ராதே கிருஷ்ணா 18-04-2020
ராதே கிருஷ்ணா 19-04-2015
ஸ்ரீ கிருஷ்ணா புத்தகம்
1. ஒன்று - வ்ருக்ஷா - பிரபஞ்சத்தோற்றம்
2. இரண்டு - இரு பறவைகள் - இன்பம் துன்பம் - ஜீவாத்மா / பரமாத்மா
3. மூன்று - மூன்று குணங்கள் - சாத்விக / ராஜச (தீவிர) / தபோ (அறியாமை)
4. நான்கு - சுவைகள் - தர்ம உணர்வு / பொருளாதார முன்னேற்றம் / புலன் திருப்தி / முக்தி
5. ஐந்து - ஐம்புலன்கள் கண், காது, வாய், மூக்கு, நாக்கு
6.உந்துதல் - புலம்பல், மாயை, நோய், மரணம், பசி, தாகம்
7. ஏழு அடுக்குகள் - தோல், தசை, சதை, ஊண் , எலும்பு, கொழுப்பு, விந்து
8. எட்டு கிளைகள் - மண் , நீர், நெருப்பு, கட்டரு, ஆகாயம், மனம், புத்தி, அஹங்காரம்
9. உடல் 9 வழிகள் - இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு மூக்குத்த்வாரங்கள் , வாய், ஜன்மேந்த்ரியம், மூலாத்வாரம்
10. காற்று - பான , அபான, உதான, வ்யான , சமான , பரமாத்மா, ஜீவாத்மா
ஸ்ரீ கிருஷ்ணர் தேவகி வசுதேவருக்கு அளித்த வரத்தின்படி மூன்று தடவை மகன்களாகப் பிறக்கிறேன் என்று வாக்களித்தார்.
அதன்படி முதலில் ப்ரச்னி - பிரஜாபதிக்கு (ஸ்வயம்பு மனு கர்வம்) 12000 வருடங்கள் ஆண்டனர். சிசு பிரச்நிகர்பா என்ற பெயருடன் பிறந்தான்.
அடுத்த கல்பத்தில் அத்தி - காச்யபருக்கு உபேந்திரன் (வாமன தேவர்) பெயருடன் பிறந்தான்.
மூன்றாவதாக தேவகி வசுதேவருக்கு ஸ்ரீ க்ரிஷ்ணராகப் பிறந்தார்.
ஏழு தாய்கள் - உண்மையான தாய் , குருவின் மனைவி, அரசனின் மனைவி, பிராமணனின் மனைவி, பசு, செவிலித்தாய் மற்றும் பூமித்தாய் ஆகும்.
இரண்டு அர்ஜுன மரங்கள் - குபேரன் மகன்களான நளகூவரன் , மணிக்ரீவன் இருவரும் குடிபோதையில் நினைவிழந்தவர்களாய் இருந்ததக்கண்ட நாரதமுனி அவர்களால் சபிக்கப்பட்டு இரு மரங்களாக இருந்தனர். கிருஷ்ணர் ஸ்பரிசம் பட்டு சபவிமொசனம் பெறுவார்கள் என்றும் கூறினார்.
காலயவனன் - முசுகுந்தன் பார்வையால் எரிக்கப்பட்டவன்.
மாந்தாதா மகன் முசுகுந்தன். இஷ்வாகு வம்சத்தில் பிறந்தவன். என்றும் தூங்கிக்கொண்டிருக்க வேண்டும் என்று கார்த்திகேயனிடம் வரம் பெற்றான். தன்னை எழுப்புபவன் தன கண் பார்வையால் எரிந்து சாம்பலாக்கப்படுவான் எனும் சக்தியை எனக்கு அளிப்பீராக என்று வரம் பெற்றான்.
அதேபோல் காலயவனன் தூங்கும் முசுகுந்தனை எழுப்ப அவர் பார்வை பட்டு எரிந்து சாம்பலானான்.
வைவஸ்வத மனுவின் 28 ஆம் யுகத்தில் கிருஷ்ணர் தோன்றுவார் என்று சுக முனிவர் கூறினார்.
பலராமர் ரைவத மன்னன் மகள் ரேவதியை மணந்தார்.
கிருஷ்ணர் விதர்ப்ப நாட்டின் மன்னன் பீஷ்மன் மகள் ருக்மிணியை மணந்தார்.
பீஷ்மனுக்கு 5 மகன்கள் மற்றும் ஒரு பெண் ருக்மிணி. 5 மகன்கள் ருக்மி, ருக்மாதீன, ருக்மபாஷு, ருக்மகேசன், ருக்மமாளி ஆவர்.
கிருஷ்ணர் தன் சாரதி தாருகனை அழைத்து பிடித்த நான்கு குதிரைகள் ( சைவ்யா (பச்சை), ஸுக்ரவா (பனிக்கட்டி நிறம் கொண்ட குதிரை), மேகபுஷ்பம் (மேக நிறம்) , பலாஹாவின் நிறம் (சாம்பல்) ஆகியவை கொண்ட ரதத்தில் விதர்ப்ப தேசம் புறப்பட்டான்.
விதர்ப்பா த்வாரகாவின் மேற்குப் பகுதி, வடக்குப் பகுதி சுமார் 1000 மைல்களுக்கு அப்பால், குண்டினா எனும் இடத்தை ஒரு இரவு நேரத்தில் அடைந்தார்கள்.
பகவான் கிருஷ்ணரின் அம்சம் மன்மதன் , முன்பு பரமசிவனால் எரிக்கப்பட்டவன்.
ருக்மிணியின் கர்பத்தில் கிருஷ்ணருக்கு மகனாகப் பிறந்தான்.பிரத்யும்னன் என்றும் அழைக்கப்பட்டான்.சம்பான் அசுரன் பிரத்யும்னனால் கொல்லப்படவேண்டும், இதை அறிந்த சம்பான் பிரத்யுமணன் என்கின்ற குழந்தையை பெண் உருவம் கொண்டு டலில் ஏற்ம்தான். பெரிய மீன் குழந்தையை விழுங்கியது. இந்த மீன் சாம்பானிடம் (சம்பாசுரன்) விற்கப்பட்டது. வேலைக்காரி மாயாவதி நாரதமுனியால் பிறப்பை அறிந்தாள்.
குழந்தை அழகிய இலைஞ்ஜனாக உருப்பெற் றது. கைகள் முழங்கால் வரை இருந்தது.
த்வாரகானாதன் ஆதிக்கத்தின் கீழ் ஸத்ராஜித் அரசன் சூரிய பக்தன். சூரிய தேவன் ச்யமந்தக மணியை வரப்ப்ரசாதமாக தந்தருளினான்.அந்த மணி காரணமாக ஸத்ராஜித்திற்கும் யது வம்சத்திற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுபிறகு அந்த மணியை கிருஷ்ணருக்கு தந்தது, தன மகளான சத்யபாமாவை மனம் செய்வித்தது. ஜாம்பவான் மகளான ஜாம்பவதியும் கிருஷ்ணருக்கு மனம் செய்விக்கப்பட்டாள் . ச்யமந்தக மணி தினமும் ஒரு பெரிய அளவிலான தங்கத்தை உற்பத்தி செய்தது. "பாரம்" - 16 பவுண்ட் தங்கம், ஒரு "மௌண்ட்" - 82 பவுன் எடை . அந்த மணி தினமும் 170 பவுண்ட் எடை தங்கத்தை உற்பத்தி செய்தது. கிருஷ்ணன் கூறியது. உக்ரசேனனுக்கு ஸத்ராஜித் மணியைத் தர மறுத்துவிட்டான்.ஸத்ராஜித் இளைய சகோதரன் பிரசேனன் தன கழுத்தில் அணிந்து குதிரை பவனி வந்தான். காட்டில் சிங்கம் அவனைத் தாக்கி , அவனையும் குதிரையையும் கொன்று மணியை தன குகைக்கு எடுத்துச் சென்றது. ஜாம்பவான் (ருக்க்ஷா) சிங்கத்தைக் கொன்று மணியை அபகரித்துச் சென்றான்.
கிருஷ்ணர் பிரசேணனைக்கொன்று ச்யமந்தக மணியை அபகரித்ததாக வதந்தி பரவியது. கிருஷ்ணர் அவர்கள் இறந்ததக்கண்டு தான் மட்டும் சுரங்கப்பாதையில் சென்றார். ஜாம்பவானின் சிறு குழந்தையிடம் மணி இருந்தது. செவிலி ஓலத்தைக் கேட்ட ஜாம்பவான் கிருஷ்ணருடன் போர் புரிந்தார். 28 நாட்கள் போர் செய்தனர். ஸத்ராஜித் - ஸததன்வன் வாதம் விவரிக்கப்பட்டது.
விந்தா, அனுவிந்தா இரு அரசர்கள் மகன்கள் "மித்ராவிந்தா" வை பலவந்தமாக கடத்திச் சென்றனர். கிருஷ்ணர் கோசல நாட்டு மன்னன் மகள் நக்னஜிதி (சத்யா) ஏழு எருதுகளுக்கும் கயிறு பூட்டி அவைகளை அடக்கவேண்டும். கிருஷ்ணர் அடக்கி மனம் புரிந்தார்.
கிருஷ்ணன் அத்தை ஷுருதகீர்த்தி (கேகய நாடு) மகள் பத்ரா கிருஷ்ணரிடம் ஒப்படைக்கப்பட்டாள் .
பௌமாசுரனைக் கிருஷ்ணர் கொன்றார். எழுவர் தாம்ரன், சிரவணன், விபாவசு, வாசு, நபச்வான், அருணன், பௌமாசுரன் ஆகியோர் கிருஷ்ணரின் சுதர்சன சக்ரத்தால் கொல்லப்பட்டனர். பலி மகன் பாணாசுரன் , அவனுக்கு உஷா மகள். உஷா - அநிருத்தன் சிவ பக்தன். சிவன் கிருஷ்ணருக்கும் சிவனுக்கும் யுத்தம் நடந்தது. சிவஜ்வரம் - நராயனஜ்வரம் .
கிணற்றில் பல்லி : ந்ருகராஜன் ஒரு அந்தணனுக்கு தானமாகக் கொடுத்த பசு மட்டற்ற பசுக்களுடன் சேர்ந்துவிட்டது. மற்றவர் தன் பசு காணவில்லை என்று அரசனிடம் கேட்டான். பிறகு அந்த பசுவை அந்த அந்தணரிடம் இருப்பதைக்கண்டு அரசனிடம் சென்று நியாயம் கூறுமாறு கேட்டான். தானம் பெற்றவரும் தானம் பெற்ற பசுவைத்தர முடியாது என்றார். அரசர் மற்றவரிடம் அதற்கு பதிலாக வேறு பசு தருவதாகக் கூறினார். ஆணால் அவரோ எனக்கு அந்தப் பசு தான் வேண்டும் என்றார். இந்த வழக்கு பலகாலம் சென்றது.அவன் தன காலம் முடிந்ததும் யம ராஜனிடம் சென்றபோது, யமராஜன் அவனிடம், முதலில் செய்த பாவத்திற்கு நரகம் செல்கிறாய அல்லது செய்த புன்யத்திற்கு சொர்க்கம் செல்கிறாய கேட்டார். அரசர் நரகம் அனுபவிப்பதாக சொன்னார். அதனால் பெரிய பல்லியாக கிணற்றில் கிடந்தார். கிருஷ்ணனால் சாபவிமோசனம் பெற்றார்.
1. பூதனா வதம்
2. த்ருனாவர்த்தன் முக்தி - (சூறாவளிக்காற்று )
பழக்காரிக்கு தானியத்திற்கு தங்கம், வைரம் கொடுத்தல்
3. நளகூவரன் , மணிக்ரீவன் சாபவிமோசனம் (உரலில் கட்டப்பட்டு இரு மரங்களின் நடுவே சென்று மரங்களை முறித்தல்
4. வத்ஸாஸுர (கன்று வடிவம்) / பகாசுர வதம் (வாத்து வடிவம்)
5. அகாசுர வதம் (பாம்பின் உருவம்)
6. சிறுவர்களையும் கன்றுகளையும் பிரம்மா திருடுதல்
7. தேனுகாசுர வதம் (கழுதை உருவம்)
8. காலியனைப் பணியவைத்தல் (கரு நாகம்)
9. காட்டுத்தீயை அணைத்தல்
10. பிரலம்பாசுர வதம் ( பலராமனை முதுகில் தூக்கிக்கொண்டு ஓடுதல்)
11. காட்டுத்தீயை விழுங்குதல் , அந்தணர்களின் மனைவியர் முக்தி
12. கோபியர்கள் வஸ்த்ரபரணம்
13. கோவர்த்தன கிரியைப் பூஜித்தல்
14. நாசகார மழை
15. வித்யாதரன் முக்தி (பெரிய பாம்பு) மற்றும் சங்காசுரன் வதம் (குபேரன் நண்பர்கள், பெண்களை கடத்திச் சென்றான்)
16. அக்ரூரர் தூது
17. கேசி (குதிரை வடிவம்) , வியோமாசுர வதம் (ஆகாயத்தில் பறக்கும் அசுரன்)
18. யாக மேடையில் வில்லை முறித்தல்
19. குவலயாபீட யானையைக் கொல்லல்
20. கம்சன் வாதம்
21. முசுகுந்தன் முக்தி
22. பௌமாசுர முக்தி
23. பௌண்ட்ருகன் , காசி ராஜனின் முக்தி
24. த்விவிதாவின் முக்தி
25. ஜராசந்தன் முக்தி
26. சிசுபாலன் முக்தி
27. சால்வன் முக்தி
28. தந்தவக்த்ர , விதூரத மற்றும் ரோமஹர்ஷன வதம்
29. பல்வலன் முக்தியும் , பலராமரின் யாத்திரையும்
பகவான் கிருஷ்ணர்
1. கிருஷ்ணனின் வருகை
2. கர்பத்திலிருந்த கிருஷ்ணனை தேவர்களின் பிரார்த்தனை
3. கிருஷ்ணன் பிறக்கிறார்
4. கம்ஸனின் அட்டூழியங்கள்
5. நந்தர் - வஸுதேவர் சந்திப்பு
6. பூதனா வதம்
7. த்ருனாவர்த்தன் முக்தி
8.விஸ்வரூபம் தரிசனம்
9. அன்னை யசோதை கிருஷ்ணனைக் கயிற்றால் கட்டுதல்
10. நளகூவரன் , மணிக்ரீவன் சாபவிமோசனம்
11. வத்ஸாஸுர / பகாசுர வதம்
12. அகாசுர வதம்
13. சிறுவர்களையும் கன்றுகளையும் பிரம்மா திருடுதல்
14. கிருஷ்ணரிடம் பிரம்மன் பிரார்த்தனை .
15. தேனுகாசுர வதம்
16. காலியனைப் பணியவைத்தல்
17. காட்டுத்தீயை அணைத்தல்
18. பிரலம்பாசுர வதம்
19. காட்டுத்தீயை விழுங்குதல்
20. இலையுதிர் கால வர்ணனை
21. கோபியர் குழலிசையால் வசீகரிக்கப்படுதல்
22. கன்னி கோபியர்களின் ஆடைகளைத் திருடுதல்
23. அந்தணர்களின் மனைவியர் முக்தி
24. கோவர்த்தன கிரியைப் பூஜித்தல்
25. விருந்தாவனத்தில் நாசகார மழை
26. வியத்தகு கிருஷ்ணர்
27. தேவேந்திரனின் பிரார்த்தனை
28. வருணனின் பிடியிலிருந்து நந்த மகாராஜாவை விடுவித்தல்
29. ராஸ நடனம் அறிமுகம்
30. கிருஷ்ணர் கோபியரிடமிருந்து மறைந்திருத்தல்
31. கோபியரின் பாடல்கள்
32. கிருஷ்ணர் கோபியரிடம் திரும்பி வருகிறார்
33. ராஸ நடன வர்ணனை
34. வித்யாதரன் முக்தி மற்றும் சங்காசுரன் வதம்
35. கோபியரின் விரக தாபம்
36. அக்ரூரர் தூது
37. கேசி , வியோமாசுர வதம்
38. அக்ரூரர் வ்ருந்தாவனம் வருதல்
39. அக்ரூரர் விஷ்ணு லோகத்தைக் காணல்
40. அக்ரூரரின் பிரார்த்தனைகள்
41. கிருஷ்ணர் மதுராவில் பிரவேசிக்கிறார்
42. யாக மேடையில் வில்லை முறித்தல்
43.குவலயாபீட யானையைக் கொல்லல்
44. கம்சன் வாதம்
45. ஆசானின் மகனை கிருஷ்ணன் மீட்டல்
46. உத்தவர் விருந்தாவனம் வருகிறார்
47. கிருஷ்ணரின் செய்தியைக் கோபியர்கள் பெறுகிறார்கள்.
48. கிருஷ்ணர் தம் பக்தர்களை திருப்தி செய்கிறார்
49. திருதராஷ்ட்ரரின் கேட்ட நோக்கம்
50. கிருஷ்ணர் த்வரகைக் கோட்டையை நிறுவுதல்
51. முசுகுந்தன் முக்தி
52. ரண சோர கிருஷ்ணர்
53. கிருஷ்ணர் ருக்மிணியைக் கடத்திச் செல்கிறார்
54. துவாரகையில் திருமணம்
55. பிரத்யும்னன் பிறக்கிறான்
56. சியமந்தக மணியின் கதை
57. ஸத்ராஜித் , ஸததன்வன் வதம்
58. ஐந்து ராணியரை கிருஷ்ணர் மணக்கிறார்
59. பௌமாசுர முக்தி
60. கிருஷ்ணரும் ருக்மிணியும் உரையாடுகிறார்கள்
61. கிருஷ்ணரின் வம்சாவளி
62. உஷா , அநிருத்தன் சந்திப்பு
63. கிருஷ்ண பானாசுர வதம்
64. நிருக ராஜனின் கதை
65. பலராமனின் விருந்தாவன விஜயம்
66. பௌண்ட்ருகன் , காசி ராஜனின் முக்தி
67. த்விவிதாவின் முக்தி
68. சாம்பனின் திருமணம்
69. கிருஷ்ணரின் மாளிகைகளுக்கு நாரத முனி செல்கிறார்
70. கிருஷ்ணரின் தினசரி நடவடிக்கைகள்
71. இந்திரப்ரஸ்த நகரில் ஸ்ரீ கிருஷ்ணர்
72. ஜராசந்தன் முக்தி
73. கிருஷ்ணர் அஸ்தினாபுரம் திரும்புகிறார்
74. சிசுபாலன் முக்தி
75. ராஜஸூய யாக முடிவில் துரியோதனன் அவமானம் அடைந்ததாக எண்ணியது ஏன்
76. யது வம்சத்தினருடன் சால்வன் போர்
77. சால்வன் முக்தி
78. தந்தவக்த்ர , விதூரத மற்றும் ரோமஹர்ஷன வதம்
79. பல்வலன் முக்தியும் , பலராமரின் யாத்திரையும்
80. கிருஷ்ணர் சுதாமா சந்திப்பு
81. சுதாமர் கிருஷ்ணரின் ஆசியைப் பெறுகிறார்
82. கிருஷ்ணரும் பலராமரும் விருந்தாவான வாசிகளைச் சந்தித்தல்
83. கிருஷ்ணரின் ராணியரை த்ரௌபதி சந்தித்தல்
84. வசுதேவர் நடத்திய யாகங்கள்
85. வசுதேவருக்கு ஆன்மிக அறிவுரை
86. சுபத்ரா பஹரணம்
87. வேதங்களின் பிரார்த்தனைகள்
88. சிவபெருமான் விடுவிக்கப்படுகிறார்
89. கிருஷ்ணரின் அதியற்புத சக்தி
90. கிருஷ்ண லீலைகளின் சுருக்கம்
திருதராஷ்ட்ரன் விசித்ரவீர்யனுக்கும் பிறந்தவனல்ல. பண்டைய காலத்தில் இன வருத்தி இல்லாமல் இருந்தால் (இனவ்ரினவ்ருத்தி செய்யும் சக்தி) அவனின் சகோதரன் மூலம் அவனின் மனைவி குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.வியாச தேவரின் கணவனின் சகோதரன் வழி மனைவி குழந்தையைப் பெற்றாலும் அக்கணவன் ஏற்றுக்கொள்கிறான். "வார் சித்ரவீர்யா" என்று அக்ரூரர் பரிகசித்தார். பொய்யான பரம்பரையில் சிம்மாசனம் ஏறி இருந்தான் என்பதை காட்டுகிறது.பாண்டுவின் புத்திரர்கள் பாண்டவர்கள் இருக்க திருதராஷ்ட்ரன் சிம்மாசனம் ஏறி இருக்கக்கூடாது.
அத்தியாயம் - 68 திருதராஷ்ட்ரன் மகனான துரியோதனனுக்கு லக்ஷ்மணா என்ற பெண் இருந்தால். கிருஷ்ணன் ஜாம்பவதிக்கும் மகனான சாம்பன் லக்ஷ்மணா சுயம்வரம் மண்டபம் வந்து அவளைக் கடத்திச் சென்றுவிட்டான்.
அவனுடன் போர் புரிந்து லக்ஷ்மனாவை பிரித்து அழைத்துக் கொண்டு அஸ்தினாபுரம் திரும்பினார்கள்.
பலராமர் அஸ்தினாபுரம் வந்து பேசி பயனின்றி அந்தக்கரை கங்கை நதியில் மூழ்கி விடும் தருவாயில் அறிவு பெற்று பீஷ்மர் அர்ஜூனர் துரியோதனரை வணங்கி ப்ரார்த்தபின் பலராமர் உள்ளம் இளகியவராய் அபயமளித்தனர். அவர்கள் திருமணத்தை விமரிசையாக நடத்தினார்கள்.
அத்தியாயம் 72: யுதிஷ்டிரன் ராஜசூய யாகம் யுதிஷ்டிரன் தன தம்பிகளை நான்கு திசைகளிலும் அனுப்பி வெற்றி பெற்று வரச் சொன்னான். சகா தேவனை மக்களுடன்(தென் திசை நாடுகள் , நகுலன் - மத்ஸ்ய தேச வீரர்களுடன் மேற்கு திசை நாடுகள், அர்ஜுனன் - கேகேய வீரர்களுடன் வடக்கு திசை மற்றும் பீமனை மத்ர தேச வீரர்களுடன் கிழக்கு திசைகளில் சென்று வென்று வரச் செய்தான். அந்தந்த தேச ராஜாக்கள் ராஜசூயம் செய்த யுதிஷ்ட்ரருக்கு வரி செலுத்தவேண்டும். போர் செய்து வெற்றிபெறவேண்டும்.
மகத மன்னன் ஜராசந்தன் மறுத்ததைக் கண்டு யுதிஷ்டிரன் கவலையுற்றான். யுதிஷ்டிரன் பீமன், அர்ஜுனன், கிருஷ்ணருடன் பிராமணன் வேஷம் தரித்து (உத்தவர் திட்டம்) ஜராச்சந்தனிடம் சென்றனர். 27 நாட்கள் போர் புரிந்தனர். 28 ஆம் நாள் பீமன் "என்னால் வெல்லமுடியாது" என்று கிருஷ்ணரிடம் கூறினான். கிருஷ்ணர் ஜராசந்தன் பிறப்பின் ரகசியம் அறிந்தவர். வெவ்வேறான இரு தாய்களுக்குப் பிறந்தவன் ( இரு பகுதிகளாக). அதைக்கண்ட தந்தை வெறுப்புற்று இரு பகுதிகளையும் காட்டில் எறிந்துவிட்டார். அங்கு சர என்ற என்ற மந்திரவாதிப பெண் இவ்விரு பகுதிகளையும் ஒட்ட வைத்து குழந்தையை உருவாக்கினாள். அவ்விரு பகுதிகளையும் பிரித்து அவனைக் கொல்லலாம் என்று பீமனுக்கு குறிப்பால் உணர்த்தினார். ஒரு குச்சியை எடுத்து இரண்டாகப் பிரித்துக் காட்டினார்.
அதைப் புரிந்துகொண்ட பீமன் அவனுடைய ஒரு காலை அழுத்திப் பிடித்து மற்றொரு காலை உயர்த்தி அவனின் உடலை இரண்டாக கிழித்தான். ஜராசந்தன் மகன் சகதேவன் .
சகதேவன் அக்ர பூஜைக்கு கிருஷ்ணருக்கு முதல் இடம் கொடுத்த போது அனைவரும் வணங்கினர். ஆனால் அங்கிருந்த சிசுபாலன் கோபமுற்று கிருஷ்ணரைப் பலவாறாகப் பேசினான்.
ஜய விஜயர்கள் கதை 7 வது காண்டத்தில் கூறப்பட்டது.
ராஜசூய யாகம் நடந்து அடுத்து "பத்னி ஸம்யாஜ" என்ற சடங்கு நடந்தது. ராணி த்ரௌபதி யுதிஷ்டிரன் அவப்ருத் ஸ்நானம் செய்தனர். கங்கையில் நீராடினர்.
சால்வன் அரக்கன் சிசுபாலன் ருக்மிணி திருமணம் செய்யும் நோக்கத்தோடு சென்றபோது சால்வனும் இருந்தான். யது வம்சத்தினருடன் ஏற்பட்ட போரில் சால்வன் தோல்வியுற்றான். அப்போது யது வம்சத்தை நிர்மூலமாக்குவதாக அரசர்கள் முன்னிலையில் சூளுரைத்தான்.
யாராலும் அழிக்கமுடியாத ஆகாயவிமானம் வேண்டும் என்று சிவனிடம் சால்வன் பிரார்த்தித்தான். அதை எங்கு செலுத்தும் திறன் பெட்டரு குறிப்பாக யதுவம்சத்தினரை அச்சுறுத்தும் வலிமை அடையவேண்டும் என்றும் சிவனிடம் வேண்டினான்.வரமும் பெற்றான்.பிரத்யும்னனுக்கும் சாரதியாக தாருகனின் மகன் பணியாற்றினான். மூர்ச்சையடைந்த பிரத்யும்ணனை யுத்தபூமிக்கு வெளியே கொண்டு சென்றான். பிரத்யும்னன் சால்வனுடனான யுத்தம், ராஜசூய யாகம் நிறைவேற்றி சிசுபாலன் வதம் முடிந்தபின் நடைபெற்றது. கிருஷ்ணன் பாண்டவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு த்வாரகைக்குப் புறப்பட்டார். சிசுபால வதம் முடிந்தபின் பாலராமருடன் தாம் அஸ்தினாபுரம் திரும்பிய போது சிசுபாலன் ஆட்கள் த்வரகையைத் தாக்கியிருக்கவேண்டும் என்று கிருஷ்ணர் எண்ணினார்.
சால்வன் கிருஷ்ணரின் இடது பக்கத்தில் தாக்கியபோது பகவானின் கையிலிருந்து சார்ங்கம் நழுவி விழுந்தது/ பகவான் கிருஷ்ணர் தம் கதையால் சால்வன் மார்பை பலமாக தாக்கினார். ரத்தம் கசியத் தொடங்கியதால் மாய சக்தியை பயன்படுத்தி கண்ணுக்குத் தென்படாமல் மறைந்தான். சில கணங்கள் முன்பின் தெரியாத ஒரு மனிதன் கிருஷ்ணர் முன்பு அழுதபடி வந்து நின்று தலை வணங்கியா வசுதேவரை சால்வன் பலவந்தமாக பிடித்துச் சென்றுவிட்டான். சால்வன் முன் தோன்றி வசுதேவர் போலிருந்த ஒருவரை நிறுத்தினான். பொய்யான வசுதேவரின் சிரத்தைத் துண்டித்து உடலை எடுத்துக் கொண்டு தன விமானத்தில் ஏறினான். கிருஷ்ணர் உண்மை அறிந்துகொண்டார். கிருஷ்ணர் விமானத்தை நொறுக்கி, அவன் கைகளைத் துண்டித்து வீழ்த்தினார்.
தந்தவக்த்ரன் ( கருஷாவின் அரசன்) கையில் ஒரு கதை ஏந்தி கிருஷ்ணரைக் கொல்ல யுத்தகளம் வந்தான். கிருஷ்ணர் அவனை மார்பில் பலமாக அடித்ததில் அவனின் இருதயம் இரண்டாகப் பிளந்தது. தலைமுடி அவிழ்ந்து சிதறியது. கை கால்களைப் பரப்பியபடி அவன் தரையில் விழுந்தான். சிசுபாலனின் மரணத்தின் பொது நேர்ந்தது போல் , ஒரு ஆத்மஜோதி அவனது உடலிலிருந்து புறப்பட்டு ஆச்சரியமாக பகவானின் உடலில் கலந்தது.
தந்தவக்த்ரனின் சகோதரன் விதூரதன் க்ரிஷ்னரைக்கொல்லவந்தான். தம் சுதர்சனச்சக்கரத்தை விடுத்து கர்ண குண்டலங்களும் அலங்கரித்த அவனின் சிரத்தைத் துண்டித்து வீழ்த்தினார்.
கிருஷ்ணர் த்வாரகைக்குச் சென்றார்.
பலராமர் நைமிசாரண்யம் வந்தடைந்தார். பலர் அங்கு குழுமியாகம் நடத்திக் கொண்டிருந்தார்கள். முனிவர்கள் பிராமணர்கள் யாவரும் எழுந்து வணங்கினர். துரதரிஷ்டவசமாக வ்யாசதேவரின் சிஷ்யரான ரோமஹர்ஷணர், பலராமர் வந்ததைக் கண்டும் எழுந்து நிற்காமல் தன் வ்யாசாசனத்தில் தொடர்ந்து அமர்ந்திருந்தான். பகவானை விட பெரியவன் தான் என்று மூடத்தனமாக எண்ணிக்கொண்டான். பலராமர் ரோமஹர்ஷணன் சரித்திரத்தை எண்ணிப் பார்த்தார்.
அவன் ஒரு சூதக்குடும்பத்தில் , அதாவது கலப்புக்குடும்பத்தில் பிறந்தவன் , அவனின் தாய் பிராமணப் பெண் , தந்தை க்ஷத்ரியன்.
அனுலோமம் - ஒரு ஆண் கீழ்ஜாதிப்பெண்னை மணப்பதால் பிறக்கும் குழந்தை
பிரதிலோமம் - ஒரு ஆண் தன்னை விட உயர் ஜாதிப்பெண்ணை மணப்பதால் பிறக்கும் குழந்தை
முனிவர்கள் யாவரும் பாலராமரிடம் , ஒரு ப்ராமனரைகொன்றதால் பிராயச்சித்தமாக நீர் என்ன செய்யவேண்டும் என்பதை நீரே சொல்லவும் என்றனர் . ரோமஹர்ஷனுக்கு உயிர் அளித்து , நீண்ட ஆயுளும், நிரம்ப பணத்தையும், சக்தி வாய்ந்த புலன்களையும், மேலும் நீங்கள் கேட்கும் அதனையும் கொடுப்பேன் என்று பலராமர் கூறினார்.
அவனைக் கொல்ல நீர் விரும்பியதால், மீண்டும் அவனை உயிர்ப்பிப்பது அவசியமில்லை. அதே சமயம் தாங்கள் முன்வந்து அவருக்கு நீண்ட ஆயுளை அளித்ததோமேன்பதை பகவானாகிய தாங்கள் நினைவிற்கொண்டு அவருக்கு நாங்கள் அளித்தது வீணாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இவ்வாறு யாகம் முடியும் வரை ரோமஹர்ஷண சுதர் உயிருடன் இருக்க வழி செய்துகொண்டார்கள். அதே சமயம் பாலராமரின் நோக்கம் நிறைவேற்றவும் வகை செய்தார்கள்.
ரோமஹர்ஷன ஸுதரின் மகனான உட்ரக்ராவா ஸுதர் தன தந்தை பதவியை மேற்கொண்டு புராண யாகங்கள் தொடர்ந்து நடத்தவேண்டும், முனிவர்கள் ப்ராயச்சித்தமாக பலராமரிடம், இங்கு பல்லவன் அரக்கன் பௌர்ணமி அமாவாசைகளில் யாகசாலைக்குள் வந்து இன்னல்களைத் தருகிறான். அவனை அழிக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறோம். அதுவே எங்களுக்கான பிரயச்சித்தத்தைத் செய்வீராக .
பலராமர் அவனது தலையை தனது கலப்பையால் உடைத்தார். நைமிசாரன்ய வாசிகளிடம் விடை பெற்று கௌசிக நதி, சரயு நதி, கங்கை, யமுனை, சரஸ்வதி, பிரயாகை வந்து சேர்ந்தார். புலஹ முனிவர் ஆசிரமம் சென்று பின்கோமதி நதி கரையிலுள்ள கண்டகியை அடைந்தார். வியாச நதியில் நீராடி , சோனா நதி நீராடி, கயா வந்தார். பித்ருக்களுக்கு வணக்கம் செலுத்தினார். சாரம், மகேந்திர பர்வதமெனும் மலை நோக்கி பயணமானார். கிருஷ்ணரின் அவதாரமான பரசுராமனை சந்தித்து தலை வணங்கினார்.
பலராமர் தெற்கு நோக்கி கோதாவரி, வேணா, பம்பா, பீமாரதி ஆகிய நதிகளில் நீராடினார். மகாரஷ்டிரா சைலபுரம் சென்று வழிபட்டார். தென் இந்தியா வேங்கடாசலம் , விஷ்ணு காஞ்சி , சிவகாஞ்சி, ரங்கக்ஷேத்ரம், மதுரை, இராமேஸ்வரம் பாம்பன் பாலம் சென்றார்.
குமரி முனையிலிருந்து கேரளா சென்றார். பிறகு கோகர்ணம், ஆர்யா தேவி (நான்கு புறமும் நீரால்சூழப்பட்டிருந்தது ) ஆலயம் சென்றார். சூர் பாரசம், தாபி, பயோஷ்ணி, நிர்விந்தியா, நதிகளில் நீராடி தண்டகாரன்ய வணமடைந்தார். நர்மதா நதிக்கு வந்தார். பிரபா தீர்த்தம் வந்தார்.
துரியோதனன் பீமன் துவங்கிய யுத்தபூமிக்கு வந்தார்.
பலராமர் இருவருக்கும் நல்லுரை வழங்கினார். அவர்களின் காதில் விழவில்லை. அதனால் பலராமர் த்வாரகைக்கு திரும்பியபோது, உக்ரசெனன் மற்றவர்களும் வரவேற்றனர்.
கிருஷ்ணர் - சுதாமா சந்திப்பு
கிருஷ்ணரின் பத்தினிகள் ருக்மிணி, பத்ரா, ஜாம்பவதி, சத்யா, சத்யபாமா, காளிந்தி, சைய்யா, லக்ஷ்மணா, ரோஹினி ஆகியோர் ஆவர்.
சத்யா - ஏழு (7) எருதுகளைக் கொன்று விவாஹம் செய்து கொண்டார்.
லக்ஷ்மணா - மீனைத் துணியால் மூடி, அதன் பிம்பம் மட்டும் கீழிருந்த தண்ணீர் தொட்டியில் தெரியும்படி செய்திருந்தார்கள். மீனின் கண்களைத் துளைத்து இந்த வெற்றி நண்பகல் அபிஜித் எனும் சுபவேளையில் நடந்தேறியது.
பலி மகாராஜாவின் பிரார்த்தனைகளைக் கேட்ட பகவான் கிருஷ்ணர் இவ்வாறு கூறினார்.ஸ்வயம்பு மனு யுத்தத்தில் மரீசி என்றழைக்கப்பட்ட பிரஜாபதிக்கு அவரின் மனைவியான ஊர்மிளா என்பவள் மூலம் ஆறு குமாரர்கள் பிறந்தார்கள். அவர்கள் தேவர்கள், ஒரு காலத்தில் பிரம்மதேவன் மரீசியின் மகளின் அழகால் கவரப்பட்டு காம இச்சையுடன் அவளைப் பின்தொடர்ந்தான். பிரம்மனைக் கண்டித்தார்கள். அதற்காக ஹிரண்யகசிபுவின் இந்த ஆறு குமாரர்கள் பின்னர் தேவகியின் கர்பத்தில் பிறந்தவர்கள். அவர்கள் பிறந்தவுடன் கம்சனால் கொல்லப்பட்டார்கள். இந்த ஆறு குமாரர்களையும் மீண்டும் காண தேவி ஆவல் கொண்டிருக்கிறாள். அவர்கள் அறுவரும் உன்ண்டுஅன் வசித்து வருகிறார்கள் என்று அறிவேன். அன்னை தேவகியின் திருப்திக்காக அவர்களை என்னுடன் அழைத்துச் செல்ல தீர்மானித்திருக்கிறேன். அன்னையைக் கண்டதும் இந்த ஆறு ஆத்மாக்களும் முக்தி பெற்று அவர்களுக்குரிய க்ருஹத்துக்குச் செல்வார்கள்.இந்த அறுவர் பெயர்கள் சமரன், உத்கீதன், பரிஷ்வாங்கன், பதங்கன், க்ஷத்ரப்ருதன், க்ருணி ஆவார்கள். இவர்கள் மீண்டும் தேவ நிலையைப் பெறுவார்கள். அறுவரும் பகவான் கிருஷ்ணர் பாலருந்திய அதே மார்பில் பாலருந்திய அறுவரும் உடனடியாக பரஞானம் அடையப் பெற்றவர்களாய் பகவான் கிருஷ்ணர் பலராமர் மற்றும் தந்தையும் அன்னையுமான வசுதேவர் தேவகியை வணகினார்கள். தமக்குரிய க்ரகங்கள் சென்றடைந்தார்கள்.
அர்ஜுனன் பிரபாசக க்ஷேத்ரத்திற்கு வந்து, தன தாய் மாமனான வசுதேவரின் மகளான சுபாத்ராவின் தீர்மானம் பற்றிக் கேள்விபட்டார். வசுதேவர் சுபாத்ராவை துரியோதனனுக்கு மணமுடிக்க பலராமர் விரும்பினார். ஆனால் அர்ஜுனன் சுபாத்ராவை கரம் பற்ற ஆசைப்பட்டார். சந்நியாசி வேடத்தில அர்ஜுனன் வந்தார். பலராமர் அவரை உபசரித்து விருந்தளித்தார். அர்ஜுனன் சுபாத்ராவைக் கடத்திச் சென்றார். பிறகு இருவருக்கும் திருமணம் செய்வித்தார்.
விதேக நாட்டின் தலைநகரமான மிதிலையில் ஒரு க்ருஹஸ்தன் பிராமணன் வசித்து வந்தார். ஸ்ருத தேவர் என்ற பெயருடையவர், பகவான் கிருஷ்ண பக்தர், இவரைப் போலவே மிதிலையின் அரசனும் பக்திமானாக இருந்தார். அவன் பெயர் பகுலாச்வன் என்பது. இருவரும் பகவான் கிருஷ்ணர் வந்தது அறிந்து தங்களைக் காண வந்திருப்பதை அறிந்து தங்கள் இல்லத்திற்கு வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள். தம்மை இருவராக நியமித்து இருவர் மனைக்கும் சென்றார். ஒருவருக்கொருவர் மற்றவர் கிருஷ்ணர் மற்றவர் மனைக்குச் சென்றிருப்பதை அறியவில்லை. இருவரும் தம் தம் மனைக்கு மட்டுமே கிருஷ்ணர் வந்திருப்பதாக எண்ணினார்கள். அதுபோல் 16000 வடிவங்களில் 16000 மனைவியரை அடைந்தபோது வ்யாபித்துக்கொண்டார்.
வேதங்கள் இறுதியில் பூர்ண சத்தியத்தை அருவமாகக் கருதுகின்றனவா (அ) வ்யக்தியாக கருதுகின்றனவா அன்பதை சுகதேவ கோச்வாம்ய்களிடம் பரிஷித் மகாராஜா கேட்டார்.
பூர்ண சத்தியத்தை அறிவதற்கு மூன்று (3) நிலைகள் உள்ளன.
1. அருவ பிரம்மனை அறிவது
2. இதயத்தில் இருக்கும் பரமாத்மாவை அறிவது
3. இறுதியாக புருஷோத்தமன் எனும் முழுமுதற்கடவுள் கிருஷ்ணனை அறிவது
1. கர்ம காண்டம்
2. ஞான காண்டம்
3. உபாஸன காண்டம்
சிவன் ஒருமுறை சகுனி என்ற அசுரனின் மகனான விருகாசுரனுக்கு வரமளித்து தாமே ஆபத்தில் சிக்கிக் கொண்டார்.
விருகாசுரன் நாரதர் சொல்படி சிவனிடம் வரம் பெற தவம் இருந்தார். வ்ருகாசுரன் கேதார்நாத் சென்று அக்னி குண்டத்தில் தன உடலின் பல பாகங்களிலிருந்து சதையை வெட்டி எடுத்து துண்டங்களை அக்னியில் இட்டான். ஏழாவது நாள் வ்ருகாசுரன் தன தலையை வெட்டி சிவனுக்கு அற்பநிப்பதேன்பது என்று ஏரியில் நீராடி உடலையும் முடியையும் உலர்த்தாமல் தன தலையை வெட்ட தயாரானான். சிவன் அசுரனை தற்கொலையிலிருந்து காப்பாற்றினார். அவனைத் தொட்டதும் காயங்கள் மறைந்து உடல் முன் போல் ஆயிற்று . பயங்கர மரண வரம் ஒன்று வேண்டினான். அசுரன் பாவத்மா, அவன் யார் தலை மேல் கையை வைத்தாலும் உடனே அவன் தலை மடியவேண்டும். சிவனும் வரம் கொடுத்தார். மேல் கை வைக்க முற்பட்டான். சிவன் விஷ்ணுவை அணுகினார். விஷ்ணு பிரமச்சாரி வேடம் தரித்து வ்ருகாசுரனிடம் வன்ஷு கேட்டார். சிவன் வரம் பற்றிக் கூறினான். சிவன் பித்தன், நீரே உமது தலையில் கை வைத்து பரிட்சிக்கலாமே , பொய் என்றால் சிவனிடம் கேட்கலாம் என்றதும் விருகாசுரன் தன தலை மேல் கை வைத்து இறந்தான்.
அத்தியாயம் 89: கிருஷ்ணனின் அற்புத சக்தி
சரஸ்வதி நதிக்கரையில் மகாமுனிவர்கள் சபை கூடியது.சத்ரயக்ஞம் எனும் மகாயக்ஞம் நடத்தினார்கள். மும்மூர்த்திகளில் (பிரம்மா , சிவா, விஷ்ணு) மிக உயர்ந்தவர் யார்? என்ற பிரச்னை விவாதம், இக்காரியத்தை ப்ருகு முனிவரிடம் ஒப்படைக்கப்பட்டது .
ப்ருகு முனிவர் முதலில் ப்ரஹ்ம லோகத்திலிருந்து தன தந்தை இருப்பிடத்துக்குச் சென்றார்.
பிரதான தெய்வங்களான இம்மூவரும் இயற்கையின் மூன்று (3) குணங்களையும் நிர்வகிக்கிறார்கள். சாத்விக குணம் / ரஜோ குணம் (தீவிர குணம்) / தபோ குணம் (அறியாமை)
பிரம்மாவிடம் சாத்விக குணம் உள்ளதா பார்க்க தன தந்தையை வணங்கி பிரார்த்தனை செய்யாமல் , மதியாதவர் போல் நடந்து கொண்டார். பிரம்ம தேவன் கோபம் கொண்டான். மகான் என்பதால் அடக்கிக் கொண்டார்.
பிறகு சிவனிடம் சென்றார். தம் ஆசனத்தை விட்டு எழுந்து வந்து அவரைத் தழுவச் சென்றார். ஆனால் சிவன் அருகி வந்தது பிருகு முனிவர் தழுவ மறுத்துவிட்டார். அன்பார்ந்த சகோதரா , நீ எப்போதும் அசுத்தமாயிருக்கிறாய் , எனவே தழுவ வேண்டாம் என்றார்.
பிருகு முனிவர்
முதல் குற்றம் - பிரம்மா மனதால் இழைக்கப்பட்டது
இரண்டாவது குற்றம் - சிவன் சொல்லால் இழைக்கப்பட்டது
மூன்றாவதாக விஷ்ணுவிடம் சென்றார்.
ஸ்ரீ தேவி விஷ்ணுவின் பாதங்களை வருடியபடி இருந்தால். பிருகு முனிவர் விஷ்ணுவின் மார்பில் காலாளில் உதைத்தார். இது பெரும் குற்றம். விஷ்ணு தயை மிக்கவர். நீர் இங்கு வந்தது என் பாக்கியம் , தயவு செய்து இந்த மெத்தையில் அமரவும். நீர் உள்ளே வந்தபோது முறையாக வரவேற்காதது என் பெரும் தவறாகும். அதற்காக நீர் மன்னிக்கவும், நீர் தீர்த்தயாத்திரை
ஸ்தலங்களையும் புனிதப்படுத்தவல்லது. வைகுண்டத்தையும் புனிதப்படுத்தும்படி உம்மை வேண்டுகின்றேன். உங்கள் பாதங்கள் மென்மையானது, என் மார்பு வஜ்ராமானது. எனவே தங்கள் பாதம் நோஹும் என்று அஞ்சுகிறேன். பாத வலி தீர நான் வருடுகிறேன். அனுமதிப்பீராக என்று கூறி வருடலானார். தங்கள் பாதம் பட்டு என் மார்பு புனிதமடைந்துள்ளது. இனி என் ஸ்ரீ தேவி என் மார்பில் மகிழ்ச்சியாக இருப்பாள். லக்ஷ்மியின் மறு பெயர் சஞ்சலா. அவள் ஓரிடத்தில் இருப்பதில்லை. எனவே ஏழைகள் செல்வந்தர்களாகவும், செல்வந்தர்கள் ஏழைகளாகவும் நாம் காண்கிறோம். சஞ்சலாவாக இருந்தாலும் வைகுண்டத்தில் அவள் பகவானின் பாத கமலங்களில் அருகில் நிரந்தரமாக வீற்றிருக்கிறாள். பிருகு முனிவரின் அனுபவங்களைக் கேட்டபின் அம்முநிவர்கள் பூர்ண சத்தியமான முழுமுதற்கடவுள் விஷ்ணுவே என்று முடிவு செய்தார்கள்.
ஒரு பிராமணன் - அவனுக்கு ஒன்பது (9) குழந்தைகலும் இறந்து பிறந்தன. இதற்கு அரசன் தான் காரணம் என்றான். இதை அறிந்த அர்ஜுனன் பிராமணனிடம் தன் க்ஷத்திரியத்தால் அடுத்த குழந்தையைக் காப்பாற்றுவதாகக் கூறினான். பிராமணனின் மனைவிக்கு உதவ நினைத்தபடி (தன நண்பன் கிருஷ்ணனை அல்ல) சென்றான். குழந்தை பிறந்து அழ ஆரம்பித்தது. சில நிமிடங்களில் குழந்தையும் அர்ஜுனன் அம்புகளும் வானில் சென்றன. அர்ஜுனன் எல்லா லோகங்களும் சென்று தேடலானான். பிராமணன் அர்ஜுனன் வாக்குறுதிகளை நம்பினேன். அவன் நபும்சகன் பொய்யான வாக்குறுதிகளை அளிப்பவன். அநிருத்தன், பலராமன், , கிருஷ்ணன் அவர்களால் என் குழந்தையைக் காப்பாற்ற இயலாமற்போனபோது சிவன் காப்பற்றுவதா உறுதி கூறினான். அர்ஜுனன் நம்பிக்கை இழந்து அக்னிப்ரவேசம் செய்ய முற்பட்டான். கிருஷ்ணர் அவனைத் தடுத்து தான் தேடிக் கொடுப்பதாக கூறி தன ரதத்தில் அர்ஜுனனுடன் அமர்ந்து வடக்கு நோக்கி புறப்பட்டான். பிரபஞ்சத்தின் எல்லையிலுள்ள , பிரபஞ்சத்தை மூடியுள்ள பகுதியை அடைந்தபோதுந்தன் குதிரைகள் நான்கும் ( சயான், ஸுகரீவன் , மேஹபுஷ்பம், பலாஹகம்) இருளில் பிரவேசிக்க தயங்கின.
கிருஷ்ணன் லோகேஸ்வரர், தன சுதர்சன சக்ரத்தை செலுத்தினார். அது சூரியனை விட 1000 மடங்கு பிரகாசத்துடன் ஒளி வீச இருளை விளக்கியது. இருளைக்கடந்து பிரம்மஜோதி எனப்படும் ஒளி வெள்ளத்தைக் கண்டான். இந்த ஆன்மிக ஒளி வெள்ளத்தை வேதாந்திகள் எனப்படும் அவ்யக்தவாதிகள் தம் இறுதி இலக்காக கருதுகிறார்கள். பிரம்மஜோதி , ஆனந்த்பாரம், அதாவது எல்லையற்றது. அளப்பரியது. இதன்பின் பகவான் கிருஷ்ணரும் , அர்ஜுனனும் மிகப்பரந்த நீர் பிரதேசத்தை அடைந்தார்கள். இதை காரணர்வ சமுத்திரம் (அ) விரஜ எனப்படும். ஜடா உலகின் படைப்புக்கு இந்த சமுத்திரம் மூல காரணம். இந்த ஜடா உலகில் மிக உயரத்திலுள்ளது . ஸத்யலோகம் (அ) பிரம்மலோகம், அதற்கு அப்பால் ருத்திரலோகமும், மகாவிஷ்ணுலோகமும் உள்ளது.
பகவான் விஷ்ணு காரண சமுத்திரத்தில் சயனித்திருக்கிறார். அவர் மூச்சு விடும்போது என்னற்ற பிரபஞ்சங்கள் உண்டாகின்றன. மூச்சு உள்ளிழுக்கும்போது என்னற்ற பிரபஞ்சங்கள் அவருள் பிரவேசிக்கின்றன. கிருஷ்ணரின் கருணையால் அர்ஜுனனுக்கு கிருஷ்ண சமுத்திரத்தின் பேரழகைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. சமுத்திரத்தினுள் மிகப்பெரிய மாளிகை கண்டான். அம்மாளிகையினுள் சேஷன் என்ற ஆனந்ததேவரும் , பிரம்மாண்ட ரூபத்தைக் கிருஷ்ணரும் அர்ஜுனரும் கண்டார்கள். ஆயிரக்கனக்கான ஆனந்ததேவரின் ஒவ்வொரு தலையிலும் பயமூட்டும் இருகண்கள் ஒளி வீசின. கழுத்தும் நாக்குகளும் நீலநிறமாயிருந்தன. உத்தமர் என்று அழைக்கப்படுகிறார். தம- இருள் , உத் - கடந்தது என்று பொருள்.
புருஷோத்தமராகிய மகா விஷ்ணுவின் நிறம் கார்கால மேகத்தைப்போல கருமையாக இருப்பதை அர்ஜுனன் கண்டான். பகவான் சகாக்களான நந்தரும், ஆனந்தரும் அவருடன் இருந்தார்கள். கிருஷ்ணர் இவ்வுலகில் மனிதனாகத்தொன்றி லீலைகள் புரிந்ததால் அவரும் அர்ஜுனனும் மகாவிஷ்ணுவின் முன் தலை வணங்கி மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர் பகவான் கிருஷ்ணரும் அர்ஜுனரும் மகாவிஷ்ணுவை வணங்கி குழந்தைகள அழைத்துக்கொண்டு த்வாரகைக்கு திரும்பி வந்து குழந்தைகளை அவர்களின் தந்தையிடம் சேர்ப்பித்தார்கள்.''கிருஷ்ணர் இவ்வுலகில் மனிதனாக வாழ்ந்து குடும்பஸ்தகராக வாழ்ந்தார். அவரது 160000 குழந்தைகள் இருந்தாலும் பல யக்ஞங்களை நிறைவேற்றி மனித சமுதாயத்தின் நலனுக்காக வாழ்வது எப்படி என்பதை அரச குலத்தினருக்கு உணர்த்தினார்.
ஸ்ரீமத் பாகவதம் 10 வது ஸ்கந்தம் அத்தியாயம் 90:
ஐந்து சிறப்புக்கள் :
1. பகவான் யது வம்சத்தில தோன்றியதால் கங்கை புனிதமானது. யது வம்ச குடும்பங்கள் கிருஷ்ணருடன் தொடர்பு கொண்டிருந்ததால் புனிதத் தன்மை பெற்றது.
2. அசுரர்களை அழித்து பக்தர்களைக் காப்பட்ட்ருயதாக தோன்றினாலும், பக்தர்களும் அசுரர்களும் ஒரே பலனை அடைந்தார்கள்.
3. பகவான் லக்குமியை விட கோபியருக்கு சலுகைகள் அளித்தார். கோபியருடன் தானும் சமநிலை பெற வேண்டுமென்று லக்குமி முயற்ச்சித்தாள். அதில் வெற்றியடையவில்லை என்றாலும் லக்குமி கிருஷ்ணரிடம் உண்மையாயிருந்தாள் .
4. நாம மகிமை விளக்கப்பட்டது
5. தர்மங்களில் எல்லாம் மிகச் சிறந்த தர்மத்தை ஏற்படுத்தினார். தம்மிடம் முற்றிலும் சரனமடைபவன் மதச் சடங்குகள் அனைத்தையும் நிறைவேற்றியவனாவான் என்று கூறுகிறார்.
ஸ்ரீ கிருஷ்ணா புத்தக விளக்கம் முற்றிற்று
Radhe Krishna 18-04-2015
I have read Krishna Book when I was in Harini house in January first week. Harini mother gave me the book of 1000 pages for me to read in my time and read it in 4 days and giving some for your information please.
Here I have heard Dasamaskandam upanyasam by Shri. U,Ve.K Swamigal and giving you the descrion collected.
I have given the topics only in Krishna book in Tamil (you will be knowing the stories already) and ofcourse full description in english (collected).
ராதே கிருஷ்ணா 15-04-2015
ஸ்ரீமத் பாகவதம் ( 9 வது மற்றும் 10 வது காண்டம் )
தசமஸ்கந்தம் - ஸ்ரீ உ.வே.கிருஷ்ணன் ஸ்வாமிகள்
க்ருத யுகம் - 5 அவதாரங்கள் - 1. மத்ஸ்யாவதாரம்
2. கூர்மாவதாரம்
3. வராஹவதாரம்
4/ ந்ருசிம்ஹவதாரம்
5. வாமனாவதாரம்
த்ரேதா யுகம் - 2 அவதாரங்கள் - 1. பலராம அவதாரம்
2. ராமாவதாரம்
த்வாபர யுகம் - 2 அவதாரங்கள் 1. பலராம அவதாரம்
2. கிருஷ்ணா அவதாரம்
கலி யுகம் - 1 அவதாரம் 1. கல்கி அவதாரம்
புராணங்கள் - 18 சாத்விக புராணங்கள் - 6
ராஜச புராணங்கள் - 6
தாமச புராணங்கள் - 6
முதல் ஸ்கந்தம் : பரிஷித் - சுகாசாரியார் அவர்களிடம் பாகவதம் சொல்லுமாறு கேட்டது . பரிஷித் இன்னும் ஏழு நாட்களே இருக்கிறது.
இரண்டாம் ஸ்கந்தம் : பெருமாள் விஸ்வரூபம் மற்றும் சிருஷ்டி செய்ய சங்கல்பம் செய்வது.
மூன்றாம் ஸ்கந்தம் : பிரம்மா ஸ்வயம்பு மனுவை படைத்தார்.
ஹிரன்யாக்ஷகன் பூமியை கடலுக்கு அடியில் எடுத்துச் சென்று விட்டான். பகவான் வராஹ அவதாரம் எடுத்து பூமியைக் காத்தான்.
ஜகத் சிருஷ்டி ஆரம்பித்தான். தேவஹூதி , கர்த்தமப் பிரஜாபதி ஸம்வாதம் ,
கபிலர் பிறந்தார். தாயாருடன் ஸம்வாதம்.
நான்காம் ஸ்கந்தம் : ப்ரியம்வ்ரதம் , உத்தானபாதன் பிறந்தனர்.
உத்தான பாதன் மகனாக த்ருவன் பிறந்தான். த்ருவ சரித்ரம் ..
ஐந்தாம் ஸ்கந்தம் : ப்ரியம்வ்ரதம் வழியில் ஆக்ணீதரன் ,நாதி , ஆதி ஜட பரதர் வந்தனர். அவர்களது சரித்ரம்.
த்ருவன் வழியில் வேணன் , அங்கண் , ருது வந்தனர்.
சப்தத்வீபங்கள் , நவ வருஷங்கள் படைக்கப்பட்டன.
ஆறாம் ஸ்கந்தம் : அஜாமிள உபாக்யானம் , இந்திரன் வ்ருத்தாசுரன் வதம்
ஏழாவது ஸ்கந்தம் : ந்ருஸிம்ஹவதாரம்
எட்டாவது ஸ்கந்தம் : கஜேந்திர மோட்சம் , அமிர்த மதன கதை , பலி சக்ரவர்த்தி (வாமனாவதாரம்) விளக்கம்.
ஒன்பதாவது ஸ்கந்தம் : இஷ்வாகு குல சரித்ரம், அம்பரிஷன் கதை , சதரன் கதை , மான் தாதா கதை , தலீபன் கதை மற்றும் அஜமஹாராஜன் கதை . தசரதன் மற்றும் ராமன் கதை.
இறுதியில் யயாதி , யது சரித்ரம் விளக்கி, கிருஷ்ணா சரித்ரம் சொல்ல ஆரம்பித்தார். கிருஷ்ணா சரித்திரத்தை சிறியதாக சொல்லி முடித்தார். பரிஷித் சுகாசாரியாரிடம் கிருஷ்ண சரித்திரத்தை விவாக சொல்லச் சொன்னார்.
சுகர் பரிஷித்திடம் நானோ முனிவர் , எனக்கு பசி தெரியாது, நீயோ மன்னன் அதனால் ஆகாரம் சாப்பிட்டு வரவேண்டும் என்றார். ஆனால் பரிஷித்தோ எனக்கு பசி என்பது இல்லை, கிருஷ்ணர் சரித்திரம் கேட்பதாலே அனனத்தும் மறந்து போகும் என்றார்.
யயாதி மூதாதியர்கள் வரிசையை பார்ப்போம்.
ராமன் கிருஷ்ணர்
சூர்ய வம்சம் சந்திர வம்சம்
பகலில் பிறந்தான் இரவில் பிறந்தான்
நவமியில் அஷ்டமியில்
அரண்மனையில் சிறைச்சாலையில்
சித்திரை ஆவணியில்
யயாதி பலகாலம் இன்ப உலகில் மூழ்கி திளைத்தான். முதுமை வந்ததும் தன் மூத்த மகனான யதுவை அழைத்து அவனிடம் அவன் இளமையை தனக்குக் கொடுக்கவேன்டினான். மகன் அதற்க்கு மறுத்து விட்டான். அதனால் யயாதி யதுவிற்கு ராஜ்யம் ஆள பட்டாபிஷேகம் கிடையாது என்று சாபமிட்டார்.
பிறகு தன இளைய மகனான புருவிடம் இளமை தருமாறு வேண்டினான். புருவும் தன் இளமையை தந்தைக்குக் கொடுத்துவிட்டான். பட்டாபிஷேகமும் பெற்றான்.
அதனால் யது வம்சம் கீழே போனது. அதை மேலே தூக்கி விட கிருஷ்ணன் யது குலத்தில் பிறந்தான். பூமியை ஹிரன்யாக்ஷகன் கடலுக்கு அடியில் தள்ளியபோது பகவான் வராஹ அவதாரம் எடுத்து பூமியை மேலே கொணர்ந்தான். அதுபோல் இப்போது கிருஷ்ணா அவதாரம் எடுத்து யது குலத்தை மேலே தூக்கிவிட தோன்றினான்.
யயாதி மகனாக சுகுரன் மற்றும் பஜமானன் பிறந்தனர். சுகுரனுக்கு தேவகன் , உக்ரசேனன் என இருவர் பிறந்தனர். தேவகனுக்கு மகளாக தேவகி பிறந்தாள்.
உக்ரசேனனுக்கு மகனாக கம்சன் பிறந்தார்.
சுகுரன் உக்ரசேனன்
4 பிள்ளைகள் / 7 பெண்கள் 9 பிள்ளைகள் / 5 பெண்கள்
தேவதான் த்ருதேவ
உபதேவஸ்ச சாந்திதேவ
ஸ்ரீதேவ உபதேவ
தேவ வர்தன ஸ்ரீ தேவ
தேவ ரக்ஷித
சக தேவ
தேவகி
சூரசேனன் - மாரீஷாவிற்கு வசுதேவர் பிறந்தார்.
பஜமானன் மகனாக சூரசேனன் பிறந்தார். அவருக்கு வசுதேவர் பிறந்தார்.
வசுதேவர் பிறந்தபோது யானை முழக்கமிட்டது, அதனால்
சூரசேனனுக்கு யானக துந்துபி என பெயர் பெற்றான்.
வசுதேவருக்கு மகனாக கிருஷ்ணன் பிறந்தான். வசுதேவருடன் திருத தங்கை பிறந்தார். அவருக்கு குந்தி பிறந்தாள் . குந்தி மகனானதால் அர்ஜுனனுக்கு கௌந்தேயன் என பெயர் உண்டு. த்ருத மகளானதால் பார்த்த பெயர்
அர்ஜுனன் சுபத்ர அவர்களுக்கு அபிமன்யு பிறந்தான். அபிமன்யு உத்தரையை மணந்தான். அவர்களுக்கு பரிஷித் பிறந்தான். பரிஷித் கர்பத்தில் இருக்கும்போது அஸ்வத்தாமன் ஒரு இரவில் அனைவரையும் சந்ததி இல்லாமல் இருக்க இரவில் அஸ்த்ர பிரயோகம் செய்தான். கண்ணனிடம் வேண்டியதால் கண்ணன் கர்பத்தில் சென்று காப்பாற்றினான். கர்ப்பம் கட்டையாக வெளிவந்தது. மீண்டும் கண்ணனை வேண்டியதால் கட்டை விரலால் தொட , நான் பிரமச்சாரியாக இருப்பது உண்மையாக இருந்தால், நான் பேசுவது எப்போதும் சத்தியமாக இருந்தால் குழந்தை எழுந்தது.
நமக்கு இப்போது இரண்டு சந்தேகம் வரும். கண்ணன் 16108 மனைவிகள், எப்படி பிரமச்சாரி, சத்தியமே பேசுபவன் என்பது தான்.
பெருமான் வைகுண்டத்திலே தன் தலைமுடி இரண்டு எடுத்து , ஒன்று வெள்ளை, மற்றது கறுப்பு எடுத்து போட்டார். வெள்ளை முடி பலராமனாகவும், கறுப்பு கிருஷ்ணனாகவும் பிறந்தனர்.
ஸ்ருத தேவி சேதி ராஜன் மகள் தனபோஷனுக்கு பிறந்தவர் வசுதேவர்.
வசுதேவரின் மற்ற பத்தினிகள் - கௌரவி - மகள் சுபத்ரா
ரோஹினி - பலராமர்
பத்ரா
மதிரா
லோகா
இள
தேவகி
அபிமன்யு - உத்தரைக்கு பிறந்தவர் பரிஷித் .
பத்தாவது ஸ்கந்தம் : பகவான் கிருஷ்ணர்
பகவான் கிருஷ்ணர் தான் முன்னமே இரண்டு தடவை வசுதேவர் தேவகிக்கு மகனாக பிறந்திருக்கிறார் என்றும் , இது மூன்றாவது தடவை மகனாக கிருஷ்ணராக அவதரிக்கிறார். முதலில் ப்ரெச்னிகர்பா மற்றும் வாமனதேவராக அவதரித்தார். இது போல் மூன்று தடவை பிறப்பதாக தேவகிக்குக் கூறியதால் அது போன்று பிறந்ததாகக் கூறினார்.
கிருஷ்ணருடன் பிறந்த எட்டு பேர்களின் பெயர்கள்
கீர்த்திமந்தம்
சுஷேணம்
பத்ரசேனம்
ருஜம்
ஸம்வர்தனம்
பத்ரம்
சங்கர்ஷணம்
ஹரிம்
பகவான் கிருஷ்ணர்
1. கிருஷ்ணனின் வருகை
2. கர்பத்திலிருந்த கிருஷ்ணனை தேவர்களின் பிரார்த்தனை
3. கிருஷ்ணன் பிறக்கிறார்
4. கம்ஸனின் அட்டூழியங்கள்
5. நந்தர் - வஸுதேவர் சந்திப்பு
6. பூதனா வதம்
7. த்ருனாவர்த்தன் முக்தி
8.விஸ்வரூபம் தரிசனம்
9. அன்னை யசோதை கிருஷ்ணனைக் கயிற்றால் கட்டுதல்
10. நளகூவரன் , மணிக்ரீவன் சாபவிமோசனம்
11. வத்ஸாஸுர / பகாசுர வதம்
12. அகாசுர வதம்
13. சிறுவர்களையும் கன்றுகளையும் பிரம்மா திருடுதல்
14. கிருஷ்ணரிடம் பிரம்மன் பிரார்த்தனை .
15. தேனுகாசுர வதம்
16. காலியனைப் பணியவைத்தல்
17. காட்டுத்தீயை அணைத்தல்
18. பிரலம்பாசுர வதம்
19. காட்டுத்தீயை விழுங்குதல்
20. இலையுதிர் கால வர்ணனை
21. கோபியர் குழலிசையால் வசீகரிக்கப்படுதல்
22. கன்னி கோபியர்களின் ஆடைகளைத் திருடுதல்
23. அந்தணர்களின் மனைவியர் முக்தி
24. கோவர்த்தன கிரியைப் பூஜித்தல்
25. விருந்தாவனத்தில் நாசகார மழை
26. வியத்தகு கிருஷ்ணர்
27. தேவேந்திரனின் பிரார்த்தனை
28. வருணனின் பிடியிலிருந்து நந்த மகாராஜாவை விடுவித்தல்
29. ராஸ நடனம் அறிமுகம்
30. கிருஷ்ணர் கோபியரிடமிருந்து மறைந்திருத்தல்
31. கோபியரின் பாடல்கள்
32. கிருஷ்ணர் கோபியரிடம் திரும்பி வருகிறார்
33. ராஸ நடன வர்ணனை
34. வித்யாதரன் முக்தி மற்றும் சங்காசுரன் வதம்
35. கோபியரின் விரக தாபம்
36. அக்ரூரர் தூது
37. கேசி , வியோமாசுர வதம்
38. அக்ரூரர் வ்ருந்தாவனம் வருதல்
39. அக்ரூரர் விஷ்ணு லோகத்தைக் காணல்
40. அக்ரூரரின் பிரார்த்தனைகள்
41. கிருஷ்ணர் மதுராவில் பிரவேசிக்கிறார்
42. யாக மேடையில் வில்லை முறித்தல்
43.குவலயாபீட யானையைக் கொல்லல்
44. கம்சன் வாதம்
45. ஆசானின் மகனை கிருஷ்ணன் மீட்டல்
46. உத்தவர் விருந்தாவனம் வருகிறார்
47. கிருஷ்ணரின் செய்தியைக் கோபியர்கள் பெறுகிறார்கள்.
48. கிருஷ்ணர் தம் பக்தர்களை திருப்தி செய்கிறார்
49. திருதராஷ்ட்ரரின் கேட்ட நோக்கம்
50. கிருஷ்ணர் த்வரகைக் கோட்டையை நிறுவுதல்
51. முசுகுந்தன் முக்தி
52. ரண சோர கிருஷ்ணர்
53. கிருஷ்ணர் ருக்மிணியைக் கடத்திச் செல்கிறார்
54. துவாரகையில் திருமணம்
55. பிரத்யும்னன் பிறக்கிறான்
56. சியமந்தக மணியின் கதை
57. ஸத்ராஜித் , ஸததன்வன் வதம்
58. ஐந்து ராணியரை கிருஷ்ணர் மணக்கிறார்
59. பௌமாசுர முக்தி
60. கிருஷ்ணரும் ருக்மிணியும் உரையாடுகிறார்கள்
61. கிருஷ்ணரின் வம்சாவளி
62. உஷா , அநிருத்தன் சந்திப்பு
63. கிருஷ்ண பானாசுர வதம்
64. நிருக ராஜனின் கதை
65. பலராமனின் விருந்தாவன விஜயம்
66. பௌண்ட்ருகன் , காசி ராஜனின் முக்தி
67. த்விவிதாவின் முக்தி
68. சாம்பனின் திருமணம்
69. கிருஷ்ணரின் மாளிகைகளுக்கு நாரத முனி செல்கிறார்
70. கிருஷ்ணரின் தினசரி நடவடிக்கைகள்
71. இந்திரப்ரஸ்த நகரில் ஸ்ரீ கிருஷ்ணர்
72. ஜராசந்தன் முக்தி
73. கிருஷ்ணர் அஸ்தினாபுரம் திரும்புகிறார்
74. சிசுபாலன் முக்தி
75. ராஜஸூய யாக முடிவில் துரியோதனன் அவமானம் அடைந்ததாக எண்ணியது ஏன்
76. யது வம்சத்தினருடன் சால்வன் போர்
77. சால்வன் முக்தி
78. தந்தவக்த்ர , விதூரத மற்றும் ரோமஹர்ஷன வாதம்
79. பல்வலன் முக்தியும் , பலராமரின் யாத்திரையும்
80. கிருஷ்ணர் சுதாமா சந்திப்பு
81. சுதாமர் கிருஷ்ணரின் ஆசியைப் பெறுகிறார்
82. கிருஷ்ணரும் பலராமரும் விருந்தாவான வாசிகளைச் சந்தித்தல்
83. கிருஷ்ணரின் ராணியரை த்ரௌபதி சந்தித்தல்
84. வசுதேவர் நடத்திய யாகங்கள்
85. வசுதேவருக்கு ஆன்மிக அறிவுரை
86. சுபத்ரா பஹரணம்
87. வேதங்களின் பிரார்த்தனைகள்
88. சிவபெருமான் விடுவிக்கப்படுகிறார்
89. கிருஷ்ணரின் அதியற்புத சக்தி
90. கிருஷ்ண லீலைகளின் சுருக்கம்