வத்தின் மேல் ஆசைப்படகூடாது. யாரையும் இழிவு படுத்தக் கூடாது.அரசனை காண வரும் பொதுமக்களை தடுக்கக்கூடாது. உண்மையான அறிஞர்களின் பொருளை அபகரிக்ககூடாது.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.

நாளை.....................

ஶ்ரீராம காவியம்
~~~~~
337/14-03-2022

ஶ்ரீராமநாம கதைகள்-17

அனுப்பியவர்:
திரு. G.ஜனார்தனன்
மேடவாக்கம்
சென்னை.
9710710456.

அனந்தராமன்...

★ஸ்ரீகிருஷ்ணனுக்கு நண்பனாக இருந்து, அவன் அருளால் தரித்திரம் நீங்கிய, சுதாமன் என்னும் குசேலன், குபேரனான கதை நம்மில் பலருக்கு நன்கு  தெரியும். இது ராமாவதாரத்துக்கு அடுத்த கிருஷ்ணாவதாரத்தில் நடந்த கதை ஆகும். ஆனால், ராமாயணத்திலும் ஸ்ரீராமன் அருள்பெற்ற ஒரு குசேலன் இருந்தான் என்றால், மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா? இந்த ராமாயணக் குசேலனின் பெயர், அனந்தன்

★ஒருமுறை வசிஷ்டரின் ஆசிரமத்தில் ஸ்ரீராமன் தனது சகோதரர்கள் லட்சுமணன், பரதன் மற்றும் சத்ருக்னனுடன் வித்யாப்பியாஸம் செய்து கொண்டு இருந்தான். அப்போது அவனுக்கு உற்ற நண்பன் ஒருவனும் இருந்தான். அவன் பெயர் அனந்தன். பரம ஏழையான அவன், வசிஷ்டரின் ஆசிரமத்தில் குருவுக்கு சேவை செய்து கொண்டிருந்தான்.
குருகுலத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த ஸ்ரீராம- லட்சுமண சகோதரர்களுக்குத் தொண்டு செய்வதில், அனந்தன் பேரானந்தம் கொண்டான். 

★குறிப்பாக, ஸ்ரீராமன்மீது அவன் வைத்த பற்றும் பாசமும் அளவுகடந்ததாக இருந்தது. பதிலுக்கு அனந்தனிடம் ஸ்ரீராமனும் பேரன்பு காட்டினான். இருவரும் சேர்ந்து குருகுலத்தில் ஆனந்தராமனாக  விளங்கினர். ஸ்ரீராமனுக்கு ஏடுகளை எடுத்து வைத்தல், எழுத்தாணியைக் கூராக்குதல், வில்லைத் துடைத்தல், அஸ்திரங்களை எடுத்து வைத்தல், உணவு பரிமாறுதல் ஆகிய பணிகளை பெருமகிழ்ச்சியோடு செய்து வந்தான் அனந்தன்.

★ஸ்ரீராமனை ஒருநாள் காண முடியவில்லை என்றாலும், அவன் மனம் ஏங்கித் தவிக்கும். 'சுதாமனும் கண்ணனும் போல’ வசிஷ்டருடைய குருகுலத்தில் அனந்தனும் ஸ்ரீராமனும் நட்பு கொண்டிருந்தனர். ஒவ்வொரு மாதமும் சில நாட்கள் அருகில் இருந்த வனத்துக்குச் சென்று, தர்ப்பைப் புல் பறித்து கொண்டு வரவேண்டியது அனந்தனின் கடமை. அதுபோல் ஒருமுறை அனந்தன் வனத்துக்குச் சென்றிருந்தான். அந்த நேரத்தில் ஸ்ரீராமனின் குருகுலம் முடிந்து, குருவிடம் விடைபெற்று தன் சகோதரர்களுடன் அயோத்தி நகருக்குச் சென்றுவிட்டான். வனத்தில் இருந்து திரும்பி வந்த அனந்தன் விவரம் அறிந்து தாங்கமுடியாத வருத்தம் கொண்டான்.

★ ஸ்ரீராமனைக் காண அவன் மனம் துடித்தது. உடனே அவன் புறப்பட்டு, அயோத்தியில் உள்ள ஸ்ரீராமனின் அரண்மனைக்குச் சென்றான். அங்கே அவனுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போதுதான் மகரிஷி விஸ்வாமித்திரருடன் ஸ்ரீராமனும் தம்பி  லட்சுமணனும் யாக சம்ரக்ஷணத்துக்காக வனத்துக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தனர். துக்கம் அனந்தனின் தொண்டையை அடைத்தது. ஒன்றும் அறியாத பாலகனான ஸ்ரீராமன் கானகம் செல்ல நேர்ந்ததை எண்ணிக் கலங்கினான். 

★ஸ்ரீராமனைக் காட்டுக்கு அனுப்பிய அரசன் தசரதனையும், அழைத்துச் சென்ற ப்ரம்மரிஷி விஸ்வாமித்திரரையும் அவன் மனத்துக்குள் மிகவும்  கடிந்து கொண்டான். பாவம் ஸ்ரீராமன்! காட்டில் அவன் என்னதான்  செய்வான்? அவனுக்கு யார் சேவை செய்வார்கள்? நித்திய கர்மங்களுக்கு, தர்ப்பை, சமித்து போன்றவற்றை யார் சேகரித்துத் தருவார்கள்? இப்படியெல்லாம் நினைத்து அவன் மனம் மிகவும் தவித்தது. எப்படியும் காட்டில் ஸ்ரீராமனைத் தேடிக் கண்டு பிடித்து, அவனுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டான் அனந்தன்.

★தன் குரு வசிஷ்டரிடம்கூடச் சொல்லிக்கொள்ளாமல், நேராகக் காட்டை நோக்கிச் சென்றான். அடர்ந்த காட்டில், ‘ராமா… ராமா…’ என்று கதறிக்கொண்டு, ஸ்ரீராமனைத் தேடி அலைந்தான். காட்டில் வழி தவறி, ஒரு இருண்ட பகுதிக்குள் அகப்பட்டுக்கொண்டான். அங்கே பல நாட்கள் ஸ்ரீராமனைத் தேடியும், அவனைக் காணாமல் அனந்தனின் மனம் வாடியது. ஸ்ரீராமனைக் காணாமல் ஊர் திரும்பவும் அவனுக்கு சிறிதும் விருப்பமில்லை. ‘ராமா, ராமா’ என்று ஜபித்துக்கொண்டு, அன்ன ஆகாரமின்றி, அந்தக் காட்டிலேயே ஓரிடத்தில் நிஷ்டையில் அமர்ந்தான். அவன் அமர்ந்த இடத்தில், அவனை மூடியவாறு புற்று வளர்ந்து விட்டது. ஆனால், அவனது ‘ராம’ ஜபம் மட்டும் சிறிதும் நிற்கவில்லை.

★காலச் சக்கரம் வேகமாகச் சுழன்றது. இதற்கிடையில், ராமாயண சம்பவங்கள் அனைத்துமே நிகழ்ந்து முடிந்து இருந்தன. விஸ்வாமித்திரரின் யாகத்தை முடித்துக் கொடுத்து, சீதையை மணம் முடித்து, தந்தை சொல் காக்கக் கானகம் சென்று, சீதையைப் பிரிந்து, அனுமனின் உதவியால் அவள் இருக்கும் இடம் அறிந்து, இலங்கை சென்று ராவண சம்ஹாரம் செய்து சீதையை மீட்டு, அயோத்தி திரும்பியிருந்தான் ஸ்ரீராமன். அவன் பட்டாபிஷேகத்துக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருந்தன. இத்தனை நடந்ததும், அது எதுவும் தெரியாமல் அந்த புற்றுக்குள் ‘ராமா, ராமா.’ என்று தவமியற்றிக் கொண்டு இருந்தான் அனந்தன்.

★ஸ்ரீராமனின் பட்டாபிஷேக வைபவத்தைக் காண பாரத தேசத்தின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் மக்களும், மற்றும் மன்னர்களும், மகரிஷிகளும் அயோத்திக்கு வந்துகொண்டு இருந்தனர். அப்போது காட்டு வழியே சென்று கொண்டிருந்த சில மகரிஷிகள் ‘ராம’ நாமத்தைப் பாடிக்கொண்டே சென்றனர். அவர்களில் ஒருவரது கால் பட்டு அனந்தன் தவமியற்றிக்கொண்டிருந்த புற்று இடிந்தது. அனந்தன் தவம் கலைந்து எழுந்தான். ராமா,ராமா, எங்கிருக்கிறாய் என் ராமா?’ என்று கதறினான்.

★காலச் சுழற்சியினால் தனக்கு வயதாகியிருப்பதைக்கூட அவன் அறியவில்லை. பல ஆண்டுகள் முடிந்துபோனதையும் அவன் உணரவில்லை. இன்னும் குழந்தைபோல ஸ்ரீராமனைத் தேடினான். அப்போது அந்த மகரிஷிகள் கூட்டத்தில் ஒருவர், அவன் யாரென்று விசாரித்துத் தெரிந்துகொண்டு, அவனுக்கு ஆறுதல் கூறினார். ஸ்ரீராமன் தனது வனவாசத்தை முடித்து பட்டாபிஷேகம் செய்து கொள்ளப் போவதையும், அதற்காகவே எல்லோரும் அயோத்தி செல்வதையும் அனந்தனுக்குத் தெரிவித்தார். 

★ஶ்ரீராமனுக்கு ஏற்பட்ட இந்த துன்பங்களைக் கேட்டு கண்ணீர் வடித்தான் பக்தன் அனந்தன். இருந்தாலும், ராமனுக்குப் பட்டாபிஷேகம் நடக்கப்போகும் செய்தி அறிந்து, அதைக் காண மகரிஷிகளுடன் அயோத்தி புறப்பட்டான். அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்று பட்டாபிஷேக நாள். எங்கும் வேத கோஷமும், மங்கல இசையும் முழங்கிக்கொண்டு இருந்தன. குல குரு வசிஷ்டர், விஸ்வாமித்திரர் முதலானோர் பட்டாபிஷேக ஏற்பாடுகளை முன்னின்று செய்து கொண்டு இருந்தனர். மக்கள், முனிவர்கள், மன்னர்களுடன், தேவர்களும் தேவ மாதர்களும் அங்கே வந்திருந்தனர்.

★ஸ்ரீராமன் அதிகாலையிலேயே மங்கல நீராடி, புதிய ஆடைகள், அணிகலன்கள் அணிந்து, தன் குலதெய்வமான சூரிய தேவனையும், மற்றும் தாயார் மூவரையும் வணங்கி, கொலு மண்டபம் நோக்கி கம்பீரமாக நடந்து வந்தான். அப்போது எல்லோரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடையும் வகையில் உரத்த குரலில், ”அடே ராமா! இத்தனை காலம் எங்கிருந்தாயடா? உன்னை எத்தனை காலமாய் நான் எல்லா இடங்களிலும் தேடுகிறேனடா?” என்று குரல் கொடுத்தபடியே ராமனை நோக்கி ஓடி வந்தான் அனந்தன்.

★ராமனை இறுகத் தழுவிக் கொண்டான்.கந்தல் உடையில், ஜடா முடியுடன் பரதேசிக் கோலத்தில் பாமரன் ஒருவன், ‘அடே ராமா’ என்று கூவி அழைத்தது கண்டு, அவையினர் அதிர்ச்சியுற்றனர். ‘எவனோ பைத்தியக்காரன் இவ்வாறு செய்கிறான்’ என்று மிகுந்த கோபத்துடன் காவலர்கள் அவனைப் பிடித்திழுக்க விரைந்தபோது, ஸ்ரீராமன் அனந்தனை நெஞ்சாறத் தழுவி, அவன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து, ”என்னை மன்னித்துவிடு அனந்தா!” என்று உணர்ச்சி பொங்கக் கூறினான்.

★"நான் உன்னிடம் சொல்லிக் கொள்ளாமலே குருகுலத்தில் இருந்து வந்துவிட்டேன். என் பிரிவினால் நீ எவ்வளவு துயரம் அடைந்திருப்பாய் என்பதை நான் அறிவேன். என் தவற்றை மன்னித்துவிடு” என்று மீண்டும் சமாதானம் செய்தான். அதைக் கேட்டு எல்லோரும் திடுக்கிட்டு பார்த்தனர். தன்னைப் போலவே தன் பிரபுவிடம் பக்தி செலுத்தும் மற்றொரு பக்தன் இருக்கிறான் என்றெண்ணிப் பூரித்த அனுமனின் கண்களிலும் நீர் சுரந்தது.

★அப்போது வசிஷ்டர், ”ராமா! இவர் யார்?” என்று கேட்க, ”தெரியவில்லையா குருதேவா? இவன் என் பள்ளித் தோழன். தங்கள் குருகுலத்தில் சேவை செய்து வந்த சீடன் அனந்தன். இத்தனை பெரிய அவையில் எல்லோரும் என்னைப் ‘பிரபு’ என்றும் ‘மகாராஜா’ என்றும் தான் அழைக்கிறார்கள். என்னை ‘அடே  ராமா’ என்று அழைக்க என் தந்தை தசரதன் இல்லையே என ஏங்கினேன். அந்தக் குறையைத் தீர்த்து வைத்ததன் மூலம் என் தந்தைக்கு நிகராக ஆகிவிட்டான் இந்த அனந்தன்!” என்று கூறினான் ஸ்ரீராமன். வசிஷ்டரும் அனந்தனைக் கட்டித் தழுவி ஆசீர்வதித்தார். எல்லோர் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்!

★"இத்தனை நாட்கள் எனக்காகத் தவமிருந்து, இடையறாமல் என் நாமத்தை ஜபித்து, என்னைத் தேடிக் கண்டடைந்த இவனுக்கு, நான் இந்த அவையில் மரியாதை செய்யக் கடமைப்பட்டுள்ளேன்” என்று கூறிய ஸ்ரீராமன் உடனே அனுமனை நோக்கி, ‘உன்னைப் போலவே என்னை நேசிக்கும் இவனுக்கு என்ன கௌரவம் தரலாம்?” என்று கேட்டான்.
”பிரபு! தங்கள் தந்தைக்குச் சமமானவர் இவர் என்று கூறினீர்கள். தாங்கள் சிம்மாசனத்தில் அமரும் முன்பு, இவரை அதில் அமர்த்தி மரியாதை செய்வது இவருக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்குமே பெருமை!” என்று கூறினான் அனுமன். எல்லோரும் அதை ஆமோதித்தனர்.

★இத்தனைப்  பெரியதொரு மரியாதைக்குத் தான் சிறிதும் தகுதியானவன்தானா? என்று எண்ணிக் கூனிக் குறுகினான் அனந்தன். அவன் வேண்டாம், வேண்டாம் என்று தடுத்தும் கேளாமல் அவனைச் சிம்மாசனத்தில் அமர்த்தி, மாலை அணிவித்து மரியாதை செய்து, பாத பூஜையும் செய்தான் ஸ்ரீராமன். அதன் பின்பே, ஸ்ரீராமனின்  பட்டாபிஷேகம் ஆரம்பமானது.

★ராமாவதாரத்தில் பகவானின் அன்பினால் கட்டுண்டு மிகவும் ஆனந்தமடைந்த அனந்தனே, ஒருவேளை அதே போன்றதொரு பேரானந்தத்தை மீண்டும் அனுபவிக்க வேண்டுமென்று கிருஷ்ணாவதாரத்தில் குசேலனாக வந்தானோ என்று தோன்றுகிறது அல்லவா?!

 ராம் ராம் ராம் ராம் ராம் ராம்

நாளை........................
 
 
[2:54 pm, 15/03/2022] Mohan SriRaghavendrar Kulithalai: ஶ்ரீராம காவியம்
~~~~~
338/15-03-2022
 
ஶ்ரீராமநாம கதைகள்-18
 
செந்தூரம்...
 
★ஶ்ரீராமரின் பட்டாபிஷேக வைபவம் வெகு சிறப்பாக நடந்து முடிந்தது. வந்திருந்த அனைத்து விருந்தினர்களும் பிரியாவிடை பெற்றுத் திரும்பினர். அனுமன் மட்டும் அயோத்தி நகரிலேயே தங்கி விட்டார். ஶ்ரீராமருக்கு பணிவிடை செய்வதே தனது பெரும் பாக்கியமென கருதி மகிழ்ச்சியுடன் இருந்தார்.  ஒருநாள் காலையில் ஶ்ரீராமரின் அரசவைக்கு செல்ல சீதை தயாராகிக் கொண்டிருந்தார்.
 
★அப்போது மாதா சீதை சிறிது செந்தூரத்தை எடுத்து தன் நெற்றி வகிட்டில் இட்டுக் கொண்டார். சீதையை அரசவைக்கு அழைத்துச் செல்ல ராமனின் சேவகனான அனுமன் இதை கவனித்தார். தாயே! உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா? என்று கேட்டார். சீதையும் கேள்! அனுமா! அப்படி என்ன கேட்கப் போகிறாய்? என்றாள். நீங்கள் ஏன் தினசரி உங்கள் நெற்றி வகிட்டில் செந்தூரத்தை வைத்துக் கொள்கிறீர்கள்? அதற்கான காரணம் என்ன? என்று கேட்டார்.
 
★என் கணவரான ஶ்ரீராமர் இவ்வுலகில்  நீடூழி வாழ வேண்டும் என்பதற்காகத்தான் அந்தச் செந்தூரத்தை எனது நெற்றி வகிட்டில் வைத்துக்  கொள்கிறேன் என்றாள் சீதை. அனுமன் சீதையை அரசவையில் விட்டு விட்டு, நான் இதோ வந்து விடுகிறேன் என்று கூறிவிட்டு சென்று விட்டார். இந்த அனுமன் எங்கு இவ்வளவு அவசரமாகச் செல்கிறான்? என்று  ஶ்ரீராமர், அன்னை சீதையிடம் கேட்டார். எங்கே என்று தெரியவில்லை. ஆனால், விரைவில் வருகிறேன் என கூறிச் சென்றான் என்று பதிலுரைத்தாள் அன்னை.
 
★சிறிது நேரம் கழித்து அந்த அரசவைக்குள் நுழைந்த அனுமனைப் பார்த்து அங்கிருந்த  அனைவரும் திடுக்கிட்டனர். பின் தங்களின் சிரிப்பை அடக்க முடியாமல் பலமாகச் சிரிக்க ஆரம்பித்தனர். அப்படி என்ன நடந்தது? தன் உடல் முழுவதும் செந்தூரத்தைப் பூசிக் கொண்டு
செந்நிற மேனியனாய் அனுமன்
அரசவைக்கு வந்ததுதான் அங்கு இருந்த அனைவரின் சிரிப்புக்கு காரணம்.
 
★ஶ்ரீராமரும் புன்னகை புரிந்து கொண்டே  அனுமா! இது என்ன கோலம்? என்று கேட்டார். அதற்கு அனுமன், அன்னை தன் நெற்றி வகிட்டில் வைத்துக் கொள்ளும் சிறு செந்தூரம், தங்களின் நீண்ட ஆயுளுக்கு வழி வகுக்கும் என்றால், நான் தங்களின் பரிபூரண ஆயுளுக்காக என் உடல் முழுவதும் செந்தூரத்தை பூசிக் கொண்டேன் என்றார்.
இனி தினமும் பூசிக்கொள்வேன் எனறும் கூறினார். இதைக் கேட்ட ராமனின் கண்கள் அனுமனின் பக்தியையும், அவனது வெகுளித் தனத்தையும் நினைத்து மிகவும் கலங்கியது. அனுமனை கட்டித் தழுவிக் கொண்டார்.
 
★யார் ஒருவர் இந்த செந்தூரம் பூசிய ராமபக்த அனுமனை தரிசனம் செய்யும் பக்தர்கள் சகல சௌபாக்யங்கள் பெற்று சிறப்பாக வாழ்வார்கள் என ஆசிர்வதித்தார். செந்தூரம் பூசிய அனுமனைத் தரிசனம் செய்து
பலன்களைப் பெறுவோம்.
 
ஜெய்ஶ்ரீராம்!
ஜெய்ஶ்ரீ ஆஞ்சநேயா!
 
நாளை. ..................
 
 
ஶ்ரீராம காவியம்
~~~~~
339/16-03-2022

ஶ்ரீராமநாம கதைகள்-19

பிரம்மா பதவிக்கு 
வரப்போகும் அனுமன்...

★ஶ்ரீராமர் தன் யுக காரியம் முடிந்த நிலையில் தன்னுடன் இருந்தவர்கள் எல்லோரையும்  வைகுண்டத்திற்கு அழைத்தார். அனைவரும் புறப்பட்டனர். ஆனால் அனுமன் மட்டும் வைகுண்டம் செல்ல சிறிதும் விரும்பவில்லை. 

★தான் இன்னும் சிறிது காலம் இந்த பூலோகத்தில் இருந்து கொண்டு, ராமரை தான் முதன் முதலில் சந்தித்த வினாடியில் இருந்து, ராம காரியத்தில் ஈடுபட்டு, பட்டாபிஷேகம் முடியும் வரை, ராமருடன் தான் கழித்த பொழுதுகளை அணு அணுவாக அசைபோட்டு ஆனந்திக்க விரும்புவதாகவும், ராம தாரக மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருக்க பூலோகம் தான் தகுதியான இடம் என்றும் ஆகவே தான் இங்கேயே இருக்க விரும்புவதாக ராமரிடம் கூறினார்.

★ராமர் இதை கேட்டதும் மிக்க மகிழ்ந்து ஆஞ்சநேயரை சிரஞ்சீவியாய் இருக்க ஆசீர்வதித்து,  மகேந்திரகிரி சென்று தவம் புரியுமாறு சொன்னார். அவருடைய தவத்திற்கு இடையூறு ஏதும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு பஞ்ச முகங்களை அருளி எத்திக்கிலிருந்தும் எந்த சோதனையும் ஏற்படாத வகையில் ஆஞ்சநேய, ஹயக்ரீவ, நரசிம்ம, கருட, ஆதிவராக மூர்த்திகளின் திரு முகங்களை சேர்த்து, அவர்களுடைய எல்லா சக்திகளையும் உனக்குத் தந்தேன்,  அடுத்து வரும் பிறவியில் நீ தான் பிரம்மா என்று சொல்லி ஆசிர்வதித்தார்.

★கலியுகம் முடிந்ததும் ஒரு யுகம் வரப்போகிறது அந்த யுகத்தில் ஆஞ்சநேயர்தான் பிரம்மா. அதற்காக அவர் தன்னை பக்குவப்படுத்திக் கொண்டு தவத்தில் ஈடுபடுத்திக்கொண்டு இருக்கிற இடம் தான் மகாபுண்ய பூமியான மகேந்திரகிரி.

★நாமும் பஞ்சமுக ஆஞ்சநேயரை தரிசித்து பயங்கள் விலகி ஶ்ரீராமர் மற்றும் ஶ்ரீஆஞ்சநேயர் அருள் பெற்று வாழ்வோம்

நாளை....................

ஶ்ரீராம காவியம்
~~~~~
340/17-03-2022

ஶ்ரீராமநாம கதைகள்-20

பக்த ராமதாஸ்...

★ஆந்திராவில் பத்ராசலம் என்றொரு இடத்தில் உள்ள ராமர் கோவில் மிகப் பிரபலம். அந்த ஊரை சிலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நவாப் தான் ஆண்டு வந்தான். தானீஷா என்பது அவன் பெயர். அவன் ஆட்சியில் கோபண்ணா என்பவர் பத்ராசலத்தின் தாசில்தாராக இருந்தார். அவர் ஶ்ரீராமனுடைய வரலாற்றை முழுவதுமாக படித்து, எப்போதும்  ராம நாமத்திலேயே இருப்பார். 

★இந்த கோபண்ணா தான் ராமர் கோவிலைப் புதுப்பித்துக் கட்டியவர். அதற்குப் பணம் தேவைப்பட்ட போது மக்களிடம் வரியாக வசூலித்த கட்டணம்  பொற்காசுகளாக இருந்தது. அந்தப் பொற்காசுகளை எல்லாம் அப்படியே ஶ்ரீராமர் கோவில் கட்ட செலவிட்டு விட்டார். இச்செய்தி அறிந்த தானீஷா தன்னிடம் அனுமதி வாங்காமல் வசூலித்த வரிப்பணத்தை எடுத்து எப்படி கோவில் கட்டலாம் என்று கேட்டு அவருக்கு 12 வருட சிறைத் தண்டனையை விதித்தான். 

★கோபண்ணா உடனே ராமனை எண்ணி உருகி அழுதார். அவர் இருந்த சிறையில் எப்போதும் ராமநாமத்தை சொல்லிக் கொண்டும், ராமரைப் பற்றிய கீர்த்தனைகள் பாடிக்கொண்டும் இருந்தார். இந்த நிலையில் ராமர் லட்சுமணனுடன், வேடர்கள் வடிவில் வந்தான். தானீஷாவைச் சந்தித்து கோபண்ணா சார்பாக அவர் கோவில் கட்ட செலவழித்த அவ்வளவு பொற்காசுகளையும் திரும்பக் கொடுத்தார். சுல்தான் தானீஷாவும் கோபண்ணாவை விடுதலை செய்தான். 

★பிறகு தான் தனக்காக வந்து தானீஷாவிடம் பொற்காசுகளை கொடுத்தது சாட்சாத் அந்த ராமனும் லட்சுமணனுமே என்பது கோபண்ணாவுக்கு தெரிந்தது. ராமபிரான் தன் பக்தர்களைக் காப்பாற்ற இப்படி பல சமயங்கள்  திருவிளையாடல் புரிந்துள்ளார். இன்றும் ஆந்திராவில் உள்ள ஒரு மியூசியத்தில் ஶ்ரீராமர் நவாப்பிடம் கொடுத்த அந்த பொற்காசுகள் நவாப்பின் பொற்காசுகள் என்ற பெயரில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.  

★இன்னொரு சமயத்தில் ஶ்ரீராம பக்தர்கள் பற்றி எழுதும்போது பக்த ராமதாஸைப் பற்றி மிக விரிவாக எழுத உள்ளேன். இந்த பதிவுடன் பத்ராசலம் ஶ்ரீராமர் கோவில் படமும், ராமதாஸின்
சில கீர்த்தனைகளையும் இணைத்துள்ளேன்.

நாளை.......................

ஶ்ரீராம காவியம்
~~~~~
341/18-03-2022

ஶ்ரீராமநாம கதைகள்-21

ஆயிரம் நாமங்களுக்கு 
சமம் இது!...

★சகஸ்ரநாமம் என்றால், அது விஷ்ணு சகஸ்ரநாமம்தான். அதற்குப்பின்தான்,  மற்றுமுள்ள  அனைத்து தெய்வங்களின் சகஸ்ரநாமங்கள் என முன்பே நாம் பார்த்துள்ளோம். ஆனால், விஷ்ணு சகஸ்ரநாமத்தை தினமும் சொல்வதென்றால், குறைந்தது, அரைமணி நேரம் ஆகும். (நிறுத்தி நிதானமாகச் சொல்ல வேண்டும்). எனக்கு நேரமில்லை என, சாக்கு போக்கு சொல்லக்கூடாது. 

★இதை நன்கு உணர்ந்த பார்வதி தேவி, இது பற்றி சிவபெருமானிடம் கேட்டாள். 'சுவாமி' விஷ்ணு சகஸ்ரநாமம் தினமும் முழுமையாக சொல்ல முடியாதவர்கள், எளிதாக பாராயணம் செய்வதற்கு ஒரு வழி சொல்லுங்கள்  எனக் கேட்டாள்.  பார்வதி! ‘ராம ராம ராம’ என, மூன்று முறை சொன்னாலே, ஒருவனுக்கு தினமும், விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்த பலன் கிடைக்கும் என பதில் அளித்தார் சிவபெருமான். 

★ ராம ராம ராம என மூன்று முறை சொன்னால், எப்படி ஆயிரம் நாமத்துக்கு சமமாகும் என, சந்தேகம்வரும்., அதற்கு கணித அடிப்படையில் பதில் உள்ளது.  எழுத்துக்களுக்கு இணையாக எண்கள் உள்ளன. "ர" என்ற எழுத்துக்கு எண் 2ம், "ம" என்ற எழுத்துக்கு எண் 5ம் ஆகும். மேலே சுலோகத்தில் "ராம" என்ற நாமம் மூன்று முறை வருகின்றது.அதாவது 2X5 2x5 2x5. என்றால் 2X5=10x2=20x5 =100x2=200x5=1000 ஸஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே. இதுதான் ராம நாமத்தின் அற்புதம்.

 ★அதனால் தான், ராம ராம ராம என்ற சொன்னால், விஷ்ணு சகஸ்ரநாம பலன் கிடைக்கும்.
தினமும் ஶ்ரீவிஷ்ணு சகஸ்ர நாமத்தில் வரும்
"ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே 
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே"
 என்ற இந்த சுலோகத்தை தினமும் குறைந்தது, 11 முறை சொல்லுங்கள், வீட்டில் சுபிட்சம் தேடி வரும். 

நாளை....................

ஶ்ரீராம காவியம்
~~~~~
342/19-03-2022

ஶ்ரீராமநாம கதைகள்-22

ராம நாமத்தால் 
வந்த மதிப்பு...

★தஞ்சாவூர் அருகே உள்ள கிராமத்தில்‌ லக்ஷ்மி என்பவர்  வசித்துவந்தார். மிக இளம் வயதிலேயே திருமணம் நடந்து ஐந்து வயதிலேயே கணவரையும் இழந்துவிட்டார். விவரம் தெரிவதற்குள் வாழ்க்கையை இழந்துவிட்ட அந்தப் பெண்ணை எல்லோரும் துக்கிரி என்றும் அதிர்ஷ்டம்‌ கெட்டவள் என்றும் அழைக்கத் துவங்கினர். வீட்டை விட்டு எதற்காகவும் வெளியே வர இயலாது. அவரின் பெற்றோர் இருந்தவரை, அவளைப் பார்த்து, கண்ணீர் வடித்துக்கொண்டே, அவளைக் காப்பாற்றி வந்தனர். நாளடைவில் பெற்றோரும் காலகதியை அடைந்துவிட்டனர்.

★ஆதரவற்ற ஒரு நிலையில் நிராதரவாக இருக்கும் அவரின் உறவினருக்கு உணவிடும் பழக்கம் இருந்ததால், அந்த தூரத்து உறவினர், லக்ஷ்மிக்கு வேண்டியதை அவள் வீட்டிற்கே அனுப்பிவிடுவார். யாரும் இல்லை. பேசவும் ஆளில்லை. வெளியிலும் போக முடியாது. போனாலும் யார் கண்ணிலாவது பட்டுவிட்டால் 'துக்கிரி' என்று திட்டுவார்கள். அவர்கள் செல்லும் காரியம் இவளைப் பார்த்ததால்  கெட்டுவிடும் என்று நினைக்கும் சமூகக் கட்டமைப்பு. 

★அவள் விடியும்‌முன்பே சென்று காவிரியில் ஸ்நானம் செய்து விட்டு வந்து வீட்டிற்குள் புகுந்து கொள்வாள். அவளுக்கு பொழுது போகவில்லை என்றால்,  தாயும் தந்தையும் தனக்கு சிறு வயதில் சொன்ன கதைகளிலும், மற்றும் ஸ்லோகங்களிலும் மூழ்கி விடுவாள். அவளுக்கு ஶ்ரீ ராம நாமம் மிகவும்‌  பிடித்த ஒன்றாக இருந்தது. 

★வீட்டில் ஒரு ஊஞ்சல் இருந்தது. அதில் அமர்ந்து ஆடிக்கொண்டே அனவரதமும் ராம நாமத்தைச் சொல்லத் துவங்கினாள். சில நாட்கள் சொன்னதும், நாமம் அவளைப் பிடித்து க் கொண்டது. பொழுது போகாதபோதெல்லாம் நாமம் சொல்லிக் கொண்டிருந்த அவள், எப்போதுமே  ராம நாமம் சொல்லத் தொடங்கினாள். 
ஆயிரம் நாமம் ஆனதும், வீட்டுச் சுவற்றில் கரிக்கட்டையால் ஒரு சிறிய கோடு கிழித்து வைப்பாள்.
இப்படியாக வீட்டுச் சுவரில் இடமே இல்லாத அளவுக்கு நாமத்தைச் சொல்லி சொல்லிக் கோடு கிழித்து வைத்திருந்தாள்.

★இப்படியே அவளுக்கும் வயதாகியது. அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகள் சில இவளைத் தேடி வரத் துவங்கின. அவர்களுக்கு தனக்குத் தெரிந்த  கதைகளும், பாட்டும் சொல்லிக் கொடுத்தாள்.   ஒருநாள் ஒரு குழந்தை அழுதுகொண்டே இருந்தது.  ஏம்மா அழற? என்று அந்தக் குழந்தையிடம் கேட்டாள்.
அப்பாவுக்கு உடம்பு சரியில்ல பாட்டி.  அவர்  பிழைக்கவே  மாட்டார்னு அந்த வைத்தியர் சொல்றாராம். அம்மா அங்கு அழுதுண்டே இருக்காங்க..

★சரி, அழாத.. இங்க வா!..
ராம நாமத்தை விடப் பெரிய மருந்தே இல்ல. உங்கப்பா நல்லா பூரணமாக குணம் அடைய  நான் ஜபம்‌ பண்ணி  வெச்சிருக்கற நாமத்திலேர்ந்து 1000 நாமா கொடுத்தேன்னு போய்ச் சொல்லு. சரியாப் போயிடும் 
என்று சொல்லி ஒரு கோட்டை அழித்தாள்.  சரி!  பாட்டி 
என்று கண்ணைத் துடைத்துக் கொண்டு ஓடிய குழந்தை சற்று நேரத்தில்  தாயுடன திரும்பி வந்தது.

★ அந்தக் குழந்தையின் தாய் ஓடிவந்து பாட்டியின் காலில் விழுந்து உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. நீங்க நாமா கொடுத்தேள்னு குழந்தை சொன்னதும் மாசக் கணக்கா படுத்த படுக்கையா இருந்தவர் சட்டுனு எழுந்து உக்காந்துட்டார். வைத்தியரும் எல்லா நாடியும் சுத்தமா இருக்கு. இனி வியாதியே வராதுன்னு சொல்லிட்டு போயிட்டார்  என்று ‌கூறி மீண்டும் மீண்டும்‌ அவரை நமஸ்காரம் செய்தாள்.  இந்த 
விஷயம் காட்டுத் தீ போல் ஊர் முழுதும் பரவியது.

★ யார் கஷ்டம் என்று வந்தாலும் தான் ஜபம் செய்து வைத்த நாமத்தின் சிறு பகுதியைக் கொடுத்து அவர்கள் கஷ்டத்தைப் போக்கி விடுவாள் பாட்டி. தான் கொடுத்ததை அன்றே ஜபம் செய்து சமன் செய்து விடுவாள்.
யார் எதிரில் வந்தால் அபசகுனம் என்று நினைத்துக் கரித்துக் கொட்டினார்களோ, அந்த துக்கிரிப் பாட்டி வராமல் ஊரில் ஒரு நிகழ்ச்சியும் நடப்பதில்லை.
துக்கிரிப் பாட்டி மாங்கல்யம் எடுத்துக் கொடுத்தால்தான் திருமணம், அவள் வந்தால்தான் க்ருஹப்ரவேசம் எல்லாம்.

அதிர்ஷ்டமில்லாதவள் என்று அனைவராலும் ஒதுக்கப்பட்ட ஒருவரை அனைவைரும் வரவேற்கும்படி செய்தது எது?
அவளைப் பிடித்துக்கொண்ட ராமநாமமன்றோ?

ஸ்ரீ ராம ஜெயம் !! ஶ்ரீராமஜெயம்!!

நாளை.........................

ஶ்ரீராம காவியம்
~~~~~
343/20-03-2022

ஶ்ரீராமநாம கதைகள்-23

சீதம்ம மாயம்ம தியாகராஜர் கீர்த்தனை...

★தியாகராஜர் தனது வீட்டு திண்ணையில் அமர்ந்து ராம ஜபம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு வயதான தம்பதிகள் மற்றும் அவர்களின் ஒரு உதவியாளர் உட்பட மூவர் அங்கு வந்து அவரிடம் பேச ஆரம்பித்தார்கள். நாங்கள் வடக்கே ரொம்ப தூரத்திலிருந்து நடைப்பயணமாய் கோவில்களை தரிசனம் செய்து கொண்டு வருகிறோம். அடுத்து நாங்கள் ராமேஸ்வரம் செல்ல வேண்டும். இன்று இருட்டி விட்டது. ஆகவே இன்றிரவு  மட்டும் உங்களது வீட்டு திண்ணையில் தங்கிவிட்டு காலை பொழுது விடிந்ததும் சென்று விடுகிறோம். தயவு செய்து அனுமதி கொடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். 

★தியாகராஜர் தனது இரு கரங்களையும் கூப்பி அவர்களை வணங்கி வரவேற்றார். இன்று இரவு நீங்கள் இங்கேயே தங்கிக் கொள்ளலாம். இரவு உணவிற்கு ஏற்பாடு செய்கிறேன் இங்கேயே நீங்கள் திருப்தியாக சாப்பிடலாம் என்று சொல்லி அவர்களை அமர வைத்தார். தனது மனைவியை அழைத்து இவர்கள் குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து விட்டு இவர்கள் சாப்பிடுவதற்கு இரவு உணவை ஏற்பாடு செய்துவிடு என்றார். 

★வீட்டில் இரண்டு பேர்களுக்கு போதுமான அரிசியே இல்லை. இப்போது ஐந்து பேர்களுக்கு உணவு தயாரிக்க வேண்டும் என்றால், அரிசிக்கு என்ன செய்வது என்று சிந்தித்தாள். பக்கத்து வீட்டுக்கு சென்று சிறிது அரிசி வாங்கி வரலாம் என்று நினைத்தவள், வந்தவர்களுக்கு தெரியாதவாறு அரிசி வாங்கிவர பாத்திரத்தை எடுத்து யார் கண்ணிலும் படாமல் தனது புடவையால் மறைத்தவாறு அங்கிருந்து வெளியே வந்தாள். இதனை கவனித்த முதியவர் அவளை தடுத்து நிறுத்தினார். 

★அம்மா! எங்களுக்காக நீங்கள் சிரமப்பட வேண்டாம். எங்களிடம் வேண்டிய அளவு தேனும் தினைமாவும் இருக்கிறது. இரண்டையும் பிசைந்து, ரொட்டி தட்டி நாம் அனைவரும் சேர்ந்தே சாப்பிடலாம் என்றார். அவளின் மனதை படம் பிடித்து காட்டியது போன்று பேசியவரை மிகுந்த வியப்புடனும், கூச்சத்துடனும், தர்மசங்கடத்துடனும் பார்த்தாள். தேனும் தினைமாவும் அடங்கிய ஒரு சிறிய பையை அவளிடம் கொடுத்தார் முதியவர். தயக்கத்துடன் அதனை பெற்று கொண்டவள், ரொட்டியை செய்து முடித்தாள். அனைவரும் சாப்பிட்டு முடித்தார்கள்.

★தியாகராஜர் அவர்களுடன் விடிய விடிய பேசிக் கொண்டு இருந்து விட்டு, ஒரு கட்டத்தில் உறங்கி போனார். பொழுது விடிந்தது. காலைக் கடன்களை முடித்து விட்டு கூடத்தில் அமர்ந்து வழக்கம் போல ராம நாமத்தை உரக்க செபித்துக் கொண்டிருந்தார் தியாகராஜர். அப்போது அவருக்கு எதிரே வந்த விருந்தினர்கள் மூவரும், ஐயா! நாங்கள் விடை பெறுகிறோம். இங்கே தங்க இடம் கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி என்று கூறி மூவரும் கிளம்பினார்கள். 

★தியாகராஜர் அவர்களை வழியனுப்ப அவர்களுடன் வாசலுக்கு வந்தார். அவர்கள் மூவரும் வாசலைக் கடந்து தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் செல்வதை கண் இமைக்காமல் பார்த்தவாறு நின்றிருந்த தியாகராஜரின் கண்களில் சட்டென்று ஒரு தெய்வீக காட்சி தெரிந்தது. இப்போது அந்த வயோதிகர் ஸ்ரீ ராமனாகவும் அந்த மூதாட்டி சீதையாகவும் அந்த உதவியாளராக வந்தவர்  அனுமனாகவும் தோற்றமளிக்க அவருக்குள் இனம் புரியாத ஒரு பதை பதைப்பு ஏற்பட்டது. கண்களில் நீர் சுரக்க, தன்னை மறந்து பக்தி பரவசத்தில் ஆனந்த கூத்தாடினார் தியாகராஜர்.

★ஶ்ரீ ராமா! என் தெய்வமே! தசரதகுமாரா! ஜானகி மணாளா! நீயா என் இல்லத்துக்கு வந்தாய்? என்னே! நாங்கள் செய்த பாக்கியம்.  அடடா! வெகு தூரத்திலிருந்து நடந்து வந்ததாய் என்று சொன்னாயே, உன் காலை பிடித்து அமுக்கி உன் கால் வலியை போக்குவதை விட்டு, உன்னை தூங்க விடாமல் விடிய விடிய பேசிக்கொண்டே இருந்தேனே. மகாபாவி நான், என் வீட்டில் உண்ண உணவு கூட இல்லை என்று அறிந்து கொண்டு ஆகாரத்தை கொண்டு வந்து, ஒரு தாய் தந்தையாய் இருந்து எங்கள் பசியையும் போக்கினாயே! உனக்கு அநேக கோடி நமஸ்காரம்! என்று நடு வீதி என்பதையும் மறந்து கண்ணீர் மல்க கதறி அழுதார் 

★தியாகராஜர். அப்போது அவர் 'சீதம்ம மாயம்ம' என்ற மிக அருமையான கீர்த்தனையை அவரையும் அறியாமல் பாட ஆரம்பித்தார். எல்லாம் ராம மயம்! இந்த ஜகமெல்லாம் ராமமயம்.!. ராம ராம.

★இந்த 'சீதம்ம மாயம்ம' என்கிற கீர்த்தனையை இங்கு பதிவு செய்துள்ளேன்.  திருமதி MS , 
திரு பாலமுரளி கிருஷ்ணா, 
திரு ஜேசுதாஸ் ஆகிய மூன்று தெய்வீக இசைக் கலைஞர்கள் அந்தக் கீர்த்தனையைப் பாட நம் செவி குளிர கேட்போம்.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.

நாளை.................
ஶ்ரீராம காவியம்
~~~~~
344/21-03-2022

ஶ்ரீராமநாம கதைகள்-24

மின்சாரம் பாயும் நாமம்
ஸ்ரீ ராம நாமம்!... 

★நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே "ராம" என்ற இரண்டு எழுத்தினால்.

★விஷ்ணு அவதாரத்தில் சிறந்தது ராம அவதாரம் என்பது உண்மை. மகா பெரியவா கூறுவது, ராமன் என்றாலே இன்பத்தைத் தருபவன் என்று அர்த்தம்.  அவர் எந்தவித  துன்பத்திலும் ஆனந்தமாக இருப்பார். ஸ்ரீராமரைவிட ராம நாமம் மிகச் சிறப்பானதாகவும், பெரிதாகவும்  கருதப்படுகிறது. எப்படி என்று பார்ப்போம். 

★ராம நாமத்தை மூன்று முறை ஆழ்ந்த பக்தியுடன் ஜபித்தால், அவர்களுக்கு அனைத்துவித மோட்சமும் நிச்சயம் உண்டு. இதுபற்றி சிவபெருமான் என்ன சொல்கிறார் தெரியுமா? எல்லா  வார்த்தைகளையும் விட ராம நாம ஜபம் ஒன்றுதான் மிகவும் இனிமையானது. அவரின்  பெயரைச் சொல்வது என்பது விஷ்ணுவின் ஆயிரம் பெயர்களைச் சொல்வதற்குச் சமம் என்று  கூறுகிறார். ராம நாமம் தான் உலகின் எல்லா மந்திரங்களுக்கும் மூத்த மூல மந்திரம் என்று கம்பனால் புகழப்படுகிறது. இந்த நாமத்தை ஜெபிப்பவரால் உடலில் மின்சார சக்தி  பாய்ந்து இன்பத்தைக் கொடுக்கும்.

★சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாக பிரம்மம் என்று போற்றப்படும் தியாகராஜ சுவாமிகள் ஒரு சிறந்த இசை ஞானியாக விளங்கியவர். இவர் தந்தை ராமபிரம்மம், ராமரின்   மிகப்பெரிய பரம பக்தர் ஆவர். ஜோதிட முறையில் (DNA Astro) தந்தை வழியாக  ராமரின் நாம உச்சரிப்பு  தியாகராஜரின்  சரீரத்துக்குள் வந்து விட்டது. இவர்  இளமையிலேயே ஸ்ரீராமர் விக்கிரகங்களை வைத்துப் பூஜை செய்து மற்றும் அவர் நாமத்தை உச்சரிப்பதுமாய் வாழ்ந்து வந்தார். 

★பின்பு ராமகிருஷ்ண யதீந்திரர் என்ற மகான்  வந்து ஶ்ரீ ராம நாமத்தை 96 கோடி முறை ஜெபிக்கும்படி தியாகராஜரிடம் கூறிச் சென்றார். அவர் சொன்னதை தெய்வ வாக்காக எடுத்து அப்புனித சொல்லை 21 ஆண்டுகளில்  96 கோடி முறை அவர் ராம நாமம் சொல்லி முடித்தார். சராசரியாக ஒரு நாளைக்கு 125,000 முறை ராமநாமத்தைச் ஜபித்ததாகவும் பலமுறை ராம தரிசனத்தைப்  பெற்றதாகவும் கூறப்படுகிறது.

★இந்து முறைப்படி நாம் செய்யும் தர்ப்பண மந்திரத்தாலும் ராமனின் பெயரை உச்சரித்து நாம் செய்த பாவத்தை ஸ்ரீ ராம நாம மந்திரம் மூலமாக கழிந்து பரிசுத்தமாக்கப்படுவான் என்று வேத சாஸ்திரத்தில் சொல்லப் பட்டுள்ளது.

ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யாப்யந்தர: சுசி:
மானஸம் வாசிகம் பாபம் ஸகுபார்ஜிதம்
ஸ்ரீ ராம ஸ்மரணேனைவ வ்யபோஹதி ந ஸம்சய:

ஸ்ரீ ராம ராம ராம

★எல்லா கடவுளரின் சஹஸ்ர நாமங்களுக்கும் ஆதியான சஹஸ்ரநாமம் விஷ்ணு சஹஸ்ர நாமம் என்று கூறப்படுகிறது. "ராம நாமத்தை மூன்று முறை ஆழ்ந்த பக்தியுடன்  ஜபித்தால், விஷ்ணு சஹஸ்ர நாமத்தை அல்லது கடவுளின் விஷ்ணு சஹஸ்ர நாமாவளியை படித்த பலன் கிடைக்கும். 

★தினமும் மூன்று தடவை ராம நாமத்தை ஜபிப்பதும் மிக சுலபம். விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் சிவ பெருமானே ராமன் புகழ் பாடும் ஒரு பலஸ்ருதி ஸ்லோகம் வருகிறது. 
இந்த ஸ்லோகத்தைப் படித்தால் சஹஸ்ரநாமத்தை முழுக்கப் படித்த பலன் உண்டு என்பது சிவபெருமானின் சூட்சம கூற்று..

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே!
ஸஹஸ்ரநாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே!!

★வால்மீகி ராமாயணம் என்கிற காவியத்தை எழுதுமளவுக்குப் புலமை பெற்றதே "ராம" என்ற நாமத்தை ஜபித்ததால் தான். இங்கும் ஆஞ்சநேயர் ராம நாமத்தை ஜெபித்து  எவ்வாறு வெற்றி வாகை சூடுகிறார் என்பது இந்த காவியத்தில் விளக்கப்பட்டுள்ளது. நாம் செய்யும் அதாவது நம்முடைய ஏழு பிறவிகளில் செய்த தீவினைகளைப் பொடிப் பொடியாக்கும்  இந்த நாமாவளி. ஸ்ரீராமன் கையினால் மரணம் சம்பவித்தால் அவர்களுக்கு நேரடி மோட்சம்தான் என்று  சூட்சகமாக உணர்த்துகிறது இந்த ராமாயணம். 

★அதேபோல் மஹாபாரதத்தில் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் பொழுது "ராம" நாமத்தை மட்டும் உயர்வானது என்பதையும் ராமாயணம் சுட்டிக் காட்டுகின்றார். ராம நாமத்தைச் சொல்லாதவன் எல்லாம் இருந்தும் இல்லாதவனாகக் கருதப்படுகிறது. ராம என்கிற இரண்டெழுத்தின் மந்திரத்தில் ஜபித்து முன்ஜென்ம பாவத்தில்  விடுபட்டு, எல்லாவித செல்வதை அடைந்து, தர்மத்தில் உயர்வு பெற்று, முக்தி என்ற ராமர் பாதம் அடைய ராம நாமம் ஜெபிப்போம்.

★ராம நாமத்தைச் சொல்வதில் எத்தனை இன்பம். அந்த நாமம் பிறர் சொல்லக் கேட்பதும் ஓர் இன்பம். பிறர் சொல்வதைப் பார்பதுவும் பேரின்பமே ஆகும். 
ராமநாமம் என்னும் பாயசத்தில் கிருஷ்ண நாமம் என்னும் சர்க்கரையை கலந்து அத்துடன் விட்டல நாமமென்னும் நெய்யை நன்கு கலந்து வாய் முழுவதும் இனிமையாய் சொல்லுங்கள் என்கிறார் புரந்தரதாசர். அந்தப் பாடலையும்  பதிவிட்டுள்ளேன்.
திருமதிகள் பிரியா சிஸ்டர்ஸ் பாடியுள்ளார்கள்.  ஏ ராமா! நீ நாம ஏமி ருசிரா! என்கிற பத்ராசல ராமதாஸ் அவர்களின் பாடலை திரு பாலமுரளி கிருஷ்ணா , மாஸ்டர் ராகுல் வெள்ளால் ஆகிய இருவரும் பாடி உள்ளார்கள்.

★ இந்த ராம நாமத்தை எப்பொழுதும்  ஜபிக்கலாம் எந்த ஒரு விபத்தும் தீமையும் நடைபெறாது என்பது என் தந்தை எனக்கு சொன்ன உபதேசம்.

நாளை......................

ஶ்ரீராம காவியம்
~~~~~
348/25-03-2022

ஶ்ரீராமநாம கதைகள்-28

அனுப்பியவர்:-
திருமதி S. விஜயலக்ஷ்மி
ரெட்டியார்பாளையம்
பாண்டிச்சேரி.
Ph: 8870514289

ராமாயண 
கதாபாத்திரங்கள்...1

★ராமாயணத்தில் இடம்  பெற்ற   69 கதாபாத்திரங்களை  மனதில்  நினைத்துக் கொண்டு வாழ்வை 
 பயனுள்ளதாக செய்வோம்
 பகவான் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பல அவதாரங்களில் குறிப்பாக அவரின் முக்கியமான பத்து (10) அவதாரங்களில் ஸ்ரீராமர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர், ஶ்ரீ ந்ருசிம்ஹர் ஆகிய மூன்று அவதாரங்கள் மிகவும் அதீதமாக இவ்வுலகில் பெரியோர்களால் போற்றப்பட்டு வருகின்றன

★அதிலும் இந்துமத இதிகாச காப்பியங்களில் பிரதானமான ஶ்ரீமத் ராமாயணத்தில் இடம் பெற்றுள்ள‍ ஒருசில முக்கியமான கதாபாத்திரங்களையும் (மகரிஷி வால்மீகி உட்பட) தமிழில் அதை காவியமாக தந்த கம்பன் என கிட்டதிட்ட  69 பாத்திரங்களை பற்றிய சிறு விளக்கம்.
முதலில் அகல்யையில் இருந்து ஆரம்பிப்போம் (அ ஆ இ க கா கு ... ச சா என்ற தமிழ் எழுத்து வரிசையாக காண்போம்)

1. அகல்யை (Agaligai)

ராமாயண காலத்துக்கு முந்தய கால கௌதம முனிவரின் மனைவி இந்திரனால் அதிகாலை வேளையில் ஏமாற்றி வஞ்சிக்கபட்டு தன் நிலையை இழந்ததால் கணவரான கௌதம முனிவர் கல்லாக போகுமாறு சாபம் இட  பின்னர் ராமாயண காலத்தில் மிதிலாபுரி செல்லும் வழியில் ஶ்ரீராமரின் ஶ்ரீபாததுளி அருளால் கல்லான சாபம் நீங்கப்பெற்றவள். இதிகாசம் கூறும் பஞ்சபதிவிரதைகளில் முதன்மையானவள் 

2. அகத்தியர் (Agathiar)

குள்ளமான முனிவர் சகல வேத அஸ்த சாஸ்திரங்கள் அறிந்தவர் இவர் ராமனுக்கு ஶ்ரீராம ராவண யுத்தம் நடந்த  போர்க்களத்தில் ஶ்ரீராமனுக்கு ஆதித்ய ஹ்ருதயம் உபதேசித்த மாமுனிவர்

3. அகம்பனன் (Agambanan)

இவன் பாத்திரமும் முக்கியமான ஒன்று. காரணம், ராவணனிடம் ராமனைப்பற்றி தவறாக கோள் சொன்னவன் அதை நம்பியே ராவணன் ராமரை குறைத்து மதிப்பிட்டு அரக்க வம்சமே அழிய காரணமானான். கோள் சொன்ன காரணம் ராமனின் அம்புக்கு முன்பு  ஒருமுறை தப்பிப் பிழைத்து வந்த அதிசயமான ராட்சஷன்

4. அங்கதன் (Angathan)

வானர அரசன் மகாபலவானான வாலிக்கும் அவன் மனைவி தாரைக்கும் பிறந்த மகன் கிஷ்கிந்தையின் இளவரசன் 
ராம ராவண யுத்தத்தில் ஶ்ரீராமனுடன் சேர்ந்து ராவண சேனையை துவம்சம் செய்தவன் ஶ்ரீராமனின் அன்புக்கு மிகவும்  பாத்திரமானவன்

5. அத்திரி (Aththri)

இவர் ஒரு மகரிஷி. அனுசூயா என்ற பத்தினியின் கணவர். அந்த பத்தினியின் காரணமாக ஶ்ரீராம தரிசனம் பெற்றவர்

6. இந்திரஜித் (Indrajith)

இலங்கை வேந்தன் ராவணனின் மகன் இந்திரனையே போரிட்டு ஜெயித்ததால் இந்திரனை ஜெயித்தவன் என்ற அர்த்தத்தில்  இந்திரஜித் என எல்லோராலும் அழைக்கப்பட்டான்.  ஶ்ரீராம ராவண யுத்தத்தில் தன் தந்தைக்காக போரிட்ட போது அயோத்தி இளையவர் ஶ்ரீலட்சுமணனால் அழிந்தவன் இவனுக்கு மேகநாதன் என்ற பெயரும் உண்டு 

7. கரன் & தூஷணன் (Karan Dooshanan)

இலங்கை வேந்தன் ராவணனின் இனிய தம்பிகள்.  தன்னுடைய  மூக்கையும் மற்றும்  காதையும் லட்சுமணனால் துண்டிக்கபட்ட சூர்பனகை தூண்டலால் ஶ்ரீராமனுடன் போரிட்டு அவர் கையால் அழிந்தவர்கள். ஜனஸ்தானம் என்ற இடத்திற்கு அதிபதிகள்

8. கபந்தன் (Gabandhan)

இந்த அசுரன் (கந்தர்வன், ஆனால் சாபம் ஒன்றால்) தலையும் காலும் இல்லாத அரக்கனாக அலைந்தான் 
கானகத்தில் ஶ்ரீராமன் இருந்த போது அவருக்கு தொல்லை கொடுக்க, ஶ்ரீராமனாலேயே வதைக்கப்பட்டவன்.  பின்னர் இவனே கந்தர்வ வடிவம் பெற்று ராம லட்சமணர்கள் கிஷ்கிந்தை செல்ல வழி காட்டியவன்

9. குகன் (Kugan)

இவன் வேடர் தலைவன் ஆவான். கங்கைகரை படகோட்டி. ஶ்ரீராமர், லட்சுமணர், தாயார் சீதா ஆகியோர் கங்கையை கடக்க உதவியதால் ஶ்ரீராமரால் ஐந்தாவது சகோதரனாக ஏற்றுக் கொள்ள‍ப்பட்ட‍வன்

10. கும்பகர்ணன் (Kumbakarna)

இலங்கை வேந்தன் ராவணனின் தம்பி. பிரம்மனிடம் கேட்ட  ஒரு வரத்தில் ஏற்பட்ட சிறு தவறால் ஆறுமாதங்கள் சாப்பிட்டும், மீதமுள்ள‍ ஆறுமாத காலங்கள்  தூங்கியும்   பொழுதைக் கழித்தவன். செஞ்சோற்றுக் கடனுக்காக மகாபாரத்த்தில் உயிரை விட்ட கர்ணனுக்கு, செஞ்சோற்று கடனை கழிப்பது எப்படி என  வழிகாட்டிவன்

11. கும்பன் (Kumba)

இவனும் இலங்கையின் இளவரசன். ஆனால் மேலே சொன்ன கும்பகர்ணனின் மகன். இவனும் தந்தையை போலவே ராம ராவண போரில் ராமரால் அழிக்கப்பட்டவன்

12. குசத்வஜன் (Kusathvajan)

பகவான் ஶ்ரீராமரின் மாமனாரும் சீதாதேவியின் தகப்பனாருமான ஶ்ரீஜனகரின் தம்பி அதாவது பரத சத்ருக்கனர் ஆகியோரின் மனைவிகளான மாண்டவி, சுருதகீர்த்தி ஆகியோரின் தந்தை ஆவார்.

13. கவுசல்யா, கைகேயி சுமித்திரை (Kowsalya, Kaikeyee, Sumithra)

இவர்கள் முறையே ஶ்ரீராம பரத லட்சுமண சத்ருக்கன் ஆகியோரின் தாயார்கள். அயோத்தி மாமன்னர் தசரதரின் மூன்று திவ்யமான பட்டத்து அரசியர். இதில் இளைய மனைவியான கைகேயி ஒருமுறை போரில் தசரதனுக்கு தேர் சாரதியாக இருந்து தேரை திறமையாக செலுத்தி  அவரின் வெற்றிக்கு காரணமாக இருந்ததால், அகம் மகிழ்ந்த தசரதன் கைகேயிடம் இரண்டு வரம் தருவதாக கூற கைகேயி, அதை தனக்கு வேண்டும் பொழுது கேட்டு பெற்று கொள்வதாக கூறினாள்.
பிறகு ஜானகியை மிதிலையில் ஶ்ரீஜனக மன்னனிடம் இருந்து கன்னிகாதானமாக பெற்று கைபிடித்து அயோத்திக்கு அழைத்து வந்த ஶ்ரீராமனுக்கு, தசரதர் பட்டாபிஷேகம் செய்ய எண்ண கைகேயி, ஶ்ரீராமன் பூவுலகில் பிறந்த காரணத்தை முற்றிலும் அறிந்தவளாக தன் தோழி மந்தரை போதனையாக ஏற்றாள். 

மன்னனான தசரதனிடம் ஸ்வாமி தற்போதைய இளவரசனான ஶ்ரீராமன் இன்று முதல் 14 ஆண்டுகள் கானகம் செல்லவும், 
அவருக்கு பதிலாக தன் மகன் பரதன் ராஜாவாக அயோத்தி நாட்டை ஆளவேண்டும் என முன்பு போர்களத்தில தருவதாக சொன்ன இரண்டு வரமாக, இப்போது கேட்க அப்போதே அந்தக்ஷணமே ராமாயண காவியத்தின் கதை தொடங்க காரணமான இருந்த ஶ்ரீராமனுக்கு பிரியமான தாய் இந்த கைகேயி.

கைகேயி இல்லையேல் ராமாயண கதை இல்லை என்னும்படியாக முக்கிய மனுஷி. ஆனால் தான் பெற்ற மகனால் முற்றிலும் வெறுப்கப்பட்டவள்

14. சுநைனா (Sunaina)

மிதிலை மன்னர் ஶ்ரீஜனகரின் மனைவி. அன்னை சீதையின் தாய்.  ஶ்ரீராமனின் மாமியார்.

15. கௌதமர்  (Gowthamar)

கல்லாகி ஶ்ரீராமர் கால் தூசிபட்டு மீண்டும் பெண்ணான கற்புக்கரசி ஶ்ரீஅகல்யையின் கணவர். பெரிய முனிவர். 
இஷ்வாகு குல ஆசாரியர் 


நாளை.....................

ஶ்ரீராம காவியம்
~~~~~
349/26-03-2022

ஶ்ரீராமநாம கதைகள்-29

அனுப்பியவர்:-
திருமதி S. விஜயலக்ஷ்மி
ரெட்டியார்பாளையம்
பாண்டிச்சேரி.
Ph: 8870514289

ராமாயண 
கதாபாத்திரங்கள்...2
(நேற்றைய தொடர்சி)


16. சதானந்தர் (Sadhanandha)

மேலே சொன்ன அகல்யை மற்றும் கவுதமரின் மகன்.
இவர்தான் மிதிலையில் ஶ்ரீராம சீதா கல்யாணத்தை நடத்தி வைத்த புரோகிதர்

17. சம்பராசுரன் (Sambrasoora)

மகா பெரிய வீரன். அசுரன். ஒருமுறை இவனுக்கும் தேவர்களுக்கும் நடந்த போரில் இந்திரன் வேண்டுதலை ஏற்று தசரதர் அவனை அழித்து தேவர்களுக்கு வெற்றிகிட்ட உதவினார்

18. சபரி (Sabari)

நல்ல தவசி. ஶ்ரீமதங்க முனிவரின் மாணவி. சிறந்த சிஷ்யை. முனிவரின் ஆக்ஞை படி பல ஆண்டுகள் காத்திருந்து பகவான் ராமனை தரிசித்தவள். தான் உண்ட எச்சில் பழத்தை பகவானுக்கு பிரசாதமாக சமர்பித்து மோட்ச்தை அடைந்தவள்

19. சதபலி (Sadhabali)

சுக்ரீவனின் வானர சேனையில் ஹனுமனை போன்ற வீரன். இவன் ஶ்ரீராம தூதனாக ஹனுமன் தென் திசையில் தாயாரை தேட செல்ல அதே தூதனாக இவர் வடதிசையில் சீதையை தேடச்சென்றவன்

20. சம்பாதி (Sambadhi)

இலங்கை வேந்தன் ராவணன் சீதையை சிறைபிடித்து சென்ற போது, அவனை எதிர்து கடுமையாக போரிட்ட ஒரே ஜீவனான பறவை அரசனான, சிறந்த மனிதாபிமானம் கொண்ட ஜடாயுவின் உடன்பிறந்த அண்ணன் 

ஹனுமன் உட்பட்ட பலரும் தாயாரான சீதா தேவியை எப்படி தேடுவது என விவாதித்த போது, இவர்தான் எங்கு அன்னை சீதா உள்ளாள், எப்படி அங்கு செல்ல வேண்டும் என கூறி, வாலிமகன் அங்கதனின் தலைமையிலான வானர படைக்கு உதவியவர்.

21. சீதா (Seetha)

பகவானான ஶ்ரீராமனின் மனைவி. பகவான் மார்பில் உறையும் சாட்சாத் ஶ்ரீதேவி என்னும் மங்கை. இந்த பகவத் ஶ்ரீராம அவதாரத்தில் தானும் ஈடுபட விரும்பி ஜானகி தாயாராக அவதரித்தார். இவரை வைதேகி, ஜனகநந்தினி, ஜனககுமாரி, மைதிலி ஆகிய பெயர்களிலும் அழைப்பர்.
இந்த அவதாரத்தில் தாயார் மிகவும் கஷ்டப்பட்டார் என்றால் மிகையில்லை. 

22. சுமந்திரர் (Sumandhirar)

அயோத்தி மன்னன் தசரதனின் அரச சபையில், அனுமனுக்கு நிகரான  அறிவார்ந்த மந்திரி. தசரத மன்னனின் ஆஸ்தான தேரோட்டி. 

23. சுக்ரீவன் (Sukriva)

வானர சூரன். இவர் கிஷ்கிந்தையின் மன்னன், வானரவீரன் வாலியின் உடன்பிறந்த தம்பி. அனுமன் ஶ்ரீராமதூதனாகும் முன் இவரிடம்தான் நண்பனாக மந்திரியாக பணிசெய்தார். இவர் சூரியபகவானின் அருளால் பிறந்தவர்.

பகவான் ஶ்ரீராமர் கானகத்தில் பிரிந்த தாயாரை மீண்டும் காண வானரசைன்யத்தை கொடுத்து, தானும் உற்ற நண்பனாய் இருந்து உதவியவர். இவரை ஶ்ரீராமர் தனது ஆறாவது சகோதரன் என அறிவித்தார். சுக்ரீவன் நல்ல பண்பு மிக்கவர்.

24. சுஷேணன் (Sushona)

சிறந்த வானர வீரன். வானர அரசன் வாலியின் மாமனார். அதோடு வானரங்களுக்கான ஆஸ்தான மருத்துவர். அசுரன்
ராவணனிடம் சிறைபட்ட தேவியை தேடி மேற்கு திசையில் சென்றவர்.

25. சூர்ப்பணகை (Surpanaga)

இலங்கை வேந்தன் ராவணன், விபிஷணன், கும்பகர்ணன் ஆகியோரின் தங்கை ஆவாள்.
தங்கையின் கணவன் என்றும் பாராமல் தன் கணவனை கொன்ற தன் அண்ணனான ராவணனை பழிவாங்க சந்தர்பம் தேடி அலைந்த போது ஶ்ரீராமரை கண்டு மையலுற்று அதன் காரணமாக மூக்கையும் மற்றும் காதையும் அறுபட்டவள். இதையே காரணமாக கொண்டு, ஶ்ரீராமனின் விருப்பமான சீதாதேவியின் மூலம் ராவணன் அழிவுக்கு வழி கண்டவள்.

26. தசரதர் (Dhasaradha)

இஷ்வாகு குல மன்னன். அயோத்தியின் அரசன். எட்டுதிசை மட்டுமல்ல வானம் பூமி என மேலும் கீழுமாக பத்து திசைகளிலும் தேரை லாவகமாக ஓட்டும் திறமைசாலி. அதனால் தசரதன் என்று அழைக்கப் பட்டார்.  தனக்கு பின் இந்த அயோத்தியை ஆள இஷ்வாகு குலத்தில் ஓர் ஆண்பிள்ளை இல்லையே என எண்ணி புத்ர காமேஷ்டி யாகம் செய்து அதன்மூலம் பகவான் ஶ்ரீமன் நாராயணனையே ஶ்ரீராமனாக தன் மகனாக பெற்றவர்.

மனைவியான கைகேயிக்கு தவறான வரம் தந்ததால் புத்ரசோகத்தில் உயிரிழந்தவர்.
ஶ்ரீராம லட்சுமண பரத சத்ருகன் ஆகியோரின் பாசமிகுந்த தந்தை. 

27. ததிமுகன் (Tathimugan)

வானரவீரன். வானர அரசர்களான வாலி சுக்ரீவன் ஆகியோரின் சித்தப்பா. அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட மதுவனம் என்ற பகுதியின் பாதுகாவலர்.

28. தாடகை (Thaadagai)

விஸ்வாமித்ரர் தவம் செய்து வந்த காட்டில், அவர்களுக்கு தொல்லை கொடுத்தபடியே வசித்த அரக்கி. லட்சுமணன் உதவியால் ராமனால் முதன் முதலாக கொல்லபட்டவள். பெண் என்றாலும் மூர்க்க குணம் உள்ளவள், எனவே கொல்வதில் தவறில்லை என முனிவர் கூறியதால், இவளை ஶ்ரீராமர் அழித்தார்.

29. தாரை (Thaarai)

வானர வீரன் கிஷ்கிந்தை மன்னன் வாலியின் மனைவி . வானரசூரன் அங்கதனின் தாய்.
அறிவில் சிறந்த வானரராணி. புராண பஞ்ச பதிவிரதைகளில் ஒருவர். 

30. தான்யமாலினி (Dhanya Malini)

இந்த பெயரை பலர் கேட்டிருக்க மாட்டார்கள். இவள் நல்ல உள்ளம் கொண்டவள். இலங்கை வேந்தன் ராவணனின் இளைய மனைவி 

31. திரிசடை (Thirisada)

இலங்கையில் ராவணனின் நம்பிக்கைக்கு பாத்திரமான அரக்கி. சீதாதேவியை அசோக வனத்தில்  ராவணன் சிறை வைத்தபோது காவலுக்கு இருந்தவள். இலங்கையில் வசித்த அரக்கிகளில் நல்லவள். தாயார் சீதைக்கு 'ஶ்ரீராமன் உம்மை மீட்டு போக வருவான்' என நம்பிக்கையை தினமும்  ஊட்டியவள். 

32. திரிசிரஸ் (Thirisirus)

இலங்கை வேந்தன் ராவணனின் தம்பியான கரனின் சேனாதிபதி. நல்ல வீரன்.

33. நளன் (Nalan)

வானர வீரன். அதிலும் பொறியியல் அறிந்த சிறந்த வானரவீரன். காரணம் தேவதச்சன் விஸ்வகர்மாவின் மகன். ராம ராவண யுத்தத்துக்கு கடலின்மீது, இலங்கைக்கு இவன் மேற்பார்வையிலேயே சேதுபாலம் கட்டபட்டது

34. நாரதர் (Naradha)

ஶ்ரீமன் நாராயணனின் நாபியில் உதித்த பிரம்மாவின் மனதில் பிறந்தவர். பிரம்ம புத்திரர். மகாஞானி, இசையில் வல்லவர், அதேநேரம் தேவலோகம், பூலோகம், பாதாள லோகம் என ஈரேழு லோகத்திலும் சஞ்சரித்தபடியே இருந்து கொண்டு நல்லவைகளுக்காக பல இடங்களில் கலகம் ஏற்றபடுத்தும் முனிவர். 

35. நிகும்பன் (Nigumbhan)

ராமாயணத்தில் ராவணன், சீதையை சிறைபிடித்தது தவறு, அதனால் அரக்கவம்சமே அழியபோகிறது என ராவணனிடம் எச்சரித்த போதும், செஞ்சோற்று கடனுக்காக ராவணனுடன் இருந்து உயிர் துறந்த கும்பகர்ணனின் மகன். கும்பனின் சகோதரன். ராம ராவண யுத்தத்தில் வீரமரணம் அடைந்தவன்.

36. நீலன் (Neelan)

வானர வீரன் சுக்ரீவனின் வானர படையில் முக்கிய நபர். வானரவீரன் நளனின் நண்பன். வானர சேனாதிபதிகளில் ஒருவன். இவன் அக்னி தேவனின் அருளால் பிறந்தவன். ராமாயண சேதுபாலம் அமைய நளனுடன் துனைபுரிந்தவன்.

37. பரசுராமர் (Parasurama)

பகவான் விஷ்ணுவின் ஒரு அவதாரம். இவர் ஜமதக்னி என்ற மகானின் மகன். ராமாயண காலத்தில் ஜனக மன்னர் சபையில் சிவதனுசை முறித்த ஶ்ரீராமனுடன் விஷ்ணுதனுசை நாணேற்ற கேட்டு போரிட்டவர் ராமரால் ஆசீர்வதிக்கப்பட்டவர் 

38. பரத்வாஜர் (Baradhvaja)

ராமாயண காலத்தில் வடக்கே பிராயாகை அருகே ஆசிரமம் அமைத்து தவமியற்றி வந்த தவசிரேஷ்டர். இவரின் வேண்டுகோளை  ஏற்று ஶ்ரீராமன் தாயாருடனும் மற்றும்  படைகளுடனும் ராவணனை வென்று, அயோத்தி திரும்பும் முன், இவரின் ஆஸ்ரமத்தில் ஓரிரவு தங்கி உணவருந்தி சென்றார்கள்.

39. பரதன் (Bharada)

பகவான் ஶ்ரீராமனின் தம்பி. அயோத்தி மன்னன் தசரதன் மற்றும் அவரின் அபிமான மனைவி கைகேயியின் மகன். 

ஶ்ரீராமனின்  நாட்டை தான் ஆள தாயார் வரம் கேட்டபோது தாய் மாமன் இல்லத்தில் இருந்ததால், திரும்பி வந்ததும் தாயரிடம்  அவளின் செயலை கண்டித்து அத்துடன் அவளை முழுவதுமாக வெறுத்து பகவான் ஶ்ரீராமனை தேடி கானகம் சென்று தாயாரின் செயலுக்கு மன்னிப்பு கேட்டு தந்தையின் இழப்பையும் கூறி, அறத்தின்படி மூத்தவரான ஶ்ரீராமனை அயோத்தியை் அரசாள வரும்படி அழைத்தான்.

ஶ்ரீராமன் இவனின் இந்தச் செயலுக்காக மூகவும் மெச்சி தந்தைக்கு இறுதி காரியங்களை செய்து, தான் தந்தை கட்டளைபடி 14ஆண்டுகள் வனவாசம் முடித்து திரும்பி வரும்வரை பரதனையே அரசாளும்படி கூறி இறுதியில் பரதனின் மிகுந்த அன்பான வேண்டுகோளுக்காக தன் பாதரட்சையை தந்தான்.

ராமனின் பாதுகையே பிரதானமாக கொண்டு, அயோத்தி கூட செல்லாமல் நந்திபுரம் என்ற இடத்திலேயே பதினான்கு ஆண்டுகள் ராமனையே எதிர்பார்த்து அரசாண்டான் பரதன். கவியரசு 
கம்பனால் ஆயிரம் ஶ்ரீராமருக்கு சமமானவன் என பாராட்டையும்  பெற்றவர்

லட்சுமணனே பொறாமைபடும் அளவுக்கு ஶ்ரீராமன் மீது பக்திகொண்டவன். பகவத் கைங்கர்யத்துக்கு உதாரணம் ஆனவன்.  சிறந்த வில்லாளி வீரன்.

40. மந்தரை (Mandra)

தசரதனின் மனைவி கைகேயியுடன் கேகய நாட்டிலிருந்து அயோத்திக்கு வந்த கைகேயின் சேடிபெண், அதாவது வேலைக்காரி. 

இவளை, கூனி என்றும் அழைப்பர். ராமாயண காவியத்தில் ஶ்ரீராமர் பட்டத்தை துறந்து கானகம் செல்லவும் அதன் மூலம் ராமாயண வைபவம் நடக்கவும் முக்கிய காரணமானவள். அத்தோடு தசரதன் மறைவுக்கும் காரணமானவள். 

நாளை....................

[9:39 pm, 27/03/2022] Mohan SriRaghavendrar Kulithalai: ஶ்ரீராம காவியம்
~~~~~
350/27-03-2022

ஶ்ரீராமநாம கதைகள்-30

அனுப்பியவர்:-
திருமதி S. விஜயலக்ஷ்மி
ரெட்டியார்பாளையம்
பாண்டிச்சேரி.
Ph: 8870514289

ராமாயண 
கதாபாத்திரங்கள்...3
(நேற்றைய தொடர்சி)


41. மதங்கர் (Madhangar)

இராமாயண காலத்தில் வாழ்ந்த சிறந்த முனிவர். இவரின் சிஷ்யையான சபரிக்கு ஶ்ரீராமரின் தர்சனம் கிட்டும் என கூறி ஆசிவழங்கியவர். அதன்படியே சபரி ஶ்ரீராமனின் தர்சனம் பெற்று மோட்சம் அடைந்தாள்.

42. மண்டோதரி (Mandodhari)

தேவலோக சிற்பியான மயனின் மகள், இலங்கை வேந்தன் ராவணனின் பட்டத்தரசி. சிறந்த வீரனான இந்திரஜித்தின் தாய். 
கணவன் ராவணனிடம்,  மாதா சீதையை விட்டு விடும்படி கூறியவள். இதிகாசம் கூறும் பஞ்சபதிவிரதைகளில் ஒருவர்

43. மாரீசன் & சுபாகு (Mareesan & Subagu)

ராமாயணத்தில் ஶ்ரீ ராமனால் முதலாவதாக அழிக்கப்பட்ட பெண் அரக்கியான தாடகையின் மகன்கள். தாடகையை வதம் செய்தபோதே, சுபாகுவும் ராமனால் வதம் செய்யப்பட்டான். 

மாரீசன் அப்போது தப்பி ஓடி, தண்டகாரண்யத்தில் ஶ்ரீராமன் மாதா சீதையுடன்  இருந்தபோது, ராவணனின் தூண்டுதலால் மாய பொன்மானாக வந்து, சீதையின் ஆசையை தூண்டி, பகவானும் தாயாரும் பிரிய காரணமாகி, ஶ்ரீராமனது கூரிய அம்பினால் கொல்லபட்டவன். 
ஒருவிதத்தில் ராவணன் அழிவுக்கும் காரணமானவன்   

44. மால்யவான் (Malyavaan)

இவர் இலங்கை வேந்தன் ராவணனின் தாய்வழிப்பாட்டன். இவரும் சூர்ப்பனகை மூலம் ராவணன் அழிவுக்கு முக்கிய காரணமானவர்.

இவர் மன்னார்கோவில் வேத நாராயணன் அருளுக்கு பாத்ரமானவர். இன்றும் இவரது சுதை உருவம், அந்த  ஊரில் வேத நாராயண ஸ்வாமியை  வணங்கியபடி இருப்பதை, பிரதான கோபுரத்தின் மேல் நிலையில் உள்ள சயனகோல சன்னதியில் காணலாம்.

45. மாதலி (Madhali)

இவர் தேவலோக தலைவன் இந்திரனின் தேரோட்டி ஆவார். இந்திரஜித்துடன் போரிடும் போது, இந்திரனின் தேரை ஶ்ரீராமருக்காக ஓட்டியவர்

46. யுதாஜித் (Udhajith)

கேகய நாட்டு இளவரசியும், தசரத மன்னனின் மனைவியுமான கைகேயியின் தம்பி.  இவர்தான் பரதனின் தாய்மாமன். கைகேகி தசரதனிடம் வரம் கேட்டபோது பரத சத்ருகணர்கள் இவரது ஊரில் இருந்தனர்

47. ராவணன் (Ravana)

இராவணன் மிச்ரவா என்பரின் மகன்.  ஶ்ரீபதியான ஶ்ரீமன் நாராயணனின் வைகுண்டத்தில் வாயில் காப்போனாக இருந்த ஜெய விஜயன்கள், சனகாதி முனிவர்கள் அளித்த  சாபத்தால் அரக்கர்களாகி வந்தவர்கள். அதில் ராமாவதாரகலத்தில் ஜெயனும் விஜயனும், ராவணன் மற்றும் கும்பகரனண் என அவதரித்தனர்

ராவணன் சிறந்த சிவ பக்தன். நல்ல இசை ஞானம் கொண்ட கலைஞன்.  வீணை வாசிப்பதில் வல்லவன். பத்து தலைகளை கொண்டவன்.  தன் தவத்தால், இசையால் அந்த சிவபெருமான் வாழும் கைலாய மலையையே அசைத்தவன்  

இலங்கையை, இந்திரனின் இந்திரபுரிக்கு சமமாக நிர்மானித்து, தன் வம்சத்துடன் அரக்கர்களின் தலைவனாக ஆட்சி புரிந்து வந்தவன்

தன் தவவலிமையால் மூன்று லோகத்தையும் வென்றவன். தேவர்களின் அரசன் இந்திரன் உள்ளிட்ட தேவர்களையும் , கிரகங்களையும் அடிமையாக்கி, ஆண்டவன். தேவர்களையும், முனிவர்களையும் மற்றும்  தவம் செய்பவர்களையும்  துன்புறுத்தி இன்பம் கண்டவன்.

பெண்சபலம் கொண்டவன். அதனாலேயே பெற்ற சாபத்தின் பயனாய், தனது தங்கையான சூர்ப்பனகை அளித்த கொடும் துர்போதனையால் மதி  மயங்கி,  சீதாதேவியை , ஶ்ரீராமன், லட்சுமணர் இல்லாதபோது சிறை எடுத்து தன் வம்சமே அழிய காரணமானவன். 

ராவணன், குபேரனின் தம்பி. 
புலஸ்திய முனிவரின் பேரன்
பகவான் ஶ்ரீராமனாக அவதாரம் எடுக்க காரணமானவன்

48. ஶ்ரீராமன் (Sri Rama)

ஶ்ரீமன் நாராயணனின் ஏழாவது அவதாரம்.   தசரதருக்கும் கோசல்யா. தேவிக்கும் புத்ர 
காமேஷ்டி யாகத்தில் கிடைத்த பாயசத்தை   கௌசல்யாவை ஸ்வீகரிக்க வைத்து அவதாரம் செய்தவன்  

நட்சத்திர வரிசையில் ஏழாவது நட்சத்திரமான புனர்வசு நட்சத்திரத்தில், நான்காம் பாதத்தில் கடக ராசியில், தேவர்கள் முனிவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, ராவணாதி அசுரர்களை அழிக்க நல்லதொரு  நவமி திதியில் லட்சுமணன் பரத சதருகணன் என்ற தம்பிகளுடன், தசரதருக்கு மூத்த மகனாக அவதரித்தார் 

நம் ராமாயண காவியத்தின் கதாநாயகன் 

49. ரிஷ்யசிருங்கர் (Rishyasirungar)

இவர் சிறந்தமுனிவர், யாகங்கள் ஹோமங்கள் செய்வதில் வல்லவர். 

ஶ்ரீராமருக்கு முன்பாக அயோத்தி மன்னரான தசரதருக்கு மகளாக பிறந்த ஷாந்தா என்பவரை மணந்து கொண்டவர். மன்னர்
தசரதரின் மாப்பிள்ளை 

இவர்தான் தசரதருக்கு, தன் மைத்துனர்களான ஶ்ரீராம லட்சுமண பரத சத்ருக்கனர்கள் அவதரிக்க காரணமான புத்திரகாமேஷ்டி யாகத்தை அயோத்தியில் செய்த முனிவர்.

50. ருமை (Rumai)

வானரசூரனான சுக்ரீவனின் மனைவி. இவளைத் தான் சுக்ரீவனின் அண்ணன் வாலி கவர்ந்து கொண்டு, சுக்ரீவனை விரட்டினான்.  பின்னர் சுக்ரீவன் ஶ்ரீராமரால் வாலியை கொல்ல வைத்து, அவர்களின் வானர சேனை ஶ்ரீராம மற்றும் ராவண யுத்தத்துக்கு உதவ முக்கிய காரணமானவள்.

51. லங்காதேவி (Lanka devi)

இலங்கையை குபேரபட்டணமாக நிர்மானித்த ராவணன், அந்த பட்டணத்தின் காவலாளியாக நியமித்த காவல் தெய்வம் இந்த பெண் 

இவளை மீறி எதிரிகள் யாருமே இலங்கைக்குள் நுழையவே முடியாது.  ஹனுமன் கூட ஒரு பெண்ணான இவளை ஜெயித்த பின்பே, இலங்கைக்குள் நுழைய முடிந்தது

இவள் என்று அழிகிறாளோ, அன்று முதல் இலங்கை அழிவு ஆரம்பமாகும் என்பது உண்மை ஆயிற்று.  

52. வசிஷ்டர் (Vashishtar)

இஷ்வாகு குல அரசனான தசரதனின் குலகுரு. பெண்களில் சிறந்த அருந்ததியின் கணவர். இவரது யோசனையால் தசரதர் புத்ர 
காமேஷ்டி யாகம் செய்தார். பின்னாளில் ஶ்ரீராமருக்கும் அவரது மைந்தர்களுக்கும் அரசனாக பட்டாபிஷேகம் செய்துவைத்தவர்.

53. தசரதர் அவையில் இருந்த மேலும் சில குரு சிரேஷ்டர்களின் பெயர்கள் 

சமார்க்கண்டேயர், மவுத்கல்யர், வாமதேவர், காஷ்யபர், கார்த்தியாயனர், கவுதமர், மற்றும்  ஜாபாலி என்போர்.

54. வருணன் (சமுத்திரராஜன்) 

இவர்தான் கடலரசன். ராமர் அழைத்தும் வராமல் பின்னர் ராமபானத்துக்கு பயந்து தன்மீது அணை கட்ட, ஶ்ரீராம சேனையை அனுமதித்தவன்

55. வால்மீகி (Vaalmiki)

ராமாயணத்தை வடமொழியான சம்ஸ்க்ருதத்தில் எழுதியவர். 
ரத்னாகரன் என்பது இயற்பெயர். 
திருடனாக கொள்ளைக்காரனாக இருந்தவர்.  நாரதரின் கேள்வியால் மனம் திருந்தி 'மரா மரா' என பல ஆண்டுகளாக மனம்ஒன்றி தியானிக்க தியானிக்க அதுவே ராம ராம என்ற மந்திரமாக மாற தன் உடலைசுற்றி கரையான் புற்று ஏற்பட்டும் கவனியாமல் தவம் செய்தமையால் வால்மீகி ( கரையான் புற்று) என்ற பெயர் பெற்றார்  

அவர் செய்த ராமநாம தவத்தின் பயனால் ஶ்ரீராம சரிதமே அவர் முன் நடக்க அதை அப்படியே கூற கூற சிவனின் மைந்தரான பிள்ளையார் இராமயணத்தை எழுதியதாக கூற்று.

ஶ்ரீராம பட்டாபிஷேகம்  முடிந்து மீண்டும் ஶ்ரீராமனால் கானகம் அனுப்பபட்ட தாயார்  சீதைக்கு அடைக்கலம் அளித்தவர்.

இவரது ஆஸ்ரமத்திலேயே ஶ்ரீராம சீதா புத்ரர்களாக லவகுசர் பிறந்தனர். 

பின்னாளில் ஶ்ரீராமனின் புத்ரர்களுக்கு அதாவது லவகுசனுக்கு தன்னுடைய  ராமாயணமான வால்மீகி ராமாயணத்தை போதித்தவர். அதை ஶ்ரீராம சபையில் லவகுசர்கள் பாடலாக பாடிக்காட்டி ஶ்ரீராமர் மற்றும் சபையோர் ஆசிகளை பெற்றனர். 

இன்று வழகத்தில் உள்ள ராமாயணம்  அனைத்துக்கும் முன்னோடி இவரது வால்மீகி ராமாயணமே அதுவே ராமகாதைக்கு உதாரணம். 

ஶ்ரீராமரால் கேட்டு ஆனந்திகப் பட்ட ராமாயணம் என்ற பெயரும் பெற்றது இவரது ராமாயணம்.

நாளை......................

ஶ்ரீராம காவியம்
~~~~~
351/28-03-2022

ஶ்ரீராமநாம கதைகள்-31

அனுப்பியவர்:-
திருமதி S. விஜயலக்ஷ்மி
ரெட்டியார்பாளையம்
பாண்டிச்சேரி.
Ph: 8870514289

ராமாயண 
கதாபாத்திரங்கள்...4
(நேற்றைய தொடர்சி)



56. வாலி (Vaali)

வானர வீரன். இவன் தேவர்கள் அரசன் இந்திரனின் அருளால் பிறந்த வானர வேந்தன். மகாபலசாலி, மூவுலகையும் அடக்கிய ராவணனை தன் வாலில் கட்டிப் போட்டவன். 

இவன் எதிரில் போர் புரிய எவர் வந்தாலும், அவர்களின் பலத்தில் பாதி இவனை வந்தடையும் என்ற வரம் பெற்று இருந்ததால், யாராலும் வெற்றி கொள்ள முடியாத பராக்கிரமம் பெற்றவன்.

ஶ்ரீராமன் கூட  சுக்ரீவனுக்காக மறைந்து இருந்தே அம்பெய்தி இவனை கொன்றார். இறக்கும் போது கூட ஶ்ரீராம நாமாவை உச்சரித்தபடியே உயிர் துறந்து வைகுந்தம் ஏகினான்.

57. விஸ்வாமித்ரர் (Vishvamithra)

இவர் சிறந்த முனிவர். அரசனாக இருந்து பின்னர் கடும் தவம் மேற்கொண்டு,  பிரம்ம ரிஷி ஆனவர். அதுவும் இஷ்வாகு குல ஆஸ்தான குலகுரு வசிஷ்டர் வாயாலேயே பிரம்மரிஷி என அழைக்கப்பட்டவர்.  

ஶ்ரீராம லட்சுமணர்கள் பால்ய வயசாக இருந்தபோதே, தசரதன் அரண்மனைக்கு வந்து, அரசர்  தசரதனிடம் ஶ்ரீராமர் மற்றும்  லட்சுமணனை தன் யாகத்தை காப்பாற்ற அனுப்ப கேட்டவர். இறுதியில் தசரதன், வசிஷ்டர் ஆகியோரின் சம்மதத்துடன் அவர்களை அழைத்து கொண்டு சென்றார். யாகத்தை கெடுக்க வந்த தாடகை மற்றும் சுபாகுவை ராமனால் வதம் செய்ய வைத்தவர்.

 ஶ்ரீராம லட்சுமணர்களின் பிறப்பின் ரகசியத்தை அறிந்து, தாடகை வதத்தில்  ஆரம்பித்து வைத்து ராமகாதையை, இளமையிலேயே  துவக்கியவர்

ராமனுக்கும் லட்சுமணனுக்கும் 'பலா அதிபலா' மந்திரங்களை உபதேசித்து பின்னர் அநேக  அஸ்திரவித்தை போதித்த குரு.

 சீதாதேவி  ஶ்ரீபதியான ஶ்ரீராமன் திருமணத்திற்கு முக்கிய காரணமானவர். 

58. விராதன் (Viradhan)

ராமாயண காலத்தில், தண்டகவனத்தில் வசித்த அரக்கன். கந்தர்வனாக இருந்து சாபம் பெற்றவன். ஶ்ரீராமனால் அந்த சாபம் தீர்ந்தவன். 

59. விபீஷணன் (Vibeeshana)

இலங்கை வேந்தன் ராவணனின் தம்பி. சிறந்த தர்ம சிந்தனை கொண்டவன். தூதனாக வந்த ஹனுமனை, கொல்வதை தவறு என சபையில் உரைத்தவன். சீதாதேவியை மீண்டும் ஶ்ரீராமரிடமே தந்துவிட யோசனை சொன்னவன். அதனால் ராவணனால் விரட்டப்பட்டு ஶ்ரீராமனிடம் அடைக்கலம் அடைந்தவன்.

ராம ராவண யுத்தத்தில் ராவணனின் உயிர் ஸ்தானத்தை ஶ்ரீராமனுக்கு் உணர்த்தி, ராவண வதம் நடக்க காரணமானவன்.

ஶ்ரீராமனால் இலங்கைக்கு அரசனாக மகுடம் சூட்டபட்டவன்
இன்றய பூலோக வைகுண்டமாக நாம் போற்றும் ஶ்ரீரங்கம் உருவாக காரணமானவன் 

60. வினதன் (Vinadhan)

சிறந்த வானர வீரன். ராமகாவியத்தில்  சீதாதேவியை தேடி ஹனுமன் தென் திசை சென்றது போல்  கிழக்குத் திசையில் சீதையை தேடச் சென்றவன். பின்னாளில் ராம ராவண யுத்தத்திலும் பங்கு பெற்றவன்

61. ஜடாயு (Jadayu)

இவர் கழுகரசன் சம்பாதியின் தம்பி. ஶ்ரீராமரின் தந்தையான தசரதனின் தோழன். 

கானகத்தில் ராவணன், சீதையை  சிறைபிடித்தபோது, முதன்முதலில் ராவணனுடன் சீதைக்காக போராடியவர். இதனால் தன் இறகுகளையும் இழந்ததோடு தன் உயிரையும் நீத்தவர். ஆனால் உயிர்துறக்கும் முன் ஶ்ரீராமரிடம் ராவணனை பற்றிய விபரம்  கூறியவர் 

ஶ்ரீராமராலேயே அந்திம கைங்கர்யம் பெற்ற பாக்யசாலி

62. ஜனகர் (Janagar)

இவர் சிறந்த ராஜரிஷி. துளிகூட உலக ஆசையின்றி, ராஜாவாக மிதிலாபுரியை எந்த குறையும் இன்றி ஆண்டுவந்தவர். இவரின் அந்த வாழ்க்கைக்கு பரிசாக லோக மாதாவான அன்னைக்கே  தந்தையாகும் பாக்யம் பெற்றவர். அதன் பலனாக  பின்னாளில் ராமருக்கும் அவரின் நிழலான லட்சுமணனுக்கும் மாமனாராக ஆனவர்.

63. ஊர்மிளா (Oormila)

பகவத் கைங்கர்யமே உயர்ந்தது என காட்டி அதற்காக பெற்ற தாய் தந்தையரையே துச்சம் என உதறி, பகவத் கைங்கர்யம் செய்வதற்காகவே, கானகம் சென்ற ஶ்ரீராமனின் நிழலான ஶ்ரீலட்சுமணனின் மனைவி.

ஶ்ரீராம கைங்கர்யத்துக்காக தன்னையே தியாகம் செய்தவள்
இவளும் அன்னை சீதாதேவி இருவரும்  சகோதரிகளே.

64. ஜாம்பவான் (Jambavan)

ராமாயணத்தில் வரும் அழகிய பாத்திரம். கானகத்தில் வாழும் கரடி வேந்தர். ஹனுமனுக்கு அவரின் பிறப்பின் ரகசியத்தை உணர்தியவர். மகாஞானி. ஶ்ரீராமரின் அன்பை பெற்றவர் இவர் பிரம்மாவின் அருள்பெற்று பிறந்தவர். இந்த ஜாம்பவான்  கிருஷ்ணாவதாரத்திலும் இருந்தவர்

65. அனுமான் (Hanuman)

ராமாயண காவியத்தில் ஶ்ரீராமரும் சீதாதேவியும் எவ்வளவு முக்கியமானவர்களோ அதற்கு சற்றும் குறைவில்லாத ஒருவர்தான்  ஶ்ரீஹனுமன் எனும்   ஆஞ்சநேயர்.

இவர் அஞ்சனை மற்றும் வானர சூரன் ஶ்ரீகேசரி ஆகியோருக்கு வாயுபகவானின் அருளால் பிறந்தவன் என்பதால் அவரை ஆஞ்சநேயன், வாயுபுத்ரன், மாருதி எனவும்  வேறு பெயர்கள் கொண்டும் அழைப்பர் 

ஶ்ரீராமனின் தூதனாக தென்திசை சென்று, ஶ்ரீராம நாமாவை உச்சாடனமாக கொண்டு, சமுத்திரத்தை தாண்டி சீதாதேவியை இலங்கையில் அசோகவனத்தில் கண்டு பேசி, அவரது உயிரை காப்பாற்றியவர் 

இலங்கையை ராவணன் தன் வாலில் வைத்த தீயால் எரித்து ராவணனுக்கு முதன்முதலில் மனதில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியவர் 

ஶ்ரீராம ராவண யுத்தத்தில் சஞ்சீவிமலையை கொணர்ந்து ஶ்ரீராம லக்குமணர்கள் உயிரை மட்டுமல்ல அநேக வானர வீரர்களின் உயிரையும் மீட்டவர்.

ஶ்ரீராம ராவண யுத்தம் முடிந்து அயோத்திக்கு ஶ்ரீராமர் வர தாமதமான வேளையில், மீண்டும் ஶ்ரீராம தூதனாக சென்று பரதன் உயிரைக் காத்தவர்.

ஶ்ரீராம நாம மகிமையை உலகுக்கு உணர்த்தியவர். அதைச் சொல்வதையே  தன் மூச்சாக கொண்டவர். ஶ்ரீராம தூதன் என்ற பெயர் பெற்றவர். 

இவரது இயற்பெயரான சுந்தரன் என்ற பெயரை நினைவு கொள்ளும் விதமாக இவரது சாகஸங்களை,  ராமாயணத்தில் சுந்தரகாண்டம் என தனியொரு பகுதியாகவே வால்மீகி கூறியுள்ளனர். 

ஶ்ரீராம நாமாவுக்கு முற்றிலும் உரிமையானவர். ஶ்ரீராமா நாமா உச்சரிக்கும் இடத்தில் எல்லாம் இருப்பவர். சிரஞ்சீவியானவர்.

66. ஸ்வயம்பிரபை (Svyambrabai)

இந்த பெண்மணி குகையில் வாழ்ந்த தபஸ்வினி. இவளின் கைங்கர்யம், ஶ்ரீராமரின் வானரசேனையான குரங்குப் படையினருக்கு, உணவிட்டதே இதனால் ஶ்ரீராமரின் மிகுந்த கருனையை பெற்றவள்

67. மாண்டவி (Mandavi)

பகவத் கைங்கர்யமே உத்தாரணம் எனக் காட்டி, அவரது திருவடியையே சரணாக கொண்டவரும், ஆயிரம் ராமர்கள் சேர்ந்தாலும் உனக்கு ஈடாக மாட்டார்கள் என, வாழ்த்த பெற்ற ஶ்ரீபரதனின் மனைவி. அன்னை சீதாதேவியின் சகோதரி.
சீதாதேவியின் தகப்பார் ஜனகரின் தம்பி, குஜத்வசனின் மகள்.

68. சுருதகீர்த்தி (Surudhakeerthi)

பகவத் கைங்கர்யத்தை விடவும் அவனது அடியார்களுக்குச் செய்யும் , பாகவத கைங்கர்யமே உயர்ந்தது என வாழ்ந்து காட்டியவரும், பரதனின் திருவடியே சரணம் என வாழ்ந்தவரும், ஶ்ரீராமனின் கடைகுட்டி தம்பியுமான ஶ்ரீசத்ருக்கனனின் மனைவி 

ஒரு விதத்தில் சீதாதேவியின் சகோதரி. மாண்டவியின் சகோதரி.  சீதாதேவியின் தகப்பார் ஜனகரின் தம்பி, குஜத்வசனின் மகள்  

69. கம்பர் (Kambar)

கம்பர் சோழநாட்டு கவிஞன். வடமொழிக்கு எப்படி ஶ்ரீவால்மீகி எழுதிய ராமாயணம் மூலமோ, அதுபோல்  தமிழில் இவர் எழுதிய ராமாயணம் மூலம் என்ற சிறப்புக்கு உரியதாகும்.

தமிழில் ஒப்பற்ற ராமாயண காவியத்தை எழுதியவர்.
இவர் எழுதிய அந்த ராமாயண காவியத்தைத்தான் இன்றும் கம்பராமாயணம் என்று தமிழர்கள் போற்றுகின்றனர்

இவரது ராமாயணத்தை , ஶ்ரீரங்கம் கோயிலில் எழுந்தருளியுள்ள பகவான் ஶ்ரீமேட்டழகிய சிங்கர் என்ற 
ஶ்ரீ  நரசிம்ம  ஸ்வாமியே அங்கீகரித்ததாக வரலாறு கூறுகிறது.

பகவத் நாமாவை, அதுவும் நன்மையும் செல்வமும் நாளும் நல்கும், பல ஜன்மத்தையும் பல ஜென்ம பாவங்களையும், போக்கும் ஶ்ரீராம நாமத்துக்கு தொடர்பான சில பாத்திரங்களை நாம் நினைவு கொண்டோம் அல்லவா? இதுவும் நமக்கு  ராமாயணத்தை படித்த பலனை தரும், என்பதில் சந்தேகமே இல்லை.  ஜெய் ஶ்ரீராம்!

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.

நாளை....................

ஶ்ரீராம காவியம்
~~~~~
352/29-03-2022

ஶ்ரீராமநாம கதைகள்-32

அனுப்பியவர்;
திரு கௌதம் சித்தார்த்
சக்தி வினாயகர் நகர்
சேலம்-4.
9994444232

மிதக்கும் பாறைகள்...

★ஶ்ரீ ராமரின் அழைப்பிற்கு இணங்கி அங்கு வந்த வருணன், தன்மீது வானரங்களை வைத்து இலங்கை வரைக்கும், மரங்கள் மற்றும்  கற்பாறைகளை வைத்து ஒரு பாலம் கட்டுங்கள், அதனை அலைகள் தாக்கி அழிக்காமலும் நீரில் மிதக்கும் படியும் பார்த்துக் கொள்கிறேன். தங்களின் வானர படைகளில் நளன் இருக்கிறான். தேவலோக விசுவகர்மாவின் மகனான அவனிடம் இந்தப் பாலத்தைக்  கட்டும் பணிகளை ஒப்படையுங்கள். அவன் இந்த அணையை திறமையுடன் கட்டி முடிப்பான் என்று சொல்லி வருணன் ராமரை வணங்கி விடைபெற்றுச் சென்றான்.

★பின்னர் ஶ்ரீ ராமர், நளனிடம் நீ அணையை திறம்பட கட்டி முடிக்க வேண்டும் என்றார். நளன் ராமரிடம், நான் அணையை நல்லமுறையில்  கட்டி முடிக்கிறேன் எனக் கூறினான்.
லட்சுமணன் ராமரிடம், அண்ணா! நளன் கையால் சேர்க்கின்ற எல்லா மலைகளும் குன்றுகளும் நீரில் மூழ்காமல் மிதக்கின்றன.  அதற்கான காரணம் என்ன? என்று கேட்டார். 

★அதற்கு ராமர்,  லட்சுமணா,! சூர்ய கிரகணம் நடக்கும் அந்த கிரகண காலத்தில் எல்லாம் வல்ல தெய்வத்தினை, குறித்து ஜபம் செய்தால் ஒன்றுக்கு பல ஆயிரம் மடங்கு பலன் உண்டு. 
அதைவிட தண்ணீரில் மூழ்கி மந்திர ஜபம் செய்தால் ஒன்றுக்கு பல லட்சம் மடங்கு பலன்கள் அதிகமாகும். அப்படி ஒருமுறை மாதவேந்திரர் என்ற மகரிஷி , கானகத்தில் சூர்ய கிரகணம் அன்று கங்கை நீரில் மூழ்கி தவம் செய்து கொண்டிருந்தார். தவம் முடிந்தபின் பூஜைகள் செய்யத் தேவைப்படும் சாளக்கிராமம் உள்ளிட்ட அனைத்தையும் கரையில் வைத்துவிட்டு நீரில் மூழ்கி தவம் இயற்றினார்.

★விஸ்வகர்மாவின் மகனாகிய நளன் அந்த சமயத்தில் கங்கைக் கரையில் மரங்களின் மீதேறி கனிகளைப் பறித்துத் தின்பதும் மரக்கிளையில் தாவித் தாவி திரிவதுமாக இருந்தான். 
நமது நளன் குட்டி வானரமாக இருந்தான். குரங்குகளுக்குச் சேட்டை செய்வது என்பது பிடித்தமான ஒன்று. அப்போது சற்று தூரத்தில் ஒரு முனிவர் சாளக்கிராமத்தை வைத்துப் பூஜை செய்ய ஏற்பாடுகள் செய்து, நீரில் மூழ்கி இருப்பது அவன் கண்களில் பட்டது. மெதுவாகச் சென்று விளையாட்டுத்தனமாக அந்தச் சாளக்கிராமத்தை எடுத்து கங்கை நீரில் வீசி எறிந்து விட்டான்.

★நீரில் தவம் செய்து கொண்டு இருந்த முனிவரை பார்த்த நளன்,  முனிவர் மீது கற்களை எறிந்து விளையாடிக் கொண்டிருந்தான். முனிவர் தவத்தை விட்டு எழுந்து வந்து அவனை  விரட்டி விட்டு மீண்டும் நீரில் மூழ்கி தவம் செய்தார். முனிவர் பலமுறை நளன் என்ற அந்த சின்ன குட்டிக் குரங்கை விரட்டியும், குட்டிக் குரங்கு கற்களை  எறிந்து கொண்டே தான் இருந்தது.
ஜபம் செய்யும் பொழுது கோபம் கொண்டு சாபம் விட்டால் ஜபசக்தி குறைந்து விடும். 

★அதனால் முனிவர் குரங்குக்கு சாபம் கொடுக்காமல், இக்குரங்கு எரியும் கற்கள் தண்ணீருக்குள் மூழ்காமல் மிதக்க வேண்டும் என்று நினைத்து நீ தண்ணீரில் எதை எறிந்தாலும் அது மூழ்காமல் மிதக்கட்டும் என்று வாழ்த்தினார். பின் மீண்டும் தண்ணீருக்குள் ஜபம் செய்ய தொடங்கினார். நளன் என்னும் குரங்கு தான் எறியும் கற்கள் மூழ்காமல் மிதப்பதினால் விளையாட்டில் ஆர்வம் இல்லாமல், அங்கிருந்து சென்று விட்டது. அந்த வாழ்த்தின்  நன்மையால் தான், நளன் இடுகிற கற்கள் தண்ணீரில் மூழ்காமல் மிதக்கின்றன.
அதனால்தான் கடலில் நளன் வைத்த கற்கள் மூழ்கிவிடாமல் நிற்கின்றன என்றார் ராமர்.

★தனுஷ்கோடியில் இருந்த ராமர் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த ராமர் சீதை லட்சுமணர் ஆகியோரது சிலைகளுடன் ராமர் பயன்படுத்திய பாறைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. பூரி ஜெகநாதர் கோவில் குஜராத் துவாரகா கிருஷ்ணர் கோவில் மற்றும் ரிஷிகேஷ் பத்திரிநாத் அலகாபாத் திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களில் காணப்படும் மிதக்கும் பாறைகள் ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டவை. புதுச்சேரியில் உள்ள அனுமன் கோவிலிலும் இந்த மிதக்கும் பாறைகளை காணலாம்.

நாளை.......................

ஶ்ரீராம காவியம்
~~~~~
354/31-03-2022

ஶ்ரீராமநாம கதைகள்-34

அனுப்பியவர்:
திருமதி. விஜயா ரங்கநாதராவ்
ஊட்டி.

சுப்ரபாதம் 
ஏன் பாடுறோம் என்று 
தெரிந்து கொள்வோம்...

★ஒரு முறை விஸ்வாமித்திரரின் யாகத்தினை காக்க சென்ற 
போது, கங்கைக்கரையில், 
ராம லட்சுமணர்கள் தங்களை 
மறந்து தூங்கிக் கொண்டு 
இருந்தனர். அவர்கள் இருவரும் ராஜகுமாரர்கள்  ஆயிற்றே. அரண்மனையில் சுகபோகமாய் இருந்தவர்கள்,இந்தக்  காடு மலைகளில் அலைந்து 
திரிந்ததால் வந்த களைப்பு. 
அதனால் நேரம் போவதைப் 
பற்றிக் கூட கவலைப்படாமல் 
உறங்கிக் கொண்டிருந்தனர்.

★அவர்களை அழைத்துக் 
கொண்டு வந்த விஸ்வாமித்திரர், அதிகாலைப் பொழுதில் எழுந்து, கங்கையில் நீராடி, ஜப தபங்களையெல்லாம் முடித்து
விட்டு, ராம- லட்சுணர்களை எழுப்புகிறார். நாலரை மணிக்கு 
எழுப்பத் தொடங்கியவர், ஆறரை 
மணி வரைக்கும் எழுப்பிக் 
கொண்டே இருக்கிறாராம்! 
ம்ஹூம். இரண்டு பேரும் எழுந்திருக்கவே இல்லை.

★உடனே, 'கௌசல்யா சுப்ரஜா. கௌசல்யா சுப்ரஜா.' என்று 
சொல்லிக் கொண்டே 
எழுப்பினாராம். இன்று ஒரு நாள், 
இந்த தெய்வக் குழந்தையை 
எழுப்பும் பேற்றினை நான் 
பெற்றேன். ஆனால், தினமும் 
இவனை எழுப்பும் அந்த திவ்ய பேற்றினை,  ராமனை பெற்ற கோசலை என்னும் கௌசல்யா எத்தனை அரிய தவமியற்றி, இவ்வரிய பேற்றினைப் பெற்றாளோ?.

★அதனால் அவளை, அதாவது அந்த கௌசல்யாவை,  கரம் கூப்பித் தொழுதவாறு ராமனை இவ்வாறு எழுப்புகிறார்.

கோசலையின் தவ புதல்வா ! 
ராமா ! கிழக்கில் விடியல் 
வருகின்றதே ! எழுந்திடு! 
புலிபோன்ற மனிதா! செய்திடுவாய் இறைகடமை ! 

★இந்த கௌசல்யா சுப்ரஜா என்கிற  வால்மீகியின் மந்திர வார்த்தையினை கொண்டே , ஸ்ரீஹஸ்தகிரி அனந்தாசாரியலு என்பவர் 'ஶ்ரீ லெங்கடேச சுப்ரபாதம்'   எழுதினார்.
அவர் எழுதிய அந்த பாடல்களே, இன்றைக்கும் திருப்பதியில் எம்.எஸ்.சுப்புலட்சுமி குரலில் திருப்பள்ளியெழுச்சி பாடலாய் ஒலிக்கிறது. 

★எல்லாம் சரி, ஶ்ரீராமனை 
எழுப்பியாச்சு. லட்சுமணனும் 
தான் தூங்கிட்டு இருக்கான். 
ஏன் லட்சுமணனை எழுப்பலை? என்று , இதை படிக்கும் அன்பர்களுக்கு நிச்சயம் மனதில் ஒரு கேள்வி எழத்தான் செய்யும்.
ஏனென்றால் லட்சுமணன் 
ஆதிசேஷன் அம்சம். ஶ்ரீமன் நாராயணான விஷ்ணுவின் படுக்கை. படுக்கையை யாரும் 
எழுப்ப மாட்டார்கள். எழுப்பவும் 
முடியாது. அதனால் தான் 
லட்சுமணனை இதில் சேர்க்கலை. 

★பகவான் ஸ்ரீராமபிரானை 
எழுப்புவதற்கு, 'கௌசல்யா 
சுப்ரஜா' என ஏன் சொல்லிக் 
கொண்டே இருக்க வேண்டும் ?
என்ன அர்த்தம் இதற்கு ?...
அதாவது, 'இப்பேர்ப்பட்ட மகிமை 
மிக்க ராமனைப் பெற்றெடுத்த கௌசல்யையே! நீ என்ன விரதம் மேற்கொண்டு, இந்த வரத்தை பெற்றாயோ.' என்று ஸ்ரீராம 
பிரானின் புகழை மறை முகமாகச் சொல்லிவிட்டு, அவனுடைய தாயாரை வாயார,  மனதாரப் புகழ்கிறார் மகரிஷி விஸ்வாமித்திரர்.

விஷ்ணுவின் அம்சமான வெங்கடேசப் பெருமானுக்கும் திருப்பள்ளியெழுச்சிப் பாடலின் முதல் வரிகளாக,  இவ்வரிகளே அமைந்துள்ளன.

கோவிந்தா! கோவிந்தா!! 
கோவிந்தா!!!

நாளை.......................

ஶ்ரீராம காவியம்
~~~~~
355/01-04-2022

ஶ்ரீராமநாம கதைகள்-35

அனுப்பியவர்:

திருமதி உஷா வெங்கட்ராமன்
படித்துறை 
ஆஞ்சநேயர் சன்னதி
சீர்காழி.

சீதையின் விருந்து...

★ஶ்ரீராமரின் பரம பக்தனான ஆஞ்சநேயனுக்கு விருந்து செய்விக்க வேண்டுமென்று 
ஒரு நாள் ஸீதாபிராட்டிக்குத் தோன்றியது. ஆகவே அனுமனை அழைத்து,  குழந்தாய்! அனுமா!
இன்றைக்கு உனக்கு என் கையால் சமைத்துப் போடுவேன். நீ இங்கே சாப்பிட வேண்டும் என அன்புக் கட்டளை இட்டாள் அன்னை ஜானகி. ஹனுமானும் மிக ஆர்வத்துடன் ஒப்புக் கொண்டார். 

★அன்னை சீதை தன்னுடைய  தோழிமார்களுடன் பலவிதமான உணவுப் பதார்த்தங்கள் தயார் செய்து வைத்தாள். ஹனுமானும் ஸ்நானம் செய்துவிட்டு, த்வாதச நாமம் போட்டுக் கொண்டு 'ராம ராம' என்று ஜபம் செய்து கொண்டே வந்து சாப்பாட்டில் உட்கார்ந்து கொண்டார்.

★சீதை தன் தோழிமார்களுடன் பரிமாறினாள். ஹனுமானோ போடப் போட சாப்பிட்டுக் கொண்டேயிருந்தார். சீதையால் பரிமாறி மாளவில்லை. சீதை சமைத்ததெல்லாம் தீர்ந்து விட்டது. சீதாபிராட்டிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இனிமேல் பரிமாறுவதற்கு ஒன்றுமில்லை. ஹனுமானோ போடு போடு என்கிறார்.

★அந்த சமயம் பார்த்து லக்ஷ்மணன் அங்கு வந்தார். ஹனுமானின் பசியடங்க என்ன வழி? தெரியாத்தனமாகச் சாப்பிடக் கூப்பிட்டு விட்டேன் என்றாள் ஸீதை. அடாடா! அவருக்கு சாப்பாடுப் போட்டு கட்டுக் கொள்ளுமா? இந்த சாப்பாட்டிலெல்லாம் அவருக்கு திருப்தி வந்துவிடாது என்று சொல்லிவிட்டு,  ஒரு துளஸீ தளத்தில், சந்தனத்தால் 'ராம' நாமத்தை எழுதி அவர் இலையில் கொண்டு போட்டார் லக்ஷ்மணன். ஆஞ்சநேயரோ உடனே அதை வாயில் போட்டுக் கொண்டு மிகப் பெரிய ஏப்பம் விட்டவாறே அங்கிருந்து  எழுந்திருந்து போய்விட்டார்.

★என்னே! ராம நாம மகிமை! என்னே ! ஶ்ரீதுளசி மகிமை.
இதைப் படிக்கும் நண்பர்களுக்கு, 
மகாபாரத காவியத்தில் நடந்த 
இதேபோன்றதொரு ஶ்ரீதுளசி மகிமை காட்சி நினைவிற்கு வந்திருக்க வேண்டுமே?

(இதுவொரு ஹிந்து கர்ணபரம்பரைக் கதை - ஸ்ரீ ஸ்ரீ க்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் அருளியது.)

நாளை..........ஶ்ரீராம காவியம்
~~~~~
355/01-04-2022

ஶ்ரீராமநாம கதைகள்-35

அனுப்பியவர்:

திருமதி உஷா வெங்கட்ராமன்
படித்துறை 
ஆஞ்சநேயர் சன்னதி
சீர்காழி.

சீதையின் விருந்து...

★ஶ்ரீராமரின் பரம பக்தனான ஆஞ்சநேயனுக்கு விருந்து செய்விக்க வேண்டுமென்று 
ஒரு நாள் ஸீதாபிராட்டிக்குத் தோன்றியது. ஆகவே அனுமனை அழைத்து,  குழந்தாய்! அனுமா!
இன்றைக்கு உனக்கு என் கையால் சமைத்துப் போடுவேன். நீ இங்கே சாப்பிட வேண்டும் என அன்புக் கட்டளை இட்டாள் அன்னை ஜானகி. ஹனுமானும் மிக ஆர்வத்துடன் ஒப்புக் கொண்டார். 

★அன்னை சீதை தன்னுடைய  தோழிமார்களுடன் பலவிதமான உணவுப் பதார்த்தங்கள் தயார் செய்து வைத்தாள். ஹனுமானும் ஸ்நானம் செய்துவிட்டு, த்வாதச நாமம் போட்டுக் கொண்டு 'ராம ராம' என்று ஜபம் செய்து கொண்டே வந்து சாப்பாட்டில் உட்கார்ந்து கொண்டார்.

★சீதை தன் தோழிமார்களுடன் பரிமாறினாள். ஹனுமானோ போடப் போட சாப்பிட்டுக் கொண்டேயிருந்தார். சீதையால் பரிமாறி மாளவில்லை. சீதை சமைத்ததெல்லாம் தீர்ந்து விட்டது. சீதாபிராட்டிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இனிமேல் பரிமாறுவதற்கு ஒன்றுமில்லை. ஹனுமானோ போடு போடு என்கிறார்.

★அந்த சமயம் பார்த்து லக்ஷ்மணன் அங்கு வந்தார். ஹனுமானின் பசியடங்க என்ன வழி? தெரியாத்தனமாகச் சாப்பிடக் கூப்பிட்டு விட்டேன் என்றாள் ஸீதை. அடாடா! அவருக்கு சாப்பாடுப் போட்டு கட்டுக் கொள்ளுமா? இந்த சாப்பாட்டிலெல்லாம் அவருக்கு திருப்தி வந்துவிடாது என்று சொல்லிவிட்டு,  ஒரு துளஸீ தளத்தில், சந்தனத்தால் 'ராம' நாமத்தை எழுதி அவர் இலையில் கொண்டு போட்டார் லக்ஷ்மணன். ஆஞ்சநேயரோ உடனே அதை வாயில் போட்டுக் கொண்டு மிகப் பெரிய ஏப்பம் விட்டவாறே அங்கிருந்து  எழுந்திருந்து போய்விட்டார்.

★என்னே! ராம நாம மகிமை! என்னே ! ஶ்ரீதுளசி மகிமை.
இதைப் படிக்கும் நண்பர்களுக்கு, 
மகாபாரத காவியத்தில் நடந்த 
இதேபோன்றதொரு ஶ்ரீதுளசி மகிமை காட்சி நினைவிற்கு வந்திருக்க வேண்டுமே?

(இதுவொரு ஹிந்து கர்ணபரம்பரைக் கதை - ஸ்ரீ ஸ்ரீ க்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் அருளியது.)

நாளை..........ஶ்ரீராம காவியம்
~~~~~
355/01-04-2022

ஶ்ரீராமநாம கதைகள்-35

அனுப்பியவர்:

திருமதி உஷா வெங்கட்ராமன்
படித்துறை 
ஆஞ்சநேயர் சன்னதி
சீர்காழி.

சீதையின் விருந்து...

★ஶ்ரீராமரின் பரம பக்தனான ஆஞ்சநேயனுக்கு விருந்து செய்விக்க வேண்டுமென்று 
ஒரு நாள் ஸீதாபிராட்டிக்குத் தோன்றியது. ஆகவே அனுமனை அழைத்து,  குழந்தாய்! அனுமா!
இன்றைக்கு உனக்கு என் கையால் சமைத்துப் போடுவேன். நீ இங்கே சாப்பிட வேண்டும் என அன்புக் கட்டளை இட்டாள் அன்னை ஜானகி. ஹனுமானும் மிக ஆர்வத்துடன் ஒப்புக் கொண்டார். 

★அன்னை சீதை தன்னுடைய  தோழிமார்களுடன் பலவிதமான உணவுப் பதார்த்தங்கள் தயார் செய்து வைத்தாள். ஹனுமானும் ஸ்நானம் செய்துவிட்டு, த்வாதச நாமம் போட்டுக் கொண்டு 'ராம ராம' என்று ஜபம் செய்து கொண்டே வந்து சாப்பாட்டில் உட்கார்ந்து கொண்டார்.

★சீதை தன் தோழிமார்களுடன் பரிமாறினாள். ஹனுமானோ போடப் போட சாப்பிட்டுக் கொண்டேயிருந்தார். சீதையால் பரிமாறி மாளவில்லை. சீதை சமைத்ததெல்லாம் தீர்ந்து விட்டது. சீதாபிராட்டிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இனிமேல் பரிமாறுவதற்கு ஒன்றுமில்லை. ஹனுமானோ போடு போடு என்கிறார்.

★அந்த சமயம் பார்த்து லக்ஷ்மணன் அங்கு வந்தார். ஹனுமானின் பசியடங்க என்ன வழி? தெரியாத்தனமாகச் சாப்பிடக் கூப்பிட்டு விட்டேன் என்றாள் ஸீதை. அடாடா! அவருக்கு சாப்பாடுப் போட்டு கட்டுக் கொள்ளுமா? இந்த சாப்பாட்டிலெல்லாம் அவருக்கு திருப்தி வந்துவிடாது என்று சொல்லிவிட்டு,  ஒரு துளஸீ தளத்தில், சந்தனத்தால் 'ராம' நாமத்தை எழுதி அவர் இலையில் கொண்டு போட்டார் லக்ஷ்மணன். ஆஞ்சநேயரோ உடனே அதை வாயில் போட்டுக் கொண்டு மிகப் பெரிய ஏப்பம் விட்டவாறே அங்கிருந்து  எழுந்திருந்து போய்விட்டார்.

★என்னே! ராம நாம மகிமை! என்னே ! ஶ்ரீதுளசி மகிமை.
இதைப் படிக்கும் நண்பர்களுக்கு, 
மகாபாரத காவியத்தில் நடந்த 
இதேபோன்றதொரு ஶ்ரீதுளசி மகிமை காட்சி நினைவிற்கு வந்திருக்க வேண்டுமே?

(இதுவொரு ஹிந்து கர்ணபரம்பரைக் கதை - ஸ்ரீ ஸ்ரீ க்ருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் அருளியது.)

நாளை..........

[1:36 pm, 02/04/2022] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
356/02-04-2022

ஶ்ரீராமநாம கதைகள்-36

அனுப்பியவர்:
திரு. B.சின்னத்தம்பி
கோவில்பட்டி.
9842165615

கோவில்களில்
ஹனுமந்த வாகனம்?...

★ஸ்வாமி கோயில்களில் கருட வாகனம் புறப்பாடு என்பது சரி.
காரணம் பகவான் கருடாரூடன்.
எப்போதும் கருடவாகனத்தில் பயணிப்பவன் பகவான். ஆனால் இந்த ஹனுமந்த வாகனம் 
ஏன் ஏற்படுத்தினார்கள். அனுமன் கருடனை போல் நித்யசூரி இல்லை.  அவன் ஒரு சிரஞ்சீவி. இன்னும் பூமியில் தானே வசிக்கிறான். அப்படி இருக்க ஏன் ஹனுமந்த வாகனம் என ஒரு  கேள்வி எழும்.

★அதற்கான இந்தப் பதில், உங்களுக்காக. ராமாயணத்தில் ஶ்ரீராம ராவண யுத்ததத்தில் ஒரு நிகழ்வு. ஶ்ரீராமனுடன் போரிட வந்த ராவணனை, இளவலும், ஶ்ரீராமானுஜனான லக்ஷ்மணன்  முதலில் எதிர்த்து போரிடுகிறான்
ராவணன் எய்யும் ஒவ்வொரு அஸ்திரத்தையும் செயலிழக்கச் செய்து கொண்டே வருகிறான்.
ஒரு சில நிமிடத்துளியில் லக்ஷ்மணன் விட்ட அம்பு ராவணனின் பத்து கைகளில் இருந்த ஆயுதங்களையும் கீழே விழச்செய்ததுடன் மேலும் தீவீரமாக ராவணனுடன் போர் புரிய தொடங்குகிறான்.

★லக்ஷ்மணனின் இந்த  போர் திறமையை கண்டு வியந்த ராவணன், லக்ஷ்மணனை அவ்வளவு எளிதில் அழிக்க முடியாது என கண்டு கொண்டு பிரம்மா விஷேமாக தனக்கு தந்த அஸ்திரத்தை லக்ஷ்மணன் மேல் ஏவுகிறான். தன் மார்பை நோக்கி வரும் அஸ்திரதின் மகிமையை உணர்ந்த லக்ஷ்மணன் அதனை எதிர்க்காமல் விட அந்த அஸ்திரம் மார்பில் பட்டு லக்ஷ்மணன் மூர்ச்சை ஆகிறான்.

★ராவணன் வேகமாக வந்து லக்ஷ்மணனை இலங்கையின் உள்ளே தூக்கி செல்வதற்காக எத்தனிக்கிறான். அவனால் துளிகூட லக்ஷ்மணன் உடலை அசைக்க முடியவில்லை. பத்து கைகளை கொண்டு மிகவும் முயல்கிறான்.  முடியவில்லை.
இதை தூரத்தில் இருந்த கவனித்த ஹனுமான், உடனே 
லக்ஷ்மணன் உடல் அருகே வேகமாக வந்து, ஒரு சிறு குழந்தையை நெஞ்சோடு அணைத்துக் காக்கும் தாயைப் போல, லக்ஷ்மணனை தனது கைகளால் தூக்கி கொண்டு ராவணன் கண்முன்னாடியே வேகவேகமாக ஶ்ரீராமன் இருக்குமிடம் சென்றடைந்தான்.

★மூர்ச்சையாகிக் கிடந்த லக்ஷ்மணனை ஶ்ரீராமனின் எதிரே கிடத்தினான். செயல் அற்றவனாய் மூர்ச்சையாகி கிடந்த லக்ஷ்மணனைப் பார்த்து தன்னிலை இழந்த ஶ்ரீராமன் சற்றைக்கெல்லாம் தன்னைச் சுதாரித்துக்கொண்டு மிகுந்த சினம் கொண்டு தம்பியை இந்நிலைக்கு ஆளாக்கிய ராவணனை போரில் சந்திக்கப் புறப்பட்டான்.

★அதே நேரம் ராவணனும் ஶ்ரீராமனுடன் போர் புரிய எண்ணி ஶ்ரீராமன் முன் தனது தேரை கொண்டுவந்து நிறுத்த,
அதர்மத்தையே தொழிலாக கொண்ட ராவணன் தேரில் போரிட வருகின்றபோது,
தர்மத்தின் தலைவனான ஶ்ரீராமன் அவனெதிரே  வெறும் தரையில் நின்று கொண்டு இருப்பதை கண்ட வாயுபுத்திரன்,
மனம் நெகிழ விழிகளில் அவனறியாமல் கண்ணீர் சுரக்க,
ஶ்ரீராமன் அருகே சென்று இருகரம் கூப்பினான்.

★அதன் பின்னர் நாத்தழுதழுக்க ஶ்ரீராமனை பார்த்து, ஐயனே! அந்த அதர்ம சொரூபமான ராவணன், ஆயிரம் குதிரை பூட்டின தேரில் உங்கள் முன் போரிட வந்துள்ளான். ஆனால் 
அவன் எதிரில் அந்த தர்மமே வடிவமான தாங்கள் வெறும் தரையில நின்று போரிட போவது எனக்கு ரொம்ப வருத்தமாக உள்ளது தேவரீர்!  அடியேனை ஒரு அல்பமான வானரம் என எண்ணாமல், பெரிய மனது கொண்டு என்னோட தோள்மேல ஏறிகொண்டு, அவனுடன் போரிட வேண்டும் என வேண்டினான்.

★அனுமனின் இந்த அன்பு வார்த்தைகளைக் கேட்டு, ஆனந்தித்த ராமனின் இரு விழியோரங்களிலும் ஆனந்த நீர்துளிர்க்க,  ஹே! வாயுபுத்ரா 
எனக்கு இதை விடச் சிறந்த உபகாரம் இந்நேரத்தில் வேறென்ன இருக்க முடியும்.
அதுவும் இல்லாமல் உன்னை போன்ற அன்பான சீடன்  என்னுடன் இருக்கும் போது எனக்கு  ஏது குறை? என சொல்லிக்கொண்டே ,
அனுமனின் தோள்களில் ஏறி அமர்ந்தான் தசரத நந்தன்.

★அவ்வளவு தான் ஹனுமன், இக்காலத்தில்  மனைவியின் மூலம் பெறப்பட்ட சேயைத் தன்  தலைமேல் பெருமையுடன் தாங்கி செல்லும்  பாசமிகுந்த தகப்பன்மார்கள் போல் ஆனந்தத்தில்  ஜொலித்தான்.
ஶ்ரீராமனோ மேன்மை மிகுந்த மேருமலை மேல் கம்பீரமாய் அமர்ந்திருக்கும்  ஆண்சிங்கம் போல் ஹனுமன் தோளில் காட்சி கொடுக்க,  இந்தக் காட்சியை கண்ட விண்ணுலக தேவர்கள் தங்களது  நல்லாசியை இருவருக்கும் பூமாரி பொழிந்து வாரி வழங்கினர்.

★காலம் காலமாய் நடந்தால் குடையாக, நின்றால் மரவடியாக, சயனித்தால் படுக்கையாக,  
திருமாலை தாங்குகின்ற பெருமையை  கொண்டிருந்த ஆதிசேஷனும் , திருமாலுக்கு ஊர்தியாய் வாயுவேக மனோவேகமாய் எப்போதும் எங்கும் சுமந்து செல்லும் பெரிய திருவடியான கருடனும்  மிகுந்த 
பொறாமை  கொண்டு நாணி தலை குனிந்தனர்.

★ஹனுமனின் மீதமர்ந்த ஶ்ரீராமனோ, ஹே! வானரவீரா!
வெகுகாலமாக நான் தேடிய  எனக்கேற்ற வாகன ஆசனம் இன்றே கிட்டியது, என்னும் விதமாக அனுமனின் தோள்களில் வெகு பாந்தமாய் ஆரோகணித்திருந்தான். அதே கோலத்துடன் ராவணனுடன் அதிதீவீரமாக போர் புரிந்து, அவனது அரக்கர் படைகளையும் அழகிய தேரையும், பலவித அஸ்திரங்களையும் அவனின் வில்லையும் செயலிழக்கச் செய்து நிராயுத பாணியாக நிறுத்தி,  ஹே! ராவணா! நிராயுதபாணியான உன்னை இன்று கொல்ல மனம் ஒப்பவில்லை.  நீ இன்றுபோய்  நாளை வேறு மீதமுள்ள படைகளுடன் வா என கூறி அனுப்பியது வரலாறு.

★அன்று அந்த போர்களதில் ஶ்ரீராமனின் வாகனமாக மாறிய  ஹனுமந்த வாகனத்தை நினைவு கூறவே, வேதசாஸ்திரங்களை அறிந்த   பூர்வர்களால் ஏற்படுத்தபட்டு, இன்றும் வைணவ திவ்ய அபிமான கோயில்களில் ஹனுமந்த வாகனம் மேல் பகவான் புறப்பாடு கண்டருளபடுகிறது.
எப்போதெல்லாம் ஹனுமந்த வாகனத்தில் பகவானை காண்கிறோமோ, அப்போது எல்லாம் இந்த நிகழ்வு நினைவுக்கு வரவேண்டும்.

★ஶ்ரீராமதூதனான ஹனுமனை போல் பகவத் கைங்கர்யம் செய்ய மனம் துடிக்க வேண்டும்.
ஹனுமன் வானரமோ, அல்லது மானுடமோ அல்ல. அவன் ஒரு அளப்பறிய இயலாத சக்தி கொண்ட ஶ்ரீராம தூதன்.
எனவே ஹனுமந்தனை போல் ஶ்ரீராமனை தூக்கி கொண்டு போக இயலாவிடினும்,
அந்த வாகனத்தை எழுந்தருள பண்ணும் ஒரு ஶ்ரீபாதம் தாங்கியாகவாவது இருப்போம்.

★அனைத்து பகவத் ஶ்ரீபாதம் தாங்கும் அன்பர்களுக்கும் இக்கேள்வி பதில் சமர்ப்பணம்.

ஜெய் ஶ்ரீராம். ஜெய் ஶ்ரீராம்.

நாளை....................
[3:11 pm, 03/04/2022] Naga. Suba.Raja Rao Salem: ஶ்ரீராம காவியம்
~~~~~
357/03-04-2022

ஶ்ரீராமநாம கதைகள்-37

அனுப்பியவர்:
திருமதி லக்ஷ்மி
ஶ்ரீரங்கம்.

அகர வரிசையில்
சுந்தர காண்டம்...


🌹அனுமன்,
🪔அலைகடலை
🪔அலட்சியமாக
🪔அடியெடுத்து
🪔அளந்து
🪔அக்கரையை
🪔அடைந்தான்.
🪔அசோகமரத்தின்
🪔அடியில் ,
🪔அரக்கிகள்
🪔அயர்ந்திருக்க
🪔அன்னையை
🪔அடிபணிந்து
🪔அண்ணலின்
🪔அடையாளமாகிய
🪔அக்கணையாழியை
🪔அவளிடம்
🪔அளித்தான்
🪔அன்னை
🪔அனுபவித்த
🪔அளவற்ற
🪔அவதிகள்
🪔அநேகமாக
🪔அணைந்தன.
🪔அன்னையின்
🪔அன்பையும்
🪔அருளாசியையும்
🪔அக்கணமே
🪔அடைந்தான்
🪔அனுமன்.
🪔அடுத்து,
🪔அரக்கர்களை
🪔அலறடித்து ,
🪔அவர்களின்
🪔அரண்களை ,
🪔அகந்தைகளை
🪔அடியோடு
🪔அக்கினியால்
🪔அழித்த
🪔அனுமனின்
🪔அட்டகாசம் ,
🪔அசாத்தியமான
🪔அதிசாகசம்.
🪔அனந்தராமன்
🪔அலைகடலின்
🪔அதிபதியை
🪔அடக்கி ,
🪔அதிசயமான
🪔அணையை
🪔அமைத்து,
🪔அக்கரையை
🪔அடைந்தான்.
🪔அரக்கன்
🪔அத்தசமுகனை
🪔அமரில்
🪔அயனின்
🪔அஸ்திரத்தால்
🪔அழித்தான்.
🪔அக்கினியில்
🪔அயராமல்
🪔அர்ப்பணித்த
🪔அன்னை
🪔அவள்
🪔அதி
🪔அற்புதமாய்
🪔அண்ணலை
🪔அடைந்தாள்.
🪔அன்னையுடன்
🪔அயோத்தியை
🪔அடைந்து
🪔அரியணையில்
🪔அமர்ந்து
🪔அருளினான்
🪔அண்ணல்.
🪔அனந்தராமனின்
🪔அவதார
🪔அருங்கதை
🪔அகரத்திலேயே
🪔அடுக்கடுக்காக
🪔அமைந்ததும்
🪔அனுமனின்
🪔அருளாலே.(சுந்தர காண்டம் தொடங்கி பட்டாபிஷேக வைபவம் வரை).

நாளை....................

ஶ்ரீராம காவியம்
~~~~~
358/04-04-2022

ஶ்ரீராமநாம கதைகள்-38

அனுமனிடம் சீதை 
சொன்ன கரடி கதை! ...

★ராவண வதம் முடிந்தது. ராமரின் கட்டளைப்படி விபீஷணருக்கு கலச நீரால் அபிஷேகம் செய்து  இலங்கையின் மன்னனாக லக்ஷ்மணர் பட்டாபிஷேகம் செய்தார். அதன் பின்னர் ராமர் அனுமனை அழைத்து சீதா தேவியிடம் தனது க்ஷேமத்தைத் தெரிவித்து ராவணன் கொல்லப்பட்டதையும் தெரிவிக்க கட்டளை இடுகிறார்.சீதையிடம் வந்த அனுமன் ராமரின் க்ஷேமத்தைத் தெரிவித்து விட்டு  ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறான்.

★நீங்கள் உத்தரவு அளித்தால் உங்களை மிரட்டிய இந்த அரக்கிகள் அனைவரையும் இப்போதே கொல்ல விரும்புகிறேன்.இந்த வரத்தை அருளுங்கள் (ஏதத் வரம் ப்ரபச்ச என்பது வால்மீகியின் வாக்கு)” என்று பணிவாக அனுமன் இந்த வரத்தைக் கேட்க, சீதையோ, “விதிப்பயனாய் என்னால் இது  இப்படி அனுபவிக்க வேண்டியதாகி விட்டது என்று நிச்சயிக்கிறேன். இந்த விஷயத்தில் ராவணனின் வேலைக்காரிகளை நான் மன்னிக்கிறேன்” என்று கூறுகிறார்.

★விதியின் வெல்ல முடியாத போக்கும், மன்னிப்பு என்ற மாபெரும் தெய்வீக குணத்தை சீதாதேவி கொண்டிருப்பதையும் இந்த இடம் அருமையாக விளக்குகிறது. 'அனுமா!  வானர சிரேஷ்டரே! ராவணனின் கட்டளைக்கு இணங்க இந்த அரக்கிகள் என்னை எப்போதும் மிரட்டினார்கள். அவனே இப்போது இறந்து விட்டான். ஆகவே இனி மிரட்ட மாட்டார்கள்.
புராதனமானதும் அறநெறி வழுவாததுமான இந்த ஸ்லோகமானது ஒரு புலியிடம் கரடி ஒன்றினால் சொல்லப் பட்டது. அதை இப்போது நான் சொல்ல, என்னிடம் கேட்பீராக!” என்று கூறும் சீதை அதைக் கூறுகிறார்:

★'ந பர: பாபமாதத்தே பரேஷாம் பாபகர்மணாம்
சமயோ ரக்ஷிதவ்யஸ்து சந்தஸ்சாரித்ர பூஷணா: 

பர: – ஒரு நற்புருஷன்

பாப கர்மணாம் – பாவத்தைப் புரியும்

பரேஷாம் – மற்றவர்க:ளுக்கு (அதாவது தீயவருக்கும்)

பாபம் – பாவத்தை (தீங்கை)

ஆதத்தே ந – புரிவதில்லை

சமய: து – நன்னெறியே தான்

ரக்ஷிதவ்ய: -பாதுகாக்கத் தக்கது

சந்த: – நல்லோர்கள்

சாரித்ர பூஷணா: – நன்னடத்தையையே ஆபரணமாகக் கொண்டவர்கள்

 ★தீங்கு செய்தோருக்குத் திரும்பி நல்லோர் தீங்கை இழைப்பதில்லை. நல்லோர்கள் நன்னடத்தையையே ஆபரணமாகக் கொண்டவர்கள். அவர்கள் நன்னெறியையே பாதுகாப்பார்கள்.

சந்த: சாரித்ர பூஷணா: என்ற வால்மீகியின் வாக்கை நினைத்து நினைத்து மகிழலாம்.

★பழம் பெரும் கதையான புலிக் கதையை சீதை கூறுவதிலிருந்தே அது எத்துணை பழமையானது என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.சரி, கரடியின் கதை என்ன?

★முன்னொரு காலத்தில் புலி ஒன்று வேடன் ஒருவனைத் துரத்தியது. புலிக்கு அஞ்சி ஓடி வந்தவன் அருகிலிருந்த மரம் ஒன்றின் மீது ஏறினான். அந்த மரத்திலோ ஒரு கரடி இருந்தது! பயந்து போன வேடன் அந்த கரடியிடம் சரணாகதி அடைந்தான். அப்போது மரத்தின் கீழே இருந்த புலி, கரடியிடம் வேடனைக் கீழே தள்ளுமாறு கூறியது. ஆனால் கரடி திடமாக அதை மறுத்து விட்டது. பின்னர் கரடி உறங்க ஆரம்பித்தது. அப்போது வேடனை நோக்கிய புலி,” இப்போது கரடியைக் கீழே தள்ளி விடு. உன்னை விட்டு விடுகிறேன்” என்றது. 

★அதற்கு இணங்கிய வேடன் உறங்கிக் கொண்டிருந்த கரடியைக் கீழே தள்ளி விட்டான். ஆனால் முழித்துக் கொண்ட கரடி கீழே விழும் போதே ஒரு மரக்கிளையைப் பற்றிக் கொண்டது, இப்போது புலி கரடியிடம், “ உன்னைத் தள்ளிய வேடனை நீ கீழே தள்ளி விடு” என்றது. அதற்குக் கரடி,” தஞ்சமுற்றவனுக்கு எவ்வாற்றானும் தீங்கு புரிய மாட்டேன்” என்று உறுதியாகக் கூறி மேலே கண்ட ஸ்லோகத்தைக் கூறியது.

★ஆகவே கரடி சொன்ன இந்த ஸ்லோகம் காலம் காலமாக வழி வழியாக வழங்கப்பட்டு வருகிறது. சரணமடைந்தவனை எப்பாடு பட்டேனும் காப்பேன் என்ற அருமையான தத்துவம் பாரதத்தின் பாரம்பரியமான தத்துவங்களுள் ஒன்று என்பதற்கு இதை விட வேறென்ன சான்று வேண்டும்!

இந்த சரணாகதி தத்துவத்தின் படியே விபீஷணனை ராமன் அங்கீகரித்து ஏற்றான் என்பதையும், ராமாயணம் சரணாகதி காவ்யம் என்பதையும் எண்ணிப் பார்த்து மகிழலாம்.

நாளை...................

ஶ்ரீராம காவியம்
~~~~~
359/05-04-2022

ஶ்ரீராமநாம கதைகள்-39

பரத தசமி...

★ராம நவமி தெரியும் !!!!
பரத தசமி தெரியுமோ ?!?

★ராமன் பிறந்தது நவமியில் !
அவன் தம்பி பரதன் பிறந்தது தசமியில் !   கௌசல்யா ராமனைத் தந்தது நவமியில் !
கைகேயி பரதனைத் தந்தது தசமியில் !  புனர்பூசம் ராமனின் நட்சத்திரம் !    பூசம் பரதனின் நட்சத்திரம் !

★பரத தசமி தெரிந்தது ?!?
லக்ஷ்மண தசமி தெரியுமோ ?!?
லக்ஷ்மணனும் , அவன் தம்பி சத்துருக்கனனும் பிறந்ததும் தசமியில்தான் !!!   சுமித்திரை பகவானுக்காக லக்ஷ்மணனைப் பெற்றதும், பரதனுக்காக சத்துருக்கனனைப் பெற்றதும் தசமியிலே !

★ஆயில்யம்   லக்ஷ்மணனையும், சத்துருக்கனனையும் தந்தது. அதனால் அடைந்தது மாபெரும் புகழினை. புனர்பூசம் ராமனின் நட்சத்திரம் !  பூசம் பரதனின் நட்சத்திரம் !

★நவமியில் வந்தவன் ஒருவன் !
அவனே ஆதிமூலன் ! தசமியில் முதலில் வந்தவன் ஒருவன் !
அவனே பரதன் !  இருவரில் முதலில் வந்தவன் ஒருவன் !
அவனே லக்ஷ்மணன் !  அந்த 
நால்வரில் கடையனாய்.  வந்து நின்றவன் ஒருவன் !  அவனே சத்துருக்கனன் !

★ராமன் உலகைக் காக்க வந்தான் !    லக்ஷ்மணன் அவனைக் காக்க வந்தான் !
பரதன் நாட்டைக் காக்க வந்தான் !    சத்துருக்கனன் அவனைக் காக்க வந்தான் !

★ராமன் தர்மம் சொன்னபடி நடந்தான் !  லக்ஷ்மணன் ராமன் சொன்னபடி நடந்தான் !  பரதன் ராம பாதுகையோடு நடந்தான் !
சத்துருக்கனன் பரதனுக்கு பாதுகையாய் நடந்தான் !
ராமன் சீதையோடு நடந்தான் !
லக்ஷ்மணன் ராமனோடு நடந்தான் ! பரதன் ராமனுக்காய் நடந்தான் !    சத்துருக்கனன் பரதனுக்காய் நடந்தான் !

★ராமன் தன் தந்தை சொல் காத்தான்! லக்ஷ்மண் தன் தாய் சொல் காத்தான் !  பரதன் ராமன் சொல் காத்தான்! சத்துருக்கனன் பரதன் சொல் காத்தான் !

★ராமனோ உன்னத தர்மம் !
லக்ஷ்மணனோ கைங்கரியம் !
பரதனோ நியாயம் !
சத்துருக்கனனோ சத்தியம் !

★புனர்பூசமும், பூசமும், மற்றும் ஆயில்யமும் ஆகிய மூன்றும் தந்ததோ நால்வகை மோக்ஷம் !
நவமியும், தசமியும் தந்ததோ நால்வகை பிரயோஜனம் !

★பழி வந்தால் பரதனாக இரு !
சேவை செய்ய   லக்ஷ்மணனாக இரு !  சிரத்தையில் தம்பி சத்துருக்கனனாக இரு !
மொத்தத்தில் ராமனுக்கு பிடித்தமாதிரி இரு !

ஶ்ரீராம காவியம்
~~~~~
360/06-04-2022

ஶ்ரீராமநாம கதைகள்-40

சுந்தரகாண்டம்...

★ராமாயணத்தை எழுதி முடித்த வால்மீகி முனிவர் ஒவ்வொரு காண்டத்திற்கும் ஒவ்வொரு பெயர் சூட்டினார். அப்போது சுந்தர காண்டத்திற்கு அனுமன் என்று பெயரை சூட்டினார். அதற்கு அனுமன் தன் பெயரை சூட்ட வேண்டாம் என்று உறுதியாக சொல்லிவிட்டார்.

★வால்மீகி முனிவர் தனது சமயோசிதத்தால் சுந்தர காண்டம் என்று பெயர் சூட்டினார். அனுமன், அருமை என்று பாராட்டி இது நம் பெயர் இல்லையே என்று அங்கிருந்து கிளம்பி தன் அன்னை அஞ்சனா தேவியை பார்க்கச் சென்றார். தன் மகன் அனுமனின் வரவால் மகிழ்ச்சி அடைந்த அஞ்சனை வா சுந்தரா வா என்று அழைத்தாள். 

★அனுமானுக்கு தூக்கி வாரி போட்டது. தாயே! தாங்கள் என்னை என்ன பெயர் சொல்லி அழைத்தீர்கள்? என்று கேட்டார். அதற்கு அஞ்சனா தேவி, உனது பால்ய பருவத்து பெயர் 'சுந்தரன்' தானே? மறந்து விட்டாயா? என்று சொல்லி பலகாரம் செய்ய செல்கிறேன் என்று உள்ளே சென்று விட்டார். 

★தன் பெயரை வால்மீகி, தனக்கே தெரியாமல் வைத்து விட்டார் என்று அப்போது தான் அனுமானுக்கு புரிந்தது.
சுந்தரகாண்டம் படிப்பவர்கள் எண்ணற்ற பலன்களை அடைவார்கள் என்று பல மகான்கள் அருளியுள்ளார்கள்.

ஜெய் ஶ்ரீராம்! ஜெய் ஶ்ரீராம்!!

நாளை..................

ஶ்ரீராம காவியம்
~~~~~
361/07-04-2022
 
ஶ்ரீராமநாம கதைகள்-41
 
அனுப்பியவர்:
V.P. சூர்யநாராயணன்
வரகூர்.
 
ராம நாமத்தின் விலை...
 
★வீதியில்  ராமா நாம சங்கீர்த்தனம் பாடியபடி  பஜனை கோஷ்டி ஒன்று சென்று கொண்டிருந்தது.!  அதை அலட்சியம் செய்தும், ராமநாம பஜனையை  கிண்டல் செய்தபடி இருந்த  ஒருவனை பஜனைக் கோஷ்டியில் இருந்த ஞானி ஒருவர் கண்டார். அவர் அவனை அருகில் கூப்பிட்டு ராம நாம மகிமைகளை எடுத்துக் கூறி  அவனுக்கு  ராம நாமத்தை உபதேசித்தார். பிறகு  ஞானி
இதை  ஒரு போதும் விற்காதே!
ஆத்மார்த்தமாக ஒரே ஒரு முறையாவது சொல்லிப் பார்! என்றார். அவனும் அப்படியே செய்தான்.!
 
★காலகிரமத்தில் அவன் இறந்து போனான். அவன் ஆத்மாவை இழுத்துப் போய் யமதர்மராஜன் முன்பு   நிறுத்தினார்கள்   யம தூதர்கள்! அவரும், அவனுடைய பாப, புண்ணிய கணக்கை பரிசீலித்து, ஒருமுறை ராம நாமத்தை சொல்லி இருக்கிறாய். அதற்காக என்ன வேண்டுமோ கேள் என்றார்.!
 
★ராம நாமத்தை உபதேசித்த ஞானி அதை விற்காதே என்று கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. அதனால், அதற்கு விலை கூற மறுத்து, அந்த ராம நாமத்திற்கு, நீங்கள் என்ன தர வேண்டுமென நினைத்துக் கொண்டு இருக்கிறீர்களோ, அதைத் தாருங்கள் என்றான்.!
திகைத்த யமதர்ம ராஜா, ராம நாமத்திற்கு நாம் எப்படி மதிப்பு போடுவது  என்று எண்ணி இந்திரன் தான் ராமநாமத்தின் மதிப்பைத்  தீர்மானிக்க வேண்டும் வா! இந்திரனிடம் போகலாம் என்றார்.!
 
★'நான் வருவதென்றால், பல்லக்கில் தான் வருவேன் அத்துடன், அந்தப்  பல்லக்கைத் தூக்குபவர்களில், நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும். சம்மதமா? என்றான்.! இவன் நம்மையும் பல்லக்கு தூக்கச் சொல்கிறான் என்றால், ராம நாமம், மிகுந்த மகிமை உடையதாகத் தான் இருக்க வேண்டும்; அதனால் தான் இப்படி எல்லாம் பேசுகிறான் என்று எண்ணிய யமதர்ம ராஜா, அதற்கு சம்மதித்து, அவனை பல்லக்கில் உட்கார வைத்து, சுமந்து கொண்டு இந்திரனிடம் போனார்.!
 
★இந்திரனோ ராம நாமத்தை என்னால் எடை போட முடியாது பிரம்மதேவரிடம் கேட்போம்; வாருங்கள் என்றார்.!  ஆனால்
யமதர்மனோடு இந்திரனும் சேர்ந்து பல்லக்கு தூக்கினால் தான் வருவேன் என்று மீண்டும் அவன் நிபந்தனை விதித்தான்.!
அதற்கு இந்திரனும் ஒப்புக் கொண்டான். பல்லக்கை சுமந்து கொண்டு, பிரம்மாவிடம் சென்றனர்.!
 
★அவரும் ராம நாம மகிமைக்கு ஒரு விலை சொல்ல, என்னால் ஆகாது. வைகுண்டம் போய், அந்த பரம்பொருளையே கேட்கலாம் வாருங்கள் என்று சொல்ல, அவரும் பல்லக்கு சுமக்கும்படியாக ஆயிற்று.!
அனைவரும் மகா விஷ்ணுவிடம் சென்று இந்தப் பல்லக்கில் இருக்கும் ஆன்மா ஒருமுறை ராம நாமத்தை சொல்லியிருக்கிறது; அதற்காக, இவனுக்கு என்ன புண்ணியம் என்பதை தாங்கள் தான் கூற வேண்டும். எங்களால் முடியவில்லை என்றனர்.!
 
★இந்த ஜீவனைப் பல்லக்கில் வைத்து, நீங்கள் எல்லாரும் சுமந்து வருகிறீர்களே... ! இதில்
இருந்தே ராம நாம மகிமை தெரியவில்லையா ??  என்று சொல்லி,  பல்லக்கில் வந்த ஆன்மாவை தன்னுடன் சேர்த்துக் கொண்டார் !
ராம்! ராம் !!
 
சௌஜன்யம்..!
 
அன்யோன்யம் .. !!
 
ஆத்மார்த்தம்..!
 
தேசியம்..!
 
தெய்வீகம்..! பேரின்பம் ...!
 
நாளை.....................
 

ஶ்ரீராம காவியம்
~~~~~
362/08-04-2022

ஶ்ரீராமநாம கதைகள்-42

சாப்பாட்டு ராமன்... 

★இலங்கையில் போர் முடிந்த பின் ராமர் சீதை லட்சுமணன் சுக்ரீவன் விபீஷணன் மற்றும் வானரப்படைகள் அனைவரும் அயோத்திக்குத் திரும்பிக் கொண்டிருக்கையில் அயோத்திக்கு செல்லு முன்பாக பரதவாஜ முனிவரை தரிசிக்க ராமர் விரும்பினார். 

★ஆனால் பதினான்கு ஆண்டுகள் முடிந்த உடனேயே ராமர் அயோத்திக்கு திரும்பி வராவிட்டால், தான் தீயில் விழுந்து மாண்டு விடுவதாக பரதன் ராமரிடம் சொல்லி இருந்தான். இதனை ராமர் நினைத்துப் பார்த்தார். பரதன் சொன்னதை செய்யக்கூடியவன் என ராமர் நன்கு அறிவார். பதினான்கு வருடங்களுக்கு முன்பு வனவாசத்தை பரதவாஜ முனிவரிடம் ஆசிர்வாதம் பெற்ற பின் ராமர் கிளம்பினார் அதன் காரணமாக மீண்டும் பரதவாஜ முனிவரிடம் ஆசி பெற்று அயோத்தி திரும்பி செல்ல ராமர் முடிவு செய்தார்.

★பரத்வாஜ முனிவர், ஶ்ரீ ராமர் மற்றும் சீதையையும் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்து வரவேற்றார். இன்று இரவு இங்கே தங்கி,  உணவு உண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ராமரால் முனிவரின் வேண்டுகோளை நிராகரிக்க முடியவில்லை. ஆனால், அதே நேரம் தன் வருகை தாமதமானால் தம்பி உயிர் துறப்பான் என்றும் அஞ்சினார். ஆகவே அனுமனை அழைத்தார். 

★எனக்காக நீ பரதனிடம் சென்று, நான் அனைவருடனும் வந்து கொண்டிருப்பதை சொல்லி விட்டுவா! என்று கேட்டுக் கொண்டார். ராமரின் உத்தரவை நிறைவேற்ற அங்கிருந்து விரைவாக சென்ற அனுமன் திரும்பி வருவார் என்று பரதவாஜ முனிவர் சற்றும் எண்ணவில்லை. அதனால் வந்திருக்கும் அனைவருக்கும் சாப்பிட இலை ஏற்பாடு செய்த பரதவாஜ முனிவர் அனுமனுக்கு தனியாக உணவு சாப்பிட இலை ஏற்பாடு செய்யவில்லை. 

★அனைவரும் சாப்பிட ஆரம்பிக்கும் நேரம் சரியாக அனுமன் வந்து விட்டார். இதனைக் கண்ட ராமர் தனது இலையின் மேல்பக்கம் அனுமன் சாப்பிடட்டும் என்று சொல்லி தனக்கு எதிர்பக்கம் அனுமனை அமரச் செய்தார். அனுமன் காய் பழங்களைத் தான் விரும்பி உண்பார் என ராமருக்குத் தெரியும். ஆகவே உணவுகளை பரிமாறுபவர்களிடம் தனது இலையின் மேல்பக்கத்தில் காய் பழங்களை பரிமாரச் சொன்னார். அரிசி சாதம் மற்ற உணவு வகைகளைத் தன் பக்கம் வைக்கச் சொன்னார். இருவரும் ஒரே இலையில் சாப்பிட்டு முடித்தார்கள். 

 ★தான் உடனடியாக அயோத்தி  போகாவிட்டால் பரதனின் உயிர் சென்றுவிடும் என்று தெரிந்தும், பரதனிடம் தான் வந்து கொண்டிருப்பதாக அனுமனை தூது போகச் சொல்லி விட்டு, பரதவாஜ முனிவரின் விருந்தில் ராமர் கலந்து கொண்டது. மேலும் தனது இலையில் அனுமனுக்கு பழங்கள் காய்களிகளை மட்டும் வைக்கச் சொல்லி, தான் சாப்பாட்டை சாப்பிட்டதாலும் ராமர் சாப்பாட்டு ராமர் ஆனார். 

 ★அதுவே காலபோக்கில் சாப்பாட்டில் விருப்பம் உடையவர்களை இப்படிப் பெயரிட்டு அழைப்பது வழக்கமாகிவிட்டது.

நாளை.......................
ஶ்ரீராம காவியம்
~~~~~
363/09-04-2022

ஶ்ரீராமநாம கதைகள்-43

மந்திரம்...

★ராமர் தனது அயோத்தி மக்களுக்கு இறைவனின் மீதான பக்குவம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள எண்ணினார். அனுமனை நன்றாக புரிந்து வைத்திருந்த ராமர், அவரை வரவழைத்தார். அபூர்வமான மந்திரம் ஒன்றை அனுமனுக்கு உபதேசித்தார். இது மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம், எல்லாருக்கும் சொல்லி விடாதே, பக்குவம் உள்ளவர்களுக்கு மட்டுமே இதை உபதேசிக்க வேண்டும். ஆகையால் இதை மனதிற்குள் உருவேற்று, மனப்  பக்குவம் இல்லாதவர்களுக்கு இதனை சொல்லாதே என்றார்.

★மறு நாள், ஏதோ ஒரு முரசு  ஒலிக்கும் சத்தம் கேட்டு, உப்பரிகைக்கு சென்று வீதியை பார்த்த ராமர் திடுக்கிட்டார். காரணம், அங்கே ராமர் ரகசியமாய் உபதேசித்த மந்திரத்தை, பறை அறிவித்து வீதி வீதியாய் சொல்லிக் கொண்டிருந்தார் அனுமன். ராமர் அனுமனை வரவழைத்து, என்ன காரியம் செய்கிறாய்? பக்குவம் உள்ளோருக்கு சொல்ல வேண்டிய மந்திரத்தை, பறை அறிவித்து சொல்கிறாயே! என்றார். 

★அமைதியாக ராமரை பார்த்து நமஸ்கரித்து, அடியேன் பக்குவம் உள்ளோருக்கு மட்டுமே உபதேசம் செய்திருக்கிறேன். தங்கள் உத்தரவை நான் சிறிதும் மீறவேயில்லை. தாங்கள் வேண்டுமானால் அடியேன் அறிவிப்பை கேட்டவர்களில் சிலரை அழைத்து இங்கேயே விசாரிக்கலாம் என்றார் வாயு புத்திரன் அனுமன். உடனே சிலரை வரவழைத்து, அனுமன் சொன்னது உங்களுக்கு ஏதாவது புரிந்ததா? எனக் கேட்டார் ராமர்.

★ராமர் கேட்ட கேள்வி என்னமோ ஒன்றுதான். ஆனால் வந்த பதில்கள் பலவிதமாக இருந்தன. ஒன்றுமே புரியவில்லை என்று சிலர் கூறினார்கள். அனுமன் ஏதோ மனம்போன போக்கில் உளறிக் கொண்டு சென்றார் என்று சிலர் கூறினார்கள். இன்னும் சிலரோ அனுமன் பேசியது புரியாவிட்டாலும் நகைச்சுவையாக இருந்தது என்று கூறினார்கள். இவ்வாறு வந்திருந்த பலரும் பலவிதமாக கூறினார்கள்.

★பக்குவமான ஞானவான்கள் சிலர் மட்டும் அனுமன் தமக்கு உபதேசித்தது, என்ன சாதாரண மந்திரமா? அது நமது  பிறவிப் பிணியையே தீர்க்கக் கூடிய மந்திரமாயிற்றே என்று சொல்லி மெய் சிலிர்த்தார்கள். மக்களின் பக்குவத்தை ராமர் புரிந்து கொண்டார்.

★விதை ஒன்று தான், ஆனால் அது  நிலத்திற்கு தகுந்தாற் போல் தானே விளைகிறது. நிலம் நன்றாக இருந்தால் கூட அவ்வப்போது நீர் உரம் இட்டு பத்திரமாக பாதுகாத்தால் தானே நன்றாக விளைச்சல் காணும். அதுபோல குரு உபதேசிக்கும் மந்திரத்தை எல்லாரும் பெற்றுக் கொண்டாலும் அது வெகு சில பக்குவப்பட்ட  உள்ளங்களில் மட்டுமே பதிந்து வெளிப்படத் துவங்குகிறது.

ஶ்ரீராம்! ஜெயராம்! ஶ்ரீராமஜெயம்

நாளை........................

[2:33 pm, 10/04/2022] Mohan SriRaghavendrar Kulithalai: ஶ்ரீமத் வால்மீகி ராமாயணம் :

ஶ்ரீவால்மீகி மஹரிஷி வர்ணித்த ஶ்ரீராமரின்  16  திவ்ய குணங்கள் :

1. குணவான் / ஸௌசீல்யம், அதாவது தன்னைவிட தாழ்ந்தவர்களிடமும் சம்பந்தம், அன்பு காட்டுவது.  

2. வீர்யவான். 

 3. தர்மஞ்ஞன். 

4. க்ருதஞ்ஞன் / நன்றி மறவாதவன்.  

5. சத்ய வாக்கியன்.

 6. திடவ்ரதன் / உறுதியான மனஸ்.  

7. நன் நடத்தை. 

8. வித்வான்.  

9. சாமர்த்தியம் உள்ளவன். 

10. எப்போதும் அழகாக இருப்பவன்.

 11.ஆத்மாவான் / பரமாத்மா.

12. ஸ்வபாவம் / ஸ்வபாவத்திலிருந்து மாறாதவன். 

13. கல்யாண குணங்களை உடையவன். 

14. பொறாமை இல்லாதவர்.

15. கோபத்தை ஜெயித்தவர் / பக்தர்களுக்கு, அடியார்களுக்கு அபச்சாரம் செய்தால் கோபப்படுபவர். 

16.தைர்யவான்.

-------------------------------
[2:33 pm, 10/04/2022] Mohan SriRaghavendrar Kulithalai: ஶ்ரீமத் வால்மீகி ராமாயணம் :

உபன்யாஸத்தில் கேட்டது : 

பகவான் ஶ்ரீராமர் எப்படி பேசுவார் ?

1."சத்திய பாஷி" = சத்தியத்தையே பேசுபவர்.

2."ப்ரிய பாஷி" =
ப்ரியமாகப் பேசுபவர்.

3."மதுர பாஷி" =
இனிமையாகப் பேசுபவர்.

4."ம்ருது பாஷி" =
மிருதுவாகப் பேசுபவர்.

5."மித பாஷி" =
குறைவாக (அளவோடு) பேசுபவர்.

6."ஸ்மித பாஷி" =
சிரித்துக் கொண்டு  பேசுபவர்.

7."ஹித பாஷி" =
நல்லதையே பேசுபவர்.

8."பூர்வ பாஷி" =
எதிராளியைப் பேசத் தூண்டுபவர்.

-------------------------------
[2:33 pm, 10/04/2022] Mohan SriRaghavendrar Kulithalai: ஶ்ரீமத் வால்மீகி ராமாயணம் :

 சரணாகதியின் ஆறு லக்ஷணங்கள் :  

1.பகவான் ஒருவனே வேண்டும் என்ற தீவிர எண்ணம், தாபம்.

2.இதற்குத் தடையாய் இருப்பவைகளை ஒதுக்க வேண்டும்.  

3.பகவான் என்னை ரக்ஷிப்பான் என்ற பரிபூரண நம்பிக்கை, மஹா விச்வாசம்.

4.பகவான்தான் ரக்ஷகன் என்ற தீவிர எண்ணம், நம்பிக்கை. 

5.வினயம், அடக்கம். 

6.ஆத்ம சமர்ப்பணம் / ஆத்ம நிவேதனம்.

-------------------------------

ஶ்ரீமத் வால்மீகி ராமாயணம்-----
ஒரு சரணாகதி க்ரந்தம் :

உபன்யாஸத்தில் கேட்டது : 

ஶ்ரீமத் ராமாயணத்தில் வரும் பல  சரணாகதிகள் :

-------------------------------

 பால காண்டம் : 

1.பிரம்மாவுடன் தேவர்கள் ராவணனின் ஹிம்ஸை தாங்காமல், பகவான் ஶ்ரீமஹாவிஷ்ணுவிடம் சரணாகதி செய்தது.
  
2.விச்வாமித்திரர் சரணாகதி :

பரமேஸ்வரனிடமிருந்து பெற்ற அஸ்திர, சஸ்திரங்களை ராமருக்கு அருளியது.

3.பரசுராமரிடம் தசரதர் சர…
[4:22 pm, 10/04/2022] Mohan SriRaghavendrar Kulithalai: ஶ்ரீராம காவியம்
~~~~~
364/10-04-2022

ஶ்ரீராமநாம கதைகள்-44

அனுப்பியவர்:-
திரு. சரவண முத்து

ராம நாம மகிமை...

★நமக்கு நன்மைகள் அதிகம்   வரவேண்டுமானால்   'ராம  நாமத்தை'         இடைவிடாமல்   கூறவேண்டும். நமது  ஒவ்வொரு  மூச்சும்    'ராம் 'ராம்'   என்றே  உட்சென்றும் ,  வெளியேறுதலும்  வேண்டும்

★நாம்  அறியாமல்   செய்த தவறுக்கு  ராம நாமமே  மிகச் சிறந்த  பிராயசித்தம்.  அறிந்தே  செய்த   தவறானால்   அதற்கு வருந்துவதும் ,   தண்டனையை ஏற்பதுவும்,   பிராயசித்தமும்   ராம  நாமமே. காலால்  நடக்கும்  ஒவ்வொரு  அடியும்  'ராம் '  என்றே  நடக்கவேண்டும் .

★நமது  எல்லா விதமான  கஷ்டங்களுக்கும்  நிவாரணம்  'ராம  நாம  ஜெபமே.' கிழக்கு  நோக்கி  செல்ல  செல்ல  மேற்கிலிருந்து  விலகிடுவோம். அதுபோல  ராம  நாமாவில்  கரைய  கரைய  துக்கத்திலிருந்து  விலகிசெல்கிறோம்.

★' ராம  நாம'  ஜெபத்திற்கு  குரு கிடைக்கவேண்டும்  என்று  கால  தாமதம்  செய்தல்  கூடாது. ஏனெனில் 'ராம  நாமமே '  தன்னுள்  குருவையும்   உள்ளே கொண்டுள்ளது . நாமமே  பிரம்மம், நாமமே குரு, நாமமே எல்லாம்.

★காலை படுக்கையில்  விழிப்பு  வந்தவுடனே நாம்  சொல்ல வேண்டியது   'ராம நாமம்.'  எழுந்து  கடமைகளை  செய்யும் போதும்  சொல்லவேண்டியதும்  'ராம நாமம்.' அந்த  நாள்  நமக்கு  'ராம  நாம'  நாளாக  இருக்க வேண்டும்.

★' ராம நாம '  ஜெபத்தில்  நாம்  இருந்தால் , நமது  கர்ம வினையின்படி  ஏதேனும்  துக்கமோ , அவமானமோ  நிகழவேண்டியதாயின்  அவைகள்  தடுக்கப்படும் அல்லது  நமக்கு  அது பாதிப்பு  இன்றி   மாற்றி அமைக்கப்படும். பாதிப்பினை  தாங்கும்  வலிமையையும், அதுவும்  பிரசாதமாக  ஏற்கும்  பக்குவமும்  வரும்,

★எந்த  இடத்திலும்,  எந்த  நிலையிலும்  'ராம  நாமா'    சொல்லலாம்.  எங்கும்  உணவு  உண்ணுமுன்  'ராம  நாமா'  பக்தியோடு சொல்லி சாப்பிட வேண்டும். இறைவனும்  அவனது   நாமாவும்  ஒன்றே!

  
★'ராம  நாமா'  எழுத  மனம், உடம்பு, கைகள் ஒருமித்து செயல்படவேண்டும். ஆனால்  'ராம  நாமா'  சொல்ல   மனம்  மட்டும்  போதும். இதைதான்  
"நா  உண்டு,  நாமா  உண்டு"   என்றனர்  பெரியோர்கள் .

★ஒரு  வீட்டில் உள்ள பெண்  'ராம  நாமா'    சொன்னால்  அந்த  பெண்ணின் குடும்பம், கணவன் குடும்பம், குழந்தைகள், பெற்றோர்கள்  அனைவரும்  பிறப்பு, இறப்பு  சக்கரத்தில் இருந்து  விடுபடுவார்கள். அந்த  வீட்டினில்  தெய்வீகம்  நிறைந்து விடும். அதுவே  கோவிலாகும் .

★எல்லாவித  சாஸ்திர  அறிவும்  'ராம  நாமாவில்  அடங்கும்.  எல்லாவித  நோய்களுக்கும்  'ராம  நாமா' சிறந்த  மருந்து, துன்பங்களுக்கும்  அதுவே  முடிவு .

★நமது  லட்சியம்  அழியா  ஆனந்தமே. அது  'ராம  நாம ஜெபத்தால்  பெற  முடியும். 'ராம  நாமாவினால்   வினைகள்  எரிந்து,  எரிந்து  நோய்கள்  குறையும். சஞ்சிதம்,  ஆகாமியம்  கருகி  ப்ராரப்தம்  சுகமாக  அனுபவித்து  ஜீரணிக்கபடும்.

 ★நமது எந்தப் பயணத்திலும், அது   பஸ்சிலோ, காரிலோ , ரயிலிலோ, பைக்கிலோ  செல்லும்போதும்  'ராம  நாமா' சொல்லலாம். அதனால் விபத்துக்கள்  தவிர்க்கப்படும்.

★காசியில் உள்ள   விஸ்வநாதர்  கோவிலில்  மாலை வழிபாட்டின்  போது ( சப்தரிஷி   பூஜையின்  போது )  ஒவ்வொரு  நாளும், வில்வதளங்களில் சந்தனத்தால்  ராம நாமம்  எழுதி,   அவற்றை விஸ்வநாதருக்கு   சமர்ப்பித்து பூஜிக்கிறார்கள்.

★ பெண்களின்  மாதாந்திர  நாட்களிலும்  'ராம  நாமா' சொல்லுவதன்  மூலம்   அந்த  பிரபஞ்ச சக்தியிடமே  அடைக்கலமாகிறோம்.'ராம  நாமா'  சொல்ல  எந்த  ஒரு  விதியும்  இல்லை.  மனம் ஒன்று இருந்தால்  மார்க்கமுண்டு.

★பெண்கள்  சமைக்கும் போது எல்லாம்   ராம நாமம்   சொல்லி சமைத்தால்,   அந்த  உணவே  ராம  பிரசாதமாகி, அதை   உண்பவருக்கு  தூய  குணங்களையும் ,  நோயற்ற   தன்மையையும்  அவர்களது  உடல்  ஆரோக்கியத்தையும் பெறும். நோய்கள்  இருப்பின்  குணமாகும்.

★வேதங்களின்  படி  ஒருவன்  புண்ணிய நதிகளில்  நீராடி  பின்பு  வேதம்  கற்று,  பூஜைகளை  நியதிப்படி  செய்தவனாய்,  யோகியாய்  முந்தய  ஜன்மங்களில்  வாழ்ந்தவனாக  இருந்தால், சுமார்  40,00,000 பிறவிகளை  கடந்தவனாக  இருந்தால்  மட்டுமே  அவனால்   'ராம  நாமா' வை    ஒரு முறை  சொல்லமுடியும்.

★'ராம  நாமாவை  உரக்க  சொல்லுங்கள்.   காற்றில்  
ராம  நாம  அதிர்வு    பரவி,   உங்களை  சுற்றிலும்   காற்றில்  ஒரு தூய்மையை   ஏற்படுத்தும். கேட்கும்  மற்றவருக்குள்ளும்   அந்த   தூய அதிர்வு  ஊடுருவி   தூய்மை  மற்றும்  அமைதியை  கேட்பவருக்கும்    தரும்.
சுற்றியுள்ள  மரம், செடி கொடிகள் , பறவைகள், விலங்குகள்   எல்லாம்   'ராம நாமா'  கேட்டு  கேட்டு ..... அவைகளும்  மிக  உயர்ந்த  பிறவிகளை  பெறலாம்.  இதுவும்  சேவையே!  

★யார்  அறிவர்?  நமது  முந்தய  பிறவிகளில்  நாமும்  'ராம  நாமா'  கேட்டு  கேட்டு  இப்போதைய  பிறவியினை  பெற  ஏதேனும்  ஒரு பக்தரின்  வீட்டருகில்  மரமாய், ..செடியாய் ...பறவையாய் ....விலங்காய்  இருந்தோமோ ! என்னவோ ........  அப்புண்ணிய  பலனை ..... ராமனே  அறிவான்.

வெற்றியை நல்கும் ஸ்லோகம்

ஸ்ரீராம ராம ராமேதீ ராமே  
ராமே மனோரமே  
சகஸ்ர நாம தத்துலயம்  
ராம நாம வரானனே...

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869

நாளை..................


ஶ்ரீராம காவியம்
~~~~~
365/11-04-2022

ஶ்ரீராமநாம கதைகள்-45

ராவணன் கேட்ட தட்சணை

★ராமர், சேது பாலத்தை கட்டும் பணியை துவக்கி வைக்க சிவ பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும், ஆகவே பூஜைசெய்ய வேண்டியனவற்றை தயார் செய்யுங்கள் என்று பணித்தார். ராமனின் விருப்பமறிந்த ஜாம்பவான், இத்தகைய சேதுவை துவக்கி சிவ பூஜை செய்து வைக்க மிகச்சிறந்த பண்டிதர் ஒருவர் அவசியம் என்றுரைத்தார். அது போல் பண்டிதர்கள் யாராவது அருகே உள்ளனரா? என்ற ராமனின் கேள்விக்கு, இந்த சிவ பூஜையை செய்வதில் சிறந்த பண்டிதன் என்றால் அது ராவணன் ஒருவனே என்று தயக்கத்துடன் பதிலளித்தார் ஜாம்பவான். 

★பதிலைக் கேட்ட ஶ்ரீராமன், பிறகென்ன நமது அன்பான ஓர் வேண்டுகோளுடன் அனுமனை அனுப்புங்கள். இப்பூஜையை சிறப்புற நடத்தி தருமாறு அந்தப்  பண்டிதரையே வேண்டி இங்கு அழைத்து வாருங்கள் என்றார். நமது விரோதியின் தேசத்தை அடையும் வழிக்கு, அவனை வைத்தே பூஜையா? இது நடக்குமா? சுக்ரீவனும், அவனின் சேனைகளும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

★ஶ்ரீராமனின் விருப்பமறிந்த அனுமன், இமைப்பொழுதில் இலங்கை அரண்மனையில் நின்றார். ராட்சதர்கள் அனுமனை சூழ்ந்தார்கள். ராட்சதர்களிடம் அனுமன் பேச ஆரம்பித்தார். நான் உங்களுடன் சண்டையிட வரவில்லை. நான் சிவ பூஜை செய்து வைக்க, உத்தமமான சிவ பக்தனான ராவணனை நாடி வந்துள்ளேன். தன் முன்னால் நிற்கும் அனுமனின் இந்தக் கோரிக்கையை கேட்டு, ராவணனின் சபையினர்கள் வியந்தார்கள். ராவணன் மிக்க ஆச்சரியத்தோடு பார்த்தான். 

★அனுமனை. சபையில் உள்ளவர்கள் இது ராமரின் சூழ்ச்சி என்றார்கள். அதற்கு அனுமன் சூழ்ச்சியால் தங்களை வெல்ல இயலுமா? தயவு கூர்ந்து எங்கள் வேண்டுகோளுக்கு செவிசாய்க்க வேண்டும் என்றார். அச்சமும், ஆவேசமும், திகைப்பும் கூடி எழுந்து நின்று அனுமனை நோக்கி பலமாகக் கூச்சலிட்டவர்களை, அமைதிப் படுத்திய  ராவணன், இந்த வேள்வியை நடத்தித் தர ஒப்புக் கொண்டு, ராமர் இருக்கும் இடத்திற்கு அனுமனுடன் வந்தான் சிவ பக்தனான ராவணன்.

★ராமருக்கு பூஜை நடத்தி தர வந்த ராவணன், ராமரைப் பார்த்து சங்கு சக்கரங்கள் மட்டும் இவரது கரங்களில் இருந்தால் விஷ்ணுவாகத்தான் இவர் தோன்றுவார் என எண்ணினான். பூஜை ஏற்பாட்டில் ஏதேனும் குறை இருந்தால் கூறுங்கள் என்றார் ராமர். அதற்கு ராவணன் தசரத மைந்தா!  பூஜைக்கான ஏற்பாடுகள் நேர்த்தியாகவே உள்ளன. ஆனால் திருமணம் ஆனவன், தனது மனைவியின்றி  செய்யும் எந்தக் காரியத்தையும் சாஸ்திரங்கள் சிறிதுகூட அங்கீகரிப்பதில்லை. அதனால் இந்த பூஜை செய்தும், அதன் பலன் உங்களுக்கு கிட்டாது  என்று பதிலளித்தான் ராவணன். 

★தாங்கள் தான் எப்படியாவது இந்த வேள்வியை சிறிதும் குறைவின்றி நடத்தி தர வேண்டும் என்றார் ராமர். சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்த ராவணன், ராமரிடம் ஒரு நிபந்தனை விதித்தான். பூஜைக்காக சீதையை சிறிது நேரம் அழைத்து வருகிறேன். பூஜை முடியும் வரை உங்கள் இருவருக்கும் இடையே எந்த பேச்சுவார்த்தையும் கூடாது. மேலும் பூஜை முடிந்த அடுத்த கணமே சீதையை அழைத்து சென்று விடுவேன். அதற்கு இடைஞ்சல் ஏதும் செய்யாமல் இருக்க வேண்டும்  என்றான். நிபந்தனையை ஏற்றுக் கொண்டார் ஶ்ரீராமர். 

★பின்னர் இலங்கை சென்று அன்னை சீதையை அழைத்து வந்த ராவணன், சேதுபந்தனம் கட்டுவதற்கான ஆரம்ப பூஜையை நல்ல முறையில் வெகுசிறப்பாகச் செய்து முடித்தான்.   இப்பூஜையை நடத்திக் கொடுத்தற்காக தட்சணையை தயவு கூர்ந்து தாங்கள் தெரியப்படுத்த வேண்டும் என்று கைக்கூப்பிய வண்ணம் பண்டிதரான ராவணனிடம் கேட்டார் ராமர். அதற்கு ராவணன் மெதுவான குரலில் ராமனுக்கு மட்டுமே கேட்கும் படி பதில் அளித்தான். என்னை பண்டிதராய் மதித்து சிவ பூஜை செய்ததற்கு நன்றி மேலும் சிவ பூஜைக்கு நான் தட்சணை எப்பேதுமே வாங்குவதில்லை. 

★தட்சணை தராததால், பலன் கிட்டாது என்று நீ ஒருவேளை எண்ணக்கூடும். யுத்தத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை நான் தோல்வியுற்று என் உயிர் பிரிய நேர்ந்தால், அத்தருணத்தில் நீ என் அருகில் இருக்க வேண்டும். இது மட்டும் தான் நான் எதிர்பார்க்கும் தட்சணை என்றான் சகல வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்த ராவணன். ராமரும் சம்மதித்தார். சிவ பூஜையை சிறப்பாக நடத்திய ராவணன் மீண்டும் இலங்கை சென்றான். 

★ராவணனின் எண்ணப்படி அவன் உயிர் பிரிந்திடும் சமயத்தில், போர்க்களத்தில் ராவணனின் அருகிலிருந்து ராமர், தான் அன்றளித்த அந்த  வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம், அருகிலிருந்து ஆசிர்வதி்த்தார். அவன் செய்த மன்னிக்க முடியாத, அன்னை  சீதையைக் கடத்தியதற்காக வதம் செய்யப்பட்ட லங்கேசன் ராவணனுக்கு, அவனுடைய உயர்ந்த வேத பண்டிதனுக்கான குரு தட்சிணை, அவனுடைய  மரணத்தின் போது கிட்டியது.

குறிப்பு;-
இந்தக் கதையைப் பற்றி நான் அறிந்தது இல்லை. நண்பர் அனுப்பியதை அப்படியே பதிவு செய்துள்ளேன். பலவிதமான கருத்துகள் இக்கதையைப் பற்றி சிலர் எழுப்ப வாய்ப்புள்ளது. இதை  ஒரு கற்பனைக் 'கதையாக'ப் பார்த்தால் போதும். 

நாளை......................

ஶ்ரீராம காவியம்
~~~~~
366/12-04-2022

ஶ்ரீராமநாம கதைகள்-46

காலதேவன் கூற்று...

★ஸ்ரீ ராமரால்  காலதேவன் கேட்டுக் கொண்டதன்படி அவ்வளவு சுலபமாக பூவுலகை விட்டு செல்ல முடியவில்லை. ராஜ்யத்தை தன்னுடைய பிள்ளைகளுக்கும் மற்றுமுள்ள சகோதரர்களின் அனைத்து வாரிசுகளுக்கும் பிரித்துக் கொடுத்தாகிவிட்டது. பரதனும் சத்ருக்கனனும் ராமருடன் புறப்பட தயாரானார்கள்.
ஆனாலும் ஸ்ரீ ராமரால் அவர் விருப்பப்படி தன் வாழ்வை துறக்க முடியவில்லை. அதற்கு 
சாட்சாத் அந்த அனுமன் தான் முக்கிய காரணம். அனுமன் இரவும் பகலும் ராமருடைய அருகாமையிலேயே இருந்து அவர் பணிகளை செய்கிறான்; அவரை விட்டு ஒருபோதும் செல்ல மாட்டான்.

★பகவான் ஸ்ரீ ராமர் இறுதியாக அனுமனுக்கு நிரந்தர பிரிவின் அவசியத்தை விளக்க எண்ணினார்.  ஒரு நாள் ராமர், அனுமனுடன் பேசிக் கொண்டு இருந்தார். அனுமன் சிறிதும் அறியாதவாறு தன் விரலில் சூட்டியிருந்த மோதிரத்தை ஒரு பள்ளத்தில் விழ செய்தார் ராமர். அந்த மோதிரம் பள்ளத்தின் உள்ளே ஓடியது. உடனே ராமன் அனுமனை நோக்கி, அனுமனே! அந்த மோதிரம் பள்ளத்தில் விழுந்து விட்டது. உடனே அந்த மோதிரத்தை எடுத்து வா என்று கூறினார். அனுமன் தன் உடலை மிகச்சிறிய பூச்சி வடிவாக்கிக் கொண்டு மோதிரம் விழுந்த பள்ளத்தில் நுழைந்தார்.

★ஆனாலும் மோதிரமோ நழுவிக்கொண்டு பாதாளம் நோக்கி சென்றுக் கொண்டு இருந் தது. அனுமனும் விடாமல் மோதிரத்தை பின்தொடர்ந்தார்.
இறுதியில் அந்த மோதிரம் பாதாள லோகத்தின் வாயிலை அடைந்தது. பாதாள லோகத்தில் கதவு திறந்துகொள்ள மோதிரம் உள்ளே நழுவி விட்டது. பாதாள லோகத்தில் கதவும் உடனடியாக மூடிக்கொண்டது.

★மோதிரத்தை பின்தொடர்ந்த அனுமன் பாதாள லோகத்தில் வாசலில் நின்றான். அப்போது அங்கே பாதாள லோகத்தின் காவலரான காலதேவன் அனுமன் முன் வந்து என்ன தேடுகிறாய்? எனக் கேட்டான்.
அனுமனும் பகவான் ஸ்ரீராமரின் மோதிரம் உள்ளே சென்று விட்டது அதை எடுத்துச் செல்ல வந்தேன் என்றான். அப்படியா! என்று புன்னகைத்தவாறு கேட்ட காலதேவன், பாதாள அறையின் கதவை திறந்து விட்டான். உள்ளே சென்று உன்னுடைய  மோதிரத்தை எடுத்துச்செல் என்று அனுமனிடம் கூறினான்.

★அனுமனும் பாதாள அறைக்கு உள்ளே நுழைந்தான். ஆனால் அவன் தேடி வந்த மோதிரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆம், அந்த பெரிய அறையில் ஆயிரக்கணக்கான மோதிரங்கள் குவிந்து இருந்தன. அனைத்து மோதிரமும் ஒன்று போல் இருக்க அனுமன் குழம்பினான். அந்த சமயத்தில்  காலதேவன் கூறத் தொடங்கினான், அனுமனே! இவை அனைத்தும் காலச் சுழற்சியின் அடையாளங்கள். யுகங்கள் மீண்டும் மீண்டும் பிறக்கும். அப்போது பிரம்மா, விஷ்ணு, லக்ஷ்மி முதலான தெய்வங்கள் மீண்டும் மீண்டும் வரிசையாக அவதாரம் எடுப்பார்கள்.

★அவர்கள், தாங்கள் எடுத்த பிறவியின் செயல்களை  நிறைவேற்றுவார்கள். பின்பு மறைவார்கள். அவர்களை நாம் தடுக்கவோ அவர்களுடன் செல்லவோ முடியாது. ஆகவே 
அனுமனே!, ராமர் தன் மூல உரு எடுக்கும் நேரம் வந்துவிட்டது. அதை நீ அறிந்து கொள்ள வேண்டும் என்றே, ராமர் தன் 
மோதிரத்தை தவற விட்டார். காலசுழற்சியின் விளக்கத்தை அறிந்து நீ உன் இருப்பிடம் செல்வாயாக! என்று காலதேவன் அறிவுறுத்தினான்.

★பிறப்பு இறப்பின் மகத்துவம் அறிந்த அனுமனும் மனம் தெளிந்த நிலையில் மீண்டும் ராமரை அடைந்தான். இப்போது பகவான் ஸ்ரீ ராமர் அனுமனிடம் விடை பெற எண்ணினார். ஆனாலும் தன் மூத்த மகன் போல் விளங்கிய அனுமனை எளிதில் உதற முடியவில்லை.
ஸ்ரீராமன், அனுமனை அருகில் அழைத்தார். அனுமனை உனக்கு ஒரு உரிமை தருகிறேன், உனக்கு விருப்பமானால் நான் இப்பூமியி லிருந்து செல்லும்போது நீ என்னுடன் வரலாம், என்று கண்ணீர் மல்க கூறி அனுமனை கட்டித் தழுவிக் கொண்டார்.
அனுமன் உடல் சிலிர்த்தான். உள்ளம் நெகிழ்ந்தான், சற்று ஒரு கணம் யோசித்தான்.

★பிரபு தாங்கள் என்மேல் காட்டும் அன்பிற்கு மிகவும் நன்றி. ஆனால் ஒரு விளக்கம் மட்டும் தயைகூர்ந்து கூறுங்கள்.
ஸ்ரீவைகுண்டத்தில் நீங்கள் ராமனாக - என் பிரபுவாக இருப்பீர்களா ? இல்லை அவதார புருஷன் விஷ்ணுவாக இருப்பீர் களா ? என அனுமன் கேட்டான்.
ஒரு நிமிடம் திகைத்தார் ராமர்.
என்ன சந்தேகம் என் மகனே! வைகுண்டத்தில் நாம் பகவான் விஷ்ணுவாகவும், சீதை லட்சுமி தேவியாகவும், லட்சுமணன் ஆதிசேஷனாகவும், பரதன் சத்ருக்கனன், சங்கு சக்கரம் ஆகவும் அவதாரத்தில் இருப்போம் என்றார் பகவான் ராமர்.

★அனுமனோ தயக்கமின்றி பிரபு!. எனக்கு ஸ்ரீராமன் போதும்  உங்களை ராமனாகவும் என் அன்னையை சீதையாகவும்  , மற்றவர்களை இப்புவியில் எடுத்த அவதாரங்களாவே வணங்க விரும்புகிறேன்.
நான் பூமியில் இருந்து உங்கள் நாமத்தை சொல்லிக் கொண்டே இருப்பேன். உங்கள் நாமத்தை பிறர் சொல்வதை கேட்டபடியே இருப்பேன். எனக்கு அந்த புண்ணிய நிலையை என்றென்றும் நீங்கள் வரமாக அருளினால் போதும் என்றான் அனுமன்.

ஜெய் ஶ்ரீராம்! ஜெய் ஶ்ரீராம்!!

நாளை.....................

ஶ்ரீராம காவியம்
~~~~~
367/13-04-2022

ஶ்ரீராமநாம கதைகள்-47

ராமரின் பாதுகை...

★ஶ்ரீராமர் சீதையை திருமணம் செய்து கொண்டு அயோத்தி நகருக்குத் திரும்பினார். நாட்டு மக்கள் அனைவரும் ஶ்ரீராமரை வாழ்த்தி, விதவிதமான அன்பு பரிசுகளை அளித்துக் கொண்டு இருந்தனர். அந்தக் கூட்டத்தில் மித்ரபந்து என்ற செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவனும் இருந்தான். அவன் கைகளில் ராமனுக்கே அளவெடுத்துத் தைத்தது போன்ற அழகான இரு பாதுகைகள் இருந்தன. வரிசை, வரிசையாக ஒவ்வொருவரும் தாங்கள் எடுத்து வந்த பரிசுப் பொருட்களை ஶ்ரீராமரிடம்  தந்துகொண்டிருந்தார்கள். 

★அனைத்தையும் பார்த்த மித்ரபந்துவுக்கு வருத்தம் நேரிட்டது. அனைவரும் விலை உயர்ந்த பரிசுகளைத் தரும் போது நாம் மட்டும் அற்ப காலணிகளையா தருவது? என நினைத்தவன், ஶ்ரீராமரைப் பார்க்கப் போகாமல் திரும்ப சென்று விடலாம் என்று நினைத்து திரும்பினான். அதனை கவனித்து விட்ட ராமபிரான் அவனை அருகே அழைத்தார். உண்மையான உழைப்பில் உருவான உன் பரிசு தான் இங்கே இருக்கும் அனைத்தையும் விட உயர்ந்தது. எனக்குப் பிரியமானதும் இதுவே என்று ராமர் சொல்ல அவரது அன்பில் நெகிழ்ந்து போனான் மித்ரபந்து. 

★ராமர் வனவாசம் செல்லப் புறப்பட்ட போது, எதையுமே எடுத்துச் செல்வது கூடாது. இருப்பினும் மித்ரபந்து கொடுத்த இந்தப் பாதுகைகளை அணிந்து செல்ல எனக்கு அனுமதியுங்கள் என்று கேட்டு, அனுமதி வாங்கி தன்னுடன் எடுத்துச் சென்றார் ராமர். கூட்டத்தில் கண்ணீர் வழிய நின்று கொண்டிருந்த மித்ரபந்துவை நோக்கி விலை உயர்ந்த எந்தப் பரிசும் எனக்குப் பயன்படவில்லை. நீ அளித்த காலணிகள் தான் என்னுடைய  கால்களைக் காக்கப் போகின்றன என்றார். 

★உண்மை அன்பின் சிறந்த அடையாளமான அந்தப் பாதுகைகளே, பின்னர் பரதனால் கொண்டு செல்லப்பட்டு அயோத்தியின் அரியணையில் அமர்ந்து பதினான்கு ஆண்டுகள் ஆட்சியும் செய்தன.

நாளை.....................

ஶ்ரீராம காவியம்
~~~~~
368/14-04-2022

ஶ்ரீராமநாம கதைகள்-48

லட்சுமணன் ஊர்மிளை...

★அன்று ஶ்ரீராமரும் சீதையும் வனவாசத்துக்குக் கிளம்பிச் செல்ல ஆயத்தமானார்கள். அவர்களுக்குச் சேவை செய்ய லட்மணனும் அவர்களுடன் கிளம்பினான். தன் மனைவி ஊர்மிளையிடம் விடை பெற்றுக் கொள்வதற்காக அவளைத் தேடி அந்தப்புரத்துக்கு வந்தான் லட்சுமணன். தன் மீது  கணவர் கொண்ட பிரியத்தைப் பற்றி ஊர்மிளைக்குத் தெரியும்.

★ஆகையால், இதே பிரியத்துடன் அவர் கானகம் சென்றால், தன் நினைவு அவரை சரி வர அவர் கடமையைச் செய்ய விடாது, அலைக்கழிக்கும் என அவள் வருந்தினாள். ஆகவே அவர் தன்னை வெறுக்கும்படி தான் நடந்து கொள்ளவேண்டும் என நிச்சயித்தாள் ஊர்மிளை. தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டு லட்சுமணனை வரவேற்கத் தயாரானாள். 

★லட்சுமணன் கானகம் செல்வதைப் பற்றி கூறியவுடன், தந்தை காட்டுக்குப் போகச் சொன்னது உங்கள் அண்ணன் ஶ்ரீராமரையே தவிர, உங்களை அல்ல. நீங்கள் ஏன் கஷ்டப்பட வேண்டும்? உங்கள் அண்ணி தான் அண்ணனை மணந்த பாபத்துக்கு அவர் பின்னால் போகிறாள். நானாக இருந்தால் அது கூட போகமாட்டேன். வாருங்கள் என்னுடன், நாம் மிதிலைக்குப் போய் மகிழ்ச்சியாக வாழலாம் என்றாள். 

★லட்சுமணன் கோபத்துடன்,  இவ்வளவு மோசமானவளா நீ? என்னுடன் வர வேண்டாம், என் முகத்திலும் இனி விழிக்க வேண்டாம், இங்கேயே சுகமாகப் படுத்து தூங்கு.  என்னுடைய அண்ணனுடனும் மற்றும் அண்ணியுடனும் நான் போகிறேன் என்றான். உங்கள் தூக்கத்தையும் சேர்த்துக் கொடுத்தாலும் நிம்மதியாகத் தூங்குவேன் என்று சிரித்துக் கொண்டே சொன்னாள் ஊர்மிளை. 

★'அப்படியே ஆகட்டும்!'. எனக் கூறிச்சென்ற லட்சுமணன் ஊர்மிளைக்குத் தன் தூக்கத்தைத் தந்துவிட்ட  ஒரே காரணத்தால்,  பதினான்கு ஆண்டுகளும் தூங்காமல் ராமனுக்குச் சேவை செய்தான். ஊர்மிளை செய்த அருமையான தியாகத்தினால், அவளுடைய நினைவும் லட்சுமணனை வாட்டவில்லை. ஶ்ரீராமனுடைய  பட்டாபிஷேகம் முடிந்த பிறகு, சீதையின் வாயினால்,  நடந்த உண்மையை அறிந்த லட்சுமணன், அவளின் தியாக மனமறிந்து ஊர்மிளையை முன்பை விடவும் அதிகமாக நேசித்தான்.

★ஒருநாள் லட்சுமணனின் குணத்தை ஊர்மிளை அறிந்து கொள்ள சீதை ஒரு வழி செய்தாள். பட்டாபிஷேகத்துக்குப் பிறகு ஒரு நாள் தன் கால் கொலுசுகளை ஊர்மிளைக்குப் பரிசாக அளித்தாள் சீதை. அன்றிரவு ஊர்மிளையின் அந்தப்புரத்துக்கு வந்த லட்சுமணனின் பார்வையில் அந்தக் கொலுசுகள் தான் முதலில் பட்டன. தினமும் சீதையின் கால்களை மட்டுமே வணங்கி வந்துள்ள லட்சுமணன், சீதை தன்முன் நிற்பதாகக் கருதி அவள் கால்களில் விழுந்து வணங்கினான். 

★துணுக்குற்றுப் பின்வாங்கிய ஊர்மிளை உண்மையைக் கூற, அவளைக் கடிந்து அந்தக் கொலுசுகளை உடனே அண்ணிக்குத் திருப்பித் தருமாறு  உத்தரவிட்டான் லட்சுமணன். ஊர்மிளையிடம் கொலுசைப் பெற்றுக் கொண்ட சீதை, உயர்ந்த கொலுசை அவளுக்குப் பரிசளித்து லட்சுமணன் தன்னிடம் கொண்ட பக்தியை உனக்கு புரிய வைப்பதற்காகவே அவ்வாறு செய்தேன் என்று தன் சகோதரி ஊர்மிளையிடம் கூறினாள்.

நாளை.......................
ஶ்ரீராம காவியம்
~~~~~
369/15-04-2022

ஶ்ரீராமநாம கதைகள்-49

சீதையின் ஆசிர்வாதம் 
பெற்ற ஆலமரம்...

★ராமர் வன வாசம் செய்த போது பித்ருக்களுக்கான சிரார்த்த தினம் வந்தது. உணவு தயாரிக்க உணவுப் பொருட்களை எடுக்க லட்சுமணர் காட்டிற்குள் சென்றான். லட்சுமணன் வருவதற்கு வெகு நேரமானது. ராமர் லட்சுமணனைத் தேடி காட்டிற்குள் கிளம்பினார். சிரார்த்த காலம் நெருங்கி விட்டதால் சீதை தவித்தாள். சிரார்த்தகாலம் தாண்டி விட்டால் பித்ருக்கள் சபிப்பார்களே என்று வருந்தினாள். 

★அருகில் கிடைத்த சில பழங்களை பறித்து அக்கினியில் வேக வைத்தாள். அதைப் பிசைந்து பிண்டம் தயாரித்தாள். அப்போது அவள் முன்பு தேஜோ மயமாக பிதுர்க்கள் தோன்றினர். சீதை பிண்டத்தை எங்களுக்கு சமர்ப்பிக்கலாம். மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறோம்  என்று கூறினார்கள். உங்களுடைய  வம்சத்தினர் சமர்ப்பிக்க வேண்டியதை நான் செய்வது சரியா? என்று சீதை தயங்கி நின்றாள். சிரார்த்த காலம் தவறி அசுர காலம் வந்து விடும். எனவே சாட்சி வைத்துக் கொண்டு கொடு, தவறில்லை என்றார்கள் பித்ருக்கள். 

★சரி, என்று சீதையும் அங்கிருந்த பல்குனிநதி, ஒரு பசு, துளசிச்செடி மற்றும் ஆலமரம் ஆகியவற்றை சாட்சியாக வைத்துக்கொண்டு பிதுர்க்களுக்கு பிண்டம் தருகிறேன். என் கணவரிடம் இந்த நிகழ்ச்சியைச் சொல்ல வேண்டும்’என்று கேட்டுக் கொண்டு பிண்டம் கொடுத்தாள். பிதுர்க்கள் பிண்டத்தை மிகவும் மகிழ்ச்சியோடு ஏற்று, பின்னர் மறைந்தார்கள். ஶ்ரீராமரும் லட்சுமணரும் சிறிது நேரத்தில் தானியங்களோடு வந்தார்கள். சீதை சீக்கிரம் சமையல் செய்’ என்றார் ராமர். 

★சீதை நடந்ததைக் கூறினாள். ராமர் திகைப்புடன், சாஸ்திரமாக சிரார்த்தம் நடத்தும் எங்கள் முன் வராத பிதுர்க்கள், உன் முன்னே தோன்றி, நேரில் பிண்டம் வாங்கினர் என்பது கற்பனை’ என்றார். நான் உண்மையைத் தான் சொல்கிறேன் பல்குனிநதி, பசு, துளசிச்செடி மற்றும் ஆலமரம் ஆகியவற்றை சாட்சி வைத்துக் கொண்டேன். தாங்கள்  அவற்றிடம் விசாரித்துக் கொள்ளுங்கள் என்றாள் சீதை.

★ராமர், சீதை சொல்வது போல் பிதுர்க்கள் நேரில் வந்து பிண்டம் வாங்கினாரா? என்று கேட்டார். ஆலமரம் தவிர மற்றவர்கள் எங்களுக்கு தெரியாது என்று சொல்லி விட்டன. ராமர் வருவதற்குள் சீதை சிரார்த்த காரியத்தை முடித்ததற்குத் தாங்கள் உடந்தையாக இருந்தோம் என்று ராமர் கோபிப்பாரோ என அவைகள் பயந்து, தெரியாது என்று சொல்லி விட்டன. ராமரும் வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு சமையலை முடித்து வை!. நாங்கள் நீராடி வருகிறோம் என்று கூறிச்சென்றார். 

★சீதை தன்னைக் கணவர் நம்பாததை எண்ணி, மிகுந்த  துக்கத்தோடு சமையல் செய்தாள். ராமர் நீராடி வந்து சங்கல்பம் செய்து கொண்டு பிதுர்க்களை சிரார்த்த சாமான்களில் ஆவாஹனம் செய்யும் போது, வானிலிருந்து அசரீரி ஒலித்தது. ராமா! ஏன் இரண்டாம் முறையாக திதி கொடுக்க எங்களை அழைக்கிறாய்? சீதை கையால் பிண்டம் வாங்கி நாங்கள் திருப்தியாக உள்ளோம் என்றது அசரீரி. அதன் பின்னர் ராமர் சமாதானமானார். 

★அதன் பின் தனக்கு  சாட்சி சொல்லாதவர்களை பார்த்த சீதை பல்குனி நதியே! உன்னிடம் எந்தக் காலத்திலும் வெள்ளம் தோன்றாது. தண்ணீர் வற்றியே காணப்படும் என்றாள். பசுவே! உன் முகத்தில் வாசம் செய்த நான் இன்று முதல் உன் பின்பக்கத்துக்குப் போய் விடுவேன் என்றாள். இந்த கயாவில் எங்கும் துளசி வளராது போகட்டும் என்ற சீதை சாட்சி சொல்லாதவர்களுக்கு சாபமிட்டாள். 

★ஆலமரம் தனக்கு சாட்சியாக நின்றதற்கு மகிழ்ந்து, யுக யுகாந்திரங்கள் நீடுடி வாழ வாழ்த்தி யுக முடிவின் போது பிரளயத்தின் போது, உனது இலையிலேயே பரமாத்மா குழந்தை வடிவில் தோன்றுவார். அவரது திருவடிகளில் உலகங்கள் அனைத்தும் லயமாகும் என்று அருளினாள். மேலும் கயாவில் சிரார்த்தம் செய்ய வருபவர்கள் யாராக இருந்தாலும், ஆலமரத்தின் அடியில் பிண்டங்களை வைத்து அர்ப்பணம் செய்வார்கள். அப்போது தான் கயாவில் சிரார்த்தம் செய்வதன் பலன் கிடைக்கும் என்றும் மகிழ்வுடன் ஆசிர்வதித்தாள். 

★இந்த சாபத்தின் விளைவால் தான் கயாவில் துளசி வளருவதே கிடையாது. மேலும் பல்குனி நதியும் எப்போதும் வற்றிபோய் காட்சியளிக்கிறது.

நாளை.....................

ஶ்ரீராம காவியம்
~~~~~
370/16-04-2022

ஶ்ரீராமநாம கதைகள்-50

அனுமனை பிடித்த 
சனீஸ்வரர்...

★ராமர், ராவணனை அழிக்க வானர சேனைகளுடன் இலங்கை செல்வதற்காக கடலில் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தார். இந்த பணியில் சுக்ரீவன், அங்கதன், அனுமன் மற்றும் வானர சேனைகளும் ஈடுபட்டிருந்தன. அனுமனும் பாறைகளை பெயர்த்தெடுத்து அவற்றின் மீது ஜெய் ஸ்ரீராம் என்று செதுக்கி நளனிடம் கொடுக்க, அவனும் அந்தப் பாறைகளை  கடலில் எறிந்து கொண்டிருந்தான். 

★அப்போது அங்கே சனீஸ்வர பகவான் தோன்றி ஶ்ரீராமரை வணங்கி, அனுமனுக்கு ஏழரைச் சனி பிடிக்கும் காலம் தொடங்குகிறது. என்னை தவறாக எண்ணாதீர்கள். என் கடமையை செய்ய அனுமதி தாருங்கள் என்று வேண்டினார். எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். அது போல் உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். முடிந்தால் அனுமனை பிடித்து பாருங்கள் என்றார் ராமர். 

★உடனே சனீஸ்வரன், அனுமன் முன் தோன்றி அனுமனே! நான் சனீஸ்வரன். 'இப்போது உனக்கு ஏழரைச் சனி ஆரம்பமாகிறது. உன்னை பிடித்து ஆட்டிப் படைக்க, உன் உடலில் ஓர் இடம் கொடு' என்றார்.சனீஸ்வரா! ராவணனின் சிறையில் இருக்கும் சீதையை மீட்க, நாங்கள் இலங்கை நோக்கிச் செல்ல இருக்கிறோம். அதற்காகத்தான் இந்த சேதுபால பணியை ராம சேவையாக ஏற்று, தொண்டாற்றி கொண்டு இருக்கிறோம். இந்த பணி முடிந்ததும், நானே தங்களிடம் வருகிறேன். அப்போது என் உடல் முழுவதுமே தாங்கள் வியாபித்து என்னை ஆட்கொள்ளலாம் என்றார் அனுமன். 

★அனுமனே!  காலதேவன் நிர்ணயித்த கால அளவை, நான் மீற முடியாது. நீயும் மீறக்கூடாது. உன்னை நான் பிடிக்கும் நேரம் நெருங்கிவிட்டது. உடனடியாக சொல்! உன் உடலின் எந்த பாகத்தில் நான் அமரலாம் என்று கேட்டான். ராம வேலையில் என் கைகள் ஈடுபட்டுள்ளன. அதனால் அங்கே இடம் தர முடியாது. என் கால்களில் உங்களுக்கு இடம் தந்தால், அது உங்களுக்கு நான் தரும் அவமரியாதையாகும். 
நம்முடைய  உடம்புக்கு சிரசே பிரதானம். எனவே நீங்கள் என் தலை மீது அமர்ந்து, தங்கள் கடமையைச் செய்யுங்கள் என்று சனிஸ்வரரை தலை வணங்கி நின்றார் அனுமன். 

★அவரின் தலை மீது அமர்ந்து கொண்டார் சனீஸ்வரன். இதுவரை சிறிய சிறிய பாறைகளை தூக்கி வந்த அனுமன் சனீஸ்வரன் தன் தலை மீது அமர்ந்த பின்பு, மிகப்பெரிய பாறைகளை பெயர்த்து எடுத்து தலை மீது வைத்துக்கொண்டு கடலை நோக்கி நடந்து பாறைகளை கடலில் வீசினார். பெரிய பெரிய பாறைகளின் பாரத்தை அனுமனுக்கு பதிலாக அவர் தலை மீது அமர்ந்திருந்த சனீஸ்வர பகவானே சுமக்க வேண்டியதாயிற்று. 

★அதனால் சனீஸ்வரனுக்கே கொஞ்சம் பயம் வந்துவிட்டது. தனக்கே ஏழரைச் சனி பிடித்து விட்டதா என்று சிந்தித்தார். அனுமன் ஏற்றிய சுமை தாங்க முடியாமல் அவரது தலையில் இருந்து கீழே குதித்தார். சனீஸ்வரா! ஏழரை ஆண்டுகள் என்னை பிடிக்க வேண்டிய தாங்கள் ஏன் இவ்வளவு சீக்கிரம் விட்டுவிட்டீர்கள்? என்று கேட்டார் அனுமன். அதற்கு சனீஸ்வரன், உன்னை ஒரு சில விநாடிகள் பிடித்ததால், நானும் பாறைகளை சுமந்து சேது பாலப்பணியில் ஈடுபட்டு புண்ணியம் பெற்றேன். 

★சிவனின் அம்சம் தாங்கள். முந்தைய யுகத்தில் தங்களை நான் பிடிக்க முயன்று வெற்றி பெற்றேன். இப்போது தோல்வி அடைந்து விட்டேன் என்றார் சனீஸ்வரன். அதற்கு அனுமன் இல்லை! இல்லை! இப்போதும் தாங்களே வென்றீர்கள். ஏழரை ஆண்டுகளுக்குப் பதில் ஏழரை விநாடிகளாவது என்னை பிடித்துவிட்டீர்கள் என்றார் அனுமன். அதைக்கேட்டு மனம் மகிழ்ந்த சனீஸ்வரன், அனுமனே! உனக்கு நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என மிகவும்  விரும்புகிறேன். நான் என்ன வேண்டும்? கேள் என்றார். 

★ராம நாமத்தை மிகவும் பக்தி சிரத்தையோடு, பாராயணம் செய்பவர்களை உங்களது ஏழரைச் சனி காலத்தில் ஏற்படும் துன்பங்களில் இருந்து நீங்களே காத்தருள வேண்டும் என வரம் கேட்டார் அனுமன். சனீஸ்வர பகவானும் அந்த வரத்தை தந்து அருளினார். ராமநாமம் சொல்லி அனுமனை வழிபட்டால், சனி பகவானால் ஏற்படும் துன்பத்தில் இருந்த நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

நாளை...............

ஶ்ரீராம காவியம்
~~~~~
371/17-04-2022

ஶ்ரீராமநாம கதைகள்-51

ராமர் விட்ட கொட்டாவியும் அனுமன் போட்ட‍ சொடுக்கும்

★ராமர் வனவாசம் முடிந்து அயோத்திக்குத் திரும்பி அரசாட்சி செய்தபோது அனுமனும் அங்கேயே தங்கினார். ராமர் காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கச் செல்லும் வரை அவருக்கு வேண்டிய அத்தனை சேவைகளையும் அவரது குறிப்பறிந்து அனுமன் செய்து வந்தார். ராமருடன் இருந்த சீதாதேவி பரதன் லட்சுமணன் சத்ருக்னன் ஆகியோரும் அனுமனின் சேவையை எண்ணி வியந்தனர். 

★ஒரு நாள் ராமர் அனுமனின் சேவைகளைப் பாராட்டினார். அதைக் கவனித்த சீதையும் ராமரின் தம்பிகளும் அனுமனைப் போல் நாமும் ஒரு நாளாவது ராமருக்கு சேவை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தனர். இந்த விருப்பத்தை ராமரிடம் தெரிவித்தனர். உங்களுக்குரிய சேவைகளை அனுமன் ஒருவரே செய்கிறார். நாளை ஒரு நாள் மட்டும் அந்தச் சேவைகளை நாங்கள் செய்யத் தங்கள் அனுமதி வேண்டும் என்று கேட்டனர். அதற்கு ராமரும் அனுமதி வழங்கினார்.

★ராமர் காலையில் கண் விழிப்பது முதல் இரவு உறங்கச் செல்வது வரையிலான சேவைகளைப் பட்டியலிட்டு அவற்றை யார் யார் செய்வது என்றும் தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர். அந்தப் பட்டியலை ராமபிரானிடம் காட்டி ஒப்புதல் பெறச் சென்றனர். ராமபிரான் அவர்களிடம் இதில் அனுமன் பெயரைக் குறிப்பிடவில்லையே என்றார். நாங்களே அனைத்துச் சேவைகளையும் செய்கிறோம் என்று பதிலளித்தார்கள். எல்லாச் சேவைகளையும் பட்டியலிட்டு விட்டீர்களா என்று கேட்டார் ராமர். அவர்களும் ஆம் என்றார்கள். 

★ராமர் புன்னகைத்து இதில் ஏதாவது ஒரு சேவை விடுபட்டிருந்தால் அதை அனுமன் செய்யலாமா? என்று கேட்டார். அதற்கு அப்படி ஒரு நிலை வராமால் நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்றார்கள். நடந்தவைகளை ராமர் அனுமனிடம் தெரிவித்து ஒரு நாள் ஓய்வு எடுத்துக் கொள்ளுமாற் கேட்டுக் கொண்டார். மறுநாள் காலையில் ராமர் எழுந்தது முதல் செய்ய வேண்டிய சேவைகளை சீதையும் ராமரின் தம்பிகளும் செய்தனர். அவர்களுக்கு வாழ்வில் இரட்டிப்புச் சந்தோஷம். ஒன்று ராமபிரானின் அருகில் இருப்பது மற்றொன்று அவருக்கு சேவை செய்வது.

★ராமரின் உத்தரவுப்படி அனுமன் அவரது அறை வாசலில் அமர்ந்து ராம நாமத்தை ஜபித்துக் கொண்டு இருந்தார். ராம சேவைகள் நன்றாக நடந்து வருகிறதா என்றும் கவனித்தார். பகல் பொழுது எந்த சேவையும் குறைவின்றிப் போனது. இரவில் ராமர் படுக்கச் சென்றார். தாம்பூலத்துடன் சீதாப்பிராட்டி வந்தார். ராமபிரான் வாய் திறந்தார். திறந்த அவரது வாய் மூடவே இல்லை. பேச்சோ அசைவோ இல்லை. 

★ராமருக்கு ஏதோ ஆகிவிட்டது என்று சீதை பயந்தாள். பரதன் லட்சுமணன் சத்ருக்னன் என்று எல்லோரையும் கூப்பிட்டாள். அவர்கள் ஓடி வந்தார்கள். அண்ணா! அண்ணா! என்று அழைத்தனர். அரண்மனை மருத்துவர் வரவழைக்கப்பட்டார். அவர் பரிசோதித்து விட்டு எந்த நோயும் இல்லை என்று கிளம்பிவிட்டார். அவர்களுக்கு அனுமனிடம் கேட்கலாமா என்று முதலில் தோன்றியது. பிறகு வசிஷ்டர் குலகுரு ஆயிற்றே. அவரிடம் கேட்கலாம் என்று அவரை அழைத்து வந்தனர். 

★அவரும் தன் பங்குக்கு ஏதேதோ செய்து பார்த்தார். ராமர் அசையாமல் இருந்தார். சிறிது நேரம் தியானம் செய்த வசிஷ்டர் அனுமனால் தான் இதற்கு பதில் சொல்ல முடியும் என்றார். அனுமனிடம் அனைவரும் வந்து ராமரைப் பார்க்கும்படி சொல்ல துள்ளிக் குதித்து வந்த அனுமன் கை விரலால் ராமரன் வாய்க்கு நேராகச் சொடக்குப் போட்டதும் அவருடைய வாய் தானாகவே மூடிக் கொண்டது. இதைப் பார்த்த பிறகுதான் அனைவருக்கும் நிம்மதி பிறந்தது.

 ★ராமர் பேச ஆரம்பித்தார். எனக்குக் கொட்டாவி வந்தால் அனுமன் தான் சொடக்குப் போடுவார். உங்களுக்கு இது தெரியவில்லை என்றார். அனைவரும் தலை குனிந்தனர். பக்தி சேவையில் அனுமனுக்கு நிகர் அனுமனே என்பதை புரிந்துகொண்ட அவர்கள் அனுமனை மனதார பாராட்டினர்.
ராமாயணத்தில் ராமர் மீது அனுமன் கொண்ட பக்தியை உலகிற்க்கு எடுத்துக் காட்ட ராமர் செய்த திருவிளையாடல் இது.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.

நாளை........................

ஶ்ரீராம காவியம்
~~~~~
18/04/2022

அன்பு நண்பர்களுக்கு 
வணக்கம் பல.

ஶ்ரீராம காவியம் நேற்றுடன் நிறைவு பெற்றது. உங்கள் அனைவரின் ஆதரவின்றி இது நடந்திருக்காது. உங்கள் அனைவருக்கும் என் இதய பூர்வமான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

கடந்த 14/01/21  அன்று ராமாயண புதிர் என்று ஆரம்பித்து, பின்னர்24/02/21 ல் இருந்து ஶ்ரீராமரின் 108 கோவில்களைப் பற்றி பதிவிட்டிருந்தேன். பிறகு 06/03/21 லிருந்து ஶ்ரீராமர் பூஜை செய்யும்போது சொல்லும் கதையினை பதிவு செய்து இருந்தேன். ஶ்ரீராம காவியம் 27/03/21 அன்று ஆரம்பிக்கப்பட்டு இந்த வருடம் 25/02/22 அன்று ஶ்ரீராம பட்டாபிஷேகம் வரை பதிவிட்டிருந்தேன். ஶ்ரீராமநாம மகிமைகளையும், ஶ்ரீராமர் பற்றிய கதைகளையும் 26/02/22 முதல் தொடங்கி நேற்று வரை 50 பகுதிகள் முடிவடைந்தன.

சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக வந்து கொண்டிருந்த ஶ்ரீராம காவியம் நேற்றுடன் இனிதே முடிவடைந்தது. இது பற்றி தங்களின் மேலான கருத்துகளை பதிவிட்டால் நன்றாக இருக்கும். ராமாயண கிரீடத்தில் முத்துக்கள் பதித்தது போல திகழுமென கருதுகிறேன்.

அடுத்து என்ன? எனப் பல நண்பர்கள் கேட்டு அவரவர் யோசனைகளையும் எனக்கு குறுந்தகவல் மூலமாக மற்றும் கைபேசி மூலமாகவும் தெரிவித்து இருந்தார்கள். ஶ்ரீமத் பாவதம், பகவத்கீதை மற்றும் ஶ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம், தேவி பாகவதம், அழகன் முருகன் மேலும் ஶ்ரீராமகாவியத்தின் தொடர்சியாக உத்திரராமாயனம், தசாவதாரம் ஆகியவைகள் நண்பர்களின் விருப்பமாக இருந்தன. 

இவற்றில் எதைப் பதிவிடலாம் என்பதை இந்த வாரத்திற்குள் (24/4/22)தெரியப் படுத்துங்கள்.
அதையே பதிவிடலாம். 1/5/22 முதல் உங்களில் அதிகமானோர் கூறும் கதை பதிவிடப்படும்.
ஆகவே நண்பர்களை, குழுவை விட்டு விலக வேண்டாம். இந்த பத்து நாட்களுக்கு (30/3/22 -வரை) தினமும் சில சிறந்த அருமையான கதைகள் பதியப் படும். அனைவருக்கும் நன்றி.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869

நாளை......................

-----------------------------------------------------------------------------------------------------







 
 




 

Thanking you

Yours faithfully
R.Narasimhan
*****************************
R.NARASIMHAN
No.3, ARIMUTHU ACHARI STREET,
TRIPLICANE
CHENNAI - 600005
TAMILNADU
INDIA
email :
sriharimurali@yahoo.com
r_r_murali@yahoo.com
rnarasimhan@rediffmail.com
****************************