Radhe Krishna 07-02-2021
ராமாயணம் 108 வரிகளில்..!இன்று 20/1/2021 புதன்கிழமை .இன்று வால்மீகி முனிவர் எழுதிய
ஸ்ரீமத் ராமாயணம் ஆறு காண்டமும் எளிய தமிழில் 108 வரிகளில் கொடுக்கப்பட்டுள்ளது.
ராமாயணம் முழுவதையும் படிக்க இயலாதவர்கள் இந்த 108 வரிகளைப் படித்துப் பயன் பெறலாம்.
ஸ்ரீ ராமா ஸ்ரீ சீதா லக்ஷ்மண சமேத ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராமபக்தஅனுமனுக்கு நித்யம் ஜெயமங்களம் ஸ்ரீ ராமஜெயம்
ராமாயணம் 108 வரிகளில்..!
1. அசல நிர்குண ஆத்ம ராமா
2. ஆனந்தப் பாற்கடல் அறிதுயில் ராமா
3. இந்திரன் முதல்தேவர் வேண்டிட ராமா
4. இகத்தில் அசுரரை அழித்திட ராமா
5. பரத லக்ஷ்மண சத்ருக்னர் ராமா
6. கூடவே பிறந்த தசரத ராமா
7. வில் அம்பு வித்தைகள் பல பயின்ற ராமா
8. யாகமும் தபசும் ரக்ஷிக்க ராமா
9. விசுவாமித்திரன் வேண்டிட ராமா
10. சென்று மந்திரம் கற்றனை ராமா
11. சுபாஹோடு அசுரர் தாடகை ராமா
12. லக்ஷ்மணனுதவியில் வெட்டிய ராமா
13. முனிவர் துதிக்கத் தங்கிய ராமா
14. மூர்க்கர் அண்டாது காத்தயோ ராமா
15. பாலப் பருவம் கடந்திட்ட ராமா
16. பக்தன் ஞானி ஜனகன் ராமா
17. மகளா முலகத் தாயவள் ராமா
18. உறையும் நகர்க்கே நடந்தாய் ராமா
19. கல்லாய்ச் சமைத்த காரிகை ராமா
20. அடியின் தூளிபட் டெழுந்தனள் ராமா
21. மிதிலை ஸ்வயம்வர சபைசேர் ராமா
22. முறித்தே வில்லை ஜயங் கொண்ட ராமா
23. ஜானகி தேவியை மணந்தாய் ராமா
24. பரசுராமன் பலம்பறி ராமா
25. அயோத்தி யடைந்த சுந்தர ராமா
அயோத்யா காண்டம்
26. பண்டைப் பகைகூனி தூண்டிட ராமா
27. கைகேயி ஏவலால் தசரதன் ராமா
28. வாக்கைக் காத்திடக் கானகம் ராமா
29. சென்றாய் லக்ஷ்மணனுடன் சீதா ராமா
30. நட்பினால் குஹனைத் தழுவிய ராமா
31. முனிவர் ஆச்ரமம் உறைந்தனை ராமா
32. தசரதன் மாளப் பரதனும் ராமா
33. சித்திரக் கூடம் அடைந்தனன் ராமா
34. சுந்தரப் பாதுகை தந்தனை ராமா
ஆரண்ய காண்டம்
35. தென்திசை ஆரண்யம் புகுந்தனை ராமா
36. முனிவர் பலர்முன் தோன்றினை ராமா
37. துஷ்ட விராதனைக் கொன்றனை ராமா
38. தமிழ்முனி அகஸ்தியர் அருள் பெறு ராமா
39. பஞ்சவடித் தலம் உறைந்தனை ராமா
40. சூர்ப்பநகை பங்கம் அடைந்தனள் ராமா
41. கரதூஷணர்கள் அழிந்தனர் ராமா
42. ராவணத் துறவி சீதையை ராமா
43. மாயமாய் அகற்றிட அலைந்தனை ராமா
44. கபந்தன்கை கண்டஞ் செய்தருளிய ராமா
45. அன்புறு சபரிகை விருந்துண்ட ராமா
கிஷ்கிந்தா காண்டம்
46. அநும சுக்ரீவர்க் கஞ்சலாம் ராமா
47. அகந்தை வாலியைக் கொன்றுமே ராமா
48. தம்பிக்கே பட்டம் கட்டினாய் ராமா
49. வானர வீரன் அநுமான் ராமா
50. தூதனாய்ச் செல்ல ஏவின ராமா
51. கணையாழி அடையாளம் தந்தனை ராமா
52. அங்கத ஜாம்பவர் தேடினர் ராமா
53. ஜடாயுமுன் சம்பாதி சொன்னான் ராமா
54. மஹேந்திரப் பெயருடைமலை மேல் ராமா
55. அடியவன் அநுமான் நின்றான் ராமா
சுந்தர காண்டம்
56. அநுமான் கடலைத் தாண்டினான் ராமா
57. லங்கினி கிழித்து லங்கையுள் ராமா
58. நாமத்தின் மகிமையால் நுழைந்தனன் ராமா
59. அசோகவனத்தில் வணங்கினான் தேவியை ராமா
60. தேவிக்கு மோதிரம் தந்தனன் ராமா
61. ராவண அரக்கனைத் தூஷித்தே ராமா
62. லங்கை எரித்துத் திரும்பினான் ராமா
63. கண்டேன் சீதையை என்றனன் ராமா
64. தேவியின் முடிமணி தந்தனன் ராமா
யுத்த காண்டம்
65. தேவியின் பிரிவால் புலம்பிய ராமா
66. வானர சைன்யம் கடற்கரை வந்தது ராமா
67. விபீஷணன் சரணம் அடைந்தனன் ராமா
68. ஆழிக் கணையும் கட்டினை ராமா
69. அணிலும் ஆழிக்கணைக்கு மணலை அளித்து ராமா
70. அரக்கன் கோட்டையைத் தகர்த்தே ராமா
71. தந்திரன் மேல்போர் தொடுத்தாய் ராமா
72. அநுமான் சஞ்சீவி தந்தனன் ராமா
73. கும்பகர்ணன் தலை வெட்டினை ராமா
74. இந்திரஜித்தன் மடிந்தான் ராமா
75. அஹிமஹி ராவணர் அழித்தபின் ராமா
76. விடுத்துநின் கூரிய அம்பினை ராமா
77. ராவணன் கவசம் பேதித்த ராமா
78. ராவணன் தலைகளை அறுத்தும் ராமா
79. அழியா முக்தி தந்தாய் ராமா
80. விபீஷணன் முடிசூட்டினை ராமா
81. கண்டே சீதையை அணைந்தாய் ராமா
82. புட்பக விமானத்தில் திரும்பினை ராமா
83. பரதன் உயிரைக் காத்தனை ராமா
84. அயோத்தி புகுந்து குடிகளை ராமா
85. ஆனந்த வெள்ளத் தாழ்த்தியே ராமா
86. பட்டாபிஷேகம் கொண்டனை ராமா
87. பாரைப் பரம்செய்து ஆண்டனை ராமா
88. மாயப் பழியது தீர்க்கும் ராமா
89. கருப்பிணி யிருந்து காக்கும் ராமா
90. கவிவரன் வால்மீகி பாடிய ராமா
91. லவகுசர் தந்தை யாகிய ராமா
92. அசுவ மேதம் நடத்திய ராமா
93. கோமள ஜானகி நாயக ராமா
94. மறைகள் போற்றிடும் மன்மத ராமா
95. பண்புடன் எம்மைக் காக்கும் ராமா
96. ஞானம் தந்தே நிற்கும்ஓ ராமா
97. துஷ்டர் அழியத் தோன்றிய ராமா
98. நல்லோர் காப்பும் அமைத்தபின் ராமா
99. பன்னக சயனனாய்ச் சென்றாய் ராமா
100. முனிவர் கதையும் முடிந்ததே ராமா
101. பணிவோர் ஜபிக்கும் நாமத்தோன் ராமா
102. கதிரவ குலத்துத் திலகமே ராமா
103. பயமழி மங்கள புங்கவ ராமா
104. நரஹரி ராகவ நாரண ராமா
105. அற்புத மெய்ச்சுக கைவல்ய ராமா
106. அநுமானிதயத் துறையும் ராமா
107. ராம ராம ஜய ராஜா ராமா
108. ராம ராம ஜய சீதாராமா.
ஸ்ரீ ராமா ஸ்ரீ சீதா லக்ஷ்மண சமேத ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி திருவடிகளே சரணம்
ஸ்ரீ ராமபக்தஅனுமனுக்கு நித்யம் ஜெயமங்களம் ஸ்ரீ ராமஜெயம்
[3:52 PM, 1/14/2021] Mohan SriRaghavendrar Kulithalai: வணக்கம் பல
இன்று முதல் தினமும் ராமாயணத்தைப் பற்றிய (புதிர்) கேள்விகள் சில பதிகிறேன். அனைவரும் படியுங்கள். பதிலைக் கண்டு பிடியுங்கள். வீட்டில் உள்ள மற்றவர்களையும் கேளுங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில் தெரிந்தவர் ராமாயணப் புலி. விடை தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் பின்னர் பதிய இருக்கும் " ஶ்ரீராம
காவியம் " படியுங்கள். அது நிச்சயம் வித்தியாசமானதாக இருக்கும்.
இந்த பகுதி முடிந்த பிறகு
நமது நாட்டில் உள்ள சில முக்கியமான ஶ்ரீராமரின் கோவில்கள் மற்றும் நமது தமிழகத்தில் உங்களுக்குத் தெரியாத கேள்விப்பட்டிராத ஊர்களில் உள்ள ஶ்ரீராமர் ஆலயங்களைப் பற்றியும் பதிய உள்ளேன். முடிந்தவரை அந்தந்த ஆலயங்களில் உள்ள ஶ்ரீராமரின் திருமேனி படங்களையும் பதிகிறேன்.
நீங்கள் அறியாத ஶ்ரீராமர் ஆலயங்கள் ஏராளம்!.ஶ்ரீராம காவியம் படிப்பதற்கு முன் ஶ்ரீராம தரிசனம் என்பது சிறப்பாக இருக்கு அல்லவா?
ஶ்ரீராம காவியம்
~~~~
புதிர்-01
1) ராமாயணத்தை இயற்றியவர் யார்?
2) ராமாயணத்தில் மொத்தம் எத்தனை ஸ்லோகங்கள்?
3) புத்திரர்களைப் பெற தசரதன் செய்த யாகம் எது?
4) ராமாயண காலத்தில் சரயு நதி – அதன் இன்றைய பெயர் என்ன?
5) கைகேயியுடன் அவர் அரண்மனையிலிருந்து கூடவே வந்த பணிப்பெண்ணின் பெயர் என்ன?
6)மஹரிஷி வால்மீகியின் பூர்வ பெயர் என்ன?
7) ராமாயணம் எந்த யுகத்தில் நடந்தது
8) வாலி, சுக்ரீவரின் தந்தை பெயர் என்ன?
9) வசிஷ்டர் ஆஸ்ரமத்தில் இருந்த பசுவின் பெயர் என்ன?
10) ஜனக மன்னரின் இயற் பெயர் என்ன?
11) அசோகவனத்தின் இன்னொரு பெயர் என்ன?
12) லக்ஷ்மணனைக் காப்பாற்ற அனுமன் கொண்டு வந்த மருந்தின் பெயர் என்ன?
என்ன? சுலபம்தானே? இதன் விடைகள் நாளைய புதிர் பகுதியில் வரும்.
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
நாளை..................
[4:37 PM, 1/14/2021] Narasimhan R: 1. Valmiki.
2. 24000
3. Puthrakameshti yaagam
4. Saryu madhi
5. Khooni mandarai
6. Ramakkardha
7. Threthaa yugam
8. Riksharaja
9. Kamdhenu
10. Seeradgwaja
11. Sita eliya
12. Sanjeevini
ஶ்ரீராம காவியம்
~~~~
புதிர் -02
நேற்றைய புதிர்-1 க்கான
விடைகள்:-
1) வால்மீகி மஹரிஷி
2) 24000
3) புத்ரகாமேஷ்டி
4) ககரா (Ghagara)
5) மந்தரை
6) ரத்னாகரர்
7) த்ரேதா யுகம்
8) ரிக்ஷராஜன்
9) சுரபி
10) ஷீரத்வஜன்
11) ப்ரமத வனம்
12) சஞ்சீவினி மூலிகை
சரியா?
இனி இன்றைய
கேள்விகள்...
13) ராமாயணத்தின் இன்னொரு பெயர் என்ன?
14) இன்று வியாச நதி என்று அழைக்கப்படும் நதி ராமாயண் காலத்தில் என்ன பெயரில் அழைக்கப்பட்டது?
15) லங்கையில் ராவணனின் குல தெய்வம் எங்கு வைக்கப்பட்டிருந்தது?
16) ராமாயண காலத்தில் லவபுரம் என்று அழைக்கப்பட்ட நகரத்தின் இன்றைய பெயர் என்ன?
17) தசரத மன்னரை அழைக்க அயோத்திக்கு ஜனகர் அனுப்பிய மந்திரியின் பெயர் என்ன?
18) ராமாயணம் மொத்தம் எத்தனை காண்டங்கள்?
19) ராமாயணத்தில் பெரிய காண்டம் எது?
20) ராமாயணத்தில் சிறிய காண்டம் எது?
21) அமராவதி நகரின் அரசன் யார்?
22) இந்திரனின் யானையின் பெயர் என்ன?
23) அஸ்வமேத யாகத்தில் குதிரையின் நெற்றியில் கட்டப்பட்டிருக்கும் பத்ரத்தின் பெயர் என்ன?
24) கலஹப்ரியர் என்று எந்த மஹரிஷிக்குப் பெயர்?
என்ன? சுலபம்தானே? இதன் விடைகள் நாளைய புதிர் பகுதியில் வரும்.
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
நாளை..................
ஶ்ரீராம காவியம்
~~~~
புதிர் -03
நேற்றைய புதிர்-2 க்கான
விடைகள்:-
13) புலஸ்த்ய வதம் அல்லது தசானனன் வதம்
14) விபாஷா
15) அசோக வனம்
16) லாகூர்
17) சுதாமன்
18) ஏழு
19) யுத்த காண்டம்
20) ஆரண்ய காண்டம்
21) இந்திரன்
22) ஐராவதம்
23) ஜய பத்ரம்
24) நாரதர்
சரியா?
இனி இன்றைய
கேள்விகள்...
25) சஞ்ஜீவினி மூலிகையை அனுமார் எடுத்து வந்த போது தூக்கி வந்த மலையின் பெயர் என்ன?
26) மஹரிஷி விஸ்வாமித்திரர் உடலுடன் சொர்க்கத்திற்கு அனுப்பிய மன்னனின் பெயர் என்ன?
27) கல்லாகப் போகக் கடவது என்று மனைவியை சபித்த முனிவரின் பெயர் என்ன?
28) சூரியனை பழம் என்று நினைத்து உண்ணச் சென்றவர் யார்?
29) யமனுடன் போர் புரிந்த ராக்ஷஸன் யார்?
30) ராம பட்டாபிஷேகத்தின் போது ஐந்து புனித நதிகளிலிருந்து நீர் கொண்டு வந்தவர் யார்?
31)ராவணனை தன் மகனின் தொட்டிலில் ஆறு மாதங்கள் கட்டி வைத்திருந்த வீரன் யார்?
32) விஸ்வாமித்திரர் ராமனை அழைக்க வந்த போது அவரிடம் தசரதன் தன் வயது எவ்வளவு என்று சொன்னார்?
33) பத்தாயிரம் வீரர்களை ஒரே சமயத்தில் எதிர் கொள்ள வல்ல வீரனின் பெயர் என்ன?
34) ஒரே சமயத்தில் லக்ஷ்மணன் எத்தனை அம்புகளை விட வல்லவ்ன்?
35) வால்மீகிக்கு அந்தப் பெயர் ஏன் வந்தது?
36) இந்திரஜித்தின் இயற்பெயர் என்ன?
என்ன? சுலபம்தானே? இதன் விடைகள் நாளைய புதிர் பகுதியில் வரும்.
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
நாளை..................
ஶ்ரீராம காவியம்
~~~~
புதிர் -04
நேற்றைய புதிர்-3 க்கான
விடைகள்:-
25) த்ரோண கிரி
26) திரிசங்கு
27) கௌதமர்
28) ஹனுமான்
29) ராவணன்
30) ஜாம்பவான்
31)வாலி
32) 60000 வருடங்கள்
33) அதிரதன்
34) 500
35) அவர் தவம் செய்த போது அவர் புற்றினால் மூடப்பட்டு இருந்ததால்
36) மேகநாதன்
சரியா?
இனி இன்றைய
கேள்விகள்...
37) பத்து அவதாரங்களில் ராமாவதாரம் எத்தனையாவது அவதாரம்?
38) ராமரின் வனவாசம் எத்தனை ஆண்டுகள்?
39) ராமர் திரும்பி வரும் வரை பரதன் எதை பூஜித்து அயோத்தியை ஆண்டு வந்தார்?
40) சீதையைத் தேடி லங்கைக்குச் சென்றது யார்?
41) தன் அடையாளமாக அசோகவனத்தில் ஹனுமானிடம் சீதை தந்தது என்ன?
42) மிதிலையில் ராமர் நாண் ஏற்றிய வில் யார் தந்தது?
43) எந்த திதியில் இராவணனை இராமர் வென்றார்?
44) அயோத்தியின் முதல் அரசன் யார்?
45) ஜனகர் எந்த நாட்டின் அரசர்?
46) இறுதியில் வைகுந்தம் ஏக ராமர் எந்த நதியில் இறங்கினார்?
47) அரக்கன் சுபாகுவை வதம் செய்தது யார்?
48) மாரீசனைக் கொன்றது யார்?
என்ன? சுலபம்தானே? இதன் விடைகள் நாளைய புதிர் பகுதியில் வரும்.
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
நாளை..................
ஶ்ரீராம காவியம்
~~~~
புதிர் -05
நேற்றைய புதிர்-4 க்கான
விடைகள்:-
37) ஏழாவது
38) 14
39) பாதுகை
40) ஹனுமான்
41) சூடாமணி
42) சிவபிரான் தந்த வில்
43) தசமி
44) இக்ஷ்வாகு
45) விதேஹநாடு
46) சரயு
47) ராமர்
48) ராமர்
சரியா?
இனி இன்றைய
கேள்விகள்...
49) கும்பகர்ணனை வதம் செய்தது யார்?
50) லவணாசுரன் ராவணனுக்கு என்ன உறவு?
51) மேகநாதனின் மாமா யார்?
52) பரசுராமரின் தந்தை யார்?
53) பரசுராமரின் தாய் யார்?
54) சுக்ரீவனின் தந்தை பெயர் என்ன?
55) ஹனுமானின் தந்தை யார்?
56) இராவணனின் மனைவி பெயர் என்ன?
57) மண்டோதரியைத் தவிர இராவணனுக்கு எத்தனை மனைவிகள்?
58) இராவணனுக்குப் பயந்து காகமாக உருவெடுத்தது யார்?
59) மஹரிஷி பரசுராமருக்கு பார்கவ என்ற பெயர் ஏன் வந்தது?
60) தனுர் வேதத்தில் எத்தனை வகை உண்டு?
என்ன? சுலபம்தானே? இதன் விடைகள் நாளைய புதிர் பகுதியில் வரும்.
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
நாளை..................
ஶ்ரீராம காவியம்
~~~~
புதிர் -06
நேற்றைய புதிர்-5 க்கான
விடைகள்:-
49) ராமர்
50)சகோதரியின் மகன்
51) துந்துபி
52) ஜமதக்னி முனிவர்
53) ரேணுகா
54) ரிக்ஷராஜன்
55) கேசரி
56) மண்டோதரி
57) 1000
58) யமன்
59) அவர் பிருகு வம்சத்தில் பிறந்ததால்
60) 4
சரியா?
இனி இன்றைய
கேள்விகள்...
61) இக்ஷ்வாகுவிற்கு எத்தனை புதல்வர்கள்?
62) ரோமபாதர் எந்த தேசத்தின் அரசர்?
63) புரு எந்த பிரதேசத்தின் அரசன்?
64) அனுமனால் கொல்லப்பட்ட ராவணனின் மகன் பெயர் என்ன?
65) பரதன் தன் இளமைப் பருவத்தைக் கழித்தது எங்கு?
66) ஹனுமான், அங்கதன் சீதையைத் தேடச் சென்ற திசை எந்த திசை?
67) கேகய நாட்டின் தலைநகர் எது?
68) ராமர், சீதை, லக்ஷ்மணன் தங்கியிருந்த பஞ்சவடி
எந்த நதிக் கரையில் அமைந்துள்ளது?
69) கர,தூஷணர் வசித்த இடம் எது?
70) ராமர் ராவணனை எந்த அஸ்திரத்தை ஏவி வதம் செய்தார்?
71) யாரிடமிருந்து இராவணன் வாளைப் பெற்றான்?
72) இராவணனின் வாளின் பெயர் என்ன?
என்ன? சுலபம்தானே? இதன் விடைகள் நாளைய புதிர் பகுதியில் வரும்.
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
நாளை..................
ஶ்ரீராம காவியம்
~~~~
புதிர் -07
நேற்றைய புதிர்-6 க்கான
விடைகள்:-
61) 100
62) அங்க தேசம்
63) காசி
64) அக்ஷயகுமாரன்
65) தாய் மாமன் வீட்டில்
66) தெற்கு
67) ராஜக்ருஹம்
68) கோதாவரி நதி
69) தண்டகாரண்யம்
70) ப்ரஹ்மாஸ்திரம்
71) சிவபிரானிடமிருந்து
72) சந்திரஹாஸம்
சரியா?
இனி இன்றைய
கேள்விகள்...
73) ராமருக்கு தண்டசக்ரா, காலசக்ரா, விஷ்ணுசக்ரா, ஐந்திரசக்ரா ஆகிய் ஆயுதங்களைத் தந்தது யார்?
74) நாராயணாஸ்திரத்தை ராமருக்குக் கொடுத்தது யார்?
75) இந்திரனின் தேர் சாரதி யார்?
76) இந்திரஜித்திற்கு அந்தப் பெயர் ஏன் வந்தது?
77) சீதைக்கு ஜானகி என்ற பெயர் எப்படி வந்தது?
78) ஜனக மகாராஜனுடைய மந்திரியின் பெயர் என்ன?
79) லெட்சுமனன், பரதன். சத்ருக்னன் ஆகியோரின் மனைவியர் பெயர் என்ன?
80) இராம சேது எனப்படும் கடல் பாலம் அமைத்த பெருமை யாரைச் சாரும்?
81) சீதை எந்த நாட்டு இளவரசி? அந்த நாட்டின் தலை நகரம் எது?
82) இராவணனுடைய தாய் தந்தையர் யார்?
83) இராவணனுடைய மந்திரிகள் பெயர் என்ன?
84)வாலி, சுக்ரீவர்களுடைய தந்தையின் பெயர் என்ன?
என்ன? சுலபம்தானே? இதன் விடைகள் நாளைய புதிர் பகுதியில் வரும்.
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
நாளை..................
ஶ்ரீராம காவியம்
~~~~
புதிர் -08
நேற்றைய புதிர்-7 க்கான
விடைகள்:-
73) விஸ்வாமித்ரர்
74) விஸ்வாமித்ரர்
75) மாதலி
76) இந்திரனை வென்றதால்
77) ஜனகரின் மகளானதால்
78) சதாநந்தர்
79) முறையே ஊர்மிளை, மாண்டவி, ஸ்ருதகீர்த்தி
80) விஸ்வகர்மாவின் புதல்வர்கள் நளன், நீலன் ஆகிய வானர சகோதரர்களை .
81) விதேஹ நாட்டின் இளவரசி, தலை நகர் மிதிலை
82) புலஸ்திய மகரிஷியின் மகனான விஸ்ரவஸ் என்ற முனிவர், சுமாலியின் மகள் கைகசி என்ற அரக்கி
83) மகோதரன், மால்யவான்
84) ரிக்ஷராஜன்
சரியா?
இனி இன்றைய
கேள்விகள்...
85) இராமாயணத்தில் சத்ருக்னனுக்கு எந்த இடத்தில் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது?
86) சீதையைக் கண்டு பிடிப்பதர்காக சுக்ரீவனிடம் நட்புகொள்ள வேண்டிய அவசியத்தை இராமனுக்கு சுட்டிக்காட்டியவன் யார்?
87) வாலி, சுக்ரீவர் மனைவியர் பெயர்கள் என்ன?
88) வாலி, அர்ஜுனன் இருவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
89) லெட்சுமணனிடம் ஒருதலைக் காதல்கொண்ட ஒரு பெண் சூர்ப்பநகை. மற்றொரு பெண் யார்? எங்கே நடந்தது?
90) தசரதர் ஏற்பாடு செய்த புத்ர காமேஷ்டி யாகத்தை முன்னின்று நடத்தி வைத்த முனிவர் யார்?
91) இராம,லெட்சுமண பரத சத்ருக்னர் பிறந்த நட்சத்திரங்கள் எவை?
92) அவர்களுடைய லக்னங்கள் அல்லது ராசி என்ன?
93) இராமர் ஜாதகத்தில் எத்தனை கிரகங்கள் உச்சம்?
94) இராமர் வாழ்வில் எண்
2, 7, 14 ஆகியன மறக்க முடியாதவை .ஏன்?
95) வால்மீகியின் கூற்றுப்படி தசரதனுக்கு ஒரு பெண் உண்டு. அவள் பெயர் என்ன?
96) தண்டகாரண்யத்தில் இராமர் சந்தித்த அகத்திய முனிவரின் தம்பி பெயர் என்ன?
என்ன? சுலபம்தானே? இதன் விடைகள் நாளைய புதிர் பகுதியில் வரும்.
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
நாளை..................
ஶ்ரீராம காவியம்
~~~~
புதிர் -09
நேற்றைய புதிர்-8 க்கான
விடைகள்:-
85) மது என்ற அரக்கனின் மகனான லவணாசுரனைக் கொன்று அவனுடைய மதுராபுரியை இராமராஜ்யத்தில் சேர்த்தான் இராமன். பிறகு அதற்கு அரசனாக சத்ருனனை பட்டம் சூட்டினான்.
86) கபந்தன் என்னும் அரக்கன்
87) தாரா, ருமா
88) இருவரும் தேவேந்திரனின் அருளால் பிறந்தவர்கள்
89) அயோமுகி என்னும் அரக்கி, மதங்க முனிவரின் ஆஸ்ரமத்தில்
90) ரிஷ்யஸ்ருங்கர்
91) ராமன்—புனர்வசு/ புனர்பூசம், லெட்சுமணன்—ஆயில்யம், பரதன்—பூசம், சத்ருக்னன்- ஆயில்யம்
92) ராமன்—கடக லக்னம், லெட்சுமணன்—சிம்ம ராசி , பரதன்—மீன லக்னம், சத்ருக்னன்- சிம்ம ராசி.
93) ஐந்து கிரகங்கள்
94) இரண்டு வரங்கள் மூலம் காட்டுக்கு அனுப்பப்பட்டான், பரதன் ஆள்வதற்கு அனுமதித்தான், ஏழு மரா மரங்களைத் துளைக்கும் போட்டியில் வெற்றி பெற்றவுடனேயே வானரசேனை உதவி கிட்டியது, பதினான்கு ஆண்டு வனவாசம்
95) சாந்தி (விளக்கம் கேட்டால் தெரிவிக்கிறேன்)
96) சுதர்சனன்
சரியா?
இனி இன்றைய
கேள்விகள்...
97) ஜடாயுவின் சகோதரர் பெயர் என்ன?
98) அனுமனின் தந்தை யார்?
99) இராவணன் எந்த ரிஷியின் வம்சத்தில் வந்தவன்?
100) ரிஷ்யமுக பர்வதத்தில் வாலி நுழையமுடியாதபடி சாபம் இட்ட முனிவர் யார்?
101) கைகேயியின் தந்தை யார்?
102) ரிஷ்யஸ்ருங்கருக்கும் தசரதருக்கும் என்ன உறவு முறை?
103) வசிஷ்டரின் மகனிடம் சீதாதேவி எல்லா நகையையும் கொடுத்துவிட்டு கானகம் சென்றாள். யார் அந்த மகன்/ முனிவர்?
104) இராமர் கொடுத்த பாதுகைகளை பரதன் எங்கே வைத்து பூஜை செய்தான்?
105) இராமரிடம் காட்டும்படி அனுமனிடம் சீதை கொடுத்த நகை எது?
106) இந்திரஜித்தையும், கும்பகர்ணனையும் போரில் யார் கொன்றார்கள்?
107) வாலியின் மகன் பெயர் என்ன?
108) இலங்கையை காவல் காத்த அரக்கியின் பெயர் என்ன?
என்ன? சுலபம்தானே? இதன் விடைகள் நாளைய புதிர் பகுதியில் வரும்.
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
நாளை..................
ஶ்ரீராம காவியம்
~~~~
புதிர் முடிவு 10
நேற்றைய புதிர்-9 க்கான
விடைகள்:-
20.சம்பாதி
21.கேசரி
22.புலஸ்த்ய ரிஷி
23.மதங்க முனிவர்
24. அஸ்வபதி
25.தசரதரின் மருமகன் ரிஷ்யஸ்ருங்கர்
26.சுயஜ்னன்
27.நந்திக்ராமம்
28.சூடாமணி
29.இந்திரஜித்- லெட்சுமணன், கும்பகர்ணன்- ராமன் 30.அங்கதன்
31.லங்கினி
சரியா?
நண்பர்களே,
வணக்கம் பல.
கேள்விகள் 108ற்கும் பதில் தெரிந்ததா? முயற்சி செய்த அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். நன்றி.
இனி அடுத்து?
★ராமாயண காவியம் என்பது ஒரு கடல். நாம் அதில் மூழ்கி ஶ்ரீராமா என்னும் அற்புத முத்தை கண்டு பிடித்து, படித்து, ருசித்து, ஆனந்தம் கொள்வதற்கு முன் முத்தைப் பற்றியும் கடலைப் பற்றியும் மிக நன்றாக அறிந்திருக்க வேண்டும்.
★எப்படி முத்தெடுக்கச் கடல் நோக்கி செல்பவர்கள் காற்று வீசும் திசை, வானிலை, கடலின் நீரோட்டம, அலைகள் தன்மை, முத்துச்சிப்பிகள் குவிந்திருக்கும் இடம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் என அனைத்தையும் அறிந்துதான் முத்தெடுக்க கிளம்புவார்கள்.
★அதுபோல நாமும் 'ஶ்ரீராமா' என்னும் அற்புத முத்தைப் படித்து ருசிப்பதற்கு முன் ஶ்ரீராமாயண புதிர், ஶ்ரீராமர் கோவில்கள், சில ஶ்ரீராமர் கோவில்களிலுள்ள உற்சவ மூர்த்திகளின் படங்கள், சில இல்லங்களில் ராமர் பூஜை அன்று சொல்லப்படும் கதை, ராமநாம மகிமைகள்,ராமாயணம் எழுதிய மகரிஷி வால்மீகி, அவரைப் பின் தொடர்ந்த மகாதவி கம்பர், ஒட்டக் கூத்தர், அருணாசல கவிராயர் மற்றும் சில கவிஞர்கள், உலகெங்கும் பரவியுள்ள ராமாயணத்தைப் பற்றிய விபரங்கள்,மேலும் ஶ்ரீராமசரித மானஸ் போன்ற இதர சில ராமாயணங்கள் பற்றியும் அறிந்து முக்யமான "ஶ்ரீராம காவியம்" கதைக்குள் நுழையலாம் என உத்தேசித்து உள்ளேன்.
★பெருமுத்தாகிய ஶ்ரீராமர் மற்றும் அவருடன் ரத்தினம், வைரம்,கோமேதகம், பவளம், புஷ்பராகம்,மாணிக்கம், வைடூரியம், மரகதம், மற்றும் நீலம் போன்ற அருமையான கதாபாத்திரங்களை "ஶ்ரீராம காவியம்" என்னும் தங்கச் சங்கிலியில் கோர்த்து சமர்ப்பிக்க மிக்க ஆர்வம் கொண்டுள்ளேன். நான் ஒரு கருவியே. எழுத்தும் மற்றும் இயக்கமும் ஶ்ரீராமச்சந்திர மூர்த்தியும் ஶ்ரீகிருஷ்ணருமே ஆவர். "ஶ்ரீஹரி வாயு குரு" அவர்களின் ஆசிகள் இந்த காவியத்தைப் படிக்கும் எல்லா அன்பர்களுக்கும் கிடைக்க ப்ரார்த்திக்கிறேன்.
நாளை முதல் ஶ்ரீராமரின் சில கோவில்கள் பற்றி அறிவோம்.
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
நாளை.....................
ஶ்ரீராமகாவியம்
~~~~
ராமர் கோவில்கள் 1
மதுராந்தகம் ஏரிகாத்த
ராமர் கோயில்...
★செ ன்னை மாநகரிலிருந்து சுமார் 85 கி.மீ. தொலைவிலும் செங்கற்பட்டிலிருந்து 30 கி.மீ. தூரத்திலும் உள்ள தலமே இது.ஏரிகாத்த ராமர் கோயில் சென்னை – திண்டிவனம் நெடுஞ்சாலையில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம் பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது. அனைத்துப் பேருந்துகளாலும், ரயில் போக்குவரத்தினாலும் வசதியாகச் செல்லுமாறு அமைந்த தலம். ஆதியில் வகுளாரண்யம் என்று பெயர் பெற்ற மகிழ மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாகத் திகழ்ந்தது.
★கிளியாறு என்ற ஆற்றின் கரையில் அமைந்துள்ள இது மதுராந்தகச் சோழரின் நினைவாக இப்பெயர் பெற்றதாகக் கூறுவர். மதுரமான (இனிமையான) பல புண்யதீர்த்தங்களை உடைய இடம் என்றும் பொருள் கொள்ளலாம். கல்வெட்டுக்களில் மதுராந்தக சதுர்வேதி மங்கலம் என்று குறிப்பிடப்பட்டுள்ள இவ்வூர் சோழ மன்னனால் வேதம் ஓதும் அந்தணர்களுக்கு மான்யமாக அளிக்கப்பட்டது. ப்ரஹ்ம வைர்த்த புராணம், பார்க்கவ புராணம் போன்ற புராணங்களில் இந்தத் தல மஹாத்மியம் மிகத்தெளிவாக கூறப்பட்டுள்ளது.
★ராமபிரான் சீதையை மீட்க இலங்கை செல்லும் போது விபாண்டக முனிவரின் ஆசிரமத்தில் சில நாட்கள் தங்கியிருந்தார். முனிவரின் வேண்டுதல்படி, அயோத்தி திரும்பும்போது சீதையுடன் கல்யாண கோலத்தில் காட்சி தந்தார். விபாண்டக முனிவர் கோயில் கருவறையிலேயே உள்ளார். சுவாமி சன்னதிக்கு வலது புறம் ஜனகவல்லித் தாயார் சன்னதி உள்ளது. திருமழிசை ஆழ்வார் மற்றும் இராமனுஜர் இக்கோயில் தலத்திற்கு தொடர்பு உடையவர்கள்.
★ஐந்து நிலை கோபுரங்கள் உடன் கூடிய ராஜகோபுரம் அமைந்துள்ளது இந்தத் தலம். ஆழ்வார்களில் பக்திசாரர் என்றழைக்கப்பட்ட ஶ்ரீமான் திருமழிசை ஆழ்வார் முக்தி அடைந்த தலம் இதுவே. சுகர் என்ற மஹரிஷியும் தவம் செய்த இடம் இதே மதுராந்தகம் தான்.
★ஆசார்யர்களோடும் பெரும் தொடர்பு பெற்று சிறப்பாக விளங்குகிறது இந்தத் தலம். வைணவ சித்தாந்தத்தின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டிய பெரியவர் ஸ்ரீ ராமானுஜர் அவர்களுக்கு வைஷ்ணவ தீக்ஷையாகிய பஞ்ச ஸம்ஸ்காரங்கள் செய்யப்பட்டது இத்தலத்தில் உள்ள மகிழ மரத்தடியில் தான். மகிழ மரமே இந்தத் தல வ்ருக்ஷம். இதற்கு அதனால் த்வயம் விளைந்த பூமி என்ற பெயரும் உண்டு.
★1967ம்ஆண்டில் இந்தக் கோவிலில் திருப்பணிகள் நடந்தபோது ஒரு சுரங்கத்தில் நவநீதக்கண்ண மூர்த்தியும், பஞ்சபாத்திரங்களும் சங்கு சக்ரங்களும் கிடைத்தன. இவை ராமானுஜரின் பஞ்சஸமஸ்காரத்திற்காக அவரது ஆசாரியர் பெரிய நம்பி அவர்களால் உபயோக படுத்தப்பட்டவையாகும் என்பதால் இன்றும் அவை ராமானுஜரின் ஸந்நிதியில் வைக்கப்பட்டுள்ளன.
★இந்த மதுராந்தகத்தில் உள்ள பெரிய ஏரியானது மழைக் காலங்களில் உடைப்பு எடுத்துக்கொண்டு பெருத்த சேதத்தை விளைவித்து வந்தது. கிழக்கு இந்தியக் கம்பெனி கலெக்டராக பணி புரிந்த சர் லயனல் பிளேஸ் என்பவர் பலமுறை கரையைச் சீர்படுத்தியும் பலனில்லை.
1825ம் ஆண்டில் மதுராந்தகம் பகுதியில் அடை மழை பெய்து வெள்ளம் சூழ்ந்தது. மதுராந்தகம் ஏரி உடைந்து விடும் சூழ்நிலை அங்கு உருவாகியது.
★மக்கள் அங்கு கோவிலில் குடிகொண்டுள்ள பெருமான் கோதண்டராமரிடம் வேண்டி பிரார்தனை செய்தனர். இதை கேள்விப்பட்ட கலெக்டர் சர் லயனல் பிளேஸ் இம்முறை மழைகாலத்தில் இந்த ஏரி உடையாமல் இக்கோவிலில் உறையும் கடவுளான ஶ்ரீ ராமர் காப்பாற்றினால் உடனடியாக ஜனகவல்லித் தாயார் என்ற தாயாரின் ஸந்நிதியைக் கம்பெனி செலவிலேயே கட்டித் தருவதாக உறுதியான வாக்களித்தார்.
★பெருமழை பெய்து ஏரி நிரம்பி வழிந்தபோது இரவில் ராமரும் லக்ஷ்மணரும் ஏரிக் கரைமீது நடந்து சென்று அதனை உடையாமல் பாதுகாப்பதைக் கண்டு பரவசமடைந்த அந்த துரை ஜனகவல்லித் தாயார் ஸந்நிதியைக் கட்டிக் கொடுத்தார். இன்றும் தாயார் ஸந்நிதியில் கலெக்டரின் இந்தத் தர்மம் பற்றிய தகவல் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இதனால் இந்த தலத்து ராமபிரானை ஏரி காத்த ராமர் என்றே அழைக்க ஆரம்பித்தனர்.
★ நின்றதிருக்கோலத்தில் மூலவராகக் கோதண்டராமர் கல்யாண கோலத்தில் ஸீதை, லக்ஷ்மணருடன் காட்சி தருகிறார். உற்சவ மூர்த்தி கோதண்ட ராமர் சற்றுப் பெரிய வடிவினராக ஸீதை லக்ஷ்மணருடன் ஸேவை ஸாதிக்கிறார். மூலவர் விபாண்டக மகரிஷிக்கு ஸேவை தந்த கோலத்தில் பாணிக்கிரகண பாணியில் ஸீதையின் கையைப் பற்றிக் கொண்டுள்ளார். விபாண்டக மகரிஷியும் ஸந்நிதியில் எழுந்தருளியுள்ளார். சற்றே சிறிய அளவில் உள்ள மற்றொரு உற்சவமூர்த்தியே கருணாகரப் பெருமாள். அவர் ஸ்ரீதேவி,பூதேவியுடன் எழுந்து அருளி உள்ளார். இவரையே ராமபிரானாக விபாண்டக மகரிஷி ஆராதித்துத் தனக்குக் காட்சி அளிக்கும்படி வேண்டினாராம். கருணாகரப் பெருமாளின் நாச்சியாரே ஜனகவல்லித் தாயார். இவர் தனி ஸந்நிதியில் மூலவராக, உற்சவராகவும் உள்ளார். இவரது ஸந்நிதிதான் கலெக்டர் துரையால் கட்டிக் கொடுக்கப்பட்டது. எல்லா உற்சவங்களும் கருணாகரப் பெருமாளுக்கே. ஸ்ரீ ராமநவமி மஹோத்சவம் மட்டும் கோதண்ட ராமருக்கு. உற்சவ மூர்த்தி கண்ணன் இவர் ஸந்நிதியில் உள்ளார்.
★மற்றும் பிற ஸந்நிதிகளில் ஆண்டாள், விஷ்வக்ஸேனர், ராமானுஜர், பெரியநம்பிகள், நிகமாந்த மஹாதேசிகன், மணவாள மாமுனிகள் உளளனர். ஆஞ்சனேயர் ராமபிரான் கோவிலுக்கு எதிரில் தனி ஸந்நிதி கொண்டு விளங்குகிறார். லக்ஷ்மி ந்ருஸிம்ஹர், உற்சவரான ப்ரஹ்லாதவரதர் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் உள்ளார். சக்கரத்தாழ்வாரும், ந்ருஸிம்ஹரும் சேர்ந்து ஒரு ஸந்நிதியில் உள்ளனர். சக்கரத்தாழ்வாரின் உற்சவ மூர்த்தியும் அங்கேயே உள்ளது. இந்தக் கோவில் புஷ்கரிணியை ராமச்சந்திர புஷ்கரிணி என்றழைக்கப் படுகின்றது.
★சரித்திரப்புகழ் பெற்ற ஏரியைக் காணக்கோவில் அருகில் உள்ள பாதை வழியே படிகள் உள்ளன. ஏரிக்கும் இந்தப் படிகள் உள்ள நடைபாதைக்கும் நடுவில் வண்டிகள் செல்லும் பாதை உள்ளது. கோவிலின் கோபுரத்தில் வடகலைத் திருமண் அடையாளமும் ஸ்ரீராமா என்று எழுதப்பட்ட எழுத்துக்களும் பொலிவுடன் காட்சி அளிக்கின்றன. இங்கு அஹோபில மடத்தினரால் நடத்தப்படும் ஸம்ஸ்க்ருதக் கல்லூரியும், ஓரியண்டல் பள்ளியும் உள்ளன. ஆனிமாத ப்ரஹ்மோத்சவமும், பங்குனி மாதத் திருக்கல்யாண உத்சவமும், மார்கழி மாத அத்யயன உத்சவமும் இங்கு புகழ் பெற்றவை.
★இங்கு ஶ்ரீராமநவமி மிகவும் விசேஷத்துடன், ஒரே நாளில் ஐந்துவித அலங்காரங்கள் உடன் சிறப்பாகக் கொண்டாட படுகிறது. தேர்த்திருவிழாவும் நடக்கிறது.ஆனிமாத்தில் பிரமோற்சவத்தில், இராமர் புஷ்பக விமானம் போல் அமைக்கப்பட்ட ஒரு தேரிலும், உற்சவர் கருணாகரப் பெருமாள் வேறு தேரிலும் உலா வருகின்றனர். இது நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் சேராவிட்டாலும் மிகுந்த புகழ் பெற்றது.
★ ராமருக்குரிய சிறப்பான கோயில்களில் இதுவும் ஒன்று. சீதையின் கைகளைப் பற்றிய நிலையில் ராமன் நிற்கிறார். ராமானுஜர் தீட்சை பெற்ற தலம்.
திறக்கும் நேரம்:
காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு ஏரி காத்த ராமர் திருக் கோயில் , மதுராந்தகம் - 603 306 காஞ்சிபுரம் மாவட்டம்.
போன்:
+91- 4115 253887, 98429 09880, 93814 82008.
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
நாளை......................
ஶ்ரீராம காவியம்
~~~~
ராமர் கோவில்கள் 02
02 தில்லை விளாகம்
வீர கோதண்டராம ஸ்வாமி...
★ஒருமைப்பாட்டின் முக்கிய சின்னமாக விளங்குபவர் ஸ்ரீராம பிரான். பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய மக்களிடையே மட்டுமின்றி, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வாழ்வோர் இடத்திலும் பரவி அவர்களின் உள்ளத்திலும், உணர்விலும் தங்கியிருப்பவர் இந்த ராமாயண நாயகர்.
★தமிழ்நாட்டிலுள்ள அநேக பெருமாள் கோயில்களில் ராம பிரானுக்கு சந்நிதிகள் ஏராளம்! இவருக்கென்று தனிப்பட்ட சில ஆலயங்களும் உள்ளன. அவற்றுள், புகழ் பெற்ற தில்லை விளாகம் ஸ்ரீ வீர கோதண்டராம சுவாமி திருக்கோயிலும் ஒன்றாகும். இது திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
★கி.பி. 1862ம் ஆண்டு, தில்லை விளாகத்தில் வேலுத் தேவர் என்னும் ராம பக்தர் வாழ்ந்து வந்தார். அவர் கனவில், ""ஸ்ரீராமர் மடம் கட்டுக'' என்று ஒரு தெய்வீக உத்தரவு தோன்றியது. அதை நனவாக்கும் நோக்கத்துடன் அஸ்திவாரம் தோண்டினார் வேலுத் தேவர். சில அடிகள் தோண்டியவுடன் செங்கற்கள் பல தெரிந்தன. மேலும் ஆழமாகத் தோண்டியதும் ஒரு பெரிய செங்கல் கட்டிடம் அடியில் புதைந்து கிடப்பதை கண்டார். கவனமாக அதை அகழ்வு செய்ததில் அழகிய பஞ்சலோக சிலைகளான ஸ்ரீராமர், சீதா தேவி, இலக்குவன், ஆஞ்சநேயர், கிருஷ்ணர், ருக்மணி தேவி, சத்தியபாமா மேலும் சந்தான கிருஷ்ணர், சக்கரத்தாழ்வார் ஆகியோரின் திருமேனிகள் கிடைத்தன.
★அந்தப் பஞ்சலோக திருமேனிகள் அனைத்தும் கி.பி.12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று பின்னால் தெரிய வந்தது. "ஸ்ரீ வீர கோதண்ட ராமர்' என்று அந்த ராமர் திருமேனிக்குப் பெயர் இடப்பட்டது. வசீகரம், கம்பீரம், மந்தஹாசம்,வீரம்,காருண்யம்,என அனைத்து அழகுகளும் அந்த பஞ்சலோகத்தாலான திருமேனியில் மண்டிக் கிடந்தன. அந்த ஶ்ரீராமரின் விக்ரகத்தின் எழிலால் கவரப்பட்ட கிராம மக்கள் அனைவரும் வந்து வணங்க ஆரம்பித்தனர்.
★இத்திருத்தலத்தின் பெருமை வெளியூர்களிலும் பரவ ஆரம்பித்தது. பக்தர்கள் நூற்றுக் கணக்கில் வந்து தரிசித்து மகிழ்ந்தனர். ஆரம்பத்தில் வீரகோதண்ட ராமர், சுமார் 50 ஆண்டுகள் ஓலைக் குடிசையின் கீழ் இருந்தபடிதான் வருகின்ற பக்தர்களுக்குத் தரிசனம் அளித்து வந்தார்.
★1905ஆம் ஆண்டு லால்குடியைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் தில்லை விளாகத்துக்கு வந்தார்; தனக்கு வாரிசு இல்லாத குறையை நீக்க ஸ்ரீ வீர கோதண்ட ராம பிரானிடம் கண்ணீர் மல்க முறையிட்டார். அங்கேயே சில நாட்கள் தங்கி சேவை செய்தார். தன் குறை தீர்த்து வாரிசு ஏற்பட்டால் தனது சொந்தச் செலவில் சிறிய கருங்கல் ஆலயம் கட்டி வைப்பதாக மனமுருகி வேண்டிக் கொண்டார். இதனால் அவரது புத்திர தோஷம் நீங்கப் பெற்றது; வாரிசாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அளவில்லா மகிழ்ச்சி கொண்டார் அந்தப் பொறியாளர். தான் கூறியபடியே பரம்பரை தர்மகர்த்தா மற்றும் கிராமப் மக்கள் அனைவருடைய முழு ஒத்துழைப்புடன் தற்போது உள்ள கருங்கல் கோயிலை எழுப்பினார் அவர். 1913ஆம் ஆண்டு குடமுழுக்கு விழாவினைச் சிறப்பாக நடத்தி முடித்தார்கள்.
★இரண்டாவது குடமுழுக்கு விழா, 1970ஆம் ஆண்டு நடந்தேறியது. பிறகு 23.06.2000ல் மூன்றாவது குடமுழுக்கு விழாவினை இப்போது உள்ள ஆலய பரம்பரை தர்மகர்த்தா, இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை செயல் அலுவலர், திருப்பணிக்குழுவினர், கிராமவாசிகள் மற்றும் ஸ்ரீராமபக்த சேவா சங்க உறுப்பினர்கள் ஆகிய அனைவரும் மிகச் சிறப்பாக நடத்தினார்கள்.
★இவ்வாலயக் கருவறையில் கற்சிலைகளே கிடையாது. கருவறையில் சீதா, ராம, லட்சுமண பஞ்ச லோக மூர்த்திகளே சேவை சாதிக்கின்றனர். தாயார் சீதைக்கு முன் சற்று இடப்புறமாக ஒரு கையை கட்டிக் கொண்டு,மறுகையால் வாய்பொத்தி அடக்கத்துடன் ஸ்ரீ ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். இந்த ஐம்பொன் சிலைகளுக்கு முன்பாக மற்றொரு "ராம பரிவாரம்' உள்ளது. இவையும் ஐம்பொன் திருமேனிகளே!
★ராமர் ராவணனை வெற்றி கொண்டு சீதையை மீட்ட பின், அயோத்திக்கு திரும்பி வரும்போது பரத்வாஜ முனிவர் ஆசிரமத்தில் சற்று இளைப்பாறியதாக "ராமாயணம்' கூறுகிறது. தில்லைவிளாகம் என்னும் திருத்தலம், பரத்வாஜ முனிவர் வாழ்ந்த இடமாக இருக்கலாம் என்றொரு கருத்து உண்டு.
★இத்திருக்கோயிலில் உள்ள ராமர், சுமார் நான்கரை அடி உயரத்துடன் காட்சியளித்து அருள் புரிகிறார். வலது கையில் அம்பும், இடது கையில் வில்லும் கொண்டு அற்புதமாக உள்ளார்.
★திரண்ட தோள்களும், முழங்கால்வரை நீண்ட கைகளும், கருணை பொங்கும் கண்களும், நகை சிந்தும் இதழ்களும் கொண்ட ஆணழகனாக ராமரைக் காண தில்லைவிளாகம் செல்ல வேண்டும். இங்கு போர் முடிந்து வீர கோதண்ட ராமஸ்வாமியாக கையில் வில் கொண்டு, வலப்புறம் சீதை, இடப்புறம் இளைய பெருமாளுடன், நின்ற திருக்கோலத்தில் அனுமனும் காட்சிதர கண்ணை அள்ளும் அழகோடு நிற்கிறார் பெருமாள்.
★இறைவனின் கைகள், மற்றும் கணுக்காலில் பச்சை நிற நரம்புகளும், விரலில் உள்ள ரேகைகளும் மிகத் தெளிவாக தெரிவது நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. வில் ஏந்திய கையின் வளைவு நெளிவுகள் சிற்பக் கலைக்கு ஓர் எடுத்துக்காட்டு. அதுபோல ராமபிரானின் வலது கையில் உள்ள "ஸ்ரீராம ஸரம்' பாணம் மிக அழகானது மேலும் அபூர்வமானதும் கூட.
இறைவனின் அருள் பொங்கும் அழகு நம்மை அகல விடாமல் தடுக்கிறது.
மேலும் சக்ரவர்த்தி திருமகன் கணுக்கால், முழங்கால், கெண்டைக்கால், நரம்புப் புடைப்புகள் ஆகியனவும் இயற்கைப் பொலிவோடு செதுக்கப்பட்டுள்ளன. ராமரின் வலது காலில் "பச்சை நரம்பு' தெரிவது தனிச் சிறப்பு.
★இங்குள்ள "பெரிய திருவடி' எனப்படும் கருடாழ்வார், பகவான் ராமரை நோக்கி கைகளைக் கூப்பியவண்ணம் முன் மண்டபத்தில் அமர்ந்து உள்ளார். மாதம்தோறும் வரும் பஞ்சமி தினத்தில் இவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து, உளுத்தம் பருப்பில் மோதகம், சுண்டல் செய்து வைத்து பிரார்த்தனை செய்தால் ராகு, கேது தோஷம் விலகும் என்கின்றனர் பெரியோர்.
★இந்த ஆலயத்தின் பின்புறம் ராமர் தீர்த்தமும், தெற்குப் பக்கத்தில் சீதா தீர்த்தமும், வடக்கு திசையில் அனுமார் தீர்த்தமும் உள்ளன. இந்த மூன்று தீர்த்தங்களிலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் பெருந்திரளான பக்தர்கள் வந்து புனித நீராடி மகிழ்கின்றனர்.நான்மறைக் காடு என்னும் வேதாரண்யம், கோடியக்கரையில் புனித நீராடுகின்ற அனைவரும் கண்டிப்பாக இங்கு வந்து நீராடிச் செல்வது வழக்கம்.
★ராமர் சந்நிதியையொட்டி ஸ்ரீ நடராஜருக்கும் ஆலயம் அமைந்துள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கிழக்கு நோக்கி காட்சி தரும் ஸ்ரீ வீர கோதண்டராமர் சந்நிதியில் உள்ள முன் மண்டபத்தில் நாம் வடக்கு திசை நோக்கி நின்று கொண்டு சிவனையும், பெருமாளையும் ஒரு சேர தரிசிக்கலாம். இவ்வாறு அமையப் பெற்றுள்ளதால் இவ்வூருக்கு "ஆதி தில்லை' என்ற ஒரு சிறப்புப் பெயரும் உண்டு.
★இந்த ஆலயத்தில் ஸ்ரீராம நவமி வருடப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி 11 நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த விழாவின் 6-ஆம் நாளில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும்.இந்தப் பெருவிழா தவிர அனுமன் ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, திருக்கார்த்திகை, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, ஆடி,தை,அமாவாசை போன்ற நாட்களிலும் இங்கு திருவிழாக்கள் நடைபெறும்.
★உ.வே.சாமிநாதைய்யர் இத்திருத்தலத்தையே ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட திருச்சித்ரகூடம் திருத்தலம் என்றே கருதினார் எனக்கூறப் படுகின்றது. பஞ்சராமர் தலங்களில் இதுவும் ஒன்றாகும்
★இத்திருத்தலம் மாயவரம் -காரைக்குடி புகை வண்டி வழித் தடத்தில் உள்ளது. ரயில் நிலையத்திற்கு தெற்கே 5 கி.மீ. தூரத்தில் கோயில் இருக்கின்றது. பட்டுக்கோட்டை-வேதாரண்யம் பேருந்து வழித்தடத்தில் தில்லை விளாகம் கோயிலடி பஸ் நிறுத்தத்தில் இறங்கி வந்தும் ஆலயத்தை தரிசிக்கலாம்.
★ஆலயம் சம்பந்தமான விவரங்களுக்கு கோதண்டராமன், (பட்டாச்சாரியார்)- 9688713211 அல்லது 04369-245725 என்ற எண்ணைத் தொடர்பு கொள்க!
நாளை.................
ஶ்ரீராம காவியம்
~~~~
ராமர் கோவில்கள் 03
★03) சேடப்பட்டி
ராமர் கோயில்...
★தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்களில் ஒன்றுதான்
சேடப்பட்டி ராமர் கோயில் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம், சேடப்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள ஶ்ரீராமர் கோயிலாகும். இக்கோயில் கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
இக்கோயிலில் ராமர், சீதா சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப் படுகிறது.
இக்கோயிலில் ஒருகாலப் பூஜை திட்டத்தின் கீழ் பூஜை நடக்கின்றது. சித்திரை மாதம் சித்திரை திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.
★04)கேத்துவார்பட்டி ராமஸ்வாமி கோயில்...
தமிழ் நாட்டிலுள்ள ஒரு ராமர் கோயில் கேத்துவார்பட்டி ஶ்ரீராமஸ்வாமி கோயில் ஆகும். தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம், கேத்துவார்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இந்தக்
கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
இக்கோயிலில் ராமர், சீதை சன்னதிகளும், ராமர், லெட்சுமணர், சீதை உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப் படுகிறது. இக்கோயிலில் ஒருகாலப் பூஜை நடக்கிறது.
★05) மணமேல்குடி பட்டாபிராமசாமி கோயில்...
பட்டாபிராமசாமி கோயில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இந்தக் கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
இக்கோயிலில் ராமர், சீதை சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
இக்கோயிலில் ஒருகாலப் பூஜை நடக்கின்றது.
நாளை.................
ஶ்ரீராம காவியம்
~~~~
ராமர் கோவில்கள் 04
★06)ஏம்பலம் கோதண்ட ராமசாமி கோயில்...
ஏம்பலம் கோதண்டராமசாமி கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், ஏம்பலம் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
இக்கோயிலில் அருள்மிகு கோண்டராமசாமி சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.இந்தக்
கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது.
★07) வேட்டைக்காரன்புதூர் ராமர் கோயில்...
ராமர் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், வேட்டைக்காரன்புதூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இந்த
கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
இக்கோயிலில் பஞ்சராத்திர முறைப்படி வழிபாடு நடக்கிறது.
★08) அவிநாசி கவுண்டன் பாளையம் ராமர் கோயில்...
ராமர் கோயில்:- தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், அவிநாசி கவுண்டன்பாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
இக்கோயிலில் ராமர், சீதாதேவி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. சித்திரை மாதம் ராமநவமி முக்கிய திருவிழாவாக சிறப்பாக நடைபெறுகிறது.
நாளை....................
ஶ்ரீராம காவியம்
~~~~
ராமர் கோவில்கள் -05
09) முடிகொண்டான்
ராமர் கோயில்...
★முடிகொண்டான் ராமர் கோயில், தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ராமர் கோயிலாகும். பஞ்சராமர் தலங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தக்
கோயில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில், மகுடவர்தனபுரம் எனும் முடிகொண்டானில் உள்ளது.
★ராமரின் வருகையைப்பற்றி பரதரிடம் சொல்வதற்காக ஆஞ்சநேயர் சென்றுவிட்ட காரணத்தால் இங்கு மூலவராக ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோர் மட்டும் உள்ளனர்.அருள்மிகு ராமர் கோதண்டராமராக கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளார் அவருக்கு வலப்புறம் சீதை மற்றும் இடப்புறம் இளவல் லக்ஷ்மணனும் உள்ளனர்.
★புரட்டாசி3வது சனிக்கிழமை உற்சவர் புறப்பாடு-13 நாட்கள் திருவிழா, ஸ்ரீராம நவமி உற்சவம்10 நாட்கள் திருவிழா கடைசி நாள் சீதா கல்யாணம் -புறப்பாடு. ஒவ்வொரு மாதமும் ராமரின் ஜென்ம நட்சத்திரமான புனர் பூசம் நட்சத்திரத்தன்று சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெறும்.வாரத்தின் சனிக் கிழமைகளில் இத்தலத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி மற்றும் பொங்கல்,தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின் போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.
★வேறு எங்குமே காண முடியாத வகையில் அனுமன் இல்லாத ராமர் எழுந்தருளி இருக்கும் மூலஸ்தானத்தை இங்கு காணலாம். இங்குள்ள ராமரின் இடது புறம் சீதையும், வலது புறம் லட்சுமணனும் உள்ளனர். ஆஞ்சநேயர் தனி சன்னதியில் உள்ளார்.
★இத்தலத்தில் வழிபடுவோர் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானமும் கீர்த்தியும், புகழும் அடைவர்.குறிப்பாக அயல் நாட்டுக் கல்வி படிக்க விரும்புவோர் இத்தலத்தில் வழிபட்டால் அவர்களது பிரார்த்தனை நிறைவேறும் உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்கள், பாடத்தில் தேர்ச்சி பெற விரும்புவர்கள், கலைத் தொழிலில் ஈடுபட்டு உள்ளவர்கள் பெரும்பாலோர் இத்தலத்தில் வந்து வழிபட்டு தங்கள் கலைகளில் சிறந்து விளங்குகின்றனர்.
★பிரிந்திருக்கும் தம்பதியர் இங்கு வழிபட்டு மீண்டும் ஒன்று சேர்கின்றனர் மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் ஸ்ரீராமசந்திர மூர்த்தி தமது பக்தர்களது வேண்டுதல் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
★தங்கள் பிரார்த்தனை நிறைவேறியவுடன் சுவாமி புறப்பாடு நடத்துகின்றனர். துளசிமாலை சாத்துதல், விளக்குகள் வாங்கி வைத்தல் ஆகியவற்றையும் பக்தர்கள் தங்கள் நேர்த்திகடன்களாக செய்கின்றனர். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகியவற்றை செய்யலாம். தவிர வழக்கம் போல அபிஷேகங்களும் ஆராதனைகளும் இங்குச் செய்யலாம். வசதி அதிகம் படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.
★14 வருடம் ஸனவாசம் முடியப்போவதால் தமக்காக காத்திருக்கும் தம்பி பரதன் தீக்குளித்து உயிரை மாய்த்து கொள்வான் என்று கருதி அனுமனை அயோத்திக்கு அவசரமாக அனுப்பி தாம் கிளம்பி வந்து கொண்டே இருக்கும் தகவலைத் தெரிவித்துவிட்டு வரும்படி ஸ்ரீராமர் உத்தரவிட்டார். அனுமனும் அயோத்தி சென்று பரதனிடம் ராமர் கூறியவற்றை தெரிவித்துவிட்டு இங்கு திரும்பினார். அப்போது ராமர் தான் வருவதற்கு முன்பே விருந்து சாப்பிட்ட செய்தி அறிந்ததும் ஆசிரமத்திற்குள் வராமல் கோபித்துக் கொண்டு வெளியிலேயே உட்கார்ந்து கொண்டாராம். ராமரும் தனக்கு அளிக்கப்பட்ட விருந்தில் பாதியை அனுமனுக்கு அளித்து சாந்தப்படுத்தினார். அதனால் தான் வேறு எங்குமே காண முடியாத வகையில் அனுமன் இல்லாத ராமர் எழுந்தருளியிருக்கும் மூலஸ்தானம் இங்கு காணலாம். கோபித்துக் கொண்ட அனுமனுக்கு கோயிலுக்கு நேர் எதிரில் தனியாக சன்னதி இருப்பதையும் காணலாம்.
★வால்மீகி ராமயணத்தில் குறிப்பிடப்பட்ட இந்த தலம் பரத்வாஜ முனிவரின் ஆசிரமம் அமைந்த தலம். ஸ்ரீராமருக்காக ரங்கநாதரை எழுந்தருளச் செய்த தலம்.
பொதுவாக ராமர் கோயில் தெற்கு நோக்கி அமைந்து இருக்கும். இதற்கு காரணம் ராவண வதத்திற்கு பின் விபீஷணன் ஆட்சி பீடம் அமர்ந்து எப்பொழுதும் ராமரை தரிசித்து கொண்டு இருக்க வேண்டும் என்பதால் அவன் வேண்டுகோளின்படி ராமர் தெற்கு நோக்கி அமைந்திருப்பதாக புராணம் கூறுகிறது. ஆனால் இங்கு கோயில் மூலவரான கோதண்டராமர் பரத்வாஜ முனிவருக்கு முடி சூடி காட்சி கொடுத்ததால் சீதா மற்றும் லட்சுமணனுடன் கிழக்கு முகமாகவும், பரத்வாஜ முனிவர் பிரதிஷ்டை செய்த ரங்கநாதர் தனி சன்னதியில் தெற்கு முகமாகவும் அருள்பாலிக்கிறன்றனர். கோபித்துக்கொண்ட அனுமனுக்கு கோயிலுக்கு எதிரில் தனி சன்னதியும் அதன் பின்னால் கோயில் தீர்த்தக்குளமும் இருக்கிறது. ஆழ்வார்கள் காலத்திற்கு முன்பே உருவான கோயில் இது. கழுத்து இடுப்பு ஆகியன வளைந்து கையில் கோதண்டம் வில் வைத்து மிக அற்புதமான வடிவத்தில் உற்சவ மூர்த்தி எழுந்து அருளியள்ள தலம்.
★ ராவணனை வதம் செய்து விட்டு திரும்புகையில் ராமனது புஷ்ப விமானம் தற்போது கோயில் உள்ள இடமான பரத்வாஜ முனிவரது ஆசிரமத்தில் தரை இறங்கியது. ராமரும் விருந்து உண்ண தயாராகிறார். அப்போது தாம் விருந்து சாப்பிடும் முன் ஸ்ரீரங்க நாதரை பூஜை செய்த பின்பே சாப்பிடுவது வழக்கம் என்று தெரிவிக்க பரத்வாஜ முனிவர் ஸ்ரீரங்கநாதரை பிரதிஷ்டை செய்கிறார். ராமரும் அவரை வழிபட்டுவிட்டு முனிவர் தந்த விருந்தை உண்டார். விருந்து உண்ட ராமர் பரத்வாஜ முனிவருக்கு தன்னுடைய பட்டாபிஷேகத்திற்கு முன்பே முடி(மகுடம்)யுடன் இந்தத் தலத்தில் காட்சி தந்தார். எனவே இங்குள்ள கோதண்ட ராமர் முடிகொண்டான் ராமர் என்றழைக்கப்படுகிறார்.
★காலை 6 மணிமுதல் 11மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
நாளை....................
ஶ்ரீராம காவியம்
~~~~
ராமர் கோவில்கள் -06
10) தாளவாடி
ராமர் கோயில்...
★தாளவாடி ராமர் கோயில் தமிழ்நாட்டில் உள்ள ஈரோடு மாவட்டம், தாளவாடி என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இந்த ராமர் கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிர்வாகியால் நிர்வகிக்கப் படுகிறது. இக்கோயிலில் ஒருகாலப் பூஜை நடக்கிறது.
11) காளசமுத்திரம் ராமச்சந்திரபெருமாள் திருக்கோயில்...
★ ராமச்சந்திரபெருமாள் கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், காளசமுத்திரம் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★இக்கோயிலில் ஶ்ரீ ராமர் சன்னதி உள்ளது. இந்தக் கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
★இக்கோயிலில் ஒருகாலப் பூஜை நடக்கின்றது. புரட்டாசி மாதம் சனிக்கிழமை முக்கிய திருவிழா நடைபெறுகிறது. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி வெகு சிறப்பாக நடைபெறுகிறது.
12) நல்லூத்துக்குளி
இராமர் கோயில்...
★ இந்த கோயிலானது தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், நல்லூத்துக்குளி என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இந்தக்
கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★இக்கோயிலில் ராமர் ( கண்ணாடிப்படம்) சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
★இக்கோயிலில் ஒருகாலப் பூஜை நடக்கின்றது. புரட்டாசி மாதம் சனிக்கிழமைகள் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.
ஶ்ரீராம காவியம்
~~~~
ராமர் கோவில்கள் -07
13)அதம்பார் ஶ்ரீ கோதண்ட ராமஸ்வாமி கோயில்...
★தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம், அதம்பார் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். பஞ்சராமர் தலங்களில் இதுவும் ஒன்று. இக்கோயில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★சரயூ நதிக்கரையில் பிறந்த ராமனுக்கு காவிரிக் கரையில் அநேக ஆலயங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று, அதம்பார்.
அமைதியே உருவாகத் திகழும் சின்னஞ்சிறு கிராமம், அதம்பார். மெயின் ரோட்டை விட்டு 2 கி.மீ. உள்ளடங்கிய ஊர்தான். என் மீது பக்தி உள்ளவன் நான் எங்கிருந்தாலும் என்னைத் தேடி வருவான்' என்று சொல்லாமல் சொல்கிற விதமாகத்தான், அழகான மோகனப் புன்னகையுடன் விளங்குகிறார். இந்த அதம்பார் ராமஸ்வாமி.
★வில்லும் அம்பும் ஏந்தி அவர் நிற்கிற அழகைச் சொல்ல வேண்டுமே! அவர் பக்கத்தில் சீதையும், லட்சுமணரும் இருக்க, திருவடி கீழ் வாய் பொத்தி உத்தரவு கேட்கும் பணிவான தோற்றத்தில் அனுமன்! இத்தோற்றத்தில் காட்சி தரும் அனுமனை தாச ஆஞ்சநேயர்' என்பர். ஆமாம். அவர் ஶ்ரீ ராமதாசன் தானே!
★பொதுவாக ஶ்ரீராம, சீதா, லட்சுமண விக்ரகங்கள் தனித்தனியாக ஒரு பீடத்தில் அமர்த்தப்பட்டிருக்கும். இங்கு மூவர் உருவும் ஒன்றாக ஒரே பீடத்தில் அமைக்கப்பட்டு உள்ளன. வேறு வேறாகப் பிரிக்க முடியாத நிலை மூவர் வாழ்வும் அப்படித்தானே?
இடதுகையில் வில்லும், வலதுகையில் அம்பும் கொண்டு ராமர் நிற்கும் தோரணை நம்மை மீண்டும் மீண்டும் பலமுறை பார்க்கத் தூண்டுகிறது.வேறு எங்கும் இப்படியான வடிவில் நாம் ராமனைப் பார்க்க முடியாது. அதனாலேயே, அது மீண்டும் மீண்டும் நம்மை ஈர்க்கிறது போலும்!
★மூலவர் ஶ்ரீ கல்யாண ரங்க நாதர் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக தனிச் சன்னதியில் உள்ளார். பிரமாண்டமான இம்மூவர் விக்ரகங்களுக்குக் கீழே, தாழ்வான பீடத்தில் உற்சவர் ஶ்ரீ ராஜகோபாலன், பாமா-ருக்மணி சகிதராக விளங்குகிறார். இவருக்கு அருகில் நர்த்தன கோபாலன். இவை எல்லாம் ஐம்பொன் திருமேனிகள். கருவறைக்கு முன்பாக வலதுபுறத்தில் விஷ்வக்சேனர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர் சிலா ரூபங்கள், வரிசையாக அருள் புரிகின்ற கோலத்தில் நமக்கு காட்சி அளிக்கின்றனர்.
★சீதையிடமிருந்து ராமனைப் பிரிக்க, மாரீசன் பொன்மான் உருவில் பொய்மானாக வந்தான். அந்த மாயத் தோற்றத்தில் மயங்கிய சீதா, அதைப் பிடித்துத் தரும்படி கேட்டாள். வேண்டாம் இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது' என்று ராமன் மறுத்தான். சீதையின் முகம் வாடிவிட்டது. அவள் ஆசையைக் கெடுப்பானேன்' என்று மனைவியின் மீதுள்ள அன்பின் பொருட்டு, மானைப் பிடிக்கச் சென்றான் ராமன்.
ஆனால், அது மானல்ல! மாரீசன்' என்று தெரிந்ததும், உன்னை கொல்லாமல் விடமாட்டேன்' என்று அதைத் துரத்தினான்.
★மான் பலவகையிலும் மறைந்து மறைந்து ஓடியது. இறுதியில் மானை நோக்கி ராமர் அம்பை எய்த இடம்தான் இந்த அதம்பார்' தலம். அந்த அம்பு, பாய்ந்து சென்று மானைத் தைத்த இடம் இத்தலத்தை அடுத்துள்ள மாந்தை' (மான்+தை)என்பர். மான் அடிபட்டு ஓடிப்போய் உயிர்நீத்த இடம், மாந்தையை அடுத்துள்ள கிராமமான கொல்லுமாங்குடி என்பதாகும்
இக்கோயிலில் உள்ள கல்வெட்டில் ராமர் வில்லின் நாணை ஏற்றி இத்தலத்தில் இருந்து மானை நோக்கி
"தம் ஹந்தும் கிருத நிச்சய; ஹதம் பார்" என்று உரைத்து அம்பை எய்தார் என்றும், "ஹதம் பார்" என்பதே பின்னர் திரிந்து 'அதம்பார்' ஆயிற்று' எனவும் செய்தி உள்ளது.
★மிகப் பழமையான கோயில், ஆயினும் மிக உள்ளடங்கிய ஓர் ஊருக்குள் இந்த கோவில் இருப்பதால் வெளி உலகினர் பலருக்குத் தெரியவில்லை. இப்போது இவ்வூரை ஒட்டி ஒரு நாளைக்கு நான்கு முறை பேருந்து செல்கிறது. இருப்பினும் பேருந்து மூலம் கிராமத்தை ஒட்டியுள்ள நிறுத்தத்தில் இறங்கி, சற்று தூரம் கோயிலுக்கு நடக்க வேண்டும்.
★கோயிலின் எதிரே உள்ள அக்ரஹாரமும், பழமையான ஓட்டு வீடுகளைக் கொண்டு உள்ளது. ஆள் நடமாட்டம் அவ்வளவாக இல்லாத கிராமம். அழகிய அல்லித் தடாகம் நம்மை ஊருக்குள் வரும்படி வரவேற்கிறது. சந்தடியற்ற தெருக்கள்தான் என்ற போதிலும் மிகவும் பிரம்மாண்டமாகவும் தூய்மையாகவும் உள்ளன.
பொதுவாக காவிரிக்கரை ராமர் ஆலயங்களுக்கென்று தலபுராணம் சிறப்போடு இருப்பது, அதன் தொன்மையைக் காட்டுகிறது.
★ராமநவமி இங்கே மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. உற்சவர் வீதி உலா உண்டு. ஊரில் உள்ள மக்கள் அனைவரும் இந்த ராமரின் தீவிர பக்தர்கள். இந்து அறநிலைத்துறை உதவியால் ஒரு கால பூஜை மட்டும் இங்கு நடைபெறுகிறது. ஶ்ரீராமரின்
பக்தர்கள் முன்னெடுத்து தலத்தையும் கோயிலையும் எல்லோரும் அறியும்படி செய்தால், அதம்பார் அழகு ராமனின் தரிசனமும், அவரது அருள் பிரசாதமும் எல்லா அன்பர்களுக்கு கிடைக்கும்.
ராமர் யார் மனதில் எழுந்து, இந்த நற்காரியத்தைச் செய்து முடிக்கும்படி பணிக்கப் போகிறாரோ, அதை அவரே அறிவார்!
★கோயிலை வலம் வந்து, அழகு பொங்கும் ராமனின் முக தரிசனத்தை மீண்டும் கண்டு, நெஞ்சாரத் துதித்து, மனச்சுமை குறைந்து, மனத்திருப்தியோடு நாம் திரும்புகிறோம். அனுமன், சற்று தூரம் நம் கூடவே வந்து வழியனுப்பி விட்டுத் திரும்பி செல்வது போல ஒரு பிரமை!
★திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து ஏரவாஞ்சேரி செல்லும் பஸ் அதம்பார் வழியே செல்கிறது. நன்னிலத்திலிருந்து 20 கி.மீ.
தரிசன நேரம்: காலை 9-12; மாலை 4-6
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
நாளை......................
~~~~
ராமர் கோவில்கள் -07
13)அதம்பார் ஶ்ரீ கோதண்ட ராமஸ்வாமி கோயில்...
★தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம், அதம்பார் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். பஞ்சராமர் தலங்களில் இதுவும் ஒன்று. இக்கோயில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★சரயூ நதிக்கரையில் பிறந்த ராமனுக்கு காவிரிக் கரையில் அநேக ஆலயங்கள் உண்டு. அவற்றுள் ஒன்று, அதம்பார்.
அமைதியே உருவாகத் திகழும் சின்னஞ்சிறு கிராமம், அதம்பார். மெயின் ரோட்டை விட்டு 2 கி.மீ. உள்ளடங்கிய ஊர்தான். என் மீது பக்தி உள்ளவன் நான் எங்கிருந்தாலும் என்னைத் தேடி வருவான்' என்று சொல்லாமல் சொல்கிற விதமாகத்தான், அழகான மோகனப் புன்னகையுடன் விளங்குகிறார். இந்த அதம்பார் ராமஸ்வாமி.
★வில்லும் அம்பும் ஏந்தி அவர் நிற்கிற அழகைச் சொல்ல வேண்டுமே! அவர் பக்கத்தில் சீதையும், லட்சுமணரும் இருக்க, திருவடி கீழ் வாய் பொத்தி உத்தரவு கேட்கும் பணிவான தோற்றத்தில் அனுமன்! இத்தோற்றத்தில் காட்சி தரும் அனுமனை தாச ஆஞ்சநேயர்' என்பர். ஆமாம். அவர் ஶ்ரீ ராமதாசன் தானே!
★பொதுவாக ஶ்ரீராம, சீதா, லட்சுமண விக்ரகங்கள் தனித்தனியாக ஒரு பீடத்தில் அமர்த்தப்பட்டிருக்கும். இங்கு மூவர் உருவும் ஒன்றாக ஒரே பீடத்தில் அமைக்கப்பட்டு உள்ளன. வேறு வேறாகப் பிரிக்க முடியாத நிலை மூவர் வாழ்வும் அப்படித்தானே?
இடதுகையில் வில்லும், வலதுகையில் அம்பும் கொண்டு ராமர் நிற்கும் தோரணை நம்மை மீண்டும் மீண்டும் பலமுறை பார்க்கத் தூண்டுகிறது.வேறு எங்கும் இப்படியான வடிவில் நாம் ராமனைப் பார்க்க முடியாது. அதனாலேயே, அது மீண்டும் மீண்டும் நம்மை ஈர்க்கிறது போலும்!
★மூலவர் ஶ்ரீ கல்யாண ரங்க நாதர் ஸ்ரீதேவி-பூதேவி சமேதராக தனிச் சன்னதியில் உள்ளார். பிரமாண்டமான இம்மூவர் விக்ரகங்களுக்குக் கீழே, தாழ்வான பீடத்தில் உற்சவர் ஶ்ரீ ராஜகோபாலன், பாமா-ருக்மணி சகிதராக விளங்குகிறார். இவருக்கு அருகில் நர்த்தன கோபாலன். இவை எல்லாம் ஐம்பொன் திருமேனிகள். கருவறைக்கு முன்பாக வலதுபுறத்தில் விஷ்வக்சேனர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர் சிலா ரூபங்கள், வரிசையாக அருள் புரிகின்ற கோலத்தில் நமக்கு காட்சி அளிக்கின்றனர்.
★சீதையிடமிருந்து ராமனைப் பிரிக்க, மாரீசன் பொன்மான் உருவில் பொய்மானாக வந்தான். அந்த மாயத் தோற்றத்தில் மயங்கிய சீதா, அதைப் பிடித்துத் தரும்படி கேட்டாள். வேண்டாம் இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது' என்று ராமன் மறுத்தான். சீதையின் முகம் வாடிவிட்டது. அவள் ஆசையைக் கெடுப்பானேன்' என்று மனைவியின் மீதுள்ள அன்பின் பொருட்டு, மானைப் பிடிக்கச் சென்றான் ராமன்.
ஆனால், அது மானல்ல! மாரீசன்' என்று தெரிந்ததும், உன்னை கொல்லாமல் விடமாட்டேன்' என்று அதைத் துரத்தினான்.
★மான் பலவகையிலும் மறைந்து மறைந்து ஓடியது. இறுதியில் மானை நோக்கி ராமர் அம்பை எய்த இடம்தான் இந்த அதம்பார்' தலம். அந்த அம்பு, பாய்ந்து சென்று மானைத் தைத்த இடம் இத்தலத்தை அடுத்துள்ள மாந்தை' (மான்+தை)என்பர். மான் அடிபட்டு ஓடிப்போய் உயிர்நீத்த இடம், மாந்தையை அடுத்துள்ள கிராமமான கொல்லுமாங்குடி என்பதாகும்
இக்கோயிலில் உள்ள கல்வெட்டில் ராமர் வில்லின் நாணை ஏற்றி இத்தலத்தில் இருந்து மானை நோக்கி
"தம் ஹந்தும் கிருத நிச்சய; ஹதம் பார்" என்று உரைத்து அம்பை எய்தார் என்றும், "ஹதம் பார்" என்பதே பின்னர் திரிந்து 'அதம்பார்' ஆயிற்று' எனவும் செய்தி உள்ளது.
★மிகப் பழமையான கோயில், ஆயினும் மிக உள்ளடங்கிய ஓர் ஊருக்குள் இந்த கோவில் இருப்பதால் வெளி உலகினர் பலருக்குத் தெரியவில்லை. இப்போது இவ்வூரை ஒட்டி ஒரு நாளைக்கு நான்கு முறை பேருந்து செல்கிறது. இருப்பினும் பேருந்து மூலம் கிராமத்தை ஒட்டியுள்ள நிறுத்தத்தில் இறங்கி, சற்று தூரம் கோயிலுக்கு நடக்க வேண்டும்.
★கோயிலின் எதிரே உள்ள அக்ரஹாரமும், பழமையான ஓட்டு வீடுகளைக் கொண்டு உள்ளது. ஆள் நடமாட்டம் அவ்வளவாக இல்லாத கிராமம். அழகிய அல்லித் தடாகம் நம்மை ஊருக்குள் வரும்படி வரவேற்கிறது. சந்தடியற்ற தெருக்கள்தான் என்ற போதிலும் மிகவும் பிரம்மாண்டமாகவும் தூய்மையாகவும் உள்ளன.
பொதுவாக காவிரிக்கரை ராமர் ஆலயங்களுக்கென்று தலபுராணம் சிறப்போடு இருப்பது, அதன் தொன்மையைக் காட்டுகிறது.
★ராமநவமி இங்கே மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. உற்சவர் வீதி உலா உண்டு. ஊரில் உள்ள மக்கள் அனைவரும் இந்த ராமரின் தீவிர பக்தர்கள். இந்து அறநிலைத்துறை உதவியால் ஒரு கால பூஜை மட்டும் இங்கு நடைபெறுகிறது. ஶ்ரீராமரின்
பக்தர்கள் முன்னெடுத்து தலத்தையும் கோயிலையும் எல்லோரும் அறியும்படி செய்தால், அதம்பார் அழகு ராமனின் தரிசனமும், அவரது அருள் பிரசாதமும் எல்லா அன்பர்களுக்கு கிடைக்கும்.
ராமர் யார் மனதில் எழுந்து, இந்த நற்காரியத்தைச் செய்து முடிக்கும்படி பணிக்கப் போகிறாரோ, அதை அவரே அறிவார்!
★கோயிலை வலம் வந்து, அழகு பொங்கும் ராமனின் முக தரிசனத்தை மீண்டும் கண்டு, நெஞ்சாரத் துதித்து, மனச்சுமை குறைந்து, மனத்திருப்தியோடு நாம் திரும்புகிறோம். அனுமன், சற்று தூரம் நம் கூடவே வந்து வழியனுப்பி விட்டுத் திரும்பி செல்வது போல ஒரு பிரமை!
★திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து ஏரவாஞ்சேரி செல்லும் பஸ் அதம்பார் வழியே செல்கிறது. நன்னிலத்திலிருந்து 20 கி.மீ.
தரிசன நேரம்: காலை 9-12; மாலை 4-6
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
நாளை......................
~~~~
ராமர் கோவில்கள் -08
14)மேலூர் சிவராமர்
கோயில்...
★ தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், மேலூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.இந்தக்கோயிலில் ஒருகாலப் பூஜை நடக்கின்றது
15) தேவீரப்பள்ளி கோதண்ட ராமர் கோயில்...
★தேவீரப்பள்ளி கோதாண்ட ராமர் கோயில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகில் தேவீரப்பள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இந்தக்
கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
★இக்கோயிலில் ஒருகாலப் பூஜை நடக்கின்றது. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி முக்கியமான திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
16) திடியன்மலை
ராமர் கோவில்...
★திடியன் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊர். இது மதுரையிலிருந்து 33 கிமீ தொலைவில் உள்ள தேனி நெடுஞ்சாலையில் இருக்கும் செல்லம்பட்டி என்ற ஓர் கிராமத்திலிருந்து 5 கிமீ தொலைவில் தெற்கே அமைந்துள்ளது.
★இங்கு நன்செய் விவசாயம் - நெல், கரும்பு போனறவைகள் விளைகின்றன. இவ்வூரில் இருக்கும் திடியன் மலையின் மீது அமைந்திருக்கும் ராமர் கோவில் மற்றும் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி கோவிலும் மிக சிறப்பு பெற்றதாகும். மேலும் இங்குள்ள நல்லூத்து பெரியகருப்பண்ண சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
★இவ்வூருக்கு மதுரை நகரின் தந்தை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 55B, 55G, 55H பேருந்துகள் செல்லும்.
நாளை..................
ஶ்ரீராம காவியம்
~~~~
ராமர் கோவில்கள் -09
17)பருத்தியூர்
கோதண்டராமர் கோயில்...
★அருள்மிகு பருத்தியூர் இராமர் ஆலயம், திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவில் உள்ளது. சூரியன் சிவனை எண்ணித் தவம் இருந்த இடம், இராம-லக்ஷ்மணர் சூரிய நமஸ்காரம் செய்த இடம் பருத்தியூர். பஞ்ச ராமர் தலங்களில் இதுவும் ஒன்று.
★தெற்கு நோக்கியுள்ள சந்நிதியில் பரவசமூட்டும் பருத்தியூர் இராம பரிவாரம். இராமாயணச் சொற்பொழிவு பல செய்து நூற்றுக்கும் மேல் பட்டாபிஷேகங்கள் நடத்தி ப்ரவசன சக்ரவர்த்தியாகத் திகழ்ந்த பிரம்மஸ்ரீ பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரி அவர்கள் கட்டிய ஆலயம் இது. இராமருக்குக் கோவில் கட்டவேண்டும் என்பதில் அவருக்கு சிறு வயது முதல் ஆசை.
★ஆலயங்களை சீர்திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது, ஸ்ரீ இராமரே கனவில் வந்து, தடாகம் அமைக்குமாறு கேட்க, இராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று இருக்கும் போது தடாகம் கட்ட உத்தரவு வருகிறதே என்று வியந்தார். குளம் கட்ட ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார். இராம பக்தரான சாஸ்திரிக்கு மிகப்பெரும் ஆச்சர்யம் காத்திருந்தது.
★ தடாகம் கட்ட நிலம் வாங்கி, ஆட்களை வைத்து செடி கொடிகளைக் களைந்து, நிலத்தைத் தோண்டியபோது கிடைத்தன இந்தப் பழைமை வாய்ந்த அழகிய ஸ்வாமியின் விக்ரஹங்கள். பாரதமெங்கும் இராமர் கதை சொல்லி, இராமநாம பாராயணம் பல செய்து,ராமர்மேல் இன்னிசை சங்கீதங்கள் பாடி, தன் இஷ்டதெய்வத்திற்கு அழகான ஒரு கோவிலை அமைத்தார். இக்கோவிலில் வரதராஜர், மகாலட்சுமி, விஸ்வநாதர், விசாலாக்ஷி விக்ரஹங்கள் உள்ளன. தில்லைவிளாகம் போல் இங்கும் சிவனையும், பெருமாளையும் ஒன்று சேர தரிசிக்கலாம்.
★இந்த ஆலயத்தின் கோவில் குளம் ஸ்ரீ கோதண்டராம தீர்த்தம். வேதம், இசை, கதா சொற்பொழிவு,ஶ்ரீராம நாம சங்கீர்த்தனம்போன்றவற்றில் புகழும் வெற்றியும் பெற்று பேரின்பம் பெற இது ஒரு சிறந்த பிரார்த்தனை ஸ்தலமாகும். கோவிலில் சுவாமிக்கு நாமஸ்மரணம், துவாதச பிரதக்ஷணங்கள், அர்ச்சனைகள் செய்து வேண்டுவது வழக்கம். இங்கு சந்நிதியில் கொடுக்கும் துளசி தீர்த்தம் மிக சக்தி வாய்ந்தது, விசேஷமானது.
★இந்தக் கோவிலில் பருத்தியூர் பெரியவா ஆராதனை, ஸ்ரீஇராமநவமி, கிருஷ்ணஜயந்தி, நவராத்திரி, ஹனுமத் ஜயந்தி பண்டிகை திருநாள் திருமஞ்சன பூஜைகள் நடைபெறுகின்றன.
நாளை...................
ஶ்ரீராம காவியம்
~~~~
ராமர் கோவில்கள் -10
18)ஊஞ்சாம்பட்டி தொட்டராமசாமி
பெருமாள் கோயில்...
★தொட்டராமசாமி பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் தேனி மாவட்டம், ஊஞ்சாம்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.
இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★இக்கோயிலில் பெருமாள் சன்னதியும்,ஶ்ரீ ராமரின் உப சன்னதியும் உள்ளன. இந்தக் கோயில் முதன்மைத் திருக் கோயில் என்ற ஒரே வகைப் பாட்டில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிர்வாகியால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த
கோயிலில் ஒருகாலப் பூஜை நடக்கின்றது.
19) அங்கலக்குறிச்சி
ராமர் கோயில்...
★இது தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூர் மாவட்டம், அங்கலக்குறிச்சி என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டு கட்டப்பட்டதாக தெரிகிறது.
★இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி வழிபாடுகள் நடக்கிறது. புரட்டாசி மாதம் சனிக்கிழமை முக்கிய திருவிழாவாக சிறப்பாக நடைபெறுகிறது.
20) கள்ளியவலசு
ராமர் கோயில்...
★கள்ளியவலசு ஶ்ரீ ராமர் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், கள்ளியவலசு என்னும் ஊரில் அமைந்துள்ள ஶ்ரீ ராமர் கோயிலாகும். இக்கோயில் கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★இக்கோயிலில் இராமர், சீதேவி, பூதேவி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.இந்தக்
கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.
நாளை..................
ஶ்ரீராம காவியம்
~~~~
ராமர் கோவில்கள் -11
21) வடுவூர்
கோதண்டராமர் கோயில்...
★வடுவூர் கோதண்டராமர் கோயில், தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ராமர் கோயிலாகும். பஞ்சராமர் தலங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தக்
கோயில் திருவாரூர் மாவட்டத்தில் தஞ்சாவூர்-மன்னார்குடி சாலையில் வடுவூர் என்னுமிடத்தில் உள்ளது. இக்கோயில் தட்சிண அயோத்தி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு
மூலவராக கோதண்டராமர்
பிராட்டி சீதாதேவி தாயார் உடன் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளி உள்ளார்.
★அவரது வடிவழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ‘மையோ! மரகதமோ! மழை முகிலோ, அலை கடலோ! ஐயோ இவன் வடிவு என்பதோர் அழியா அழகுடையோன் என்றும் கண்டோம், கண்டோம், கண்டோம், கண்ணுக்கு இனியானை கண்டோம்’ என்று அனுபவிக்கும் படியாய், ஸ்ரீ கோதண்டராமர் மற்றும் சீதாப்பிராட்டி, லட்சுமணன், அனுமனுடன் திவ்யதரிசனம் தருகிறார்.ஸ்ரீ ராமநவமி விழா 10 நாள் பிரமோற்சவத்துடன் விமரிசையாக கொண்டாடப் படும். அப்போது நடைபெறும் திருக்கல்யாண உற்சவத்தை பார்ப்பவர்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும் என்பது நம்பிக்கை.
★இதிகாச நாயகனான ஶ்ரீராமன், தந்தை தசரதனின் ஆணையின்படி 14 வருடம் வனவாசம் மேற்கொண்டார். அடர்ந்த கானகத்தில் அவர் நடமாடி வந்தபோது, அங்குள்ள முனிவர்கள் அவரை அங்கேயே தங்கி இருக்கவேண்டும் என்று மிகவும் மன்றாடிகேட்டுக் கொண்டனர். அவதார நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு ராமன் முனிவர்கள் அனைவரையும் சமாதானப் படுத்தி மேற்கொண்டு செல்ல தடைவிதிக்கக்கூடாது என்று கூறினார்.
★அதற்கு அந்த முனிவர்கள் சம்மதிக்கவில்லை. இதனால் ராமன் என்ன செய்வதென்று சிந்தித்தார். முடிவில் தன் கையாலேயே தன்வடிவத்தை தானே ஒரு விக்ரகமாகச் செய்து தனது ஆசிரமத்து வாசலில் வைத்துவிட்டு உள்ளே சீதையுடன் இருந்தார்.
முனிவர்கள் மறுமுறை ஶ்ரீ ராமனை தரிசிக்க வந்த போது, ஆசிரமத்து வாசலில் அழகெல்லாம் ஓர் உருவாய் திரண்ட வடிவழகுடன் கூடிய ராமன் செய்த விக்ரகத்தை வணங்கி விட்டு உள்ளே சென்றார்கள்.
★அப்போது அவர்கள் ஶ்ரீ ராமனிடம் இந்த தண்ட காரண்யத்தை விட்டு ராமர் செல்லக்கூடாது என்று மீண்டும்வேண்டி கேட்டுக் கொண்டனர். அப்போது ராமன் நான் வேண்டுமா? அல்லது ஆசிரமத்து வாசலில் உள்ள எனது உருவம் வேண்டுமா? என்று கேட்டார். ராமனின் விக்ரகத்தின் அழகில் மெய் மறந்து இருந்த முனிவர்கள் அந்த திவ்ய விக்ரகத்தையே மிகவும் விரும்பினார்கள். உடனே விக்ரகத்தை முனிவர்களிடம் கொடுத்த ராமன் அங்கே எழுந்தருளிவிட்டார்.
★அவர்கள் அந்த விக்ரகத்தை திருக்கண்ணப்புரத்தில் ராமர் சன்னிதியில் பிரதிஷ்டை செய்து நீண்டகாலம் வழிபட்டு வந்திருக்கிறார்கள். அதனால் தான் திருக்கண்ணப்புரம் பெருமாளை பாடிய குலசேகர ஆழ்வார், இந்த ராமனை மனதில் கொண்டு, தனது பெருமாள் திருமொழியில் ‘மன்னுபுகழ் என்ற எட்டாம் திருமொழியில், சிலை வளைத்தாய், சிலைவலவர், ஏமருவுஞ்சிலை வலவா, வளையவொரு சிலை அதனால், ஏவரி வெஞ்சலை வலவா’ என பாடியுள்ளார்.
★ஸ்ரீ சவுரி ராஜனாகிய கண்ணபிரான் எழுந்தருளி இருக்கும் திருக்கோவிலில் கிளைச்சன்னிதியில் ராமன் இருந்ததால் இப்பதிகத்தை அவர்பாடினார். இந்த ராமர் விக்ரகம் ஒரு காலத்தில் அங்கிருந்து அகற்றப்பட்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகிலுள்ள தலைஞாயிறு என்ற ஊரில் மரத்தடியில், சீதை, லட்சுமணன், பரதன், அனுமன் விக்ரகங்களுடன் மண்ணுக்கடியில் மறைத்து வைக்கப்பட்டது.
★பல ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சையை ஆண்டு வந்த மராட்டிய மன்னரின் கனவில், பெருமாள் சென்று தான் தலைஞாயிறு அருகே மண்ணுக்கடியில் புதைந்து கிடப்பதாகவும்,அதை வெளி கொணர்ந்து கோவில்கட்டி, ஆராதனை செய்யும்படியும் உத்தரவிட்டார். அதன்படியே மன்னரும் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று விக்ரகங்களை மண்ணில் இருந்து வெளியே எடுத்தார்.
★அப்போது அந்த ஊர் மக்கள் திரண்டு வந்து, சிலைகளை அங்கிருந்து எடுத்துச்செல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே லட்சுமணன், பரதன், சிலைகளை தஞ்சை மன்னர் அவர்களிடம் கொடுத்து அவர்களை சமாதானபடுத்தி, ஸ்ரீ கோதண்டராமர், சீதை, அனுமன் சிலைகளை மட்டும் பல்லக்கில் எடுத்து கொண்டு வந்தார். அந்த சிலைகளை தஞ்சையில் பிரதிஷ்டை செய்ய எண்ணி கொண்டு வரும் வழியில் வடுவூர் வந்தபோது நள்ளிரவு ஆகிவிட்டது.
★அங்கு தங்கி இளைப்பாறி, விக்ரகங்களை வடுவூர் கோவிலில் வைத்து இருந்தார். இந்த எழிலார்ந்த விக்ரகங்களை கண்ட அவ்வூர் மக்கள் அந்த விக்ரகங்களை வடுவூரிலேயே பிரதிஷ்டை செய்யவேண்டும் என்று மன்னரிடம் அன்புடன் கேட்டு கொண்டனர். விக்ரகங்களை மன்னர் எடுத்து சென்றால் சென்றால், அனைவரும் உயிரை மாய்த்து கொள்ளப் போவதாக கூறினர். உடனே மன்னனும் மனமுவந்து அந்த விக்ரகங்களை அங்கேயே பிரதிஷ்டை செய்தார். பின்னர் லட்சுமணன் விக்ரகத்தையும் புதிதாக செய்தனர்.
★தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் 20 கிலோ மீட்டர் தூரத்தில் பறவைகள் சரணாலயமான வடுவூர் ஏரிக்கரையில் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு அருகே சரயுபுஷ்கரணி உள்ளது. கிழக்கு பார்த்த கோவிலின் முகப்பில் 61 அடி உயரமுள்ளதும், 5 அடுக்குகள் கொண்ட ராஜகோபுரம் உள்ளது. கோவிலில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் தை மாதம் வெள்ளிக்கிழமை தாயார் எழுந்தருளி சேவை தருவது வழக்கம். ஆடிப்பூரம், கனுப்பண்டிகை நாட்களில் தாயார் ஊஞ்சல் உற்சவம் இங்கு நடக்கும். இந்த மண்டபத்தின் தெற்கில் உள்ள சன்னிதியில் லட்சுமி, ஹயக்கிரீவர் மற்றும் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி உள்ளனர்.
★பிரபையில் காளிங்க நர்த்தன கண்ணபிரான் உபய நாச்சியாருடன் காட்சியளித்து அருள் புரிகிறார். பெருமாள் சன்னிதிக்கு நேர் எதிரில் கண்ணாடி அறையும், பெரிய திருவடி (கருட) சன்னிதியும் மேற்கு நோக்கி உள்ளன. மகாமண்டபத்தின் வடக்குப் பக்கம் சுவரையொட்டி வரிசையாக மூலவர்களாக விக்னேசுவரர், ஆதிசேஷன், ஆண்டாள், உடையவர் முதலியன ஆழ்வார்கள் உள்ளனர்.
★இதையொட்டியுள்ள தெற்கு நோக்கிய சன்னிதிக்குள் வாசுதேவன், ஸ்ரீதேவி, பூதேவி, செங்கமலத்தாயார் மூலவராகவும், ஸ்ரீ கோபாலன் ருக்மணி சத்யபாமாவுடன், உற்சவராகவும் காட்சி தருகிறார்.
★அர்த்த மண்டபத்தில் வடகிழக்கு மூலையில் பெரிய நிலைக்கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. அந்த கண்ணாடியினுள்ளே கோதண்டராமரின் பிரதிபிம்ப சேவை கிடைக்கும். ஆலய தல விருட்சம் வகுள மரம் ஆகும். இந்த ஆலயத்தில் தினமும் 6 கால பூஜைகள் நடைபெறுகின்றன.
★சித்திரை மாதம் அட்சய திரிதியை, ஆடிமாதம் ஆற்றங்கரையில் தீர்த்தவாரி, புரட்டாசியில் தேசிகன் உற்சவம், நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, தை அமாவாசை தீர்த்தவாரி, மாசிமகம், பங்குனி மாதம் ஸ்ரீ ராமநவமியையொட்டி புனர்பூச நட்சத்திரத்தில் தொடங்கி 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும்.
★வடுவூர் ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோவில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து 13 கிலோ மீட்டர் தூரத்திலும், தஞ்சையில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து மன்னார்குடி செல்லும் பஸ்சில் சென்றால் 40 நிமிட பயண தூரத்தில் வடுவூரை அடையலாம்.
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
நாளை...............
ஶ்ரீராம காவியம்
~~~~
ராமர் கோவில்கள் -12
22)மல்லபுரம்
ராமசாமி கோயில்...
★மல்லபுரம் ராமசாமி கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், மல்லபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★இக்கோயிலில் ராமர், சீதை சன்னதிகளும், லெட்சுமணர் உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த
கோயிலில் ஒருகாலப் பூஜை நடக்கின்றது.
23) வேட்டைக்காரன்புதூர் ராமர் கோயில்
★இது தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிற்றூர் வேட்டைக்காரன்புதூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இந்தக்
கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத நியமனம் செய்யப்பட்ட அறங்காவலர் அமைப்பால் இக்கோயில் நிர்வகிக்கப்படுகிறது.இந்தக்
கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி வழிபாடு நடக்கிறது.
24) ஒண்ணுபுரம் ஶ்ரீராமர் பஜனை கோயில்...
★ஒண்ணுபுரம் ராமர்பஜனை கோயில் தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை மாவட்டம், ஒண்ணுபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள ஶ்ரீ ராமர் கோயிலாகும்.
★அருள்மிகு ராமர்பஜனை கோவில், பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
இக்கோயிலில் ராமர் பஜனை மடம் சன்னதி உள்ளது. இந்த கோயில் முதன்மைத் திருக் கோயில் என்ற பிரிவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத நியமனம் செய்யப்பட்ட அறங்காவலர் அமைப்பால் இக்கோயில் நிர்வகிக்கப்படுகிறது.
★இக்கோயிலில் ஒருகாலப் பூஜை திட்டத்தின் கீழ் பூஜை நடக்கின்றது.
25) ஜக்காம்பேட்டை பட்டாபிராமர் கோயில்...
★ஜக்காம்பேட்டை அருள்மிகு ஶ்ரீபட்டாபிராமர் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், ஜக்காம்பேட்டை என்னும் ஊரில் அமைந்துள்ள ஶ்ரீராமர் கோயிலாகும்.இந்தக்
கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★இக்கோயிலில் கிருஷ்ணர் சன்னதி உள்ளது.இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத ஒரு அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
★இக்கோயிலில் ஒருகாலப் பூஜை நடக்கின்றது.
நாளை..................
ஶ்ரீராம காவியம்
~~~~
ராமர் கோவில்கள் -13
26)ஆசூர்
கோதண்டராமர் கோயில்...
★ஆசூர் கோதண்டராமர் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், ஆசூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இந்தக்
கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற ஒரு வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. இந்தக்
கோயிலில் ஒருகாலப் பூஜை திட்டத்தின் கீழ் பூஜைகள் நடக்கின்றது.
27)கீழ்பாலூர் ராமர்பஜனை கோயில்...
★கீழ்பாலூர் ராமர்பஜனை கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பாலூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
★இந்தக் கோயிலில் ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் பூஜை நடக்கின்றது. மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி முக்கிய திருவிழாவாக சிறப்பாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் சனிக்கிழமைதோறும் திருவிழா நடைபெறுகிறது.
28)குயிலம் பட்டாபிராமர் கோயில்...
★குயிலம் பட்டாபிராமர் கோயில் தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை மாவட்டம், குயிலம் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயில் ஆகும். இந்தக் கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப் பாட்டில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
★இக்கோயிலில் ஒருகாலப் பூஜைச் திட்டத்தின் கீழ் வைகானசம் ஆகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆவணி மாதம் ஸ்ரீ ராம நவமி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.
29)விழுந்தமாவடி இராமர் கோயில்...
★விழுந்தமாவடி இராமர் கோயில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம், விழுந்தமாவடி என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இக்கோயில் கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிர்வாகியால் நிர்வகிக்கப் படுகிறது. இக்கோயிலில் ஒருகாலப் பூஜை நடக்கிறது.
30)மீமிசல் கல்யாணராமர்
திருக்கோயில்...
★இலங்கையில் இருந்த சீதையை மீட்க வானரப்படை சகிதமாக ராம, லட்சுமணன் சென்றனர். அவர்கள் மீமிசல் பகுதிக்கு வந்தனர். அப்பகுதி மக்கள் ராமருக்கு உதவி செய்தனர். இதற்கு கைமாறாக சீதையை மீட்டு வரும் போது, மீமிசலில் திருமணக் கோலத்தில் ராமர், சீதை ஆகியோர் இளவல் லட்சுமணனுடன் இங்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அந்த இடத்தில் சரபோஜி மன்னர் கல்யாணராமர் சுவாமி கோயிலைக் கட்டி திருப்பணி பலவற்றைச் செய்தார்.
★ராவணனிடம் போரிட்டு வெற்றி பெற்ற ஶ்ரீ கல்யாண ராமர் இங்கு எழுந்தருளி இருப்பதால், தினமும் கடலுடன் போராடி தங்கள் வாழ்க்கையை ஓட்டும் மீனவ சமுதாயத்தினர் தங்களுக்கும், தொழிலுக்கும் பங்கம் ஏதும் ஏற்படாமல் இருக்க இவரை வழிபாடு செய்கின்றனர். இலங்கை இருக்கும் திசை நோக்கி காட்சியளிக்கும் ராமர் கோயில் கர்ப்பக் கிரகத்தில் ஶ்ரீ ராமர், சீதை, லட்சுமணன் நின்ற ஒரு கோலத்தில் அருள் பாலித்து வருகின்றனர். அருகில் பக்த ஆஞ்சநேயரும் எழுந்தருளி உள்ளார். இதேவடிவில் உற்சவ மூர்த்திகளும் காணப்படுகின்றனர்.
★சீதையை மீட்கும்போது ராவணனுடன் ஏற்பட்ட போரில் தம்பி லட்சுமணன் மயக்கமடைந்து விட்டார். அவருக்கு ஏற்பட்ட மயக்கம் தெளிவிக்க மூலிகைகள் நிரம்பிய சஞ்சீவிமலையை எடுத்து வர ஆஞ்சநேயர் சென்றார். மலையை எடுத்து வரும் வழியில், சனிபகவான் ஆஞ்சநேயரிடம், உன்னை பிடிக்க வேண்டிய கால கட்டம் வந்ததால், உன்னுடைய சரீரத்தை (உடம்பை) பிடிக்க அனுமதிக்க வேண்டும், என்றார். தன்னுடைய காலை பிடித்துக் கொள்வாய் என்று ஆஞ்சநேயர் கூறியதால் அவருடைய காலை அந்த சனிபகவான் இறுகப் பற்றிக் கொண்டார். இதனால் இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டால் சனி பகவானின் பார்வை குறையும் என்ற நம்பிக்கையுள்ளது.
★நாகதோஷம், செவ்வாய் தோஷம், கார்க்கோடக தோஷம், மாங்கல்ய தோஷம், பித்ருக்கள் தோஷம் நீங்க பரிகார பூஜைகள் நடக்கிறது. இதற்காக பக்தர்கள் அருகில உள்ள மீமிசல் கடலுக்குச் சென்று குளித்துவிட்டு, கோயில் வளாகத்தில் உள்ள கல்யாண புஷ்கரணியிலும் குளித்து ஈரத்துடன் ஸ்வாமி கல்யாணராமரை அர்ச்சனை செய்து வழிபட்டால் எல்லா தோஷங்களும நிவர்த்தி ஆகிறது. ஶ்ரீ ராமருக்கும், சீதைக்கும் திருமஞ்சனம் செய்து, புது வஸ்திரம் சாற்றி சிறப்பு அர்ச்சனைகள் செய்கின்றனர்.
★இங்கு வரும் குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு, கேதுவின் தானியமான கருப்பு உளுந்தை, முகுந்தமாலா என்று கூறப்படும் ஓர் திவ்ய மந்திரத்தை உச்சரித்து 90 நாட்களுக்கு தேவையான அளவு பிரசாதமாகத் தருகின்றனர். இதனை 90 நாட்கள் சாப்பிடுவதன் மூலம் குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைப்பதாகவும் அநேகரின் நம்பிக்கையாக உள்ளது. அத்துடன் ராமர் சன்னதியில் தவழ்ந்த நிலையில் இருக்கும் ஐம்பொன்னால் செய்யப்பட்ட ஶ்ரீ சந்தானகிருஷ்ணன் விக்ரகத்தை பூஜித்து, குழந்தை பாக்கியம் கோரி வரும் பக்தர்களுக்கு வழங்குகின்றனர். அதை மடியில் வைத்திருக்கும் பக்தர்கள் பூஜை முடிந்து வீடு திரும்பும் போது விக்ரகத்தை கோயிலில் வழங்கிவிட்டு செல்கின்றனர். இவ்வாறு சந்தான கிருஷ்ணனை மடியில் சுமப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பது பலர் நம்பிக்கை.
★கர்ப்பக் கிரகத்தில் ஶ்ரீராமர், சீதை, லட்சுமணன் நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கின்றனர்.ராம நவமி, வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி,கிருஷ்ண ஜெயந்தி போன்ற விழாக்கள் மிகுந்த சிறப்பாக இங்கு கொண்டாடப் படுகின்றன.
★காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், பிறகு மாலை 4 மணி முதல்
இரவு 8 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.
★அருள்மிகு கல்யாணராமர் திருக்கோயில் மீமிசல், புதுக்கோட்டை.
போன்: +91 9965864048
நாளை......................
ஶ்ரீராம காவியம்
~~~~
ராமர் கோவில்கள் -14
31)குப்பம் ராமர்பஜனை கோயில்...
★குப்பம் ராமர்பஜனை கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், குப்பம் என்னும் ஊரில் அமைந்துள்ள ஶ்ரீராமரின் கோயிலாகும். இக்கோயில் கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★இங்கு கோயில் கோசாலை உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.இங்கு
இக்கோயிலில் ஒருகாலப் பூஜை திட்டத்தின் கீழ் பூஜை நடக்கின்றது. வைகாசி மாதம் ராம நவமி முக்கியமான ஒரு திருவிழாவாக கொண்டாடப் பட்டு மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் 5 சனிக்கிழமை திருவிழா நடைபெறுகிறது.
32)எடக்கல் கோதண்டராமர் கோயில்...
★எடக்கல் கோதண்டராமர் கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், எடக்கல் என்னும் ஊரில் அமைந்துள்ள ஶ்ரீராமரின் கோயிலாகும். அருள்மிகு கோதண்டராமர் கோவில்
கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற ஒரு வகைப்பாட்டில் அரசு இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. இங்கு
இக்கோயிலில் ஒருகாலப் பூஜை திட்டத்தின் கீழ் பூஜை நடக்கின்றது.
33)களம்பூர் கெங்கை கொண்டான் மண்டபம் ஶ்ரீராமர் கோயில்...
★களம்பூர் கெங்கை கொண்டான் மண்டபம் கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். இக்கோயில் கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது
★இக்கோயிலில் ராமர், லட்சுமணர், சீதை சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.
★இக்கோயிலில் ஒருகாலப் பூஜை நடக்கின்றது. சித்திரை மாதம் ராமநவமி முக்கிய திருவிழாவாக விமரிசையாக நடைபெறுகிறது.
34)ஆற்காடு ஶ்ரீராம சீதா லட்சுமண பரத
சத்துருக்ன அனுமான் பஜனை கோயில்...
★ஆற்காடு ஶ்ரீராம சீதா லட்சுமண பரத சத்துருக்ன அனுமான் பஜனை கோயில் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம், ஆற்காடு என்னும் ஊரில் அமைந்துள்ள ராமர் கோயிலாகும். அருள்மிகு ஶ்ரீராம சீதா லட்சுமண பரத சத்துருகன அனுமான் கோவில், பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
★இக்கோயிலில் ராமர், சீதா சன்னதிகளும், லட்சுமணன், பரதன், சத்துருக்கன், அனுமன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 1927-ஆம் ஆண்டின் அறநிலையப் பாதுகாப்புச் சட்டப்படி அரசு நிர்வாக அலுவலரால் நிர்வகிக்கப்படுகிறது.
★இக்கோயிலில் ஒருகாலப் பூஜை நடக்கின்றது. ஐப்பசி மாதம் ராமநவமி முக்கிய திருவிழாவாக சிறப்பாக நடைபெறுகிறது.
35)அரியலூர்
கோதண்டராமர் கோவில்...
★பல்லவ மன்னன் ஒருவன் தன் பெற்ற வெற்றிகளால் இறுமாப்புடன் இருந்தான். முதியவர் ஒருவர் போரினால் பெற்ற வெற்றிக்குப் பின், எவ்வளவு பெரும் துயரங்கள் நிறைந்து இருக்கின்றன என்பதை அவனுக்கு எடுத்துச் சொன்னார். களத்தில் ஜெயித்த அவனுக்கு அதில் களங்கமும் சேர்ந்திருப்பதை உணர்த்தினார். உண்மை உணர்ந்த மன்னன், தன் பாவங்கள் தீர வழிகாட்ட வேண்டினான். கோதிலா குணத்துடன் வாழ்ந்து காட்டிய ராமபிரானை வணங்கச் சொன்னார் முதியவர். அப்படியே செய்தான் அந்த மன்னன். அதற்காக அவன் கட்டியதே இந்த திருக்கோயில் என்கிறார்கள்.
★தலம் எதுவானாலும் ராமபிரான் தன்னிகரற்ற தெய்வமாகவே திகழ்வார் என்பதே உண்மை என்றாலும் காலத்தாலும் புராணக் காரணத்தாலும் ஒவ்வொரு தலமும் தனிச்சிறப்பு பெறும். அந்த வகையில் இந்தத் திருத்தலத்தின் சிறப்பு என்னவென்றால் அரி இல் ஊர். அதாவது அரியாகிய மகாவிஷ்ணுவின் இருப்பிடம் என்பது தான் இந்த ஊரின் பெயருக்குக் காரணம் என்கிறார் தமிழ்த்தாத்தா உவே சாமிநாதய்யர். அவருக்கும் இந்த ஊருக்கும் என்ன சம்பந்தம்? அவர் சிறு வயதில் வாழ்ந்ததும் தமிழ் கற்றதும் அதில் ஆர்வம் பெற்றதும் இந்த ஊரில் தானாம். தமிழ்த்தாத்தா வருகைக்கு முன்பே, தமிழ் விளையாடிய கோயில் இது என்று சொல்லலாம்.
★அதற்கு காரணம், பல்லவ மன்னர்களால் கி.பி ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு சோழர் காலத்தில் மீண்டும் புதுப்பிக்கப்பட்ட ஆலயம் இது. ஆறாம் நூற்றாண்டில் கோயில் கட்டப்பட்டதாக வரலாறு சொன்னாலும் அதற்கு முன்பே திருமால் இங்கே எழுந்தருளி இருக்க வேண்டும் என்கிறார்கள். அதற்குச் சான்றாக பாற்கடல் வாசனான இறைவன் இங்கே வந்த காலத்தில் இங்கும் கடல் இருந்ததாக சொல்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
★கடல் உள்வாங்கியதால் கடலுக்குள் இருந்து தோன்றி வெளிவந்த பூமியே இந்த அரியலூர். தொல்பொருள் ஆராய்சியாளர்கள் கடலின் அடியில் உள்ள உயிர்களின் படிமங்களை இந்த ஊரில் பல இடங்களில் அகழ்ந்து எடுத்து இருக்கிறார்கள். இன்றும் கிடைக்கின்றனவாம். கடல் கொண்ட ஊர் பூம்புகார். கடல்தந்த ஊர் அரியலூர். கடல் என்றாலே அது பகவான் திருமாலின் வீடுதானே..! என்று இவ்வூரைப் பற்றிப் போற்றியிருக்கிறார் திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள்.
★முகப்பு கடந்ததும் பலிபீடம், கொடிமரம் தரிசித்ததும் ராம நாமத்தின் பெருமை போல கம்பீரமாக நிற்கும் ஐந்து நிலை கோபுரத்தின் வழியே சென்று கருடனை வணங்கி முன் மண்டபத்தின் உள்ளே நுழைந்தால் அந்த மண்டபத் தூண்களில் தசாவதாரக் சிற்பங்கள். கோதண்டராமர் கோயில் என்று சொல்லப் பட்டாலும் கருவறையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடாஜலபதி உள்ளார் மூலவரையும் உற்சவரையும் தரிசிக்கும்போது மனம் நிறைகிறது. அலமேலு மங்கைத் தாயார் தனியாக ஒரு சன்னதியில் அருள் பாலிக்கிறாள்.
★கோயிலின் பெயருக்குக் காரணமான கோதண்டராமர், இனியவளும் இளையவனும் உடனிருக்க அனுமன் திருப்பாதம் பணிய எழிலாகத் தோற்றமளிக்கிறார், மலர் மகளுக்கு மட்டும்தான் ராமாவதாரத்தில் இடம் உண்டு என்றாலும் இங்கே பூமகளுக்கும் ஒரு சிறப்பு உண்டு. இங்கே உள்ள ராம விக்ரகம் பூமித்தாயால் சுமந்து தரப்பட்டது என்பது தான் அது. ஆமாம் பூமியில் இருந்து புதையலாகக் கிடைத்தவை இங்கிருக்கும் சீதா, ராம, லட்சுமணர் மூர்த்தங்கள்.
★இங்கே தன் பத்து அவதாரங்களையும் ஒருசேர மண்டபத் தூண்களில் தசாவதாரச் சிற்பங்கள் அமைந்துள்ளது. . சிற்பங்கள் என்று நினைக்கவே இயலாதபடி ஒவ்வொன்றும் நிஜமாகவே எதிரில் இருப்பது போல் தோன்றுகின்றன. அதிலும் தூணில் இருந்தே தோன்றிய நரசிம்மரின் வடிவம். ஆஹா! பயத்தோடு பக்தியையும் ஒருசேர நமக்கு
ஏற்படுத்தும். அம்பரீஷி எனும் பெயருடைய ஒரு மன்னன் பெருமாளின் தசாவதாரம் அனைத்தையும் ஒருசேர தரிசிக்க ஆசைப்பட்டான். அவனுக்கு எம்பெருமான் காட்சியருளிய தலம் இது. இன்றும் பறவை வடிவில் இவ்வாலய கோபுரத்தில் அமர்ந்து தேவாதி தேவனை தரிசித்து மகிழ்கிறானாம் அந்த அரசன். அதனை விளக்கும் விதமாக மண்டபத்தின் எதிர்ப்புறம் கோபுரத்தின் உள்வாயிலின் மேல் பறவை ஒன்றின் சிலையை வடித்து வைத்து இருக்கிறார்கள்.
★பல்லவர் கால பாணியில் அமைந்த சிங்கமுக தூண்கள் இங்கே இருப்பது கோயிலின் காலத்தினை உணர்த்துகிறது தேர்போன்ற அமைப்பில் இரு குதிரைகள் இழுப்பதுபோன்ற கருவறை மண்டப அமைப்பு முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தின் திருக்கோயில் திருத்தி அமைத்து திருப்பணி செய்ய பட்டிருப்பதை சொல்லாமல் சொல்கிறது. இக்கோயில் பிற்காலத்தில் சல சிறந்த ஜமீன்தாரர்களாலும் நன்கு பராமரிக்கப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனி, பிரம்மோற்சவம் ஆகிய திருவிழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன
★ஆண்டாள், ஆழ்வாராதிகள், தும்பிக்கை ஆழ்வார்,ருக்மணி சத்யபாமா சமேதராக தனிச் சன்னதியில் அருளும் ஶ்ரீ
கிருஷ்ணர், அனுமன் சன்னதிகளும் இங்கே அமைந்துள்ளது. திருமணத் தடை நீங்க இங்கு பக்தர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்
தங்கள் பிரார்த்தனைகள் எல்லாம் நிறைவேறியதும் திருமஞ்சனம் செய்தும், துளசி மாலை சார்த்தியும் தங்கள் நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்துகிறார்கள்.
★காலை 6 மணி 11 முதல் மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
போன்: +91 9943530122,
9047912201.
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.
நாளை.........................
ஶ்ரீராம காவியம்
~~~~
ராமர் கோவில்கள் -15
36) அயோத்யாபட்டிணம்
கோதண்டராமர் கோவில்...
★தமிழ்நாடு சேலம நகரில் அயோத்யாபட்டிணம என்னும் இடத்தில் உள்ள ஶ்ரீராமர் கோவிலைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.
★புராதன சிறப்போடு, ஆர்ப்பாட்டம் சிறிதுமில்லாத அமைதியான அதேசமயம் கம்பீரமான தோரணையில் அழகாக. வீற்றிருக்கிறது
சேலம் அயோத்தியாபட்டணம் கோதண்டபாணி ராமர் திருக் கோயில். இங்கு ராமர் காலடி பட்டதால் அயோத்தியா பட்டணம் என்ற பெயரை இவ்விடம் பெற்றது.இங்குள்ள ஒவ்வொரு கல்லும் கவி பாடுகின்றன. கலைநுட்ப வேலைப்பாடுகள் மிக்க கல் தூண்களை தட்டினால் போதும் பல்வேறு இசை ஒலிகள் எழுந்து மனதை மயக்குகின்றன.
★தாரமங்கலம் கைலாசநாதர் பெருமாள் கோயில் மற்றும் திருச்செங்கோடு முருகன் கோயில், மதுரை மன்னன் திருமலை நாயக்கர் மஹால் ஆகியவற்றுடன் இந்த கோயிலும் ஒரே காலத்தில் திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது என்று வரலாறு சொல்கிறது. இதற்கு இங்குள்ள பிரமாண்டமான சிற்பங்களே சாட்சி. அசுரனை வதை செய்யும் தேவர் குதிரை, யானை, யாழி, சிங்கம் போன்றவற்றின் மீது அமைந்திருப்பது போன்ற ஒரே கல்லில் செய்யப்பட்ட பல்வேறு கற்சிற்பங்கள் மனதை கொள்ளை கொள்கின்றன.
★சிற்பங்களில் குறிப்பாக ராமர் பட்டாபிஷேக காட்சி, பரதன், சத்ருக்னன் மற்றும் லட்சுமணன் கற்சிற்பங்களை கண் குளிர காண கொடுத்து வைத்திருக்க வேண்டும்.ஒரு தூணில் திருமலை நாயக்கர் தன் தேவியுடன் காட்சி தருகிறார். சிற்ப கலைக்கு மட்டுமல்ல. ஓவியக் கலைக்கும் பெயர் பெற்றது இக்கோயில். இவ்வளவு ஆண்டுகளாகியும் காலத்தால் அழியாத அன்றைய அற்புத ஓவியங்கள் கோயிலின் "சிலீங்'கில் பார்ப்போரை சிலிர்ப்படைய வைக்கின்றன.
★இங்கு இருக்கும் ராமபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சித்திரை மாதம் பவுர்ணமி தினத்தில் கோயில் கதவு ஓட்டை வழியாக வரும் சூரிய ஒளி பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் தற்போது கோயிலை சுற்றி நிறையக் கட்டிடங்கள் எழுப்பப்பட்டு விட்டதால் தடுக்கப்பட்டு விட்டது. இவ்வளவு புராதன சிறப்பு மிக்க கோயிலுக்கு மக்கள் அனைவரும் சென்று வழி பட்டால் கோடி புண்ணியம் கிட்டுவதோடு, உலக புகழ் வாய்ந்த அதிசயங்கள் மிக்க கற்சிற்பங்களை காணும் களிப்பையும் பெறலாம்.
★ஐந்து நிலை ராஜகோபுரம் உயர்ந்த விளக்குத் தூணும் கொண்ட கோயில் இது. விளக்குக் தூணின் அடியில் கருடாழ்வார். சங்கு, சக்கரம் ஆகிய உருவங்கள் கொண்டு காணப்படுகின்றன. கிழக்கு திசை நோக்கிய கோயில், மூலவர் ராமர் பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தருகிறார். கருவறை மூன்று நிலை விமானத்தோடு எழிலுடன் விளங்குகின்றது. வழக்கமாக வலதுபுறமாக காணப்படும் தாயார் இங்கு இடதுபுறமாக எழுந்தருளியுள்ளார். கருடாழ்வார் ராமரை நோக்கி வணங்கியபடி நிற்கின்றார். பிராகாரத்தில் தெற்குநோக்கி ஆஞ்சநேயர் அபய காட்சி தருகின்றார். ஆழ்வார்கள் தனிச் சன்னிதியில் எழுந்து அருளியுள்ளனர்.
★மகாமண்டபம்28 கலைநயம் மிக்க தூண்களை கொண்டது ஒரு தூணில் தசாவதாரக் காட்சிகள் அனைத்தும் சித்திரிக்கப்பட்டுள்ளன. இசைக்கும் தூண் ஒன்றும் உள்ளது. மேற்கூரையில் அழகிய ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. கண்ணன் கோபியரோடு நீராடும் காட்சி சித்திரிக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் மீது தற்சமயம் உருவாக்கப்பட்ட, பாற்கடல் பள்ளிகொண்ட நாராயணன், பாமா-ருக்மணி சுதைச் சிற்பங்கள் அழகாகக் காணப்படுகின்றன.
★ராவணனை அழித்துவிட்டு அயோத்தி செல்லும் வழியில் ராமர் இங்கு தங்கி இளவல் விபீஷணனுக்கு பட்டாபிஷேக ராமனாகக் காட்சியளித்தார். ஆகவே இந்த ராமர் பட்டாபிஷேக ராமர் எனவும் அழைக்கப்படுகிறார். இதன் காரணமாகவே இந்தத் தலத்துக்கு அயோத்தியாப் பட்டினம் என்ற பெயரும் ஏற்பட்டது. திருமலைநாயக்க மாமன்னர் காலத்தில் கட்டப்பட்ட கோயில் இது. ராமன் இருக்குமிடம் அயோத்தி என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.
★ராவண வதம் முடிந்து ராமர் பட்டாபிஷேகம் செய்து கொண்ட புராதன சிறப்பு மிக்க கோயில் சேலம் அயோத்தியாபட்டணம் ராமர் கோயில். வட இந்தியா சென்று அயோத்தியில் உள்ள ராமரை வழிபட வேண்டும் என்று அவசியம் இல்லை. சேலம் அருகே உள்ள இந்த அயோத்தியாபட்டணம் ராமரை வழிபட்டால் போதும். சகல புண்ணியங்களும் கிட்டும்.சீதையை மீட்க வானரப் படை உதவியுடன் இலங்கை சென்று ராவணனை கொன்ற ராமர் இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு காலடி வைத்தார். அயோத்திக்கு திரும்ப வேண்டும் என்றால் சைல மலை குன்றுகள் வழியாக தான் திரும்ப வேண்டும். ராமர், சீதை, லட்சுமணன், அனுமார், சுக்ரீவர், விபீஷணர் அனைவரும் சைல மலை குன்று பகுதியை வந்தடைந்த போது லேசாக இருட்ட தொடங்கியது.களைப்பாறி விட்டு செல்லலாம் என்று நனைத்த போது, சிறிய அளவிலான கோயில் ஒன்று தென்பட்டது.இங்கு ராமர், சீதை, லட்சுமணன் உட்பட அனைவரும் அன்றிரவு தங்கினர்.
★விடிந்து எழுந்த போது பட்டாபிஷேகத்திற்கான நாள், நட்சத்திரம் நெருங்கி விட்டது.நேரம் தவறினால் ராஜ குற்றமாகிவிடும் என்று எண்ணிய ராமர் இந்த கோயிலிலேயே தனக்கு பட்டாபிஷேகம் செய்து கொண்டதாகவும், பின்பு அயோத்தி சென்று முறைப்படி பட்டாபிஷேகம் முடித்தார் என்றும் சொல்வதுண்டு.
★ மூலஸ்தானத்திற்கு பாதுகாவலர்களாக துவார பாலகர்கள் வீற்றுள்ளனர். அவர்களை வணங்கி விட்டு உள்ளே சென்றதும் இடம் இருந்து வலமாக பார்த்தால் ஆஞ்சநேயர், சத்ருக்கனன், பரதர், ராமர், சீதை மற்றும் லட்சுமணன், சுக்ரீவர், விபீஷ்ணர் வீற்றுள்ளனர். அருகில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.
★இக்கோவில் காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு கோதண்டபாணி ராமர் திருக்கோயில், அயோத்தியாப்பட்டணம்-636 103 சேலம் மாவட்டம்.
நாளை.......................
-- இன்று முதல் இனிதே ஆரம்பம் --
ஸ்ரீ ராமரின் சூரிய வம்சம்!
(மூலம் - மஹாகவி காளிதாசரின் "ரகு வம்சம்")
(எண் : 1 )
"லோகாபிராமம் ரணரங்தீரம் ராஜீவனேத்ரம் ரகுவம்ஸனாதம்
காருண்யரூபம் கருணாகரம் தம் ஸ்ரீராமசந்த்ரம் ஸரணம் ப்ரபத்யே
-- ஸ்ரீ ராமரக்ஷா ஸ்தோத்ரம் --
"உலகத்திலுள்ளவர் அனைவருக்கும் ப்ரியமான ஸ்ரீராமா, போர்களத்தில் அசகாய தீரனே, தாமரை கண்ணனே, ரகுவம்சத்தின் தலைவனே, கருணையின் உருவமே, கருணாகரனே, ஸ்ரீ ராமசந்திரனின் பாதங்களைச் சரணடைகிறேன்."
‘ராமன்’ என்றாலே 'ஆனந்தமாக இருப்பவன்' என்று ஒரு அர்த்தம்; மற்றவர்களுக்கும் 'ஆனந்தத்தைத் தருகிறவன்' என்றும் இன்னொரு அர்த்தம்.
எத்தனை விதமான துக்கங்கள் வந்தாலும் அதனால் மனம் சலனம் அடையாமல், ஆனந்தமாக தர்மத்தையே அனுசரித்துக்கொண்டு ஒருவன் இருந்தான் என்றால், அது ஸ்ரீராமன்தான். வெளிப்பார்வைக்கு அவன் துக்கப்பட்டதாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள்ளேயே ஆனந்தமாகவே இருந்தவன்.
மனதை அலைய விடாமல் கட்டிப் போடுவதற்குச் சாமானிய மனிதர்களுக்கான ஒரேயொரு வழி வேத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற தர்மங்களை ஒழுக்கத்தோடு, கட்டுப்பாட்டோடு பின்பற்றி வாழ்வதுதான்.
வேதங்களில் வரையறுக்கப்பட்டுள்ள தர்மங்களை அனுட்டானம் செய்து கொண்டு, சுக துக்கங்களில் சலனமடையாமல், தானும் ஆனந்தமாக இருந்து கொண்டு, மற்றவர்களுக்கும் ஆனந்தத்தை ஊட்டுவதுதான் யோகம்.
அப்படியிருப்பவனே ஒரு தர்மயோகி!.
அதனால்தான், இப்பூலோக பிரபஞ்சத்தில் பிறப்பெடுக்கும் அனைத்து ஜீவர்களுக்கெல்லாம் ஒரு பெரிய உதாரணமாக, வேத தர்மங்களை எல்லாம் அதன் வழியிலேயே அனுசரித்து ஆனந்தமாக வாழ்ந்து காட்டுவதற்காகவே ஸ்ரீமந் நாராயணனே ராமனாக தன்னை பங்குனி மாதம் புனர் பூச நட்சத்திரத்தில், கிருஷ்ண பட்ச நவமி திதியில் அவதரித்துக் கொண்டார்.
ராம வாக்கியத்தில் எங்கே கண்டாலும், "இது என் அபிப்பிராயம்" என்று எங்கும் சொல்லவே மாட்டார். "ரிஷிகள் இப்படிச் சொல்கிறார்கள்; சாஸ்திரம் இப்படிச் சொல்கிறது" என்றே அடக்கமாகச் சொல்வார்.
ஆக, சகல வேதங்களின் பயனாக முடிவில் ஒன்றே அறியப்படவேண்டிய "பரம புருஷன்" எவனோ, அவனே அந்த வேத தர்மத்துக்கு முழுக்க, முழுக்க அக வாழ்விலே தன்னை கட்டுப்படுத்திக் கொண்டும், அப்படிக் கட்டுப்பட்டு இருப்பதிலேயே ஆனந்தம் இருக்கிறது என்று புற வாழ்விலே காட்டிக்கொண்டும், ராமனாகவே தன்னை வேஷம் கட்டிக்கொண்டு வாழ்ந்தவன்தான் ஸ்ரீ பரவாசுதேவ நாராயணன்.
இங்கே ஸ்ரீ பரவாசுதேவன் நாராயணன் எந்த வம்சத்திலிருந்து ராமன் அவதாரமெடுக்க தீர்மானிக்கிறார்?.
இந்து தொன்மவியலின் அடிப்படையில் சூரியனுக்கும், சந்தியா தேவிக்கும் வைவஸ்தமனு என்ற மகன் பிறந்தார். இவர் தான் "மனுஸ்மிதிரி"-யை இயற்றியவர்.
வெப்பமும் ஒளியும் தருவதன் மூலம் கிரகங்களைக் கட்டுப்படுத்தி, அனைத்து கிரகங்களுக்கும் மன்னனாக விளங்கும் சூரியனை, சூரிய தேவன் (தற்போதைய சூரிய தேவனின் பெயர் விவஸ்வான்) ஆட்சி செய்து வருகிறான். விவஸ்வான் என்கிற சூரியன் முதல் மனிதனாக அறியப்பெறுகிறார். இவருடைய பேரனான இச்வாகுவின் வழி வந்த அரச வம்சம் சூரிய குலமாக அறியப் பெறுகிறது. இந்த வம்சத்தில் பிறந்தவராக பகீரதனும், ராமரும் அறியப்படுகிறார்கள்.
சூரியனின் மறுபெயரான ரகு என்பதிலிருந்து "ரகு வம்சம்" என்று இந்த வம்சம் அழைக்கப்பட்டிருக்கலாம் எனவும், தசரதனின் தாத்தாவான ரகு என்பவரின் வம்சம் என அடையாளம் செய்ய "ரகு வம்சம்" என்று அழைக்கப்படுக்கலாமெனவும் நம்பப்படுகிறது.
இந்து தொன்மவியலில் அடையாளம் காணப்பெற்ற ரகு வம்சத்தினை சேர்ந்த ஸ்ரீ ராமசந்திர மூர்த்தியின் மூதாதையர்கள் பின்வருமாறு :
பிரம்மாவின் மகன் -- மரீசீ
மரீசீயின் மகன் -- கஷ்யபர்
கஷ்யபரின் மகன் -- விவஸ்வான்
விவஸ்வானின் மகன் -- மனு
மனுவின் மகன் -- இஷ்வாகு
இஷ்வாகுவின் மகன் -- விகுக்ஷி
விகுக்ஷியின் மகன் -- புரண்ஜயா
புரண்ஜயாவின் மகன் -- அணரன்யா
அணரன்யாவின் மகன் -- ப்ருது
ப்ருதுவின் மகன் -- விஷ்வாகஷா
விஷ்வாகஷாவின் மகன் -- ஆர்தரா
ஆர்தராவின் மகன் -- யுவான்ஷ்வா-1
யுவான்ஷ்வாவின் மகன் -- ஷ்ரவஷ்ட்
ஷ்ரவஷ்டின் மகன் -- வ்ரதஷ்வா
வ்ரதஷ்வாவின் மகன் -- குவலஷ்வா
குவலஷ்வாவின் மகன் -- த்ருதஷ்வா
த்ருதஷ்வாவின் மகன் -- ப்ரோமத்
ப்ரோமத்தின் மகன் -- ஹர்யஷ்வா
ஹர்யஷ்வாவின் மகன் -- நிகும்ப்
நிகும்பின் மகன் -- சன்டஷ்வா
சன்டஷ்வாவின் மகன் -- க்ருஷஸ்வா
க்ருஷஸ்வாவின் மகன் -- ப்ரஸன்ஜீத்
ப்ரஸன்ஜீத்தின் மகன் -- யுவான்ஷ்வா-2
யுவான்ஷ்வாவின் மகன் -- மன்தாத்தா
மன்தாத்தாவின் மகன் -- அம்பரீஷா
அம்பரீஷாவின் மகன் -- ஹரிதா
ஹரிதாவின் மகன் -- த்ரதஸ்யு
த்ரதஸ்யுவின் மகன் -- ஷம்பூத்
ஷம்பூத்தின் மகன் -- அனரண்யா-2
அனரண்யாவின் மகன் -- த்ரஷஸ்தஸ்வா
த்ரஷஸ்தஸ்வாவின் மகன் -- ஹர்யஷ்வா 2
ஹர்யஷ்வாவின் மகன் -- வஸுமான்
வஸுமாவின் மகன் -- த்ரிதன்வா
த்ரிதன்வாவின் மகன் -- த்ரிஅருணா
த்ரிஅருணாவின் மகன் -- திரிசங்கு
திரிசங்கு வின் மகன் -- ஹரிசந்திரன்
ஹரிசந்திரநநின் மகன் -- ரோஹிதாஷ்வா
ரோஹிதாஷ்வாவின் மகன் -- ஹரித்
ஹரித்தின் மகன் -- சன்சு
சன்சுவின் மகன் -- விஜய்
விஜயின் மகன் -- ருருக்
ருருக்கின் மகன் -- வ்ருகா
வ்ருகாவின் மகன் -- பாஹு
பாஹுவின் மகன் -- சாஹாரா
சாஹாராவின் மகன் -- அசமஞ்சன்
அசமஞ்சனின் மகன் -- அன்ஷுமன்
அன்ஷுமனின் மகன் -- திலீபன்
திலீபனின் மகன் -- பகீரதன்
பகீரதனின் மகன் -- ஷ்ருத்
ஷ்ருத்தின் மகன் -- நபக்
நபக்கின் மகன் -- அம்பரீஷ்
அம்பரீஷனின் மகன் -- சிந்து த்வீப்
சிந்து த்வீப்பின் மகன் -- ப்ரதயு
ப்ரதயுவின் மகன் -- ஸ்ருது பர்ணா
ஸ்ருது பர்ணாவின் மகன் -- சர்வகாமா
சர்வகாமாவின் மகன் -- ஸுதஸ்
ஸூதஸின் மகன் -- மித்ரஷா
மித்ராஷாவின் மகன் -- சர்வகாமா 2
சர்வகாமாவின் மகன் -- அனன்ரண்யா 3
அனன்ரண்யாவின் மகன் -- நிக்னா
நிக்னாவின் மகன் -- ரகு
ரகுவின் மகன் -- துலிது:
துலிதுவின் மகன் -- கட்வாங் திலீபன்
கட்வாங் திலீபனின் மகன் -- ரகு 2
ரகுவின் மகன் -- அஜன்
அஜனின் மகன் -- தசரதன்
தசரதனின் மகன் -- ஸ்ரீ ரகு ராமர்
ஸ்ரீ ரகு ராமரின் மகன்கள் -- லவர், குசர்
இங்கே நான் நிறுத்திக் கொள்கிறேன். இனி,
ஒரு தலைசிறந்த "காவியத்தின்" துணையோடு, பின்வரும் வினாக்களில்
புதைந்திருக்கும் விடைகளையும் தெரிந்து கொள்ள விழைவதே இத்தொடரின் நோக்கம்.
"ரகு வம்சம்" என்பது என்ன?;
ராமாயணத்தில் கூறப்படும் ராமபிரானின் வம்சாவளியினரே ரகு வம்சத்தின் கதாநாயகர்களா?;
சூரியனிடம் இருந்தே இந்த வம்சம் தோன்றியதா?;
ராமபிரானுடைய மூதாதையர்கள் யார், யார்?;
அவர்கள் எல்லாம் எப்படி ராமபிரானுடைய வம்சத்தை உருவாக்கி வளர்த்தார்கள்?;
அவர்கள் சிறப்புக்கள் என்பதெல்லாம் என்னென்ன?.
ராமருடைய மறைவுக்குப் பின்னர் அவர் வம்சம் தழைத்ததா?
ஒவ்வொரு மனித அவதாரத்தையும் தெய்வங்கள் எடுக்க நேரிடும் பொழுது என்னென்ன
"ரகு வம்சம்" என்பது என்ன?;
ராமாயணத்தில் கூறப்படும் ராமபிரானின் வம்சாவளியினரே ரகு வம்சத்தின் கதாநாயகர்களா?;
சூரியனிடம் இருந்தே இந்த வம்சம் தோன்றியதா?;
ராமபிரானுடைய மூதாதையர்கள் யார், யார்?;
அவர்கள் எல்லாம் எப்படி ராமபிரானுடைய வம்சத்தை உருவாக்கி வளர்த்தார்கள்?;
அவர்கள் சிறப்புக்கள் என்பதெல்லாம் என்னென்ன?.
ராமருடைய மறைவுக்குப் பின்னர் அவர் வம்சம் தழைத்ததா?
ஒவ்வொரு மனித அவதாரத்தையும் தெய்வங்கள் எடுக்க நேரிடும் பொழுது என்னென்ன
செய்து ஒரு குறிப்பிட்ட வம்சத்தில் அவர்கள் அவதரித்தார்கள் என்பதின் அர்த்தம் என்னென்ன?
இன்னும் பல தொடர்புடைய வினாக்களுடனும்.......!!!!
அனைத்தையும் அறிந்து ஆன்மீக தெளிவடைய உட்புகுவோம் ............
குறிப்பு :
இந்நெடிய தொடர் இனி எதிர்வரும் வாரங்களில் ஒவ்வொரு சனிக்கிழமையன்று பதிவேற்றம் செய்யப்படும்.
உயிர்க்கொல்லியிலிருந்து விடுபட உலக நலன் வேண்டி இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ராமபிரானின் குலப்பெருமையால் நன்மைகளே இனி உலகம் முழுவதும் நிறையட்டும்.
அனைவரும் வாழ்க நலமுடன்! வளர்க வளமுடன்!
Radhe Krishna 14-01-2021இன்னும் பல தொடர்புடைய வினாக்களுடனும்.......!!!!
அனைத்தையும் அறிந்து ஆன்மீக தெளிவடைய உட்புகுவோம் ............
குறிப்பு :
இந்நெடிய தொடர் இனி எதிர்வரும் வாரங்களில் ஒவ்வொரு சனிக்கிழமையன்று பதிவேற்றம் செய்யப்படும்.
உயிர்க்கொல்லியிலிருந்து விடுபட உலக நலன் வேண்டி இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ராமபிரானின் குலப்பெருமையால் நன்மைகளே இனி உலகம் முழுவதும் நிறையட்டும்.
அனைவரும் வாழ்க நலமுடன்! வளர்க வளமுடன்!
[3:52 PM, 1/14/2021] Mohan SriRaghavendrar Kulithalai: வணக்கம் பல
இன்று முதல் தினமும் ராமாயணத்தைப் பற்றிய (புதிர்) கேள்விகள் சில பதிகிறேன். அனைவரும் படியுங்கள். பதிலைக் கண்டு
பிடியுங்கள். வீட்டில் உள்ள மற்றவர்களையும் கேளுங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில் தெரிந்தவர் ராமாயணப் புலி. விடை
தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் பின்னர் பதிய இருக்கும் " ஶ்ரீராம
காவியம் " படியுங்கள். அது நிச்சயம் வித்தியாசமானதாக இருக்கும்.
இந்த பகுதி முடிந்த பிறகு
நமது நாட்டில் உள்ள சில முக்கியமான ஶ்ரீராமரின் கோவில்கள் மற்றும் நமது தமிழகத்தில் உங்களுக்குத் தெரியாத
கேள்விப்பட்டிராத ஊர்களில் உள்ள ஶ்ரீராமர் ஆலயங்களைப் பற்றியும் பதிய உள்ளேன். முடிந்தவரை அந்தந்த ஆலயங்களில்
உள்ள ஶ்ரீராமரின் திருமேனி படங்களையும் பதிகிறேன்.
நீங்கள் அறியாத ஶ்ரீராமர் ஆலயங்கள் ஏராளம்!.ஶ்ரீராம காவியம் படிப்பதற்கு முன் ஶ்ரீராம தரிசனம் என்பது சிறப்பாக இருக்கு அல்லவா?
ஶ்ரீராம காவியம்
~~~~
புதிர்-01
1) ராமாயணத்தை இயற்றியவர் யார்?
2) ராமாயணத்தில் மொத்தம் எத்தனை ஸ்லோகங்கள்?
3) புத்திரர்களைப் பெற தசரதன் செய்த யாகம் எது?
4) ராமாயண காலத்தில் சரயு நதி – அதன் இன்றைய பெயர் என்ன?
5) கைகேயியுடன் அவர் அரண்மனையிலிருந்து கூடவே வந்த பணிப்பெண்ணின் பெயர் என்ன?
6)மஹரிஷி வால்மீகியின் பூர்வ பெயர் என்ன?
7) ராமாயணம் எந்த யுகத்தில் நடந்தது
8) வாலி, சுக்ரீவரின் தந்தை பெயர் என்ன?
9) வசிஷ்டர் ஆஸ்ரமத்தில் இருந்த பசுவின் பெயர் என்ன?
10) ஜனக மன்னரின் இயற் பெயர் என்ன?
11) அசோகவனத்தின் இன்னொரு பெயர் என்ன?
12) லக்ஷ்மணனைக் காப்பாற்ற அனுமன் கொண்டு வந்த மருந்தின் பெயர் என்ன?
என்ன? சுலபம்தானே? இதன் விடைகள் நாளைய புதிர் பகுதியில் வரும்.
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
நாளை..................
[4:37 PM, 1/14/2021] Narasimhan R: 1. Valmiki.
2. 24000
3. Puthrakameshti yaagam
4. Saryu madhi
5. Khooni mandarai
6. Ramakkardha
7. Threthaa yugam
8. Riksharaja
9. Kamdhenu
10. Seeradgwaja
11. Sita eliya
12. Sanjeevini
ஶ்ரீராம காவியம்
~~~~
புதிர் -02
நேற்றைய புதிர்-1 க்கான
விடைகள்:-
1) வால்மீகி மஹரிஷி
2) 24000
3) புத்ரகாமேஷ்டி
4) ககரா (Ghagara)
5) மந்தரை
6) ரத்னாகரர்
7) த்ரேதா யுகம்
8) ரிக்ஷராஜன்
9) சுரபி
10) ஷீரத்வஜன்
11) ப்ரமத வனம்
12) சஞ்சீவினி மூலிகை
சரியா?
இனி இன்றைய
கேள்விகள்...
13) ராமாயணத்தின் இன்னொரு பெயர் என்ன?
14) இன்று வியாச நதி என்று அழைக்கப்படும் நதி ராமாயண் காலத்தில் என்ன பெயரில் அழைக்கப்பட்டது?
15) லங்கையில் ராவணனின் குல தெய்வம் எங்கு வைக்கப்பட்டிருந்தது?
16) ராமாயண காலத்தில் லவபுரம் என்று அழைக்கப்பட்ட நகரத்தின் இன்றைய பெயர் என்ன?
17) தசரத மன்னரை அழைக்க அயோத்திக்கு ஜனகர் அனுப்பிய மந்திரியின் பெயர் என்ன?
18) ராமாயணம் மொத்தம் எத்தனை காண்டங்கள்?
19) ராமாயணத்தில் பெரிய காண்டம் எது?
20) ராமாயணத்தில் சிறிய காண்டம் எது?
21) அமராவதி நகரின் அரசன் யார்?
22) இந்திரனின் யானையின் பெயர் என்ன?
23) அஸ்வமேத யாகத்தில் குதிரையின் நெற்றியில் கட்டப்பட்டிருக்கும் பத்ரத்தின் பெயர் என்ன?
24) கலஹப்ரியர் என்று எந்த மஹரிஷிக்குப் பெயர்?
என்ன? சுலபம்தானே? இதன் விடைகள் நாளைய புதிர் பகுதியில் வரும்.
வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869
நாளை..................